செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
மூ

மூ1 mū, பெ.(n.)

   மகரமெய்யும் ஊகார உயிரும் சேர்ந்து பிறக்கும் உயிர் மெய்யெழுத்து; the compound of ம் and ஊ = மூ.

     [ம் + ஊ – மூ]

 மூ2 mū, பெ.அ.(adj.)

   மூன்று (வின்.);; three.

     “மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு” (அகநா.282:8);.

     “ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றி” (புறநா.55:2);.

க. மூ.

 மூ3 mūttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. அகவை யுயர்தல்; to be senior in age.

     “மூத்தோன் வருக வென்னாது” (புறநா.183);.

   2. முதுமை யுறுதல்; to become old;to be older than another.

     “தமியள் மூத்தற்று” (குறள், 1007);.

   3. முடிதல்; to end. “மூவா முதலா வுலகம்” (சீவக.1);.

   4. கேடுறுதல்; to be damaged or spoiled.

     “மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க்கு” (தேவா.936, 4);.

க. மூது

     [முது → மூ → மூ-த்தல்]

 மூ4 mū, பெ.(n.)

   மூப்பு (யாழ்.அக.);; old age.

     [முது → மூ]

 மூ5 mū, பெ.அ.(adj.)

   மூன்று என்னும் எண்ணின் பெயரடை; the adjectival form of {}

மூகன்

மூகன்1 mūkaṉ, பெ.(n.)

   கீழ்மகன் (திவா.);; low, mean person.

     [மூக்கன்2 → மூகன்.]

 மூகன்2 mūkaṉ, பெ.(n.)

   1. ஊமையன்; dumb man.

     “சீறிச்சமண்முகன்” (தக்கயாகப். 189);.

   2. ஓர் அசுரன்; an A {}.

     “மூக நாமதானவன்” (பாரத.அருச்சுனன்றவ.79);.

   3. ஏழை (வறிஞன்); (யாழ்.அக.);; poor man.

     [மூழ் → மூகு → மூகன் = ஊமையன்.]

மூகம்

மூகம் mūkam, பெ.(n.)

   1. ஊமை; dumbness.

   2. வாய்பேசாநிலை (மெளனம்); (சூடா.);; speechlessness, silence.

   3. வறுமை (யாழ்.அக.);; poverty.

   4. ஒருவகை மீன் (யாழ்.அக.);; a kind of fish.

   5. பேய் வகை (யாழ்.அக.);; a class of devils.

மூகரன்

மூகரன் mūkaraṉ, பெ(n.)

   1. காது கேட்காதவன், செவிடன்; a deaf man.

   2. ஊமையன்; a dumb man.

     [மூகன் → மூகரன்.]

மூகளுர்

 மூகளுர் mūkaḷur, பெ. (n.)

   ஒசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in HosurTaluk.

     [மூன்று+கல்+ஊர்-முக்கல்லூர்-மூகலூர்மூகளுர் (கொ.வ.);]

மூகா-த்தல்

மூகா-த்தல் mūkāttal,    4 செ.கு.வி.(v.i.)

   பேசாமலிருத்தல் (மெளனமாக); (யாழ்.அக.);; to be silent.

     [முகம் + ஆ – மூகா → முகா-த்தல்.]

மூகி

மூகி mūki, பெ.(n.)

   கேழ்வரகு (நாமதீப.354);; ragi.

மூகை

மூகை1 mūkai, பெ.(n.)

   ஊமை (பிங்.);; dumb person.

 மூகை2 mūkai, பெ.(n.)

   1. ஈரற் குலை (பிங்.);; liver.

   2. படைக்கூட்டம்; vast horde.

     “நான்முகத்தன மூகை சூழ வமைந்த” (தக்கயாகப்.621);.

தெ. மூக = படைக்கூடம்.

 மூகை3 mūkai, பெ.(n.)

   சங்கஞ்செடி (சங்அக.);; mistletoe berrythorn.

மூகைச்சிலேட்டுமம்

 மூகைச்சிலேட்டுமம் mūkaiccilēṭṭumam, பெ.(n.)

   கழுத்துக்குள் ஊமையைப் போல உண்டாக்கும் இரைச்சலை உண்டாக்கி கோழையை வெளியேத் தள்ளும் ஒருவகை நோய்; a diseases marked by the sound dumb, in the throat and copious phlegm which is thrown out.

     [மூகை + Skt. சிலேட்டுமம்.]

மூகைமை

மூகைமை mūkaimai, பெ.(n.)

   ஊமையாய் இருக்கும் தன்மை; dumbness. “மூகைமைக் கொள்கையே மிக்கான்” (தணிகைப்பு. வீராட்ட.43);.

     [மூகை → மூகைமை.]

மூகையலரி

 மூகையலரி mūkaiyalari, பெ.(n.)

   அலரி மரம்; a tree – Nerium Odorum (சா.அக.);.

மூகையெழுத்து

 மூகையெழுத்து mūkaiyeḻuttu, பெ.(n.)

   ஊமையெழுத்து (வின்.);; consonant being mute.

     [மூகை + எழுத்து]

மூக்கக்காவலம்

 மூக்கக்காவலம் mūkkakkāvalam, பெ. (n.)

   புரசு; a tree – Butea frondosa (சா.அக.);.

மூக்கடிச்சதைநோய்

 மூக்கடிச்சதைநோய் mūkkaḍiccadainōy, பெ.(n.)

   உள்நாக்கின் பின்புறம் தொண்டைக்கும் மூக்குக்கும் இடையில் உள்ள தொண்டைச் சதை (tonsil); அழன்று வீங்கும் நோய்; adenoids.

     [மூக்கடி + சதை + நோய்]

மூக்கடைப்பான்

மூக்கடைப்பான் mūkkaḍaippāṉ, பெ.(n.)

   1. நீர்க் கோவையினால் ஏற்படும் மூக்கடைப்பு (மருத்.);; hindrance to breathing through the nostrils, due to cold.

   2. மூக்கு நோய் வகை; polypus in the nose.

   3. மாட்டு நோய் வகை; quinsy in cattle.

     [மூக்கு + அடைப்பான்]

மூக்கடைப்பு

 மூக்கடைப்பு mūkkaḍaippu, பெ.(n.)

மூக்கடைப்பான் (இ.வ.); பார்க்க;see {}.

     [முக்கு + அடைப்பு]

மூக்கணத்தாஞ்சாறு

 மூக்கணத்தாஞ்சாறு mūkkaṇattāñjāṟu, பெ.(n.)

   மூலிகை நீர் (கோவை.);; medicinal herb water.

     [மூக்கணத்தாம் + சாறு]

மூக்கணாங்கயிறு

 மூக்கணாங்கயிறு mūkkaṇāṅgayiṟu, பெ(n.)

   மாட்டின் மூக்கில் நுழைத்துத் தலையைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிறு; rope or string drawn through the bridge of the nose of the bullock as a bridle.

மூக்கணாங்கயிற்றைப் பிடித்து இழுத்ததும் மாடு நின்றது.

     [மூக்கு + கயிறு]

     [p]

 மூக்கணாங்கயிறு mūkkaṇāṅgayiṟu, பெ. (n.)

மாட்டு மூக்கில் குத்திக் கட்டப்படும் கயிறு:

 a rope tied through the nose of the cattle.

     [மூக்கு+அணம்+கயிறு]

மூக்கணாங்கயிறுபோடு

மூக்கணாங்கயிறுபோடு1 mūkkaṇāṅgayiṟupōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   வண்டி யிழுக்கும் மாட்டிற்கு மூக்கின் ஒரு துளையில் நுழைத்து மறுதுளையில் வாங்கி தலையைச் சுற்றிக் கட்டுதல்; drawning the rope or string through the bridge of the nose of the bullock.

     [மூக்கனாங்கயிறு + போடு-தல்.]

 மூக்கணாங்கயிறுபோடு2 mūkkaṇāṅgayiṟupōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   திருமணம் நடைபெறுதல் (கோவை.);; to marriage.

உன் பிள்ளைக்கு மூக்கணாங்கயிறு போடணும் (கோவை.);.

     [மூக்கு + அணாம் + கயிறு + போடு-தல்]

நாட்டுப்புற வழக்காக இச்சொல் பயன் படுத்தப்படுகிறது. ஆண்மகனாய் இருந்தால் கால்கட்டு போடுதல் அதாவது மணம் செய்வித்தலைக் குறித்ததாயிற்று. வீட்டுக்கு அடங்கி சொற்படி கேளாமல் தம் மனம் போன போக்கில் செல்லுபவர்களை நல்வழிப்படுத்தும் கரணியமாக வந்த சொல்லாகும். மேலும் பெண்களாய் இருப்பின் மணம் செய்வித்தலைக் குறித்து தாலிக் கயிறு மூக்கணாங்கயிறாயிற்று. இஃது பெண்ணடிமைக் கொள்கையையொட்டி எழுந்த சொல் எனலாம்.

மூக்கணாஞ்சுண்டு

 மூக்கணாஞ்சுண்டு mūkkaṇāñjuṇṭu, பெ. (n.)

   எருமையின் முகத்தில் கட்டும் கயிறு; a rope to tie arround the face of buffalo.

     [மூக்கு + அணாம் + சுண்டு]

மூக்கணாஞ்சுண்டு இல்லாத மாட்டைப் போல அவன் பிள்ளைத் திரிகிறான் (கோவை.);.

மூக்கணை

மூக்கணை mūkkaṇai, பெ.(n.)

   1. மூக்காங்கயிறு பார்க்க;see {}.

   2. கட்டை வண்டியின் முன் பக்கம் உள்ள ஒட்டுநருடைய இருக்கை; driver’s seat in front of the cart.

   3. முகவணை (இ.வ.); பார்க்க;see {}.

     [மூக்கு + அணை]

மூக்கணைமரம்

 மூக்கணைமரம் mūkkaṇaimaram, பெ.(n.)

   வண்டியின் ஏர்க்கால் மரம்; pole of a cart.

     [மூக்கணை + மரம்]

மூக்கநாகம்

 மூக்கநாகம் mūkkanākam, பெ.(n.)

   கொம்பேறிமூக்கன் பாம்பு; whip snake.

மறுவ. கண்குத்திப் பாம்பு

மூக்கன்

மூக்கன்1 mūkkaṉ, பெ.(n.)

   பெரிய மூக்குள்ளவன் (வின்.);; man with a large or prominent nose.

     [மூக்கு → மூக்கன்]

 மூக்கன்2 mūkkaṉ, பெ.(n.)

   மீன்கொத்தி; king fisher.

     “ஒல்காச் சிவல்மூக்க னொண் புறவு” (சினேந்.261);.

     [மூக்கு → மூக்கன்]

மூக்கு நீண்ட பறவை வகை.

 மூக்கன்3 mūkkaṉ, பெ.(n.)

   1. கீழ் மகன் (திவா.);; low, vulgar man.

   2. கடுஞ்சினம் (இ.வ.);; rage.

 மூக்கன்4 mūkkaṉ, பெ.(n.)

   கொம்பேறி மூக்கன் எனும் பாம்பு வகை; a kind of snake.(சா.அக.);.

     [மூக்கு → மூக்கன்]

மூக்கு நீண்ட பாம்பு.

மூக்கன்சம்பா

மூக்கன்சம்பா mūkkaṉcambā, பெ.(n.)

   சம்பா நெல்வகை; a kind of {} paddy.

     “மூக்கன் சம்பாச் சிறிய முள்ளுச்சம்பா” (நெல்விடு.181);.

மூக்கன்வாளை

மூக்கன்வாளை mūkkaṉvāḷai, பெ.(n.)

   மீன்வகை; a kind of fish.

     “பவளைவாளை மூக்கன் வாளை” (பறாளை.பள்ளு.16);.

     [மூக்கன் + வாளை]

மூக்கப்பன்

 மூக்கப்பன் mūkkappaṉ, பெ.(n.)

   நீதிசாரம் நூலாசிரியர் (அபி.சிந்.);; author of {}.

மூக்கப்பூயம்

 மூக்கப்பூயம் mūkkappūyam, பெ.(n.)

மூக்கம்பூயம் பார்க்க;see {} (சா.அக.);.

மூக்கம்

மூக்கம் mūkkam, பெ.(n.)

   சீற்றம்; rage.

     “படமூக்கப் பாம்பணையானோடு” (தேவா. 1232, 8);.

மூக்கம்பூயம்

 மூக்கம்பூயம் mūkkambūyam, பெ.(n.)

   புரசு; a tree – Butea frondosa (சா.அக.);.

மூக்கரசா

 மூக்கரசா mūkkaracā, பெ.(n.)

   பனிப்பயறு; dew gram-Phaseolus aconitifolius (சா.அக.);.

மூக்கரட்டை

 மூக்கரட்டை mūkkaraṭṭai, பெ.(n.)

மூக்கிரட்டை (இ.வ.); பார்க்க;see {} (சா.அக.);.

மூக்கரணைமூலம்

 மூக்கரணைமூலம் mūkkaraṇaimūlam, பெ.(n.)

   மூக்கரணை வேர்; root of {} (சா.அக.);.

மூக்கரண்டி

 மூக்கரண்டி mūkkaraṇṭi, பெ.(n.)

   கொடி வகை; spreading hogweed (சா.அக.);.

மூக்கரத்தவொழுக்கு

 மூக்கரத்தவொழுக்கு mūkkarattavoḻukku, பெ.(n.)

   மூக்கின் வழியே அரத்தம் வெளிப்படுகை; bleeding nose – Epistaxis (சா.அக.);.

     [மூக்கு + அரத்தம் + ஒழுக்கு.]

மூக்கரிகத்தி

மூக்கரிகத்தி mūggarigatti, பெ.(n.)

   வெற்றிலையினுடைய உடற்பகுதி, நடுத் தண்டு முதலியவற்றை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகைச் சிறப்புக் கத்தி; a special kind of knife for cutting the stem of betel leaf.

     [மூக்கு1 + அரி + கத்தி]

மூக்கரிசியுடை – தல்

மூக்கரிசியுடை – தல் mūkkarisiyuḍaidal,    4 செ.கு.வி.(v.i.)

   சில்லுமூக்குடைதல்; to bleed in the nose.

     [மூக்கு + அரிசி + உடை-தல்]

மூக்கரைச்சாரணை

 மூக்கரைச்சாரணை mūkkaraiccāraṇai, பெ.(n.)

   வெண்மையான ஒரு வகைக் கொடி;а сreeper (சா.அக.);.

மூக்கர்

 மூக்கர் mūkkar, பெ.(n.)

   கீழ்மக்கள் (திவா.);; low, vulgar people.

மூக்கறட்டை

மூக்கறட்டை mūkkaṟaṭṭai, பெ.(n.)

   1. ஒரு பூடு; a prostate plant – hog weed – Bauhavia procumbens (சா.அக.);.

   2. மூக்கிரட்டை (யாழ்.அக.); பார்க்க;see {}.

மூக்கறிவு

மூக்கறிவு mūkkaṟivu, பெ.(n.)

   மோப்பத் தாலறிகை (வின்.);; scent, sense of smell.

     [மூக்கு1 + அறிவு]

மூக்கறு

மூக்கறு1 mūkkaṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   மூக்கை அறுத்தல்; to disfigure one by cutting off one’s nose.

     “தங்கையும் மூக்கறுத்தாள் தான் தானே” (இராமநா. உயுத்.44);.

     [மூக்கு + அறு-த்தல்]

 மூக்கறு2 mūkkaṟuttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. ஒரு சூழ்நிலையில் தெரிந்தோ தெரியாமலோ ஒன்றை வெளிப்படுத்துவதன் மூலம் ஒருவரை இழிவுபடுத்துதல்; humiliate;snub

   2. மானக்கேடு (அவமானம்); செய்தல் (இராமநா.உயுத்.44);; to put one to disgrace.

     “முதலாளி சொன்னது முத்தாபோச்சு தொழிலாளி சொன்னது மூக்கறுந்து போச்சு” (பழ.);.

     [மூக்கு + அறு-த்தல்]

மூக்கறுத்தான்

 மூக்கறுத்தான் mūkkaṟuttāṉ, பெ.(n.)

மூக்கிரட்டை (சங். அக.); பார்க்க;see {}.

     [மூக்கு + அறுத்தான்]

மூக்கறுபடு – தல்

மூக்கறுபடு – தல் mūkkaṟubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   இழிவுபடுத்துதல்; get snubbed;degrade one by nose-cut.

பக்கத்து வீட்டுக்காரருக்காக ஞாயம் பேச வந்து மூக்கறுபட்டுப் போனேன்.

     [மூக்கு + அறு-படுதல்]

மூக்கறுப்பான்

 மூக்கறுப்பான் mūkkaṟuppāṉ, பெ.(n.)

   மூக்குத் தொடர்புடைய ஒரு நோய்; a disease of the nose.

     [மூக்கு + அறுப்பான். மூக்கை அறுப்பது போன்று வலியைத் தரும் நோய்.]

மூக்கறுப்பு

மூக்கறுப்பு mūkkaṟuppu, பெ.(n.)

   மானக் கேடு; disgrace.

     “என் குடிக்கு ஒரு மூக்கறுப்பா” (இராமநா.உயுத்.44);.

மூக்கறை

மூக்கறை mūkkaṟai, பெ.(n.)

   குறைபாடு உடைய மூக்கினைப் பெற்ற-வன்-வள்-து; person or animal with a defective nose.

     “மூக்கறை மட்டை மகாபல காரணி” (திருப்பு:266);.

     ‘மூக்கறையானுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போக விடான்;பின்னும் போக விடான்’ (பழ.);.

     ‘மூக்கறைக்கு முகுரம் கட்டினால் சினம் (கோபம்); வரும்’ (பழ.);.

     ‘மூக்கறையன் கண்ணாடியைப் பகைத்தது போல’ (பழ.);.

க. மூகொறெ.

     [மூக்கு + அறை. அறு → அறை]

மூக்கறைச்சி

மூக்கறைச்சி1 mūkkaṟaicci, பெ.(n.)

   குறை மூக்குள்ளவன்; woman with a defective nose.

     “உன்னைத் தனித்து உகப்பாள் மூக்கறைச்சியன்றோ” (ஈடு, 10, 3:9);.

க. முகொறதி

     [மூக்கறையன் → மூக்கறைச்சி]

 மூக்கறைச்சி2 mūkkaṟaicci, பெ.(n.)

   1. அரிதாரம்; yellow orpiment.

   2. செடி வகை; a plant.

மூக்கறையன்

 மூக்கறையன் mūkkaṟaiyaṉ, பெ.(n.)

   குறை மூக்குள்ளவன் (உ.வ.);; man with a defective nose.

     “மூக்கறையன் கண்ணாடியைப் பகைத்தது போல” (பழ.);.

க. மூகொறெய.

     [மூக்கறை → மூக்கறையன்]

மூக்காங்கயிறு

 மூக்காங்கயிறு mūkkāṅgayiṟu, பெ.(n.)

   எருத்தின் மூக்கைத் துளைத்துப் பூட்டுங் கயிறு (வின்.);; rope or string put through a bullock’s nose as a curb.

மறுவ. மூக்கணாங்கயிறு

     [மூக்கு + ஆம் + கயிறு.]

மூக்காங்கொழுந்து

 மூக்காங்கொழுந்து mūkkāṅgoḻundu, பெ. (n.)

   மூக்கின் நுனி (வின்.);; tip of the nose.

     [மூக்கு + ஆம் + கொழுந்து.]

மூக்காணி

 மூக்காணி mūkkāṇi, பெ.(n.)

   மாட்டு வண்டி நிலத்தில் ஊன்ற உதவும் கட்டை (கோவை.);; pole use to instal a cart.

     [மூக்கு + ஆணி]

     [p]

மூக்காந்தண்டு

 மூக்காந்தண்டு mūkkāndaṇṭu, பெ.(n.)

   மூக்கினுடைய நடுத்தண்டு; bridge of the nose.

மறுவ. மூக்குத்தண்டு

     [மூக்கு + ஆம் + தண்டு = மூக்கின் எலும்புள்ள பாகம்.]

மூக்காமண்டை

 மூக்காமண்டை mūkkāmaṇṭai, பெ.(n.)

மூக்குத்தண்டு (இ.வ.); பார்க்க;see {}.

     [மூக்கு + ஆ + மண்டை.]

மூக்காரல்

 மூக்காரல் kadir-mukkaral, பெ.(n.)

   மூக்கு நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும் ஒருவகை மீன்; a kind of fish with has long and sharp nose.

     [கதி + மூக்கு + ஆரல்.]

மூக்காலழு – தல்

மூக்காலழு – தல் mūkkālaḻudal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சிணுங்குதல் (உ.வ.);; to whine, snivel, indicating discontent or unwillingness.

   2. சிறிய செயலுக்குப் பெருமுயற்சி யெடுத்துக் கொள்ளுதல்; to take more effort for less work.

இந்தச் சிறிய வேலை செய்வதற்கே நீ மூக்காலழுகிறாய். நான் இதற்குமேல் செய்திருக்கிறேன் (உ.வ.);.

     [மூக்கால் + அழு – தல்.]

மூக்கால்நீரருந்தல்

 மூக்கால்நீரருந்தல் mūkkālnīrarundal, பெ.(n.)

   மூக்கின் மூலம் தண்ணீர் குடிக்கை; to take water through nostrils – this is a cure for eye diseases (சா.அக.);.

     [மூக்கு + ஆல் + நீர் + அருந்தல்.]

மூக்காவனை

 மூக்காவனை mūkkāvaṉai, பெ.(n.)

   கற்சூரை (வின்.);; spurious wild indigo.

மூக்காவளை

மூக்காவளை1 mūkkāvaḷai, பெ.(n.)

   ஒரு வகை முள் பூடு; a thorny plant (சா.அக.);.

 மூக்காவளை2 mūkkāvaḷai, பெ.(n.)

   மர வகை (யாழ்.அக.);; a tree.

மறுவ. மூக்காவனை

மூக்காவேளை

 மூக்காவேளை mūkkāvēḷai, பெ.(n.)

மூக்காய்வேளை பார்க்க;see {}.

மூக்கிகம்

 மூக்கிகம் mūggigam, பெ.(n.)

   வசம்பு; a plant, sweet flag – Acorus Calamus (சா.அக.);.

மறுவ. மூக்கில்

மூக்கினி

மூக்கினி mūkkiṉi, பெ.(n.)

   1. முந்திரி மரவகை; cashew tree – Anacardium occidentale.

   2. கொடிமுந்திரி (திராட்சை);; common grape vine.

மூக்கிரட்டை

 மூக்கிரட்டை mūkkiraṭṭai, பெ.(n.)

   கொடி வகை (வின்.);; spreading hog weed- Boer haavia diffusa.

மூக்கிறைச்சி

 மூக்கிறைச்சி mūkkiṟaicci, பெ.(n.)

   ஒரு பூடு; a plant (சா.அக.);.

மூக்கிற்கரியார்

 மூக்கிற்கரியார் mūkkiṟkariyār, பெ.(n.)

   குன்றிமணி; a twiner – Abrus precatorius (சா.அக.);.

மூக்கிற்கல்

 மூக்கிற்கல் mūkkiṟkal, பெ.(n.)

   காந்த ஆற்றல் உள்ள ஒருவகை இரும்புக்கட்டி (வின்.);; black loadstone, magnetic oxide of iron.

மறுவ. காகச்சீலை

மூக்கிலழகி

 மூக்கிலழகி mūkkilaḻki, பெ.(n.)

   நிலக் குமிழ் மரம்; Kashmere tree – Gmelina arborea.

மூக்கிலி

மூக்கிலி mūkkili, பெ.(n.)

   1. குறை மூக்கு உள்ள-வன்-வள்-து; person or animal with a defective nose.

     “மூக்கிலி முகத்தில்” (பிரபுலிங்.வசவண்.31);.

   2. பசலை வகை, சிறு பசளை; large-flowered purslane.

   3. நடைவழியில் முளைக்கும் ஒரு வகைப்பூடு, சிறுபூளை; a common wayside weed.

   4. செடிவகை (கோஷ்டம்);; Arabian costum.

தெ. முக்கிடி.

     [மூக்கு → மூக்கிலி]

மூக்கில்

 மூக்கில் mūkkil, பெ.(n.)

மூக்கிகம் பார்க்க;see {}.

மூக்கில்நீர்பாய் – தல்

மூக்கில்நீர்பாய் – தல் mūkkilnīrpāytal,    1 செ.கு.வி.(v.i.)

    மூக்கில் நீர்வடிதல்; running nose – Catarrh of the nose (சா.அக.);.

     [மூக்கில் + நீர் + பாய் – தல்.]

மூக்கில்விரலைவை – த்தல்

மூக்கில்விரலைவை – த்தல் mūkkilviralaivaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   வியப்படைதல்; be pleasantly surprised.

பாவணரின் மொழி ஆராய்ச்சியை உணர்ந்த மூதறிஞர்கள் தமது மூக்கில் விரலை வைத்தனர்.

     [மூக்கில் + விரல் + வை-த்தல்]

மூக்கில்வேர்

மூக்கில்வேர்1 mūkkilvērttal,    4 செ.கு.வி.(v.i.)

   இரையின் மோப்பத்தால் கழுகுக்கு மூக்கில் வேர்வை யுண்டாதல்; to sweat in the nose like a vulture which scents its prey.

     [மூக்கில் + வேர் – த்தல்]

 மூக்கில்வேர்2 mūkkilvērttal,    4 செ.கு.வி.(v.i.)

   ஒருவர் பிறருக்குத் தெரிந்திருக்காது என்று நினைக்கிற செய்தியை மற்றொருவர் எப்படியோ தெரிந்திருத்தல், முன்னடையாளந் தெரிதல்; sense instinctively something one is after;nose out something;

 to get aclue or scent.

கடன் கேட்டு வந்துவிட்டானா? எனக்கு நேற்று பணம் வந்தது இவனுக்கு மூக்கில் வேர்த்திருக்கும்.

     [மூக்கில் + வேர் – த்தல்]

மூக்கிழந்தான்

 மூக்கிழந்தான் mūkkiḻndāṉ, பெ.(n.)

   ஒருவகை வெண்கொடி (மூக்கரைச் சாரணை);; a white creeper – Trianthima monogyna (சா.அக.);.

மூக்கு

மூக்கு1 mūkku, பெ.(n.)

   1. மூச்சு இழுத்து விடுதற்கும் நறுமணத்தை உணர்வதற்கும் பயன்படுகின்ற உடல் உறுப்பு; nose, nostril.

     “மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே” (தொல். பொருள். 582);.

     “உள்ளூன் வாடிய கரிமூக்கு நொள்ளை” (அகநா53:8);.

     “கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்ப” (புறநா.249:1);.

     “அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி” (நற்.6:7);.

   2. பறவையலகு (திவா.);; bird’s beak bill.

கோழி குப்பையைக் காலால் கிளறி மூக்கால் புழுவைக் கொத்திற்று. அவன் கிளி மூக்குக்காரன்.

   3. யானைத் துதிக்கை; elephant’s trunk.

     “மூரி யேழ் கடலுந்தரு மூக்கின” (தக்கயாகப்.273);.

   4. ஏன வாயிலுள்ள மூக்கு போன்ற உறுப்பு; nose – shaped part of a cup, etc. spout of kettle or pot.

     “கலசலப்பானை யொன்று மூக்குமடியுமுட்பட” (தெ.இ.கல்.தொ.2:5);.

   5. வண்டிப்பாரின் தலைப்பகுதி; nose – shaped end of the pole of a cart.

     “காடி வைத்த கலனுடை மூக்கின்” (பெரும்பாண். 57);.

   6. முளை தோன்றும் வித்தின் முனை; nose – shaped end of the pole of a cart.

     “காடி வைத்த கலனுடை மூக்கின்” (பெரும்பாண். 57);.

   6. முளை தோன்றும் வித்தின் முனை; germinating end of seeds.

     “குன்றி மூக்கிற் கரியாருடைத்து” (குறள், 277);.

   7. இலைக்காம்பு; base or stem of a leaf.

     “மாஅத்து மூக்கிறு புதிர்ந்த” (ஐங்குறு.213);.

   8. குறுநொய்;   குறுநொய்யரிசி (இ.வ.);; broken ends of rice.

தெ. மூக்கு;க. மூகு;ம. மூக்கு;து. மூகு.

     [முகத்தல் = மூக்கால் மணத்தை நுகர்தல். முக → முகு → முக்கு → முக்கு = முகரும் உறுப்பு. முக → முகர்-தல் = மணத்தை நுகர்தல் (மு.தா. 44);.]

 மூக்கு2 mūkku, பெ.(n.)

   முரட்டுப் பேச்சு; rude talk.

     “மூக்குப் பேசுகின்றா னிவனென்று” (திவ்.பெரியாழ்.5. 1:1);.

மூக்குக்கணம்

மூக்குக்கணம் mūkkukkaṇam, பெ.(n.)

   கணை நோய் வகை (பாலவா.41);; a disease.

     [மூக்கு + கணம்]

மூக்குக்கண்ணாடி

 மூக்குக்கண்ணாடி mūkkukkaṇṇāṭi, பெ.(n.)

   பார்வைக் குறையுடையவர்கள் தங்கள் பார்வையைச் சரியாக்கிக் கொள்ள கண்களுக்குமுன் அணியும் ஒருவகை ஆடி; spectacles.

     [மூக்கு + கண்ணாடி]

மூக்கின் மீது பொருத்தி ஒரு சட்டகத்தின் மூலம் இரண்டு கண்களுக்கும் நேராக நிற்குமாறு உள்ள ஆடி அமைப்பு. மூக்கின்மேல் பொருந்தியிருத்தலால் மூக்குக்கண்ணாடி எனப்பட்டது.

     [p]

மூக்குக்குத்து – தல்

மூக்குக்குத்து – தல் mūkkukkuddudal,    5 செ.கு.வி.(v.i.)

   சிறுமியின் மூக்கில் மூக்குத்தி போன்ற நகைகளை மாட்டுவதற்காக துளையிடுதல்; to perforate the nose as of a girl – child to fix the nose-jewel.

     [மூக்கு + குத்து-தல்]

சிற்றுார்களில் சிறுமிகளுக்கு மட்டுமின்றி, தொடர்ந்து மூன்று குழந்தைகள் பெற்று இறந்துவிடின் மூன்றாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு பெண் குழந்தையாக இருந்தால்

பிறந்தவுடனே மூக்குக்குத்தி மூக்கம்மாள், மூக்காயி எனப் பெயரிடுவதும், ஆண் குழந்தையாக இருந்தாலும் மூக்குக் குத்தி மூக்கன், பிச்சை எனப் பெயரிடுவதும் வழக்காம்.

மூக்குக்கொழுந்து

 மூக்குக்கொழுந்து mūkkukkoḻundu, பெ.(n.)

   மூக்கினுடைய நுனிப்பகுதி (வின்.);; tip of the nose.

மறுவ. மூக்காங்கொழுந்து

     [மூக்கு + கொழுந்து.]

மூக்குக்கோலா

 மூக்குக்கோலா mūkkukālā, பெ.(n.)

   பெரிய மூக்கினை உடைய கோலா மீன் (தஞ்சைமீன்.);; a kind of sword fish with long nose.

     [மூக்கு + கோலா.]

மூக்குச்சட்டி

 மூக்குச்சட்டி mūkkuccaṭṭi, பெ.(n.)

   சாறு முதலியன ஊற்றுவதற்குப் பயன்படும் மூக்குள்ள ஏன வகை (உ.வ.);; a vessel with a projecting lip, used to pour liquid food.

     [மூக்கு + சட்டி.]

நீர்வடிய உதவும் மூக்கு போன்ற ஏன வகை.

     [p]

மூக்குச்சதை

 மூக்குச்சதை mūkkuccadai, பெ.(n.)

   மூக்கில் வளர்ந்த தசை; adenoids – Polypus (சா.அக.);.

     [மூக்கு + சதை.]

மூக்குச்சலாகை

மூக்குச்சலாகை mūkkuccalākai, பெ. (n.)

   தமிழ் மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 26 வகையான கருவிகளில் மூக்கினுள் பயன்படுத்தப்படும் இடுக்கிக் கருவி; one of the 26 surgical instruments mentioned in Tamil Medicine – Nasal forceps.

     [மூக்கு + சலாகை.]

மூக்குச்சளி

 மூக்குச்சளி mūkkuccaḷi, பெ.(n.)

   மூக்கில் இருந்து வெளிவரும் சளி; mucus of the nose, snivel, catarrhal discharge.

மூக்கிருக்கிற மட்டும் சளி உண்டு (பழ.);.

     [மூக்கு + சளி.]

மூக்குச்சாத்திரம்

 மூக்குச்சாத்திரம் mūkkuccāttiram, பெ.(n.)

   மூக்கு வழியாக மூச்சுக்காற்று வெளி வருவதைக் கொண்டு குறி சொல்லுவதைப் பற்றிய நூல்; art of divination by a study of respiration.

     [மூக்கு + சாத்திரம்.]

மூக்குச்சிந்து – தல்

மூக்குச்சிந்து – தல் mūkkuccindudal,    5 செ.கு.வி.(v.i.)

   மூக்குச்சளியை வெளிப் படுத்துதல்; to blow the nose.

     [மூக்கு + சிந்து-தல்.]

மூக்குச்சீறு-தல்

மூக்குச்சீறு-தல் mūkkuccīṟudal,    5 செ. கு.வி. (v.i.)

மூக்குச்சிந்து-தல் பார்க்க (வின்.);;see {}.

     [மூக்கு + சீறு-தல்.]

மூக்குச்சுழி-த்தல்

மூக்குச்சுழி-த்தல் mūkkuccuḻittal,    4 செ. கு.வி.(v.i.)

   இகழ்ச்சிக் குறியாக மூக்கை நெரித்துத் திருப்புகை (யாழ்.அக.);; to turn up one’s nose in contempt.

     [மூக்கு + சுழி-த்தல்.]

மூக்குச்செள்ளு

 மூக்குச்செள்ளு mūkkucceḷḷu, பெ.(n.)

   அரிசிமாவு முதலியவற்றில் இருக்கும் சிறிய கருப்புப் பூச்சி (கோவை.);; a black pest found in flour.

மறுவ. மூக்குவண்டு.

     [மூக்கு + செள்ளு.]

மூக்குடி

 மூக்குடி mūkkuḍi, பெ. (n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantangi Taluk.

     [மூத்த+குடி-முக்குடி]

மூக்குடைபடு – தல்

மூக்குடைபடு – தல் mūkkuḍaibaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

மூக்கறுபடு – தல் பார்க்க: see {}.

     [மூக்கு + உடைபடு-தல்.]

மூக்குண்ணி

 மூக்குண்ணி mūkkuṇṇi, பெ.(n.)

   மூக்குப் புண்; ulcer destroying the nose (சா.அக.);.

மூக்குத்தடை

 மூக்குத்தடை mūkkuttaḍai, பெ.(n.)

   பெண்டிர் பூணும் மூக்கணி, மூக்குத்தி; nose – jewel worn by women.

     [மூக்கு + தடை.]

மூக்குத்தண்டு

 மூக்குத்தண்டு mūkkuttaṇṭu, பெ.(n.)

   மூக்கின் எலும்புள்ள மேற்பாகம்; bridge of the nose.

     [மூக்கு + தண்டு]

மூக்குத்தளுக்கு

மூக்குத்தளுக்கு mūkkuttaḷukku, பெ.(n.)

   மூக்குத்தி, 1 பார்க்க; see {}, 1.

     [மூக்கு + தளுக்கு]

மூக்குத்தள்ளு

 மூக்குத்தள்ளு mūkkuttaḷḷu, பெ. (n.)

   கோலிக்குண்டு விளையாட்டில் தோற்றவர் குண்டினைத் தள்ளும் வகை; a children’s game.

     [முக்கு+தள்ளு]

மூக்குத்தழுக்கி

 மூக்குத்தழுக்கி mūkkuttaḻukki, பெ.(n.)

மூக்குத்தளுக்கு (யாழ்.அக.); பார்க்க;see {}.

மூக்குத்தி

மூக்குத்தி1 mūkkutti, பெ.(n.)

   1. பெண்கள் மூக்கு நுனியின் பக்கவாட்டுப் பகுதியில் துளையிட்டு அணிந்து கொள்ளும் சிறிய அணி (தெ.இ.கல்.தொ.2:339);; nose – jewel worn by women.

     “முத்தமிட வொட்டாத மூக்குத்தியைக் கழற்றி” (விறலி விடு.569);.

   2. கொடி வகை; blunt leaved hogweed, Boerhaavia verticillata.

   3. மூக்கொற்றி, 3 பார்க்க;see {}, 3.

மறுவ. மூக்குவாளி, மூக்கொற்றி

க., து. மூகுதி;ம. மூக்குத்தி.

     [மூக்கொற்றி → முக்குத்தி]

     [p]

 மூக்குத்தி2 mūkkutti, பெ.(n.)

   மரவகை (கோவை);; a kind of wood.

மூக்குத்திக்காய்

 மூக்குத்திக்காய் mūkkuttikkāy, பெ.(n.)

   மருதன் காய்; a creeper (சா.அக.);.

மூக்குத்திச்செடி

 மூக்குத்திச்செடி mūkkutticceḍi, பெ.(n.)

   ஒருவகைச் செடி; a shrub – Lantana indica.

     [மூக்குத்தி + செடி]

மூக்குத்திப்பூ

 மூக்குத்திப்பூ mūkkuttippū, பெ.(n.)

   மூக்குத்தி வடிவிலானப்பூ; flower of Lantana indica.

     [மூக்குத்தி + பூ.]

மூக்குத்திப்பூடு

 மூக்குத்திப்பூடு mūkkuttippūṭu, பெ.(n.)

   ஒருவகைப் பூண்டு; a plant (சா.அக.);.

     [மூக்குத்தி + பூடு]

மூக்குத்திருகு

மூக்குத்திருகு mūgguttirugu, பெ.(n.)

மூக்குத்தி, 1 பார்க்க;see {}, 1.

     [மூக்கு + திருகு]

மூக்குத்தூள்

 மூக்குத்தூள் mūkkuttūḷ, பெ.(n.)

மூக்குப்பொடி பார்க்க;see {}.

     “மூக்குத்தூள் போடாத முண்டத்துக்கு, முப்பது பணத்தில் வெள்ளி டப்பி” (பழ.);.

     [மூக்கு + தூள்]

மூக்குநீர்

 மூக்குநீர் mūkkunīr, பெ.(n.)

   மூக்குச்சளி; the watery mucus from the nostrils due to snot.

     [மூக்கு + நீர்]

மூக்குநீர்ப்பாய்ச்சல்

 மூக்குநீர்ப்பாய்ச்சல் mūkkunīrppāyccal, பெ.(n.)

   மூக்கிலிருந்து நீர் வடியும் சளி நோய்; a kind of cool disease.

மறுவ. நீர்க்கோர்வை, தடுமன்.

     [மூக்குநீர் + பாய்ச்சல்]

மூக்குநீர்வடிதல்

 மூக்குநீர்வடிதல் mūkkunīrvaḍidal, பெ.(n.)

   மூக்கில் வழியும் சளி; watery discharge from the nostrils.

     [மூக்குநீர் + வடிதல்.]

மூக்குந்தண்டு

மூக்குந்தண்டு mūkkundaṇṭu, பெ.(n.)

மூக்குத்தண்டு (செங்கை.); பார்க்க;see {}.

     [மூக்கு1 + தண்டு]

மூக்குப்பிடிக்க

 மூக்குப்பிடிக்க mūkkuppiḍikka, வி.அ.(adv.)

   அளவுக்கு அதிகமாக குடித்தல்;அளவுக்கு அதிகமாக உண்ணுதல்; eat to one’s fill or to surfeit.

திருமண வீட்டில் மூக்குப் பிடிக்க சோறு உண்டு வந்தாயா?

     [மூக்கு + பிடிக்க]

மூக்குப்பிடிக்கவுண்(ணு) – தல்

மூக்குப்பிடிக்கவுண்(ணு) – தல் mūkkuppiḍikkavuṇṇudal,    16 செ.கு.வி. (v.i.)

   அளவுக்கதிகமாக உண்ணுதல்;அளவுக்கு அதிகமாக குடித்தல் (உ.வ.);; to eat to surfeit.

     [மூக்குப்பிடிக்க + உண்ணு – தல்.]

மூக்குப்பிளவை

 மூக்குப்பிளவை mūkkuppiḷavai, பெ.(n.)

   மூக்கில் வரும் ஒருவகைப் புண் (யாழ்.அக.);; an abscess in the nose.

     [மூக்கு + பிளவை.]

மூக்குப்பிழிதல்

 மூக்குப்பிழிதல் mūkkuppiḻidal, பெ.(n.)

   ஆண்பிள்ளையாய்ப் பிறக்க வேண்டுமென்று கருப்பமான பெண்களுக்கு நான்கு, ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் செய்யப்படும் சடங்கு (புஞ்சவனம்);; a ceremony during the pregnancy of a woman, performed with a view of securing a male child.

     [மூக்கு + பிழிதல்.]

மூக்குப்பீ

 மூக்குப்பீ mūkkuppī, பெ.(n.)

   மூக்கில் உள்ள உலர்ந்த சளிப்பொருக்கு (இ.வ.);; dried mucus of the nose.

     [மூக்கு + பீ.]

மூக்குப்பீனசம்

மூக்குப்பீனசம் mūkkuppīṉasam, பெ. (n.)

   1. மூக்கில் உண்டாகும் ஒருவகை எரிச்சல் (பீனசரோகம்); நோய்; inflammation of the nose.

   2. மூக்கில் சதை வளரும் நோய்; poly- pus in the nose.

     [மூக்கு + பீனசம்]

மூக்குப்புத்து

 மூக்குப்புத்து mūkkupputtu, பெ.(n.)

   மூக்கில் ஏற்படும் புற்றுநோய்; cancer of the nose (சா.அக.);.

     [மூக்கு + புத்து. புற்று → புத்து).]

மூக்குப்புலாக்கு

 மூக்குப்புலாக்கு mūkkuppulākku, பெ. (n.)

   மூக்கில் தொங்கவிடப்படும் ஒர் அணி (கோவை.);; hanging ornament of nose worn by women.

     [மூக்கு + புலாக்கு]

பெண்கள் காதுகளில் அணியும் அணிகலன்களுள் தோடு என்பது காதுகளில் ஒட்டினாற் போன்றும் தொங்கட்டான், தோலாக்கு, லோலாக்கு போன்றவை காதுகளில் தொங்கினாற் போன்றும் அணியும் அணிகலன்களாகும். இவை போன்றே மூக்கின் தண்டுப் பகுதியில் துளையிட்டு தொங்கினாற் போன்று அணியும் அணிகலன் மூக்குப்புலாக்கு. இஃது பழங்குடி மக்கள் அணியும் அணிகலனாகும்.

     [p]

மூக்குப்புழு

 மூக்குப்புழு mūkkuppuḻu, பெ.(n.)

   ஒரு வகை புழு; maggot in the nose (சா.அக.);.

மூக்குப்பூரி

மூக்குப்பூரி mūkkuppūri, பெ.(n.)

   1. முதலிரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தவுடன் இறக்க, மூன்றாவது பிறந்தப் பிள்ளையும் அவ்வாறே இறந்து விடுமோ என்ற பயத்தில் அதைத் தடுப்பதற்காக மூக்குக் குத்தப் பெற்ற ஆண் குழந்தை; male child who is born after the early death of the first two previous male children of the same parents and whose nose is perforated in the belif that its death in childhood will thereby be averted.

   2. பிளந்த மேலுதடு உள்ளவன்; hare – lipped.

     [மூக்கு + பூரி. பீறு → பூறு → பூறி → பூரி.]

மூக்குப்பூரு-தல்

மூக்குப்பூரு-தல் mūkkuppūrudal,    5 செ.கு.வி.(v.i.)

மூக்குக்குத்து-தல் பார்க்க;see {}.

     [மூக்கு + பூரு-தல்]

மூக்குப்பூறி

 மூக்குப்பூறி mūkkuppūṟi, பெ.(n.)

மூக்குப்பூரி பார்க்க;see {}.

மூக்குப்பொடி

மூக்குப்பொடி mūkkuppoḍi, பெ.(n.)

   1. (மூக்கால் உறிஞ்சப்படும்); புகையிலைத் தூள் (பொடி);; snuff.

   2. மூக்கிற்காகப் பயன்படுத்தும் ஒருவகைப் பொடி; a medicated powder used as a snuff in diseases.

     [மூக்கு + பொடி.]

மூக்குப்பொட்டு

மூக்குப்பொட்டு mūkkuppoṭṭu, பெ.(n.)

மூக்குத்தி, 1 பார்க்க;see {}, 1.

     [மூக்கு + பொட்டு]

மூக்குமட்டை

 மூக்குமட்டை mūkkumaṭṭai, பெ. (n.)

   பனை மரத்தின் நுனி மட்டை; tip of palmyra leafstalk.

     [முக்கு+மட்டை]

மூக்குமீன்

 மூக்குமீன் mūkkumīṉ, பெ.(n.)

   சுறா வகையைச் சேர்ந்த மீன்; a kind of sword fish.

     [மூக்கு + மீன்]

     [p]

மூக்குமுட்ட

 மூக்குமுட்ட mūkkumuṭṭa, வி.எ.(adv.)

மூக்குப்பிடிக்க பார்க்க;see {}.

     [முக்கு + முட்ட]

மூக்கும்முழியுமாக

 மூக்கும்முழியுமாக mūkkummuḻiyumāka, வி.அ.(adv.)

   முக அழகோடு, முகப் பொலிவாக; with well – pronounced features.

உனக்குப் பார்த்திருக்கும் பெண் மூக்கும் முழியுமாக அழகாக இருக்கிறாள். குழந்தை மூக்கும் முழியுமாக இருக்கிறது.

     [மூக்கு + முழியுமாக.]

அளவான மூக்கும் விழியமைப்பும் உடைய பெண்ணை மூக்கு முழியுமாக இருக்கிறாள் என்று கூறுவது வழக்கு. ‘விழிக்கிறாய்’ என்பதை ‘முழிக்கிறாய்’ என்பது உலக வழக்கு. ‘மூக்கும் விழியுமாக’ என்பது ‘மூக்கும் முழியுமாக’ என்று வழங்குகிறது.

மூக்குயர்

மூக்குயர்1 mūkkuyartal,    2 செ.கு.வி.(v.i.)

