செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ம1 ma, பெ.(n.)

   மகரமெய்யும் அகர உயிருஞ் சேர்ந்த உயிர்மெய்யெழுத்து; the compound of ம் and அ.

     [ம் + அ.]

 ம2 ma, பெ.(n.)

   ஏழிசைக் குறியீடுகளுள் நான்காவதாகிய உழை (மத்திமம்); எனப்படும் இசையி னெழுத்து (சிலப்.3:67, அரும்.);; the symbol of the fourth note of the gamut (Mus.);.

     [ம் + அ.]

 ம3 ma, பெ.(n.)

   1. நிலவு (இலக்.அக.);; moon.

   2. சிவன் (இலக்.அக.);;{}

   3. காலன் (இலக்.அக.);;{}.

   4. காலம் (யாழ்.அக.);; time.

   5. நான்முகன் (யாழ்.அக.);; Brahman.

   6. திருமால் (யாழ்.அக.);;{}

   7. நஞ்சு (யாழ்.அக.);; poison.

     [ம் + அ.]

மஃகான்

மஃகான் maḵkāṉ, பெ.(n.)

   மகரவொற்று; the letter ‘m’.

     “மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்” (தொல்.எழுத்து.28);.

     [ம + கான்.]

மக

மக2 maga, பெ.(n.)

மகமை3 பார்க்க; see magamai.

மகக்குழை

மகக்குழை magagguḻai, பெ.(n.)

   மாவிலை (தைலவ. தைல. அனுபந்த.61);; mango leaf.

     [மக = இளமை. இளமையில் அழகாயிருப்பது எவ்வுயிர்க்கும் பொதுவியல்பு. இருப்பினும் மாந்தளிர் எல்லாவற்றுள்ளும் அழகாயிருந்தமையினால் மாந்தளிர் மேனி என்பன போன்ற வழக்குகள் எழுந்தன. அதன்வழி மக + குழை என்றாகியிருக்கலாம். குழை = தழை.]

மகச்சோறு

 மகச்சோறு magaccōṟu, பெ.(n.)

   முப்பத் திரண்டறங்களுள் குழந்தைகட்குச் சோறளிக்கும் அறம்; food for infants, one of thirty two good deeds.

     [மக = இளமை, குழத்தை, மக + சோறு.]

மகடி

மகடி1 magaḍi, பெ.(n.)

மகிடி பார்க்க (வின்.);;see magidi.

 மகடி 2 magaḍi, பெ.(n.)

   மேற்கட்டுள்ள வீடு; terraced house, storied building (C.G.);.

     [மாடி -→மகடி. ஒ.நோ. தட்டு – தகடு, தூள் – துகள், பால் -→பகல்.]

மகடு

மகடு1 magaḍu,    1. பெண்; female.

   2. மனனவி; wife, spouse.

     [முல் (இளமைக் கருத்து வேர்); -→முள் -→முளை. முளையான் = சிறு குழந்தை, முள் -→மள். மள்ளன் = இளைஞன், மறவன். மள் -→மள -→மழ. மழ = இளமை, இளமைக்குரிய பெண்மை, மழ -→மக = இளமை, பிள்ளை, மகன் அல்லது மகள். மக -→மகள் = பெண், புதல்வி. மகள் -→மகடு (வே.க.4:7);.]

 மகடு2 magaḍu, மகிடி பார்க்க (அரு.நி.); see magidi.

மகடூஉ

மகடூஉ magaṭūu, பெ.(n.)

   1. பெண்; female, woman.

     “மகடூஉ வறிசொல்” (தொல்.சொல்.2.);.

   2. மனனவி; wife, spouse.

     “இற்பொலி மகடூஉ போல” (புறநா.33);.’

ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்” (தொல்.எழுத்து.271);.

     [மகடு -→மகடூஉ.]

தொல் பழங்காலங்களில் சொல்லி னிமைக்காக மெய்யீற்றுச் சொற்களோடு உகரஞ் சேர்ப்பது பேச்சு வழக்கில் இயல்பாயிருந்தது, இடவழக்காயினும் பெருக வழங்கிய இடவழக்குகள் ஆதலின் இதனை ஒப்ப முடிந்த உலக வழக்காகத் தொல்காப்பியரும் ஏற்றார். உயிரீற்றில் முடியும் வினைமுற்றுகளும் வினையெச்சங்களும் ஒப்புமையாக்கம் கருதி பெயரீற்றிலும் ஆட்சி பெறலாயின. வினையெச்ச வாய்பாடுகளில் செய்யூ என்னும் வாய்பாடு தொல்காப்பியத்தில் குறிக்கப் பெறுகிறது. இதனையொத்து அவன்கண்டு, அவன் கண்டான் என்னும் வினைமுற்றைக் கண்டூஉ எனவும் மகள் என்னும் பெயர்ச்சொல்லை மகள் ->மகடு ->மகடூஉ என்றும் அளபெடையில் நீட்டி ஒலிப்பது இனிமை கருதிய இடவழக்காம். கிரேக்க மொழியில் மொழியிடையிலும் இத்தகு உயிர்நீட்டங்கள் உளவென்பர். தமிழில் உயிர் அளபெடையாட்சி மிக்கிருந்ததற்கு ஆடூஉ, மகடூஉ போன்ற சொல்லாட்சிகள் தக்க சான்றுகளாகின்றன. வினைமுற்று உயிரீற்று அளபெடையாக தொன்முது காலத்தில் இருந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக, கல்லாத தெலுங்கு மக்களிள் பேச்சு வழக்கில் உகர ஈற்று ஏவல் வினைகள்

அளபெடையாக ஒரொருகால் நீண்டொலிப்பதை இன்றும் கேட்க முடிகிறது.

மகடூஉக்குணம்

மகடூஉக்குணம் magaṭūugguṇam, பெ.(n.)

   பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்னும் நாற்குணம் (இறை.2, உரை. பக்,29);; feminine qualities, numbering four, viz. accam, {}.

     [மகள் -→மகடு -→மகடுஉகுள் -→குணம் (வளைவு, அடங்கிய தன்மை, பணிவு, ஒத்துவரும் இயல்பு, நலம், மேன்மை, மேம்பட்டு விளங்கும் திறம், அறிவு);. மகடூஉ + குணம்.]

மகடூஉமுன்னிலை

மகடூஉமுன்னிலை magaṭūumuṉṉilai, பெ.(n.)

   பெண்ணை முன்னிலைப்படுத்திக் கூறுகை (காரிகை.பாயி. 1, உரை.);; vocative,addressing a woman.

     [மகள் -→மகடு -→மகடூஉ + முன்னிலை.]

மகட்கருமம்

மகட்கருமம் magaṭgarumam, பெ.(n.)

   பெண்ணை மணந்து கொள்ளுகை; taking a girl in marriage, as a duty.

     “நின் மகற் கொரு மகட்கரும முன்னி” (சூளா.தூது.15);.

     [மகள் + கருமம்.]

மகட்கொடை

மகட்கொடை magaḍgoḍai, பெ.(n.)

   தன் மகளை மணஞ்செய்து கொடுக்கை; gift of a daughter in marriage.

     “நன்மகற் கல்லது மகட் கொடை நேரார்” (பெருங்.உஞ்சைக்.36,93);.

     [மகள் + கொடை.]

மகட்கோடல்

மகட்கோடல் magaṭāṭal, பெ.(n.)

   பெண்னண மணம் புரிகை (இலக்.வி.485, உரை.);; marriage, as the acceptance of a girl.

     [மகள் + கோடல்.]

மகட்பாற்காஞ்சி

மகட்பாற்காஞ்சி magaṭpāṟgāñji, பெ.(n.)

   முதுகுடித்தலைவனிடம் நின் மகளைத் தருக வென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை (தொல்.பொருள்.79, உரை.);; theme describing the refusal of a person belonging to an ancient clan to give his daughter in marriage to a king who asks for her hand.

     [மகள் + பால் + காஞ்சி.]

அகத்திணை ஏழனுள் பெருந்தினணக்குப் புறனாகியது காஞ்சித்திணை. அஃது ஒன்றற் கொன்று உரிமையாதல், யாக்கை, இளமை முதலிய பல நெறியானும் நிலையாத வுலக இயற்கைக்குப் பொருந்திய நெறியினை யுடையது (இலக்.வி.614. உரை.);

எண்வகை மணத்தினும் நான்கு மணம் பெற்ற பெருந்திணை போல இக்காஞ்சியும் அறமுதலாய மும்முதற் பொருளும் அவற்றது

நிலையின்மையுமாகிய ஆறனுள்ளும், நிலையின்னம மூன்றற்குமுரித்தா யெல்லாத் திணைகட்குமொத்த மரபிற் றாகலானும் ‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறு’ மென்ற நான்குஞ் சான்றோரிகழ்ந்தாற் போல அறமுதலியவற்றது நிலையின்மை யுணர்ந்து அவற்றை அவரிகழ்தலானும் ஏறிய மடற்றிற முதலிய நான்கும் பொருந்தாக் காமமாயினவாறு போல உலகியல் நோக்கி நிலையாமை நாற் பொருளன்றாகலானும் உரிப் பொருளிடம் மயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணை போல அறம்பொருனின்பம் பற்றி யன்றி வேறு நிலையாமை யென்றோர் பொருளின்றாதல் ஒப்புமையானும் காஞ்சித் திணை பெருந்திணைக்குப் புறத்திணை யெனப்பட்டது (த.சொ.அக.);

மகட்பேசு-தல்

மகட்பேசு-தல் magaṭpēcudal,    5,செ.குன்றாவி.(v.t.)

   திருமணத்துக்குப் பெண்ணை உறுதிப் படுத்தல்; settle as a bride;to betroth a bride.

     “வந்திருந்தென்னை மகட்பேசி” (திவ்.நாய்ச். 6,3);.

     [மகள் + பேசு -,]

மகண்மறுத்தல்

மகண்மறுத்தல் magaṇmaṟuttal, பெ.(n.)

மகண்மறுத்துமொழிதல் பார்க்க (புறநா. 109, துறைக்குறிப்பு.);;see {}.

     [மகள் + மறுத்தல்.]

மகண்மறுத்துமொழிதல்

மகண்மறுத்துமொழிதல் magaṇmaṟuddumoḻidal, பெ.(n.)

   பகைவீரன் தம் மகளை மணங்கோடற்கு விரும்பிக் கேட்கச் சிற்றரசர் மறுத்தலைக் கூறும் புறத்துறை (பு .வெ.5,9);; theme describing the refusal of a chieftain to give his daughter in marriage to a hostile warrior when demanded.

     [மகள் + மறுத்து + மொழிதல்.]

மகண்மா

மகண்மா magaṇmā, பெ.(n.)

   1.பெண் வடிவங் கொண்ட ஒரு விலங்கு; a fabulous animal having the form of a woman.

     “மைந்தரைப் பார்ப்பன மாமகண்மாக் குழாம்” (சீவக. 1902);.

   2. அலி (நன்.264.விருத்.);; hermaphrodite.

     [மகள் + மா.]

மகண்மை

மகண்மை1 magaṇmai, பெ.(n.)

   1. பெண்டன்மை; womanhood

   2. மகளாகுந் தன்மை; daughter hood.

     “தமரலாரும் மகண்மை கொள்ளக் கருதுங் குறியினாள்” (வெங்கையு.154);.

     [மகள் + மை – மகண்மை]

 மகண்மை2 magaṇmai, பெ.(n.)

மகமை பார்க்க; see magamai.

     “அந்தராய மகண்மை கொளாதே மாகவும்” (தெ.க.தொ.3,175,28);.

மகதந்திரம்

மகதந்திரம் magadandiram, பெ.(n.)

   ஒரு சிற்ப நூல் (இருசமய. சிற்பசாத்.3);; a treatise an architecture.

மகதம்

மகதம் magadam, பெ.(n.) மகிழம் பார்க்க; see magilam (சா.அக.).

 மகதம் magadam, பெ.(n.)

   1. தேசம் ஐம்பத் தாறனுள் இராசகிருகத்தைத் தலைநகராகக் கொண்ட ஒரு தேசம்; country of South Bihar with Rajagraha as its capital, one of 56 {}.

   2. நடுநாட்டில் திருக் கோவலூரைச் சார்ந்த ஒரு பகுதி; country about Tiru-k-{} in South Arcot Dt.

   3. பதினெண்மொழியுள் ஒன்று (நன்.272, உரை);; the language of Magadha, one of {}.

     [Skt. magadha → த. மகதம்.]

மகதியாழ்

 மகதியாழ் magadiyāḻ, பெ. (n.)

புத்தர் காலத்து யாழ் வகையினுள் ஒன்று,

 a harp.

     [மகதம்+யாழ்]

மகதுருமம்

 மகதுருமம் magadurumam, பெ.(n.)

   அரசமரம்; peepul tree ficus religiose (சா.அக.);.

மகதேசன்

மகதேசன் magatēcaṉ, பெ.(n.)

   1.மகத நாட்டரசன்; king of Magadai.

   2. நடு நாட்டைச் சேர்ந்த மகதநாட்டுச் சிற்றரசன்; king of a part of the country in nadu-nadu.

     “மகத தேசனாறைநகர் காவலன்” (பெருந்தொ.1192);.

     [மகதை + தேசன்.]

 மகதேசன் magatēcaṉ, பெ.(n.)

   1. மகத தேசத்தரசன் (பாரத.இரா.17);; king of Magadha.

   2. நடுநாட்டைச் சார்ந்த மகத நாட்டுச் சிற்றரசன்; king of a part of the country in {}.

     “மகதேச னாறைநகர் காவலன்” (பெருந்தொ.1192);.

     [Skt. {} → த. மகதேசன்.]

மகதேசன்பெருவழி

மகதேசன்பெருவழி magatēcaṉperuvaḻi, பெ.(n.)

   சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகழூரிலிருந்து காஞ்சிபுரம் செல்வதற்காக வாணர்களால் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை; a high way leading to Kanchipuram from Aragalur, Attur Taluk, Salem District formed by the Bana rulers.

     [மகதை + ஈசன் + பெருவழி.]

மகதை மண்டலத்தை ஆண்ட வாணர்கள் மகதைப் பெருமாள், மகதேசன் என்றவாறு அழைக்கப்பட்டனர். “ஸ்வஸ்தி ஸ்ரீ மகதேசன் பெருவழி” என்ற எழுத்துகளும் கீழே குழிகளும் செதுக்கிய கல் ஒன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழுரில் கண்டுபிடிக்கப்பட்டு, சேலம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. அதன் கற்காரை (சிமிட்டி); வார்ப்பு சேலம் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் உள்ள வரலாற்றகத்தில் உள்ளது. ஒரு குழி ஒரு காதத்தைக் குறிக்கும். ஒரு காதம் 4 கல் (மைல்);. 1 படைசால் (பர்லாங்கு); 220 அடி நீளத்திற்குச் சமம். ஒரு வரிக்கு 5குழி வீதம் 4 வரிசையும் ஐந்தாவது வரிசையில் 6 குழியும் உள்ளன ஐந்தாவது வரியில் கல் உடைந்துவிட்டது. 26 காதம் என்பது 105 கல்லும் 440 அடியும் ஆகும். (தோராயமாக 169 கிலோமீட்டர்);.

மகதை

மகதை1 magadai, பெ.(n.)

திப்பிலி பார்க்க; see tippili.

 மகதை1 magadai, பெ.(n.)

   திப்பிலி (சங்.அக.);; long pepper.

     [Skt. {} → த. மகதை.]

 மகதை2 magadai, பெ.(n.)

மகதம், 2 பார்க்க;see magadai.

மகதைசுவரியம்

 மகதைசுவரியம் magadaisuvariyam, பெ.(n.)

   பெருஞ்செல்வம்; great opulence.

     [Skt. mahat+{} → த. மகதைசுவரியம்.]

மகதைப்பெருமாள்

 மகதைப்பெருமாள் magadaipperumāḷ, பெ.(n.)

   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள ஆறகழூரைத் தலைநகராகக்கொண்ட மகதை மண்டலத்தை ஆண்ட வாணர்களின் பொதுப் பெயர்; a general name of the Banas, who ruled Magadhai mandalam with Aragalur as capital near Attur of salem District.

     [மகதை + பெருமாள்.]

மகதைமண்டலம்

 மகதைமண்டலம் magadaimaṇṭalam, பெ.(n.)

   சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஆறகழூரைத் தலைமையிடமாகக் கொண்ட வாணர்கள் ஆண்ட நாட்டுப் பகுதி; a region ruled by Banas with Aragalur near Attur in Salem District, as capital.

     [மகதம் + மண்டலம். ஒருகா. மகோதை -→மகதை.]

மகத்து

மகத்து magattu, பெ.(n.)

   1. பெரியது; that which is great, large or huge.

     “மகத்தாகி நின்றனை நீ” (தாயு. பராபர. 226);.

   2. அதிகம் (வின்.);; greatness, intensity.

   3. பெருமையானது; that which is magnificent, exalted, majestic.

     “மகத்தான பன்னிரு வெய்யவர்” (குலோத். கோ.18);.

   4. பேராதன்(யாழ்.அக.);; great person, in a religious or moral sense;saint.

   5. நாடு (இலக்.அக.);; country.

   6. நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று; an Upanisad, one of 108.

     [Skt. mahat → த. மகத்து.]

மகத்துவம்

மகத்துவம் magattuvam, பெ.(n.)

   பெருமை; greatness, magnificence, majesty, excellence.

     “மகத்துவமாப் பிரமாண்டமாகச் செய்யும்” (தாயு.தந்தைதாய்.6);.

     [Skt. mahat-tva → த. மகத்துவம்.]

மகந்தரம்

மகந்தரம் magandaram, பெ.(n.)

   1. கள்; toddy.

   2. பதநீர்; sweet toddy.

மகந்து

 மகந்து magandu, பெ.(n.)

   துறவிகளின் மடத்திற்குத் தலைவனாயிருக்குந் துறவி; head of a religious establishment, superior of a monastery, who is succeeded on his death by the chief of his disciples (R.F.);.

மகனம்

 மகனம் magaṉam, பெ. (n.)

   இசை உருக்களில் ஒன்று; a musical note.

     [மகுன்-மகணம்]

மகனாலிமூலி

 மகனாலிமூலி magaṉālimūli, பெ. (n.)

சிறுமுன்னைவேர் பார்க்க; see {} (சா.அக.);.

மகன்

மகன் magaṉ, பெ. (n.)

   1. ஆண்மகவு; son.

     “தன் மகன்றா யுயர்வும்” (தொல்.பொருள்.172);.

   2. குழந்தை (வின்.);; child.

   3. ஆண் பிள்ளை; man, male person.

     “செய்ந் நன்றி கொன்ற மகற்கு”(குறள்,110);.

   4. சிறந்தோன்; exalted or esteemed or noble person.

     “நூல்கற்ற மகன்றுணையா நல்லகொளல்” (நாலடி,136);.

   5. வீரன்; warrior.

     ‘வேந்தன் மனம்போல வந்தமகன்’ (பு.வெ.2, 5);.

   6. கணவன்; husband.

     “நினக்கிவன் மகனாகத் தோன்றியதூஉம்” (மணிமே.21:29);.

     [முல்(இளமைக் கருத்து வேர்); -→முள் -→முளை. முளையான் = இளையோன், குழவி. முள் -→மள், மள்ளன் = இளையோன், வீரன். மள் -→மழ = இளமை, இளமைக்குரிய மென்மை. மழ -→மக = இளமை, பிள்ளை. மக -→மகன் (வே.க.4:6);.]

மகன்மை

மகன்மை1 magaṉmai, பெ.(n.)

   1. மகன்றன்மை; sonship.

     ‘மகன்மை கொண்டார்’ (பெரியபு.தடுத்தாட்.5);.

   2. ஆண்டன்மை (யாழ்.அக.);; manliness.

     [மகன் -→மகன்மை.]

 மகன்மை2 magaṉmai, பெ.(n.)

   பழைய வரிவகை; an ancient tax.

     “வலங்கை யிடங்கை மகன்மையும்” (தெ.க.தொ.3,115);.

     [மகமை -→மகன்மை.]

மகன்றில்

மகன்றில் magaṉṟil, பெ. (n.)

   ஆண் பெண்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத நீர்வாழ் பறவை வகையில் ஆண் பறவை; a male species of aquatic love bird.

     “குறுங்காண் மகன்றிலன்ன வுடன்புணர் கொள்கை” (ஐங்குறு.381);.

     [மகன்றில் = ஆண் அன்றில்.]

     [P]

மகப்பால்

 மகப்பால் magappāl, பெ.(n.)

மகப்பால் வார்த்தல் பரர்க்க (திவா.);; see {}

     [மக + பால்.]

மகப்பால்வார்த்தல்

மகப்பால்வார்த்தல் magappālvārttal, பெ.(n.)

   முப்பத்திரண்டறங்களுள் ஏதிலிப் பிள்ளைக்குப் பால் வார்த்தலாகிய அறம்; giving milk to infants, an act of charity, one of thirty two good deeds.

முப்பத்திரண்டறங்களாவன:

   1.ஆதுலர் சாலை,

   2. ஒதுவார்க்குணவு,

   3. அறு சமயத்தோர்க்குணவு,

   4. ஆவுக்கு வாயுறை,

   5. சிறைச்சோறு,

   6. ஐயம்,

   7. தின்பண்டம் நல்கல்,

   8. மகச்சோறு,

   9. மகப்பெறுவித்தல்,

   10. மக வளர்த்தல்,

   11. மகப்பால்,

   12. அறவைப்பிணஞ் சுடுதல்,

   13. அழிந்தோரை நிறுத்தல்,

   14. வண்ணார்,

   15. நாவிதர்.

   16. வதுவை,

   17.பூணூல்,

   18. நோய் மருந்து,

   19. கண்ணாடி,

   20. நாளோலை,

   21. கண் மருந்து.

   22. தலைக்கெண்ணெய்,

   23. பெண் நுகர்ச்சி.

   24. அட்டூண்,

   25. பிறரறங்காத்தல்,

   26. தண்ணீப் பந்தர்,

   27. மடம்,

   28. தடம்,

   29. கா,

   30. ஆவுறிஞ்சுதறி,

   31. ஏறுவிடுத்தல்,

   32. விலையுயிர் கொடுத்துக் கொலையுயிர் மீட்டல்.

     [மகப்பால் + வார்த்தல்.]

மகப்பெறுவித்தல்

 மகப்பெறுவித்தல் magappeṟuvittal, பெ.(n.)

   முப்பத்திரண்டறங்களுள் மகவைப் பெறுவித்தல் ஆகிய அறம்; rendering assistance in child-birth, an act of charity, one of thirty two deeds.

     [மக + பெறுவித்தல்.]

மகப்பேறு

மகப்பேறு magappēṟu, பெ.(n.)

   பிள்ளைப் பேறு; giving birth to a child.

     “மன்னன் மகப்பேற்றின் மனங்களித்து” (பிரமோத்.8,122);.

     [மகவு + பேறு.]

மகமாயி

மகமாயி magamāyi, பெ.(n.)

   1. மலைமகள்;{}.

     “பூதநாயக டத்துக் காமி மகமாயி” (திருப்பு.641);.

   2. பெரியம்மைக்குரிய தேவனத; the Goddess of small-pox (Loc);.

மகமுறை

மகமுறை magamuṟai, பெ.(n.)

   1. விருந்து (அக.நி.);; feast.

   2. வேள்வி செய்யும் முறைமை (யாழ்.அக.);; method of performing sacrifices.

மகமேரு

 மகமேரு magamēru, பெ.(n.)

மகாமேரு பார்க்க;see {}.

மகமை

மகமை1 magamai, பெ.(n.)

   பொதுச் செயல்களுக்காக விரும்பிச் செலுத்தப்படும் ஓரு சிறு தன்னார்வ வரி; a voluntary tax or cess for common cause.

     “திருமாலை திருவிளக்குவாகிய கயிங்கரியங்களுக்காக மகமை திட்டம் செய்து தானம்” (ஆவணம்-1, கல்-இரண்டாம் பகுதி.1);.

 மகமை2 magamai, பெ.(n.)

   குத்தகை (கொ.நா. ஆவ.74, பக்.309);; tenure, lease.

 மகமை3 magamai, பெ.(n.)

   1. கோயில் அறச்சாலை முதலியவற்றின் செலவுக்காக தண்டப்படும் வரி; contribution in grain for a temple or attram, levied from cultivators now given optionally, tax or contribution levied for a religious or charitable purpose bearing a certain definite preparation (R.F.);.

     “மானிய நிலம்பதி மகமையென்பதும்” (செவ்வந்திபு. உறையூர். 31);.

   2. வணிகர்கள் தங்கள் ஊதியத்தில் இருந்து அறத்திற்குக் கொடுக்கும் தொகை; donation for charity consisting of a fixed percentage on the profits of commercial transactions.

   3. நிலவரி வகை; an ancient land tax (S.I.I. vi,187);(I.M.P.Cg.519);.

மகம்

மகம்  magam,    ஈகம்; sacrifice.

     “மகந்தான் செய்து வழி வந்தார்” (திருவாச. 21,3);.

மகம்பூ

 மகம்பூ magambū, பெ.(n.)

   பெருஞ்சீரகம் (சங்.அக.);; common arise.

     [P]

மகம்மது

 மகம்மது magammadu, பெ. (n.)

   புகழாளி; a respectable epithet in Islam.

     [Аг. muhammad → த. மகம்மது.]

மகரகந்தம்

 மகரகந்தம் magaragandam, பெ.(n.)

   வெங்காயம் (சங்.அக.);; onion.

மகரகாலம்

 மகரகாலம் magaragālam, பெ.(n.)

   மா; mango.

மகரக்குறுக்கம்

மகரக்குறுக்கம் magaragguṟuggam, பெ.(n.)

   தன் மாத்திரையின் அளவில் குறைந்த மகரமெய்; SHORTHAND (ம்); as in போன்ம்,one of ten {} q.v. (Gram.); (நன்.96);.

ம + கரம் – மகரம். மகரம் + குறுக்சும். கரம் – எழுத்துச் சாரியை, கரம், காரம், கான் என்னும் மூன்றும் பழந்தமிழ் எழுத்துச் சாரியைகள்.

இவற்றுள் கரம், கான் இரண்டும் நெட்டெழுத்திற்கு வாரா. ஆயினும் கரம், காரம், கான் இம்மூன்றும் குற்றெழுத்துச் சாரியைகளாய் வரும் (தொல்.எழுத்து.137,உரை.);.கரம் குற்றெழுத்திற்கும் காரம் நெட்டெழுத்திற்கும் சொல்லும் வழக்கு அச்சாரியைகளில் அமைந்துள்ள குறில் நெடில் வடிவங்களால் ஏற்பட்டதென்க. உயிரெழுத்தின் உதவியின்றித் தாமாக வொலிக்காத மெய் எழுத்துக்களை ஒலிப்பித்தல் பொருட்டும், தாமாக ஒலிக்கும் உயிரெழுத்துகளையும் எளிதாக ஒலிப்பித்தற் பொருட்டும், சில துணையொலிகளைப் பண்டைத் தமிழிலக்கண நூலார் அமைத்துள்ளனர். அனவ எழுத்துச் சாரியை எனப்படும். வடமொழியாளர் கரம், காரம் என்னும் இரண்டையே தமிழினின்று கொண்டுள்ளனர். அதோடு குறிற்கு இரண்டையும் வேறுபாடின்றி ஆள்வர். இதனாற் சாரியையமைப்பின் தமிழ்மூலம் தெளிவாகத் தெரிகிறது. கார காரம் என்பன வடமொழியில் கர, கரா என்று ஈறுகெட்டு நிற்கும்.சாரியை என்னும் குறியீடும் வடமொழியிலில்லை (வ.வ.299);.

மகரசகா

 மகரசகா magarasagā, பெ.(n.)

   மருதோன்றி வகை (சங்.அக.);; a kind of henna with ever-fresh flowers (சா.அக.);.

மகரசாலம்

 மகரசாலம் magaracālam, பெ.(n.)

மகர காலம் பார்க்க (சங்.அக.);; see {} (சா.அக.);.

மகரசால்

 மகரசால் magaracāl, பெ.(n)

   மாமரம்(சா.அக.);; mango tree(சா.அக.);.

மகரசிதம்

 மகரசிதம் magarasidam, பெ.(n.)

   கொன்றை மரம்; a tree {}(சா.அக);.

மகரசியா

 மகரசியா magarasiyā, பெ.(n.)

   செழுமலர்க் கொன்றை; large flower cassia – Cassia florida (சா.அக.);.

மகரதம் magaradam, பெ. (n.);

   கொடிவேலி என்னுஞ் செடி; a plant, plumbago zetanka(சா.அக.);.

மகரதோரணம்

மகரதோரணம் magaratōraṇam, பெ.(n.)

   சுறவ (மகர); வடிவமைந்த ஒப்பனைத் தொங்கல்; ornamental hangings representing makara fishes.

     “மதிதொட நிவந்தன மகரதோரணம்” (கம்பரா.மந்தரை.31);.

     [Skt. makara-{} → த. மகரதோரணம்.]

மகரத்துவசம்

 மகரத்துவசம் magarattuvasam, பெ.(n.)

   ஒரு மருந்து; a kind of medicine (சா.அக.);.

மகரந்தம்

மகரந்தம் magarandam, பெ.(n.)

   1. மலர்த் துகள் (திவா.);; filament of the lotus; pollen and anther of flowers.

   2. பூந்தேன் (பிங்.);; nectar or honey of flowers.

   3. கள் (பிங்.);; toddy.

   4. வண்டு; honey-bee.

   5. குயில் (மூ.அ.);; Indian cuckoo.

     [Skt. makaranda → த. மகரந்தம்.]

மகரமுகம்

 மகரமுகம் magaramugam, பெ. (n.)

   நாட்டியத்தில் பின்பற்றப்படும் ஒரு வகையான முத்திரை நிலை; an handpose in dance.

     [மகரம்+முகம்]

மகரம்

 மகரம் magaram, பெ. (n.)

   ஒரு வகையான இரட்டைக்கை முத்திரை; an hand pose.

     [மகரம் (மீன்);-மகரம்]

மகரராசி

 மகரராசி magararāci, பெ.(n.)

   சுறவம், பத்தாம் ஒரை; capricorn of the zodiac.

     [Skt. makara+raci → த. மகரராசி.]

மகரரேகை

 மகரரேகை magararēgai, பெ.(n.)

   செல்வந்த னென்பதைக் காட்டுங் குறியாக உள்ளங் கையில் அமையும் கைவரி வகை (இரேகை வகை); (சங்.அக.);; line on the palm of hand, believed to indicate wealth.

த.வ. மீனக்கைவரி

     [Skt. makara → த. மகரரேகை.]

மகரவலயம்

மகரவலயம் magaravalayam, பெ.(n.)

மகரப்பகுவாய் பார்க்க;see magara-p- {}.

     “மகரவலய மணிதிகழ் நுதலியர்” (பரிபா. 10, 77);.

     [Skt. makara → த. மகரம்+வலயம்.]

மகரவாகனன்

 மகரவாகனன் magaravāgaṉaṉ, பெ.(n.)

வருணன் (சங்.அக.);;{}

     [Skt. makara+{} → த. மகரவாகனன்.]

மகரவியூகம்

மகரவியூகம் magaraviyūgam, பெ.(n.)

   மகரமீனின் வடிவான படைவகுப்பு; array of army in the shape of a magaram.

     “வருபடை தன்னை நிறுத்தி விதம்பட மகரவியூகம் வகுத்து” (பாரத. பதின் மூன்றாம்.7);.

     [Skt. magara+{} → த. மகரவியூகம்.]

மகரவிரி

 மகரவிரி magaraviri, பெ.(n.)

மகரவிருத்தி பார்க்க; see magara-virutti (சா.அக.);.

மகரவிருத்தி

 மகரவிருத்தி magaravirutti, பெ.(n.)

   சேம்பு; a kind of Indian kales-Tuber-colocasia (சா.அக.);.

மகரவீணை

மகரவீணை magaravīṇai, பெ.(n.)

மகரயாழ் பார்க்க;see magara-{}.

     “தீந்தொடை மகரவீணைத் தெள்விளி” (சீவக.608);.

த.வ. சுறவ யாழ்

     [Skt. makara → த. மகரம் + வீணை.]

மகரவேதிகம்

 மகரவேதிகம் magaravētigam, பெ.(n.)

   வாலுளுவை மரம்; intellect tree (சா.அக.);.

மகராகரம்

 மகராகரம் magarāgaram, பெ.(n.)

   கடல் (யாழ்.அக.);; sea.

     [Skt. {}-kara → த. மகராகரம்.]

மகராங்கன்

 மகராங்கன் magarāṅgaṉ, பெ.(n.)

மகரக் கொடியோன் பார்க்க (சங்.அக.);;see {}.

     [Skt. {} → த. மகராங்கன்.]

மகராங்கம்

 மகராங்கம் magarāṅgam, பெ.(n.)

   கடல் (யாழ்.அக.);; sea.

     [Skt. {} → த. மகராங்கம்.]

மகராசன்

 மகராசன் magarācaṉ, பெ.(n.)

மகாராசன் பார்க்க;see {}.

     “வருராம தேவ மகராசன்” (நம்பியுலா.);.

     [Skt. {} → த. மகராசன்.]

மகராசா

 மகராசா magarācā, பெ.(n.)

மகாராசன் பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகராசா.]

மகராசி

மகராசி magarāci, பெ.(n.)

   1. இராணி; queen.

   2. பெருஞ்சொத்துள்ளவள்; wealthy blessed woman.

     “மகராசியாக விருப்பாயே” (திருவாரூ.குற.);.

     [Skt. maha-{} → த. மகராசி.]

மகராசுவன்

 மகராசுவன் magarācuvaṉ, பெ.(n.)

மகரவாகனன் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகராசுவன்.]

மகராட்டிரம்

 மகராட்டிரம் magarāṭṭiram, பெ.(n.)

மகாராட்டிரம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

மகராயனம்

 மகராயனம் magarāyaṉam, பெ.(n.)

   கதிரவன் வடக்கு நோக்கித் திரும்புங்காலம் (பஞ்.);; winter solstice.

     [Skt. {} → த. மகராயனம்.]

மகராலயம்

மகராலயம் magarālayam, பெ.(n.)

   கடல் (திவா.);; sea, as the abode of fish.

     “வானுமின்றி மகராலயமு மின்றி” (தக்கயாகப்.408);.

     [Skt. maka-{} → த. மகராலயம்.]

மகரி

 மகரி magari, பெ. (n.)

   சிற்பத்தின் காதணிகளில் ஒன்று; a ear ornament in sculpture,

     [மகரம்-மகரி]

 மகரி magari, பெ.(n.)

   கடல் (சங்.அக.);; sea.

     [Skt. makarin → த. மகரி.]

மகரிகை

மகரிகை magarigai, பெ.(n.)

   1. அணி முதலிய வற்றிலமைந்த சுறாமீன் வடிவு; the figure of shark, as in ornaments.

     “மகரிகை வயிர குண்டலமலம்புந்… தோள்புடை வயங்க” (கம்பரா.நித்னை.17);.

   2. மகரம்1, 4 பார்க்க;see magaram.

     “மாதின் மகரிகை வயங்கு பொற்பூண் சூழுறு கவானே” (கந்தபு. மாயை.56);.

   3. தோரணம் (சது.);; ornamental hangings.

   4. மகரவடிவாய்ச் செய்த பெட்டி; a shark-shaped box.

     “மகரிகை நிறைய” (பெருங்.மகத.17,161);.

     [Skt. makarika → த. மகரிகை.]

மகரிசி

 மகரிசி magarisi, பெ.(n.)

   தவமுனிவர்; great sage.

     [Skt. maharsi → த. மகரிசி.]

மகரிப்பு

 மகரிப்பு magarippu, பெ.(n.)

   கையாந்தகரை எனுஞ்செடி; a plant (சா.அக.);.

மகருதம்

 மகருதம் magarudam, பெ.(n.)

   கொடிவேலி எனும் நிலைத் திணை(மலை.);; Ceylon leadwort.

மகரூர்

 மகரூர் magarūr, பெ. (n.)

   கள்ளக்குறிச்சி வட்திலுள்ள சிற்றூர்; a village in Kallakkurichi Taluk.

     [மகர்+ஊர்]

 மகரூர் magarūr, பெ.(n.)

   உறுதியாக்கப் பட்டது (P.T.L.);; that which is fixed or established.

     [Ar. muqarrar → த. மகரூர்.]

மகரை

 மகரை magarai, பெ.(n.)

கடல்மீன் வகை; a sea-fish (இ.வ.);.

மகர்நோன்பு

 மகர்நோன்பு magarnōṉpu, பெ. (n.)

ஒன்பான் இரவின் (நவராத்திரி);பண்டிகையின் போது குழந்தைகள் பல புனைவுகள் புனைந்து

 Blood;a children’s dance.

     [மகார்-மகர்+நோன்பு]

மகர்நோன்பு சாவடி

 மகர்நோன்பு சாவடி magarnōṉpucāvaḍi, பெ. (n.)

குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள்

   நடத்துவதற்காக, தஞ்சையிலுள்ள சாவடி; a theatre for children’s dance of Tanjavur.

     [மகார்→ மகர்+நோன்பு+சாவடி]

மகற்பலம்

மகற்பலம் magaṟpalam, பெ. (n.)

   பெரும்பலன்; great, strong, important result.

     “மகற்பல வாஞ்சையாலே” (சிவதரு. பரம.47);.

 மகற்பலம் magaṟpalam, பெ.(n.)

   பெரும் பலன்; great, important result.

     “மகற்பல வாஞ்சையாலே” (சிவதரு. பாம. 47);.

     [Skt. mahat + phala → த. மகற்பலம்.]

மகலிங்கம்

 மகலிங்கம் magaliṅgam, பெ.(n.)

   மரவகை; weavers beam, Sehrebera swietenioides (L.);.

மகலோகம்

மகலோகம் magalōgam, பெ.(n.)

   மேலேழுலகத் தொன்று (திவா.);; an upper world, fourth of {}-ulagam.

     “கோவுலோக மகலோக மடையக் குமுறவே” (தக்கயாகப். 704);.

     [Skt. {} → த. மகலோகம்.]

மகளிக்கீரை

 மகளிக்கீரை magaḷigārai, பெ. (n.)

   கீரை வகை (யாழ்.அக.);; cockscomb greens, quail grass – Celosia argentea.

மகளிரான்மலர்மரம்

 மகளிரான்மலர்மரம் magaḷirāṉmalarmaram, பெ. (n.)

உயர்பிரிவு (உத்தமசாதி);ப் பெண்களின் தொடுகை முதலிய செய்கைகளால் மலர்வனவாகக் கருதப்படும் மகிழ், ஏழிலைம்பாலை, பாதிரி, முல்லை, புன்னை, குரா, அசோகு, குருக்கத்தி, மரா, சண்பகம் என்ற பத்துவகை மரங்கள்

 trees and plants believed to blossom by the very touch, look, etc, of woman of the highest class, numbering ten, viz. {}.

     [மகளிரால் மலரும் மரம் -→மகளிரான் மலரும் மரம் -→மகளிரான் மலர் மரம்.]

மகளிர்

மகளிர் magaḷir, பெ. (n.)

   பெண்கள்; woman.

     “வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தலல்லது” (புறநா.10);.

     “பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்கொடி மகளிரும் மைந்தரும் கூடி நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்” (வெற்றிவேற்கை 55);.

     ‘இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறுபடும்’ (குறள், 822);.

     [மகள் -→மகளிர்.]

மகளிர்பருவம்

மகளிர்பருவம் magaḷirparuvam, பெ. (n.)

   1. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பெண் பருவம் (திவா.);; stages of woman’s life, of which there are seven, viz. {}

   2. வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்ற நால்வகைப் பெண்பருவம்; stages of woman’s life, numbering four, viz. {}.

     [மகளிர் + பருவம்.]

மகளீது

 மகளீது magaḷītu, பெ. (n.)

மகிழம்பூ பார்க்க; see {} (சா.அக.);.

மகளோது

 மகளோது magaḷōtu, பெ. (n.)

நரிப்பாலை பார்க்க; see nari-p-palai (சா.அக.);.

மகள்

மகள் magaḷ, பெ. (n.)

   1. பெண்மகவு; daughter.

     “நல்கூர்ந்தார் செல்வமகள்” (கலித்.56);.

   2. பெண்; woman, female, feminine, damsel.

     “ஆய மகணீயாயின்” (கலித்.107);.

   3. மனைவி; wife.

     “மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம்” மணிமே.21,30);. “பெண்மை அடுத்த மகள் என்கிளவியும்” (தொல்.சொல்.165);.

   4. பெண் தெய்வம்; goddess.

திருமகள் (உ.வ.);

   5. தெய்வத்தாய்; god mother.

நிலமகள் (உ.வ.);.

     [முல் (இளமைக் கருத்து வேர்); -→முள் -→முளை. முளையான் = சிறுவன். முள் -→மள் -→மழ = இளமை,இளமைக்குரிய மென்மை. மழ -→மக -→மகள் (வே.க.4:60);.]

இளமையும் பொதுவாதலின் பால்காட்டும் ஈறே ஆண் குழந்தையையும் பெண் குழந்தையையும் வேறுபடுத்தும். அள் – பெண்பாலீறு).

மகவன்

 மகவன் magavaṉ, பெ.(n.)

மகவான் பார்க்க (யாழ்.அக.);; see{}

மகவளர்த்தல்

 மகவளர்த்தல் magavaḷarttal, பெ.(n.)

மகவு வளர்த்தல் பார்க்க (சூடா.);;see magavu-valarttal.

மகவாட்டி

 மகவாட்டி magavāṭṭi, பெ.(n.)

   மக்கட் செல்வமுடையவள் (யாழ்.அக.);; woman blessed with children.

     [மக -→மகவாட்டி.]

மகவாதநோய்

 மகவாதநோய் magavātanōy, பெ.(n.)

   ஒரு நோய்; complicated rhematic diseases (சா.அக.);.

மகவாதரோகம்

 மகவாதரோகம் magavātarōgam, பெ. (n.)

மகவாதநோய் பார்க்க; see {} (சா.அக.);.

மகவான்

மகவான்1 magavāṉ, பெ.(n.)

   மகப்பேறுடையவன்; one who has children.

     “தன் மசகனூறு மகவானாகச் செய்யும்” (தேவை.16);.

     [மக -→மகவான்.]

 மகவான்2 magavāṉ, பெ.(n.)

   1. இந்திரன்; indiran.

     “மகவான்மக ளிரங்கின னரற்ற” (பாரத.பதின்மூன்.168);.

   2.சிவன்(சங்.அக.);; {}.

 மகவான்3 magavāṉ, பெ. (n.)

   யாகஞ் செய்பவன்; sacrificer.

     “வேதாவை மிக்க மகவானாகக் கூட்டி” (தேவை.15);.

 மகவான்1 magavāṉ, பெ.(n.)

   1. இந்திரன் (திவா.);; Indra.

     “மகவான்மக ளிரங்கின னரற்ற” (பாரத.பதின்மூன்.168);.

   2. சிவன் (சங்.அக.);;{}.

     [Skt. magha-{} → த. மகவான்.]

 மகவான்2 magavāṉ, பெ.(n.)

   வேள்வி செய் பவன்; sacrifice.

     “வேதாவை மிக்க மகவானாகக் கூட்டி” (தேவை.15);.

     [Skt. makha-{} → த. மகவான்2.]

மகவின்கோள்

மகவின்கோள் magaviṉāḷ, பெ.(n.)

   வியாழன் எனும் கோள் (நாமதீப.100);; the planet Jupiter.

     [மகவு -→மகவின் + கோள்.]

மகவு

மகவு magavu, பெ. (n.)

   1.குழந்தை (திவா.);; infant.

     “மகவுமுலைவருட” (கம்பரா.தைல.13);.

   2.மகன்; son

     “கொண்டதோர் மகவி னாசை” (அரிச்.பு.மயான.20);. 3.கோட்டில் வாழ் விலங்கின் பிள்ளை (தொல்.பொருள்.569);;

 young of animals living on trees, as of monkeys.

     [முல், இளமைக் கருத்துவேர். முல் -→முள் -→முளை. முள் -→மள் -→மள -→மழ, இளமை, குழந்தை. மழ -→மக -→மகவு (வே.க.4:60);.]

மகவுவளர்த்தல்

 மகவுவளர்த்தல் magavuvaḷarttal, பெ. (n.)

   முப்பத்திரண்டறங்களுள் குழந்தைகளை வளர்த்தலாகிய அறம் (பிங்.);; fostering children, an act of charity, one of thirty two good deeds (q.v.);.

     [மக -→மகவு + வளர்த்தல்.]

மகப்பால்வார்த்தல் பார்க்க.

மகவேற்பு

 மகவேற்பு magavēṟpu, பெ.(n.)

   ஒருவர் மற்றொ ருவருடைய குழந்தையைக் சட்டப்படி தன்னு டைய குழந்தையாக ஏற்றுக் கொள்ளுதல் (சுவீகாரம்);; adoption of a child,

     [மகவு+ஏற்பு]

மகவேள்வி

மகவேள்வி magavēḷvi, பெ. (n.)

   ஆண் மகப்பேறு விரும்பிச் செய்யும் வேள்வி; sacrifice performed for obtaining male child.

     “மிக்க மகவேள்விசெய் விருப்புடைய னாகி” (திருவிளை. தடாதகை.7);.

     [மக -→மகவு + வேள்வி.]

மகா

மகா makā, பெ.(n.)

   1. பெருமையான; great, high, exalted, dignified, noble, honourable.

     “மகாசபையோம்” (S.l.l.i, 68);.

   2. அளவற்ற; immense, prodigious, stupendous, monstrous, extreme.

   3. உயர்ந்த; superior, paramount.

   4. மிகுந்த; intense.

     [Skt. mahat → த. மகா.]

மகாஅகதம்

 மகாஅகதம் magāagadam, பெ.(n.)

   நஞ்சு முறிக்கும் செய்முறையைக் குறிக்கும் பெயர்; the name of an antitoxic preparation (சா.அக.);.

மகாஅவிழ்தம்

 மகாஅவிழ்தம் makāaviḻtam,    பெ. (n.) சுக்கு; dried ginger (சா.அக.).

 மகாஅவிழ்தம் makāaviḻtam, பெ.(n.)

   சுக்கு; dried ginger (சா.அக.);.

மகாஅவுசத நாசனி

 மகாஅவுசத நாசனி makāavusadanāsaṉi, பெ.(n.)

   பூசணிக்காய்; pumpkin (சா.அக.);.

மகாகச்சம்

மகாகச்சம்1 makākaccam, பெ.(n.)

   கடல் (யாழ்.அக.);; sea.

த.வ. மாக்கடல்

     [Skt. {}-kacha → த. மகாகச்சம்.]

 மகாகச்சம்2 makākaccam, பெ.(n.)

   1. பெருங்கடல்; ocean.

   2. மலை; mountain (சா.அக.);.

மகாகணம்

 மகாகணம் makākaṇam, பெ.(n.)

   குழந்தைகட்கு நாக்கு, உதடு புண்ணாகி, கண் வெளுத்து, உடல் வெதும்பிக் காணும் ஒருவகைக் கணைநோய்; a congenital disease of the children marked by anemia, ulcerated tongue and lips (சா.அக.);.

 மகாகணம் makākaṇam, பெ.(n.)

   குழந்தை கட்கு நாக்கு, உதடு புண்ணாகி, கண் வெளுத்து, உடல் வெதும்பிக் காணும் ஒரு வகைக் கணை நோய்; a congenital disease of the children marked by anemia, ulcerated tongue and lips (சா.அக.);.

த.வ. மாக்கணம்

மகாகணரோகம்

 மகாகணரோகம் makākaṇarōkam, பெ.(n.)

   குழந்தை நோய் வகை (சீவரட்.);; a disease of children.

த.வ. மாக்கண நோய்

     [மகாகணம் + ரோகம்.]

மகாகண்டம்

மகாகண்டம் makākaṇṭam, பெ. (n.)

   பெரிய முள்ளங்கி; large radish – Raphanus sativus (சா.அக.);.

 மகாகண்டம்1 makākaṇṭam, பெ.(n.)

   பாலி மொழியிலுள்ள ஒரு புத்தமத நூல் (மணிமே. பக்.366);; a Buddhistic work in {} language.

த.வ. மாகண்டம்

 மகாகண்டம்2 makākaṇṭam, பெ.(n.)

   பெரிய முள்ளங்கி; large raddish (சா.அக.);.

த.வ. மாகண்டம்

     [p]

மகாகண்ணி

 மகாகண்ணி makākaṇṇi, பெ.(n.)

   இந்திர பாடாணம்; a variety of arsenic (சா.அக.);.

 மகாகண்ணி makākaṇṇi, பெ.(n.)

   இந்திர பாடாணம் என்னும் செய்ந்நஞ்சு; a variety of arsenic (சா.அக.);.

த.வ. மாகண்ணி

மகாகதம்

மகாகதம் makākadam, பெ.(n.)

   1. காய்ச்சல்; fever.

   2. மிகுந்த வெப்பம்; intense heat.

   3. மிகுந்த சினம்; great anger (சா.அக.);.

த.வ. மாகதம்

மகாகதி

 மகாகதி makākadi, பெ.(n.)

   மேற்கதி (யாழ்.அக.);; upward progress.

த.வ. மாக்கதி

     [Skt. {}-gati → த. மகாகதி.]

மகாகந்தம்

மகாகந்தம்1 makākandam, பெ.(n.)

   பூண்டு, உள்ளி (யாழ்.அக.);; garlic.

த.வ. மாக்கந்தம்

     [Skt. {}-kanda → த. மகாகந்தம்.]

 மகாகந்தம்2 makākandam, பெ.(n.)

   1. வெண்காயம் அல்லது உள்ளி; onion or garlic.

   2. அரிசந்தனம்; red sandal (சா.அக.);.

த.வ. மாக்கந்தம்

மகாகபித்தம்

 மகாகபித்தம் makākabittam, பெ.(n.)

   வில்வம் (மூ.அ.);; bael.

     [Skt. {}-kapittha → த. மகாகபித்தம்.]

மகாகபெலம்

 மகாகபெலம் makākabelam, பெ.(n.)

   கொம்மட்டி; a creeping plant-water melon (சா.அக.);.

மகாகர்வம்

 மகாகர்வம் makākarvam, பெ.(n.)

   பத்திலக் கங்கோடி (பிங்.);; ten billions.

     [Skt. {}-kharva → த. மகாகர்வம்.]

மகாகற்பம்

மகாகற்பம் makākaṟpam, பெ. (n.)

   1. சிறந்த கற்பமூலிகை; a superior drug of all healing potency.

   2. சித்தர்கள் பயன்படுத்தும் சிறந்த மருந்து; a superior medicinal preparation used by siddars to secure immortal youth (சா.அக.);.

 மகாகற்பம்1 makākaṟpam, பெ.(n.)

   கற்பம் பல கொண்ட முடிவுகாலம் (வின்.);; a great cycle of time consisting of many a {}.

     [Skt. {}-kalpa → த. மகாகற்பம்1.]

 மகாகற்பம்2 makākaṟpam, பெ.(n.)

   1. சிறந்த கற்பமூலிகை; a superior drug to prolong life; drug of all healing potency.

   2. சித்தர்கள் பயன்படுத்தும் ஒரு சிறந்த மருந்து; a superior medicinal preparation used by siddhars to secure immortal youth (சா.அக.);.

 மகாகற்பம்3 makākaṟpam, பெ.(n.)

மகா கர்வம் பார்க்க (நாமதீப.801);;see {}- karvam.

மகாகல்யாணகம்

 மகாகல்யாணகம் magāgalyāṇagam, பெ.(n.)

   உடலை தூய்மையாக்குவதும் நினைவை வலுப்படுத்துவதுமான ஒருவகை நெய்; a medicinal ghee in ayurveda for insanity an for strengthening memory (சா.அக.);.

மகாகவம்

 மகாகவம் makākavam, பெ.(n.)

   பெரும்போர் (யாழ்.அக.);; great war.

     [Skt. {} → த. மகாகவம்.]

மகாகவி

மகாகவி makākavi, பெ.(n.)

   பெரும்புலவர் (பெருங்கவி);; great poet.

     “மகாகவி யொருவர் ஒரு காவியத்தில் இட்டனர்” (தக்கயாகப்.8, உரை);.

த.வ. பெரும்பாவலர்

     [Skt. {}-kavi → த. மகாகவி.]

மகாகாசம்

மகாகாசம் makākācam, பெ. (n.)

   1. ஒரு வகைக் காசநோய்; a kind of virulent asthma or bronchitis.

   2. பரவெளி; atmosphere or ether (சா.அக.);.

 மகாகாசம்1 makākācam, பெ.(n.)

   பெருஞ்சிரிப்பு (யாழ்.அக.);; loud laughter.

     [Skt. {} → த. மகாகாசம்.]

 மகாகாசம்2 makākācam, பெ.(n.)

மகா காயம்2 பார்க்க (வின்.);;see {}.

     [Skt. {} → த. மகாகாசம்2.]

 மகாகாசம்3 makākācam, பெ.(n.)

   1. ஒரு வகைக் காசநோய்; a kind of virulent asthma or bronchitis.

   2. பரவெளி; atmosphere or ether (சா.அக.);.

மகாகாமி

மகாகாமி makākāmi, பெ.(n.)

   1. மிக்க காமங் கொண்டவன்; a lascivious person.

   2. முத்திருக்கஞ்செவி என்னும் மூலிகை; a plant, which see (சா.அக.);.

த.வ. மாகாமி

மகாகாயன்

 மகாகாயன் makākāyaṉ, பெ.(n.)

   பனி மலையின் தெற்கு வாயில் காப்போன் (சங்.அக.);; the guard at the Southern gate of mt. {}.

த.வ. மாகாயன்

     [Skt. {} → த. மகாகாயன்.]

மகாகாயம்

மகாகாயம்1 makākāyam, பெ.(n.)

   1. பெரிய உருவம் அல்லது யானை; elephant.

   2. பருத்தவுடம்பு; a stout body (சா.அக.);.

த.வ. மாகாயம்

 மகாகாயம்2 makākāyam, பெ.(n.)

   பெரு வெளி (இலக்.அக.);;த.வ. மாகாயம்

     [Skt. {} → த. மகாகாயம்2.]

மகாகாலங்கம்

 மகாகாலங்கம் makākālaṅgam, பெ. (n.)

   ஆதண்டை; a thorn y shrub (சா.அக.);.

 மகாகாலங்கம் makākālaṅgam, பெ.(n.)

   ஆதொண்டை என்னும் மூலிகை; a throng shrub (சா.அக.);.

மகாகாலன்

 மகாகாலன் makākālaṉ, பெ.(n.)

   உருத்திரன் (அபி.சிந்.);; rudra, as the final destroyer.

     [Skt. {} → த. மகா+காலன்.]

மகாகாலம்

மகாகாலம் makākālam, பெ.(n.)

   1. நெடுங் காலம்; a long time.

   2. மாமரம்; mango tree.

   3. குறட்டை என்னும் மூலிகை; korattay (சா.அக.);.

த.வ. மாக்காலம்

மகாகாளமூர்த்தி

மகாகாளமூர்த்தி makākāḷamūrtti, பெ.(n.)

மகாகாலன் பார்க்க (தக்கயாகப்.271, விசேடக்.);;see {}.

     [Skt {} → த. மகாகாளம்+மூர்த்தி.]

மகாகாளர்

மகாகாளர் makākāḷar, பெ.(n.)

   1. மகாகாலன் (சங்.அக.); பார்க்க;see {}.

   2. மகாசாத்தாவின் வீரருள் தலைமை பெற்றவன்; a servant of {}.

     “மகாகாளர் வருபடலம்” (கந்தபு.);.

த.வ. மாகாளர்

     [Skt. {} → த. மகா+(காலன்); → காளர்.]

மகாகாளி

மகாகாளி makākāḷi, பெ. (n.)

   ஆட்டுச்செவி அல்லது ஆடு தீண்டாப்பாலை; a bitter prostate plant.

மறுவ. ஆடுதின்னாப் பாலை.

 மகாகாளி1 makākāḷi, பெ.(n.)

   சத்திகளி லொருத்தி (தக்கயாகப்.107, உரை);; a {}.

த.வ. மாகாளி

     [Skt. {} → த. மகா+காளி.]

 மகாகாளி2 makākāḷi, பெ.(n.)

   ஆட்டுச்செவி அல்லது ஆடு தின்னாப்பாலை என்னும் மூலிகை; a bitter prostate plant (சா.அக.);.

     [Skt. {} → த. காளி.]

மகாகாளிசரண்

மகாகாளிசரண் makākāḷisaraṇ, பெ.(n.)

   களாவிழுது (தைலவ.தைல.119);; the aerial root of {} plant.

மகாகாளை

மகாகாளை makākāḷai, பெ.(n.)

   ஒன்பான் செல்வங் (நிதி); களிலொன்று (அபி.சிந்.940);; one of nava-niti.

     [Skt. {} → த. மகாகாளை.]

மகாகிதி

மகாகிதி makākidi, பெ.(n.)

   கோடிகோடா கோடி (த.நி.போ.பக்.25);; a great number, one thousand trillions.

மகாகிரிவம்

 மகாகிரிவம் makākirivam, பெ.(n.)

   ஒட்டகம் (யாழ்.அக.);; camel.

     [Skt. {} → த. மகாகிரிவம்.]

மகாகிருதம்

 மகாகிருதம் makākirudam, பெ.(n.)

   தூய்மை செய்த வெண்ணெய்; fresh carified butter (சா.அக.);.

மகாகீரிவம்

மகாகீரிவம் makāārivam, பெ.(n.)

   1. ஒட்டகம்; camel.

   2. நீண்ட கழுத்து; long neck (சா.அக.);.

த.வ. ஒட்டகம்

மகாகுட்டம்

 மகாகுட்டம் makākuṭṭam, பெ. (n.)

   பெரு நோய்; leprosy (சா.அக.);.

 மகாகுட்டம் makākuṭṭam, பெ.(n.)

   பெருநோய்; leprosy (சா.அக.);.

த.வ. பெருங்குட்டம்

மகாகுணபாடம்

 மகாகுணபாடம் makākuṇapāṭam, பெ.(n.)

   தேரையர் செய்த ஒரு தமிழ் மருத்துவ நூல்; a Tamil medical science (சா.அக.);.

த.வ. மாகுணபாடம்

மகாகுண்டலினி

மகாகுண்டலினி makākuṇṭaliṉi, பெ.(n.)

   மூலாதாரத்திலுள்ள பாம்பின் வடிவமைந்த ஒரு ஆற்றல் (பிரபோத.44,20);; the cosmic energy in the form of serpent, abiding in the {}.

மகாகுமரி

 மகாகுமரி makākumari,  a big variety of red chamomile (சா.அக.).

 மகாகுமரி makākumari, பெ.(n.)

   குங்குமச் செவ்வந்தி; a big variety of red chamomile (சா.அக.);.

த.வ. மாகுமரி

மகாகும்பம்

 மகாகும்பம் makākumbam, பெ.(n.)

   நூறாயிரங் கோடி (திவா.);; a great number, billion.

த.வ. மாகும்பம்

     [Skt. {}-kumbha → த. மகாகும்பம்.]

மகாகும்பாவம்

மகாகும்பாவம் makākumbāvam, பெ.(n.)

   1. குமிள் அல்லது குமிழ்; Kashmere tree.

   2. மேகாதிவாதம், கபம், கிரகணி, பாண்டு இவற்றை நீக்கும் ஒரு மூலிகை; it is useful for anaemia, diarrhoea (chronic); rheumatism etc. (சா.அக.);.

மகாகும்பி

 மகாகும்பி makākumbi, பெ.(n.)

   சாம்பற் பூசணி (மலை.);; ash-gourd (சா.அக.);.

 மகாகும்பி makākumbi, பெ.(n.)

   சாம்பற் பூசணி (மலை.);; ash-gourd.

மறுவ. பெரும்பூசணி, மாகும்பி

மகாகுழம்பு

 மகாகுழம்பு makākuḻmbu, பெ. (n.)

   அகத்தியர் பெருங்குழம்பு; a wax like medicine (சா.அக.);.

 மகாகுழம்பு makākuḻmbu, பெ.(n.)

   அகத்தியர் பெருங்குழம்பு என்னும் மெழுகு வடிவிலான மருந்து வகை; a wax like medicine (சா.அக.);.

த.வ. மாக்குழம்பு

மகாகெசம்

 மகாகெசம் makākesam, பெ.(n.)

   மாந்தர் கைக்கு நூறுமுழங்கொண்ட அளவு (த.நி. போ.);; hundred cubits.

     [Skt. {}-gaja → த. மகாகெசம்.]

மகாகெந்தம்

 மகாகெந்தம் makākendam, பெ. (n.)

சீதேவிசெங்கழுநீர் பார்க்க; see {} (சா.அக.);.

 மகாகெந்தம் makākendam, பெ.(n.)

   சீதேவி செங்கழுநீர் என்னும் மூலிகை; a kind of herb (சா.அக.);.

     [மகா+கந்தம் → கெந்தம்.]

மகாகெந்தா

 மகாகெந்தா makākendā, பெ. (n.)

   கருப்புக் கடலை; a black Bengal gram (சா.அக.);.

 மகாகெந்தா makākendā, பெ.(n.)

   கறுப்புக் கடலை; a black gram (சா.அக.);.

     [மகா + கெந்தா.]

மகாகைலாயம்

 மகாகைலாயம் makākailāyam, பெ.(n.)

   சிவபெருமான்(பிரான்); வீற்றிருக்கும் மலை; the great {}, abode of {}.

     [Skt. {} → த. மகாகைலாயம்.]

மகாகோசம்

 மகாகோசம் makāācam, பெ.(n.)

   பேரொலி (சங்.அக.);; great tumult or noise.

த.வ. பெருங்கூச்சல், பெருங்கூவல்

     [Skt. {} → த. மகாகோசம்.]

மகாகோசா

 மகாகோசா makāācā, பெ.(n.)

   மாமரக் குடும்பத்தைச் சேர்ந்த பிசிடேசியா இண்டகிரி மாமரத்தில் தோன்றும் கொம்பு போன்ற புது வளர்ச்சியான கற்கடகசிங்கி; a growth like the claws of crab seen on the leaves petioles of pistacia integerrima;

 galls of pistacia integerrima (சா.அக.);.

த.வ. மாகோசா

மகாகோடாசுழிமாத்திரை

 மகாகோடாசுழிமாத்திரை makāāṭācuḻimāttirai, பெ.(n.)

   மாலைக்கண் காமாலை, சோகை, நச்சுக் குற்றம், விப்புருதி, பீலிகை, காசம், புண் முதலியவற்றைக் குணமாக்கும். தாளகம், வீரம், கவுரி, லிங்கம், பாடாணம், சூதம், கெந்தி, துரிசு, வெண்காரம், அன்ன பேதி, பால்துத்தம், மனோசிலை, செப்புத் தொட்டி, படிகாரம், வாளம், இவற்றைத் தூய்மை செய்து கடைச் சரக்குகளுடன் சேர்த்து அணியம் செய்து சித்த நூலிற் கண்ட அளவுப்படி கொடுக்கும் மாத்திரை; a pill containing the above drugs which is used for jaundice, dropsy, bronchitis diseases of spleen, night blindness etc. (சா.அக.);.

     [Skt. {} → த. கோடாசுழி+மாத்திரை]

மகாகோடி

மகாகோடி makāāṭi, பெ.(n.)

   ஒரு பேரெண் (நாமதீப.80, உரை.);; a great number.

த.வ. மாகோடி

     [மகா+கோடி.]

     [Skt. {} → த. மகாகோடி.]

மகாகோணி

 மகாகோணி makāāṇi, பெ.(n.)

   இலக்கங் கோடா கோடி (யாழ்.அக.);; a great number, ten trillions.

த.வ. மாகோணி

     [Skt. {} → த. மகாகோணி.]

மகாகோரம்

மகாகோரம் makāāram, பெ.(n.)

   1. நிரய (நரக); வகை (வின்.);; a hell.

   2. கண்ணால் பார்க்க முடியாத வன்கொடுமை (உ.வ.);; atrociousness, awfulness.

     [Skt. {} → த. மகாகோரம்.]

மகாகோளி

மகாகோளி makāāḷi, பெ. (n.)

   கற்க திரவிய வகை; a medicinal drug.

     “வாலுகம் மகாகோளி மகிழம்” (தைலவ.தைல.77);.

 மகாகோளி1 makāāḷi, பெ.(n.)

   கற்க மருந்து வகை; a medicinal drug.

வாலுகம் மகாகோளி மகிழம்” (தைலவ.தைல.77);.

 மகாகோளி2 makāāḷi, பெ.(n.)

   அறியப்படாத ஒருவகை ,மூலிகை; unidentified plant (சா.அக.);.

த.வ. மாகோளி

மகாக்கினி

மகாக்கினி1 makākkiṉi, பெ.(n.)

   வேள்வித்தீ (ஒமாக்கினி); (யாழ்.அக.);; sacrificial fire.

     [Skt. {} → த. மகாக்கினி.]

 மகாக்கினி2 makākkiṉi, பெ.(n.)

   1. காட்டுத்தீ (காடாக்கினி);; great fire which see.

   2. அழல்விரி தீச்சுடர் (தீபாக்கினி);; moderate fire spreading flames (சா.அக.);.

மகாக்கு

 மகாக்கு makākku, பெ. (n.)

   குரங்குகளில் ஒருவகை; a kind of monkey.

     [மங்கன்-மங்கு-மகாக்கு]

மகாங்கம்

 மகாங்கம் makāṅgam, பெ.(n.)

   ஒட்டகம் (யாழ்.அக.);; camel.

     [Skt. {} → த. மகாங்கம்.]

மகாசகா

மகாசகா1 makācakā, பெ.(n.)

   1. வாடா மல்லிகை (மலை.);; bachelor’s buttons.

   2. மறு தோன்றிமரம்; a tree yielding unfading flowers.

     [Skt. {} → த. மகாசகா.]

மகாசகை

 மகாசகை magācagai, பெ. (n.)

   வாடாத பூவுள்ள மறுதோன்றி மரம்; a tree yielding unfading flowers (சா.அக.);.

 மகாசகை magācagai, பெ.(n.)

மகாசகா (வின்.); பார்க்க;see {}.

மகாசக்தி

மகாசக்தி makācakti, பெ.(n.)

   1. சிவசத்தி;{},

 the female energy of God {}.

   2. குமாரக் கடவுள் (யாழ்.அக.);; Skanda.

த.வ. மாசத்தி, பெருஞ்சத்தி.

     [Skt. {} → த. மகாசக்தி.]

மகாசங்கம்

மகாசங்கம் makācaṅgam, பெ. (n.)

   1. எலும்பு; bone.

   2. நெற்றி; forehead (சா.அக.);.

 மகாசங்கம்1 makācaṅgam, பெ.(n.)

   மாநாடு (வின்.);; great council of a nation.

த.வ. பெருமன்றம், மாநாடு

     [Skt. {} → த. மகாசங்கம்1.]

 மகாசங்கம்2 makācaṅgam, பெ.(n.)

   1. ஆயிரம் கோடாகோடி (பிங்.); (த.நி.போ.25);; a great number, hundred thousand billions.

   2. குபேரன் செல்வத்துளொன்று (பிங்.);; a treasure of {}.

   3. நெற்றி (யாழ்.அக.);; forehead.

   4. மாந்தவெலும்பு வகை (யாழ். அக.);; a human bone.

     [Skt. {} → த. மகாசங்கம்2.]

 மகாசங்கம்3 makācaṅgam, பெ.(n.)

   1. எலும்பு; bone.

   2. நெற்றி; fore head (சா.அக.);.

மகாசங்காரம்

 மகாசங்காரம் makācaṅgāram, பெ.(n.)

   ஊழி முடிவு; the final dissolution of the universe.

த.வ. ஊழிமுடிவு

     [Skt. {} → த. மகாசங்காரம்.]

மகாசங்கை

 மகாசங்கை makācaṅgai, பெ.(n.)

   சங்கை பதின்மடங்கு கொண்டது (சங்.அக.);; a great number, consisting of ten {}.

த.வ. மாசங்கை

     [Skt. {} → த. மகாசங்கை.]

மகாசண்டன்

மகாசண்டன் makācaṇṭaṉ, பெ.(n.)

   எமனது ஏவலாளரில் ஒருவன்; a servant of Yama.

     “ஒத நமனுற்ற மகாசண்டன்” (சிவதரு. சுவர்க்கநரக. 101);.

     [Skt. {} → த. மகாசண்டன்.]

மகாசண்டம்

மகாசண்டம் makācaṇṭam, பெ.(n.)

   நிரய (நரக); வகை (சிவதரு. சுவர்க்கநரக.708);; a hell.

     [Skt. {} → த. மகாசண்டம்.]

மகாசதாசிவன்

 மகாசதாசிவன் makācatācivaṉ, பெ.(n.)

இருபத்தைந்து திருமுகத்தையுடையவனாயும் சதாசிவமூர்த்திக்கு மேற்பட்டவனாயுமுள்ள சிவத்திருமேனி(அபி.சிந்.);;({});

 manifest- tation of {}.

த.வ. மாசதாசிவன்

     [Skt. {} → த. மகாசதா சிவன்.]

மகாசதிக்கல்

 மகாசதிக்கல் makācadikkal, பெ.(n.)

   உடன் கட்டையேறிய கற்புடையாட்டியின் நினைவாக அவளுடைய வடிவம் பொறித்த சிலை; stone in memory of a chaste woman who immolates herself on the funeral pyre of her deceased husband.

     [Skt. {} → த. மகாசதி+கல்.]

சதி என்னும் வடசொல் மனைவி எனப் பொருள்படும். உடன்கட்டை ஏறியதால் வணங்கத் தக்க பெருமையுடையவளாகக் கருதப்பட்டதால் மகாசதிக்கல் எனும் கற்சிலை நாட்டப்பட்டது.

மகாசனசுரோத்திரியம்

மகாசனசுரோத்திரியம் makāsaṉasurōttiriyam, பெ.(n.)

   சிற்றூரில் பொது மக்களுக்காகத் தள்ளுபடி செய்த வரி (G.Tn.D. l.311);; a partial remission of assessment in a village on account of occupation.

     [Skt. {}-jana → த. மகாசன சுரோத்திரியம்.]

மகாசனி

 மகாசனி makācaṉi, பெ.(n.)

   வாலுளுவை யரிசி; seed of intellect tree-Celastrus paniculata (சா.அக.);.

மகாசபை

மகாசபை makācabai, பெ.(n.)

   ஊர்ப் பொதுக் காரியங்களை ஆளுவம் செய்யும் அதிகார அவை (S.I.l.i, 60,69);; great assembly for the administration of public affairs.

த.வ. மாமன்றம்

     [Skt. mahat +→ த. மகாசபை.]

மகாசப்தமி

 மகாசப்தமி makācaptami, பெ.(n.)

   இரத சப்தமி (பஞ்.);; the seventh day in the bright fortnight of the lunar month of {}.

     [Skt. {} → த. மகாசப்தமி.]

மகாசமுத்திரம்

மகாசமுத்திரம் makācamuttiram, பெ.(n.)

   1. பெருங்கடல் (தக்கயாகப்.140, உரை);; ocean.

   2. ஒரு பேரெண் (நாமதீப.800, உரை);; a great number, as a hundred.

     [மகா+சமுத்திரம்.]

     [Skt. mahat → த. மகா+சமுத்திரம்.]

மகாசம்பு

 மகாசம்பு makācambu, பெ.(n.)

   பெருநாவல்; a tree yielding a large variety of jambo fruits (சா.அக.);.

     [மகா+சம்பு.]

மகாசம்மோகனம்

 மகாசம்மோகனம் makācammōkaṉam, பெ.(n.)

   விழித்திருப்பவர்களை மெய்ம்மறந்து உறக்கம் கொள்ளச் செய்யும் மந்திர வகை (சங்.அக.);; a mantra used to induce sound sleep in others.

     [Skt. {}-sam-{} → த. மகாசம் மோகனம்.]

மகாசயன்

 மகாசயன் makācayaṉ, பெ.(n.)

   பெருமகன் (யாழ்.அக.);; lord, noble.

த.வ. பெருமான்.

     [Skt. {} → த. மகாசயன்.)

மகாசயம்

மகாசயம்1 makācayam, பெ.(n.)

   பெருங்கடல் (யாழ்.அக.);; ocean.

     [Skt. {} → த. மகாசயம்.]

 மகாசயம்2 makācayam, பெ.(n.)

   கொடிய ஈளைநோய்; advanced consumption.

மகாசலம்

மகாசலம் makācalam, பெ.(n.)

   புண்ணிய நீர் (தக்கயாகப்.247, உரை);; sacred water.

த.வ. மாசலம்.

     [Skt. {}-jala → த. மகாசலம்.]

மகாசாகரம்

மகாசாகரம் makācākaram, பெ.(n.)

   சாகரம் பதினெட்டுக்கொண்ட பேரெண் (த. நி.போ. பக்.25);; a great number consisting of 18 {}.

     [Skt. {} → த. மகாசாகரம்.]

மகாசாகை

மகாசாகை makācākai, பெ.(n.)

   மரத்தின் பெருங்கிளை (S.I.I. ii, 201);; main branch of a tree.

     [Skt. {} → த. மகாசாகை.]

மகாசாத்தா

 மகாசாத்தா makācāttā, பெ.(n.)

   ஐயனார் (கந்தபு.மகாசாத்.);;{}, nom. sing. of {}.

     [Skt. {} → த. மகாசாத்தா.]

மகாசாத்திரன்

மகாசாத்திரன் makācāttiraṉ, பெ.(n.)

   1. சமயங்களின் மூலநூல்களைப் பயின்றவன்; one who is versed in the basic texts of the various systems of religion.

