தலைசொல் | பொருள் |
---|---|
ரேகடி | ரேகடி rēkaḍi, பெ.(n.) கரிசல் நிலம்; black cotton soil. [U. {} → T. {} → த. ரேகடி] |
ரேகாமூலம் | ரேகாமூலம் rēkāmūlam, பெ. (n.) அடிப்படை ஆவணத்தின் மூலச்சான்று; documentary evidence. [Skt. {}+ → ரேகா+மூலம்] |
ரேகாம்சம் | ரேகாம்சம் rēkāmcam, பெ.(n.) குறிப்பிட்ட வரிகை (ரேகை);க்குந் துவக்கமாகக் கொண்ட வரிகை (ரேகை);க்கும் இடைப்பட்ட கோணத்தின் நடுஅளவு; longitude. த.வ. வரிகைக் கோணம் [Skt. {} → த. ரேகாம்சம்] |
ரேகை | ரேகை1 rēkai, பெ.(n.) நாணயவகை; a coin. ரேகை2 rēkai, பெ.(n.) 1. (வரிகை); இரேகை பார்க்க;see {}. 2. கோளங்களில் துருவத்தின் வழியே செல்வதாகக் கருதப்படுங்கோடு; meridian. த.வ. வரிகை [Skt. {} → த. ரேகை] |
ரேக்கு | ரேக்கு rēkku, பெ.(n.) 1. பூவிதழ்; petal of flowers. 2. தங்கம் முதலியவற்றின் மெல்லிய தகடு; toil of metal. “தங்கரேக்காற் சமைத்திட்டபாரக் கொங்ககைக் குறியும்” (தனிப்பா.1-378,21); [U. {} → த. ரேக்கு] |
ரேக்ளா | ரேக்ளா rēkḷā, பெ.(n.) ரேக்ளாவண்டி பார்க்க;see {} [U. {} → த. ரேக்ளா] |
ரேக்ளாவண்டி | ரேக்ளாவண்டி rēkḷāvaṇṭi, பெ.(n.) ஒருவன் மாத்திரம் உட்கார இடமுள்ள ஒற்றை மாட்டுவண்டி வகை; a kind of single bullock-cart with only one seat. த.வ. ஒற்றை வண்டி [U. {}+ → த. ரேக்ளா+வண்டி] |
ரேங்கு-தல் | ரேங்கு-தல் rēṅgudal, செ.குன்றாவி(v.t.) சினமூளுதல்; to rage, to be angry. [T.K. {} → த. ரேங்கு] |
ரேடியோ | ரேடியோ rēṭiyō, பெ. (n.) வானொலி; radio. [E. radio → த. ரேடியோ.] |
ரேணு | ரேணு rēṇu, பெ.(n.) பொடி; dust. [Skt. {} → ரேணு] |
ரேந்தா | ரேந்தா rēndā, பெ.(n.) சித்திரப்பின்னற்குரிய ஊசி வகை; a needle used in embroidery work. |
ரேந்தாத்தையல் | ரேந்தாத்தையல் rēndāttaiyal, பெ.(n.) பூவேலைத் தையல்; lace-work. |
ரேந்தை | ரேந்தை rēndai, பெ.(n.) ரேந்தாத்தையல் பார்க்க;see {}-ttaiyal. |
ரேழி | ரேழி rēḻi, பெ.(n.) இரேழி பார்க்க;see {}. [இடைகழி-டேகழி-ரேழி] |
ரேவதி | ரேவதி rēvadi, பெ. (n.) இருபத்தேழாம் நாள்மீன்; the 27th naksatra. [Skt. {} → த. ரேவதி] |
ரேவு | ரேவு rēvu, பெ.(n.) 1. இறங்கு துறை; landing place, ford, port, harbour. 2. ஆயத்துறை; custom-house. [T.K. {} → ரேவு] |