தலைசொல் | பொருள் |
---|---|
ய | ய ya, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும். ‘அ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘a’ to the consonant ‘y’ [ய் + அ → ய] இடையெழுத்து :- (இடையினம்); தமிழ் நெடுங்கணக்கில் ‘க’ கா முதலாக வரும் உயிர்மெய்யெழுத்துகளில், பதினோராம் எழுத்து. இடையெழுத்து(ய,ர,ல,வ,ழ,ள);களு ளொன்று. வல்லெழுத்துப்போல் வன்மையுமாகாமல் மெல் லெழுத்துப்போல் மென்மையுமாகாமல், இடை நிகானவாய் நிற்பதால், இடையினம் அல்லது இடையெழுத்தென்று, இலக்கணப் புலவர் இயம்புவர். அரையுயிர் Semi-vowels):- உயிரெழுத்திற்கும் மற்றைய மெய் யெழுத்திற்கும் இடைநிகரணவாய், நிற்பன என்று கொண்டு, மேனாட்டார். ‘ய’கர ‘வ’கரத்தை அரை உயிர்கள் என்று வழங்குவர். ஆனால், இவற்றைப் பிறப்பு வகையாலோ, செவியுனர் ஒலி வகையாலோ, ஓரினமாகக் கொண்டு ஆராய்வதே சாலச் சிறந்ததென்று. இந்நாளைய பேச்சொலியியல் (phonetics); அறிஞர்கள் கருதுவர். பிறப்பிடம் :- நாவின் மேற்புறம் தட்டையாக நிற்குங்கால், அண்ணத்திற்கும், நாவிற்கும் இடையேயுள்ள இடைவெளி மிகமிகச் சிறியதாய்ப் பாந்து தோன்றும். அவ்விடைவெளி வழியாக மூச்சானது உரசிக்கொண்டே வெளிவருங்கால் தோன்றும் ஒலிப்புடை ஒலியே யகரம். இஃது இடையண்ணத்திற் பிறப்பது. இவ்வொலியின் பிறப்பிடம் பற்றித் தொல்காப்பியர். “அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்”(தொல்.99); என்று கூறியுள்ளது காண்க ‘மிடற்றெழு வளியிசை’ என்பதால், யகாம் ஒலிப்புடை ஒலி எனக் கொள்ளலாம். ‘அண்ணம் சேர்ந்த’ என்பதனால், அது வல்லண்ண ஒலி என்பது தெளிவு. ‘கண்ணுற்றடைய’ என்பது. இஃது உரசொலி என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். “உரலாணியிட்டாற் போலச் செறிய” என்று நச்சினார்க்கினியரும், உவமைகாட்டிப் பொருள் கூறியுள்ளது அறிக. இடையெழுத்து :- யகரம் மொழிக்கு முதலில் வாரா. யகரம், இகரத்திற்கொத்த இடையெழுத்து எனலாம். உரசொலியின் கண்னே இகரம் யகரமாதல் இயல்பு. அலகு பெறும் உயிரொலி, ஈற்றில் படுத்துச் சொல்லப் பெறும் போது. ‘இ’கரம் யகரமாகும். [ஆஇ → ஆய். (எ.கா.); போஇ → போய்] ‘இகர யகரம் இறுதி விரவும்’ என்பது தொல்காப்பியம். இகரத்தின் பிறப்பிடமே யகரத்தின் பிறப்பிடமாகும். ஆனால் நாவானது இகரத்திற்கு எழவேண்டியதற்கு மேலும் சிறிது உயரத்தில் அண்ணத்தை நோக்கி எழுங்கால், யகரம் பிறக்கும். நாவானது இகர, யகரத்தை ஒலிக்குங்கால், அண்ணத்திற்கும் நாவிற்கும் இடையே சிறிது இடைவெளி தோன்றும். அஃதாவது உயர வேற்றுமை உருவாகுமென்று மொழியியலார் கருதுவர். மற்றொரு பிரிவினர், “இஃது உயர வேற்றுமை அன்று; யகர ஒலிப்பு எழுங்கால், உள் நாவின் பின்புறத்தே நிகழும் ஒத்தொலிப்பின் (resonance); வேற்றுமையே என்பர். அகர ஆகாரத்தின் முன்போ, உகர ஊகாரத்தின் முன்போ, யகரம் வருங்கால், நாவினியக்கம், பெரிதளவில் வேற்றுமையை ஏற்படுத்தும். யகரத்தை மொழியியலார் கூட்டொலி என்றும் கூறுவர். ஒரு முழு உயிரை அடுத்து, உடம்படுமெய் போன்ற நெகிழுயிர், முன்னோ பின்னோ அமைந்து வருவதே கூட்டொலியென்பார், சுவீட்டு (sweet); என்ற மொழியியல் அறிஞர். ஆனால் தமிழில் யகரம் உயிரும், மெய்யும் மயங்கும், மயக்கத்தினிடை வெளிப்படும் நெகிழொலி என்பதே பொருந்தும். நிலைமொழியை ஒட்டியே யகர உடம்படுமெய், பிற்காலத்தே பெருவழக்காகப் பயின்று வந்துள்ளது. பவணந்தியார் வருமொழியின் உறுப்பினையொட்டியே, யகர உடம்படுமெய் வழக்கிலிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். பவணந்தியார் பகர்வது வருமாறு :- இாஜவழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ் விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும் மொழியியலார், யகரத்தை நெகிழொலி என்றும், இலக்கண நூலார் உடம்படுமெய் என்றும் கூறியுள்ளனர். ஆனால் மொழிக்கோ, மொழி யுறுப்பிற்கோ, ஈற்றில் பயின்றுவரும் யகரம் நெகிழொலி யாகாது. மொழியீற்று யகரத்தை “இ” கரத்தின் திரிபென்றுரைத்தலே பொருந்தும். போஇ → போய். ஆஇ → ஆய். மேற்குறித்த எடுத்துக்காட்டுகள் தொல்காப்பியர் காலத்தில், “ய”கரம் உடம்படுமெய்யாக வருவது கட்டாயமில்லை என்பதைப் புலப்படுத்துகின்றன. பழந்தமிழில் உயிர்களும் ஒன்றோடொன்று மயங்குந் தன்மையினைத் தெளிவுறுத்துகின்றன எனலாம். பழந்தமிழில், தொல்காப்பியத்தில் கூறியவாறு, யகரம் ஆகாரத்துடன்தான், மொழிக்கு முதலில் வரும், யானை → ஆனை, யாடு → ஆடு, யாறு → ஆறு, யாமை → ஆமை. தொல்காப்பியர் காலத்தில், உயிரோடு உயிர் மயங்கும் மயக்கம் இயல்பாகவே வழக்கூன்றி யிருந்தது. ‘யா’ என்பது எகரமாகக் குறுகும். யான் → என், யாது → எது, யாம் → எம். கல்லாதார் வழங்கும் சொற்களில் யகரம் சகரமாக ஒலிக்கும். உயிர் → உசிர், மயிர் → மசிர், பயல் → பசல், மயல் → மசல், அயல் → அசல். யகரம் வருமொழி முதலாக வரும்போது நிலைமொழியீற்றுக் குற்றியலுகரம், குற்றிய லிகரமாகத் திரியும். பிற்காலத்தே மொழியின் ஈற்றில் வரக்கூடிய மெல்லெழுத்தும், இடை யெழுத்தும், உகரச்சாரியை பெற்று வருவது இயல்பாயிற்று. நாடு + யாது-நாடியாது, மண்ணு + யாது-மண்ணியாது. சொல்லு + யாது-சொல்லியாது. யகரம் மூக்கொலி பெற்றால், ஞகரம் போன்றே ஒலிக்கும். இவ்வாறு யகரம் ஞகரமாகத் திரிவதைத் தொல்காப்பியரும் குறித்துள்ளார். மண், பொன் போன்று மெல்லெழுத்தில் முடியும் சொற்களின் பின்னே, யாத்தல் என்ற வினைச்சொல்லடியாகப் பிறந்த சொற்கள் வருமானால், யகரமும் மெல்லொலிச்சாயல் பெற்று ஞகரமாகும். தமிழில், யகரம் மொழிக்கு முதலில் வாரா நிலையிலும், பிறமொழிச் சொற்களில், ஆ வல்லாத பிற உயிர்களோடு சேர்ந்து, மொழிக்கு முதலில் வரும் நிலை பிற்காலத்தே ஏற்பட்டது. இந்நிலையில், தமிழின் இயல்பிற்கு ஏற்ற வண்ணம் மாறியே ஒலிக்கும். யந்திரம் → இயந்திரம், யசுடின் → இயக்கன், யுத்தம் → உயுத்தம். யகரத்தை முதலெழுத்தாகக் கொண்டு வரும் பிறமொழிச் சொற்கள், தமிழ் மொழிக்கு முதலில் வரும் போது யகரம் எகரமாகத் திரியும். காலந்தோறும் கல்வெட்டுகளிற் காணப்படும் யகரத்தின் வரிவடிவ வளர்ச்சி :- ஒரு பிறை போன்ற வடிவத்தின் நடுவில் நிற்கும் செங்குத்துக் கோடாக, கி.மு.3-ஆம் நூற்றாண்டில் அசோகர் காலக் கல்வெட்டுகளில் – (அசோகன் பிராமி.); காணப்படும் வரிவடிவம். தமிழகக் குகைக் கல்வெட்டுகளில், தமிழியெழுத்தாகச் சூலத்தின் முத்தலை வடிவம் போன்று கி.மு.3-ஆம் நூற்றாண்டில் காணப்படும் வரிவடிவம். கி.பி.2-ஆம் நூற்றாண்டில் இவ்வெழுத்தின் உயரம் குறைந்து, நடுக்கோட்டில் அழகுப் புள்ளியுடனும், இடப்பகுதியில் ஒரு வளைவும் கொண்டு வளர்ச்சியுற்ற வரிவடிவம். கி.பி.3.4.5-ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்தில் வளர்ச்சியுற்ற வரிவடிவம் கி.பி.6.7-ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலக் கல்வெட்டுகளிற் காணப்படும் வளர்ச்சி பெற்ற வரிவடிவம். கி.பி.8-ஆம் நூற்றாண்டுகளில் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவ வளர்ச்சி. கி.பி.9-ஆம் நூற்றாண்டில் வரி வடிவ வளர்ச்சி கி.பி.10.11-ஆம் நூற்றாண்டுகளில் சோழர் காலத்து வரிவடிவ வளர்ச்சி. கி.பி.12,13-ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர் காலத்து வரிவடிவ வளர்ச்சி. கி.பி.14,15-ஆம் நூற்றாண்டுகளில் விசயநகர மன்னர் காலத்து வரிவடிவம் |
யகிர்த்துச்சூலை | யகிர்த்துச்சூலை yagirttuccūlai, பெ.(n.) கல்லீரல் வீங்கும் நோய்; hepatitis. [Skt. {}+சூலை → யகிர்த்துச்சூலை] |
யக்கன் | யக்கன் yakkaṉ, பெ.(n.) 1. இயக்கன் பார்க்க;see {}. 2. குபேரன்; Kuberan as the lord of the Yaksas. [Skt. {} → த. யக்கன்] |
யக்கராசன் | யக்கராசன் yakkarācaṉ, பெ.(n.) குபேரன் (இயக்கர்களுக்கு அரசன்);;{} as the lord of the Yaksas. [Skt. {} → த. யக்கராசன்] |
யக்கராத்திரி | யக்கராத்திரி yakkarāttiri, பெ.(n.) நளி (கார்த்தி கை); மாதத்து முழு நிலவு (யாழ். அக.);; the full moon in the month of {}. [Skt. {} + த. யக்கராத்திரி] |
யக்கிஞமூர்த்தி | யக்கிஞமூர்த்தி yakkiñamūrtti, பெ.(n.) 1. தீக் கடவுள் (தக்கயாகப்.344.உரை);; the God of fire. 2. யாக்கியபுருடன் பார்க்க;see yakkiya {}. [Skt. {}+மூர்த்தி] |
யக்கிஞம் | யக்கிஞம் yakkiñam, பெ.(n.) யக்கியம் (தக்கயாகப். 344. உரை); பார்க்க;see yakkiyam. |
யக்கியசூத்திரம் | யக்கியசூத்திரம் yakkiyacūttiram, பெ. (n.) யக்கியோபவீதம் பார்க்க;see {}. [Skt. {} + த. யக்கியசூத்திரம்] |
யக்கியபசு | யக்கியபசு yakkiyabasu, பெ.(n.) வேள்வியில் காவு கொடுப்பதற்குரிய விலங்கு (யாழ்.அக);; the animal offered in sacrifice. [Skt. {}+ த. யக்கியபசு] |
யக்கியபுருடன் | யக்கியபுருடன் yakkiyaburuḍaṉ, பெ. (n.) திருமால் (யாகத்தின் உருவினன்); (சங்.அக.);;{} as assuming the form of sacrifice. |
யக்கியம் | யக்கியம் yakkiyam, பெ. (n.) 1. யஞ்ஞம் பார்க்க;see {}. 2. துவாபர யுகம் (யாழ்.அக.);;{}, the third yuga. [Skt. {} → த. யக்கியம்] |
யக்கியயோக்கியம் | யக்கியயோக்கியம் yakkiyayōkkiyam, பெ.(n.) அத்தி (சங்.அக); country fig. [Skt. {} → த. யக்கிய யோக்கியம்] |
யக்கியாரி | யக்கியாரி yakkiyāri, பெ.(n.) தக்கன் யாகத்தையழித்தவனாகிய சிவன்;{}, as the destroyer of Daksa’s sacrifice. [Skt. {} → யக்கியாரி] |
யக்கியோபவீதம் | யக்கியோபவீதம் yakkiyōpavītam, பெ.(n.) இருபிறப்பாளர் இடத்தோளின் மீதிருந்து மார்பின் குறுக்கே அணியும் பூணுால்; the sacred thread, worn by the members of the first three castes, across the chest and over the left shoulder. [Skt. {} → யக்கியோபவீதம்] |
யக்கேசன் | யக்கேசன் yakācaṉ, பெ. (n.) குபேரன்;{}. [Skt. {} → யக்கேசன்] |
யக்ஞம் | யக்ஞம் yakñam, பெ.(n.) யஞஞம் பார்க்க;see {}. த.வ. வேள்வி [Skt. {} → யக்ஞம்] |
யக்ஞோபவீதம் | யக்ஞோபவீதம் yakñōpavītam, பெ. (n.) யக்கியோபவீதம் பார்க்க;see {}. [Skt. {} → த. யக்ஞோவீதம்] |
யசசு | யசசு yasasu, பெ.(n.) புகழ்; honour, glory, {}, renown. [Skt. {} → யசசு] |
யசசுவி | யசசுவி yasasuvi, பெ.(n.) புகழாளன்(சங்.அக.);; illustrious person, renowned man. [Skt. {} → யசசுவி] |
யசனம் | யசனம் yasaṉam, பெ.(n.) வேள்வி செய்கை (சூடா);; the act of sacrificing. [Skt. Yajana → யசனம்] |
யசமானன் | யசமானன் yasamāṉaṉ, பெ.(n.) 1. ஒகத் தலைவன்; sacrifice. 2. தலைவன்(கொ.வ.);; master, lord, patron. 3. வீட்டுத்தலைவன்; head of a family. [Skt. {} → த. யசமானன்] |
யசமான் | யசமான் yasamāṉ, பெ. (n.) யசமானன், 2. பார்க்க;see {}. (கொ.வ.); [Skt. {} → த. யசமானன் – யசமான்] |
யசு | யசு yasu, பெ.(n.) வேதம்நான்கனுள் இரண்டாவது (சிலப்.பக்.339);; Yajur-{}, the second of the four {}. [Skt. Yajus → த. யசு] |
யசுசு | யசுசு yasusu, பெ. (n.) யசு பார்க்க;see {}. [Skt. Yajus → த. யசுசு] |
யசுரு | யசுரு yasuru, பெ. (n.) யசு பார்க்க;see {}. |
யசுர் | யசுர் yasur, பெ. (n.) யசு பார்க்க;see {}. [Skt. Yajus → த. யசு] |
யசுர்வேதம் | யசுர்வேதம் yasurvētam, பெ. (n.) யசு பார்க்க;see {}. [Skt. Yajus → veda] |
யசோதரகாவியம் | யசோதரகாவியம் yacōtarakāviyam, பெ.(n.) உச்சயினி நகரத்து அரசனாகிய யசோதரனைப் பற்றிக் கூறும் ஒரு சைனகாப்பியம்; a Jaina poem on {}, a king of Ujjain. [Skt. {}+ → யசோதர காவியம்.] |
யசோதை | யசோதை yacōtai, பெ.(n.) கண்ணபிரானை வளர்த்த தாய்; foster – mother of Krishna. [Skt. {} → யசோதை] |
யசோவதி | யசோவதி yacōvadi, பெ. (n.) மேருவுக்கு வடகீழ்பால் ஈசானனுக்குரிய நகரம் (சங்.அக.);; the city of {}, situate to the north-east of mount. {}. [Skt. {} → யசோவதி] யஞ்ஞம் __, பெ.(n.); ஒகம்; sacrifice, sacrificial worship, offering of an oblation. [Skt. Yajna → யஞ்ஞம்] |
யஞ்ஞன் | யஞ்ஞன் yaññaṉ, பெ. (n.) நெருப்புக் கடவுள்; the god of fire “இரை யாசையால் வந்த யஞ்ஞா” (தக்கயாகப்.302); [Skt. Yajna → யஞ்ஞன்] |
யஞ்ஞமூர்த்தி | யஞ்ஞமூர்த்தி yaññamūrtti, பெ.(n.) 1. யக்கிய புருடன் பார்க்க;see {}. 2. யக்கிஞ்மூர்த்தி,1. பார்க்க;see {}. |
யஞ்ஞவராகம் | யஞ்ஞவராகம் yaññavarākam, பெ. (n.) திருமால் பன்றியாக உருவெடுத்தத் தோற்றரவு; the boar-incarnation of {}. |
யஞ்ஞோபவீதம் | யஞ்ஞோபவீதம் yaññōpavītam, பெ.(n.) யக்கி யோபவீதம் பார்க்க;see {}. |
யட்சன் | யட்சன் yaṭcaṉ, பெ. (n.) 1. இயக்கன்;{} 2. குபேரன்; Kuberan, the lord and wealth 3. இயக்கன்,2. பார்க்க;see {}. [Skt. {} → த.யட்சன்] |
யட்சம் | யட்சம் yaṭcam, பெ.(n.) 1. நாய் – dog 2. மந்திரம் -mantra [Skt. {} → யட்சம்] |
யட்சவாசம் | யட்சவாசம் yaṭcavācam, பெ.(n.) ஆலமரம்; [Skt. {} → த. யட்சவாசம்] |
யட்சிணி | யட்சிணி yaṭciṇi, பெ.(n.) 1. இயக்கி; female yaksa 2. குபேரனுடைய மனைவி; wife of {}. 3. கொற்றவைக்குப் பணி செய்யும் பெண் கடவுள் a goddess in the service of {}. [Skt. {} → யட்சிணி] |
யட்டி | யட்டி1 yaṭṭi, பெ. (n.) அதிமதுரச்செடி; liquorice plant. யட்டி2 yaṭṭi, பெ.(n.) தண்டாயுதம்.(அக.நி);; club. யட்டி3 yaṭṭi, பெ. (n.) ஊன்று கோல் (யாழ்.அக.); staff, walking stick. யட்டி yaṭṭi, பெ.(n.) முத்தாரம் (யாழ்.அக.);; pearl necklace. [Skt. {} → த. யட்டி] |
யதா | யதா yatā, கு.வி.எ.(adv) எவ்வாறு (வின்); according as, in the same manner as. [Skt. {} → யதா] |
யதா-தானம் | யதா-தானம் yatātāṉam, பெ.(n.) முன்னிருந்த இடம்; [Skt. {} → யதாதானம்] |
யதாசக்தி | யதாசக்தி yatācakti, கு.வி.எ. (adv.) இயன்றளவு (கொ.வ); to the best of one’s ability as far as possible. [Skt. Yatha-{} → த. யதாசக்தி] |
யதாத்திதம் | யதாத்திதம் yadāddidam, கு.வி.எ. (adv.) உள்ளபடி, just as it is; in fact, actually. [Skt. {}-sthita→ யதாத்திதம்] |
யதாநகல் | யதாநகல் yatānagal, பெ. (n.) சரியானபடி (நகல்);; நேர்ப்படி; true copy. [Skt. Yata+ப.நகல்] |
யதாப்பிரகாரம் | யதாப்பிரகாரம் yatāppirakāram, கு.வி.எ. (adv.) 1. அதுவேபோல;(வின்); in like manner. 2. வழக்கப்படி;(உ.வ.); as usual. |
யதாப்பிரதி | யதாப்பிரதி yadāppiradi, பெ.(n.) யதாநகல் பார்க்க;see {}. |
யதார்த்தம் | யதார்த்தம் yatārttam, பெ.(n.) உண்மை; (உ.வ); truth; reality. [Skt. {} + த. யதார்த்தம்] |
யதார்த்தவாதி | யதார்த்தவாதி yatārttavāti, பெ.(n.) உண்மை பேசுவோன்; truth-speaker. [Skt. {} → யதார்த்தவாதி] |
யதி | யதி yadi, பெ.(n.) 1. துறவி; ascetic. “யதியாகி யவணிருந்த தோழன்றன்னை” (பாரத. அருச்சுனன்றீர்.53);. 2. சீரோசை முடியுமிடம் (தண்டி.110.உரை.);; 3. சொற்றொடரில் நிறுத்திப் படிக்கும் இடம் (யாழ்.அக.);; pause in read. 4. தாளப் பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது (பரத.தாள.25);; 5. அடக்கம் (யாழ்.அக.);; restraint. 6. இளைப்பாற்றி (யாழ்.அக.);; that which relieves fatigue. 7. ஒன்றிப்பு (யாழ்.அக.);; concentration. 8. மோனை (வின்);; alliteration. 9. கைம்பெண் (யாழ்.அக.);; widow. [Skt. Yati → த. யதி] |
யதிதிமதி | யதிதிமதி yadidimadi, பெ. (n.) அசையும் மற்றும் அசையா சொத்துகள்; movable and immovable property. |
யதிபங்கம் | யதிபங்கம் yadibaṅgam, பெ. (n.) யதிவழு பார்க்க;see {}. [Skt. Yati+{} → த. யதிபங்கம்.] |
யதிபதி | யதிபதி yadibadi, பெ.(n.) யதிராசன்;பார்க்க;see {}. [Skt. Yati+pati → யதிபதி.] |
யதிபாத்திரம் | யதிபாத்திரம் yadipāddiram, பெ.(n.) இரவலர் கை ஏனம்; begging bowl. (யாழ்.அக.);; [Skt. Yati+pattiram → யதிபாத்திரம்.] |
யதிபாரா | யதிபாரா yadipārā, பெ.(n.) இதிபாரா பார்க்க;see {}. (C.G.); [Skt. Yatit +para → யதிபாரா] |
யதிப்பிரட்டம் | யதிப்பிரட்டம் yadippiraṭṭam, பெ.(n.) யதிவழு (தண்டி.111, குமாரசு. உரை); பார்க்க;see {}. [Skt. Yati + {} → த. யதிப்பிரட்டம்.] |
யதியாசாரம் | யதியாசாரம் yadiyācāram, பெ.(n.) சமண (சைன); முனிவர்கள் ஒழுகுதற்குரிய நெறி(விதி);களைக் கூறும் நூல்;(மேருமந்.424, உரை.);; a treatise on the conduct of jaina ascetices. |
யதிவழு | யதிவழு yadivaḻu, பெ.(n.) ஒசையறும்வழி நெறிப்படவராமல் நிற்பது. (தண்டி.110);; |
யதீந்திரசரணர் | யதீந்திரசரணர் yatīndirasaraṇar, பெ.(n.) கூரத்தாழ்வார். (சங்.அக.);;{}, a disciple of {}. [Skt. {} → த. யதீந்திரசரணர்.] |
யதீந்திரன் | யதீந்திரன் yatīndiraṉ, பெ.(n.) யதிராசன் பார்க்க;see {}. [Skt. {} → த. யதீந்திரன்.] |
யதீந்திரப்பிரவணப்பிரபாவம் | யதீந்திரப்பிரவணப்பிரபாவம் yatīndirappiravaṇappirapāvam, பெ.(n.) பிள்ளைலோ காரிய சீயர் இயற்றியதும் மணவாளமாமுனி களின் வரலாற்றைக் கூறுவதுமாகிய நூல்; a biography of {} by {}. |
யதீந்திரப்பிரவணர் | யதீந்திரப்பிரவணர் yatīndirappiravaṇar, பெ. (n.) மணவாளமாமுனி ; a vai snava {}. [Skt. {}-pravana → த. யதீந்திரப்பிரவணர்.] |
யது | யது yadu, பெ.(n.) நிலவு குலத்து(சந்திர வம்சத்து); யாதவ இனத்து மூல புருடனாகிய அரசன்;(பாரத);; an ancient king of the lunar race, the founder of the {} dynasty. [Skt. Yadu → த. யது] |
யதுநாதன் | யதுநாதன் yadunādaṉ, பெ. (n.) கண்ணன்; lord {}. [Skt. Yadu-{} → த. யதுநாதன்.] |
யதேச்சம் | யதேச்சம் yatēccam, [Skt. {} → த. யதேச்சம்.] |
யதேச்சாதிகாரம் | யதேச்சாதிகாரம் yatēccātikāram, பெ. (n.) விருப்பப்படி ஆணை செலுத்துகை; un controlled exercise of power; autocracy. த.வ. தன்னெடுப்பு, அதிகாரம் [Skt. {} → த. யதேச்சாதிகாரம்.] |
யதேச்சை | யதேச்சை yatēccai, கு.வி.எ. (adv.) யதேச்சையாய் பார்க்க;see {}. த.வ. தன்போக்கு [Skt. {} → த. யதேச்சை.] |
யதேச்சையாய் | யதேச்சையாய் yatēccaiyāy, கு.வி.எ. (adv.) விருப்பின்படி (கோயிலொ.25);; to one’s satisfaction; according to one’s wish or inclination or pleasure. த.வ. தன்போக்காக |
யதேந்திரியம் | யதேந்திரியம் yatēndiriyam, பெ. (n.) கற்புடைமை;(சங்.அக); chastity. [Skt. {} → த. யதேந்திரியம்.] |
யதோத்தேசபக்கம் | யதோத்தேசபக்கம் yatōttēcabakkam, பெ.(n.) ஒரு சொல் நின்றுழி நின்று பலச்சூத்திரங்களும் பலவோத்துக்களும் தன் பொருளே நுதலிவரச் செய்வது (நன். எழுத்து.விருத்.பக்.29.);; (gram); method of interpretation in a treatise, by which the sense of the {} and the subsections of a chapter is controlled by its heading. [Skt. {} → த. யதோத்தேசபக்கம்.] |
யத்தனம் | யத்தனம் yattaṉam, பெ.(n.) முயற்சி; effort, exertion. எத்தனம் பார்க்க;see ettanam. [Skt. Yatna → த. யத்தனம்] |
யத்தினம் | யத்தினம் yattiṉam, பெ.(n.) 1. முயற்சி; effort, exertion. 2. எத்தனம் பார்க்க;see {}. |
யந்திரகிரகம் | யந்திரகிரகம் yandiragiragam, பெ.(n.) 1. பொறி (சூத்திரம்);; machine 2. செக்கு; oil-mill. |
யந்திரக்கல் | யந்திரக்கல் yandirakkal, பெ. (n.) இயந்திரத்தால் இறுக்கியாக்கப்பட்ட செங்கல். (C.E.M.);; pressed brick, as machine- made. [Skt. Yantra → த. யந்திரக்கல்] |
யந்திரசாத்திரம் | யந்திரசாத்திரம் yandiracāttiram, பெ. (n.) 1. எந்திரப் பொறிகளைப் பற்றிய நூல்; treatise on mechanics. 2. மந்திரச்சக்கரம் அமைப்பதைத் தெரிவிக்கும் நூல் (யாழ்.அக.); treatise on the art of constructing diagrams for magical incantations. [Skt. Yantra- → த. யந்திரம்] |
யந்திரசாபம் | யந்திரசாபம் yandiracāpam, பெ. (n.) கொற்றவில் (தக்கயாகப்.643);; victorious bow. [Skt. Yantra+{} → த. யந்திரசாபம்] |
யந்திரதாபனம் | யந்திரதாபனம் yandiratāpaṉam, பெ.(n.) தகடு முதலியவற்றில் விரும்பிய பயனை விளைக்கும் மந்திரசக்கரம் (ஸ்தாபிக்குஞ் சடங்கு); உருவாக்கும் செயல்; ceremonial fixing of a plate or palm leaf engraved with magical diagrams. [Skt. Yantra + stapa → த. யந்திரதாபனம்] |
யந்திரம் | யந்திரம் yandiram, பெ.(n.) 1. சூத்திரப்பொறி; machine, mechanical contrivance. “இக்கரை யந்திரத்துட் பட்டதென்ன” (அஷ்டப், திருவேங்கடத்தத். தனியன்); 2. மந்திரச்சக்கரம்; diagrams for magical incantations. “யந்திரங்கள் வரைந்து கட்டி” (தக்கயாகப்.175);. 3. தேர் (பிங்);; chariot, car. 4. திரிகை. (யாழ்.அக.);; grinding-mil. 5. செக்கு. (யாழ்.அக.);; oil-mill. 6. தீக்கடைகோல் (யாழ்.அக.);; fire-drill. [Skt. Yantra → த. யந்திரம்] |
யந்திரலோகம் | யந்திரலோகம் yandiralōkam, பெ. (n.) பயறு; pulse. [Skt. Yantra → த. யந்திரம் + லோகம்] |
யந்திரவாவி | யந்திரவாவி yandiravāvi, பெ.(n.) எந்திரயுதவியால் நீரை நிறைத்தற்கும் போக்குதற்குரிய நீர்நிலை (சிலப்.3.45 அரும்);; tank or reservoir filled or emptied by mechanical means. [Skt. Yantra → த. யந்திரம்] |
யந்திரவூர்தி | யந்திரவூர்தி yandiravūrti, பெ. (n.) யந்திரவுதவியாற் செல்லுதற்குரிய ஊர்தி (வாகனம்); (வின்);; conveyance moved by mechanism. [Skt. Yantra → த. யந்திரம் + ஊர்தி] |
யந்திரி | யந்திரி yandiri, பெ. (n.) தோலாற்செய்யப்பட்ட இசைக்கருவி; musical instrument made of leather. (t132);. [இய-இயந்திரி-யந்திரி] |
யந்திரு | யந்திரு yandiru, பெ. (n.) 1. ஆளுவோன்; ruler. 2. குதிரைப்பாகன்; horse-groom. 3. தேர்ப்பாகன்; charioteer. [Skt. {} → யந்திரு] |
யமகண்டன் | யமகண்டன் yamagaṇṭaṉ, பெ.(n.) 1. வலியோன்; strong, powerful person. “அந்த யமகண்டனை யார் வெல்லுகிறது” (குருபரம்.190); 2. ஒரு காணாக் கோள்; an invisible planet. 3. யமகண்டம் பார்க்க;see {}. [Skt. Yama → த. யம கண்டன்] |
யமகண்டம் | யமகண்டம் yamagaṇṭam, பெ. (n.) 1. ஒவ்வொரு நாளிலும் காலனுக்கு (எமனுக்கு); உரியதாகக் கருதப்பட்ட மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது; 2. ஒருவன் வாணாளில் (ஆயுளில்); உயிருக்கு பேரிடைஞ்சலான (அபாயமான); காலம்; the period of danger to one’s life. [Skt. Yama → த. யம + கண்டம்] |
யமகண்டம்பாடு-தல் | யமகண்டம்பாடு-தல் yamagaṇṭambāṭudal, . உயிருக்கு பேரிடைஞ்சலான கட்டுப்பாட்டுக் (அபாயமான நிபந்தனைக்) குட்பட்டு பாடுதல்; to compose verses under stringent conditions, the penalty for the breach of which is death. [Skt. Yama → த.யம+ கண்டம் +பாடு] |
யமகண்டவேளை | யமகண்டவேளை yamagaṇṭavēḷai, பெ.(n.) யமகண்டம் பார்க்க;see {}. [Skt. Yama → த. யம + கண்டவேளை] |
யமகம் | யமகம் yamagam, பெ.(n.) வந்த எழுத்துகளே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி.(தண்டி.90 வரை); repetition, in a stanza, with changes of meaning sometimes effected by changes in the division of words, dist.fr, tiripu. [Skt. Yamaka → த. யமகம்] |
யமகவந்தாதி | யமகவந்தாதி yamagavandāti, பெ.(n.) யமகத்தோடு வரும் அந்தாதி; a kind of {} poem with yamakam in each verse. “யமக வந்தாதியை வாசிமினே” (அஷ்டப். திருவரங்கத் தந். தனியன்);. [Skt. Yamaka → த. யமகவந்தாதி] |
யமகாதன் | யமகாதன் yamakātaṉ, பெ. (n.) 1. பேராற்ற லுள்ளவன். (உ.வ);; man of great ability. 2. மிகச் சமர்த்தன்; man of great intelligence. 3. மிகவும் பொல்லாதவன்; wicked man. [Skt. Yama + த. யகமகாதன்] |
யமகாளிந்தி | யமகாளிந்தி yamakāḷindi, பெ. (n.) சரயுநதி; the river {}. (யாழ்.அக.); [Skt. {} + யமகாளிந்தி] |
யமகிங்கரன் | யமகிங்கரன் yamagiṅgaraṉ, பெ. (n.) 1. யமதூதன்1 பார்க்க;see yama-{}. 2. யமபடன் பார்க்க;see {}. |
யமகீடம் | யமகீடம் yamaāṭam, பெ. (n.) புழுவகை; wood-louse. (சங்.அக.);. [Skt. Yama-{} → த. யமகீடம்] |
யமசபம் | யமசபம் yamasabam, பெ. (n.) காலனது அவை (இயமனது சபை); (யாழ்.அக.);; yama’s court. [Skt. Yama-sabha + த. யமசபம்] |
யமதக்கினி | யமதக்கினி yamadakkiṉi, பெ.(n.) a sage. சமதக்கினி எனும் முனிவன்; பார்க்க;see {}. [Skt. Jamadagni → த. யமதக்கினி] |
யமதங்கி | யமதங்கி yamadaṅgi, பெ.(n.) a sage சமதக்கினி;பார்க்க; (தொல்.பாயி.உரை);;see {}. [Skt. Yamadagni → த. யமதங்கி] |
யமதங்கிமைந்தன் | யமதங்கிமைந்தன் yamadaṅgimaindaṉ, பெ.(n.) பரசுராமன்;{} யமதங்கி- மைந்தனைச் சாரவே (பாரத.குருகுல.134);; [யமதங்கி+மைந்தன்] [Skt. Jamadagni → த. யமதங்கி] |
யமதர்மராசன் | யமதர்மராசன் yamadarmarācaṉ, பெ.(n.) 1. காலன்; yaman 2. நடுவு நிலை குன்றாதவன்; just, upright man. [Skt. Yama + tarama+{} → த. யமதர்மராஜன்] |
யமதூதன் | யமதூதன் yamatūtaṉ, பெ.(n.) 1. காலனது தூதன்; messenger of yama. 2. யமதூதி;பார்க்க;see yama-dudi. (யாழ்.அக.); [யமன் + தூதன்] [Skt. Yama → த.யம] |
யமதூதி | யமதூதி yamatūti, பெ.(n.) நாகத்தின் நச்சுப்பல் நான்கனுளொன்று (சீவக.1288,உரை);; a fang of the serpent, one of four naccu-p-pal, q. [Skt. Yama+{} → த. யமதூதி] |
யமனி | யமனி yamaṉi, பெ.(n.) யமபுரம் பார்க்க;see yamapuram. “யமனி சாரும்” (சிவதரு. சுவர்க்க நரக.41); [Skt. Sam-yamani → த. யமனி] |
யமனிகை | யமனிகை yamaṉigai, பெ.(n.) யவனிகை பார்க்க;see {}. [Skt. {} → யமனிகை] |
யமன் | யமன் yamaṉ, பெ. (n.) 1. எண்திசைக் காவலருலொருவனும் தென்திசைக்கு உரியவனுமான கடவுள் (திவா.);; yaman, the God of death, regent of the South, one of {}. q.v. “எருமைப் பகட்டின் மிசை யமனேறவே” (தக்கயாகப். 463.);; 2. நாகத்தின் நச்சுப்பல் நான்கனுளொன்று (சீவக. 1288, உரை);; a fang of the serpent, one at four naccu-p-pal. q.v. [Skt. Yama → யமன்] |
யமபகினி | யமபகினி yamabagiṉi, பெ. (n.) யமுனை நதி; the river yamunai. (யாழ்.அக.); [Skt. Yama+bhagini → த. யமபகினி] |
யமபடன் | யமபடன் yamabaḍaṉ, பெ. (n.) இயமனது ஏவலாள்; servant of yama “யமபட ரெனுந்திமிர மணுகாக் கதி” (தாயு.மலைவளர்.1); [Skt. Yama → த. யம] |
யமபடம் | யமபடம் yamabaḍam, பெ.(n.) யமஉலகத்தின் விவரங்களையும் அங்கே பாவிகள் நுகரும் துன்பங்களையுங் காட்டும் சித்திரப்படம்; map or picture of yama’s world, showing in detail the tortures inticted on sinners. [Skt. Yama → த. யமபடம்] |
யமபுரம் | யமபுரம் yamaburam, பெ.(n.) எமனுடைய பட்டணம்(சங்.அக.);; yaman’s city. [Skt. Yama → த. யமபுரம்] |
யமபுரி | யமபுரி yamaburi, பெ.(n.) யமபுரம் பார்க்க;see yama- puram “யமபுரியேறுவர்” (பெருந்தொ.1176);. |
யமப்பிரியம் | யமப்பிரியம் yamappiriyam, பெ.(n.) 1. அத்தி country fig 2. ஆலமரம் banyan. [Skt. Yama+priya → த. யமப்பிரியம்] |
யமயாதனை | யமயாதனை yamayātaṉai, பெ.(n.) இயம வேதனை பார்க்க;see yama-{}. [Skt. Yama+ {} → த. யமயாதனை] |
யமரதம் | யமரதம் yamaradam, பெ.(n.) யமவாகனம் பார்க்க;see {}. [Skt. Yama+ratha → த. யமரதம்] |
யமராசன் | யமராசன் yamarācaṉ, பெ.(n.) இயமன் பார்க்க;see yaman. “அடைமொரு தண்டி லெற்றும் யமராசன்” (தக்கயாகப். 444); [Skt. Yama-{} → த. யமராசன்] |
யமற்கேளம் | யமற்கேளம் yamaṟāḷam, பெ. (n.) கடுக்காய் chebulic myrobalan. |
யமலோகம் | யமலோகம் yamalōkam, பெ. (n.) 1. எமனுடைய உலகம்; yaman’s world. 2. நரகம்; hell; place of torture. [Skt. Yama → த. யமலோகம்] |
யமளம் | யமளம் yamaḷam, பெ. (n.) இணை;இரட்டை (யாழ்.அக.); couple; pair; twins. [Skt. {} → த. யமளம்] |
யமவாதை | யமவாதை yamavātai, பெ.(n.) யமவேதனை பார்க்க;see yama-{}. [Skt. Yama+{} → த. யமவாதை] |
யமவிரதம் | யமவிரதம் yamaviradam, பெ. (n.) 1. இயமத்தைக் கடைபிடிக்கை; practice of iyamam;(யாழ். அக.); 2. ஒருபாற்கோடாது (பாரபட்சமின்றி); அரசுமுறை நடத்துகை; impartial adminis- tration of government. [Skt. Yama → த. யம + விரதம்] |
யமவேதனை | யமவேதனை yamavētaṉai, பெ.(n.) பெருந்துன்பம் (கொ.வ); excruciating pain. [Skt. Yama+{} → த. யமவேதனை] |
யமுனை | யமுனை yamuṉai, பெ.(n.) பிரயாகையிற் கங்கை யாற்றுடன் கலக்கும் ஓர் ஆறு; Jamuna which joins the Ganges at {}. யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின் (திவ். நாய்ச்.12,4); [Skt. Yamuna → த. யமுனை] |
யமுனைத்துறைவன் | யமுனைத்துறைவன் yamuṉaittuṟaivaṉ, பெ.(n.) 1. கண்ணன்; Kannan, as lord of the region of the Jamuna. “தூய பெருநீர் யமுனைத் துறைவனை” (திவ்.திருப்பா.5);. 2. மாலியச்சான்றோரான ஆளவந்தார்; a Vaishnava accaryar. எதிகட்கிறைவன் யமுனைத்துறைவன் (திவ்.இராமாநூசநாற்.21);. |