   2. ஐயனார் (சிலப்.9, 15, உரை); பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகாசாத்திரன்.]

மகாசாந்தபனம்

 மகாசாந்தபனம் makācāndabaṉam, பெ.(n.)

   முதனாள் கோசலமும், இரண்டாம் நாள் கோமயமும், மூன்றாம் நாள் பாலும், நாலாம் நாள் தயிரும், ஐந்தாம் நாள் நெய்யும், ஆறாம் நாள் தருப்பை நீரும் உண்டு நோற்கும் ஒரு நோன்பு (சங்.அக.);; a fast in which the six articles, viz., cow’s urine, cow-dung, milk, curds, ghee and water consecrated with quitch grass, are taken, one on each of six consecutive days.

     [Skt. {} → த. மகா சாந்தபனம்.]

மகாசாமந்தன்

மகாசாமந்தன் makācāmandaṉ, பெ.(n.)

   பெரும்படைத்தலைவன்; generalissimo;

 vassel chief.

     “மகா சாமந்தாதிபதி சிக்க வீரபத்திர நாயகர்” (I.M.P.Sm. 103);.

த.வ. மாசாமந்தன்.

     [Skt. {} → த. மகாசாமந்தன்.]

மகாசாயம்

 மகாசாயம் makācāyam, பெ. (n.)

   ஆலமரம்; banyan tree (சா.அக.);.

 மகாசாயம் makācāyam, பெ.(n.)

   ஆலமரம்; banyan tree (சா.அக.);.

மகாசாரக்கந்தம்

 மகாசாரக்கந்தம் makācārakkandam, பெ.(n.)

   பேரீச்சு; date of wild variety (சா.அக.);.

 மகாசாரக்கந்தம் makācārakkandam, பெ. (n.)

   பேரீச்சு; date wild variety(சா.அக.);.

மகாசாரம்

 மகாசாரம் makācāram, பெ. (n.)

சிறுவிடு கொள் பார்க்க; see {} (சா.அக.);.

 மகாசாரம் makācāram, பெ.(n.)

   சிறு விடுகொள்; horsegram, a shrub. (சா.அக.);.

மகாசாலி

மகாசாலி1 makācāli, பெ.(n.)

   பெரும்பீர்க்கு (சங்.அக.);; a kind of spongegourd.

த.வ. மாசாலி.

 மகாசாலி2 makācāli, பெ.(n.)

   1. சிவப்பு நெல்; red paddy.

   2. வெள்ளையரிசி; white rice.

   3. கோதுமை; wheat (சா.அக.);.

த.வ. மாசாலி.

மகாசாலினி

 மகாசாலினி makācāliṉi, பெ. (n.)

   தின்பீர்க்கு; a climber, species of sponge gourd (சா.அக.);.

 மகாசாலினி makācāliṉi, பெ.(n.)

   தின்பீர்க்கு; a climber (சா.அக.);.

த.வ. மாசாலினி.

மகாசிங்கச்சுண்ணம்

 மகாசிங்கச்சுண்ணம் makāciṅgaccuṇṇam, பெ. (n.)

   துருசுச் சுண்ணம்; calcined white powder of copper sulphate (சா.அக.);.

மகாசிங்கி

 மகாசிங்கி makāciṅgi, பெ.(n.)

   கருஉயிர்நீர் (சங்.அக.);; semen virile.

த.வ. மாசிங்கி.

மகாசிங்கிச்சுண்ணம்

 மகாசிங்கிச்சுண்ணம் makāciṅgiccuṇṇam, பெ.(n.)

   துருசுச் சுண்ணம்; calcined white powder of copper sulphate (சா.அக.);.

மகாசித்தன்

 மகாசித்தன் makācittaṉ, பெ.(n.)

   பனி மலையின் (கைலாசத்தின்); கீழைவாயில் காப்போன் (அபி.சிங்.);; guard at the eastern gate of {}.

     [Skt. {}-siddha → த. மகாசித்தன்.]

மகாசித்திரசயானம்

 மகாசித்திரசயானம் makāsittirasayāṉam, பெ.(n.)

   தாளிப்பனை; talipot palm (சா.அக.);.

மகாசித்திரசாயனம்

 மகாசித்திரசாயனம் makācittiracāyaṉam, பெ. (n.)

   தாளிப்பனை; talipot palm (சா.அக.);.

மகாசிந்தாதிலேகியம்

மகாசிந்தாதிலேகியம் makācindātilēkiyam, பெ.(n.)

 an electuary preparation as in Agastiar Vallathi 600. It is useful in jaundice, dropsy, anaemia etc. (சா.அக.);.

மகாசிராவி

 மகாசிராவி makācirāvi, பெ. (n.)

   கோவைக் கொடி; a creeper (சா.அக.);.

 மகாசிராவி makācirāvi, பெ.(n.)

   கோவைக் கொடி; a climbing plant (சா.அக.);.

மகாசிரோட்டம்

 மகாசிரோட்டம் makācirōṭṭam, பெ. (n.)

   நாள்பட்ட வயிற்றுப்போக்கு; chronic diarhoea (சா.அக.);.

 மகாசிரோட்டம் makācirōṭṭam, பெ.(n.)

   கடுங்கழிச்சல்; chronic diarrhoea (சா.அக.);.

மகாசிவராத்திரி

மகாசிவராத்திரி makācivarāttiri, பெ.(n.)

   கும்ப (மாசி); மாதத்துக் கரும்பக்கத்துப் (கிருட்ணபட்சத்து); பதினான்மியும் முக்கோல் (திருவோணம்); நாண்மீனும் கூடிய இரவு; the night of the dark fortnight in the month of {}, sacred to Siva, when the 14th tithi and {}-are current.

த.வ. மாசிவனிரவு.

     [Skt. mahat → த. மகா+சிவராத்திரி.]

மகாசீனம்

 மகாசீனம் makācīṉam, பெ.(n.)

   சீனதேசம் (வின்.);; China proper.

     [Skt. mahat → த. மகா+சீனம்.]

மகாசுகந்தரசம்

 மகாசுகந்தரசம் magāsugandarasam, பெ.(n.)

இருசுவசற்பாட்சி பார்க்க;see {} (சா.அக.);.

த.வ. மாசுகந்தரசம்.

மகாசுகம்

 மகாசுகம் magācugam, பெ.(n.)

   புணர்ச்சி, மகிழ்வு (யாழ்.அக.);; sexual intercourse.

     [Skt. {}-sukha → த. மகாசுகம்.]

மகாசுக்கம்

 மகாசுக்கம் makācukkam, பெ.(n.)

மகாகசா பார்க்க;see {} (சா.அக.);.

மகாசுராங்கிசக்குளிகை

 மகாசுராங்கிசக்குளிகை magāsurāṅgisagguḷigai, பெ.(n.)

   நாட்காய்ச்சல் இருமுறைக் காய்ச்சல், மும்முறைக் காய்ச்சல், நால்முறைக் காய்ச்சல் மற்றும் அனைத்துக் காய்ச்சலுக்குக் கொடுக்கும் ரசம், கெந்தி, ஊமத்தம் விதை, திரிகடுகு சமன்கொண்டு எலுமிச்சம் பழச் சாற்றினால் அரைத்துருட்டிய மாத்திரை; a mediated pill prepared with mercury, sulphur, etc. for fevers (சா.அக.);.

மகாசுவாசம்

 மகாசுவாசம் makācuvācam, பெ. (n.)

   கண்டத்தில் கலகலவென்று ஒலியுடன் விடும் பெரும் மூச்சு; sound sigh, a disease in which the patient breaths heavily lying sound in the throat, eyes fixed in gaze and with gramps at his sides (சா.அக.);.

 மகாசுவாசம் makācuvācam, பெ.(n.)

   கண்டத்தில் கலகல வென்ற ஓசையுடன் விடும் பெரும் மூச்சு; a disease in which the patient breaths heavily lying unconcious, and a low rattling sound in the throat, eyes fixed in gaze and with cramps at his sides (சா.அக.);.

மகாசுவாசரோகம்

மகாசுவாசரோகம் makācuvācarōkam, பெ.(n.)

   மூச்சு நோய் வகையுள் ஒன்று (சீவரட். 58);; a disease affecting respiration.

     [Skt. {} → த. மகாசுவாச ரோகம்.]

மகாசுவாலை

 மகாசுவாலை makācuvālai, பெ.(n.)

   விலைமகளிர் அடையும் நிரயவகை (அபி.சிந்.);; a hell for unchaste women.

     [Skt. {} → த. மகாசுவாலை.]

மகாசுவேதம்

மகாசுவேதம்1 makācuvētam, பெ.(n.)

   வாலுளுவை (மலை.);; climbing staff plant.

     [Skt. {} → த. மகாசுவேதம்1.]

 மகாசுவேதம்2 makācuvētam, பெ.(n.)

   சிறு வாலுளுவை; intellect plant (சா.அக.);.

மகாசுவேதை

 மகாசுவேதை makācuvētai, பெ.(n.)

   கலைமகள் (யாழ்.அக.);; goddess of learning.

     [Skt. {} → த. மகாசுவேதை.]

மகாசூசிகை

மகாசூசிகை magācūcigai, பெ.(n.)

   பெரியம்மை (தஞ்.சர.iii, 68);; small-pox.

     [Skt. {} → த. மகாசூசிகை.]

மகாசூதம்

 மகாசூதம் makācūtam, பெ.(n.)

   போர்ப் பறை (யாழ்.அக.);; war-drum.

     [Skt. {} → த. மகாசூதம்.]

மகாசூத்திரன்

 மகாசூத்திரன் makācūttiraṉ, பெ.(n.)

   இடையன் (யாழ்.அக.);; cow-herd.

     [Skt. {} → த. மகாசூத்திரன்.]

மகாசூரன்

மகாசூரன் makācūraṉ, பெ.(n.)

   1. பெரு வீரன்; a great warrior.

   2. திறமை மிகுந்தவன்; very able man.

     [Skt. {} → த. மகாசூரன்.]

மகாசூலை

 மகாசூலை makācūlai, பெ.(n.)

   மூட்டு வலி நோய் வகை; rheumatism (சா.அக.);.

மகாசேனன்

மகாசேனன் makācēṉaṉ, பெ.(n.)

   1. படைத் தலைவன் (யாழ்.அக.);; generalissimo, commander of a large force.

   2. படைத் தளபதியான குமாரக் கடவுள்; skandha, as the general of celestual forces.

   3. அருகன்; arhat.

   4. புத்தன்; the Buddha.

     [Skt. {} → த. மகாசேனன்.]

மகாசைவன்

மகாசைவன் makācaivaṉ, பெ.(n.)

சிவ தீக்கை பெற்ற பார்ப்பனன் (சைவச.பொது. 475);;({});

 brahmin who has been initiated.

     [Skt. maha-{} → த. மகாசைவன்.]

மகாசைவம்

மகாசைவம் makācaivam, பெ.(n.)

   சிவ னியம் பதினாறனுள் திருநீறு, அக்கமணி பூண்டு சடைவளர்த்துச் சிவனைச் சமகுண னாகவும் குணமிலியாகவும் எண்ணி வழிபாடு செய்ய வேண்டுமெனக் கூறுஞ் சமயம்;     ({}.); a {} sect which holds that the initiate should wear holy ashes, rudrak beads and matted hair, and meditate on {}, in his conditioned and unconditioned forms one 16 Saivam, q.v.

த.வ. மாசிவனியம்.

     [Skt. {} → த. மகாசைவம்.]

மகாசோபம்

மகாசோபம் makācōpam, பெ.(n.)

   நூறு கோடி, கோடாகோடி (த.நி.பேர். பக்.25);; a great number, hundred thousand trillions.

     [Skt. {} → த. மகாசோபம்.]

மகாச்சாயம்

 மகாச்சாயம் makāccāyam, பெ.(n.)

   ஆல்; banyan.

     [Skt. {} → த. மகாச்சாயம்.]

மகாச்சுவாலம்

 மகாச்சுவாலம் makāccuvālam, பெ.(n.)

   வேள்வித் தீ வகை (யாழ்.அக.);; a sacrificial fire.

த.வ. பேரொளிப்பிழம்பு

     [Skt. {} → த. மகாச்சுவாலம்.]

மகாதசம்

 மகாதசம் makātasam, பெ. (n.)

   மாவுலிங்க மரம்; the tree mavulingam (சா.அக.);.

 மகாதசம் makātasam, பெ.(n.)

   மாவிலிங்கம்; a tree – crataeva religiosa (சா.அக.);.

மகாதசை

 மகாதசை makātasai, பெ.(n.)

   பிறப்பியக் காரருக்கு ஒரு கோளின் நடப்புக்காலம்;     [Skt. {} → த. மகாதசை.]

மகாதண்பனை

மகாதண்பனை makātaṇpaṉai, பெ.(n.)

   ஒரு பேரெண் (நாமதீப.801);; a great number.

     [Skt. mahat → த. மகா+தண்பனை.]

மகாதந்தம்

மகாதந்தம் makātandam, பெ.(n.)

   1. யானை (யாழ்.அக.);; elephant.

   2. யானைக் கொம்பு; tusk of an elephant.

     [Skt. {}-danta → த. மகாதந்தம்.]

மகாதனம்

மகாதனம் makātaṉam, பெ.(n.)

   1. பொன்; gold.

   2. வேளாண்மை; agriculture.

   3. நறுமணப்புகை; incense.

     [Skt. {}-dhana → த. மகாதனம்.]

மகாதமணி

 மகாதமணி makātamaṇi, பெ. (n.)

   நெஞ்சகத்தின் இடது பக்கத்தினின்றும் கிளம்பும் ஒரு பெரிய செல்வரத்தக் குழல்; a large artery starting from the left ventricle of the heart (aorta); (சா.அக.);.

     [P]

மகாதமனி

 மகாதமனி makātamaṉi, பெ.(n.)

   நெஞ்சாங் குலையின் இடது பக்கத்தினின்று கிளம்பும் ஒரு பெரிய செவ்விரத்தக் குழல்; a large artery starting from the left ventricle of the heart-Аorta (சா.அக.);.

மகாதலம்

மகாதலம்1 makātalam, பெ.(n.)

   1. நிலவுலகம் (பிங்.);; the earth.

   2. அரிதாரம் (சங்.அக.);; yellow orpiment.

     [Skt. {} → த. மகாதலம்1.]

 மகாதலம்2 makātalam, பெ.(n.)

   கீழேழுலகத் தொன்று (சூடா.);; a nether world, fifth of {}.

த.வ. பேரிடம்.

     [Skt. {} → த. மகாதலம்2.]

 மகாதலம்3 makātalam, பெ.(n.)

   1. புண்ணியத் தலம்; sacred place.

   2. முதன்மைத் தலம் (வின்.);; head quarters;chief place;court.

     [Skt. {}-sthala → த. மகாதலம்3.]

 மகாதலம்4 makātalam, பெ.(n.)

   அரிதாரம்; yellow orpiment (சா.அக.);.

மகாதாது

 மகாதாது makātātu, பெ.(n.)

   பொன் (யாழ்.அக.);; gold.

     [Skt. {} → த. மகாதாது.]

மகாதானம்

மகாதானம் makātāṉam, பெ. (n.)

   பெருங்கொட்டை; big seed (சா.அக.);.

 மகாதானம்1 makātāṉam, பெ.(n.)

   மன்ன வராற் செய்யப்படும் கொடை வகை (த. நி.போ.பக்.25);; a kind of gift made by kings.

த.வ. பெருங்கொடை.

     [Skt. {} → த. மகா+தானம்1.]

 மகாதானம்2 makātāṉam, பெ.(n.)

   பெரிய கொட்டை; a big seed (சா.அக.);.

மகாதி

 மகாதி makāti, பெ. (n.)

   திப்பிலி; long pepper plant (சா.அக.);.

 மகாதி makāti, பெ.(n.)

   திப்பிலி; long pepper plant (சா.அக.);.

மகாதிக்தம்

 மகாதிக்தம் makātiktam, பெ.(n.)

   மருந் தூட்டப்பட்ட கசப்புச் சுவையுடைய நெய்; abitter medicated ghee given for skin diseases. It is a Ayurvedic preparation (சா.அக.);.

மகாதிசை

மகாதிசை1 makātisai, பெ.(n.)

   நாற்பெருந் திசை; the four cardinal points.

த.வ. மாத்திசை.

     [Skt. mahat → த. மகா+திசை1.]

 மகாதிசை2 makātisai, பெ.(n.)

மகாதசை பார்க்க;see {}-tasai.

     [Skt. {} → த. மகாதிசை2.]

மகாதிம்பம்

மகாதிம்பம் makātimbam, பெ. (n.)

   ஒரு வகைப் பெருமரம்; species of a big tree (சா.அக.);.

 மகாதிம்பம்1 makātimbam, பெ.(n.)

மகாநிம்பம்2, 1 (சங்.அக.); பார்க்க;see {}.

 மகாதிம்பம்2 makātimbam, பெ.(n.)

   பெரு மரம்; a tree (சா.அக.);.

மகாதிரகிருதம்

 மகாதிரகிருதம் magādiragirudam, பெ.(n.)

   குட்ட நோய் வகைகள் எல்லாவற்றிற்கும் தரப்படும் ஒரு வகை மருந்து நெய்மம்; a medicinal ghee used for all kinds of leprosy (சா.அக.);.

மகாதிராவகம்

 மகாதிராவகம் magātirāvagam, பெ.(n.)

   ஆயுள்வேத முறைப்படி சித்திர மூலவேர், நாயுருவி, புளியம்பட்டை, இலைக்கள்ளி, பிரம்பு, மூக்கிரட்டை, முதலியவற்றைச் சுட்டுச் சாம்பலாக்கி மற்ற கடைச் சரக்குகளுடன் சேர்த்து வாலையிலிட்டு வடிக்கும் எரிநீர்; an ayurvedic preparation obtained by distilling the ashes of some plants along with some bazaar drugs (சா.அக.);.

மகாதிலதம்

 மகாதிலதம் makādiladam, பெ.(n.)

   சாரிபாதி; கோட்டியை(பைத்தியத்தை); ப் போக்கும் ஒரு மூலிகை; an unidentified plant said to cure madness or insanity. (சா.அக.);.

மகாதிவ்விய

 மகாதிவ்விய makātivviya, பெ.(n.)

   மருந்து கலக்கப்பட்ட மெழுகு வகை; a wax like medicinal preparation (சா.அக.);.

மகாதீவு

 மகாதீவு makātīvu, பெ.(n.)

   மாலத் தீவுகள் (வின்.);; the maldives.

     [Skt. mahat → த. மகா+தீவு.]

மகாதுந்துமி

 மகாதுந்துமி makātundumi, பெ.(n.)

   போர்ப்பறை (யாழ்.அக.);; war-drum.

த.வ. பெருந்துந்தூமி.

     [Skt. mahat → த. மகா+துந்துமி.]

மகாதுருவம்

 மகாதுருவம் makāturuvam, பெ.(n.)

   வெண்கடம்பு; white cadamba (சா.அக.);.

மகாதேசம்

 மகாதேசம் makātēcam, பெ.(n.)

   இதளியம் (பாதரசம்); (மூ.அ.);; mercury.

     [Skt. {} → த. மகாதேசம்.]

மகாதேவன்

மகாதேவன் makātēvaṉ, பெ.(n.)

   1. கடவுள்; god.

   2. சிவபெருமான் (பிரான்);;{},

 as the great God.

   3. வருணன் (வின்.);;{}.

த.வ. மாதேவன், பெருவுடையார்.

     [Skt. {} → த. மகாதேவன்.]

மகாதேவர்திருமஞ்சனம்

மகாதேவர்திருமஞ்சனம் makātēvartirumañjaṉam, பெ.(n.)

   வடமுனைத்தீ (வடவாமுகாக்கினி); (தக்கயாகப்.379, உரை);; the submarine fire.

     [Skt. {} → த. மகாதேவர் + திரு மஞ்சனம்.]

மகாதேவி

மகாதேவி1 makātēvi, பெ.(n.)

   1. மலைமகள் (பார்வதி); (தக்கயாகப்.80, உரை);;{},

 as the consort of {}.

   2. தலைமையரசி; chief queen.

     “வாணாதி ராசர் மகாதேவியார்” (S.I.I. iii, 399);.

     [Skt. {} → த. மகாதேவி.]

 மகாதேவி2 makātēvi, பெ.(n.)

   வையங் காப்பவளாகிய மலைமகள்; the geat mother (சா.அக.);.

மகாதோசக்குறி

 மகாதோசக்குறி makātōcakkuṟi, பெ.(n.)

   உந்தியில் ஒரு விரல் பொருந்தும் அளவு எக்கி உயர எழும்பினால் இத்தோசமாம்; a symptom or morid condition- தோஷம்.

மகாதோசநீக்கி

மகாதோசநீக்கி makātōcanīkki, பெ.(n.)

   1. சித்தா மல்லி, சிற்றாமல்லி பார்க்க;see {}.

   2. பாவட்டை; a small tree – Pavata indica (சா.அக.);.

மகாதோசம்

 மகாதோசம் makātōcam, பெ.(n.)

   பாழ்வினை, பெரும்பாவம் (கொ.வ.);; great sin.

     [Skt. {} → த. மகாதோசம்.]

மகாதோரணம்

மகாதோரணம் makātōraṇam, பெ.(n.)

   கோயில் விளகு வகை (M.E.R., 608 of 1916);; a kind of temple lamp.

     [Skt. {} → த. மகா+தோரணம்.]

மகாதோரை

 மகாதோரை makātōrai, பெ.(n.)

   ஒரு பேரெண் (யாழ்.அக.);; a great number.

     [Skt. mahat → த. மகா+தோரை.]

மகாத்தியாகம்

 மகாத்தியாகம் makāttiyākam, பெ.(n.)

   பெருந்துறவு; complete renunciation of the world.

     [Skt. {} → த. மகாத்தியாயகம்.]

மகாத்திரம்

 மகாத்திரம் makāttiram, பெ. (n.)

   தேக்கு; teak (சா.அக.);.

 மகாத்திரம் makāttiram, பெ.(n.)

   தேக்கு; teak – Tectona grandis (சா.அக.);.

மகாத்துமா

 மகாத்துமா makāttumā, பெ.(n.)

   பேராதன் (மிகு முது முனிவர்);; highly spiritual person;exceedingly wise man;lofty soul.

     [Skt. {} → த. மகாத்துமா.]

மகாத்துருவம்

 மகாத்துருவம் makātturuvam, பெ. (n.)

   வெண்கடம்பு மரம்; white cadamba tree (சா.அக.);.

மகாத்மியம்

மகாத்மியம் makātmiyam, பெ.(n.)

மாகாத் மியம் (த.நி.போ.பக்.247); பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகாத்மியம்.]

மகாநங்கை

 மகாநங்கை makānaṅgai, பெ. (n.)

மிளகாய் நங்கை பார்க்க; see {} (சா.அக.);.

 மகாநங்கை makānaṅgai, பெ.(n.)

   மிளகாய்; chilly (சா.அக.);.

மகாநடனன்

 மகாநடனன் makānaḍaṉaṉ, பெ.(n.)

மகாநடன் (சங்.அக.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகாநடனன்.]

மகாநடன்

 மகாநடன் makānaḍaṉ, பெ.(n.)

   சிவ பெருமான் (பிரான்); (யாழ்.அக.);;{}, as the great dancer.

த.வ. மாநடன்

     [Skt. {}-nata → த. மகாநடன்.]

மகாநட்சத்திரம்

 மகாநட்சத்திரம் makānaṭcattiram, பெ.(n.)

   குறித்த நாளில் நிலவொடு (சந்திரனுடன்); கூடியிருக்கும் விண்மீன் (நட்சத்திரம்); (இ.வ.);; lunar asterism occupied by the moon on a particular day.

த.வ. பெருவிண்மீன்

     [Skt. mahat → த. மகாநட்சத்திரம்.]

மகாநதி

மகாநதி makānadi, பெ.(n.)

   1. பேராறு; great river.

   2. கங்கை (சங்.அக.);; the Ganges.

   3. மகாநதியென்னும் ஆறு (இக்.வ.);; the river {}.

     [Skt. {} → த. மகாநதி.]

மகாநந்தை

 மகாநந்தை makānandai, பெ. (n.)

   கள்; toddy (சா.அக.);.

 மகாநந்தை makānandai, பெ.(n.)

   கள்; toddy (சா.அக.);.

த.வ. மாநந்தை

மகாநரகம்

 மகாநரகம் magānaragam, பெ.(n.)

   நிரய (நரக); வகை (யாழ்.அக.);; a hell.

     [Skt. {}-naraka → த. மகாநரகம்.]

மகாநவமி

 மகாநவமி makānavami, பெ.(n.)

   கலைமகள் விழா நிகழும் ஒன்பான் இரவின் இறுதி நாள்; the last day of {}, as a day sacred for the worship of {}.

த.வ. மாத்தொண்மி

     [Skt. {}+ → த. மகாநவமி.]

மகாநாகம்

மகாநாகம் makānākam, பெ.(n.)

   1. சுர புன்னை; long leaved two sepalled gamboge.

   2. பெரும்பாம்பு; great cobra.

     [Skt. {} → த. மகாநாகம்.]

மகாநாசிகள்

 மகாநாசிகள் magānācigaḷ, பெ. (n.)

   கோபுரங்களில் அமைக்கப்பெறும் ஒரு வகையான சிற்பம்; a sculpture in the tower of temple.

     [மா-மகா+நாசிகள்]

மகாநாடு

 மகாநாடு makānāṭu, பெ.(n.)

   பொது மக்களின் கூட்டம்; great assembly or council held by headmen;

 general meeting of all the members of a society;

 conference.

த.வ. மாநாடு

     [Skt. mahat → த. மகா+நாடு.]

மகாநாதம்

மகாநாதம்1 makānātam, பெ.(n.)

   1. சங்கு (யாழ்.அக.);; conch.

   2. பேரொலி; great noise.

   3. இசைக் கருவி; a wind instrument.

   4. அரிமா (சிங்கம்);; lion.

   5. யானை; elephant.

   6. மேகம்; cloud.

த.வ. மாநாதம்

     [Skt. {} → த. மகாநாதம்.]

 மகாநாதம்2 makānātam, பெ.(n.)

   1. பொன்; gold.

   2. பொன்னிமிளை; a kind of yellow bismuth (சா.அக.);.

     [மகா+நாதம்.]

மகாநாமியம்

மகாநாமியம் makānāmiyam, பெ.(n.)

   மதத் தொடர்பான செயல் வகை (த.நி.போ.பக்.24);; a religious observance.

     [Skt. {} → த. மகாநாமியம்.]

மகாநாராயணம்

மகாநாராயணம் makānārāyaṇam, பெ.(n.)

   நூற்றெட்டு (உபநிடதங்கள்); துணைத் தொன் மக்களுள் ஒன்று; an uparisad, one of 108.

     [Skt. maha-{} → த. மகாநாராயணம்.]

மகாநாரி

 மகாநாரி makānāri, பெ. (n.)

சுரபுன்னை மரம்; {} tree (சா.அக.);.

 மகாநாரி makānāri, பெ.(n.)

மகாநாகம் பார்க்க;see {} (சா.அக.);.

மகாநாளிகம்

மகாநாளிகம் magānāḷigam, பெ.(n.)

   போரில் பயன்படும் இயந்திர வகை (சுக்கிரநீதி, 80);; a kind of war-machine.

     [Skt. {} → த. மகாநாளிகம்.]

மகாநிகற்பம்

 மகாநிகற்பம் magānigaṟpam, பெ.(n.)

   ஒரு பேரெண் (வின்.);; a great number.

     [Skt. {}-nikharva → த. மகாநிகற்பம்.]

மகாநிசி

 மகாநிசி makānisi, பெ.(n.)

   நள்ளிரவு (யாழ்.அக.);; midnight.

     [Skt. {} → த. மகாநிசி.]

மகாநிதி

 மகாநிதி makānidi, பெ.(n.)

   குபேரன் நிதி களிலோன்று (யாழ்.அக.);; a treasure of {}.

     [Skt. {}-nidhi → த. மகாநிதி.]

மகாநித்திரை

 மகாநித்திரை makānittirai, பெ.(n.)

   பெருந் துயில் (மரணம்); (யாழ்.அக.);; death, as the long sleep.

த.வ. மிளாத்துயில்

     [Skt. {} → த. மகாநித்திரை.]

மகாநிம்பம்

மகாநிம்பம்1 makānimbam, பெ.(n.)

   மலைவேம்பு (மூ.அ.);; Persian lilac.

த.வ. மாநிம்பம்

     [Skt. {}-nimba → த. மகாநிம்பம்.]

 மகாநிம்பம்2 makānimbam, பெ.(n.)

   1. பூவரசு மரம்; portia tree.

   2. பெரிய வேம்பு; big species of neem tree.

   3. நூறாண்டு அகவையுடைய வேப்ப மரம்; a margosa tree of 100 years old.

   4. சர்க்கரை வேம்பு; neem whose bark is sweet to taste (சா.அக.);.

 மகாநிம்பம்3 makānimbam, பெ.(n.)

   பெரு மரம் (மலை.);; toothed-leaved tree of Heaven.

மகாநியோகம்

மகாநியோகம் makāniyōkam, பெ.(n.)

   அரசனது ஆணை; royal command.

     “மகா நியோகமும் புறப்பட்டு” (S.I.I.iv, 152);.

த.வ. அரசகட்டளை

     [Skt. {}+ {} → த. மகாநியோகம்.]

மகாநிரயம்

மகாநிரயம் makānirayam, பெ.(n.)

   நிரய வகை (மணிமே.6,181, அரும்.);; a hell.

த.வ. மாவளறு.

     [Skt. {}-niraya → த. மகாநிரயம்.]

மகாநிர்குண்டிதைலம்

 மகாநிர்குண்டிதைலம் makānirkuṇṭidailam, பெ.(n.)

   கண்ணோய், தலைநோய் ஆகியவற்றுக்குத் தலை முழுகும் நெய்மம்; a bathing oil prepared out of nocci vitex negundo (சா.அக.);.

மகாநீலம்

மகாநீலம் makānīlam, பெ.(n.)

   1. கையாந்த கரை, என்னும் மூலிகை (மலை.);; a plant growing in wet places.

   2. மரகதம் (யாழ்.அக.);; emerald.

த.வ. மாநீலம்.

     [Skt. {} → த. மகாநீலம்.]

மகாநேமி

 மகாநேமி makānēmi, பெ.(n.)

   காக்கை; crow (சா.அக.);.

மகாநைவேத்தியம்

 மகாநைவேத்தியம் makānaivēttiyam, பெ.(n.)

   கடவுட்குப் படைக்கும் அன்னம்; main offerings made to a deity, as cooked rice.

     [Skt. {} → த. மகாநைவேத்தியம்.]

மகாநோன்பு

 மகாநோன்பு makānōṉpu, பெ.(n.)

   ஒன்பானிராத் திருவிழா (இ.வ.);; festival of nava-{}.

த.வ. மாநோன்பு

     [Skt. mahat → த. மகா+நோன்பு.]

மகாந்தம்

 மகாந்தம் makāndam, பெ.(n.)

   மலர்த்துகள் (மகரந்தம்);; pollen (சா.அக.);.

மகானிலம்

 மகானிலம் makāṉilam, பெ. (n.)

   தகரை; plant (சா.அக.);.

மகான்

மகான் makāṉ, பெ. (n.)

   பெருந் தன்மையுள்ள பெருமகன்; a respectable the man.

     ‘மூலப்பகுதியான மகானுண்டாகும்’ (பாகவ. சுக முன் 2.5.);.

     [Skt. {} → த. மகான்.]

மகான்யம்

 மகான்யம் makāṉyam, பெ. (n.)

   திருப்பெரும்புதுரர் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Sriperumbudur Taluk.

     [ஒருகா மாகாணம்- மாகான்யம்]

மகாபஞ்சகாவியகிருதம்

 மகாபஞ்சகாவியகிருதம் magāpañjagāviyagirudam, பெ.(n.)

   மருந்தூட்டப் பெற்ற ஒரு வகை நெய்; a medicated ghee used for epilepsy, insanity dropsy, abdominal tumour, piles, chlorosis and jaundice (சா.அக.);.

மகாபஞ்சமூலம்

மகாபஞ்சமூலம் makāpañjamūlam, பெ. (n.)

   ஐந்து வகை மரத்தின் பட்டைகளைச் சேர்த்தரைத்த கூட்டு; the paste of barks of the five trees or herbs.

ஐவகை மரங்களவான:

   1. வில்வம்,

   2. முன்னை,

   3. ஈகர்முலி,

   4. பாதிரி,

   5. பெருமரம்.

 மகாபஞ்சமூலம் makāpañjamūlam, பெ.(n.)

   ஐந்து வகையான மரத்தின் வேர்ப் பட்டைகள் சேர்ந்த கூட்டு (வில்வம், முன்னை, ஈசுரமூலி, பாதிரி, பெருமரம்);; the roots of the five trees or plants which see (சா.அக.);.

மகாபட்சி

 மகாபட்சி makāpaṭci, பெ.(n.)

   ஆந்தை (சங்.அக.);; owl.

த.வ. பெரும் பறவை.

     [Skt. {}-paksin → த. மகாபட்சி.]

     [p]

மகாபதுமன்

 மகாபதுமன் makāpadumaṉ, பெ.(n.)

   எட்டு மாநாகங்களுள் நிலத்தை வடப்பக்கத்தில் தாங்கும் நாகம் (பிங்.);; the divine serpent which supports the earth in the north one of {}.

     [Skt. {}-padma → த. மகாபதுமன்.]

மகாபதுமபெந்தம்

மகாபதுமபெந்தம் makābadumabendam, பெ.(n.)

   சித்திரக் கவி வகை (மாறனலங்.283, உரை);; a kind of cittirakavi of great complexity.

     [Skt. {}-padma → த. மகாபதும பெந்தம்.]

மகாபதுமம்

மகாபதுமம் makāpadumam, பெ.(n.)

   1. குபேரன் ஒன்பான் குவைகளுள் ஒன்று; one of nine treasures of {}.

   2. ஒரு பேரெண் (பிங்.);; a great number.

   3. வெண்டாமரை (யாழ்.அக.);; white lotus.

   4. 176 கொடுமுடிகளையும் 22 மேனிலைக்கட்டுகளையுமுடைய கோயில் (சுக்கிரநீதி. 230);; a temple of 176 towards and 22 storeys.

   5. மகாபதுபெந்தம் பார்க்க;see {}.

த.வ. பெருந்தாமரை.

     [Skt. {}-pandma → த. மகாபதுமம்.]

மகாபதுமவிசர்ப்பி

 மகாபதுமவிசர்ப்பி makāpadumavisarppi, பெ.(n.)

   சிறுவர்களுக்குத் தலையிலும் கீழ் வயிற்றிலுமுண்டாகி இறப்பையுண்டாக்கும் புண்; a kind of scabis (சா.அக.);.

த.வ. பெரும்புண். (முதலில் நரம்பின் வழியாக நெற்றியில் கண்டு, பிறகு மார்பிலிறங்கி கடைசியாகக் குதத்திலிறங்கும்);

மறுவ. பாலவிசர்ப்பி

மகாபத்திர

 மகாபத்திர makāpattira, பெ.(n.)

   பூசபத்திரி; a plant to help pooja (சா.அக.);.

மகாபத்திரம்

மகாபத்திரம் makāpattiram, பெ. (n.)

   1. பனைமரம் (சங்.அக.);; palmyra tree.

   2. வில்வ இலை; leaf of bael tree.

   3. தேக்கு; teak (சா.அக.);.

 மகாபத்திரம்1 makāpattiram, பெ.(n.)

   பனைமரம் (சங்.அக.);; palmyra tree.

     [Skt. {}-patra → த. மாகபத்திரம்.]

 மகாபத்திரம்2 makāpattiram, பெ.(n.)

   1. வில்வ இலை; leaf of bael tree.

மகாபத்திரி

 மகாபத்திரி makāpattiri, பெ. (n.)

   சிவப்பாமணக்கு; red castor plant (சா.அக.);.

 மகாபத்திரி makāpattiri, பெ.(n.)

   சிவப்பு ஆமணக்கு; red castor plant (சா.அக.);.

மகாபரணி

 மகாபரணி makāparaṇi, பெ.(n.)

   தென் புலத்தார்க்குச் (பிதிரர்களுக்கு); சிறப்பானதும் மகாளயபக்கத்தில் வருவதுமான பரணி (விண்மீன்); (பஞ்.);; the day of the second naksatra, in {}, auspi- cious for worshipping the manes.

த.வ. பெரும்பரணி.

     [Skt. {} → த. மகாபரணி.]

மகாபற்பன்

 மகாபற்பன் makāpaṟpaṉ, பெ.(n.)

மகாபதுமன் பார்க்க;see {}.

மகாபற்பம்

 மகாபற்பம் makāpaṟpam, பெ.(n.)

மகா பதுமம், (திவா.); பார்க்க;see {}-padumam.

மகாபலன்

மகாபலன் makāpalaṉ, பெ.(n.)

   1. வலு மிக்கவன்; strong person.

   2. காற்று (வின்.);; air, wind.

     [Skt. {}-bala → த. மகாபலன்.]

மகாபலம்

மகாபலம்1 makāpalam, பெ. (n.)

   வில்வம்; bael (சா.அக.);.

 மகாபலம்2 makāpalam, பெ. (n.)

   1. கொழிஞ்சி; sylhet orange.

   2. தூதுவளை; climbing brinjal.

   3. தெங்கு; coconut-plant (சா.அக.);.

 மகாபலம்1 makāpalam, பெ.(n.)

   வில்வம்; bael.

     [Skt. {}-phala → த. மகாபலம்.]

 மகாபலம்2 makāpalam, பெ.(n.)

   மயிர் மாணிக்கம் என்னும் கொடி வகை; cypress- vine. (சா.அக.);;

     [Skt. {}+phala]

 மகாபலம்3 makāpalam, பெ.(n.)

   1. கொழிஞ்சி; orange tree.

   2. பேராமுட்டி; pavonia odorata.

   3. தென்னை; coconut tree.

   4. கொம்மட்டி மாதுளை; a kind of citron.

   5. தூதுவளை; a thorny shrub.

   6. கொழுமிச்சை, ஒரு வகை நார்மரம்;   இதன் பட்டியினின்று சணலைப் போன்ற நார் எடுக்கப்படும்; flax tree-sida rhomboides the bark yields a flax like fibre (சா.அக.);.

     [Skt. {}+phala]

மகாபலா

மகாபலா makāpalā, பெ. (n.)

   1. பேராமுட்டி; a plant.

   2. வரித்தும்மட்டி; stripe country cucumber (சா.அக.);.

 மகாபலா makāpalā, பெ.(n.)

   1. பேராமுட்டி என்னும் மூலிகை; a plant-pavonia adorata.

   2. வரித்தும்மட்டி என்னும் படர்கொடி; a creeper.

மகாபலி

 மகாபலி makāpali, பெ.(n.)

   மாவலி என்னும் அரசன்; an Asura sovereign.

த.வ. மாவலி.

     [Skt. {}-bali → த. மகாபலி.]

மகாபலிகம்

 மகாபலிகம் magāpaligam, பெ. (n.)

   வெள்ளைப் பூசணி; ash gourd (சா.அக.);.

 மகாபலிகம் magāpaligam, பெ.(n.)

   வெள்ளைப் பூசணி; ash gourd (சா.அக.);.

மகாபலிபுரம்

 மகாபலிபுரம் makābaliburam, பெ. (n.)

மாமல்லபுரம் பார்க்க; see {}

மகாபலை

 மகாபலை makāpalai, பெ.(n.)

   வில்வம் (தைலவ.தைல.);; bael tree.

     [Skt. {}-phala → த. மகாபலை.]

மகாபவன்

 மகாபவன் makāpavaṉ, பெ.(n.)

   வெள்ளி (யாழ்.அக.);;{}.

     [Skt. {}-bhava → த. மகாபவன்.]

மகாபாகன்

மகாபாகன் makāpākaṉ, பெ.(n.)

   நற் பேறுள்ளவன்; blessed person.

     “பண்டிதனும் மகாபாகனும் கிருதார்த்தனும்” (சி.சி.பு.84, சிவாக்.);.

     [Skt. {} → த. மகாபாகன்.]

மகாபாகவதம்

மகாபாகவதம் makāpākavadam, பெ.(n.)

   கி.பி. 1543-ல் நெல்லி நகர் வரதராச ஐயங்கார் வடமொழியினின்று தமிழ் மொழியிற் செய்யுளாக இயற்றிய பாகவத நூல்; a Tamil version of the Sanskrit Bhagavatam by Varadaraja Aiyanga of Nellinakar, 1543 A.D.

     [Skt. mahat+ {} → த. மகாபாகவதம்.]

மகாபாசகன்

 மகாபாசகன் magāpācagaṉ, பெ.(n.)

   புத்தபிக்கு (யாழ்.அக.);; a Bauddha mendicant.

த.வ. மாபாசகன்.

     [Skt. {} → த. மகாபாசகன்.]

மகாபாதகம்

 மகாபாதகம் magāpātagam, பெ.(n.)

   ஐம்பெருங்கேடு (பஞ்சமா பாதகம்);; the five heinous crimes.

     “மகாபாதகந் தீர்த்த திருவிளையாடல்” (திருவாலவா.);.

     [Skt. {} → த. மகாபாதகம்.]

மகாபாபத்தழகி

 மகாபாபத்தழகி makāpāpattaḻki, பெ.(n.)

   சீவகமூலி; which see (சா.அக.);.

மகாபாரதம்

மகாபாரதம் makāpāradam, பெ.(n.)

   1. வடமொழியில் பாண்டவர் வரலாற்றைக் கூறும் வியாசபாரதம்; the great sanskrit epic, dealing with the story of the {}, by the sage {}.

   2. பெருந்தேவனார், வில்லிபுத்தூரர், நல்லாப் பிள்ளை போன்றோர் தமிழில் இயற்றிய பாரத நூல்கள்; the tamil renderings of the {}, by {}.

த.வ. மாபாரதம்.

     [Skt. {} → த. மகாபாரதம்.]

மகாபாரதவிருத்தி

மகாபாரதவிருத்தி makāpāradaviruddi, பெ.(n.)

   கோயிலில் மகாபாரதம் படித்துச் சொற்பொழிவு செய்வதற்கு விடப்படும் மானியம் (I.m.p.Tn.91);; allowance for expounding the {} in a temple.

     [Skt. {} → த. மகாபாரத விருத்தி.]

மகாபாரிசவாதம்

மகாபாரிசவாதம் makāpārisavātam, பெ.(n.)

   கையுங் காலும் ஒரு பக்கங்கனத்து, திமிர்த்து, உடல் வீழ்ந்து, நாவு தடுமாறிப் பிழைக்கும் வழியில்லாத தீராத வலிப்பை (சன்னியை); யுண்டாக்குமோர் ஊதை நோய் (யூகி.1200);; para plegia (சா.அக.);

த.வ. பெருமுடக்குநோய்.

மகாபிண்டம்

மகாபிண்டம் makāpiṇṭam, பெ.(n.)

   இயல், இசை, நாடகம் போலப் பல பிண்டங்களை உறுப்பாகக் கொண்ட பெருநூல் (மாறனலங். 20);; a big treatise consisting of several {}.

த.வ. மாபிண்டம்

     [Skt. mahat → த. மகா+பிண்டம்.]

மகாபித்தம்

மகாபித்தம் makāpittam, பெ. (n.)

   வில்வ மரம்; bael tree (சா.அக.);.

 மகாபித்தம்1 makāpittam, பெ.(n.)

மகாகபித்தம் (சங்.அக.); பார்க்க;see {} kapittam.

த.வ. பெரும்பித்தம்.

 மகாபித்தம்2 makāpittam, பெ.(n.)

   வில்வ மரம்; bael tree (சா.அக.);.

மகாபிரதானி

 மகாபிரதானி makāpiratāṉi, பெ.(n.)

   தலைமையமைச்சர்; prime minister.

     [Skt. {} → த. மகாபிரதானி.]

மகாபிரளயம்

மகாபிரளயம் makāpiraḷayam, பெ.(n.)

   உலகம் முடிகின்ற ஊழியிறுதி; dissolution of universe;

 deluge (வின்.);.

   2. ஒரு பேரென்; a great number.

த.வ. பேரூழி.

மகாபிராணம்

 மகாபிராணம் makāpirāṇam, பெ. (n.)

   காகம்; crow (சா.அக.);.

 மகாபிராணம் makāpirāṇam, பெ.(n.)

   காக்கை; crow (சா.அக.);.

த.வ. பெருங்காக்கை.

மகாபுடம்

மகாபுடம்1 makāpuḍam, பெ.(n.)

   நிலத்தில் ஒன்றரை முழச் சதுரமும், இரண்டு முழ ஆழமுள்ள பள்ளத்தில் காட்டெருவையிட்டுப் போடும் புடம் (உ.வ.);; calcination of metals by placing them in a heap of burning {} in a pit one cubit and a cialf square and two cubits deep.

     [Skt. mahat → த. மகா+புடம்.]

 மகாபுடம்2 makāpuḍam, பெ.(n.)

   நான்கு முழ அகலம், நீளம், ஆழமுள்ள சதுரப் பள்ளத்தில் அல்லது குழியில் 1000, வரட்டியில் போடும் மருந்து புடம்; a process of calcining medicines in a pit measuring 2yds x 2yds x 2yds or 2 cubic yeards with 1000, cowdung cakes. The luted cuucible withe medicine is placed in the centre of the pile or above 750 cakes and set fire with camphor when all the cakes are completly burnt into ashes and cooled the crucible is taken out and opened (சா.அக.);.

த.வ. மாப்புடம்.

மகாபுராணம்

மகாபுராணம் makāpurāṇam, பெ.(n.)

   1. முதன்மையான பதினெண் தொன்மங்கள் (தக்கயாகப். 113, உரை);. ; the 18 chief {}.

   2. ஒரு சமண சமயத் தொன்மம்; a Jaina {}.

     [Skt. {}-purana → த. மகாபுராணம்.]

மகாபுருடன்

மகாபுருடன் makāpuruḍaṉ, பெ.(n.)

   நற் குணம் வாய்ந்தவன்; a man distinguished for great personal qualities.

     “அடைக்கலமெனத் தேடிவருவோர்தனமக் காக்குமவனே மகாபுருடனாம்” (அற்ப.சத. 17);.

     [Skt. {}-purusa → த. மகாபுருடன்.]

மகாபூ

 மகாபூ makāpū, பெ.(n.)

   பெருஞ்சீரகம் அல்லது சோம்பு; anise-Aniseed-Anetham foeniculum (சா.அக.);.

மகாபூசிதம்

 மகாபூசிதம் makāpūcidam, பெ.(n.)

பெருஞ்சீரகம், மகாபூ பார்க்க்;see {} (சா.அக.);.

மகாபூசுரபி

 மகாபூசுரபி makābūcurabi, பெ.(n.)

   புன்னை; a tree (சா.அக.);.

த.வ. பெரும்புன்னை.

மகாபூதகடிதானம்

மகாபூதகடிதானம் magāpūtagaḍitāṉam, பெ.(n.)

   கொடை வகை (S.I.I.vii, 21);; a kind of gift.

மகாபூதம்

மகாபூதம் makāpūtam, பெ.(n.)

   ஐம்பெரும்பூதங்கள்; gross elements opp. to {}.

     “பூமி முதலான மகாபூதங்க ளைந்தும்” (பு.வெ.8,33, உரை);.

த.வ. பெரும்பூதம்.

     [Skt. {} → த. மகாபூதம்.]

மகாபூரணசந்திரோதயம்

மகாபூரணசந்திரோதயம் makāpūraṇasandirōtayam, பெ.(n.)

   மருந்து வகை (தஞ்.சர.iii, 68);; a kind of medicine.

     [Skt. {}+candra+udaya → த. மகாபூரண சந்திரோதயம்.]

மகாபூரி

 மகாபூரி makāpūri, பெ.(n.)

   ஒரு பேரெண் (பிங்.);; a great number, ten quintillions.

     [Skt. mahat → த. மகா+பூரி.]

மகாபெலா

 மகாபெலா makāpelā, பெ.(n.)

பேராமுட்டி (மலை); பார்க்க;see fragrant sticky mallow.

     [Skt. {} → த. மகாபெலா.]

மகாபேகன்

 மகாபேகன் makāpēkaṉ, பெ.(n.)

   தவளை; frog (சா.அக.);.

த.வ. மாப்பேகன்

மகாபைசாசிகம்

 மகாபைசாசிகம் magāpaicācigam, பெ.(n.)

   மனநோயைக் குணமாக்கும் மருந்தூட்டப்பட்ட நெய்; a medicated ghee for insanity (சா.அக.);.

மகாபோதி

மகாபோதி makāpōti, பெ.(n.)

   கௌதமர் தங்கியிருந்து அறிவு எழுச்சி பெற்றுப் புத்தரான அரசமரம் (மணிமே. 11, 43, உரை);; the Bo-tree in {} which the Buddha received enlightment.

த.வ. பெரும்போதி.

     [Skt. {} → த. மகாபோதி.]

மகாப்பிரகாசத்தி

 மகாப்பிரகாசத்தி makāppirakācatti, பெ.(n.)

   காக்கைப்பொன் (அப்பிரகம்); (சங்.அக.);; mica.

த.வ தகட்டிழை

     [Skt. {} → த. மகாப்பிரகா+சத்தி.]

மகாப்பிரசாதம்

 மகாப்பிரசாதம் makāppiracātam, பெ.(n.)

   கோயில்களில் கடவுளுக்குப் படைத்து அடியவர்களுக்கு கொடுக்கும் பொங்கல் முதலியன (இ.வ.);; food, sweet meats, etc., which are offered to an idol and distributed afterwards to devotees.

த.வ. அருட்படையல்

     [Skt. {} → த. மகாப்பிரசாதம்.]

மகாப்பிரதானன்

மகாப்பிரதானன் makāppiratāṉaṉ, பெ.(n.)

   தலைமைப் படைத் தளபதி (M.E.R. 497 of 1926);; commandar in chief.

த.வ. முதன்மையன்.

     [Skt. {} → த. மகாப்பிரதானன்.]

மகாப்பிரதோசம்

மகாப்பிரதோசம் makāppiratōcam, பெ.(n.)

   இரண்டு பக்கங்களிலும் வரும் பதின்மும்மியொடு (திரயோதசியோடு); கூடிய கதிரவன் மறையும் வேளை; evening twilight of the 13th titi of the bright and dark fortnights.

     [Skt. {} → த. மகாப் பிரதோசம்.]

மகாப்பிரத்தானம்

மகாப்பிரத்தானம் makāppirattāṉam, பெ.(n.)

   1. வடதிசை நோக்கிச் செல்லும் மீளாப் பெரும்பயணம்; the great journey northward, made with the intention of ending one’s days.

     ‘மகாப்பிரத்தான பருவம்.’

   2. அருகக் கடவுளின் பஞ்ச கல்யாணத் தொன்றாகிய பெருந்துறவு (திருநூற்.பு.உரை);;த.வ. பெரும்பிரிவு.

     [Skt. {} → த. மகாப் பிரத்தானம்]

மகாப்பிரபு

மகாப்பிரபு makābbirabu, பெ.(n.)

   1. பெருஞ் செல்வன்; great, lord; wealthy person.

   2. பெருங்கொடையாளி; a person of great liberality.

     [Skt. mahatprabu → த. மகாப்பிரபு.]

மகாப்பிரளயம்

மகாப்பிரளயம் makāppiraḷayam, பெ.(n.)

   1. உலகம் முடிகின்ற ஊழியிறுதி; final dissolution of the world at the end of a kalpa or the period of Brahma’s lifetime, dist. fr. {}.

   2. ஒரு பேரெண் (வின்.);; a great number.

த.வ. பேரூழி

     [Skt. {}-pralaya → த. மகாப்பிரளயம்.]

மகாப்பிராசத்தி

 மகாப்பிராசத்தி makāppirācatti, பெ.(n.)

   ஒரு வகை அப்பிரகம்; a kind of mica (சா.அக.);.

மகாப்பிராணன்

மகாப்பிராணன் makāppirāṇaṉ, பெ.(n.)

   வலிந்து பலுக்கப்படும் மெய்யெழுத்து (பி.வி.4, உரை);; aspirate.

த.வ. மூச்சொலி.

     [Skt. {} → த. மகாப்பிரணன்.]

மகாப்பிராணம்

 மகாப்பிராணம் makāppirāṇam, பெ.(n.)

   காக்கை (சங்.அக.);; crow.

     [Skt. {} → த. மகாப்பிராணம்.]

மகாப்பிரியபான்னி

 மகாப்பிரியபான்னி makāppiriyapāṉṉi, பெ. (n.)

   சிறுவிடு கொள்; which see (சா.அக.);.

மகாமகம்

மகாமகம் magāmagam, பெ.(n.)

   பன்னி ரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதும் கும்ப (மாசி); மாதத்தில் வியாழன் முழு நிலாவொடு கொடுநுகம் விண்மீன் (மகம்); சேரப்பெறுவதுமான நன்னாளில் கும்ப கோணத்தில் நிகழும் முழுக்கு விழா; the great luni-solar festival at kumbakonam, held once in 12 years in {} when jupiter is in leo and the full moon is in or about makam.

     [மகா+மகம்.]

த.வ. மாமாங்கம்.

     [Skt. {} → த. மகாமகம்.]

மகாமகரப்பூ

 மகாமகரப்பூ magāmagarappū, பெ.(n.)

   வழலை; which see (சா.அக.);.

மகாமகரம்

மகாமகரம் magāmagaram, பெ.(n.)

   ஒரு பேரெண் (நாமதீப.801);; a great number.

     [மகா+மகரம்.]

     [Skt. {}-makara → த. மகாமகரம்.]

மகாமகவிருட்சம்

 மகாமகவிருட்சம் magāmagaviruṭcam, பெ.(n.)

   கற்பக மரம்; a celestical tree which gives whatever is wished for (சா.அக.);.

     [மகாமக + விருட்சம்.]

மகாமகோபாத்தியாய

 மகாமகோபாத்தியாய makāmaāpāttiyāya, பெ.(n.)

   அரசினரால் பெரும் புலவர் களுக்கு அளிக்கப்படும் பட்டம்; a title confered by the Government on scholars.

     [Skt. {} → த. மகாமகோபாத்தியாய.]

மகாமசானம்

 மகாமசானம் makāmacāṉam, பெ.(n.)

   காசி நகரம் (யாழ்.அக.);; Benares city.

த.வ. பெருஞ்சுடலை.

     [Skt. {} → த. மகாமசானம்.]

மகாமண்டபம்

மகாமண்டபம் makāmaṇṭabam, பெ.(n.)

   கோயிலில் அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள பெரிய மண்டபம் (l.m.p.Tn.270);; large pillared-hall next to the artta-{} in a temple.

த.வ. பெருமண்டபம்.

     [Skt. mahat → த. மகா+மண்டபம்.]

மகாமண்டலிகன்

 மகாமண்டலிகன் magāmaṇṭaligaṉ, பெ.(n.)

மகாமண்டலேசுவரன் பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகாமண்லிகன்.]

மகாமண்டலேசுவரன்

மகாமண்டலேசுவரன் makāmaṇṭalēcuvaraṉ, பெ.(n.)

   மண்டலத்தை யாளும் தலைவன் (அதிபதி);; Governor.

மகாமண்டலேசுவர ராமராஜ திம்மராஜ விட்டல மகாராஜா” (l.m.p. Tn.275);.

     [Skt. {} → த. மகாமண்டலேசுவரன்.]

மகாமண்டூரம்

மகாமண்டூரம் makāmaṇṭūram, பெ.(n.)

   பாண்டு நோயைத் தீர்க்கும் மருந்து (பதார்த்த.1210);; a medicine for a anemia.

     [Skt. {} → த. மகா மண்டூரம்.]

மகாமதம்

மகாமதம் makāmadam, பெ.(n.)

   1. மத யானை (யாழ்.அக.);; elephant in rut.

   2. வெறி; blinding excitement.

த.வ. மிகுமதம்.

     [Skt. {}-mada → த. மகாமதம்.]

மகாமந்திரமூர்த்திகள்

 மகாமந்திரமூர்த்திகள் magāmandiramūrttigaḷ, பெ.(n.)

   ஏழரைக்கோடியினரான உயர்தர ஆன்மாக்கள் (வின்.);; a class of souls of superior order, numbering seventy five millions.

     [Skt. mahat+mantra → த. மகாமந்திரம்+ மூர்த்திகள்.]

மகாமந்திரம்

 மகாமந்திரம் makāmandiram, பெ.(n.)

   மூலமந்திரம்; chief mantra.

த.வ. மாமந்திரம்.

     [Skt. {}-mantra → த. மகாமந்திரம்.]

மகாமந்திரி

 மகாமந்திரி makāmandiri, பெ.(n.)

   முதன்மை மந்திரி (யாழ்.அக.);; prime minister.

த.வ. முதன்மை அமைச்சர்.

     [Skt. mahat → த. மகா+மந்திரி.]

மகாமரு

 மகாமரு makāmaru, பெ.(n.)

   கருப்பு வாகை; black speicies of sirissa (சா.அக.);.

மகாமாத்திரன்

மகாமாத்திரன் makāmāttiraṉ, பெ.(n.)

   1. மந்திரி; minister.

   2. செல்வன்; wealthy man.

   3. யானைப்பாகன்; mahout.

     [Skt. {} → த. மகாமாத்திரன்.]

மகாமாத்திரி

மகாமாத்திரி makāmāttiri, பெ.(n.)

   1. குருவின் மனைவி (யாழ்.அக.);; preceptor’s wife.

   2. செல்வி; wealthy woman.

     [Skt. {} → த. மகாமாத்திரி.]

மகாமாயாசக்தி

மகாமாயாசக்தி makāmāyācakti, பெ.(n.)

   1. மகாமாயை, 1 (தக்கயாகப்.104, உரை); பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகாமாயாசக்தி.]

மகாமாயி

 மகாமாயி makāmāyi, பெ.(n.)

கொற்றவை (வின்.);;{}.

த.வ. மாமாயி, மகமாயி.

     [Skt. {} → த. மகாமாயி.]

மகாமாயை

மகாமாயை makāmāyai, பெ.(n.)

   1. மலை மகள் (யாழ்.அக.);;{}.

   2. தூய மாயை (சங்.அக.);;({});

 pure {}.

     [Skt. {} → த. மகாமாயை.]

மகாமாரி

மகாமாரி makāmāri, பெ.(n.)

   1. கொற்றவை (துர்க்கை);;{}.

   2. கொள்ளைநோய்; plague, epidemic disease.

த.வ. மாமாரி.

     [Skt. {} → த. மகாமாரி.]

மகாமார்க்கம்

மகாமார்க்கம் makāmārkkam, பெ.(n.)

   சிறந்த சமயநெறி; great religion, as a path to salvation.

     “வேதமார்க்கம் முதலிய மகாமார்க்கங்களை” (தக்கயாகப். 7, உரை);.

த.வ. பெருநெறி.

     [Skt. {} → த. மகாமார்க்கம்.]

மகாமால்

 மகாமால் makāmāl, பெ. (n.)

   வில்வ இலை; leaf of bael tree (சா.அக.);.

 மகாமால் makāmāl, பெ.(n.)

   வில்வ இலை; leaf of bael tree (சா.அக.);.

மறுவ. மாகபத்திரம்.

     [p]

மகாமிருகம்

 மகாமிருகம் magāmirugam, பெ.(n.)

   யானை (யாழ்.அக.);; elephant.

     [Skt. {}-mrga → த. மகாமிருகம்.]

மகாமிருத்து

 மகாமிருத்து makāmiruttu, பெ.(n.)

சிவபிரான் (யாழ்.அக.);;{}.

     [Skt. {}-mrtyu → த. மகாமிருத்து.]

மகாமிருத்துயஞ்சயம்

 மகாமிருத்துயஞ்சயம் makāmiruttuyañjayam, பெ.(n.)

   ஒரு மந்திரம்; a mantra.

     [Skt. {}+purnam → த. மகாமிருத்து யஞ்சயம்.]

மகாமுகம்

 மகாமுகம் magāmugam, பெ.(n.)

   முதலை (யல.அக.);; crocodile.

     [Skt. {}-mukha → த. மகாமுகம்.]

மகாமுத்திரை

மகாமுத்திரை makāmuttirai, பெ.(n.)

திரிசூல முத்திரையில் தர்ச்சனியை அநாபிகை வளைப்பதாகக் காட்டும் முத்திரை (செங்.10);;({});

 a hand-pose in which the ring- finger in {}-muttirai close round the

 forefinger.

     [Skt. {}-mudra → த. மகாமுத்திரை.]

மகாமுனி

மகாமுனி makāmuṉi, பெ.(n.)

   1. பெருந்தவ முனிவன்; eminent sage.

   2. அகத்தியர் (வின்.);; agastya.

   3. புத்தன் (யாழ்.அக.);; the Buddha.

த.வ. மாமுனி.

     [Skt. {}+muni → த. மகாமுனி.]

மகாமூர்க்கம்

 மகாமூர்க்கம் makāmūrkkam, பெ. (n.)

   நாரத்தை; bitter orange tree (சா.அக.);.

 மகாமூர்க்கம் makāmūrkkam, பெ.(n.)

   நாரத்தை; bitter orange tree (சா.அக.);.

த.வ. பெருங்கொழிஞ்சி.

மகாமூலி

மகாமூலி makāmūli, பெ.(n.)

   1. ஆகா சகருடன் கிழங்கு; sky root-climbing shrub.

   2. கற்பத்துக்கு உதவும் சட்டமுனியின் ஊதை (வாத); நூல் 1000த்தில் சொல்லியுள்ள 23 சிறந்த மூலிகைகள்; the 23 superior drugs related in the Tamil alchemical science 1000 of the siddhar named satta muni- All healing drugs of high potency (சா.அக.);.

த.வ. மாமூலி.

மகாமெலம்

 மகாமெலம் makāmelam, பெ.(n.)

   கொம்மட்டி (சங்.அக.);; country cucumber.

மகாமேகராசாங்கதைலம்

மகாமேகராசாங்கதைலம் makāmēkarācāṅgadailam, பெ.(n.)

   மருந்தெண்ணெய் வகை (தைலவ.தைல.135, வரி, 3, உரை);; a medicinal oil.

     [Skt. mahat +{} → த. மகாமேக ராசாங்கதைலம்.]

மகாமேகரோகம்

 மகாமேகரோகம் makāmēkarōkam, பெ.(n.)

   பிரமேகம், வெட்டை நோய்; gonorrhoea. (சா.அக.);.

மகாமேதை

மகாமேதை makāmētai, பெ.(n.)

   1. பேரறிவு; great intellect.

   2. பேரறிவாளன்; man of great intellect.

   3. மருளூமத்தை என்னும் மூலிகை (மலை.);; cockle-bur.

த.வ. மாமேதை.

     [Skt. mahat+{} → த. மகாமேதை.]

மகாமேதோ

 மகாமேதோ makāmētō, பெ.(n.)

மகா மேதை பார்க்க;see {} (சா.அக.);.

மகாமேரு

மகாமேரு makāmēru, பெ.(n.)

மேருமலை (பிங்.); mt. {}.

     “சாற்று மகாமேருவரைச் சிகரத் துற்றால்” (சிவரக.சிவதன்மா.21);.

த.வ. மாமேரு

     [Skt. {} → த. மகாமேரு.]

மகாமேருதானம்

மகாமேருதானம் makāmērutāṉam, பெ.(n.)

   மன்னவர் புரியும் கொடை வகை (த. நி.போ.பக்.25);; a kind of gift made by kings.

     [Skt. {}+ → த. மகாமேருதானம்.]

மகாமேருப்பிரசம்சை

மகாமேருப்பிரசம்சை makāmēruppirasamsai, பெ.(n.)

   அளவு கடந்த புகழ்ச்சி; immoderate praise.

     “தெரிந்தவர் போலக் காட்டி மகாமேருப்பிரசம்சை பண்ணினீர்” (சிவசம. பக்.36);.

     [Skt. {} → த. மகாமேருப் பிரசம்சை.]

மகாம்

 மகாம் makām, பெ.(n.)

முகாம் (இ.வ.); பார்க்க;see halting place, camp.

     [Ar. {} → த. மகாம்.]

மகாம்புய பீடம்

 மகாம்புய பீடம் makāmbuyapīṭam, பெ. (n.)

சிற்பங்களைத் தாங்கும் பீடம்

 a stand structure of the sculptures.

     [மா-மகா+அம்புயம்+பீடம்]

மகாயக்கியம்

 மகாயக்கியம் makāyakkiyam, பெ.(n.)

மகாயஞ்ஞம் பார்க்க;see {}.

த.வ. மாவேள்வி.

மகாயஞ்ஞம்

 மகாயஞ்ஞம் makāyaññam, பெ.(n.)

மகாயாகம் பார்க்க;see {}.

த.வ. மாவேள்வி.

     [Skt {} → த. மகாயஞ்ஞம்.]

மகாயாகம்

 மகாயாகம் makāyākam, பெ.(n.)

   பஞ்சமகா யாகம்(யாழ்.அக.);; the five sacrifices.

த.வ. ஐம்மாவேள்வி.

     [Skt. {} → த. மகாயாகம்.]

மகாயானம்

மகாயானம் makāyāṉam, பெ.(n.)

   பெளத்தசமய வகை (நீலகேசி, 342, உரை);; a school of Buddhism.

     [Skt. {} → த. மகாயானம்.]

மகாயுகம்

மகாயுகம் magāyugam, பெ.(n.)

   நான்கு யுகங் கூடியதும் 43,20,000 வருடங்கள் கொண்டதுமான காலம் (வின்.);; colossal cycle of time, comprising the four yugas, reckoned as 43,20,000 solar years.

த.வ. மாவூழி.

     [Skt. {}-yuga → த. மகாயுகம்.]

மகாயோசனை

மகாயோசனை makāyōcaṉai, பெ.(n.)

   கோடி யோசனை (நாமதீப.800, உரை);; a crore of {}.

     [Skt. mahat+{} → த. மகாயோசனை.]

மகாயோனி

 மகாயோனி makāyōṉi, பெ.(n.)

   காற்றா (வாயுவா);னது அல்குல் (யோனி); கருப்பம் இவ்விடங்களில் புகும்போது அல்குலில் சதை வளர்ந்து பருமனாக பருக்கும் ஒரு வகையான, பெண்களுக்குண்டாகும் நோய்; a disease of the vagina wherein it is extremely dilated (சா.அக.);.

த.வ. மாயோனி.

மகாரசசூதம்

 மகாரசசூதம் makārasasūtam, பெ.(n.)

   ஓர் உயர் வகை தேமா (மூ.அ.);; a superior kind of mango tree.

     [Skt. {} → த. மகாரசசூதம்.]

மகாரசதம்

 மகாரசதம் makārasadam, பெ.(n.)

   பொன் (யாழ்.அக.);; gold.

     [Skt. {}-rajana → த. மகாரசதம்.]

மகாரசனம்

 மகாரசனம் makārasaṉam, பெ.(n.)

மகாரசதம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [Skt. {}-rajana → த. மகாரசனம்.]

மகாரசம்

மகாரசம் makārasam, பெ.(n.)

   1. மரவகை (சங்.அக.);; a tree.

   2. கஞ்சி (யாழ்.அக.);; gruel.

     [Skt. {}-rasa → த. மகாரசம்.]

மகாரசிங்கி

 மகாரசிங்கி makārasiṅgi, பெ. (n.)

   சினை முட்டை; ovum (சா.அக.);.

 மகாரசிங்கி makārasiṅgi, பெ.(n.)

   நாதம்; ovum (சா.அக.);.

மகாரசிதகாரம்

 மகாரசிதகாரம் makārasidakāram, பெ. (n.)

   மிளகு; pepper (சா.அக.);.

 மகாரசிதகாரம் makārasidakāram, பெ.(n.)

   மிளகு; pepper (சா.அக.);.

     [மகா+ரசிதகாரம்.]

மகாரசிதம்

 மகாரசிதம் makārasidam, பெ. (n.)

   மாமரம்; mango tree (சா.அக.);.

 மகாரசிதம் makārasidam, பெ.(n.)

   மாமரம்; mango tree (சா.அக.);.

மகாரணியம்

 மகாரணியம் makāraṇiyam, பெ.(n.)

   பெருங்காடு(வின்.);; great forest.

த.வ. பெருங்காடு.

     [Skt. {} → த. மகாரணியம்.]

மகாரதன்

மகாரதன் makāradaṉ, பெ.(n.)

   தான் ஒருவனாகிப் பதினாயிரம் வீரரை எதிர்த்துப் பொரவல்ல தேர்வீரன் (பாரத.அணிவ.1);; a warrior on a chariot, capale of fighting single-handed against 10,000 warriors, one of four {}, q.v.

த.வ. பெருந்தேரன்.

     [Skt. {}-ratan → த. மகாரதன்.]

மகாரதம்

மகாரதம் makāradam, பெ.(n.)

   1. மகா ரதனுடைய தேர் (பொருட்.நி.);; the chariot of a {}.

   2. பேராசை; great desire.

த.வ. பெருந்தேர்.

     [Skt. {}-ratha → த. மகாரதம்.]

மகாரபஞ்சகம்

மகாரபஞ்சகம் magārabañjagam, பெ.(n.)

   மகரவெழுத்தில் தொடங்கும் மது, மச்சம், புலால் (மாமிசம்); முத்திரை, மைதுனம் என்ற ஐந்து வகைகள் (தக்கயாகப்.51, விசேடக் குறிப்பு);; the five objects whose names begin with the consonant ma, viz., matu, maccam, {}.

த.வ. ஐம்மகரம்,

     [மகார+பஞ்சகம்.]

மகாரம்

மகாரம்1 makāram, பெ. (n.)

   கல்லுப்பு; rock salt

 மகாரம்2 makāram, பெ. (n.)

   மகாரவெழுத்து; the mystic letter ‘ம’.

     [ம + காரம்.]

மகரம் பார்க்க; see magaram.

 மகாரம் makāram, பெ.(n.)

   1. கல்லுப்பு; rock salt.

   2. மகாரவெழுத்து; the mystic letter

     ‘ம’ (சா.அக.);.

மகாரவி

 மகாரவி makāravi, பெ. (n.)

   றுப்பரிசி; black rice (சா.அக.);.

 மகாரவி makāravi, பெ.(n.)

   கறுப்பரிசி; black rice (சா.அக.);.

மகாரவுப்பு

 மகாரவுப்பு makāravuppu, பெ. (n.)

   கல்லுப்பு (மூ.அ.);; rock salt (சா.அக.);.

 மகாரவுப்பு makāravuppu, பெ.(n.)

   கல்லுப்பு (மூ.அ.);; rock-salt (சா.அக.);.

மகாராசன்

மகாராசன் makārācaṉ, பெ.(n.)

   1. மகா ராசா, 1, 2, 3 பார்க்க;see {}.

   2. கவலை யற்றவன் (யாழ்.அக.);; person free from cure.

   3. சமண குரு (யாழ்.அக.);; Jaina priest.

     [Skt. {} → த. மகாராசன்.]

 மகாராசன் makārācaṉ, பெ.(n.)

   1. பேரரசன்; monarch.

   2. குபேரன்;{}.

   3. பெருஞ்செல்வன்; very wealthy man.

   4. கவலையற்றவன் (யாழ்.அக.);; person free from care.

   5. சமணகுரு (யாழ்.அக.);; Jaina priest.

     [Skt. {} → த. மகாராசா.]

மகாராசமிருகாங்கம்

மகாராசமிருகாங்கம் makārācamirukāṅgam, பெ.(n.)

   ஈளைநோய் தீர்க்குங் வடி நீர் வகை (பதார்த்த.219);; a decoction for the cure of asthma.

     [Skt. {} → த. மகாரச மிருகாங்கம்.]

 மகாராசமிருகாங்கம் makārācamirukāṅgam, பெ.(n.)

   சளி, ஈளைநோய், வீக்கம் முதலிய நோய்களைப் போக்கும் ஓர் ஆயுள் வேத மாத்திரை; an Ayurvedic medicine used for consumption, bronchitis, anaemia etc (சா.அக.);.

மகாராசயோகி

 மகாராசயோகி makārācayōki, பெ. (n.)

   பச்சைக் கற்பூரம்; crude camphor (சா.அக.);.

 மகாராசயோகி makārācayōki, பெ.(n.)

   பச்சைக் கருப்பூரம்; crude comphor (சா.அக.);.

மகாராசா

மகாராசா makārācā, பெ.(n.)

   1. பேரரசன்; paramount king, monarch.

   2. குபேரன் (வின்.);;{}.

   3. பெருஞ்செல்வன்; very wealthy man.

   4. அரசு அளித்து வரும் ஒரு பட்டம்(இக்.வ.);; a title conferred by the Government.

த.வ. பேரரசன்.

     [Skt. {} → த. மகாராசா.]

மகாராசாதுறவு

 மகாராசாதுறவு makārācātuṟavu, பெ.(n.)

   குமார தேவரியற்றிய ஒரு நூல்; a work by {}-tevar.

     [மகாராசா+துறவு.]

மகாராசி

மகாராசி makārāci, பெ.(n.)

மகராசி, 2 (உ.வ..); பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகாராசி.]

மகாராட்டிரம்

மகாராட்டிரம் makārāṭṭiram, பெ.(n.)

   1. ஒரு நாடு (யாழ்.அக.);; the mahratta country.

   2. ஒரு மொழி; the mahratta language.

     [Skt. {} → த. மகாராட்டிரம்.]

 மகாராட்டிரம் makārāṭṭiram, பெ.(n.)

   1. ஒரு மாநிலம்; the mahratta country.

   2. மராட்டிய மொழி; the Maharatta language.

மகாராணி

 மகாராணி makārāṇi, பெ.(n.)

   பேரரசி; empress.

