தலைசொல் | பொருள் |
---|---|
ருக் | ருக் ruk, பெ.(n.) இருக்கு மறை(வேதம்);; Rg-{}. 2. வேதமந்திரம்;{} hymn. [Skt. {} → ருக்] |
ருக்கா | ருக்கா rukkā, பெ.(n.) சீட்டு; note, chit, memorandum. [U. {} → ருக்கா] |
ருக்மினி | ருக்மினி rukmiṉi, பெ.(n.) திருமாலின் மூத்த மனைவி;{} Krishna’s first wife. [Skt. {} → ருக்மினி] |
ருசி | ருசி rusi, பெ.(n.) உருசி பார்க்க;see {}. [Skt. ruci → ருசி] |
ருசு | ருசு rusu, பெ.(n.) 1. சான்று; proof. 2. கையெழுத்து; signature. [U. {} → ருசு] |
ருசுச்செய்-தல் | ருசுச்செய்-தல் rususseytal, செ.கு.வி. (v.i.) மெய்ப்பித்தல்; to prove or establish by evidence; to bring home, as a charge or accusation. [U. {} → த. ருசுச்செய்தல்] |
ருசுப்படுத்து-தல் | ருசுப்படுத்து-தல் rusuppaḍuddudal, செ.கு.வி. (v.i.) ருசுச்செய்-, பார்க்க;see rucuccey-,. |
ருசுப்பண்ணு-தல் | ருசுப்பண்ணு-தல் rusuppaṇṇudal, செ.கு.வி. (v.i.) ருசுச்செய்-, பார்க்க;see rucuccey-,. |
ருசுப்பொறுப்பு | ருசுப்பொறுப்பு rusuppoṟuppu, பெ. (n.) உண்மையெனக் காட்ட வேண்டிய பொறுப்பு; burden of proof. |
ருசுப்போடு-தல் | ருசுப்போடு-தல் rusuppōṭudal, செ.கு.வி (v.i.) கையெழுத்துப்போடுதல்; to affix one’s signature. |
ருசும் | ருசும் rusum, பெ.(n.) சில பணியாளர் வழக்கமாகப் பெறும் உரிமைப்பணம்; fees, money, payments received by public officers, as perquisites attached to their office. [U. {} → ருசும்] |
ருசுவு | ருசுவு rusuvu, பெ.(n.) ருசு பார்க்க;see {}. |
ருத்திரகணப்பெருமக்கள் | ருத்திரகணப்பெருமக்கள் ruttiragaṇapperumaggaḷ, பெ.(n.) ஒரு சார் சிவனடியார்; the a class of {} devotees. [Skt. rudra+த. ருத்திர+கணம்+பெருமக்கள்] |
ருத்திரன் | ருத்திரன் ruttiraṉ, பெ.(n.) உருத்திரன் பார்க்க;see {}. [Skt. rudra → ருத்திரன்] |
ருத்திரவீணை | ருத்திரவீணை ruttiravīṇai, பெ.(n.) உருத்திர வீணை பார்க்க;see {}. [Skt. rudra+{} → ருத்திரவீணை] |
ருத்திராபிடேகம் | ருத்திராபிடேகம் ruttirāpiṭēkam, பெ.(n.) உருத்திரசூத்தத்தைச் சொல்லி துய்மையான நீரால் நீராட்டுதல்; a ceremonial bath in water sanctioned with the recital of {}. [Skt. rudre+{} → ருத்திராபிடேகம்] |
ருத்ராட்சம் | ருத்ராட்சம் rutrāṭcam, பெ.(n.) உருத்திராட்ச மணி; rudrak bead. த.வ. அக்கமணி [Skt. {} → ருத்ராஷம்] |
ருப்பு-தல் | ருப்பு-தல் ruppudal, செ.கு.வி.(v.i.) தோசை மாவு முதலியன அரைத்தல்; to grind. [T.K. rubbu → ருப்பு] |
ருப்புக்கல் | ருப்புக்கல் ruppukkal, பெ.(n.) ஆட்டுக்கல் ; stone mortar. |
ருப்புக்குழவி | ருப்புக்குழவி ruppukkuḻvi, பெ.(n.) மாவரைக்குங் குழவி; stone roller for grinding. |
ருப்புரல் | ருப்புரல் ruppural, பெ.(n.) ருப்புக்கல் பார்க்க;see ruppukkal. |
ருப்புலக்கை | ருப்புலக்கை ruppulakkai, பெ.(n.) மாவிடிக்கும் உலக்கை; pestle for grinding flour. |
ருமானி | ருமானி rumāṉi, பெ.(n.) மாதுளம் வித்தைப் போன்ற சிவந்த நிறமுள்ள மாம்பழவகை; a round reddish mango fruit as resembling in colour the pips of pomegranate. த.வ. செம்மாங்கனி [U. {} → ருமானி] |
ருமாலை | ருமாலை rumālai, பெ.(n.) தலைப்பாகை; a head dress. [Persn. {} → ருமாலை] |