செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
மு

மு  mu, பெ.(n.)

   மகரமெய்யும்(ம்); உகர உயிரும் (உ); இணைந்து பிறக்கும் உயிர்மெய்யெழுத்து; the compound of ம் and உ.

     [ம் + உ மு.]

     ‘மு’ மகரமெய்யும் உகர உயிரும் சேர்ந்து பிறந்தது;

உதடுகளை அழுத்தி பின் மூக்கொலியாக வெளிப்படும்.

     ‘மு’ பல்வேறு காலங்களில் வரிவடிவில் ஏற்பட்ட மாற்றங்கள்.

கி.மு.3 ஆம் நூற்றாண்டு – {}

கி.பி.5 ஆம் நூற்றாண்டு – {}.

கி.பி.7 ஆம் நூற்றாண்டு – {}.

கி.பி.17 ஆம் நூற்றாண்டு – {}.

முக

முக1 mugattal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. நீரைக் குழித்தல் அல்லது துளைத்தல் போல மொள்ளுதல்; to draw, as water;

 to bale.

     “கனையிருள் வானங் கடன்முகந்து” (கலித்.145);.

   2. நீர்ப்பொருளையும் கூலப் பொருளையும் கலத்தால் அல்லது படியால் மொண்டளத்தல்; to measure, as grain or liquid.

   3. நிரம்பப் பெறுதல்; to obtain in full measure.

படியால் முகந்து நெல்லை சணல் பையில் போட்டார்கள். முந்நீர் முகந்து செல்லும் முகில் (மேகங்கள்);. “முகந்தனர் திருவருள்” (கம்பரா.எழுச்சி.2);.

   4. தாங்கி யெடுத்தல்; to lift, take up.

     “முகந்துயிர் மூழ்கப் புல்லி” (கம்பரா.கும்பகர்ண.129);.

   5. விரும்புதல்; to desire, like.

     “மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்” (நல்வழி.24);.

க. மொகெ.

     [முழு → முகு → முக → முக-த்தல். நீர் முதலிய நீர்மங்களை (திரவங்களை); அல்லது தவசங் (தானியங்);களைக் கையால் அல்லது கொள்கலனால் நிறைத்து எடுத்தல்.]

 முக2 mugattal,    2 செ.குன்றாவி.(v.t.)

   மூக்கால் நுகருதல் (உ.வ.);; to smell.

     [முகம் → முக → முக-த்தல்.]

முககட்டணம்

முககட்டணம் mugagaṭṭaṇam, பெ.(n.)

   1. கோயில் முகப்பிலமைந்த கற்கட்டிடம், மண்டபம்; stone pavilion in the edifice of the temple.

     “திருநாவுக்கரசு தேவன் திருமடத்து நாயனார், அழகிய திருவையாறுடையார் கீழைத் திருவாசல் முககட்டணத்து எழுந்தருளி இருந்து” (தெ.கல்.தொ.8, கல்.43);. (கல். அக.);.

   2. கட்டடமுகப்பு (தெ.இ.கல்.தொ.3, 21);; porch.

     [முகம் + கட்டணம். கட்டடம் → கட்டணம்.]

முககந்தம்

 முககந்தம்  mugagandam, பெ.(n.)

   முருங்கை மரம் (பரி. அக.);; Indian horse radish tree.

முகக்கடுப்பு

முகக்கடுப்பு mugaggaḍuppu, பெ.(n.)

   1. முகத்தில் தோன்றும் கடுமைக்குறி (வின்.);; severity of countenance.

   2. முகச் சினப்பு; a swelling or pimple on the face.

     [முகம் + கடுப்பு. கடுப்பு = வெகுளி, முகஞ்சுளிக்கை.]

முகக்கட்டு

 முகக்கட்டு mugaggaṭṭu, பெ. (n.)

   நாணமின்மை; shameless.

     [முகம் + கட்டு.]

முகக்கட்டை

முகக்கட்டை mugaggaṭṭai, பெ.(n.)

   1. மோவாய்க் கட்டை (வின்.);; chin.

   2. தாடி; beard.

     [முகம் + கட்டை. கட்டை = உடல்.]

முகக்கண்ணாடி

முகக்கண்ணாடி mugaggaṇṇāṭi, பெ.(n.)

   முகம் பார்க்குங் கண்ணாடி; mirror, looking glass.

     “முட்டிணை வட்டு முகக் கண்ணாடியும்” (பெருங்.உஞ்சைக்.38:170);.

     [முகம் + கண்ணாடி.]

முகக்கயில்

 முகக்கயில் mugaggayil, பெ.(n.)

   உடைந்த தேங்காயின் கண்ணுள்ளதாகிய மேன்மூடி (யாழ்ப்.);; upper half of a coconut shell with the kernal.

     [முகம் + கயில். கயில் = தேங்காயில் பாதி.]

முகக்கருவி

முகக்கருவி  mugaggaruvi, பெ.(n.)

   கடிவாளம்; bit of a bridle.

     “குதிரைகள்…… முகக் கருவி பொரப்பட்ட செவ்வாயை உடைமையான்” (புறநா.4:8, உரை);.

     [முகம் + கருவி.]

முகக்களை

 முகக்களை mugaggaḷai, பெ.(n.)

   முகத்தின் அழகு (உ.வ.);; charm or brightness of countenance attractiveness of face.

     [முகம் + களை. களை = அழகு.]

முகக்கவர்ச்சி

முகக்கவர்ச்சி  mugaggavarcci, பெ.(n.)

   1. முகத்தின் அழகு; charm of face.

நடிகைக்கு முகக்கவர்ச்சி தேவை (அவசியம்);.

   2. பார்வையால் மயக்கும் மாயக்கலை; bewitching by looks, a magic art.

     [முகம் + கவர்ச்சி.]

முகக்காறை

 முகக்காறை mugaggāṟai, பெ.(n.)

   அணிகலன் வகை;     [முகம் + காறை. காறை = பெண்களும், குழந்தைகளும் அணியும் அணிகலன்.]

முகக்கிளர்ச்சி

 முகக்கிளர்ச்சி mugaggiḷarcci, பெ.(n.)

முகமலர்ச்சி (வின்.); பார்க்க; see mugamalarcci.

     [முகம் + கிளர்ச்சி. கிளர்ச்சி = மகிழ்ச்சி, செழிப்பு.]

முகக்குறி

முகக்குறி mugagguṟi, பெ.(n.)

   1. முகத்திற் றோன்றுங் குறிப்பு; facial expression, indication of the face.

   2. நோயாளியின் முகத்தில் தோன்றும் நோயறிகுறிகள்; symptoms in the face of a patient.

   3. ஒருவகை முகச்சாயல்; a kind of face feature (சா.அக.);.

     [முகம் + குறி.]

முகக்கொம்பு

 முகக்கொம்பு  mugaggombu, பெ.(n.)

   கால் நடையின் முன்பக்கமாக வளைந்த கொம்பு (வின்.);; horn bent forward.

     [முகம் + கொம்பு.]

முகக்கொள்(ளு)-தல்

முகக்கொள்(ளு)-தல் mugaggoḷḷudal,    7 செ.குன்றாவி. (v.t.)

   அளந்து கொள்ளுதல்; to take in;

 to comprehend.

     “கண்ணுக்கு முகக்கொள்ள வொண்ணாத போக்யதை யுடையவன்” (ஈடு, 5.8:7);.

     [முக + கொள் – தல். முகத்தல் = அளத்தல்.]

முகக்கொள்ளி

முகக்கொள்ளி mugaggoḷḷi, பெ.(n.)

   கொள்ளிவாய்ப்பேய்; willothewisp, ignis fatus.

     “முடைக் கொள்ளு முதிர வூன்செம் முகக் கொள்ளி கொண்டு நேடி” (இரகு. சூசனயோ.22);.

     [முகம் + கொள்ளி.]

முகக்கோட்டம்

 முகக்கோட்டம் mugagāṭṭam, பெ.(n.)

   வெறுப்பு, வருத்தம் முதலியவற்றின் குறியாக முகங்கோணுகை; expression of face, indicating grief, dislike, reluctance, etc.

மறுவ. முகவாட்டம்

     [முகம் + கோட்டம்.]

முகங்கடுத்தல்

முகங்கடுத்தல் mugaṅgaḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   சினம், வெறுப்பு முதலியவற்றின் குறியாக முகத்திற் கடுமை தோற்றுவித்தல்; to set one’s face in anger, to frown.

     [முகம் + கடுத்தல். கடுத்தல் = சினத்தல்.]

முகங்கரு – த்தல்

முகங்கரு – த்தல் mugaṅgaruttal,    4 செ.கு.வி. (v.i.)

முகங்கடுத்தல் பார்க்க; see {}.

     [முகம் + கருத்தல்.]

முகங்கருகு-தல்

முகங்கருகு-தல் mugaṅgarugudal,    5 செ.கு.வி. (v.i.)

   சீற்றம், சினம் முதலியவற்றின் குறியாக முகத்தில் கடுமை தோற்றுவித்தல் (வின்.);; to show the rages of reluctance in face foaming with extreme anger.

     [முகம் + கருகுதல். கருகுதல் = சின மிகுதியால் முகத்தில் கடுமை தோன்றுதல்.]

முகங்கவிழ்தல்

முகங்கவிழ்தல் mugaṅgaviḻtal,    2 செ.கு.வி. (v.i.)

   நாணம் முதலியவற்றால் தலை குனிதல்; to bend down one’s face, as when put to shame or disgrace;

 coyness as a feminine.

     [முகம் + கவிழ்தல். கவிழ்தல் = நாண முதலியவற்றால் தலையிறங்குதல்.]

முகங்காட்டு

முகங்காட்டு1 mugaṅgāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   காட்சி கொடுத்தல்; to appear to assume a visible form.

     “அவன் முகங் காட்டுகைக்காக” (ஈடு, 10. 11:3);.

     [முகம்+காட்டுதல். காட்டுதல் = காண்பித்தல்.]

 முகங்காட்டு2 mugaṅgāṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   பெரியோரைச் சென்று காணுதல் (நாஞ்.);; to pay a visit to a great man.

     [முகம் + காட்டுதல். காட்டுதல் = காணுதல்.]

முகங்காண்(ணு)தல்

முகங்காண்(ணு)தல் mugaṅgāṇṇudal,    16 செ.கு.வி. (v.i.)

   கட்டி உடைவதற்கு முன் வாய் வைத்தல்;   கட்டி உடைவதற்கான முன் குறியீடு; to gather, as a head of a boil.

     [முகம் + காண்(ணு);தல்.]

முகங்காண்பி – த்தல்

முகங்காண்பி – த்தல் mugaṅgāṇpittal,    4 செ.குன்றாவி. (v.t.)

முகங்காட்டு2தல், பார்க்க; see {},

     “நாட்டார் மன்னனை முகங் காண்பிக்க வந்திருக்கிறார்கள்” (நாஞ்.);.

     [முகம் + காண்பித்தல்.]

முகங்குப்புறுதல்

முகங்குப்புறுதல் mugaṅguppuṟudal,    20 செ.கு.வி.(v.i.)

முகங்கவிழ்தல் பார்க்க; see {}.

     [முகம் + குப்புறுதல். குப்புறுதல் = தலைகவிழ்தல், தலைகுனிதல்.]

முகங்குறாவு – தல்

முகங்குறாவு – தல் mugaṅguṟāvudal,    5 செ.கு.வி.(v.i.)

   துன்பத்தால் முகம் பொலிவிழத்தல் (வின்.);; lent face due to distress.

மறுவ. முகக்கோட்டம்.

     [முகம் + குறாவுதல். குறாவுதல் = வாடுதல், ஒடுங்குதல், பொலிவிழத்தல்.]

முகங்கொ – த்தல்

முகங்கொ – த்தல் mugaṅgottal,    4 செ.கு.வி.(v.i.)

   1. இன்முகங் காட்டுதல்; to show a kindly face.

     “ஆசாலேச முடையார்க்கு முகங்கொடாதவனாய்” (ஈடு,4 7:9);.

   2. முகங்காட்டுதல், 1 பார்க்க: see {}, 1.

     “இன்னானுக்கு இன்ன தோப்பிலே முகங்கொடுக்கக் கடவோம்” (திவ்.பெரியதி.5:1 பிர.);.

   3. செவிசாய்த்தல் (வின்.);; to grant a kind hearing.

   4. செல்லங் கொடுத்தல் (வின்.);; to fondle, treat wtih indulgence.

பிள்ளைக்கு முகங் கொடுக்காதே (வின்.);.

     [முகம் + கொடுத்தல்.]

முகங்கொள்(ளு)

முகங்கொள்(ளு)1 mugaṅgoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. இசைவு பெறுதல்; to obtain consent.

     ‘இரவுக்குறி யேற்பித்து முகங் கொண்டு’ (திருக்கோ. 156, உரை);.

   2. இசைவுக் குறி காட்டுதல்; to indicate consent.

     ‘பொதுப்பட விலக்கி முகங் கொண்டு’ (திருக்கோ.81, உரை);.

     [முகம் + கொள்ளுதல்.]

 முகங்கொள்(ளு)2 mugaṅgoḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   கட்டி அல்லது பரு உடைவதற்கு முன் வாய் வைத்தல்; obtain formtion of cone in an abscess ulcer or carbuncle shoot forth as in boils (சா.அக.);.

     [முகம் + கொள்(ளு);தல்.]

முகங்கோடுதல்

முகங்கோடுதல் mugaṅāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

முகங்கோணுதல், பார்க்க; see {}.

     [முகம் + கோடுதல். கோடுதல் = வளைதல்.]

முகங்கோணுதல்

முகங்கோணுதல் mugaṅāṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   முகத்தில் வெறுப்புக்குறி காட்டுதல்; to indicate dissatisfaction by one’s countenance.

     [முகம் + கோணுதல். கோணுதல் = மாறுபடுதல், வெறுப்புக் கொள்ளுதல்.]

முகசந்தி

முகசந்தி mugasandi, பெ.(n)

   நாடக சந்தி ஐந்தனுள் முதலில் உள்ள சந்தி (சிலப்.3:13, உரை);; the first juncture or opening of a drama, one of five {}.

     [முகம் + சந்தி. சந்தி = இணைவு.]

நாடகசந்தி =

   1. முகம்,

   2. படி (பிரதி); முகம்,

   3. தருப்பம்,

   4. வளைவு.

   5. துய்த்தல்.

அந்தி → சந்தி. அந்தி = கூடுகை. பகலும் இரவும் கூடும் நேரம். ஒ.நோ.அவை → சவை.

முகசன்னி

 முகசன்னி mugasaṉṉi, பெ.(n.)

   முகத்திற் காணும் இசிவுநோய் (சன்னி); வகை (இங்.வை);; facial neuralgia Ticaouloureux.

     [முகம் + சன்னி. சன்னி = இசிவு நோய்.]

முகசம்

 முகசம் mugasam, பெ.(n.)

   பல்; tooth.

முகசரம்

 முகசரம் mugasaram, பெ.(n.)

   கூரையின் அடிப்பகுதியைத் தாங்க விட்டுள்ள நீட்டு மரம்; beam or log supporting the lower part of а гoof.

     [முகம் + சரம். சரம் = கூரையைத் தாங்கும் மரம்.]

முகசின்னம்

 முகசின்னம் mugasiṉṉam, பெ.(n.)

முகக்குறி பார்க்க; see {}.

முகசீரி

 முகசீரி mugacīri, பெ.(n.)

   நாக்கு; tongue (சா.அக.);.

முகசுரம்

 முகசுரம் mugasuram, பெ.(n.)

   பனங்கள் (பரி.அக..);; toddy.

முகசோதனம்

 முகசோதனம் mugacōtaṉam, பெ.(n.)

   முகங் கழுவுகை; cleaning of the face (சா.அக.);.

     [முகம் + Skt. சோதனம்.]

முகசோதி

 முகசோதி mugacōti, பெ.(n.)

   எலுமிச்சை (ம.வெ.);; lime fruit.

முகச்சரக்கு

 முகச்சரக்கு  mugaccaraggu, பெ.(n.)

   கடைக்குமுன்னால் பார்வைக்காக வைக்கப்படும் பண்டம் (வின்.);; commodities exhibited for show.

     [முகம் + சரக்கு. சரக்கு = வணிகப் பண்டம், வணிகப் பொருள்கள்.]

முகச்சவரம்

 முகச்சவரம்  mugaccavaram, பெ.(n.)

   முகத்தில் செய்து கொள்ளும் மழிக்கை (சவரம்);; shaving of the face.

     [முகம் + சவரம். Skt. ksaura → த. சவரம்.]

முகச்சாடு

 முகச்சாடு mugaccāṭu, பெ.(n.)

   முக்காடு (இ.வ.);; veil, covering for the face.

     [முகம் + சாடு. சாடு = கையில் மாட்டிக் கொள்ளும் உறை;

தலையில் போட்டுக் கொள்ளும் துணி.]

முகச்சாடை

முகச்சாடை mugaccāṭai, பெ.(n.)

   1. முகச் சாயல் பார்க்க; see {}.

   2. முகக்குறிப்பு; indication of the face.

   3. கண்டுங் காணாமை (வின்.);; slight notice, pretended half notice;

 winking.

     [முகம் + சாடை. சாடை = சாயல், ஒப்பு, சைகை (வே.க.உ.பக்.107);.]

முகச்சாயல்

முகச்சாயல் mugaccāyal, பெ. (n.)

   1. முகத்தின் அழகு தோற்றம்; features, lineaments of the face.

   2. முகஒற்றுமைத் தோற்றம்; facial resemblance.

இந்தப் பையன் அவன் தாத்தாவின் முகச் சாயலில் இருக்கிறான்.

     [முகம் + சாயல். சாயல் = அழகு, ஒப்புமை, நிழல்.]

முகச்சாயை

 முகச்சாயை mugaccāyai, பெ.(n.)

   முகச்சாடை (உ.வ.);; facial features.

     [முகம் + சாயை. சாயை = நிழல், ஒப்பு, சாயல், முகஒப்புமை.]

முகச்சாய்ப்பு

முகச்சாய்ப்பு mugaccāyppu, பெ.(n.)

   1. விருப்பமின்மை (வின்.);; slight aversion.

   2. வருத்தம் (இ.வ.);; displeasure.

   3. வெகுளி (வின்.);; anger.

     [முகம் + சாய்ப்பு. சாய் → சாய்ப்பு = முகங்கொடாமை, வெறுப்பு, வெகுளி.]

முகச்சார்த்து

முகச்சார்த்து mugaccārttu, பெ.(n.)

   சார்த்துவரி என்னும் இசைப்பாட்டு (சிலப்.7, பக்.207);; a kind of {}.

முகச்சிரட்டை

 முகச்சிரட்டை mugacciraṭṭai, பெ.(n.)

   கண்ணுள்ள தேங்காய் மூடி; upper half of a coconut shell.

     [முகம் + சிரட்டை. சிரட்டை = தேங்காய் மூடி.]

முகச்சுருக்கம்

 முகச்சுருக்கம்  mugaccuruggam, பெ.(n.)

   முகத்திரை; wrinkless of the face.

     [முகம் + சுருக்கம்.]

முகச்செழிப்பம்

 முகச்செழிப்பம் mugacceḻippam, பெ.(n.)

முகக்களை பார்க்க; see {}.

     [முகம் + செழிப்பு + அம். ‘அம்’ பெருமைப் பொருள் பின்னொட்டு.]

முகச்செழிப்பு

 முகச்செழிப்பு mugacceḻippu, பெ.(n.)

   மகிழ்ச்சி; cheerful, countenance.

     [முகம் + செழிப்பு. செழிப்பு = வளம், வளமை, தெளிவு.]

முகஞ்சா-தல்

முகஞ்சா-தல் mugañjātal,    19 செ.கு.வி. (v.i.)

முகஞ்சுண்டு தல் பார்க்க; see {}.

     [முகம் + சாதல்.]

முகஞ்சின்னம்போ தல்

முகஞ்சின்னம்போ தல் mugañjiṉṉambōtal,    8 செ.கு.வி.(v.i.)

   வெட்கப்படுதல் (வின்.);; to be put out of countenance, to be ashamed.

     [முகம் + சின்னம் + போ தல்.]

முகஞ்சிறுத்துப்போ-தல்

முகஞ்சிறுத்துப்போ-தல் mugañjiṟuttuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   சினம், ஏமாற்றம் முதலியவற்றால் முகம் சுருங்கிப் போதல்; face becoming wansmallar through anger and perplexity.

     [முகம் + சிறுத்துப்போ தல்.]

முகஞ்சுண்டுதல்

முகஞ்சுண்டுதல் mugañjuṇṭudal, பெ.(n.)

   1. முகங்கருகு-தல் பார்க்க; see {}.

   2. முகங்கடு-த்தல் பார்க்க; see {}.

   3. முகஞ்சின்னம்போ-தல் பார்க்க; see {}.

     [முகம் + கண்டுதல்.]

முகஞ்சுளி-த்தல்

முகஞ்சுளி-த்தல் mugañjuḷittal,    4 செ.கு.வி. (v.i.)

முகங்கடுத்தல் பார்க்க; see {}.

     [முகம் + சுளி-த்தல்.]

முகஞ்சூம்புதல்

முகஞ்சூம்புதல் mugañjūmbudal,    5 செ.கு.வி. (v.i.)

   முகத்திற் களைப்புத் தோன்றுதல் (வின்.);; to look worn out and exhausted.

     [முகம் + சூம்பு தல், சூம்புதல் = மெலிதல், மெலிந்து வாடுதல், களைத்தல்.]

முகஞ்செத்துப்போ-தல்

முகஞ்செத்துப்போ-தல் mugañjettuppōtal,    8 செ.கு.வி.(v.i.)

   தவறு செய்ததால் வெட்கமடைந்து முக வாட்டமடைதல்; face becoming wan pale through shame (சா.அக.);.

     [முகம் + செத்து + போதல்.]

முகஞ்செய்

முகஞ்செய்1 mugañjeytal,    1 செ. குன்றாவி. (v.t.)

   நோக்குதல்; to face, to look toward.

     “முன்னினான் வடதிசை முகஞ்செய்து” (சீவக. 1408);.

     [முகம் + செய் தல்.]

 முகஞ்செய்2 mugañjeytal,    1 செ.கு.வி. (v.i.)

   1. தோன்றுதல்; to appear.

     “முகஞ்செய் காரிகை” (பெருங். உஞ்சைக்.35:49);.

   2. முன்னாதல்; to be first.

     “தோன்றினாண் முகஞ்செய் கோலம்” (சீவக.675);.

     [முகம் + செய் தல்.]

முகக்கொம்பு, முகதலை, முகமண்டபம், முகவாசல், முகவுரை, உரைமுகம், கழிமுகம்,

துறைமுகம், நூன்முகம், போர்முகம் என்னும் கூட்டுச் சொற்களில் முகம் என்னுஞ் சொல் முன்புறத்தையே குறித்தல் காண்க (வே.க.முல்);.

 முகஞ்செய்3 mugañjeytal, தொ.பெ. (vbl.n.)

   சிலந்தி (கட்டி); குழித்தல்; formation of the point in an abscess.

     [முகம் + செய்-தல்.]

முகஞ்செழி-த்தல்

முகஞ்செழி-த்தல் mugañjeḻittal,    4 செ.கு.வி. (v.i.)

முகமலர் தல் (வின்.); பார்க்க; see muga – malar.

     [முகம் + செழி-த்தல். முகப்பொலிவு கொள்ளுதல்.]

முகடன்

 முகடன் mugaḍaṉ, பெ.(n.)

   உள்ளான் குருவி; a bird, snipe.

முகடமறியோன்

 முகடமறியோன் mugaḍamaṟiyōṉ, பெ.(n.)

   பச்சோந்தி; green lizard chameleon.

முகடி

முகடி mugaḍi, பெ.(n.)

   மூதேவி; goddess of misfortune.

     “மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான் தாள்உளான் தாமரையி னாள்” (குறள், 617);.

     [முகடு → முகடி.]

கூரை முகட்டில் தங்குவதாகக் கருதப்படுவதால் மூதேவி முகடி எனப்பட்டாள். இனி முகடு என்னும் சொற்குப் பாழ் என்னும் பொருள் இருப்பதால் பாழான நிலைமையுண்டு பண்ணுபவள் முகடி என்றுமாம். அவளது பேய்த் தன்மையாலும் வறுமைப் பஞ்சத்தன்மையாலும் அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப்பட்டது (பாவாணர்);.

முகடிக்கொடி

 முகடிக்கொடி mugaḍiggoḍi, பெ.(n.)

   காக்கை; crow.

முகடு

முகடு mugaḍu, பெ.(n.)

   1. உச்சி; top, highest part.

     “முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின்” (பெரும்பாண்.246); “திரைப்பிதிர் கடுப்ப முகடுகந் தேறி” (நற்.89:2);.

   2. வீட்டின் மேற்கூரை (வின்.);; ridge of a roof.

   3. முகட்டுவளை பார்க்க; see {} valai.

     “இகழ்ந்தார் முகட்டுவழி கட்டிற்பாடு” (ஆசாரக்.23);.

   4. துறக்கவுலக (அண்ட); முகடு; roof the heavens.

     “வானெடு முகட்டை யுற்றனன்” (கம்பரா. மருத்து. 30);.

   5. உயர்வு; superiority, excellence, acme.

     “முனிமை முகடாய மூவா முதல்வன்” (சீவக. 1609);.

   6. வீட்டின் வாயில்; entrance of a house.

     “முகட்டு வழியூண் புகழ்ந்தார்” (ஆசாரக்.23);.

   7. சபைக்குறடு; platform, as of an assembly.

     “பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது பிதற்றிடும் பெருமூடரும்” (அறப்.சத.35);.

   8. தலை; head.

     “முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்” (தேவா.936, 10);.

   9. ஒட்டகம் முதலியவற்றின் உயர்ந்த முதுகுப்புறம்; hump, as of camel etc.

     “சொல்லத்தகு முகட் டொட்டகம்” (கனா.15);.

   10. பாழ்; the region of Chaos, as beyond the worlds.

     “நீர்மலிய முகடுபடு மண்ட கோளகை” (தக்கயாகப்.140);.

   11. வீடுபேறு (தக்கயாகப்.140, உரை);; salvation.

   12. முலை முகம்; nipple.

தெ., க. மொகடு.

 முகடு mugaḍu, பெ. (n.)

   ஒன்றும் தெரியாத அப்பாவி, கள்ளம் கவடற்றவன்; a dul person. (கொ.வ.வ.சொ.124);.

     [முசு+முசுடு]

முகடுதெற்று – தல்

முகடுதெற்று – தல் mugaḍudeṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   கூரை வீட்டில் மோடு கட்டுதல் (வின்.);; to construct the ridge of an ola roof.

     [முகடு + தெற்று – தல். தெற்றுதல் = மாற்றுதல், பின்னுதல், தொடுத்தல், மேடாக்குதல்.]

முகடுபடு – தல்

முகடுபடு – தல் mugaḍubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பாழாதல்; to be devastated, ruined.

     “புறம்புநீர் மலிய முகடுபடு மண்டகோளகை” (தக்கயாகப்.140);.

     [முகடு + படுதல். படுதல் = அழிதல், சாதல், சாய்தல், பாழாதல்.]

முகடுமுறி-த்தல்

முகடுமுறி-த்தல் mugaḍumuṟittal,    4. செ.கு.வி.(v.i.)

முகடுதெற்றுதல், (வின்.); பார்க்க; see {}.

முகடோடி

 முகடோடி mugaṭōṭi, பெ.(n.)

முகட்டுவளை பார்க்க; see {}.

     [முகடு + ஒடு முகடோடு → முகடோடி.]

முகட்டறை

 முகட்டறை mugaṭṭaṟai, பெ.(n.)

   முகட்டு வீட்டில் உத்தரமட்டத்திற்கு மேலுள்ள அறை (புதுச்.);; garret.

     [முகடு + அறை.]

முகட்டாணி

 முகட்டாணி mugaṭṭāṇi, பெ.(n.)

   கூரையின் உச்சியிலுள்ள மர ஆணி வகை; ridge peg.

     [முகடு + ஆணி. முகடு = உச்சி, வீட்டின் மேற் கூரை.]

முகட்டுக்கால்

முகட்டுக்கால்1 mugaṭṭuggāl, பெ.(n.)

   வீட்டின் மேல்முகட்டு வளையைத் தாங்க, வைக்குங் கால்; small upright post below the ridge piece.

     [முகடு + கால்.]

 முகட்டுக்கால்2 mugaṭṭuggāl, பெ.(n.)

   மேட்டு மடையின் கால் (தெ.இ.கல். தொ.iii:347);; high level channel.

     [முகடு + கால்.]

முகட்டுக்காவணம்

 முகட்டுக்காவணம் mugaṭṭuggāvaṇam, பெ.(n.)

முகட்டுப்பந்தல் பார்க்க (நாஞ்.);; see {}.

     [முகடு + காவணம் முகட்டுக்காவணம். காவணம் = பந்தல்.]

முகட்டுத்துளை

 முகட்டுத்துளை mugaṭṭuttuḷai, பெ.(n.)

   கூரையிற் காற்றுச் செல்லவிடும் வழி; ventilator in a slopping roof.

     [முகடு + துளை.]

முகட்டுத்துவாரம்

 முகட்டுத்துவாரம் mugaṭṭuttuvāram, பெ. (n)

முகட்டுத்துளை பார்க்க; see {}.

     [முகடு + Skt. துவாரம்.]

முகட்டுப்பந்தல்

 முகட்டுப்பந்தல் mugaṭṭuppandal, பெ.(n.)

   முகடு வைத்த சாய்வு பந்தல் (நாஞ்.);; a pandal with a ridged roof.

     [முகடு + பந்தல்.]

முகட்டுப்பாய்ச்சு

 முகட்டுப்பாய்ச்சு mugaṭṭuppāyccu, பெ. (n.)

முகட்டுவளை (யாழ்.அக.); பார்க்க; see {}.

முகட்டுப்பூச்சி

 முகட்டுப்பூச்சி mugaṭṭuppūcci, பெ.(n.)

மூட்டுப்பூச்சி (வின்.); பார்க்க; see {}.

     [முகடு + பூச்சி.]

முகட்டுவளை

 முகட்டுவளை mugaṭṭuvaḷai, பெ.(n.)

   கூரை முகட்டின் நீட்டுவளை; ridgepiece.

     [முகடு + வளை. வளை = சிறிய உத்தரம், சிறிய மரத்துண்டு.]

முகட்டோடு

 முகட்டோடு mugaṭṭōṭu, பெ.(n.)

   முகட்டை மூடும்ஓடு; ridge – tile.

     [முகடு + ஒடு.]

     [p]

முகண்டம்

 முகண்டம் mugaṇṭam, பெ.(n.)

   கடலை; gram, pulse.

முகதரிசனம்

 முகதரிசனம் mugadarisaṉam, பெ.(n.)

   பெரியோர் (அ); மதிப்புமிக்கவரின் முகத்தைக் காண்கை; sight as of a great person’s face.

     [முகம் + Skt.தரிசனம். Skt. தரிசனம் → த. காட்சி, தோற்றம்]

முகதலை

முகதலை1 mugadalai, பெ.(n.)

   1. மகளிரின் சீலை முந்தானை (வின்.);; the front or outer end of a saree. dist. fr. camatalai.

   2. எதிர் முகமாக்குகை (வின்.);; confrontation.

     [முகம் + தலை, தலை = நுனி, முடிவு.]

 முகதலை2 mugadalaiddal,    4 செ. குன்றாவி. (v.t.)

   எதிர் முகமாக்குதல் (வின்.);; to confront, face.

எங்களை முகதலைத்துவிடும் (வின்.);.

     [முகதலை1 → முகதலை2-த்தல்.]

 முகதலை mugadalai, பெ. (n.)

   கைமாற்றுக் கடன்; hand loan.

முகதலைப்பு

முகதலைப்பு  mugadalaippu, பெ.(n.)

முகதலை1 பார்க்க; see {}.

     [முகம் + தலைப்பு.]

முகதவசம்

 முகதவசம் mugadavasam, பெ.(n.)

   மொச்சை; field bean Dolichos lablab.

முகதா

 முகதா  mugatā, பெ.(n.)

   முன்னிலை; presence of a person.

அவன் முகதாவிற் பேசினேன்.

     [முகம் + தாவு – முகத்தாவு → முகதா.]

முகதாட்சிணியம்

 முகதாட்சிணியம் mugatāṭciṇiyam, பெ. (n.)

   ஒருவர் முன்னிலையிற் காட்டும் கண்ணோட்டம் (உ.வ.);; delicacy, consideration for the feelings of a person in his presence.

     [முகம் + Skt.தாட்சிணியம். Skt.தாட்சிணியம் → த. கண்ணோட்டம், இரக்கம்.]

முகதாட்சிணை

 முகதாட்சிணை mugatāṭciṇai, பெ.(n.)

முகதாட்சிணியம் (வின்.); பார்க்க; see {}.

     [முகம் + Skt. தாட்சிணை.]

முகதாவு

 முகதாவு mugatāvu, பெ.(n.)

முகதா (வின்.); பார்க்க; see {}.

முகத்தமா

 முகத்தமா mugattamā, பெ. (n.)

   செய்தி (இ.வ.);; case;

 affair.

     [U. muqadama → த. முகத்தமா]

முகத்தலளவு

 முகத்தலளவு mugattalaḷavu, பெ.(n.)

முகத்தலளவை (வின்.); பார்க்க; see {}.

     [முகத்தல் + அளவு.]

முகத்தலளவை

முகத்தலளவை mugattalaḷavai, பெ.(n.)

   நால்வகை யளவைகளுள் தவசம் முதலியவற்றை முகந்தளக்கும் அளவை (நன்.290, உரை);; measure of capacity, one of four {}.

     [முகத்தல் + அளவை.]

நால்வகை அளவை : நீட்டலளவை, நிறுத்தல் அளவை, முகத்தல் அளவை, எண்ணல் அளவை.

முகந்தளக்கப்படும் பொருள்களுள் நெல் பெரும்பான்மையாகவும் சிறந்ததாகவுமிருத்தல் பற்றி முகத்தலளவை நெல்லிலக்கம் எனப்படும்.

கீழ் வருவது முகத்தலளவை :

   2 செவிடு 1 பிடி

   4 செவிடு 1 ஆழாக்கு

   2 ஆழாக்கு 1 உழக்கு

   2 உழக்கு 1 உரி

   2 உரி 1 நாழி

   8 நாழி 2 குறுணி (மரக்கால்);

   2 குறுணி 1 பதக்கு

   12 பதக்கு 1 தூணி (காடி);

   3 தூணி 1 கலம்

   400 குறுணி 1 கரிசை (பறை);

அரசு முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரையும், கோயிற் பண்டாரத்தில் தெய்வப் பெயரையும் தாங்கியிருந்தன. சோழாந்தகன் நாழி, அருண்மொழித் தேவன் மரக்கால் என்பன அரசன் பெயரையும், ஆடவல்லான் மரக்கால் செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால் என்பன தெய்வப் பெயரையும் தாங்கியவையாகும் (பழ. தமிழாட்சி. பக்.72);

முகத்தலளவையாகுபெயர்

 முகத்தலளவையாகுபெயர் mugattalaḷavaiyāgubeyar, பெ.(n.)

   அளத்தற்குரிய பெயர் அளக்கும் கருவிக்கு ஆகி வருவது; the measurement’s instrument name. (

எ.கா.) நாழி.

     [முகத்தல் + அளவை + ஆகுபெயர்.]

முகத்தலை

முகத்தலை  mugattalai, பெ.(n.)

முகதலை1, 2 பார்க்க; see mugatalai.

     “முகத்தலை யறிந்து உடுத்தாயிருந்ததே” (ஈடு, 8. 9:5);.

     [முகம் + தலை.]

முகத்தல்

 முகத்தல்  mugattal, பெ.(n.)

முகத்தலளவை பார்க்க; see {}.

     [முக → முகத்தல்.]

முகத்தாணி

 முகத்தாணி mugattāṇi, பெ.(n.)

   அவல்; flaked rice (சா.அக.);.

முகத்தான்

 முகத்தான் mugattāṉ, வி.அ.(adv.)

   பொருட்டு; with the intention of, for the purpose of.

வழிபாடு இயற்றும் முகத்தான் தென்னாட்டு பயணம் மேற்கொண்டோம்.

முகத்தாராளம்

 முகத்தாராளம் mugattārāḷam, பெ.(n.)

   முகமலர்ச்சி (வின்.);; cheerfulness.

     [முகம் + தாராளம்.]

முகத்தாலடி-த்தல்

முகத்தாலடி-த்தல் mugattālaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

முகத்திலடி த்தல் (வின்.); பார்க்க; see {}.

முகத்தாளி

 முகத்தாளி mugattāḷi, பெ. (n.)

   தலைமைத்திற முடையோன், முதன்மையானவன்; leader, authority.

     [முகத்து+ஆளி]

முகத்தாவு

 முகத்தாவு mugattāvu, பெ.(n.)

   முன்னிலை; presence of a person.

முகத்திரியக்குநாடி

 முகத்திரியக்குநாடி mugattiriyaggunāṭi, பெ.(n.)

   முகத்தில் குறுக்காயோடும் அரத்தக் குழாய் வகை (வின்.);; transverse facial artery.

     [முகம் + திரியக்குநாடி.]

முகத்திரை

முகத்திரை1 mugattirai, பெ.(n.)

   1. முகத்தை மறைக்கும் முறையில் போட்டுக் கொள்ளும் மெல்லிய துணி; veil.

   2. உண்மை நோக்கத்தை மறைத்திருப்பது; mask.

அவன் முகத்திரை ஒரு நாள் விலகும்.

     [முகம் + திரை.]

 முகத்திரை2 mugattirai, பெ.(n.)

   முகத்தில் ஏற்படும் தோல் சுருக்கம்; furrous in the face wrinkles in the face (சா.அக.);.

     [முகம் + திரை.]

முகத்திற்கரிக்கோடிடுகை

 முகத்திற்கரிக்கோடிடுகை mugattiṟgarigāḍiḍugai, பெ.(n.)

முகத்திலரும்புகை பார்க்க; see mugattilarumbugai.

     [முகம் → முகத்தில் + கரிக்கோடிடுகை.]

முகத்திற்கரிபூசு-தல்

முகத்திற்கரிபூசு-தல் mugaddiṟgaripūcudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. அவமானப் படுத்தல்; to despise, disgrace.

   2. நம்ப வைத்து ஏமாற்றுதல்; deceit, treachery.

அவனை நம்பியிருந்தேன். முகத்தில் கரிபூசிவிட்டான்.

     [முகத்தில் + கரிபூசு – தல். முகத்திற்கரிபூசி அழகைக் கெடுப்பது போல் அவமானம் செய்தல்.]

முகத்திலடி

முகத்திலடி1 mugattilaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. நேரே பழித்தல்; to abuse or reproach another to his face.

   2. நேருக்கு நேர் கடுமுகங் காட்டிக் கண்டித்தல் (வின்.);; to condemn or forbid by one’s countenance.

முகத்தில் அடிப்பதுபோல் சொல்லி விட்டான்.

     [முகத்தில் + அடித்தல்.]

 முகத்திலடி2 mugattilaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   அருவருப்பாதல் (இ.வ.);; to be replusive or disgusting.

     [முகத்தில் + அடித்தல்.]

முகத்திலருப்பமிறங்குகை

 முகத்திலருப்பமிறங்குகை mugattilaruppamiṟaṅgugai, பெ.(n.)

முகத்தி லரும்புகை பார்க்க; see mugattilarumbugai.

     [முகத்தில் + அருப்பம் + இறங்குகை.]

முகத்திலரும்புகை

 முகத்திலரும்புகை  mugattilarumbugai, பெ.(n.)

   மேலுதட்டில் மயிர் தோன்றுகை (வின்.);; sprouting of hairs in the upper lip.

     [முகத்தில் + அரும்புகை.]

முகத்திலீயாடாமை

முகத்திலீயாடாமை mugattilīyāṭāmai, பெ. (n.)

   1. கவலை கொண்ட முகங் கொள்ளுகை (உ.வ.);; having a very anxious look.

   2. அதிர்ச்சியாலோ உணர்ச்சி மேலீட்டாலோ முகம் நிலைக்குத்தி அசையாது நிற்றல்; due to shock or over feelings the face stunning.

     [முகத்தில் + ஈ + ஆடாமை.]

முகத்தீடு

 முகத்தீடு mugattīṭu, பெ.(n.)

   பிணத்தின் முகமூடிச் சீலை (வின்.);; face cloth.

     [முகம் + இடு முகமிடு → முகத்திடு → முகத்தீடு.]

முகத்துக்குமுகம்

 முகத்துக்குமுகம்  mugattuggumugam, பெ.(n.)

   நேருக்கு நேர்; face to face.

முகத்துநாடி

 முகத்துநாடி mugattunāṭi, பெ.(n.)

   முகத்திலோடும் அரத்தக் குழாய் (இங்.வை.);; facial artery.

     [முகம் + அத்து + நாடி.]

முகத்துரை

முகத்துரை  mugatturai, பெ.(n.)

   தானே நேரில் நின்று பேசுகை; direct speech of a person.

     ‘கொண்டெடுத்து மொழியப்படுவ தல்லது முகத்துரையாக நிகழ்த்தும் நிகழ்ச்சி……. இல்லாமை’ (இலக்.வி.563, உரை);.

     [முகம் + அத்து + உரை.]

முகத்துவாரம்

முகத்துவாரம் mugattuvāram, பெ.(n.)

   1. கழிமுகம் (உ.வ.);; mouth of a firth or river.

   2. நுழைவு வாயில்; enterance.

   3. முகத்தில் உள்ள துளைகள் (வாய், மூக்கு);; face holes.

     [முகம் + Skt. துவாரம். Skt. துவாரம் → த. துளை, வழி.]

முகத்தூண்

முகத்தூண் mugattūṇ, பெ.(n.)

   முகப்புத் தூண் (பெருங்.உஞ்சைக்.58:54);; front pillar.

     [முகம் + அத்து + தூண்.]

முகத்தெளிவு

 முகத்தெளிவு mugatteḷivu, பெ.(n.)

முகக்களை பார்க்க; see {}.

     [முகம் + தெளிவு.]

முகத்தேங்காய்

 முகத்தேங்காய் mugattēṅgāy, பெ.(n.)

முகக்கயில் (யாழ்ப்.); பார்க்க; see mugakkayil.

     [முகம் + தேங்காய். உடைந்த தேங்காயில் கண்ணுள்ளதாகிய மேல் மூடி.]

முகத்தைக்காட்டு – தல்

முகத்தைக்காட்டு – தல் mugaddaiggāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   இசைவின்மையை முகக் குறிப்பால் தோற்றுவித்தல்; to express unwillingness by facial signs.

     ‘ஒரு செயலை ஏவினால் முகத்தைக் காட்டுகிறான்’.

     [முகம் → முகத்தை + காட்டுதல்.]

முகத்தைத்துடை – த்தல்

 முகத்தைத்துடை – த்தல் mugattaittuḍaittal, செ.கு.வி.(v.i.)

   தேற்றுதல்; console.

     [முகம் → முகத்தை + துடைத்தல்.]

முகத்தைமுறித்தல்

 முகத்தைமுறித்தல் mugattaimuṟittal, பெ. (n.)

   நேருக்கு நேராக, முகத்தில் அடித்தாற்போல பேசிவிடுகை, எடுத்தெறிந்து பேசுகை; it’s given abuse speech.

     [முகத்தை + முறித்தல்.]

முகத்தோற்றம்

 முகத்தோற்றம் mugattōṟṟam, பெ.(n.)

   உணர்ச்சியைக் காட்டும் முகம்; facial expression, look.

நாட்டியக் கலையில் முகத்தோற்றம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அவர் எப்போது பேச்சை நிறுத்துவார், வீட்டுக்கு எப்போது போவோம் என்கிற முகத்தோற்றத்துடன் காத்திருந்தனர்.

     [முகம் + தோற்றம்.]

முகநகை

 முகநகை  muganagai, பெ.(n.)

   முகமலர்ச்சி; laughing face.

     [முகம் + நகை.]

முகநட்பு

 முகநட்பு muganaṭpu, பெ.(n.)

   வெளி நட்பு (உ.வ.);; pretended, outward friendship.

     [முகம் + நட்பு.]

முகநாடி

முகநாடி1 muganāṭi, பெ.(n.)

முகக்குறி பார்க்க; see {}.

     [முகம் + நாடி.]

 முகநாடி2 muganāṭi, பெ.(n.)

   முகத்தையும் மூக்கில் ஒடும் வளிநிலையையும் பார்த்து நோயின் தன்மை கூறும் நூல் (தஞ்.சர.3:191);; a treatise on the diagnosis of diseases by an examination of the face and of the breath of the nostrils.

     [முகம் + நாடி.]

முகநாளம்

 முகநாளம் muganāḷam, பெ.(n.)

   முகத்தின் குருதிக் குழாய்; facial vein.

     [முகம் + நாளம். நாளம் = குழல்]

முகநிறம்

 முகநிறம் muganiṟam, பெ.(n.)

   முகத் தோற்றம்; complexion.

முகநிலை

முகநிலை  muganilai, பெ.(n.)

   இசைப் பாட்டு வகை (சிலப்.6:35, உரை);; a kind of song.

முகநிலைப்பசாசம்

முகநிலைப்பசாசம் muganilaippacācam, பெ.(n.)

   பெருவிரலும் சுட்டு விரலும் முகங்கூடி உகிர் விட்டு நிற்கும் நிலை (சிலப்.3:18, உரை);; a gesture in which the thumb and forefinger are joined just below the nails.

     [முகநிலை + Skt. பசாசம்.]

முகநோக்குதல்

முகநோக்குதல் muganōggudal,    5 செ.கு.வி. (v.i.)

   நோக்கெதிர் நோக்குதல் (இலக்.வி.580, உரை, பக்.530);; to meet face to face, to exchange glances.

     [முகம் + நோக்குதல். முகநோக்குதல் = முகத்தை நேருக்குநேர் நோக்குதல்.]

முகந்தகம்

 முகந்தகம்  mugandagam, பெ. (n.)

   ஈர வெங்காயம் (மூ.அ.);; onion.

முகந்தண்டு

 முகந்தண்டு mugandaṇṭu, பெ.(n.)

   முதுகின் நடுவேயுள்ள மணிக் கோவையைப் போன்ற எலும்பு; the vertibral column (சா.அக.);.

     [முதுகுத்தண்டு → முகந்தண்டு.]

முகந்தம்

 முகந்தம்  mugandam, பெ.(n.)

முககந்தம் (அரு.அக.); பார்க்க; see mugakandam.

     [முககந்தம் → முகந்தம். முககந்தம் = முருங்கை.]

முகந்தரு-தல்

முகந்தரு-தல்  mugandarudal,    20 செ.கு.வி. (v.i.)

   இரக்கம்காட்டுதல் (பட்சங்காட்டுதல்);; to show favour.

     [முகம் + தருதல்.]

முகந்திகா

 முகந்திகா mugandigā, பெ.(n.)

   முருங்கை; drumstick.

மறுவ. முககந்தம்

முகந்திரிதல்

முகந்திரிதல்  mugandiridal,    2 செ.கு.வி. (v.i.)

முகமாறுதல் பார்க்க; see {}.

     “முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து” (குறள், 90);.

     [முகம் + திரிதல்.]

முகந்திருத்துதல்

முகந்திருத்துதல்  mugandiruddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   முகவாட்டந் தவிர்த்தல்; to compose one’s countenance.

     “இருந்து முகந்திருத்தி” (தனிப்பா.1, 94:11);.

     [முகம் + திருத்துதல்.]

முகந்துடை-த்தல்

முகந்துடை-த்தல் muganduḍaittal,    4 செ. குன்றாவி. (v.t.)

முகமழித்தல் (புதுக். கல்.909); பார்க்க; see {}.

     [முகம் + துடைத்தல்.]

முகனை

முகனை mugaṉai, பெ.(n.)

   1. முன்புறம்; fore part, front.

   2. தொடக்கம்; beginning, introduction.

   3. முதன்மை, தலைமை; headship, leadership.

அவன் முகனை பண்ணுகிறான் (வின்.);.

   4. உடனடியாகச் செயற்படுத்துகை; instantaneousness.

நான் வந்த முகனையிலே அவன் போய்விட்டான் (வின்.);.

   5. கடுஞ்சினம்; irritability, irascibility.

ஏன் இவ்வளவு முகனை உனக்கு? (இ.வ.);.

   6. முதலெழுத்து; first letter.

     [முகம் → முகன் → முகனை.]

முகனைக்கல்

 முகனைக்கல் mugaṉaiggal, பெ.(n.)

   கோயில் முதலியவற்றின் வாசற் காலின் மேலுள்ள உத்திரக்கல்; stone lintel, as of a temple gateway.

     [முகனை + கல்.]

     [p]

முகனைக்காரன்

 முகனைக்காரன் mugaṉaiggāraṉ, பெ. (n.)

   முதலாளி (வின்.);; manager, superintendent, headman.

     [முகனை + காரன்.]

முகனைமுடிவு

 முகனைமுடிவு mugaṉaimuḍivu, பெ.(n.)

   தொடக்கமும் முடிவும் (ஆதியந்தம்); (வின்.);; beginning and end.

     [முகனை + முடிவு.]

முகபங்கம்

 முகபங்கம் mugabaṅgam, பெ.(n.)

   இலச்சை (வின்.);; shame.

     [முகம் + பங்கம். Skt. பங்கம் → த. குறை, பழுது, கேடு. இலச்சை = வெட்கம், நாணக் கேடு,

மானக்கேடு.]

முகபடாம்

முகபடாம் mugabaṭām, பெ.(n.)

   யானையின் முகத்தில் இடும் ஒப்பனை செய்த (அலங்காரத்); துணி; ornamental cloth on the face of an elephant.

     “முகபடாமன்ன மாயை நூறி” (தாயு. மெளன.1);.

     [முகம் + படாம். படாம் = சீலை, திரைச்சீலை, முகபடாம்.]

     [p]

முகபரிச்சயம்

 முகபரிச்சயம்  mugabariccayam, பெ.(n.)

முகப்பழக்கம் (வின்.); பார்க்க; see {}.

     [முகம் + Skt. பரிச்சயம்.]

முகபாகம்

 முகபாகம் mugapāgam, பெ.(n.)

   முகத்தின் பகுதி; facial region.

     [முகம் + பாகம்.]

முகபாடம்

 முகபாடம் mugapāṭam, பெ.(n.)

   வாய்ப் பாடம் (வின்.);; that which is learnt by heart.

     [முகம் + பாடம். பாடம் = படிக்கும் நூற்பகுதி. மூலபாடம், படிப்பு.]

முகபாவம்

 முகபாவம் mugapāvam, பெ.(n.)

முகத் தோற்றம் பார்க்க; see {}.

     [முகம் + Skt. பாவம்.]

முகபூரணம்

 முகபூரணம் mugapūraṇam, பெ.(n.)

முகக்களை பார்க்க; see {}.

     [முகம் + Skt. பூரணம்.]

முகப்படுதல்

முகப்படுதல் mugappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   முன்றோன்றுதல்; to appear in front.

     “விழி யிணைக்கு முகப்பட்டிடும்” (பாரத. நச்சுப்.19);.

     [முகம் + படுதல்.]

முகப்படை

 முகப்படை mugappaḍai, பெ.(n.)

   முகத்தில் ஏற்படும் தோல் நோய்; eczema.

     [முகம் + படை. முகத்தில் உண்டாகும் ஒருவகை நோய்.]

முகப்பட்டா

 முகப்பட்டா mugappaṭṭā, பெ. (n.)

   குதிரையின் முகத்திற்கு மாட்டும் அணிகலன் (கோவை.);; an ornamental on the face of horse.

     [முகம் + பட்டா. படம் → பட்டா.]

     [p]

முகப்பணி

 முகப்பணி mugappaṇi, பெ. (n.)

முகச்சவரம் பார்க்க; see mugaccavaram.

     [முகம் + பணி.]

முகப்பந்தல்

முகப்பந்தல்  mugappandal, பெ.(n.)

   வீட்டின் முன் போடும் பந்தல்; pandal in front of a house.

     “முத்து வளைத்து முகப் பந்தலிட்டார்கள்” (சித்.நாய.46);.

     [முகம் + பந்தல்.]

முகப்பரு

 முகப்பரு  mugapparu, பெ.(ո.)

   இளைஞரின் முகங்களில் வெங்காயப் பூ போலும், இலவமுள்ளைப் போலும் அடி பருத்து முனையுள்ளதாகிய கொப்புளங்கள்; facial pimples amongst lads attaining maturity Acne.

     [முகம் + பரு.]

முகப்பழக்கம்

 முகப்பழக்கம் mugappaḻggam, பெ.(n.)

   அறிமுகம் (வின்.);; acquaintance.

     [முகம் + பழக்கம்.]

முகப்பாக்கு

 முகப்பாக்கு mugappāggu, பெ.(n.)

   பாக்கின் மேற்பகுதி (யாழ்ப்.);; the upper part of an arecanut.

     [முகம் + பாக்கு.]

முகப்பிரியம்

முகப்பிரியம்1 mugappiriyam, பெ.(n.)

   நாரத்தை; a citron fruit.

 முகப்பிரியம்2 mugappiriyam, பெ.(n.)

   மதிப்பு, மதிப்புரவு (மரியாதை); (வின்.);; respect for persons.

     [முகம் + Skt. பிரியம்.]

முகப்பு

முகப்பு  mugappu, பெ. (n.)

   1. முன்னிலை; front.

     “இருந்திடா யெங்கள் கண்முகப்பே” (திவ். திருவாய்.9. 2:7);.

   2. முற்பகுதி; forepart,

 frontis piece.

   3. வீட்டின் முன்புறக் கட்டிடம்; porch, facade.

     “முகத்தணிந்த முகப்பு” (அரிச்.பு. இந்திர.20);.

   4. அணிகலன்களில் முன்புறத்தி லெடுப்பாகச் செய்யப்பட்ட பொருத்துவாய் முதலியன; front piece of a jewel.

   5. முகதலை1, 1 பார்க்க; see {}.1.

   6. வீடு, கட்டடம் முதலியவற்றின் வாயிலும் வாயிலை ஒட்டிய பகுதியும்; front part of a house, etc.

வீட்டின் முகப்பில் ஒரு நாய் ஒடியது.

   7. பார்வைக்கு முதலில் படும்படியாக அமைந்திருக்கும் பகுதி; face, facade of a house.

பழைய திரையரங்கம் எடுப்பான முகப்புக் கொண்டதாகப் புதுப்பிக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் பணியின் பெயரை உறையின் மேல் முகப்பில் எழுதவும். தலைவர் படத்தைச் சிற்றுந்தின் முகப்பில் வைத்துக் கட்டியிருந்தார்கள்.

க. மொகப்பு

     [முல் → முள் → முளு → முழு → முகு → முக → முகப்பு (வே.க.);.]

முகப்புமடை

 முகப்புமடை mugappumaḍai, பெ.(n.)

   தலைமடை; ridged cut.

     [முகப்பு + மடை. மடை = மதகு, மதகுப் பலகை.]

முகப்புற்று

 முகப்புற்று mugappuṟṟu, பெ.(ո.)

   முகத்திற் கட்டி வெடிக்கும் நோய் வகை; lupus.

     [முகம் + புற்று.]

முகப்பூச்சு

முகப்பூச்சு mugappūccu, பெ. (n.)

   1. முகத்தில் பூசிக் கொள்ளும் பசை அல்லது மாவுப் பொருள்; painting or powder for the face.

தெருக்கூத்தில் முகப்பூச்சு இன்றியமையாத ஒன்று. இரவு நாடகங்களில் கோமாளிக்கு மட்டுமல்லாமல் அரசனுக்கும் முகப்பூச்சு பூசப்படுகிறது.

   2. வெளிப்பகட்டு; ostentalious.

     [முகம் + பூச்சு.]

முகப்பொருத்தம்

முகப்பொருத்தம்  mugapporuttam, பெ. (n.)

   1. முகநட்பு (வின்.); பார்க்க; see {}.

   2. முகராசி (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [முகம் + பொருத்தம்.]

முகப்பொலி

 முகப்பொலி  mugappoli, பெ.(n.)

   கதிரினின்று உதிர்ந்த நெல்; paddy dropped from ears of corn.

     [முகம் + பொலி. பொலி = தூற்றாத நெற் குவியல்.]

முகப்பொலிவு

 முகப்பொலிவு  mugappolivu, பெ.(n.)

முகக்களை பார்க்க; see {}.

     [முகம் + பொலிவு. பொல் → பொலி. பொலிவு = தோற்றப் பொலிவு, அழகு, முகமலர்ச்சி.]

முகப்போதரவு

 முகப்போதரவு mugappōtaravu, பெ.(n.)

   இச்சகம் (வின்.);; coaxing, flattery.

     [முகம் + போதரவு. போதரவு = இச்சகம், முகமன்.]

முகப்போலி நடனங்கள்

 முகப்போலி நடனங்கள் mugappōlinaḍaṉaṅgaḷ, பெ. (n.)

விலங்குகளைப் போன்றுஉருவம் புனைந்து ஆடும் ஆட்டங்கள்

 a dance of wearing animal faces.

     [முகம்போலி+நடனம்]

முகமண்டகம்

முகமண்டகம் mugamaṇṭagam, பெ.(n.)

முகமண்டபம் பார்க்க; see {}.

     “விட்டுணுக் கிருகத்து முகமண்டகத்தே கூடியிருந்து” (தெ.இ. கல்.தொ.3:12);.

     [முகம் + மண்டகம். மண்டகம் = மண்டபம், கற்கட்டடம்.]

முகமண்டபம்

முகமண்டபம் mugamaṇṭabam, பெ.(n.)

   கோயிலின் முன்மண்டபம்; front hall in a temple.

     “முகமண்டபஞ் செய்து நிரந்தளித்தான்” (செந்.4, பக்.335);.

     [முகம் + மண்டபம். மண்டபம் = கற்கட்டடம், சாவடி, ஒப்பனை செய்யப்பட்ட பந்தல்.]

முகமண்டலம்

 முகமண்டலம் mugamaṇṭalam, பெ.(n.)

   தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம்; face.

     [முகம் + மண்டலம்.]

முகமதியர்

 முகமதியர்  mugamadiyar, பெ.(n.)

   முகமது நபியை முழுமுதற்கடவுளாக எண்ணி வழிபடுபவர்கள்; followers of the Prophet muhammad.

     [முகமது → முகமதியர்.]

முகமன்

முகமன் mugamaṉ, பெ.(n.)

   1. ஒருவரைப் புகழ்ந்து கூறும் சொற்கள், முகப்புகழ்ச்சி; flattery.

     “முருகென உணர்ந்து முகமன் கூறி” (அகநா.272:13);.

   2. ஒருவரை நலம் உசாவி வேண்டியோ அல்லது விருந்து போன்றவை கொடுப்பதற்காகவோ சொல்லப்படுவது; civilities, greetings.

விருந்தினர்களை முகமன் கூறி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.

   3. பண்பட்ட பழக்க வழக்கம்; civility, politeness.

     “முன்னையிற் புனைந்து முகம னளித்தும்” (கல்லா.13);.

   4. வழிபாடு (துதி);; praise.

     “புகழ்ந்துமுன் னுரைப்பதென் முகம்மனே” (தேவா.863, 3);.

     [முகம் → முகன்.]

முகமயக்கு

முகமயக்கு  mugamayaggu, பெ.(n.)

   1. பார்வையால் மயக்கும் கலை (வித்தை); (சங்.அக.);; bewitching by looks, a magic art.

   2: முகமாயம் பார்க்க;see {}.

     [முகம் + மயக்கு.]

முகமறிதல்

முகமறிதல் mugamaṟidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   அறிமுகமாதல்; to be acquainted with.

     “முகமறியா விருந்தொன்று” (இலக். வி.555, உதா);.

முகமறுத்தல்

முகமறுத்தல் mugamaṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. இரக்கமின்றிப் பேசுதல்; to speak impartially.

முகமறுத் துறவாடு.

   2. கணக்காய்ப் பேசுதல்; to speak accurately.

     [முகம் + அறுத்தல்.]

முகமலர்ச்சி

முகமலர்ச்சி  mugamalarcci, பெ.(n.)

   முகத்தில் மகிழ்ச்சி தோன்றுகை; cheerfulness of countenance.

     “முக மலர்ச்சி கூறல்” (திருக்கோ.363, தலைப்பு);.

     [முகம் + மலர்ச்சி. மலர்ச்சி = மகிழ்சி, மலர்கை.]

முகமலர்தல்

முகமலர்தல்  mugamalartal,    2 செ.கு.வி. (v.i.)

   முகப் பொலிவு கொள்ளுதல்; to wear a cheerful countenance.

     “பூம்புன லூரன் புக முகமலர்ந்த…. கோதை” (திருக்கோ.363, கொளு);.

     [முகம் + மலர்தல். மலர்தல் = தோன்றுதல், பொலிவு கொள்ளுதல்.]

முகம் மலர் போன்றதென்பதும் முகம் மேனோக்கிக் கிடத்தல் மொட்டு விரிந்த நிலையையும் முகங் குப்புறக் கிடத்தல் மலர்ந்த பூக்குவிந்த நிலையையும் ஒக்குமென்பதும் கருத்து (வே.க.);

முகமல்

 முகமல் mugamal, பெ. (n.)

   மிகுதியான எடை கொண்டிருக்கும் பட்டு வகை (வின்.);; velvet.

     [Ar. Makhmal → த. முகமல்]

முகமழித்தல்

முகமழித்தல் mugamaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

முகம்மழித்தல் பார்க்க; see {}.

     [முகம் + அறிதல். அறிதல் = புதியதாய்க் கண்டுபிடித்தல், பட்டறிதல், தோன்றுதல்.]

முகமாட்டம்

முகமாட்டம் mugamāṭṭam, பெ.(n.)

   1. முகத்தைக் காட்டுகை (வின்.);; showing one’s face.

   2. ஒருதலைச் சார்பு (பாரபட்சம்); (வின்.);; partiality.

   3. மதிப்பு (வின்.);; respect for persons.

   4. முகமன், 1 (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [முகம் + ஆட்டம்.]

முகமாதல்

முகமாதல் mugamātal,    6 செ.கு.வி. (v.i.)

   ஏற்றுக் கொள்ளுதல், உடன்படுதல்; to agree.

     ‘தான் முற்கூறியதற்கு முகமாகாமை கண்டு’ (சீவக.1120, உரை);.

     [முகம் + ஆதல்.]

முகமாயக்காரி

 முகமாயக்காரி mugamāyaggāri, பெ.(n.)

   முகக்கவர்ச்சியுள்ளவள் (வின்.);; woman of a fascinating looks or charming face.

     [முகம் + மாயக்காரி. மாயக்காரி = மாயக்கள்ளி, மயக்கி ஏமாற்றுபவள்.]

முகமாயம்

 முகமாயம் mugamāyam, பெ.(n.)

   முகவழகில் உண்டாம் கவர்ச்சி (வின்.);; charm of fascinating face, as of a woman.

     [முகம் + மாயம்.]

முகமாறுதல்

முகமாறுதல் mugamāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

முகங்கோணுதல் பார்க்க; see {}.

     ‘தம்பால் இரந்தவர்களுக்கு… முகமாறாது ஈதலை’ (கலித்.61:11, உரை);.

     [முகம் + மாறுதல்.]

முகமாற்று

முகமாற்று mugamāṟṟu, பெ. (n.)

முக மயக்கு, 1 பார்க்க (சங்.அக.);; see muga mayakku, 1.

     [முகம் + மாற்று.]

முகமினுமினுப்பு

 முகமினுமினுப்பு mugamiṉumiṉuppu, பெ.(n.)

   எண்ணெய் கசிவினால் முகம் பளபளப்பாயிருக்கை; face that glows due to the oil secretion.

     [முகம் + மினுமினுப்பு.]

முகமில்வரி

முகமில்வரி  mugamilvari, பெ.(n.)

   இசைப் பாட்டு வகை (சிலப்.7:4, அரும்.);; a kind of song.

     [முகம் + இல்2 + வரி. முகமில் வரி = முகமொழிந்து ஏனை உறுப்புக்களான் வருவது. வரி = இசை, இசைப்பாட்டு.]

முகமுகங்கணோக்குதல்

முகமுகங்கணோக்குதல் mugamugaṅgaṇōggudal,    5 செ.கு.வி. (v.i.)

முகமுகம்பார்த்தல், பார்க்க; see {}.

     “கண்மல்குநீரார் முகமுகங்க னோக்கினார்” (சீவக.1808);.

     [முகம் + முகம் + கண் + நோக்குதல்.]

முகமுகமாய்

 முகமுகமாய் mugamugamāy, கு.வி.எ.(adv.)

   நேருக்கு நேராய் (வின்.);; face to face, personally.

     [முகம் + முகம் + ஆய்.]

முகமுகம்பார்த்தல்

முகமுகம்பார்த்தல் mugamugambārttal,    4 செ.கு.வி. (v.i.)

   முகத்தை முகம் பார்த்தல்; to look one another in the face.

     “மதுரைநகர் நின்ற மாயவினைப் புரவி முகமுகம் பார்த்து” (திருவாலவா.29:1);.

     [முகம் + முகம் + பார்த்தல்.]

முகமுகெனல்

முகமுகெனல் mugamugeṉal, பெ.(n.)

   1. வண்டு எழுப்பும் (ரீங்காரஞ் செய்யும்); ஒலிக்குறிப்பு; onom. expr. signifying humming of bees.

   2. குடத்துள் நீர்புகும் ஒலிக்குறிப்பு; gurgling of water.

முகமுடைவரி

முகமுடைவரி mugamuḍaivari, பெ.(n.)

   மூன்றடி முதல் ஏழடி வரை வரும் இசைப்பாட்டு வகை (சிலப்.7:4, அரும்.);; a kind of song, of four to seven lines.

     [முகமுடை + வரி.]

முகமுதல்

 முகமுதல்  mugamudal, பெ.(n.)

   முகமும் கண்களும் கிட்டத்தட்ட மெல்லிய (சிறிய); வீக்கமுடன் இருக்கை; soft swelling about the face and the eyes urticaria gigantea (சா.அக.);.

     [முகம் + முதல்.]

முகமுன்னிலை

 முகமுன்னிலை mugamuṉṉilai, பெ.(n.)

   நேர்முகம் (வின்.);; one’s presence.

     [முகம் + முன்னிலை.]

முகமுறி

முகமுறி1 mugamuṟidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கண்ணோட்டமின்மை (தாட்சணிய மறுதல்);; to be discourteous;

 to be unsympathetic.

   2. மனநோதல்; to be offended.

ஒருவனை முகமுறியப் பேசாதே.

     [முகம் + முறிதல்.]

 முகமுறி2 mugamuṟittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. ஈவு இரக்கமின்றி துன்புறுத்துதல் (வின்.);; to wound one’s feelings;

 to offend.

   2. சின மூட்டுதல் (யாழ்.அக.);; to provoke another to anger.

     [முகம் + முறி2த்தல்.]

முகமுறிவு

முகமுறிவு mugamuṟivu, பெ.(n.)

   1. சிறிதும் இரக்கமின்றி துன்புறுத்துகை; discourteous behaviour, want of consideration for the feelings of others.

   2. வெறுப்பு (சங்.அக.);; dislike, hatred.

     [முகமுறி → முகமுறிவு.]

முகமூடி

முகமூடி mugamūṭi, பெ. (n.)

   1. பிறக்கும் போது குழந்தையின் முகத்தை மூடியுள்ள பை (வின்.);; covering often found on the face of children when born.

   2. முக்காடு; veil.

   3. பிணத்தின் முகத்தை மூடும் ஆடை (இ.வ.);; facecloth.

   4. முகத்தை மறைத்து அணிந்து கொள்ளும் துணி அல்லது தோல்; mask of cloth, paper, etc.

முகமூடிக் கொள்ளை புறநகர் பகுதிகளில் அதிகம்.

     [முகம் + மூடி. முகமூடி = முகத்தை மறைத்து அணிந்து கொள்ளும் துணி அல்லது தோல்.]

முகமை

 முகமை  mugamai, பெ.(n.)

முகாமை பார்க்க; see {}.

அவன் முகமையாயிருந்து செயலைச் செய்தான்.

     [முகம் → முகமை. முகமை = முதன்மை, தலைமை.]

முகமொட்டுதல்

முகமொட்டுதல் mugamoṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   சேவல்களைச் சண்டைக்கு எதிர்முகமாக்குதல் (யாழ்ப்.);; to turn the face of one cock towards another rousing them to fight.

     [முகம் + ஒட்டுதல்.]

முகம்

முகம்1 mugam, பெ.(n.)

   1. தலையில் நெற்றி முதல் மோவாய் வரையுள்ள முன்புறம்; face.

     “முகத்தா னமர்ந் தினிது நோக்கி” (குறள், 93);.

முகம் பார்க்கும் கண்ணாடி, அரிமா முகம் பொறித்த காசு.

   2. வாய்; mouth.

     “மொழிகின்ற முகத்தான்” (கம்பரா. வாலிவ.74);.

     “வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த” (குறுந்.227:2);.

     “விம்முறு கிளவிய ளென்முக நோக்கி” (நற்.33:10);.

   3. முன்பு; front.

     “ஈன்றாள் முகத்தேயு மின்னாதாம்” (குறள், 923);.

   4. குத்துவிளக்கு போன்றவற்றில் திரியிட்டு எரிக்கும் பகுதி; that part of the lamp, such as kuttu{}.

ஐந்து முக விளக்கு, முற்றத்தைப் பார்க்கும்படி விளக்கினைத் திருப்பி வை.

   5. இயல்பு, குணம்; one’s nature.

இது அவளுடைய முகம் இல்லை. முகத்திலே விழித்தாலும் மூன்று நாளைக்கு சோறு அகப்படாது (பழ.);. முகத்துக்கு அஞ்சி மூத்தா ரோடு போனால் குலத்துக்கெல்லாம் ஈனமாம் (பழ.);. முகத்துக்கு முகம் கண்ணாடி (பழ.);.

     [முல் தோன்றுதல் கருத்து. முள் → முள → முளை = வித்திலிருந்து வெளிப்படும் முதல் வெளிப்பாடு. முள் → முளு → முழு → முகு = முகிழ். முகிழ்தல் = அரும்புதல். முகு → முகம் = மூக்கும் வாயும் சேர்ந்த முன்பகுதி. முகம் → முகமை = முதன்மை, தலைமை,முகம் = முன்பக்கம், தலையின் முன்பக்கம், முகத்தின் முன் நீண்டுள்ள மூக்கு, நுனி, தொடக்கம், முன்பு, முதன்மை. இவையெல்லாம் முன்மைக் கருத்தைப் பொதுவாகக் கொண்டவை. இப்பொருள்கட்கெல்லாம் அடிப்படை தோன்றற் கருத்தே. இயல்பான தோற்றமும் இயக்கமும் முன்னோக்கியே நிகழ்வதால். ஒரு பொருள் தோன்றம் போது அதன் முன்புறமே தெரியும். வடமொழியில் முக என்னுஞ் சொற்கு மூலமில்லை. வடவர் அச்சொற்கு முகம் என்பதைவிட வாய் என்பதையே சிறப்புப் பொருளாக் கொள்வதால் பின்வருமாறு பொருந்தப் பொய்த்தலாக மொழிப் பொருட் காரணங் கூறுவதுண்டு. முக = மு + க (kha);. க = கன் = தோண்டு. முக = தோண்டப்பட்ட கிடங்கு போன்ற வாய். இது ஒரு நகையாட்டுச் செய்தியாக இருப்பதொடு, கன் (khan); என்னும் சொல்லும் தென் சொல்லாகவே இருத்தல் காண்க. கல்லுதல் = தோண்டுதல். கல் → கன் → கன்னம் = சுவரில் தோண்டும் துளை (வ.மொ.வ.236, 237);.]

   தமிழ், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக அகப்பகையாலும் புறப்பகையாலும், மறையுண்டும் குறையுண்டும் வந்திருந்தும் ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் ஒருசில நடுநிலை மொழி யாராய்ச்சியாளர் தமிழ் முகம் திரும்பி அதன் தொன்மையையும் முன்மையையும் வடமொழிக்குச் சொல் வழங்கிய வன்மையையும் உணர்ந்து, அதை உலகனுக்குணர்த்த முன் வந்திருப்பது மிக மகிழத்தக்கதே. ஆயினும்;ஏமாற்றுவதிலும் அறைபோவதிலும் துறைபோய ஒருசில புறத்தமிழரும் போலித் தமிழரும், இன்றும், முகம் என்னும் சொல் வடசொல்லென்று வலிக்கத் துணிவது எத்தனை இரங்கத்தக்க செய்தியாம்!

முகம் என்னும் சொல் தென்சொல்லேயென ஒன்பான் ஆண்டுகட்கு முன்னரே என் ‘முதற்றாய்மொழி’ யில் விளக்கியிருப்பினும், அதனைப் பாராமையாலோ, ஆராய்ச்சி யின்மையாலோ, வடமொழி வெறிபற்றிய தமிழ் வெறுப்பாலோ, அடிமைத்தனத்தினாலோ, ‘முகம்’ வடசொல்லென இன்றும் ஒருசார் தமிழாசிரியர் வகுப்பிற் சொல்வதும், அதுகேட்டு மாணவர் மயங்குவதும், சில தேர்வாளர் மாணவர் போட்டித் தேர்வுகளில் முகம் எம்மொழிச் சொல் என வினவி உண்மையுரைப்பாரைத் தவறுவிப்பதும் வழக்கமாயிருந்து வருகின்றன. இது பலர்க்கும் இடர்ப்பாட்டை விளைத்தலின், இனிமேல் இப் பொருள்பற்றி ஐயுறவும் ஏமாற்றும் தருக்கமும்

இல்லாதவாறு, முகம் என்பது தென்சொல்லேயென முடிந்த முடிபாக நாட்டுதற்கு எழுந்ததிக் கட்டுரையென்க.

முகம் என்பது தென்சொல்லேயெனக் கோடற்கு மறுக்கொணாச் சான்றுகள் வருமாறு :

முகம் (முகு + அம்); = முன்பு, முன்னுறுப்பு, முன்பக்கம்.

முனை, நுனி, தோற்றம்.

முகப்பு, முகனை, முகச்சரக்கு, முகதலை, முகமண்டபம், முகமனை, முகவாசல், முகவுரை, உரைமுகம், துறைமுகம், நூன்முகம், போர்முகம் முதலிய வழக்குகளை நோக்கின் முன்மைக் கருத்தே முகம் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் என்பது விளங்கும்.

உயிரிகளின் (பிராணிகளின்); முன்பக்கத்திற் சிறந்த உறுப்பு தலையின் முன்புறமாதலின், அது முகம் எனப்பட்டது.

உயிரிகளின் இயல்பான இயக்கம் அல்லது தோற்றம் முன்னோக்கியே நிகழ்தலின் முன்மைக் கருத்தில் தோற்றக் கருத்துத் தோன்றிற்று.

எ – டு:

முகம் = தோற்றம்

முகஞ்செய்தல் = தோன்றுதல்

முகம்பெறுதல் = தோன்றுதல்

முகு + உள் = முகுள்முகிள் = அரும்பு

முகிள் + அம் – முகிளம் = அரும்பு.

அரும்புதல் = தோன்றுதல்

முகுள் – (முகுர்); – முகுரம் = தளிர்

முகிள் – முகிழ் = அரும்பு. முகிளம் – முகிழம் = மலரும் பருவத்தரும்பு.

முகிழ்த்தல் = தோன்றுதல்

     “மூவகை யுலகு முகிழ்த்தன முறையே” (ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்து);.

முகு + ஐ – முகை = அரும்பு, முகைதல் = அரும்புதல், முகைத்தல் = அரும்புதல்.

முகு – முக்கு – மொக்கு = அரும்பு. மொக்கு மொக்குள் = அரும்பு.

முகம் என்னும் சொல்லில் முகு என்னும் பகுதியும், முகு என்னும் பகுதியில் மு என்னும் எழுத்தும், மு என்னும் உயிர்மெய்யில் உ என்னும் உயிரும், உயிர்நாடியான உறுப்புகளாம்.

முன், முந்து முதலிய சொற்களில் முகரமும், ஊங்கு உங்கு, உங்ஙன், உது, உவன் முதலிய சொற்களில் ஊகார உகரங்களும், அடிப்படையாயிருந்து முன்மைக் கருத்தை யுணர்த்துதல் காணக்.

முகம் – முகர் – முகரை – மோரை.

முகர் – முகரி = முன்புறம், தொடக்கம்

முகம் – முகன் – முகனை – மோனை.

முகு – முக – முகப்பு.

   2) வடமொழியிற் கூறும் மூலமும் பொருளும் ஒரு சிறிதும் பொருந்தாமை :

வடமொழியில் முகம் என்பது முக்ஹ (mukha); என்றே வழங்கினும், அதனை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, னகர (நகர); மெய்யை ஈற்றிற் சேர்த்து முக்ஹன் (mukhan); என்னும் வடிவைப் படைத்து அதில் ‘மு’ என்னும் முதன்மையான பகுதியைப் பொருளற்ற முன்னொட்டாக (Prefix);த் தள்ளி, எஞ்சிய க்ஹன் (khan); என்னும் கூற்றைத்

தோண்டுதற் பொருள் தரும் வினைப்பகுதியாக்கி, தோண்டுதல், தோண்டப்பட்ட கிடங்கு, கிடங்கு போனற் வாய், வாயுள்ள இடம் (முகம்); என, முறையே முகம் என்னும் சொற்குப் பொரு ளுரைப்பர் வடநூலார்.

இது பகுத்தறிவிற்குச் சற்றும் பொருந்தாமையொடு.

     ‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று.

சூழினுந் தான்முந் துறும்” (குறள், 380); என்னும் தெய்வத் திருமறைக்கேற்ப, மீண்டும் முகம் என்பது தென்சொல்லே யென்பதை வலியுறுத்தல் காண்க.

முகம் – முகன் (கடைப்போலி);

இனி, கன் என்னும் சொல்லும் தென் சொல்லே.

கல் – கன். கல்லுதல் = தோண்டுதல். கன் கன்னம் = தோண்டுதல், சுவரைத் துளைத்துத் திருடுதல்.

லகரம் னகரமாகத் திரிதல் இயல்பு.

ஒ.நோ: ஆல் – ஆன் (3ஆம் வேற்றுமை யுருபு);.

மேல – மேன.

     (3); வடமொழியிலும் முக்ஹ என்பது முகம் என்னும் பொருளில் வழங்கல்

எடு: முக்ஹ + கமல = முகத் தாமரை (தாமரை முகம்);

முக்ஹ என்னும் சொற்கு வடமொழியில் வாய் என்பதேர முதன்மைப் பொருளாகக் கொள்ளினும், முகம் என்னும் பொருட்கும் வட்டஞ்சுற்றி வழியே வருதல் காண்க.

தலையில் முகம் முன்புறமா யிருத்தல்போல் முகத்தில் மூக்கு முன்னுறுப்பா யிருத்தலால், முன்மைக் கருத்தை அடிப்படையாகக் கொண்ட முகம் என்னும் சொல் தமிழில் மூக்கையும் உணர்த்தும்.

முகம் – முக, முகத்தல் = மூக்கால் மணம் நுகர்தல்.

முக – மோ – மோப்பு – மோப்பம்

முகம் – முகர், முகர்தல் = மோத்தல், முகர் – மோர்.

முகு – முக்கு – மூக்கு

மூக்கு – முக்கை = ஆறு திரும்பும் மூலை.

முகு என்னும் அடிக்கு எதுகையான நுகு, புகு முதலிய அடிகளும், முன்மைக் கருத்தின் வழிப்பட்ட தோன்றற் கருத்தை யுணர்த்துவதாகும்.

நுகு – நுகும்பு = பனையின் இளமடல்

நுகு – நுங்கு = இளம் பனங்காய்ச் சுளை அல்லது கொட்டை.

நுகு – (நகு); நாகு = இளமை

புகு – பூ, பூத்தல் = தோன்றுதல்

     “பூந்தலிற் பூவாமை நன்று”

பூ – போ – போத்து = இளங்கிளை.

போத்து – போந்து = பனங்குருத்து

போந்து – போந்தை = பனங்குருத்து

புகு – (பொகு); – பொகில் = அரும்பு

பொகில் – போகில் = அரும்பு

ழகரம் சில சொற்களில் ககரமாகத் திரியும்.

எடு : தொழுதி – தொகுதி. முழை – முகை.

இங்ஙனமே, நுழு, புழு, முழு முதலிய ழகர உயிர்மெய்யீற்றுச் சொற்களும் ககர வுயிர் மெய்யீற்றினவாய்த் திரிந்திருத்தல் வேண்டும்.

முள் – முழு – முகு.- நுள் – நுழு – நுகு.

முள் – முளை, முளைத்தல் = தோன்றுதல்.

நுழுந்து = இளம்பாக்கு, நுழாய் = இளம்பாக்கு.

ஆயிரக்கணக்கான பழந் தென்சொற்கள் அழிந்துபோயினமையால், பல கருத்துகளை இணைக்கும் அண்டுகளை எல்லா மொழிமுதல் அடிகட்கும் காட்டமுடிந்திலது.

முகத்தைக் குறித்தற்கு ஆனனம், வதனம், முதலிய பிறசொற்கள் வடமொழியிலுள.

தென்மொழியில் முகத்தைக் குறித்தற்குத் தொன்றுதொட்டு வழங்குவதுக முகம் என்னும் சொல் ஒன்றே.

இலை, தாள், தோகை, ஒலை என ஒரே, நிலைத்திணைச் சினையை நால் வகைப்படுத்தவும், வடு (மா);, மூசு (பலா);, கச்சல் (வாழை); என முக்கனிகட்கும் பிஞ்சுநிலையில் சிறப்புச்சொல் வழங்கவும் தெரிந்த மதிமாண் பண்டைத் தமிழர்க்கு முகத்தைக் குறித்துச் சொல்லில்லையென்பது, பகுத்தறிவுடையார்க்குக் கூறும் கூற்றன்று.

ஆயிரக்கணக்கான தென்சொற்கள் வடமொழியில் வெளிப்படையாய் வழங்கிவருவதால்

வடமொழி தென்சொல்லைக் கடன் கொள்ளா தென்னும் பித்தர் கூற்றை எள்ளி யிகழ்க.

மேலையாரிய மொழிகளுள் ஒன்றிலேனும் முகம் என்னும் சொல்லின்மையால், முகம் என்பது தென்பாலி முகத்துத் தோன்றிய தென் சொல்லேயென ஓங்கி அறைக.

     “பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே மெய்போ லும்மே

மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற்

பொய்போ லும்மே பொய்போ லும்மே” – பாவாணர்

தமிழ்ப்பொழில் மடங்கல் (ஆவணி); 1958.

 முகம்2 mugam, இடை.(part.)

   1. இயங்குவதை அல்லது இருப்பதைக் குறிப்பிடும் போது திசை என்ற பொருள் வரும்படிச் சொல்வது; direction, side to which one turns or keeps one’s face.

அவர் என் திரும்பி ஏதோ சொன்னார். ஆறு தென்முகமாக ஒடுகிறது.

   2. பெயரெச்சத்தின் பின் வகை அல்லது வண்ணம் என்ற பொருள்வரும்படி பயன்படுத்துவது; by way of.

வரிகட்டாமல் ஏய்ப்பவர்களை எச்சரிக்கும் முகமாக இந்த ஆணை வெளியிடப் பட்டுள்ளது. கடற்கரைக்கு மக்கள் வந்தமுகமாக இருந்தனர்.

     [முகு → முகம்(வே.க);.]

 முகம்3 mugam, பெ.(n.)

   1. வாயில் (சங்.அக.);; entrance, as of a house.

   2. சுழி (பிங்.);; back water.

   3. இடம் (திருக்கோ.356, உரை);; place.

     [முகு → முகம் (வே.க);.]

 முகம்4 mugam, பெ.(n.)

   1. கட்டியின் முனை; point of the abscess or boil etc.

   2. இந்திர கோபப் பூச்சி; cochineal insect (பரி.அக.);.

   3. தொடக்கம்; commencement as in ‘urukkumugam’ (உருக்குமுகம்);.

     [முகு → முகம் (வே.க);.]

 முகம்5 mugam, பெ. (n.)

   முகப்பு, அணிகலன்களின் முன்புறத் தோற்றம்; facet of the ornaments.

அணிகலன்களின் தோற்றப் பொலிவாகவும், புடைப்பாகவும் மணிகள் (இரத்தினங்கள்); வைத்து இழைக்கப்படும் முகப்பு.

     “முத்தின் பட்டிகை ஒன்றினால்… பொன்னின்பூ ஆறும்முகம் ஒன்றும்” (தெ.கல். தொ.5, கல்.521);.

     [முகு → முகம் (வே.க);.]

 முகம்6 mugam, பெ.(n.)

   1. நோக்கு; look, sight.

     ‘புகுமுகம் புரிதல்’ (தொல். பொருள். 261);.

   2. ஊழ்கம் (தியானம்);; meditation.

     “செல்வன்… இரண்டுருவ மோதி நேர்முக நோக்கினானே ” (சீவக.1289);

   3. முகமன்; praise, flattery.

     “முகம் பலபேசி யறியேன்” (தேவா.742, 2);.

   4. மூலம்; instrumentality.

   5. வேள்வி (யாகம்);; sacrifice.

     “மறைவழி வளர்முகமது சிதைதர” (தேவா.573, 5);.

     [முகு → முகம் (வே.க);.]

 முகம்7 mugam, பெ.(n.)

   1. கரணியம் (உ.வ.);; cause, reason.

   2. ஏழாம் வேற்றுமையுருபு; ending of seventh case.

     “இனிய செய்தி நின்னார் வலர் முகத்தே” (புறம்.12);.

   3. நாடகச் சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி (சிலப்.3:13, உரை);; the first juncture or opening of a drama, one of five {} canti

   4. உவம உருபு (சீவக.298);; particle of comparison.

கிளிமுகக் கிளவி (சீவக. 298);.

     [முகு → முகம் (வே.க);.]

 முகம்8 mugam, பெ.(n.)

   1. நடிகர்கள் அரங்கத்திற்கு வருமுன் நிகழும் கூத்து (சிலப்.3:147, உரை);; opening dance before the appearance of the actors on the stage.

   2. இயல்பு; character, nature.

     “களி முகச் சுரும்பு” (சீவக.298);.

   3. நிலை (வின்.);; state, condition.

   4. பக்குவம்; fullgrowth, maturity.

     “பயம்பின்வீழ் முகக்கேழல்” (மதுரைக்.295);.

     [முகு → முகம் (வே.க.);.]

 முகம்9 mugam, பெ.(n.)

   1. முதன்மை (வின்.);:

 chieftaincy.

   2. ஊர் (கிராம); முதலியவற்றின் பகுதி (நாஞ்.);; part, as of a town or village.

     [முகு → முகம் (வே.க.);]

 முகம்1௦ mugam, பெ.(n.)

   வகை; kind, class.

     “பலமுகங்களான கலக்கங்கள் நேரிட்ட சமயத்தில்” (ரகஷ்ய.4);.

     [முகு → முகம் (வே.க.);]

 முகம்11 mugam, பெ.(n.)

   1. மேலிடம் (வின்.);; head, top.

   2. நுனி; point.

     “அமின் முகக்கணை” (கம்பரா.ஆற்றுப்.14);.

   3. வடிவு; form, shape.

     “கூன்முகமதி” (பிரபுலிங். கைலாச.3);.

   4. தோற்றம்; aspect, appearance.

     “சுளிமுகக் களிறன்னான்” (சீவக.298);.

     [முகு → முகம் (வே.க.);]

முகம்குளுப்பைதட்டல்

 முகம்குளுப்பைதட்டல் mugamguḷuppaidaṭṭal, தொ.பெ.(vbl.n.)

   முகம் வீங்கல்; face becoming swollen.

     [முகம் + குளுப்பை + தட்டல்.]

முகம்கொடுத்துப்பேசுதல்

முகம்கொடுத்துப்பேசுதல் mugamgoḍudduppēcudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஈடுபாடு காட்டி மதித்துப் பேசுதல்; talk directly and in a friendly way.

அவர் என்னிடம் முகம் கொடுத்துப் பேசி நீண்ட நாட்கள் ஆகிறது என வருத்தப்பட்டுக் கொண்டான்.

     [முகம் + கொடுத்து + பேசுதல்.]

முகம்சுண்டல்

 முகம்சுண்டல் mugamcuṇṭal, பெ.(n.)

   முகம் சுளிக்கை; frowning.

முகம்சுளித்தல்

முகம்சுளித்தல் mugamcuḷittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   அருவருப்பு முதலியவற்றால் முகத்தில் ஏற்படும் சுருக்கம்; screw up one’s face as an expression of dislike, disgust, etc.

தன் முது சேறுபட்டுவிட்டது கண்டு முகம் சுளித்தான்.

     [முகம் + களித்தல்.]

முகம்செத்துப்போதல்

முகம்செத்துப்போதல் mugamcettuppōtal,    8 செ.கு.வி.(v.i.)

   முகம் களை இழத்தல்; fall of the face.

திருமண வீட்டில் நுழைந்தவரை ‘நீங்கள் யார்’ என்று கேட்டதும் அவருடைய முகம் செத்துப் போயிற்று.

     [முகம் + செத்து + போதல்.]

முகம்பார்-த்தல்

முகம்பார்-த்தல் mugambārttal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. நேர்நோக்குதல்; to look one in the face.

   2. அன்பு செய்தல் (வின்.);; to show kindness to.

   3. நன்கு மதித்தல் (சிலப்.11:182, அரும்);; to treat with regard.

   4. முகம் நோக்கி இனம் அறிதல் (உ.வ.);; to recognise faces of persons, as a child.

     [முகம் + பார்-த்தல்.]

முகம்பார்வை

முகம்பார்வை mugambārvai, பெ.(n.)

   பழைய வரிவகை; an ancient tax.

     “ஜோடி முகம்பார்வை, சுங்க சாலை, சம்படம்” (I.M.P.Cg. 1095);.

     [முகம் + பார்வை.]

முகம்புகு-தல்

முகம்புகு-தல்  mugambugudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. முகமலர்தல் பார்க்க; see mugam malar.

     “முகம்புகன் முறைமையின்” (தொல்.பொருள்.152);.

   2. இரக்கத்திற்காக (தயைக்காக); எதிர் சென்று நிற்றல்; to approach for favours.

     “முகம் புகுத லாற்றுமோ மேல்” (நாலடி, 306);.

      “முகம் புகுகின்ற தோழிக்கு” (ஐங்குறு. 20, துறைக் குறிப்பு);.

     [முகம் + புகு தல். புகுதல் = அடைதல், தாழ்நிலை அடைதல், செல்லுகல், நுழைதல்.]

முகம்புடை-த்தல்

முகம்புடை-த்தல் mugambuḍaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. துயரக் (துக்கக்); குறியாக முகத்திலடித்துக் கொள்ளுதல்; to beat one self on the face, as an expression of grief.

     “பலசன முகம்புடைத் தகங்குழைந் தழவே” (சீவக.2758);.

   2. கட்டி உடைவதற்கு முன் வாய் வைத்தல்; to gather, as the head of a boil.

     [முகம் + புடை – த்தல். புடைத்தல் = அடித்தல், குத்துதல்.]

முகம்புதை-த்தல்

முகம்புதை-த்தல்  mugambudaiddal,    4 செ.கு.வி. (v.i.)

   முகத்தை மூடிக்கொள்ளுதல்; to cover one’s face.

     “கையா னகை முகம் புதைத்த தோற்றம்” (சீவக.2461);.

     [முகம் + புதைத்தல். புதைத்தல் = மறைத்தல், ஒளித்து வைத்தல், வாய்புதைத்தல், அமிழ்த்துதல்.]

முகம்பெறுதல்

முகம்பெறுதல் mugambeṟudal,    21 செ.கு.வி. (v.i.)

   தோன்றுதல்; to rise, as the sun;

 to appear.

     “சுடர் முகம் பெற்றபோதே” (சீவக. 1404);.

     [முகம் + பெறுதல். பெறுதல் = அடைதல், பிறப்பித்தல், தோன்றுதல்.]

முகம்மதியர்

 முகம்மதியர்  mugammadiyar, பெ.(n.)

   இசுலாம் மதத்தினர்; followers cf the religion of Muhammad.

     [முகம்மது → முகம்மதியர்.]

முகம்மது

முகம்மது1 mugammadu, பெ.(n.)

முகமதுநபி பார்க்க; see mugammadunabi.

 முகம்மது2 mugammadu, பெ.(n.)

   20ஆம் நூற்றாண்டில் மெய்ஞானக் குறவஞ்சி என்ற நூலை இயற்றியவர் புலவர்; author of {}.

முகம்மதுஉசேன்

முகம்மதுஉசேன் mugammaduucēṉ, பெ.(n.)

   18ஆம் நூற்றாண்டில் தவுக்கிடு மாலை, பெண்புத்தி மாலை, ஆகிய நூல்களை இயற்றிய புலவர்; author of {} and {}.

     [முகம்மது + உசேன்.]

முகம்மதுநபி

 முகம்மதுநபி  mugammadunabi, பெ.(n.)

   முகமதிய மத அருட்பணிப் பெருந்தகையான முகமது நபிகள் நாயகம்; Muhammad the Prophet of Islam.

     [முகமது + நபி.]

முகம்மழித்தல்

முகம்மழித்தல் mugammaḻittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   முகத்திலுள்ள மயிரை (தாடி, மீசை); நீக்குதல்; to shave one’s face.

     [முகம் + மழித்தல்.]

முகம்வைத்தல்

 முகம்வைத்தல்  mugamvaittal, முகங்காண்(ணு)தல் பார்க்க; see {}.

     [முகம் + வைத்தல்.]

முகரதம்

முகரதம்  mugaradam, பெ.(n.)

   முகத்திற் புணர்கை; carnal intercourse in the mouth.

     “தன் மனையாளை முகரதஞ் செய்வித்து” (கடம்ப.பு.இலீலா.108);.

     [முகம் + Skt. ரதம்.]

முகரன்

 முகரன் mugaraṉ, பெ.(n.)

   பயனிற்சொல் சொல்லுவோன் (சங்.அக.);; chatterbox;

 one who speaks without purpose.

முகரம்

முகரம்  mugaram, பெ.(n.)

   1. தொடர்ஒலி; noise, continuous sound.

முகரப்பாய்மா (கம்பரா. அதிகாய.186);.

   2. சங்கு; conch.

     “முகரத் திடை….. சுறவங் கொணர்ந்தெற்று மறைக்காடே” (தேவா.846, 2);.

   3. காகம் (சங்.அக.);; crow.

முகராசி

முகராசி mugarāci, பெ.(n.)

   1. முகக் கவர்ச்சி பார்க்க; see mugakkavarcci.

   2. ஆகூழ் (அதிர்ஷ்டம்);; luck.

     [முகம் + Skt. ராசி.]

முகரி

முகரி1 mugari, பெ.(n.)

   1. மல்லிகைப்பூ (வின்.);; jasmine flower.

   2. தாழைச் செடி (மலை.);; fragrant screwpine.

தெ. மொகலி

     [முகம் → முகரி.]

 முகரி2 mugari, பெ.(n.)

   ஆரவாரஞ் செய்வோன்; one who makes noise.

     “பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள்” (தேவா. 719:9);.

 முகரி3 mugari, பெ.(n.)

   1. முகனை, 1, 2, 3 பார்க்க; see {}, 1, 2, 3.

   2. மூக்கினடி; bottom of the nose.

     [முகம் → முகர் → முகரி.]

 முகரி4 mugari, பெ.(n.)

மூரி (யாழ்.அக.); பார்க்க; see {}.

 முகரி5 mugari, பெ.(n.)

முகலி பார்க்க; see mugali.

முகரிகுளித்தல்

முகரிகுளித்தல் mugariguḷittal, பெ.(n.)

   அள்ளுகொள்ளை, பெருங்கொள்ளை (யாழ்.அக.);; plunder, pillage.

     [முகரி2 + குளித்தல்.]

முகரிமை

முகரிமை  mugarimai, பெ.(n.)

   1. பேரறிவு (பிங்.);; wisdom, knowledge of divine things.

     “முகரிமைசா னற்றவர்” (சேதுபு. பலதீ.30);.

   2. தலைமை; chieftaincy, lordship.

     “முகரிமை யடைந்தவன் றோல்முகத்தவன்” (கந்தபு. கயமுகனுற்.49);.

     [முகரி2 → முகரிமை.]

முகரியோலை

 முகரியோலை mugariyōlai, பெ.(n.)

முறியோலை பார்க்க; see {}.

முகரீர்

 முகரீர் mugarīr, பெ. (n.)

   எழுத்தன் (குமாஸ்தா);; clerk, writer, scribe.

     [Ar. Muharrir → த. முகரீர்]

முகரு-தல்

முகரு-தல்  mugarudal,    2 செ.குன்றாவி. (v.t.)

   நுகருதல்; smelling (சா.அக.);.

     [முகர்1 தல் → முகரு – தல்.]

முகரூபம்

முகரூபம் mugarūpam, பெ.(n.)

   1. முகச்சாயல் (வின்.); பார்க்க; see {}.

   2. முகத்தின் அழகு (யாழ்.அக.);; beauty of face.

     [முகம் + Skt. ரூபம். த. உருவம் → வ. ரூப.]

முகரூபு

 முகரூபு mugarūpu, பெ.(n.)

   முகத்தின் அழகு (யாழ்.அக.);; beauty of face.

     [முகம் + Skt. ரூபு. த. உருவம் → வ. ரூப – ரூபு.]

முகரெனல்

 முகரெனல் mugareṉal, பெ.(n.)

   ஒலிக் குறிப்பு வகை (வின்.);; onom. expr. of humming, as of bees.

முகரை

முகரை  mugarai, பெ.(n.)

   1. முகவாய்க் கட்டை; chin.

அவன் முகரையில் ஒரு குத்து விட்டான்.

   2. மூக்கினடி; bottom of the nose.

     “முகரை யாலுழுத தொய்யில்” (திருக்காளத். பு.கண்ணப்ப.3);.

   3. முகம், பழிக்கப்படும் முகம்; face, face as ugly.

     ‘அவன் முகரையைப் பார் எப்படி இருக்கிறதென்று’ (உ.வ.);.

   தெ. மோர;   க .மோரெ; Hind.{}.

     [முகம் → முகர் → முகரை. முகரை = மூக்கும் வாயும் சேர்ந்த பகுதி.]

முகரைக்கட்டை

முகரைக்கட்டை mugaraiggaṭṭai, பெ.(n.)

முகரை, 1 பார்க்க; see mugarai,

   1. சண்டையில் அவன் முகரைக் கட்டை உடைந்தது.

     [முகரை + கட்டை.]

முகரையெலும்பு

 முகரையெலும்பு  mugaraiyelumbu, பெ. (n.)

   மோவா யெலும்பு; lower jaw, bone.

     [முகரை + எலும்பு.]

முகரோமம்

முகரோமம் mugarōmam, பெ.(n.)

   மீசை மயிர் (சித்.மரபுகண்.பக்.6);; moustache.

     [முகம் + Skt. ரோமம்.]

முகர்

முகர்1 mugartal,    2 செ.குன்றாவி. (v.t.)

   மூக்கால் மோத்தல், மணமறிதல்; to smell.

     [முகம் → முகர் → முகர் தல்.]

 முகர்2 mugarttal,    4 செ.கு.வி.(v.i.)

   முகத்தல்; take water in a vessel.

 முகர்3 mugar, பெ.(n.)

   1. முகம்; face.

   2. மூக்கு; nose.

     [முகம் → முகர்.]

முகர்வுக்கணு

 முகர்வுக்கணு mugarvuggaṇu, பெ.(n.)

   பரு (T.U.L.M.);; tubercle.

முகலட்சணம்

 முகலட்சணம் mugalaṭcaṇam, பெ.(n.)

   முகத்தோற்றம்; visage (சா.அக.);.

     [முகம் + Skt. லட்சணம்.]

முகலாங்கலம்

 முகலாங்கலம் mugalāṅgalam, பெ.(n.)

   பன்றி; hog (சா.அக.);.

முகலி

முகலி1 mugali, பெ.(n.)

   1. தாழை; a wild shrub growing near the sea shore fragrant screw pine pan dana oderatissima.

   2. நிலப்பனை; ground palm Curculigo Corchioides.

 முகலி2 mugali, பெ.(n.)

   சீகாளத்திப் பக்கத்தோடும் ஓர் ஆறு (தேவா.1095, 3);; a river flowing by {}.

முகவங்கு

 முகவங்கு mugavaṅgu, பெ.(n.)

   முகத்தில் படரும் கருந்தேமல்; a skin disease rendering the face black (சா.அக.);.

     [முகம் + வங்கு.]

முகவசனம்

முகவசனம் mugavasaṉam, பெ.(n.)

   வாய்ச் சொல்; talk, words.

     “சுப்பு ஒதுவார் முகவசனத்தாலும் விசதமாகுமே” (மீனாட். சரித்.2:310);.

     [முகம் + Skt.வசனம்.]

முகவசிகரம்

 முகவசிகரம் mugavasigaram, பெ.(n.)

முகக்கவர்ச்சி பார்க்க; see mugakkavarcci.

     [முகம் + Skt. வசிகரம்.]

முகவசியம்

 முகவசியம்  mugavasiyam, பெ.(n.)

முகக்கவர்ச்சி பார்க்க; see mugakkavarcci

     [முகம் + வசியம். வயம் → அவசியம்]

முகவசீகரம்

 முகவசீகரம்  mugavacīgaram, பெ.(n.)

முகக்கவர்ச்சி பார்க்க; see mugakkavarcci

     [முகம் + Skt.வசீகரம்]

முகவட்டம்

 முகவட்டம்  mugavaṭṭam, பெ.(n.)

முக மண்டலம் பார்க்க; see mugamanga/am.

     [முகம் + வட்டம்.]

முகவட்டி

முகவட்டி  mugavaṭṭi, பெ.(n.)

   அரச முத்திரை இடும் அலுவலர்; officer of the Royal sealed.

     “புரவரிசி காணத்து முகவட்டி மகட மங்கலமுடையான் எழுத்து” (புதுகல். 183:6);.

முகவட்டு

முகவட்டு  mugavaṭṭu, பெ.(n.)

   விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை; an ornament worn on the forehead of an animal,

     “நெற்றி முன்னாப் பூட்டுத் தரள முகவட்டும் பொலிய” (திருவிளை. மாயப்பக 15);.

     [முகம் + வட்டு. வட்டு = வட்டமான அணிகலன்.]

முகவணை

முகவணை1 mugavaṇai, பெ.(n.)

   இசைக் கருவி வகை; a kind of Indian darionet.

     ‘முகவணையை வாசி”(பணவிடு.183);.

 முகவணை2 mugavaṇai, பெ.(n)

   1. முகப்பு; facade, porch.

   2. முகவுரை (வின்.);; preface,

   3. வண்டியின் முகப்பில் வண்டிக்காரன் இருந்தோட்டும் இடம்; driver’s seat in front of a cart.

   4. முகவணைக்கல் பார்க்க; see{}.

     “நிலைகால் அருகனை முகவனை….. கட்டினதும்” (கோயிலொ.138);.

     [முகம் + அணை.]

முகவணைக்கல்

முகவணைக்கல் mugavaṇaiggal, பெ. (n.)

   வாயிலின் மேலுள்ள உத்தரப்படிக்கல், முகப்புக்கல்; stone placed at the top across the pillars of a gate.

     “மண்டபத்தில் வாசலில் முகவணைக்கல்லு பழுவூ ருடையான் செம்போ உய்யிவந்த பெருமாள்” (புது.கல்.612:3);.

     [முகவணை + கல்.]

முகவரி

 முகவரி  mugavari, பெ.(n.)

   ஒரு பெயருக்குரியவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் இருப்பிடம்பற்றிய விளத்தம்; address, superscription.

     [முகம் + வரி. முகம் = இடம். வரி = எழுத்து.]

முகவரை

முகவரை  mugavarai, பெ.(n.)

   அணிகலனின் நடுவில் பதிக்கும் கல்; central stone in a jewel.

     ‘முகவரை என்று பாடமாம் போது, நாயகக்கல்லுப் போலே பாட்டுக்களுக் கெல்லாம் பிரகாசமாயிருக்கும்’ (திவ். திருப்பல்.2, வியா. பக்.34);

     [முகம் + அரை. முகம் = இடம், நடுவிடம் அரை = அரைதல், பதித்தல்.]

முகவர்

 முகவர்  mugavar, பெ.(n.)

   ஒர் அமைப்பின், நிறுவனத்தின் சார்பாக பொருள் வாங்கி விற்பனை செய்து கழிவுத் தொகை பெறுபவர்; agent of an organisation, firm, etc.

ஆயுள் காப்பீடு முகவர்கள். சிறுசேமிப்பு முகவர்கள்.

முகவலிப்பு

 முகவலிப்பு  mugavalippu, பெ.(n.)

   முகத்தைக் கோணச் செய்யும் இசிவு (சன்னி); நோய் வகை (வின்.);; facial paralysis.

மறுவ. முகவதாசன்னி, முகவூதை.

     [முகம் + வலிப்பு. வலிப்பு = இசிவு, இழுப்பு நோய்.]

முகத்தைப் பற்றிய நோய். தலைவலி கண்டு, முகம் சுளுக்கி கண் சிவந்து பிடரியுளைந்து பழைய முகமாறி ஒரு முகமாய்த் திருகி வாங்கி வலித்திடுமோர் ஊதை (வாதம்); நோய்.

முகவல்லபம்

 முகவல்லபம்  mugavallabam, பெ.(n.)

   மாதுளை (பரி.அக.);; pomegranate.

முகவளை

முகவளை mugavaḷai, பெ.(n.)

   வளைகள் கழலாதிருக்க அணியும் தடை வளையல்; bangle of shorter size, worn as a keeper.

     “வளைக்கு முகவளை” (குலோத்.கோ.505);.

     [முகம் + வளை. வளை = கைவளை.]

முகவழி

 முகவழி mugavaḻi, பெ.(n.)

   மூலம்; means.

அவன் முகவழியாகப் போக வேண்டும்.

     [முகம் + வழி.]

முகவவ்வால்

 முகவவ்வால் mugavavvāl, பெ.(n.)

   சிவப்பும் சாம்பனிறமுங் கலந்த மீன்வகை; white pomfret, brownish grey, Stromatens sinensis.

     [முகம் + வவ்வால். வவ்வால் = மீன்வகை.]

     [p]

முகவாசச்செப்பு

முகவாசச்செப்பு mugavācacceppu, பெ.(n.)

   முகவாசம் வைக்கும் பரணி; casket or box for spices used with betel.

     “இன் முகவாசச் செப்பும்……. இளையவ ரேந்தினாரே” (சீவக.838);.

மறுவ. வெற்றிலைப்பெட்டி.

     [முகவாசம் + செப்பு. செப்பு = பெட்டி.]

முகவாசம்

முகவாசம்1 mugavācam, பெ.(n.)

   1. நறுமணத்து (வாசனை);க்காக வாயில் இட்டுக் கொள்ளுதற்குரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், இனவகை (சாதி); என்ற ஐவகை நறுமணப் பண்டங்கள் (சீவக.838, உரை);; fragrant spices, of which there are five viz. {}.

   2. வெற்றிலை (சீவக. 1055);; betel.

     “கொண்டாரின் முகவாசம்” (சீவக.1055);.

   3. முகப்பழக்கம் (யாழ்.அக.);; familiarity, acquaintance.

     [முகம் + Skt. வாசம்.]

 முகவாசம்2 mugavācam, பெ. (n.)

   பிணத்தின் முகத்தை மூடும் ஆடை (உ.வ.);; facecloth.

முகவாசல்

 முகவாசல் mugavācal, பெ.(n.)

   தலைவாசல்; front gate.

     [முகம் + வாசல்.]

முகவாசை

முகவாசை1 mugavācai, பெ.(n.)

   ஒருதலைச் சார்பு (வின்.);; partiality.

 முகவாசை2 mugavācai, பெ.(n.)

முகவாசம்2 பார்க்க; see {}.

முகவாச்சியம்

முகவாச்சியம் mugavācciyam, பெ.(n.)

   1. கையால் வாயை அடித்து இசையெழுப்புகை; playing on the mouth by striking it with the hand.

   2. முகவீணை பார்க்க; see {}.

     [முகம் + வாச்சியம். வாச்சியம் = முழக்கி இசை யெழுப்பும் கருவி.]

முகவாடல்

 முகவாடல் mugavāṭal, பெ. (n.)

முகவாட்டம் (வின்.); பார்க்க; see {}.

     [முகம் + வாடல்.]

முகவாட்டம்

 முகவாட்டம் mugavāṭṭam, பெ.(n.)

   முகத்தில் தோற்றுஞ் சோர்வு (வின்.);; jaded countenance;

 fatigued appearance.

     [முகம் + வாட்டம்.]

முகவாதசன்னி

 முகவாதசன்னி mugavātasaṉṉi, பெ.(n.)

   முகத்தைக் கோணச் செய்யும் ஒருவகை இசிவு நோய் (வின்.);; facial paralysis.

மறுவ. முகவலிப்பு

     [முகம் + Skt. வாதசன்னி.]

முகவாதம்

 முகவாதம் mugavātam, பெ.(n.)

முகவூதை; see {}.

     [முகம் + Skt. வாதம்.]

முகவாதை

 முகவாதை mugavātai, பெ.(n.)

முகவூதை பார்க்க; see {}.

முகவாத்தியம்

 முகவாத்தியம் mugavāttiyam, பெ.(n.)

முகவாச்சியம் பார்க்க; see {}.

     [முகம் + Skt. வாத்தியம்.]

முகவாயு

 முகவாயு mugavāyu, பெ.(n.)

முகவலிப்பு பார்க்க; see mugavalippu.

     [முகம் + Skt. வாயு.]

முகவாய்

முகவாய்1 mugavāy, பெ.(n.)

முகவாய்க் கட்டை பார்க்க; see {}.

 முகவாய்2 mugavāy, பெ.(n.)

   ஏற்றச்சால் முகப்பதற்கு ஏற்புடையதாகக் கரை முகப்பிடத்தில் தோண்டுவிக்கும் மடைநீர் வாய்; channel.

     [முகம் + வாய்.]

முகவாய்க்கட்டை

 முகவாய்க்கட்டை mugavāyggaṭṭai, பெ.(n.)

   மோவாய்; chin.

     [முகவாய் + கட்டை.]

முகவாய்நீட்சி

 முகவாய்நீட்சி mugavāynīṭci, பெ.(n.)

   கீழ்த் தாடை எழும்பு; prominent lower jaw.

     [முகவாய் + நீட்சி.]

முகவார்

முகவார்1 mugavār, பெ.(n.)

   குதிரை முதலியவைகட்கு முகத்திலிடுங் கயிறு; headstall, halter.

     [முகம் + வார்.]

 முகவார்2 mugavār, பெ.(n.)

   மிதியடியின் கட்டைவிரல் பகுதியையும், நடுப்பகுதியையும் இணைக்கும் வார்; a kind of shoe lether.

     [முகம் + வார்.]

முகவாள்

முகவாள் mugavāḷ, பெ.(n.)

   கலப்பைக்கூர் (செந்.4, பக்.212);; plough share.

     [முகம் + வாள். வாள் = கூர்மை.]

முகவிகாரம்

 முகவிகாரம் mugavigāram, பெ.(n.)

முகவேறுபாடு பார்க்க; see {}.

     [முகம் + Skt. விகாரம்.]

முகவியர்

முகவியர்  mugaviyar, பெ.(n.)

   இன்முகமா யுள்ளோர்; those who look pleased.

     “முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார்” (சீவக.2045);.

     [முகம் → முகவியர்.]

முகவிலாசம்

 முகவிலாசம் mugavilācam, பெ.(n.)

   முகப் பொலிவு (வின்.);; beaming countenance.

     [முகம் + Skt. விலாசம்.]

முகவிழி

 முகவிழி mugaviḻi, பெ.(n.)

   முகத்தில் விழிக்கை; facing, meeting.

அவனுடன் முகவிழி கிடையாது.

     [முகம் + விழி. விழி = விழித்தல்.]

முகவிழுப்பு

 முகவிழுப்பு mugaviḻuppu, பெ.(ո.)

முகவலிப்பு பார்க்க; see mugavalippu.

     [முகம் + இழுப்பு.]

முகவீணை

முகவீணை mugavīṇai, பெ.(n.)

   ஒரு வகை இசைக் கருவி; Indian clarionet.

     “தித்திசிறு முகவீணை… மிழற்ற” (குற்றா. தல. தருமசா. 54);.

     [முகம் + வீணை.]

முகவு

முகவு  mugavu, பெ.(n.)

   1. மாளிகை முகப்பு:

 facade, porch.

   2. ஒளி, காந்தி; brilliance.

     [முகம் → முகவு = முன்மண்டபம்.]

 முகவு mugavu, பெ. (n.)

   ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே மூச்சில் செய்யும் பணி முடுக்கம்; quickness in performance.

     [மூசு-முசு-முகவு]

முகவுரை

முகவுரை1 mugavurai, பெ.(n.)

   முன்னுரை (நன்.1);; introduction, preface.

     [முகம் + உரை.]

நூல் முதலியவற்றில் நூலின் மூலப் பகுதி தொடங்குமுன் எழுதப்பெறும் நூல் எழுதப் புகுந்த கரணியம், நூல் அமைப்பு, நூலின்தேவை, நன்றியுரை வரை அடக்கிய உரை.

 முகவுரை2 mugavurai, பெ.(n.)

   1. கணக்குப் புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் ஆண்டு, மாதம், நாள் முதலிய குறிப்பு; introductory entry of date, etc. in daily account

   2. திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் நற்சொல்; auspicious expression, at the commencement of an epistle etc.

     [முகம் + உரை.]

முகவூதை

 முகவூதை mugavūtai, பெ.(n.)

முகவலிப்பு பார்க்க; see mugavalippu.

     [முகம் + ஊதை.]

முகவெட்டி

முகவெட்டி mugaveṭṭi, பெ.(n.)

   சோழர் ஆட்சியில் இறைவரி முதலிய பல துறைகளிலும், அரசும், அதிகாரிகளும் செலுத்தி வந்த ஆணைக்குரிய ஒலைகளைத் தணிக்கை செய்து முத்திரையிட்டு உரியவர்க்கு ஆணை வழி அனுப்பும் அதிகாரி; an auditor of {} period.

     “இவை புரவுவரி சீகரணத்து முகவெட்டி தெங்கூருடையா னெழுத்து” (தெ.கல்.தொ. 5, கல்.662);.

முகவெட்டிநாயகம்

 முகவெட்டிநாயகம் mugaveṭṭināyagam, பெ.(n.)

   புரவு வரித் திணைக் களத்தில் அடங்கிய முகவெட்டி என்னும் வரி திட்ட அதிகாரிகள் எழுதிய ஆணை ஒலைகளை ஆய்வு செய்து அனுமதிக்கும் தலைமை அதிகாரி; chief auditor of {} period.

     [முகவெட்டி + நாயகம்.]

முகவெட்டு

 முகவெட்டு mugaveṭṭu, பெ.(n.)

   பெரும்பாலும் திரைப்படத்தில், நாடகத்தில் பங்கு (பாத்திரம்); ஏற்பவருக்கு வேண்டிய முகத்தோற்றம்; facial features.

கதைத் தலைவனுக்கு நல்ல முகவெட்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த காலம் போய் விட்டது. புகழ்பெற்ற நடிகைக்கு இருப்பது போன்ற முகவெட்டு வேண்டும்.

     [முகம் + வெட்டு.]

முகவெண்டலை

முகவெண்டலை mugaveṇṭalai, பெ.(n.)

   முகமட்டும் வெள்ளையாயிருக்கும் மாட்டுக் குற்றம் (மாட்டுவா.15);; a blemish in cattle, of having the face alone white.

     [முகம் + வெண்மை + தலை.]

முகவெள்ளைப்பருந்து

 முகவெள்ளைப்பருந்து mugaveḷḷaipparundu,    பெ. (ո.) முகம் மட்டும் வெளுத்திருக்கும் ஒரு வகைப் பருந்து; a species of kite with white face.

     [முகம் + வெள்ளை + பருந்து.]

     [p]

முகவெழுத்து

முகவெழுத்து mugaveḻuttu, பெ.(n.)

   முகத்தில் எழுதிப் புனையும் ஒப்பனை (பெருங்.வத்தவ.13, தலைப்பு);; painting on the face.

     [முகம் + எழுத்து]

முகவேறுபாடு

 முகவேறுபாடு mugavēṟupāṭu, பெ.(n.)

   முகத்தில் ஏற்படும் வேறுபாடு; facial deformity.

     [முகம் + வேறுபாடு.]

முகவேலை

 முகவேலை mugavēlai, பெ.(n.)

   முகத்தில் மட்டும் முடி மழிக்கை; shaving of the face alone without shaving the head.

     [முகம் + வேலை.]

முகவை

முகவை  mugavai, பெ.(n.)

   1. மொண்டு கொள்ளுகை; drawing, as water;

 taking up, as grain.

     “பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்” (அகநா.126:11);.

     “முகவை யின்மையி னுகவை யின்றி” (புறநா.368:11);.

   2. மிகுதியாகக் கொடுக்கப்படும் பொருள்; anything which is given in large quantities.

     “புகர்முக முகவை” (புறநா.371);.

   3. நீர் முகக்குங் கருவி; bucket for drawing water.

     “கயிறுகுறு முகவை” (பதிற்றுப். 22:14);.

   4. அகப்பை (வின்.);; ladle.

   5. நெற் பொலி (சிலப்.10:137, உரை);; heap of paddy on the threshingfloor.

   6. இராமநாதபுரம்; Ramnad.

     “தென் முகவையின் சேதுபதி” (தனிச்.சிந். பக்.456:34);.

     [முழு → முகு → முக → முகவை (வே.க.);.]

முகவைக்கண்ணமுருகனார்

முகவைக்கண்ணமுருகனார் mugavaiggaṇṇamurugaṉār, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் குருவாசகக் கோவை என்னும் நூலை இயற்றிய புலவர்; a poet, author of {}.

     [முகவை + கண்ணன் + முருகனார்.]

முகவைப்பாட்டு

முகவைப்பாட்டு mugavaippāṭṭu, பெ.(n.)

   களத்திற் சூடடிக்கும் போது பாடும் பொலிப்பாட்டு; song sung during the treading of grain on the threshingfloor by cattle.

     “பெருஞ் செய்ந்நெல்லின் முகவைப் பாட்டும்” (சிலப்.10: 137);. “முகக்கக் கொடுத்தலின் முகவை யாயிற்று” (மேற்படி உரை);.

     [முகவை + பாட்டு.]

முகவோலை

முகவோலை mugavōlai, பெ.(n.)

   மன்னர் முதலியோர் எழுதும் திருமுகம்; ola letter of a king or of a great person.

     “கன்னிதன்னை முன்னர்ப் பயந்தோன் முகவோலை…. மன்னர்க் கெழுத” (பாரத. சம்பவ.43);.

     [முகம் + ஒலை.]

முகாசா

முகாசா mukācā, பெ. (n.)

   வேலையின் பொருட்டு வரியில்லாமலும் வரி குறைத்தேனும் கொடுக்கப்படும் இறையிலிச் சிற்றூர் (M.M 506);; village or land assigned to an individual, either rent free or at a low quit- rent, on condition of service.

     [H. {} → த. முகாசா]

முகாத்தமஞ்சரி

 முகாத்தமஞ்சரி mukāttamañjari, பெ. (n.)

   திப்பிலி; long pepperPiper longum.

முகாந்தரம்

முகாந்தரம் mukāndaram, பெ. (n.)

   1. கரணியம்; cause, reason.

   2. மூலம்; means.

     “யார் முகாந்தரம் போனால் இது கைகூடும்?” (இ.வ.);.

   3. வேறு செய்தி (விஷயம்);; another mater.

     “இதுவும் முகாந்தராமாய்ச் செல்லு கிறதோ”(ஈடு 9,8,3.);

     [Skt. mukha + antara → த. முகாந்தரம்]

முகாபிலா

 முகாபிலா mukāpilā, பெ. (n.)

   படி முதலிய வற்றை மூலத்துடன் ஒத்துப் பார்க்கை (வின்);; examination, comparison, as of a copy with the original.

     [Ar. muqabila → த. முகாபிலா]

முகாமயம்

 முகாமயம் mukāmayam, பெ.(n.)

   முகத்தில் உண்டாகும் நோய்; disease of the face.

     [முகம் → முகாம் + மயம்.]

முகாமிடல்

 முகாமிடல் mukāmiḍal, பெ.(n.)

   மகிழ்ச்சி யூட்டும் ஒரு பொழுது போக்கு; recreation.

     [முகாம் + இடல்.]

இதில் இடம் தேர்வு, தலைவர், ஊதல், எழுதுகோல், ஊசி நூல் முதல், உணவுப் பொருட்கள் வரை கொண்டு வந்து தீயால் உணவு ஆக்குவர். சாரணர் பயிற்சி இதில் அடங்கும் (கலை.கள.);.

முகாமுகமாய்

 முகாமுகமாய் mugāmugamāy, பெ.(n.)

முகமுகமாய் (வின்.); பார்க்க; see {}.

முகாமை

 முகாமை mukāmai, பெ.(n.)

   முதன்மை, தலைமை (வின்.);; headship, superiority, preeminence, precedence.

     [முகம் = முதன்மை. முகம் → முகமை → முகாமை.]

முகாமைக்காரன்

 முகாமைக்காரன் mukāmaikkāraṉ, பெ. (n.)

   முன்னின்று நடத்துவோன் (வின்.);; manager, headman, president, as of a society;

 agent.

     [முகாமை + காரன்.]

முகாமையாளர்

 முகாமையாளர் mukāmaiyāḷar, பெ.(n.)

   மேலாளர்; manager.

வங்கி முகாமையாளர்.

     [முகாமை + ஆளர்.]

முகாமொத்தைமூலி

 முகாமொத்தைமூலி mukāmottaimūli, பெ.(n.)

   முடக்கொற்றான்; a medicinal creeper, balloon vine – Cardio spermum halicacabum (சா.அக.);.

முகாம்

 முகாம் mukām, பெ. (n.)

   சுற்றுப்பயணத்தில் கூடாரமடித்துக் குறுகிய காலம் தங்கும் இடம்; a camp. த.வ. தாவளம்

     [Ar. {} → த. முகாம்]

முகாம்புரி

 முகாம்புரி mukāmburi, பெ.(n.)

   சிற்றுார் தேவதை (நாஞ்.);; a village goddess.

முகாயி

முகாயி mukāyi, பெ.(n.)

   1. திப்பிலி; long pepper Piperlongum.

   2. கருமுகில் நஞ்சு (பாஷாணம்);; a prepared arsenic (சா.அக.);.

முகாரவிந்தம்

 முகாரவிந்தம் mukāravindam, பெ.(n.)

   முகத்தாமரை; lotus like face (சா.அக.);.

முகாரி

 முகாரி mukāri, பெ. (n.)

   இசைவகை; a musical mode.

முகி

முகி1 mugittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   முடித்தல்; to finish, conclude;

 to achieve. accomplish.

     “ஆற்றிற் பாலத்தை முகித்தே னல்லேன்” (குற்றா.தல.கண்டக.39);.

     [முடித்தல் → முகித்தல்.]

 முகி2 mugidal,    2 செ.கு.வி.(v.i.)

   முடிதல்; to end, terminate, to be finished.

     “முகியாத பகுதி புருடர்” (திருப்பு.681);.

   தெ. முகியு;க. முகி.

     [முடிதல் → முகிதல்.]

முகினாயகன்

முகினாயகன் mugiṉāyagaṉ, பெ.(ո.)

வருணன்;{}.

     “முகினாயகனை நினைப்பிட்டான்” (திருவாலவா.30:2);.

     [முகில் + நாயகன். மழை தரும் முகிலின் தலைவன்.]

முகினி

 முகினி mugiṉi, பெ.(n.)

   புளிய மரம் (மலை.);; tamarind tree Tama rindus indica (சா.அக.);.

முகின்மேனி

முகின்மேனி mugiṉmēṉi, பெ.(n.)

திருமால்;{}.

     “முகின்மேனி வேதன்றேட ” (திருவாலவா.காப்பு.3);.

மறுவ. முகில்வண்ணன்.

     [முகில் + மேனி. முகில்வண்ண உடம்புடைய திருமால்.]

முகிற்குன்மம்

 முகிற்குன்மம் mugiṟguṉmam, பெ.(n.)

முகிற்குன்றம் பார்க்க; see {}.

முகிற்குன்ரம்

முகிற்குன்ரம்1 mugiṟguṉram, பெ.(n.)

   செய்நஞ்சு (மு.அ.);; a mineral poison.

முகிற்குன்றம்

முகிற்குன்றம்2 mugiṟguṉṟam, பெ.(n.)

   முகில் மூடிய மலை; cloudy mountain.

     [முகில் + குன்றம்.]

முகில்

முகில்  mugil, பெ.(n.)

   1. கடல் நீரை முகந்து கொள்ளுவதாகக் கருதப்பட்ட மழைவான்; cloud.

     “முகிலுரிஞ்சுஞ் சூழி” (பு.வெ.6:22);.

   2. திரள் (பிங்.);; gathering, mass.

   தெ. மொகுலு;க. முகில்.

     [முக → முகில். முகத்தல் = மொள்ளுதல்.]

முகில்நிறம்

 முகில்நிறம் mugilniṟam, பெ.(n.)

   நீலமும் கருமையும் கலந்த நிறம்; combined colour of blue and black.

     [முகில் + நிறம்.]

முகில்வண்ணன்

முகில்வண்ணன் mugilvaṇṇaṉ, பெ.(n.)

   கார்முகில் நிறமுடைய திருமால்;{}, as cloudcloured.

     “முகில் வண்ணன் பேர்பாட” (திவ்.திருப்பா.11);.

     [முகில் + வண்ணன்.]

முகிளம்

முகிளம் mugiḷam, பெ.(n.)

முகிழ்1, 1 பார்க்க; see {}., 1.

     [முகிழ் → முகிழம் → முகிளம் (வே.க.);..]

முகிளிதம்

முகிளிதம் mugiḷidam, பெ.(n.)

   1. முகிழ்1, 1 பார்க்க; see {}, 1,

   2. அரைப்பகுதி குவிகை; half closing, as of flowers or of eyes.

     “முகிளிதங் கொண்டு வாட்கண் மொழிதரா” (விநாயகவு. திருநகரப்.126);.

     [முகிழ் → முகிழி → முகிழிதம் → முகிளிதம் (வே.க.);.]

முகிள்

முகிள் mugiḷ, பெ.(n.)

முகிழ்1, 1 பார்க்க; see {},1,

   1. “முகிண் முலை” (கம்பரா. காப்பு.3);.

     [முகிழ் → முகிள் (வே.க.);]

முகிழம்

 முகிழம் mugiḻm, பெ.(n.)

   மலரும் பருவத்துப் பேரரும்பு (சது.);; flower bud about to bloom.

     [முகழ் → முகிழம் (வே.க.);]

முகிழரும்பு

முகிழரும்பு mugiḻrumbu, பெ.(n.)

