தலைசொல் | பொருள் |
---|---|
ரா | ரா rā, பெ.(n.) இரவு (இராத்திரி); (நாம தீப. 553);; night. |
ராகப் | ராகப் rākap, பெ.(n.) அங்கவடி; stirrup. [Arab. {} → த. ராகப்] |
ராகமாலிகை | ராகமாலிகை rāgamāligai, பெ.(n.) ஒரு பாடலிற்பல பண் (ராகங்);களும் தொடர்ந்துவரப் பாடும் பண் (ராகத்);தொடர்; head ornament worn by women.series of {} in which the successive parts of a song or sung. த.வ. கூட்டுப்பண் [Skt. {} → த. ராகமாலிகை] |
ராகம் | ராகம் rākam, பெ.(n.) 1. ஆசை; desire. 2. நிறம்; colour. “மாக ராக நிறைவா ளொளியோனை” 3. சிவப்பு (பிங்);; redness. 4. பாட்டு (பிங்.);; music, musical measure. “உதயராகத்தோடு” (பாரத.இந்.5);. 5. பண் ;(mus.); specific melody types. 6. சுந்தா சுத்த தத்துவங்களுள் ஒன்று; [Skt. {} → த. ராகம்] |
ராகவன் | ராகவன் rākavaṉ, இராகவன் பார்க்க;see {}. [Skt. {} → த. ராகவன்] |
ராகவர்த்தனி | ராகவர்த்தனி rākavarttaṉi, பெ.(n.) மேளகர்த்தாக்களுளொன்று; a primary {}. [Skt. {}→ ] |
ராகி | ராகி rāki, பெ.(n.) இராகி2 (வின்); பார்க்க;see {}. த.வ. இறகி [Skt. {} → த. ராகி] |
ராகு | ராகு rāku, பெ. (n.) கருங்கோள்;{}. [Skt. {} → த. ராகு.] |
ராகுத்தராயன் | ராகுத்தராயன் rākuttarāyaṉ, பெ.(n.) பார்க்க இராவுத்தன்1; trooper, cavalier. “இராகுத்தராயன் என்று” (திருவாலவா. 28, 83, பிம்);. [K. {} → த. ராகுத்தராயன்] |
ராக்கடி | ராக்கடி rākkaḍi, பெ.(n.) உச்சந்தலையணிவகை; an ornament worn by women on the crown of the head. த. வ. சூளாமணி [U. {} → த. ராக்கடி] |
ராக்கடை | ராக்கடை rākkaḍai, பெ.(n.) ராக்கடி பார்க்க;see {}. [ராக்கடி → த. ராக்கடை] |
ராக்கெட் | ராக்கெட் rākkeṭ, பெ. (n.) ஏவுகணை; rocket. [E. rocket → த. ராக்கெட்.] |
ராங்கி | ராங்கி rāṅgi, பெ.(n.) செருக்கு (கொ.வ.);; affectation, vanity, haughtiness. [E. rank → த. ராங்கி] |
ராசஅம்சம் | ராசஅம்சம் rācaamcam, பெ.(n.) அன்னப்பறவை வகை; flamingo, phoenicopterus, roseus. |
ராசக்காணம் | ராசக்காணம் rācakkāṇam, பெ. (n.) அரசனுக்குரிய வரி முதலியன; revenue, king’s share of the produce. [Skt. {}+M. {} → த. ராசக்காணம்] |
ராசக்கிரீடை | ராசக்கிரீடை rācakkirīṭai, பெ. (n.) 1. அரசர்களின் புனல் விளையாட்டு; sportive play of the royal family in a water pool. 2. கண்ணபிரான் ஆயமகளிரொடு ஆடிய கூத்துவகை; a sportive dance of {} with the {}. [Skt. {}+ த. ராசக்கிரீடை] |
ராசசம்மானம் | ராசசம்மானம் rāsasammāṉam, பெ.(n.) அரசன் அளிக்கும் பரிசு; present made by a king. [Skt. {} → த. ராசசம்மானம்] |
ராசசூயம் | ராசசூயம் rācacūyam, பெ. (n.) ஒரு வகை வேள்வி; a kind of sacrifice. [Skt. {} → த. ராஜசூயம்] |
ராசசேகரி | ராசசேகரி rācacēkari, பெ.(n.) இடைக்காலச் சோழரின் பட்டப் பெயர்; a title of later cholas. [Skt. {} → {}] |