     “மகாராணி மங்கம்மா”. (உ.வ.);

     [Skt. {} → த. மகாராணி.]

மகாராத்திரம்

 மகாராத்திரம் makārāttiram, பெ.(n.)

   நள்ளிரவு (யாழ்.அக.);; mid night.

     [Skt. {} → த. மகாராத்திரம்.]

மகாரிட்டம்

 மகாரிட்டம் makāriṭṭam, பெ. (n.)

   மலைவேம்பு; mountain neem (சா.அக.);.

 மகாரிட்டம் makāriṭṭam, பெ.(n.)

   மலைவேம்பு; mountain neem (சா.அக.);.

மகாருத்திரர்

மகாருத்திரர் makāruttirar, பெ.(n.)

   சிவபெருமான் (சி.போ.பா.1, பக்.54);; lord {}.

த.வ. உருத்திரன்.

     [Skt. {}-rudra → த. மகாருத்திரர்.]

மகாரூபகம்

 மகாரூபகம் magārūpagam, பெ.(n.)

   ஒரு நாடகத் தமிழ் நூல் (யாழ்.அக.);; a work probably written in {}-t-tamil.

     [Skt. {} → த. மகாரூபகம்.]

மகாரூபை

மகாரூபை makārūpai, பெ.(n.)

   1. நல்லுரு வுள்ளவன்; woman of beautiful form.

   2. பார்வதி (கூர்மபு. திருக்கல்.21);;{}.

     [Skt. {} → த. மகாரூபை.]

மகாரேவதம்

 மகாரேவதம் makārēvadam, பெ.(n.)

   முட் பலாசு என்னும் முள்முருக்கு மரம்; a tree erythrina indica (சா.அக.);.

     [Skt. {}+revadam]

மகாரோகம்

 மகாரோகம் makārōkam, பெ.(n.)

   குட்டம் முதலிய பெருநோய் (சங்.அக.);; leprosy and other serious diseases.

த.வ. பெருநோய்.

     [Skt. {} → த. மகாரோகம்.]

மகாரௌரவம்

 மகாரௌரவம் makārauravam, பெ.(n.)

   நிரய வகை (சங்.அக.);; a hell.

     [Skt. {}-raurava → த. மகாரௌரவம்.]

மகார்

மகார்1 makār, பெ. (n.)

   1. மகன்கள்; sons.

     “அவுணர்கோன் மகார்” (கந்தபு. மூவாயிர.58);. 2. குழந்தைகள் (பிங்.);;

 children.

     “இளந்துணை மகாரின்” (பதிற்றுப். 71:7);.

     [முல் (இளமைக் கருத்து வேர்); -→முள் -→முளை -→முளையான் = சிறு குழந்தை, சிறுவன். முள் -→மள். மள்ளன் = இளைஞன், மறவன். மள் -→மழ = இளமை, இளமைக்குரிய மென்மை, குழந்தை. மழ -→மழவு = இளமை, குழந்தை. மழவு -→மகவு = குழந்தை, மகன், மரத்தில் வாழும் விலங்கின் குட்டி. மழ -→மக -→மகள் = பெண், புதல்வி, மனைவி. மகள் -→மகன் -→மகார் (வே.க.4:7);.]

மகாலக்குமி

 மகாலக்குமி makālakkumi, பெ.(n.)

   திரு மகள்; Laksmi.

     [Skt. {}-laksmi → த. மகாலக்குமி.]

மகாலிங்கம்

 மகாலிங்கம் makāliṅgam, பெ. (n.)

   ஒரு மரம்; a tree-weaver bean (சா.அக.);.

மகாலோகம்

 மகாலோகம் makālōkam, பெ. (n.)

   காகம்; crow (சா.அக.);.

மகால்

 மகால் makāl, பெ.(n.)

   அரண்மனை; palace.

     “திருமலைநாயக்கர் மகால்” (உ.வ.);.

     [U. mahal → த. மகால்.]

மகாளயம்

மகாளயம் makāḷayam, பெ. (n.)

   1. கன்னி (புரட்டாசி); மாதத்துக் கரும்பக்கம்; the dark fortnight in ther lunar month of {}.

   2. தென்புலத்தார்க்குக் கன்னித் (புரட்டாசி); திங்களில் வரும் கரும்பக்கத்தில் செய்யும் நினைவேந்தல் நிகழ்ச்சி; offerings to deseased ancestors made during {}.

     [Skt. {} → த. மகாளயம்.]

மகாவாதம்

மகாவாதம் makāvātam, பெ. (n.)

   1. பெருங்காற்று; tempestuous wind.

     ‘மகாவாதம் சென்று தாக்கிய பொழுது’ (தக்கயாகப். 144. உரை);

   2. மகாவாதரோகம் பார்க்க;see {}.

     [Skt. {} → த. மகாவாதம்.]

மகாவாதரோகம்

 மகாவாதரோகம் makāvātarōkam, பெ. (n.)

   வாதக் குடைச்சல் நோய் (பைஷஜ);; nervous disease, palsy.

மகாவிக்கல்

 மகாவிக்கல் makāvikkal, பெ. (n.)

   மிகுந்த ஓசையுடன் பிறக்கும் விக்கல்; hiccupps which produces a feeling of crushing pain at the vulnerable parts stretches out the body in full shaking all the limbs and causes severe thirst. It accurs with a considerable force accompanied by a loud sound (சா.அக.);.

மகாவித்துவான்

 மகாவித்துவான் makāvittuvāṉ, பெ. (n.)

   பெரும்புலவன் என்னும் பட்டம்; a title meaning

     ‘great scholar’

த.வ. பெரும்புலவன்

     [Skt. {} → த. மகாவித்வான்.]

மகாவினிதம்

 மகாவினிதம் makāviṉidam, பெ. (n.)

   பேரா முட்டி எனும் மருந்துச் செடி; a medicinal plant (சா.அக.);.

மகாவிரதம்

மகாவிரதம் makāviradam, பெ. (n.)

   1. சைவ சமயத்தின் உட்சமய மாறனுளொன்றான மாவிரதம். (யாழ். அக.);; a section of Saivaisam.

   2. சைன விரத வகை. (சீவக. 2818, உரை.);;     [Skt. {}-virata → த. மகாவிரதம்.]

மகாவிருக்கம்

 மகாவிருக்கம் makāvirukkam, பெ. (n.)

   சதுரக்கள்ளி; a kind of square Spurge – cactus (சா.அக.);.

மகாவிருட்சாதி

 மகாவிருட்சாதி makāviruṭcāti, பெ.(n.)

   புல்லூரி; a parasite plant (சா.அக.);.

மகாவில்

 மகாவில் makāvil, பெ. (n.)

   பேராமுட்டி எனும் மருந்துச் செடி; a medicinal plant (சா.அக.);.

மகாவெள்ளை

 மகாவெள்ளை makāveḷḷai, பெ. (n.)

   படிகக்கல்; a crystal stone (சா.அக.);.

மகி

 மகி  magi,    தேவாங்கு; Jemur the Indian sloth (சா.அக.).

     [P]

மகிடமர்த்தனி

 மகிடமர்த்தனி magiḍamarttaṉi, பெ. (n.)

மலைமகள் (துர்கை); (சங்.அக.);. {}.

     [Skt. mahisa-mardani → த. மகிடமர்த்தனி மகிசம் – எருமை. மர்த்தனி – கொன்றவள்]

மகிடி

மகிடி1 magiḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. மக்களித்தில் (வின்.);; to be sprained, dislocated.

   2. தலைகீழாக விழுதல் (இ.வ.);, குப்புறக் கவிழ்தல்; to be over turned, to lie down in back

     [மறுக்களி -→மக்களி -→மகளி -→மகடி -→மகிடி (கொ.உ.);]

 மகிடி2 magiḍi, பெ. (n.)

   பாம்பாட்டியின் ஊது சூழல்வகை; a kind of hautboy used by snake- charmers.

     [மகிழ் -→மகிழி -→மகுழி -→மகுடி.]

மனம் மகிழ்த்தும் ஓசைக்குரிய இசைக் கருவி.

 மகிடி3 magiḍi, பெ. (n.)

   1. மந்திரத்தால் பொருளை மறைத்தலும் அதனைக் கண்டெடுத்தலுமாகிய மந்திரக்காரரிடையே நிகழும் போட்டி; trial of magical powers between two enchanters in which one hides some treasure from the other and challenges him to discover it by mantras.

   2. வெளிக்காணாமற் புதைத்தும் புதைத்ததைக் கண்டெடுத்தும் ஆடும் விளையாட்டு வகை (வின்.);; common play where things are hidden by one player and discovered by another.

     [மகிழ் -→மகு -→மகுழி -→மகுடி. மகிழ்வு மிகுவிக்கும் விளையாட்டு.]

மகுடி என்பது மோடி எனத் திரிந்தது.

மகிடிக்குழல்

மகிடிக்குழல் magiḍigguḻl, பெ. (n.)

மகிடி2 பார்க்க;see magidi.

     [மகிடி + குழல்.]

மகிடியெடு-த்தல்

மகிடியெடு-த்தல் magiḍiyeḍuttal,    18 செ.குன்றாவி.(v.t.)

   மகிடியில் மறைந்த பொருளைக் கண்டெடுத்தல் (வின்.);; to search for and discover a thing hidden in magidi.

     [மகிடி + எடு-.]

மகிடிவை – த்தல்

மகிடிவை – த்தல் magiḍivaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. பொருளை மந்திரத்தால் மறைப்பித்தல்; to hide treasure as magicians.

   2. மகிடி விளையாட்டில் ஆடு கருவியைப் புதைத்தல்; to hide a play – thing, as players.

     [மகிடி2 + வை-.]

மகிணன்

மகிணன் magiṇaṉ, பெ.(n.)

   1.கணவன்; husband.

     “நின் மகிணன் றனையும்” (கந்தபு.திருமண.29);.

   2. மருதநிலத் தலைவன்; chief of an agricultural tract.

     “தலைவன் பெயர் ஊரன் மகிணன்” (இறை. களவி.1, பக்.18);.

   3. இறைவன்; lord.

     “மதிய மூர்ச டாமோலி மகிணர்” (தக்கயாகப்.111);.

     [மகிழ் + நன் – மகிழ்நன் -→மகிணன்.]

மகிழ்த்தும் இயல்பினன்.

ஒ.நோ: வாழ்நன் ->வாணன்.

மகிண்டி

 மகிண்டி magiṇṭi, பெ. (n.)

   முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்i; a village in Mudukulattur.Taluk.

     [மகிழ்-மகிழ்ந்தி-மகிண்டி]

மகினம்

 மகினம் magiṉam, பெ. (n.)

   ஆட்சிப் பரப்பு (யாழ்.அக.);; jurisdiction of kingdom.

மகிபாலன்

 மகிபாலன் magipālaṉ, பெ. (n.)

   அரசன் (பிங்.);; king, monarch.

     [Skt. {} → த. மகிபாலன்]

மகிமா

மகிமா magimā, பெ. (n.)

   எண் வகை ஆற்றலுள் (அட்டமாசித்திகளுள்); விருப்பம் போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல்; the supernatural power of increasing size of will one of {}.

     “உள்ளும்புறனு நிறையும் பெருமைதனை யன்றோ மகிமா வென்னும்” (திருவிளை. அட்டமா.23.);;

     [Skt. {} → த. மகிமா.]

மகிமை

மகிமை magimai, பெ.(n.)

   கொங்கணவர் என்னும் பெயரிய சித்தர்; one of the siddhars named Konganavar, the author of several Tamil medical works (சா.அக.);.

 மகிமை magimai, பெ. (n.)

   1. பெருமை. greatness, grandeur, glory, majesty.

     “மங்கல மகிமை மாநகர்” (திருப்பு. 16);;

   2. மதிப்புரவு (வின்.);; Honour, dignity;

 respectability.

மகிமைப்படுத்து-தல்

மகிமைப்படுத்து-தல் magimaippaḍuddudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மதிப்புரவு செய்தல்; to magnify, glorify, dignify.

   2. புகழ்தல்(வின்.);; to extol, praise.

த.வ. பெருமைப்படுத்துதல்

     [Skt. {} → த. மகிமை+படுத்து-.]

மகிரி

 மகிரி magiri, பெ. (n.)

   நீலஞ்ஜோதி எனுஞ் செடி; a plant called {} (சா.அக.);.

மகிளம்

 மகிளம் magiḷam, பெ.(n.)

   பூவிதழ் (யாழ்.அக.);; petal.

மகிளி

மகிளி1 magiḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   மகிடி பார்க்க (வின்.);; see magidi.

 மகிளி2 magiḷi, பெ.(n.)

   1. மகிளிக்கீரை பார்க்க; see {}

   2. சேறு; mire {}.

மகிளிக்கீரை

 மகிளிக்கீரை magiḷigārai, பெ.(n.)

   கீரை வகை (வின்.);; a species of greens.

மகிளிப்பருவம்

 மகிளிப்பருவம் magiḷipparuvam, பெ.(n.)

   சேற்றுக் காலாக உழுது சாகுபடிக்குத் தகுதியான நிலை (நாஞ்.);; condition of wet land prepared for {} cultivation.

     [மகிளி + பருவம். மகிளி = சேறு.]

மகிழடிசேவை

 மகிழடிசேவை magiḻṭicēvai, பெ.(n.)

   சென்னை, திருவொற்றியூர்ச் சிவன் கோயிலில் நிகழும் ஒரு திருநாள்; a festival in the siva shrine of Tiru-v-{} of Chennai.

     [மகிழடி + சேவை.]

மகிழமரம்

மகிழமரம் magiḻmaram, பெ.(n.)

மகிழ்3 பார்க்க; see {}.

     [மகிழம் + மரம்.]

மகிழம்

மகிழம் magiḻm, பெ.(n.)

   மணமுள்ள மரவகை மலர்; pointed – leaved ape-flower.

     “வேங்கை மராஅ மகிழம்” (பரிபா.22,7);.

     [மகிழ் -→மகிழம், மனம் மகிழ்க்கும் நறுமண முள்ள மலர்.]

மகிழம்பூ

மகிழம்பூ1 magiḻmbū, பெ.(n.)

ஓரு பூவகை; {}

 a kind of flower, minu {}.

     [P]

 மகிழம்பூ2 magiḻmbū, பெ.(n.)

   புடைவை வகை; a variety of saree.

மகிழம் பூவின் வடிவம் பொறித்த புடவை.

மகிழம்பூத்தேன்குழல்

 மகிழம்பூத்தேன்குழல் magiḻmbūttēṉguḻl, பெ.(n.)

   மகிழம்பூப் பணிகாரம்; a kind of cake.

     [மகிழம்பூ + தேன்குழல்.]

மகிழம்பூப்பணிகாரம்

 மகிழம்பூப்பணிகாரம் magiḻmbūppaṇigāram, பெ.(n.)

   பணியார வகை; a kind of cake made in imitation of {}flowers.

     [மகிழம்பூ + பணிகாரம்.]

மகிழலகு

மகிழலகு magiḻlagu, பெ.(n.)

   மகிழம் விதை (திவ்.இயற்.1,49);; seed of the {} tree, formerly used in astrological calculation.

     [மகிழ் + அலகு.]

மகிழிசை

மகிழிசை magiḻisai, பெ.(n.)

   செந்துறைப் பாட்டுள் ஒரு வகை (யாப்.வி.538);; a kind of centurai-p-pattu.

     [மகிழ் + இசை.]

மகிழின்பரல்

 மகிழின்பரல் magiḻiṉparal, பெ.(n.)

மகிழலகு பார்க்க; see {}.

மகிழ்

மகிழ்1 magiḻtal,    4. செ.கு.வி.(v.i.)

   1. அகங்களித்தல்; to joy, rejoice, exult.

     “காணின் மகிழ்ந்துள்ளம்” (குறள், 1057 );.

   2. உணர்வழிய உவகையெய்துதல்; to forget oneself out of joy.

     “உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில்காமத்திற் குண்டு” (குறள், 1281);.

   3. குமிழியிடுதல்; to bubble up in boiling.

     ‘சோறு மகிழ்ந்து வருகிறது’ (உ.வ.);.

     [முகு -→மகு -→மகிழ்.]

 மகிழ்3 magiḻ, பெ. (n.)

   1. இன்பம்; joy exhilaration, happiness.

     “மகிழ்சிறந்து” (புறநா.20,32);

   2. குடிவெறி; intoxication from liquor.

     “மகிழ்மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ” (ஐங்குறு.42);. 3. மது;

 toddy or liquor.

     “பிழி மகிழுண்பார் பிறர்” (பு.வெ.2, 11);.

     [முகி -→மகிழ்.]

 மகிழ்4 magiḻ, பெ. (n.)

   மணமுள்ள மலர் தரும் மரவகை; pointed-leaved ape-flower – mimusaps elangi.

     “மகிழ்மாலை மார்பினன்” (திவ்.திருவாய்.4, 10, 11);.

மகிழ் – தல்

மகிழ் – தல் magiḻtal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. விரும்புதல்; to wish, desire.

     “மங்கலவணியிற் பிறிதணி மகிழாள்” (சிலப்.4:50);.

   உண்ணுதல்; to take in drink.

     “தேறன் மகிழ்ந்து” (புறநா.129);.

     [முகு -→மகு -→மகிழ்-.]

மகிழ்ச்சி

மகிழ்ச்சி magiḻcci, பெ. (n.)

   1. உவகை; joy, pleasure, delight, gladness.

     “மன்னா மகிழ்ச்சி யறிவுடையாளர்க ணில்” (நாலடி, 16);.

   2. மகிழ்ச்சியணி (சூடா.); பார்க்க; see {}.

     [மகிழ் -→மகிழ்ச்சி.]

மகிழ்ச்சிநிலை

மகிழ்ச்சிநிலை magiḻccinilai, பெ. (n.)

   உள்ள மிகுதி; elation of spirits.

     “மார்பன் மடவரற் புணர்ந்த மகிழ்ச்சி நிலை” (பு.வெ.10, பொதுவி.முல்லைப்.1, கொளு);.

     [மகிழ்ச்சி + நிலை.]

மகிழ்ச்சியணி

மகிழ்ச்சியணி magiḻcciyaṇi, பெ. (n.)

   மகிழ்ந்து சொல்லுகையாகிய அணிவகை (வீரசோ.அலங்.12);; figure of speech in which joy is expressed.

     [மகிழ்ச்சி + அணி.]

மகிழ்ச்சிவினை

மகிழ்ச்சிவினை magiḻcciviṉai, பெ. (n.)

   நல்லூழ், நல்வினை, அறம்; religious merit, good destiny or virtue.

     “மேவிய மகிழ்ச்சி வினைப் பயனுண் குவர்” (மணிமே.30:81);.

     [மகிழ்ச்சி + வினை.]

மகிழ்த்தாரான்

மகிழ்த்தாரான் magiḻttārāṉ, பெ.(n.)

மன்மதன் (நாமதீப.58, உரை);;{},

 the Indian cupid.

     [மகிழ் + தாரன்.]

மகிழ்நன்

மகிழ்நன் magiḻnaṉ, பெ.(n.)

   1. மகிணன், 1 பார்க்க; see {}.

     “மகிழ்நன் மகிழ்நன் பரத்தமை நோவேன் றோழி” (கலித். 75);.

   2. மகிணன், 2 பார்க்க; see {}.

     “எய்தின னாகின்று கொல்லோ மகிழ்நன்” (ஐங்குறு.24);.

     [மகிழ் + நன்.]

மகிழ்வட்ட ஓட்டம்

 மகிழ்வட்ட ஓட்டம் magiḻvaṭṭaōṭṭam, பெ. (n.)

   வட்டத்தில் உள்ளும் வெளிப்புறத்தும் உள்ளவர்கள் இணை சேர்ந்து விளையாடல்; merry go round.

     [மகிழ்+வட்டம்+ஒட்டம்]

மகிழ்வு

மகிழ்வு magiḻvu, பெ.(n.)

மகிழ்ச்சி பார்க்க; see {}.

     “இன்பமு மகிழ்வு மெங்கும்” (பெரியபு. நாட்டு.31);.

     [மகிழ் -→மகிழ்வு.]

மகீ

 மகீ maā, பெ. (n.)

மகி பார்க்க (யாழ்.அக.);; see magi.

மகீசணி

 மகீசணி maācaṇi, பெ. (n.)

   ஐந்திலை நொச்சி; a small tree.

மகுட ஆட்டம்

 மகுட ஆட்டம் maguḍaāḍḍam, பெ. (n.)

   கணியான் கூத்தின் வேறு பெயர்; a name for ‘kaniyānāttam’.

     [மகுடம்+ஆட்டம்]

மகுடஞ்சூட்டுதல்

 மகுடஞ்சூட்டுதல் maguḍañjūḍḍudal,  coronation.

     [மகுடம் + சூட்டுதல்.]

மகுடஞ்சூழ் – தல்

மகுடஞ்சூழ் – தல் maguḍañjūḻtal,    2 செ.கு.வி.(v.i.)

   1. கண்ணொளி மங்குதல்; to become dim as eye sight.

     ‘அவனுக்குக் கண் மகுடஞ் சூழ்ந்து போயிற்று’ (உ.வ.);.

   2. செருக்கால் புறக்கணிப்புக்கு ஆளாதல்; to become regardless of others, as one elevated to a high office.

     [மகுடம் + சூழ்.]

மகுடம்

மகுடம் maguḍam, பெ. (n.)

   1. மணிமுடி; crown

     “அரக்கன்றன் மகுடம்” (கம்பரா.முதற்போ.246);.

   2. தலைப்பாகை வகை (வின்.);; head – dress, turban, cresft, tiara.

   3. புனைவான உச்சி; anything crest – like, as the ornamental top of a temple car.

   4. பல பாடல்களில் ஒரே வகையில் வரும் முடிவு; finishing part of stanzas in a poem, in the form of a refrain.

   5. கட்டுரை முதலியவற்றின் தலைப்பு; title, captain.

   6. சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று (திருமந்.73);; an ancient Saiva scripture, one of 28 {}, q.v.

   7. ஓலைச் சுவடியின் மணி முடிச்சுக் கொண்டை (யாழ்ப்.);; ornamental button of an olai book.

   8. மாதர் காதணி வகை; a ear – ornament worn by women (J.);.

   9. மத்தளம் முதலியவற்றின் விளிம்பு (சங்.அக.);; edge of drums.

   10. பறை வகை (நாஞ்.);; a kind of drum

   11. ஒளிமங்கல்(வின்.);; dimness of vision, obscurity.

     ‘எனக்குக் கண் மகுடமாயிருக்கிறது'(உ.வ.);.

     [முகடு (முகடம்); -→மகுடம்.]

மகிழ் ->மகிழம் ->முகுளம் ->முகுடம் ->மகுடம். மொட்டுப் போன்ற கூம்பிய மணி முடி.

முகம் ->முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி, முகடு = உச்சி, வீட்டின் உச்சி, வாணமுகடு, தலை, உயர்வு. முகடு -> (முகடம்); ->மகுடம். இனி, முகிழ் ->முகிழம் ->முகுளம் ->முகுடம் ->மகுடம் = மொட்டுப் போற் கூம்பிய மணிமுடி என்றுமாம்.

வ.மகுட (t.);, முகுட (t.); பேராசிரியர் பரோ இச்சொல்லைத் தென் சொல்லென்றே கூறுவர். (The Sanskrit Language p.381); முகுடம் பிறை வடிவினதென்றும், கிரீடம் குவிந்ததென்றும், மெளலி மும்முனைய தென்றும் மா.வி.அ.கூறும் (வ.மொ.வ.212, 213); (செல்வி.செப்.78, பக்.11); (மு.தா.105);.

 மகுடம் maguḍam, பெ. (n.)

   கணியான் கூத்தில் இசைக்கப்பெறும் தப்பு போன்ற ஓர் இசைக்கருவி; a musical instrument in ‘kaniyān küttu’.

     [மகிழ்-மகிழம் – மகுடம்]

மகுடயோகம்

 மகுடயோகம் maguḍayōgam, பெ.(n.)

   ஐந்தாமிடத்திற் குருவும் பத்தாமிடத்திற் சனியும் ஒன்பதாமிடத்திற் பஞ்சமாதிபதியும் இருக்க வரும் நிலை (சங்.அக.);; a status, when Jupiter is situate in the fifth, Saturn in the tenth house and the lord of the fifth in the ninth house.

     [மகுடம் + Skt.யோகம்]

மகுடி

மகுடி maguḍi, பெ.(n)

   1. மகிடி2 பார்க்க; see magidi.

   2. ஓர் இசைக் கருவி; a kind of trumpet or flute.

     “மகுடியின் கிளை யிமிழ்த்தனர்” (பாரத.அணி15);.

     [P]

மகுமம்

 மகுமம் magumam,    மார்பு; breast, chest.

     [மருமம் -→மார்பு, இலை. மருமம் -→மகுமம்.]

மகுரக்கா

 மகுரக்கா maguraggā, பெ.(n.)

   வழுதலை எனுஞ்செடி; brinjal plant (சா.அக.);.

மகுலம்

 மகுலம் magulam, பெ.(n.)

   மகிழ்பூ; pointed – leaved ape-flower.

மகுளம்பல்

 மகுளம்பல் maguḷambal, பெ.(n.)

   கவிழ் தும்பை; a species of dead nettle plant (சா.அக.);.

மகுளி

மகுளி maguḷi, பெ.(n.)

   1. ஓசை; sound, noise.

     “உருடுடி மகுளியிற் பொருடெரிந் திசைக்கும் கடுங்குரற் குடிஞைய” (அகநா:19);.

   3.எட்பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்குநோய் (மலைபடு.103);; redness, a disease affecting sesame and other plants.

மகுளிபாய் – தல்

மகுளிபாய் – தல் maguḷipāytal,    2 செ.கு.வி. (v.i.)

   நீரின்மையால் எள்ளு முதலிய செடி கொடிகள் செந்நிறமடைதல்; to turn red for want of water, as sesame, etc.

     [மகுளி + பாய் -.]

மகூலம்

 மகூலம் maālam, பெ.(n.)

   மலர்ந்த பூ; blossom flower.

மகேசன்

மகேசன் maācaṉ, பெ. (n.)

   சிவபிரான்; Siva.

மேலவர்க் கல்லா லின்றே விழுமிய மகேச நாமம் (இரகு. யாக.58);.

     [Skt. {} → த. மகேசன்.]

மகேச்சுரர்

மகேச்சுரர் maāccurar, பெ. (n.)

   சிவனடியார். (சிலப்பிர. 48, உரை.);; devotees as Siva.

     [Skt. {} → த. மகேச்சுரர்.]

மகேந்திரம்

மகேந்திரம் maāndiram, பெ. (n.)

   1. ஒரு மலைத் தொடர்; a range of mountains.

   2. கஞ்சம் மாவட்டத்திலுள்ள ஒரு மலை; a mountain 32 miles south – west of Berhampore, in Ganjam of with ancient Siva shrine.

மந்திர மாமலை மகேந்திர வெற்பன் (திருவாச. 2,100);.

த.வ. மாவிந்தம்

     [Skt. {} → த. மகேந்திரம்.]

மகோதரம்

 மகோதரம் maātaram, பெ. (n.)

   பெருவயிற்று நோய்; dropsy of the abdomen, ascitis.

த.வ. பெருவயிற்றுநோய்

     [Skt. மகா+உதரம்.]

மகோந்நதம்

 மகோந்நதம் maānnadam, பெ. (n.)

பனைமரம் palmyra tree – Borassus flabellifer. (சா.அக.);

     [Skt. மகா + உன்னதம்.]

மகோன்னதம்

மகோன்னதம் maāṉṉadam, பெ. (n.)

   1. மிக்க உயரம்; height, loftiness.

   2. உயர்ந்த நிலை; high rank, high position.

   3. பனை. (மூ.அ);; palmyra, palm.

     [Skt. {}-nata → த. மகோன்னதம்.]

மகோன்மதம்

 மகோன்மதம் maāṉmadam, பெ. (n.)

   மிகு மயக்க வெறி. (யாழ். அக.);; extreme intoxication.

     [Skt. {} → த. மகோன்மதம்.]

மகோற்சவம்

 மகோற்சவம் maāṟcavam, பெ. (n.)

   பெரிய திருநாள்; great festival.

த.வ. பெருவிழா

     [Skt. {}-sava → த. மகோற்சவம்.]

மக்கடபுத்தி

 மக்கடபுத்தி makkaḍabutti, பெ.(n.)

   குறும்புத் தனம் (வின்.);; mischievous tendency.

     [ஒருகா.மழுக்கடம் + Skt.புத்தி.]

மக்கடி-த்தல்

மக்கடி-த்தல் makkaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   உருவழித்தல் (வின்.);; to deform, disfigure.

     [மழுக்கடி -→மக்கடி -,]

மக்கட்கதி

மக்கட்கதி makkaṭkadi, பெ.(n.)

   நான்கு நிலைகளுள் மக்களாய்ப் பிறக்கும் பிறப்பு (சீவக.2790, தலைப்பு);; birth as a human being, one of {}(q.v.);.

     [மக்கள் + Skt.கதி.]

 Skt.கதி >த.நிலை.

மக்கட்கதியெழுத்து

மக்கட்கதியெழுத்து makkaṭkadiyeḻuddu, பெ.(n.)

   ஆ, ஈ, ஊ, ஏ என்ற நான்கு உயிர் நெடிலும், ங, ஞ, ண, ந, ம என்ற ஐந்து மெய்யெழுத்துகளும் (பன்னிருபா, 24);; the four long vowels {} and the consonants {}.

மக்கட்சேவகன்

மக்கட்சேவகன் maggaṭcēvagaṉ, பெ.(n.)

   மக்கள் ஊழியன்; one who does personal service, social worker.

     “தண்டுகிற நெல்லு மக்கட் சேவகர்க் கொண்டு” (தெ.க.தொ.4:33);.

     [மக்கள் + Skt.சேவகன்.]

மக்கட்சேவகம்

மக்கட்சேவகம் maggaṭcēvagam, பெ.(n.)

   மக்கள் ஊழியம்; service to the people.

     “மக்கட் சேவகப் பேற்றுக்குப் பரப்பு ஒரு மாவுக்குக் குறுணியாக” (தெ.க.தொ.4:33);.

     [மக்கள் + Skt.சேவகம்.]

மக்கட்டம்பிடி – த்தல்

மக்கட்டம்பிடி – த்தல் makkaḍḍambiḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   இழுபறிப்படுதல் (யாழ்.அக.);; to be landed in difficulties.

     [முக்கட்டு -→முக்கட்டம் -→மக்கட்டம் + பிடி -. முக்கட்டு = துன்பநிலை (தஞ்சை வழக்கு);.]

மக்கட்டாயம்

 மக்கட்டாயம் makkaṭṭāyam, பெ.(n.)

   மகன் முறையாய் வரும் தாய வுரிமை; system of inheritance rights to the sons, succession in the time of sons,dist.fr. {}.

     [மகன் -→மக்கள் + தாயம். (மக்கள் – ஆண்பாற் பன்மை.]

மக்கட்டு

மக்கட்டு1 makkaṭṭu, பெ.(n.)

   மணிக்கட்டு (தக்கயாகப்.99, உரை);; wrist.

     [மணிக்கட்டு -→மக்கட்டு]

 மக்கட்டு2 makkaṭṭu, பெ.(n.)

   அரையில் ஆடையின் மேற்கட்டுங்கட்டு; waistband.

     “புதுப்புது மக்கட்டலை மக்கட்டினரே” (தக்கயாகப். 9);.

     [மேல் + கட்டு -→மேக்கட்டு -→மக்கட்டு.]

மக்கட்பரப்பு

__,

பெ.(n.);

   1.மன்பதை; humanity, human beings.

   2. நாட்டு மக்கள் (திவா.);; inhabitants or citizens of a state, the public, the common wealth.

     [மக்கள் + பரப்பு.]

மக்கட்பாடு

மக்கட்பாடு makkaṭpāṭu, பெ.(n.)

   மக்களுடைய முயற்சி; human effort.

     “மக்கட் பாட்டினானும் வலியானும்….. பெறலாவதன்று” (இறை.1.10);.

     [மக்கள் + பாடு.]

மக்கட்பேறு

மக்கட்பேறு makkaṭpēṟu, பெ.(n.)

   1. பிள்ளை; obtaining children.

   2.பெறுகை; be getting children.

     “அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற” (குறள், 61);.

     [மக்கள் + பேறு.]

மக்கண்முரி

மக்கண்முரி makkaṇmuri, பெ.(n.)

   வடிவின் சிறியவ-ன்-ள் (கலித்.94);; dwarf, chit slip of a person, used in contempt.

     [மக்கள் + முரி (முரி = சிறுமை);.]

மக்கனம்

மக்கனம் makkaṉam, பெ.(n.)

   1. மூழ்குகை; immersion

   2. அவமானம் (வின்.);; disgrace, shame.

     [மக்கு -→மக்கனம்.]

 மக்கனம் makkaṉam, பெ.(n.)

   1. மூழ்குகை; immersion.

   2. அவமானம்; disgrace.

     [Skt. magna → த. மக்கனம்.]

மக்கனீசம்

 மக்கனீசம் makkaṉīcam, பெ.(n.)

   தங்கம்; Refined gold (சா.அக.);.

மக்கன்

மக்கன் makkaṉ, பெ.(n.)

   மந்தன்; dullard.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); -→முள் -→மள் -→மள்கு -→மட்கு. மட்குதல், ஒளி மங்குதல், அழுக்கடைதல், வலி குன்றுதல். ஒ.நோ. வெள் -→வெள்கு -→வெட்கு. மட்கு -→மக்கு = மந்தன், அறிவிலி. மக்கு -→மக்கன் (வே.க.4:60);.]

மக்கமல்லார்-தல்

மக்கமல்லார்-தல் makkamallārtal,    2. செ.கு.வி. ( v.i.)

   மல்லாந்து கிடத்தல் (வின்.);; to lie on the back.

     [மக்க + (மீமிசை அடைச்சொல்); மல்லார். மலர் -→மல்லார்-. மலர்தல் = முன்புறம் மேணோக்கி இருத்தல். “கவிழ்ந்த மண்டை மலர்க்குநர்யாரென” (புறநா.103);.]

மக்கம்

மக்கம் 1 makkam, பெ.(n.)

   எருக்கு (மலை.);; madar. Madder- Rubia cordifolia.

 மக்கம்2 makkam, பெ.(n.)

   நெய்வோர் தறி (வின்.);; loom.

தெ.மக்கமு;க.மக்க.

     [P]

மக்கர்

 மக்கர் makkar, பெ. (n.)

   இடக்கு, இடைஞ்சல்; rudeness.

     [Ar. makr → த. மக்கர்.]

மக்கல்

மக்கல் makkal, பெ.(n.)

   கெட்டுப்போன பொருள்; anything spoiled.

அரிசி மக்கலாயிருக்கிறது(உ.வ.);.

     [முல்(பொருந்தற் கருத்து வேர்); -→முள் -→மள் -→மள்கு. மள்குதல் = ஒளி குறைதல், குறைதல். மல்கு → மழுகு → மழுகுதல் →= ஒலிகுறைதல். மழுகு -→மழுங்கு -→மங்கு. மள்கு -→மட்கு. மட்குதல் = மயங்குதல், ஒளி மங்குதல், அழுக்கடைதல், வலி குன்றுதல். மட்கு -→மக்கு -→மக்குதல் = ஒளி மழுங்குதல், அழுக்கேறுதல், கெட்டுப்போதல். மக்கு -→மக்கல் (வே.க.4:60);.]

மக்கல்நாற்றம்

 மக்கல்நாற்றம் makkalnāṟṟam, பெ.(n.)

   கெட்ட வாடை; fusty, stink.

     [மட்கு -→மக்கு. மக்கல் + நாற்றம்.]

மக்கல்லசூளை

 மக்கல்லசூளை makkallacūḷai, பெ.(n.)

மக்கல்லம் பார்க்க;see makkallam (சா.அக.);.

மக்கல்லம்

 மக்கல்லம் makkallam, பெ.(n.)

   மகவீன்ற பெண்களின் கருப்பையிலிருந்து அழுக்கு முழுவதுமாய் வெளிப்படாததினால் ஏற்படும் நோய்; a disease in which lochia of newly delivered woman is obstructed in its exit by the local voyu and thereby causing growths (nodules); below the naval on the sides of the pelvis or the pubis. Severe piercing pain is felt about the region of navel stomach and bladder (சா.அக.);.

மக்களவை

 மக்களவை makkaḷavai, பெ. (n.)

   நாடாளுமன்றம்; parliament, loksaba.

மறுவ. நாடாளுமன்றம்

     [மக்கள்+அவை]

மக்களவைத் தலைவர்

 மக்களவைத் தலைவர் makkaḷavaittalaivar, பெ. (n.)

   நாடாளுமன்ற உறுப்பினர்களால் தலைமைப் பொறுப்புக்குத் தெரிவு செய்யப் படுபவர்; speaker of the parliament.

     [மக்களவை+தலைவர்]

மக்களாட்சி

 மக்களாட்சி makkaḷāṭci, பெ. (n.)

வாக்களிக்கும் உரிமை பெற்ற மக்களால் தெரிந் தெடுக்கப்பெறும் உறுப்பினர்கள் பங்கேற்று நடத்தும் ஆட்சி முறை

 democracy.

     [மக்கள்+ஆட்சி]

மக்களி

மக்களி1 makkaḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. குணமடைந்த நோய் திருப்புதல் (சென்னை);; to return, relapse, as disease.

   2. உடற் சந்து பிசகுதல்; to be dislocated, as the joints.

     [மறுக்களித்தல் -→மக்களித்தல். ஒ.நோ. ஒருக்களித்தல் -→ஒக்களித்தல்.]

 மக்களி2 makkaḷittal,    18 செ.குன்றாவி.(v.t.)

   மாற்றுதல்; to modify, revoke, supersede, retract.

மக்களித்துப் பேசாதே (உ.வ.);.

     [மறுக்களி-, -→மக்களி-,]

 மக்களி3 makkaḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   புரளுதல்; dislocality.

     [மறுக்களித்தல் மறுபுறம் திரும்புதல். மறுக்களி -→மக்களி-,]

மக்களிக்குசுரம்

 மக்களிக்குசுரம் makkaḷikkusuram, பெ.(n.)

   பழம்சுரம்; relapsing fever (சா.அக.);.

மக்களிப்பு

மக்களிப்பு makkaḷippu, பெ.(n.)

   1. புரளுகை; failures, defect, distortion

   2. குணமான நோய் திரும்புகை; returning or relapse, as of a disease.

     [மறுக்களிப்பு -→மக்களிப்பு.]

மக்களுறை

 மக்களுறை makkaḷuṟai, பெ.(n.)

   மக்கள் மருந்து; medicine for human being (சா.அக.);.

     [மக்கள் + உறை.]

மக்கள்

மக்கள் makkaḷ, பெ.(n.)

   1. மாந்தவினம்; human beings, in general.

     “உயர்திணை யென்பனார் மக்கட் சுட்டே” (தொல்.சொல்.1);.

   2. ஐம்பொறியுணர்வொடு மனவறிவுமுடைய உயிர்கள்; human beings for excellence as having the five senses as well as the mind which is the sixth sense.

     “மக்கள் தாமே ஆறறி வுயிரே” (தொல்.பொருள்.558);.

   3. பிள்ளைகள்; children.

     “தம்பொரு ளென்ப தம்மக்கள்” (குறள், 63);.

     “விலங்கொடு மக்களனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்” (குறள், 410);.

     “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” (பழமொழி);.

ம.,க. மக்கள்.

மக்கள் நாச்சி

 மக்கள் நாச்சி makkaḷnācci, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [மக்கள்+நாச்சி]

மக்கள்பாட்டு

 மக்கள்பாட்டு makkaḷpāṭṭu, பெ.(n.)

   இந்துத் தானிகுரலில்(தொனி);யில் அமைந்த ஒருவகை இசைப்பாட்டு (டப்பா பாட்டு); ; Tamil song attuned to Hindustan style of music

     [மக்கள்+பாட்டு]

மக்கள்வழி

 மக்கள்வழி makkaḷvaḻi, பெ.(n.)

   மக்கள் சொத்துரிமை; patriarchal, system of inheritance in which the property descends to the sons.

     [மக்கள் + வழி.]

மக்கா

மக்கா makkā, பெ.(n.)

   அரேபியாவிலுள்ளதும் முகம்மது பிறந்ததால் பேர் பெற்றதுமான இடம்; Mecca, one of the two chief cities of Arabia, celebrated as the birth-place of Muhammad.

     “வேரியம் பணைசூழ் மக்க மிக்கொக்கு” (திருவிளை.நரியர்.105);.

     [Ar. makkah → த. மக்கா.]

மக்காச்சோளம்

 மக்காச்சோளம் makkāccōḷam, பெ.(n.)

   ஒருவகைச் சோளம்; maize Indian corn – Zea mays.

     [P]

மக்காணி

 மக்காணி makkāṇi, பெ. (n.)

   மக்காச்சோளம். (கொ.வ.);; maize, Indian corn, zea mays.

மக்காயன்

 மக்காயன் makkāyaṉ, பெ.(n.)

   மூடன் (இ.வ.);; dullard, idiot.

     [மக்கு -→மக்கன் -→மக்காயன்.]

மக்காரெட்டி

மக்காரெட்டி makkāreṭṭi, பெ.(n.)

   பழைய நாணய வகை (சரவண, பணவிடு. 58-59);; an ancient coin.

மக்கி

மக்கி1 makki,  ceylon gamboges.

   2. குளிகை வகை (யாழ்.அக.);; a medicinal pill.

 மக்கி2 makki, பெ.(n.)

   ஈ; house fly (C.G.);.

 மக்கி3 makki, பெ.(n.)

   வென்பார்க்கல் (யாழ்ப்.);; marl, calcareous earth.

 மக்கி1 makki, பெ.(n.)

   ஈ (C.G.);; fly.

     [Skt. {} → த. மக்கி.]

 மக்கி2 makki, பெ.(n.)

   வெண்பார்க்கல் (J.);; marl, calcareous earth.

     [Skt. {} → த. மக்கி2.]

மக்கிக்கலவை

 மக்கிக்கலவை makkikkalavai, பெ.(n.)

   பிசின் கலப்பு; a compound of gambage.

     [மக்கி + கலவை.]

மக்கிக்குமக்கி

மக்கிக்குமக்கி  makkikkumakki,    ஈயடிச்சான் காப்பி; exact reproduction or copy (C.L.).

க.மக்கிகாமக்கி.

மக்கிகா

__,

பெ.(n.);

   எருக்கு; muddar plant(சா.அக.);.

=

மக்கிச்செடி

 makkicceṭi,

பெ.(n.);

   மக்கிப் பிசின் எடுக்கும் ஒருவகைச் சீனச்செடி; a kind of tree yielding gamboggi(சா.அக.);.

=

மக்கிசாபுகையிலை

 makkicāpukaiyilai,

பெ.(n.);

   மூக்குத்தூள் புகையிலை; tobacco used for preparing snuff (சா.அக.);.

=

மக்கிட்டுப்பிடி

 makkiṭṭuppiṭi,

பெ.(n.);

   கைகளாற் கட்டிப் பிடிக்கும் பிடிப்பு; grip by throwing one’s arms round another.

மக்கிட்டுப்பிடியாகப் பிடித்தான் (இ.வ.);.

     [மல் + கட்டு + பிடி.]

மற்போர்க்குரிய கட்டுப்பிடி.

=

மக்கிமுக்கி

__,

மக்கி1 பார்க்க(யாழ்ப்.);; see makki.

=

மக்கிமுக்கிமரம்

 makkimukkimaram,

பெ.(n.);

   ஒருவகைப் பிசின் மரம்; Ceylon gamboges tree.

     [மக்கிமுக்கி + மரம்.]

=

மக்கிறந்தம்

 makkiṟantam,

பெ.(n.);

   பித்தளை; brass (சா.அக.);.

=

மக்கு1 – தல்

 makku-,

   5 செ.கு.வி.(v.i.);

 to die, perish.

   2.மந்தமாதல்; to become dull.

     “மக்கிய ஞானத் தீயால்” (கைவல்.தத்.90);.

   3.கெடுதல்; to decay, as fruits.

   4.அழுக்கேறுதல் (வின்.);; to moulder.

   5.ஈரத்தாற் கெட்டுப் போதல்; to be spoiled, as by dampness.

அரிசி மக்கிப் போய் விட்டது (உ.வ.);.

   6.கருத்துப்போதல்; to become dark or block

வெள்ளி மக்கி விட்டது(உ.வ.);.

     [ முல்(பொருந்தற் கருத்துவேர்); -→முள் -→மள் -→மள்கு -→மட்கு. மட்குதல் = ஒளி மழுங்குதல், அழுக்கேறுதல், கருத்துப்போதல், கெட்டுப் போதல். மட்டு -→மக்கு (வே.க. 4:60);.]

=

மக்கு2

 makku,

பெ.(n.);

   1.மந்தகுணம்; Sluggishness, doltishness.

   2.அறிவிலி; ignorant person, dullard.

     [முல் -→முள் -→மள் -→மள்கு -→மட்கு -→மக்கு (வே.க. 4:60);.]

=

மக்கு 3

 makku,

பெ.(n.);

   1. அடைமண்; soft clay for filling up crevices in walls.

   2. மரவேலையிற் சந்து தெரியாமல் அடைக்கும் சாந்து; putty, in carpentry, filler.

     [மழுக்கு-→மக்கு. மேடு பள்ளங்களை மழுக்கிச் சமன்படுத்தும் சாந்து அல்லது களிமண்.]

=

மக்குரு

 makkuru,

பெ.(n.);

   எலும்பு இளைத்தல்; emaciated bone.

     [மக்கு + உரு.]

=

மக்குலம்

__,

   சிலாசத்து; a substance said to be oozing out from mountain (சா.அக.);

=

மக்கையன்

 makkaiyaṉ,

பெ.(n.);

   அறிவுக் குறையுடையவன்; dullard.

     [மழுக்கு -→மக்கு -→மக்கையன் (மு.தா.99);.]

=

மக1

 maka,

பெ.(n.);

   1. பிள்ளை; child, infant, young of an animal.

     “மந்திம்மக” (சீவக.1897);.

   2. மகன் அல்லது மகள்; son or daughter.

     “மகமுறை தடுப்ப” (மலைபடு.185);.

   3. இளமை (யாழ்.அக.);; young age, adolence.

     [முள் (இளமைக்கருத்துவேர்); -→முளை = இளமை. முளையான் = சிறு குழந்தை. முள் -→மள் -→மள்ளன் = இளைஞன். மள் -→மள -→மழ = இளமை. “மழவும் குழவும் இளமைப் பொருள” (தொல்.உரி.14); ‘அழ மழப்போலும்’ (திருக்கோ.147);. மழ -→மக.]

மக்கினம்

மக்கினம் makkiṉam, பெ.(n.)

   1. அழுந்துகை; immersion.

     “மக்கினம் பட்டுள்ளே மருவி யிருந்தாண்டி” (பட்டினத்துப்.பக்.235);.

   2. அவமானம்; disgrace.

     “அந்தச் சபையில் அவன் மக்கினப்பட்டான்”.

     [Skt. magna → த. மக்கினம்.]

மக்கிளி

 மக்கிளி makkiḷi, பெ.(n.)

உழவு வேலைகளுக்குப் பயன்படும் கூடை

 basket (கொ.வ.);.

     [முக்கு-முக்குரி-மக்கிரி (கொ.வ.);]

மக்பி

 மக்பி makpi, பெ.(n.)

   கமுக்கமான (C.G.);; secret, confidential.

     [Ar. mahfi → த. மக்பி.]

மக்பூல்

 மக்பூல் makpūl, பெ.(n.)

   ஒப்பளிப்புச் செய்யப் பட்டது (C.G.);; that which is approved.

     [Ar. {} → த. மக்பூல்.]

மக்மல்

 மக்மல் makmal, பெ.(n.)

   கனமாய் மெத்தென் றிருக்கும் பட்டுவகை (வின்.);; velvet.

     [H. magmul → த. மக்மல்.]

மக்ரிபு

 மக்ரிபு makribu, பெ.(n.)

   மாலைத் தொழுகை; prayer at sunset (muham.);.

     [Skt., Ar. maghrib → த. மக்ரிபு.]

மங்கஞ்சம்பா

மங்கஞ்சம்பா maṅgañjambā, பெ.(n.)

   ஏழு மாதத்திற் பயிராகக் கூடிய சம்பா நெல்வகை (விவசா..2);; a kind of campa paddy, maturing in seven months.

மங்கணசித்தர்

 மங்கணசித்தர் maṅgaṇasittar, பெ.(n.)

   ஒரு சித்தர் (அபி.சிந்.);; a siddhar.

மங்கண்டம்

 மங்கண்டம் maṅgaṇṭam, பெ. (n.)

   ஆழமான பகுதியில் பாறை இல்லாமல் மணல் உள்ள பகுதி; sandy bed of a water reservoir or river. (கொ.வ);.

     [மணல்-கண்டம்]

மங்கனிறம்

 மங்கனிறம் maṅgaṉiṟam, பெ.(n.)

   மங்கின நிறம்; dim or dingy colour.

     [மங்கல் + நிறம்.]

மங்கம்மாள்

 மங்கம்மாள் maṅgammāḷ, பெ.(n.)

   மதுரையிலிருந்து ஆண்ட நாயக்க வழி அரசி (சி.பெ.அக.);; queen of the {} clan who ruled {} Region from Madurai.

மங்கல நீராட்டு விழா

 மங்கல நீராட்டு விழா maṅgalanīrāṭṭuviḻā, பெ. (n.)

பூப்பெய்தவளுக்குச் செய்யும் சடங்கு

 purificatory ceremony for the girl who has attained puberty.

     [மக்கல+நீராட்டு+விழா]

மங்கல மும்மி

 மங்கல மும்மி maṅgalamummi, பெ.(n.)

   விடை(வைசாக); மாத வளர்பிறை மூன்றாம் பக்கலாகிய நன்னாள்(அட்சய திருதியை);; third tithi of the bright for tnight of vaisāgam, as securing merit to all deeds of virtue performed on that day.

     [மங்கலம்+மும்மி]

மங்கலகரப்புல்

 மங்கலகரப்புல் maṅgalagarappul,    அறுகம்புல்; the doob grass or harialli grass-cynodon dactylon or devil’s grass (சா.அக.).

     [மங்கலம் -→மங்கலகரம் + புல்.]

மங்கலகாரியம்

மங்கலகாரியம் maṅgalakāriyam, பெ.(n.)

   நற்சடங்கு; festive, auspicious or joyous ceremony.

     [மங்கலம் + காரியம். மங்கல் -→மங்கலம்)

த. கருமம் >வ. காரியம்.

மங்கலகீதம்

__,

பெ.(n.);

மங்கலப்பாட்டு பார்க்க; see mangala-p-pattu,

     “மங்கல கீதம் பாட” (கம்பரா.விடை கொடுத்த.5);.

     [மங்கலம் + Skt.கீதம்.]

மங்கலகௌசிகம்

 மங்கலகௌசிகம் maṅgalagausigam, பெ.(n.)

   அராக வகை (வின்.);; a musical mode.

     [மங்கலம் + Skt.கெளசிகம்.]

மங்கலகௌசிகை

 மங்கலகௌசிகை maṅgalagausigai, பெ.(n.)

மங்கலகெளசிகம் பார்க்க (வின்.);; see mangala-kaucigam.

     [மங்கலம் + Skt.கெளசிகை.]

மங்கலக்கருவி

மங்கலக்கருவி maṅgalakkaruvi, பெ.(n.)

   1. மழிப்புக்கத்தி; razor, as used for shaving on auspicious occasions like wedding.

     “மங்கலக் கருவி முன்னுறுத்தி வாழ்த்தி” (சீவக.2411);.

   2. யாழ் முதலிய இசைக்கருவிகள்; musical instruments, as yal, etc.

     “நங்கை கற்கு மங்கலக் கருவிக்கு “(பெருங்.உஞ்ஞைக்.34, 171);.

     [மங்கலம் + கருவி.]

மங்கலக்கிழமை

மங்கலக்கிழமை maṅgalakkiḻmai, பெ.(n.)

   செவ்வாய்க்கிழமை; Tuesday, as the day of Mars.

     “மங்கலக் கிழமை தன்னிற் கைப்பலி கொடுத்து”(யசோதர.2, 58);

     [மங்கலம் + கிழமை.]

செவ்வாய்க் கோளை செவ்வண்ணமாகப் பார்த்தது போலவே செம்மஞ்சள் நிறமாகவும், வடவர் பார்த்திருந்ததால் மஞ்சள்கோளை மங்கலக் கோளாக்கி, அதேபோல் செவ்வாய்க்கிழமை மங்கலக் கிழமையானது போலும்.

மங்கலக்குடி

மங்கலக்குடி maṅgalakkuḍi, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிக்கரையில் அமைந்துள்ள, தற்போது திருமங்கலக்குடி என வழங்கும் ஊர்; the present Thirumangala-k-kudi situated on the banks of cauvery in Thanjavur Dt.

     “மாவிரியும் பொழில் மங்கலக் குடி” (அப்பர் தேவாரம்.187, 2); (இல.ஊ.பெ.);.

     [மங்கலம் + குடி.]

மங்கலசூத்திரம்

 மங்கலசூத்திரம் maṅgalacūttiram, பெ.(n.)

   மங்கலநாண்; twisted thread in which the {} is strung.

     [மங்கலம் + சூத்திரம்.]

மங்கலச் செய் கை

 மங்கலச் செய் கை maṅgalacceykai, பெ.(n.)

மங்கலகாரியம் பார்க்க (வின்.);; see {}.

     [மங்கலம் + செய்கை.]

மங்கலச்செறு

மங்கலச்செறு maṅgalacceṟu, பெ.(n.)

   மாமல்லபுரத்தை அடுத்த சிறுதாவூர் என்ற ஊரின் அருகிலுள்ள ஊர்; name of a place near {} next to Mamallapuram.

     “எங்கள் ஊர் உக்காவிரி வாய்க்காலுக்குத் தெற்கு மங்கச்செறும்” (தெ.க.தொ.1. கல்.42, 12);.

     [மங்கலம் + செறு.]

மங்கலச்சொல்

மங்கலச்சொல் maṅgalaccol, பெ.(n.)

   1. நலத்தைக் குறிக்கும் மொழி (வின்.);; auspicious word.

   2. வாழ்த்து உரை (வின்.);; languages of benediction.

   3. செய்யுட்களின் முதலில் வரற்குரிய திரு, பூ, உலக முதலிய நன்மொழிகள் (வெண்பாப். முதல் மொழி.2);; particular words or their synonyms considered auspicious to begin a poem with as tiru, {}, ulagam, etc.

     [மங்கலம் + சொல்.]

மங்கலதினம்

 மங்கலதினம் maṅgaladiṉam, பெ.(n.)

மங்கலநாள் பார்க்க; see {}.

   த. நாள்;வ. தினம்.

     [மங்கலம் + Skt.தினம்.]

மங்கலதூரியம்

 மங்கலதூரியம் maṅgalatūriyam, பெ.(n.)

மங்களஇசை பார்க்க (வின்.);; see {}.

     [மங்கலம் + தூரியம்.]

மங்கலத்திருநாள்

மங்கலத்திருநாள் maṅgalattirunāḷ, பெ.(n.)

   நன்னாள் (மணிமே.10:83);; holy day of festival.

     [மங்கலம் + திருநாள்.]

மங்கலத்துகில்

மங்கலத்துகில் maṅgalattugil, பெ.(n.)

   வெண்டுகில்; white cloth, as auspicious.

     “மங்கலத் துகிலை வாங்கி” (சீவக. 1146);.

     [மங்கலம் + துகில்.]

மங்கலநதி

 மங்கலநதி maṅgalanadi, பெ.(n.)

   நன்னீ ராடற்குரிய பேராறு; sacred or holy river.

     [மங்கலம் + Skt. நதி.]

மங்கலநாண்

மங்கலநாண் maṅgalanāṇ, பெ.(n.)

   தாலிச் சரடு; twisted thread in which the {} is strung.

     “நிறைநெடு மங்கல நானோ” (கம்பரா. நகர.2);.

     [மங்கலம் + நாண்.]

மஞ்சள்நிறத்த நாண்.

மங்கலநானம்

 மங்கலநானம் maṅgalanāṉam, பெ.(n.)

மங்களநீராடல் பார்க்க; see {}.

     [மங்கலம் + Skt.ஸ்நானம்.]

மங்கலநாள்

மங்கலநாள் maṅgalanāḷ,    நன்னாள்; auspicious day.

     “மங்கலநாட் கணித் தறிந்தனன்” (உபதேசகா. சிவபுண்ணிய.60);.

     [மங்கலம் + நாள்.]

மங்கலநீராடல்

 மங்கலநீராடல் maṅgalanīrāṭal, பெ.(n.)

   நற்செயல் தொடங்கும் போது செய்யும் நீராட்டம்; bath at the commencement of an auspicious ceremony.

     [மங்கலம் + நீராடல்.]

மங்கலன்

மங்கலன் maṅgalaṉ, பெ.(n.)

   1. செவ்வாய்; the planet Mars.

   2. மங்கலியன் (வின்); பார்க்க; see {}

மங்கலபத்திரம்

 மங்கலபத்திரம் maṅgalabattiram, பெ.(n.)

   திரு முதலிய மங்கலச் சொற்களால் தொடங்கப்படுவதும், தலைவனும் பணியாளனும் உடன்பட்டுச் செய்து கொள்வதுமான ஒப்பந்த ஆவணம்; document indicating an agreement between master and servant embodying the terms of the contract of service, which begins with holy words like tiru, etc.

     [மங்கல + Skt. பத்திரம்.]

மங்கலப்பத்திரிகை

 மங்கலப்பத்திரிகை maṅgalappattirigai, பெ.(n.)

   திருமணவழைப்பு (வின்.);; marriage invitation.

     [மங்கலம் + Skt.பத்திரிகை.]

மங்கலப்பாடகர்

 மங்கலப்பாடகர் maṅgalappāṭagar, பெ.(n.)

   அரசர் முதலியவரைப் புகழ்வோர் (வின்.);; bards, encomiasts. [மங்கலம் + பாடகர்.]

மங்கலப்பாட்டு

 மங்கலப்பாட்டு maṅgalappāṭṭu, பெ.(n.)

   நன்னாளில் பாடும் பாடல்; music on auspicious occasions.

     [மங்கலம் + பாட்டு.]

மங்கலப்பிரதை

 மங்கலப்பிரதை maṅgalappiradai, பெ.(n.)

   மஞ்சள் (சங்.அக.);; turmeric (சா.அக.);.

மங்கலப்புருடன்

மங்கலப்புருடன் maṅgalappuruḍaṉ, பெ.(n.)

   1. மங்கல செயல்ச்செய்யத் தகுதி யுள்ளவன் (வின்..);; the proper man to perform or conduct a ceremony or to communicate good tidings, as a married man.

   2. எப்பொழுதும் நலந்துய்ப்போன் (இ.வ.);; a man who is ever happy.

     [மங்கலம் + Skt. புருட(ஷ);ன்.]

மங்கலப்பேரிகை

 மங்கலப்பேரிகை maṅgalappērigai, பெ.(n.)

   மங்கல காலங்களில் முழக்கும் முரசம் (வின்.);; drum beaten an auspicious occasions.

     [மங்கலம் + பேரிகை.]

மங்கலப்பொருத்தம்

மங்கலப்பொருத்தம் maṅgalapporuttam, பெ.(n)

   செய்யுண் முதன் மொழிப் பொருத்தம் பத்தனுள் முதன் மொழியிடத்து மங்கலச் சொல் நிற்பது (வெண்பாப். முதன்மொழி.2);; rule of propriety by which a mangala-c-col is used at the commencement of a poem, one of ten {}.

     [மங்கலம் + பொருத்தம்.]

மங்கலமகளிர்

மங்கலமகளிர் maṅgalamagaḷir, பெ.(n.)

மங்கலமங்கையர் பார்க்க; see {}.

     “மங்கல மகளிரொடு மாலைசூட்டி” (புறநா.332);.

     [மங்கலம் + மகளிர்.]

மங்கலமங்கையர்

மங்கலமங்கையர் maṅgalamaṅgaiyar, பெ.(n.)

   வாழ்வரசிகள்; women under coverture.

     “மங்கல மங்கையராய் மன்னவர் கன்னியராய்” (பெருந்தொ.969);.

     [மங்கலம் + மங்கையர்.]

மங்கலமடந்தை

மங்கலமடந்தை maṅgalamaḍandai, பெ.(n.)

   1. வாழ்வரசி; married woman, an auspicious.

   2. மங்கலாதேவி பார்க்க; see {}.

     “மங்கல மடந்தை கோட்டத்து” (சிலப்.30:53);.

     [மங்கலம் + மடந்தை.]

மங்கலமரபு

மங்கலமரபு maṅgalamarabu, பெ.(n.)

மங்கல வழக்கு பார்க்க (நன்.266, மயிலை.);: see {}.

     [மங்கலம் + மரபு.]

மங்கலமாந்தர்

மங்கலமாந்தர் maṅgalamāndar, பெ.(n.)

   மங்கல காரியங்களைச் செய்வோர் (பெரியபு. மூர்த்தி.39);; those who perform auspicious rites, as in a coronation.

     [மங்கலம் + மாந்தர்.]

மங்கலமுகூர்த்தம்

 மங்கலமுகூர்த்தம் maṅgalamuārttam, பெ.(n.)

மங்கலமுழுத்தம் பார்க்க: see {}.

     [மங்கலம் + முகூர்த்தம். முழுத்தம் -→முகூர்த்தம்.]

மங்கலமுரசு

மங்கலமுரசு maṅgalamurasu, பெ.(n.)

மங்கலப்பேரிகை பார்க்க; see {}

     “மங்கல முரசின மழை யினார்த்தன” (கம்பரா. கடிமண.41);.

     [மங்கலம் + முரசு.]

மங்கலமுழுக்கு

 மங்கலமுழுக்கு maṅgalamuḻukku, பெ.(n.)

   நற்செயற் றொடங்குமுன் செய்யும் நீராட்டு; bath at the commencement of an auspicious ceremony.

     [மங்கலம் + முழுக்கு.]

மங்கலமுழுத்தம்

 மங்கலமுழுத்தம் maṅgalamuḻuttam, பெ.(n.)

   நல்லோரை; auspicious hour.

     [மங்கலம் + முழுத்தம்.]

மங்கலமுழுவம்

மங்கலமுழுவம் maṅgalamuḻuvam, பெ.(n.)

மங்கலப்பேரிகை பார்க்க; see {}.

     “மங்கல முழவம் விம்ம” (பாரத. திரெளபதி மாலை.18);.

     [மங்கலம் + முழவம்.]

மங்கலமொழி

மங்கலமொழி maṅgalamoḻi, பெ.(n.)

மங்கலச்சொல் பார்க்க; see mangala-c-col.

     “மங்கல மொழியும், வைஇய மொழியும்” (தொல்.பொருள்.244);.

     [மங்கலம் + மொழி.]

மங்கலம்

மங்கலம்1 maṅgalam, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் மழநாட்டில் இருந்த ஒரூர்; a village in Mazha nadu in Thanjavur Dt.

     “மங்கலமானது மங்கலமாகிய வாழ் மூதூர்” (பெரியபு.30, 7);.

 மங்கலம்2 maṅgalam, பெ.(n.)

   1. நலமான தன்மை; auspiciousness, propitiousness.

     “குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்தி” (சீவக.488);, 2. ஆக்கம்;

 achievement. means of accomplishment, good fortune.

     “விண்வேண்டின் வேறாதன் மங்கலம் வேந்தர்க்கு” (பு.வெ. 9, 10);.

   3. பொலிவு; splendour.

     “மணக்கோல மங்கலம்யாம் பாட” (பு.வெ.9,22);.

   4. நற்செயல் (பிங்.);; good deed according to the sastras.

   5. நன்மை; goodness, honour.

     “மங்கலமென்ப மனைமாட்சி” (குறள், 60);.

   6. திருமணம்; marriage.

     “மங்கல வாழ்த்துப் பாடலும்” (சிலப்.பதி.63);.

   7. தாலி; marriage badge.

     “மற்றை நல்லணிகள் கானுன் மங்கலங் காத்த மன்னோ” (கம்பரா. உருக்காட்டு.35);.

   8. கொடை (திவா.);; virtue.

   9. சிறப்பு; excellence.

     “சைவமங்கல வேதி யத் தாபதன்” (திருவிளை. விருத்த.13);.

   10. வாழ்த்து; praise, panegyric, blessings.

     “மங்கல மொழியும்” (தொல்.பொருள்.244);.

   11. மங்கலவழக்கு பார்க்க (நன்.267);; see {}.

   12. எண் வகை மங்கலம்; eight auspicious objects.

     “படிவ மங்கலங் களெட்டும் பரித்து” (திருவிளை. திருமணப்.143);.

   13. சேர்க்கை; gathering, collecting.

   14. தகனபலி(யாழ்.அக.);; funeral oblation.

     [மங்கல் -→மங்கலம்.]

முல் ->முள் -> (மள்); ->மண், மண்ணுதல் = மழித்தல். இந்தக் கத்தி மண்ணாது என்பது தென்னாட்டு வழக்கு. மள் ->மழ் ->மழி. மழித்தல் = மொட்டையடித்தல், மள் ->மழ ->மழுங்கு ->மழுங்கன் = வேலைப்பாடில்லாத அணி. மங்கல் என்பது உளி மழுங்கல். மழுங்கு ->மங்கு ->மங்கல் ->மஞ்சல் = மங்கலான நிறம். மங்கல் நிறம் = மஞ்சள் நிறம். வெண்மையுமன்றிப் பச்சையுமன்றி இடை நிகர்த்ததாய் மங்கிய நிறமாக விடுத்தலின் மஞ்சள் நிறம் முதலாவது மங்கல் எனப்பட்டது. மங்கல் ->மஞ்சல் ->மஞ்சள். ஒ.நோ. கழங்கு ->கழஞ்சு. இலங்கு ->இலஞ்சு ->இலஞ்சி. மஞ்சல் = மஞ்சள் நிறமுள்ள சரக்கு.

தமிழ் நாட்டில் கணவனோடு கூடி வாழும் பெண்டிர் அழகிற்கும் உடல் நலத்திற்கும் மணத்திற்கும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது வழக்கமாதலின் மஞ்சட்கும் மஞ்சள் நிறத்திற்கும் மங்கலத் தன்மை ஏற்பட்டு விட்டது. திருமண வரிசையில் வைக்கப்படும் பொருள்களில் மஞ்சளும் ஒன்றாகும். மங்கல் ->மங்கலம் = மஞ்சட் பூச்சாற் குறிக்கப் பெறும் மகளிர் வாழ்க்கைநலம். மஞ்சளாலும் மஞ்சள் நிறத்தாலும் குறிக்கப் பெறும். நற்செய்தி (மு.தா.102);.

வடவர் காட்டும் மூலம்

மங்கலம்பதினாறு

மங்கலம்பதினாறு maṅgalambadiṉāṟu, பெ.(n.)

   எண் வகை மங்கலத்தோடு வாள், குடை, ஆலவட்டம், சங்கம், தவிசு, திரு, அரசியலாழி, ஓமாலிகை யென்ற எட்டுஞ் சேர்ந்த பதினாறு வகையான எடுபிடிகள் (பெருங். இலாவண, 5, 26, அரும்.);; the sixteen auspicious paraphernalia, including, sword, umberlla, fan, conch, seat, the head ornament {}, royal discus and pots containing fragrant drugs along with {}.

     [மங்கலம் + பதினாறு.]

மங்கலரேவு

 மங்கலரேவு maṅgalarēvu, பெ. (n.)

   திருமங்கலம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a villagein Tirumangalam Taluk.

     [மங்கல+இறவு]

மங்கலவணி

மங்கலவணி maṅgalavaṇi, பெ.(n.)

   1. திருமங்கலியம்; marriage badge.

     “அகலுண் மங்கலவணி யெழுந்து” (சிலப். 1:47, அரும்.);.

   2. இயற்கையழகு; natural charm or beauty.

     “மறுவின் மங்கல வணியே யன்றியும்” (சிலப்.2:63);,

   3. மங்கலக்குறியாக அணியும் வெள்ளணி; white cloth or ornament, as worn at a wedding.

     “மங்கல வணியினர்” (சீவக.603);.

     [மங்கலம் + அணி.]

மங்கலவண்ணம்

மங்கலவண்ணம் maṅgalavaṇṇam, பெ.(n)

மங்கலக் குறியான வெண்மைநிறம்,

 whiteness, as the auspicious colour.

     “மங்கல வண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து” (தொல்.பொருள்.91 உரை);.

     [மங்கலம் + வண்ணம்.]

மங்கலவரிகை

 மங்கலவரிகை maṅgalavarigai, பெ.(n.)

   ஒருவனுக்குண்டாகும் நன்மைகளைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை வரிகை (திருவாரூ.குற.);; a kind of distinctive line on the palm of the hand, believed to indicate one’s fortune.

     [மங்கலம் -→மங்களம் + Skt. வரிகை.]

மங்கலவள்ளை

 மங்கலவள்ளை maṅgalavaḷḷai, பெ.(n.)

   உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாவில் வகுப்புறப் பாடும் சிற்றிலக்கியம் (பிரபந்தம்); (இலக்.வி.);; a poem about a lady of noble birth, in nine {}.

     [மங்கலம் + வள்ளை.]

மங்கலவழக்கு

மங்கலவழக்கு maṅgalavaḻkku, பெ.(n.)

   தகுதிவழக்கு மூன்றனுள் மங்கலம் அல்லாததை மங்கலமாகக் கூறும் வழக்கு (நன்.267, உரை.);; euphemism, usage of an auspicious word to denote an inauspicious thing one of three {}, q.v.

     [மங்கலம் + வழக்கு.]

ஒருவர் துன்புறும் போது, அவரை ஆற்றித் தேற்றுவதும் அவரொடு தாமும் சேர்ந்து துன்புறுவதும், உயர்ந்தோர் இயல்பு. கண்ணன்ன கேளிரை இழப்பதும், எரி போன்ற வறுமையால் வாடுவதும் பெருந்துன்பமாம். அத்துன்பங்களை அவற்றிற்குரிய சொல்லாற் குறிப்பினும் அவற்றால் துன்புறுவோர்க்குத் துன்பம் பெருகுமென்று கருதி, இன்பமும் நன்மையும் குறிக்கும் சொற்களால் அவற்றைக் குறித்து வந்தனர் பண்டை மேலோர். இதனை மங்கல வழக் கென்பர் இலக்கணவாசிரியர்.

செத்தானைத் துஞ்சினான் என்றும், சாவைப் பெரும் பிறிது என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும், தாலியறுதலைத் தாலி பெருகிற்று என்றும் வறுமையை நிரப்பு என்றும், வறுமைப் பாட்டை நல் கூர்தல் என்றும் கூறுவது மங்கல வழக்காம்.

துஞ்சுதல்-தூங்குதல். நிரப்பு-நிறைவு, நல் கூர்தல்-நன்மை மிகுதல். இனி, சாவுக் கேதுவான நச்சுயிரிகளையும் மங்கலச் சொல்லாற் குறிப்பது வழக்கம். எ-டு: நல்ல பாம்பு (சொல்.112);.

மங்கலவாச்சியம்

 மங்கலவாச்சியம் maṅgalavācciyam, பெ.(n.)

   நற்காலங்களில் இசைக்கப்படும் இசைக்கருவி; musical instruments played on auspicious occasion, usually nathasvaram and co-instruments colloq.

     [மங்கலம் -→மங்களம் + வாச்சியம் (வாத்தியம் -→வாச்சியம்);.]

மங்கலவாரம்

மங்கலவாரம் maṅgalavāram, பெ.(n.)

   1. நல்லநாள்; auspicious day as Monday or Wednesday or a day when there is a favourable configuration of the planets.

   2. மங்களவாரம் பார்க்க; see {}.

     [மங்கலம் + Skt.வாரம்.]

மங்கலவார்த்தை

மங்கலவார்த்தை maṅgalavārttai, பெ.(n.)

   1. நன்மொழி; auspicous language.

   2. நற் செய்தி; good news.

   3. மங்கலச்சொல் பார்க்க; see mangala-c-col.

     [மங்கலம் + Skt.வார்த்தை.]

மங்கலவாழ்த்து

 மங்கலவாழ்த்து maṅgalavāḻttu, பெ.(n.)

   சிற்றிலக்கியத்தின் முதலில் அல்லது இறுதியிற் செய்யப்படும் வழுத்து; salutation, praise, especially in the opening or the conclusion of a poem.

     [மங்கலம் + வாழ்த்து.]

மங்கலவினைஞன்

மங்கலவினைஞன் maṅgalaviṉaiñaṉ, பெ.(n.)

   1. முடிதிருத்துவோன்; barber, as doing auspicous work.

   2. மங்கலப்புருடன் பார்க்க (வின்.);; see {}.

     [மங்கலம் + வினைஞன்.]

மங்கலவெள்ளை

மங்கலவெள்ளை maṅgalaveḷḷai, பெ.(n.)

   1. சிற்றிலக்கியம் தொன்னூற்றாறனுள்’ சந்தமும் வெண்பாவும் விரவிய ஒன்பது பாடல்களாலேனும், கலிவெண்பா ஒன்றினாலேனும், ஒன்பது வெண்பாக்களினாலேனும், ஒன்பது சந்தங்களினாலேனும் உயர்குடிப் பிறந்த கற்புடை மடந்தையைப் புகழ்ந்துபாடும் சிற்றிலக்கியம் (பன்னிருபா. 300–302);; poem on a chaste or continent lady of noble birth in nine mixed {} of {}, and vaguppu metre or one {} or nine stanzas either in {} or vaguppu metre, one of 96 pirapanthams, q.v.