யா | யா yā, compound of ய் and ஆ, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும். ‘ஆ’ என்ற நெட்டுயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the long vowel ‘a’ to the consonant ‘y’. காலந்தோறும் கல்வெட்டுக்களிற் காணப்படும் யகர ஆகாரத்தின் வரிவடிவ வளர்ச்சி :- கி.மு.2,3-ஆம் நூற்றாண்டுகளில் அசோகர் காலத்து தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிற் காணப்படும் வரி வடிவம் கி.மு.2,3-ஆம் நூற்றாண்டுகளில் குகைகளில் காணப்படும் தமிழி யெழுத்துக் கல்வெட்டில் காணப்படும் வரிவடிவம் கி.பி.5,6,7-ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவம். கி.பி.8-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் காணப்படும் வரி வடிவம் கி.பி.9-ஆம் நூற்றாண்டுக் கல் வெட்டுகளில் காணப்படும் வரிவடிவம் கி.பி.10.11-ஆம் நூற்றாண்டுகளில் சோழர் காலக் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவம் கி.பி.11.12-ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவம் கி.பி.14,15-ஆம் நூற்றாண்டுகளில் விசயநகர மன்னர் கல்வெட்டுகளில் காணப்படும் வரிவடிவம் கி.பி.18,19-ஆம் நூற்றாண்டில் யகர ஆகாரம் இன்றைய வரிவடிவத்தை எய்தியது எனலாம் கி.பி.20-இல் தற்கால வரிவடிவம். யா2 yā, பெ. (n.) யாவை; what or which things, “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” (குறள்’ 54);. யா3 yā, பெ. (n.) அஃறிணைப்படர்க்கைப் பன்மை வினா; third person inferior beings plural question. 2. அசைச்சொல்; a rhythmic word 3. ஓரெழுத்து; a letter of Tamil alphabet. 4. ஐயம்; doubt, apprehension. 5.இல்லை; nothing. யா4 yā, பெ.(n.) 1. கருமைப் பொருண்மை யினைக் குறிக்கும் ஒரெழுத்து ஒருமொழி; a monosyllabic unique word describing the blackish nature of the subject. 2. கரிய மரம்; a black tree. “உம்பல் அகைத்த ஒள்முறி யாவும்” (மலைபடு 429);. 3. ஓர் மரம்; ebony-tree, Ceylon ebony – Diospyros ebenaster. 4. மரவகை (தொல். எழுத்து.229);; a tree. “யானை யொடித்துண்டெஞ்சிய யா” (குறுந் 232);. 5. அகலம் (நாமதீப. 778);; breadth, width த.யா → skt. { } = dark. dark-brown. { } = { } = black. த.யா → skt. { } → { }. { } = darkness. “யா” என்னும் ஓரசைச்சொல் கருமைக் கருத்தினை முதன்மையாக அல்லது அடிப்படையாகக் கொண்டது; அதே போழ்தில், கரிய, பருத்த அடிப்பகுதியினைக் கொண்ட யாமரத்தையும் குறிக்குந் தன்மைத்து. மூலச் சொல்லின் முதனிலையாகிய வேர்ப்பகுதியிலேயே, கருமைப் பொருள் பொதிந்துள்ளது. உளங்கொளத் தக்கதொன்றாகும். இக் கருமைக் கருத்து மூலவேர் பற்றிச் சொல்லாய்வாளர் ப.அருளியார் கூறுவது : “கருமை என்னும் நிறக்கருத்து அடிப்படையில் மரவகையினுள் ஒன்று, “யா”-என்றவாறே, பண்டைய நம் தமிழ் மாந்தர்களால் கட்டப்பெற்றது ஈராயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகம் முழுமைக்கும் மிகப் பரவலாகவும் தெளிவாகவும் இனந்தெரிந்திருந்த இம் மரம். இன்றைக்கு மிகப்பெரிய நிலைத்தினை (தாவர);வியல் அறிஞர்களாலேயே எம்மரம் என்று, கண்டறிய முடியவில்லை என்றவாறு, கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் மறைதிறத்ததாகும்! யா5 yāttal, 4 செ.கு.வி. (v.i.) 1. பிணித்தல்; lure, decoy. 2. ஒன்றோ டொன்று பொருத்துதல், கட்டுதல்; to tie up. ‘யானையால் யானையாத் தற்று” (குறள், 678);. 3. நீர் முதலியன அணைத்தல்; to dam up, to confine. “பெருக யாத்தநீர்” (காஞ்சிப்பு:நாட்75);. 4. விட்டு நீங்காதிருத்தல்; to be inseparable from, “பெருக யாத்தநீர்” (காஞ்சிப்பு:நாட் 75); “மற்றவனை யாக்குமவர் யாக்கு மணைந்து” (எலா.8);. 5. அணிதல், கட்டிக் கொள்ளுதல்; to adorn. “மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும்” (புறநா.378:77);, 6. செய்யுள் முதலியன அமைத்தல்; to compose, as a poem. “மொழி பெயர்த்ததர்ப்பட யாத்தல்”(தொல்,பொருள். 652);. 7. சொல்லுதல்; to tell, utter, say. “சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்”(தொல், பொருள், 655);. 8. தொடர்பு கொள்ளுதல்; to contact “குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு”(குறள் 793);. [யா → யாத்தல் = ஒன்றோடொன்று பொருந்துதல், கட்டுதல், பிணித்தல்.] “யா” என்னும் பொருந்துதற் கருத்து வேர்மூலத்தினின்று தோன்றிய சொல். யா → யாக்கு → யாக்கை பல்வகைத் தாதுக்களாலும், நரம்பு, நார், தசை, எலும்பு போன்றவற்றால் பொருத்திக் கட்டப்பெற்ற உடல். யா → யாப்பு = கட்டு, கட்டுவடம், பிணிப்பு – கட்டுத்துணி. யா → யாத்தல் = ஒன்றோடொன்று பொருந்துதல், கட்டுதல், பிணித்தல், அணிதல், கட்டிக் கொள்ளுதல், தொடர்பு கொள்ளுதல், விட்டு நீங்காதிருத்தல், செய்யுள் முதலியன கட்டுதல் போன்ற பொருண்மைகளில், தொல்காப்பியம் முதல், அனைத்துக் கழக இலக்கியங்களிலும், வழக்கூன்றி யுள்ளது. “யா” என்னும் இப்பொருந்துதற் கருத்து மூலவேர், “இய்” என்னும் விதைச் சொல்லினின்று தோன்றியது. இது பற்றிய விளத்தம் வருமாறு : இய் → இய → இயா → யா. 1. இய் → இயை → இயைதல் = 1. பொருந்துதல், சேர்தல், அணுகுதல், நேர்தல் போன்ற பொருட்பாங்கினில், “இய்” என்னும் மூல வேரினின்று முகிழ்த்த “இயைதல்” என்னும் சொல், பயின்று வந்துள்ளமைக்கான எடுத்துக்காட்டு: “என்போ டியைந்த வமிழ்து” (நாலடி, 210);. இணங்குதல், உடன்படுதல், மனம் இசைதல் அல்லது பொருந்துதல். புணர்தல், கூடுதல். ஒத்தல், போலுதல். 2. இயை + (த்); + தல் – இயைத்தல் பொருத்துதல், சேர்த்தல். இயைய = ஒர் உவமவுருபு. இயை + வு – இயைவு = சேர்க்கை. மேற்குறித்த பொருட்பொருத்தப்பாட்டுடன் இயைந்ததும், இலக்கியச் சான்றுகளுடன் கூடியதுமான அடிப்படைத் தரவுகளின் வாயிலாக, “யா” என்னும் பொருந்துதல் கருத்துக் கிளைவேர், “இய்” என்னும் மூலமுதல் வேரினின்று முகிழ்த்தது எனலாம். கீழ்க்காணும் சான்றுகளும் பொருந்துதல் கருத்துத் தோற்றத்தினை நிலைநிறுத்தும் வண்ணம் அமைந்துள்ளன. இயைவு → இயைபு = பொருத்தம், புணர்ச்சி, இணக்கம். இசைவு = பொருத்தம், தகுதி. யகர சகரத்திரிபு = இயை → இசை = பொருத்து. 3. இசை + தல் – இசைதல் = பொருந்துதல். ஒத்துச் சேர்தல், கலத்தல், உடன்படுதல். இசை + (த்); + தல் – இசைத்தல் = பொருந்துதல், கட்டல், ஒத்தல். யகர ழகரத்திரிபு = இயை → இழை = பொருந்து. இழை + தல் – இழைதல் = கூடுதல், பிணைதல். மனம் பொருந்துதல், நெருங்கிப் பழகுதல். இழை + (த்); + தல் – இழைத்தல் பொருத்துதல், பதித்தல், செய்தல். இத்தகைய பொருண்மைகளைத் தன்னகத்தே கொண்ட, பொருந்துதற் கருத்து வேர்மூலம் பற்றி விளக்க வந்த சொல்லாய்வறிஞர் அருளியார், “மிகப் பலவாகிய பொருட்செறிவு சான்ற இனச் சொற்களைத் தமிழில் வளர்வுறச் செய்வதற்கு அடிப்படை மூலக்கருவாக இருந்த “இய்” என்னும் மூலவேரே, இய் → இய → இயா → யா என்றவாறு வளர்ந்து, எளிய நெட்டொலியாக நின்று, அப்பொருந்துதற் கருத்தையே அடிப்படையாகக் கொண்ட கிளைவேராக வளர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட சொல்வடிவங்களைத் தோற்றுவிக்கக் காரணக் கருவாயிற்று” (“யா”-பக்.211);. என்று குறிப்பிட்டுள்ளது, ஈங்கு கருதத்தக்கது. தொல்காப்பியந் தொட்டு, அனைத்துக் கழக இலக்கியங்களிலும், யாத்தல் என்னுமிச்சொல், ஒன்றோடொன்று பொருந்துதல், கட்டுதல், பிணித்தல், கட்டிக் கொள்ளுதல், அணிதல், செய்யுள் முதலியன கட்டுதல் போன்ற பொருண்மைகளில் ஆளப்பட்டுள்ளது. ஒன்றோடொன்று பொருந்துதல், கட்டுதல் என்னும் பொருளில், “காஞ்சியி னகத்துக் கரும்பருத்தி யாக்குந் திம்புனல் ஊர” (அகநா. 156.6:7);. 2. பிணித்தல் என்னும் பொருளில் ‘யானையால் யானையாத் தற்று” (குறள் 678);. 3. செய்யுள் முதலியன கட்டுதல் என்னும் பொருட்பாங்கில். “மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல்” (தொல், பொருள்.652);. 4. அணிந்து கொள்ளுதல், கட்டிக் கொள்ளுதல் என்னும் பொருண்மையில், “அரைக்கு அமைமரபின மிடற்றுயாக்குநரும் மிடற்றமை மரபின அரைக்கு யாக்குநரும்” மேற்குறித்த இலக்கிய வழக்குகள் அனைத்தும், பொருந்துதல் பொருண்மையினை அடிப்படையாகக் கொண்டவையே. இப் பொருந்துதல் கருத்தின் மூலவேர். “இய்” என்பதேயாகும். |
யா அ | யா அ yāa, பெ.(n.) 1. செய்யுளில் மட்டும் பயின்றுவரும், “யா” என்பதன் அளபெடை; lengthening of sound in { } in poetry. “யாஅ ஒண்டளிர் (அகநா. 331.1);. 2. யா அம் பார்க்க; see { }. கழகக்காலப் புலவர்கள், “யா” எனும் நெடிலை செய்யுளில் ஒசை நிறைத்தற்பொருட்டு, “யாஅ” என்று அளபெடையாகக் குறித்துள்ளனர். (எ.டு); “யாஅ வரிநிழல்” (குறுந்-232:4-5);, “நீடுநிலையாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்”(அகநா.263, 8); |
யாஅம் | யாஅம்1 yāam, பெ.(n.) யாமரம் பார்க்க; see{ } “நெடுநிலை யாஅம்” (அகநா. 659:8);. “மென்சினை யாஅம் பொளிக்கும்” (குறுந் 37:2);. [யா → யாஅ → யாஅம்] யாஅம்2 yāam, பெ.(n.) செய்யுளில் மட்டும் காணப்பெறும், “யாஅ” என்பதன் அளபெடை; lengthening of sound { } in poetry. “பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்”(குறுந் 37 2-7);. [யா → யாஅ → யாஅம்] “யாஅ” என்னும் வடிவே, யாமரம் என்னும் பொருண்மையில், அளபெடுத்த வடிவமாக “யாஅம்” என்று கழகக்காலப் புலவர்களால் குறிக்கப்பட்டுள்ளது. (எ.கா.); “நெடுநிலை யாஅம்” (அகநா.659.9);. |
யாக நிலை | யாக நிலை yākanilai, பெ.(n.) யாகசாலை பார்க்க;see {}. “வான்றருஞ் சுரபி யாக நிலைபுக” (இரகு. தேனுவ.52.); [Skt. Yama+→ த. யாகம் + நிலை] |
யாகசாலை | யாகசாலை yākacālai, பெ. (n.) வேள்வி மண்டபம்; sacrificial hall. [Skt. {} → த. யாகசாலை.] |
யாகத் திரவியம் | யாகத் திரவியம் yākattiraviyam, பெ.(n.) வேள்விப் பொருள்; articles of sacrifice. [Skt. {}+tiraviyam → யாகதிரவியம்] |
யாகத்தம்பம் | யாகத்தம்பம் yākattambam, பெ. (n.) வேள்வித் தூண், யூபம். (தக்கயாகப்.505.உரை);; sacrificial post. [யாகம்+தம்பம்] [Skt. {} → த. யாக +தம்பம்] |
யாகபதி | யாகபதி yākabadi, பெ.(n.) 1. வேள்வியியற்றுபவன்; one who performs a sacrifice; 2. இந்திரன்;(இலக்.அக.); {}. [Skt. {}+→ யாகபதி] |
யாகபத்தினி | யாகபத்தினி yākabattiṉi, பெ.(n.) 1. யாகபதியின் மனைவி; wife of {} pati or sacrificer, as taking part in the sacrifical ceremonies. “இவர் தமக்குரியாளகிய யாகபத்தினியுமான(பாரத. சூது.199);” 2. திரெளபதி;(யாழ்.அக.); Draupadi. [Skt. {} → த. யாகபத்தினி] |
யாகபன்னி | யாகபன்னி yākabaṉṉi, பெ.(n.) 1. யாகபத்தினி பார்க்க;see {} மாமியென் றியாக பன்னியை (தக்கயாகப்.504); [Skt. {} → த. யாகபன்னி] |
யாகபாகம் | யாகபாகம் yākapākam, பெ.(n.) 1. அவிர்ப்பாகம்; [Skt. {} → த. யாகம் + பாகம்] |
யாகபாரி | யாகபாரி yākapāri, பெ.(n.) யாகதட்சிணை(யாக புருடன் மனைவி); “தக்கணை யாக பாரியென” (இரகு. அரசி.20);; fees given at a sacrifice, considered as the wife of sacrifice personified. [Skt. {} → த. யாகபாரி] |
யாகபேரம் | யாகபேரம் yākapēram, பெ.(n.) கோயிலுள் ஒகச் சாலைக்குரிய மூர்த்தி (Loc);; the idol that presides over the sacrificial hall of a temple. [Skt. {} → யாகபேரம்] |
யாகபோசனர் | யாகபோசனர் yākapōcaṉar, பெ.(n.) வானோர்;(யாழ்.அக.); Gods. [Skt. {} → த. யாகபோசனர்] |
யாகப்பப்பிள்ளை | யாகப்பப்பிள்ளை yākappappiḷḷai, பெ. (n.) தூது பனுவர், வானவன் விடு தூது போன்ற நூல்களை எழுதியவர், இவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராவார்; wrote treatiss like { } { } 19th C. யாகவுப்பு yākavuppu, பெ. (n.) மருந்துப்பு: a kind of medicinal salt. [யாக + உப்பு] |
யாகப்பிறையான் | யாகப்பிறையான் yākappiṟaiyāṉ, பெ.(n.) தக்கனது ஒகத்தினால் தோன்றிய நிலவு; the moon arising our of Daksa’s sacrificial fire. “யாகப்பிறையா னினியென்னகம் புகுந்து (தக்கயாகப்.63, விசேடக் குறிப்பு); [Skt. {} → யாகம் + பிறையான்] |
யாகமண்டபம் | யாகமண்டபம் yākamaṇṭabam, பெ.(n.) யாகசாலை பார்க்க;see {}. [Skt. {} → த. யாகம் + மண்டபம்] |
யாகம் | யாகம் yākam, பெ.(n.) 1. பதினெட்டு வகைப்பட்ட வேள்வி; 2. ஐவகை(ஓகம்);; sacrifice of five kinds. 3. ஐவகையாகம்; venetics of siritual discipline. 4. திருவாராதனம்; worship. [Skt. {} → த. யாகம்] |
யாகவிபாகம் | யாகவிபாகம் yākavipākam, பெ.(n.) ஒகத்திற் கிடைக்கும் அவிர்ப்பாகம்; oblations at a sacrifice. “இழைத்த யாகவிபாக முற்பட வுண்ணலாம்” (தக்கயாகப்.248); [Skt. {}+vib → த. யாகவி] |
யாகவுப்பு | யாகவுப்பு yākavuppu, பெ.(n.) பூரணாதியுப்பு (மூ.அ.); பார்க்க;see {}. [Skt. {} → யாக + உப்பு] |
யாகவேதி | யாகவேதி yākavēti, பெ. (n.) வல்லமை யுள்ள மூலிகை 23ல் ஒன்று; one of the 23 strong drugs. [யாக + வேதி] |
யாகாட்டம் | யாகாட்டம் yākāṭṭam, பெ. (n.) வெள்ளை நாயுருவி; ordinary species of Indian burr. [யாகம் + ஆட்டம்] |
யாகுவம் | யாகுவம் yākuvam, பெ.(n.) சாவகத்தீவு;(யாழ்.அக.); the island of Java. [Perh. {} → த. யாகுவம்] |
யாக்கு-தல் | யாக்கு-தல்2 yākkudal, 5 செ.கு.வி. (v.i.) யாக்குதல்; to compose, to create afrsh. |
யாக்குதல்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
யாக்குவி-த்தல் | யாக்குவி-த்தல் yākkuvittal, 4 செ.கு.வி. (v.i.) பழக்குவித்தல்; to tame, to accustom. |
யாக்கெரு | யாக்கெரு yākkeru, பெ. (n.) கொன்றை; cassia. |
யாக்கை | யாக்கை yākkai, பெ.(n.) 1. கட்டுகை; tie, bond, 2. உடம்பு; body, “யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு” (குறள் 79);, “காக்கைக்கும் கழுகுக்கும் இரையாகும் இந்த யாக்கை”, “நீரில் எழுத்தாகும் யாக்கை………. ” க.வா. குமரகுருபர். [யா + கு – யாகு → யாக்கு + ஐ- யாக்கை] “யா” என்னும் பொருந்தற் கருத்து மூலத்தினின்று முகிழ்த்த சொல் நரம்பு-நார்-எலும்பு-தசை-அரத்தம் முதலியவற்றால் கட்டுறப் பெற்றதாகிய உடம்பு, உடல், யாக்கை. “நீர்இன்று அமையா யாக்கைக்கு” (புறநா. 18:18); இச்சொல்லின் பொருட்பொருத்தப்பாடு பற்றிச் சொல்லாய்வாளர் ப. அருளியார் கூறுவது : “யா → யாத்தல் = பொருத்துதல், கட்டுதல் (யாழ்.அக.);. “யா” என்னும் பொருந்துதல் கருத்துக் கிளைவேர் நூற்றுக்கு மேற்பட்ட சொல் வடிவங்களைத் தோற்றுவித்துள்ளது” கட்டுதல், பிணித்தல், பொருத்துதல் போன்ற பொருட் பொருத்தப்பாட்டில் யாக்கை என்னும் இச்சொல் கழகவிலக்கியங்களில் ஏராளமாக வழக்கூன்றியுள்ளது. யாக்கை என்னும் பெயர்குறித்து மொழிஞாயிறு மொழிவது :-யாக்கை என்பது ஆகுபெயர். எழுவகைத் தாதுக்களால் யாக்கப்பட்டது. யாத்தல் = கட்டுதல் (தேவ.12, பக்.205);. |
யாக்கைக்குறுகுற்றம் | யாக்கைக்குறுகுற்றம் yāggaigguṟuguṟṟam, பெ. (n.) யாக்கைக்குற்றம், 2 (சது.); பார்க்க; see { }. [யாக்கை + கு உறு + குற்றம்] |
யாக்கைக்குற்றம் | யாக்கைக்குற்றம் yākkaikkuṟṟam, பெ. (n.) 1. கொட்டாவி, நெட்டை, குறுகுறுப்பு, கூன் கிடை, நட்டுவிழல் என்பனவாகிய உடலில் உண்டாம் ஐந்து வகைக் குற்றங்கள் (பிங்.);; ill mannered bodily action, of which there are five kinds, viz: { } { } { } { } { } 2. நிலைநின்ற குற்றம் (தோஷம்);; permanent defect. “என் செய்வினையா மெய்க்குற்ற நீக்கி” (திவ். இராமாதுச. 26);. 3.. பதினெண்குற்றம் (பிங்.);; the eighteen kinds of defects of the human body. |
யாக்கைசித்தியாக்கி | யாக்கைசித்தியாக்கி yākkaisittiyākki, பெ.(n.) எருமைக் கனைச்சான்; seperation of body after attainment or final liberation. |
யாக்கையன் | யாக்கையன் yākkaiyaṉ, பெ. (n.) தசை, எலும்பு, நார், அரத்தம், கொழுப்பு போன்ற தாதுக்களாற் கட்டப்பெற்றவன்; man bind or made of flesh, bone, nerves, blood and fat, “வடிந்த யாக்கையன்” (புறம், 180:6);. [யாக்கை + அன்] “அன்” ஆண்பாலீறு. மானுடயாக்கையானது. தசை, எலும்பு, நரம்பு முதலான, பல்வகைப் பொருட்களால் கட்டப்பெற்றது. இவ்வாறு பொருத்திய உடம்பினையுடைய மாந்தன் உடம்பினன், உடலினன் என்னும் பொருட் பொருத்தம், விளங்கித் தோன்றும் வண்ணம் “யாக்கையன்” என்று குறிக்கப் பெற்றான். |
யாங்கணும் | யாங்கணும் yāṅgaṇum, பெ. (n.) எங்கும்; every-where, “எஞ்ஞான்றும் யாங்கனும் யார்க்கு மெளிது” (குறள், 864);. [யாங்கண் + உம்] |
யாங்கண் | யாங்கண் yāṅgaṇ, வி.எ.(adv.) எவ்விடம்; where. [யா + கண்] |
யாங்கனம் | யாங்கனம் yāṅgaṉam, பெ.(n.) எவ்வாறு; how, in what manner, of what nature. “யாங்கனம் தாங்குவென்” (நற்.381:6);. “யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்” (புறநா. 8);. [யாங்க + அனம் → யாங்கனம். “அனம்” = சொல்லாக்க ஈறு.] |
யாங்கர் | யாங்கர் yāṅgar, பெ.(n.) அரக்கர் (அக.நி);; araggaragani, devil spirited persons demon, giant. யாங்கர் yāṅgar, பெ.(n.) அரக்கர்;{} (அக.நி.);. |
யாங்கள் | யாங்கள் yāṅgaḷ, பெ.(n.) தன்மைப் பன்மைப் பெயர்; we. [எம் → யாம் + கள் – யாங்கள்.] ஒ.நோ. நாம் + கள் – நாங்கள், எம் + கள் – எங்கள். “கள்” பன்மையீறு. தனித்தன்மைப் பன்மைப் பெயர் வழக்கற்றுப் போனதினால், இன்று அதன் இடத்தில் ‘நாங்கள்’ என்னும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப்பெயர் தன் உளப்பாட்டுப் பொருளையிழந்து வழங்குகின்றது. |
யாங்கு | யாங்கு1 yāṅgu, வி.எ.(adv.) 1. எவ்விடம், எங்கு; where. “கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ” (குறள் 1070);. 2. எவ்வாறு; how, in what manner, of what nature. “யாங்கு வல்லுநையோ” (ஐங்குறு 231);. க. ஹேகெ. [யா + அங்கு → யாஅங்கு → யாங்கு] ஆங்கு → அங்கு = அவ்விடம் (கலித்.145:6); யாங்கு2 yāṅgu, பெ. (n.) ஐயப்பொருளை யுணர்த்துஞ் சொல்; doubtful word. [யாஅங்கு + யாங்கு] |
யாங்கும் | யாங்கும் yāṅgum, பெ. (n.) எவ்விடத்தும்: everywhere. “யாங்குமுளன் யாங்கு மிலன்……. எம்மான்” (குற்ற தல, தக்கன் வேள்.5);. |யாங்கு → யாங்கும்] |
யாங்ங்ணம் | யாங்ங்ணம் yāṅṅṇam, பெ.(n.) 1. எவ்விடம்: where, “கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ” (குறள் 1070);. 2. எவ்வாறு ; how. in what manner, of what nature. “யாங்கு வல்லுநையோ” (ஐங்குறு.231); [யாங்கனம் → யாங்ஙனம்] |
யாசகத்திருநாள் | யாசகத்திருநாள் yācagattirunāḷ, பெ.(n.) பலரிடத்தும் இரந்து பெற்று நடத்துந்திருவிழா(இ.வ.);; festival performed by raising donations to meet the expenses. [Skt. {} → த. யாசகம்] |
யாசகன் | யாசகன்1 yācagaṉ, பெ.(n.) இரப்போன்;(திவா); beggar menddicant. [Skt. {} → த. யாசகன்] யாசகன்2 yācagaṉ, பெ.(n.) வேள்வி செய்விப்பவன்; priest offciating at a sacrifice. [Skt. {} → த. யாசகன்] |
யாசகம் | யாசகம்1 yācagam, பெ.(n.) இரப்பு; begging “யாசகத்தினிழி வரவு” (சேது.சேதுசருக்.மே); [Skt. {} → த. யாசகம்] யாசகம்2 yācagam, பெ.(n.) 1. அரசயானை; Royal elpehant. 2. மதயானை; rutting elephant. [Skt. {} → த. யாசகம்] |
யாசசர்க்கரை | யாசசர்க்கரை yāsasarkkarai, பெ. (n.) பூனைக்காலிச் செடியின் சாற்றினின் றெடுக்கும் சருக்கரை; salt, extracted from juices of { } plant. |
யாசனம் | யாசனம் yācaṉam, பெ.(n.) வேதியனாக இருந்து யாகஞ்செய்விக்கை; enabling one to perform a sacrifice by officiating as priest. [Skt. {} → த. யாசனம்] |
யாசனை | யாசனை yācaṉai, பெ.(n.) 1. வேண்டுதல்; request. 2. பிச்சை (சங்.அக); alms. [Skt. {} → த. யாசனை] |
யாசி-த்தல் | யாசி-த்தல் yācittal, இரத்தல் beg; to ask alms. “எத்தகையோர்களும் யாசிக்கப்படும் அத்தகை வித்தக” (விநாயகபு. 4.73.36); [Skt. {} → த. யாசி] |
யாசிதகம் | யாசிதகம் yācidagam, பெ.(n.) 1. வட்டி முதலியன இன்றித் திருப்பிக் கொடுப்பதாகப் பெற்ற பொருள்;(சுக்கிரநீதி,96); that which is lent without interest. 2. வாடகையின்றி பயன்படுத்தித் திருப்பிக் கொடுப்பதாகப் பெற்ற பொருள்; thing borrowed for use without rent. [Skt. {} → த. யாசிதகம்] |
யாசிதம் | யாசிதம் yācidam, பெ.(n.) யாசிதகம் பார்க்க: see {}-tagam (சுக்கிரநீதி,141); [Skt. {} → த. யாசிதம்] |
யாசுசிதறாணி | யாசுசிதறாணி yāsusidaṟāṇi, பெ. (n.) கற்பூரம்; camphor. [யாக + சிதறாணி] |
யாசுமிர்த்தம் | யாசுமிர்த்தம் yācumirttam, பெ. (n.) புளி நரளைக் கிழங்கு; tubeus root of virtus cornosa alais, v.s setosa. [யாக + அமிர்த்தம்] |
யாஞ்ஞவல்கியம் | யாஞ்ஞவல்கியம் yāññavalkiyam, பெ (n.) 1. நூற்றெட்டு மறைமங்களுள்(உபநிடதம்); ஒன்று; an upanisad, one of 108. 2. அற (தரும); நூல் பதினெட்டினொன்று; a sanskrit text book of Hindu law, ascribed to {}, one of 18 {}, q.v. n opanisad, one of 108. [Skt. {} → த. யாஞ்ஞவல்கியம்] |
யாடம் | யாடம் yāṭam, பெ. (n.) சிறுகாஞ்சொறி (தைலவ.தைல);; small climbing nettle. |
யாடலாயமூலி | யாடலாயமூலி yāṭalāyamūli, பெ. (n.) கறிப்புடலை; snake gourd, useful as vegetable. |
யாடவச்சாரம் | யாடவச்சாரம் yāṭavaccāram, பெ. (n.) சத்திசாரம்; a kind of prepared salt. [யாடவம் + சாரம்] |
யாடு | யாடு yāṭu, பெ.(n.) ஆடு; goat, “யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும்” (தொல், பொருள். 567);. [P] க. ஆடு, ஆண்டு; தெ. ஆடு, யேட, ஏடிக; ம. ஆடு, து. ஏடு, குட. ஆடி; கூ. ஒட குரு ஏடா: மா. ஏட; பிரா. கேட் குரும். ஆடு, கோண். யேடி: துட. ஒடு, ஈரு.எரு. ஆடு, பட ஆடு. த. யாடு; skt. { } Skt. { } = ஆண்யாடு, { } = பெண்யாடு; pkt. { } = பெண்யாடு, { } = ஆண்யாடு வட இந்திய மொழிகளில் யாடு, திரிந்து வழங்கிய பாங்கு வருமாறு :- Pashai. { } shumashti, { } Gawar-bati. { } Savi. = { } Pahlvi = { } Shina = { }. [ஏழகம் → ஏடகம் → ஏடு → யாடு (வே.க.4, பக்47);.] ஒருகா. யா = கருமைக் கருத்தினைக் குறிக்கும் மூலவேர். யா → ஆ. ஒருகா. யாடு → ஆடு. ‘டு’ சொல்லாக்க ஈறு. மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும், வழக்கூன்றிய “ஆடு” என்னும் கரிய விலங்கின் பண்டைய வடிவம் யாடு என்பதாகும். கருமை என்னும் பொருண்மையில் யாடு என்னும் பெயர், பண்டைக் காலத்தே கழக இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. கருமையின்றி வெண்மைநிறத்தில் உள்ள ஆடு, வெள்ளாடு எனப்பட்டது. வெள்ளாட்டிலும், கருமைநிறம் மிகுதியாக உண்டு. யாடு என்னுமிச் சொல் கருமைக் கருத்தின் அடிப்படையிலேயே, இலக்கியத்திலும், மக்களிடையேயும் வழக்கூன்றியுள்ளது. தொல் காப்பியத்திலும், அகநானூற்றிலும் “யாடு” என்றே இடம் பெற்றுள்ளது. “யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்” (தொல். பொருள்.567);, “மோத்தையும் தகரும் உதளும் அப்பரும் யாத்த என்ய யாட்டின் கண்னே” (தொல். பொருள். 1547);, “காடுறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்” (அகநா.394:13);. “யா” என்னும் இக் கருமைப் பொருண்மை முதனிலையே காலப்போக்கில் “ஆ” என்று, மக்கள் வழக்கிலும், இலக்கிய வழக்கிலும், திராவிட மொழிகளிலும் வழங்கலாயிற்று. |
யாட்டை | யாட்டை yāṭṭai, பெ.(n.) ஒராண்டுக்காலம்; annual, yearly. [ஆண்டு → ஆண்டை → ஆட்டை → யாட்டை] |
யாணன் | யாணன் yāṇaṉ, பெ. (n.) அழகுள்ளவன்; beautiful or handsome person. “யாணர்க்குள் யாண” (அரிச். பு: சூழ்வினை. 19);. [யாண் + அன் – யாணன்] யாண் – கவின், அழகு. யாணன் – அழகும், கவினும் இயல்பாக வாய்க்கப் பெற்றவன். |
யாணம் | யாணம்1 yāṇam, பெ.(n.) 1. அன்பு, விருப்பம், உள்ளக்கட்டு; love, affection, friendship. 2. பற்றுக்கோடு; support, “தேவரை யாணமென் றடைந்து” (திவ்.திருச்சந்.69); [யா → யாஅண் → யாண் + அம் – யாணம்] “இய்” – என்பது பொருந்துதற் கருத்து மூலவேர். இய் → இயை → இயைதல் = அன்பால் இணைதல், நட்பால் பொருந்துதல். இரண்டு உள்ளமும் இயைதல். ஆரா அன்பால் இணைந்து கலத்தல். இய் → இய → இயா → யா. யா = பொருந்துதற் கருத்துக் கிளைவேர். கருத்தொருமித்த காதலர் இருவர்தம் உள்ளக்கட்டின், விருப்பின் விளைவாகத் தோன்றும் நெஞ்சகப் பிணைப்பே காதலேயாகும். யாணம்2 yāṇam, பெ.(n.) கட்டு; bind. tie. “உடைதாரமும் ஒட்டியாணமும்” (மீனாட்சி பிள்.ஊசல், 10);. [யா → யாஅண் → யாண் + அம் – யாணம்] பொருளில் பயின்று வருவது காண்க. கன்னடம், தெலுங்கு, துளு முதலான திராவிடமொழிகளிலும், கட்டு, பொருத்து என்னும் பொருளில், இச்சொல் இன்றளவும் ஆளப்பட்டு வருதல் கண்கூடு. ekāoṭṭiyāṇam, Tu.: { } { } Te. : { }. த. ஒட்டியாணம் → Skt. { }. யாணம்3 yāṇam, பெ.(n.) 1. அழகு; beauty. “யாணஞ்சான்ற அறிவர், கண்டோர்.” (தொல்,பொருள்.1446);. 2. புதுவருவாய்; new income. [யாஅண் → யாண் + அம் – யாணம்] கலியாணம் என்னும் கூட்டுச்சொல்லில் பின்னொட்டாகப் பிணைக்கப்பட்டுள்ள யாணம் என்னும் சொல், அழகு என்னும் பொருளில் தொல்காப்பியர் காலத்தே ஆளப்பட்டது. கலியாணம் என்பது ஆடவர்க்கு எழிலார்ந்த இல்லத்தரசி கொணர்ந்த புதுவருவாய் என்னும் பொருண்மையில், இக்காலத்தும் ஆளப்படுகிறது. இதுகுறித்து மொழிஞாயிறு கூறுவது :- ” க லி என்னும் சொல் இசைக்கருவி முழக்கத்தையும், யாணம் என்னும் சொல் பந்தற்சுவடிப்பும், மணமக்கள் கோலமுமாகிய அழகையும், வரிசை வைத்தலும், மொய் யெழுதுதலும், சீர் செய்தலுமாகிய புது வருவாயையும் குறிப்பது கவனிக்கத்தக்கது” (வ.வ.278, 279);. |
யாணர் | யாணர்1 yāṇar, பெ.(n.) 1. புத்தம் புதிது; freshness, newness. “புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி” (தொல்.சொல்.379);. 2. புதிய வருவாய்; new income. “அறாஅ யாண ரகன்கட் செறுவின்” (பதிற்றுப். 71);. 3. வளப்பம்; fertility. “யாணர்க் கோங்கின் குவிமுகை” (ஞானா 60);. 4. செல்வம்; wealth. “வெல்போர் வீயா யாணர்” (பதிற்றும் 35, 10);. 5. நன்மை (பிங்);; goodness. 6. முறைமை; nature, regularity. ‘மாணுற விலகா யாணர்த்து” ஞானா 54, 8). [ஏ → ஏண் → யாண் → யாணம் → யாணர்.] யாணர்2 yāṇar, பெ.(n,) அழகு (பிங்.);; beauty. charm. [யாண் + அர் – யாணர். ‘அர்’ சொல்லாக்க ஈறு.] யாண் = கவின், அழகு. யாண் + அர் – யாணர். அழகும் கவினும் எழிலுற வாய்க்கப் பெற்றவர். “யாண்” என்னும் முன்னொட்டு அழகு, கவின் என்னும் பொருட் பொருத்தப்பாட்டில், கழக விலக்கியங்களில் பரவலாகப் பதிவூன்றியுள்ளது. “யானது பசலை என்றனன்” (கலித்.507);. “யாணர்த் தண்பணை உறும் என” (அகநா.220:19);. “யாணர்த் தம் சிறுகுடி யானே” (அகநா. 228:13);. “காரணி யாணர்த் துரம்பகம் பழுனிய தீம்பிழி மாந்தி” (பதிற்றுப்.80:20, 21);. இவ்வழகுப் பொருண்மை குறித்துச் சொல்லாய்வறிஞர் அருளியார் பகர்வது “அழகுடைய ஒன்று-புதியதாகத் தோன்றியதாகவும் – புதுமையோடு அமைந்திருப்பதாகவும் இருத்தல் இயல்பாதலின் – புதுமை – புதிது ஆகிய கருத்துப் பொருள் விரிவாக்கங்கள் நிகழ்ந்தன.” |
யாணர்நகர் | யாணர்நகர் yāṇarnagar, பெ. (n.) விஞ்சையருலகு (பிங்.);: world of the { }. |
யாணு | யாணு yāṇu, பெ. (n.) அழகு; beauty. “ஞானமாக்கழல் யாணுற வீக்குநர்” (ஞானா.33); யாணுக் கவினாகும்” (தொல், சொல்.381);. [யாண் → யாணு = கவின் அழகு.) |
யாண் | யாண் yāṇ, பெ. (n.) அழகு; beauty. handsome. “ஞானமாக்கழல் யாணுற வீக்குநர்” (ஞானா. 37); [|ஏ → எண் → யாண்] யாண் கவின், அழகு என்னும் பொருட் பொருத்தப்பாட்டில், இச்சொல் பயிலுந் தன்மைத்து. கலித்தொகை 50-ஆம் பாடலில், இச்சொல், கவின், அழகு என்னும் பொருண்மையில் வழக்கூன்றியுள்ளது. “யாணது பசலை என்றனன்” (கலி 50:7);. |
யாண்டு | யாண்டு1 yāṇṭu, பெ. (n.) 1. எங்கு, எவ்விடம்; where, what place. “தண்னென்னும் தீயாண்டுப் பெற்றா ளிவள்” (குறள் 1104); 2. எப்பொழுது; when ever, “யாண்டும் இடும்பை இல” (குறள், 4);. “யாண்டுச்சென் றியாண்டு முள ராகார்” (குறள், 895);. [யா + அண்டு – யாஅண்டு → யாண்டு] அண் = இடப் பொருள் உருபு. அண் + து – அண்டு = இடைத்தையுடையது, இடம். யா = வினாப் பொருண்மையினைக் குறிக்கும் சொல். தமிழ் மொழியில் முதற்கண் மாந்தன் விளைத்த எவ்வகை வினாக் கேட்புக்குமாக வழங்கிய வினாமொழி. யாண்டு2 yāṇṭu, பெ. (n.) ஆண்டு; year. “யாண்டு தலைப்பெயர வேண்டு புலத் திறுத்து” (பதிற்றுப். 15);. தெ., க. ஏடு; ம. ஆண்டு. யாண்டு என்றது மாசித் திங்களில் தோன்றிய பங்குனிப் பிறை முதலாக மேல் வருகின்ற மாசியில் பங்குனிப் பிறையளவும் பன்னிரு மதியமாதல் (நச்.சிவ.489);. யாண்டு3 yāṇṭu, பெ. (n.) பருவம்; term, period. [யா → யாண் → யாண்டு] பன்னீராண்டும், பதினாறியாண்டுமே பெண்மையும், ஆண்மையும் பிறக்கும் பருவ மென்பது (தொல்.பொருள்.273, பேரா);. |
யாண்டும் | யாண்டும் yāṇṭum, வி.எ.(adv.) 1. எப்பொழுதும்; always, under all circumstances for ever, “யாண்டு மிடும்பை யில” (குறள், 4);. 2. எவ்விடத்தும்; in all places, every where, wheresoever. “யாண்டுச்சென்றி யாண்டு முளராகார்” (குறள். 895);. [யாண்டு + உம்] |
யாண்டை | யாண்டை yāṇṭai, பெ.அ.(in. pn.) எவ்விடம்; which place. “யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய்” (கம்பரா. உருக்காட்டு 61);. தெ. எட. [யாண்டு → யாண்டை] |
யாதகம் | யாதகம் yātagam, பெ. (n.) அகத்தி, a tree-{ }. |
யாதசாம்பதி | யாதசாம்பதி yādacāmbadi, பெ. (n.) மழைக் கடவுள் (வருணன்); (யாழ்.அக.); Varunan. [Skt. {} → த. யாதசாம்பதி] |
யாதனம் | யாதனம்1 yātaṉam, பெ.(n.) 1. யாதனை, 1,3 பார்க்க;see {}, 1,3. யாதனம்2 yātaṉam, பெ.(n.) 1. மரக்கலம் (சது.); boat. 2. தெப்பம் (யாழ்.அக.);; raft. |
யாதனாசரீரம் | யாதனாசரீரம் yātaṉācarīram, பெ.(n.) அளறு (நரகம்); நுகர்தற்குரிய உடல் (தேகம்);; the body created to undergo the experiences of hell. “பாவம் யாதனாசரீர நல்குமாறு” (ஞானவா.சித்.18); [Skt. {} + {} – த். யாதனாசரீரம்] |
யாதனை | யாதனை yātaṉai, பெ.(n.) 1. நோவு (வேதனை);; pain, agony, torment, suffering. “அடைந்தடைந் திங்கி யாதனையா வழிந்ததல்லால்” (தாயு.ஆகார.30); 2. அளறு(நரக);த் துன்பம் வேதனை (சூடா););; the tortures of hell. “யாதனையுண்டு கொல்” (சிவதரு. சுவர்க்க நரக.188);. 3. துக்கம் (பிங்); anguish [Skt. {} → த. யாதவர்] |
யாதபதி | யாதபதி yādabadi, பெ. (n.) 1. கடல்; sea. 2. மழைக்கடவுள் (வருணன்);; varunan. [Skt. {}-pati → த. யாதபதி] |
யாதம் | யாதம்1 yātam, பெ.(n.) யானைத் தோட்டி (வின்);; elephant goad. [Skt. {} → த. யாதம்] யாதம்2 yātam, பெ.(n.) யாதவம்(யாழ்.அக.); பார்க்க;see yadavam. |
யாதயாமம் | யாதயாமம் yātayāmam, பெ.(n.) அருந்தியது அறுதல்; digestion, assimilation. |
யாதரு | யாதரு yātaru, பெ.(n.) பலகறை; cowry Cypracamoneta. |
யாதவசமூலி | யாதவசமூலி yātavasamūli, பெ.(n.) மருளூமத்தை; a species of datura. [யாதவசம் + மூலி. மூலிகை என்பதன் கடைக்குறை மூலி] |
யாதவன் | யாதவன் yātavaṉ, பெ.(n.) கண்ணபிரான்;{}. “யாதவன் துவரைக்கிறையாகிய மாதவன்” (பெரியபு.திருமலை.14); [Skt. {} → த. யாதவன்] |
யாதவம் | யாதவம் yātavam, பெ.(n.) மாட்டுமந்தை (யாழ்.அக.);; stock of cattle. [Skt. Yadava → த. யாதவம்] |
யாதவர் | யாதவர் yātavar, பெ.(n.) 1. யதுவமிசத்தவர்; yadavas as descendants of yadu. ” சேதிபர் யாதவரே” (கலிங்.316,புதுப்.); 2. இடையர்(பொ.வ);; persons of the cowherd caste. [Skt. {} → த. யாதவர்] யாதவர் yātavar, பெ.(n.) 1. யதுவமிசத்தவர்;{} as descendants of yadu. “சேதிபர் யாதவரே” (கலிங்.316,புதுப்.); 2. இடையர் (பொ.வ);; persons of the cowherd caste. “யாதனையுண்டு கொல்” (சிவதரு. சுவர்க்க நரக.188); 3. வருத்தம் (பிங்.);; anguish, distress. [Skt. {} → த. யாதனை] |
யாதவி | யாதவி yātavi, பெ.(n.) 1. குந்தி; Kunti, as a female descendant of yadu. “இறைவனு மகிழ்ந்து பின்னும் யாதவிக்குரைப்ப” (பாரத சம்பவ.85); 2. சிவை(உமை); (யாழ்.அக.);; the Goddess {}, as the sister of {}. [Skt. {} → த. யாதவி] |
யாதாத்து | யாதாத்து yātāttu, பெ.(n.) 1. நினைவுக்குறிப்பு; written memorandum. 2. ஒத்த வேலை செய்வோர் அவ்வேலை பற்றித் தம்முள் எழுதும் நினைவுக்குறிப்பு; official memorandum addressed by one official to another of equal status. 3. ஆவணங்களில் (பத்திரம்); வரிப் பிளப்பு முதலியவற்றைக் குறிக்குங் குறிப்பு. (இ.வ.);; memorandum of interlineation, etc., in a document. த.வ. இடைக்குறிப்பு [Skt. {} → த. யாதாத்து] |
யாதாத்மியம் | யாதாத்மியம் yātātmiyam, பெ.(n.) உண்மை- யான நிலை; exact condition, true state. [Skt. {} → த. யாதாத்மியம்] |
யாதானும் | யாதானும் yātāṉum, பெ.எ.(adj.) எதுவாயினும்; which thing, what thing. “யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்” (குறள், 397);, [யாது + ஆன் + உம்] |
யாதாயாதமாயலை-தல் | யாதாயாதமாயலை-தல் yādāyādamāyalaidal, செ.கு.வி. (v.i.) போவதும் வருவதுமாய் அலைதல் (பார்ப்);; to be wandering to and fro. |
யாதார்த்தியம் | யாதார்த்தியம் yātārttiyam, பெ.(n.) உண்மை (சத்தியம்); (இலக்.அக.);; truth. [Skt. {} → த. யாதார்த்தியம்] |
யாதி | யாதி yāti, பெ.(n.) 1. நினைவு; memory. “எனக்கு யாதி இல்லை”. 2. ஆழ்ந்த கருத்து; deep thought. [U. Yad → த. யாதி] |
யாதிகன் | யாதிகன் yātigaṉ, பெ.(n.) வழிச்செல்வோன் (சங்.அக.); traveller. [Skt. {} → த. யாதிகன்] |
யாதிகம் | யாதிகம் yātigam, பெ. (n.) மல்லிகை வகையுளொன்று; a kind of jasmine – Jasminim Auriculatum. [யாது + ஆன் + உம்] |
யாதினிக்குல்லி | யாதினிக்குல்லி yātiṉikkulli, பெ. (n.) சாராயம் (சித்.அக.);; arrack. [யாதினி + குல்லி] |
யாது | யாது1 yātu, பெ.அ. 1. எது; what, which. “அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்” (குறள் 254);, “யாது யா……. என்னும் பெயரும்” (தொல். சொல். பெயரி. 13:5);. 2. வினா; question, interrogation, query. ‘காரணம் யாதாக இருப்பினும் அதைத் தெரிவிக்க வேண்டும்’. [யாவது → யாது.] “யாது” என்பது சிறிதும் அறியப்படாத பொருள்பற்றி வினாவாக வரும். கா. குதின்வாலி யாது? யாது2 yātu, பெ. (n.) அரக்கன்; { } { } “வைதனர் யாதுதானர்” (கம்பரா. கும்ப. 174);. யா → யாது = கரியநிறத்தன். யாது3 yātu, பெ. (n.) கள் (சது.);; toddy. யாது4 yātu, பெ. (n.) நினைவு; memory, remembrance. “எனக்கு யாது இல்லை”. [யா → யாது] |
யாதுகம் | யாதுகம் yātugam, பெ.(n.) வாலுளுவை யரிசி; seeds of intellect plant. |
யாதுடையான்பூடு | யாதுடையான்பூடு yātuḍaiyāṉpūḍu, பெ. (n.) செவ்வாமணக்கு; red variety of Castor. |
யாதும் | யாதும் yātum, பெ.(n.) எதுவும்; anything and everything, anything. “யாது மூரே யாவருங் கேளிர்” (புறநா.192. [யாது + உம்] ஒருகா. யாவதும் → யாதும் என்றுமாம் |
யாதொரு | யாதொரு yātoru, பெ.அ.(adj.) எந்த ஒரு; any what so ever, “யாதொரு தெய்வங் கண்டீர் அத்தெய்வமாகி அங்கே” (அப்பர். தேவாரம்);, ‘எனக்கும், இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை’. [யாது + ஒரு] |
யாதோ | யாதோ yātō, பெ. (n) ஐயச்சொல்; interrogative or doubtfull word. [யாது → யாதோ] |
யாதோனிவாசம் | யாதோனிவாசம் yātōṉivācam, பெ.(n.) தண்ணீர்; water. |
யாதோவருமாசி | யாதோவருமாசி yātōvarumāci, பெ.(n.) பெருந்துளசி; a large species of ocimun sanitum, holy basil. |
யாத்தழாகம் | யாத்தழாகம் yāttaḻākam, பெ. .(n.) மூதண்டம் என்னும் மூலிகை; a kind of herbal medicine. [யா + தழாகம்] |
யாத்திராகமம் | யாத்திராகமம் yāttirākamam, பெ (n.) விவிலியநூலுட் பழைய ஏற்பாட்டின் உட்பிரிவு (கிறித்து);; the book of exodus, in the Old Testament. [Skt. {} → யாத்திராகமம்] |
யாத்திராகரணம் | யாத்திராகரணம் yāttirākaraṇam, பெ (n.) 1. வழிச்செலவு செய்கை (பயணம் பண்ணுகை);; travelling, make expedition. 2. பொழுது போக்கு; hobby. [Skt. {}+karana → த. யாத்திராகரணம்] |