ராசசேவை | ராசசேவை rācacēvai, பெ.(n.) அரச வேலை; service under a king, state service. [Skt. {} → த. ராசசேவை] |
ராசதண்டனை | ராசதண்டனை rācadaṇṭaṉai, பெ.(n.) முறை (நீதி);மன்றத்தால் குற்றத்திற்கேற்றவாறு வழங்கப்படும் தண்டனை; punishment awarded by a court of law. மறுவ. அரச தண்டனை. [Skt. {}+த. தண்டனை → த. ராசதண்டனை] |
ராசதானி | ராசதானி rācatāṉi, பெ. (n.) 1. தலைநகர்; capital city. 2. மாநிலம்; province, presidency. [Skt. {} → த. ராசதானி] |
ராசதோரணை | ராசதோரணை rācatōraṇai, பெ.(n.) பெருஞ்சிறப்பு; splendour, pomp, as befitting a king. மறுவ. அரச தோரணை. [Skt. {} → த. ராசதோரணை] |
ராசத்துரோகம் | ராசத்துரோகம் rācatturōkam, பெ. (n.) அரசனுக்குக் கேடு சூழ்கை; treason. மறுவ. அரசஇரண்டகம் [Skt. {} → த. ராசத்துரோகம்] |
ராசத்துரோகி- | ராசத்துரோகி- rācatturōki, பெ.(n.) அரசனுக்குக் கேடு சூழ்பவன்; traitor. மறுவ. அரசஇரண்டகன் [Skt. {} → த. ராசத்துரோகி] |
ராசநடை | ராசநடை rācanaḍai, பெ.(n.) மிடுக்கான (கம்பீரமான); நடை; stately gait, as of a king. [Skt. {}+த. நடை → த. ராசநடை] |
ராசநிந்தனை | ராசநிந்தனை rācanindaṉai, பெ.(n.) அரசினைப் பழிக்கை; sedition. [Skt. rajya → த. ராச+நிந்தனை] |
ராசநோய் | ராசநோய் rācanōy, பெ.(n.) எலும்புருக்கி நோய்; tuberculosis. [Skt. {} → த.ராச+நோய்] |
ராசன் | ராசன் rācaṉ, பெ.(n.) அரசன்; king. [த. அரசன் → Skt. rajan → த. ராசன்] |
ராசபக்தி | ராசபக்தி rācabakti, பெ.(n.) அரசனிடம் குடிகளுக்குள்ள பற்று; loyalty to the king. [Skt. {}+pakti → த. ராசபக்தி] |
ராசபத்திரம் | ராசபத்திரம் rācabattiram, பெ.(n.) அரசனளிக்கும் ஆவணம் முதலியன; royal edict or grant. [Skt. {}+ patra → த. ராசபத்திரம்] |
ராசபாகம் | ராசபாகம் rācapākam, பெ.(n.) 1. அரசனுக்குரிய பங்கு; royal share. 2. அரசாங்கத்துக்குரியதான விளைச்சல் முதலியவற்றின் பகுதி; share of produce due as revenue to the government. [Skt. {} → த. ராசபாகம்] |
ராசபாட்டை | ராசபாட்டை rācapāṭṭai, பெ. (n.) 1. பெருவழி; royal road, king’s highway. 2. நேர்முறையான வழி; straight path. [Skt. {}+ த. பாட்டை → த.ராசபாட்டை] |
ராசபிளவை | ராசபிளவை rācabiḷavai, பெ.(n.) பிளவை நோய் வகை; a disease. [Skt. {} + த. பிளவை → த. ராசபிளவை] |
ராசபுத்திரன் | ராசபுத்திரன் rācabuttiraṉ, பெ.(n.) அரசன் மகன்; prince. [Skt. {}+putra → த. ராசபுத்திரன்] |
ராசபோகம் | ராசபோகம் rācapōkam, பெ.(n.) 1. இன்ப வாழ்க்கை; life of great ease and enjoyment, as of a king. இராசபாகம் பார்க்க;see {}. [Skt. {} → த. ராச+போகம்] |
ராசமண்டலம் | ராசமண்டலம் rācamaṇṭalam, பெ.(n.) அரசர் கூட்டம்; assembly of kings. “அன்றிருந்த ராசமண்டலம்” (பாரத.வாரணா.63); [Skt. {} → த. ராசமண்டலம்] |
ராசமான்ய | ராசமான்ய rācamāṉya, பெ. (adj.) 1. அரசனால் மதிக்கத்தக்க; most excellent as worthy of the king’s regard. [Skt. {} → த. ராசமான்ய] |
