தலைசொல் | பொருள் |
---|---|
ரொக்க வியாபாரம் | ரொக்க வியாபாரம் rokkaviyāpāram, பெ.(n.) பணத்திற்குப் பண்டங்களை விற்கும் வியாபாரம்; cash transactions. த.வ. கைப்பணவணிகம். [Skt. {} → த. ரொக்கவியாபாரம்] |
ரொக்கக்காரன் | ரொக்கக்காரன் rokkakkāraṉ, பெ. (n.) 1. முதலாளி; capitalist. 2. பணக்காரன்; rich man as having cash. |
ரொக்கசாமீன் | ரொக்கசாமீன் rokkacāmīṉ, பெ.(n.) பணமாகக் கொடுக்கும் பிணை; security in money, cash security. |
ரொக்கப்பட்டா | ரொக்கப்பட்டா rokkappaṭṭā, பெ.(n.) பணத்துக்குக் குத்தகையாக விடப்படும் நிலத்திற்குக் கொடுக்கப்படும் பட்டா; a patta for land leased for cash rent. |
ரொக்கம் | ரொக்கம் rokkam, பெ.(n.) அணியமாக இருக்கும் பணம்; cash, ready money. த.வ. கைப்பணம். [K. rokka → Skt. {} → த. ரொக்கம்] |
ரொக்காதாயம் | ரொக்காதாயம் rokkātāyam, பெ.(n.) 1. பணமாக வரும் வரும்படி; cash receipts or income. 2. செலவு நீங்கிய மிச்சவரும்படி; net profit. த.வ. கைப்பணவருவாய். [Skt. {}+ → த. ரொக்காதாயம்] |
ரொச்டு | ரொச்டு rocṭu, பெ.(n.) 1. தொந்தரவு; trouble, annoyance. 2. சீர்குலைகை; confusion, disorder. [T.K. {} → ரொச்டு] |
ரொட்டி | ரொட்டி roṭṭi, பெ.(n.) கோதுமை மாவாற் செய்த உணவு வகை; bread, wheaten cake. த.வ. உருட்டி, அடை [U. {}(k.{}); → த. ரொட்டி] |