யாத்திராதானம் | யாத்திராதானம் yāttirātāṉam, பெ (n.) 1. விழா (யாத்திரை);, திருவிழா (உற்சவம்); இவற்றின் தொடக்கத்தில் அவை இடையூறின்றி முற்றுப் பெறுமாறு கொடுக்கும் கொடை (தானம்);; propitiatory gift made at the beginning of a journey or of a festival to insure its sucessful termination. 2. சாகுந்தறுவாயிற் கொடுக்கும் கொடை (தானம்);; propitiatory gift made in-death-bed. [Skt. {} → த. யாத்திராதானம்] |
யாத்திராப்பிரசங்கம் | யாத்திராப்பிரசங்கம் yāttirāppirasaṅgam, பெ (n.) செலவில் (யாத்திரை); இருக்கை (யாழ்.அக.);; being on tour. [Skt. {} → த. யாத்திராபிரசங்கம்] |
யாத்திரிகன் | யாத்திரிகன் yāttirigaṉ, பெ.(n.) கோயில்களுக்குச் செலவு (தலயாத்திரை); செய்வோன்; traveller, pilgrim. [Skt. {} → த. யாத்திரிகன்] |
யாத்திரிகர்விடுதி | யாத்திரிகர்விடுதி yāddirigarviḍudi, பெ.(n.) செலவு(பிரயாணஞ்); செய்வோர் தங்குதற்குரிய கட்டடம்; travellers bungalow. [Skt. {} → த. யாத்திரிகர்+ விடுதி] |
யாத்திரை | யாத்திரை1 yāttirai, பெ.(n.) செலவு; journey, voyage. “நிசிவேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்”. [ஏய் → ஏ → யா + திரை = தொழிற்பெயர் விகுதி] த. யாத்திரை – Skt. { } யாத்ரா. ஒ.நோ. மா → மாத்திரை. ‘ய’காம் ஜகரமாவது இந்தி ஆரியமொழி இயல்பு. இந்தி. யுவன் → வ. ஜவான். த யாத்திரை → வ. யாத்ரா → இந்தி. ஜாத்ரா (தலைமை.தமி.பக்.17);. யாத்திரை என்பது பாவாணரின் வேர்ச்சொல் பகுப்பின் வழி தூய தென்சொல் என்பது புலனாகும். இதுகாறும் இச்சொல் பிறமொழிச் சொல்லென மயங்கி வந்த நிலையினை விட்டொழிக. யாத்திரை2 yāttirai, பெ. (n.) திருக் கோவில்களைக் காணும் பொருட்டு செலவு மேற்கொள்கை; pilgrimage, to sacred places. ‘இராமேச்சுரம் வரை யாத்திரை மேற்கொண்டார்’. [ஏய் → ஏ → யா → யாத்திரை = வழிச்செலவு.] |
யாத்திரை நாடி | யாத்திரை நாடி yāttiraināṭi, பெ. (n.) கோழை மேற் கோழை கூடிச்சேர்ந்தால் உடலிருக்க உயிர் பிறிந்து போகும், இறத்தலைக்குறிக்கும் நாடி; pulse indicating death, due to phlegmatic humour reactin. [யாத்திரை + நாடி] |
யாத்திரைபோதல் | யாத்திரைபோதல்1 yāttiraipōtal, பெ.(n.) மணமகன் திருமண நிகழ்வின் முன்பு பயணமாகச் செல்லுதல் (இ.வ.);; a custom of ceremonial setting out of the bridegroom as a pilgrim, just before the celebration of the marriage. “காசி யாத்திரை” (இ.வ.);. [யாத்திரை + போதல்] யாத்திரைபோதல்2 yāttiraipōtal, பெ.(n.) 1. வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல்; setting by the bridegroom for earing wealth. 2. திருக்கோயில்களுக்கு நலங்கருதி செலவு மேற்கொள்ளுதல்; setting out of pilgrimage. மறுவ. பரதேசம் போ-தல். [ஏ → யா + திரை + போ- ஏ செல், திரை ஒரு தொழிற்பெயரீறு] யாத்திரை என்னுஞ் சொல்லை வட சொல்லென்று மயங்கி யாத்திரை போதல் என்னும் வழக்கம் ஆரியத் திருமண நிகழ்வில் காணப்படுவதால் வடவருக்கே யுரியதென்பர். பாவாணரின் வேர்ச்சொல் பகுப்பின் வழி தூய தென்சொல் என்பது புலனாகும். பழந்தமிழரிடத்தே யாத்திரை போதல் என்னும் வழக்கத்திற்கு இணையாக, ‘பரதேசம் போதல்’ என்னும் நிகழ்வு, வழக்கூன்றி வந்துள்ளது. தமிழரிடையே பழைய முறையில் நிகழ்த்தப் பெறும், பெரும்பாலான திருமணங்களில், ‘பரதேசம் போதல்’ என்று ஒரு சடங்கு முற்காலத்தே உண்டு. “வினையே ஆடவர்க்கு உயிரே” என்னும் பழந்தமிழர் தம் மணவினை முடித்தற்கு முன்பே, பொருள் தேடச் செல்லுதல் சிறப்பெனக் கருதப்பட்டதால், “பரதேசம் போதல்” என்னும் சடங்கு திருமண நிகழ்வில் இடம்பெற்றதெனலாம். பரதேசம் என்பது வெளிநாடு மணப்பிள்ளை குதிரையில் பரதேசம் போய் வருவார், வந்தவுடன் மணமகளுக்குத் தாலிகட்டுதல் நடைபெறும். இந்நிகழ்வு தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் தமிழர்தம் திருமண நிகழ்வாகும். இந்நிகழ்வு பண்டைய இலக்கண இலக்கியங்களில் “வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதல்” என்னும் அகப்பொருள் துறையைச் சார்ந்தது ஆகும். இந்நிகழ்வு பழைய வழக்கத்தின் அடையாளமாக, பொருள் வளம் மிக்காரிடையே காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடியின் விளைவாக இந்நிகழ்வு அருகி வருவது யாவரும் அறிந்தவொன்றாகும். வாழ்வியலில் அனைத்து இல்லக் கடமைகளையும் முடித்த முதுபெருங்குரவர். நற்பேறு கருதி திருக்கோயில்களுக்குச் செல்லுதலும் யாத்திரை போதலேயாகும். |
யாந்தலந்தகம் | யாந்தலந்தகம் yāndalandagam, பெ. (n.) செங்கத்தரி; red variety of brinjal. |
யாந்துடனாதி | யாந்துடனாதி yānduḍaṉāti, பெ.(n.) கருந்துளசி; black variety of ocimum sanction, a species of holy basil family. [யா + துழநாதி → துடனாதி] |
யானஞ்செய்-தல் | யானஞ்செய்-தல் yāṉañjeytal, -13 செ.கு.வி. (v.i.) செல்லுதல்; to go, to move, “பத்தியால்………. யானஞ் செய” (இரகு. நாட்டுப்.41);. |
யானபாத்திரம் | யானபாத்திரம் yāṉapāttiram, பெ.(n.) மரக்கலம் (யாழ்.அக.);; boat or catamaran. [ஏனம் → யானம் + பாத்திரம் (யானம் = மரக்கலம்);.] |
யானமுகம் | யானமுகம் yāṉamugam, பெ.(n.) வண்டியினேர்க்கால் முனைப்பகுதி; a sturdy plank used in bullock-cart thill. [யானைமுகம் → யானமுகம்] |
யானம் | யானம் yāṉam, பெ.(n.) 1. கட்டப்பெற்ற ஊர்தி வகை; conveyance, vehicle, carriage. “சிலம்பறீ ரிந்திரன் யானம்” இரகு.திக்குவி.10) 2. சிவிகை; palanquin, litter. “வாகன யானங் கண்மிசைக் கொண்டார்” (பெரியபு. தடுத்தாட்.20); (சூடா.);. 3. மரக்கலம் (சூடா.);; vessel, ship, raft, catamaran. “யானமே மரக்கலத்தோ டெழிலூர்தி” (குடா.11:15:2);. 4. அரசரது குணங்களுள் ஒன்றான போர்ச் செலவு; march against an enemy, one of { } “சிந்தை கொள்யான மேற்செல்லல்” (இரகு திக்குவி 21);. 5. அறை வீடு (யாழ்.அக.);; room, chamber 6. கள் (சது.);; toddy. [ஏல் → ஏனம் → யானம்] “யா”-என்னும் பொருந்துதற் கருத்து வேரினின்று முகிழ்த்த சொல். யாத்தல் – கட்டுதல், இணைத்தல். யானம் – கட்டப்பெற்ற ஊர்தி வகை. நில நீர்வழிச் செலவிற்கு முறையே பல்லக்கு, மரக்கலம் போன்றவற்றை உருவாக்குவதற்கு மரத்துண்டு, பலகை, இரும்புச் சட்டம் முதலான பொருட்களை ஒன்றோடொன்று பொருத்தி, இணைத்துச் செய்வதால் ஏற்பட்ட பெயர் என்றறிக. |
யானர் | யானர்3 yāṉar, பெ. (n.) 1. கல் தச்சர் (அக.நி.);.);; stone-cutters. 2. மரவேலை செய்யும் தச்சர்; carpenters. [P] [யாஅண் → யாண் + அர் → யாணர்] |
யானாதருயா | யானாதருயா yāṉātaruyā, பெ.(n.) பலகரை; cowry. மறுவ. சோழி. |
யானெனதெனல் | யானெனதெனல் yāṉeṉadeṉal, பெ.(n.) தானல்லாத உடம்பை யானென்றும் தனக்குப் புறம்பான பொருளை எனதென்றும் கருதி அவற்றின்மேற் பற்றுவைத்தல் (அகங்காரம மகரங்கள்);; the sense of I and mine. “யானென தென்னுஞ் செருக்கறுப்பான்’ (குறள், 346);. [ஏ → ஏன் → யான் + என் + அது – எனது + எனல், ஏ = உயர்வு.] ‘தன்னுடம்பைத் தானாக மயங்கி யானென்பதால் அகப்பற்று ‘யான்’ என்னும் சொல்லாலும், தனக்குச் சொந்தமான பிறபொருள் அல்லது உடைமைகளையெல்லாம் தனித்தனி எனது என்று சொல்வதால் புறப்பற்று ‘எனது’ என்னும் சொல்லாலும் குறிக்கப்படும்’ (குறள், 346, தமிழ் மரபுரை); |
யானை | யானை1 yāṉai, பெ.(n.) துதிக்கையுடைய விலங்கு; elephant – Elephas indicus. “யானையுங் குதிரையும்” (தொல், பொருள். 570);, யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ (பழ.);, ‘யானைக் கட்டக் கயிறு தானே எடுத்துக் கொடுக்கும்’ (பழ.);, ‘யானை மேல் போகிறவனைச் சுண்ணாம்பு கேட்பது போல’ (பழ.);. ‘யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்’ (பழ.);. [அல் → எல் → என் → ஏன் → ஏனை → யானை] [ஒருகா. யா + அன் → யாஅன் → யான் + ஐ → யானை = கரிய விலங்கு] தெ. ஏனுக , க. அனெ (ane);, { } ம. அன ({ });. kota. a.n.. Toda = a.n., Kodagu = a-ne, Tuly. { } Kolami = { } { } Naiki = { } Gondi. { } Konda = { }. மறுவ 1. உம்பல் = உயர்ந்தது; 2. உவா = திரண்டது; 3. ஓங்கல் = மலை போன்றது; 4. கரி = கரியது; 5. கள்வன் = கரியது; 6. களிறு = கரிய ஆண்யானை, 7. கறையடி = உரல் போன்ற பாதத்தினை யுடையது 8. குஞ்சரம் = திரண்டது; 9. கைம்மா = துதிக்கையை யுடைய விலங்கு; 10. கைம்மலை = கையையுடைய மலைபோன்றது; 11. நால்வாய் = தொங்குகின்ற வாயையுடையது; 12. புகர்முகம் = முகத்தில் புள்ளியுள்ளது (ஒருவகை);; 13. புழைக்கை (பூட்கை); = துளையுள்ள கையையுடையது; 14. பெருமா = பெரியவிலங்கு; 15. பொங்கடி = பெரிய பாதத்தையுடையது;16. யானை (ஏனை); = கரியது; 17. வழுவை = உருண்டு திரண்டது; 18. வாரணம் = சங்கு போன்ற தலையையுடையது அல்லது புல்லை வாரிப் போடுவது; 19. தும்பி = துளையுள்ள கையையுடையது; 20. வேழம் = வெள்ளை யானை (சொல்.ஆ.க.பக்.16);. மேற்குறித்த மறுவடிவப் பெயர்கள் ஒவ்வொன்றும், நுண்ணிய பொருட் பொருத்தப்பாட்டுடன், கழகக்கால இலக்கியங்களில் ஆளப்பெற்றவையாகும். கருமை நிலையிலும், பருமை நிலையிலும் காணப்படும் பெருமைசான்ற முப்பத்தெட்டுப் பெயர்களில் கழக இலக்கியங்களில் இவ்விலங்கு உலா வருகின்றது என்று, சொல்லாய் வறிஞர் ப.அருளியார் குறித்துள்ளதும், ஈங்கு எண்ணத்தக்க வொன்றாகும். கன்னங்கரிய வண்ணத்தில், பென்னம் பெரிய தோற்றத்துடன், காண்பவர்தம் கருத்திலும், நெஞ்சிலும் நீக்கமற நிறைந்து, பெருமைமிகு உருவுடன் உலாவரும், இவ்விலங்கு, தமிழ்மண்ணிற்குரிய மரபுச்சொத்துகளுள் ஒன்று. மங்கல அடையாளமாகக் கருதப்பெறும் ஒம் என்னும் மூலமந்திரத்தை உலகுக்கு உணர்த்தும் பான்மையில் அமைந்துள்ளது. தமிழர்தம் வாழ்வியலில் பின்னிப் பிணைந்தது. கழகப் பனுவல்களில் ஐந்நூற்றிற்கும் அதிகமான இடங்களில், யானையின் கருமைசான்ற கவினுறு காட்சி எழுத்தோவியமாக்கப்பட்டுள்ளது. கண்கூடு. யானை என்னும் சொல்லாட்சி, சங்கப்பாடல்களில் நானூறுக்கும் மேற்பட்ட இடங்களில் மிகநுண்ணிய பொருண்மையுடன் பல்வேறு நிலைகளில் பதிவு பெற்றுள்ளது. “யானை” என்னும் கருமைவண்ண விலங்கிற்கு விதைச்சொல்லாக “அல்” என்னும் மூலத்தைத் தமது வேர்ச்சொற் கட்டுரை பகுதி 1-இல் பாவாணர் குறித்துள்ளார். “அல்” கருமைக் கருத்துவேர் அல் → அலவன் = 1. கரியவிருள் அகலும் வண்ணம் தண்ணொளி பாய்ச்சும் நிலவன். 2. கும்மிருட்டில் பளிச்சென்று பார்வைத் துலக்கமுறுமாறு, பளிங்குக் கண்களுடன் அமைந்த பூனை. அல் → எல் = இரவு. எ.கா:- “எல்லிற் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப் போல்” (நாலடி, 8);. எல் → எல்லி → எல்லிருள் = இராவிருள். “அல்” என்னும் கருமைக் கருத்து மூலத்திலிருந்து முகிழ்த்த, எல், எல்லி, எல்லிருள் போன்ற சொற்கள் கழக இலக்கியங்களிலும், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் போன்ற காப்பியப்பனுவல்க்ளிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இந்த “எல்” என்னும் கருமைக்கருத்து வேரடியினின்று பிறந்த சொல்லே யானை என்பது, மொழிப்பகலவன் பாவாணர் கருத்தாகும். எல் → என் → ஏன் → ஏனை → யானை. இக் கருமைக்கருத்து வேர் மூலத்தை விளக்கவந்த பாவாணர், யானையை, ஏனை என்று வழங்கும் நெல்லை வழக்கையும் (வே.க., 1.பக்.159); எடுத்துக் காட்டியுள்ளார். கருமைக் கருத்து வேரடியான “எல்” என்பதிலிருந்தே, பன்றியைக் குறிக்கும் ஏனம் என்ற சொல் தோன்றியது. எல் → என் → ஏன் → ஏனம் = பன்றி; ஏன் = கரிய விலங்கான பன்றி. “ஏனொருவன் எயிற்றில் தாங்கியதும்” (திவ் இயற். நான். 70); பன்றியைக் குறிக்க வந்த தொல்காப்பியர், “இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும்” (தொல்,பொருள்.623); “இருள்நிறப்பன்றி” என்னுங்குறிப்பு. கருமைக் கருத்தினைக் குறிப்பது. வெண் மருப்பினையுடைய பன்றிக்கும் ஆண்யானைக்கும், ஏனம் என்னும் சொல் பொதுப்பெயராகும். ஏனம், களிறு, யானை போன்ற சொற்கள் கருமைத் தோற்றத்தினை குறிப்பன. யானைக்குரிய பெயர்களும் – அவற்றிற்குரிய காரணங்களும்:- துளையுடைமை :- 1. தும்பி : துளையமைந்த கையினை உடைய விலங்கு. 2. புழைக்கை : புழையமைந்த-அஃதாவது, துளை பொருந்திய கையினை உடைய விலங்கு. 3. பூட்கை : புழைக்கையினை உடைய விலங்கு. புழை + கை → பூழ்க்கை → பூட்கை வேறுபுடையில் மலர்ந்த வேறொரு சொல்! திரிபின் காரணமாக இவ்வண்ணம் ஒரு வடிவு கொள்ளுவது- போலி வகையதாகும்). கை போன்ற உறுப்பமைவு : 4. கைம்மா : கையினை உடைய விலங்கு. 5. கைம்மலை : கையினையும் மலை போன்ற தோற்றத்தையும் உடைய விலங்கு. தொங்குகை : 6. குஞ்சரம் : தொங்கும் கையினையுடைய விலங்கு. குஞ்சுதல் – தொங்குதல் குஞ்சி = தொங்கும் ஆண்குறி குஞ்சு + அரம் → குஞ்சரம் (“அரம்-ஒர் ஈறு); “குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை” (தொல்.பொருள்.மரபி : 19); 7. துங்கல் : தும்பிக்கை தூங்கும் விலங்கு. தூங்குதல் = தொங்குதல். தூங்கு → தூங்கு = தொங்குகை (ஒ.நோ. : தூக்கு + அணம் → தூக்கணம் தூக்கணம் + குருவி – தூக்கணங்குருவி); 8. நால்வாய் : தொங்கும் வாய்போன்ற – தும்பிக்கையை உடைய விலங்கு பருத்த அடியினை உடமை : 9. கறையடி : உரல் போன்ற கால்களை உடைய விலங்கு “கறையடி யானை” (பெரும்பாண் : 351 நச்.உரை); : உரல் போன்ற அடியினையுடைய யானை…..); 10.பொங்கடி : பருத்து வீங்கிய தோற்றத்தையுடைய – அடியினையுடைய விலங்கு. முகத்திற் புள்ளிகளையுடைமை : 11. புகர்முகம் : புள்ளிகள் பொருந்திய முகத்தினையுடைய விலங்கு. “பொறிவரிப் புகர்முகந் தாக்கிய வயமான்” (பெரும்பாண்:448); மதநீர் ஒழுக்குடைமை : 12. வழுவை : மதநீர் வழுவுதலையுடைய (ஒழுகுதலையுடைய); விலங்கு. வண்டுகள் மொய்ப்புடைமை : 13. மொய் : வண்டுகள் மொய்த்தலையுடைய விலங்கு வண்டுகளைக் கடிந்தோட்டுதலுடைமை : 14. கடிவை : (வண்டு); ஞிமிறு முதலியவற்றைக் கடிந்து ஒட்டுவதற்கு எப்போதும் காதுகளை அசைவித்துக் கொண்டிருக்கும் விலங்கு. (கடிதல் = விலக்குதல்); “கொடிது கடிந்து கோறிருத்தி” (புறம்:17:5);. கடி = நீக்கம் (பிங்.); கடிவை = யானை (திவா.); மந்தமுடைமை : 15. மந்தமா : சுறுசுறுப்பின்றி பெரும்பாலும் அமைதியாக இயங்கும் விலங்கு. மதமுடைமை : 16. களிறு : மதத்தையுடைய விலங்கு “களிறு மதயானை” (பிங், 2413); 17. மதக்கயம் : மதத்தையுடைய கரியநிற விலங்கு 18. மதமா : மதத்தையுடைய விலங்கு மருட்சி நோக்குடைமை : 19. மருண்மா : மருண்டு நோக்கும் நோக்கத்தினையுடைய விலங்கு பெருந்தோற்றமுடைமை : 20. பகடு : பெரிய உருத் தோற்றத்தையுடைய விலங்கு (பகம் = பெருமை);. 21. எறும்பி : பெரு விலங்கு (இறு → இறும்பு → எறும்பு → எறும்பி 22. பெருமா : பெரிய விலங்கு 23. பெருவிலங்கு : பெருந் தோற்றத்தையுடைய விலங்கு (“பெண்டாட்டி பெருவிலங்கு (யானை);. பிள்ளையிரண்டும் கள்ளாணி!” என்பதொரு பழமொழி); உயரமுடைமை : 24. உம்பல் : உயரமான தோற்றத்தையுடைய விலங்கு 25. உவா : உயரமுடைய விலங்கு வலிமையுடைமை : 26. வல்விலங்கு : வலிமை பொருந்திய விலங்கு 27. வயமா : வலிமை மிக்க விலங்கு. “வய வலியாகும்” (தொல்.சொல்.உரி 70); கட்டுப் பேறுடைமை : 28. கம்பமா : கம்பத்தில் பிணிக்கப் பெறுதலை -யுடைய விலங்கு தறியில் கட்டப் பெறுதலையுடைய விலங்கு “கம்பமா என்றேன்!” (தனிப்பா.); சங்கொலிப்புடைமை : 29. வாரணம் : பெருஞ்சங்குப் போன்ற ஒலியையெழுப்பும் விலங்கு “புகர்முக வாரணம்” (மணிமே.7 : 115);. ஊதுலைத் துருத்தியுருவுடைமை : 30. தோல் : துருத்தியைப் போன்ற தோற்றமுடைய விலங்கு. தோல் = துருத்தி. “மென்றோன் மிதியுலைக் கொல்லன்” தோல் = யானை. “புரைத்தோல் வரைப்பின்” (மலைபடு.88); மூங்கில் முளையுண்ணல் விழைவுடைமை: 31. வேழம் : மூங்கில் மூளையினை விரும்பியுண்ணும் விலங்கு. வய் = துளை. வய் + இர்→வயிர் = துளையினையுடைய ஊதுகொம்பு “திண்காழ் வயிரெழுந்திசைப்ப” (திருமுரு 120); வயிர் = துளையினையுடையதாகிய மூங்கில் “முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரி” (ஐங்குறு : 395);. வயிர் + இயர் → வயிரியர் = ஊதுகொம்பு ஊதுபவர்கள்; பாடகர் “வயிரிய மாக்கள் பண்ணமைத் தெரீஇ” (பதிற்றுப். 29); வய் → வெய் → வேய் = 1. மூங்கில். “வேய்ப்பெயல் விளையுட் டேக்கட்டேறல்” (மலைபடு.171);. 2. உட்டுளைப் பொருள் (பிங்.); வேய்க்கண் = மூங்கிற் கணு (நாமதீப : 297);, வேய்ங்குழல் = புல்லாங்குழல் (திவ். திருப்பள்ளியெழுச்சி. 4);, வேய்ம்பரப்பு = மூங்கிற்பாய் (நாஞ்சில் நாட்டு வழக்கு);, வேயரிசி = மூங்கிலரிசி (திவா.); வேய்த்தோள் = மூங்கில் போன்ற தோள். காண்க : “முறிமேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு” (குறள்,1113);. வேய் + அம் → வேயம் → வேழம் = மூங்கில் வேழம் = மூங்கில் முளையினை விரும்பியுண்ணுவதாகிய யானை. ஒ.நோ. : வேழம் → வேழம் + பு → வேழம்பு + அர் → வேழம்பர் = கழைக் கூத்தர் (பிங்.);. கருநிறத் தோற்றமுடைமை : 32. கயம் : கரிய நிறத் தோற்றத்தையுடைய விலங்கு கய் + அம் → கயம் = யானை கயமுனி = யானைக் கன்று “பொய்பொரு கயமுனி முயங்குகை கடுப்ப” (மலையடு : 107);. முனி = யானைக் கன்று “முனியுடைக் கவளம் போல” (நற் : 360 : 9);. கயம் → (Prakrit); gaya gaja = elephant (Pali); gaja = elephant. 33. நாகம் : கரிய நிறத்தையுடைய விலங்கு “ஏந்தெழில் வரிநுதல் பொருதொழி நாகம்” (நெடுநல்: 1.16-177);. 34. ஆம்பல் : கரிய நிறமுடைய விலங்கு 35. கள்வன் : கரிய நிறத் தோற்றத்தையுடைய விலங்கு (கள் : கருமைக் கருத்துப் பக்கவேர்); கள் → கள் + வு → கள்வு + அன் → கள்வன் = கரியவன் (பிங்.);. கள்வன் = (கரிய நிறத்ததாகிய); யானை (பிங்); 36. களவன் : கரிய நிறத்தையுடைய விலங்கு கள் → கள் + அவு → களவு + அம் → களவம் யானை (வின்.); களவம் களபம் (வகா பகரத் திரிபு); = யானை கலவம் → கலாவம். கலாபம் தோகை, தோகையையுடையதாகிய மயில் “மணிவயிற் கலாபம்” (சிறுபாண்.15);. 37. கரி ; கரியநிற விலங்கு கரு + இ – கரி. “கொடுங்கரிக் குன்றுரித்து” (திருவாச 6, 19); கரி → (Sanskrit); kari = elephant மேலும் காண்க : Kari-kumbha = the frontal globe of an elephant Kari-garjit = the roaring of the elephant Kari-carman = an elephant’s hide Karija = a young elephant Kari-danta = elephant’s tusk the trunk of the elephant Kari-pa = the keeper of an elephant Kari-patha = the way of an elephant Kari-pota = a young elephant Kari-bandha = the post to which an elephant is tied destroyer of elephants Kari-mukha = elephant faced water elephant (hippopotamus = நீர்யானை); Kari-vara = an excellent elephant Kari-skandha = a herd of elephants Karika = an elephant Karini = a female elephant மேலே குறிக்கப்பெற்ற 38 பெயர்களுள், யானை, கயம், நாகம், ஆம்பல், கள்வன், கரி, களபம் முதலான சொற்கள், கருமை நிறத் தோற்றத்தைத் தெள்ளத் தெளிவுறக் காட்டுவன. மிகக் கருமையாகவும், பருமையாகவும் பெரியவுருவில் திகழும். இவ்விலங்கினை, விலங்கியலார் பாலூட்டி வகையுள் அடக்குவர். இம் மன்பதையுள் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் காண விரும்பும் விலங்கு யானையே எனில் மிகையன்று. கழகக்காலம் முதல், இன்றளவும். இவ்விலங்கு தமிழர்தம் வாழ்வியலில் பிரிக்கமுடியாதது. விலங்குக் காட்சியகங்களிலும் (zoo);. வட்டாங்குகளிலும் (circus);, திருக்கோவில்களிலும், திருமண நிகழ்வுகளிலும், பகட்டாரவார வரவேற்பு விழாக்களிலும் யானையின் பங்கு இன்றியமையாதது. நந்தமிழ் நாட்டில் யானையைப் பற்றியப் பழமொழிகள், வழக்குகள், கல்லாதார் நாவில் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில், முதுமலையில் யானைகள் சிறப்பாகப் பாதுகாத்து வளர்க்கப் பெறுகின்றன. இங்குள்ள யானைகள் எலிபாகமாக்சிமக இண்டிக்கசு (எலிபாஸ்மாக்ஸிமஸ் இண்டிக்கஸ்); வகையைச் சார்ந்தவை. இந்தியாவில் இமயமலையின் தாழ்வான பகுதிகளிலும், நாவலந்தேயத்தின் வடபாகத்திலும், அசாம், கிழக்கு வங்காளம் போன்ற இடங்களிலுள்ள அடர்ந்த காடுகளிலும், நீலமலை, மேற்குத் தொடர்ச்சி மலையிலும், குடகு, எருமையூர் (மைசூர்);, திருவிதாங்கூர் போன்ற இடங்களிலும், யானைகள் கூட்டங்கூட்டமாகக் காணப்படுகின்றன. [P] யானை2 yāṉai, பெ.(n.) பெரியது என்னும் பொருளில் ஆளப்பெறும் பெயரெச்சம்; noun used as adj. in the sense of big, large, tall, great, etc. [ஏனை → யானை.] |
யானை நூல் | யானை நூல் yāṉainūl, பெ.(n.) அறுபத்து நான்கு கலையுள் யானையிலக்கணம் அறியுங் கலை(கசபரீட்சை);; science relating to the points of the elephant, one of arupattunālu-kalai [யானை+நூல்] |
யானை வென்றி | யானை வென்றி yāṉaiveṉṟi, பெ.(n.) ஒரு யானை பிறிதொன்றோடு பொருது வெற்றி பெறுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ. ஒழிபு.8);; theme describing the victory of an elephant fighting with another. [யானை+வெல்→ அவென்→வென்றி] |
யானை வேட்டுவன் | யானை வேட்டுவன் yāṉaivēṭṭuvaṉ, பெ.(n.) யானை வேட்டையாடுவோன்; one who hunts elephants. “யானை வேட்டுவன் யானையும் :ெறுமே”(புறநா.214);. [யானை+வேடு→வேட்டு→வேட்டுவன்.] |
யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை | யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை2 yāṉaikkaṭcēymāndarañjēralirumboṟai, பெ.(n.) பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனால் கட்டுண்டவன். இவனைப் பாடிய புலவர் குறுங்கோழியூர் கிழார்; one who was subdued by { } victories king { } poet { } composed songs in praise of him. |
யானைக் கால் சுரம் | யானைக் கால் சுரம் yāṉaikkālcuram, பெ.(n.) யானைக்கால் நோயின் அறிகுறியாக ஏற்படும் காய்ச்சல்; a kind of fever preceeding the attack of elephantasis. [யானைக்கால் + சுரம்.] |
யானைக்கச்சை | யானைக்கச்சை yāṉaikkaccai, பெ.(n.) யானைக் கழுத்தணிக் கயிறு (பிங்.);; cord tied round elephant’s neck [யானை + கச்சு → கச்சை.] |
யானைக்கடைப்பல் | யானைக்கடைப்பல் yāṉaikkaḍaippal, பெ.(n.) யானையின் கடைவாய்ப்பல்; the last interior tooth in the elephant’s mouth. [யானை + கடை + பல்] |
யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும் பொறை | யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரலிரும் பொறை1 yāṉaikkaṭcēymāndarañjēralirumboṟai, பெ. (n.) ஒரு சேர அரசன், இவன் அரசனும் புலவனும் வள்ளலுமாக இருந்தவன்.ஐங்குறு நூறு தொகுப்பித்தோன் என்பர். இவன் இளஞ்சேரலிரும் பொறைக்கு உறவினன்; a cera king, also as king, poet as well as liberal donor. He is said have composed { } related to harm { }. |
யானைக்கணையம் | யானைக்கணையம் yāṉaikkaṇaiyam, பெ.(n.) 1. யானை கட்டுந்தறி; post or deeply earthed ensure to which elephants are chained. 2. யானைக் கூடத்தில் யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடா வண்ணம் அவற்றைப் பிரிக்கிற குறுக்கு மரம்; wooden bar set up between elephants in a stable to prevent their fighting with one another [யானை + கணையம். கணையம் = யானைக் கட்டுத்தறி] |
யானைக்கண் | யானைக்கண் yāṉaikkaṇ, பெ.(n.) 1. சிறு கண்; small eye in disproportion to the size of the body, as those of an elephant. “யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல்” (புறநா. 20);. 2. இலை, காய் முதலியவற்றில் புள்ளி விழும் நோய் வகை (யாழ்.அக.);; a disease that causes spots or dots on leaves and fruits. [யானை + கன்] |
யானைக்கண்சட்டி | யானைக்கண்சட்டி yāṉaikkaṇcaṭṭi, பெ.(n.) அஞ்சனத்திற்காக மை படியும் படியாகப் பயன்படுத்தும் ஓர் வகைச் சட்டி; an earthern ware to arrest the smoke to prepare collyrium. [யானை + கண் + சட்டி] |
யானைக்கண்தாட்டுப்பத்திரி | யானைக்கண்தாட்டுப்பத்திரி yāṉaikkaṇtāṭṭuppattiri, பெ.(n.) சேலை வகை; a kind of saree. [யானைக்கண் + தாட்டு + Skt. பத்திரி] |
யானைக்கதி | யானைக்கதி yāṉaikkadi, பெ.(n.) நடனம், வேகம், மந்தம், ஒட்டம் என்ற நான்கு வகைப்பட்ட யானை நடை; paces of an elephant, of four kinds viz., { } dancing, turidam or hurrying, mandam or slow, { } or running. [யானை + கது → கதி (கதி = நடை);.] |
யானைக்கத்தலை | யானைக்கத்தலை yāṉaikkattalai, பெ.(n.) கத்தலை மீன் வகை (வின்.);; a species of kattalai fish. [ஆனைக்கத்தலை → யானைக்கத்தலை] |
யானைக்கன்று | யானைக்கன்று yāṉaikkaṉṟu, பெ.(n.) யானைக்குட்டி (பிங்.);; young one or calf of an elephant. “யானைக் கன்றும் வளநாடும் பெற்றவர்”. [யானை + கன்று. கன்று = யானையின் இளமைப்பெயர்] |
யானைக்கம்பம் | யானைக்கம்பம் yāṉaikkambam, பெ.(n.) யானை கட்டுந்தறி; post for typing elephants. [யானை + கொம்பு → கம்பு → கம்பம். கம்பம் = பெருமரத்தூண்] |
யானைக்கரணம் | யானைக்கரணம் yāṉaikkaraṇam, பெ.(n.) கரசைக்கரணம்; the karanam known as { }. சோமவாரமும் திரிதி நாமயோகமும் யானைக் கரணமும் பெற்ற திருவோண நக்ஷத்ரத்து” [T.A.S.V, 122]. [யானை + கரணம்] |
யானைக்கருப்பம் | யானைக்கருப்பம் yāṉaikkaruppam, பெ.(n.) 1. வெகுகாலந்தங்குங் கருப்பம்; long period of gestation, as of an elephant which is 18 months for a female calf and 22 months for a male calf. 2. நீடித்த கால முயற்சி; a tediously long period of endeavour before functification. “இதைப் பற்றிய பிரயத்தினம் கசகர்ப்பம்”. [யானை + கருப்பம்] |
யானைக்கற்றாழை | யானைக்கற்றாழை yāṉaikkaṟṟāḻai, பெ.(n.) கற்றாழை வகை (L);; century plant. மறுவ. காட்டுக்கற்றாழை. [யானை + கற்றாழை] |
யானைக்கல் | யானைக்கல் yāṉaikkal, பெ.(n.) மதுரையில் வைகைக் கரையிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிகு இடங்களுளொன்று; a famous historical place located in the river bank of vaigai at Madurai. |
யானைக்கள்ளிமுனையாள் | யானைக்கள்ளிமுனையாள் yāṉaikkaḷḷimuṉaiyāḷ, பெ.(n.) ஒரு பூண்டு (வின்.);; spurge sprout, boucerosia umbellata. |
யானைக்கவடு | யானைக்கவடு yāṉaikkavaḍu, பெ.(n.) யானைபோல் மனத்துள் மறைத்து வைத்திருக்கும் காழ்ப்புணர்வு – நீங்கா வெறுப்பு; concealed grudge or ill-will or resentment, as of an elephant. [யானை + கவடு] |
யானைக்காதல் | யானைக்காதல் yāṉaikkātal, பெ.(n.) முகைதீன் இபின் சின்ன இபுராகிம் என்பவரால் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காதல் பனுவல்; a treatise titled ‘{ } { }’ written by Mohideen ibin chinna Ibrahim, 19C. [யானை + காதல்] |
யானைக்காற்சுவடி | யானைக்காற்சுவடி yāṉaikkāṟcuvaḍi, பெ.(n.) யானைக்கால்மூலி பார்க்க; see { }. [யானைக்கால் + சுவடி..] |
யானைக்காற்புழு | யானைக்காற்புழு yāṉaikkāṟpuḻu, பெ.(n.) யானைக்கால் நோயினை யுண்டாக்கும் புழு; a kind of worm developing elephantiasis. [யானைக்கால் + புழு.] யானைக்காற்பூடு { } பெ.(n.); யானைக்காற்சுவடி பார்க்க; see { }. [யானைக்கால் + பூடு.] |
யானைக்காலை | யானைக்காலை yāṉaikkālai, பெ.(n.) யானைகள் கட்டுமிடம் (வின்.);; Elephant-stable. [யானை + காலி → காலை. காலி = மாடுகள் காலி.] |
யானைக்கால் | யானைக்கால் yāṉaikkāl, பெ.(n.) 1. யானைக்கால்நோய் பார்க்க; see { }. 2. பெரிய நீர்த்தும்பு (வின்.);; large tube fixed on the walls or roofs for draining rain water. மறுவ. பெருங்கால், மோத்திக்கால். Skt. சீலியதம் [ஏன் → ஏனை → யானை + கால்] குல் → கல் → கால் = தோன்றல். வளர்தல். கால் = “குல்” என்னும் தோன்றற் கருத்து வேரிலிருந்து, முகிழ்த்த சொல். முழங்காலுக்குக் கீழ் பெருமளவில் விங்கிப் பருக்கச் செய்யும் ஒரு வகை நோய். |
யானைக்கால்நோய் | யானைக்கால்நோய் yāṉaikkālnōy, பெ.(n.) பெருங்கால் நோய்; elephantiasis – Filariasis. [யானைக்கால் + நோய்] யானையின் கால் வீங்கிப் பருத்துள்ளது போன்று, மனிதர்களின் காலினையும் வீங்கிப் பருக்கச் செய்யும் நோய். இந்நோய், மிகநுண்ணிய உயிரியினால் (Wuchereia Bancrofti); உருவாகிறது. ஆடவர்களிடம் அதிகம் காணப்படுகிறது. குளம் குட்டைகளிற் காணப்படும் கொசுக்களின் மூலம் இந்நோய் பரவுகிறது. அமெரிக்கா, இசுபெயின், ஆத்திரேலியா, சீனா, இந்தியா, வடமேற்கு ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்நோய் பரவியுள்ளது. |
யானைக்கால்மூலி | யானைக்கால்மூலி yāṉaikkālmūli, பெ.(n.) யானையடியிலை என்னும் பெயர் கொண்ட மருந்துச் செடி; plant with leaf as big as elephants foot mark. [யானைக்கால் + மூலி.] யானையின் அடிச்சுவட்டினைப் போன்று வட்ட [P] வடிவிலான இலைகளைக் கொண்ட மருந்துக் கொடி. |
யானைக்கால்வணக்கிப்பூடு | யானைக்கால்வணக்கிப்பூடு yāṉaikkālvaṇakkippūṭu, பெ.(n.) சிறு நெருஞ்சில் (மூ.அ.);; cows thorn, land caltropsTribulus terrestrs. [யானை + கால் + வணக்கு + பூடு] |
யானைக்கால்வணங்கி | யானைக்கால்வணங்கி yāṉaikkālvaṇaṅgi, பெ.(n.) யானைக்கால்வணங்கிப் பூடு பார்க்க; see { }. [யானைக்கால் + வணங்கி.] |
யானைக்கால்வீக்கம் | யானைக்கால்வீக்கம் yāṉaikkālvīkkam, பெ.(n.) காலில், தோல், சவ்வு, தசை, எலும்பு முதலானவற்றில் நீர் சேர்வதனால் ஏற்படும் வீக்கம்; a swelling caused in the leg by the accumulation fluid and morbid growth flesh. [யானைக்கால் + வீக்கம்.] இரண்டு கால்களிலும், கெட்டநீர் சேர்ந்து, யானைக்கால் போன்று பெருத்து வீக்கத்துடன் தேவையற்ற சதை வளர்ச்சியை உண்டாக்கும் நோய். |
யானைக்கிட்டி | யானைக்கிட்டி yāṉaikkiṭṭi, பெ.(n.) வாட்கோரை; a kind of grass. [யானை + கிட்டி = பெருங்கோரை வகை.] |
யானைக்கிளிஞ்சில் | யானைக்கிளிஞ்சில் yāṉaikkiḷiñjil, பெ.(n.) கிளிஞ்சில் வகையுளொன்று; a kind of oyster or shell. கடற்கரையில் ஒதுங்கிக், கிடக்கும் யானைக்கிளிஞ்சில்கள் மேலை நாடுகளில் தரமிக்க உணவாகப் பயன்படுகின்றன (உ.வ.);. மறுவ. படகுக்காலி. [யானை + கிளிஞ்சில் = கடல்வாழ் உயிரி வகை.] கிள் → கிளி → களிஞ்சில் (தொல்.பொருள். 584, உரை);. இக் கிளிஞ்சில்கள் யானைக்கொம்பின் வடிவத்தைப் போன்றவை. கடற்கரையின் மணற்படுகையில் பரவலாகக் காணப்படுபவை. எல்லாக் கடற்கரைகளிலும் மடிந்த நிலையில் ஒதுங்கிக் கிடக்குந் தன்மையன. |
யானைக்குட்டம் | யானைக்குட்டம் yāṉaikkuṭṭam, பெ.(n.) பெருநோய் வகை; a kind of leprosy. [யானை + குட்டம்.] யானைத்தோல் போல், சொறசொறவென்று தடித்துக் கறுத்து, மரத்துக் காணப்படும் நோய். |
யானைக்குப்பு | யானைக்குப்பு yāṉaikkuppu, பெ.(n.) சதுரங்கம்; chess. “யானைக்குப்பு ஆடுவாரைப் போலே” (திவ். திருப்பா. 26, வ்யா);. [யானை + குப்பு] |
யானைக்குரு | யானைக்குரு yāṉaikkuru, பெ.(n.) மர வகை; species of cinnamon. [யானை + குரு] |
யானைக்குருகு | யானைக்குருகு yāṉaiggurugu, பெ.(n.) சக்கரவாகம், 1( சூடா.);; cakra bird. [யானையுண்குருகு → யானைக்குருகு] |
யானைக்குறுந்தோட்டி | யானைக்குறுந்தோட்டி yāṉaikkuṟundōṭṭi, பெ.(n.) குறுந்தோட்டிப் பூடுவகை; queensland hemp, [யானை + குறுந்தோட்டி] |
யானைக்குறும்பு | யானைக்குறும்பு yāṉaikkuṟumbu, பெ.(n.) யானைக்கவடு (இ.வ.); பார்க்க; see { }. [யானை + குறும்பு] |
யானைக்கூடம் | யானைக்கூடம் yāṉaikāṭam, பெ.(n.) யானைகள் கட்டுமிடம் (வின்.);; elephant stable. [யானை + கூடு → கூடம்.(கூடம் = யானைச் சாலை);] |
யானைக்கை | யானைக்கை yāṉaikkai, பெ.(n.) 1. தும்பிக்கை; elephants trunk 2. கை வீக்கங் காணும் நோய்வகை; a filarial disease in which the hand gets swollen. [யானை + கை] |
யானைக்கைக்கோள் | யானைக்கைக்கோள் yāṉaikkaikāḷ, பெ.(n.) பகைவரை யெறிந்து அவர்தம் கரிமாவையும் காவலையும் கைக் கொண்டதைக் கூறும் புறத்துறை (பு.வெ.6, 24); (புறப்.);; theme of destroying one’s enemy and capturing his elephants and fortress. [யானை + கைக்கொள் → கைக்கோள்.] |
யானைக்கொசுகு | யானைக்கொசுகு yāṉaiggosugu, பெ.(n.) பெரிய கொசுகு; large musquito. [யானை + கொசு.கு.] |
யானைக்கொந்தி | யானைக்கொந்தி yāṉaikkondi, பெ. (n.) பெரிய மருந்திலை வகையு ளொன்று a kind of large medicinal leaves. [யானை + கொந்தி.] |
யானைக்கொப்பம் | யானைக்கொப்பம் yāṉaikkoppam, பெ.(n.) யானையை அகப்படுத்துங் குழி (சூடா.);; kheda, pit for entrapping elephants. [யானை + கொப்பம்] |
யானைக்கொம்பன் | யானைக்கொம்பன் yāṉaikkombaṉ, பெ.(n.) 1. கன்னி (புரட்டாசி);யில் விதைத்து ஆறு மாதத்தில் விளையும் ஒருவகை நெல்; 2. வாழை வகை (வின்.);; species of plantain. [யானை + கொம்பன்] |