   1. ஆல், அரசு, அத்தி இவற்றின் மலரும் பருவ மொட்டு:

 flower buds of banyan, ficus religiosa and fig.

   2. மலரும் பருவத்தரும்பு; flower bud about to bloom.

     [முகிழ் + அரும்பு.]

முகிழிதம்

முகிழிதம் mugiḻidam, பெ.(n.)

முகிழ், 1 பார்க்க; see {}.

   1. “பொன்னின் முகிழிதம் விளைத்து” (குற்றா.தல.நாட்டுச்.9);.

     [முகிழ் → முகிழி → முகிழிதம் = அரும்பல், அரும்பு (வே.க.);.]

முகிழித்தல்

முகிழித்தல் mugiḻittal,    4 செ.கு.வி.(v.i.)

   குவிதல்; to fold or close up, as a flower its petals.

     [முகிழ் → முகிழி → முகிழித்தல்.]

முகிழ்

முகிழ்1 mugiḻttal,    4 செ.கு.வி.(n.)

   1. அரும்புதல்; to bud, put forth buds.

     “அருமணி முகிழ்த்தவேபோ லிளங் கதிர் முலையும்… பரந்த” (சீவக.551);.

     “குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப” (குறுந்.17:2);.

   2. தோன்றுதல்; to appear.

     “மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே” (ஐங்குறு. கடவுள்);.

     “முளியிலை கழித்தன முகிழிண ரொடுவரு” (நற்.53:7);.

   3. கூம்பும் மலர்போல் குவிதல்; to fold or close up, as a flower its petals,

 to shut, as the eyes.

     “மகவுகண் முகிழ்ப்ப” (கல்லா.7);.

க. முகுல்.

     [முல் → முள் → முளு → முழு → முகு → முகிழ் → முகிழ்த்தல். ஒ.நோ. தொழு → தொகு.]

 முகிழ்2 mugiḻttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. ஈனுதல்; to bear, bring forth beget.

     “அமரராதி யரை முகிழ்த்து” (விநாயகபு. 81:154);.

   2. தோற்றுவித்தல்; to display, to cause to appear.

     “அற்புத முகிழ்த்தார்” (காஞ்சிப்பு. பன்னிரு.163);.

க. முகுல்

     [முல் → முள் → முளு → முழு → முகு → முகிழ் → முகிழ்த்தல் (வே.க);.]

 முகிழ்3 mugiḻtal,    4 செ.கு.வி.(v.i.)

முகிழ்3, 1 பார்க்க;see {},

   1. “முகிழ்ந்து வீங்கிள முலை” (சீவக.1004);.

 முகிழ்4 mugiḻ, பெ.(n.)

   1. அரும்பு; bud.

     “குறுமுகிழ வாயினுங் கள்ளிமேற் கைந்நீட்டார்” (நாலடி, 262);.

   2. குமிழி (மொக்குள்);; bubble.

     “பெயறுளி முகிழென” (கலித்.56);

   3. தேங்காய் முதலியவற்றின் மடல் (யாழ்ப்.);; integument, as of a coconut or palmyra fruit.

   4. முகிழ்ப்புறம் பார்க்க; see {}.

     ‘அனிச்சப் பூவை முகிழ் களையாது சூடினாள் (குறள், 115, உரை);.

   5. தயிர் முதலியவற்றின் கட்டி; mass, as of curds.

     “குவிந்த முகிழ்களை யுடைய உறையாலே இறுகத் தோய்ந்த இனிய தயிர்” (பெரும்பாண்.157, உரை);.

   6. முகுளம், 3 பார்க்க; see mugulam, 3.

     [முல் → முள் → முளு → முழு → முகு → முகிழ். ஒ.நோ.தொழு → தொகு.]

முகிழ்காங்கூலம்

முகிழ்காங்கூலம் mugiḻgāṅālam, பெ.(n.)

   காங்கூலக் கைவகை (சிலப்.3: 18, உரை, பக்.94);; a kind of {} pose.

     [முகிழ் + காங்கூலம்.]

முகிழ்த்தகம்

 முகிழ்த்தகம் mugiḻttagam, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [ஒருகா தடாகம்-தகம்-முகிழ்+தகம்]

முகிழ்த்தம்

முகிழ்த்தம் mugiḻttam, பெ.(n.)

முழுத்தம் (முகூர்த்தம்); பார்க்க; see {}.

     “பெரியோரைச் சேர்ந்த முகிழ்த்தத்தினால்” (திருவிளை.பயகர.63);.

     [முழுத்தம் → முகிழ்த்தம்.]

முகிழ்நகை

முகிழ்நகை mugiḻnagai, பெ.(n.)

   புன்சிரிப்பு; smile.

     “முள்ளெயி றிலங்கு முகிழ்நகை” (பு.வெ.11, ஆண்பாற்.9);.

     [முகிழ் + நகை.]

முகிழ்ப்புறம்

 முகிழ்ப்புறம் mugiḻppuṟam, பெ.(n.)

   காய் பூ, முதலியவற்றின் காம்படி (வின்.);; that part of flower or fruit to which the stalk is attached.

     [முகிழ் + புறம்.]

முகிழ்விரியாக்கத்திரி

 முகிழ்விரியாக்கத்திரி mugiḻviriyāggattiri, பெ.(n.)

   கத்திரிப் பிஞ்சு; tender brinjal.

     [முகிழ் + விரியா + கத்திரி.]

முகிவு

 முகிவு  mugivu, பெ.(n.)

   முடிவு; end, termination.

     [முகி → முகிவு.]

முகிவுகாலம்

 முகிவுகாலம் mugivugālam, பெ.(n.)

முடிவுகாலம் பார்க்க; see {}.

     [முகிவு + காலம்.]

முகுடம்

முகுடம்1 muguḍam, பெ.(n.)

   கோபுரப் பூடு; a kind of unidentified plant (சா.அக.);.

 முகுடம்2 muguḍam, பெ.(n.)

   1. மணிமுடி (மகுடம்);; crown.

     “முகுடமும் பெருஞ் சேனையும்” (பாரத.குரு.14);.

   2. முடியுறுப்பு ஐந்தனுளொன்று (திவா.);; a part of the crown, one of five {}.

     [p]

வ. முக்குட்ட

     [மகுடம் → முகுடம்.]

பேராசிரியர் பரோ தம் ‘சமற்கிருத மொழி’ என்னும் நூலின் இறுதியில் முகுடம் (மகுடம்); என்பது திரவிடச் சொல்லென்று குறித்திருத்தல் காண்க (வே.க. முல்.1);. முடியுறுப்புகள் : 1. முகுடம் (மகுடம்);, 2. கயிறு (தாமம்);, 3. தாமரை (பதுமம்);, 4. கேடகம், 5. கிம்புரி (ஆ.நி.);.

முகுட்டை

முகுட்டை muguṭṭai, பெ.(n.)

   மூட்டைப் பூச்சி; bug.

     “உண்ணி முகுட்டை யெறும்பு” (நீலகேசி.79);.

முகுத்தம்

முகுத்தம்  muguttam, பெ.(n.)

முழுத்தம் பார்க்க; see {}.

     “உதித்த நன் முகுத்தத் தானும்” (திருவாலவா.3:12);.

முகுந்தநாயகர்

 முகுந்தநாயகர் mugundanāyagar, பெ.(n.)

     ‘பஞ்சரத்திரனம்’ எனும் நூலை இயற்றிய புலவர்;

 a poet, author of “{}”.

முகுந்தநிதி

 முகுந்தநிதி  mugundanidi, பெ.(n.)

   குபேரனது ஒன்பான் பொருட்குவையுள் ஒன்று (நவநிதியு லொன்று); (வின்.);; a treasure of {}, one of navanidi.

     [முகுந்தன் + நிதி.]

முகுந்தன்

 முகுந்தன் mugundaṉ, பெ.(n.)

   திருமால் (பிங்.);;{}.

முகுந்தம்

 முகுந்தம்  mugundam, பெ. (n.)

   இதளியம் (பாதரசம்);; mercury (சா.அக.);.

முகுரம்

முகுரம்  muguram, பெ.(n.)

   1. கண்ணாடி (திவா.);; mirror.

     “முகமுகரம்புரை முதலொடு சொன்னான்” (பாரத.வாரணா.102);.

   2. பெரு மல்லிகை (மூ.அ.);; single flowered Arabian Jasmine.

   3. தளிர் (சங்.அக.);; tender leaf.

முகுலம்

முகுலம்  mugulam, பெ.(n.)

   1. உடம்பு; body.

   2. ஆதன் (ஆன்மா);; soul (சா.அக.);.

முகுலி

 முகுலி  muguli, பெ.(n.)

   தாழை (பரி.அக.);; fragrant screwpine.

     [முசலி → முகுலி.]

முகுளமண்டலாதனம்

முகுளமண்டலாதனம் muguḷamaṇṭalātaṉam, பெ.(n.)

முகுளம், 4 பார்க்க (தத்துவப்.109, உரை);; see {}, 4.

     [முகுளம் + மண்டலாதனம்.]

முகுளம்

முகுளம்  muguḷam, பெ.(n.)

   1. அரும்பு; bud.

     “பங்கய முகுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த” (திருவாலவா.4:14); (சூடா.);.

   2. தாமரைத் தண்டு (தைலவ.தைல);; lotus stalk.

   3. ஒரு கையின் ஐந்து விரலும் நிமிர்ந்து நுனிபொருந்திக் கூம்பி நிற்கும் இணையா வினைக்கை வகை (சிலப்.3:18, உரை);; a gesture with one hand in which all the fingers are held upright with the tips joined together, one of 33 {}.

   4. இரண்டு காலும் ஒக்க வைத்து மண்டலமாக இருக்கும் இருக்கை (ஆசன); வகை (தத்துவப். 109, உரை);; a squatting posture in which the two legs are joined to form a horizontal circle.

   5. முகுளாதனம் (தத்துவப்.108); பார்க்க; see {}.

   6. மூளையின் பின் பகுதியாகிய முள்ளந்தண்டுக் கொடியின் உச்சி (இங்.வை.பக்.27);; medulla oblongata, hindmost segment of the brain.

வ. மு.குல.

     [முகிழ் → முகிள் → முகுள் → முகுளம் (வே.க.);.]

முகுளாதனம்

முகுளாதனம் muguḷātaṉam, பெ.(n.)

   இரண்டு கையும் முதுகிலே கூட்டி கும்பிட்டிருக்கும் இருக்கை (ஆசனம்); வகை (தத்துவப்.108, உரை);; a pose in which a devotee’s hands are joined together on his back in a praying attitude.

     [முகுளம் + ஆதனம்.]

முகுளித்தல்

முகுளித்தல் muguḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   குவிதல்; to close, as a flower.

     “முகுளிக்கும்….. அரவிந்த நூறாயிரம்” (தண்டி.62);.

     [முகிழ் → முகிள் → முகுள் → முகுளி → முகுளித்தல் (வே.க);.]

முகுள்

 முகுள்  muguḷ, பெ.(n.)

   மலரும் பருவ மொட்டு; flower bud about to bloom.

     [முகிழ் → முகிள் → முகுள் (வே.க);.]

முகுள் விளக்கு

 முகுள் விளக்கு muguḷviḷaggu, பெ. (n.)

   சிறிய விளக்கு வகை; a lamp variety.

     [முகிழ்-முகுள்+விளக்கு]

முகூர்த்தக்கால்

 முகூர்த்தக்கால் muārttakkāl, பெ. (n.)

   திருமணப் பந்தர்க்கு நல்வேளையில் முதலாக நாட்டும் கம்பம் (தம்பம்); (வின்);; first post fixed at an ausicious moment for a marriage.

த.வ. முழுத்தக்கால்

     [Skt. {} → த. முகூர்த்தம்+கால்]

முகூர்த்தம்

முகூர்த்தம் muārttam, பெ. (n.)

   1. நேரம்; moment, time.

   2. ஒன்றரை மணி நேரங் கொண்ட ஒரு காலவளவை; a division of time = 3 3/4 nalikai = 1 1/2 hours.

     “படுங் கலை முகூர்த்தங் காட்டைகளென்றா”. (காஞ்சிப்பு. காயாரோகண. 2);

   3. இரண்டு நாழிகை கொண்ட காலப்பகுதி (மேருமந் 94, உரை);;   4. நல்லோரை; auspicious time.

     “ஒப்பகன்றிடு முகூர்த்தமிவ் வெல்லை” (கந்தபு. தெய்வயா. 187);

   5. திருமணம்; marriage, wedding.

த.வ. முழுத்தம்

     [த. முழுத்தம் → Skt. {} → த. முகூர்த்தம்]

முகூலகம்

 முகூலகம் muālagam, பெ.(n.)

   நேர்வாளம் (அரு.அக.);; true croton.

முகேரெனல்

முகேரெனல் muāreṉal, பெ.(n.)

   ஒலிக் குறிப்பு வகை; onom. expr. signifying humming, splashing.

     “தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து” (திருவாச.7:11);.

முகை

முகை1 mugai, பெ.(n.)

   1. அரும்பு; opening bud.

     “முகை மொக்கு ளுள்ளது நாற்றம் போல்” (குறள், 1274);. முல்லை அரும்புவதற்குள் தான் திரும்பி வருவதாக தலைவன் தலைவியிடம் சொன்னான். நறுமுகையே…. நறுமுகையே….. நீ ஒரு நாழிகை நில்லாய்.

   2. குகை; cave.

     “கன்முகை வயப்புள” (ஐங்குறு.246);.

   3. கூட்டம் (பிங்.);; crowd.

   4. மிடா (பிங்.);; large earthen vessel.

     [முகுள் → முகு → முகை (வே.க);.]

 முகை2 mugaidal,    2 செ.கு.வி.(v.i.)

   அரும்புதல்; to bud.

     “பொய்கை முகைந்த தாமரை” (ஐங்குறு.6);.

     [முகுள் → முகு → முகை → முகைதல் (வே.க);.]

 முகை3 mugaittal,    4 செ.கு.வி.(v.i.)

முகை2-தல் (வின்.); பார்க்க; see {}.

     [முகுள் → முகு → முகை → முகைத்தல் (வே.க);.]

முகைதிறத்தல்

முகைதிறத்தல் mugaidiṟaddal,    2 செ.கு.வி. (v.i.)

   அரும்பு மலர்தல்; to blossom.

     ‘பொரிப் புன்கும்… முருக்கினொடு முகைதிறந்து’ (இலக்.வி.487, உரை);.

     [முகை + திறத்தல்.]

முகைதீன்பிச்சைப்புலவர்

 முகைதீன்பிச்சைப்புலவர் mugaitīṉpiccaippulavar, பெ.(n.)

   தரிச்சீர் கப்பல் சிந்து, வழிநடைச் சிந்து ஆகிய நூல்களை இயற்றிய புலவர்; Islamic poet.

முகைதீன்புலவர்

 முகைதீன்புலவர் mugaitīṉpulavar, பெ.(n.)

   மெய்ஞானச் சிந்து என்னும் நூலை இயற்றிய புலவர்; a Muslim poet one who wrote a book called “{}”.

முகைப்பால்

 முகைப்பால் mugaippāl, பெ.(n.)

   முலைப் பால்; breast milk.

மறுவ. தாய்ப்பால்

     [முகை + பால்.]

முகையலூர்

 முகையலூர் mugaiyalūr, பெ.(n.)

   சோழ நாட்டில் இருந்த ஓர் ஊர்; a village in {} country.

முகையலூர்ச்சிறுகருந்தும்பியார்

 முகையலூர்ச்சிறுகருந்தும்பியார் mugaiyalūrcciṟugarundumbiyār, பெ.(n.)

   கழகப் புலவர்;{} poet.

     [முகையலூர் + சிறு + கருந்தும்பியார்.]

முகையூர்

முகையூர் mugaiyūr, பெ.(n.)

   சிதம்பரம் வட்டம் திருநாகையூருக்கருகில் இருந்த சிறிய ஊர்களில் ஒன்றின் பண்டைய பெயர்; ancient name of an village near {}, which is now in Chidambaram Taluk.

     ‘பிடாகை முகையூரில் திருணமத்துக் காணியாக’ (தெ.இ.க.தொ.12, க.எண்.153.21);.

 முகையூர் mugaiyūr, பெ. (n.)

   சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chidambaram Taluk.

     [முழை-முகை+ஊர்]

முக்கடுகம்

 முக்கடுகம் muggaḍugam, பெ.(n.)

   சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று வகை மருந்துச் சரக்குகள் (வின்.);; the three medicinal stuffs.

     [மூன்று + கடுகம்.]

முக்கடுகு

 முக்கடுகு muggaḍugu, பெ.(n.)

முக்கடுகம் (வின்.); பார்க்க; see {}.

முக்கடுப்பு

 முக்கடுப்பு mukkaḍuppu, பெ.(n.)

   சினக் குறிப்பினைக் காட்டும் முகம்; frowning of the face.

     [முகக்கடுப்பு → முக்கடுப்பு.]

முக்கடை

முக்கடை mukkaḍai, பெ.(n.)

   ஆறு விரலம் கொண்ட ஒருபிடி யுயரம் (இ.வ.);; height of the fist with thumb raised vertically = 6inches.

     [மூன்று + கடை.]

முக்கட்சுழி

 முக்கட்சுழி mukkaṭcuḻi, பெ.(n.)

   மாட்டின் நெற்றியில் உள்ள தாச்சுழிக்கும், குடைமேல் குடைச்சுழிக்கும் கீழுள்ள சுழி; circular or curved mark on the forhead of the cow situated beneath the {} and {}.

     [மூன்று + கண் + சுழி.]

முக்கட்செல்வன்

முக்கட்செல்வன் mukkaṭcelvaṉ, பெ.(n.)

   மூன்று கண்களையுடைய சிவன் (திவா.);;{}, as having three eyes.

     “முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே” (புறநா.6:18);.

     [மூன்று + கண் + செல்வன்.]

முக்கட்டக்காய்

 முக்கட்டக்காய் mukkaṭṭakkāy, பெ. (n.)

   மூன்று விதைளையுடைய நிலக்கடலைக் காய்; a ground nut having three nuts in a shell.

     [மூன்று+கட்டம்+காய்]

முக்கட்டு

முக்கட்டு1 mukkaṭṭu, பெ. (n.)

   1. முச்சந்தி (இ.வ.); பார்க்க; see muccandi.

   2. இக்கட்டு நிலை (தஞ்சை.);; difficult situation.

     [மூன்று + கட்டு முக்கட்டு. கட்டு = கட்டுப்பாடு. மூன்றுகட்டு → முக்கட்டு = மூன்று வழிகள் சேருமிடம்.]

 முக்கட்டு2 mukkaṭṭu, பெ.(n.)

   விரலின் பொருத்து (இ.வ.);; Knuckle.

முக்கட்டெண்ணெய்

 முக்கட்டெண்ணெய் mukkaṭṭeṇīey, பெ.(n.)

முக்கூட்டெண்ணெய் (நெல்லை.); பார்க்க; see {}.

     [முக்கூட்டெண்ணெய் → முக்கட்டெண்ணெய்.]

முக்கட்பகவன்

முக்கட்பகவன் muggaṭpagavaṉ, பெ.(n.)

முக்கட்செல்வன் பார்க்க; see {}.

     “முக்கட் பகவனடி தொழாதார்க் கின்னா” (இன்.நாற்.1);.

     [மூன்று + கண் + பகவன்.]

முக்கணச்சுழி

 முக்கணச்சுழி mukkaṇaccuḻi, பெ.(n.)

   இரு கண்களின் (சற்று); மேலுள்ள தீமையைத் தரும் மாட்டுச் சுழி (கோவை.);; a curve found above the eyes of the cow, suppose tobe a badsign.

     [முக்கணம் + சுழி.]

முக்கணன்

முக்கணன் mukkaṇaṉ, பெ.(n.)

முக்கண்ணன் பார்க்க; see {}.

     “முக்கணா போற்றி” (தேவா.968, 10);.

முக்கணவன்

 முக்கணவன் mukkaṇavaṉ, பெ.(n.)

   கொடி வகை (யாழ்.அக.);; a climber.

முக்கணி

 முக்கணி mukkaṇi, பெ.(n.)

முக்கண்ணி (வின்.); பார்க்க; see {}.

முக்கண்டகம்

 முக்கண்டகம் muggaṇṭagam, பெ.(n.)

   நெருஞ்சி (தைலவ.தைல.);; cow’s thorn.

     [மூன்று + கண்டகம்.]

முக்கண்டலி

 முக்கண்டலி mukkaṇṭali, பெ.(n.)

முக்கண்டகம் (பரி.அக.); பார்க்க; see {}.

முக்கண்ணன்

முக்கண்ணன் mukkaṇṇaṉ, பெ.(n.)

   1. மூன்று கண்களை உடையவன்; one who has threeeyed.

   2. மூன்று கண்களை உடைய சிவன் (சூடா.);;   {}. 3. வீரபத்திரன்;   {}. 4. பிள்ளையார்;{}.

     [மூன்று + கண்ணன்.]

முக்கண்ணப்பன்

முக்கண்ணப்பன் mukkaṇṇappaṉ, பெ.(n.)

   மூன்று கண்களையுடைய சிவன்;{} three eyed god.

     “முனியே நான்முகனே முக்கண்ணப்பா” (திவ்.திருவாய். 10, 10:7);.

     [மூன்று + கண் + அப்பன்.]

முக்கண்ணான்

முக்கண்ணான் mukkaṇṇāṉ, பெ.(ո.)

முக்கண்ணன், 2 பார்க்க; see {}.

     “கடந்தடு முன்பொடு முக்கண்ணான்” (கலித்.2);.

     [மூன்று + கண்ணான்.]

முக்கண்ணி

முக்கண்ணி mukkaṇṇi, பெ.(n.)

   1. காளி (திவா.);; {}.

   2. மலைமகள் (பிங்.);; {}.

   3. தேங்காய் (வின்.);; coconut.

     [மூன்று + கண்ணி.]

முக்கண்ணின்பால்

 முக்கண்ணின்பால் mukkaṇṇiṉpāl, பெ. (n.)

   தேங்காய்ப் பால்; milky juice of coconut kernel.

     [மூன்று + கண் + பால் → மூன்று கண்ணின் பால் → முக்கண்ணின்பால்.]

முக்கண்ணிளையோன்

 முக்கண்ணிளையோன் mukkaṇṇiḷaiyōṉ, பெ.(n.)

   இளநீர்; tender coconut.

     [முக்கண் + இளையோன்.]

முக்கண்னொருகண்

 முக்கண்னொருகண் muggaṇṉorugaṇ, பெ(n.)

   பச்சைக் கருப்பூரம்; crude camphor.

     [முக்கண் + ஒருகண்.]

முக்கண்பால்

 முக்கண்பால் mukkaṇpāl, பெ.(n.)

   தேங்காய்ப்பால்; milk of coconut kernel.

     [முக்கண் + பால்.]

முக்கந்தன்

 முக்கந்தன்  mukkandaṉ, பெ.(n.)

   இடைய ருள்ளும் கொடிக்காற் காரருள்ளும் ஒரு சாரார்க்கு வழங்கும் பட்டப் பெயர்; title of a sect of shepherds and of betel vine cultivators.

முக்கந்தம்

 முக்கந்தம்  mukkandam, பெ.(n.)

   முருங்கை மரம்; drumstick tree Moringa oleifera.

முக்கனி

முக்கனி mukkaṉi, பெ.(n.)

   மா, பலா, வாழை என்ற மூவகைக் பழங்கள்; the three kinds of fruits, viz. {}.

     “முந்து முக்கனியி னானா முதிரையின்” (கம்பரா. நாட்டு.19);.

     “தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாய்க் கூட்டிச் சர்க்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே” (அருட்பா.345);.

     [மூன்று + கனி.]

முக்கப்பு

முக்கப்பு mukkappu, பெ.(n.)

   முக்கவராய்தம் (சூலாயுதம்);; three pronged dart;

 trident.

     “பருமுக் கப்பினரே” (தக்கயாகப். 98);.

     [மூன்று + கப்பு. கப்பு = கவர்கொம்பு, கிளை, பிளவு.]

முக்கம்

முக்கம்  mukkam, பெ.(n.)

முற்கம், 1 பார்க்க; see {}.

     [முற்கம் → முக்கம்.]

முக்கம்பாலை

 முக்கம்பாலை mukkambālai, பெ.(n.)

   மரவகை (நாஞ்.);; a kind of tree.

முக்கரணம்

முக்கரணம்1 mukkaraṇam, பெ.(n.)

   1. குட்டிக் கரணம் (தனிப்பா.2, 3:5);; somersault.

   2. விடாப்பிடி; stubborn.

     [மூன்று + கரணம்.]

 முக்கரணம்2 mukkaraṇam, பெ.(n.)

   மனம், வாக்கு, காயம்; three classes of organs mind, speech and action.

     [மூன்று + Skt. கரணம்.]

முக்கரணம்போடு-தல்

முக்கரணம்போடு-தல் mukkaraṇambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. குட்டிக்கரணம் போடுதல்; to turn a somersault.

     “முக்கரணம்….. போட்டு முயன்றிடினும்” (தனிப்பா.2, 3:5);.

   2. விடாபிடியாக இருத்தல்; to be stubborn.

     [முக்கரணம் + போடு-தல்.]

முக்கருணை

 முக்கருணை mukkaruṇai, பெ.(n.)

   காறுகருணை, காறாக்கருணை, புளிக் கருணை என்ற மூவகைக் கருணைச் செடிகளின் கிழங்குகள் (தைலவ.தைல.);; the three species of {} roots, viz., {}.

     [மூன்று + கருணை.]

முக்கருவு

முக்கருவு  mukkaruvu, பெ.(n.)

   1. முட்டை; egg.

   2. தொப்புள் கொடி; placental cord (சா.அக.);.

முக்கரையான மும்முடிச் சோழபுரம்

 முக்கரையான மும்முடிச் சோழபுரம் mukkaraiyāṉamummuḍiccōḻpuram, பெ. (n.)

   மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்; a village in Mannarkudi Taluk.

முக்கலாசான்நல்வெள்ளையார்

முக்கலாசான்நல்வெள்ளையார் mukkalācāṉnalveḷḷaiyār, பெ.(n.)

   கழகக்காலப் புலவர்; a {} poet.

     [முக்கல் + ஆசான் + நல் + வெள்ளை + .ஆர்.]

முக்கல் என்பது ஒரூராகும். இஃது எங்குளது எனப் புலப்படவில்லை. ஆசான் என்பது சிறப்புப் பெயராக இருக்கலாம். இவர் பாடிய பாடலொன்று நற்றிணையில் உள்ளது (நற்.272);.

     “கடலங் காக்கைச் செவ்வாய்ச் சேவல்

படிவ மகளிர் கொடிகொய் தழித்த

பொம்மல் அடும்பின் வெண்மணல் ஒருசிறைக்

கடுஞ்சூல் வதிந்த காமர் பேடைக்

கிருஞ்சேற் றயிரை தேரிய தெண் கழிப்

பூவுடைக் குட்டந் துழவுத் துறைவ

னல்கா மையி னசைபழ தாகப்

பெருங்கை யற்றவென் சிறுமை யலர்வாய்

ஆம்பல் மூதூ ரலர்தந்த

நோயா கின்றது நோயினும் பெரிதே” (நற்.272);.

முக்கலிப்பு

 முக்கலிப்பு  mukkalippu, பெ. (n.)

   மணங் கமழும் ஒருவகைச் செடி (கோட்டம்);; costus shrub, Saussurea lappa.

முக்கல்

முக்கல்1 mukkal, பெ. (n.)

   1. முயற்சி முதலியவற்றில் இறுகப் பிடித்த மூச்சைச் சிற்றொலிபட வெளிவிடுகை; straining, as in travail.

   2. பெரு முயற்சி (உ.வ.);; great effort.

   3. எடுத்தலோசை (பிங்.);; high pitch.

   4. பேசுவதால் எழுமொலி (சது.);; voice.

     [முக்கு → முக்கல்.]

 முக்கல்2 mukkal, பெ.(n.)

   ஈரமிகுதி முதலியவற்றாற் பொருள்களில் வீசும் கெட்ட நாற்றம்; stench of things owing to dampness etc.

இந்த அரிசி முக்கலடிக்கிறது.

     [மக்கல் → முக்கல்.]

 முக்கல்3 mukkal, பெ.(n.)

   முக்கும் செய்கை; groan made while struggling: straining.

     [முக்கு → முக்கல்.]

முக்கழகம்

முக்கழகம் mukkaḻkam, பெ.(n.)

   பாண்டிய அரசின் கீழ் அமைந்த தமிழ்ப் புலவர்களாலாகிய தலைக்கழகம், இடைக் கழகம், கடைக்கழகம் என்ற மூன்று தமிழ்க் கழகங்கள்; the three ancient Tamil academies which flourished under the partronage of the Pandiya kings viz. {}.

     “கண்ணுதற் பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து” (திருவிளை. திருநாட்.56);.

     [குல் – கூடற்கருத்து. குல் → குள் → கள் → களம் = 1 கூட்டம், 2 கூடுமிடம். களம் → கழகு → கழகம். 1 பேரவை, 2 புலவரவை.]

த. கழகம் → வ. சங்கம்.

முக்கழகம் பற்றிய தேவனேயப் பாவாணர் கருத்து :

முக்கழக வுண்மை :

ஆரிய வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் நூல்கள் அத்தனையும், முன்னைத் தமிழர் நாகரிகத்திற்குச் சான்றும் பின்னைத் தமிழர் முன்னேற்றத்திற்குத் துணையும் ஆகாதவாறு, அழிக்கப்பட்டுவிட்டன. மொழியாராய்ச்சியும் நடுநிலையும் நெஞ்சுரமும் இல்லாத தொடை நடுங்கிகட்கு, இவ்வுண்மையைக் காணும் அகக்கண் இல்லை.

தமிழ், வரலாற்றில் கெட்டாத உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி யாதலாலும், ஆரிய வருகை முன்னைத் தமிழிலக்கியம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதனாலும், இறையனார் அகப்பொருள் உரையிற் கூறப்பட்டுள்ள முக்கழக வரலாறு, முற்காலச் செய்திகளும் பிற்காலச் செய்திகளும் மயங்கி, நடுநிலையாராய்ச்சி வல்லுநர் அல்லாதார் சிக்கறுக்க முடியாப் பெருமுடிச்சாய்க் கிடக்கின்றது.

     “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன்” என்னும் இளங்கோவடிகள் கூற்று, பொல்லாப் புன்சிறு பொய்ம் மொழியாய் இருத்தல் எவ்வகையிலும் இயலாது.

அடியார்க்குநல்லார் தம் சிலப்பதிகார வுரையில், முழுகிப் போயினவாகப் பெயர் குறித்துக் கூறிய ஏழேழ் நாடுகளும் பிறவும் பற்றிய செய்தியும், கட்டுக் கதையாய் இருத்தல் முடியாது.

வைகை மதுரையைத் தென்மதுரை யென்னும் பெருவழக்கில்லை. ஆதலால், தென்மதுரை யென்பது பஃறுளி மதுரையே.

     “முதற்சங் கமுதூட்டும் மொய்குழலா ராசை

நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் கடைச்சங்கம்

ஆம்போ ததுவூதும்” என்னும் பட்டினத்தடிகள் பாட்டு, சங்காகிய சங்கத்தைப் பற்றிய தேனும், முக்கழகத்தே முன்னிய தென்பது வெளிப்படை.

காலத்தால் மட்டுமன்றிக் கருத்தாலுங் கடைப்பட்ட வைகை மதுரைப் பாண்டியரே தமிழ்வளர்ச்சிக் கழகம் நிறுவினரெனின், அவர்க்கு முற்பட்ட தலையிடைக்காலப் பாண்டியர் ஏன் கழகம் நிறுவியிரார்?

முக்கழக வுண்மையை இற்றை இலக்கியச் சான்றின்மை பற்றி நம்பாதார் பாட்டனைப் பெற்ற பூட்டனைக் கண்டிராமையால் அவன் இவ்வுலகி லிருந்ததை நம்பாதாரே.

முக்கழகமும் நிறுவியர் பாண்டியரே

     “மோனையாந் தெய்வத் தமிழ்மொழி நிறீஇய

சங்கத் தலைவர்கள் தலைமை பூண்டங்

கறம்வள ரவையில்அரங்கே றியநாள்

வழுதியர் வளர்த்தது சங்க காலம்” என்பது பேரிசைச் சூத்திரம் என்னும் திரட்டில், தமிழ் மொழி விளக்கம் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு நூற்பா.

பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் (கி.பி.9ஆம் நூற்.); தளவாய்புரச் செப்பேடு.

     “மன்னெதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும்

அங்கதனி லருந்தமிழ்நற் சங்கம் இரீஇத் தமிழ்வளர்த்தும்”

என்றும், அவன் மகனான பாண்டியன் இராசசிம்மனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேடு,

     “மகாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்”

என்றும், முன்னோர் செயலைப் பின்னோர்மேல் ஏற்றிக் கூறுகின்றன. வைகை மதுரையைத் தென்மதுராபுரம் என்றது, கண்ணன் மதுரையை வடமதுரை யெனக் கருதியதாகல் வேண்டும்.

     “சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்

சவுந்தர பாண்டியன் எனுந்தமிழ் நாடனும்

சங்கப் புலவரும் தழைத்தினி திருந்தது

மங்கலப் பாண்டி வளநா டென்ப.”

     “உங்களிலே நானொருவ னொப்பேனோ வொவ்வேனோ

திங்கட் குலனறியச் செப்புங்கள் சங்கத்துப்

பாடுகின்ற முத்தமிழ்க்கென் பைந்தமிழு மொக்குமோ

ஏடவிழ்தா ரேழெழுவீ ரின்று.”

     “பூவேந்தர் முன்போற் புரப்பா ரிலையன்றிப்

பாவேந்த ருண்டென்னும் பான்மைதான் மாவேந்தன்

மாற னறிய மதுரா புரித்தமிழோர்

வீறணையே சற்றே மித”

என்பவை, 12ஆம் நூற்றாண்டினரான பொய்யாமொழிப் புலவர், மதுரையிற் கடைக்கழகப் புலவரின் கற்படிமையையும் கழகப் பலகையையும் நோக்கிப் பாடியன.

இவையெல்லாம் கடைக்கழகத்தையே பற்றியவை யேனும், முதலிரு கழகமும் பாண்டியர் நிறுவினவேயென்பதைக் குறிப்பாக வுணர்த்துவன வாகும், இந்துமாவாரியில் மூழ்கிப் போன தமிழ் நிலமெல்லாம் பாண்டிநாடேயாதலின், அதில் சேர சோழர் எவ்வகை யிலேனும் இருந்திருக்க முடியாது. இறையனா ரகப்பொருளுரை முக்கழக வரலாறு, “தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச்சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள்” என்றே தொடங்குதல் காண்க.

தலைக்கழகம் (தோரா. கி.மு.10,000 5,000);

இறையனா ரகப்பொருளுரையிலுள்ள முச்சங்க வரலாறு :

தலைச்சங்கம் :

     “தலைச்சங்கம் இடைச்சங்கங் கடைச் சங்கமென மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞாற்று நாற்பத் தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவர்களைச் சங்கமிரீ இயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொண்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப அவர்க்கு நூல் அகத்தியம்.”

இதன் விளக்கம் :

கழகத்தைக் குறிக்கும் சங்கம் என்பது பிற்காலத்துச் சமற்கிருதச் சொல்லாதலால், அச் சொல்லே அக்காலத்தில் தமிழகத்தில் வழங்கியிருக்க முடியாது. ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்தகாலம் தோரா கி.மு.1500. அதற்கு நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டிற்குப் பின்னரே, வேத ஆரியமுந் தமிழுங் கலந்து சமற்கிருதம் என்னும் இலக்கிய வழக்கு வகைமொழி (Dialect); தோன்றிற்று. சமற்கிருதம் என்னுஞ் சொல்லே கலந்து செய்யப்பட்டது என்னும் பொருளதே.

அம்பலம். அமை – அவை. ஆயம், கடிகை, களம், களரி, கழகு கழகம், குழு, குழாம். குழுமல் குழுவல், குறி, கூட்டு கூட்டம், கூடல், கோட்டி, சேகாம், தொகை, பண்ணை, பொது பொதியம், மன்று மன்றம் என்னம் சொற்களுள் ஒன்றே அக்காலத்துக் கழகத்தைக் குறிக்க வழங்கியிருத்தல் வேண்டும்.

முதலிரு கழகமும் மூழ்கிய பின்னரே அகத்தியர் தென்னாடு வந்ததனால், அவர் தலைக்கழகத்தில் இருந்திருக்க முடியாது. இடைக்கழக விருக்கையை மூழ்குவித்த இரண் டாங் கடல் கோளுக்குத் தப்பிய மாவேந்த (மகேந்திர); மலையும், அகத்தியர் வந்தபின் முழுகிவிட்டது. அதனால் அவர் பொதிய மலையிலேயே நிலையாக வதிய நேர்ந்தது.

     “அந்த மலய மலையினது உச்சியில் வீற்றிருக்கிறவரும், சூரிய பகவானைப் போல மிகுந்த ஒளியுடன் விளங்குபவருமான, அகஸ்திய முனிவர் பெருமானைக் காண்பீர்கள்……. சாகரத்தின் மத்தியில் அகஸ்தியரால் வைக்கப்பட்டதும் அழகிய பல மரங்களடர்ந்ததும், அழகிய பொன்மயமானதும், மலைகளில் சிறந்ததெனத் திரிலோகப் பிரசித்தி பெற்றதுமான, மகேந்திரம் என்னும் பர்வதம் பெருங்கடலில் மூழ்கிக் கிடக்கின்றது” என்று சுக்கிரீவன் சீதையைத் தேடித் தென்றிசை சென்ற வானரப் படையை நோக்கிக் கூறியதாக, வான்மீகியார் தம் வடமொழி யிராமாயணத்தில் வரைந்திருத்தல் காண்க.

அகத்தியர் இராமர் காலத்தவராதலாலும் அவர் மகேந்திர மலையை வாரியிடை வைத்தார் என்பதனாலும், அனுமன் மகேந்திர மலையினின்று கடலைத் தாண்டினான் என்பதனாலும் அகத்தியர் காலத்தில் அம் மலையின் மேற் பகுதி ஒரு தீவாக இருந்ததெனக் கருதலாம்.

திரிபுரமெரித்த விரிசடைக்கடவுள் என்றது, இறையனார் போலச் சிவபெருமான் பெயர் தாங்கிய

ஒரு புலவரையே. இது குணசாகரர் தம் யாப்பருங்கல விரிவுரையில் திரிபுரமெரித்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என்றும், திரிபுரமெரித்த விரிசடை நிருத்தர் பெயர்மகிழ்ந்த பேராசிரியர் என்றும், ஒரு புலவர் பெயரைக் குறித்ததை ஒருபுடை யொத்தாகும்.

குன்றெறிந்த முருகவேள் என்றது முருகன் என்னும் பெயர் கொண்ட புலவரையே. பெயரொப்புமை பற்றி மாந்தரைத் தேவரெனக் கொண்டது. எழுதப்பட்ட வரலாறின்மையையும் அப் புலவரின் சேணெடுந் தொன்மையையும் காட்டும்.

     “ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை யென்பார் செந்தமிழில் வெளியிட்ட ஈழமும் தமிழ்ச்சங்கமும் என்னுமொரு கட்டுரையில், கி.மு. ஐந்நூற்று நாற்பத்து மூன்றாவது ஆண்டில் விசயன் என்னும் அரசன் சிங்கள அரசினை நிலைபெறுத்துவதற்கு முன், தமிழரது அரசு இலங்கையில் இருந்ததென்றும், அந் நாட்டிற்கே நாகத்தீவு என்ற பெயர் வழங்கிய தென்றும், நாகர்கோயில், முசிறி என்ற பெயர்கள் ஈழநாட்டில் வழங்கினவென்றும், சோழன் மணந்த நாககன்னிகை அந்நாட்டு அரசன் மகளென்றும், இளநாகன் என்னும் அரசன் கி.பி.38 ல் அவண் அரசாண்டா னென்றும் கூறுதலால் உதியஞ் சேரலாதனைப் பாடிய முடிநாகராயர் ஈழமன்னர் மரபினராயிருத்தல் கூடுமென்று கருதுதற்கு இடமுண்டு.”2 என்று கூறியுள்ளார் பேரா.கா.சுப்பிரமணியப் பிளளை. பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் இடைக்கழகத்திற்குப் பிற்பட்ட பாரதக் காலத்தவனாதலால், அவனைப் பாடிய முடிநாகராயர் தலைக்கழகத்தில் இருந்திருத்தல் முடியாது. அப் பெயரார் ஒருவர் அக் கழகத்தில் இருந்திருப்பின், அவர் வேறொருவராயிருந்திருத்தல் வேண்டும் என்ரி, சியார்சு, எட்வார்டு என்னும் பெயரினர் பலர் இங்கிலாந்தரசரா யிருந்ததை நோக்குக.

முடிநாகர் என்பார் சூட்டுநாகர் என்னும் நாகர் வகுப்பார். நாகவுருவைத் தலையில்

அணிந்திருந்ததனால் அப் பெயர் பெற்றதாகத் தெரிகின்றது. முடிநாகரின் அரையர் முடிநாகராயர்.

     “கீண்டது வேலை நன்னீர் கீழுறக் கிடந்த நாகர்

வேண்டிய வுலக மெங்கும் வெளிப்பட மணிகள் மின்ன

ஆண்டகை யதனை நோக்கி யரவினுக் கரசர் வாழ்வுங்

காண்டகு தவத்த னானேன் யானெனக் கருத்துட் கொண்டான்”

என்னும் கம்பராமாயணக் கடல்தாவு படலக் செய்யுள் (20); ஈண்டுக் கவனிக்கத் தக்கது.

நிதியின் கிழவன் என்றது அளகையாளி அல்லது திருமாவளவன் என்பது போன்ற பெயருடைய ஒரு புலவரை.

   தலைக்கழகக் காலத்துப் பாண்டிநாடு குமரிமுனைக்குத் தெற்கில் ஏறத்தாழ ஈராயிரங்கல் தொலைவு பரந்திருந்ததனால், அக்கழகப் புலவர் ஐந்நூற்று நாற்பத் தொன்பதின்மர் என்பதிலும் அவருள்ளிட்டுப் பாடினார், நாலாயிரத்து நானூற்று நாற்பத் தொன்பதின்மர் என்பதிலும், இம்மியும் ஐயுறவிற்கு இடமில்லை. கழகமிருந்தார் நிலையான உறுப்பினர்;உள்ளிட்டுப் பாடினார் இடையிடை வந்து பாடிச்சென்ற பிறர்.

அவர் பாடியதாகச் சொல்லப்படும் பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையும் அக்காலத்துப் பொதுவிலக்கியமே. அவற்றுள், முதலது இசையிலக்கியமும் இடையிரண்டும் இசையிலக் கணமுமாகும். அந்நான்கனுள் ஒன்றுகூட இக்காலத்தில்லை. கலிப்பாவின் திரிபான பரிபாடல் தலைக்கழகக் காலத்திற் பாடப்பட்ட தென்பது ஐயத்திற்கிட மானதே.

தலைக்கழகத்தைப் புரந்த பாண்டியர் எண்பத்தொன்பதின்மர் என்பதிலும், அவர் ஆண்ட

காலம் நாலாயிரத்து நானூற்று நாற்பதியாண்டு என்பதிலும், அவருட் பாவரங்ககேறினார் எழுவர் என்பதிலும், எவ்வகை ஐயத்திற்கும் இடமில்லை. அக்காலத்து மக்கட்கு வாழ்நாள் நீண்டிருந்ததனால், தலைக்கு ஐம்பதியாண்டு நிரவலாக வைத்துக் கணிப்பின், மொத்தம் நாலாயிரத்து நானூற்று ஐம்பதாக, பத்தாண்டு கூடியே வருதல் காண்க.

கடுங்கோன் என்பவன், களப்பாளர் (களப்பிரர்); காலத்தின் பின் பாண்டி நாட்டைக் கைப்பற்றிய கடுங்கோன் அல்லன். பெயரொப்பு மையைத் தீதாகப் பயன்படுத்தித் தமிழினத்தின் தொன்மையையும் தலைமையையும் மறைப்பதும் குறைப்பதும், தமிழ்ப் பகைவரான ஆரிய வரலாற்றாசிரியரின் வழக்கமான குறும்பாகும். காய்சின வழுதி என்னும் பெயரினன் ஒருவனும் பிற்காலப் பாண்டியருள் இன்மை காண்க. தலைக்கழகப் பாண்டியர் எண்பத்தொன்பதின்மர் பெயரும் குறித்திருப்பின், அவரனைவரும் குமரிநாட்டின் ரென்பது வெள்ளிடை மலையாகும்.

தலைக்கழக இருக்கை கடல் கொள்ளப்பட்ட மதுரை என்று தெளிவாக அடைகொடுத்துப் பிரித்திருத்தலை ஊன்றி நோக்குக.

அகத்தயம் தலைக்கழக நூலன்று. முதலிரு கழக நூல்கள் அத்தனையும் அழிக்கப்பட்டுவிட்டன. தமிழ் உலக முதன் மொழி. அதன் இலக்கியமும் உலக முதல் அறிவியற் படைப்பு. ஆதலால் வரலாற்றிற் கெட்டாத தொன்மைத்தது. நெடுகலும் தொடர்ந்து தமிழகப் பொது வரலாறெழுதும் வழக்கம் பண்டை நாளிலில்லை. நாடுவாரியாகவும் ஆட்சி வாரியாகவும் பகுதிபகுதியாக எழுதப்பட்ட வரலாறுகளும் வரலாற்றுச் சான்றுகளும், அவ்வப்போது நேர்ந்த போர்களில் அழிக்கப்பட்டு விட்டன. கி.மு.1200 போல் எழுதப்பட்ட அகத்தியமே கி.பி.7ஆம் நூற்றாண்டில் முதற் பண்டை நூலாக இருந்தனால், அது தலைக்கழக இலக்கண நூலாக

இறையனாரகப் பொருளுரையிற் குறிக்கப்பட்டது. தலைக்கழகக் காலமோ கி.மு.52 நூற்றாண்டுக்கு முந்தியது.

அவர் சங்கமிருந்து செய்யுள் செய்தது அல்லது நூலியற்றியது என்னாது, “அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது” என்று தலைக்கழகத்திற்குங் கூறியதனால், அக் கழகத் தோற்றத்திற்கு முன்பே நல்லிசைப் புலவர் பலர் செய்யுள் செய்திருந்தனரென்பதும் அவற்றை ஆராய்வதே கழகத்தின் முதல் நோக்கமும் முதன்மையான நோக்கமு மென்பதும், அறியப்படும். இதனால் தமிழின் தொன்மையும் பண்பாடும் ஒருங்கே விளங்கும்.

இடைக்கழகம் :

இடைச்சங்கம்

இனி, இடைச்சங்க மிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங் கோழியும் மோசியும் வெள்ளூர்க் காப்பியனும், சிறுபாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக்கோனும் கீரந்தையுமென இத் தொடக்கத்தார் ஐம்பத் தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்தெழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலையகவலுமென இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமுந் தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூத புராணமுமென இவை யென்ப. அவர் மூவாயிரத் தெழுநூற்றி யாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கமிரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து கபாட புரத்தென்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது.

இதன் விளக்கம் :

அகத்தியர் தென்னாடு வந்தது கி.மு.12ஆம் நுற்றாண்டென்று முன்னரே கூறப்பட்டது. அதற்குள் முதலிரு கழக விருக்கையும் மூழ்கிவிட்டன. தொல்காப்பியர் காலம் கி.மு.6ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டு. ஆகவே, அகத்தியரும் தொல்காப்பியரும் ஒருகால வாணராகவோ இடைக்கழகப் புலவராகவோ இருந்திருக்க முடியாதென்பது வெள்ளிடை மலை.

தமிழ்ப் புலவர் வரலாற்றில், அகத்தியரையும் தொல்காப்பியரையும் ஆசிரியரும் மாணவருமாக இணைத்தது, உண்மை வரலாற்றிற்கு ஒரு பெரிய இடறுகட்டை யாகும். முதலிரு கழக இலக்கிய மனைத்தும், நூற்பெயரும் நூலாசிரியர் பெயரும் எதிர்காலத்தில் எவருக்கும் தெரியாதவாறு கூட்டுக் கட்டுப்பாட்டுடன் அழிக்கப்பட்டுவிட்டமையால், அகத்தியரே முதல் தமிழாசிரியரும் அகத்தியமே முதல் தமிழிலக்கணமும் ஆகக் கருத நேர்ந்துவிட்டது. அகத்தியம் மாபிண்டம் என்னும் முத்தமிழிலக்கணம். இலக்கணத்திற்கு முந்தியது இலக்கியம் என்பதும், இலக்கணத்துள்ளும் முத்தமிழிலக்கணத்திற்கு முந்தியது இயற்ற மிழிலக்கணம் என்பதும், இயற்றமிழிலக் கணத்துள்ளும் பொருளுக்கு முந்தியது சொல்லும் சொல்லிற்கு முந்தியது எழுத்தும் ஆகும் என்பதும், ஒவ்வொரு துறையிலும் அதன் படிநிலைகளிலும் முதலும் வழியும் சார்பும் சார்பிற் சார்புமாகப் பல நூல்கள் பன்னூற்றாண்டு வழங்கிய பின்னரே, பெரும்பாலும் நிறைவான அளவை நூல் தோன்றுமென்பதும், பண்டையாசி ரியர்க்குத் தெளிவாகத் தெரிந்ததில்லை.

அகத்தியர்க்குத் தொல்காப்பியர் நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டு பிற்பட்டவர். அகத்தியத்திற்கு அடுத்துத் தோன்றிய இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியமாதலின், பிற்காலத்தார் தொல்காப்பியரை அகத்தியரின்

மாணவராகக் கருதிவிட்டனர். அகத்தியரைத் தொல்காப்பியத்தில் குறிப்பாக வேனும் ஓரிடத்துங் குறிப்பிடாமையும், “என்ப”, “என்மனார் புலவர்”, “எனமொழிப” என்றும், பிறவாறும், முன்னூலா சிரியரைப் பன்மையிலேயே தொல்காப்பியர் நெடுகலுங் குறித்துச் செல்லுதலும், அவர் உடன் மாணவரான பனம் பாரனார்.

     “முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிய

புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்”

என்றும் தம் சிறப்புப்பாயிரத்திற் கூறியிருத்தலும், தொல்காப்பியர்க்கு அகத்தியரொடு தொடர் பின்மையைத் தெளிவாகக் காட்டும். ஆயினும் நச்சினார்க்கினியர்,

     “மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்

தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்

தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த

துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்”

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் சிறப்புப் பாயிரத்தை நம்பி, பகுத்தறிவிற் கொவ்வாத ஒரு கதையைக் கட்டிவிட்டார்.

அகத்தியம் இறந்துபட்டமைக்குத் தொல் காப்பியரின் எதிர்ச் சாவிப்பு கரணியமன்று. அது முத்தமிழ் முழு நூலாயிருந்து தமிழின் பெருமையைச் சிறப்பக் காட்டினதனாலும், தொல்காப்பியம் போல் ஆரியக் கருத்துகளைப் புகுத்தாமையாலும், வடசொல்லைச் செய்யுட் சொல்லாகக் கொள்ளாமையாலுமே, முதுகுடுமிப் பெருவழுதி போன்றார் காலத்தில் தமிழ்க் கடும் பகைவரான ஆரிய வெறியரால் அழிக்கப்பட்டு விட்டது.

அகத்தியரையும் தொல்காப்பியரையும் முதலிற் குறித்ததனால் இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன் சிறு பாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக் கோன், கீரந்தை என்பவரும் பிற்காலத்தவரே.

துவரைக்கோன் என்றது, எருமையூர் (மைசூர்); நாடென்னும் கன்னட நாட்டில் இன்று துவாரசமுத்திரம் என வழங்கும் துவரை நகரைத் தலைநகராகக் கொண்ட, இருங்கோவேளின் முன்னோன்.

கழகமிருந்தார் தொகை ஐம்பத் தொன்பதாகவும் உள்ளிட்டுப் பாடினார் தொகை மூவாயிரத்து எழுநூறாகவும் குறைந்து போனமைக்கு, பனிமலைவரை வடக்கிலுள்ளது போன்ற ஒரு பெரு நிலப்பரப்பு முழுகிப்போனமையே கரணியம்.

அவர் பாடியதாகச் சொல்லப்படும் கலியும் குருகும் வெண்டாளியும் வியாழமாலையகவலும் பிறவும் இறந்துபட்டன. அவையும் அக்காலத்துப் பொதுவிலக்கியமே.

அவர்க்கு இலக்கண நூலென்ற ஐந்தும் இடைக்கழகத்திற்கும் கடைக்கழகத்திற்கும் இடைப்பட்டவையே மாபுராணமும் பூதபுராணமும் இறந்துபட்டன. இசைநுணுக்கம் இன்றும் கையெழுத்துப் படியாயிருப்பதாகச் சொல்லப் படுகின்றது. ஆயின், அச்சேறி வெளிவராமையோடு மறைவாகவும் உள்ளது. புராணம் என்னும் வட சொல்லே, மாபுராணமும் பூத புராணமும் ஆரியம் வழக்கூன்றிய பிற்காலத்தன வென்பதைத் தெரிவிக்கும். அதே சமயத்தில், அவை கூறும் இலக்கணச் செய்தியின் தொன்மையையும் உணர்த்தும்.

புராணம் என்னும் பெயர் வட மொழியிலக்கியத்திற் பழங்கதை அல்லது அதுபற்றிய பனுவலையே குறிக்கும். பிற்காலத்தில் படைப்பு, துணைப்படைப்பு, மன்னூழி (மன் வந்தரம்);, அரச மரபுகள், அவற்றின் வரலாறுகள் ஆகிய ஐந்தையும் பற்றிக் கூறுவதே புராணம் என்று ஒரு வரையறை செய்யப்பட்டது. அவ் வரையறைக்கு முந்தி மாபுராணமும் பூதபுராணமும் தோன்றி யிருக்கலாம்.

இடைக் கழகத்தைப் புரந்த பாண்டியர் வெண்டேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை ஐம்பத்தொன்பதின்மர். தலைக்கு நாற்பதாண்டு நிரவலாக வைத்துக் கொள்ளின். அவர் ஆண்ட காலம் ஈராயிரத்து முந்நூற்றறுப தாண்டாகும். முக்கழக வரலாற்றில் அது மூவாயிரத்தெழு நூறாண்டென்றது, கழகமில்லாத இடைக் காலத்தையும் சேர்த்ததாகல் வேண்டும். ஏனெனின், தலைக்கழக விருக்கையை உட்டெகாண்ட ஒரு பெரு நிலப்பரப்பு திடுமென மூழ்கியபின், உடனடியாக ஆட்சி ஏற்பட்டிருக்க முடியாது. ஆட்சி ஏற்பட்டபின்னும், நாடு முழுதுந் தழுவிய தலைமைப் புலவர் கழகம் உடன் தோன்றியிருக்க முடியாது. ஆதலால், ஆயிரத்து முந்நூற்று நாற்பதாண்டு இடையீடு பட்டிருத்தல் வேண்டும். கடல்கோளுக்குத் தப்பிய குடிகளைக் குடியேற்றவும், புதிய அரசமைக்கவும் ஆட்சிக்கு மருதநிலத்தலைநகரும் வணிக வளர்ச்சிக்கு நெய்தல்நிலத்தலைநகரும் எடுப்பிவிக்கவும், எதிர்காலக் கடல்கோள் தடுப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், மீண்டும் புலவர் கழகந் தோற்று வித்தற்கேற்ற செழிப்பும் அமைதியும் நாட்டில் நிலவவும், அத்துணைக் கால இடையிடும் வேண்டியது இயற்கையே.

வெண்டேர்ச் செழியன் முடத்திருமாறன் என்னும் பெயர்கள் பிற்காலத்துப் பாண்டியர் பெயர் போலாது தூய தமிழாயிருத்தல், ஆரிய வருகைக்கு முந்திய நிலையைக் காட்டும்.

சிலர், முடத்திருமாறன் கடல்கோளுக்குத் தப்பும் முயற்சியில் முடம்பட்டு அப் பெயர் பெற்றானென்று கூறுவர். வன் பிறப்பிலேயே முடம்பட்டு மிருந்திருக்கலாம்.

புலவர் தொகை போன்றே, பாண்டியர் தொகையும் அவருட் பாவரங்கேறினார் தொகையும் குறைந்தமை, பழம் பாண்டியநாடு மிகக் குறுகிப் போனமையைக் காட்டும்.

கபாடபுரம் என்னும் பெயர் வான்மீகி யிராமாயணத்தினின்று அறிந்தது. அச் சொல்லிற்கு வடமொழியில் வாயில் அல்லது கதவு என்பதே பொருள். அண்மையில் வெளிவந்த (P.S.); கிருட்டிணசாமி ஐயரின் மொழிபெயர்ப்பிலும், கபாட என்பது வாயிலின் கதவு என்றே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (பாண்டயாநாம் கபாடம் த்ரஷயத = பாண்டிய நாடுகளின் உட்புகும் வாயிலின் கதவைக் காண்பீர்கள்);.

ஆரிய வருகைக்கு முற்பட்ட பழம் பாண்டி நாட்டு நகருக்கு வேற்றுமொழிப் பெயர் அமைந்திருத்தல் இயலாது. கபாட என்னும் சொல்லிற்கு வடமொழியில் மூலமும் இல்லை. ஆறு, கடலொடு கலக்குமிடம் வாய போன்றிருத்தலால், அதற்குக் கயவாய் என்று பெயர். (ஒ.நோ.: Portsmouth, Plymouth); கயம் = கடல். குமரியாறு கடலொடு கலந்த இடத்திலேயே கபாடபுரம் என்னும் பட்டினம் இருந்திருத்தல் வேண்டும். அதன் பெயரும் அதனொடு முழுகிப் போயிற்று.

   ஒருகால், புகார் (ஆறு கடலிற் புகுமிடம்); என்பது போன்றே கயவாய் என்பதும் சிறப்புப் பெயராய் வழங்கி யிருக்கலாம்;அல்லது, புதவம் (வாயில்); என்று பெயரிருந்திருக்கலாம். கபாட என்னும் சொல் கதவம் என்னும் தென்சொல்லின் முறைமாற்றுத் திரிபாயுமிருக்கலாம்.

கடைக்கழகக் காலத்தின் முற்பகுதியிலும் குமரியாறிருந்ததாகத் தெரிவதால், காவிரி யாறிருக்கவும் காவிரிப்பூம்பட்டினம் முழுகிப் போனதுபோன்றே, குமரியாறிருக்கவும் கபாடபுரம் என்னும் பட்டினமும் முழுகிப் போயிருத்தல் வேண்டும். அம் முழுக்கும் ஒரு பகுதி முன்னும் ஒரு பகுதி பின்னுமாக இருந்திருக்கலாம்.

தென்னாட்டார் வடதிசையிற் கங்கையாடச் சென்றது போன்றே, வடநாட்டார் தென்றிசையிற் குமரியாட வந்ததும், பண்டைக்காலத்திற் பெருவழக்காயிருந்தது.

     “தெனா அது உருகெழு குமரியின் தெற்கும்” (புறம்.6);.

     “தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும்” (சிலப்.8:1, அடியார், உரை);.

என்பன குமரியாற்றின் பெருமையைக் காட்டும்.

இடைக்கழக விருக்கையைக் கொண்டது இரண்டாம் அல்லது மூன்றாங் கடல்கோள். அது கி.மு.1500 போல் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏறத்தாழ அதுவே கீழையாரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலமும்.

ஆகவே, முதலிரு கழகமும் முற்றும் ஆரியத் தொடர்பற்றன என்பதை அறிதல் வேண்டும் (தமிழிலக்கிய வரலாறு பக்.6273);.

முக்கவர்த்தடி

 முக்கவர்த்தடி mukkavarttaḍi, பெ.(n.)

   மீன், பன்றி முதலியவற்றைக் குத்த உதவும் ஈட்டி வகை (மண்டா.);; harpoon, gaff.

     [முக்கவர் + தடி.]

மூன்று கிளைகளைக் கொண்ட ஈட்டி வகை.

முக்கவெளி

 முக்கவெளி mukkaveḷi, பெ.(n.)

   ஒன்பான் மணிகளில் ஒன்று (புட்பராகம்);; one of nine gems Topaz (சா.அக.);.

முக்காடு

முக்காடு mukkāṭu, பெ.(n.)

   மறைவுச் சீலை, தலையை மூடிக் கொள்ள உதவும் துணி; veil or cloth worn to cover one’s head.

     “கவலையுட் கொடு போர்த்த முக்காடு” (பிரபோத.3:55);.

அவள் கெட்ட கேட்டுக்கு முக்காடு வேறா? முக்காட்டின் கீழே கைகாட்டுகிறது (பழ.அக.);. முக்காட்டுக்குள்ளே மூடுமந்திரமா? (பழ.அக.);.

ம. முக்காடு

     [முட்டாக்கு → முக்காடு. முட்டாக்கு பார்க்க.]

முக்காட்டங்கி

 முக்காட்டங்கி mukkāṭṭaṅgi, பெ.(n.)

   மகளிருடைய தலைமறைவுச் சீலை (வின்.);; hood or veil, worn by women.

     [முக்காடு + அங்கி. தலையை மறைத்துக் கொள்ளப்பயன்படும் துணி.]

முக்காட்டுக்கூறை

முக்காட்டுக்கூறை mukkāṭṭukāṟai, பெ.(n.)

   1. மணப் பெண்ணுக்குப் பெற்றோர் கொடுக்கும் தலைமறைவுச் சீலை (வின்.);; garment given by the parents to the bride to cover her head.

   2. ஒருத்தி கைம்பெண்ணாகும் போது அவளது பெற்றோர் கொடுக்கும் சீலை (இ.வ.);; garment given by the parents of a woman on the occasion of her widowhood.

     [முக்காடு + கூறை. கூறை = ஆடை, துணி.]

முக்காட்டுச்சீலை

 முக்காட்டுச்சீலை mukkāṭṭuccīlai, பெ.(n.)

முக்காட்டங்கி (வின்.); பார்க்க; see {}.

     [முக்காடு + சீலை. சிலை = துணி.]

முக்காட்டுநித்திரை

 முக்காட்டுநித்திரை mukkāṭṭunittirai, பெ.(n.)

   முகத்தையும் உடம்பையும் மூடித் தூங்குவது; sleeping covering the face.

     [முக்காட்டு + Skt. நித்திரை.]

முகத்தை மூடித் தூங்குவதால் இரண்டு கண்களுக்கும், தோள்களுக்கும் வலிவுண்டாகும். அன்றியும் குளிர்வாடை, வெயில், வேகம், தூசி, பனிக்காற்று இதனால் விளையும் நோய்கள் நீங்கும்.

முக்காட்டுப்பூச்சி

 முக்காட்டுப்பூச்சி mukkāṭṭuppūcci, பெ. (n.)

   சிவப்புக் கம்பளிப் பூச்சியின் தாய்ப்பூச்சி (கோவை.);; mother of red caterpillar.

     [முக்காட்டு + பூச்சி.]

முக்காணி

முக்காணி1 mukkāṇi, பெ.(n.)

எண்பதில் மூன்று பங்குடைய பின்ன வெண்:

 the fraction 3/80 as threekāni.

     [மூன்று + காணி – முக்காணி]

 முக்காணி2 mukkāṇi, பெ. (n.)

   தன்னிச்சையாய் ஓடாமலிருப்பதற்கும் தன்பால் மூத்திரம் முதலியவற்றைக் குடியாமலிருப்பதற்கும் மாட்டின் கழுத்திலிடும் முக்கோண வடிவாயமைந்த சட்டகம், தளை (இ.வ.);; triangular frame on the neck of cattle to prevent them from going astray or drinking their own milk or urine.

     [மூன்று + கோணம் – முக்கோணம் → முக்காணி]

     [P]

 முக்காணி3 mukkāṇi, பெ.(n.)

முக்காணியர் பார்க்க;(G.Tn. D. 1.507); see mu-kkāniyar.

 முக்காணி mukkāṇi, பெ. (n.)

   ஏற்றக்கொம்பில் சாலோடு இணைக்கும் கருவி; a connective device in piccotah pole.

     [மூன்று+(கால்);காலி-கானி]

முக்காணி முடிச்சு

 முக்காணி முடிச்சு mukkāṇimuḍiccu, பெ. (n.)

   முடிச்சு வகை; a kind of knot.

     [முக்காணி+முடிச்சு]

முக்காணிக்கொம்பு

 முக்காணிக்கொம்பு  mukkāṇikkombu, பெ.(n.)

   ஏற்றக் கோலின் அடிப்பகுதியில் உள்ள துளையில் பொருத்தப்பட்டிருக்கும் Q&minu; wooden pole, joined in the hole of the lift at the bottom.

     [முக்காணி + கொம்பு]

முக்காணியர்

 முக்காணியர் mukkāṇiyar, பெ. (n.)

   முன்குடுமி தரிப்பவரும் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்காணி ஊரைச் சார்ந்தவருமாகிய பார்ப்பன வகையார்; a class of Brahmins, who wear the hair tuft in front of the head, as belonging to the Village {} in Tirunelveli District.

     [முக்காணி ஊர்ப்பெயர். முக்காணி → முக்காணியர் = முக்காணி என்னும் ஊரில் வாழ்பவர்.]

முக்காணியூர்

 முக்காணியூர் mukkāṇiyūr, பெ. (n.)

   மூவேந்தர்களின் பொதுப்பிறப்பிடமாகக் கருதப்படும் ஊர்; mukkani-y-Dr considered to be the common birth place of Chera, Chola, Pandya dynasties of Tamil royal decendency.

     [மூ(ன்று);+காணி+ஊர்]

முக்காதம்

 முக்காதம் mukkātam, பெ.(n.)

   மூன்று காத தூரம்; three {} distance.

     “முக்காதம் சுமந்தாலும் முசல் கைதூக்குதான்” (பழ.அக.);.

     [மூன்று + காதம்.]

முக்காதலர்

 முக்காதலர் mukkātalar, பெ.(n.)

   கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள் (வின்.);; the triple friends viz. {}.

     [மூன்று + காதலர் – முக்காதலர்.]

முக்காத்துட்டு

முக்காத்துட்டு mukkāttuṭṭu, பெ.(n.)

   பழங்காலக் காசு வகை; an ancient coin.

     “முக்காத்துட்டுக்கு மூன்று தரம் காலில் விழுவான். முக்காத்துட்டுக்குப் பயனில்லாதவன்”

     [முக்கால் + துட்டு.]

 முக்காத்துட்டு mukkāttuṭṭu, பெ. (n.)

   பழைய காலத்துமூன்று காசு; three paisain arupee of 192 paisa value.

     [முக்கால்+துட்டு]

நூறு காசுகள் கொண்ட புதிய உருவா_அறிமுக மாவதற்கு முன்பு ஆங்கில ஆட்சிக் காலத்து உருவா (12 விடு காசு-1 அனா, 16 அனா-1 ரூபாய்); 192 விடுகாக மதிப்பாதலால் 4 விடுகாசு ஒரு துட்டு எனும் பெயர் பெற்றது. துட்டு என்பது ஒரு அனாவில் மூன்றில் ஒரு பங்கு மதிப்புடையது. முக்கால் துட்டின் மதிப்பு 3 விடுகாக.

முக்கானோக்கு

 முக்கானோக்கு  mukkāṉōkku, பெ.(n.)

முக்கால்நோக்கு (வின்.); பார்க்க; see mukkäl-nøkku.

     [முக்கால் + நோக்கு.]

முக்காயவேளை

 முக்காயவேளை mukkāyavēḷai, பெ.(n.)

   மருந்துச் செடி வகை; five leaved wild indigo Tephrosia senticosa.

முக்காய்

 முக்காய் mukkāy, பெ. (n.)

   கடுக்காய், நெல்லி, தான்றி என்னும் மூன்று வகைக் காய்கள்; three kinds of fruits viz. gallnut, Indian gooseberry, bellerica.

     [மூன்று + காய்.]

முக்காரக்கல்

 முக்காரக்கல் mukkārakkal, பெ.(n.)

   குத்துக்கல்லின் கீழுள்ள கல்; stone standing on edge as a prop in a lift used for irrigation.

முக்காலமறிந்தவன்

 முக்காலமறிந்தவன் mukkālamaṟindavaṉ, பெ.(n.)

   மூன்று காலங்களையு மறிந்த அறிஞர் (ஞானி);; sage, as knowing the past, the present and the future.

     [முக்காலம் + அறிந்தவன்.]

முக்காலம்

முக்காலம்1 mukkālam, பெ.(n.)

   1. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங்கள்; the three divisions of time, viz. {}, etirvu.

     “அம்முக்காலமுங் குறிப்பொடுங் கொள்ளும்” (தொல்.சொல். 200);.

   2. விரைவு (துரிதம்);, நடுநிலை (மத்திமம்);, காலத்தாழ்வு (விளம்பம்); என்னும் இசைக்குரிய மூன்று காலம் (திரிகாலம்);; tempo, a measure of time, three in number.

     [மூன்று + காலம்.]

 முக்காலம்2 mukkālam, பெ.(n.)

   மூன்று வேளை;   காலை, நண்பகல், மாலை; the three times a day morning, noon and evening.

கோயிலில் முக்காலமும் பூசை நடைபெறுகிறது.

     [மூன்று + காலம்.]

முக்காலி

முக்காலி mukkāli, பெ.(n.)

   1. மூன்று கால் கொண்ட இருக்கை; three footed stool, triped.

     “பெண்ணையும் கொடுத்து முக்காலியும் சுமந்தாப்பலே” (கோவை.);.

   2. தீ (தைலவ.பாயி.61);; fire.

     [மூன்று + (கால் → ); காலி..]

     [p]

முக்காலும்

 முக்காலும் mukkālum, கு.வி.எ.(adv.)

   எப்போதும் (இ.வ.);; for ever.

முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்கு ஆகுமா? (பழ.அக.);.

     [முக்கால் → முக்காலும்.]

முக்காலேமூன்றுவீசம்

முக்காலேமூன்றுவீசம்1 mukkālēmūṉṟuvīcam, கு.வி.எ.(adv.)

   பெரும்பாலும்; almost certainly.

முக்காலே மூன்று வீசம் வந்துவிடுவான் (உ.வ.);.

     [முக்கால் + மூன்று + வீசம்.]

 முக்காலேமூன்றுவீசம்2 mukkālēmūṉṟuvīcam, பெ.(n.)

   கீழ்வாய் இலக்கத்தில் ஒன்று (15/16);; a fraction number 15/16.

     [முக்கால் + மூன்று + வீசம். வீசம் = 1/16 பதினாறில் ஒன்று. முக்கால் என்பது 12/16, மூன்று வீசம் 3/16;

   12/16 + 3/16 15/16 முக்காலும் மூன்று வீசமும்.]

முக்காலேயரைக்கால்முழம்

 முக்காலேயரைக்கால்முழம் mukkālēyaraikkālmuḻm, பெ. (n.)

   நீட்டலளவை (முழத்தால் அளக்கும்); முறையில் ஒருவகை; linear measurement of measuring a statue by elbow.

முதல் இராசராசனுடைய மனைவியருள் சோழமாதேவியார் திருஇராச ராசேசுவரத்தில் செய்து அமைத்த மாழையாலான ஆடவல்லான் திருமேனியை இம்முறையால் அளந்தனர்.

     [முக்கால் + அரைக்கால் + முழம்.]

முக்கால்

முக்கால்1 mukkāl, பெ. (n.)

   1. நான்கில் மூன்று பங்குடைய பின்னவெண்; the fraction 3/4 as three quarters.

மணி ஒன்றே முக்கால். “முக்காற் பணத்துக் குதிரை மூன்று பணத்துப் புல் தின்றாற் போல” (பழ.அக.);.

   2. ஒருவகை இசை (சந்தம்);; a kind of metre.

     “திருமுக்கால்” (தேவா.86, பதிகத் தலைப்பு);.

     [மூன்று + கால். கால் = ஒரு பொருளின் நான்கில் ஒரு பாகம்.]

 முக்கால்2 mukkāl, பெ. (n.)

   1. மும்முறை; three times.

     “ஆரியனை முக்காலும் வலங்கொடு” (கம்பரா.அதிகாய.87);.

   2. மூன்றாவது முறை; a third time.

     “முக்காலின் முடிந்திடுவான் முயல்வான்” (கம்பரா.மாரீச.212);.

   3. முக்காலம், 1 பார்க்க; see {}, 1

     [மூன்று + கால். கால் = ஒரு பொருளின் நான்கில் ஒரு பாகம்.]

முக்கால்நோக்கு

 முக்கால்நோக்கு mukkālnōkku, பெ.(n.)

   நால்வகை கோள் (கிரக); நோக்குக் கூறுள் ஒரு கோள் (கிரகம்); முக்கால் பார்வையோடு நோக்குகை; aspect of a planet having three quarters of a sight one of four kiraka{}.

     [முக்கால் + நோக்கு.]

முக்கால்புள்ளி

 முக்கால்புள்ளி mukkālpuḷḷi, பெ.(n.)

   எழுதும் போதோ, அச்சிடும் போதோ விளக்கம், எடுத்துக்காட்டு முதலியவைத் தரப்படுவதற்கு முன் பயன்படுத்தப்படும் (:என்னும்); குறி; colon.

கட்டுரையில் முக்கால் புள்ளியை அடிக்கடி பயன்படுத்துகின்றார்.

     [முக்கால் + புள்ளி.]

முக்கால்வட்டம்

முக்கால்வட்டம் mukkālvaṭṭam, பெ.(n.)

   கோயில் (T.A.S. 3, 193);; temple, shrine.

     [முக்கால் + வட்டம்.]

முக்கால்வளையம்வேர்

 முக்கால்வளையம்வேர் mukkālvaḷaiyamvēr, பெ.(n.)

   மூக்காய்வேளை வேர்; root of {}.

முக்காழி

 முக்காழி  mukkāḻi, பெ. (n.)

   மூன்று கொட்டையுள்ள பனம்பழம் முதலியன; fruit containing three stones or seeds, as of the palmyra palm.

முக்காழி யிருப்பை.

     [மூன்று + (காழ் →); காழி.]

முக்காழிபனங்காய்

முக்காழிபனங்காய்  mukkāḻibaṉaṅgāy, பெ.(n.)

முக்காழி பார்க்க; 35; see mu-k-kāli.

     [முக்காழி + பனங்காய்]

முக்காழ்

முக்காழ்  mukkāḻ, பெ.(n.)

   மூன்று கோவையாலான முத்துவடம்; pearl necklace of three strands.

     “மயிர்ப்புறஞ் கற்றறிய கயிற்கடை முக்காழ்”(மணிமே.3:135);.

     [மூன்று + காழ்.]

முக்காவனாடு

முக்காவனாடு mukkāvaṉāṭu, பெ.(n.)

   தமிழகத்துப் பழைய சிறு நாடுகளுள் ஒன்று; a small district in ancient {}.

     “முக்காவனாட்டு ஆமூர்மல்லனை” (புறநா. 80, தலைப்பு);.

     [மூன்று + காவல் + நாடு.]

முக்காவல்நாட்டுஆமூர்மல்லன்

முக்காவல்நாட்டுஆமூர்மல்லன் mukkāvalnāṭṭuāmūrmallaṉ, பெ.(n.)

   தித்தனுடைய மகன்; Tittan’s son.

இவன் சோழன் தித்தனுடைய மகன். மற்போரிற் சிறந்தவன். சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியாற் போரிட்டு கொல்லப்பட்டவன். சாத்தந்தையரால் பாடல் பெற்றவன் (புற.நா.80);.

     [முக்காவல் + நாட்டு + ஆமூர் + மல்லன்.]

முக்காவெள்ளாமை

 முக்காவெள்ளாமை mukkāveḷḷāmai, பெ.(n.)

   சரியான விளைச்சலின் அளவில் முக்கால் பாகம் (கோவை);; as three quarters of yielding.

     [முக்கால் + வெள்ளாமை.]

முக்காவேளை

முக்காவேளை mukkāvēḷai, பெ.(n.)

முக்காய்வேளை (பதார்த்த.472); பார்க்க; see {}.

     [முக்காய்வேளை → முக்காவேளை.]

   தெ. முக்கு;   க. முக்கிரி;ம. முக்குக.

     [முற்கு → முக்கு → முக்குதல். முற்கு எழுத்திலா ஒலி.]

முக்கிமுக்கி

 முக்கிமுக்கி  mukkimukki, வி.எ.(adv.)

   பெருமுயற்சி செய்து; to make great efforts.

துணியை நாலு முக்கிமுக்கிக் காயப்போடு. முக்கி முக்கி உண்டான்.

முக்கிமுனகி

 முக்கிமுனகி  muggimuṉagi, வி.எ.(adv.)

   ஒன்றைச் செய்வதற்கு மிகவும் இடர்பட்டு; with much difficulty, groaning.

முக்கிமுனகி எப்படியோ வீட்டுக்கான முன்பணத்தைக் கொடுத்துவிட்டேன். குழந்தை முக்கி முனகி சோறு தின்றது.

முக்கிமுனகு-தல்

முக்கிமுனகு-தல்  muggimuṉagudal,    5 செ.கு.வி. (v.i.)

முக்கிமுனங்கு-தல் பார்க்க; see mukk-munargu-.

     [முக்கு + முனகு-தல் → முக்கிமுனகு-தல்.]

முக்கிமுனங்கு-தல்

முக்கிமுனங்கு-தல் mukkimuṉaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மனமின்மை காட்டி முணுமுணுத்தல்; to grumble.

   2. மிகத் துன்புறுதல் (உ.வ.);; to suffer much.

   3. மிகையாக உண்ணுதல்; to eat large quantity of food.

     “திரையணற் கொடுங்கவுள் நிறைய முக்கி” (நற்.22:5);.

     “பாசவன் முக்கித் தண்புனற் பாயும்” (புறநா.63:13);.

     [முக்கு + முணங்கு-தல் → முக்கிமுனங்கு தல்.]

முக்கியத்தர்

முக்கியத்தர் mukkiyattar, பெ. (n.)

   1. செல் வாக்கும் சிறப்பும் உடையவர் முதன்மை யானவர்; person of importance.

     “உயர் முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி என்ன முடிவு செய்தார்கள்”

மறுவ. முதன்மையாளர், முந்தாளி, முகத்தாளி, பெருமகன்.

     [Skt. mukyasta → த. முக்கியத்தர்]

முக்கியத்துவம்

 முக்கியத்துவம் mukkiyattuvam, பெ. (n.)

   சிறப்பு பொருந்திய தன்மை; importance.

     “இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரமிது”.

மறுவ. முதன்மை, முகாமை

     [Skt. mukhya+tva → த. முக்கியத்துவம்]

முக்கியம்

முக்கியம் mukkiyam, பெ. (n.)

   1. சிறப்புடையது; that which is primary, principal or important.

     “முடித்துக் கொண்ட முக்கியமும்” (திவ். திருவாய். 5, 10, 9);

   2. தலைமை; greatness, eminence, superiority.

     “பிண்டியா ரடியாரென்னு முக்கியமே” (திருநூற்.73.);

மறுவ. முகாமை, முதன்மை

     [Skt. mukhya → த. முக்கியம்]

முக்கிளைக்கள்ளி

 முக்கிளைக்கள்ளி mukkiḷaikkaḷḷi, பெ.(n.)

   உறைப்பான பால் போன்ற சாறுடைய செடிவகை; a kind of spurge.

     [முக்கிளை + கள்ளி.]

முக்கீச்சாரம்

 முக்கீச்சாரம் mukāccāram, பெ.(n.)

   கோயில்; temple.

சோழநாட்டு உறையூரில் உள்ள கோயில். மூவேந்தரும் சேர்ந்து வழிபட்டக் கோயில்.

     “சீரினால் அங்கொளிர் தென்வன் செம்பியன் வில்லவன் சேரும் முக்கீச்சரத் தடிகள் செய்கின்றதோர் செம்மையே” (சம்ப.தேவாரம்);.

முக்கீரம்

 முக்கீரம் mukāram, பெ.(n.)

   ஒரு வகைச் செடி; a kind of plant.

முக்கு

முக்கு1 mukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முயற்சியால் இறுகப் பிடித்து மூச்சினை ஒலிபட வெளிவிடுகை; to strain, as a woman in travail.

   2. பெருமுயற்சி செய்தல் (உ.வ.);; to make great efforts.

எவ்வளவு முக்கியும் மூட்டையைத் தூக்க முடியவில்லை.

   3. ஒரு செயலைச் செய்வதற்காக மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி அழுத்தம் தருதல்; strain in order to do something, groan.

எடை அதிகம் உள்ள பாறையை முக்கிமுக்கித்தான் தள்ள வேண்டி இருந்தது.

   தெ. முக்கு;   க. முக்கிரி;ம. முக்குக.

     [முற்கு → முக்கு → முக்குதல். முற்கு எழுத்திலா ஒலி.]

 முக்கு2 mukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   நிரம்ப வாயிற் பெய்து உண்ணுதல்; to eat in large mouthfuls.

     “பாசவன் முக்கி” (புறநா.63);.

உணவை ஒரு முக்கு முக்கினான்.

     [முழுகு → முழுங்கு;

முழுங்குதல் = தொண்டைக்குள் வயிற்றுக்குள் முழுகச் செய்தல். முழுகு → முக்கு தல்.]

 முக்கு3 mukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மூழ்குவித்தல்; to press anything under water, to immerse.

     “தீர்த்தம்…… அதிலெனை முக்கியெடுத்து” (தணிகைப்பு. நந்தி.60);.

குளத்தில் நன்கு முக்கிக் குளித்தான்.

     [முழுக்கு தல் → முக்கு – தல். முழுக்கு தல் = அமிழ்த்துதல்.]

 முக்கு4 mukkudal,    5 செ.கு.வி.(v.i.)

   மூழ்குதல்; to immerse one’s self.

     “முத்துப் படுந் துறையில் முக்குவார் முகத்தைக் கொடுத்துப் பழங் கொள்ளுவார்கள்” (திவ்.திருமாலை.1, வியாக்.பக்.14);. நீரில் மூழ்கி எழுந்தான்.

     [முழுங்கு தல் → முங்கு தல் → முக்கு தல் = தண்ணீர் முதலிய நீர்மத்தில் ஒருபொருளை முழுவதுமாக நனையச் செய்தல்.]

 முக்கு5 mukku, பெ.(n.)

   1. முக்கல், 1, 2 (உ.வ.); பார்க்க; see mukkal, 1, 2.

   2. மூச்சுத் திணறுகை (வின்.);; suffocation.

   3. நோய் வகை; a disease.

     “முக்கு நோயற வோட்டு மருந்தென” (சிவதரு.பாவ.69);.

     [முற்கு → முக்கு.]

   தெ. முக்கு;   க. முக்கிரி;ம. முக்குக.

     [முற்கு → முக்கு → முக்குதல். முற்கு எழுத்திலா ஒலி.]

 முக்கு6 mukku, பெ.(n.)

   சாலை, தெரு, சந்து முதலியவற்றின் முனை; corner, of a street, etc.

முக்கு அங்காடி வரை போய் வருகிறேன். தெரு முக்கில் என்ன கூட்டம்?

ம. முக்கு

     [முடுக்கு → முக்கு முடுக்கு = மூலை, கோணல் தெரு.]

முக்குக்கடுக்கன்

 முக்குக்கடுக்கன்  mukkukkaḍukkaṉ, பெ.(n.)

   கடுக்கன் வகை (இ.வ.);; a kind of ear-ring.

     [முக்கு + கடுக்கன்.]

முக்குக்கணம்

 முக்குக்கணம்  mukkukkaṇam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு குதம் (ஆசனம்);வெளிப்பட்டு முக்கலுடன் அரத்தமும் சீழும் ஒழுகி உடல் வாட்டமடையும் ஒருவகை நோய்; a disease in children causing hard breathing, Tabes mesentric.

     [முக்கு + கணம்.]

முக்குடுமி

முக்குடுமி  mukkuḍumi, பெ.(n.)

   1. குடுமி வகை (வின்.);; triple lock of hair.

   2. முக்கவராய்தம் (சூலம்); (பெரியபு. உருத்திர. 10);; trident.

     [மூன்று + குடுமி → முக்குடுமி.]

முக்குடுமியெறிவேல்

முக்குடுமியெறிவேல்  mukkuḍumiyeṟivēl, பெ.(n.)

முக்குடுமி, 2 (தக்கயாகப். 461 ); பார்க்க; see mukkugumi, 2

     [முக்குடுமி + எறிவேல்.]

முக்குடை

முக்குடை  mukkuḍai, பெ.(n.)

   அருகனுக்குரிய குடை; an umbrella peculiar to Arhat.

     “குளிர் முக்குடையி னிழலோய் நீ” (சீவக. 1244);.

     [மூன்று + குடை.]

 முக்குடை mukkuḍai, பெ. (n.)

   சமணத்தின் பிரிவாகிய சாங்கியரின் உருவ வழிபாட்டுத் திருமேனியின் தலைமேல் குடை மேல் குடையாக மூன்று குடைகள் அமைந்திருக்கும் பாங்கு; three umbrellas designed one above another, an Thirthangaras of Tamil -Sankya faith.

     [மூன்று+குடை]

முக்குடைக்கல்

 முக்குடைக்கல் mukkuḍaikkal, பெ.(n.)

   சமணச் சமைய அறச்செயல்களுக்காக விடப்பட்ட நிலத்தின் எல்லையைக் குறிக்கும் முக்குடை வடிவில் செதுக்கப் பெற்ற கல் (கல்வெட்டு);; boundary stone for lands granted to Jaina institution, as marked by {}.

     [முக்குடை + கல்.]

முக்குடைச்செல்வன்

 முக்குடைச்செல்வன் mukkuḍaiccelvaṉ, பெ.(n.)

   முக்குடை உடையவனான அருகக் கடவுள் (சூடா.); ; Arhat, as having {}.

     [முக்குடை + செல்வன்.]

முக்குடையான்

முக்குடையான் mukkuḍaiyāṉ, பெ.(n.)

முக்குடைச்செல்வன் பார்க்க; see {}.

     “முக்குடையான் றாளினை” (சீவக.3142);.

     [முக்குடை → முக்குடையான்.]

முக்குடையோன்

 முக்குடையோன் mukkuḍaiyōṉ, பெ.(n.)

முக்குடைச்செல்வன் (திவா.); பார்க்க; see {}.

     [முக்குடை → முக்குடையோன்.]

முக்குணம்

முக்குணம்1 mukkuṇam, பெ. (n.)

   மூன்று குணம்; the three fundamental qualities.

     “முக்குணவசத்தான் முறைமறந்தறைவரே” (இலக்.கொ.6);.

     [மூன்று + குணம் முக்குணம். மூன்று குணமாவது தேவிகம் (சாத்துவம்);, மாந்திகம் (இராசதம்);, பேயிகம் (தாமதம்); (பாவாணர் தமிழர் மதம்);.]

 முக்குணம்2 mukkuṇam, பெ.(n.)

ஊதை (வாதம்);, பித்தம், கோழை (சிலேட்டுமம்); என்ற

   மூன்று குணங்கள்; the three humours in the human system namely vatham(wind humour); pitham (bile humour); kapham (phlegm humour);.

     [மூன்று + குணம்..]

முக்குணவேளை

 முக்குணவேளை mukkuṇavēḷai, பெ.(n.)

   கிழமைகளை ஒன்றரை மணிக் கூறுகளாகப் பிரிக்கும் காலப்பகுதி (பஞ்.);; the divisions of a day into periods of one and a half hours, named successively as {}, and {}.

     [முக்குணம் + வேளை.]

முக்குணுக்கிடு–தல்

முக்குணுக்கிடு–தல் mukkuṇukkiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   மூன்று வளைவு உண்டாகும்படி செய்தல் (திவ்.பெரியதி. 8. 2:5 வியா.);; to cause three bendings, as in a pose of the body.

     [மூன்று + குணுக்கு + இடு-தல்.]

முக்குணுக்கு

 முக்குணுக்கு mukkuṇukku, பெ.(n.)

   மூன்று வளைவு; three bendings.

     [மூன்று + குணுக்கு. குணுக்கு = வளைவு.]

முக்குந்துருக்கம்

 முக்குந்துருக்கம்  mukkundurukkam, பெ.(n.)

   மூன்று வகை நறுமணப் புகை (குங்கிலியம்);; the three kinds of incenses.

முக்குமாந்தம்

 முக்குமாந்தம் mukkumāndam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு உடல் மெலிந்து முக்கி முக்கி வெளிப்படும் அரத்தக் கழிச்சலுடன் காய்ச்சலையும் உண்டாக்கும் ஒருவகைச் செரியாமை நோய் (மாந்தம்);; a disease in children accompanied by fever hard breathing and dysentery and purging.

     [முக்கு + Skt. மாந்தம் = செரியாமை.]

முக்குமீன்

 முக்குமீன் mukkumīṉ, பெ.(n.)

   சுறா மீன் வகை; a kind of shark fish.

     [p]

முக்குமூலம்

 முக்குமூலம் mukkumūlam, பெ.(n.)

   மூலச்சூடு நோய்; heat near the rectal region.

     [முக்கு + மூலம். மூலம் = ஒருவகை நோய்.]

முக்குராணிபோடு-தல்

முக்குராணிபோடு-தல் mukkurāṇipōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   நீர் குடிக்கும் போது மாடு முதலியவை மூக்கை நீருட் செலுத்தி யுறிஞ்சுதல்; to immerse the nose deeply in water when drinking, as bulls.

மாடு முக்குராணி போட்டுக் குடிக்கிறது (உ.வ.);.

     [மூக்கு + உரிது + போடுதல் → முக்குராணி போடு-தல்.]

முக்குருந்து

 முக்குருந்து  mukkurundu, பெ.(n.)

   காட்டெலுமிச்சை; wild lime.

முக்குரும்பி

 முக்குரும்பி mukkurumbi, பெ. (n.)

போளூர்

   வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Polur Taluk.

     [மூன்று+குறும்பி]

முக்குறட்டை

 முக்குறட்டை mukkuṟaṭṭai, பெ.(n.)

   பூனை முட்குறட்டைச் செடி; a variety of {}, small korattai Trichanthesgenus.

முக்குறுணி

 முக்குறுணி mukkuṟuṇi, பெ.(n.)

   மூன்று குறுணி தவசவளவு, மூன்று மரக்கால்; a grain measure.

     [மூன்று + குறுணி → முக்குறுணி. குறுணி = எட்டுப் படி கொண்ட தவசவளவு, ஒரு மரக்கால்.]

முக்குறுணிப்பிள்ளையார்

 முக்குறுணிப்பிள்ளையார் mukkuṟuṇippiḷḷaiyār, பெ.(n.)

முக்குறுணியரிசிப் பிள்ளையார் பார்க்க; see {}.

     [மூன்று + குறுணி + பிள்ளையார்.]

முக்குறுணியரிசிப்பிள்ளையார்

 முக்குறுணியரிசிப்பிள்ளையார் mukkuṟuṇiyarisippiḷḷaiyār, பெ.(n.)

   மூன்று குறுணியரிசி சமைத்து வழிபடப்பெறும் பிள்ளையார்; an image of {} to whom an offering prepared of three {} of rice is made.

     [மூன்று + குறுணி + அரிசி + பிள்ளையார்.]

முக்குறும்பு

முக்குறும்பு mukkuṟumbu, பெ.(n.)

முக்குற்றம் பார்க்க; see {}.

     “காம முதலா முக்குறும் பற” (கம்பரா. விராதன்.2);.

     [மூன்று + குறும்பு. குற்றம் → குறும்பு.]

முக்குற்றக்கலப்பு

 முக்குற்றக்கலப்பு mukkuṟṟakkalappu, பெ.(n.)

   ஊதை (வாதம்); பித்தம், கோழை (சிலேட்டுமம்); முதலியவற்றின் கலப்பு; the mixture of the three humours in the body (சா.அக.);.

     [முக்குற்றம் + கலப்பு.]

முக்குற்றங்கடிந்தோன்

 முக்குற்றங்கடிந்தோன் mukkuṟṟaṅgaḍindōṉ, பெ.(n.)

   முக்குற்றத்தையும் ஒழித்த புத்தன் (திவா.);; the Buddha, as having, eradicated {}.

     [முக்குற்றம் + கடிந்தோன். காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்றங்களிலிருந்து விடுபட்டவன்.]

முக்குற்றம்

முக்குற்றம் mukkuṟṟam, பெ.(n.)

   காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகை உயிர்க் குற்றங்கள் (பிங்.);; the three evils pertaining to the soul viz. {},

 mayakkam.

     “முக்குற்ற நீக்கி” (நாலடி.190);.

     [மூன்று + குற்றம்.]

ஆதனின் (ஆன்மாவின்); அல்லது மாந்தனின் குற்றங்களை யெல்லாம் மூன்றாக அடக்கி, அவற்றை ஆசை, சினம், அறியாமை என முறைப்படுத்திக் கூறினர் நம் முன்னோர். அவற்றையே,

     “காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

   நாமங் கெடக்கெடு நோய்” (குறள், 360); என்றார் திருவள்ளுவர். காமம், ஆசை : வெகுளி, சினம்;மயக்கம், அறியாமை. வெகுளி, சினம் என்பன ஒருபொருட் சொல்லாயினும், வேகும் நெருப்பைப் போல வெம்மை மிக்க சினமே வெகுளி என அறிக.

     “குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயுங் காத்த லரிது” (குறள், 29); என்னும் குறளை நோக்குக.

பொதுவாக, அறியாமையே துன்பத்திற் கெல்லாம் மூலமாகச் சொல்லப்படுகின்றது. ஒரு பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதாலும், ஒரு கொடிய உயிரியிடம் அல்லது பொறியிடம் அல்லது இயற்கையிடம் அகப்பட்டுக் கொள்வதாலும், ஒரு தீயபொருளை நல்லதென்று நுகர்வதாலும், துன்புறுவது மெய்யே. ஆயின், அவற்றை அண்டாமலும் நுகராமலும் இருந்த விடத்திற் பாதுகாப்பாக விருப்பின், பெரும்பாலும் துன்பத்திற்குத் தப்பிக்கொள்ளலாம். ஒரு பொருளைத்தேடிச் சென்று அது கிடையாக்கால் துன்புறுவதற்கு, அது பற்றிய அறிவும் ஓரளவு கரணியமாம். ஆகவே, உண்மையில் துன்பத்திற்கு மூலக்கரணியமா யிருப்பது ஆசையேயன்றி வேறன்று. இன்ப துன்பங்களை விளைவிக்கும் நல்வினை தீவினைகளைச் செய்விப்பதும், ஒருவனுடைய ஆசையே யன்றி அறியாமையன்று. அதனாலேயே,

     “அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும்

தவா,அப் பிறப்பீனும் வித்து” (குறள், 361);

     “அவாவிலார்க் கில்லாகுந் துன்ப மஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்” (குறள், 368);

     “இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்

துன்பத்துள் துன்பங் கெடின்” (குறள், 369);.

     “ஆரா வியற்கை யவர்நீப்பி னந்நிலையே

பேரா வியற்கை தரும்” (குறள், 370); என்றார் திருவள்ளுவர். அவாவறுத்தல் என்னும் அதிகாரத்தைத் துறவறவியலின் இறுதியில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கதாம்.

காமம் அல்லது ஆசை துன்பத்திற்கு மூலக் கரணியமா யிருப்பத னாலேயே அது முன்வைக்கப்பட்டது. விரும்பியதொன்று கிடையாமையால் அல்லது வெறுப்பான தொன்றை இன்னொருவன் செய்ததனால், சினம் அல்லது வெகுளி பிறப்பது இயல்பே. ஆயின், காமத்திற்கும் வெகுளிக்கும் இடை நிலம் (middle ground); இருப்பதனால், வெகுளி என்பது காமம் என்பதன் எதிர்ச்சொல்லே (contrary term); யன்றி மறுதலைச் சொல் (contradictory term); அன்று. விரும்பாத பொருள்மே லெல்லாம் ஒருவனுக்கு வெறுப்புண்டாகாது. அம் மனப்பான்மை நொதுமல் நிலை யொத்ததே. காமத்தொடு எதிர்நிலைத் தொடர்பு கொண்டிருப்பதால், வெகுளி அதன்பின் வைக்கப்பட்டது.

மயக்கம் என்றது அறியாமையே. அறிவு முற்றறிவும் சிற்றறிவும் என இருவகைப்பட்டிருப்பது போன்றே. அறியாமையும் முற்றறியாமையும் சிற்றறியாமையும் என இருதிறப்படும். ஒன்றைப்பற்றி ஒன்றும் தெரியாமை முற்றறியாமை. ஒன்றை இன்னொன்றாகப் பிறழ வுணர்தல் சிற்றறியாமை.

   ஒன்றை அதுவோ இதுவோ என மயங்கல்;அறிவிற்கும் அறியாமைக்கும் இடைப்பட்ட ஐயநிலை. சிற்றறியாமை திரிபு என்றும், முற்றறிவு தெளிவு என்றும், சொல்லப்பெறும். காம வெகுளி மயக்கம் என்னும் மூன்றையும் வடவர் ஐந்தாக விரிப்பர்.

     “குற்றங்க ளைந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பென்பன: இவற்றை வடநூலார் பஞ்சக் கிலேசமென்பர் என்று 38ஆம் குறளுரையிலும்,

     “அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யானென மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கிது வேண்டுமென்னும் அவாவும். அதுபற்றி அப் பொருட்கட் செல்லுமாசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கட் செல்லுங் கோபமுமென வடநூலார் குற்ற மைந்தென்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவதல் ஆசைக்கண்ளூ மடங்குதலான், மூன்றென்றார்” என்று 360ஆம் குறளுரையிலும், பரிமேலழகர் கூறியிருத்தல் காண்க.

அகங்காரம் என்னும் சொல், வடமொழியில் வினை முதனிலையின்றி அஹம்கார என நின்று, நான் என்னும் அகப்பற்றை யுணர்த்துமென்றும், தமிழில் அகங்கரி என்னும் முதனிலையடிப் பிறந்து அகங்கரிப்பு அல்லது செருக்கு என்று பொருள்படும் தொழிற்பெயர் அல்லது தொழிற் பண்புப் பெயராகுமென்றும். வேறுபாடறிக. அகம், மனம், கரித்தல், கடுத்தல் அல்லது மிகுதல். அகம் + கரி = அகங்கரி அகங்கரிப்பு. அகங்காரம் வடமொழியில், அஹம் கார என்பது எனது என்னம் புறப்பற்றை யுணர்த்தும் மமகார என்பதன் மறுதலைச் சொல்லாம். தமிழில் அத்தகைய நிலை யின்மையை நோக்குக. இதனால் இருசொல்லும் வெவ்வேறெனவும், வடிவொப்புமையினாலும் ஆராய்ச்சியின்மையாலும் தமிழரால் அறியாதும், வடவரால் அறிந்தும், ஒன்றோடொன்று மயக்கப் படுகின்றன வென்றும் அறிக.

   இனி, ஆரியச் சார்பான சிவனியக் கொண்முடியில் (சைவ சித்தாந்தத்தில்);, ஆணவம், மாயை, காமியம் எனக் கூறியிருக்கும் மும்மலப் பெயரும், காம வெகுளி மயக்கம் என்பவற்றின் திரிப்பே யென்பது, என் ‘தமிழர் மதம்’ என்னும் நூலில் விளக்கப்பெறும். ஆணவம் என்பது ஆண் என்னும் அடிப்பிறந்து அறியாமையைக் குறிப்பதன்று. மயக்கம் என்பதே அறியாமையை (உயிரொடு நிலையான தொடர்பற்ற உடம்பை நான் என உணரும் திரிபுணர்ச்சியை); உணர்த்தும். ஐம்பூதங்கட்கும் மூலமான மாயை வேறு;பிறழ்வுணர்ச்சியைக் குறிக்கும் மயக்கம் வேறு. மாய் + ஐ = மாயை (மாய்ந்த அல்லது மறைந்த நிலை);. ஒ.நோ. சாய் + ஐ = சாயை = சாயா (வ);, மாயை மாயா (வ.); காமம் காமியம் = விருப்பமானவை. கார்மிய என்பதன் திரிபாகக் கொண்டு இருவகை வினையென்று கூறுவது பொருந்தாது.

திருவள்ளுவர் இல்லறத்தாலும் வீடுபேறுண் டெனக் கூறியிருத்தலாலும் சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடுபெற்றதாகப் பெரிய புராணங் கூறுதலாலும் நுகர்ச்சியினாலும் நல்வினையாலும் பழந்தீவினை போக்கப்படு மாதலாலும் தீவினை கலவாது இறைவழிப்பாட்டோடு கூடிய நல்வினைத் தொகுதியும் பிறவிக்குக் கரணியமாம் என்பது உத்திக்குப் பொருந்தாமையாலும், இவ் வுலகிற் பிறந்து வளர்ந்து கற்றுத் துறந்து ஒரு வினையும் செய்யாமல் வீடுபெறாமென்பது இயலாத தாதலும், “நல்வினை தீவினைகள் மேற்குறித்தவாறு தூலமாச் செய்யப்படும்பொழுது ஆகாமியம் என்றும் பின் சூக்குமமாய நிலைபெற்று நிற்கும்பொழுது ‘சஞ்சிதம்’ என்றும், பின் இன்ப துன்பங்களாய் வந்து பயன்படும்பொழுது ‘பிரார்த்தம்’ என்றும் பெயர் பெறும் ‘பிரார்த்தமே’ ஊழ் எனப்படுகின்றது. ‘நல்வினை தீவினை’ என இருவகைப்பட்டு விரியால் எண்ணிறந்தனவாய் நிற்றலின் சடமாயும் பலவாயும் உள்ள இவை ‘காரியம், என்பதும்.

அதனால் இவை “தோற்றமும் அழிவும் உடையன” என்பதும், அதனால் மூல கன்மமே காரண கன்மமாய்த் ‘தோற்றக் கேடின்றி நிற்கும்’ என்பதும், பெறப்படும்” என்று அறப்புரவளாகம் (தருமையாதீனம்); வெளியிட்டுள்ள ‘சித்தாந்தத் தெளிவியல்’ என்னும் கொண்முடிபுத் தெளிவியல் கூறுவது (பக்.160); அறிவாராய்ச்சி மிக்க இக் காலத்திற் கேற்காது.

ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என்னும் மூன்றையும் முறையே எதிர்வு. இறப்பு, நிகழ்வு எனத் தூய தமிழிற் கூறலாம் (பாவாணர் தமிழியற் கட்டுரைகள், பக்.145147);.

முக்குலம்

முக்குலம்  mukkulam, பெ.(n.)

   பழங் காலத்திலிருந்த மூன்று அரச குலங்கள்; the three ancient lines of kings.

     “முக்குலத்தினு மதிக்குல முதன்மை பெற்றது வென்று” (பாரத.குருகுல.28);.

     [மூன்று + குலம். மூன்றுகுலம் → முக்குலம்.]

முக்குலைச்சு

முக்குலைச்சு mukkulaiccu, பெ.(n.)

     ‘தெ’ என்ற குறியுள்ளதும் நான்கில் மூன்று பங்குடையதுமான பின்னவெண் (யாழ்ப்.);;

 the fraction 3/4, as three quarters.

முக்குளம்

முக்குளம்1 mukkuḷam, பெ. (n.)

   கங்கை, யமுனை, சரசுவதி ஆகிய மூன்று ஆறுகளும் கூடுமிடம் (வின்.);; the confluence of the rivers, the {}, the {} and the Ganges.

     “முக்குளம் செற்றார் பாதம் சேருமுக்குளமும் பாடி உளமகிழ்ந் தேத்தி வாழ்ந்தார்” (சேக்கிழார்);.

     [மூன்று + குளம் – முக்குளம். குளம் = நீர் நிலையைக் குறித்தது ஆற்றையும் குறித்தது.]

 முக்குளம்2 mukkuḷam, பெ.(n.)

   இருபதாவது விண்மீனான முற்குளம் (பூராடம்); (வின்.);; the 20th naksatra.

முக்குளி

முக்குளி1 mukkuḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   முழுகுதல்; to dive.

அவன் முக்குளிக்க நீரில் பாய்ந்தான். “இரைகவர் ஞெண்டு முக்குளித்தூறு மளறு கிடங்கில்” (திருச்செந். பிள்ளை. செங்கீரை.10);.

தெ. புக்கிளிஞ

     [முங்கிக்குளி த்தல் → முக்குளி த்தல் = நீரில் அமிழ்ந்து உள்ளே செல்லுதல்.]

 முக்குளி2 mukkuḷi, பெ.(n.)

   கோழி முளையான் பூடு (பதார்த்த.607);; large flowered purslane.

முக்குளிக்காரை

 முக்குளிக்காரை mukkuḷikkārai, பெ.(n.)

   சதக்காரைச் செடி; a kind of webera Canthium genus.

முக்குளிக்கீரை

 முக்குளிக்கீரை mukkuḷikārai, பெ.(n.)

   உப்புக்கீரை; a kind of vegetable greens Portulaca pilosa.

முக்குளிப்பான்

முக்குளிப்பான் mukkuḷippāṉ, பெ.(n.)

   1. உள்ளான் என்னும் சிறிய நீர்ப்பறவை வகை (வின்.);; dabchick, a small grebe.

   2. நோய் வகை (சங்.அக.);; a kind of disease.

     [முங்குளிப்பான் → முக்குளிப்பான்.]

     [p]

 முக்குளிப்பான் mukkuḷippāṉ, பெ. (n.)

   வாத்து போல் உடலமைப்புக் கொண்ட பறவையினம்; a bird.

     [மூழ்கி+குளிப்பான்]

முக்குளியர்

 முக்குளியர் mukkuḷiyar, பெ.(n.)

   கடலில் மூழ்கி (முங்கி);க் குளித்து முத்து, சிப்பி ஆகியவற்றை எடுப்பவர்கள்; pear collecting divers.

மறுவ, குளியாளி

     [முங்கு+குளியர்]

முக்குழி

முக்குழி mukkuḻi, பெ.(n.)

   வேள்வித் தீயை வளர்க்குங் குழிகள்; sacrificial pits for maintaining the three {} fires.

     “சமிதை முக்குழிக் கூட்டத்துட்பட்ட வோக்கி” (பெருங்.இலாவான.3:15);.

     [முன்கு + குழி.]

முக்குழிப்பாய்ச்சு-தல்

முக்குழிப்பாய்ச்சு-தல் mukkuḻippāyccudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. முக்கோண வடிவாக நடவு அமையும்படி நாற்று நடுதல் (இ.வ.);; to transplant seedlings in triangular shapes.

   2. தந்திரத்தால் கேட்டிற்குள்ளாதல் (இ.வ.);; to entrap and ruin.

அவனை முக்குழிப் பாய்ச்சிவிட்டான்.

     [முக்குழி + பாய்ச்சு தல். பாய்ச்சுதல் = நீர்ப் பாய்ச்சுதல்.]

முக்குழியாட்டம்

 முக்குழியாட்டம் mukkuḻiyāṭṭam, பெ.(n.)

   சிற்றுார் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு வகை; a village game which children plays.

முக்குவன்

 முக்குவன் mukkuvaṉ, பெ.(n.)

   நுளையன்; fisherman.

     [முக்கு → முக்குவன்.]

முக்குவர்

முக்குவர்  mukkuvar, பெ.(n.)

   குமரி, முகவையில் வாழும் மீனவக் குடியினருள் ஒரு வகுப்பினர் (மீனவ.);; sect of people in fisherman community.

க. முக்குவர்.

     [முக்கு → முக்குவர். முக்கு தல் = மூழ்கு தல்.]

     ‘முக்குவர்’ இலங்கையிலும் பழஞ்சேர நாடாகிய கேரளத்திலும் உள்ளனர். சேரநாட்டு முக்குவர் ஈழவருடனும் முகவருடனும் இலங்கையினின்று வந்ததாகச் சொல்லப்படுவர்’ என்று குண்டர்ட்டு தம் மலையாள ஆங்கில அகரமுதலியிற் கூறுவர் (தேவநேயம்.12, பக்.96);.

முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு mukāṭaṟpaḷḷu, பெ.(n.)

   முக்கூடல் அழகர் பேரில் 17ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பள்ளுப் பனுவல்; a {} poem on {}, 17th century.

     [முக்கூடல் + பள்ளு → முக்கூடற்பள்ளு.]

பள்ளுப்பாட்டு நூல்களில் தலைசிறந்தது முக்கூடற்பள்ளு. இது 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. தாமிரபருணி ஆற்றோடு சிற்றாறும், கயத்தாறும் கலந்து கூடும் இடத்தை முக்கூடல் என்பர். முக்கூடலில் கோயில் கொண்ட அழகர் மீது பாடப்பட்டது இந்நூல். முக்கூடலில், ஒரு பண்ணையாரிடத்தில் பயிர்த்தொழில் செய்யும் பள்ளன் ஒருவனுக்கு இரு மனைவியர். மூத்த மனைவி முக்கூடற்பள்ளி, பெருமாளை வணங்குபவள். இளையவள் மருதூர் பள்ளி, சிவனை வணங்குபவள். இவ்விரு மனைவியருக்குள் நிகழும் போட்டி, சண்டை, சச்சரவு, உரையாடல்கள் போன்றவற்றை இந்நூலில் காணலாம். அதிலே நாட்டைப் பற்றியும் ஊரைப் பற்றியும், இருவரின் மதத்தைப் பற்றியும் ஏச்சுகளும் பேச்சுகளும் நகைச் சுவையுடன் அமையக் காணலாம்.

இத்தகைய நயமிக்க முக்கூடற் பள்ளு நூலை எழுதிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலை நாடகமாக்கித் தந்தவர் ‘வேளான் சின்னத் தம்பி’ என்னும் பெயருடைய என்னயினாப் புலவர். (திரு.மு.அருணாசலப் பிள்ளை, முக்கூடற்பள்ளு நூல் ஆராய்ச்சி); இந்நூலில் அமைந்துள்ள நயமிக்க பாடல்கள் சில,

     “ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலை

யாளமின்னல் ஈழமின்னல் குழமின்னுதே

நேற்றுமின்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே கேணி

நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே!

சேற்றுநண்டு சேற்றைக்குழைத் தேற்றடைக்குதே மழை

தேடியொரு கோடிவானம் பாடி யாடுதே

போற்றுதிரு மாலழகர்க்கேற்ற மாம்பண்ணைச் சேரிப்

புள்ளிப்பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக் கொள்வோமே”

     “உள்ளத்தில் ஊசலிடும் உல்லாசப் பார்வைவிழிக்

கள்ளத்தி னாலிரும்புங் கல்லுங் கரையாதோ

வெள்ளத்தி லேதுயில்கார் மெய்யழகர் முக்கூடற்

பள்ளத்தி யாரழகு பார்க்க முடியாதே”

இத்தகைய வளமுள்ள பாடல்கள் சிந்தும் விருத்தமும் விரவி வரப் பாடப்பட்டுள்ளன. இந்நூலில், சித்திரக் காலி, வாலான் சிறை மீட்டான், மணல் வாரி, செஞ்சம்பா, கருஞ்சூறை, பொற்பாளை, கத்துரிவாணன், பூம்பாளை, கருங்குறுவை, புனுகுச் சம்பா போன்ற நெல்லின் வகைகளையும், குடைக்கொம்பன், செம்மறையன், குத்துக் குளம்பன், மோழை, குடைச் செவியன், குற்றாலன், கூடு கொம்பன் போன்ற மாட்டின் வகைகளையும் காணலாம்.

முக்கூடல்

முக்கூடல் mukāṭal, பெ.(n.)

   1. மூன்று ஆறுகள் கூடும் நன்னீர்த் துறை; a place where three rivers meet, generally considered sacred.

     “திருமுக்கூட லென்றி சைப்ப” (கருவூர்ப்பு.ஆமிரா.45);.

   2. நெல்லை மாவட்டத்தில் சித்திரா ஆறும் உப்போடையும் தாமிரபருணியுடன் கூடும் இடத்துள்ளதோர் மாலியத் தலம்; a shrine in Tinnevelly District at the confluence of the {}, the {} and the {} sacred to Visnu.

     “வடி வார்வேல் முக்கூடல் அம்மா முருகமருங் கொன்றையந்தார் முக்கூட மாட்டா முலை” (சிவபெருமான் திருவந்தாதி. 50);.

     [மூன்று + கூடு தல் → முக்கூடல்.]

முக்கூட்டரத்தம்

முக்கூட்டரத்தம் mukāṭṭarattam, பெ.(n.)

   வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு மூன்றையும் மெல்லுதலால் உண்டாகுஞ் செந்நிறம்; red colour produced by chewing betel, arecanut and lime.

     “முக்கூட்டரத்த வொண்பசை விலங்கி” (பெருங்.நரவாண. 1,205);.

     [முக்கூட்டு + அரத்தம் – முக்கூட்டரத்தம்.]

முக்கூட்டு

முக்கூட்டு mukāṭṭu, பெ.(n.)

   1. மூன்று சரக்குக்களாலாகிய மருந்து; a medicine compounded of three drugs.

     “கைபுனைந் தியற்றிய முக்கூட்டமிர்தும்” (பெருங். இலாவாண.4:91);.

   2. மூன்று கட்டிகளைக் கூட்டியமைத்த அடுப்பு (வின்.);; oven, as formed of three stones or lumps of earth placed triangularly.

   3. முக்கூட்டெண்ணெய் (வின்.); பார்க்க; see {}.

   4. தாழி விண்மீன் (பரணி);; the 2nd naksatra.

   5. மூன்று வழிகள் சேருமிடம்; junction, where three paths meet.

முக்கூட்டில் நிற்காதே..

     [மூன்று + கூட்டு.]

முக்கூட்டுத்தைலம்

 முக்கூட்டுத்தைலம் mukāṭṭuttailam, பெ.(n.)

முக்கூட்டெண்ணெய் பார்க்க; see {}.

     [முக்கூட்டு + தைலம். Skt. தைலம் = எண்ணெய்.]

முக்கூட்டுநெய்

 முக்கூட்டுநெய் mukāṭṭuney, பெ.(n.)

முக்கூட்டெண்ணெய் பார்க்க; see {}.

     [முக்கூட்டு + நெய்.]

முக்கூட்டெண்ணெய்

 முக்கூட்டெண்ணெய் mukāṭṭeṇīey, பெ.(n.)

   நல்லெண்ணெய், சிற்றாமணக் கெண்ணெய், ஆவின் நெய் ஆகிய இம்மூன்றோடு மற்ற மருந்து சரக்குகளையும் சேர்த்துப் போகர் முறைப்படி செய்தவோர் தலைமுழுக்குக் கெண்ணெய்; medicated bathing oil prepared with gingelly oil, castor oil and ghee with other drugs according to {}.

     [முக்கூட்டு + எண்ணெய். முக்கூட்டு = மூன்றும் கலந்தது.]

முக்கூறிடல்

 முக்கூறிடல் mukāṟiḍal, தொ.பெ.(vbl.n.)

   மூன்று பங்காய்ச் செய்கை; make into three equal parts (சா.அக.);.

     [மூன்று + கூறிடல்.]

முக்கூறிலை

 முக்கூறிலை mukāṟilai, பெ.(n.)

   மூன்று முனைகளை உடைய இலை; tricuspidate leaf (சா.அக.);.

     [மூன்று + கூறு + இலை.]

முக்கூறு

 முக்கூறு mukāṟu, பெ.(n.)

   மூன்று பங்கு; three parts.

     [மூன்று + கூறு.]

முக்கூறுபோடல்

 முக்கூறுபோடல் mukāṟupōṭal, பெ.(n.)

முக்கூறிடல் பார்க்க; see {}.

முக்கை

 முக்கை mukkai, பெ.(n.)

   மூன்று (உ.வ.);; three, a term used in games.

     [மூன்று + கை.]

முக்கைப்புனல்

முக்கைப்புனல் mukkaippuṉal, பெ.(n.)

   மூன்று முறை குடங்கையால் நீர் முகந்து முன்னோர்க்கு (பிதிரர்க்கு);ச் செய்யும் நீர்க்கடன்; the three handfuls of water poured out as offerings to the manes.

     “குருதியால் முக்கைப் புனலுருப்பன்” (கம்பரா.மாயாசனக.91);.

     [மூன்று + கை + புனல். புனல் = நீர்.]

முக்கோடியேகாதசி

முக்கோடியேகாதசி mukāṭiyēkātasi, பெ.(n.)

   சிலை (மார்கழி); மாதத்து வளர்பிறையில் வரும் பதினோராம் நாள் (ஏகாதேசி);; the 11th titi of the bright fortnight of {}.

     [மூன்று + கோடி + Skt. ஏகாதசி.]

முக்கோட்டான்நடவு

 முக்கோட்டான்நடவு mukāḍḍāṉnaḍavu, பெ.(n.)

   வரிசையில்லாமல், ஒழுங்கின்றி நடவு செய்கை (உழவு);; transplanting the seedlings without any order.

     [முக்கோட்டான் + நடவு.]

முக்கோட்டை

முக்கோட்டை mukāṭṭai, பெ.(n.)

   வழிபட்டோர்க்குப் பாட்டியற்றும் ஆற்றலை அளிக்கும் கொற்றவை கோயில்; a shrine of {} who is said to endow Her votaries with poetic power.

     “பாடுவித்த முக்கோட்டை யிருக்கிறபடி” (ஈடு, 4, 5:2);.

     [மூக்கோட்டை → முக்கோட்டை.]

முக்கோணத்தட்டு

 முக்கோணத்தட்டு mukāṇattaṭṭu, பெ.(n.)

   வடிதட்டாக பயன்படுத்தப்படும் ஏன வகை; a triangular plate.

     [மூன்று+கோணம்+தட்டு]

முக்கோணம்

முக்கோணம் mukāṇam, பெ.(n.)

   1. மூன்று கோணங்களையுடைய வடிவம்; triangle.

   2. நிரய வகை; a hell.

     “அதன்கீழ்க் குலிச முக்கோணம்” (சிவதரு. சுவர்க்கநரக. 109);.

     [மூன்று + கோணம். கோணம் = மூன்று கோணங்களையும் மூன்று பக்கங்களையும் உடைய வடிவம்.]

முக்கோணவாரி

 முக்கோணவாரி mukāṇavāri, பெ.(n.)

   உட்காதினுள்ளிருக்கும் பள்ளம்; the oval cavity of the internal ear Vestibule (சா.அக.);.

முக்கோணி

முக்கோணி mukāṇi, பெ.(n.)

   மலைமகள் (பார்வதி);; Malaimagal (Parvadi);, as residing in the mystic triangle.

     “சக்தி கெளரி முக்கோணி” (பேரின்பக்கீர்த்.பக்.55);.

     [முக்கோணம் → முக்கோணி.]

முக்கோண்

முக்கோண் mukāṇ, பெ.(n.)

முக்கோணம், 1 பார்க்க; see {}, 1.

     “வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும்” (பெருங். உஞ்சைக்.42:29);.

     [முக்கோணம் → முக்கோண்.]

முக்கோதனம்

 முக்கோதனம் mukātaṉam, பெ.(n.)

   தோதகத்தி; a tree (சா.அக.);.

முக்கோற்பகவர்

முக்கோற்பகவர் mugāṟpagavar, பெ.(n.)

   முத்தண்டமேந்திய துறவிகள்; a class of ascetics who carry {}.

     “முக்கோற் பகவரைக்கண்டு” (கலித். 9, துறைக்குறிப்பு);.

     [முக்கோல் + பகவர். பகவன் → பகவர் = திருமாலடியவரான முனிவர்.]

முக்கோல்

முக்கோல் mukāl, பெ. (n.)

   1. மாலிய குரவர்கள் கையில் வைத்திருக்கும் மூன்று கவையுடைய கோல்; trident staff carried by {} ascetics.

     “நூலே கரக முக்கோன் மணையே” (தொல்.பொருள். 625);.

   2. இருபத்திரண்டாவது விண்மீன் (திருவோணம்);; the 22nd naksatra.

     [மூன்று + கோல்.]

முக்கோல் அந்தணர்

 முக்கோல் அந்தணர் mukālandaṇar, பெ.(n.)

   முக்கோல், மனை, நீர்க்கடிகை ஆகிய மூன்றும் ஏந்தி தோன்றிய (ஆகம வழியில் தவம் செய்யும் தமிழ் முனிவன்; ancient Tamil saint of TINA social order with trudant plank and water in small jar, contrary to Aryan vedic andanan.

     “உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்.அந்தணிர்” (கலி);.

     [முக்கோல்+அந்தணன்]

முக்தசர்

முக்தசர்1 muktasar, பெ. (n.)

   உட்கருத்து (சராம்சம்);; gist, abstract.

     “அவன் பிராதின் முக்தசர் என்ன?”

மறுவ. உட்கருத்து

     [U. mukhtasar → த. முக்தசர்]

 முக்தசர்2 muktasar, பெ.அ. (adj.)

   சுருக்கமான; abbreviated, brief, short.

     [U. mukhtasar → த. முக்தசர்]

முக்தா

 முக்தா muktā, பெ. (n.)

   ஒரு சிற்றூரின் வரை யறுத்த மொத்தத் தீர்வை;     [U. maqta → த. முக்தா]

முக்தியார்

 முக்தியார் muktiyār, பெ. (n.)

   பிறருக்காக வழக்கை வாதிப்போன்; aattorney, pleader.

     [U. mukhtar → த. முக்தியார்]

முக்தியார்நாமா

 முக்தியார்நாமா muktiyārnāmā, பெ. (n.)

   அதிகார ஆவணம் (பத்திரம்);(C.G.);; power of attorney.

     [U. {} → த. முக்தியார்நாமா]

முங்காச்சி

 முங்காச்சி muṅgācci, பெ.(n.)

   நீருள் அமுங்கி முழுகுகை; plunging in water.

     [முங்கு → முங்காச்சி.]

முங்காச்சு

 முங்காச்சு muṅgāccu, பெ.(n.)

முங்காச்சி (இ.வ.); பார்க்க; see {}.

முங்குதல்

முங்குதல் muṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. நீரில் மூழ்குதல்; to plunge into water.

     “கிள்ளை…. முங்கி யெழும்” (இரகு.தேனு.14);.

   2. அமிழ்தல்; to sink.

     “முன்னிய வங்க முங்கிக் கேடுற” (மணிமே.29:16);.

   3. நிரம்பியிருத்தல்; to be full.

     “கொலை முங்குங் களவிடுமால்” (இரகு. நகரப்.25);.

   தெ. முங்கு;ம. முங்ஙு

     [முழுங்கு → முங்கு → முங்குதல்.]

முங்குளிப்பான்

 முங்குளிப்பான் muṅguḷippāṉ, பெ.(n.)

   நீரில் மூழ்கி யிரை தேடும் உள்ளான் என்னும் பறவை; common snipe.

     [முங்கு + குளிப்பான் முங்குளிப்பான்.]

முங்கொசவம்

 முங்கொசவம் muṅgosavam, பெ.(n.)

   பெண்கள் சேலை கட்டும் போது முன்னால் வைக்கும் மடிப்பு (கோவை.);; ornamental pleating in a woman’s dress hanging from the right hip.

     [முன் + கொசவம். கொசவம் = சேலை மடிப்பு வகை. கொய்சகம் → கொசவம்.]

     [p]

முசகம்

 முசகம் musagam, பெ.(n.)

   எலி; rat (சா.அக.);.

முசங்கி

 முசங்கி musaṅgi, பெ. (n.)

   ஒருவகைக் கொவ்வைக் கொடி; a common creeper of the hedges (சா.அக.);.

முசடு

 முசடு musaḍu, பெ. (n.)

   ஒரு வகை மீன்; brown tripel tail.

     [முசு-முசுல்;

முசு-முசடு]

முசரப்பு

 முசரப்பு musarappu, பெ. (n.)

   கணக்கு ஆய்வாளன் (P.T.L.);; accountant, examiner of accounts.

     [Ar. mishrif → த. முசரப்]

முசரா

 முசரா musarā, பெ. (n.)

   திசை (திக்கு); (M. Navi.);; direction.

     [Ar. {} → த. முசரா]

முசரியம்

 முசரியம் musariyam, பெ. (n.)

   நன்னிலம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Nannilam Taluk.

     [முசிறி-முசரியம்]

முசரு

 முசரு musaru, பெ.(n.)

முசர் (தைலவ.தைல.); பார்க்க; see {}.

முசருகம்

 முசருகம் musarugam, பெ.(n.)

   பவளம்; coral (சா.அக.);.

முசரை

 முசரை musarai, பெ.(n.)

   வெள்ளாட்டுக்கு உண்டாகும் தொற்று நோய்; a contagious disease occures to goats.

முசர்

முசர் musar, பெ.(n.)

   1. மோர் (பிங்.);; butter milk.

   2. தயிர் (சது.);; curd.

க. மொசரு

முசற்காது

முசற்காது musaṟkātu, பெ.(n.)

   1. மருந்துப் பூடு வகை; a medicinal plant, Ludwigia.

   2. ஆட்டுக் காலடம்பு; goat’sfoot creeper.

     “வீக்கம்…. ஏகும் முசற்கா திலையிருக்கும் ஊரைவிட்டு” (பதார்த்த.573);.

     [முயல் → முசல் + காது.]

கை, கால், விரை வீக்கத்தைப் போக்கும் ஒருவகைப் பூண்டு (சா.அக.);.

முசற்கொம்மட்டி

 முசற்கொம்மட்டி musaṟkommaṭṭi, பெ. (n.)

   ஒருவகை முலாம்பழம் (கொம்மட்டி); (வின்.);; a kind of melon, convoloulus.

     [முசல் + கொம்மட்டி.]

முசற்செவி

முசற்செவி musaṟsevi, பெ.(n.)

   1. முயற் காது; ear’s of the hare.

   2. முயற் செவிக்கள்ளி பார்க்க; see {}.

   3. முயற்காதிலை பார்க்க; see {} (சா.அக.);.

     [முயல் → முசல் + Skt. செவி.]

முசற்றழை

 முசற்றழை musaṟṟaḻai, பெ.(n.)

   முயல் என்னும் பெயர் கொண்ட காட்டுப் புதர்ச் செடி; rabbit weed Hare leaf Ipomoea biloba (சா.அக.);.

     [முயல் → முசல் + தழை,]

முசற்றாழை

 முசற்றாழை musaṟṟāḻai, பெ.(n.)

முசற்றழை பார்க்க; see {}. (சா.அக.);.

முசற்றிசை

 முசற்றிசை musaṟṟisai, பெ.(n.)

முயற்றிசை (வின்.); பார்க்க; see {}.

முசலகன்

முசலகன் musalagaṉ, பெ.(n.)

   1. முயலகன் பார்க்க; see {}.

     “கனமாகச் செய்த முசலகன் ஒன்று” (தெ.இ.கல்.தொ.ii, 135:30);.

   2. ஒரு நோய்; a disease.

     “அகங்காரமாகிய முசலகனேறி” (திவ். திருமாலை.43, வியா.140);.

முசலம்

முசலம் musalam, பெ.(n.)

