தலைசொல் | பொருள் |
---|---|
ரீகர் | ரீகர் rīkar, பெ.(n.) கரிசல்தரை; black cotton soil. [U. {} → ரீகர்] |
ரீங்காரம் | ரீங்காரம் rīṅgāram, பெ.(n.) வண்டு முதலியவற்றின் நீள்மென் ஒலி; humming as of bees. |
ரீதி | ரீதி rīti, பெ.(n.) 1. நிலைமை; “காலரீதி” state, condition. 2. முறை; mode, method, model, system. [Skt. {} → ரீதி] |
ரீதிகெளளை | ரீதிகெளளை rītigeḷaḷai, பெ.(n.) ஒரு பண்வகை; a melody type. [Skt. {}-gauda → ரீதிகெளளை] |
ரீப்தாங்கல் | ரீப்தாங்கல் rīptāṅgal, பெ.(n.) கப்பற்பாயின் உறுப்புகளுள் ஒன்று; reef-band. [E. reef → ரீப்தாங்கல்] |
ரீப்பர் | ரீப்பர் rīppar, பெ.(n.) வரிச்சல் பட்டை; reeper, long strip or lath of palmyra or other timber. [Mhr. rip → E. reeper → ரீப்பர்] |
ரீப்பா | ரீப்பா rīppā, பெ.(n.) ரீப்பர் பார்க்க;see {}. |