   மூக்கு நீண்டு காணுகை;இது ஒரு வகை இறப்பிற்கான குறி என்பர்; nose appearing to be elongated, this is one of the symp- toms of death.

     [மூக்கு + உயர்-தல்]

 மூக்குயர்2 mūkkuyarttal,    2 செ.கு.வி. (v.i.)

   பிறந்த குழந்தையின் மூக்கைச் சப்பையாகாமலிருக்க இழுத்து விடுதல்; to pinch up the nose of a new – born infant to prevent it being flat – nosed.

     “அண்ணா உரிஞ்சி மூக்குயிர்த்தார்” (சீவக.2703);.

     [மூக்கு + உயர் – த்தல்]

மூக்குரட்டை

 மூக்குரட்டை mūkkuraṭṭai, பெ.(n.)

மூக்கிரட்டை பார்க்க;see {}.

மூக்குரணம்

 மூக்குரணம் mūkkuraṇam, பெ.(n.)

   மூக்குப்புண்; ulcer nose (சா.அக.);.

     [மூக்கு + இரணம். Skt. {} → த. இரணம்.]

மூக்குரத்தம்

 மூக்குரத்தம் mūkkurattam, பெ.(n.)

   மூக்கிலிருந்து அரத்தம் வழிகை; bleeding from the nose.

     [மூக்கு + அரத்தம் – மூக்கரத்தம் →மூக்குரத்தம்.]

மூக்குரி-த்தல்

மூக்குரி-த்தல் mūkkurittal,    4 செ.குன்றாவி. (v.t.)

மூக்கறு-த்தல் பார்க்க;see {}.

     ‘அவனை மூக்குரித்து விட்டான்’.

     [மூக்கு + உரி-த்தல்.]

மூக்குறட்டை

 மூக்குறட்டை mūkkuṟaṭṭai, பெ.(n.)

மூக்கிரட்டை பார்க்க;see {}.

மூக்குறாங்காற்று

மூக்குறாங்காற்று mūkkuṟāṅgāṟṟu, பெ.(n.)

   சுழல் காற்று (இ.வ.);; cyclone.

     [மூக்கு5 + உறு + ஆம் + காற்று.]

மூக்குறிஞ்சு – தல்

மூக்குறிஞ்சு – தல் mūkkuṟiñjudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒசை உண்டாக மூக்கினால் மூச்சை உள்வாங்குதல்; to sniff.

     “மூக்குறிஞ்சி முலையுணாயே” (திவ். பெரியாழ்.2, 2 : 2);.

சளி அதிகமானதால் குழந்தை மூக்குறிஞ்சிக்கிட்டேயிருக்கு.

     [மூக்கு + உறிஞ்சு-தல்]

மூக்குவட்டகை

மூக்குவட்டகை mūgguvaṭṭagai, பெ.(n.)

   விளிம்பில் மூக்குடன்கூடிய குவளை; cup with a nose – shaped lip.

     “ஸ்ரீ ராஜராஜ தேவர் – சேரமானையும், பாண்டியர்களையும், மலைநாட்டு எறிந்து கொண்ட வெள்ளியின் திருப்பரி கலங்கள் – மூக்கு வட்டகை ஒன்று” (தெ.கல்.தொ.2, கல். 91);.

     [மூக்கு + (வட்டிகை →); வட்டகை]

மூக்குவாளி

 மூக்குவாளி mūkkuvāḷi, பெ.(n.)

   மூக்கணி வகை (வின்.);; a ring worn in the nose.

     [மூக்கு + வாளி. வாளி = ஒருவகைக் காதணி.]

மூக்குவேர்-த்தல்

மூக்குவேர்-த்தல் mūkkuvērttal,    4 செ.கு.வி. (v.i.)

மூக்கில்வேர் – த்தல் பார்க்க;see {}.

     [மூக்கு + வேர்-த்தல்.]

மூக்கூளை

 மூக்கூளை mūkāḷai, பெ.(n.)

மூக்குச்சளி (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மூக்கு + ஊளை.]

மூக்கை

 மூக்கை mūkkai, பெ.(n.)

   மொட்டு (சங்.அக.);; bud.

க. மக்கெ

     [மொக்கு → மூக்கை.]

மூக்கைச்சிந்து – தல்

மூக்கைச்சிந்து – தல் mūkkaiccindudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஒன்றை நினைத்த மாத்திரத்தில் கண்ணீர் விடுதல், அழுதல்; shed tears, weep fainty at the slightest prompting.

     [மூக்கு → மூக்கை + சிந்து – தல்]

மூக்கைச்சுளி-த்தல்

மூக்கைச்சுளி-த்தல் mūkkaiccuḷittal,    4 செ.கு.வி.(v.i.)

மூக்குச்சுழி-த்தல் (வின்.); பார்க்க;see {}.

மூக்கைச்சொறி – தல்

மூக்கைச்சொறி – தல் mūkkaiccoṟidal,    2 செ.கு.வி.(v.i.)

   எளிமை காட்டுதல்; to plead poverty or abject condition, as by rubbing the tip of one’s nose.

     “தயங்க வைத்தாய் எனப் பேசிமூக்கைச் சொறிந்து” (திருப்பு.695);.

     [மூக்கு + ஐ + சொறி-தல்.]

மூக்கைத்துளை – த்தல்

மூக்கைத்துளை – த்தல் mūkkaittuḷaittal,    4 செ.கு.வி.(v.i.)

   மணம், நாற்றம் போன்றவை மூக்கை பாதித்தல்; excite the sense of smell of fragrance or flavor;stink to high heaven of bad smell nosy aroma which excity a nose.

வெங்காயக் குழம்பு மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கைத் துளைக்கும் சாக்கடை நாற்றம்.

     [மூக்கு + ஐ + துளை – த்தல்]

மூக்கைநுழை – த்தல்

மூக்கைநுழை – த்தல் mūkkainuḻaittal,    4 செ.கு.வி.(v.i.)

   பிறருடைய செய்கையில் அழைப்பில்லாமல் தலையிடுதல்; poke one’s nose.

நீ அடுத்தவர் வழக்கில் மூக்கை நுழைக்காதே?

     [மூக்கு → முக்கை + நுழை-த்தல்.]

மூக்கைநெறி – த்தல்

மூக்கைநெறி – த்தல் mūkkaineṟittal,    4 செ.கு.வி.(v.i.)

மூக்குச்சுழி-த்தல் (வின்.); பார்க்க;see {}.

மூக்கைப்பிடி – த்தல்

மூக்கைப்பிடி – த்தல் mūkkaippiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மூச்சுப் பயிற்சி செய்தல் (பிரணாயமஞ் செய்தல்);; to control the breath, as in devotional exercises.

   2. மந்திரம் சொல்லுதல் (இ.வ.);; to mutter mantras.

   3. கெட்ட நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்தல்; bad smell stink to nose.

     [மூக்கு → முக்கை + பிடி-த்தல்]

மூக்கொற்றி

மூக்கொற்றி mūkkoṟṟi, பெ.(n.)

   1. மூக்குத்தி (வின்.); பார்க்க;see {}.

   2. மூக்கொற்றிக்கோரை (சங்.அக.); பார்க்க;see {}.

   3. கொடிவகை (வின்.);; a climber-Thumbergia racemosa.

     [மூக்கு + ஒற்று – மூக்கொற்று →மூக்கொற்றி.]

மூக்கொற்றிக்கோரை

 மூக்கொற்றிக்கோரை mūkkoṟṟikārai, பெ.(n.)

   புல்வகை (வின்.);; a kind of club grass – Scirpus antaracticus.

     [மூக்கொற்றி + கோரை]

மூக்கொற்றிப்பூடு

 மூக்கொற்றிப்பூடு mūkkoṟṟippūṭu, பெ.(n.)

   சிறுசெடி வகை (வின்.);; a plant lnula Indica.

தெ. மூக்கிதி

     [மூக்கொற்றி + பூடு]

மூக்கொற்றிப்பூண்டு

 மூக்கொற்றிப்பூண்டு mūkkoṟṟippūṇṭu, பெ.(n.)

மூக்கொற்றிப்பூடு (வின்.); பார்க்க;see {}.

மூக்கொற்றைக்கோரை

 மூக்கொற்றைக்கோரை mūkkoṟṟaikārai, பெ.(n.)

மூக்கொற்றிக்கோரை (வின்.); பார்க்க;see {}.

     [மூக்கொற்றி + கோரை]

மூக்கொலியன்

மூக்கொலியன்1 mūkkoliyaṉ, பெ.(n.)

   மெல்லிய ஒலியன்; nasal phoneme.

     [மூக்கு + ஒலியன்]

 மூக்கொலியன்2 mūkkoliyaṉ, பெ.(n.)

   சங்கு (மூ.அ.);; chank.

     [மூக்கு + ஒலியன்]

மூக்கோட்டை

மூக்கோட்டை1 mūkāṭṭai, பெ.(n.)

   மூக்குத் துளை; nostril.

     [மூக்கு + ஒட்டை]

 மூக்கோட்டை2 mūkāṭṭai, பெ.(n.)

   வழிபட்டோர்க்கு பாடலியற்றும் ஆற்றலை அளிக்கும் கொற்றவைக் கோயில்; a shrine of {} who is said to endow Her votaries with poetic power.

மூக்கோலம்

 மூக்கோலம் mūkālam, பெ.(n.)

   புழுங்க லரிசி; boiled rice (சா.அக.);.

மூக்கோலியன்

 மூக்கோலியன் mūkāliyaṉ, பெ.(n.)

   சங்கு; chank;conch-shell.

மூங்கமார்ப்படல்

 மூங்கமார்ப்படல் mūṅgamārppaḍal, பெ.(n.)

   பட்டி போட உதவும் மூங்கில் (கோவை.);; bamboo which is used to make cow-shed.

     [மூங்கமார் + படல்]

மூங்கர்

மூங்கர் mūṅgar, பெ.(n.)

   ஊமையர்; dumb persons.

     “கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்து” (தேவா.1040, 2);.

மூங்கா

மூங்கா1 mūṅgā, பெ.(n.)

   1. கீரிவகை; a species of mongoose.

     “மூங்கா வெருகுஎலி மூவரி அணிலோடு ஆங்கு அவை நான்கும் குட்டிக்குரிய” (தொல். பொருள்.மரபு.6);.

   2. கீரி (மூ.அ.);; mongoose.

தெ., க. முங்கி;ம. மூங்னா.

     [மூக்கு → (மூங்கு); → மூங்கா = மூக்கு நீண்ட கீரி வகை.]

 மூங்கா2 mūṅgā, பெ.(n.)

   ஆந்தை (நாஞ்.);; owl.

ம. முங்ஙா

மூங்காப்பிள்ளை

மூங்காப்பிள்ளை mūṅgāppiḷḷai, பெ.(n.)

   கீரிப்பிள்ளை; mongoose.

     [மூங்கா1 + பிள்ளை.]

மூங்கி

 மூங்கி mūṅgi, பெ.(n.)

   பாசிப்பயறு (மலை.);; green gram.

மூங்கிடப்பை

 மூங்கிடப்பை mūṅgiḍappai, பெ.(n.)

   நீளவாட்டில் பிளந்த மூங்கிற்றுண்டு (உ.வ.);; splint, splinter, lath of bamboo.

     [மூங்கில் + தப்பை – மூங்கிற்றப்பை → மூங்கிடப்பை.]

மூங்கினெல்

 மூங்கினெல் mūṅgiṉel, பெ.(n.)

மூங்கிலரிசி (வின்.); பார்க்க;see {}.

     [மூங்கில் + நெல்]

மூங்கின்முத்து

 மூங்கின்முத்து mūṅgiṉmuttu, பெ.(n.)

   மூங்கிலிலிருந்து தோன்றுவதாகக் கருதப் படும் முத்து வகை (வின்.);; a kind of pearl said to be obtained from the bamboo.

     [மூங்கில் + முத்து]

மூங்கிற்கழி

 மூங்கிற்கழி mūṅgiṟkaḻi, பெ.(n.)

   இலை, முட்கிளை நீக்கப்பட்ட மூங்கிற் கொம்பு; bamboo stick.

     [மூங்கில் + கழி.]

மூங்கிற்குத்து

மூங்கிற்குத்து mūṅgiṟkuttu, பெ.(n.)

   1. மூங்கிற்புதர் பார்க்க (இ.வ.);;see {}.

   2. மூங்கிற்போத்து பார்க்க (வின்.);;see {}.

     [மூங்கில் + குத்து]

மூங்கிற்குருத்து

 மூங்கிற்குருத்து mūṅgiṟkuruttu, பெ.(n.)

   அடிபட்ட அரத்த வீக்கங்களைப் போக்கும் தளிர்; the tender leaves of bamboo is capable of curing contused swelling – Bamboo plast (சா.அக.);.

     [மூங்கில் + குருத்து]

மூங்கிற்குழல்

 மூங்கிற்குழல் mūṅgiṟkuḻl, பெ.(n.)

மூங்கிற்குழாய் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மூங்கில் + குழல்]

மூங்கிற்குழாய்

மூங்கிற்குழாய்1 mūṅgiṟkuḻāy, பெ.(n.)

   புல்லாங்குழல் (வின்.);; flute of bamboo.

     [மூங்கில் + குழாய்]

 மூங்கிற்குழாய்2 mūṅgiṟkuḻāy, பெ.(n.)

   பண்டை காலத்தில் மருந்து, தேன் முதலியவைக் கெடாதபடிக்கு வைப்பதற்காகச் செய்யும் மூங்கிற் குழாய்; a hallow bamboo used for preserving honey, medicines etc.

     ‘மூங்கிற் குழாய்க்குள்ளே பெய்தலை

உடைய……. கட் டெளிவை’ (மலைபடு.171, உரை);.

     [மூங்கில் + குழாய்]

     [p]

மூங்கிற்கொட்டை

 மூங்கிற்கொட்டை mūṅgiṟkoṭṭai, பெ.(n.)

மூங்கிலரிசி (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மூங்கில் + கொட்டை]

மூங்கிற்கொத்து

மூங்கிற்கொத்து mūṅgiṟkottu, பெ.(n.)

மூங்கிற்குத்து, 1 (இ.வ.); பார்க்க;see {}.

மூங்கிற்கோல்

மூங்கிற்கோல் mūṅgiṟāl, பெ.(n.)

மூங்கிற்கழி பார்க்க;see {}.

     ‘மூங்கிற் கோலைத் தலையிலே வலித்துக் கட்டின’ (பெரும்பாண்.285, உரை);.

     [மூங்கில் + கோல்]

மூங்கிற்சம்பா

மூங்கிற்சம்பா mūṅgiṟcambā, பெ.(n.)

   சம்பா நெல் வகை; a kind of {} paddy.

     “நெடு மூக்கன் அரிக்கராவி மூங்கிற் சம்பா” (முக்கூடற்.97);.

     [மூங்கில் + சம்பா.]

மூங்கிலரிசி போன்ற அரிசியைக் கொண்ட சம்பா நெல்.

மூங்கிற்பட்டை

மூங்கிற்பட்டை mūṅgiṟpaṭṭai, பெ.(n.)

   1. மூங்கிற்பிளாச்சு பார்க்க;see {}.

   2. மூங்கிற் கணுவின் மேலுள்ள உறை (உ.வ.);; sheath at the knot of a bamboo.

     [மூங்கில் + பட்டை]

மூங்கிற்பண்ணை

 மூங்கிற்பண்ணை mūṅgiṟpaṇṇai, பெ.(n.)

   அடர்த்தியான மூங்கிற்காடு (நாஞ்.);; dense clump of bamboo.

     [மூங்கில் + பண்ணை]

மூங்கிற்பத்தை

 மூங்கிற்பத்தை mūṅgiṟpattai, பெ.(n.)

மூங்கிற்பிளாச்சு (இ.வ.); பார்க்க;see {}.

     [மூங்கில் + பத்தை]

மூங்கிற்பாய்

 மூங்கிற்பாய் mūṅgiṟpāy, பெ.(n.)

   மூங்கிலால் செய்யப்பட்ட பாய்; mat made up of bamboo tree.

மூங்கிற் பாயும் முரட்டுப் பெண்டாட்டியும் (பழ.);.

     [மூங்கில் + பாய்]

மூங்கிற்பிளாச்சு

 மூங்கிற்பிளாச்சு mūṅgiṟpiḷāccu, பெ.(n.)

   நீளத்தில் பிளந்த மூங்கில் துண்டு (கொ.வ.);; splint, splinter, lath of bamboo.

     [மூங்கில் + பிளாச்சு]

மூங்கிற்பிளிச்சு

மூங்கிற்பிளிச்சு mūṅgiṟpiḷiccu, பெ.(n.)

   1. மூங்கிற்பிளாச்சு (இ.வ.); பார்க்க;see {}.

   2. ஒல்லியான மூங்கிற் கழி (சீவக.634, உரை);; thin bamboo stick.

     [மூங்கில் + பிளிச்சு]

மூங்கிற்புல்

 மூங்கிற்புல் mūṅgiṟpul, பெ.(n.)

   புல்வகை (மூ.அ.);; a kind of grass.

     [மூங்கில் + புல்]

மூங்கிற்போத்து

 மூங்கிற்போத்து mūṅgiṟpōttu, பெ.(n.)

   கொத்தாக உள்ள மூங்கிற் கன்று (வின்.);; cluster of bamboo saplings.

     [மூங்கில் + போத்து]

மூங்கிற்றண்டு

 மூங்கிற்றண்டு mūṅgiṟṟaṇṭu, பெ.(n.)

மூங்கிற்கழி (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மூங்கில் + தண்டு]

மூங்கிற்றப்பை

 மூங்கிற்றப்பை mūṅgiṟṟappai, பெ.(n.)

மூங்கிற்பிளாச்சு (வின்.); பார்க்க;see {}.

     [மூங்கில் + தப்பை]

மூங்கிலடி

 மூங்கிலடி mūṅgilaḍi, பெ.(n.)

   நெல்லை மாவட்டச் சிற்றூர்; a village name, in Nellai Dt.

     [மூங்கில் + அடி]

மூங்கிலம்மா

 மூங்கிலம்மா mūṅgilammā, பெ.(n.)

   சிற்றூர் பெண் தெய்வம் (தேவதை); (இ.வ.);; village deity.

     [மூங்கில் + அம்மா]

மூங்கிலரிசி

மூங்கிலரிசி mūṅgilarisi, பெ.(n.)

   மூங்கிலினின்று உண்டாகும் விதை (சீவக. 1422, உரை);; the seed of the bamboo.

     [மூங்கில் + அரிசி]

மூங்கிலரிசிதேன்கொழுக்கட்டை

 மூங்கிலரிசிதேன்கொழுக்கட்டை mūṅgilarisitēṉkoḻukkaṭṭai, பெ.(n.)

   மலைவாழ் இனத்தவரின் சிறப்பு உணவு (கோவை.);; food of the inhabitant in hills.

     [மூங்கிலரிசி + தேன் + கொழு + கட்டை]

மூங்கிலாடை

மூங்கிலாடை mūṅgilāṭai, பெ.(n.)

   மூங்கிலின் உட்புறத்தில் மெல்லியதாக உள்ள தாள் (சிறுபாண்.236, உரை);; paper – like tissue inside bamboos.

     [மூங்கில் + ஆடை]

மூங்கிலிலை

 மூங்கிலிலை mūṅgililai, பெ.(n.)

   மூங்கிலின் இலை; bamboo leaves.

     “மூங்கில்இலை மேலே தூங்கும் பனிநீரே” (பழ.);.

     [மூங்கில் + இலை.]

   குடற் சூலை;வயிற்று நோய்;அரத்தத்துடிப்பு, குழந்தைப் பேறு அழுக்கு, இருமல், கண்ணின் சிவப்பு முதலிய நோய்களை மூங்கிலிலை நீக்கும்.

மூங்கிலுப்பு

 மூங்கிலுப்பு mūṅgiluppu, பெ.(n.)

   மூங்கிலிலிருந்து எடுக்கப்படும் ஒரு மருத்துவ குணமுள்ள உப்பு; a medicinal salt found in bamboo (சா.அக.);.

     [மூங்கில் + உப்பு]

மூங்கிலூமத்தை

 மூங்கிலூமத்தை mūṅgilūmattai, பெ.(n.)

   ஒரு வகை ஊமத்தை; a plant – Dhatura milal (சா.அக.);.

     [மூங்கில் + ஊமத்தை]

மூங்கில்

மூங்கில் mūṅgil, பெ.(n.)

   உள்ளீடற்ற குழாய் போன்ற தண்டுப் பகுதியில் கணுக்களைக் கொண்டதும் நீண்டு வளர்வதுமான புறக்காழுள்ள பெரும்புல் வகை; bamboo-Bambusa arundinacea.

     “அம்பணை மூங்கிற் பைம்போழ்” (பெருங்.உஞ்சைக்.42 : 48);.

     “முற்றா மூங்கில் முளைதரு பூட்டும்” (அகநா.85: 8);.

     “ஆடுகழை நிவந்த பைங்கண் மூங்கில்” (நற்.28:7);.

     “கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே” (குறுந். 179:7);.

     “கான்முளை மூங்கிற் கவர்கிளை போல’ (பதிற்றுப்.84:12);.

   2. கழை (புனர்பூச); நாள் (திவா.);; the seventh naksatra.

ம. மூங்கில்

வகைகள்:

   1. மூங்கில்,

   2. கல் மூங்கில்,

   3. வேசி மூங்கில்,

   4. காட்டுமூங்கில்,

   5. சிறுமூங்கில்,

   6. பொன் மூங்கில்,

   7. கெட்டி மூங்கில்,

   8. நெட்டை மூங்கில், முள் மூங்கில்,

   9. உக்கா மூங்கில் (சா.அக.);.

மூங்கில் கலவா

 மூங்கில் கலவா mūṅgilkalavā, பெ. (n.)

   ஒரு வகை மீன்; yellow rock cod.

     [மூங்கில்+கலவாய்]

மூங்கில் கூடை

 மூங்கில் கூடை mūṅgilāṭai, பெ. (n.)

   மூங்கிலால் பின்னப்பட்ட கூடை; a bamboo basket.

     [மூங்கில்+கூடை]

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு mūṅgiltuṟaippaṭṭu, பெ.(n.)

   தென்னார்க்காடு மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டத்தில், திருவண்ணா மலையிலிருந்து சற்றொப்ப 30 கல்லன்மாத்திரி தொலைவிலுள்ள ஊர்; a city in South Arcot dist., about 30 km away from {}.

     [மூங்கில் + துறைப்பட்டு]

தென் பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள ஊர். ஆற்றங்கரையில், மூங்கில்கள் நிறைந்திருந்தமையால் மூங்கில் துறைப்பட்டு என்று பெயர் பெற்றது.

மூங்கில்நாடா

 மூங்கில்நாடா mūṅgilnāṭā, பெ.(n.)

   மூங்கிலால் செய்யப்பட்ட, பட்டுத்தறிக்குரிய நாடா; weaver’s instrument for silk loom made of bamboo.

     [மூங்கில் + நாடா]

மூங்கில்புல்லூரி

 மூங்கில்புல்லூரி mūṅgilpullūri, பெ.(n.)

   மூங்கிலின் மேற் படரும் புல்லுருவி வகை; bamboo parasite.

     [மூங்கில் + புல்லூரி]

மூங்கில்போத்து

 மூங்கில்போத்து mūṅgilpōttu, பெ.(n.)

மூங்கிற்போத்து பார்க்க;see {}.

     [மூங்கில் + போத்து.]

மூங்கில்முத்து

 மூங்கில்முத்து mūṅgilmuttu, பெ.(n.)

மூங்கின்முத்து பார்க்க;see {}.

     [மூங்கில் + முத்து]

மூங்கில்முளை

 மூங்கில்முளை mūṅgilmuḷai, பெ.(n.)

   மூங்கிலின் முளை; shoot of bamboo.

     [மூங்கில் + முளை]

மூங்கில்மோவு

 மூங்கில்மோவு mūṅgilmōvu, பெ.(n.)

   மூங்கில் கணு; joints of bamboo.

     [மூங்கில் + மோவு]

மூங்கு

மூங்கு1 mūṅgu, பெ.(n.)

மூங்கி (வின்.); பார்க்க;see {}.

 மூங்கு2 mūṅgu, பெ.(n.)

   சிறுபயறு; small pulse.

மூங்கை

மூங்கை mūṅgai, பெ.(n.)

மூகை1 பார்க்க;see {}.

      “தீய புறங்கூற்றின் மூங்கையாய்” (நாலடி, 158);.

மூங்கைநோய்

மூங்கைநோய் mūṅgainōy, பெ.(n.)

   நோய் வகை (கடம்ப.பு.இலீலா.127);; a kind of disease.

மூங்கைமை

மூங்கைமை mūṅgaimai, பெ.(n.)

   ஊமைத் தன்மை; dumbness.

     “தலைசாய்த் தங்கிருந்தார் மூங்கை மையால்” (நீலகேசி, 271);.

     [முங்கை → மூங்கைமை]

மூங்கையர்

 மூங்கையர் mūṅgaiyar, பெ.(n.)

   ஊமையர்; dumb person (சா.அக.);.

     [மூங்கை → மூங்கையர்.]

மூங்கையான்

மூங்கையான் mūṅgaiyāṉ, பெ.(n.)

   ஊமையன்; dumb person.

     “மூங்கையான் பேசலுற்றான்” (கம்பரா.நாட்.1);.

     [மூங்கை → மூங்கையான்]

மூங்கையூசி

 மூங்கையூசி mūṅgaiyūci, பெ.(n.)

   வலை பின்னுதற்கு ஏற்றவாறு மூங்கிலாலான ஒரு வகை ஊசி; a needle manufactured from bamboo to knit fish net.

மூங்கைரோகம்

 மூங்கைரோகம் mūṅgairōkam, பெ.(n.)

மூங்கைநோய் பார்க்க;see {}.

மூசடை

மூசடை mūcaḍai, பெ. (n.)

   1. பழுதாய்ப் போகை; rancidity.

   2. பழுதாய்ப் போன பண்டம் (இ.வ.);; anything that has become rancid, anything unclean.

க. முசரி

மூசணம்

 மூசணம் mūcaṇam, பெ.(n.)

   மிளகு; pepper – Piper nigrum (சா.அக.);.

மூசரச்சாரம்

 மூசரச்சாரம் mūcaraccāram, பெ.(n.)

   சவுட்டுப்பு; salt extracted from fuller’s earth (சா.அக.);.

மூசல்

மூசல் mūcal, பெ.(n.)

   1. மொய்க்கை (பிங்.);; swarming, thronging.

   2. இறப்பு (பிங்.);; death.

   3. கெடுகை (வின்.);; being spoiled.

     [மூசு → மூசல்.]

மூசாந்தம்

 மூசாந்தம் mūcāndam, பெ. (n.)

   வெண்டாமரை (மலை.);; white lotus.

மூசாம்பரம்

மூசாம்பரம் mūcāmbaram, பெ.(n.)

   1. கரிய போளம்; scarlet flowered aloe.

   2. கரிய போளப் பிசின்; resinous inspissated juice of aloe.

   3. கூட்டு மருந்துச் சரக்கு; a compound of catechu formed with the juice of young coconuts, arecanuts and other spices.

உரு. முசாம்பர்

மூசி

மூசி1 mūci, பெ.(n.)

   பொன்னாங்கண்ணி; a prostate plant – lllec brumsessile (சா.அக.);.

 மூசி2 mūcittal,    4 செ.கு.வி.(v.i.)

   மூச்சிழைத்தல்; gasp.

     [முசு → முசி → மூசி → மூசி-த்தல்.]

மூசிகவாகனன்

 மூசிகவாகனன் mūcigavāgaṉaṉ, பெ. (n.)

பெருச்சாளியை ஊர்தியாக உடையவனாகக் கருதப்படும்) பிள்ளையார்;{}

 sriding thebondicoot.

     “முப்பழநுகரும் மூசிக வாகன” (விநாயகர் அகவல்);.

     [Skt. {} → த. மூசிகவாகனன்.]

மூசு

மூசு1 mūcudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. மொய்த்தல்; to swarm about, gather round

     “வண்டு மூசுதேறன் மாந்தி” (நெடுநல்.33);.

     “மிஞீறுமூசு கவுள சிறுகண் யானை” (அகநா.159:16);.

     “புன்மூசு கவலைய முண்மிடை வேலி” (புறநா.116:4);.

     “மூசு வண்டறை பொய்கையும் போன்றதே” (அப்பர் தேவாரம்);.

   2. மூச்சு விடுதல்; to respire.

தெ. மூசுறு

 மூசு2 mūcudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கெடுதல் (வின்.);; to go bad, to be spoiled, rancid.

   2. சாதல் (பிங்.);; to die.

   3. மோப்பம் பிடித்தல் [தெ.மூட்சூட்சு]; to sniff.

     “நாசிமூசி” (திருவாலவா. 36 : 22);.

 மூசு3 mūcu, பெ. (n.)

   இடவகையில் நெருக்கமாக இருக்கை (மொய்க்கை);; swarming, thronging.

     “வண்டு மூசறா” (சீவக.418); “வியன்பணை முழங்கும் வேன்மூ சழுவத்து” (பதிற்று.31.30);.

      “வளவ னென்னும் வண்டுமூசு கண்ணி” (புறநா.227.9);.

 மூசு4 mūcu, பெ.(n.)

இளங்காய், பிஞ்சு,

 green or unripe fruit.

பலாமூசு.

தெ. முசுரு;க. முசுரு.

     [முள் → முளு → முசு → முசு. ஒ.நோ.உளு → உசு. ள – ச போலித் திரிபு (வே.க.முல்1);.]

மூசுண்டை

மூசுண்டை mūcuṇṭai, பெ.(n.)

   1. தின்பண்டம் (செ.வழ.);; eatables.

   2. கேடுற்ற பணிகாரம் (வின்.);; spoiled cake.

மூசுமல்லிகை

மூசுமல்லிகை mūcumalligai, பெ.(n.)

   ஊசி மல்லிகை (பதார்த்த.331);; eared jasmine.

     [ஊசிமல்லிகை → மூசுமல்லிகை]

நல்ல தரமான இனப்பெருக்கத்தை உண்டாக்கும், ஒரு வகைப் பூ (சா.அக.);.

மூசுமூசெனல்

மூசுமூசெனல் mūcumūceṉal, பெ.(n.)

   1. ஒர் ஒலிக்குறிப்பு; onom, expr. of crunching sound, as of cattle eating seeds.

   2. பெருமூச்சு விடுதற் குறிப்பு; onom. expr of breathing hard, as when intensely at work;panting, as in running.

மூசெனல்

 மூசெனல் mūceṉal, பெ.(n.)

மூசுமூசெனல் (இ.வ.); பார்க்க;see {}.

மூசை

மூசை mūcai, பெ.(n.)

   1. மண்ணாலான குகை; crucible.

   2. மாழை (உலோகங்கள்);களை உருக்கி வார்ப்பதற்கான மட்கரு; earthen mould for casting molten metal.

     [மூழை → மூசை.]

முள் → முழை. முழைத்தல் = துளைத்தல். முழை = குகை. முழை → மூழை = குழிந்த இடம். மூழை → மூசை = மண்குகை, மட்கரு (தேவநேயம்.12:101);.

வடமொழியில் இச்சொல்லுக்கு மூலமில்லை. மா.வி.அ. இச்சொல்லை ‘மூஷ’ (சுண்டெலி); என்னும் சொல்லோடிணைக்கிறது (வ.மொ.வ.);.

மூசைப்புல்

 மூசைப்புல் mūcaippul, பெ.(n.)

   முட்செடி (சங்கஞ்செடி);; mistle-toe berry thorn.

     [மூசை + புல்.]

மூச்சடக்கம்

மூச்சடக்கம் mūccaḍakkam, பெ.(n.)

   1. உயிரடங்கி நிற்கை; suspended animation.

   2. ஒரு வகை நோய்; a disease in which breath is restrained (சா.அக.);.

     [மூச்சு + அடக்கம்]

மூச்சடக்கு-தல்

மூச்சடக்கு-தல் mūccaḍakkudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   மூச்சுக் காற்றை உள் அடக்குதல்; to control and hold the breath.

     “மூச்சடக்கி யென்றும் வார்புனலிடையே நின்று” (குற்றா.தல. வடவருவி.28);.

     [மூச்சு + அடக்கு-தல்]

மூச்சடை-த்தல்

மூச்சடை-த்தல் mūccaḍaittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   மூச்சுத் திணறச் செய்தல்; to cause choking.

     [மூச்சு + அடை-த்தல்]

மூச்சடைப்பான்

மூச்சடைப்பான் mūccaḍaippāṉ, பெ.(n.)

மூச்சடைப்பு, 2 பார்க்க;see {}, 2.

     [மூச்சடை → மூச்சடைப்பான்.]

மூச்சடைப்பு

மூச்சடைப்பு mūccaḍaippu, பெ.(n.)

   1. மூச்சு வாங்குகை; difficulty in respiration;hard breathing;panting for breath.

   2. முட்டு மூச்சு வாங்குகை; choking, asphyxia (செ.அக.);.

     [மூச்சடை → மூச்சடைப்பு]

மூச்சன்

 மூச்சன் mūccaṉ, பெ.(n.)

   வலியவன் (யாழ்ப்.);; powerful, strong person.

மூச்சிழுப்பு

 மூச்சிழுப்பு mūcciḻuppu, பெ.(n.)

   ஈளை நோய் (சுவாசகாசம்);, இருமல் நோய்; asthma.

     [மூச்சு + இழுப்பு]

மூச்சு

மூச்சு mūccu, பெ.(n.)

   1. உயிர் வாழ்வதற்காக நுரையீரலுக்குள் இழுத்து வெளிவிடும் காற்று, உயிர்ப்பு; respiration, breath.

     “மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்” (தனிச்.சிந்.111:1);.

மூச்சுவிட மறந்தவர் யாருமிலர்.

   2. ஆண்மை (யாழ். அக.);; manliness.

   3. வலிமை, பலம் (யாழ்.அக.);; strength.

   4. ஆக்கம், முயற்சி; effort.

முதல் மூச்சில் (இ.வ.);.

ம. மூச்சு

மூச்சுக்காட்டாமை

 மூச்சுக்காட்டாமை mūccukkāṭṭāmai, பெ.(n.)

   அமைதியாக இருக்கை (நிச்சத்தமா யிருக்கை);; breathless silence.

இதைப்பற்றி அவளிடம் மூச்சுக் காட்டாதே.

     [மூச்சுக்காட்டு + ஆ + மை.]

மூச்சுக்காட்டு-தல்

மூச்சுக்காட்டு-தல் mūccukkāṭṭudal,    5 செ.கு.வி.(v.t.)

   1. ஆளரவஞ் செய்தல்; to show signs of life.

   2. ஆண்மை காட்டுதல் (யாழ்.அக.);; to show signs of courage.

   3. எதிர்மறை வடிவங்களில் தான் ஒர் இடத்தில் இருப்பதற்கான அறிகுறியை வெளிப்படுத்துதல்; utter a sound or word as a sign of one’s presence.

பொய் வெளிப்பட்டதும் அவன் மூச்சுக் காட்டவில்லை.

     [மூச்சு + காட்டு-தல்.]

மூச்சுக்காண்கை

 மூச்சுக்காண்கை mūccukkāṇkai, பெ.(n.)

   இறப்புக் குறியாக மேல் மூச்சுத் தோன்றுகை (இ.வ.);; breathing hard, as a sign of expiring.

     [மூச்சு + காண்கை.]

மூச்சுக்கிளைக்குழலழற்சி

 மூச்சுக்கிளைக்குழலழற்சி mūccukkiḷaikkuḻlaḻṟci, பெ.(n.)

   நுரையீரல் நோய் வகை; a kind of lungs disease.

     [மூச்சு + கிளை + குழல் + அழற்சி.]

மூச்சுக்குத்து

 மூச்சுக்குத்து mūccukkuttu, பெ.(n.)

   ஒருவகைக் காற்றுப் பிடிப்பு நோய் (வின்.);; a kind of gout.

     [மூச்சு + குத்து.]

மூச்சுக்குப்பி

 மூச்சுக்குப்பி mūccukkuppi, பெ.(n.)

   முத்துக் குளியாளும், சங்குக் குளியாளும், கடலில் மூழ்க புது முறையில் கையாளும் உயிர்ப்புக் குப்பி; aspirator bottle handled by pearl divers, and conch divers.

     [மூச்சு + குப்பி.]

மூச்சுக்குழல்

 மூச்சுக்குழல் mūccukkuḻl, பெ.(n.)

   தொண்டையில் இருந்து நுரையீரல் வரை அமைந்திருக்கும் மூச்சுப் போகும் குழல் போன்ற பாதை; windpipe, trachea.

     [மூச்சு + குழல்.]

     [p]

மூச்சுக்குழாய்விரிவழற்சி

 மூச்சுக்குழாய்விரிவழற்சி mūccukkuḻāyvirivaḻṟci, பெ.(n.)

   நுரையீரலின் அடிப்பகுதியில் உண்டாகும் ஒருவகை நோய்; bronchi – ectasis.

     [மூச்சுக்குழாய் + விரிவழற்சி.]

மூச்சுண்டை

மூச்சுண்டை mūccuṇṭai, பெ.(n.)

மூசுண்டை பார்க்க;see {}.

     “மூச்சுண்டை விற்று…… பாடுபட்டு” (ஆதியூரவதானி, 3);.

மூச்சுத்தாங்கல்

 மூச்சுத்தாங்கல் mūccuttāṅgal, பெ.(n.)

மூச்சடைப்பு (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மூச்சு + தாங்கல்.]

மூச்சுத்திணறல்

 மூச்சுத்திணறல் mūccuttiṇaṟal, பெ.(n.)

   சீராக மூச்சுவிட முடியாத அளவில் மூச்சுத் தடைபடும் நிலை; suffocation in breathing.

அவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது (உ.வ.);.

     [மூச்சு + திணறல்.]

மூச்சுப்பறிதல்

மூச்சுப்பறிதல் mūccuppaṟidal, பெ.(n.)

   1. மூச்சுக்காற்று வெளியே செல்கை; breathing out, exhalation.

   2. உடல் நலம் குறைவுபடுகை (பலவீனப்படுகை);; becoming weak.

     [மூச்சு + பறிதல்.]

மூச்சுப்பிடி-த்தல்

மூச்சுப்பிடி-த்தல் mūccuppiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மூச்சுக்காற்றை உள்ளடக்குதல் (வின்.);; to control or suppress the breath.

    2. மூச்சுத் திணறுதல் (வின்.);; to be short of breath

   3. இடுப்பில் சுளுக்கிக் கொள்ளுதல்; to be sprained at the hip.

மூட்டையைத் தூக்கினேன். மூச்சுப் பிடித்துக் கொண்டு விட்டது.

   4. முழுமூச்சாக முயலுதல்; to strain one’s powers.

     [மூச்சு + பிடி-த்தல்.]

மூச்சுப்பிடிப்பு

மூச்சுப்பிடிப்பு mūccuppiḍippu, பெ.(n.)

   1. ஒரு வகை மூச்சு உயிர்ப்பு நோய்; pleurisy;

 pleurodynia.

   2. மூச்சுக் காற்றை உள் அடக்குகை (வின்.);; suppression of breath.

   3. இடுப்பில் உண்டாகும் சுளுக்குநோய் (M.L.);; sprain at the hip.

     [மூச்சு + பிடிப்பு.]

மூச்சுப்பேச்சு

மூச்சுப்பேச்சு mūccuppēccu, பெ.(n.)

   1. பேசுகை (வின்.);; talk.

   2. உயிரோடு இருப்பதற்கான அடையாளம்; sign of life.

மூச்சுப் பேச்சு இல்லை (யாழ்.அக.);.

     [மூச்சு + பேச்சு.]

மூச்சுப்பொறு-த்தல்

மூச்சுப்பொறு-த்தல் mūccuppoṟuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   மூச்சை உள் அடக்குதல் (வின்.);; to suppress breath.

     [மூச்சு + பொறு-த்தல்.]

மூச்சுமுட்டல்

மூச்சுமுட்டல் mūccumuṭṭal, பெ.(n.)

   1. மூச்சுத் திணறுகை; suffocation.

   2. மூச்சு இருமல் நோய் (பைஷஜ.);; asthma.

     [மூச்சு + முட்டல்.]

மூச்சுமுட்டு-தல்

மூச்சுமுட்டு-தல் mūccumuṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   மூச்சுத் தடைப்பட்டுத் திணறுதல்; suffocate;breathe hard.

சமையல் அறையின் புகையால் அம்மாவுக்கு மூச்சு முட்டியது (உ.வ.);.

     [மூச்சு + முட்டு-தல்.]

மூச்சுவாங்கு

மூச்சுவாங்கு1 mūccuvāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   மூச்சு இரைத்தல்; gasp for breath;pant.

பத்து அடி நடப்பதற்குள் உனக்கு மூச்சு வாங்குகிறதே!

     [மூச்சு + வாங்கு-தல்.]

 மூச்சுவாங்கு2 mūccuvāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மூச்சுக் காற்றை உள்ளே அடக்குதல் (யாழ்.அக.);; to restrain breath, as in making an effort or dragging a heavy thing.

   2. பெருமூச்சு விடுதல்; to breathe hard.

மூச்சு வாங்க ஒடி வந்தான்.

   3. வெடிப்புக் காணுதல்; to crack, split open, to give way, as a wall.

இந்தக் கட்டடம் மூச்சு வாங்கி விட்டது.

     [மூச்சு + வாங்கு-தல்.]

மூச்சுவாங்குதல்

மூச்சுவாங்குதல் mūccuvāṅgudal, பெ. (n.)

   1. இளைப்பினால் பெருமூச்சு வருகை; panting, breathing hard, as in fatigue.

   2. இறப்புக் காலத்தில் பெருமூச்சு விடுகை; long-drawn breathing at the moment of death.

     [மூச்சு + வாங்குதல்.]

மூச்சுவிடாமல்

மூச்சுவிடாமல் mūccuviṭāmal, வி.அ.(adv.)

   1. வாய்திறவாமல்; in breathless silence.

   2. இடைவிடாமல்; without break or intermission.

மூச்சுவிடாமல் பாடுகிறாள். மூச்சுவிட நேரமில்லை. மூச்சுவிடாமல் மழைபெய்கிறது.

மூச்சுவிடு

மூச்சுவிடு1 mūccuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   இயற்கையான காற்றை மூக்கின் வழியே உள்ளே இழுத்து, இழுத்த காற்றை வெளியே விடுதல் (ஆசுவாசப்படுத்திக் கொள்ளுதல்);; to breathe respire.

மூன்று மாடி ஏறி வந்திருக்கிறேன், கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்கிறேன். “மூச்சு விடுமுன்னே” (தனிப்பா. i, 80:160);.

     [மூச்சு + விடு-தல்.]

 மூச்சுவிடு2 mūccuviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. எதிர் மறையில் அல்லது எதிர்மறைப் பொருளில் சிறிதளவு தெரிவித்தல்; make even a mention of say not to breathe a word.

அப்பாவிடம் எழுதுகோலைத் தொலைத்தது பற்றி மூச்சு விடாதே!. நேரில் சந்தித்த போது தனக்கு வேலை கிடைத்தது குறித்து அவர் மூச்சு விடவில்லை.

   2. மூச்சுவாங்கு2-தல், 3 பார்க்க;see {}, 3.

     [மூச்சு + விடு-தல்.]

மூச்செடுத்தல்

மூச்செடுத்தல் mūcceḍuttal, பெ.(n.)

   1. மேல் மூச்சு எழுகை (யாழ்.அக.);; gasping one’s last breath.

   2. மூச்சடக்குகை (இ.வ.);; holding one’s breath.

     [மூச்சு + எடுத்தல்.]

மூச்செறி-தல்

மூச்செறி-தல் mūcceṟidal,    2 செ.கு.வி.(v.i.)

மூச்சுவிடு1-1, (வின்.); பார்க்க;see {}, 1.

     [மூச்சு + எறி-தல்.]

மூச்சை

 மூச்சை mūccai, பெ.(n.)

மூர்ச்சை (வின்.); பார்க்க;see {}.

மூச்சொடுங்குகை

 மூச்சொடுங்குகை mūccoḍuṅgugai, பெ.(n.)

   உயிர்ப்பு (பிராணன்); ஒடுங்குகை (வின்.);; ceasing to breathe, as when dying.

     [மூச்சு + ஒடுங்குகை.]

மூஞ்சான்

 மூஞ்சான் mūñjāṉ, பெ.(n.)

   கடல் மீன் வகை; sea -fish, scarlet-Serranus miniatus.

மூஞ்சி

மூஞ்சி mūñji, பெ.(n.)

   1. மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி; muzzle.

   2. முகம்; face.

     “பிணி கொண் மூஞ்சிப் பிசாசகன்” (நீலகேசி, பூதவாதச்.3);.

தவறு செய்தால் மூஞ்சிமேலே அடிப்பேன்.

தெ., க. மூதி;ம. மூச்சி.

     [முந்து → (முந்து); → மூஞ்சு → மூஞ்சி.]

முகத்தில் நீண்டிருப்பது மூக்கு.

மூஞ்சிகாட்டு

மூஞ்சிகாட்டு1 mūñjikāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   எளிமையைக் காட்டுதல்; to wear a long face.

      “கணக்கு கேட்டால் மூஞ்சியைக் காட்டுகிறான்” (உ.வ.);.

     [மூஞ்சி + காட்டு-தல்.]

 மூஞ்சிகாட்டு2 mūñjikāṭṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

மூஞ்சியாலடி-த்தல் பார்க்க;see {}.

     [மூஞ்சி + காட்டு-தல்.]

மூஞ்சிக்குண்டையம்

 மூஞ்சிக்குண்டையம் mūñjikkuṇṭaiyam, பெ.(n.)

   சுறாமீன் வகை (நெல்லைமீன.);; a kind of shark fish-Selachoidei.

மூஞ்சிசுண்டு-தல்

மூஞ்சிசுண்டு-தல் mūñsisuṇṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முகத்தைச் சுளித்தல்; to be wry – faced.

   2. முகங்கருகுதல்; to look small or withered.

மறுவ. முகவாட்டம்

     [மூஞ்சி + சுண்டு-தல்.]

மூஞ்சிச்சுவர்

மூஞ்சிச்சுவர் mūñjiccuvar, பெ.(n.)