யானைக்கொம்பு | யானைக்கொம்பு yāṉaikkombu, பெ.(n.) 1. யானையின் கொம்பு; elephant’s tusk. 2. யானையின் எலும்பு; elephant’s bone. 3. நெற்பயிரில் விழும் ஒருவகை நோய்: a disease of paddy crops. [யானை + கொம்பு] |
யானைச்சச்சாரம் | யானைச்சச்சாரம் yāṉaiccaccāram, பெ.(n.) யானைகள் கட்டுமிடம்; elephant stable. [யானை + சச்சாரம்] |
யானைச்சப்பரம் | யானைச்சப்பரம் yāṉaiccapparam, பெ.(n.) யானை மீது மேல்விதானமுள்ள இருக்கை (அம்பாரி); (யாழ்.அக.);; howdah, [யானை + சப்பரம்] [P] |
யானைச்சார்வு | யானைச்சார்வு yāṉaiccārvu, பெ.(n.) யானைகள் கட்டுமிடம் (வின்.);; elephantstable. [யானை + சார்வு] |
யானைச்சாலை | யானைச்சாலை yāṉaiccālai, பெ.(n.) யானைகள் கட்டுமிடம் (வின்.);; elephantstable. மறுவ. யானைக்கூடம். [யானை + சாலை] |
யானைச்சீரகம் | யானைச்சீரகம் yāṉaiccīragam, பெ.(n.) பெருஞ்சீரகம், 2 (மலை.);; chinese anise. [யானை + சீரகம்] |
யானைச்சுண்டை | யானைச்சுண்டை yāṉaiccuṇṭai, பெ.(n.) காட்டுச் சுண்டை; solanum ferox. [யானை + சுண்டை] |
யானைச்சொறி | யானைச்சொறி1 yāṉaiccoṟi, பெ.(n.) பெருந்தினவு நோய் (M.L.);; dry tetter, a scaly eruption, psoriasis. [யானை + சொறி] யானைச்சொறி2 yāṉaiccoṟi, பெ.(n.) சாம்பல் நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ தடிப்புகளையும், வெள்ளை நிறச் செதில்களையும் ஏற்படுத்தும் ஒரு வகை தோல் நோய்; psoriasis. [யானை + சொறி] |
யானைத்தடிக்கால் | யானைத்தடிக்கால் yāṉaittaḍikkāl, பெ.(n.) யானைத்தடிச்சல் பார்க்க; see { }. [யானை + தடிக்கால்] |
யானைத்தடிச்சல் | யானைத்தடிச்சல் yāṉaittaḍiccal, பெ.(n.) 1. படர்கொடி வகை (L.);; smooth-leaved fish-bone climber 2. புளிநறளை (மூ.அக.);; bristly { } vine. 3. புளி அரணைப் பூண்டு; a kind of plant. [யானை + தடிச்சல்] |
யானைத்தடிப்பு | யானைத்தடிப்பு yāṉaittaḍippu, பெ.(n.) யானைத்தடிச்சல் பார்க்க; see { }. [யானை + தடிப்பு.] |
யானைத்தண்டம் | யானைத்தண்டம் yāṉaittaṇṭam, பெ.(n.) யானை செல்லும் வழி (யாழ்.அக.);; elephant’s track. மறுபவ. யானையடி. [யானை + தண்டம்] |
யானைத்தண்டு | யானைத்தண்டு yāṉaittaṇṭu, பெ.(n.) ஒருவகைக் கீரைத்தண்டு; large sized amaranth stem. [யானை + தண்டு] |
யானைத்தந்தம் | யானைத்தந்தம் yāṉaittandam, பெ.(n.) 1. யானையின் கொம்பு; elephant’s tusk. 2. யானையின் எலும்பு; elephant’s bone. [யானை + தந்தம்] [P] |
யானைத்தம்பம் | யானைத்தம்பம் yāṉaittambam, பெ.(n.) யானை கட்டுந் தறி; post to which elephants are chained. [யானை + Skt. stamba → த. தம்பம்] |
யானைத்தறி | யானைத்தறி yāṉaittaṟi, பெ.(n.) 1. யானை கட்டுந்தறி; post to which elephants are chained. 2. யானைக் கூடத்தில் யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடா வண்ணம் அவற்றை பிரிக்கிற குறுக்குமரம், wooden bar set up between elephants in a stable to prevent their fighting with one another. [யானை + தறி] |
யானைத்தலை | யானைத்தலை yāṉaittalai, பெ.(n.) அத்தியிலை; the leaf of fig tree. |
யானைத்தலைவன். | யானைத்தலைவன். yāṉaittalaivaṉ, பெ.(n.) யானைக் கூட்டத்துள் தலைமை ஏற்கும் யானை (மலைபடு. 297, உரை);; leading prominent elephnat in a herd. [யானை + தலைவன்] |
யானைத்தவிசு | யானைத்தவிசு yāṉaittavisu, பெ.(n.) யானை மீது அமைக்கப்படும் இருக்கை (சொளடோல்);; howdah. [யானை+தவிக] மறுவ. அம்பாளி |
யானைத்திசை | யானைத்திசை yāṉaittisai, பெ.(n.) வடக்கு (யாழ்.அக.);; north direction. [யானை + திசை] பெருந்திசையாகக் கருதப்படும் வடதிசை. |
யானைத்திப்பிலி | யானைத்திப்பிலி yāṉaittippili, பெ.(n.) பெருந்திப்பிலி கொடிவகை; elephant-pepper climber, long pepper. [யானை + திப்பிலி] |
யானைத்தீ | யானைத்தீ1 yāṉaittī, பெ.(n.) தணியாத பசியை விளைக்கும் நோய்; a disease that causes insatiable hunger “யானைத் தீ நோயரும்பசி கெடுத்த” (மணிமே 19, 153);. [யானை + தீ] யானைத்தீ2 yāṉaittī, பெ.(n.) தணியாப் பசியை விளைக்கும் ஒரு நோய். இதனால் காய சண்டிகை மிகத் துன்புற்றுப் பின்மணிமேகலையிட்ட உணவால் பசி யொழிந்தனள் (மணிமேகலை.);; a disease of insatiable hungry affecting by this, kayasandigai suffered a lot and satiated with the food offered by { }. [யானை + தீ] |
யானைத்தும்மல் | யானைத்தும்மல் yāṉaittummal, பெ.(n.) யானைத்தும்மயிலை விழும், இது குளிசமாடவுதவும்; an unknown leaf. [யானை + தும்மல்] |
யானைத்தூண் | யானைத்தூண் yāṉaittūṇ, பெ.(n.) 1. யானை கட்டுந்தறி; post to which elephants are chained. 2. யானைக் கூடத்தில் யானைகள் ஒன்றோடொன்று போரெதிர்தலைப் பிரிக்கிற குறுக்கு மரம்; woodenbar set up between elephants in a stable to prevent their fighting with one another. [யானை + தூண்] |
யானைத்தெல்லு | யானைத்தெல்லு yāṉaittellu, பெ.(n.) பெருந்தெல்லு என்னும் கொடிவகை; a creeper. [யானை + தெல்லு] |
யானைத்தொழு | யானைத்தொழு yāṉaittoḻu, பெ.(n.) யானைகள் கட்டுமிடம்; elephant stable. [யானை + தொழு] |
யானைநகம் | யானைநகம் yāṉainagam, பெ.(n.) யானையின் குளம்பு; elephant’s nail, [யானை + நகம்] |
யானைநாரத்தை | யானைநாரத்தை yāṉainārattai, பெ.(n.) கடார நாரத்தை; a big variety of citrus fruit, sevila orange. [யானை + நாரத்தை] |
யானைநெருஞ்சி | யானைநெருஞ்சி yāṉaineruñji, பெ.(n.) பெருநெருஞ்சி; a large thirstle – Tribulus longinosus; Bedalium meria (சா.அக.);. [யானை + நெருஞ்சி] |
யானைநெருஞ்சில் | யானைநெருஞ்சில் yāṉaineruñjil, பெ.(n.) பெருநெருஞ்சில் (இங்.வை.111);; a stoutStemmed herb. [யானை + நெருஞ்சில்] கருத்த முட்களையுடைய பெரு நெருஞ்சில். [P] |
யானைபதி | யானைபதி yāṉaibadi, பெ.(n.) நகம்; nail. மறுவ. யானையுகிர். [யானை + பதி] |
யானைபாய்ச்சு-தல் | யானைபாய்ச்சு-தல் yāṉaipāyccudal, 5 செ.கு.வி.(v.i.) யானையை மதம்படுமாறு செய்தல்; to make an elephant go must or musth “மறைந்தி யானை பாய்ச்சி விடல்”(பழ. 62);. [யானை + பாய்ச்சு-] |
யானைபிடி-த்தல் | யானைபிடி-த்தல் yāṉaibiḍittal, 4 செ.கு.வி. (v.i.) காட்டில் வாழும் யானையைக் குழிவெட்டிப் பிடித்தல்; to catch a wild elephant by the way of digging pit. [யானை + பிடி-, புள் → பிள் → பிண்டி → பிடி-] யானைபிடி-த்தல் – யானையைக் கைப்பற்றுதல், அகப்படுத்துதல், கட்டுதல். யானை பிடித்தல் நால்வகைப்படும். 1. பெண்யானையின் மூலம் பிடித்தல்; பெண்யானையின் இனப்பெருக்கம் பருவகாலத்தில் – காட்டுக்குள் அனுப்பி – ஆண் யானையைப் பிடித்தல். 2. தாரு முறையில் மதம் பிடித்த இரண்டு யானைகளை யானைக் கூட்டமுள்ள காட்டுப் பகுதியில் போகச் செய்து பிற யானைகளைப் பிடித்தல். இமயமலைச் சாரலில் கூர்க்கரினத்தார் இம்முறையினை இன்றும் கையாளுகின்றனர். 3. குழிவெட்டிப் பிடித்தல். குழிவெட்டிப் பிடிக்கும் முறை பற்றிய குறிப்பு புறநானூற்றிலும் (புறம்.7:4:19);. சிலப்பதிகாரத்திலும் (25:3); காணப்படுகிறது. இம்முறை ‘பயம்பு’ என்று குறிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் குறிப்பிட்ட அளவு ஆழத்திற்கு குழிகளைவெட்டி, அதன்மேற்பரப்பினை மூங்கில், இலை, தழைகளால் மூடிப் பிடிப்பர். 4. நான்காவது வகை, கெடா (Kheda); முறையைச் சார்ந்தது. இதுபற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. |
யானைப்பசி | யானைப்பசி yāṉaippasi, பெ.(n.) அளவிறந்த பசி; extreme hunger, hyerorexia. மறுவ. பெரும்பசி [யானை+பசி] |
யானைப்படுகுழி | யானைப்படுகுழி yāṉaippaḍuguḻi, பெ.(n.) யானையை அகப்படுத்துங் குழி (சூடா.);; kheda, pit for entrapping elephants. [யானை + படுகுழி. (படுகுழி = பெருங்குழி] |
யானைப்படை | யானைப்படை yāṉaippaḍai, பெ.(n.) அரசர்க்குரிய நால்வகைப் படையுளொன்று; one of the four kinds of king’s army. ‘யானையுடை படைகாண்டல் மிகவினிதே’ என்றார் பூதஞ்சேந்தனாரும். [யானை + படை] அடிக்கடி யானைப்படையை அரசன் அணிவகுப்பித்துக் கண்டுகளிப்பான். யானைப் படை அக்காலத்துச் சிறந்த படையாகக் கருதப்பட்டது. |
யானைப்பட்டம் | யானைப்பட்டம் yāṉaippaṭṭam, பெ.(n.) யானையின் முகவோடை (உரி.நி.);; ornamental plate tied to an elephant’s fore head. [யானை + பட்டம்] |
யானைப்பதி | யானைப்பதி yāṉaippadi, பெ.(n.) யானை நகம்; elephant’s nail, [யானை + நகம்] |
யானைப்பந்து | யானைப்பந்து yāṉaippandu, பெ.(n.) விளையாட்டு வகை (தஞ். சர. i, 529);; a game. மறுவ. பிள்ளையார் பந்து. [யானை + பந்து] யானைப்பந்து என்னும் இந்த ஆட்டம் பிள்ளையார் பந்து என்னும் விளையாட்டென மொழிஞாயிறு குறித்துள்ளார்: ஊரகப் பகுதிகளில் இந்த விளையாட்டு இன்றும் ஆடப்படுகிறது. இவ்விளையாட்டு பற்றிப் பாவாணர் கூறுவது: ஆட்டத்தின் பெயர் பிள்ளையாரைக் குறிக்கும் ஒரு கல்லின்மேற் பந்தை எறிந்தாடும் ஆட்டு, பிள்ளையார் பந்து. இது திருச்சிராப்பள்ளி வட்டாரத்திற் பிள்ளையார் விளையாட்டென வழங்கும். ஆடுவார் தொகை: பொதுவாக, எண்மர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர். ஆடு கருவி: ஏறத்தாழ ஆறங்குல நீளமுள்ள ஒரு கல்லும், ஒரு பந்தும், இதற்குரிய ஆடு கருவிகளாம். ஆடிடம்: கவரடியும் அதையடுத்த வெளிநிலமும் ஆடுகளமாம். ஆடுமுறை : ஆடுவோரெல்லாரும் சமத் தொகையினரான இரு கன்னையாகப் பிரிந்து கொள்வர். ஒரு செங்கல்லை அல்லது சிறு கல்லைப் பிள்ளையாராக கோடித்து நட்டு, ஒரு கன்னையார் சற்றொப்ப பதினாறடித் தொலைவில் எதிர்நின்று ஒவ்வொருவராய் ஒவ்வொரு தடவை நிரனிரை ஒருவர்பின் ஒருவராய்ப் ஒருமுறை மட்டுமே பிள்ளையாரைப் படுகிடையாகச் சாய்த்தற்குப் பந்தாலடிக்க, இன்னொரு கன்னையார் இரு பக்கத்திலும் பிள்ளையார்க்கும் அவருக்கும் இடையில் வரிசையாக நின்று கொண்டு, எறியப்பட்ட பந்தைப் பிடிக்க முயல்வர். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்தை மேலெழும்பொழுது பிடித்து விடினும், எறிந்த பந்து பிள்ளையாற்மேற் படாவிடினும், பட்டும் அதைப் படுகிடையாய்ச் சாய்க்காவிடினும், எறியுங் கன்னையாள் மாறிக்கொண்டேயிருந்து அனைவருந் தீர்ந்தபின், எதிர்க்கன்னை அடிக்குங் கன்னையாராகவும் மாறல் வேண்டும். பிள்ளையாரைப் படுகிடையாய்ச் சாய்த்த பந்து பிடிக்கப்படாவிடின், பிடிக்க நின்ற கன்னையர் அனைவரும் சற்றுத் தொலைவில் இடையிட்டு நிற்பர். அடித்த கன்னையாளரனைவரும் நெருக்கமாகக் கூடி நின்று, அவருள் ஒருவன் பந்தைத் தன் அடி வயிற்றின் மேல் வைத்து அது வெளிக்குத் தெரியாமல் இரு கையாலும் பொத்திக்கொண்டும், பிறரும் தாம் பந்து வைத்திருப்பதாக எதிர்க் கன்னையாருக்குத் தோன்றுமாறு தனித்தனி நடித்துக்கொண்டும், அவரிடையே பிரிந்து செல்வர். எதிர்க்கட்சியாருள் யாரேனும் ஒருவன், உண்மையாய்ப் பந்து வைத்திருப்பவனை ஐயுறாது அவனுக்குப் பக்கமாக நிற்பின், பந்து வைத்திருப்பவன் திடுமென்று அவன்மேல் எறிந்து விடுவான்; அத்துடன் ஒராட்டை நிறைவுற்றதாகக் கருதப்பெறும். அடுத்த ஆட்டை ஆடுவது ஆடுவார் விருப்பத்தைப் பொறுத்தது. ஆட்டுத் தோற்றம் : ஒருகால், பிறமதப் பகைமைபற்றியும் கொள்ளையடித்தற் பொருட்டும். இடைக் காலத்திற் சில அரசரும் கொள்ளைத் தலைவரும் தெய்வச்சிலைகளை (விக்கிரகங்களை); உடைத்ததும் கவர்ந்ததும், இவ் விளையாட்டுத் தோற்றத்திற்குக் காரணமாயிருந்திருக்கலாம். கசினி மகமது, மாலிக்காபூர், திருமங்கையாழ்வார் முதலியோர் செயல்கள், இங்குக் கவனிக்கத்தக்கன. |
யானைப்பல் | யானைப்பல் yāṉaippal, பெ.(n.) யானையின் கொம்பு; elephant’s tooth, tusk, “யானைப் பல்லை உரைத்துத் தடவினால் மண்டையிடி போகும்”. மறுவ. யானைத்தந்தம் [யானை + பல்] [P] |
யானைப்பல்லாதி | யானைப்பல்லாதி yāṉaippallāti, பெ.(n.) கண்ணில் பூவிழும் நோய்க்கான மருந்து மாத்திரை; an ayurvedic medicinal tablet for opacity of the lens. |
யானைப்பாகன் | யானைப்பாகன் yāṉaippākaṉ, பெ.(n.) யானை நடத்துவோன் (பிங்.);; elephant driver, mahout. மறுவ. மாவுத்தர் [யானை + பாகன்] |
யானைப்பிச்சான் | யானைப்பிச்சான் yāṉaippiccāṉ, பெ.(n.) கொடிவகை, (மலை.);; bristly trifoliate vine. மறுவ. புளிநறளை. [யானை + பிய் → பிய்ச்சான்] |
யானைப்பிஞ்சு | யானைப்பிஞ்சு yāṉaippiñju, பெ.(n.) அத்திப் பிஞ்சு; very tender big fruit. [யானை + பிஞ்சு] ஈங்கு பிஞ்சு என்பது காய்நிலைகள் நான்கனுள் தோன்றிய நிலையினைக் குறிக்கும் என்பார் மொழிஞாயிறு. புள் → (பிள்); → பீள் = இளங்கதிர். இளமைப்பூட்டை = இளங்கதிர். பூட்டை → பீட்டை (மு.தா.39);. புள் → பிள் → பின் → பின்சு → பிஞ்சு. யானை என்பது பெருமைப் பொருள் முன்னொட்டு. |
யானைப்பிரண்டை | யானைப்பிரண்டை yāṉaippiraṇṭai, பெ.(n.) பெரிய வடிவிலமைந்த பிரண்டை; large species of square stalked vine vitis quadrangularis. [யானை + பிரண்டை] புரண்டை → பிரண்டை = புரண்டிருக்கும் அல்லது முறுக்குண்டிருக்கும் கொடி (மு.தா.242);. முறுக்குண்ட நீள்பெருங் கொடியே யானைப் பிரண்டை. யானை என்பது ஈங்கு பெருமைப் பொருள் குறித்த முன்னொட்டு. |
யானைப்பீசன் | யானைப்பீசன் yāṉaippīcaṉ, பெ.(n.) புதுவகைக் கொன்றை; a variety of cassia tree. [யானை + பீசன்] |
யானைப்புச்சான் | யானைப்புச்சான் yāṉaippuccāṉ, பெ.(n.) புளிநறளை; a hairy climbing plant. [யானை + புச்சான்] |
யானைப்புடுக்கு | யானைப்புடுக்கு yāṉaippuḍukku, பெ.(n.) சதை வளர்ந்து பருத்த புடுக்கு; elephantoid scrotum. [யானை + புடுக்கு – புடை → புடம் → புட்டம் – புடைத்த குண்டி. புட்டம் → புட்டா → புட்டை – பெருத்த விதை (அண்டம்); (வே.க.3-77); புடம் → புட → புடுக்கு. ‘கு’ – சொல்லாக்க ஈறு] |
யானைப்புளி | யானைப்புளி yāṉaippuḷi, பெ.(n.) பெரிய மரவகை (மலை.);; baobab. [யானை + புள் → புளி] யானைப் புளி என்னுஞ்சொல், கருமையான பருத்த பெரியமரத்தைக் குறிக்கும். புளிப்புச் சுவை மிக்க சற்றுப் பெரிய பழங்களைத் தரும் புளியமரம், |
யானைப்புளியமரம் | யானைப்புளியமரம் yāṉaippuḷiyamaram, பெ.(n.) பப்பரப்புளி, பொந்தம் புளி மரம், பூரி மரம்; a big tamarind tree, a stout stemmed tamarind tree. [யானை + புளிமரம் → புளியமரம்] |
யானைப்புளுகன் | யானைப்புளுகன் yāṉaippuḷugaṉ, பெ.(n.) பெரும் பொய்யன் (இ.வ.);, great liar [யானை + புளுகன் = பெரும்புளுகன். புள் → புளு → புளுகு = பொய் : (வே.க.3.101);. புளு + புளுகு → புளுகன். யானை = உருவிற்பெரியதைக் குறிக்கும் அடை.] ஒ.நோ. யானைக்கால். யானைப்புடுக்கு, யானை நெருஞ்சில், யானைக்காது. |
யானைப்பெருங்காயம் | யானைப்பெருங்காயம் yāṉaipperuṅgāyam, பெ.(n.) 1. ஒருவகைப் பெருங்காயக் கலவை (வின்.);; a medicinal preparation of asafoetida for elephants. 2. பெருங்காய வகை, (சங்.அக.);; a kind of asafoetida. [யானை + பெருங்காயம்] மருந்துச் சரக்காகப் பயன்படும் பெருங்காயம். ஈங்கு யானை என்னும் அடை, கருமையும், பருமையுங் குறித்ததென்க. |
யானைப்பெருஞ்செல்வம் | யானைப்பெருஞ்செல்வம் yāṉaipperuñjelvam, பெ.(n.) பெருஞ்செல்வம் (கசேந்திரை &sufluni);; great affluence, opulence. – [யானை+பெரும்+செல்வம்] |
யானைப்போர் | யானைப்போர் yāṉaippōr, பெ.(n.) யானைகள் ஒன்றோடொன்று பொரும் போர்; elephant-fight with each other, “குன்றேறி யானைப் போர் கண்டற்றால்” (குறள், 758);. [யானை + போர்] |
யானைமஞ்சள் | யானைமஞ்சள் yāṉaimañjaḷ, பெ.(n.) பெருத்த கிழங்குகளையுடைய மஞ்சள் வகை (மலை.);; a large species of turmeric. [யானை + மஞ்சள்] |
யானைமட்டம் | யானைமட்டம் yāṉaimaṭṭam, பெ.(n.) இள யானை (யாழ்.அக.);; young elephant. [யானை + மட்டம்] |
யானைமணி | யானைமணி yāṉaimaṇi, பெ.(n.) யானையின் இருமருங்குந் துங்கும் மணி; bells suspended on either side of an elephant. “யானைவரும் பின்னே, மணி யோசைவரும் முன்னே” (பழ.);. [யானை + மணி] |
யானைமதம் | யானைமதம் yāṉaimadam, பெ.(n.) யானையின் தலைப்பக்கம் இரண்டு, கண் இரண்டு, கைத் துளை இரண்டு குறி ஒன்று என ஏழிடங்களின்று பாய்வதாகக் கருதப்படும் மதநீர்; must exudation of an elephant, said to issue from seven places, the two temples, the two eyes, the two nostrils and the testes. [யானை + மதம். மதம் = மதநீர்] |
யானைமயக்கி | யானைமயக்கி yāṉaimayakki, பெ.(n.) ஒரு செடி; a plant. [யானை + மயக்கி] |
யானைமறம் | யானைமறம் yāṉaimaṟam, பெ.(n.) அரசனது யானையின் போர் வீரத்தைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு.வெ. 7, 6);; theme praising the heroic deeds of the king’s elephant in battle. [யானை + மறம்] |
யானைமறவர் | யானைமறவர் yāṉaimaṟavar, பெ.(n.) யானை வீரன்; elephant trooper. மறுவ. ஆணையாள், குஞ்சரமல்லர், அத்தி மல்லர். [யானை + மறவர்] |
யானைமலை | யானைமலை yāṉaimalai, பெ.(n.) 1. மதுரைக்கு வடக்கிலுள்ள ஒரு குன்று (தேவா. 858, 1);; a long, bare, elephant-shaped rock near Madurai. 2. கோயம்புத்துர் மாவட்டத்தி லுள்ள ஒரு மலைத் தொடர்; Anaimalais, a range of mountains in the southern part of the Coimbatore district. “ஊனெழு குன்றை யானைமலையென” (திருவாலவா. 26, 28);. [ஏனை → யானை + மலை] |
யானைமால் | யானைமால் yāṉaimāl, பெ.(n.) யானைகள் கட்டுமிடம் (வின்.);; elephant-stable. [யானை + மால். மால் = யானை கட்டுந் தொழுவம்.] |
யானைமாவுத்தன் | யானைமாவுத்தன் yāṉaimāvuttaṉ, பெ.(n.) யானைப்பாகன்; mahout. [யானை + மாவுத்தன்] |
யானைமீக்குவம் | யானைமீக்குவம் yāṉaimīkkuvam, பெ.(n.) கறுப்பு மருதுவகை; leathery-winged myrobalan. [யானை+மீக்குவம்] |
யானைமீன் | யானைமீன் yāṉaimīṉ, பெ.(n.) 1. பெருமீன் வகை(பிங்);; a very large fish. 2.திமிங்கில வகை (தக்கயாகப், 384, உரை);; a kind of whale. [யானை+மீன்] |
யானைமுகபடாம் | யானைமுகபடாம் yāṉaimugabaṭām, பெ.(n.) யானையின் கும்பத்தலத்திலிடும் ஒப்பனைச் சீலை (பிங்.);; ornamental cloth covering the fore head of an elephant. [யானை+முகபடாம்] |
யானைமுகவன் | யானைமுகவன் yāṉaimugavaṉ, பெ.(n.) பிள்ளையார் கடவுள் (திவா.);; Ganesa, [யானை+முகவன்] |
யானைமுகவற்கிளையோன் | யானைமுகவற்கிளையோன் yāṉaimugavaṟgiḷaiyōṉ, பெ.(n.) 1. முருகக் கடவுள் (பிங்.);; Skanda. 2. வீரபத்திரக் கடவுள் (சூடா.);; Virabhadra. |
யானைமுகவோட்டம் | யானைமுகவோட்டம் yāṉaimugavōṭṭam, பெ. (n.) யானையுருவமான முகப்புள்ள தோணி(சிலப்.13, 176, உரை);; boat with an elephant-shaped prow. மறுவ. கரிமுகவம்பி (சிலப்.13,179); [யானை+முகம்+ஒடம்] |
யானைமுள் | யானைமுள் yāṉaimuḷ, பெ.(n.) 1. நீருடைய மரம்; buffalo thorn cutch. 2. குடைவேல் மரம்; umbrella thorn babul. [ஏனை→யானை+முள்] |
யானைமுள்ளிச்சங்கு | யானைமுள்ளிச்சங்கு yāṉaimuḷḷiccaṅgu, பெ.(n.) சங்குவகை, பெரிய யானை போன்ற அமைப்புடையதும், வெளிப்புறம் முட்கள் நிறைந்ததுமான சங்கு; an elephant-shaped thorny conch. |
யானைமூத்திரம் | யானைமூத்திரம் yāṉaimūttiram, பெ.(n.) யானையின் சிறுநீர்; elephant’s urine. [யானை + மூத்திரம்] இது மருந்துக்கு பயன்படும். |
யானையங்குருகு | யானையங்குருகு yāṉaiyaṅgurugu, பெ.(n.) குருகு வகை; a kind of heron. “யானையங் குருகின் சேவலோடு” (மதுரைக் 674);. |
யானையடி | யானையடி yāṉaiyaḍi, பெ.(n.) 1. சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் நெறி; the course of the elephant or the rook in a game of chess. 2. நேர்வழி; straight path or course. 3. ஐயனார் கோயில் முன்றிலில் யானையுரு நிறுத்தியிருக்குமிடம்; place where an elephant’s figure is set in front of an { } temple. 4. பெரிய வட்டமாயுள்ளது; anything large and round like the foot of an elephant. “யானையடி யப்பளம்” 5. செடிவகை (இ.வ.);; a plant. [யானை + அடி. அண் → அடி. இனி அடு → அடி என்றுமாம்.] யானை நிறுத்தியிருக்கும் அல்லது கட்டியிருக்கும் பெரிய வட்டமான இடமே, “யானையடி” எனப்படும். |
யானையடிக்கல் | யானையடிக்கல் yāṉaiyaḍikkal, பெ.(n.) தளம்போட உதவும் பெரிய சதுரச் செங்கல் (இ.வ.);; large sized square brick, used in flooring or roofing. [யானையடி + கல்] |
யானையடியிலை | யானையடியிலை yāṉaiyaḍiyilai, பெ.(n.) யானைக்கால்மூலி பார்க்க; see { }. [யானையடி + இலை.] யானைத்தடம் போன்று அமைப்புள்ள மூலிகையிலை. |
யானையணைதறி | யானையணைதறி yāṉaiyaṇaidaṟi, பெ.(n.) 1. யானை கட்டுந்தறி; post to which elephants are chained. 2. யானைக் கூடத்தில் யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடா வண்ணம் அவற்றைப் பிரிக்கிற குறுக்குமரம்; wooden bar set up between elephants in a stable to prevent their fighting with one another. [யானை + அள் → அண் → அண → அணை + தறி (அணைதறி = கரி, பரி முதலியவற்றைக் கட்டும் கம்பம் அல்லது குறுந்தறி);] |
யானையறுகு | யானையறுகு yāṉaiyaṟugu, பெ.(n.) பெரிய அருகம்புல்; large sized dubgrass or harialli grass. [யானை + அறு + அறுகு] மாந்தர்தமை வருத்தும் பெரிய நோய்களை அறுப்பது யானையறுகு, பயிர் பச்சைகளைக் களைகளாக வேரூன்றி அழிப்பதனாலும், இப்பெயர் வந்ததெனலாம். |
யானையாளி | யானையாளி yāṉaiyāḷi, பெ.(n.) யாளி (சூடா.); பார்க்க; see { }. [யானை + யாளி] |
யானையாள் | யானையாள் yāṉaiyāḷ, பெ.(n.) யானை வீரன்; elephant trooper. [யானை + ஆள்.] |
யானையுண்குருகு | யானையுண்குருகு yāṉaiyuṇgurugu, பெ.(n.) 1. யானையைக் கொன்று தின்பதாகக் கருதப்படும் ஒரு பெரும் பறவை (வின்.);; a labulous bird, reputed to be able to devour an elephant, 2. இரவில் இணை பிரிந்து வருந்துவதாகக் கூறும் பறவை வகை; a kind of bird that anguishes for sepearation of its pair in night. சக்கரவாகச் செழும்பெடை காண்” (தணிகைப்பு. களவு,347);. [யானை + உண் + குருகு] |
யானையுரித்தோன் | யானையுரித்தோன் yāṉaiyurittōṉ, பெ.(n.) சிவபிரான்; as having flayed an elephant. [யானை + உரித்தோன்] |
யானையெலுமிச்சை | யானையெலுமிச்சை yāṉaiyelumiccai, பெ.(n.) பெரிய எலுமிச்சை; large sized species of |ime. [யானை + எலுமிச்சை] |
யானையேற்றம் | யானையேற்றம் yāṉaiyēṟṟam, பெ.(n.) யானை மீதேறி அதனையடக்கி நடத்தும் வித்தை (பதார்த்த 1451, தலைப்பு);; art of riding an elephant bringing it under his control. [யானை + ஏறு → ஏற்று → ஏற்றம்] அரசர்க்குரியனவாகச் சொல்லப்பெறும் அடையாளப்பொருள் இருபத்தொன்றனுள் வலிமை, பெருமை முதலிய சிறப்புக்களைக் குறிக்கும் யானை. அரசப் பதவி காணவிழைவார் கற்கவேண்டும் வித்தைகளுள் யானையேற்றமு மொன்று. |
யானையைவிழுங்குமீன் | யானையைவிழுங்குமீன் yāṉaiyaiviḻuṅgumīṉ, பெ.(n.) திமிங்கிலம் (சா.அக.);; whale. [யானை + ஐ + விழுங்கு + மீன்] யானை விழுங்குமீன் என்னும் பெயருள்ள திமிங்கிலம் கடலில் வாழ்வது; பாலூட்டி யினத்தைச் சார்ந்தது. மீனையொத்த தோற்றமுடைய பெரிய விலங்கு. [P] |
யானைவணக்கி | யானைவணக்கி yāṉaivaṇakki, பெ.(n.) யானைத்தோட்டி (பிங்.);; elephant goad. [யானை + வணக்கு + வணக்கி] |
யானைவணங்கி | யானைவணங்கி1 yāṉaivaṇaṅgi, பெ.(n.) 1. தேட் கொடுக்கிச் செடி; a plant. 2. நெருஞ்சி; a prostrate plant with thorny fruits, land caltrops-Tribulus terrestris. [யானை + வணங்கி] யானைவணங்கி2 yāṉaivaṇaṅgi, பெ.(n.) 1. சிறுசெடிவகை; turnsole, 2. ஒரு வகைச் செடி; a stout-stemmed herb with spiny fruits and slimy leaves. [யானை + வணங்கு → வணங்கி] |
யானைவாரி | யானைவாரி yāṉaivāri, பெ.(n.) 1. யானை பிடிக்குமிடம்; place where elephants are caught or happed. 2. யானைகள் கட்டுமிடம் (வின்.);; elephant-stable. [யானை + வாரி. வாரி = யானை யகப்படுத்துமிடம்] |
யானைவாழை | யானைவாழை yāṉaivāḻai, பெ.(n.) 1. பெரிய வாழைவகை; a large species of plantain. 2. நீண்ட குலை கொண்ட ஒருவித வாழை; stunted plantain not more than four feet hight and having its bunch of fruits hanging down like a elephant’s trunk. [யானை + வாழை] |
யானைவிச்சுளி | யானைவிச்சுளி yāṉaiviccuḷi, பெ.(n.) கழுகு வகை (வின்.);; a species of osprey. [யானை + விச்சுளி] [P] |
யானைவிழுங்குமீன் | யானைவிழுங்குமீன் yāṉaiviḻuṅgumīṉ, பெ.(n.) யானையைவிழுங்குமீன் பார்க்க; see { }. [யானை + ஐ + விழுங்கு + மீன்] |
யானைவீரர் | யானைவீரர் yāṉaivīrar, பெ.(n.) எண் பெருந் துணைவருள் யானை மேலிருந்து போர்புரியும் வீரர் (திவா.);; warriors riding on elephants, one of en-perun-tunavar “யானை வீரருமிவுளித் தலைவரும்” (சிலம் 26, 76);. மறுவ. யானை மறவர், குஞ்சரமல்லர். [யானை + வீரர்] |
யான் | யான்1 yāṉ, பெ.(n.) செய்யான்; a kind of centepede. யான்2 yāṉ, சு.பெ.(n.) நான் first person, I. “யான்நோக்குங் காலை நிலன்நோக்கும்” (குறள், 1093);, “யான் எனும் ஆசு இல் ஆதவனே.”(சிவ.திரு.149); [ஏ → ஏன் → யான் (ஏ – உயர்வு);.] ‘நான்’ என்னும் செருக்கு (அகங்காரம்); மாந்தனுக்கு இயல்பாக வுண்மையால், முந்தியல் தமிழன் தற்பெருமையும் தன்னலமும் பற்றி ‘ஏ’காரச் சுட்டால் தன்னைக் குறித்தான் (க.வி.பக்.58);. “யா”-என்னும் தன்மைச்சுட்டு மூலத்தினின்று முகிழ்த்த சொல். “நான்” என்றவாறு, தன்னையே குறிப்பிட்டுச் சொல்லிக் கொள்ளுவதற்கு முதன்முதல் மாந்தன் பயன்படுத்திய மூல வொலியீடு. யான்3 yāṉ, பெ.அ. தன்மை யொருமைப் பெயர் (தொல். சொல். 162);; first person singular noun. தெ. எநு; ம. ஏந; க. ஊந். |
யான்மை | யான்மை yāṉmai, பெ.(n.) செருக்கு, தன்னலம் மற்றும் தன்முனைப்புணர்வு: egoism; arrogancy, self-consciousness. ‘யான்மை தீர்புகழ் வியாதன்” (சேதுபு. விது.1); [ஏ → ஏன் → யான் → யான்மை] |
யாபதம் | யாபதம் yāpadam, பெ.(n.) வாலுளுவை; a plant-Celastrus paniculata. [யா + பதம்] |
யாபனம் | யாபனம் yāpaṉam, பெ.(n.) 1. பொழுது போக்குகை; whiling away one’s time. 2. தாமதிக்கை; delaying. 3. இகழுகை; despising. [Skt. {} → த. யாபனம்] |
யாபம் | யாபம் yāpam, பெ.(n.) யாப்பம் பார்க்க; see { }. யாபி1-த்தல் { } 4 செ.கு.வி.(v.i.); 1. பொழுது பொக்குதல்; to while away one’s time. 2. துய்த்தல்; to enjoy. “சுசிக்குச் சுசிந்தை சொல்லுக்குத் தேருர், இருக்கப் பறக்கை, யாபிக்கக் கோட்டாறு” (நாஞ்);. [யா → யாபி-] |
யாபி | யாபி2 yāpittal, 4 செ.கு.வி.(v.i.) உரிமையில்லையாகவும் எடுத்தாளுதல்; to obtain unlawful possession of; to encroach upon. |
யாபேரும் | யாபேரும் yāpērum, மா. பெ. எல்லாரும் (இ.வ.);; one and all. [யா + பேரும்.] |
யாப்பண்டம் | யாப்பண்டம் yāppaṇṭam, பெ.(n.) கருக்கொண்டவள் விரும்பும் திண்பண்டம்; an eatable desired by a pregnant Woman. மறுவ, காயமருந்து. |
யாப்பதிகாரம் | யாப்பதிகாரம்1 yāppadikāram, பெ.(n.) செய்யுளிலக்கணம் கூறும் நூற்பகுதி (தொல். பொருள். 313, பேரா);; section on prosody. மறுவ. யாப்பிலக்கணம். [யாப்பு + அதிகாரம். அதிகாரம் = நூற்பெரும் பிரிவு.] யாப்பதிகாரம்2 yāppadikāram, பெ.(n.) செய்யுளிலக்கணம் பற்றி புலவர் குழந்தை எழுதிய நூல்; a treatise on Tamil prosody by pulavar { }. |
யாப்பம் | யாப்பம் yāppam, பெ. (n) புணர்ச்சி (சங். அக.);; coition. மறுவ. கலவி. [யாப்பு + அம் – யாப்பம்] த. யாப்பம் → Skt. { } (யாப); = sexual intercourse. |
யாப்பருங்கலக்காரிகை | யாப்பருங்கலக்காரிகை yāpparuṅgalaggārigai, பெ.(n.) பதினோராம் நூற்றாண்டில் அமிதசாகரர் கட்டளைக் கலித்துறையால் இயற்றிய செய்யுளிலக்கண நூல்; a treatise on Tamil prosody in { } metre by { } 11th, C. மறுவ. காரிகை. [யாப்பருங்கலம் + காரிகை] கரு → கார் → காரிகை = அழகிய பெண். யாப்பருங்கலக் காரிகையென்பது அழகிய பெண்ணை விளித்துப் பாடும் பாவகையில் அமைந்தது. |
யாப்பருங்கலம் | யாப்பருங்கலம் yāpparuṅgalam, பெ.(n.) பதினோராம் நூற்றாண்டில் அமிதசாகரர் நூற்பாவால் இயற்றிய செய்யுளிலக்கண நூல்; a grammatical treatise on prosody in suttira-p-pa, by Amidasagarar. |
யாப்பறை | யாப்பறை yāppaṟai, பெ.(n.) கற்பில்லாதவள்; abandoned woman. “யாப்பறை யென்றே யெண்ணின னாகி” (மணிமே 22, 42);. [யாப்பு + அறு → அறை – யாப்பறை = யாப்பு அறுபட்டவள். கட்டு நெகிழ்ந்தவள்.] |
யாப்பானந்தம் | யாப்பானந்தம் yāppāṉandam, பெ.(n.) பாட்டில் தலைவன் பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடை மொழியினைப் புணர்த்து இடர்ப்படப்பாடும் ஆனந்தக் குற்றம் (யாப். வி. 96, பக். 522);; a defect in composition in which the name of the hero of a poem is clumsily set in the midst of attributes. முன் தொடுக்கப்பட்ட சிறப்புடை மொழியின் பின்னர்ப்பாட்டுடைத்தலைவன் பெயர்நிறீஇ அதன் பின்னே சிறப்புடை மொழி நிறீஇச், சிறப்பிக்கப்படுவதனை இவ்வாறு இடர்ப்படப் பாடுவது (யாப்.96);. [யாப்பு + Skt. { } → த. ஆனந்தம்] |
யாப்பியம் | யாப்பியம் yāppiyam, பெ.(n.) 1. பொழுது போக்கு (யாழ்.அக.);: hobby 2. காலவரை யறை யுள்ளது; time-bound that which has a time limit or frame. 3. வளி முதலாய நோய் மூன்றனுள் பெரும்பான்மை தீர்க்கத் தக்கதும் சிறுபான்மை தீர்க்க முடியாததுமான நாட்பட்ட நோய் (குறள், 949, கீழ்க் குறிப்பு);; chronic disease as not completely curable, one of three { } 4. இழிவானது (யாழ்.அக);; that which is contemptible or mean, pully-mindedness. 5. நாஞ்சில் நாட்டு மருமக்கத்தாய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடும்பத்திலிருந்து விலகும் போது அக்குடும்பத்தில் அவனுக்குள்ள பங்குக்கு ஈடாகக் கொடுத்து, ஒதுக்குஞ் சொத்து; the property given to a male member of the { } { } family in lieu of his interest in the family property. ‘அவனுக்கு இந்நிலத்தை யாப்பியமாகக் கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள்’. [யாப்பு → யாப்பியம்] |
யாப்பியயானம் | யாப்பியயானம் yāppiyayāṉam, பெ. (n.) கோயில் திருமேனியை நெடுந்துாரம் கொண்டு செல்லுதற்கு உதவும் தண்டிகை; ornamental palanquin for carrying an idol for long distances. [யாப்பியம் + யானம்] |
யாப்பியரோகம் | யாப்பியரோகம் yāppiyarōkam, பெ.(n.) நோய் மூன்றனுள் பெரும்பான்மை தீர்க்கத் தக்கதும் சிறுபான்மை தீர்க்க முடியாததுமான நாட்பட்ட நோய் (குறள், 949 கீழ்க் குறிப்பு);; chronic disease, as not completely curable, one of three { } [யாப்பியம் + Skt. ரோகம். யாப்பியம் = உடம்பு] Skt. { } → த. ரோகம். |
யாப்பியவுகந்துடைமை | யாப்பியவுகந்துடைமை yāppiyavuganduḍaimai, பெ.(n.) நாஞ்சில் நாட்டிலுள்ள குழந்தைகளுக்குத் தகப்பனாருடைய யாப்பியச் சொத்திலுள்ள உரிமை; the reversionary interest of the children of a { } family in the { } property of their father. [யாப்பியம் + உகந்துடைமை] |
யாப்பிலக்கணம் | யாப்பிலக்கணம் yāppilakkaṇam, பெ.(n.) செய்யுளிலக்கணம்; prosody. [யாப்பு + இலக்கணம்] |