   1. உலக்கை (பிங்.);; wooden pestle for pounding paddy.

   2. போரில் பயன்படுத்தும் ஒரு படைக்கருவி (திவா.);; a pestle like weapon of war, club.

     “நெடு முசலங் கொண்டடிப்ப” (கம்பரா. கும்பகருண.56);.

முசலாடி

 முசலாடி musalāṭi, பெ. (n.)

   ஒரு வகை மீன்; brown tripel tail.

     [முசல்+ஆ]

முசலி

முசலி1 musali, பெ. (n.)

   உலக்கையைப் (முசலத்தை); படையாகக் கொண்ட பலராமன் (பிங்.);; Balarama as wielding a pestlelike weapon.

 முசலி2 musali, பெ.(n.)

   1. பல்லி (வின்.);; house lizard.

   2. ஓந்தி; blood sucker.

   3. பச்சோணான்; chameleon.

   4. உடும்பு; a large kind of lizard.

   5. முதலை (திவா.);; aligator.

   6. கபில நிறமும் 2 1/2 விரல வளர்ச்சியும் உள்ள கடல் மீன்வகை; a sea fish, brassy brown, attaining 2 1/2 in. in length, Lobotes Surinamensis.

 முசலி3 musali, பெ.(n.)

   1. தாழை (சூடா.);; fragrant screwpinePandanus.

   2. நிலப் பனை; ground palm plant, Curculigo Orchioides.

   3. வெருகன் கிழங்கு; a bulbous root.

தெ. மெகலி

முசலிகா

 முசலிகா musalikā, பெ.(n.)

   செந்தாழை; a red or deep yellow variety and very fragrant screw pine shrub Pandanus.

முசலிகை

முசலிகை1 musaligai, பெ.(n.)

   உடும்பு; guana.

 முசலிகை2 musaligai, பெ.(n.)

முசலிகை யாதனம் பார்க்க; see {}.

முசலிகையாதனம்

முசலிகையாதனம் musaligaiyātaṉam, பெ.(n.)

   இரண்டு கையுங் காலுஞ் சம்மணங் கூட்டுவது போல் மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்குமாறு செய்யும் இருக்கை (ஆசனம்); வகை (தத்துவப்.108, உரை);; a kind of yogic posture which consists in lying on one’s chest with hands and legs folded in a peculiar way (சா.அக.);.

     [முசலி2 → முசலிகை + Skt. ஆதனம்.]

     [p]

முசலை

 முசலை musalai, பெ.(n.)

   ஒருவகைக் கோரைக் கிழங்கு; a kind of fragrant root as that of nut grass Cyperus rotundus (சா.அக.);.

முசல்

முசல்1 musal, பெ.(n.)

முயல் பார்க்க; see muyal (சா.அக.);.

     [முயல் → முசல்.]

 முசல்2 musal, பெ.(n.)

   1. கொம்மட்டி; gourd.

   2. ஒர் பூண்டு; a plant.

முசல்காதிலை

 முசல்காதிலை musalkātilai, பெ.(n.)

முயற்காதிலை பார்க்க; see {} (சா.அக.);

     [முசல் + காது + இலை. முயற்காது போன்ற இலையை யுடைய கொடி.]

முசல்செவிக்கள்ளி

 முசல்செவிக்கள்ளி musalsevikkaḷḷi, பெ.(n.)

முயற்செவிக்கள்ளி பார்க்க; see {}.

     [முசல் + செவி + கள்ளி. முயற்காது போன்ற இலையுடைய கள்ளிச் செடி.]

முசல்மான்

 முசல்மான் musalmāṉ, பெ.(n.)

   முகம்மதியன்; Muhammed.

 முசல்மான் musalmāṉ, பெ. (n.)

   முகமதியன்; muhammad.

     [Arab. {} → த. முசல்மான்]

முசல்மூலி

 முசல்மூலி musalmūli, பெ.(n.)

   முயல் திண்ணும் மூலிகை, அறுகம்புல்; harialli grass or devil’s grass, Cynodon dactylon (சா.அக.);.

     [முசல் + மூலி.]

முசல்வலி

 முசல்வலி musalvali, பெ.(n.)

முசல் வலிப்பு பார்க்க; see {}.

முசல்வலிப்பு

 முசல்வலிப்பு musalvalippu, பெ.(n.)

   வலிப்பு நோய் வகை (மூ.அ.);; a kind of recurring fit or spasm, epilepsy.

     [முசல் + வலிப்பு.]

முசளிகொங்கை

முசளிகொங்கை musaḷigoṅgai, பெ.(n.)

   தாழை விழுது; adventitious roots of screw pine (சா.அக.);.

     [முசலி3 + கொங்கை.]

முசாதகம்

 முசாதகம் mucātagam, பெ.(n.)

   வெண்டாமரை (பரி.அக.);; white lotus.

முசாபர்

முசாபர் mucāpar, பெ. (n.)

   1. பயணி; traveller.

   2. சுற்றுச் செலவு; tour.

முசாபர்கானா

 முசாபர்கானா mucāparkāṉā, பெ. (n.)

   பயணிகள் விடுதி (இ.வ.);; traveller’s bungalow.

த.வ. பயணியர் மாளிகை

     [Ar. {} → த. முசாபர்கானா]

முசி

முசி1 musidal,    2 செ.கு.வி.(v.i.)

   1. அறுதல்; to be torn.

     “மகுடந் தேய்ப்ப

முசிந்து… தழும்பேறி” (பதினொ. காரை. அற்பு.76);.

   2. கசங்குதல்; to be crumpled, as a garment.

     ‘முசிந்த புடைவையை யுடைய’ (கலித். 96, உரை);.

   3. களைத்தல் (இ.வ.);; to be tired.

   4. ஊக்கங் குன்றுதல்; to feel discouraged.

     “முசியாத அத்விதீய காரணமா யென்னுதல்” (ஈடு, 2. 8:5);.

   5. முசி2, 1, 3 பார்க்க; see {}, 1, 3.

   6. முசி2, 4 பார்க்க; see {}, 4. மூங்கில்போல் அன்னை சுற்றம் முசியாமல் வாழ்ந்திடுவீர்.

 முசி2 musittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. களைத்தல் (வின்.);; to faint, become tired.

   2. துன்பம் கொள்ளுதல் (கிலேசித்தல்); (திவ்.பெரியதி.1. 9:4, அரும்.);; to be distressed.

   3. மெலிதல்; to grow thin.

     “என்னை வரவிட்ட பாவி முசித்துச் சதை கழியாமல்” (தனிப்பா.1, 236:3);.

   4. அழிதல்; to perish.

     “முசித்திடாமல் வாழ்ந்திருத்தி” (பிரபோத.3: 66);.

   5. முசி1, 2 பார்க்க; see {}. 2.

     “திருவரையிலே முசிக்கையாலும்” (திவ்.திருப்பல்.9, வியா.);.

 முசி3 musittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   திருகுதல்; to wrench, twist.

     “அன்னவன் முடித்தலை முசித்து” (கம்பரா.பொழிலிறு.7);.

முசிடி

 முசிடி musiḍi, பெ.(n.)

   தன்னிறத்தை அடிக்கடி மாற்றும் ஒரு வகைக் கடல் மீன்; a sea fish which changes its colour.

முசிடு

முசிடு musiḍu, பெ.(n.)

முசிறு, 1, 2 (வின்.); பார்க்க; see {}, 1, 2.

க. முசுடு

     [முசிறு → முசிடு.]

முசிட்டெறும்பு

 முசிட்டெறும்பு musiṭṭeṟumbu, பெ.(n.)

முசிற்றெறும்பு பார்க்க; see {}.

     [முசிடு + எறும்பு.]

முசிப்பாறு-தல்

முசிப்பாறு-தல் musippāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   இளைப்பாறுதல் (வின்.);; to rest, receive, take comfort.

     [முசிப்பு + ஆறுதல்.]

முசிப்பாற்றி

 முசிப்பாற்றி musippāṟṟi, பெ.(n.)

   இளைப்பாற்றுகை (வின்.);; rest;

 refreshment.

     [முசிப்பு + ஆற்றி. ஆற்று → ஆற்றி.]

முசிப்பு

முசிப்பு musippu, பெ. (n.)

   1. மெலிவு; thinness, emaciation.

     “விலாப்புடை முசிப்பற வீங்க” (உத்தரரா. சந்திரகே.71);.

   2. களைப்பு (வின்.);; languor, debility, fatigue, weariness.

   3. அழிவு; destruction.

     “போகந் துய்த்து முசுப்பின்றி வாழ்தல் வாழ்வு” (பிரபோத.38:30);.

   4. இடை (வின்.);; waist.

     [முசி → முசிப்பு.]

முசிரி

முசிரி musiri, பெ.(n.)

முசிறி பார்க்க; see {}.

     “முகையவிழ் தார்க்கோதை முசிரியார் கோமான்” (முத்தொள்.6);.

     [முசிறி → முசிரி.]

 முசிரி musiri, பெ. (n.)

   திருச்செங்கோடுவட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruchengodu Taluk. –

     [முசிறி-முசிரி (கொ.வ.);]

முசிறி

முசிறி musiṟi, பெ.(n.)

   மேற்கடற் கரையிலுள்ள பழைய துறைமுகப் பட்டினம்; Muziris, an ancient seaport, near Cranganore.

     “முழங்கு கடன் முழவின் முசிறியன்ன” (புறநா.343, பிம்);.

     “முதுநீர் முன்றுறை முசிறி முற்றி” (அகநா.57:15);.

வால்மீகி இராமாயணம் இப்பட்டினத்தை முரசீபத்தனம் என்று கூறுகிறது. சுள்ளி என்னும் பேரியாறு கடலில் கலக்குமிடத்து இருந்த பட்டினம். முற்காலத்து யவனர் முதலியோர் மிளகு முதலிய சரக்குகளை மேனாட்டிற்குக் கொண்டு செல்லும் துறைமுகம் எனத் தாலமி முதலிய யவன யாத்திரிகரால் புகழப்பட்டது. சேரனது தலைநகரமாகவும் இருந்தது (அபி.சிந்:);.

முசிறு

முசிறு musiṟu, பெ.(n.)

   1. செந்நிறமுள்ள எறும்பு வகை; red ant, Formica smaragdina.

   2. கடுகடுப்புள்ளவன்ள்; one easily enraged;

 surly, irritable person.

   3. முசு1 பார்க்க (வின்.);; see {}.

     [முயிறு → முசிறு.]

முசிற்றெறும்பு

 முசிற்றெறும்பு musiṟṟeṟumbu, பெ.(n.)

முசிறு பார்க்க;see {}.

முசிலாப்பு

 முசிலாப்பு musilāppu, பெ.(n.)

ஒடுக்கிக் கட்டுகை (யாழ்ப்’.);,

 compression to a small bulk.

முசிவு

முசிவு1 musivu, பெ.(n.)

முசிப்பு, 2 பார்க்க: see {},

   2. “அரிமுசிவொடு மெழ” (தேவா.832:3);.

     [முசி → முசிவு.]

 முசிவு2 musivu, பெ. (n.)

   கசங்குகை; crumpling.

     “திருப்பரியட்டத்தைக் கொண்டு வசைவும் முசிவுமற விரித்துச் சாத்தி” (திவ். பெரியாழ். 3, 4:2, வியா.பக்.594);.

     [முசி → முசிவு.]

முசீபத்து

முசீபத்து mucīpattu, பெ. (n.)

   துன்பம்; distress, misfortune.

     “முசீபத்தைப் போக்கிப் பரக்கத்து உண்டாக்கும்” (மகி.க.ii,94.);

     [Ar. {} → த. முசீபத்து]

முசு

முசு1 musu, பெ.(n.)

   கருங்குரங்கு வகை; langurSemnopithecus priamus.

     “கருமை மெழுகியவை போன்றினிய வல்லா முகத்த முசுவுங் குரங்கு மிரிய” (சீவக.1414);.

     “மைபட் டன்ன மாமுக முசுக்கலை” (அகநா.267:9);.

     “மெய்யோ வாழிதோழி சாரல் மைபட்டன்ன மாமுக முசுக்கலை” (குறுந்:121:1, 2);.

     “இன்முகப் பெருங்கலை நன்மேயல் ஆரும்” (நற்.119:5);.

   க. முக;   ம. மொச்ச;து. முஜ்ஜு (muju);.

     [p]

 முசு2 musu, பெ.(n.)

   திமில்; hump.

முசுகுந்தன்

முசுகுந்தன் musugundaṉ, பெ.(n.)

   தேவர்கள் அசுரரொடு பொருதபொழுது தேவர்களுக்கு உதவிய ஒரு மன்னன்; an emperor, who assisted the {} in their wars against the Asuras.

     ‘வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்த னென்னும் மன்னனுக்கு வரும் இடையூற்றை’ (சிலப்.5:65, உரை);.

முசுக்கட்டை

முசுக்கட்டை musukkaṭṭai, பெ.(n.)

   1. கம்பளிப் பூச்சி; hair caterpiller or silk worm.

   2. அரம்பத்தின் பற்களைப் போன்ற இலைகளையும், கம்பளிப் பூச்சி போன்ற பழங்களையும் உடைய ஒருவகைக் குத்துச் செடி; mulberry, Morus indica Indian mulberry plant.

முசுக்கட்டைப்பூச்சி

 முசுக்கட்டைப்பூச்சி musukkaṭṭaippūssi, பெ.(n.)

   கம்பளிப் பூச்சி; hairy caterpiller.

     [முசுக்கட்டை + பூச்சி.]

முசுக்கை

 முசுக்கை musukkai, பெ.(n.)

முசுமுசுக்கை (மூ.அ.); பார்க்க; see {}.

முசுக்கொட்டைச்செடி

முசுக்கொட்டைச்செடி musukkoḍḍaisseḍi, பெ.(n.)

முசுக்கட்டை, 2 பார்க்க; see {}, 2. இதன் இலை பட்டுப்புழுவிற்கு உணவாகப் பயன்படுகிறது.

     [முசுக்கட்டை → முசுக்கொட்டை + செடி.]

முசுடர்

 முசுடர் musuḍar, பெ.(n.)

முசுண்டர் (சூடா.); பார்க்க; see {}.

முசுடு

முசுடு1 musuḍu, பெ.(n.)

முசிறு (வின்.); பார்க்க; see {}.

மரங்களில் அதிகமாக இருக்கும் பழுப்பு நிறப் பெரிய எறும்பு.

     [முசிறு → முகடு.]

 முசுடு2 musuḍu, பெ. (n.)

   சிடுமூஞ்சி, சடுதியில் சினங்கொள்வோன் (முன்கோபி);; irritable person.

அவர்முசுடாக இருந்தாலும் நல்லவர்.

முசுட்டுமுட்டைத்தைலம்

 முசுட்டுமுட்டைத்தைலம் musuṭṭumuṭṭaittailam, பெ.(n.)

   முசுற்றெறும்பின் முட்டை களினின்று வடித்தெடுக்கும் எண்ணெய்; a medicinal oil prepared from the eggs of red ants.

     [முகடு + முட்டை + Skt. தைலம்.]

முசுட்டை

 முசுட்டை musuṭṭai, பெ.(n.)

   கொடி வகை (வின்.);; a kind of creeper Iponoea candicans.

மறுவ. பஞ்சி.

க. முசுடெ.

இது ஒரு வகைக் கொடி, தென்னிந்தியாவி லெங்கும் கிடைக்கக் கூடியது. இதன் கொடி மருத்துவ குணமுடையது. கைப்பு, கார்ப்புச் சுவையுடையது. இக் கொடியைக் குடிநீரிட்டாவது அல்லது பொடி செய்து இதர மருந்துகளுடன் சேர்த்தாவது கொடுக்க வளி, வெள்ளை, நீர்த்தினவு, புடை, சிறு சிரங்கு இவைகளை நீக்கும் குணமுடையது. இதை அரைத்து எண்ணெய்விட்டுக் காய்ச்சி சொறி, சிரங்கு, நமைச்சல் முதலியவைகட்குப் பூசிவர அவை குணமாகும். இது நுட்புழுக் கொல்லி (Germicide);, ஊதை (வாத); மடக்கி (Antivata); மலமிளக்கி (Laxative);, ஆகியவற்றிற்குச் சிறந்த மருந்தாகும். இக்கொடியின் மருத்துவக் குணங்களைப் பற்றிய குறிப்புக்களை ‘அகத்தியர் குணபாடப் பாடலால் அறிய முடிகிறது.

     “மாதே முசுட்டையது வாதமொடு ஐயத்தைத்

தீதே புரிநீரைத் தீர்க்குங்காண் வேதனைசெய்

வன்மலத்தைத் தள்ளும் வறட்சி சொறிசிரங்கைச்

சன்மமறப் போக்கிலிடுஞ் சாற்று”

முசுட்டைப்பெண்

 முசுட்டைப்பெண் musuṭṭaippeṇ, பெ.(n.)

   ஒருவகைப் புழு; a kind of worm (சா.அக.);.

முசுண்டர்

முசுண்டர் musuṇṭar, பெ.(n.)

   கீழ்மக்கள்; low, mean people.

     “தவிர்தி யினி முசுண்டரவர் சங்கந் தன்னை” (சேதுபு.துரா.65);.

     [முசுடு → முசுண்டர் = முசுடு எறும்பு போல் தாழ்ந்த, கீழ்மக்கள்.]

முசுண்டி

முசுண்டி musuṇṭi, பெ. (n.)

   படைக்கலக் கருவி வகைகளுள் ஒன்று (வின்.);; a sledge like weapon of war.

     “முழு முரட்டண்டுவேன் முசுண்டி” (கம்பரா. பிரமாத்திர.48);.

முசுண்டை

முசுண்டை musuṇṭai, பெ.(n.)

   கொடி வகை; leather berried bindweed Rivea ornata.

     “புல்கொடி முசுண்டையும்” (நெடு நல்.13);.

     “முன்றின் முஞ்ஞையொடுமுசுண்டை பம்பி” (புறநா.320:1);.

     “குவையிலை முசுண்டை வெண்பூக் குழைய” (அகநா.94:2);.

க. முசுடே.

முசுப்பதி

 முசுப்பதி musuppadi, பெ.(n.)

   போர் வீரருறையுமிடம் (வின்.);; barracks for soldiers.

முசுப்பாத்தி

முசுப்பாத்தி1 musuppātti, பெ. (n.)

   1. முசிப்பாற்றி பார்க்க; see {}.

   2. வேலை; work.

 முசுப்பாத்தி2 musuppātti, பெ. (n.)

   வேடிக்கை, வியப்பு, பொழுதுபோக்கு; amusement, good fun.

குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருப்பதைப் பார்க்க முசுப்பாத்தியாக இருந்தது. இந்த ஊரில் ஒரு முசுப்பாத்தியும் இல்லை.

     [முசிப்பு → முசுப்பு + ஆற்றி. முசுப்பாற்றி → முசுப்பாத்தி.]

முசுப்பிரா

 முசுப்பிரா musuppirā, பெ.(n.)

   நரிக் கொன்னை; a variety of cassia (சா.அக.);.

முசுப்பு

முசுப்பு musuppu, பெ.(n.)

முசு2 (உ.வ.); (திருவிருத்.21, வியா.); பார்க்க; see {}.

தெ. முபு

     [முசு → முசுப்பு.]

முசுமக்கி

 முசுமக்கி musumakki, பெ.(n.)

   மஞ்சட் காளான்; yellow mushroom.

முசுமாலினி

 முசுமாலினி musumāliṉi, பெ.(n.)

   மஞ்சட் காசி தும்பை; yellow balsam (சா.அக.);.

முசுமுக க்கைக்கீரை

 முசுமுக க்கைக்கீரை musumugaggaigārai, பெ.(n.)

   முசுமுகக்கையிலை; leaf of {} (சா.அக.);.

   தெ. முசுமுககய;   இந். பிலவி;மரா.சித்ரதி.

     [முசுமுசுக்கை + கீரை.]

மூச்சு இருமல் (அ); ஈளை நோய் (சுவாசகாசம்);, கோழை முதலியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

முசுமுசு

முசுமுசு1 musumusuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நீர் முதலியன கொதித்தல் (வின்.);; to bubble up, as boiling water.

   2. குறட்டை விடுதல் (வின்.);; to snore.

   3. தினவெடுத்தல்

   9

 to feel a sensation of itching.

     [முகமுசெனல் → முசுமுசுத்தல்.]

 முசுமுசு2 musumusuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   உறிஞ்சுதல்; to snuff up, as a hog.

     [முசுமுசெனல் → முசுமுசு த்தல்.]

முசுமுசுக்கை

முசுமுசுக்கை musumusukkai, பெ.(n.)

   சுனையுள்ள இலைகளையும் அரத்தநிறப் பழங்களையும் உடைய மருந்துக் கொடிவகை; bristly bryony, creeper, Mukia scabrella.

     “முசுமுசுக்கை மாமூலி” (பதார்த்த:57);.

ம. முசுமுகக்க.

முசுமுசுச்சாலை

 முசுமுசுச்சாலை musumusussālai, பெ.(n.)

   பழைய புதைகுழி வகை (இ.வ.);; kistvaen, ancient grave.

     [ஒருகா.முதுமக்கட்சால் → முசுமுசுச்சால் → முசுமுசுச்சாலை.]

முசுமுசுப்பு

முசுமுசுப்பு1 musumusuppu, பெ.(n.)

   1. நீர் முதலியன கொதிக்கும் ஒலி; sound of boiling.

   2. சொறியும் போது உண்டாகும் ஒலி; sound of scratching provoked by itching.

     [முசுமுசு → முசுமுசுப்பு.]

 முசுமுசுப்பு2 musumusuppu, பெ.(n.)

   விருப்பம், அன்பு (சிரத்தை);; eager of attention;

 earnestness.

     “சீராட்டி வளர்த்த முசுமுசுப் பெல்லாம் திருநிறத்திலே தோன்றும்படி யிருக்கும்” (திவ்.பெரியாழ்.1. 2:12 வியா.பக்.38);.

முசுமுசெனல்

முசுமுசெனல் musumuseṉal, பெ.(n.)

   1. நீர் முதலியன கொதித்தற் குறிப்பு; sound of boiling.

   2. தினவெடுத்தற் குறிப்பு; itching sensation.

     [முசுமுசு → முசுமுசெனல்.]

முசும்பு – தல்

முசும்பு – தல் musumbudal,    5 செ.கு/வி.(v.i.)

   முணமுணத்தல் (வின்.);; to mumble, mutter murmur.

     [உசும்புதல் → முசும்புதல்.]

முசுரம்

 முசுரம் musuram, பெ.(n.)

   புற்றுக் காளான்; mushroom growing on ant hill (சா.அக.);.

முசுறி

முசுறி musuṟi, பெ.(n.)

முசிறி பார்க்க;see {}.

     “முசிறியன்ன நலஞ் சால் விழுப் பொருள்” (புறநா.343);.

முசுறு

முசுறு musuṟu, பெ.(n.)

   1. முசு1 பார்க்க;see {}.

   2. முசிறு, 1, 2 பார்க்க;see {}, 1, 2.

     [முசிறு + முசுறு.]

மரங்களில் அதிகமாக இருக்கும் பழுப்பு நிறப் பெரிய எறும்பு வகை.

முசுறுப்புல்

 முசுறுப்புல் musuṟuppul, பெ.(n.)

முயிற்றுப் புல் பார்க்க;see {}

மறுவ. அளத்துப்புல்

     [முசுறு + புல்.]

முசுறுமுட்டை

 முசுறுமுட்டை musuṟumuṭṭai, பெ.(n.)

   மரங்களில் இருக்கும் கட்டெறும்பைப் போன்ற சிவந்த எறும்பின் முட்டை. இலுப்பை மரத்தின் முசுறு முட்டை சிறப்பு குணம் எனக் கருதுவர். இதனால் காற்று பிடிப்பு நோய் நீங்கும் என்பர்; the egg of a red ant which has its nest in trees. The one on the tree Bassia longifolia is considered best for medicinal use (சா.அக.);.

     [முசுறு + முட்டை.]

முசுறுமுட்டைத்தைலம்

 முசுறுமுட்டைத்தைலம் musuṟumuṭṭaittailam, பெ. (n.)

   சிவப்பெறும்பின் முட்டையி னின்று எடுக்கும் எண்ணெய்; a medicated oil extracted from the eggs of red ants.

     [முசுறுமுட்டை + Skt. தைலம்.]

முசுறுமுட்டைப்பால்

 முசுறுமுட்டைப்பால் musuṟumuṭṭaippāl, பெ.(n.)

   நஞ்சு (விஷம்); முறிவதற்காக வேண்டி பயன்படுத்தும் சிவப்பெறும்பின் முட்டையில் இருந்து எடுக்கப்பட்ட பால்; the juice from the eggs of red ants used as an antidote in poisons (சா.அக.);.

     [முசுறு + முட்டை + பால்.]

முசுறுமூலி

 முசுறுமூலி musuṟumūli, பெ.(n.)

   ஒருவகைத் தழுவு கொடி மூலம் தயாரிக்கும் பெரு மருந்து; a twiner Aristolochia indica.

     [முசுறு + மூலி.]

முசுலி

முசுலி musuli, பெ. (n.)

   குதிரையின் கணைக்காற் குழைச்சில் வீக்கங் கண்டு நொண்டச் செய்யும் நோய் வகை (அசுவசா. 107);; a disease of swelling in the ankles of horse which makes it limp.

முசுலீம்

 முசுலீம் musulīm, பெ. (n.)

   முகமதியன்; muhammadan.

     [Ar. muslim → த. முசுலீம்]

முசைப்பேயெட்டி

 முசைப்பேயெட்டி musaippēyeṭṭi, பெ.(n.)

   மைலாலக்கடி மரம் (L.);; common grey mango laurel, Tetracantha rexburghil.

முச்சகம்

முச்சகம்  muccagam, பெ.(n.)

முப்புவனம் பார்க்க; see {}.

     “முச்சக நிழற்று முழுமதி முக்குடை” (நன்.258);.

     [மூன்று + Skt. சகம்.]

முச்சக்கரம்

முச்சக்கரம்  muccakkaram, பெ.(n.)

முப்புவனம் பார்க்க; see {}.

     “முச்சக்கரமு மளப்பதற்கு நீட்டியகால்” (பொருந.இறுதி வெண்பா.3);.

     [மூன்று + சக்கரம்.]

முச்சங்கம்

முச்சங்கம் muccaṅgam, பெ.(n.)

முக்கழகம் பார்க்க; see {}.

     “ஆதிமுச்சங்கத் தருந்தமிழ்க் கவிஞர்” (சிலப்.பக்.8, கீழ்க் குறிப்பு);.

     [மூன்று + சங்கம்.]

முச்சடை

முச்சடை muccaḍai, பெ.(n.)

   விபீடணன் மகளாய் இலங்கையில் சீதைக்குத் துணையா யிருந்து உதவியவள், திரிசடை; the daughter of {} and companion of {} her captivity in {}.

     “முச்சடை யென்பாளவள் சொல்ல” (கம்பரா.நித்தனை. 82);.

     [மூன்று + சடை.]

முச்சட்டை

முச்சட்டை1 muccaṭṭai, பெ.(n.)

   1. அழகு; elegance, beauty.

   2. ஒழுங்கு; neatness, order.

தெ. முட்சட

 முச்சட்டை2 muccaṭṭai, பெ.(n.)

   மூன்று சட்டை; three shirts.

ஒன்றே போல முச்சட்டை வாங்கினேன்.

     [மூன்று + சட்டை.]

முச்சதுரம்

முச்சதுரம்  muccaduram, பெ.(n.)

   1. முக்கோணம்; triangle.

     “நாற்சதுரமும் முச்சதுரமும் வில்வடிவமாகிய மூன்றுலகை’ (திருமுரு.181, உரை);.

   2. சதுரக்கள்ளி (மூ.அ.);; square spurge.

     [மூன்று + சதுரம்.]

முச்சத்தி

முச்சத்தி  muccatti, பெ.(n.)

   அரசர்க் குரியதாகக் கருதப்பட்ட மூவகை ஆற்றல் (இரகு.திக்கு.25);; the three powers of a king.

     [மூன்று + சத்தி.]

அரசர்க்குரிய மூவகை ஆற்றல் :

   1); பொருள், படைகளால் அமையும் ஆற்றல் (பிரபு சத்தி);,

   2. அமைச்சரின் சூழ்ச்சி வன்மையால் அரசர்க்கு உண்டாகும் ஆற்றல் (மந்திர சத்தி);,

   3. முயற்சியின் பயனால் விளையும் ஆற்றல், ஊக்கம் (உற்சாக சத்தி);.

முச்சந்தி

முச்சந்தி  muccandi, பெ.(n.)

   1. ஒரு நாளின் மூன்று பகுதியாகிய காலை, பகல், மாலை (திரிசந்தி);; the three periods of the day.

   2. மூன்று தெரு அல்லது மூன்று வழி கூடுமிடம் (திருமுரு.225, உரை);; junction of three streets or three ways.

   3. முற்காலத்தில் வட்டாட்சி அலுவலகப் (நாஞ்.);; a petty taluk officer of old days.

     [மூன்று + சந்தி. சந்தி = கூடுகை, கூடுமிடம்.]

முச்சந்திமண்

 முச்சந்திமண் muccandimaṇ, பெ.(n.)

   மூன்று தெரு கூடுமிடத்தில் உள்ள தரை மண்; mud at the junction of three streets.

     [முச்சந்தி + மண்.]

குழந்தைகளுக்கு நோய் ஏற்படின் கண்ணேறு பட்டு விட்டதாகக் கருதி முச்சந்தி மண்ணை எடுத்து வந்து உப்பு, மிளகாய், மண் சேர்த்து குழந்தையின் தலையைச் சுற்றி நெருப்பில் போட கண்ணேறு போய் விடும் என்ற நம்பிக்கை இன்றளவும் ஊர்களில் காணும் பழக்கமாகும்.

முச்சந்திமூப்பன்

 முச்சந்திமூப்பன் muccandimūppaṉ, பெ.(n.)

   முச்சந்தியிலுள்ள ஒரு சிறு தெய்வம் (இ.வ.);; a village deity, having its abode at the junction of three streets or ways.

     [முச்சந்தி + மூப்பன்.]

முச்சரக்கு

 முச்சரக்கு  muccarakku, பெ. (n.)

   சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய முப்பண்டம்; the three pungents dry ginger, pepper and long pepper (சா.அக.);.

     [மூன்று + சரக்கு.]

முச்சலாடு

 முச்சலாடு muccalāṭu, பெ.(n.)

   காது மிகச் சிறியதாய் உள்ள செம்மறியாடு; brown sheep which has very small size of ears.

மறுவ. மொச்சி ஆடு.

     [முச்சல் + ஆடு.]

     [p]

முச்சலிக்கா

முச்சலிக்கா muccalikkā, பெ. (n.)

   1. உடன் படிக்கை; note of hand, written obligation, agreement, bond;

 deed;

 counter part of lease, as by a tenant to his landlord.

   2. பிணை ஆவணம்; recognisance, bail, penalty bond.

த.வ. ஒப்பந்தம்

     [Skt. mucalka → த. முச்சலிக்க]

முச்சலீலிகை

முச்சலீலிகை muccalīligai, பெ.(n.)

   வாய்நீர் (உமிழ்நீர்);, சிறுநீர், விந்துநீர் (நாதநீர்); என்னும் மூவகை நீர்; the three liquids, viz. {}

     “முச்சலீலிகை சொக்கிடுவார்” (திருப்பு.603);.

     [மூன்று + Skt. சலிலம் (நீர்); → சலீலிகை.]

முச்சாரிகை

முச்சாரிகை muccārigai, பெ.(n.)

   குதிரை, தேர், யானை என்ற மூன்று படையும் ஒருங்குசேர்ந்து செல்லும் அணிவகுப்பு; parade of horses, chariots and elephants.

     “முச்சாரிகை யொதுங்கு மோரிடத்தும்” (ஏலாதி.12);.

     [மூன்று + சாரிகை. சாரிகை = அணிவகுப்பு, வட்டமாயோடுகை.]

முச்சி

முச்சி1 mucci, பெ.(n.)

   1. தலையுச்சி; crown of head.

     “மகளை… முச்சிமோந்து” (சூளா. இரதநூ.102);.

   2. கொண்டை முடி; tuft of hair on the head.

     ‘இவள் போதவிழ் முச்சியூதும் வண்டே” (ஐங்குறு.93);.

   3. சூட்டு; creast.

     “வாகையொண்பூப் புரையு முச்சிய தோகை” (பரிபா.14:7);.

ம. முச்சி.

     [உச்சி → முச்சி.]

 முச்சி2 mucci, பெ.(n.)

முச்சில் (வின்.); பார்க்க; See muccil.

 முச்சி mucci, பெ. (n.)

   1. அலுவலர்களுக்கு எழுது பொருள் முதலியன அணியம் செய்து கொடுக்கும் வேலையாள் (C.G.);; stationer, one who serves out stationery in a public office

   2. தோல் வினைஞன் (C.G.);; one who works in leather.

   3. உறைகாரன் (அக.நி.);; sheath maker.

   4. தச்சன்; carpenter, cabinet-maker.

   5. வண்ணம் பூசுபவன்; painter.

     [H. {} → த. முச்சி]

முச்சினி

 முச்சினி mucciṉi, பெ.(n.)

   மூன்றாம் மாதம் (க.அக.);; third month.

முச்சிமரம்

 முச்சிமரம்  muccimaram, பெ.(n.)

   கலியாண முருக்கமரம்; a tree with prickles Erythrina indica one bearing red flowers;

 the other white flowers (சா.அக.);.

     [முச்சி + மரம்.]

முச்சிமுச்சிக்கல்

 முச்சிமுச்சிக்கல்  muccimuccikkal, பெ.(n.)

மணலில் பொருளை ஒளிக்கும்

   விளையாட்டு (கோவை.);; a kind of children play.

மறுவ. கிச்சுக்கிச்சு தாம்பலம்.

     [முச்சி + முச்சி + கல்.]

முச்சியன்

முச்சியன் mucciyaṉ, பெ. (n.)

   1. தச்சன் (யாழ்ப்.);; carpenter, cabinet maker.

   2. வண்ணக்காரன் (வின்.);; painter.

ம. முச்சியன்

முச்சியமான்சுரம்

 முச்சியமான்சுரம் mucciyamāṉcuram, பெ.(n.)

   விட்டுவிட்டு வரும் காய்ச்சல்; intermittent fever.

காய்ச்சல் விட்டுவிட்டு வரும்பொழுது வியர்வை, நடுக்கம், பிதற்றல், கழிச்சல், கக்கல் (வாந்தி); முதலிய குணங்கள் உண்டாகும் (சா.அக.);.

முச்சிரம்

முச்சிரம்1 mucciram, பெ.(n.)

   சூலம் (வின்.);; trident.

 முச்சிரம்2 mucciram, பெ.(n.)

   பெருஞ்சீரகம் (பரி.அக.);; anise seed.

முச்சில்

 முச்சில்  muccil, பெ.(n.)

   சிறுமுறம் (பிங்.);; toy winnow.

     [முற்றில் → முச்சில். முற்றில் = சிறுமுறம்.]

     [p]

முச்சீரடி

 முச்சீரடி muccīraḍi, பெ.(n.)

   சிந்தடி (மூன்று அடிகளைக் கொண்ட செய்யுள்);; metrical line of three feet.

     [மூன்று + சீர் + அடி.]

முச்சீரம்

முச்சீரம் muccīram, பெ.(n.)

   மூன்று வகை சீரகம் (1. சீரகம், 2. பெருஞ்சீரகம், 3. கருஞ் சீரகம்);; the three kinds of cumin (சா.அக.);.

     [மூன்று + சீர் + அம்.]

முச்சு-தல்

முச்சு-தல்  muccudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. மூடுதல்; to cover.

     “தாட்செருப்புலகெலாந் தோன்முச்சுந் தரம்போல்” (ஞானவா. மாவலி.8);.

   2. செய்தல்; to make.

முச்சியே மரக்கோவை முயற்சியால்” (சிவதரு.பாவ.81);.

   தெ. மீயூ;க., து. முச்சு.

     [மூய் = மூடுதல், முடிதல். மூய் → மூச்சு → முச்சு → முச்சுதல்.]

முச்சுக்கருவளி

 முச்சுக்கருவளி muccukkaruvaḷi, பெ.(n.)

   ஊர்க்குருவி; a bird sparrow (சா.அக.);.

முச்சுடர்

முச்சுடர் muccuḍar, பெ.(n.)

   ஞாயிறு, திங்கள், தீ ஆகிய மூன்று சுடர்கள்; the three luminaries viz., {}.

     “அந்திச் சேதியொளி முச்சுடர் முக்கணும்” (தக்கயாகப்.281);.

     [மூன்று + சுடர்.]

முச்சுடும்

 முச்சுடும்  muccuḍum, முச்சூடும் பார்க்க; see {}.

முச்சுரப் பிறழ்ச்சிப் பண்

 முச்சுரப் பிறழ்ச்சிப் பண் muccurappiṟaḻccippaṇ, பெ. (n.)

   பிறழ்ச்சிப் பண்ணின் ஒரு வகை; a musical note.

     [மு(மூன்று);+கரம்+பிறழ்ச்சி+பண்]

முச்சுரம்

 முச்சுரம்  muccuram, பெ.(n.)

   ஊதை (வாதம்);, பித்தம், சளி (சிலேட்டுமம்); முதலியவற்றால் உண்டான காய்ச்சல்;{}, pitta fever and kapa fever (சா.அக.);.

     [மூன்று + சுரம்.]

முச்சூடும்

 முச்சூடும் muccūṭum, கு.வி.எ. (adv.)

   முழுவதும்; fully.

நாள் முச்சுடும் காத்திருந்தேன், ஆனால் அவனைப் பார்க்க முடியவில்லை.

ம. முச்சூடும்.

முச்சை

 முச்சை  muccai, பெ.(n.)

   காற்றாடிப் பட்டத்தில் முக்கோணமாகக் கட்டி நூலுடன் இணைத்து முடிச்சிடும் மூன்று சிறுதுண்டு நூல்கள் (யாழ்ப்.);; the three strings tied to a paper kite in a triangular form with their free ends knotted together with the line.

முச்சொல்லலங்காரம்

 முச்சொல்லலங்காரம் muccollalaṅgāram, பெ.(n.)

   ஒரு தொடர் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள் கொண்டு நிற்கும் சொல்லணி வகை (வின்.);; a figure of speech in which an expression is capable of three meanings when divided in three different ways.

     [மூன்று + சொல் + Skt. அலங்காரம்.]

முஞல்

 முஞல் muñal, பெ.(n.)

   கொசுகு (வின்.);; mosquito, gnat.

முஞ்சம்

முஞ்சம் muñjam, பெ. (n.)

   குழந்தைகளின் தலை உச்சியிலணியும் அணி வகை; ornament worn in the crown of head by children.

     “திணைபிரி புதல்வர் கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ” (பரிபா.16:8);.

     [முச்சி → முஞ்சம்.]

முஞ்சரம்

 முஞ்சரம் muñjaram, பெ.(n.)

   தாமரைக் கிழங்கு (பரி.அக.);; lotus root.

முஞ்சல்

 முஞ்சல் muñjal, பெ.(n.)

   இறப்பு; dying (சா.அக.);.

முஞ்சி

முஞ்சி muñji, பெ.(n.)

   1. ஒருவகை நாணல் (L.);; reedy sugarcaneSaccharum arundinaceum.

   2. மணமாகாத அந்தணர்கள் (பிரமசாரிகள்); அரையிற் கட்டும் நாணற் கயிறு; girdle formed of the reed, worn by Brahmin celibate students.

     “முப்புரி நூலினன் முஞ்சியன்” (கம்பரா.வேள்வி.22);.

முஞ்சுதல்

முஞ்சுதல் muñjudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சாதல்; to die.

     “அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்” (திருவாச.4:19);.

   2. முடிதல் (உ.வ.);; to end.

     [முடிதல் → முஞ்சுதல்.]

முஞ்சை

 முஞ்சை muñjai, பெ.(n.)

   தருப்பைப் புல்; sacrificial grass (சா.அக.);.

முஞ்ஞை

முஞ்ஞை muññai, பெ.(n.)

முன்னை2 பார்க்க;see {}.

     “மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞை….. அடகு” (புறநா.197);.

முடக்கடி

முடக்கடி muḍakkaḍi, பெ.(n.)

   1. தடை (வின்.);; hindrance, objection, thwarting.

   2. வருத்தம் (இ.வ.);; straits, difficulties.

     [முடக்கு + அடி.]

முடக்கத்தான்

 முடக்கத்தான் muḍakkattāṉ, பெ.(n.)

முடக்கொற்றான் பார்க்க; see {} (சா.அக.);.

மறுவ. முடக்கறுத்தான் கொடி, இந்திர வல்லி.

முடக்கன்

 முடக்கன் muḍakkaṉ, பெ.(n.)

   தாழை; a fragrant screw pine.

     [முடங்கல் → முடக்கன். முடங்கல் = தாழை.]

முடக்கம்

முடக்கம்1 muḍakkam, பெ.(n.)

   1. தடை; restraint, hindrance, obstacle.

     “எய்து மது முடக்கமானால்” (அரிச்.பு.நகர்நீங்.21);.

   2. அடக்கம் (பிங்.);; contraction.

   3. கைகால் முடங்குகை; lameness, being crippled by paralysis.

   4. வளைவு; bend, curve.

     ‘வாளையினது பகுத்தவாயை யொக்க முடக்கத்தை உண்டாக்கி… விரலிடத்தேயிட்ட முடக்கென்னு மோதிரம்’ (நெடுநல்.1434, உரை);.

   5. பணமுடை; want, as of money.

   6. பணம் முதலியன தேங்கிக் கிடக்கை; lying idle, as money in a bank.

     [முடக்கு → முடக்கம்.]

 முடக்கம்2 muḍakkam, பெ.(n.)

   1. தடை ஏற்பட்ட அல்லது தடுக்கும் நிலை; stoppage.

பணி முடக்கத்தால் பொருளாக்கம் நின்றுவிட்டது.

   2. பயனாகாத வகையில் தங்கிவிட்ட நிலை; freeze.

அரசு நடவடிக்கையால் அயல்நாட்டு வங்கியில் போட்டிருந்த பணம் முடக்கமாகிவிட்டது.

     [முடக்கு → முடக்கம்.]

முடக்கம்செய்தல்

 முடக்கம்செய்தல் muḍakkamceytal, தொ.பெ.(vbl.n.)

   நொண்டியாகச் செய்கை; to cripple or mutilate or maim a person.

     [முடக்கம் + செய்தல்.]

முடக்கம்மை

 முடக்கம்மை muḍakkammai, பெ.(n.)

முடக்குமாரி பார்க்க; see {}.

     [முடக்கு + அம்மை.]

முடக்கறுத்தான்

 முடக்கறுத்தான் muḍakkaṟuttāṉ, பெ.(n.)

முடக்கொற்றான் பார்க்க; see {}.

     [முடக்கு + அறுத்தான்.]

முடக்கறை

முடக்கறை muḍakkaṟai, பெ.(n.)

   மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு; inner mound of a fortification, as cover for bowmen.

     ‘பகழியினை யுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து’ (பு.வெ.6:24, உரை);.

     [முடக்கு + அறை.]

முடக்கற்றான்

முடக்கற்றான் muḍakkaṟṟāṉ, பெ.(n.)

முடக்கொற்றான் (தைலவ.தைல.93); பார்க்க; see {}.

முடக்கு

முடக்கு1 muḍakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. மடக்குதல்; to bend, as knee, arm, etc.

     “முடக்கிச் சேவடி” (திவ்.பெருமாள்.7:2);.

   2. சுற்றிக் கொள்ளுதல்; to wind round, wrap, as one’s person.

     “நாகங்கச்சா முடக்கினார்” (தேவா.955, 1);.

   3. தடுத்தல் (அக.நி.);; to prevent, hinder.

   4. முடங்கச் செய்தல்; to cause to bend or contract, to disable, as one’s limbs.

     ‘வளிநோய் அவனை முடக்கி விட்டது’ (வின்.);.

   5. நிறுத்துதல்; to cease activity, to stop, discontinue.

பணமுடையால் சீட்டை முடக்கிவிட்டான்.

   6. வேய்தல்; to roof in, as a hut;

 to cover.

குடிசை முடக்கி வைத்தேன் (வின்.);.

     [முடங்குதல் → முடக்குதல்.]

 முடக்கு2 muḍakkudal,    5 செ.கு.வி.(v.i.)

   படுத்துக் கொள்ளுதல் (உ.வ.);; to lie down.

     [முடங்குதல் → முடக்குதல்.]

 முடக்கு3 muḍakku, பெ.(n.)

   1. வளைவு; curve, bend.

     ‘மகளிர் காலிற் பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற் போல’ (சீவக.510, உரை);.

   2. முடங்கும் நாக்கு; tongue.

     “அண்ண மூடெழ முடக்கினை யழுத்தி” (தணிகைப்பு. அகத்தியனருள்.280);.

   3. தெருவின் கோணம்; corner of a winding street.

அத்தெரு மூலை முடக்காயிருக்கிறது (வின்.);.

   4. முடக்கு மோதிரம் (நெடுநல்.1434, உரை);; a kind of ring.

   5. முடக்கறை (பு.வெ. 5:1, கொளு.); பார்க்க; see {}.

   6. தடை (இ.வ.);; hindrance.

   7. சுணக்கம் (இ.வ.);; delay.

   8. வேலையின்மை; unemployment.

   9. சீற்றம் (இ.வ.);; anger, Wrath.

   10. நோய் வகை (வை.மூ.);; a disease. 1

   1. மூலை; corner. 1

   2. கோடித் திருப்பம்; last turning.

     ‘முடக்குத் தூம்பினின்றும் வடக்கு நோக்கிப் போன வாய்க்கால்’ (தெ.கல். தொ.7:137);. 1

   3. நெரிந்த வளைவு; bend, curve.

க. முடுக்கு.

     [முடங்கு → முடக்கு.]

 முடக்கு4 muḍakkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. செயல்பாடு தொடர முடியாதபடி தடைப்படுத்துதல்; stop, so as not to proceed further, cripple.

சிக்கன நடவடிக்கையைக் கரணியம் காட்டி வேலை வாய்ப்புத் திட்டங்களை முடக்கிவிடுதல் கூடாது. போக்குவரத்து நெரிசல் கரணியமாக வழக்கமான பணி சிறிது நேரம் முடக்கப்பட்டது.

   2. பணத்தை, பயன்பாடு குறைவான ஒன்றில் முதலீடு செய்தல்; lock up capital, funds, etc, make a dead investment.

செயலாக்கத் திறன் இல்லாத திட்டத்தில் பல கோடி உருபாவை இந்த நிறுவனம் முடக்கிவிட்டது.

   3. நுழைவு ஆவணம் முதலியவற்றைப் பயன் படுத்தாதவாறு அல்லது வங்கியில் உள்ள பணத்தைப் பெறமுடியாதவாறு தடுத்தல்; confiscate, freeze an account.

இரு வங்கிகளில் அவர் கணக்கில் உள்ள பணத்தை முடக்கி வைக்க அரசு ஆணை பிறப்பித்தது.

   4. ஒருவரின் நடவடிக்கைகளைக் குறிப்பிட்ட இடத்துக்குள் இருக்கும் வகையில் ஒடுக்குதல்; confine one’s activities.

இவ்வளவு படித்தவளை வீட்டிற்குள் முடக்கி வைப்பது மடமை.

     [முடங்குதல் → முடக்குதல்.]

முடக்குக்காய்ச்சல்

 முடக்குக்காய்ச்சல் muḍakkukkāyccal, பெ.(n.)

முடக்கம்மை (M.L.); பார்க்க; see {}.

     [முடக்கு + காய்ச்சல்.]

முடக்குக்குடர்

 முடக்குக்குடர் muḍakkukkuḍar, பெ.(n.)

முடக்குக்குடல் பார்க்க; see {}.

     [முடக்கு + குடர். குடல் → குடர்.]

முடக்குக்குடல்

 முடக்குக்குடல் muḍakkukkuḍal, பெ.(n.)

   சிறுகுடல் (யாழ்.அக.);; small intestines.

     [முடக்கு + குடல்.]

முடக்குச்சரக்கு

முடக்குச்சரக்கு muḍakkuccarakku, பெ.(n.)

   1. விலைப்படாது, விற்கப்படாது கிடக்குஞ் சரக்கு (வின்.);; dead stock, unsaleable goods.

   2. பாழான சரக்கு; damaged goods.

     [முடக்கு + சரக்கு. சரக்கு = வணிகப் பண்டம்.]

முடக்குப்பனை

 முடக்குப்பனை muḍakkuppaṉai, பெ.(n.)

   கோணலாக வளர்ந்த பனை (வின்.);; crooked palmyra.

     [முடக்கு + பனை.]

முடக்குமாரி

 முடக்குமாரி muḍakkumāri, பெ.(n.)

   அம்மை நோயின் கரணியமாகக் கைகால்களை முடக்கிக் காய்ச்சலை உண்டாக்கும் ஊதை நோய் (வாதம்);; fever causing pain in the joints and cripple the person.

மறுவ. முடக்கம்மை

     [முடக்கு + மாரி.]

முடக்குமோதிரம்

முடக்குமோதிரம் muḍakkumōtiram, பெ.(n.)

   நெளி மோதிரம் (சிலப்.6:95, அரும்);; a kind of ring.

     [முடக்கு + மோதிரம். மோதிரம் = விரலணி வளைந்த விரலணி.]

முடக்குற்றான்

 முடக்குற்றான் muḍakkuṟṟāṉ, பெ.(n.)

முடக்கொற்றான் (வின்.); பார்க்க; see {}.

முடக்குவாதம்

முடக்குவாதம் muḍakkuvātam, பெ.(n.)

முடக்கூதை பார்க்க; see {}.

     “முடக்கு வாதத்தர்” (கடம்ப.பு:இலீலா.131);.

     [முடக்கு + Skt. வாதம். Skt vada → த. வாதம் = காற்று.]

முடக்குவாயு

 முடக்குவாயு muḍakkuvāyu, பெ.(n.)

முடக்கூதை பார்க்க; see {}.

     [முடக்கு + Skt. வாயு. Skt. {} → த. வாயு = காற்று.]

முடக்கூதை

முடக்கூதை muḍakātai, பெ.(n.)

   1. கை கால் முதலிய உறுப்புக்களை முடங்கச் செய்யும் பக்கவூதை நோய்; paralysis.

அவனுடைய தாத்தாவுக்கு முடக்கூதை வந்து ஒருகையும் ஒரு காலும் விழுந்து விட்டது.

   2. மூட்டுக் கடுகடுத்ததைப் போலவும் முறிந்தது போலவும் நடக்க வொண்ணாமல் தவழ்ந்து போகும்படி செய்யும் காற்றுப்பிடிப்பு நோய்; a disease that cripples the person rheumatic and gout disease.

   3. மூட்டு வீக்கம்; arthritis.

     [முடக்கு + ஊதை. ஊதை = வளிநோய்.]

முடக்கெடு-த்தல்

முடக்கெடு-த்தல் muḍakkeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வளைவை நேராக்குதல்; to straighten, as anything bent.

   2. சீற்றத்தைத் தணித்தல்; to appease.

     [முடக்கு + எடுத்தல்.]

முடக்கொற்றான்

முடக்கொற்றான் muḍakkoṟṟāṉ, பெ.(n.)

   1. கொடிவகை; balloon – vine Cardios permum halicacabam.

   2. கொடிவகை,; lesser balloon vine Cardiospermum canescens.

மறுவ. முடக்குற்றான், முடக்கறுத்தான்.

 Tel. Buddaboosara;

 Mal.ulinja;

 Kan. Kanakai;

 Hind. Kanphata.

     [முடம் + கொற்றான் முடக்கொற்றான் = முடச்சூலையைப் போக்கும் கொடிவகை.]

இப்பூண்டு இந்தியா முழுவதும் பயிராகின்றதெனினும் தமிழ்நாடு, வங்காளம், இலங்கை போன்ற இடங்களில் மிகுதியாய் வளருகின்றன. துவர்ப்பு, கார்ப்புச் சுவை மிக்கது. இதன் இலை, வேர் முதலியன கீல், சினைப்பு, புண் கரப்பான் ஆகிய நோய்களை நீக்கும் தன்மையுடையது என்பதை அகத்தியர் குண்பாடம் என்னும் நூலால் அறியலாம்.

     “சூலைப் பிடிப்பு சொரி சிரங்கு வன்கரப்பான்

காலைத் தொடுவாய்வுங் கன்மலமுஞ் சாலக்

கடக்கத்தா னோடிலிடுங் காசினியை விட்டு

முடக்கொற்றான் றன்னை மொழி” (அக.குண.);

இதன் இலை, வேர் முதலியவைகளை குடிநீரிலிட்டு குடிக்க வளிமூலம், நாட்பட்ட இருமல் நீங்கும். மேலும் இதன் இலைகளை வதக்கி அடிவயிற்றில் கட்டச் சூதகத்தை மிகுதிப்படுத்தி சூலக அழுக்குகளை வெளிப்படுத்தும். இதன் இலைச் சாற்றைக் காதில் விட காதுவலி, சீழ் வடிதல் நீங்கும் (பொருட்பண்பு நூல் குணபாடம்.1, பக்.600);.

     [p]

முடங்கசாலி

 முடங்கசாலி muḍaṅgacāli, பெ.(n.)

   காரைச்செடி; carri a wild plant (சா.அக.);.

முடங்கன்முலை

 முடங்கன்முலை muḍaṅgaṉmulai, பெ.(n.)

   தாழை விழுது (தைலவ.தைல.);; switch of the fragrant screw pine.

     [முடங்கல் + முலை.]

முடங்கர்

முடங்கர் muḍaṅgar, பெ.(n.)

   ஈன்றணிமையில் உண்டாம் நலிவு; physical exhaustion, as in confinement.

     “குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த” (அகநா.147);.

     [முடங்கு → முடங்கர்.]

முடங்கல்

முடங்கல்1 muḍaṅgal, பெ.(n.)

   1. வில்போல் மடங்குகை (சூடா.);; being bent, as a bow.

   2. பணம் முதலியன தேங்கிக் கிடக்கை (தாயு. சிற்சுகோதய.1);; lying idle, as money in a bank.

   3. தடைப்படுகை; being hindered.

     “முயலுநோன்பு முடங்க லிலான் ” (சேதுபு. முத்தீர்.6);.

   4. முடக்கூதை பார்க்க; see {}.

   5. சுருளோலைக் கடிதம்; roll of palmleaf used in letterwriting.

     “மண்ணுடை முடங்கல்” (சிலப்.13:96);.

   6. சிறுமை; smallness.

     “முடங்கன் மனாலையமே யினிதாயிற்று” (திருநூற்.30);.

   7. ஓர் அணா மதிப்புள்ள சிறுகாசு (இ.வ.);; small coin, equivalent to 1 anna.

     [முடங்கு → முடங்கல்.]

 முடங்கல்2 muḍaṅgal, பெ.(n.)

   1. முடத்தாழை; fragrant screw pine.

   2. முள்ளி (மலை.);; Indian nightshade.

   3. மூங்கில்; spiny bamboo.

     [முடங்கு → முடங்கல்.]

முடங்கி

முடங்கி1 muḍaṅgi, பெ. (n.)

   1. நோயாற் கிடையாய்க் கிடப்பவன் (யாழ்.அக.);; bed ridden person.

   2. முடவன் (பாண்டி.);; lame person.

     [முடங்கு → முடங்கி.]

 முடங்கி2 muḍaṅgi, பெ.(n.)

   நிலத்தின் மூலை நீட்டம் (நெல்லை.);; elbow or jutting part of a piece of land.

     [முடங்கு → முடங்கி.]

முடங்கிக்கிடந்தநெடுஞ்சேரலாதன்

முடங்கிக்கிடந்தநெடுஞ்சேரலாதன் muḍaṅgikkiḍandaneḍuñjēralātaṉ, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a {} poet.

     [முடங்கி + கிடந்த + நெடுஞ்சேரலாதன்.]

இவர் சேரர் குடியைச் சேர்ந்தவர். முடங்கிக் கிடந்த என்ற அடைமொழியால் நடக்கவியலாது இருந்தார் போலும். இவர் நெய்தலைப் புனைந்து

பாடுவதில் வல்லவர். இவர் பாடிய பாடல் அகநானூற்றில் கிடைக்கிறது.

     “நெடுங்கயிறு வலந்தன குறுங்க ணவ்வலைக்

கடல்பா டவிய வினமீன் முகந்து

துணைபுன ருவகையர் பரத மாக்க

ளிளையரு முதியருங் கிளையுடன் துவன்றி

யுப்பொ யுமண ரருந்துறை போக்கு

மொழுகை நோன்பக டொப்பக் குழீஇ

பயிர்திணி யடைகரை யொலிப்ப வாங்கிப்

பெருங்களந் தொகுத்த வுழவர் போல

விரந்தோர் வறுங்கல மல்க வீசிப்

பாடுபல வமைத்துக் கொள்ளை சாற்றிக்

கோடுயர் திணிமணற் றுஞ்சுந் துறைவ

பெருமை யென்பது கெடுமோ வொருநாண்

மண்ணா முத்த மரும்பிய புன்னைத்

தண்ணறுங் கானல் வந்து தும்

வண்ண மெவனோ வென்றனிர் செலினே” (அகநா.30);.

முடங்கிறை

முடங்கிறை muḍaṅgiṟai, பெ.(n.)

   கூரையின் கூடல்வாய்; valley of a roof

     “முடங்கிறைச் சொறிதரு மாத்திர ளருவி” (முல்லைப்.87);.

     [முடங்கு + இறை. முடங்குதல் = சுருங்குதல். இறை = உடலுறுப்பின் மூட்டு வாய், கூரையின் கூடல்வாய்.]

முடங்கு

முடங்கு1 muḍaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. சுருங்குதல்; to contract.

     “இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி” (பதினோ.திருவிடைமும்.22);.

   2. கைகால் இயங்காமற் போதல், ஊனமாதல்; to become lame or maimed crippled at paralsed.

அவருக்கு அந்த நேர்ச்சி (விபத்து);க்குப் பின் கால் முடங்கி விட்டது.

     “கைகால் முடங்கு பொறியிலி” (பிரபுலிங். துதி.1);.

   3. வளைதல்; to bend.

     “அடங்கினன் முடங்கியலம் வந்து” (உத்திரரா. வரையெடுத்த.72);.

   4. கெடுதல்; to be spoiled.

     “சிறுமை பொருந்திப் பெருமை முடங்கி” (திருப்பு.372);.

   5. தங்குதல்; to abide, remain, stay.

     “அறுகாற் பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கு” (பதினொ.பொன்வண். 64);.

   6. படுத்துக் கொள்ளுதல்; to lie down.

     “பசியட முடங்கிய பைங்கட் செந்நாய்” (நற்.103);.

   7. செயல் தொடராதபடி தடைப்படுதல்; to be hindred, be crippled.

வேலை நிறுத்தத்தால் மருத்துவமனைப் பணிகளும் முடங்கியுள்ளன. செயல் முடங்கி விட்டது.

   8. பயன்பாடு குறைவான ஒன்றில் முதலீடு செய்யப்படுதல், தேங்குதல்; get locked up. என் பணம் முழுவதும் நூல் வெளியிட்டதினால் முடங்கி விட்டது.

   9. ஒருவரின் நடவடிக்கைகள் குறிப்பிட்ட இடத்துக்குள் இருக்கும் வகையில் ஒடுங்குதல்; be confined to something.

எனது அம்மா நோய்வாய்ப்பட்டு முடங்கி விட்டார். அவள் பட்டப் படிப்புப் படித்தும் மடப்பள்ளியில் முடங்கிவிட்டாள்.

தெ., க. முடுகு.

     [முடம் → முடங்கு → முடங்குதல்.]

 முடங்கு2 muḍaṅgu, பெ.(n.)

   1. முடக்கூதை (திவா.); பார்க்க; see {}.

   2. தெருச் சந்து; lane,

   3. தெருவளைவு; turning in a street.

     [முடம் → முடங்கு.]

 முடங்கு3 muḍaṅgu, பெ.(n.)

   1. நிலத்தின் மூலை நீட்டம்; elbow or jutting part of a field.

     “மேற்கு முடங்கு குழி” (தெ.கல்.தொ.4, 194);.

   2. வளைவு; corner, turning.

     [முடம் → முடங்கு.]

முடங்குளை

முடங்குளை muḍaṅguḷai, பெ.(n.,

   1. பிடரி மயிர் (சது.);; mane, as of horse.

   2. பிடரி மயிருடைய அரிமா; lion, as having a mane.

     “முடங்குளை முகத்து….. அவுணனொடும்” (கல்லா.முருக. துதி.); (பிங்.);.

முடங்குவாதம்

 முடங்குவாதம் muḍaṅguvātam, பெ.(n.)

முடக்கூதை பார்க்க; see {}.

     [முடங்கு + வாதம். Skt. Vada → த. வாதம் = ஊதை நோய்..]

முடங்கொன்றான்

 முடங்கொன்றான் muḍaṅgoṉṟāṉ, பெ.(n.)

முடக்கொற்றான் பார்க்க; see {}.

     [முடம் + கொன்றான்.]

முடச்சூர்

 முடச்சூர் muḍaccūr, பெ. (n.)

   கோயமுத்துர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்; a village in Coimbatore.

     [முடச்சு+ஊர்]

இவ்வூரை வீரராசேந்திர சோழன் ஆண்டு வந்தான் எனக் கல்வெட்டு கூறுகிறது.

முடஞ்சம்

 முடஞ்சம் muḍañjam, பெ.(n.)

   நிலவேம்பு; a plant the creat Andrographis paniculata alias justicia paniculata cures fevers (சா.அக.);.

முடத்தாமக்கண்ணியார்

முடத்தாமக்கண்ணியார் muḍattāmakkaṇṇiyār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a {} poet.

     [முடத்தாமம் + கண்ணியார்.]

எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான பொருநராற்றுப்படையை இயற்றியவர்.

     “இயற் பெயர் முன்னர்” (தொல்.சொல்.இடை:22, சேனா.); என்னும் நூற்பாவினடியில் ‘ஆர்’ ஈறு (விகுதி); பன்மையொடு முடிதற்கு முடத்தாமக்கண்ணியார் வந்தாரென்பது எடுத்துக்காட்டாகக் காட்டப் பெற்றிருத்தலால் இவர் பெயர் முடத்தாமக்கண்ணி என்று தெரிகின்றது. இப்பெயர் உறுப்பால் வந்ததென்றும், இவர் பெண்பாலரென்றும் கூறுவாரும் உளர். ‘ஆர்’ ஈறு பெற்ற பல பெயர்கள் இருப்ப, இவர் பெயரை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டியது இவரின் சிறப்பைப்

புலப்படுத்தும். காவிரின் பெருமையைப் பொருநராற்றுப்படையில் சிறப்பாகக் கூறுகின்றார்.

     “எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்

குல்லை கரியவும் கோடெரி நைப்பவும்

அருவி மாமலை நிழத்தவு மற்றக்

கருவி வானம் கடற்கோண் மறப்பவும்

பெருவற னாகிய பண்பில் காலையும்

நறையு நரந்தமு மகிலு மாரமுந்

துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி

நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்

புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்

கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து

சூடுகோ டாகப் பிறக்கி நாடொறுங்

குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை

கடுந்தெற்று மூடையி னிடங்கெடக் கிடக்குஞ்

சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையுட் டாகக்

காவிரி புரக்கு நாடுகிழ வோனே” (பொருந.233248);.

முடத்தி

முடத்தி muḍatti, பெ.(n.)

   1. முடமானப் பெண்; lame woman.

   2. வளைவுள்ளது; anything bent.

     [முடவன் (ஆ.பா.); → முடத்தி (பெ.பா.);.]

முடத்திருமாறன்

முடத்திருமாறன் muḍattirumāṟaṉ, பெ. (n.)

   இடைச் சங்கத்திறுதியில் வாழ்ந்த பாண்டியன் (இறை. 1:5);; the last of the {} kings of the Middle {}.

     [முடம் + திருமாறன்.]

இவர் இடைக் கழக இறுதியில் பாண்டிய நாட்டை ஆண்டவர். இவர் காலத்துக் கழகமிருந்த கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டுக் கழகம்

அழிந்தபோது, உடனே இப்பொழுது உள்ள மதுரையில் கடைக் கழகத்தை நிறுவினார். இவர் பாண்டிய மரபினர். சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் மகனாகிய குட்டுவன் சேரலைப் பாராட்டியுள்ளார். இவர் பாலைத் திணையையும், குறிஞ்சித் திணையையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் தாம் பாடியுள்ள செய்யுளில் சாபம் என்ற வடசொல்லைக் (நற்.228); கையாண்டுள்ளார். இவர் பாடியதாக நற்றிணையில் இரண்டு பாடல்கள் காணப்படுகின்றன.

     “என்னெனப் படுமோ தோழி மின்னுவசிபு

அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீரக்

கண்தூர்பு விரிந்த கனையிருள் நடுநாள்

பண்பில் ஆரிடை வரூஉம் நந்திறத்து

அருளான் கொல்லோ தானே கானவன்

சிறுபுறம் கடுக்கும் பெருங்கை வேழம்

வெறிகொள் சாபத் தெறிகணை வெரீஇ

யழந்துபட விடாகத் தியம்பும்

எழுந்துவீழ் அருவிய மலைகிழ வோனே (நற்.228);.

முடத்தெங்கு

முடத்தெங்கு muḍatteṅgu, பெ.(n.)

   கோணலாக வளர்ந்த தென்னை; crooked cocopalm.

     “முடத்தெங் கொப்பன’ (நன்.31);.

     [முடம் + தெங்கு. வளைந்து பிறர் நிலத்துச் சென்று நிற்பது.]

நல்லாசிரியர் இலக்கணத்தை நான்கு உவமைகளால் (நிலம், மலை, நிறைகோல், மலர்); காட்டிய நன்னூலார், ஆசிரியர் ஆகத் தகாதவர் இலக்கணத்தையும் நான்கு உவமைகளால் கூறுகின்றார். அவற்றுள் ஒன்று ‘முடத்தெங்கு’.

     “கழற்குடம், மடற்பனை, பருத்திக் குண்டிகை முடத்தெங்கொப்பன” (நன்.31);.

நீரூற்றல் முதலிய பல்வகை உதவிகளையும் செய்து தன்னைப் பேணி வளர்க்காத இயல்புடைய பிறருக்குத் தன்னிடத்துள்ள காய்களைத் தரும் குற்றமுடையது

முடத்தெங்கு. அதாவது வளைந்து பிறர் நிலத்துச் சென்று பயன் தரும் இயல்புடையது முடத்தெங்கு.

கொடுத்தல் முதலிய பலவகை யுதவிகளையும் செய்து தமக்கு வழிபாடு செய்யும் இயல்பில்லாத மாணாக்கருக்கு தம்மிடத் திலுள்ள கல்விப் பொருளைத் தருங் குற்றமுடையவர் ஆசிரியராகாதார். ஆதலால் அவருக்குப் பிறர் நிலத்தில் வளைந்து சென்று பயன்தரும் முடத்தெங்கு உவமையாகியது.

முடந்தை

முடந்தை muḍandai, பெ. (n.)

   1. முடம்; lameness.

   2. வளைந்தது; anything bent.

     “முடந்தை நெல்லின் கழையமல் கழனி” (பதிற்றுப்.32:13);.

   3. மாதவிலக்குத் தடைபடும் நோய் (M.L.);; failure or suspended flow of the menses Amenorrhoea.

     [முடம் → முடந்தை. முடம் = தடைபடுதல்.]

முடனத்திமூலி

 முடனத்திமூலி muḍaṉattimūli, பெ.(n.)

   செம்பருத்தி; red cotton Gossypium (சா.அக.);.

முடப்புளி

 முடப்புளி muḍappuḷi, பெ.(n.)

   திருமுதுகுன்றம் (விருத்தாசலம்); வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vriddhachalam Taluk.

     [முடம்(வளைவு);+புளி]

முடமயிர்

முடமயிர் muḍamayir, பெ.(n.)

   1. இரண்டு இமைகளும் ஒட்டிக் கொண்டு காயம் (விரணம்); உண்டாகி கருமணிகள் வெளுத்துக் காணும் ஒருவகைக் கண் நோய்; a disease affecting the pupil of the eye caused by the sticking of the eye lids togethers.

   2. தொண்டையில் முடி முளைப்பதல் உண்டாவதாகக் கருதப்படும் நோய் வகை; a disease said to be caused by the growth of hairs in the throat (சா.அக.);.

     [முடம் + மயிர்.]

முடமா

 முடமா muḍamā, பெ.(n.)

   காட்டுமா அதாவது சாரப் பருப்பு; wild mango seed Buchanania angustifolia (சா.அக.);.

முடமுடெனல்

 முடமுடெனல் muḍamuḍeṉal, பெ.(n.)

   ஒலிக்குறிப்பு வகை (யாழ்.அக.);; onom. expr. signifying cracking noise.

முடமோசியார்

முடமோசியார் muḍamōciyār, பெ.(n.)

   கழகப் புலவர்;{} poet.

மறுவ. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.

     [முடம் + மோசியார்.]

இவர் சோழநாட்டு உறையூரை அடுத்த ஏணிச்சேரியைச் சார்ந்தவர். முட மோசியார் என்பது உறுப்பால் வந்த பெயராகலாம். இவர் பிறப்பால் அந்தணர் என்பதை தொல்காப்பிய மரபியல் நூற்பா 74இல் நச்சினிர்க்கினியர் கூறியுள்ளார். சேரமான் அந்துவஞ் சேரலிரும்பொறையால் ஆதரிக்கப்பட்டவர். இவரால் பாடப்பட்டோர் சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி, ஆய். புறநானூற்றில் 13, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 241, 374, 375 ஆகிய எண்ணுள்ள பாடல்களைப் பாடியுள்ளார். போர்க்களத்திற் பகைவரது சேனையைப் பிளந்து

கொண்டு வாள் வீரர்க்கிடையே தன் தலைமை தோன்றச் செல்லும் சோழன் களிற்றிற்குக் கடலைக் கிழித்துச் செல்லும் நாவாயையும், விண் மீன்களுக்கு இடையே விளங்கும் திங்களையும் இவர் உவமை கூறியிருக்கின்றார் (புறநா.13);. ஆய் என்னும் வள்ளலுடைய கொடைச் சிறப்பு, வீரச் சிறப்பு முதலியனவும் இவராற் பலவகைகளில் பாராட்டப் பெற்றுள்ளன. இதுபற்றியே,

     “திருந்துமொழி மோசி பாடிய ஆயும்” (புறநா.158); எனப் பெருஞ்சித்திரனார் இவரைப் பாராட்டியுள்ளார்.

     “இவனியா ரென்குவை யாயி னிவனே

புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய

எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்

மறலி யன்னகளிற்று மிசை யோனே

களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்

பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்

சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப

மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே

நோயில னாகிப் பெயர்கதி லம்ம

பழன மஞ்ஞை யுகுத்த பீலி

கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்

கொழுமீன் விளைந்த கள்ளின்

விழுநீர் வேலி நாடுகிழ வோனே” (புறநா.13);.

முடம்

முடம் muḍam, பெ.(n.)

   1. வளைவு; bent.

     “முடத்தொடு துறந்த வாழா வன்பகடு” (புறநா.307);.

   2. வளைந்தது; anything bent.

     “முடத்தாழை” (கலித்.136);.

   3. கை கால் ஊனமுடன் இருப்பது; leprosy.

   4. ஆடல்பாடல் முதலியவற்றின் குற்றம்; defects in singing and dancing.

     “பண்ணே பாணி தூக்கே முடமே” (சிலம்.3:46);.

   5. கை அல்லது கால் செயல்படாத நிலை; crippled condition of leg or arm.

முடப்பிள்ளை யானாலும் மூத்தப் பிள்ளை. கோழி மிதித்துக் குஞ்சு முடமாவது இல்லை.

   6. உறுப்புக் குறை; defective limbs or organs.

   7. நொண்டி; lameness.

   8. கீழ் பிடிப்பு (கீல் பிடிப்பு);; orthritic.

     [முடங்கு → முடம். முள் → முண் → முணம் → முடம். முள் (வளைவு);]

முடரோமம்

முடரோமம் muḍarōmam, பெ.(n.)

முடமயிர், 2 பார்க்க; see {},2.

     [முடம் + Skt. ரோமம்.]

முடலை

முடலை1 muḍalai, பெ.(n.)

   1. உருண்டை (பிங்.);; ball, globe.

   2. முறுக்கு; twist in the fibre, as of firewood.

     “முடலை விறகின்” (மணிமே. 16:26);,

   3. முருடு (திவா.);; roughness.

   4. கழலை (அக.நி.);; wen, tubercle, excrescence.

   5. மனவன்மை; hardness of heart.

     “நன்றுணரா ராய முடலை முழுமக்கள்” (பழ.25);.

   6. பெருங்குறடு (அக.நி.);; large pincers.

     [முடம் → முடல் → முடலை.]

 முடலை2 muḍalai, பெ.(n.)

   புலால் நாற்றம்; bad smell, as of flesh.

     “முடலை யாக்கையின்” (ஞானா.23:5);.

     [முடை = புலால்நாற்றம். முடை → முடலை.]

 முடலை3 muḍalai, பெ. (n.)

   1. வலிமை; strength.

   2. பெருமை; greatness.

     [மிடல் = வலிமை. மிடல் → முடல் → முடலை.]

முடவன்

முடவன் muḍavaṉ, பெ.(n.)

   1. நொண்டி; lame person.

     ‘காலான் முடவன்’ (தொல்.சொல். 73, இளம்பூ.);.

     “முடவரல்லீர்” (தேவா.919, 8);.

     “முடவனுக்குக் கோபம் விட்ட இடத்திலே” (பழ.);.

     “முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டாற் போல” (பழ.);.

   2. அருணன் (அக.நி.);;{}.

   3. காரிகோள் (சனி.); (பிங்.);; the planet Saturn.

     [முடம் → முடவன்.]

முடவன்முழுக்கு

 முடவன்முழுக்கு muḍavaṉmuḻukku, பெ.(n.)

   காவிரியில் கடைமுகத்து முழுக்காட்டுப் பலனை அளிக்கும் நளி (கார்த்திகை); மாத முதல் நாள் முழுக்கு; bath in the Cauvery on the first day of Nali ({});, considered as meritorious as bath on {} mugamday.

     [முடவன் + முழுக்கு.]

முடவாட்டுக்கல்

முடவாட்டுக்கல்1 muḍavāḍḍukkal, பெ.(n.)

   ஆட்டின் வயிற்றினின்று எடுக்கப்படும் மஞ்சணிறமுள்ள மணப்பண்டம் (ஆட்டு ரோசனை); (வின்.);; bezoar found in sheep.

     [முடை + ஆட்டுக்கல். முடை = புலால், புலால் நாற்றம்.]

முடவாட்டுக்கால்

முடவாட்டுக்கால்2 muḍavāḍḍukkāl, பெ.(n.)

ஆட்டுக்கால் மரம்

 a tree (சா.அக.);.

முடவாண்டி

முடவாண்டி muḍavāṇḍi, பெ. (n.)

   கொங்கு நாட்டில் கொங்கு வேளாளர் கூட்டத்துட் பிறக்கும் பிறவிக் குருடு முடங்களான குழந்தைகளை வலிய எடுத்து வளர்த்து வரும் இரப்போர் (பிச்சைக்கார); வகையினர் (E.T.5: 84);; a class of beggars in {} country, who voluntarily take and bring up all children born blind or lame in the {} Caste.

     [முடம் + ஆண்டி. ஆண்டி = இரப்போன், துறவி.]

முடவு-தல்,

முடவு-தல்,  muḍavudal,    5 செ.கு.வி. (v.i.)

   நொண்டுதல் (யாழ்ப்.);; limp.

     [முடம் → முடவு → முடவுதல்.]

முடவேலி

 முடவேலி muḍavēli, பெ. (n.)

   பரமக்குடி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Paramakkudi Taluk.

     [முடம்+வேலி]

முடி

முடி1 muḍittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. முற்றுவித்தல்; to end, terminate.

     “நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத்திடர் முடித்தான்” (கம்பரா.மிதிலை.88);. நூல் முழுவதையும் மும்மாதத்திற்குள் எழுதி முடித்துவிட்டார்.

   2. நிறைவேற்றுதல்; to effect, accomplish.

     “அருந்தொழில் முடியரோ திருந்துவேற் கொற்றன்” (புறநா.171);.

   3. அழித்தல்; to destroy.

     “சேனையை… முடிக்குவன்” (கம்பரா.மிதிலை.98);.

   4. கட்டுதல்; to fasten tie.

     “பாஞ்சாலி கூந்தன் முடிக்க” திவ்.பெரியதி.6. 7:8).

   5. தலையில் பூவைச் சூட்டிக் கொள்ளுதல்; to decorate with, put on, as flowers.

     “கூழையுளே திலாள் கைபுனை கண்ணி முடித்தான்” (கலித். 107:15);. பூ முடித்து பொட்டுவைத்து அழகு செய்து கொள்ளுதல்.

   6. செயலை, நிகழ்ச்சியை நிறைவுக்குக் கொண்டு வருதல், நிறைவு பெறும்படி செய்தல்; complete or finish a work, one’s studies, etc., end one’s speech.

சமையலை முடித்து விட்டு வந்து பேசுகிறேன். முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. என்னுடைய பையன் இப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். அவர் பேச்சை முடிப்பது போல் தெரியவில்லை.

   7. குறிப்பிட்டவாறு இறுதி நிலை அமைத்தல்; conclude, end.

     “கனவு நனவாகட்டும்” என்ற தொடரோடு கதையை முடித்திருக்கிறார்.

   8. ஒருவரை இல்லாதபடி ஆக்குதல், கொல்லுதல்; bump off some one, put an end to some one.

கெடுதி (அநீதி); செய்பவரை அவர்கள் முடித்து விடுவார்கள் போலிருக்கிறது.

     [முல் → முள் → முண்டு → முண்டி → முடி → முடித்தல். முல் = வளைதல், சுற்றுதல். முட்டு → முட்டி → முடி → முடித்தல்.]

 முடி2 muḍidal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. சேர்த்து முடிச்சிடுதல், சுற்றிக்கட்டுதல்; gather up something in to a knot;

 tie up, something keeping it in a cloth, etc.

கூந்தலை அழகாக முடித்திருந்தாள். தலையில் துணியை முடிந்து கொண்டாள். கீரை விற்பவள் காசை முந்தானையில் முடிந்திருந்தாள்.

   2. தலையில் பூ முதலியவற்றை செருகுதல், அணிதல்; put flowers, etc., on some one’s hair.

தலையில் பூ முடிந்து விடுகிறேன், வா.

   3. செயல், நிகழ்ச்சி முற்றுப் பெறுதல்,

   முடிவுக்கு வருதல்; of an act, an event come to an end, come to a close.

     “சொன்முறை முடியாது” (தொல்.சொல்.233);.

விழா இனிதே முடிந்தது. முதல் ஆட்டம் முடிய இன்னும் சிறிது நேரம் தான் இருக்கிறது.

   4. ஒருவருக்குக் குறிப்பிடப்படும் வயது முழுமை பெறுதல், நிறைவு அடைதல்; turn specified age complete.

அவனுக்கு இருபத்தியெட்டு வயது முடிந்து இருபத்தியொன்பது நடக்கிறது. குழந்தைக்கு மூன்று வயது முடிந்து விட்டது.

   5. குறிப்பிட்டதில், குறிப்பிடப்படுவதோடு இறுதி நிலை அமைதல்; end in or with something.

தேர்வில் இரண்டாம் எண்ணில் முடியும் அனைத்துத் தேர்வாளர்களும் வெற்றி பெற்றதாய்க் கூறப்படுகிறது. வாய்ப் பேச்சு கைகலப்பில் முடிந்தது.

   6. மூன்றாம் வேற்றுமை அல்லது நான்காம் வேற்றுமை உருபோடு கூடியதான தன்மையில் அமைதல், இயலுதல்; with instrumental or dative case be able to, have the ability to, can.

     “என்னால் முடியாது” என்று சொல்லாதே. “முடியும்” என்று சொல்! யாராலும் மறுக்க முடியாத உண்மை! அவருக்கு முடிந்ததை அவர் செய்துவிட்டார்.

   7. எதிர்மறை வடிவங்களில் உடம்புக்கு ஆற்றல் இருத்தல்; have energy or health;

 feel fit.

உடம்புக்கு முடியவில்லை என்று அம்மா படுத்துவிட்டாள்.

   8. நிறைவேறுதல்; to be effected of accomplished.

     “முட்டின்றி மூன்று முடியுமேல்” (நாலடி, 250);.

   9. அழிதல்; to be destroyed, to perish.

மூவேந்தர் குலமும் 16ஆம் நூற்றாண்டோடு முடிந்து விட்டது.

   10. வாழ்நாள் முடிந்து சாதல்; to die

     “கயலேர் கண்ணி கணவனொடு முடிய (பு. வெ. 10, சிறப்பிற்.9, கொளு.);

   11. தோன்றுதல்; to appear.

     “முடிந்தது முடிவது முகிழ்ப்பதுமவை மூன்றும்” (பரிபா. 13:46);.

   12. இயலுதல்; to be possible, capable. என்னால் அதனைச் செய்ய முடியும்.

   13. சண்டை மூட்டுதல்; to incite persons to a quarrel.

அவனுக்கும் இவனுக்கும் முடிந்து விட்டான்.

   14. தொடர்புபடுத்துதல்; to make a marriage alliance.

அவளுக்கும் இவனுக்கும் முடிந்துவிட்டார்கள்.

   ம. முடிக;க. முடி.

     [முட்டு → முட்டி → முடி → முடிதல்.]

     ‘முடி’ என்னுஞ் சொல் ஒரு பொருளின் முடிவான இறுதிப் பகுதியைக் குறித்தலால், ஒரு வினை முடிதலைக் குறிக்கும் வினைச் சொல்லாகவும் அஃது ஆளப்பட்டது (வே.க.);.

 முடி3 muḍi, பெ.(n.)

   1.தலை; head.

     “அதுவே சிவன் முடிமேற்றான் கண்டு” (திவ். திருவாய்.2 8:6); (திவா.);.

   2. குடுமி (பிங்.);; man’s hair tuft.

   3. பெண்டிர் கொண்டை போடும் வகை ஐந்தனுள் உச்சியில் முடிக்கும் மயிர்க்கட்டு வகை (திவா.);; tuft or coil of hair on the head, one of aimpal.

   4. உடம்பில் குறிப்பாகத் தலையில் வளரும் தொடுவுணர்வு இல்லாத மெல்லிய இழை, தலை மயிர்; head hair.

     “முடிமுடியாய் நட்டால் பிடிபிடியாய் விளையுமா?” (பழ.அக.);. “முடிவைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறது, கொண்டு குலம் பேசுகிறது போலிருக்கின்றது” (பழ.அக);. “முடி வைத்த தலைமேலே சுழிக் குற்றம் பார்க்கிறதா?” (பழ.அக.);. முடிக்காணிக்கை (உ.வ.);

   5. மயிர்; hair. பன்றி முடி.

   6. தெய்வத் திருமேனிகட்கும், அரசர்கட்கும் தலையில் அணிவிக்கும், உயர் மணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட திருமுடி, மணிமுடி; crown.

     “ஞாயிற்றணி வனப்பமைந்த….. புனைமுடி” (பரிபா.13:2);. “முடிசார்ந்த மன்னரும் முடிவில் ஒருபிடி சாம்பாராகிப் போகிறதுதான்” (பழ.அக.);.

   7. மலை உச்சி; crown, as of a mountain.

     “முடியை மோயின னின்றுழி” (கம்பரா.மீட்சி. 186);.

   8. தேங்காயிற்பாதி (வின்.);; half of a coconut.

   9. முடிச்சு; knot, tie.

     “கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்” (மதுரைக். 256);.

   10. முடிவு (வின்.);; end. 1

   1. நாற்றுமுடி; bundle, as of a paddy seedlings for transplantation.

     “நிரை நிரை விளம்பி வழிமுடி நடுநரும்” (கல்லா.46:14);. 1

   2. பறவை பிடிக்குங் கண்ணி, சுருக்குக் கண்ணி; noose.

     “துறவாம் பறவை மயன் முடியிற் படுதல்” (பிரபுலிங். மாயையுற்.56);. 1

   3. துளசி (பிங்.);; sacred basil. 1

   4. தேங்காய் குடுமி (யாழ்ப்.);; tuft of fibre left on the upper part of the coconut.

     [முட்டு → முட்டி → முடி. முண்டு → முண்டி → முடி (வே.க.முல்5);.]

மாந்தரும் அஃறிணைப் பொருள்களும் மாந்தரை அல்லது அஃறிணைப் பொருள்களை முட்டுவது தலையாலேயே யாதலால், தலையும் தலைபோன்ற உச்சிப் பகுதியும் தலையிலுள்ள உறுப்பும் அணிகலமும் முடியெனப் பெயர் பெறும்.

விலங்கு மயிரையும் முடியென்றது, மயிர் என்பது இடக்கர்ச் சொல்லாகி மயிரை முடியென்னும் இடக்கரடக்கல் வழக்கொழிந்த பிற்காலத்ததாகும்.

நாற்றுமுடி, மூட்டை முடிச்சு முதலிய கூட்டுச் சொற்களிலுள்ள முடியென்னும் சொல் வளைத்தல் அல்லது சுற்றுதல் என்பதை வேர்ப் பொருளாகக் கொண்ட வேறொரு சொல்லினின்று தோன்றியதாகும்.

நட்டமாக நிற்கும் பொருள்களின் உச்சிப் பகுதி அவற்றிற்கு முடிபோன் றிருத்தலால் அது முடியெனப்பட்டது. மலையுச்சி வான் முகட்டை முட்டிக் கொண்டிருப்பதாகப் பாடவும் சொல்லவும் படுதல் காண்க. மலைமுடிகளுள் உயர்ந்தது கொடுமுடி (வே.க.முல்4);.

 முடி4 muḍi, து.வி.(aux.v.)

   1. செய்வித்தல், தீர்த்தல் என்னும் பொருள் தரும்படியான வினைப்படுத்தும் வினை; verbalizer used in the sense of settle, perform, accomplish, etc.

பெண்ணுக்குக் கல்யாணம் முடிக்க வேண்டும். பழி முடிக்காமல் வாழப் போவதில்லை.

   2. முதன்மை வினையின் செயலை நிறைவுறச் செய்வதாகக் குறிப்பிடும் ஒரு துணை; an auxiliary verb used to indicate that the work, action indicated in the main verb has reached a state of completion.

இந்தப் புத்தகத்தை நான் படித்து முடித்து விட்டேன். ஆறே மாதத்தில் வீட்டைக் கட்டி முடித்தார்.

     [முட்டு → முட்டி → முடி.]

முடிகண்டம்

 முடிகண்டம் muḍigaṇḍam, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivagangai Taluk.

     [முடி+(கொண்டான்);கண்டம்]

முடிகத்தரிக்கிறவன்

 முடிகத்தரிக்கிறவன் muḍigattariggiṟavaṉ, பெ.(n.)

   கத்திரி கள்வன் (வின்.);; cutpurse, pick pocket.

     [முடி + கத்தரிக்கிறவன்.]

முடிகம்

 முடிகம்  muḍigam, பெ.(n.)

   பெருச்சாளி; bandi coot (சா.அக.);.

முடிகயறுபோடல்

 முடிகயறுபோடல் muḍigayaṟupōḍal, பெ.(n.)

   பூச்சிக்கடி, கக்குவான் முதலிய நோய்களுக்கு மந்திர ஆற்றலால் ஒருகயிறு முடிந்து உடம்பில் அணிவது; wearing of the magic thread to ward off or cure certain diseases morbid conditions of infants, insect bites, whooping cough, etc.

குழந்தைக்கு முடிகயறுபோட மசூதிக்குச் சென்றான் (உ.வ.);.

மறுவ. முடிகயிறுபோடல்.

     [முடி + கயறு + போடல்.]

முடிகயிறுபோடல்

 முடிகயிறுபோடல் muḍigayiṟupōḍal, பெ.(n.)

முடிகயறுபோடல் பார்க்க; see {}.

முடிகவி – த்தல்

முடிகவி – த்தல் muḍigavittal,    4 செ.குன்றாவி. (v.t.)

முடிசூட்டுதல் பார்க்க; see {}.

     “இன்னா னென வறியா வென்னை முடிகவித்து” (பாரத வெண்.315);.

     [முடி + கவித்தல். கவித்தல் = சூட்டுதல்.]

முடிகொண்டசோழன்

முடிகொண்டசோழன் muḍigoṇḍacōḻṉ, பெ.(n.)

   முதல் இராசேந்திர சோழனது பட்டப் பெயர் (தெ.இ.கல்.தொ. 2:107);; a title of Rajendra {} l.

     [முடிகொண்ட + சோழன்.]

முடிகொண்டசோழபுரம்

முடிகொண்டசோழபுரம் muḍigoṇḍacōḻpuram, பெ.(n.)

   திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சோழர் தலைநகர் (I.M.P.Rd. 285);; capital of {} in {} district.

மறுவ. முடிகுண்டம்.

     [முடிகொண்டசோழன் + புரம்.]

முடிகொண்டசோழப்பேராறு

முடிகொண்டசோழப்பேராறு muḍigoṇḍacōḻppērāṟu, பெ.(n.)

   முதல் இராசேந்திர சோழனால் பழையாறையில் வெட்டப்பட்ட ஆறு; a river digged in {} by Rajendra {} I.

பழையாறை இவன் காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என வழங்கப்பட்டது. (முதல் இராசேந்திரன் கி.பி.10121044 பிற்.சோழ. வர. சதாசிவபண். பக்.181);.

     [முடி + கொண்ட + சோழப்பேராறு.]

முடிகொண்டசோழமண்டலம்

முடிகொண்டசோழமண்டலம் muḍigoṇḍacōḻmaṇḍalam, பெ.(n.)

எருமையூர் (மைசூர்); பகுதியின் தென் பகுதியும் சேலம் மாவட்டத்தின் வடபகுதியும் கொண்ட கங்கபாடி நாடு (பிற்.சோழ.வர. சதாசிவபண். பக்.472);; {},

 which includes the southern part of Mysore and northern part of Salem.

     [முடிகொண்டசோழன் + மண்டலம்.]

முடிகொண்டநல்லூர்

 முடிகொண்டநல்லூர் muḍigoṇḍanallūr, பெ.(n.)

   சோழநாட்டு ஊர்ப்பெயர்; a village in {} country.

     [முடிகொண்ட + நல்லூர்.]

முடிக்கண்ணி

முடிக்கண்ணி muḍikkaṇṇi, பெ.(n.)

முடிமாலை பார்க்க; see {}.

     “கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை” (தேவா.456:6);.

     [முடி + கண்ணி. கண்ணி = மாலை வகை.]

முடிக்கயிறு

 முடிக்கயிறு muḍikkayiṟu, பெ.(n.)

   கண்ணேறு நீங்க மாட்டுக்குப் போடும் முடிசேர்த்து முடிந்த கறுப்புக் கயிறு (கோவை.);; a black rope tied around the cow neck due to evil eyes.

     [முடி + கயிறு.]

முடிக்கலம்

முடிக்கலம் muḍikkalam, பெ.(n.)

   மணிமுடி; crown.

     ‘ஆண்டு அரசருடைய முடிக்கல முதலியவற்றை வாங்கிக் கொண்டு’ (பெரும்பாண்.451, உரை);.

     [முடி + கலம்.]

முடிக்காணிக்கை

 முடிக்காணிக்கை muḍikkāṇikkai, பெ.(n.)

   தெய்வத்திற்கு நேர்ந்துகொண்டு மயிர் முடியை வளர்த்து, மழித்துக் காணிக்கையாக இடுகை (உ.வ.);; offering of the hair of a person’s head which has been allowed to grow for a certain time, in fulfilment of a vow.

     [முடி + காணிக்கை. காணிக்கை = கடவுளர்கேனும் பெரியோர்க்கேனும் அளிக்கப்படும் பொருள்.]

முடிக்கீரை

 முடிக்கீரை muḍikārai, பெ.(n.)

   முளைக் கீரை (வின்.);; young greens, tender potherbs.

முடிக்கொத்துநோய்

 முடிக்கொத்துநோய் muḍikkottunōy, பெ.(n.)

   வாழைப் பயிரில் ஏற்படும் நோய் (கோவை.);; a kind of plantain disease.

     [முடிக்கொத்து + நோய்.]

முடிக்கோரை

முடிக்கோரை muḍikārai, பெ.(n.)

   1. ஒருவகைக் கோரைப் புல்; a variety nut grass.

   2. தலை மயிர்; hair on the head (சா.அக.);.

     [முடி + கோரை.]

முடிசம்

 முடிசம் muḍisam, பெ.(n.)

முடிசரம் பார்க்க; see {}.

முடிசரம்

 முடிசரம் muḍisaram, பெ.(n.)

   சரக்கொன்றை மரம்; a tree Cassia fistula.

     [முடி + சரம்.]

முடிசாய்

முடிசாய்1 muḍicāytal,    1 செ.கு.வி.(v.i.)

   இறத்தல் (வின்.);; to die, as having the head droop.

     [முடி + சாய்தல் = தலைசாய்தல், இறத்தல்.]

 முடிசாய்2 muḍicāyttal,    1 செ.கு.வி. (v.i.)

   1. படுத்துக்கொள்ளுதல்; to lie down, to rest, as lowering the head.

     “முகுந்தனுடன் பாண்டவரு முடி சாய்த்து” (பாரத.முதற்.77);.

   2. தலை வணங்குதல்; to pay homage, bow one’s head in reverence.

     “முனிந்தருள லென்று முடிசாய்த்து நின்றான்” (நள. கலிநீங்கு.63);.

   3. ஒருபக்கமாகத் தலையைச் சாய்த்தல்; to incline the head sideways.

     [முடி + சாய்த்தல்.]

முடிசுருளைஎலும்பு

 முடிசுருளைஎலும்பு muḍisuruḷaielumbu, பெ.(n.)

   மார்பெலும்பு; breast bone Sternum.

முடிசூடுதல்

முடிசூடுதல் muḍicūḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. அரசன் மணிமுடி சூடுதல்; to be crowned as king.

   2. மகுடம் அணிதல்; to wear a crown.

     “முடிசூடு முடியொன்றே” (கலிங். 525);.

அரசனுக்குப் பின் அவன் மகன் முடிசூடுதலே வழக்கம்.

     [முடி + சூடுதல்.]

முடிசூட்டு

முடிசூட்டு1 muḍicūḍḍudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   அரசுக்குரிய மணி முடியைச் சூட்டுதல்; to crown, as king.

     “முன்றின் முரசமுழங்கமுடி சூட்டி” (கம்பரா. இரணிய.174);.

     [முடிசூடு தல் → முடிசூட்டுதல். சூட்டுதல் = அணிவித்தல்.]

 முடிசூட்டு2 muḍicūḍḍu, பெ.(n.)

   அரசன் மணிமுடி சூடுகை; coronation.

     “முடிசூட்டு மங்கல நாள்” (தமிழ்நா.171, தலைப்பு);.

     [முடிசூடு → முடிசூட்டு.]

முடிசூட்டுவிழா

 முடிசூட்டுவிழா muḍicūḍḍuviḻā, பெ.(n.)

   அரசக்குடி வழியில் வந்த ஒருவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு அடையாளமாக அவருக்கு மணி முடி சூட்டும் நிகழ்ச்சி; coronation.

     [முடிசூட்டு + விழா.]

முடிச்சடைமுனிவன்

முடிச்சடைமுனிவன் muḍiccaḍaimuṉivaṉ, பெ.(n.)

   வீரபத்திரன்;{} as wear ing matted locks.

     “முடிச்சடை முனிவனன்று வேள்வியிற் கொண்ட” (சீவக. 2285);.

     [முடி + சடை + முனிவன். சடைமுனிவன் = சடை முடியை யுடையவன்.]

முடிச்சன்

 முடிச்சன் muḍiccaṉ, பெ.(n.)

   சூழ்ச்சித் திறமுடையான் (இ.வ.);; scheming fellow.

     [முடிச்சு → முடிச்சன்.]

முடிச்சவிழ்

முடிச்சவிழ்1 muḍiccaviḻttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒன்றைத் திருடுதற்கு அதை முடிந்து வைத்துள்ள துணி முடிச்சை அவிழ்த்தல் (வின்.);; to untie money knotted in a cloth, with a view to theft.

   2. திருடுதல் (இ.வ.);; to steal.

     [முடிச்சு + அவிழ்த்தல்.]

 முடிச்சவிழ்2 muḍiccaviḻttal,    4 செ. குன்றாவி.(v.t.)

   சிக்கலான ஒன்றைத் தீர்ப்பதற்கு முயலுதல்; to find a solution for a problem.

     [முடிச்சு + அவிழ்த்தல்.]

முடிச்சை அவிழ்த்து அதனுள் உள்ள பொருள்களை வெளியாக்குதல் போல் சிக்கலான ஒரு செய்தியைப் பலரும் அறியும்படி செய்தல்.

முடிச்சவிழ்க்கி

__,

பெ.(n.);

   1. முடிச்சை அவிழ்ப்பவன் (வின்.);, பணமூட்டையை அவிழ்த்துத் திருடுபவன்; one who secretly removes money tied in a cloth.

   2. திருடன்; thief.

     [முடிச்சு + அவிழ், முடிச்சவிழ் → முடிச்சவிழ்க்கி.]

முடிச்சாத்து

முடிச்சாத்து muḍiccāttu, பெ.(n.)

   தலைப் பாகை; turban.

     “தனி முடிச்சாத்துஞ் சாத்தி” (திருவாலவா.54:14 (பிம்););.

     [முடி + சாத்து.]

முடிச்சு

முடிச்சு1 muḍiccu, பெ.(n.)

   1. கட்டு; tie.

இப்படியா முடிச்சுப் போடுவார்கள், கட்டைப் பிரிக்கவே முடியவில்லையே? தலைமயிர் முடிச்சு முடிச்சாக இருந்தது.

   2. மயிர்முடி; tuf of hair.

   3. கணு; knot in wood.

   4. மகளிர் காதணி வகை (நெல்லை.);; an ear ring worr by women.

   5. கண்டறிந்து தீர்த்தற்கரிய தந்திரம்; deep scheme, cunning plan, stratagem.

     ‘அவன் போட்டது நல்ல முடிச்சு’.

     [முடி → முடிச்சு = அவிழவோ பிரித்து வாரவோ முடியாதபடி ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது.]

 முடிச்சு2 muḍiccu, பெ.(n.)

   1. மூட்டை என்பதோடு இணைந்து வரும் சொல்; a word which occurs in combination with {}.

மூட்டை முடிச்சுடன் பேருந்தில் ஏற வேண்டும்.

   2. சிறு மூட்டை; small bundle.

     [முடி → முடிச்சு.]

முடிச்சுக்கஞ்சி

 முடிச்சுக்கஞ்சி muḍiccukkañji, பெ.(n.)

   கொதிக்கும் கஞ்சிச் சோற்றில் சுக்கை சீவி, துணியில் முடிந்து அதில் போட்டு காய்ச்சி வடித்த கஞ்சியின் தெளிவு; rice gruel or porridge made by adding small cloth bundle containing dry ginger in addition to the usual ingredients.

     [முடி + சுக்குக்கஞ்சி → முடிச்சுக்கஞ்சி]

முடிச்சுக்காரன்

முடிச்சுக்காரன் muḍiccukkāraṉ, பெ.(n.)

   1. சிறுமூட்டைகளையுடையவன்; one who possesses small bundle.

   2. பணமுள்ளவன்; one who has money.

   3. சூழ்ச்சித் திறமுடையோன் (தந்திரி);; scheming person.

     [முடிச்சு + காரன். காரன் சொல்லாக்க ஈறு]

முடிச்சுக்காறை

 முடிச்சுக்காறை muḍiccukkāṟai, பெ.(n.)

   பெண்களின் கழுத்தணி வகை (இ.வ.);; a kind of gold necklet, worn by women.

     [முடிச்சு + காறை. காறை = கழுத்தணி வகை. முடிச்சுகளோடு செய்யப்பட்ட கழுத்தணி.]

முடிச்சுக்கோரை

 முடிச்சுக்கோரை muḍiccukārai, பெ.(n.)

முடிக்கோரை பார்க்க; see {}.

     [முடிச்சு + கோரை.]

முடிச்சுப்போடு-தல்

முடிச்சுப்போடு-தல் muḍiccuppōḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. சண்டை மூட்டுதல்; to incite persons to a quarrel.

அவனுக்கும் இவனுக்கும் முடிச்சுப் போடுகிறான்.

   2. தொடர்புபடுத்துதல்; to connect the two various matters.

என்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறாய்.

   3. திருமணம் செய்து வைத்தல்; to make a marriage alliance.

அவளுக்கும் இவனுக்கும் முடிச்சுப் போட்டாச்சு.

     [முடிச்சு + போடுதல்.]

முடிச்சுமாறி

 முடிச்சுமாறி muḍiccumāṟi, பெ.(n.)

முடிச்சவிழ்க்கி பார்க்க (வின்.);; see {}.

     [முடிச்சு + மாறி. மாறி = இரண்டகஞ் செய்வோன்.]

முடிச்சுற்று

முடிச்சுற்று muḍiccuṟṟu, பெ.(n.)

   தலைப் பாகை; turban, as tied about the head.

     “தொகுமுடிச்சுற்றுஞ் சுற்றி” (திருவாலவா. 54:14);.

     [முடி + சுற்று. முடி = தலை. சுற்று = சுற்றிக்கட்டப்படுவது. தலையைச் சுற்றிக் கட்டப்படும் தலைப்பாகை.]

முடிச்சுற்றுமாலை

முடிச்சுற்றுமாலை muḍiccuṟṟumālai, பெ.(n.)

முடிச்சூட்டு பார்க்க (தக்கயாகப்.119, உரை);; see {}.

     [முடி + சுற்று + மாலை = தலையில் அணியும் மாலை.]

முடிச்சுவலை

 முடிச்சுவலை muḍiccuvalai, பெ.(n.)

   முடிச்சு முடிச்சாக உள்ள மீன் பிடி வலை; a kind of fishing net.

     [முடிச்சு + வலை.]

முடிச்சூட்டு

முடிச்சூட்டு muḍiccūḍḍu, பெ.(n.)

   முடியில் (தலையில்); அணியும் மாலை; garland worn on the head.

     “முடிச்சூட்டு முல்லையோ” (தக்கயாகப். 119);.

     [முடி + சூட்டு. முடியில் அணியும் மாலை.]

முடிதட்டுதல்

முடிதட்டுதல் muḍidaḍḍudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   வலைமுடியைக் களைதல் அல்லது அறுத்து நீக்குதல் (மீனவ.);; remove or cut off of the fishing net.

     [முடி + தட்டுதல். தட்டுதல் = அகற்றுதல், நீக்குதல்.]

முடிதலைச்சுன்னம்

 முடிதலைச்சுன்னம் muḍidalaiccuṉṉam, பெ.(n.)

   தலையின் முடியினின்று செய்யப்படும் ஒருவகைச் சுண்ணாம்பு; calcined powder prepared from the black hair of the head.

     [முடி + தலை + சுன்னம். சுன்னம் = சுண்ணாம்பு. தலைமுடியிலிருந்து செய்யப்படும் சுண்ணாம்பு.]

முடிதிருத்தகம்

 முடிதிருத்தகம் muḍidiruddagam, பெ.(n.)

   மாந்தரின் தலையில் உள்ள முடியைக் குறைத்து அல்லது திருத்தி அழகுபடுத்தும் கடை; hair dressing saloon.

பள்ளி மாணவர்கள் முடிதிருத்தகம் சென்று அழகாக முடிதிருத்தி வகுப்பறைக்குச் செல்ல வேண்டும்.

     [முடி + திருத்தகம்.]

முடிதீட்டுதல்

முடிதீட்டுதல் muḍidīḍḍudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   தலை, காலில்படும்படி வணங்குதல்; to prostrate, as touching with one’s head another’s feet.

     “பாதத் தெழின்முடி தீட்டினானே” (சீவக.2641);.

     [முடி + தீட்டுதல். காலில் விழுந்து வணங்குதல்.]

முடிதும்பை

 முடிதும்பை muḍidumbai, பெ.(n.)

   ஒரு வகைத் தும்பைச் செடி; white dead nettle Leucas (சா.அக.);.

     [முடி + தும்பை.]

முடிதுளக்கு

முடிதுளக்கு1 muḍiduḷakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   தலையசைத்தல்; to assent, show appreciation, as by a nod.

     “திருமுடி துளக்கி நோக்கி “(சீவக.1881);.

     [முடி + துளக்குதல். துளக்குதல் = அசைதல். முடி = தலை..]

 முடிதுளக்கு2 muḍiduḷakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

முடிதீட்டுதல் பார்க்க; see {}.

     “முனைவற் றொழுது முடிதுளக்கி” (சீவக.2357);.

     [முடி + துளக்கி. முடி = தலை, துளக்குதல் = வணங்குதல்.]

முடித்தகேள்வி

முடித்தகேள்வி muḍittaāḷvi, பெ.(n.)

   கரை கண்ட கேள்வி; complete learning.

     “முடித்தகேள்வி முழுதுணர்ந்தோரே” (சிலப். 1:19);.

     [முடி → முடித்த + கேள்வி.]

முடித்தலை

 முடித்தலை muḍittalai, பெ. (n.)

   கொங்கு நாட்டில் உள்ள ஒரு ஊர்; a village in Kongu nadu

     [முடி+தலை]

இவ்வூர் தற்போது கொடுமுடி’ என்று அழைக்கப்படுகிறது.

முடித்தலைக்கொண்டசோழபுரம்

முடித்தலைக்கொண்டசோழபுரம் muḍittalaikkoṇḍacōḻpuram, பெ.(n.)

   மதுரை; Madurai city.

     [முடி + தலை + கொண்ட + சோழபுரம்.]

   3ஆம் குலோத்துங்கச் சோழன் பாண்டி மண்டலத்திற்குச் சோழ பாண்டி மண்டலம் என்றும், மதுரைக்கு முடித்தலைக் கொண்ட சோழபுரம் என்றும், பாண்டியனது ஒலக்க மண்டபத்திற்குச் சேரபாண்டியர் தம்பிரான் என்றும் பெயர் மாற்றினான் (பழ.த.ஆ.பக்.87);.

முடித்தலைக்கோபெருநற்கிள்ளி

முடித்தலைக்கோபெருநற்கிள்ளி muḍittalaikāperunaṟkiḷḷi, பெ.(n.)

   சோழ அரசன்;{} king.

     [முடி + தலை + கோ + பெருநற்கிள்ளி.]

இவன் அந்துவஞ் சேரலிரும்பொறையின் காலத்தவன் இவனை முடமோசியார் வாழ்த்திப் பாடியுள்ளார் (புறநா.13);.

முடித்தானை

 முடித்தானை muḍittāṉai, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [முடி+தானை]

முடித்துக்காட்டல்

முடித்துக்காட்டல் muḍittukkāḍḍal, பெ.(n.)

   உத்தி முப்பதிரண்டனுள் மேலோர் முடித்தவாறு முடித்துக் காட்டுவது (நன்.145, உரை);; a literary device which consists in showing that the author’s statements are in line with the ancient authorities, one of 32 utti.

     [முடித்து + காட்டல்.]

முடித்துக்கொடு-த்தல்

முடித்துக்கொடு-த்தல் muḍittukkoḍuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   நிறைவேற்றித் தருதல்; to accomplish, complete, as a piece of business.

     [முடித்து + கொடுத்தல்.]

முடித்தேங்காய்

 முடித்தேங்காய் muḍittēṅgāy, பெ.(n.)

   குடுமியுள்ள தேங்காய் (வின்.);; coconut with the husk removed, leaving a small part of the the fibre on the upper part of the nut.

     [முடி + தேங்காய்.]

     [p]

முடித்தைலம்

 முடித்தைலம் muḍittailam, பெ.(n.)

முடியெண்ணெய் பார்க்க; see {}.

     [முடி + Skt.தைலம்.]

முடிநடை

முடிநடை muḍinaḍai, பெ.(n.)

   தலையால் நடக்கை; walking on one’s head.

     “அங்க வுடலிழந்து முடி நடையா லேறி” (திருத்.பு.சா.28);.

     [முடி + நடை. முடி = தலை.]

முடிநர்

முடிநர் muḍinar, பெ.(n.)

   கட்டுபவர்; those who tie knots.

     “வம்புநிறை முடிநரும்” (மதுரைக்.514);.

     [முடி → முடிநர்.]

முடிநாதம்

 முடிநாதம் muḍinātam, பெ.(n.)

   இந்திர கோபப் பூச்சி; cochineal insect.

முடிநாறு

முடிநாறு muḍināṟu, பெ.(n.)

   நாற்றுமுடி; sheaf or bundle of seedlings.

     “முடிநாறழுத்திய நெடுநீர்ச்செறு” (பெரும் பாண்.212);.

     [முடி + நாறு. நாற்று → நாறு. இடைக்குறை.]

முடிநீர்

முடிநீர் muḍinīr, பெ.(n.)

   1. மூளை நீர்; liquid extracted from brain.

   2. ஒளி (விந்து); நீர்; semen (சா.அக.);.

     [முடி + நீர்.]

முடிநீர்த்தான்

 முடிநீர்த்தான் muḍinīrttāṉ, பெ.(n.)

   சரக்கொன்றை மரம்; a kind of tree Cassia fistula (சா.அக.);.

முடிநீலம்

 முடிநீலம் muḍinīlam, பெ.(n.)

   மயிற்றுத்தம்; blue vitriol (சா.அக.);.

மறுவ. துருசு.

முடிந்தகணம்

முடிந்தகணம் muḍindagaṇam, பெ.(n.)

   நிகழ்காலம்; present time.

     “முன்னைக் கணத்தி னிறந்தவனு முடிந்த கணத்து நின்றவனும் (மேருமந்.662);.

     [முடி1 + கணம். கணம் = காலநுட்பம், காலம்.]

முடிந்தகொள்கை

 முடிந்தகொள்கை muḍindagoḷgai, பெ.(n.)

   முடிந்த முடிவு; final conclusion.

     [முடி → முடிந்த + கொள்கை. கொள்கை = முடிவு.]

முடிந்ததுமுடித்தல்

முடிந்ததுமுடித்தல் muḍindadumuḍiddal, பெ.(n.)

   உத்தி முப்பத்திரண்டனுள், முன்னர் விளக்கிக் கிடந்தவற்றைத் தொகுத்துக் கூறுவது (நன்.382, உரை);; recapitulation, briefly restating the point discussed. one of 32 utti.

     [முடி → முடிந்தது + முடித்தல்.]

முடிந்ததுமுற்றும்

 முடிந்ததுமுற்றும் muḍindadumuṟṟum, பெ.(n.)

   நூலிறுதியில் முடிவைக் குறிக்க எழுதப்படுந் தொடர் (வின்.);; expression indicating conclusion, used at the end of a treatise, ‘finis’.

இப்புதினம் முடிந்தது முற்றும்.

     [முடிந்தது + முற்றும்.]

முடிந்தநூல்

முடிந்தநூல் muḍindanūl, பெ.(n.)

   முழுதுங் கூறும் நூல்; exhaustive treatise.

     “முடிந்த நூலிற் கண்டு கொள்க” (இறை. 1, பக்.2);.

     [முடி → முடிந்த + நூல்.]

முடிந்தபொழுது

முடிந்தபொழுது muḍindaboḻudu, பெ.(n.)

   முதிர்ந்த அகவை; old age.

     “முடிந்த பொழுதிற் குறவான ரேனம் படிந்துழு சால் பைந்தினைகள் வித்த” (திவ்.இயற்.3:89);.

     [முடி → முடிந்த + பொழுது.]

முடிபு

முடிபு  muḍibu, பெ.(n.)

முடிவு பார்க்க; see {}

     “முனிவரர் வெகுளியின் முடிபென்றார் சிலர்”(கம்பரா.மாரிச.34);.

     [முடி → முடிபு]

முடிபெழுத்து

முடிபெழுத்து  muḍibeḻuttu, பெ.(n.)

   எழுத்து வகையுள் ஒன்று (நன்.256, மயிலை);; a class of letters.

     [முடிபு → எழுத்து]

முடிபொருட்டொடர்நிலை

முடிபொருட்டொடர்நிலை  muḍiboruḍḍoḍarnilai, பெ.(n.)

   பொருட்டொடர் நிலைச் செய்யுள்; epic or narrative poem,

முடிபொருட் டொடர் நிலையுள் தானப் பயன்கூறும் வழி (சிலப்.29, உரை);.

     [முடி + பொருள் + தொடர்நிலை.]

முடிபொருட் டொடர் நிலை யென்றது அறம் முதலிய நாற்பயனையும் கூறும் நூல்களான சீவகசிந்தாமணி முதலியவை (சிலப்.2:9, அடியார்க்கு நல்லார் உரை);.

முடிபோடு

முடிபோடு1 muḍipōḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   ஒன்றோடொன்று மாட்டிப் புணைத்தல்; to tie into a knot.

     [முடி + போடு-தல்.]

 முடிபோடு2 muḍipōḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. கணவனும் மனைவியுமாதற்கு நெறி (விதி); யமைதல்; to be predestined or ordained to be married to each other.

அவனுக்கும் இவளுக்கும் முடிபோட்டிருக்கிறது.

   2. சண்டை மூட்டுதல்; to incite persons to a quarrel.

அவனுக்கும் இவனுக்கும் முடிபோடுவதே அவர் வேலை.

     [முடி + போடு-தல்.]

முடிப்பானை

 முடிப்பானை muḍippāṉai, பெ.(n.)

   பொன் முதலிய அரும்பண்டங்களை வைக்கும் பெரிய பானை அல்லது பெரிய மட்கலம்; large earthen vessel for storing money or treasure.

     [முடி + பானை.]

முடிப்பிசைக்குறி

முடிப்பிசைக்குறி muḍippisaikkuṟi, பெ.(n.)

   சொற்றொடர் முடிவைக் காட்டும் முற்றுக்குறி (நான்.பால.169);; full stop.

     [முடிப்பு + இசை + குறி.]

முடிப்பிரி

 முடிப்பிரி muḍippiri, பெ.(n.)

முடிப்புரி பார்க்க; see {}.

முடிப்பு

முடிப்பு muḍippu, பெ.(n.)

   1. முடிபோடுகை; tying, fastening.

   2. முடிச்சு; tie, knot.

   3. கட்டு; bundle.

   4. தலையில் அணியும் பொருள்; that which is worn on the head.

   5. இருசாற்பணம்; remittance as kist into the treasury.

இன்று முடிப்புச் செலுத்தியாக வேணும்.

   6. சொத்து; money, wealth.

அவனுக்கு முடிப்பொன்று மில்லை.

   7. மொத்தத் தொகை (யாழ். அக.);; total amount.

   8. தீர்ப்பு (யாழ்.அக.);; decision.

   9. பணம் நகை முதலியவற்றைத் தொகுத்து, துணி போன்றவற்றில் கட்டி வைப்பது; money, pieces of jewellery wrapped in a cloth or tied up.

கோவில் உண்டியலில் கிடந்த ஒரு முடிப்பில் ஒர் ஆயிரம் ரூபாய் இருந்தது.

     “ஒரு பொன்முடிப்பு வைத்தேன்” (விறலிவிடு.899);.

   10. முடிவு (வின்.);; end, re sult.

     [முடி → முடிப்பு.]

முடிப்புக்கட்டு

முடிப்புக்கட்டு1 muḍippukkaḍḍudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   முடிவு செய்தல் (யாழ். அக.);; to conclude.

     [முடிப்பு + கட்டுதல்.]

 முடிப்புக்கட்டு2 muḍippukkaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   பணமுடிப்புச் சேர்த்து வைத்தல்; to set apart, as a provision for a future expenditure.

பெண் பிறந்திருப்பதனால் இனி முடிப்புக் கட்டி வைக்க வேண்டும். கோயிலுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் முடிப்புக் கட்டி வைக்க வேண்டும்.

     [முடிப்பு + கட்டுதல்.]

முடிப்புக்காரன்

முடிப்புக்காரன்

முடிப்புக்காரன்  muḍippukkāraṉ, பெ.(n)

   1. பண்டைக் காலத்து அரசிறை வாங்கும் 91596,15uff; collector of the revenue of a village, in ancient times.

   2. பணமுள்ளவன்; one who keeps money.

     [முடிப்பு + காரன். காரன் சொல்லாக்க ஈறு.]

முடிப்புமாறி

 முடிப்புமாறி  muḍippumāṟi, பெ.(n.)

முடிச்சுமாறி பார்க்க; see {}

     [முடிச்சுமாறி → முடிப்புமாறி]

முடிப்புரி

முடிப்புரி  muḍippuri,    1. அரசிறை வாங்குபவன்; receiver of rents and taxes.

   2. வட்டி வாங்குபவன்; shroff.

     [முடிப்பு + உரி. உரி → உரிதல் = தானே எடுத்துக் கொள்ளல், வாங்குதல்.]

முடிமன்னன்

முடிமன்னன் muḍimaṉṉaṉ, பெ.(n.)

   மணிமுடி சூடிய மன்னன்; crowned monarch.

     ‘முடிமன்னர் மூவருங் காத்தோம்பும்’ (சிலப்.29, பக்.575);.

     [முடி + மன்னன்.]

முடிமயிர்

முடிமயிர்1 muḍimayir, பெ.(n.)

   1. சேர்த்து முடித்த தலை மயிர் (வின்.);; lock of hair.

   2. மகளிர் தலைமயிரோடு சேர்த்து முடித்துக் கொள்ளும் கட்டுமயிர் (வின்.);; switch.

மறுவ. இடிமயிர்

     [முடி + மயிர்.]

 முடிமயிர்2 muḍimayir, பெ.(n.)

   தெய்வத்துக்குக் காணிக்கையாக மழித்து இடும் தலைமயிர் (இ.வ.);; hair offered to a deity in pursuance of a vow.

     [முடி + மயிர்.]

முடிமாமிசம்

 முடிமாமிசம் muḍimāmisam, பெ.(n.)

   தலையில் உள்ள நார் போன்ற நீண்ட மெல்லிய தோல்; an elastic membrane of the head.

     [முடி + Skt.மாமிசம்.]

முடிமார்

முடிமார் muḍimār, பெ.(n.)

   முடிப்பவர்; those who accomplish things.

     “தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்” (திருமுரு.89);.

     [முடி + முடிமார்.]

முடிமாலிகம்

 முடிமாலிகம் muḍimāligam, பெ.(n.)

   மஞ்சள் கொன்றை; a cassia (சா.அக.);.

முடிமாலை

 முடிமாலை muḍimālai, பெ.(n.)

   தலையில் அணியும் மாலை (திவா.);; garland for the head, chaplet.

     [முடி + மாலை.]

முடிமூளை

 முடிமூளை muḍimūḷai, பெ.(n.)

   தலைக்குள் ளிருக்கும் மூளை; brain of the human head (சா.அக.);.

     [முடி + மூளை. முடி = தலை.]

முடிமேலழகி

 முடிமேலழகி muḍimēlaḻki, பெ.(n.)

   கோடக சாலை (மலை.);; a very small plant.

முடிமேல்முடி

 முடிமேல்முடி muḍimēlmuḍi, பெ.(n.)

   மர வகை (மலை.);; panicled golden blossomed pear tree.

முடிய

முடிய muḍiya, கு.வி.எ.(adv.)

   முழுதும் (திவா.);; unto the end finally.

     ‘என்று முடியக் கட்டுரைப்பது’ (தக்கயாகப்.728);.

     [முடி → முடிய.]

முடியண்டசவ்வு

 முடியண்டசவ்வு muḍiyaṇḍasavvu, பெ.(n.)

   இழுத்தால் நாரைப் போல் நீளும்படியான தலையில் உள்ள மெல்லிய தோல்; a membrane covering the head (சா.அக.);.

     [முடியண்டம் + Skt.சவ்வு.]

முடியண்டம்

 முடியண்டம் muḍiyaṇḍam, பெ.(n.)

   தலை மண்டையோடு; cranial bone, human skull (சா.அக.);.

     [முடி + Skt.அண்டம். முடி = தலை.]

முடியனூர்

 முடியனூர் muḍiyaṉūr, பெ.(n.)

   தென்னார்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள ஊர்; a village in South arcot district in {} Taluk.

சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவனான முடியன் என்பவரின் பெயரால் அமைந்த ஊர்.

     [முடியன் + ஊர்.]

முடியன்

 முடியன் muḍiyaṉ, பெ.(n.)

   கழகக்காலக் குறுநில மன்னன்; a king in {} period.

முடியரசன்

 முடியரசன் muḍiyarasaṉ, பெ.(n.)

முடி மன்னன் பார்க்க; see {}.

     [முடி + அரசன்.]

முடியரசு

 முடியரசு muḍiyarasu, பெ.(n.)

   அரசரால் அல்லது அரசியால் நடத்தப்படும் ஆட்சி; monarchy.

இன்றும் சில நாடுகளில் பெயரளவில் முடியாட்சி இருக்கிறது.

மறுவ. முடியாட்சி

     [முடி + அரசு. முடிசூடி நாட்டை ஆளுவது.]

முடியறுத்தல்

 முடியறுத்தல் muḍiyaṟuttal, பெ.(n.)

   குடுமி வைக்குஞ் சடங்கு (இ.வ.);; the first shaving of a baby, ceremonially observed (செ.அக.);.

     [முடி + அறுத்தல்.]

முடியல்

 முடியல் muḍiyal, பெ.(n.)

   எல்லாம் (சது.);; all, whole.

     [முடி → முடியல்.]

முடியாட்சி

 முடியாட்சி muḍiyāḍci, பெ.(n.)

   முடிசூடி ஆட்சி புரிகை; monarchy.

மறுவ. முடியரசு.

     [முடி + ஆட்சி. முடி சூடி ஆளும் ஆட்சி.]

தலைமுறை தலைமுறையாக நாட்டை ஆளுகை.

முடியிறக்கு

முடியிறக்கு1 muḍiyiṟakkudal,    5 செ. கு.வி. (v.i.)

   நேர்ச்சிக் கடனாக தெய்வங்களுக்கு வேண்டிக்கொண்டு மயிர் மழித்தல் (இ.வ.);; to shave the hair of the head in fulfilment of a vow.

     [முடி + இறக்குதல்.]

 முடியிறக்கு2 muḍiyiṟakkudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   இழிவுபடுத்துதல் (யாழ்.அக.);; to put to disgrace.

     [முடி + இறக்குதல்.]

முடியில்தரித்தான்

 முடியில்தரித்தான் muḍiyiltarittāṉ, பெ.(n.)

   சரக்கொன்றை; cassia fistula (சா.அக.);.

     [முடியில் + Skt. தரித்தான்.]

முடியுப்பு

 முடியுப்பு muḍiyuppu, பெ.(n.)

   கல்லுப்பு (மூ.அ.);; rock salt.

முடியுயர்-தல்

முடியுயர்-தல் muḍiyuyartal,    2 செ.கு.வி. (v.i.)

   ஆட்சிச் செழிப்புடன் இருத்தல்; to grow prosperous as a king.

குடியுயர முடியுயரும்.

     [முடி + உயர்தல்.]

முடியுறுப்பு

 முடியுறுப்பு muḍiyuṟuppu, பெ.(n.)

   மாலை (தாமம்);, முகுடம், தாமரை (பதுமம்);, கோடகம் கிம்புரி என ஐவகைப்பட்ட மகுடவுறுப்புகள் (திவா.);; ornamental parts of a crown, five in number. viz., {} (padumam);, {}, kimburi.

     [முடி + உறுப்பு.]

முடியுலகம்

முடியுலகம் muḍiyulagam, பெ.(n.)

முடியுலகு பார்க்க; see {}.

     “முடியுலக மூர்த்தி” (சீவக. 1847);.

     [முடி + உலகம்.]

முடியுலகு

முடியுலகு muḍiyulagu, பெ.(n.)

   மேலுலகம்; Heaven, celestial world, as the highest world.

     “வால்விளை முடியுலகுற” (சீவக. 1847);.

     [முடி + உலகு.]

முடியூர்

முடியூர் muḍiyūr, பெ.(n.)

   பெண்ணை யாற்றங்கரையில் உள்ள ஊர்; a village паmе.

பெண்ணையாற்றங்கரையில் இந்நாளில் கிராமம் என்று வழங்கப்படும் இவ்வூர் முதல்பராந்தகன் காலத்தில் முடியூர் என்று அழைக்கப்பட்டது. பராந்தகனின் முதல் படைத் தலைவன் பெரும் படையுடன் இவ்வூரில் தங்கியிருந்தான் (பிற்கால. சோழர் வரலாறு சதாசிவபண்டாரத்தார் பக்கம்.48);.

     [முடி + ஊர்.]

முடியெடு-த்தல்

முடியெடு-த்தல் muḍiyeḍuttal,    4 செ. குன்றாவி.(v.t)

   1. முடியிறக்குதல் பார்க்க; see {}.

   2. தலையெடுத் தோங்குதல்; to become, prominent.

     “மறையவர் முடியெடுத்தனர்” (கலிங்.251);.

     [முடி + எடுத்தல்.]

முடியெண்ணெய்

முடியெண்ணெய் muḍiyeṇīey, பெ.(n.)

   1. தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் எண்ணெய் (தைலம்);; bathing oil.

   2. தலைக்கிட்டு முழுகும் எண்ணெய்; hair oil (சா.அக.);.

     [முடி + எண்ணெய்.]

முடியைப்பிய்த்துக்கொள்(ளு)தல்

முடியைப்பிய்த்துக்கொள்(ளு)தல் muḍiyaippiyddukkoḷḷudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   எளிதில் தீர்வு காண முடியாமல் அல்லல்படுதல்; rack one’s brains to solve a problem, to driven mad.

மாணவன் முழு ஆண்டுத் தேர்வு எழுதிக் கொண்டு இருக்கும்போது ஒருசில கேள்விகளுக்கு விடை தெரியாமல் முடியைப் பிய்த்துக் கொண்டான்.

     [முடியை + பிய்த்து + கொள்தல்.]

முடிறு

 முடிறு muḍiṟu, பெ. (n.)

   ஒரு வகை மீன்; gizzard shad.

     [முடி-முறு]

முடிவறிதல்

முடிவறிதல் muḍivaṟidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   நன்றாக உணர்தல் (யாழ்.அக.);; to be advanced in knowledge, to master completely.

     [முடிவு + அறிதல்.]

முடிவாங்குதல்

முடிவாங்குதல் muḍivāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   முடியிறக்குதல் பார்க்க; see {}.

     [முடி + வாங்குதல்.]

முடிவாழை

 முடிவாழை muḍivāḻai, பெ.(n.)

   இலாமிச்சை (பிங்.);; cuscusgrass.

     [முடி + வாழை.]

முடிவிடங்கூறல்

முடிவிடங்கூறல் muḍiviḍaṅāṟal, பெ.(n.)