   நெற்றிச்சுவர் (கட்டட.நாமா.15);; gable wall.

     [மூஞ்சி + சுவர்.]

மூஞ்சித்திருக்கை

 மூஞ்சித்திருக்கை mūñjittirukkai, பெ. (n.)

திருக்கை மீன் வகையுளொன்று:

 a kind of ray-fish.

     [மூஞ்சி + திருக்கை.]

     [p]

மூஞ்சியாலடி-த்தல்

மூஞ்சியாலடி-த்தல் mūñjiyālaḍittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   உடன்படாமைக் குறிப்புத் தோன்ற எரிந்து விழுதல் (இ.வ.);; to show irritability or bad temper, show the sign of disagreement by irritation.

     [மூஞ்சியால் + அடி-த்தல்.]

மூஞ்சியிலடி-த்தல்

மூஞ்சியிலடி-த்தல் mūñjiyilaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

மூஞ்சியாலடி-த்தல் பார்க்க;see {}.

மூஞ்சியில் அடித்தாற்போல் விடை சொல்லி அனுப்பிவிட்டான் (கோவை.);.

     [மூஞ்சியில் + அடி-த்தல்.]

மூஞ்சிவாளை

மூஞ்சிவாளை mūñjivāḷai, பெ.(n.)

   முகவழகுடையதொரு வாளை மீன்; scabbard fish silvery, attaining 16 inch in length.

     [மூஞ்சி + வாளை.]

மூஞ்சு-தல்

மூஞ்சு-தல் mūñjudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. நக்கியுண்ணுதல்; to lick

   2: மூசு-தல்

     [மூசு-தல் → மூஞ்சு-தல்.]

மூஞ்சுறு

 மூஞ்சுறு mūñjuṟu, பெ.(n.)

மூஞ்சூறு (வின்.); பார்க்க;see {}.

மூஞ்சூர்பட்டு

 மூஞ்சூர்பட்டு mūñjūrpaṭṭu, பெ. (n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [மூஞ்சூர்+(பற்று);பட்டு]

மூஞ்சூறு

மூஞ்சூறு mūñjūṟu, பெ.(n.)

   1. உயிரி வகை (பிராணி); (உ.வ.);; musk-rat, Sorex indicus.

   2. மாட்டுநோய் வகை (இ.வ.);; a cattle disease.

   3. எலி வகைகளுள் ஒன்று,

 a kind of shrew mouse.

     [மூஞ்சுறு → மூஞ்சூறு.]

மூஞ்சூறுவாணம்

 மூஞ்சூறுவாணம் mūñjūṟuvāṇam, பெ.(n.)

   உந்து கூண்டு வாணம், ஒருவகை ஏவுகணை; a kind of rocket.

     [மூஞ்சூறு + வாணம்.]

மூஞ்சூறு வடிவில் செய்யப்பட்ட வாணம்.

மூஞ்சூற்றுமுள்ளன்

 மூஞ்சூற்றுமுள்ளன் mūñjūṟṟumuḷḷaṉ, பெ.(n.)

   கிழங்குள்ள கொடி வகை (யாழ்.அக.);; a bulbous-rooted creeper.

     [மூஞ்சூறு + முள்ளன்.]

மூஞ்சை

மூஞ்சை mūñjai, பெ.(n.)

   1. கோணியமுகம் (வின்.);; pouting, sullen countenance.

   2. நீண்ட முகம் (யாழ்.அக.);; longish face.

   3. நீண்ட மூக்கு (யாழ்.அக.);; longish nose.

     [மூஞ்சி → மூஞ்சை.]

மூஞ்சையன்

 மூஞ்சையன் mūñjaiyaṉ, பெ.(n.)

   முகங் கோணியவன் (வின்.);; pouter, sulky fellow.

     “மூஞ்சையப்பன் முகத்தைப் பார்” (பழ.);.

     [மூஞ்சை → மூஞ்சையன்.]

மூட

 மூட mūṭa, பெ.அ.(adj.)

   அறிவுக்கு ஒவ்வாத, முட்டாள்தனமான; absurd, foolish.

மூடப்பழக்கம், மூடக் கொள்கை, மூடச்சொல்.

மூடகபாணி

 மூடகபாணி mūṭagapāṇi, பெ.(n.)

   இலைக் கள்ளி; leafy spurge – Euphorbia nerifolia.

மூடகருப்பம்

மூடகருப்பம் mūṭagaruppam, பெ.(n.)

   1. கருப்பத்திலிறந்த குழந்தை (சிசு); (யாழ். அக.);; still – born child.

   2. மகப்பேறு காலத்தில் குழந்தையை எளிதில் வெளியேறாமல் செய்யும் நோய் வகை (சீவரட். 208);; a disease in which a pregnant woman is not easily delivered of her child.

மூடக்காய்

 மூடக்காய் mūṭakkāy, பெ.(n.)

   நோய் விழுந்து சரியாக வெடிக்காதப் பருத்தி (கோவை.);; uncracked diseased cotton.

மூடக்கொத்தான்

 மூடக்கொத்தான் mūṭakkottāṉ, பெ.(n.)

   முடக்கொற்றான்; balloon vine a creeper – Cardiospermum halicacabum (சா.அக.);.

மூடதியந்தம்

 மூடதியந்தம் mūṭadiyandam, பெ.(n.)

   முட்டைச் சிலந்தி; a kind of abscess (சா.அக.);.

மூடதை

 மூடதை mūṭadai, பெ.(n.)

மூடத்தனம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

மூடத்தட்டு-தல்

மூடத்தட்டு-தல் mūṭaddaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   உப்பளப் பாத்திகளில் தேங்கியிருக்கும் உப்புநீர் மீது படியும் பாசி போன்ற ஆடையை, வாருபலகையினால் கலைத்து அப்புறப்படுத்துதல்; remove the layer like fungus settled on the top of the salt water stagnant in the salt – pan.

மூடத்தனம்

 மூடத்தனம் mūṭattaṉam, பெ.(n.)

   முட்டாள்தனம்;   சோர்வுடன் கூடிய தன்மை;அறிவீனம்; stupidity, dullness, ignorance.

     [மூடம் + தனம்.]

மூடநம்பிக்கை

 மூடநம்பிக்கை mūṭanambikkai, பெ.(n.)

   பழக்கத்தினால் ஏற்றுக் கொள்ளும், அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கை; supersititious belief.

மூடநம்பிக்கையால் கிராமத்தில் பெண்கள் பிறந்த குழந்தையின் எடையைப் பார்க்க அனுமதிப்பதில்லை. அறிவியலாளரிடையிலும் மூடநம்பிக்கைகள் உண்டு.

     [மூடம் + நம்பிக்கை.]

மூடனம்

மூடனம்1 mūṭaṉam, பெ.(n.)

மூடம்3, 1 (இ.வ.); பார்க்க;see {}, 1.

     [மூடம் → மூடனம்.]

 மூடனம்2 mūṭaṉam, பெ.(n.)

   மிளகு (மலை.);; black pepper.

மூடன்

மூடன் mūṭaṉ, பெ.(n.)

   1. அறிவிலான்; fool, ignoramus, stupid person.

     “பயன் றெரித றேற்றாத மூடர்” (நாலடி, 316);.

   2. கீழ்மகன் (திவா.);; low, mean man.

மொட்டைக் கடிதத்தை வைத்து மனைவிமேல் ஐயப்படுகிறான் மூடன் (உ.வ.);.

மூடபத்தி

 மூடபத்தி mūṭabatti, பெ. (n.)

   கரணியம் அறியாமல் செய்யும் இறையன்பு (உ.வ.);; superstition, blind zeal, bigotry.

     [மூடம் + (பக்தி); → பத்தி.]

மூடமா

 மூடமா mūṭamā, பெ.(n.)

   காட்டுமா; wild mango – Buch anania latifolia (சா.அக.);.

மூடம்

மூடம்1 mūṭam, பெ.(n.)

   1. முகில்சூழ்ந்த வனம் (மந்தாரம்);; dark, clouded sky.

வானம் இன்று மூடமாயிருக்கிறது (பே.வ.);.

   2. குளிர் (யாழ்.அக.);; chillness;

 cold.

   3. மறைந்த இடம்; place of concealment, secret place.

      “வேட்கைவிட்டார் நெஞ்சின் மூடத்துளே நின்று முத்தி தந்தானே” (திருமந்.2614);.

க. மோட.

     [மூடு → மூடம்.]

 மூடம்2 mūṭam, பெ.(n.)

   8 மரக்கால் கொண்ட முகத்தலளவை (தைலவ.தைல.);; a measure of capacity = 8 marakkal.

 மூடம்3 mūṭam, பெ.(n.)

   1. அறிவின்மை (பிங்.);; foolishness, stupidity.

   2. மயக்கவுணர்வு; confusion;

 error.

     “பாசண்டி மூடம்” (அறநெறி.16);. 3. ஐயம் (யாழ்.அக.);;

 doubt.

மூடர்

 மூடர் mūṭar, பெ.(n.)

மூடன் பார்க்க;see {}.

மூடர்கள் சேர்க்கையில் தப்பாமல் கெடுதி வரும். மூடர் கூட்டுறவு முழுதும் கேடு. மூடர் முன்பு மூர்க்கம் பேசாதே (பழ.);.

     [மூடன் → மூடர்.]

மூடலை

மூடலை mūṭalai, பெ.(n.)

   மதிகேடு; lack of sense,

     “மூடலையாவதன் காரண மென்னை” (நீலகேசி.380);.

மூடல்

மூடல் mūṭal, பெ.(n.)

   1. மூடுகை; covering.

   2. மூடி; cover;lid.

சாடியின் மூடல்.

     [மூடு → மூடல்.]

மூடவாதம்

மூடவாதம் mūṭavātam, பெ.(n.)

   1. மலமும் நீரும் சேர்ந்து கொப்பூழ் இருக்கும் இடத்தில் குடலை இழுத்துப் பிடித்து வயிற்றுக்குள் துன்பத்தை உண்டாக்கும் ஒரு வகை ஊதை நோய்; a disease marked by constipation suppession of urine, pain and stiffness round the novel (சா.அக.);.

மூடாக்கு

 மூடாக்கு mūṭākku, பெ. (n.)

முக்காடு பார்க்க;see {}.

     [மூடு + ஆக்கு.]

மூடாடி விளக்கு

 மூடாடி விளக்கு mūṭāṭiviḷakku, பெ..(n.)

   கண்ணாடிக் கூடு பொருத்திய மண்ணெண் ணெய் விளக்கு(சிமினி விளக்கு);; kerosene lamp with a chimney.

     [மூடு+ஆடி+விளக்கு]

மூடாத்துமா

 மூடாத்துமா mūṭāttumā, பெ. (n.)

   மூடன் (உ.வ.);; fool, stupid person.

மூடாந்தகாரம்

 மூடாந்தகாரம் mūṭāndakāram, பெ.(n.)

   மிகை அறிவின்மை (வின்.);; excessive mental darkness.

மூடாம்பரக்கண்

மூடாம்பரக்கண் mūṭāmbarakkaṇ, பெ.(n.)

   அரைக்கண் பார்வையான மெய்ப்பாட்டுக் கண் (அவிநயக்கண்); வகை (பரத.பா.வ.94);; seeing with half-closed eyes;squinting eyes.

     [மூடு + அம்பரம் + கண்]

மூடி

மூடி1 mūṭi, பெ.(n.)

   1. ஒரு கொள்கலனின் திறப்பை மூடுவதற்கு அந்தத் திறப்பின் அளவே இருக்கும் ஒரு சிறிய தட்டு; anything that is designed for closing or covering a container.

     ‘சாடிக்கேற்ற மூடி’. 2. எழுதுகோல் போன்றவற்றில் மேல் பகுதியைப் பாதுகாக்க செருகி மூடும் அமைப்பு;

 cap of a pen, etc.

எழுதுகோலின் மூடி தொலைந்துவிட்டது. ”

மூடி வைத்தாலும் முணுமுணு என்னும், தைத்து வைத்தாலும் டமடம என்னும்’,

     ‘மூடாத உடைமை முக்காற் காசும் பெறாது” (பழ.);.

     [மூடு → மூடி.]

 மூடி2 mūṭi, பெ.(n.)

   1. மூடு கருவி; that which covers, cover, lid top.

   2. தேங்காய் மூடி (கொ.வ.);; half of a split coconut.

   3. கொத்து மல்லி (மலை.);; coriander.

தெ. மூட;ம. மூடி.

     [மூடு → மூடி.]

 மூடி3 mūṭi, பெ.(n.)

   மூடத்தன்மை யுள்ளவள்; stupid, foolish woman.

     “ஏடி மூடி” (அரிச்.பு.மயான.37);.

மூடிகநஞ்சு

 மூடிகநஞ்சு mūṭiganañju, பெ. (n.)

   எலி நஞ்சு; rat poison.

மூடிகம்

மூடிகம் mūṭigam, பெ.(n.)

   1. பெருச்சாளி; bandicoot.

     “மீனு மானேன் மாய்ந்து மூடிகமு மானேன்” (பிரமோத்.15:29);.

   2. எலி (யாழ்.அக.);; rat.

மூடிகாராதி

 மூடிகாராதி mūṭikārāti, பெ. (n.)

   பூனை (யாழ்.அக.);; cat.

மூடிக்கீரை

 மூடிக்கீரை mūṭikārai, பெ. (n.)

   எலிச் செவிக் கீரை; a prostate weed – Merremia gangetica (emargineta); (சா.அக.);.

மூடிமறை-த்தல்

மூடிமறை-த்தல் mūṭimaṟaittal,    4 செ.கு.வி. (v.i.)

   நடந்து விட்ட ஒன்றைப் பிறர் அறிந்துவிடாதவாறு செயல்படுதல்; cover up.

கொலையை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். எவ்வளவு மூடி மறைத்தாலும் உண்மை ஒருநாள் தெரியாமலா போகும்?

     [மூடி + மறை-த்தல்.]

மூடியம்மன்

 மூடியம்மன் mūṭiyammaṉ, பெ.(n.)

   பெண் கடவுள்; goddess.

     ‘மூடியம்மனை வழிபட மும்மாரி மழைபொழியும் மக்கள் குறை தீரும்’ (கோவை.);.

     [மூடி + அம்மன்.]

மூடிவை-த்தல்

மூடிவை-த்தல் mūṭivaittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. சேமித்துப் பாதுகாத்தல்; to preserve, keep safe.

     “ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனொ டொக்குமே” (தேவ.1218, 9);.

   2. கமுக்கமாக (இரகசியம்); மறைத்து வைத்தல்; to conceal, hide, as secrets.

     [மூடு → முடி + வை-த்தல்.]

மூடு

மூடு1 mūṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. கதவு, பலகணி (சன்னல்); போன்றவற்றை அடைத்தல்; close of doors, etc., shut a door, etc.

   பலகணியை (சன்னலை); மூடாதே! 2. பெட்டி, பை முதலியவற்றின் திறப்பை (ஒரு பொருளை உள்ளே போட முடியாத அளவுக்கு); அடைதல்; be in closed condition of a case, box, etc.;close a case, box, etc.

நான் பார்த்த போது பெட்டி மூடித்தான் இருந்தது. தண்ணீர்த் தவலையை மூட மறந்து விட்டேன்.

    3. கண், வாய் முதலியவற்றின் இமைகளை, உதடுகளை ஒன்று சேர்த்தல்; close, close the eyes, mouth. ஊழ்கத்தின் (தியானத்தின்); போது அவருடைய கண்கள் மூடி இருந்தன. வாயை முடித்தூங்கு!

   4. நீட்டிய நிலையில் இருக்கும் புத்தகம் போன்றவற்றை மடக்கியோ, இணைத்தோ ஒன்று சேர்த்தல்; close, close the fingers, the book, etc.

பிறந்த குழந்தையின் கை மூடி இருக்கும். கொட்டாவி வந்ததும் புத்தகத்தை மூடினான்.

   5. மறைக்கப்பட்டிருத்தல் அல்லது மறைத்தல்; to hide, screen;to obscure.

     “மூடி மேனியை” (கம்பரா.பிரமாத்திர.173);.

பனிமூடிய மலை. கையால் காதை மூடினான்.

   6. கல்வி நிறுவனம், தொழிற்சாலை முதலியவை இடைக்காலமாகவோ நிலையாகவோ செயல்படாமல் நிறுத்தி வைத்தல்; be closed, shut down for the day or permanently, close a shop, instituions, factory etc, for the day or permanently.

விரைந்து போ, கடை மூடிவிடும். நிருவாகம் தொழிற் சாலையை மூடிவிட முடிவு செய்துள்ளது.

    7. வெளியேறும் நீர் முதலிய நீர்மங்களைக் குழாய் அல்லது அதன் அமைப்பிலிருந்து வெளியேறாமல் நிறுத்துதல்; stop, close, turn off the flow of water etc. from a tap etc. குழாயை மூடிவிட்டாயா?

   8. போர்த்தல்; to cover, shroud, veil.

     “மூடித்தீக் கொண்டெழுவர்” (நாலடி, 24);.

     “மூடி முக்காட்டுக்குள்ளே போகிறவள்தான் ஒடி, ஒடி மாப்பிள்ளை கொள்வாள்” (பழ.);.

   9. அடைத்தல்; to shut in, enclose;to close, as the eyes;to shut, as the mouth.

கண்மூடித் திறந்தான்.

   10. சுற்றிக் கொள்ளுதல்; to surround, encompass.

      “ஆர்த்துமண்டி மூடினான்” (கம்பரா. நாகபாச. 92);.

தெ. மூயு;க. முச்சு;ம. முடுக.

 மூடு2 mūṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   நோய் முதலியன மிகுதல்; to reach a critical stage, as a disease, to come to a head.

 மூடு3 mūṭu, பெ.(n.)

   1. வேர்; root.

     “மன்னு புனன் மூட்டில்விடக் கொப்பெலாந் தழைத் தோங்கும்” (குற்றா.தல.மூர்த்தி.17);.

   2. கரணியம்; cause;origin.

இவற்றிற் கெல்லாம் அவன்தான் மூடு.

   3. சிறுதூறு; small bush.

   4. பெட்டையாடு (தொல். பொருள்.619);; ewe.

   5. நிலை; stand, as of a chariot.

தேர் மூடு (இ.வ.);.

தெ. மோடு;ம. மூடு.

 மூடு4 mūṭu, பெ.(n.)

 மூடு5 mūṭu, பெ.(n.)

மூடன், 1 பார்க்க;see {}, 1.

      “மூடாய முயலகன்” (தேவா. 878, 3);.

மூடுகுப்பாயம்

மூடுகுப்பாயம் mūṭuguppāyam, பெ.(n.)

   1. நீண்ட சட்டை (அங்கி); (யாழ்ப்.);; mantle;long coat.

   2: மேற் போர்வை (யாழ்.அக.);; overcoat.

     [மூடு + குப்பாயம். குப்பாயம் = சட்டை.]

மூடுகுழி

 மூடுகுழி mūṭuguḻi, பெ. (n.)

   பல்லாங்குழியில் தோற்றுநிரப்பப்படாத வெறுங்குழி; pt not file. in an indoor game. (தெ.ஆ.வ);.

     [மூடு+குழி]

மூடுசன்னி

 மூடுசன்னி mūṭusaṉṉi, பெ.(n.)

   ஒரு வகை இசிவு (சன்னி); நோய்; catalepsy.

     [மூடு + சன்னி.]

மூடுசாந்து

 மூடுசாந்து mūṭucāndu, பெ.(n.)

   தளம் முதலியவற்றிற்குப் பயன்படுத்தும் அரைத்த சாந்து (யாழ்ப்.);; lime mortar used in flooring, terracing, etc.

     [மூடு + சாந்து.]

மூடுசீலை

மூடுசீலை mūṭucīlai, பெ.(n.)

   1. மூடுவதற்குப் பயன்படும் ஒருவகைத் துணி; cloth to cover medicine or medicinal vesael.

   2. போர்த்தும் ஆடை (வின்.);; wraper, cloth- cover.

     [மூடு + சீலை.]

மூடுசுரம்

 மூடுசுரம் mūṭusuram, பெ.(n.)

   காமக் காய்ச்சல்; fever due to passion.

     [மூடு + சுரம்.]

மூடுசூளை

 மூடுசூளை mūṭucūḷai, பெ. (n.)

   செங்கற் காளவாய் வகை (வின்.);; a kind of brick kiln.

     [மூடு + சூளை.]

மூடுடமரம்

 மூடுடமரம் mūḍuḍamaram, பெ.(n.)

   மரவகை; East Indian stainwood – Chloroxylon swietenia.

     [மூடு + உடைமரம்.]

மூடுதார்

 மூடுதார் mūṭutār, பெ. (n.)

மூடுசீலை (வின்.); பார்க்க;see {}.

     [மூடு + தார். தாறு → தார்.]

மூடுதிரை

 மூடுதிரை mūṭudirai, பெ.(n.)

மூடுசீலை (வின்.); பார்க்க;see {}.

     [மூடு + திரை.]

மூடுதூறு

 மூடுதூறு mūṭutūṟu, பெ.(n.)

   பிணத்தை மூடிவைப்பதற்கானப் போர்வை (பிரேதச் சீலை);; winding sheet.

     [முடு + தூறு. தூறு = புதர், காடு.]

மூடுபனி

 மூடுபனி mūṭubaṉi, பெ.(n.)

   பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடியாதபடி அடர்த்தியாகப் பெய்யும் பணி; fog, mist.

மூடுபனி கரணியமாகப் பாதை தெரியாததால் வண்டிகள் மெதுவாகச் சென்றன. நேற்று அதிகாலை மூடுபனி அதிகமாக இருந்ததனால் வழக்கமாகச் செல்ல வேண்டிய வானூர்திகள் செல்லவில்லை.

     [மூடு + பனி.]

மூடுபல்லக்கு

 மூடுபல்லக்கு mūṭuballakku, பெ.(n.)

   மூடிய பல்லக்கு; a kind of covered palanquin.

     [மூடு + பல்லக்கு]

மூடுபாறை

 மூடுபாறை mūṭupāṟai, பெ.(n.)

   வாய்க்கால், கண்மாய் மேல் மூடும் கல்; covering stone of a tunnel or a sluice.

     [மூடு + பாறை.]

மூடுமந்திரம்

மூடுமந்திரம் mūṭumandiram, பெ.(n.)

   1. கமுக்கமாக நடக்கும் செயல்பாடு; profound secret.

   2. இன்னது நடக்கிறது என்பது தெளிவாக தெரியாத, உணர்ந்து கொள்ள முடியாத நிலை; veiled activity, secrecy.

யார் அமைச்சராகப் போகிறார் என்பது மூடு மந்திரமாகவே இருக்கிறது.

     [மூடு + மந்திரம்.]

மூடுமுகப்பிறப்பு

 மூடுமுகப்பிறப்பு mūṭumugappiṟappu, பெ.(n.)

   முகத்தில் சவ்வு மூடிப்பிறக்கை (குல்லா யிட்டுப் பிறத்தல்);; birth of child with a piece of the amneolic membrane, occassionally covering its face like a veil being born with a caul.

     [மூடு+முகம்+பிறப்பு]

மூடுர்

 மூடுர் mūṭur, பெ. (n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Wandiwash Taluk.

     [முடுவல்-மூடு:ஊர்]

மூடுவழி

 மூடுவழி mūṭuvaḻi, பெ.(n.)

   கோட்டை முதலியவற்றில் கட்டடத்தால் மூடிக் காக்கப்பட்ட வழி (கட்டட.நாமா.);; subterranean passage, as in a fort.

     [மூடு + வழி.]

மூடை

மூடை mūṭai, பெ.(n.)

   பொதி, பண்ட மூட்டை; sack, sack-load, pack.

     “பொதிமூடைப் போரேறி” (பட்டினப்.137);.

     “மனைக்குவைஇய கறிமூடையாற்” (புறநா.343:3);.

   2. மிகச் செறிந்த கூலக் கோட்டை; packed bundle, as of paddy.

     “கடுந்தெற்று மூடை ” (புறநா.285);.

   3. கூலக் குதிர்; a large receptacle for grains.

     “கடுந்தெற்று மூடையின்” (பொருந.245);.

   தெ. முட;க. மூடெ;ம. மூட.

     [முள் → முள் → மூட்டு → மூட்டை → மூடை.]

மூட்கு

மூட்கு1 mūṭkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   அகப்பையால் எடுத்தல் (இ.வ.);; to ladle out, as rice from a pot.

     [மூழ்கு-தல் → மூட்கு-தல்.]

 மூட்கு2 mūṭkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   சிக்கலை விடுவித்தல் (இ.வ.);; to unravel, to free, as from an encumbrance.

     [மீள்-தல் → மூள்-தல் → மூட்கு-தல்.]

மூட்சி

மூட்சி mūṭci, பெ.(n.)

   சினமிகுதி; violent temper;rage.

     “மூட்சியிற் கிழித்த வோலை” (பெரியபு.தடுத்தாட்.56);.

     [முள் → மூட்சி. மூள்-தல் = சினம் மிகுதல்.]

மூட்டங்கட்டு

மூட்டங்கட்டு1 mūṭṭaṅgaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மாழை (உலோக); உருக்கக் குழி யுண்டாக்குதல் (வின்.);; to make a pit or cavity to serve as a crucible for melting metals.

   2. முகில் ஒருங்கு சேர்தல்; to gather, as clouds.

முகில் மூட்டங் கட்டுகிறது.

     [மூட்டம் + கட்டு-தல்.]

 மூட்டங்கட்டு2 mūṭṭaṅgaṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   1. மண் முதலியவற்றால் மூடுதல் (இ.வ.);; to cover with mud etc., as a corpse in the funeral pyre.

   2. ஆயத்தப்படுத்துதல், ஒழுங்கு பண்ணுதல், தக்க திறமையுடன் இருத்தல்; to prepare, fit, arrange.

   3. தொடங்குதல் (வின்.);; to set going, commence as an undertaking.

     [மூட்டம் + கட்டு-தல்.]

மூட்டங்கலை

மூட்டங்கலை1 mūṭṭaṅgalaidal,    4 செ.கு.வி.(v.i.)

   வானம் வெளிவாங்குதல்; to release the rain cloud.

     [மூட்டம் + கலை-தல்.]

 மூட்டங்கலை2 mūṭṭaṅgalaidal,    4 செ.குன்றாவி.(v.t.)

   மூடியுள்ள மூட்டத்தை நீக்குதல் (வின்.);; to break open or break up, as a covering or coating of mud.

     [மூட்டம் + கலை-த்தல்.]

மூட்டம்

மூட்டம்1 mūṭṭam, பெ.(n.)

   முகில், புகை போன்றவை பெருமளவில் திரண்டிருத்தல்; thick mass of clouds, smoke, etc.

முகில் மூட்டம் ஞாயிறு ஒளியை மறைத்திருந்தது. பனி மூட்டத்துக்குள் சிக்கி வழி தெரியாமல் திண்டாடினோம்.

     [மூடு → மூட்டம்.]

 மூட்டம்2 mūṭṭam, பெ.(n.)

   1. மூடியிருப்பது (சது.);; which is covered.

   2. உலை முகம் (யாழ்.அக.);; furnace.

   3. மூடுதழல்; smouldering fire.

   4. மூடிய தவசக் குவை; heap of corn protected by a cover of straw and mud.

   5. மகளிர் மகபேறுக் காலத்திற்குப் பின்னும் அடுத்து வரும் மாதவிடாய்க்கு முன்னுமுள்ள காலம்; interval between a woman’s delivery and the first subsequent menstruation.

அவள் மூட்டத்திலேயே கருக்கொண்டாள் (இ.வ.);.

    6. விறகு (யாழ்.அக.);; fuel.

   7. சொக்கப்பனை (வின்.);; bon fire.

   8. ஆயத்தம்; readiness.

மூட்டம் பண்ணுகிறான் (வின்.);.

   10. கம்மக் கருவி வகை (யாழ்.அக.);; a smith’s tool.

     [முடு → மூட்டம்.]

 மூட்டம்3 mūṭṭam, பெ.(n.)

   மூளல்; kindling fire (சாஅக.);.

மூட்டம்பண்ணு-தல்

மூட்டம்பண்ணு-தல் mūṭṭambaṇṇudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஒரு செயல் செய்வதற்கு அணியப்படுத்துதல் (வின்.);; to prepare, as for a journey.

     [மூட்டம் + பண்ணு-தல்.]

மூட்டம்பிரி-த்தல்

மூட்டம்பிரி-த்தல் mūṭṭambirittal,    4 செ. குன்றாவி.(v.t.)

மூட்டங்கலை-தல் (வின்.); பார்க்க;see {}.

மூட்டம்பொதி-தல்

மூட்டம்பொதி-தல் mūṭṭambodidal,    4 செ. குன்றாவி. (v.t.)

மூட்டங்கட்டு-தல், 3 பார்க்க;see {}, 3.

     [மூட்டம் + பொதி-தல்.]

மூட்டம்போடு-தல்

மூட்டம்போடு-தல் mūṭṭambōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   மரக்கட்டளைகளை அடுக்கி தீயிட்டுக் கொளுத்திக் கரி உண்டாக்குதல்; to assemble the wooden logs for charred wood.

     [மூட்டம் + போடு-தல்.]

தென்தமிழ் நாட்டில் குறிப்பாக மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மானாவாரிப் பகுதி மிகுந்திருப்பதால் அங்கு வேலிக்காத்தான் எனும் செடி மரமாகவும் செடியாகவும் வளர்ந்து காணப்படும். பயிர்த் தொழில் இல்லாத வேனிற்காலங்களில் இவற்றை வெட்டி துண்டுகளாக்கி மொத்தமாக அடுக்கி வைத்துச் சருகு முதலியவற்றால் மூடி மண்ணால் பூசி தீயிட்டு எரிப்பர். தீ கொழுந்து விட்டு எரியாவண்ணம் நீரால் அணைத்துப் புகை மட்டும் வரும்படி செய்தால், மரத்துண்டுகளனைத்தும் கரியாகி விடும். இது பல்வேறு வகையில் பயன்படும்.

மூட்டாங்கயிறு

 மூட்டாங்கயிறு mūṭṭāṅgayiṟu, பெ.(n.)

   மரக்கலத்தைக் கட்டுதற்குரிய கயிறு; catamaran, boat tieing rope.

     [பூட்டாங்கயிறு → மூட்டாங்கயிறு.]

மூட்டாதஅக்கினி

 மூட்டாதஅக்கினி mūṭṭātaakkiṉi, பெ.(n.)

   காமத்தீ; fire of passion (சா.அக.);.

மூட்டாள்

 மூட்டாள் mūṭṭāḷ, பெ.(n.)

   மூட்டை தூக்கி; porter.

சீட்டாளுக் கொரு மூட்டாளா? (உ.வ.);.

க. மூடேயாளு

     [மூட்டு → மூட்டை + ஆள்.]

மூட்டி

 மூட்டி mūṭṭi, பெ.(n.)

ஆண்கள் உடுத்தும்சாரம்

 lungi.

மறுவ. வளியன்

     [மூட்டு-மூட்டி]

மூட்டு

மூட்டு1 mūṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. தீ உண்டாக்குதல்;   அடுப்பில் நெருப்பு பற்ற வைத்தல்; make fire kindle;fire in the hearth.

     “கல்லா உமணர்க்குத் தீமூட் டாகும்” (அகநா.257:17);.

     “மூட்டிய தீ” (நாலடி, 224);.

தீ மூட்டி குளிர் காய்ந்தனர். அடுப்பை மூட்டி உலை வைத்தல்.

   2. சிரிப்பு, சினம் முதலியவற்றை உண்டாக்குதல் அல்லது ஏற்படுத்துதல்; make some one laugh or angry;create mischief.

தண்ணீர் குடிக்கும் போது சிரிப்பு மூட்டாதே! உங்களுக்குள் வாய்ச்சண்டை மூட்டி விட்டது யார்?

     [முள் → மூட்டு → மூட்டு-தல்.]

 மூட்டு2 mūṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

    சணற்பை, துணி முதலியவற்றில் இரு விளிம்புகள் இணையும்படி சேர்த்தல்;   சேர்த்துத் தைத்தல்; bring closer;sew together.

மிக எளிமையாக நெல் கூலத்தை மூட்டினான். நிறவேட்டி (லுங்கி);யை மூட்டித் தைத்துத்தர ஐந்து ரூபாயா?

     [முள் → மூட்டு → மூட்டு-தல்.]

 மூட்டு3 mūṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. ஒன்றைச் செலுத்துதல்; to cause to enter, to put into.

     “கடுபுகு கதிர் மூட்டி” (கலித்.8);.

   2. பொருந்துதல், கூடுதல்; to join, link.

     “கால் கொடுத்தெலும்பு மூட்டி” (தேவா.631:3);.

   3. பகையை ஏற்படுத்தி சண்டைக்குத் தூண்டி விடுதல்; to stimulate, as a quarrel, to stir up, as feelings.

அவனைப் பற்றி இவனிடத்தில் மூட்டினான்.

   4. தைத்தல்; to stitch, sew together.

   5. மிகைப்படுத்துதல் (வின்.);; to increase.

இருவருக்கும் நன்றாய் மூட்டிவிட்டு விட்டான் (உ..வ.);.

தெ. முட்டிஞ்சு;ம. மூட்டுக.

     [முள் → மூட்டு (பி.வி.); → மூட்டு-தல்.]

 மூட்டு4 mūṭṭu, பெ. (n.)

   உடல், அணி முதலியவற்றின் பொருத்து; joint, articulation.

     “கவசத்தையும் மூட்டறுத்தான்” (கம்பரா. சடாயுவ.113);.

   2. சந்திப்பு (யாழ்.அக.);; junction.

   3. குதிரைக் கடிவாளம் (பிங்.);; bridle, bit.

   4. கோள் (யாழ்.அக.);; tale – bearing.

   5. கட்டு; tie, bond.

     “வன்றாண் மிசைப் பிணித்த வல்லிகளின் மூட்டறுத்து” (கந்தபு.மீட்சிப்.8);.

   6. கட்டப்பட்டது (வின்.);; that which is tied.

   7. தையல்; stitch.

   8. மனவெழுச்சி (வின்.);; excitement provocation.

    9. வாழையிலைக் கற்றை: bundle of banana leaves.

மூட்டுமூட்டாய்ப் பிரிந்து போய்விட்டது (உ.வ.);.

    10. பொத்தகக் கட்டடப் பகுதி; binding of books.

   11. எலும்புகளின் இணைப்பு; bone joint.

முழங்கால் மூட்டு விலகியிருக்கலாம் என்று முதலுதவி அளித்தவர் கூறினார்.

ம., தெ. மூட்டு;க. மூட்டை.

     [முள் → மூட்டு.]

 மூட்டு5 mūṭṭu, பெ.(n.)

   வளையம், தோல், சாட்டைவார் மூன்றும் சேர்ந்த மதங்கத்தின் பகுதி (கலைமகள்.xii, 399);; comprising the {} and {}.

     [மூள் → மூட்டு.]

 மூட்டு6 mūṭṭu, பெ.(n.)

   1. மூடுகின்ற பொருள்; that which forms a cover, coating, wrapper.

     “மாலையை மூட்டாகப் பெய்து

வெயிலை மறைத்து” (சீவக.1267, உரை);.

   2. மூட்டம், 1 (வின்.); பார்க்க;see {}, 1.

     [முள் → மூட்டு.]

மூட்டுக்கயிறு

 மூட்டுக்கயிறு mūṭṭukkayiṟu, பெ.(n.)

நெசவு ஆலையில் பாவு கீழே விழாமல் இருக்கக் கட்டியுள்ள கயிறு,

  rope tied, to prevent the warp falling down.

     [மூட்டு + கயிறு.]

மூட்டுக்காயம்

 மூட்டுக்காயம் mūṭṭukkāyam, பெ.(n.)

   உடற்பொருத்திலுள்ள காயம் (C.E.M.);; wound at a joint.

     [மூட்டு + காயம்.]

மூட்டுக்குட்டி

 மூட்டுக்குட்டி mūṭṭukkuṭṭi, பெ. (n.)

   பெண் ஆட்டிக்குட்டி; young of she-goat.

     “மூடும் நாகும் யாடல பெறா” (தொல்மரபி);.

     [மூடு+குட்டி]

மூட்டுச்சாட்டு

மூட்டுச்சாட்டு mūṭṭuccāṭṭu, பெ.(ո.)

   1. கோள் (யாழ்ப்.);; scandal;

 backbiting.

   2. சந்து (இ.வ.);; joint.

     [மூட்டு + சாட்டு.]

மூட்டுச்சூலை

 மூட்டுச்சூலை mūṭṭuccūlai, பெ.(n.)

மூட்டுச்சூலைவளி பார்க்க;see {}.

     [மூட்டு + சூலை.]

மூட்டுச்சூலைவளி

 மூட்டுச்சூலைவளி mūṭṭuccūlaivaḷi, பெ.(n.)

   சூலை நோய் வகை; inflammation of the joints.

மறுவ. மூட்டுச்சூலைவாயு

     [மூட்டுச்சூலை + வளி.]

மூட்டுச்சேலை

 மூட்டுச்சேலை mūṭṭuccēlai, பெ.(n.)

   மூட்டித் தைத்த புடைவை (இ.வ.);; patched sareе.

     [முள் → மூட்டு + சேலை.]

மூட்டுத்தாபனரோகம்

 மூட்டுத்தாபனரோகம் mūṭṭuttāpaṉarōkam, பெ.(n.)

   மூட்டுகள் வீங்கும் ஒருவகை நோய்; inflammation of the joints – Acroarthiritis (சா.அக.);.

     [மூட்டு + Skt. தாபனரோகம்.]

மூட்டுத்திமிரூதை

 மூட்டுத்திமிரூதை mūṭṭuttimirūtai, பெ.(n.)

   மூட்டிற் பிடிப்பு உண்டாக்கும் ஒருவகை ஊதை நோய் வகை (M.L.);; anchylosis of joint.

     [மூட்டு + திமிர் + ஊதை.]

மூட்டுத்திமிர்வாயு

 மூட்டுத்திமிர்வாயு mūṭṭuttimirvāyu, பெ.(n.)

மூட்டுத்திமிரூதை பார்க்க;see {}.

மூட்டுநழுவல்

 மூட்டுநழுவல் mūṭṭunaḻuval, பெ.(ո.)

   உடற்பொருத்துப் பிசகல் (M.L.);; dislocation of a joint.

மறுவ. மூட்டுப்பிசகல்.

     [மூட்டு + நழுவல்.]

மூட்டுப்பூச்சி

மூட்டுப்பூச்சி1 mūṭṭuppūcci, பெ.(n.)

   படுக்கைக்கட்டில், நாற்காலி முதலியவற்றின் இடுக்குகளில் இருந்து கொண்டு மாந்தனின் அரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒருவகைப் பூச்சி; bed-bug – Cimex lectularius.

     [மூடு → மூட்டு + பூச்சி. மூடு = முகடு.]

 மூட்டுப்பூச்சி2 mūṭṭuppūcci, பெ.(n.)

   கம்பளிப்பூச்சி (G.S.A.D.I.126);; hairy caterpillar.

     [மூடு → மூட்டு + பூச்சி.]

மூட்டுப்பூச்சி பார்க்க;see __.

 மூட்டுப்பூச்சி பார்க்க;see __.  mūṭṭuppūccipārkka,      [முகடு → மூடு.]

மூட்டுப்பூச்சிமருந்து

 மூட்டுப்பூச்சிமருந்து mūṭṭuppūccimarundu, பெ.(n.)

   கீரைப்பூச்சி மருந்து; vermifuge – for bugs (சா.அக.);.

     [மூட்டுப்பூச்சி + மருந்து.]

மூட்டுவலி

 மூட்டுவலி mūṭṭuvali, பெ.(n.)

   மூட்டில் உண்டான துன்பம்; pain in the joints – Arthralgia, arthro dynia.

     [மூட்டு + வலி.]

மூட்டுவாய்

மூட்டுவாய் mūṭṭuvāy, பெ.(n.)

   பொருத்து (இலக்.வி.640, உரை, பக்.643);; joint, clasp.

     [மூட்டு + வாய்.]

மூட்டுவிலகல்

 மூட்டுவிலகல் mūṭṭuvilagal, பெ.(n.)

மூட்டுநழுவல் (இங்.வை.); பார்க்க;see {}.

     [மூட்டு + விலகல்.]

மூட்டை

மூட்டை1 mūṭṭai, பெ.(n.)

   1. தவசம் முதலியவை நிரப்பப்பட்டு கட்டப்பட்ட அல்லது தைக்கப்பட்ட சணற்பை; sack holding grain etc.

கூடத்தில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

   2. எடுத்துச் செல்ல எளிமையாக இருக்கக் கட்டி வைத்திருப்பது அல்லது பொதிந்து வைத்திருப்பது; anything which is bundled up so as to be carried easily.

அழுக்குத் துணி மூட்டையை மிதிவண்டியில் வைத்திருந்தான். சிறுவர்கள் நூல்கள் அடங்கிய மூட்டையைத் தூக்க முடியாமல் திணறுகிறார்கள்.

   3. சணற் பையின் கொள்ளளவாகிய ஏறக்குறைய இருபத்து நான்கு மரக்காலைக் குறிப்பிடுவது; a term referring to the capacity of a sack, approximately twenty four measures.

எத்தனை மூட்டை நெல் விளைந்தது. அரிசி மூட்டை என்ன விலை?

    4. உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு அல்லது பொட்டணம்; bundle, that which is tied up, bag, wallet, satchel.

இந்தத் துணிகளையும் மூட்டையில் வைத்துக்கட்டு (உ.வ.);.

   5. பொதி; load carried in a sack, bale.

அரிசி மூட்டைகளையெல்லாம் வண்டியிலேற்றிக் கொண்டு போய்விட்டார்கள்.

   6. 48 பட்டணம்படி கொண்ட ஒரு கோணி அளவு; a large measure of capacity, bag, as of rice, containing generally 48 Madras measures (G.Tj.P.I.134);.

   7. பெரும் பொய் (இ.வ.);; great lie.

அவன் மூட்டை யளக்கிறான்.

ம. மூட்ட;தெ. மூட;க. மூடே.

     [முள் → மூள் → மூட்டு → மூட்டை = கட்டு, பொட்டணம், பொருள் நிறைந்த கோணி (தேவநேயம் 12:102);]

 மூட்டை2 mūṭṭai, பெ.(n.)

மூட்டுப்பூச்சி1 பார்க்க;see {}.

     “மூட்டை கலம் புழுதி முக்கலம்” (தமிழ்நா.பக்.228);.

ம. மூட்ட.

     [மூடு → மூட்டை.]

மூட்டைகட்டு-தல்

மூட்டைகட்டு-தல் mūṭṭaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. படிப்பு, வணிகம் முதலியவற்றை இனித் தொடர்வதில் பயன் இல்லை என்று நிறுத்துதல்; stop or discontinue studies, business, etc.

படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு அப்பாவோடு சேர்ந்து வணிகத்தைக் கவனித்தான்.

   2. ஒர் இடத்திலிருந்து வெளியேறுதல்; quit leave.

இனிமேல் இங்கு உனக்கு வேலை இல்லை, மூட்டைகட்டு!

     [மூட்டை + கட்டு-தல்.]

மூட்டைக்காரன்

மூட்டைக்காரன் mūṭṭaikkāraṉ, பெ.(n.)

   1. பொதி சுமக்கும் தொழிலாளி; porter.

     “மூட்டைக்காரனுக்கு முழங்காலிலே அறிவு” (பழ.);.

    2. பெரும் பொய் கூறுவோன் (இ.வ.);; great liar.

மறுவ. மூட்டைத்தூக்கி

     [மூட்டை + காரன்.]

மூட்டைக்கொல்லி

 மூட்டைக்கொல்லி mūṭṭaikkolli, பெ.(n.)

   சிறுதும்பை; small dead nettle, a kind of plant (சா.அக.);.

மூட்டைத்தூக்கி

மூட்டைத்தூக்கி1 mūṭṭaittūkki, பெ.(n.)

   முடக்கற்றான்; palsy curer – Cardiospermum halicacabum (சா.அக.);.

 மூட்டைத்தூக்கி2 mūṭṭaittūkki, பெ.(n.)

   பொருள்களைத் தூக்கிச் செல்லுங் கூலியாள்; porter.

     [மூட்டை + தூக்கி.]

மூட்டைநாறி

 மூட்டைநாறி mūṭṭaināṟi, பெ.(n.)

   ஒம வல்லி; a plant-Country borage (சா.அக.);.

மூட்டைப்பூச்சி

மூட்டைப்பூச்சி mūṭṭaippūcci, பெ.(n.)

மூட்டுப்பூச்சி1 பார்க்க;see {}.

     “மூட்டைப் பூச்சியைப் போல கடிக்கிறாயே” (பழ.);.

     [முட்டை + பூச்சி.]

மாந்தனின் அரத்தத்தை உறிஞ்சி இடுக்குகளில் வாழும் சிறு பூச்சி.

மூட்டைமுடிச்சு

 மூட்டைமுடிச்சு mūḍḍaimuḍiccu, பெ.(n.)

   பயணத்திற்கான பொருள்; bag and baggage.

பாட்டியின் மூட்டை முடிச்சுகளை வைக்கவே வண்டியில் இடம் போதவில்லை.

     [மூட்டை + முடிச்சு.]

மூட்டையவிழ்-த்தல்

மூட்டையவிழ்-த்தல் mūṭṭaiyaviḻttal,    4 செ.கு.வி. (v.t.)

மூட்டைவிடு-தல் (இ.வ.); பார்க்க;see {}.

     [மூட்டை + அவிழ்-த்தல்.]

மூட்டைவிடு-தல்

மூட்டைவிடு-தல் mūḍḍaiviḍudal,    20 செ. கு.வி.(v.i.)

   பொய்ச் செய்தி கூறுதல் (இ.வ.);; to give out a fictitious account;to start false rumours.

     [மூட்டை + விடு-தல்.]

 மூட்டைவிடு-தல் mūḍḍaiviḍudal, செ.கு.வி. (vi.)

   பொய் புளுகுதல்; to gossip.

     [மூட்டை+விடு-]

மூணாங்குழி

 மூணாங்குழி mūṇāṅguḻi, பெ. (n.)

இறப்புச் சடங்கின்போது, பால் தெளிக்கும் இடம்:

 a place to conduct the third day death rite.