யாப்பு | யாப்பு1 yāppu, பெ.(n.) 1. கட்டுகை; binding, tying. “கழல்யாப்புக் காரிகை நீர்த்து” (குறள். 777);. 2. பிணிப்பு (நற், 21:2); கட்டு, கட்டுவடம் (கலி.54:3);; tie, “யாப்புடை யாழ்” (சீவக. 2011);. 3. கட்டப்பெற்ற பாட்டு, செய்யுள் (பிங்.);; poetry, 4. யாழ்ப் பத்தரிற் குறுக்கே வலிவுறச் செய்யுங் கட்டு; ligature stretched across the pot like portion of { } “புதுவது புனைந்த வெண்கை யாப்பமைத்து” (மலை. 28);. 5. சிறப்புப் பாயிரவிலக்கணம் பதினொன்றனுள் இன்ன நூல் கேட்டபின் இன்னது கேட்கத்தக்க தென்னும் முறை (நன். 49);; graduated serial order of treatises to be studied one of order of { }. 6. அன்பு, அன்புத் தொடர்பு; affection, as binding persons together love that was springing up between them. “நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுளட்டிய நீர்” (குறள் 1093); 7. உறுதி; resolution, steadiness, firmness, conviction. “யாப்புறு மாதவத்து” (மணிமே பதி. 57);, “யாப்பிலோரை” (முது. காஞ்சி. 21);. 8. சூழ்ச்சி (பிங்.);; counsel, guile, 9. பொருத்தம்; fitness, matching. “அதற்கு யாப்புடைமையின்” (தொல், சொல். 77);. 10. கவசம் (நற்.265:4);; armour 11. பாம்பு (அக.நி.);; snake, 12. மெய்ப்பை (பரி, திரட்டு; 12:19);; சொற்களைப் பாவாக இசைத்தல் (தேவ.2);. அடிதோறும், பொருள் பெறச்செய்வதொரு செய்கை (பேரா.தொல். பொருள். 313); தெ. ஆபு [யா → யாப்பு] யாப்பு எனினும், பாட்டு எனினும், தூக்கு எனினும், செய்யுள் எனினும், தொடர்பு எனினும் ஒக்கும் (யாப்.பாயி.);. யாப்பு2 yāppu, பெ.(n.) வல்லிகை என்னும் குதிரைக்குரிய கழுத்தணி (கலி.96:10);; valligai, tied tinkling bells put around the neck of horse. [யா → யாப்பு = குதிரையின் கழுத்தில் பிணைத்துள்ள அணிவகை] யாப்பு3 yāppu, பெ.(n.) முலைக்கச்சு, bodice, stays for the breast. [யா → யாப்பு = கட்டுத்துணி] 1. மார்பகத்தின் மேலிட்டுக் கட்டும் சீலைப் பகுதி. 2. முதுகை வளைய வந்து மார்பருகில் இணைத்து முட்டை கட்டும் கச்சை (சீதக்.36);. யாப்பு yāppu, பெ. (n.) யாழின் ஓர் உறுப்பு component of an stringed instrument called lute. (13:83);. [யா-யாப்பு] |
யாப்புண்டல் | யாப்புண்டல் yāppuṇṭal, பெ.(n.) கட்டுப்படுதல்; subject to, bounden. [யாப்பு + உண்டல்] |
யாப்புறவு | யாப்புறவு yāppuṟavu, பெ. (n.) 1. தள்ளத் தகாத மரபொழுங்கு; inviolable rule. ”ஒன்றற்கே இவையாறும் வரவேண்டு மென்னும் யாப்புறவில்லை” (நன்.132 மயிலை);. 2. தகுதி; fitness, suitability. “கோப்பெருந்தேவிக் கல்லதை யிச்சிலம் பியாப்புறவில்லை” (சிலப். பதி 24);. [யாப்பு + உறவு – யாப்புறவு] |
யாப்புறு | யாப்புறு1 yāppuṟudal, 20 செ.கு.வி.(v.i.) பொருள் நிரம்பியிருத்தல்; to be pregnant with meaning. “யாப்புற வந்த” (தொல். பொருள்.254);. [யாப்பு + உறு-] யாப்புறு2 yāppuṟudal, 17 செ.கு.வி. (v.i) ஏற்புடையதாதல், சம்மதித்தல்; to be appropriate, to earn, gather. “வருந்தி யாப்புற்ற” (ஞானா 20);. [யாப்பு + உறு-] யாப்புறு3 yāppuṟuttal, 4 செ.குன்றாவி. (v. t.) 1. வலியுருத்துதல்; to enforce. “பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு” (குறள், 944, உரை);. 2. கட்டுப்படுத்தல்; to bound. [யாப்பு + உறு-] |
யாப்புறுப்பார் | யாப்புறுப்பார் yāppuṟuppār, பெ.(n.) உறுதிப்படுத்துவார்; one who confirms. [யாப்புறு → யாப்புறுப்பார்.] |
யாப்புவகை | யாப்புவகை yāppuvagai, பெ.(n.) நான்கு பிரிவாகவுள்ள நூலமைப்பு; treatise which has four sections. [யாப்பு + வகை] நூல்யாக்குமிடத்து நான்கு பிரிவாக நூல் அமைக்கப்படும். அவையாவன:- 1. தொகுத்தமைத்தல், 2. விரித்துக் கூறும் பான்மையில் அமைத்தல், 3. தொகை விரியாகக் கூறுதல், 4. மொழிபெயர்த்தல். |
யாப்புவழு | யாப்புவழு yāppuvaḻu, பெ. (n.) செய்யுட் குற்றங்களுளொன்று (யாப்.வி.பக். 525);; a defect in poetic composition [யாப்பு + வழு] “யாப்பதிகாரத்தோடு மாறு கொள்வது” (யாம் 95.); |
யாமகோடம் | யாமகோடம் yāmaāṭam, பெ.(n.) 1. சேவல்; cock, 2. நாழிகை வட்டில் (யாழ். அக.);; hour glass. |
யாமக்காலம் | யாமக்காலம் yāmakkālam, பெ.(n.) நள்ளிரவு; mid-night. மறுவ. நடு இரவு நடுநாள். [யாமம் + காலம்] யாமக்காவலர் { } பெ. (n.); யாமங்கொள்பவர் பார்க்க; see { }. [ஏமம் → யாமம் + காவலர்] |
யாமக்கிழங்கு | யாமக்கிழங்கு yāmakkiḻṅgu, பெ. (n.) ஒருவகைக் கிழங்கு; a variety of corm. [யாமம் + கிழங்கு] |
யாமக்கோட்டம் | யாமக்கோட்டம் yāmakāṭṭam, பெ. (n.) உவளகம்; harem. “யாமக் கோட்டத் தருஞ்சிறைக் கோடல்” (பெருங். இலாவாண, 11, 25);. [யாமம் + கோட்டம்] |
யாமங்கொள்பவர் | யாமங்கொள்பவர்1 yāmaṅgoḷpavar, பெ.(n.) 1. இடையாமத்து ஊர்க்காவல் செய்பவர்; night watchman. “யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம்” (புறநா. 37);, 2. நாழிகைக் கணக்கர்; those who announce the time of the day to the king. “குறுநீர்க் கன்னலின் யாமங் கொள்பவர்” (மணிமே.7:65); யாமங்கொள்பவர்2 yāmaṅgoḷpavar, பெ.(n.) யாமந்தோறும் காவல் செய்தலை மேற்கொள்ளும் காவலர்; mid-night watchman, “காப்புடை வாயில் போற்றோ என்னும் யாமங் கொள்பவர்” (நற்.132:8-9);. [ஏமம் → யாமம் + கொள்பவர்] இரவுப் பொழுதில் ஒவ்வொரு யாமத்தும் காவல் மேற்கொள்பவர். |
யாமசரிதன் | யாமசரிதன் yāmasaridaṉ, பெ. (n.) அரக்கன்; arakkaṉ, as roaming about at night. “யாமசரிதனை மூளையுக வுடல் கீளுமே” (பாரத.வேத்திரகீய. 45);. |
யாமசிக்கிழங்கு | யாமசிக்கிழங்கு yāmasikkiḻṅgu, பெ.(n.) தண்டுக்கிழங்கு வகையு ளொன்று; a variety of corm. சமையலுக்குப் பயன்படும் கருப்புத் தோலுடன் கூடிய கிழங்கு. |
யாமன் | யாமன் yāmaṉ, பெ.(n.) இறப்புக் கடவுள்; iṟappukkaḍavuḷ, மறுவ. இயமன் [ஏமம் → யாமம் → யாமன்.] உடல் வேறு உயிர் வேறாக இருவேறுபடுத்தும் கூற்றுவன். |
யாமபதி | யாமபதி yāmabadi, பெ. (n.) திங்கள் (சந்திரன்); (யாழ்.அக.);; moon. [யாமம் + பதி] |
யாமபேரி | யாமபேரி yāmapēri, பெ. (n.) இரவில் ஒவ்வொரு சாமத்தின் தொடக்கத்திலும் கொட்டும் பேரிகை; drum beaten with stick at the commencement of each of the three watches or segment of the mid night. “யாம பேரி யிசைத்தலால் (கம்பரா. கைகேசிசூழ் 57);, [யாமம் + பேரி. பேரி = முரசு பேரிகை என்பதன் கடைக்குறை பேரி] |
யாமம் | யாமம்1 yāmam, பெ.(n.) 1. 7 1/2 நாழிகை கொண்ட காலவளவை (பிங்.);; a watch of 7 1/2 { } = 3 hours, period of three hours. 2. நள்ளிரவு; midnight, the middle watch of the night. “கூதிர் யாம மென்மனார் புலவர்” (தொல், பொருள், 6);. 3. இரவு; night. “யாமக்கடலை நீந்துவேன்.” (சீவக. 1663);. 4. இடக்கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி (சிலப்.3,27, உரை);; small drum beaten by the left hand. 5. ஒரு நாளில் 40 நாழிகைக்குமேல் 50 நாழிகை வரையுள்ள பொழுது (நாமதீப.559);; the period between the fortieth and the fiftieth { } of a day. 6. பொழுது (அக.நி.);; time, 7. அகலம் (நாமதீப.778);; breadth. த. யாமம் → Skt. மறுவ. நள்ளிரவு, நடு இரவு, நடுநாள், நடுச்சாமம். [ஏம் → ஏமம் → யாமம்] யாமம் என்னுஞ் சொல், “யா” என்னும் கருமைக்கருத்து மூல வேரடியினின்று கிளைத்தது. அங்கிங்கெனாதவாறு, யாங்கணும் இருள் கவ்வித் திகழும், நடு இரவுக் காலமே யாமம். இச்சொல், இரவுக்காலம் என்னும் பொதுப் பொருளில், முதற்கண் வழங்கியது. காலப்போக்கில் அவ்விருள் செறிந்து திகழும் நடுப்பகுதி நேரமாகிய நள்ளிரவுப் பொருண்மையில், சிறப்பாக மக்களிடையே, வழக்கூன்றியது. நள்ளென்னும் இடையறாத் தொடரோசை எங்கும் கேட்கும், இராப்பொழுதின் நடுக்கூறே யாமம் என்று கழகக்கால இலக்கியங்கள் இயம்பும். எ.கா.வருமாறு :- 1. “நள்ளென் யாமத்து” (குறுந். 160 : 4); 2. “நள்ளென யாமத்து மழை பொழிந்தாங்கே” (நற். 22 :11);. 3. “கடல் மீன் துஞ்சு நள்ளென் யாமத்து” (அகம் 142 : 20);. 4. “நள்ளென் யாமத்து உயவுத் துணையாக.” (அகம்.103 :12);. 5. “யாம இரவின் நெடுங்கடை நின்று” (அகம்:208 : 1);. நடுஇரவு, நள்ளிரவு என்னும் பொருண்மையில் தொல்காப்பியம் முதலான கழகக்காலப் பனுவல்களில் பரந்துபட்ட இலக்கியப் பதிவுகள் காணப்படுகின்றன. அவற்றுட் சில வருமாறு :- 1. “குறிஞ்சி, கூதிர், யாமம் என்மனார் புலவர்” (தொல்.பொருள்.1 : 7); 2. “புலம்புகொள் யாமத்து” (குறுந் 279 : 3); “………….. உறை செறிந்து” 3. “ஊதை தூற்றும் கூதிர் யாமத்து” (குறுந்.86:3:4); 4. “நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்” (புறநா.189:3);. “யாமம்” என்னும் சொல்பற்றி ஆய்வாளர் ப.அருளிகூறுவது வருமாறு :- பொதுப்பட இரவைக் குறித்துத் தோற்றிய யாமம் என்னுஞ் சொல், கருத்துக் கூர்ப்பு எய்தி, நள்ளிரவாகிய நடு இரவையே காலப்போக்கில், சிறக்கக் குறித்து வழங்கத் தலைப்பட்டது. “ய” கரம் “ஜ” கரமாவது வடவிந்திய ஆரிய மொழி இயல்பு. த. யாத்திரை → Skt. { }. Hindi. { }. “யாமம்” என்னும் கருமைக்கருத்து அடிப்படைச் சொல்லினின்று (சகரமெய் முற்பேறுற்றுத்); திரியெய்திவாறு பயில்வு கொண்டுள்ள இந்திய-ஆரிய மொழிச் சொற்களாவன : யாமம் → (Sanskrit); { } = black, swarthy, dark-blue [Prakrit] { } = black, dark-blue [Pali] : { } = black, dark [Pashai] : { }, { } = black Kachur – i sala dialect of pashai : { } = black Wegali dialect of pashai : { } = black. Kashmiri : somu = dark-blue, dark brown, Nepali : { } = dark coloured Assamese : { } { } = swarthy, lightish dark Gujarati : { } = black. dark Sindhi : sam – van = black colour அடுத்த திரிபு வளர்ச்சி : யாமம் → [Sanskrit] { } → { } = dark-coloured Prakrit : Samala = dark coloured Sindhi : { } = dark-blue{ } : { } { } saula = black, dark-complexioned Nepali : { } = swarthy Oriya : { } { } ஒரு ஒப்பு நோக்குக்கு : [Sanskrit] { } – { } [சியாமா சாஸ்திரி கருப்பாசிரியன்] [கருப்பாசிரியப் பார்ப்பான்] யா = கருமை யா → [Sanskrit] { } = dark, dark-brown { } : { } = black யா → [Sanskrit] { } → { } { } = darkness யாமங் கொள்பவர் = இடையாமத்து ஊர் காப்பவர் கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி” (புறம் : 37 :9-10); யாமம்2 yāmam, பெ.(n.) தெற்கு (சூடா.);; South. |
யாமயாழ் | யாமயாழ் yāmayāḻ, பெ.(n.) நடுச் சாமத்தில் இசைக்கும் யாழ்; lute played at midnight. “யாமயாழ் மழலையாள்” (கம்பரா. நாடவிட்.34);. [யாமம் + யாழ்] நள்ளிரவில் இசைக்கப்பெறும் யாழ்; ஒவ்வொரு யாமத்திலும், அதற்குரிய பண்முறையோடு இசைக்கப்பெறும் யாழ். |
யாமரம் | யாமரம் yāmaram, பெ.(n.) 1. கரிய பருத்த அடிப்பகுதியை யுடைய மரம்; the blackish trunk of a tree. “யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும்” (தொல்.எழுத்து. 229);. 2. ஆச்சா மரம் (அக.நி.);; hard wickia binata tree. கன். ஆக, ஆச ஆர்ச. மறுவ. கருந்தாளி மரம், மையாளி மரம், நெடுந்தாளி, அஞ்சன மரம், காட்டடகு, சாலமரம். [யா + மரம் – யாமரம்] கரிய பருத்த தாள்பகுதியை உடைய நெடிய மரம். இம்மரம் பாலை நிலத்தில் பரவலாகக் காணப்பெறும். இம்மரத்தின் நிலைத்திணைப் பெயரை, (தாவரப் பெயரை); இதுகாறும், யாரும் தெளிவாக வரையறுக்கவில்லை. “யா” என்னும் ஒரசைச் சொல், சொல்லமைப்பிலேயே, கருமைப் பொருண்மையை பெயராகப் பெற்றுள்ளது. கருமைக் கருத்து மூலச்சொல்லான, “யா” என்னும் விதைச்சொல்லே ( seed – word ); யாமரத்தினைக் குறிக்கும். கழக இலக்கியத்தின் தலைமைப் பனுவலான தொல்காப்பியத்திலும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலும், ‘யா’, ‘யாஅ’ ‘யாஅம்’. ‘யாமரம்’ என்னும் வடிவங்கள் பதிவு பெற்றுள்ளன. (எ.கா.); “யா” :- “யாவுயர் நனந்தலை” (அகநா.65:13);. “யாஅ” :- “யாஅ வரிநிழல்” (குறுந். 232 : 5);. “யாஅம்”, “நெடுநிலை யாஅம்” (அகநா. 659,9);, “யாமரம்” “யாமரக் கிளவியும்” (தொல் எழுத்து. 229);. யாமரம் கரிய நெடுந்தாள்களைத் தன்னகத்தே கொண்டது. இப் பருத்த நெடுந்தாள்களினின்று கிளைத்த கவடுபட்ட கொம்புகளில், பொன்போற் சிவந்த இளந்தளிர்கள், மிக்கு ஒளியுடன் மிளிரும். இம் மரத்தின் கவடுபட்ட கொம்புகளில் விளங்கித் தோன்றம் பிளவுபட்ட இலைகள் எல்லாம், இலையுதிர்காலத்தே வீழ்ந்துபடுந் தன்மைத்து. இலைகள் உதிர்ந்த நிலையில், யாமரத்தின் மீது விழும் சூரியக் கற்றைகள், பாலைநில வழிப்போக்கர்களுக்கு வரிநிழலை வழங்குந் தன்மையன. பொன் போல் ஒளிரும், பிளவுபட்ட யாமரத்தின் இலைகள், காண்போர்க்கு மனையுறைக் கோழியின், செக்கச்சிவந்த அலைதாடியின் தோற்றத்தினை நினைவூட்டுத் தன்மையன. சேவலின் சிவந்த அலைதாடியின் அமைப்பானது, யாமாத்தில் நெருப்புக்கனல் ஒளிர்வது போன்றிருக்கும். இக் காட்சியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் தெளிவுறுத்துகின்றன. “நெருப்பவிர் கனலி யுருப்புச் சினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழ லிரீஇ” (ஐங்குறு. 388:1-2);. “மனையுறை கோழி அணல் தாழ்பு அன்ன கவையொண் தளிர கருங்கால் யாஅத்து” (அகநா. 187, 14-15); கன்னங்கரிய நெடியதாள்களையுடைய இம் மரத்தினைக் கழக இலக்கியப் பாடல்கள் “கருங்கால் யாத்து” என்று கூறுவது போன்று, சாம்பசிவ மருத்துவ அகரமுதலியும், “கருந்தாளிமரம்” என்று பெயரிட்டு அழைப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது. இம்மரம் நீண்ட நெடிய தோற்றமுடையது. ஏணி சார்த்தி ஏறவேண்டிய அளவிற்குத் தாள்பகுதி நெடுமையும், சுற்றுப்பகுதி பருமையுங் கொண்டது. பின்வரும் அகநானூற்றுப் பாடல்வரிகள், யாமரத்தின் தோற்றத்தினை நன்கு புலப்படுத்துகின்றன. “நெடுந்தாளி யாத்து” (அகநா 2); ‘குறும்பொறை எழுந்த நெடுந்தாள் யாத்து” (அகநா.193 : 7); இம்மரம் ஆறலைக் கள்வரின் அடாவடிச் செயலைத் தவிர்ப்பதற்கும், அருந்துணை புரிந்தது. வழிச் செல்வோர், கள்வர் திரியாத நல்வழியைத் தெரிவு செய்யப் பயன்படும், பொன்போன்ற கவைத்த தளிர்களையுடைய யாமரம் – என்னும் பொருண்மையைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் வரிகள் தெளிவுறுத்தும் பான்மை வருமாறு :- “கள்வர் பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார் மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாத்து” அச்சந்தரும் அருஞ்சுரத்தில், ஆறலைத் துண்ணும் கொடுந்தொழில் எயினர், பெரும் பொருள் தேடுதற்கு உறுதுணை புரியும், நெடுநிலை மரம். கவைமுறி பொன்தளிர் வீழ்ந்த ஞான்று, வழிப்போக்கர்தம் வருகையை அறிதற்கு, வாட்டமான வரிநிழலைத் தோற்றுவிக்கும், நெடுந்தாள் மரம். கொடுவில் எயினர், செந்நிலை யாமரத்தின், மரமோடு மரமாக ஒன்றியிருந்து, வழிக்கண் வரும் வம்பலரைக் காண்பர். இந் நிலையினைக், கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் வரிகள், நெஞ்சில் நிலைநிறுத்தும் பாங்கு வருமாறு :- “வேறுபல் கவலைய வெருவரு வியன்காட்டு ஆறுசெல் வம்பலர் வருதிறம் காண்மார் வில்வல் ஆடவர் மேலான் ஒற்றி நீடுநிலை யாஅத்துக் கோடுகொள் அருஞ்சுரம்” (அகநா.263);. ஒளி பொருந்திய செங்குத்தான தோற்றத்தினையுடைய இம்மரத்தின் இலைகள் வீழ்ந்து படுந்தன்மையன. இலைகள் இலவாகி மிக ஓங்கித் திகழும், யாமாத்தின் அடிப்பகுதி, நண்பகல் ஞாயிற்றின் கதிர்வீச்சில் – வரிவரியான நிழல் தோற்றத்தினை, வழிப்போக்கர்க்கு வாரிவழங்கும் தன்மையை, “ஒல்கு நிலை யாஅத்து ஒங்குசினை பயந்த அல்குறு வரிநிழல்”…….. (அகநா.287:11);. “கருங்கால் யாத்து வரிநிழ லிரீஇ” யாமாத்தின் தாள்பகுதி, உரித்தற்கேற்றவாறு அமைந்த பட்டைகளையுடையது. “அத்த யாஅத்துப் பொரியரை முழுமுதல்” இம்மரத்தின் பட்டைகளை யானை உரித்து, மிக விருப்புடன் உண்ணும். “பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும்” யாமரத்தின் பட்டையை உரித்தால் நீர் கசியும். “நாரரை மருங்கின் நீர்வரப் பொளித்து” இன்றைய ஆச்சா மரமே; அன்றைய யாமரம் :- “யா”-என்னும் இம்மரப்பெயர்க்குப் பொருள் புகல வந்த அறிஞர் பெருமக்கள் அனைவரும், கழகக்கால இலக்கியங்களில் பயின்ற பான்மையினை சற்றும் உற்று நோக்காது, பொத்தாம் பொதுவாக, “ஒருவகை மரம்” என்றே குறித்துள்ளனர். 1. சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி. யா = ஒரு மரவகை; a kind of tree. 2. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி. யா = மரவகை; a tree (பக்.3396);. 3. மரஇனப் பெயர்த்தொகுதி – II யா = மரவகை; a kind of tree (பக். 221);. “யா”-மரம் இன்றைய வழக்கில், “ஆச்சா” என வழங்கப் பெறுகின்றது.யா → ஆ, என்று மாறும். யானை → ஆனை யா → ஆ + சு → ஆசு. ஆக + ஆ → ஆசா யாமரம். யாமரத்தைக் குறித்து வழங்கிய பண்டைய இத் தமிழ் வடிவங்கள், இன்றும் கன்னட மொழியில் “ஆசு”, “ஆச”, “ஆர்ச” போன்ற வடிவங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆசா → ஆச்சா = வலித்தல் திரிபு. ஆச்சா = ஆச்சாமரம் = பண்டைய யாமரம். [Hardwickia binata] ‘ஆமணக்கு விதைத்தால் ஆச்சா முளைக்குமா?’ என்ற நாட்டுப்புற பழமொழியும், ஆச்சாவைச் சுட்டுவதறிக. முடிவாக, கழகக் காலத்தில் யாமரம் என்றும், கன்னடத்திலும், மக்கள் வழக்கிலும் ஆச்சாமரம் என்றும், இம்மரம் மக்களிடையே வழக்கூன்றி இருந்தது. மலைபடுகடாத்து வரிகளிடையில் வரும் “யாவும்” என்ற சொல்லுக்கு, “யாம் பூவும்” – (அதாவது, யாமரத்தின் பூவும்); – என்று நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளதாகப் பதிப்பித்துள்ளமைக்கு, – உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் அடிக்குறிப்பாகத் தந்துள்ள பாட வேறுபாடு, “ஆச்சாவிற் பூவும்” என்று குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வடிக் குறிப்பு – அன்றைய யாமாமே – இன்றைய, ஆச்சாமரம் என்பதை உறுதிப்படுத்துகிறது எனலாம் (காண்க. பத்துப்பாட்டு. மலைபடு. நச்.பக்.648);. |
யாமர் | யாமர் yāmar, பெ.(n.) 1. இயக்கர் பன்னிருவர்; twelve sons of { } a deity. 2. தேவதை; a deity. |
யாமளசாத்திரம் | யாமளசாத்திரம் yāmaḷacāttiram, பெ.(n.) சத்தி பூசையைப் பற்றிக் கூறும் தந்திர சாத்திர நூல் (தக்கயாகப். 136, உரை);; a tantric work on Sakti worship. [யாமளம் + Skt. சாத்திரம்] |
யாமளபுராதனர் | யாமளபுராதனர் yāmaḷaburātaṉar, பெ.(n.) காளியின் படைவீரர்; the warriors of { } army. “வருவார் புவனநாயகி தன் யாமள புராதனர்களே” (தக்கயாகப் 432); [யாமளம் + Skt. புராதனர்] |
யாமளம் | யாமளம்1 yāmaḷam, பெ.(n.) 1. சத்தி பூசையைப் பற்றிக் கூறும் ஒரு தந்திர நூல் (தக்கயாகப், 136, உரை);; a tantric work on sakti worship. 2. யாமளத்தின்படி பகடாதியாக வேண்டிய பலிக ளீத்து (பாரத.களப்.8);; a vedic section on witch-craff. “யாமள முதலிய வேத மந்திரம்” (பாரத. நச்சுப். 14);. 3. சோடு (யாழ்.அக.);; pair, brace, couple. யாமளம்2 yāmaḷam, பெ.(n,) 1. பச்சை (யாழ்.அக.);, green, 2. இளமை; youth, adolescence. |
யாமளருபதேசம் | யாமளருபதேசம் yāmaḷarubatēcam, பெ.(n.) ஒரு நுண்ணுத்தி (தாந்திரிகம்); நூல் (தக்கயாகப் 168, உரை);; a tantric treatise. [Skt. {} → த. யாமளருபதேசம்] |
யாமளவிக்கல் | யாமளவிக்கல் yāmaḷavikkal, பெ.(n.) இரட்டை இரட்டையாக வரும் விக்கல்; hiccups which occurs in double strokes. |
யாமளாகமம் | யாமளாகமம் yāmaḷākamam, பெ.(n.) சக்தி பூசையைப்பற்றிக் கூறும் ஒரு தந்திர நூல் (தக்கயாகப். 136, உரை);; a tantric work on Sakti worship. |
யாமளாக்கினி | யாமளாக்கினி yāmaḷākkiṉi, பெ.(n.) மாகாளியினுடைய பெருந்தீ (தக்கயாகப். 666, உரை);; the fire of { } யாமளாக்கினி yāmaḷākkiṉi, பெ. (n.) பெருங் கொற்றவையாகிய காளியின் தீ (தக்கயாகப். 666. உரை);; the fire of {}. |
யாமளாசாரியர் | யாமளாசாரியர் yāmaḷācāriyar, பெ.(n.) யாமளாகமத்தின் வழியொழுகும் பெரியோர். (தக்கயாகப். 51,உரை.);; the principal followers of {}. [Skt. {} → த. யாமளாசாரியர்] |
யாமளேந்திரர் | யாமளேந்திரர் yāmaḷēndirar, பெ.(n.) இசைத்தமிழ் நூலாசிரியருள் ஒருவர் (சிலப். உரைப்பாயி);, one of the author of a treatise on { }. யாமளேந்திரர் yāmaḷēndirar, பெ. (n.) இந்திரகாளியம் நூலின் ஆசிரியர் author of Indrakaliyam. யாமளேந்திரர் yāmaḷēndirar, பெ.(n.) இசைத் தமிழ் நூலாசிரியருளொருவர்;(சிலப். உரைப்பாயி);; author of a treatise on icai-t-tamil. |
யாமளை | யாமளை yāmaḷai, பெ.(n.) 1. மலைமகள்; Parvadi. “யாமளையை வரையரசளித்த பச்சை மா மணியை” (பிரமோத். 18, 29);. 2. (கொற்றவை); காளி (பிங்.);; Durga, |
யாமவதி | யாமவதி yāmavadi, பெ.(n.) இராப்பொழுது (யாழ்.அக.);; night, as divided into watches. [யாமம் + வதி → யாமவதி] இராப்பொழுதின் முப்பிரிவுகளுள் ஒன்றான இடையாமம். பத்திலிருந்து இரண்டு மணி வரையிலான காலம். |
யாமவருணம் | யாமவருணம் yāmavaruṇam, பெ.(n.) வாகை மரம்; a tree, the indian walnut. |
யாமி | யாமி yāmi, பெ.(n.) 1. இரவு (யாழ்.அக.);; night. 2. இயமன்தேவி (அபி.சிந்.);; wife of yama. 3. தெற்கு (யாழ்.அக.);; south. 4. கற்புடையாள் (யாழ்.அக.);; chaste or continent woman. 5. உடன்பிறந்தாள் (யாழ்.அக.);; sister, 6. மகள் (யாழ்.அக.);; daughter, 7. மருமகள் (யாழ்.அக.);; daughter-in-law. [யாமம் → யாமி.] |
யாமிகன் | யாமிகன் yāmigaṉ, பெ.(n.) இரவுப் பொழுதில் நகர்நோட்டஞ் செய்யும் காவற்காரன் (சுக்கிர நீதி,32);; nightwatchman, one who patrols a city at night. [யாமி → யாமிகன்.] |
யாமிகை | யாமிகை yāmigai, பெ.(n.) இரவு; night. [யாமி → யாமிகை.] |
யாமினி | யாமினி yāmiṉi, பெ.(n.) ( முதல் இடை கடையெனும் மூன்று யாமங்களை யுடைய) இரவு; night, as consisting of three watches of four hours duration each. “யாமினியி லெவ்வுயிர்க்கு மேற்ற துயில்” (பாரத பதினேழாம். 169);. |
யாமினியம் | யாமினியம் yāmiṉiyam, பெ.(n.) தெற்கு (பிங்.);; south. “யாமியந்தனி லெய்திய தூதுவர்” (குற்றா.தல. மந்தமா.85);. |
யாமினீபதி | யாமினீபதி yāmiṉīpadi, பெ.(n.) 1. திங்கள் (சங்.அக.);; moon, 2. எரிக்குங் கருப்பூரம்; camphor. யாமீரன் { } பெ.(n.); திங்கள் (யாழ்.அக.); moon. மறுவ, நிலவன். |
யாமியன் | யாமியன் yāmiyaṉ, பெ.(n.) அகத்தியன் (யாழ்.அக.);; Agastya. |
யாமியம் | யாமியம்1 yāmiyam, பெ.(n.) 1. இந்து விதிமுறைகளின் தொகுப்பு (யாழ்.அக.);; a code of Hindu law. 2, தவம் (யாழ்.அக.);; penance, Tapas. 3. சந்தனம்; sandal. யாமியம்2 yāmiyam, பெ.(n,) தெற்கு (பிங்.);; south. “யாமியந்தனி லெய்திய தூதுவர்” யாமியம்3 yāmiyam, பெ.(n.) பொறுப்பு: security, responsibility. |
யாமியாயனம் | யாமியாயனம் yāmiyāyaṉam, பெ.(n.) தென்திசைச் செலவு (தட்சிணாயனம்); (யாழ்.அக.);; sun’s progress towards the south. [யாமி + Skt. அயனம்] |
யாமியை | யாமியை yāmiyai, பெ.(n.) இரவு (யாழ்.அக.);: night. [யாமி → யாமியை] |
யாமிரீபதி | யாமிரீபதி yāmirīpadi, பெ.(n.) கருப்பூரம்; camphor, |
யாமீரை | யாமீரை yāmīrai, பெ..(n.) இரவு; night. |
யாமுகம் | யாமுகம் yāmugam, பெ.(n.) மனக்கவலை (யாழ்.அக.);; mental worry, agony. |
யாமுனம் | யாமுனம் yāmuṉam, பெ.(n.) அஞ்சனக்கல் (யாழ்.அக.);; black bismuth. |
யாமுனர் | யாமுனர் yāmuṉar, பெ.(n.) யமுனைத் துறைவருக்கு நாதமுனி கட்டளையால் மணக்கால் நம்பி இட்டபெயர் (அபிதாந சிந்);; based on the orders of Natamuni, Manakkal Nambi named Yamunai shrine as Yamunar. |
யாமுனாசாரியர் | யாமுனாசாரியர் yāmuṉācāriyar, பெ.(n.) ஆளவந்தார் என்னும் மாலிய ஆசிரியர்;āḷavandāreṉṉummāliyaāciriyar, |
யாமுனேட்டகம் | யாமுனேட்டகம் yāmuṉēṭṭagam, பெ.(n.) ஈயம் (யாழ்.அக.);; lead. |
யாமை | யாமை1 yāmai, பெ.(n.) பாதுகாப்பான ஒடுள்ள ஒருயிரி-ஆமை; tortoise, “யாமை யெடுத்து நிறுத்தற்றால்” (கலித். 94);. க. ஆமெ. [ஏம் → ஏமை → யாமை (ஏம் = பாதுகாப்பு); (சு.வி.பக்.54);.); யாமை2 yāmai, பெ.(n.) இரவு (யாழ்.அக.);, night. யாமை3 yāmai, பெ.(n.) செவ்வழிப்பண்; a secondary melody-type of the { } class. “செவ்வழி யாழ்த் திறத் தொன்று” (பிங்);. யாமை4 yāmai, பெ.(n.) 1. தெற்கு (யாழ்.அக.);; south. 2. இரண்டாம் நாண்மீன்; the second naksatra, part of aries. “பரணிநாட் பிறந்தான்” (சீவக. 1813);. 3. போர்முகத்தில் ஆயிரம் யானைகளை அழித்து வென்ற வீரனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட சிற்றிலக்கியவகை (இலக். வி. 839);; a poem about a hero who destroyed 1000 elephants in war front. 4. இரவின் பதினைந்து முழுத்தங்களுள் ஆறாவதான இராக்கதம் (விதான.குணா.குண.73, உரை);; the sixth of the 15 divisions of the night. 5. அடுப்பு (தைலவ.தைல);; oven, fireplace. 6. செப்பு; jewel casket, small box. 7. சாடி; a kind of jar. 8. சிலந்திக்கூடு (ஈடு. 7, 5, 10);; a spider’s web. 9. ஏரிமதகு (வின்.);; a sluice of a tank. 10. கூத்து (சது.);; dance. 11. காவல் மேடை; watch tower. 12. மேற்றட்டு; race over a fireplace, loft under the roof of a house. யாமை5 yāmai, பெ.(n.) இல்பொருள் குறிக்கும் ஒர் வாய்பாடு (இலக். வி. 160, உரை);; a term denoting that which is non-exixting, as a blanket made of turtle’s hair, a mare’s nest. யாமை yāmai, பெ. (n.) பிங்கல நிகண்டு கூறு கின்ற நெய்தலின் பண் வகை, melody type belongs to maritime (Pingalanigandu);. [யா-யாமை] |
யாமைப்பலகை | யாமைப்பலகை yāmaippalagai, பெ.(n.) ஒகவிருக்கைகளுக்குப் பயன் படுத்துவதும், ஆமையின் வடிவம் அமைந்ததுமான ஒகவிருக்கை வகை; a kind of wooden seat in the form of a tortoise, used for sitting in meditation. “வில்வாதியினாற் செய்க… கூர்மாதனம்” (சைவ பொது 57); (தொல், பொருள். 625);. [யாமை + பலகை] |
யாமைமனை | யாமைமனை yāmaimaṉai, பெ.(n.) சம்மணம் அல்லது கால்மேற் கால்போட்டு உட்காருகை; a yogic posture with folded legs. “வில்வாதி யினாற் செய்க…. கூர்மாதனம்” மறுவ, கூர்மாதனம். [யாமை + மணை] |
யாம் | யாம் yām, பெ.(n.) தன்மைப்பன்மைப் பெயர் (தொல்.சொல். 164);; we. “யாஅம் துணை புணர்ந்துறைதும்” (ஐங்குறு.333);, “யாம் கண்ணிற்கான நகுப” (குறள், 1140);. க. ஆம் [யா + அம் – யாஅம் → யாம். அம் = தன்மைப் பன்மை ஈறு.] |
யாம்பல்கண்டாள் | யாம்பல்கண்டாள் yāmbalkaṇṭāḷ, பெ.(n.) மணித்தக்காளி; a medicinal plant used as vegetable, black night-shadeSolanum tubenosum. |
யாம்மியோத்தராந்தம் | யாம்மியோத்தராந்தம் yāmmiyōttarāndam, பெ.(n.) [Skt. {}+uttara+ antara → த. யாம்மி– யோத்தராந்தம்] |
யாயாரியம் | யாயாரியம் yāyāriyam, பெ.(n.) புங்கமரம்; a tree-Indian beech, cypness. |
யாயாவரர் | யாயாவரர் yāyāvarar, பெ.(n.) வழிபடுதற்குரிய மூதாதையர்; manes. மறுவ. தென்புலத்தார், முந்தையர். |
யாய் | யாய் yāy, பெ.(n.) தாய்; mother. “முன்றிற் போகா முதிர்வினள் யாயும்” (புறநா. 159);. “தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே” (புறநா. 83,3);. “யாயும் ஞாயும்” (குறுந்.);. [எம் + ஆய் – எம்மாய் → யாய். சொற்சிதைவாகி வந்தது.] [P] |
யாரஞ்சம் | யாரஞ்சம் yārañjam, பெ.(n.) ஆடாதோட; a medicinal shrub -Adhathoda vesica. |
யாரம் | யாரம் yāram, பெ.(n.) துண்டிப்பூடு; a kind of medicinal herb. |
யாரள் | யாரள் yāraḷ, வி.பெ. யாவள் பார்க்க; see { } “பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே” (குறுந். 19);. [யார் + அள் = பெண்பாற் பெயரீறு.] |
யாரி | யாரி1 yāri, பெ.(n.) fig tree. யாரி2 yāri, பெ.(n.) 1. எதிரி; opponent, respondant. 2. கதவு; door. 3. கள்ளக் காதலர் (சோரநாயகர்);; paramour. |
யாரியாத்தி | யாரியாத்தி yāriyātti, பெ.(n.) வானம்; sky. |
யாருந்தின்னாமூலி | யாருந்தின்னாமூலி yārundiṉṉāmūli, பெ.(n.) 1. அங்கப்பிச்சு; the bile in the body. 2. ஒரு வகை மூலிகை; a kind of herb. [யாரும் + தின்னா + மூலி] |
யாரும் | யாரும் yārum, பெ.(n.) எவரும்; anybody or everybody. “யாரு மறிவர் புகைநுட்பம்” (நாலடி, 282);. [யார் + உம்] |
யாரை | யாரை yārai, பெ.(n.) இதில் ‘ஐ’ சாரியை; whom. |
யாரோ | யாரோ yārō, பெ.(n.) இன்னார் என்று பெயர் குறிப்பிடப்பட முடியாதவர்; someone who cannot be identified, இது யாரோ ஒருவர் பாடிய பாட்டு. |
யார் | யார்1 yār, பெ.வி. யாவர், எவர்; who. “நலக்குரியார் யாரெனின்” (குறள், 149);. தெ. யவும்; க. யாரு. [ஏ → யா → யாவர் → யார்] யாவர் என்னுஞ் சொல்லின் தொகு வடிவமே யார். “வ”கரம் இடைக்குறை. இது குறித்துத் தொல்காப்பியர் கூறுவது. “பலரறி சொல்முன் யாவர் என்னும் பெயரிடை வகரம் கெடுதலும்…..” (தொல்.எழுத்து.172);. யார்2 yār, பெ.(n.) செடிவகை (மலை);; bristly button weed. யார்3 yār, பெ.(n.) 3 அடி; one yard. யார்4 yār, பெ.(n.) உயர்திணைப் பன்மை அல்லது உயர்வு ஒருமை வினாச்சொல்; plural or honorfic singular pronoun of { } (higher caste);. “யா அ ரென்னும் வினாவின் கிளவி” (தொல்.சொல். 695);. ‘இந்தியத் தலைமை அறமன்றத் தலைவர் (நீதிபதி); யார்?” [ஏ → யா → யார்] ‘ஏ’காரத்தின் திரிபே ‘யா’வென்பது. உயர்திணை முப்பாலையுங் குறிக்கும். ‘யார்’ என்பது. உலகவழக்கில் ‘ஆர்’ என்று மருவும். உயர்திணையில் வரும் இவ்வினாச்சொல், அகநானூறு 50வது பாடல், 8வது வரியிலும்; பரிபாடல் (17:8); ஆம் பாடலிலும், நாலடியார் (119:1); ஆவது பாடலிலும் எடுத்தாளப் பெற்றுள்ளது. யார்5 yār, பெ.(n.) புகழ்பெற்றவர்களின் அல்லது குறிப்பிட்ட துறையில் உள்ளவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, முகவரி முதலிய விளத்தங்கள் அடங்கிய நூல்; a book of men of fame or persons serving in a particular department containing biography, address the details. |
யார்பதம் | யார்பதம் yārpadam, பெ.(n.) வாலுளுவை (மலை.);; black-oil tree. |
யாறகம் | யாறகம் yāṟagam, பெ.(n.) வான்வெளியிற் பறந்தலையுங் கருடன்; sky root – a climber. |
யாறாம்பை | யாறாம்பை yāṟāmbai, பெ.(n.) கவுதும்பை; a species of tumbai, dead nettle. |
யாறு | யாறு yāṟu, பெ.(n.) மரஞ்செடி கொடியடர்ந்த அடவியை யூடறுத்துச் செல்லும் நீர்ப்பெருக்கு; river. “அகழிழிந் தன்ன கான்யாற்று நடவை” (மலைபடு. 214);. தெ. எரு; க., ம. ஆரு. [அர் → அறு → ஆறு → யாறு] நிலமெங்கும் ஒரே சோலையாயிருந்த காலத்தில், இடையிடையோடும் ஆறுகளே, ஊடுநீந்தியும் ஒரமாக நடந்து செல்லும் வழிகளாயிருந்தமையின், வழி ஆறு எனப்பட்டது (சொல்.ஆ.க.பக்.17);. மலையை அறுத்து வழிந்தோடும் நீரை அருவி என்றாதல் போன்று நிலத்தை ஊடறுத்து ஒடும் நீர்ப்பெருக்கு யாறானவாறாம். |
யாற்றுநீர் | யாற்றுநீர் yāṟṟunīr, பெ.(n.) எண்வகைப் பொருள்கோளில் சொற்களை முன்பின்னாக மாற்றாமல் நேராகவே பொருள் கொள்ளு முறை (நன். உரை. 412);; a mode of construing a verse in which the words are taken in their order without any transposition to yield the intended meaning, one of the eight { }. |
யாற்றுநீர்ப்பொருள்கோள் | யாற்றுநீர்ப்பொருள்கோள் yāṟṟunīrpporuḷāḷ, பெ.(n.) பொருள்கோள் எட்டு வகைகளுள் ஒன்று, செய்யுளில் ஆற்று நீர் போன்று பொருள் கொள்வதாகும்; knowing meaning of a poem like pouring of river water, one of eight { }. [யாற்றுநீர் + பொருள்கோள்] |
யாற்றொழுக்கு | யாற்றொழுக்கு yāṟṟoḻukku, பெ.(n.) கருதிய பொருளைக் குறைவுபடாது, நூற்பாவில் அமைத்துக் கூறுகை; composing { } flawless. [யாற்று + ஒழுகு → ஒழுக்கு] யாற்றொழுக்கு பற்றி இளம்பூரணர் இயம்புவது “கருதிய பொருளை வழுவாமற் சூத்திரம் ஒருங்குபடக் கிளத்தல்” (தொல்.பொருள்.656, இளம்.);. |
யாலம் | யாலம்1 yālam, பெ.(n.) சாலமரம்; sal. shorea robusta. “ஆமணக்கு நட்டு ஆச்சாவாக்கலாகாது” (சீவக. 2613. உரை);. யாலம்2 yālam, பெ.(n.) 1. ஆச்சாமரம் (அக.நி.);; hard wickia binata tree. 2. ஓர் மரம்; ebony tree; Ceylon ebony – Diospyros ebenaster. மறுவ, காட்டடகு, சாலமரம். த யாலம் → Skt. { }; Eng. sal. [யா → யாஅல் → யால் → அம் → யாலம்] யாலம் என்னும் இச்சொல், “யா”-என்னும் கருமைக் கருத்து முதனிலையினின்று முகிழ்த்தது. யா → ஆ. ஆ + சு → ஆசு; ஆசு + ஆ → ஆசா. வலித்தல் திரிபாக ஆசா → ஆச்சா – என்று மாறும். ஆச்சா = ஆச்சாமரம். கழக இலக்கியங்களில், யாலம் (ஆச்சாமரம்); யாமரம் எனும் பெயரில் பதிவு பெற்றுள்ளது. “யாமாக் கிளவி” (தொல்.எழுத்து.229); தொல் காப்பியத்தில் யாலம் எனப்படும் ஆச்சமரம், “யாமாம்” என்று இடம் பெற்றுள்ளது. யாலம்3 yālam, பெ.(n.) இரவு (அக.நி.);; night. [யாமம் → யாலம்] |
யாலாவாருதம் | யாலாவாருதம் yālāvārudam, பெ.(n.) ஆதொண்டை ; a thorny creeper |
யால்லம் | யால்லம் yāllam, பெ.(n.) வானம்; sky. |
யாளவரி | யாளவரி yāḷavari, பெ.(n.) யாளியுருவங்கள் வரிசையாக அமைக்கப் பெற்ற கோயிற் கட்டடப் பகுதி); the portion of a temple-structure where the figures of { } are set in row. [யாள + வரிசை → வரி (வரிசை நிரையொழுங்கு);] |