   2. சந்தனக் குழம்பு; sandal paste, as used an auspicious occasions.

     “மங்கல வெள்ளை வழித்து” (சீவக.1477);.

     [மங்கலம் + வெள்ளை.]

மங்கலவேளை

 மங்கலவேளை maṅgalavēḷai, பெ.(n.)

மங்கலமுழுத்தம் பார்க்க (வின்.);; see {}.

     [மங்கலம் + வேளை.]

மங்கலாதேவி

மங்கலாதேவி maṅgalātēvi, பெ.(n.)

   ஒரு பெண் தெய்வம் (சிலப்.30:53, அரும்.);; celestial rymph.

     [மங்கலம் + தேவி.]

மங்கலி

மங்கலி1 maṅgali, பெ.(n.)

   இல்லத்தரசி; married woman, as wearing the {}.

     [மங்கலம் -→மங்கலி.]

 மங்கலி2 maṅgali, பெ.(n.)

மங்கலியன் பார்க்க (வின்.);; see {}.

     [மங்கலம் -→மங்கலி -→மங்கலியன்.]

மங்கலியகம்

 மங்கலியகம் maṅgaliyagam, பெ.(n.)

   சிறு கடலை வகை (யாழ்.அக.);; small bengal gram.

மங்கலியக்காரி

மங்கலியக்காரி maṅgaliyakkāri, பெ.(n.)

   1. மங்கலி பார்க்க; see {}.

   2. மனைவி; wife.

     [மங்கலம் -→மங்கலியம் + காரி. காரி – உடைமை குறித்த பெண்பாலீறு.]

மங்கலியசூத்திரம்

மங்கலியசூத்திரம் maṅgaliyacūttiram, பெ.(n.)

மங்கலசூத்திரம் பார்க்க; see {}.

     “மங்கலிய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே” (புறநா. 127, உரை);.

     [மங்கலம் -→மங்கலியம் + சூத்திரம்.]

மங்கலியன்

 மங்கலியன் maṅgaliyaṉ, பெ.(n.)

   முடி திருத்துவோன்; barber.

     [மங்கல் -→மங்கலி -→மங்கலியன்.]

மங்கலியப்பிச்சை

 மங்கலியப்பிச்சை maṅgaliyappiccai, பெ.(n.)

   கணவனுயிரைக் காக்குமாறு மனைவி இரந்து கேட்கை கொ.வ.); wife’s prayer to save her husband’s life when he is in dying bed begging for preservation of her tali.

     [மங்கலம் -→மங்கலி -→மங்கலியம் + பிச்சை]

மங்கலியப்பெண்டுகள்

மங்கலியப்பெண்டுகள் maṅgaliyappeṇṭugaḷ, பெ.(n.)

   1. வாழ்வரசிகளாய் இறந்தவரும் அவரவர் குடும்பத்தினரால் தெய்வமாகக் கொண்டாடப்படுவோருமாகிய பெண்டிர்; woman who died during the lifetime of their husbands and are worshiped as deities of their families.

   2. வாழ்வரசிகளாய் இறந்த மகளிர் பொருட்டுச் செய்யும் சடங்கு; a feast in honour of {}.

     [மங்கலம் -→மங்கலியம் + பெண்டுகள்.]

மங்கலியப்பொருத்தம்

 மங்கலியப்பொருத்தம் maṅgaliyapporuttam, பெ.(n.)

   மணப் பொருத்தம்; an agreement of horoscopes of the bride and the bridegroom regarding ‘rajju’ i.e. safety of {} (astrol);.

     [மங்கலம் -→மங்கலியம் + பொருத்தம்.]

மங்கலியம்

 மங்கலியம் maṅgaliyam, பெ.(n.)

   திருமணத்திற் கட்டப்படுந் தாலி;   {}; wedding badge.

     [மங்கலம் -→மங்கலி -→மங்கலியம்.]

மங்கலியவதி

 மங்கலியவதி maṅgaliyavadi, பெ..(n.)

   வாழ்வரசி; a married woman.

     [மங்கல் -→மங்கலி -→மங்கலியவதி.]

மங்கலை

மங்கலை1 maṅgalai, பெ.(n.)

   மருத்துவத்தில் முன்னாளில் சிறந்திருந்த மருத்துவ மங்கை; nick name of a lady who experted herself in maternity cases (சி.பெ.அக.);.

 மங்கலை2 maṅgalai, பெ.(n.)

   1. கணவனோடு வாழ்பவள்; married woman.

   2. திருமகள்; Tirumagal.

   3. மலைமகள்; Malaimagal

   4. கொற்றவை;{}.

     [மங்கலம் -→மங்கலை.]

 மங்கலை3 maṅgalai, பெ.(n.)

   முடி திருத்துவோர் குலப்பெண் (அம்பட்டச்சி); (வின்.);; woman of the barber caste.

     [மங்கலியன் (ஆ.பா.); -→மங்கலை (பெ.பா.);.]

மங்கல்

மங்கல் maṅgal, பெ.(n.)

   1. கெடுகை; decaying, fading.

   2. ஒளி மழுக்கம்; dimness, obscurity, growing dim.

   3. இருள் கலந்த நேரம்; darkness, dusk.

   4. உளி மழுங்கல்; blunt as edge of chisel.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); -→முள் -→மள் -→மள்கு. மள்குதல் = ஒளி குறைதல், குறைதல். மள்கு -→மழுகு. மழுகுதல் = ஒளி குறைதல். மழுகு -→மழுங்கு. மழுங்கல் = ஒளி குறைதல், பொலிவழிதல், கவனிப்பின்றி மறைந்துபோதல், கெடுதல், மழுங்கு -→மங்கு -→மங்கல் (வே.க.4:59);.]

மங்கல்யம்

 மங்கல்யம் maṅgalyam, பெ.(n.)

மங்கலியம் பார்க்க; see mangaliyam.

     [மங்கலியம் -→மங்கல்யம்.]

மங்கல்லியம்

மங்கல்லியம் maṅgalliyam, பெ.(n.)

   1. மங்கலியம் பார்க்க; see mangaliyam.

   2. சந்தனம்; sandal wood.

   3 .தயிர் (யாழ்.அக.);; curd,

   4. பொன் (யாழ்.அக.);; gold.

   5. செவ்வீயம் (யாழ்.அக.);; red lead.

     [மங்கலியம் -→மங்கல்லியம்.]

மங்கள கைசி

 மங்கள கைசி maṅgaḷagaisi, பெ. (n.)

   பண் வகைகளிற் ஒன்று; a musical note.

     [மங்களம்-கைசி]

மங்கள தேசிகம்

 மங்கள தேசிகம் maṅgaḷatēcigam, பெ. (n.)

   ஒரு வகையான பண்; a musical note.

     [மங்களம்+தேசிகம்]

மங்களகீதம்

 மங்களகீதம் maṅgaḷaātam, பெ.(n.)

மங்கலகீதம் பார்க்க (வின்.);; see {}.

     [மங்கலம் -→மங்களம் + Skt.கீதம்.]

மங்களன்

 மங்களன் maṅgaḷaṉ, பெ.(n.)

மங்கலன் பார்க்க; see {}.

     [மங்கலன் -→மங்களன்.]

மங்களப்பாடகர்

 மங்களப்பாடகர் maṅgaḷappāṭagar, பெ.(n.)

மங்கலபாடகர் பார்க்க (வின்.);; see {}.

     [மங்கலம் -→மங்களம் + பாடகர்.]

மங்களப்பாடவர்

 மங்களப்பாடவர் maṅgaḷappāṭavar, பெ.(n.)

மங்கலபாடகர் பார்க்க (வின்.); see {}.

     [மங்கலம் -→மங்களம் + பாடவர். பாடகர் -→பாடவர்.]

மங்களம்

 மங்களம் maṅgaḷam, பெ.(n.)

மங்கலம் பார்க்க; see {}.

     [மங்கலம் -→மங்களம்.]

மங்களரேகை

 மங்களரேகை maṅgaḷarēkai, பெ.(n.)

மங்கலவரிகை பார்க்க; see {}.

     [மங்கலம் -→மங்களம் + Skt. ரேகை. வரிகை -→ரேகை.]

மங்களர்

மங்களர் maṅgaḷar, பெ.(n.)

   புத்தருள் ஒருவர் (மணிமே.பக்.369);; a Buddha.

மங்களவாத்தியம்

 மங்களவாத்தியம் maṅgaḷavāttiyam, பெ.(n.)

மங்கலவாச்சியம் பார்க்க; see {}.

     [மங்கலம் -→மங்களம் + வாத்தியம் (வாத்தியம் -→வாச்சியம்);.]

மங்களவாரநாள்

மங்களவாரநாள் maṅgaḷavāranāḷ, பெ.(n.)

   செவ்வாய்க்கிழமை; Tuesday.

சகாத்தம் 1668 இதில் மேற்செல்லா நின்ற அஷ்செய தை மி மங்கள வாற னாள் பூசனஷத்திரத்தில் (த.மரா.செப்.50, 17-41.);

மங்களவாரம்

 மங்களவாரம் maṅgaḷavāram, பெ.(n.)

மங்கலவாரம் பார்க்க; see {}.

     [மங்கலவாரம் -→மங்களவாரம்.]

மங்களாசரணை

மங்களாசரணை maṅgaḷācaraṇai, பெ.(n.)

   வாழ்த்து, வணக்கம், வத்து நிர்த்தேசம் என்ற முப்பகுதியுடைய நூன்முகம்; prefatory verse to a book or poem, of which there are three kinds viz. {}

     “வாய்த்த நூன்முகத் துரைக்கு மங்களாசரணை வாழ்த்து வணக்கொடு வத்துநிர்த் தேசமூன்று (வேதா.சூ.8);.

மங்களாசாசனம்

மங்களாசாசனம் maṅgaḷācācaṉam, பெ. (n.)

   1. நன்மையை வேண்டுகை; invocation of blessings by great persons.

   மங்களா சாச னத்தின் மற்றுள்ள வாழ்வார்கள் தங்களார் வத்தளவு (உபதேசரத். 18);;   2. ஆழ்வாராதி யாரால் துதிக்கப் பெறுகை; benediction on a sacred place, as by {}, etc.

   3. பெரியோர்களின் வழிபாடு; worship by great men.

பெருமாளை மங்களாசாசனம் செய்தாயிற்றா?.

     [Skt. {} → த. மங்களாசானம்.]

மங்களாசாரம்

மங்களாசாரம் maṅgaḷācāram, பெ.(n.)

மங்கலவாழ்த்து பார்க்க; see {}.

     “மங்களாசாரமுரம்பெறு தேவமோதிலக்கணத்தில்” (பிரபோத.11, 4);.

மங்களான்

மங்களான் maṅgaḷāṉ, பெ.(n.)

   குதிரைச் சாதி வகை (அசுவசா.151);; a bread of horse.

மங்களாரத்தி

மங்களாரத்தி maṅgaḷāratti, பெ.(n.)

மங்களாலத்தி பார்க்க; see {}.

     [மங்கலம் -→மங்களம் + ஆரத்தி. ஆலத்தி – ஆரத்தி.]

 மங்களாரத்தி maṅgaḷāratti, பெ. (n.)

   1. கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கருப்பூர ஆரத்தி; waving of camphor before a deity.

   2. மங்கலகாலங்களில் மஞ்சணீர் சுற்றுகை; ceremony of waving turmeric water in a dish on auspicious occasions.

     [Skt. {}+arathi → த. மங்களாரத்தி.]

மங்களாலத்தி

மங்களாலத்தி maṅgaḷālatti, பெ.(n.)

   1. கடவுளுக்குச் சுழற்றியெடுக்கும் கருப்பூர ஆரத்தி; waving of camphor before deity.

     “மங்களாலத்தியானவுடனே வட்டிலிலே திருப்படிக்கத்தை முகந்து” (கோயிலொ.59);.

   2. நற்காலங்களில் மஞ்சணீர் சுற்றுகை; ceremony of waving turmeric water in a dish, an auspicious occasion.

     [மங்கலம் -→மங்களம் + ஆலத்தி. ஆல் + ஆற்று – ஆலாற்று -→ஆலாத்து -→ஆலாத்தி. இனி, ஆலாத்தி -→ஆராத்தி -→ஆரத்தி என்றுமாம். ஆலாற்றுதல் = சுற்றச் செய்தல். ஆலத்தி பார்க்க.]

மங்களியம்

மங்களியம் maṅgaḷiyam, பெ.(n.)

   1. அரச மரம்; a tree.

   2. பாலை மரம்; palai tree (சா.அக.);.

மங்களூரோடு

 மங்களூரோடு maṅgaḷūrōṭu, பெ.(n.)

   ஒரு வகைத் தட்டோடு; Calicut tiles as from mangalore.

     [மங்களூர் + ஒடு.]

மங்களூர் எனும் ஊரின் பெயரினால் அமைந்த ஒடு.

மங்களை

மங்களை maṅgaḷai, பெ.(n.)

   1. மங்கலை1 பார்க்க; see {}.

     “மலைமக ளிகுளை மங்களை மண்டபமிழைத்து” (காஞ்சிப்பு. மாசாத்,35);.

   2. பருவ நிலைகளுள் ஒன்று (வின்.);; a period of human life.

   3. யோகினி திசையிலொன்று (யாழ்.அக.);; a direction in {}.

     [மங்கலை -→மங்களை.]

மங்காமைகாத்தான்

மங்காமைகாத்தான் maṅgāmaikāttāṉ, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy,

     “சீரிய லழகியவாணன் மங்காமை காத்தான்” (பறாளை. பள்ளு.24);.

மங்காரநெய்

 மங்காரநெய் maṅgāraney, பெ.(n.)

   சுறா மீன் நெய்; shark lever oil (சா.அக.);.

     [மங்காரம் + நெய்.]

மங்காரம்

 மங்காரம் maṅgāram, பெ.(n.)

   சுறாமீன்; shark (சா.அக.);.

     [P]

மங்கிணி

மங்கிணி maṅgiṇi, பெ.(n.)

   1. மந்த அறிவுள்ளவ-ன்-ள்; extremely dull person.

   2. பயனற்றவ-ன்-ள் (வின்.);; mean, worthless person.

     [மங்கு -→மங்கிணி.]

மங்கிலம்

 மங்கிலம் maṅgilam, பெ.(n.)

   காட்டுத்தீ (யாழ்.அக.);; forest fire.

மங்கு

மங்கு1 maṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1 குறைதல்; to grow less, to diminish.

     “தாக மங்குதலின்மையால்” (விநாயகபு.80, 94);.

   2. ஒளி மங்குதல்; to become dim, as light or eye-sight.

   3. நிறங்குன்றுதல்; to grow pale, to loose lustre.

   4. பெருமை குறைதல்; to be obscured, as splendour, glory, fame, to fade, as beauty, to decline in prosperity, as a religion, to be reduced in circumstance, power or authority.

   5. வாட்டமுறுதல்; to be deprived of freshness, as the countenance, power or authority.

   6. கெடுதல்; to decay, to be ruined.

     “தீவினைத் தெவ்வெனும் பேர் மங்க” (திருநூற்.19);.

   7. சாதல்; to die, perish.

     “மங்கியு முற்பவித்து முழல் வல்லிடரில்” (திருப்போ. சந்.மட்டுவிருத்.7);.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); -→முள் -→மள் -→மள்கு. மள்குதல் = ஒளி குறைதல், குறைதல். மள்கு -→மழுகு. மழுகுதல் = ஒளி குறைதல். மழுகு -→மழுங்கு. மழுங்குதல் = ஒளி குன்றுதல், பொலிவழிதல், கெடுதல், மழுங்கு -→மங்கு (வே.க.4:59);.]

 மங்கு2 maṅgu, பெ.(n.)

   1. கேடு; ruin, loss.

   2. வங்கு (வின்.);; black spots on the face.

     [மழுங்கு -→மங்கு.]

 மங்கு3 maṅgu, பெ.(n.)

   சாடி (இ.வ.);; polished earthern jar.

     [P]

மங்குங்காலம்

 மங்குங்காலம் maṅguṅgālam, பெ.(n.)

   தீமைக் காலம்; time of dearth or adversity, unpropitious season.

     ” மங்குங் காலத்திற்கு மா; பொங்குங் காலத்திற்குப் புளி” (பழ);.

     [மங்கும் + காலம்.]

மா மிகுதியாகக் காய்ப்பின் அந்த ஆண்டு மழை குறைந்து வறட்சி ஏற்படும் என்பதும் புளி மிகுதியாகக் காய்ப்பின் மழை மிகுந்து வளமை மிகும் என்பதும் பொதுவான மக்கள் நம்பிக்கை.

மங்குசனி

 மங்குசனி maṅgusaṉi, பெ.(n.)

மங்குநோய் முகன் பார்க்க; see {}.

     [மங்கு + Skt.சனி. சனி = நோய்முகன்.]

 Skt. சனி >த. காரி.

மங்குநார்

 மங்குநார் maṅgunār, பெ.(n.)

   மக்கி உலர்ந்த நார்; fibre of plants, dry and decayed.

     [மக்கு -→மங்கு + நார்.]

மங்குநோய்முகன்

மங்குநோய்முகன் maṅgunōymugaṉ, பெ.(n.)

   ஒருவனுடைய வாழ்நாளில் முதலில் வந்து தீமை செய்யும் ஏழரையாண்டுக் காரி; the first period of 7 1/2 years when saturn abides in the 12th, 1st and 2nd house from a person’s cantira-{}. indicating mis-fortunes.

மங்குலம்

மங்குலம் maṅgulam, பெ.(n.)

   1. மழுக்கம்; cloudiness, murkiness, obscuration.

   2. கலக்கம்; perturbation, confusion of mind.

   3. முகவாட்டம்; gloominess, gravity of countanance.

   4. பார்வை மந்தம்; dullness of the eye, dimness of sight,

   5. ஐயம்; uncertainty, doubtfulness.

   6. நிறக்குறைவு; Indistinctness, obscureness, paleness, as of a colour.

     [மங்கு -→மங்குல் -→மங்குலம்.]

மங்குலி

மங்குலி maṅguli, பெ.(n.)

   இந்திரன்; Indran. as the Lord of the clouds.

     “அமிர்தங் கடைந்தவ னஞ்ச மங்குலி” (திருப்பு:559);.

     [மங்குல் -→மங்குலி.]

மங்குல்

மங்குல் maṅgul, பெ.(n.)

   1. ஒளிக்குறைவு; dim.

   2. கண் தெரியாதவாறு குறைந்த மூடு பனி;  fog.

     “மங்குல் மனங்கவர” (பு.வெ.9, 45);.

   3. இருட்சி; darkness.

     “மங்குல் மாப்புகை’ (புறநா.4, 103);.

   4. இரவு (திவா.);; night.

   5. இருண்ட முகில்; cloud.

     “மங்குறோய் மணிமாட….. நெடுவீதி” (தேவா. 41, 7);.

   6. கரிய வானம்; sky.

     “மங்குல்வாய் விளக்கு மண்டலமே” (திருக்கோ. 177);.

   7. வான வெளிப் பக்கமாகிய திசை; direction, point of the compass.

     “புயன்மங்குலி னறை பொங்க” (கலித். 105, 25);.

     [மங்கு -→மங்குல்.]

மங்குல்வாணி

மங்குல்வாணி maṅgulvāṇi, பெ.(n.)

   வான் குரல்; voice from the heaven.

     “மங்குல் வாணி யுதித்த மட மயிலே” (அருணகிரிபு. அருந்தவ. 162);

     [மங்குல் + வாணி.]

வானி ->வாணி. வானத்திலிருந்து வரும் குரல்.

மங்குளம்

 மங்குளம் maṅguḷam, பெ.(n.)

மங்குலம் பார்க்க; see {}.

மங்கை

மங்கை maṅgai, பெ.(n.)

   1. பெண்; woman.

வாலிழை மடமங்கையர் (புறநா.11);.

   2. 12 முதல் 13 வயது வரை உள்ள பெண்; a girl between 12 and 13 years.

     “மொய் கொண்ட மங்கை யிடங்கடவா மாண்பினாள்” (பதினொ. திருக்கைலாய. உலா.100);.

   3. கற்றாழை (சூடா.);; aloe,

   4. மங்கலம் பார்க்க; see {}.

சீவரமங்கை, வரகுண மங்கை.

   5. இதளியம் (சங்.அக.);; mercury,

   6. பெண் பருவங்களுலொன்று; one of the feminine stage.

மங்கைப் பருவத்தாள் (உ.வ.);.

     “நாளல்லா நாள் பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு” (மூதுரை, 3);.

     [மழுங்கு -→மங்கு -→மங்கை]

மணப் பருவத்திற்குரியவர் பதினாறாட்டைப் பருவத்தானும் பன்னீராட்டைப் பருவத்தாளும் என்று அகப்பொருளிலக்கணமும் மாகவானிகர் வண்கை மாநாய்கண் குலக்கொம்பர் ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள் (சிலப். மங்கல.23); என்று இளங்கோவடிகளும் கூறுதலையும், பன்னீராட்டைப் பருவத்தார் மங்கை

யெனப்படுதலையும் நோக்குக.

மங்கை நல்லூர்

மங்கை நல்லூர் maṅgainallūr, பெ. (n.)

   மயிலாடுதுறையிலிருந்து 8 கல்மாத்திரி தொலைவில் உள்ள ஒரு ஊர்; name of a village 8 k.m. from Mayiladuturai.

     [மங்கை+நல்லூர்]

மங்கைபங்கன்

மங்கைபங்கன் maṅgaibaṅgaṉ, பெ.(n.)

மங்கைபாகன் பார்க்க; see {}.

     ” மங்கைபங்கனை மாசிலா மணியை” (தேவா. 549, 5);.

     [மங்கை + பங்கன்.]

மங்கைபங்காளன்

 மங்கைபங்காளன் maṅgaibaṅgāḷaṉ, பெ.(n.)

மங்கைபாகன் பார்க்க (வின்.);; see {}.

     [மங்கை + பங்காளன்.]

மங்கைபாகன்

மங்கைபாகன் maṅgaipākaṉ, பெ.(n.)

   சிவ வடிவங்களுளொன்று; a form of {} half male and half female.

     “மங்கை பாகனை நோக்கி” (கம்பரா.அகலிகை.50);.

     [மங்கலம் + பாகன்.]

மங்கைமூலி

 மங்கைமூலி maṅgaimūli, பெ.(n.)

   வெள்ளை நாயுருவி; a white species of the plant Indian burr (சா.அக.);.

மங்கையக்கண்ணி

 மங்கையக்கண்ணி maṅgaiyakkaṇṇi, பெ.(n.)

   கற்பூரவல்லி; country borage (சா.அக.);.

மங்கையர்கோன்

மங்கையர்கோன் maṅgaiyarāṉ, பெ.(n.)

   திருங்கையாழ்வார்; a {} saint.

     “மங்கையர்கோன்…. அவதரித்த கார்த்திகை நாள்” (உபதேசரத்.9);.

     [மங்கு -→மங்கை -→மங்கையர் + கோன்.]

மங்கையர்க்கரசி

மங்கையர்க்கரசி maṅgaiyarkkarasi, பெ.(n.)

   1. பெண்களிற் சிறந்தவள்; the best woman,

   2. பெண்மைக் குணங்கள் நிறைந்தவள்; the woman who passess all femine qualities.

     [மங்கையர்க்கு + அரசி.]

மங்கையர்க்கரசியார்

மங்கையர்க்கரசியார் maṅgaiyarkkarasiyār, பெ.(n.)

   நாயன்மார் அறுபத்து மூவருள் நின்ற சீர் நெடுமாறனுடைய தேவியாராகிய சிவனடியார்; the queen of the {} king {} a cononized {} saint, one of 63.

     [மங்கையர்க்கு + அரசியார்.]

மசகம்

மசகம்1 masagam, பெ.(n.)

   1. கொசுகு (பிங்.);; gnat, mosquito.

     “மசகந்தர மென்னலாய்” (அஷ்டப். திருவேங்கடத். 59);.

   2. நீர்த்துருத்தி (யாழ்.அக.);; Squirt.

     [மசகு -→மசகம்.]

 மசகம்2 masagam, பெ.(n.)

   மயிர் (யாழ்.அக.);; hair.

     [மள் –→ (மய்); மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு. மை -→மயி -→மசி = கரியகுழம்பு (தஞ்சை நாட்டார் எழுதும் மையை மசி யென்றே கூறுவர்);, மசி -→மசகு = வண்டி மை. மசகு -→மசகம் (மு.தா.181);.]

 மசகம்3 masagam, பெ.(n.)

   மயக்கம் (யாழ்.அக.);; confusion.

     [மயக்கம் -→மசக்கம் -→மசகம்.]

மசகரி

மசகரி masagari, பெ.(n.)

   1. மசகாரி (சிலப்.6, 169, அரும்.பாடபேதம்); பார்க்க: see {}

   2. திரை (இ.வ.);; curtain.

மசகவரி

மசகவரி masagavari, பெ.(n.)

மசகாரி (சீவக.838, உரை.பாடபேதம்); பார்க்க; see {}.

மசகாரி

மசகாரி masakāri, பெ.(n.)

   சித்திரப் பணி எழுதியதும் கொசுகுகளை விலக்குவதுமான அமளித் திரை (சிலப்.6, 169, அரும்); (சீவக. 838, உரை);; decorated bed-curtain for protection against mosquitoes.

மசகி

 மசகி masagi, பெ.(n.)

அத்தி பார்க்க; see atti.

மசகிற்புள்

 மசகிற்புள் masagiṟpuḷ, பெ.(n.)

   கடற்பறவை வகை (வின்.);; a species of sea-gull.

மசகு

மசகு1 masagudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. சுணங்கி நிற்றல்; to linger, loiter, to hang about designedly,

   2 மனந்தடுமாறுதல்; to hesitate, to be in suspence, to be undecided or undetermined.

     [மசக்கு -→மசகு.]

 மசகு2 masagu, பெ.(n.)

   வைக்கோற் கரியோடு எண்ணெய்த்துணி கலந்து கட்டை வண்டியின் அச்சிலிடும் மை; mixture of oil and burnt straw, used as grease for country carts.

தெ. மசக.

     [மள் -→ (மய்); மை = கருமை, முகில், காராடு, கரியகுழம்பு. மை -→மயில் = கரு (நீல); நிறத் தோகையுள்ள பறவை. மயில் -→மயிலை = கருமை கலந்த வெள்ளைக் காளை. மை -→மயிர் -→கரியமுடி. மை -→மயி -→மசி = கரிய குழம்பு. மசி -→மசகு.]

 மசகு1 masagu, பெ.(n.)

   நடுக்கடலில் திசை தெரியாது ஆழ்ந்தகன்ற இடம் (யாழ்ப்);; deep sea, far from shore, where there is no mark for guidance.

     [மயங்கு -→மசகு.]

 மசகு2 masagudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கலங்கி நிற்றல்; to linger, loiter;

 to hang about designedly.

   2. மனந்தடுமாறுதல்; to hesitate;

 to be in suspense;

 to be undecided or undetermined.

     [முள் -→முய் -→முய -→முயகு -→மயகு -→மசகு (வே.க.(4:57);.]

 மசகு masagu, பெ. (n.)

மாட்டு வண்டியின் கொடைக்கட்டைக்கு இடும் கரிநெய்,

 grease,

     [மை-மயகு-மசகு]

மசக்கம்

மசக்கம் masakkam, பெ.(n.)

   1. மயக்கம்; swoon, unconsciousness.

   2. மந்தம்; dullness, indolence.

அவன் மசக்கம் பிடித்தவன் (இ.வ.);

   3. மசக்கை பார்க்க; see {}.

     [முல் (பொருந்தற் கருத்த வேர்); -→முள் -→முய் -→முய -→முயகு -→முயங்கு. முயங்குதல் = பொருந்துதல், தழுவுதல், புணர்தல், செய்தல். முயங்கிக் கொள்ளுதல் = கணவனும் மனைவியுமாக வாழ்தல். முயங்கு -→முயக்கு = தழுவுகை. முயக்கு -→முயக்கம் = தழுவுகை, புணர்ச்சி, தொடர்பு. முயக்கு -→மயக்கு = போர் செய்கை, கலக்கம். மயக்கு -→மயக்கம் = கலப்பு, ஒரு வேற்றுமையுருபு மற்றொரு வேற்றுமைப் பொருளிற் கலத்தல் (வேற்றுமை மயக்கம்);. எழுத்துப் புணர்ச்சி இருபாற் கலப்பாகிய அலி, அறிவின் திரிபு, அறியாமை, காமநோய், உணர்விழப்பு. மயங்கு -→மசங்கு -→மசக்கு -→மசக்கம் (வே.க.4:57);.]

மசக்கல்

மசக்கல் masakkal, பெ.(n.)

மசங்கல், 1 பார்க்க; see {}.

     [மயக்கம் -→மசக்கம் -→மசக்கல்

 மசக்கல் masakkal, பெ.(n.)

   தன்வசமாக்கல்; to bewitch;

 to enchant;

 to charm. (சா.அக.);

மசக்கி

 மசக்கி masakki, பெ.(n.)

   அழகாலும் தளுக்காலும் மயக்குபவள் (கொ.வ.);; showily attractive woman.

     [மயக்கி -→மசக்கி.]

மசக்கிவைத்தல்

மசக்கிவைத்தல் masakkivaittal, பெ.(n.)

   நிலத்தை சீர்செய்து சமப்படுத்தி, நல்ல விளைநிலமாக செய்து வைத்தல்; reform the land meliorate.

சங்கரப்பாண்டியன் மாறஞ்துவனன் சிவ பத்தன் மசக்கி வைத்த நிலத்துக்கு கீழ் பாற்கெல்லை. இத்தேவர் திருவிளக்கு (தெ.இ.க.தொ.19, கல்.372-3);.

மசக்கு-தல்

மசக்கு-தல் masakkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1 மயங்கச் செய்தல்; to charm, bewitch.

     “லீலை யிலேயுற முறை மசக்கவம்” (திருப்பு.338);.

   2. குழப்புதல்; to confuse, perplex.

   3. ஆடையைக் கஞ்சிப் பற்று நீங்கும்படி கசக்குதல்; to crumple, as a cloth to get out the stiffening.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); -→முள் -→முய் -→முய -→முயகு -→முயங்கு -→மயங்கு -→மசங்கு -→மசக்கு (வே.க.4:57);.]

மசக்குப்பரவிடு-தல்

மசக்குப்பரவிடு-தல் masakkupparaviḍudal,    18 செ.குன்றாவி.(v.t.)

   ஐயமுறப்படுதல்; to be confused, as regarding identity.

     “தன்னொடு மசக்குப் பரவிடலாம் படியான தேவ சாதியையும்” (ஈடு.2,.2, 5);.

     [பயக்கு -→மசக்கு + பரவிடுதல்.]

மசக்கை

மசக்கை masakkai, பெ.(n.)

   1. கருவுற்ற பெண்ணுக்கு உண்டாகும் மயக்கம்; morbid longings of a pregnant woman.

   2. சூதகக் கட்டு (பைஷஜ.258);; amenorrhoea.

     [மயங்கு -→மசங்கு -→மசக்கு -→மசக்குதல் = மயங்கச் செய்தல், குழப்புதல். மசக்கு ச-→மசக்கம் -→மசக்கை (வே.க.4:57);.]

மசக்கைக்காரி

 மசக்கைக்காரி masakkaikkāri, பெ.(n.)

   மசக்கையாயிருக்கும் கருவுற்ற பெண்; pregnant woman suffering from morning sickness.

     [மசக்கை + காரி.]

மசக்கைப்பண்டம்

 மசக்கைப்பண்டம் masakkaippaṇṭam, பெ.(n.)

   கருவுற்ற பெண்கள் மசக்கைக் காலத்தில் விரும்பும் தின்பண்டம்; special articles of food, desired by pregnant Women.

     [மசக்கை + பண்டம்.]

மசங்கல்

மசங்கல் masaṅgal, பெ.(n.)

   1. பகலும் இரவும் கலக்கும் அந்திப்பொழுது (வின்.);;  twilight of evening.

   2. மயக்கம்; confusion, perplexity.

     “மசங்கற் சமண் மண்டைக்கையர்” (தேவா.567,10);.

     [மயங்கு -→மசங்கு -→மசங்கல் (வே.க.4:57);.]

பகலும் இரவும் மயங்கும் – அந்திப் பொழுதை அந்தி மயங்கும் நேரம் என்னும் வழக்கை நோக்குக.

மசங்கு-தல்

மசங்கு-தல் masaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. மயங்குதல் (திவா.567, 10);; to become confused, to be doubtful.

   2. ஒளி குறைதல்; to become dull, to lose lustre.

     ‘மேனியில் வன்னமு மசங் காதோ’ (இராமநா. அயோத். 11);.

   3. கசங்குதல் (வின்.);; to be crumpled, to grow soft by use.

     [மயங்கு -→மசங்கு-.]

மசடன்

மசடன் masaḍaṉ, பெ.(n.)

   குணங்கெட்டவன்; person of bad character.

     “அசடனை மசடனை ஆசார வீணனை” (திருப்பு:557);.

     [மை -→மயி -→மசி -→மச -→மசடன்.]

மசணை

மசணை masaṇai, பெ.(n.)

   1. மந்தன்; dullard, indolent person.

   2. நெல்வகை; a kind of paddy.

மசண்டை

மசண்டை masaṇṭai, பெ.(n.)

மசங்கல், 1 பார்க்க; see {}.

     [மச -→மசள் -→மசண்டை.]

மசண்டைப்பொழுது

மசண்டைப்பொழுது masaṇṭaippoḻudu, பெ.(n.)

மசங்கல், 1 பார்க்க; see {}.

     [மசண்டை + பொழுது.]

மசதி

 மசதி masadi, பெ.(n.)

   கடுகு ரோகிணி; medicinal root (சா.அக.);.

மசநாய்

 மசநாய் masanāy, பெ. (n.)

வெறிபிடித்த நாய்,

 rogue dog. (கொ.வ);.

     [மிசை→மச+நாய்]

மசநாய்க்கடி

 மசநாய்க்கடி masanāykkaḍi, பெ.(n.)

   வெறிநாய்க்கடி; rabis do bite hydrophobia (M.L.);.

     [மச + நாய் + கடி.]

மசந்தகடுக்கை

 மசந்தகடுக்கை masandagaḍuggai, பெ.(n.)

   செழுமலர்க் கொன்றை; large flower cassie (சா.அக..);.

மசனப்பாறை

 மசனப்பாறை masaṉappāṟai, பெ. (n.)

   உறுதியில்லாமல் நொறுங்கும் தன்மை கொண்ட பாறை; breakable stone.

     [மசி-மசினம்+பாறை]

மசனம்

 மசனம் masaṉam, பெ. (n.)

   வருத்துகை (சங். அக.);; trouble someness.

     [Skt. masana → த. மசனம்]

மசமச-த்தல்

மசமச-த்தல் masamasattal, செ.கு.வி.(v.i.)

   1. தினவெடுத்தல் (இ.வ.);; to itch.

   2. செயலை முடிக்க காலந்தாழ்த்தல்; to be slow and indecisive.

   3. தெளிவற்று கலங்கலான பார்வை; uncleared sight.

     [மய -→மயத்தல் = மயங்குதல். மயமயத்தல் = தொடர்ந்து மயக்கத்தை ஏற்படுத்துதல். மயமயத்தல் -→மசமச-த்தல்.]

மசமசப்பு

 மசமசப்பு masamasappu, பெ.(n.)

   சொறிவு; itching sensation. (சா.அக.);

மசமசவெனல்

மசமசவெனல் masamasaveṉal, பெ.(n.)

   1.தினவெடுத்தற் குறிப்பு;  itching.

   2. தீர்மானமின்றி இழுத்தற்குறிப்பு; wavering, as in speech or action.

   3. தெளிவற்ற பார்வையுணரல்; to feel glaring sight.

     [மயமய + எனல் -→மசமச + எனல் -→மச மசவெனல்.]

மசமசெனல்

 மசமசெனல் masamaseṉal, பெ.(n.)

மசமச வெனல் பார்க்க; see {}.

மசம்

மசம்1 masam, பெ.(n.)

   1. அளவு; measure.

   2. சினம்; anger.

   3. ஒலி; sound (சா.அக.);.

 மசம்2 masam, பெ.(n.)

   கொசுகு (வின்.);; mosquito (சா.அக.);.

மசயன்

 மசயன் masayaṉ, பெ. (n.)

   தெளிவில்லாதவன்; a dull headed person.

     [மசை+அன்]

மசரகம்

 மசரகம் masaragam, பெ.(n.)

   குருவி; sparrow (சா.அக.);.

     [P]

மசரசமலர்

மசரசமலர் masarasamalar, பெ. (n.)

   1. குழந்தைகளுக்குக் கருப்பாக நுரைத்து கழியும் ஒரு வகை நோய்; a disease in children accompanies by black mucus clots.

   2. செறி புழு; a kind of worm in the in festine. (சா.அக.);

மசரதம்

மசரதம் masaradam, பெ.(n.)

   கானல் நீர், பேய்த்தேர்; mirage.

     ” மசரத மனையவர் வரமும்” (கம்பரா.திருவவ.22);.

     [மச + Skt.ரதம்.]

மசரா

 மசரா masarā, பெ.(n.)

   உட்கிடைக் கிராமம்; hamlet.

மசரைநோய்

மசரைநோய் masarainōy, பெ.(n.)

   கால்நடை நோய் வகை (பாலவா.1041);; a disease of cattle.

மசரைப்புழு

 மசரைப்புழு masaraippuḻu, பெ. (n.)

மசரசமலர் பார்க்க;see {}-malar. (சா.அக.);

     [மசரை+புழு]

மசரோகம்

மசரோகம் masarōkam, பெ.(n.)

   1. மறு; wart.

   2. பாலுண்ணி; lichen (சா.அக.);.

மசறி

மசறி masaṟi, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

     “நெற்றலி யசலிலை மசறி” (குருகூர்ப்.20);.

மசவு

மசவு masavu, பெ.(n.)

மசகு2 பார்க்க; see {}.

     [மசகு -→மசவு.]

மசாகம்

 மசாகம் macākam, பெ.(n.)

   குருவி (சங். அக.);; small bird.

     [Skt. {} → த. மசாகம்]

மசானக்கரை

 மசானக்கரை macāṉakkarai, பெ.(n.)

மசானம் பார்க்க; see {}.

     [மயானம் -→மசானம் + கரை.]

மசானக்கொள்ளை

 மசானக்கொள்ளை macāṉakkoḷḷai, பெ.(n.)

   பகற்கொள்ளை; day-light robbery

     “மாயாவி தேடிய முதலெல்லாம் மசானக் கொள்ளையாய்ப் போகிறது” (பழ.);.

     [மயானம் -→மசானம் + கொள்ளை.]

மசானச்சாம்பல்

 மசானச்சாம்பல் macāṉaccāmbal,    பிணஞ்சுட்ட சாம்பல்; ashes of the corpse or dead body (சா.அக.).

     [மயானம் + சாம்பல்.]

மசானம்

மசானம் macāṉam, பெ.(n.)

   1. சுடுகாடு; cremation ground, burial place.

   2. சுடலை; cremation ground.

     [மயானம் -→மசானம். மாய்தல் + மறைதல், இறத்தல்.]

மசாரகம்

 மசாரகம் macāragam, பெ.(n.)

   இந்தி நீலமணி; a kind of blue stone (சா.அக.);.

மசாரம்

மசாரம் macāram, பெ.(n.)

   1. பைம்மணி; a precious gem.

   2. நீல அரத்தினம்; a blue gem. (சா.அக.);.

மசாலா

மசாலா macālā, பெ.(n.)

   பொதுவாக புலால் உணவில் பயன்படுத்தப்படும் கசகசா, இலவங்கப்பட்டை, பூண்டு முதலியவை சேர்த்து அரைக்கப்பட்ட கலவை; mixed condiments and spices (for meat dishes);;

 curry stuff.

     ‘மசாலா இல்லாமல் கறிக்குழம்பு சுவை இருக்காது’.

   2. மரக்கறி சமையலில் துவையல் போல் அரைக்கப்பட்ட தேங்காய் அல்லது மிளகாய்; mashed coconut or chilli in vegetarian preparations.

   3. உருளைக் கிழங்குத் துண்டுகளோ, மிளகாய், வெங்காயம் முதலியவற்றைக் கலந்து தாளித்துச் செய்யப்பட்ட கலவை; boiled potato mixed with chilli and onion.

     ‘பூரிக்கு இன்னும் கொஞ்சம் மசாலா போட்டுக் கொள்!’ (பே.வ.);.

   4. திரைப்படம், நாடகம் முதலியவற்றில் மக்கள் விரும்பி பார்க்கக் கூடிய பொழுதுபோக்குப் பகுதிகளான சண்டை, பாட்டு, காதல் காட்சி முதலியவை குறிப்பிட்ட அளவில் நிறைந்த கலவை;     (of film, play); a mix of stereotype box-office elements.

     ‘சரியான மசாலாப் படம், இதற்கு எப்படி பரிசு கிடைத்தது?” (உ.வ.);.

த.வ.உசிலை

மசாலை

மசாலை1 macālai, பெ.(n.)

   கறிச்செலவு;  condiments, spices, curry-stuffs.

 மசாலை2 macālai, பெ.(n.)

   குதிரை முதலிய விலங்குகட்குக் கொடுக்கும் மருந்து; drugs mashed and given to horse and other animals.

மசாலைமீன்

 மசாலைமீன் macālaimīṉ, பெ. (n.)

   மீன் வகையுளுள் ஒன்று; a kind offish.

     [மசாலை+மீன்]

மசாலைமேய்-த்தல்

மசாலைமேய்-த்தல் macālaimēyttal,    1 செ.குன்றாவி.(v.t.)

   குதிரை முதலிய விலங்குகட்கு மசாலை கொடுத்தல் (வின்.);; to give {} as to a horse.

     [மசாலை + மேய்-.]

மசால்

 மசால் macāl, பெ.(n.)

மசாலை பார்க்க; see {}.

     [மசாலை -→மசால் (கொச்சை);.]

மசால்சி

மசால்சி macālci, பெ.(n.)

   1. தீவட்டி பிடிப்பவன் (வின்.);; torch-bearer.

   2. விளக்குத் துடைத் தேற்றுபவன் (இ.வ.);; servant who trims the lamps.

     [U. mashalci → த. மசால்சி]

மசால்தோசை

 மசால்தோசை macāltōcai, பெ.(n.)

   உருளைக் கிழங்கு உசிலையை உள்ளே மடித்துத் தரப்படும் தோசை; a dosai with a filling of fried potato and onion.

     “உணவு விடுதிக்கு வருபவர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது மசால்தோசை”.

த.வ.உசிலைத் தோசை

     [U. mashal → த. மசால்]

மசால்வடை

 மசால்வடை macālvaḍai, பெ.(n.)

   வெங் காயமும் பிறவும் கலந்த வடைப் பணிகார வகை; a kind of {} made with onions and condiments.

த.வ. உசிலை வடை

     [U. {} → த. மசால்]

மசி

மசி1 masidal,    2 செ.கு.வி.(v.i.)

   1. நெரநெர வென்றிராமல் வழுவழுப்பாயிருத்தல்; to be mashed, worked about with a ladle, reduced to pulp.

   2. வளைந்து கொடுத்தல், விட்டுக்கொடுத்தல்; to yield, to be placable.

அவன் இலகுவிலே மசியமாட்டான் (உ.வ.);.

     [மத்து -→மத்தி. மத்தித்தல் = மத்தினால் கடைந்து கூழாக்குதல். மதி -→மசி;

மசித்தல் = குழைத்தல். மசிதல் = குழைதல்.]

 மசி2 masittal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. கடைந்து அல்லது பிசைந்து குழையச் செய்தல்; to mash, as food, to reduce to a thin pulpy consistence, as greens, fruits.

   2. மைக் கட்டியை அல்லது களிம்பை நீரிற் குழைத்து எழுதுமை யுருவாக்குதல்; to prepare by mixing, as ink.

     “மசித்து மையை விள்ள வெழுதி” (பதினொ.திருவாலங்.மூத்2);.

     [மத்து -→மத்தி -→மதி -→மசி; மத்தித்தல் மத்தினாற் கடைதல். மதித்தல் = குழைத்தல்.]

 மசி3 masi, பெ.(n.)

   1. கரிய குழம்பு; liquid of thick consistency, paste in ink.

     “மசிகலந்தெழுதப்பட்ட” (சூளா.தூது.83);.

   2. மசகு2 பார்க்க; see {}.

     [மள் -→ (மய்); மை -→மசி. மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு. மை -→மசி.]

மசிகம்

 மசிகம் masigam, பெ.(n.)

   புற்று (சங்.அக.);; anthill.

மசிகாந்தசாதி

 மசிகாந்தசாதி masikāndasāti, பெ.(n.)

   சைதன்னிய பிரகாசி சாதியாகிய ஆண் சாதிவகையில் ஒன்று; one of the four classification of men. (சா.அக.);.

மசிகூபி

 மசிகூபி masiāpi, பெ.(n.)

   எழுதுமை வைக்குங்குப்பி; ink-bottle, ink-stand.

த.வ. மைக்குப்பி

     [Skt. {} → த. மசிகூபி]

மசிக்குப்பி

மசிக்குப்பி masikkuppi, பெ.(n.)

மசிக்கூடு பார்க்க (இ.வ.);; see {}.

     [மசி3 + குப்பி.]

மசிக்கூடு

மசிக்கூடு masikāṭu, பெ.(n.)

   எழுதுமை வைக்குங் குப்பி; ink-bottle, ink-stand.

     [மசி3 + கூடு.]

மசிதானி

 மசிதானி masitāṉi, பெ.(n.)

மசிக்கூடு பார்க்க; see {}.

 மசிதானி masitāṉi, பெ.(n.)

   மைக்கூடு (யாழ். அக.);; ink-bottle.

த.வ. மைக்கூடு

     [Skt. {} → த. மசிதானி]

மசினை

 மசினை masiṉai, பெ.(n.)

   சீமைச் சணல் (புதுவை.);; hemp.

மசிபதம்

 மசிபதம் masibadam, பெ.(n.)

   இறகுத் தூவல் (யாழ்.அக.);; guill-pen.

மசிமை

மசிமை masimai, பெ.(n.)

   பெருமை; greatness.

     “மசிமையில் கூறைதாராய்” (திவ். நாய்ச். 3,9);.

     [Skt. {} → த. மசிமை]

மசிமையிலி

மசிமையிலி masimaiyili, பெ.(n.)

   வெட்க மில்லாதவன்; shameless person.

     “வஞ்சகப் பேய்ச்சி பா லுண்ட மசிமையிலீ” (திவ்.நாய்ச்3, 9);.

     [மகிமை + இலி.]

மசியகிரி

மசியகிரி masiyagiri, பெ.(n.)

   மேற்கூரை, மேற் கவிகை; canopy.

     “திருத்திரை கட்டுகிறதும் மசியகிரி கட்டுகிறதும்” (கோயிலொ.96);.

     [மசிய + கிரி]

     [Skt. masaka-hari → த. மசியகிரி]

மசியம்

மசியம் masiyam, பெ.(n.)

   1. கருஞ்சீரகம்; black cumin seeds.

   2. மிளகு; pepper. (சா.அக.);

மசியல்

 மசியல் masiyal, பெ.(n.)

   கடைந்து செய்த உணவு முதலியன (வின்.);; anything mashed, mash, pulp.

     [மத்தி -→மதி -→மசி -→மசியல்.]

மசிரன்

 மசிரன் masiraṉ, பெ.(n.)

   கூல (தானிய);க் கதிரை அரிக்கும் பூச்சி வகை; insect that eats into the stalks of dry crops.

     [மசிர் -→மசிரன்.]

மசிர்

மசிர் masir, பெ.(n.)

   1. மயிர்; hair

   2. அறுகு; tender bermuda – grass.

     [மள் -→ (மய்); மை = கருமை, முகில், காராடு, கரிய குழம்பு. மை -→மயில் = கரு (நீல); நிறத் தோகையுள்ள பறவை, மை -→மயிர் = கரிய முடி (மு.தா.181);, மயிர் -→மசிர் (கொ.வ.);.]

மசிலி

மசிலி1 masili, பெ.(n.)

மசியகிரி (இ.வ.);பார்க்க;see {}.

 மசிலி2 masili, பெ.(n.)

   பாதையில் தங்கிச் செல்லும் இடம் (P.T.L.);; stage in a journey.

     [U. mazil → த. மசிலி]

மசிலிக்கால்

 மசிலிக்கால் masilikkāl, பெ.(n.)

   மேற்கவிகை கட்டுங் கட்டிலின் மேற்கால் (இ.வ.);; the four posts of a cot.

     [மசிலி+ கால்]

மசில்

மசில் masil, பெ.(n.)

மஞ்சில்2 பார்க்க; see {}.

மசுக்கரம்

 மசுக்கரம் masukkaram, பெ.(n.)

   மூங்கில் (மலை.);; spiny bamboo.

மசுமாஞ்சரி

 மசுமாஞ்சரி masumāñsari, பெ.(n.)

   உத்தா மணி; a creeior (சா.அக.);.

மசுரன்

 மசுரன் masuraṉ, பெ.(n.)

மசிரன் பார்க்க; See {}.

மசுரம்

 மசுரம் masuram, பெ.(n.)

   கடலை (சங்.அக.);; bengal gram (சா.அக.);.

மசூதி

 மசூதி macūti, பெ.(n.)

   பள்ளிவாசல்; mosque.

     [U. {} → த. மசூதி]

மசூரம்

மசூரம் macūram, பெ.(n.)

   1. தவச வகையுள் ஒன்று (சுக்கிர- நீதி, 321.);; a kind of pulse.

   2. மூட்டுப்பூச்சி (சங்.அக.);; bug.

     [Skt. {} → த. மசூரம்]

மசூரி

மசூரி1 macūri, பெ.(n.)

மசூரிகை (வின்.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. மசூரி]

 மசூரி2 macūri, பெ.(n.)

மசூதி (சங். அக.); பார்க்க;see {}.

     [Skt. masjid → த. மசூதி]

மசூரிகம்

மசூரிகம்1 macūrigam, பெ.(n.)

மசூரிகை (வின்.); பார்க்க;see {}.

 மசூரிகம்2 macūrigam, பெ.(n.)

மசூரி1 பார்க்க;see {} (சா.அக.);.

மசூரிகாரோகம்

 மசூரிகாரோகம் macūrikārōkam, பெ. (n.)

   சுரத்தினால் உடம்பு முழுதும் குருவெழும்பும் நோய்; a disease -eruptive fevers. (சா.அக.);

மசூரிகை

மசூரிகை macūrigai, பெ.(n.)

   1. ஒருவகை நோய்; a kind of disease.

   2. கடலைக் கட்டி; boils of the size of gram (சா.அக.);.

 மசூரிகை macūrigai, பெ. (n.)

   பெரியம்மை நோய் (வைசூரி);(இ.வ.);; small-pox.

     [Skt. {} → த. மசூரிகை]

மசூரிப்பருப்பு

 மசூரிப்பருப்பு macūripparuppu, பெ.(n.)

   ஒருவகைப் பருப்பு; a kind of pulse (சா.அக.);.

மசை

மசை masai,    1. மசகு2 பார்க்க; see {}.

     “வண்டிக்கு மசை போட்டாய் விட்டதா” (உ.வ.);.

   2. மூடன் (இ.வ.);; fool, idiot.

     [மசி -→மசகு -→மசை (கொச்சை);.]

மசோதா

மசோதா macōtā, பெ.(n.)

   1. மூல ஆவணத்துக்கு முன் படி; rough draft, as of a document.

   2. சட்டமாவதற்கு முன் சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்ட முன்வரைவு (இக்.வ.);; draft bill of an act.

த.வ. முள் வரைவு

     [U. musau-wada → த. மசோதா]

மச்சகந்தி

 மச்சகந்தி maccagandi, பெ.(n.)

   பரிமளகந்தி (பாரத);; Vyasa’s mother.

     [Skt. matsyagandhi → த. மச்சகந்தி]

மச்சக்காவடி

 மச்சக்காவடி maccakkāvaḍi, பெ.(n.)

   மீன் கலயங்கள் கொண்ட காவடி; a {} with vessels containing fish.

     [Skt. matsya+சாவடி.]

     [மச்சம் + காவடி]

மச்சக்கெண்டை

 மச்சக்கெண்டை maccakkeṇṭai, பெ. (n.)

   கரும்புள்ளியுள்ள கெண்டை மீன் வகையுள் ஒன்று; a kind of fish.

     [மச்சம்+கெண்டை]

மச்சக்கொடி

 மச்சக்கொடி maccakkoḍi, பெ.(n.)

   காமனுக்கும் பாண்டியனுக்கும் உரியதான மீன்கொடி (வின்);; banner of {} and the {} bearing fishen sign.

     [மச்சம் + கொடி]

மச்சங்கள்

 மச்சங்கள் maccaṅgaḷ, பெ.(n.)

   இலாஞ்சன ரோகம்; moles (சா.அக.);.

மச்சங்கொல்லி

 மச்சங்கொல்லி maccaṅgolli, பெ.(n.)

   புகையிலை; tobacco (சா.அக.);

மச்சசல்லி

 மச்சசல்லி massasalli, பெ.(n.)

   மீன் எலும்பு; fish bone (சா.அக.);.

மச்சதாது

 மச்சதாது maccatātu, பெ.(n.)

   எலும்புக்குள் இருக்கும் ஒருவகை மூலப்பொருள்;  marrow of the bone (சா.அக.);

மச்சதேசம்

மச்சதேசம் maccatēcam, பெ.(n.)

   தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று; a country in Central India, one of 56 tecam.

 மச்சதேசம் maccatēcam, பெ. (n.)

   ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று; a country in Central, India one of 56 {}.

     [Skt. matsya+ {} → த. மச்சதேசம்]

மச்சத்தின்கச்சம்

 மச்சத்தின்கச்சம் maccattiṉkaccam, பெ.(n.)

   மீனெலும்பு (சா.அக.);; fish bone, cuttle bone (சா.அக.);.

மச்சத்தில்செனித்தமலக்கல்

 மச்சத்தில்செனித்தமலக்கல் maccattilceṉittamalakkal, பெ.(n.)

   பொன்னம்பர்; amber of a gold colour a mineral describes in the Tamil siddha medical science.

மச்சனம்

மச்சனம் maccaṉam, பெ.(n.)

   நன்னீராட்டு (ஆறுமுகநா.14);; baptism, immersion.

மச்சனா

 மச்சனா maccaṉā, பெ.(n.)

   முள்ளங்கி; raddish (சா.அக.);.

மச்சபுராணம்

மச்சபுராணம் maccaburāṇam, பெ.(n.)

   1. பதினெண் தொன்ம (புராண);த்துள் மீன்தோற்றரவு எடுத்த திருமாலால் சிவனுடைய பெருமை விளங்க அறிவுரைப் பெற்ற தொன்மம் (பிங்);; a chief {} in honour of Siva, narrated by {} in His fish in carnation, one of {}.

   2. திருநெல்வேலி வடமலையப்ப பிள்ளை யினால் கி.பி. 1706-இல் தமிழில் மொழி பெயர்த்துப் பாடப்பெற்ற நூல்; a metrical rendering of matsya-{} in Tamil by {} of Thirunelveli, 1706 A.D.

     [Skt. matsya+{} → த. மச்சபுராணம்]

மச்சப்பொன்

 மச்சப்பொன் maccappoṉ, பெ.(n.)

   மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப்பொன்; piece of gold kept for a sample.

மச்சமாமுகம்

 மச்சமாமுகம் maccamāmugam, பெ.(n.)

   புல்லுருவி; a parasitic plant (சா.அக.);.

மச்சமுனி

 மச்சமுனி maccamuṉi, பெ.(n.)

   பதினெண் சித்தருள் ஒருவரும் மருத்துவ நூலியற்றி யவருமான ஒரு சித்தர்; reputed mystic, author of treatises on medicine, one of {} q.v.

 மச்சமுனி maccamuṉi, பெ.(n.)

   பதினெண் சித்தருள் ஒருவரும் மருத்துவ நூலியற்றிய வருமான ஒரு சித்தர்; a reputed mystic, author of treatises on medicine, one of {}-Cittar.

மச்சம்

மச்சம்1 maccam, பெ.(n.)

   உடம்பிலுண்டாகும் புள்ளி; mole on the skin.

மள் ->மய் ->மை = கருமை, முகில், காராடு.

மை ->மயில் = கரு (நீல); நிறத் தோகையுள்ள பறவை..

மயில் ->மயிலை = கருமை கலந்த வெள்ளைக் காளை.

மை ->மயிர் = கரியமுடி.

மை ->மயி ->மசி = கரிய குழம்பு (தஞ்சை நாட்டார் எழுதும் மையை மசியென்றே கூறுவர்);.

மசி ->மசகு = வண்டிமை.

மச்சு ->மச்சம் (மு.தா.181);.

 மச்சம்2 maccam, பெ.(n.)

   1. மச்சப்பொன் பார்க்க; see {}.

     “வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு” (பெரியபு. ஏயர்கோன். 109);.

   2. சுவடு, ஏடல்; trace, clue (இ.வ.);.

 மச்சம்1 maccam, பெ.(n.)

   1. மீன்; fish.

   2. திருமாலின் முதலாம் தோற்றரவு; fish- incarnation of {}, one of {}.

   3. மீன ஒரை; pisces of the zodiac.

   4. மீன (பங்குனி); மாதம்; month of {}.

     “பயமார் கடமச்சத்திற்குந் திரிக்குள்” (தைலவ. பாயி. 55);.

   5. மச்ச புராணம்,1 பார்க்க;see macca-{}.

   6. மச்சதேசம் பார்க்க;see

     “மச்சநாடன்” (பாரத. நிரை. 65);.

     [Skt. matsya → த. மச்சம்]

 மச்சம்2 maccam, பெ.(n.)

   மாற்றறிய வைத் திருக்கும் பார்வைப் பொன்; piece of gold kept for a sample.

     “வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக் கொண்டு” (பெரியபு. ஏயர்கோன்.109.);.

     [I. matstsu, K. macca → த. மச்சம்]

மச்சம்பி

மச்சம்பி maccambi, பெ.(n.)

   1. தமக்கை கணவன்; elder sister’s husband.

   2. அம்மான் மகன்; maternal uncle’s son.

   3. அத்தை மகன்; paternal aunt’s son.

   4. கணவனுடைய தமையன்; husband’s elder brother.

மச்சயந்திரம்

 மச்சயந்திரம் maccayandiram, பெ.(n.)

   அம்பெய்வதற்கு மீன் வடிவாயமைத்த குறி (அபி. சிந்.);; mark for archers in the shape of a fish.

     [மச்ச + யந்திரம்]

மச்சரம்

மச்சரம் maccaram, பெ.(n.)

   1. பொறாமை (வின்);; envy;

 jealousy at another’s success or prosperity.

   2. போட்டி; competition, rivalry.

     [Pkt. maccara → Skt. {} → த. மச்சரம்]

மச்சராசன்

மச்சராசன் maccarācaṉ, பெ.(n.)

   1. மீன் களின் தலைவன்; king of fishes.

     “மச்சராசன் மேல் வரவே” (தக்கயாகப். 469);.

   2. மச்ச தேசத்தரசன்; king of Matsya country.

     [Skt. {} → த. மச்சராசன்]

மச்சரூபன்

 மச்சரூபன் maccarūpaṉ, பெ.(n.)

   காய்ச்சு நஞ்சு; a kind of arsenic. (சா.அக.);

மச்சரேகை

 மச்சரேகை maccarēkai, பெ.(n.)

   ஆண்மகவு உண்டென்பதைக் குறிக்கும் உள்ளங்கை வரிக்கோடு; a line in the palm of hand, believed to denote the existence of male off spring.

மச்சவிளக்கம்

 மச்சவிளக்கம் maccaviḷakkam, பெ.(n.)

   மீன்களைப் பற்றிய நூல்(பாண்டி.);; treatise on marine zoology.

     [மச்சம் + விளக்கம்]

மச்சாக்கி

மச்சாக்கி maccākki, பெ.(n.)

   பொன்னாங்கண்ணி (நாமதீப.298);; a plant.

மச்சாமேகம்

 மச்சாமேகம் maccāmēkam, பெ.(n.)

   இது நாவல் வேரினால் தீரும் நோய் வகை; a variety of mega disease it is curses by the infusion of the root of jambolana.

மச்சாழ்வி

மச்சாழ்வி maccāḻvi, பெ.(n.)

மச்சாவி (M.E.R. 479 of 1917 – B); பார்க்கs;see {}.

மச்சி

மச்சி1 macci, பெ.(n.)

மச்சு4 பார்க்க (சங்.அக.);; see maccu.

 மச்சி2 macci, பெ.(n.)

   1. பூனைக்காலி; a climbing plant.

   2. கிச்சிலி; orange.

   3. கணுக்கால் எலும்பு; ankle bone (சா.அக.);.

மச்சிகன்

மச்சிகன் maccigaṉ, பெ.(n.)

   வணிகன்; trader.

     “மச்சிகனெழுந்து கம்பவாணரை மகிழ்ந்து போற்றி” (திருவிரிஞ்சைப். வழித்துணை-42);.

மச்சிகம்

மச்சிகம் maccigam, பெ.(n.)

   முடிதிருத்தத் தொழில் (நீலகேசி,280.);; barber’s work.

மச்சிகை

மச்சிகை1 maccigai, பெ.(n.)

   மோர்; butter-milk (சா.அக.);.

     [மத்திகை -→மச்சிகை. மத்தினால் கடையப்பட்ட மோர்.]

 மச்சிகை2 maccigai, பெ.(n.)

   ஈ (வின்.);; fly.

மச்சிக்கண்ணி

 மச்சிக்கண்ணி maccikkaṇṇi, பெ.(n.)

   பொன்னாங்கண்ணி; sessile plant (சா.அக.);.

     [P]

மச்சிக்கொடி

 மச்சிக்கொடி maccikkoḍi, பெ.(n.)

   பூனைக் காலி; a climbing plant (சா.அக.);.

மச்சினேயம்

 மச்சினேயம் macciṉēyam, பெ.(n.)

   கம்பம்புல்; a kind of grass (சா.அக.);.

மச்சிபம்

 மச்சிபம் maccibam, பெ.(n.)

   கடுகுரோகிணி (மலை);; chiristmas rose.

மச்சிப்பாசி

 மச்சிப்பாசி maccippāci, பெ.(n.)

மச்சியாச்சி பார்க்க; see {}.

மச்சியம்

மச்சியம்1 macciyam, பெ.(n.)

மச்சம்1 பார்க்க;see maccam.

 மச்சியம்2 macciyam, பெ.(n.)

   கடுகுரோகிணி; a root uses as purgative. (சா.அக.);

மச்சியராசன்

மச்சியராசன் macciyarācaṉ, பெ.(n.)

மச்சராசன் (தக்கயாகப் 469, உரை, பார்க்க;see {}.

மச்சியாகிதம்

 மச்சியாகிதம் macciyākidam, பெ.(n.)

   பொற்றிலை கரிப்பான்; a eclipse plant (சா.அக.);.

மச்சியாங்கண்ணி

 மச்சியாங்கண்ணி macciyāṅgaṇṇi, பெ.(n.)

   பொன்னாங்கண்ணி; sessile plant (சா.அக.);.

மறுவ. மச்சியாத்தி, மச்சியாச்சி, மச்சாக்கி.

மச்சியாச்சி

 மச்சியாச்சி macciyācci, பெ.(n.)

மச்சியாங் கண்ணி பார்க்க; see {}.

 மச்சியாச்சி macciyācci, பெ.(n.)

மச்சியாத்தி பார்க்க;see {}.

மச்சியாத்தி

 மச்சியாத்தி macciyātti, பெ.(n.)

   பொன்னாங் கண்ணி; sessile plant. (சா.அக.);

மச்சிருங்கி

 மச்சிருங்கி macciruṅgi, பெ.(n.)

   களாவிழுதி; Indian ipecacuanha (சா.அக..);.

மச்சில்

மச்சில் maccil, பெ.(n.)

மச்சு1 பார்க்க; see maccu1.

மச்சு

மச்சு1 maccu, பெ.(n.)

   1. மட்டமாகச் செங்கல் குத்திப்பாவிய மேற்றளம்; terraced roof, flat-roof.

   2. மேற்றளத்திற் பாவும் பலகை (வின்);; wainscot ceiling.

   3. மேல்மாடம்; upper story.

     “மச்சணி மாடங்கள்” (திவ். திருவாய் 5, 9, 3);.

   4. உத்தரமட்டத்தின் மேலுள்ள பலகைத் தடுப்பு (வின்.);; board partition for the gable of a room or boarded enclosure of an upper room, loft under the roof of a house.

 மச்சு2 maccu, பெ.(n.)

மச்சுப்பொன் பார்க்க; seе {}.

 மச்சு3 maccu,    1. குற்றம் (சங்.அக்.); blemish, fault.

   2. ஒழுங்கின்மை; that which is improper,

     “மச்சிது செய்தார் யாரோ” (பெரியபு. கண்ணப்ப.108);.

     [மள் -→மரு -→மறு = குற்றம். மள் -→மச்சு (மு.தா. 182);.]

 மச்சு4 maccu, பெ.(n.)

   பூனைக்காலி; cow – hage.

மச்சுகத்தி

 மச்சுகத்தி maccugatti, பெ.(n.)

   மரஞ் செடிகளைச் சீர்படுத்துங் கத்தி; pruning knife (C.G.);.

தெ. மட்சுகத்தி, க. மச்சுகத்தி.

     [மச்சு + கத்தி

     [P.]

மச்சுக்கல்

 மச்சுக்கல் maccukkal, பெ.(n.)

   மேற்றளத்திற் பதிக்கும் செங்கல் வகை (யாழ்.அக.);; ceiling brick.

     [மச்சு + கல்.]

மச்சுக்கால்

 மச்சுக்கால் maccukkāl, பெ.(n.)

   விட்டத்தின் நடுக்குத்துக் கால் (வின்.);; king-post.

     [மச்சு + கால்.]

மச்சுப்பாவு-தல்

மச்சுப்பாவு-தல் maccuppāvudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. மேற்றளத்தைப் பலகை முதலியவற்றால் மூடுதல்; to cover the floor of an upper storey with planks, bricks, etc.

   2. மேலிடத்தைப் பலகையாலடைத்தல்; to make a board ceiling.

     [மச்சு + பாவு-, பரவு -→பாவு-,]

மச்சுப்போ-தல்

மச்சுப்போ-தல் maccuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. மக்குதல்; to decay, rot.

   2. சோறு குழைதல் (யாழ்ப்.);; to be reduced to a mash by over-boiling, a rice.

     [மை-தல் -→மை -→மச்சு + போ-.]

மச்சுவா

 மச்சுவா maccuvā, பெ.(n.)

   ஏதம் நிகழும் போது பயன்படுத்திக் கொள்வதற்காகத் தோணியில் வைத்திருக்கும் சிறு படகு (க.ப.அக.);; life boat.

மச்சுவீடு

மச்சுவீடு maccuvīṭu, பெ.(n.)

   1. மேற்றள முள்ள கட்டிடம்; house with a terraced roof.

   2. பலகையடைப்புள்ள மேன்மாடி வீடு (வின்.);; house with a wainscot ceiling.

     [மச்சு + வீடு.]

     [P]

மச்சூர்

 மச்சூர் maccūr, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvadanai Taluk.

     [மாச்சு+ஊர்]

மச்சேந்திரநாதன்

 மச்சேந்திரநாதன் maccēndiranātaṉ, பெ.(n.)

   நவநாத சித்தரில் ஒருவர்; one of the Siddhars. (சா.அக.);

மச்சேந்திரநாதர்

 மச்சேந்திரநாதர் maccēndiranātar, பெ. (n.)

   நவநாத சித்தருளொருவர் (சது.);; a mystic, one of {}.

     [Skt. {} → த. மச்சேந்திரநாதர்]

மச்சேந்திரன்

 மச்சேந்திரன் maccēndiraṉ, பெ.(n.)

   மச்ச முனி நாயனார்; a Siddhar. (சா.அக.);

மச்சை

மச்சை1 maccai, பெ.(n.) அ

   ம்பெய்தற்குரிய குறி (வின்.);; target.

 மச்சை2 maccai, பெ.(n.)

மச்சம்2, 3 பார்க்க; see maccam2, 3.

 மச்சை3 maccai, பெ.(n.)

   1. எலும்பினுள்ளுள்ள மூளை; marrow of the bones.

   2. உட் காய்ச்சல் (யாழ்.அக.);; internal fever.

   3. மீனம்பர் (யாழ்.அக.);; irey amber.

மச்சைசமுற்பவம்

 மச்சைசமுற்பவம் massaisamuṟpavam, பெ.(n.)

   மாதப்போக்கின் போது வெளியாகும் கெட்ட அரத்தம் (சுரோணித நீர்);; menstrual blood. (சா.அக.);.

மச்சைதாதுகதசுரம்

 மச்சைதாதுகதசுரம் massaidādugadasuram, பெ.(n.)

   எலும்புச் சோற்றைத் தாக்கும் காய்ச்சல்; a fever affecting the marrow of the bone. (சா.அக.);

மச்சைதாதுக்கிருமி

 மச்சைதாதுக்கிருமி maccaitātukkirumi, பெ.(n.)

   எலும்புச் சோற்றை உண்ணும் நுண்ணுயிரி; parasite or germ that eats the bone marrow. (சா.அக.);

மச்சையுருக்கி

 மச்சையுருக்கி maccaiyurukki, பெ.(n.)

   எலும்பினுட்பசை வற்றுதல்; a trophy of bone marrow (சா.அக.);.

மச்சையெலும்பு

மச்சையெலும்பு maccaiyelumbu, பெ.(n.)

   1. எருதின் மச்சை யெலும்பு; medulla rubre.

   2. நிணவெலும்பு;  marrow bone (சா.அக.);.

மச்சைவாதம்

 மச்சைவாதம் maccaivātam, பெ.(n.)

   நாரத்தை; bitter orange (சா.அக.);.

மச்சைவித்திரதி

 மச்சைவித்திரதி maccaividdiradi, பெ.(n.)

   எலும்புச் சோற்றைத் தாக்கும் ஒரு கட்டி; abscess affecting the marrow. (சா.அக.);

மஞ்சகணை

 மஞ்சகணை mañjagaṇai, பெ.(n.)

   சுரம், வேட்கை இவற்றிற்குப் பயன்படும் ஒரு சரக்கு; a drug used for fever and thirst. (சா.அக.);.

மஞ்சகம்

மஞ்சகம்1 mañjagam, பெ.(n.)

   கட்டில் (சங்.அக.);; bedstead.

 மஞ்சகம்2 mañjagam, பெ.(n.)

மஞ்சுகம் பார்க்க (சங்.அக.);; see {}.

 மஞ்சகம் mañjagam, பெ.(n.)

   கொக்கு; a bird- stork. (சா.அக.);.

மஞ்சகாசிரயம்

 மஞ்சகாசிரயம் mañjakācirayam, பெ.(n.)

   மூட்டுப் பூச்சி; bug. (சா.அக.);

மஞ்சகீடம்

மஞ்சகீடம் mañjaāṭam, பெ.(n.)

   மூட்டைப் பூச்சி (நாநார்த்த.1048);; bug.

மஞ்சக்கல்

மஞ்சக்கல் mañjakkal, பெ.(n.)

   நூற்றிருபது இயற்கைச் சரக்குகளுள் ஒன்று; one of the 120 natural drugs. (சக.அக.);.

மஞ்சக்குடி

மஞ்சக்குடி mañjakkuḍi, பெ.(n.)

   அறந்தாங்கி வட்டத்தில் திருப்புரவாசல் அருகில் உள்ள ஊர்; a place near Thiruppuravasal in Aranthangi Taluk.

     “மஞ்சலக்குடிப்பற்றில் ஏம்பலான கலியுகராமநல்லூர்” (தெ.க.தொ. 8, கல்.210-2);.

மஞ்சக்குளிப்பான்பணம்

மஞ்சக்குளிப்பான்பணம் mañjakkuḷippāṉpaṇam, பெ.(n.)

   நாணய வகை; a kind of coin (Tr.Rev.m.ii,217);.

மஞ்சட் சாரை

மஞ்சட் சாரை mañjaṭcārai, பெ.(n.)

   1. பாம்பு வகை (சீவரட்.);; yellow rat-snake, Zaolys mucos

   2. நச்சுப்பாம்பு வகை; rock snake, Bungarus fasciatus, as having yellow marks on the sides of its head (m.m.751);.

     [மஞ்சள் + சாரை.]

மஞ்சட்கச்சி

 மஞ்சட்கச்சி mañjaṭkacci, பெ.(n.)

   மஞ்சணிறக் காய் காய்க்குந் தென்னை வகை; a species of coconut, bearing yellow nuts.

மஞ்சட்கடம்பு

 மஞ்சட்கடம்பு mañjaḍkaḍambu, பெ.(n.)

   நீண்ட மரவகை; a kind of cadamba tree (L.);.

     [மஞ்சள் + கடம்பு. கடம்பு = மரவகை.]

மஞ்சட்கடிதம்

 மஞ்சட்கடிதம் mañjaḍkaḍidam, பெ.(n.)

மஞ்சள்கடிதம் பார்க்க; see {}.

     [மஞ்சள் + கடிதம்.]

மஞ்சட்கடிதாசி

 மஞ்சட்கடிதாசி mañjaḍkaḍitāci, பெ.(n.)

மஞ்சள்கடிதம் பார்க்க; see {}.

     [மஞ்சள் + கடிதாசி.]

மஞ்சட்கடுக்காய்

 மஞ்சட்கடுக்காய் mañjaḍkaḍukkāy, பெ.(n.)

   வரிக்கடுக்காய்; a variety of gallnut (சா.அக.);.