த.வ. மூன்றாம்குழி

     [மூன்றாம்+குழி-மூன்றாங்குழி-மூணாங்குழி (கொ.வ.);]

மூணான்

 மூணான் mūṇāṉ, பெ.(n.)

   கொடிய நஞ்சு வாய்ந்த மீன்; a highly poisionous fish.

இம்மீன் கடற்பரப்பில் பஞ்சு போல மிதக்கும்.

     [p]

மூணாம்சேத்தி

 மூணாம்சேத்தி mūṇāmcētti, பெ. (n.)

   மன்னார்குடி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Mannargudi Taluk.

     [மூன்றாம்+செய்-செய்த்தி-சேத்தி]

மூணுகட்டை

 மூணுகட்டை mūṇugaṭṭai, பெ. (n.)

   ஒன்றுமுதல் ஆறு வரையிலான எண்கள் எழுதப்பெற்ற அட்டையும், மூன்று கட்டைகளும் பயன்படுத்தி ஆடப்படும் சூது விளையாட்டு; a dice play.

     [மூன்று+கட்டை]

மூண்டன்

 மூண்டன் mūṇṭaṉ, பெ.(n.)

   மிளகு (மலை.);; black pepper.

மூண்டாணி

 மூண்டாணி mūṇṭāṇi, பெ.(n.)

மூன்று வீசம் (நாஞ்.); பார்க்க;see {}.

     [முண்டாணி → மூண்டாணி.]

மூதணங்கு

 மூதணங்கு mūtaṇaṅgu, பெ.(n.)

   காளி (துர்க்கை); (சூடா.);; Durga.

     [மூது + அணங்கு.]

மூதண்டகசாயம்

 மூதண்டகசாயம் mūtaṇṭagacāyam, பெ.(n.)

   அறுகம் வேரும் மிளகும் சேர்த்துக் காய்ச்சிய கருக்கு நீர் (கஷாயம்);; decoction of pepper and the internodes of the dub-grass – Cynodon dactylon.

     [மூதண்டம் + கசாயம்.]

மூதண்டகன்னி

மூதண்டகன்னி mūtaṇṭagaṉṉi, பெ.(n.)

   1. தூதுவளை; a prickly climber – Solanum trilobatum.

   2. பிரமியிலை; bramia plant – Gratiola moniera (சா.அக.);.

மூதண்டக்கொடி

 மூதண்டக்கொடி mūtaṇḍakkoḍi, பெ.(n.)

   சீந்திற்கொடி; moon creeper- Tinosphora Cordifolia (சா.அக.);.

மூதண்டசத்தி

 மூதண்டசத்தி mūtaṇṭasatti, பெ.(n.)

   கந்தக நஞ்சு; a kind of arsenic.

மூதண்டசித்திச்சி

 மூதண்டசித்திச்சி mūtaṇṭasittissi, பெ.(n.)

   கரூமத்தை; a black or blue variety of dhatura (சா.அக.);.

மூதண்டசூதகளிகம்

 மூதண்டசூதகளிகம் mūtaṇṭacūtagaḷigam, பெ.(n.)

   பிரண்டை; a climber – Vitis quadrangularis (சா.அக.);.

மூதண்டமூலி

 மூதண்டமூலி mūtaṇṭamūli, பெ.(n.)

   வில்வம்; a sacred tree – bael tree – Aegle marmelous (சா.அக.);.

மூதண்டம்

மூதண்டம்1 mūtaṇṭam, பெ.(n.)

   1. முட்டை வடிவமான பேருலகம் (பிரமாண்டம்);; the universe, believed to be egg-shaped.

     “உந்திக்கமலம் விரிந்தால் விரியும்…. இம் மூதண்டமே” (அஷ்டப்.திருவாங்க.மா.19);.

   2. பேருலகத்தின் கூரை(பிரமாண்டத்தின் முகடு); (பிங்.);; roof of the universe.

     [மூது + Skt. அண்டம்.]

 மூதண்டம்2 mūtaṇṭam, பெ.(n.)

   1. கொம்மட்டி; a melon.

   2.அறுகம் வேர்; dub -grass.

   3. சரக்கொன்றை; a tree – Cassia fistula.

   4. பெண் கருவகத்தில் உண்டாகும் சினை; ovum (சா.அக.);.

மூதம்

 மூதம் mūtam, பெ.(n.)

   விந்து (இந்திரியம்); (சங்.அக.);; semen.

மூதரி-த்தல்

மூதரி-த்தல் mūtarittal,    4 செ.குன்றாவி. (v.t.)

மூதலி-த்தல் பார்க்க (உ.வ.);;see {}.

     [மூதலி-த்தல் → மூதரி-த்தல்.]

மூதறி – தல்

மூதறி – தல் mūdaṟidal,    2 செ.கு.வி.(v.i.)

   1. அறிவு முதிர்தல்; to be ripe in wisdom.

   2. பழமையான செய்திகளை அறிதல்; to know the past.

     “மூதறியு மம்மனை மார் சொல்லுவார்” (திவ்.இயற்.சிறிய.ம.19);.

     [முது → மூது → மூதறி → மூதறி-தல்.]

மூதறிஞர்

 மூதறிஞர் mūtaṟiñar, பெ.(n.)

   அகவை நிரம்பிய அறிஞர், பெரும் அறிஞர்; scholar of great repute.

நேற்று மூதறிஞர் இராசாசி அவர்கள் வருகை தந்தார்.

     [மூது + அறிஞர்.]

மூதறிவாளன்

மூதறிவாளன் mūtaṟivāḷaṉ, பெ.(n.)

   அறிவு முதிர்ந்தோன்; man of ripe wisdom.

     “மூதறிவாளர் முதல்வன்” (திவ்.பெரியாழ். 5. 2:2);.

     [முது → மூது → மூதறி → மூதறிவாளன்.]

மூதறிவு

 மூதறிவு mūtaṟivu, பெ.(n.)

   மெய்யறிவு, பேரறிவு; mature understanding, ripe wisdom.

     [மூது + அறிவு.]

மூதலி-த்தல்

மூதலி-த்தல் mūtalittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மெய்ப்பித்தல், நிறுவுதல் (நிரூபித்தல்);; to establish with evidence to confront with proof.

     “அவன் படியை நெஞ்சுக்கு மூதலிக்கிறார்” (ஈடு, 1. 10:5);.

தெ. மூதலிந்ட்சு;க. மூதலிசு.

மூதலிப்பி-த்தல்

மூதலிப்பி-த்தல் mūtalippittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   மெய்ப்பித்தல்; to cause to prove.

மூதா

மூதா1 mūtā, பெ.(n.)

   கிழ ஆன் (பசு, கிழமாடு);; aged cow.

     “வளைதலை மூதா” (பதிற்றுப். 13:6);.

     [முதிய + ஆ – மூதா = முதியமாடு.]

 மூதா2 mūtā, பெ.(n.)

   தம்பலப் பூச்சி (இந்திர கோபம்);; the cochineal insect.

மறுவ. மூதாய்.

     [முதாய் → மூதா.]

மூதாக்கள்

 மூதாக்கள் mūtākkaḷ, பெ.(n.)

மூதாட்கள் (சங்.அக.); பார்க்க;see {}.

மூதாட்கள்

 மூதாட்கள் mūtāṭkaḷ, பெ.(n.)

   முன்னோர் (யாழ்.அக.);; forefathers, ancestors.

     [மூது + ஆள் – மூதாள் → மூதாட்கள்.]

மூதாட்டி

மூதாட்டி mūtāṭṭi, பெ.(n.)

   1. அகவை முதிர்ந்த பெண், முதியவள்; respectable old woman.

     “நரை மூதாட்டி ஒருத்தியை” (மணிமே.20:40);.

     [மூதாளன் (ஆ.பா.); → மூதாட்டி (பெ.பா.);.]

மூதாதை

மூதாதை mūtātai, பெ. (n.)

   பாட்டன், தாத்தா, தந்தையைப் பெற்ற தந்தை, தாயைப் பெற்றத் தந்தை; grand father.

     “மூதாதை மாதாளும் பாகத்தெந்தை” (திருவாச.5:30);.

     [முது(மை); + தாதை.]

மூதாதையர்

 மூதாதையர் mūtātaiyar, பெ.(n.)

   தன் மரபில் அல்லது குடிவழியில் முன் வாழ்ந்தோர்; ancestors.

நாகரிகத்தின் ஒவ்வொரு படியையும் நம் மூதாதையர் கடந்து வந்திருக்கின்றனர்.

     [மூதாதை → மூதாதையர்.]

மூதானந்தம்

மூதானந்தம் mūtāṉandam, பெ.(n.)

   1. மாபெரும் மகிழ்ச்சி; Supreme Bliss.

     “மூதானந்த வாரிதியே” (அருட்பா, 5, முறையிட்ட.9);.

   2. தன் கணவன் இறந்த போதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பை நினைந்து கண்டோர் கூறும் புறத்துறை (தொல்.பொருள்.79);; theme in which the bystanders describe the great love of a wife dying immediately on her husband’s death.

மறுவ. பேரானந்தம்

     [மூது + Skt.ஆனந்தம்.]

மூதாய்

மூதாய்1 mūtāy, பெ.(n.)

   பாட்டி, தாயைப் பெற்றத் தாய், தந்தையைப் பெற்றத் தாய்; grand mother, maternal, and paternal grand-mother.

     [மூது + ஆய்.]

 மூதாய்2 mūtāy, பெ.(n.)

   தம்பலப்பூச்சி; cochineal insect.

     [ஈயன்மூதாய் → மூதாய்.]

மூதாளன்

மூதாளன் mūtāḷaṉ, பெ.(n.)

   முதியவன், அகவை முதிர்ந்தவன்; aged person.

     “நரை மூதாளர் நாயிடக் குழிந்த” (புறநா.52);.

     “மூதாளர் கைபிணி விடுத்து” (அகநா. 366:10);.

     [மூது + ஆள் – மூதாள் → முதாளன்.]

மூதிகா

 மூதிகா mūtikā, பெ.(n.)

மூதிக்கம் பார்க்க;see {}.

மூதிக்கம்

 மூதிக்கம் mūtikkam, பெ.(n.)

   சிவனார் வேம்பு (மலை.);; wiry indigo.

மூதிசகம்

 மூதிசகம் mūtisagam, பெ.(n.)

மூதிக்கம் (மூ.அ.); மூதிக்கம்;see {}.

மூதிதம்

 மூதிதம் mūdidam, பெ.(n.)

   எருக்கிலை; leaf of a plant calotrophis, Gigantia (சா.அக.);.

மூதின்முல்லை

மூதின்முல்லை mūtiṉmullai, பெ.(n.)

   மறக்குடியிற் பிறந்த ஆடவர்க்கேயன்றி அக்குடியில் உள்ள மகளிர்க்கும் மறம் (வீரம்); உண்டாதலைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு.வெ.8:21);; theme describing the spirit of valour manifested among women of warrior tribes.

     [மூதின் + முல்லை.]

மூதியோலை

 மூதியோலை mūtiyōlai, பெ. (n.)

   முகரியோலை (நாஞ்.);; uneven palm-leaf.

மறுவ. முறியோலை.

     [மூறியோலை → மூதியோலை.]

மூதிரம்

 மூதிரம் mūtiram, பெ.(n.)

   அவரை; a twiner – Dolichor lablab (சா.அக.);.

மூதிரி

மூதிரி1 mūtirittal,    4 செ.குன்றாவி. (v.t.)

மூதலி-த்தல் பார்க்க;see {}.

     [மூதலி-த்தல் → மூதிரி-த்தல்.]

 மூதிரி2 mūtiri, பெ.(n.)

   1. கிழமாடு, எருது; aged ox.

   2. கிழ எருமை; aged buffalo.

   3. எருமை; buffalo.

     [முது → மூது → மூதிரி.]

மூதிரை

மூதிரை mūtirai, பெ.(n.)

   1. ஆறாவது விண்மீனான யாழ் (திருவாதிரை); (பிங்.);; the sixth naksatra.

   2. சிவபிரான் (சூடா.);; god {}.

மூதிற்பெண்டிர்

மூதிற்பெண்டிர் mūtiṟpeṇṭir, பெ.(n.)

   மறக்குடி மகளிர்; women of warrior – tribes.

     “மூதிற்பெண்டிர் கசிந்தழ நாணி” (புறநா.19);.

     [மூதில் + பெண்டிர்.]

மூதில்

மூதில் mūtil, பெ.(n.)

   1. பழங்குடி; ancient family.

   2. பழைய மறக்குடி; ancient warrior – tribe.

     “தமியன் வந்த மூதிலாள” (புறநா.284);.

     “மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி” (நற்.367:6);.

     “சிவந்த காந்தண் முதல் சிதைமூதிற்” (பதிற்று.15:11);.

     [முது → மூது → மூதில்.]

மூது

மூது1 mūtu, பெ.(n.)

   முதுமை; oldness, elderliness.

     “மூதானவன் முன்னர் முடிந்திடும்” (கம்பரா.பிராட்டி களங்கான்.18);.

க. மூதி

     [முது → மூது.]

 மூது2 mūtu, பெ.(n.)

   ஈகை (அரு.நி.);; gift.

மூதுகிரி

 மூதுகிரி mūtugiri, பெ.(n.)

   எலிப்பயறு; a pulse (சா.அக.);.

மூதுணர்-தல்

மூதுணர்-தல் mūtuṇartal,    2 செ.குன்றாவி. (v.t.)

   நன்றாக உணர்தல்; to know thoroughly, to have ripe knowledge of.

     “மூதுணர்ந்தவ ரன்றி மொழிவரோ’ (உபதேசகா.சிவபுண்.229);.

     [முது → மூது + உணர்-தல்.]

மூதுணர்ந்தோர்

 மூதுணர்ந்தோர் mūtuṇarndōr, பெ.(n.)

   அறிவு முதிர்ந்தோர் (சூடா.);; persons of ripe knowledge.

     [மூதுணர் → மூதுணர்ந்தோர்.]

மூதுணர்வு

மூதுணர்வு mūtuṇarvu, பெ.(n.)

   முதிர்ந்த அறிவு; ripe knowledge or wisdom.

     “மூதுணர்வின் மிக்கான் மதிவீடணன்” (கம்பரா.அதிகாயன்.87);.

     [மூதுணர் – → மூதுணர்வு.]

மூதுரை

மூதுரை mūturai, பெ.(n.)

   1. பழமொழி, காலம்காலமாக வழங்கிவருவதும் எடுத்துக்காட்டாகக் கூறப்படுவதுமான பெரியோர் சொல்; proverb.

     “மூழை யுப்பறியாத தென்னு மூதுரையு மிலளே” (திவ்.பெரியாழ்.37:4);.

   2. பிற்கால ஒளவையார் இயற்றியதாகக் கருதப்படும் அற நூல்; a didactic poem attributed to {}.

   3. மறை (வேதம்);; the {}.

     “முற்று மோர்ந்தவர் மூதுரை யர்த்தமே” (தாயு. பொன்னைமாதரை.51);.

     [முது → மூது + உரை.]

மூதுவர்

மூதுவர் mūtuvar, பெ.(n.)

   முன்னோர்; elders, ancients.

     “விண்ணாட்டவர் மூதுவர்” (திருவிருத்.2);.

     [முது → மூது → மூதுவர்.]

மூதூர்

மூதூர் mūtūr, பெ.(n.)

   1. பழைய ஊர்; ancient village.

     “பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்ட மர்ந்தாங்கு” (சிலப்.14 : 82);.

      “செறிந்தசேரிச் செம்மண் மூதூர்” (அகநா.15:7);.

      “மல்லன் மூதூர் வயவேந்தே” (புறநா.18:12);.

      “நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்” (நற்.45:4);.

      “ஆதி யருமன் மூதூ ரன்ன” (குறுந்.293:4);.

    2. திருவள்ளூர் மாவட்டத்தில் கடம்பத்துர் ஊராட்சியில் உள்ள ஊர்; a Village in Tiruvalluvar District.

இப்பகுதியிலுள்ள ஊர்களுள் மிகவும் பழமையான காலத்தில் தோன்றியதால் மூதூர் எனப் பெற்றது போலும்.

     [மூது + ஊர்.]

மூதேவி

மூதேவி mūtēvi, பெ.(n.)

   1. திருமகளுக்கு முந்திப் பிறந்த, தீவினைப் பயன் விளைவிப்பதாகக் கருதப்படும் பெண் தெய்வம்; goddess of Misfortune, as the elder sister of Lakshmi.

மூதேவியின் பிறந்த வீடு.

     “சீதேவியாள் பிறந்த செய்யதிருப்பாற் கடலில் மூதேவியேன் பிறந்தாள் முன்” (தனிப்பா.1, 179:1);.

   2. அருவருப்பான தோற்றம் கொண்டவள் (வின்.);; deformed person.

   3. ஆக்கங் கெட்ட சோம்பெறிப் பெண்; sloth woman.

     ‘மூதேவியடைந்து முடங்கிக் கிடக்கிறாள்’ (உ.வ.);.

   4. பெரும்பாலும் ஒரு பெண்ணைத் திட்டுவதற்குப் பயன்படுத்தும் சொல்; a word used mostly to scold a woman with.

பத்து மணி வரை தூங்காதே, மூதேவி!

     [மூ + தேவி.]

மூதேவிகொடி

 மூதேவிகொடி mūtēvigoḍi, பெ.(n.)

   மூதேவி கொடியின் சின்னமாக உள்ள காகம் (பிங்.);; crow, as the emblem on the banner of M {}.

     [மூதேவி + கொடி.]

மூதேவிபடை

 மூதேவிபடை mūtēvibaḍai, பெ.(n.)

   மூதேவியின் ஆய்தமாகவுள்ள துடைப்பம் (பிங்.);; broom, as the weapon of {}.

     [மூதேவி + படை.]

மூதேவிமூலி

 மூதேவிமூலி mūtēvimūli, பெ.(n.)

   சிறு பூளை; a plant woolly caper – Achyranthes lanata (சா.அக.);.

மூதேவியூர்தி

 மூதேவியூர்தி mūtēviyūrti, பெ.(n.)

   மூதேவியின் ஊர்தியாகிய கழுதை (பிங்.);; donkey as the vehicle of {}.

     [மூதேவி + ஊர்தி.]

மூதை

மூதை1 mūtai, பெ.(n.)

   1. வேளாண்மைச் செய்வதற்காக வெட்டித் திருத்திய காடு (அக.நி.);, பழங்கொல்லை; ground cleared of wood and prepared for tillage.

   2. மூதணங்கு பார்க்க;see {}.

     [முது → மூது → மூதை.]

 மூதை2 mūtai, கு.பெ.எ.(adj.)

   முந்தை; old, past, ancient.

     “மூதைவினை கடைக்கூட்ட “(சிலப்.9, இறுதிவெண்பா.);.

     [முது → மூது → மூதை.]

 மூதை3 mūtai, பெ.(n.)

   இசங்கு (மலை.);; mistletoe berrythorn.

மறுவ. சங்கஞ்செடி.

     [மூகை → மூதை.]

மூதைச்சுவல்

மூதைச்சுவல் mūtaiccuval, பெ.(n.)

   பழைய மேட்டு நிலம்; elevated land.

     “மூதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்” (குறுந்.204:3);.

     [மூதை + சுவல்.]

மூத்த

மூத்த mūtta, பெ.அ.(adj.)

   1. உறவு முறைச் சொற்களோடு வருகையில் முதலில் பிறந்தவர், குறிப்பிடப்படும் பலரில் முதலாவதாக அமைந்து இருப்பவர்; with kinship terms born first, elder first among many.

     “நின்று மூத்த யாக்கை யன்னநின்” (புறநா.24:27);.

     “ஐந்தலை அவிர்பொறி அரவ மூத்த” (பரிபா.19:72);.

     “மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய” (பதிற்று.22:10);.

   மூத்த மகன். மூத்த மருமகள். “மூத்தது மோழை;இளையது காளை” (பழ.);.

   2. முதன்மைப் பதவியில் இருப்பவரைக் குறிக்கையில், இருப்பவர்களில் நீண்ட காலமாகப் பணிபுரியும் அல்லது பட்டறிவுள்ள; of officials senior or experienced.

மூத்த அதிகாரிகளுடன் கலந்து முடிவு எடுக்க வேண்டும். மூத்த தலைவர்.

     [முது → மூ → முத்த.]

மூத்தகுடி

மூத்தகுடி1 mūttaguḍi, பெ.(n.)

   பழமையான குடி; ancient citizens, who have come from a respectable family.

     “கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்தகுடி” (பு.வெ. 2:14);.

     [மூத்த + குடி.]

 மூத்தகுடி2 mūttaguḍi, பெ.(n.)

   முதல் மனைவி (கோவை.);; first wife.

மூத்தகுடியிருக்க இன்னொரு முந்தானை குடி எதுக்கு (கோவை.);.

மறுவ. மூத்தாள்

     [மூத்த + குடி.]

மூத்தகுடிமகள்

 மூத்தகுடிமகள் mūttaguḍimagaḷ, பெ.(n.)

   முதல் மனைவியின் மகள் (கோவை.);; a daughter of first wife.

மறுவ. மூத்தாள் மகள்

     [மூத்தகுடி + மகள்.]

மூத்தண்ணா

 மூத்தண்ணா mūttaṇṇā, பெ.(n.)

   பெரியண்ணன், தமையன் (இ.வ.);; eldest brother.

     [மூத்த + அண்ணா.]

குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உடன் பிறந்த ஆண்மக்கள் இருக்க அதில் முதலாவதாகப் பிறந்தவனை மூத்த அண்ணா என்பர்.

மூத்ததிகாரம்

 மூத்ததிகாரம் mūddadikāram, பெ.(n.)

   தலைமை அதிகாரம் (T.A.S.);; supreme authority.

     [மு → மூத்த + அதிகாரம்.]

மூத்ததிருப்பதிகம்

மூத்ததிருப்பதிகம் mūddadiruppadigam, பெ. (n.)

   காரைக்கால் அம்மையார் இயற்றியதும் பதினோராந் திருமுறையில் உள்ளதுமான ஒரு பதிகம் (பெரியபு. காரைக்கா.63);; a poem in {} by {}.

     [மூ → மூத்த + திருப்பதிகம்.]

மூத்தநயினார்

மூத்தநயினார் mūttanayiṉār, பெ.(n.)

   சிவனின் மூத்த மகனான பிள்ளையார்;{}, as the eldest son of {}.

     “பெருச்சாளியை மூத்த நயினார் மொடுவாய்க் கொடுபோனார்” (குற்றா. குற. 93:2);.

     [மூ → மூத்த + நயினார். நாயனார் → நயினார்.]

மூத்தநாயனார்

 மூத்தநாயனார் mūttanāyaṉār, பெ.(n.)

மூத்தநயினர் பார்க்க;see {}.

     “மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை” (பதினொ.);.

     [மூ → மூத்த + நாயனார்.]

மூத்தபிள்ளை

 மூத்தபிள்ளை mūttabiḷḷai, பெ.(n.)

   திருவாங்கூர் அரசரால் நாஞ்சில் நாட்டு வேளாளர்க்குக் கொடுக்கப்படும் பட்ட வகை (நாஞ்.);; a title conferred on the {} of {}, by Travancore kings.

     [மூ → மூத்த + பிள்ளை.]

மூத்தபிள்ளையார்

 மூத்தபிள்ளையார் mūttabiḷḷaiyār, பெ.(n.)

மூத்தநயினார் பார்க்க;see {}.

     “மூத்த பிள்ளையார் திருமும் மணிக்கோவை” (பதினொ.);.

     [மூ → மூத்த + பிள்ளையார்.]

மூத்தப்பன்

மூத்தப்பன் mūttappaṉ, பெ.(n.)

   பாட்டன்; father’s father.

     “எம்மு னெந்தை மூத்தப்பன்” (தேவா.1086, 9);.

     “தம் மூத்தப்பன்” (திவ். திருப்பல்.6);

ம. முத்த ப்பன்

     [முது → மூ → மூத்த + அப்பன்.]

மூத்தமாமியார்

மூத்தமாமியார் mūttamāmiyār, பெ.(n.)

   1. மாமனாரின் மூத்த மனைவி; first wite of one’s father-in-law.

   2. மனைவியின் தமக்கை (செ.வ.);; elder sister-in-law.

     [மூ → மூத்த + மாமியார்.]

மூத்தம்

மூத்தம் mūttam, பெ.(n.)

முழுத்தம் பார்க்க;see {}.

     “மூத்தமொன்றின் முடிந்தவர்” (கம்பரா. கரன்வதை.189);.

     [முழுத்தம் → மூத்தம்.]

மூத்தவன்

மூத்தவன் mūttavaṉ, பெ.(n.)

   1. அகவையிற் பெரியவன்; one who is senior in age.

   2. அண்ணன்; elder brother.

     “மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூ தெழுந்தருளி” (திவ்.பெரியதி. 4, 6:7);.

   3. மேலோன் (வின்.);; superior.

     [மூ → மூத்தவன்.]

மூத்தவர்

 மூத்தவர் mūttavar, பெ. (n.)

மூத்தவன் பார்க்க;see {}.

வீட்டில் மூத்தவர்களைக் கலந்து கொண்டு பிறகு சொல்கிறேன்.

     [மூ → மூத்தவர்.]

மூத்தவாரை

 மூத்தவாரை mūttavārai, பெ.(n.)

   பச்சோந்தி; chameleon (சா.அக.);.

மறுவ. பச்சோணான், பச்சோந்தி.

மூத்தானுப்பு

 மூத்தானுப்பு mūttāṉuppu, பெ.(ո.)

மூத்திரவுப்பு பார்க்க;see {}.

மூத்தாருண்ணி

 மூத்தாருண்ணி mūttāruṇṇi, பெ. (n.)

   கல்குளம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kalkulam Taluk.

     [மூத்த+ஊருணி]

மூத்தார்

மூத்தார் mūttār, பெ.(n.)

   1. மூத்தோர், 1 பார்க்க;see {}, 1.

     “மூத்தா ரிளையார் பசுப் பெண்டிர்” (ஆசாரக்.65);.

   2. கணவனுடைய தமையன் (இ.வ.);; husband’s elder brother.

     [மூ → மூத்தார்.]

மூத்தாள்

மூத்தாள் mūttāḷ, பெ.(n.)

   1. முதியவள் (பிங்.);; aged woman.

   2. தமக்கை (பிங்.);; elder sister.

   3. மூதேவி (யாழ்.அக.); பார்க்க;see {}.

   4. முதல் மனைவி; first wife.

     [மூ → மூத்தாள்.]

மூத்திரஅமிலம்

 மூத்திரஅமிலம் mūttiraamilam, பெ.(n.)

   சிறுநீர் புளியம் (அமிலம்);; uric acid (சா.அக.);.

     [மூத்திரம் + Skt. அமிலம்]

மூத்திரக்கடுப்பு

 மூத்திரக்கடுப்பு mūttirakkaḍuppu, பெ. (n.)

   சிறுநீர் தொடர்புடைய நோய்; disurea – Urrodynia (சா.அக.);.

மறுவ. நீர்கடுப்பு, நீர்ச்சுருக்கு.

     [மூத்திரம் + கடுப்பு.]

மூத்திரக்கட்டி

 மூத்திரக்கட்டி mūttirakkaṭṭi, பெ.(n.)

   சிறுநீர்ப்பையில் உண்டாகும் கட்டி; urimary abscess (சா.அக.);.

     [மூத்திரம் + கட்டி.]

மூத்திரக்கல்

 மூத்திரக்கல் mūttirakkal, பெ.(n.)

   மூத்திரப் பையில் உண்டாகும் கல் அடைப்பு நோய் (இங்.வை.);; stone in the bladder, a disease.

மறுவ. சிறுநீர்க்கல்

     [மூத்திரம் + கல்.]

மூத்திரக்கழலை

 மூத்திரக்கழலை mūttirakkaḻlai, பெ. (n.)

   சிறுநீர் வரும் வழியில் உண்டாகும் கட்டி; a tumour or growth in the urethra – Urethropуma (சா.அக.);.

     [மூத்திரம் + கழலை.]

மூத்திரக்கழிச்சல்

மூத்திரக்கழிச்சல் mūttirakkaḻiccal, பெ.(n.)

   1. உடம்பில் உள்ள நுட்பமான மாசுகளையும், ஈரல், நீர்ப்பை அழுக்குகளையும், நீர்க்கட்டு முதலிய நச்சுக்களையும் வெளிப்படுத்தும் ஒருவகைக் கழிச்சல்; a urinary disease.

   2. சிறுநீரை மிகைப்படுத்தும் மருந்து; diuretic (சா.அக.);.

     [மூத்திரம் + கழிச்சல்.]

மூத்திரக்காதம்

 மூத்திரக்காதம் mūttirakkātam, பெ. (n.)

   சிறுநீர் கொஞ்சங் கொஞ்சமாய் வருதல் அல்லது சொட்டுச் சொட்டாய் விழல்; retention of urine and intermittent flow of urine during micturition.

     [மூத்திரம் + Skt. காதம்.]

மூத்திரக்கிரிச்சரம்

மூத்திரக்கிரிச்சரம் mūttirakkiriccaram, பெ.(n.)

   1. கல்லடைப்பு; blocking the passage of urine by the urinary calculus.

   2. நீர்ச்சுருக்கு; burning sensation or scalding pain white passing urine due to calculus (சா.அக.);.

     [மூத்திரம் + Skt. கிரிச்சரம்.]

மூத்திரக்கிருச்சம்

மூத்திரக்கிருச்சம் mūttirakkiruccam, பெ. (n.)

   1. மூத்திரக்கல் பார்க்க;see {}.

   2. மூத்திரக்கிருச்சிரம் (வின்.); பார்க்க;see {}.

மூத்திரக்கிருச்சிரம்

 மூத்திரக்கிருச்சிரம் mūttirakkirucciram, பெ.(n.)

   துன்பப்பட்டுச் சிறிது சிறிதாக மூத்திரம் போகச் செயும் நோய்வகை; strangury, scant urination, difficulty in passing urine.

     [மூத்திரம் + Skt. கிருச்சிரம்.]

மூத்திரக்கிறீச்சனம்

 மூத்திரக்கிறீச்சனம் mūttirakkiṟīccaṉam, பெ.(n.)

மூத்திரக்கிருச்சம் பார்க்க;see {}

     [மூத்திரம் + கிறீச்சனம்.]

மூத்திரக்குடல்விருத்தி

 மூத்திரக்குடல்விருத்தி mūttirakkuḍalvirutti, பெ.(n.)

   வழக்கமாக வருகின்ற சிறுநீரை அடக்கியடக்கி அகாலத்தில் பெய்வதினால் அம்மூத்திரம் உள்ளே தங்கி, பையில் கட்டுண்ட நீரைப்போல் துளி துளியாய்க் கலங்கி நீர்ச் சுருக்குடன் வெளிப்படும் ஒரு வகை நோய்; a kind of urinary disease caused by suppression and detention of urine in the bladder – Retention of urine (சா.அக.);.

     [மூத்திரம் + குடல் + Skt. விருத்தி.]

மூத்திரக்குடுக்கை

 மூத்திரக்குடுக்கை mūttirakkuḍukkai, பெ.(n.)

   சிறிது நேரம் கூட சிறுநீரை வெளியேற விடாமல் அடக்கும் தன்மையில்லாதவ-ன்-ள் (வின்.);; person incontinent of urine.

     [மூத்திரம் + குடுக்கை.]

மூத்திரக்குண்டி

 மூத்திரக்குண்டி mūttirakkuṇṭi, பெ. (n.)

   சிறுநீரைத் தூங்கும்போது படுக்கை யிலேயே வெளியேற்றுபவ-ன்-ள் (உ.வ.);; person who passes urine in bed during sleep.

     [மூத்திரம் + குண்டி.]

மூத்திரக்குண்டிக்காய்

 மூத்திரக்குண்டிக்காய் mūttirakkuṇṭikkāy, பெ.(n.)

   அரத்தத்தில் உள்ள கெட்ட நீரைப் பிரித்து சிறுநீராக மாற்றும் உடல் உறுப்பு (இங்.வை.);; kidney.

     [மூத்திரம் + குண்டி + காய்.]

     [p]

மூத்திரக்குண்டிக்காய்க்குழல்

 மூத்திரக்குண்டிக்காய்க்குழல் mūttirakkuṇṭikkāykkuḻl, பெ.(n.)

   மூத்திரக் குண்டிக்காயினின்றும் மூத்திரப் பைக்குச் சிறுநீர் செல்லும் சிறுநீர்க் குழல் (இங்.வை.);; ureter.

     [மூத்திரக்குண்டிக்காய் + குழல்.]

மூத்திரக்குண்டிக்காய்நோய்

 மூத்திரக்குண்டிக்காய்நோய் mūttirakkuṇṭikkāynōy, பெ. (n.)

   மூத்திரக் குண்டிக்காயைப் பற்றிய நோய் வகை (M.L.);; bright’s disease, Albuminuria.

     [மூத்திரக்குண்டிக்காய் + நோய்.]

மூத்திரக்குளவி

 மூத்திரக்குளவி mūttirakkuḷavi, பெ. (n.)

   மூத்திரங் குடிப்பதாகக் கருதப்படும் குளவி வகை (யாழ்.அக.);; a kind of hornet, said to lick urine.

     [மூத்திரம் + குளவி.]

மூத்திரக்குழல்

மூத்திரக்குழல் mūttirakkuḻl, பெ. (n.)

   1. மூத்திரக் குண்டிக்காயுள் சிறுநீர் சுரக்குங் குழல்; tubulus urinifer.

   2. மூத்திரக்குண்டிக்காய்குழல் பார்க்க; see {}.

     [மூத்திரம் + குழல்.]

மூத்திரக்குழல்வாதம்

 மூத்திரக்குழல்வாதம் mūttirakkuḻlvātam, பெ.(n.)

   சிறுநீர்ப் பையில் உண்டாகும் காற்றுப் பிடிப்பு நோய்; paralysis of the ureter – Ureterolysis (சா.அக.);.

     [மூத்திரக்குழல் + Skt. வாதம்.]

மூத்திரக்கோசம்

மூத்திரக்கோசம்1 mūttirakācam, பெ.(n.)

   1. அண்டப்பை; scrotum.

   2. மூத்திரா சயம் பார்க்க;see {}.

     [மூத்திரம் + Skt. கோசம்.]

 மூத்திரக்கோசம்2 mūttirakācam, பெ. (n.)

   மூத்திரக்குண்டிக்காய்; kidney.

     [மூத்திரம் + Skt. கோசம்.]

மூத்திரச்சங்கம்

 மூத்திரச்சங்கம் mūttiraccaṅgam, பெ. (n.)

   நீரிழிவு நோய் (வின்.);; diabetes.

     [மூத்திரம் + Skt. சங்கம்.]

மூத்திரச்சங்கிரகணம்

 மூத்திரச்சங்கிரகணம் mūttiraccaṅgiragaṇam, பெ. (n.)

   சிறுநீரைக் கட்டுப்படுத்தும் மருந்து; drug or medicine that suppresses urine.

     [மூத்திரம் + Skt. சங்கிரகணம்.]

மூத்திரச்சுக்கிலம்

 மூத்திரச்சுக்கிலம் mūttiraccukkilam, பெ.(n.)

   மூத்திரத்துடன் விந்து இறங்கும் வெட்டை நோய் (யாழ்.அக.);; the whites, a disease in which semen is discharged along with urine, leucorrhea.

     [மூத்திரம் + Skt. சுக்கிலம்.]

மூத்திரத்தங்கல்

 மூத்திரத்தங்கல் mūttirattaṅgal, பெ.(n.)

   சிறுநீரைத் தேக்கி வைத்திருக்கை; retention of the urine – Auria.

     [மூத்திரம் + தங்கல்.]

மூத்திரத்தடை

 மூத்திரத்தடை mūttirattaḍai, பெ.(n.)

   சிறுநீர் அடைப்பு; stricture.

     [மூத்திரம் + தடை.]

மூத்திரத்தாரை

மூத்திரத்தாரை mūttirattārai, பெ.(n.)

   1. சிறுநீர் கீழ் இறங்குகை (மூத்திர நீரோட்டம்);; flow of urine.

   2. மூத்திரத் துளை (பைஷஜ.291); பார்க்க;see {}.

     [மூத்திரம் + தாரை.]

மூத்திரத்தாரைகடுப்பு

 மூத்திரத்தாரைகடுப்பு mūttirattāraigaḍuppu, பெ.(n.)

   சிறுநீர் இறங்கும் வழியில் உண்டாகும் எரிச்சல்; irritability of the urethra – Urethrism.

     [மூத்திரத்தாரை + கடுப்பு.]

மூத்திரத்தாரைச்சுருக்கம்

 மூத்திரத்தாரைச்சுருக்கம் mūttirattāraiccurukkam, பெ. (n.)

   சிறுநீர் இறங்கும் வழியில் ஏற்படும் அடைப்பு முதலிய நோய்; stricture of the urethra – Urethrostenosis.

     [மூத்திரத்தாரை + சுருக்கம்.]

மூத்திரத்தாரைப்புண்

 மூத்திரத்தாரைப்புண் mūttirattāraippuṇ, பெ.(n.)

   சிறுநீர் இறங்கும் வழியில் உண்டாகும் புண்; ulceration of the urinary passage.

     [மூத்திரத்தாரை + புண்.]

மூத்திரத்தாரையடைப்பு

 மூத்திரத்தாரையடைப்பு mūttirattāraiyaḍaippu, பெ. (n.)

   சிறுநீர் இறங்கும் வழியில் உண்டாகும் அடைப்பு; obstruction of the passage in the urethra – Urethro phraxis.

     [மூத்திரத்தாரை + அடைப்பு.]

மூத்திரத்தாரையழற்சி

 மூத்திரத்தாரையழற்சி mūttirattāraiyaḻṟci, பெ. (n.)

   சிறு நீர் இறங்கும் வழியில் ஏற்படும் எரிச்சல்; inflammation of the urethra – Urethritis.

     [மூத்திரத்தாரை + அழற்சி.]

மூத்திரத்தாரைவலி

 மூத்திரத்தாரைவலி mūttirattāraivali, பெ.(n.)

   சிறுநீர் இறங்கும் வழியில் உண்டாகும் வலி; pain in the urethra – Urethralgia.

     [மூத்திரத்தாரை + வலி.]

மூத்திரத்துளை

 மூத்திரத்துளை mūttirattuḷai, பெ.(n.)

   சிறுநீர் வெளிவரும் வழி; urethra.

     [மூத்திரம் + துளை.]

மூத்திரத்துவாரம்

 மூத்திரத்துவாரம் mūttirattuvāram, பெ.(n.)

மூத்திரத்துளை பார்க்க;see {}.

     [மூத்திரம் + Skt. துவாரம்.]

மூத்திரநாளம்

 மூத்திரநாளம் mūttiranāḷam, பெ.(n.)

   மூத்திரப்பையில் ஒடும் நாடி நரம்புகள்; rend arteries and venis.

     [மூத்திரம் + நாளம்.]

மூத்திரநெய்ப்பற்று

 மூத்திரநெய்ப்பற்று mūttiraneyppaṟṟu, பெ.(n.)

   சிறுநீரில் காணப்படும் மஞ்சள் நிற நெய்மப் பொருள்; a yellowish oily substance in the urine – Urein.

     [மூத்திரம் + நெய்ப்பற்று.]

மூத்திரநோய்

 மூத்திரநோய் mūttiranōy, பெ.(n.)

   சிறுநீர் தொர்புடைய நோய்; a urinary disease.

     [மூத்திரம் + நோய்.]

மூத்திரப்பந்தம்

 மூத்திரப்பந்தம் mūttirappandam, பெ.(n.)

   சிறுநீர்ப் பிரியாமை; suppression of urine (சா.அக.);.

     [மூத்திரம் + பந்தம்.]

மூத்திரப்பரீட்சை

 மூத்திரப்பரீட்சை mūttirapparīṭcai, பெ.(n.)

   நோயாளியின் உறக்கத்தில் இருந்து விழித்தபின்பு வருகின்ற சிறுநீரை ஆராய்கை; the urine which is passed by the patient before day break after awaking from sleep should be selected for Examination. That which comesout in the middle of discharge should be the proper urine for examination.

     [மூத்திரம் + Skt. பரீட்சை.]

மூத்திரப்பலா

 மூத்திரப்பலா mūttirappalā, பெ.(n.)

   முள் வெள்ளரி, கக்கரிக்காய்; cucumber with thorny edges (சா.அக.);.

மூத்திரப்பவுந்திரம்

 மூத்திரப்பவுந்திரம் mūttirappavundiram, பெ.(n.)

   சுரந்த சிறுநீரை வெளி வராமல் கட்டும் ஒரு வகை நோய் (M.L.);; urinary fistula.

     [மூத்திரம் + Skt. பவுந்திரம்.]

மூத்திரப்பாதை

 மூத்திரப்பாதை mūttirappātai, பெ.(n.)

   சிறுநீர் இறங்கும் வழி; urethra.

     [மூத்திரம் + பாதை.]

மூத்திரப்பாலை

 மூத்திரப்பாலை mūttirappālai, பெ.(n.)

   ஒரு வகை மூத்திர நோய்; a kind of urinary disease (சா.அக.);.

     [மூத்திரம் + பாலை.]

மூத்திரப்பாளம்

மூத்திரப்பாளம் mūttirappāḷam, பெ.(n.)

மூத்திர நோய் வகை (தஞ்.சரசு. iii, 140);.

 a disease of the urninary-organs.

மூத்திரப்பாளை

 மூத்திரப்பாளை mūttirappāḷai, பெ.(n.)

   ஒருவகையான சிறுநீர் நோய்; a kind of urinary disease (சா.அக.);.

மூத்திரப்பிந்து

 மூத்திரப்பிந்து mūttirappindu, பெ.(n.)

   சொட்டுச் சிறுநீர்; a urinary disease – Stricture of urethra or the enlargement of the prostate glad (சா.அக.);.

மூத்திரப்பிரளயம்

 மூத்திரப்பிரளயம் mūttirappiraḷayam, பெ.(n.)

   மிகைச் சிறுநீர்; excess of urine (சா.அக.);.

     [மூத்திரம் + Skt. பிரளயம்.]

மூத்திரப்புடம்

 மூத்திரப்புடம் mūttirappuḍam, பெ.(n.)

   கீழ் வயிறு; the lower region of the abdomen (சா.அக.);.

மூத்திரப்புரட்டு

 மூத்திரப்புரட்டு mūttirappuraṭṭu, பெ.(n.)

   சிறுநீர், மலவாய் வழியாக வெளியேறுகை; the discharge of urine through the anus – Urochesia.

மூத்திரப்புரீடங்கள்

மூத்திரப்புரீடங்கள் mūttirappurīṭaṅgaḷ, பெ.(n.)

   சிறுநீரும் மலமும்(சலமலங்கள்); (இறை.1, உரை, பக்.9);; urine and faeces (சா.அக.);.

     [மூத்திரம் + Skt. புரீடங்கள்.]

மூத்திரப்புளிப்பு

 மூத்திரப்புளிப்பு mūttirappuḷippu, பெ.(n.)

   புளிப்பு சிறு நீர்; uric acid.

     [மூத்திரம் + புளிப்பு.]

மூத்திரப்பேதி

 மூத்திரப்பேதி mūttirappēti, பெ.(n.)

மூத்திரக்கழிச்சல் பார்க்க;see {}.

     [மூத்திரம் + Skt. பேதி.]

மூத்திரப்பை

 மூத்திரப்பை mūttirappai, பெ.(n.)

   உடலில் மூத்திரந்தங்கும் உறுப்பு; bladder.

     [மூத்திரம் + பை.]

     [p]

மூத்திரப்பைகுத்தல்வலி

 மூத்திரப்பைகுத்தல்வலி mūttirappaiguttalvali, பெ.(n.)

   சிறுநீர்ப் பையில் ஏற்படும் ஒரு வகைக் குத்தல் வலி; neuralgia of bladder.

     [மூத்திரப்பை + குத்தல்வலி.]

மூத்திரப்பைக்கல்

 மூத்திரப்பைக்கல் mūttirappaikkal, பெ.(n.)

மூத்திரக்கல் பார்க்க;see {}.

     [மூத்திரப்பை + கல்.]

மூத்திரப்பைக்கழலை

 மூத்திரப்பைக்கழலை mūttirappaikkaḻlai, பெ.(n.)

   சிறுநீர்ப்பையில் உள்ள ஒருவகைக் கட்டி; tumour of the bladder.

     [மூத்திரப்பை + கழலை.]

மூத்திரப்பைசோர்வு

 மூத்திரப்பைசோர்வு mūttirappaicōrvu, பெ.(n.)

   சிறுநீர்ப்பையை முடக்கும் காற்றுப் பிடிப்பு நோய்; paralysis of the bladder.

     [மூத்திரப்பை + சோர்வு.]

மூத்திரப்பைதாபிதம்

 மூத்திரப்பைதாபிதம் mūddirappaidāpidam, பெ.(n.)

மூத்திரப்பைநோய் பார்க்க;seе {}.

மூத்திரப்பைநோய்

 மூத்திரப்பைநோய் mūttirappainōy, பெ.(n.)

   சிறுநீர்ப்பையில் உண்டாகும் ஒரு வகை எரிச்சல் நோய்; inflammation of the bladder, Cystitis.

     [மூத்திரப்பை + நோய்.]

மூத்திரப்பைரோகம்

 மூத்திரப்பைரோகம் mūttirappairōkam, பெ.(n.)

மூத்திரப்பைநோய் பார்க்க;see {}.

     [மூத்திரப்பை + ரோகம்.]

மூத்திரப்பைவலி

 மூத்திரப்பைவலி mūttirappaivali, பெ.(n.)

   சிறுநீர்ப்பையில் ஏற்படும் ஒருவகை வலி; cramps in the bladder (சா.அக.);.

     [மூத்திரப்பை + வலி.]

மூத்திரப்பைவீக்கம்

 மூத்திரப்பைவீக்கம் mūttirappaivīkkam, பெ.(n.)

மூத்திரப்பைநோய் பார்க்க;see {}.

மூத்திரமஞ்சள்

 மூத்திரமஞ்சள் mūttiramañjaḷ, பெ.(n.)

   மஞ்சள் நிறமுடைய சிறுநீர்; yellow pigment of the urine which gives the urine its yellow colour – Urochrome.

     [மூத்திரம் + மஞ்சள்.]