யாளி | யாளி yāḷi, பெ.(n.) 1. கரிமாவின் மருப்பும் தும்பிக்கையும் அரிமாவின் முகமுடையதாகக் கருதப்படும் விலங்கு; a mythological lionfaced animal with elephantine proboscis and tusks. “உழுவையும் யாளியு முளியமும்ஞ (குறிஞ்சிப். 252);. 2. அரிமா (அக.நி.);; lion. 3. மடங்கலோரை (சிங்கராசி); (சூடா.);; leo of the zodiac. 4. இறை கூடைவகை (வின்.);; a shallow vessel for throwing water to wet the sail of a craft or for ladling out bilge water, 5. யானை (அக.நி);; elephant. க. யாளி |
யாளி வளைவு | யாளி வளைவு yāḷivaḷaivu, பெ. (n.) மண்டப வாயிற்படிகளின் அருகில் அமைக்கப்படும் யாளி உருவம்; a mythical animal carved in front of the threshold of a mandapam. [யாளி+வளைவு] |
யாளிக்கால் | யாளிக்கால் yāḷikkāl, பெ.(n.) யாளி வடிவிற் செய்த பாதம் (S.I.I.i,5);; leg of stand etc., shaped like a { } [யாளி + கால்] |
யாளிக்கூடை | யாளிக்கூடை yāḷikāṭai, பெ.(n.) இறை கூடைவகை; a shallow vessel for throwing water to wet the sail of a craft or for ladling out bilge-water. [யாளி + கூடை] [P] |
யாளிதத்தன் | யாளிதத்தன்1 yāḷidaddaṉ, பெ.(n.) ஒளவைக்குத் தந்தை father of Awai. “யாளிகூவற்றுண்டு” – எனும் ஞானாமிர்த செய்யுளால் அறியலாம். மறுவ. பகவன் [யாளி + தத்தன்] யாளிதத்தன்2 yāḷidaddaṉ, பெ.(n.) ஒரு முனி (ஞானாமி);; a saint or sage. [யாளி + தத்தன்] |
யாளிபலம் | யாளிபலம் yāḷibalam, பெ.(n.) அரிமாவினையு மிஞ்சும் ஆற்றலைக் குறிக்கும் உவமைச் சொல்; extraordinary strength, comparable to the strenght of a lion. [யாளி + Skt. Bala → த. பலம்] |
யாளிப்பட்டை | யாளிப்பட்டை yāḷippaṭṭai, பெ.(n.) யாளிக் கூடை பார்க்க; see { } [யாளி + பட்டை] |
யாளிமுகம் | யாளிமுகம் yāḷimugam, பெ.(n.) யாளியின் முகம்போல அணிகளில் அமைக்கப்பட்ட முகப்பு முதலியன; ornamental pendant or clasp of jewels, shaped like the face of а { }. [யாளி + முகம்] |
யாளியானை | யாளியானை yāḷiyāṉai, பெ.(n.) யானையின் மருப்பும் துதிக்கையும் அரிமாவின் முக முடையதாகக் கருதப்படும் விலங்கு. a mythological lion-faced animal with elephantine probosics and tusks. [யாளி + யானை] |
யாளியூர்தி | யாளியூர்தி yāḷiyūrti, பெ.(n.) காளி as riding on a [யாளி + ஊர்தி] |
யாளிலலாடம் | யாளிலலாடம் yāḷilalāṭam, பெ.(n.) யாளி யுருவமைந்த தூணின் நெற்றி; the capital of a pillar, shaped like a { }. |
யாளிவிரை | யாளிவிரை yāḷivirai, பெ.(n.) சிறு சணல் வித்து (பதார்த்த. 780);; lin-seed, flaxseed, linususitatissi mum. [யாளி + விரை] |
யாழ | யாழ yāḻ, இடை. ஒரு முன்னிலை அசைச்சொல்; expletive of the second person. “யாழ நின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக் காண்” (கலித். 18);. [யாழ் → யாழ] ‘யாழ யுடையாய்’ என்னும் பொருளுடைய செய்யுளில் ‘யாழ’ என்னுஞ் சொல், நாளடைவில் அசைச்சொல் அளவில் நின்றது. யாழ yāḻ, பெ.(n.) இடை அசை நிலை an expletive. [எல்-எலுவன்-ஏல-ஏழ-யாழ] மறுவ தரிக கீறுதல் யாழ yāḻ, இடை (inter) அசை நிலை; an expletive. [எல்-எலுவன-ஏல-ஏழ – யாழ] |
யாழல் | யாழல் yāḻl, பெ.(n.) கறையான் (யாழ்.அக.);; white ant. மறுவ. சிதல் |
யாழவடிப்படிரம் | யாழவடிப்படிரம் yāḻvaḍippaḍiram, பெ.(n.) சந்தனம்; sandal. |
யாழாசிரியன் | யாழாசிரியன் yāḻāciriyaṉ, பெ.(n.) யாழிசை கற்பிப்பவன்; instructor or trainer in lute-playing. [யாழ் + ஆசிரியன்] |
யாழினுமென்மொழியம்மை | யாழினுமென்மொழியம்மை yāḻiṉumeṉmoḻiyammai, பெ.(n.) திருவிளமரிலே கோயில் கொண்டிருக்கும் தேவியின் பெயர்; a deity enshrined at { } [யாழினும் + மென்மொழி + அம்மை] |
யாழின்மென்மொழிநாயகி | யாழின்மென்மொழிநாயகி yāḻiṉmeṉmoḻināyagi, பெ.(n.) திருமணஞ் சேரியில் எழுந்தருளியிருக்கும் தேவியின் பெயர்; the deity enshrined at { }. [யாழ் → யாழின் + மென்மொழி + நாயகி] ‘இன்’ ஒப்புப்பொருள் குறித்த ஐந்தாம் வேற்றுமை உருபு. |
யாழுறுப்பு | யாழுறுப்பு yāḻuṟuppu, பெ.(n.) யாழில் அமைந்துள்ள சிறப்புறுப்புகள்; the special components of the lute viz., pattar, { } undi, maruppu, tivavu. [யாழ் + உறுப்பு] 1. பத்தர் :- பத்தர் என்பது, இக்காலத்தில் வீணையென்ற இசைக் கருவியில் உள்ள குடம் என்ற உறுப்பினை ஒத்து அமைந்ததாகும். பத்தர் என்ற இவ்வுறுப்பினை முன்னோர்கள் குமிழ், முருக்கு, தணக்கு என்ற மரங்களால் அமைத்தார்கள். யாழ்ப் பத்தராகிய இதன் மேற்புறம் முழுவதும் குடைந்தெடுக்கப்பட்டுத் தோலால் மூடப்பெறும். இனி, பத்தரின் மேற்புறத்தில் ஒரு பாதி மரமே வறுவாயாகத் திறக்கப்பட்டிருக்க, அத்திறப்பின் வழியாக மற்றைப் பாதி மரத்தினையும் உள்ளே குடைந்தெடுத்து, வறுவாய்ப்பகுதியை மட்டும் போர்வைத் தோலால் மூடுதலும் உண்டு. பத்தர் என்ற உறுப்பானது, இவ்வாறு இரு வகையாகவும் அமைக்கப்படும். இதன்கண் எட்டாம் நாள் திங்களைப் போன்று அரைவட்ட வடிவில் வறுவாய் அமைத்த பொழுது அதன் வழியாகக் குடைந்தமைக்கப் பெற்ற பத்தரின் உள்ளிடம் இருள் செறிந்ததாய் இருக்கும். பத்தரில் வறுவாயாகத் தோன்றும் மேற்பரப்பினை மூடுதற்கு அமைந்த போர்வைத் தோல் நன்றாகப் பாடஞ் செய்து துவரூட்டப்பட்டுச் செந்நிறமுடையதாய் தோன்றும். இத் தோலைப் பொருத்தி மூடுவதற்குப் பத்தரின் ஒரத்தைச் சுற்றிலும் முடுக்கப்பட்ட சிறிய ஆணிகளின் தலைகள் நண்டின் கண்களைப் போன்று தோன்றும். போர்வைத் தோலின் நடுப்பகுதி பத்தரின் உள்ளே நரம்புகள் செல்லுதற்கு ஏற்ற வண்ணம் இரு கூறாகப் பிரிந்து இணைத்துத் தைக்கப்பெற்றிருக்கும். இங்ங்னம், போர்வைத் தோலினை நடுவே இணைத்ததைப் பதனம் என்றும், பொல்லம் பொத்துதல் என்றும் வழங்குவர். 2. யாப்பு :- யாப்பு என்பது பத்தரின் குறுக்களவே நீளமாகச் சிறுவிரற் பருமனாக யானைத் தந்தத்தினாற் செய்யப்பட்டு, நரம்புகளைத் தொடுத்தற்கு இடமாகவும் நரம்பின் அசைவினைப் பத்தரிலே தாக்கி ஒலிமையப் பெருக்குதற்குரிய கருவியாகவும் அமைக்கப்பட்டதோர் உறுப்பாகும். இவ்வுறுப்பு பத்தரின் உள்ளிடத்தே செறிக்கப் பெறுவதாகும். 3. உந்தி :- உந்தி என்பது, பத்தரின் மேல் மூடப்பெற்ற போர்வைத் தோலிற்கும், பத்தரினுள்ளே செறிக்கப்பட்ட யாப்புறுப்பிற்கும் நடுவே அமைந்த உறுப்பாகும். இது வளைந்து உயர்ந்து போர்வைத் தோலின் நடுவிடத்தைத் தாங்கி நிற்பதாகும். இதன் அடியில் அமைந்த யாப்புறுப்பில், தொடுக்கப்பட்ட இசை நரம்புகள், அதன் மேல் உள்ள உந்தியென்னும் இதன் வழியாக, வெளியே செல்ல வேண்டியிருத்தலால் உந்தியென்னும் இவ்வுறுப்பின் நுனிப்பகுதி இரு பிளவாகப் படுக்கப்பட்டிருக்கும். ‘உந்தி’ என்னும் சொல் ‘உந்து’ என்னும் வினையடியாகப் பிறந்ததாகும். வளைந்து உயர்ந்து உந்தி நிற்றலால் ‘உந்தி’ என்னும் பெயருடையதாயிற்று. 4. மருப்பு :- மருப்பு என்பது, யாழிலுள்ள கோடு என்ற உறுப்பாகும். இது பாம்பு மேல் நோக்கிப் படமெடுத்தது போன்று மேல்நோக்கி வளைந்த வடிவுடையதாகும். கோடுதல்-வளைதல், வளைந்த வடிவுடையதாதலின் கோடு என வழங்கப்பெற்றது. இது கருங்காலி, கொன்றை முதலிய மரத்தினாற் செய்யப்பட்டுக் கருநிறமுடைய தாயிருக்கும். முற்கூறிய வண்ணம் பத்தரினுள்ளிடத்தே யாப்புறுப்பில் தொடுக்கப்பட்ட இசை நரம்புகள் பத்தரின் நடுவே, இரு கூறாகப் பொருத்தித் தைக்கப்பெற்ற போர்வைத்தோலின் ஊடாக, வெளியே இழுக்கப்பட்டுக் கோடு என்ற இவ்வுறுப்பிலே வாரினால் வலித்துக் கட்டப் பெறுவனவாகும். 5. திவவு :- இசை நரம்புகளைக் கோட்டில் துவக்குதற்கு அமைந்த வார்க்கட்டினைத் திவவு என வழங்குவர். யாழ் நரம்புகளைக் கோட்டின் மேலும் கீழும் உயர்த்தியும் தாழ்த்தியும் உச்சு சுரமாக்குதற்கும், மந்த சுரமாக்குதற்கும் பயன்பட்டது திவவு என்னும் வார்க் கட்டேயாகும். காலம் செல்லச் செல்ல இத் திவவுக்குப் பதிலாக நரம்புகளை, வலித்தற்கும் மெலித்தற்கும் உரிய வகையில் அமைத்துக் கொண்ட உறுப்பு, மாடக;ம் என்பதாகும். இது, நால்விரல் அளவான மாலிகை வடிவில் கருவிள மரத்தினாற் கடைந்து செய்யப்பட்டு, நரம்புகளை இழுத்து முறுக்குதற்கும், வேண்டுமளவு தளர்த்தற்கும், தகவாகக் கோட்டின் கண்ணே அமைக்கப்படுவதாகும். மாடமாகிய இவ் வுறுப்பினை இக்காலத்தார் முறுக்காணி என வழங்குவர். |
யாழையங்கினி | யாழையங்கினி yāḻaiyaṅgiṉi, பெ.(n.) தழுதாழை; shrub in the edges, aloe. |
யாழோர் | யாழோர் yāḻōr, பெ.(n.) 1. யாழிசை வல்லோர்; skilful or expert players on the lute. 2. கந்தருவர் (சூடா.);; Gandharvas, the heavenly choristers. [யாழ் → யாழோர்] |
யாழோர்கூட்டம் | யாழோர்கூட்டம் yāḻōrāṭṭam, பெ.(n.) காதலர் தம்முள் மனமொத்துக் கூடுங் கூட்டம் (தொல்.பொருள்.92, உரை);; a form of marriage which results entirely from love and which has no ritual whatsoever, as common among Gandharvas. [யாழோர் + கூடு → கூட்டம். (கூட்டம் – கூடுகை] |
யாழோர்மணவினை | யாழோர்மணவினை yāḻōrmaṇaviṉai, பெ.(n.) காதலர் தம்முள் மனமொத்துக் கூடுங் கூட்டம் (தொல்.பொருள்.92.உரை);. a form of marriage which results entirely from love and which has no ritual whatsoever, as common among Gandharvas. “யாழோர் மனவினைக் கொத்தனளென்றே” (மணிமே.22,86);. [யாழோர் + மணவினை] |
யாழ் | யாழ் yāḻ, பெ.(n.) 1. பேரியாழ், சகோடயாழ், மகரயாழ், செங்கோட்டி யாழ் என்ற நால்வகை வீணைக்கருவி (சிலப். 3, 26); (பிங்.);; stringed musical instruments, which are four kinds viz., { } { } { } { } 2. ஆடவை (மதுரை); ராசி (பிங்.);; gemini of the zodiac. 3. அசுவதி (பிங்.);, ஒரு நட்சத்திரம் (திவா);; name of the first nakstra, part of aries. 4. மூதிரை (திருவாதிரை); (சூடா.);; the 6th naksatra, part of orion. 5. பண் (இறை. 1, உரை);; (mus.); melody-type. 6. ஆந்தை, (அரு.நி.);; owl பண்டைத் தமிழர், தமிழகத்தில் தெரிந்தெடுத்து அமைத்த இன்னியங்களுள், நரம்புக் கருவியாகிய யாழ் மிகவும் சிறப்புடையது. இசை நுணுக்கங்களையும், பல்வகைப் பண்ணமைதிகளையும் ஒர்ந்துணர்ந்தோர் யாழ் என்னும் பொருண்மையில், நரம்பமைதிகட்கு ஏற்றவாறு, அமைத்துள்ள மறுவடிவங்கள் வருமாறு :- மறுவ. நரம்பு, நரம்பின்மறை, மறை, நரம்புக் கருவி. [எ → ஏழ் → யாழ் (சு.வி.பக்.53);] மேலே குறித்துள்ள பெயர்களனைத்தும் யாழைக் குறிக்கும் பொதுப்பெயர்களாகும். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரால், “பாணர் கைவழி மதிப்புரை (மறுப்பு);” என்னும் கட்டுரையில் எடுத்தாளப் பெற்றவை. கழகத்தமிழ்ப் பனுவல்களிலும், அதற்கு முன்னர் இயற்றப்பட்ட பாடல்கள் பலவற்றிலும் இடம்பெற்றுள்ள, மூவகை யாழ் பற்றிய குறிப்புகள் வருமாறு :- 1. வில்யாழ், 2. சீறியாழ், 3. பேரியாழ். வரலாற்றிற்கு எட்டாத தொன்முது காலத்தே அமைக்கப்பெற்ற நரம்புக்கருவியே வில்யாழாகும். வில்லின் நரம்பினை (நாணினை); நெருடுங்கால் விளைந்த இன்னிசையொலியே பல்வகை யாழ்க்கருவிகளின் வளர்ச்சிக்கு அடிகோலின என்று இசை வல்லுநர் இயம்புவர். இது பற்றி மொழிஞாயிறு மொழிவது :- “நரப்புக்கருவி வில்நாண் ஒலியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிதலால், வில்யாழே முதன்முதல் தோன்றிய யாழ்வகையாக இருத்தல் வேண்டும்” (மறுப்புரை மாண்பு.பக்.121);. முற்காலத்தில் வாழ்ந்த இசைப்புலவர்கள், துறைக்கருவியாகிய வேய்ங்குழலையும், நரம்புக்கருவியாகிய யாழையும் துணைக்கொண்டே குரல் முதலிய ஏழிசைகளையும், குற்றமற ஆராய்ந்து, பெரும்பண்களை அமைத்துள்ளனர். இப்பண்களின் வழிப்பிறக்கும் திறங்களை ஒர்ந்துணர்ந்து இசை நுணுக்கங்களை இனிமை பொருந்துமாறு இசைத்து வகைப்படுத்தியுள்ளனர். குழல், யாழ் என்னுமிக் கருவிகள், கேட்பவர் பிணிக்குந் தன்மையன. அனைவர்தம் மனத்திற்கும் மட்டற்ற மகிழ்வூட்டுவன: சிந்தைக்கும், செவிப்புலனுக்கும் சீரிய இசைத்திறத்தை வாரி வழங்குவதால்தான் வள்ளுவப் பெருந்தகையார், “குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்” என்று யாழிசையோடு, குழலிசையின் சிறப்பினையும் சேர்த்துக் கூறியுள்ளார். முற்காலத்தில், யாழ்க் கருவியை நிலைக்களனாகக் கொண்டே பெரும்பண்களும், அவற்றின் திறங்களும் தெள்ளிதிற் தெரிந்து வகைப்படுத்தப்பட்டன. யாழ் நரம்பின் துணைகொண்டு, நுணுகி ஆராய்ந்து கண்ட பண் வகைகளைத் தொல்காப்பியர், “யாழின் பகுதி” (தொல்.அகம்.15); என்றும், அப் பண்களின் பாங்கினையும், இயல்புகளையும் திறம்படத் தெரிவிக்கும் இசை நூலை, “நரம்பின் மறை” என்றும் குறிப்பிட்டுள்ளார். மாந்தரிடையே இன்று பயன்பாட்டிலுள்ள அனைத்து நரம்புக் கருவிகளுக்கும் பிறப்பிடம், யாழே யாகும். முதல் மூலநரப்புக் கருவியாகிய யாழனின்றே, நரம்பிசைக் கருவிகள் அனைத்தும்தோன்றின என்பது பாவாணர்தம் கருத்தாகும். அதனால்தான் மொழிஞாயிறு “யாழ் என்னும் தமிழ்ப்பெயர், பண்டைக்காலந் தொட்டு, தமிழ் நாட்டில் மட்டுமின்றி, ஞாலமெங்கனும், முக்காலும் வழங்கும், நரப்புக் கருவி கட்கெல்லாம் பொதுப்பெயர்” என்று குறித்துள்ளார். மேலும் அவர் கூறுங்கால், “ஒரு நரம்புள்ள சுரையாழ் முதல் ஆயிரம் நரம்புள்ள, ஆதியாழ் வரை எல்லா நரப்புக் கருவிகளும், கழக இலக்கியப் பனுவல்களிலும், அதற்கு முன்னர் இயற்றப்பட்ட பாடல்கள் பலவற்றிலும் யாழ் என்றே குறிக்கப்பட்டுள்ளன. யாழ் என்னுஞ் சொல்லைச் சிறப்புப் பெயராகக் கொண்ட எந்தவொரு தனிக்கருவியும் கடைச் சங்க காலத்திருந்ததில்லை. அன்றிருந்த பல்வகை யாழிற் தலைசிறந்தது, செங்கோட்டு யாழேயாகும். வீணை என்பது, செங்கோட்டியாழையே குறித்து வழங்கிற்று. யாழைக் குறித்து வழங்கிய பல்வகைப் பெயர்களுள், வீணையும் ஒன்று. யாழ் வேறு, வீணை வேறு என்பது, இருவகையில் தவறான திரிபுக் கொள்கை என்றும் அறிந்து கொள்க”. யாழ் என்னும் தென்சொல், பிற்காலத்து வழக்கற்றதினாலேயே, முற்காலத்தில் சுரையாழ் என வழங்கியது. யாழ், வீணை என்னும் இரு சொற்களும் ஒருபொருட் கிளவியாய், ஒரே கருவியையே குறிக்கும். இசை நுணுக்கமறியாதோரே யாழ்வேறு, வீணை வேறு என்பர். பண்ணிசைத்தற்குரிய பண்டை யாழ் வகைகளுள், செங்கோட்டியாழ் ஒன்றே, இன்று சிறிது, உருக்கரந்தும், பெயர் மாறியும் வழங்கி வருகின்றது. நரம்பு அல்லது கம்பி கொண்ட இசைக் கருவிகளெல்லாம், தமிழில் யாழ் என்றே பெயர் பெறுதற்குரியன (மறுப்புரை, மாண்பு. பக்.122);. யாழ் என்பது, ஒரு தனிப்பட்ட கருவியின் சிறப்புப் பெயராகாது. அது தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக் கருவி, கஞ்சக் கருவி என்னும், நால்வகைக் கருவியுள், நரப்புக் கருவியை யெல்லாம், பொதுப்படக் குறிக்கும் பொதுப் பெயராகும். இப்பாகுபாட்டின்படி இற்றை வீணையும் ஒருவகை யாழாயிருக்க அதை மட்டும், எங்ஙனம் வேறு பிரித்துக் கூற முடியும். பண்ணைக் குறித்த யாழ் என்னும் சொல் ‘ஏழ்’ என்பதின் திரிபு. யாழ் என்னும் நரம்புக் கருவி. தோன்று முன்னமே குறிஞ்சியாழ், பாலையாழ் எனப் பண்ணின் பெயராக யாழ் என்னும் சொல் வழங்கியது. கருவியிலாயினும் தொண்டையிலாயினும் இசையை எழுப்புதல், எழூஉதல் எனப்படும். எழுவது அல்லது எழுப்பப்படுவது ஏழ். ஏழ் = இசை. இசைச் சுரங்கள் ஏழு. ‘ஏழிசைச் சூழல்’, ‘ஏழிசை வல்லபி என்னும் வழக்குகளை நோக்குக. ‘ஏழ்’ என்னும் இசையின் பெயர் அதன் கரத்தொகையான ஏழாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது. நரம்புகளாற் கட்டப்பெற்றதும், மரம் (தந்தம்); மருப்பு, தோல் போன்றவற்றால் நன்கு பொருத்தப் பெற்றதுமான இசைக்கருவி. அடியார்க்கு நல்லார் யாழ்பற்றிக் கூறுவது :- யாழ் நால்வகைப்படும்; அவை பேரியாழ், மகரயாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ் என்பன. இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுமிடத்துப் பேரியாழிற்கு இருபத்தொன்றும், மகாயாழிற்குப் பத்தொன்பதும் சகோட யாழிற்குப் பதினாறும், செங்கோட்டி யாழிற்கு ஏழும் கொள்ளப்படும் (அடியார்க்கு நல்லார். சிலம்பு.3:26);. வில்யாழும் – சிறப்புகளும் :- பண்டைத் தமிழ் மாந்தர்களால் மிகப் பழங்காலத்தில் அமைக்கப்பெற்ற நரப்புக் கருவியே, வில்யாழாகும். யாழுருவங்கள் அனைத்திற்கும் வில்யாழே மூலமாகும். தேவநேயர்தம் கருத்தும் இஃதேயாகும். இதனையடியொற்றியே சீறியாழ், பேரியாழ், செங்கோட்டியாழ், சகோடயாழ் முதலாக ஆயிரம் நரம்புடைய பெருங்கலம் என்னும் யாழ் ஈறாக, எத்தனையோ யாழமைப்புகள் நரம்பிசை வல்லுநர்களால் நன்கு இசையறிவிற் தேர்ந்து தெளிந்துணர்ந்து வடிவமைக்கப்பட்டன. இடையனொருவன், உள்ளே துளையுடைய குமிழ மரக்கொம்புகளை வில்லாக வளைத்து, மரல்நார்க் கயிற்றினை நரம்பாகக் கட்டித் தானே செய்து கொண்ட வில்யாழில், குறிஞ்சிப்பண்ணை இசைத்து இன்புற்ற நிகழ்வினைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார், தாம் பாடிய பெரும்பாணாற்றுப் படையில் பேசுவது வருமாறு :- ஞெலிகோற் கொண்ட பெருவிரல் ஞெகிழிச் செந்தீத் தோட்ட கிருந்துளைக் குழலின் இன்றீம் பாலை முனையிற் குமிழின் புழற் கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பு வில்யா ழிசைக்கும் விரலொறி குறிஞ்சி வில்யாழின் இசையானது, வண்டுகளின் இன்னொலியை ஒத்தது. அண்மையிலுள்ளோர் செவிக்கே புலப்படும் தன்மைத்து. வில்லாக வளைக்கப் பெற்ற குமிழங் கொம்பும், அக்கொம்பினுள்ளே அமைக்கப்பட்ட சிறுதுளையும், நரம்பின் ஒலியை, ஒரு குறிப்பிட்ட அளவே பெருகச் செய்தன. யாழ் அமைப்பு :- வில்யாழின் இன்னிசைப் பெருக்கினை இனிதுணர்ந்த இசைவல்லுநரும், இசைக் கருவியாளரும், பின்வருமாறு வில்யாழினை வடிவமைத்தனர். முதற்கண் நல்ல விளை நிலத்தில் விளைந்து நன்கு பருத்து முற்றியதும், மாசுமருவற்றதும், வண்டுகள் துளைக்காத தன்மையுள்ளதுமான குமிழ மரத்தைத் தெரிவு செய்தனர். பின்னர் அம்மரத்தினை வேண்டிய அளவுக்குத் துண்டாக அறுத்தனர். அதன்பின் அறுத்த மாத்தினொரு பகுதியை, உள்ளே குடைந்து வெற்றிடமாக்கினர். மரத்துண்டின் மேற்பரப்பினைத் தோலினால் மூடினர். குமிழ மரத்தில் தோல் நன்கு இறுகிப் பொருந்தும்படி ஓரங்களில் சிறிய அணிகளை முடுக்கிப் பத்தர் என்னும் யாழுறுப்பினை அமைத்தனர். பின்பு, பத்தரிலும் கோட்டிலும் நன்கு பொருந்தும்படி, நீளத்தாற் சிறியனவும், பெரியனவும் அகிய நரம்புகளை அளவறிந்து இணைத்துக் கட்டி, யாழினை வடிவமைத்தனர். இவ்வாறு வடிவமைத்த யாழில், முதறக்ண் பண்டைக்காலத்தே. மாட்டின் நரம்புகளைத் தெரிவு செய்து, இசை நரம்புகளாக அமைத்தனர். காலப்போக்கில் மாட்டின் நரம்புகள் மழையாலும், வெயிலாலும், நெகிழ்ந்தும். இறுகியும், அடிக்கடி குரலோசையை (சுருதியை); வேறுபடுத்திக் காட்டியதால், குழலோசையின் துணையுடன், யாழ் நரம்பிற்கு இசைகூட்டி, மகிழ்ந்தனர். [P] |
யாழ்இலக்கணம் | யாழ்இலக்கணம் yāḻilakkaṇam, பெ.(n.) யாழ் செய்யும் அல்லது யாழினை இசைக்கும் முறையினைக் கூறும் நூல்; a treatise on making { }. [யாழ் + இலக்கணம்] |
யாழ்க்கரணம் | யாழ்க்கரணம் yāḻkkaraṇam, பெ.(n.) யாழ்வாசிப்பிற்குரிய செய்கை; movements of the hands in playing the lute. “பண்ணியாழ்க் கரணமும்” (மணிமே 2, 20);. [யாழ் + கரு → கரணம் (செய்கை);] த. கரணம் → Skt. karana. |
யாழ்க்குமிழ் | யாழ்க்குமிழ் yāḻkkumiḻ, பெ.(n.) வில்யாழ் உருவாக்கத்திற்குப் பயன்படும் குமிழமரம்; “{ }” tree used for making { }. [யாழ் + குமிழ்] |
யாழ்செய்-தல் | யாழ்செய்-தல் yāḻceytal, 1 செ.கு.வி.(v.i.) பாடுதல்; to sing, to tune music. “தேனின மலங்கலுண் டியாழ் செயும்” (சீவக. 1012);. [யாழ் + செய்-.] |
யாழ்தரித்தாள் | யாழ்தரித்தாள் yāḻtarittāḷ, பெ.(n.) மலை மகள் (நாமதீப.22);; { } [யாழ் + Skt.தரித்தாள்] |
யாழ்த்தண்டு | யாழ்த்தண்டு yāḻttaṇṭu, பெ.(n.) வீணா தண்டம்; neck of the lute. [யாழ் + தண்டு] |
யாழ்த்திறம் | யாழ்த்திறம் yāḻttiṟam, பெ.(n.) 1. ஐந்து சுரமுள்ள இசை (சிலப்.4, 106, உரை);; a secondary melody-type, pentatonic. 2. பண் (பிங்.);; [யாழ் + திறம்] திறம் = ஐந்து கரங்களைக் கொண்ட பண்வகை. |
யாழ்நரம்பு | யாழ்நரம்பு yāḻnarambu, பெ.(n.) தந்திரி; a string of lute. மறுவ. யாழ்நார் [யாழ் + நாம்பு] யாழ் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாத மூலவுறுப்பு. யாழிசை மிகநுட்பமாக வெளிப்படுதற்கு, யாழ் நரம்பினை மிகத் திட்பமாக முறுக்கேற்ற வேண்டும். நன்கு முறுக்கேற்றிய, பிசிறற்ற மிக மெல்லிய நரம்பினால்தான் கேட்பவர் உளங்கொளத் தக்கவாறு பண்களை மிக நுணுக்கமாக இசைக்க இயலுமென்று இசை வல்லுநர் கூறுவர். [P] |
யாழ்நார் | யாழ்நார் yāḻnār, பெ.(n.) யாழ்நரம்பு பார்க்க; see { }. [யாழ் + நார்] |
யாழ்பதங்காளி | யாழ்பதங்காளி yāḻpadaṅgāḷi, பெ.(n.) செவ்வழியாழ்த் திறத்தொன்று (பிங்.);; a secondary melody-type of the cevvali class. [யாழ் + பதங்காளி] |
யாழ்ப்பதம் | யாழ்ப்பதம் yāḻppadam, பெ. (n.) நெய்த லுக்குரிய பதினாறுபண்களில் ஒன்று one of 16 melody type of maritime music. [யாழ்+பதம்] |
யாழ்ப்பத்தர் | யாழ்ப்பத்தர் yāḻppattar, பெ.(n.) யாழ் யாழ் உறுப்புகளுள் ஒன்று; a component of the lute, |
யாழ்ப்பாணநாயனார் | யாழ்ப்பாணநாயனார் yāḻppāṇanāyaṉār, பெ.(n.) ஈழத்தரசனிடமிருந்து யாழ்ப்பாண நாட்டைப் பெற்றுத் தமிழர்களைக் குடியேற்றியவராகச் சொல்லப்படுபவரும் கட்புலனிழந்தவருமான சோழநாட்டு இசைப் புலவர்; a blind minstrel of the { } country, who is said to have been favoured by a singhalese king and obtaining possession of Jaffna, settled a colony of Tamil people. |
யாழ்ப்பாணம் | யாழ்ப்பாணம் yāḻppāṇam, பெ.(n.) இலங்கையின் வடபாலுள்ளதும், தமிழராற் குடியேற்றம் பெற்றதுமான நாடு; Jaffna, a province north of ceylon, inhabited by a colony of Tamils. தமிழர் மிகுதியாயுள்ள இவ்விடம் இலங்கையின் வட பாற்கண் அமைந்துள்ளது. இங்கு காங்கேசன் துறை, ஊர்க்காவற்றுறை எனும் இருதுறைமுகங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணம் நாகதீவம், எருமை முல்லைத் தீவு என்ற இரு தீவுகளாக இருந்து பின் தீவகற்பமாக மாறியது. புவியியல் மாற்றத்தால் இப்பகுதிகள் சேர்ந்து யாழ்ப்பாணம் உண்டாயிற்று. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் நாகர்கள் வாழ்ந்தனர். நாகமன்னன் இதை ஆண்டான். மணிமேகலையில் சொல்லப்படும் மணிபல்லவமும் நாகதீவமும் ஒன்றே எனக் கருதுவாருமுளர். தென்னிந்திய மக்களுடன் இனத்தாலும் பண்பாட்டாலும் தொடர்புள்ள மக்கள் வாழ்ந்தமையை புவியியல், மானிடவியல், வரலாறு, இலக்கியம், மொழி முதலியன சான்று பகர்கின்றன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் அங்குப் பேச்சு மொழியாக வழக்கூன்றியிருந்தது. சேர நாட்டின் குருடனான பாணனொருவன் யாழுடன் சென்று இலங்கை அரசனைப் போற்றிப் பாடினமையால் அவ்வரசன் மகிழ்ந்து, இலங்கையின் வடபகுதியைப் பரிசாகத் தந்ததன் நினைவாக ‘யாழ்ப்பாணம்’ என்ற பெயரிடப்பட்டதாகவொரு கருத்துமுண்டு. ஐரோப்பியரின் வருகைக்குப்பின் ‘ஜாப்னா’ (jaffna); என மருவிற்று. யாழ்ப்பாணம் கி.மு.145லிருந்து தமிழ் மன்னரின் ஆட்சியின் கீழிருந்தது. இக்காலத்தில் தமிழர்களும் நாகர்களும் கலப்புமணம் கொண்டனர். கி.பி.431இல் சீனப் பயணி பாகியான், இலங்கை வந்து சில குறிப்புகளெடுத்துக் கொண்டார். 9, 10-ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்களுக்கு சிங்கை ஆரிய மன்னர்களென்று பெயர். டச்சுக்காரர் 1658-இல் போர்ச்சுக்கீசியரை வென்று 1795 வரை ஆண்டனர். டச்சு மொழி யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் கலந்தது. சான்றாக கதிரை (நாற்காலி);, அலவாங்கு (கடப்பாரை);, கந்தோர் (அலுவலகம்);, வெந்தீசு (ஏலவிற்பனை); முதலிய சொற்கள் இன்றும் வழங்கப்படுகின்றன. 1795ஆம் ஆண்டு, யாழ்ப்பாணம் ஆங்கிலேயரின் ஆளுகைக்குட்பட்டு, 1948ம் ஆண்டு இலங்கை முழுவதும் விடுதலை அடைந்தது. |
யாழ்ப்பாணர் | யாழ்ப்பாணர் yāḻppāṇar, பெ.(n.) யாழ்வாசினையில் வல்ல பாணர் வகையார் (பு.வெ.9, 19, கொளு);; an ancient caste of lute-players of excellence. [யாழ் + பாணர்] |
யாழ்ப்பாணி | யாழ்ப்பாணி yāḻppāṇi, பெ.(n.) யாழ்ப்பாண நாட்டான்; citizen native of jaffna. [யாழ்ப்பாணம் → யாழ்ப்பாணி] |
யாழ்முனி | யாழ்முனி yāḻmuṉi, பெ.(n.) மூவுலகுலாவி (நாரதர்);; sage { } who is personefied always with lute playing. [யாழ் + முனி] |
யாழ்முனிவன் | யாழ்முனிவன் yāḻmuṉivaṉ, பெ.(n.) மூவுலகுலாவி (நாரதர்);; a sage, { } “பாடல் யாழ் முனிவன்” (பாகவத 10 ஸ்ரீ நாரதர், 7);. [யாழ் + முனிவன்] |
யாழ்முரி | யாழ்முரி yāḻmuri, பெ.(n.) அருட்டொண்டர் திருஞான சம்பந்தரால் யாழில் அடங்காத இசையை யுடையதாகப் பாடப்பட்ட பண்வகை; a tune sung by saint Tiru-nana-sambandar as one which could not be played on the yal or lute. [யாழ் + முரி] திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வேண்டுகோளை யேற்றுத் திருஞான சம்பந்தப் பெருமானால் பாடப்பட்ட பண். யாழ்முரிப் பண்ணிலமைந்த பாடல் வருமாறு :- மாதர்மடப்பிடியும் மடஅன்னமும் அன்னதோர் நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர் பூதஇனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர் அவர்படர் சடைந் நெடு முடியதோர் புனலர் வேதமொடு ஏழிசைபாடுவ ராழ்கடல் வெண்டிரை யிரைந் நுனிரகரை பொருதுவிம்மி நின்றயவே தாதவிழ்புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை எழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே மிடற்றில் இசைக்கவியலாவாறு, இறைவனின் இறும்பூதுச் செயலாக யாழ்முரிப்பண் திகழ்ந்த தன்மையினைச் சேக்கிழார் வழிநின்று மொழிஞாயிறு கூறுவது :- , திருநீலகண்ட யாழ்ப்பாணர், ‘யாழ்முரிப் பண்ணை’த் தம் யாழிலிட்டுக் காட்ட முடியாமைக்கு, அதாவது, அவரது அளவிறந்த சிவபக்தியே காரணம். தருமபுரத்திலுள்ள அவருடைய உறவினர், அவர் திருஞானசம்பந்தரின் திருப்பதிக இசையை யாழ்ப்படுத்தி வந்த திறனைப் புகழ்ந்தபோது, அவர் அதற்கு மிக வருந்தி, யாழிலிட்டுக் காட்ட முடியாதவாற திருப்பதிகம் பாடும்படி தாமே திருஞானசம்பந்தரை வேண்டினார். இதனால், யாழிலிட்டுக் காட்ட முடியாத பெருமை, திருப்பதிக இசைக்கிருத்தல் வேண்டுமென்று அவர் பேரவாக் கொண்டமை புலனாகும். இத்தகைப் பக்தி நோக்குடையவர் எங்ங்னம் தம் திறமையை அன்று காட்டியிருக்க முடியும்? அவர் காட்ட முயன்றிருப்பினும், அவரது அச்ச மனப்பான்மை எங்ங்னம் இடந்தந்திருக்கும்? இரண்டாவது, யாழில் மட்டுமின்றி வேறெவர் மிடற்றிலும் இசைக்க முடியாதவாறு, இறைவனருளால் இறும்பூதுச் செயலாக யாழ்முரிப் பண்ணைத் திருஞானசம்பந்தர் பாடினாரென்று, சேக்கிழார் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். வேறெவர் மிடற்றிற்கும் இயலாத இசை யாழுக்கு மட்டும் எங்ங்னம் இயன்றிருக்கும்? இதனால் யாழ்முரிப் பண்ணைப் பாணர் யாழிலிட்டுக் காட்ட முடியாமை அவர் யாழ் வில்யா ழொத்தது என்னும் போலி யூகிப்பிற்கேதுவாகாமை பெறப்படும். மேற்காட்டிய காரணங்களின் உண்மையைப் படிப்போர் அறிதற்கு, அந்நிகழ்ச்சியைக் கூறும் பெரிய புராணச் செய்யுள்களை ஈண்டுக் காட்டுகின்றேன் :- “தருமபுரம் பெரும்பானர் திருத்தாயர் பிறப்பிடமாம் அதனாற் சார வருமவர்தஞ் சுற்றத்தார் வந்தெதிர்கொண் டடிவணங்கி வாழ்த்தக் கண்டு பெருமையுடைப் பெரும்பாணர் அவர்க்குரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த அருமையுடைப் பதிகந்தாம் யாழினாற் பயிற்றும்பே றருளிச் செய்தார்” “கிளைஞருமற் றதுகேட்டுக் கெழுவுதிருப் பதிகத்திற் கிளர்ந்த ஒசை அளவுபெறக் கருவியில்நீர் அமைத்தியற்று மதனாலே அகில மெல்லாம் வளரஇசை நிகழ்வதென விளம்புதலும் வளம்புகலி மன்னர் பாதம் உளம்நடுங்கிப் பணிந்துதிரு நீலகண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார்” “அலகில்திருப் பதிகஇசை அளவுபடா வகைஇவர்கள் உலகிலுளோ ருந்தெளிந்தங் குண்மையினை அறிந்துய்ய உணர்த்தும் பண்பால் மலர்புகழுந் திருப்பதிகம் பாடியரு ளப்பெற்றால் பண்பு நீடி இலகுமிசை யாழின்கண் அடங்காமை யான்காட்டப் பெறுவன் என்றார்” “வேதநெறி வளர்ப்பவரும் விடையவர்முன் தொழுதுதிருப் பதிகத் துண்மை பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்துநூல் புகன்ற பேத நாதஇசை முயற்சிகளால் அடங்காத வகைகாட்ட நாட்டு கின்றார் மாதர்மடப் பிடிபாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த” “வண்புகலி வேதியனார் மாதர்மடப் பிடிஎடுத்து வனப்பிற் பாடிப் பண்பயிலுந் திருக்கடைக்காப் புச்சாத்த அணைந்துபெரும் பாண னார்தாம் நண்புடையாழ்க் கருவியினால் முன்புபோல் கைக்கொண்டு நடத்தப் புக்கார்க் கெண்பெருகும் அப்பதிகத் திசைநரம்பில் இடஅடங்கிற் றில்லை யன்றே” திருஞானசம்பந்தரினும் முதியரான திருநாவுக்கரசர், ‘மாசில் வீணையும்’ என்று பாடியிருத்தலானும், திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழ்முரிப் பண்ணை இசைத்தற் கியலாமை பற்றித் தம் யாழை உடைத்தற் கெழுந்தபோது, அதைத் தடுத்த சம்பந்தர் ‘யாழை விட்டுவிட்டு வீணையை மேற்கொள்ளும்’ என்னாது, ‘திருப்பதிக இசையை இயன்றவரை இயக்கும்’ என்றமையானும்; பாணரும் வேறொரு நரப்புக் கருவியை மேற்கொள்ளாமை யானும் அவர் கையாண்டது வீனையொத்த கருவியே யன்றி வேறென்று என்பது துணியப்படும் (மறுப்புரை மாண்பு.பக்.120); பாணர்கைவழி மதிப்புரை (மறுப்பு););. யாழ்முரி yāḻmuri, பெ. (n.) சம்பந்தர்பாடிய பண் வகை; melody sung by a conconized siva saint Sambandar. [யாழ்+முரி] |
யாழ்முரிநாதர் | யாழ்முரிநாதர் yāḻmurinātar, பெ.(n.) தருமபுரத்தில் எழுந்தருளிய இறைவன் திருப்பெயர் (அபிதாநகோ.);; name of a god shrined at Dharuma-puram. [யாழ்முரி + Skt. நாதர்] |
யாழ்முரிநாதெசுவரர் | யாழ்முரிநாதெசுவரர் yāḻmurinātesuvarar, பெ.(n.) திருத்தருமபுரத்திலே கோயில் கொண்டிருக்கும் இறைவன் பெயர்; the god shrined at Tiru-t-taruma-puram. |