     [மஞ்சள் + கடுக்காய்.]

மஞ்சட்கடுதாசிகொடுத்தல்

 மஞ்சட்கடுதாசிகொடுத்தல் mañjaḍgaḍutācigoḍuttal, பெ.(n.)

   கடன் இறுக்க முடியாத நிலையேற்படுகை(கொ.வ.);; becoming insolvent.

     [மஞ்சள்கடுதாசி + கொடுத்தல்.]

மஞ்சட்கனிச்சி

 மஞ்சட்கனிச்சி mañjaṭkaṉicci, பெ.(n.)

   எட்டி (சா.அக.);; nuxuomica.

மஞ்சட்கரிசாலை

 மஞ்சட்கரிசாலை mañjaṭkaricālai, பெ.(n.)

   மஞ்சள் பூவிடும் ஒருவகைக் கரிசலாங்கண்ணி (சா.அக.);; a variety of eclipse plant bearing yellow flowers.

மறுவ. மஞ்சட்கரிப்பான், பொற்றிலைக் கரிப்பான்.

     [மஞ்சள் + கரிசாலை.]

     [P]

மஞ்சட்கரு

 மஞ்சட்கரு mañjaṭkaru, பெ.(n.)

   முட்டையின் மஞ்சணிறமான உள்ளீடு (வின்.);; yolk of an egg.

     [மஞ்சள் + கரு.]

மஞ்சட்கலவாய்

மஞ்சட்கலவாய் mañjaṭkalavāy, பெ.(n.)

   செந்நீல நிறமுடையதும் 10 1/2 விரலம் வளரக் கூடியதுமான கடல் மீன் வகை; a sea fish deep purplish-blue, attaining 10 1/2 inch in length, Serranus flavocaeruleus.

மஞ்சட்கல்

மஞ்சட்கல்1 mañjaṭkal, பெ.(n.)

   சொரிப் புள்ளிக் கல் (சா.அக.);; a kind of mineral salt.

 மஞ்சட்கல்2 mañjaṭkal, பெ.(n.)

   மஞ்சள் நிறமுடைய கல்; a kind of yellow stone.

     [மஞ்சள் + கல்.]

மஞ்சட்களவாணி

 மஞ்சட்களவாணி mañjaṭkaḷavāṇi, பெ.(n.)

மஞ்சட்டிருடி பார்க்க; see {} (m.m.);.

     [மஞ்சள் + களவாணி.]

மஞ்சட்காசித்தும்பை

மஞ்சட்காசித்தும்பை mañjaṭkācittumbai, பெ.(n.)

   1. ஒருவகை நோய்; a kind of disease.

   2. பொன்னிறத் தும்பை; flowering plant with yellow flower (சா.அக.);.

மஞ்சட்காஞ்சி

 மஞ்சட்காஞ்சி mañjaṭkāñji, பெ.(n.)

   மர வகை; elliptic acuminate small leaved gamboge m.tr. Garcinia timberti (L.);.

     [மஞ்சள் + காஞ்சி.]

மஞ்சட்காணி

 மஞ்சட்காணி mañjaṭkāṇi, பெ.(n.)

   மண விழாவின் போது பெண்ணுக்குப் பெற்றோர் அன்பளிப்பாக வழங்கும் நிலம்; settlement assignment of land to a daughter, a kind of dowry (C.G.);.

     [மஞ்சள் + காணி.]

மஞ்சட்காப்பு

மஞ்சட்காப்பு mañjaṭkāppu, பெ.(n.)

   1. நெற்றியிலிடும் மஞ்சட் பொட்டு; mark of turmeric paste on the forehead, considered a charn.

   2. கோயிற் றெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சள் விழுது; turmeric paste with which a deity is coated.

     “நெய்யிலை யடைக்காய் மஞ்சட் காப்பு” (உபதேசா. சிவத்துரோ.498);.

   3. குழந்தைக்கு முதலெழுத்தறிமுகஞ் செய்யும் போது எழுதும் ஒலைக்கு மஞ்சள் பூசுகை; smearing with turmeric the ola leaf on which the first lesson of a child is written.

   4. தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவோர் கையில் கட்டும் மஞ்சளில் தோய்த்த துணி; a piece of cloth wet in the turmaric paste tied on the forehand at the occassion of vow made to deity.

   5. வினைத் தொடக்கத்தில் கையில் கட்டும் காப்பு மஞ்சள்; to tie an amulet, a yellow string or the arm in token of a vow and as a pledge of its fulfilment.

     [மஞ்சள் + காப்பு.]

மஞ்சட்காமாலை

 மஞ்சட்காமாலை mañjaṭkāmālai, பெ.(n.)

   குருதியில் பித்தநீர் கலப்பதால் கண்களும் தோலும் மஞ்சள் நிறமடைந்து காணப்படும் ஒரு நோய்; jaundice icterus.

     [மஞ்சள் + காமாலை.]

மஞ்சட்காளான்

 மஞ்சட்காளான் mañjaṭkāḷāṉ, பெ.(n.)

   காளான் வகை (வின்.);; a yellow mushroom.

     [மஞ்சள் + காளான்.]

மஞ்சட்கிலுகிலுப்பை

__,

பெ.(n.);

   பெருங்கிலுகிலுப்பை (சித்.அக.);; a kind of mattlewort.

மஞ்சட்காவி

 மஞ்சட்காவி mañjaṭkāvi, பெ.(n.)

   மஞ்சள் நிறமான காவி; ochre of yellow colour.

     [மஞ்சள் + காவி.]

மஞ்சட்கிழங்கு

மஞ்சட்கிழங்கு mañjaṭkiḻṅgu, பெ.(n.)

   1. கழிச்சற் (பேதி);க் கிழங்கு; rhuberb.

   2. குளிக்குமஞ்சள்; turmeric used by women while bathing (சா.அக.);.

மஞ்சட்குங்குமத்துக்கழை-த்தல்

மஞ்சட்குங்குமத்துக்கழை-த்தல் mañjaṭkuṅgumattukkaḻaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   நற்செயல்களில் மஞ்சள் தாம்பூலம் முதலியன பெற்றுக் கொள்ளுதற்குப் பெண்டிரை அழைத்தல்; to invite women folk, on an auspicious occasion when saffron, red powder, betel, etc, are given.

     [மஞ்சள்குங்குமத்துக்கு + அழை-.]

மஞ்சட்குச்சி

 மஞ்சட்குச்சி mañjaṭkucci, பெ.(n.)

   மர மஞ்சள்; tree turmeric.

     [மஞ்சள் + குச்சி.]

மஞ்சட்குப்பஞ்செட்டி

 மஞ்சட்குப்பஞ்செட்டி mañjaṭkuppañjeṭṭi, பெ.(n.)

மஞ்சம்பத்துச்செட்டி பார்க்க (இ.வ.);; see {}.

மஞ்சட்குருவி

மஞ்சட்குருவி mañjaṭkuruvi, பெ.(n.)

   1. தூக்கணங் குருவி; weaver-bird (m.m.1021);.

   2. குருவி வகை; turmeric bulbul, lxos luteolus (m.m. 102);.

     [மஞ்சள் + குருவி.]

     [P]

மஞ்சட்குறவான்

 மஞ்சட்குறவான் mañjaṭkuṟavāṉ, பெ.(n.)

   ஒருவகைக் கடல் மீன்; a kind of sea fish.

     [மஞ்சள் + குறவான்.]

மஞ்சட்குளி

மஞ்சட்குளி1 mañjaṭkuḷittal,    4 செ.கு.வி.(v.t.)

   1. மகளிர் நீராடும் போது உடலுக்கு மஞ்சள் தடவி முழுகுதல்; to smear the face and the body with a thin paste of turmeric, as women in bathing.

   2. பெண்டன்மையனாகுதல்; to consider oneself as a woman, said of a man in devision.

     ‘அந்தச் செயலை முடிக்காமற் போனால் நான் மஞ்சட் குளிக்கிறேன்’ (இ.வ.);.

   3. மர முதலியன மஞ்சள் நிறங் கொள்ளுதல்; to become yellow, as trees in water-logged.

     [மஞ்சள் + குளி-த்தல்.]

 மஞ்சட்குளி2 mañjaṭkuḷittal,    பகட்டாய் வாழ்தல்; to lead a fashionable life,

     “கொஞ்சி நீ மஞ்சட் குளிக்கிறாய்” (பஞ்ச.திருமுக.1217);.

     [மஞ்சள் + குளி-.]

 மஞ்சட்குளி3 mañjaṭkuḷi, பெ.(n.)

   1. மஞ்சள் தேய்த்துக் குளிக்கை; bath after smearing the face and the body with turmeric paste.

     “மஞ்சட் குளியை மறவாதே” (விறலிவிடு.);.

   2. மஞ்சணீர்விளையாட்டு பார்க்க; see {}.

     [மஞ்சள் + குளி.]

மஞ்சட்கூவாளி

 மஞ்சட்கூவாளி mañjaṭāvāḷi, பெ.(n.)

   மஞ்சளரளி, மஞ்சள் பூப்பூக்கும் அரளிச்செடி; a plant with yellow flowers.

     [மஞ்சள் + கூவாளி.]

மஞ்சட்கெளிறு

 மஞ்சட்கெளிறு mañjaṭkeḷiṟu, பெ.(n.)

   கெளிற்று மீன் வகை; a fish of golden colour.

     [மஞ்சள் + கெளிறு.]

மஞ்சட்கொங்கு

 மஞ்சட்கொங்கு mañjaṭkoṅgu, பெ..(n.)

   சடைக்கோங்கு மரம்; a variety of silk cotton tree.

     [மஞ்சள் + கோங்கு.]

மஞ்சட்கொத்து

 மஞ்சட்கொத்து mañjaṭkottu, பெ.(n.)

   கிழங்குடன் கூடிய மஞ்சட் செடி; turmeric plant with its cluster of tubers, as auspicious,

     ‘பொங்கலுக்குப் படைக்க மஞ்சட் கொத்து வாங்கி வா’ (உ.வ.);.

     [மஞ்சள் + கொத்து.]

மஞ்சட்கொன்றை

மஞ்சட்கொன்றை mañjaṭkoṉṟai, பெ.(n)

   1. சிறுமரவகை; sulphur-flowered senna.

   2. பிரம்புக் கொன்றை; siamese tree Seппа.

     [மஞ்சள் + கொன்றை.]

மஞ்சட்கொம்பு

 மஞ்சட்கொம்பு mañjaṭkombu, பெ.(n.)

மஞ்சட்டேறு பார்க்க (இ.வ.);; see {}.

     [மஞ்சள் + கொம்பு.]

மஞ்சட்கொழுப்பன்

 மஞ்சட்கொழுப்பன் mañjaṭkoḻuppaṉ, பெ.(n.)

   பறவை வகை; Indian Oriole, Oriolus kundoo.

மஞ்சட்கோழிமீன்

 மஞ்சட்கோழிமீன் mañjaṭāḻimīṉ, பெ.(n.)

   கடல் மீன் வகை; a sea-fish buff, vertically banded;

 Chaetodon octofasciatus.

     [மஞ்சள் + கோழிமீன்.]

மஞ்சட்சாமந்தி

 மஞ்சட்சாமந்தி mañjaṭcāmandi, பெ.(n.)

   செவ்வந்தி வகை (வின்.);; yellow chrysan – Themum coronation.

     [மஞ்சள் + சாமந்தி.]

மஞ்சட்சாரி

 மஞ்சட்சாரி mañjaṭcāri, பெ.(n.)

   மஞ்சள் வெற்றிலை; yellow betel leaf (சா.அக..);,

     [மஞ்சள் + சாரி.]

மஞ்சட்சிட்டு

 மஞ்சட்சிட்டு mañjaṭciṭṭu, பெ.(n.)

   தூக்கணங் குருவி (இ.வ.);; weaver bird.

     [மஞ்சள் + சிட்டு.]

மஞ்சட்சித்தகத்தி

 மஞ்சட்சித்தகத்தி mañjaṭcittagatti, பெ.(n.)

   மஞ்சட் செம்பை; a small tree which bears yellow flowers (சா.அக.);.

மஞ்சட்சித்திரப்பூ

 மஞ்சட்சித்திரப்பூ mañjaṭcittirappū, பெ.(n.)

   செவ்வந்திப் பூ; yellow chamomile (சா.அக.);.

மஞ்சட்சீனக்கிழங்கு

 மஞ்சட்சீனக்கிழங்கு mañjaṭcīṉakkiḻṅgu, பெ.(n.)

   மருந்துச் செடி வகை; indian rhubarh (சா.அக.);.

     [மஞ்சள் + சீனக்கிழங்கு.]

மஞ்சட்செம்முள்ளி

மஞ்சட்செம்முள்ளி mañjaṭcemmuḷḷi, பெ.(n.)

   1. செம்முள்ளி; thorny nail-dye.

   2. செம்முள்ளி வகை; leser yellow nail-dye s.sh., Barleria cuspidata.

   3. நீலம்பரம்; densespiked blue nail – dye (m.m.558);.

     [மஞ்சள் + செம்முள்ளி.]

மஞ்சட்செவ்வந்தி

 மஞ்சட்செவ்வந்தி mañjaṭcevvandi, பெ.(n.)

மஞ்சட்சாமந்தி பார்க்க (வின்.);; see {}.

     [மஞ்சள் + செவ்வந்தி.]

மஞ்சட்சேவிதம்

 மஞ்சட்சேவிதம் mañjaṭcēvidam, பெ.(n.)

மக்காச்சோளம் பார்க்க; see {}. (சா.அக.);.

மஞ்சட்சோகை

 மஞ்சட்சோகை mañjaṭcōkai, பெ.(n.)

   சோகை நோய் வகை; yellow sickness, cholorosis (M.L.);.

     [மஞ்சள் + சோகை.]

மஞ்சட்சோளம்

மஞ்சட்சோளம் mañjaṭcōḷam, பெ.(n.)

   சோள வகை (விவசா.3);; a kind of maize

     [மஞ்சள் + சோளம்.]

மஞ்சட்டணக்கு

 மஞ்சட்டணக்கு mañjaṭṭaṇakku, பெ.(n.)

   கோங்கிலவு; false tragacanth.

     [மஞ்சள் + தணக்கு.]

மஞ்சட்டாழை

 மஞ்சட்டாழை mañjaṭṭāḻai, பெ.(n.)

   தான் வகை (சித்.அக.);; a kind of aloe.

     [மஞ்சள் + தாழை.]

மஞ்சட்டி

 மஞ்சட்டி mañjaṭṭi, பெ.(n.)

மஞ்சிட்டி பார்க்க (வின்.);; see {}.

மஞ்சட்டிச்சேலை

மஞ்சட்டிச்சேலை mañjaṭṭiccēlai, பெ.(n.)

   சேலை வகை (தெ.க.தொ.7:22);; a kind of Sarее.

     [மஞ்சட்டி + சேலை.]

மஞ்சட்டிரளை

 மஞ்சட்டிரளை mañjaṭṭiraḷai, பெ.(n.)

   கணவனை இழந்தவள் ஈமச்சடங்கில் சுற்றத்தார்க்கு வழங்கும் மஞ்சளுருண்டை; ball of turmeric paste given by a widow to her relations at the cremation of her husband, as a token of her blessing.

     [மஞ்சள் + திரளை. திரள் -→திரளை.]

மஞ்சட்டிருடி

மஞ்சட்டிருடி mañjaḍḍiruḍi, பெ.(n.)

   முகமும் மூக்கும் மஞ்சள் நிறமாயுள்ள கழுகுவகை; dung kite, Neophron perenopterus (m.m.284);.

     [மஞ்சள் + திருடி..]

மஞ்சட்டுணி

 மஞ்சட்டுணி mañjaṭṭuṇi, பெ.(n.)

   மஞ்சணீரில் தோய்த்த சீலை (வின்.);; cloth dipped in water tinged with turmeric, as auspicious.

     [மஞ்சள் + துணி.]

மஞ்சட்டேறு

 மஞ்சட்டேறு mañjaṭṭēṟu, பெ.(n.)

   மஞ்சட் கிழங்குத் துண்டு (வின்.);; small piece of turmeric.

மஞ்சட்டோறு

 மஞ்சட்டோறு mañjaṭṭōṟu, பெ.(n.)

மஞ்சட்டேறு (வின்.); பார்க்க; see {}.

மஞ்சட்பட்டி

 மஞ்சட்பட்டி mañjaṭpaṭṭi, பெ.(n.)

   ஒருவகை மஞ்சட் பூண்டு; guiana golden funnel dog bane (சா.அக.);.

மஞ்சட்பால்கொடு – த்தல்

மஞ்சட்பால்கொடு – த்தல் mañjaḍpālkoḍuttal,    4 செ.கு.வி.(v.i.)

   தத்தெடுத்துக் கொள்ளுதல்; to adopt a child (Loc.);.

     [மஞ்சள் + பால் + கொடு-.]

மஞ்சட்பாவட்டை

 மஞ்சட்பாவட்டை mañjaṭpāvaṭṭai, பெ.(n.)

மஞ்சணாறி பார்க்க (வின்.);; see {}.

மஞ்சட்பாவாடை

 மஞ்சட்பாவாடை mañjaṭpāvāṭai,  new cloth immensed or dipped in water tinged with turmeric, put on while worshipping village deities.

     [மஞ்சள் + பாவாடை.]

மஞ்சட்பூ

 மஞ்சட்பூ mañjaṭpū, பெ.(n.)

   பவள மல்லிகை; night flowering jasmine.

     [மஞ்சள் + பூ.]

மஞ்சட்பூச்சு

 மஞ்சட்பூச்சு mañjaṭpūccu, பெ.(n.)

   மகளிர் குளிக்கும் போது மஞ்சளரைத்துப் பூசிக் கொள்ளுகை; rubbing the face and body with turmeric paste as woman in bathing.

     [மஞ்சள் + பூச்சு.]

மஞ்சட்பூதைவேனை

 மஞ்சட்பூதைவேனை mañjaṭpūtaivēṉai, பெ.(n.)

   ஒருவகை (கற்பக); மூலிகை; a rejuvenating plant which bear yellow flowers (சா.அக.);.

மஞ்சட்பொரி

 மஞ்சட்பொரி mañjaṭpori, பெ.(n.)

   சொர்ண பேதி; a mineral dissolving gold (சா.அக.);.

மஞ்சணத்தி

 மஞ்சணத்தி mañjaṇatti, பெ.(n.)

நுணா மரம்,

 a tree with fragrant flowers.

மஞ்சணம்

 மஞ்சணம் mañjaṇam, பெ.(n.)

   பற்பொடி; dentifrice.

மஞ்சணாங்கு

 மஞ்சணாங்கு mañjaṇāṅgu, பெ.(n.)

   சோலை கொடுக்காய்ப் புளி; a kind of gamboges.

மஞ்சணாடி

 மஞ்சணாடி mañjaṇāṭi, பெ.(n.)

   வைரமணியின் குற்றங்களுள் ஒன்றாகிய மஞ்சணிறக் கீற்று; yellow streak, a flaw in diamond.

     [மஞ்சள் + நாடி.]

மஞ்சணாதி

மஞ்சணாதி mañjaṇāti, பெ.(n.)

   1. மரவகை; Indian mulberry, s.tr. morinda citirifolia.

   2. செடி வகை; dying mulberry, s.sh. Morinda tinctoria.

   3. கொடி வகை; small ach root s.cl. Morinda umballata.

     [மஞ்சள் + நாறி.]

மஞ்சணாத்தி

 மஞ்சணாத்தி mañjaṇātti, பெ.(n.)

மஞ்சனாறி பார்க்க; see {}.

     [மஞ்சணாறி -→மஞ்சணாத்தி.]

மஞ்சணாறி

 மஞ்சணாறி mañjaṇāṟi, பெ.(n.)

   ஒரு வகை மரம்; morinda umbellata.

மஞ்சணாற்றி

 மஞ்சணாற்றி mañjaṇāṟṟi, பெ.(n.)

மஞ்சனாறி பார்க்க (வின்.);; see {}.

     [மஞ்சணாறி -→மஞ்சணாத்தி -→மஞ்சணாற்றி.]

மஞ்சணி

 மஞ்சணி mañjaṇi, பெ.(n.)

   வேலிப்பருத்தி (உத்தாமணி);; a twining creeper.

மஞ்சணிப்பு

 மஞ்சணிப்பு mañjaṇippu, பெ.(n.)

   மஞ்சள் நிறம்; yellowness.

மஞ்சணீராறு

மஞ்சணீராறு mañjaṇīrāṟu, பெ.(n.)

   காஞ்சீபுரத்திற்கருகில் ஒடும் வேகவதியாறு;  the river {}, flowing near {},

     ‘மஞ்சணீர் நதியின் பாங்கர்’ (காஞ்சிப்பு சார்ந்தா.47);.

     [மஞ்சள் + நீராறு.]

மஞ்சணீர்

மஞ்சணீர் mañjaṇīr, பெ.(n.)

   1. நற் காலங்களில் பயன்படுத்தும் மஞ்சட் கரைத்த நீர்; water mixed with turmeric and other ingredients, for use on auspicious occasions.

   2. திருமணத்தில் விருந்தினர் மீது மஞ்சணீர் தெளிக்கும் நான்காம் நாள்; fourth day of a wedding, as the time for sprinkling turmeric water, as guests.

     [மஞ்சள் + நீர்.]

மஞ்சணீர்குடிப்பி-த்தல்

மஞ்சணீர்குடிப்பி-த்தல் mañjaṇīrkuḍippittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   தத்தெடுத்துக் கொள்ளுங் குழந்தையை மஞ்சணீர் குடிப்பிக்குஞ் சடங்கினைச் செய்தல் (குருபரம்.354);; to make a child drink turmeric-mixed water, as a ceremonial rite in adoption.

     [மஞ்சள் + நீர் + குடிப்பி-.]

மஞ்சணீர்சுற்று – தல்

மஞ்சணீர்சுற்று – தல் mañjaṇīrcuṟṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   ஆளான (சமைந்த); பெண்ணிற்குச் சடங்கு செய்தல்; to celebrate the puberscence of a girl with the prescribed ceremonies.

     [மஞ்சள் + நீர் + சுற்று-.]

மஞ்சணீர்ச்சீட்டு

 மஞ்சணீர்ச்சீட்டு mañjaṇīrccīṭṭu, பெ.(n)

   தத்தெடுப்பதைக் குறிக்கும் ஆவணம்; deed of adoption.

     [மஞ்சள் + நீர் + சீட்டு.]

மஞ்சணீர்த்திருவிழா

 மஞ்சணீர்த்திருவிழா mañjaṇīrttiruviḻā, பெ.(n.)

   இளவேனில் விழா; the spring festival.

     [மஞ்சள் + நீர் + திருவிழா.]

மஞ்சணீர்நதி

 மஞ்சணீர்நதி mañjaṇīrnadi, பெ.(n.)

மஞ்சணீராறு பார்க்க; see {}.

     [மஞ்சள் + நீர் + Skt.நதி.]

மஞ்சணீர்ப்பிள்ளை

 மஞ்சணீர்ப்பிள்ளை mañjaṇīrppiḷḷai, பெ.(n.)

   தத்தெடுத்துக் கொண்ட பிள்ளை; adopted child.

     [மஞ்சள் + நீர் + பிள்ளை.]

மஞ்சணீர்விளையாட்டு

 மஞ்சணீர்விளையாட்டு mañjaṇīrviḷaiyāṭṭu, பெ.(n.)

   விழா, திருமணம் முதலியவற்றின் முடிவில் மஞ்சணீரிறைத்து விளையாடுகை; play of sprinkling turmeric mixed water at the close of a festival, marriage etc.

     [மஞ்சள் + நீர் + விளையாட்டு.]

மஞ்சணுணா

 மஞ்சணுணா mañjaṇuṇā, பெ.(n.)

மஞ்சணாறி பார்க்க (வின்.);; see {}.

     [மஞ்சள் + நுணா.]

மஞ்சணை

மஞ்சணை1 mañjaṇai, பெ.(n.)

   சில சாதி மகளிர் கழுத்திலும், சிறுதெய்வங்களின் உருவங்களிலும் பூசப்படும் எண்ணெய்க் குங்குமம் (குருகூர்ப்பள்ளு, 71);; turmeric paint mixed with oil, smeared on the necks of women of certain castes and idols of minor deities.

     [மஞ்சள் + நெய். மஞ்சணெய் -→மஞ்சனை]

 மஞ்சணை2 mañjaṇai, பெ.(n.)

மஞ்சணாறி, 1 (வின்.); பார்க்க; see {}.

மஞ்சதி

 மஞ்சதி mañjadi, பெ.(n.)

   கையாந்தகரை என்னுஞ்செடி; a kind of plant.

மஞ்சத்தண்ணீர்கரைத்தல்

 மஞ்சத்தண்ணீர்கரைத்தல் mañjattaṇṇīrkaraittal, பெ.(n.)

   பெண் பருவமடைதல் (இ.வ.);; attaining puberty, as a girl.

     [மஞ்சள் + தண்ணீர் + கரைத்தல்.]

மஞ்சநீர்த்தகப்பன்

 மஞ்சநீர்த்தகப்பன் mañjanīrttagappaṉ, பெ.(n.)

   தத்தெடுத்துக் கொண்ட தந்தை;(புதுவை.);; adoptive father.

     [மஞ்சள் + நீர் + தகப்பன்.]

மஞ்சநீலம்

 மஞ்சநீலம் mañjanīlam, பெ.(n.)

   துருசு, துத்தநாகம்; copper sulphate.

மஞ்சனப்புல்

 மஞ்சனப்புல் mañjaṉappul, பெ.(n.)

மஞ்சம்புல் பார்க்க (வின்.);; see {}.

     [மஞ்சனம் + புல்.]

மஞ்சனாவாரை

 மஞ்சனாவாரை mañjaṉāvārai, பெ.(n.)

   ஆவாரை; a shrub.

     [மஞ்சள் + ஆவாரை.]

மஞ்சனி

மஞ்சனி1 mañjaṉi, பெ.(n.)

பெண் (திவா.);

 Woman.

 மஞ்சனி2 mañjaṉi, பெ.(n.)

   வேலிப்பருத்தி;  hedge twiner.

 மஞ்சனி mañjaṉi, பெ. (n.)

   ஆத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Attur Taluk.

     [மஞ்சள்-மஞ்சளி-மஞ்சனி]

மஞ்சன்

மஞ்சன்1 mañjaṉ, பெ.(n.)

   மஞ்சணிற முடையவன் (இ.வ.);; man of yellow complexion.

     [மஞ்சலன் -→மஞ்சன்.]

 மஞ்சன்2 mañjaṉ, பெ.(n)

   1. மகன்; son.

     “சுந்தரி தரு மஞ்சன்” (கந்தபு. திருவி.81);.

   2. ஆண்மகன்; man, young man.

     “எழுந்தனர் மஞ்சு தோய்புய் மஞ்சரே”

மஞ்சன்பாரை

 மஞ்சன்பாரை mañjaṉpārai, பெ. (n.)

   ஒரு வகை மீன்; yellow dog fish.

     [மஞ்சள்+சுறா]

மஞ்சபத்துார்

 மஞ்சபத்துார் mañjabatr, பெ. (n.)

   திரு வண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்; name of the village in Tiruvannamalai.

     [மஞ்சம்+பற்று+ ஊர்]

மஞ்சப்பத்துச்செட்டி

மஞ்சப்பத்துச்செட்டி mañjappattucceṭṭi, பெ.(n.)

   செட்டிச்சாதி வகை; a sub-division of chetties (E.T.ii, 910);.

மஞ்சமண்டபம்

 மஞ்சமண்டபம் mañjamaṇṭabam, பெ.(n.)

   பள்ளியறை (யாழ்.அக.);; bed chamber.

     [மஞ்சம் + மண்டபம்.]

மஞ்சமம்

 மஞ்சமம் mañjamam, பெ.(n.)

   அரக்காம்பல்; red water lilly plant (சா.அக.);.

மஞ்சம்

மஞ்சம் mañjam, பெ.(n.)

   1. கட்டில் (பிங்.);; bed-stead, couch, cot.

     “மருவிய விறலியோடு மஞ்சநீ டலத்து வைகும்” (திருவாலவா.54, 34);.

   2. இருக்கை யிடுதற்குரிய அடித்தளம்; platform, dais.

     “மஞ்சமேறி மணித்தவி சேறினார்” (பாரத. குருகுலச்.120);.

   3. சப்பரம் (யாழ்ப்.);; canopied vehicle for idls.

மஞ்சம்புல்

மஞ்சம்புல்1 mañjambul, பெ.(n.)

   நுணா; morind tinctoria.

 மஞ்சம்புல்2 mañjambul, பெ.(n.)

   எலுமிச்சம் மணமுள்ள ஒருவகைப் புல்; lemon grass – Androogon schoenanthus.

மஞ்சரம்

மஞ்சரம்1 mañjaram, பெ.(n.)

   இலைக்கள்ளி; leafly milk spurge (சா.அக.);.

     [P]

 மஞ்சரம்2 mañjaram, பெ.(n.)

   முத்து (சிந்தா.நி.);; pearl.

மஞ்சரா

 மஞ்சரா mañjarā, பெ.(n.)

   மணித்தக்காளி; a plant (சா.அக.);.

மஞ்சரி

மஞ்சரி1 mañjari, பெ.(n.)

   1. பூங்கொத்து (பிங்.);; cluster of flowers.

     “மாணிக்க மஞ்சரியின்…….ஒளிசேர்” (திவ். இயற். பெரிய. 26);.

   2. பூமாலை (பிங்.);; flower garland.

   3. தளிர் (பிங்.);; shoot, sprout.

   4. மலர்க் காம்பு (வின்.);; flower stalk.

   5. ஒழுக்கம் (சூடா.);; rectitude;

 conformity to rules of conduct.

   6. மஞ்சரிப்பா (யாழ். அக.); பார்க்க;see {}.

   7. மருந்து வகை (யாழ். அக.);; a kind of medicine.

   8. முத்து (சங்.அக.);; pearl.

     [Skt. {} → த. மஞ்சரி]

 மஞ்சரி2 mañjari, பெ.(n.)

   நாயுருவி (மலை);; plant growing in hedges and thickets.

     [Skt. khara-{} → த. மஞ்சரி]

 மஞ்சரி3 mañjari, பெ.(n.)

   பண் வகை (பரத. ராக- பக்.102.);; a specific melody-type.

 மஞ்சரி4 mañjari, பெ.(n.)

   தொகுப்பு; collection.

     ‘சிறுகதை, மஞ்சரி’. (உ.வ.);.

மஞ்சரிப்பா

மஞ்சரிப்பா mañjarippā, பெ.(n.)

   பனுவல் வகை; a kind of poetic composition.

     “கிருஷ்ணராயற்கு மஞ்சரிப்பா…….. செய் ஞானப்ர காச குருராயன்” (தொண்டை. சத. 95.);

     [Skt. {} → த. மஞ்சரி]

மஞ்சரிப்புட்பம்

 மஞ்சரிப்புட்பம் mañjarippuṭpam, பெ.(n.)

   புங்கு; a tree.(சா.அக.);.

மஞ்சரீகம்

 மஞ்சரீகம் mañjarīkam, பெ.(n.)

   மருக் கொழுந்து (மூ.அ.);; southern wood.

மஞ்சலன்

 மஞ்சலன் mañjalaṉ, பெ.(n.)

   வில்லாளி; bowman.

மஞ்சலி

 மஞ்சலி mañjali, பெ.(n.)

   உருத்திர சடை; sweet basil. (சா.அக.);.

மஞ்சலிக்கான்

 மஞ்சலிக்கான் mañjalikkāṉ, பெ.(n.)

மஞ்சிலிக்கான் பார்க்க; see {}.

மஞ்சலோகயம்

 மஞ்சலோகயம் mañjalōkayam, பெ.(n.)

   தூக்கணாங்குருவி; a bird which see the loxia bird that builds hanging nests on the top of tree. (சா.அக.);.

மஞ்சல்

 மஞ்சல் mañjal, பெ.(n.)

மஞ்சூர் (இ.வ.); பார்க்க;see {}.

மஞ்சளரளி

 மஞ்சளரளி mañjaḷaraḷi, பெ.(n.)

   மஞ்சள் நிறத்தில் பூக்கும் அரளி;    மலையரளி, தங்க அரளி; exile olender, thevetia nerifoloia.

     [மஞ்சள் + அரளி.]

மஞ்சளலரி

 மஞ்சளலரி mañjaḷalari, பெ.(n.)

மஞ்சளரளி பார்க்க; see {}.

     [மஞ்சள் + அலரி.]

மஞ்சளாலாத்தி

 மஞ்சளாலாத்தி mañjaḷālātti, பெ.(n.)

மஞ்சணீரால் எடுக்கும் ஆரத்தி (வின்.);:

 ceremony of waving turmeric-mixed water to avert the evil eye.

     [மஞ்சள் + ஆலாத்தி.]

மஞ்சளி

 மஞ்சளி mañjaḷi, பெ.(n.)

   வேலிப் பருத்தி (மலை.);; hedge twiner.

மஞ்சளி – த்தல்

மஞ்சளி – த்தல் mañjaḷittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மஞ்சணிறமாதல்; to turn-yellow.

     “கண்கள் மஞ்சளித்து” (அகவசா.88);.

     [மஞ்சள் -→மஞ்சளி-.]

மஞ்சளிளங்கலையன்

 மஞ்சளிளங்கலையன் mañjaḷiḷaṅgalaiyaṉ, பெ.(n.)

   நெல் வகை; a kind of paddy.

மஞ்சளிளநீர்த்தென்னை

 மஞ்சளிளநீர்த்தென்னை mañjaḷiḷanīrtteṉṉai, பெ.(n.)

மஞ்சட்தெங்கு பார்க்க; see {}.

     [மஞ்சள் + இளநீர் + தென்னை.]

மஞ்சளிளவஞ்சி

 மஞ்சளிளவஞ்சி mañjaḷiḷavañji, பெ.(n.)

   மயில்வஞ்சி எனும் மரம்; a tree.

மஞ்சளெண்ணெய்

மஞ்சளெண்ணெய் mañjaḷeṇīey, பெ.(n.)

   1. மஞ்சள் சேர்த்து வடித்த மருந்தெண்ணெய் (வின்.);; a medicinal oil prepared with turmeric.

   2. மட்டமான மண்ணெண்ணெய்; crude kerosene (Mod.);.

     [மஞ்சள் + எண்ணெய்.]

மஞ்சள்

மஞ்சள்1 mañjaḷ, பெ.(n.)

   1. செடிவகை; turmeric, curcuma longa.

     “மஞ்சள் மெல்லிலை மயிர்ப்புறத் தைவர” (சிறுபாண். 44);.

   2. மஞ்சணிறம்; yellow colour, as that of turmeric.

மஞ்சள் வெயில்.

   3. எலுமிச்சை (சங்.அக.);; acid lime,

   4. மஞ்சட்குருவி பார்க்க; see {}.

     [மங்கல் -→மஞ்சள்.]

 மஞ்சள்2 mañjaḷ, பெ.(n.)

   அரிசனம்; Indian saffron.

மஞ்சள் வகைகள் :

   1. விரலி மஞ்சள்;   2. சருகு மஞ்சள்,

   3. பூசு மஞ்சள்,

   4. கறி மஞ்சள்,

   5. கூகை மஞ்சள்,

   6. கத்தூரி மஞ்சள்,

   7. நாட்டு மஞ்சள்,

   8. சீமை மஞ்சள்,

   9. குரங்கு மஞ்சள்.

மஞ்சள் அட்டை

 மஞ்சள் அட்டை mañjaḷaṭṭai, பெ.(n.)

   கால் பந்தாட்டத்தில் தவறாக விளையாடிய ஆட்டக்காரரை எச்சரித்துக் காட்டப்படும் அட்டைத்துண்டு; yellow card shown in football match as warning signal.

     [மஞ்சள் + அட்டை.]

மஞ்சள் திருடி

 மஞ்சள் திருடி mañjaḷtiruḍi, பெ.(n.)

   கழுகு வகை; kind of eagle.

     [மஞ்சள் + திருடி.]

மஞ்சள் நீராட்டு

 மஞ்சள் நீராட்டு mañjaḷnīrāṭṭu, பெ.(n.)

மஞ்சள்நீராட்டுவிழா பார்க்க; see {}.

     [மஞ்சள் + நீராட்டு.]

மஞ்சள் நீர்

 மஞ்சள் நீர் mañjaḷnīr, பெ. (n.)

பச்சைக் கோலத்தின் வகைகளிற் ஒன்று

 a floral decoration.

     [மஞ்சள்+நீர்]

மஞ்சள் முளைக்கிடை

 மஞ்சள் முளைக்கிடை mañjaḷmuḷaikkiḍai, பெ.(n.)

   விதைத்து இரண்டொரு நாள் சென்றபின் வயலிலிடும் ஆட்டுக்கிடை (நாஞ்.);; penning sheep in a field where paddy has been sown recently.

     [மஞ்சள் + முளை + கிடை.]

மஞ்சள்கடம்பை

மஞ்சள்கடம்பை mañjaḷkaḍambai, பெ.(n.)

   1. மஞ்சள் நிறமான கடம்பை; yellow cadamba.

   2. மஞ்சட்கடம்பை பார்க்க; see {}.

     [மஞ்சள் + கடம்பை.]

மஞ்சள்கடிதம்

 மஞ்சள்கடிதம் mañjaḷkaḍidam, பெ.(n.)

   ஒருவர் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலையைத் தெரிவிக்கும் அறிவிப்பு; petition given by a debtor unable to pay his debts notice of bankruptey.

     [மஞ்சள் + கடிதம்.]

மஞ்சள்கண்

 மஞ்சள்கண் mañjaḷkaṇ, பெ.(n.)

   ஒரு வகைக் கண்ணோய்; xanthelasma (சா.அக.);.

     [மஞ்சள் + கண்.]

மஞ்சள்கயிறு

 மஞ்சள்கயிறு mañjaḷkayiṟu, பெ.(n.)

தாலியாக அணியும் மஞ்சள் தடவிய கயிறு:

 cord soaked in turmeric solution and worn as tail.

     [மஞ்சள் + கயிறு.]

மஞ்சள்கரு

 மஞ்சள்கரு mañjaḷkaru, பெ.(n.)

   முட்டையிலுள்ள மஞ்சள் நிறத்திலிருக்கும் உயிர்ப் பொருள்; yolk.

     [மஞ்சள் + கரு.]

மஞ்சள்காப்பு

மஞ்சள்காப்பு mañjaḷkāppu, பெ.(n.)

   கோயில் திருவிழாவின் போது இறைப்பற்றாளர்கள் கட்டிகொள்ளும் காப்பு; a piece of cloth with coin wet in the turmaric paste tied on the forehand at the occassion of deity function. “வெற்றிலை நாற்பதுக்கு நெல்லிரு நாழியும் மஞ்சள் காப்புக்கு நெல்லுரியும் திருமடைப் பள்ளிக்கு விறகுக்கு குசக்கலத்துக்கு நெல் நாழியும்” (தெ.க. தொ.7.409-6);.

     [மஞ்சள் + காப்பு.]

மஞ்சள்குரு

 மஞ்சள்குரு mañjaḷkuru, பெ.(n.)

   எலுமிச்சம் பழம்; lime fruit (சா.அக.);.

     [மஞ்சள் + குரு.]

மஞ்சள்குருவி

 மஞ்சள்குருவி mañjaḷkuruvi, பெ.(n.)

   குருவி வகை; turmeric bulbul.

     [மஞ்சள் + குருவி.]

மஞ்சள்குளி-த்தல்

மஞ்சள்குளி-த்தல் mañjaḷkuḷittal,    4 செ.கு.வி. (v.i.)

மஞ்சட்குளி-த்தல் பார்க்க; see {}.

     [மஞ்சள் + குரு.]

மஞ்சள்தண்ணீர்

 மஞ்சள்தண்ணீர் mañjaḷtaṇṇīr, பெ.(n.)

மஞ்சள்நீராட்டுவிழா பார்க்க; see {}.

     [மஞ்சள் + தண்ணீர்.]

மஞ்சள்தாழை

 மஞ்சள்தாழை mañjaḷtāḻai, பெ(n.)

   பொன்னிறத் தாழை; golden yellow or yellowish red screw pine very fragrant flower.

     [மஞ்சள் + தாழை.]

மஞ்சள்திணை

 மஞ்சள்திணை mañjaḷtiṇai, பெ.(n.)

   திணை வகை;İtalian millet.

     [மஞ்சள் + திணை.]

மஞ்சள்தெங்கு

 மஞ்சள்தெங்கு mañjaḷteṅgu, பெ.(n.)

   தென்னை வகை; a variety of coconut tree bearing big coconuts, whose shells are used as vessels.

     [மஞ்சள் + தெங்கு.]

மஞ்சள்நாகதாளி

 மஞ்சள்நாகதாளி mañjaḷnākatāḷi, பெ.(n.)

   சப்பாத்துக் கள்ளி; cactus opuntia dillenil.

     [மஞ்சள் + நாகதாளி.]

மஞ்சள்நாங்கு

 மஞ்சள்நாங்கு mañjaḷnāṅgu, பெ.(n.)

   சோலைக் கொடுக்காய்ப் புளி; a species of gambage.

     [மஞ்சள் + நாங்கு.]

மஞ்சள்நாறிப்பட்டை

 மஞ்சள்நாறிப்பட்டை mañjaḷnāṟippaṭṭai, பெ.(n.)

   நுணாப்பட்டை; the bark of {} tree.

     [மஞ்சள்நாறி + பட்டை.]

மஞ்சள்நீராட்டுவிழா

 மஞ்சள்நீராட்டுவிழா mañjaḷnīrāṭṭuviḻā, பெ.(n.)

   பூப்பெய்திய பெண்களுக்கு நடத்தப்படும் சடங்கு; a ritual bath in turmeric mixed water for a girl who has attained pubterty.

     [மஞ்சள் + நீராட்டு + விழா.]

மஞ்சள்நீர்

மஞ்சள்நீர் mañjaḷnīr, பெ.(n.)

   1. முட்டையின் மஞ்சட் கரு; yellow of an egg.

   2. மஞ்சள் கரைத்த நீர்; water mixed turmeric.

   3. மஞ்சள் நிறமான நீர்; yellow coloured water.

   4. மஞ்சள் நிறமான சிறுநீர் (மூத்திரம்);; yellow coloured urine.

     [மஞ்சள் + நீர்.]

மஞ்சள்பாரை

 மஞ்சள்பாரை mañjaḷpārai, பெ. (n.)

   ஒருவகை மீன்; a kind of fish.

     [மஞ்சள்+பாரை]

மஞ்சள்மந்தாரை

 மஞ்சள்மந்தாரை mañjaḷmandārai, பெ.(n.)

   மந்தாரை வகை (வின்.);; a species of mountain ebony.

     [மஞ்சள் + மந்தாரை.]

மஞ்சள்மல்லிகை

 மஞ்சள்மல்லிகை mañjaḷmalligai, பெ.(n.)

   மல்லிகை இனத்தைச் சார்ந்த மஞ்சள் நிறமான நச்சுச் செடி; a poisonous climber resembling jasmine creeper with yellow flowers.

     [மஞ்சள் + மல்லிகை.]

மஞ்சள்முளை

 மஞ்சள்முளை mañjaḷmuḷai, பெ.(n.)

   இரண்டொரு நாளான நென்முளை (நாஞ்.);; paddy seedling, one or two days old.

     [மஞ்சள் + முளை.]

மஞ்சள்முள்ளங்கி

 மஞ்சள்முள்ளங்கி mañjaḷmuḷḷaṅgi, பெ.(n.)

   கிழங்கு வகை;саггоt-Daucus Carota.

     [மஞ்சள் + முள்ளங்கி.]

மஞ்சள்மெழுகு

 மஞ்சள்மெழுகு mañjaḷmeḻugu, பெ.(n.)

   தேன்மெழுகு; bee’s wax.

     [மஞ்சள் + மெழுகு.]

மஞ்சள்மேகம்

 மஞ்சள்மேகம் mañjaḷmēkam, பெ.(n.)

   மேகநோய்; a kind of venereal disease.

     [மஞ்சள் + மேகம்.]

மஞ்சள்வசந்தம்

 மஞ்சள்வசந்தம் mañsaḷvasandam, பெ.(n.)

   ஒரு நற்செயல் (வின்.);; a auspicious ceremony in which turmeric – mixed water in sprinkled.

     [மஞ்சள் + வசந்தம்.]

மஞ்சள்வரிக்குறவான்

 மஞ்சள்வரிக்குறவான் mañjaḷvarikkuṟavāṉ, பெ.(n.)

   முதுகில் கறுப்பு மஞ்சள் வரிகளையுடைய கடல் மீன்; file fish.

     [மஞ்சள்வரி + குறவான்.]

     [P]

மஞ்சள்வாங்கு – தல்

மஞ்சள்வாங்கு – தல் mañjaḷvāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   திருமணம் உறுதி செய்தல்; to settle a marriage.

     [மஞ்சள் + வாங்கு-.]

மஞ்சள்வாடை

 மஞ்சள்வாடை mañjaḷvāṭai, பெ.(n.)

   மகப்பேற்றுப் பெண்களில் அறையிலிடும் மஞ்சட்பொடி மணம் (வின்.);; scent of turmeric, as at the house when there is a lying-in.

     [மஞ்சள் + வாடை.]

மஞ்சள்விசிறி

 மஞ்சள்விசிறி mañsaḷvisiṟi, பெ.(n.)

   சேலை வகை (இ.வ.);; a kind of saree.

     [மஞ்சள் + விசிறி.]

மஞ்சள்விளையாட்டு

 மஞ்சள்விளையாட்டு mañjaḷviḷaiyāṭṭu, பெ.(n.)

மஞ்சணீர்விளையாட்டு பார்க்க (வின்.);; see {}.

     [மஞ்சள் + விளையாட்டு.]

மஞ்சள்வீரி

__,

பெ.(n.);

   மணலிக் கீரை (சா.அக.);; a bitter kitchen greens (சா.அக.);.

     [மஞ்சள் + வீரி.]

மஞ்சள்வெயில்

 மஞ்சள்வெயில் mañjaḷveyil, பெ.(n.)

   மாலை வெயில் (கொ.வ.);; yellow sunshine just before sunset, evening glow.

     [மஞ்சள் + வெயில்.]

மஞ்சள்வேட்டி

 மஞ்சள்வேட்டி mañjaḷvēṭṭi, பெ.(n.)

   மண மகன் முதலியோர் அணியும் மஞ்சணீற் றோய்த்த ஆடை; cloth dyed yellow, as worn by the bridegroom at the time of marriage.

     [மஞ்சள் + வேட்டி.]

மஞ்சவாகை

 மஞ்சவாகை mañjavākai, பெ.(n.)

   ஒருவகை வாகை; a variety of sirrassa tree.

     [மஞ்சள் + வாகை.]

மஞ்சவிளையாட்டு

 மஞ்சவிளையாட்டு mañjaviḷaiyāṭṭu, பெ. (n.)

   தீமிதி விழாவிற்கு மறுநாள், திருமண முறை யுடையவர்கள் ஒருவர்மீது ஒருவர்மஞ்சள் நீரை ஊற்றி விளையாடும் விளையாட்டு; spraying play of coloured water among teenagers on the next day of fire pit festival.

     [மஞ்சள் (நீர்);+ விளையாட்டு]

மஞ்சவெய்யில்

 மஞ்சவெய்யில் mañjaveyyil, பெ.(n.)

மஞ்சள்வெயில் பார்க்க; see {}.

     [மஞ்சள் + வெய்யில்.]

மஞ்சா

 மஞ்சா mañjā, பெ.(n.)

   இலைக்கள்ளி (மலை.);;  five-tubercled.

மஞ்சாக்குரு

 மஞ்சாக்குரு mañjākkuru, பெ.(n.)

   எலுமிச்சை; acid lime.

மஞ்சாடி

மஞ்சாடி1 mañjāṭi, பெ. (n.)

   சிவப்பான உருண்டை விதை; around shaped seed red in colour.

     [மஞ்சி-மஞ்சாடி]

 மஞ்சாடி mañjāṭi, பெ. (n.)

   இரண்டு குன்றி மணிகள் கொண்ட பொன் எடை; a gold weights equal to two crab eyes.

     “முக்கழஞ்செ மூன்று மஞ்சாடியுங் குன்றியும் பொன்”(தெ.சா.8:2:எ.529);.

     [மஞ்சு+ஆ]

மஞ்சாரி

 மஞ்சாரி mañjāri, பெ.(n.)

   கஞ்சாங்கோலை (மலை.);; white-basil.

மஞ்சாளி

 மஞ்சாளி mañjāḷi, பெ.(n.)

மஞ்சாடி பார்க்க; see {}.

மஞ்சி

மஞ்சி1 mañji, பெ.(n.)

   1. சணல்; sunnhemp

   2. சணல் நார்; hemp fibre.

 மஞ்சி2 mañji, பெ.(n.)

   படகு; cargo boat wtil a raised platform.

     [மஞ்சு -→மஞ்சி.]

     [P]

 மஞ்சி3 mañji, பெ.(n.)

   1. சிறுவரம்பு; ridge between garden beds.

   2. குறும்பு (இ.வ.);; gable.

     [மஞ்சு -→மஞ்சி.]

 மஞ்சி4 mañji, பெ.(n.)

   மூடுபனி (இ.வ.);; fog.

     [மஞ்சு -→மஞ்சி.]

 மஞ்சி5 mañji, பெ.(n.)

   சுங்கம் வாங்கி, கூட்டிக் கொடுப்போன்(வின்.);; pimp, pander.

 மஞ்சி mañji, பெ. (n.)

   யாழ் நரம்பிற்குத் தகாத ஒன்று; unappropriate string in harp,

     [மாஞ்சி-மஞ்சி]

மஞ்சிகன்

 மஞ்சிகன் mañjigaṉ, பெ.(n.)

   முடிதிருத்துவோன் (நாவிதன்);; barber.

மஞ்சிகம்

மஞ்சிகம்1 mañjigam, பெ.(n.)

   தாளி (பிங்.);; hedge bind-weed.

 மஞ்சிகம்2 mañjigam, பெ.(n.)

மஞ்சிகை1 பார்க்க (பிங்.);; see {}.

மஞ்சிகள்

 மஞ்சிகள் mañjigaḷ, பெ. (n.)

   வில் யாழிலுள்ள நரம்புகளைச் சுட்டும் பெயர்; name of strings in bow harp.

     [மஞ்சி+கள்]

மஞ்சிகை

மஞ்சிகை1 mañjigai, பெ.(n.)

   1. பெட்டி; chest, box.

     “யவன மஞ்சிகை” (பெருங்.உஞ்சைக். 32, 745);.

   2. கொட்டாரம்; store-room.

     “கூழுடைக் கொழுமஞ்சிகை” (பட்டினம.163);

   3. தொம்பை (பட்டினப்.163, கீழ்க் குறிப்பு);; grain bin.

     [மஞ்சு -→மஞ்சி -→மஞ்சிகை.]

 மஞ்சிகை2 mañjigai, பெ.(n.)

   1. தாளி; hedge bind-weed.

   2. கையாந்தகரை; a plant found in wet places.

   3. காதணி வகை; a ear-ornament.

     “மஞ்சிகை துளைச் சிறு காதினுட் டுளங்க” (சீவக.2388);.

மஞ்சிக் கோரை

மஞ்சிக் கோரை mañjikārai, பெ. (n.)

   கோரைக்களை வகை; reed. (வே.க.36);.

     [மஞ்சி+கோரை]

மஞ்சிக்கம்

மஞ்சிக்கம் mañjikkam, பெ.(n.)

   ஊர்ப்புறத்துத் தரிசு நிலம்; uncultivated land near a village or town.

     “மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி” (தெ.க தொ..Ill, 203, 14);.

மஞ்சிடாலிகம்

 மஞ்சிடாலிகம் mañjiṭāligam, பெ.(n.)

   மலை நொச்சி; hill nocci. (சா.அக.);.

மஞ்சிடாலை

 மஞ்சிடாலை mañjiṭālai, பெ.(n.)

   வாழை; plantain. (சா.அக.);.

மஞ்சிடாவிகம்

 மஞ்சிடாவிகம் mañjiṭāvigam, பெ.(n.)

   கண் சிவந்து கண்ணீர் வடிகை; an eye disease marked by redness of the eye and watering. (சா.அக.);.

மஞ்சிட்டம்

மஞ்சிட்டம் mañjiṭṭam, பெ.(n.)

மஞ்சாடி1,2 பார்க்க; see {}.

மஞ்சிட்டி

மஞ்சிட்டி mañjiṭṭi, பெ.(n.)

   1. நீர்ப்பூடுவகை; munjeet, Indian madder, rubia cordifolia (I, P);.

   2. சாப்பிரா (சிறுமரவகை);; arnotto.

   3. சாயவேர்; chayroot for dyeing (L.);.

மஞ்சிட்டிமேகம்

 மஞ்சிட்டிமேகம் mañjiṭṭimēkam, பெ.(n.)

   சிறுநீரில் காணப்படும் ஒருவகைக் காரப் பொருள்; an alkaloid substance found in the urine. (சா.அக.);.

     [மஞ்சிட்டி + மேகம்]

மஞ்சினி

 மஞ்சினி mañjiṉi, பெ.(n.)

   புழுங்கலரிசி; boiled rice. (சா.அக.);.

மஞ்சிபத்திரி

மஞ்சிபத்திரி mañjibattiri, பெ.(n.)

   1. ஒரு நறுமணப்பூண்டு; a fragrant leaf.

   2. காட்டு மல்லிகை; jasminum Angustifolium.

   3. மகர வாழை; a kind of plantain. (சா.அக.);.

மஞ்சிபலை

 மஞ்சிபலை mañjibalai, பெ.(n.)

   வாழை (யாழ்.அக.);; plantain.

மஞ்சிபோ-தல்

 மஞ்சிபோ-தல் mañjipōtal, செ.கு.வி. (v.i.)

   தொடர்ந்து இடித்தலால் நன்கு பொடியாகச் செய்தல்; to make nice powderto pounding continuously.

     [நைந்து-மைந்து-மஞ்சி+போ-]

மஞ்சிமம்

 மஞ்சிமம் mañjimam, பெ.(n.)

   அழகு (சிந்தா.நி.);; beauty.

மஞ்சிமூட்டம்

 மஞ்சிமூட்டம் mañjimūṭṭam, பெ.(n.)

   மூடு பனி (இ.வ.);; thick fog.

     [மஞ்சு + மூட்டம்.]

மஞ்சிரம்

 மஞ்சிரம் mañjiram, பெ.(n.)

   காலாழி; toe-ring.

மஞ்சிரு

 மஞ்சிரு mañjiru, பெ.(n.)

   கையாந்தகரை எனுஞ்செடி; a plant found in wet places.

மஞ்சிறு

 மஞ்சிறு mañjiṟu, பெ.(n.)

   கையாந்தகரை எனுஞ் செடி; a plant found in wet places.

மஞ்சிலிக்கான்

 மஞ்சிலிக்கான் mañjilikkāṉ, பெ.(n.)

   திருநீற்றுப் பச்சை; fragrant basil.

மஞ்சிலை

 மஞ்சிலை mañjilai, பெ.(n.)

   செங்கல்; brick. (சா.அக.);.

மஞ்சில்

 மஞ்சில் mañjil, பெ.(n.)

   முதுவரப்பு வழி; large embankment of cause way between paddy fields, used as a path.

மஞ்சிவிரட்டு

 மஞ்சிவிரட்டு mañjiviraṭṭu, பெ.(n.)

மஞ்சு விரட்டு பார்க்க; see {}.

     [மஞ்சு + விரட்டு.]

மஞ்சீரகம்

 மஞ்சீரகம் mañjīragam, பெ.(n.)

   கழற்சி; molucca – bean.

மஞ்சீரம்

மஞ்சீரம் mañjīram, பெ.(n.)

   காற்சிலம்பு; tinkling anklet.

     “மஞ்சீர மாறாவனகிரி” (அழகர்கல. 8);

     [Skt. {} → த. மஞ்சீரம்]

மஞ்சு

மஞ்சு1 mañju, பெ.(n.)

   1. அழகு (சூடா.);; beauty, gracefulness.

     “மஞ்சுடை மணி நகு மாலை மண்டபம்” (சூளா.குமார.17);.

   2. அணிகலன் (சூடா.);; jewel.

 மஞ்சு2 mañju, பெ.(n.)

   1. வெண்முகில்; white cloud.

     “மஞ்சென நின்றுலவும்” (சீவக.2853);.

   2. முகில்; cloud.

     “யாக்கை மலையாடு மஞ்சு போற்றோன்றி” (நாலடி, 28);.

   3. பனி (பிங்.);; dew.

   4. மூடுபனி (இ.வ.);; fog.

   5. யானை முதுகு; back of an elephant.

 மஞ்சு3 mañju, பெ.(n.)

   களஞ்சியம் (வின்.);; store-house, granary.

 மஞ்சு4 mañju, பெ.(n.)

   1. கட்டில்; cot, bed – stead,

   2. குருமாடியின் அடைப்பு; board – partition or gable carried above the wall.

   3. வீட்டு முகடு (பிங்.);; ridge of a roof.

 மஞ்சு5 mañju, பெ.(n.)

   1. இளமை; youthfulness, juvenility.

   2. வலிமை; strength, force.

     “மஞ்சரங்கிய மார்பிலும்” (கம்பரா. இராவணன் வதை 168);.

     [மைத்து -→மத்து -→மஞ்சு.]

 மஞ்சு mañju, பெ. (n.)

   தேங்காய் மட்டையிலி ருந்து நார் எடுத்தபின் வரும் துகள்; the dust particles from coconut shell coir.

     [மய்-மஞ்சு]

 மஞ்சு mañju, பெ. (n.)

   வயலில் அமைக்கப்படும் பாத்தித் திட்டு; raised row of earth in the field.

     [முஞ்சு-மஞ்சு]

மஞ்சுகம்

 மஞ்சுகம் mañjugam, பெ.(n.)

   கொக்கு; stork. (சா.அக.);.

மஞ்சுக்கட்டை

மஞ்சுக்கட்டை mañjukkaṭṭai, பெ.(n.)

   1. முகட்டுச்சிரிப்பு

 sloping roof over the breadth of a house.

     [மஞ்சு4 + கட்டை.]

மஞ்சுளம்

மஞ்சுளம் mañjuḷam, பெ.(n.)

   1. அழகு; beauty, agreeableness.

     “மலரடி மஞ்சுளப் பஞ்சி” (கம்பரா. ஊர்தேடு.32);. 2. இலேசு;

 softness, tenderness.

     “மஞ்சுளமா கிருப்பது சுபுக நன்றென்பர்” (திருவிளை. உக்கிர. வேல்வளை.35);.

மஞ்சுளா

 மஞ்சுளா mañjuḷā, பெ. (n.)

   அழகி, எழிலி; beautiful woman.

     [Skt. {} → த. மஞ்சுளா.]

மஞ்சுவிரட்டு

 மஞ்சுவிரட்டு mañjuviraṭṭu, பெ. (n.)

   எருதுபிடி விளையாட்டு காளையை அடக்கும் திறப்பாடு; capturing a bull at large as a proof of bravery.

மறுவட சல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், ஏறுகோள், ஏறுகோடல்

     [மைந்து(வலிமை);-மஞ்சு+விரட்டு]

மஞ்சுவெருட்டு

மஞ்சுவெருட்டு mañjuveruṭṭu, பெ.(n.)

   1.மஞ்சுவிரட்டு பார்க்க; see {}.

   2. ஆகவர்கை (இ.வ.);; cattle raid.

     [மஞ்சு5 + வெருட்டு. வெருள் -→வெருட்டு.]

மஞ்சூடை

மஞ்சூடை mañjūṭai, பெ.(n.)

   1. பெரிய கூடை; large basket.

   2. பெட்டி; box.

மஞ்சூரம்

மஞ்சூரம்1 mañjūram, பெ.(n.)

   கடலை (பிங்);; bengal gram.

     [Skt. {} → த. மஞ்சூரம்]

 மஞ்சூரம்2 mañjūram, பெ.(n.)

   மஞ்சாடி மரம்; barbadoes.

     “மஞ்சூர் மிலக்கங்கொண்டு” (வீரவன. உமையாண். 20);

மஞ்சூருத்திரவு

 மஞ்சூருத்திரவு mañjūruttiravu, பெ.(n.)

   உறுதி செய்யப்பட்டதைக் குறிக்குங் கட்டளை (இ.வ.);; order of confirmation.

     [மஞ்சூர் + உத்திரவு]

மஞ்சூர்

 மஞ்சூர் mañjūr, பெ.(n.)

   ஏற்றுக்கொள்ளப் பட்டது; that which is accepted or approved.

     [U. {} → த. மஞ்சூர்]

மஞ்சைக்காணி

 மஞ்சைக்காணி mañjaikkāṇi, பெ.(n.)

மஞ்சட்காணி (இ.வ.); பார்க்க; see {}.

     [மஞ்சள் -→மஞ்சை + காணி.]

மஞ்சொட்டி

 மஞ்சொட்டி mañjoṭṭi, பெ.(n.)

   பூடுவகை; a kind of herb.

மஞ்ஞை

மஞ்ஞை maññai, பெ.(n.)

   மயில்; peacock.

     “பழன மஞ்ஞை யுகுத்த பீலி” (புறநா.13);.

மஞ்ஞையீர்க்கு

 மஞ்ஞையீர்க்கு maññaiyīrkku, பெ.(n.)

   மயிலிறகு; peacock’s feather.

     [மஞ்ஞை + ஈர்க்கு.]

மஞ்ஞையூர்தி

 மஞ்ஞையூர்தி maññaiyūrti, பெ.(n.)

   முருகக் கடவுள்; Lord Murugan as having a peacock for his vehicle.

     [மஞ்ஞை +ஊர்தி.]

மடக்கடி

மடக்கடி maḍakkaḍi, பெ.(n.)

   1. கோணல்; crookedness.

   2. சமமின்மை; uneveness, as of a road, bank, shore, etc.

   3. ஏதம்; danger, peril, hazard.

   4. சூழ்ச்சி; indirectness or crabbedness of an answer calculated to deceive.

   5. தந்திரம்; stratagem, device, craft.

   6. வலைக்குட் படுத்துகை; entrapping, entangling ensnaring.

     [மடக்கு + அடி.]

மடக்கனியான்

 மடக்கனியான் maḍakkaṉiyāṉ, பெ.(n.)

   ஓணான்; lizard.

மடக்கம்

மடக்கம் maḍakkam, பெ.(n.)

   1. வளைவு;  flexure, crook.

   2. வணக்கம்; reverence, veneration.

   3. பணிவு; subjection, subordination, compliance, conformity.

   4. மனவடக்கம்; restraint, limitation.

   5. நோய் திரும்புகை (நாஞ்.);; return, relapse, as of fever.

     [முல் (வளைதற் கருத்துவேர்); -→முள் -→முடங்கு -→மடங்கு -→மடக்கு = வளைவு, மூலை முடக்கு, தடுப்பு, தடை. மடக்கு -→மடக்கம் (வே.க.4:82);.]

மடக்கல்

 மடக்கல் maḍakkal, பெ.(n.)

   முடக்கல்; bending as in limbs – flexing.

     [முடக்கல் -→மடக்கல். உகர அகரத்திரிவு (ஒ.நோ.); குடைதல் -→கடைதல்.]

மடக்காணி

மடக்காணி maḍakkāṇi, பெ.(n.)

   மடத்துக்கு விடப்பட்ட நிலம்; donates land for abbey.

திருவீழிமிழலை திருநாவுகரசன் மடக் காணி” (திரு.வீழி.கல். 573/1977);.

     [மடம் + காணி. காணி = நிலம்.]

மடக்கிடு-தல்

மடக்கிடு-தல் maḍakkiḍudal,    18 செ.குன்றாவி.(v.t.)

   1. மேற்செல்லாது தடுத்து வைத்தல்; to check, to keep within certain limits.

     “மடக்கிடன் மனமொடு” (பெருங். உஞ்சைக். 34, 50);.

   2. வாய்மடுத்தல் (ஈடு. 2, 3, 9, ஜீ);; to swallow at a single draught.

     [மடக்கு + இடு-.]

மடக்கியல்

 மடக்கியல் maḍakkiyal, பெ.(n.)

   சுரிதகம் (யாழ்.அக.);; last member of a Kalippa.

     [மடக்கு + இயல்.]

மடக்கிறால்

மடக்கிறால்1 maḍakkiṟāl, பெ.(n.)

   மீன் வகையு ளொன்று; a kind of fish.

 மடக்கிறால்2 maḍakkiṟāl, பெ.(n.)

   சிப்பிமீன் வகை; prawn, astacus carcinus.

மடக்கிளி

மடக்கிளி maḍakkiḷi, பெ.(n.)

   1. இளங் கிளி; young parrot.

     “சிறையாரு மடக்கிளியே யிங்கேவா” (தேவா.);.

   2. பெண்; woman, charming like a parrot.

   3. நீலங்கலந்த சாம்பல் நிறமுள்ளதும் பதின்மூன்று விரற்கடை வளரக் கூடியதுமான கடல்மீன் வகை; a sea-fish, bluish grey, attaining 13 inch in length, therapon jarbua.

மடக்கீதம்

 மடக்கீதம் maḍakātam, பெ.(n.)

   ஒருவகை நஞ்சு; a kind of arsenic.

மடக்கு

மடக்கு1 maḍakkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. மடித்தல்; to bend, as the arms, knees, to draw in, fold, shut, as knife, to double, to deflect.

     “வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கி” (கம்பரா.கடறாவு.17);.

   2. திருப்புதல்; to turn about, as a horse, carriage or vessel, to turn back.

     “தடுத்திடை மடக்குதன் மானும்” (காஞ்சிப்பு. நகர.6);.

   3. மாறிமாறிச் செய்தல்; to repeat.

   4. வென்று கீழ்ப்படுத்துதல்; to subdue, as in war, conquer, to surpass.

   5. வாயடக்குதல்; to stop by argument or sophistry;

 to confute, to over power.

   6. கால்நடை முதலியவற்றை ஒருசேர அடக்கி வைத்தல்; to compress;

 to restrain;

 to keep together, as cattle in a row.

     “இந்த வயலுக்கு ஒருநாள் மாட்டுக்கடை மடக்க வேண்டும்” (உ.வ.);.

   7. பண்டம் முதலியவற்றைத் தன் வசப்படுத்துதல்; to engage, as a servent, to secure for oneself, as an article or cargo.preventing others from obtaining it.

   8. தடுத்தல்; to stop or hinder, as proceedings, to quash.

   9. அழித்தல்; to destroy;

 to kill.

     “மடக்கு வாயுயிரை யென்னா” (கம்பரா, கும்பக. 188);.

   10. பணிவாக்குதல்; to tame, humble.

   11. உடற்கட்டுக் குலைதல்; to break the constitution as disease.

   12. மருந்து முதலியவற்றின் கடுமை முதலியவற்றை முறித்தல்; to counteract, as force;

 to reduce, as the power of a medicine, the action of a poison;

 to check, as a fire from spreading.

   13. தவச அரியறுத்தல்; to reap, as sheaves of corn.

   14. உடுத்துதல்; to wear around the waist, as a garment.

     “மடக்கினார் புலியின் றோலை” (தேவா.955, 1);

   15. ஒதுக்கிக் கட்டுதல்; to parcel out and enclose, as a piece of land.

 மடக்கு2 maḍakkudal,    5 செ.கு.வி.(v.i.)

   திரும்பத் திரும்ப வருதல்; to recur, as letters or words.

     “ஓரெழுத்து மடக்கலும்” (தண்டி.95);.

     [முல் = வளைதல் பொருள். முல் -→முள் -→முண் -→முணவு -→முணகு -→முணங்கு -→முணங்குதல் = வளைதல். முன் -→முணம் -→முடம் = வளைவு. முடம் -→முடிவு. முடவுதல் = நொண்டுதல். முடம் -→முடங்கு. முடங்குதல் = வளைதல். முடங்கு -→முடக்கு = வளைவு. முடக்கு -→மடக்கு (வே.க.4:82);.]

 மடக்கு3 maḍakku, பெ.(n.)

   1. மூலைமுடுக்கு; bend, crook, flexure; corner.

   2. வளைவு (கொ.வ.);; inflection, deflection, refraction.

   3. திருப்பு (இ.வ.);; turn.

   4. மடிப்பு; fold; folding, as of a knife or table.

   5. மடக்குக் கத்தி பார்க்க; see {}.

   6. தடை; curb, check, rebuff.

   7. மாறிமாறி வருகை; repetition, constant recurrence.

   8. தாறுமாறு; zigzag course.

   9. நிலவளவு வகை; superficial measure of land, 1/2 acre, as a turn of ploughing cattle (G.Sm.D.I.i, 288);.

   10. செய்யுளில் சொல்சீர் முதலியன பொருள் வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணி வகை (தண்டி.90);; repetion of a word, foot or line of poetry, in a stanza each time in a different sense.

   11. ஒருதடவையில் உட்கொள்ளக் கூடிய நீர் (இ.வ.);; mouthful of liquid swallowed at a time.

   12. நூல்; thread.

     [முடங்கு -→மடங்கு -→மடக்கு.]

 மடக்கு4 maḍakku, பெ.(n.)

அளந்த நிலத்தின் வரி மதிப்பிற்குச் சமமான நிலம்: tax equivalent land area for newly measured land. (ஆவணம் 1991, 10- iii (1); அதிஇராசேந்திரனின் 3ஆம் ஆண்டு கல்வெட்டு (கி.பி.1070);, அரியலூர் வட்டம் பெரிய திருக்கோணம் செளந்தர பெருமாள் கோயில்);.

 மடக்கு5 maḍakku, பெ.(n.)

   பெரிய மண்ணகல், மண் ஏனம் மூடி; a large earthern plate.

 மடக்கு1 maḍakku, பெ. (n.)

   அரைத்தட்டுப் போன்று இருக்கும் சட்டி; earthen flat pot.

     [மட-மடக்கு]

 மடக்கு2 maḍakku, பெ. (n.)

   ஒயிலாட்டத்தில் வலக்காலால் மட்டும் செய்யப்படும் ஓர் உடல் இயக்கம்; right leg movement infolk dance ‘oyilättam’.

     [மட-மடக்கு]

 மடக்கு3 maḍakku, பெ. (n.)

விளக்கெரிக்க

   உதவும் அகன்ற அகல்; earthen vessel used as lamp plate.

     [மடு-மடக்கு (பள்ளமானது);]

மடக்குக்கட்டி

 மடக்குக்கட்டி maḍakkukkaḍḍi, பெ.(n.)

   மடக்குக் கவிழ்த்தது போலிருக்கும் ஒருவகை கட்டி;  a kind of abscess to resemble an indian saucer in its shape (சா.அக.);.

     [மடக்கு + கட்டி.]

மடக்குக்கட்டில்

 மடக்குக்கட்டில் maḍakkukkaḍḍil, பெ.(n.)

   மடிக்கக்கூடிய கட்டில் (இக்.வ.);; folding cot.

     [மடக்கு + கட்டில்.]

மடக்குக்கதவு

 மடக்குக்கதவு maḍakkukkadavu, பெ.(n.)

   மடிப்புள்ள கதவு வகை; folding door.

     [மடக்கு + கதவு.]

மடக்குக்கத்தி

 மடக்குக்கத்தி maḍakkukkatti, பெ.(n.)

   பிடிக்குள் மடக்கி வைக்குங் கத்தி வகை (இ.வ.);; folding knife, clasp knife.

     [மடக்கு + கத்தி.]

     [P]

மடக்குக்கத்திரி

 மடக்குக்கத்திரி maḍakkukkattiri, பெ.(n.)

   மடக்கி வைக்கும் சிறிய கத்தரிக் கோல் வகை (இ.வ.);; folding scissors.

     [மடக்கு + கத்தரி.]

மடக்குக்கால்

மடக்குக்கால்1 maḍakkukkāl, பெ.(n.)

   வளை கால்; bandy leg.

     [மடக்கு + கால்.]

 மடக்குக்கால்2 maḍakkukkāl, பெ.(n.)

   முட்டுக்கால்; support, prop.

     [மடக்கு + கால்.]

மடக்குக்குடர்

 மடக்குக்குடர் maḍakkukkuḍar, பெ.(n.)

   குடற்பகுதி; large intestings.

     [மடக்கு + குடர். குடல் -→குடர்.]

மடக்குச்சுரம்

 மடக்குச்சுரம் maḍakkuccuram, பெ.(n.)

   மாறிமாறி வரும் காய்ச்சல்; a fever constantly recurring, intermittent fever.

     [மடக்கு+சுரம். மடக்கு = திருப்பு, திரும்பத் திரும்ப.]

மடக்குத் தட்டி

 மடக்குத் தட்டி maḍakkuttaḍḍi, பெ. (n.)

   இரண்டாக மடக்கிய தட்டி; folded bamboo mat.

     [வடக்கு+தட்டி]

மடக்குத்தூரம்

 மடக்குத்தூரம் maḍakkuttūram, பெ.(n.)

மடக்குத்தொலைவு பார்க்க; see {}

     [மடக்கு + தூரம்.]

 Skt. தூரம்;

த. தொலைவு.

மடக்குத்தொலைவு

 மடக்குத்தொலைவு maḍakkuttolaivu, பெ.(n.)

   அணைப்புத் தூரம் (இ.வ.);; distance through which the furrow is turned.

     [மடக்கு + தொலைவு.]

மடக்குநாற்காலி

 மடக்குநாற்காலி maḍakkunāṟkāli, பெ.(n.)

   மடக்கக்கூடிய இருக்கை; folding chair.

     [மடக்கு + நாற்காலி.]

மடக்குநீட்டு

 மடக்குநீட்டு maḍakkunīḍḍu, பெ.(n.)

   திருமுகவோலை; royal writ.