மூத்திரமடக்கமுடியாமை

 மூத்திரமடக்கமுடியாமை mūttiramaḍakkamuḍiyāmai, பெ.(n.)

   சிறுநீர் வெளியேறாமல் அடக்க இயலாமை; inability to retain the urine – Enuresis or Urrcratia (சா.அக.);.

     [மூத்திரம் + அடக்கமுடியாமை.]

மூத்திரமதிகப்படுத்தல்

 மூத்திரமதிகப்படுத்தல் mūddiramadigappaḍuddal, பெ.(n.)

   சிறுநீர் மிகைப் படுகை; increase of urinary secreation – Uragogue (சா.அக.);.

     [மூத்திரம் + அதிகப்படுத்தல்.]

மூத்திரமருந்து

 மூத்திரமருந்து mūttiramarundu, பெ.(n.)

   சிறுநீர் கழிச்சல் மருந்து; diuretics (சா.அக.);.

     [மூத்திரம் + மருந்து.]

மூத்திரமார்க்கம்

 மூத்திரமார்க்கம் mūttiramārkkam, பெ.(n.)

மூத்திரத்துளை பார்க்க;see {} (சா. அக.);.

     [மூத்திரம் + மார்க்கம்.]

மூத்திரமிகுதி

 மூத்திரமிகுதி mūddiramigudi, பெ.(n.)

   சிறுநீர் அதிகமாக வெளியேறுகை; passing excess of urine (சா.அக.);.

     [மூத்திரம் + மிகுதி.]

மூத்திரமுரித்தல்

 மூத்திரமுரித்தல் mūttiramurittal, பெ.(n.)

   கற்றாழையினால் சிறுநீரை முரிக்கும் செய்முறைகளில் ஒன்று; a process in the course of alchemy (சா.அக.);.

     [மூத்திரம் + முரித்தல்.]

மூத்திரம்

மூத்திரம் mūttiram, பெ.(n.)

   சிறுநீர்; urine.

ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது.

     “உங்கள் மூத்திரப் பிள்ளையை” (திவ்.பெரியாழ்.4: 6:9);.

ம. முள்;வ. மூத்ர.

     [முள் → (மொள்); → மோள் → மோளுதல் = சிறுநீர்விடுதல். மோள் + திரம் – (மோட்டிரம்); → மோத்திரம் → மூத்திரம். மோள் என்னும் வினையும் மோத்திரம் என்னும் பெயர் வடிவும் இன்றும் பாண்டி நாட்டி வழக்கென அறிக.]

மூத்திரம்பெய்

மூத்திரம்பெய்1 mūttirambeytal,    1 செ. கு.வி.(v.i.)

   சிறுநீர் கழித்தல்; to make water, to urinate.

     ‘மூத்திரம் பெய்கிறதற் குள்ளே முப்பத்தெட்டுக் குணம்’ (பழ.);.

     [மூத்திரம் + பெய்-தல்.]

 மூத்திரம்பெய்2 mūttirambeytal,    1 செ.குன்றாவி.(v.t.)

   புறக்கணிப்பு செய்தல்; to disregard.

மேலிருந்து வந்த ஆணையை மூத்திரம் செய்தான்.

     [மூத்திரம் + பெய்-தல்.]

மூத்திரரோகம்

 மூத்திரரோகம் mūttirarōkam, பெ.(n.)

மூத்திரநோய் பார்க்க;see {}.

     [மூத்திரம் + Skt. ரோகம்.]

மூத்திரலம்

மூத்திரலம்1 mūttiralam, பெ.(n.)

மூத்திர வர்த்தனகாரி பார்க்க;see {}.

 மூத்திரலம்2 mūttiralam, பெ.(n.)

   சிறுநீர் கடுப்பு; inflammation of the urethra (சா.அக.);.

மூத்திரவடைப்பு

 மூத்திரவடைப்பு mūttiravaḍaippu, பெ.(n.)

மூத்திரக்கிருச்சரம் (M.L.); பார்க்க;see {}.

     [மூத்திரம் + அடைப்பு.]

மூத்திரவண்டல்

 மூத்திரவண்டல் mūttiravaṇṭal, பெ.(n.)

   சிறுநீர் மாசு; deposits in the urine, precipitated urine (சா.அக.);.

     [மூத்திரம் + வண்டல்.]

மூத்திரவண்டவிருத்தி

 மூத்திரவண்டவிருத்தி mūttiravaṇṭavirutti, பெ.(n.)

   சிறுநீர் மாசு வளர்ச்சி அடைகை; enlargement of the scrotum due to extravation of urine – Urocele (சா.அக.);.

     [மூத்திரவண்டல் + Skt. விருத்தி.]

மூத்திரவமிலம்

 மூத்திரவமிலம் mūttiravamilam, பெ.(n.)

   சிறுநீர் புளியம்; uric acid (சா.அக.);.

     [மூத்திரம் + Skt. அமிலம்.]

மூத்திரவர்த்தனகாரி

 மூத்திரவர்த்தனகாரி mūttiravarttaṉakāri, பெ.(n.)

   சிறுநீர் மிகையாகச் சுரப்பதற்கான மருந்து (இங். வை.);; diuretic.

மூத்திரவாதம்

 மூத்திரவாதம் mūttiravātam, பெ.(n.)

மூத்திரவோதம் பார்க்க;see {} (சா.அக.);.

     [மூத்திரம் + Skt. வாதம்.]

மூத்திரவாய்ப்போக்கு

 மூத்திரவாய்ப்போக்கு mūttiravāyppōkku, பெ.(n.)

   சிறுநீர் வெளியேற்றும் வாய்; urethral discharge (சா.அக.);.

     [மூத்திரம் + வாய் + போக்கு.]

மூத்திரவிசர்ச்சனி

 மூத்திரவிசர்ச்சனி mūttiravisarssaṉi, பெ.(n.)

   மூத்திரப்பையை ஒட்டிய தசை வகை (வின்.);; a urinary muscle – Accelerator urini.

மூத்திரவியக்கம்

 மூத்திரவியக்கம் mūttiraviyakkam, பெ.(n.)

   சிறுநீர் தேக்கம்; retention of urine – Uroschesis (சா.அக.);.

மூத்திரவியர்வை

 மூத்திரவியர்வை mūttiraviyarvai, பெ.(n.)

   வியர்வைப் பொருட்களில், சிறுநீரில் உள்ள உப்புகள் கலந்திருக்கை; presence of urinous materials in the sweat – Uridrosis (சா.அக.);.

     [மூத்திரம் + வியர்வை.]

உடம்பிலுள்ள கழிவுப் பொருட்கள் சிறுநீரின் மூலமாக வெளியேற்றப்படுகிறது. இதில் உப்பும் ஒரு கழிவுப் பொருளாகும். வேர்த்தலின் போது உடம்பின் மீது உப்புத் துகள் படிந்துள்ளதால் வந்த பெயராகலாம்.

மூத்திரவிருத்தி

 மூத்திரவிருத்தி mūttiravirutti, பெ.(n.)

   சிறுநீர் வெளியே பாய்ந்து வடிகை; extravasation of urine (சா.அக.);.

     [மூத்திரம் + விருத்தி.]

மூத்திரவிரேசனீயம்

 மூத்திரவிரேசனீயம் mūttiravirēcaṉīyam, பெ.(n.)

மூத்திரவர்த்தனக்காரி பார்க்க;see {}.

மூத்திரவிலக்கணம்

 மூத்திரவிலக்கணம் mūttiravilakkaṇam, பெ.(n.)

   சிறுநீரின் தன்மை; nature of urine (சா.அக.);.

     [மூத்திரம் + இலக்கணம்.]

மூத்திரவுப்பு

 மூத்திரவுப்பு mūttiravuppu, பெ.(ո.)

   சிறுநீரின் உப்பு (பைஷஜ.);; urea acid.

     [மூத்திரம் + உப்பு.]

மூத்திரவெச்சம்

 மூத்திரவெச்சம் mūttiraveccam, பெ.(n.)

   மூத்திரப் பையில் இருந்து மூத்திரம் முழுவதும் வெளியேறாமல் எஞ்சியிருப்பது; residual urine (சா.அக.);.

     [மூத்திரம் + எச்சம்.]

மூத்திரவெரிச்சல்

 மூத்திரவெரிச்சல் mūttiravericcal, பெ.(n.)

   சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல் (M.L.);; irritation of the bladder.

     [மூத்திரம் + எரிச்சல்.]

மூத்திரவெரிப்பு

 மூத்திரவெரிப்பு mūttiraverippu, பெ.(n.)

   சிறுநீரின்காரம்; alkalinity of the urine- Alkalinuria (சா.அக.);.

     [மூத்திரம் + எரிப்பு.]

மூத்திரவெள்ளை

 மூத்திரவெள்ளை mūttiraveḷḷai, பெ.(n.)

   பால்நிறம் கொண்ட சிறுநீர்; milky urine – Chyluria (சா.அக.);.

     [மூத்திரம் + வெள்ளை.]

மூத்திரவோதம்

 மூத்திரவோதம் mūttiravōtam, பெ.(n.)

   சிறுநீர்ப்பையில் இருந்து வெளிவராது தினம் தினம் தேங்கிய மூத்திரம் அதிகமாகி குடலைப் பெருக்கச் செய்யும் ஒருவகை நோய்; a disease caused by retention of urine (சா.அக.);.

மறுவ. மூத்திரவாதம்

     [மூத்திரம் + வோதம்.]

மூத்திராசயம்

 மூத்திராசயம் mūttirācayam, பெ.(n.)

மூத்திரப்பை பார்க்க;see {}.

மூத்திராசயவாதரோகம்

 மூத்திராசயவாதரோகம் mūttirācayavātarōkam, பெ.(n.)

   மூத்திரப் பையின் வீக்கம்; inflammation of the bladder.

     [மூத்திரம் + Skt. சயவாதரோகம்.]

மூத்திராதிக்கியம்

 மூத்திராதிக்கியம் mūttirātikkiyam, பெ.(n.)

   சிறுநீர் தொடர்புடைய நோய்; urimary disease (சா.அக.);.

     [மூத்திரம் + ஆதிக்கியம்.]

மூத்திராதிசாரம்

 மூத்திராதிசாரம் mūttirāticāram, பெ.(n.)

   நோயாளியின் உடலில் சிறுநீர் அதிகரித்து அடிக்கடி வெளியேரும் ஒருவகை நோய்; a urinary disease in which large quantity of urine is passed-Diabetes insipidus (சா.அக.);.

மறுவ. நீரிழிவுநோய்.

     [மூத்திரம் + Skt. ஆதிசாரம்.]

மூத்திறோற்சங்கம்

 மூத்திறோற்சங்கம் mūttiṟōṟcaṅgam, பெ.(n.)

   சிறுநீர் அரத்தமாக இறங்குகை (யாழ்.அக.);; painful and bloody discharge of urine.

மூத்தை

 மூத்தை mūttai, பெ. (n.)

   முதியவன்; old man.

மூத்தையால் நடக்க முடியவில்லை (மீனவ.);.

     [மூத்தல்-மூத்தை]

மூத்தோன்

மூத்தோன் mūttōṉ, பெ. (n.)

   1. அகவை மேற்பட்டவன்; aged person.

   2. அண்ணன் (பிங்.);; elder brother.

   3. பிள்ளையார் (பிங்.);;{} as the eldest of {} sons.

   4. 48 அகவை முதல் 64 அகவைக்குட்பட்ட

   மனிதன் (வின்.);; man between 48 and 64 years age.

   5. முதியவன்; elderly man, senior.

     [முது → மூ → மூத்தோன்.]

மூத்தோன்கைக்கொம்பு

 மூத்தோன்கைக்கொம்பு mūttōṉkaikkombu, பெ. (n.)

   யானைக் கொம்பு; elephant’s tusk (சா.அக.);.

     [மூத்தோன் + கை + கொம்பு.]

மூத்தோர்

மூத்தோர் mūttōr, பெ.(n.)

   1. முதியவர், அகவை முதிர்ந்த பெரியவர்; aged persons;elders.

     “விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை” (ஆசாரக்.22);.

மூத்தோர் சொல் (வார்த்தை); அமிழ்தம் (பழ.);.

     “மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்” (பழ.);.

   2. பண்டிதர் (திவா.);; learned persons.

   3. அமைச்சர்; ministers.

     [முது → மூ → மூத்தோர்.]

மூந்திக்கருக்கல்

 மூந்திக்கருக்கல் mūndikkarukkal, பெ.(n.)

   அந்திநேரம், மாலைக்காலம், பகலின் முடிவு நேரம்; evening twilight.

     [முந்தி → மூந்தி → கருக்கல்.]

மூனானாத்து

 மூனானாத்து mūṉāṉāttu, பெ.(n.)

   நேற்றைக்கு முந்திய நாளுக்கு முந்தைய நாள் (முகவைமீன.);; two – days before yesterday.

     [மூன்றாம்நேற்று → மூனானேற்று → மூனானாத்து.]

மூனை

 மூனை mūṉai, பெ.(n.)

   தவசங்களுள் ஒன்றான கம்புக்கு மேலுள்ள தோல்; skin layer that covers the millet, husk.

மறுவ, சொங்கு, கொங்கு, கொங்கை.

மூன்றன் அலகு

 மூன்றன் அலகு mūṉṟaṉalagu, பெ.(n.)

   ஒரு தட்டும் இரண்டு எண்ணிக்கையும் கொண்ட தாளக்குறியீடு; a time measure of steps.

     [மூன்று+அன்+அலகு ‘அன்’-சாரியை]

மூன்றாக மறைதல்

 மூன்றாக மறைதல் mūṉṟākamaṟaidal, பெ. (n.)

   விரட்டுபவன் ஓடுகின்றவனைத் துரத்தியும், ஓடுபவன் தப்பிக்க ஒர் இணை யளின் (சோடியின்); பின்னால் மறைந்துநின்றும் விளையாடல்; a children’s play.

     [மூன்று+ஆக+மறைதல்]

மூன்றாங்கட்டு

மூன்றாங்கட்டு mūṉṟāṅgaṭṭu, பெ.(n.)

   1. வீட்டின் மூன்றாங் கட்டடப் பகுதி (உ.வ.);; the third compartment of a house.

   2. ஒடிந்த உறுப்புக்கு இறுதியாக மூன்றாம் முறை கட்டுங் கட்டுப் போலுள்ள முடிவான தீர்மானம் (வின்.);; final or decisive opinion, as the third and last bandage to a broken limb (செ.அக.);.

     [மூன்று + ஆம் + கட்டு.]

மூன்றாங்கல்

மூன்றாங்கல் mūṉṟāṅgal, பெ.(n.)

   மூன்று கல் வைத்து ஆடும் கல்லாட்டம் (கோவை.);; a kind of three stone game or play.

மறுவ. கல்லாங்கல், கூழாங்கல்.

     [மூன்றாம் + ஆம் + கல்.]

ஆட்டத்தின் பெயர் : மூன்று கற்களைக் கொண்டு ஆடும் ஆட்டம் மூன்றாங்கல்.

ஆடுமுறை : மூன்று கற்களுள் ஒன்றைக் கீழ் வைத்து ஏனையிரண்டையும் கையில் வைத்துக் கொண்டு அவற்றுள் ஒன்றை மேலெறிந்து இன்னொன்றைக் கீழ்வைத்து முந்திக் கீழ் வைத்ததை எடுத்துக் கொண்டு மேலெறிந்ததைப் பிடித்தல் வேண்டும். பின்பு மீண்டும் ஒன்றை மேலெறிந்து கையிலுள்ளதைக் கீழ் வைத்துக் கீழிருந்ததை எடுத்துக் கொண்டு மேலெறிந்ததைப் பிடித்தல் வேண்டும். இவ்வாறே பன்னிருமுறை தொடர்ந்து தவறாது ஆடிவிடின் பழமாம். பன்னிரு முறைக்கும் கீழ்வருமாறு பாட்டுப் பாடப்படும்.

   1. ஒன்றாவது – ஒன்றாங்காய்,

   2. இரண்டாவது – இரத்தினகிளி (அல்லது ஈச்சங்காய்);,

   3. மூன்றாவது முத்துச்சரம்,

   4. நாலாவது நாற்காலி,

   5. அஞ்சாவது பஞ்சவர்ணம்,

   6. ஆறாவது பாலாறு,

   7. ஏழாவது எழுத்தாணி,

   8. எட்டாவது கொட்டாரம்,

   9. ஒன்பதாவது ஒலைப்பூ,

   10. பத்தாவது பனங்கொட்டை,

   11. பதினொன்றாவது தென்னம்பிள்ளை,

   12. பன்னிரண்டாவது தென்னை மரத்தடியிலே தேரோடும் பிள்ளையார்.

ஒருத்தி ஆடும் போது தவறிவிடின், அடுத்தவள் ஆடல் வேண்டும். ஆடினவள் மறுமுறையாடும் போது, மீண்டும் முதலிலிருந்தே ஆடல் வேண்டும் (தமிழ் நாட்டு விளையாட்டுகள், பாவாணர், பக்.63);. நெல்லையில் பெண்கள் இவ்விளையாட்டை விளையாடும் பொழுது கீழ்வரும் பாட்டைப் பாடிக் கொண்டே விளையாடுவார்கள்.

ஒரி உலகெலாம், உலகெலாம்

சூரியன், சூரியன் தங்கச்சிக்கு

சுந்தரவள்ளிக்கு, மாயக்

குறத்திக்கு நாளை கல்யாணம்.

 மூன்றாங்கல் mūṉṟāṅgal, பெ. (n.)

   தட்டாங்கல் ஆட்டத்தின் வகை; a children’s play.

     [மூன்று+ஆம்+கல்]

மூன்றாங்கால்

மூன்றாங்கால் mūṉṟāṅgāl, பெ.(n.)

   1. திருமணம் போன்றவற்றிற்கு மூன்று நாள் முன்பு நடும் பந்தற்கால் (வின்.);; the first post of a marriage ‘pandal’ set up three days before the wedding.

   2. மூன்றாம் தலைமுறை உறவு (வின்.);; consanguinity of the third degree.

   3. மூன்றாம் ஆண்குழந்தை (இ.வ.);; the third male child of a person.

     [மூன்று + ஆம் + கால்.]

மூன்றாங்குட்டம்

 மூன்றாங்குட்டம் mūṉṟāṅguṭṭam, பெ.(n.)

   உடல் சிவப்பாகி, கொஞ்சம் நாள் கழித்து உடம்பு வெளுத்துத் துன்புறுத்தும் ஒருவகைத் தொழுநோய்; third stage of leprosy (சா.அக.);.

     [மூன்று + ஆம் + குட்டம்.]

மூன்றாங்கொம்பு

 மூன்றாங்கொம்பு mūṉṟāṅgombu, பெ.(n.)

   மூன்றாம் நாள் விதைப்பதற்காக அதற்கு முன் இரண்டு நாளும் நீரில் ஊறவைத்த நெல்விதை (தஞ்சை.);; seeds of paddy kept in water for two days, for sowing on the third day.

மறுவ. மூன்றாங்கோப்பு

     [மூன்று + ஆம் + கொம்பு.]

மூன்றாநடவு

 மூன்றாநடவு mūṉṟānaḍavu, பெ.(n.)

   மூன்றாவது முறை பிடுங்கி நடும் நாற்று (இ.வ.);; third transplantation of seedlings.

     [மூன்று + ஆம் + நடவு.]

மூன்றாந்தரச்சங்கு

 மூன்றாந்தரச்சங்கு mūṉṟāndaraccaṅgu, பெ.(n.)

   புழுத்தாக்குதலுக்குட்பட்ட சங்கு (நெல்லை.);; a marine shell, an inferior conch affected by worms.

     [மூன்று + ஆம் + தரசங்கு.]

மூன்றாந்திருவந்தாதி

 மூன்றாந்திருவந்தாதி mūṉṟāndiruvandāti, பெ.(n.)

   நாலாயிரத் தெய்வப் பனுவலுள் பேயாழ்வார் வெண்பாவிற் பாடிய அந்தாதி நூல்; an {} metre in {}-p-pirabandam by {}.

     [மூன்று + ஆம் + திருவந்தாதி.]

மூன்றாமீற்றுப்பசும்பால்

 மூன்றாமீற்றுப்பசும்பால் mūṉṟāmīṟṟuppasumbāl, பெ.(n.)

   நாட்பட்ட சளி(கபம்); நோயைப் போக்கும் பால்; milk of the cow that has given birth to the third calf (சா.அக.);.

     [மூன்று + ஆம் + ஈற்று + Skt. பசு + அம் + பால்.]

மூன்றாமுறைக்காய்ச்சல்

 மூன்றாமுறைக்காய்ச்சல் mūṉṟāmuṟaikkāyccal, பெ.(n.)

   ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் காய்ச்சல் நோய் (M.L.);; malaria tertian fever.

     [மூன்று + ஆம் + முறை + காய்ச்சல்.]

மூன்றாம்சுற்று

மூன்றாம்சுற்று mūṉṟāmcuṟṟu, பெ.(n.)

   1. மூன்றாவது சுற்றுப் பாதை;கோயிற் கருவறையைச் சுற்றியுள்ள மூன்றாவது சுற்றுப்பாதை; vicinity surrounding a shrine in a temple.

   2. விளையாட்டு, பேச்சு வார்த்தை மூன்றாம் நிலையில் இருக்கை; third circular of sports, talk.

     [மூன்று + ஆம் + சுற்று.]

மூன்றாம்பாட்டன்

 மூன்றாம்பாட்டன் mūṉṟāmbāṭṭaṉ, பெ.(n.)

   முப்பாட்டன் (இ.வ.);; grandfather’s grandfather.

     [மூன்று + ஆம் + பாட்டன்.]

மூன்றாம்பிறைக்காய்ச்சல்

மூன்றாம்பிறைக்காய்ச்சல் mūṉṟāmbiṟaikkāyccal, பெ.(n.)

   மூன்று நாட்களுக்கு ஒருமுறை விட்டு விட்டு வரும் காய்ச்சல்; a fever whose paroxysms return every third day or every 48 hours – Tertian fever(சா.அக.);.

     [மூன்று + ஆம் + பிறை + காய்ச்சல்.]

மூன்றாம்வளையமூலவிரணம்

 மூன்றாம்வளையமூலவிரணம் mūṉṟāmvaḷaiyamūlaviraṇam, பெ.(n.)

   மலவாயில் உண்டாகும் மூல முளை எரிச்சல்; piles (சா.அக.);.

     [மூன்று + ஆம் + வளையம் + மூலம் + Skt. இரணம்.]

மூன்றாவது

மூன்றாவது mūṉṟāvadu, பெ. (n.)

   1. இரண்டாவதற்கு அடுத்துள்ளது; that which is third.

   2. வெற்றிலைப் பாக்குடன் சேர்த்து உண்ணும் மூன்றாவது பொருளான சுண்ணாம்பு; quick lime, as the third article used in chewing betel, the other two being betel and areca-nut.

     [மூன்று → மூன்றாவது.]

மூன்றிலைமேனி

 மூன்றிலைமேனி mūṉṟilaimēṉi, பெ.(n.)

   குப்பைமேனி; rubbish plant – Acalypha indica (சா.அக.);.

     [p]

மூன்று

மூன்று mūṉṟu, பெ.(n.)

   இரண்டுக்கு மேல் அடுத்துள்ள எண்; three.

சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே (தொல்.எழுத்து.1);.

      “அறனும் பொருளு மின்பமு மூன்றும்” (புறநா.28:15);.

      “இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்” (நற்.214:1);.

      “மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த” (அகநா.147:4);.

      “மூன்று முடிச்சு கழுத்தில் விழட்டும்;

முப்பது இலைகள் குப்பையில் விழட்டும்” (பழ.);.

     “மூன்று காசுக் குதிரை ஆறு காசு வைக்கோல் தின்கிறதாம்”.

     “மூன்று மாதத்திற்கு முன்னே பல் போனவளுக்கு முறுக்குக் கடையில் என்ன வேலை”.

     “மூன்று வீட்டுக்கு முக்காலி நான்கு வீட்டிற்கு நாற்காலி”.

தெ. மூது;க. மூட்ரு;ம. முந்து;து. முகி.

மூன்று கால் ஓட்டம்

 மூன்று கால் ஓட்டம் mūṉṟukālōṭṭam, பெ. (n.)

   ஒர் அணி இணைகளில் ஒரு பக்கமுள்ள கால்களை ஒரு துண்டுக் கயிற்றால் கட்டிக் கொண்டு ஓடுதல்; three legged relay).

     [மூன்று+கால்+ஓட்டம்]

மூன்றுகட்டுவீடு

மூன்றுகட்டுவீடு mūṉṟugaṭṭuvīṭu, பெ.(n.)

   1. மூன்று முற்றங்களைக் கொண்ட வீடு; comprising three court yards house.

   2. மூன்று மாடி உள்ள வீடு; three terrace house.

     [மூன்று + கட்டு + வீடு.]

மூன்றுகளை

 மூன்றுகளை mūṉṟugaḷai, பெ. (n.)

   ஒரெண்ணிக்கைக்குள் பன்னிரு குறில்கள் அடைந்து ஒலிக்கும் நேரம்; a metre in prosody.

     [மூன்று+களை]

மூன்றுகாலம்

 மூன்றுகாலம் mūṉṟukālam, பெ.(n.)

   இறப்பு, நிகழ்வு, எதிர்வு ஆகிய மூன்று காலங்களைக் குறிப்பது; three types of tense, viz. present tense, past tense, future tense.

முக்காலமும் அறிந்த முனிவன்.

     [மூன்று + காலம்.]

மூன்றுகொட்டைக்காய்

 மூன்றுகொட்டைக்காய் mūṉṟugoṭṭaiggāy, பெ.(n.)

   மூன்று விதையுள்ள நிலக்கடலை (கோவை.);; three seeds ground-nut.

     [மூன்று + கொட்டை + காய்.]

மூன்றுதண்டர்

மூன்றுதண்டர் mūṉṟudaṇṭar, பெ.(n.)

   மூன்று (திரி); தண்டத் துறவிகள்; ascetics with trident – staff.

     “மூன்று தண்டரொன்றினர்” (திவ்.திருச்சந்.52);.

     [மூன்று + தண்டர்.]

மூன்றுதாள்

மூன்றுதாள் mūṉṟutāḷ, பெ. (n.)

   1. ஒரு வகைச் சீட்டாட்டம் (கோவை.);; a kind of a game at cards.

   2. தனித்தனியாக மூன்று காகிதத்தின் பெயர்; three paper.

   3. மூன்று கால்கள்; three legs.

     [மூன்று + தாள்.]

மூன்றுதுறைசன்னல்

 மூன்றுதுறைசன்னல் mūṉṟuduṟaisaṉṉal, பெ.(n.)

   மூன்று கதவுடைய சாளரம்; window with three doors.

     [மூன்று + துறை + சன்னல்.]

மூன்றுநிலைமாடக்கோயில்

 மூன்றுநிலைமாடக்கோயில் mūṉṟunilaimāṭakāyil, பெ.(n.)

   மூன்று அடுக்குடையக் கோயில்; the three storeyed (storied); temple.

     [p]

     [மூன்று + நிலை + மாடம் + கோயில்.]

மூன்றுநூல்

மூன்றுநூல் mūṉṟunūl, பெ.(n.)

   பூணூல்; the sacred thread, as having three strands.

     “மூன்றுநூல் கிடந்த தோண்முனி” (கம்பரா.கிளை.137);.

     [மூன்று + நூல்.]

மூன்றுபத்திரி

 மூன்றுபத்திரி mūṉṟubattiri, பெ.(n.)

   சாதி இலை, இலவங்க இலை, தாளிச இலை; mace, cinnamon leaf, Himalayan silverfur (சா.அக.);.

     [மூன்று + பத்திரி.]

மூன்றுபத்திவீடு

 மூன்றுபத்திவீடு mūṉṟubattivīṭu, பெ.(n.)

மூன்றுகட்டுவீடு பார்க்க;see {}.

     [மூன்று + பத்தி + வீடு.]

மூன்றுபுள்ளிநண்டு

 மூன்றுபுள்ளிநண்டு mūṉṟubuḷḷinaṇṭu, பெ.(n.)

   மேலோட்டில் மூன்று புள்ளிகளுடைய கடல் நண்டு (தஞ்சைமீன.);; three dotted sea-shore crabs.

     [மூன்று + புள்ளி + நண்டு.]

     [p]

மூன்றுப்பு

 மூன்றுப்பு mūṉṟuppu, பெ.(n.)

   கடலுப்பு, இந்துப்பு, கல்லுப்பு என்னும் மூன்று வகை உப்பு; the three salts, viz., {}, iոduppս, kallսppս (சா.அக.);.

     [மூன்று + உப்பு.]

மூன்றுமா

மூன்றுமா mūṉṟumā, பெ.(n.)

     ‘ங’ என்ற குறியுள்ளதும், இருபதில் மூன்று கொண்டதுமான கீழிலக்க (பின்ன);வெண்;

 the fraction 3/20.

     [மூன்று + மா.]

மூன்றுவர்ணத்தி

 மூன்றுவர்ணத்தி mūṉṟuvarṇatti, பெ.(n.)

   பன்றி முள்; the thorn of a porcupine (சா.அக.);.

மூன்றுவீசம்

மூன்றுவீசம் mūṉṟuvīcam, பெ.(n.)

     ‘ங’ என்ற குறியுள்ளதும் பதினாறில் மூன்று கொண்டதுமான கீழிலக்க (பின்ன);வெண்;

 the fraction 3/16.

     [மூன்று + வீசம்.]

மூன்றுவேளை

 மூன்றுவேளை mūṉṟuvēḷai, பெ.(n.)

   காலை, நண்பகல், மாலை என்ற நாளின் மூன்று பகுதிகள்; three period of a day called morning, after-noon and evening.

     [மூன்று + வேளை.]

மூன்றேமுக்கால்

மூன்றேமுக்கால் mūṉṟēmukkāl, பெ.(n.)

   அளவுப் பெயர்; measurement.

எண்ணிக்கையில் மூன்றும், மேலும் ஒன்றில் முக்கால் பங்கும் (3/4);.

     “மூன்றே முக்கால் நாழிகையிலே முத்து மழை பெய்தது. வாரி எடுக்கு முன்னே மண் மாரியாய்ப் போயிற்று” (பழ.);.

     [மூன்று + முக்கால்.]

மூப்பன்

மூப்பன் mūppaṉ, பெ.(n.)

   1. நகரப் பரதவன்; city fishermen.

   2. பரதவர் தலைவர்; head of fishermen.

   3. கிறித்துவ மதத்

   தலைவருள் ஒரு வகையார்; christian pastor.

   4. ஒரு குலத்தாரின் ஊர்த்தலைவன்; head man, in some castes.

   5. இலைவாணியர் முதலான சில குலங்களின் பட்டப் பெயர்; title of {} and other castes.

     “வருஞ்சனிக்கு மூப்பராம்” (சினேந்.141); (E.T.5, 118);.

     [மு → மூப்பு → மூப்பன்.]

மூப்பமார்

 மூப்பமார் mūppamār, பெ.(n.)

   தேனெடுத்தல் மற்றும் வேட்டையாடுந் தொழிலில் திறனுடைய, ஒருவகை இனத்தவர்; a caste, in which people are experts in collecting honey from bee-hives, and in hunting.

     [மு → மூப்பு → மூப்பமார்.]

மூப்பர்

மூப்பர் mūppar, பெ.(n.)

   1. பெரியோர்; elders in age;superiors.

     “மூப்பரை யிகழ்ந்தே மாகில்” (அரிச்.பு.நகர்நீ.151);.

   2. கிறித்துவ மதத் தலைவருள் ஒருவகையார் (வின்.);; deacons.

     [மூ → மூப்பு → மூப்பர் (வே.க.);.]

மூப்பறுக்கும்திரி

 மூப்பறுக்கும்திரி mūppaṟukkumtiri, பெ.(n.)

   சிறு குழந்தைகளுக்கு மலக்கட்டுண்டான போது மலவாயினின்று மலத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தும் ஒரு மருத்துவ திரி; a medicinal wick used as suppositoryto expel the faeces from the rectum of children (சா.அக.);.

     [மூப்பறுக்கும் + திரி.]

மூப்பானசுவாமி

 மூப்பானசுவாமி mūppāṉasuvāmi, பெ.(n.)

   திருவிதாங்கூரில் ஒரு தலைமைப் பணியாளன் (வின்.);; a principal officer in Travancore.

     [மூப்பான் + Skt. சுவாமி.]

மூப்பான்

மூப்பான் mūppāṉ, பெ.(n.)

   1. அகவை முதிர்ந்தவன்; aged person.

   2. முதியவன்; elder.

   3. சிவன்;{}.

     “முப்பான் மழுவும்” (தனிபா.1, 32 : 61);.

     [மூ → மூப்பு → மூப்பான்.]

மூப்பி

மூப்பி mūppi, பெ.(n.)

   1. முதுமகள்; aged woman;elderly woman.

     ‘மூப்பி மாராலே…. நீராட்டி’ (சீவக. 1892, உரை);.

   2. தலைவி (வின்.);; woman of distinction;

 mistress.

ம. மூப்பி

     [மூ → மூப்பு → மூப்பி.]

மூப்பு

மூப்பு mūppu, பெ.(n.)

   1. அகவை, முதுமை; seniority in age;old age.

     “முனிதக்க மூப்புள” (நாலடி, 92);.

மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய (அகநா.7:4);.

   2. தலைமை (யாழ்.அக.);; power of management, leadership.

   3. ஒட்டாரச் செருக்கு (பிடிவாதம்); (இ.வ.);; wilfulness.

   ம. மூப்பு;தெ., க.முப்பு.

     [மூ → மூப்பு.]

மூப்புக்களவு

மூப்புக்களவு mūppukkaḷavu, பெ.(n.)

மூப்புக்கழிவு, 1 பார்க்க;see {}, 1.

     [மூப்பு + களவு.]

மூப்புக்கழிவு

மூப்புக்கழிவு mūppukkaḻivu, பெ.(n.)

   1. ஊர்த் தலைவனுக்குச் சேர வேண்டிய பொருள்; dues payable to the village headman (M.M.509);.

   2. வரித் தொகை யிலிருந்து ஊர்த் தலைவனுக்கு உரியதைக் கொடுத்ததால் கழிக்கப்படும் பகுதி (இ.வ.);; deduction from the revenue on account of the dues paid to the village headman.

     [மூப்பு + கழிவு.]

மூப்புமுகனை

 மூப்புமுகனை mūppumugaṉai, பெ.(n.)

   தலைமை பற்றிவரும் சொற் செலவு (செல்வாக்கு); (யாழ்ப்);; influence due to age, rank, etc.

     [மூப்பு + முகனை.]

மூய்

மூய்1 mūytal,    1 செ.குன்றாவி.(v.t.)

   1. மூடுதல் (திவா.);; to cover.

     ‘”பருமணன் மூஉய்” (பரிபா.10 : 4);.

   2. நிரப்புதல்; to full.

     “கயிறுகுறு முகவை மூயின” (பதிற்றுப்.22);.

தெ. மூயு.

 மூய்2 mūytal,    1 செ.கு.வி.(v.i.)

   1. நெருங்கிச் சூழ்தல்; to surround closely

     “ஆயிரரு மங்கண் மூயினர்க ளண்ணலை” (கந்தபு. சகத் திரவா.18);.

    2. முடிதல்; to end.

கதை மூய்ந்தது.

 மூய்3 mūytal,    2 செ.குன்றாவி. (v.t.)

   துப்புதல் (இ.வ.);; to spit.

     [உமிழ் → (முழ்); → முழி → மூய் → முய்-தல்.]

 மூய்4 mūy, பெ.(n.)

   1. மூடி; cover.

      “பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன” (குறுந்.233);.

    2. பூப்பெட்டி; flower basket.

     “முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய்” (பரிபா. 10:14);.

மூரன்முறுவல்

மூரன்முறுவல் mūraṉmuṟuval, பெ.(n.)

   புன்சிரிப்பு; smile.

     ‘முட்போன்ற பல்லு விளங்கும் மூரன் முறுவலையும்’ (பு.வெ.11, ஆண்பாற்.9, உரை);.

     “மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே” (குறுந்.286);.

     [மூரல் → மூரன் + முறுவல்.]

மூரலி-த்தல்

மூரலி-த்தல் mūralittal,    4 செ.கு.வி.(v.i.)

   புன்முறுவல் செய்தல்; to laugh, smile.

      “மூரலித்த முகத்தினன்” (உபதேசகா. அயமுகி.61);.

     [மூரல் → மூரலி-த்தல்.]

மூரல்

மூரல் mūral, பெ.(n.)

   1. பல் (பிங்.);; tooth.

   2. புன்சிரிப்பு (பிங்.);; smiling.

     “மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே” (குறுந். 286:5);.

     “உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு” (அகநா.60:4);.

    3. சோறு; boiled rice.

     “பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” (பெரும்பாண்.168);.

   4. பால் (பரி.அக.);; milk.

   5. ஒரு வகை கடல் மீன்; a kind of sea – fish.

தெ. முரியு, முருகு;க. முருவ;ம. முரல்;து.முரிஜ.

மூரா

 மூரா mūrā, பெ. (n.)

   மீன்பிடிகலத்தின் முன்பக்கம் (முகவைமீன்.);; frontage of fishing boat.

மூரி

மூரி1 mūri, பெ.(n.)

   1. பெருமை; greatness.

     “மூரிக் கடற்றானை” (பு.வெ.3:3); (பிங்.);.

      “முழங்குதிரை கொழீஇய மூரீ எக்கர்” (நற். 15:1);.

    2. வலிமை; strength.

     “மூரிவெஞ்சிலை” (கம்பரா.கும்பகருண.26);.

   3. பழமை (வின்.);; antiquity.

   4. கிழ அகவை; old age. “மூரியெருத்தாலுழவு” (இன்.நாற். 21);.

    5. எருமை; buffalo.

     “மோட்டிள மூரி யுழக்க” (கம்பரா. அகலிகை. 69);.

   6. எருது; ox, bullock.

     “நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு” (பதிற்றுப்.67 : 15);.

   7. விடை யோரை (இடபராசி); (திவா.);; taurus of the zodiac.

   8. திமில் (யாழ்.அக.);; hump.

   9. துண்டம்; bit, part.

     “வெண்ணிண மூரி யருள” (புறநா.393);.

   10. முறியோலை பார்க்க;see {}.

   11. முரண் (பிங்.);; enmity.

   12. நெரிவு (வின்.);; crack, breach.

   ம. மூரி;தெ., க., து. முரி.

 மூரி2 mūri, பெ.(n.)

   1. சோம்பல்; laziness, indolence.

   2. சோம்பல் முரிப்பு; shaking off laziness.

     “பொய்த்ததோர் மூரியா னிமிர்ந்து” (கம்பரா.உண்டாட்35);.

 மூரி mūri, பெ.(n.)

   பொலி காளை, எருது; stud bull.

     [முல்-மூர்-முரி]

மூரிநிமிர்-தல்

மூரிநிமிர்-தல் mūrinimirtal,    2 செ.கு.வி. (v.i.)

   நெட்டை முரித்தல்; to stretch one self, as from laziness.

     “சிங்கம்… மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு” (திவ். திருப்பா.23);.

மறுவ. சோம்பல் முறித்தல்.

     [முரி → மூரி → மூரி + நிமிர்தல் = உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல் (வே.சொ.க.);.]

மூரிபோ – தல்

மூரிபோ – தல் mūripōtal,    8 செ.கு.வி.(v.i.)

மூரிநிமிர்-தல் பார்க்க;see {}.

     “நாஞ்சின் மூரிபோகாது முடுக்கும்” (பரிபா.20:54);.

     [மூரி + போ-தல்.]

மூரிப்போ-தல்

மூரிப்போ-தல் mūrippōtal,    8 செ.கு.வி. (v.i.)

   முதுமையால் வலிமையற்றுப் போதல்; to become weak by age.

முன்பே மூரிப் போய்ப் பல விடங்களிலும் பூண்கட்டிக் கிடக்கிறதொரு சொத்தை வில்லை (திவ்.பெரியாழ்.3. 9:2, வியா.பக்.771);.

     [மூரி + போ-தல்.]

மூரிமுரி-த்தல்

மூரிமுரி-த்தல் mūrimurittal,    4 செ.கு.வி. (v.i.)

மூரிநிமிர்-தல் பார்க்க;see {}.

     [மூரி + முரி-த்தல்.]

மூரியோலை

 மூரியோலை mūriyōlai, பெ.(n.)

முறியோலை (நாஞ்சில்.); பார்க்க;see {}.

     [மூரி + ஒலை.]

மூரிவலனாதி

 மூரிவலனாதி mūrivalaṉāti, பெ.(n.)

   பருந்து; kite.

மூருகடந்தை

 மூருகடந்தை mūrugaḍandai, பெ.(n.)

   இலந்தை; jujube – zizphus (சா.அக.);.

மூருகணிக்கரம்

 மூருகணிக்கரம் mūrugaṇiggaram, பெ.(n.)

   கத்திரிக்காய்; brinjal (சா.அக.);.

மூருவம்

 மூருவம் mūruvam, பெ.(n.)

மூர்வம் பார்க்க;see {}.

     [மூர்வம் → மூருவம்.]

மூர்க்கண்டவன்

 மூர்க்கண்டவன் mūrkkaṇṭavaṉ, பெ.(n.)

   கொட்டைப் பாக்கு; arecanut.

மூர்க்கத்தனம்

 மூர்க்கத்தனம் mūrkkattaṉam, பெ. (n.)

   விலங் கியல்பு;   கடுங்கொடுமை; wild behaviour.

த.வ.விலங்கியல்பு, வன்கொடுமை

     [Skt. {} → த. மூர்க்கம்.]

மூர்க்கநாயனார்

மூர்க்கநாயனார் mūrkkanāyaṉār, பெ. (n.)

   நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர். (பெரியபு.);; a canonized {} saint, one of 63.

மூர்க்கம்

மூர்க்கம் mūrkkam, பெ. (n.)

   1. மூடத்தன்மை (வின்.);; foolishness, stupidity.

   2. கடுஞ்சினம்; rage, fury, wrath.

     “மூர்க்கத்தவனை நரங்கலந்த சிங்கமாய்க் கீண்ட” (திவ். இயற். 2, 84.);

   3. ஒட்டாரம், பிடிவாதம் (வின்.);; obstinacy.

   4. பகை. (வின்.);; opposition, hatred.

   5. முரட்டுத்தனம் (இ.வ.);; violence, force.

   6. நாகப்பாம்பு (யாழ்.அக.);; cobra.

   7. மலப்பைச் சிறுபுழு (சங். அக.);; thread worm.

     [Skt. {} → த. மூர்க்கம்.]

மூர்க்கி

 மூர்க்கி mūrkki, பெ. (n.)

   மூவிலைக் கொழுந்து; three leaved wild lime – Trichilia spinosa (சா.அக.);.

மூர்ச்சனம்

 மூர்ச்சனம் mūrccaṉam, பெ.(n.)

   பித்தத்தினால் நினைவு தவறுதல்; loss of consciousness due to excess of bile humour.

     [மூச்சு → மூர்ச்சை → மூர்ச்சனம்.]

மூர்ச்சனை

மூர்ச்சனை mūrccaṉai, பெ.(n.)

   1. மூர்ச்சை, 1 பார்க்க;see {}.

   1. “முந்திய வுயிர்ப்புமற மூர்ச்சனை யடைந்தான்” (பிரமோத்.5:22);.

   2. பெருமூச்சு விடுகை, ஆழ்துயர்படுகை, நெட்டுயிர்ப்பு; sigh, deep breath.

     “முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால்” (சீவக. 1627);.

   3. கமகம் பத்தனுளொன்று (பரத.இராக.24);; the regulated rise and fall through the musical scale, modulation, one of ten kamagam.

     [மூர்ச்சை –→ மூர்ச்சனை.]

மூர்ச்சி-த்தல்

மூர்ச்சி-த்தல் mūrccittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. மயக்கமடைதல், உணர்விழத்தல்; to swoon, faint.

     “அன்பினால் மூர்ச்சித்த வன்பருக்கு” (தாயு.சுகவாரி.4);.

   2. பெருமூச்சு விடுதல்; to sigh.

     “துயர் சிறிதாறி மூர்ச்சியா” (கம்பரா. சடாயுவு.139);.

     [மூச்சு → மூர்ச்சை → மூர்ச்சி → மூர்ச்சி-த்தல்.]

மூர்ச்சிதம்

மூர்ச்சிதம் mūrccidam, பெ.(n.)

   1. அறிவின்மை; ignorance.

   2. மூர்ச்சை, 1, 2 பார்க்க;see {}, 1, 2.

   3. உயரம்; height.

     [மூச்சு → மூர்ச்சை → மூர்ச்சி → மூர்ச்சிதம்.]

மூர்ச்சை

மூர்ச்சை1 mūrccai, பெ.(n.)

   1. மயக்க மடைகை, அறிவு இழக்கை, உணர்வு இழக்கை (பிரக்ஞை); (உ.வ.);; fainting, loss of consciousness, swoon, syncope.

   2. வாட்டம் (யாழ்.அக.);; languioshing.

   3. மூர்ச்சனை, 3 (இசை.); பார்க்க;see {}.

அந்தப் பாட்டில் மூர்ச்சை நன்றாகயிருந்தது.

   4. கூர்மை; sharpness.

கத்தியின் மூர்ச்சை.

     [மூச்சு → (மூச்சை); → மூர்ச்சை.]

ஒ.நோ. கோத்தல் → கோர்த்தல்

 மூர்ச்சை2 mūrccai, பெ.(n.)

ஒர் இசையின் சிறப்பியல்பு (கனம் கிருஷ்ணையர், 16);:

 distinguishing marks of a musical mode.

     [மூச்சு → மூர்ச்சை.]

மூர்ச்சைசுரம்

 மூர்ச்சைசுரம் mūrssaisuram, பெ.(n.)

   மயக்கம் உண்டாக்கும் ஒருவகைக் காய்ச்சல்; fever that causes unconsciousness (சா.அக.);.

     [மூர்ச்சை + சுரம்.]

மூர்ச்சைதெளி-தல்

மூர்ச்சைதெளி-தல் mūrccaideḷidal,    2 செ.கு.வி. (v.i.)

   மயக்கத்திலிருந்து தெளிதல்; to recover from swoon (சா.அக.);.

     [மூர்ச்சை + தெளி-தல்.]