ராசமுதலிகள் | ராசமுதலிகள் rācamudaligaḷ, பெ.(n.) தலைமையதிகாரிகள்; ministers and chieftains. |
ராசயோகம் | ராசயோகம் rācayōkam, பெ.(n.) இராசயோகம் 1,2,3, பார்க்க;see {}. மறுவ. அரசவோகம். |
ராசராசநரேந்திரன் | ராசராசநரேந்திரன் rācarācanarēndiraṉ, பெ. (n.) வேங்கி நாட்டரசன்; a king name of {} [Skt. rajan + raja+{} → த. ராசராச நரேந்திரன்] |
ராசராசன்காசு | ராசராசன்காசு rācarācaṉkācu, நாணய வகை; a coin. |
ராசராசேசுவரி | ராசராசேசுவரி rācarācēcuvari, பெ.(n.) கொற்றவை;{}. [Skt. {} → த. ராசராசேசுவரி] |
ராசரிகம் | ராசரிகம் rācarigam, பெ.(n.) ஆட்சி; rule, government. [T. {} → {} → த. ராசரிகம்] |
ராசரிசி | ராசரிசி rāsarisi, பெ.(n.) துறவுநிலையிலுள்ள அரசன்; royal sage. [Skt. {} → த. ராசரிசி] |
ராசவிசுவாசம் | ராசவிசுவாசம் rāsavisuvāsam, பெ.(n.) இராசபக்தி பார்க்க;see {}. [Skt. {} → த. ராசவிசுவாசம்] |
ராசவிழி | ராசவிழி rācaviḻi, பெ.(n.) மிடுக்கான நோக்கு; royal or majestic look. [Skt. {} → த. ராசவிழி] |
ராசா | ராசா rācā, பெ.(n.) 1. அரசன்; king, ruler. 2. மிகச்சிறந்தவன்; that which is most excellent of its kind. 3. அரசு அளிக்கும் பட்டப் பெயர்; a title of honour conferred by the government. [Skt. {} → த. ராசா] |
ராசாகுடுமிபண்ணு-தல் | ராசாகுடுமிபண்ணு-தல் rācākuḍumibaṇṇudal, செ.குன்றாவி. (v.t.) 1. மறைவாகப் போய் ஒருத்தன் குடுமியை அவிழ்த்து விளையாட்டுச் செய்தல்; to make sport of one by stealthily untying his hairtuft. 2. இறுதிரத்தாரில் ஒருவர்க்கும் நன்மையாகாதபடி செய்தல் (இ.வ);; to be beneficial to neither party. |
ராசாங்கம் | ராசாங்கம் rācāṅgam, பெ.(n.) அரசு; kingship. [Ar. {} → ராசாங்கம்] |
ராசாத்தி | ராசாத்தி rācātti, பெ.(n.) இராசாத்தி பார்க்க;see {}. ராசாத்தி rācātti, பெ.(n.) ராணி பார்க்க;see {}. ரிக் rik, பெ.(n.); இருக்கு பார்க்க;see irukku. [Skt. {} → த. ரிக்] |
ராசாமந்திரி | ராசாமந்திரி rācāmandiri, பெ.(n.) ஒருவனை அரசனாகவும் மற்றவர்களை மந்திரி முதலானவர்களாகவும் கொண்டு சிறுவர் விளையாடும் விளையாட்டு வகை; a sport among children in which the players act the parts of a king, his ministers, etc. |
ராசாளி | ராசாளி rācāḷi, பெ.(n.) இராசாளி பார்க்க;see {}. |
ராசி | ராசி1 rāci, பெ.(n.) வரிசை; row. ராசி2 rāci, பெ.(n.) 1. கூட்டம் (வின்.);; collection. 2. குவியல் (பிங்.);; heap “சுட்டன துரக ராசி” (கம்பரா. நாகபாசப்.94);. 3. இனம்; kind, sort. 4. மொத்தம்; aggregate. 5. மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனசு, மகரம், கும்பம், மீனம்.(சூடா.);; sign of the zodiac. “ஏக ராசியினினெய்த” (கம்பரா. இராவணன் தானை19);. 6. நல்லூழ் (கொ.வ);; lack. 7. சுபாவம்(கொ.வ.);; agreement, harmony. 9. வட்டி முதலியன கணக்கிடும் பொழுது கொள்ளும் கணித எண் (Arith.); product of terms, used in the calculation of interest, etc. 10. பணம்(இ.வ.);; coin. [Skt. {} → த. ராசி2] ராசி3 rāci, பெ.(n.) இணக்கம் (சமாதானம்);; amicable settlement between litigants, reconciliation. [Skt. {} → த. ராசி3] |