     [மடக்கு + நீட்டு.]

மடக்குப்பாய்

 மடக்குப்பாய் maḍakkuppāy, பெ. (n.)

நெட்டுவாக்கில் மடக்கும் பாய்,

 mat to be folded lengthwise.

     [மடக்கு+பாய்]

மடக்குப்பிடிக்கத்தி

 மடக்குப்பிடிக்கத்தி maḍakkuppiḍikkatti, பெ.(n.)

மடக்குக்கத்தி பார்க்க; see {}.

     [மடக்குப்பிடி + கத்தி.]

மடக்குமடக்கெனல்

 மடக்குமடக்கெனல் maḍakkumaḍakkeṉal, பெ.(n.)

   நீர் குடிப்பதிலுண்டாகும் ஓர் ஒலிக்குறிப்பு; onom, expr. signifying gurgling of water in drinking.

மடக்குமண்டா

 மடக்குமண்டா maḍakkumaṇḍā, பெ.(n.)

   மீன்பிடி கருவி வகை; a kind of fishing instrument (க.ப.அக.);.

மடக்குமேசை

 மடக்குமேசை maḍakkumēcai, பெ.(n.)

   கால்களை மடக்கி வைத்தற்குரிய மேசை;  folding table.

     [மடக்கு + மேசை.]

மடக்குயில்

 மடக்குயில் maḍakkuyil, பெ.(n.)

   குயில் போன்ற குரலினையுடைய பெண்; woman having a sweet voice like the koel.

     [மழ -→மழம் -→மடம் + குயில்.]

மடக்குவரி

மடக்குவரி maḍakkuvari, பெ.(n.)

   1. இரண்டாம் விளைச்சலின் மேல் விதிக்கும் வரி; additional tax, as for a second corp.

   2. வரிமேல் வரி; additional cess.

     [மடக்கு + வரி.]

மடக்கெனல்

 மடக்கெனல் maḍakkeṉal, பெ.(n.)

மடக்குமடக்கெனல் பார்க்க; see {}.

     [மடக்குமடக்கெனல் -→மடக்கெனல்.]

மடக்கெழுத்தாணி

 மடக்கெழுத்தாணி maḍakkeḻuttāṇi, பெ.(n.)

   கத்தியுடன் பிடிக்குள் அடங்கும் எழுத்தாணி வகை; folding style with knife.

     [மடக்கு + எழுத்தாணி.]

     [P]

மடக்கொடி

மடக்கொடி maḍakkoḍi, பெ.(n.)

   இளம் பெண்; young woman, as tender,

     “ஒரு மடக் கொடியாகி வந்து” (கம்பரா.அகலி.51);.

     “மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை’ (மணிமே.);.

     [மழ -→மழம் -→மடம். மடம் + கொடி.]

மடங்கக்கூறு – தல்

மடங்கக்கூறு – தல் maḍaṅgakāṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   திரும்பக் கூறுதல்; to repeat.

     “அவை… மடங்கக்கூறல் வேண்டாவாம்” (தொல்,பொருள்.255. உரை);.

     [மடங்கு + கூறு-.]

மடங்கடி – த்தல்

மடங்கடி – த்தல் maḍaṅgaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. தோற்கச் செய்தல்; to subdue, suppress, restrain, repulse;

 to check, as in war or in argument;

 to put rout;

 to chase.

   2. திரும்பச் செய்யும்படி பண்ணுதல் (இ.வ.);; to compel, as a person, to re-do a thing.

     [மடங்கு + அடி-.]

மடங்கற்கணக்கு

 மடங்கற்கணக்கு maḍaṅgaṟkaṇakku, பெ.(n.)

   சாகுபடியான பயிரில் பலனைக் குறிக்கும் கணக்கு; accounts of the actual produce of a field.

     [மடங்கல் + கணக்கு.]

மடங்கற்கொடியோன்

 மடங்கற்கொடியோன் maḍaṅgaṟkoḍiyōṉ, பெ.(n.)

   வீமன் (சூடா.);; Bhima, as having a lion banner.

     [மடங்கல் + கொடியோன்.]

மடங்கலர்

 மடங்கலர் maḍaṅgalar, பெ.(n.)

   பகைவர்; enemies, foes.

மடங்கலூர்தி

 மடங்கலூர்தி maḍaṅgalūrti, பெ.(n.)

   கொற்றவை (அரிமா மீதமர்ந்தவள்);; Durga, as riding a lion.

     [மடங்கல் + ஊர்தி.]

மடங்கல்

மடங்கல் maḍaṅgal, பெ.(n.)

   1. வளைகை; bending, being bent.

   2. கோணம்; crook, angle, corner.

   3. மீளுகை; returning.

   4. மழுங்கிப் போகை; curving or blunting of the edge.

   5. அடக்கம்; suppression, control.

   6.. ஒடுக்கம்; absorption.

     “மைந்துடை யொரவனு மடங்கலுநீ” (பரிபா.1,44);.

   7. முடிவு; end.

   8. இடி; thunderbolt.

   9. வடவைத்தீ (பிங்.);; submarine fire.

     “மடங்கல் வண்ணங் கொண்ட கருந்திறல்” (பதிற்றுப்.628);.

   10. ஊழிக்காலம்; termination of yuga.

     “மடங்கற் காலை” (கலித்.120);.

   11. கூற்றுவன்; God of death.

     “மடங்கல் போற் சினை.இ” (கலித்2);.

   12. கூற்றுவனின் ஏவலர்; servant of God of death.

     “தருமனு மடங்கலும்” (பரிபா.3, 8);.

   13. அரிமா; lion.

     “மடங்கலிற் சீறி மலைத் தெழுந்தார்” (பு.வெ.3,24);.

   14. அரிமா மாந்தன் (நரசிங்கம்);; man-lion incarnation of Tirumal.

     ” மடங்கலாய் மாறட்டாய்” (சிலப்.17, முன்னிலைப் பரவல், 3);.

   15. யாளி; fabulous griffin,

   16. நோய் வகை; a disease.

   17. முற்றிவளைந்து சாய்ந்த கதிர் (இ.வ.);; ripened sheaf of grain, prostrate in the field.

   18. சம்பா அறுவடையான பின் விதைப்பிலுண்டாகும் கோடைப் பயிர் (இ.வ.);; summer catch-corp, sown after campa has been reaped.

   19. தாழை (அக.நி.);; fragrant screw-pine.

     [முல் (வளைதற் கருத்துவேர்); -→முள் -→முண் -→முண -→முணவு -→முணங்கு -→முணங்குதல் = உள் வளைதல், உள்ளடங்குதல், அடங்குதல், குரலையடக்கிப் பேசுதல், முணங்கு = சோம்பலால் ஏற்படும் உடம்பு வளைவு, முடக்கம், சோம்பு, அடக்கம். முணங்கு -→முடங்கு -→முடக்கு = வளைவு, தெருவின் கோணம், முடக்கு (நெளி); மோதிரம். முடங்கும் நாக்கு, முடக்குநோய், தடை, காலத்தாழ்வு, வேலையின்மை. முடங்கு -→மடங்கு -→மடங்கல் (வே.க.4:82);.]

 மடங்கல் maḍaṅgal, பெ.(n.)

   1 ஐந்தாம் தமிழ் மாதம் (ஆவணி);; the fifth Tamil month August-September

   2. 22 ஆவது விண்மீனாகிய பறவை(அவிட்டம்);;   22nd winmin.

     [மடங்கு-மடங்கல்(அரிமா);]

மடங்காநீர்

மடங்காநீர் maḍaṅgānīr, பெ.(n.)

   வற்றாத நீரூற்று (சினேந்:362, தலைப்பு);; unfailing supply of water, as from a spring.

     [மடங்கா + நீர். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை.

மடங்கி

மடங்கி maḍaṅgi,    இருந்து; or sitting posture.

     “தலைபோ கன்மையிற் சிறுவழி மடங்கி” (புறநா.223:2);.

மடங்கு

மடங்கு1 maḍaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. வளைதல் (பிங்.);; to become bent, as the arm or leg.

     “படையோன் முடங்கி மடங்கி (கலித். 94, 9);.

   2. முடங்குதல்; to be shut closed, folded, as a knife or table

   3. கோணுதல்; to be inflected, deflected. refracted, bent out of place.

   4. வளைந்து செல்லுதல்; to bend, turn, as a road, or river.

   5. மீளுதல்; to turn about

   6. சொல் முதலியன திரும்ப வருதல்; to be repeated,

     “என்று மடங்கக் கூறல் வேண்டாவாம்” (தொல். பொருள்.255, உரை);.

   7. திருகுதல்; to be twisted, distorted, as a limb.

   8. குறைதல்; to be diminished.

     “மடங்கா விளையுள் வயலூர்” (சிலப்.23:119);

   9. சுருங்குதல்; shrink.

     “மூப்புக் காலத்து உடலின் தோல் மடங்கும்” (உ.வ.);.

   10. ஒடுங்குதல்; to be absorbed. (திருக்கோ.75, உரை);.

   11. நெளிதல்; to be battered.

   12. கீழ்ப்படுதல்; to submit, yield, surrender.

     “காரொலி மடங்க……. களத்தினார்த்த பேரொலி” (கம்பரா. நாகபாச. 291);.

   13. தாழ்தல்; to be humbled, tamed, reduced, as pride, to be broken down, as the constitution.

     “இகழ்பாடுவோ ரெருத்த மடங்க” (புறநா.40 பாடபேதம்);.

   14. செயலறுதல்; to be indolent, inactive.

     “உழவினார் கைம்மடங்கின்” (குறள், 1034);.

   15. சூடடங்குதல்; to be decreased in force, as the wind or heat, to yield, as a disease or poison to medicines or mantras.

   16. நிறுத்தப் பெறுதல்; to be stopped, hindered, to be quashed, as proceedings.

     “மண்டமரின்றொடு மடங்கும்” (கம்பரா.கும்ப.267);.

   17. தடுக்கப்படுதல்; to be turned off, diverted, thrown back, as weapons.

   18. வாயடங்குதல்; to be silenced by argument, by sophistry, by authority, to be checked, confuted, refuted.

   19. சொத்துரிமையாளர் இறந்தபின் சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்து விடுதல் (கொச்சை.);; to be lodged with one’s as property on the death of the owner.

     [முல் (வளைதற் கருத்து வேர்); -→முள் -→முண். முண -→முணவு -→முணகு -→முணங்கு. முணங்குதல் = உள்வளைதல், உள்ளடங்குதல், அடங்குதல், குரலையடக்கிப் பேசுதல், முணங்கு = சோம்பலால் ஏற்படும் உடம்புவளைவு, முடக்கம், சோம்பு, அடக்கம். முணங்கு -→முடங்கு. முடக்கு = வளைவு, தெருவின் கோணம், முடக்கு மோதிரம் (நெளி);. முடங்கும் நாக்கு, முடக்குநாய், தடை, காலத்தாழ்வு, வேலையின்மை, முடங்கு -→மடங்கு.]

 மடங்கு2 maḍaṅgu, பெ.(n.)

   1. மடி, அளவு; measure, quantity, degree.

     “இரு மடங்காக வெய்தும்” (சூளா.கல்யா.165);.

   2. அடக்கம்; suppression, control.

   3. மடங்குத்தீர்வை பார்க்க; see {}.

   4. நோய் (யாழ்.அக.);; disease.

   5. இழைக் கயிறு (யாழ்.அக.);; coir rope.

     [முல் (வளைதற்கருத்து வேர்); -→முள் -→முடங்கு -→மடங்கு.]

 மடங்கு3 maḍaṅgu, பெ.(n.)

   1. மணங்கு3 பார்க்க; see {}.

   2. பங்கு; share, portion.

மடங்குக்கட்டு – தல்

மடங்குக்கட்டு – தல் maḍaṅgukkaḍḍudal,    5 செ.கு.வி.(v.i.)

   வலையை அளவாகக் கட்டுதல்; tie the fishing net in the limited area.

மடங்குத்தீர்வை

 மடங்குத்தீர்வை maḍaṅguttīrvai, பெ.(n.)

   தண்டவரி; penal assessment (R.T.);.

     [மடங்கு + தீர்வை.]

மடங்குபலன்

 மடங்குபலன் maḍaṅgubalaṉ, பெ.(n.)

    ripened sheaf of grain, protrate in the field.

மடங்கைப்பூடு

 மடங்கைப்பூடு maḍaṅgaippūḍu, பெ.(n.)

   எழுத்தாணிப் பச்சிலை எனுஞ்செடி; a plant whose flower shoots up in the form of a style.

மடசாம்பிராணி

மடசாம்பிராணி maḍacāmbirāṇi, பெ.(n.)

மடையசாம்பிராணி 1, பார்க்க (இ.வ.);; see {}.

     [மடையசாம்பிராணி -→மடசாம்பிராணி.]

மடச்சாம்பிராணி

மடச்சாம்பிராணி maḍaccāmbirāṇi, பெ. (n.)

   அடிமுட்டாள் (திட்டும் சொல்);; fool. (கொ.வ.வ.சொ.19);.

     [மட்டம்-மட+சாம்பிராணி]

மடச்சீலி

 மடச்சீலி maḍaccīli, பெ. (n.)

   கிச்சிலி மீன் வகை; Squeaking perch.

     [மட+சீலி]

மடதருமம்

மடதருமம் maḍadarumam, பெ.(n.)

   1. மடத்துக்குச் செய்யும் தருமம்; donation to a mutt.

   2: மடத்திற் புரியுந் தருமம்; alms given at a mutt.

     [மடம் + Skt. தருமம்.]

மடதாளம்

 மடதாளம் maḍatāḷam, பெ.(n.)

மட்டிய தாளம் பார்க்க; see {}.

     [மட்டியதாளம் -→மடதாளம்.]

மடதி

 மடதி maḍadi, பெ.(n.)

   ஆலங்கட்டி; hail stone (சா.அக.);.

மடத்தனம்

மடத்தனம் maḍattaṉam, பெ.(n.)

   1. மூட குணம்; stupidity, dullness.

   2. மடம்1,1 பார்க்க; see {}.

     [மடமை + தனம்.]

மடத்துவாசல்மறியல்

மடத்துவாசல்மறியல் maḍattuvācalmaṟiyal, பெ.(n.)

   நாட்டுக் கோட்டைச் செட்டிகள் மடத்து அதிகாரிகளை முன்னிட்டுக் கொண்டு செய்யும் பஞ்சாயத்து வகை; an old form of {} among {}, dist. fr. {}(E.T.V.263);.

     [மடத்துவாசல் + மறியல்.]

மடநடை

மடநடை maḍanaḍai, பெ.(n.)

   மென்னடை; gentle gait, as a women and children.

     “மடநடை பெண்மை வனப்பென்ப தோராய்” (சீவக.2125);.

     [மள் -→மழ -→மழலை = இளமை, குழவி, மழ -→மழம் -→மடம் = இளமை மடம் + நடை.]

மடநோக்கு

மடநோக்கு maḍanōkku, பெ.(n.)

   மருண்ட பார்வை; bashful, timid look.

     “பெருமட நோக்கிற் சிறுநுதல்” (பு.வெ.11, 7);.

     [மடம் + நோக்கு.]

மடந்தை

மடந்தை1 maḍandai, பெ.(n.)

   1. பெண்; woman, lady.

     “இடைக்குல மடந்தை” (சிலப்.16:2);.

   2. மகளிர் பருவம் ஏழனுள் பதினான்கு முதல் பத்தொன்பது அகவை வரையுள்ள பருவத்துப் பெண்; woman between the aged of 14 and 19.

     “மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச்” (சிலப்.);.

     “உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு” (குறள், 1122);.

   3. பருவமாகாத பெண் (யாழ்.அக.);; girls who have not attained puperty.

   4. சேம்புவகை (நாஞ்.);; a kind of Indian kales.

     [முல் (இளமைக் கருத்துவேர்); -→முள் -→முளை. முளை = வித்தினின்று முளைத்த சிறுவெளிப்பாடு, இளமை, மரக்கன்று, சிறு பிள்ளை, மகன். முளை -→முளையான் = சிறுகுழந்தை. முள் -→மள் -→மள்ளன் = இளைஞன், மறவன், படைமறவன், குறிஞ்சி நிலவாணர். மள் -→மள -→மழ = இளமை, குழந்தை. மழ -→மழம் -→மழல் -→மழலை = இளமை, குழந்தைகளின் இனிய திருந்தாச் சொல். மழ -→மழம் -→மடம் = இளமை, இளமைக்குரிய மென்மை, இளமைக்குரிய அழகு, இளமைக்குரிய அறியாமை, பெண்பாற் குணம் நான்கனுள் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை. மழ -→மட -→மடம் -→மடந்தை (வே.க.4:5);.]

 மடந்தை2 maḍandai, பெ.(n.)

   1. மரமஞ்சள்; tree turmeric.

   2. அரிதாரம்; orpiment.

மடந்தையாயிரு-த்தல்

மடந்தையாயிரு-த்தல் maḍandaiyāyiruttal,    3 செ.கு.வி.(v.i.)

   மகப்பெறும் பருவத்தினளாதல்; to be of child-bearing age.

     “அவள் மடந்தையா யிருக்கிறாள் (உ.வ.);.

     [மடந்தையாய் + இரு-.]

மடன்

மடன்1 maḍaṉ, பெ.(n.)

   1. அறியாமை; ignorance:

     “இன்சொலார் தன் மடனொக்கு மடனு முண்டோ” (கம்பரா.உண்டாட்டு.10);.

   2. கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை; credulity; proneness to accept another’s opinion and holding fast to it.

     “சாயலு நாணு மடனு மென்றா” (தொல். பொருள்.247);.

     [மடம் -→மடன்.]

 மடன்2 maḍaṉ, பெ.(n.)

   அறிவிலான்; ignorant person.

க. மடன்.

     [மடம் -→மடன்.]

மடன்மா

மடன்மா maḍaṉmā, பெ.(n.)

மடல் 3 பார்க்க; see {}.

   3. “மடன்மாகூறு மிடனுமா ருண்டே” (தொல்.பொருள்.99);.

     [மடல் + மா.]

மடப்பசுதி

 மடப்பசுதி maḍappasudi, பெ.(n.)

   கருங் கூளி; a black vulture (சா.அக.);.

மடப்பதிங்கம்

 மடப்பதிங்கம் maḍappadiṅgam, பெ.(n.)

   உளுந்து; black gram (சா.அக.);.

மடப்பதியினாம்

மடப்பதியினாம் maḍappadiyiṉām, பெ.(n.)

   பணியாளர்களுக்கு மோரும் உணவு மளிப்பதற்காக விடப்படும் இறையிலி நிலம் (இ.வ.);; endowment for supplying butter – milk and food for public officers.

     [மடம்2 + பதி + உருது. இனம் -→இனாம்.]

மடப்பம்

மடப்பம்1 maḍappam, பெ.(n.)

   1. மென்மை; tenderness.

   2. இணக்கம்; acquiescence.

   3. பேதைமை; simplicity, credulity.

     [முல் (இளமைக் கருத்துவேர்); -→முள் -→மள். மள்ளன் = இளைஞன், மறவன், மள் -→மள -→மழ = இளமை, குழந்தை. மழ -→மட -→மடப்பு -→மடப்பம் (வே.க.4:5);.]

 மடப்பம்2 maḍappam, பெ.(n.)

   1. மருத நிலந்தூர்; town in an agricultural tract.

   2. ஐந்நூறு ஊர்களுக்குத் தலைமை பெற்ற ஊர்; chief town admist 500 villages.

 மடப்பம்3 maḍappam, பெ.(n.)

   அரண்மனையிற் பணி செய்யும் பெண் (யாழ்.அக.);; female inmate of a palace.

மடப்பற்று

மடப்பற்று maḍappaṟṟu, பெ.(n.)

   மடத்துக்குரிய சொத்து (யாழ்.அக.);; property of a monastery.

     [மடம்2 + பற்று.]

மடப்பளி

 மடப்பளி maḍappaḷi, பெ.(n.)

     [மடைப்பள்ளி ->மடப்பள்ளி ->மடப்பளி.]

மடப்பளிப்பால்

 மடப்பளிப்பால் maḍappaḷippāl, பெ.(n.)

    coconut toddy (சா.அக.).

மடப்பள்ளி

 மடப்பள்ளி maḍappaḷḷi, பெ.(n.)

மடைப் பள்ளி பார்க்க (வின்.);; see {}.

     [மடைப்பள்ளி -→மடப்பள்ளி.]

மடப்புறத்து இறையிலி

மடப்புறத்து இறையிலி maḍappuṟattuiṟaiyili, பெ.(n.)

   வரிகள் நீக்கிய கோயில் நிலம்; tax free temple land.

     “படுவூர்க் கோட்டத்து காவிரிப்பாக்கப் பற்று திருபாற்கடலில் இவருக்குக் காணியான நிலத்தில் இவருக்கு மடப்புறத்து இறையிலி” (தெ.க.தொ.17, கல்.759-3);.

     [மடப்புறத்து + இறையிலி.]

மடப்புறம்

 மடப்புறம் maḍappuṟam, பெ. (n.)

   மடத்துக்கு விடப்பெற்ற இறையிலி நிலம்; free land donated for monastery.

     “நிலம் நாலுமாவும் இம்மடத்துக்கு மடப்புறமாக ஆயம் பாடி தூவல்.”

     [மடம்+புறம்]

மடமட – த்தல்

மடமட – த்தல் maḍamaḍattal,    4 செ.கு.வி.(v.i.) ஒலித்தல்; to gurgle, rattle.

மடமடக்கி

 மடமடக்கி maḍamaḍakki, பெ.(n.)

   வட்டத் திருப்பி; root of twining plant (சா.அக.);.

மடமடப்பு

 மடமடப்பு maḍamaḍappu, பெ.(n.)

   ஒலிக்கை; gurgling, purling, rattling.

     [மடமட -→மடமடப்பு.]

மடமடவெனல்

 மடமடவெனல் maḍamaḍaveṉal, பெ.(n.)

மடமடெனல் பார்க்க; see {}.

     [மடமட + எனல்.]

மடமடெனல்

மடமடெனல் maḍamaḍeṉal, பெ.(n.)

   1. ஓர் ஒலிக்குறிப்பு; onom. expr. signifying gurgling, as water, rattling, rustling.

   2. விரைவுக் குறிப்பு; being in haste, acting with despatch.

     [மடமட + எனல்.]

மடமயில்

மடமயில்1 maḍamayil, பெ.(n.)

   அறியாப் பெண்; an innocent girl.

     [மடம் = அழகு, முதிராஅறிவு. மடம் + மயில்.]

 மடமயில்2 maḍamayil, பெ.(n.)

   அழகிய பெண்; woman, beautiful like peafowl.

     [மடம் = அழகு. மடம் + மயில்.]

மடமான்

மடமான் maḍamāṉ, பெ.(n.)

   பெண்; woman, as timid as a deer.

     “மட மானினைப் போத வென்று” (திவ்.பெரியதி.3, 7, 1);.

     [மடம் + மான்.]

மடமை

மடமை1 maḍamai, பெ.(n.)

   அறிவின்மை; idiocy.

     [மடம் -→மடமை.]

 மடமை2 maḍamai, பெ.(n.)

   பேதைமை; ignorance, stupidity, silliness, folly,

     “விருந்தோம்ப லோம்பா மடமை” (குறள், 89);.

     [மழ -→மட -→மடமை.]

மடம்

மடம்1 maḍam, பெ.(n.)

   1. அறியாமை; ignorance, folly,

     “மடப்படலின்றிச் சூழுமதி வல்லார்” (சீவக.1927);.

   2. மகடூஉக் குணம் நான்கனுள் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை; simplicity, credulity, artelessness, one of four {}.

     “வாலிழை மட மங்கையர்” (புறநா.11);.

   3. அழகு; beauty.

     “மடக்கணீர் கோரும்” (சிலப்.17, உரைப்பாட்டு மடை);.

   4. மென்மை; tenderness, delicacy.

     “தெளி நடை மடப்பிணை” (புறநா.23);.

   5. இணக்கம்; acquiescence.

     “அஞ்சிறைய மடநாராய்” (திவ்.திருவாய்.1,4,1);.

     [முல் (இளமைக் கருத்துவேர்); -→முள் -→முளை. முளை = வித்தினின்று முளைத்த சிறுவெளிப்பாடு, இளமை, மரக்கன்று, சிறு பிள்ளை, மகன். முளை -→முளையான் = சிறுகுழந்தை. முள் -→மள் -→மள்ளன் = இளைஞன், மறவன், படைமறவன், குறிஞ்சி நிலவாணர். மள் -→மள -→மழ = இளமை, குழந்தை. மழ -→மழம் -→மழல் -→மழலை = இளமை, குழந்தைகளின் இனிய திருந்தாச் சொல். மழ -→மழம் -→மடம் = இளமை, இளமைக்குரிய மென்மை, இளமைக்குரிய அழகு, இளமைக்குரிய அறியாமை, பெண்பாற் குணம் நான்கனுள் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை, மழ -→மட -→மடம். முள் -→மள் -→மள்ளன் = இளைஞன், வீரன். மள் -→மழ = இளமை, குழவி. மழவுங்குழவும் இளமைப் பொருள (தொல்.உரி, 14);. மழ -→மட -→மடம் (வே.க.4:5);.]

இரு திணையிலும் பெண்பால் ஆண்பாலினும் மடம் மிக்கதாகக் கருதப்படுவதால் மடவரல், மடந்தை முதலிய பெயர்கள் உயர்திணையிலும் மந்தி, மூடு முதலிய பெயர்கள் அஃறிணையிலும் பெண்பாலைக் குறிக்க வெழுந்தன (மு.தா.42);.

 மடம்2 maḍam, பெ.(n.)

   1. துறவியர் தங்குமிடம்; hermitage.

ஆண்டிகள் கூடி மடம் கட்டினாற்போல்? (பழ.);.

   2. இரப்போர்க்கு உணவளிக்குமிடம் அல்லது இரப்போர் உண்டு தங்குமிடம்; a place where pilgrims and religious mendicants are fed.

     “வல்லநாட்டு ஸ்ரீ கோவிஞ்சபாடி மடத்தில் உண்ண” (தெ.க.தொ.13:33);.

   3. ஊர்ப் பொதுக் கட்டடம், உசாவடி (சாவடி);; a public building in a village.

   4. வழிப்போக்கர் தங்குமிடம்; rest – house.

   5. கோயில்; temple.

   6. இடம்; place.

   7. தேர் (யாழ்.அக.);; car.

     [முல் (துளைத்தற் கருத்து வேர்); -→முள் -→மள் -→மடு = ஆற்றிடைப் பள்ளம், அருவி விழும் பள்ள நீர்க் குண்டு, ஆற்றிடைக் குட்டை, ஆவின்மடி. மடு -→மடுத்தல் = வாயில் வைத்தல், உண்ணுதல், விழுங்குதல், ஊட்டுதல், நிறைத்தல், சேர்த்தல், உட்புகுத்துதல், உட்செலுத்துதல், அமிழ்த்துதல். மடு -→மடம் (வே.க.4:91);.]

 மடம்3 maḍam, பெ.(n.)

   1. இதளியம்; mercury.

   2. பெருங்காயம்; asafoetida (சா.அக.);.

மடறுங்கி

 மடறுங்கி maḍaṟuṅgi, பெ.(n.)

சிறுதும்பை பார்க்க; see {} (சா.அக.);.

மடற்கள்ளி

 மடற்கள்ளி maḍaṟkaḷḷi, பெ.(n.)

   ஒரு வகைக் கள்ளி; a kind of spurge (சா.அக.);.

     [மடல் + கள்ளி.]

மடற்பனை

 மடற்பனை maḍaṟpaṉai, பெ.(n.)

   சங்குப் பனை; a tree.

     [மடல் + பனை.]

மடற்பரி

மடற்பரி maḍaṟpari, பெ.(n.)

மடல்3 பார்க்க: see {}.

     [மடல் + பரி.]

மடற்பாளை

 மடற்பாளை maḍaṟpāḷai, பெ.(n.)

   பூம்பாளை (யாழ்.அக.);; tender spathe.

     [மடல் + பாளை.]

மடற்றுத்தம்

 மடற்றுத்தம் maḍaṟṟuttam, பெ.(n.)

   துத்த வகை; native hydrous silicate of zinc, calamine.

     [மடல் + துத்தம்.]

மடலட்டு

 மடலட்டு maḍalaḍḍu, பெ.(n.)

   பனைவெல்லம்; palm jaggery.

     [மடல் + அட்டு. மடல் = பனை.]

மடலவிழ்-தல்

மடலவிழ்-தல் maḍalaviḻtal,    2 செ.கு.வி.(v.i.)

   இதழ்விரிதல்; to burst, as flower-sheath.

     [மடல் + அவிழ்-.]

மடலாந்து

 மடலாந்து maḍalāndu, பெ.(n.)

மட்டைப்படல் பார்க்க; see {}.

மடலி-த்தல்

மடலி-த்தல் maḍalittal,    4 செ.கு.வி.(v.i.)

   மடங்கித் திரும்புதல் (யாழ்.அக.);; to bend, double.

     [முல் (வளைதற் கருத்து வேர்); -→முள் -→முண் -→முண்டு -→மண்டு -→மண்டி = காலை முடக்கி முழங்காலால் நிற்கை. மண்டிபோடுதல், மண்டியிடுதல் என்னும் வழக்கை நோக்குக. மண்டு -→மண்டலம் = வட்டம், வட்ட வடிவம். மண்டலம் -→மண்டலி. மண்டலித்தல் = வளைத்தல், பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல், வில்லாளி காலை வளைத்து வட்டமாக்குதல். மண்டலி -→மடலி (வே.க.4:83);.]

மடலூர்-தல்

மடலூர்-தல் maḍalūrtal,    2 செ.கு.வி.(v.i.)

   தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலான குதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல்; to ride a horse of palmyra stems, as a disappointed lover to win his love.

     “மடலூர்தல் யாமத்து முள்ளுவேன்” (குறள், 1136);.

     [மடல் + ஊர்-.]

மடலூர்ச்சி

மடலூர்ச்சி maḍalūrcci, பெ.(n.)

மடல் 3, 4 பார்க்க; see {}.

     [மடல் + ஊர்ச்சி.]

மடலேறு – தல்

மடலேறு – தல் maḍalēṟudal,    5 செ.கு.வி.(v.i.)

மடலூர்-, பார்க்க; see {},

     “நோனாவுடம்பு முயிரு மடலேறும்” (குறள், 1132);.

     [மடல் + ஏறு-.]

மடல்

மடல் maḍal, பெ.(n.)

   1. பனை முதலியவற்றின் ஏடு (சூடா.);; flat leaf of palm, plantain and screwpine.

     “கொழுமடற் குமரி வாழை” (சீவக.274);.

   2. பனங்கருக்கு; jagged stem of a palmyra leaf.

     “ஒழிமடல் விறகிற் கழி மீன் சுட்டு” (புறநா.29);.

   3. தான் காதலித்த தலைவியைப் பெறாவிடத்துத் தலைவன் ஏறுதற்பொருட்டுப் பனங்கருக்காற் குதிரை போற் செய்த ஊர்தி; horse of palmyra stems on which a thwarted lover mounts to proclaim his grief and win his love.

     “ஏறிய மடற்றிறம்” (தொல்.பொருள்.51);.

   4. கலிவெண்பாவின் உறுப்பாகிய உலாமடல் (சூடா.);;{}, a poem in {} metre.

   5. பூவிதழ்; flower petal.

     “மடல் விரிமலர்” (பாகவத.1 மாயவன-9);.

     “மடல் பெரிது மகிழ் இனிது கந்தம்” (மூதுரை-12);.

   6. கிளை; branch.

     “மடற்பெரிய வாலின் கிழ்” (தேவா.26, 10);.

   7. கண்ணிமை; eye-lid.

     “கண்மடல்”.

   8. திருநீறும் சந்தனமும் வைக்கும் கலம் (சீவக. 1147, உரை);; receptacle for sacred ashes and sandal.

     “பொன்னின் புஷ்கரப் பத்திமடல் ஒன்று” (தெ.க.தொ.2, 15);.

   9. சோளக்கதிர் முதலியவற்றின் மேலுறை (வின்.);; sheath, as of Indian corn, plantain flower, etc.

   10. காதுச்சுணை (யாழ்.அக.);; external border or tip of the ear.

   11. தோண் மேலிடம் (வின்.);; shoulder blade.

   12. ஆயுதவலகு; blade of a weapon.

     “மடற்றலைக் கதிர்கொள் வேலான்” (இரகு.குசண.35);.

   13. கை; hand.

     “மடலோடுமடல் சேரக்கட்டி” (வெங்கைக்கோ. 8);

   14. ஏற்றக்கழி; standing pole of a well-sweep.

   15. சிறுவாய்க்கால் (வின்.);; branch channel.

     “பொய்தலை அடுத்த மடலின் கண்ணும்” (தொல்.பொருள்.111);.

 மடல்2 maḍal, பெ.(n.)

   கடிதம்; ஒலை வடிவிலோ, தாள் வடிவிலோ செய்திகளை எழுதியனுப்பும் ஏடு; letter.

 மடல் maḍal, பெ. (n.)

சாயம் ஏற்றிய கோரை களை மடல் மடலாக எடுத்துவைத்த அடுக்கு

 layers of coloured fiber.

     [மடு-மடல்]

மடல்உஉளி

 மடல்உஉளி maḍaluuḷi, பெ. (n.)

   மரத்தில் பூ வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படுத்தப் படும் வளைந்த கூர்மையான நுனிப்பகுதி கொண்ட உறி வகை; a kind of chisel.

     [மடல்+ உளி]

மடல்வாத்து

 மடல்வாத்து maḍalvāttu, பெ.(n.)

   மயிலைப் போன்ற தோகையினை யுடைய நீர்ப்பறவை வகை; a water-fowl resembling the black cormorant, but with a different-coloured bill and plumage like a peacock’s,

     [மடல் + வாத்து.]

மடல்வாழை

 மடல்வாழை maḍalvāḻai, பெ.(n.)

   பேயன் வாழை; a kind of banana.

     [மடல் வாழை.]

     [P]

மடவன்

மடவன் maḍavaṉ, பெ.(n.)

   அறிவிலான்; stupid person.

     “மடவர் மெல்லியர் செல்வினும்” (புறநா.106);.

     [முள்-→மள் -→மள -→மழ -→மழம் -→மடம் -→மடவன் (வே.க.4:5);.]

மடவரல்

மடவரல் maḍavaral, பெ.(n.)

   1. மடப்பம்; simplicity, artlessness.

     “மடவரலுண்கண் வாணுதல் விறலி” (புறநா. 89);.

   2. பெண்; woman.

     “மடவர னோக்கம்” (குறள், 1085);

     “மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே” (திருமுருகா.100-102);.

     [முல் (இளமைக் கருத்துவேர்); -→முள் -→முளை = வித்தினின்று முளைத்த சிறு வெளிப்பாடு இளமை, சிறுபிள்ளை, மகன். முள் -→மள் -→மழ, மழவு = இளமை, குழந்தை. மழ -→மட -மடம் = இளமை. இளமைக்குரிய மென்மை. மடம் -→மடந்தை = பெண் மடம் -→மடம்வால் -→மடவரல் (வே.க4:6);.]

இருதிணையிலும் பெண்பால் ஆண்பாலினும் மடம் மிக்கதாகக் கருதப்படுவதால் மடவரல், மடந்தை முதலிய பெயர்கள் உயர்திணையிலும், மந்தி மூடு முதலிய பெயர்கள் அஃறிணையிலும் பெண்பாலைக் குறிக்க வெழுந்தன (மு.தா.42);.

மடவளாகம்

மடவளாகம் maḍavaḷākam, பெ.(n.)

   கோயிலைச் சூழ்ந்துள்ள வீதி; streets around a temple.

     “இம்மடவளாகத்து இருக்கிற குடிகளுக்கு” (தெ.க.தொ.3, 48);.

     “குன்றத்துரரின் மடவளாகந் தானாக்கி” (சேக்கிழார்.பு:19);.

மடவள்

மடவள் maḍavaḷ, பெ.(n.)

   அறிவிலாள்; stupid woman.

     “மடவளம்ம நீ யினிக் கொண்டோளே” (ஐங்குறு.67);.

     [முள் -→மள் -→மள -→மழ = இளமை, குழந்தை. மழ -→மழம் + மடம் = இளமை, மென்மை, அழகு. மடம் -→மடவள் (வே.க.4:5);.]

மடவா-தல்

மடவா-தல் maḍavātal,    18 செ.கு.வி.(v.i.)

   மடப்பம் வருதல்; to be charming, as a girl.

     “கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந்தனளே”(குறுந் 100);.

     [மடம் -→மட + வா-.]

மடவாமீன்

மடவாமீன் maḍavāmīṉ, பெ.(n.)

மடவை 4 பார்க்க; see {}.

மடவாயம்

மடவாயம் maḍavāyam, பெ.(n.)

   மகளிர் விளையாட்டுக் கூட்டம்; company of girl-playmates of a maiden,

     “மடவாயமாகி மிடையும் பதினெண் கணத்து மடவாரும்” (தக்கயாகப்.307);.

     [மடம்2 + ஆயம்.]

மடவார்

மடவார் maḍavār, பெ.(n.)

   1. மகளிர்; woman, lady.

     “வலம்வந்த மடவார்க ணடமாட” (தேவா.278,1);. 2. மூடர்;

 fools.

     “வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை” (குறள், 153);.

மடவாள்

மடவாள் maḍavāḷ, பெ.(n.)

   பெண் (திவா.);; woman

     “குழன்மடவாள் கூறுடைய ளொருபாகம்” (திருவாச.5, 17);.

     [மடவள் -→மடவடாள்.]

மடவாழை

மடவாழை maḍavāḻai, பெ.(n.)

   பேயன் வாழை; a kind of banana (G.Sm.D.l.i. 215);.

     [மடல் + வாழை.]

மடவி

 மடவி maḍavi, பெ.(n.)

   இளம்பனை; young palmyra tree.

     [மட -→மடல் = இளமை. மடல் -→மடலி.]

 மடவி maḍavi, பெ.(n.)

மடவியர் பார்க்க; see {}.

     [மட -→மடவி.]

மடவியர்

மடவியர் maḍaviyar, பெ.(n.)

   1. மடவார்1 பார்க்க; see {}.

     “மடவியரைச் சிந்தை விருப்பஞ் செய்வித்தல்” (கொக்கோ. பாயி.12);.

   2. மடவார்2 பார்க்க; see {}.

     “வரையகவாணர் மடவியரே”(இறை.18, உரை.மேற்.);.

     [மடம் -→மடவி -→மடவியர் (வே.க.4:5);.]

மடவிளாகம்

மடவிளாகம் maḍaviḷākam, பெ.(n.)

   கோயிலைச் சுற்றியுள்ள தெருவில் மடத்திற்கென்று அமைக்கப்பட்ட நிலப்பகுதி (மடவளாகம்);; a land allotted for the street around the temple.

     “ஸ்ரீகுலொத்துங்க சொழவிண்ணகராழ்வா (ன்); கொயிலிற் திருமடவிளாகத்து (த்); தெற்கில்பருமட” (தெ.க தொ.IV, கல்.134/1986);.

மடவை

மடவை maḍavai, பெ.(n.)

   1. கவைக்கால்; post.

     “மடவையிடைக்கழல் வைப்பார்போல்” (சேதுபு தேவிபுர.64);. 2. துடுப்பு:

 oar, paddle.

   3. தணக்கு; whirling-nut.

   4. வெண்ணிற முள்ள மீன் வகை (பதார்த்த. 932);; grey mullet, silvery, mugil oligolepe.

மடவைக்கெண்டை

 மடவைக்கெண்டை maḍavaikkeṇḍai, பெ.(n.)

   மீன் வகை (யாழ்.அக.);; a species of сагp.

     [மடவை + கெண்டை.]

மடவைச்சுறா

 மடவைச்சுறா maḍavaiccuṟā, பெ.(n.)

   சுறா மீன் வகை; a kind of {} fish.

     [மடவை + சுறா.]

மடவைமயக்கி

 மடவைமயக்கி maḍavaimayakki, பெ.(n.)

   பெண்கள் மயங்க வைக்கும் செடி; a plant which enchants woman (சா.அக.);.

மடவோர்

மடவோர் maḍavōr, பெ.(n.)

   1. மடவார், 1 பார்க்க; see {}.

     “பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு” (மணிமே.19:73);.

   2. மடவார் 2 பார்க்க; see {}.

     “மக்களிர் சிறந்த மடவோ ருண்டோ” (மணிமே.6:104);.

     [மடவார். -→மடவோர்.]

மடா

மடா maṭā, பெ.(n.)

   ஏன வகை; large earthern vessel.

     “அடைச்சேம் பெழுந்த வாடுறு மடாவின்” (பதிற்றுப்.24, 20);.

     [முழுத்தல் = பருத்தல். முழு -→முழா -→முடா -→மிடா = பெருத்த மண்பானை. மிடா -→மடா.]

மடாதிபதி

 மடாதிபதி maṭādibadi, பெ.(n.)

   மடத்துத் தலைவன்; head of a monastery.

     [மடம் + Skt.அதிபதி.]

மடாதிபத்தியம்

 மடாதிபத்தியம் maṭātibattiyam, பெ.(n.)

   கோயில் அல்லது மடத்தின் மேலாண்மை (யாழ்.அக.);; management of affairs of a temple or mutt.

     [மடல் + Skt.அதிபத்தியம்.]

மடாரெனல்

 மடாரெனல் maṭāreṉal, பெ.(n.)

   ஒர் ஒலிக்குறிப்பு; onom. expr. signifying crashing noise.

     “மரம் மடாரென்று முறிந்தது” (உ.வ.);.

     [மடார் + எனல்.]

மடாலயம்

மடாலயம் maṭālayam, பெ.(n.)

மடம்2 1, 2 பார்க்க; see {}.

     [மடம் + ஆலயம்.]

மடாவிளக்கு

 மடாவிளக்கு maṭāviḷakku, பெ. (n.)

கோயில் களில் பெரிய திரி போட்டு எரியும் விளக்கு.

 a large temple lamp.

     [மருடா-மடா+விளக்கு]

மடி

மடி1 maḍidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. மடங்குதல்; to be bent, folded, turned down, lapped in.

     “வள்ளுகிர் மடிய” (கம்பரா.கும்ப.182);.

   2. நுனி மழுங்குதல்; to be turned, as an edge or a point.

     “வயிரவாளை…. வாய்மடிய வீழ்த்த” (வாயுசங்.யாவுஞ்.3);.

   3. தலைசாய்தல்; to droop, as the head of one asleep or as sheafs of grain in a field.

   4. வீழ்தல்; to fall on.

     “மடி மடிந்து மாண்ட வுளுற்றி லவர்க்கு” (குறள், 604);.

   5. வாடுதல் (இ.வ.);; to wither, as leaves.

   6. சுருளுதல்; to roll, as waves,

     “மடிதிரை தந்திட்ட….. முத்தம்” (நாலடி, 224);.

   7. முயற்சியறுதல்; to be indolent, inactive.

     “மடியாவினைஞர்” (பெரும்பாண்.254);.

   8. தூங்குதல்; to sleep.

     “மன்பதை யெல்லா மடிந்த விருங்கங்குல்” (கலித்.65);.

   9. சுருங்குதல்; to shrink, contract.

     “வீங்கு சுரை மடிய” (அகநா.54.);.

   10. ஊக்கங்குறைதல்; to be dispirited.

     “உவவு மடிந்துண் டாடியும்” (பட்டினப்.93);.

   11. அழிதல்; to perish;

 to be destroyed.

     “குடிமடிந்து குற்றம் பெருகும்” (குறள், 604);.

   12. சாதல்; to die.

     “வல்லது மடிதலே யென்னின் மாறுதிர்” (கம்பரா, அதிகார.6);.

   13. தானியங்கேடுறுதல்; to become mouldy, as rice.

     “மடிந்துபோன அரிசி” (உ.வ.);.

   14. திரண்டு செல்லுதல்; to rush in together as a crowd.

     “மக்கள் திருவிழாக் காண மடிகிறார்கள்” (உ.வ.);

   15. கொப்புள முடைதல்; to break, to be broken as a blister.

     [முடிதல் = வளைத்து அல்லது மடித்துக் கட்டுதல். முடி -→மடி = வளைந்து மடங்குதல். முட்டு -→முட்டி -→முடி = இறுதி முடி -→மமுதல் = 1. சாதல், 2. அழிதல்.]

 மடி2 maḍittal,    2 செ.குன்றாவி.(v.t.)

   அழித்தல்; to kill destroy,

     “மரனெலா மடிப்ப” (கம்பரா.தாடகை.35);.

     [முட்டு -→முட்டி -→முடி. முடிதல் = இறுதியாதல், முற்றுப் பெறுதல், நிறைவேறுதல், செய்ய முடிதல். வாணாள் முடிந்து இறத்தல், அழிதல், முடி -→மடிதல் = சாதல், அழிதல். மடித்தல் = அழித்தல் (வே.க.4:65);.]

 மடி3 maḍittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. மடங்குதல்; to fold, as the arms, to fold up, as cloth, as paper, to double up, shut up, as a folding knife.

   2. வளைதல்; to bend, turn down, turn in curl.

   3. பேச்சில் மடங்க வடித்தல்; to baffle in speech, confound by artifice, as in an argument.

   4. அழித்தல்; to kill, destroy.

     “மரனெலா மடிப்ப” (கம்பரா.தாடகை.35);.

   5. உழக்குதல்; to tramble down. to throw into confusion.

     [முல் (வளைதற் கருத்துவேர்); -→முள் -→முண்டு -→முண்டி -→முடி. முடிதல் = வளைத்து அல்லது சுற்றிக் கட்டுதல். முடித்தல் = கூந்தலைக் கட்டுதல், பூமாலை கொண்டையிற் கட்டியணிதல். முடி = பறவை பிடிக்குங் கண்ணி, கட்டு, முடிச்சு, உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை, நாற்று முடி. முடி -→மடி (வே.க.4:85);.]

 மடி4 maḍi, பெ.(n.)

   1. மடங்குகை; bending down, as sheaf of paddy.

   2. வயிற்று மடிப்பு; crease in abdomen.

   3. வயிறு; belly, stomach,

     “இடாகினிப் பேய் வாங்கி மடியகத்திட்டாண் மகவை” (சிலப்.9:22);.

   4. அரை; waist.

     “பணப்பையை மடியிற் கட்டிக் கொண்டான்” (உ.வ.);.

   5. மடித்த தொடையின் மேற்பகுதி; lap.

     “குழந்தை அவன் மடியில் உட்கார்ந்து கொண்டிருந்தது” (உ.வ.);.

   6. ஆடை, தாள் முதலியவற்றின் மடிப்பு; orget.

     “சேமமடிந்த பொழுதில்” (குறிஞ்சிப் 156);.

   7. ஆடை; cloth, garment.

     “குறியவு நெடியவு மடிதரூஉ விரித்து” (மதுரைக்.520);.

   8. தூய்மையாக உடுத்தும் மரவுரி, பட்டு, பருத்தி முதலியவற்றாலாகிய ஆடை வகை; cloth made of the fibre of trees, coarse silk, cotton, etc., as ceremonially pure.

     “உடுக்க மடி கொண்டுவா” (கொச்சை.);.

   9. தீட்டில்லா நிலை; ceremonial purity, as of one who has bathed.

     ‘நான் மடியாயிருக்கிறேன், எண்ணைத் தொடாதே’ (உ.வ.);.

   10. பல துண்டுகள் கொண்ட ஆடை வகை; piece consisting of a certain number of clothes.

   11 பை போன்ற முந்திச் சொருக்கு; fold in a cloth wrapped round the waist, answering for a pocket.

பாக்கை மடியில் கட்டலாம் தோப்பை மடியிலே கட்டலாமா?’ (பழ.);.

   12. வலை வகை; a kind of net.

   13. மீன்வலையோடு சேர்ந்த பெரும்பை; large bag attached to a finishing net.

   14. மாடு முதலியவற்றின் முலையிடம்; udder, especially of a cow.

     “மடி வெண் டிங்களா” (கம்பரா.ஊர்தே.56);.

   15. அடக்கம்; submission.

   16. தனிமை (பிங்.);; loneliness.

   17. சோம்பல்; sloth, idleness, indolence.

     “போகூழாற் றோன்று மடி” (குறள், 371);.

     “மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர்” (குறள், 602);.

   18. சோம்பலுடையவன்; lazy person.

     “களி மடி மானி” (நன்.39);.

   19. நோய் (பிங்.);; disease.

   20. கேடு (பிங்.);; ruin, loss, detriment, damage.

   21. பொய் (பிங்.);; lie, falsehood.

   22. பகை; hatred, emity.

   23. முடைநாற்றம்; bad odour,

     “மடிநாறு மேனி” (தேவா.30, 4);.

   24. இரட்டைக் கட்டுமரம்; double catamaram (G.Tn. D.I.229);.

   25. சோறு (அக.நி.);; boiled rice.

   26. தாழை; fragrant screw-pine.

   27. தாழை விழுது (தைலவ.தைல.125);:

 external root of the screw-pine.

   28. மடங்கு; turn, time.

     “கூற்றினும் மும்மடி கொன்றான்” (கம்பரா.இலங்கையெரி.57);.

 மடி5 maḍidal,    4 செ.குன்றாவி (v.t.)

   மறத்தல்; to forget.

     “சேம மடிந்த பொழுதில்” (குறிஞ்சிப்.156);.

 மடி1 maḍi, பெ. (n.)

   எட்டு முழ வேட்டிகள் இரண்டு கொண்டது; twin dhoties.

     [மடு-மடி]

 மடி2 maḍi, பெ. (n.)

மீன்பிடி வலை வகை

 a kind of fishing net.

     [மடு-மடி]

மடிகசக்கு-தல்

மடிகசக்கு-தல் maḍigasaggudal,    5 செ. குன்றாவி.(v.t.)

மடிபிசை-தல் பார்க்க (வின்.);; see {}.

     [மடி + கசக்கு-.]

மடிகட்டு

மடிகட்டு1 maḍigaḍḍudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. தூய ஆடை அணிதல்; to dress in ceremonially pure cloth.

   2. ஆடையை உலர்த்தல்; to dry a washed cloth.

   3. மணப் பெண்ணின் மடியில் வெற்றிலை பாக்குப் பழங்கட்டுதல்; to the betels and fruits in the cloth of a bride.

     [மடி + கட்டு-.]

 மடிகட்டு2 maḍigaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் (இ.வ.);; to take in large quantity.

     [மடி2 + கட்டு-.]

 மடிகட்டு3 maḍigaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   கடற்கரைக்கு வந்துவிட்ட பெரு வலையின் வாயை (மீன்கள் வெளி வராதிருக்க);க் கட்டுதல்; to tie up the finishing net.

     [மடி + கட்டு-.]

மடிகட்டை

 மடிகட்டை maḍigaḍḍai, பெ.(n.)

   பெரிய வலையிலுள்ள மடியின் வாயை அகற்றிப் பிடிக்கக் கட்டப்பட்டிருக்கும் கட்டை; wodden log tied in the mouth of the finishing net for wide opening.

     [மடி + கட்டை. மடி = வலை.]

மடிகம்

 மடிகம் maḍigam, பெ.(n.)

   தாழை; fragrant screw pine (சா.அக.);.

மடிகம்பு

மடிகம்பு maḍigambu, பெ.(n.)

   1. தறிமரம்; web beam.

   2. வலைக்கம்பு (யாழ்.அக.);; main pole of a fishing net.

     [மடி3 + கம்பு.]

மடிகாது

 மடிகாது maḍikātu, பெ.(n.)

   நாய் முதலியவற்றின் மடிந்த காது; lop ear, as of a dog.

     [மடி + காது.]

மடிகாரன்

 மடிகாரன் maḍikāraṉ, பெ.(n.)

   நாட்டுப் படகில் தொழில் செய்வோர்; one who used to fishing by country boat.

     [மடி + காரன்.]

மடிகால்

 மடிகால் maḍikāl, பெ.(n.)

   முழந்தாளிடும் போது மடித்த கால்; bent leg as when kneeling.

     [மடி + கால்.]

மடிகோல்

 மடிகோல் maḍiāl, பெ. (n.)

நெய்யப்பட்ட ஆடைகளை மடிப்பதற்குரிய கோல்

 a kind of weavers implement.

மடிக்கணினி

 மடிக்கணினி maḍikkaṇiṉi,  a பெ. (n.)

   மடியில் வைத்து இயக்கும் கணினி; laptop.

     [மடி+கணினி]

மடிக்கதம்

 மடிக்கதம் maḍikkadam, பெ.(n.)

   மலைப் பூவரசு; mountain portia tree (சா.அக.);.

மடிக்கதிர்

மடிக்கதிர் maḍikkadir, பெ.(n.)

   கதிரறுப் போர்க்குப் பரிசாகக் கொடுக்குந் தவசக் கதிர்; perquisite of grain given to women engaged in reaping a crop (M.M.452);.

     [மடி2 + கதிர்.]

மடிக்கயிறு

 மடிக்கயிறு maḍikkayiṟu, பெ.(n.)

   பரதவர் பயன்படுத்தும் நீண்ட கயிறு; coden rop.

     [மடி + கயிறு.]

மடிக்குருவி

 மடிக்குருவி maḍikkuruvi, பெ.(n.)

   வெற்றிலை; betel leaf.

     [மடி + குருவி.]

மடிக்கெட்டி

 மடிக்கெட்டி maḍikkeḍḍi, பெ. (n.)

   முக்குவர் இனத்தில் மீன்பிடி வலையைச் செய்பவர்; net makers.

     [மடி+கட்டி-மடிக்கட்டி-மடிக்கெட்டி (கொ.வ.);]

மடிக்கோல் சிம்பு

 மடிக்கோல் சிம்பு maḍikālcimbu, பெ. (n.)

 pieces.

     [மடி+கோல்+சிம்பு]

மடிசஞ்சி

 மடிசஞ்சி maḍisañsi, பெ.(n.)

   மடிவேட்டி வைத்தற்குரியதும் புல் அல்லது கம்பளியா லானதுமான பை; bag made of reed or wool for keeping clothes ceremonially pure.

     [மது + சஞ்சி.]

மடிசல்

மடிசல் maḍisal, பெ.(n.)

   1. நீர்த் தொடர்பால் பொருள்களில் உண்டாகும் கெடுதி; damage caused by lapse of time or by dampness.

   2. நாட்பட்டுக் கெட்ட தவசம்; grain injured by time.

     [மடி -→மடிசல்.]

மடிசார்

 மடிசார் maḍicār, பெ. (n.)

   நடக்கும்போதுகால் தடுக்காமலிருப்பதற்காக வேட்டி அல்லது புடவையைக் கால் சுற்றி மேல் வளைத்து உடுக்கும் முறை; way of tucking cloth or saree around the waist allowing legs for free movement of walking.

மாமி மடிசார் உடுத்திருக்கிறாள் (இ.வ.);.

     [மடிதறு-மதற்று-மடிசற்று-மடிசார்]

மடிசாறு

 மடிசாறு maḍicāṟu, பெ.(n.)

மடிதாறு பார்க்க (இ.வ.);; see {}.

     [மடிதாறு -→மடிசாறு.]

மடிசாறுபாய்-தல்

மடிசாறுபாய்-தல் maḍicāṟupāytal,    2 செ.கு.வி. (v.i.)

   நீர்ப்பொருள் ஒழுங்காய் நேரே விழாது பக்கம் விலகிச் சிந்துதல் (இ.வ.);; to be spilled in pouring a liquid, as from carelessness.

     [மடி + சாறு + பாய்-.]

மடிசீலை

 மடிசீலை maḍicīlai, பெ.(n.)

   நீர்ச்சீலை (கோவணம்); (இ.வ.);; forelap.

     [மடி + சீலை.]

மடிசெவி

 மடிசெவி maḍisevi, பெ.(n).

மடிகாது பார்க்க; see {}.

     [மடி + செவி.]

மடிச்சல்

 மடிச்சல் maḍiccal, பெ. (n.)

   விளவங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vilavancode Taluk.

     [மடி-மடிச்சல். மடி – வயல்]

மடிச்சீலை

மடிச்சீலை1 maḍiccīlai, பெ.(n.)

   தூய ஆடை;  ceremonically pure cloth.

     [மடி + சிலை. சேலை -→சீலை.]

 மடிச்சீலை2 maḍiccīlai, பெ.(n.)

   1. மடியிற் கட்டிக் கொள்ளும் பணப்பை; purse kept in the gridle.

     “மடிச்சீலை கொட்டித் தாராதவரார்” (விறலிவிடு.117);.

   2. நீர்ச்சீலை; forelap.

     [மடி + சீலை. சேலை -→சீலை.]

மடிச்சுக்கட்டி

 மடிச்சுக்கட்டி maḍiccukkaḍḍi, பெ.(n.)

   புழுவகை (யாழ்.அக.);; a kind of worm.

மடிதடவு-தல்

மடிதடவு-தல் maḍidaḍavudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பிறன்பொருளைக் கவரல்; to pick – pocket, skealthily remove purse, jewels, etc. from a person.

     “தன்னை விசுவசித்து உடன் கிடந்தவனை மடி தடவினவனைப் போல” (ஈடு.10, 8, 2. அரும்.);.

   2. ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியைத் தடவி ஆய்தல்; to examine one’s clothes and see if anything is kept hidden.

     “மடிதடவாத சோறும்” (ஸ்ரீவசன.3, 28);.

     [மடி + தடவு-.]

மடிதப்பு-தல்

மடிதப்பு-தல் maḍidappudal,    5 செ.கு.வி.(v.i.)

 washing the net.

     [மடி + தப்பு-.]

மடித்துக்கட்டுதல்

 மடித்துக்கட்டுதல் maḍiddukkaḍḍudal, பெ. (n.)

பாய் நெசவுசெய்தபின்னர் அதன் ஓரங்களைச் சீவி மடித்துக் கட்டுவது,

 giving final finishing to mats.

     [மடித்து+கட்டு]

மடிந்தகாது

 மடிந்தகாது maḍindakātu, பெ.(n.)

   மடிந்து அகன்ற காது; flap ear.

     [மடிந்த + காது.]

மடிபிசை-தல்

மடிபிசை-தல் maḍibisaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   பால் சுரக்கும்படியாகப் பசுவின் மடியைத் தடவுதல்; to chafe the udder of a cow in milking.

     [மடி + பிசை-தல்.]

மடிபிடி

மடிபிடி1 maḍibiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கட்டாயப்படுத்துதல்; to compel, as seizing by the waist cloth.

     “மடிபிடித்துக் காற்கட்டி விலக்க வொண்ணாதபடி யாயிருக்கை ” (ஈடு.5, 3, 5);.

   2. வலுவிற் சண்டைக்கு அழைத்தல் (இ.வ.);; to pick a quarrel.

   3. வழக்காடுதல் (வின்.);; to dispute.

     [மடி + பிடி-.]

 மடிபிடி3 maḍibiḍi, பெ.(n.)

   1. கட்டாயம்; compulsion, as caused by seizing by the waist cloth.

     “தூதரென்று மடிபிடியதாக நின்று” (திருப்பு.1204);.

   2. சண்டை; altercation, dipute.

   3. மாத்துவப் பெண்கள் மடி நோற்கத் தொடங்குகை (இ.வ.);; commencement of the observance of ceremonial purity by Madhva women.

     [மடி + பிடி.]

மடிபிடிவழக்கு

 மடிபிடிவழக்கு maḍibiḍivaḻkku, பெ.(n.)

   பகைவரிருவர் ஒருவர் மேலொருவர் தொடுக்கும் வழக்கு; mutual complaint,application for redress by both parties to a dispute.

     [மடிபிடி + வழக்கு.]

மடிப்பங்கால்

 மடிப்பங்கால் maḍippaṅgāl, பெ.(n.)

மடிகால் பார்க்க; see {}.

மடிப்பணம்

 மடிப்பணம் maḍippaṇam, பெ.(n.)

   கைப் பணம்; cash on hand.

     [மடி + பணம்.]

மடிப்பாளி

 மடிப்பாளி maḍippāḷi, பெ.(n.)

   மோசக்காரன்; cheat, defraud, impostor.

மடிப்பிச்சை

மடிப்பிச்சை maḍippiccai, பெ.(n.)

   1. இடுப்புத் துணியிலேற்கும் பிச்சை; alms received in one’s loin-cloth.

   2. தாழ்மையாய்க் கேட்கும்

   பிச்சைப் பொருள்; alms begged for in a mean manner.

     ‘தெய்வமே இந்தப் பிள்ளையை மடிப்பிச்சை தரவேணும்’ (உ.வ.);.

     [மடி2 + பிச்சை.]

மடிப்பினை

 மடிப்பினை maḍippiṉai, பெ.(n.)

   ஈய மூலப்பொருள், வங்க மணல் (யாழ்.அக.);; lead oге.

மடிப்பிளை

 மடிப்பிளை maḍippiḷai, பெ.(n.)

மடிப்பினை பார்க்க; see {}.

     [மடிப்பினை -→மடிப்பிளை.]

மடிப்பிள்ளை

 மடிப்பிள்ளை maḍippiḷḷai, பெ.(n.)

   கைக் குழந்தை; child in arm.

     [மடி + பிள்ளை.]

மடிப்பு

மடிப்பு1 maḍippu, பெ.(n.)

   1. ஒன்றைப் பல பகுதிகளாக மடித்திருப்பது; fold, doubling, plait.

   2. மடிப்புத்தையல் பார்க்க; see {}.

   3. மடிப்படையாளம்; crease mark of a fold.

   4. தொந்தி மடிப்பு; fold, crease in the abdomen as from obesity.

   5. மோசம்; trick, fraud, imposture, entanglement.

     ‘மடிப்பான பேச்சு’ (உ.வ.);.

   6. இருபோகம்; double crop (C.G.);.

     [மடி -→மடிப்பு.]

 மடிப்பு2 maḍippu, பெ.(n.)

   மடிக்கக் கூடிய கதவு ஆடும் இரும்புக் கருவி; folding hinge.

     [மடி -→மடிப்பு.]

மடிப்புக்கதவு

 மடிப்புக்கதவு maḍippukkadavu, பெ.(n.)

   மடக்கக் கூடிய கதவு; folding door.

     [மடி -→மடிப்பு + கதவு.]

மடிப்புக்காரன்

 மடிப்புக்காரன் maḍippukkāraṉ, பெ.(n.)

மடிப்பாளி பார்க்க; see {}.

மடிப்புக்கால்

 மடிப்புக்கால் maḍippukkāl, பெ.(n.)

மடிகால் பார்க்க; see {}.

     [மடிப்பு + கால்.]

மடிப்புசால்

 மடிப்புசால் maḍippucāl, பெ. (n.)

   உழுத நிலத்தை மீண்டும் உழுதல்; ploughing a land already ploughed.

     [மடி-மடிப்பு+சால்]

மடிப்புடவை

மடிப்புடவை maḍippuḍavai, பெ.(n.)

   1. மடித்த ஆடை; folded cloth.

     “சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடவைகளை” (மதுரைக். 520, உரை);.

   2. மகளிரின் சீலை; saree which is ceremonially pure.

     [மடி + புடவை.]

மடிப்புத்தையல்

 மடிப்புத்தையல் maḍipputtaiyal, பெ.(n.)

   மடித்துத் தைக்குந் தையல்;  hemming.

     [மடிப்பு + தையல்.]

மடிப்புப்பிடி-த்தல்

 மடிப்புப்பிடி-த்தல் maḍippuppiḍittal, செ.கு.வி. (v.i.)

   சட்டை முதலியவற்றில் மடிப்பு வைத்துத் தைத்தல் (டக்குப் பிடித்தல்);; to tuck or sew folds in a garment.

     [மடிப்பு+பிடித்தல்]

மடிப்புப்பேசு-தல்

மடிப்புப்பேசு-தல் maḍippuppēcudal,    5 செ.கு.வி.(v.i.)

   கவர் பொருள்படக் கூறுதல் (வின்.);; to use words in a double sense with intent to deceive.

     [மடிப்பு + பேசு-.]

மடிப்புப்பேச்சு

 மடிப்புப்பேச்சு maḍippuppēccu, பெ.(n.)

   கவர் பொருள்படுஞ் சொல்; equivocal speech.

     [மடிப்பு + பேச்சு.]

மடிப்பெட்டி

மடிப்பெட்டி maḍippeḍḍi, பெ.(n.)

   1. சீலை வைக்கும் ஒலைக் கூடை; ola basket for keeping cloths ceremonially.

   2. அரை மடியிலமைக்கும் வெற்றிலைப் பாக்குப் பை (வின்.);; betel pouch carried in the waist – fold.

     [மடி + பெட்டி.]

மடிப்பெழுத்தாணி

 மடிப்பெழுத்தாணி maḍippeḻuttāṇi, பெ.(n.)

   கைப்பிடியுள் மடங்கும் எழுத்தாணி வகை; foldable iron style.

     [மடிப்பு + எழுத்தாணி.]

மடிப்பை

மடிப்பை maḍippai, பெ.(n.)

   1. அரை மடியிற் கட்டிய பை; purse kept in the girdle.

   2. அடைப்பை (யாழ்.அக.);; bag for keeping betel.

   3. மடிசஞ்சி பார்க்க’; see {}.

     [மடி + பை.]

மடிமாங்காயிடு – தல்

மடிமாங்காயிடு – தல் maḍimāṅgāyiḍudal,    17 செ.கு.வி.(v.i.)

மடிமாங்காய்போடு-, பார்க்க; see {}.

     “மடிமாங்காயிட்டு விஷயீகரிக்க வந்திருக்கிறவன்” (திவ்.திருநெடுந். 9, பக்.73);.

     [மடிமாங்காய் + இடு-.]

மடிமாங்காய்போடு-தல்

மடிமாங்காய்போடு-தல் maḍimāṅgāypōḍudal,    19 செ.கு.வி.(v.i.)

   1. செய்யாததைச் செய்ததாக ஏறிட்டுக் குற்றங் கூறுதல்; to charge falsely, putting a mango in another’s possession in order to accuse him of theft.

   2. கையூட்டுக் கொடுத்தல் (யாழ்ப்.);; to bribe.

     [மடிமாங்காய் + போடு-.]

மடிமாறி

 மடிமாறி maḍimāṟi, பெ.(n.)

   முடிச்சுமாறி (இ.வ.);; pick-pocket.

     [மடி + மாறி.]

மடிமூத்தார்தாழி

 மடிமூத்தார்தாழி maḍimūttārtāḻi, பெ.(n.)

   முதுமக்கட்டாழி; large urn found in ancient burial places.

     [மடி + மூத்தார்தாழி.]

மடிமை

மடிமை maḍimai, பெ.(n.)

   சோம்பு (தொல்.பொருள்..260);; idleness, sloth, inactivity.

     [மடி -.→மடிமை.]

மடிமைகண்டிகை

 மடிமைகண்டிகை maḍimaigaṇḍigai, பெ. (n.)

   பொன்னேரிவட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Ponneri Taluk.

     [ம-மடிமை+கண்டிகை]

மடியல்

 மடியல் maḍiyal, பெ.(n.)

மடிசல் பார்க்க; see {}.

     [மடிசல் -→மடியல்.]

மடியிறக்கு-தல்

மடியிறக்கு-தல் maḍiyiṟakkudal,    5 செ.கு.வி (v.i.)

   ஈனுவதற்கு முன் பசுவின் மடி பருத்தல் (வின்.);; to have udder distended, as a cow before calving.

     [மடி + இறக்கு-.]

மடியில்

மடியில் maḍiyil, பெ.(n.)

   கூடாரம்; tent

     “மடியில்விட்டு” (சேதுபு.அகத்.33);.

     [மது + இல்.]

     [P.]

மடியுண்டடிப்பான்

 மடியுண்டடிப்பான் maḍiyuṇḍaḍippāṉ, பெ.(n.)

   பூசனி; pumpkin (சா.அக.);.

மடியுறை

மடியுறை maḍiyuṟai, பெ.(n.)

   விம்மிதம்;  astonishment, bewilderment.

     “மருளெனக் கருதிய மடியுறை கேண்மதி” (பெருங் உஞ்சைக். 48, 111);.

     [மடி + உறை.]

மடியேந்து-தல்

மடியேந்து-தல் maḍiyēndudal,    5 செ.குன்றாவி (v.t.)

மடியேல்-, பார்க்க; see {}.

     [மடி + ஏந்து-.]

மடியேல்-தல்

மடியேல்-தல் maḍiyēltal,    9 செ.குன்றாவி (v.t.)

   பிச்சையெடுத்தல் (யாசித்தல்);; to beg as receiving alms in one’s cloth

     “பிரயோசனத்துக்கு மடியேற்கை யன்றிக்கே (ஈடு.3, 7, 1);.

மடில்

 மடில் maḍil, பெ.(n.)

   தாழை; fragrant screw pine (சா.அக.);.

மடிவலை

 மடிவலை maḍivalai, பெ.(n.)

   வலை வகை (க.ப.அக.);; boat seine, bag net.

     [மடி + வலை-.]

மடிவாளம்

 மடிவாளம் maḍivāḷam, பெ. (n.)

   ஒசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Hosur Taluk.

     [மடி(வயல்);+வாளம்]

மடிவி-த்தல்

மடிவி-த்தல் maḍivittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. முனை மழுங்கச் செய்தல்; to blunt, as the edge of an instrument.

   2. கொல்லுதல்; to ki||.

     [மடி -→மடிவி-.]

மடிவிடு – தல்

மடிவிடு – தல் maḍiviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

மடியிறக்கு-, பார்க்க (வின்.);; see {}.

     [மடியிறக்கு -→மடிவிடு-.]

மடிவு

மடிவு maḍivu, பெ.(n.)

   1. சோம்பல்; inactivity, indolence.

     “ஒடியா முறையின் மடிவிலையாகி” (புறநா.29);.

   2. உற்சாகக் குறைவு; discouragement.

   3. அழிவு (வின்.);; ruin, loss, destruction.

   4. சாவு; death.

     [மடி -→மடிவு.]

மடிவை

மடிவை maḍivai, பெ.(n.)

   தழை; fonage.

     “மடிவைக் குறுந்தொடி மகளிர்…. முனையின்” (அகநா.226);.

மடு

மடு1 maḍuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. உண்ணுதல்; to take food or drink.

     “மடுத்தவனஞ்சமுதா” (தேவா.238, 3);.

   2. நிறைத்தல் (வின்.);; to fill, penetrate, suffuse, as adour.

   3. சேர்த்தல்; to unite, join.

     “பிணக்குவை கொண்டோடிக்…. கடல் கங்கை மடுத்திடை தூராதே” (கம்பரா. குகப்.21);

   .4. அடக்கிக் கொள்ளுதல்; to hold, contain. ”

மடுத்து மாமலையேந்தலுற்றான்”(தேவா.823);.

   5. ஊட்டுதல்; to cause to eat or drink;

 to feed.

     “ஒண்டொடி மகளிர் மடுப்ப”(புறநா.56);.

   6. தீ மூட்டுதல்; to kindle.

     “கொலைஞ ருலை யேற்றித் தீ மடுப்ப” (நாலடி, 331);.

   7. அமிழ்த்துதல்; to immerse. cause to sink,

     “ஞானவாரி மடுத்து” (சி.சி.8,16);.

   8. குத்துதல்; to gore, pierce, thrust.

     “கூர்நுதி மடுத்தத னிறஞ் சாடி” (கலித்.52,3);.

   9. மோசம் பண்ணுதல்; to inveigle, to entrap, to act treacherously.

     ‘அவனை மடுத்துவிட்டான்’ (இ.வ.);.

   10. விழுங்குதல்; to devour.

     “வரவர வாய்மடுத்து” (நீதிநெறி, 64);.

   11. மயக்குதல் (யாழ்ப்.);; to charm.

   12. செலுத்துதல்; to cause;

 to go or enter.

     “மதியொடு பாம்பு மடுப்பென்” (கலித்.144, 21);.

 மடு2 maḍuttal,    4 செ.கு.வி.(v.i.)

   இடையூறு எதிர்ப்படுதல்; to meet with obstacle.

     “மடுத்த வாயெல்லாம் பகடன்னான்” (குறள், 624);.

     [முல் (துளைத்தற் கருத்துவேர்); -→முள் -→முழ -→முழுகு -→முழுங்கு. முழுங்குதல் = முழுகுதல், தொண்டைக்குள் அல்லது வயிற்றிற்குள் முழுகச் செய்தல், விழுங்குதல். முள் -→மள் -→மடு (வே.க.4:90);.]

 மடு3 maḍu, பெ.(n)

   1. நீர்நிலை (பிங்.);; pond, pool.

     “கங்கை வருநீர் மடுவுள்” (திருவாச.6,26);.

   2. ஆற்றிடைப் பள்ளம்; deep place in a river or channel.

     “ஆறிடுமேடு மடுவும்போ லாஞ் செல்வம்” (நல்வழி, 32);.

     [முள் -→முள்கு;

முள்குதல் = உட்செலுத்துதல். முள் ->மள் ->மடு = ஆற்றிடை பள்ளம்.]

 மடு1 maḍu, பெ. (n.)

   புலி வேடமிடுபவர் கையில் வைத்து இருக்கும் கருவி; a small weapon held by the tiger dancers.

     [மடூ-மடு]

 மடு maḍu, பெ. (n.)

   தற்காப்புக் கலைகளில் ஒன்று; an art of self protection.

     [மல்-மண்-மடு]

மடு சுற்றுதல்

 மடு சுற்றுதல் maḍusuṟṟudal, பெ. (n.)

   புலியாட்டத்தின் ஒரு கூறு; an action in the play of tiger dance.

     [மடு+சுற்றுதல்]

மடுத்தடி-த்தல்

மடுத்தடி-த்தல் maḍuttaḍittal,    18 செ.குன்றாவி.(v.t.)