மூர்ச்சைபித்தம்

 மூர்ச்சைபித்தம் mūrccaibittam, பெ.(n.)

   மார்பு எரிச்சல், வாய்க் கசப்பு, முழங்கால், தொடை வலி, வாந்தி, செரிமானம் சரியில்லாமை முதலிய நோய் வகை; a disease marked by bitterness in the mouth, burning sensation in the chest, pain in the knee and thighs, vomitting and indigestion (சா.அக.);.

     [மூர்ச்சை + பித்தம்.]

மூர்ச்சைப்புழு

 மூர்ச்சைப்புழு mūrccaippuḻu, பெ.(n.)

   பாக்குகளில் இருக்கும் ஒருவகைப் புழு, இப்பாக்கை வாயில் போட்டுக் கொண்டால் மயக்கம் உண்டாகும்; a worm in the areca nut that causes fainting (சா.அக.);.

     [மூர்ச்சை + புழு.]

மூர்ச்சைரோகம்

மூர்ச்சைரோகம் mūrccairōkam, பெ.(n.)

   மயக்கம். மூக்கின் துளைகளில் 4 துளி முலைப்பால் விடத் நீங்கும் இம் மயக்கம்; the faint or swoon is relieved by dropping breast milk into the nostrils (சா.அக.);.

     [மூச்சு → மூர்ச்சை + Skt. ரோகம்.]

மூர்ச்சைவலி

 மூர்ச்சைவலி mūrccaivali, பெ.(n.)

   மயக்க வலிப்பு; fainting fits (சா.அக.);.

     [மூர்ச்சை + வலி.]

மூர்ச்சைவாயு

 மூர்ச்சைவாயு mūrccaivāyu, பெ. (n.)

   மூர்ச்சை உண்டுபண்ணுவதாகக் கருதும் காற்று (வாயு); (வின்.);; a wind in the body, supposed to cause swooning.

     [மூர்ச்சை + Skt. வாயு.]

மூர்ச்சைவிழல்

 மூர்ச்சைவிழல் mūrccaiviḻl, பெ.(n.)

   மயங்கி விழுகை; get swooned (சா.அக.);.

     [மூர்ச்சை + விழல்.]

மூர்தினிவயல்

 மூர்தினிவயல் mūrtiṉivayal, பெ. (n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur.Taluk.

     [மூலை+தண்ணிர்+வயல்]

மூர்த்தன்னியன்

மூர்த்தன்னியன் mūrttaṉṉiyaṉ, பெ. (n.)

   1. முகாமையானவன்; chieftaincy, pre- eminence.

மும்மதமால்யானை மூர்த்தன் னியனை (விறலிவிடு.24);.

   2. ஊக்கமிகுதி யுடையவன்; person of great energy.

மூர்த்தன்னியம்

மூர்த்தன்னியம் mūrttaṉṉiyam, பெ. (n.)

   1. முதன்மைச்சிறப்பு; prominence.

   2. மீறுகை; high handedness.

     [Skt. {} → த. மூர்த்தன்னியம்]

மூர்த்தம்

மூர்த்தம் mūrttam, பெ.(n.)

முழுத்தம் (முகூர்த்தம்); பார்க்க;see {}.

     “பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்” (பெருங்.நரவான.6, 73);.

 மூர்த்தம் mūrttam, பெ. (n.)

   1. வடிவுடைப் பொருள்; that which has form, figure, shape or body.

     “அன்மையின் மூர்த்தம்” (ஞான.55,2);

   2. உடல் (சூடா.);; body.

   3. உறுப்பு (பிங்.);; limb.

     [Skt. {} → த. மூர்த்தம்1]

மூர்த்தி

மூர்த்தி mūrtti, பெ. (n.)

   1. உடல்; body.

     “ஒத்தொளிரு மூர்த்தியார்” (சூளா.குமார.1);

   2. வடிவம்; form, figure.

     “அன்பெனு மூர்த்தியார்” (பெரியபு. மூர்த்தி.9);.

   3. கடவுள்; God.

     “திரிமூர்த்தி”.

   4. அருகன் (திவா.);; arhat.

   5. புத்தன் (திவா.);; the Buddha.

   6. சிவன். (யாழ். அக.);;{}.

   7. சத்தியோசாதத்தின் ஆற்றல் (சத்தி); (சதாசிவ);; the {} of {}.

   8. துறவுக்கோலம்பூண்டவன் (சீவக. 3071);; ascetic, one who performs penance.

   9. பெரியார்; saint, sage, great personage, a term of reverence.

     “ஒதுவார்மூர்த்தி”.

   10. தலைவன் (யாழ். அக.);; lord.

   11. பொருள் (யாழ்.அக.);; matter, substance.

   12. நடை, நாகரிகம் (யாழ். அக.);; style, fashion.

     [Skt. {} → த. மூர்த்தி.]

மூர்த்திகரம்

மூர்த்திகரம் mūrttigaram, பெ. (n.)

   1. தெய்வச் செயல்; divine act.

   2. தெய்வத் தன்மை (வின்.);; divinity, divine nature.

     [Skt. {} kara → த. மூர்த்திகரம்.]

மூர்த்திசெட்டிவெட்டு

மூர்த்திசெட்டிவெட்டு mūrttiseṭṭiveṭṭu, பெ.(n.)

   பழைய நாணய வகை (பணவிடு.141);; an ancient coin.

     [p]

மூர்த்திநாயனார்

மூர்த்திநாயனார் mūrttināyaṉār, பெ.(n.)

   சிவனடியார் அறுபத்து மூவரில் ஒருவர்; one among 63 canonized {}.

     [மூர்த்தி + நாயனார்.]

பாண்டிய நாட்டின் மதுராபுரி நகரத்தைச் சார்ந்தவர். இயற்பெயர் மூர்த்தியார். சமண சமயத்தைச் சார்ந்த வடுகக் கருநாட மன்னன் மூர்த்தியாரை இகழ்ச்சி படுத்த எண்ணி தொடர் துன்பங்கள் கொடுத்தான் என்றும் அதைப் பொருட்படுத்தாமல் மூர்த்தியார் திருத்தொண்டு செய்து வந்தார் என்றும், அப்பொழுது அரசன் நம் அடியார்க்கு யாரும் சந்தனக்கட்டை விற்கக் கூடாது என்று தடைவிதித்ததாகவும், இதனால் சந்தனக்கட்டை எங்கும் கிடைக்கவில்லை என்றும், அரசன் உடனே சிவனடியாரின் கையை சந்தனக்கல்லில் வைத்து முழங்கை எலும்பு ஒடியும்படி அடித்ததாகவும், அடியார் அப்போது சிவனியமும் தமிழும் தழைக்க இந்நாட்டிற்கு ஒரு நல்ல அரசன் எப்பொழுது தான் வருவானோ? என வேண்ட, அன்று இரவு அரசன் இறந்து விட்டதாகவும், அவருக்கு (அரசன்); பிள்ளைகள் இல்லாததால் அமைச்சர்கள் யானையைக் கண்கட்டிவிட்ட தாகவும், யானையிடம் உன் திருவருளால் நாட்டையாள ஒருவரைத் தெரிந்து சுமந்து வரும்படி வேண்டியதாகவும் யானை மூர்த்திநாயனாரைச் சுமந்து வந்ததாகவும் அன்று முதல் மூர்த்தியார் உலகாண்டு பின்பு இறைவனடி சேர்ந்தார் என தொண்டர் மாக்கதை (பெரிய புராணம்); கூறுகிறது.

மூர்வம்

 மூர்வம் mūrvam, பெ.(n.)

   செடி வகையைச் சார்ந்த பெருங்குரும்பை; bow string hemp stemless plant (சா.அக.);.

மூறுவஞ்சி

 மூறுவஞ்சி mūṟuvañji, பெ. (n.)

   முத்து; pearl, one of the nine gems (சா.அக.);.

மூறுவா

 மூறுவா mūṟuvā, பெ.(n.)

   பெருங்குரும்பை (மலை.);; bowstring hemp.

மூறைக்கல்

 மூறைக்கல் mūṟaikkal, பெ.(n.)

   கடலடியிற் கிடைக்கும் கல் வகைகளுள் விலை மதிப்புடையது (நெல்லைமீன.);; valuable stone among stones found under the sea.

மூறைமுள்

 மூறைமுள் mūṟaimuḷ, பெ.(n.)

   நீர்பரப்பின் மேல் பந்துபோல் மிதக்கும் ஒருயிரி; an aquatic floating creeper resembling like ball.

மூல நோயுடையார் உண்ண மூலம் குணமாகும்.

மூற்றை

மூற்றை mūṟṟai, பெ.(n.)

   மும்மடங்கு; three –fold;triple.

     “நூற்றுப்பத்து நுவன்ற தோன் முகன் மூற்றைக் கையினன்” (கந்தபு. கயமுகன்.2);.

     [மூன்று → மூற்றை.]

மூலஅபானக்கடுப்பு

 மூலஅபானக்கடுப்பு mūlaapāṉakkaḍuppu, பெ.(n.)

   மலவாய்ப் பகுதியில் எரிச்சலுடன் வலி ஏற்படுகை; irritating pain caused in the region of anus (சா.அக.);.

மூலகஞ்சம்

மூலகஞ்சம் mūlagañjam, பெ.(n.)

   1. சுவற்று முள்ளங்கி; large radish – Raphanus sativus.

   2. சின்ன முள்ளங்கி; small radish – Raphanus sativus (சா.அக.);.

மூலகஞ்சரம்

 மூலகஞ்சரம் mūlagañjaram, பெ.(n.)

   சின்ன முள்ளங்கி; small radish – Raphanus sativus (சா.அக.);.

மூலகஞ்சானி

 மூலகஞ்சானி mūlagañjāṉi, பெ.(n.)

   ஆற்று முள்ளங்கி; wall radish – Blumea aurita (சா.அக.);.

மூலகணம்

மூலகணம் mūlagaṇam, பெ.(n.)

   1. வெப்பம் கரணியமாக குழந்தைகளுக்கு மலத்தில் சீழ், அரத்தம் இரண்டும் கலந்து விழும் ஒரு நோய் வகை (பைஷஜ.);; a disease in children due to congential heat marked by passing of bloody and mucus faeces.

   2. மூலக்கணம் பார்க்க;see {}.

மறுவ. முக்குக்கணம்

மூலகதலம்

மூலகதலம் mūlagadalam, பெ.(n.)

   1. ஒருவகை முருங்கை; moringa.

   2. முண்முருங்கை, 1 (மூ.அ.);;see {}.

மூலகந்தம்

மூலகந்தம்1 mūlagandam, பெ.(n.)

   இருவேலி; cuscus-grass.

 மூலகந்தம்2 mūlagandam, பெ.(n.)

   மரம், பூண்டு இவைகளின் வேர்; root of plant, trees and herbs (சா.அக.);.

மூலகன்மம்

மூலகன்மம் mūlagaṉmam, பெ.(n.)

   ஆதனை ஒட்டிக் கொண்டு இருக்கிற கன்மம் (சி.சி.2, 39, சிவஞா);; karma eternally clinging to the soul.

     [மூலம் + Skt. கன்மம்.]

மூலகபம்

 மூலகபம் mūlagabam, பெ.(n.)

   முருங்கை; drumstic tree – Moringa oleifera (சா.அக.);.

மூலகபல்லவம்

 மூலகபல்லவம் mūlagaballavam, பெ.(n.)

   முருங்கை மரம்; drumstic tree – Moringa oleifera (சா.அக.);.

மூலகம்

மூலகம் mūlagam, பெ.(n.)

   1. கற்பூர வாழைப் பழம்; a kind of fragrant plantain fruit.

   2. கிழங்கு; tuber ous root.

   3. முள்ளங்கி; radish (சா.அக.);.

மூலகம்பகைத்தான்

 மூலகம்பகைத்தான் mūlagambagaittāṉ, பெ.(n.)

   சீந்திற்கொடி; moon creeper – Tinosphora corelifolia (சா.அக.);.

மூலகரணாதி

 மூலகரணாதி mūlagaraṇāti, பெ.(n.)

   சிவனார் வேம்பு; Siva’s neem – Indigoferra asphalathifolia (சா.அக.);.

மூலகவொளி

மூலகவொளி mūlagavoḷi, பெ.(n.)

மூலாக்கினி, 2 பார்க்க;see {}, 2.

     “சுடரிலகு மூலகவொளி மேவியருவி பாய” (திருப்பு.586);.

மூலகா

 மூலகா mūlakā, பெ.(n.)

   முள்ளங்கி; radish – Raphanus sativus (சா.அக.);.

மூலகாரணம்

மூலகாரணம் mūlakāraṇam, பெ. (n.)

   முதற்கரணியம்; first cause.

நானவற்றினுக்கு மூல காரணமாகுவன் (பிரபுலிங்.மாயைகோ.68);.

     [மூலம் + காரணம்.]

மூலகுணக்காரன்

மூலகுணக்காரன் mūlaguṇaggāraṉ, பெ.(n.)

மூலக்காரன், 3 (வின்.); பார்க்க;see {}. 3.

மூலகுருவாசான்

 மூலகுருவாசான் mūlaguruvācāṉ, பெ.(n.)

   பொன்மாற்று சித்தர்; alchemist (சா.அக.);.

மூலக்கச்சம்

 மூலக்கச்சம் mūlakkaccam, பெ.(n.)

மூலைக்கச்சம் (உ.வ.); பார்க்க;see {}.

     [மூலை + கச்சம் → மூலக்கச்சம்.]

மூலக்கடுப்பு

 மூலக்கடுப்பு mūlakkaḍuppu, பெ.(n.)

   மூல நோய் (வின்.);; piles (சா.அக.);.

     [மூலம் + கடுப்பு.]

மூலக்கணம்

 மூலக்கணம் mūlakkaṇam, பெ.(n.)

   அரத்தமும் சளியும் கலந்து வெளியேறி குழந்தைகளைத் தாக்கும் ஒருவகை நோய்; a disease in children due to congenital heat marked by passing of bloody and mucus faeces.

மறுவ. முக்குக்கணம்

     [மூலம் + கணம்.]

மூலக்கனல்

 மூலக்கனல் mūlakkaṉal, பெ.(n.)

மூலச்சூடு பார்க்க;see {}.

     [மூலம் + கனல்.]

மூலக்கரணி

 மூலக்கரணி mūlakkaraṇi, பெ.(n.)

   ஒருவகை நஞ்சு; a kind of arsenic.

மூலக்கரப்பன்

 மூலக்கரப்பன் mūlakkarappaṉ, பெ.(n.)

   ஒரு வகைத் தோல் நோய்; a skin disease (சா.அக.);.

மூலக்கல்

 மூலக்கல் mūlakkal, பெ.(n.)

   தலைக்குள் இருக்கும் நச்சுக்கல்; a kind of poisonous stone in the head (சா.அக.);.

     [மூலம் + கல்.]

மூலக்கல்வி

மூலக்கல்வி mūlakkalvi, பெ.(n.)

   தொடக்கப் பள்ளிக் கல்வி; elementary education.

மூலக் கல்வி நாங்கள் வாசித்தா லாபத்தோ (பெண்மதி மாலை.பக்.29);.

     [மூலம் + கல்வி.]

மூலக்கழிச்சல்

 மூலக்கழிச்சல் mūlakkaḻiccal, பெ.(n.)

   அறுவகைக் கழிச்சல் நோய்களுள் ஒன்று; one of six {}, Chronil euterities.

     [மூலம் + கல்.]

மூலக்காடு

 மூலக்காடு mūlakkāṭu, பெ. (n.)

   கள்ளக் குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakkurichi Taluk.

     [முலை+காடு]

மூலக்காட்டுமாடு

 மூலக்காட்டுமாடு mūlakkāṭṭumāṭu, பெ.(n.)

   கறவை (பசு); மாட்டின் வகையில் ஒன்று; a species of mischy cow.

     [மூலம் + காட்டு + மாடு.]

மூலக்காணி

 மூலக்காணி mūlakkāṇi, பெ.(n.)

   கர்க்கடக நஞ்சு (யாழ்.அக.);; mineral poison.

மூலக்காரன்

மூலக்காரன் mūlakkāraṉ, பெ.(n.)

   1. மூல நூலை இயற்றியவன்; author of a work, as distinguished from its commentator.

   2. மூல நோய் உள்ளவன் (வின்.);; person suffering from piles.

   3. எதற்கும் உடனடியாக சினம் கொள்ளும் குணம் உடையவன் (வின்.);; short – tempered man.

     [மூலம் + காரன்.]

மூலக்காற்று

 மூலக்காற்று mūlakkāṟṟu, பெ.(n.)

   மூலைத் திசையினின்று அடிக்கும் காற்று (மீனவ.);; wind that blows from the corner of two direction.

     [மூலை → மூலம் + காற்று.]

மூலக்கால்

 மூலக்கால் mūlakkāl, பெ. (n.)

   குளம்பு விரிந்து போன மாடு; cow with widened hoof.

மூலக்கிரகம்

 மூலக்கிரகம் mūlaggiragam, பெ.(n.)

   அரச மரம்; a sacred tree called papal – Ficus religiosa (சா.அக.);.

மூலக்கிரந்தி

மூலக்கிரந்தி mūlakkirandi, பெ.(n.)

   1. நல்ல அரத்தம் கெடுவதால் வரும் நோய்; a disease due to impure blood in the body.

   2. மூலநோய், 1 (M.L.); பார்க்க;see {}, 1.

மறுவ. வயிற்றுக்கடுப்பு

     [மூலம் + கிரந்தி.]

மூலக்கிராணி

மூலக்கிராணி mūlakkirāṇi, பெ.(n.)

   1. அறுவகைக் கழிச்சல் (கிராணி); நோய்களுள் ஒன்று; chronic enteritis, one of six {}.

   2. மூலநோய், 1 பார்க்க;see {}, 1.

   3. வயிற்றளைச்சல் (வின்.);; dysentry.

     [மூலம் + Skt. கிராணி.]

 Skt. கிராணி → த. கழிச்சல்.

அறுவகைக் கழிச்சல் (கிரகணி); நோய்கள்:

   1. பித்தக் கழிச்சல்;   2. வெப்ப ஊதைக் கழிச்சல்,

   3. சளி ஊதைக் கழிச்சல்;   4. மேகக் கழிச்சல்;   5. மூலக்கழிச்சல்;   6. ஊதைக் கழிச்சல்.

மூலக்குச்சி

 மூலக்குச்சி mūlakkucci, பெ. (n.)

   வடும்புத் தண்டையும் முன் தண்டையும் இழுத்துக் கட்டும் குச்சிகள்; an handloom device.

     [மூலை+குச்சி]

மூலக்குறிச்சி

 மூலக்குறிச்சி mūlakkuṟicci, பெ. (n.)

   மதுரை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurai Taluk.

     [மூலை+குறிச்சி]

மூலக்கூடல்

 மூலக்கூடல் mūlakāṭal, பெ.(n.)

   பெருங் குடல் அடிக்கூறு, மலவாய்; rectum.

மூலக்கூறு

மூலக்கூறு1 mūlakāṟu, பெ.(n.)

   உயிரற்ற ஒருபொருளைத் துண்டித்துக் கொண்டு போய்க் கடைசியாகப் பிரிக்க முடியாததெனக் கருதப்படும் நிலையில் உள்ள மூலப்பொருளின் அனைத்துப் பண்புகளையும் கொண்ட ஒரு குறிப்பிட்ட அணுவோ அல்லது வெவ்வேறு அணுக்களின் இணைவோ கொண்ட சிறு பகுதி; molecule.

     [மூலம் + கூறு.]

 மூலக்கூறு2 mūlakāṟu, பெ.(n.)

   பொருள்களின் அடிப்படைத் தத்துவம்; radical part or essential principle of a substance.

     [மூலம் + கூறு.]

மூலக்கொடி

 மூலக்கொடி mūlakkoḍi, பெ.(n.)

   அல்லிக் கொடி; water lily (சா.அக.);.

மூலக்கொதி

மூலக்கொதி mūlakkodi, பெ.(n.)

   1. மூல நோய் உண்டாக்கும் ஒருவகை எரிச்சல் (வின்.);; painful sensation from piles.

   2. மூலநோய், 1 பார்க்க;see {}, 1.

     [மூலம் + கொதி.]

மூலக்கொதிப்பு

 மூலக்கொதிப்பு mūlakkodippu, பெ.(n.)

மூலக்கொதி பார்க்க;see {}.

     [மூலம் + கொதிப்பு.]

மூலங்கீரனார்

மூலங்கீரனார் mūlaṅāraṉār, பெ.(n.)

   கழக காலப் புலவன்; poet in {} age.

முள் முருக்கின் நெற்றைப் பேயினுடைய கைவிரலுக்கு உவமை கூறியவர். சோழ நாட்டு திருச்சாய்க்காடு இவர் செய்யுளில் வந்துள்ளது (நற்.73);. பேய்கள் பலியுண்ண மூதூர் மன்றங்களுக்கு வருவதை இவர் கூறுகிறார். திருச்சாய்க் காட்டின் வளத்தையும் சிறப்பித்துக் கூறியுள்ளார். இவ்வூர் இக்காலத்தில் சாயாவானம் என்று வழங்கப்படுகிறது. இவர் பாடியதாக நற்றிணையில் ஒரு பாடல் உள்ளது.

பாலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

     “வேனில் முருக்கின் விளைதுணர் அன்ன

மாணா விரல் வல்வாய்ப் பேஎய்

மல்லன் மூதூர் மலர்ப்பலி உணீஇய

மன்றம் போழும் புன்கண் மாலைத்

தம்மொடும் அஞ்சும் நம்மிவண் ஒழியச்

செல்ப என்ப தாமே செவ்வரி

மயிர் நிரைத் தன்ன வார்கோல் வாங்குகதிர்

செந்நெலஞ் செறுவின் அன்னந் துஞ்சும்

பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்

நுதல் கவின் அழிக்கும் பசலையும்

அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே” (நற்.73);.

மூலசதுர்வர்க்கம்

 மூலசதுர்வர்க்கம் mūlasadurvarkkam, பெ.(n.)

   நான்கு வகைக் கிழங்கு; four sorts of tuber.

     [மூலம் + சதுர்வாக்கம்.]

மூலசத்தி

 மூலசத்தி mūlasatti, பெ.(n.)

   தலைமையான ஆற்றல் (சக்தி);; serpents power in the human system – ‘kundalini’ the seat of power the Godless of Moola {} (சா.அக.);.

     [மூலம் + சத்தி.]

மூலசம்

 மூலசம் mūlasam, பெ. (n.)

   கிழங்குள்ள செடிகொடி (வின்.);; plants and creeper having tubers.

மூலசாமூலம்

 மூலசாமூலம் mūlacāmūlam, பெ.(n.)

   பெருவழுதலை; a plant – a big species of brinjal (சா.அக.);.

மூலச்சி

 மூலச்சி mūlacci, பெ. (n.)

   காற்றுக்கொடி (கொத்தான்);; air creeper, leafless creeper – Cassytha filiformia (சா.அக.);.

மூலச்சிறைபோடு – தல்

மூலச்சிறைபோடு – தல் mūlacciṟaipōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   ஒரு சடங்கு; one kind of rite, function, observance.

     [மூலை + சிறை + போடு-.]

கணவன் இறந்த இரவுக்குப் பின் வரும் அதிகாலையில் மனைவியின் பட்டுச் சேலையை அவிழ்த்து வெள்ளைச் சேலை உடுத்துவர். இச்சடங்கு அவளை மூலையிற் சிறை வைத்தற்கு அடையாளமாக நடத்தப்படுகிறது (கோவை.);.

மூலச்சுன்னம்

 மூலச்சுன்னம் mūlaccuṉṉam, பெ.(n.)

   குடற் சுன்னம் (நச்சுக் கொடியில் இருந்து எடுக்கப்படும் காரத்தன்மை உடைய கலவை);; an alkaline compound prepared from the placental cord (சா.அக.);.

மூலச்சூடு

மூலச்சூடு mūlaccūṭu, பெ.(n.)

   1 கணைச்சூடு; a disease of children.

   2. மூலநோய்; piles.

   3. மூலக்கொதி, 1 பார்க்க;see {}, 1.

     [மூலம் + சூடு.]

மூலச்சோதி

 மூலச்சோதி mūlaccōti, பெ. (n.)

   கடவுள்t (வின்.);; god, as the Primeval Light.

     [மூலம் + Skt. சோதி.]

மூலஞ்சிவப்பி

 மூலஞ்சிவப்பி mūlañjivappi, பெ.(n.)

   நச்சுப்புல்; a poisonous grass (சா.அக.);.

மூலட்டம்

மூலட்டம் mūlaṭṭam, பெ.(n.)

மூலட்டானம் பார்க்க;see {}.

      “திருமூலட்டந் தொழுது” (காஞ்சிப்பு.தழுவக்கு.172);.

மூலட்டானன்

மூலட்டானன் mūlaṭṭāṉaṉ, பெ.(n.)

   1. திருவாரூரிற் கோயில் கொண்டுள்ள சிவன்; the presiding deity at the Temple of {}.

     “மணியாரூர்த் திருமூலட்டானனாரே” (தேவா. 720, 1);.

    2. மூலவர் பார்க்க;see {}.

     [மூலட்டானம் → மூலட்டானன்.]

மூலட்டானம்

மூலட்டானம் mūlaṭṭāṉam, பெ.(n.)

   திரு மூலட்டானம் (தேவா.725, 4);; the sacred shrine of {}.

மூலதடி

 மூலதடி mūladaḍi, பெ.(n.)

   ஆண் குறி; male organ, penis (சா.அக.);.

     [மூலம் + தடி.]

மூலதனம்

மூலதனம்1 mūladaṉam, பெ.(n.)

   தொழில் தொடங்கத் தேவைப்படும் அல்லது பயன்படுத்தப்படும் முதல் (பணம்);; capital, investment.

பத்து கோடி ரூபாய் மூலதனத்தில் நிறுவப்பட்ட தொழிற்சாலை. சில நாடுகள் உள்நாட்டுத் தொழில்களில் அயல் நாட்டவர் மூலதனம் போடுவதை வரவேற்கின்றன. உழைப்பையே மூல தனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்.

     [மூலம் + Skt. தனம்.]

 மூலதனம்2 mūladaṉam, பெ. (n.)

   தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகிற உடமை, சொத்து; hereditary property.

     [மூலம் + தனம்.]

மூலதாது

 மூலதாது mūlatātu, பெ.(n.)

   மூலப் பொருள் (தனிமம்);; elements (சா.அக.);.

     [மூலம் + Skt. தாது.]

மூலதிரசம்

 மூலதிரசம் mūladirasam, பெ.(n.)

   ஒருவகைச் செடி (அரத்தை);; a plant – Galangal – Alpinia galangal (சா.அக.);.

மூலதேசியம்

 மூலதேசியம் mūlatēciyam, பெ.(n.)

   செழு மலர்க் கொன்றை; large flower cassia – Cassia florida (சா.அக.);.

மூலத்தனம்

 மூலத்தனம் mūlattaṉam, பெ.(n.)

மூலதனம் (யாழ்.அக.);பார்க்க; see {}.

     [மூலம் + Skt. தனம்.]

மூலத்தம்பம்

 மூலத்தம்பம் mūlattambam, பெ.(n.)

   ஒரு சிற்ப நூல் (வின்.);; a treatise on architecture.

     [மூலம் + Skt.தம்பம்.]

மூலத்தானம்

மூலத்தானம் mūlattāṉam, பெ.(n.)

   1 அடிப்படை; base, foundation.

   2. கருவறை; sanctum sanctorum of a temple.

   3. மூலவர் (யாழ்.அக.); பார்க்க;see {}.

   4. அரச இருக்கை (வின்.);; royal residence, palace.

     [மூலம் + Skt. தானம்.]

மூலத்தினவு

 மூலத்தினவு mūlattiṉavu, பெ.(n.)

   எரிச்சலை உடைய மலவாய்; irritation in the anus (சா.அக.);.

     [மூலம் + தினவு.]

மூலத்தின்சாரம்

மூலத்தின்சாரம் mūlattiṉcāram, பெ.(n.)

   1. சிறுநீர்; urine.

   2. கல்லுப்பு; rock salt.

மூலத்திரவியம்

 மூலத்திரவியம் mūlattiraviyam, பெ.(n.)

மூலதனம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மூலம் + Skt. திரவியம்.]

மூலத்தீ

 மூலத்தீ mūlattī, பெ.(n.)

   உயிர் ஆதன் (சீவாத்மா);; liberated soul (சா.அக.);.

மூலத்தீசுர்

 மூலத்தீசுர் mūlattīcur, பெ.(n.)

   திருமந்திரம் எழுதிய திருமூலர்; Thirumoolar, author of Thirumantiram (சா.அக.);.

மூலத்துருவம்

 மூலத்துருவம் mūlatturuvam, பெ.(n.)

   விண்கோள் நிலை அளவு வகை; epoch- longitude, longitude of a planet.

மூலத்துளை

 மூலத்துளை mūlattuḷai, பெ.(n.)

   மலவாய்த் துளை; anal orifice.

மூலத்துவாரம்

 மூலத்துவாரம் mūlattuvāram, பெ.(n.)

மூலத்துளை பார்க்க;see {}.

     [மூலம் + Skt. துவாரம்.]

மூலநாசம்

மூலநாசம் mūlanācam, பெ.(n.)

   அடியோடு அழிகை; eradication, complete destruction.

மூலநாசம் பெற முடிக்கு மொய்ம்பினாள் (கம்பரா.சூர்ப்ப.8);.

     [மூலம் + நாசம்.]

மூலநாடி

மூலநாடி1 mūlanāṭi, பெ.(n.)

   சுழுமுனை (திருமந்.622);; a principal tubular vessel of the human body, said to lie between {} and {}, one of {}.

     [மூலம் + நாடி.]

 மூலநாடி2 mūlanāṭi, பெ.(n.)

   மலவாய் நாடி; nerves in the anus (சா.அக.);.

     [மூலம் + நாடி.]

மூலநாயன்

மூலநாயன்1 mūlanāyaṉ, பெ. (n.)

   திருமூலர்; great siddher named Tirumoolar (சா.அக.);.

 மூலநாயன்2 mūlanāyaṉ, பெ.(n.)

   வடிநீர் (கியாழம்);; decoction.

மூலநாள்

மூலநாள் mūlanāḷ, பெ.(n.)

   19ஆம் விண்மீனாகிய குருகு (நட்சத்திரம்);; the 19th {}.

     [மூலம் + நாள்.]

மூலநிதரி

 மூலநிதரி mūlanidari, பெ.(n.)

   வட்டத் திருப்பி; root of a twiner – Cissampelos pareira (சா.அக.);.

மூலநோக்காடு

மூலநோக்காடு mūlanōkkāṭu, பெ.(n.)

மூலநோய், 1 பார்க்க;see {}, 1.

     [மூலம் + நோக்காடு.]

மூலநோய்

மூலநோய்1 mūlanōy, பெ.(n.)

   மலவாயில் உண்டாகும் ஒருவகை நோய்; piles haemorrhoids.

     [மூலம் + நோய்.]

மலவாயில் உள்ள நாளம் என்னும் அரத்த நரம்பானது கிழங்கு முளையைப் போலவும், வேர்களைப் போலவும், ஊன் முளைகளைப் போலவும் காணும் ஒரு வகை நோய்.

 மூலநோய்2 mūlanōy, பெ.(n.)

   ஆணவ மலம்; an impurity eternally clinging to the soul.

     “மூல நோய் தீர்க்கு முதல்வன் கண்டாய்” (தேவா.845, 9);.

     [மூலம் + நோய்.]

மூலனூர்

 மூலனூர் mūlaṉūr, பெ. (n.)

   தாராபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Dharapuram Taluk.

     [மூலன்+ஊர்]

மூலபகந்தரம்

 மூலபகந்தரம் mūlabagandaram, பெ.(n.)

மூலப்பவுத்திரம் பார்க்க;see {}.

மூலபஞ்சாட்சரம்

 மூலபஞ்சாட்சரம் mūlabañjāṭcaram, பெ.(n.)

   ஐந்து எழுத்தாலாகிய நமசிவாய மந்திரம் (வின்.);; the mystic mantra of five letters viz. nama-{}.

     [மூலம் + Skt. பஞ்சாட்சரம்.]

மூலபண்டாரம்

மூலபண்டாரம் mūlabaṇṭāram, பெ. (n.)

   நிதி வைப்பு; treasure kept in reserve.

     “எங்கள் பாண்டிப் பிரான்றன் னடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான்” (திருவாச. 36:5);.

     [மூலம் + பண்டாரம்.]

மூலபதம்

 மூலபதம் mūlabadam, பெ.(n.)

   சொல்லின் முதல் நிலை (பகுதி); (வின்.);; etymon, radix or indivisible part of a word.

     [மூலம் + Skt. பதம்.]

மூலபத்திரம்

 மூலபத்திரம் mūlabattiram, பெ.(n.)

   செப்பு நெருஞ்சில்; a prostate plant – Indigofera enneaphylla (சா.அக.);.

மூலபரடை

 மூலபரடை mūlabaraḍai, பெ.(n.)

   தலைமை அவை; chief assembly.

மூலபரணி

 மூலபரணி mūlabaraṇi, பெ.(n.)

   முருங்கை மரம்; drumstic tree – Moringa oleifera (சா.அக.);.

மூலபலதம்

 மூலபலதம் mūlabaladam, பெ.(n.)

   பலா மரம்; jack tree- Arto carpus integri folia (சா.அக.);.

மூலபலம்

 மூலபலம் mūlabalam, பெ.(n.)

மூலப்படை பார்க்க;see {}.

     “மூல பலவதைப் படலம்” (கம்பரா.);.

மூலபலா

 மூலபலா mūlabalā, பெ.(n.)

   ஒரு வகைப் பலா; a kind of jack tree (சா.அக.);.

மூலபவுந்திரம்

 மூலபவுந்திரம் mūlabavundiram, பெ.(n.)

மூலப்பவுத்திரம் பார்க்க;see {}.

     [மூலம் + Skt. பவுந்திரம்.]

மூலபாடம்

 மூலபாடம் mūlapāṭam, பெ.(n.)

   உரை யில்லாத மூலம் (வின்.);; bare text without commentary.

     [மூலம் + பாடம்.]

மூலபிருத்தியன்

 மூலபிருத்தியன் mūlabiruttiyaṉ, பெ.(n.)

கடவுள் சிவனுக்குத் தொண்டு செய்யும் தலைமைப் பணியாளன் (சண்டேசுரர்);;{},

 as the chief servant of {}.

மூலபேரம்

 மூலபேரம் mūlapēram, பெ.(n.)

மூலவர் பார்க்க;see {}.

மூலப்படி

 மூலப்படி mūlappaḍi, பெ.(n.)

   கிணற்றுப் படிக்கட்டில் நீருக்கருகில் உள்ள கடைசிப்படி (கோவை.);; a last foot-stone in the stair-case of a well.

     [மூலம் + படி.]

மூலப்படை

மூலப்படை mūlappaḍai, பெ.(n.)

   அறுவகைப் படையுள் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் படை (குறள், 762, உரை); (சுக்கிரநீதி. 303);; soldiers who have been maintained from very early times or from time immemorial;

 reserved force, one of {}.

     “உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது” (குறள், 762);.

வ. மெளலம்

     [மூலம் + படை.]

அறுவகைப்படை :

   1. மூலப்படை;   2. கூலிப் படை;   3. நாட்டுப் படை;   4. காட்டுப்படை;   5. துணைப் படை;   6. பகைப்படை அறுவகைப் படையுள்ளுஞ் சிறப்புடையது மூலப்படை. மூலப்படையை வள்ளுவர் தொல்படை என்பர். வாழையடி வாழையாக இருந்து வருவதும், எவ்வகை ஊற்றையும் பொருட்படுத்தாததும், இறப்பிற்கு அஞ்சாததும், போரையே விரும்புவதும், அரசனைக் காக்க என்றும் உயிரை உவந்து ஈவதும், எக்காரணத்தையிட்டும் அறை போகாததும் வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்களாம். போர்க் காலத்துப் பெரும்படை அமைதிக் காலத்து வேண்டாவாதலின், போர் முடிந்த பின் மூலப்படை யொழிந்த பிறவெல்லாம் கலைக்கப்படுவது மரபு. அன்று மூலப்படைப் பகுதிகள் தலைநகரிலும், பிற கோநகர்களிலும் எல்லைப் புறங்களிலும் புதிதாய் வெல்லப்பட்ட பகைவர் நாட்டிலும் நிறுத்தப் பெறும் (பழ.தமிழ்.43);.

மூலப்பட்டை

 மூலப்பட்டை mūlappaṭṭai, பெ.(n.)

   சித்திர மூலத்தின் மேற்தோல் (சங்.அக.);; bark of Ceylon leadwort.

     [மூலம் + பட்டை.]

மூலப்பவுத்திரம்

 மூலப்பவுத்திரம் mūlappavuttiram, பெ.(n.)

   காற்றுபிடிப்பு, பித்தம் உடம்பில் மிகையாகி மலவாயின் அடியில் வீங்கிப் புடைத்துப் பழுத்து உடைந்து அதனின்று நீர் இடையறாது ஒழுகிக் கொண்டிருக்கும் நோய்; fistula in ano.

     [மூலம் + Skt. பவுத்திரம்.]

மூலப்பாண்டு

 மூலப்பாண்டு mūlappāṇṭu, பெ.(n.)

   உடல் காய்ந்து, முகம் வீங்கி வெளுத்து, வலு குறைந்து, கைகால் ஒய்ந்து, சூலை மேற்கொண்டு, உணவு சுருங்கும் ஒருவகை நோய்; a disease marked by dryness of the skin bloated face, paleness, loss of viality etc, a kind of dropsy (சா.அக.);.

மூலப்பாண்டுசூலை

 மூலப்பாண்டுசூலை mūlappāṇṭucūlai, பெ.(n.)

   உடல் வறண்டு, வெளுத்துத் திமிர் ஏறி, வீங்கி, கை கால் வளைந்து, கட்டி மலம் சிறுத்தும், அரத்த சோகையுடனும், கைகால்கள் விறைப்புடனும், களைப்புடனும் காணப்படும் ஒரு வகை நோய்; a kind of dropsy accompanied by anaemia, swelling loss of sensation pain in the limbs and stiffness of joints fatigue etc (சா.அக.);.

     [மூலப்பாண்டு + சூலை.]

மூலப்பினிசம்

 மூலப்பினிசம் mūlappiṉisam, பெ.(n.)

   மூக்கில் தசை வளர்ச்சியை உண்டாக்கும் ஒரு வகை நோய்l; a disease called sinus (சா.அக.);.

மூலப்புற்று

 மூலப்புற்று mūlappuṟṟu, பெ.(n.)

   மலவாய் வழியில் ஏற்படும் புற்று நோய்; cancer in the rectal region (சா.அக.);.

     [மூலம் + புற்று.]

மூலப்பொருள்

மூலப்பொருள் mūlapporuḷ, பெ.(n.)

   1. மூலகரணியமானப் பொருள்; the primary elements.

   2. கடவுள் (வின்.);; god, as the primal Being.

     [மூலம் + பொருள்.]

மூலமட்டம்

 மூலமட்டம் mūlamaṭṭam, பெ.(n.)

மூலைமட்டம் பார்க்க;see {}.

மூலமந்திரம்

மூலமந்திரம்1 mūlamandiram, பெ.(n.)

   1. தலைமை மந்திரம்; the chief mantra.

     “மும்மைசா லுலகுக் கெல்லா மூல மந்திரத்தை” (கம்பரா.வாலிவ. 71);.

   2. அடிப்படை மந்திரம் (பிரணவம்);; the mystic syllable {}.

     [மூலம் + மந்திரம்.]

 மூலமந்திரம்2 mūlamandiram, பெ.(n.)

   செய்வினைகட்கு மூலிகைகளை பயன்படுத்த வேண்டி, வேரைப் பிடுங்குவதற்கு முன் சொல்லும் மந்திரம்; before collecting the herbs for medical purposes, some religious function with mantram is to be performed (சா.அக.);.

     [மூலம் + மந்திரம்.]

மூலமுக்கணை

 மூலமுக்கணை mūlamukkaṇai, பெ.(n.)

   வில்வம்; Bael – Crataeva religiosa alias Aegle mernaelos (சா.அக.);.

மூலமுறிவெங்கொதிப்பு

மூலமுறிவெங்கொதிப்பு mūlamuṟiveṅgodippu, பெ. (n.)

   1. மூலச்சூடு, மூலக் கொதிப்பு; internal heat of system.

   2. மலவாய் வெளிப்படல்; prolapse of the anus.

     [மூலம் + முறி + வெம்மை + கொதிப்பு..]

மூலமுளை

 மூலமுளை mūlamuḷai, பெ.(n.)

   மூல நோயின் கரணியமாக மலவாயில் காணப்படும் முளை போன்ற நுனி; the fleshy excresence protruding out-wards in the rectum caused by piles (சா.அக.);.

மூலமுளைமுனை

 மூலமுளைமுனை mūlamuḷaimuṉai, பெ.(n.)

   மலவாயில் தோன்றும் முளையின் முனை; tip of the fleshy growth in the piles (சா.அக.);.

     [மூலமுளை + முனை.]

மூலமொழி

 மூலமொழி mūlamoḻi, பெ.(n.)

   முதலில் தோன்றிய மொழி, தாய்மொழி; primary or parent language.

     [மூலம் + மொழி.]

மூலம்

மூலம்1 mūlam, பெ.(n.)

   1. விதையினின்று முன்தோன்றும் முளை; seed-leaf.

   2. முளையின் மாற்றமாகிய வேர்; root.

   3. திரண்ட வேராகிய கிழங்கு (பிங்.);; bulb, tuber.

     “முதிர்கனி மூல முனிக்கண மறுப்ப” (கல்லா.38);.

   4. வேரை ஒட்டிய அடிமரம்; trunk of a tree.

     “போதி மூலம் பொருந்தி” (மணிமே. 26: 47);.

   5. அடிப்படை; fundamental cause.

   6. முதல் (ஆதி);; origin, source, that which is original.

     “மூலவோலை மாட்சியிற் காட்ட” (பெரியபு.தடுத்.56);.

   7. கரணியம்; cause, foundation.

     “மூலமாகிய மும்மலம்” (திருவாச. 2, 111);.

    8. வாயில்; agency, means.

இது அவன் மூலமாகக் கிடைத்தது.

    9. முகாமை (பிரதானம்);; importance.

     “மூலவேள்விக்கு” (கம்பரா. பிரமாத்.164);.

   10. மூலவர் (யாழ்.அக.); பார்க்க;see {}.

   11. மரம்; tree.

   12. குருகுவிண்மீன் (பிங்.);, மூலநாள்; the 19th naksatra.

   13. அண்மை; nearness.

   14. உரிமையாளர்; ownership.

   15. இதளியம் (பாதரசம்);; mercury.

   16. சித்திர மூலம்; ceylon lead wort.

வ. மூல.

     [முல் → முல் → மூலம் = முளை.]

 மூலம்2 mūlam, பெ.(n.)

   மலவாய் ஓரத்திலோ, உட்பகுதியிலோ முளையைப் போல் உருவாகி வலியையும் மலச்சிக்கலையும் உண்டாக்கும் ஒரு நோய்; piles.

அவன் மூலநோயால் தாக்கப்பட்டுள்ளதால் அவனின் மூலம் அடிக்கடி வெளிவந்துவிடுகிறது.

     [முல் → மூல் → மூலம் = முளை. அண்டியில் முளைபோல் தோன்றும் நோய்.]

 மூலம்3 mūlam, பெ.(n.)

   1. பிறிது ஒன்று தோன்றுவதற்கு அடிப்படையாக இருக்கும் பொருள்; source, origin.

இந்தச் சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் மூலகரணியம் இதுதான். இந்தச் செய்திக்கு மூலம் ஒர் ஆங்கிலப் பத்திரிகை உண்மையாக, வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மூலமாக வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினேன்.

   2. படி (பிரதி); எடுப்பதற்கு உரிய அடிப்படையான முதல் உருவாக்கம்; original of something.

இந்த ஒவியத்தின் மூலம் எங்கு உள்ளது?

    3. முதன் நூலாசிரியரால் எழுதப்பட்ட பாடம்; the original text.

சிலப்பதிகாரத்தின் மூலம் மட்டும் கொடு. உரையை நான் படித்திருக்கிறேன்.

     [முல் → முல் → மூலம்.]

 மூலம்4 mūlam, பெ.(n.)

   அடிப்படை ஆவணம், ஒலை (ஆதாரப்பத்திரம்);; document of title.

இந்த வீட்டு ஆவணத்தின் மூலம் என் அப்பாவிடம் உள்ளது.

     [முல் → மூல் → மூலம்.]

 மூலம்5 mūlam,    இடை.(part.) ஒன்றின் ஊடாக அல்லது வழியாகப் பயன்படுத்தி ஒரு செயல் நடைபெறுவதாகக் காட்டும் இடைச்சொல்; a term to express the sense of by means of, by through.

பேராசிரியரோடு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆழ் துளைக் கிணறு மூலம் நிலத்தடி நீரை எடுத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துகிறார்கள். இடி விழுந்தால் மின்சார இடிதாங்கி மூலம் நிலத்தில் இறங்கிவிடும்.

 மூலம்6 mūlam, பெ.(n.)

   முதலீடு; capital, investment.

     “இந்நிலத்துக்கு மூலமான பணம்” (திருத்துறைப்பூண்டி கல்.1, 39, தெ.இ.கல்.தொ.17, கல் 546-39);.

     [முல் → முல் → மூலம்.]

மூலம்பேடு அந்தணன்

 மூலம்பேடு அந்தணன் mūlambēṭuandaṇaṉ, பெ. (n.)

   உப்பு வணிகராயிருந்து கல்வி, ஓகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று முக்கோல் அந்தணராகிய சான்றோர்; the name found in a burial urn, refers to a agamic Tamil saint though originally he was a salt merchant. Anthanan in TINA social organisation was a status name of non-Aryan Tamil society.

     [மூலம்பேடு+அந்தணன்]

மூலரத்தக்கணம்

 மூலரத்தக்கணம் mūlarattakkaṇam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு மலவாயில் மலத்துடன் அரத்தத்தை உண்டாக்கும் நோய்; a cogenital disease in children causing bloody stools (சா.அக.);.

     [மூலம் + அரத்தக்கணம்.]