   உத்தி முப்பத்திரண்டனுள் தான் சொல்லும் இலக்கணத்திற்கு நெறி (விதி); கூறும் இடத்தைக் குறிப்பது (நன்.97, உரை);; giving particular reference to the rule followed in the context one of 32 utti.

     [முடிவு + இடங்கூறல்.]

முடிவினை

முடிவினை muḍiviṉai, பெ.(n.)

   கருமம் மூன்றனுள் இம்மையிற் பலனளிக்கும் பழவினை; past Karma whose effect has begun to operate.

ஆகாமிய வினையும் முடிவினையும் ஒத்தல் வேண்டும் (சி.பொ.பா. 8, 1 பக்.175 சுவாமிநா.);.

     [முடி1 + வினை.]

முடிவிலாற்றலுடைமை

முடிவிலாற்றலுடைமை muḍivilāṟṟaluḍaimai, பெ.(n.)

   எண் குணத்துள் ஒன்று (குறள், 9, உரை);; omnipotence, one of eight natures.

     [முடிவிலாற்றல் + உடைமை.]

எண் குணங்களாவன :

   1. தன்வயத்தன் ஆதல்,

   2. தூய உடம்பினன் ஆதல்,

   3. இயற்கை உணர்வினன் ஆதல்,

   4. முற்றும் உணர்தல்,

   5. இயல்பாகவே கட்டு (பாசம்);களில் இருந்து நீங்குதல்,

   6. பேரருள் உடைமை,

   7. முடிவு இல் ஆற்றல் உடைமை,

   8. வரம்பு இல் இன்பம் உடைமை.

முடிவிலாற்றல்

 முடிவிலாற்றல் muḍivilāṟṟal, பெ.(n.)

முடிவிலாற்றலுடைமை பார்க்க (திவா.);; see {}.

     [முடிவு + இல் (எ.ம.); + ஆற்றல்.]

முடிவு

முடிவு muḍivu, பெ.(n.)

   1. தொடங்கியதற்கு இறுதி; end of something.

மாநாட்டின் முடிவில் சிறப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இவர் எழுதும் கதைக்கு முடிவு என்பதே இல்லையா?

   2. போட்டிகள், தேர்வுகள் முதலியவை எவ்வாறு முடிந்தது என்பது பற்றிய விளத்தம்; result of a competition.

 examination, etc.

பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவுகள் நாளை வெளியிடப்படும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பத்திரிகை இருக்கிறதா?

   3. இறுதி; that which is final.

இதுதான் உன் முடிவான கருத்து என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. முடிவாக நீ என்ன விலைச் சொல்கிறாய்? நான் அதை வாங்கியே தீரவேண்டும்.

   4. சட்டப்படியான தீர்ப்பு;   அறிவான தீர்மானம்; verdict, decision.

முறை மன்றத்தின் முடிவை மதிக்காமல் காவல் துறையினர் நடந்து கொண்டதாகக் குறை கூறினர். தாத்தாவை மருத்துவ மனையில் சேர்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். சரியா? தவறா? கேள்விகளுக்கு என்னால் சரியாக முடிவு எடுக்க முடியவில்லை.

   5. பயன்; issue, result.

   6. தீர்மானம்; conclusion, decision.

முடிவென்ன சொல்கிறீர்?

   7. முடிவான உட்கோள்; resoluteness.

     “அக்கணை…. முடுகிய முடிவை நோக்கி” (கம்பரா. நிகும்ப.177);.

   8. இசைப் பாகுபாட்டினுள் ஒன்று (சிலப்.3:41–2, உரை, பக்.108);; a kind of note in music.

   9. இறப்பு; death.

முடிவு காலம்.

   10. எல்லை; limit.

     “சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்” (குறள், 671);.

   11. பண் (இராகம்); முடிவில் அமையும் இசைச் சுரம்; tonic at the conclusion of a piece.

     [முடி → முடிவு.]

 முடிவு muḍivu, பெ. (n.)

ஆளத்தியில் பாடப்படும் பகுப்பு முறை:

 a song variation.

     [முடி-முடிவு]

முடிவு நிலை

 முடிவு நிலை muḍivunilai, பெ.(n.)

   கருத்துகள், கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வரும் முடிவு; theoretical stage.

     [முடிவு+நிலை]

முடிவுகட்டுதல்

முடிவுகட்டுதல் muḍivugaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. ஒன்றைக் குறித்து முடிவு எடுத்தல், தீர்மானித்தல்; take a decision, decide on something, finalize.

நிருவாகத்தைச் சந்தித்துப் பேசுவதற்கு முன் என்னென்ன கோரிக்கைகளை முன் வைக்கப் போகிறோம் என்று முடிவு கட்டிக் கொள்வோம்.

   2. தொல்லை விளைவிக்கும் ஒன்று தொடர முடியாத இறுதி நிலையை அடையச் செய்தல்; put an end to something.

     ‘அவனுடைய கொட்டத்திற்கு முடிவு கட்டுகிறேனா இல்லையா பார்’ என்று சூளுரைத்தான். கொடுஞ் செயல்களுக்கு இனியும் முடிவுகட்டாவிட்டால் நாடு சிதறிவிடும்.

   3. எண்ணித்துணிதல்; to come to a conclusion.

     [முடிவு + கட்டுதல்.]

முடிவுகாலம்

 முடிவுகாலம் muḍivukālam, பெ.(n.)

   சாக்காடு; time of death.

     [முடிவு + காலம்.]

முடிவுசெய்தல்

முடிவுசெய்தல் muḍivuseytal,    1 செ.கு.வி. (v.i.)

முடிவுகட்டுதல், 1 பார்க்க; see {},

   1. உன்னை அயல்நாட்டில் படிக்க வைக்க முடிவு செய்திருக்கிறோம். இந்தப் புதியச் சிக்கலுக்குக் கரணியம் அவர்கள்தான் என்று கட்சி மேலிடம் முடிவு செய்தது.

     [முடிவு + செய்தல்.]

முடிவுசொல்(லு)தல்

முடிவுசொல்(லு)தல் muḍivusolludal,    13 செ.கு.வி. (v.i.)

   தீர்ப்புச் சொல்லுதல்; to give a decision, to deliver, judgement.

     [முடிவு + சொல்(லு);தல்.]

முடிவுபோக்குதல்

முடிவுபோக்குதல் muḍivupōkkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   நிறைவேற்றுதல்; to accomplish, fulfil.

     ‘தான் சூளுற்ற காரியத்தினை முடிவு போக்காது’ (கலித்.149:10, உரை);.

     [முடிவு + போக்குதல்.]

முடிவுபோதல்

முடிவுபோதல் muḍivupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   நிறைவேறுதல்; to be accomplished, fulfilled.

     ‘முடிவு போகாமையின்’ (குறள், 262, உரை);.

     [முடிவு + போதல்.]

முடிவுரை

முடிவுரை muḍivurai, பெ.(n.)

   1. முடித்து வைக்கும் முறையில் பேசும் பேச்சு அல்லது எழுதும் எழுத்து; concluding speech or remark.

விழாவின் இறுதியில் தலைவர் முடிவுரை ஆற்றினார்.

   2. நூலிறுதியில் அமையும் கட்டுரை; epilogue, concluding section of a work.

கட்டுரையின் முடிவில் எழுதியிருப்பது படிப்பவரை உண்மையாகச் சிந்திக்கத் தூண்டும்.

     [முடிவு + உரை.]

முடிவெட்டுதல்

முடிவெட்டுதல் muḍiveḍḍudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   தலைமுடியைக் கத்தரித்துச் சீர்செய்தல்; have or do a hair cut.

சிறுவர்களுக்கு முடிவெட்டக் கட்டணம் உருபாய் நான்கு.

     [முடி + வெட்டுதல்.]

முடிவெழுத்து

 முடிவெழுத்து muḍiveḻuttu, பெ.(n.)

முடிபெழுத்து பார்க்க; see {}.

     [முடிவு + எழுத்து.]

முடிவேந்தர்

முடிவேந்தர் muḍivēndar, பெ.(n.)

முடி மன்னன் பார்க்க; see {}.

     ‘முடிவேந்தர் மன்னும் அரண்களை’ (சிறுபாண். 247, உரை);.

     [முடி + வேந்தர்.]

முடிவேர்

 முடிவேர் muḍivēr, பெ.(n.)

   வெட்டிவேர்; khuskhus (சா.அக.);.

முடுக

முடுக muḍuga, கு.வி.எ. (adv.)

   1. விரைவாய்; swiftly, quickly.

   2. கிட்ட (யாழ்.அக.);; near.

முடுகடி

__,

பெ.(n.);

   அண்மை (யாழ்.அக.);; nearness.

     [முடுக்கடி → முடுகடி.]

முடுகல்

முடுகல் muḍugal, பெ.(n.)

   1. விரைவு; quickness.

   2. வலிமை; strength.

     [முடுகு → முடுகல்.]

முடுகியல்

முடுகியல் muḍugiyal, பெ.(n.)

   கலிப்பா வகைகளின் உறுப்புக்களுள் ஒன்று (தொல்.பொருள்.464);; a part of kali verse, characterised by rapid movement.

     [முடுகு → முடுகியல்.]

முடுகியல் நடை

 முடுகியல் நடை muḍugiyalnaḍai, பெ. (n.)

   தொங்கலைப்பாடுதற்கு உரிய நடை; a metre in prosody.

     [முடுக்கு+இயல்+நடை]

முடுகியல்வண்ணம்

 முடுகியல்வண்ணம் muḍugiyalvaṇṇam, பெ.(n.)

முடுகியல் (பிங்.); பார்க்க; see {}.

     [முடுகியல் + வண்ணம்.]

முடுகு

முடுகு1 muḍugudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. விரைந்து செல்லுதல்; to hasten, to be in haste, to move quickly.

     “முடுகழலின் முந்துறுதல்” (பு.வெ.3 : 6);.

   2. நெருங்கி வருதல்; to become urgent;

 to come to a head;

 to throng and surge.

     “வெம்மைக் கூற்ற முடுகாதே” (தேவா. 116, 7);.

   3. வலிமையாதல் (வின்.);; to be strong.

   தெ., க. மிடுகு;ம. முடுகு.

     [முடுக்கு → முடுகு → முடுகுதல்.]

 முடுகு2 muḍugudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   எதிர்தல் (பிங்.);; to meet;

 to advance against.

     [முடுகு1தல் → முடுகு2தல்.]

 முடுகு3 muḍugu, பெ.(n.)

   1. முடுகிச் செல்லும் ஓசை வகை (வின்.);; a rapid movement in verse.

   2. நாற்றம்; bad odour, stench.

     “முடுகு நாறிய வடுகர்” (தேவா.918, 1);.

   3. அரக்காற் செய்யப்பட்ட கங்கணம் (நெல்லை.);; bracelet made of lac.

   4. அரக்குவளை செய்யுங் கட்டளை (இ.வ.);; mould in which lac bracelets are made.

   5. மோதிர வகை (நாஞ்.);; a ring.

     [முடுக்கு → முடுகு.]

 முடுகு4 muḍugu, பெ.(n.)

கடமை விலங்கின் பெண் (வின்.);,

 female elk.

 முடுகு5 muḍugu, பெ.(n.)

   தோணி வகை (குருகூர்ப்.19);; a kind of boat.

முடுகுவண்ணம்

முடுகுவண்ணம் muḍuguvaṇṇam, பெ.(n.)

   அராகந் தொடுத்த அடியோடு பிற அடிசேர்ந்து தொடர்ந்தோடுஞ் சந்தம் (தொல்.பொருள்.545);; a rhythm effected by mixing lines of short syllables in rapid succession with those of a different type.

     [முடுகு + வண்ணம்.]

முடுகுவெண்பா

 முடுகுவெண்பா muḍuguveṇpā, பெ.(n.)

   ஒசை (சந்த); முடுகுள்ள வெண்பாவகை; a species of {} verse composed either wholly or partly in quick rhythm.

     [முடுகு + வெண்பா.]

முடுக்கடி

 முடுக்கடி muḍukkaḍi, பெ.(n.)

   நெருக்கடி; busy time;

 critical moment.

திருமண முடுக்கடியில் துணிகள் வாங்காதே.

     [முடுக்கு + அடி. முடுக்குதல் = விரைவு படுத்துதல்.]

முடுக்கன்

 முடுக்கன் muḍukkaṉ, பெ.(n.)

   வலியோன் (யாழ்.அக.);; strong man.

     [மிடுக்கு → முடுக்கு → முடுக்கன்.]

முடுக்கம்

முடுக்கம் muḍukkam, பெ. (n.)

   1. விலை யேற்றம்; high price, dearness.

   2. இறுகல் (நாஞ்.);; tightness.

     [முடுக்கு → முடுக்கம்.]

முடுக்கர்

முடுக்கர் muḍukkar, பெ.(n.)

   1. குறுந்தெரு; short street.

     “முடுக்கரும் வீதியும்” (சிலப்.5 : 187);.

   2. அருவழி; pathway difficult to pass.

     “முட்டுடை முடுக்கரு மொய்கொள் குன்றமும்” (சீவக.1216);

   3. தெருச்சந்து; lane.

     “முடுக்கர் தோறும் புகுந்த வல்லிருளின் பொம்மல்” (இரகு. இலவ.55);.

   4. மலைக்குகை (பிங்.);; mountain cavern.

   5. நீர்க் குத்தான இடம்; place where water presses against a bank and erodes.

     “குண்டுகய முடுக்கர்…… யாற்று” (மலைபடு.213);.

   6. இடைவெளி; interstice, interspace.

     “முடத்தாழை முடுக்கருள்” (கலித்.136);.

     [முடுக்கு → முடுக்கர் = குறுந்தெரு. (வே.க.);]

முடுக்காணி

 முடுக்காணி muḍukkāṇi, பெ.(n.)

   ஆணி வகை (இ.வ.);; screw.

     [முடுக்கு + ஆணி.]

     [p]

முடுக்கிவிடுதல்

முடுக்கிவிடுதல் muḍukkiviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   தீவிரமாக அல்லது வேகமாகச் செயல்படும்படி இயக்குதல்; to gear up, step up, accelerate.

தேர்தல் நெருங்கியதும் அனைத்துக் கட்சிகளும் தங்களின் கொள்கைகளைப் பரப்பும் பணிகளை முடுக்கிவிட்டன. போட்டி வேட்பாளருக்கு எதிராக அவதூறான மேடைப் பேச்சைப் பரப்ப ஆளும் கட்சி முடுக்கி விடப்பட்டிருக்கிறது.

     [முடுக்கி + விடுதல்.]

முடுக்கு

முடுக்கு1 muḍukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பாவை, பொறிகள் முதலியவற்றை இயங்குவதற்காக திருகுதல்; to set in motion, wind.

சீறுந்தில் திறவுகோலை நுழைத்து முடுக்கினான்.

   2. மாடு முதலியவற்றை விரட்டி ஒட்டுதல்; to drive away.

வேலிதாண்டி மேயும் மாட்டை முடுக்காமல் வேடிக்கையா பார்த்துக் கொண்டு இருக்கிறாய்?

   3. திருகாணி முதலியவற்றை உட்செலுத்துதல்; to screw something.

மரைதேய்ந்திருப்பதனால் ஆணியைச் சரியாக முடுக்க முடியவில்லை.

     “கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து” (நெடுநல்.85);.

   4. விரைவுபடுத்துதல் (வின்.);; to urge, bring pressure on.

   5. விரைவாகச் செலுத்துதல்; to drive, cause to run, as a horse, to set in motion, as a potter’s wheel.

     “கடுகி முடுக்கிலும்” (விநாயகபு.55: 7);.

   6. விரைந்து கடித்தல்; to bite off hurriedly.

     “பிணவு நாய் முடுக்கிய தடியொடு” (மலைபடு.177);.

   7. உழுதல்; to plough.

     “மூரிதவிர முடுக்கு முதுசாடி” (பரிபா.20:54);.

   8. தூண்டி விடுதல் (உ.வ.);; to induce, urge on.

ஏன் அவனுடன் சண்டை செய்யும்படி முடுக்குகிறாய்?

க. முடுக்கு.

     [முள் = முற்படு, விரை. முள் → முடு → முடுகு → முடுக்கு → முடுக்குதல் (சு.வி.42);.]

 முடுக்கு2 muḍukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. உணர்ச்சி மிகுதல்; to feel urgently, as the call of nature.

ஒன்றுக்கு முடுக்குகிறது.

   2. மிகுதியாதல்; to increase, as in price.

விலைமுடுக்கிப் போகிறது.

   3. விரைதல்; to hasten.

     “முடுக்கிவந்து” (உத்திரரா, இலங்கை யழி 20);.

     [முடுக்கு1தல் → முடுக்கு2தல்.]

 முடுக்கு3 muḍukku, பெ.(n.)

   1. விரைவுப் படுத்துகை; urging, pressing hard.

   2. மூலை; corner.

தெருமுடுக்கில் ஒரு பெட்டிக் கடை உண்டு.

   3. கோணல் தெரு; narrow, winding street.

     “முட்டுமுடுக்கு மிட்டிடை கழியும்…. வீதியும்” (பெருங். உஞ்சைக்.33 : 16);.

   4. மிகுதி; increase, dearness, as of price.

தங்கம் விலை வெகு முடுக்கு.

க. முடுக்கு.

     [முள் = விரை. முள் → முடு → முடுகு → முடுக்கு (சு.வி.42);.]

 முடுக்கு4 muḍukku, பெ.(n.)

   1. வலிமை (வின்.);; strength, power.

   2. அகந்தை (இ.வ.);; pride, arrogance, stiffness of manners.

முடுக்குச்சந்து

 முடுக்குச்சந்து muḍukkuccandu, பெ.(n.)

   சிறு சந்து (உ.வ.);; alley, narrow lane.

     [முல் → முள் → முண் → முண → முணுக்கு →. முடுக்கு + சந்து.]

முடுக்குச்சுரம்

 முடுக்குச்சுரம் muḍukkuccuram, பெ.(n.)

முடக்குக்காய்ச்சல் பார்க்க; see {}.

மறுவ. முடக்குமாரி

     [முடக்கு + சுரம். சுரம் = காய்ச்சல்.]

முடுக்குத்தெரு

முடுக்குத்தெரு muḍukkutteru, பெ.(n.)

   ஒடுங்கிய சிறு தெரு; small, narrow street.

     “நெடுந்தெருவே போகிறவர்கள் நான் இருந்த முடுக்குத் தெருத் தேடி வந்த போதே” (ஈடு, 1, 2:6);.

     [முடுக்கு + தெரு.]

முடுக்குவழி

 முடுக்குவழி muḍukkuvaḻi, பெ.(n.)

முடுக்குச்சந்து பார்க்க; see {}.

     [முடுக்கு + வழி.]

முடுக்கூரணி

 முடுக்கூரணி muḍukāraṇi, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivagangai Taluk.

     [முடுக்கு+ஊருணி]

முடுங்கனல்

 முடுங்கனல் muḍuṅgaṉal, பெ.(n.)

   செங்குளவி; red wasp (சா.அக.);.

முடுதம்

 முடுதம் muḍudam, பெ.(n.)

   தலைமை (நாஞ்.);; leadership.

முடுதுரை

முடுதுரை muḍudurai, பெ. (n.)

   1.சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk,

   2.அவினாசி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Avanashi Taluk.

     [முடு(முதலை);+(துறை);துரை]

முடுத்தார்

 முடுத்தார் muḍuttār, பெ.(n.)

   மூடுகை; act of covering.

அந்தப் பிணத்திற்கு முடுத்தார் பண்ணினீர்களா?

     [மூடு → முடு → முடுத்தார்.]

முடுவல்

முடுவல் muḍuval, பெ.(n.)

   1. நாய் (பிங்.);; dog.

     “சினமுடுவல் நரி கழுகு” (திருப்பு.519);.

   2. பெண்நாய் (பிங்.);; bitch.

     “முடுவறந்த பைந் நிணத் தடியொடு” (மலைடு.563);.

   3. செந்நாய் (அக.நி.);; a brown coloured dog.

     [முடுகு → முடுவல் = விரைவாக ஒடும் இயல்புள்ள நாய்.]

முடுவல்வெம்படையோன்

 முடுவல்வெம்படையோன் muḍuvalvembaḍaiyōṉ, பெ.(n.)

   நாய்ப்படை யுடையவனான வயிரவன் (சூடா);; Bhairava, as having an army of dogs.

     [முடுவல் + வெம்மை + படையோன்.]

முடை

முடை1 muḍaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   பாய், கூடை முதலியவை பின்னுதல்; to plait a basket;

 weave a mat.

கூடை முடைவோர்க்குக் குறைந்த கூலியே கிடைக்கிறது. எங்கள் பள்ளியில் பாய் முடையக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

     ‘உலர்ந்த பழுத்தலை முடைந்து வேய்ந்த தனிமனை’ (பெரும்பாண்.353, உரை);.

     [மிடை → முடை → முடைதல்.]

 முடை2 muḍaidal,    2 செ.கு.வி.(v.i.)

   மெலிதல் (வின்.);; to become lean.

     [மிடை → முடை → முடைதல்.]

 முடை3 muḍai, பெ.(n.)

   1. புலால்; flesh.

     “முடைச் சாகாடு” (நாலடி, 48);.

   2. கெட்ட மணம்; stench, offensive odour.

     “முடையரைத் தலைமுண்டிக்கு மொட்டரை” (தேவா.423, 4);.

   3. புளித்த மோர் முதலியவற்றின் வீச்சம்; smell of sour buttermilk or curds.

     “இடைப்பேச்சு முடைநாற்றமுமாய் விட்டது” (திவ்.திருப்பா. வியா.அவ.);.

   4. தவிடு (பிங்.);; bran.

 முடை4 muḍai, பெ.(n.)

   1. நெருக்கடி, தட்டுப்பாடு; financial straits, constraint, shortage, squeeze.

பணத்துக்கு இப்போது கொஞ்சம் முடையாக உள்ளது.

   2. பற்றாக்குறை; need not enough scarcity.

 முடை5 muḍai, பெ.(n.)

   1. குடையோலை (திவா.);; ola basket

   2. ஒலைக்குடை (வின்.);; umbrella of palm leaves.

     [மிடை → முடை.]

 முடை1 muḍaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   பாய், கூடை முதலியவை பின்னுதல்; to plait a basket;

 weave a mat.

கூடை முடைவோர்க்குக் குறைந்த கூலியே கிடைக்கிறது. எங்கள் பள்ளியில் பாய் முடையக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

முடைசல்

முடைசல் muḍaisal, பெ.(n.)

   1. முடைகை; plaiting, braiding.

   2. முடையப்பட்டது; that which is plaited.

   3. வெள்ளத்தால் கரை உடைந்து போகாதவாறு மூங்கில் முதலியவற்றால் இடும் அணைப்பு (இ.வ.);; screen of bamboo or palm leaves for protecting the banks of rivers from erosion by floods.

     [மிடை → முடை → முடைசல்.]

முடைச்சேரி

 முடைச்சேரி muḍaiccēri, பெ.(n.)

   முல்லை நிலத்தூர் (யாழ்.அக.);; village in the forest tracts.

முடைஞ்சல்

முடைஞ்சல் muḍaiñjal, பெ.(n.)

   1. இடையூறு (நாமதீப.631);; trouble, distress.

   2. பொருளில்லாதத் திண்டாட்டம்; poverty.

     [முட்டு → முடை → முடைஞ்சல் (சு.வி.42);.]

முடைநாறி

 முடைநாறி muḍaināṟi, பெ.(n.)

   கொடி வகை (L.);; small downylobed vine, Vitis linnaei.

     [முடை + நாறி.]

முடைநாற்றம்

முடைநாற்றம் muḍaināṟṟam, பெ.(n.)

   1. கெட்டுப்போன இறைச்சி, புளித்த மோர் முதலியவற்றில் இருந்து வரும் கெட்ட மணம்; foul smell of meat, sour milk, etc.

   2. புலால்; flesh.

     “முடைச் சாகாடு” (நாலடி, 48);.

     [முடை + நாற்றம்.]

முடைப்படு-தல்

முடைப்படு-தல் muḍaippaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   நெருக்கடி உண்டாதல்; to be in straits.

     [முடை + படுதல்.]

முடைமா

 முடைமா muḍaimā, பெ.(n.)

   காட்டுமா; forest mango, Buchanania lutifolia.

முடையிருப்பு

 முடையிருப்பு muḍaiyiruppu, பெ.(n.)

   எதிர்காலத்தில் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் பயன்படுத்துவதற்கான தவச சேமிப்பு; reserve of food grains, buffer stock.

நுகர் பொருள் வணிகக் கழகத்திடம் நான்கு ஆயிரம் மூட்டை அரிசி முடையிருப்பில் உள்ளது.

முடையூர்

 முடையூர் muḍaiyūr, பெ. (n.)

   செங்கற்பட்டு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chenglepet Taluk.

     [முடை(பாய்முடைதல், கூடைமுடைதல்);+ஊர்]

முட்கடு

 முட்கடு muḍkaḍu, பெ.(n.)

   கடுமரவகை (அ.அ.);; a species of {} tree.

முட்கத்திரி

 முட்கத்திரி muṭkattiri, பெ.(n.)

முள்ளங் கத்திரி (மூ.அ.); பார்க்க; see {}.

     [முள் + கத்திரி.]

முட்கரணை

 முட்கரணை muṭkaraṇai, பெ.(n.)

   காட்டுக் கரணை; wild yam.

     [முள் + கரணை.]

முட்கரம்

முட்கரம் muṭkaram, பெ.(n.)

   ஒராய்தம்; club. mace, club.

     “கணிச்சி முட்கரங் கோடாரி” (குற்றா.தல.தக்கன்வேள்விய.14);.

     [முள் + கரம் முட்கரம் = முள் வடிவில் செய்யப்பட்ட ஒராய்தம், குண்டாந்தடி, தண்டாய்தம்.]

முட்கலப்பை

 முட்கலப்பை muṭkalappai, பெ.(n.)

   முனையிற் பற்களையுடைய நிலத்தை உழப் பயன்படுத்தும் கலப்பை வகை (யாழ்ப்.);; a kind of harrow.

உழுவதற்கு முட்கலப்பை ஒன்று வாங்கி வந்தான்.

     [முள் + கலப்பை.]

     [p]

முட்கா

 முட்கா muṭkā, பெ.(n.)

   பச்சைப் பயிறு; greengram Phaseolus aureus.

முட்காசிகம்

 முட்காசிகம் muṭgācigam, பெ.(n.)

   குறுக்குச்செடி; a plant prickly poppy Argemone mexicana.

முட்காபரணி

 முட்காபரணி muṭkāparaṇi, பெ.(n.)

   ஒரு வகைப் பருப்பின் விதை, பாசிப்பயிறு; a kind of edible seedPhaseolustrilobus.

முட்காய்வேளை

 முட்காய்வேளை muṭkāyvēḷai, பெ.(n.)

   செடிவகை (L.);; five leaved wild indigo Tephrosia senticosa.

முட்கிளுவை

 முட்கிளுவை muṭkiḷuvai, பெ. (n.)

   கிளுவை செடிவகை (வின்.);; Indian balm of gilead common hedge plant – Balsamodendron berryi.

     [முள் + கிளுவை.]

முட்கீரை

 முட்கீரை muṭārai, பெ.(n.)

   கீரை வகை (வின்.);; thorny spinach Amaranthus Spinosus.

     [முள் + கீரை.]

முட்குடப்பழம்

முட்குடப்பழம் muḍkuḍappaḻm, பெ.(n.)

   பலாப்பழம்; jack fruit.

     “முட்குடப் பழமெல்லா மிடறி” (திருச்செந்தூர். பிள்ளை. செங்.4);.

     [முள் + குடம் + பழம். குடம் போன்றதும் மேல் பகுதியில் முள் போன்ற அமைப்புடையதுமான பலாப் பழம்.]

முட்கொடுச்சி

 முட்கொடுச்சி muḍkoḍucci, பெ.(n.)

   தூதுவளை; a thorny climber Solanum trilobatum (சா.அக.);.

     [முள் + கொடுச்சி.]

முட்கொன்றை

 முட்கொன்றை muṭkoṉṟai, பெ.(n.)

   கொடி வகை (வின்.);; a species of prickly brasiletto Caesalpinia nuga.

     [முள் + கொன்றை.]

முட்கோல்

முட்கோல் muṭāl, பெ.(n.)

   குதிரையைத் தூண்டும் தாற்றுக் கோல்வகை; a kind of goad for horses.

     “முட்கோல் வலக்கையாற் றாங்கி” (சீவக.794);.

     [முள் + கோல்.]

முட்சங்கம்

 முட்சங்கம் muṭcaṅgam, பெ.(n.)

முட்சங்கு பார்க்க; see {}.

     [முள் + சங்கம். சங்கம் = சங்கு, சங்கஞ் செடி.]

முட்சங்கு

முட்சங்கு muṭcaṅgu, பெ.(n.)

   1. முள்ளுள்ள சங்கு வகை (வின்.);; chank with thorn like points.

   2. சங்கஞ்செடி; mistletoe berry thorn.

     [முள் + சங்கு.]

     [p]

முட்சவள்

 முட்சவள் muṭcavaḷ, பெ.(n.)

   கவைக்கோல் வகை (யாழ்ப்.);; spade fork.

     [முள் + சவள்.]

முட்சீதா

 முட்சீதா muṭcītā, பெ.(n.)

   சீதா பழவகை; a variety of custard apple.

     [முள் + சீதா.]

முட்சீரிதம்

 முட்சீரிதம் muṭcīridam, பெ.(n.)

   கிளுவை மரவகை; a kind of tree Balsmodendron berry (சா.அக.);.

முட்சுண்டை

 முட்சுண்டை muṭcuṇṭai, பெ.(n.)

   தூதுவளை அல்லது பேய்ச்சுண்டை; prickly {} Solanum trilobatum (சா.அக.);.

     [முள் + சுண்டை. சுண்டை செடி வகை.]

     [p]

முட்செடி

 முட்செடி muḍceḍi, பெ.(n.)

   முட்களுடையச் செடி, முட்பூண்டு; a thorny shrub (சா.அக.);.

     [முள் + செடி.]

முட்செம்பை

 முட்செம்பை muṭcembai, பெ.(n.)

   ஒருவகை முட்செடி, செங்கிடை (L.);; prickly sesban Sesbania aculeata.

     [முள் + செம்பை, செம்பை = முள்ளுள்ள செடிவகை.]

முட்செவ்வந்தி

 முட்செவ்வந்தி muṭcevvandi, பெ.(n.)

   ஒருவகைச் செவ்வந்தி; a kind of flower Chrysanthemum genus (சா.அக.);.

     [முள் + செவ்வந்தி. செவ்வந்தி பூச்செடி வகை. முட்செவ்வந்தி என்பதற்கு ரோசா என்ற பொருள் யாழ்ப்பாணத்தில் வழங்குவதாக சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலி குறிப்புத் தருகின்றது.]

முட்ட

முட்ட muṭṭa, வி.அ.(adv.)

   1. நிறைந்து காணும்படி; filling up the entire space of something.

கை முட்ட வளையல்.

   2. முற்ற, முடிய, முழுவதுமாக; fully.

     “முட்ட

நித்தில நிரைத்த பந்தரின்

     ” (பாரத. கிருட்.103);. வயிறுமுட்ட சாப்பிட்டேன்.

     “முட்ட நனைந்தவனுக்கு ஈரமில்லை, முழுவதும் கெட்டவனுக்குத் துக்கம் இல்லை” (பழ.);.

     “முட்டநனைந்தார்க்குக் குளிரில்லை”

     “முட்டற்ற நாரிக்கு இரட்டைப் பரியமா” (பழ.);.

     “முட்ட நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு?” (பழ.);.

     [முற்று → முற்ற → முட்ட.]

முட்டகம்

 முட்டகம் muṭṭagam, பெ. (n.)

   வெண்ணீ றாக்குதற்குரிய எருமுட்டை, பசுஞ்சாண உண்டை (நாஞ்.);; ball of dried cowdung, used in preparing sacred ashes.

மறுவ. எருவாட்டி

முட்டக்குத்தி

 முட்டக்குத்தி muṭṭakkutti, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [முட்டம்+குத்தி]

முட்டடி

முட்டடி1 muḍḍaḍi, பெ.(n.)

   அண்மை (வின்.);; nearness, propinquity.

   2. முட்டிடை பார்க்க; see {}.

     [முட்டு + அடி.]

 முட்டடி2 muḍḍaḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   கோலியாட்டத்தில் தோற்றவனுடைய முட்டியில் வென்றவன் கோலியாலடித்தல் (நெல்லை.);; to strike the knuckles of a defeated player with the balls, at a game of marbles.

     [முட்டு + அடித்தல்.]

 முட்டடி3 muḍḍaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

முட்டாடு – தல் பார்க்க; see {}.

     [முட்டு + அடித்தல்.]

முட்டடைப்பான்

முட்டடைப்பான் muḍḍaḍaippāṉ, பெ.(n.)

   வயிற்றை வீங்கச் செய்யும் மாட்டு நோய் வகை (M.Cm.D.I.248);; a cattle disease, flatulent distension, of the belly Tympanites.

   2. கருங்கால் (மாட்டுவா.84);; black leg.

     [முட்டு + அடைப்பான்.]

முட்டத்தட்ட

 முட்டத்தட்ட muṭṭattaṭṭa, கு.வி.எ.(adv.)

   முழுவதற்கு நெருக்கமாக, கிட்டத்தட்ட; nearly, to full.

     [முட்ட + தட்ட.]

முட்டத்தட்டு-தல்

முட்டத்தட்டு-தல் muṭṭaddaṭṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. முழுதும் பறித்தல்; to shake down completely, as fruits from a tree.

   2. முழுதும் இல்லையாதல்; to be wanting entirely.

     [முட்ட + தட்டுதல்.]

முட்டத்தனம்

 முட்டத்தனம் muṭṭattaṉam, பெ.(n.)

   மூடத் தன்மை (வின்.);; ignorance, stupidity.

     [முட்டன் + தனம். முட்டன் = மூடன்.]

முட்டன்

 முட்டன் muṭṭaṉ, பெ.(n.)

   மூடன் (வின்.);; dunce.

     [முட்டம் → முட்டன்.]

முட்டமுடிபோக

 முட்டமுடிபோக muḍḍamuḍipōka, கு.வி.எ.(adv.)

முட்ட பார்க்க;see {}.

     [முட்ட + முடிபோக முட்டமுடிபோக = முழுவதும்.]

முட்டமுடிய

 முட்டமுடிய muḍḍamuḍiya, வி.அ.(adv.)

முட்ட பார்க்க; see {}.

     [முட்ட + முடிய முட்டமுடிய = முற்றிலும், முடிவுவரை.]

முட்டமுட்ட

முட்டமுட்ட muṭṭamuṭṭa, வி.அ.(adv.)

   1. அடிக்கடி; frequently.

   2. எப்பொழுதும் (கோவை.);; when, at what time.

   3. முழுதும் (கோவை);; wholly.

முட்ட முட்ட நீ இப்படியே தாண்டா சீரழிவுபண்றே (கோவை);. வயிறு முட்ட முட்ட சாப்பிடாதே.

முட்டம்

முட்டம்1 muṭṭam, பெ.(n.)

   1. பொருந்திய பக்கம், பக்கச் சரிவு; slope.

     “நளிமலை முட்டமும்” (பெருங்.வத்தவ.2:43);.

   2. காக்கை; crow

     ‘குரங்கணின் முட்டம் போக்கு நீற்றும்’ (கச்சி.வண்டு.75, உரை);.

     [முட்டு → முட்டம்.]

 முட்டம்2 muṭṭam, பெ.(n.)

முட்டான்1 பார்க்க; see {}.

 முட்டம்3 muṭṭam, பெ.(n.)

   1. கடலூர் (தென்னார்க்காடு); மாவட்டத்திலுள்ள (ஸ்ரீமுஷ்ணம்); திருமுட்டம் என்னும் ஒரு மாலியத்தலம்;{}, shirine in Cuddalore (South Arcot); District.

     “‘முட்டத்துப் பன்றி முளரித் திருப்பதத்தை” (பெருந்தொ.26);.

   2. கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் வட்டத்தில் உள்ள ஊர்; a village in {} District

இவ்வூரில் கடல் உள்நோக்கி வந்து முட்டிக் கொண்டிருப்பதால் பெற்ற பெயர்.

   3. மலையாள நாட்டில் உள்ள வள்ளுவ நாட்டில் இருந்த ஊர்; a village in {} country.

முதல் இராசராசன் இவ்வூருக்கு மும்முடிச் சோழ நல்லூர் எனப் பெயரிட்டு இவ்வூரில் உள்ள கோயிலுக்கு இறையிலி நிலம் வழங்கியுள்ளான் (பிற்காலச் சோழர் வரலாறு சதாசிவம்);.

   4. பலர்கூடி வாழும் ஊர் (சூடா.);; village, town.

     [முட்டு → முட்டம்.]

 முட்டம்4 muṭṭam, பெ.(n.)

   மதி முட்டுப்பாடு (மதிக்குறைவு); ஆகிய மடமை; stupidity, ignorance.

     [முட்டு → முட்டம். முட்டு = குறைவு.]

 முட்டம் muṭṭam, பெ. (n.)

   பெரிய வீடு, வளமனை, அரண்மனை; a big house, bangalow, palace.

என் முட்டம் புகாதே (இ.வ.);.

     [முகடு-முகட்டம்-முட்டம்]

முட்டரிசி

 முட்டரிசி muṭṭarisi, பெ.(n.)

   நன்றாய் வேகாத சோறு (உ.வ.);; rice not fully boiled.

சோறு முட்டரிசியாகாமல் நன்றாகப் பார்த்து வடி.

மறுவ. நொறுக்கரிசி

     [முட்டு + அரிசி முட்டரிசி = வேக்காடு குன்றிய அரிசி.]

முட்டறிவோர்

 முட்டறிவோர் muṭṭaṟivōr, பெ.(n.)

   கடலடியில் காணும் பாறையின் தன்மை அல்லது இருப்பிடம் அறிந்தவர்; one who knows the quality of a rock and its abode beneath the sea.

     [முட்டு + அறிவோர்.]

முட்டல்

 முட்டல் muṭṭal, பெ. (n.)

   ஆத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Attur Taluk.

     [முட்டம்-முட்டல்]

முட்டளவுகுழி

 முட்டளவுகுழி muṭṭaḷavuguḻi, பெ.(n.)

   முழங்காலளவு ஆழமான குழி; knee deep, depth of a pit.

     [முட்டு + அளவு + குழி.]

முட்டவம்

 முட்டவம் muṭṭavam, பெ.(n.)

முட்டகம் பார்க்க; see {}.

முட்டவும்

 முட்டவும் muṭṭavum, வி.அ.(adv.)

முற்ற (வின்.); பார்க்க; see {}.

     [முட்ட → முட்டவும்.]

முட்டா

முட்டா muṭṭā, பெ.(n.)

   1. ஊர்க்கிழமை (பண்ணை);, குறுநில ஆட்சி (தேவநேயம் 12:59);; estate.

   2. சொத்து (வின்.);; property.

     [முட்டம் = பொருந்திய பக்கம், சுற்றடைப்பு. முட்டம் → முட்டா.]

முட்டாக்கிடு – தல்

முட்டாக்கிடு – தல் muḍḍākkiḍudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   முகத்தைப் போர்த்தல்; to cover the face, as a veil.

     ‘வையை யென்னு மகள் மலராகிய ஆடையை முட்டாக்கிட்டு’ (சிலப்.13:173, அரும்);.

   2. உள்ளடக்குதல்; to subordinate

     “தன்னழகாலே அல்லாத வழகை முட்டாக்கிடுந் திருவபிடேகத்தை யுடையவன்” (ஈடு, 8, 8:1);.

     [மூடு + ஆக்கு மூடாக்கு → முட்டாக்கு = இடுதல்.]

முட்டாக்கு

முட்டாக்கு muṭṭākku, பெ.(n.)

   1. தலையை மூடும் துணி; veil.

முட்டாக்கை இழுத்து மூடு.

   2. போர்வை (சிலப்.13:173, அரும்.);; overal mantle.

மறுவ. முக்காடு

     [மூடு + ஆக்கு மூடாக்கு → முட்டாக்கு.]

முட்டாடுதல்

முட்டாடுதல் muṭṭāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   குவித்தல் (இ.வ.);; to form into a pile or heap.

     [முட்டு + ஆடுதல்.]

முட்டாட்டம்

முட்டாட்டம்1 muṭṭāṭṭam, பெ.(n.)

   1. முட்டாள் தன்மை; stupidity.

   2. அறிவின்மை யாலுண்டாகும் செருக்கு; pertinacity or conceit arising from ignorance.

அவன் முட்டாட்ட மாடுகிறான்.

     [முட்டம் + ஆட்டம்.]

 முட்டாட்டம்2 muṭṭāṭṭam, பெ.(n.)

   முட்டுகை (வின்.);; butting.

     [முட்டு + ஆட்டம். ஒ.நோ.E.butt, meet end to end.]

முட்டான்

முட்டான்1 muṭṭāṉ, பெ.(n.)

   1. அணையாது எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு மூட்டம் (இ.வ.);; fuel placed over the flame to keep it steadily burning.

     ‘குளிருக்கு முட்டான் போடு’.

   2. திருநீறு நீற்றுவதற்குரிய சாணவுருண்டை; ball of cow dung used in preparing sacred ashes.

திருநீறுக்கு முட்டான் போடு.

     [முள் → முட்டு → முட்டான் (வே.க.);.]

 முட்டான்2 muṭṭāṉ, பெ.(n.)

முட்டான் மஞ்சள் (நெல்லை.); பார்க்க; see {}.

     [முட்டு → முட்டான்.]

 முட்டான்3 muṭṭāṉ, பெ.(n.)

   சிறிய மேசை; stool.

     [முட்டு → முட்டான்.]

     [p]

முட்டான்மஞ்சள்

முட்டான்மஞ்சள் muṭṭāṉmañjaḷ, பெ.(n.)

   மஞ்சட்கிழங்கு; root of turmeric.

     [முட்டான்2 + மஞ்சள்.]

முட்டாபலம்

 முட்டாபலம் muṭṭāpalam, பெ.(n.)

   சங்கஞ் செடி; misllitoe berry thorn Azima tetracatha (சா.அக.);.

முட்டாறு

முட்டாறு muṭṭāṟu, பெ.(n.)

முட்கோல் பார்க்க;see {}.

     “முட்டாற்றிற் குத்தி யுழப்பெருது பொன்றப் புடைத்து” (சீவக.2783);.

     [முள் + தாறு. எருது, குதிரை, யானை ஆகியவற்றைத் தூண்டி செலுத்தப் பயன்படும் கூரிய முனையுள்ள கோல்.]

முட்டாற்றுக்கோல்

 முட்டாற்றுக்கோல் muṭṭāṟṟukāl, பெ.(n.)

   தூக்குக் கோல் (இ.வ.);; steelyard.

     [முள் + தாற்றுக்கோல். தாற்றுக்கோல் = இருப்பு முட்கோல், துலைக்கோல், நிறைகோல்.]

முட்டாள்

முட்டாள்1 muṭṭāḷ, பெ.(n.)

   மூடன்; dunce, simpleton, stupid fellow.

     “முட்டாளரக்கர்” (திருப்பு.141);.

     “முட்டாளை நம்பி எந்த வேலையும் செய்யாதே”.

     “முட்டாளுக்கு இரண்டு ஆள்”.

     “முட்டாளுக்கு சினம் (கோபம்); மூக்கின் மேலே”.

     “முட்டாளுக்கு என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேளான்”.

     “முட்டாள் தனத்திற்கு முதல் பங்குக்காரன்”.

     “முட்டாள் பயலுக்கு இரட்டைப் பரியம்”.

ம. முட்டாள்.

     [முட்டு + ஆள். அறிவைப் பயன்கொள்ளத் தெரியாததால் பிறரால் குறைவாக மதிப்பிடப்படும் ஆள்.]

 முட்டாள்2 muṭṭāḷ, பெ.(n.)

   1. ஊர்தியினடியில் அதைத் தாங்குவது போல் வைக்கும் படிமை; image placed underneath a vehicle as if in support.

   2. கொத்து வேலைச் சிற்றாள்; mason’s assistant, boy or girl cooly.

     “செங்கலுக்கு நீறெடுத்து முட்டாளாய் நிற்பாரும்” (பணவிடு.285);.

க. முட்டாள்

     [முட்டு + ஆள் முட்டாள் = முட்டும் ஆள், முட்டித் தாங்கும் ஆள், தாங்கும் உருவம்.]

முட்டாள்வேலை

 முட்டாள்வேலை muṭṭāḷvēlai, பெ.(n.)

   மூடச் செயல் (வின்.);; work of a blunderer.

     [முட்டாள் + வேலை]

முட்டாவாள்

 முட்டாவாள் muṭṭāvāḷ, பெ.(n.)

   இடையறாமல் தொடர்ந்து ஊர்ப் பொது வேலை நிகழ்வதற்கு ஆள் எடுக்க அளிக்கும் வரி வகை (கடமை);; an ancient tax collected for the purpose of appointing labourers for uninterrupted village work.

மறுவ. முட்டி, முட்டையாள்.

முட்டி

முட்டி1 muṭṭi, பெ. (n.)

   1. விரல்களை மடக்கியதும் மேடாகத் தெரியும் எலும்பு;   முழங்காலில் உள்ள வட்டமான ஓடு (சில்லு);; knuckle, knee cap.

கால் முட்டியிலும் கை முட்டியிலும் அடித்துத் துன்புறுத்தினார்கள்.

   2. விரற் பொருத்துத் தெரியும்படி முடக்கிய கை; fist.

   3. முட்டிக்கையாற் குத்துங் குத்து; blow with the fist.

     “முட்டிகள் படப்பட” (பாரத. வேத்திர.56);.

   4. நான்கு விரல்களை யிறுக முடக்கி அவற்றின் மீது கட்டை விரலை முறுகப் பிடிக்கும் இணையா வினைக்கை (சிலப்.3:18, உரை);; a gesture with one hand in which the four fingers are closed tightly and the thumb is pressed over them one of 33 {}.

   5. கைப்பிடியளவு; handful.

     “முட்டி மாத்திரமேனும்” (சேதுபு. இராமதீ.3);.

   6. பிடியளவாக இடும் ஐயம் (பிச்சை);; alms.

     “முட்டிபுகும் பார்ப்பார்” (தனிப்.1, 142:39);.

   7. படைக்கலன் பிடிக்கும் வகை; a mode of holding a weapon.

     “துய்ய பாசுபதத் தொடையு முட்டியும்” (பாரத. அருச்சுனன்றவ. 129);.

   8. அறுபத்து நாலு கலைகளுள் கையுள் மறைத்ததை இன்னதென்று அறிந்து கூறும் கலை; art discovering anything concealed in the closed hand, one of {}.

நட்டமுட்டி சிந்தனை.

   9. உடைந்த செங்கலின் துண்டு (நெல்லை.); (இ.வ.);; broken brick.

   10. முட்டிகை (யாழ்.அக.); பார்க்க; see {}. 1

   1. கைமுட்டி போல் செய்யப்படும் வெல்லம்; jaggery.

     [முட்டு → முட்டி. முட்டுதல் = எதிர்ப்படுதல், பொருந்துதல், மோதுதல்.]

வடவர் காட்டும் மூலம் முஷ். முஷ் = திருடு, கொள்ளையடி சிறைகொண்டுபோ, உளங்கவர், மகிழ்ச்சியால் மயக்கு, உடை, அழி என்று பொருள்.

     “Musti. m.f. stealing, filching W., the clenched hand, fist (perhaps ovig, the hand closed to grasp anything stolen);” (வ.மொ.வ.); எனவே வடமொழி மூலம் இந்தப் பொருளுக்கு முற்றிலும் பொருந்தாது.

 முட்டி2 muṭṭi, பெ. (n.)

   1. நஞ்சு தீர்க்கும் மந்திர பண்டுவ வகை (பெரியபு.திருஞா.1060);; a magic cure for poison.

   2. வரிவகை (புதுக். கல்.504);; a tax.

 முட்டி3 muṭṭi, பெ.(n.)

   1. பெரும்பாலும் ‘கள்’ இறக்குவதற்குப் பயன்படும் கலயம்; an earthen pot with a narrow mouth used mostly for collecting toddy from palm trees கள்ளு முட்டி.

   2. சிறுபானை; small earthen pot.

     ‘சட்டி முட்டிகளை சடுதியில் கழுவிப்போடு’ (உ.வ.);

 முட்டி4 muṭṭi, பெ.(n.)

   1. எட்டி மரம்; a poisonous tree Strychnos nux vomica.

   2. சிற்றாமுட்டி; pavomia zeylanica.

   3. பேராமுட்டி; pavonia odorata.

   4. பேய்த் தும்மட்டி; bitter apple.

     [முள் → முட்டு → முட்டி (வே.க.);.]

 முட்டி5 muṭṭi, பெ.(n.)

   1. சம்மட்டி எனப்படும் மீன் வகை; a kind of fish called {}.

சம்மட்டி போன்ற தோற்றம் உடைய மீன் வகை.

   2. சிப்பி வகை; cockle Cardium ekule.

     [p]

 முட்டி6 muṭṭi, பெ. (n.)

   1. ஒரு பலவளவு (தைலவ.தைல.1.);; a standard weight 1 palam.

   2. இருபது கவளி கொண்ட அளவு; quantity consisting of 20 kavali.

முட்டி வெற்றிலை (தஞ்.);.

   3. திருவிழாவில் ஊரெல்லைத் தெய்வத்திற்குப் படைக்கும் பலிச்சோறு (M.M.);; oblation of ball of rice deposited on the boundary line of a village in a festival.

     [முள் → முட்டு → முட்டி (வே.க.);.]

 முட்டி1 muṭṭi, பெ. (n.)

   நாட்டியத்தில் முத்திரை நிலை; a hand pose in dance.

     [முட்டு-முட்டி]

 முட்டி muṭṭi, பெ. (n.)

பெரிய மரக்கட்டை,

 a log of wood. (கொ.வ.வ.சொ..124);.

     [முடு-முட்டு-முட்டி]

முட்டிகை

முட்டிகை muṭṭigai, பெ. (n.)

   தட்டார் சிறு சுத்தி; jeweller’s small hammer.

     “முட்டிகை போல…. கொட்டி யுண்பாரும்” (நாலடி, 208);.

ம. முட்டி.

முட்டிக்கத்திரி

 முட்டிக்கத்திரி muṭṭikkattiri, பெ.(n.)

   ஒருவகைக் கத்தரிக்காய்; a species of brinjal.

மறுவ. முட்டைக் கத்திரி.

     [முட்டி + கத்திரி.]

முட்டிக்கல்

முட்டிக்கல் muṭṭikkal, பெ.(n.)

   1. எல்லை யறியும் கல்; boundary stone.

   2. சுவர் (பாது);காப்பிற்காக மூலையில் போடப்படும் ‘ட’ வடிவக் கல் (கோவை);;     ‘L’ shaped stone built in corner for the safty of wall.

     [முட்டி + கல்.]

முட்டிக்காற்கழுதை

 முட்டிக்காற்கழுதை muṭṭikkāṟkaḻudai, பெ.(n.)

   பின்னங்கால் முட்டிகள் தட்டும்படி நடக்குங் கழுதை; donkey.

     [முட்டி + கால் + கழுதை.]

முட்டிக்காலன்

 முட்டிக்காலன் muṭṭikkālaṉ, பெ.(n.)

   முட்டுக்கால் தட்டும்படி நடப்போன் (வின்.);; knock knee person.

     [முட்டி + கால் + அன்.]

முட்டிக்கால்

முட்டிக்கால் muṭṭikkāl, பெ. (n.)

   1. முழங்கால்; knee.

முட்டிக்கால் தட்டும்படி நடக்காதே.

   2. முழங்காற் சிப்பி அல்லது பொருத்து; knee pan, knee cap.

   3. முட்டிக்காற் பின்னல்; knockknee.

     “கழுதையின் முட்டிக் கால் வீரம் உதை பட்டவர்க்குத்தான் தெரியும்” (பழ.);.

     [முட்டி + கால்.]

முட்டிக்கால்தட்டு-தல்

முட்டிக்கால்தட்டு-தல் muṭṭikkāldaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

முட்டுக்கால்தட்டு தல் பார்க்க; see {}.

     [முட்டி + கால் + தட்டுதல். முழங்காற் சிப்பிகள் ஒன்றோடொன்று உரசுதல்.]

முட்டிக்கால்போடு தல்

முட்டிக்கால்போடு தல் muṭṭikkālpōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   தண்டனையாக மண்டி போடுதல்; kneel down as punishment.

வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டு வராததால் ஆசிரியர் முட்டிபோடச் சொன்னார்.

     [முட்டி + கால் + போடு-தல்.]

முட்டிக்கீரை

 முட்டிக்கீரை muṭṭikārai, பெ.(n.)

   குமுட்டிக் கீரை; a kind of greens Celosia nodiflora.

     [முட்டி + கீரை.]

முட்டிக்கை

முட்டிக்கை muṭṭikkai, பெ. (n.)

   1. விரல் மடக்கியுள்ளகை; clenched fist.

   2. முழங்கை பார்க்க;see {}.

     [முட்டி + கை.]

முட்டிக்கால் என்பது போன்றே முட்டிக்கை என்பதும் பொருத்தையே சிறப்பாகக் குறிக்கும். முன்னது காற்பொருத்தும் பின்னது விரற் பொருத்தும் ஆகும் (வே.க.முல்4);. ஆசிரியர் மாணவனின் முட்டிக்கையிலேயே அடித்தார் (உ.வ.);.

முட்டிக்கொள்(ளு) தல்

முட்டிக்கொள்(ளு) தல் muṭṭikkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. இருட்டு கரணியமாக பார்வை குறைவால் எதிர் இருப்பவற்றில் மோதிக்கொள்ளுதல்; to hit the opposite things when moving in dark.

இருட்டில் எதிலும் முட்டிக்கொள்ளாமல் நடந்துவா (உ.வ);.

   2. சினம், கவலை முதலியவற்றால் தலையை மோதிக் கொள்ளுதல் (வின்.);; to hit or dash one’s head, as in despair or in anger.

   3. பெரு முயற்சி யெடுத்தல் (உ.வ.);; to put forth great efforts to try one’s utmost.

     [முட்டு → முட்டி + கொள்(ளு); தல்.]

முட்டிச்சண்டை

முட்டிச்சண்டை muṭṭiccaṇṭai, பெ.(n.)

   முட்டிக்கைப்போர் (வின்.);, குத்துச் சண்டை; boxing, pugilism.

     [முட்டி1 + சண்டை.]

முட்டிச்சுரை

முட்டிச்சுரை muṭṭiccurai, பெ.(n.)

   மகிடி வாச்சியம் செய்வதற்குப் பயன்படும் சுரை (M.M.293);; calabash, climber, lagenaria vulgaris, as used by snake charmers for a wind instrument.

     [முட்டி1 + சண்டை.]

முட்டிச்சுழி

 முட்டிச்சுழி muṭṭiccuḻi, பெ.(n.)

   மாட்டின் முதுகில் பின் முட்டியின் இருபுறமும், நான்கு விரலத்திற்குள்ளிருக்கும் தீமையை உண்டாக்குவதாகக் கருதப்படும் சுழி; circular or curved form mark four inches, on either side of the back joint at the back region of the cow which is considered to be a bad sign.

     [முட்டி + சுழி.]

முட்டிடு-தல்

முட்டிடு-தல் muḍḍiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   நோய் முதலியன மிகுதல் (இ.வ.);; to come to a crisis.

     [முட்டு + இடுதல்.]

முட்டிடை

முட்டிடை muḍḍiḍai, பெ. (n.)

   1. நெருக்கடி (இ.வ.);; hardship, straits.

   2. நெருக்கம்; over crowding.

     [முட்டு + இடை. முட்டு = இடுக்கம், நெருக்கம்.]

முட்டிபோடு-தல்

முட்டிபோடு-தல் muṭṭipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

முட்டிக்கால்போடு தல் பார்க்க; see {}.

நாள் தோறும் அந்த மாணவன் காலதாமதமாக வருவதனால் தலைமை ஆசிரியர் அவனை முட்டி போடச் சொன்னார்.

     [முட்டி + போடுதல்.]

முட்டிப்பிச்சை

முட்டிப்பிச்சை  muṭṭippiccai, பெ.(n.)

   பிடியரிசியாகப் பெறும் ஐயம்; begging handful of rice.

     [முட்டி1 + பிச்சை]

முட்டிப்போர்

 முட்டிப்போர் muṭṭippōr, பெ.(ո.)

   கைகுத்துப் போர்; boxing.

     [முட்டி + போர்.]

முட்டிமுரண்டுதல்

முட்டிமுரண்டுதல் muṭṭimuraṇṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அருமுயற்சி யெடுத்தல்; to endeavour with persistence, struggle with stubbornness.

முட்டிமுரண்டி பார்த்தாலும் கிடைக்க வேண்டியதுதான் கிடைக்கும்.

     [முட்டு + முரண்டுதல்.]

முட்டிமோது-தல்

முட்டிமோது-தல் muṭṭimōdudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கூட்டத்தில் நெரிந்து முன்னேறி முயல்தல்; surge up.

திரை அரங்கத்தில் படத்தைப் பார்ப்பதற்காக மக்கள் முட்டி மோதுகின்றனர். சிற்றம்பலத்தானைக் காண மக்கள் முட்டி மோதுகின்றனர்.

மறுவ. முட்டிமுரண்டு-தல்

     [முட்டி + மோது-தல்.]

முட்டியடி-த்தல்

முட்டியடி-த்தல் muḍḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. முட்டிச்சண்டையிடுதல்; boxing.

   2. முட்டிப்போர் செய்தல் போல் வருந்தித் திண்டாடுதல்; to struggle hard.

வேலைக்கு முட்டியடிக்கிறான் (உ.வ.);.

     [முட்டி + அடித்தல்.]

முட்டியம்

 முட்டியம் muṭṭiyam, பெ. (n.)

   கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakkurichi Taluk.

     [முட்டம்-முட்டியம்]

முட்டியுத்தம்

 முட்டியுத்தம் muṭṭiyuttam, பெ.(n.)

முட்டிப்போர் பார்க்க; see {}.

முட்டிரட்டி

முட்டிரட்டி muṭṭiraṭṭi, பெ.(n.)

முட்டிரட்டு பார்க்க; see {}.

     “நிசதி கலவரை அரிசி பத்தெட்டுக் குத்தல் ஸ்ரீகோயிலுக்கே கொண்டு சென்று அளப்போமானோம், அளப்போமாயின் முட்டிரட்டி பந்மாகேசுவரர் தண்டிக் கொள்ள ஒட்டிக் குடுத்தோம்” (தெ.கல்.தொ.12 கல்.61);.

     [முட்டி + இரட்டி.]

முட்டிரட்டு

முட்டிரட்டு muṭṭiraṭṭu, பெ.(n.)

   தடை பெற்றால் இரட்டிப்பாக கொடுப்பது; giving in double due to interdict.

     “பொன்… இறுத்து முட்டிரட்டி அட்டுவோமானோம்” (திருத்துறைப் பூண்டி கல்.2937);.

     [முட்டி + இரட்டு.]

முட்டிருமல்

 முட்டிருமல் muṭṭirumal, பெ.(n.)

   விட்டு விட்டு வரும் ஒருவகைத் தொடர் இருமல் (குத்திருமல்);; irritating cough caused by inflammation.

மறுவ. தொண்டைப்புகைச்சல், கக்குவான் இருமல்.

     [முட்டு + இருமல்.]

முட்டிவாங்கி

முட்டிவாங்கி muṭṭivāṅgi, பெ. (n.)

   பிடியரிசி வாங்கும் பிச்சைக்காரன்; recipient of doles, mean beggar.

     “முஷ்டிவாங்கிப் பயலோ மோப்பாச்சு” (விறலிவிடு. 772);.

     [Skt. musti → த. முட்டி + வாங்கி]

முட்டிவெற்றிலை

 முட்டிவெற்றிலை muṭṭiveṟṟilai, பெ.(n.)

   மட்டமான வெற்றிலை வகை; betel leaves, of a coarse variety.

     [முட்டி + வெற்றிலை.]

முட்டு

முட்டு1 muṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. தலையை அல்லது தலையால் ஒன்றின் மீது மோதுதல்; knock one’s head against something, bump one’s head against, butt.

மஞ்சுவிரட்டு விழாவினை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தவர்களில் சிலர் மாடு முட்டி இறந்தனர். கன்று ஆ(பசு);விடம் முட்டி முட்டிப் பால் குடித்தது. சுவரில் தலையை முட்டிக் கொண்டு கதறி அழுதான்.

     “துள்ளித் தூண் முட்டுமாங்கீழ்” (நாலடி, 64);.

   2. தடுத்தல்; to oppose, hinder.

   3. எதிர்த்தல்; to assault, attack.

   4. எதிர்ப்படுதல்; to meet.

     “வரையா நாளிடை வந்தோன் முட்டினும்” (தொல். பொருள்.112); (சூடா.);.

   5. பிடித்தல்; to grip, grasp.

     “குழலாள்… கையினைக் கையாலவன் முட்டிடலும்” (உத்தரரா. திக்குவி.16);.

   6. தேடுதல்; to seek.

     “நாடிநாங் கொணருது நளினத் தாளைவான் மூடிய வுலகினை முற்றுமுட்டி யென்று” (கம்பரா.சம்பாதி.7);.

   க. முட்டு;ம. முட்டுக.

     [முல் (பொருந்தல்); → முது → முத்து → முட்டு → முட்டுதல்.]

 முட்டு2 muṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. குன்றுதல்; to be deficient.

     “முட்டா வின்பத்து முடிவுல கெய்தினர்” (சிலப். 15:197);.

   2. முடிதல்; to end.

     “முட்டடி யின்றிக் குறைவு சீர்த்தாகியும்” (தொல். பொருள். 435);.

   3. தடைப்படுதல்; to be hindered, prevented.

     “வெண்ணெல்லி னரிசிமுட்டாது… பெறுகுவீர்” (மலைபடு. 564);.

     “இத்தன்ம முட்டில்” (தெ.கல்.தொ.3, 95);.

   4. பொருதல்; to fight, attack.

     “குலப் பகைஞன் முட்டினான்” (கம்பரா.நட்புக்.50);.

   5. வழுவுதல்; to fail, stray away.

     “புண்ணிய முட்டாள்” (மணிமே.16:49);.

   6. அழுகை, கண்ணீர், சினம் முதலியவை வெளிப்படுகிற வகையில் நிறைதல், நிரம்புதல்; surge up of tears, anger, etc. brim with tears, etc, to be full.

     “தோயமுட்டிய தோடவிர் மலர்த்தடம்” (காஞ்சிப்பு.கழுவாய்.79);.

பேசப்பேச அவன் கண்களில் நீர்முட்டியது. அவனுக்குச் சினம் முட்டிக் கொண்டு வந்தது.

   7. நெருங்குதல்; to be close..

     [முட்டு1 – தல் → முட்டு2தல்.]

 முட்டு3 muṭṭu, பெ.(n.)

   1. முழங்கால், முழங்கை விரல்கள், இவற்றின் பொருத்து; knee, elbow, knuckle.

   2. குவியல் (உ.வ.);; heap. பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக்கின்றன.

   3. பற்றுக்கோடு; prop, support.

விலங்குகள் கொம்பால் தாக்குகை.

   4. தடை; hindrance, obstacle, impediment.

     “முட்டுவயிற் கழறல்” (தொல். பொருள்.271);.

     “பன்முட்டின்றாற் றோழி நங்களவே” (அகநா.122);.

   5. முட்டுப்பாடு, 1, 2 பார்க்க; see {}, 1, 2.

   6. உட்சென்று கடத்தலருமை; difficulty, as in passing.

     ” முட்டுடை முடுக்கரும்” (சீவக. 1216);.

   7. குறைவு; shortness, deficiency.

     “மூவேழ் துறையு முட்டின்று போகிய” (புறநா.166);.

   8. கண்டு முட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள் (பெரியபு. திருஞான.692);; pollution.

   9. மாதவிடாய் (வின்.);; menses.

   10. விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை; battering, butting. 1

   1. சில்லறைப் பொருள்கள்; sundry things.

     ‘கட்டினேம் முட்டுக்களை’ (புறநா. 206, உரை);. வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமான்கள் கூட விடாமல்திருடர்கள் எடுத்துச் சென்று விட்டனர். 1

   2. மேடு (வின்.);; rising ground, high, ground. 1

   3. ஒன்று விழாமல் தாங்கும் அல்லது நகராமல் தடுக்கும் கட்டை முதலியவை; prop, block.

வண்டியை நிறுத்திச் சக்கரங்களுக்குக் கல்லால் முட்டுக் கொடுத்துவிட்டுக் கடைக்குள் சென்றான். விளம்பரப் பலகை சாய்ந்து விடாமல் இருக்க முட்டு வைத்தான். 1

   4. கருவி; tool, instrument.

     “கொற்றரு மிருப்பு முட்டு” (திருவாலவா.45:8);. 1

   5. சந்தி; junction.

போகவர இடையூறாக முட்டில் நிற்காதே. 1

   6. கடலடியில் உள்ள குன்று மற்றும் பாறை போன்ற தடைகள் (மீனவ.);; hindrance of rock and hill under the sea.

கடலில் எங்கெங்கு முட்டுகள் உள்ளன வென்று கண்டறிந்தவரே தொழில் திறனுடையவராய்க் கருதப்படுவார்.

தெ., க., ம., து. முட்டு.

     [முல் → முது → முத்து → முட்டு = தாங்கல். ஒ.நோ. M.E. buttress;

 OF. bouterez;

 mod. F. bouteret: F. bouter;

 E. buttress;

 F. butt;

 OF. abutex (but, end);, end on, E. abut, border upon, abutment, a lateral support (வே.க.);.]

   முட்டுக்கால், முட்டுக்கொடுத்தல், முட்டுச் சட்டம், முட்டுச்சுவர் முதலிய தொடர்ச் சொற்கள் தாங்கல் கொடுத்தலையும்;   முட்டுக்கட்டை, முட்டுத்தொய்வு (மூச்சுவிட முடியாமை);, முட்டுப்பாடு முதலிய தொடர்ச்சொற்கள் தடைபண்ணுதலையும், முட்டுமுடுகு, முட்டிடை முதலிய தொடர்ச் சொற்கள் வழி யிடுக்கத்தையும்;முட்டுச்சீலை, முட்டுப் பட்டினி, முட்டுப் பாந்தை முதலிய தொடர்ச்சொற்கள் தீட்டுப் பாட்டையும்

முட்டுக்கால் தட்டுதல், முட்டுக்குட்டு, முட்டுக் குத்துதல் (முழங்கால் மேல் நிற்றல்);, முட்டுப்பிடிப்பு. முட்டுவலி, முட்டு வீக்கம் முதலிய தொடர்ச்சொற்கள் முழங்கால் வினையையும் உணர்த்தும் (வே.க.முல்4);.

 முட்டு4 muṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கூடுதல்; to meet, assemble, together.

   2. பொருந்துதல்; to be suitable.

     [முத்து → முட்டு → முட்டுதல். ஒ.நோ.O.E. mitan;

 O.S. motian;

 ON. Moeta;

 Goth. (ga); motjan;

 E.meet;

 OE. motian;

 E. moot, assembly. E. wikenagemot = Anglo Saxon national council or parliament. OE.witena, wisemens (ge); mot, meeting (வே.க.);.]

முட்டு-தல்

முட்டு-தல் muṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1 கலப்பை பொருத்துதல்; to fix the plough.

   2.தொடுதல்; to touch.

     [முள்-முடு-முட்டு]

முட்டுகுத்து-தல்

முட்டுகுத்து-தல் muṭṭuguddudal,    5 செ.கு.வி. (v.i.)

   முழங்கால் மேல் நிற்றல் (வின்.);; to fall upon one’s knees.

     [முட்டு + குத்துதல். முட்டு = முழங்கால்]

முட்டுக்கட்டியாடு-தல்

முட்டுக்கட்டியாடு-தல் muṭṭukkaṭṭiyāṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   பொய்க் கால்களில் நின்று நடத்தல் (வின்.);; to go on stilts.

     [முட்டுக்கட்டு + ஆடுதல். பொய்க்காற் கட்டையில் நின்று நடத்தல்.]

முட்டுக்கட்டு – தல்

முட்டுக்கட்டு – தல் muṭṭukkaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பற்றுக்கோடாகக் (ஆதாரமாகக்); கட்டை முதலியன கொடுத்தல்; to prop, buttress.

   2. வழியை யடைத்தல் (வின்.);; to blockade, shut up a place or an entrance, shut or beset the avenues of a town.

   3. வயல் முதலியவற்றுக்கு வரப்பு (எல்லை); கட்டுதல் (யாழ்ப்.);; to form ridges as in a field;

 to limit or confine within bounds.

   4. முழந்தாளைக் கைகளாற் கட்டுதல்; to sit cross legged with arms folded round the knees.

முட்டுக் கட்டி உட்காராதே.

     [முட்டு + கட்டுதல்.]

முட்டுக்கட்டை

முட்டுக்கட்டை muṭṭukkaṭṭai, பெ.(n.)

   1. தேர் போன்ற இழுக்கப்படும் ஊர்திகளை நிறுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் சாய்வு அமைப்பிலுள்ள கட்டை; stumbling block wood used as break to stop the pulling car.

தேரை நிறுத்த முட்டுக்கட்டை போடு.

   2. தாங்கு கம்பம்; block or stake, as a prop. or support.

வாழைக்கு முட்டுக்கட்டை கொடுக்க வேண்டும்.

   3. தடைசெய்பவன் – பவள் வது; person or object which is a hindrance.

   4. மேற்கொண்டு செயல்பட முடியாதவாறு தடுப்பது; stumbling block.

உன் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டையாக இருப்பது எது?

     [முட்டு + கட்டை. முட்டு = தடை செய்கை.]

முட்டுக்காடு

 முட்டுக்காடு muṭṭukkāṭu, பெ. (n.)

   கடற்கரை ஓரம் சென்னைக்கு அருகில் உள்ள ஊர்; a village, near in chennai.

இது ஒரு சுற்றுலா தலம். இங்குப் படகுத்துறை முதலியவை அமைந்துள்ளன.

முட்டுக்காய்

முட்டுக்காய் muṭṭukkāy, பெ. (n.)

   1. முட்டுக்குரும்பை பார்க்க; see {}.

   2. பனி (பரி.அக.);; ice.

     [முட்டு + காய்.]

முட்டுக்காய்த்தேங்காய்

 முட்டுக்காய்த்தேங்காய் muṭṭukkāyttēṅgāy, பெ.(n.)

முட்டுக்குரும்பை பார்க்க; see {}.

     [முட்டுக்காய் + தேங்காய்.]

முட்டுக்காரன்

 முட்டுக்காரன் muṭṭukkāraṉ, பெ.(n.)

   மத்தளமடிப்பவன் (தஞ்சை);; one who plays on {}.

     [முட்டு + காரன். முட்டுதல் = தாக்குதல்.]

முட்டுக்கால்

முட்டுக்கால் muṭṭukkāl, பெ. (n.)

   1. தாங்கு கால்; support, pedestal, beam to support an old wall or tree.

     ‘தேவருலகுக்கு முட்டுக்காலாக ஊன்றிவைத்த (பெரும்பாண். 346, உரை);.

   2. முட்டிக்கால் பார்க்க; see {}.

மறுவ. கட்டைக்கால்

     [முட்டு + கால். முட்டு = தாங்கல்.]

முட்டுக்கால்தட்டு-தல்

முட்டுக்கால்தட்டு-தல் muṭṭukkāldaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   முழங்கால் ஒன்றோ டொன்று இடித்தல்; to have one’s knees knocking together, as a donkey.

மறுவ. முட்டி தட்டுதல், முட்டிக்கால் தட்டுதல்.

     [முட்டுக்கால் + தட்டு. முட்டுக்கால் = முழங்கால்.]

முட்டுக்குச்சி

 முட்டுக்குச்சி muṭṭukkucci, பெ.(n.)

   தொண்டானையும், தொண்டாங் கயிற்றையும் இணைக்கும் பகுதியில் உள்ள குச்சி (உழவு);; block of wood which helps in the water lift.

     [முட்டு + குச்சி.]

தொண்டன் = தோலால் செய்யப்பட்டு கவலைச் சாலின் கீழ்ப்புறம் நீர் வெளியேறும் பகுதியில் கட்டப்பட்டிருப்பது. தொண்டாங்கயிறு = தொண்டானுடன் பிணைக்கப்பட்டு நுகத்தடியில் கட்டப்படும் கயிறு.

முட்டுக்குடிசை

 முட்டுக்குடிசை muḍḍukkuḍisai, பெ.(n.)

   மாதவிலக்குக் காலத்தில் இருளர் இனப் பெண்கள் தங்கும் குடிசை; a cottage of Erular ladies to stay at the period of menses time.

     [முட்டு + குடிசை. முட்டு = மாதவிலக்கு.]

முட்டுக்குட்டு

முட்டுக்குட்டு muṭṭukkuṭṭu, பெ.(n.)

   முட்டுவலி (பைஷஜ.257);;பார்க்க; see {}.

தெ. முட்டுகுட்டு.

     [முட்டு + குட்டு. முட்டு = முழங்கால்.]

முட்டுக்குரும்பை

 முட்டுக்குரும்பை muṭṭukkurumbai, பெ. (n.)

   முற்றாத இளநீர் (இ.வ.);; very immature coconut.

     [முட்டு + குரும்பை. முள் → முட்டு = குறைவு, முற்றாதது. குரும்பை = இளநீர். தெங்கு, பனைகளின் இளங்காய். முட்டுக்குரும்பை = சிறு தென்னம் பிஞ்சு அல்லது பனம் பிஞ்சு (வே.க.);.]

முட்டுக்கொடுத்தல்

முட்டுக்கொடுத்தல் muḍḍukkoḍuttal, பெ.(n.)

   1. சாய்வுக்கு எதிர்ப்புறமாகக் கொம்பு நிறுத்துதல்; to put up a prop.

வாழை காற்றில் சாயாமல் இருக்க ஒரு மூங்கில் கொம்பை முட்டுக் கொடு,

   2. இடையூறு செய்தல்; to put an obstacle in the way.

     [முட்டு + கொடுத்தல். முட்டு = தாங்குதல்.]

முட்டுக்கொம்பு

 முட்டுக்கொம்பு muṭṭukkombu, பெ.(n.)

   ஏற்றக்கோல் (சால்கோல்); கயிறு துலானில் கீழ் இறங்காமல் இருக்கப் பயன்படும் கொம்பு (உழவு);; a wooden pole which helps the picotah not to descend from its position.

     [முட்டு + கொம்பு. கால்கோல் = ஏற்றக்கோல். துலான் = அடிப்பக்கம் பருத்தும் மேற்பக்கம் சிறுத்தும் உள்ள மரம். அடிப்பக்கத்தில் ஏற இறங்க மிதிப்படி இருக்கும். இது நீரிறைக்கும் ஏற்றத்தில் பயன்படும்.]

முட்டுக்கோல்

முட்டுக்கோல் muṭṭukāl, பெ.(n.)

   கிட்டி (இறுக்குங்கோல்);; clamps.

     “முட்டுக்கோல் கொண்டு அபகரித்த தனத்தை” (ஈடு,5.3.9.ஜீ);.

     [முட்டு + கோல்.]

 முட்டுக்கோல் muṭṭukāl, பெ. (n.)

   வண்டி யின் பின்பக்கச் சுமையை (பாரத்தை);த் தாங்க கீழ்ப்பகுதியில் வைத்திருக்கும் கட்டை; a drop in cart. (கொ.வ.வ.சொ.124);.

     [முட்டு+கோல்]

முட்டுச்சட்டம்

 முட்டுச்சட்டம் muṭṭuccaṭṭam, பெ.(n.)

   துளைக்கருவிகளைத் திருப்பும் சட்டம் (உதைமானச் சட்டம்); (C.E.M.);; brace, strut.

     [முட்டு = கருவி. முட்டு + சட்டம்.]

முட்டுச்சந்து

 முட்டுச்சந்து muṭṭuccandu, பெ.(n.)

   மேற்கொண்டு செல்ல முடியாமல் முடிந்து விடுகிற சிறு தெரு; blind alley, dead end street.

முட்டுச் சந்தில் வண்டியை நிறுத்தி வை.

     [முட்டு + சந்து. முட்டு = தடை.]

     [p]

முட்டுச்சீலை

 முட்டுச்சீலை muṭṭuccīlai, பெ.(ո.)

   மாதவிலக்குக் காலத்தில் அணிந்து கொள்ளும் புடவை (வின்.);; cloth worn by a woman in her periods.

     “வகையறியாதே வண்ணான் பொறவுக்குப் போனா முட்டுச் சீலையை வெளுக்கச் சொன்னான்” (பழ.);.

     [முட்டு = திட்டு, மாதவிலக்கு. முட்டு + சீலை.]

முட்டுச்சுவர்

 முட்டுச்சுவர் muṭṭuccuvar, பெ. (n.)

   உதைமானச் சுவர் (C.E.M.);; buttress.

     [முட்டு + சுவர். முட்டு = தாங்கல் (தாங்குதல்);]

முட்டுச்சேலை

 முட்டுச்சேலை muṭṭuccēlai, பெ.(n.)

முட்டுச்சீலை பார்க்க; see {}.

     [முட்டு + சேலை.]

முட்டுத்தலைக்கல்

 முட்டுத்தலைக்கல் muṭṭuttalaikkal, பெ.(n.)

   மீன்பிடி வலையின் கீழ்ப்பகுதி கடலடியில் உட்காரும் பொருட்டு வலையின் கீழ்ப்பகுதியிற் கட்டப் பெறும் கல் (தஞ்சை. மீனவ.);; a stone tied at the bottom of the fishing net to make it sit under the sea.

     [முட்டு + தலை + கல்.]

முட்டுத்தொய்வு

 முட்டுத்தொய்வு muṭṭuttoyvu, பெ.(n.)

   மூச்சு நோயால் மூச்சுவிடுதலில் ஏற்படும் இடர்ப்பாடு (வின்.);; difficulty in breathing, as from pulmonary disease.

     [முட்டு + தொய்வு. முட்டு = தடைசெய்கை, இடையூறு தொய்வு = மூச்சு (சுவாசம்); முட்டு.]

முட்டுப்படுதல்

முட்டுப்படுதல் muḍḍuppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. துன்புறுதல்; to be pressed, perplexed, to be in difficulty or extremity, as one beset by creditors.

   2. தடைப்படுதல்; to be hindered.

     ‘அறத் தொழில்கள் முட்டுப்படாத….. நன்னெஞ்சினோர்’ (பட்டினப். 204, உரை);.

     [முட்டு + படுதல்.]

முட்டுப்பட்டினி

முட்டுப்பட்டினி muṭṭuppaṭṭiṉi, பெ.(n.)

   கண்டு முட்டுக் கேட்டு முட்டுக்களால் நேரிடும் பட்டினி; fasting to a tone for meeting a heretic or hearing about heretics.

     “பறி தலைக்கையர்…. முட்டுப் பட்டினிகளோடும்… பாழிசெல்ல” (திருவாலவா. 37:74);.

     [முட்டு + பட்டினி. பட்டினி = உணவு கொள்ளாமை. முட்டு = திட்டு.]

முட்டுப்பாடு

முட்டுப்பாடு muṭṭuppāṭu, பெ. (ո.)

   1. தடுமாற்றம்; dilemma.

எதைத் தேர்வு செய்வது என்பதில் அவருக்கு முட்டுப்பாடு.

   2. தட்டுப்பாடு; need, want.

     ‘கூடும் பொருள்கள் கூடாமையாலுள்ள முட்டுப்பாடு’ (கலித். 93, பக்.565, உரை);.

அவருக்குப் பொருள் முட்டுப்பாடு.

   3. இடையூறு; trouble, distress.

     ‘பரத்தையரெல்லார்க்கும் முட்டுப்பாடு உண்டாதலும் உண்டு’ (கலித்.93, உரை, பக்.564);.

ஒருவர் முன்னேறும்போது எத்தனையோ முட்டுப்பாடுகள் வரும்.

   4. முட்டு2, 6 (சிலப்.15, 164, உரை); பார்க்க; see {},6.

   5. தீது (சூடா.);; evil.

     [முட்டுப்படு → முட்டுப்பாடு. முட்டு = தடைசெய்கை.]

முட்டுப்பாந்தை

 முட்டுப்பாந்தை muṭṭuppāndai, பெ.(n.)

முட்டுச்சீலை (பரவ.); பார்க்க; see {}.

     [முட்டு + பாந்தை. முட்டு = தீட்டு.]

முட்டுப்பிடிப்பு

 முட்டுப்பிடிப்பு muḍḍuppiḍippu, பெ. (n.)

   மூட்டுப் பகுதியில் ஏற்படும் ஊதை நோய் (கீல்வாயுநோய்); (M.L.);; formation of a stiff joint, Anchylosis.

     [முட்டு + பிடிப்பு. முட்டு = முழங்கால்.]

முட்டுமுடுகு

 முட்டுமுடுகு muḍḍumuḍugu, பெ.(n.)

   உட் சென்று கடத்தலருமை (நாஞ்.);; difficulty, as in passing.

     [முட்டு + முடுகு. முட்டு = வழி இடுக்கம்.]

முட்டுயுத்தம்

 முட்டுயுத்தம் muṭṭuyuttam, பெ.(n.)

   கைக்குத்துச் சண்டை; boxing, pugilism.

மறுவ. முட்டிச்சண்டை

     [முட்டு + Skt. யுத்தம். Skt. yuddha → த. யுத்தம் = போர்.]

முட்டுறடு

 முட்டுறடு muḍḍuṟaḍu, பெ.(n.)

முட்டொறடு (பைபிள்); பார்க்க; see {}.

     [முள் + துறடு.]

முட்டுளசி

முட்டுளசி muṭṭuḷasi, பெ.(n.)

   ஒருவகைத் துளசி (பதார்த்த.308);; a kind of basil Acanthospexmum his pidum.

     [முள் + துளசி. முள்ளுள்ள துளசி வகை.]

முட்டுளி

__,

பெ.(n.);

   தச்சுக் கருவி வகை (கோவை);; a kind of carpenter’s instrument.

     [முட்டு + உளி.]

     [p]

முட்டுற்றவன்

__,

பெ.(n.);

   1. குறைவுள்ளவன்; needy person.

   2. அறிவீனன்; ignorant or foolish person.

     [முட்டு + உறு முட்டுறு → முட்டுற்றவன்.]

முட்டுவலி

 முட்டுவலி muṭṭuvali, பெ.(n.)

   பெண்களுக்கு மாதவிலக்குக் குற்றத்தால் ஏற்படும் ஒருவகைக் கருப்பப்பை நோய்; a disease of the uterus in females Dysmenorrhoea.

     [முட்டு = மாதவிலக்கு. முட்டு + வலி.]

முட்டுவழி

முட்டுவழி muṭṭuvaḻi, பெ. (n.)

   வேளாண் தொழிலுக்குச் செலவிடப்படும் தொகை; agriculture expenses. (கொ.வ.வ.சொ.124);.

     [மூட்டு(செலவுகளைப் பகுத்துப் பொருத்தும்);+வழி]

முட்டுவாதம்

 முட்டுவாதம் muṭṭuvātam, பெ.(n.)

   முட்டியில் காற்று பிடிப்பு ஏற்படுவதால் முடக்கவும் நீட்டவும் முடியாமல் சிறிது தூரம் நடந்தாலும் கவிழ்ந்து விழுவதைப் போல தோன்றும் ஒருவகைக் காற்று பிடிப்பு நோய்; a disease of the knee joint Rheumatism.

     [முட்டு + வாதம். Skt. வாதம் → த. ஊதை நோய், வளிநோய்.]

முட்டுவாளை

 முட்டுவாளை muṭṭuvāḷai, பெ.(n.)

   அடித் தொடையிற் புறப்படும் கட்டி வகை; abscess in the thigh or near the groin.

மறுவ. தொடை வாழைநோய்.

முட்டுவாள்

 முட்டுவாள் muṭṭuvāḷ, பெ.(n.)

   கைவாள் (C.E.M.);; hand saw.

     [முட்டு + வாள். முட்டுவாள் = நீளம் குறைவான வாள்.]

     [p]

முட்டுவீக்கம்

முட்டுவீக்கம் muṭṭuvīkkam, பெ.(n.)

   1. முழங்கால் வீங்குகை (M.L.);; inflammation of the synovial membrane the kneejoint Synovitis

   2. கணுக்களின் வீக்கம்; swelling the joints.

     [முட்டு + வீக்கம். முட்டு = முழங்கால், முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து. விக்கம் = உடல் உறுப்பு வீங்குகை, நீர்ச்சுரப்பால் உடல் வீங்கும் நோய்.]

முட்டை

முட்டை1 muṭṭai, பெ.(n.)

   1. பறவைகளில், ஊர்வனவற்றில் பெண்ணினம் இடும், குஞ்சு வளர்வதற்கான கருவைக் கொண்ட நீள்

   கோள அல்லது உருண்டை வடிவப் பொருள்;   குறிப்பாக உண்பதற்குப் பயன்படுத்தும் கோழி முட்டை; egg, especially, egg of a hen.

     “புலவுநாறு முட்டையை….. கிழங்கொடு பெறூஉம்” (புறநா.176);.

பறவைகள் மரங்களில் கூடுகட்டி முட்டை இடுகின்றன. முதலை மணலில் முட்டை இடுகிறது. முட்டைப் பொரியல், முட்டைக் குழம்பு.

   2. பாலூட்டிகளில், பெண்ணின் இனப் பெருக்க மண்டலத்தில் உருவாகும், விந்துவை ஏற்றுக் கருவாக மாறும் சிறு உருண்டை; ovum.

   3. முட்டை வடிவ எண், சுழி; zero.

பையன் எல்லாப் பாடங்களிலும் முட்டை.

   4. முட்டை வடிவ சிறு கரண்டி அளவு; measure of a teaspoon (which is egg shaped);.

     “ஒரு முட்டை நெய்” (பதினொ. சேத்.16);.

     “நெய்முட்டை யொன்று” (தெ.கல். தொ.2, 91, 115);.

ஒரு முட்டை எண்ணெய் ஊற்றித் தாளிக்கவும் வாங்கியுள்ளான்.

   5. முட்டை வடிவ உலகம் (உலக கோளம்);; world as a globe.

     “திசைமுகுன செய்த முட்டை கீண்டிலது” (கம்பரா.திருவடி.66);.

   6. உடம்பு; body.

     “முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்” (திருமந். 163);.

   7. சாணி யுருண்டையை வட்டமாகத் தட்டிக் காயவைத்த வறட்டி; dry cake of cowdung.

     “நெருப்புக்கு முட்டையும்” (அருட்பா.i, திருவருள்.105);. மண்ணுகுடம் கொண்டு போகும் மாமா நீ மச்சினிய பார்க்கணும்னா? முட்டை வறட்டிய தட்டனுமா.

   ம. முட்டை;க. முட்டெ.

     [முல் (வளைதல்); → முள் → முட்டு → முட்டை.]

 முட்டை2 muṭṭai, பெ.(n.)

   தவிடு; bran.

முட்டைக்கண்

முட்டைக்கண் muṭṭaikkaṇ, பெ. (n.)

   1. பிதுங்கியுள்ள விழி; goggle eye.

   2. உருண்டை விழி; large rolling eye.

     [முட்டை + கண் (வே.க.);.]

முட்டைக்கண்ணீர்

முட்டைக்கண்ணீர் muṭṭaikkaṇṇīr, பெ.(n.)

   1. சொட்டுச் சொட்டாய் விழும் கண்ணீர்; dropping of tears.

   2. கண்ணீர்ப் பெருந்துளி (வின்.);; large drops of tears.

     [முட்டை + கண்ணீர்.]

முட்டைக்கத்திரி

 முட்டைக்கத்திரி muṭṭaikkattiri, பெ.(n.)

   முட்டை போன்ற வடிவமுடைய கத்தரி; brinjal.

மறுவ. முட்டிக்கத்தரி

     [முட்டை + கத்தரி.]

முட்டைக்கார்

 முட்டைக்கார் muṭṭaikkār, பெ.(n.)

   கார்காலத்தில் விளையும் நெல்வகை (C.G.);; a kind of paddy.

     [முட்டை + கார்.]

முட்டைக்கால்

 முட்டைக்கால் muṭṭaikkāl, பெ.(n.)

   முட்டை போன்ற சிறுகரண்டி; small spoon.

     [முட்டை + கால்.]

முட்டைக்காளான்

 முட்டைக்காளான் muṭṭaikkāḷāṉ, பெ. (n.)

   முட்டை வடிவத்தைப் போன்ற ஒருவகைக் காளான்; an ovaly shaped mush room.

மறுவ. குடைக்காளான்

     [முட்டை + காளான்.]

முட்டைக்கூடு

 முட்டைக்கூடு muṭṭaikāṭu, பெ.(n.)

   முட்டையின் வெளிப்புறக் கூடு; egg shell.

     [முட்டை + கூடு.]

முட்டைக்கோங்கு

 முட்டைக்கோங்கு muṭṭaikāṅgu, பெ.(n.)

   தணக்கு மரவகை (L.);; whirling nut Gyrocarpus jacquini.

     [முட்டை + கோங்கு.]

முட்டைக்கோசு

 முட்டைக்கோசு muṭṭaikācu, பெ.(n.)

   வெளிர்ப் பச்சை நிற இலைகளை அடுக்கடுக்காகக் கொண்ட முட்டை வடிவுடைய இலை கறி தரும் செடி வகை; cabbage Brassica oleracea capitata.

     [முட்டை + கோசு. H.Cosh.]

முட்டைக்கோழி

முட்டைக்கோழி muṭṭaikāḻi, பெ.(n.)

   1. முட்டையிடும் கோழி; fowl.

   2. பெட்டைக் கோழி; hen.

     [முட்டை + கோழி. முட்டை இடும் பெட்டைக் கோழி.]

முட்டைச்சாம்பல்

முட்டைச்சாம்பல் muṭṭaiccāmbal, பெ. (n.)

   1. வரட்டிச் சாம்பல் (வின்.);; ash of burnt cowdung.

   2. வரட்டிச் சாம்பலும் விளக்கெண்ணெயுங் குழைத்திடும் மருந்து; mixture of cowdung, ash and castrol oil, used medicinally.

     [முட்டை + சாம்பல்.]

முட்டைத்தகுத்தல்

 முட்டைத்தகுத்தல் muṭṭaittaguttal, தொ. பெ.(vbl.n.)

   முள் தைத்தது போன்ற குத்தல் வலி; acute piercing pain, like the run of a thorn.

     [முள் + தைத்தல் + குத்தல்.]

முட்டைத்தயிலம்

 முட்டைத்தயிலம் muṭṭaittayilam, பெ. (n.)

முசுட்டுமுட்டைத்தயிலம் (நாஞ்.); பார்க்க; see {}.

     [முட்டை + Skt. தயிலம்.]

முட்டைத்தோல்

 முட்டைத்தோல் muṭṭaittōl, பெ. (n.)

   முட்டைக் கருவின் மேலாக உரைபோல இருக்கும் மெல்லிய தோல்; a membrane lining inside the egg.

     [முட்டை + தோல்.]

முட்டைநாறி

முட்டைநாறி muṭṭaināṟi, பெ.(n.)

   1. வெதுப்படக்கி (மூ.அ.);; false nettle.

   2. நீண்ட மரவகை; fetid tree.

     [முட்டை + நாறி.]

முட்டைப்பாசி

முட்டைப்பாசி muṭṭaippāci, பெ.(n.)

   ஒருவகை நீர்ப்பூடு (M.M.609);; aquatic plants with inflated appendages to roots, especially Utricularia stellaris.

     [முட்டை + பாசி. பாசி = நீர்ப்பாசி, கடற்பாசி.]

முட்டைப்பாரை

முட்டைப்பாரை muṭṭaippārai, பெ.(n.)

   ஐந்து விரலம் நீளமுள்ள கடல்மீன் வகை (யாழ்ப்.);; a sea fish, attaining 5in. in length.

     [முட்டை + பாரை. பாரை = மீன் வகை.]

முட்டைப்பை

 முட்டைப்பை muṭṭaippai, பெ.(n.)

   சினைப்பை; ovarium.

     [முட்டை + பை.]

முட்டைமுடக்கெலும்பு

 முட்டைமுடக்கெலும்பு muḍḍaimuḍakkelumbu,    பெ.(n) முழங்காலெலும்பு; knee bone Patella.

     [முட்டை + முடக்கு + எலும்பு. முட்டை வடிவ முழங்காலெலும்பு.]

முட்டையோடு

முட்டையோடு muṭṭaiyōṭu, பெ.(n.)

   1. முட்டையின் மேலோடு; egg shell.

   2. கோழி முட்டையோடு; fowl egg shell.

     [முட்டை + ஒடு. கோழி முட்டையின் ஒடு மாழைத்துகள்களைச் சுண்ணகமாக்கும் தன்மையுடையது.]

முட்டைவடிவு

 முட்டைவடிவு muḍḍaivaḍivu, பெ.(n.)

   நீண்ட உருண்டை வடிவம் (வின்.);; spheriod, elliptical shape.

     [முட்டை + வடிவு.]

முட்டைவெண்கரு

 முட்டைவெண்கரு muṭṭaiveṇkaru, பெ. (n.)

   முட்டைக்குள்ளிருக்கும் வெள்ளைக் கரு; white of an egg the albumen.

     [முட்டை + வெண்கரு.]

முட்டைவெள்ளை

 முட்டைவெள்ளை muṭṭaiveḷḷai, பெ.(n.)

   முட்டையின் வெண்கரு கலந்த கதை; white lime mixed with the white of eggs.

     [முட்டை + வெள்ளை.]

முட்டொறடு

 முட்டொறடு muḍḍoṟaḍu, பெ.(ո.)

   இறைச்சியைத் தொங்கவிடும் முள் (வின்.);; flesh hook.

     [முள் + துறடு முட்டுறடு → முட்டொறடு.]

முட்டொளை

 முட்டொளை muṭṭoḷai, பெ.(n.)

   வீணைத் தண்டின் நடுவே செல்லுந்தொளை; foramen spinale.

     [முள் + தொளை.]

முட்பன்றி

 முட்பன்றி muṭpaṉṟi, பெ.(n.)

   முள்ளம் பன்றி; an animal porcupine – Hedge hog Echinus.

     [முள் + பன்றி.]

முட்பரம்பு

 முட்பரம்பு muṭparambu, பெ.(n.)

   முட்களுள்ள பரம்புப் பலகை (இ.வ.);; harrow.

     [முள் + பரம்பு. முட்களுள்ள பரம்புப் பலகை.]

     [p]

முட்பலா

 முட்பலா muṭpalā, பெ.(n.)

   ஆண்மையை உண்டாக்கும் ஒருவகைப் பலா, வேர்ப்பலா; a species of jack that promotes the potency of men.

     [முள் + பலா.]

முட்பலாசு

முட்பலாசு muṭpalācu, பெ. (n.)

   1. முள் முருக்கு; a tree Erythrina indica.

   2. இலைப் புரசு; butea frondosa.

     [முள் + பலாசு.]

முட்பலுகு

 முட்பலுகு muṭpalugu, பெ.(n.)

முட்பலுவு பார்க்க; see {}.

     [முள் + பலுகு. பலுவு → பலுகு, பலுவு = பரம்புப் பலகை.]

முட்பலுவு

 முட்பலுவு muṭpaluvu, பெ.(n.)

முட்பரம்பு பார்க்க; see {}.

     [முள் + பலுவு. பலுவு = பரம்புப் பலகை.]

முட்பாகல்

 முட்பாகல் muṭpākal, பெ.(n.)

   முள்ளுள்ள பாகற்காய்; a variety of bitter gourd.

     [முள் + பாகல்.]

முட்புறக்கனி

முட்புறக்கனி muṭpuṟakkaṉi, பெ.(n.)

   பலாப்பழம்; jack fruit.

     “முட்புறக்கனி யின்றேனும்” (நைடத.நாட்டுப்.20);.

     [முள் + புறம் + கனி. புறத்தே முள்ளோடு இருக்கும் பழம்.]

முட்புளிச்சை

 முட்புளிச்சை muṭpuḷiccai, பெ.(n.)

   புளிச்சை வகை (L.);; thorny hemp bendy Hibiscus surattensis.

     [முள் + புளிச்சை. புளிச்சை = ஒருவகைச் செடி.]

முட்பூலா

 முட்பூலா muṭpūlā, பெ.(n.)

   பூலாச் செடி வகை; black berried feather foil Phyllanthus reticulatus.

     [முள் + பூலா.]

முட்பூலாஞ்சி

 முட்பூலாஞ்சி muṭpūlāñji, பெ.(n.)

முட்பூலா பார்க்க; see {}.

முட்பூல்

 முட்பூல் muṭpūl, பெ.(n.)

முட்பூலா பார்க்க; see {}.

முணக்குதல்

முணக்குதல் muṇakkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   உள் வளைத்தல்; to contract, withdraw, bend.

     “வள்ளுகிர் முணக்கவும்” (நற்.114);.

     [முணங்கு → முணக்கு → முணக்குதல்.]

முணங்கு

முணங்கு1 muṇaṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. உள் வளைதல், உள்ளடங்குதல்; to be contracted, withdrawn, bent.

   2. அடங்குதல் (வின்.);; to be subject to.

   3. தெளிவற்ற வகையில் மெல்லிய குரலில் பேசுதல், குரலையடக்கிப் பேசுதல் (வின்.);; to speak in a suppressed tone, mutter in a low tone, murmur.

காய்ச்சலால் இரவு முழுவதும் முணங்கிக் கொண்டே இருந்தான்.

     [முல் → முள் → முண் → முண → (முணவு → முணகு →); முணங்கு → முணங்குதல் (வே.க.);.]

 முணங்கு2 muṇaṅgu, பெ.(n.)

   1. அடக்கம் (சூடா.);; withdrawing, contracting, bending.

   2. சோம்பல் முறிப்பு; shaking off drowsiness or laziness by stretching one’s limbs.

     “முணங்கு நிமிர் வயமான்” (புறநா.52);.

     “வியலறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து” (அகநா.357 : 5);.

   3. சோம்பலால் ஏற்படும் உடம்பு வளைவு, முடக்கம், சோம்பு (இலக்.அக.);; idleness.

     [முல் → முள் → முண் → முண → (முணவு → முணகு →); முணங்கு (வே.க);.]

முணங்குநிமிர்தல்

முணங்குநிமிர்தல் muṇaṅgunimirtal,    2 செ.கு.வி.(v.i.)

   உடம்பை நீட்டிச் சோம்பல் முறித்தல்; to shake off drowsiness or laziness.

     “முணங்குநிமிர்ந் தளைச் செறி யுழுவை யிரைக்குவந் தன்ன” (புறநா.78);.

     [முணங்கு + நிமிர்தல்.]

முணமுணத்தல்

முணமுணத்தல் muṇamuṇattal,    4 செ. குன்றாவி. (v.t.)

   வாய்க்குள் மெல்லப் பேசுதல் (உ.வ.);; to mutter, murmur.

     [முல் → முள் → முண் → முண → முணமுணத்தல் (வே.க.);.]

முணவல்

முணவல் muṇaval, பெ.(n.)

   சினம் (நாமதீப. 637);; anger.

     [முணவு → முணவல்.]

முணவுதல்

முணவுதல் muṇavudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. வெறுத்தல்; to dislike, feel aversion to.

     ‘களிறு நிலை முணவுதற்குக் காரணம் இருஞ்சேறாடுதல்’ (பதிற்றுப்.64 : 7, உரை);.

   2. சினத்தல்; to be angry.

     [முள் → முண் → முண → முணவு → முணவுதல்.]

முணுக்குமுணுக்கெனல்

 முணுக்குமுணுக்கெனல் muṇukkumuṇukkeṉal, பெ.(n.)

   குழவி தாய்ப்பாலைச் சிறிது சிறிதாக உறிஞ்சிக் குடிக்கை; in a way that a child suck milk from its mother’s breast.

     [முல் → முள் → முண் → முண → முணு → முணுக்கு → முணுக்குமுணுக்கெனல் (வே.க);.]

முணுமுணுத்தல்

முணுமுணுத்தல் muṇumuṇuttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. வெறுப்பு, நிறைவின்மை (அதிருப்தி); முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில் தாழ்ந்த குரலில் பேசுதல்; grumble, mutter, talk in whispers.

எதற்கு முணுமுணுக்கிறாய்? கடைக்குப் போக முடியாது என்று சொல்லிவிடு. நான் வரும்போது அவன் காதில் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தாயே.

   2. வாய்க்குள்ளாகப் பேசுதல்; recite mantras, prayers softly.

ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தவாறே கூடத்தில் நடந்து கொண்டு இருந்தார்.

     [முல் → முள் → முண் → முண → முணு → முணுமுணு → முணுமுணுத்தல் (வே.க.1:3);.]

முணுமுணுப்பு

 முணுமுணுப்பு muṇumuṇuppu, பெ.(ո.)

   வெறுப்பு, நிறைவின்மை (அதிருப்தி); முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில் முணுமுணுக்கை; grumbling.

மனைவியின் முணுமுணுப்புத் தாங்காமல் கணவர் மளிகைக் கடைக்குப் புறப்பட்டார். முணுமுணுப்பு இல்லாமல் கேட்ட போதெல்லாம் அப்பா பணம் கொடுத்திருக்கிறார்.

     [முல் → முள் → முண் → முண → முணு → முணுமுணுப்பு (வே.க.);.]

முணை

முணை1 muṇaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   வெறுத்தல்; to dislike, feel aversion to.

     “களிறுநிலை முணைஇய” (பதிற்றுப்.64:7);.

     [முண் → முண → முணை → முணைதல்.]

 முணை2 muṇai, பெ.(n.)

   1. வெறுப்பு; aversion.

     “முணையில் கொடை” (சிவப்.பிரபந். சிவஞான. பிள்.முத்தப்.5);.

   2. மிகுதி; abundance.

     “முணையினாற் கடலக முழக்க மொத்தவே” (சீவக.2222);.

     [முணை1 → முணை2]

முண்டகத்துறை

 முண்டகத்துறை muṇṭagattuṟai, பெ.(n.)

   குளம்; pond.

     [முண்டகம் + துறை. துறை = நீர்த்துறை, கடல், தாமரை மலர் நிறைந்த குளம்.]

முண்டகநாயகம்

 முண்டகநாயகம் muṇṭaganāyagam, பெ.(n.)

   சூரிய காந்திபூ; sun flower (சா.அக.);.

முண்டகன்

 முண்டகன் muṇṭagaṉ, பெ.(n.)

   தாமரையில் பிறந்ததாகக் கருதப்படும் நான்முகன் (இலக்.அக.);; Brahma, as lotus born.

     [முண்டகம் → முண்டகன்.]

முண்டகம்

முண்டகம்1 muṇṭagam, பெ.(n.)

   1. முள்; thorn.

     “முண்டக விறும்பி னுற்று” (அரிச்.பு. வேட்டஞ்.36);.

   2. முள்ளுடைத்துாறு (பிங்.);; thorn bush.

   3. தாழை (பிங்.);; fragrant screw pine.

     “கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்” (குறுந்.51);.

   4. தாமரை; lotus.

     “முண்டக வதன மழகெழ” (திருவாலவா.37:58);.

   5. நீர்முள்ளி (திவா.);; water thorn.

     “முண்டகங் கரும்பெனத் துய்த்து” (கல்லா.62:14);.

     “முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை” (அகநா.80);.

   6. கழிமுள்ளி; Indian nightshade.

     “மணிப்பூ முண்டகங் கொய்யே னாயின்” (நற்.191);.

     “மணிப்பூ முண்டகத்து” (மதுரைக். 96);.

   7. கருக்கு வாய்ச்சி (அ.க.நி.);; jagged

 jujube.

   8. பதநீர் (சங்.அக.);; sweet toddy.

   9. கள் (பிங்.);; toddy.

   10. கருப்புக்கட்டி; jaggery from palmyra.

   11. தேன்; honey of flowers.

     [முள் + அகம்.]

 முண்டகம்2 muṇṭagam, பெ.(n.)

   1. நெற்றி (பிங்.);; forehead.

     “முண்டகக் கண்ணா போற்றி” (குற்றா. தல.திருமால்.141);.

   2. தலை (அரு.நி.);; head.

   3. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று; an Upanisad one of 108.

   4. வாழை (மலை.);; plantain.

 முண்டகம்3 muṇṭagam, பெ.(n.)

   கடல் (அக.நி.);; sea.

 முண்டகம்4 muṇṭagam, பெ.(n.)

   மார்பின் கீழ் 4 விரலம் வீங்கி வலி கொடுக்கும் நோய்; a disease marked by swelling and pain just, below the chest.

முண்டகவேணி

 முண்டகவேணி muṇṭagavēṇi, பெ.(n.)

   பொன்னாவாரை; a plant Cassia auriculata (சா.அக.);.

முண்டகாசனன்

 முண்டகாசனன் muṇṭakācaṉaṉ, பெ.(n.)

முண்டகன் (யாழ். அக.); பார்க்க; see {}.

     [முண்டகம் + Skt. ஆசனன்.]

முண்டகாசனி

 முண்டகாசனி muṇṭakācaṉi, பெ.(n.)

முண்டகாசனை (யாழ்.அக.); பார்க்க; see {}.

முண்டகாசனை

 முண்டகாசனை muṇṭakācaṉai, பெ.(n.)

   தாமரைப் பூவிலிருப்பவள் திருமகள் (இலக்குமி);; Lakshmi, as seated on a Lotus.

முண்டகாசனை கேள்வன் (சூடா.);.

     [முண்டகம் + Skt. ஆசனை. ஆசனம் → ஆசனை.]

முண்டக்கண்

 முண்டக்கண் muṇṭakkaṇ, பெ. (n.)

   கூட்டமாக இருக்கும் ஒரு வகை மீன்; seven banded cardinal fish.

     [முண்டு-முண்ட+கண்]

முண்டக்கண்கத்தளை

 முண்டக்கண்கத்தளை muṇṭakkaṇkattaḷai, பெ.(n.)

   ஒரு வகை மீன்; black banded jewfish.

     [முண்டக்கண்+கத்தளை]

முண்டக்கண்பாரை

 முண்டக்கண்பாரை muṇṭakkaṇpārai, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

     [முண்டக்கண் + பாரை.]

     [p]

முண்டச்சி

 முண்டச்சி muṇṭacci, பெ.(n.)

   கைம்பெண் (முண்டை);; widow.

     [முண்டை → முண்டைச்சி.]

முண்டச்சேடு

 முண்டச்சேடு muṇṭaccēṭu, பெ. (n.)

   சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk.

     [முண்டல்+சேடு]

முண்டனம்

 முண்டனம் muṇṭaṉam, பெ.(n.)

   தலை மழிக்கை; shaving of the head.

     [முண்டம் + அனம்.]

முண்டனி

முண்டனி muṇṭaṉi, பெ.(n.)

   1. கொட்டாங் கரந்தை; a plant, Spheranthes hirtus.

   2. நொச்சிவேர்; the root of vitex negundo (சா.அக.);.

முண்டன்

முண்டன்1 muṇṭaṉ, பெ.(n.)

   1. மழித்த தலையன்; shaven headed person.

     “கண்டராய் முண்டராகி” (தேவா.269, 3);.

   2. கையில் மண்டையோடுடைய (கபால முடைச்); சிவன்; {}.

     “முண்டனீறன்” (திவ். திருச்சந்.71);.

   3. சிவனியன் (சைவன்); (திவ். திருமாலை, 8, வியா.);; {}.

   4. சமணர் (திவ். திருமாலை. 8, வியா.);; Jain.

   5. மஞ்சிகன் (நாவிதர்); (யாழ்.அக.);; barber.

   6. கரும்பாம்பு (இராகு);; ascending node.

     [முண்டம் → முண்டன்.]

 முண்டன்2 muṇṭaṉ, பெ.(n.)

   1. வலியவன் (திவ். திருமாலை.8, வியா.);; strong, powerful person.

   2. கிழங்கின் இறுக்கமான பகுதி; hard portion of a tuber.

சேப்பம் முண்டன்.

     [மிண்டு → முண்டு → முண்டன்.]

 முண்டன்3 muṇṭaṉ, பெ.(n.)

   விடாப்பிடியன் (உ.வ.);; obstinate man.

     [முண்டன்2 → முண்டன்3.]

முண்டன்சுரா

 முண்டன்சுரா muṇṭaṉcurā, பெ.(n.)

   சுறா மீன் வகை; a species in fish.

     [முண்டன் + சுரா.]

முண்டன்சுறா

 முண்டன்சுறா muṇṭaṉcuṟā, பெ. (n.)

   சுறா மீன் வகையுள் ஒன்று; gangetic shark.

     [முண்டன்+சுறா]

முண்டபலம்

 முண்டபலம் muṇṭabalam, பெ.(n.)

   தேங்காய் (யாழ்.அக.);; coconut.

     [முண்டம் + பலம். முண்டம் = உருண்டை..]

முண்டப்பங்கி

முண்டப்பங்கி muṇṭappaṅgi, பெ.(n.)

   தன்னை உணரும் பொருட்டு செய்யும் பூசையில் (ஆன்மார்த்த பூசையில்); இலிங்கவுருவமாயுள்ள சிவனை ஐந்து முகங்களோடு கூடியவராக மனதில் எண்ணி வழிபடுதல் (தியானிக்கை);; meditation of {} as having five faces in {}.

     “முறைமை யிற்றண்டபங்கி முண்டபங்கியு மியற்றி” (சூத.சிவமான்.4:18); (தத்துவப்.64, 203);.

முண்டப்பாட்டு

முண்டப்பாட்டு muṇṭappāṭṭu, பெ.(n.)

   மிறைக்கவிவகை (யாப்.வி.பக்.510);; variety of metrical composition.

     [முண்டம் + பாட்டு.]

முண்டம்

முண்டம்1 muṇṭam, பெ.(n.)

   1. தலை; head.

     “முண்டம் வெம்பு” (திருவாலவா.44:31);.

   2. நெற்றி; forehead.

     “முண்டத்துற்ற கண்னெரியினான்” (இரகு.தேனுவ.86);.

   3. மழித்த தலை; clean shaven head.

     “சடையு முண்டமுஞ் சிகையும்” (அரிச். பு.விவாக.2);.

   4. வழுக்கைத் தலை (வின்.);; bald head.

   5. மண்டையோடு (கபாலம்);; skull.

     “இறையான் கையினிறையாத முண்டந் நிறைத்த வெந்தை” (திவ்.பெரியதி.5. 1:8);.

   6. உடற்குறை (யாழ்.அக.);; headless trunk.

   7. உறுப்புக் குறை (யாழ். அக.);; limbless body.

கைமுண்டம், கால்முண்டம்.

   8. நிரம்பாக் கருப்பிண்டம்; undeveloped foetus.

முண்டம் விழுந்தது.

   9. மயிரில்லாத் தலைபோல் ஆடையில்லா அம்மண உடம்பு (உ.வ.);; naked body.

   10. அறிவில்லாதவன்; useless person, block head.

     [முள் → முண் → முண்டு → முண்டம்.]

 முண்டம்2 muṇṭam, பெ.(n.)

   1. திரட்சி (சூடா.);; sphere, globe.

   2. இரும்புக்கிட்டம் (அக.நி.);; iron dross.

   3. குற்றி (இலக்.அக.);; stump, stake.

   4. உபநிடதங்கள் 108ல் ஒன்று; an upanisad.

   5. முண்டபங்கி பார்க்க; see {}.

     “நலத்த வுருவது காண்டல் முண்டம்” (தத்துவப். 64);.

   6. சந்தனம் நீறு முதலியவற்றால் நெற்றியில் இடும் குறி; caste mark on the forehead.

     “ஆட்கொண்டான்றிரு முண்டந் தீட்ட மாட்டாது” (திருவாச.35 : 9);.

   7. பிட்டு (அக.நி.);; a preparation of rice flour cooked in steam.

   8. மரத்துண்டு; piece, as of timber.

   9. கட்டி; mass.

பேராறு பெருகிவர பெருமுண்டம் மிதந்துவர.

   10. கணுக்காற் பொருத்து; ankle.

     [முள் → முண் → முண்டு → முண்டம்.]

மொட்டைத் தன்மையைக் குறிக்கும் முண்டம் என்னும் சொல்லும். உருட்சியைக் குறிக்கும் முண்டம் என்னும் சொல்லும் வெவ்வேறென அறிக.

வடவர் காட்டும் முண்ட் (mund); என்னும் மூலம் செயற்கையென்பது தெளிவு.

     “mund (prob. artificial, to serve as the supposed of the words below);, cl, I.P. to cut (Khandavechidi);, Dhatup. IX, 40;

 to cursh, grind, IX, 38 (VI. for mut);;

 cl.l.A. to cleanse ‘or to sink’ or ‘to shave’

என்று மா.வி.அ.. குறித்தல் காண்க (தேவநேயம் 11, பக்.297);.

 முண்டம்3 muṇṭam, பெ.(n.)

   சீட்டாட்டத்தில் ஒருவர் கையிலுள்ள ஒரு இனத்தைச் சார்ந்த ஒற்றைச் சீட்டு (உ.வ.);; a single card of a suit, in the hands of a player.

 முண்டம் muṇṭam, பெ. (n.)

   சிற்பியர் வடிவமைக்கும் மார்பணி; an ornament in Sculpture.

     [முண்டு-அம்]

முண்டா

 முண்டா muṇṭā, பெ. (n.)

   தோள்; shoulder, upperarm.

     “முண்டாத்தட்டிச் சண்டைக்கு அழைக்கிறான்”.

     [U. {} → த. முண்டா]

முண்டாகாரம்

முண்டாகாரம் muṇṭākāram, பெ.(n.)

   1. உடற் குறை; headless trunk.

   2. உருவிளங்காத பொருள் (உ.வ.);; shapeless mass.

     [முண்டு → முண்டம் → முண்டாகாரம்.]

முண்டாசு

முண்டாசு muṇṭācu, பெ. (n.)

   தலைப் பாகைவகை; a kind of head dress, small looseturban.

     “கொடுத்தானோர் முண்டாசு” (விறலிவிடு. 1116);.

த.வ. தலைக்கட்டு

     [H. {} → த. முண்டாசு]

முண்டாணி

 முண்டாணி muṇṭāṇi, பெ.(n.)

மூன்றுவீசம் பார்க்க (நெல்லை.);; see {}.

முண்டான்

 முண்டான் muṇṭāṉ, பெ.(n.)

   மஞ்சட்கிழங்கு; turmeric tuber.

முண்டாபனியன்

 முண்டாபனியன் muṇṭāpaṉiyaṉ, பெ. (n.)

   தோள் (முண்டா); தெரியும்படியான உள் ளொட்டி; sleeveless vest.

த.வ. உள்ளொட்டி

     [Skt. {} → த. முண்டாபனியன்]

முண்டாரி

 முண்டாரி muṇṭāri, பெ.(n.)

   வலிமையானவன்; strong, powerful person.

     [மிண்டு → முண்டு → முண்டாரி.]

முண்டி

முண்டி1 muṇṭittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மொட்டையாய் மழித்தல்; to shave the head completely.

     “தலை முண்டிக்கு மொட்டரை” (தேவா.423, 4);.

     [முண்டு → முண்டி → முண்டித்தல்.]

 முண்டி2 muṇṭi, பெ.(n.)

   கல்லுளிமங்கன் (இ.வ.);; pertinacious beggar.

   தெ. முண்டி;க. மொண்டு.

 முண்டி3 muṇṭi, பெ.(n.)

   1. மழித்த தலையினன் (திருவாலவா.குறிப்பு);; person with a clean shaven head.

   2. மஞ்சிகன் (நாவிதன்);

 barber.

   3. நெற்றியில் மதக்குறி (திரிபுண்டாரம்); அணிந்தவன்; one who wears a caste mark on his forehead.

     “நீற்றுப் பூண்டகு முண்டியேடா” (திருவாலவா.13, 14);.

     [முண்டு → முண்டி.]

 முண்டி4 muṇṭi, பெ.(n.)

முண்டனி பார்க்க (நாமதீப.329);;see {}.

 முண்டி5 muṇṭi, பெ.(n.)

   வளைவு; crooked ness, bend.

     [முள் → முண்டு → முண்டி (க.வி.44);.]

முண்டிதம்

முண்டிதம் muṇṭidam, பெ.(n.)

   1. மொட்டை யடிக்கை; shaving the head clean.

முண்டிதப்படு சென்னியன் (கந்தபு. மார்க். 117);.

   2. வரிக்கூத்து வகை (சிலப்.3:18, உரை);; a masquerade dance.

     [முண்டி → முண்டிதம்.]

முண்டிதை

 முண்டிதை muṇṭidai, பெ.(n.)

   உடலிளைத்துத் தோன்றும் தேவாங்கு (நாமதீப.);; the Indian sloth.

முண்டினி

 முண்டினி muṇṭiṉi, பெ.(n.)

   ஒரு வகை மரம்; a kind of tree useful in alchemy (சா.அக.);.

முண்டியடித்தல்

முண்டியடித்தல் muṇḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   கூட்டத்தில் முன்னேற ஒருவரை ஒருவர் நெருக்கித் தள்ளுதல்; jostle against, push around.

பேருந்தில் முண்டியடித்து ஏறினார். நடிகரைப் பார்க்கக் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வந்தது.

     [முண்டி + அடித்தல்.]

முண்டீரம்

 முண்டீரம் muṇṭīram, பெ.(n.)

   கீரை வகை (சங்.அக.);; a kind of greens.

முண்டு

முண்டு1 muṇṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. முரண்டு பண்ணுதல்; to be unruly. refractory;

 to act saucily.

   2. முனைந்து நிற்றல்; to attack vehemently.

ஒரு முண்டு முண்டிப் பார்த்தான்.

   3. சண்டை செய்யும் முனைப்போடு இருத்தல்; be aggressive.

     [முள் → முண்டு → முண்டுதல் = முற்படுதல், முட்டுதல், தாக்குதல், துளைத்தல் (க.வி.42);.]

 முண்டு2 muṇṭu, பெ.(n.)

   1. முருட்டுத் தன்மை (யாழ்.அக.);; petulance, obstinacy.

   2. முனைந்து செய்யும் எதிர்ப்பு; vehement attack.

   3. மடமை (யாழ்.அக.);; stupidity.

   4. மரம் முதலியவற்றின் கணு; knot, as in a tree.

   5. திரட்சி; bulging or protuberance.

   6. உருண்ட கட்டை (இ.வ.);; short log;

 wooden prop.

முண்டும்முடிச்சும்.

   7. உடற்சந்து (உ.வ.);; joint of the body.

முண்டிலே பட்டது.

   8. திமில் (இ.வ.);; hump.

க. மொண்டு.

     [முண்டு1 → முண்டு2.]

 முண்டு3 muṇṭu, பெ.(n.)

   சிறுவேட்டி (நாமதீப. 780);; shortsized cloth.

க., ம. முந்டு.

முண்டுகொடுத்தல்

முண்டுகொடுத்தல் muṇḍugoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   முட்டுகொடுத்தல்; give a support or prop.

சாய்ந்து கிடந்த வாழைமரத்திற்கு முண்டு கொடுத்து நிமிர்த்தியிருக்கிறார்கள்.

     [முண்டு + கொடுத்தல்.]

முண்டுபலகை

முண்டுபலகை muṇṭubalagai, பெ.(n.)

   கடலில் கட்டு மரத்தைச் செலுத்த உதவும் துடுப்பு (இ.வ.);; paddle.

     [முண்டு2 + பலகை.]

     [p]

முண்டை

முண்டை1 muṇṭai, பெ.(n.)

   முட்டை; egg.

     “முண்டை விளை பழம்” (பதிற்றுப்.60:6);.

     [முண்டு → முண்டை.]

 முண்டை2 muṇṭai, பெ.(n.)

   கண்ணின் கருவிழி (உ.வ.);; apple of the eye.

     [மிண்டை → முண்டை.]

 முண்டை3 muṇṭai, பெ.(n.)

   தலைமழித்த கைம்பெண்; widow, as having a shaven head.

     “மொட்டை முண்டை” (தனிச்.சிந்.376 : 4);.

     [முண்டன் → முண்டை (பெ.பா.);]

முண்டைக்கட்டை

 முண்டைக்கட்டை muṇṭaikkaṭṭai, பெ.(n.)

முண்டக்கட்டை பார்க்க; see {}.

     [முண்டம் + கட்டை.]

முண்டைக்கண்

முண்டைக்கண் muṇṭaikkaṇ, பெ.(n.)

முண்டக்கண் பார்க்க; see {}.

     [முண்டை2 + கண்.]

உருண்டு பெருத்த விழிகளை உடையதால் முட்டைக் கண் என்பது முண்டைக்கண் என வழங்குகின்றது.

முண்டைச்சி

முண்டைச்சி muṇṭaicci, பெ.(n.)

முண்டை3 பார்க்க; see {}.

     “முண்டைச்சிக்குக் சொந்தக்காரன் முன்னுக்கு வருவானா” (பழ);.

     “முண்டைச்சி பெற்றது மூன்றும் அப்படியே” (பழ.);.

     [முண்டை3 → முண்டைச்சி]

முண்டைமோப்பி

முண்டைமோப்பி muṇṭaimōppi, பெ.(n.)

   1. கைம்பெண் (வின்.);; widow.

   2. கைம்பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை (சென்னை);; son born to a widow.

     [முண்டை + மோப்பி.]

முண்ணாக்கு

 முண்ணாக்கு muṇṇākku, பெ.(n.)

   முள் பாய்ந்த நாக்கு; tongue with inflamed papillae (சா.அக.);.

     [முள் + நாக்கு.]

முண்ணாயகி

 முண்ணாயகி muṇṇāyagi, பெ.(n.)

   பாம்பு தின்னி என்னும் மூலிகை (வின்.);; a kind of poisonous herb.

     [முள் + நாயகி.]

முண்ணாவல்

 முண்ணாவல் muṇṇāval, பெ.(n.)

   நாவல் வகை; a species of roseapple.

     [முள் + நாவல்.]

முண்மா

 முண்மா muṇmā, பெ.(n.)

   முள்ளம்பன்றி (யாழ்.அக.);; porcupine.

     [முள் + மா. மா = விலங்கு.]

முண்முரண்டை

 முண்முரண்டை muṇmuraṇṭai, பெ.(n.)

   கொடி வகை; necklace berried climbing caper, Marua arenaria.

முண்முருக்கு

 முண்முருக்கு muṇmurukku, பெ.(n.)

முள்ளுமுருக்கு (மூ.அ.); பார்க்க; see {}.

     [முள் + முருக்கு]

முண்முருங்கை

 முண்முருங்கை muṇmuruṅgai, பெ.(n.)

முள்ளுமுருக்கு பார்க்க; see {}.

     [முள் + முருங்கை.]

முதங்கி

முதங்கி1 mudaṅgi, பெ.(n.)

   வெள்ளகத்தி; sesbania grandiflora, bearing white flowers (சா.அக.);.

 முதங்கி2 mudaṅgi, பெ.(n.)

   கத்தரி வகை (சங்.அக.);; a kind of brinjal.

முதனடை

முதனடை mudaṉaḍai, பெ.(n.)

   இயக்கம் நான்கனுள் மிகத் தாழ்ந்த செலவினை யுடைய பாடல் (சிலப்.3 : 67, உரை);; slow – measured song, one of the four varieties of iyakkam.

     [முதல் + நடை.]

இயக்கம் நான்கு = முதனடை, வாரம், கூடை, திரள்.

முதனா

முதனா mudaṉā, பெ.(n.)

   நாக்கின் அடிப்பகுதி; base or innermost part of the tongue.

     “ஙகார முதனா அண்னம்” (தொல்.எழுத்து.89);.

     [முதல் + நா2.]

முதனாள்

முதனாள் mudaṉāḷ, பெ.(n.)

   1. முதல் விண்மீனான இரலை (அசுவினி);; the first naksatra.

   2. முதல் நாள்; the first day.

   3. முந்தின நாள் (சங்.அக.);; previous day.

     [முதல் + நாள்.]

முதனிணைப்பு

முதனிணைப்பு mudaṉiṇaippu, பெ.(n.)

நூல் அல்லது எடுத்துக் காட்டுப் பாடல்களை நினைப்பூட்டும் அப்பாடல்களின் முதற் மாடு பார்க்க; see mudar-madu,

   {}. 4. முற்றியது; that which is ripe.

     ‘முதாரிக் காய்’ (சிலப்.16:24, அரும்);.

     [முது + ஆரி. ஆர் → ஆரி.]

முதனிறம்

 முதனிறம் mudaṉiṟam, பெ.(n.)

   மாங்கிசச் சிலை (யாழ்.அக.);; a kind of block stone.

முதனிலை

முதனிலை mudaṉilai, பெ.(n.)

   1. முதலில் நிற்பது; that which stands first.

     “முதனிலை மூன்றும்” (தொல்.சொல்.230);.

   2. பகுதி (நன்.144, சங்கர);; root form.

   3. கரணியம்; cause.

     “ஆயெட்டென்ப தொழின் முதனிலையே” (தொல்.சொல்.112);.

   4. தலைவாயில்; outer door.

     [முதல் + நிலை.]

முதனிலைத்திரிந்ததொழிற்பெயர்

 முதனிலைத்திரிந்ததொழிற்பெயர் mudaṉilaiddirindadoḻiṟpeyar, பெ.(n.)

   வினையடி முதலெழுத்துத் திரிந்து வருவதனால் தொழிற் பெயராய் நிற்பது; verbal noun formed by modifying the initial letter of a verbal root as {}, from {}.

     [முதனிலை + திரிந்த + தொழிற்பெயர். வினையடிச் சொற்கள் சற்றுத் திரிந்து பெயராகவும் ஆளப்படுவதுண்டு. எ.டு. உண் → ஊண், படு → பாடு.]

முதனிலைத்தீவகம்

முதனிலைத்தீவகம் mudaṉilaiddīvagam, பெ.(n.)

   ஒரு சொல் செய்யுளின் முதலில் நின்று குணமுதலிய பொருள் குறித்து ஏனையிடத்துஞ் சென்று பொருள் விளக்கும் அணி வகை; a figure of speech in which a word used in the begining of a sentence is understood in other parts also.

     “குணந் தொழில் சாதி பொருள்குறித் தொருசொல் ஒருவயி னின்றும் பலவயிற் பொருடரிற் றீவகஞ் செய்யுண் மூவிடத்தியலும்” (தண்டி.38);.

     [முதனிலை + தீவகம்.]

ஓரிடத்து வைக்கப்பட்ட விளக்கானது பலவிடங்களில் பரவி பொருள்களை விளக்குதல் போல் தீவகவணி செய்யுளின் ஒரிடத்து நின்று, குணத்தானும், தொழிலானும், இனத்தானும் (சாதியானும்);, பொருளானும் பலவிடத்து நின்ற சொற்களோடு பொருந்திப் பொருள் விளக்கும் தன்மையது. அது முதனிலைத் தீவகம், இடை நிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் என மூன்று வகைப்படும்.

முதனிலைத் தீவகம், முதனிலைக் குணத் தீவகம், முதனிலை தொழிற்றீவகம், முதனிலை இனத்தீவகம் (சாதித் தீவகம்);, முதனிலை பொருட்டீவகம் என நால்வகையாக வரும்.