   மடங்கடித்தல், ஏற்காமல் தள்ளுதல்; to frustrate an object.

     [மடி -→மடு -→மடுத்து + அடி-.]

மடுத்தல்

 மடுத்தல் maḍuttal, பெ.(n.)

சுத்தியல் (வின்.);:

 hammer.

     [மடி -→மடு -→மடுத்தல்.]

     [P]

மடுப்படு-த்தல்

மடுப்படு-த்தல் maḍuppaḍuttal,    20 செ.குன்றாவி.(v.t.)

   ஆழ்ந்திருத்தல்; to be deep.

     “மடுப்படுக்குஞ் சுருதிப் பொருள்” (தேவா. 80, 10);.

மடுப்பு

மடுப்பு1 maḍuppu, பெ.(n.)

   1. அடைவு;  containing.

   2. நிறைப்பு; filling up, suffusion.

   3. உண்கை; taking food.

   4. மோசஞ்செய்கை; deceiving, inveigling.

   5. ஏமாற்றம்; baffing frustration, disappointment.

   6. கேடு; injury.

     [மடு -→மடுப்பு.]

 மடுப்பு2 maḍuppu, பெ.(n.)

மடிப்பு பார்க்க (யாழ்.அக.);; see {}.

     [மடு -→மடுப்பு (கொச்சை);.]

 மடுப்பு maḍuppu, பெ. (n.)

   பாவை நெய்வதற்கு நீட்டி வைத்திருத்தல்; extending the weaving material.

     [மடு-மடுப்பு]

மடுமீன்

 மடுமீன் maḍumīṉ, பெ.(n.)

   ஆற்றின் மடுவில் தங்கியிருக்கும் மீன்; fish existing in the deep place of a river.

     [மடு + மீன்.]

மடுமுழுங்கி

 மடுமுழுங்கி maḍumuḻuṅgi, பெ.(n.)

   நீர் வெள்ளை எனும் நெல் வகை; a kind of paddy.

மடுவங்கரை

 மடுவங்கரை maḍuvaṅgarai, பெ.(n.)

   குளக்கரை (வின்.);; side or brink of a pool or tank.

     [மடு + அம் + கரை.]

மடுவிடு

மடுவிடு1 maḍuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஆற்றில் மடுவுண்டாதல்; to make a deep place in a river or channel.

 மடுவிடு2 maḍuviḍudal,    18 செ.குன்றாவி.(v.t.)

   கன்றைத் தாய்ப்பால் குடிக்க விடுதல்; to feed calf in cow’s udder.

மடுவிப்புருதி

 மடுவிப்புருதி maḍuvippurudi, பெ.(n.)

   கட்டி வகை; a kind of abscess (சா.அக.);.

மடை

மடை1 maḍai, பெ.(n.)

   1. தொளை (திவா.);; hole, aperture.

   2. வாய்; mouth.

   3. குளத்திற்கு வாய் போன்ற மதகு; small sluice of a tank.

     “உழவ ருடைத்த தெண்ணீர் மடை ” (தஞ்சைவா.151);.

   4. மதகுப் பலகை; shutters of a sluice.

   5. நீரணை; dam by which the flow of water in a channel is obstructed.

   6. ஓடை; channel.

     “மடை தோறும் கமலமென் பூச்செறி யெறும்பியூர்” (தேவா.379, 9);.

   7. அணிகலக் கடைப்பூட்டு; clasp, as of an ornament.

     “மடைசெறி முன்கைக் கடகமொடு” (புறநா. 150);.

   8. படைக்கலமூட்டு; joint, as in a spear.

     “மடையவிழ்ந்த……. வேல்” (சீவக.293);.

   9. அழுத்தின ஆணி; nail, rivet.

     “மடைகலங்கி நிலை திரிந்தன” (புறநா.97);.

   10. உண்ணுஞ்சோறு (பிங்.);; boiled rice.

   11. சமையல் வேலை; cooking.

     “அடுமடைப் பேய்க் கெலாம்” (கலிங்.139);.

   12. தெய்வப் படையல்; oblation of food to a deity.

     “மடை யடும்பால்” (கலித்.109);.

 OE. mete = food. OS. meti, mat;

 OtIG. maz;

 Goth. mats;

 E. meat.

     [முல் (துளைத்தற் கருத்து வேர்);-→முள் -→மள் -→மடு = ஆற்றிடைப் பள்ளம். அருவி விழும் பள்ளநீர்க் குண்டு ஆற்றிடைக் குட்டை, ஆவின்பால் மடி. மடு -→மடுத்தல் = வாயில் வைத்தல், உண்ணுதல். விழுங்குதல், ஊட்டுதல், நிறைத்தல், சேர்த்தல், உட்புகுத்துதல், குத்துதல், உட்செலுத்துதல். மடு -→மடை (வே.க.4:91);.]

 மடை2 maḍai, பெ.(n.)

   1. மடைமை, பேதைமை; ignorance.

   2. மூதறிவின்மை; silliness.

   3. அறிவு மழுக்கம்; stupidity.

     [முள் -→மள் -→மள்ளன் = இளைஞன், வீரன். மள் -→மழ = இளமை, குழவி. மழவுங் குழவும் இளமைப் பொருள (தொல். பொருள்.உரி.14);. மழ -→மழவு = இளமை, குழவி, மழவு -→மழவன் = இளைஞன், வீரன். மழ -→மழழை = இளமை. மழ -→மத -→மட -→மடம் = இளமை, மடமை. மட -→மடப்பு -→மடப்பம் = இளமை, மடமை. மட -→மடை = மடைமை. இருதினையிலும் பெண்பால் ஆண்பாலினும் மடம் மிக்கதாகக் கருதப்படுவதால் மடவரல், மடந்தை முதலிய பெயர்கள் அஃறிணையிலும் பெண்பாலைக் குறிக்க வெழுந்தன (முதா42);.]

 மடை3 maḍai, பெ.(n.)

   1. சமையல் வேலை; cooking,

     “அடுமடைப் பேய்க்கெலாம்” (களிங்.139);.

   2. சோறு; boiled rice.

   3. படையல் உணவு; oblation of food to a deity.

     “மடையடும்பால்” (கலித்.109);.

     [மடுத்தல் = உண்ணுதல். மடு -→மடை = உணவு.]

 மடை4 maḍai, பெ.(n.)

   பழைய நாணய வகை; an ancient coin (I.m.p.cg.1009-10);.

 மடை5 maḍai, பெ.(n.)

   1. நீர்நிலைகளிலிருந்து நிலங்களுக்கு நீர் பாய்கின்ற திறப்பு; way to irrigation water cannal.

     “ஸ்ரீகான பள்ளியில் மழவராயப்புத்தேரியில் முதல் மடையில் நம்பிராட்டியற்கு அமுது படிக்கு” (தரும.கல்.1, தொ.1, 32);.

   2. ஒடை; channel.

     [மடு -→மடை.]

மடைகலம்

மடைகலம் maḍaigalam, பெ.(n.)

   சமையல் ஏனம்; cooking utensil.

     “மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடைபானை” (மணிமே.21:56);.

     [மடை + கலம்.]

மடைகோலு-தல்

மடைகோலு-தல் maḍaiāludal,    5 செ.கு.வி.(v.i.)

   வயலுக்கு நீர்பாய்ச்சுதல்; to attend to the irrigation of fields.

     [மடை + கோலு-, மடை = மதகு.]

மடைக்கடல்

 மடைக்கடல் maḍaikkaḍal, பெ.(n.)

   ஆற்று நீர் கடலில் கலக்கும் கடற்பாகம் (யாழ்.அக.);; river-mouth, that part of the sea where the river joins it.

     [மடை + கடல்.]

மடைக்கருப்பு

மடைக்கருப்பு maḍaikkaruppu, பெ. (n.)

   நாட் டுப்புறங்களில் நீர்நிலைகளைக் காக்கும் சிறு Q5Louth; a village deity near water tanks.

மறுவ மடையாண்டி

     [மடை+கருப்பு]

மடைக்கலப்பானை

 மடைக்கலப்பானை maḍaikkalappāṉai, பெ.(n.)

   ஒரு வகைப் பானை; a kind of pot.

     [மடை + கலம் + பானை. மடை = சமையல் தொழில்.]

மடைக்கலம்

மடைக்கலம் maḍaikkalam, பெ. (n.)

   கொங்கு திருமணத்தில் சமையலுக்குக் காணிக்கை அளித்தல்; amount given to the cooks in marriage. (கொ.வ.வ.சொ.120);.

     [மடை+கலம்]

மடைக்கழி – த்தல்,

மடைக்கழி – த்தல், maḍaikkaḻittal,    4 செ.குன்றாவி.(v.t)

   மதகு திறத்தல் (புதுவை);; to open the sluice.

     [மடை + கழி-.]

மடைச்சாதி

 மடைச்சாதி maḍaiccāti, பெ.(n.)

   அறிவு குறைந்த கூட்டத்தார் (வின்.);; ignorant folk.

     [மடை + சாதி. மடம் -→மடை.]

மடைதிறப்புக்கதிர்

 மடைதிறப்புக்கதிர் maḍaidiṟappukkadir, பெ.(n.)

   அறுவடைக் காலத்தில் மடை வெட்டிக்குக் கொடுக்கும் நெற்கதிர்; perquiste in kind to {}, during harvest.

     [மடைதிறப்பு + கதிர்.]

மடைதிறப்போன்

 மடைதிறப்போன் maḍaidiṟappōṉ, பெ.(n.)

மடைவெட்டி (நாஞ்.); பார்க்க; see {}.

     [மடைதிறப்போன் -→மடைவெட்டி.]

மடைத்தனம்

 மடைத்தனம் maḍaittaṉam, பெ.(n.)

   அறிவுக் குறை; folly.

     [மடத்தனம் -→மடைத்தனம்.]

மடைத்தலை

மடைத்தலை maḍaittalai, பெ.(n.)

   மதகு; sluice, head of a channel.

     “மடைத் தலையிலோடுமீ னாட” (மூதுரை, 16);.

     [மடை + தலை.]

     [P]

மடைத்தொழிலோன்

 மடைத்தொழிலோன் maḍaittoḻilōṉ, பெ.(n.)

   சமையற்காரன் (பிங்.);; cook.

     [மடை + தொழிலோன்.]

மடைத்தொழில்

மடைத்தொழில் maḍaittoḻil, பெ.(n.)

   சமையல் தொழில்; work of cooking,

     “மடைத் தொழிற்கு மிக்கோன்” (நள.கலிநீங்.25);.

     [மடை + தொழில். மடு -→மடை = சமையல்.]

மடைநில்-தல்

மடைநில்-தல் maḍainiltal,    14 செ.கு.வி. (v.i.)

   வேண்டும் போதெல்லாம் பெற்றம் பால் சுரத்தல்; to secrete milk in cow whenever we need.

இந்த மாடு மடைநிற்காது (சென்னை);.

     [மடை + நில்-.]

மடைநூல்

மடைநூல் maḍainūl, பெ.(n.)

   சமையற் கலை நூல்; art of cookry. treatise on cooking.

     “மடைநூற் செய்தியும்” (மணிமே.2:22);.

மடைபரவு – தல்

மடைபரவு – தல் maḍaibaravudal,    5 செ.கு.வி. (v.i.)

மடைபோடு-, பார்க்க (யாழ்ப்.);; see {}.

     [மடை + பரவு-.]

மடைபோடு-தல்

மடைபோடு-தல் maḍaipōḍudal,    19 செ.கு.வி. (v.i.)

   இறைவனுக்குச் சோறு படைத்தல்; to lay out rice offerings before a deity.

     [மடை + போடு-. மடை = உணவு.]

மடைப்பண்டம்

 மடைப்பண்டம் maḍaippaṇḍam, பெ.(n.)

   இறைவனுக்குப் படைக்குஞ் சோறு; rice offerings to a deity.

     [மடை + பண்டம்.]

மடைப்பளி

 மடைப்பளி maḍaippaḷi, பெ.(n.)

மடைப் பள்ளி பார்க்க; see {}.

     [மடைப்பள்ளி -→மடைப்பளி.]

மடைப்பள்ளி

மடைப்பள்ளி1 maḍaippaḷḷi, பெ.(n.)

   கோயில் முதலியவற்றின் அடுக்களை; cook-house, kitchen, especially of a temple.

     “அடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி” (கல்லா.23, 37);.

     [மடை + பள்ளி.]

 மடைப்பள்ளி2 maḍaippaḷḷi, பெ.(n.)

   1. அரண்மனைச் சமையற்காரன்; steward of a palace.

   2. ஒரு சாதி (யாழ்ப்.);; a caste of people.

     [மடை + பள்ளி.]

 மடைப்பள்ளி maḍaippaḷḷi, பெ. (n.)

   சமையலறை ; temple kitchen.

     [திரு + மடை + பள்ளி]

மடைப்பின்தொட்டி

 மடைப்பின்தொட்டி maḍaippiṉtoḍḍi, பெ.(n.)

   ஏரிக்கு வெளிப்புறத்தில் மதகின் ஒரமாய்க் கட்டப் பெற்ற தொட்டி (இ.வ.);; cistern outside a tank-bund near its sluice.

     [மடை + பின் + தொட்டி.]

மடைமாறி

மடைமாறி maḍaimāṟi, பெ.(n.)

   புரட்டுக்காரன் – ரி; cheat, deceitful person.

     “தொழுதாள் மடைமாறி சொல்வாள்” (விறலி விடு.803);.

மடைமுகம்

மடைமுகம் maḍaimugam, பெ.(n.)

   1. மடைத்தலை பார்க்க; see {}.

   2. மடைக்கடல் பார்க்க (யாழ்ப். அக.);; see {}.

     [மடை + முகம்.]

மடைமுன்தொட்டி

 மடைமுன்தொட்டி maḍaimuṉtoḍḍi, பெ.(n.)

   ஏரிக்கு உட்புறத்தில் மதகு ஒரமாய் நீர் வேகத்தைக் குறைத்தற்குச் சதுர வடிவிற் கட்டப்பட்ட தொட்டி (இ.வ.);; cistern inside a tank – bund in front of a sluice; to lesson water pressure at its head.

     [மடை + முன் + தொட்டி.]

மடைமை

மடைமை maḍaimai, பெ.(n.)

   அறியாமை; ignorance.

     [மடி -→மட -→மடம் = மடந்தை. மடம் -→மடைமை (வே.க.4:6);.]

மடையசாதி

 மடையசாதி maḍaiyacāti, பெ.(n.)

மடைச் சாதி பார்க்க (வின்.);; see {}.

     [மடைச்சாதி -→மடையசாதி.]

மடையசாம்பிராணி

மடையசாம்பிராணி maḍaiyacāmbirāṇi, பெ.(n.)

   1. அறிவுக்குறைவன் (யாழ்.அக.);; dunce.

   2. மட்டிப்பால் பார்க்க; see {}.

   3. மடையன்சாம்பிராணி பார்க்க; see {}.

மடையடை-த்தல்

மடையடை-த்தல் maḍaiyaḍaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நீர்பாயுங் காலை மூடுதல்; to close the source of irrigation.

   2. தீர்மானமான விடை சொல்லுதல்; to give a definite reply.

     [மடை + அடை.]

மடையன்

மடையன்1 maḍaiyaṉ, பெ.(n.)

   சமையற்காரன்; cooking man.

     “இவ்வறச் சாலை மடையன் ஒருவனுக்கு” (தெ.க.தொ.5, கல்.223);. “மடைக்கலஞ் சீழ்ந்த வீழ்ந்த மடையனை” (மணி.21, 56);.

     [முல் (துளைத்தற் கருத்து வேர்); –→முள் -→மள் -→மடு = ஆற்றிடைப் பள்ளம், அருவி விழும் பள்ளநீர்க்குண்டு. மடு -→மடுத்தல் = வாயில் வைத்தல், உண்ணுதல். மடு -→மடை = தொளை, வாய், உண்ணுஞ் சோறு, சமையல் வேலை. மடை -→மடையன் (வே.க. 4:92);.]

 மடையன்2 maḍaiyaṉ, பெ.(n.)

மடைவெட்டி பார்க்க; see {}.

     [மடை -→மடையன். மடை = மதகுக் கதவு.]

 மடையன்3 maḍaiyaṉ, பெ.(n.)

   அறிவுக் குறைவாளன்; block-head.

     “மடையர் பொருள் பெறமருவிகள்” (திருப்பு.828);.

     [மழ -→மழம் -→மடம் -→மடயன் -→மடையன். மடம் = இளமை, இளமைக்குரிய அறியாமை (வே.க.4:6);.]

மடையன்சாம்பிராணி

மடையன்சாம்பிராணி maḍaiyaṉcāmbirāṇi, பெ.(n.)

   1. மரவகை; malabar mohogany.

   2. மடையசாம்பிராணி பார்க்க: see {}.

மடையன்நீர்

 மடையன்நீர் maḍaiyaṉnīr, பெ.(n.)

   தெளிந்த நீர்; crystal water.

     [மடை + நீர் – மடையன்நீர்.]

மடையான்

மடையான் maḍaiyāṉ, பெ.(n.)

   1. மடை வெட்டி பார்க்க; see {}.

   2. பறவை வகை (பதார்த்த.896);; heron, ardea.

   3. உள்ளான் வகை; a grey snipe.

மடை = நீரோடை. மடையில் நிற்கும் பறவை மடையான்.

மடையுப்பு

 மடையுப்பு maḍaiyuppu, பெ.(n.)

   சோற்றுப்பு; common salt.

     [மடை + உப்பு. மடை = சமையல் தொழில். சமையலுக்குப் பயன்படும் உப்பு.]

மடைவெட்டி

 மடைவெட்டி maḍaiveḍḍi, பெ.(n.)

   நீர்மடை திறப்போன்; sluice opener, servent watching the irrigation works and distributing the water (R.T.);.

     [மடை + வெட்டி. மடை = நீர்நிலை.]

மட்கடம்

 மட்கடம் maḍkaḍam, பெ.(n.)

   மண் ஏனம்; mud pot.

மட்கடி- த்தல்

மட்கடி- த்தல் maḍkaḍittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   கெடுமாறு செய்தல்; to damage, to destroy, to lose by negligence.

     [மட்கு -→மட்கடி-த்தல்.]

மட்கண்டம்

 மட்கண்டம் maṭkaṇṭam, பெ.(n.)

   கிணறு தோண்டும் போது காணும் மண்பாகம்; statum of earth as in sinking wells.

     [மண் + கண்டம்.]

மட்கலம்

மட்கலம் maṭkalam, பெ.(n.)

   மண்ணாலான பாண்டம்; earthern vessel.

     “பசுமட்கலத்துணீர் பெய்திரீஇ யற்று” (குறள். 660);.

     [மண் + கலம்.]

     [P]

மட்கு-தல்

மட்கு-தல் maṭkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. ஒளி மங்குதல்; to be dim, duskey, to be deprived of lustre, glory or brilliance.

     “நாகத்தின் வஞ்சவாயின் மதியென மட்குவான்” (கம்பரா. அயோமு. 12);.

   2. வலுகுன்றுதல்; to lose strength, to become defficient.

     “தரியலர் முனைமட்க” (பாரத. மீட்சி.176);.

   3. மயங்குதல்; to be bewildered.

     “மட்கிய சிந்தை” (கம்பரா. தைல.5);.

   4. அழுக்கடைதல் (கொச்சை.);; to become mouldy;

 to be foul or dirty.

   5. அழிதல்; to be destroyed.

     “மதத்தர் மட்கினர்” (பிரபோத:30, 58);.

     [மள்கு -→மட்கு.]

மட்குகை

 மட்குகை maṭgugai, பெ.(n.)

   குகை; crucible.

     [மண் + குகை.]

மட்சத்திரியம்

 மட்சத்திரியம் maṭcattiriyam, பெ.(n.)

   பேய்ச் சுரை; a wild and bitter gourd. (சா.அக.);.

மட்சாந்து

 மட்சாந்து maṭcāndu, பெ.(n.)

   சுவர்கட்ட உதவும் குழைத்த மண் சேறு; mud plaster used in building walls.

     [மண் + சாந்து.]

மட்சிகம்

 மட்சிகம் maṭcigam, பெ.(n.)

   ஈ (சங்.அக.);; fly.

     [Skt. {} → த. மட்சிகம்]

மட்சிகை

 மட்சிகை maṭcigai, பெ.(n.)

மட்சிகம் (சங்.அக.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. மட்சிகை]

மட்சிமயம்

 மட்சிமயம் maṭcimayam, பெ.(n.)

   அதிமதுரம்; liquorice. (சக. அக.);

மட்சுவர்

 மட்சுவர் maṭcuvar, பெ.(n.)

   மண்ணால் கட்டப்பட்ட சுவர்; mudwall.

     [மண் + சுவர்.]

மட்டகத்தம்

மட்டகத்தம் maṭṭagattam, பெ.(n.)

   1. நன்கு அமைந்தது; that which is well-proportioned and smoothly formed.

   2. முழுமை; entireness, absoluteness.

     [மட்டம் + Skt.சுத்தம். மட்டம் = ஒரே அளவு நிலை.]

மட்டக்கொம்பன்சுறா

 மட்டக்கொம்பன்சுறா maṭṭakkombaṉcuṟā, பெ.(n.)

   பழுப்பு நிறமுள்ளதும் பலவடிகள் நீண்டு வளர்வதுமான மீன்வகை; hammer-head shark, grey, attaining several feet in length, zygaena tudes.

மட்டக்கோலூசி

 மட்டக்கோலூசி maṭṭakālūci, பெ.(n.)

   அறுவை மருத்துவக் கருவிகளுள் ஒன்று; one of the surgical instruments.

மட்டக்கோல்

மட்டக்கோல் maṭṭakāl, பெ.(n.)

   1. கொத்து வேலைக் கருவிகளுலொன்று (வின்.);; rule, ruler, mason’s smoothing rule.

   2. மட்டப்பலகை (இவ்.); பார்க்க; see {}.

     [மட்டு -→மட்டம். மட்டம் + கோல்.]

     [P]

மட்டங்கட்டு-தல்

மட்டங்கட்டு-தல் maṭṭaṅgaṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   1. தளம் முதலியவற்றின் ஏற்றத் தாழ்வைக் கயிறு மட்டப்பலகை முதலியவற்றினால் அறிதல்; to as certain the eveness or level of a surface by time or rule.

   2. துளையின் தட்டுகளைத் தடைப் பொருளிட்டுச் சமனாக்குதல்; to balance at the scales.

     [மட்டு -→மட்டம் + கட்டு-, மட்டம் = ஒரே அளவு.]

மட்டசீச்சான்

 மட்டசீச்சான் maṭṭacīccāṉ, பெ. (n.)

   ஒரு வகை மீன்; if sir;

 squeaking porch.

     [மட்டம்-கீச்சான்]

மட்டச்சாவாளை

மட்டச்சாவாளை maṭṭaccāvāḷai, பெ.(n.)

   வெண்மை நிறமுள்ளதும் 25 விரலம் வரை வளர்வதுமான மீன் வகை; ribbon-fish, burrished silver, attaining 25 in. in length, trichiurus muticuss.

     [மட்டம் + சாவாளை.]

மட்டச்சுறா

மட்டச்சுறா maṭṭaccuṟā, பெ.(n.)

   சாம்பனிற முடையதும் 9 அடிவரை வளர்வதும் கொடியதுமான சுறா மீன்வகை; shark, grey very ferocious, attaining 9 ft. in length, carcharias gangeticus.

     [மட்டம் + சுறா.]

மட்டச்சுவர்

 மட்டச்சுவர் maṭṭaccuvar, பெ.(n.)

   சிறுசுவர்; dwarf wall, breast wall (C.E.M.);.

     [மட்டம் + சுவர், மட்டம் = குறைவான அளவு.]

மட்டஞ்செய்-தல்

மட்டஞ்செய்-தல் maṭṭañjeytal,    1 செ. குன்றாவி, (v.t)

   1. சமனாக்குதல்; to level, as the ground, to trim evenly, as a garland.

     “கத்தரிகையால் மட்டஞ்செய்த மாலையினை” (பு.வெ.3, 3, கொளு. உரை);.

   2. செவ்விதாகச் செய்தல்; to beautify, render attractive.

     “மணிச்செய் கடிப்பினை மட்டஞ் செய்து” (பெருங்.உஞ்சைக்.34, 199);.

     [மட்டம் + செய். மட்டம் = ஒரே அளவு.]

மட்டத்தரம்

மட்டத்தரம் maṭṭattaram, பெ.(n.)

   1. தாழ்ந்த தரம்; inferior quality.

   2. நடுத்தரம்; medium quality.

     [மட்டம் + தரம். மட்டம் = தாழ்வு.]

மட்டத்தாரை

மட்டத்தாரை maṭṭattārai, பெ.(n.)

   கூர்மை யற்ற விளிம்புடையது; anything smooth – edged, as a diamond.

     “கட்டினவைரம் மட்டத்தாரை அறுநூற்று முப்பத்தாறும்” (தெ.க.தொ.2:78);.

     [மட்டம் + தாரை. மட்டம் = மட்டமாகத் தட்டப்பட்டது.]

மட்டத்தாரைச்சப்படி

மட்டத்தாரைச்சப்படி maḍḍattāraiccappaḍi, பெ.(n.)

   மழுங்கிய விளிம்புடைய தட்டை வைரம் (தெ.க.தொ.2:78);; flat diamond with smooth edges.

     [மட்டம் + தாரை + சப்படி. மட்டம் = மட்டமாகத் தட்டிச் சமப்படுத்தப்பட்டது.]

மட்டத்திருக்கை

 மட்டத்திருக்கை maṭṭattirukkai, பெ.(n.)

   செம்பசுமை நிறமுள்ள திருக்கை மீன் வகை; ray-fish grenish – brown Rhinoptera adspensa.

     [மட்டம் + திருக்கை.]

     [P]

மட்டத்துருத்தி

மட்டத்துருத்தி maṭṭatturutti, பெ.(n.)

   1. நீர் முதலியன வீசுங் கருவி வகை; a kind of squirt.

     “சுண்ணத்தையும் சந்தனத்தையும் … மட்டத் துருத்தியாலும் நெடுந் துருத்தியாலும் சிதற” (சீவக. 86, உரை);.

   2. கம்மக் கருவி வகை (இ.வ.);; a kind of hand-bellows.

   3. நறுமணம் புகைக்கும் கலம் (வின்.);; a small-sized perfuming pot.

     [மட்டம் + துருத்தி.]

மட்டநூல்

 மட்டநூல் maṭṭanūl, பெ.(n.)

   சமநிலை பார்ப்பதற்கு உதவும் நூல்; measuring line.

     [மட்டு -→மட்டம் + நூல். மட்டம் = ஒரே அளவு.]

மட்டனம்

மட்டனம் maṭṭaṉam, பெ.(n.)

   பூசுகை; smearing, rubbing over.

     “மான்மதக் கலவைச் சாந்த மட்டனஞ் செய்து” (திருவிளை. உக்கிர. வேல்வளை.45);.

     [மட்டு -→மட்டம் -→மட்டனம்.]

மட்டன்

மட்டன் maṭṭaṉ, பெ.(n.)

   மூடன்; dullard.

     “கட்டைப் புத்தியன் மட்டன்” (திருப்பு.419);.

     [மட்டு -→மட்டன். மட்டம் = அளவு குறைவு.]

மட்டப்பலகை

மட்டப்பலகை maṭṭappalagai, பெ.(n.)

   1. சமனறியுந் தச்சுக் கருவி; measuring rod, carpenter’s, rule.

   2. மணியாசிப் பலகை; mason’s smoothing plane.

   3. சமநிலை காட்டுங் கொத்துக் கருவி; mason’s level, wooden frame with plumb line.

   4. உயர்வு தாழ்ச்சிகளைக் காட்டவுதவும் அளவு கோடிட்ட பலகை; levelling staff.

   5. வயலில் மண்கொண்டு செல்லும் தட்டுப் பலகை; a kind of flat sled for carrying soild from one part of a field to another (G.Tp.D.l.141);.

     [மட்டு -→மட்டம் + பலகை. மட்டம் = ஒரே சம அளவு.]

மட்டப்பா

 மட்டப்பா maṭṭappā, பெ.(n.)

   மொட்டை மாடி (இ.வ.);; open terrace, flat roof.

மட்டம் = ஒரே சம அளவு.

     [மட்டம் -→மட்டப்பா.]

மட்டப்பாரை

 மட்டப்பாரை maṭṭappārai, பெ. (n.)

மலபார் கடற்கரையில் இருக்கும் மீன் வகை

 Malabar trevally.

     [மட்டம்+பாரை]

மட்டப்பாறை

 மட்டப்பாறை maṭṭappāṟai, பெ.(n.)

   ஒரு வகைக் கடல்மீன்; a sea fish.

     [P]

மட்டப்பாவீடு

 மட்டப்பாவீடு maṭṭappāvīṭu, பெ.(n.)

   மொட்டை மாடியுள்ள வீடு; house with open terrace,

மட்டம் = ஒரே சம அளவு.

     [மட்டம் -→மட்டப்பா + விடு.]

மட்டப்பாவு

மட்டப்பாவு1 maṭṭappāvu, பெ.(n.)

மட்டப்பா பார்க்க; see {}.

 மட்டப்பாவு2 maṭṭappāvu, பெ.(n.)

   குறைந்த அளவுள்ள பாவு; short lengthen warp.

     [மட்டம் + பாவு.]

மட்டப்பிரி

 மட்டப்பிரி maṭṭappiri, பெ.(n.)

   வள்ளத்தின் உறுப்பு (க.ப.அக.);; a part of the vallam.

மட்டப்பொன்

 மட்டப்பொன் maṭṭappoṉ, பெ.(n.)

   மாற்றுக் குறைவான பொன் (வின்.);; impure gold, as inferior in quality.

     [மட்டு -→மட்டம் + பொன்.]

மட்டமாய்க்கூட்டல்

 மட்டமாய்க்கூட்டல் maṭṭamāykāṭṭal, பெ.(n.)

   மொத்தமாய்க் கூட்டல்; to add in moderate quantity.

     [மட்டமாய் + கூட்டல்.]

மட்டம்

மட்டம்1 maṭṭam, பெ.(n.)

   1. அளவு; measure.

   2. சமநிலை; evenness, flatness.

   3. அளவுகோல்; rule, line, gauging rod.

   4. எல்லை; limit, extent, bound, degree (w.);.

   5. ஊகம்; guess, conjecture.

   6. ஒப்பு.; equality in length, height, size, measure or quality.

   7. சிறுமை; smallness.

     “மட்டப்பூ” (தெ.க.தொ..2:84);.

   8. தாழ்வு;  inferiority, deficiency.

   9. மிதம்; moderation.

   10. செட்டு; furglity.

   11. சிறு குதிரை (இ.வ.);; pony,

   12. வாழை, கரும்பு முதலியவற்றின் கன்று; sapling of plantain, bamboo, sugarcane etc.

   13. பொன் மணியின் உறுப்பு வகை (வின்.);; smooth round neck of gold bead.

   14. ஆனைக் குட்டி; young male elephant.

   15. ஒரே உயரமுள்ள நிலை; level.

   16. சமவெண்; whole quantity, sum, leaving no over plus.

   17. மூன்றொத்துடைய தாளம் (சிலப்.3:151, உரை);; triple beat in measuring time.

   18. குறைவு; decrease.

     “அவற்றில் ஆதரம் மட்டமாய கும் (ஸ்ரீவசன.3, பிர.172);. 19. கேடயம் (வின்.);;

 shield.

     [மட்டு -→மட்டம்.]

 மட்டம் 2 maṭṭam, பெ.(n.)

   கள்; toddy.

     “மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன…. சுனை”

மட்டம்பார்-த்தல்

மட்டம்பார்-த்தல் maṭṭambārttal,    4 செ.கு.வி. (v.i.)

   பாதை சுவர் முதலியவற்றின் ஒழுங்கை நோட்டம் பார்த்தல்; to examine the level or straightness, as of a road or wall etc.

     [மட்டம் + பார்-. மட்டம் = ஒரே அளவு.]

மட்டம்பிடி

மட்டம்பிடி1 maḍḍambiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   மதிப்பிடுதல்; to estimate.

     [மட்டம் + பிடி -. மட்டம் = ஒரே அளவு.]

 மட்டம்பிடி2 maḍḍambiḍittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. மட்டம்வெடி-, பார்க்க; see {}.

   2. சமனாக்குதல் (இ.வ.););; to level.

மட்டம்போடு – தல்

மட்டம்போடு – தல் maṭṭambōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   வேண்டுமென்றே வேலை முதலியவற்றுக்கு வாராதிருத்தல்; to absent oneself willfully.

     ” பள்ளிக்குச் செல்லாமல் மட்டம் போட்டு விட்டான்” (உ.வ.);.

     [மட்டம் + போடு -. மட்டம் = குறைவு.]

மட்டம்வெடி-த்தல்

மட்டம்வெடி-த்தல் maḍḍamveḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   கிளை கப்புகள் உண்டாதல்; to shoot forth, branch out, as from the stem of a plant.

     [மட்டு -→மட்டம் + வெடி-.]

மட்டம்வை – த்தல்

மட்டம்வை – த்தல் maṭṭamvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மட்டம்வெடி-த்தல் பார்க்க (யாழ்.அக.);; see {}.

   2. மட்டங்கட்டு – தல் பார்க்க; see {}.

     [மட்டம் + வை-.]

மட்டயந்திரம்

 மட்டயந்திரம் maṭṭayandiram, பெ.(n.)

   சம நிலையை அறியும் கருவி (இக்.வ.);; instrument for testing level.

     [மட்டு -→மட்டம் + இயந்திரம்.]

மட்டறி

மட்டறி1 maṭṭaṟidal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. மதிப்பிடுதல்; to guess, make a rough estimate.

   2. பழகியறிதல்; to bear in mind

 so as to recognise or identify, to know well.

   3. ஒப்பிடுதல்; to liken, compare with.

     [மட்டம் -→மட்டு + அறி-. மட்டம் = அளவு, மதிப்பு.]

 மட்டறி2 maṭṭaṟidal,    1. அளவேற்படுத்துதல்; to fix a limit, to stint.

   2. குறிப்பறிதல்; to understand indications.

     [மட்டம் -→மட்டு + அறி-.]

மட்டலகு

 மட்டலகு maṭṭalagu, பெ.(n.)

   இழைப்புளியின் உருண்டை அலகு வகை; blade for the jack-plane.

     [மட்டு -→மட்டம் + அலகு.]

மட்டவிழைப்புளி

 மட்டவிழைப்புளி maṭṭaviḻaippuḷi, பெ.(n.)

   தச்சுக் கருவி வகை; jack plane, joiner’s plane for coarse work.

     [மட்டம் + இழைப்புளி.]

     [P]

மட்டவேலை

 மட்டவேலை maṭṭavēlai, பெ.(n.)

   பரும்படியான வேலை (யாழ்.அக.);; rough work, work not requiring much skill, as different from ilaippu and {}.

     [மட்டம் + வேலை.]

மட்டவேலைக்காரன்

 மட்டவேலைக்காரன் maṭṭavēlaikkāraṉ, பெ.(n.)

   வெள்ளி தங்கவேலைகளில் காப்பு முதலிய பரும்படி வேலை செய்யுந் தட்டான்; smith whose work does not require much skill.

     [மட்டு -→மட்டம் + வேலைக்காரன்.]

மட்டாயுதம்

 மட்டாயுதம் maṭṭāyudam, பெ.(n.)

   வாள்; sword.

     [மட்டு + Skt.ஆயுதம்.]

மட்டாய்

மட்டாய் maṭṭāy, வி.எ.(adv)

   1. அளவாய்; moderately, temperately.

   2. வேண்டிய வளவாக; as much as in needed,

   3. செட்டாக; sparingly, parsimoniously, frugally.

   4. ஏற்கத்தக்கதாக; passably, tolerably.

     [மட்டு -→மட்டாய். மட்டு = அளவு.]

மட்டி

மட்டி1 maṭṭittal,    4 செ.கு.வி.(v.i.)

   மண்டலித்தல்; to be or become circular, to form into circles or ringlets, to coil.

     [முல்(வளைதற் கருத்து வேர்); -→முள் -→முண்டு -→மண்டு -→மண்டி = காலை மடக்கி முழங்காலால் நிற்கை. முட்டு -→மட்டு -→மட்டி -→மட்டி-த்தல் (வே.க.4:83);.]

 மட்டி2 maṭṭittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   வட்டமாகுதல்; to make circular.

     “திரடோள்கண் மட்டித்தாட்” (தேவா.12, 3);.

     [முட்டு -→மட்டு -→மட்டி -→மட்டி-த்தல்.]

 மட்டி3 maṭṭi, பெ.(n.)

   1. மூடன்; dolt, blockhead.

     “அறியாத… மூடமட்டி” (திருப்பு:195);.

   2. ஒழுங்கின்மை; clumsiness, awkwardness.

   3. பரும்படி; roughness, coarseness.

   4. மக்கு(இ.வ.);; putty, cement for whiting.

   5. மட்டிக்காரை பார்க்க; see {}.

   6. சிப்பிமீன்; oyster, cockle, shell-fish.

   7. மட்டிவாழை பார்க்க; see {}.

தெ., க. மட்டி.

     [முட்டு -→மட்டு -→மட்டி (வே.க.4:65);.]

 மட்டி4 maṭṭittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. அழித்தல்; to destroy.

     ” மணிகொள் குட்டிம மட்டித்து” (கம்பரா. பொழிலிறுத்.24);.

   2. முறித்தல்; to break.

     “மாங்கனிப் பணை மட்டித்து” (கம்பரா. பொழிலிறுத்.25);.

   3. பூசுதல்; to put on, clap on, daub, as sandal paste.

     “குளிர்சாந்த மட்டித்து” (திவ்.நாய்ச்.6,10);.

   4. மெழுகுதல்; to cleanse, as the floor.

     “மணிநிலஞ் சந்தனங் கொண்டு மட்டியா” (மேருமந்.629);.

   5. பிசைதல்; to mix and knead.

     “சுண்ணமொடு மட்டித்துக் கலந்த குங்குமக் கொழுஞ் சேறு” (பெருங். உஞ்சைக்.40, 222-3);.

   6. உறுதி செய்தல்; to ascertain, discover determine.

     [முட்டு -→மட்டு -→மட்டி-.]

 மட்டி5 maṭṭi, பெ.(n.)

   மண்டலிக்கை; coiling, as of a snake, circuling as of a wrestler,

     “மட்டியே முதலாவுள்ள மற்றொழிலின்” (பாரத.சடாசுர.18);.

 மட்டி maṭṭi, பெ. (n.)

   கள் மிடாவின் அடியில் தேங்கியிருக்கும் கழிவு; sediment in toddy pot.

     [மள்-மடு-மட்டி]

மட்டிகேயம்

 மட்டிகேயம் maṭṭiāyam, பெ.(n.)

   விளாத்தி மரம்; a tree (சா.அக.);.

மட்டிகை

மட்டிகை maṭṭigai,    களத்தில் வைக்கோல் அரிக்கட்டு முதலியவற்றின் மேல் இடுஞ்சாணி முத்திரை; seal of cowdung put upon bundled sheats of paddy of straw on the threshing floor or upon corn sacks (m.m.483).

     [மட்டு -→மட்டி -→மட்டிகை.]

 மட்டிகை maṭṭigai, பெ. (n.)

   திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village ir Tirukkoyilur Taluk.

     [மட்டு-மட்டிகை]

மட்டிக்கம்பிவேட்டி

 மட்டிக்கம்பிவேட்டி maṭṭikkambivēṭṭi, பெ.(n.)

   பொடிக் கம்பிக்கரையுள்ள முருட்டு வேட்டி (இ.வ.);; coarse cloth with a narrow line border, worn by men.

     [மட்டுக்கம்பி -→மட்டிக்கம்பி + வேட்டி.]

மட்டிக்காய்

 மட்டிக்காய் maṭṭikkāy, பெ.(n.)

   மட்டிக் கொடியின் காய்; fruit of {} (சா.அக.);.

மட்டிக்காரை

 மட்டிக்காரை maṭṭikkārai, பெ.(n.)

பரும்படியாக அரைத்த சுண்ணச்சாந்து:

 coarse or rough plaster.

     [மட்டு -→மட்டி + காரை.]

மட்டிக்கொடி

 மட்டிக்கொடி maḍḍikkoḍi, பெ.(n.)

   ஒரு வகைச் செடி; a plant (சா.அக.);.

மட்டிச்சிப்பி

 மட்டிச்சிப்பி maṭṭiccippi, பெ.(n.)

   சிப்பி மீனோடு (வின்.);; oyster shell.

     [மட்டி + சிப்பி.]

மட்டிடு-தல்

மட்டிடு-தல் maḍḍiḍudal,    17 செ.குன்றாவி.(v.t.)

மட்டறி-பார்க்க (வின்.);; see {},

     [மட்டு -→மட்டிடு-தல்.]

மட்டித்தனம்

 மட்டித்தனம் maṭṭittaṉam, பெ.(n.)

   மூடத் தனம்; stupidity, foolishness.

     [மட்டு -→மட்டித்தனம்.]

மட்டித்தாள்

 மட்டித்தாள் maṭṭittāḷ, பெ.(n.)

   கரட்டுத்தாள், மட்டமான தாள்; coarse paper.

     [மட்டு -→மட்டி + தாள்.]

மட்டித்தேயம்

 மட்டித்தேயம் maṭṭittēyam, பெ.(n.)

   வெள்ளைக் கருங்காலி மரம்; a tree (சா.அக.);.

மட்டித்தையல்

 மட்டித்தையல் maṭṭittaiyal, பெ.(n.)

   பரும்படித் தையல் (வின்.);; coarse sewing.

     [மட்டு -→மட்டி + தையல்.]

மட்டிப்படைக்கலம்

மட்டிப்படைக்கலம் maḍḍippaḍaikkalam, பெ.(n.)

மட்டி3 பார்க்க (திவா.);; see {}.

     [மட்டி3 + படைக்கலம்.]

மட்டிப்பாம்பு

 மட்டிப்பாம்பு maṭṭippāmbu, பெ.(n.)

   ஒரு வகை பாம்பு; a variety of snake (சா.அக.);.

     [மட்டி + பாம்பு.]

மட்டிப்பாலை

 மட்டிப்பாலை maṭṭippālai, பெ.(n.)

மட்டிப்பால் பார்க்க; see {}.

மட்டிப்பால்

மட்டிப்பால் maṭṭippāl, பெ.(n.)

   1. மரவகை; entireleaved tree of heaven, I. tr. Ailanthus mala-baricus.

   2. நறுமணப் பொருள் வகை; ailanthus balsam.

மட்டிப்புடவை

 மட்டிப்புடவை maḍḍippuḍavai, பெ.(n.)

   முருட்டுச் சீலை; coarse cloth worn by women.

     [மட்டி + புடவை.]

மட்டிமீன்

மட்டிமீன் maṭṭimīṉ, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

     “பருந்துவாயன் மட்டிமீன் பாரக் கெண்டை” (பறாளை.பள்ளு.15);.

     [மட்டி + மீன்.]

மட்டியம்

மட்டியம் maṭṭiyam, பெ.(n.)

   தாள வகையு ளொன்று (பரத.தாள.19);; a variety of time – measure one of {}.

மட்டியூர்நிலவளவுகோல்

மட்டியூர்நிலவளவுகோல் maṭṭiyūrnilavaḷavuāl, பெ.(n.)

   கோச்சடையன் வீரபாண்டியனின் 5ஆவது ஆட்சியாண்டில் திருமயம் வட்டத்தில் வழக்கிலிருந்த ஒரு வகை அளவுகோல்; a measurement of Tirumayam vattam at the period of {}.

     “நிலம் முக்காணி முந்திரிகையும் மட்டியூர் நிலவளவுகோலால் இப்பழந்தேவதாநம் நீங்கலாக” (புது.கல்.361/2);.

மட்டிலை

 மட்டிலை maṭṭilai, பெ.(n.)

   பச்சிலை (தைலவ.தைல.);; mysore gamboge.

மட்டிவாயன்

மட்டிவாயன் maṭṭivāyaṉ, பெ.(n.)

   1. திறந்தகன்ற வாயையுடையவன்; one who has a gaping mouth.

   2. முப்பது விரலம் வளரக் கூடியதும் சாம்பல் நிறமுள்ளதுமான மீன்வகை; black rock-cod, silvery grey, attaining 30 in. in length. sparus berda,

   3. 18 விரலம் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல் மீன் வகை; a sea-fish, silver-grey, attaining 18 in. length chrysophrys datria.

     [மட்டி + வாயன்.]

     [P]

மட்டிவாய்

மட்டிவாய்1 maṭṭivāy, பெ.(n.)

   1. திறந்தகன்ற வாய்; gaping mouth.

   2. மட்டிவாயன், 3 பார்க்க; see {}.

     [மட்டி + வாய்.]

 மட்டிவாய்2 maṭṭivāy, பெ.(n.)

   மங்கிய சிவப்பு நிறமுள்ளதும் ஓரடி வளர்வதுமான கடல்மீன் வகை; a sea-fish pale dull red, attaining one foot in length, scolopsis vosmerti.

     [மட்டி + வாய்.]

மட்டிவாழை

 மட்டிவாழை maṭṭivāḻai, பெ.(n.)

   வாழை வகை (நாஞ்.);; a kind of plantain.

     [மட்டி + வாழை.]

மட்டிவேலை

மட்டிவேலை maṭṭivēlai, பெ.(n.)

   1. பரும்படியான வேலை; rough work opp. to fine work.

   2. திறமை வேண்டாத வேலை; work not requiring inteligence or skill.

     [மட்டி + வேலை.]

மட்டு

மட்டு1 maṭṭu, பெ.(n.)

   1. அளவு; measure, quantity, standard, degree, size, proportion, amount.

   2. எல்லை; limit, extent, boundary, scope, range.

     “வடிவுக்கோர் மட்டுண்டாமோ” (ஞானவா. தேவா.1);.

   3. குத்து மதிப்பு;  estimate, conjecture, as from the eye-sight.

   4. அளவு; moderateness, tolerableness.

   5. பொதுத் தன்மை; that which is middling or common place.

     “மட்டாய்ச் செலவிடு” (உ.வ.);.

   6. நிலவளவு வகை; a standard of land measurement.

   7. மட்டம்1 பார்க்க; see {}.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); -→முள் -→முட்டு -→மட்டு (வே.க.4:65);.]

ஒள்றோடொன்று முட்டுகிற நிலையிலேயே ஒன்றன் நீள அளவு தெரியும்.

 மட்டு2 maṭṭu, பெ.(n.)

   1. கருவி (திவா.);; a weapon.

   2. கிளிஞ்சல் வகை; calm.

   3. மீன் வகை; meretrix.

   4. ஒரு வகை மரம்; a kind of tree.

 மட்டு3 maṭṭu, பெ.(n.)

   1. தேன்; honey.

     “மட்டுவாயவிழ்ந்த தண்டார்” (சீவக. 1145);.

   2. கள்; toddy, fermented liquor.

     “‘வெப்புடைய மட்டுண்டு” (புறநா:24);.

   3. சாறு;  sweet juice.

     “கருப்பு மட்டுவாய் மடுத்து’ (திருவாசக.5, 80);.

   4. உடலுறவின்போது கிளர்ச்சி யுண்டாவதற்காகப் பருகும் பருகம்; drink taken at the time of sexual union.

     “மட்டுடை மணமகள்” (சீவக.98);.

   5. மது வைக்குஞ் சாடி; liquor jar.

     “மட்டுவாய் திறப்பவும்”(புறநா. 113);.

   6. மணம்; fragrant smell,

     “மட்டுநீறொடும்” (இரகு இரகுவுற். 23);.

     [முல் -→முள் -→முட்டு -→முத்து. முத்துதல் = பொருந்துதல், ஒத்தல், கலத்தல். முத்து -→மத்து = கலப்பு, கலக்கம், மயக்கம், மயக்கஞ் செய்யும் பித்தம், மயக்கம் தரும் கள், தீங்கள்ளாகிய தேன், பித்தமுண்டாக்கும் ஊமத்தை. மத்து -→மட்டு (வே.க.4:67);.]

மட்டுக்கட்டு

மட்டுக்கட்டு1 maṭṭukkaṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   1. ஒரு நிலைக்கு வருதல்; to form a judgement after observation.

   2. இனமறிந்து கொள்ளுதல்; to recognise identify.

   3. அனுமானித்தல்; to infer.

   4. உணர்தல்; to comperhend.

   5. மதிப்பிடுதல்; to estimate,

   6. அளவுக் குட்படுதல்; to stint, limit.

   7. தடுத்தல்; to hinder.

     [மட்டு2 + கட்டு-.]

 மட்டுக்கட்டு2 maṭṭukkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   சரிநிலைக்கு வருதல்; to be brought to the normal condition or limits.

     [மட்டு + கட்டு-.]

மட்டுக்கட்டு-தல்

மட்டுக்கட்டு-தல் maṭṭukkaṭṭudal,    5 செ.குன் றாவி, (v.t.)

   வேலையைக் குறைத்துக் கொள்ளுதல்; to decrease the range ol work.

இப்பொழு தெல்லாம் அவன் தன் வேலையை மட்டுக்கட்டிக் கொண்டான். (மீனவ);.

     [மட்டு+கட்டு]

மட்டுக்குமிஞ்சு – தல்

மட்டுக்குமிஞ்சு – தல் maṭṭukkumiñjudal,    5 செ.கு.வி. (v.i.)

   அளவு கடத்தல்; to exceed bounds, as in eating, to be excessive, as prices.

     [மட்டுக்கு + மிஞ்சு-.]

மட்டுக்குழி

மட்டுக்குழி maṭṭukkuḻi, பெ.(n.)

   அளவாக வெட்டிய குழி; excavated pit.

     “அதனைச் சூழப் பறித்துக் கிடக்கின்ற மட்டுக் குழிகளினுள்ளே” (பெரும்பாண்.108 உரை);.

     [மட்டு + குழி]

மட்டுக்கோணம்

 மட்டுக்கோணம் maṭṭukāṇam, பெ.(n.)

   நேர்கோணம் (யாழ்.அக.);;  right angle.

     [மட்டு + கோணம்.]

மட்டுக்கோல்

 மட்டுக்கோல் maṭṭukāl, பெ.(n.)

   அளவு கழி; measuring rod.

     [மட்டு + கோல்.]

மட்டுத்தப்பு

மட்டுத்தப்பு1 maṭṭuddappudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. இலக்குத் தவறுதல்; to miss an aim;

 to take a wrong direction.

   2. மதிப்புத் தவறுதல்; to exceed propriety, to behave or speak disrespectfully or impolitely,

   3. அளவு கடந்து செலவிடுதல்; to live extravagantly.

   4. அளவு மிஞ்சுதல்; to act conceitedly, to assume airs.

     [மட்டு + தப்பு-.]

 மட்டுத்தப்பு2 maṭṭuttappu, பெ.(n.)

   சரி கவனமின்மை; improprietly, immoderation.

     [மட்டு + தப்பு.]

மட்டுத்திட்டம்

மட்டுத்திட்டம் maṭṭuttiṭṭam, பெ.(n.)

   1. மதிப்பு; guess, estimate, conjecture.

   2. அளவு; extent, amount, limit.

   3. நடத்தை; character, worth, merit.

     [மட்டு + திட்டம்.]

மட்டுப்படு-தல்

மட்டுப்படு-தல் maḍḍuppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அளக்கப்படுதல்; to be measured, gauged.

   2. வரையறைப்படுதல்; to be limited, circumscribed, curbed.

     “மட்டுப் படாக் கொங்கை மானார்” (தனிப்பா.1, 149, 54);.

   3. உணரப்படுதல்; to be comprehended, understood.

   4. குறைதல்; to decrease, grow less.

     [மட்டு + படு-.]

 மட்டுப்படு-தல் maḍḍuppaḍudal,    17 செ.குன்றாவி (v.t.)

   துப்புத் தெரிதல்; to spy and find Out:

     [மட்டு+படு]

மட்டுப்பால்

மட்டுப்பால் maṭṭuppāl, பெ.(n.)

மட்டிப்பால் பார்க்க (பதார்த்த.116);; see {}.

மட்டுப்பிடி-த்தல்

மட்டுப்பிடி-த்தல் maḍḍuppiḍittal,    4 செ.குன்றாவி (v.t.)

   1. இனமறிந்து கொள்ளுதல்; to recognise, identify.

   2. உணர்தல்; to comprehend.

   3. தீர்மானம் செய்தல்; to decide, determine.

   4. அளத்தல் (இ.வ.);; to measure.

     [மட்டு + பிடி-.]

மட்டுப்பிரமாணம்

 மட்டுப்பிரமாணம் maṭṭuppiramāṇam, பெ.(n.)

   சரியளவு (யாழ்.அக.);; correct measure.

மட்டுமதிப்பு

மட்டுமதிப்பு maṭṭumadippu, பெ.(n.)

   1. தகுதிக்கேற்ற மதிப்பு; due regard for another’s character or rank, politeness.

   2. நன்னடை; good behaviour.

     [மட்டு + மதிப்பு.]

மட்டுமதியம்

மட்டுமதியம் maṭṭumadiyam, பெ.(n.)

   1. சரியளவு; actual measurement.

   2. நடுவளவு; moderation.

   3. மட்டுத்திட்டம் பார்க்க;see {}.

     [மட்டு + Skt. மத்திய -→மதியம்.]

மட்டுமரியாதை

 மட்டுமரியாதை maṭṭumariyātai, பெ.(n.)

மட்டுமதிப்பு பார்க்க; see {}.

     [மட்டு + skt.மரியாதை.]

மட்டுமருங்கு

 மட்டுமருங்கு maṭṭumaruṅgu, பெ.(n.)

மட்டு மதிப்பு பார்க்க; see {}.

     [மட்டு +மருங்கு]

மட்டுமிஞ்சு-தல்

மட்டுமிஞ்சு-தல் maṭṭumiñjudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அளவு மிஞ்சுதல்; to be excess in proportion.

   2. அளவு தப்புதல்; to go wrong in proportion.

மட்டும்

மட்டும் maṭṭum, பெ.அ.(adv.)

   1. வரை; until, so far, as far as,

     ‘அந்த ஊர் மட்டும் போவோம்’ (உ.வ.);.

   2. மாத்திரம்; only.

     ‘நீ மட்டும் போகலாம்’ (உ.வ.);.

     [மட்டு = எல்லை. மட்டும் = (இட எல்லை, ஆள் எல்லை); எல்லை வரையறுப்பு.]

மட்டுவாயூடகம்

மட்டுவாயூடகம் maṭṭuvāyūṭagam, பெ.(n.)

   1. வெண்ணிறமுள்ள கடல் மீன்வகை; sea-fish, silvery, Gerres lucidus.

   2. வெண்ணிற முடையதும் நாலரைவிரற்கடை வளர்வதுமான கடல்மீன் வகை; a sea-fish, silvery, attaining 4 1/2 inch in length, Gerres setifer.

மட்டை

மட்டை1 maṭṭai, பெ.(n.)

   1. தெங்கு, பனை முதலியவற்றின் மடல்; leaf-stalk of fern or palm, stem of plantain.

   2. தேங்காயின் மேல் தோடு; husk of coconut.

   3. 4500 வெற்றிலை அல்லது 45 கவுளி கொண்ட வெற்றிலைக்கட்டு; a bundle of 4500 betel leaves.

   4. பந்தடிக்கும் மட்டை; bat.

   5. பாம்பு; snake.

     “மட்டையிடம் குட்டி வலம்” (பழ.);.

     [மட்டு -→மட்டை]

 மட்டை2 maṭṭai, பெ.(n.)

   1. மொட்டை; bald – ness.

     “கொய்யப்பட்ட மட்டையாகிய தலையுடனே” (புறநா.261, உரை);.

   2. உடற் குறை; headless body, trunk.

   3. மூடன்; stupid fellow.

     [மொட்டை -→மட்டை.]

 மட்டை3 maṭṭai, பெ.(n.)

   1. பயனற்றவ-ன்-ள்-து; worthless person or thing.

     “இந்த மட்டைக் கிறுத்த தெல்லா போதும்” (விறலிவிடு.889);.

   2. மட்டமான நெல்; a variety of paddy, as inferior.

   3. மாசுள்ள நென்மணி; coarse grain in paddy.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); -→முள் -→முட்டு -→மட்டு = அளவு, எல்லை, குத்து மதிப்பு, சிறுமை, தாழ்வு குறைவு, அடக்கம், சிக்கன அளவு, ஒப்பு. மட்டு -→மட்டை (வே.க.4:66);.]

 மட்டை1 maṭṭai, பெ. (n.)

   தலைகீழாகச் சுற்றும் பம்பரம் (த.நா.வி.);; inverse top.

     [மொட்டு-மட்டு-மட்டை]

 மட்டை maṭṭai, பெ. (n.)

   செய்யாறுவட்டத்தில் ஒரு ஊர்; name of the village in Seyyaru taluk.

     [மட்டு-மட்டை]

மாறவர்மன் கந்தரபாண்டியன் கல்வெட்டில் வரும் மட்டை செய்யாறிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது.

 மட்டை maṭṭai, பெ. (n.)

   இழவுச் சடங்கில் வாசிக்கப்பெறும் இசைக்கருவி; a funeral music instrument.

மட்டைகடி-த்தல்

மட்டைகடி-த்தல் maḍḍaigaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   பிள்ளைகள் உதடு கடித்தல்; to bite the lower lip, as a child.

     [மட்டை + கடி-.]

மட்டைகட்டு-தல்

மட்டைகட்டு-தல் maṭṭaigaṭṭudal,    5 செ.குன்றாவி (v.t.)

மட்டைவைத்துக்கட்டு-, பார்க்க; see {}.

     [மட்டை + கட்டு-.]

மட்டைக்கங்கு

 மட்டைக்கங்கு maṭṭaikkaṅgu, பெ.(n.)

   பனை முதலியவற்றின் மட்டையடியிலுள்ள ஒலை; leaves on either side of the lower part of palmyra stem.

     [மட்டை + கங்கு.]

மட்டைக்குதிரை

 மட்டைக்குதிரை maṭṭaikkudirai, பெ.(n.)

   நெசவுக் கருவியின் ஒருறுப்பு; trestle for preparing the warp in weaving.

     [மட்டை + குதிரை.]

     [P]

மட்டைக்கொம்பு

 மட்டைக்கொம்பு maṭṭaikkombu, பெ.(n.)

   விலங்கின் விரி கொம்பு; horns of an animal extending side ways.

     [மட்டை + கொம்பு. மட்டை = விரிவது.]

மட்டைக்கோரை

 மட்டைக்கோரை maṭṭaikārai, பெ.(n.)

   கோரை வகை; smooth sedge, Cyperus procerulus.

     [மட்டை + கோரை.]

மட்டைச்சாறு

 மட்டைச்சாறு maṭṭaiccāṟu, பெ.(n)

   பனை மட்டைச்சாறு; juice of the stalk or stem of the leaf of palmyra (சா.அக.);.

     [மட்டை + சாறு.]

மட்டைச்சொண்டு

 மட்டைச்சொண்டு maṭṭaiccoṇṭu, பெ.(n.)

   பெரிய உதடு; large lip.

     [மட்டை + சொண்டு.]

மட்டைதட்டு

மட்டைதட்டு1 maṭṭaidaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   தென்னை மட்டையை நசுக்கி நாரெடுத்தல்; to beat the integument of the coconut to form coir.

     [மட்டை + தட்டு-.]

 மட்டைதட்டு2 maṭṭaidaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஏழையாதல்; to become poor.

     [மட்டை + தட்டு-.]

மட்டைத்தாரைச்சவக்கம்

மட்டைத்தாரைச்சவக்கம் maṭṭaittāraiccavakkam, பெ.(n.)

   மழுங்கிய விளிம் புடையதும் சதுர வடிவுள்ளதுமான வைரக்கல்; square shaped diamond with smooth edges.

     “மட்டத்தாரைச் சவக்கம் நூற்றறுபத் தொன்பதும்” (தெ.க.தொ.2:78);.

     [மட்டம் + தாரை + சவக்கம். மட்டம் = மட்டமாகத் தட்டப்பட்டது.]

மட்டைத்தும்பு

 மட்டைத்தும்பு maṭṭaittumbu, பெ.(n.)

   பனைநார்; fibre of the palmyra stem.

     [மட்டை + தும்பு.]

மட்டைத்தேள்

மட்டைத்தேள் maṭṭaittēḷ, பெ.(n.)

   1. பிள்ளைத் தேள்; a kind of scorpion.

   2. பூரான் வகை; a kind of centipede.

     [மட்டை + தேள்.]

மட்டைப்படல்

 மட்டைப்படல் maḍḍaippaḍal, பெ.(n.)

   பனை மட்டையாலாகிய வேலி; fence of palmyra stems.

     [மட்டை + படல்.]

மட்டைப்பூசை

மட்டைப்பூசை maṭṭaippūcai, பெ.(n.)

மட்டையடி3-, 2 பார்க்க; see {}.

     [மட்டை + பூசை.]

மட்டைப்பூச்சி

 மட்டைப்பூச்சி maṭṭaippūcci, பெ.(n.)

   புழு வகை; tape-warm.

     [மட்டை + பூச்சி.]

மட்டையடி

மட்டையடி1 maḍḍaiyaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. வறுமையால் வருந்துதல்; to suffer from destitution.

   2. பிறன் பொருட்டுத் தொல்லைமேற் கொள்ளுதல்; to worry oneself in another’s cause.

     [மட்டை + அடி-.]

 மட்டையடி2 maḍḍaiyaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பகடி பண்ணுதல்; to ridicule.

     [மட்டை + அடி-.]

 மட்டையடி3 maḍḍaiyaḍittal, பெ.(n.)

   1. ஆண் தெய்வத்துக்கும் அம்மனுக்கும் உள்ள காதற் கலகத்தைக் குறிக்கோளாய்க் கொண்டு தேவரடியாரும் கோயிற் பணியாளர்களும் அவரவர்க்கும் முறையே படிநிகராளிகளாய் நின்று நடத்தும் கோயிற்றிருவிழா; a temple festival in which dancing girls and temple servants take sides representing the Goddess and the God respectively and enact their love-quarrel.

   2. இகழ்ச்சிக் குறியாகத் தேங்காய் மட்டையால் அடிக்கை; beating with the coconut husk, in contempt.

   3. பகடி (இ.வ.);; ridicule.

     [மட்டை + அடி-.]

மட்டையடியடி

மட்டையடியடி1 maḍḍaiyaḍiyaḍittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   வாழை மட்டையால் அடித்து விளையாடுதல்; to beat with plaintain stems in sport.

     [மட்டையடி + அடி-.]

 மட்டையடியடி2 maḍḍaiyaḍiyaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. விருந்து பண்ணாமலிருத்தல்; to receive impolitely.

   2. ஏளனமாகப் பேசுதல் (இ.வ.);; to use obscene language.

     [மட்டையடி + அடி-.]

மட்டையடியாகச்செய்தல்

மட்டையடியாகச்செய்தல் maḍḍaiyaḍiyākacceytal, பெ.(n.)

   1. வேறுபாடில்லாமல் ஒரேயடியாக செய்யப்படும் செய்கை; doing the same thing for all account

   2. புரிந்து கொள்ளாமல் ஒரே செயலை எந்த விடத்தும் செய்யும் செய்கை; doing the samething for all place without understanding.

மட்டையர்

மட்டையர் maṭṭaiyar, பெ.(n.)

   சமணர்; jains, as bald-headed.

     “துவரியாடையார் மட்டையர் சமண் தொண்டர்கள்” (திவ். பெரியதி 2, 1, 6);.

     [மொட்டை -→மட்டை -→மட்டையர்.]

மட்டைவைத்துக்கட்டு

மட்டைவைத்துக்கட்டு1 maṭṭaivaiddukkaṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. கூடையின் மேற்பகுதியைப் பனை மட்டையின் பிளந்த சிம்பு வைத்துப்பின்னுதல்; to fasten the top of a basket with fibres of palmyra stem.

   2. உடைந்த எலும்புகள் கூடும்படி மரச்சிம்பு வைத்துக் கட்டுதல்; to fasten splints on a broken limb.

     [மட்டைவைத்து + கட்டு-.]

 மட்டைவைத்துக்கட்டு2 maṭṭaivaiddukkaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஒருவன் குறையைத் தாங்கிப் பேசுதல்; to support another in his fault.

     [மட்டைவைத்து + கட்டு-.]

மட்பகை

மட்பகை maṭpagai, பெ.(n.)

   1. மட்கலத்தை அறுக்குங் கருவி; potter’s instrument for paring clay.

   2. மட்பகைவன் பார்க்க; see {}.

     [மண் + பகை.]

மட்பகைஞன்

 மட்பகைஞன் maṭpagaiñaṉ, பெ.(n.)

மட் பகைவன் பார்க்க; see {}.

     [மண் + பகைஞன்.]

மட்பகைவன்

 மட்பகைவன் maṭpagaivaṉ, பெ.(n.)

   குயவன் (சூடா.);; potter.

     [மண் + பகைவன்.]

     [P]

மட்பனை

 மட்பனை maṭpaṉai, பெ.(n.)

   நிலப்பனை; moosly root.

     [மண் + பனை.]

மட்பலகை

மட்பலகை maṭpalagai, பெ.(n.)

   சுடாத செங்கல்; unburnt brick..

     “திருப்பணிக்குப் பயிலுஞ் சுடுமட் பலகை பலகொணர் வித்து” (பெரியபு ஏயர்கோ.49);.

     [மண் + பலகை.]

மட்பாண்டம்

 மட்பாண்டம் maṭpāṇṭam, பெ.(n.)

   மண்ணால் செய்த ஏனங்கள்; earthern vessels.

     [மண் + பாண்டம்.]

மட்பாம்பு

மட்பாம்பு maṭpāmbu, பெ.(n.)

   நிலத்தைத் தாங்குவதாகத் தொன்மங்களால் கருதப்படும் ஆயிரம் தலை கொண்ட பாம்பு; mythological thousand-headed serpent which supporting the earth.

     “மட்பாம்பு நெளிய…. மிக்கு நடந்தது பெரும்படைச் சாத்து” (திருவாலவா.39,20);.

     [மண் + பாம்பு.]

மண

மண1 maṇattal,    3 செ.கு.வி.(v.i.)

   1. கலத்தல்;  to be united, mingled.

     “அறையும் பொறையு மணந்த தலைய” (புறநா.118);.

   2. வந்து கூடுதல்;  to come together.

     “நிரை மணந்த காலையே.” (சீவக.418);.

   3. நேர்தல்;  to happen.

     “மருவுற மணந்த நட்பு” (கலித்.46);.

   4. பொருந்துதல்; to be fixed, attached.

     “மத்தகத் தருவியின் மணந்த வோடையை” (சீவக. 2211);.

   5. கமழ்தல்; to emit fragrance.

     “மணந்த சோலையும்” (அரிச்.பு.விவாக.98);.

   6. விளங்குதல்; to shine.

     “தேவர் மருட மணக்குங் கழல் வீரா” (திருப்பு.527);.

     [மணம்-→மண-த்தல்.]

 மண2 maṇattal,    12 செ.குன்றாவி.(v.t.)

   1. திருமணம் புரிதல்; to wed.

     “மணந்தார் பிரிவுள்ளி” (நாலடி, 397);.

   2. புணர்தல் (பிங்.);; to copulate with. ”

மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள்” (கலித்.24);.

   3. கூடியிருத்தல்; to live in company with.

     “மணக்குங்கான் மலரன்ன தகையவாய்” (கலித்.25);.

   4. அணைத்தல்; to embrace.

     “திருந்திழை மென்றோள் மணந்தவன்” (கலித்.);.

     [மணம்-→மண-.]

மணஉறவாடல்

 மணஉறவாடல் maṇauṟavāṭal, பெ.(n.)

   மக்கள் திருமணத்தால் தொடர்புடைய பெற் றோர் உறவுகொள்ளுதல் (சம்பந்தங்கலத்தல்);; contracting relation-ship, as parents by marriage by their children.

     [மணம்+உறவாடல்]

மணக்கடவு

 மணக்கடவு maṇakkaḍavu, பெ. (n.)

   பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in PollachiTaluk.

 |மண்கடவு)

மணக்கத்தம்புல்

 மணக்கத்தம்புல் maṇakkattambul, பெ.(n.)

   ஒருவகைப் புல்; a kind of grass (சா.அக.);.

     [மணக்கத்தம் + புல்.]

மணக்கத்தை

 மணக்கத்தை maṇakkattai, பெ.(n.)

   நெல் வகை; a kind of paddy.

மணக்கத்தையரிசி

 மணக்கத்தையரிசி maṇakkattaiyarisi, பெ.(n.)

   ஒரு வகை சிவப்பரிசி; a kind of red rice for pudding and cakes.

     [மணக்கத்தை + அரிசி.]

மணக்காப்புச்சீமந்தம்

 மணக்காப்புச்சீமந்தம் maṇakkāppuccīmandam, பெ.(n.)

   மகளிரின் முதற் கருப்பத்தில் வளைகாப்புடன் சேர்த்துச் செய்யும் சீமந்தச் சடங்கு (இ.வ.);; the celebration of a woman during the period of her first pregnancy called cimandam, along with bangle wearing ceremony.

     [மணம் + காப்பு + சீமந்தம்.]

மணக்கால்

 மணக்கால் maṇakkāl, பெ.(n.)

   கலியாணப் பந்தலிடுவதற்கு முதலில் நடும் முழுத்தக் கால் (இ.வ.);; first post set up in an auspicious hour for a marriage pavilion.

     [மணம் + கால்.]

மணக்கால்நம்பி

 மணக்கால்நம்பி maṇakkālnambi, பெ.(n.)

   மாலியப் பெரியார்களுள் ஒருவர் (குருபரம்.);; a Vaishnava Acharya.

     [மணக்கால் + நம்பி.]

மணக்கிழத்தி

 மணக்கிழத்தி maṇakkiḻtti, பெ.(n.)

   கறுப்பறுகு; a black variety of dub grass (சா.அக.);.

     [மணம் + கிழத்தி.]

மணக்கீரை

 மணக்கீரை maṇakārai, பெ.(n.)

   கீரைவகை (புதினா);; mint.

     [மணம்+கீரை]

மணக்குடவர்

மணக்குடவர் maṇakkuḍavar, பெ.(n.)

   திருக்குறளாசிரியர்களுள் ஒருவர்; a commentator on the kural.

     “தருமர் மணக்குடவர்…… வள்ளுவர் நூற் கெல்லையுரை செய்தாரிவர்” (பெருந்தொ. 1538);.

     [மணம் + குடவர்.]

மணக்குடையர்

மணக்குடையர் maṇakkuḍaiyar, பெ.(n.)

மணக்குடவர் பார்க்க; (தொண்டை.சத.40, மேற்கோள்.);; see {}.

     [மணக்குடவர்-→மணக்குடையர்.]

மணக்குழம்பு

 மணக்குழம்பு maṇakkuḻmbu, பெ.(n.)

   வயிற்றின் மீதும், மார்பின் மீதும் பூசிக் கொள்ளும் சந்தனங் கலந்த ஒருவகை மணக் குழம்பு; a sandal wood paste with other drugs is smeared over the abdomen, and chest.

     [மணம் + குழம்பு.]

மணக்கோலமூலி

மணக்கோலமூலி maṇakālamūli, பெ.(n.)

   1. காட்டு முருங்கை; wild mornika tree.

   2. ஒருவகை நில ஆவாரை; senna leaved shrub (சா.அக.);.

மணக்கோலம்

மணக்கோலம்1 maṇakālam, பெ.(n.)

   1. திருமணத்துக்குரிய ஒப்பனை;  wedding dress or costume.

     “மணக்கோலமதே பிணக்கோலமதாம் பிறவியது” (தேவா. 934, 7);.

   2. திருமண ஊர்கோலம் (இ.வ.);; marriage procession.

   3. மணச்சடங்கின் முன்னிகழும் மணமகனது ஊர்கோலம் (வின்.);; procession of the bridgroom just before his marriage.

     [மணம் + கோலம்.]

 மணக்கோலம்2 maṇakālam, பெ.(n.)

   வாழை; plantain (சா.அக.);.

மணக்கோல்

மணக்கோல் maṇakāl, பெ.(n.)

   மலரம்பு; flower arrow of {}.

     “மணக்கோ றுரந்த…. மதனை” (கல்லா. 31, 8);.

     [மணம் + கோல்.]

மணக்கோவை

 மணக்கோவை maṇakāvai, பெ.(n.)

   ஒருவகைக் கோவை; used for curry Kovai fruit tender (சா.அக.);.

மணங்கட்டு-தல்

மணங்கட்டு-தல் maṇaṅgaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நறுமண மூட்டுதல்; to fumigate with odours, perfume.

     [மணம் + கட்டு-.]

மணங்கல்

மணங்கல் maṇaṅgal, பெ.(n.)

   1. பெரும்பானை (அக.நி.);; big pot.

   2. யானை; elephant.

மணங்கிளர்-தல்

மணங்கிளர்-தல் maṇaṅgiḷartal,    11 செ.கு.வி. (v.i.)

மணந்தட்டு-, பார்க்க; see {}.

மணங்கு

மணங்கு1 maṇaṅgu, பெ.(n.)

   ஆட்டுக்குட்டி (திவா.);; lamp.

 மணங்கு2 maṇaṅgu, பெ.(n.)

   இருவாட்சி (மலை.);; tuscan jasmine.

 மணங்கு3 maṇaṅgu, பெ.(n.)

   நிறைவகை; a standard weight, 25 lbs.

 மணங்கு4 maṇaṅgu, பெ.(n.)

மடங்கு2, 1 பார்க்க; see {}.

     [மடங்கு-→மணங்கு.]

மணங்குலை-தல்

மணங்குலை-தல் maṇaṅgulaidal,    2 செ.கு.வி. (v.i.)