யாழ்வகை | யாழ்வகை yāḻvagai, பெ.(n.) 1. ஐந்து நிலத்திற்குரிய யாழ் எனும் இசைக் கருவி; a turning Iute intended for all 5 classification or categories of lands. 2. பண்டைக்காலத்தில் வழக்கிலிருந்த ஏழுவகை யாழ்களான வில்யாழ், பேரியாழ் (பெருங்கலம்);, சீறியாழ், செங்கோட்டியாழ், ஆதியாழ் (பெருங்களம்);, மகரயாழ், சகோட ung; the seven kinds of lute ({ }); in ancient days viz., { } { } ({ });,{ } { } { } ({ });. { } { } [யாழ் + வகை] யாழ்வகைகளாவன :- 1. வில்யாழ் :- வில்யாழின் அமைப்பும் சிறப்பும் யாழ் என்னும் சொல் விளக்கத்திற் காண்க. 2. பேரியாழின் (பெருங்கலம்); அமைப்பும் சிறப்பும் :- முற்கால மக்கள் உருவத்திலும் பெரியவரா யிருந்ததனால், அவர் கையாண்ட கருவிகளெல்லாம் பெரியனவாகவேயிருந்தன. மக்கள் உருவம் வரவரச் சிறுத்து வருவதனால், அவர்கள் கையாளும் பலவகைக் கருவிகளும் சிறுத்து வருகின்றன. பேரியாழ் மிகப் பழையதாதலின், அது முது பழங்கால மக்கட்கேற்றபடி மிகப் பெரியதாயிருந்திருக்கின்றது. அது நால்வகை யாழில் முதற் குறிக்கப் பெறுவதற்கு அதன் பழைமையே காரணம். கடைச் சங்க காலத்திலும் அது வழங்கினதாகக் கூறப்படினும், அது உருவத்திற் பெரியவர்க்கே உரியதாய் அருகின வழக்காகவே வழங்கினதாகத் தெரிகின்றது. அதிர்வு நரம்புகளால் இசையைப் பெருக்கலாம் என்ற எண்ணம் உண்டானபின், பெருங்கலம் என்னும்பேரியாழில் முதன்முதலாக அதிர்வு நரம்புகள் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆகவே, அவ் யாழில் பெரும் பத்தர் முந்தினதும் அதிர்வு நரம்பு பிந்தியதுமாகும். தலைச்சங்க காலத்து மக்கள் தம் உடற் பருமனுக்கேற்றபடி இயல்பாகவே பெரும் பத்தர் அமைத்திருத்தல் வேண்டும். பிற்காலத்துச் சிற்றுருவ மக்களின் சீரியாழ்களோடு ஒப்பு நோக்கிய பின்னரே, அதற்குப் பெருங்கலம் அல்லது பேரியாழ் என்று பெருமைச் சொல் அடைகொடுத்துப் பின்னோர் பெயரிட்டதாகத் தெரிகின்றது. முதற்காலத்தில் அது அளவான கருவியாகவே கருதப்பட்டிருக்கலாம். பழங்காலத்தில் பெரு வழக்காக வழங்கியதாக நூல்களிற் கூறப்படும் மத்தளம், அதன் பருமை காரணமாக இன்று பயன்படுத்தப்படாமல் சில சிற்றுார்களிற் பதுங்கிக் கிடக்கின்றது. அது சிறுவடிவான மதங்கம் (மிருதங்கம்); இன்று பெருவழக்காயுள்ளது. இங்ங்னமே, பேரியாழ், சீறியாழ் நிலைமைகளும் கடைச்சங்க காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். பேரியாழினும் பேரியாழான ஆதியாழ் (பெருங்கலம்); வேறு; நாரதப் பேரியாழ் என்பது வேறு. “பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிரு சாணும், வணரளவு சாணும், பத்தரளவு பன்னிரு சாணும், இப் பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும், உந்தியும் பெற்று, ஆயிரங்கோல் கொடுத்தியல்வது; என்னை?” “ஆயிர நரம்பிற் றாதியா ழாகும் ஏனையுறுப்பு மொப்பன கொளலே பத்தரளவுங் கோட்டின தளவும் ஒத்த வென்ய இருமுன் றிரட்டி வணர்சா ணொழித்தென வைத்தனர் புலவர்” என்பது அடியார்க்கு நல்லார் உரைப்பாயிரம். நாரதப் பேரியாழ் வில்யாழ் வகையாகும். இருபத்தொரு நரம்பினால் தொடுக்கப்படுவது பேரியாழ் எனப் புறநானூற்றுரையாசிரியர் குறிப்பிடுவதால் பேரியாழுக்குரிய நரம்பின் தொகை 21 என்பது புலனாகும். பெரும்பாணாற்றுப் படையில், ‘இடனுடைப் பேரியாழ் என இது குறிக்கப்படுதலால் வடிவிற் பெரியதாயிருந்ததெனத் தெரிகிறது. இதனைக் கவைபோல் அமைந்து, பின்னிருந்து தாங்குதற்கு அமைந்தது கவைக்கடை என்ற உறுப்பாகும். ‘பிறைபிறந்தன்ன பின்னேந்து கவைக்கடை’ எனவரும் பெரும்பாணாற்றுப்படைத் தொடர் இதன் அமைப்பினை நன்கு விளக்குவதாகும். பேரியாழில் குரல் முதலிய ஏழிசைக்குரிய நரம்புகள் எழும், மெலிவு, சமன், வலிவு என்னும் மூன்று தானங்களிலும் தனித்தனி அமைந்து நிற்றலால் மொத்த நரம்புகள் இருபத்தொன்றாயின. 3. சீறியாழ் அமைப்பும் சிறப்பும் :- “வணர் கோட்டுச் சீறியாழ்” என நடுகற் காதையிலும், “செந்நிறம் புரிந்த செங்கோட்டியாழ்” எனப் புறஞ் சேரியிறுத்த காதையிலும் இளங்கோவடிகள் குறிப்பிடுதலால் சீறியாழும், செங்கோட்டியாழும் இருவேறு கருவிகள் என்பது நன்கு விளங்கும். இவற்றுள் சீறியாழ் என்பது பத்தர், கோடு, திவவு, போர்வைத்தோல், நரம்பு என்னும் ஐந்துறுப்புடையதாகும். 4. செங்கோட்டுயாழ் அமைப்பும் சிறப்பும் :- நாவலந்தேயத்தில் (இந்தியாவில்); வழக்கிலிருந்த நால்வகை நரப்புக் கருவிகளுள், தலைசிறந்தது செங்கோட்டியாழ் என்பது, பாவாணர்தம் கொண்முடிபு. இச்செங்கோட்டி யாழே, சிலமாற்றம் பெற்று யாழின் மறுபெயர்களுள் ஒன்றான வீணை என்னும் பெயரில், இன்று வழங்கி வருகிறது. கி.பி.8 ஆம் நூற்றாண்டிற்கும், கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில், இன்றைய வீணையைப் போன்று, வளைவின்றி நேராய் அமைந்திருத்தலால், செங்கோட்டி யாழ் என்றழைக்கப்பட்டது. செம்மை + கோடு – நேராய் அமைந்த கோடு. ‘செம்மை’ என்னுஞ் சொல், இங்கு வளைவின்மையைச் சுட்டியது. செங்கோட்டியாழ், யாழின் இன்னிசைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. செங்கோட்டியாழ் பற்றி, மொழிஞாயிறு வழங்கும் சிறப்புக் குறிப்புகள் :- 1. நால்வகை யாழுள், செங்கோட்டி யாழே மிகச் சிறந்தது. 2000 ஆண்டுகட்கு முன்பு வடிவமைக்கப்பட்டது. இதைவிடச் சிறந்த இசைக்கருவி, ஞாலமெங்கினும் இல்லை. இக்காலத்து வீணையையொத்த வடிவில் செங்கோட்டியாழ் அமைந்திருந்ததாலேயே, அதற்கு வீணை என்னும் பெயரும், சிறுபான்மை வழங்கிற்று. இச்செங்கோட்டி யாழில் நரம்பிற்குப் பதிலாய்க் கம்பியும், வார்த்திவவிற்குப் பதிலாய் வெண்கல மெட்டும், தோற் போர்வைக்குப் பதிலாய், மரப்பலகையும், வறுவாய்க்குப் பதிலாய் நுண்துளைத் தகடும் கொண்டிருத்தலே, இற்றை வீணையின் வேறுபாடாம். குடவடிவிற் சிறிது மாறுதல், கோல் எனப்படும். மெட்டுத் தொகையிற் கூடுதல், ஆகியவற்றையும் வேறுபாடாகச் சேர்த்துக் கொள்ளலாம். ஈராயிரமாண்டுகட்கு முன்பு வடிவமைக்கப்பட்ட செங்கோட்டி யாழே; கால வளர்ச்சியில், மேற்குறித்த வேறுபாடுகளுடன் வீணை என்னும் பெயரில், இன்று மக்களிடையே உலா வருகின்றது என்பார், மொழிஞாயிறு. நால்வகை யாழ் குறித்த கடைக்கழகப் பாடலுள்இ செங்கோட்டி யாழே சீர்பொலியுஞ் சிறப்பினது என்பதைக் குறிக்கும் பாடல் : “பேரியாழ் பின்னு மகரஞ் சகோடமுடன் சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் – தார்பொலிந்து மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே பின்னு முகாவே பிற” என்பதனால், கடைச்சங்க காலத்தில் பலவகை யாழ்கள் சிறந்தன என்பதும், அவற்றுள்ளும் செங்கோட்டியாழ் தலைசிறந்தது என்பதும் அறியப்படும். காலமுறைப்படி நோக்கின், இசைவல்லார் கையாளும் கருவிகளுள் பிந்தினது சிறந்திருக்கு மேயன்றி, முந்தினது சிறந்திருக்காது. நால்வகை யாழுள் இறுதியது செங்கோட்டி யாழாதலின், அது ஏனையவற்றினும் சிறந்ததாயிருத்தல் வேண்டும். செங்கோட்டி யாழில் அமைந்துள்ள உறுப்புகள் :- செங்கோட்டியாழில் 18 உறுப்புகள் உள்ளன. உறுப்புகளின் வரணனையைப் படங்களுடன் திரு.வரகுண பாண்டியனார், சீவகசிந்தாமணி வாயிலாகவும், நூற்பாக்களின் துணைக்கொண்டும் விளக்கியுள்ளார். நூற்பாக்கள் வருமாறு :- “கோடே பத்த ராணி நரம்பே மாடக மெனவரும் வகையின வாகும்” “மாட்டிய பத்தரின் வகையு மாடகமுந் தந்திரி யமைதியுஞ் சாற்றிய பிறவு முந்திய நூலின் முடிந்த வகையே” திருத்தக்க தேவர் கூறுவது :- “மணிகடை மருப்பின் வாளார் மாடக வயிரத் தீந்தேன் அணிபெற வொழுகி யன்ன அமிழ்துறழ் நரம்பின் நல்யாழ்” (சீவக.722);. மறைத்திரு. விபுலானந்த அடிகள் தமது யாழ்நூலுள் வரைந்து காட்டியுள்ள படத்தில் செங்கோட்டியாழின் உறுப்புகள் முழுமையாகச் சுட்டப் பெறவில்லை. இலக்கியங்களில் காணப்படுவதும், பழைய நூற்பாக்களில் குறித்துள்ளவையும் விடப்பட்டுள்ளன. இது குறித்து மொழிஞாயிறு கூறுவது : “செங்கோட்டி யாழைப்பற்றி அடிகள் வரைந்து காட்டியுள்ள படமே, உண்மையானதாயின் வறுவாய், கவைக்கடை, உந்தி, ஒற்றுறுப்பு, தந்திரிகரம், மாடகம், தகைப்பு வணர் முதலிய உறுப்புகளெல்லாம் எங்கே? அவற்றைக் கூறியுள்ள இளங்கோவடிகளும், அடியார்க்கு நல்லாரும் பித்தரோ? அன்றிப் பொய்யரோ?” 5. ஆதியாழ் :- முதலூழியிலே அரக்கர்கள் நரம்புக் கருவியை அமைத்து வாசிப்பதில் வல்லவர்களாக இருந்தனரென்றும், அவர்களது தருக்கினை நீக்குங் கருத்துடன் நல்லறிவுடைய புலமைச் செல்வர்கள் ஆயிர நரம்புடைய யாழினை அமைத்து, நுண்ணிய இசை நலன்கள் பலவற்றையும் வெளிப்படுத்தினார்க ளென்றும் பெருங்கதையிற் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயிரம் நரம்புடையதாய் அமைக்தப் பெற்ற யாழானது ஆதியாழ் எனவும், பெருங்களம் எனவும் வழங்கப் பெற்றது. இக்கருவியில் பத்தர் பன்னிருசாண் நீளமும், கோடு வளைவொழித்துப் பன்னிருசாண் நீளமும் உடையனவாக அமைக்கப்படுவன என்றும் யாழுக்குரிய ஏனையவுறுப்புக்களும் மேற்கூறிய அளவுக்குத்தக அமைக்கப்படுவன என்றும் அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். இசைச் சுருதிகளை நுட்பமாக ஆராயுமிடத்து அச்சுருதிகளின் எல்லை இருநூறு என்பது திட்டமாகத் தெரியுமென்றும் அவ்விரு நூறு கருதிகளையும் மெலிவிற்கு மெலிவு, சமன் வலிவு, வலிவிற்கு வலிவு என்னும் ஐந்து தானங்களிலும் வைக்க நரம்புகளின் தொகை ஆயிரமாம் என்றும், இத்தகைய நுண்ணிய சுருதிகளை வாசித்தற்குப் பயன்படும் முறையில் தமிழ் மக்களால் அமைத்துக் கொள்ளப்பட்ட யாழ்க் கருவியே ஆயிர நரம்புடைய யாழ் என்பர். 6. மகரயாழ் :- மணிமேகலை, பெருங்கதை, சீவகசிந்தாமணி என்னும் நூல்களிலே ‘மகரயாழ்’ எனவும் ‘மகரவீணை’ எனவும் கூறப்படும் இசைக் கருவி சங்கச் செய்யுட்களிலே குறிக்கப்படவில்லை. ‘யவனக் கைவினை மகாவீணை’ எனப் பெருங்கதையிற் கூறப் பெற்றிருத்தலால் இக்கருவி யவனபுரம் எனப்படும். கிரேக்க நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்குக் கொண்டு. வரப்பட்டதென எண்ணுவதற்கு இடமுண்டு. யவனர்களால் மகரமீன் வடிவில் வனப்புற அமைக்கப்பட்ட இவ்விசைக் கருவியானது அரச குமரர், பரத குமரர் முதலிய பெருஞ்செல்வர் வீடுகளிலே வாசிக்கப் பெற்றதெனத் தெரிகிறது. 7. சகோடயாழ் :- ‘ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி’ எனவும், ‘பிழையா மரபின் ஈரேழ்கோவை’ எனவும், சிலப்பதிகாரத்திற் சிறப்பித்துப் போற்றப் பெறும் யாழ்க் கருவி பதினான்கு நரம்புடைய சகோட யாழாகும். இதன்கண், உழைமுதல், கைக்களை யீறாகப் பதினான்கு நரம்பு கட்டப்பெற்றன. அவற்றுள் முதல் நான்கு மெலிவுத் தானத்திலும், இடையேழு சமன் தானத்திலும், இறுதி மூன்று வலிவுத் தானத்திலும் அமைந்து நின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வழங்கிய யாழ்க் கருவியாகிய இதன் உருவச் சாயல் அமராவதிச் சிற்பத்திலே கிடைத்திருக்கிறது. கி.பி.ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பார், திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாடிய தேவாரப் பதிகங்களைச் சகோட யாழில் வாசித்தார் என்பது வரலாறு. இங்ங்னம் சகோட யாழை வாசித்தமையால் அவரைச் ‘சகோட யாழ்த்தலைவர்’ எனச் சேக்கிழார் பாராட்டிப் போற்றியுள்ளார். தாராசுரம் திருக்கோயிலில் யாழேந்திய நிலையில் அமைக்கப்பட்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவுருவத்தில் அவர் வாசித்த பழைய சகோட யாழின் உருவச்சாயலை இன்றும் காணலாம். கேள்வியென்பது யாழுக்கு ஒரு பெயர். இன்னிசை புலனாதற்குரிய சிறந்த முறையில் அமைக்கப் பெற்றமையால் இது ‘செம்முறைக் கேள்வி’ எனப் பெயரெய்தியது. இத்தமிழ்ப் பெயரே பிற்காலத்தில் ‘சகோஷம்’ என வடமொழியில் மொழி பெயர்த்து வழங்கப்பெற்றது. யாழும் வீணையும் ஒன்றே :- யாழ் வேறு; வீணை வேறு என்று, இரண்டையும் வேறுபடுத்திப் பாவாணர் காலத்திலேயே சிலர் பேசி வந்தனர். ஆனால், இரண்டும் ஒன்றே என்று “பாணர் கைவழி” மதிப்புரை (மறுப்பு); சனவரி, (செந்தமிழ்ச் செல்வி 1951); என்னும் கட்டுரையில், தொல்காப்பியம், கழக காலப் பாடல்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, தேவாரம், பிங்கம் போன்ற நூல்களின் துணையுடன் நிறுவியுள்ளார். அனைத்து நாப்புக் கருவிகளுக்கும் யாழ் என்பது பொதுப்பெயராகும். வீணை என்பது யாழைக் குறித்து வழங்கிய பெயர்களுள் ஒன்று. அன்றையச் செங்கோட்டியாழே, இன்றைய வீணை என்பார் மொழிஞாயிறு. வீணை என்னும் பெயர் தனித்து வரும்போது, செங்கோட்டி யாழையே அல்லது பிற யாழையே குறிக்கும். என்று இளங்கோவடிகளும், “மாசில் வீணையும் மாலை மதியமும்” என்று திருநாவுக்கரசரும், “குழலி னோசை வீணை மொந்தை கொட்ட முழ வதிர” என்று திருஞானசம் பந்தரும் கூறுதல் காண்க. சீவகசிந்தாமணியில், கந்தருவதத்தையா ரிலம்பகத்தில், யாழ் என்னும் பெயரும், வீணை என்னும் பெயரும், ஒரு பொருட்கிளவியாய், ஒன்றுக்கொன்று பதிலாக வருகின்றன. தேவாரத்தில் யாழ் என்னும் பெயர் வருமிடத்தில் வீணையும் வீணை என்னும் பெயர் வருமிடத்தில் யாழ் என்னும் பெயரும் விலக்கப்பட்டன. நாரதயாழ், நாரதவீணை என ஒரே கருவி குறித்து இருபெயர் வழக்கமுள்ளது. வீணை என்னும் பெயர், யாழ் என்னும் பெயரோடுகூடி வருமிடத்தில் மட்டும், தனி மிடற்றிசையையோ யாழிசையோடு கூடிய மிடற்றிசையையோ குறிக்கும். யாழ் என்னும் சொல்லும், பொதுப்பட்ட இசையையும், இசைப்பகுதியான பண்ணையும் இசைக் கருவியான யாழையும், இடத்திற்கேற்ப குறிக்கும். “துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” (தொல்களவு:1); என்று தொல்காப்பியரும், “யாழோர் மணவினைக் கொத்தனள் என்றே” (மணிமே.22:86); என்று சீத்தலைச் சாத்தனாரும், சொல்லை இசையென்னும் பொருளில் ஆண்டனர். “பாலை குறிஞ்சி மருதஞ் செவ் வழியென நால்வகை யாழா நாற்பெரும்பண்ணே” என்று பிங்கல முனிவர் அச்சொல்லைப் பண் என்னும் பொருளில் ஆண்டனர். யாழ் என்பது ஒரு தனிப்பட்ட கருவியின் சிறப்புப் பெயராகாது. அது தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக் கருவி, கஞ்சக்கருவி என்னும் நால்வகைக் கருவியுள் நரப்புக் கருவியை யெல்லாம் பொதுப்படக் குறிக்கும் பொதுப் பெயராகும். இப் பாகுபாட்டின்படி இற்றை வீணையும், ஒருவகை யாழாயிருக்க அதை மட்டும் எங்ங்ணம் வேறு பிரித்துக் கூற முடியும்? யாழும் வீணையும் வெவ்வேறு கருவி யாயிருப்பின், நாரதயாழ் நாரதவீணை எனச் சிலப்பதிகாரத்தும், மகாயாழ் மகாவீணை எனச் சிந்தாமணியிலும், ஒரே கருவி என் இரு பெயராலும் அழைக்கப் பெறல் வேண்டும்? ஆதி (பெரு);, மகர, சகோட, செங்கோட்டு, முண்டக, சிறு முதலிய அடையடுத்தாலன்றி, யாழ் என்னும் பெயர் ஒரு சிறப்பு வகை நரப்புக் கருவியைக் குறிக்காது. ஆயினும், சுருக்கம் பற்றி, துப்பாக்கியிற் பலவகையிருப்பினும் அவற்றுட் சிறந்ததும் துப்பாக்கியென்றே அழைக்கப் பெறுதல் போல, யாழுட் பலவகையிருப்பினும் அவற்றுட் சிறந்ததும் யாழ் என்றே அழைக்கப்பெறும். யாழ் பற்றிய இலக்கியச் சான்றுகள் :- பத்துப் பாட்டில் அமைந்த சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை முதலான கழகக்காலப் பனுவல்களில், இற்றைக்கு 2000ஆம் ஆண்டுகட்கு முன்பு பாணர் இசைத்த, யாழ்க் கருவியின் தோற்றமும், யாழுறுப்புகளின் வண்ணமும் வடிவமும், செயல்வகையும், பயனும், பல்வேறு உவமைகளின் வாயிலாக விளக்கப்பெற்றுள்ளன. இதுகாறும் கிடைத்துள்ள கழகத் தமிழ்ப் பனுவல்களில், யாழ் குறித்து வரும் பாடல்கள் பற்றிய பதிவெண்களின் விளத்தம் வருமாறு :- அகநானூறு: 0.15, 14:15, 56:11, 82:6, 88:11, 109:1, 186:10, 212:6, 214:13, 266:10, 279:11, 314:12, 331:10, 332:8, 346:13, 374:8, 396:3. ஐங்குறுநூறு: 410.5, 472:1, 475:3, 478:5, கலித்தொகை: 2.27, 9:19, 29:17, 32:9, 34:16, 70:22, 118:15, 123:4, 131:9, 143:10, 38. குறிஞ்சிப்பாட்டு: 110. சிறுபாணாற்றுப்படை: 35. திருமுருகாற்றுப்படை: 141. நற்றிணை 30:2, 139:4, 176:8, 186:6, 189:3, 335:9, 380:7. நெடுநல்வாடை 70. பட்டினப்பாலை: 156. பதிற்றுப்பத்து: 41.2. பரிபாடல்: 3.86, 7:78, 8:2,_10:56, 11:125, 20:57, 21:35. புறநானூறு: 64:1, 65:1, 69:1, 109:15, 136:1, 152:14, 170:13, 242:2. பெரும்பாணாற்றுப்படை: 182, 462. பொருநராற்றுப்படை 109, 168, 211. மதுரைக்காஞ்சி: 559, 584, 605. மலைபடுகடாம்: 37, 381, 450, 469, 534. முல்லைப்பாட்டு: 8. 1. ‘செவ்வழி நல்யா ழிசையினென் பையென’ (அகம்.14:15);. 2. ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழின்’ (அகம்:56:1);. 3. ‘நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி’ (புறம்.64:1);. 4. ‘மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப’ (புறம்.65:1);. 5. ‘வணரமை நல்யா ழிளையர் பொறுப்ப’ (பதிற்றுப் 41:2);. |
யாழ்வல்லோன் | யாழ்வல்லோன் yāḻvallōṉ, பெ.(n.) மூவுலகு உலாவி (நாரதன்);; a celestial sage said to be expert in lute playing. [யாழ் + வல் → வல்லான் → வல்லோன்] |
யாழ்வல்லோர் | யாழ்வல்லோர் yāḻvallōr, பெ.(n.) 1. வீணை வல்லோர்; talented experts in playing on the lute. 2. கந்தருவர் (சூடா.);; Gandharvas, the heavenly choristers. [யாழ் + வல் → வல்லார் → வல்லோர்.] “ஆவோ வாகும் பெயருமா ருளவே” (தொல்.680);. |
யாழ்வாசித்தல் | யாழ்வாசித்தல் yāḻvācittal, பெ.(n.) மகளிர்க்குரிய குசல வித்தை ஐந்தனுள் ஒன்றான யாழ்வாசித்தல்; playing the lute, a women’s accomplishment, one of five { }. [யாழ் + வாசித்தல்] |
யாழ்வாசினை | யாழ்வாசினை yāḻvāciṉai, பெ.(n.) வீணை வாசிக்கை (சீவக.660. உரை);; playing the lute. [யாழ் + வாசி → வாசினை] |
யாவகம் | யாவகம் yāvagam, பெ.(n.) 1. பருத்தி வகை (சங்.அக.);; brazil cotton. 2. காராமணி; chowlee-bean. “அரிகாற் பெரும்பயறு நிறைக்கு மூர” (ஐங்குறு. 47);. |
யாவசூகம் | யாவசூகம் yāvacūkam, பெ.(n.) வாற் கோதுமையின் வைக்கோலை நீற்றிச் செய்த உப்புவகை (மூ.அ);; alkaline salt prepared from the ashes of burnt barley straw. |
யாவச்சீவம் | யாவச்சீவம்1 yāvaccīvam, வி.எ.(adv.) வாழ்நாளுள்ளவரை; as long as one’s life lasts, life long till one’s last breath. “அவனுடைய யாவச்சீவமு மறிவேன்” யாவச்சீவம்2 yāvaccīvam, வி.எ.(adv.) ஒருவரைப் பற்றிய வாணாள் வரலாறு; every thing about one’s life history, everything about a person. “யாவச்சீவம் பிறருக்குழைத்தான்” [யாவம் + → த. சிவம்] |
யாவணது | யாவணது yāvaṇadu, பெ.(n.) எவ்விடத்துள்ளது (புறநா.);; where is it? [யாவண் + அது → யாவணது] யாவண் என்னும் வினாமொழியினின்று தோன்றிய சொல். |
யாவண் | யாவண் yāvaṇ, வி.பெ. எவ்விடம்; where, “இருள் யாவணதோ நின்னிழல் வாழ்வோர்க்கே” (புறநா. 102);. [யா + (வ்); + அண் → யாவண்] “யா” – என்னும் வினாக்கேட்பு மொழியினை அடிப்படையாகக் கொண்டு முகிழ்த்த சொல். |
யாவது | யாவது yāvadu, வி.பெ. 1. எது; which, “காரியம் யாவதும் கழறுவீர்” (கந்தபு. தக்கன்மக. 6);. 2. எவ்விதம்; how. “கொணரும் வகை யாவதென” (கம்பரா. திருவவ. 38);. [யா + (வ்); + அது → யாவது] “அது” – அஃறிணை ஒருமைச்சுட்டுப்பெயர். யாவது என்னுஞ் சொல் கழகவிலக்கியங்களில் மிகுதியாகப் பயின்று வந்துள்ளது. அவற்றுட் சில வருமாறு :- 1); “நினக்கியான் மறைத்தல் யாவது” (நற்.72:5); 2); “ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது” (புறம்.97:17); 3); “இலம்பாடு அகற்றல் யாவது” (புறம்:281:15); சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலியில். இச்சொல்லிற்குரிய கழகவிலக்கியச் சான்றுகள் குறிக்கப்படவில்லை. |
யாவதும் | யாவதும் yāvadum, வி.எ.(adv.) 1. சிறிதும்; even a little. “யாவது மனங்கவல் பின்றி” (பொருந. 94);. 2. எல்லாம் (சூடா.);; wholy. “யானைவெண் மருப்பினாலியற்றி யாவதும்” (சீவக. 1201);. [யாவது → யாவதும்] |
யாவத்தீவு | யாவத்தீவு yāvattīvu, பெ.(n.) யவத்தீவு (வின்);; the Island of Java. த.வ. யாவம், யாவா [Skt. Yava-{} → த. யாவத்தீவு] |
யாவத்தும் | யாவத்தும் yāvattum, வி.எ.(adv.) 1. சிறிதும்; even a little, “யாவது மனங்கவல் பின்றி” (பொருந. 94);. 2. எல்லாம் (சூடா.);; all, wholly, entirely “யானைவெண் மருப்பினாலியற்றி யாவதும்” (சீவக. 1201);, “அவள் சொத்து யாவத்தும் போயிற்று”. |
யாவநாலம் | யாவநாலம் yāvanālam, பெ.(n.) ஒரு வகைத் தவசம் (பதார்த்த 1399);; maize, great, millet. |
யாவநாளம் | யாவநாளம் yāvanāḷam, பெ.(n.) யாவ நாலம் பார்க்க,5; see { }. |
யாவனம் | யாவனம் yāvaṉam, பெ.(n.) நிலவரிகை; a land cess or tax. [யவனம் → யாவனம்] |
யாவன் | யாவன் yāvaṉ, வி.பெ. எவன்; who, which man. “யாவனோ வொருவ னென்றாள்” (கம்பரா.உலாவியற் 11);. க. யாவது [ஏ → யா + அன்] “அன்” – ஆண்பாற் பெயரீறு. தொல்காப்பியர் யாவன் என்னுமிச் சொல்லைப் பாலினைப் புலப்படுத்தும் உயர்திணைப் பெயருள் ஒன்றாகக் குறித்துள்ளார். “யாவன்……… என்னும் ஆவயின் மூன்றொடு ……… அப்பதினைந்தும் பால்அறி வந்த உயர்தினைப் பெயரே” (தொல்.647);. |
யாவம் | யாவம்1 yāvam, பெ.(n.) 1. அரக்கு (இ.வ.);; lac. 2. பருத்தி வகை (சங்.அக.);; brazil cotton. யாவம்2 yāvam, பெ.(n.) யாவத்தீவம் (வின்.);; the island of java. யாவம்3 yāvam, பெ.(n.) ஆச்சாமரம்: hard Wickia binata tree. [யா → யாவம்.] |
யாவரும் | யாவரும் yāvarum, பெ.(n.) எவரும்; each and every person, all persons. “யாவருமறிவரியாய் எமக்கெளியாய்” (திருவாச. 20:3);. [யாவர் + உம் ‘உம்’ முற்றும்மை] |
யாவர் | யாவர்1 yāvar, வி.பெ. 1 2 உயர்திணைப் பன்மையில் வரும் வினாச்சொல்; interro gative plural pronoun for higher category of names of men and gods. ‘இந்த இலக்கண நூலின் உரை யாசிரியர்கள் யாவர்?’ 2. அனைவர்; me and all, everyone நேர்ச்சியில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கதறியழுத காட்சி யாவர் உள்ளத்தையும் உருக்கியது. [யா + (வ்); + அர் → யாவர்] ‘அர்’ – பலர்பாலீறு. யாவர்2 yāvar, வி.பெ. எவர்; who, what persons. “……….. யாவர் என்னும் ஆவயின் மூன்றொடு” (தொல்.சொல்.647);, “யாவர்வாய் திறக்க வல்லார்” (கம்பரா. பூக்கொய். 6);, “பலரறி சொல்முன் யாவர் என்னும் பெயரிடை” (தொல்.எழுத்து.172);. தெ. எவரு; க. யார்; ம. யாவர். [ஏ → யா + அர் – யாவர்] “அர்” – பலர்பாலீறு. உயர்திணைப் பெயருள் ஒன்றாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார். “யாவர்………….. என்னும் ஆவயின் மூன்றொடு ………… பாலறி வந்த உயர்தினைப் பெயரே” (தொல்.647);. |
யாவள் | யாவள் yāvaḷ, வி.பெ. எவள்; who, which woman. “யாவளோ வெம் மறையாதீமே” (ஐங்குறு.370);, “யாவள்……. என்னும் ஆவயின் மூன்றொடு”(தொல், 647); க. யாவளு. [ஏ → யா. “அள்” – பெண்பாற் பெயரீறு] |
யாவும் | யாவும் yāvum, பெ.(n.) எல்லாம் (சூடா.);; all, wholeness, entirely, each and everything. க. யாவவு. [யா + உம்] |
யாவை | யாவை yāvai, வி.பெ. எவை; which things, what. “யாதுயா யாவை என்னும் பெயரும்” (தொல். சொல். 652);, “புகழுந்தலைவன் யார் நூற்பொருள் யாவை” (மணிமே.27.168);. [யா + அவை → யாஅவை → யாவை] “யா” என்னும் வினாவடி அஃறினைப் பன்மை வினாப் பெயராக செய்யுளில் வழங்கும். “அவை” அஃறிணைப் படர்க்கைப் பன்மைச் கட்டுப்பெயர் (தொல்.சொல்.167.சேனா, உரை);. |
யாவையும் | யாவையும் yāvaiyum, பெ.(n.) எல்லாம் (சூடா.);; all, wholeness, entirely, “யாவையும் பாடிக் கோவையைப் பாடு” (பழ.);. [யாவை + உம், “உம்” முற்றும்மை] |
யி | யி yi, ‘ய’ என்ற மெய்யெழுத்தும், இ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘i’ to the consonant ‘y’. [ய் + இ → யி] |
யீ | யீ yī, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஈ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘i’ to the consonant ‘y’, [ய்+ஈ→யீ] |
யு | யு yu, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘உ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘u’ to the consonant ‘y’, [ய் + உ → யு] |
யுகசந்தி | யுகசந்தி yugasandi, பெ.(n.) ஊழியின் (யுகம்); முடிவினின்றும் அடுத்த ஊழியின் (யுகம்); தொடக்கத்தினின்றும் சேர்த்ததும் முன் ஊழியின் ஆறிலொருபங்குமான காலப்பகுதி: (Astron.); period comprising the end of the next equivalent to one-sixth of the duration of the earlier yuga. [Skt. Yuga+sandhi → த. யுகசந்தி] |
யுகதருமம் | யுகதருமம் yugadarumam, பெ.(n.) நூலின்படி (சாத்திரம்); அந்த அந்த ஊழியில் (யுகம்); நடக்கவேண்டிய நடைமுறை (வின்);; the characteristics of a particular yuga as detailed in the {}. த.வ. ஊழிநடப்பு [Skt. Yuga → த. யுகம் + தருமம்] |
யுகந்தரம் | யுகந்தரம் yugandaram, பெ.(n.) 1. ஏர்க்கால்; pole of a carriage to which the yoke is fixed. 2. ஒரு நாடு; a countsry. [Skt. Yugan-dhara → த. யுகந்தரம்] |
யுகபத்திரிகை | யுகபத்திரிகை yugabattirigai, பெ.(n.) மரவகை;{} tree. [Skt. {} → த. யுகபத்திரிகை] |
யுகபேதம் | யுகபேதம் yugapētam, பெ.(n.) ஊழிகளுக்குள் (யுகம்); உண்டாகும் நடைமுறையின் வேறுபாடு (வின்);; the difference in characteristics between one yuga and another. [Skt. Yuga+{} → த. யுகபேதம்] |
யுகப்பிரளயம் | யுகப்பிரளயம் yugappiraḷayam, பெ.(n.) நான்கு ஊழியின்(யுகம்);முடிவில் நிகழும் அழிவு (பிரளயம்); (வின்);; cosmic deluge at the end of a cycle of yugas. [Skt. Yuga+pra-laya → த. யுகப்பிரளயம்] |
யுகமுடிவு | யுகமுடிவு yugamuḍivu, பெ.(n.) ஊழியின்(யுகம்); முடிவு (யாழ்.அக.);; the end of a yuga. [Skt. Yuga → த. யுகம்] |
யுகம் | யுகம்1 yugam, பெ.(n.) 1. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நால்வகைப்பட்ட நீடிய காலம்.(பிங்);; age, aeon, a long period of time, of which there are fair, viz., kiruta-yukam, {}, kali-yukam. 2. இரட்டை; pair, coule, brace “பதயுகத் தொழில் கொடு” (கம்பரா.நகரப்.49); 3. நுகம் (யாழ்.அக.); yoke. 4. நான்கு முழங்கொண்ட அளவு(யாழ்.அக.);; a measure of four cubits. [Skt. Yuga → த. யுகம்1] யுகம்2 yugam, பெ. (n.) உலகம் (பூமி); (பிங்);; earth. |
யுகளம் | யுகளம் yugaḷam, பெ. (n.) இரட்டை; pair, brace. “சேவடி யுகள மல்லது (பதினொ. மூத்தபிள்ளையாக);” த.வ. இணை [Skt. Yuga la → த. யுகளம்] |
யுகளி | யுகளி yugaḷi, பெ.(n.) யுகளம் (வின்); பார்க்க;see yugalam. [Skt. Yugali → த. யுகளி] |
யுகவத்திரகம் | யுகவத்திரகம் yugavattiragam, பெ.(n.) திருவாத்தி (தைலவ.தைல.51.);; holy mountain ebony. [Skt. Yugapatraka → த. யுகவத்திரகம்] |
யுகாதி | யுகாதி yukāti, பெ.(n.) 1. ஊழியின் (யுகம்); தொடக்கம் (சங்.அக.);; beginning of the year. 2. தெலுங்கர், கன்னடர் முதலியோரின் ஆண்டுப் பிறப்பு; the new year day of the Telugus and the Kanarese. 3. அருகன்; Arhat. 4. கடவுள் (யாழ்.அக.);; god. [Skt. {} → த. யுகாதி] |
யுகாந்தப்பிரளயம் | யுகாந்தப்பிரளயம் yukāndappiraḷayam, பெ. (n.) யுகப்பிரளயம் (வின்); பார்க்க;see yuga-p- {}. [Skt. {}+Pra-laya → த. யுகாந்தப் பிரளயம்] |
யுகாந்தம் | யுகாந்தம் yukāndam, பெ.(n.) 1. ஊழியின் (யுகம்); முடிவு (வின்);; the end of yuga. 2. யுகப்பிரளயம் (யாழ்.அக.); பார்க்க;see {}. [Skt. {} → த. யுகாந்தம்] |
யுகாந்தாக்கினி | யுகாந்தாக்கினி yukāndākkiṉi, பெ.(n.) ஊழித்தீ (தக்கயாகப்.67,உரை); ; the all consuming fire at the end of a cycle of yugas. [Skt. {} → த. யுகாந்தாக்கினி] |
யுக்தம் | யுக்தம் yuktam, பெ. (n.) 1. தகுதி (கொ.வ.);; fitness, suitablenes, propriety. 2. தொடர் மொழியினிறுதியில் கூடினது என்ற பொருளில் வருஞ்சொல்; the second member of a compound word meaning that which is combined ‘with’. [Skt. Yukta → த. யுக்தம்] |
யுக்தி | யுக்தி yukti, பெ.(n.) 1. பொருத்தம்; fitness. 2. கருதுகோள் (அனுமானம்);; inference. 3. காரணம் (நியாயம்); (வின்);; reason, argument. 4. கூரியவறிவு; keen understanding, acute intellect. 5. சூழ்ச்சி (கொ.வ.);; plan, scheme, device. 6. அறிவுரை புத்திமதி (வின்);; counsel, advice. 7. பகுத்தறிவு (விவேகம்); (வின்);; discrimination. 8. ஆராய்வு (வின்);; deleberation. 9. சூழ்ச்சி(உபாயம்);(வின்);; expedient, artifice. [Skt. Yukti → த. யுக்தி] |
யுக்மம் | யுக்மம் yukmam, பெ.(n.) இணை, இரட்டை; pair, couple, brace. [Skt. Yugma → த. யுக்மம்] |
யுஞ்சானன் | யுஞ்சானன் yuñjāṉaṉ, பெ.(n.) ஒகப் பயிற்சி (யோகாப்பியாசம்); செய்வோன் (கங்.அக.); ; one who practises {}, yogi. [Skt. {} → த. யுஞ்சானன்] |
யுதிட்டிரன் | யுதிட்டிரன் yudiṭṭiraṉ, பெ.(n.) பாண்டவருள் மூத்தவனான தருமபுத்திரன்(பாரத.);; Dharma- putra, the eldest of the {}. [Skt. {} → த. யுதிட்டிரன்] |
யுத்தகளம் | யுத்தகளம் yuttagaḷam, பெ.(n.) போர்க்களம்(பிங்);; battle-field. [Skt. Yuddha → த. யுத்தம்+களம்] |
யுத்தசன்னத்தன் | யுத்தசன்னத்தன் yuttasaṉṉattaṉ, பெ. (n.) போர்க்கோலங் கொண்டவன் (வின்);; one armed or equipped for battle. [Skt. Yuddha + san-naddha → த. யுத்த சன்னத்தன்] |
யுத்தசன்னாகம் | யுத்தசன்னாகம் yuttasaṉṉākam, பெ.(n.) போருக்கு முன்னேற்பாடு (ஆயத்தம்); (வின்);; preparation for battle, preparedness for war. [Skt. Yuddha+san-{} → த. யுத்த சன்னாகம்] |
யுத்தசன்னியாசம் | யுத்தசன்னியாசம் yuttasaṉṉiyāsam, பெ.(n.) சூளுறவு(சபதம்); செய்து போர்த் தொழிலினின்று நீங்குகை(வின்);; renunciation of military life, under a vow. [Skt. Yuddha+san-{} → த. யுத்த சன்னியாசம்] |
யுத்தநாதி | யுத்தநாதி yuttanāti, பெ.(n.) [Skt. Yukta+{} → த. யுத்தநாதி] |
யுத்தநாதிவாக்கியம் | யுத்தநாதிவாக்கியம் yuttanātivākkiyam, பெ.(n.) கோள் இயக்க (அயனசலன); வாய்பாடு (வின்);; (Astron.); table of the precession of the equinoxes for a given time. |
யுத்தமுகம் | யுத்தமுகம் yuttamugam, பெ. (n.) போர்முனை(வின்);; battle front. [Skt. Yuddha+ → த.யுத்தம் + முகம்] |
யுத்தம் | யுத்தம்1 yuttam, பெ.(n.) போர்(பிங்);; battle, fight, war. [Skt. Yuddha → த. யுத்தம்1] யுத்தம்2 yuttam, பெ.(n.) 1. பொருத்தம்(வின்);; fitness, proriety. 2. யுத்தம்,2 (வின்); பார்க்க;see yuktam, 3. நான்கு முழங்கொண்ட அளவு. (யாழ்.அக.);; a measurement. [Skt. Yukta → த. யுக்தம்,2] |
யுத்தரங்கம் | யுத்தரங்கம் yuttaraṅgam, பெ.(n.) போர்க்களம்; theatre of war, field of battle. [Skt. Yuddha → த. யுத்தம்+ அரங்கம்] |
யுத்தவீரன் | யுத்தவீரன் yuttavīraṉ, பெ.(n.) போர் வீரன்; warrior. [Skt. Yuddha → த. யுத்தம்+வீரன்] |
யுத்தவேது | யுத்தவேது yuttavētu, பெ.(n.) பொருத்தமான ஏதுவைக் கொண்ட அணிபுனைவு (அலங்காரம்); (யாழ்.அக.);; [Skt. Yuddha+ த. யுத்தம் + வேது] |
யுத்தாயுத்தம் | யுத்தாயுத்தம் yuttāyuttam, பெ.(n.) தக்கதுந் தகாததும்; what is proper and what is improper, propriety and impropriety. [Skt. {} → த. யுத்தாயுத்தம்] |
யுத்தி | யுத்தி yutti, பெ.(n.) யுக்தி பார்க்க;see yukti. [Skt. Yukti → த. யுத்தி] |
யுத்திக்காரன் | யுத்திக்காரன் yuttikkāraṉ, பெ.(n.) கூரிய அறிவுள்ளவன் (வின்);; man of keen, resourceful intellect. [Skt. Yukti → த. யுத்தி + காரன்] |
யுத்திசித்தி | யுத்திசித்தி yuttisitti, பெ.(n.) ஏரணதருக்கத் தால்(தருக்கரீதியால்); ஏற்படும் முடிவு (வின்);; logical or rational conclusion. |
யுத்திநியாயம் | யுத்திநியாயம் yuttiniyāyam, பெ.(n.) யுத்திவாதம் பார்க்க;{}. [Skt. Yukti+{} → த. யுத்திநியாயம்] |
யுத்தியுத்தர் | யுத்தியுத்தர் yuttiyuttar, பெ. (n.) ஏரணவல்லான் (தார்க்கிகர்); (வின்);; logicians. [Skt. Yukti+yukta → த. யுத்தியுத்தர்] |
யுத்திவாதம் | யுத்திவாதம் yuttivātam, பெ.(n.) நூல் (சாத்திரம்); ஆதாரங்களைக் கொள்ளாமல் அறிவு (புத்தி); வன்மையைக் கொண்டு தருக்கம் செய்கை (வாதிடுகை); (கொ.வ);; argument founded on pure reason and not on scriptural authority. [Skt. Yukti+{} → த. யுத்திவாதம்] |
யுத்தோன்முகன் | யுத்தோன்முகன் yuttōṉmugaṉ, பெ.(n.) போருக்கு அணியமாய்(ஆயத்தம்); இருப்பவன். (தக்கயாகப். 228, உரை);; one who is prepared and ready for war. [Skt. {} → த. யுத்தோன்+முகன்] |
யுனானி | யுனானி yuṉāṉi, பெ.(n.) முகம்மதிய மருத்துவர் கையாளும் கிரேக்க மருத்துவ முறை; Greek school of medicine, practised by Indian muhammadans. [Skt. {} → த. யுனானி] |
யுவ | யுவ yuva, பெ.(n.) வியாழன் வட்ட ஆண்டு அறுபதனுள் ஒன்பதாவது (பெரியவரு);; the 9th year of the Jupiter cycle. [Skt. Yuvan → த. யுவ] |
யுவதி | யுவதி yuvadi, பெ.(n.) 1. இளம் பெண்; young woman. 2. பதினாறு அகவையுடைய பெண், (சூடா);; girl of 16 years. [Skt. Yuvati → த. யுவதி] |
யுவன் | யுவன் yuvaṉ, பெ.(n.) இளைஞன்(வின்);; young man. [Skt. Yuvan → த. யுவன்] |
யுவராசன் | யுவராசன் yuvarācaṉ, பெ.(n.) இளவரசன் (வின்);; heir-apparent to the throne, crown-prince. [Skt. Yuva-{} → த. யுவராசன்] |
யுவா | யுவா yuvā, பெ.(n.) யுவன் பார்க்க;see {}. |
யூ | யூ yū, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஊ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘U’ to the consonant ‘y’. [ய் + ஊ →யூ] |
யூகசாலி | யூகசாலி yūkacāli, பெ.(n.) அறிவுக்கூர்மை யுள்ளவன்; quick witted person. [Skt. {} → த. யூகம்+சாலி] |
யூகம் | யூகம்1 yūkam, பெ.(n.) 1. கருங்குரங்கு; black monkey. “யூகமொடு மாமுக முசுக்கலை” (திருமுரு.302.); (பிங்.); 2. பெண்குரங்கு (திவா.);; female monkey. யூகம்2 yūkam, பெ.(n.) ஒருவகைப்புல் (அக.நி.);; broomstick grass. [Skt.{} → த. யூகம்2] யூகம்3 yūkam, பெ.(n.) பேன்(யாழ்.அக.);; louse. [Skt. yuka → த. யூகம்3] யூகம்4 yūkam, பெ.(n.) 1. உன்னிப்பு, கருதுகை (உத்தேசம்);; guess, conjecture. 2. பகுத்தறிவு (விவேகம்); (யாழ்.அக.);; discrimination, keen preception, understanding. 3. கருத்து; intent, import. 4. காந்தி (யாழ்.அக.);; brilliance. 5. எரணம், தருக்கம்; reason , logic. [Skt. {} → த. யூகம்] யூகம்5 yūkam, பெ.(n.) 1. படையின் அணிவகுப்பு; arrangement or disposition of the forces for fighting military array. “சக்கரயூகம் பிக்கு” (கம்பரா. நிகும்பலை.69);. 2. படை (சூடா);; army, host. 3. உடற்குறை (பிங்);; headless trunk of a body. [Skt. {} → த. யூகம்5] யூகம்6 yūkam, பெ.(n.) கோட்டான் (பிங்);; rock horned owl. |
யூகவான் | யூகவான் yūkavāṉ, பெ.(n.) யூகி1 (யாழ்.அக.); பார்க்க;see {}. [Skt. {} → த. யூகவான்.] |
யூகி | யூகி1 yūki, பெ.(n.) அறிவாளி(புத்திசாலி);(வின்); ; wise man, ingenious person, man of keen understanding. [Skt. {} → த. யூகி.] யூகி2 yūkittal, 4 செ.குன்றா.வி. (v.i.) 1. கருதுதல் (உத்தேசம்);; guess conjecture. 2. கருதுதல் (அனுமானித்தல்);(கொ.வ.);; to infer conclude. 3. ஆராய்தல் (யாழ்.அக.);; to examine scrutinize. [Skt. {} → த. யூகி2.] யூகி3 yūki, பெ.(n.) வத்சனான உதயணனிடம் அரசு நுண்ணுத்தியில் (இராச்சியதந்திரம்); வல்லவனாக இருந்த(நிபுணன்); மந்திரி; a minister of {}, king of vasta, famous for his political wisdom. “யூகிபோதரவு” (பெருங்.இலாவாண. 8, தலைப்பு.] [Skt. {} → த. யூகி3.] |