ராசிநாமா | ராசிநாமா rācināmā, பெ.(n.) 1. வழக்காளிகள் இருவரும் தம்முள் ஒத்துப் போவதாக எழுதித்தரும் ஆவணம்; Document in writing where by the parties to a suit agree to adjust their differences. 2. இராசிநாமா பார்க்க;see {}. 3. பட்டாவிலக்குப் பத்திரம் deed of relinquishment executed by the cultivator when he gives up his {} lands. |
ராசிபாளையன் பணம் | ராசிபாளையன் பணம் rācipāḷaiyaṉpaṇam, பெ.(n.) நாணய வகை; a coin. |
ராசிபொன் | ராசிபொன் rāciboṉ, பெ.(n.) நாணய வகை; a coin. |
ராசிபோகம் | ராசிபோகம் rācipōkam, பெ.(n.) கோள் ஒன்று ஓர் இராசியைக் கடந்து செல்லுகை; the passage of a planet through a sign of the zodiac. [Skt. {} → த. ராசிபோகம்] |
ராசிமானம் | ராசிமானம் rācimāṉam, பெ.(n.) கோள்களின் நிலையைக் கணிக்கும் முறை; calculation of the position of a planet in the zodiac. 2. குறித்த இராசி முற்றும் தோன்று(உதயமா); வதற்காகும் காலம்; time taken for a particular sign of the zodiac to pass the horizon. [Skt. {} → த. ராசிமானம்] |
ராசு | ராசு rācu, பெ.(n.) ஒரு தெலுங்கப் பிரிவினர்; a telugu caste. [T. {} → {} த. ராசு] |
ராசோபசாரம் | ராசோபசாரம் rācōpacāram, பெ.(n.) 1. அரசர்க்குரிய விருந்தோம்பல்; honours pertaining to a king. 2. பெரும மதிப்புரவு; great civility, as be fitting a king. [Skt. {} → த. ராசோபசாரம்] |
ராட்சதன் | ராட்சதன் rāṭcadaṉ, பெ.(n.) அரக்கன் (இராக்கதன்); (வின்);; giant, demon, goblin. [Skt. {} → த. ராட்சதன்] |
ராட்டினம் | ராட்டினம் rāṭṭiṉam, பெ.(n.) 1. சுழலும் சக்கரம்; spinning wheel. 2. நீரிறைக்க உதவும் சக்கரம்; pulley for drawing water, reel ginning machine whirligig. த. வ. உருளி [U. {} → த. ராட்டினம்] |
ராட்டிரகூடம் | ராட்டிரகூடம் rāṭṭiraāṭam, பெ.(n.) இரட்டர் களுடைய நாடு; country of the {}. [Skt. {} → த. ராட்டிரகூடம்] |
ராட்டிரம் | ராட்டிரம் rāṭṭiram, பெ.(n.) அரசாங்கம்; kingdom. [Skt. {} → த. ராட்டிரம்] |
ராட்டு | ராட்டு rāṭṭu, பெ.(n.) இராட்டினம்(கொ.வ); பார்க்க;see {}. |
ராட்டை | ராட்டை1 rāṭṭai, பெ.(n.) இராட்டினம் (கொ.வ); பார்க்க;see {}. [Hind. {} → த. ராட்டை] ராட்டை2 rāṭṭai, பெ.(n.) நூல் நூற்க உதவும் சக்கரம்; ambar {}. [Hind. {} → த. ராட்டை] |
ராணி | ராணி rāṇi, பெ.(n.) அரசி; queen. 2. இளவரசி; princess. [Pkt. {} < {} → த. ராணி] |
ராணு | ராணு rāṇu, பெ.(n.) காலாட்படை; infantry. “வாரிட்டா ராணு வரிசையாய் நிற்க”(விறலிவிடு. 1049); |
ராணுவப்பேர் | ராணுவப்பேர் rāṇuvappēr, பெ.(n.) சேனைத் தலைவர்; persons in command of armies. “அச்சமில்லை ராணுவப்போர்” (கூளப்ப.53);. [T. {} → த. ராணுவம்] |