   நிலைகுலைதல்; to be ruined in circumstances.

     “மக்கி மணங் குலைந்து” (இராமநா.யுத்.81);.

மணங்கொம்பு

 மணங்கொம்பு maṇaṅgombu, பெ.(n.)

மணுகுப்பூ பார்க்க; see {}.

மணஞ்சேரி

மணஞ்சேரி maṇañjēri, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரிக்கு வடகரையில் அமைந்துள்ள ஊர்; a town on the northern banks of cauvery in Thanjavur Dt.

     “மயிலொரு மல்கிய சோலை மணஞ்சேரி” (பெரியபு. 152-1);.

     [மணம் + சேரி. மணம் = திருமணம்.]

மணத்தக்கள்ளி

 மணத்தக்கள்ளி maṇattakkaḷḷi, பெ.(n.)

   இலைக்கள்ளி; leafy milk spurge (சா.அக.);.

மணத்தக்காளி

 மணத்தக்காளி maṇattakkāḷi, பெ.(n.)

மணித்தக்காளி பார்க்க; see {}.

     [மணித்தக்காளி-→மணத்தக்காளி (கொ.வ.);.]

மணத்தூண்

மணத்தூண் maṇattūṇ, பெ.(n.)

   திருவரங்கத்தில் அரங்கநாதர் கோயிலுட் புறத்திலுள்ள இரட்டைத் தூண்கள் (திவ். பெருமாள், 1, 2);; the two pillars in the court of Thiruvarangam temple.

மணந்தட்டு-தல்

மணந்தட்டு-தல் maṇandaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   நறுமணம் வீசுதல் (யாழ்.அக.);;  to be fragrant;

 to spread sweet smell.

     [மணம் + தட்டு-. மணம் = நறுமணம்.]

மணந்தவன்

மணந்தவன் maṇandavaṉ, பெ.(n.)

   கணவன்; husband.

     “மணந்தவர் தேர்….. தோன்றும்” (திருக்கோ.326);.

     [மணம்-→மணந்தவன். மணம் = திருமணம்.]

மணப்பந்தல்

 மணப்பந்தல் maṇappandal, பெ.(n.)

   திருமணத்தில் இடப்படும் ஒப்பனைப் பந்தல் (வின்.);; marriage pavilion erected and decorated for the occasion.

     [மணம் + பந்தல். மணம் = திருமணம்.]

மணப்பறை

மணப்பறை maṇappaṟai, பெ.(n.)

   திருமண முழுவு; marriage drum.

     “மன்றங் கறங்க மணப்பறை யாயின” (நாலடி, 23);.

     [மணம் + பறை. மணம் = திருமணம்.]

மணப்பாகு

மணப்பாகு1 maṇappāku, பெ.(n.)

   முறுகாத வெல்லப்பாகு; meltless treacle (சா.அக.);.

     ‘முறுகிய வெல்லப்பாகிற்கு எதிரானது’.

 மணப்பாகு2 maṇappāku, பெ.(n.)

   பாகு வகை (பதார்த்த.182);; a kind of treacle.

மணப்பாக்கம்

 மணப்பாக்கம் maṇappākkam, பெ. (n.)

   வேலூர் மாவட்டத்தில் செய்யார் ஆரணி வழித்தடத்தில் உள்ள ஒரு ஊர்; a village in Vellore district.

     [மணம்+பாக்கம்]

மணப்பாரி

 மணப்பாரி maṇappāri, பெ.(n.)

   ஓர் அம்மை; a kind of measles (சா.அக.);.

மணப்பிரண்டை

 மணப்பிரண்டை maṇappiraṇṭai, பெ.(n.)

   நறுமணப் பிரண்டை; a kind of fragrant plant (சா.அக.);.

     [மணம் + பிரண்டை.]

மணப்பு

மணப்பு maṇappu, பெ.(n.)

   1. நறுமணம்; scent, odour, perfume.

     “முழுவதும் மணப்புள்ள சந்தனநெய்” (தைலவ.பாயி.16, உரை);.

   2. புணர்ச்சி (வின்.);; copulation.

   3. சாரம் (யாழ்.அக.);; essence.

   4. செல்வமுடைமை (யாழ்.அக.);; possession of extensive properties.

     [மணம்-→மணப்பு.]

மணப்பூச்சு

மணப்பூச்சு maṇappūccu, பெ.(n.)

   உடம்பிற் பூசும் சந்தனக் குழம்பு முதலியன; fragrant paste of camphor, sandal, etc., for the person.

     “கார்கால மணப்பூச்சின் குணம்” (பதார்த்த.1432);.

     [மணம் + பூச்சு. மணம் = நறுமணம்.]

மணப்பொடி

 மணப்பொடி maṇappoḍi, பெ.(n.)

   நறுந்துகள்; scented powder.

     [மணம் + பொடி. மணம் = நறுமணம்.]

மணப்பொருத்தம்

மணப்பொருத்தம் maṇapporuttam, பெ.(n.)

   1. திருமணப் பொருத்தம்; agreement in the horoscopes of a bridgroom and a bride with reference to their fitness for marriage.

   2. திருமண உடன்படிக்கை (வின்.);; marriage contract, written agreement between parties marrying or giving their children in marriage.

     [மணம் + பொருத்தம். மணம் = திருமணம் ]

மணமகன்

மணமகன் maṇamagaṉ, பெ.(n.)

   1. திருமண மாப்பிள்ளை; bridegroom.

     “மணமகன் போல நின்றான்” (சீவக.2185);.

   2. கணவன் (சூடா.);; husband.

     “மணமகனே பிணமகனாய்” (திருவிளை. பழியஞ்.40);

     [மணம் + மகன்.]

மணமகள்

 மணமகள் maṇamagaḷ, பெ.(n.)

   திருமணப் பெண்; bride.

     [மணம் + மகள்.]

மணமக்கள்

 மணமக்கள் maṇamakkaḷ, பெ.(n.)

   புதிதாய்த் திருமணம் செய்து கொள்பவர்கள்; newly married couples, newly-weds.

     [மணம் + மக்கள்.]

கணவன் மனைவியுமாக ஒருவருக்கொருவர் வாழ்க்கைத் துணைவராய் இல்லறம் தொடங்கும் இருவரும், திருமணத்தன்று மணமக்கள் எனப்படுவர். அவ்விருவரையும் பிரித்துக் கூறுங்கால், மணமகன் மணமகள் என்றும், மணவாளன் மணவாட்டி என்றும், பெண் மாப்பிள்ளை (மணவாளப்பிள்ளை); என்றும், பெண் பிள்ளை என்றும், கூறுவது வழக்கம். மணமகனைப் பிள்ளை என்பது வடார்க்காட்டு வழக்கு (த.தி. முன்.vi);.

மணமண்

 மணமண் maṇamaṇ, பெ.(n.)

   மணமுள்ள மண் (கஞ்சோற்பவம்);; a fragrant earth

     [மணம்+மண்]

மணமண்டபம்

 மணமண்டபம் maṇamaṇṭabam, பெ.(n.)

திருமண மண்டபம் (யாழ்.அக.);:

 marriage pavilion.

     [மணம் + மண்டபம்.]

மணமலி

 மணமலி maṇamali, பெ.(n.)

   மருக்கொழுந்து (மலை.);; southern wood.

     [மணம் + மலி.]

மணமாலை

மணமாலை maṇamālai, பெ.(n.)

   திருமணத்தில் மணமக்கள் சூடும் பூமாலை; garland for the bride and bridegroom at a wedding.

     “மணமாலை அந்தரி சூட்ட” (திவ்.நாய்ச். 6, 3);.

     [மணம் + மாலை.]

மணமுரசு

மணமுரசு maṇamurasu, பெ.(n.)

   விழா முரசு (சிலப்.5:141);; drum used at festivals and marriages.

     [மணம் + முரசு.]

மணமுறிவு

 மணமுறிவு maṇamuṟivu, பெ.(n.)

மணவிலக்கு பார்க்க;see maņavilakku.

     [மண[ம்]+முறிவு]

மணமுழவு

மணமுழவு maṇamuḻvu, பெ.(n.)

   மருதநிலப் பறை (தொல்.பொருள்.18, உரை);; drum of the agricultural tract.

     [மணம் + முழவு.]

மணமேற்குடி

மணமேற்குடி maṇamēṟkuḍi, பெ.(n.)

   நின்றசீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனின் அமைச்சர் குலச்சிறையார் பிறந்த ஊர்; the native place of {}, the minister of {}, the Pandya king.

     “குருந்தவிழ் சாரல் மணமேற்குடி மண்குலச் சிறையே” (திருத்தொண்டர்.26);.

மணம்

மணம் maṇam, பெ.(n.)

   1. கூடுகை; union, as of lovers.

     “ஏதிலார் மணந்தனில் மனம்போக்கும்” (காசிக.மகளிர்.10);.

   2. எண் வகையான திருமணம் (பிங்.);; marriage of which there are eight kinds.

   3. நறுநாற்றம்; fragrance.

     “மணநாறு படப்பை” (பெரும்பாண்.354);.

   4. நறுமணப் பொருள்; fragrant substance.

     “மணங்கமழ் நாற்றம்” (மதுரைக்.447);.

   5. மதிப்பு; respectability, dignity.

பணமுள்ளவனுக்கே மணமுண்டு (பழ.);.

   6. நன்னிலை; prosperity, affuence.

     “மக்கி மணங்குலைந்து” (இராமநா.உயுத்.81);. தெ. மதுவு; க. மணம்.

     [முல்(பொருந்தற் கருத்து வேர்);-→ முள்-→ மள்-→ மண்-→ மண. மணத்தல் = பொருந்துதல். மண-→ மணம் (வே.க. 4:63);.]

மணம்பிடி-த்தல்

மணம்பிடி-த்தல் maṇambiḍittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. மோப்பம் பிடித்தல்; to perceive by smell or scent, as dogs.

   2. நறுமணம் முதலியவற்றால் இழுக்கப்படுதல் (யாழ்ப்.);; to be attracted by dainties, as children; to be attracted by smell, as insects,

   3. முடைநாற்றம் வீசுதல் (வின்.);; to stink.

     [மணம் + பிடி. மணம் = நறுமணம், முடைநாற்றம்.]

மணம்புரி-தல்

மணம்புரி-தல் maṇamburidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   திருமணம் செய்தல்; to marry.

     [மணம் + புரி-. மனம் = திருமணம்.]

மணற்கண்ணாம்பு

 மணற்கண்ணாம்பு maṇaṟkaṇṇāmbu, பெ.(n.)

   மணல் மிகுந்துள்ள சுண்ணாம்புக்கல்; sandy limestone.

     [மணல் + சுண்ணாம்பு.]

மணற்கல்

 மணற்கல் maṇaṟkal, பெ.(n.)

   மணற்பாங்கான பாறை (வின்.);; sand stone, aqueous rock.

     [மணல் + கல்.]

மணற்காடை

 மணற்காடை maṇaṟkāṭai, பெ.(n.)

   மணலி லிருக்கும் பொன்னைச் சப்பி வாழும் தவளையைப் போன்ற ஓர் உயிரி; a creature like frog living on gold mixed up in sandy places (சா.அக.);.

     [மணல் + காடை.]

மணற்காலப்பள்ளி

மணற்காலப்பள்ளி maṇaṟkālappaḷḷi, பெ.(n.)

மணற் மேடாக உள்ள ஊர்:

 sand hillock place or village.

     “இந்நாட்டு வெளாநாட்டு மணற் காலப்பள்ளியுந் திறப்பான் பரகேசரி தேவதானங்களும் திருவடிகள் தேவதானங்களும்” (தெ.க.4, தொ.2, 4, 46);.

மணற்கால்

 மணற்கால் maṇaṟkāl, பெ.(n.)

   மணற் பாங்கான நிலம் (இ.வ.);; sandy soil.

     [மணல்-→மணற்கால். ஒ.நோ.ஆற்றங்கால், சேற்றங்கால்.]

மணற்காளான்

மணற்காளான்1 maṇaṟkāḷāṉ, பெ.(n.)

   1. தவளை; a frog.

   2 மணலில் முளைக்கும் காளான்; a kind of mushroom grown in the sandy places (சா.அக.);.

 மணற்காளான்2 maṇaṟkāḷāṉ, பெ.(n.)

மணற்றவளை பார்க்க; (வின்.);; see{}.

மணற்கிளரி

 மணற்கிளரி maṇaṟkiḷari, பெ. (n.)

   ஒருவகைப் பறவை; a kind of bird.

     [மணல்+கிளறி]

மணற்கீரை

மணற்கீரை maṇaṟārai, மணலி, 1 பார்க்க; see {}.

     [மணல் + கீரை.]

மணற்குடி

 மணற்குடி maṇaṟkuḍi, பெ. (n.)

   நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்; a village in Nagappattinam District.

     [மணல்+குடி]

மணற்குன்றம்

மணற்குன்றம் maṇaṟkuṉṟam, பெ.(n.)

   மணலின் திட்டை; sand-heap, sand-bank, sand dunes.

     “வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்” (மணிமே. 1:64);.

     [மணல் + குன்றம்.]

மணற்குன்று

மணற்குன்று1 maṇaṟkuṉṟu, பெ.(n.)

   மண் மேடு; sand hillock.

     “எருக்காட்டுச் சேரியில் மணற்குன்று கல்லியும் குழி தூர்த்தும்” (தெ.க.தொ.22, கல்.32-1);.

     [மணல் + குன்று.]

 மணற்குன்று2 maṇaṟkuṉṟu, பெ.(n.)

   புடம் போடுவதற்காகக் குவிக்கும் மணலின் திரள்; a heap of sand intended for purposes of calcination.

     [மணல் + குன்று.]

 மணற்குன்று3 maṇaṟkuṉṟu, பெ.(n.)

மணற் குன்றம் பார்க்க; (சங்.அக.);; see {}.

     [மணல் + குன்று.]

மணற்குருவி

 மணற்குருவி maṇaṟkuruvi, பெ.(n.)

மணற் காடை பார்க்க; see {}.

     [மணல் + குருவி.]

மணற்கூகை

 மணற்கூகை maṇaṟākai, பெ.(n.)

   தவளை (வின்.);; frog.

     [மணல் + கூகை.]

மணற்கூர்கை

 மணற்கூர்கை maṇaṟārkai, பெ.(n.)

   வளையலுப்பு; a kind of salt (சா.அக.);.

மணற்கை

 மணற்கை maṇaṟkai, பெ.(n.)

மணற்றரை பார்க்க; see {}.

மணற்கொழிப்பான்

 மணற்கொழிப்பான் maṇaṟkoḻippāṉ, பெ.(n.)

   அம்மை வகை (இ.வ.);; an eruptive disease, as resembling sand.

     [மணல் + கொழிப்பான். மணல் போன்ற சிறு கொப்புளங்களாய்த் தோன்றும் அம்மை.]

மணற்கோடு

மணற்கோடு maṇaṟāṭu, பெ.(n.)

மணற் கோட்டை பார்க்க; see {}.

     “மணற்கோடு கொண்டு” (பதிற்றுப்.30:27);.

     [மணல் + கோடு. கோட்டை-→ கோடு.]

மணற்கோட்டை

மணற்கோட்டை maṇaṟāṭṭai, பெ.(n.)

   1. மணலாலான கோட்டை; sand embankment, as a rampart.

   2. வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற் குவியல் (பதிற்றுப்.30, உரை);; protecting bank of sand, as of a river in floods.

     [மணல் + கோட்டை.]

மணற்கோவை

 மணற்கோவை maṇaṟāvai, பெ.(n.)

   மணலிற் படருங் கோவைக் கொடிவகை (மூ.அ.);; a kind of creeper growing in a sandy tract, a climbing plant.

     [மணல் + கோவை.]

மணற்சாரி

 மணற்சாரி maṇaṟcāri, பெ.(n.)

மணற்றறை பார்க்க; (உ.வ.);; see {}.

     [மணல் + சாரி.]

மணற்சோறு

மணற்சோறு maṇaṟcōṟu, பெ.(n.)

   குழந்தைகள் விளையாட்டில் சோறாகக் கருதும் மணல்; sand, regarded as rice by children.

     “சிறியார் மணற் சோற்றிற் றேக்கிடுமாபோல்” (திருமந்.306);.

     [மணல் + சோறு.]

மணற்பருவம்

 மணற்பருவம் maṇaṟparuvam, பெ.(n.)

   புழுதிக்காலாக உழுது உழவுக்கு ஏற்ற நிலை; preparation of a {} and for {} cultivation.

மணல் + பருவம்.]

மணற்பாக்கு

 மணற்பாக்கு maṇaṟpākku, பெ.(n.)

   கெடாம லிருப்பதற்காக மணலிற் புதைத்து வைக்கும் பாக்கு (யாழ்ப்.);; arecanut, preserved by being kept buried in sand.

     [மணல் + பாக்கு.]

மணற்பாங்கு

 மணற்பாங்கு maṇaṟpāṅgu, மணற்றறை பார்க்க; see {}.

     [மணல் + பாங்கு.]

மணற்பாடு

 மணற்பாடு maṇaṟpāṭu,    பயிரிடுவதற்குத் தகாத மணல் பாங்கான நிலம்; sandy soil unfit for cultivation.

     [மணல் + பாடு.]

மணற்பாறை

 maṇaṟpāṟai,

பெ.(n.);

   மென்மைத் தன்மையுடைய பாறை; sedimentry rock; rock formed by the seas and lakes depositing sand and mud in their shores or the bottom.

     [மணல் + பாறை.]

மணற்புடம்

 மணற்புடம் maṇaṟpuḍam, பெ.(n.)

   மணல் மறைவில் போடும் புடம்; sand bath.

     [மணல் + புடம்.]

மணற்புரம்

மணற்புரம் maṇaṟpuram, பெ.(n.)

மணலூர் புரம் பார்க்க; (திருவாலவா.53:10);; see {}.

     [மணல் + புரம்.]

மணற்பொருக்கு

 மணற்பொருக்கு maṇaṟporukku, பெ.(n.)

   கருஞ்சுக்கான்;  black lime stone (சா.அக.);.

மணற்போக்கி

 மணற்போக்கி maṇaṟpōkki, பெ.(n.)

   வாய்க்காலில் மணல் கழிவதற்காக ஏற்படுத்திய வழி (இ.வ.);; sand escape.

     [மணல் + போக்கி.]

மணற்றரம்

 மணற்றரம் maṇaṟṟaram, பெ.(n.)

மணற்றரை பார்க்க; (W.G.);; see {}.

     [மணல் + தரம்.]

மணற்றரை

 மணற்றரை maṇaṟṟarai, பெ.(n.)

   மணல் பாங்கான நிலம் (வின்.);; sandy soil: sandy tract of land.

     [மணல் + தரை.]

மணற்றவளை

 மணற்றவளை maṇaṟṟavaḷai, பெ.(n.)

   தவளை வகை (வின்.);; mud frog.

     [மணல் + தவளை.]

மணற்றாரா

 மணற்றாரா maṇaṟṟārā, பெ.(n.)

   தாராவகை (வின்.);; a species of wild duck or teal.

     [மணல் + தாரா.]

மணற்றிருக்கை

 மணற்றிருக்கை maṇaṟṟirukkai, பெ.(n.)

   திருக்கைமீன் வகை (வின்.);; a kind of thorn-back fish.

     [மணல் + திருக்கை.]

மணலக்கம்பம்

 மணலக்கம்பம் maṇalakkambam, பெ.(n.)

   பால்வீதி மண்டலம் (யாழ்.அக.);; the milky Way.

மணலடித்தரிசு

 மணலடித்தரிசு maṇalaḍittarisu, பெ.(n.)

   மணல் மேவிப் பாழ்பட்ட நிலம் (இ.வ.);; land rendered waste by accumulation of sand.

     [மணலடி + தரிசு.]

மணலி

மணலி1 maṇali, பெ.(n.)

   சேக்கிழார் நமிநந்தியடிகள் புராணத்தில் சுட்டும் திருவாரூர் வட்டத்தில் திருநெல்லிக்காவல் அருகிலிருந்த ஊர்; a town near Thirunallikkaval in Thiruvarur Taluk, which is mentioned by {} in {}.

     “தேவர் பெருமாள் எழுச்சி திருமணலிக் கொருநாள் எழுந்தருள” (பெரியபு.நமி.22);.

     [மணல்-→மணலி.]

 மணலி2 maṇali, பெ.(n.)

   கீரைவகை (பதார்த்த. 593);; sandgreens, Gisekia pharnacloides.

 மணலி3 maṇali, பெ.(n.)

   1. மருக்கொழுந்து (மலை.);; southern wood.

   2. நெல்வகை (நாமதீப.351);; a kind of paddy.

   3. பாம்பு வகை நிகண்டு); a kind of snake.

மணலிக்கீரை

 மணலிக்கீரை maṇalikārai, பெ.(n.)

   கீரை வகை; a kind of greens (சா.அக.);.

     [மணலி + கீரை.]

மணலிக்கோரை

 மணலிக்கோரை maṇalikārai, பெ.(n.)

   உப்பங்கோரை; a kind of nut grass (சா.அக.);.

     [மணலி + கோரை.]

மணலிரும்பு

 மணலிரும்பு maṇalirumbu, பெ.(n.)

   மணல் கலந்த இரும்பு; iron ore.

     [மணல் + இரும்பு.]

மணலுறிஞ்சி

 மணலுறிஞ்சி maṇaluṟiñji, பெ.(n.)

   மணலைப் பறித்துப் போக்கும் பள்ளமடை (இ.வ.);; under sluice, to draw away sand.

     [மணல் + உறிஞ்சி.]

மணலூர்

மணலூர் maṇalūr, பெ.(n.)

மணலூர்புரம் (திருவாலவா.53, 6); பார்க்க; see{}.

மணலூர்புரம்

மணலூர்புரம் maṇalūrpuram, பெ.(n.)

   பாண்டியரது பழைய தலைநகரம் (பி.வி.2, உரை);; an ancient {} capital.

மணலூர்பேட்டை

 மணலூர்பேட்டை maṇalūrpēṭṭai, பெ. (n.)

   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்; a village in Vilupuram district.

     [மணல்+ஊர்+பேட்டை]

திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி செல்லும் வழித்தடத்தில் உள்ளது.

மணலேறு

மணலேறு maṇalēṟu, பெ.(n.)

   முத்துக் குற்றவகை (சிலப்.14:193, உரை);; a flaw in pearis.

     [மணல் + ஏறு.]

மணலை

 மணலை maṇalai, பெ.(n.)

மணலைமீன் பார்க்க; (வின்.);; see {}.

     [மணலைமீன்-→மணலை.]

மணலைமீன்

 மணலைமீன் maṇalaimīṉ, பெ.(n.)

   கல் நவரை என்னும் மீன் வகை (வின்.);; a sea fish.

     [மணலை + மீன்.]

மணலொத்திடம்

 மணலொத்திடம் maṇalottiḍam, பெ.(n.)

   மணலை வறுத்து ஒத்திடமிடுதல்; the application of hot sand for affected part of the body (சா.அக.);.

     [மணல் + ஒத்திடம்.]

மணல்

மணல் maṇal, பெ.(n.)

   1. பொடியாயுள்ள பிதிர்மண்; sand; gravel.

     “பெருமண லுலகமும்” (தொல். பொருள்.5);.

   2. மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று (சிலப்.14:184);; flaw in emerald, one of eight{}.

மணல்தரம்

 மணல்தரம் maṇaltaram, பெ.(n.)

மணற்றரை பார்க்க; see {} (loc.);.

மணல்தாரா

 மணல்தாரா maṇaltārā, பெ.(n.)

மணற்றாரா பார்க்க; see {} (சா.அக.);.

மணல்திட்டு

 மணல்திட்டு maṇaltiṭṭu, பெ.(n.)

   கடலுள் காணலாகும் சிறுசிறு திட்டுகள்; a small mount found in sea.

     [மணல் + திட்டு.]

மணல்திட்டை

 மணல்திட்டை maṇaltiṭṭai, பெ.(n.)

   மணற் குன்று; sand hill; sand bank.

     [மணல் + திட்டை.]

மணல்தொட்டி

 மணல்தொட்டி maṇaltoṭṭi, பெ.(n.)

   மருந்தைப் புடம் போடுவதற்காக மணல் நிரப்பிய இரும்புத் தொட்டி; an iron tub full of sand used in the calcination of medicinal powders (சா.அக.);.

     [மணல் + தொட்டி.]

மணல்மத்திகை

 மணல்மத்திகை maṇalmattigai, பெ.(n.)

   மணற்குளியல்; sand bath (சா.அக.);.

மணல்மறைவுபுடம்

 மணல்மறைவுபுடம் maṇalmaṟaivubuḍam, பெ.(n.)

   புடம் போடுவதற்குரிய மருந்தடங்கிய குப்பியைக் கழுத்தளவு மணலுக்குள் புதைத்து வைத்தல்; to keep the bottle containing medicine to be calcined in slow; cow dung fire concealed in the sand up to the neck (சா.அக.);.

     [மணல் + மறைவுபுடம்.]

மணல்முள்ளங்கி

 மணல்முள்ளங்கி maṇalmuḷḷaṅgi, பெ.(n.)

ஆற்றுமுள்ளி பார்க்க; see {} (சா.அக.);.

மணல்மேடு

 மணல்மேடு maṇalmēṭu, பெ.(n.)

   ஆற்றுவாய்ப் பக்கம் மேடாகக் குவிந்திருக்கும் மணல் குவியல்; sand pile near river side.

     [மணல் + மேடு.]

மணல்வாரி

மணல்வாரி maṇalvāri, பெ.(n.)

   1. மண் தோண்டி பார்க்க; (இக்.வ.);; see {}.

   2. நெல்வகை; a kind of paddy.

     “சேரு மணல்வாரி குளவாளை” (பறாளை. பள்ளு..23);.

   3. புல்வகை (யாழ்.அக.);; a kind of grass.

   4. சின்னம்மை வகை; measles (இ.வ.);.

   5. மணல்போக்கி பார்க்க; see{}.

     [மணல் + வாரி.]

மணல்வாரிச்சடங்கு

 மணல்வாரிச்சடங்கு maṇalvāriccaḍaṅgu, பெ.(n.)

   தொல் தமிழர் திருமணத்தில் குடத்தில் மணலைக் கொட்டி நீர் வார்க்கும் நடப்பு வகை; ceremony of putting sand into a big pot and pouring in water, a custom at the wedding of Tol-tamilar.

     [மணல்வாரி + சடங்கு.]

மணவணி

மணவணி maṇavaṇi, பெ.(n.)

மணக் கோலம் பார்க்க; see {}.

     “ஒரு பெருநாளான் மணவணி காண மகிழ்ந்தனர்” (சிலப்.1:42);.

     “மணஅணி அணிந்த மகளிர் ஆங்கே பிணஅணி அணிந்துதம் கொழு நரைத் தழீஇ உடுத்த ஆடை கோடியாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்” (உலகநீதி, 56);

     [மணம் + அணி.]

மணவன்னம்

 மணவன்னம் maṇavaṉṉam, பெ.பெ.(n.)

உப்பிலி பார்க்க; see uppili (சா.அக.);.

மணவருக்கம்

 மணவருக்கம் maṇavarukkam, பெ.(n.)

   நறுமணச் சரக்கு வகை; aromatic substance.

     [மணம் + வருக்கம். மணம் = நறுமணம்.]

மணவரைபுடம்

 மணவரைபுடம் maṇavaraibuḍam, பெ.(n.)

   மணற்புடம்; sand bath (சா.அக.);.

மணவறை

மணவறை maṇavaṟai, பெ.(n.)

   1. திருமண மண்டபம்;  chamber or dais for the performance of the marriage rites.

     “என்னெஞ்ச மணவறை” (குமர.பிர.மீனாட். இரட்.2);.

   2. பள்ளியறை;  bed-chamber.

     “மணவறை யியற்றினாரே” (சீவக.837);.

     [மணம் + அறை. மணம் = திருமணம்.]

மணவறைத்தோழன்

 மணவறைத்தோழன் maṇavaṟaittōḻṉ, பெ.(n.)

   மாப்பிள்ளைத் தோழன் (வின்.);; bridegroom’s companion; best man.

     [மணவறை + தோழன்.]

மணவாட்டி

மணவாட்டி maṇavāṭṭi, பெ.(n.)

   1. மணமகள்; bride.

   2. மனைவி (பிங்.);; wife.

     “இவன் மணவாட்டி சேந்தங்குரத்தி” (தெ.க.தொ. 125);.

     [மணம் + ஆட்டி. மணம் = திருமணம் ஆட்டி = பெண்பாலீறு. எ.டு. மூதாட்டி, பெருமாட்டி, திருவாட்டி.]

மணவாரி

 மணவாரி maṇavāri, பெ.(n.)

   பெரு நெல் வகை; a kind of coarse paddy.

மணவாளக்கோன்

மணவாளக்கோன் maṇavāḷakāṉ, பெ. (n.)

   மூன்றாம் இராசராசன் 15ஆம் ஆட்சி யாண்டில் வம்புபழுத்தாள் மகள் நாச்சிவைத்த விளக்கிற்காக ஆ(பசு);க்களைப் பெற்றுக் கொண்டு நெய் வழங்கிய இடையன் கீரந்தை திருவாய் குலம் மணவாளன்; an herdsman who got cows and offered ghee to a particular lamp for its glow.

மணவாளதாசர்

 மணவாளதாசர் maṇavāḷatācar, பெ.(n.)

   பிள்ளைப் பெருமாளையங்கார்;  an author.

மணவாளன்

மணவாளன் maṇavāḷaṉ, பெ.(n.)

   1. மண மகன்; bridegroom.

   2. கணவன்;  husband.

     “மலையான் மணவாளா” (திருவாச.6:40);,

     [மணம் + ஆளன்.]

மணவாளன்சோறு

 மணவாளன்சோறு maṇavāḷaṉcōṟu, பெ.(n.)

   மாமியார் மருமகனுக்குத் திருமணவறையிற் செய்யும் விருந்து; the ceremonial feast in the bridal chamber, given to the bridegroom by the bride’s mother.

     [மணவாளன் + சோறு.]

மணவாளன்தழுக்கல்

 மணவாளன்தழுக்கல் maṇavāḷaṉtaḻukkal,  the ceremony in which the bridegroom and the bride are embraced by their respective parents and relations.

மணவாளமாமுனி

மணவாளமாமுனி maṇavāḷamāmuṉi, பெ.(n.)

   14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் உபதேச ரத்தினமாலை முதலிய நூல்கள் இயற்றியவருமான தென்கலை மாலியர்; an {} of the {}, author of {} and other works, 14th C.

மணவாளம்

 மணவாளம் maṇavāḷam, பெ.(n.)

   நேர் வாளம்; croton seed (சா.அக.);.

மணவாளி

மணவாளி maṇavāḷi, பெ.(n.)

   1. மணமகன்; bridegroom.

   2. மணமகள்; bride.

     [மணம் + ஆளி.]

மணவினை

 மணவினை maṇaviṉai, பெ.(n.)

   திருமண நடப்பு (சடங்கு);; marriage ceremony.

     [மணம் + வினை.]

மணவிற்கூத்தனானகாலிங்கராயன்

 மணவிற்கூத்தனானகாலிங்கராயன் maṇaviṟāttaṉāṉakāliṅgarāyaṉ, பெ.(n.)

   குலோத்துங்க சோழனின் படைத் தலைவன்; Major General of {} (சி.பெ.அக.);.

சைவ சமயப் பற்றுடையவன்; தில்லையில் பொற்கூரை அமைத்தான்; நூற்றுக்கால் மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவார மண்டபம் ஆகியவை அமைத்தான். ஞானசம்பந்தர் கோயிலுக்கும் பொன் வேய்ந்தான். பூம்பொழில் அமைத்தான். திருவதிகை வீரட்டானேச் சுரத்திலும் கூரைக்குப் பொன் வேய்ந்தான்.

மணவிற்கோட்டம்

மணவிற்கோட்டம் maṇaviṟāṭṭam, பெ.(n.)

   தொண்டை மண்டலத்து 24 கோட்டங்களுள் ஒன்று (S.I.I.i, 119);; one of the 24 {}.

மணவிலக்கு

 மணவிலக்கு maṇavilakku, பெ.(n.)

   ஒரு திருமணத்தின் சட்டப்படியான முறிவு; divorce.

மறுவ மணமுறிவு, தீர்வை, கழித்துக்கட்டல்

     [மண[ம்]+விலக்கு]

மணவீசம்

 மணவீசம் maṇavīcam, பெ.(n.)

   மாதுளை (சங்.அக.);; pomegranate.

மணவு

 மணவு maṇavu, பெ.(n.)

பலகறை; cowry.

மணவூர்

 மணவூர் maṇavūr, பெ. (n.)

   திருத்தணிவட்டத்திலுள்ள சிற்றூர்; a village in TiruttaniTaluk.

     [மணவை+ஊர்]

மணவை

மணவை maṇavai, பெ.(n.)

   அடுப்பு (தைலவ.தைல.பாயி.14);; oven, hearth, cooking place.

     [மண்-→மணவை.]

மணவோலை

 மணவோலை maṇavōlai, பெ.(n.)

   திருமண அழைப்பிதழ்; invitation to a marriage.

     [மணம் + ஒலை.]

மணாட்டு

மணாட்டு maṇāṭṭu, பெ.(n.)

   மணமகளாகு நிலை; brideship.

     “மணாட்டுப் புறஞ் செய்யுங் கொலோ” (திவ்.பெரியாழ்.3, 8, 4);.

     [மணம்-→மனாட்டு.]

மணாட்டுப்பெண்

மணாட்டுப்பெண் maṇāṭṭuppeṇ, பெ.(n.)

   மருமகள்; daughter-in-law.

     “நந்த கோபருடைய மணாட்டுப் பெண்ணாய்” (திவ்.திருப்பா.18, வியா, பக்.168);.

     [மணாட்டு + பெண்.]

மணாட்டுப் பெண் என்பது முறையே மாட்டுப்பெண் நாட்டுப் பெண் என மருவி, மருமகள் என்னும் பொருளில், தஞ்சை வட்டாரத்தில் வழங்கி வருகின்றது (த.தி.முன்.vi);.

மணாளன்

மணாளன் maṇāḷaṉ, பெ.(n.)

   1. மணமகன்; bridegroom,

     “நித்த மணாளர் நிரம்ப வழகியர்” (திருவாச.17, 3);.

   2. கணவன்; husband.

     “மானேர் நோக்கி மணாளா போற்றி” (திருவாச.4, 135);. [

மணம்->மணாளன்.]

மணி

மணி maṇi, பெ.(n.)

   1. தொன்மணிகள் (பிங்.);; gem, nine precious stones.

   2. நீல மணி (திவா.);; sapphire.

     “முண்டகங் கதிர்மணி கழாஅலவும்” (சிறுபாண்.148);.

   3.மாணிக்கம்;  ruby.

     “மணிவாய்க் கிள்ளை” (கல்லா.50, 23);.

   4. முத்து (பிங்.);; pearl.

   5. சிந்தாமணி; a supernatural gem.

     “உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி” (திருப்பு. விநாயகர் துதி.2);.

   6. பளிங்கு; crystal.

     “மணியுட் டிகழ்தரு நூல்போல்” (குறள், 1273);.

   7. கண்மணி; apple of the eye.

     “கருமணியிற் பாவாய்” (குறள், 1123);.

   8. அக்கமணி (உருத்திராக்கம்); தாமரைமணி முதலியன; sacred bead, as rudrak or lotus seed.

     ” மாசிலாத மணிதிகழ் மேனி” (பெரியபு.திருக்கூட்ட.6);.

   9. கூலமணி; grain of corn.

நெல்மணிக் குவியல் (உ.வ.);.

   10. நஞ்சுநீக்குங் கல்;  snake-stone.

     “மணிமந்திர மாதியால்” (தாயு. பரிபூரண.9);.

   11. நிலாக்காந்தக்கல்; moon stone.

     “நீடுநீர் மணிநீரும்” (சீவக.2418);.

   12. மணிமாலை; necklace of beads.

     “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு” (தொல்.பொருள்.480);.

   13. அணிகலன்; jewel.

   14. உருண்டை வடிவுள்ள பொருள்; small round thing, as bead.

     “மணியிருதலையுஞ் சேர்த்தி” (சீவக.2977);.

   15. வலையினோரத்திற் கட்டிய உருண்டைகள்; round sinkers attached, to a net.

     “இனமணி விளிம்புறக் கோத்து” (திருவாலவா.22, 13);.

   16. மீன் வலையின் முடிச்சு; knot in a fishing net.

     “மணிவலை”.

   17. நண்டு, தேள் முதலியவற்றின் கொடுக்குமணி (வின்.);; knuckle or joint of lobster, scorpion, etc.

   18. ஆட்டினதர் (வின்.);; wattle on the throat of a sheep.

   19. வீடு பெற்ற உயிர் (ஆன்மா);; liberated soul.

     “மணியினுக் கொளி” (சீவக.3100);.

   20. அழகு (சூடா.);; beauty.

     “மணிக்காத்து” (கல்லா.4);.

   21. கதிரவன் (பிங்.);; sun.

   22. ஒளி; light.

     “செம்மணி மணிபழுத் தமைந்த வாய்” (கம்பரா.இலங்கைகே.12);.

   23. நன்மை (பிங்.);; goodness, auspiciousness.

   24. சிறந்தது; that which is excellent.

மணியான செய்தி சொன்னான் (உ.வ.);.

   25. கருமை (பிங்.);; blackness.

   26. கண்டை; bell; gong.

     “மணிகிளர் முன்றிற் றென்னவன்” (புறநா:388, 13);.

   27. கண்டையோசை; sound, as of bell, gong, etc.

     “மணி கேட்கிறது” (உ.வ.);.

   28. அறுபது நிமிடம் நேரம் (mod.);; hour.

   29. ஒன்பது; the number

   9. “மணிநாள்” (தைலவ.தைல.115);.

   30. ஆண் குறியின் நுனி (இ.வ.);; tip of the penis.

   31. பெண்குறியின் ஓர் உறுப்பு (யாழ்.அக.);; a part of the pudendum muliebre.

     [முல்(இளமைக் கருத்து வேர்);-→ முள்-→ முண்-→ முண. முணமுணத்தல் = வாய்க்குள் மெல்லப் பேசுதல். முண்-→ மண்-→ மணி (வே.க. 4:3);.]

மணிஒடுக்கான்

 மணிஒடுக்கான் maṇioḍukkāṉ, பெ.(n.)

   உடும்பு; a genus of large lizard.

     [மணி+ஒடுக்கான்]

மணிகடம்

 மணிகடம் maṇigaḍam, பெ.(n.)

வேலிப் பருத்தி (உத்தாமணி); (சங்.அக.);; hedge-twiner.

மணிகட்டு-தல்

மணிகட்டு-தல் maṇigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கதிரில் தவசமணி உண்டாதல்; to form grains, in ears of corn.

     [மணி + கட்டு-.]

மணிகண்டசாவி

 மணிகண்டசாவி maṇigaṇṭacāvi, பெ.(n.)

மணிபிடிச்சாவி பார்க்க; see {}.

     [மணிகண்ட + சாவி.]

மணிகண்டன்

மணிகண்டன் maṇigaṇṭaṉ, பெ.(n.)

 as blue-necked.

     “மணிகண்ட னென்னும் பேர் மற்றிதனால்” (பூவண.உலா, 50);.

     [மணி + கண்டன்.]

மணிகன்னிகை

மணிகன்னிகை maṇigaṉṉigai, பெ.(n.)

மணிகர்ணிகை பார்க்க; see {}.

     “மணிகன்னிகையாடி” (காசிக. தேவ.அக.2);.

மணிகன்றிகை

மணிகன்றிகை maṇigaṉṟigai, பெ.(n.)

மணிகர்ணிகை பார்க்க; see {}.

     “காசியிற் சிறந்ததொன் மணிக்கன்றிகை” (கந்தபு.தக்கன்.சிவபூ.2);.

மணிகம்

 மணிகம் maṇigam, பெ.(n.)

நீர்க்குடம் (யாழ்.அக.);; water-pot.

மணிகாசம்

 மணிகாசம் maṇikācam, பெ.(n.)

   கண்ணோய் வகை (யாழ்.அக.);; an eye-disease.

மணிகானனம்

மணிகானனம் maṇikāṉaṉam, பெ.(n.)

   கழுத்து (சிந்தா.நி.41);;  neck.

மணிகாரன்

 மணிகாரன் maṇikāraṉ, பெ.(n.)

   மணி வேலை செய்பவன் (சங்.அக.);; worker in precious stones.

மணிகாரம்

 மணிகாரம் maṇikāram, பெ.(n.)

   வெண் காரம் (மூ.அ.);;  borax.

மணிகிலுக்கு-தல்

மணிகிலுக்கு-தல் maṇigiluggudal,    5 செ.கு.வி. (v.i.)

   கைம்மணி யடித்தல் (யாழ்ப்.);; to ring a hand bell.

     [மணி + கிலுக்கு.]

மணிகுயிற்றுநர்

 மணிகுயிற்றுநர் maṇiguyiṟṟunar, பெ.(n.)

   முத்துக்கோப்பார் (பிங்.);; makers or pear garlands.

     [மணி + குயிற்றுநர்.]

மணிகூடம்

 மணிகூடம் maṇiāṭam, பெ.(n.)

   இந்திரனின் விளையாட்டுச் செய்குன்று (சங்.அக.);; an artificial hillock where Indra sports.

     [மணி + கூடம்.]

மணிக்கஞ்செடி

 மணிக்கஞ்செடி maṇikkañjeḍi, பெ.(n.)

மணிச்சட்டி பார்க்க; (யாழ்.அக.);; see {}.

     [மணிச்சட்டி-→மணிக்கஞ்செடி.]

மணிக்கடை

 மணிக்கடை maṇikkaḍai, பெ.(n.)

   மணிக் கட்டு; wrist.

     [மணிக்கட்டு-→மணிக்கடை.]

மணிக்கடைநாடி

 மணிக்கடைநாடி maṇikkaḍaināḍi, பெ.(n.)

மணிக்கட்டுநாடி பார்க்க; see {}.

     [மணிக்கடை + நாடி.]

மணிக்கடைநூல்

 மணிக்கடைநூல் maṇikkaḍainūl, பெ.(n.)

   மணிக்கட்டின் சுற்றளவைக் கொண்டு அவரவர் நோயின் தன்மையைக் கூறும் நூல்; a treatise describing the methods of diagnosing diseases by using a thread and measuring the wrist and fingers.

     [மணிக்கடை + நூல்.]

மணிக்கட்டி

 மணிக்கட்டி maṇikkaṭṭi, பெ.(n.)

   நெய் முதலிய உறைந்த பொருள்களின் மீது உண்டாகும் கட்டி (வின்.);; bead-like formation on the surface of congealed substances, as ghee, lard.

     [மணி + கட்டி.]

மணிக்கட்டு

மணிக்கட்டு maṇikkaṭṭu, பெ.(n.)

   கைத்தலத்திற்கும் முன்கைக்கும் இடைப்பட்ட பொருத்திடம்; wrist, carpus.

     “மணிக் கட்டதனை வளைத்திட லென்ப” (பரத. பாவ.24);.

தெ., க. மணிகட்டு; ம. மணிக்கட்டு.

     [மணி + கட்டு.]

மணிக்கட்டுநாடி

 மணிக்கட்டுநாடி maṇikkaṭṭunāṭi, பெ.(n.)

   மணிக்கட்டில் பார்க்க; நாடி; pulse selt at the wrist.

      [மணிக்கட்டு + நாடி.]

மணிக்கட்டெலும்பு

 மணிக்கட்டெலும்பு maṇikkaṭṭelumbu, பெ.(n.)

   மணிக்கட்டிலுள்ள எலும்புகள்; wrist bones.

     [மணிக்கட்டு + எலும்பு.]

மணிக்கட்டை

 மணிக்கட்டை maṇikkaṭṭai, பெ.(n.)

   வலை மிதப்பதற்காக மேலே கட்டப்படும் மரக்கட்டைத் துண்டு; a piece of log tie up on a fishing-net.

     [மணி + கட்டை. மணி = சிறியது.]

மணிக்கணக்கு

 மணிக்கணக்கு maṇikkaṇakku, பெ.(n.)

   கடியாரப்படியுள்ள ஒழுங்கு (உ.வ.);; mechanical regularity like clock-work.

     [மணி + கணக்கு.]

மணிக்கயிறு

மணிக்கயிறு1 maṇikkayiṟu, பெ.(n.)

   1. கண்டாமணியை இழுத்தடிக்குங் கயிறு; bell- rope.

   2. முடிச்சுள்ள சாட்டைக் கயிறு; whip-lash with knots.

   3. பாசக்கயிறு;  yama’s noose.

     “மணிக் கயிற்றினாற் றளைத்தனர்” (உபதேசகா. சிவ புண்ணிய.272);.

   4. முத்துவடம்; string of pearls.

     “மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும்” (பெருங். உஞ்சைக்.34, 116);.

   5. முறுக்கு நன்கமைந்து மெல்லிதான கயிறு (இ.வ.);; finely twisted cord.

     [மண் + கயிறு. மணி = சிறியது.]

 மணிக்கயிறு2 maṇikkayiṟu, பெ.(n.)

   நாயுருவி; a plant Indian burr (சா.அக.);. மறுவ.

மணிக்கருது. மணிக்கழலை

 மணிக்கருது. மணிக்கழலை maṇikkarudumaṇikkaḻlai, பெ.(n.)

   ஒரு நோய்;  an ulcer.

     [மணி + கழலை.]

மணிக்காக்கை

 மணிக்காக்கை maṇikkākkai, பெ.(n.)

   காக்கை வகை; a kind of crow.

     [மணி + காக்கை. மணி = சிறியது.]

மணிக்காடை

மணிக்காடை maṇikkāṭai, பெ.(n.)

   சிறு காடை வகை; button-quail.

     “மணிக்காடை முட்டை” (விறலிவிடு. 628);.

     [மணி + காடை. மணி = சிறியது.]

மணிக்காம்பு

மணிக்காம்பு maṇikkāmbu, பெ.(n.)

   1. மணி இழைத்துச் செய்த கால்; jewelled stand or leg.

     “தானோர் மணிக்காம்பு போனிமிர்ந்து” (திவ்.இயற்.பெரியதி.);.

   2. தக்காளி (சங்.அக.);; tomato.

     [மணி + காம்பு.]

மணிக்காரி

 மணிக்காரி maṇikkāri, பெ.(n.)

   வெண் காரம்; borax (சா.அக.);.

மணிக்காற்பள்ளி

 மணிக்காற்பள்ளி maṇikkāṟpaḷḷi, பெ.(n.)

   அரசர்க்குரிய சிவிகை வகை (சூடா);; a kind of palanquin for king.

     [மணிக்கால் + பள்ளி.]

மணிக்காலறிஞர்

 மணிக்காலறிஞர் maṇikkālaṟiñar, பெ.(n.)

   மணிகளின் குணமறிந்த வணிகர்; merchants skilled in the knowledge.

     “மணிக்காலறிஞர் பெருங்குடி” (கல்லா. முருக.துதி);.

     [மணிக்கால் + அறிஞர்.]

மணிக்கால்

 மணிக்கால் maṇikkāl, பெ.(n.)

   வலையின் அடிப்பகுதி நீரில் அமிழ்வதற்காகக் கோக்கப்படும் சுட்ட மண்ணுருண்டை; round fired glay die at the bottom of fishing net.

     [மணி + கால். மணி கட்டும் கடைப்பகுதி.]

மணிக்காளி

 மணிக்காளி maṇikkāḷi, பெ.(n.)

   மணித் தக்காளி (மூ.அ.);; black nightshade.

     [மணித்தக்காளி-→மணிக்காளி (கொ.வ.);.]

மணிக்குடர்

மணிக்குடர் maṇikkuḍar, பெ.(n.)

   1. சிறுகுடல், மணிக்குடல்; small intestines.

   2. நஞ்சு; poison.

     [மணி + குடல்-→ குடர். மணி = சிறியது.]

மணிக்குடற்நோய்

 மணிக்குடற்நோய் maṇikkuḍaṟnōy, பெ.(n.)

   ஒருவகைக் குடல் நோய்; tuberculosis of the bowels or small intestines.

     [மணிக்குடல் + நோய்.]

மணிக்குடற்புழு

 மணிக்குடற்புழு maṇikkuḍaṟpuḻu, பெ.(n.)

   சிறுகுடற் புழு; round worm occupying the upper part of the small intestines.

     [மணிக்குடல் + புழு.]

மணிக்குடல்

 மணிக்குடல் maṇikkuḍal, பெ.(n.)

   சிறுகுடல் (உ.வ.);; small intestines.

     [மணி + குடல். மணி = சிறியது.]

மணிக்கூடு

மணிக்கூடு maṇikāṭu, பெ.(n.)

   1. மணிதூங்கு மாடம் (கட்டட.நாமா.4);; belfry-stand; bell-tower.

   2. கடிகாரமமைந்த கோபுரம்; clock-tower, clock-house.

   3. கடியாரக்கூடு (யாழ்ப்.);; clock case.

   4. கடிகாரம் (வின்.);; clock, as containing a bell.

   5. நாழிகை வட்டில் (யாழ்.அக.);; clepsydra; hour-glass.

   6. சாயப்பூடுவகை (இ.வ.);; a plant used in dyeing.

     [மணி + கூடு.]

மணிக்கூண்டு

மணிக்கூண்டு maṇikāṇṭu, பெ.(n.)

மணிக்கூடு, 1, 2 பார்க்க; (இ.வ.);; see {}.

     [மணி + கூண்டு.]

மணிக்கை

 மணிக்கை maṇikkai, பெ.(n.)

மணிக்கட்டு பார்க்க; see {}.

     [மணிக்கட்டு-→மணிக்கை.]

மணிக்கொச்சம்

மணிக்கொச்சம் maṇikkoccam, பெ.(n.)

மணிக்கயிறு, 5 பார்க்க; (இ.வ.);; see {}.

மணிக்கொட்டை

 மணிக்கொட்டை maṇikkoṭṭai, பெ.(n.)

   சிற்றாமணக்குக் கொட்டை; castor seed.

     [மணி + கொட்டை.]

மணிக்கொல்லை

 மணிக்கொல்லை maṇikkollai, பெ. (n.)

   சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Chidambaram Taluk.

     [மணி+கொல்லை]

மணிக்கோடு

 மணிக்கோடு maṇikāṭu, பெ. (n.)

   கடலில் மூழ்கிய குமரிக்கோட்டு மணிமேலை; a peak of the mountain ‘Mani’ in submerged land of the Tamils (செங்கோன் தரைச்செலவு);.

     [மணி+கோடு]

மணிக்கோரை

 மணிக்கோரை maṇikārai, பெ.(n.)

   கோரை வகை (வின்.);; a kind of sedge.

     [மணி + கோரை.]

மணிக்கோவை

மணிக்கோவை1 maṇikāvai, பெ.(n.)

சிறு மணிக்கோவை பார்க்க; see {}.

     [மணி + கோவை.]

 மணிக்கோவை2 maṇikāvai, பெ.(n.)

   மணிமாலை; necklace of gems.

     “பொன்னாண் கோத்த நன்மணிக் கோவை” (மணிமே.3:133);.

     [மணி + கோவை.]

மணிசகம்

 மணிசகம் maṇisagam, பெ.(n.)

மணீசகம் பார்க்க; (யாழ்.அக.);; see {}.

மணிசரம்

 மணிசரம் maṇisaram, பெ.(n.)

மணிக் கோவை பார்க்க; (யாழ்.அக.);; see {}.

     [மணி + சரம். சரம் = கோவை.]

மணிசேகரம்

 மணிசேகரம் maṇicēkaram, பெ.(n.)

   காலனுடைய அந்தப்புரம் (சங்.அக.);; yama’s harem.

மணிச்சட்டம்

 மணிச்சட்டம் maṇiccaṭṭam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு எண் அறிவிக்க உதவும் மணிகள் கோத்த சட்டம்; a wooden trame with rows of coloured beads, for teaching arithmetic to children, abacus.

     [மணி + சட்டம்.]

     [p]

மணிச்சட்டி

 மணிச்சட்டி maṇiccaṭṭi, பெ.(n.)

   விளிம்பில் மணிவடிவமைந்த மண்சட்டி (யாழ்ப்.);; earthern pot with a rim like a row of beads.-

     [மணி + சட்டி.]

மணிச்சம்பா

 மணிச்சம்பா maṇiccambā, பெ.(n.)

   நீரிழிவைப் போக்கும் ஒருவகைச் சம்பா நெல்; a kind of paddy rice curing diabetics.

     [மணி + சம்பா.]

மணிச்சிகை

மணிச்சிகை maṇiccigai, பெ.(n.)

   குன்றி; crab’s-eye.

     “செங்கொடு வேரி தேமா மணிச்சிகை” (குறிஞ்சிப்.64);.

     [மணி + சிகை.]

மணிச்சித்திரம்

 மணிச்சித்திரம் maṇiccittiram, பெ.(n.)

   பொற்றலைக் கரிப்பான்; a prostate plant-eclipse plant bearing yellow flowers (சா.அக.);.

மணிச்சுறா

மணிச்சுறா maṇiccuṟā, பெ.(n.)

   சாம்ப னிறமுள்ளதும் 12 அடி வளர்வதுமான சுறாமீன் வகை; black shark, grey, attaining 12 ft. in length.

     [மணி + சுறா.]

மணிச்செப்பு

மணிச்செப்பு maṇicceppu, பெ.(n.)

   மணி யிழைத்த செப்பு; small casket set with precious stones.

     “மாலைப் பெரு மணிச்செப்பும்” (சீவக.2474);.

     [மணி + செப்பு.]

மணிச்சோதி

 மணிச்சோதி maṇiccōti, பெ.(n.)

   வாயு தேவனது வில் (சங்.அக.);; the bow of the wind-god.

மணிதனு

 மணிதனு maṇidaṉu, பெ.(n.)

   வானவில் (யாழ்.அக.);; rainbow.

     [மணி + தனு.]

மணிதம்

 மணிதம் maṇidam, பெ.(n.)

   மணியினோசை (யாழ்.அக.);; sound of the bell.

     [மணி-→மணிதம்.]

மணிதிரள்(ளு)-தல்

மணிதிரள்(ளு)-தல் maṇidiraḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   நெற்கதிரில் தவசமணி திரண்டு உருவடைதல்; to mature, as grain in corn – ears.

     [மணி + திரள்.]

மணிதீபம்

 மணிதீபம் maṇitīpam, மணித்தீவம் பார்க்க; (சங்.அக.); see {}.

     [மணி + தீபம்.]

மணிதுருவிடு-தல்

மணிதுருவிடு-தல் maṇiduruviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   மணிகளைச் சுத்தி செய்தல் (யாழ்.அக.);; to cut and polish gem.

மணித்தக்காளி

 மணித்தக்காளி maṇittakkāḷi, பெ.(n.)

   கரும்பச்சைநிற இலைகளையும் பழுத்த நிலையில் கருநிறமாக இருக்கும் சிறிய மணி போன்ற காய்களையுமுடைய ஒருவகைச் செடி; black night shade.

     [மணி + தக்காளி.]

மணித்தாளம்

 மணித்தாளம் maṇittāḷam, பெ. (n.)

   ஒரு தாள விசைக் கருவி; a musical instrument.

     [மணி+தாளம்]

மணித்தீவம்

மணித்தீவம் maṇittīvam, பெ.(n.)

   பெண்கள் மாத்திரம் வாழும் ஒரு தீவு (பெருங்.உஞ்சைக்.42, 181, குறிப்புரை);; an island inhabited by women alone.

     [மணி + தீவம்.]

மணித்துத்தி

 மணித்துத்தி maṇittutti, பெ.(n.)

   சிறுதுத்தி (வின்.);; five-winged capsule rose-mallow.

     [மணி + துத்தி. மணி = சிறியது.]

மணித்தைலம்

 மணித்தைலம் maṇittailam, பெ.(n.)

   ஆமணக்கு நெய்; oil of castor seed.

     [மணி + Skt.தைலம்.மணி = ஆமணக்கு விதை. தில் = எள். திலம் – தைலம் – நெய்மம்.]

மணிநா

மணிநா maṇinā, பெ.(n.)

   மணியின் நாக்கு; tongue of a bell.

     “ஆடுங் கடைமணி நாவசை யாமல்” (தமிழ்நா.128);.

     [மணி + நா. நா = நாக்கு.]

மணிநாக்கு

 மணிநாக்கு maṇinākku, பெ.(n.)

மணிநா பார்க்க; see {}.

     [மணி + நாக்கு.]

மணிநிறம்

மணிநிறம் maṇiniṟam, பெ.(n.)

   கருநீல நிறம்; dark blue colour, as of sapphire.

     “மணிநிறம் கொண்ட மாமலை வெற்பில்” (ஐங்குறு.224);.

     [மணி + நிறம்.]

மணிநிறவண்ணன்

 மணிநிறவண்ணன் maṇiniṟavaṇṇaṉ, பெ.(n.)

மணிவண்ணன் பார்க்க; see {}.

     [மணிநிறம் + வண்ணன்.]

மணிநீர்

மணிநீர் maṇinīr, பெ.(n.)

   1. மணிபோலும் நிறத்தினையுடைய நீர்; dark blue water, as in a tank.

     “மணிநீரு மண்ணும் மலையும்” (குறள், 642);.

     “துகில்சேர் மலர்போன் மணிநீர் நிறைந்தன்று புனலென மூதூர் மலிந்தன் றவருரை” (பரிபா.12, 93-4);.

   2. மணியிலுள்ள நீர்; water of a gem.

     [மணி + நீர்.]

மணிநீலகாசம்

 மணிநீலகாசம் maṇinīlakācam, பெ.(n.)

   கண்ணோய் வகை; cataract (சா.அக.);. மறுவ, நீலகாசம்

மணிநெய்

 மணிநெய் maṇiney, பெ.(n.)

   சிறு முத்துக் கொட்டை எண்ணெய்; oil pressed from the small castor seed.

     [மணி + நெய்.]

மணிந்தம்

 மணிந்தம் maṇindam, பெ.(n.)

மணிபந்தம் பார்க்க; (யாழ்.அக.);; see {}.

     [மணிபந்தம்-→மணிந்தம்.]

மணிபத்மம்

மணிபத்மம் maṇibatmam, பெ.(n.)

   புத்த பாதம் (மணிமே.3:65-6, அரும்.);; the buddha’s foot-print.

     [மணி + பத்மம்.]

மணிபந்தம்

மணிபந்தம் maṇibandam, பெ.(n.)

மணிக் கட்டு பார்க்க; see {}.

     “இரண்டு முழங்கையி னிரண்டு மணிபந்தத்து” (சைவச.பொது.192);.

     [மணி + பந்தம்.]

மணிபந்து

மணிபந்து maṇibandu, பெ.(n.)

மணிபந்தம் பார்க்க; see {}.

     “கைகளும் மணிபந்தசைத்துற” (பெரியபு. திருநாவுக். 358);.

     [மணி + பந்து. பந்து = பந்தம்.]

மணிபர்வதம்

 மணிபர்வதம் maṇibarvadam, பெ.(n.)

மணிகூடம் பார்க்க; see {}.

     [மணி + பர்வதம்.]

மணிபல்லவம்

மணிபல்லவம் maṇiballavam, பெ.(n.)

   காவிரிப்பூம்பட்டினத்திற்குக் தென்கிழக்கே 30 யோசனைத் தொலைவிலுள்ளதும் புத்த பாத அடிச்சுவடுடையதுமான ஒரு தீவு; an island, 30 {} south-east of {}, said to contain a foot-print of the buddha on a pedestal.

     “மணிமேகலையை மணி பல்லவத்துய்த்து” (மணிமே.பதி:44);.

     [மணி + பல்லவம்.]

மணிமேகலை பாவியத்தில் புத்த அடிச்சுவடு அமைந்துள்ளதாகக் கூறப்பட்ட இடம் இதுவேயெனக் கருதப்படுகிறது. தற்போது நயினாத்தீவு என்று அழைக்கப்படுகிறது. புகாரிலிருந்து தெற்கே 30 யோசனை தூரத்தில் மணிபல்லவம் இருந்ததாக மணிமேகலை தெரிவிக்கின்றது. யோசனை என்பது 16 கல். 5 படைசால் (பர்லாங்); 440 அடி நீளம் ஆகும். இத் தொலைவு பொருத்தமாக இல்லை. ஒரு கூப்பிடுதூரம் 1 கல் 1 படைகால் 220 அடி நீளம். 30 கூப்பிடுதூரம் என்று இருந்திருந்தால் சரியாக இருக்கும்.

மணிபிடி

மணிபிடி1 maṇibiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   மணிகட்டைப் பிடித்து நாடி பார்த்தல்; to feel the pulse at the wrist.

     [மணி + பிடி-.]

 மணிபிடி2 maṇibiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

மணிகட்டு-தல் பார்க்க; (கொ.வ.);; see {}.

     [மணி + பிடி-.]

 மணிபிடி3 maṇibiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   கதிரில் தவசமணி பிடித்தல்; to format grains in the corn ears.

     [மணி + பிடி-. மணி = தவசமணி.]

மணிபிடிச்சாவி

 மணிபிடிச்சாவி maṇibiḍiccāvi, பெ.(n.)

   முற்றாது கெட்டபயிர்; blighted ear of corn with few grains.

     [மணிபிடி + சாவி.]

மணிபிந்துமாலை

 மணிபிந்துமாலை maṇibindumālai, பெ.(n.)

   கை, முளி, நெற்றி, மார்பு, தொடை இவ்விடங்களில் அழுந்தும்படி வைக்கும் பற்குறி; impressions of teeth made in the forehead, chest, thigh and wrist (சா.அக.);.

மணிபீசம்

 மணிபீசம் maṇipīcam, பெ.(n.)

   மாதுளை; fruit pomegranate (சா.அக.);.

மணிபூமி

 மணிபூமி maṇipūmi, பெ.(n.)

   மணி விளையும் நிலம்; ruby mine.

     [மணி + பூமி.]

மணிப்படிகால்

 மணிப்படிகால் maṇippaḍikāl, பெ. (n.)

ஏணிப்படுகால் பார்க்க;see eni-p-padukal.

மணிப்பவளம்

 மணிப்பவளம் maṇippavaḷam,    தமிழும் வடமொழியும் விரவிய உரைநடை; a kind of style in which words of two languages as Tamil and Sanskrit are mixed.

மறுவ. மணிப்பிரவாளம்

     [மணி + பவளம்.]

த. பவளம் > வ. பிரவாளம். ஒ.நோ. த. மதங்கம் > வ.மிருதங்கம்.

மணிப்பாரா

மணிப்பாரா maṇippārā, பெ.(n.)

   அரண்மனை வாயிலில் நேரத்தை அறிவிக்க அடிக்கும் மணிகட்டிய காவலிடம்; palace gate where the hours are struck.

   2. அரண்மனை வாயிலில் மணியடித்துக் காவல்புரியும் வேலை; office of striking the hour-gong at a palace-gate.

     [மணி + பாரா (உருது);.]

மணிப்பாரி

மணிப்பாரி maṇippāri, பெ.(n.)

   1. இராக் காவலாளரின் பாட்டு வகை; a kind of night-watchman’s song.

   2. மணியடித்துக் கொண்டு சுற்றும் இரவுக்காவலர்; patrol by night-watchman, sounding gongs.

     [மணி + பாரி.]

மணிப்பால்

 மணிப்பால் maṇippāl, பெ.(n.)

   கடைக்கண் சிரங்கு; ulcer at the angle of the eye (சா.அக.);.

மணிப்பிடிப்பு

 மணிப்பிடிப்பு maṇippiḍippu, பெ.(n.)

   நெற் கதிரில் மணி தோன்றுகை; formation of grains in the corn ears.

     [மணி + பிடிப்பு.]

மணிப்பிரவாளம்

 மணிப்பிரவாளம் maṇippiravāḷam, பெ.(n.)

மணிப்பவளம் பார்க்க; see {}.

     [மணி + பிரவாளம்.]

த. பவளம்-> ப்ரவளம்-> வ. பிரவாளம்.

மணிப்புங்கம்

மணிப்புங்கம் maṇippuṅgam, பெ.(n.)

   1. பூவந்தி மரவகை (M.M.844);; rusty soap-nut.

   2. நெய்க்கொட்டான் (மலை.);; soap-nut.

     [மணி + புங்கம்.]

மணிப்புங்கு

 மணிப்புங்கு maṇippuṅgu, பெ.(n.)

   மணிப் புங்கம் பார்க்க;     [மணிப்புங்கம்-→மணிப்புங்கு.]

மணிப்புன்கம்

 மணிப்புன்கம் maṇippuṉkam, பெ.(n.)

மணிப்புங்கம் (இ.வ.);; see {}.

     [மணிபுங்கம்-→மணிப்புன்கம்.]

மணிப்புன்கு

 மணிப்புன்கு maṇippuṉku, பெ.(n.)

மணிப் புங்கம் (மலை.); பார்க்க; see {}.

     [மணிப்புங்கம்-→மணிப்புன்கு.]

மணிப்புறா

மணிப்புறா maṇippuṟā, பெ.(n.)

   புறாவகை (பதார்த்த.906);; ring-dove, turtle-dove, spotted dove.

     [மணி + புறா.]

மணிப்பொச்சம்

மணிப்பொச்சம் maṇippoccam, பெ.(n.)

மணிக்கயிறு, 5 பார்க்க; (இ.வ.); see {}.

     [மணி + பொச்சம்.]

மணிமகுடம்

மணிமகுடம் maṇimaguḍam, பெ.(n.)

   1. மணிமுடி; crown set with precious stones, worn by great monarchs

   2. ஏட்டுச் சுவடியைக் கட்டுங் கயிற்றின் தலைமுடிச்சு (யாழ்.அக.);; ornamented button of an ola bock.

     [மணி + மகுடம்.]

மணிமண்டபம்

மணிமண்டபம் maṇimaṇṭabam, பெ.(n.)

   1. மணிக்கூடு, 1, 2 பார்க்க; see {}.

   2. மணியம்பலம் பார்க்க; see {}.

     [மணி + மண்டபம்.]

மணிமந்தம்

 மணிமந்தம் maṇimandam, பெ.(n.)

இந்துப்பு (சங்.அக.);, salt petre.

மணிமந்திரெளசதம்

 மணிமந்திரெளசதம் maṇimandireḷasadam, பெ.(n.)

   நஞ்சு முதலியன நீக்கற்குரிய மணி மந்திரம் மருந்து பின்னும் மூவகை நீக்குகள்; gem, mantra and medicine, being three remedies for poison, etc.

மணிமலர்

மணிமலர் maṇimalar, பெ.(n.)

   குவளை; blue nelumbo.

     “மணிமலர்க் கோலை விடுகண்” (சீவக. 1613);.

     [மணி + மலர்.]

மணிமலை

மணிமலை maṇimalai, பெ.(n.)

   ஏழ்குன்ற நாட்டு மகேந்திர மலைக்குத் தெற்கே பெருவள நாட்டில் இருந்த பண்டைய ஊர்; an old place of Peruvalanadu, situated south of Mahendramalai of {}.

     [மணி + மலை.]

இது மேரு மலையின் 49 கொடுமுடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு

     “மணிமலைத் தமிழ்ச் சங்கம்” என்ற பெயரில் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்ததாகத்தெரிகிறது.

மணிமாடம்

மணிமாடம் maṇimāṭam, பெ.(n.)

   1. சிறந்த மாளிகை;  beautiful palace.

     “அம்பொனெடு மணிமாட வயோத்தி யெய்தி” (திவ்.பெருமாள்.10, 8);.

   2. திருநறையூர்த் திருமால் கோயில் (திவ்.பெரியதி.6, 6);;  a {} shrine at {}.

     [மணி + மாடம்.]

மணிமான்

 மணிமான் maṇimāṉ,    கதிரவன், சூரியன்; the sun.

மணிமாலை

மணிமாலை maṇimālai, பெ.(n.)

   1. முத்து வடம்; garland of pearls.

   2. 96 சிற்றிலக்கியங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவச் செய்யும் சிற்றிலக்கியம் (சது.);; a poem of 20 {} and 40 {}, one of 96 pirapantam, q.v.

   3. திருமகள் (யாழ்.அக.);; the goddess of wealth.

   4. திருவாசியாகிய பிரபை (சங்.அக.);; ornamental arch over the head of an idol.

   5. காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி (யாழ்.அக.);;     (Erot.); a cirular mark left by the teeth of a lover on the body of his beloved, during sexual union.

     [மணி + மாலை.]

மணிமாளிகை

 மணிமாளிகை maṇimāḷigai, பெ.(n.)

மணி மண்டபம் பார்க்க; see {}.

     [மணி + மாளிகை.]

மணிமிடற்றன்

 மணிமிடற்றன் maṇimiḍaṟṟaṉ, பெ.(n.)

துரிசு; blue vitriol.

மணிமிடைப்பவளம்

மணிமிடைப்பவளம் maṇimiḍaippavaḷam, பெ.(n.)

   1. மணியும் பவளமுங் கலந்த மணி; necklace of gems and coral beads strung alternately.

   2. அகநானூற்றின் இரண்டாம் பிரிவு; the second section of the anthology {}.

     “பாட்டு நூற்றென்பதும் மணிமிடையவளம் எனப்படும்” (அகநா. பாயி.உரை, பக்.406);. மணியும் பவளமும் விரவியுள்ள மாலையைப் போல ஒளி நயமும் பொருளமைதியும் ஒருங்கேயமையப் பெற்ற 180 அகப்பாடல்கள் கொண்ட இரண்டாம் பகுதி.

மணிமுசுட்டை

 மணிமுசுட்டை maṇimusuṭṭai, பெ.(n.)

பேய்முகட்டை பார்க்க; (சங்.அக.);; see {}.

மணிமுடி

மணிமுடி1 maṇimuḍi, பெ.(n.)

விலை யுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தலையணி,

 crown set with precious stones, worn by great monarches.

     [மணி + முடி.]

 மணிமுடி2 maṇimuḍi, பெ.(n.)

   இறுகித் திரண்ட முடிச்சு; hard knot.

     “மணிமுடி யேறின” (சிலப்.27:65);.

     [மணி + முடி.]

மணிமுடிச்சு

மணிமுடிச்சு maṇimuḍiccu, பெ.(n.)

மணி முடி, 2 பார்க்க; see {}.

     [மணி + முடிச்சு.]

மணிமுடிச்சோழன்

மணிமுடிச்சோழன் maṇimuḍiccōḻṉ, பெ.(n.)

   கி.பி.7-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் வாழ்ந்த சோழ மன்னன்; a {} king ruled over at middle period of the seventh century.

     [மணிமுடி + சோழன்.]

இவனது மகள் மங்கையர்க்கரசி. பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் மங்கையர்க்கரசியை மணந்தான் (பிற்காலச் சோழ வரலாறு-சதாசிவப் பண்டாரத்தார், பக்.8);.

மணிமேகலாதெய்வம்

 மணிமேகலாதெய்வம் maṇimēkalāteyvam, பெ.(n.)

   மணிமேகலை காவியத்தில் மணிமேகலையை ஆற்றுப்படுத்தும் இறை மகள்; goddess, who guided {} in the epic {} (சி.பெ.அக.);.

     [மணிமேகலை + தெய்வம்.]

மணிமேகலை

மணிமேகலை1 maṇimēkalai, பெ.(n.)

   1. இந்திரனேவலால் தீவங்கள் சிலவற்றைக் காவல் புரிந்துவந்த தேவதை (சிலப்.15:33);; tutelary goddess (adj.); certain islands by Indra’s command.

   2. கோவலனுக்கு மாதவிக்கும் பிறந்த மகள்; the daughter of {}, the hero of the Cilappatikaram, by Madavi

   3. கூல வாணிகன் சாத்தனார் இயற்றியதும் ஐம்பெரும் பாவியத்து ளொன்றாகியதும் மணிமேகலையின் துறவைக் கூறுவதுமான புத்த நூல்; a buddhistic epic poem on the renunciation of {}. by {}, one of {}.

   4. இடையில் அணியும் அணிகலன் வகை; woman’s jewelled girdle.

     “வாரார வீக்கி மணிமேகலை திருத்தி” (திவ்.இயற். சிறிய.ம.10);.

மணிமேகலைதுறவு

மணிமேகலைதுறவு maṇimēkalaiduṟavu, பெ.(n.)

மணிமேகலை, 3 பார்க்க; (மணிமே. பதிகம்.97);; see {}.

     [மணிமேகலை + துறவு.]

மணிமேடை

மணிமேடை maṇimēṭai, பெ.(n.)

மணிக் கூடு, 1, 2 பார்க்க; (இ.வ.);; see {}. [

மணி + மேடை.]

மணியக்காரன்

மணியக்காரன் maṇiyakkāraṉ, பெ.(n.)

   சிற்றுார், கோயில் முதலியவற்றில் மேல் கண்காணிப்பு செய்வோன்; headman of a village; superintendent of a temple, etc. (R.F.);.

     “துடிமணியக்காரர்” (விறலிவிடு. 1055);.

தெ. மணியக்காடு; க. மணியக்கார; ம. மணியக்காரன். [மணியம்->மணியக்காரன்.]

மணியங்கயிறு

 மணியங்கயிறு maṇiyaṅgayiṟu, பெ. (n.)

   பாய் ஓரம் கட்டப் பயன்படும் நார்; fibre tied at the end of the mat.

     [மணி+ அம்+கயிறு]

மணியங்காக்கை

 மணியங்காக்கை maṇiyaṅgākkai, பெ.(n.)

   சாம்பல் நிறமுள்ள காக்கை வகை (வின்.);; royston crow, ashy in colour.

     [மணி + காக்கை.]

மணியச்சட்டம்

மணியச்சட்டம் maṇiyaccaṭṭam, ப