முதனிலைக் குணத் தீவகம் : எ-டு.

     “சேந்தன் வேந்தன் றிருநெடுங்கண் டெவ்வேந்தர்

ஏந்து தடந்தோ ளிழிகுருதி – பாய்ந்து

திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த வம்பும்

மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து” (தண்டி.38);

   அரசனது அழகிய நீண்ட கண்கள் சினத்தால் சிவந்தன;   அவை சிவந்த அளவில் பகைவேந்தர்களினுடைய உயர்ந்த பெரிய தோள்கள் அம்புகள்பட்டு அரத்தங் குழம்பிச் சிவந்தன;   அத்தோள்களினின்று பெருகிவருகின்ற அரத்தம் பாய்தலால் திசைகள் சிவந்தன;   அந்த அரத்தத்திற் படிதலால் வலிமையினையுடைய வில்லினாற் சொரியப்பட்ட அம்புகள் சிவந்தன;அந்த அரத்தம் மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.

இச்செய்யுளின் முதலில் உள்ள சேந்தன என்னும் பண்புச்சொல் கண், தோள், திசை முதலியவற்றோடுஞ் சென்று சேர்ந்து பொருள் விளைத்தலால் முதனிலைக் குணத் தீவகமாம். சேந்தன என்பது வினைச் சொல்லாயினும்

அதனாற் பெறும் பொருள் செந்நிறமாகிய பண்பாகலின் அது பண்பெனப்பட்டது. சேந்தன என்பது செம்மை என்னும் பண்புப் பெயரினடியாகப் பிறந்த வினையாதலையும் நோக்குக.

முதனிலைத்தொழிற்பெயர்

முதனிலைத்தொழிற்பெயர் mudaṉilaiddoḻiṟpeyar, பெ.(n.)

   தன்னியல்பின் மாறாத வினையடியே தொழிற் பெயராக நிற்பது (குறள், 117, உரை);; verbal noun formed from a verbal root without any suffix and without any variation of the root form, as {}.

     [முதனிலை + தொழிற்பெயர். வினையடிச் சொற்கள் மட்டுமே பெயராக அமைவது. எ.டு.அடி, பிடி, உதை.]

முதனிலைவிளக்கு

 முதனிலைவிளக்கு mudaṉilaiviḷakku, பெ.(n.)

முதனிலைத்தீவகம் பார்க்க (வின்.);; see {}.

     [முதனிலை + விளக்கு.]

முதனை

 முதனை mudaṉai, பெ. (n.)

   விருத்தாசலம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vriddhachalam Taluk.

     [முதன்-முதனை]

முதன்மடை

முதன்மடை mudaṉmaḍai, பெ.(n.)

   1. தலை வாய்க்கால்; head of a water channel.

   2. முதன்மடை பாயும் நிலம்; field near the head of an irrigation source.

     [முதல் + மடை.]

முதன்மரியாதை

 முதன்மரியாதை mudaṉmariyādai, பெ. (n.)

   முதலிற் செய்யும் சிறப்பு, மதிப்புரவு; first honours.

     [முதல் + Skt. மரியாதை.]

முதன்மறிநிலை

 முதன்மறிநிலை mudaṉmaṟinilai, பெ.(n.)

   சினைப் பெயர் முதற்கும் முதற்பெயர் சினைக்கும் வரும் அணி வகை (யாழ்.அக.);; a figure of speech which consists in applying {} instead of {} – peyar and vice versa.

     [முதல் + மறிநிலை.]

முதன்முதலாக

 முதன்முதலாக mudaṉmudalāka, வி.அ.(adv.)

   இதற்கு முன் இல்லாமல் முதல் முறையாக; at first, for the first time.

இந்தக் கலை முதன் முதல் எங்கு உருவானது? கிராமத்தில் இருந்து வந்த எனது தாத்தா இப்போது தான் முதன்முதலாக வானூர்தியைப் பார்க்கிறார்.

     [முதல் + முதலாக.]

முதன்முதல்

 முதன்முதல் mudaṉmudal, பெ.(n.)

   தொடக்க காலம்; the very first time.

     [முதல் + முதல்.]

முதன்முன்னம்

முதன்முன்னம் mudaṉmuṉṉam, பெ.(n.)

   தொடக்கம்; the very beginning.

     “அடியே னடைந்தேன் முதன் முன்னமே” (திவ். திருவாய்.2. 3:6);.

     [முதல் + முன்னம்.]

முதன்மை

முதன்மை mudaṉmai, பெ.(n.)

   1. முன்னுரிமை பெற்று முதலிடம் வகிப்பது அல்லது குறிப்பிடத்தக்கதாக அமைவது; primary importance.

நம் நாட்டில் உழவுத் தொழிலே முதன்மைத் தொழிலாக உள்ளது. இன்றையக் கல்வியில் அறிவியல் முதன்மையாக உள்ளது.

   2. பதவியில், அலுவலகத்தில் தலைமை; officials chief, one who is in a high designation in a office.

முதன்மைப் பொறியாளர் வந்தார். அவர்தான் முதன்மை வழக்குறைஞர். இதுதான் வங்கியின் முதன்மை அலுவலகம்.

   3. தலைமை; priority; superiority; supremacy.

     “கணித மாக்களை முடிவுற நோக்கியோர் கூறி முதன்மை” (கம்பரா. மந்தரை.1);,

     [முதல் → முதன் → முதன்மை.]

முதன்மை ஏவலர்

 முதன்மை ஏவலர் mudaṉmaiēvalar, பெ.(n.)

   தலைமை ஏவலாளர் (தபேதார்);; head peon,

     [முதன்மை+ஏவலர்]

முதன்மைவினை

 முதன்மைவினை mudaṉmaiviṉai, பெ.(n.)

   தொடர் நிலையிலும் பொருள் நிலையிலும் தனித்து இயங்கக் கூடியதும் வினை யடையையும் துணை வினையையும் ஏற்கக் கூடியதுமான வினைச்சொல்; main verb.

     [முதன்மை + வினை.]

முதம்

முதம் mudam, பெ.(n.)

   உவகை; pleasure, delight.

     “புந்தியின் முதமெய்தி” (கந்தபு. மீட்சிப்.11);.

முதற்கடன்

முதற்கடன் mudaṟkaḍaṉ, பெ.(n.)

   1. தலைமையான கடமை; prime duty.

   2. உழவுத் தொழிற்காக முன் கொடுக்கும் பணம்; advance of money to ryots, agricultural loan.

     [முதல் + கடன்.]

முதற்கடவுள்

 முதற்கடவுள் mudaṟkaḍavuḷ, பெ.(n.)

   முதல் தெய்வம்; the Supreme Being.

     [முதல் + கடவுள்.]

முதற்கண்

 முதற்கண் mudaṟkaṇ,    கு.வி.எ. (adv.) முதலில்; at first, at the outset, first of all.

அவையில் இருப்போருக்கு முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறைகளை எவ்வாறு நீக்குவது என்பது பற்றி முதற்கண் ஆராய்வோம்.

     [முதல் + கண்.]

முதற்கரு

முதற்கரு1 mudaṟkaru, பெ. (n.)

   நஞ்சுக் கொடி;   அதாவது பிண்டத்தில் சேர்ந்து நின்ற (சவ்வு); கொடி; placental cord.

     [முதல் + கரு.]

 முதற்கரு2 mudaṟkaru, பெ. (n.)

   மூளை (அரு.அக.);; brain-matter.

     [முதல் + கரு.]

முதற்கருவி

முதற்கருவி mudaṟkaruvi, பெ.(n.)

   1. முதற்காரணம் பார்க்க; see {}.

   2. ஆடல் பாடல்களின் தொடக்கத்தில் இசைக்கும் மத்தளம் (சிலப். 3:27, உரை);; a kind of drum used to introduce music and dancing.

     [முதல் + கருவி.]

முதற்கற்பம்

முதற்கற்பம் mudaṟkaṟpam, பெ.(n.)

   1. வங்கச் செந்தூரம்; calcined red powder of white lead.

   2. அயக்காந்தச் செந்தூரம்; calcined red powder of iron and lead stone.

முதற்காரணகாரியம்

 முதற்காரணகாரியம் mudaṟkāraṇakāriyam, பெ. (n.)

   செயற்படும் காரணப் பொருள் (வின்.);; primary or material cause.

     [முதல் + காரணகாரியம்.]

முதற்காரணம்

முதற்காரணம் mudaṟkāraṇam, பெ.(n.)

   காரிய நிகழ்ச்சிக்கு இன்றியமையாத காரணம் (நன்.296, மயிலை);; primary or material cause.

     [முதல் + காரணம்.]

முதற்காரன்

 முதற்காரன் mudaṟkāraṉ, பெ.(n.)

   முதலாளி (வின்.);; capitalist.

     [முதல் + காரன்.]

முதற்காலம்

முதற்காலம் mudaṟkālam, பெ.(n.)

   1. இசையின் விளம்ப காலம்; slow measure in beating time, as the first or starting measure of a song.

   2. கோயிலிற் காலையிற் செய்யும் முதற் பூசை; first pooja in a temple in the morning.

     [முதல் + காலம்.]

முதற்குட்டம்

 முதற்குட்டம் mudaṟkuṭṭam, பெ.(n.)

   உடம்பில் சொறியுண்டாகி மயிர் சிலிர்த்து திமிருண்டாகி நிறம் மாறும் ஒருவகைக் குட்டம்; a kind of leprosy in its first stage causing itches all over the body with benumbing (சா.அக.);.

     [முதல் + குட்டம்.]

முதற்குறிப்புமொழி

 முதற்குறிப்புமொழி mudaṟkuṟippumoḻi, பெ.(n.)

   முதல் நூல் முதற் செய்யுளைக் குறிப்பது; mention, first book and first poem.

     [முதல் + குறிப்பு + மொழி.]

முதற்குறை

முதற்குறை mudaṟkuṟai, பெ.(n.)

   1. சொன் முதலில் எழுத்துக் குறைந்து வரும் செய்யுள் உறழ்ச்சி (விகார.); வகை (நன்.156. உரை);; poetic licence which consists in the shortening of a word by one or more

 letters at the beginning as marai for {}.

   2. காரிய தொடக்கத்திற்றானே யுள்ள குறை; Initial defect or mistake.

முதற்குறை முற்றுங்குறை.

   3 முதலாவதாயுள்ள தேவை; primary need.

     [முதல் + குறை.]

முதற்கைகொடு – த்தல்

முதற்கைகொடு – த்தல் mudaṟgaigoḍuddal,    4 செ.கு.வி.(v.i.)

   கையால் தழுவி அன்புகாட்டுதல் (புறநா.24, உரை); (திருமுரு. 216, உரை);; to show one’s great love by taking in one’s arms.

     [முதல் + கைகொடு-த்தல்.]

முதற்கொடி

 முதற்கொடி mudaṟkoḍi, பெ.(n.)

   இளந்தளிர் (வின்.);; the first sprout of a creeper.

     [முதல் + கொடி.]

முதற்கொண்டு

 முதற்கொண்டு mudaṟkoṇṭu, இடை. (part.)

   குறிப்பிடுவது தொடங்கி வரிசையாக அல்லது தொடர்ச்சியாக; from something on words to.

இந்தக் கடையில் ‘கடுகு’ முதற்கொண்டு அனைத்தையும் வாங்க முடியும். புதிய பாடத்திட்டம் இவ்வாண்டு முதற்கொண்டு நடைமுறைக்கு வருகிறது.

     [முதல் + கொண்டு.]

முதற்சங்கம்

 முதற்சங்கம் mudaṟcaṅgam, பெ.(n.)

   முக்கழகங்களில் முதலாவது கழகம்; the first of the three {}.

     [முதல் + சங்கம்.]

முதற்சீர்

முதற்சீர் mudaṟcīr, பெ.(n.)

   ஈரசைச்சீர் (வீரசோ.யாப்.2);; metrical foot of two syllables.

     [முதல் + சீர்.]

முதற்தூசு

 முதற்தூசு mudaṟdūcu, பெ.(n.)

   முதற்பூப்பு; the first menses.

     [முதல் + தூசு.]

முதற்பட்சம்

 முதற்பட்சம் mudaṟpaṭcam, பெ.(n.)

   முதலில் வைத்து எண்ணத் தக்கது (உ.வ.);; first thing to be considered.

முதற்பா

 முதற்பா mudaṟpā, பெ.(n.)

முற்பா (பிங்.);; see {}.

முதற்பாதம்

முதற்பாதம் mudaṟpādam, பெ.(n.)

   1. கோள்கள் (கிரகங்கள்);, விண்மீனின் (நட்சத்திரங்கள்); நான்கு பாதங்களுள் முதற்காலில் செல்லுங் காலம்; time taken by a heavenly body to pass the first quarter of a naksatra.

   2. வலது முன்னங் கால்; foreleg of cattle.

   3. முதல்தர போக்கிலி (உ.வ.);; rogue of the first order.

     [முதல் + பாதம்.]

முதற்பாவாடை

முதற்பாவாடை mudaṟpāvāṭai, பெ.(n.)

   வேலைக்காரர் தலைவன் (I.M.P. Cg.146);; chief servant.

     [முதல் + பாவாடை.]

முதற்பிண்டம்

 முதற்பிண்டம் mudaṟpiṇṭam, பெ.(n.)

   தலைப்பிண்டம்; the first foetus.

     [முதல் + பிண்டம்.]

முதற்பெயர்

முதற்பெயர் mudaṟpeyar, பெ.(n.)

   முழுப் பொருளைக் குறிக்கும் பெயர் (நன்.281);; name which denotes the whole object.

     [முதல் + பெயர்.]

முதற்பேர்

 முதற்பேர் mudaṟpēr, பெ.(n.)

   தலைமை வேலைக்காரன் (நாஞ்.);; head peon.

ம. முதற்பேர்

     [முதல் + பேர்.]

முதற்பேறு

முதற்பேறு mudaṟpēṟu, பெ.(n.)

   1. தலைப் பிள்ளை; first-born child.

   2. முதற்பலன்; first fruits.

     [முதல் + பேறு.]

முதற்பொருள்

முதற்பொருள் mudaṟporuḷ, பெ.(n.)

   1. கடவுள்; god.

   2. அகப்பொருட்குரிய நிலம் பொழுதுகளின் இயல்பு (தொல்.பொருள்.4);; nature of land and seasons.

   3. முதலீடு (சங்.அக.);; capital invested in a business.

   4. முதற்பெயர் (தொல்.சொல்.59, தெய்வச்.); பார்க்க; see {}.

     [முதல் + பொருள்.]

முதற்போலி

முதற்போலி mudaṟpōli, பெ. (n.)

   மூவகைப் போலிகளுள் பொருள் வேறுபாடின்றி ஒத்து நடப்பது (இலக்.);; one of the three kinds of {} (gramm.);.

சொல்லுக்கு முதலிலும் சகர ஞகர யகரங்களுக்கு முன்னும் அகரமும் ஐகாரமும் ஒத்து நடப்பது (நன்னூல்.123, உரை);.

   பசல் – பைசல்;மஞ்சு மைஞ்சு, மயல் – மையல்.

முதற்றரம்

முதற்றரம் mudaṟṟaram, பெ.(n.)

   1. முதற்றடவை; first time.

   2. முதன்மை யானது; first class or grade; that which is first rate.

     [முதல் + தரம்.]

முதற்றிரமம்

முதற்றிரமம் mudaṟṟiramam, பெ.(n.)

   சோழர் காலத்தில் வாங்கிய வரி வகை (சோழ.ii: 334);; a tax.

முதற்றிருவந்தாதி

 முதற்றிருவந்தாதி mudaṟṟiruvandādi, பெ. (n.)

   நாலாயிரத் தெய்வப் பனுவில் உள்ளதும் பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்டதுமான அந்தாதி நூல்; a poem in {} by {}.

     [முதல் + திருவந்தாதி.]

முதலக்கரம்

 முதலக்கரம் mudalakkaram, பெ.(n.)

முதலெழுத்து பார்க்க; see {}.

     [முதல் + அக்கரம். Skt. a-ksara → த. அக்கரம் = எழுத்து.]

முதலடி

முதலடி mudalaḍi, பெ.(n.)

   1. தொடக்கம் (இ.வ.);; beginning.

   2. ஆண்டின் முதல் விளைச்சல் (மகசூல்); (தஞ்சை.);; first corp. of the year.

     [முதல் + அடி.]

முதலடிப்பருவம்

 முதலடிப்பருவம் mudalaḍipparuvam, பெ.(n.)

   உழுவதற்கேற்ற முதற் பருவம் (தஞ்சை.);; first ploughing season.

     [முதலடி + பருவம்.]

முதலனுமானம்

 முதலனுமானம் mudalaṉumāṉam, பெ. (n.)

   முதற் காரணத்தைக் கொண்டு அனு மானிக்கை (வின்.);; direct inference of an effect from a root-cause, as that the rain-clouds will rain.

     [முதல் + அனுமானம்.]

முதலமைச்சர்

முதலமைச்சர் mudalamaiccar, பெ.(n.)

   இந்தியாவில் மாநிலத்தை அல்லது நடுவண் அரசின் நேரடிப் பார்வைக் கீழ்வரும் பகுதியை ஆளும் அமைச்சரவையில், முதன்மைப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர்; in India chief minister of a state, etc.

     [முதல் + அமைச்சர்.]

     “அறநிலை திரியா அன்பின் அவையத்துத்

திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து

மெலிகோ செய்தே னாகுக” (புறநா.71);

     “நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்குகக்

கொடிதோர்த்த மன்னவன்” (கலித்..8);

என்னும் பகுதிகள் முதலமைச்சன் அரசியலில் எவ்வளவு தனிப் பொறுப்பும் அதிகாரமும் வாய்ந்தவன் என்பதை உணர்த்தும். உயர்குடிப் பிறப்பும் ஒழுக்கமும் மதிநுட்பமும் இலக்கண இலக்கிய திறனும், நெஞ்சுரனும், அரசியல் வினைத் திட்பமும் அரசனது குறிப்பறிந்து ஒழுகும் ஆற்றலும், அரசன் சிறப்பாக நுகரும் பொருளை விரும்பா இயல்பும், அரசனிடத்துங் குடிகளிடத்தும் அன்பும் எவ்வகையினும் அறைபோகா உள்ளமும், அறவுணர்ச்சியும் சொல்வன்மையும், தோற்றப் பொலிவும், மகப்பேற்றுடன் சுற்றமும் உடையவனே, முதலமைச்சனாக அமர்த்தப் பெறுவான் (பழந்தமிழாட்சி பக்.33);.

முதலறவு

முதலறவு mudalaṟavu, பெ. (n.)

முதலற்றுப்போ-தல் பார்க்க; see {}.

     “முற்பாற்கிழமை முதலறவின்றி” (பெருங். மகத.தருச.18, 25);.

முதலற்றுப்போ-தல்

முதலற்றுப்போ-தல் mudalaṟṟuppōdal,    8 செ.கு.வி.(v.i.)

   அடியோடழிதல் (வின்.);; to be totally extinguished, as family; to be eradicated.

     [முதல் + அற்றுப்போ-தல். அற்றுப்போதல் = அழிந்து போதல்.]

முதலவன்

முதலவன் mudalavaṉ, பெ.(n.)

   குல முதல்வன்; patriarch.

     “முதலவன் முதலிய முந்தையோர்” (கம்பரா.பள்ளிபடை 50);.

     [முதல்வன் → முதலவன்.]

முதலான

 முதலான mudalāṉa, கு.வி.எ. (adj.)

   தொடக்கமாகவுடைய; beginning with.

     [முதல் → முதலான.]

முதலாயிரம்

 முதலாயிரம் mudalāyiram, பெ.(n.)

   நாலாயிரப் பனுவலில் (நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்); முதலாவது பகுதி; the first of the four sections of {}.

     [முதல் + ஆயிரம்.]

முதலாய்

 முதலாய் mudalāy, கு.வி.எ.(adv.)

   கூட; even.

தண்ணீர் முதலாய் இங்கே கிடையாது (வின்.);.

     [முதல் → முதலாய்.]

முதலாளி

முதலாளி mudalāḷi, பெ.(n.)

   1. ஆட்களை வேலைக்கு அமர்த்திச் சொந்தத் தொழிலோ வணிகமோ செய்பவர்; one who invests in and runs a business, industry, etc;

 proprietor;

 owner.

முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே நல்லுறவு நிலவுகின்றது. தேயிலைத் தோட்ட முதலாளி.

   2. மூலவைப்புள்ளவன் (மூலதனம்);; capitalist.

   3. தொழிற்சாலை அல்லது வணிகநிலைய உரிமையாளர்,சொந்தக்காரர்; proprietor.

   4. பெருநிலக்கிழார்; land lord.

   5. தலைவன்; chief, president, responsible person.

     [முதல் + ஆளி. ஆள் → ஆளி.]

முதலாளித்துவம்

 முதலாளித்துவம் mudalāḷidduvam, பெ.(n.)

   நாட்டின் பொருளியலை அளவிடும் உருவாக்கப் பொருள்கள் பெருமளவில் தனியார் உடைமைகளாக இருக்கும் அமைப்பு; capitalism.

முதலாளித்துவம் இல்லாத நாடு உலகினில் இல்லை.

     [முதலாளி → முதலாளித்துவம்.]

முதலாழ்வார்கள்

 முதலாழ்வார்கள் mudalāḻvārkaḷ, பெ. (n.)

   மாலிய ஆழ்வார்களில் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்;{} canonised saints.

     [முதல் + ஆழ்வார்கள்.]

முதலி

முதலி1 mudali, பெ. (n.)

   1. தலைவன்; head, chief.

எங்கண் முன்பெருமுதலி யல்லை யோவென (பெரியபு.கண்ணப்.177);.

   2. பெரியோன்; saint, religious teacher.

     “மூவர் முதலிகளுந் தேவாரஞ்செய்த

திருப்பாட்டும்” (ஏகாம். உலா, 78); (ஈடு, 6. 1 : 1);.

   3. முதலியார், 3 பார்க்க (E.T.l, 84);; see {}, 3.

க.மொதலிக

     [முதல் → முதலி.]

 முதலி2 mudali, பெ.(n.)

   1. தாழை (பரி.அக.);; fragrant screw pine.

   2. சீமையிலுப்பை (இ.வ.);; sapodilla.

     [முசலி → முதலி.]

 முதலி3 mudali, பெ.(n.)

   அரசின் முதன்மை அலுவலர் (MER. 1923-24, p, 103);; chief officer of the state.

     [முதல் → முதலி.]

முதலிடைப்போலி

முதலிடைப்போலி mudaliḍaippōli, பெ. (n.)

   செந்தமிழ் வழக்கில் வழங்கிவரும் ஒரு சொல் அதே பொருளில் உருவில் சில மாற்றங்களோடு வழங்குவது; letter or syllable substituted for another different in sound as in

ஐயர் – அய்யர்.

     [முதல் + இடை + போலி.]

வகை – 6

   1. முதல்போலி-ஐயர்-அய்யர்

   2. இடைப்போலி-உடைமை-உடமை

   3. கடைப்போலி-பந்தல்-பந்தர்

   4. முதலிடைப்போலி-ஐந்தாறு -அஞ்ஞூறு

   5. இடைகடைப்போலி-புலையச்சி-புலைச்சி

   6. முற்றுப்(முழுவதும்); போலி-ஐந்து-அஞ்சு (இலக்.கலை.கள.);

முதலிமை

முதலிமை  mudalimai, பெ.(n.)

   தலைமை (புதுக்.கல்.361);; head-ship.

     [முதலி → முதலிமை. முதலி = தலைவன்.]

முதலிய

 முதலிய mudaliya, பெ.அ.(adj.)

   ஒரு தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவைத் தொடக்கமாக உடைய; beginning with.

புகையிலை, பொறிகள் (இயந்திரங்கள்);, மருந்துப் பொருட்கள் முதலியவற்றின் மீது புதிய வரி சுமத்தப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும்.

     [முதல் → முதலிய.]

முதலியாண்டான்

முதலியாண்டான் mudaliyāṇṭāṉ, பெ.(n.)

   1. இராமானுசரின் முதன் மாணாக்கருள் ஒருவரான திருமாலடியார் (அஷ்டப். திருமரங்க .ஊச.21);; a {} the chief disciple of {}.

   2. வழிபடுவோர் தலையில் வைக்கப்படுவதும் இராமனுசரின் திருவடி நிலையுள்ளதுமான மகுடம்; a crown bearing the image of {} sandals, used in temples of {} for blessing worshippers by placing it on their heads.

     [முதலி + ஆண்டான்.]

முதலியார்

முதலியார் mudaliyār, பெ.(n.)

   1. தலைவன்; head, chief.

முதலியார் என்னவும் பண்ணி (ஈடு, 4. 1:7); (i.M.P Tj. 1634);.

   2. இலங்கையரசால் வழங்கப்படும் பட்டப் பெயர்; a honorific tittle bestowed by the Ceylon Government.

   . வேளாளருள் ஒரு பிரிவினர்க்கும், செங்குந்தருக்கும், தஞ்சை மாவட்டத்திலுள்ள சமணருள் ஒரு பிரிவினருக்கும் உரிய குலப் பட்டப் பெயர்; a caste title of a sect of {}, of {} and of a sect of Jains in the Tanjore District.

     [முதலி → முதலியார்.]

முதலியோர்

 முதலியோர் mudaliyōr, கு.வி.எ.(adv.)

   முதலிய பிறர்; and such other.

கட்டாய இந்தியை எதிர்த்துத் தமிழைக் காத்தவர், மறைமலை யடிகள், சோமசுந்தர பாரதியார் முதலியோ ராவர்.

     [முதல் → முதலியோர்.]

முதலிரவு

 முதலிரவு mudaliravu, பெ.(n.)

   மணமகனும் மணமகளும் திருமணம் முடிந்தபின் முதன்முதலில் கலந்து கொள்ளும் இரவு; the night fixed for consummation of marriage.

     [முதல் + இரவு.]

முதலிற்கூறும்சினையறிகிளவி

 முதலிற்கூறும்சினையறிகிளவி mudaliṟāṟumciṉaiyaṟigiḷavi, பெ.(n.)

   தொல் காப்பியரின் கோட்பாட்டின்படி முதலுக் குரிய பெயர் சினையை உணர்த்தும் வகையில் ஆளப்படும் சொல்; a kind of metonymy, where the whole is put for its part.

     [முதலில் + கூறும் + சினையறி + கிளவி.]

நன்னூலார் இதனை முதலாகுபெயர் என்பர். ‘இப்பூ தாமரை’ என்ற வழி தாமரை என்ற முதலின் பெயர் ‘பூ’ என்ற சினையை உணர்த்தினமையால் இது முதலிற் கூறும் சினையறி கிளவி (கிளவி – சொல்); (இலக்.கலை.கள.);.

முதலில்

 முதலில்  mudalil, வி.அ.(adv)

   ஆரம்பிப்பதற்கு முன், தொடக்கமாக; at first, first of all; to begin with.

நான் முதலில் உங்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் முதலில் எங்குச் செல்ல வேண்டும்.

     [முதல் → முதலில்.]

முதலில்வருஞ்சனி

முதலில்வருஞ்சனி mudalilvaruñjaṉi, பெ.(n.)

   பத்தாவது விண்மீனான கொடுநுகம் (மகம்);; the 10th naksatra.

முதலிவயல்

 முதலிவயல் mudalivayal, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Tiruvadanai Taluk.

     [முதலி+வயல்]

முதலீடு

முதலீடு mudalīṭu, பெ.(n.)

   1 முதலி லிடுகை; placing first.

   2. முதலிலிட்ட பொருள்; that which iS placed first.

   3. முதலில் செலுத்துந் தொகை (இ.வ.);; the first instalment.

   4. ஆண்டின் முதலறுவடை(இ.வ.);; the first crop of the year.

   5. வணிக முதல் (சிலப்.9:74, அரும்);; capital invested in trade.

   6. அசல் கடன் தொகைக்குப் பணஞ் செலுத்துகை; repayment of principal amount of a loan.

கொடுப்பதை முதலீடாக வைத்துக் கொள்ளலாம்.

     [முதல் + ஈடு.]

முதலீற்று

முதலீற்று mudalīṟṟu, பெ.(n.)

   1. முதன் முதலாக ஈனுகை; first calving.

   2. தலையீற்றுக் கன்று; first born calf, firstling.

     [முதல் + ஈற்று.]

முதலு

முதலு1 mudaludal,    5 செ.கு.வி.(v.i.)

   1. முதலாதல்; to commence, begin, come first.

     “முதலா வேன தம்பெயர் முதலும்” (தொல்.எழுத்து.66);.

   2. தொடக்க முடையதாதல்; to have a beginning.

     “மூவா முதலா வுலகம்” (சீவக.1);.

     [முதல் → முதலு-தல். முதலில் தோன்றுவது அல்லது முதலாக வருதல்.]

 முதலு2 mudaludal,    5 செ.குன்றாவி. (v.t.)

   தலைமை உடைத்தாதல்; to have as the origin; to begin with.

     “அகரமுதல வெழுத்தெல்லாம்” (குறள், 1);.

     [முதல் → முதலு-தல்.]

முதலுதவி

 முதலுதவி mudaludavi, பெ.(n.)

   காய முற்றவருக்கு அல்லது திடீரென நோயுற்றவருக்கு மருத்துவரிடம் காட்டும் வரை பயனளிக்கக் கூடியதாக அளிக்கப்படும் உடனடி மருத்துவம்; first aid.

தற்கால மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முதலுதவி செய்வதற்குத் தாமாகவே முன் வர வேண்டும் என முதலமைச்சர் கூறினார்.

     [முதல் + உதவி.]

முதலூழி

முதலூழி mudalūḻi, பெ.(n.)

   ஊழிமுதல்; first yuga.

     “முதலூழி யின்பம்வர” (தஞ்சைவா. 286);.

     [முதல் + ஊழி. ஊழி = கடற்கோளால் உலகம் முடியுங் காலம்.]

முதலெழுஞ்சனி

 முதலெழுஞ்சனி mudaleḻuñjaṉi, பெ.(n.)

முதலில்வருஞ்சனி பார்க்க; see {}.

     [முதல் + எழும் + சனி.]

முதலெழுத்து

 முதலெழுத்து mudaleḻuddu, பெ.(n.)

   தமிழ் மொழியின் பயன்பாட்டிற்கு முதலாக உள்ள உயிரெழுத்துப் பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள்; the primary letters comprising the twelve vowels and the eighteen consonants.

     [முதல் + எழுத்து.]

முதலை

முதலை1 mudalai, பெ.(n.)

   நீரில் வாழும் நீணாள் உயிரி; crocodile.

     “நெடும் புனலுள் வெல்லு முதலை” (குறள், 495);. “இருங்கழி முதலைமே எந்தோ லன்ன” (அகநா.3:1);.

     “கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை” (குறுந்.324);.

     “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா”,

     “முதலைவாய் பிள்ளை மீண்டுவருமா” (பழ.);.

ம. முதல.

     [முதல் → முதலை = திரண்ட மர அடி போன்ற நீருயிரி.]

முதலை வகை :

   1. முதலை (gavial); = தென்னாசியாவிற் பெரும்பான்மையாகக் காணப்படும் முதலை.

   2. இடங்கர் (Crocodile); = வட ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாகக் காணப்படும் முதலை.

   3. கராம் (allegator); = தென் அமெரிக்காவில் பெரும்பான்மையாகக் காணப்படும் முதலை (சொ.ஆ.க.38);.

     [p]

 முதலை2 mudalai, பெ.(n.)

   1. இறகின் அடிக்குருந்து; quill of a feather.

   2. செங்கிடை; prickly sesban.

     [முதல் → முதலை.]

 முதலை3 mudalai, பெ.(n.)

   திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்திலுள்ள ஊர்; a village in Tirunelveli district in {} Taluk.

முதலைக் குளம் என்ற ஊர்ப் பெயரே முதலை என்று குறுகி வழங்குகிறது.

     [முதல் → முதலை.]

முதலைக்கண்

முதலைக்கண் mudalaikkaṇ, பெ.(n.)

   முன் தள்ளிய விழி (இ.வ.);; protuberant eye, as of a crocodile, goggle eye.

     [முதலை1 + கண்.]

முதலைக்கண்ணீர்

 முதலைக்கண்ணீர் mudalaikkaṇṇīr, பெ. (n.)

   இரக்கப்பட வேண்டிய ஒரு செய்தியால் வருத்தம் இல்லாமல், வருந்துவதாகக் காட்டி வெளிப்படுத்தும் போலிக் கண்ணீர் அல்லது செய்கை; crocodile tears.

அவனுக்குக் கெடுதி செய்துவிட்டு முதலைக் கண்ணீர் வடிக்கிறான். அவரது பேச்சு வெறும் முதலைக் கண்ணீர்தான், நம்பி விட வேண்டாம்.

     [முதலை + கண்ணீர்.]

முதலைக்கு இமைகள் கிடையாது. அதன் கண்கள் காய்ந்து போகாவண்ணம் அதன் கண்ணில் நீர் காந்து வழிந்து கொண்டிருக்கும். அதைக் கண்டு முதலை அழுவதாகக் கொள்ளக் கூடாது. அதுபோல் யாராவது போலியாகக் கண்ணீர் வடித்தால் அதை முதலையின் கண்ணீர்க்கு ஒப்பிடுவது உலக வழக்கு.

முதலைக்கோரை

 முதலைக்கோரை mudalaikārai, பெ.(n.)

   கோரை வகை (வின்.);; a tall sedge – Cyperusdubius.

     [முதலை + கோரை.]

முதலைதள்ளு-தல்

முதலைதள்ளு-தல் mudalaidaḷḷudal,    5 செ.கு.வி.(v.i.)

   கண் வெளிப் பிதுங்குதல் (இ.வ.);; to have bulging eyes.

     [முதலை + தள்ளு-தல்.]

முதலைநெய்

 முதலைநெய் mudalainey, பெ.(n.)

   முதலையி னின்று எடுக்கும் நெய், இது இழுப்பு மற்றும் காற்று பிடிப்பு (சன்னி, வாதம்); நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது; fat extracted from crocodile, used for delirium and rheumatism (சா.அக.);.

     [முதலை + நெய்.]

முதலைப்பூண்டு

முதலைப்பூண்டு mudalaippūṇṭu, பெ. (n.)

   1. நீரரளி; red shanks – Polygonum genus.

   2. ஆற்றலரி; alligators’ nose -polygonum barbatum, leaves used in infusion in colic, seeds carminative, another species is glaborum (சா.அக.);.

     [முதலை + பூண்டு.]

முதலையார்

 முதலையார் mudalaiyār, பெ.(n.)

   வன்மீன் பிடிப்பவர்; one who catches dangerous fishes.

     [முதலை → முதலையார்.]

முதலைவாதக்காய்ச்சல்

 முதலைவாதக்காய்ச்சல் mudalaivādakkāyccal, பெ. (n.)

   காற்று பிடிப்பினால் (வாதம்); உண்டாகும் காய்ச்சல்; a kind of rheumatic fever.

     [முதலை + Skt. வாதம் + காய்ச்சல்.]

முதலோன்

முதலோன் mudalōṉ, பெ.(n.)

   கடவுள்; god, as the First Cause.

     “செஞ்சடை முதலோன்” (கம்பரா.நிகும்பலை.142);.

     [முதலவன் → முதலோன்.]

முதல்

முதல்1 mudal, பெ.(n.)

   1. தொடக்கம்; begining.

     ‘முதலூழியிறுதிக் கண்’ (சிலப்.8:1, உரை);.

     “கழனி நெல்லின் கவைமுத லலங்க”(அகநா.13:19);

     “கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி” (குறுந்.69:3);.

     “சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை” (நற்.3:6);.

   2. இடம் முதலியவற்றில் முதலாயிருப்பு; first, as in rank, place, etc.

     “முதல் நீடும்மே” (தொல்.எழுத்து.458);.

   3. கரணியம்; cause.

     “நோய்முத னாடி” (குறள், 948);.

   4. மூலக் கரணியனான கடவுள்; god, as the first cause.

     “மூவா முதலாய் நின்ற முதல்வா” (திருவாச.27 : 10);. 5. முதலாவான்;

 one who is first or oldest.

     “முதலாய நல்லானருளல்லால்” (திவ்.இயற்.1 : 5);.

   6. தலைமை, வரிசை, மேன்மை, உயர்வு (சிலாக்கியம்); அல்லது ஏற்றம்; best, that which is superior.

முதன் மாணாக்கன்.

   7. அடைகொளி (விசேடியம்); (சைவப்.);; that which is qualified.

   8. செலவுக்குரிய வருவாயாக அமைத்துவைக்கும் பொன்னும் பொருளும் நிலமுமாகிய மூலவைப்பு, வைப்பு; principal, fund, capital, money yielding interest.

     “முதலிலார்க் கூதியமில்லை (குறள், 449);.

   9. வேர்; root.

     “முதலினூட்டு நீர்” (அரிச். பு.மீட்சி.17);.

   10. கிழங்கு; tuber.

   11. அடிப்பாகம்; base, foot, bottom or lowest part of anything.

     “வாடிய வள்ளி முதலரிந் தற்று” (குறள், 1304);. 12 அடிமரம்;

 stump;

 lowest part of stem.

     “வேங்கையைக் கறுவு கொண்டதன் முதற் குத்திய மதயானை” (கலித்.38);.

   13. இடம்; place.

     “சுரன்முதன் மராத்தவரி நிழல்” (சிறுபாண்.8);.

   14. முதற்பொருள், 2 பார்க்க; see {}.

     “முதலெனப்படுவது நிலம் பொழுதிரண்டின் னியல்பென மொழிப” (தொல்.பொருள்.4);.

   15. பிண்டப் பொருள்; whole, integral thing.

     “முதலுஞ் சினையும்” (தொல். சொல்.89);. 16. செலவுக்காகச் சேமிக்கும் பொருள்;

 stock, store.

     “திருப்பூ மண்டபத்துக்கு முதலாக அளக்கவும்”

     (தெ.இ.கல்.தொ.iii, 215:11);.

   17. இசைப்பாட்டு வகையுள் ஒன்று (சிலப்.3 : 41-2, உரை);; a variety of tune.

   18. முதலெழுத்து (நன்.59); பார்க்க; see {}.

   19. சொத்தின் கொள்முதல் விலை; cost price.

     “முதல் எழுத்திலே வெள்ளெழுத்தா?”,

     “முதல் எடுக்கும்போதே தப்பட்டைக்காரன் செத்தான்”,

     “முதல் இல்லார்க்கு ஊதியமில்லை”,

     “முதலை வைத்துப் பெருக்காத வணிகரைப் போல”,

     “முதற் கோணல் முற்றும் கோணல்”, “முதற்பிள்ளை மூத்திரத்திற்கு அழும்போது இரண்டாம் பிள்ளை பாலுக்கு அழுகிறதாம்”,

     “முதலில் பிறந்த பிள்ளை முத்துப் பிள்ளை பின்னே பிறந்த பிள்ளை பீப்பிள்ளை”,

     “முதல்ல எடுத்து செலவிடாதே”,

     “முதலுக்கு மோசமாக இருக்கிறபோது, இலாபத்துக்குச் சண்டை போடுகிறதா?” (பழ.);.

     [முன் → முந்து → முந்தல் → முதல் = முதன்மை, முதலி, முதலாளி (சு.வி.28);. முந்து → முது → முதல் (வே.க.முல்.2);.]

 முதல்2 mudal, இடை.(prep.)

   1. ஏழாம் வேற்றுமையுருபு (நன்.302);; termination of the locative case.

     “குணமுதற் றோன்றிய… மதியின்” (மதுரைக்.195);.

   2. ஐந்தாம் வேற்றுமை யுருபு; termination of the ablative case, meaning ‘from henceforth’.

அடிமுதல் முடிவரை (உ.வ.);.

க. முதல்

     [முதல்1 → முதல்2.]

 முதல்3 mudal, பெ.(n.)

   ஆவணம்; document.

இந்த முதல் இற்றைநாள் முதலியான காட்டுகையில்” (தெ.இ.கல். தொ.ப.90);.

     [முதல்1 → முதல்3.]

 முதல்4 mudal, கு.பெ.எ.(adj.)

   முதலான (வின்.);; beginning with.

முதலாயிரம்.

     [முதல்1 → முதல்4.]

 முதல்5 mudal, கு.விஎ.(adv.)

   முதலில்; first.

முதல்வந்தவன்.

     [முதல்1 → முதல்5.]

 முதல்6 mudal, பெ.(n.)

   உடம்பு; body.

முதலாயிரம்.

     [முழு → (முது); → முதல் = உடம்பு.]

 முதல் mudal, பெ. (n.)

   பண் ஒரு பாடலொடு பொருத்தப்படுங்கால் பெறும் பெயர்; a term to denote tune setting in a song.

     [முது-முதல்]

முதல் ஒட்டு ஆளத்தி

 முதல் ஒட்டு ஆளத்தி mudaloṭṭuāḷaddi, பெ. (n.)

   ஆளத்தி வகையினுள் ஒன்று; a musical term.

     [முதல்+ஒட்டு+ஆளத்தி]

முதல் நடை

 முதல் நடை mudalnaḍai, பெ. (n.)

   தாளக் காலத்தின் நடைகளில் ஒன்று; a time measure.

     [முதல்+நடை]

முதல்செயநீர்

 முதல்செயநீர் mudalceyanīr, பெ.(n.)

   வழலையுப்பு செயநீர்; pungent liquid prepared from quint essence salt (சா.அக.);.

முதல்செலவு

 முதல்செலவு mudalcelavu, பெ.(n.)

   வரவு செலவு (நாஞ்சில்);; income and expenditure.

     [முதல் + செலவு.]

முதல்தகவலறிக்கை

 முதல்தகவலறிக்கை mudaldagavalaṟiggai, பெ. (n.)

   காவல் நிலையத்தில் முதன்முதலில் பெறப்பட்ட குற்ற நிகழ்வைப் பற்றிய விளத்தங்கள் அடங்கிய பதிவு அல்லது குறிப்பு; information of an offence first received and recorded by the police, abbreviated to F.I.R.

இந்தக் கொலைக் குற்றத்தின் முதல் தகவல் அறிக்கையைப் பார்வையிடக் கூட வழக்கறிஞர் அனுமதிக்கப் படவில்லை.

     [முதல் + தகவல் + அறிக்கை. Arab.dakhal → த. தகவல்]

முதல்தரம்

 முதல்தரம் mudaldaram, பெ.(n.)

முதற்றரம் பார்க்க; see {}.

     [முதல் + தரம்.]

முதல்தீர்த்தம்

 முதல்தீர்த்தம் mudaldīrddam, பெ.(n.)

   திருமால் கோயிலில் முதன்முதற் பெறும் தூயநீர் உயர்மதிப்பு; honour of receiving holy water first in a congregation in a {} temple.

     [முதல் + Skt. தீர்த்தம்.]

முதல்நிலை

 முதல்நிலை mudalnilai, பெ.(n.)

   ஒரு சொல்லின் முதலில் நிற்கும் எழுத்துகள்; a letters stand first in a word.

     [முதல் + நிலை]

தமிழ்மொழி அமைப்பின்படி பன்னிரண்டு உயிரும் க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ ஆகிய ஒன்பதும் முதல் நிலையாக வருவது, நன்னூலார் ‘நு’ கரத்தையும் முதல்நிலையாக கொள்வார்.

முதல்நிலைதிரிந்ததொழிற்பெயர்

 முதல்நிலைதிரிந்ததொழிற்பெயர் mudalnilaidirindadoḻiṟpeyar, பெ.(n.)

முதனிலைதிரிந்ததொழிற்பெயர் பார்க்க; see {}.

     [முதல்நிலை + திரிந்த + தொழிற்பெயர்.]

முதல்நிலைத்தொழிற்பெயர்

 முதல்நிலைத்தொழிற்பெயர் mudalnilaiddoḻiṟpeyar, பெ.(n.)

முதனிலைத் தொழிற்பெயர் பார்க்க; see {}.

     [முதல்நிலை + தொழிற்பெயர்.]

முதல்நீட்சி

 முதல்நீட்சி mudalnīṭci, பெ.(n.)

   ஒரு சொல்லில் உள்ள முதல் உயிர் நீண்டு அந்தச் சொல்லின் இலக்கண நிலை மாற்றம் பெறுவது; grammatical change of lengethening a short vowel into a long vowel when it stands in the begining of a word.

     [முதல் + நீட்சி.]

   பொதுவாகச் சொன்னால் ஒரு சொல்லின் முதலுயிர் நீண்டு ஒலிப்பது;முதல் உயிர் குறிலாக இருந்து நெடிலாக மாறுவது.

விடு → வீடு

கெடு → கேடு (இலக்.கலை.கள.);

முதல்நூல்

முதல்நூல் mudalnūl, பெ.(n.)

   1. தொடக்கப் பாடநூல்; primer.

கூட்டுறவு முதல் நூல்.

   2. முதனூல் பார்க்க; see {}.

     [முதல் + நூல்.]

சிறந்த அறிவுடையவரால் இயற்றப்பட்டு அதன் வழியில் பல நூல்கள் எழுதப்படுவதற்கான அடிப்படை நூல்.

முதல்பிடி

முதல்பிடி mudalpiḍi, பெ.(n.)

   1. சீட்டு நிறுவனம் நடத்துவோன் (நெல்லை.);; conductor of a chit fund.

   2. காசாளர்; treasurer.

     [முதல் + பிடி.]

முதல்மந்திரி

 முதல்மந்திரி mudalmandiri, பெ.(n.)

முதலமைச்சர் பார்க்க; see mudal – amaiccar.

     [முதல் + Skt.மந்திரி.]

முதல்மரியாதை

 முதல்மரியாதை mudalmariyādai, பெ. (n.)

   கோயில் முதலியவற்றில் முதலாவதாகப் பெறும் மதிப்புரவு (மரியாதை);; first preference in doing the honours, as at a temple.

     [முதல் + Skt. மரியாதை.]

முதல்முதலாக

 முதல்முதலாக mudalmudalāka, பெ.(n.)

முதன்முதலாக பார்க்க; see {}.

முதல்வஞ்சி

முதல்வஞ்சி mudalvañji, பெ.(n.)

முதுமொழி வஞ்சி (புறநா.37, முதற்குறிப்பு); பார்க்க; see {}.

     [முதல் + வஞ்சி.]

முதல்வடி

முதல்வடி mudalvaḍi, பெ.(n.)

   1. முதலில் வடிக்கும் சாறு (இ.வ.);; juice obtained in the first distillation.

   2. முதலில் வடித்த சாராயம் (வின்.);; alcohol obtained in the first distillation.

     [முதல் + வடி.]

முதல்வன்

முதல்வன் mudalvaṉ, பெ.(n.)

   1. தலைவன்; one who is first, chief, head.

     “மூவர்க்கு முதல்வ ரானார்” (தேவா. 453:2);.

   2. எல்லாப் பொருட்கும் மூலமான இறைவன்; god, as the First Cause.

     “ஞாலமூன் றடித்தாய முதல்வன்” (கலித்.124);.

     “முதுமுதல்வன் வாய்போகா” (புறநா.166:2);.

   3. அரசன் (திவா.);; king.

   4. தந்தை; father.

     “தன்முதல்வன் பெரும்பெயர்” (கலித்.75);.

     [முதல் → முதல்வன்.]

முதல்வன்சேய்

 முதல்வன்சேய் mudalvaṉcēy, பெ.(n.)

   முருகன் (உரி.நி.);; god {}.

     [முதல்வன் + சேய்.]

முதல்வன்வாக்கு

 முதல்வன்வாக்கு mudalvaṉvākku, பெ. (n.)

   தோன்றியம் (ஆகமம்); (பிங்.);; the Agamas.

     [முதல்வன் + வாக்கு.]

முதல்வர்

முதல்வர் mudalvar, பெ.(n.)

   1 முதலாயினார்;  persons begining with.

     “முந்தை முதல்வர்” (பு.வெ.1:19);.

     “நான்மறை முதல்வர் சுற்ற மாக” (புறநா.26:13);.

   2. வானவர் (சது.);; celestials.

முதல் → முதல்வர்.]

முதல்வள்ளல்கள்

 முதல்வள்ளல்கள் mudalvaḷḷalkaḷ, பெ.(n.)

   வரையாது கொடுப்போராகிய செம்பியன், காரி அல்லது சகாரி (ஆ.நி.); விராடன், நிருதி, துந்துமாரி, சகரன், நளன் என ஏழு வள்ளல்கள் (சூடா.);; the liberal chiefs of the first order whose bounty knows no limit seven in number, viz {} or {} according to Aciriyanikandu, {}.

     [முதல் + வள்ளல்கள்.]

முதல்வாடாக்கடன்

முதல்வாடாக்கடன் mudalvāḍākkaḍaṉ, பெ.(n.)

   முதல் அழியாத நிலையில் வட்டி மட்டும் தொடர்ந்து செலுத்தும் கடன் தொகை; loan which is paid continuously only with interest not along with principal.

     “இவர் பக்கல் நாங்கள் முதல் வாடாக் கடனாக பொரிசை இடகைக் கொண்ட காசு நாலாயிரம்” (தெ.இ.கல்.தொ.8, கல்.345);.

     [முதல் + வாடா + கடன். முதல் குறையாமல் வட்டி மட்டும் தொடர்ந்து செலுத்தும் கடன்.]

முதல்வாடை

 முதல்வாடை mudalvāṭai, பெ.(n.)

   முதன் முதலிற் நீர்ப்பாயும் வயல்கள் (W.G.);; block of fields nearest the source of irrigation.

     [முதல் + வாடை. வாடை = வரிசை.]

முதல்வாதி

 முதல்வாதி mudalvādi, பெ.(n.)

   மாழை; metal (சா.அக.);.

முதல்வி

முதல்வி mudalvi, பெ.(n.)

   தலைவி (சூடா.);; lady of first rank;

 mistress.

     “மனுஷ்யப் பெண்களுக்கும் இவளே முதல்வி யென்றவாறு” (தக்கயாகப்.321, உரை);.

     [முதல்வன் → முதல்வி.]

முதல்வினை

 முதல்வினை mudalviṉai, பெ.(n.)

   முதற் பெயருக்கு உரிய வினை; personal noun in the form of a finite verb or personal noun derived from a verbal root.

     [முதல் + வினை.]

ஒரு முற்றுத்தொடரில் முதற்பெயரும் சினைப் பெயரும் பயன்படும் பொழுது அந்தப் பெயர்களுக்குத் தனித்தனியே வினைகள் அமைவதுண்டு. முதற்பெயருக்கு உரிய வினையை முதல்வினை என்றும் சினைப் பெயருக்கு உரிய வினையைச் சினைவினை என்றும் கூறுவர்.

ஒடிந்து – சினைவினை

விழுந்தது – முதல்வினை (இலக்.கலை.கள.);

முதல்வெண்குருத்து

 முதல்வெண்குருத்து mudalveṇkuruddu, பெ.(n.)

   முதன்முதலில் தோன்றும் குருத்து (பிங்.);; first sprout.

     [முதல் + வெண் + குருத்து.]

முதல்வேதம்

 முதல்வேதம் mudalvēdam, பெ.(n.)

   முதல் மறையாகிய இருக்கு (பிங்.);; Rig {}, as the first {}.

     [முதல் + Skt. வேதம்.]

முதல்வேர்

 முதல்வேர் mudalvēr, பெ.(n.)

   அடி வேர்; tap root.

     [முதல் + வேர்.]

முதளை

 முதளை mudaḷai, பெ.(n.)

   ஆற்றலரி (வின்.);; alligator’s nose – Polygonum barbatum.

முதள்

 முதள் mudaḷ, பெ.(n.)

   மொக்கு (சங்.அக.);; bud.

மறுவ போது, மொட்டு, அரும்பு.

     [முகிழ் → முதள்.]

முதாரி

முதாரி2 mutāri, பெ.(n.)

   முன்கை வளையல்; bracelet.

     “முன்கை முதாரியு மொளிகால” (முத்துக்.பிள்.17);.

     [முது → முதார் → முதாரி.]

முதாரு

முதாரு mutāru, பெ.(n.)

   1. பால் மறக்குங் கன்று (வின்.);; calf almost weaned.

   2. பால் மறுக்கு நிலையிலுள்ள ஆன் (பசு);; milk cow, almost dry.

     [முதாரி → முதாரு.]

முதாருப்பால்

 முதாருப்பால் mutāruppāl, பெ.(n.)

   கறப்பதற்கு மறுக்கு நிலையிலுள்ள ஆவின் பால் (வின்.);; milk of a cow that is almost dry.

     [முதாரு + பால்.]

முதிகம்

 முதிகம் mudigam, பெ.(n.)

   வேம்பு; margosa tree.

முதிசம்

 முதிசம் mudisam, பெ.(n.)

   மூதாதையர் சொத்து (யாழ்ப்.);; ancestral property.

     [முதுசொம் → முதிசம்.]

முதிசல்

 முதிசல் mudisal, பெ.(n.)

   அரத்தை; galangal.

முதிதபாவனை

முதிதபாவனை mudidapāvaṉai, பெ.(n.)

   தணியாத சினத்தை (செற்றம்); நீக்கும் பொருட்டு புத்தமதத்தைச் சார்ந்தவர்களால் செய்யப்படும் ஊழ்கம் (மணிமே.30:256);; a set mode of meditation practised by Buddhist asectics to free themselves from anger.

முதிதம்

 முதிதம்  mudidam, பெ.(n.)

முதம் (சங்.அக.); பார்க்க; see mudam.

முதிதை

முதிதை mudidai, பெ.(n.)

   1. மகிழ்ச்சி; joy, delight, happiness.

     “அறிவருண் முதிதை” (ஞானவா.வீதக.62);.

   2. மனத்தூய்மை (பரிபா.4:1, உரை);; a virture which cleanses the mind, one of four citta-parikarmam.

   3. செற்றத்தை நீக்கும் பொருட்டுப் புத்தர்களாற் செய்யப்படும் ஊழ்கம்; a set of meditation practised by Buddhist ascetics to free themselves from anger.

     “மைத்திரி கருணா முதிதை” (மணிமே.30: 256);.

முதினி

 முதினி mudiṉi, பெ.(n.)

   ஒட்டை மரம்; a tree (சா.அக.);.

முதியகுழல்

முதியகுழல் mudiyaguḻl, பெ.(n.)

   குதிரைவாலிப் புல் (தைலவ.தைல.76);; a species of grass.

முதியன்

முதியன் mudiyaṉ, பெ.(n.)

முதியவன் பார்க்க; see {}.

     “இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி” (அகநா.30); “செல்வுழி யெழாஅ நல்லேர் முதிய” (புறநா.389:12);.

     [முது → முதியன்.]

முதியம்

 முதியம்  mudiyam, பெ.(n.)

   நாய்வேளை (மலை.);; a sticky plant that grows best in sandy places.

முதியவன்

முதியவன் mudiyavaṉ, பெ.(n.)

   1. மூத்தோன்; elder, senior.

     “மக்களுள் முதியவன்” (கலித்.25);.

   2. அகவை முதிர்ந்தவன்; aged man.

   3. நான்முகன்; Brahma.

     “தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக ” (கலித்..2);.

க. முதுக

     [முது → முதியவன்.]

முதியாக்கிழங்கு

 முதியாக்கிழங்கு mudiyākkiḻṅgu, பெ. (n.)

   மஞ்சட்கிழங்கு; turmeric.

முதியான்

முதியான் mudiyāṉ, பெ.(n.)

   1. முதியவன் பார்க்க; see {}.

   2. பறவை வகை (சங்.அக.);; a bird.

   3. முதுகன்று (யாழ்.அக.);; full grown calf.

முதியாரிகம்

 முதியாரிகம் mudiyārigam, பெ.(n.)

   மஞ்சள்; turmeric.

முதியார்குழல்

 முதியார்குழல் mudiyārkuḻl, பெ.(n.)

முதியார்சூந்தல் பார்க்க; see {}.

     [முதியார் + குழல்.]

முதியார்கூந்தல்

 முதியார்கூந்தல் mudiyārāndal, பெ.(n.)

   கொடியார் கூந்தலென்னும் பூண்டு (சங். அக.);; a kind of plant called {}.

     [முதியார் + கூந்தல்.]

முதியாள்

முதியாள் mudiyāḷ, பெ. (n.)

   1. மூத்தவள்; elderly woman.

   2. தேவராட்டி; woman possessed by a spirit.

     “தெய்வ நிகழ் குறமுதியாள் சென்ற பின்பு” (பெரியபு. கண்ணப்ப.52);.

க. முதுகி.

     [முது → முதியாள்.]

முதியோர்

 முதியோர் mudiyōr, பெ.(n.)

   அறிஞர்; persons of ripe wisdom.

     [முது-மை → முதியோர்.]

முதியோர்கல்வி

 முதியோர்கல்வி mudiyōrkalvi, பெ.(n.)

   அகவை முதிர்ந்தோர்க்கு அளிக்கப்படும் கல்வி; adult education.

தமிழகத்தில் முதியோர் கல்வி வளர்ச்சி யடைந்துள்ளது.

     [முதுயோர் + கல்வி.]

முதியோள்

முதியோள் mudiyōḷ, பெ. (n.)

   1. கிழப் பருவமடைந்தவள்; old woman.

   2. பெண் தெய்வம்; Goddess.

     “முதியோள் கோட்டம்” (மணிமே.17:88);,

     “முளரி மருங்கின் முதியோள் சிறுவன்” (புறநா.278:2);.

     [முது → முதியோள்.]

முதிரன்

முதிரன் mudiraṉ, பெ.(n.)

   1. தாந்தோன்றி (யாழ்.அக.);; libertine,

   2. போக்கிலி (வின்.);; vile or wicked person.

முதிரம்

முதிரம்1 mudiram, பெ.(n.)

   முகில் (பிங்.);; cloud.

 முதிரம்2 mudiram, பெ.(n.)

   குமணனுக்குரிய மலை; a mountain belonging to the ancient chief {}.

     “நல்லிசைக் குமணன்…. முதிரத்தோனே” (புறநா.160:13);.

முதிராச்செவ்வந்தி

 முதிராச்செவ்வந்தி mudirāccevvandi, பெ.(n.)

   மஞ்சள் செவ்வந்தி; yellow chryanthum.

முதிராப்பிண்டம்

 முதிராப்பிண்டம் mudirāppiṇṭam, பெ.(n.)

   முற்றாத கரு (வின்.);; embryo.

     [முதிர் + ஆ + பிண்டம்.]

முதிரி

 முதிரி mudiri, பெ.(n.)

   அவரை வகை; dolichos lab.

முதிரிமை

 முதிரிமை mudirimai, பெ.(n.)

முதுமை (யாழ்.அக.); பார்க்க; see mudumai.

     [முதிர் → முதிரி → முதிரிமை.]

முதிரை

முதிரை mudirai, பெ.(n.)

   1. அவரை, துவரை முதலிய பயறுகள்; pulse or other leguminous plant.

     “முதிரை வாலூன் வல்சி மழவர்” (பதிற்றுப்.55:7);.

   2. துவரம் பருப்பு; pigeon – pea, dholl.

     “முதிரையின் முழுத்த நெய்யில்” (கம்பரா.நாட்டுப். 19);.

   3. மரவகை (வின்.);; East Indian satin-wood, chloroxylon swietenia.

     [முதிர் → முதிரை.]

முதிரைப்பில்லை

 முதிரைப்பில்லை mudiraippillai, பெ.(n.)

   கண்ணுக்குள் வரும் நோய்; a chronic eye diseases (சா.அக.);.

முதிரைமண்டம்

 முதிரைமண்டம் mudiraimaṇṭam, பெ.(n.)

   பல்லி; lizard (சா.அக.);.

முதிர்

முதிர்1 mudirdal,    2 செ.கு.வி.(v.i.)

   1. மரம், காய் முதலியவை இளமைத் தன்மை நீங்கி முற்றுதல்; to grow old, to have the qualities of age.

முதிர்ந்த மரங்களை வெட்டுவார். “முதிராக் கிளவியள்” (மணிமே. 22:181);.

   2. பதமாதல், கருநிரம்புதல்; to become mature, to grow ripe.

     “கொண்மூ…. சூன் முதிர்பு” (புறநா.161);.

   3. நிறைதல்; to excel, surpass, to become satiated, to be saturalted,

     “உறைமுதிரா நீரால்” (திணைமாலை.103);.

   4. முற்படுதல்; to procede.

     “முதிர்வினை” (சிலப்.பதி);.

   5. ஒழிதல்; to end, cease.

     “கதிரொழி காறும் கடவுட் டன்மை முதிராது” (சிலப்.30:66);. 6. உலர்தல்;

 to become dry.

   தெ.முதுரு;   க.முது; L. maturar;

 F. maturer;

 M.E. maturus (ripe);;

 E. mature (வே.க.முல்2);.

     [முது → முதிர் → முதிர்-தல் (சு.வி.);.]

 முதிர்2 mudirdal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. சூழ்தல்; encompass, surround.

     “தீவினை முதிர்வலை” (சிலப். 16:156);.

   2. அகவை நிரம்புதல்; old; advance-in years.

அவர் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தவர் என்றே நினைக்கிறேன்.

     [முது → முதிர் → முதிர்-தல் (சு.வி.);.]

முதிர்காடு

 முதிர்காடு mudirkāṭu, பெ.(n.)

   பழங்காடு (சூடா.);; wild jungle, ancient forest.

     [முதிர் + காடு.]

முதிர்காய்

 முதிர்காய் mudirkāy, பெ.(n.)

   கனி; riped fruit.

     [முதிர் + காய்.]

முதிர்காற்று

 முதிர்காற்று mudirkāṟṟu, பெ.(n.)

   கடுங் காற்று (வின்.);; gale, strong wind.

     [முதிர் + காற்று.]

முதிர்ச்சி

முதிர்ச்சி  mudircci, பெ.(n.)

   1. பழுத்த பருவம்; maturity, ripened condition.

   2. அகவை முதுமை; great age, old age.

   3. முதுக்குறைவு (திவா.);; excellence in learning or experience.

   4. செருக்கு (யாழ்ப்.);; arrogance.

     [முதிர் → முதிர்ச்சி.]

முதிர்ச்சிக்காரன்

 முதிர்ச்சிக்காரன் mudirccikkāraṉ, பெ. (n.)

   செருக்குள்ளவன் (வின்.);; arrogant man.

     [முதிர்ச்சி + காரன்.]

முதிர்ந்தகுறிஞ்சி

முதிர்ந்தகுறிஞ்சி mudirndaguṟiñji, பெ. (n.)

   பண்வகை (திவ்.திருவாய்.1:1 தலைப்பு);; a melody type of the {} class.

     [முதிர் → (முதிர்ந்த); + குறிஞ்சி.]

முதிர்ந்தநீர்

 முதிர்ந்தநீர் mudirndanīr, பெ.(n.)

   சிறுநீர் (அமுரி);; urine (சா.அக.);.

முதிர்ந்தவிந்தளம்

 முதிர்ந்தவிந்தளம் mudirndavindaḷam, பெ.(n.)

   குறிஞ்சியாழ்த்திறவகை (பிங்.);; a secondary melody type of the {} class.

     [முதிர்ந்த + விந்தளம்.]

முதிர்ந்தோர்கல்வி

 முதிர்ந்தோர்கல்வி mudirndōrkalvi, பெ.(n.)

முதியோர்கல்வி பார்க்க; see {}.

     [முதிர்ந்தோர் + கல்வி.]

முதிர்பாகு

 முதிர்பாகு mudirpāku, பெ.(n.)

   முதிர்ந்த வெல்லப்பாகு; over heated jaggery syrup.

     [முதிர் + பாகு.]

முதிர்பிறை

 முதிர்பிறை mudirpiṟai, பெ.(n.)

   காருவாவிற்குப் பின்வரும் நான்காம் நாள் முதல் எண்ணாள் வரையான வளர்பிறைத் திங்கள் (வின்.);; the second quarter of the waxing moon.

     [முதிர் + பிறை.]

முதிர்பு

 முதிர்பு mudirpu, பெ.(n.)

முதிர்வு (சங்.அக.); பார்க்க; see mudirvu.

ம. முதிர்ப்பு

     [முதிர் → முதிர்பு.]

முதிர்ப்பு

முதிர்ப்பு mudirppu, பெ.(n.)

   1. மனக் கலக்கம் (திவா.);; perturbation.

     “சினைப் பசும்பாம்பின் சூன் முதிர்ப் பன்ன” (குறுந். 35:2);. 2. முதிர்ச்சி, 1, 2 (யாழ்.அக.); பார்க்க; see mudircci, 1, 2.

     [முதிர் → முதிர்ப்பு.]

முதிர்மரம்

 முதிர்மரம் mudirmaram, பெ.(n.)

   பட்டை யுரிக்கக் கூடிய மரம்; tree aged enough to peal off the bark.

     [முதிர் + மரம்.]

முதிர்வாதக்கட்டு

 முதிர்வாதக்கட்டு mudirvādakkaṭṭu, பெ.(n.)

   உடம்பில் ஒர் இடத்தில் நில்லாது ஒடிக்கொண்டிருந்து ஆங்காங்கு வீக்கத்தை ஏற்படுத்தும் நோய்; swelling that traverses the whole body.

     [முதிர் + Skt. வாதம் + கட்டு.]

முதிர்வு

முதிர்வு mudirvu, பெ.(n.)

   1. முதிர்ச்சி 1, 2 பார்க்க; see mudircci 1,

   2. “கைக்கொண்டு முற்றிய முதிர்வும்” (தொல். பொருள்.68);.

     “பெருங்களிற்று மருப்பின் அன்ன வரும்பு முதிர்பு” (நற்.19:3);.

     “பெருமலை யன்ன தோன்றல சூன்முதிர் புருமுரறு கருவியொடு பெயல்கட னிறுத்து” (புறநா.161:3, 4);.

   2. மிகுதி; excess, plenty.

     “மான்மத முதிர்வுறக் கமழ்வன” (கம்பரா.நகரப். 60);. 3. சேமிப்புத் தொகை குறிப்பிட்டக் காலத்திற்குப் பின் அடையும் அதிக அளவு;

 date of maturity of a deposite.

ஐந்து ஆண்டுகளக்குப் பிறகு இந்தத் தொகை இருமடங்காக முதிர்வு அடையும்.

     [முதிர் → முதிர்வு.]

முதிர்வேனில்

 முதிர்வேனில் mudirvēṉil, பெ.(n.)

முதுவேனில் (சங்.அக.); பார்க்க; see {}.

     [முதிர் + வேனில்.]

முது

முது mudu, பெ.(n.)

   1. பேரறிவு; vast knowledge.

     “முதுவா யிரவல” (சிறுபாண். 40);.

     “முருக யர்ந்து வந்த முதுவாய் வேல சினவ லோம்பு மதி” (குறுந். 362:1);.

   2. முதுமை; oldness.

     [முதல் → முது (சு.வி);.]

இளமையில் அறிவின்மையும் முதுமையில் அறிவுண்மையும், பட்டறிவின்மை யுண்மையால் ஏற்படும் இயற்கை நிலைமை யென்பதை மடம், முது என்னுஞ் சொற்கள் உணர்த்தும்.

முது சொத்து ஏம வாழ்வு

 முது சொத்து ஏம வாழ்வு mudusodduēmavāḻvu, பெ.(n.)

   மூதாதையர் சொத்தால் வாழும் நல்வாழ்க்கை (சுகவாசசீவனம்);; comfortable livelihood.

     [முது+சொத்து+ஏம+வாழ்வு]

முதுகண்

முதுகண்1 mudugaṇ, பெ.(n.)

   1. முதன்மைப் பற்றுக்கோடு; chief support.

     “முற்றிழை மகளிர்க்கு முதுக ணாமென” (பெருங். உஞ்சைக். 36:198);.

   2. பேரறிவுரைஞன்; wiseman.

     [முந்து → முது → முதுகண் (வே.க);..]

 முதுகண்2 mudugaṇ, பெ.(n.)

   காப்பாளர்; guardian.

     “சுந்தரபட்டனையே முதுகண்ணாக வுடைய” (தெ.இ.கல்.தொ.5:272);.

     [முது + கண்.]

 முதுகண்3 mudugaṇ, பெ.(n.)

   வழியுரிமை (வாரிசு);; property rights of the legal heridity.

     “ஸ்ரீ மூலத்தான முடையார்க்கு நொட்டூர், திரு வாண்டாள் சாநியேன், எந் மகந் தாமோதிரப்பட்ட நாந வீரகத்திரபிள்ளையை முதுகண்ணாக கொண்டு – தண்ணீர்ப்பட்டி ஒரு மாவரையும், தலைப்பாடகம் அரைமாவும் களர் ஒரு மாவரையும் கீழைத் தெருவில் மனை அமையும் தேவர்க்கு தேவதாநமாகக் குடுத்தேன்” (தெ.இ.கல்.தொ.12, கல்.184);.

முதுகன்றிருமல்

 முதுகன்றிருமல் mudugaṉṟirumal, பெ.(n.)

   கன்றுகட்கு வரும் நோய் வகை (M.L.);; hoose, a disease incident to cattle, especially calves.

     [முது + கன்று + இருமல்.]

 முதுகன்றிருமல் mudugaṉṟirumal, பெ. (n.)

   ஒரு வகை நுண் உயிரி; louse (or); husk

     [முதுகன்+திருமல்]

முதுகன்று

 முதுகன்று mudugaṉṟu, பெ.(n.)

   பால்குடி மறந்த கன்று (வின்.);; weaned calf.

     [முது + கன்று.]

முதுகயம்

முதுகயம் mudugayam, பெ.(n.)

   கடல்; sea.

     “முதுகயந் தீப்பட” (திவ்.பெரியதி.8. 5:6);.

முதுகலை

 முதுகலை mudugalai, பெ.(n.)

   பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் படிக்கும் மேல் பட்டப் படிப்பு; master of arts, course leading to the degree of master of arts.

     [முது + கலை.]

முதுகாஞ்சி

முதுகாஞ்சி mudukāñji, பெ.(n.)

   1. அறிவின் மிக்க மூத்தோர் அறிவில்லாத இளையோர்க்கு இளமை நிலையாமை முதலியவற்றை எடுத்து மொழியும் புறத்துறை (தொல்.பொருள்.79, உரை);; theme of admonition and instruction by men of ripe wisdom to inexperienced youths.

   2. முதுகாஞ்சித் துறை பற்றிய சிற்றிலக்கிய வகை (சது.);; a poem on the {} theme.

     [முது + காஞ்சி.]

முதுகாடு

முதுகாடு mudukāṭu, பெ.(n.)

   1. முதையல் பார்க்க (திவா.);; see mutaiyal.

   2. சுடுகாடு (திவா.);; cremation or burial ground.

     “முதுகாட்டிடை….. நடமாடி” (தேவா.773, 1);.

     “அஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு” (புறநா.356:4);.

     [முது + காடு.]

முதுகாட்டுத்தரிசு

முதுகாட்டுத்தரிசு mudukāṭṭuddarisu, பெ.(n.)

   1. பதினைந்து ஆண்டுக்கு மேலாக சாகுபடி செய்யப்படாத நிலம் (வின்.);; land left waste for over 15 years.

   2. சுடுகாட்டுக்காக விடப்பட்ட நிலம் (இ.வ.);; waste land used as a burial or cremation ground.

     [முதுகாடு + தரிசு.]

முதுகால்

முதுகால்1 mudukāl, பெ.(n.)

   ஓராண்டுக்கு மேற்பட்ட வெற்றிலைக் கொடிகளையுடைய தோட்டம் (யாழ்.அக.);; garden of betel vines more than a year old.

     [முது + கால்.]

 முதுகால்2 mudukāl, பெ.(n.)

   வெற்றிலைக் கொடியின் நடுவிலுள்ள இலை (மதி.க.ii.55);; leaves at the middle of the betel wine.

     [முது + கால்.]

முதுகால்வெற்றிலை

 முதுகால்வெற்றிலை mudukālveṟṟilai, பெ.(n.)

   முதிர்ந்த கொடியி னின்று பறித்த வெற்றிலை (C.G.);; betel leaf plucked from a full-grown creeper.

     [முதுகால் + வெற்றிலை.]

முதுகிடு-தல்

முதுகிடு-தல் mudugiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   புறங்காட்டுதல்; to be defeated and flee.

     “முகில் வண்ணன் றனக்கஞ்சி முதுகிட்டோடி” (கம்பரா.உத்தர.இராவணன். பிறப்.39);.

     [முதுகு + இடு-தல்.]

முதுகில்குத்து-தல்

முதுகில்குத்து-தல் mudugilguddudal,    5 செ.கு.வி.(v.i.)

   இனிமை காட்டி ஏய்த்தல்; stab some one in the back.

முதுகில் குத்துதல் மற வேந்தர்க்கு அழகல்ல.

     [முதுகு → முதுகில் + குத்து-தல்.]

முதுகு

முதுகு1 mudugu, பெ.(n.)

   1. மனித உடலில் பின் கழுத்தில் இருந்து இடுப்புவரை உள்ள பக்கம், விலங்கின் உடலில் கழுத்திலிருந்து வால்வரை உள்ள மேல் பகுதி; back, the region of the spine.

     “முதுகிற் றைத்த வாளிகள்” (கம்பரா. யுத்த.மந்திர.116.);.

அணிலின் முதுகில் மூன்று கோடுகள் உண்டு.

     “முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழைய பயம்”,

     “முதுகிலே புண் இருந்தால் குனியப் பயம்”,

     “முதுகில் அடித்தால் ஆறும், வயிற்றில் அடித்தால் ஆறுமா?”.

   2. நாற்காலி முதலியவற்றில் சாய்ந்து கொள்வதற்குரிய பகுதி; back portion; back, as of a chair.

   3. முதுகு ஒடிந்த நாற்காலி, நடுவிடம்; middle place.

     “தவள மாடத்தகன் முதுகு பற்றி” (கல்லா.19 : 22);.

   4. வரப்பு மேடு; ridge, mound.

     “மிடைந்து வயல் திரிந்து முதுகு சரிந்துடைந்து” (கல்லா.53:33);.

   5. பொத்தகத்தின் பக்கங்கள் ஒன்று சேர்ந்து அமைந்திருக்கும் தட்டையான நீண்ட பக்கவாட்டுப் பகுதி; spine of a book.

ம.முதுகு

 முதுகு2 mudugu, பெ.(n.)

   முருடு (வின்.);; coarseness grossness.

தெ. முதுகு

 முதுகு mudugu, பெ. (n.)

   கொம்பு விளையாட்டில் இடம் பெறும் கழியின் தலைப்புப் பகுதி; top of pole.

     [முது+முதுகு]

முதுகுகாட்டு-தல்

முதுகுகாட்டு-தல் mudugugāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

முதுகிடு-தல் பார்க்க; see {}.

     [முதுகு + காட்டு-தல்.]

முதுகுகாண்(ணு)-தல்

முதுகுகாண்(ணு)-தல் mudugugāṇṇudal,    16 செ.குன்றாவி.(v.t.)

   தோல்வியுறச் செய்தல்; to defeat.

     “இந்திரன் முதுகுகண்ட விராவணற் கேயச் சொன்னான்” (கம்பரா. இலங்கை காண்.5);.

     [முதுகு + காண்(ணு);-தல்.]

முதுகுகொடு – த்தல்

முதுகுகொடு – த்தல் mudugugoḍuddal,    4 செ.கு.வி.(v.i.)

   1. முதுகிடு-தல் பார்க்க; see {}.

     “போர்க்களத்தே சென்று முதுகு கொடாமல்” (பட்டினப்.பக்.538, உரை);.

   2. துணை செய்தல் (வின்.);; to help, assist.

   3. குதிரை, யானை முதலியன தன்மேலேற இடங் கொடுத்தல் (இ.வ.);; to allow one to mount, as a riding horse, etc.

   4. விளையாட்டாகவும் தண்டனையாகவும் முதுகிற் பிறரைத் தூக்கிச் சுமத்தல் (இ.வ.);; to carry a person on one’s back, as a punishment or in a game.

     [முதுகு + கொடு-த்தல்.]

முதுகுக்கு முதுகு

 முதுகுக்கு முதுகு muduguggumudugu, பெ. (n.)

   இணையை விட்டுவிட்டு வேறு ஒருவனைப் பிடித்து முதுகுக்கு முதுகு தொடும் விளையாட்டு; back to back tag.

     [முதுகு+கு+முதுகு]

முதுகுச்சுண்ணாம்பு

 முதுகுச்சுண்ணாம்பு muduguccuṇṇāmbu, பெ.(n.)

   மணல் மிகுதியாய்ச் சேர்த்த சுண்ணாம்பு (C.E.M.);; coarse chunnam.

     [முதுகு + சுண்ணாம்பு.]

முதுகுடி

முதுகுடி muduguḍi, பெ.(n.)

   கற்றோன்றி மண்டோன்றாக் காலத்து வாளொடு முற்றோன்றிய மூத்த குலம்; ancient and respectable family as of warriors.

     “முதுகுடி மகட் பாடஞ்சிய மகட் பாலானும்” (தொல். பொருள்.79);.

மறுவ. மூத்தகுடி.

     [முது + குடி.]

முதுகுதாங்கி

 முதுகுதாங்கி mudugudāṅgi, பெ.(n.)

   சார்மணை (வின்.);; support to lean back on, as in a planquin, in a chair or on a pial.

     [முதுகு + தாங்கி.]

முதுகுத்தண்டு

 முதுகுத்தண்டு muduguddaṇṭu, பெ.(n.)

   தண்டுவடம்; spinal-cord.

ஒவ்வொருவருக்கும் முதுகுத் தண்டு நன்றாக இருந்தால் மட்டுமே அவர்களால் வலியில்லாமல் உட்கார, நடக்க, படுக்க முடியும்.

     [முதுகு + தண்டு.]

     [p]

முதுகுத்துணி

 முதுகுத்துணி mudugudduṇi, பெ.(ո.)

   முருட்டுச் சீலை (C.E.M.);; coarse cloth.

     [முதுகு + துணி.]

முதுகுநீர்குத்தல்

 முதுகுநீர்குத்தல் mudugunīrguddal, பெ.(n.)

முதுகுநீர்ச்சடங்கு பார்க்க; see {}.

     [முதுகு + நீர் + குத்தல்.]

முதுகுநீர்ச்சடங்கு

 முதுகுநீர்ச்சடங்கு mudugunīrccaḍaṅgu, பெ.(n.)

   முதுகில் நீரூற்றிச் செய்யுஞ் சீமந்தச் சடங்கு (வின்.);; a purificatory ceremony of pouring water upon the back of a woman in her first pregnancy.

     [முதுகு + நீர் + சடங்கு.]

முதுகுநூல்

 முதுகுநூல் mudugunūl, பெ.(n.)

   முருட்டு நூல் (வின்.);; coarse yarn.

     [முதுகு + நூல்]

முதுகுநெளி-த்தல்

முதுகுநெளி-த்தல் muduguneḷiddal,    3 செ.கு.வி.(v.i.)

   வேலைக்குச் சோம்புதல் (உ.வ.);; to shirk work; to be indolent.

     [முதுகு + நெளி-த்தல்.]

முதுகுன்றம்

முதுகுன்றம் muduguṉṟam, பெ.(n.)

   கடலூர் (தென்னார்க்காடு); மாவட்டத் திலுள்ள சிவ தலம்; a Siva shrine in the {}.

தற்போது விருத்தாசலம் என்று அழைக்கப்படுகிறது. திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருமுதுகுன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.

     “முத்தாறு…. நித்திலம் வாரிக்கொழிக்கு முதுகுன்றமே.” (தேவா.981, 1);.

     [முது + குன்றம்.]

முதுகுன்று

முதுகுன்று muduguṉṟu, பெ.(n.)

முதுகுன்றம் பார்க்க; see {}.

     “முத்தாறு வந்தடி வீழ்தரு முது குன்றடை வோமே” (தேவா.978:1);.

     [முது + குன்று.]

முதுகுப்பிடிப்பு

 முதுகுப்பிடிப்பு muduguppiḍippu, பெ.(n.)

   முதுகில் வலியுண்டாக்கும் ஊதை (வாயு); நோய் வகை (M.L.);; sprain of the back.

     [முதுகு + பிடிப்பு.]

முதுகுப்பிளவு

 முதுகுப்பிளவு muduguppiḷavu, பெ.(ո.)

முதுகுப்பிளவை (M.L.); பார்க்க; see {}.

     [முதுகு + பிளவு.]

முதுகுப்பிளவை

 முதுகுப்பிளவை muduguppiḷavai, பெ.(n.)

   முதுகிலுண்டாம் அரச பிளவை (வின்.);; carbuncle appearing on one’s back.

     [முதுகு + பிளவை..]

முதுகுமண்காட்டு-தல்

முதுகுமண்காட்டு-தல் mudugumaṇgāṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   மற்போரில் தோல்வியுறச் செய்தல் (இ.வ.);; to defeat in wrestling.

மறுவ. புறமுதுகுக்காட்டுதல்

     [முதுகு + மண்காட்டு-தல்.]

முதுகுமண்கொடு-த்தல்

முதுகுமண்கொடு-த்தல் mudugumaṇgoḍuddal,    4 செ.கு.வி. (v.i.)

   மற்போரில் தோல்வியுறுதல் (இ.வ.);; to be defeated in wrestling.

     [முதுகு + மண்கொடு-த்தல்.]

முதுகுமுள்

 முதுகுமுள் mudugumuḷ, பெ.(n.)

முதுகெலும்பு (வின்.); பார்க்க; see mսdսցelսmbս.

     [முதுகு + முள்.]

முதுகுமுள்ளணைதசை

 முதுகுமுள்ளணைதசை mudugumuḷḷaṇaidasai, பெ.(n.)

   முதுகெலும்பினை யடுத்துள்ள தசை (வின்.);; a muscle-semispinalis dorsi.

     [முதுகு + முள்ளணை + தசை.]

முதுகுரவர்

முதுகுரவர் muduguravar, பெ.(n.)

   தாய் தந்தையர்; parents.

     “எம்முது குரவ ரென்னுற் றனர் கொல்” (சிலப்.16:60);.

     [முது + குரவர்.]

முதுகுருகு

முதுகுருகு mudugurugu, பெ.(n.)

   தலைக் கழகத்து இறந்துபட்ட நூல்களுள் ஒன்று (இறை.1, உரை, 4);; an ancient poem of the first {}-not now extant.

     [முது + குருகு.]

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் muduguḷaddūr, பெ.(n.)

   இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துர் வட்டத்தில் அவ்வட்டத்தின் தலைநகராய் விளங்கும் ஊர்; a town in Ramnad district in {} Taluk, 25 k.m. away from Paramakkudi.

     [முது + குளத்தூர்.]

முதுகுவாளை

 முதுகுவாளை muduguvāḷai, பெ.(n.)

   முதுகில் உண்டாகும் ஒருவகைக் கழலை; deep abscess on the back.

     [முதுகு + வாளை.]

முதுகூற்றனார்

 முதுகூற்றனார் muduāṟṟaṉār, பெ.(n.)

   கழகக்காலப் புலவர்; ancient {} poet.

     [முது + கூற்றனார்.]

முதுகெலும்பு

 முதுகெலும்பு mudugelumbu, பெ.(n.)

   முதுகின் நடுவில் அமைந்திருப்பதும் உடலைத் தாங்கிநிற்பதுமான, ஒன்றன் கீழ் ஒன்றாக, வரிசையாக முள் எலும்புகளால் ஆன நீண்ட உறுதியான எலும்புத் தண்டு; back bone, spine, vertebral column.

உழவர்கள் தான் நாட்டின் முதுகெலும்புகள்.

மறுவ. தண்டெலும்பு, முள்ளந்தண்டு, வீணாத்தண்டு தண்டுவடம்.

     [முதுகு + எலும்பு.]

முதுக்கங்காய்

 முதுக்கங்காய் mudukkaṅgāy, பெ.(n.)

   தும்மட்டிக்காய் (இ.வ.);; country cucumber.

முதுக்கள்

முதுக்கள் mudukkaḷ, பெ.(n.)

   முன்னோர்; ancestors.

     “எங்கள் முதுக்கள் ஒற்றி வைக்கையில் ” (புதுக்.கல்.317);.

     [முதல் → முது → முதுக்கள்.]

முதுக்கு

முதுக்கு mudukku, பெ. (n.)

   1. அறிவு; knowledge.

   2. தெருட்சி; wisdom.

   3. பேரறிவு; great wisdom.

     [முது → முதுக்கு.]

முதுக்குடி

முதுக்குடி mudukkuḍi, பெ.(n.)

முதுகுடி பார்க்க; see {}.

     “முரசு கடிப்பிகூஉ முதுக்குடிப் பிறந்தோன்” (மணிமே.1:31);.

     [முது-மை + குடி.]

முதுக்குறை

முதுக்குறை1 mudukkuṟaidal,    2 செ.கு.வி. (v.i.)

   அறிவு மிகுதல்; to become ripe in wisdom.

     “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ” (குறள், 707);.

     “முதுக்குறைக் குரீஇ முயன்றுசெய் குடம்பை” (நற்.366:9);.

     [முது → முதுக்கு + உறை – முதுக்குறை → முதுக்குறை-தல் (சு.வி.);.]

 முதுக்குறை2 mudukkuṟai, பெ.(n.)

முதுக்குறைவு பார்க்க; see {}.

     “முதுக்குறை நங்கை” (சிலப். 15:202);.

     [முது → முதுக்கு + உறை. உறைதல் = தங்குதல்.]

முதுக்குறைமை

முதுக்குறைமை mudukkuṟaimai, பெ.(n.)

முதுக்குறைவு பார்க்க; see {}.

     “போற்றாய்களை நின் முதுக்குறைமை” (கலித்.62);.

     “கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே” (குறுந். 217:7);.

     [முது → முதுக்கு + உறைமை.]

முதுக்குறைவி

முதுக்குறைவி mudukkuṟaivi, பெ.(n.)

   பேரறிவுள்ளவள்; wise woman.

     “சிறுமுதுக் குறைவி….. சேயிழைக் காற்றி” (பெருங். மகத.22:68);.

     “சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி” (அகநா.17:9);.

     [முதுக்குறை → முதுக்குறைவி.]

முதுக்குறைவு

முதுக்குறைவு1 mudukkuṟaivu, பெ.(n.)

   1. பேரறிவு (பிங்.);; great wisdom.

     “ஏதிலார் யாதும் புகல விறைமகள் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு” (குமர.பிர. நீதிநெறி.33);.

   2. மகளிர் பருவமடைதல் (வின்.);; pubescence of girls.

     [முதுக்குறை → முதுக்குறைவு.]

 முதுக்குறைவு2 mudukkuṟaivu, பெ.(n.)

   பேதைமை (சூடா.);; innocence.

     [முது + குறைவு.]

முதுசம்

 முதுசம் mudusam, பெ.(n.)

   மரபு வழியாக வரும் சொத்து; inherited property.

இது எனக்கு முதுசமாகக் கிடைத்த வீடு.

     [முதுசொம் → முதுசம்.]

முதுசாயம்

 முதுசாயம் muducāyam, பெ.(n.)

   அழுத்தமான சாயம் (வின்.);; deep dye.

     [முது + சாயம்.]

முதுசார்வு

 முதுசார்வு muducārvu, பெ.(n.)

   இளஞ் சார்வையடுத்திருக்கும் பனையோலை (யாழ்ப்.);; palmyra or talipot leaves next to {}.

     [முது + சார்வு.]

முதுசூரியர்

முதுசூரியர் muducūriyar, பெ.(n.)

   இரட்டைப் புலவருள் ஒருவர் (தமிழ்நா.113, தலைக்குறிப்பு);; one of the two poets known as {}.

     [முது + சூரியர்.]

முதுசொம்

 முதுசொம் mudusom, பெ.(n.)

முதுபொருள் பார்க்க; see {}.

     [முது + சொம்.]

முதுசொல்

முதுசொல் mudusol, பெ.(n.)

முதுமொழி, 1 பார்க்க; see {}.

   1. “தம்பானை சாய்ப்பற்றா ரென்னு முது சொல்லும்” (திருவிசை. வேணாட்.2); (திவா.);.

     “முது நெல்லிக்கனியும், மூத்தோர் சொல்லும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்” (பழ.);.

     [முது + சொல்.]

முதுதரிசு

முதுதரிசு mududarisu, பெ.(n.)

முதுகாட்டுத் தரிசு, 2 பார்க்க; see {}, 2.

     [முது + தரிசு.]

முதுதறை

முதுதறை mududaṟai, பெ.(n.)

   பாழ்நிலம்; barren ground.

     “நீர்நிலமும் முதுதறையும்” (புதுக்.கல்.361. பக்.233);.

     [முது + தறை.]

முதுதலை

முதுதலை mududalai, பெ.(n.)

   மரத்தின் முற்றிய அடிப்பாகம்; lower end of the trunk or stem of a tree, as hardened by growth,

     “மரமிசைக்கும்போது முதுதலை கீழாகவும் இளந்தலை மேலாகவும்” (சர்வா.சிற்.68);.

     [முது + தலை.]

முதுதவம்

 முதுதவம் mududavam, பெ.(n.)

   முற் பிறப்பிலோ இப்பிறப்பில் முன்போ செய்த தவம் (வின்.);; penance performed in previous birth or long ago in this birth.

     [முது + தவம்.]

முதுநாரை

முதுநாரை mudunārai, பெ.(n.)

   தலைக் கழகத்து (தலைச் சங்கத்து); இறந்துபட்ட நூல்களுள் ஒன்று (இறை.1, உரை.4);; an ancient poem of the first {}, not now extant.

     [முது + நாரை.]

முதுநிலம்

முதுநிலம் mudunilam, பெ.(n.)

   1. களர் நிலம்; brackish ground.

   2. பெரும் பாழ் நிலம் (வின்.);; large extent of barren ground.

   3. பாலை (யாழ்.அக.);; desert tract.

   4. இயற்கை மாறாமல் காடும் மேடுமாக உள்ள நிலம்; waste land, uncultivated land.

     [முது + நிலம்.]

முதுநிலை

முதுநிலை mudunilai, பெ. (n.)

   1. பல நிலைகளைக் கொண்ட பதவி வரிசையில் உயர்நிலை; senior grade.

முதுநிலை மேலாளர். முதுநிலைப் பொறியாளர்.

   2. பள்ளிகளில் முதுகலைப் பட்டம் பெற்று அடைந்திருக்கும் தகுதி; post graduate grade.

மேனிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்.

     [முது + நிலை.]

முதுநீர்

முதுநீர் mudunīr, பெ.(n.)

முன்னீர் பார்க்க; see {}.

     “சுடர்படு முது நீரில்” (திவ். பெரியதி.8, 5:5);.

     “முதுநீர் முன்றுறை முசிறி முற்றி” (அகநா.57:15);.

     [முது + நீர்.]

முதுநீர்மலையாளர்

 முதுநீர்மலையாளர் mudunīrmalaiyāḷar, பெ.(n.)

   மலையில் வாழும் ஒருவகைப் பழங்குடி இனத்தார்; a sect of hill-men.

     [முதுநீர் + மலையாளர்.]

முதுபயிர்

முதுபயிர் mudubayir, பெ.(n.)

   1. முற்றிய பயிர் (வின்.);; full – grown crop.

   2. கனி தரக்கூடிய மரம் (வின்.);; tree full-grown and ready to bear fruit.

   3. முதுகால் பார்க்க; see {}.

     [முது + பயிர்.]

முதுபாலை

முதுபாலை mudupālai, பெ.(n.)

   கணவனை இழந்த தலைவி மூங்கில் ஓங்கி வளர்ந்த காட்டில் தனி நின்று புலம்புவதைக் கூறும் புறத்துறை; theme of a lonely woman bewailing the loss of her husband in a desert.

     “நனிமிக சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும்” (தொல்.பொருள்.79);.

     [முது + பாலை.]

முதுபாழ்

முதுபாழ் mudupāḻ, பெ.(n.)

முதுநிலம் பார்க்க; see mudu-nilam.

     “முதுபாழ் பெயல்பெய்தன்ன” (புறநா.381);.

     [முது + பாழ்.]

முதுபுண்

முதுபுண் mudubuṇ, பெ.(n.)

   நெடு நாட்களாக குணமாகாதப் புண்; festering sore.

     “மெய்ப்படு முதுபுண் டீர்ப்பான்” (சீவக.2881);.

     [முது + புண்.]

முதுபெண்டு

முதுபெண்டு mudubeṇṭu, பெ. (ո.)

   1. மகளிரின் எழுவகைப் பருவங்களுள் 32 முதல் 40 அகவை வரையுள்ள பேரிளம் பெண்; woman between the ages of 32 and 40.

   2. மாதவிடாய் நீங்கிய பெண்; woman past menstruation.

   3. அகவை முதிர்ந்தவள்; old woman.

     [முது + பெண்டு.]

எழுவகைப் பருவம் :

   1. பேதை,

   2. பெதும்பை,

   3. மங்கை,

   4. மடந்தை,

   5. அரிவை,

   6. தெரிவை,

   7. பேரிளம் பெண்.

முதுபொருள்

முதுபொருள் muduboruḷ, பெ.(ո.)

   முன்னோர் தேட்டு (மூதாதையர் சொத்து);; ancestral property.

     “ஒரு முதலாகி முதுபொருளாயிருந்த தனங்களும்” (பட்டினத். உடற்கூற்றுவ.11);.

     [முது + பொருள்.]

முதுபோத்து

முதுபோத்து mudupōddu, பெ.(n.)

   முதிய ஆண் ஓணான் (ஓந்தி);; old blood – sucker – calotes verisicotor.

     “வேதின வெரிநின் ஒதிமுது போத்து” (குறுந்.140:1);.

     [முது + போத்து. போத்து = ஒணான்.]

முதுப்போக்கன்

 முதுப்போக்கன் muduppōkkaṉ, பெ.(n.)

   மடைத்தொழிலாளர்; cook person skilled in culinary.

முதுமகன்

முதுமகன் mudumagaṉ, பெ.(n.)

   1. அகவை முதிர்ந்தவன்; man of advanced years.

     “முந்து புள்ளுரைத்த முதுமகன்” (பெருங். உஞ்சைக் 56:234);.

   2. முப்பதுக்கு மேற்பட்ட அகவையுடையவன் (பன்னிருபா. 232);:

 man past the age of thirty.

   3. காரி (சனி.); (பிங்.);; the planet Saturn.

     “முதுமகனு நீளரவு மொன்பா னிற்கில்” (சினேந்.272);.

     [முதுமை + மகன்.]

முதுமகள்

முதுமகள் mudumagaḷ, பெ.(n.)

முது பெண்டு பார்க்க; see {}.

     “பார்ப்பன முதுமகள்” (பெருங்.இலாவாண. 3:30);.

     [முது + மகள்.]

முதுமக்கட்சாடி

முதுமக்கட்சாடி mudumakkaṭcāṭi, பெ. (n.)

முதுமக்கட்டாழி பார்க்க; see {}.

     “முதுமக்கட் சாடி வகுத்த தராபதியும்” (விக்கிரம.உலா);, (தக்கயாகப். 376, உரை);.

     [முதுமக்கள் + சாடி.]

முதுமக்கட்டாழி

முதுமக்கட்டாழி mudumakkaṭṭāḻi, பெ.(n.)

   1. முற்காலத்தில் இறந்த வீரர் உடல்களை அடக்கம் செய்யப் பயன்படுத்திய மட்பாண்டம் (புறநா.256, உரை);; a large earthen jar where in corpses of warriors were interred in ancient times.

   2. ஆசீவக முனிவர் புக்கிருந்து நோற்கும் பெருந்தாழி வகை; a large pot into which A {} ascetics enter for performing penance.

   3. மிகவும் அகவை முதிர்ந்தவர்களை வைத்துப் பாதுகாக்குஞ் சாடி வகை; a large earthen jar in which persons were kept and looked after in their extreme old age.

     [முதுமக்கள் + தாழி.]

முதுமக்கள்

 முதுமக்கள் mudumakkaḷ, பெ.(n.)

   அகவை முதிரிந்தோர்; elders, aged persons.

     “நரை முதுமக்க ளுவப்ப” (பழ.);.

     [முது + மக்கள்.]

முதுமரம்

முதுமரம் mudumaram, பெ.(n.)

   ஆலமரம்; banyan.

     “பறவை…. பகலுறை முதுமரம்” (குறுந். 352);.

     [முது + மரம்.]

முதுமாணி

 முதுமாணி mudumāṇi, பெ.(n.)

   கல்லூரிப் பட்டப் படிப்பில் முதுகலை; post graduate.

மறுவ முதுகலை, முதுநிலை.

     [முது + மாணி.]

முதுமுறை

முதுமுறை mudumuṟai, பெ.(n.)

   மூத்த முறைமை; seniority in age.

     “முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியான்” (கலித்.124);.

     [முது + முறை.]

முதுமூப்பு

முதுமூப்பு mudumūppu, பெ.(n.)

   மிக முதிர்ந்த அகவை; ripe old age.

     “முதுமூப்பாய மக்களை” (திருவிளை. எல்லாம்வல்ல.9);.

     [முது + மூப்பு.]

முதுமை

முதுமை mudumai, பெ.(n.)

   1. பழமை (பிங்.);; antiquity, oldness.

   2. அகவை முதிர்ந்து உடல் பலமும் தோற்றக் கவர்ச்சியும் இழந்த கூட்டம், மூப்பு; old age.

     “இளமை நாணி முதுமை யெய்தி” (மணிமே4:107);,

     “முதுமை யெள்ளலஃதமைகுந் தில்ல” (அகநா.6:15);,

     “முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்” (பரிபா.2:23);.

   3. முதுமொழி, 1 (சூடா.); பார்க்க; see {}. 1.

   4. முற்றின நிலை (பிங்.);; maturity.

   5. முதுகாஞ்சி பார்க்க; see {}.

     “கழிந்தோ ரொழிந் தோர்க்குக் காட்டிய முதுமையும்” (தொல்.பொருள்.79);.

   தெ. முதிமி;ம. முதும.

     [மூ → முதுமை.]

முதுமொழி

முதுமொழி mudumoḻi, பெ.(n.)

   1. பழமொழி (தொல்.பொருள்.489);; proverb, old saying.

   2. பெரியோர் வாக்கு, அறிவுரை; words of wisdomaxiom.

     “முதுமொழி கூற முதல்வன் கேட்டு” (மணிமே.25:119);.

   3. சான்றோர் செய்யுள்கள்; poems of ancient poets.

     “செவி செறுவாக முதுமொழி நீரா” (கலித். 68);.

   4. மறைநூல்;  the {}.

     “முன்னை மரபின் முதுமொழி முதல்வ” (பரிபா.3:42);.

   5. திருக்குறள் (வள்ளுவமா.31);; T {}.

     [முது + மொழி.]

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி mudumoḻikkāñji, பெ.(n.)

   1. அறிவுடையோர் அறம் பொருளின்பங்களைப் பலரும் அறியச் சொல்லும் புறத்துறை (பு.வெ.10, காஞ்சிப்.1);; theme of wise men giving instruction on {} to the people at large.

   2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானதும் கூடலூர் கிழார் இயற்றியதுமான அறநூல் (நீதி நூல்);; an ancient didactic poem of 100 verse by {}, one of {}.

     [முதுமொழி + காஞ்சி.]

முதுமொழிவஞ்சி

முதுமொழிவஞ்சி mudumoḻivañji, பெ.(n.)

   மகன் தந்தையினுடைய வீரச் செயலைக் கூறும் புறத்துறை (பு.வெ.3:13);; theme of a son describing the heroic acts of his father.

     [முது + மொழி வஞ்சி.]

பழைய வரலாற்றினையும், வாளினையும் உடைய மறக்குடியில் பிறந்த தந்தையின் நிலைமையை மகன் சொல்லும் புறத்துறை.

முதுவன்திடல்

 முதுவன்திடல் muduvaṉdiḍal, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Sivagangai Taluk.

     [முதுவன்+திடல்]

முதுவர்

முதுவர்1 muduvar, பெ.(n.)

   1. மூத்தோர்; elders, old persons.

     “தமராகிய முதுவர்” (கந்தபு.வள்ளியம்.43);.

   2. அறிவாற்றல் (ஞான); மிக்கோர்; persons of ripe wisdom;

 men of experience.

     “முதுவருண் முந்து கிளவாச் செறிவு” (குறள், 715); (பிங்.);.

   3. அமைச்சர், அறிவுரைஞர் (பிங்.);; counsellors.

   4. புலவர் (திவா.);; poets.

   5. மலைவாழ் பழங்குடி (E.T.5:86);; a hill tribe.

     [முது → முதுவர்.]

 முதுவர்2 muduvar, பெ.(n.)

   உழவர்; a cultivator, farmer pesant.

     [முது → முதுவர்.]

கோவை, திருவாங்கூர் மலையை அடுத்த நிலத்தில் வேளாண் பயிர் தொழிலைச் செய்பவர்களை முதுவர் என்பர்.

முதுவல்

 முதுவல் muduval, பெ.(n.)

   பழமையாற் பழுதானது (இ.வ.);; that which is time – worn.

     [முது → முதுவல்.]

முதுவளர்குடி

 முதுவளர்குடி muduvaḷarkuḍi, பெ. (n.)

   அறந்தாங்கிவட்டத்திலுள்ள சிற்றுார்; a village inArantangi Taluk.

     [முது+வளர்+குடி]

முதுவானாள்

முதுவானாள் muduvāṉāḷ, பெ.(n.)

   மலையில் வாழும் ஒருவகைப் பழங்குடியினர் (E.T.5, 86);; a hill tribe.

முதுவு

முதுவு muduvu, பெ.(n.)

முதுகு2 பார்கக; see mudugu2.

முதுவுழிஞை

முதுவுழிஞை muduvuḻiñai, பெ.(n.)

   1. இரை கண்ட பறவை பாய்வது போல, எதிரிகளைக் கண்டு பாயும் வீரர்களைக் குறித்துக் கூறும் துறை; a theme, says about the warrior who attack the enemies, like the bird that tantivy when seeing its prey.

     “வேய் பிணங்கிய மிளையரணம் பாய்புள்ளிற் பரந்திழிந்ததன்று”(பு.வெ.6:20);.

   2. போரைச் செய்யும் எயிலினுள்ளோருடைய மிகுதியைக் கூறுவதும் வெல்லுதற்குரிய மாறுபாட்டைக் கூறுவதுமான உழிஞைத்துறை;  a kind of {}.

     “செருமதிலோர் சிறப்புரைத்தலும் அரு முரணான அத் துறையாகும்” (பு.வெ.6:21);.

     [முது + உழிஞை.]

முதுவெழுத்து

 முதுவெழுத்து muduveḻuddu, பெ. (n.)

   தேறின எழுத்து (வின்.);; settled, well-formed handwriting.

     [முது + எழுத்து.]

முதுவேனில்

முதுவேனில் muduvēṉil, பெ.(n.)

   பருவம் ஆறனுள் ஆடவை (ஆனி);, கடக(ஆடி);த் திங்களடங்கிய கடுங்கோடைக் காலம் (பிங்.);; summer, the month of {} and {} as the season of extreme heat, one of {} (six season);.

     [முது + வேனில்.]

பருவம் :

   1. கார்காலம்,

   2. கூதிர் காலம்,

   3. முன்பனிக்காலம்,

   4. பின்பனிக் காலம்,

   5. இளவேனில் காலம்,

   6. முதுவேனில் காலம்.

முதுவோர்

முதுவோர் muduvōr, பெ.(n.)

   1. முதுவர் 1, 2, 3 பார்க்க; see muduvar, 1, 2, 3. 2.

   அரசன், ஆசிரியர், தாய், தந்தை, அண்ணன் முதலிய பெரியோர்; the great; the noble; the elders, as king, teacher, mother, father, elder brother.

     “முதுவோர்க்கு முகிழ்த்த கையினை’ (சிறுபாண்.231);. 3. புலவர் (திவா.);;

 poets.

     [முது → முதுவோர்.]

முதூசன்

 முதூசன் mutūcaṉ, பெ.(n.)

   கொட்டைப் பாக்கு; areca-nut (சா.அக.);.

முதை

முதை mudai, பெ.(n.)

   1. முதைப்புனம் (பிங்.); பார்க்க; see {}.

     “முதைச் சுவற்கலித்த முற்றா இளம்புல்” (குறுந்.204);.

   2. சங்கஞ் செடி (பரி.அக.);; mistle toe berry-thorn.

     [முது → முதை (வே.க);.]

முதைப்புனம்

முதைப்புனம் mudaippuṉam, பெ.(n.)

   1. பழங்கொல்லை (திவா.);; ground long under cultivation, dist. fr. {}.

     “முதைப் புனங் கொன்ற ஆர்கலி உழவர்” (குறுந்.155:1);.

   2. பயிரிடுவதற் குரித்தான பண்பட்ட நிலம் (வின்.);; ground cleared and prepared for tillage.

     [முது → முதை + புனம்.]

முதையல்

முதையல் mudaiyal, பெ.(n.)

   1. பழங்காடு (சூடா.);; wild jungle; ancient forest.

     “விதையர் கொன்ற முதையற் பூமி” (நற்.121);.

     “முளிந்த வோமை முதையலங் காட்டு” (அகநா.5:8);.

   2. கடுகு (சங்.அக.);; mustard.

     [முது → முதை → முதையல்.]

முத்தகம்

முத்தகம்1 muttagam, பெ.(n.)

   1. தனித்து நின்று பொருள் முடியுஞ் செய்யுள் (தண்டி2);; a stanza which, by itself, is complete in sense.

   2. இசைப் பாவகையுள் ஒன்று (சிலப்.6 : 35);; a kind of literary composition adapted to singing.

   3. ஏவுகணை (எறியாய்தம்); (யாழ்.அக.);; missile.

 முத்தகம்2 muttagam, பெ.(n.)

   1. குருக்கத்தி; common delight of the woods.

   2. கருக்குவாய்ச்சி; jagged jujube.

முத்தக்காக

முத்தக்காக muttakkāka, பெ.(n.)

   1. கோரை வகை (M.M.228);; straight sedge.

   2. கோரைக் கிழங்கு; straight sedge tuber.

முத்தக்காசை அமுது செய்விப்பது (ஈடு,1.6:1);.

முத்தங்கி

 முத்தங்கி muttaṅgi, பெ.(n.)

   முத்தாலாகிய தளர்ச்சியான மேல் சட்டை, முத்துச் சட்டை; cloak made of pearls.

     [முத்து + Skt. அங்கி]

முத்தங்கொஞ்சுதல்

முத்தங்கொஞ்சுதல் muddaṅgoñjudal,    5 செ.கு.வி.(v.i.)

முத்தமிடுதல் பார்க்க; see {}.

     [முத்தம்1 + கொஞ்சுதல்]

முத்தங்கொடுத்தல்

முத்தங்கொடுத்தல் muttaṅgoḍuttal,    4 செ. குன்றாவி.(v.t.)

முத்தமிடுதல் பார்க்க; see {}.

     [முத்தம் + கொடுத்தல்.]

முத்தங்கொள்(ளு)தல்

முத்தங்கொள்(ளு)தல் muddaṅgoḷḷudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   1. முத்தமிடுதல் பார்க்க; see {}.

     “தாய் வாய் முத்தங் கொள்ள” (பெரியபு. கண்ணப்ப. 23);.

   2. பொருந்துதல்; to touch, come in contact with.

     “சிலை முத்தங் கொள்ளுந் திண்டோள்” (சீவக.2312);.

   3. தழுவுதல், புல்லுதல்; to embrace.

     “முலை முத்தங் கொள்ள” (சீவக.2312);.

     [முத்தம் + கொள்(ளு);தல்]

முத்தடுப்பூசி

 முத்தடுப்பூசி muttaḍuppūci, பெ.(n.)

   தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தசை விறைப்பு இசிவு ஆகிய மூன்று நோய்களுக்கான தடுப்பு மருந்து; triple antigen.

     [முத்தடுப்பு + ஊசி.]

முத்தண்டு

முத்தண்டு muttaṇṭu, பெ.(n.)

   துறவிகள் வைத்திருக்கும் மூன்று பிரிவான தண்டம் (திரி தண்டம்);; triple staff of an ascetic.

     “முத்தண்டு தொட்டிழுத்தாய்” (உபதேசகா. உருத்திராக்.86);.

     [மூன்று + தண்டு.]

     [p]

முத்தண்ணா

முத்தண்ணா muttaṇṇā, பெ.(n.)

   1. தமையன்; elder brother.

   2. அசடன்; dullard, a term of abuse.

     [மூ + அண்ணா. அண்ணன் → அண்ணா. மூ = மூத்தவன். மூத்தண்ணன் → மூத்தண்ணா → முத்தண்ணா]

முத்தத்தீபம்

முத்தத்தீபம்  muttattīpam, பெ.(n.)

   கோயிலிலுள்ள விளக்கு வகை (தமிழ்விடு.முகவுரை.பக்.12);; a kind of temple lamp.

ஒருகா. முற்றம் → முத்தம்.

     [முத்தம் + Skt. தீபம் த. தீ → தீவம் → வ. தீபம்]

முத்தந்தாதல்

முத்தந்தாதல் muttandātal,    18 செ.கு.வி. (v.i.)

   முத்தமிடுமாறு கன்னம் முதலியவற்றைக் காட்டுதல்; to offer one’s cheek for a kiss.

     “என் குட்டனே முத்தந்தா” (திவ்.பெரியாழ்.3.3:2);.

     [முத்தம் + தாதல்.]

முத்தன்

முத்தன்1 muttaṉ, பெ.(n.)

   1. முத்தி பெற்றவன்; one who has attained salvation, Jivan – mukta.

     “முத்தனாய்ப் பிரகாச னாமே” (சி.சி 4 : 19);.

   2. இயல்பாகவே தளைகளிலிருந்து (பாசங்களிலிருந்து); நீங்கிய சிவன்; Siva, as being by nature free from bonds.

     “அத்தன் முத்தன்” (திருக்கோ.358);.

   3. திருமால் (வின்.);; {}.

   4. வைரவன் (பிங்.);; Bhairava.

   5. அருகன் (பிங்.);; Arhat.

   6. புத்தன் (பிங்.);; the Buddha.

     [முத்தி → முத்தன்.]

 முத்தன்2 muttaṉ, பெ.(n.)

   1. அன்பன் (பாரத. சூது.14);; one who gives pleasure, as a child.

   2. மூடன் (சது.);; fool.

முத்தன்ஆசிரியார்

முத்தன்ஆசிரியார் muttaṉāciriyār, பெ.(n.)

   20ஆம் நூற்றாண்டில் பழனிக் குறவஞ்சி என்னும் நூலை இயற்றிய தமிழ்ப் புலவர்; a Tamil poet in 20th century, author of {}.

     [முத்தன் + ஆசாரியார்.]

முத்தப்பசெட்டியார்

முத்தப்பசெட்டியார் muttappaseṭṭiyār, பெ.(n.)

   20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; Tamil Poet.

இவர், கலித்துறை அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, நேமக் கலம்பகம், செயங்கொண்டார் சதகம், செயங்கொண்ட சோழீசர் பிள்ளைத் தமிழ்,செயங்கொண்டார் வழக்கம், திருமுக விலாசம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

முத்தப்பருவம்

 முத்தப்பருவம்  muttapparuvam, பெ.(n.)

   பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் குழந்தையை முத்தந் தரும்படியாகப் பாடும் பகுதி; a section of pillaittamil which describes the stage of childhood in which the child is asked to offer its cheek for a kiss.

     [முத்தம் + பருவம்.]

முத்தமாலை

முத்தமாலை muttamālai, பெ.(n.)

   முத்து மாலை; garland of pearl.

     “முத்தமாலை முடிமுதல் வருட” (பெருங். இலாவண.4:136);.

     [முத்து + மாலை.]

முத்தமிடு – தல்

முத்தமிடு – தல் muddamiḍudal,    18 செ. குன்றாவி. (v.t.)

   அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகளாற் பயிறல்; to kiss.

     [முத்தம் + இடுதல்.]

முத்தமிழுரியோன்

முத்தமிழுரியோன் muttamiḻuriyōṉ, பெ. (n.)

   1. முத்தமிழ்முனிவன் (யாழ்.அக.); பார்க்க; see {}.

   2. வயிரவன் (சது.);; Bhairava.

     [முத்தமிழ் + உரியோன்.]

முத்தமிழ்

முத்தமிழ் muttamiḻ, பெ.(n.)

   இயல், இசை, நாடகம் என்னும் மூவகையான தமிழ்; the three kinds of literature in Tamil viz., iyal, {}.

     “மும்முரசு முத்தமிழும்” (வள்ளுவ மா.10);.

     [மூன்று + தமிழ்.]

முத்தமிழ்க்கவிராயர்

 முத்தமிழ்க்கவிராயர் muttamiḻkkavirāyar, பெ.(n.)

   சுசீந்திரத் தலபுராணம் என்னும் நூலை இயற்றிய புலவர்; a poet author of {}.

     [முத்தமிழ் + கவிராயர்.]

முத்தமிழ்க்கவிவீரராகவமுதலியார்

முத்தமிழ்க்கவிவீரராகவமுதலியார் muddamiḻkkavivīrarākavamudaliyār, பெ. (n.)

   பிற்காலத் தமிழ்ப் புலவர்; a Tamil poet who belongs to the later period.

     [முத்தமிழ்க்கவி + வீரராகவ + முதலியார்.]

இவர் வரலாற்றைத் திருவேங்கடக் கலம்பகம் முகவுரையில் வை.மு.சடகோப ராமானுசாச்சாரியர் எழுதியிருக்கிறார். இவர் 500 ஆண்டுக்கு முன்பிருந்தவர். இவர் பொன் விளைந்த களத்தூரிற் பிறந்தவர். திருக்கழுக்குன்றப் புராணஞ் செய்தவர்.ஈழம் போய் யானைக் கன்றும் வளநாடும் பெற்றவர். கண்டசுத்தி பாடுபவர். இவர் செய்த நூல்கள்

   1. திருவேங்கடக் கலம்பகம்,

   2. திருக்கண்ண மங்கை மாலை,

   3. கச்சிப் பெருந்தேவித் தாயார் பஞ்சரத்தினம்,

   4. பாலூர்க் கலம்பகம்,

   5. செய்யூர் பிள்ளைத் தமிழ்.

முத்தமிழ்முனிவன்

முத்தமிழ்முனிவன் muttamiḻmuṉivaṉ, பெ.(n.)

   அகத்தியன்; Agastya as the exponent of {}.

     “முத்தமிழ் முனிவன் கேட்ப” (காஞ்சிப்பு.வீரராக.6);.

     [முத்தமிழ் + முனிவன்.]

முத்தமுண்(ணு)தல்

முத்தமுண்(ணு)தல் muddamuṇṇudal,    13 செ.குன்றாவி. (v.t.)

முத்தமிடுதல் பார்க்க; see {},

     “தணிவற முத்த முண்டாள்” (திருவாலவா.45:15);.

     [முத்தம் + உண்(ணு);தல்.]

முத்தம்

முத்தம்1 muttam, பெ.(n.)

   1. உதடு (பிங்.);; lip.

   2. அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகளால் தொடுகை (சூடா.);; kiss.

     “மணிவாயிடை முத்தம் தருதலும்” (திவ்.பெருமாள்.7: 5);.

     “முறிமேனிமுத்த முறுவல்” (குறள், 1113);.

   3. முத்தப்பருவம் (இலக்.வி.806); பார்க்க; see muttapparuvam.

   4. மருதநிலம் (சூடா.);; agricultural tract.

     [முல் → முது → முத்து → முத்தம். ‘அம்’ பெருமைப் பொருட் பின்னொட்டு.]

 முத்தம்2 muttam, பெ.(n.)

   1. முத்து; pearl.

     “சீர்மிகு முத்தந் தைஇய” (பதிற்றுப்.39);.

     “மண்ணாமுத்த மரும்பிய புன்னை” (அகநா. 30:13);.

     “ஒலிபன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்தது” (நற்.202, 2);.

   2. பேராமணக்குக் கொட்டை (தைலவ. தைல.);; castor bean.

   3. பச்சைக்கல்லின் குணங்களுளொன்று (திருவிளை.மாணிக்.67);; a superior quality of emerald.

   4. முத்தாபலம், 2 பார்க்க; see {}.

வ. முக்த.

     [முத்து → முத்தம். முத்து + அம் முத்தம். ‘அம்’ பெருமைப் பொருட் பின்னொட்டு. ஒ.நோ. விளக்கு → விளக்கம்.]

 முத்தம்3 muttam, பெ.(n.)

   ஆண் குறி; penis,

     “அச்சுதன் முத்த மிருந்தவா காணீரே” (திவ்.பெரியாழ்.1. 2:6);.

 முத்தம்4 muttam, பெ.(n.)

   1. அன்பு (சூடா.);; love, endearment.

   2. மகிழ்ச்சி (அரு.நி.);; joy.

     [முத்து → முத்தம்.]

 முத்தம்5 muttam, பெ.(n.)

   1. முத்தாசனம் பார்க்க; see {}.

     “முத்தமென லிடப்பரட்டாற் சீவனியை யழுத்தி வலக்காலொத்த பரடப் பரட்டின் கீழழுந்த வைகுதல்” (பிரபோத.44 : 9);.

   2. வீடுபேறு; salvation.

     “எய்திய பெத்தமு முத்தமும்” (திருமந்.2256);.

   3. விடுதலை (யாழ்.அக.);; release.

 முத்தம்6 muttam, பெ. (n.)

   1. கோரை (நாமதீப.);; sedge.

   2. முத்தக்காசு (பாலவா.761); பார்க்க; see {}.

 முத்தம்7 muttam, பெ.(n.)

   முற்றம் என்ற சொல்லின் பேச்சுவழக்கு; correction of word ‘{}’ the court yard of house.

முத்தரசநல்லூர்

 முத்தரசநல்லூர் muttarasanallūr, பெ. (n.)

   திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு ஊர்; a village in Tiruchi.

     [மூன்று→மூ+தரையர்+நல்லூர்]

முத்தரையர் என்னும் பெயர் வாய்ந்த பண்டைக் குலம் ஒன்று பழந்தமிழ் நூல்களிலே பேசப்படு கின்றது. அவர்கள் சிறந்த படைவீரராக விளங்கினர்.

முத்தரசன்

 முத்தரசன் muttarasaṉ, பெ. (n.)

   இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்; a village in Ramanathapuram.

     [முத்தரையன்-முத்தரசன்]

முத்தரசபுரம்

 முத்தரசபுரம் muttarasaburam, பெ. (n.)

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊர்:

 a village in Thanjavur.

     [முத்தரையன்-முத்தரசன்+புரம்]

சத்துரு பயங்கர முத்தரையன், பெரும் பிருகு முத்தரையன் முதலியோரின் வீரச் செயல்களை வரலாறு குறிக்கின்றது.

முத்தரதி

முத்தரதி muddaradi, பெ.(n.)

   1. கோரைக் கிழங்கு; a grass Cyperus rotundus.

   2. அமுக்கிராக் கிழங்கு; a shrubWithania coagulens.

முத்தரை

முத்தரை muttarai, பெ.(n.)

   அரையிலணியும் முத்துவடம்; waist band made of pearls.

     “பிறங்கிய முத்தரை முப்பத் திருகாழ்” (சிலப்.6:87);.

     [முத்து + அரை.]

     [p]

முத்தரையர்

முத்தரையர் muttaraiyar, பெ.(n.)

   வேளிரின் உறவு முறையினராகவும் பல்லவர் ஆட்சியில் சிற்றரசர்களாகவும் இருந்த மன்னர் குலமரபினர்; tutelary heritage of {} and the petty of Pallava king.

     “பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும்” (நாலடி, 200);.

     [ஒருகால் : மூன்று + தரை முத்தரை → முத்தரையர்.]

தஞ்சைக்கு அருகில் உள்ள செந்தலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள். தஞ்சைக்கருகே உள்ள வல்லம் என்ற ஊரும் இவர்களுக்கு தலைநகராக இருந்தது. பல்லவர்களுக்குக் கீழ் சிற்றரசர்களாக இம்மரபினர் வாழ்ந்துள்ளனர். பெரும்பிடுகு, மாற்பிடுகு, விடேல் பிடுகு, பகாபிடுகு போன்ற பல்லவ மரபிற்குரிய பட்டங்களை இவர்களும் கொண்டிருந்தனர். இம்மரபினரின் வரையா வண்மை பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் கூறப்பட்டுள்ளது (பிற்.சோழ.வர.சதாசிவப்பண்டார. பக்கம்.14);.

முத்தர்

 முத்தர் muttar, பெ.(n.)

   மேடு, திடர் (வின்);; mound, hillock.

முத்தலாபுரம்

 முத்தலாபுரம் muttalāpuram, பெ.(n.)

   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தில் வைப்பாற்றின் கரையில் எட்டையாபுரம் அருப்புக்கோட்டைச் சாலையிலுள்ள ஊர்; a city in Tuticorin district in {} taluk, on the way from {} to {}-puram, situated on the banks of Vaipparu.

முத்தலை

 முத்தலை muttalai, பெ.(n.)

முத்தலைக் கழு பார்க்க (திவா.);; see {}.

     [மூன்று + தலை.]

முத்தலைக்கழு

முத்தலைக்கழு muttalaikkaḻu, பெ.(n.)

   முக்கோல் (சூலம்); (பிங்.);; the trident, as having three heads or spikes.

     “முத்தலைக் கழுக்கள் வீசுவன” (திருவிளை. திருநகர.24);.

     [முத்தலை + கழு.]

முத்தலைவேலோன்

 முத்தலைவேலோன் muttalaivēlōṉ, பெ. (n.)

   வைரவன் (சது.);; god of Bhairava.

     [மூன்று + தலை + வேலோன்.]

மூன்று பிரிவாக உள்ள வேலை, படையாகக் கொண்டவன்.

முத்தலைவேல்

 முத்தலைவேல் muttalaivēl, பெ.(n.)

முத்தலைக்கழு பார்க்க (பிங்.);; see {}.

     [மூன்று + தலை + வேல்.]

முத்தளகி

 முத்தளகி muttaḷagi, பெ.(n.)

முருங்கை பார்க்க; see {}.

முத்தழலோர்

முத்தழலோர் muttaḻlōr, பெ.(n.)

   பிராமணர்; Brahmins.

     “முத்தழலோர் மனைகடொறும்” (தேவா.113, 2);.

முத்தழல்

முத்தழல் muttaḻl, பெ.(n.)

முத்தீ பார்க்க; see {}.

     “முத்தழல் வேள்வி” (காசிக. சிவசன். தெய்.23);.

     [முன்று + தழல். தழல் = நெருப்பு, தணல்.]

முத்தவள்ளி

முத்தவள்ளி muttavaḷḷi, பெ.(n.)

   முத்துக் கோத்த கொடிபோல் அமைந்த கழுத்தணி; a garland of pearls, as shaped like a creeper.

     “முத்த வள்ளியொடு மும்மணி சுடர” (பெருங்.உஞ்சைக்.34:203);.

     [முத்தம் + வள்ளி.]

முத்தவி

முத்தவி muttavi, பெ.(n.)

   ஆமணக் கெண்ணெய் (சங்.அக.);; castor oil.

     [முத்து2 + அவி. அவி = அவித்தல், ஆமணக்குக் கொட்டையை அவித்துப் பெறும் எண்ணெய்.]

முத்தா

 முத்தா muttā, பெ.(n.)

   தமையன் (மாலியம்);; elder brother.

     [முத்தண்ணா → முத்தா.]

முத்தாகாரம்

 முத்தாகாரம் muttākāram, பெ.(n.)

   முத்துச் சிப்பி (வின்.);; pearl-oyster.

     [முத்து + காரம் – முத்துகாரம் → முத்தாகாரம். Skt கார → த. காரம்.]

முத்தாசனம்

 முத்தாசனம் muttācaṉam, பெ.(n.)

   இருக்கை (ஆசனம்); ஒன்பதனுள் இடது கணுக்காலை மலவாயின் (குதத்தின்); கீழும், வலது கணுக்காலை இடது கணுக்காலின் கீழும் வைத்துத் தலை முதலியவை நேர் நிமிர இருக்கும் ஒக (யோக); இருக்கை வகை; a yogic posture which consists in placing the left ankle beneath the region of the anus and the right ankle under the left so placed, while the head and neck are held straight with the body, one of nine {}.

முத்தாடு – தல்

முத்தாடு – தல் muddāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   முத்தமிடுதல்; to kiss.

     “முகத்தின் முத்தாடியும்” (காஞ்சிப்பு.திருக்கண்.பு.137);.

தெ. முத்தாடு

     [முத்து + ஆடு-தல்.]

முத்தாதனம்

முத்தாதனம் muttātaṉam, பெ.(n.)

   1. முத்தாசனம் பார்க்க (வின்.);; see {}.

   2. காலிரண்டும் நீட்டி யிருக்கும் ஒகவகை (தத்துவப்.107, உரை);; a yogic posture which consists in sitting with both legs stretched out.

     [முத்தாசனம் → முத்தாதனம்.]

முத்தாதி

முத்தாதி muttāti, பெ.(n.)

   1. முத்தக்காசு பார்க்க; see {}.

   2. அமுக்கிரா; Indian winter cherry.

     [முத்தம் + ஆதி.]

முத்தாத்துக்கோல்

முத்தாத்துக்கோல் muttāttukāl, பெ. (n.)

   தூக்குக் கோல் ((G.Sm.D.I., 284);; balance.

     [முள் + தாற்றுக்கோல்.]

     [p]

முத்தாத்துமா

 முத்தாத்துமா muttāttumā, பெ.(n.)

   வீடு பெற்ற உயிர் (வின்.);; soul which has attained salvation.

     [முத்தி + Skt. ஆத்துமா. ஆத்துமா → த. ஆதன்.]

முத்தாந்தம்

முத்தாந்தம் muttāndam, பெ.(n.)

   முத்தி யாகிய உயர் நிலை; salvation, as the highest state.

     “அவமாகாச் சித்தர் முத்தாந்தத்து வாழ்வர்” (திருமந்:497);.

     [முத்தி + Skt. ஆந்தம்.]

முத்தானந்தர்

முத்தானந்தர் muttāṉandar, பெ.(n.)

   குறவஞ்சி நூலை எழுதிய புலவர்;  a poet, author of {}.

இவர் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆற்றுாரில் வாழ்ந்தவர்.

முத்தானம்

முத்தானம் muttāṉam, பெ.(n.)

   அடுப்பு (நாமதீப.496);; oven.

முத்தான்மா

 முத்தான்மா muttāṉmā, பெ.(n.)

முத்தாத்துமா பார்க்க (வின்.);; see {}.

முத்தாபலம்

முத்தாபலம் muttāpalam, பெ.(n.)

   1. முத்து (இலக்.அக.);;  pearl.

   2. சங்கஞ்செடி (திவா.);;  mistle-toe berry thorn.

     [முத்து + Skt. ஆபலம்.]

முத்தாபி

 முத்தாபி muttāpi, பெ.(n.)

   மாட்டுத் தரகர் பேச்சு மொழி. இது ஒரு குழூஉக்குறி. நூற்றுக்கு மேல் வரும் எழுபத்தைந்தைக் குறிக்க கறவலில் வழங்கும் சொல்; a cant used by cow brokers, to indicate seventy five rupees, that counts after hundred.