மூலரவி

 மூலரவி mūlaravi, பெ. (n.)

   காக்கையின் நால்வகை இனத்தில் ஒருவகை; one of the four varieties of crow (சா.அக.);.

மூலரோகம்

மூலரோகம் mūlarōkam, பெ.(n.)

மூல நோய்1 (பதார்த்த); பார்க்க;see {}.

     [மூலம் + Skt. ரோகம்.]

மூலர்

மூலர் mūlar, பெ. (n.)

   திருமூலர்; saint Thirumoolar.

     “மூலர் முறை யொன்று” (சேக்கிழார்.பு.96);.

மூலர்முறை

மூலர்முறை mūlarmuṟai, பெ.(n.)

   திருமந்திரம் (சேக்கிழார்.பு.96);; Tiru mandiram.

     [மூலர் + முறை.]

மூலவக்கினி

 மூலவக்கினி mūlavakkiṉi, பெ.(n.)

   சிறுநீர்; urine (சா.அக.);.

மூலவன்னிதீச்சலம்

 மூலவன்னிதீச்சலம் mūlavaṉṉitīccalam, பெ.(n.)

   சிறுநீரக புளியம் (அ); உப்பு; uric acid or salts (சா.அக.);.

மூலவயல்

மூலவயல் mūlavayal, பெ. (n.)

   1. திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

   2. அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantangi Taluk.

     [மூலை+வயல்]

மூலவர்

 மூலவர் mūlavar, பெ.(n.)

   கோயிலுள் கருவறையில் நிலையாக உள்ள கடவுளின் வடிவம் (மூர்த்தி);; idol fixed in the sanctum sanctorum of a temple, dist. fr. {}.

மூலவர் வழிபாடு முத்தி தரும்.

     [மூலம் → மூலவர்.]

கோயிலில் கால்கோள் செய்யப்பட்ட கடவுள்.

மூலவள்ளி

 மூலவள்ளி mūlavaḷḷi, பெ.(n.)

   வெற்றிலை (பிங்.);, இலைக்கொடி; betel vine – Piper betel.

மூலவாசல்

மூலவாசல் mūlavācal, பெ.(n.)

   1. கோயிலின் உட்பக்கக் கருவறை வாயில்; entrance into the sanctum sanctorum of a temple.

     “மூலவாசல் வெளிவிட்டு” (திருப்பு.399);.

   2. உச்சித்துளை; fontanelle.

     [மூலம் + வாசல். வாயில் → வாசல்]

மூலவாயு

மூலவாயு1 mūlavāyu, பெ.(n.)

   செரிமானம் சரியில்லாமல் உடல் வெளுத்து மலம் கருகி வயிறு எப்பொழுதும் இரைந்து கொண்டிருக்கும் ஒரு வகை நோய்; a windy disease attended with loss of appetite bloodlessness and noisy bowels (சா.அக.);.

     [மூலம் + Skt. வாயு.]

 மூலவாயு2 mūlavāyu, பெ.(n.)

   வளிப் பிடிப்பால் (வாதம்); உண்டாகும் நோய் (வின்.);; wind in the intestines, a disease.

     [மூலம் + Skt. வாயு.]

மூலவாய்க்கால்

 மூலவாய்க்கால் mūlavāykkāl, பெ.(n.)

   தொடக்கவாய்க்கால் (கோவை);; beginning of water-course.

     [மூலம் + வாய் + கால்.]

மூலவாய்வு

 மூலவாய்வு mūlavāyvu, பெ.(n.)

   இடுப்புப் புடிப்பு;முக்கோண மூட்டெலும்பு சார்ந்த ஒரு நோய்; the gas in the sacral region (சா.அக.);.

மூலவிக்கிரகம்

 மூலவிக்கிரகம் mūlaviggiragam, பெ.(n.)

மூலவர் (வின்.); பார்க்க;see {}.

மூலவியாதி

மூலவியாதி mūlaviyāti, பெ.(n.)

மூலநோய்1 (வின்.); பார்க்க;see {}.

மூலவிருள்

மூலவிருள் mūlaviruḷ, பெ.(n.)

   1. ஆதனைப் பற்றியிருக்கும் அறியாமையாகிய இருள் (வின்.);; the original darkness of the soul.

   2. ஆணவ மலம் (யாழ்.அக.);; the original impurity of the soul.

     [மூலம் + இருள்.]

மூலவுதிரம்

 மூலவுதிரம் mūlavudiram, பெ.(n.)

   மூலம் கரணியமாக மலவாயில் உண்டாகும் அரத்தம்; bleeding from the piles (சா.அக.);.

     [மூலம் + உதிரம்.]

மூலவுபத்திரவம்

மூலவுபத்திரவம் mūlavubattiravam, பெ.(n.)

மூலநோய்1 பார்க்க;see {}.

     [மூலம் + Skt. பவுத்திரம்.]

மூலவுப்பு

 மூலவுப்பு mūlavuppu, பெ.(n.)

   மண்டை ஒட்டில் இருந்து செய்யப்படும் ஒருவகை உப்பு; a kind of salt extracted from the human skull (சா.அக.);.

     [மூலம் + உப்பு.]

மூலவெதுப்பு

மூலவெதுப்பு mūlaveduppu, பெ.(n.)

   மாடுகளுக்கு உண்டாகும் ஒருவகை நோய் (மாட்டுவா.158);; a disease of cattle.

     [மூலம் + வெதுப்பு.]

மூலவெழுத்து

மூலவெழுத்து mūlaveḻuttu, பெ.(n.)

   1. மூலாக்கரம் பார்க்க;see {}.

   2. முளைமந்திரம் (பிரணவம்);; the mystic incantation {}.

     “மூல வெழுத்துடனைந்துங் கொளுவி” (கந்தபு. கயமுகனு.72);

     [மூலம் + எழுத்து.]

மூலவேர்

மூலவேர் mūlavēr, பெ.(n.)

   அடிவேர்; tap root, main root of a tree.

     “மகாமேரு பர்வதத்தை மூல வேருடன் முடியுடன் வாங்கினவன்று” (தக்கயாகப்.161, உரை);.

     [மூலம் + வேர்.]

மூலவேர்த்தைலம்

 மூலவேர்த்தைலம் mūlavērttailam, பெ.(n.)

   நடுநிலக்கடல் (முத்தியதரைக்கடல்); சார்ந்த பகுதிகளில் காணப்படும் ஒப்பனைச் செடிகளின் வேரில் இருந்து எடுக்கப்படும் நெய்மம்; oil prepared out of plumbgo root (சா.அக.);.

     [மூலம் + வேர் + Skt. தைலம்.]

மூலவோலை

மூலவோலை mūlavōlai, பெ.(n.)

   மூல ஆவணம்; original of a deed, as distinguished form its copy.

     “மூலவோலை மாட்சியிற் காட்ட வைத்தேன்” (பெரியபு. தடுத்தாட்.56);.

     [மூலம் + ஒலை.]

மூலா

 மூலா mūlā, பெ.(n.)

   கொடி முல்லை; a creeper (சா.அக.);.

மூலாகமம்

 மூலாகமம் mūlākamam, பெ.(n.)

   உலகத் தோற்ற வரலாறு; the book of genesis evolution of universe.

     [மூலம் + வேர் + Skt. ஆகமம்.]

மூலாக்கரம்

 மூலாக்கரம் mūlākkaram, பெ. (n.)

   பிற எழுத்துக்களுக்கு மூலமான அகரம் (வின்.);; the fundamental or basic letter from which all other letters are derived.

மறுவ. முதலெழுத்து.

மூலாக்கினி

மூலாக்கினி mūlākkiṉi, பெ.(n.)

   1. இரைப்பை எரிச்சல், அடிவயிறு எரிச்சல்; the gastric fire.

   2. மூலாதாரத்தில் உள்ள சூடு; internal heat having its seat in the {}.

     [மூலம் + Skt. அக்கினி.]

மூலாசனம்

 மூலாசனம் mūlācaṉam, பெ.(n.)

   வேர் கிழங்குகளாகிய உணவு (யாழ்.அக.);; food consisting only of roots and bulbs.

மூலாசாரம்

 மூலாசாரம் mūlācāram, பெ.(n.)

   மருந்துக்குப் பயன்படுத்தும் வேர்களை உடைய மூலிகை; herbs and plants whose roots are only used in medicine (சா.அக.);.

மூலாட்டிநாடிகம்

 மூலாட்டிநாடிகம் mūlāṭṭināṭigam, பெ.(n.)

   ஒருவகைச் செடி (மூக்கிரட்டை);; a prostate plant hogweed-Boerhaavia procumbens (சா.அக.);.

மூலாதாரம்

மூலாதாரம்1 mūlātāram, பெ.(n.)

   1 அடிப்படை; fundamental cause.

   2. ஆறுமூல(தார);ங்களுள் குய்யத்துக்கும் குதத்துக்கும் நடுவில் நான்கு இதழ்த் தாமரை போலுள்ள சக்கரம் (சிலப்.3:26, உரை);; a cakkiram or nerve – plexus in the body. described as a four – petalled lotus, situated between the base of the sexual organ and the anus, one of {}.

     [மூலம் + Skt. ஆதாரம்.]

 மூலாதாரம்2 mūlātāram, பெ.(n.)

   ஒன்றைத் தோற்றுவிக்க அல்லது ஒரு தொழிலைச் செய்ய அடிப்படையாகவும் மூலமாகவும் அமைவது; resources.

தேவையான மூலாதாரங்களும், பட்டறிவும் உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

     [மூலம் + Skt. ஆதாரம்.]

 மூலாதாரம் mūlātāram, பெ. (n.)

   அடிப்படை; basis, fundamental.

     [Skt. {} → த. மூலாதாரம்.]

மூலான்

 மூலான் mūlāṉ, பெ.(n.)

   நச்சுத் தன்மையுள்ள மீன்; a poisonous fish.

இம்மீனின் பல் படின் நெஞ்சடைக்கவும், இறக்கவும் நேரிடும் (செங்கை.மீன.);.

மூலாமை

 மூலாமை mūlāmai, பெ. (n.)

   கடல்வாழ் ஆமைவகையுளொன்று (முகவைமீன.);; a species of sea tortoise (சா.அக.);.

     [மூலம் + ஆமை.]

மூலாவளி

 மூலாவளி mūlāvaḷi, பெ.(n.)

   மூளை; brain (சா.அக.);.

மூலி

மூலி1 mūli, பெ.(n.)

   1. மருந்தாகவுதவும் புல், பூண்டு செடி, கொடி; plant.

     “பாதாள மூலி படருமே” (நல்வழி.23);.

   2. மருந்துவேர்; medicinal root.

   3. கிழங்கு; root of a tree.

த. மூலி → வ. மூலின்.

     [முல் → மூலி.]

 மூலி2 mūli, பெ.(n.)

   கரணியப் பொருளாகக் கருதப்படுபவன் (பூதன்);; one who is the cause,

     “மூலிவடிவா மெயினன்” (பாரத. அருச்சுனன்றவ.103);.

மூலிகற்பம்

 மூலிகற்பம் mūligaṟpam, பெ.(n.)

   மூலிகைகளைக் கொண்டு செய்த உடல் வலுவேற்றும் மருந்து (காய கற்பம்);; herbs used in the preparation of rejuvenating drugs (சா.அக.);.

     [மூலி + கற்பம்.]

மூலிகை

 மூலிகை mūligai, பெ.(n.)

   மருந்தாகப் பயன்படும் செடி கொடிகளின் வேர், இலை முதலியன; roots leaves etc. of plants, used for medicine.

மூலிகை அறுத்தால், மூன்றுலகு ஆளலாம் (பழ.);.

வ. மூலிகா.

     [மூலி → மூலிகை. த. மூலிகை → வ. மூலிகா.]

மூலிகைச்சத்து

 மூலிகைச்சத்து mūligaiccattu, பெ.(n.)

   மூலிகையில் உள்ள உயிர்ச் சத்து; the active principles of a drug.

     [மூலிகை + சத்து.]

மூலிகைச்சரக்கு

மூலிகைச்சரக்கு mūligaiccaraggu, பெ. (n.)

   சித்த மருத்துவத்தின்படி 1008 பொருட்கள்;   1008 products for Siddha medicine (சா.அக.);.

     [மூலிகை + சரக்கு.]

மூலிகைச்சாறு

 மூலிகைச்சாறு mūligaiccāṟu, பெ.(n.)

   மருந்துப் பூண்டினின்று பிழிந்தெடுத்தச் சாறு; juice of the herbs (சா.அக.);.

     [மூலிகை + சாறு.]

மூலிகைச்செம்பு

மூலிகைச்செம்பு1 mūligaiccembu, பெ.(n.)

   மூலிகைகளில் இருந்து எடுக்கும் செம்பு; copper extracted from herbs (சா.அக.);.

     [மூலிகை + செம்பு.]

 மூலிகைச்செம்பு2 mūligaiccembu, பெ.(n.)

   திருமூலர் திருமந்திரம் 1000ல் சொல்லி உள்ள முறையில் மூலிகையிலிருந்து எடுத்தச் செம்பு; copper extracted from herbs – The method of extraction is told in Thirumandiram.

     [மூலிகை + செம்பு.]

மூலிகைப்பயிர்

 மூலிகைப்பயிர் mūligaippayir, பெ.(n.)

   மருந்தாகப் பயன்படும் விளைபயிர்; medicinal herbs.

     [மூலிகை + பயிர்.]

மூலிகைமர்மம்

 மூலிகைமர்மம் mūligaimarmam, பெ.(n.)

   மூலிகையின் மறைபொருள் (கமுக்கங்களை);பற்றிய நூல்; secrets about the herbs (சா.அக.);.

     [மூலிகை + மர்மம்.]

மூலிகையீயம்

மூலிகையீயம் mūligaiyīyam, பெ.(n.)

   திருமூலர் திருமந்திரம் 1000த்தில் சொல்லியுள்ள மூலிகையினின்று ஈய மெடுக்கும் முறை, ஈய மூலிகை; the method of extracting lead from herbs is told in “Thirumandiram’ lead extracted from herbs (சா.அக.);.

     [மூலிகை + ஈயம்.]

மூலிக்கரணம்

மூலிக்கரணம் mūlikkaraṇam, பெ.(n.)

   1. மூலம், ஆதி; commencement.

   2 விலை ஆவணம்; sale deed.

     [மூலி + கரணம்.]

மூலிக்கை

 மூலிக்கை mūlikkai, பெ. (n.)

மூலிகை (யாழ்.அக.); பார்க்க;see muligai.

மூலியம்

மூலியம்1 mūliyam, பெ.(n.)

   1. விலை; price.

   2. விலைக்கு வாங்கிய பொருள் (யாழ்.அக.);; article purchased.

   3. ஊதியம், கூலி (யாழ்.அக.);; wages, salary.

   4. வாயில் (நிமித்தம்);; means agency.

     [மூலம் → மூலி → மூலியம்.]

த. மூலம் → வ. மூல்யம்

 மூலியம்2 mūliyam,    வி.அ.(adv.) வாயில்; through.

யார் மூலியமாய்ச் செய்தி தெரிவித்தாய்? (உ.வ.);.

     [முல் → முல் → மூலம் → மூலியம்.]

மூலை

மூலை mūlai, பெ.(n.)

   1. இருபக்கங்களோ, கோடுகளோ சந்திக்கும் கோணம்; corner where two sides or lines meet.

     “மூலை முடுக்குகளும்” (இராமநா.சுந்.3);.

சதுரத்துக்கு நான்கு மூலைகள். சேலைத் தலைப்பின் ஒரு மூலை கிழிந்திருந்தது.

    2. கோணத் திசை; intermediate point of direction.

ஈசான மூலையில் வீடு.

   3. முனை; tip, corner of a street.

தெரு மூலையில் வண்டி நிற்கிறது.

   4. மிகச் சிறு அளவு; no worth or value, of no avail.

கல்யாணச் செலவுக்கு இந்த ஆயிரம் ரூபாய் எந்த மூலைக்கு? பெரும் புள்ளிகளே அவனை எதிர்க்க முடியாத போது நீ எந்த மூலைக்கு?.

   5. வீடு (வின்.);; house.

மூலை வீட்டிலே முட்டை இடுகிறான் (பழ.);.

   6. அறை மூலை; corner of the room.

     “இருட்டறை மூலையிலிருந்த குமரி” (திருமந். 1514);.

ம. மூல;தெ. மூல;க. மூலெ.

     [முல் → முல் → மூலை.]

மூலைகா-த்தல்

மூலைகா-த்தல் mūlaikāttal,    4 செ.கு.வி. (v.i.)

   கணவனை இழந்த மனைவி வீட்டுக்குள் ஒரு மூலையிற் கிடந்து துன்பமடைதல் (இ.வ.);; to lie mourning in a corner of a house, as a recently widowed woman.

     [மூலை + கா-த்தல்.]

மூலைக்கச்சம்

 மூலைக்கச்சம் mūlaikkaccam, பெ.(n.)

   பின் கச்சத்திலிருந்து ஆடைநுனி தொங்கும்படி உடைகட்டும் வகை; fashion of tying a man’s cloth so that one end is partly tucked in behind and partly let freely down.

     [மூலை + கச்சம்.]

மூலைக்கப்புப்பாய்தல்

 மூலைக்கப்புப்பாய்தல் mūlaikkappuppāytal, பெ. (n.)

   குழந்தைகளின் விளையாட்டு வகை (இ.வ.);; a children’s game.

     [மூலை + கப்புப்பாய்தல்.]

மூலைக்கார்த்திகை

 மூலைக்கார்த்திகை mūlaiggārttigai, பெ.(n.)

   நளி (கார்த்திகை); மாதத்தில் நளி விண்மீனுக்கு (திருக் கார்த்திகைக்கு);ப் பின் வரும் நாட்கள் (இ.வ.);; the day of the month of {} after {}.

மூலைக்காற்று

 மூலைக்காற்று mūlaikkāṟṟu, பெ.(n.)

   மூலைத் திசையினின்று அடிக்குங் காற்று (வின்.);; wind blowing from an intermediate point of the compass.

     [மூலை + காற்று.]

மூலைக்கால்

மூலைக்கால் mūlaikkāl, பெ.(n.)

முழுத்தக்கால் பார்க்க;see {}.

     “மூலைக்கால் நாட்டும் விதி” (சர்வா. சிற்.39);.

     [மூலை + கால்.]

மூலைக்குடா

மூலைக்குடா mūlaikkuṭā, பெ.(n.)

   1. குடா துறைமுகம் முதலியவற்றின் மூலை; corner of a bay harbour, etc.

   2. வீடு, வயல் முதலியவற்றின் மூலையிடம் (வின்.);; out-of-the way room in a large house;remote corner of a large field.

     [மூலை + குடா.]

மூலைக்குத்து

மூலைக்குத்து mūlaikkuttu, பெ.(n.)

   1. முற்றத்து மூலைக்கு எதிராக வீட்டுத் தலைவாயிலின் நிலை அமைந்திருக்கை; position of a house in which its main door-way faces a corner of the courtyard.

   2. மூலைப்பார்வை பார்க்க;see {}.

     [மூலை + குத்து.]

மூலைக்குமூலை

 மூலைக்குமூலை mūlaikkumūlai,    வி.எ.(adv.) சிதறுபட (உ.வ.); in a scattered manner.

     [மூலை + கு + மூலை.]

மூலைக்குமூலைவரிசை

 மூலைக்குமூலைவரிசை mūlaikkumūlaivarisai, பெ.(n.)

   ஒன்றுவிட்டொரு கல் எதிர்முகமாகச் சாயும்படி அமைக்கும் கட்டட முறை (C.E.M.);; diagonal bond, herring bone work, rows of parallel lines in which the alternate rows slope in different directions.

     [மூலைக்குமூலை + வரிசை.]

மூலைக்கை

 மூலைக்கை mūlaikkai, பெ.(n.)

   வீட்டின் மூலை முகட்டுச் சட்டம் (வின்.);; beam from a corner to the ridge of a roof.

     [மூலை + கை.]

மூலைக்கோடு

 மூலைக்கோடு mūlaikāṭu, பெ. (n.)

   கட்ட விளையாட்டில் நான்கு மூலைகளை இணைக்கும் கோடு; line connecting four COfnefS.

     [மூலை+கோடு].

மூலைத்தாய்ச்சி

 மூலைத்தாய்ச்சி mūlaittāycci, பெ.(n.)

   நாலுமூலைத்தாய்ச்சி என்னும் விளையாட்டு; a game.

     [மூலை + தாய்ச்சி.]

மூலைத்திசை

 மூலைத்திசை mūlaittisai, பெ.(n.)

   பெருந்திசைகளுக்கு நடுவேயுள்ள கோணத் திசை (வின்.);; intermediate point of the compass.

     [மூலை + திசை.]

மூலைப்பார்வை

மூலைப்பார்வை mūlaippārvai, பெ.(n.)

   1. கோணத் திசையை நோக்கிய வீட்டு நிலை; position of the house facing an intermediate point of the compass, considered in auspicious.

   2. சாகுந் தறுவாயில் விழி ஒருபுறமாகச் செருகி நிலைக்குத்திடுகை; fixed, oblique look of the eyes at the time of death.

     [மூலை + பார்வை.]

மூலைமடக்கி,

 மூலைமடக்கி, mūlaimaḍakki, பெ. (n.)

முறத்தில் மூலையை மடக்கிப் பின்னுவது:

 folder knit of corners.

     [மூலை+மடக்கி]

மூலைமட்டப்பலகை

 மூலைமட்டப்பலகை mūlaimaṭṭappalagai, பெ.(n.)

   மூலைமட்டம் பார்க்குங் கருவி (C.E.M.);; mason’s set – square.

     [மூலை + மட்டம் + பலகை.]

கட்டடத்தின் மூலையின் ஒழுங்கைக் கண்டறியப் பயன்படுத்தும் கோணமுடையதாகச் செய்யப்பட்ட ‘T’ அல்லது ‘ட’ வடிவ கருவி.

     [p]

மூலைமட்டம்

மூலைமட்டம் mūlaimaṭṭam, பெ.(n.)

   1. நேர்கோணம்; right angle.

   2. மூலை மட்டப்பலகை பார்க்க;see {}.

     [மூலை + மட்டம்.]

மூலைமட்டம்பார்த்தல்

 மூலைமட்டம்பார்த்தல் mūlaimaṭṭambārttal, பெ. (n.)

   வாயில் நிலையில் மூலைகளின் சரிசம அளவை அளவிட்டுப் பார்க்கை; testing a door-frame by diagonal measurement.

     [மூலை + மட்டம் + பார்த்தல்.]

மூலைமுடங்கி

 மூலைமுடங்கி mūlaimuḍaṅgi, பெ.(n.)

   வளைந்து செல்லும் சிறு வழி (வின்.);; crooked way.

     [மூலை + முடங்கி.]

மூலைமுடுக்கு

மூலைமுடுக்கு mūlaimuḍukku, பெ.(n.)

   1. பொருள்களுக்கு இடையில் உள்ள சிறு இடைவெளி; small gaps between things.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் விரலணி (மோதிரம்); கிடைக்கவில்லை.

    2. எளிதில் சென்றடைய முடியாத இடம்; unreachable corner of a country, etc.

இந்தப் பத்திரிகை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கிடைக்கும்.

    3. சந்து பொந்து; nook and corner.

     [மூலை + முடுக்கு.]

மூலையடியே

மூலையடியே mūlaiyaḍiyē, கு.வி.எ. (adv.)

   எதிர்பாராத வகையில் (எதேச்சையாய்);; at one’s pleasure, as one likes.

     “மூலையடியே சுகானுபவம் பண்ணித் திரிந்தார்களாம் படி” (ஈடு.4. 9:5);.

     [மூலை + அடியே.]

மூலையடிவழி

மூலையடிவழி mūlaiyaḍivaḻi, பெ.(n.)

   குறுக்கு வழி; short cut.

     “எனக்கு இங்ஙனே யிருப்பதொரு மூலையடிவழி யுண்டாவதே” (ஈடு, 10, 8 : 3);.

     [மூலை + அடி + வழி.]

மூலையரம்

 மூலையரம் mūlaiyaram, பெ.(n.)

   மூன்று பட்டையுள்ள அரம் (வின்.);; three-sided rasp or file.

     [மூலை + அரம்.]

     [p]

மூலையோடு

மூலையோடு1 mūlaiyōṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   நேர்க்கோணமின்றி மூலை வாக்கில் அமைதல் (வின்.);; to be elongated as a corner to run out of square.

     [மூலை + ஒடு-தல்.]

 மூலையோடு2 mūlaiyōṭu, பெ.(n.)

   1. கூரை முகட்டில் வேயும் ஒடு வகை; ridge- tile.

   2. கூடல் வாயில் இடும் ஒடு; a kind of tile used for covering the valley of a roof.

     [மூலை + ஒடு.]

     [p]

மூலையோட்டம்

 மூலையோட்டம் mūlaiyōṭṭam, பெ.(n.)

   நேர்க்கோணமின்றி மூலையாய் அமைகை (வின்.);; angular extension, diagonal extending out of square.

     [மூலை + ஒட்டம்.]

மூலைவாக்கு

 மூலைவாக்கு mūlaivākku, பெ.(n.)

   மூலை கோணிய நிலை (வின்.);; diagonal position, oblique position.

     [மூலை + வாக்கு.]

மூலைவாங்கல்

 மூலைவாங்கல் mūlaivāṅgal, பெ.(n.)

மூலையோட்டம் பார்க்க;see {}.

     [மூலை + வாங்கல்.]

மூலைவாசல்

 மூலைவாசல் mūlaivācal, பெ.(n.)

   தெருவிற்கு நேராகவன்றி ஒதுக்கமாய் அமைந்த வாயில்; gate or door – way, at or near a corner of a house.

     [மூலை + (வாயில்); வாசல்.]

மூலைவாட்டம்

 மூலைவாட்டம் mūlaivāṭṭam, பெ.(n.)

மூலைவாக்கு பார்க்க;see {}.

     [மூலை + வாட்டம்.]

மூலைவாட்டு

 மூலைவாட்டு mūlaivāṭṭu, பெ.(n.)

மூலைவாக்கு பார்க்க;see {}.

     [மூலை + வாட்டு.]

மூலைவிட்டம்

 மூலைவிட்டம் mūlaiviṭṭam, பெ.(n.)

   நான்கு கோணத்தில் உள்ள எதிர் மூலைகளைச் சேர்க்குங் கோடு; diagonal.

     [மூலை + விட்டம்.]

மூளி

மூளி1 mūḷi, பெ.(n.)

   1. பெண்களைக் குறித்து, அணிகலன்கள் முதலியவை இல்லாத வெறுமை;   வழக்கமாய் உள்ள அணிகலனில்லாத-வன்-வள்-து; person or thing devoid of the usual ornaments, etc.

கல்யாணத்திற்கு மூளிக் கழுத்துடனா போவது? கணவனை இழந்து மூளியாகி நிற்கும் மகளைக் கண்டு மனம் அழுதது.

   2. பொருளில் வடிவமோ கூர்மையோ இல்லாத

   குறைபாடு; defect in shape, sharpness, etc. in certain articles.

முனை உடைந்து மூளியாகி கிடந்தது உளி. மூளிச் சட்டியானாலும் கொழுக்கட்டை வேக வேண்டும் (பழ.);.

சிதைந்து மூளியாகக் கிடந்தன சிற்பங்கள். உறுப்புக் குறையுள்ள பொருள் எல்லாம் மூளியும் காளியுமாய்க் கிடக்கிறது (உ.வ.);.

   3. பெண்ணைக் குறித்த ஒரு வகைச் சொல்; an addrishing word for woman an conlempt.

   4. பெண்ணைக் குறிக்கும் பொதுச்சொல்; a term for addrishing woman.

     “ஒருநாழியாலும் வரும். ஒரு மூளியாலும் வரும்” (பழ.);.

     [முள் → மூள் → மூளி.]

 மூளி2 mūḷi, பெ.(n.)

   1 உறுப்புக் குறை; defect of limb, deformity.

     “சூர்ப்பணகையை மூளியாக்க” (இராமநா. உயுத்.26);. காதறுந்த மூளி மூக்கறுந்த மூளியைப் பார்த்துச் சிரித்தாளாம்.

   2. தலைப்பகுதியில் பின்னப்பட்டிருப்பது; that which has lost a part or piece, especially at the top.

மூளிக்குடம்.

   3. குறைவுள்ள கருமம்; that which is defective.

அவன் வராமையால் அந்தக் கருமம் மூளியாய்ப் போயிற்று.

    4. அழகற்றவள்; ugly woman, a term of abuse.

   5. துளையுள்ளது; that which bore.

   6. துளையறுந்தது; that which is torn bore.

     [முள் → மூள் → மூளி.]

மூளிக்காதவன்

 மூளிக்காதவன் mūḷikkātavaṉ, பெ.(n.)

மடங்கிய அல்லது சுருங்கிய காதினை உடையவன் (கோவை.);,

 bent, or contracted ear-lobe.

     [மூளி + காதவன். காதன் → காதவன்.]

மூளிக்காதி

 மூளிக்காதி mūḷikkāti, பெ.(n.)

   காதணி யில்லாதவள்; women without ear jewels.

     [முளி + காதி. காது → காதி.]

மூளிக்காது

மூளிக்காது mūḷikkātu, பெ.(n.)

   1. பெண்டிரின் அணிகலன்கள் அணியாத காது; woman’s ear devoid of the usual ornaments.

   2. அறுபட்ட காது; ear with torn lobe.

     [முளி + காது.]

மூளிக்குடம்

 மூளிக்குடம் mūḷikkuḍam, பெ.(n.)

   ஒரு மருங்கு வாயுடைந்த குடம்; damaged mouth pot.

     [முளி + குடம்.]

மூளிநாய்

 மூளிநாய் mūḷināy, பெ.(n.)

   காதறுபட்ட நாய் (வின்.);; dog with clipped ears.

     [மூளி + நாய்.]

மூளிமுக்காடு

 மூளிமுக்காடு mūḷimukkāṭu, பெ. (n.)

   மகளிர் தலையை மறைக்கும் துணி (வின்.);; hood, covering for the head of a woman.

     [மூளி + முக்காடு.]

மூளிமுலை

 மூளிமுலை mūḷimulai, பெ.(n.)

   காம்பு இல்லாத முலை; absence of the nipple – Athelia (சா.அக.);.

     [முளி + முலை.]

மூளிமோதரம்

 மூளிமோதரம் mūḷimōtaram, பெ.(n.)

   கணையாழி, விரலணி (கோவை.);; finger – ring.

     [மூளி + மோதரம்.]

மூளியாடு

 மூளியாடு mūḷiyāṭu, பெ.(n.)

   மிகச்சிறிய காதுகளையுடைய ஆடு (கோவை.);; sheep with small ears.

     [மூளி + ஆடு.]

மூளியுதடு

 மூளியுதடு mūḷiyudaḍu, பெ.(n.)

   பிளந்த உதடு (வின்.);; hare lip.

     [மூளி + உதடு.]

மூளியோடு

 மூளியோடு mūḷiyōṭu, பெ.(n.)

   சிதைந்த ஓடு (வின்.);; chipped tile.

     [மூளி + ஒடு.]

மூளிவண்டி

 மூளிவண்டி mūḷivaṇṭi, பெ.(n.)

   மேற்கூடு இல்லாத மாட்டு வண்டி (கோவை.);; bullock cart without roof.

     [மூளி + வண்டி.]

     [p]

மூளுவான்சொறி

 மூளுவான்சொறி mūḷuvāṉcoṟi, பெ.(n.)

   சொறி – கடல் மீன் (தஞ்சை, மீன்.);; a sea fish.

மூளை

மூளை mūḷai, பெ.(n.)

   1. உடல் உறுப்புகளைச் செயற்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் உணர்வுகளைத் தோற்றுவிப்பதுமான, மண்டையோட்டினுள் அமைந்திருக்கும் உறுப்பு; brain.

     “மூளையார் சிரத்து” (திவ்.பெரியதி4, 2 : 8);.

வலிப்பு நோய்க்கு மூளையில் ஏற்படும் பாதிப்பே கரணியம்.

    2. அறிவு, சிந்தனைத் திறன்; brain, intelligence.

மூளை இருந்தால் இப்படிச் செய்வாயா? அவருக்கு இருக்கும் மூளையில் கால்பங்கு நமக்கு இருந்தால் போதும்!

   3. எலும்புக்கு நடுவில் உள்ள பொருள் (மச்சை); (சூடா.);; bone marrow, medullary substance, one of {}.

ம. மூள;வ.மஜ்ஜா

 OE.mearg, Os., OHG. marg, ON.mergh, E.marrow.

     [மூள் → மூளை = எலும்பிற்கு அல்லது மண்டையோட்டிற்கு உள்ளிருப்பது.]

பிடரியில் முள்ளந்தண்டு நடுவில் இருந்து மண்டை வரைக்கும் நான்கு பிரிவுகளாய் உள்ள குழகுழப்பான வெண்மையுள்ள ஒரு தசைப்பற்று. இது ஆண்களுக்கு பொதுநிலையில் 1500 சிற்றெடை (grams);யும், பெண்களுக்கு (1200 சிற்றெடையும் இருக்கும் என்பர். அகவை ஆக ஆக எடையும் வலுவும் குறையும் (சா.அக.);.

     [p]

மூளைகெடு-தல்

மூளைகெடு-தல் mūḷaigeḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   அறிவு குறைதல்; to be weak in brain power.

     [மூளை + கெடு-தல்.]

மூளைக்கட்டி

 மூளைக்கட்டி mūḷaikkaṭṭi, பெ.(n.)

   மூளையில் உண்டான கட்டி; abscess of the brain.

     [மூளை + கட்டி.]

மூளைக்கமர்

 மூளைக்கமர் mūḷaikkamar, பெ.(n.)

   தலையின் மூளைப் பகுதிகளின் இடையே யுள்ள இடைவெளி; the fissure separating the two hemispheres of the brain – Intercerebral fissure (சா.அக.);.

மூளைக்கலக்கம்

 மூளைக்கலக்கம் mūḷaikkalakkam, பெ.(n.)

   மூளையில் ஏற்படும் கலக்கம், அறிவுப் பிறழ்சி; brain disorders, paranoea.

     [மூளை + கலக்கம்.]

மூளைக்காய்ச்சல்

 மூளைக்காய்ச்சல் mūḷaikkāyccal, பெ.(n.)

   மூளையில் ஏற்படும் அழற்சியினால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு உண்டாகும் காய்ச்சலோடு கூடிய நோய்; brain fever.

     [மூளை + காய்ச்சல்.]

மூளைக்கால்கள்

 மூளைக்கால்கள் mūḷaikkālkaḷ, பெ.(n.)

   முகுளத்தையும் சின்ன மூளையையும் ஒன்று சேர்க்கும் நரம்புப் பட்டைகள்; a pair of bands which connect the pons and the oblongata with the cerebrum cruracerebri (சா.அக.);.

     [மூளை + கால்கள்.]

மூளைக்கொதிப்பு

மூளைக்கொதிப்பு mūḷaikkodippu, பெ.(n.)

   1. வெயிலால் தாக்கப்படுகை; sunstroke.

   2. தலையில் சென்று தாக்கும் மிகையான குருதியோட்டம்; rush of blood to the head.

மிக்கபடிப்பால் அவனுக்கு மூளைக் கொதிப்பு உண்டாயிற்று.

     [மூளை + கொதிப்பு.]

மூளைச்சலவைசெய்-தல்

மூளைச்சலவைசெய்-தல் mūḷaissalavaiseytal,    1 செ.கு.வி. (v.i.)

   சிந்தித்து முடிவுக்கு வரவிடாமல் ஒன்றைத் திரும்ப திரும்பச் சொல்லி அல்லது சான்று காட்டி அதை ஏற்கச் செய்தல்; brain wash.

     [மூளை + சலவை + செய்-தல்.]

மூளைச்சுரம்

 மூளைச்சுரம் mūḷaiccuram, பெ.(n.)

மூளைக்காய்ச்சல் பார்க்க;see {}.

     [மூளை + சுரம்.]

மூளைச்சோர்வு

 மூளைச்சோர்வு mūḷaiccōrvu, பெ.(n.)

   உறுதியாக நிற்கும் திறன் இல்லாத மூளை; weakness of brain (சா.அக.);.

     [மூளை + சோர்வு.]

மூளைதாபனரோகம்

 மூளைதாபனரோகம் mūḷaitāpaṉarōkam, பெ.(n.)

   மூளையில் ஏற்படும் நோய்; cerebral inflammation.

மூளைத்தாபிதம்

 மூளைத்தாபிதம் mūḷaiddāpidam, பெ.(n.)

   கொதிப்புடன் உள்ள மூளை; inflammation of the brain (சா.அக.);.

மறுவ. மூளைக்கொதிப்பு

     [மூளை + Skt. தாபிதம்.]

மூளைப்பாரிசவாயு

 மூளைப்பாரிசவாயு mūḷaippārisavāyu, பெ.(n.)

   மூளைக்கு வரும் ஒரு வகை நோய்; cerebral paralysis.

     [மூளை + Skt. பாரிசவாயு.]

மூளைப்பிதுக்கம்

 மூளைப்பிதுக்கம் mūḷaippidukkam, பெ.(n.)

   மூளை பிதுங்கி விடுகை (இங்.வை.);; protrusion of the brain, as from an accident.

     [மூளை + பிதுக்கம்.]

மூளைப்பித்தம்

 மூளைப்பித்தம் mūḷaippittam, பெ.(n.)

   தலை மூளையில் பித்தம் சேர்ந்தால் மது உண்டவரைப் போல பிதற்றி, அறிவைக் கெடுத்துவிடும் ஒரு வகை நோய்; a disease which spoils the intellect of the person and makes him behave little, a intoxicated person. It is caused by bile humour affecting the brain (சா.அக.);.

     [மூளை + பித்தம்.]

மூளைமுடக்கு

மூளைமுடக்கு mūḷaimuḍakku, பெ.(n.)

   1. மூலைமுடங்கி பார்க்க;see {}.

   2. மூலைமுடுக்கு பார்க்க;see {}.

     [மூலை + முடக்கு.]

மூளையதிர்ச்சி

 மூளையதிர்ச்சி mūḷaiyadircci, பெ.(n.)

   தலையில் அடிபடுவதால் உண்டாகும் மூளைக் கலக்கம் (இங்.வை.);; concussion of the brain.

     [மூளை + அதிர்ச்சி.]

மூளையமுக்கம்

 மூளையமுக்கம் mūḷaiyamukkam, பெ.(n.)

   மூளை அழுந்தி விடுகை (இங்.வை.);; compression of the brain, as from an accident.

     [மூளை + அமுக்கம்.]

மூளையரத்தவொழுக்கு

 மூளையரத்தவொழுக்கு mūḷaiyarattavoḻukku, பெ.(n.)

   அரத்தப் போக்குடைய மூளை; cerebral haemorrhage.

     [மூளை + அரத்தம் + ஒழுக்கு.]

மூளையில்லாதவன்

 மூளையில்லாதவன் mūḷaiyillātavaṉ, பெ.(n.)

   மூடன், அறிவிலி; fool, as devoid of brains.

     [மூளை + இல்லாதவன்.]

மூளைவறண்டவன்

மூளைவறண்டவன் mūḷaivaṟaṇṭavaṉ, பெ.(n.)

   1. கோணற் புத்தியுள்ளவன் (வின்.);; eccentric man.

   2. மூளையில்லாதவன் (இ.வ.);;பார்க்க;see {}.

     [மூளை + வறண்டவன்.]

மூள்(ளு)தல்

மூள்(ளு)தல் mūḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   1. நெருப்புப் பற்றுதல்; kindle, catch fire.

     “ஆலையில் மூண்ட நெருப்பைத் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்”.

   2. சினம், ஐயம் முதலியவை உள்ளத்தில் எழுதல்; to rouse the anger, suspicion.

அவன் பார்க்கும் பார்வையைக் கண்டதுமே அவருக்கு ஐயம் மூண்டது.

   3. ஊக்கத்துடன் முற்படுதல் (முனைதல்);; to enter upon with earnestness.

     “முதலற முடிக்க மூண்டான்” (கம்பரா.மாயாசீ.96);.

   4. இடையூறு (தகராறு);, கலவரம் முதலியன ஏற்படுதல்; to dispute, war, etc. தலைவர் சுடப்பட்டதால் நாட்டில் கலவரம் மூண்டது.

   5. பொருந்துதல்; to be suitable.

   6. கூடுதல், மிகுதல்; to increase.

     [முள் → முள் → முள்ளு)-தல்.]

மூழக்கு

மூழக்கு mūḻkku, பெ.(n.)

   மூன்று உழக்கு (தொல்.எழுத்து.457, உரை);; three {}.

குறச்சிறார்.

     “மூழக்குழக்குத் தினை தந்தார்” (தமிழ்நா.29);.

     [மூ + உழக்கு.]

மூழட்டி

 மூழட்டி mūḻṭṭi, பெ.(n.)

   மிளகு; pepper – Piper nigrum.

மூழல்

மூழல் mūḻl, பெ. (n.)

   1. மூடி; lid.

     ‘காண்டிகைச் செப்பு ஒன்று அடியும் மூழலும் உட்பட’ (தெ.இ.கல்.தொ.2:5);.

   2. கழற்காய் (திவா.);; bonduc nut.

     [மூழ் → முழல்.]

மூழாக்கு

மூழாக்கு mūḻākku, பெ. (n.)

மூழக்கு (தொல்.எழுத்து.457, உரை); பார்க்க;see {}.

     [மூலக்கு → மூழாக்கு.]

மூழி

மூழி1 mūḻi, பெ.(n.)

   1. உட்குழிந்த அகப்பை (திவா.);; ladle.

   2. நீர்க்கலம் (கமண்டம்);; a vessel for holding water.

     “மயிற்பீலியியோடு மூழிநீர் கையிற்பற்றி” (பெரியபு. திருஞான. 601);.

   3. வேள்வி (யாகம்);க்குப் பயன்படுத்தும் ஏன வகை (சீவக.2464, அரும்.);; a vessel used in sacrifices.

   4. நீர்நிலை (பிங்.);; reservoir of water, tank.

   5. துழாவிக் கடையும் மத்து (வின்.);; churning stick.

க. மூழி

     [மூழ் → மூழி.]

 மூழி2 mūḻi, பெ.(n.)

   சோறு (சூடா.);; boiled rice, cooked rice.

     [மூழ் → மூழி. மூழ் = அரும்பு. அரும்புபோல் இருக்கும் சோற்றை மூழி என்றிருக்கலாம்.]

மூழிவாய்

மூழிவாய் mūḻivāy, பெ. (n.)

   பூக்கூடை; flower-basket.

     “மூழிவாய் முல்லை மாலை” (சீவக.833);.

     [மூழி + வாய். மூழ் = மலர் மொட்டு. மூழ் → மூழி = மலர், மூழிவாய் = மலர்க்கூடை.]

மூழை

மூழை mūḻai, பெ.(n.)

   1. குழிந்த இடம்; hallow place.

     “குன்றை யம்மூல மூழைவாய் வைத்து” (கம்பரா.மருத்து.116);.

   2. உட்குழிந்த அல்லது சமைத்த உணவை முகக்கும் அகப்பை; ladle.

     “மூழை சுவையுணரா தாங்கு” (நாலடி, 321);.

    3. துழாவிக் கடையும் மத்து (சது.);; churning strick.

   4. சோறு; boiled rice.

     [முழி → மூழை.]

மூழ்

மூழ்1 mūḻtal,    2 செ.கு.வி.(v.i.)

   பற்றிக் கொள்ளுதல்; to seize, take hold of.

     “மூழ்ந்த பிணி நலிய” (நன்.417, விருத்.);.

     [மூள்-தல் → மூழ்-தல்.]

 மூழ்2 mūḻttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   மூழ்கச் செய்தல்; to submerge, engulf.

     “மூழ்த்த நாளந்நீரை மீனாயமைத்த பெருமானை” (திவ்.பெரியதி.6 8:2);.

     [முழு → மூழ் → மூழ்-த்தல்.]

 மூழ்3 mūḻttal,    4 செ.கு.வி.(v.i.)

   முதிர்தல் (பதிற்றுப்.அரும்.);; to be mature.

     [ஊழ்-த்தல் → மூழ்-த்தல் = முதிர்தல்.]

 மூழ்4 mūḻttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. மூடுதல்; to close, as a bud.

     “மறவரும் வாய் மூழ்த்தனரே” (புறநா.336);.

   2. மொய்த்தல்; to swarm round.

     “கதழ்பு மூழ்த்தேறி” (பரிபா.10:18);.

   3. வளைத்தல்; to surround.

     “முரணுடை வேட்டுவர் மூழ்த்தனர்” (பெருங்.உஞ்சைக்.56:49);.

     [முகிழ்-த்தல் → மூழ்-த்தல்.]

 மூழ்5 mūḻ, பெ.(n.)

   மலர் அரும்பு, முகிழ் (யாழ்ப்.);; flower – bud.

மறுவ. போது, மொட்டு.

     [முகிழ் → மூழ்.]

மூழ்கடி-த்தல்

மூழ்கடி-த்தல் mūḻkaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மூழ்கச் செய்தல்; to drown.

     [மூழ்கு + அடி-த்தல்.]

மூழ்கல்

 மூழ்கல் mūḻkal, தொ.பெ. (vbl.n.)

   முழுகல்; bathing (சா.அக.);.

மறுவ. தலை நீராடல்.

மூழ்கிக்கப்பல்

 மூழ்கிக்கப்பல் mūḻkikkappal, பெ.(n.)

   நீரில் மூழ்கிச் செல்லும் கப்பல்; submarine.

மூழ்கு

மூழ்கு1 mūḻkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. நீர் மடத்தின் கீழ் செல்லுதல், முழுகுதல்; submerge, get drowned;sink.

பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

   2. நினைவு முதலியவற்றில் அழுந்துதல், துயரம் முதலியவற்றில் ஆழ்தல், அமிழ்தல்; get buried in thought, etc., be immersed in grief, etc.

     “வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி” (திருவாச.6:41);. “கரையம்பு மூழ்க” (கலித்.6);. பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார். வேலையில் மூழ்கிவிட்டால் வீட்டை மறந்து விடுவார்.

     [முழுகு → மூழ்கு → மூழ்கு-தல்.]

 மூழ்கு2 mūḻkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. புகுதல்; to reach, enter.

