தலைசொல் | பொருள் |
---|---|
ரிகாமி | ரிகாமி rikāmi, பெ.(n.) வேலையற்றவன்; unemployed person. “கச்சேரியில் வேலை காலியாயிருக்கிறது; ஆனால் ரிகாமி ஒருவனுமில்லை.” (இ.வ.); [U. riktakarman → {} → ரிகாமி] |
ரிக்சா | ரிக்சா rikcā, பெ.(n.) ஆள் இழுத்துச் செல்லும் பயண வண்டி வகை; rickshaw. த.வ. ஆள்வண்டி [Japanese jinrikisa → rickshaw → ரிக்சா] |
ரிங்கின்கயிறு | ரிங்கின்கயிறு riṅgiṉkayiṟu, பெ.(n.) கப்பல்களின் பாய்களை விரிக்கவுஞ் சுருக்கவும் உதவுங்கயிறு; rigging. [E. rigging → த. ரிங்கின் + கயிறு] |
ரிசபதேவர் | ரிசபதேவர் risabatēvar, பெ.(n.) நந்திதேவர்; the holy bul nanti. [Skt. {} + த. தேவர்] |
ரிசபம் | ரிசபம் risabam, பெ. (n.) எருது, காளை; ox. [Skt. {} → த. ரிசபம்] |
ரிசி | ரிசி risi, பெ.(n.) முனிவன்; sage, saint. [Skt. {} → ரிசி] |
ரித்ததிதி | ரித்ததிதி riddadidi, பெ.(n.) நான்காவது, ஒன்பதாவது, பதினான்காவது ஆகிய பிறைநாட்களைக் குறிக்கும் பொதுச்சொல்; a common term for the fourth, nineth and fourteenth titi of the lunar fortnight. த.வ. ஐந்திடையிட்டபிறைநாள் [Skt. rikta-tithi → ரித்ததிதி] |
ரிபு | ரிபு ribu, பெ.(n.) பகைவன்; enemy. [Skt. ripu → ரிபு] |
ரியாயத் | ரியாயத் riyāyat, பெ.(n.) வரியின் தள்ளுபடி; abatement of assessment. |
ரிவாசா | ரிவாசா rivācā, பெ.(n.) வழக்கம்; custom, practice, usuage. [Arab. {} → ரிவாசா] |
ரிவாசு | ரிவாசு rivācu, பெ.(n.) ரிவாசா பார்க்க;see {}. |