ராணுவம் | ராணுவம் rāṇuvam, பெ.(n.) பட்டாளம்; army. [T. {} → த. ராணுவம்] |
ராதா மனோகரம் | ராதா மனோகரம் rātāmaṉōkaram, பெ.(n.) பூங்கொடி வகை (இ.வ.);; a flowering creeper. |
ராதை | ராதை rātai, பெ.(n.) திருமால் மனைவியருள் ஒருத்தியான ராதா; one of the wife of {}. [Skt. {} → த. ராதை] |
ராத்தல் | ராத்தல் rāttal, பெ.(n.) எடையளவு; a measure of weight. |
ராத்தல் தராசு | ராத்தல் தராசு rāttaltarācu, பெ.(n.) தோல் முதலியன நிறுக்கும் நிறைகோல் வகை; the spring balance, used chiefly in weighing hides, wool, palmyra-fibre, yarn, etc. |
ராத்திரி | ராத்திரி rāttiri, பெ.(n.) இரவு (இராத்திரி);; night. “ராத்திரி மேனியம்மான்” (அஷ்டப். திருவேங்கடத்.24); [Skt. {} → த. ராத்திரி] |
ராப்தா | ராப்தா rāptā, பெ. (n.) 1. இணைப்பு; bond, that which binds one thing with another. 2. நட்பு; friendliness. 3. வழக்கம்; habit, custom. 4. மாமூல்; mamool, precedent. 5. அரசவீதி (ராஜபாட்டை);; thorough fare. [Arab. {} → த. ராப்தா] |
ராப்பாடி | ராப்பாடி rāppāṭi, பெ.(n.) இரவில்பாடி இரந்துண்போர்; washerman of the low castes, who begs his food at night, singing along the streets. |
ராப்புச் சர்க்கரை | ராப்புச் சர்க்கரை rāppuccarkkarai, பெ.(n.) தூய்மை செய்யாத சருக்கரை (இ.வ.);; unrefined sugar. [U. {} → த. ராப்பு] |
ராப்பொடி | ராப்பொடி rāppoḍi, பெ.(n.) அராப்பொடி(வின்.);; filings. |
ராமகேளி | ராமகேளி rāmaāḷi, பெ.(n.) பண் வகை; a musical mode. [Skt. {} → த. ராமகேளி] |
ராமக்கோழி | ராமக்கோழி rāmakāḻi, பெ.(n.) நீர்க்கோழி வகை (இ.வ.);; water hen, as having a mark resembling vaisnava mark. |
ராமசேகரலு | ராமசேகரலு rāmacēkaralu, பெ.(n.) நெல் வகை; a kind of paddy. |
ராமபாணம் | ராமபாணம் rāmapāṇam, பெ.(n.) இராமபாணம் பார்க்க;see {}. [Skt. {} → த. ராமபாணம்] |
ராமப்பிரியை | ராமப்பிரியை rāmappiriyai, பெ.(n.) பண் வகை; a musical mode. [Skt. {} → த. ராமப்பிரியை] |
ராமராச்சியம் | ராமராச்சியம் rāmarācciyam, பெ.(n.) மிகு பயனுள்ள அரசு; most beneficient government, as the rule of {}. [Skt. {} → த. ராமராஜ்யம்] |
ராமர் | ராமர் rāmar, பெ.(n.) திருமால் தோற்றரவுகளுள் ஒன்று; an appearance of {}. [Skt. {} → த. ராமர்] |
ராமானுசம் | ராமானுசம் rāmāṉusam, பெ.(n.) 1. தீபக் கால் வகை; a kind of standard for a light. 2. செம்பினாலியன்ற ஒரு வகைக் குடிநீர்; a copper cup. 3. தென்கலைத் திருமண்காப்பிடு கின்ற பாதம்; the pedestal of the y mark of the Ten-Kalai {}. [Skt. {} → த. ராமானுசம்] |
ராமாயணம் | ராமாயணம் rāmāyaṇam, பெ. (n.) 1. இராமாயணம் பார்க்க; the epic {}. 2. இராமராவணயுத்தம்; the war between {} and {}. [Skt. {} → த. ராமாயணம்] |
ராம்பாடி | ராம்பாடி rāmbāṭi, பெ.(n.) a wandering caste. [Mhr. {} → த. ராம்பாடி] |