யூகிபாசை | யூகிபாசை yūkipācai, பெ.(n.) யூகிப்பயில்(வின்); பார்க்க;see {}. [Skt. {} + {} → த. யூகிபாசை.] |
யூகிப்பயில் | யூகிப்பயில் yūkippayil, பெ. (n.) குழூ உக்குறிகளாலான மொழி (வின்.);; a kind of secret language. [Skt. yuki + த.யூகி.] |
யூகை | யூகை1 yūkai, பெ.(n.) யூகம்3 பார்க்க;see {}. [Skt. {} → த. யூகை1.] யூகை2 yūkai, பெ.(n.) துவரையின்(யவை); எட்டிலொரு பங்கான அளவு (கந்தபு. அண்ட கோ.5.);; a linear measure = 1/8 of yavai. யூகை3 yūkai, பெ.(n.) 1. யூகம்4 ,2(யாழ்.அக.);பார்க்க ;see {}, 2. மூலத்திலிருந்து உரைகாரர் கருதும் (அனுமான); கருத்து; inference from a text, drawn by its commentator. 3. கல்வி (வின்);; learning, erudition. 4. அறிவாளி(வின்);; erudite person. [Skt. {} → த. யூகை3.] |
யூதநாதன் | யூதநாதன் yūtanātaṉ, பெ.(n.) யூதபம் (சூடா); பார்க்க;see yudabam. [Skt. {} → த. யூதநாதன்.] |
யூதநாயகன் | யூதநாயகன் yūtanāyagaṉ, பெ. (n.) படைத்தலைவன்; commander. “யூதநாயகரோடு ரகேசரை” (தக்கயாகப்.609); [Skt. {}+nayaga → த. யூதநாயகன்] |
யூதபதி | யூதபதி yūdabadi, பெ.(n.) 1. யூதபம் பார்க்க ;see {}. 2. யூத்நாயகன் (தக்கயாகப்.609, உரை, பார்க்க;see {}. [Skt. {}+pati → த. யூதபதி.] |
யூதபம் | யூதபம் yūtabam, பெ.(n.) தன் கூட்டத்தைக் காக்கும் தலைவன் யானை(பிங்);; chief elephant, leader of a herd of elephants. [Skt. {}-pa → த. யூதபம்.] |
யூதப்பிரட்டன் | யூதப்பிரட்டன் yūtappiraṭṭaṉ, பெ.(n.) தன்னினத்தைவிட்டுப் பிரிந்த யானை.(யாழ்.அக.);; elephant which has strayed away from its herd. [Skt. {} → த. யூதப்பிரட்டன்] |
யூதமதம் | யூதமதம் yūdamadam, பெ.(n.) எபிரேயரின் மதம்; judaism. |
யூதம் | யூதம் yūtam, பெ.(n.) 1. விலங்கின் கூட்டம்(சூடா);; herd, as of elephants, flock. 2. பெரும்படை; battalion troop. “புக்க பூதவேதாள யூதமே” (தக்கயாகப்.509.);. [Skt. {} → த. யூதம்.] |
யூதர் | யூதர் yūtar, பெ.(n.) யூதப்பிரிவினர்; the jews. [Heb. yaudi → த. யூதர்.] |
யூபதண்டு | யூபதண்டு yūpadaṇṭu, பெ.(n.) 1. யூபத்தம்பம் பார்க்க ;see {} “யூபதண்டு கொண்டோட வெற்றியே” (தக்கயாகப்.505); [Skt. {}+danda → த. யூபதண்டு.] |
யூபத்தம்பம் | யூபத்தம்பம் yūpattambam, பெ.(n.) வேள்வித்தூண் (தக்கயாகப்.505, உரை);; post or stake to which the sacrificial animal is fastened, sacrificial post. [Skt. {}+stambha → த. யூபத்தம்பம்.] |
யூபம் | யூபம்1 yūpam, பெ.(n.) 1. யூபத்தம்பம் பார்க்க;see {}-t-tambam ” யூபநட்ட வியன்களம் பலகொல்” (புறநா.15); 2. வேள்வி(சூடா);; sacrifice. [Skt. {} → த. யூபம்1.] யூபம்2 yūpam, பெ.(n.) 1. படையின் அணிவகுப்பு (பிங்);; battle array. 2. உடற்குறை(பிங்); ; headless trunk of a body. “பிணையூபமெழுந்தாட” (மதுரைக்.27); |
யூமியா | யூமியா yūmiyā, பெ.(n.) படிச் செலவுக்காகக் கொடுக்குந் தொகை (வின்);; allowance or pension, calculated originally by the day. த.வ. பிழைப்பூதிய முன்பணம் [Ar. yaumia → த. யூமியா.] |
யெ | யெ ye, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘எ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘e’ to the consonant ‘y’. [ய்+எ→ யெ] |
யெள | யெள yeḷa, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஒள’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘au’ to the consonant ‘y’, [ப்+ ஒள→ யெள] வ் |
யெளகிகம் | யெளகிகம் yeḷagigam, பெ.(n.) பகுபதம்(வின்);; divisible word, derivative. [Skt. yaugika → த. யௌகிகம்] |
யெளதகம் | யெளதகம் yeḷadagam, பெ (n.) திருமணத்தின்போது மணமகனோடு மணையிலிருக்கும் பொழுது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீர்; gift paid to a bride while sitting beside the bridegroom, a variety of stridhana. [Skt.yautaka → த. யௌதகம்] |
யெளதம் | யெளதம்1 yeḷadam, பெ.(n.) ஒரு நீட்டலளவை (யாழ்.அக.);; a linear measure. [Skt. yautava → த. யெளதம்] |
யெளவனகண்டகம் | யெளவனகண்டகம் yeḷavaṉagaṇṭagam, பெ.(n.) முகப்பரு(யாழ்.அக.);; pimple on the face. [Skt. yauvana+{} → த. யௌவன கண்டகம்] |
யெளவனதசை | யெளவனதசை yeḷavaṉadasai, பெ.(n.) விடலைப்பருவம் (சங்.அக.);; youth. [Skt. yauvana+{} → த. யௌவனதசை] |
யெளவனம் | யெளவனம் yeḷavaṉam, பெ.(n.) 1. இளமை(சூடா);; adolescence. 2. அழகு(அக.நி);; beauty. 3. களிப்பு (சது);; joy. 4. மகளிர்கூட்டம்(யாழ்.அக.);; assembly of women. [Skt. yauvana → த. யௌவனம்] |
யெளவனலக்கணம் | யெளவனலக்கணம் yeḷavaṉalakkaṇam, பெ (n.) 1. அழகு; beauty. 2. கொங்கை; breast. [Skt. yauvana –{} → த. யௌவன லக்கணம்] |
யே | யே yē, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஏ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘e’ to the consonant ‘y’. [ய் +ஏ-→ யே] |
யை | யை yai, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஐ’ என்ற நெட்டுயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘ai’ to the consonant ‘y’. [ய் + ஐ→யை] |
யொ | யொ yo, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ஒ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘o’ to the consonant ‘y’. [ய்+ஒ→யோ] |
யோ | யோ yō, ‘ய்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஒ’ என்ற உயிரெழுத்தும் இணைந்த உயிர்மெய் (அசை) யெழுத்து; the syllable formed by adding the short vowel ‘6’ to the consonant ‘y’, |
யோக வடிவம் | யோக வடிவம் yōkavaḍivam, பெ. (n.) இறை சிற்பத்தின் வடிவ நிலைகளில் ஒன்று; sculpture form of god. [ஒகம்-யோகம்+வடிவம்] |
யோகக்கட்டு | யோகக்கட்டு yōkakkaṭṭu, பெ (n.) இருகால் களையும் மாறி மடக்கி அக்கால்களை முதுகோடு சேர்த்து வாரினாற் கட்டுகை (சங்.அக.);; setting cross-legged on the hams and binding the folded legs with the body by means of a strap. [Skt. {} → த. யோகம் + கட்டு] |
யோகக்காட்சி | யோகக்காட்சி yōkakkāṭci, பெ.(n.) கால நேரங்களுக்கு ஆட்படாத ஆதனின் புலனறிவு (சி.சி.அளவை,4);; yogic perception of the soul, transcending the limitation of time and place. [Skt. {} → த. யோகம் + காட்சி] |
யோகக்காரன் | யோகக்காரன் yōkakkāraṉ, பெ.(n.) ஆகூழ் பெற்றவன்; fortunate man. த.வ. மச்சக்காரன், நற்பேறுள்ளவன். [Skt. {} → த. யோகக்காரன்] |
யோகக்குண்டலினி | யோகக்குண்டலினி yōkakkuṇṭaliṉi, பெ.(n.) நூற்றெட்டுஉபநிடதங்களுள் ஒன்று; an Upnisad one of 108. [Skt. {} → த. யோகக்குண்டலினி] |
யோகசமாதி | யோகசமாதி yōkasamāti, பெ.(n.) ஆதன் உடலையும், மனத்தையும் விட்டுப் பிரிந்து இருக்கும் ஒகநிலை(திருப்பு.341);; a yogic cotemplation in which the soul becomes detached from the body and mind. த.வ. ஒக ஒன்றுதல். [Skt. {}+samadhi → த. யோகசமாதி] |
யோகசம் | யோகசம் yōkasam, பெ.(n.) பழைய வடமொழி சிவனியமறை இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச.பொது.331, உரை); ; an ancient Saiva scripture in Sanskrit, one of 28 Civakamam. [Skt. {}-ja → த. யோகசம்] |
யோகசரன் | யோகசரன் yōkasaraṉ, பெ.(n.) அனுமான் (யாழ்.அக.);; Hanuman. [Skt. {}-cara → த. யோகசரன்] |
யோகசாதனம் | யோகசாதனம் yōkacātaṉam, பெ.(n.) ஒகப்பயிற்சி; the practice of yoga. [Skt. {} → த. யோகசாதனம்] |
யோகசாதனை | யோகசாதனை yōkacātaṉai, பெ.(n.) ஒகப்பயிற்சி; the practice of yoga. [Skt. {} → த. யோகசாதனை] |
யோகசாத்திரம் | யோகசாத்திரம் yōkacāttiram, பெ.(n.) அறுபத்து நான்கு கலைகளுள் ஒகத்தைப் பற்றிக் கூறும் கலை; yoga philosophy, one of {}-kalai. [Skt. {} → த. யோகசாத்திரம்] |
யோகசாரணம் | யோகசாரணம் yōkacāraṇam, பெ.(n.) அறிவியல் ஒன்றே என்றைக்கும் உள்ளது எனக் கூறும் புத்தமதப் பிரிவு; Buddhist school which maintain that the intelligence or {} alone eternally exists. [Skt. {} → த. யோகசாரணம்] |
யோகசாரன் | யோகசாரன் yōkacāraṉ, பெ.(n.) யோகாசார மதத்தைப் பின்பற்றுபவன்(சி.சி.பர.யோகா.1);; follower of the {} school of Buddhism. [Skt. {} → த. யோகசாரன்] |
யோகசிகை | யோகசிகை yōgasigai, பெ.(n.) நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று; an upanisad, one of 108. [Skt. {} → த. யோகசிகை] |
யோகசித்தன் | யோகசித்தன் yōkasittaṉ, பெ.(n.) ஓகத்தில் தேறியவன்; one of the best siddharas [யோகம்+சித்தன்] [Skt. {} → த. யோகம்] |
யோகசித்தி | யோகசித்தி yōkasitti, பெ.(n.) ஒகம் செய்து பெற்ற ஆற்றல்; ower attained by the practice of yoga. [Skt. {}+ siddhi → த. யோகசித்தி] |
யோகசூடாமணி | யோகசூடாமணி yōkacūṭāmaṇi, பெ.(n.) நூற்றெட்டு துணை விளக்க நூல்களுள்(உபநிடதங்களுள்); ஒன்று; an upanisad one of 108. [Skt. {} → த. யோகசூடாமணி] |
யோகசேமம் | யோகசேமம் yōkacēmam, பெ (n.) 1. ஆக்கம் (வின்);; welfare, prosperity. 2. வாழ்க்கைத் தொழில், பிழைப்பு வழி; livelihood. 3. நலமானநிலை; state of health. 4. பெற்ற பொருளின் நிலைபேறும் மேன்மெல் வருவாயும்; secure possession of what has been acquired, and increasing prosperity. த.வ. செழிப்பு,வாழ்க்கை, பிழைப்பு, நன்னிலை, மேல்வருமானம் [Skt. {} → த. யோகசேமம்] |
யோகதட்சிணாமூர்த்தம் | யோகதட்சிணாமூர்த்தம் yōkadaṭciṇāmūrddam, பெ (n.) தென்முக நம்பியின் வடிவங்களுள் ஒன்று; a form of {}. [Skt. {} → த. யோக தட்சிணாமூர்த்தம்] |
யோகதண்டம் | யோகதண்டம் yōkadaṇṭam, பெ.(n.) ஒகிகள் கைக்கொள்ளுங் கோல்(வின்);; staff of a yogi. த.வ. ஒகிதடி [Skt. {} → த. யோகதண்டம்] |
யோகதத்துவம் | யோகதத்துவம் yōkadadduvam, பெ.(n.) நூற்றெட்டு துனை விளக்க நூல்களுள் (உபநிடதங்களுள்); ஒன்று; an upanisad, one of 108. [Skt. {}-tattva → த. யோகதத்துவம்] |
யோகதீக்கை | யோகதீக்கை yōkatīkkai, பெ.(n.) ஒகவழியால் குரு மாணாக்கனது உடலுள் புகுந்து அவனது ஆதனை உட்கொண்டு சிவனது திருவடியிற் சேர்க்கும் தீக்கை வகை; a mode of initiation in which the teacher, by yogic power enters the body of his disciple, takes hold of his soul and joins it to the feet of Siva. [Skt. {} → த. யோகதீக்கை] |
யோகதீட்சை | யோகதீட்சை yōkatīṭcai, பெ.(n.) யோக தீக்கை பார்க்க;see {}. [Skt. {} → த. போகதீட்சை] |
யோகநானம் | யோகநானம் yōkanāṉam, பெ.(n.) ஏழு குளியல்களுள் ஊழ்கத்தினால் உண்டாகும் தூய்மை (வின்);; purification by {} contemplation, one of seven {}. [Skt. {} → த. யோகநிட்டை] |
யோகநிட்டை | யோகநிட்டை yōkaniṭṭai, பெ.(n.) ஒக முறையில் உள்ளொடுங்குதல்; absorbed yogic contemplation. [Skt. {} → த. யோகநிட்டை] |
யோகநித்திரை | யோகநித்திரை yōkanittirai, பெ.(n.) உறங்குவது போன்றிருந்தும் அறிவுற்றிருக்கும் ஒகநிலை (தக்கயாகப்.148, உரை);; a state of meditation which admits of the full exercise of one’s mental powers, the body remaining inactive as in sleep. த.வ. ஒகத்துயில் [Skt. {}+nidra → த. யோகநித்திரை] |
யோகநிலை | யோகநிலை yōkanilai, பெ.(n.) ஒகநிலையில் உள்ளொடுங்கி அமர்ந்திருத்தல்; absorbed yogic contemplation. த.வ ஒக ஒடுக்கம்(யோகம்+நிலை); [Skt. {} → த. யோகம்] |
யோகநூல் | யோகநூல் yōkanūl, பெ.(n.) அறுபத்து நான்கு கலைகளுள் ஒகத்தைப் பற்றிக் கூறும் கலை (வின்);; yoga philosophy, one of {} kali. [Skt. {} → த. யோகம்+நூல்] |
யோகபதம் | யோகபதம் yōkabadam, பெ.(n.) கரணியச் சொல்(வின்);; derivative word. [Skt. {}+pada → த. யோகபதம்] |
யோகபரன் | யோகபரன் yōkabaraṉ, பெ.(n.) ஒகநினை வுடையவன் (இலக்.அக);; one who has completely given himself up to yogic practices. [Skt. {}-para → த. யோகபரன்] |
யோகபரீட்சை | யோகபரீட்சை yōkabarīṭcai, பெ.(n.) ஒகப்பயிற்சி; practice of yoga. [Skt. {} → த. யோகப் பரீட்சை] |
யோகபாதம் | யோகபாதம் yōkapātam, பெ.(n.) 1. யோகம் பார்க்க;see {}. வடிவினையுடைய கடவுளை அகத்தான் வழிபடுகை யாகிய வழி (சி.போ.பா.8,1,பக்,359.புதுப்); 2. ஒவ்வொரு சிவத்தோன்றியத்திலும் ஒகத்தைப் பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி (பெரியபு.தில்லைவா. சூச);; second of the four parts of each sivagamam, a dealing with yoga practices. 3. ஒகத்தைப் பற்றிக் கூறும் மாலியத்தோன்றியப் பகுதி; the section of {} dealing with yoga. [Skt+ {}+ pata → த. யோகபாதம்] |
யோகபீடம் | யோகபீடம் yōkapīṭam, பெ.(n.) ஓகிகளுக்குரிய இருக்கை; seat on posture peculiarly suitable to a yogi. [Skt. {} → த. யோகபீடம்] |
யோகப்பட்டம் | யோகப்பட்டம் yōkappaṭṭam, பெ.(n.) ஒகத்தில் அமர்ந்திருக்கும் பொழுது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்துக் கட்டவுதவும் கச்சை; strap used by a jogi sitting on his hams, to bind his folded legs with the body. “யோகப் பட்டம் விளங்க” (திருவாலவா. 13,5); த.வ. ஒக நாண். [Skt. {} → த. யோக+பட்டம்] |
யோகப்பிரத்தியட்சம் | யோகப்பிரத்தியட்சம் yōkappirattiyaṭcam, பெ.(n.) ஆதன் உடலையும், மனத்தையும் விட்டுப் பிரிந்து நிற்கும் நிலையில், காலநேரங்கட்கு உட்படாத ஆதனின் புலனறிவு (சி.சி. அளவை.4);; yogic perception of the soul, transcending the limitation of time and peace. [Skt. {} → த. யோகப்பிரத் தியட்சம்] |
யோகப்பிரமாணம் | யோகப்பிரமாணம் yōkappiramāṇam, பெ.(n.) யோகநிலை பார்க்க;see {}. [Skt. {}+pra-{} → த. யோகப்பிரமாணம்] |
யோகமார்க்கம் | யோகமார்க்கம் yōkamārkkam, பெ.(n.) ஒகமுறை; yogic system. த.வ. ஒகவழி. [Skt. {} → த. யோகமார்க்கம்] |
யோகம் | யோகம் yōkam, பெ.(n.) 1. சேர்க்கை junction, union, combination . “பொரிபுனையோக வியோக முடைத்தோன்(ஞானா.61,9); 2. கோள்கள் முதலியவற்றின் நற்சேர்க்கை; lucky conjunction, as of planets. 3. கூடல்; sexual union, “பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார் (பெரியபு.தடுத்.181); 4. கூட்டல் (யாழ்.அக.);; addition 5. ஆகூழ்; luck, fortune. “யோகநாள் வந்த தென்று (இராமநா. பாலகா.10);. 6. உயர்ச்சி (செந்.iv 257);; excellence. 7. ஊக்கம். (யாழ்.அக.); enthusiasm, zeal 8. தகுதி (யாழ்.அக.); 9. சொற்பிறப்பியலுக்குத் தொடர்பான சொல் தோற்றம்; etymological connection of a word. 10. கரணியப் பெயர்;(நன். 62, விருத்); derivative name. 11. நூற்பா (யாழ்.அக.); aphorism. 12. வழி (உபாயம்);; means, expedient, device. “கைகண்ட யோகம்(திவ்.நாய்ச்.12,5, வ்யா); 13. மருந்து remedy, cure, medicine. “ஆழ்துயரவித்தற் கொத்த வரும்பெறல் யோகநாடி” (சீவக.1800); 14. ஏமாற்று (யாழ்.அக); fraud. 15. அரைப்பட்டிகை, waist band, girdle “அரியர் யோகமும்” (சிலப்.14,170); 16. நற்சுழி; auspicious mark, as on horse, cattle etc., ” யோகப்புரவி” (பெரியபு.தடுத்.19); 17. ஆழ்நிலை ஊழ்கம்; deep and abstract meditation, concentration of the mind in the contemlation of the supreme spirit. “யோக நல்லுறக்க நல்கினான்”(இரகு, திருவவ.5);. 18. உணர்ச்சி; consciousness” தாக்குதன் முன்னே யோகம் வந்தது மாண்டார்க்கு (கம்பரா.வேலேற்ற.42); 19. மிகுநுண்ணிய வடிவினையுடைய கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய வழி (சி.போ.பா.8,1,பக்359,புதுப்);;{} path of {} which consists in the mental worship of {} in his subtler form. ஒவ்வொரு சிவதோன்றியத்திலும் ஒகத்தைப் பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி (பெரியபு.தில்லைவா.சூச.);; second of the four parts of each sivaiamam, as dealing with yoga practices. |
யோகயாமளம் | யோகயாமளம் yōkayāmaḷam, பெ.(n.) கொற்றவை வழிபாட்டின் தந்திரங்களைப் பற்றிய நூல்;(சாக்தேய தந்திரம்); a tantric work dealing with the worship of {}. “யோகயாமளத்தினாள்” (தக்கயாகப்.136); [Skt. {} → த. யோகயாமளம்] |
யோகரூடி | யோகரூடி yōkarūṭi, பெ.(n.) காரண விடுகுறி (நன்.62 விருத்);; word having at etymoloyogical as well as a special or conventional meaning as pankaja. [Skt. {} → த. யோகரூடி] |
யோகர் | யோகர் yōkar, பெ.(n.) ஓகியர்; yogis, followers of the yoga system. ” எண்ணிலா முனிவர்…..யோகர்” (திருகாளத். சூடா.); 2. முனிவர், (சூடா); sages ascetics. 3. சமண முனிவர்(சூடா);; Jaina saints. [Skt. {} → த. யோகர்] |
யோகவான் | யோகவான் yōkavāṉ, பெ.(n.) ஆகூழ் உள்ளவன் (வி);; fortunate man. த.வ. நற்பேறுள்ளவன். [Skt. {} → த. யோகவான்] |
யோகவிபாகம் | யோகவிபாகம் yōkavipākam, பெ.(n.) ஒரு நூற்பாவில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு நூற்பாவாக்கி பொருள் கோடலாகிய நூற் புணர்ப்பு (தொல். சொல். 11, சேனா.);; separation of that which is usually combined together, especially the seperation of the words of a sutra splitting one rule into two or more. [Skt. {} → த. யோகவிபாகம்] |
யோகவுறக்கம் | யோகவுறக்கம் yōkavuṟakkam, பெ.(n.) யோகநித்திரை பார்க்க;see {}. த.வ. ஒகத்துயில். [Skt. {} → த. யோகம்+உறக்கம்] |
யோகவேட்டி | யோகவேட்டி yōkavēṭṭi, பெ.(n.) இடது தோள் மேலிருந்து குறுக்காக அணியும் மேலாடை (வி);; upper cloth worn across the chest, passing over the left shoulder, and under the right. [Skt. {} → த. யோகவேட்டி] |
யோகாக்கினி | யோகாக்கினி yōkākkiṉi, பெ (n.) 1. ஒகத்தாலடையும் ஒளி; lustre attained through yogic practice. 2. நெருப்புத் திரள் (வி);; blaze of fire. 3. விடாத ஒகமுறைக் கடைப்பிடிப்பால் ஒகியின் கண்ணில் ஒளிருந் தீ (வின்);; excessive heat of fire glowing in the eyes of a yogi because of continued meditation. த.வ. ஒகப் பொலிவு, தீப் பிழம்பு, ஒக ஒளி [Skt. {}+agni → த. யோகாக்கினி] |
யோகாசனம் | யோகாசனம் yōkācaṉam, பெ (n.) 1. ஒகத்துக்குரிய இருக்கை (வின்);; mode of sitting, suited to profound and abstract meditation. 2. ஐவகை முழங்காலிட்டுக் குந்தியிருக்கும் இருப்பு(சங்.அக.);; sitting on the hams, one of {}. த.வ. ஒகஇருக்கை [Skt. {} → த. யோகாசனம்] |
யோகாசாரம் | யோகாசாரம் yōkācāram, பெ (n.) 1. ஒகமுறைகளை அறிந்து ஒழுகும் முறை; practice and observance of yoga. 2. அறிவியல் ஒன்றே என்றைக்கும் உள்ளது என்று கூறும் பெளத்த மதப் பிரிவு; a buddhist school which maintains that the intelligence or {} alone externally exists. [Skt. {} → த. யோகாசாரம் |
யோகாசாரியன் | யோகாசாரியன் yōkācāriyaṉ, பெ (n.) ஒகத்தின் உட்பொருளைக் கற்பிக்கும் ஆசிரியன் (வின்);; teacher of the yoga system of philosophy. |
யோகாதிகாரம் | யோகாதிகாரம் yōkātikāram, பெ.(n.) ஒகநிலை யில் நிற்குந் திறமை(வின்);; ability or fitness to undertake the practice of yoga. [Skt. {}+ adhikara → த. யோகாதிகாரம்] |
யோகாதிசயம் | யோகாதிசயம் yōkātisayam, பெ.(n.) நன்னிலை; condition, state of health. “என் யோகாதிசயங்களுரைக்க (அருட்பா, Vl, வேண்டுகோ);. த.வ. உடல்நலம் [Skt. {} → த. யோகாதிசயம்] |
யோகாப்பியாசம் | யோகாப்பியாசம் yōkāppiyācam, பெ.(n.) ஒகப் பயிற்சி; practice of yoga. [Skt. {} → த. யோகப்பியாசம்] |
யோகார்த்தம் | யோகார்த்தம் yōkārttam, பெ.(n.) சொற்பிறப்பியல் கூறும் கரணியப் பொருள் (வி); ; etymological meaning. [Skt. {}+artha → த. யோகார்த்தம்] |
யோகி | யோகி yōki, பெ.(n.) 1. ஓக முறையின் மெய்மைகளைப் பின்பற்றி அப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவன்; follower of the yoga system of philosophy, adopt in yogic practices. ” ஒண்டிறல் யோகிகளே (திருவாச.46,2);. 2. துறவி (வின்); ascetic. 3. சிவபெருமான் (பிங்);; Lord Siva. 4. ஐயனார்(பிங்);;{}. 5. அருகன் (பிங்);; Arhat 6. உடலை வளைக்க உதவும் தசை (வி);; abductor muscle. த.வ. ஒகி [Skt. {} → த. யோகி] |
யோகி-த்தல் | யோகி-த்தல் yōkittal, 4.செ.குன்றாவி (v.t.) ஊழ்கம் செய்தல்(வி); ; to contemplate, to meditate upon. த.வ. உள்ளொடுங்குதல் [Skt. {} → த. யோகி-,] |
யோகினி | யோகினி yōkiṉi, பெ.(n.) 1. மந்திரக்காரி (வின்);; female magician, witch sorcesess. 2. கொற்றவைக்கு ஏவல்செய்யும் மகளிர்வகை; a class of female attendants on Durga. “வீரயோகினி வெள்ளமோடு (பிரபுலிங்.கைலாச.42); 3. தெய்வப்பெண்; fairy. ” நிலையெனும் யோகினி மடவாலும் (திருக்காளத்.பு.விசிட்டத்.28); 4. கொற்றவை;{}. “இத்திறம் யோகினி யிசைத்து (கந்தபு.அக்கினி முகா.132); 5. ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு திசையில் நின்று கொண்டு அத்திசை நோக்கிப் பயணமாவோர்க்குத் தீங்கு விளைவிப்பவளாகக் கருதப்படும் பெண் தெய்வம் (சோதிடகிரக.89.);; Durga who, on earth titi of the waring and waxing moon appears in a particular direction and causes harm to those who start their journey in that direction. [Skt. {} → த. யோகினி] |
யோகினிச்சி | யோகினிச்சி yōkiṉicci, பெ.(n.) வரிக் கூத்துவகை (சிலப்.3.13, உரை, பக்.89);; a kind of dance. |
யோகினிதிசை | யோகினிதிசை yōkiṉidisai, பெ.(n.) யோகினி என்ற பெண் தெய்வம் இருக்கின்ற திசை (பஞ்);; direction of the {}. [Skt. {} → த. யோகினிதிசை] |
யோகிப்பரதேசி | யோகிப்பரதேசி yōkipparatēci, பெ.(n.) வடநாட்டுத் துறவி; ascetic pilgrim from North India mendicants, as practicing yoga. [Skt. {} → த. யோகிப்பரதேசி] |
யோகிப்பு | யோகிப்பு yōkippu, பெ.(n.) ஊழ்கம்(வின்); ; meditation, contemplation. த.வ. உடல்நலம் [Skt. {} → த. யோகிப்பு] |
யோகீசுவரன் | யோகீசுவரன் yōācuvaraṉ, பெ.(n.) ஒகத்தில் வல்லவன்; adept in yoga. த.வ. ஒகஅறிஞன் [Skt. {} → த. யோகீசுவரன்] |
யோகு | யோகு yōku, பெ.(n.) ஊழ்கத்தில் ஆழ்ந்து ஒடுங்குகை; deep and abstract meditation;concentration of the mind in the contemplation of the supreme spirit. “யோக நல்லுறக்க நல்கினான் (இரகு. திருவவ.5); த.வ. ஒக ஒடுக்கம். [Skt. {} → த. யோகு] |
யோக்கியதா பத்திரிகை | யோக்கியதா பத்திரிகை yōggiyatāpattirigai, பெ.(n.) யோக்கியதா பத்திரம் பார்க்க: see yokkiyata – pattiram [Skt. {} → த. யோக்கியதா பத்திரிகை.] |
யோக்கியதாபட்சம் | யோக்கியதாபட்சம் yōkkiyatāpaṭcam, பெ.(n.) தகுதி பற்றிய மதிப்பு; consideration of appropriateness or fitness regard of qualification or merits. [Skt. {} → த. யோக்கியதா பட்சம்] |
யோக்கியதாபத்திரம் | யோக்கியதாபத்திரம் yōkkiyatāpattiram, பெ.(n.) கல்வித் தேர்ச்சியைக் குறிக்கும் நற்சான்று ஆவணம்; Diploma of educational attainments 2. நல்லொழுக்கத்தைக் குறிக்கும் ஆவணம்; certificate of good character, conduct certificate. த.வ. 1. கல்விச் சான்றிதழ். 2. நல்லொழுக்கச் சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ். [Skt. {}-ta+patra → த. யோக்கியதா பத்திரம்.] |
யோக்கியதைச் சீட்டு | யோக்கியதைச் சீட்டு yōkkiyadaiccīṭṭu, பெ.(n.) யோக்கியதா பத்திரிகை பார்க்க;see yokkiyata pattirikkai. [Skt. {} → த. யோக்கியதைச் சீட்டு] |
யோக்கியத்துக்குக் கொடுத்தல் | யோக்கியத்துக்குக் கொடுத்தல் yōkkiyattukkukkoḍuttal, செ.கு.வி (v.i.) ஒருவனது நேர்மையின்மேல் பற்றுக் கோடாக கடன் கொடுத்தல்; to lend money to a person without security depending on his honesty. 2. பணத்தைக் கப்பல் வணிகம் முதலியவற்றில் போடுதல்; to risk one’s money in trade, etc. த.வ. நம்பிக்கைக் கடன். [Skt. {} → த. யோக்கியம் அத்து + கொடுத்தல்.] |
யோக்கியன் | யோக்கியன் yōkkiyaṉ, பெ.(n.) 1. தகுதியானவன்; worthy, honourable man. 2. தக்கவன்; suitable. 3. உதவி செய்யக்கூடியவன், பயனுள்ளவன்; useful, serviceable, capable man. த.வ. 1. மதிப்புள்ளவன். 2. பொருத்தமானவன். [Skt. {} → த. யோக்கியன்] |
யோக்கியபாத்திரம் | யோக்கியபாத்திரம் yōkkiyapāttiram, பெ.(n.) நன்னடத்தை உடையவன் (யாழ்.அக.);; person of respectability. த.வ ஒழுக்கமுள்ளவன். [Skt. {} → த. யோக்கியபாத்திரம்] |
யோக்கியம் | யோக்கியம் yōkkiyam, பெ.(n.) 1. யோக்கியதை 1,4,6 பார்க்க;see {}. 2. ஒழுக்கம்; worthy conduct, decorum, conformity to rules. 3. தூய்மை; goodness, purity, holiness. த.வ. 1. தகுதி 2. நற்பண்பு 3. நல்லெண்ணம். [Skt. {} → த. யோக்கியம்] |
யோக்கியவான் | யோக்கியவான் yōkkiyavāṉ, பெ.(n.) நன்னடத்தை உள்ளவன் (யாழ்.அக.);; person of respect- ability. த.வ. பண்பாளன். [Skt. {} → த. யோக்கிய + ஆன்] |
யோக்கியாசனம் | யோக்கியாசனம் yōkkiyācaṉam, பெ.(n.) தகுதிக்குத்தக்கவாறு அமைந்த இடம்; seat of place suited to one’s dignity. த.வ. மதிப்புரவு இடம், தகவிருக்கை [Skt. {} → த. யோக்கியாசனம்] |
யோக்கியாதி | யோக்கியாதி yōkkiyāti, ஓர் ஆண்டில் கதிரவனது அன்றாட இயக்கத்தைக் கணிக்கும் கணித வாய்ப்பாடு; equation table of the sun’s true motion for every day in the year. [Skt. {} → த. யோக்கியா+ ஆதி] |
யோக்கியாயோக்கியம் | யோக்கியாயோக்கியம் yōkkiyāyōkkiyam, பெ (n.) தகுதிப்பாடும், தகுதிப்பாடின்மையும்; worthiness and unworthiness. த.வ. தகவு இகவு [Skt. {} → த. யோக்கியா யோக்கியம்] |
யோசனன் | யோசனன் yōcaṉaṉ, பெ.(n.) கடவுள்(யாழ்.அக.);; God. [Skt. {} → த. யோசனன்] |
யோசனம் | யோசனம் yōcaṉam, பெ.(n.) 1. எண்ணம்; thought reflection, consideration. 2. கருத்து; opinion, sentiment. 3. அறிவுரை; counsel, advice. 4. கருவி; device, scheme, contrevance. 5. பகுத்தறிவு; discretion, prudence, wisdom. 6. 2 1/4 மைல் கொண்ட தொலைவு (கந்தபு.அண்ட கோ.6);. நாக நன்னாட்டு நானூறி யோசனை (மணிமே.9,21); 7. ஓசை (சது);; sound. [Skt. {} → த. யோசனம்] |
யோசனவல்லி | யோசனவல்லி yōcaṉavalli, பெ (n.) 1. நீர்ப்பூடுவகை; Indian madder 2. வல்லாரை; Indian penny wort. [Skt. {}+valli → த. யோசனவல்லி] |
யோசனை | யோசனை yōcaṉai, பெ.(n.) 1. எண்ணம்; thought, reflection, consideration. 2. கருத்து; opinion, sentiment. 3. அறிவுரை; counsel, advice. 4. வழி; device, scheme, contrivance. 5. அறிவு; disoretion, prudence wisdom. 6. நான்கு குரோசங் கொண்ட நீட்டலளவை; a linear measure four {} ” நாக நன்னாட்டு நானூறு யோசனை. (மணிமே 9:21.); 7. ஓசை; sound. [Skt. {} → த. யோசனை] |
யோசனைக்காரன் | யோசனைக்காரன் yōcaṉaikkāraṉ, பெ.(n.) முன்னறிவுடையவன் (வி);; prudent, thoughtful man. த.வ. விழிப்புள்ளவன் [Skt. {} → த. யோசனை+காரன்] |
யோசனைசாலி | யோசனைசாலி yōcaṉaicāli, பெ.(n.) அறிவு உள்ளவன்(வி);; wise, polite man. [Skt. {} → த. யோசனை+சாலி] |
யோசனைவான் | யோசனைவான் yōcaṉaivāṉ, பெ.(n.) யோசனைக்காரன் பார்க்க;see {}. த.வ. விழிப்புள்ளவன் [Skt. {} → த. யோசனை+காரன்] |
யோசி-த்தல் | யோசி-த்தல் yōcittal, 4. செ. குன்றாவி (v.t.) 1. சேர்த்தல்; to bring together. “வாயுப் பிராணனொன்று மடைமாறி யோசித்து” (திருப்பு341); 2. எண்ணுதல் (சிந்தித்தல்);; to consider, ponder. “எல்லாம் யேரசிக்கும் வேளையில்” (தாயு.பரிபூரண.10); 3. அறிவுரை கேட்டல்; to consult. த.வ.இணைத்தல், எண்ணுதல், நல்லுரை கேட்டல் [Skt. yoj → த. யோசி-,] |
யோசியம் | யோசியம் yōciyam, பெ.(n.) கணியம்; astrology prognostication, divination. த.வ. கணியம் [Skt. {} → த. யோசியம்] |
யோதனம் | யோதனம் yōtaṉam, பெ.(n.) போர்; act of fighting battle, war. “யோதனத்தி லிவன்” (பாரத.பதினான்.78); [Skt. {} → த. யோதனம்] |
யோத்திரம் | யோத்திரம் yōttiram, பெ.(n.) நுகக்கயிறு (யாழ்.அக.);; cord used to yoke cattle. த.வ. கட்டுகயிறு, பூட்டாங்கயிறு [Skt. yoktra → த. யோத்திரம்] |
யோனி | யோனி yōṉi, 1. நோனி, பெண்குறி; pudendum muliebre. “விரிந்தது யோனியும்(திருமந்.455);. 2. இனப்பெருக்க உறுப்பு; place of birth, source, origin. “உலக வை புரக்கும் யோனி (ஞானா-14,4);.” 3. கருப்பைப் பை ; womb, matrix. 4. காரணம்(சது);; cause. 5. பிறவி; form of life. எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்(திவ்.இயற்.திருவிருத்.1); 6. ஆவுடையாள்; pedestal of a lingam. 7. ஒரு நாடக உறுப்பு (சிலப்.3,13 உரை);; a necessary adjunct or part of a drama. 8. பதினொன்றாவது விண்மீனாகிய கணை; the 11th asterisma 9. நீர் (இலக்.அக.);; water. [Skt. {} → த. யோனி] |
யோனிக்கலப்பு | யோனிக்கலப்பு yōṉikkalappu, கலப்பு இனம் (யாழ்.அக.); mixed origin or caste. I [Skt. {} → த. யோனி+கலப்பு] |
யோனிசங்கரன் | யோனிசங்கரன் yōṉisaṅgaraṉ, பெ.(n.) கலப்பு இனப்பிறப்பால் இழிந்தவனாகக் கருதப்படுபவன் (யாழ்.அக.);; person of mixed caste, offspring of mixed parentage considered low born. [Skt. {}-kara → த. யோனிசங்கரன்] |
யோனிசங்கரம் | யோனிசங்கரம் yōṉisaṅgaram, பெ.(n.) யோனிக்கலப்பு பார்க்க;see {}. [Skt. {}-kara → த. யோனிசங்கரம்] |
யோனிசிராவம் | யோனிசிராவம் yōṉisirāvam, பெ.(n.) வெள்ளை நோய் (பைஷஜ);; whiles, leucorrhoea. [Skt. {} → த. யோனிசிராவம்] |
யோனிபேதம் | யோனிபேதம் yōṉipētam, பெ.(n.) 84 இலட்சமாகக் கூறப்படும் பிறப்பு வகை; species of living beings, said to number 84 lakhs ” உரை செரு மெண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேத நிரை சேர” (தேவப.575,3);. (பிங்); [Skt. {} → த. யோனிபேதம்] |
யோனிப்பொருத்தம் | யோனிப்பொருத்தம் yōṉipporuttam, பெ.(n.) திருமணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று(வி);; a coressondence between the horoscopes of the prospective bride and bride grooms, one of ten {}-p-poruttam. [Skt. {} → த. யோனி+பொருத்தம்] |
யோனிமுத்திரை | யோனிமுத்திரை yōṉimuttirai, பெ.(n.) முக்கோணமாகக் காட்டும் 84 கைமுத்திரை வகை (சங்.அக.);; a hand pose with a triangular opening between the fingers. [யோனி+முத்திரை] [Skt. {} → த. யோனி + முத்திரை] |
யோனிமேகம் | யோனிமேகம் yōṉimēkam, பெ (n.) யோனிசிராவம் பார்க்க;see {}. [Skt. {} → த. யோனிமேகம்] |
யோனிவாய்ப்படு-தல் | யோனிவாய்ப்படு-தல் yōṉivāyppaḍudal, செ.கு.வி. (v.i.) பிறத்தல் (யாழ்.அக);; to be born. [யோனி+வாய்ப்படுதல்] [Skt. {} → த. யோனி] |
யோமிய | யோமிய yōmiya, பெ.(n.) முகம்மதியர் செய்த உதவிகளுக்காக பிரிட்டன் அரசு அவர்க்கு அரசு வாயிலாகக் கொடுத்துவந்த அன்றாடப்படி; daily allowance or pension granted to Muhammadans, in the earlier years of British rule for having rendered special services. (M.N.A.D.l,287); த.வ. பிழைப்புப்படி [Arab. yaumia → த. யோமிய] |
யோமியதார் | யோமியதார் yōmiyatār, அன்றாட படி பெறுவோர் (M.N.A.D.I,287); grantee of daily allowance. த.வ. நாட்படி [Skt. {} → த. யோமிய+தார்] |
யௌதம் | யௌதம்2 yaudam, பெ.(n.) மகளிர் கூட்டம் (யாழ்.அக.);; assembly of women. |
ய் | ய் y, 1. தமிழ் நெடுங்கணக்கில் பதினோராவது இடையின மெய்யெழுத்து; the eleventh medial consonant of the Tamil alphabet. 2. அடியிண்ண ஒலி; voiced palatal. 3. மூவின மெய்யெழுத்துப் பிரிவுகளுள், வல்லினத்துக்கும், மெல்லினத்துக்கும், இடைப்பட்ட நிலையில் ஒலிக்கும் எழுத்து; the six medial consonants of the Tami/ (tripartite); system வல்லெழுத்துத் தோன்றும் மார்புக்கும், மெல்லெழுத்துத் தோன்றும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான அடியண்ணத்தில் தோன்றும், ஒலிப்புடை ஒலியாகும். |