முத்தாப்பு செய்-தல்

முத்தாப்பு செய்-தல் muttāppuseytal,    1 செ.குன்றாவி, (v.t.)

   சிறப்பு செய்தல்; to honour.

     [முத்தாய்ப்பு+செய்தல்]

முத்தாமணக்கு

முத்தாமணக்கு muttāmaṇakku, பெ.(n.)

   ஆமணக்கு வகை (சங்.அக.);; a kind of castor plant.

     [முத்து2 + ஆமணக்கு.]

முத்தாயலே

 முத்தாயலே muttāyalē, பெ. (n.)

   எதிர் வழக் காளி (C.G.);; the accuseed the defendant.

     [Ar. {} → த. முத்தாயலே]

முத்தாய்

 முத்தாய் muttāy, பெ. (n.)

   வழக்காளி (C.G.);; the complainant, the plaintiff.

     [Ar. {} → த. முத்தாய்]

முத்தாய்ப்பு

 முத்தாய்ப்பு muttāyppu, பெ.(n.)

   தொடர்ந்து நிகழ்ந்தவற்றில் சிறப்பான, கச்சிதமான முடிவு; effective or precise end.

மாநாட்டுக்கே முத்தாய்ப்பாக இருந்தது தலைவரின் முடிவுரை.

     [முத்து + ஆய்ப்பு.]

முத்தாரம்

முத்தாரம் muttāram, பெ.(n.)

   முத்து மாலை; garland of pearls.

     “கவரியுங் கடகமுங் கதிர்முத் தாரமும்” (பெருங்.உஞ்சைக். 32 : 74);.

     [முத்து + ஆரம். ஆரம் = மாலை.]

     [p]

முத்தாலதை

 முத்தாலதை muddāladai, பெ.(n.)

முத்தாரம் பார்க்க (யாழ்.அக.);; see {}.

முத்தாலத்தி

முத்தாலத்தி muttālatti, பெ.(n.)

   ஆலத்தி வகை (அன்னாலத்தி);; waving balls of boiled rice coloured with saffron, as before an idol.

     “முத்தாலத்திகொண் டெண்ணாயிர மடவார்சூழ” (தமிழ்நா.240);.

     [முத்து + ஆலத்தி.]

முத்தாளம்

முத்தாளம் muttāḷam, பெ.(n.)

   1. காலை;  morning.

   2. காலை யுணவு;  morning meal dist. fr. {}.

   3. காலைப் படையல்;  morning offerings.

     “பூசை நமக்காரம் அத்தாளம் முத்தாளம் வச்சு” (TA.S.5:116);.

     [முன் + தாலம் – முன்தாலம் → முத்தாளம்.]

முத்தாவணம்

முத்தாவணம் muttāvaṇam, பெ.(n.)

   சோழர் காலத்தில் வாங்கப்பட்ட வரி வகை (M.E.R.1916, P.119);; a kind of tax.

முத்தாவலி

 முத்தாவலி muttāvali, பெ.(n.)

முத்தாவளி பார்க்க (இலக்.அக.);; see {}.

முத்தாவளி

முத்தாவளி muttāvaḷi, பெ.(n.)

   1. முத்து மாலை;  garland of pearls.

   2. பண் வகை;  a musical mode.

     [முத்து + ஆவளி.]

முத்தி

முத்தி1 mutti, பெ.(n.)

   முத்தம்; kiss.

     “மணிவாயில் முத்தி தரவேணும்” (திருப்பு:183);.

     “புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு ” (புறநா.41:14);.

     [முல் → முது → முத்து → முத்தி.]

 முத்தி2 mutti, பெ. (n.)

   1. விடுபடுகை; release.

   2. துறக்கம் (மோட்சம்);; final beatitude or emanicipation, release of the soul from metempsychosis.

     “முத்திக் குழன்று” (திருவாச11 : 12);.

   3. ‘பதமுத்தி பரமுத்தி யென்ற இருவகை முத்திநிலை’ (வேதா.சூ.56, உரை);; stage in salvation, of two kinds, viz. padamutti, paramutti.

பிராக். முத்தி.

     [முத்துதல் = பொருந்துதல், சேர்தல். முத்து → முத்தி. ஆதன் இறைவனை அடையும் இறுதிநிலை.]

 முத்தி3 mutti, பெ.(n.)

   திசை (யாழ்.அக.);; direction.

 முத்தி mutti, பெ.(n.)

   1. திருமகள்;  Laksmi.

   2. தேமல்;  yellow spreading spots on the breasts of women.

முத்திகம்

முத்திகம் muttigam, பெ.(n.)

   108ல் உபநிட தங்களுள் ஒன்று; an Upanisad one of 108.

முத்திக்கை

 முத்திக்கை muttikkai, பெ.(n.)

   அரண் வளைப்பு (யாழ்.அக.);; siege.

க. முத்திகெ

     [முற்றுகை → முத்திக்கை.]

முத்திதசை

 முத்திதசை muddidasai, பெ.(n.)

   உலகத் தொடர் அனைத்தினின்றும் விடுபட்ட நிலை; a stage when one is free from all worldly attachments.

     [முத்தி + தசை.]

முத்திதாசாரியன்

முத்திதாசாரியன் muttitācāriyaṉ, பெ. (n.)

   கொள்கை பின்பற்றும் மாணாக்கனுக்கு வீடளிக்கவல்ல குரு (சைவச. ஆசா.31, உரை);; guru, who is able to secure final beatitude for his disciple.

     [முத்து → முத்தி + தா + ஆசாரியன்.]

முத்திதிசை

 முத்திதிசை muddidisai, பெ.(n.)

முத்திதசை (வின்.); பார்க்க; see {}.

     [முத்தி + திசை.]

முத்திநாடு

முத்திநாடு muttināṭu, பெ.(n.)

புத்தேளிர் வாழும் துறக்க உலகு,

 heaven.

     “முத்திநாட்டின் முகத்தினை முட்டுற” (கம்பரா. முதற்போர்.41);

     [முத்தி + நாடு.]

முத்திநெறி

முத்திநெறி muttineṟi, பெ.(n.)

   துறக்கநெறி; way to final beatitude.

     “முத்திநெறி யறியாத மூர்க்கரொடு” (திருவாச. 51:1);

     [முத்தி + நெறி.]

முத்தின்குற்றவகை

முத்தின்குற்றவகை muttiṉguṟṟavagai, பெ.(n.)

   குறைபாடுகளுடன் உள்ள வகையில் ஒன்றான முத்து; blemish in a pearl.

     [முத்தி + இன் + குற்றவகை.]

அக்குற்றங்கள் முறையே வரை, கறை, குரு, கறடு, அப்பிரம், திரங்கல், தோல் முதலியன (தெ.இ.கல்.தொ.2, கல்.3, 86, 93);.

முத்தின்சலாபம்

 முத்தின்சலாபம் muttiṉcalāpam, பெ.(n.)

   முத்துக் குளிக்கும் இடம்; place of pearl fishery.

     “முத்தின் சலாபமு முத்தமிழ்ப் பொதியிலும்” (முதற்குலோத்துங்கன் – மெய்க்கீர்த்தி);.

     [முத்து + இன் + Skt. சலாபம்.]

முத்தின்சிடுக்கு

முத்தின்சிடுக்கு muttiṉciḍukku, பெ.(n.)

   முத்தாலான காதணி; pearl ear-ring.

     “முத்தின் சிடுக்கு, ஒரணையிற் கோத்த முத்து பதினெட்டும் பொன்னும் உட்பட” (தெ.கல். தொ.2: 2, கல்.51);.

     [முத்து + இன் + சிடுக்கு. சிடுக்கு = காதணி வகை.]

முத்தின்சூடகம்

முத்தின்சூடகம் muttiṉcūṭagam, பெ.(n.)

   சிவப்புக்கல் மணி வைத்திழைக்கப்பட்ட பொன் வளையல்; golden bangles decorated and set up with gem.

     “முத்தின் சூடகம் ஒன்றில் துண்டம் இரண்டிற் கறடிகை ஆறும் கேவணம் வைத்து விளக்கிக் கட்டின பளிங்கு எழுபத்தொன்பதும்” (தெ.இ.கல். தொ.2:2 கல்.51);.

     [முத்து + இன் + சூடகம். சூடகம் = கைவளை.]

முத்தின்வளையல்

முத்தின்வளையல் muttiṉvaḷaiyal, பெ.(n.)

   முத்துக்கள் பதித்தும் கட்டியும் செய்யப்பெறும் பொன் வளையல்; golden bangles decorated and set up with pearls.

     “பொன்கொடு செய்த முத்தின்வளையல் ஒன்று-கோத்த முத்து முன்னூறு ஐம்பத்து மூன்றினால்” (தெ.இ.கல். தொ.2, கல்.3);.

     [முத்து + இன் + வளையல்.]

முத்திபஞ்சாட்சரம்

முத்திபஞ்சாட்சரம் muttibañjāṭcaram, பெ.(n.)

     ‘ஓம்’ சேர்ந்த ஐந்தெழுத்து மந்திரம் (பஞ்சாக்கர. 45, உரை);;

 a form of {} with pranava.

     [முத்தி + Skt:பஞ்சாட்சரம்.]

முத்திபதம்

முத்திபதம் muddibadam, பெ.(n.)

   1. வீடுபேறு (மோட்சபதவி);; the state of final beatitude.

   2. அறிவுநிலை (யாழ்.அக.);; the state of spiritual knowledge.

     [முத்தி + பதம்.]

முத்திப்பழுது

முத்திப்பழுது muddippaḻudu, பெ.(n.)

   மலம் முற்றும் நீங்கிய முத்திநிலை இல்லை யென்னுங் கொள்கை (சிவப்பிர.36);; doctrine which holds that there is no absolute salvation.

     [முத்தி + பழுது.]

முத்திப்பேறு

 முத்திப்பேறு muttippēṟu, பெ.(n.)

   துறக்க வாழ்வு (மோட்ச வாழ்வு); (யாழ். அக.);; attainment of final beatitude.

மறுவ. வீடுபேறு.

     [முத்தி + பேறு.]

முத்திமார்க்கம்

முத்திமார்க்கம் muttimārkkam, பெ.(n.)

   1. முத்திநெறி பார்க்க; see {}.

   2. கருமநெறிவழி; the course of karma.

     [முத்தி + Skt. மார்க்கம். மார்க்கம் = வழி.]

முத்திமுதல்

முத்திமுதல் muddimudal, பெ.(n.)

   முத்தியைப் பெறுதற்கு முதலாகிய ஆதன்; soul, as eligible for salvation.

     “முத்திமுதற்கே மோகக் கொடி படர்ந்து” (திருவுந்தி41);.

     [முத்தி + முதல்.]

முத்திமுத்திரை

முத்திமுத்திரை muttimuttirai, பெ.(n.)

   தாமிரபருணியாறு (நாமதீப.525);; a river {}.

முத்தியெறி-தல்

முத்தியெறி-தல் muddiyeṟidal,    2 செ. குன்றாவி. (v.t.)

   கழித்தல்; to remove entirely, put away.

     “முத்தியெறிந்து விடற்கு” (கலித்து. 64);.

     [முத்து + எறி-தல்.]

முத்திரமம்

 முத்திரமம் muttiramam, பெ. (n.)

   இலவங்கப் பட்டை (சங்.அக.);; cinnamon.

முத்திரா

 முத்திரா muttirā, பெ.(n.)

   சின்ன முள்ளங்கி; a kind of small radish.

முத்திராசர்

முத்திராசர் muttirācar, பெ.(n.)

   18ஆம் நூற்றாண்டில் கைலாய மாலை என்னும் நுாலை இயற்றிய தமிழ்ப் புலவர்; a Tamil poet author of {} in 18th century.

முத்திராசாலை

 முத்திராசாலை muttirācālai, பெ.(n.)

   அச்சுக்கூடம்; printing press.

     [முத்திரைசாலை → முத்திராசாலை.]

முத்திராதானம்

முத்திராதானம் muttirātāṉam, பெ.(n.)

   நெருப்பில் சூடேற்றப்பெற்ற சங்கு சக்கர முத்திரைகளைத் தோள்களில் ஒற்றும் சடங்கு; ceremony of initiation by branding the emblems of {} and {} on a person’s shoulders.

     “சாத்திமேன் முத்திராதானம்” (பிரபோத.11: 11);.

     [முத்திரை + Skt. தானம்.]

முத்திராதாரணம்

 முத்திராதாரணம் muttirātāraṇam, பெ.(n.)

   சங்கு சக்கர முதலிய முத்திரைகளை உடம்பில் ஒற்றிக் கொள்ளுகை; wearing the emblems of {} impressed on one’s body.

     [முத்திரை + Skt. தாரணம்.]

முத்திராவதாரம்

முத்திராவதாரம் muttirāvatāram, பெ.(n.)

   காதணி வகை (MER.222 of 1921);; an ear – ornament.

முத்திரி

முத்திரி1 muttirittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   முத்திரையிடுதல்; to seal.

     [முகம் + திரம்-முகத்திரம் → முகத்திரி. முத்திரி.]

 முத்திரி2 muttiri, பெ.(n.)

   1. உட்டுளை யமைந்த காதணி வகை; a kind of ear ornament, in the form of a hollow cylinder.

   2. அடையாளம் (யாழ்.அக.);;  sign, seal.

     [முகம் + திரம்-முகத்திரம் → முகத்திரி → முத்திரி.]

முத்திரிகை

 முத்திரிகை muttirigai, பெ. (n.)

   எழுத்து வெட்டப் பெற்ற மோதிரம் (பிங்.);; engraved signet or seal.

     [முகம் + திரம் – முகத்திரம் → முகத்திரி → முத்திரி → முத்திரிகை.]

முத்திரிவள்ளம்

 முத்திரிவள்ளம் muttirivaḷḷam, பெ.(n.)

   ஒருவகை முகத்தல் அளவை; a kind of measure of capacity.

     [முத்திரை → முத்திரி + வள்ளம்.]

நில உரிமையாளர்கள் குத்தகைப்படி வாங்கப் பயன்படுத்தும் சரியான அளவுள்ள முத்திரையிட்ட பழைய முகத்தல் அளவை (கோவை);.

முத்திருக்கஞ்செடி

 முத்திருக்கஞ்செடி muttirukkañjeḍi, பெ. (n.)

   செந்துருக்கஞ் செடி (யாழ்.அக.);; safflower -Spiny saffron.

முத்திருக்கன்

முத்திருக்கன் muttirukkaṉ, பெ.(n.)

   1. இலைக் கள்ளி; leaf spurge-Euphorbia nirulia.

   2 . நிலக் கடம்பு; justicia acaulis (சா.அக.);.

முத்திருக்கன்செவி

முத்திருக்கன்செவி muttirukkaṉcevi, பெ.(n.)

   1. நிலக்கடம்பு (மூ.அ.);; justicia acaulis.

   2. ஓர் செடி; a plant – Asara bucca, Asarum Europacum.

   3. எழுத்தாணிப்பூடு; launea pinnati fida.

முத்திரை

முத்திரை muttirai, பெ.(n.)

   1. அரசு, அமைப்பு முதலியவற்றின் சின்னம், ஒரு அலுவலகத்தை அல்லது அதிகாரியை முதன்மைப்படுத்தும் குறியீடு; seal, emblem.

சோழர் முத்திரை பொறித்த காசுகள். உதவித் தொகைக்கான விண்ணப்பத்தில் கல்லூரி முதல்வரின் கையெழுத்துடன் முத்திரையும் இருக்க வேண்டும்.

   2. நேரி (வாக்கு);ச் சீட்டு முதலியவற்றில் குறிப்பிட்ட வடிவத்தில் பதிக்கும் குறியீடு; mark that is to be placed on a ballot paper, etc.

நாற்காலிச் சின்னத்தில் முத்திரையிடுங்கள் என்று ஒலி பரப்பிக் கொண்டு வண்டி சென்றது.

   3. அஞ்சல் தலை; postage stamp.

ஐந்து உரூபாய் முத்திரை ஒட்டியது போதவில்லை.

   4. கடிதங்களின்மேல் ஒட்டப்பட்டுள்ள அஞ்சல் தலையைச் சரிபார்த்து அதன் மீதும் கடிதங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது கடிதங்களின் மேலும் அஞ்சலகங்களில் இடப்படும் நாளிட்ட சிறு அச்சு; a small date seal print laid in post offices, at that time of taken to verify the postal stamp and at the time of deliveries. அஞ்சலக முத்திரையைப் பார்த்தால் அது என்றைக்கு அஞ்சல் செய்யப்பட்டது எனப்து தெரியும். 5. உறை முதலியவை பிரிக்கப்படாமல் இருப்பதற்கான அரக்குப் பதிவு;

 wax seal.

முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள்.

   6. ஒருவரின் நடத்தை, தனித்தன்மை முதலியவற்றைத் தெரிவிக்கக் கூடிய அடையாளம்; mark or stamp, brand.

நாமாக உதவி செய்யப் போனால் இளிச்சவாயன் என்று முத்திரை குத்திவிடுவார்கள். திரைப்படத்தின் காதல் காட்சிகளில் இயக்குநரின் முத்திரை தெரிகிறது.

   7. ஒரு கருத்தைக் குறிப்பாகத் தெரிவிக்கும் கை அசைவு; stylized sign made with hands expressive of one’s thoughts, feelings, etc.

   8. அடையாளம்; impress, mark.

     “அசாதாரன முத்திரை யோடே வரவேணு மென்கிறார்” (திவ். பெரியாழ்.1.8:9, வியா.);.

   9. இலச்சினை;  seal signet.

     “பொறித்த முத்திரையும் வேறாய்” (திருவாலவா.24:8);.

   10. போர் வீரன் அல்லது அவனது ஏவலர்க்குரிய அடையாள வில்லை; badge of a soldier or peon.

   11. பதிகம் சிற்றிலக்கியம் முதலியவற்றின் இறுதியில் வரும் ஆக்கியோன் பெயர்ப்பதிவு; composer’s name introduced at the end of a song or poem, as his mark.

   12. காதிலணியும் குண்டல வகை; ear ornament.

     “காதின் மேற் செய்ய முத்திரையும்” (திருவாலவா.13:4);.

   13. பூசை செய்யும் போது காட்டும் கையடையாளம்; hand-pose in worship.

     “திருந்த முத்திரை சிறப்பொடு காட்டி” (பதினொ.நக்கீர. திருக்கண் மறம். அடி.55);.

   14. கையாற் காட்டும் நாட்டியக் குறி;  hand-pose.

     ‘இறைவன் மோன முத்திரையத்தனாய்’ (திருமுரு.112, உரை);.

   15. வங்கியம், (நாதசுரம்); வாசிக்கும்போது தொழிற்படாத துளை (சிலப்.17, 3, உரை);; the hole in a flute or pipe which is not fingered while playing.

     “முத்திரையே முதலனைத்து முறைத்தானஞ் சோதித்து” (பெரியபு. ஆனாய.24);.

     [முகம் + திரம். முகத்திரம் (முத்திரம்); → முத்திரை. ஒ.நோ.மாத்திரம் → மாத்திரை. வடவர் முத்ர (மகிழ்ச்சியான); என்னுஞ்சொல்லை மூலமாகக் காட்டுவர் (வ.மொ.வ.72);.]

முத்திரை யென்பது அரசனுடைய திருமுகத்தில் மையாலும் அரக்காலும் மண் என்னும் சாந்தாலும் பொறிக்கப்படும் அடையாள வடிவம். மூவேந்தர்க்கும் அவரவர் கொடியிலெழுதப்பட்ட வடிவமே முத்திரையாகவுமிருந்தது.

ஒர் அரசன் தன்னால் வெல்லப்பட்ட அரசரின் முத்திரைகளையும் தன் முத்திரையுடன் சேர்த்துப் பொறிப்பது வழக்கம். செங்குட்டுவன் மும்முத்திரைகளையும் அதிகமான் ஏழு முத்திரை களையும் உடையராயிருந்தனர் (பழ.த.ஆ. பக்.22);.

 முத்திரை muttirai, பெ. (n.)

பெருவங்கிய (நாகசுர);த்தின் உறுப்புகளில் ஒன்று

 a part of nadaSvaram.

     [முத்து-முத்திரை]

முத்திரைக்கடுதாசி

 முத்திரைக்கடுதாசி muttiraikkaḍutāci, பெ.(n.)

   முத்திரையிட்ட ஆவணம் (C.G.);; stamped paper.

     [முத்திரை + கடுதாசி.]

முத்திரைக்கணக்கர்

முத்திரைக்கணக்கர் muttiraikkaṇakkar, பெ.(n.)

   கோயிற்பணியாளருள் ஒரு வகையினர் (மீனாட்.சரித்.1: 2);; a class of temple servant.

     [முத்திரை + கணக்கர்.]

முத்திரைக்கம்பு

 முத்திரைக்கம்பு muttiraikkambu, பெ.(n.)

   முத்திரையச்சு (வின்.);; seal.

     [முத்திரை + கம்பு.]

முத்திரைக்குத்திப்பார்ப்பார்

 முத்திரைக்குத்திப்பார்ப்பார் muttiraikkuttippārppār, பெ.(n.)

சங்கு சக்கர முதலிய அடையாளங்களை உடலில் சந்தனத்தாற் பதித்துக் கொள்வோரான மாத்துவப் பார்ப்பனர் (இ.வ.);; {}

 Brahmins who impress, with sandal paste, the marks of {} of {} different parts of their persons.

     [முத்திரை + குத்து + பார்ப்பார்.]

முத்திரைக்கூடம்

முத்திரைக்கூடம் muttiraikāṭam, பெ. (n.)

   1. காவலறை (யாழ். அக.);;  prison.

   2. பண்டங்களின் மேல் முத்திரையிடும் இடம் (வின்.);; place where goods are stamped.

     [முத்திரை + கூடம்.]

முத்திரைக்கோல்

முத்திரைக்கோல் muttiraikāl, பெ.(n.)

   1. முத்திரையச்சு (வின்.);; seal.

   2. கூலக் குவியலிற் குறியிடுவதற்குதவும் மரத்தினா லியன்ற அடையாளக் கோல்; wooden seal for marking a heap of grain.

     [முத்திரை + கோல்.]

முத்திரைச்சங்கு

முத்திரைச்சங்கு muttiraiccaṅgu, பெ.(n.)

   சங்கு வகை; a kind of conch.

     “முத்திரைச் சங்கொன் றூத” (தெ.இ.கல். தொ.ii, 275 : 11);.

     [முத்திரை + சங்கு.]

முத்திரைச்சூடு

 முத்திரைச்சூடு muttiraiccūṭu, பெ. (n.)

   கால்நடைகளுக்கு இடும் குறியீடு (வின்.);; branding of animals.

     [முத்திரை + சூடு.]

     [p]

முத்திரைச்சேவகன்

 முத்திரைச்சேவகன் muttiraiccēvagaṉ, பெ.(n.)

   முத்திரை வில்லையை அணியும் பணியாள்; peon wearing a badge.

     [முத்திரை + சேவகன்.]

முத்திரைத்தலை

 முத்திரைத்தலை muttiraittalai, பெ.(n.)

   அஞ்சற்கட்டணம் முதலிய கட்டணத் திற்காக ஏற்பட்ட தலை பதிக்கப்பட்ட முத்திரை; postage stamp; court fee stamp.

     [முத்திரை + தலை.]

முத்திரைத்தாள்

 முத்திரைத்தாள் muttiraittāḷ, பெ.(n.)

   விருப்பாவணம், ஒப்பந்தம், உடன்பாடுகள் முதலியவற்றை அதிகார முறையாக எழுதப் பயன்படுத்தும் குறிப்பிட்ட விலைமதிப்புடைய, அரசினுடைய முத்திரை அச்சிடப்பட்டத் தாள்; stamp-paper for writing deeds.

முத்திரைத்தாள் விற்பனையில் தவறான வழியில் பணம் சேர்த்தவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்.

     [முத்திரை + தாள்.]

முத்திரைப்படி

 முத்திரைப்படி muttiraippaḍi, பெ.(n.)

   அரசு அடையாளமிடப்பட்ட படி; Madras measure, as stamped as the standard measure.

     [முத்திரை + படி.]

முத்திரைப்பலகை

 முத்திரைப்பலகை muttiraippalagai, பெ.(n.)

   கூலக் குவியலில் முத்திரையிடுதற்கு உரிய எழுத்து அல்லது அடையாளமமைந்த பலகை (C.G.);; plank with some writing or mark thereon, used as a seal on the heap of grain.

     [முத்திரை + பலகை.]

முத்திரைப்பல்லவம்

 முத்திரைப்பல்லவம் muttiraippallavam, பெ.(n.)

   இசைப்பதத்தினடி தோறும் ஒட்டப் படிக்கும் பல்லவி (யாழ்.அக.);; a Pallavi repeated at the end of each padam.

     [முத்திரை + பல்லவம். பல்லவம் = பல்லவியில் திரும்பத் திரும்ப பாடப்படும் முதலுறுப்பு.]

முத்திரைப்பல்லவி

 முத்திரைப்பல்லவி muttiraippallavi, பெ. (n.)

   முத்திரைப்பல்லவம் பார்க்க (வின்.);; see muttirai-p-pallavam.

     [முத்திரை + பல்லவி.]

முத்திரைமண்

முத்திரைமண் muttiraimaṇ, பெ.(n.)

   1. கூலக் குவியலிலிடும் மண்குறி; seal of earth affixed to a grain heap.

   2. முத்திரை யிடுவதற்குரிய மண் முதலிய பொருள்; any soft substance that will hold an impression, in sealing.

     [முத்திரை + மண்.]

முத்திரைமனிதன்

 முத்திரைமனிதன் muddiraimaṉidaṉ, பெ. (n.)

   அரசின் தூதுவர் (R.);; King’s ambassador.

     [முத்திரை + மனிதன்.]

முத்திரைமெழுகு

 முத்திரைமெழுகு muttiraimeḻugu, பெ.(n.)

   முத்திரை வைக்கப் பயன்படும் அரக்கு (பாண்டி.);; sealing wax.

     [முத்திரை + மெழுகு.]

முத்திரைமோதிரம்

 முத்திரைமோதிரம் muttiraimōtiram, பெ.(n.)

   முத்திரை பதிக்கப்பட்ட கணையாழி (மோதிரம்);; seal – ring.

     [முத்திரை + மோதிரம்.]

முத்திரையரக்கு

 முத்திரையரக்கு muttiraiyarakku, பெ.(n.)

   முத்திரை பதித்தற்குரிய அரக்கு வகை (வின்.);; sealing wax.

     [முத்திரை + அரக்கு.]

முத்திரையிலாஞ்சனை

 முத்திரையிலாஞ்சனை muttiraiyilāñjaṉai, பெ.(n.)

   முத்திரைக்குறி (வின்.);; impress of seal.

     [முத்திரை + இலாஞ்சனை. இலாஞ்சனை = குறி, முத்திரை, அடையாளம்.]

முத்திரையுட்சிக்கு

முத்திரையுட்சிக்கு muttiraiyuṭcikku, பெ. (n.)

   காசு (நாணய); முத்திரையில் உள்ள கேடு வகை (பணவிடு.179);; defect in the impress of a coin.

     [முத்திரை + உள் + சிக்கு.]

முத்திரைவித்து

முத்திரைவித்து muttiraivittu, பெ.(n.)

   1. அக்கமணி (உருத்திராட்சம்);; a sacred bead of a tree – Elaeocarpus lanciolatus.

   2. அறிவு (ஞானம்);; wisdom.

     [முத்திரை + வித்து.]

முத்திரைவை-த்தல்

முத்திரைவை-த்தல் muttiraivaittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   அரிபின்னலில் ஈரமண் வைத்து அதன் மேல் முத்திரைப் பலகையை ஊன்றி எடுத்தல்; keep the wet sand in the heap and press the mark on it by a block of wood.

     [முத்திரை + வை-த்தல்.]

முத்திறங்குதல்

முத்திறங்குதல் muddiṟaṅgudal, பெ.(n.)

   அம்மை முத்துக்கள் பால் வடிந்து மறைகை (வின்.);; waning of pustules, in smallpox.

     [முத்து2 + இறங்கு-தல்.]

முத்திறமணி

முத்திறமணி muttiṟamaṇi, பெ.(n.)

   பெளத்தர் வணங்கற்குரிய முத்திறப் பொருள்கள் (திரிமணி); (புத்தம்);; the three objects of veneration.

     “முத்திறமணியை…. வணங்கி” (மணிமே.30:4);.

     [மூன்று + திறமணி.]

முத்திற்கோத்தமுத்து

முத்திற்கோத்தமுத்து muttiṟāttamuttu, பெ.(n.)

   வட்டமான பருமுத்து ஒவ்வொன்றின் அடியிலும் குறுமுத்து ஒவ்வொன்றினைக் கோத்த அமைப்பில் உருவாக்கப்பட்ட முத்து மாலை; string of pearls which is threaded each connected in between a small pear in coherent.

     “முத்திற்கோத்த முத்து – தொளாயிரத் தெண்பத் தொன்றினால்” (தெ.கல்.தொ.2, கல்.1);.

     [முத்தில் + கோத்த + முத்து.]

முத்திளம்

 முத்திளம் muttiḷam, பெ.(n.)

   கக்கரிகாய் (சங்.அக.);; kakkari-melon.

முத்திவிக்கினம்

 முத்திவிக்கினம் muttivikkiṉam, பெ.(n.)

   முத்திக்கு இடையூறுகளான ஐயம், திரிபு, அறியாமைகள் (வின்.);; obstacles to salvation, three in number, viz. aiyam, tiribu, {}.

     [முத்தி + Skt. விக்கினம்.]

முத்திவிலக்கு

 முத்திவிலக்கு muttivilakku, பெ.(n.)

முத்திவிக்கினம் பார்க்க (வின்.);; see {}.

     [முத்தி + விலக்கு.]

முத்தீ

முத்தீ muttī, பெ.(n.)

   1. இல்லறத் தீ, தெய்வத்தீ, தென்புலத்தீ, (காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி); என்ற மூவகைத் தீ; the three sacrificial fires, viz., karugapattiyam, {}, {}.

     “இருபிறப்பாளர் முத்தீப் புரைய” (புறநா.367);.

   2. வயிற்றுத் தீ, காமத்தீ, சினத் தீயென்னும் மூவகைத் தீ (சூடா.);; the three-fold fires of the body, viz. {}.

   3. ஆயுர்வேதத் தீ; fire used in preparing medicines, of three kinds of degrees.

     [மூன்று + தீ.]

முத்தீது

 முத்தீது muttītu, பெ. (n.)

   முன்னேற்பாடு (பாண்டி);; preparedness.

த.வ. முன்அணியம்

     [Ar. mustaid → த. முத்தீது]

முத்தீமரபினர்

 முத்தீமரபினர் muttīmarabiṉar, பெ.(n.)

   வேள்வித்தீ (வேதாக்கினி); மூன்றையும் பேணும் குலத்தவரான பிராமணர் (பிங்.);; Brahmins, as guardians of the sacrificial fires.

     [முத்தீ + மரபினர்.]

முத்தீரமம்

 முத்தீரமம் muttīramam, பெ.(n.)

முத்திரமம் பார்க்க; see muttiramam.

முத்து

முத்து1 muddudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. சேர்தல்; to unite, join.

     “திருமுத்தாரம்” (சீவக.504);.

   2. முத்தமிடுதல்; to kiss.

     “புதல்வர் பூங்கண் முத்தி” (புறநா.41);.

     [முல் (பொருந்துதல்); → முது → முத்து → முத்து-தல்.]

 முத்து2 muttu, பெ.(n.)

   1. சிப்பியில் இருந்து எடுக்கப்படும் விலை மதிப்பு உடைய உருண்டை வடிவ வெந்நிறப் பொருள்; pearl.

முத்துமாலை, முத்துப் பற்கள். முத்துமுத்தாக எழுதியிருக்கிறான்.

     “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை” (நற்.23);. “பனைமரு டடக்கையொடு முத்துப்பட முற்றிய” (புறநா.161);.

     “முல்லை முகை முறுவல் முத்தென்று” (நாலடி, 45);.

   2. சில வகை மரங்களின் செடிகளின் மேல்தோல் நீக்கப்பட்ட கொட்டை; seeds of certain trees without outer skin.

முத்துக்கொட்டை.

   3. வெண்மணி போன்ற கண்ணீர்த்துளி; pearl like tears.

     “பருமுத் துறையும்” (சீவக.1518);.

   4. ஆமணக்கு வித்து; castor bean.

     “முத்திருக்குங் கொம்பசைக்கும்” (தனிப்பா.1, 3:2);.

   5. வெண்முத்துப் போன்ற அம்மை நோய்க் கொப்புளம் (உ.வ.);; pock of small pox, pustule.

பிள்ளைக்கு உடம்பு முழுதும் முத்துப் போட்டிருக்கிறது.

   6. ஆமணக்கு விதை போன்ற நெய்யுள்ள விதை (நாமதீப. 373);; oil seed, as rape, castor, etc.

   7. கிளிஞ்சில் முத்துப் போன்ற மாதுளையின் விதை; succulent seed of pomegranate.

   8. வெண்முத்துப் போன்ற வெள்ளரிசி;  rice.

   9. 7/8 பணவெடை கொண்டதோர் பொன்னிறை; a gold smith’s weight= 7/8 {}.

   10. ஆட்டக் காய்கள் (இ.வ.);; seeds, shells, etc. used in games.

   11. சங்கு முதலியவற்றின் முட்டை; the egg of a conch.

   12. பருப்பு; dhal, pulp.

   13. சிப்பிமுத்து; oyster pearl.

   14. பெண் காமக்களை; the semen of a female.

   15. 120 வகையான இயற்கைப் பொருட்களில் இதுவும் ஒன்று; one of the 120 kinds of natural substances.

   16. மேலானது (யாழ்.அக.);; that which is excellent or praise worthy.

முத்தான பேச்சு.

ம., தெ., க. முத்து; து. முத்த; பிரா. முத்தா.

     [முள் → முட்டு → முத்து (வ.மொ.வ.);]

முத்துப் பற்றிய பழமொழிகள் :

     “முத்தளந்த கையால் முசப்பயறு அளக்க வந்தது”,

     “முத்தளந்த கையாலே மோர் விற்கிறதா?”,

     “முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர் எத்தாலும் பெருமைப்படார்”.

     “முத்து அளக்கிறவளும் பெண்பிள்ளைதான், மூசப் பயறு அளக்கிறவளும் பெண்பிள்ளைதான்”,

     “முகத்துக்கு முத்தா யிருக்கிறது”,

     “முத்தும் பவளமும் முறை முறையாய்க் கோத்தது போல”,

     “முத்தைத் தெளித்தாலும் கலியாணந்தான், மோரைத் தெளித்தாலும் கலியாணந்தான்”.

     “முத்திலும் சொத்தை உண்டு; பவழத்திலும் பழுதுண்டு” (பழ.);.

முத்துப் பிறக்கும் இடங்கள்:

சிப்பி, மீன், முதலை, உடும்பு, தாமரை, வாழை, கமுகு, கரும்பு, பன்றிக்கொம்பு, ஆவின் பல், பாம்பு, கொக்கு, மங்கையர் கழுத்து.

ஆமணக்கு முத்து (கொட்டைமுத்து);, குருக்குமுத்து, புளியமுத்து, வேப்பமுத்து என்பன ஒரளவு உருண்டை வடிவான விதைகள்.

முத்துச்சம்பா, முத்துச்சோளம், முத்து மாதுளை என்பனவும் அத்தகையனவே.

முத்துக்குளிப்பு மன்னார்குடாக் கடலில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது.

முத்தூர்க்கூற்றம் என்பது பாண்டி நாட்டின் கீழ்கரைப் பகுதி. உரோம நாட்டிற்கு ஏற்றுமதியான பாண்டிநாட்டு முத்து வரலாற்றுப் புகழ் பெற்றது.

     “வேழ முடைத்து மலைநாடு மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து-பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயற்றொண்டை

நன்னாடு சான்றோ ருடைத்து” என்பது பிற்காலத்து ஒளவையா ரொருவரின் பாட்டு.

வடவர், முக்தா என்னும் சொல்லை (முச்(C);); என்னும் வினை முதனிலையொடு தொடர்புபடுத்தி, சிப்பியினின்று விடுதலை பெற்றது என்று பொருட் காரணம் கூறுவது பொருந்தாது (வ.மொ.வ.2:72);.

 முத்து3 muttu, பெ. (n.)

   1. அழகு; beauty.

     “அடியாற் படியளந்த முத்தோ” (திவ்.இயற். பெரியதிருவந்.27);.

   2. மகிழ்ச்சி (திவ்.இயற். பெரியதிருவந்.27, வியா.);; joy, happiness.

   3. அன்பு; love, endearment.

வேலை முத்தோ, பிள்ளை முத்தோ?

 முத்து4 muttu, பெ.(n.)

   முத்தம் (உ.வ.);; kiss

 முத்து5 muttu, பெ.(n.)

   வெண்குருகு (அரு.நி.);; a water – bird.

 முத்து6 muttu, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் ‘ஞானக் கப்பல்’ என்னும் நூலை இயற்றிய புலவர்; a poet, author of {}.

முத்துகம்

 முத்துகம் muttugam, பெ. (n.)

   கடலை; gram – Bengal – gram.

முத்துக்கடுக்கன்

 முத்துக்கடுக்கன் muttukkaḍukkaṉ, பெ.(n.)

   முத்துக் கட்டிய கடுக்கனென்னுங் காதணி (வின்.);; pearl ear-ring.

     [முத்து + கடுக்கன்.]

முத்துக்கண்டி

முத்துக்கண்டி muttukkaṇṭi, பெ. (n.)

   முத்தாலாகிய கழுத்தணி வகை;  pearl necklace.

     [முத்து + கண்டி.]

   இயற்றிய புலவர்; a poet in 18th century, author of {}.

முத்துக்குடை

 முத்துக்குடை muttukkuḍai, பெ.(n.)

   அருகனது மூன்று குடையுளொன்று (வின்.);; one of the three umbrellas of Arhat.

     [முத்து + குடை.]

முத்துக்குத்து – தல்

முத்துக்குத்து – தல் muddukkuddudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. தாழ்ந்த முத்தை நீக்குதல்; to reject inferior pearls which may readily break.

   2. கடவுட் பலிக்காக மந்திரஞ் சொல்லி அரிசி குத்துதல்; to pound rice, for using it for sacred purposes, chanting mantras.

     [முத்து + குத்து-தல்.]

முத்துக்குமரக்கவிராயர்

முத்துக்குமரக்கவிராயர் muttukkumarakkavirāyar, பெ.(n.)

   18-19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் ‘ஞானக்கும்மி’ என்னும் நூலின் ஆசிரியர்; a poet, author of {} lived 18-19 century.

இவர் ஐயனாரூஞ்சல், நடராசர் பதிகம், ஞானக்கும்மி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

முத்துக்குமரன்

 முத்துக்குமரன் muttukkumaraṉ, பெ.(n.) ம

முத்துக்குமாரன் பார்க்க; see {}.

முத்துக்குமாரசாமிபுலவர்

 முத்துக்குமாரசாமிபுலவர் muttukkumāracāmibulavar, பெ.(n.)

   தமிழ்ப் புலவர்; a Tamil poet.

இவர் இயற்றிய நூல் திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ்.

முத்துக்குமாரசுவாமிகள்

முத்துக்குமாரசுவாமிகள் muttuggumārasuvāmigaḷ, பெ.(n.)

   19—20ஆம் நூற்றாண்டில் கதிர்காமத்தந்தாதி, கதிர்காம மாலை ஆகிய நூல்களை இயற்றிய புலவர்; a

 poet in 19-20th century, author of {}.

முத்துக்குமாரதாசர்

முத்துக்குமாரதாசர் muttukkumāratācar, பெ.(n.)

   20ஆம் நூற்றாண்டில் வேளுர் முத்துக்குமாரசாமி அந்தாதி, கந்த புராண சதகம் ஆகிய நூல்களை இயற்றிய புலவர்; a poet author of {}.

முத்துக்குமாரதேசிகர் __,

முத்துக்குமாரதேசிகர் __, muttuggumāratēcigar,    20ஆம் நூற்றாண்டில் சூரியனார்க் கோயில் குரு தோத்திரப் பதிகம் என்னும் நூலை இயற்றிய புலவர்; a poet in 20th century, author of {}.

முத்துக்குமாரத்தம்பிரான்

முத்துக்குமாரத்தம்பிரான் muttukkumārattambirāṉ, பெ. (n.)

   19ஆம் நூற்றாண்டில் போரூர் என்னும் ஊரில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்; a Tamil poet who lived {} in 19th century.

இவர் பூசாவிதி அகவல், திருப்போரூர்க் கலித்துறை அந்தாதி, சமரபுரி மாலை, பிரணவசைல மாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

முத்துக்குமாரன்

முத்துக்குமாரன் muttukkumāraṉ, பெ.(n.)

   முருகக் கடவுள்; God Murugan.

     “முத்துக் குமாரனைத் தனிப்புரக்க” (குமர. பிர. முத்துக்குமார. பிள்.2);.

முத்துக்குமாரர்

முத்துக்குமாரர் muttukkumārar, பெ.(n.)

   18ஆம் நூற்றாண்டில் வலைவீசு புராணம் என்னும் நூலை இயற்றிய புலவர்;  a poet in18th century, author of {}.

முத்துக்குறி

 முத்துக்குறி muttukkuṟi, பெ.(n.)

   கையிலுள்ள முத்துக்களைக் கணக்கிட்டுப் பலன் சொல்லுங் குறி; divination by means of a handful of pearls.

     [முத்து + குறி.]

முத்துக்குளி

முத்துக்குளி1 muttukkuḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   முத்துச்சிப்பி எடுப்பதற்காகக் கடலுள் மூழ்குதல்; to dive for pearl-oysters.

முத்துக் குளிப்பவர்களுக்கு நீண்ட நேரம் மூச்சடக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

     [முத்து + குளி-த்தல்.]

 முத்துக்குளி2 muttukkuḷi, பெ.(n.)

   நீரில் மூழ்கி முத்தெடுக்கை (வின்.);; pearl-fishery.

     [முத்து + குளி.]

முத்துக்கெண்டை

 முத்துக்கெண்டை muttukkeṇṭai, பெ. (n.)

கெண்டை மீன் வகையுள் ஒன்று

 long ray,

     [முத்து+கெண்டை]

முத்துக்கொட்டை

 முத்துக்கொட்டை muttukkoṭṭai, பெ.(n.)

   ஆமணக்கு விதை; castor seed.

     [முத்து + கொட்டை.]

முத்துக்கொட்டைச்செடி

 முத்துக்கொட்டைச்செடி muttukkoḍḍaicceḍi, பெ.(n.)

   ஆமணக்குச் செடி; castor plant.

     [முத்துகொட்டை + செடி.]

முத்துக்கொண்டை

முத்துக்கொண்டை muttukkoṇṭai, பெ. (n.)

   கடவுள் திருமேனியின் தலையில் அணியும் முத்தாலான தலையணி வகை; head-dress of pearls, as for idols.

     [முத்து2 + கொண்டை.]

     [p]

முத்துக்கொதி

 முத்துக்கொதி muddukkodi, பெ.(n.)

   முதற் கொப்புளங் கிளம்பும் அரிசிக் கொதி; stage in the boiling of rice, when bubbles begin to appear.

     [முத்து + கொதி. முத்துப்போல் கொப்புளம் கிளப்பும் கொதி.]

முத்துக்கொம்பன்

முத்துக்கொம்பன் muttukkombaṉ, பெ. (n.)

   1. முத்துநிறக் கொம்புள்ள யானை; elephant with pearly white tusks.

   2. கடல் மீன் வகை (யாழ்ப்.);; a sea-fish.

     [முத்து + கொம்பன்.]

முத்துக்கொறித்தல்

 முத்துக்கொறித்தல் muttukkoṟittal, பெ.(n.)

   பல்லி சத்தமிடுகை (நாஞ்.);; chirp of a lizard.

     [முத்து + கொறித்தல்.]

முத்துக்கோவை

 முத்துக்கோவை muttukāvai, பெ.(n.)

முத்துமாலை (வின்.); பார்க்க; see {}.

     [முத்து + கோவை.]

முத்துச்சனிப்பு

 முத்துச்சனிப்பு muttuccaṉippu, பெ.(n.)

   முத்து உண்டாகும் இடம் (யாழ்.அக.);; place where pearls are formed.

     [முத்து + Skt. சனிப்பு.]

முத்துச்சம்பா

 முத்துச்சம்பா muttuccambā, பெ.(n.)

   ஐந்து மாதங்களில் விளையும் ஒருவகை நெல் (A.);; a kind of paddy that matures in five months.

     [முத்து + சம்பா.]

முத்துச்சலாபம்

முத்துச்சலாபம் muttuccalāpam, பெ.(n.)

   1. முத்துக்குளிக்கை; pearl-fishery.

   2. முத்துக் குளிப்பில் அடையும் பேறு (யாழ்.அக.);; the out-turn in pearl-fishery.

     [முத்து + Skt.சலாபம்.]

முத்துச்சல்லி

 முத்துச்சல்லி muttuccalli, பெ.(n.)

   முத்துக் கோத்த தொங்கல் (சங்.அக.);; ornamental hangings of strung pearls.

     [முத்து + சல்லி.]

முத்துச்சாமி

 முத்துச்சாமி muttuccāmi, பெ.(n.)

   சிற்றூர் தெய்வம் (கோவை.);; village deity.

முத்துச்சாமிஐயங்கார்

முத்துச்சாமிஐயங்கார் muttuccāmiaiyaṅgār, பெ.(n.)

   19-20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a Tamil poet lived in 19-20th century.

இவர் மணவாள மாமுனிகள் நூற்றந்தாதி குருகைக் கலம்பகம், நூற்றெட்டுத் திருப்பதித் திருப்பதிகங்கள் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

முத்துச்சாமிஐயர்

முத்துச்சாமிஐயர் muttuccāmiaiyar, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a poet lived in 19th century.

இவர் மயூரநாதர் அந்தாதி, ஆசிரியர் துதிப்பாக் கோவை, முருகன் துதிப்பாக் கோவை, அன்புவிடு தூது, அலங்கார நாயகி பதிகம், கசாரணியேசுரர் பதிகம், காமாட்சியம்மைப் பதிகம், வரகூர் வேங்கடேசர் பதிகம், சிதம்பர விநாயகர் மாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

முத்துச்சாமிக்கவிராயர்

முத்துச்சாமிக்கவிராயர்1 muttuccāmikkavirāyar, பெ.(n.)

   20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a Tamil poet, who lived in 20th century.

இவர் காரணக்கும்மி, ஞானக்கும்மி முருகன் ஏயிற் கும்மிப்பாட்டு, சிங்காரவேலர் சதகம், வடிவேலர் சதகம் ஆகிய நூற்களை இயற்றியுள்ளார்.

 முத்துச்சாமிக்கவிராயர்2 muttuccāmikkavirāyar, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a Tamil poet, lived in 19th century.

இவர் கருங்காலக்குடிக் காதல், புரவி பாளையத்தார் கும்பி, அன்னம்விடு தூது, சங்கிலி வீரப்பப் பாண்டியன் பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

முத்துச்சாமிக்கோனார் (1858-1944)

முத்துச்சாமிக்கோனார் (1858-1944)18581944 muttuccāmikāṉār, பெ.(n.)

   தமிழ்ப் புலவர்; a Tamil poet.

சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சார்ந்தவர். தெலுங்கு, சமற்கிருதம் பயின்றவர். திருச்செங்கோடு மான்மியம், திருப்பணிமாலை, கொங்கு மண்டல சதக உரை ஆகிய நூல்களை இயற்றியவர்.

முத்துச்சாமிப்பிள்ளை

முத்துச்சாமிப்பிள்ளை1 muttuccāmippiḷḷai, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a Tamil poet, who lived in 19th century.

தருமை சொக்கநாத மாலை, திருப்பனந்தாள் சிலேடை வெண்பா ஆகிய நூல்களை இயற்றிய புலவர்.

 முத்துச்சாமிப்பிள்ளை2 muttuccāmippiḷḷai, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a Tamil poet, lived in 19th century.

சிவபெருமான் இரட்டை மணிமாலை, திருக்கழுகு மாமலை, சிவக்கொழுந்து மாலை ஆகிய நூல்களை இயற்றியவர்.

முத்துச்சாமிமுதலியார்

முத்துச்சாமிமுதலியார் mudduccāmimudaliyār, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a Tamil poet, belong to 19th century.

   19ஆம் நூற்றாண்டில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கலித்துறை அந்தாதி, இடும்பன் கவசம் ஆகிய நூல்களை இயற்றிய புலவர்.

முத்துச்சிப்பி

முத்துச்சிப்பி muttuccippi, பெ. (n.)

   1. முத்துள்ள ஒட்டினையுடைய நீர்வாழ் உயிரி; pearl-oyster.

   2. mother of pearl.

     [முத்து + சிப்பி.]

     [p]

முத்துச்சிலாகம்

 முத்துச்சிலாகம் muttuccilākam, பெ.(n.)

முத்துச்சலாபம் பார்க்க; see {}.

     [முத்து + சிலாகம்.]

முத்துச்சிவிகை

 முத்துச்சிவிகை muttuccivigai, பெ.(n.)

   முத்துக்களால் அழகூட்டப்பட்ட பல்லக்கு (வின்.);; planquin adorned with pearls.

     [முத்து + சிவிகை.]

முத்துச்சுண்ணம்

முத்துச்சுண்ணம் muttuccuṇṇam, பெ. (n.)

   முத்தை நீற்றிய சுண்ணம் (பதார்த்த. 135);; lime obtained by calcining pearls.

     [முத்து + சுண்ணம்.]

முத்துச்சுண்ணாம்பு

 முத்துச்சுண்ணாம்பு muttuccuṇṇāmbu, பெ.(n.)

முத்துச்சுண்ணம் பார்க்க; see {}.

முத்துச்சொரிதல்

முத்துச்சொரிதல்1 mudduccoridal, பெ.(n.)

   சோற்றுப் படையல்; offering of boiled rice to a deity.

     [முத்து + சொரிதல்.]

 முத்துச்சொரிதல்2 mudduccoridal, பெ.(n.)

   அழகொழுகப் பேசுகை (இ.வ.);; talking in an excellent manner, rhetorical talk.

அவன் வாயிலிருந்து முத்துச் சொரிகிறது.

     [முத்து + சொரிதல்.]

முத்துச்சோளம்

 முத்துச்சோளம் muttuccōḷam, பெ.(n.)

   முத்தைப் போன்ற வெள்ளைச் சோளம் (யாழ்,அக.);; Indian corn, maize – Zca mays.

மறுவ. கோடைச்சோளம்.

     [முத்து + சோளம்.]

முத்துடக்கன்

 முத்துடக்கன் muttuḍakkaṉ, பெ.(n.)

   நிலக்கடம்புச் செடி (A.);; a plant – Justicia accaulis.

முத்துத்தம்பி

முத்துத்தம்பி muttuttambi, பெ.(n.)

   தமிழ்ப் பெரும்புலவர்; a great Tamil poet.

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சார்ந்தவர். தந்தையார் ஆறுமுகம். 1880இல் இந்தியாவுக்கு வந்தார். பாரத சுருக்கம், அபிதான கோசம், நன்னூல் இலகுபோதம், தென்மொழி வரலாறு ஆகிய நூல்களை எழுதியவர்.

முத்துத்தரியம்

முத்துத்தரியம் muttuttariyam, பெ.(n.)

   முத்தினால் ஒப்பனை செய்த மேலாடை; upper garment decorated with pearls.

     “முத்துத் தரியமும் பவழப் பிணையலும்” (பெருங். இலாவண. 1:5);.

     [முத்து + Skt. தரியம்.]

முத்துத்தாண்டவர்

 முத்துத்தாண்டவர் muttuttāṇṭavar, பெ.(n.)

   இசைத்தமிழ் வளர்த்தவர்களுள் ஒருவர்; a poet who foster Tamil verse set to music.

முத்துத்தாமம்

முத்துத்தாமம் muttuttāmam, பெ.(n.)

   1. முத்துமாலை பார்க்க; see {}.

     “கோலமாமணி யாரமு முத்துத்தாமமும்” (திவ்,அமலனாதி.9);.

   2. முத்துச்சல்லி பார்க்க; see muttu-c-calli.

     “முத்துத்தாம முறையொடு நாற்றுமின்” (மணிமே.1:49);.

     [முத்து + தாமம்.]

முத்துத்தாழ்வடம்

 முத்துத்தாழ்வடம் muttuttāḻvaḍam, பெ. (n.)

முத்துமாலை (வின்.);பார்க்க; see {}.

     [முத்து + தாழ்வடம். தாழ்வடம் = நீண்டு தாழ்ந்த மாலை.]

முத்துநாயக்கன்பட்டி

முத்துநாயக்கன்பட்டி muttunāyakkaṉpaṭṭi, பெ.(n.)

   சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் சேலத்திற்கு வடமேற்கே ஏறத்தாழ 15 கல்லன் மாத்திரியிலுள்ள ஊர்; a city in Salem district in {} Taluk in 15 k.m. away from Salem in North West direction.

     [முத்துநாயக்கன் + பட்டி.]

நாயக்கர் ஆட்சி காலத்தில் ஆண்ட முத்து நாயக்கன் என்பவர் பெயரால் ஏற்பட்ட ஊராக இருக்கலாம்.

முத்துநிரப்பம்

முத்துநிரப்பம் muttunirappam, பெ.(n.)

   ஒற்றைச்சரமாலை (தக்கயாகப்.340, உரை);; necklace of a single string.

மறுவ. ஏகாவலி வடம்.

     [முத்து + நிரப்பம். நிரம்பு → நிரப்பு → நிரப்பம் = முழுமை.]

முத்துநீர்

முத்துநீர் muttunīr, பெ.(n.)

   பனிநீர்த் திவலை; dew drop.

     “முத்து நீர்ச் சாந்தடைந்த மூஉய்த்தத்தி” (பரிபா.10:13);.

     [முத்து + நீர்.]

முத்துநெய்

முத்துநெய் muttuney, பெ.(n.)

   சிற்றாமணக்கு நெய் (பதார்த்த.162);; castor oil.

     [முத்து + நெய்.]

முத்துப்பந்தர்

முத்துப்பந்தர் muttuppandar, பெ.(n.)

   முத்துமாலைகளால் ஒப்பனை செய்யப்பட்ட கூரையையுடைய பந்தல் (தமிழ்நா.119);; canopy decorated with strings of pearls.

     [முத்து + பந்தர்.]

முத்துப்பற்பம்

 முத்துப்பற்பம் muttuppaṟpam, பெ.(n.)

   உடலின் இயற்கையான வெப்பத்தினால் உண்டாகும் நெஞ்சத் துடிப்பு, விந்தணுக்கள் தொடர்பான நோய்கள், அரத்த காசம், முறையற்ற அரத்தப் போக்கு முதலிய நோய்களுக்கான மருந்து; the calcined white powder of pearl cures congenital heat, palpitation of the heat, due to the heat, seminal disorders, haemoptisis, aemorrhagic disorders etc.

     [முத்து + பற்பம். பற்பம் = பொடி..]

முத்துப்பல்லக்கு

 முத்துப்பல்லக்கு muttuppallakku, பெ.(n.)

முத்துச்சிவிகை பார்க்க; see muttu-c-civigai.

     [முத்து + பல்லக்கு. முத்துக்கள் பதித்து அழகு செய்யப்பட்ட பல்லக்கு.]

முத்துப்புரி

முத்துப்புரி muttuppuri, பெ.(n.)

முத்துச்சல்லி பார்க்க; see muttu-c-calli.

     “முத்துப் புரிநாற்று” (பெருங்.வத்தவ. 5 : 48);.

     [முத்து + புரி.]

முத்துப்பூவாழி

 முத்துப்பூவாழி muttuppūvāḻi, பெ.(n.)

   வெங்காயம்; onion – Allium cepa (சா.அக.);.

முத்துப்பேய்ச்சி

முத்துப்பேய்ச்சி muttuppēycci, பெ.(n.)

   ஊர் பெண் தெய்வம்; a village Goddess.

     “முத்து ராக்கு முத்துப்பேய்ச்சி” (பஞ்ச. திருமுக.671);.

     [முத்து + பேய்ச்சி.]

முத்துப்போடு-தல்

முத்துப்போடு-தல் mudduppōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   அம்மை நோயில் முத்துத் தோன்றுதல் (வின்.);; to break out in pustules, as in small pox, or measles.

     [முத்து + போடு-தல்.]

முத்துப்போட்டுப்பார்-த்தல்

முத்துப்போட்டுப்பார்-த்தல் muttuppōṭṭuppārttal,    4 செ.குன்றாவி.(v.t.)

   கணிய வகையுள் ஒன்று; a kind of astrology.

கொட்டை முத்தினைப் போட்டுப் பார்த்து ஒற்றையெண்வரின் நல்லது, இரட்டை யெண்வரின் தீயது (கெட்டது); என அறியும் கணிய வகை (கோவை);.

     [முத்து + போட்டு + பார்-த்தல்.]

முத்துமணல்

முத்துமணல் muttumaṇal, பெ.(n.)

   மணல் போன்ற சிறிய முத்து; small pearl resembling a grain of sand.

     “நற்பெரும் பந்தருள் முத்து மணல் பரப்பி” (பெருங். உஞ்சைக்.48 : 88);.

     [முத்து + மணல்.]

முத்துமணிமாலை

 முத்துமணிமாலை muttumaṇimālai, பெ.(n.)

முத்துமாலை பார்க்க; see {}.

     [முத்து + மணி + மாலை.]

முத்துமழை

 முத்துமழை muttumaḻai, பெ.(n.)

   பருவ மழை (இ.வ.);; seasonal rain.

     [முத்து + மழை.]

முத்துமழைபெய் – தல்

முத்துமழைபெய் – தல் muttumaḻaibeytal,    1 செ.கு.வி.(v.i.)

   செல்வம் பொங்குதல் (உ.வ.);; to prosper, to amass wealth.

     [முத்து + மழை + பெய்-தல்.]

முத்துமாதுளை

 முத்துமாதுளை muttumātuḷai, பெ.(n.)

   மாதுளை வகை (யாழ்.அக.);; a species of pomegranate.

     [முத்து + மாதுளை.]

முத்துமாலை

முத்துமாலை muttumālai, பெ.(n.)

   முத்துக் கோத்த கழுத்தணி வகை (திவ். அமலனாதி. 9, வியா.);; garland of pearls.

நாய்க்குத் தெரியுமா முத்து மாலை (பழ.);.

     [முத்து + மாலை.]

முத்துமாலைக்குறுவை

முத்துமாலைக்குறுவை muttumālaikkuṟuvai, பெ.(n.)

   ஒருவகை நெல்; a kind of paddy.

     “முத்துமாலைக் குறுவை” (பறாளை. பள்ளு.24);.

     [முத்து + மாலை + குறுவை. குறுவை = குறுகிய காலத்தில் விளையும் நெல்வகை]

முத்துமுறி

 முத்துமுறி muttumuṟi, பெ.(n.)

   முத்துப் போல் வெண்மையான உயர்ந்த வெண்கலம் (இ.வ.);; bestbell-metal, as pearl – white.

     [முத்து + முறி.]

முத்துமுறிவெண்கலம்

 முத்துமுறிவெண்கலம் muttumuṟiveṇkalam, பெ.(n.)

முத்துமுறி பார்க்க; see {}.

     [முத்துமுறி + வெண்கலம்.]

முத்துரதம்

 முத்துரதம் mudduradam, பெ.(n.)

   கோயிலைச் சுற்றி இழுக்கும் சிறுதேர் (கோவை.);; small car, chariot.

     [முத்து + Skt. ரதம்.]

முத்துராக்கு

முத்துராக்கு mutturākku, பெ.(n.)

   சிற்றூர் பெண் தெய்வம்; a village goddess.

     “முத்துராக்கு முத்துப் பேய்ச்சி” (பஞ்ச. திருமுக.671);.

     [முத்து + ராக்கு. Skt. {} → த. ராக்கு.]

முத்துராசாக்கவிராயர்

 முத்துராசாக்கவிராயர் mutturācākkavirāyar, பெ. (n.)

   மயிலாசல மாலை என்னும் நூலை இயற்றிய புலவர்; Tamil poet. author of {}.

முத்துராமக்கவிராயர்

 முத்துராமக்கவிராயர் mutturāmakkavirāyar, பெ.(n.)

   பிற்காலப் புலவர்; Tamil poet, belongs to the later period.

இவருடைய ஊர் திருப்போரூருக்கு வடக்கே ஆறு கல் தொலைவிலுள்ள கோவளம் என்பது. இவ்வூர் ஒரு துறைக் கோவையில் ‘சென்றத்தை’ என்னும் செய்யுளில் கூறப்பட்டுள்ளது. இவர் நூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தவர். பெட்டுராசா இராமச்சந்திர கவிராசருடைய மாணாக்கர். இவருடைய தமையனாருள் ஒருவராகிய சண்முக முதலியார் பெரிய முறைமன்றத்தில் பணியாற்றியவர். இவர் செய்த தனிப்பாடல்கள் பல. பாரத கீர்த்தனம். திருத்தணி கை நொண்டி என்னும் நூல்களை எழுதியவர்.

முத்துராமலிங்கசேதுபதி

முத்துராமலிங்கசேதுபதி muddurāmaliṅgacēdubadi, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a poet in 19th century.

இவர் முருகர் அனுபூதி, நீதிபோத வெண்பா, சடாட்சர சாரப்பதிகம், சரசசல்லாப மாலை, பிரபாகரமாலை, வள்ளி மணமாலை என்னும் நூல்களை இயற்றியவர்.

முத்துருட்சிமணி

முத்துருட்சிமணி mutturuṭcimaṇi, பெ.(n.)

   முத்துப்போலுருண்ட பொன்மணி (வின்.);; pearl-like gold bead.

     [முத்து2 + உருட்சி + மணி.]

முத்துருளைமணி

 முத்துருளைமணி mutturuḷaimaṇi, பெ.(n.)

முத்துருட்சிமணி பார்க்க; see {}.

     [முத்து + உருளை + மணி.]

முத்துருவி

 முத்துருவி mutturuvi, பெ.(n.)

   மகளிர் காதணி வகை (யாழ்.அக.);; an ear-ornament for women

முத்துலையிடு-தல்

முத்துலையிடு-தல் muddulaiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   ஒன்றுக்கு மூன்று கற்பித்தல்; to exaggerate three-fold.

     “முத்துலை யிட்டுக் கொண்டு” (திருவிருத்.71, வியா. பக்.37););.

     [மூன்று → மு + துலை + இடு-தல்.]

முத்துளம்

 முத்துளம் muttuḷam, பெ.(n.)

   மூங்கில் (சங்.அக.);; bamboo.

     [முத்து + உள் – முத்துள் → முத்துளம்.]

மூங்கிலிலிருந்து முத்து தோன்றுவதாகக் கருதப்படுவதுண்டு.

முத்துவடம்

முத்துவடம் muttuvaḍam, பெ.(n.)

   1. முத்து மாலை பார்க்க; see {}.

     “முத்துவடமு முழுமணிக் காசும்” (பெருங். மகத.17:164);.

   2. ஒர் புடவை வகை; a kind of sareе.

     [முத்து + வடம். வடம் = சரம்]

முத்துவட்டம்

முத்துவட்டம் muttuvaṭṭam, பெ.(n.)

   1. ஒருவகை யுருண்டை முத்து (தெ.இ.க. தொ.ii, 143, 3);; a kind of round pearl.

   2. முத்தெண்ணிக்கையின் வகை; unit consisting of a certain number of pearls.

     [முத்து + வட்டம்.]

முத்துவண்ணச்சேலை

முத்துவண்ணச்சேலை muttuvaṇṇaccēlai, பெ.(n.)

   பழங்காலத்துப் புடவை வகை (பணவிடு.303);; a kind of saree, of olden days.

     [முத்து + வண்ணம் + சேலை.]

முத்துவண்ணம்

 முத்துவண்ணம் muttuvaṇṇam, பெ.(n.)

   வெண்ணிறம்; pearl – like colour, as of teeth.

     [முத்து + வண்ணம்.]

முத்துவரிசை

முத்துவரிசை muttuvarisai, பெ. (n.)

   2,4 வடிகளின் வழி செல்லும் பாவு வரிசை

 a handloom feature.

     [முத்து+வரிசை]

முத்துவர்ணம்

முத்துவர்ணம் muttuvarṇam, பெ.(n.)

முத்துவண்ணம் பார்க்க; see {}.

     “முத்துவர்ண மூரனல்லாள்” (விறலிவிடு. 717);.

     [முத்து + வர்ணம். வண்ணம் → வர்ணம்.]

முத்துவளம்

 முத்துவளம் muttuvaḷam, பெ. (n.)

கடலில் காணலாகும் முத்துக்களின் அடர் தொகுதி:

 pear as seen in sea.

     [முத்து+வளம்]

முத்துவீரக்கவிராயர்

முத்துவீரக்கவிராயர் muttuvīrakkavirāyar, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் சங்கர நாராயண கோயில் புராணம் என்னும் நூலை இயற்றிய புலவர்; author of {}.

முத்துவீரவாத்தியார்

 முத்துவீரவாத்தியார் muttuvīravāttiyār, பெ.(n.)

   முத்துவீரியம் என்னும் இலக்கண நூலாசிரியர்; author of {}.

முத்துவீரியம்

 முத்துவீரியம் muttuvīriyam, பெ.(n.)

   ஐந்து வகை இலக்கணங்களையும் கொண்ட நூல்; the book a treatise which says about five kinds of grammar.

     [முத்து + வீரியம்.]

இந்நூல் முத்துவீர (உபாத்தியாய);ர் இயற்றியது. இதில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து இலக்கணங்களும் விளக்கப் பட்டுள்ளது.

முத்துவெள்ளை

முத்துவெள்ளை muttuveḷḷai, பெ.(n.)

   1. ஈய வெள்ளி; white lead, Ceruse.

   2. நெல்வகை; a kind of paddy.

     [முத்து + வெள்ளை.]

முத்தூர்

முத்தூர் muttūr, பெ.(n.)

   பாண்டி மண்டலத்து ஊரின் பெயர்; name of the place.

     “பாண்டி மண்டலத்து முத்தூற்றுக் கூற்றத்து” (A.R.E. 438/1913);.

முத்தூர்க்கூற்றம்

முத்தூர்க்கூற்றம் muttūrkāṟṟam, பெ. (n.)

முத்தூற்றுக்கூற்றம் (சிலப்.11 : 22, உரை); பார்க்க; see {}.

     [முத்தூர் + கூற்றம்.]

முத்தூறு

முத்தூறு muttūṟu, பெ.(n.)

முத்தூற்றுக் கூற்றம் பார்க்க; see {}.

     “முத்தூறு தந்த கொற்ற நீள்குடை ” (புறநா. 24:22);.

முத்தூற்றுக்கூற்றம்

முத்தூற்றுக்கூற்றம் muttūṟṟukāṟṟam, பெ.(n.)

   வேளிர்க்குரியதாயிருந்த பாண்டி நாட்டின் பகுதியான நிலப்பிரிவு (புறநா.24, உரை);; a tract of land belonging to the {} and annexed to the {} kingdom later on.

     [முத்தூறு + கூற்றம்.]

முத்தெட்டு

 முத்தெட்டு mutteṭṭu, பெ.(n.)

   பண்ணையாருக்குப் பண்ணையாட்கள் கூலியின்றிப் பயிரிடும் நிலம் (யாழ்ப்.);; field cultivated free of wages for the proprietor by his farm labourers.

முத்தெண்ணெய்

 முத்தெண்ணெய் mutteṇīey, பெ.(ո.)

   ஆமணக்கெண்ணெய்; oil of castor seed.

     [முத்து + எண்ணெய்.]

முத்தெயில்

முத்தெயில் mutteyil, பெ.(n.)

   பழமையான மதில்; ancient fortress.

     “முத்தெயின் மதுரைதன்னில்” (திருவாலவா.62:7);.

     [முதுமை + எயில்.]

முத்தெருக்கன்செவி

முத்தெருக்கன்செவி mutterukkaṉcevi, பெ.(n.)

   நிலக்கடம்பு (பாலவா.886);; a plant.

மறுவ. முத்திருக்கன்செவி.

முத்தெறி-தல்

முத்தெறி-தல் muddeṟidal,    2 செ.கு.வி.(v.i.)

முத்துப்போடு-தல் (யாழ்.அக.);; see {}.

     [முத்து + எறி-தல்.]

முத்தெழும்பு-தல்

முத்தெழும்பு-தல் muddeḻumbudal,    5 செ.கு.வி. (v.i.)

முத்துப்போடு-தல் பார்க்க; see {}.

     [முத்து + எழும்பு-தல்.]

முத்தை

முத்தை1 muttai, பெ.(n.)

   முன்னிடம்; front.

     “முத்தை வரூஉங் காலந் தோன்றின்” (தொல்.எழுத்து.164);.

     [முந்தை → முத்தை.]

 முத்தை2 muttai, பெ.(n.)

   1. திரட்சி (சூடா.);; lump, large mass.

   2. சோற்றுருண்டை (வின்.);; boiled rice gathered into a ball.

தெ. முத்த.

     [முத்து → முத்தை (வே.க.);.]

 முத்தை3 muttai, பெ.(n.)

   பேதைப் பருவத்தாள் (யாழ்.அக.);; innocent girl;

 girl between the ages of five and seven.

     [முந்தை → முத்தை.]

 முத்தை4 muttai, பெ. (n.)

முத்தக்காசு பார்க்க (சங்.அக.);; see {}.

     [முந்தை → முத்தை.]

முத்தையன்

 முத்தையன் muttaiyaṉ, பெ.(n.)

முத்துக் குமாரன் (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [முத்து + ஐயன்.]

முத்தையா

முத்தையா muttaiyā, பெ. (n.)

   19-20ஆம் நூற்றாண்டில் சுங்குரும்மை அந்தாதி, பதிற்றுப் பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றிய புலவர்; a poet, author of {}.

முத்தொகைவினா

 முத்தொகைவினா muttogaiviṉā, பெ. (n.)

   முதல் எண்ணுக்கும் இரண்டாம் எண்ணுக்குமுள்ள ஏற்றத்தாழ்வுக்கொத்தபடி மூன்றாவது எண் ஒன்றுக்குரிய மற்றோர் எண்ணைக் காணும் கணக்கு முறை (வின்.);; rule of three, rule of proportion.

     [மூன்று + தொகைவினா.]

முத்தொருகன்

 முத்தொருகன் muttorugaṉ, பெ.(n.)

முத்தடக்கன் (சங்.அக.); பார்க்க; see {}.

முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் muttoḷḷāyiram, பெ.(n.)

   சேரர், சோழர், பாண்டியர் ஒவ்வொருவருக்கும் 300 செய்யுட்களாக தொள்ளாயிரம் வெண்பாக்களாலியன்ற ஒரு பழைய நூல்; a poem of 900 {} in honour of the {} and {}, kings having 300 each.

     [மூன்று → மூ → மு + தொள்ளாயிரம். மூன்று வகையானதாகிய தொள்ளாயிரம் பாடல்கள்.]

பண்டைத் தொகை நூல்களான எட்டுத்தொகை பத்துப்பாட்டுகளுக்குப் பின்னர் இயற்றப்பட்டதாகக் கருதப்படுவது முத்தொள்ளாயிரம். இந்நூலின் பாடல் எண்ணிக்கை தொள்ளாயிரம் என்றும், இரண்டாயிரத்து எழுநூறு என்றும் இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் இன்று நூல் வடிவில் கிடைப்பது நூற்று முப்பது பாடல்கள் மட்டுமே. அவையும் இருவேறு வகையில் கிடைத்தவையே.

புறத்திரட்டு என்னும் தொகை நூலின் இடையிடையே நூற்றெட்டுப் பாடல்களும், பழைய உரைகளினிடையே இருபத்திரண்டு பாடல்களும்

கிடைத்துள்ளன. ஆகவே இந்நூலின்கண் அமைந்து உரையொடு வருவனவாகிய நூற்றுமுப்பது பாடல்களும் படிப்பவர்க்கு இன்சுவை படைப்பனவாக அமைந்துள்ளன.

இந்நூலின் பெயர்ப்பொருள் ஆய்வுக்குரியது. மூன்று என்னும் சொல்லும் தொள்ளாயிரம் என்னும் சொல்லும் சேருங்கால்

     “மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும்”,

     “மூன்றனொற்றே பகாரம் ஆகும்” என்ற தொல்காப்பிய (தொல்.எழுத்து.140, 141); இயல்நூலின் முறைப்படி முதல் நெடில் குறுகி வருமொழியிலுள்ள தகரத்திற்கு இயைந்த தகரவொற்றும் பெற்று முத்தொள்ளாயிர மாயிற்று;

மூன்று வகையினதாகிய தொள்ளாயிரம் பாடல்களை உடைய நூல் என்பது பொருள். மூன்று வகை யென்பது சேர, சோழ, பாண்டியன் என்ற மூவேந்தரைப் பற்றியது. இவ்வாறு கொள்ளாது மூவேந்தரைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களை உடையது என்று பொருள் விரித்து இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களை உடையது என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இலக்கண விளக்க நூலுடையார் தாம் எழுதிய பாட்டியலினகத்து எண் செய்யுளாமாறு உணர்த்துவா னெடுத்துக் கொண்டு,

     “ஊரையும் பெயரையும் உவந்தெண்ணாலே சீரிதற் பாடலெண் செய்யு ளாகும்”

என்ற நூற்பா கூறி,

     “பாட்டுடைத் தலைவன் ஊரினையும் பெயரினையும் உவந்து எண்ணாலே பத்து முதல் ஆயிரமாகவும் பொருட் சிறப்பினாலே பாடுதல் அவ்வவ்வெண்ணாற் பெயர்பெற்று நடக்கும் எண்செய்யுளாம்;

     ” அவை முத்தொள்ளாயிரம், அரும்பைத் தொள்ளாயிரம் முதலியன ”

என்று உரையும் வரைந்துள்ளனராதலால் அதனைப் பின்பற்றித் தொள்ளாயிரம் பாடல்களே இந்நூலில் அமைந்திருத்தல் கூடும் என்று கருதுதல் வேண்டும்.

இந்நூலாசிரியர் யார் என தெரியவில்லை. இந்நூல் அமைந்துள்ள நூற்றுமுப்பது பாடல்களும் பயில்பவருக்கு இனிய கவை தருவன. நினைக்குந் தோறும், நினைக்குந்தோறும்,

     “காமமிகு காதலன்தன் கலவியினைக் கருதுகின்ற ஏமமிகு கற்புடையாளின்”

இன்பத்தினும் மிகுவதாய இன்பத்தினைத் திருவாசகம் நல்குவது போன்று இந்நூலும் நல்குமென்று கூறுவது மிகையாகாது.

இந்நூலில் அமைந்துள்ள பாடல்கள், பெரும்பாலும் விருந்து என்ற முறையினைப் பின்பற்றி அமைந்துள்ளன. பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் புதுவதாகத் தொடுக்கப்படுந் தொடர்நிலை மேலதாகிய விருந்து என்பதற்கு இந்நூலை எடுத்துக் காட்டுதலானும் அது நன்கு உணரப்படும். இந்நூல் வெண்பாக்கள் பெரும்பான்மை நான்கடியானும் சிறுபான்மை ஐந்து அடிகளானும் வந்தன என்பதும் உணரக்கிடத்தலால் யாப்பருங்கலக் காரிகையி னுரையில் மேற்கோளாக வந்துள்ள, “பன்மாடக் கூடல்” என்ற ஆறடிச் செய்யுளாக விருத்தல் கூடுமென்று கருதி இதனகத்துச் சேர்த்தனர். இந்நூலில் கட்டியொருவர் பெயர்கொண்ட பாடாண்திணைப் புறப்புறக் கைக்கிளைச் செய்யுள் பல அமைந்துள்ளன. கைக்கிளைப் பாடல்கள் பெரும்பாலும் பெண்பாற் கைக்கிளைப் பாடலாகவே அமைந்துள்ளன.

இந்நூலில் கடல் வாழ்த்துப்பாடல் ஒன்றும், சேரனைப் பற்றி இருபத்து மூன்று பாடல்களும், சோழனைப் பற்றி நாற்பத்து ஆறு பாடல்களும், பாண்டியனைப் பற்றி அறுபது பாடல்களும் உள்ளன.

இந்நூலில் அமைந்துள்ள சுவைமிக்கப் பாடல்கள் சில :

     “கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்டார் மாறன்

முடிபாடி முத்தாரம் பாடித் – தொடியுலக்கை

கைம்மனையுள் ஒச்சப் பெறுவேனோ? யானும்ஒர்

அம்மனைக் காவல் உளேன்” (34);

     “நந்தி னிளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்த ரிளங்கமுகின் பாளையும் – சிந்தித்

திகழ்முத்தம் போற்றோன்றுஞ் செம்மற்றே தென்னன்

நகைமுத்த வெண்குடையா னாடு” (8);

     “நாணாக்கால் பெண்மை நலனழியும் முன்னின்று

காணாக்கால் கைவளையுஞ் சோருமால் – காணேனான்

வண்டெவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக்

கண்டெவ்வந் தீர்வதோர் ஆறு” (28);

     “பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்

என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும்

பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக்

கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை

எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்

திருத்தார்நன் றென்றேன் தியேன்” (58);

முத்தொழிற்பகவன்

 முத்தொழிற்பகவன் muttoḻiṟpagavaṉ, பெ.(n.)

   கடவுள் (யாழ்.அக.);; God, the Supreme Being.

     [முத்தொழில் + பகவன்.]

ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலைச் செய்வதாகக் கருதப்படும் கடவுள் என்றறிக.

முத்தொழிலர்

முத்தொழிலர் muttoḻilar, பெ.(n.)

   1. கடை மகன் (சூத்திரர்); (பிங்.);; {}.

   2. உழவு வாணிகம் ஆநிரை காத்தலாகிய

மூன்று தொழில்கள் உடையவரான வணிகர் (வைசியர்); (வின்.);; {},

 as engaged in three pursuits, viz. agriculture, trade, herding cattle.

     [மூன்று + தொழிலர்.]

முத்தொழில்

 முத்தொழில் muttoḻil, பெ.(n.)

   படைப்பு, காப்பு, அழிப்பு என்ற கடவுளின் மூவகைச் செயல் (பிங்.);; the triple functions of God -head viz. {}.

     [மூன்று + தொழில்.]

முந்தண்டுக்கால்

 முந்தண்டுக்கால் mundaṇṭukkāl, பெ.(n.)

   நெசவில் முன்தண்டைத் தாங்கும் கால்; stand which bears the front pole in weaver’s instrument.

     [முன்தண்டு + கால்.]

முந்தன்

முந்தன் mundaṉ, பெ.(n.)

   கடவுள்; God, as the First Being

     “முந்தனை யான்மா வென்றும்” (சி.சி.4:28);.

     [முந்து → முந்தன்.]

முந்தல்

முந்தல்1 mundal, பெ.(n.)

   1. முற்படுகை (உ.வ.);; being first or before.

   2. முனை (வின்.);; projection, promontory.

     [முந்து → முந்தல்.]

 முந்தல்3 mundal, பெ.(n.)

   முச்சந்தி (யாழ். அக.);; junction of three roads.

 முந்தல்3 mundal, பெ.(n.)

   முகவை மாவட்டக் கடற்புறத்து அலைவாய் துருத்தியிலுள்ளதோர் ஊர்; a name of a seashore village in Ramanad District.

முந்தாங்கி

முந்தாங்கி mundāṅgi, பெ.(n.)

   1. நீளத்திற் கோடிட்ட மகளிர் சீலை வகை; a kind of saree striped lengthwise.

   2. விரலாழிக்கு முன்னிடும் வளையம்; keeper, ring that keeps another on the finger or toe.

   3. வண்டிச் சக்கரங் கழலாமல் இருப்பதற்காக அதன் முன் இடும் வளையம்; axle-ring of a cart.

     [முன்1 + தாங்கி.]

முந்தாணி

 முந்தாணி mundāṇi, பெ.(n.)

முந்தானை (வின்.); பார்க்க; see {}.

     [முந்தானை → முந்தாணி.]

முந்தாநாள்

முந்தாநாள் mundānāḷ, பெ.(n.)

   நேற்றெனச் சொல்லப்படுவதற்கு முந்திய நாள்; day before yesterday.

     “முந்தா நாளிரவு கண்ட கனா” (விறலிவிடு.501);.

     [முந்து + ஆ + நாள்.]

 முந்தாநாள் mundānāḷ, பெ. (n.)

   நேற்றைக்கு முன் நாள்; day before yesterday.

     [முந்தை+நாள்- முந்தைநாள் – முந்தையாம் நாள்-முந்தாநாள்)]

முந்தானை

 முந்தானை mundāṉai, பெ. (n.)

முன்றானை பார்க்க; see {}.

சேலை முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

     [முன்றானை → முந்தானை.]

முந்தானைபோடு – தல்

முந்தானைபோடு – தல் mundāṉaipōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

முன்றானைவிரி-த்தல் பார்க்க; see {}.

     [முந்தானை + போடு-தல்.]

முந்தானைவிரி – த்தல்

முந்தானைவிரி – த்தல் mundāṉaivirittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. முன்றானைவிரி-த்தல் பார்க்க; see {}.

   2. முந்தி விரி-த்தல், 2 பார்க்க; see mundi- viri-, 2.

     [முந்தானை + விரி-த்தல்.]

முந்தி

முந்தி1 mundi, பெ.(n.)

   1. முன்னிடம்;  front.

   2. முன்றானை பார்க்க; see {}.

     “பொதுமாதர் முந்தியே தொடு மிடங்கள்” (குற்றா.தல.மந்தமா.21);.

     [முந்து → முந்தி.]

 முந்தி2 mundi, கு.வி.எ.(adv.)

   1. காலத்தில் முன்பு, முன்னால்; of time earlier.

இரண்டு நாள் முந்தி வந்திருக்கக் கூடாதா? இது முந்தியே பார்த்த திரைப்படம் தான்.

   2. வேகமாக; faster.

உன் கடிகாரம் அரை மணி நேரம் முந்திப் போகிறது.

   3. முற்காலம்; some time before.

     “முந்தி வானோர்கள் வந்து” (தேவா.477, 8);.

     [முந்து → முந்தி.]

 முந்தி1 mundi, பெ. (n.)

   முந்தானை; free part of the saree.

     [முன்-முந்து-முந்தி]

முந்திசினோர்

முந்திசினோர் mundisiṉōr, பெ.(n.)

   முன்னோர்; the ancients.

     “இலங்குகதிர்த் திகிரி முந்திசினோரே” (பதிற்றுப்.69:17);.

     [முந்தி + ஈயினோர் = முந்தியீயினோர் → முந்தீயினோர் → முந்தீசினோர் → முந்திசினோர் (வே.க.);.]

முந்தின

 முந்தின mundiṉa, இடை.(part.)

முந்திய பார்க்க; see mundiya.

     “முந்தினோர் பிந்தினோராவர், பிந்தினோர் முந்தினோ ராவர்”,

     “முந்தி வந்த செவியைப் பிந்தி வந்தகொம்பு மறைத்ததாம்” (பழ.);,

     “முந்தின சோற்றைத் தட்டினால் பிந்தின சோறு பீயும் சோறும்” (பழ.);.

     [முந்திய → முந்தின.]

முந்திப்பலகை

முந்திப்பலகை mundippalagai, பெ. (n.)

   பட்டுச் சேலையில் முந்தானைபோடப் பயன் படுத்தும் அரை அடி அகலம் 6 அடி நீளம் கொண்ட தேக்குப் பலகை; a wooden plank used in silk saree weaving.

     [முந்தி+பலகை]

முந்திய

 முந்திய mundiya, பெ.அ.(adj.)

   காலத்தில் முற்பட்ட, முன்னிருந்த; previous; pre-.

முந்திய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர். இதற்கு முந்திய கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. வரலாற்றுக்கு முந்திய காலம்.

     [முந்து → முந்திய.]

முந்தியவட்டி

 முந்தியவட்டி mundiyavaṭṭi, பெ.(n.)

   கடன் கொடுக்கும்போது முன்னதாகப் பிடித்துக் கொள்ளும் வட்டி (C.G.);; interest taken in advance at the time of the loan.

     [முந்து + வட்டி.]

முந்திரி

முந்திரி1 mundiri, பெ.(n.)

   1/320 என்ற குறியுள்ள பின்னயென்; the fraction 1/320.

     “முந்திரிமேற் காணி மிகுவதேல்” (நாலடி, 346);.

ம. முந்திரி.

     [முந்து + இரி = முந்திரி. இரிதல் = விலகுதல், பிளத்தல், கெடுதல். இரிசல் = பிளவு. ஒ.நோ. = பின்னம் = 1. பின்னம், 2. கீழ்வாயிலக்கம். E. fraction, f.1. frang, break. கீழ்வாய் இலக்கங்களுள் முந்தியது முந்திரி எனப்பட்டது (வே.க.முல்.2]

மேல்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் மேல் முந்திரி என்னும் முந்திரி (1/320);யும் கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் கீழ்முந்திரி (1/102, 1/400);யும் ஆகும் (பழந்த.ஆ.பக்.72);.

 முந்திரி2 mundiri, பெ.(n)

   1. அகன்ற இலை உடையதும் மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறத்தில் பழத்தைக் கொடுக்கக் கூடியதுமான ஒரு மரம், அண்டிமா; cashew tree, Anacardium occidentale.

   2. முந்திரிப் பருப்பு; cashew nut.

   3. முந்திரிகை2,1 பார்க்க; see mundirigai2, 1.

   தெ. முந்தமாமிதி;ம. முந்திரி.

     [முன் + துரி – முந்துரி → முந்திரி. துருத்தல் = முன் தள்ளுதல் (த.வி.);. துருத்துதல் = முன் தள்ளுதல் (பி.வி.);. முந்திரிக் கொட்டை பழத்திற்கு வெளியே முன்தள்ளிக் கொண்டிருத்தலால், அதன் பழமும் மரமும் முந்திரியெனப்பட்டன. அண்டிமா என்பதும் இப் பொருளதே. அண்டியில் கொட்டை யுடைய பழம் அண்டிமா.]

வகைகள் :

   1. கொடிமுந்திரி,

   2. காட்டு முந்திரி,

   3. கொட்டை முந்திரி,

   4. மலாக்கா முந்திரி,

   5. சிறிய கொடி முந்திரி (சா.அக.);.

முந்திரிகை

முந்திரிகை1 mundirigai, பெ.(n.)

முந்திரி1 பார்க்க; see {}.

     ‘காணியே முந்திரிகை’ (தொல்.எழுத்து.164, உரை);.

     [முந்திரி → முந்திரிகை.]

 முந்திரிகை2 mundirigai, பெ.(n)

   1. கொடி முந்திரி (திராட்சை);; common grape vine.

     “முந்திரிகைப் பழச்சோலைத் தேன்” (சீவக. 3063);.

   2. முந்திரி2, 1 பார்க்க; see mundiri2, 1.

     [முந்திரி → முந்திரிகை.]

முந்திரிகைக்கள்(ளு)

 முந்திரிகைக்கள்(ளு) mundirigaiggaḷḷu, பெ.(n.)

   முந்திரிகை மது; wine brandy (சா.அக.);.

     [முந்திரிகை + கள்.]

முந்திரிக்கொட்டை

முந்திரிக்கொட்டை mundirikkoṭṭai, பெ.(n.)

   1. முந்திரிப் பழத்தின் கீழ்ப் பகுதியிலிருந்து வெளியே நீண்டு இருக்கும் கொட்டை; cashew-nut which protrudes from the fleshy party of the stalk.

   2. தேவையில்லாமல் அடுத்தவர் கருத்துப் பரிமாற்றத்தில் தலையிட்டு பேசுபவர்; one who talks or acts presumptuously.

அந்த முந்திரிக் கொட்டையைக் கூப்பிடாதே.

     [முந்திரி + கொட்டை.]

     [p]

முந்திரிப்பருப்பு

 முந்திரிப்பருப்பு mundiripparuppu, பெ.(n.)

   முந்திரிக் கொட்டையில் இருந்து எடுக்கப்படும் பருப்பு; cashew kernel.

சுவையில் முந்திரிப் பருப்பை முந்தும் பருப்பு ஏதுமில்லை.

மறுவ. அண்டிப்பருப்பு

     [முந்திரி + பருப்பு.]

முந்திரியணா

முந்திரியணா mundiriyaṇā, பெ.(n.)

   ஒர் அணா (செட்டிநாடு);; one anna.

     [முந்திரி1 + அணா.]

முந்திவிரி-த்தல்

முந்திவிரி-த்தல் mundivirittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. முன்றானைவிரி-த்தல் பார்க்க; see {}.

முந்தி விரித்தவள் சீதேவி, முலைப்பால் கொடுத்தவள் மூதேவியா?

   2. பிச்சை வாங்க துணி விரித்தல்; to unfold or spread one’s cloth to receive alms.

     [முந்தி + விரி-த்தல்.]

முந்து

முந்து1 mundudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. காலம், இடம் முதலியவற்றால் முற்படுதல்; to be prior in time, place, etc.

     “முதுவருண் முந்துகிளவாச் செறிவு” (குறள், 715);,

     “முந்துவிளை பெருங்குரல் கொண்ட மந்தி” (நற்.22:2);.

   2. எதிர்ப்படுதல்; to come in front; to advance; to meet.

     “முந்தின னருமறைக் கிழவன்” (கம்பரா. தாடகை.28);.

   3. விரைதல்; to go fast.

     “முந்தா நின்ற வேட்கை” (ஞானவா.சுக்கி.7);.

   4. மேலெழுதல்; to rise up.

     “உந்தி முதலா முந்துவளி தோன்றி” (தொல்.எழுத்து.83);.

   5. முதன்மை யாதல்; to take precedence; to take the lead; to be first.

     “அவையத்து முந்தி யிருப்பச் செயல்” (குறள், 67);.

   6. சிறத்தல்; to surpass, excel.

   7. பழமையாதல்; to be old; to be long-standing.

   8. வண்டி முதலியவற்றைக் கடந்து செல்லுதல், கடந்து முன் செல்லுதல்; go past, over take.

பேருந்தை முந்தும் போது சீறுந்து இடி மோதலுக்கு உள்ளானது. முன்னால் ஒடிக்கொண்டு இருந்தவரையும் கடைசி நிமயத்தில் முந்திவிட்டார்.

   9. ஒன்றைப் பெறவோ செய்யவோ பிறரைக் காட்டிலும் விரைதல்; over take some one, rush to get, to do something.

   எனக்குத்தான் அந்த வேலை கிடைத்து இருக்க வேண்டும்;ஆனால் அவர் முந்திக் கொண்டார். முந்துங்கள், இன்னும் சில மனைகளே விற்பனைக்கு உள்ளன என்று விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

க. முந்து

     [முல் → முன் → முன்று → முந்து → முந்து-தல்.]

 முந்து2 mundu, பெ.(n.)

   1. முற்காலம்; antiquity

     “முந்துறை சனகனாதி” (கந்தபு. மேருப்.10);.

   2. முன்பு; priority.

   3. தொடக்கம்(ஆதி);; beginning.

     “முந்துநடுவு முடிவு மாகிய… சேவடியானை” (திருவாச.18:5);.

     [முந்து1 → முந்து2.)

 முந்து3 mundu, பெ.(n.)

   வெண்ணாரை (அக.நி.);; a kind of white heron.

முந்துநீர்ப்போக்கு

 முந்துநீர்ப்போக்கு mundunīrppōkku, பெ.(n.)

   மிகை சிறு நீர்; passing excess of urine – Nocturia.

     [முந்து + நீர்ப்போக்கு.]

முந்துநூல்

முந்துநூல் mundunūl, பெ.(n.)

   1. முன்னூல்; original treatise as distinguished from subsequent works or commentaries.

     “முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணி” (தொல்.சிறப்புப்.);.

   2. மறைநூல்; the Vedas.

     “முந்துநூலு முப்புரிநூலு முன்னீந்த வந்தணாளன்” (திவ்.பெரியதி.6:5, 7);.

     [முந்து + நூல்.]

முந்துறு

முந்துறு1 munduṟudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. முன்னிலையாதல்; to be in front, as of a person.

     “மொய்வளைத் தோளி முந்துற மொழிந்தன்று” (பு.வெ.12, பெண்பாற்.1, கொளு.);.

   2. முற்படுதல்; to be first; to be in advance.

இல்லைகனா முந்துறாத வினை (பழமொ.12);.

     “யாமுந் துறுதல் செல்லேம் ஆயிடை” (அகநா.261:11);.

     [முந்து + உறு1-தல்.]

 முந்துறு2 munduṟuttal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. தோற்றுவித்தல்; to cause to appear.

     “நோய் முந்துறுத்து நொதுமன் மொழியல்” (அகநா.39);.

   2. காட்டிக் கொள்ளுதல்; to show, assume.

     “பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து” (புறநா.29);.

   3. ஒருவன் முன்னிலையில் அறிவித்தல்; to disclose in one’s presence. ”

வேட்கை முந்துறுத்தல்” (பு.வெ. 12, பெண்பாற்.1);.

     [முந்து + உறு-த்தல்.]

 முந்துறு3 munduṟuttal,    20 செ.கு.வி. (v.i.)

   முதலாதல்; to begin with.

     “அச்சமு நாணு மடனு முந்துறுத்த” (தொல். பொருள். 99);.

     [முந்து + உறு-த்தல்.]

முந்துாழ்

முந்துாழ்2 munḻ, பெ.(n.)

பழவினை (வின்.);:

 fate, destiny.

     [முந்து + ஊழ்.]

முந்தூளம்

 முந்தூளம் mundūḷam, பெ.(n.)

முந்தூழகம் பார்க்க; see {}.

முந்தூள்

 முந்தூள் mundūḷ, பெ. (n.)

முந்தூழகம் பார்க்க; see {}.

     [முந்துாழ் → முந்துாள்.]

முந்தூழகம்

 முந்தூழகம் mundūḻkam, பெ.(n.)

   மூங்கில்; bamboo.

     [முந்துாழ் + அகம்.]

முந்தூழ்

முந்தூழ்1 mundūḻ, பெ.(n.)

   மூங்கில் (திவா.);; spiny bamboo.

     “முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே” (குறுந்.239:6);.

மறுவ. முந்தூழ்கம், முந்தூள், முந்தூளம்.

முந்தை

முந்தை1 mundai, பெ. (n.)

   1. முற்காலம்; the past, former time.

     “முந்தைத் தான் கேட்டவாறே” (சீவக.545);.

   2. பழைமை (பிங்.);; antiquity.

   3. முன்னோன்; ancestor.

     “அந்தணர்….. தந்தை தாயென் றிவர்க்கு….. முந்தைவழி நின்று” (பு.வெ.9:33);.

   தெ. முந்துகி;க. முந்தெ.

     [முந்து → முந்தை.]

 முந்தை2 mundai, கு.வி.எ.(adv.)

   முன்; in front of.

     “வந்தடி பொருந்தி முந்தை நிற்பின்” (புறநா.10);.

     “தேர்வண் மலையன் முந்தைப் பேரிசை” (நற்.100:9);,

     “முந்தை யுணர்ந்தோர் வந்து நினக் குரைப்ப” (பெருங்.உஞ்சை. சாங்கி.36:169);.

     [முந்து → முந்தை.]

 முந்தை3 mundai, பெ.(n.)

   சிறு ஏன வகை (வின்.);; a small vessel.

   தெ. முந்த;க. முந்தெ.

     [மொந்தை → முந்தை.]

முந்தைநாள்

முந்தைநாள் mundaināḷ, பெ.(n.)

   1. முந்தாநாள் (வின்.);; day before yesterday.

   2. முந்தை1, 2 பார்க்க; see mundai1, 2.

     [முந்தை1 + நாள்.]

முந்தைய

 முந்தைய mundaiya, கு.பெ.எ.(adj.)

முந்திய பார்க்க; see mundiya.

     [முந்திய → முந்தைய.]

முந்நாடி

 முந்நாடி munnāṭi, பெ.(n.)

   வளி, பித்தம், கோழைக்குரிய நாடிள்; the three pulses.

     [மூன்று + நாடி.]

முந்நிரை

 முந்நிரை munnirai, பெ.(n.)

   ஆடு, மாடு, எருமை என்னும் மூன்றன் மந்தை அல்லது கூட்டம்; a flock of cattle.

     [மூன்று + நிரை.]

முந்நீர்

முந்நீர்1 munnīr, பெ.(n.)

   ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்ற மூன்று நீர்களை உடைய கடல்; sea, as consisting of three waters, viz., river water, spring water and rain water.

     “முந்நீர் விழவி னெடியோன்” (புறநா.9);. முந்நீர் வழக்கம் மகடுஉ வோடில்லை (தொல்,அகத்.34);.

   க. முந்நிர்;தெ. முந்நீரு.

     [மூன்று + நீர்.]

 முந்நீர்2 munnīr, பெ.(n.)

   இளநீர், சருக்கரை நீர், கன்னலினீர்; the three kinds of liquids, viz., milk of tender coconut, sugared water and juice of sugarcane.

     “முந்நீ ரடைக்காயும் படைத்து” (ஞானதீசை. 4);.

     [மூன்று + நீர்.]

முந்நூறு

முந்நூறு munnūṟu, பெ.(n.)

   மூன்று நூறு; the number 300.

     “முந்நூறூர்த்தே தண்பறம்பு நன்னாடு” (புறநா.110:3);.

     [மூன்று + நூறு.]

முந்நூற்றுநாலு

 முந்நூற்றுநாலு munnūṟṟunālu, பெ.(n.)

   சீட்டாட்டத்தில் ஒருவகை; a game of cards.

     [முந்நூறு + நாலு. நான்கு → நாலு (பே.வ.);]

முந்நூல்

முந்நூல் munnūl, பெ.(n.)

   1. ஆண்கள் மார்பில் அணியும் மூன்று பிரிவான நூல் (பூணூல்);; the sacred thread, as containing three strands.

     “மார்மிடை முந்நூல் வனையா முன்னர்” (மணிமே.13:23);.

   2. மகளிர் கழுத்தணி வகை (இ.வ.);; woman’s necklace, as having three Strands.

     [மூன்று + நூல்.]

முனகர்

முனகர் muṉagar, பெ.(n.)

   கீழ்த்தரமானவன்; low, mean person.

     “வினையின் முனகர் துன்னு மின்னாக் கடறு” (திருக்கோ.217);.

     [முனகு → முனகர்]

முனகல்

 முனகல் muṉagal, பெ.(n.)

   மெல்லிய குரலில் வெளிப்படுத்தும் ஒலி; groan.

குழந்தையின் முனகலைக் கேட்டு விழித்துக் கொண்டாள்.

     [முனகு → முனகல்]

முனகு

முனகு1 muṉagudal,    5 செ.கு.வி.(v.i.)

   துன்பம் முதலியவை தாங்காமல் மெல்லிய குரலில் தெளிவற்ற வகையில் பேசி எதிர்ப்பைத் தெரிவித்தல்;விருப்பமின்மை, எதிர்ப்பு, சலிப்பு முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையில் தெளிவில்லாமல் மெல்லிய குரலில் பேசுதல்;முணுமுணுத்தல்; groan with pain;mutter something, as a protest, etc.

இரவு முழுவதும் காய்ச்சலால் முனகிக் கொண்டிருந்தான். எடுபிடி வேலைக்கு நான்தான் கிடைத்தேனா என்று முனகியவாறே சென்றேன். வாய்க்குள்ளே முனகாதே உரக்கப் பேசு!

     [முனகு → முனகு → முனகு-தல்.]

 முனகு2 muṉagu, பெ.(n.)

   குற்றம்; defect, fault.

     “முனகு தீரத் தொழுதெழு மின்கள்” (தேவா.356, 2);.

     [முனகு1 → முனகு.]

முனக்கம்

முனக்கம் muṉakkam, பெ.(n.)

   1. முணு முணுக்கை (நாஞ்.);; muttering, murmuring;grumbling.

   2. புலப்பம், வேதனைக்குரல்; mоап.

     [முனங்கு → முனக்கு → முனக்கம்.]

முனங்கு

முனங்கு1 muṉaṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. குரலையடக்கிப் பேசுதல்; to mutter, murmur;to grumble.

   2. வேதனையாற் புலம்புதல்; to moan.

     [முணகு → முனகு → முனங்கு → முனங்கு-தல்.]

ஒ.நோ. OE. moen, Obs. mean, E. moan, to make along low murmur of physical or mental suffering, to complain, to lament mis- fortune, to lament for dead person (வே.க.முல்5);.

 முனங்கு2 muṉaṅgu, பெ.(n.)

   ஒரம் (இ.வ.);; edge, border, side.

முனல்

முனல் muṉal, பெ.(n.)

   1. முல்லைக் கொடிவகை; Arabian jasmine.

   2. காட்டு மல்லிகை’; wild jasmine.

முனாக்கம்

 முனாக்கம் muṉākkam, பெ.(n.)

   சுரை; a creeper or climber, bottle gourd – Calabash – Logenaria Vulgaris (சா.அக.);.

முனாது

முனாது muṉātu, பெ.(n.)

   1. முன்னிடத் துள்ளது; that which is in front.

     “சித்திரகூட முனாதென” (சீவக. 1421);.

   2. முன்புள்ளது; that which is earlier.

     “எழுவினி வாழியென் னெஞ்சே முனாது” (குறுந். 11:4);.

     [முன் → முனாது]

முனி

முனி1 muṉidal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. வெறுத்தல்; to dislike.

      “முனித னினைதல் வெரூஉதன் மடிமை” (தொல்.பொருள்.260);.

      “முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்” (அகநா.98:4);.

      “முனிபடர் உழந்தபாடில் உண்கண்” (குறு.357:1);.

      “துளிகூர் மனத்தார் முனிபடர் உழக்கும்” (நற்.262:5);.

      “முனித்தலைப் புதல்வர் தந்தை” (புறநா.250:8);.

    2. சினங் கொள்ளுதல்; to be angry with.

     “முடிபொரு ளன்று முனியன் முனியல்” (பரிபா.20:93);.

ம., க., து. முனி.

     [முன் → முனி → முனி-தல்.]

 முனி2 muṉi, பெ.(n.)

   1. முனிவன் (பிங்.);; saint, sage.

      “முனியுந் தம்பியும்…… இனிய பள்ளிகளெய்திய பின்” (கம்பரா. மிதிலைக். 139);.

    2. புத்தன் (யாழ்.அக.);; the Buddha.

   3. அகத்திய முனி; Agastiya – {}.

   4. தெய்வம்; god.

     [முன் → முனி. வடவர் காட்டும் மூலம் ‘மன்’ = கருது. இது முன் என்னும் தென் சொற்றிரிபு.]

 முனி3 muṉi, பெ.(n.)

   1. வில் (திவா.);; bow.

      “முனிநாண் கோத்து” (உபதேசகா. பஞ்சாக். 96);.

    2. யானைக் கன்று; young elephant.

      “முனியுடைக் கவளம்போல்” (நற்.360);.

    3. சடைப்பேய் (இ.வ.);; devil, goblin.

     [முல் → முன் → முனி (வே.க);. முல் = வளைதற் கருத்துவேர். சாய்தல் கோணுதல், வளைதல், நெளிதல், மடங்குதல், திருகுதல், வட்டமாதல், முடிதல், சுற்றுதல், சுழலுதல், புரளுதல், உருளுதல், உருண்டையாதல், திரிதல், திரும்புதல், சூழ்தல் முதலிய பலவும் வளைதற் கருத்தொடு தொடர்புள்ளவையாம்.]

 முனி4 muṉi, பெ.(n.)

   1. அகத்தி; a tree – Coronilla grand flora.

   2. தேன்; honey.

     [முன் → முனி.]

முனிசடிலம்

 முனிசடிலம் muṉisaḍilam, பெ.(n.)

   மருக்கொழுந்து (மூ.அ.);; southernwood.

முனிசீப்பு

முனிசீப்பு muṉicīppu, பெ. (n.)

   1. சிற்றூர்த் தலைவன் (வின்.);; village headman.

   2. நயன் (நீதி); வழங்கும் ஒரு வகை அலுவலன்; district munsif, presiding officer in certain subordinate court of justice

     [Ar. munsif → த. முனிசீப்பு]

முனிசுவ்விரதர்

முனிசுவ்விரதர் muṉisuvviradar, பெ.(n.)

   தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர் (திருக்கலம்.காப்பு, உரை);; an Arhat, one of 24 {}.

முனிதளம்

 முனிதளம் muṉidaḷam, பெ.(n.)

   அகத்தி; a tree – Sesbania grandi flora.

முனித்துருமம்

முனித்துருமம் muṉitturumam, பெ.(n.)

   அகத்தி (மூ.அ.);; West Indian pea-tree.

     [முனி4 → முனித்துருமம்]

முனித்துறை

முனித்துறை muṉittuṟai, பெ(n.)

   விழா சடங்கு; rites and ceremonies.

     “முனித்துறை முதல்வியர்” (பரிபா.11:82);.

     [முனி + துறை]

முனிநன்

முனிநன் muṉinaṉ, பெ.(n.)

   வெறுப்பவன்; one who dislikes or hates.

     “நன்தோளிடை முனிநர் சென்ற வாறே” (ஐங்குறு.314);.

     [முனி → முனிநன்]

முனிந்துரை

 முனிந்துரை muṉindurai, பெ.(n.)

   வெந்தயம்; a plant – Fenu greek – Trigonella foe numgraecum (சா.அக.);.

முனிபகா

 முனிபகா muṉibakā, பெ.(n.)

   வரகு; a millet – kodo millet-Paspalum Scrobicu latum (சா.அக.);.

முனிபடர்

முனிபடர் muṉibaḍar, பெ.(n.)

   வெறுத்தற்குரிய துன்பம்; despise grief.

      “முனிபடர் உழந்த பாடில் உண்கண்” (குறுந்.357:1);.

முனிபட்சி

 முனிபட்சி muṉibaṭci, பெ.(n.)

   அவல்; flacked rice.

முனிபத்திரி

 முனிபத்திரி muṉibattiri, பெ.(n.)

   செவ்வகத்தி; red variety of Sesbania grandi flora (சா.அக.);.

முனிபித்தலம்

 முனிபித்தலம் muṉibittalam, பெ.(n.)

   தாமிரம் (அரு.அக.);; copper.

முனிப்பூண்டு

 முனிப்பூண்டு muṉippūṇṭu, பெ.(ո.)

முனிதளம் பார்க்க;see {}.

முனிமரபு

முனிமரபு muṉimarabu, பெ.(n.)

   இறைமை; Godhead, divinity.

     “அருமுனி மரபி னான்றவர்” (பரிபா.19:3);.

     [முனி + மரபு]

முனிமூத்திரம்

முனிமூத்திரம் muṉimūttiram, பெ.(n.)

   1. கல்லுப்பு (யாழ்.அக.);; rock salt

   2. கூர்மை, கல்லுப்பு முதலியவை கலந்த உப்புக்கட்டி (வின்.);; salt in lumps, composed of {}, kalluppu etc.

     [முனி + மூத்திரம்]

முனிமை

முனிமை muṉimai, பெ.(n.)

   முனிவருக்குரிய தன்மை; saintliness.

     “முனிமை முகடாய மூவா முதல்வன்” (சீவக. 1609);.

     [முனி → முனிமை]

முனிமையின்வடிவு

முனிமையின்வடிவு muṉimaiyiṉvaḍivu, பெ.(n.)

   சமணர்கள் நோன்பேற்கும் வகை (சைனதீட்சை வகை);; a kind of {}.

     “முனிமையின் வடிவினை முடியநின்று” (மேருமந்.1200);.

     [முனிமை + இன் + வடிவு]

முனியகத்தி

 முனியகத்தி muṉiyagatti, பெ.(n.)

   பிரம்பு; rattan-Calamus rotang (சா.அக.);.

முனியந்தல்

 முனியந்தல் muṉiyandal, பெ. (n.)

   திருவண்ணாமலை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvannamalai Taluk.

     [முனி+ஏந்தல்(ஏரி);]

முனியன்

 முனியன் muṉiyaṉ, பெ.(n.)

   சிற்றூர் சிறு தெய்வம் (உ.வ.);; a village demon.

மறுவ. முனியாண்டி

     [முனி → முனியன்]

முனிவன்

முனிவன் muṉivaṉ, பெ.(n.)

   1. உலகப்பற்றைத் துறந்த அறிவன் (ஞானி);; sage.

     “வந்தெதிர்ந்த முனிவனை” (கம்பரா. மிதிலைக்.85);.

     “நீயே வடபான் முனிவன் றடவினுட் டோன்றி” (புறநா.201.8);.

   2. கடவுள்; god.

     “முனிவன் புத்திரன்” (திருவாலவா. காப்பு, 2);.

     [முனி → முனிவன்]

முனிவரன்

 முனிவரன் muṉivaraṉ, பெ.(n.)

   சிறந்த உயர்வான முனிவர் (முனிசிரேட்டன்);; eminent sage.

     “தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்” (பு.வெ. சிறப்);.

     [முனி → முனிவரன்]

முனிவர்

முனிவர் muṉivar, பெ.(n.)

   1. இருடிகள்; hermits, ascetics.

      “முனிவர்களும் யோகிகளும்” (திவ்.திருப்பா.6);.

      “பணியிய ரத்தைநின் குடையே முனிவர்” (புறநா.6:17);.

    2. பதினெண் கணத்துள் ஒரு தொகுதியினர் (பிங்.);; a class of sages, one of {}.

   3. உலகப் பற்றைத் துறந்து தவம் புரிந்து பல ஆற்றல்கள் பெற்றவர்; ascetic sage.

     [முனி → முனிவர்]

முனிவறாமை

முனிவறாமை muṉivaṟāmai, பெ.(n.)

   உயிர்த்துன்பம் பன்னிரண்டனுள் ஒன்றான தீராச் சினம் (கோபம்); (பிங்.);; unappeasable wrath, as a cause of distress, one of 12 {}.

     [முனிவு + அறு + ஆ(மை);]

முனிவாழை

 முனிவாழை muṉivāḻai, பெ. (n.)

   கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakkurichi Taluk.

     [முன்னி+வாழை]

முனிவிலனாதல்

முனிவிலனாதல் muṉivilaṉātal, பெ.(n.)

   வணிகர் குணம் எட்டனுள் ஒன்றான சினமின்மை (பிங்.);; being without anger, one of eight qualities of merchants.

வணிகர் குணங்கள் :

   1. தனிமையாற்றல்,

   2. முனிவிலனாதல்,

   3. இடனறிந்தொழுகல்,

   4. பொழுதொடு புணர்தல்,

   5. வறுவது தெரிதல்,

   6. இறுவதஞ்சாமை,

   7. ஈட்டல்,

   8. பகுத்தல்.

     [முனிவு + இலன் + ஆதல்]

முனிவு

முனிவு muṉivu, பெ.(n.)

   1. வெறுப்போடு கூடிய சினம்; anger, wrath.

     “முனிவு தீர்ந்தோன்” (கம்பரா. வருண.82);.

    2. வெறுப்பு (தொல். சொல்.386);; dislike, aversion.

   3. களைப்பு; fatigue.

   4. வறுத்தம்; suffering.

     “முனிவிகந்திருந்த….. இரவல” (சிறுபாண். 40);.

   5. முயற்சி (சிவதரு. சிவத.1, உரை);; endeavour.

க. முனிபு, ம. முனிவு.

     [முனி –→ முனிவு]

முனிவேடம்

 முனிவேடம் muṉivēṭam, பெ. (n.)

   பூத நடனம்; a bhuta dance,

     [முனி+வேடம்]

முனிவோன்

 முனிவோன் muṉivōṉ, பெ.(n.)

   நாரை; heron (சா.அக.);.

முனீந்திரன்

முனீந்திரன் muṉīndiraṉ, பெ.(n.)

   1. சிறந்த முனிவர்; eminent sage.

   2. புத்தன் (சூடா.);; the Buddha.

   3. அருகன் (சீவக.3094, உரை);; Arhat.

     [முனி → முனீந்திரன்]

முனுக்கன்

முனுக்கன் muṉukkaṉ, பெ. (n.)

   அமைதியாக இருப்பவன்; a calm person. (கொ.வ.வ. சொ.125);.

     [முலு-முணுக்கன்]

முனை

முனை1 muṉaidal,    2 செ.கு.வி.(v.i.)

   பொருதல்; to fight.

     “வில்லோர் உழவர் வெம்முனைச் சீறூர்” (நற்.3:5);.

க., து. முநி.

 முனை2 muṉaidal,    2 செ.கு.வி.(v.i.)

   ஊக்கங் கொள்ளுதல்; to be zealous, enthusiastic.

     ‘அவன் அந்தச் செயலில் முனைந்திருக்கிறான்’ (உ.வ.);.

 முனை3 muṉaidal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. சினத்தல்; to be angry with;to resent.

   2. வெறுத்தல்; to dislike.

     “இன்றீம்பாலை முனையின்” (பெரும்பாண்.180);.

க., து. முநி.

 முனை4 muṉaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   எதிர்த்தல்; to attack.

     “முனைப்பது நோக்கிவேல் முனையவி ழற்றத்து” (கல்லா.70:16);.

 முனை5 muṉaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. செயலில் முனைந்து இறங்குதல்; to be active, busy oneself in, bestir oneself.

      “முனைத்திடா தசத்துச் சத்தின்முன்” (சி.சி.7:1);.

    2. மூண்டு நிற்றல்; to be deeply engaged.

   3. எடை கூடுதல்; to be of over- weight.

சருக்கரையைக் கொஞ்சம் முனைக்கப் போடு (உ.வ.);.

    4. முயற்சி மேற்கொள்ளுதல்;   முயலுதல்; take efforts;

 attempt.

சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட முனைந்தார். ஒன்றைப் பற்றிச் சிந்திக்க முனையும் போது தான் அதில் உள்ள இன்னல்கள் தெரிய வரும்.

 முனை6 muṉai, பெ.(n.)

   1. போர்; battle, war.

     “கடுநெறி முனையகன் பெரும்பாழ்” (பதிற்றுப்.25:9);.

     “முனைதிறை கொடுக்குந் துப்பிற் றன்மலை” (அகநா.13:2);.

   2. போர்க் களம்; battle field.

     “முனையான் பெருநிரை போல” (குறுந்.80:6);.

     “முனைமுருங்கத் தலைச் சென்றவர்” (புறநா.16:3);.

   3. பகைப் புலம்; enemy country.

     “முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பின்” (குறிஞ்சிப். 128);.

   4. பகை; hatred.

   5. வெறுப்பு (சூடா.);; dislike, aversion.

   6. துணிவு (வின்.);; boldness, valour.

   7. கூட்டம், திரள் (ஈடு, 10. 5:10);; crowed, collection.

   8. குறிப்பிடப்படும் செயல்பாடு நிகழும் ஓர் இடம்; front as the place of action.

போர் முனை.

க. மொநெ

 முனை7 muṉai, பெ.(n.)

   தவம்; austerity.

     “முனைத் திறத்து மிக்கசீர் முனைவர்” (சீவக.707);.

 முனை8 muṉai, பெ.(n.)

   1. முன்; front.

     “அத்தி னகர மகர முனையில்லை” (தொல். எழுத்து.125);.

   2. முகம் (ஈடு, 10, 5:10);; face.

   3. நுனி; point, sharpened end, edge.

     “வெய்ய முனைத் தண்டு” (சீவக. 1136, பாடபேதம்);.

   4. கடலுட் செல்லும் நீண்ட கூரிய தரைப்பகுதி; cape, head-land.

   5. ஒரம்;   கோடி;விளிம்பு; corner of something.

குமரிமுனை.

   6. நீளமுடைய ஒரு பொருளில் அல்லது இணைக்கப்பட்ட ஒன்றின் தொடங்கும் இடம் அல்லது முடியும்

   இடம்; beginning or end part of a rope, street, etc. or anything connected.

நூலின் ஒரு முனையை எடுத்து ஊசியில் கோத்தான். தெருமுனையில் அந்தக் கடை உள்ளது. தொலைபேசியின் மறுமுனையில் பேசுவது யார் என்று தெரியவில்லை

தெ. முந, க.மொநெ.

 முனை9 muṉai, பெ.(n.)

   தலைமை (அக.நி.);; superiority, eminence.

முனைகாரன்

முனைகாரன் muṉaikāraṉ, பெ.(n.)

   முனைப்புள்ளவன் (வின்.);; courageous person;valiant, brave man.

     [முனை6 + காரன்]

முனைகுலை-தல்

முனைகுலை-தல் muṉaigulaidal,    2 செ.கு.வி.(v.i.)

   ஊக்கங் குன்றுதல் (வின்.);; to be dispirited, discouraged.

     [முனை + குலை-தல்]

முனைகேடு

 முனைகேடு muṉaiāṭu, பெ.(n.)

   மதிப்புரவின்மை (மரியாதையின்மை); (வின்.);; disrespect, insult.

     [முனை + கேடு]

முனைசுனை

முனைசுனை muṉaisuṉai, பெ.(n.)

   1. ஒழுங்கற்ற வேறுபாடு (யாழ்.அக.);; invidious distinction.

    2. ஏய்ப்பு (வஞ்சகம்); (இ.வ.);; double dealing.

முனைஞர்

முனைஞர் muṉaiñar, பெ.(n.)

   படைத் தலைவர்; commander of an army.

     “வேந்துவிடு முனைஞர்” (தொல்.பொருள். 57);.

     [முனை → முனைஞர்]

முனைந்தோர்

 முனைந்தோர் muṉaindōr, பெ.(n.)

   பகைவர் (திவா.);; enemies.

     [முனை → முனைந்தோர்]

முனைப்பதி

 முனைப்பதி muṉaippadi, பெ.(n.)

   பாசறை (பிங்.);; military encampment.

     [முனை + பதி]

முனைப்பாடி

முனைப்பாடி muṉaippāṭi, பெ.(n.)

   வட ஆர்க்காடு தென்னார்க்காடு மாவட்டங்கள் அடங்கிய பகுதி, பழைய நாடுகளுள் ஒன்று; an ancient province comprising portions of North and South Arcot Districts.

     “சிறந்த திருமுனைப்பாடித் திறம் பாடுஞ் சீர்ப்பாடு” (பெரியபு. திருநாவு.11); (I.M. PN.A.387: S.A. 737);.

மறுவ. திருமுனைப்பாடி

முனைப்பாடியார்

 முனைப்பாடியார் muṉaippāṭiyār, பெ.(n.)

   அறநெறிச்சாரம் என்ற நூலின் ஆசிரியராகிய புலவர்; a poet, author of A {}.

     [முனை + பாடியார்]

முனைப்பு

 முனைப்பு muṉaippu, பெ.(n.)

   ஒரு செயல், பணி முதலியவற்றைச் செய்வதில் காட்டும் மும்முரம்;   கவனம்; determination;drive.

நம் அணியினர் இன்னும் சற்று முனைப்பாக விளையாடி யிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். எழுத்தாளன் ஆகிவிட வேண்டும் என்பது அவன் குறிக்கோள், அதே முனைப்பாக இருக்கிறான்.

     [முனை → முனைப்பு]

முனைப்புலம்

முனைப்புலம் muṉaippulam, பெ.(n.)

முனைப்பதி பார்க்க (தொல்.பொருள்,57,உரை);;see {}.

     [முனை + புலம்.]

முனைமழுங்கு

முனைமழுங்கு1 muṉaimaḻuṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   கூர்மை கெடுதல்; to become blunt, as the edge of an instrument.

     [முனை + மழுங்கு-தல்]

 முனைமழுங்கு2 muṉaimaḻuṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   ஊக்கங் குன்றுதல்; to become dispirited, lose courage.

     [முனை + மழுங்கு-தல்]

முனைமுகம்

முனைமுகம் muṉaimugam, பெ.(n.)

   1. போர்க் களத்தின் முன்னிடம்; front of battle.

     “முனைமுகத்து நில்லேல்” (ஆத்திசூ.);.

   2. போர்க்களம்; battle field.

   3. போரின் தொடக்கம்; commencement of battle.

     “முனைமுகத்து மாற்றலர் சாய” (குறள், 749);.

     [முனை + முகம்]

முனைமேற்செல்(லு)-தல்

முனைமேற்செல்(லு)-தல் muṉaimēṟcelludal,    13 செ.கு.வி.(v.i.)

   பகைமேற் படையெடுத்தல்; to invade an enemy country.

     “முனைமேற் சென்றோ ருறைபதி” (திவா.);.

     [முனை + மேற்செல்-(லுதல்]

முனையடுவார்நாயனார்

முனையடுவார்நாயனார் muṉaiyaḍuvārnāyaṉār, பெ.(n.)

   நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர் (பெரியபு.);; a can- onized {} saint, one of 63.

இவர் இயற்பெயர், முனையடுவார். பொன்னித் திருநாட்டின் திருநீடுரைச் சார்ந்தவர்.

முனையதரையனான கண்டிய தேவன்

முனையதரையனான கண்டிய தேவன் muṉaiyadaraiyaṉāṉagaṇṭiyadēvaṉ, பெ. (n.)

   வீரபாண்டியன் 10வது ஆட்சி ஆண்டில் சந்தி ஏற்படுத்தி இதற்காகச் செலவுக்குத் தவசி பெரும் பாக்கத்தில் வரி நீக்கி நிலங்களைத் தானமாக வழங்கிய குறுநில மன்னன்; a chieftain.

     [முனையதரையன்+ஆன+கண்டியன்+தேவன்]

முனையதரையன்

 முனையதரையன் muṉaiyadaraiyaṉ, பெ.(n.)

   ஒர் அரசன்; a king (அபி.சிந்.);.

முனையம்

 முனையம் muṉaiyam, பெ.(n.)

   வானூர்தி நிலையத்தைக் குறிப்பிடும்போது ஒரே நேரத்தில் பல வானூர்திகள் இறங்கும் ஒடுபாதை கொண்ட நிலையம்; airport terminal.

     [முனை → முனையம்]

முனையரையர்

முனையரையர் muṉaiyaraiyar, பெ.(n.)

   முனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசர்; a dynasty of chiefs who ruled in {}.

     “காவல னார்நரசிங்க முனையரையர்” (பெரியபு.நரசிங்க.1);.

இவரின் சிறப்புப் பெயர் நரசிங்க முனையரையர். சமயம் சிவனியம். சுந்தர மூர்த்தி நாயனாரைத் தத்தெடுத்து வளர்த்தவர்.

முனையர்

முனையர் muṉaiyar, பெ.(n.)

முனையரையர் பார்க்க;see {}.

     “இம்முனையர் பெருந்தகையார்” (பெரியபு. நரசிங்க.2);.

முனையிடம்

முனையிடம் muṉaiyiḍam, பெ.(n.)

   1. போர்க் களம்; battle-field.

   2. பாலை நிலத்துர் (பிங்.);; town in a desert tract.

     [முனை + இடம்]

முனையுள்ளோன்

 முனையுள்ளோன் muṉaiyuḷḷōṉ, பெ.(n.)

முனைகாரன் (வின்.); பார்க்க;see {}.

     [முனை + உள்ளோன்]

முனையூர்

 முனையூர் muṉaiyūr, பெ.(n.)

   பெருங் கதையில் இடம்பெறும் தலைநகரத்தின் பெயர்; capital city.

இடவகனுக்கு உதயணன் கொடுத்த நாடுகளுள், ஒரு நாட்டின் தலைநகரத்தின் பெயர் (அபி.சிந்.);.

முனையோர்

முனையோர் muṉaiyōr, பெ.(n.)

   பகைவர்; enemies.

     “ஒன்னா முனையோர்க் கொழிக வினித்துயில்” (பு.வெ.4:21);.

     [முனை → முனையோர்]

முனைவன்

முனைவன்1 muṉaivaṉ, பெ. (n.)

   1. கடவுள்; god, as the First Being.

      “வினையினீங்கி விளங்கிய வறிவின் முனைவன்” (தொல். பொருள்.649);.

   2. முனிவன்; saint, sage.

     “முனைத்திறத்து மிக்கசீர் முனைவர்” (சீவக.707);.

   3. தலைவன்; chief.

     “முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன்” (திருக்கோ. 329, கொளு.);.

   4. புத்தன் (பிங்.);; the Buddha.

   5. அருகன்; Arhat.

     “முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான்” (சீவக. 1943);.

     [முனை → முனைவன்]

 முனைவன்2 muṉaivaṉ, பெ.(n.)

   பகைவன் (சது.);; enemy.

     [முனை → முனைவன்]

முனைவர்

 முனைவர் muṉaivar, பெ.(n.)

   குறிப்பிட்ட துறையில் ஆராய்ச்சி செய்து ஆய்வுக் கட்டுரை அளித்துப் பெறும் உயர்ந்த பட்டம்; Doctorate of Philosophy.

முனைவு

முனைவு muṉaivu, பெ.(n.)

   1. வெறுப்பு (தொல்.சொல்.386);; aversion, dislike, detest.

   2. அவாவின்மை (சூடா.);; freedom from desire.

   3. வெறுப்போடு கூடிய சினம்; anger, wrath.

     [முனை → முனைவு]

முன்

முன்1 muṉ, கு.பெ.எ.(adj.) & கு.வி.எ.(adv.)

   1. இடத்தைக் குறித்து வருகையில் முகத்தை நோக்கி இருப்பது;   இடத்தால் முன்னாவது; in front of someone.

     “என்னை முன்நில்லன் மின்தெவ்விர்” (குறள், 771);.

     “முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க” (தனிப்பா.);

      “மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும்” (தொல். எழுத்து.28);. புத்தகம் உனக்கு முன்தானே இருக்கிறது. பேருந்து திடீரென்று நின்றதால் முன் இருக்கையில் தலை மோதியது. யானைமுன் கால் (பிங்.);.

    2. காலத்தால் முன்னாவது (நன்.123, உரை);; previous prior.

     “முற்றுற்றுந் துற்றினை” (நாலடி, 190);.

     “உடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன்” (அகநா.1:18);.

     “பின்தூங்கி முன்னெழூஉம் பேதையே” (தனிப்பா.);.

     “யானைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே”(பழ.);.

   3. முன்னால்; forward.

காலை முன்வைத்தவன் திடுக்கிட்டு நின்றான்.

    4. காலத்தை குறித்து வருகையில், குறிப்பிட்டதற்கு முதலில் அமைவது அல்லது வந்தது; of time before;first part, etc.

ஐந்து ஆண்டுகட்கு முன் நடந்த நிகழ்ச்சி.

   5. வெளிப்புறம் அமைவது;பயன்பாட்டில் முதன்மையாக அமைவது; front side, part, etc.

கதவின் முன்பக்கத்தைத் துடை.

தெ. முனு;க. மு.

     [முல் → முன். முல் = முன்மை (கருத்து);.]

 முன்2 muṉ, பெ.(n.)

   1. பழமை (சூடா.);; antiquity.

     “கற்றோன்றி மண்றோன்றாக் காலத்தே வாளோடு முன்றோன்றி மூத்தகுடி” (பு.வெ.2:15);.

   2. முதல் (பிங்.);; that which is first or chief.

   3. உயர்ச்சி (திவா.);; eminence.