ராயசக்காரன் | ராயசக்காரன் rāyasakkāraṉ, பெ. (n.) எழுத்தர்; clerk, secretary. [T. {}. k. {} → த. ராயசக்காரன்] |
ராயசம் | ராயசம் rāyasam, பெ.(n.) 1. கட்டளை; order. 2. இராயசம் (பார்க்க);; business of a writer. 3. கருவம்; if {} hangting. [T. rayacame, K. {} → த. ராயசம்] |
ராயசீமரக்கால் | ராயசீமரக்கால் rāyacīmarakkāl, பெ.(n.) பட்டணம்படி 21/4 முதல் 23/4 வரை கொள்ளும் ஒரு முகத்தலளவை; measure of capacity = 2 1/4 to 2 3/4 Madras measure. [Mhr. {} → த. ராயசீ] |
ராயன் | ராயன் rāyaṉ, பெ.(n.) 1. அரசன்; king. 2. இராயன்; caesan. 3. மாத்துவப்பிராமணர் முதலானோர் பட்டப்பெயர்; title of certain castes like {} Brahmins. [Skt. {} → த. ராயன்] |
ராயப்பர் | ராயப்பர் rāyappar, பெ.(n.) பேதுரு என்ற கிறித்துவப் பெரியார்; St. Peter. [Skt. {} → த. ராயப்பர்] |
ராயர் | ராயர் rāyar, பெ.(n.) சில சாதியாரின் பட்டப்பெயர்; title of certain kallar and other castes. [K. {}. T. {} → த. ராயர்] |
ராய்சாகிப் | ராய்சாகிப் rāycākip, பெ. (n.) முகமதியரல்லாத இந்தியருக்கு அரசு அளிக்கும் பட்டவகை; a title of honour conferred by the Government on Indians other than Muhammadans. [U. rai+{} → த. ராய்சாகிப்] |
ராய்த்தா | ராய்த்தா rāyttā, பெ.(n.) பழம் முதலியவற்றை மோரில் ஊறவைத்துச் செய்த உணவு வகை. [U. {} → த. ராய்த்தா] |
ராவடம் | ராவடம் rāvaḍam, பெ.(n.) அராவு தொழில்; filing. [T. {} → ராவடம்] |
ராவணன் | ராவணன் rāvaṇaṉ, பெ.(n.) பார்க்க இராவணன்;{}. [Skt. Ravana → ராவணன்] |
ராவணன் விழி | ராவணன் விழி rāvaṇaṉviḻi, பெ.(n.) 1. நீரில் வாழும் உயிரி; a mollusc. 2. நீரில் வாழும்ஒரு வகை உயிரியின் ஓடு; shell of a mollusc. |
ராவு-தல் | ராவு-தல் rāvudal, வி.(v.) அராவுதல்; to file. [Skt. அராவு-ராவு] |
ராவுத்தன் | ராவுத்தன் rāvuttaṉ, பெ.(n.) குதிரைவீரன்; horseman. சூர்க்கொன்ற ராவுத்தனே (கந்தரலங். 37); 2. ஒரு பட்டப் பெயர்; a title. [U. raut → ராவுத்தன்] |
ராவுராப்பலகை | ராவுராப்பலகை rāvurāppalagai, பெ.(n.) 1. வாத்தாட்டுப்பலகை; eaves. 2. மச்சுத்தளத்தின் கீழ்க் கைமரங்களின் மீது பரப்பப்படும் பலகை; ceiling. |
ராவ் | ராவ் rāv, பெ.(n.) மகாராட்டிரர். மாத்துவப் பிராமணர் முதலிய சில சாதியாரின் பட்டப்பெயர்; title of Maharattas. Madhva Brahmins. [U. {} → ராவ்] |
ராவ்சாகிப் | ராவ்சாகிப் rāvcākip, பெ.(n.) முகமதியரல்லாத இந்தியருக்கு அரசாங்கத்தார் அளிக்கும் பட்டவகை; a title of honour conferred by the government on Indians other than muhammadans. [U. {} +U. {} → ராவ்சாகிப்] |
ராவ்பகதூர் | ராவ்பகதூர் rāvpagatūr, பெ.(n.) முகமதியரல்லாத இந்தியருக்கு அரசாங்கத்தார் அளிக்கும் பட்டவகை; a title of honour conferred by the government on Indians other than Muhammadans. [U. {} → ராவ்பகதூர்] |