     “வானமூழ்கிச் சில் காற்றிசைக்கும்” (மதுரைக்.357);.

   2. மறைதல்; to be hidden, screened.

     “வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி” (சிறுபாண்.170);.

   3. தங்குதல்; to abide, to remain.

     “முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து” (கலித்.16);.

தெ. முநுகு;க. முழுகு;ம. முநுகுக.

     [முழுகு → மூழ்கு → மூழ்கு-தல்.]

 மூழ்கு3 mūḻkudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஈடுவைத்த பொருள் திருப்ப முடியாமல் போதல்; pledged things cannot retained.

மூழ்த்தம்

மூழ்த்தம் mūḻttam, பெ. (n.)

முழுத்தம் பார்க்க;see {}.

      “ஊழ்வினை துரப்பவோடி யொன்று மூழ்த்தத் தினுள்ளே” (சீவக.2763);.

     [முழுத்தம் → மூழ்த்தம்.]

மூழ்த்து

மூழ்த்து1 mūḻddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1.மூழ்2-, பார்க்க;see {}.

   2. ஆழ்த்துதல்; to plunge, immense, weigh down.

     [முழுத்து → மூழ்த்து → மூழ்த்து-தல்.]

 மூழ்த்து2 mūḻttu, வி.அ.(adv.)

   விரைந்து; speedly.

     “வகைவகை யூழூழ் கதழ்பு மூழ்த்தேறி” (பரிபா.10:18);.

     “மூழத்திறுத்த வியன் றானையொடு” (பதிற்று.33:5);.

மூவகைச்சத்தி

மூவகைச்சத்தி mūvagaiccatti, பெ.(n.)

   விழைவு ஆற்றல் (இச்சா சத்தி);, செயலாற்றல் (கிரியாசத்தி);, அறிவாற்றல் (ஞானசத்தி); எனும் மூவகையாற்றல்; The three powers

   1. the power of affection and benevolence to souls.

   2. the power of creation – Evolution of universe.

   3. the power of knowledge (சா.அக.);.

     [மூவகை + சத்தி.]

மூவகைப்பாலகர்

மூவகைப்பாலகர் mūvagaippālagar, பெ.(n.)

   1. பால் குடிக்கும் குழந்தை; those infants which can take only milk.

   2. பாலும் குடிப்பதோடு சோறு திண்ணும் குழந்தை; those which can take and live on in milk and rice.

   3. சோறு மட்டும் தின்னும் குழந்தை; those that can live on rice only (சா.அக.);.

     [மூவகை + பாலகர்.]

மூவகைமதம்

மூவகைமதம் mūvagaimadam, பெ.(n.)

   மூன்று வகையான மதம்; three kinds of religions.

     [மூன்று → மூ + வகை + மதம்.]

மக்களின் அறிவு நிலைக்கேற்ப மதம்

   1. சிறுதெய்வ வணக்கம்,

    2. பெருந்தேவ மதம்,

   3. கடவுள் சமயம் என மூவகைப்படும்.

   இம்மை நலத்தை மட்டும் நோக்கி இன்பக் காலத்திலும், துன்பக் காலத்திலும், ஐம்பூதமும் ஆவிகளும் போன்ற சிறு தெய்வங்கட்கு உணவு படைத்துக் காவு கொடுப்பதும், சிறு தெய்வ வணக்கம்;சிவன் அல்லது திருமால் பெயரால் இறைவனை நாள்தோறும்வழிபட்டு, உயிர்க் கொலை நீக்கிக் காய்கனி மட்டும் படைத்து, அவ்வம்மத அடையாளந் தாங்கி இருதிணை யுயிருக்கும் தீங்கு செய்யாது இயன்றவரை நன்மையே செய் தொழுகுவது பெருந்தேவ மதம்;எங்கும் நிறைந்திருக்கும், இறைவனை உருவ வணக்கமின்றி உள்ளத்திலேயே வழிபட்டு, தன்னையே படைத்து, முக்கரணமுந் தூய்மையாகி இல்லறத்திலேனும் துறவறத்திலேனும் நின்று, இயன்றவரை எல்லாவுயிர்கட்கும் நன்மையே செய்து, இம்மையிலேனும் மறுமையிலேனும் வீடு பெற வொழுகுவது கடவுள் சமயமாம். சிறு தெய்வ வணக்கத்திற்கு உருவம் இன்றியமையாதது;பெருந்தே வழிபாட்டிற்கு, அது வழிபடுவாரின் அகக் கரண வளர்ச்சிக் கேற்றவாறு இருந்தும் இல்லாமலும் இருக்கலாம் (தேவநேயம்- 12, பக்.107);.

மூவகையிடம்

 மூவகையிடம் mūvagaiyiḍam, பெ.(n.)

   தமிழ் இலக்கணங்கள் கூறும் தன்மை, முன்னிலை, படர்க்கை; place of Tamil gramatical verse first person, second person and third person, etc.

     [மூன்று + வகை + இடம்.]

மூவங்கம்

மூவங்கம் mūvaṅgam, பெ. (n.)

   1. காசு (வெள்வங்கம்);; tin.

   2. ஈயம்பொதி (கருவங்கம்);; lead.

   3. துத்தநாகம் (நாகம்);; zinc (சா.அக.);.

     [மூ + அங்கம்.]

மூவசைச்சீர்

மூவசைச்சீர் mūvasaissīr, பெ.(n.)

   உரிச்சீர்; metrical foot of three syllables.

     “வெண்பா வினமா நேரசையாலிற்ற மூவசைச் சீர்” (காரிகை, உறுப்.6);.

     [மூ + அசை + சீர்.]

மூவடிமுக்கால்

 மூவடிமுக்கால் mūvaḍimukkāl, பெ.(n.)

   வெண்பாவிற் கொருபெயர்; a kind of {}.

     [மூவடி + முக்கால். மூன்று முழுவடியும் (அடி தோறும் நான்கு சீர் கொண்டது); ஒரு முக்காலடியும் (மூன்று சீர் கொண்டது); கொண்டது.]

மூவடிமுப்பது

மூவடிமுப்பது mūvaḍimuppadu, பெ.(n.)

   இடைக்காடர் செய்ததாகக் கூறப்படுவதும், சிந்தடிச் செய்யுள் முப்பது கொண்டதுமான ஒரு நூல் (தொல்.பொருள். 548, உரை);; a poem of 30 stanzas of three lines each, attributed to {}.

     [மூன்று + அடி – மூன்றடி → மூவடி + முப்பது.]

மூன்றடிச் செய்யுட்கள் முப்பது கொண்டவை. இந்நூல் தற்போது இல்லை (கலை.);.

மூவடிவு

 மூவடிவு mūvaḍivu, பெ.(n.)

   ஆண், பெண், அலி என்ற மூவகை வடிவம்; the three forms of living things viz. {}.

     [மூ + வடிவு.]

மூவட்சி

 மூவட்சி mūvaṭci, பெ.(n.)

   தேங்காய் (தைலவ.தைல.);; coconut, as having three eyes.

     [மூ + Skt. அட்சி.]

தேங்காயின் மேற்பரப்பில் மூன்று புள்ளிகள் காணப்படும். இம்மூன்றும் சிவனின் முக்கண் என பக்தர் கூறுவதால் இதற்கு மூவட்சி எனப் பெயர் வந்திருக்கலாம்.

மூவணை

 மூவணை mūvaṇai, பெ.(n.)

   மூன்று இணை ஏர் மாடு (வின்.);; three yokes of oxen.

     [மூன்று + இணை.]

மூவன்

மூவன் mūvaṉ, பெ.(n.)

   கழக கால அரசன்; a king belongs to {} period.

பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர்க்கு விரைவில் பரிசில் தராமையால் இகழப் பெற்றவன் (புறநா.209);.

பொறையன் என்னும் சேர மன்னன் மூவனுடையப் பல்லைப் பிடுங்கித் தொண்டி நகரின் மதில் வாயிற் கதவிலே அழுத்தினான் என்று தெரிகிறது (நற்.18);.

பாலை திணை குறித்து பொய்கையார் பாடிய பாடலில் மூவன் பற்றிய செய்தி இடம் பெற்றுள்ளது.

     “பருவரல் நெஞ்சமொடு பல்படரகல

வருவர் வாழி தோழி மூவன்”

முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற்

கானலந் தொண்டிப் பொருநன் வென்வேல்

தெறலருந் தானைப் பொறையன் பாசறை

நெஞ்ச நடுக்குறூஉந் துஞ்சா மறவர்

திரைதபு கடலின் இனிது கண் படுப்பக்

கடாஅங் கழீஇய கதனடங்கியானைத்

தடவு நிலை யொரு கோட்டன்ன

ஒன்றிலங் கருவிய குன்றிறந்தோரோ” (நற்.18.);.

மூவரசர்

 மூவரசர் mūvarasar, பெ. (n.)

மூவேந்தர் பார்க்க;see {}.

     [மூ + அரசர்.]

மூவராயர்

மூவராயர் mūvarāyar, பெ.(n.)

மூவேந்தர் பார்க்க;see {}.

     “மூவராயர் கண்டன்” (தெ.இ.கல்.தொ.1:10);.

     [மூவரையர் → மூவராயர்.]

மூவரியணில்

மூவரியணில் mūvariyaṇil, பெ.(ո.)

   முதுகில் நீளமாக மூன்று வரிகளுடைய அணில் வகை; striped squirrel, Sciurus palmarum, as having three longitudinal stripes along its back.

     “மூவரியணிலோடாங்கவை நான்குங் குட்டிக்குரிய” (தொல்.பொருள்.561);.

     [மூ + வரி + அணில்.]

     [p]

மூவரையர்

 மூவரையர் mūvaraiyar, பெ. (n.)

மூவராயர் பார்க்க;see {}.

     [மூ + அரையர்.]

மூவர்

மூவர்1 mūvar, பெ.(n.)

   1. முவ்வடிவுகள்; the Hindu trinity.

     “பலர்புகழ் மூவருந் தலைவராக” (திருமுரு.162);.

   2. மூவேந்தர் பார்க்க;see {}.

     “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்” (தொல். பொருள்.391);.

      “முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்” (புறநா.35:4);.

     “தமிழ்கெழு மூவர் காக்கு ” (அகநா.31:14);.

    3. தேவாரக் குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆகிய மூன்று நாயன்மார்கள்; the three Saiva saints, viz. Appar, {} authors of the {} hymns.

     “மூவர்செய் பனுவல்” (தாயு.சச்சிதா.3);.

     [மூ → மூவர்.]

 மூவர்2 mūvar, பெ.(n.)

   அந்தணர், அரசர், வணிகர் எனும் மூன்று பிரிவினர்; three section of people, Brahmins, kings and traders who are considered to be high- birth.

     [மூ –→ மூவர்.]

     “இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை” (குறள், 41);.

     “என்னுங்குறளில் இயல்புடைய மூவர்” என்பது அதிகார வியைபால் அந்தணர், அரசர், வணிகர் என்னும் முக்குலத் தில்லறத்தாரையே குறிக்கும் பிரமசாரியன், வானப்பிரத்தன், சந்நியாசி என்று பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தாது. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் என்னுங் குறளிலுள்ள துறந்தார் என்னுஞ் சொல்லே துறவியரைக் குறிக்கும் (பழ.த.ஆ.பக்.99);.

மூவர்கண்மாய்

 மூவர்கண்மாய் mūvarkaṇmāy, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [மூவர்+கண்மாய்]

மூவர்தண்பொழில்

 மூவர்தண்பொழில் mūvartaṇpoḻil, பெ.(n.)

   தமிழ்நாடு; Tamil Nadu.

     [மூவர் + தண்பொழில். மூவர் = சேர, சோழ, பாண்டியர்.]

பரதகண்ட மெனப்படும் இந்துதேயம், பழங்காலத்தில் நாவல் மரத்தான் சிறப்புற் றிருந்தமையால், நாவலம் பொழில் எனப்பட்டது.

ஒரு காலத்தில் குமரி மலை முதல் பனிமலை (இமயம்); வரையும் முத்தமிழ் வேந்தர் ஆட்சி செலுத்தியமையால், நாவலந் தண்பொழிற்கு மூவர் தண்பொழில் ‘மூவர் தண்பொழில்’ என்பது தென்னாட்டை அல்லது தமிழ்நாட்டை மட்டும் குறித்தது (சொ.ஆ.க.);.

மூவறிவுயிர்

மூவறிவுயிர் mūvaṟivuyir, பெ.(n.)

   ஊறு, சுவை, நாற்றம் ஆகிய மூவறிவு மட்டுமே யுள்ள சிதலெறும்பாதியான சிற்றுயிர்கள்; creatures such as ants, having only three senses.

     “சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” (தொல். பொருள்.மரபு.30);.

     [மூ + அறிவு + உயிர். உற்றறிதல், சுவைத்தறிதல், நுகர்ந்தறிதல் அல்லது முகர்ந்தறிதல் ஆகிய மூன்று அறிவினை மட்டும் பெற்ற சிதலெறும்பு முதலிய உயிர்கள்.]

மூவளபிசைத்தல்

மூவளபிசைத்தல் mūvaḷabisaittal, பெ.(n.)

   செய்யுளில் ஒசை குறையுமிடத்து நெடில்கள் தனது இரண்டு மாத்திரை அளவிலிருந்து மூன்று மாத்திரை அளபாய் நீட்டித்து ஒலிப்பது (அளபெடை);; a letter lengthened in sound either in literary.

     “ஓஒதல் வேண்டு மொளி மாழ்குஞ் செய்வினை ஆஅதும் என்னு மவர்” (குறள், 653);.

மறுவ. அளபெடை.

     [மூன்று + அளபு + இசைத்தல். நெட்டுயிர்கள் மூவலகு பெற்று ஒலிப்பது.]

எழுத்துக்களின் ஒலியளவு கூறும்போது ஒவ்வொரு மாத்திரையையும் ஒரு அலகாகக் கொண்டனர். ஒலியலகினை அளவு என்றும் குறிப்பர். உயிரெழுத்துக்களில் குறில் ஓரலகு பெறும். நெடில் ஈரலகு பெறும். நெட்டுயிர்கள் சில சூழலில் மூன்று மாத்திரை அளவினதாக ஒலிக்கப்படுவதும் உண்டு. அதுவே அளபெடை.

மூவாசை

மூவாசை1 mūvācai, பெ.(n.)

   மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூவகைப்பட்ட பற்று; the three desires or passions, viz., {}.

     [மூ + ஆசை.]

 மூவாசை2 mūvācai, பெ.(n.)

   பிணத்தின் மேல் மூடும் சீலை (இ.வ.);; cloth spread over a corpse.

மூவாதியார்

 மூவாதியார் mūvātiyār, பெ.(n.)

   ஐந்திணை எழுபது என்ற நூலை இயற்றிய ஆசிரியர்; a poet, author of {}.

மூவாமருந்து

மூவாமருந்து mūvāmarundu, பெ.(n.)

   அமிழ்தம்;   சாவா மருந்து; nectar, as preventing old age.

     “மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்” (சிலப்.2:46);.

     [மூ + ஆ + மருந்து.]

மூவாமலை

 மூவாமலை mūvāmalai, பெ. (n.)

   மேரு மலை (பிங்.);; the Mount {}.

மூவாமுதல்

 மூவாமுதல் mūvāmudal, பெ.(n.)

   கடவுள் (யாழ்.அக.);; God.

     [மூ + ஆ + முதல்.]

மூவாயிரவர்

மூவாயிரவர் mūvāyiravar, பெ.(n.)

   தில்லை வாழ் பிராமணர் மூவாயிரவர்; the community of 3000 Brahmins, being special devotees of the God at Chidambaram.

     “மூவாயிரவர்க்கு மூர்த்தி யென்னப் பட்டானை” (தேவா.17, 7);.

     [மூ + ஆயிரம் – மூவாயிரம் → மூவாயிரவர்.]

மூவார்

மூவார் mūvār, பெ.(n.)

   மூப்பில்லாத தேவர்; the {}, as never ageing.

     “மூவார் தொழுதெழு வடிவம்” (மேருமந்.874);.

     [மூ + ஆ – மூவா → மூவார்.]

மூவார்விரியன்

 மூவார்விரியன் mūvārviriyaṉ, பெ.(n.)

   நீளம் குறைந்து தடித்துள்ள பாம்பு வகை (கோவை.);; a kind of short and pursy {} snake.

இருபக்கமும் தலையிருப்பது போல் தோற்றமளிக்கும் பாம்பு.

     [மூவார் + விரியன்.]

மூவிசை

 மூவிசை mūvisai, பெ.(n.)

   மந்தம், மத்திமம், உச்சம் என்ற மூன்றான பண் வகை (வின்.);; pitch of three grades, viz. mandam, mattimam, uccam.

     [மூ + இசை.]

மூவிடப்பெயர்

 மூவிடப்பெயர் mūviḍappeyar, பெ.(n.)

   தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களை உணர்த்தும் பகரப்பெயர்; personel pronoun.

     [மூவிடம்+பெயர்]

மூவிடம்

 மூவிடம் mūviḍam, பெ.(n.)

   தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்கள் (பிங்.);; the three persons, viz., {}.

மறுவ. மூவகையிடம்

     [மூ + இடம்.]

தன்மை – நான், நாங்கள், யான், யாம்

முன்னிலை – நீ, நீங்கள், நீர், நீவிர்

படர்க்கை – அவன், அவள், அது.

மூவினம்

மூவினம் mūviṉam, பெ.(n.)

   1. ஆன் (பசு);, எருமை, ஆடு ஆகிய மூவகைப்பட்ட கால்நடை; the three kinds of cattle, viz., {}, erumai, {}.

     “மூவின மேய்த்தல் சேவினந் தழுவல்” (இலக்.வி.390);.

   2. வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற மூவகை மெய்யெழுத்து (நன்.236);; the three classes of consonants, viz., {}.

     [மூ + இனம்.]

மூவிரல்தட்டல்

 மூவிரல்தட்டல் mūviraltaṭṭal, தொ.பெ. (vbl.n.)

   நாடி பார்த்த பின் மூவிரலையும் நிலத்தின் மேல் தட்டல்; patting the three fingers on the earth after feeling the pulse (சா.அக.);.

     [மூன்று + விரல் + தட்டல்.]

மூவிருந்தேக்கி

 மூவிருந்தேக்கி mūvirundēkki, பெ.(n.)

   தொப்புள்; umbilicus (சா.அக);.

மூவிலை

மூவிலை1 mūvilai, பெ. (n.)

மூவிலை வேல் பார்க்க;see {}.

     “கொலைமலி மூவிலையான்” (தேவா.923, 11);.

 மூவிலை2 mūvilai, பெ.(n.)

   1. குப்பை மேனி; a plant used as antidote- Acalypha-indica.

   2. நரிப்பயறு (மலை.);; field-gram.

   3. வில்வம்; bael, as triple – leaved.

     “நல்லறுகு மூவிலைப் பத்திரமிரண்டும்” (செவ்வந்தி.பு. பிரமதேவன். 43);.

மூவிலைக்குருத்து

 மூவிலைக்குருத்து mūvilaikkuruttu, பெ.(n.)

   பொதிகை மலைச் சாரலில் தாமிரபரணி ஆற்றங்கரையில் விளைவதாகச் சொல்லும் ஒருவகைச் செடி; a plant said to grow in the Podigai mountain and the shores of the river Tamaraparani (சா.அக.);.

     [மூன்று + இலை + குருந்து.]

மூவிலைச்சி

 மூவிலைச்சி mūvilaicci, பெ.(n.)

   வில்வம்; a sacred tree – Aegle mermelos alias Crataeva religiosa (சா.அக.);.

மூவிலைச்சூலம்

மூவிலைச்சூலம் mūvilaiccūlam, பெ.(n.)

மூவிலைவேல் பார்க்க;see {}.

     “மூவிலைச் சூலமென்மேற் பொறி” (தேவா.937, 1);.

     [மூ + இலை + சூலம்.]

மூவிலைப்பயறு

 மூவிலைப்பயறு mūvilaippayaṟu, பெ.(n.)

   ஒருவகைப் பயறு, நரிப்பயறு; a variety of pulse, field-gram – Phaseolus aconitifolius (சா.அக.);.

     [மூ + இலை + பயறு.]

மூவிலைமின்னி

 மூவிலைமின்னி mūvilaimiṉṉi, பெ.(n.)

   அவரை (சங்.அக.);; a twiner beans – Dolichos lab lab (சா.அக.);.

மூவிலைவேலோன்

 மூவிலைவேலோன் mūvilaivēlōṉ, பெ.(n.)

   முத்தலை வேல் தாங்கிய வயிரவன் (பிங்.);; Bhairava, as wielding the trident.

     [மூவிலைவேல் → மூவிலைவேலோன்.]

மூவிலைவேல்

மூவிலைவேல் mūvilaivēl, பெ.(n.)

   முத்தலை வேல் (திரிசூலம்);; trident.

     “மூவிலை வேல் வலனேந்திப் பொலிபவனே” (திருவாச. 6:9);.

     [மூவிலை + வேல்.]

மூவிழை

 மூவிழை mūviḻai, பெ.(n.)

   பாவு நெசவில் பயன்படுத்தப்படும் ஊடிழை; yarn that intervenes the warp.

     [மூ + இழை.]

மூவு-தல்

மூவு-தல் mūvudal,    5 செ.கு.வி.(v.i.)

   விலகுதல் (யாழ்.அக.);; to separate, remove.

   த. மூவு-தல்; E. move.

     [ஒவு-தல் → மூவு-தல் = நீங்குதல்.]

மூவுதவமணி

 மூவுதவமணி mūvudavamaṇi, பெ.(n.)

   யானைக் குன்றிமணி; barricary seed – Adanan thera pavonia (சா.அக.);.

மூவுலகம்

மூவுலகம் mūvulagam, பெ. (n.)

மூவுலகு பார்க்க;see {}.

     “மூவுலகம் விளைத்த வுந்தி” (திவ்.இயற். திருவாசி.4);.

     [மூ + உலகம்.]

மூவுலகளந்தொன்

 மூவுலகளந்தொன் mūvulagaḷandoṉ, பெ.(n.)

   திருமால்;{}.

     [மூவுலகு + அளந்தோன்.]

மூவுலகாளி

மூவுலகாளி mūvulakāḷi, பெ.(n.)

   1. கடவுள்; god.

     “முனைவன் மூவுலகாளி” (திவ்.திருவாய்.8:9:5);.

   2. இந்திரன் (யாழ். அக.);; indra.

     [மூவுலகு + ஆளி. ஆள் → ஆளி.]

மூவுலகு

மூவுலகு mūvulagu, பெ.(n.)

   துறக்கம் (சுவர்க்கம்);, நிலவுலகம் (மத்தியம்);, கீழுலகு (பாதாளம்); என்ற மூன்று உலகங்கள்; the three worlds.

     “மூவுலகுங் கேட்குமே… கொடுத்தா ரெனப் படுஞ்சொல்.” (நாலடி,100);.

     [மூ + உலகு.]

மூவுலகுணர்ந்தமூர்த்தி

 மூவுலகுணர்ந்தமூர்த்தி mūvulaguṇarndamūrtti, பெ.(n.)

   அருகன்; Arhat.

     [மூவுலகு + உணர்ந்தமூர்த்தி.]

மூவெயில்

மூவெயில் mūveyil, பெ.(n.)

   திரிபுரம்; the three cities, destroyed by {}.

     “முக்கண்ணான் மூவெயிலு முடன்றக்கால்” (கலித்.2:4);.

     [மூ + எயில்.]

மூவேந்தர்

மூவேந்தர் mūvēndar, பெ.(n.)

   சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூன்று தமிழரசர்; the three Tamil kings, viz., {}.

     “முடியா லுலகாண்ட மூவேந்தர் முன்னே” (தேவர்.880, 11);.

     [மூ + வேந்தர்.]

 மூவேந்தர் mūvēndar, பெ.(n.)

   பழந்தமிழ கத்தை ஆட்சி புரிந்த மூன்று தமிழ் வேந்தர் மரபினர்; three royal class of the Tamils who ruled over Tamilnadu.

     [மூன்று+வேந்தர்]

பண்டைத்தமிழ் மன்னர்க்குப் பல பெயர்கள் வழங்கினும் அவற்றுட் பாண்டியன், சோழன், சேரன் என்பவை மிக முதுமையும், முதன்மையும் பற்றியவாகும். பாண்டியன், சோழன்,சேரன் என்பதே கால முறையாயினும் இசைவுபற்றிச் சேரன், சோழன், பாண்டியன் எனத் தலைமாற்றிக் கூறப்படும்.

தமிழரசர் கொடி வழிகள் ஆரிய வருகைக்கு முன்னமே தமிழ் நாட்டிலிருந்தும், அவற்றின் பெயர்கட்கு வடமொழி மூலங்காட்டினார் கால்டுவெல் கண்காணியார். மேனாட்டறிஞர் எத்துணையோ ஆராய்ச்சி வன்மையும், நடுவுநிலைமையும் உடைய ரேனும், இந்திய மொழிகளெல்லாம் வடமொழி வழியின யென்னுமோர் தவற்றெண்ணம் அவர் மன திற் குடி கொண்ட மையின், அவராராய்ச்சி சிற்சில விடத்துப் பயன்பட்டிலது. சேர சோழபாண்டியர் தமிழ் மன்னராயிருப்பவும் அவர்க்குப் பெயர் வடமொழியி னின்று வந்தன வென்பது எங்ங்ணம் பொருந்தும்? ஆரிய மரபினராயிருந் திருப்பினன்றோ அவர்க்கு ஆரியப் பெயர் வழங்கியிருக்கும்? சேர சோழ பாண்டியப் பெயர்கள் சேர சோழ பாண்டிய ரென்று அசோகர் கல்வெட்டிலிருக்கின்றனவென்பது ஆரிய வழிக்கு ஆதாரமாகுமா? ழகரம் தெலுங்கிலும், வட மொழியிலும் டகரமாய்த் திரியும்.

எ-டு- தெலுங்கு வடமொழி

கோழி-கோடி நாழி-நாடி கிழங்கு-கெட்டா பிழை-பீட

நாளம் மூங்கில். நாளி-மூங்கிலாற் செய்யப் பட்டபடி இக்காலத்தும் மூங்கிற் படிகளைச் சிற்றுார் களிலும், சிறு கடைகளிலும் காணலாம். நாளிநாழி, சீகாளி – சீகாழி.

சோழன் என்பது சோடன் என்பதன் திரி பென்றும், நாழி என்பது நாடி என்பதன் திரியென்றும்,

தமிழர் என்பது திராவிடர் என்பதன் திரியென்றும், பாண்டியன் என்பது பாண்டுவினின்றும் திரிந்த தென்றும் கூறுவர் கால்டுவெல் கண்காணியார்.

மெய்யெழுத்துகள் ரகரத்தோடு சேர்ந்து மொழி முதல் நிற்பது வடமொழியிற் பெரும்பான்மை. அதன் படி த என்பது த்ர என்றாகும். மகரத்திற்கு வகரம் போலியாகும்.

எ-டு: குமி-குவி, மிஞ்சு-விஞ்சு.

ழ வடமொழியில் ட ஆகும். இங்ங்ணம் தமிழ் என்னும் சொல் வட மொழியில் த்ரவிட என்றாகும். தமிழகம் என்னும் சொல் கிறித்துவுக்குப் பன்னூ றாண்டிற்கு முன்னரே மேலை நாடுகளில் Damurica. டemurica_டemபria என்று பலவாறு திரிந்து வழங்கி யிருப்பவும், அதற்குப்பின் இந்தியாவிற்கு வந்த ஆரிய வாய்ச்சொல்லின் திரிபென்பது சற்றும் பொருந்தாது.

தமிழ் மன்னர் பெயர் வடமொழிப் பழங்காவியங் களாகிய பாரத இராமாயணங்களிற் கூறப்பட்டுள. உதியன் என்னும் ஓர் சேரநாட்டரசன் பாரதப் படை கட்குச் சோறு வழங்கியமைபற்றிப் பெருஞ்சோற்று தியஞ்சேரலாதன் என்று பழந்தமிழ் நூல்களிற் பாராட் டப்படுகின்றான். வான்மீகி இராமாயணத்திற் றமிழ் மன்னரைப் பற்றிய குறிப்பு, பிற்காலத்தில் இடைச் செருகலென்று சிலர் புறக்கணிக்கலாம். இராமர் தெற்கே வந்து அகத்தியரைக் கண்டதை எவரும் மறுக்கார். அகத்தியருண்மையானே பாண்டியனுண் மையும் அறியப்படும். பாரதத்திற்கு முன்னமே பாண் டியனுண்மை இராமாயணத்தால் விளங்காவிடினும், கிறித்துவுக்கு முன்னைய மேனாட்டுப் பூமி சாத்திரி கள் குறித்துள்ள தமிழகப் படங்களானும், பிரித் தானியப் பொருட்காட்சிச் சாலைத் தலைவர், Dr.ஹால் என்பவர் பாபிலோனியக் குடைபொருள்கள் பற்றிக் கூறியுள்ள ஆராய்ச்சியுரையானும் விளங்குவதாகும்.

பாண்டு, பாண்டியன் என்னும் பெயரொப்புமை பற்றியும், பாண்டுவின் மகனாகிய அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை வந்தபோது பாண்டியன் மகளை மணந் தான் என்னும் கதைபற்றியும், மகாவம்சம் என்னும் இலங்கைச் சரித்திர நூலில் பாண்டியன் என்பதை, பாண்டு என்பதினின்றும் திரிந்த பாண்டிவன் என்னும் தத்திதாந்தத் திரியென்று கூறுவது மொட்டைத் தலைக்கும், முழங்காற்கும் முடிபோட்ட தொக்கு மன்றோ?

பாண்டியன்,சோழன்,சேரன் என்னும் பெயர்கள் வடமொழியாயின், வடமொழியில் அவற்றிற்குப் பொருளிருத்தல் வேண்டும். பாண்டியப் பெயர்க்குக்

கூறும் வடமொழிப்பொருள் சரித்திர வாயிலாய் மறுக் கப்பட்டது. சோழசேரப் பெயர்கட்குப் பொருந்தப் புளுகும் பொருளும் வடமொழியிலில்லை. இனி, இத் தமிழ் மன்னர் பெயர்கள் தமிழ் சொற்களாயின் அவற்றிற்குப் பொருள் என்னை யெனிற் கூறுதும்:

   1. பாண்டியன் – பாண்டியன் பாண்டி+ அன்

பாண்டி என்பது வட்டமென்னும் பொருளிலேயே வழங்கப்பட்டுள்ளது. பாண்டி,ஒரு விளையாட்டு. ஒட்டை வட்டமாக நறுக்கி நிலத்தில் அரங்கு கீறி எறிந்து விளையாடுவது. வட்டமாக நறுக்கப்பட்ட ஒடு வட்டு எனப்படும். வட்டு என்பது கருவியாகுபெயராய் அதைக் கொண்டு ஆடும் விளையாட்டையும் உணர்த்தும்.

     ‘கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் (நற்.3);

வட்டு என்பதன் பரியாயப் பெயராகவே பாண்டி யென்பது தென்னாட்டில் வழங்குகின்றது.

தொடடி, புட்டி, விட்டி என்பன தொட்டில், புட்டில், விட்டில் என்று நின்றாற்போல, பாண்டி என்பதும் பாண்டில் என நிற்கும்.

பாண்டில் வட்டம். பாண்டில் என்பது வட்டம் என்னும் மூலப் பொருள்பற்றியே பல பொருள்களை யுணர்த்தும்.

பாண்டில் =

   1. அகல், வட்டமாயிருப்பது.

   2. காளை, வட்டமாய் அல்லது உருண்டிருப்பது.

   3. கைத்தாளம், வட்டமாயிருப்பது.

   4. நாடு

ஒரு நாட்டை அல்லது நாட்டுப்பகுதியை வட்டம், வட்டகை, வட்டாரம் என்று சொல்வது வழக்கு. மண்டலம் என்பது வட்டத்தின் பரியாயப் பெயரே. இங்கிலீஷிலும் circle என்று நாட்டுப் பகுதியைக் கூறுவர்.

   5. சக்கரம், வட்டமாயிருப்பது.

   6. பண்டி (வண்டி);

பண்டி யென்பத வண்டியென்பதன் திரிபு பவ, போலி. வண்டி-வள் பகுதி, தி விகுதி. வள் + தி வண்டி, வளைந்திருப்பது. வண்டியென்பது முதலில் சக்கரத்தையும் பின்பு உறுப்பாகுபெயராய்ச் சகடத்தையும் குறிக்கும்.

பண்டி என்பதே பாண்டி, பாண்டில் எனத் திரியும்.

     “பாண்டில் எடுத்தபஃ றாமரை கீழும் பழனங் களே” எனும் திருக்கோவையடியில் பாண்டில் என்பது கிண்ணம் என்னும் பொருளில் தாமரைக்குவமையாய் வந்துள்ளது. கிண்ணம் வட்டமா யிருப்பது.

வட்டம் என்னும் சொல் உருட்சியையும், திரட்சி யையும் குறிக்கும். ஓர் உருண்டையின் பரப்புத் துரத் தில் வட்டமாகவே தோன்றும்

பாண்டியன் குதிரைக்குக் கனவட்டம் என்று பெயர். ஓர் இளைஞனை இளவட்டம் என்பர் தென் னாட்டார். வட்டம் என்பதைப் போலவே அதன் பரியாயப் பெயராகிய பாண்டில் என்பதும் உருட்சியும், திரட்சியுமாகிய பொருள்களை யுணர்த்தும்.

பாண்டில், உருட்சியான ஒரு காளையை யுணர்த்துவது போல உருட்சியான ஒரு வீரனையும் உணர்த்தும். காளை என்னும் பெயர் உவமையாகு பெயராய் வீரனைக் குறிப்பது செய்யுளிற் பெரு வழக்கு தென்னாட்டார் காளை என்னும் பெயரைத் தம் சிறார்க்கிடுவது இன்றும் வழக்கம். இப்போ துள்ள சிவகிரி ஜமீன்தார் அவர்களின் பெயர் செந் தட்டிக் காளைப்பாண்டியன் என்பது. ஆகவே பாண்டி யென்பதற்கு

     “வீரன்” என்பதே பொருளாம். அஃது அன் விகுதி பெற்றுப்பாண்டியன் என நிற்கும். பாண்டியன் வீரத்தைச் சங்க நூல்களானும்,

     “பாண்டியனார் பராக்கிரமம் பகர்வரிதே யம்மானே” என்னும் புகழெந்தியார் கூற்றானு முணர்க.

இனி, பாண்டியனுக்குரிய மறுபெயர்களாவன:

செழியன் செழிய நாட்டை யுடையவன்.

தென்னவன் தென்னாட்டரசன்.

வழுதி புலவரால் வழுத்தப்படுகின்றவன்.

மாறன் – பகைவரொடு மாறுகொண்டவன்.

மீனவன் மீணக்கொடியுடையவன்.

கைதானவன் தன் கையை வெட்டினவன் (பொற்கைப் பாண்டியன். அவனுக்குப் பின்னால் ஏற்பட்ட பெயர்.);

பஞ்சவன் ஐந்து சிற்றரசரை ஆண்டவன். (கல்வெட்டுகளையும், சரித்திரத்தையுங் காண்க.); முல்லை, குறிஞ்சி முதலிய ஐந்திணை நிலங்களை யுடையவன் என்று பொருள் கூறல் பொருந்தாது.

கெளரியன் கெளரியின் வழித்தோன்றல்,

கெளரி தடாதகைப் பிராட்டியாரான பார்வதி.

சின்னமும், அங்கமும் பற்றிய தொடர்மொழிப்

பெயர்கள் இங்குக் கூறப்பட்டில.

   2. சோழன் : சோளம் – சோழம் – சோழம் + அன் சோழன்.

சோழம் என்பது மக்காச் சோழம், கள்ளர் வெட்டிச் சோளம் என்றும் கூறப்படும்.

மக்காச்சோளம் சோழநாட்டிலேயே சிறப்பாய் விளைகின்றது. பாண்டிநாட்டிற் பயிரிடப்படுவதே யில்லை. கொங்குநாட்டிலும், பிற சேர நாட்டுப்பகுதி களிலும் விளைந்தாலும், சிற்றுண்டியாய்த் தின்னத் தக்க அவ்வளவு சிற்றளவாகவே விளைகின்றது. சோழநாட்டிற் கள்ளருக்குச் சிறந்த வுணவாகின்றது. கள்ளர் அதை மிகுதியாகப் பயிரிடுகின்றனர். அதனாலேயே கள்ளர்வெட்டிச் சோளம் எனப் பெயர் பெற்றது. கள்ளர் என்னும் வகுப்பார் சோழநாட்டி லன்றிப் பிற நாட்டிவில்லை. இதனாலும் சோளம் சோழநாட்டிற்கே சிறப்பென்பது பெறப்படும்.

தாவரப் பொருள்களால் இடங்கள் பெயர் பெறுவது சாதாரணம்.

எ-டு : பொழில் (சோலை); உலகம். உலக முழுதும் முன்காலத்தில்ஒரே சோலைபோல் தோன்றிற்று.

நாவலந்தீவு-நாவன் மரம் மிகுந்த பரதகண்டம்

நெல்வேலி, திருநெல்வேலி, நென்மேனி, நெல்லூர் முதலியன நெல் விளையும் இடங்கள்.

புளியம்பட்டி, புளியங்குடி, அத்திகுளம், வேப்பங் குளம், பனையூர், பனையடிப்பட்டி முதலியன மரங்க ளாற் பெற்ற பெயர்கள்.

எருக்கலங்குடி செடியாற் பெற்ற பெயர். இங்ங்ணமே பிறவும்.

சோளம் விளையும்நாடு தானியாகுபெயராகச் சோளம் எனப்பட்டது. சோளம் சோழம் எனத் திரியும்.

ள-ழ. cf. தோள் + அன் – தோளன் – தோழன். தோள்போல் உதவுபவன் அல்லது தோளிற் கை போடுபவன்.

சீகாளி – சீகாழி. யாளி -யாழ், நாளி-நாரி, தேளி-தேழி, தேள்போற் கொட்டுவது.

சோழநாட்டையுடையவன் சோழன்.

இனி, சோழனுக்குரிய மறுபெயர்களாவன :

சென்னி – தலைவன், சென்னி தலை.

கிள்ளி – பகைவர் தலையைக் கிள்ளுபவன்.

அபயன் – பயத்தை நீக்குபவன், அடைக்கலந் தருபவன்.

வளவன் வளநாட்டையுடையவன்.

செம்பியன் சிபியின் வழித்தோன்றல்.

சின்னமும், அங்கமும் பற்றிய தொடர்மொழிப் பெயர்கள் இங்குக் கூறப்பட்டில.

   3. சேரன் : சாரல் – சேரல்-சேரன்.

தமிழ் வேந்தர் மூவருள்ளும் சேரனே மலை நாட்டையுடையவன். சாரல் என்பது மலையின் அடிவாரத்தையும், மலைநாட்டையும் குறிக்கும். பின்பு இடவாகுபெயராய் அம் மலைநாட்டை ஆள்பவனைக் குறித்தது.

சாரல் என்பது சேரல் என்று திரியும். உக சார் – சேர்.

சேரல் என்பது சேரன் என்று திரியும்.

ல-ன போலி. cf. மறன் – மறல், மறலி-எமன். திறன் – திறல்.

சேரல் என்பதே சேரன் பழம்பெயராகும்.

எ.டு: குடக்கோச் சேரல், மாந்தரஞ் சேரல்.

சோல் + அன் சோலன் -கேரளன்.

ச-க, போலி. cf. சீர்த்தி – கீர்த்தி, கலவுகுலவு.

ல-ள, போலி cf. இறலி-இறளி, கசலி-கசளி.

சேரன், கேரளன் என்பவை பிந்திய வடிவங் களாகும். அவற்றுள்ளும் மிகப் பிந்தியது கேரளன் என்பத பண்டைத் தமிழ் நூல்களிலெல்லாம் சேரல் என்பதே பெருவழக்காய் வரும். பிற்காலத்துப் புராணங்களிலெல்லாம் கேரளன் என்பது பெருவழக் காய் வரும்.

சேரன் என்னும் பெயரொடு மான் என்னும் பெயர் சேர்த்துச் சேரமான் என்று வழங்குவது முண்டு. மான் என்பத மகன் என்பதன் திரிபு. பெருமகன் – பெருமான், மருமகன் – மருமான்.

இனிச் சேரனுக்குரிய பிற பெயர்களாவன :

வில்லவன்-வில்லையுடையவன்.

கொங்கன் – கொங்குநாட்டை யுடையவன்.

குடக்கோ – குடநாட்டரசன். குடம் – மேற்கு.

குட்டுவன்_குடநாட்டரசன். குடம்- குட்டம்.

குடகன் – குடநாட்டரசன்.

கோதை – (வில்லுக்காக); முன்கைத் தோற்கட்டுடையவன்.

உதியன்-உயர்ந்தவன். உயர்ந்த மலைநாடன்.

வானவன்-வானத்தையளாவும் மலைநாடன்.

வானவரம்பன்-வானத்தையளாவும் மலைநாடன். மலையமான்_மலைநாட்டரசன்.

சேய் – மலைத் தெய்வமாகிய முருகன் போன்றவன்.

சின்னமும், அங்கமும் பற்றியதொடர்மொழிப் பெயர்கள் கூறாது விடப்பட்டன.

இதுகாறுங் கூறியவற்றால் தமிழரும், தமிழர சரும் ஆரிய வருகைக்கு முன்பே, தமிழ்நாட்டி லிருந்தவர்களென்றும், அவர்கள் தமிழ்நாட்டின் பழங்குடிகளேயென்றும், அவை வடமொழியிற் பலவாறு திரியுமென்றும், தமிழரசருள் பாண்டியன் காலத்தால் முற்பட்டவன் என்றும், சோழன் இடைப் பட்டவன் என்றும், சேரன் கடைப்பட்டவன் என்றும் தெரிந்து கொள்க.

பாண்டியன் முற்பட்டவன் என்பது தமிழ்நாடன் என்னும் பெயரினாலும், சங்க வரலாற்றாலும், சரித்திரத்தினாலும்,

     “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்

குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு

தென்திசை யாண்ட தென்னவன் வாழி”

என்னும் சிலப்பதிகார வரிகளாலும், முழுகின தமிழகமுண்மையிலும், மேனாட்டுக் குறிப்புகளாலும் அறியப்படும். முழுகின தமிழகம் பாண்டி நாட்டுப் பகுதியாகும். அதுவே மக்கள் முதன்முதற் றோன்றி யவிடம்.

மக்கள் பெருகி வடக்கே வரவே சோழநாடு தோன்றிற்று. தென்றிசையினின்றே மக்கள் ஆதியில் வடக்கே சென்று உலகமுழுதும் பரவின தாகச் வரலாறு கூறும் பல்வகைக் கலைகளும் இதற்குச் சான்று பகரும்.

சோழநாட்டின்பின் சேரநாடு தோன்றிற்று. சேரநாடு முதலாவது குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்குநாட் டளவாயிருந்து பின்பு மேல் கரையும் சென்று தாவிற்று.

தமிழ்மொழி பாண்டிநாட்டின் செந்தமிழாயிருந் ததும், வடக்கே சோழ நாட்டிற் சற்றுத் திரிந்ததும், அதை அடுத்து அதன் மேற்கே மிகத் திரிந்து கொடுந் தமிழானதும்.

கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் பாண்டியன் தமிழ்நாட்டில் தலைமை வகித்ததும், பின்பு சோழன் தலைமை வகித்ததும், பின்பு சேரன் செங்குட்டுவன் தலைமை வகித்ததும், பாண்டிய சோழ சேர முன்மை இடைமை பின்மைகளை யுணர்த்துவனவாகும்.

சங்ககாலத்தோடு தனித் தமிழரசு தலைத் தாழ்த்ததனால் அதற்குப் பிற்பட்ட சிற்றிடைச் சிறு போதைத் தமிழரகக் கிளர்ச்சிகள் இங்குக் கொள் எப்பட்டில,

மேனாட்டுப் பழையவரலாற்று நூல்களில் தமிழரசரைப்பற்றிய குறிப்புகளிலெல்லாம் பாண்டியன் பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழநாடு வடக்கே வரவர விரிந்திருத்தலால் மக்கள் மேற்கே சென்று குடியேறினர் என்க.

சேரநாட்டுத் தமிழ் தன் பெருந்திரியினாலேயே வடமொழித் துணைகொண்டு மலையாளம் எனத் தனிமொழியாய்ப் பிரிந்தது.

ஆதலால் பாண்டியன் பெயர் மிகப் பழைமையான தென்க.-“செந்தமிழ்ச் செல்வி” கன்னி 1934

மூவேந்தர் உடன்படிக்கை

 மூவேந்தர் உடன்படிக்கை mūvēndaruḍaṉpaḍikkai, பெ. (n.)

மூவேந்தர் கூட்டணி பார்க்க;see movesdarkūlfans.

     [மூன்று+வேந்தர்+உடன்படிக்கை]

மூவேந்தர் கூட்டணி

 மூவேந்தர் கூட்டணி mūvēndarāṭṭaṇi, பெ. (n.)

   வடநாட்டுப் படையெடுப்பை முறியடிக்கத் தமிழ் மூவேந்தர்களும் ஒன்றுகூடி தமக்குள் செய்துகொண்ட உடன்படிக்கை; federation of the three Tamil kings made an accepted agreement in view of safeguarding against the invasion or attack of north Indianarmies andplunderers, (காரவேலன் கல்வெட்டு);.

     [மு(மூன்று);+வேந்தர்+கட்டணி]

மூவேந்திரவேளார்

மூவேந்திரவேளார் mūvēndiravēḷār, பெ.(n.)

   விருப்பாட்சி தேவராயர் காலத்தில் வாழ்ந்த கணக்கு அதிகாரி; a contemporary accountant of {} devarayar.

     “இப்படிக்கு இவர்கள் சொல்ல இந்த பிரமாணம் எழுதினென் இன்னாட்டுக் கணக்கு உத்திராபதியாரான அறிவுடை மூவேந்த வேளார்” (புது.கல்.715/40);.

இவர் காலம் கி.பி.1476.

மூவேல்

 மூவேல் mūvēl, பெ. (n.)

   மூன்று வகை வேலமரம்; the three kinds of acacia tree.

     [மூ + வேல்.]