   4. முன்றோன்றல் பார்க்க;see {}.

     “அறுமுகேசன் முன்” (திருவாலவா. காப்பு, 2);.

     [முல் → முன். முல் = முன்மை.]

 முன்3 muṉ, இடை. (part.)

   ஏழனுருபுள் ஒன்று (நன்.302);; sign of the locative.

 முன்4 muṉ, பெ.(n.)

   1. மனக்குறிப்பு; meaning, idea.

     “முன்னுற வுணர்தல்” (தொல்.பொருள்.127);.

   2. பக்கம்; side,

   3. உப்பு; salt.

க. முந்து

     [முன்னு → முன்.]

முன்கடை

முன்கடை muṉkaḍai, பெ.(n.)

   வீட்டுவாயில்; vestibule.

     “தேரெம் முன்கடை நிற்க” (ஐங்குறு.5);.

தெ. முந்கட

     [முன் + கடை.]

முன்கட்டி

 முன்கட்டி muṉkaṭṭi, பெ. (n.)

   முறத்தில் முன் புறம் உள்ள இரண்டு மூலைகளைக் கட்டுகை; finishing two ends in winnow making.

     [முன்+கட்டி]

முன்கட்டு

முன்கட்டு muṉkaṭṭu, பெ.(n.)

   1. வீட்டின் முற்பகுதி; front apartments of a house (lobby);.

   2. கைகளை முன்னாக வைத்துக் கட்டுகை; pinioning the hands in front.

     [முன் + கட்டு.]

பின்கட்டுக்கு எதிர்ச்சொல்.

முன்கலந்தவிருட்சத்தி

 முன்கலந்தவிருட்சத்தி muṉkalandaviruṭcatti, பெ.(n.)

   வில்வம்; a sacred tree-Bael tree-Aegle marmelos (சா.அக.);.

முன்கழுத்துக்கழலை

 முன்கழுத்துக்கழலை muṉkaḻuttukkaḻlai, பெ.(n.)

   கழுத்திலுள்ள (தைராய்டு); சுரப்பி வீங்குவதால் ஏற்படும் நோய்; goitre.

     [முன் + கழுத்து + கழலை.]

     [p]

முன்கால்

 முன்கால் muṉkāl, பெ.(n.)

முன்னங்கால் பார்க்க;see {}.

     [முன் + கால்.]

முன்குச்சி

 முன்குச்சி muṉkucci, பெ. (n.)

முறத்தின் முன்பக்கம்குச்சி வைத்துக் கட்டுவது

 fire part fixing stick in the forefront of the winnow.

     [முன்+குச்சி]

முன்குடுமி

முன்குடுமி muṉkuḍumi, பெ.(n.)

   தலையின் முன்பக்கமாக வைத்துக் கொள்ளுங் குடுமி; tuft of hair in front.

     “சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா” (தனிப்பா.1, 29:54);. “சோழியன் குடுமி சும்மா ஆடுமா?” (பழ.);.

     [முன் + குடுமி.]

முன்கூட்டியே

முன்கூட்டியே muṉāṭṭiyē, வி.அ.(adv.)

   1. முன்பே; in advance.

பணம் வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லக்கூடாதா?

   2. ஏற்கெனவே, முன்னரே; early, already.

அவர் யார் என்பது முன்கூட்டியே உனக்குத் தெரியுமா?

     [முன் + கூட்டியே.]

முன்கை

முன்கை muṉkai, பெ.(n.)

   1. கையின் முன்பகுதி, முன்னங்கை; forearm.

     “முன்கை யிறை யிறவா நின்ற வளை” (குறள், 1157);.

      “யரம்பபோ ழவ்வளைப் பொலிந்த முன்கை” (அகநா.6:2);.

      “அரிமயிர்த் திரண்முன்கை” (புறநா.11:1);.

      “வளையணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்தென” (நற்.71:2);.

      “தொகு வளை முன்கை மடந்தையொடு நட்பே” (குறுந்.15:6);. 2. கை;

 hand.

     “முன்கை நீண்டால் முழங்கை நீளும்” (பழ.);.

க. முந்கை.

     [முன் + கை.]

முன்கைத்தொடரி

 முன்கைத்தொடரி muṉkaittoḍari, பெ. (n.)

   கைச்சங்கிலி; hands cuff.

     [முன்கை+தொடரி]

முன்கைவாதம்

 முன்கைவாதம் muṉkaivātam, பெ.(n.)

   முன்னங்கை இரண்டோடு முகமும் வீங்கி வலிக்கும் ஒரு வகையான காற்றுப் பிடிப்பு நோய்; a kind of rheumatism affecting the fore arms (சா.அக.);.

     [முன்கை + Skt.வாதம்.]

முன்கொம்பு

முன்கொம்பு muṉkombu, பெ.(n.)

   1. விலங்கின் முன்வளைந்த கொம்பு (வின்.);; horn bent forwards.

   2. பல்லக்கு முதலியவற்றின் முன்தண்டு; front pole, as of palanquin.

     [முன் + கொம்பு.]

முன்கோபம்

 முன்கோபம் muṉāpam, பெ.(n.)

   முழுக்கத் தெரிந்து கொள்ளும் முன்பே தோன்றும் சினம்; short temper.

தன்னுடைய முன்கோபத்தினால் பல நல்ல வேலைகளை இழந்திருக்கிறார். முன் கோபம் பின்னிரக்கம்.

     [முன் + Skt. கோபம்.]

முன்கோபி

 முன்கோபி muṉāpi, பெ.(n.)

   விரைவில் சினங்கொள்ளக்கூடியவர்; person with a short temper.

முன் கோபியைக் கண்டால் மூன்றடி தள்ளியே நின்று பேசுதல் நலம்.

     [முன் + Skt. கோபி.]

முன்கோலம்

 முன்கோலம் muṉālam, பெ.(n.)

   நிலப் பனை; ground palm – Curculigo orchioides (சா.அக.);.

முன்சி

 முன்சி muṉci, பெ. (n.)

   மொழி கற்பிக்கும் ஆசிரியன்; language teacher.

     [Ar. munshi → த. முன்சி]

முன்சிகை

 முன்சிகை muṉcigai, பெ.(n.)

முன்குடுமி பார்க்க;see {}.

முன்சொல்

 முன்சொல் muṉcol, பெ.(n.)

   பழமொழி (பிங்.);; old saying, proverb.

மறுவ. சொலவடை, முதுமொழி.

     [முன் + சொல்.]

முன்தட்டு

 முன்தட்டு muṉtaṭṭu, பெ.(n.)

   மரக்கலத்தின் முகப்புத் தட்டு; deck across the bow of a vessel.

     [முன் + தட்டு.]

முன்தண்டு

 முன்தண்டு muṉtaṇṭu, பெ. (n.)

   வடும்புத் தண்டில் இருந்து நூல்களை முன்தண்டுக்குக் கொண்டு வந்து இணைக்கும் மரம்; a device in handloom.

     [முன்+தண்டு]

முன்தள்ளு-தல்

முன்தள்ளு-தல் muṉdaḷḷudal,    5 செ.கு.வி. (v.i)

   ஒரு வரிசையில் இருந்து, முன் பக்கமாக நீண்டிருத்தல், துருத்துதல், வெளியே தள்ளி அமைதல்; stick out, project.

அவளுக்குச் சற்று முன்தள்ளிய பல். தெருவில் முன் தள்ளியிருக்கிற வீடுதான் அவருடைய வீடு.

     [முன் + தள்ளு-தல்.]

முன்தானை

 முன்தானை muṉtāṉai, பெ.(n.)

முன்றானை பார்க்க;see {}.

     [முல் → முன் + தானை. தானை = ஆடை.]

முன்தேர்க்குரவை

 முன்தேர்க்குரவை muṉtērkkuravai, பெ.(n.)

முன்றேர்க்குரவை பார்க்க;see {}.

முன்தொடரி

 முன்தொடரி muṉtoḍari, பெ. (n.)

   ஒரு வகைத் தொடரிப் பூண்டு; a thorny shrub.

முன்நிறுத்து-தல்

முன்நிறுத்து-தல் muṉniṟuddudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒருவரை அல்லது ஒரு கருத்தை அல்லது ஒரு செய்தியை முதன்மைப்படுத்துதல், முதன்மை அளித்தல்; bring to the fore, project some one, keep something in focus.

மக்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு தலைவரை முன்நிறுத்தி செய்தி பரப்பும் பணியைச் செய்தால் தேர்தலில் வெற்றி பெறலாம். மக்களின் நிலையை முன் நிறுத்திப் பார்க்கையில் இதுபோன்ற திருவிழாக்கள் பயனற்றது.

     [முன் + நிறுத்து-தல்.]

முன்நேரம்

முன்நேரம் muṉnēram, பெ. (n.)

   1. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமேயே உள்ள நேரம்; the time before the particular time.

தேர்வுக்கு முன்நேரத்திலேயே சென்றுவிடு.

   2. விடியற்காலை; early morning.

   காலை முன்நேரமாக எழுதல் உடலுக்கு நலம். 3. கடந்த நாழிகை அல்லது மணித் துளிகளைக் கூறுவது; past minute or time.

     “முன் நேரம் கப்பற்காரன். பின் நேரம் பிச்சைக்காரன்” (பழ.);.

     [முன் + நேரம்.]

முன்னங்கால்

முன்னங்கால் muṉṉaṅgāl, பெ.(n.)

   1. விலங்கின் கழுத்தை ஒட்டி அமைந்திருக்கும் முன்பக்கத்துக் கால்; foreleg of a quadruped.

   2. முழங்காலின் முன்பக்கம் (வின்.);; shin, the forepart of the leg.

   3. பாதத்தின் மேற்பக்கம் (இ.வ.);; instep.

     [முன் + கால் – முன்கால் → முன்னங்கால்.]

முன்னங்கால்சப்பை

 முன்னங்கால்சப்பை muṉṉaṅgālcappai, பெ.(n.)

   விலங்குகளின் முன்கால் தசை; animals fore leg muscle.

     [முன்னங்கால் + சப்பை.]

முன்னங்கை

 முன்னங்கை muṉṉaṅgai, பெ.(n.)

   கையின் முன்பாகமான உறுப்பு; forearm.

     [முன் + கை – முன்கை → முன்னங்கை.]

முன்னடி

முன்னடி1 muṉṉaḍi, பெ.(n.)

   1. வீட்டின் முகப்பிடம் (வின்.);; portion of a house near its entrance.

   2. அருகில்; proximity.

அது முன்னடியிலே யிருக்கிறது.

   3. விளிம்பு; brink, edge.

கிணற்று முன்னடி.

   4. பாட்டின் முதலடி; first line of a poem.

   5. முன்னடியான் பார்க்க;see {}.

     [முன் + அடி]

 முன்னடி2 muṉṉaḍi, கு.வி.எ.(adv.)

   முன்பு (யாழ்.அக.);; before.

     [முன் + அடி.]

முன்னடிபின்னடிசேவித்தல்

 முன்னடிபின்னடிசேவித்தல் muṉṉaḍibiṉṉaḍicēvittal, பெ.(n.)

   தெய்வப் பனுவல்களின் (திவ்வியப் பிரபந்தப் பாடல்களின்); முன்பாதிபின்பாதிகளின் முதல் நினைப்புகளை மட்டும் சொல்லுகை (அனுசந்திக்கை);; a short method of reciting Tivviya-p-pirabandam, by which a portion only of each half of a stanza is recited.

     [முன்னடி + பின்னடி + சேவித்தல்.]

முன்னடிமாது

 முன்னடிமாது muṉṉaḍimātu, பெ.(n.)

   இலந்தை; jujube tree- Zizphus jujube (சா.அக.);.

முன்னடியான்

 முன்னடியான் muṉṉaḍiyāṉ, பெ.(n.)

   கோயிலின் வாயிலில் உள்ள சிறு தெய்வம்; minor deity in front of a shrine.

     “சுவாமி வரங்கொடுத்தாலும் முன்னடியான் வரங்கொடான்’ (வின்.);.

     [முன்னடி → முன்னடியான்]

முன்னடியார்

 முன்னடியார் muṉṉaḍiyār, பெ.(n.)

   முன்னோர் (வின்.);; ancestors.

     [முன்னடி → முன்னடியார்]

முன்னடியில்

முன்னடியில் muṉṉaḍiyil, கு.வி.எ. (adv.)

   1. சிறிது நேரத்தில்; shortly.

முன்னடியில் வந்துவிட்டேன் (இ.வ.);.

   2. அண்மையில்; near.

     [முன்னடி → முன்னடியில்]

முன்னடிவிளக்கு

முன்னடிவிளக்கு muṉṉaḍiviḷakku, பெ. (n.)

   முன்கொண்டு செல்லும் கைவிளக்கு; light carried in front.

     “சுடர்வேன் முன்னடி விளக்கா” (பதினொ.திருவாரூ.7);.

     [முன்னடி + விளக்கு]

முன்னடைப்பன்

 முன்னடைப்பன் muṉṉaḍaippaṉ, பெ.(n.)

   அசை போடாமற் செய்யும் மாட்டு நோய் வகை (வின்.);; a disease which prevents cattle from chewing the cud.

     [முன் + அடைப்பான்]

முன்னடையாளம்

 முன்னடையாளம் muṉṉaḍaiyāḷam, பெ.(n.)

   முன்னறிகுறி (வின்.);; portent, indication.

     [முன் + அடையாளம்]

முன்னணி

முன்னணி1 muṉṉaṇi, பெ.(ո.)

   1. விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில் வெற்றி அடையும் வாய்ப்புடன் இருக்கும் நிலை, முன்னிலை; position ahead of oth- ers;the lead.

அந்த வேட்பாளர் ஐயாயிரம் ஒட்டு முன்னணியில் உள்ளார்.

   2. முதன்மை வகிக்கும் நிலை; fore front;leading writers, etc.

   தொழில் வளர்ச்சியில் நம் நாடு முன்னணியில் உள்ளது. அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர் இவர். அந்த முன்னணி நடிகர் பேட்டி தர மறுத்துவிட்டார். 3. குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் பலர் அல்லது பல அமைப்புகள் இணைந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு; of political parties, etc. forming a front.

தேர்தலில் தமிழ் முன்னணி வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

     [முன் + அணி]

 முன்னணி2 muṉṉaṇi, பெ.(n.)

   தூசிப்படை (வின்.);; van of an army.

க. முந்நணி

     [முன் + அணி]

முன்னணிசு

முன்னணிசு muṉṉaṇisu, பெ.(n.)

   தலை முண்டாசு வகை; a kind of head -dress.

     “முத்துராயன் கொடுத்தான் முன்னணிசு” (விறலிவிடு.108);.

     [முன் + அணிசு]

முன்னணை

முன்னணை1 muṉṉaṇai, பெ.(n.)

   மாட்டுத் தொட்டி (வின்.);; crib, manger.

மறுவ. கழனித்தொட்டி.

     [முன் + அணை]

 முன்னணை2 muṉṉaṇai, பெ.(ո.)

   1. முதலில் பிறந்த குழந்தை அல்லது கன்று (திவ். திருமாலை, 19, வியா. பக்.71);; elder- born child or calf.

   2. முதலிற் செல்லும் ஏர்; leading plough, in ploughing.

   3. கொண்டி மாட்டுக்கு முன்னங்காலிற் கட்டுந்தளை (இ.வ.);; clog or cord fastening the forelegs of a refractory animal.

   4. அணைக்குமுன் தற்காலிகமாகப் போடும் அணை (இ.வ.);; ring – bund.

     [முன் + அணை]

முன்னதம்

 முன்னதம் muṉṉadam, பெ.(n.)

   நாட்டியத்தில் ஆட்காட்டிவிரலை மற்றை விரல்களினின்றும் பிரித்துச் செய்யும் மெய்ப்பாடு வகை (வின்.);; a kind of hand-pose in which the fore-finger is held separate from the rest.

முன்னதாக

 முன்னதாக muṉṉatāka, வி.அ.(adv.)

   குறிப்பிடப்படும் நேரத்திற்கு அல்லது குறிப்பிடப்படுவதற்கு முன்பு; before;previously.

மின் தொடர் வண்டி புறப்படுவதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே தொடர்வண்டி நிலையம் வந்து விட்டேன். இரு அணிகளுக்கு இடையே இதற்கு முன்னதாக நடைபெற்ற ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.

க. முந்தாகி

     [முன்னது + ஆக – முன்னதாக.]

முன்னது

 முன்னது muṉṉadu, பெ.(n.)

   வரிசையில் ஒழுங்கில் முன் இருப்பது அல்லது முதலில் வருவது; the former;

 that which is first or in front.

இந்த இரு திரைப்படங்களில் முன்னதுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருக்கிறது.

     [முன் → முன்னது]

முன்னத்தினருங்கிளவி

 முன்னத்தினருங்கிளவி muṉṉattiṉaruṅgiḷavi, பெ.(n.)

   குறிப்பினால் உணரப்படும் ஒரு சொல் (நன்.);; a word of implication (அபி.சிந்);.

     [முன்னத்தின் + அருங்கிளவி.]

முன்னத்தின்கால்

 முன்னத்தின்கால் muṉṉattiṉkāl, பெ.(n.)

முன்னங்கால் பார்க்க;see {}.

முன்னத்தின்கால்சப்பை

 முன்னத்தின்கால்சப்பை muṉṉattiṉkālcappai, பெ.(n.)

முன்னனங்கால்சப்பை பார்க்க;see {}.

முன்னந்தம்

 முன்னந்தம் muṉṉandam, பெ.(n.)

   முன் பார்வை (வின்.);; front view.

     [முன் → அந்தம்]

முன்னந்தலை

 முன்னந்தலை muṉṉandalai, பெ.(n.)

நெற்றியிலிருந்து உச்சி வரையுள்ள

தலைப்பாகம் (C.G.); forepart of the head, sinciput.

     [முன் + தலை → முன்னந்தலை]

முன்னந்தொடை

முன்னந்தொடை muṉṉandoḍai, பெ.(n.)

   1. தொடையின் மேற்பகுதி; upper part of the thigh.

   2. முன்தொடை இறைச்சி; fore-quarter of mutton.

     [முன் + தொடை → முன்னந்தொடை]

முன்னன்

முன்னன் muṉṉaṉ, பெ.(n.)

   அண்ணன்; elder brother.

     “பெட்பொடு முன்னனைக் காணும்” (இரகு.அவதாரநீங்.13);.

     [முன் → முன்னன்.]

முன்னபாவம்

முன்னபாவம் muṉṉapāvam, பெ.(n.)

   இன்மை (அபாவம்); நான்கனுள் முன்பு இல்லாமை (தருக்கசங்.96);; previous non-existence, one of four {}.

     [முன் + Skt. அபாவம்]

முன்னமரம்

 முன்னமரம் muṉṉamaram, பெ.(n.)

   முன்னை; a small tree.

முன்னம்

முன்னம்1 muṉṉam, கு.பெ.எ.(adj.) & கு.வி.எ. (adv.)

முன்1 பார்க்க;see {}.

     “நம்மினு முன்ன முணர்ந்த வளை” (குறள், 1277);.

க. முந்நம்

     [முன் -.→ முன்னம்.]

 முன்னம்2 muṉṉam, பெ.(n.)

   1 கருத்து; thought, intention.

     “முன்ன முகத்தினுணர்ந்து” (புறநா.3);.

   2. மனம் (திவா.);; mind.

     [முன்னு → முன்னம்.]

 முன்னம்3 muṉṉam, பெ.(n.)

   1. குறிப்பு; sign, indication.

     “முன்னத்தா னொன்று குறித்தாய் போற் காட்டினை” (கலித்.61);.

     “முன்னங் காட்டி முகத்தி னுரையா” (அகநா. 5:19);.

   2. குறிப்புப் பொருள்; implication, suggestion.

முன்னவிலக்கு.

     [முன்னு → முன்னம்.]

 முன்னம்4 muṉṉam, பெ.(n.)

   இம்மொழி சொல்லுதற்கு உரியாரும் கேட்டற்கு உரியாரும் இன்னாரெனப் படிப்போர் அறியுமாறு செய்யப்படுவதாகிய செய்யு ளுறுப்பு (தொல். பொருள்.519);; indication of the person speaking and the person addressed, in a stanza.

     [முன்னு → முன்னம்]

 முன்னம்5 muṉṉam, பெ.(n.)

   அரிமா; lion.

 முன்னம்6 muṉṉam, பெ.(n.)

   சீக்கிரி; black sirissa.

முன்னம்பல்

முன்னம்பல் muṉṉambal, பெ.(n.)

   வாயின் முன்வரிசைப் பல் (C.G.);; front tooth, incisor.

     [முன்னம்1 + பல்.]

முன்னர்

முன்னர் muṉṉar, கு.வி.எ.(adv.)

   1. முன்பு (பிங்.);; before;inadvance;in front of.

     “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை” (குறள், 435);.

     “அன்னை முன்னர்யாம் என்னிதற் படலே”(அகநா.95:15);, “தெறலருங் கடவுள் முன்னனர்ச் சீறியாழ்” (நற்.189:3);.

     “தெண்கிணை முன்னர்க் களிற்றி னியலி” (புறநா.79:3);.

   2. முற்காலத்தில்; in former times.

க. முந்ந

     [முன் → முன்னர்]

முன்னர்விலக்கு

 முன்னர்விலக்கு muṉṉarvilakku, பெ.(n.)

முன்னவிலக்கு பார்க்க;see {}.

முன்னறிகுறி

 முன்னறிகுறி muṉṉaṟiguṟi, பெ.(n.)

   பின் னிகழ்ச்சிக்கு அறிகுறியாக முன்னிகழ்வது; portent, presage.

     [முன் + அறிகுறி]

முன்னறிவிப்பு

முன்னறிவிப்பு muṉṉaṟivippu, பெ.(n.)

   1. முன்கூட்டியே தெரிவிக்கும் நடவடிக்கை; fore warning;notice;notification.

தொழிலாளர்கள் முன்னறிவிப்புத் தராமல் வேலை நிறுத்தத்தில் இறங்கியதாக நிருவாகம் கூறியது. அடகு வைத்த நகைகளை முன்னறிவிப்பு இல்லாமல் ஏலம் போட முடியாது.

   2. வானிலையைப் பற்றிய முன்கணிப்பு; weather forecast.

கடற்கரை ஒரப் பகுதிகளில் மழை பெய்யும் என்பது இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

     [முன் + அறிவிப்பு.]

முன்னல்

முன்னல் muṉṉal, பெ.(n.)

   1. நினைவு; thinking.

   2. மனம்; mind.

தெ. முந்நு.

     [முன்னு → முன்னல்]

முன்னவன்

முன்னவன் muṉṉavaṉ, பெ.(n.)

   1. தேவன், கடவுள்; the first Being God.

     “முன்னவன் போதியில்” (மணிமே.28:141);.

   2. சிவன் (பிங்.);;{}.

     “முன்னவன் கூடல்” (கல்லா.32:10);.

   3. அண்ணன் (சூடா.);; elder brother.

     “முன்னவன் வினவ” (கம்பரா.வேள்.4);. “முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ” (பழ.);.

     [முன் → முன்னவன்]

முன்னவள்

முன்னவள் muṉṉavaḷ, பெ.(n.)

   1. அக்கை (தமக்கை); (பிங்.);; elder sister.

   2. மூதேவி; goddess of Misfortune.

     “முன்னவள் பதாகையோடு….. வந்துற்றவா போல்” (கந்தபு.சிங்கமு.443);.

     [முன் → முன்னவள்]

முன்னவிலக்கு

முன்னவிலக்கு muṉṉavilakku, பெ.(n.)

   குறிப்பினால் ஒன்றனை மறுத்து மேன்மை தோன்றச் சொல்லும் விலக்கணிவகை; a figure of speech in which a statement is heightened in effect by the suggestion of an apparent contradiction. “முன்னத்தின் மறுப்பினது முன்னவிலக்கே மூவகைக் காலமு மேவிய தாகும்” (தண்டி. 43);.

     [முன்னம் + விலக்கு]

முன்னவிலக்கணி வகைகள்:

   1. இறந்த வினை விலக்கு,

   2. எதிர்வினை விலக்கு,

   3. நிகழ்வினை விலக்கு,

   4. பொருள் விலக்கு,

   5. குணவிலக்கு,

   6. காரண விலக்கு,

   7. காரிய விலக்கு,

   8. வன்சொல் விலக்கு,

   9. வாழ்த்து விலக்கு,

   10. தலைமை விலக்கு,

   11. இகழ்ச்சி விலக்கு,

   12. துணைசெயல் விலக்கு,

   13. முயற்சி விலக்கு,

   14. பரவச விலக்கு,

   15. உபாய விலக்கு,

   16. கையறல் விலக்கு,

   17. உடன்படல் விலக்கு,

   18. வெகுளி விலக்கு,

   19. இரங்கல் விலக்கு,

   20. ஐயவிலக்கு,

   21. வேற்றுப் பொருள்வைப்பு விலக்கு,

   22. சிலேடை விலக்கு,

   23. ஏது விலக்கு.

முன்னா-தல்

முன்னா-தல் muṉṉātal,    6 செ.கு.வி.(v.i.)

   முன்னதாதல்; to be first;to be early.

      “முன்னான பூதங்கள்” (கம்பரா. இரணியன் வதை.170);.

     [முன் → முன்னா-தல்]

முன்னாகக்கொடி

 முன்னாகக்கொடி muṉṉākakkoḍi, பெ. (n.)

   பிள்ளைத் தாய்ச்சிக் கொடி; placental cord (சா.அக.);.

மறுவ. நஞ்சுக்கொடி, தொப்புள் கொடி.

முன்னாடி

முன்னாடி1 muṉṉāṭi, பெ.(n.)

   முன்பக்கம்; infront portion.

     ‘கீழ்த் தாடையிலுள்ள தீய மாட்டுச்சுழி முன்னாடியிருந்தா பண்ணாடிக்காகாது’ (பழ.);.

     [முன் → முன்னாடி]

 முன்னாடி2 muṉṉāṭi, கு.வி.எ. (adv.)

   முன்னமே (உ.வ.);; formerly, previously, already.

     [முன் → முன்னாடி]

 முன்னாடி3 muṉṉāṭi, வி.அ.(adv.)

முன்னால்1 பார்க்க;see {}.

     [முன் → முன்னாடி]

முன்னாலே

முன்னாலே muṉṉālē, கு.வி.எ. (adv.)

முன்னாடி2 பார்க்க;see {}.

     [முன் → முன்னாலே]

முன்னால்

முன்னால்1 muṉṉāl, வி.அ.(adv.)

   1. முன் பக்கமாக; forward;infront of.

கண்ணாடிக் கதவை முன்னால் தள்ளுதல்.

   2. முன்னர்; years ago;preceding;before.

இது நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. எனக்கு முன்னால் பேசியவர் யார்? முன்னால் போனா கடிக்கும். பின்னால் போனா ஒதைக்கும்.

     [முன் → முன்னால்]

 முன்னால்2 muṉṉāl, இடை.(part.)

   முன் பக்கத்தில்; before some one or something.

எனக்கு முன்னால் கழுதை ஒடியது. ‘முன்னால் பார்த்தால் சேவகன் குதிரை, பின்னாலே பார்த்தால் செட்டியார் குதிரை’ (பழ.);.

     [முன் → முன்னால்]

முன்னாள்

முன்னாள்1 muṉṉāḷ, கு.பெ.எ.(adj.)

   பொறுப்பு, பதவி முதலியவை குறித்து வருகையில் கடந்த காலத்தில் இருந்ததைக் குறிப்பது; former;ex.

முன்னாள் அமைச்சர் ஒருவர் விழாவுக்குத் தலைமையேற்றார். இவன் என்னுடைய முன்னாள் மாணவன்.

     [முன் + நாள்]

 முன்னாள்2 muṉṉāḷ, பெ.(n.)

   1. முன்தினம்; yesterday;previous day.

   2. முற்காலம்; former days.

     “முன்னாள் பாய்விடைக ளேழடர்த்து” (திவ். பெரியதி.3.4:4);.

மறுவ. மேனாள்

     [முன் + நாள்.]

 முன்னாள்3 muṉṉāḷ, பெ.(n.)

   தமக்கை (வின்.);; elder sister.

     [முன் → முன்னாள்]

முன்னி

 முன்னி muṉṉi, பெ.(n.)

   முல்லை நிலத்தில் இயற்கையாக விளையும் ஒரு சிறு பயறு; a small size green gram grown in mullai tract.

     [முல் → முன் → முன்னி (வே.க.);. முல் = சிறுமை.]

ஒ.நோ. L. min, small. இதனின்றே minify, minim, minimum, minish, minor, minute

முதலிய பல சொற்கள் திரிந்துள்ளதாகத் தெரிகிறது (வே.க.);.

இயற்கையான தோற்றம் அல்லது இயக்கமெல்லாம் முன்னோக்கியே நிகழ்தலால்

தோற்றக் கருத்தில் முன்னோக்கல் அல்லது முகங்காட்டற் கருத்து இரண்டறக் கலந்துள்ளது (வே.க.);.

முன்னிசிவு

முன்னிசிவு muṉṉisivu, பெ.(n.)

   உடம்பை முன்பக்கமாக வளையச் செய்யும் ஒருவகை ஊதைநோய் (தம்பவாதநோய்); (சீவரட்.165);; a kind of rheumatism in which the body is bent forward.

     [முன் + இசிவு.]

முன்னிடு

முன்னிடு1 muṉṉiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. முந்துதல்; to advance;to go in front.

   2. அணியமாயிருத்தல்; to be ready, prompt.

   3. வெற்றியாதல் (அனுகூலமாதல்);; to succeed, be successful.

உனக்குக் காரியம் முன்னிடும்.

தெ. முந்நிடு;க. முந்திடு;ம. முந்நிடுக.

     [முன் + இடு-தல்.]

 முன்னிடு2 muṉṉiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. முன் வைத்தல்; to put before.

   2. எதிர்ப்படுதல் (வின்.);; to meet.

   3. முன்னே போகவிடுதல் (வின்.);; to let one go before or in advance.

   4. நோக்கமாகக் கொள்ளுதல்; to bear in mind.

அந்தச் செயலை முன்னிட்டு வந்தான்.

   5. துணைக் கொள்ளுதல்; to invoke the aid of.

இவன் முன்னிடுமவர்களை அவன் முன்னிடும் (ஸ்ரீவசந.2:151);.

     [முன் + இடு-தல்.]

முன்னிட்டி

 முன்னிட்டி muṉṉiṭṭi, பெ.(n.)

   விலங்குகளுக்கு உணவு வைக்குந் தொட்டி (வின்.);; crib, manger, trough for fodder.

     [முன்னிடு → முன்னிட்டி]

முன்னிட்டு

முன்னிட்டு muṉṉiṭṭu, வி.அ.(adv.)

   1. ஒரு கரணியத்தை முன்வைத்து; advancing or offering any reason.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் விழாவிற்கு வராமல் இருந்து விடாதீர்கள்.

    2. ஒன்றைக் கரணியமாகக் கொண்டு; on account of.

தலைவர் இறந்ததை முன்னிட்டு வண்டிகளில் கறுப்புக் கொடி கட்டியிருந்தனர்.

     [முன் + இட்டு.]

முன்னின்மை

முன்னின்மை muṉṉiṉmai, பெ.(n.)

முன்ன பாவம் பார்க்க;see {}.

     “முன்னின்மையோடு பின்னின்மை யன்றி” (வேதா.சூ.35);.

     [முன் + இன்மை]

முன்னிருட்டு

 முன்னிருட்டு muṉṉiruṭṭu, பெ.(n.)

   இருட் பக்க (அபரபட்சம்); இரவின் முற்றேரத்திலுள்ள இருள் (உ.வ.);; darkness in the early hours of the night, as during the dark fortnight.

     [முன் + இருட்டு.]

முன்னிருப்பு

முன்னிருப்பு muṉṉiruppu, பெ.(ո.)

   1. முன்னிலைமை; former condition.

   2. குடிவழிச் சொத்து (பூர்வ சொத்து);; ancestral property.

   3. கையிருப்புத் தொகை; balance on hand.

   4. கணக்கில் முன்னேட்டிலிருந்து எடுத்தெழுதும் இருப்புத் தொகை; balance brought forward.

     [முன் + இருப்பு.]

முன்னிலவு

 முன்னிலவு muṉṉilavu, பெ.(n.)

முன்னிலா (வின்.); பார்க்க;see {}.

     [முன் + நிலவு. முழுநிலவு நாள் (வெள்ளுவா); வருவதற்கு முந்திய நாட்கள். ]

முன்னிலா

 முன்னிலா muṉṉilā, பெ.(n.)

   ஒளிப்பக்கத்து (பூர்வ பட்சம்); இரவின் முன்னேரத்திலுள்ள நிலவு; moonlight in the early hours of the night, as during the bright fortnight.

     [முன் + நிலா]

முன்னிலை

முன்னிலை1 muṉṉilai, பெ.(n.)

   1. முன்னிற்ப -வள்-வன்-து; person or thing that stands in front.

     “முன்னிலையாக்கல்” (தொல். பொருள்.101);.

    2. தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூவிடங்களுள் ஒன்று; second person, the person or thing spoken to.

     “உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும்” (தொல். எழுத்து.152);.

     “பெருவளக் கரிகாள் முன்னிலைச் செல்லார்” (அகநா.125:18);.

     “ஒன்னார் முன்னிலை முருககிப் பின்னின்று” (புறநா.262:4);.

   3. கரணியம் (தஞ்சைவா.7, தலைப்பு, உரை);; cause.

   4. முதன்மையானது; that which is essential.

     “கலவிக்கு முன்னிலையாய்” (திருவிருத்.16, வியா.பக்.113);.

   5. நேர்முகம் (சமுகம்);; presence.

அவர் முன்னிலையிற் சொல்லியுள்ளேன்.

   6. வெளிப்படுமிடம்; place of manifestation.

     “முன்னிலை கமரேயாக” (பெரியபு.அரிவாட்டாய.23);.

     [முன் + நிலை.]

 முன்னிலை2 muṉṉilai, பெ.(ո.)

   1. விளையாட்டு, தேர்தல் முதலியவற்றில் வெற்றி பெறுவதற்குரிய முதல் இடம்;   முன்னணி; leading position in a race, etc.

அந்த வேட்பாளர் பத்தாயிரம் நேரி (வாக்கு);கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்தப் போட்டித் தொடரில் எந்த நாடு முன்னிலையில் உள்ளது என்று தெரியவில்லை.

   2. ஒருவர் இருக்கும் இடத்தின் முன்பு; presence of someone.

இறைவன் முன்னிலையில் பூக்கட்டிப் போட்டுப் பார்த்தார்கள்.

   3. பேசுபவரின் முன் இருப்பவர்; person who is addressed;second person.

     [முன் + நிலை.]

முன்னிலைஅசைச்சொல்

 முன்னிலைஅசைச்சொல் muṉṉilaiasaissol, பெ.(n.)

முன்னிலையசை பார்க்க;see {}.

     [முன்னிலை + அசை + சொல்]

முன்னிலைக்காட்சி

 முன்னிலைக்காட்சி muṉṉilaikkāṭci, பெ.(n.)

   இறைவனை முன்னால் (அணித்துறக்); காணும் காட்சி (பிரபஞ்சவி.);; realising God as being immediately present.

     [முன்னிலை + காட்சி.]

முன்னிலைக்காரன்

முன்னிலைக்காரன் muṉṉilaikkāraṉ, பெ.(n.)

   1. கம்மாளர், வண்ணார் முதலிய குலங்களின் தலைவன் (யாழ். அக.);; headman of the caste, as of {} etc.

   2. ஒருவகைக் கீழ்த்தர வேலைக்காரன் (நாஞ்.);; a petty officer.

     [முன்னிலை + காரன்]

முன்னிலைக்கிளவி

முன்னிலைக்கிளவி muṉṉilaikkiḷavi, பெ.(n.)

முன்னிலை1, 2 பார்க்க;see {}, 2.

     [முன்னிலை + கிளவி.]

முன்னிலைப்படர்க்கை

முன்னிலைப்படர்க்கை muṉṉilaippaḍarkkai, பெ.(n.)

   முன்னிலைப் பொருளில் வழங்கும் படர்க்கைச் சொல்; word which in form is in the third person, but is used in the second person.

      ‘எம்பி முன்னிலைப் படர்க்கை (சீவக.1760, உரை);.

     [முன்னிலை + படர்க்கை]

முன்னிலைப்படுத்து-தல்

முன்னிலைப்படுத்து-தல் muṉṉilaippaḍuddudal,    5 செ.கு.வி.(v.i.)

   தன்னை முதன்மை நிலையில் வைத்தல்; project one self;bring oneself to the fore front.

அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

     [முன்னிலை + படுத்து-தல்.]

முன்னிலைப்பரவல்

முன்னிலைப்பரவல் muṉṉilaipparaval, பெ.(n.)

   கடவுளை முன்னிலைப் படுத்திப் புகழுகை (சீவக.17, பக்.448);; praise ad- dressed the God.

     [முன்னிலை + பரவல்]

முன்னிலைப்பாடு

 முன்னிலைப்பாடு muṉṉilaippāṭu, பெ. (n.)

   பிணைப்பொருள் (வின்.);; bail, security, pledge.

     [முன்னிலை + பாடு. படு → பாடு.]

முன்னிலைப்புறமொழி

முன்னிலைப்புறமொழி muṉṉilaippuṟamoḻi, பெ.(n.)

   முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறு போலக் கூறுஞ்சொல் (தொல்.பொருள்.165, இளம்.);; speech intended for one who is present but spoken as if to a third person.

     [முன்னிலை + புறமொழி]

முன்னிலைப்பெயர்

முன்னிலைப்பெயர் muṉṉilaippeyar, பெ.(n.)

   முன்னிலை யிடத்துவரும் பெயர்ச் சொல் (தொல்.எழுத்து.321);; second person pronoun or noun.

எ-டு: நீ, நீர், நீங்கள்

     [முன்னிலை + பெயர்]

முன்னிலையசை

முன்னிலையசை muṉṉilaiyasai, பெ. (n.)

   முன்னிலையில் வழங்கும் அசைச் சொல் (புறநா.40, உரை);; expletive used with the second person sing., as {}.

     [முன்னிலை + அசை]

முன்னிலையில்

 முன்னிலையில் muṉṉilaiyil, பெ.எ.(adj.)

   நிகழ்ச்சிக் கூட்டம் முதலியவைக் குறித்து வருகையில் ஒருவர் அல்லது பலர் முன்னின்று பொறுப்பேற்ற நிலையில்;ஒருவர் அல்லது பலர் முன்னின்று கவனிக்கும் நிலையில்; in the presence of.

மேலதிகாரியின் முன்னிலையில் ஞாயம் கேட்கப்பட்டது. தரைப்படைத் தலைவரின் முன்னிலையில் வன்முறையாளர்கள் படைக்கலன்களை ஒப்படைத்தனர். விருந்தினர் முன்னிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கூடத் தெரியாதா?

     [முன்னிலை → முன்னிலையில்]

முன்னிலையேவலொருமைவினைமுற்று

 முன்னிலையேவலொருமைவினைமுற்று muṉṉilaiyēvalorumaiviṉaimuṟṟu, பெ.(n.)

   ஆய், உ, ஆல், எல், காண் என்னும் ஐந்து ஈறு (விகுதி);களையும் அகர முதல் ஒளகாரவிறுதி நின்ற பன்னீருயிரையும் ஞண்ந்ம்ன்ய்ர்ல்வ்ழ்ள் என்னும் பதினொரு மெய்களையும் ஈறாக உடைய இருதிணை முக்கூற்று ஒருமை முன்னிலையேவல் வினைச் சொற்கள்; second person singular imperative finite verb.

     [முன்னிலை + ஏவல் + ஒருமை + வினைமுற்று.]

முன்னிலையேவல்பன்மைவினைமுற்று

 முன்னிலையேவல்பன்மைவினைமுற்று muṉṉilaiyēvalpaṉmaiviṉaimuṟṟu, பெ.(n.)

   மின் உம் என்னும் ஈறுகளை இறுதியில் உடையதாய் இடைநிலையேலாது எதிர் காலத்தைக் காட்டி வருமொழிகள்; second person plural imperative finite verb.

முன்னிலையொருமைவினைமுற்று

 முன்னிலையொருமைவினைமுற்று muṉṉilaiyorumaiviṉaimuṟṟu, பெ. (n.)

   ஐ, ஆய், இ என்னும் ஈறு (விகுதி);களை உடைய இருதிணை முக்கூற்றொருமை வினைமுற்று; second person singular fi- nite verb.

முன்னிலைவினை

 முன்னிலைவினை muṉṉilaiviṉai, பெ. (n.)

   முன்னிலைப் பெயர் எழுவாயாக வரும் பொழுது அதனோடு சென்று இணையும் வினை; second person verb.

     [முன்னிலை + வினை]

முன்னில்-தல் (முன்னிற்றல்)

முன்னில்-தல் (முன்னிற்றல்) muṉṉiltalmuṉṉiṟṟal,    14 செ.கு.வி.(v.i.)

   1. முன்தோன்றுதல்; to appear before.

     “முன்னின்றாண்டாய்” (திருவாச.21:2);.

   2. துணைநிற்றல்; to stand by;to assist, guide.

     “முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ” (பெரியபு.மனுநீதி.47);.

   3. தலைமையேற்றல்; to take the lead.

   4. பொறுப்பேற்றுக் கொள்ளுதல்; to assume responsibility.

     [முன் + நில்-தல்.]

முன்னிளவல்

 முன்னிளவல் muṉṉiḷaval, பெ.(n.)

முன்றோன்றல் (திவா.); பார்க்க;see {}.

     [முன் + இளவல்]

முன்னீடு

முன்னீடு1 muṉṉīṭu, பெ.(n.)

   1. முன் செல்லுகை; going before.

   2. முன்னிடுகை; placing before.

   3. தலைமை (யாழ்.அக.);; leadership.

   4. பொறுப்பாளி (வின்.);; responsible person.

     [முன்னிடு → முன்னீடு]

 முன்னீடு2 muṉṉīṭu, பெ.(n.)

   பெண்டிர் காதணி வகை (வின்.);; an ear-ornament, worn by women.

     [முன்னிடு → முன்னீடு]

 முன்னீடு3 muṉṉīṭu, பெ.(n.)

   முதல் அடைமானம்; first or prior mortgage.

     [முன் → முன்னீடு]

முன்னீட்டுத்தொகை

 முன்னீட்டுத்தொகை muṉṉīṭṭuttogai, பெ.(n.)

முன்பணம் பார்க்க;see {}.

     [முன் + ஈட்டுத்தொகை]

முன்னீர்

முன்னீர்1 muṉṉīr, பெ.(n.)

   நிலத்திற்கு முன் தோன்றிய கடல்; sea, as having been formed before land.

     “முன்னீர் விழவி னெடியோன்” (புறநா.9, பாடபேதம்);.

     “முன்னீராயினு முகந்துடன் புகுவோர்” (பெருங்.மகத.மேல்வீ.24:76);.

தெ. முந்நீரு;க. முந்நீர்.

     [முன் + நீர்]

 முன்னீர்2 muṉṉīr, பெ.(n.)

   1. சோற்றுக் கற்றாழைச் சாறு; juice of aloes.

   2. வெடியுப்பு எரிநீர்; nitric acid.

   3. முதலில் உண்டாகும் நீர்; first formed water (சா.அக.);.

முன்னீர்க்கோவை

 முன்னீர்க்கோவை muṉṉīrkāvai, பெ.(n.)

   நீர்க்கோவை (ஜலதோஷம்); வகை (சீவரட்.);; catarrh.

     [முன் + நீர்க்கோவை]

முன்னீர்ப்பழந்தீவு

 முன்னீர்ப்பழந்தீவு muṉṉīrppaḻndīvu, பெ.(n.)

   கடலிலுள்ள இசை பன்னீராயிரம் தீவுகளடங்கிய கூட்டமாகும்; very old islands in the Indian ocean called as {}.

தமிழகத்தின் தென் மேற்கில் இந்துமாக்கடலில் அமைந்த மாலத் தீவுகள் என்று கூறப்படும், பழமையான தீவுகளாகும். இதனை இலக்கத் தீவுகள் என்றும் கூறுவர். இத்தீவுகள் கடல் கொண்ட தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளாகும். முதல் இராசராசன் இத்தீவுகளைக் கடற்படையால் வென்று கைப்பற்றியுள்ளான்.

     “முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும்” (முதல் இராசராசன் – மெய்க்கீர்த்தி);.

     [முன்னீர் + பழந்தீவு]

முன்னு

முன்னு1 muṉṉudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   கருதுதல்; to think, contemplate.

     “வேறுபுல முன்னிய விரகறி பொருந” (பொருந.3);

க. முந்து

     [உன்னு-தல் → முன்னு-தல்.]

 முன்னு2 muṉṉudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. எதிர்ப்படுதல்; to meet.

     “கதிர்முலைக் கன்னி மார்ப முன்னினர் முயங்கி னல்லால்” (சீவக.483);.

   2. அடைதல்; to reach, arrive at.

      “முனிவன் முன்னினானால்” (சூளா.தூது. 123);.

    3. அணுகுதல்; to approach.

     “நகர் நெறியின் முன்னினான்” (சீவக. 1249);.

   4. பொருந்துதல்; to get to, join.

     “முன்னுபு கீழ்த்திசை நோக்கி” (சீவக.2636);.

   5. பின்பற்றுதல்; to adhere to;to follow.

     “முற்றுட னுணர்ந்தவ னமுத முன்னினார்” (சீவக.2639);.

     [முன் → முன்னு → முன்னு-தல்]

 முன்னு3 muṉṉudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கிளர்தல்; to swell, rise, as the waves.

     “நளிகடன் முன்னியது போலும்” (பரிபா.12:7);.

   2. படர்ந்து செல்லுதல்; to spread.

     “முன்னுங் கருவிடமுண்ட… முன்னோன்” (திருக்கோ. 236);.

   3. முற்படுதல்; to precede, go before. ”

முன்னியாடு பின்யான்….. உங்ஙனே வந்து தோன்றுவனே.” (திருக்கோ.16);.

   4. நிகழ்தல் (சம்பவித்தல்);; to happen.

     ‘மடந்தைக்கு முன்னியதறிய” (திருக்கோ.229, கொளு.);.

     [முன் → முன்னு-தல்]

முன்னுக்கு

 முன்னுக்கு muṉṉukku, வி.அ.(adv.)

   ஒர் இடத்தின் முன்பாக; forward;to the fore.

நாற்காலியை கொஞ்சம் முன்னுக்கு இழுத்து போடு.

     [முன் → முன்னுக்கு]

முன்னுக்குக்கொண்டுவா – தல் (முன்னுக்குக்கொண்டுவரு-தல்)

முன்னுக்குக்கொண்டுவா – தல் (முன்னுக்குக்கொண்டுவரு-தல்) muṉṉukkukkoṇṭuvādalmuṉṉukkukkoṇṭuvarudal,    18 செ.கு.வி. (v.i.)

   வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரச் செய்தல்;முன்னேற்றுதல்; cause to come up;help someone rise to in the world.

நன்றாகப் படித்துக் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும்.

     [முன்னுக்கு + கொண்டு + வா-தல்]

முன்னுக்குப்பின்முரணாக

 முன்னுக்குப்பின்முரணாக muṉṉukkuppiṉmuraṇāka, வி.அ.(adv.)

   முரண் பாடான முறையில்;ஒன்றை ஒன்று மறுக்கிற வகையில்; in a self contradict way.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவரை எப்படி நம்புவது?

     [முன்னுக்கு + பின் + முரணாக.]

முன்னுக்குவா-தல் (முன்னுக்குவருதல்)

முன்னுக்குவா-தல் (முன்னுக்குவருதல்) muṉṉukkuvādalmuṉṉukkuvarudal,    18 செ.கு.வி.(v.i.)

   1. வளர்ச்சியடைதல்; to come to the fore;to advance, progress.

   2. வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரச் செய்தல்;   முன்னேற்றுதல்; come up;progress or advance in life.

பல இடர்களைத் தாண்டி முன்னுக்கு வந்தவனுக்குத்தான் பணத்தின் அருமை தெரியும். நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று வாழ்த்தினார்.

     [முன் → முன்னுக்கு + வா-தல்]

முன்னுச்சி

 முன்னுச்சி muṉṉucci, பெ.(n.)

   தலை யுச்சியின் முன்பகுதி; front part of the head, sinciput.

     [முன் → முன்னுச்சி]

முன்னுச்சிப்பூ

 முன்னுச்சிப்பூ muṉṉuccippū, பெ.(n.)

   உச்சிப்பூ; an ornament for the forehead of a child.

மறுவ. தலைச்சுட்டிப்பூ

     [முன்னுச்சி + பூ]

முன்னுடையாரும்பழம்பேரும்நீக்கி

முன்னுடையாரும்பழம்பேரும்நீக்கி muṉṉuḍaiyārumbaḻmbērumnīkki, வி.எ.(adv.)

   நிலம் முன் யாருக்குச் சொந்தமாய் இருந்ததோ, அதைப் பொருள் கொடுத்துத் தனதாக்கிய பின், அவர் பெயரையும், நிலத்திற்கமைந்த அவரது உரிமைப் பெயரையும் வரி கணக்கில் இருந்து நீக்கித் தன் பெயரால் பதிவு செய்வது; removing the name of the seller from the tax account book and registering the name of the buyer, after owning the property.

     “இந்நிலம் ஏழுவேலியும், இறையிலி காராண்மையு முட்பட முன்னுடையாரும் பழம்பேரும் நீக்கி” (திருவாரூர் கல்வெட்டுத் தொகுதி.2:1 பக்.18);.

முன்னுதாரணம்

 முன்னுதாரணம் muṉṉutāraṇam, பெ.(n.)

முன்மாதிரி பார்க்க;see {}.

முன்னுரிமை

முன்னுரிமை muṉṉurimai, பெ.(n.)

   1. பலவற்றுள் சிலவற்றிற்கு முதன்மை கருதி அளிக்கும் இடம்; priority.

அரசின் திட்டங்களில் வேளாண்மைக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது.

   2. சலுகை அளித்து ஏற்படுத்தும் வாய்ப்பு; preference.

பகுதி நேர வேலைக்குப் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் முன்னுரிமை.

     [முன் + உரிமை]

முன்னுரை

முன்னுரை1 muṉṉuraittal,    4 செ. குன்றாவி.(v.t.)

   1. முற்பட அறிவிப்புச் செய்தல்; to indicate before hand.

     “முகம்போல முன்னுரைப்பதில்” (நான்மணி. 47);.

   2. வருவது கூறுதல் (வின்.);; to foretell, predict.

     [முன் → முன்னுரை-த்தல்.]

 முன்னுரை2 muṉṉurai, பெ.(n.)

   1. பழமொழி; ancient saying adage, proverb.

   2. பழைய வரலாறு; ancient history.

      ‘முன்னுரையிற் கேட்டறிவதில்லையே” (திவ்.இயற்.பெரிய. 6:59);.

   3. முகவுரை; preface.

கட்டுரைகளில் முன்னுரை இடம் பெற்றிருக்கும்.

     [முன் → முன்னுரை.]

முன்னுற

முன்னுற muṉṉuṟa, கு.வி.எ.(adv.)

   முன்பாக; previously, beforehand, already.

      “முன்னுறக் காவா திழுக்கியான்” (குறள், 535);.

      “மின்னொளிர் நெடுவேல் இளையோன்முன்னுற” (அகநா.203:10);.

      “கூறுவன் வாழி தோழி முன்னுற” (நற்.233:6);. “முறைநற் கறியுநர் முன்னுறப் புகழ்ந்த” (புறநா.224:5);.

     [முன் + உறு – முன்னுற]

முன்னுறவுணர்தல்

முன்னுறவுணர்தல் muṉṉuṟavuṇartal, பெ.(n.)

   தலைவிக்கு முன்னுற்ற களவு நிலையைத் தோழி அறிதலைக் கூறும் அகத்துறை (திருக்கோ.62, கொளு.);; theme describing a maid getting to know of the secret love-affair of her mistress.

     [முன் + உறு + உணர்தல்]

முன்னுறுகிளவி

முன்னுறுகிளவி muṉṉuṟugiḷavi, பெ.(n.)

   குறிப்பு மொழி; abstract language.

     “முன்னுறு கிளவியிற் பண்ணுறப் பணிக்கலும்” (பெருங். உஞ்சை.கரடு.32:71);.

     [முன் + உறு + கிளவி]

முன்னுறுபுணர்ச்சி

முன்னுறுபுணர்ச்சி muṉṉuṟubuṇarcci, பெ.(n.)

   இயற்கைப் புணர்ச்சி (இறை.2, பக்.33);; first union of lovers.

     [முன் + உறு + புணர்ச்சி.]

முன்னுாற்கேள்வன்

 முன்னுாற்கேள்வன் muṉṟāḷvaṉ, பெ. (n.)

   கடவுள் (யாழ்.அக.);; god.

     [முன்னூல் + கேள்வன்.]

முன்னுால்

முன்னுால் muṉl, பெ.(n.)

   1. ஆதி நூல்; original treatise, as distinguished from subsequent works or commentaries.

   2. மறை (வேதம்); (வின்.);; the {}.

     [முன் + நூல்.]

முன்னூர்

முன்னூர் muṉṉūr, பெ.(n.)

   தென்னார்க்காடு மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் திண்டிவனத்திலிருந்து 22 கல்லன் மாத்திரி தொலைவிலுள்ள ஊர்; a city in South Arcot district in {} Taluk 22 km away from {}.

ஒரு பகுதியில் பல ஊர்கள் அமைந்திருக்கும்பொழுது முதலில் இருப்பது முன்னூர் எனப்படும் கரணியம் பற்றி இப்பெயர் வந்தது. இப்பகுதியில் முந்நூறு கோயில்கள் இருந்ததாகவும், அதனால் முந்நூறு என்று பெயர் பெற்று நாளடைவில் முன்னூறு ஆயிற்று என்றும் கூறுவர். இன்று இங்கு 75 கோயில்கள் உள்ளன.

     [முன் + ஊர்.]

முன்னூற்றுவன்திருவாரூரன்

முன்னூற்றுவன்திருவாரூரன் muṉṉūṟṟuvaṉtiruvārūraṉ, பெ.(n.)

   தமிழகத்தில் சோழர் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த சிவாகம நெறியுடைய சிவாச்சாரியார்கள் 48,000 பேர்களுள் முன்னூற்றுவர் அடங்கிய குழுவினருள் ஒருவரான திருவாரூரன் என்பவர் (தெ.இ.கல்.தொ.14, கல்.64);; one among 48,000 {} called {} during the region of {}.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை muṉṉeccarikkai, பெ.(n.)

   1. பேரிடர், கலவரம் முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் அவை நிகழாமல் தடுக்கும் ஏற்பாடு; precaution.

குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பலர் கைது செய்யப்பட்டனர்.

   2. முன்னறிவிப்பு; fore warning.

மார்புவலி ஒரு கடுமையான நோய்க்கான முன்னெச்சரிக்கையாகும்.

     [முன் + எச்சரிக்கை]

முன்னெண்ணம்

முன்னெண்ணம்1 muṉṉeṇṇam, பெ.(n.)

   1. முன்னிகழ்ச்சி பற்றிய நினைவு; thoughts about the past.

   2. முன் ஆய்வு; fore thought.

     [முன் + எண்ணம்]

 முன்னெண்ணம்2 muṉṉeṇṇam, பெ.(n.)

   விளைவு குறித்து அல்லது நடக்கப் போவது குறித்து அணியமாக இருப்பதற்கு ஏற்ற வகையில் முன்னரே செய்யும் சிந்தனை; fore thought, thoughtfulness.

காலையிலேயே முகில் கூட்டம் வானத்தில் நிரம்பி இருந்ததனால் முன்னெண்னத்துடன் குடை கொண்டு வந்திருந்தான். முன்னெண்ணம் (யோசனை); இல்லாமல் கடன் வாங்கி விட்டு இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்?

     [முன் + எண்ணம்.]

முன்னெற்றி

முன்னெற்றி muṉṉeṟṟi, பெ.(n.)

   நெற்றியின் மேற்பகுதி; upper part of the forehead.

     “முன்னெற்றி நரைத்தன போல” (திவ். பெரியாழ்.3.5:10);.

     [முன் + நெற்றி]

முன்னெற்றிமயிர்

 முன்னெற்றிமயிர் muṉṉeṟṟimayir, பெ. (n.)

   தலையின் முன்பக்க மயிர் (இ.வ.);; fore-lock.

     [முன்னெற்றி + மயிர்]

முன்னெழுச்சி

முன்னெழுச்சி muṉṉeḻucci, பெ.(n.)

முன்னெண்ணம்1, 1 பார்க்க;see {}, 1.

     [முன் + எழுச்சி]

முன்னே

முன்னே1 muṉṉē, கு.வி.எ.(adv.)

   1. முன்னால்; முன்னர்; ago;earlier;ahead.

நான்கு நாட்களுக்கு முன்னே அந்த நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் முன்னேயே வந்துவிட்டீர்களே?

      “முன்னே ஆட்டைப்பிடி பின்னே மாட்டைப் பிடி”.

      “முன்னே ஒரு குறுணி பின்னே ஒரு முக்குறுணி”.

      “முன்னே பார் பின்னே பார் உன்னைப் பார் என்னைப் பார்”.

      “முன்னே பிறந்த காதைப் பார்க்கிலும்

பின்னே பிறந்த கொம்பு பலம்” (பழ.);.

    2. முன்பு; before.

     “முன்னே கொடுத்தா ருயப்போவர்” (நாலடி, 5);.

   3. எதிரில்; in the presence of.

     “முன்னே யுரைத்தான் முகமனே யொக்கும்” (தேவா.1199, 3);.

ம., க. முந்ந

     [முன் → முன்னே]

 முன்னே2 muṉṉē, இடை.(part.)

   முன்னால்;   முன்னர்; before someone or something.

     [முன் → முன்னே]

முன்னேபின்னே

 முன்னேபின்னே muṉṉēpiṉṉē, வி.அ. (adv.)

   முன்பின்; before and after.

     “முன்னேயின்னே செத்தால்தான் சுடுகாடு தெரியும்” (கோவை.);.

முன்னேரம்

முன்னேரம் muṉṉēram, பெ.(n.)

   1. இளம் பகல்; early times, as forenoon.

   2. விடியற் பொழுது; morning twilight.

   3. அந்திவேளை (வின்.);; evening twilight.

     [முன் + நேரம்]

முன்னேர்

 முன்னேர் muṉṉēr, பெ.(n.)

   உழவில் முதலிற் செல்லும் ஏர் (உ.வ.);; leading plough, in ploughing.

     “முன்னேர் போன வழியே பின்னேர் போகும்” (கோவை);.

     [முன் + ஏர்]

முன்னேர்க்குண்டை

 முன்னேர்க்குண்டை muṉṉērkkuṇṭai, பெ.(n.)

   உழவில் முந்திச் செல்லும் ஏர்மாடு (வின்.);; leading team of oxen, in ploughing.

     [முன்னேர் + குண்டை]

முன்னேறு-தல்

முன்னேறு-தல் muṉṉēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தடையைக் கடந்து முன் செல்லுதல்; to make headway against something.

போரில் படைகள் முன்னேறியிருப்பதாகச் செய்திகள் வந்தன. சுற்றி நின்ற கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னேற முயன்றனர் காவலர்கள்.

   2. உயர்நிலைக்குச் செல்லுதல்;மேம்படச் செய்தல்; progress, go forward;develop.

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. நாடு தொழிற்துறையில் முன்னேற என்ன செய்ய வேண்டும்?

   3. உடல்நிலை சீரடைதல்; im- prove of health.

தந்தையின் உடல்நிலை முன்னேறுவதை நினைத்து ஆறுதல் கொண்டேன்.

   4. முந்திக்கொள்ளுதல் (வின்.);; to anticipate, forestall.

     [முன் + ஏறு-தல்.]

முன்னேறும் சிலைகள்

 முன்னேறும் சிலைகள் muṉṉēṟumcilaigaḷ, பெ. (n.)

   தொடுபவர் ஒன்று முதல் பத்து வரை எண்ணுவதற்குள் சிலையாக நிற்கும் விளையாட்டு; a children’s game.

     [முன்னேறும்+சிலை+கள்]

முன்னேற்பாடு

 முன்னேற்பாடு muṉṉēṟpāṭu, பெ.(n.)

   ஆயத்தப் பணி; preparatory work;

 preliminaries.

தேர்தல் முன்னேற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஊருக்குச் செல்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள்.

     [முன் + ஏற்பாடு]

முன்னேற்றம்

முன்னேற்றம் muṉṉēṟṟam, பெ.(n.)

   1. உயர்நிலை;மேம்பாடு;வளர்ச்சி;வளர்ச்சியடைகை; progress;betterment;improvement.

நாட்டின் பொருளியல் முன்னேற்றத்திற்காகப் பல புதிய திட்டங்கள் போடப்பட்டன. அறிவியல் முன்னேற்றங்கள் குமுதாயத்தை மேம்படுத்துவனவாக இருக்க வேண்டும்.

   2. உடல் நலம் சீர்பெறுதல்; improvement in health.

நோய்வாய்ப்பட்ட தலைவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததும் வேலைக்கு வருவார்.

     [முன்னேறு → முன்னேற்றம்.]

முன்னேற்று-தல்

முன்னேற்று-தல் muṉṉēṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

    உயர்நிலையை அடையச் செய்தல்;மேம்படச் செய்தல்; advance.

பொருளியல் துறையில் நாட்டை முன்னேற்றத் திட்டங்கள் போடப்பட்டுள்ளன.

     [முன் + ஏறு-தல்.]

முன்னை

முன்னை1 muṉṉai, பெ.(n.)

   1. பழமை; former times, antiquity.

     “முன்னைப் பழம் பொருட்கும்” (திருவாச.7:9);. “முன்னை நின் றாங்கே விலக்கிய எல்லாநீ” (கலித்.116:3);.

   2. தமக்கை; elder sister.

     “என்ற னன்னை நும்முன்னை” (கம்பரா. மிதிலைக். 124);.

   3. தமையன் (திவா.);; elder brother.

க., ம. முந்நெ

     [முன் → முன்னை]

 முன்னை2 muṉṉai, பெ.(n.)

   1. முன்னைமரப் பொது; firebrand teak, Premna.

   2. ஆ (பசு); முன்னை; headache-tree.

   3. எருமை முன்னை; dusky-leaved firebrand teak.

   4. பீநாறி மரம்; woolly – leaved firebrand teak.

   5. முன்னை மர வகை; charcoal-tree.

முன்னைக்கணம்

முன்னைக்கணம் muṉṉaikkaṇam, பெ.(n.)

   கடந்த காலம்; past time.

     “முன்னைக் கணத்தி னிறந்தவனும்” (மேருமந்.662);.

     [முன் → முன்னை + கணம்]

முன்னைக்கீரை

 முன்னைக்கீரை muṉṉaikārai, பெ.(n.)

   முன்னை மரத்தின் இலை; leaves of {} tree.

     [முன்னை + கீரை]

முன்னைக்கூட

 முன்னைக்கூட muṉṉaikāṭa, கு.வி.எ.(adv.)

முன்னைக்கூடி (இ.வ.); see {}.

     [முன்னை + கூட.]

முன்னைக்கூடி

 முன்னைக்கூடி muṉṉaikāṭi, கு.வி.எ. (adv.)

   முன்னமே (இ.வ.);; before, already.

     [முன்னை + கூடி.]

முன்னைக்கூட்டி

 முன்னைக்கூட்டி muṉṉaikāṭṭi, கு.வி.எ. (adv.)

முன்னைக்கூடி (நெல்லை); பார்க்க;see {}.

     [முன்னை + கூட்டி]

முன்னைய

 முன்னைய muṉṉaiya, பெ.எ.(adj.)

   முந்திய; previous.

முன்னைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது.

     [முன் → முன்னை → முன்னைய]

முன்னையோர்

முன்னையோர் muṉṉaiyōr, பெ.(n.)

   1. முன்னோர்; predecessors, ancestors

     “முன்னையோரிறந்தார்” (கம்பரா. இந்திரசித். 8);.

   2. பெரியோர்; elders.

     “முன்னையோர் கொடுத்த நன்மனைக் கிழத்தி யாகிய வந்நிலை” (பதினொ. திருவிடை.7);.

     [முன்னை → முன்னையோர்]

முன்னைவினை

முன்னைவினை muṉṉaiviṉai, பெ.(n.)

   பழவினை; past karma, destiny.

     “உழல்வதெல்லாம்….. முன்னை வினையாய் விடும்” (நாலடி, 107);.

     [முன்னை + வினை.]

முன்னொட்டு

 முன்னொட்டு muṉṉoṭṭu, பெ.(n.)

   ஒரு சொல்லாகத் தனித்து வராமல் ஒரு சொல்லுக்கு முன்னால் இணைக்கப்படும் இடைச்சொல்; prefix.

பொருள் – மென்பொருள்

மென் – முன்னொட்டு

     [முன் + ஒட்டு.]

முன்னொற்றி

 முன்னொற்றி muṉṉoṟṟi, பெ.(n.)

   முதல் அடைமானம்; first or prior mortgage.

     [முன் + ஒற்றி]

முன்னோக்கி

முன்னோக்கி muṉṉōkki, வி.எ. (adv.)

   1. முன்பக்கமாக இருக்கும்; thrusting forward.

முன்னோக்கி நீண்ட பற்கள். முதுகுத் தண்டின் முன்னோக்கிய வளைவு.

   2. வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு; looking forward.

முன்னோக்கிய பார்வை இல்லையென்றால் முன்னேற்றமும் இல்லை.

     [முன் + நோக்கி.]

முன்னோடி

முன்னோடி1 muṉṉōṭi, பெ.(n.)

   கொள்ளை நோயுள்ள காலத்தில் தெருவில் உலாவுவதாகக் கருதப்படும் பேய் (வின்.);; an evil spirit, supposed to walk the streets in times of pestilence.

     [முன் + ஒடு – முன்னோடு → முன்னோடி.]

 முன்னோடி2 muṉṉōṭi, பெ.(ո.)

   1. இன்றைய விரிவான வளர்ச்சிக்கு அன்று அடிப்படையாக இருந்தது; pioneer, precursor.

நாடகத்தின் முன்னோடி தெருக்கூத்து என்று அவர் குறிப்பிட்டார்.

   2. விரிவாக அமைக்க முன்கூட்டியே சிறு அளவில் ஆய்வு முறையில் செய்யப்படுவது; pilot.

சோயா அவரையில் இருந்து எண்ணெய் எடுக்கும் முன்னோடி ஆலை இது.

   3. முன்மாதிரி;    பின்பற்றக் கூடியது; worth following: model.

அந்த எழுத்தாளர் இளைய தலைமுறைக்கு முன்னோடி.

     [முன் + ஒடி.]

முன்னோடும்பிள்ளை

முன்னோடும்பிள்ளை muṉṉōṭumbiḷḷai, பெ.(n.)

   1. வீட்டு வேலைகளைச் செய்வதில் வலிய வந்து உதவி செய்பவன் (இ.வ.);; one who voluntarily helps in managing the affairs of a family.

   2. குட்டியாண்டவனது முன்னடியான் (E.T.vi, 182);; an attendant god of {}.

     [முன் + ஒடும் + பிள்ளை.]

முன்னோட்டம்

முன்னோட்டம் muṉṉōṭṭam, பெ.(n.)

   1. பின்னர் முறையாக நடக்கவிருப்பது எப்படியிருக்கும் என்று தெரிவிக்கும் வகையிலான கணிப்பு; ஒன்றின் செயல்பாடு முதலியவற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு நிகழ்த்தப்படும் ஆய்வு; trial;preview, trial run.

வரும் பொதுத் தேர்தல் பற்றிய முன்னோட்ட ஆய்வு. போக்குவரத்து ஏற்பாடுகள் குடியரசு தலைவரின் வருகைக்குப் போதுமானதா என்பதை அறியக் காவல்துறையினர் முன்னோட்டம் பார்த்தனர்.

   2. மேலெழுந்தவாரியாகப் பார்வையிடுகை; cursory glance or perusal.

     [முன் + ஒட்டம்.]

முன்னோட்டுக்கொள்(ளு)-தல்

முன்னோட்டுக்கொள்(ளு)-தல் muṉṉōṭṭukkoḷḷudal,    13 செ.குன்றாவி (v.t.)

   ஆராய்ந்து கொள்ளுதல்; to learn by investigation.

     “அவதா ரங்களை முன்னேட்டுக் கொண்டு” (ஈடு, 1:3, பிர.);.

     [முன் + ஒடு + கொள்(ளு);-தல். ஒடு → ஒடு.]

முன்னோன்

முன்னோன்1 muṉṉōṉ, பெ.(n.)

   1. பிள்ளையார் (சூடா.);; god {}.

   2. அருகன் (யாழ்.அக.);; Arhat.

   3. கடவுள்; God.

     [முன் → முன்னோன்]

 முன்னோன்2 muṉṉōṉ, பெ.(n.)

   1. முன் தலைமுறையினன்; predecessor, ancestor.

     “தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன்” (மணிமே.28:123-4);.

   2. தகப்பன்; father. “வாட்குடியின் முன்னோனது நிலை” (பு.வெ. 3:13, கொளு);.

   3. தமையன்; elder brother.

     “தம்முன்னோர் தந்தைதாய்” (பு.வெ.9:33);.

     [முன் → முன்னோன்]

முன்னோர்

முன்னோர் muṉṉōr, பெ.(n.)

   1. முன் தலைமுறையினர்; predecessors, ances-tors.

நமது முன்னோர் சில துறைகளில் மேம்பட்ட நிலை அடைந்திருந்தார்கள். அவர்களுடைய முன்னோர்களைப் பற்றி உசாவிய போது பல சுவையான செய்திகள்

   2. மந்திரித் தலைவர் (பிங்.);; chief ministers.

   3. பண்டையவர் (பூர்விகர்);; the ancients.

     “முன்னோர் மொழி பொருளே யன்றி” (நன்.9);.

     [முன் → முன்னோர்]

மனித குலத்தில் முன் வாழ்ந்தோர்;ஒரு குடிவழியின் (பரம்பரையின்); மூதாதையர்.

முன்னோலை

 முன்னோலை muṉṉōlai, பெ.(n.)

   எழுதிக் கொடுத்திருப்பதற்கு முன்னுள்ள மூலச்சீட்டு (நாஞ்.);; previous records or deeds.

     [முன் + ஒலை.]

முன்பகை

 முன்பகை muṉpagai, பெ.(n.)

   இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுச் சில நாட்கள் (அ); மாதங்கள் (அ); ஆண்டுகள் கழிந்தும் மனத்தாங்கல் உள்ள நிலை; enmity.

      “முன்பகை செய்தால் பின் பகை விளையும்”.

      “அவர்கள் இருவரும் முன்பகை கரணியமாக பேசுவதில்லை” (பழ.);.

     [முன் + பகை.]

முன்பணம்

முன்பணம் muṉpaṇam, பெ.(n.)

   1. முன்கூட்டியே வைப்புத் தொகையாகப் பெறப்படும் பணம்; caution deposit.

அந்த நூலகத்தில் சேர ஐம்பது ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும். வங்கியில் இந்த வேலைக்குப் பத்தாயிரம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்.

    2. கூலியாக உள்ள தொகையில் முன் கூட்டியே தரப்படும் பணம்; advance payemnt.

   வேலையாள் முன்பணம் வாங்கிக் கொண்டு போனார். 3. ஒரு பொருளை வாங்குவதற்கு அடையாளமாக முன்னே கொடுக்கும் சிறுதொகை, முன்னீட்டுத் தொகை; advance, earnest.

     [முன் + பணம்.]

முன்பதிவுசெய்-தல்

முன்பதிவுசெய்-தல் muṉpadivuseydal,    1 செ.கு.வி. (v.i.)

   திரையரங்கம், தொடர் வண்டி நிலையம் முதலியவற்றில் முன்கூட்டியே இருக்கைகளைப் பதிவு செய்தல்; reserve seats, etc. in a cinema, train, etc.

நான் நாளை தொடர்வண்டி மூலமாக மதுரை செல்ல நேற்றே முன் பதிவு செய்துவிட்டேன்.

     [முன் + பதிவு + செய்-தல்.]

முன்பனி

முன்பனி muṉpaṉi, பெ.(n.)

   பருவகாலங்கள் ஆறனுள் இரவின் முற்பகுதியிற் பனி மிகுதியுடைய சிலை (மார்கழி);, சுறவம் (தை); மாதங்கள் (தொல்.பொருள்.10, உரை); (பிங்.);; the months of {} and Tai, being the season in which dew falls during the early part of the night, one of six paruvam.

     “முளரி கரியும் முன்பனிப் பானாட” (அகநா.163:8);.

     “பின்பணி அமையம் வருமென முன்பனி” (நற்.224:2);.

     [முன் + பனி]

முன்பன்

முன்பன் muṉpaṉ, பெ.(n.)

   1. வலிமை யுடையவன்; powerful man,

     “செருச்செய் முன்ப” (புறநா.41);.

   2. தலைவன்; leader master.

     “முன்பனை முன்பு நோக்கி” (கம்பரா.நாகபாச.90);.

   3. ஏலச்சீட்டு நடத்துபவன் (நாஞ்.);; conductor of a chit-fund.

   4. நிலம் வாங்கி வீடுகள் விற்க முதலீடு செய்து செயற்படுபவன்; promoter.

     [முன்பு → முன்பன்.]

முன்பாலைநாடு

முன்பாலைநாடு muṉpālaināṭu, பெ.(n.)

   கடல் கோளால் அழிந்ததாகக் கருதப்படும் தமிழ் நாட்டுப் பகுதி; a division of the Tamil country, supposed to have been sub-merged in a deluge.

     ‘ஏழ் முன்பாலை நாடும்’ (சிலப்.8:2, உரை);.

     [முன் + பாலை + நாடு]

முன்பால்

முன்பால் muṉpāl, கு.வி.எ.(adv.)

   முன்னாக; in front.

     ‘அகத்தியன் முன்பாலிட்ட சாபம்’ (சிலப்.3:2, உரை);.

     [முன்பு → முன்பால்]

முன்பின்

முன்பின்1 muṉpiṉ, கு.வி.எ.(adv.)

   1. முந்தியும் பிந்தியும்; before and after, before and be – hind.

   2. முன்பழக்கம், அறிமுகம்; familiar.

முன்பின் அறியாமல் ஒருவனுடன் சேராதே. முன்பின் விசாரித்துச் செய்.

     [முன் + பின்]

 முன்பின்2 muṉpiṉ, பெ.(n.)

   வலிமை; strength.

     “அடுபுலி முன்பின் தொடுகழல் மறவர்” (அகநா.75:6);.

     “ஆனிற் பரக்கும் யானைய முன்பின்” (புறநா.5:2);.

     “கடாஅஞ் செருக்கிய கடுஞ்சின முன்பின்” (நற்.103:3);.

     [முன் + பின்]

முன்பின்தெரியாத

 முன்பின்தெரியாத muṉpiṉteriyāta, பெ.எ. (adj.)

   பழக்கம் இல்லாத;   அறிமுகம் இல்லாத; unfamiliar, unknown, strange.

முன்பின் தெரியாத ஊரில் சரியான முகவரி இல்லாமல் நண்பனின் வீட்டை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? முன்பின் தெரியாத ஆட்களிடம் மனம்விட்டுப் பேசக்கூடாது.

     [முன் + பின் + தெரியாத]

முன்பின்நினைத்துப்பார்க்காமல்

 முன்பின்நினைத்துப்பார்க்காமல் muṉpiṉniṉaittuppārkkāmal, கு.வி.எ. (adv.)

   விளைவுகளை எண்ணிப் பார்க்காமல்; thoughtlessly;without fore thought.

முன்பின் நினைத்துப் பார்க்காமல் ஒரு செயலில் இறங்கிவிடாதே.

     [முன் + பின் + நினைத்து + பார்க்காமல்.]

முன்பின்பார்-த்தல்

முன்பின்பார்-த்தல் muṉpiṉpārttal,    4 செ. குன்றாவி.(v.t.)

   நன்கு ஆராய்ந்து முடிவு செய்தல்; to consider carefully, as looking about;to weigh the pros and cons.

     [முன்பின் + பார்-த்தல்]

முன்பிறந்தான்

 முன்பிறந்தான் muṉpiṟandāṉ, பெ.(n.)

   அண்ணன், தமையன்; elder brother.

     [முன் + பிறந்தான்]

முன்பிறந்தாள்

முன்பிறந்தாள் muṉpiṟandāḷ, பெ.(n.)

   1. அக்கை, அக்காள் (திவா.);; elder sister.

   2. மூதேவி (பிங்.);; goddess of misfortune.

     [முன் + பிறந்தாள்]

முன்பிற்படி

முன்பிற்படி muṉpiṟpaḍi, கு.வி.எ.(adv.)

   முன்போல; as before.

     ‘முன்பிற் படியே….. செம்பாலையு மாயின’ (சிலப்.3:86-9, உரை);.

     [முன்பில் + படி]

முன்பிலாண்டு

முன்பிலாண்டு muṉpilāṇṭu, பெ.(n.)

   முன் சென்ற ஆண்டு, கடந்த ஆண்டு; previous year.

      ‘முன்பிலாண்டை ஒழுகினபடி’ (தெ.இ.க.தொ.i, 129);.

     [முன்பில் + ஆண்டு]

முன்பில்

முன்பில் muṉpil, கு.பெ.எ.(adj.) & கு.வி.எ. (adv.)

முன்1 பார்க்க;see {}.

     ‘முன்பிற் காதையில்’ (சிலப். 7:1, அரும்.);.

     [முன்பு → முன்பில்]

முன்பு

முன்பு1 muṉpu, பெ.(n.)

   1. முற்காலம்; former time, ancient time.

   2. முன்னிடம்; front.

     “தோட்டியான் முன்பு துரந்து சமந்தாங்கவும்” (புறநா.14);.

   3. பழமை (வின்.);; antiquity.

தெ. முநுபு;க. முந்து;ம. மும்பு.

     [முன் → முன்பு]

 முன்பு2 muṉpu, பெ.(n.)

   1. உடல்வலிமை; physi-cal strength.

     “முன்பாலுடல் சினஞ்செருக்கி” (குறிஞ்சிப்.159);.

      “முளிசினை பிளக்கு முன்பின் மையின்” (குறுந்.388:5);.

    2. பெருமை; greatness.

     [முன் → முன்பு]

 முன்பு3 muṉpu, கு.வி.எ.(adv.)

   1. முன்னாக; before;infront of.

     “தலையில் வணங்கவுமாங் கொலோ தையலார் முன்பே” (திவ்.திருவாய்.5 3:7);.

   2. முன்காலத்தில்; formerly.

     “முன்புநின் றம்பி வந்து சரண்புக” (கம்பரா.வாலிவதை.117);.

     [முன் → முன்பு]

முன்புத்தை

முன்புத்தை muṉputtai, கு.வி.எ.(adv.)

முன்பு3 (திவ்.திருவாய்.1, 4, 2, பள்ளி.); பார்க்க;see {}.

முன்புருவம்

 முன்புருவம் muṉpuruvam, பெ.(n.)

   அடிக்கை எலும்பின் முனைப்பாகம் (வின்.);; anterior bicipital ridge.

     [முன் + புருவம்]

முன்புற்றை

முன்புற்றை muṉpuṟṟai, கு.வி.எ.(adv.) முன்பு3 பார்க்க;see {}.

     “முன்புற்றையிற் காட்டில்” (ஈடு, 7. 9:4);.

முன்புள்ளார்

முன்புள்ளார் muṉpuḷḷār, பெ.(n.)

   மூதாதை; the ancients;forefathers, predecessors;ancestors.

     “முன்புள்ளார்…. என்பார்கள்” (திருவிருத். 34, வியா.பக்.206);.

     [முன்பு + உள்ளார்]

முன்மடி

 முன்மடி muṉmaḍi, பெ.(n.)

   ஆடையின் மடியிற் செய்து கொள்ளும் பை (வின்.);; tuck or fold in the cloth serving the purpose of a bag or receptacle.

து. முந்மடி.

     [முன் + மடி]

முன்மணி

முன்மணி1 muṉmaṇi, பெ.(n.)

   ஒரு மணிமாலையில் சேர்க்கப்பட்டு இருக்கும் மணிகளுக்கு எல்லாம் முதலாவதாகச் சேர்க்கப்பட்டு இருக்கும் மணி; first bead string in a garland of bead.

     [முன் + மணி]

 முன்மணி2 muṉmaṇi, பெ.(n.)

   கொட்டை கரந்தை; a plant, Indian globe thistle – Sphaer anthus hirtus.

முன்மற-த்தல்

முன்மற-த்தல் muṉmaṟattal,    3 செ.கு.வி.(v.i.)

   கடுமை (உக்கிரம்); கொள்ளுதல் (வின்.);; to grow vehement;to burst into a passion.

     [முன்மறம் → முன்மற-த்தல்]

முன்மறம்

 முன்மறம் muṉmaṟam, பெ.(n.)

முன்கோபம் பார்க்க;see {}.

     ‘முன்மறத்திலே சொல்லாதே” (வின்.);.

முன்மாதிரி

முன்மாதிரி muṉmātiri, பெ.(n.)

   1. கட்டுமானத்திற்கு அடிப்படையாக முதலில் எடுத்துக் கொள்ளப்படுவது அல்லது சிறு அளவில் உருவாக்கப்படுவது; model;miniature.

தலைவர் சிலைக்கு முன்மாதிரி இந்த நிழற்படம்தான். அமைக்கப்படவிருக்கும் அனல் மின்சார நிலையத்தின் முன்மாதிரியை அமைச்சர் பார்வையிட்டார்.

   2. பின்பற்றக் கூடிய வகையில் எடுத்துக்காட்டாக அமையும் ஒருவர் அல்லது ஒன்று; something exemplary, something worth following.

பொருளியல் வளர்ச்சியில் நம்நாடு பிற சிறு நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கலாம். இளம் அறிவிலாருக்கு அவர் நல்ல முன்மாதிரி.

     [முன் + மாதிரி]

முன்மாரி

 முன்மாரி muṉmāri, பெ.(n.)

   பருவமழைக்கு முன் செய்யும் விதைப்பு (யாழ்ப்.);; cultivation when the seed is sown before the monsoon.

     [முன் + மாரி]

முன்முகனை

 முன்முகனை muṉmugaṉai, பெ.(ո.)

   தொடக்கம் (யாழ்.அக.);; commencement.

     [முன் + முகனை]

முன்முகப்பு

 முன்முகப்பு muṉmugappu, பெ.(n.)

   நுழைவு வாயில் அமைப்பு (யாழ்.அக.);; entrance, as of a palace;facade.

     [முன் + முகப்பு]

முன்முடுகுவெண்பா

 முன்முடுகுவெண்பா muṉmuḍuguveṇpā, பெ.(n.)

   முன்னிரண்டடிகள் முடுகிய ஓசை(சந்தங்); கொண்டு வரும் வெண்பா வகை; a kind of {} having a quick flowing rhythm in the first two lines.

     [முன் + முடுகு + வெண்பா]

முன்முறை

முன்முறை muṉmuṟai, பெ.(n.)

   முன்பிறப்பு; previous or past birth.

     “முன்முறை செய்தவத்தினிம் முறை யியைந்தேம்” (பரிபா. 11:138);.

     [முன் + முறை]

முன்மொழி

முன்மொழி muṉmoḻi, பெ.(n.)

   1. பழமொழி (வின்.);; old saying, proverb, adage.

   2. தொகைமொழியில் இரண்டாவதாக வரும் மொழி; the second member of a compound word.

      “முன்மொழி நிலையலும்” (தொல்.சொல்.419);.

    3. முன்மொழி நிலையல் பார்க்க;see {}.

மறுவ. முதுமொழி, சொலவடை.

     [முன் + மொழி]

முன்மொழி-தல்

முன்மொழி-தல் muṉmoḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   ஒருவரின் பெயரை அல்லது தீர்மானம் முதலியவற்றை உரியோரின் கவனத்திற்கு முன் வைத்தல்; propose someone’s name, etc. for consideration in a formal meeting.

செயலாளர் பதவிக்குக் கூட்டத்தில் உங்கள் பெயரை நான் முன்மொழிகிறேன். நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்க் கட்சித் தலைவர் முன்மொழிந்தார்.

     [முன் + மொழி-தல்]

முன்மொழிநிலையல்

முன்மொழிநிலையல் muṉmoḻinilaiyal, பெ.(n.)

   தொகைமொழியுள் இரண்டாவது மொழிக்கண்ணே பொருள் சிறந்து நிற்கை; compound word in which there is emphasis of meaning on the second member.

     [முன்மொழி + நிலையல்]

முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும்

இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்

அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும்

எனநான் கென்ய பொருணிலை மரபே (தொல்.சொல்.414);

தொல்காப்பியர் கூறும் நான்கு வகை மொழிநிலையல்:

   1. முன்மொழி நிலையல்,

   2. பின்மொழி நிலையல்,

   3. இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல்,

   4. அன்மொழி நிலையல்.

எ.கா. வேங்கைப்பூ, தாமரைப்பூ முதலான சொற்களில் வேங்கை, தாமரை முதலாய முன்மொழிகளில் பொருள் சிறந்து நிற்பது.

முன்மொழிந்துகோடல்

முன்மொழிந்துகோடல் muṉmoḻinduāṭal, பெ.(n.)

   உத்தி முப்பத்திரண்டனுள் பின்னர் அடிக்கடி கூற வேண்டியவற்றை முன்னர் எடுத்துக் கூறும் உத்திவகை (நன்.14);; mention at the commencement of what must needs be stated frequently in the course of a treatise, one of 32 utti.

நுதலில் புகுதல் ஒத்துமுறை வைப்பே

தொகுத்துச் சுட்டல் வகுத்துக் காட்டல்

முடித்துக் காட்டல் முடிவிடங் கூறல்

தானெடுத்து மொழிதல் பிறன் கோட்கூறல்

சொற்பொருள் விரித்தல் தொடர்ச்சொற் புணர்த்தல்

இரட்டுற மொழிதல் ஏதுவின் முடித்தல்

ஒப்பின் முடித்தல் மாட்டெறிந் தொழுகல்

இறந்தது விலக்கல் எதிரது போற்றல்

முன்மொழிந்துகோடல் பின்னது நிறுத்தல்

விகற்பத்தின் முடித்தல் முடிந்தது முடித்தல்

உரைத்து மென்றல் உரைத்தாம் என்றல்

ஒருதலை தணிதல் எடுத்துக்காட்டல்

எடுத்த மொழியின் எய்த வைத்தல்

இன்ன தல்லதிதுவென மொழிதல்

எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல்

பிறநூல் முடிந்தது தானுடன்படுதல்

தன்குறி வழக்கமிகவெடுத் துரைத்தல்

சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல்

ஒன்றின் முடித்தல் தன்னினமுடித்தல்

உய்த்துரை வைப்பென உத்தி எண்ணான்கே (நன்.14);

     [முன் + மொழிந்து + கோடல்]

முன்றணிவு

முன்றணிவு muṉṟaṇivu, பெ.(n.)

   மாட்டுக் குற்ற வகை (பெரியமாட்.17);; a defect in cattle.

     [முன் + தணிவு]

முன்றளை

 முன்றளை muṉṟaḷai, பெ.(n.)

   கொண்டி மாட்டுக்கு முன்னங்காலிற் கட்டுந்தளை (யாழ்.அக.);; clog or cord fastening the forelegs of a refractory animal.

     [முன் + தளை]

முன்றாங்கி

 முன்றாங்கி muṉṟāṅgi, பெ.(n.)

   மகளிர் கால்விரல்களிலணியும் அணி வகை, மெட்டி (நாஞ்.);; a kind of ring worn by women, on the toes.

     [முன் + தாங்கு – முன்றாங்கு → முன்றாங்கி]

முன்றாதை

 முன்றாதை muṉṟātai, பெ.(n.)

   பாட்டன் (யாழ்.அக.);; grand-father.

     [முன் + தாதை]

முன்றானை

முன்றானை muṉṟāṉai, பெ.(n.)

   1. புடவை முதலியவற்றின் தலைப்பு; the outer end of a saree or cloth.

     “முன்றானையிலே முடிந்தாளலாம்படி” (ஈடு, 1 10:11);.

   2. மேற் போர்வை (யாழ்.அக.);; upper garment.

     [p]

     [முன்தானை → முன்றானை = சேலைக்கடை முனை (வே.க.);]

முன்றானைபோடு-தல்

முன்றானைபோடு-தல் muṉṟāṉaipōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

முன்றானைவிரி-த்தல், பார்க்க;see {}.

     [முன்றானை + போடு-தல்.]

முன்றானைவிரி-த்தல்

முன்றானைவிரி-த்தல் muṉṟāṉaivirittal,    4 செ.கு.வி.(v.i.)

   ஒருவனுக்கு மனைவியாய் இருத்தல் (இ.வ.);; to be one’s wife;to yield to a man’s embrace.

     [முன்றானை + விரி-த்தல்]

முன்றாய்

 முன்றாய் muṉṟāy, பெ.(n.)

   பாட்டி (யாழ்.அக.);; grand – mother.

     [முன் + தாய்]

முன்றிணைமுதல்வன்

முன்றிணைமுதல்வன் muṉṟiṇaimudalvaṉ, பெ.(n.)

   குலமுன்னோரில் முதல்வன்; pro – genitor, ancestor.

     “நின்முன்றிணை முதல்வர் போல நின்று” (பதிற்றுப்.14:20);.

     [முன் + திணை + முதல்வன்]

முன்றில்

முன்றில் muṉṟil, பெ.(n.)

   1.வீட்டின் முன்னிடம்; front of a house.

     “பலவின் சுளையுடை முன்றில்”(நற்.77);.

     “தேம்பிழி நறவின் குறவர் முன்றில்” (அகநா.78:7);.

     “வாரசும் பொழுகு முன்றில்” (புறநா.114:5);.

     “பல்கிளைக் குறவர் அல்கயர் முன்றில்” (நற்.44:8);.

   2. வெளியிடம்; space.

     “சிகரப்படர் முன்றிறொறும்” (கம்பரா. கடறா.47);.

தெ. முந்கிலி, முங்கிலி.

     [முன் → முன்று → முன்றில்.]

இல்முன், முன்றில் என்பன ஒருபொருள் குறித்து வந்த சொல்லென்றறிக.

முன்றுடரி

 முன்றுடரி muṉṟuḍari, பெ.(n.)

முன்றொடரி பார்க்க;see {}.

முன்றுடரிபின்றி

 முன்றுடரிபின்றி muṉṟuḍaribiṉṟi, பெ.(n.)

முன்றொடரி (பரி. அக.); பார்க்க;see {}.

     [முன்றொடரி → முன்றுடரி + பின்று – முன்றுடரிபின்று → முன்றுடரி + பின்றி.]

முன்றுடரிபின்றுடரி

 முன்றுடரிபின்றுடரி muṉṟuḍaribiṉṟuḍari, பெ.(n.)

முன்றொடரி (கரு.அக.); பார்க்க;see {}.

     [முன்றொடரி → முன்றுடரி + பின்றுடரி]

முன்றுறை

முன்றுறை muṉṟuṟai, பெ.(n.)

   துறைமுகம்; port, harbor.

     “முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர்” (மணிமே.7:70);.

     [முன் + துறை.]

முன்றுறையரையர்

 முன்றுறையரையர் muṉṟuṟaiyaraiyar, பெ.(n.)

   முன்றுறை என்னுமூரில் வாழ்ந்த பழமொழி நானூரின் ஆசிரியர்; a poet, au- thor of {}, as a native of {}.

     [முன்றுறை + அரையர்]

முன்றூதன்

 முன்றூதன் muṉṟūtaṉ, பெ.(n.)

   முன்னே சென்று செய்தியைக் கூறுபவன் (வின்.);; herald, forerunner.

     [முன் + தூதன்]

முன்றேர்க்குரவை

முன்றேர்க்குரவை muṉṟērkkuravai, பெ. (n.)

   போரில் வெற்றியடைந்த அரசன் வெற்றிக் களிப்பால் தன் தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கைபிணைந்து ஆடுவதைக் கூறும் புறத்துறை (தொல்.பொருள்.76);; theme describing the dance of a king on the dais of his chariot, joining hands with his victorious warriors, in celebration of his victory.

     [முன் + தேர் + குரவை]

முன்றொடரி

 முன்றொடரி muṉṟoḍari, பெ.(n.)

   நாயுருவி (சங்.அக.);; a plant growing in hedges and thickets – Achyranthus aspera.

     [முன் + தொடரி. தொடர் → தொடரி]

முன்றோன்றல்

முன்றோன்றல் muṉṟōṉṟal, பெ.(n.)

   1. உடன் பிறந்தாருள் மூத்தவன்; first – born among brothers.

     “பாண்டவரின் முன்றோன்றல் பார்முழுதுந் தோற்று” (நள.சுயம்.1);.

   2. தமையன்; elder brother.

     “தன்னுடைய முன்றோன்றல் கொண்டேக” (திவ்.இயற்.பெரிய.ம.53);.

     [முன் + தோன்றல்]

முன்றோல்

 முன்றோல் muṉṟōl, பெ.(n.)

ஆண்குறியின் நுனியை மூடி இருக்கும் தோல்,

 prepuce of the penis.

     [முன் + தோல்]

முன்வரைவு

 முன்வரைவு muṉvaraivu, பெ.(n.)

எழுத்து முதலியவற்றின் மாற்றத்திற்கும் திருத்தத் திற்கும் மேம்பாட்டுக்கும் உரியதுமான வரைவு இறுதிவடிவம்பெறாத முன் வரைவு

 draft.

சட்ட முன் வரைவு.

     [முன்+வரைவு]

முன்வளம்

முன்வளம் muṉvaḷam, பெ.(n.)

   1. தோணியின் முன் பக்கம்; prow or bow of a ferry.

   2. முன்னிடம்; front, forepart.

     [முன் + வள்ளம் – முன்வள்ளம் → முன்வளம்]

முன்வழுக்கை

 முன்வழுக்கை muṉvaḻukkai, பெ.(n.)

   தலையின் முன் பக்கத்தின் மயிர் உதிர்ந்துவிட்டப் பகுதி (வழுக்கை);; baldness infornt of the head-Calvities.

     [முன் + வழுக்கை]

முன்வா-

முன்வா- muṉvā,    18 செ.கு.வி.(v.i.)

   ஒன்றைச் செய்ய தாமே உடன்பட்டு ஆர்வத்துடன் அணியமாக இருத்தல்; come forward;

 ex – press willingness.

தேர்தலைப் பற்றிப் பலர் தாமே முன்வந்து தங்கள் கருத்துக்களைக் கூறினர். ஆற்றைச் சுத்தப்படுத்தும் பணியை நடத்தப் பல சேவை அமைப்புகள் முன்வந்துள்ளன.

     [முன் + வா]

முன்வாய்

முன்வாய் muṉvāy, பெ.(n.)

   1. வாயின் முன்பக்கம்; fore-part of the mouth.

   2. உதடு (வின்.);; lips.

   3. பொலி தூற்றுவதில் காற்றுக்கு எதிர்ப்பக்கம் (வின்.);; the direction opposite to that whence the wind blows, in winnowing.

   4. பொலியிற் பதருடன் கலந்துள்ள தவசக் குவியல் (இ.வ.);; grain found mixed with chaff even after winnowing.

     [முன் + வாய்]

முன்வாய்ப்பல்

 முன்வாய்ப்பல் muṉvāyppal, பெ.(n.)

   முன்னம்பல் (M.L.);; incisor.

     [முன்வாய் + பல்]

முன்விட்டுவிடு-தல்

முன்விட்டுவிடு-தல் muṉviḍḍuviḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   முதன் முறையில் ஒரு செயலை செய்ய மறந்து விட்டு அதன் பிறகு அச்செயலை நினைத்து வருந்துதல்; repenting later, for an undone deed or action.

     “முன்விட்டு விட்டுப் பின்நின்று கழுத்தறுக்கலாமா?” (பழ.);.

     [முன் + விட்டு + விடு-தல்]

முன்விழிப்பு

 முன்விழிப்பு muṉviḻippu, பெ.(n.)

   விழிப்பு (சாக்கிரதை);; wakefulness, vigilence.

     [முன்+விழிப்பு]

முன்வை-த்தல்

முன்வை-த்தல் muṉvaittal,    4 செ.கு.வி.(v.i.)

   முன்னிடுகை, திட்டம் முதலியவற்றை ஆய்வுக்காகத் தக்க முறையில் கவனத்திற்குக் கொண்டு வருதல்; purpose;

 put forward resolution, demand, etc.

தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிருவாகம் ஏற்கவில்லை.

     ‘முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டேன்’ (பழ.);.

     [முன் + வை-த்தல்.]

முன்வைப்புத்தொகை

 முன்வைப்புத்தொகை muṉvaipputtogai, பெ.(n.)

   ஏலம், ஒப்பந்தப் புள்ளி முதலியவற்றுக்காக ஒருவர் கட்ட வேண்டிய முன்பணம்; earnest money deposit.

     [முன் + வைப்பு + தொகை.]

முபலகு

 முபலகு mubalagu, பெ. (n.)

   எண்ணினாலன்றி எழுத்தினாற் காட்டும் மொத்தத் தொகை (C.G.);; total, especially written in words instead of figures.

     [U. mublas → த. முபலகு]

முப்பகை

முப்பகை muppagai, பெ.(n.)

   1. ஆதனைக் (ஆன்மாவைக்); கெடுக்கின்ற மூன்று குற்றங்களாகிய காமம், வெகுளி, மயக்கம்; the three evil qualities of the soul, viz., {}, vekuļi, mayakkam.

     “முப்பகை வென்றார்” (கம்பரா. கார்மு.26);.

   2. பேய் (பிசாசு);, உலகு, உடலாகிய மாந்தனின் மூன்று பகைவர்கள் (சது.);; the three enemies of mankind, viz. {}, ulagu, {}.

     [மூன்று + பகை.]

முப்படலம்

 முப்படலம் muppaḍalam, பெ.(n.)

   ஒருவகைக் கண்ணோய்; an eye disease.

முப்படை

 முப்படை muppaḍai, பெ.(n.)

   ஒரு நாட்டின் தரைப்படை, கப்பல் படை, வான்படை ஆகிய மூன்று படை; the armed forces comprising of army, navy and air force.

முப்படைத் தளபதி யார்?

     [மூன்று + படை.]

முப்பட்டகம்

 முப்பட்டகம் muppaṭṭagam, பெ. (n.)

   கண்ணாடி போன்றவற்றால் முக்கோண வடிவில் செய்யப்பட்டதும் தன்னுள் பாயும் ஒளியை நிறமாலையாகப் பிரிக்கக் கூடிய தன்மை உடையதுமான பொருள்; prism.

     [மூன்று + பட்டகம்.]

     [p]

முப்பட்டையரம்

 முப்பட்டையரம் muppaṭṭaiyaram, பெ.(n.)

   மூன்று பட்டைகள் அமைந்த அரம் (இ.வ.);; corner file.

     [மூன்று + பட்டை + அரம்.]

முப்பணி

 முப்பணி muppaṇi, பெ.(n.)

   மூன்று வகை; three kinds of work.

     “முப்பணியிட்ட பெண்ணுக்குக் கொப்பு ஒன்றுதான் குறை” (பழ.);.

     [மூன்று + பணி.]

முப்பதம்

முப்பதம் muppadam, பெ.(n.)

     ‘அது நீயாயிருக்கிறாய்’ என்னும் பொருளுடைய மூன்று வடசொல் (தத்துவமசி);;

{}, as comprising three words.

     “முப்பதப் போதாந்தமான பிரணவத்துள்” (திருமந். 225);. [மூன்று + Skt. பதம்.]

முப்பதாம்பூசை

 முப்பதாம்பூசை muppatāmbūcai, பெ.(n.)

   பண்டார இனத்தவரின் சடங்குகளில் ஒரு வகை (கோவை.);; a rite of {} caste.

     [முப்பதாம் + பூசை.]

பிணக் குழிக்குப் பந்தலிட்டு உட்கார்ந்து மந்திரம் சொல்லிப் பின் வீட்டிலும் மந்திரம் சொல்லிச் செய்யும் சடங்கு.

முப்பது

முப்பது muppadu, பெ.(n.)

   மூன்று பத்து (திவ்.திருப்பா.30);; thirty.

     “முப்பது செருப்புத் தின்றவனுக்கு மூன்று செருப்பு பணிகாரம்” (பழ.);,

     “முப்பது பணம் கொடுத்தாலும் மூளிபட்டம் போகாது” (பழ.);,

     “முப்பதும் போய் மூன்றும் தள்ளினவள் போலப் பேசுகிறாள்” (பழ.);,

     “முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை முப்பது ஆண்டு தாழ்ந்தவனும் இல்லை” (பழ.அக.);.

     [மூன்று + பத்து.]

முப்பதுநோன்பு

முப்பதுநோன்பு muppadunōṉpu, பெ.(n.)

   1. முகமதியர் நாளும் நோற்கும் நோன்பு (உ.வ.);; fast observed by Muhammadans daily in the month of {}.

   2. தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கரில் மணம் செய்துகொண்ட பெண்கள் மணநாள் முதல் முப்பது நாள் நோற்கும் நோன்பு (இ.வ.);; ceremonial observance practised by newly married Telugu girls in Tamil districts, as lasting for thirty days from the date of marriage.

     [முப்பது + நோன்பு.]

முப்பதுவெட்டி

 முப்பதுவெட்டி muppaduveṭṭi, பெ. (n.)

   வாலாசாவட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Wallajah Taluk

     [ஒருகா. முப்பதுபட்டி-முப்பதுவட்டி-முப்பது+வெட்டி]

முப்பதெருப்புடம்

முப்பதெருப்புடம் muppaderuppuḍam, பெ.(n.)

   30 வரட்டிகளால் போடும் புடம்; cowdung fire with 30 cakes for calcination.

     [முப்பது + எரு + புடம்.]

முப்பத்தாறாயிரப்படி

 முப்பத்தாறாயிரப்படி muppattāṟāyirappaḍi, பெ.(n.)

   ஈடு முப்பத்தாறாயிரம்; a commentary on {}.

     [முப்பது + ஆறு + ஆயிரப்படி.]

முப்பத்திமண்டபம்

 முப்பத்திமண்டபம் mubbattimaṇṭabam, பெ.(n.)

   மூன்று பத்திகளுள்ள மண்டபம்; pillared hall containing four rows of pillars, as having three vestibules.

     [மூன்று + பத்தி + மண்டபம்.]

நான்கு வரிசையாக உள்ள தூண்களுக்கு இடைப்பட்ட மூன்று பத்திகளையுடைய மண்டபம்.

முப்பத்திரண்டறம்

 முப்பத்திரண்டறம் muppattiraṇṭaṟam, பெ.(n.)

ஆதுலர்சாலை, ஒதுவார்க்குணவு, அறுசமயத்தோர்க்குணவு, ஆவுக்கு (பசுவுக்கு); வாயுறை, சிறைச்சோறு, ஐயம், நடைத் தின்பண்டம், மகச்சோறு, மகப்பெறு வித்தல், மகவளர்த்தல், மகப்பால், அறவைப் பிணஞ்சுடல், அழிந்தோரை நிறுத்தல், வண்ணார், முடிதிருத்துவோர் (நாவிதர்);, வதுவை, பூணூல், நோய் மருந்து, கண்ணாடி, நாளோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய், பெண்ணுகர்வு, அட்டூண், பிறரறங்காத்தல், தண்ணீர்ப்பந்தர், மடம், தடம், கா, ஆவுரிஞ்சு நடுதறி,

   ஏறுவிடுத்தல், விலையுயிர் கொடுத்துக் கொலையுயிர் மீட்டல் என்னும் முப்பத்திரண்டு வகையான அறம் (திவா.Mss.);; thirty two kinds of charity.

     [முப்பது + இரண்டு + அறம்.]

முப்பத்துமுக்கோடிதேவர்

முப்பத்துமுக்கோடிதேவர் muppattumukāṭitēvar, பெ.(n.)

   முப்பத்து மூன்று கோடியாகக் கணக்கிடப்படும் தேவர் (தக்கயாகப்.183, உரை);; celestials numbering thirty-three crores.

   2. முப்பத்துமூவர் பார்க்க; see {},

     “செருக்கொண்ட முப்பத்து முக்கோடி தேவருஞ் சேனையுமே” (அஷ்டப். திருவரங்கத்துமா.64);.

     [முப்பது + மூன்று + கோடி + தேவர்.]

முப்பத்துமுத்தேவர்

முப்பத்துமுத்தேவர் muppattumuttēvar, பெ.(n.)

முப்பத்துமூவர் (திவா.); பார்க்க; see {}.

     “அதிதி புதல்வராய முப்பத்து முத்தேவர்” (தக்கயாகப்.16);.

     [மூன்று + பத்து + முத்தேவர்.]

முப்பத்துமூவர்

முப்பத்துமூவர் muppattumūvar, பெ.(n.)

   முப்பத்துமூன்று தேவர் (பிங்.);; the 33 celestials in four groups viz, {}.

     “முப்பத்து மூவரமரர்க்கு” (திவ். திருப்பா:20);.

     [மூன்று + பத்து + மூவர்.]

முப்பறமுந்நாழி

முப்பறமுந்நாழி muppaṟamunnāḻi, பெ.(n.)

   வரி வகை (T.A.S., iii.216);; a tax.

முப்பலம்

 முப்பலம் muppalam, பெ.(n)

முப்பலை (வின்.); பார்க்க; see mu-p-palai.

முப்பலை

 முப்பலை muppalai, பெ.(n.)

   திரிபலை (யாழ். அக.);; three myrobalans.

முப்பழம்

முப்பழம் muppaḻm, பெ.(n.)

   1. முக்கனி (சிலப்.6. 76. உரை.); பார்க்க; see {}.

   2. திரிபலை; the three myrobalans.

     “முப்பழ நீர்ப்பளிங்களைஇ” (சீவக.2356);.

     [மூன்று + பழம்.]

முப்பாட்டன்

முப்பாட்டன்1 muppāṭṭaṉ, பெ.(n.)

பாட்டனுக்குத் தந்தை (வின்.);,

 great-grand father.

உன்னுடைய முப்பாட்டனுடைய பெயர் என்ன?

     [முன் + பாட்டன்.]

 முப்பாட்டன்2 muppāṭṭaṉ, பெ.(n.)

   பாட்டனுக்குப் பாட்டன் (வின்.);; grand father’s grand father.

எங்கள் முப்பாட்டன் காலத்திருந்தே இந்தச் சொத்து எங்களிடமே உள்ளது.

     [முன் + பாட்டன்.]

முப்பாட்டி

முப்பாட்டி muppāṭṭi, பெ.(n.)

   பாட்டியின் தாய்; great-grand mother.

     [முன் + பாட்டி. முப்பாட்டன்2 (ஆ.பா.); → முப்பாட்டி (பெ.பா.);.]

 முப்பாட்டி2 muppāṭṭi, பெ.(n.)

   பாட்டனுக்குப் பாட்டி (யாழ்.அக.);; grand father’s grand – mother.

     [முப்பாட்டன்2 → முப்பாட்டி2.]

முப்பாத்துக்காரர்

 முப்பாத்துக்காரர் muppāttukkārar, பெ.(n.)

   தாழ்ந்த இனத்தவர்களின் தலைவன் (கோவை.);; a headmanship of low caste people.

முப்பான்

 முப்பான் muppāṉ, பெ.(n.)

   முப்பது; thirty.

முப்பாரிதம்

 முப்பாரிதம் muppāridam, பெ.(n.)

மிளகு,

 pepper-Pipernigrum.

முப்பாற்புள்ளி

முப்பாற்புள்ளி muppāṟpuḷḷi, பெ.(n.)

   1. ஆய்தவெழுத்து (தொல்.எழுத்து.2);; the letter ஃ, as having three dots.

   2. குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற புள்ளியுள்ள மூன்றெழுத்துகள் (தொல்.விருத்.பக்.26);; the three letters {}, as written with dots.

     [முப்பால் + புள்ளி.]

முப்பாலகர்

முப்பாலகர் muppālagar, பெ.(n.)

   பால் குடிப்பவர், பாலும் சோறும் உண்பவர், சோறுமட்டு முண்பவரென மூவகைப்பட்ட குழந்தைகள் (தைலவ.தைல,117. உரை);; children of three kinds, viz., those who drink milk alone, those who take milk and rice and those who take rice only.

     [மூன்று + பாலகர். பாலகன் → பாலகர்.]

முப்பாலர்

முப்பாலர் muppālar, பெ.(n.)

முப்பாலகர் (தைலவ.தைல,117); பார்க்க; see {}.

     [மூன்று + பாலர். பாலன் → பாலர்.]

முப்பால்

முப்பால்1 muppāl, பெ.(n.)

   1. அறம், பொருள், இன்பமெனும் மூன்று பகுப்புகள்; the three division, {}.

   2. முப்பாலை விரித்துக் கூறும் திருக்குறள்;{} as dealing with {}.

     “வள்ளுவர் முப்பாலாற் றலைக்குத்துத் தீர்வு சாத்தற்கு” (வள்ளுவமா.11);.

   3. ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்பன; the three genders,viz., {}.

     “அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே” (தொல். சொல்.212);.

   4. காய்ச்சுப் பால், திரட்டுப்பால், குழம்புப்பால் என்ற மூன்று வகைப்பட்ட பால் (யாழ்.அக.);; the three preparations of milk, viz., {}.

   5. தாய்ப் பால், ஆவின் பால், ஆட்டுப்பால் என்னும் மூவகைப் பால் (தமிழ்விடு.25, உரை);; the three kinds of milk, viz., mother’s milk, cow’s milk, goat’s milk.

தெ. முப்பாலு

     [மூன்று + பால்.]

 முப்பால்2 muppāl, பெ.(n.)

   வன்பால், மென்பால், சமப்பால் என்ற மூவகை நிலங்கள்; the three kinds of land, viz., {}.

     [மூன்று + பால். பால் = நிலம்]

முப்பாழ்

முப்பாழ் muppāḻ, பெ.(n.)

   1. நிலத்திற் குண்டாம் வெயிற்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் என்ற மூவகைக் கேடுகள்; the three forms of ruin which a land is subject to viz., {}.

   2. உள்பொருள் (சீவேசுவர ஜகத்துக்கள்); (சங்.அக.);; the three entities, viz., {}.

   3. உடம்புக்குள் வெறுமையான மூன்றிடம் (வின்.);; the three vacant regions believed to exist in the body.

     [மூன்று + பாழ்.]

முப்பிடாரி

 முப்பிடாரி muppiṭāri, பெ.(n.)

   சிற்றுார் பெண் தெய்வம்; a village goddess.

     [மூன்று + பிடாரி. பிடாரி = சிற்றூர்த்தெய்வம்]

முப்பிணி

 முப்பிணி muppiṇi, பெ.(n.)

   வளி, பித்தம், கோழையாகிய மூன்று குற்றத்தினால் உண்டாகும் நோய்கள்; disease caused by the three kinds of human system (vatham); wind humours, (pittham); bile humour, (kapam); phlegm humour.

     [மூன்று + பிணி.]

முப்பிரண்டை

 முப்பிரண்டை muppiraṇṭai, பெ.(ո.)

   மூன்று முகப் பிரண்டை; vitis with three faced stem (சா.அக.);.

     [மூன்று + பிரண்டை. மூன்று பிரிவாக இருக்கும் பிரண்டை.]

முப்பிரி

 முப்பிரி muppiri, பெ.(n.)

   மூன்று கயிறை ஒன்றாகத் திரிக்கும் கருவி (கோவை.);; an instrument used for three coir ramble.

     [மூன்று + பிரி.]

முப்பிறைக்காண்பான்

 முப்பிறைக்காண்பான் muppiṟaikkāṇpāṉ, பெ.(n.)

   கக்குவான்; whooping cough (சா.அக.);.

முப்பிறைச்சுமை

 முப்பிறைச்சுமை muppiṟaiccumai, பெ. (n.)

முப்பிறைக்காண்பான் பார்க்க; see {}.

     [மூன்று + பிறை + சுமை.]

முப்பிள்ளைப்பேறு

 முப்பிள்ளைப்பேறு muppiḷḷaippēṟu, பெ.(n.)

   மூன்று குழந்தைகளைக் குறிப்பிட்ட காலத்தில் ஈனுகை; giving birth to triplets at a time.

     [மூன்று + பிள்ளை + பேறு.]

முப்பு

முப்பு muppu, பெ.(n.)

   1. முப்பூ பார்க்க; see muppu.

   2. அகத்தியர் இயற்றிய வாகடநூல் (மூ.அ.);; a medical treatise by Agattiyar.

முப்புக்குரு

 முப்புக்குரு muppukkuru, பெ.(n.)

   கரைப்பான்; quint essence salt – universal solvant (சா.அக.);.

முப்புடம்

 முப்புடம் muppuḍam, பெ.(n.)

   மூன்றுபுடம்; submitting thrice to the cowdung fire (சா.அக.);.

முப்புடி

முப்புடி muppuḍi, பெ.(n.)

   1. திரிபுடி (வின்.);; the three factors of knowledge.

   2. முக்குணம் (யாழ்.அக.); பார்க்க; see {}.

முப்புடைக்கனி

முப்புடைக்கனி muppuḍaikkaṉi, பெ. (n.)

முப்புடைக்காய் பார்க்க; see {}.

     “முப்புடைக்கனிசிந்த மோதி” (மீனாட். பிள்ளைத்.55);.

     [மூன்று + புடை + கனி.]

முப்புடைக்காய்

முப்புடைக்காய் muppuḍaikkāy, பெ.(n.)

   மூன்று பிரிவுகளுடைய தேங்காய் (பெரும்பாண்.364);; coconut as having three vertical sections.

     [மூன்று + புடை + காய். தேங்காய் மூன்று பிரிவுகளையுடையது.]

முப்புநூல்

முப்புநூல் muppunūl, பெ.(n.)

   பதினெண் வகையான குட்ட நோய்களையும் அவற்றைக் குணமாக்கும் மருத்துவ முறைகளையும் சொல்லும் அகத்தியர் இயற்றிய ஒரு தமிழ் மருத்துவ நூல்; a Tamil treatise of Agattiyar on 18 kinds of leprosy and their cures (சா.அக.);.

     [மூன்று + நூல்.]

முப்புரக்கனி

 முப்புரக்கனி muppurakkaṉi, பெ.(n.)

   பலாப்பழம்; jack fruit.

     [p]

முப்புரமாலி

 முப்புரமாலி muppuramāli, பெ.(n.)

   சிவனார் வேம்பு; siva’s neem – Indigofera asphalathi folia alias asphalathoides indicus (சா.அக.);.

முப்புரமெரித்தான்

முப்புரமெரித்தான் muppuramerittāṉ, பெ.(n.)

   1. சிவன்; {}.

   2. சிவனார் வேம்பு; wiry indigo.

   3. ஆடுதின்னாப்பாளை; worm killer.

     [முப்புரம் + எரித்தான்.]

முப்புரம்

முப்புரம் muppuram, பெ.(n.)

   திரிபுரம்; the three aerial cities burnt by {}.

     “ஒக்க முப்புர மோங்கெரி தூவ” (தேவா.485, 5);.

     [மூன்று + புரம்.]

முப்புரி

முப்புரி1 muppuri, பெ.(n.)

முப்புரம் (வின்.); பார்க்க; see mu-p-puram.

 முப்புரி2 muppuri, பெ.(n.)

   மூன்று நூல் சேர்த்துத் திரித்த கயிறு; cord of three strands.

முந்நூல்கொண்டு முப்புரி யாக்குதலின்’ (திருமுரு.183, உரை);.

   தெ. முப்பிரி;க. முப்புரி.

     [மூன்று + புரி.]

 முப்புரி muppuri, பெ. (n.)

   திண்டிவனம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tindivanam Taluk.

     [மூன்று+புரி]

முப்புரிச்சவுக்கம்

 முப்புரிச்சவுக்கம் muppuriccavukkam, பெ.(n.)

   முப்புரிநூலாலமைந்த சிறிய ஆடை (இ.வ.);; cloth woven from yarn of three strands.

     [முப்புரி + (Skt. catuska → த.); சவுக்கம்.]

முப்புரிநூலோர்

 முப்புரிநூலோர் muppurinūlōr, பெ.(n.)

   பிராமணர் (திவா.);; Brahmins, as wearing the sacred thread.

     [முப்புரி + நூலோர்.]

முப்புரிநூல்

முப்புரிநூல் muppurinūl, பெ.(n.)

   பூணூல்; thread with three strands worn by men of certain castes.

     “முப்புரி நூலொடு மானுரி யிலங்கு மார்வினின்” (திவ்.இயற். திருவெழு.வரி. 7);.

     [மூன்று + புரி + நூல்.]

முப்புரிமுண்டு

முப்புரிமுண்டு muppurimuṇṭu, பெ.(n.)

முப்புரிச்சவுக்கம் (இ.வ.); பார்க்க; see muppuri-c-cavukkam.

     [முப்புரி1 + முண்டு.]

முப்புள்ளி

 முப்புள்ளி muppuḷḷi, பெ.(n.)

   ஆய்த வெழுத்து (இலக். அக.);; the letter ஃ, as having three dots.

     [மூன்று + புள்ளி.]

முப்புவனம்

முப்புவனம் muppuvaṉam, பெ.(n.)

   துறக்கவுலகம், நிலவுலகம், பாதாளவுலகம் ஆகிய மூன்று உலகங்கள் (திருவிளை. தலவிசேட.2);; the three worlds {}.

     [மூன்று + (Skt. bhuvana → த.); புவனம்.]

முப்பூ

முப்பூ1 muppū, பெ.(n.)

   ஒருவகை உப்பு; a kind of salt.

     [மூன்று + உப்பு.]

காரமான பூநீற்றைப் பனி நீரில் கரைத்து வைத்து மூன்றாம் நாள் தெளிவெடுத்து பரிதியில் பத்துமுறை காய வைத்து, கல்லுப்பு, கற்கண்ணாம்பு, மண்டையோட்டு உப்பு, கற்பூரம் ஆகியவற்றை முட்டையின் வெள்ளைக் கருவில் ஆட்டிப் புடமிட உண்டான உப்பு (அபி.சிந்.);.

 முப்பூ2 muppū, பெ.(n.)

   இரும்பு முதலியவற்றைப் பொன்னாக்கவும் ஒரிலக்க மாண்டுகள் உயிர்வாழச் செய்யும் என நம்பப்படுவதான ஒருவகையுப்பு; a salt believed to have the power of transmiting baser metals into gold, and to enable one to live 1,00,000 years.

     [மூன்று + உப்பு.]

முப்பூநீறு

 முப்பூநீறு muppūnīṟu, பெ.(n.)

   முப்புச் சுண்ணம்; calcined powder prepared from muppu consisting of three salts (சா.அக.);.

     [முப்பு + நீறு.]

முப்பூப்புடம்

 முப்பூப்புடம் muppūppuḍam, பெ.(n.)

   மணவைப்பூப்புடம், குழிப்பூப்புடம், பூபதனப் பூப்புடம் என்ற மூவகைப் பூப்புடங்கள் (தைலவ.தைல);; the three modes of calcining medicines, viz., {}.

     [மூன்று + பூப்புடம்.]

முப்பூரம்

முப்பூரம் muppūram, பெ.(n.)

   கணை, முற்குளம், முற்கொழுங்கால் (பூரம், பூராடம், பூரட்டாதி); என்னும் மூன்று விண்மீன்கள்; the three naksatras viz., {}.

     “ஆயில் முப்பூரஞ் சோதி” (சூடா. உள்.165);.

     [மூன்று + (Skt. {}-phalguni → {} → த.); பூரம்.]

முப்பேன்

 முப்பேன் muppēṉ, பெ.(n.)

   மனிதர் தலைமுடியில் வாழும் சிற்றுயிர்; louse.

     “முப்பேன் பிடிப்பது மூதேவி உறவுக்கு அடையாளம்” (பழ.);.

முப்பேர்நாகனார்

முப்பேர்நாகனார் muppērnākaṉār, பெ. (n.)

   கழக காலப் புலவர்; an ancient {} poet.

     [முப்பேர் + நாகனார். முப்பேர் என்பது ஊரின் பெயர்.]

ஒழிந்த இளமையை முதிர்ந்தோர் எய்தாரெனவும், வாழ்நாள் வகையறிந்த அறிஞரும் இல்லையெனவும் நற்றிணை 314ஆம் பாடலில் கூறுகின்றார்.

     “முதிர்ந்தோர் இளமை ஒழிந்தும் எய்தார்

வாழ்நாள் வகையளவு அறிஞரும் இல்லை

மாரிப் பித்திகத்து ஈரிதழ் அலரி

நறுங்காழ் ஆரமொடு மிடைந்த மார்பிற்

குறும் பொறிக் கொண்ட கொம்மையம் புகர்ப்பிற்

கருங்கண் வெம்முலை ஞெமுங்கப் புல்லிக்

கழிவ தாக கங்குல் என்றுதாம்

மொழிவன் மையிற் பொய்த்தனர் வாழிய

நொடிவிடு வன்ன காய்விடு கள்ளி

அலங்கலம் பாவை ஏறிப் புலம்புகொள்

புன்புறா வீழ்பெடைப் பயிரும்

என்றூழ் நீளிடைச் சென்றிசி னோரே” (நற்.314);.

முப்பொருள்

முப்பொருள் mupporuḷ, பெ.(n.)

   கடவுள், உயிர், தளை (பதி, பசு, பாசம்); என்னும் மூன்று முதற்பொருள்கள் (சி.போ.பா.6:2, பக்.328);; the three fundamental entities, {}, uyir, talai (padi, {});.

     [மூன்று + பொருள்.]

முப்பொறி

 முப்பொறி muppoṟi, பெ.(n.)

   மனம், வாக்கு, காயம்; the three organs refersing to mind, mouth and body thought speech and action (சா.அக.);.

     [மூன்று + பொறி.]

முப்பொழுது

முப்பொழுது muppoḻudu, பெ.(n.)

முப்போது பார்க்க; see {}.

     “முப்பொழு தேத்திய நால்வர்க்கு” (தேவா.திருவெழுகூற. 142, வரி.7);.

     [மூன்று + பொழுது.]

முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார்

முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார் muppoḻudundirumēṉidīṇṭuvār, பெ.(n.)

   தொகையடியாருள் காலை, உச்சி, மாலை என்ற மூன்று பொழுதுகளிலும் சிவனது திருமேனியைத் தொட்டுப் பூசனை செய்தற்குரிய ஆதிசைவப் பிராமணர் (தேவா.378. 10);; Adi-{} Brahmins, as entitled to touch the sacred idol of {} morning, noon and evening for anointing and decorating, one of togas-y-{}

     [முப்பொழுது + திருமேனி + தீண்டுவார்.]

முப்போகம்

 முப்போகம் muppōkam, பெ.(n.)

   ஆண்டில் மூன்று முறை விளைவு (மகசூல்); பெறுகை (கோவை.);; three time crop in a year.

     [மூன்று + போகம்.]

முப்போது

முப்போது muppōtu, பெ.(n.)

   காலை, உச்சி, மாலை என்ற மூன்று வேளைகள்; the three portions of a day, viz., {}, ucci, {}.

     “முப்போதுங் கடைந்தீண்டிய வெண்ணெயி னோடு” (திவ்.பெரியாழ்.3.1: 5);.

     [மூன்று + போது.]

முப்போதுந்திருமேனிதீண்டுவார்

 முப்போதுந்திருமேனிதீண்டுவார் muppōtundirumēṉitīṇṭuvār, பெ.(n.)

முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார் பார்க்க; see {}.

     [முப்போது + திருமேனி + தீண்டுவார்.]

முமுக்கு

முமுக்கு mumukku, பெ.(n.)

முமுட்சு, 1 (நாமதீப.134); பார்க்க; see {},1.

முமுடம்

 முமுடம் mumuḍam, பெ.(n.)

   முழுத்துறவு (வின்.);; total or complete renunciation.

முமுட்சு

முமுட்சு mumuṭcu, பெ.(n.)

   1. வீடுபேறடைய விழைவோர்; one who is eager for salvation.

     “முத்தனா மவனே நாடரிய முமுட்சு” (வேதா.சூ.14);.

   2. துறவு (யாழ்.அக.);; renunciation.

முமூட்சு

முமூட்சு mumūṭcu, பெ.(n.)

முமுட்சு, 1 (வின்.); பார்க்க; see {}, 1.

மும்

 மும் mum, பெ.(n.)

   முருங்கைப்பட்டை; bark of drum stick tree – Moringa obeitera (சா.அக.);.

மும்பாடெபிம்பாடெ

 மும்பாடெபிம்பாடெ mumbāṭebimbāṭe, பெ.(n.)

   மாடுகளுக்கு உள்ள இரண்டு சுழிகள் (கோவை);; two curl-marks of cows.

அரச (இராச); சுழிக்கும் மந்திரச் சுழிக்கும் குறுக்கே உள்ள சுழிகள் (கோவை.);.

மும்பாரம்

 மும்பாரம் mumbāram, பெ.(n.)

முன்பாரம் பார்க்க; see {}.

     [முன்பாரம் → மும்பாரம்.]

மும்மடங்கு

மும்மடங்கு mummaḍaṅgu, பெ.(n.)

   மூன்று பங்கு; three times over, three-fold.

     “மும்மடங்கு பொலிந்த முகத்தினன்” (கம்பரா. காட்சிப்.19);.

தெ. மும்மடுகு

     [மூன்று + மடங்கு.]

மும்மடி

மும்மடி mummaḍi, பெ.(n.)

   1. மும்மடங்கு பார்க்க; see {}.

     “பதாதி மும்மடி சேனா முகமே” (பிங்.6:540);.

   2. அழகின் குறியாக மகளிர் வயிற்றிற் காணப்படும் மூன்று மடிப்பு (இ.வ.);; three creases in a woman’s abdomen, considered as a sign of beauty.

க. மும்மடி

     [மூன்று + மடி.]

மும்மடியாகுபெயர்

மும்மடியாகுபெயர் mummaḍiyākubeyar, பெ.(n.)

   கருமையென்று பொருள்படுங் கார் என்பது முகிலை (மேகத்தை);யுணர்த்திப் பின் மழைக்காலத்தை யுணர்த்திப் பின் மழைக்காலத்துப் பயிரை யுணர்த்துவதுபோல ஒன்றன் மேலொன்றாக மும்முறை சென்று பொருளுணர்த்தும் ஆகுபெயர் வகை (நன்.290, உரை);; an {}-peyar of treble transference, {} which literally means black and figuratively means first cloud, secondly rainy season and thirdly the crop of the rainy season.

     [மும்மடி + ஆகுபெயர்.]

மும்மணி

மும்மணி mummaṇi, பெ.(n.)

   1. புருடராகம், வயிடூரியம், கோமேதகம் எனும் மூவகை மணி; the three gems, viz., {}.

     “மும்மணி யாவன சொன்ன புருடராக முறுவயிடூரியங் கோமேதகமே” (திருவாலவா. 25:22);.

   2. மும்மணிக்காசு பார்க்க; see {}.

