தலைசொல் | பொருள் |
---|---|
ரூடி | ரூடி rūṭi, பெ.(n.) இடுகுறிப் பெயர்; term used in its conventional sense. [Skt. {} → ரூடி] |
ரூட்டி | ரூட்டி rūṭṭi, பெ.(n.) தொந்தரை; annoyance; trouble. “ரூட்டி செய்தல் தேதென்று” (விறலிவிடு.855); [Skt. {} → ரூட்டி] |
ரூட்டியடி-த்தல் | ரூட்டியடி-த்தல் rūḍḍiyaḍittal, செ.குன்றாவி.(v.t.) தொந்தரை செய்தல்; to cause annoyance. [Skt. {} → ரூட்டியடி] |
ரூபகதாளம் | ரூபகதாளம் rūpagatāḷam, பெ.(n.) ஏழு தாளத்தொன்று; a variety of time measure, one of catta-{}. த.வ. உருவகத்தாளம் [Skt. {} → ரூபகதாளம்] |
ரூபகம் | ரூபகம் rūpagam, பெ.(n.) 1. உருவகம்; metapher. 2. ரூபகதாளம் பார்க்க;see {}. 3. பத்துவகைப்பட்ட நாடகம்; drama of which there are ten species. [Skt. {} → ரூபகம்] |
ரூபம் | ரூபம் rūpam, பெ.(n.) 1. உருவம்; form, appearance, figure likeness. 2. ஒளியாகிய புலன்; sense of sight. 3. அழகு; beauty. [Skt. {} → ரூபம்] |
ரூபலாவண்ணியம் | ரூபலாவண்ணியம் rūpalāvaṇṇiyam, பெ. (n.) வடிவழகு; beauty of form, loveliness. [Skt. {} → ரூபலாவண்ணியம்] |
ரூபவதி | ரூபவதி rūpavadi, பெ.(n.) வடிவழகுள்ளவள்; beautiful, handsome woman. த.வ. வடிவழகி [Skt. {} → ரூபவதி] |
ரூபா | ரூபா rūpā, பெ.(n.) ரூபாய் பார்க்க;see {}. [Skt. {} → ரூபா] |
ரூபாய் | ரூபாய் rūpāy, பெ.(n.) ஒரு தோலா எடையுள்ள வெள்ளி நாணயவகை; a current silver coin of 180 gr, composed of 165 parts pure silver and 15 parts alloy=1 tola in weight. த.வ. வெண்பொன் [Skt. {} → ரூபாய்] |
ரூபாவதி | ரூபாவதி rūpāvadi, பெ.(n.) மேளகர்த்தாக்களு ளொன்று; a primary {}. |
ரூபாவரி | ரூபாவரி rūpāvari, பெ.(n.) தோட்டக்கால்களுக்கு விதிக்கும் வரிவகை; a special tax on garden lands. |
ரூபி | ரூபி1 rūpittal, செ.கு.வி. (v.i.) மெய்ப்பித்தல்; to prove, demonstrate. [Skt. {} → ரூபி] ரூபி2 rūpi, பெ.(n.) 1. உருவமுடையது; that which has shape, visible object, as having form. 2. அழகுடையவன்/ள்; handsome, well-shaped person. [Skt. {} → ரூபி] |
ரூப்காரி | ரூப்காரி rūpkāri, பெ.(n.) வழக்கு நடவடிக்கை; judicial proceeding. [Persn. {} → ரூப்காரி] |
ரூப்ரூப் | ரூப்ரூப் rūprūp, து.வி.(adv.) முன்னிலையில்; in person, in one’s presence, personally, face to face. [Persn. {} → ரூப்ரூப்] |
ரூலர் | ரூலர் rūlar, பெ.(n.) கோடு இடுதற்குதவுங் கோல்; ruler. த.வ. கோட்டுக்கோல் [E. ruler → ரூலர்] |
ரூல்கட்டை | ரூல்கட்டை rūlkaṭṭai, பெ.(n.) ரூலர்(இக்.வ); பார்க்க;see {}. [E. rulle → ரூல்+கட்டை] |
ரூல்கம்பு | ரூல்கம்பு rūlkambu, பெ.(n.) ரூலர் பார்க்க;see {}. [E. rule+ கம்பு1 → ரூல்+கம்பு] |
ரூல்கழி | ரூல்கழி rūlkaḻi, பெ.(n.) ரூலர்(சிக்.வ.); பார்க்க;see {}. [E. rule+ கழி4 → ரூல்+கழி] |
ரூல்தடி | ரூல்தடி rūltaḍi, பெ.(n.) ரூலர் பார்க்க;see {}. [E. rule+ தடி2 → ரூல்+தடி] |