     “முத்தவள்ளியொடு மும்மணி சுடர” (பெருங்.உஞ்சை.34 : 203);.

   3. திரிமணி (மணிமே.அரும்.);; the three objects of veneration.

     [மூன்று + மணி.]

மும்மணிக்காசு

மும்மணிக்காசு mummaṇikkācu, பெ. (n.)

   அணிகலன் வகை; an ornament.

     “மும்மணிக்காசும் பன்மணித் தாலியும்” (பெருங்.நரவாண.9:49);.

     [மும்மணி + காசு.]

மும்மணிக்கோவை

மும்மணிக்கோவை mummaṇikāvai, பெ.(n.)

   1. மூன்று கொத்துள்ள கழுத்தணி வகை (வின்.);; necklace of three strings of beads.

   2. சிற்றிலக்கியம் 96-இல் அகவலும் வெண்பாவும் கலித்துறையும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப்பெறும் முப்பது பாடல்களையுடைய இலக்கிய வகை (இலக்.வி.815);; a poem of 30 stanzas, in which agaval, {} and {} occur serially one after another in {}, one of 96 pirapandam.

     [மும்மணி + கோவை.]

மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையில் பல நூல்கள் உள்ளன. முனைவர் ந.வீ. செயராமன் தொகுத்த சிற்றிலக்கிய அகராதியில் 38 மும்மணிக்கோவை நூல்கள் இடம்பெற்றுள்ளன. மும்மணிக் கோவை என்பது விருந்து என்னும் வனப்பு வகையைச் சார்ந்தது. 8-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூர் மும்மணிக் கோவை என்னும் நூலை இயற்றியுள்ளார். பெரும்பான்மையான, மும்மணிக்கோவை நூல்கள், ஊர்ப்பெயருடன் சேர்ந்து வருகின்றன. சில ஆசிரியர் பெயருடன் வருகின்றன. எ-டு: சிதம்பர மும்மணிக்கோவை, குமரகுருபரர் மும்மணிக்கோவை.

மும்மணிமண்டலம்

 மும்மணிமண்டலம் mummaṇimaṇṭalam, பெ.(n.)

மும்மண்டலம் (பொருட்.நி.); பார்க்க; see {}.

     [மும்மணி + மண்டலம்.]

மும்மணிமாலை

மும்மணிமாலை mummaṇimālai, பெ.(n.)

   சிற்றிலக்கியம் 96-இல் வெண்பாவும் கலித் துறையும் அகவலும் முறையே மாறிவர அந்தாதித் தொடையாகப் பாடப் பெறும் முப்பது பாடல்களைக் கொண்ட இலக்கிய வகை (இலக்.வி.820);; a poem of 30 stanzas in which {} and agaval occur serially one after another in {}, one of 96 pirapandam.

     [மும்மணி + மாலை.]

இதன் ஆசிரியர் த.செய்யப்பர். இவர் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் (சிற்றிலக்கிய அகராதி);.

மும்மண்டலம்

மும்மண்டலம் mummaṇṭalam, பெ. (n.)

   1. கதிரவ (சூரிய); மண்டலம், திங்கள் (சந்திர); மண்டலம், நெருப்பு (அக்கினி); மண்டலமென்ற மூன்று பகுதிகள்; the three regions viz., {}.

   2. நிலம், வானம், மேலுலகம் (பூமி அந்தரம், சுவர்க்கம்); என்ற மூன்று பகுதிகள்; the triple regions viz., {}.

     [மூன்று + மண்டலம்.]

மும்மதக்கோடு

 மும்மதக்கோடு mummadakāṭu, பெ.(n.)

   செயற்கையாகக் கனிச்சாரங்களைக் கலந்த நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison.

மும்மதத்தன்

 மும்மதத்தன் mummadaddaṉ, பெ.(n.)

பிள்ளையார்; {}.

     “மும்மதத்த னால்வாயைங்கரத்தன்” (சி.சி.காப்பு);.

     [மும்மதம் → மும்மதத்தன்.]

மும்மதன்

 மும்மதன் mummadaṉ, பெ.(n.)

மும்மதத்தன் (பிங்.); பார்க்க; see {}.

மும்மதம்

மும்மதம் mummadam, பெ. (n.)

   மத யானையின் கன்னமதம், கைமதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதநீர்; exuation of a must elephant, as from three places, viz., {}-madam, kai-madam, {}-madam.

     “பொழிந்திழி மும்மதக் களிற்றின் மருப்பும்” (தேவா.184, 5);.

     [மூன்று + மதம்.]

மும்மதில்

 மும்மதில் mummadil, பெ.(n.)

முப்புரம் (பிங்.); பார்க்க; see mu-p-puram.

     [மூன்று + மதில்.]

மும்மரம்

மும்மரம் mummaram, பெ.(n.)

   1. கடுமை; impetuosity, severity, vehemence, fierceness.

நோய் மும்மரமாயிருக்கிறது.

   2. விரைவு; swiftness.

மும்மரமாய்ப் போனான்.

   3. பகட்டாரவாரம்; pomp.

திருமணம் மும்மரமாய் நடக்கிறது.

   4. கவனம்; attentiveness, concentration of mind, eagerness.

மும்மரமாய்ப் படிக்கிறான்.

தெ. மும்மர.

மும்மரி-த்தல்

மும்மரி-த்தல் mummarittal,    4 செ.கு.வி.(v.i.)

மும்முரி-த்தல் பார்க்க; see mummuri-.

     [மும்மரம் → மும்மரி-த்தல்.]

மும்மறை

 மும்மறை mummaṟai, பெ.(n.)

   இருக்கு, எசூர், சாமம் எனும் மூன்று மறை; the three {}, viz., irukku, {}.

     [மூன்று + மறை.]

மும்மலக்கரு

 மும்மலக்கரு mummalakkaru, பெ. (n.)

   பன்றி மலம், மனிதர் மலம், தீட்டுச் சீலை; excreta of pig, man and menses cloth (சா.அக.);.

     [மூன்று + மலம் + கரு.]

மும்மலத்தார்

மும்மலத்தார் mummalattār, பெ.(n.)

   1. பிறவிப் பிணியர் (சகலர்);; souls of the lowest class.

   2. மலம் ஐந்துள் (ஆணவம், மாயேயம், திரோதானம் என்னும்); மூன்று மலமுடையவர் (விஞ்ஞானகலர்); (தத்துவப்.21, உரை);; {},

 as having three of the aindu malam, viz., {}.

     [மூன்று + மலத்தார்.]

மும்மலம்

மும்மலம் mummalam, பெ.(n.)

   ஆணவ மலம், கன்மமலம், மாயாமலம் என்ற மூவகை மலங்கள்; the three impurities of the soul which cling to it until it attains final liberation viz {}.

     “மயக்கமாயதோர் மும்மலப் பழவல் வினைக்குள்” (திருவாச.30:7);.

   2. ஐம்மலத்துள் ஆணவம், மாயேயம், திரோதானம் என்ற மூவகை மலங்கள்; the three out of the five impurities of the soul, viz., {}.

   3. முக்குற்றம் பார்க்க (சீவக.96, உரை);; see {}.

     [மூன்று + மலம்.]

மும்மா

மும்மா mummā, பெ. (n.)

   8/20 என்ற பின்னவெண்; the fraction 8/20 as three {}.

     [மூன்று + மா.]

மும்மாங்காய்

 மும்மாங்காய் mummāṅgāy, பெ.(n.)

   மூன்று ஆண்டு வரை வெளிப்படாது இருக்கும் கருப்பம் (சீவரட்.);; rare cases of pregnancy, believed to extend to three years.

     [மும்மா → மும்மாங்காய்.]

மும்மாமுக்காணி

மும்மாமுக்காணி mummāmukkāṇi, பெ.(n.)

   8/16 என்ற பின்னவெண்; the fraction 8/16 as a sum of {} and {}.

     [மும்மா + முக்காணி.]

மும்மாமுந்திரி

மும்மாமுந்திரி mummāmundiri, பெ.(n.)

   40/820 என்ற பின்னவெண்; the fraction 40/ 820 as a sum of {} and {}.

     [மும்மா + முந்திரி.]

மும்மாரி

மும்மாரி mummāri, பெ.(n.)

   திங்க ளொன்றிற் பெய்யும் மூன்று மழை; three showers in a month.

     “வான மும்மாரி பொழிக” (மணிமே. 1:33);.

     [மூன்று + மாரி.]

மும்மீன்

 மும்மீன் mummīṉ, பெ.(n.)

   ஐந்தாவது விண் மீனான மாழ்கு (மிருக சீரிடம்); (திவா.);; the fifth naksatra.

     [மூன்று + மீன்.]

மும்முக்காணி

 மும்முக்காணி mummukkāṇi, பெ.(n.)

மும்மாமுக்காணி பார்க்க; see {}.

     [மூன்று + முக்காணி.]

மும்முடிச்சோழகன்

 மும்முடிச்சோழகன் mummuḍiccōḻkaṉ, பெ. (n.)

   கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊர்; a village in South Arcot.

     [மும்முடி+சோழன்]

இவ்வூர் இராசராசனின் விருது பெயரால் ஏற்பட்ட ஊராகும்.

மும்முடிச்சோழன்

 மும்முடிச்சோழன் mummuḍiccōḻṉ, பெ.(n.)

தமிழ்நாட்டு வேந்தர் மூவருக்குமுரிய முடிகளை அணிந்த சோழன் முதல் இராசராசன் (கல்.);; {}

 l, as wearing the crowns of the three kings of the Tamil country.

     [மூன்று + முடி + சோழன்.]

மும்முட்டி

மும்முட்டி mummuṭṭi, பெ.(n.)

   சிற்றாமுட்டி பேராமுட்டி நாக முட்டி யெனும் செடிகள் (தைலவ.தைல76);; the three plants whose names end in {}.

     [மூன்று + முட்டி.]

மும்முனி

 மும்முனி mummuṉi, பெ. (n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in WandiwashTaluk.

     [மு(மூன்று);+முனி]

மும்முரசு

மும்முரசு mummurasu, பெ.(n.)

   1. நாயமுரசு (நியாய முரசு);, வீர முரசு, ஈக (தியாக); முரசாகிய மூன்று முரசுகள்; the three drums, viz., {}.

     “மும்முரசு முத்தமிழும்” (வள்ளுவமா. 10); (கலித்.132,உரை);.

   2. வீரமுரசு, நாய (நியாய); முரசு, மணமுரசாகிய மூன்று முரசுகள்; the three drums, viz. {}.

   3. சேர, சோழ பாண்டியர்க்குரிய மூன்று முரசுகள் (கலித். 132, உரை);; the drums of {}.

     [மூன்று + முரசு.]

மும்முரம்

மும்முரம் mummuram, பெ.(n.)

   1. செயல் செய்தல், செயல் நடைபெறுதல் முதலியவற்றில் விரைவு, கவனம், ஆகியவற்றுடன் கூடியவை; excitement, briskness.

வேலை மும்முரத்தில் சாப்பிடக் கூட மறந்துவிட்டேன். தேர்தலுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது.

   2. மும்மரம் பார்க்க; see mummaram.

மும்முரி-த்தல்

மும்முரி-த்தல் mummurittal,    4 செ.கு.வி.(v.i.)

   கடுமை (உக்கிரம்); கொள்ளுதல்; to rage, storm, to be vioIent, vehement or impetuous.

தெ. மும்மரின்சு.

     [மும்முரம் → மும்முரி-த்தல்.]

மும்முறை

மும்முறை mummuṟai, பெ. (n.)

   மூன்று முறை; three times.

     ‘திருந்தடி மும்முறை வணங்கி’ (மணிமே. 12:6, உரை);.

     [மூன்று + முறை.]

மும்முறைகுதித்துத்தாண்டுதல்

 மும்முறைகுதித்துத்தாண்டுதல் mummuṟaigudidduddāṇṭudal, பெ.(n.)

   ஒடி வந்து காலால் உந்தி மூன்று முறைத் தாண்டிக் குதித்து முடிக்கும் ஒரு வகை விளையாட்டுப் போட்டி; tripple jump.

     [மூன்று + முறை + குதித்து + தாண்டுதல்.]

மும்மூடம்

மும்மூடம் mummūṭam, பெ.(n.)

   மூவகை அறிவின்மை, மடமை; the three kinds of folly.

     [மூன்று + மூடம்.]

   1. கனிம மூடம் (உலோக மூடம்);,

   2. தேவதா மூடம்,

   3. பாசண்ட மூடம்.

மும்மூடர்

மும்மூடர் mummūṭar, பெ.(n.)

   முழுமூடர் (திருநூற்.53, உரை);; downright fools.

     [மும்மூடம் → மும்மூடர்.]

மும்மூன்று

மும்மூன்று mummūṉṟu, பெ.(n.)

   1. ஒன்பது; three times three.

   2. தனித்தனி மூன்று; three by three, threes.

     [மூன்று + மூன்று.]

மும்மூர்த்தி

மும்மூர்த்தி mummūrtti, பெ.(n.)

   1. திரி மூர்த்தி; the Hindu triad.

     “பொற்பூடணர் மும்மூர்த்திகளாம் விமலனார்க்கே” (சிவரக. கணபதிவந்தனை.15);.

   2. திரிகடுகம் (தைலவ. தைல.);; three medicinal stuffs.

     [மூன்று + மூர்த்தி.]

மும்மூலி

மும்மூலி mummūli, பெ. (n.)

   1. மூன்று வகை மூலிகைகள்; the three kinds of herbs.

   2. ஒரு தசையின் பெயர்; triceps.

     [மூன்று + மூலி.]

மும்மை

மும்மை mummai, பெ.(n.)

   1. மூன்றாயிருக்குந் தன்மை (யாழ்.அக.);; the state of being three.

   2. மூன்று; three, three fold.

     ‘தெரிமாண் டமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்’ (குறள், 23, உரை);.

   3. உம்மை, இம்மை மறுமையாகிய மூவகை நிலைபேறு (திவா.);; the three states of existence, viz., ummai, immai, {}.

   4. இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்று காலங்கள்; the three tenses, viz., {}.

     “எதிர்மறை மும்மையு மேற்கும்” (நன்.145);.

க. மூமெ

     [மூன்று → மும்மை.]

மும்மைத்தமிழ்

மும்மைத்தமிழ் mummaittamiḻ, பெ.(n.)

   1. முத்தமிழ் பார்க்க; see mu-t-{}.

   2. எழுத்து, சொல், பொருள் என்னும் முக்கூறுடைய தமிழிலக்கணம் (மாறனலங். சிறப்புப்பாயிரம்);; the three sections of Tamil grammar, viz., {}.

     [மும்மை + தமிழ்.]

மும்மையணு

மும்மையணு mummaiyaṇu, பெ.(n.)

   காணக்கூடிய நிறையளவில் மிக நுண்ணிய தெனக் கருதப்படுவதும் சாளர வாயிலில் கதிரொளியில் தோன்றும் துகள் வடிவானதும் ஆகிய அணு (சி.போ.பா.1 : 1, பக்.30, சுவாமிநா.);; mote in a sunbeam.

     [மும்மை + அணு.]

மும்மொழி

 மும்மொழி mummoḻi, பெ.(n.)

   பழி கூறல், புகழ் கூறல், மெய்கூறல் ஆகிய மூன்று வகைப்பட்ட மொழி (சூடா.);; the three kinds of speech, viz., {}.

     [மூன்று + மொழி.]

முயக்கம்

முயக்கம் muyakkam, பெ.(n.)

   1. தழுவுகை; embrace.

     “பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்” (குறள், 913);.

   2. புணர்ச்சி; copulation.

     ‘முயக்கம் பெற்றவழி’ (ஐங்குறு. 93, உரை);.

   3. தொடர்பு; connection;

 uniting, joining.

     “ஆணவத்தின் முயக்கமற்று” (தணிகைப்பு.நந்தி.110);.

     [முயக்கு → முயக்கம்.]

முயக்கிடைமலைவு

முயக்கிடைமலைவு muyakkiḍaimalaivu, பெ.(n.)

   தழுவுதற்கு இடையே உள்ள மாறுபாடு; variation of embrace.

     “எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே” (குறுந்.237:7);.

     [முயக்கு + இடை + மலைவு.]

முயக்கு

முயக்கு muyakku, பெ.(n.)

முயக்கம் பார்க்க; see muyakkam.

     “வளியிடை போழப் படாஅ முயக்கு” (குறள், 1108);.

     “முன்பு மாதவப் பயத்தினாலவன் முயக்கமர்வார்” (தணிகைப்பு.நாட்டுப்.48);.

     [முயங்கு → முயக்கு.]

முயங்கிக்கொள்(ளு)-தல்

முயங்கிக்கொள்(ளு)-தல் muyaṅgikkoḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   கணவனு மனைவியுமாய் வாழ்தல் (வின்.);; to live together as husband and wife.

     [முயங்கு + கொள்(ளு);-தல்.]

முயங்கு-தல்

முயங்கு-தல் muyaṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பொருந்துதல்; to join, to cling to.

     “முலையு மார்பு முயங்கணி மயங்க”(பரிபா.6:20);.

   2. தழுவுதல்; to embrace.

     ‘முயங்கிய கைகளை யூக்க” (குறள், 1238);.

   3. புணர்தல்; to copulate with.

   4. செய்தல்; to do, perform.

     “மணவினை முயங்க லில்லென்று” (சூளா.தூது.100);.

     [முள் → முய் → முய → முயங்கு → முயங்கு-தல்.]

முயனோய்

முயனோய் muyaṉōy, பெ.(n.)

முயல்வலி (கூர்மபு.நித்தியகன்ம, 10); பார்க்க; see muyal-vali.

     [முயல் + நோய்.]

முயன்மார்க்கம்

 முயன்மார்க்கம் muyaṉmārkkam, பெ.(n.)

   குதிரை நடை வகை ஐந்தனுள் முயலின் ஒட்டம் போன்ற நடை (சசகதி);; a pace of horse.

     [முயல் + மார்க்கம். மார்க்கம் = குதிரையின் நடை.]

முயற்கறை

முயற்கறை muyaṟkaṟai, பெ.(n.)

   நிலவி னிடத்துள்ள களங்கம்; spots on the moon, as like a hare.

     “முயற்கறை மதிதவழ் முன்றிற் குன்றுகள்” (கம்பரா.சேது.10);.

     [முயல் + கறை.]

நிலவில் காணப்படும் முயல்போன்ற உருவம்.

முயற்களங்கம்

 முயற்களங்கம் muyaṟkaḷaṅgam, பெ.(n.)

முயற்கறை பார்க்க; see {}.

     [முயல் + களங்கம்.]

முயற்காதிலை

 முயற்காதிலை muyaṟkātilai, பெ.(n.)

   முயலின் காதைப் போன்ற இலை; a plant having leaves resembling the ears of hare.

     [முயற்காது + இலை.]

முயற்காது

 முயற்காது muyaṟkātu, பெ.(n.)

   இரு பக்கமும் காதுள்ள மரை வகை; fly-nut (செ.அக.);.

முயற்கூடு

முயற்கூடு muyaṟāṭu, பெ.(n.)

   நிலவு (பிங்.);; moon.

     “முயற்கூடு கண்டு சாலத்தாம் பனிக்கும் பொய்கைத் தாமரை” (சீவக. 2284);.

     [முயல் + கூடு.]

முயற்கொம்பு

முயற்கொம்பு muyaṟkombu, பெ.(n.)

   உலகில் இல்லாத பொருள்; non-existing as the horns of rabbit.

     “கான்முயற் கொம்பே யென்கோ” (தாயு.தேன்முகம்.1);.

     [முயல் + கொம்பு.]

இல்லாதனவற்றிற்கு இப்பொருளை ஏற்றிச் சொல்வது, முயலுக்கு கொம்பில்லாதது போல் இன்மையைக் காட்டும்.

முயற்கோடு

 முயற்கோடு muyaṟāṭu, பெ.(n.)

முயற்கொம்பு (வின்.); பார்க்க; see {}.

     [முயல் + கோடு.]

முயற்சாதி

 முயற்சாதி muyaṟcāti, பெ.(n.)

   உடற்கூற்றை வைத்துப் பிரிக்கப்படும் ஆண் இனத்தி லொன்று; one of the four divisions of men.

முயற்சி

முயற்சி1 muyaṟci, பெ.(n.)

   1. விடாமுயற்சி; effort, exertion, activity, application.

     “முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்” (குறள், 619);. முயற்சியுடையார் இகழ்ச்சி யடையார் மருத்துவர் எவ்வளவோ முயற்சி செய்தும் நோயாளியைக் காப்பாற்ற முடியவில்லை.

   2. ஊக்கம் (சூடா.);; perseverence, diligence, industry.

   3. வேலை; employment.

உனக்கு முயற்சி என்ன?

   4. குறிப்பிட்டநேரத்தில் முனைப்புடன் மேற்கொண்ட செயல்; attempt.

பேருந்தைக் கடத்த மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

     [முயல் → முயற்சி = ஒன்றிற்காக மேற்கொள்ளும் உழைப்பும் செயல்பாடும்.]

 முயற்சி2 muyaṟcittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   முயலுதல், முயற்சி செய்தல்; try hard.

எவ்வளவோ முயற்சித்தும் அவனுக்கு வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

     [முயல் → முயற்சி → முயற்சி-த்தல்.]

முயற்செவி

முயற்செவி muyaṟcevi, பெ.(n.)

   செடி வகை (M.M.339);; hare’s-ear, shrub, Emilia sonchifolia.

ம. முயல்செவி

     [முயல் + செவி. முயற்செவியைப் போன்ற இலைகளையுடைய செடிவகை.]

முயற்செவிக்கள்ளி

 முயற்செவிக்கள்ளி muyaṟcevikkaḷḷi, பெ. (n.)

   இலைக்கள்ளி; five – tubercled spurge.

     [முயல் + செவி + கள்ளி. முயற்செவியைப் போன்ற இலைகளையுடைய செடிவகை.]

முயற்சேவிதம்

 முயற்சேவிதம் muyaṟcēvidam, பெ.(n.)

   மயிர்கொன்னை; caesal pinia pulcherrima alias poinciana regia.

முயற்சை

முயற்சை muyaṟcai, பெ.(n.)

முயற்சி, 1, 2 பார்க்க; see {}1, 2.

     [முயற்சி → முயற்சை.]

முயற்புல்

முயற்புல் muyaṟpul, பெ.(n.)

   1. மூவகைப் புல்; creeping panic grass, couch grass, harialli grass – Cynodon dact ylon (சா.அக.);.

   2. அறுகம் புல் (மூ.அ.); (M.M.349);; harialli grass.

     [முயல் + புல்.]

முயற்புழுக்கைக்களிம்பு

 முயற்புழுக்கைக்களிம்பு muyaṟpuḻukkaikkaḷimbu, பெ.(n.)

   கண்புகைச்சல் நோயைத் தீர்க்கும் மருந்து; an eye medicine for eye disease (சா.அக.);.

     [முயற்புழுக்கை + களிம்பு. முயற்புழுக்கைப் போல் இருக்கும் களிம்பு மருந்து.]

முயற்பேலகம்

 முயற்பேலகம் muyaṟpēlagam, பெ.(n.)

முயற்செவிக்கள்ளி பார்க்க; see {}. (சா.அக.);.

முயற்றி

முயற்றி muyaṟṟi, பெ.(n.)

முயற்சி, 1, 2 பார்க்க; see {}, 1, 2.

     “முயற்றியா லிடர்கள் வந்தால்” (தேவா.1104, 9);.

     [முயற்சி → முயற்றி.]

முயற்றிசை

 முயற்றிசை muyaṟṟisai, பெ.(n.)

   வடகீழ்த் திசை (வின்.);; the north-eastern quarter, as the region, of the hare.

முயற்று

முயற்று muyaṟṟu, பெ.(n.)

முயற்சி, 1, 2 பார்க்க; see {}, 1, 2.

     “முயற்றின்மை யின்மை புகுத்தி விடும்” (குறள், 616);.

     [முயற்சி → முயற்று.]

முயலகநோய்

 முயலகநோய் muyalaganōy, பெ.(n.)

முயல்வலி பார்க்க; see muyal-vali.

முயலகன்

முயலகன்1 muyalagaṉ, பெ.(n.)

   கெந்தக நஞ்சு; a kind of arsenic.

 முயலகன்2 muyalagaṉ, பெ.(n.)

   1. நடவரசப் பெருமான் ஏறி நடிக்கும் பூதம்; a {}

 over whose body {}.

     “மூடாய முயலகன்” (தேவா.878, 3);.

   2. முயல்வலி பார்க்க; see muyal-vali.

     “மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்தணைவுற” (பெரியபு.திருஞான.311);.

     [முயல்1 → முயலகன்.]

முயலடி

முயலடி muyalaḍi, பெ. (n.)

   கலவியில் நிகழும் நகக்குறி ஆறனுள் மகளிரின் உடம்பில் முயலடிபோன்று ஆடவர் நகத்தினாற் பதிக்கும் அடையாளம்; nail mark resembling a hare’s foot, made on the body of a woman, during sexual union, one of six {}.

     “முயலடி யென்னவே மொழிய வேண்டுமால்” (கொக்கோ. 5:61);.

     [முயல் → முயலடி.]

முயலாக்கிரம்

 முயலாக்கிரம் muyalākkiram, பெ.(n.)

   உலக்கைத்தலை (யாழ். அக.);; head of pestle.

முயலின்கூடு

 முயலின்கூடு muyaliṉāṭu, பெ. (n.)

முயற்கூடு (சூடா.); பார்க்க; see {}.

     [முயல் + கூடு.]

முயலுப்பு

 முயலுப்பு muyaluppu, பெ.(n.)

   வளையலுப்பு (மூ.அ.);; glass-gall.

     [முயல் + உப்பு.]

முயலை

 முயலை muyalai, பெ.(n.)

முசலை (யாழ்ப்.); பார்க்க; see {}.

முயல்

முயல்1 muyalludal,    14 செ.குன்றாவி.(v.t.)

   1. விடாதுபற்றி ஊக்கத்தோடு செய்தல்; to practise, persevere, make continued exertion.

     “செய்தவ மீண்டு முயலப்படும்” (குறள், 265);

   2. வருந்துதல்; to take pains.

     “தவங்கள் முயன்று செய்தாலும்” (தஞ்சைவா.19);.

   3. தொடங்குதல் (வின்.);; to begin, undertake.

 முயல்2 muyal, பெ.(n.)

   நீண்ட காதுக ளுடையதும் வேகமாக ஓடக் கூடியதும் கிழங்கு முதலியவற்றை உண்டு வாழ்வதுமான சிறு விலங்கு; hare, rabbit, Lepus nigricollis.

     “காண முயலெய்த வம்பினில்” (குறள், 772);.

முயல் வேகத்தை ஆமை வென்றது.

க. மொல.

புல் நிறைந்த இடங்களில் வாழும் சிறிய விலங்கு, தண்ணீர் கிடைக்காவிடின் பனிநீரை உண்ணும்.

     [p]

 முயல்3 muyal, பெ.(n.)

   போர் (சது.);; war.

முயல்கண்டன்

 முயல்கண்டன் muyalkaṇṭaṉ, பெ.(n.)

முயல்வலி பார்க்க; see muyal – vali.

முயல்காதுக்கீரை

 முயல்காதுக்கீரை muyalkātukārai,    ஒருவகைக் கொடி; a kind of creeper – Ipomoea biloba.

     [முயல் + காது + கீரை. முயல் காதைப் போன்ற நீண்ட இலையையுடைய கீரை.]

முயல்கிறுக்கு

 முயல்கிறுக்கு muyalkiṟukku, பெ.(n.)

   குணப்படுத்த முடியாத நாட்பட்ட நோய்; an incurable chronical, disease.

முயல்புல்

 முயல்புல் muyalpul, பெ.(n.)

   ஒருவகைப் புல்; hare’s grass.

     [முயல் + புல்.]

முயல்புழுக்கைக்களிம்பு

 முயல்புழுக்கைக்களிம்பு muyalpuḻukkaikkaḷimbu, பெ.(n.)

   கண்ணோய் மருந்து; a medicine for eye diseases.

     [முயல் + புழுக்கை + களிம்பு.]

முயல்மீன்

 முயல்மீன் muyalmīṉ, பெ.(n.)

   கடல்மீன் வகை; a sea fish.

     [முயல் + மீன்.]

     [p]

முயல்வலி

முயல்வலி muyalvali, பெ.(n.)

   வாயால் மண்ணைக் கவ்வி நுரை தள்ளி துள்ளத் துள்ள வலிக்கும் ஒரு வகை வலிப்பு; a kind of rhegmatic disease.

     “பெருவியாதி முயல்வலி பீனசம்” (குற்றா. தல.மந்தமா.102);.

ம. முயல்வலிப்பு

     [முயல் + வலி.]

இந்த வலிப்புத் தண்ணீரைக் கண்டாலும், தண்ணீரைத் தலையில் தெளித்தாலும், நெருப்பைக் கண்டாலும் நெருப்பின் சூடுபட்டாலும் மற்றும் மக்கள் கூட்டத்தைக் கண்டாலும் அடிக்கடி உண்டாகும் ஒருவகை நோய்.

முயல்வாதம்

 முயல்வாதம் muyalvātam, பெ.(n.)

முயல் வலி (இ.வ.); பார்க்க; see muyal-vali.

     [முயல் + வாதம். Skt. {} → த. வாதம்.]

முயல்வு

முயல்வு muyalvu, பெ.(n.)

   முயலுகை; endeavouring, persevering, exercising, effort.

     “முயல்வா லளித்த நின்னருளால்” (ஞானவா.இட்சு. 10);.

     [முயல் → முயல்வு.]

முயிறு

முயிறு muyiṟu, பெ.(n.)

முசிறு, 1 பார்க்க; see {}.

     “முயிறுமூசு குடம்பை” (நற்.180);.

     [முசிறு → முயிறு.]

முயிறுமுட்டை

 முயிறுமுட்டை muyiṟumuṭṭai, பெ.(n.)

   முயிற்றெறும்பு முட்டை; the egg of a red ant (சா.அக.);.

     [முயிறு + முட்டை.]

முயிற்றுப்புல்

 முயிற்றுப்புல் muyiṟṟuppul, பெ.(n.)

   புல் வகை (மூ.அ.);; ant-grass – Pommereulla.

     [முயிறு + புல் – முயிறுபுல் → முயிற்றுப்புல்]

முயிற்றுமுட்டை

 முயிற்றுமுட்டை muyiṟṟumuṭṭai, பெ.(n.)

முயிறுமுட்டை பார்க்க; {} (சா.அக.);.

முயிற்றெறும்பு

முயிற்றெறும்பு muyiṟṟeṟumbu, பெ.(n.)

முசிறு, 1 பார்க்க; see {}, 1.

     [முயிறு + எறும்பு.]

முரகரி

 முரகரி  muragari, பெ.(n.)

முராந்தகன் (சங்,அக.); பார்க்க; see {}.

முரங்கினம்

 முரங்கினம் muraṅgiṉam, பெ.(n.)

   மிளகு; pepper – Pipernigrum (சா.அக.);.

முரசகேது

முரசகேது murasaātu, பெ.(n.)

முரசக் கொடியோன் பார்க்க; see {}.

     “கேட்டிநீ முரசகேது” (பாரத. அருச்சுனன்றவ.16);.

     [முரசம் + Skt. கேது.]

முரசக்கொடியோன்

 முரசக்கொடியோன் murasakkoḍiyōṉ, பெ.(n.)

   முரசத்தைக் கொடியிலுடைய தருமன் (பிங்.);; Dharmaputra, as having the emblem of a drum on his banner.

     [முரசம் + கொடியோன்.]

முரசன்

 முரசன் murasaṉ, பெ.(n.)

   கந்தக நஞ்சு; a kind of arsenic.

முரசபந்தம்

முரசபந்தம் murasabandam, பெ.(n.)

   மிறைக்கவி வகை (தண்டி, 96, உரை);; a kind of cittira-kavi.

முரசபலம்

 முரசபலம் murasabalam, பெ.(n.)

   பலா மரம் (யாழ்.அக.);; jack-tree.

     [முரசம் + பலம். பழம் → பலம்.]

முரசம்

முரசம் murasam, பெ.(n.)

   1. பறைப் பொது (சூடா.);; drum, tabour.

     “ஆனக முரசஞ் சங்க முருட்டொடு மிரட்டவாடி” (கம்பரா. களியாட்டு.3);.

   2. மருத நிலப்பறை வகை (பிங்.);; a drum of the agricultural tracts.

   3. பெருமுரசு, போர்ப்பறை; war drum.

     “முரச மிடைப்புலத் திரங்க வாரமர் மயங்கிய ஞாட்பில்” (புறநா.288);.,

     “இரங்கிசை முரசம் ஒழியப் பரந்தவர்” (அகநா.116:17);.

வ. முரஜ.

     [முரசு → முரசம் = பெருமுரசு.]

முரசறை-தல்

முரசறை-தல் murasaṟaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. செய்தியை யாவரும் அறிய பறையடித்துச் சொல்லுதல்; to announce by beat of drum.

   2. வெளியிடுதல்; to proclaim.

     “அருமறைகள் முரசறையவே” (தாயு. திருவருள்.3);.

     [முரசு + அறை-தல்.]

முரசல்

 முரசல் murasal, பெ.(n.)

   ஒடியக்கூடிய, முருடுள்ளது; that which is brittle.

இந்த வெற்றிலை முரசல் (இ.வ.);.

     [முரஞ்சு-தல் → முரசல்.]

முரசவாகை

முரசவாகை murasavākai, பெ.(n.)

   அரசனது மாளிகையில் ஆடுவெட்டிப் படையல் செய்திடும் வீரமுரசினது தன்மையைக் கூறும் புறத்துறை (பு.வெ.8:4);; theme describing the ceremony of offering oblations to the {} in a king’s palace.

     [முரசம் + வாகை.]

முரசவுழிஞை

முரசவுழிஞை murasavuḻiñai, பெ.(n.)

   பொன்னாலே செய்த உழிஞைமாலை யணிந்து ஆடுவெட்டியிடும் காவுதனை நுகரும் வீரமுரசின் நிலைமையைக் கூறும் புறத்துறை (பு.வெ.6:4);; theme describing the {} being decorated with a garland of {} flowers made of gold and being offered goat-sacrifice.

     [முரசம் + உழிஞை.]

முரசு

முரசு1 murasu, பெ.(n.)

   1. பல்லினீறு; gum.

   2. பல்லை இணைத்திருக்கும் உறத்த தோல்; the hard fleshy substance which invests the teeth (சா.அக.);.

 முரசு2 murasu, பெ.(n.)

   முற்காலத்தில் வேந்தர்கள் தங்கள் ஆணையை மக்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்திய அரைகோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் ஒருவகைத் தோற் கருவி; a kind of drum formely used for royal proclamations etc.

     ” முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு” (அகநா. 156:1);,

     “ஆண்டலை மதில ராகவும் முரசுகொண்டு” (நற்.39.8);.

     “முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது” (பதிற்றுப்.12:7);.

     “இடியென முழங்கு முரசின்” (புறநா.17);.

     [முருள் → முருடு → (முருசு); → முரசு (வ.மொ.வ);. முருடு = பறைப்பொது.]

முரசாவது ஏதேனமொன்றை அறிவிப்பதற்கோ அல்லது யாரேனும் ஒரு சாரரை அழைப்பதற்கோ அடிக்கப்படும் பேரிகை என்னும் பெரும்பறையாகும். அது கொடை (தியாக); முரசு, முறை (நியாய); முரசு, போர் (வீர); முரசு என மூவகைப்பட்டதாகக் கூறப்படும். இவற்றுள் சிறந்தது போர்முரசாகும். அதற்குத் தனியாக ஒரு கட்டில் உண்டு. இதை முரசுகட்டில் என்றழைப்பர்.

போர்முரசு, படை திரட்டுவதற்கு நகரத்திலும் பொருநரை ஊக்குவதற்குப் போர்க்களத்திலும், வெற்றி குறித்து இரண்டு இடங்களிலும் இடியோசை போல் முழக்கப்படும். இம் முரசாவது புலியை வென்ற கொல்லேற்றின் சீவாத தோலால் போர்க்கப் பெறுவது மரபாகும். இதனை,

     “புனைமருப் பழுந்தக் குத்திப் புலியொடு பொருது வென்ற

கனைகுர லுருமுச் சிற்றக் கதழ்விடையுரிவை போர்த்த

துணைகுரல் முரசம்” (சீவக.2899); எனும் பாடல் வரியிலும்.

     “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த

மாக்கண் முரசம்” (மதுரை.732-3); எனும் பாடல் வரியிலும் அறியலாம்.

போர்முரசு தெய்வத்தன்மை யுள்ளதாகவும், வெற்றியைத் தருவதாகவுங் கருதுவதால் அதற்கு மாலையும் பீலியும் அணிந்து பலியிட்டும் நீராட்டுவதும் வழக்கமாம் (பழ.த.ஆ.பக்.23);.

     [p]

 முரசு3 murasu, பெ.(n.)

   இருபத்தாறாவது விண் மீனான முற்கொழுங்கால் (உத்திரட்டாதி);; the 26th naksatra.

     [முரசம் → முரசு.]

முரசுகட்டில்

முரசுகட்டில் murasugaṭṭil, பெ.(n.)

   அரசர்க்குரிய முரசு வைக்கும் இருக்கை (புறநா.50, தலைப்பு);; dais for the royal drum.

     [முரசு + கட்டில்.]

முரசுயர்த்தோன்

முரசுயர்த்தோன் murasuyarttōṉ, பெ.(n.)

முரசக்கொடியோன் பார்க்க; see {}.

     “முரசுயர்த்தோ யுனதருளுக் கஞ்சினேனே” (பாரத.கிருட்டிணன்றூ.13);.

     [முரசு + உயர்ந்தோன்.]

முரசுவெட்டி

 முரசுவெட்டி murasuveṭṭi, பெ.(n.)

   பல்லீறைப் பிளக்க உதவும் ஆய்தம்; a knife for incising the gums – Gum ancet (சா.அக.);.

     [முரசு + வெட்டி.]

முரசுவைத்தல்

 முரசுவைத்தல் murasuvaittal, பெ.(n.)

   பேரிகையுடன் செல்லும் மதிப்புயர்வு டைமை (வின்.);; possessing or being allowed to keep drums, as a paraphernalia.

     [முரசு + வைத்தல்.]

முரசை

 முரசை murasai, பெ.(n.)

   குபேரன் மனைவி (அபி.சிந்.);; wife of Kubera.

முரச்சு-தல்

முரச்சு-தல் muraccudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   முற்றுவித்தல்; to accomplish, make ready.

     “முரசுசெய முரச்சி” (பதிற்றுப்.44:16);

     [முரஞ்சு-தல் → முரச்சு-தல்.]

முரஞ்சியூர்முடிநாகராயர்

 முரஞ்சியூர்முடிநாகராயர் murañjiyūrmuḍinākarāyar, பெ.(n.)

   தலைக்கழகப் புலவர்; first {} poet (அபி.சிந்.);.

     [முரஞ்சி + ஊர் + முடி + நாகராயர்.]

முரஞ்சு

முரஞ்சு1 murañjudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. முதிர்தல்; to mature, to be old, ancient.

     “முரஞ்சன் முதிர்வே” (தொல்.சொல்.333);.

   2. வலி பெறுதல்; to gain strength.

     “நோயுடல் முன்செயல் முரஞ்சியதெவண்” (ஞானா.59);.

   3. நிரம்புதல்; to be full or abundant.

     “பூண்களெல்லா முரஞ்சொளி கான்று மின்ன” (காஞ்சிப்பு. தீர்த்த.89);.

 முரஞ்சு2 murañju, பெ.(n.)

   1. முதிர்கை; maturing.

     “முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே” (மலைபடு.144);.

   2. பாறை (சூடா.);; rock ledge.

முரடன்

முரடன் muraḍaṉ, பெ.(n.)

   1. பண்பு தெரியாதவன்; rude man.

சிறுவனாயிருந்த போதே முரடன் என்று பெயர் வாங்கியவன்.

   2. ஒட்டாரம்பிடித்தவன் (பிடிவாதக்காரன்);; obstinate man.

   3. முருடன், 3 பார்க்க; see {}, 3.

க. மொரட

     [முரடு → முரடன் = மென்மையும் நளினமும் இல்லாமல் சினமுடன் நடந்து கொள்பவன்.]

முரடன் சுறா

 முரடன் சுறா muraḍaṉcuṟā, பெ.(n.)

   சுறா மீன் வகையுள் ஒன்று; gangetic shark.

     [முரடன்+சுறா]

முரடு

முரடு1 muraḍu, பெ.(n.)

   1. உறுதியும் கடினத் தன்மையும் கொண்டது, கரடு; roughness, unevenness;

 ruggedness.

முரட்டுக் கட்டை, முரட்டுக்கை, முரட்டுத்துணி.

   2. மரக்கணு; knob or knot, as in timber.

   3. உடம்பின் மூட்டு (வின்.);; joint of the body.

   4. மதிப்புரவு (மரியாதை); இன்மை; ill-temper, wildness, rudeness.

   5. ஒட்டாரம் (பிடிவாதம்);; obstinancy.

   6. பருமை; largeness, bigness.

முரட்டுப்பாம்பு.

   7. அறிவின் வழி இல்லாத, மடத்தனம்; unreasonableness.

முரட்டு வலிமையில் அவன் குதிக்கிறான்.

   8. சினமுடன் நடந்து கொள்ளும் ஆள்; rough and tough person.

அவன் சரியான முரடு.

     [முருடு → முரடு.]

 முரடு2 muraḍu, பெ.(n.)

   பெரியது, திரண்டது; that which is big, cumulative.

     [முள் → முர → முரள் → முரண் → முரடு.]

முரட்கை

முரட்கை muraṭkai, பெ.(n.)

முரற்கை, 3 (சது.); பார்க்க; see {}, 3.

முரட்டடி

முரட்டடி muraḍḍaḍi, பெ.(n.)

   இணக்கமற்ற குணம்; rough, rude, reckless, lawless behaviour.

     “முரட்டடித் தவத்தக் கன்றன் வேள்வி” (தேவா.710, 5);.

     [முரடு + அடி.]

முரட்டாட்டம்

 முரட்டாட்டம் muraṭṭāṭṭam, பெ.(n.)

முரட்டடி (யாழ்.அக); பார்க்க; see {}.

     [முரடு + ஆட்டம்.]

முரட்டுக்கழுத்து

முரட்டுக்கழுத்து muraṭṭukkaḻuttu, பெ. (n.)

   1. நுகம்பூணா எருத்தின் கழுத்து (வின்.);; stiff neck, as of an ox not broken to the yoke.

   2. முரட்டடி (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [முரடு + கழுத்து.]

முரட்டுக்குணம்

 முரட்டுக்குணம் muraṭṭukkuṇam, பெ.(n.)

முரட்டடி (வின்.); பார்க்க; see {}.

     [முரடு + குணம்.]

முரட்டுத்தனம்

 முரட்டுத்தனம் muraṭṭuttaṉam, பெ.(n.)

முரட்டடி பார்க்க; see {}.

     [முரடு + தனம்.]

முரட்டுப்பாட்டு

முரட்டுப்பாட்டு muraṭṭuppāṭṭu, பெ.(n.)

   1. இனிமையற்ற இசைப்பாட்டு; music harsh to the ear.

   2. அரிதிற்பாடும் பாட்டு; melody difficult to be sung.

     [முரடு + பாட்டு.]

முரட்டுப்பெண்

 முரட்டுப்பெண் muraṭṭuppeṇ, பெ.(n.)

   பிடிகொடாப் பெண்; obstinate, unyielding woman.

முரட்டுப் பெண்ணும் சுருட்டுப் பாயும் (பழ.);.

     [முரடு + பெண்.]

முரட்டுமஞ்சி

 முரட்டுமஞ்சி muraṭṭumañji, பெ. (n.)

   யாழின் ஒலிநயத்தில் பகையாகக் கருதப்படுவது; anti – feature in harp.

     [முரடு+மஞ்சி]

முரட்டுமயிர்

 முரட்டுமயிர் muraṭṭumayir, பெ.(n.)

   பருமயிர்; coarse hair.

     [முரட்டு + மயிர்.]

முரட்டோலை

 முரட்டோலை muraṭṭōlai, பெ. (n.)

   வளைந்திருக்கும் ஒலைமுறி (வின்.);; uneven strip of palm-leaf.

     [முரடு + ஒலை.]

முரட்பயம்பு

முரட்பயம்பு muraṭpayambu, பெ.(n.)

   ஏற்றிழிவையுடைய நிலத்திலுள்ள குழி; pit or trench in an uneven tract.

     “பரண்முரட் பயம்பிடை” (சீவக.1900);.

     [முரண் + பயம்பு.]

முரணணி

முரணணி muraṇaṇi, பெ.(n.)

   சொல்லேனும் பொருளேனும் முரண அமையும் ஓர் அணி (வீரசோ.அலங்.12);; a figure of speech in which words or ideas are used in antithesis.

     [முரண் + அணி.]

முரணமணல்

 முரணமணல் muraṇamaṇal, பெ. (n.)

   வெள்ளி மணல்; silver ore.

முரணர்

முரணர் muraṇar, பெ.(n.)

   பகைவர்; enemies.

     “அரணையுறு முரணர் பலர்” (தேவா.148:7);.

     [முரண் → முரணர்.]

முரணு

முரணு1 muraṇudal,    12 செ.கு.வி.(v.i.)

   மாறுபடுதல்; to be at variance.

     “தீ முரணிய நீரும்” (புறநா.2);.

     [முரண் → முரணு-தல்.]

 முரணு2 muraṇudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   பெருக்குதல்; to multiply.

     ‘இரு திணையும் பொதுவுமான மூன்றினானும் முரணப் பதினெட்டாம்’ (நன்.269, உரை);.

     [முரண் → முரணு-தல்.]

முரணை

 முரணை muraṇai, பெ.(n.)

   இலை சுருட்டை விழுந்து முரட்டுக் குணம் அடைவது (கோவை.);; roughness leaves.

     [முரண் → முரணை.]

முரண்

முரண்1 muraṇtalmuraṇṭal,    12 செ.கு.வி. (v.i.)

   பகைத்தல்; to be at variance;

 to be opposed.

     “முரண்டு மாய்க்கவே” (பாரத.குரு.49);.

     [முள் → முர → முரள் → முரண் → முரண்-தல்.]

 முரண்2 muraṇ, பெ.(n.)

   1. எதிரானதாகவோ மாறுபட்டதாகவோ அமைவது, மாறுபாடு; variance, opposition; perversity.

     “கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி” (புறநா.37);,

     “பரல்மட் சுவல முரணில முடைத்த” (அகநா.21:21);,

     “அரண்பல கடந்த முரண்கொள் தானை” (நற். 150:3);.

சட்டத்திற்கு முரனாகச் செய்யக் கூடாது.

   2. பகைமை (திவா.);; spite, hatred.

     “முரணியோர் முரண்டப” (கலித்.132);.

   3. போர் (திவா.);; fight, battle.

   4. முரண்டொடை (தொல்.பொருள்.407); பார்க்க; see {}.

   5. வலிமை (திவா.);; strength.

   6. பெருமை (மாறனலங். 265, உதா.749);; greatness.

   7. முருட்டுக் குணம் (வின்.);; roughness, stubbornness.

   8. கொடுமை (வின்.);; fierceness.

   9. மாணிக்கக் குற்றங்களுளொன்று (திருவாலவா.25:14);; a flaw in rubies.

ம. முரண்.

     [முள் → முர → முரள் → முரன் → முரண்.]

 முரண்3 muraṇ, பெ.(n.)

   திண்ணமான சிப்பி; strength shell.

     [முள் → முர → முரள் → முரண்.]

முரண்களரி

 முரண்களரி muraṇkaḷari, பெ.(n.)

   குத்துச்சண்டைக் களம்; boxing stadium.

     [முரண் + களரி.]

முரண்டன்

முரண்டன் muraṇṭaṉ, பெ.(n.)

   1. மாறுபா டுள்ளவன் (சங்.அக.);; cross-tempered, quarrelsome person.

   2. ஒட்டாரம் பிடித்தவன் (பிடிவாதக்காரன்); (இ.வ.);; obstinate person.

   3. பொறுமை யில்லாதவன் (யாழ்.அக.);; impatient person.

   4. பரபரப்புடையவன், துடுக்குக்காரன் (அவசரக்காரன்); (யாழ்.அக.);; hasty, impetuous person.

     [முரண் → முரண்டு → முரண்டன்.]

முரண்டு

முரண்டு1 muraṇṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. விடாப்பிடியாதல்; to be obstinate, persistent.

   2. மாறுபடுதல்; to be opposed, cross-grained.

     [முரண் → முரண்டு-தல்.]

 முரண்டு2 muraṇṭu, பெ.(n.)

   1. விடாப்பிடி (உ.வ.);; persistence, obstinancy.

பள்ளிக்குச் செல்ல முடியாது என்று முரண்டு பிடித்தான்.

   2. மாறுபாடு (நாமதீப.628); (யாப். வி.3, உரை, பக்.38);; variance, opposition.

   3. அமையாமை (யாழ்.அக.);; disagreement.

   4. வளையாமை (யாழ்.அக.);; unyielding nature.

     [முள் → முர → முரள் → முரண் → முரண்டு. பெரும்பாலும் பிறர் கூறும் அல்லது எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்ய எதிர்ப்புக் காட்டுவது.]

முரண்டொடை

முரண்டொடை muraṇḍoḍai, பெ.(n.)

   தொடையைந்தனுள் மொழியானும் பொருளானும் மறுதலைப்படப் பாடல் தொடுப்பது (இலக்.வி.723, உரை);; a mode of versification in which there is antithesis of words or ideas, one of five todai.

     [முரண் + தொடை.]

இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்

நிலவுக்குவித் தன்ன வெண்மண லொருசிறை

இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை

பொன்னி னன்ன துண்டா துறைக்கும் (யா.கா.மேற்கோள்.);

இப்பாடலில் இருள், நிலவு, இரும்பு, பொன் என்று அடிதோறும் பொருள் மாறுபட வந்திருப்பதால் இது முரண்தொடை எனப்படும்.

முரண்படு-தல்

முரண்படு-தல் muraṇpaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   எதிராக இருத்தல், மாறுபடுதல்; to contradict, to be opposed.

நூலில் தெரிவித்திருக்கும் கருத்துக்களோடு முரண்படுகிறேன். ஒன்றிற்கொன்று முரண்பட்ட நிலை.

     [முரண் + படு-தல்.]

முரண்பாடு

 முரண்பாடு muraṇpāṭu, பெ.(n.)

   மாறுபாடு; contradiction, difference.

எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடு எங்கள் நட்பைப் பாதிக்கவில்லை. உன்னுடைய முந்தியப் பேச்சுக்கும் இப்போதைய பேச்சுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன.

     [முரண் + பாடு. படு → பாடு..]

முரண்மொழி

முரண்மொழி1 muraṇmoḻi, பெ.(n.)

   1. பொருள் மாறுபடும் சொல்; contrast, antithesis.

   2. எதிர்மொழி (யாழ்.அக.);; contradictory statement.

     [முரண் + மொழி.]

 முரண்மொழி2 muraṇmoḻi, பெ.(n.)

   செய்யுட் குற்றங்களுளொன்று (யாப்.வி. பக்.525);; a defect in versification.

     [முரண் + மொழி.]

முரண்வினைச்சிலேடை

முரண்வினைச்சிலேடை muraṇviṉaiccilēṭai, பெ.(n.)

   மொழியப்பட்ட வினைப் பொருள் முரண இரட்டுறப்படுத்தும் அணி வகை (மாறனலங்.152);; a figure of speech which consists in {} in verbs relating to persons or objects of opposite characteristics.

     [முரண்வினை + சிலேடை.]

முரண்விளைந்தழிவணி

 முரண்விளைந்தழிவணி muraṇviḷaindaḻivaṇi, பெ.(n.)

   மேனோக்கில் மாறுபாடு தோன்றக் கூறும் அணி; a figure of speech in which there is an apparent contradiction.

     [முரண் + விளைந்தழிவணி. இரண்டு வகை அறங்களையும், தோன்றி அழியும் பகைமையையும் பற்றிக் கூறுவது.]

முரன்றுபாடு-தல்

முரன்றுபாடு-தல் muraṉṟupāṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   இன்னொலி செய்தல் (ஆலாபனஞ் செய்தல்);; to elaborate a musical note or melody.

     “களிவண்டு முரன்றுபாட” (சீவக.1959);.

     [முரல் → முரண் → முரன் → முரன்று + பாடு-தல்.]

முரப்பா

 முரப்பா murappā, பெ. (n.)

   பாகில் ஊறவைத்த தின்பண்டம்; preserved jam.

     [H. {} → த. முரப்பா]

முரப்பு

முரப்பு murappu, பெ.(n.)

   கைக்கு மென்மை யற்றுத் தோன்றுந் தன்மை; roughness.

     “தோல் முரப்பேறி” (அசுவசா. 66);.

     [முரம்பு → முரப்பு = கடினமான சொர சொரப்புத் தன்மை.]

முரமுரவெனல்

 முரமுரவெனல் muramuraveṉal, பெ.(n.)

முரமுரெனல் பார்க்க; see {}.

முரமுரெனல்

முரமுரெனல் muramureṉal, பெ.(n.)

   1. நுரைத்தற் குறிப்பு; onom, expr. of foaming, effervescing.

     “முரமுரெனவே புளித்த மோரும்” (தனிப்பா.i, 103:34);.

   2. வாய்க்குள் கரகரப்பாயிருத்தற் குறிப்பு; cracking in the mouth.

   3. தூய்மையாயிருத்தற் குறிப்பு; being clean and neat.

முரம்

 முரம் muram, பெ.(n.)

கருங்கற் பொடி (C.E.M.); granite crushed to dust for road-making.

     [முரம்பு → முரம்.]

முரம்பு

முரம்பு murambu, பெ.(n.)

   1. பருக்கைக் கல்லுள்ள மேட்டு நிலம்; mound of gravel or stone.

     “முரம்பு கண்ணுடைந்த நடவை” (மலைபடு.432);.

   2. மேடு (சூடா.);; mound, elevation.

   3. பாறை (பிங்.);; rock.

   4. வன்னிலம்; rough hard ground.

     “பரன்முரம்பாகிய பயமில் கானம்” (அகநா.5);.

     “முரம்பு கன்உடைய வேகிக் கரம்பை” (குறுந்.400:4);

   5. கழி (சூடா.);; backwater, creek, small arm of the sea.

   6. உப்பளம் (யாழ்.அக.);; salt-pan.

   7. கற்பாங்கான மேட்டு நிலத்தூர்; a village.

தெ. மொரமுர்

மறுவ. கரம்பு நிலம்

முரரை

முரரை murarai, பெ.(n.)

   மரத்தின் முருட்டரை; hard, stout trunk of a tree.

     “முரரை முழுமுத றுமியப் பண்ணி” (பதிற்றுப்.5ஆம் பத்.பதி.);.

     [முரடு + அரை.]

முரற்கை

முரற்கை muraṟkai, பெ.(n.)

   1. ஒலி; sound.

     “பாணர் நரம்புளர் முரற்கைபோல”(ஐங்குறு.402);.

     “நின்ற முரற்கை நீக்கி நன்றும்” (புறநா.376);.

   2. முரற்சி, 2 பார்க்க; see {}, 2.

     “பாணர் நயம்படு முரற்கையின்” (ஜங்குறு.407);.

   3. கலிப்பா (தொல். பொருள். 382);; Kali verse.

   4. தாளவகை; a time – measure.

     “இன்புறு முரற்கை நும்பாட்டு” (மலைபடு.390);.

     [முரல் → முரற்கை.]

முரற்சி

முரற்சி1 muraṟci, பெ.(n.)

   1. ஒலி; sound.

     “கொன்றைத் தீங்குழன் முரற்சியர்” (கலித்.106);.

   2. பாட்டு; song.

     “நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி” (மதுரைக்.217);.

     [முரல் → முரற்சி.]

 முரற்சி2 muraṟci, பெ.(n.)

   கயிறு; cord.

     “பெண்டிர் கூந்தன் முரற்சியால்” (பதிற்றுப். 5ஆம் பத்.பதி.);,

     “வடுக்கொளப் பிணித்த விடுமுரி முரற்சி” (நற்.222:2);.

     [முரண் → முரற்சி.]

முரற்று-தல்

முரற்று-தல் muraṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. ஒலித்தல்; to make sound.

     “கிடப்பதோ முரற்றலின்றி” (கம்பரா.மீட்சி.308);.

   2. கதறுதல்; to cry.

     “அரற்றியு மயர்ந்து முரற்றியு முயிர்த்தும்” (பெருங். இலாவண. 19:208);. (பிங்.);.

     [முரல் → முரற்று → முரற்று-தல்.]

முரற்றுமம்

 முரற்றுமம் muraṟṟumam, பெ.(n.)

   குடம் (அக.நி.);; water-pot.

முரலல்

முரலல் muralal, பெ.(n.)

   1. ஒலிக்கை (வின்.);; sounding.

   2. கலப்போசை (சது.);; confused noise.

   3. எடுத்தலோசை (சூடா.);; high pitch.

   தெ. மொர;   க. மொரெகி;ம. முரலு.

     [முரல் → முரலல்.]

முரல்

முரல்1 muralludal,    13 செ.கு.வி.(v.i.)

   1. ஒலித்தல்; to make sound.

     “மதுகர முரலுந் தாரோயை” (திருவாச. 5:16);.

   2. கதறுதல்; to cry.

     “குடுமிக் கூகை குராலொடு முரல” (மதுரைக்.170);.

க. மெரல்

 முரல்2 muralludal,    14 செ.குன்றாவி. (v.t.)

   பாடுதல்; to sing.

     “ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை” (கலித்.9);.

 முரல்3 mural, பெ.(n.)

   மீன் வகை (கொக்கு மீன்); (நாமதீப.271);; needle-fish Syngnathus.

முரல்வு

முரல்வு muralvu, பெ.(n.)

   யாழின் மெல்லோசை; soft sound, as of a lute.

     “வண்டின் றொழுதி முரல்வு” (பரிபா.8:36);.

     [முரல் → முரல்வு.]

முரள்

முரள் muraḷ, பெ.(n.)

   சிப்பிவகை (தொல். பொருள்.584);; a shell-fish.

     [முரல் → முரள்.]

முரவம்

முரவம் muravam, பெ.(n.)

   1. பறைவகை; a drum.

     “முரவ மொந்தை” (தேவா.385, 5);.

   2. முழக்கம்; noise, reverberation, resonance.

     “முரவம்படு மண்ணாமலை” (தேவா.1025, 5);.

     [முரல் → முரவம்.]

முரவு

முரவு1 muravu, பெ.(n.)

   முரிவு; break; broken condition, as of the mouth of a pot.

     “முரவுவாய்க் குழிசி” (பெரும்பாண்.99);.

     “மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்” (அகநா.72:3);.

     [முரி → முரவு.]

 முரவு2 muravu, பெ.(n.)

   1. முரவம், 1 பார்க்க; see muravam,

   1. “முரவுந் தூம்பு முழங்குபு துவைப்ப” (பெருங்.மகத.25:16);.

முரவை

முரவை muravai, பெ.(n.)

   கைக்குத்தல் அரிசியிலுள்ள வரி; streaks in unpolished rice.

     “முரவை போகிய முரியா வரிசி” (பொருந.113);.

     [முரி → முரவை.]

முராமணி

 முராமணி murāmaṇi, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivaganga Taluk.

     [முரல்+மணி]

முரி

முரி1 muridal,    2 செ.கு.வி. (v.i.)

   1. வளைதல்; to bend.

     “முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும்” (மணிமே.18:161);.

   2. கரும்பு கம்பு முதலியவை வளைந்து ஒடிதல் (சூடா.);; to break off, snap off.

     “மூத்துவினை போகிய முரிவாய் அம்பி” (நற்.315:3);,

     “நல்லெழி னெடும்புதவு முருக்கிக் கொல்லு பேன மாகிய நுனைமுரி மருப்பிற்” (பதிற்றுப்.16:6,7);.

   3. கெடுதல்; to perish, to be ruined.

     “இடைக்கண் முரிந்தார் பலர்” (குறள், 473);.

   4. தோல்வியுறுதல்; to be defeated.

     “முற்றிய வமரர்சேனை முரிந்தன” (விநாயகபு.34:15);.

   5. சிதறுதல்; to be scattered.

     “பஞ்சினம் பகைமுரிந் தெழுந்தன விண்ணத் தலமர” (கல்லா.7);.

   6. தளர்தல்; to lack in strength, to be gentle, as in gait.

     “முரிந்தநடை மடந்தை யர் முழங்கொலியும் வழங்கொலியும்” (திருவிசை. கருவூ.5:10);.

   7. தவறுதல்; to go wrong.

     “முரியுங்காலைத் தெரிய மற்றதிற் றட்டினள்…. எழுப்பி” (பெருங்.வத்தவ.12.99);.

   8. நீங்குதல் (சீவக.172);; to separate, leave.

   9. நிலைகெடுதல்; to lose one’s position.

     “இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்” (குறள், 899);.

   10. குணங்கெடுதல்; to be spoiled.

     “ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து” (திருச்செந்துரர். பிள்ளைத். செங்கீரை.1);.

ம., க. முரி.

     [முரு → முரி → முரி-தல் (வே.க.);.]

 முரி2 murittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. வளைந்து ஒடித்தல்; to break off, snap off.

     “நன்சிலை முரித்திட்டம்பை வாடினன் பிடித்துநின்றான்” (சீவக.2185);.

   2. அழித்தல்; to ruin.

     “மதிலொடு வடவாயிலை முரித்து” (திருவாலவா.24:4);.

   3. தோற்கச் செய்தல் (யாழ்.அக.);; to defeat.

   4. திறமையாக நடத்துதல் (வின்.);; to manage, as a business.

வெட்டி முரித்தல் என்னும் வழக்கை நோக்குக.

   தெ. முரியு;ம. முரிக்க.

     [முரு → முரி → முரி-த்தல்.]

 முரி3 muri, பெ.(n.)

   1. வளைவு; curve, bend.

     “முரியா ரளகத் தடாதகை” (திருவிளை. பயகர.8);.

   2. துண்டு; piece, bit, half.

   3. நொய்யரிசி; broken rice, semolina.

     “குத்திய வரிசியெல்லா முரியறக் கொழிக்க வாரீர்” (தக்கயாகப். 736);.

   4. முழுதிற் குறைவானது; anything short or dwarfish.

     “மக்கண் முரியே” (கலித்.94);.

   5. சிதைவு (சிலப்.25:146, அரும்.);; scratch, blemish.

   6. எழுதிய ஒலை நறுக்கு, முறி (இ.வ.);; written bond.

   7. இசைப்பாவின் இறுதிப் பகுதி (சிலப்.6:35, உரை);; the closing section of a musical composition.

   8. நாடகத் தமிழின் இறுதியில் வருஞ் சுரிதகம் (தொல்.பொருள். 144, உரை);; the {} at the close of a poem in {}.

ம., தெ., க., து. முரி.

     [முரு → முரி.]

முரிகம்

 முரிகம் murigam, பெ.(n.)

   மயிர்ப்படாம் (சூடா.);; woollen blanket.

தெ. முரி.

     [முரி → முரிகம்.]

முரிகிரந்தி

 முரிகிரந்தி murigirandi, பெ.(n.)

   பத்தியம் முறிந்ததால் தீராததாகும் நோய் (வின்.);; disease becoming incurable because of the non-observance of the prescribed diet.

     [முரி + கிரந்தி. Skt. granthi → த. கிரந்தி.]

முரிகிரந்திப்படு-தல்

முரிகிரந்திப்படு-தல் murigirandippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   பத்தியக் குறைவால் நோய் மிகுதல் (வின்.);; to grow worse from neglect of the prescribed diet.

     [முரிகிரந்தி + படு-தல்.]

முரிச்சார்த்து

முரிச்சார்த்து muriccārttu, பெ.(n.)

   சார்த்துவரிப் பாட்டுவகை (சிலப்.கானல்.அரும்.பக்.205);; a kind of {}.

     [முரி + சார்த்து.]

பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரோடுஞ் சார்த்திப் பாடும் வரிப்பாட்டு வகை.

சார்த்துவரி மூன்று வகைப்படும். முகச்சார்த்து, முரிச்சார்த்து, கொச்சகச்சார்த்து.

முகச்சார்த்து : மூன்றடி முதல் ஆறடி ஈறாக வரும். இடை நான்கடியானும் ஐந்தடியானும் வரும்.

முரிச்சார்த்து : அடித்தொகை மூன்றும் இரண்டும் வரும்.

கொச்சகச் சார்த்து : கொச்சகம் போன்று முடியும்.

மறையில் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை

இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய

நிறைமதியும் மீனும் என அன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த

பொறைமலி பூங்கொம்பேற வண்டாம் பல் ஊதும் புகாரே எம்மூர் (சிலம்.7:29ஆம் பாடல்);.

முரித்தல்

முரித்தல் murittal, பெ.(n.)

   1. நகை; laughter.

   2. இலங்குகை; shining.

முரித்தாளை

 முரித்தாளை murittāḷai, பெ.(n.)

   பட்டாசுத் தொழிலில் பயன்படுத்தும் வாணகெந்தி; a kind of sulphur used in fire works (சா.அக.);.

முரித்துவெட்டு – தல்

முரித்துவெட்டு – தல் muridduveṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. வாய்க்காலின் நீரைத் தடுத்து வேற்றிடத்திற் பாயும்படி செய்தல்; to divert the water of a channel.

வாய்க்காலை முறித்து வெட்டி முழு நிலத்திற்கும் பாயும்படி செய்தான்.

    2. வாய்க்காலின் வளைவை நேராக்குதல்; to straighten the course of a channel.

     [முறித்து + வெட்டு-தல்.]

முரிநிலை

முரிநிலை murinilai, பெ.(n.)

   இயற்பாவின் இறுதியில் பாடுந் தரவு (சிலப்.6 : 35, உரை);; closing part of a song.

     [முரி + நிலை.]

முரிப்பு

முரிப்பு1 murippu, பெ.(n.)

   1. முரிக்கை (வின்.);; breaking, bruising, cracking from external force.

   2. திமில் (திவா.);; hump of an ox.

தெ. மூப்பு

     [முரி → முரிப்பு.]

 முரிப்பு2 murippu, பெ. (n.)

   நேர் திருப்பம், ஒடிந்த வளைவு, கட்டடங்களின் மூலைத் திருப்பம்; bend curve, corner turning in the building.

     “திருநந்தாவனத்துக்கு எல்லையாவது நள்ளாற்று முரிப்புக்கு மேற்கும்” (தெ.இ.கல்.தொ.5, கல்.251);.

     [முறி → முரி → முரிப்பு.]

முரிமுரி

முரிமுரி1 murimuridal,    2 செ.கு.வி. (v.i.)

   வளைதலைச் செய்தல்; to bend, curve.

     “புருவமும் முரிமுரிந்தவே” (சீவக. 2310);.

     [முரி + முரி – முரிமுரி → முரிமுரி-தல்.]

 முரிமுரி2 murimuri, பெ.(n.)

   எட்டி (சங்.அக.);; nux vomica.

முரியல்

முரியல் muriyal, பெ.(n.)

   1. துண்டு (யாழ். அக.);; bit, fragment.

   2. எளிதில் முரிவுது; that which is brittle.

     [முரி → முரியல்.]

முரிவரி

முரிவரி murivari, பெ.(n.)

   வரிப்பாட்டு வகை (சிலப். 3 :16, அரும்.);; closing part of a dance song.

     [முரி + வரி.]

     “எடுத்த வியலு மிசையுந் தம்மில், முரித்துப் பாடுதன் முரியெனப்படுமே” (சிலப்.7:14. அரும்.);.

எ – டு :

     “பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே

பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே

முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே

எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே”

     “திரைவிரி தருதுறையே திருமணல் விரியிடமே

விரைவிரி நறுமலரே மிடைதரு பொழிலிடமே

மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே

இருகயல் இணைவிழியே எனையிடர் செய்தவையே” (சிலப். 7:14, 15);

முரிவாய்

முரிவாய் murivāy, பெ.(n.)

   1. இடித்து உண்டாக்கின வாசல்; opening made in a wall, used as entrance.

     “கண்டவெயின் முரிவாயாற் கொண்டு புக்கான்” (திருவாலவா.24:4);.

   2. கன்னவாயில்; opening made in house-breaking.

     “களவுபோகின்ற வென்றுந் தப்பிய முரிவாயில்லை” (திருவாலவா. 55:5);.

   3. முரிந்த குறடு; pitted pial.

     “முரிவாய் முற்றம்” (புறநா.261);.

     [முரி + வாய்.]

முரிவு

முரிவு murivu, பெ.(n.)

   1. மடிப்பு (யாழ்.அக.);; fold.

   2. வளைந்து ஒடிகை (யாழ்.அக.);; breaking, snapping.

   3. சுருங்குகை; contracting.

     “புருவமுரிவு கண்டஞ்சி” (முத்தொள்.களம்.);.

   4. நீங்குகை; leaving, separation.

     “இளையர் மார்ப முரிவில

ரெழுதி வாழும்” (சீவக.372);.

   5. வருத்தம்; trouble, difficulty.

     “பாவைமார் முரிவுற்றார்களின் மூர்ச்சனை செய்பவால்” (சீவக. 1627);.

   6. சோம்பு (அரு.நி.);; laziness.

   7. ஊழ் (அரு.நி.);; fate.

   8. பெருமை (அரு.நி);; greatness.

க. முரிவு

     [முல் → முர் → முரு → முரி → முரிவு.]

முருகக்கடவுள்

 முருகக்கடவுள் murugaggaḍavuḷ, பெ.(n.)

   குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன்; Murugan, god of {} tract.

     [முருகன் + கடவுள்.]

முருகநாயனார்

முருகநாயனார் muruganāyaṉār, பெ.(n.)

   63 நாயன்மார்களுள் ஒருவர் (பெரியபு.);; a canonized {} saint one of sixty three.

     [முருகன் + நாயனார்.]

சோழ நாட்டில் திருப்புகலூரைச் சேர்ந்தவர். பிராமணர் குலத்தில் பிறந்தவர். சிவன் மீது ஆழ்ந்த பற்றுள்ளவர். திருஞானசம்பந்தரின் நண்பர்.

முருகனாடல்

 முருகனாடல் murugaṉāṭal, பெ.(n.)

   துடி குடை என்ற இருவகைக் கூத்து (பிங்.);; Kanda’s dance, of two kinds, viz., {}.

     [முருகன் + ஆடல்.]

முருகனாற்றம்

 முருகனாற்றம் murugaṉāṟṟam, பெ.(n.)

   காந்தின (கருகின);. மணம் (உ.வ.);; smell of being scorched, charred or scalded.

     [முறுகல் + நாற்றம்.]

முருகன்

முருகன் murugaṉ, பெ. (n.)

   1. கட்டிளைஞன் (திவா.);; youth buck.

   2. குமரன் என்னும் குறிஞ்சி நிலத் தெய்வம்;{}, god of {} tract.

     “முருக னற்போர் நெடுவே ளாவி” (அகநா.1:3);,

     “முருகற் சீற்றத் துருகெழ குருசில்” (புறநா.16:12);.

   3. வெறியாடும் வேலன் (பிங்.);; one possed by {}.

     “முதியாளோடு முருகனை முறையிற் கூவி” (கந்தபு. வள்ளி.155);.

   4. பாலைநிலத் தலைவன் (அரு.நி.);; chief of the desert tract.

   க. முருக;ம. முருகன்.

     [முருகு → முருகன்.]

குறிஞ்சி நிலத் தேவனை இளைஞனென்று கருதியே குறிஞ்சி நில மக்கள் முருகன் என்றனர். ஒ.நோ. குமரன் = இளைஞன், முருகன்.

முருகன்மரம்

 முருகன்மரம் murugaṉmaram, பெ.(n.)

   புரசு; a kind of tree – Butea frondosa.

மறுவ. முருக்கன் மரம்.

முருகபம்

 முருகபம் murugabam, பெ.(n.)

   உயர்ந்த முத்து; a superior pearl.

முருகயர்-தல்

முருகயர்-தல்  murugayartal,    4 செ.கு.வி. (v.i.)

   1. முருகக் கடவுளுக்குப் பூசை செய்தல்; to offer worship to Kandan.

   2. வெறியாடுதல்; to dance while under possession by Kandan.

     “முருகயர்ந்து வந்த முதுவாய் வேந்தன்” (குறுந்.362);.

   3. விருந்திடலாகிய வேள்வி செய்தல்; to give feast, as in sacrifice.

     “படையோர்க்கு முருகயர” (மதுரைக்.38);.

     [முருகு + அயர்-தல்.]

முருகவுருட்டிசுறா

 முருகவுருட்டிசுறா murugavuruṭṭisuṟā, பெ.(n.)

   கடல்மீன் வகை (யாழ்ப்.);; a sea – fish.

முருகவேள்

முருகவேள் murugavēḷ, பெ.(n.)

   1. சிவனுடைய மகன்; {}

 son.

   2. முருகக்கடவுள் (பட்டினப். 158, உரை); பார்க்க; see {}.

     [முருகன் + வேள்.]

முருகா

முருகா murukā, பெ.(n.)

   1. அகில்; a kind of fragrant wood-Agallochum.

   2. எலுமிச்சை; lime.

   3. அழகு; beauty.

   4. இளமை; tender age.

   5. கள்; toddy.

   6. மணம் (வாசனை);; smell (சா.அக.);.

     [முருகு → முருகா.]

முருகாநோய்

 முருகாநோய் murukānōy, பெ.(n.)

   மிளகாய்ச் செடிக்கும், காய்க்கும் வரும் ஒருவகை நோய் (கோவை.);; a kind of disease that attacks chilly plant.

முருகாப்பாடி

 முருகாப்பாடி murukāppāṭi, பெ. (n.)

   போளூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Polur Taluk.

     [முருகன்+பாடி]

முருகினிவயல்

 முருகினிவயல் murugiṉivayal, பெ. (n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Arantangi Taluk.

     [முருகு+அணி+வயல்]

முருகியம்

முருகியம் murugiyam, பெ.(n.)

   குறிஞ்சி நிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை (தொல்.பொருள்.18,உரை);; drum played in the worship of Kanda, in hilly tracts.

     [முருகு → முருகியம்.]

முருகியல்

 முருகியல் murugiyal, பெ.(n.)

   அழகியல்; aesthetic.

     [முருகு → முருகியல்.]

முருகு

முருகு1 murugu, பெ.(n.)

   1. இளமை (திவா.);; tenderness, tenderage, youth.

   2. அழகு (பிங்.);; beauty.

   3. குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகன்; Kandan, god of {} tract.

     “அருங்கடி வேலன் முருகொடு வளைஇ” (மதுரைக்.611);.

   4. தெய்வம்; divinity, god.

     “முருகு மெய்ப்பட்ட புலத்திபோல” (புறநா.259);.

     “முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநா” (அகநா.22:11);.

     “மடவை மன்ற வாழிய முருகே” (நற்.34:11);.

   5. வேலன் வெறியாட்டு; dancing while under possession by Kanda.

     “முருகயர்ந்து வந்த முதுவாய் வேலன்” (குறுந். 362);.

   6. மணம்; fragrance.

     “முருகமர்பூ முரண்கிடக்கை” (பட்டினப்.37);.

   7. திருவிழா (திவா.);; festival.

     “முருகயர் பாணியும்” (சூளா.நாட்.7);

   8. படையல் விருந்து

 sacrificial feast.

     “படையோர்க்கு முருகயர” (மதுரைக். 38);.

     [முல் → முள் → முரு → முருகு (வே.க);.]

இளமை என்பது ஒர் உயிரியின் பிறப்பிற்கும் முழுவளர்ச்சிக்கும் இடைப்பட்ட நிலைமை அல்லது காலம். இளமைப் பருவத்திலேயே உருவச் சிறுமையும் உடல் மென்மையும் அழகு நிறைவும் மறவுணர்ச்சியும் வலிமை மிகுதியும் பொதுவாக அமைந்திருத்தலால் இளமைக் கருத்திற் சிறுமை, மென்மை, அழகு, மறம், வலிமை முதலிய கருத்துகளும் தோன்றும் (வே.க.);.

 முருகு2 murugu, பெ.(n.)

   1. பூத்தட்டு (நாமதீப.429);; flower-salver.

   2. தேன்; honey.

     “முருகு வாய்மடுத்துண்டளி மூசும்” (நைடத. மணம்புரி.23);.

   3. கள் (பிங்.);; toddy.

   4. எலுமிச்சை (பிங்.);; sour lime.

   5. எழுச்சி (திவா.);; elevation, height.

   6. நறுமண மரம் (திவா.);; eagle wood.

   7. விறகு (திவா.);; fuel.

   8. திருமுருகாற்றுப்படை; {}.

முருகு பொருநாறு” (பத்துப்பாட்டு. தனிப்பா.);.

     [முருகு1 → முருகு2.]

 முருகு3 murugudal, செ.கு.வி.(v.i.)

   1. முதிர்தல்; to be ripe or mature.

     “முருகு காதலின்” (கம்பரா.அகலிகை.54);.

   2. காய்ச்சுதலிற் பக்குவம் மிஞ்சுதல்; to exceed the proper limit in heating.

நெய் முருகிவிட்டது.

     [முறுகு-தல் → முருகு-தல்.]

வெல்லம், சருக்கரை ஆகியவற்றைக் காய்ச்சும் பொழுது, இளங் கம்பிப்பதம், கம்பிபதம் என்று ஒவ்வொரு இனிப்புப் பண்டத்தின் நிலைக்குத் தக்கவாறு காய்ச்சுவர். இதையெல்லாம் தாண்டி இறுகி விடும் பதத்தை முற்றிய பதம் என்பர்.

 முருகு4 murugu, பெ. (n.)

   பிறைபோல் வளைந்த காதணிவகை; an ornament worth in the helix of the ear.

     “வச்ர முருகை யெந்தக் கோனான்றன் கையிற் கொடுத்தானோ” (விறலிவிடு.703);.

தெ., க. முருகு.

     [முல் → முர் → முரு → முருகு.]

முருகுகாது

 முருகுகாது murugugātu, பெ.(n.)

   காதின் எதிர்ப்புறம் உள்ள சிறுமடல் (முருகாது); (கோவை.);; ear lobe.

முருகுகாந்தி

 முருகுகாந்தி murugugāndi, பெ.(ո.)

   மல்லிகை; jasmine flower (சா.அக.);.

முருகுசடை

 முருகுசடை murugusaḍai, பெ.(n.)

   சிக்கலுள்ள தலைமயிர்; matted or entangled curls of hair.

முறுகுசடை முடிய வியலாது (வின்);.

     [முறுகு + சடை.]

முருகேசன்

 முருகேசன் muruācaṉ, பெ.(n.)

முருகக் கடவுள் பார்க்க’; see {}.

     [முருகு + ஈசன்.]

முருகை

 முருகை murugai, பெ.(n.)

   ஒருவகைக் கல் (யாழ்ப்.);; a kind of stone.

முருகைக்கல்

 முருகைக்கல் murugaiggal, பெ.(n.)

   பவளம்; coral (சா.அக.);.

     [முருகை + கல்.]

முருகைநண்டு

 முருகைநண்டு murugainaṇṭu, பெ.(n.)

   நண்டுவகை (யாழ்ப்.);; a kind of crab.

முருக்கஞ்சேரி

 முருக்கஞ்சேரி murukkañjēri, பெ.(n.)

   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருவாரூர் ஆகிய வட்டங்களில் இருக்கும் ஊர்ப்பெயர்கள்; name of this village is found in {} district, {} and {}.

முருங்கை மரங்கள் மிகுதியாக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

     [முருங்கை + சேரி- முருங்கைச்சேரி → முருக்கஞ்சேரி.]

முருக்கதாபம்

 முருக்கதாபம் murukkatāpam, பெ.(n.)

   ஒருவகை இசிவு (சன்னி); நோய்; a kind of delirium.

முருக்கன்மரம்

 முருக்கன்மரம் murukkaṉmaram, பெ.(n.)

   மரவகை; Bengal kino tree, Butea frondoso.

     [முருக்கு → முருக்கன் + மரம்.]

முருக்கம்

 முருக்கம் murukkam, பெ.(n.)

   கலியாண முருக்க மரம்; bastard teak-rootch wood tree-Red been – Erythrina indica.

     [முருக்கு → முருக்கம்.]

இதன் பூ சிவப்பாகவும், நறுமண மில்லாததாகவும் இருக்கும். மரம் முட்களை உடையது. இது மருத்துவத்திற்கு மிகையாகப் பயன்படுகிறது. பழம், பூ போன்றவை ஒரு வகை நாற்றமுடையவை, உண்பதற்குப் பயன்படாது. பூ முயல் இரத்தத்தைப் போல் இருக்கும். இதன் பட்டைச் சாறு மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் பூவை, திருவள்ளுவர் “இனரூழ்த்து நாறா மலர்” என்று கூறியுள்ளார் (சா.அக.);.

 முருக்கம் murukkam, பெ. (n.)

   திண்டிவனம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tindivanam Taluk.

     [முருக்கு+அம்]

முருக்கம்பிசின்

 முருக்கம்பிசின் murukkambisiṉ, பெ.(n.)

   முருக்க மரத்தின் பிசின்; gum of the tree Butea frondosa – B. superba Bengal kino.

     [முருக்கம் + பிசின்.]

முருக்கம்புளி

 முருக்கம்புளி murukkambuḷi, பெ.(n.)

   எலுமிச்சம் புளிப்பு (அமுதாகரம்);; citric acid.

     [முருகு → முருக்கம் + புளி.]

முருக்கம்விரை

 முருக்கம்விரை murukkamvirai, பெ.(n.)

   முருக்க மரத்தின் கொட்டை; the seed of Butea – frondosa. It is anthel-mentic (சா.அக.);.

     [முருக்கம் + விரை.]

முருக்கல்

முருக்கல் murukkal, தொ.பெ.(verbn.)

   1. அழிக்கை; destroying.

     “முன்யானிவனை முருக்கலும் வேண்டினென்” (பெருங். உஞ்சை விழா.37:199);.

   2. கொல்லுகை; killing (சா.அக.);.

     [முருக்கு → முருக்கல்.]

முருக்கள்ளி

 முருக்கள்ளி murukkaḷḷi, பெ.(n.)

   துறட்டிச் செடி; prickly climbing cockspur, Pisonia aculeata (சா.அக.);.

மறுவ. காரிண்டு.

முருக்கவரை

 முருக்கவரை murukkavarai, பெ.(n.)

   கோழியவரை; a kind of bean (சா.அக.);.

     [முருக்கு + அவரை.]

முருக்கி

 முருக்கி murukki, பெ.(n.)

   சதுரக்கள்ளி; square spurge-Euphorbia antiquorum (சா.அக.);.

முருக்கிதழ்

 முருக்கிதழ் murukkidaḻ, பெ.(n.)

   சிவந்த உதடு; red lip.

     [முருக்கு + இதழ். முருக்கம் மலர் போன்ற சிவந்த உதடு.]

முருக்கு

முருக்கு1 murukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அழித்தல்; to destroy, crush, ruin.

     “விறல்வேன் மன்னர் மன்னெயில் முருக்கி” (சிறுபாண்.247);.

   2. கொல்லுதல் (திவா.);; to kill.

     “எற்றி முருக்குவ ரரக்கர் முன்பர்” (கம்பரா.மகரக்.12);.

   3. முறித்தல்; to break in pieces.

காப்புடைய வெழுமுருக்கி” (புறநா. 14);.

   4. உருக்குதல் (வின்.);; to melt. 5. கரைத்தல் (வின்.);;

 to dissolve.

     [முருங்கு-தல் → முருக்கு-தல்.]

 முருக்கு2 murukku, பெ.(n.)

   கொலை (அரு. நி.);; killing.

     [முருக்கு1 → முருக்கு2.]

 முருக்கு3 murukku, பெ.(n.)

   1. முள்ளு முருக்கு, 1 பார்க்க; see {}, 1.

   2. புரசமரம்; palas-tree, Butea frondoso.

     “முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற ழடைகரை” (பதிற்றுப்.23 : 20);,

     “முருக்கரும் பன்ன வள்ளுகிர் வயப்பிணவு” (அகநா. 362:5);.

   3. எலுமிச்சை (தைலவ. தைல.);; sour lime.

   4. கொடியெலுமிச்சை (வின்.);; Italian lemon.

   5. குருகு (குறிஞ்சிப்.73, உரை);; white fig.

   6. அகில்; a fragrant wood tree-Agallochum.

முருக்குக்கள்ளி

 முருக்குக்கள்ளி murukkukkaḷḷi, பெ. (n.)

   ஒருவகைக் கள்ளி (கோவை.);; a kind of square spurge.

     [முருக்கு + கள்ளி.]

முருக்குத்தடி

 முருக்குத்தடி murukkuttaḍi, பெ.(n.)

   பனையேறிகள் பனைமூட்டிற் சார்த்தி மிதித்தேறுவதற்கு வைக்குந் தடி (நாஞ்சில்.);; a wooden stand used to climb palm-tree.

     [முருக்கு + தடி.]

முருக்குமித்திரி

 முருக்குமித்திரி murukkumittiri, பெ. (n.)

   அழகுக்காக வளர்க்கும் தோட்டச் செடியின் விதை (நேர்வாளம்);; croton seed (சா.அக.);.

முருக்கேரி

முருக்கேரி murukāri, பெ. (n.)

   1. வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

   2.திண்டிவனம் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Tindivanam Taluk.

     [முருக்கன்+ஏரி]

முருங்கக்கீரை

 முருங்கக்கீரை muruṅgakārai, பெ.(n.)

முருங்கைக்கீரை பார்க்க; see {}.

     [முருங்கை + கீரை.]

முருங்கச்சார்

 முருங்கச்சார் muruṅgaccār, பெ.(n.)

   முருங்கை மரப் பட்டையின் சாறு; juice of the bark of Moringa oleifer.

     [முருங்கை + சார். சாறு → சாரு → சார்.]

முருங்கன்

 முருங்கன் muruṅgaṉ, பெ. (n.)

   மடங்கல் மாதத்தில் (ஆவணி);யில் விதைக்கப்பட்டு நான்கு மாதங்களில் விளைவாகும் கார்நெல் வகை; a coarse kind of {} paddy sown in {} and maturing in four months.

முருங்கு

முருங்கு1 muruṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. அழிதல்; to perish;

 to be destroyed.

     “அமரு ளேற்றார்.முரண் முருங்க” (பு.வெ.1:7);.

   2. முறிதல்; to break.

     “கூம்பு முதன் முருங்க” (மதுரைக்.377);.

   3. அடங்கியெரிதல்; to simmer,

     “முருங்கெரியிற் புக” (கம்பரா. கார்முக.29);.

தெ. முருகு

 முருங்கு2 muruṅgu, பெ.(n.)

முருக்கு3, 1, 2 பார்க்க;see murukku3, 1, 2.

முருங்கை

முருங்கை1 muruṅgai, பெ.(n.)

   உணவில் பயன்படுத்தும் இலைகளையும் காய்களையும் உடைய, எளிதில் ஒடியக் கூடிய ஒரு மரம்; horse radish tree-Moringa pterygosperma.

வெண்ணெய் உருக்கும் போது முருங்கைக் கீரை போடுவதுண்டு

. “முருங்கா வென்னுஞ் சிங்களச் சொல் முருங்கையென வந்தவாறும்” (வீரசோ. தத்.8);.

     “நாரின் முருங்கை நவிரல் வான்பூ” (அகநா.1:16);,

     “முருங்கைப்பூ சிவந்ததினால் கூந்தலில் முடிப்பார்களா?”,

     “முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்” (பழ.);.

   தெ. முநக;ம. முரிஞ்ஞ.

 Sinh. {}.

முருங்கை வகை :

   1) காட்டு முருங்கை,

   2) தவசு முருங்கை,

   3) பூனை முருங்கை,

   4) கலியாண முருங்கை,

   5) புனல் முருங்கை,

   6) முள் முருங்கை,

   7) செம்முருங்கை,

   8); நல்முருங்கை (சா.அக.);.

     [p]

 முருங்கை2 muruṅgai, பெ.(n.)

   1. புன்னை மரம்; a tree – Alexandrian laurel.

   2. அழிஞ்சில்; sage – leaved alangium – Alangium lamareck.

 முருங்கை muruṅgai, பெ. (n.)

   மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Madurantakam Taluk.

     [முருங்கு-முருங்கை]

முருங்கைக்காய்

 முருங்கைக்காய் muruṅgaikkāy, பெ. (n.)

   குச்சி போன்று நீண்டதும் உட்பகுதியில் சதைப் பற்றுள்ளதுமான, முருங்கை மரத்தின் காய்; fruit of the horse-radish tree which looks like a small stick in India drum stick.

காய்கறிகளில் முருங்கைக்காய் போல் சத்தானது எதுவும் இல்லை.

     [முருங்கை + காய்.]

முருங்கைக்கீரை

 முருங்கைக்கீரை muruṅgaikārai, பெ.(n.)

   முருங்கை மரத்தின் கீரை; greens of the drumstick tree – Moringa oleifera (சா.அக.);.

     [முருங்கை + கீரை.]

முருங்கைப்பிஞ்சு

முருங்கைப்பிஞ்சு muruṅgaippiñju, பெ.(n.)

   1. முருங்கைக் காயின் இளமைப் பிஞ்சு; tender drumstick.

   2. குழந்தைக் கணை, எலும்புருக்கிக் காய்ச்சல் மேலும் ஒளிநீர் (விந்து); இழப்பு முதலியவை நீங்கும் என்பர்; tender drumstick, it is useful in rickets, bone fever, loss of semen nausea etc.

     [முருங்கை + பிஞ்சு.]

முருங்கைப்பூ

 முருங்கைப்பூ muruṅgaippū, பெ.(n.)

   முருங்கை மரத்தின்பூ; flowers of drumstick tree. It aphrodisiac.

     [முருங்கை + பூ.]

முருங்கையீர்க்கு

 முருங்கையீர்க்கு muruṅgaiyīrkku, பெ.(n.)

   முருங்கைக் கீரையின் காம்பு; the rip of the tripinnate of Moringa Oleifera.

     [முருங்கை + ஈர்க்கு.]

முருங்கைவித்து

 முருங்கைவித்து muruṅgaivittu, பெ.(n.)

   முருங்கைக் காயின் விதை; drumstick seeds.

     [முருங்கை + வித்து.]

நீற்றுப்போன ஒளிநீரை (விந்தை); இறுக்கிப் பிசின் போலாக்கும் குணமுடையது முருங்கை வித்து.

முருங்கைவேர்

 முருங்கைவேர் muruṅgaivēr, பெ.(n.)

   முருங்கை மரத்தின் வேர்; pungeant root of drumstick tree – used as a substitute for horse radish.

     [முருங்கை + வேர்.]

முருடன்

முருடன் muruḍaṉ, பெ.(n.)

   1. முரட்டுக் குணமுள்ளவன்; obstinate person.

     “முருடரான ராவணாதிகளை” (ஈடு, 2. 7:10);.

   2. முன்பின் ஆராயாதவன்; reckless person.

   3. மூடன்; ignorant, foolish person.

     “கல்லா முருடரும்” (அஷ்டப். அழக.30);.

   4. வேடன் (சூடா.);; hunter.

   5. நாகரிகமற்றவன்; rude person, savage.

க. மொரட

     [முருடு → முருடன்.]

முருடு

முருடு muruḍu, பெ. (n.)

   1. கரடுமுரடு; coarseness, roughness.

     “முருட்டுச் சிரமொன் றுருட்டினை” (சங்கற்ப. ஈசுவர விவகார. வரி.26);.

   3. கொடுமை; cruelty.

     “அரக்கர் குலம் முருடு தீர்த்தபிரான்” (திவ். திருவாய்.2. 7 : 10);.

   4. முடிச்சுள்ள மரக்கணு (திருவாலவா.23:4);; knot in wood.

   5. வெட்டிய மரத்தினடி (சங்.அக.);; stump.

   6. விறகு (பிங்.);; fire wood.

   7. உருண்ட மரக்கட்டை; piece of wood.

     “வன்பராய் முருடொக்கு மென் சிந்தை” (திருவாச.23: 40);.

   8. பறைப்பொது (பிங்.);; drum.

     “முரசுஞ் சங்கு முருடு மொலிப்ப” (பெருங்.மகத. படைதலை. 19:195);

   9. பெரு மத்தளம்; hand drum with two faces.

     “முருடதிர்ந்தன” (சிலப்.மங்கல.);.

   10. பத்தல் (சங்.அக.);; a kind of bucket.

   11. பருமை; largeness.

     “முருட்டு மோத்தைத் தலை பெற்றமை” (தக்கயாகப். 47);.

   12. பெருங்குறடு (வின்.);; large tongs.

   க. மொடு;வ. முரஜ.

     [முரண் → முருடு.]

முருட்டுக்கையர்

முருட்டுக்கையர் muruṭṭukkaiyar, பெ.(n.)

   அடங்கா வொழுக்க முள்ளவர்; persons of rude behaviour.

     “முருட்டுக்கையர் புறப்பட்டார் புரட்டுப் பேசி” (திருவாலவா.38:14);.

     [முருடு + கையர்.]

முருட்டுத்தன்மை

முருட்டுத்தன்மை muruṭṭuttaṉmai, பெ. (n.)

   ஒராது செய்யுங் குணம் (குறள், 1063, உரை);; recklessness.

     [முருடு + தன்மை.]

முருதகன்முடி

 முருதகன்முடி murudagaṉmuḍi, பெ. (n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur Taluk.

     [முருதகன்+முடி]

முருதகுசம்

 முருதகுசம் murudagusam, பெ.(n.)

   சேங்கொட்டை; marking nut – Semicarpus anacardium (சா.அக.);.

முருதல்

 முருதல் murudal, பெ.(n.)

   நாக நஞ்சு; a kind of arsenic (சா.அக.);.

முருதாறு

 முருதாறு murutāṟu, பெ.(n.)

   பன்றி (கோவை.);; pig.

முருநடைப்பூதி

 முருநடைப்பூதி murunaḍaippūti, பெ.(n.)

   கருங்குளவி; a black wasp (சா.அக.);.

முருந்தன்

முருந்தன் murundaṉ, பெ.(n.)

   1. திறமுடையான்; person of ability.

     “பெருந்தகைப் பெரியோனைப் பிணித்த போர் முருந்தன்” (கம்பரா.பிணிவீட்.37);.

   2. புகழுடையான் (இலக்.அக.);; famous person.

     [முருந்து → முருந்தன்.]

முருந்தபாலி

முருந்தபாலி murundapāli, பெ.(n.)

   1. குந்திரிக்கம்; vateri indica.

   2. குங்கிலி மரம்; boswbllia glabra (சா.அக.);.

முருந்தம்

முருந்தம் murundam, பெ.(n.)

முருந்து, 5 (சூடா.); பார்க்க; see murundu, 5.

     “குருந்த நின்றரும்பின முருந்தம்” (கம்பரா. வனம்புகு. 45);.

     [முருந்து → முருந்தம்.]

முருந்தழற்சி

 முருந்தழற்சி murundaḻṟci, பெ.(n.)

   குருத்தெலும்பினுடைய அழற்சி; inflam mation of cartilage.

     [முருந்து + அழற்சி.]

முருந்து

முருந்து1 murundu, பெ.(n.)

   1. இறகினடிக் குருத்து (பிங்.);; quili of a feather.

   2. மயிலிறகின் அடிக்குருத்து; root of peacock’s feather.

     “முருந்தேய்க்கு முட்போ லெயிற்றினாய்” (ஏலா.7);.

     “முருந்தெனத் திரண்ட முள்ளெ யிற்றுத் துவர் வாய்” (அகநா. 179:11);,

     “முருந்தேர் வெண்பல் முகிழ்நகை திறந்தே ” (நற்.179:10);.

   3. தென்னை முதலியவற்றின் அடிவெண் குருத்து (சூடா.);; white and fresh sprout of a palm.

   4. கொழுந்து (சங்.அக.);; tendril.

   5. இளந்தளிர் (அரு.நி.);; tender leaf.

   6. வேரின் மேற்றண்டு; stalk of plant justabove the roots.

     “பைஞ்சாய்க் கோரையின் முருந்தினன்ன” (அகநா.62);.

   7. எலும்பு; bone.

     “முருந்தின் காறுங் கூழையை” (சீவக. 1661);.

   8. வெண்மை (சூடா.);; whiteness.

   9. முத்து (அரு.நி.);; pearl.

   10. வெண்மையும் அழுத்தமும் கொண்டு எலும்பின் தலைப்புகளை மூடும் குருத்தெலும்பு; a white elastic substance forming the tissue from which bone is formed by calcification – Cartilege (சா.அக.);.

 முருந்து2 murundu, பெ.(n.)

   பூவின் தாள்; stalk of flower.

     “பூமுருந்துங் குருந்துஞ் செருந்தும் பொருந்து மூட்டுடன்” (குருகூர்ப்.6);.

முருந்துசாலங்கள்

 முருந்துசாலங்கள் murunducālaṅgaḷ, பெ. (n.)

   குருத்தெலும்பு உயிர்மங்கள்; cartilagenous cells (சா.அக.);.

முருந்துத்தாபிதம்

 முருந்துத்தாபிதம் murunduddāpidam, பெ.(n.)

   குருத்தெலும்புக்கு உண்டாகும் அழற்சி; inflammation of the cartilage.

     [முருந்து + Skt. தாபிதம்.]

முருந்துநார்

 முருந்துநார் murundunār, பெ.(n.)

   குருத் தெலும்பின் இழைநார் தோற்றம்; fibro cartilage.

     [முருந்து + நார்.]

முருந்தெலும்பு

 முருந்தெலும்பு murundelumbu, பெ.(n.)

   குருத்தெலும்பு; cartilage bone.

     [முருந்து + எலும்பு.]

முருமுரு-த்தல்

முருமுரு-த்தல் murumuruttal,    4 செ.குன்றாவி. (v.t.)

முறுமுறு-த்தல் பார்க்க; see {}.

முருவிலி

முருவிலி muruvili, பெ.(n.)

   1. முருவிளிக் கொடி பார்க்க; see {}.

   2. ஊதை (வாதம்);யடக்கி (சங்.அக.);; wind killer.

   க. முரிகில்;ம. முரல்.

     [முருகு + வல்லி-. முருகுவல்லி → முருவிலி.]

முருவிளிக்கொடி

 முருவிளிக்கொடி muruviḷikkoḍi, பெ.(n.)

   துறட்டிச் செடி (காரிண்டு);; prickly climbing cock-spur.

     [முருவிலி → முருவிளி + கொடி.]

முருவு

 முருவு muruvu, பெ.(n.)

   ஆடவர் காதணி (கோவை.);; men’s ear ornament.

முரைசு

முரைசு muraisu, பெ.(n.)

முரசு பார்க்க; see {}.

     “முரைசு மூன்றாள் பவர்” (கலித். 132);.,

     “உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே” (புறநா.62:9);.

     [முரசு → முரைசு.]

முறக்கன்னன்

முறக்கன்னன் muṟakkaṉṉaṉ, பெ.(n.)

முறம் போன்ற காதுடைய பிள்ளையார் (நாமதீப.27);;{},

 as having winnow-like ears.

     [முறம் + கன்னன்.]

முறண்டு

 முறண்டு muṟaṇṭu, பெ.(n.)

முரண்டு (யாழ். அக.); பார்க்க;see {}.

முறண்டுகம்

 முறண்டுகம் muṟaṇṭugam, பெ.(n.)

   ஒரு வகையான நஞ்சு (அவுபல பாடாணம்); (யாழ்.அக.);; a kind of arsenic, a mineral poison.

முறபம்

 முறபம் muṟabam, பெ.(n.)

   செங்கழுநீர்ப் பூ; a kind of flower, water lily (சா.அக.);.

முறப்பா

 முறப்பா muṟappā, பெ. (n.)

   இஞ்சி முதலியவைக் கூட்டிக் காய்ச்சிய சருக்கரைப் பாகு; a preserve in honey or sugar syrup.

இஞ்சி முறப்பா சாப்பிட பித்தம் போகும் (சா.அக.);.

முறமுற-த்தல்

முறமுற-த்தல் muṟamuṟattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தூய்மையாக இருத்தல்; to be neat.

   2. முறுமுறுப்பாதல்; to be rough or stiff;to be crisp.

முறமுறக்க

 முறமுறக்க muṟamuṟakka, கு.வி.எ.(adv.)

   தூய்மையாக (இ.வ.);; neatly, cleanly.

     [முறமுற → முறமுறக்க]

முறமுறப்பு

முறமுறப்பு muṟamuṟappu, பெ.(ո.)

   1. தூய்மை; cleanliness.

   2. முறுமுறுப்பு; roughness, stiffness, as of washed cloth;crispness.

     [முறமுற → முறமுறப்பு.]

முறம்

முறம் muṟam, பெ.(n.)

   தவசங்களைப் புடைக்கப் பயன்படுங் கருவி; winnow.

     “முறஞ்செவியானை” (புறநா.339);.

     “முறஞ் செவி யானைத் தடக்கையில் தடைஇ” (நற்.376:1);.

   2. 16வது விண்மீன் (விசாகம்); (சிலப்.3:123, உரை);; the 16th naksatra as resembling a winnow.

     ‘முறத்தடி பட்டாலும் முகத்தடி படக்கூடாது’ (பழ.);.

மறுவ. சொளகு

க. மொர;ம. முரம்.

     [p]

முறளச்சிப்பி

 முறளச்சிப்பி muṟaḷaccippi, பெ.(n.)

   சிப்பி வகை (வின்.);; a kind of shell.

     [முரல் + சிப்பி – முரல்சிப்பி → முறளச்சிப்பி.]

முறவளைவு

 முறவளைவு muṟavaḷaivu, பெ.(n.)

   கட்டட நிலை, பலகணி முதலியவற்றின் மீது முறம்போல் வளைவாய்க் கட்டும் கட்டட வேலை (C.E.M.);; elliptcal arch.

     [முறம் + வளைவு.]

முறாக்கத்தலை

 முறாக்கத்தலை muṟākkattalai, பெ.(n.)

   கடல்மீன்வகை (யாழ்ப்.);; a sea-fish.

     [முறால் + கத்தலை.]

முறால்

 முறால் muṟāl, பெ.(n.)

   கடல்மீன் வகை (யாழ்ப்.);; a sea-fish.

முறி

முறி1 muṟittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. ஒடித்தல்; to break, as a stick.

     “பொருசிலை முறித்த வீரன்” (பாரத. கிருட்டிண.141);.

    2. தன்மை மாற்றுதல்; to change the nature of, as milk, medicine.

     “ஆசைப்பிணி பறித்தவனை யாவர் முறிப்பவர்” (கம்பரா. அங்கத.18);.

க. முரி

     [முறி1- தல் → முறி3 – த்தல்.]

 முறி2 muṟittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. கிழித்தல், வெட்டுதல்; to cut.

வேட்டியை இரண்டாக முறி.

   2. நிறுத்திவிடுதல்; to close, to discontinue.

ஏலச்சீட்டை முறித்துவிட்டான்.

   3. நெசவுத் தறியில் உண்டை மறித்தல்; to fold, turn back, as the warp in a loom.

     [முறி3 – த்தல் → முறி1 – த்தல்.]

 முறி3 muṟidal,    2 செ.கு.வி.(v.i.)

   1. வளைந்து ஒடிதல்; to break, give way, as a branch.

     “அச்சு முறிந்ததென் றுந்தீபற” (திருவாச.14: 2);.

   2. நிலை கெடுதல்; to be discomfited.

     “அரக்க னெடுத்து முறிந்து” (பெரியபு. திருஞா.77);.

   3. அழிதல்; to perish, cease to exist.

      “வீரமுறிந்த நெஞ்சினர்” (விநாயகபு. 79:66);.

    4. தன்மை கெடுதல்; to change in one’s nature;

 to be spoiled.

பால் முறிந்து போயிற்று.

   5. பதந்தப்புதல்; to exceed the proper stage, as in boiling or heating.

நெய் முறியக் காய்ந்ததனாற் கசக்கின்றது.

   6. பயனறுதல்; to become ineffectual, as medicine.

விட முறிய மருந்து சாப்பிட்டான் (வின்.);.

   7. குலைதல் (உ.வ.);; to fail, as a business concern.

   ம. முரிக்;தெ. முரிக்கொனு;க. முரி.

     [முரு → முறு → முறி → முறி-தல் (வே.க.);.]

 முறி4 muṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. தோற்றல்; to be defeated, as an army.

   2. அருள்மாறுதல் (இ.வ.);; to be ungracious.

     [முறி4 – தல் → முறி2 – தல்.]

 முறி5 muṟi, பெ.(n.)

   1. துண்டு; piece.

     “கீண்ட வளையின் முறியொன்று கிடப்ப” (ஞானவா. சிகித்.107);.

   2. உடைத்த தேங்காயிற் பாதி; broken half of a coconut.

தேங்காய் முறி.

    3. பாதி; half.

   4. துணி; piece of cloth.

     “கொள்ளி முறிப் பாதியேது” (அரிச்சந். மயான.41);.

   5. முருட்டுத் துணி (G.Tn.D.I. 216);; rough cloth.

தெ., க., ம. முறி.

     [முறு → முறி.]

 முறி6 muṟi, பெ.(n.)

   1. ஆவணம் (பத்திரம்);; deed, written bond.

      “மோக வாசை முறியிட்ட பெட்டியை” (தாயு.சிற்ப.1);.

    2. ஒலையில் எழுதிய பற்றுச்சீட்டு (R.F.);; receipt written on a piece of ola.

     [முறு → முறி.]

 முறி7 muṟi, பெ.(n.)

   1. தளிர்; sprout, shoot.

     “முறிமேனி முத்தம் முறுவல்” (குறள், 1113);.

      “பொரிப்பூம் புன்கி னெழில்தகை யொண்முறி” (நற்.9:5);.

      “கவைமுறி யிழந்த செந்நிலை” (அகநா.33:3);.

      “வாழைப் பூவின் வளைமுறி சிதற” (புறநா.237:11);.

    2. கொழுந்திலை; tender leaf.

     “இலையே முறியே தளிரே தோடே” (தொல். பொருள். 642);.

   3. இலை (யாழ்.அக.);; leaf.

     [முல் → முள் → முரு → முறு → முறி(வே.க.);.]

 முறி8 muṟidal,    2செ.கு.வி.(v.i.)

   1. துண்டாதல்; break, snap, fracture.

புயலில் மரம் முறிந்து சாய்ந்தது. கை எலும்பு முறிந்து படுக்கையில் இருக்கும்படி ஆகிவிட்டது.

   2. பேச்சுத் தொடர்பு, உறவு தொடராமல் நிற்றல்;   அறுபடுதல்; break up.

அவர்களிடையே இருந்த நல்லுறவு முறியக் கரணியம் என்ன?

     [முறு → முறி → முறி-தல்.]

 முறி9 muṟittal,    4 செ.கு.வி.(v.i.)

   சில்லறை மாற்றுதல்; change the rupees into coins.

ஐந்து ரூபாய்க்கு சில்லறை முறித்துக் கொண்டுவா!

     [முறு → முறி → முறி-த்தல்.]

 முறி௧10 muṟi, பெ.(n.)

   1. நகர் பகுதி, சேரி (பிங்.);; part of a village or town.

   2. அறை (நாஞ்.);; room.

   3. மூலையிடம் (யாழ்.அக.);; corner.

     [முறு → முறி.]

 முறி11 muṟi, பெ.(n.)

முறிதிரிசூலை (மூ.அ.); பார்க்க;see {}.

     [முறு → முறி.]

 முறி12 muṟi, பெ.(n.)

உயர்ந்த வெண்பொன் (வெண்கலம்); (யாழ்.அக.);:

 alloy of a superior quality, especially bell – metal.

     “தழையும் தட்டையும் முறியுந்தந்திவை” (குறுந்.223);.

     [முறு → முறி.]

 முறி13 muṟidal,    2 செ.கு.வி.(v.i.)

   துளிர்த்தல்; to sprout.

     “முறிந்தகோல முகிழ் முலையார்” (சீவக.2358);.

     [முல் → முள் → முரு → முறு → முறி → முறி-தல் (வே.க);.]

முறிகதவு

 முறிகதவு muṟigadavu, பெ.(n.)

   மேற்பகுதி தனியாகவும் கீழ்ப்பகுதி தனியாகவும் திறந்து மூடும்படி அமைந்த கதவு (நாஞ்.);; half – doors.

     [முறி + கதவு.]

முறிகரை

 முறிகரை muṟigarai, பெ.(n.)

   இடிந்த கரை (யாழ்.அக.);; broken bank or dam.

     [முறி + கரை.]

முறிகிரந்தி

 முறிகிரந்தி muṟigirandi, பெ.(n.)

முரி கிரந்தி (வின்.); பார்க்க;see muri – kirandi.

முறிகுளம்

முறிகுளம் muṟiguḷam, பெ.(n.)

   1. கரை யுடைந்த குளம் (பிங்.);; a tank with a broken bund

   2. வடிகால் நீர் தேங்கும் குளம்; drainage tank.

   3. 20வது நாண்மீன் (பூராடம்); (பிங்.);; the 20th naksatra.

தெ. முருகு.

     [முறி + குளம்.]

முறிக்கட்டி

முறிக்கட்டி muṟikkaṭṭi, பெ.(n.)

   உயர்ந்த வெண்பொன் (வெண்கலம்); (யாழ்.அக.);; bell – metal of superior quality.

     [முறி12 + கட்டி.]

முறிக்கலைச்சுருக்கு

 முறிக்கலைச்சுருக்கு muṟikkalaiccurukku, பெ.(n.)

   துறவியின் முக்கோலிற் சுருக்கிக் கட்டிய சிறு துணி (கல்லா.கண.);; a piece of cloth usually kept tied to the trident – staff of an ascetic.

     [முறி + கலை + சுருக்கு.]

முறிசாதனம்

முறிசாதனம் muṟicātaṉam, பெ.(n.)

   1. முறிச்சீட்டு, 1 பார்க்க;see {}, 1.

   2. முறிச்சீட்டு, 2 பார்க்க;see {}. 2.

     [முறி + Skt. சாதனம்.]

முறிசெய்-தல்

முறிசெய்-தல் muṟiseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   அடிமையாக்குதல்; to enslave.

     “ஆண்ட பிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை” (திருவாச.13:8);.

     [முறி + செய்-தல்.]

முறிச்சல்

முறிச்சல் muṟiccal, பெ.(n.)

   1. முறிகை; breaking.

   2. குறைவு; indigence, want.

     “எனக்கு இப்போது முறிச்சலா யிருக்கிறது” (வின்.);.

     [முறி → முறிச்சல்.]

முறிச்சாதனம்

முறிச்சாதனம் muṟiccātaṉam, பெ.(n.)

முறிச்சீட்டு,

   1 (யாழ்.அக.); பார்க்க;see {}, 1.

     [முறி + Skt.சாதனம்.]

முறிச்சி

 முறிச்சி muṟicci, பெ.(n.)

   அடிமைப் பெண் (வின்.);; female slave.

     [முறியன் (ஆ.பா.); → முறிச்சி (பெ.பா.);.]

முறிச்சீட்டு

முறிச்சீட்டு muṟiccīṭṭu, பெ.(n.)

   1. உடன்படிக்கைச் சீட்டு (வின்.);; written bond or agreement.

   2. அடிமையோலை; bond of slavery.

     [முறி + சீட்டு.]

முறிச்சூலை

 முறிச்சூலை muṟiccūlai, பெ.(n.)

   ஆண் குறியிலும் மலவாய் (குதம்);க்கு மேலும் அடிக்குடலிலும் ஒடிஓடி குத்தலும் கீழ் வயிற்றில் தொப்புளைச் சுற்றி சுற்றி இழுத்தலுமாகிய இக்குணங்களோடு கூடிய ஒருவகைச் சூலை நோய்; a kind of rheumatism affecting the penis abdomen and the navel causing intense pin prick pain.

மறுவ. முறிதிரிசூலை

     [முறி + சூலை.]

முறிச்சேலை

முறிச்சேலை muṟiccēlai, பெ.(n.)

   1. நெசவில் உண்டை மறித்த சேலை (இ.வ.);; a kind of chequered saree.

   2. நேர்த்தியான வெண்ணிறப் புடவை வகை (வின்.);; a kind of fine white cloth for women.

     [முறி + சேலை.]

முறிதிரிசூலை

முறிதிரிசூலை muṟidiricūlai, பெ.(n.)

   1. சூலை நோய் வகை (வின்.);; a disease of the spinal nerves.

   2. ஒருவகை வயிற்றுவலி; a kind of rheumatism.

     [முறி + திரிசூலை.]

முறித்தற்கள்ளி

 முறித்தற்கள்ளி muṟittaṟkaḷḷi, பெ.(n.)

   சதுரக்கள்ளி; square spurge – Euphorbia ant, quorum (சா.அக.);.

முறித்தேன்

 முறித்தேன் muṟittēṉ, பெ.(n.)

   தெளிந்த தேன் (யாழ்ப்.);; clarified honey.

     [முறி + தேன்.]

முறிந்தஎலும்புக்கூட்டி

முறிந்தஎலும்புக்கூட்டி muṟindaelumbukāṭṭi, பெ.(n.)

   முறிந்த எலும்பை மீண்டும் ஒட்ட வைக்கும் ஒரு வகை மருந்து எண்ணெய்; the preparation of an oil which can be applied for fractures burns and rheumatic affections is given above.

     [முறிந்த + எலும்பு + கூட்டி.]

   செருபடை யிலைச் சாறு;   தேள் கொடுக்கி;வெண்பூவுள்ள வட்டமான கிலுகிலுப்பை இலை, ஊமத்தன் இலை, துளசி இலை இவற்றின் சாறு, சம எடையுடன் ஆல், அரசு, இச்சி, பாலை மருதோன்றி, முருங்கை கல்லிச்சி மைக் கொன்றை, பொன் முருங்கை இவற்றின் பட்டைகளை இடித்து நீர்

விட்டுக் காய்ச்சி இறுத்து மேற்படி சாறுகளுடன் கலந்து இத்துடன் காசுக் கட்டி, களிப்பாக்கு பொடித்துப் போட்டு பிறகு பூதக்கரப்பான் பட்டை நற்சங்கம் வேர்பட்டை இடித்துக் காய்ச்சி முன் குறிப்பிட்டச் சாறுகளுடன் கலந்து விளக் கெண்ணெய் இலுப்பெண்ணெய், புங்கெண்ணெய், நல்லெண்ணெய், வேப் பெண்ணெய் இவைகளைச் சேர்த்து 3 நாள் ஒரு பானையில் வைத்து பிறகு இலவங்கத்தைப் பொடி செய்து போட்டுக் காய்ச்சி திரளும் பதத்தில் வடிகட்டி வெள்ளைத் துணியில் நனைத்துப் போட்டு சுடுநீர் விட்டுறுவ எலும்பு பொருந்தும். முழங்கால் காற்றுபிடிப்பு நோய் (வாதம்);, நெருப்புச் சுட்ட புண்ணுக்கும் போட குணமாகும் (சா.அக.);.

முறிபலகை

 முறிபலகை muṟibalagai, பெ.(n.)

   போர்வை நெய்யும் கருவி; an instrument for weaving carpet.

முறிப்பட்டையம்

முறிப்பட்டையம் muṟippaṭṭaiyam, பெ.(n.)

   1. முறிச்சீட்டு, 1 பார்க்க;see {}.

   2. முறிச்சீட்டு, 2 (W.G.); பார்க்க;see {}.

     [முறி + பட்டையம்.]

முறிப்பத்திரம்

முறிப்பத்திரம் muṟippattiram, பெ.(n.)

   1. முறிச்சீட்டு, 2 பார்க்க;see {} 2.

   2. ஒலை ஆவணம் (வின்.);; ola document.

     [முறி + Skt. பத்திரம்.]

முறிப்பான்

 முறிப்பான் muṟippāṉ, விட்டுனுக்கி ராந்தி என்றழைக்கப்படும் மூலிகைச் செடி (மூ.அ.)

 a plant that grows only in hot and dry places.

     [உதிரம் + முறிப்பான்]

முறிப்பு

முறிப்பு muṟippu, பெ.(n.)

   1. மாற்று மருந்து; antidote.

   2. கடுமை; harshness.

   3. செருக்கு (கர்வம்);; pride.

     “முறிப்பான பேசி மலையெடுத்தான்” (தேவா.684, 10);.

   4. தோழமை மாறுகை (வின்.);; estrangement, breach of friendship.

   5. முரிப்பு (யாழ்.அக.); பார்க்க;see murippu.

     [முறி → முறிப்பு.]

முறிப்பெட்டி

 முறிப்பெட்டி muṟippeṭṭi, பெ.(n.)

   ஆவணம் வைக்கும் பெட்டி (இ.வ.);; box for documents.

     [முறி + பெட்டி.]

முறியடி-த்தல்

முறியடி-த்தல் muṟiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒருவரின் கெட்டத் திட்டத்தை தோல்வியடையச் செய்தல், நடக்கவிடாமல் செய்தல்; outman work, to rout, break, crush.

தங்கக் கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. எதிர்க் கட்சிகளின் பொய்யான செய்தி பரப்பும் வேலையை முறியடிப்போம்.

   2. விரட்டியடித்தல்; beat off;

 break down.

நாட்டைப் பிரிக்கும் ஆற்றல்கள் முறியடிக்கப்பட்டன. கொள்ளைக் கூட்டத்தை முறியடித்தனர்.

   3. புதிய முயற்சி (சாதனை); செய்து முந்திய முயற்சியை (சாதனையை); பின்னடையச் செய்தல்; break old records.

இந்தப் போட்டித் தொடரில் பல பழைய முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.

     [முறி + அடி-த்தல்.]

முறியன்

முறியன் muṟiyaṉ, பெ.(n.)

   1. ஆண் அடிமை (வின்.);; male slave.

   2. பயிரிற்காணும் ஒருவகை நோய்; a disease of crops.

தெ. முரிக்கது;க. முறுவ;ம. முரியன்.

     [முறி → முறியன்.]

முறியல்

 முறியல் muṟiyal, பெ.(n.)

முறிவு (வின்.); பார்க்க;see {}.

     [முறி → முறியல்.]

முறியெழுது-தல்

முறியெழுது-தல் muṟiyeḻududal,    5 செ.கு.வி.(v.i.)

   ஆவணம் எழுதுதல்; to write a bond or document.

     [முறி + எழுது-தல்.]

முறியோலை

 முறியோலை muṟiyōlai, பெ.(n.)

   முடங்கின பனையோலை (வின்.);; uneven palm – leaf.

     [முறி + ஓலை.]

முறிவாடு

முறிவாடு muṟivāṭu, பெ. (n.)

   நஞ்சை (விடத்தை); முறிக்கும் மருந்து; anti poison medicine. (கொ.வ.வ.சொ.126);.

     [முறி+(பாடு);வாடு]

முறிவு

முறிவு1 muṟivu, பெ.(n.)

   1. மக்கள் குடிக்கும் மருந்து வகைகளுள் ஒன்று; a kind of medicine causing reaction.

   2. நஞ்சுக்கு மாற்று மருந்து; antidode (சா.அக.);.

மறுவ. முறிமருந்து

     [முறி → முறிவு.]

 முறிவு2 muṟivu, பெ.(n.)

   1. எலும்பு உடைகை; bone fracture.

இதற்குக் காரணம் எலும்பு முறிவுதான்.

   2. பேச்சு ஒப்பந்தம், உறவு நீடிக்காமல் போகும் நிலை; break down of negotiations, etc.

இந்தப் பேச்சு ஒப்பந்த முறிவுக்கு யார் கரணியம்?

   3. பிளப்பு (வின்.);; breach;

 rupture.

   4. பிணக்கம்; enmity, misunderstanding.

ம. முரிவு

     [முறி → முறிவு.]

முறிவுமருந்து

 முறிவுமருந்து muṟivumarundu, பெ.(n.)

   மாற்று மருந்து (M.L.);; antidote.

     [முறிவு + மருந்து.]

முறிவுரை

 முறிவுரை muṟivurai, பெ.(n.)

   மருந்தை முறிக்கும் பொருள்; antagonist medicine (சா.அக.);.

முறிவெட்டியான்

 முறிவெட்டியான் muṟiveṭṭiyāṉ, பெ.(n.)

   கடற்காளான் வகை (யாழ்.அக.);; a kind of sea – fungus resembling sponge.

முறுகல்

முறுகல் muṟugal, பெ.(n.)

   1. தோசை போன்ற சில உணவுப் பொருள்கள் சூட்டால் அடையும் மொரமொரப்புத் தன்மை; the condition of being roasted crisp.

முறுகலான இரண்டு தோசை.

   2. காய்ந்து கரிந்தது; that which is scorched or over – heated.

   3. திருகல்; twist.

திருகல் முறுகல். பிரண்டைபோல திருகல் முறுகலானது (உ.வ.);.

     [முறுகு + முறுகல்.]

முறுகு

முறுகு1 muṟugudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. திருகுதல் (பிங்.);; to wriggle, twist.

   2. விரைதல்; to accelerate, to hasten.

     “முறுகிய விசையிற்றாகி” (சீவக.796);.

ம. முருக்கு

     [முரு → முறு → முறுகு → முறுகு-தல்.]

 முறுகு2 muṟugudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. முதிர்தல்; to ripen, mature.

      “கனி முறுகி விண்டென” (சூளா. சீய.7);.

    2. மிகுதல்; to increase.

     “வேட்கையின் முறுகி யூர்தர” (சீவக.1183);.

   3. கடுமையாதல்; to become vehement or intense.

     “வெயின் முறுக” (நாலடி, 171);.

   4. சுண்டிப் போதல் (கருகிப் போதல்); (உ.வ.);; to be scorched or charred, as in frying.

   5. செருக்குதல்; to be haughty or insolent, to bluster.

     “வரையெடுக்கலுற்று முறுகினான்” (தேவா. 289, 10);.

     [முரு → முறு → முறுகு → முறுகு-தல்.]

 முறுகு3 muṟugudal,    5 செ.குன்றாவி.(v.t.) மீறுதல் (பிங்.); to violate or infringe, as a right.

ம. முறுகு

     [முரு → முறு → முறுகு → முறுகு-தல்.]

 முறுகு4 muṟugudal,    5 செ.கு.வி.(v.i.)

   பாகு சூட்டினால் நீர்த்தன்மை குறைந்து இறுகுதல்; to become thick when over heated of treacle, etc.

சருக்கரைப் பாகு முறுகாமல் பார்த்துக்கொள்!.

     [முரு → முறு → முறுகு → முறுகு-தல்.]

 முறுகு5 muṟugu, பெ.(n.)

   திண்மை, வன்மை; firmness, hardness, as the core of tree.

     “மீளாதபடி முறுகு கொளுந்துகை”

     [முரு → முறு → முறுகு.]

முறுகுகஞ்சா

 முறுகுகஞ்சா muṟugugañjā, பெ.(n.)

   சடைக்கஞ்சா வகை; variety of Bangal hemp.

     [முறுகு + கஞ்சா. கஞ்சா = செடிவகை.]

முறுகுகொளுந்து-தல்

முறுகுகொளுந்து-தல் muṟugugoḷundudal,    5 செ.கு.வி.(v.i.)

   வலிமை பெறுதல்; to become firm, to gain strength.

     “காதல் முறுகு கொளுந்தினார்க்கும்” (திருவிருத்.97, வியா. பக்.459);.

     [முறுகு + கொளுந்து-தல்.]

முறுகுநெய்

 முறுகுநெய் muṟuguney, பெ.(n.)

   பதங்கெடக் காய்ந்த நெய்; ghee spoiled by over – heating.

     [முறுகு + நெய்.]

முறுகுபதம்

முறுகுபதம் muṟugubadam, பெ.(n.)

   மருந்தெண்ணெய்ப்பதம் ஐந்தனுள் அதிகமாகக் காய்ச்சும் பக்குவநிலை (யாழ். அக.);; excessive heating, a stage in the preparation of medicinal oils, one of five {}.

     [முறுகு + பதம்.]

மருந்தெண்ணெய்ப்பதம் ஐந்து:

   1) குழம்பு பதம்,

   2) கடுகு பதம்,

   3) மந்த பதம்,

   4) மெழுகு பதம்,

    5) முறுகுபதம்.

முறுகுவெல்லம்

 முறுகுவெல்லம் muṟuguvellam, பெ.(n.)

   பதங்கெடும் வண்ணம் மிகக் காய்ச்சிய வெல்லம்; jaggery spoiled by over-heating.

     [முறுகு + வெல்லம்.]

முறுக்கச்சு

 முறுக்கச்சு muṟukkaccu, பெ.(п.) முறுக்குக்குழல் பார்க்க;see {}.

     [முறுக்கு + அச்சு.]

முறுக்கடி-த்தல்

முறுக்கடி-த்தல் muṟukkaḍittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   மறுத்தல் (வின்.);; to oppose, disobey, as a command.

     [முறுக்கு + அடி-த்தல்.]

முறுக்கம்

முறுக்கம் muṟukkam, பெ.(n.)

   1. திருகல்; twist.

   2. முடுக்கு; pressing hard.

    3. கடுமை; rigour.

     [முறுக்கு → முறுக்கம்.]

முறுக்கம்பாகம்

முறுக்கம்பாகம் muṟukkambākam, பெ. (n.)

   மிகத் தொல்லைப்பட்டுப் புரிந்து கொண்ட பின்பே சுவைக்கும்படியாக செய்யுள் நடை வகை; difficult style of composition.

மறுவ. நாரிகேளபாகம் (கம்பரந்.93);

     [முறுக்கு → முறுக்கம் + பாகம்.]

முறுக்கரவு

 முறுக்கரவு muṟukkaravu, பெ.(n.)

   முறுக்கரா (சங்.அக.);;பார்க்க;see {}.

     [முறுக்கு + அரவு.]

முறுக்கரா

முறுக்கரா muṟukkarā, பெ.(n.)

   பாம்பு வகை (நாமதீப.261);; a kind of snake.

     [முறுக்கு + அரா.]

முறுக்கல்

முறுக்கல்1 muṟukkal, பெ.(n.)

   வளைந்து வளைந்து மடங்குதல், திருப்புதல்; twisting, distorting (சா.அக.);.

 முறுக்கல்2 muṟukkal, பெ.(n.)

   பொல்லாங்குக் குற்றம்; tort (சா.அக.);.

முறுக்கவரை

 முறுக்கவரை muṟukkavarai, பெ.(n.)

   வளையம் வளையமாக இருக்கும் அவரை; Goa bean, Psophocarpus tetra gonolobus.

     [முறுக்கு + அவரை.]

முறுக்கவிழ்-தல்

முறுக்கவிழ்-தல் muṟukkaviḻtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. அரும்பு மலர்தல்; bloom as a flower.

   2. முறுக்காறு பார்க்க;see {}.

     [முறுக்கு + அவிழ்-தல்.]

முறுக்காணி

 முறுக்காணி muṟukkāṇi, பெ.(n.)

   வீணை முதலியவற்றின் நரம்பை முறுக்குங் கருவி (வின்.);; peg of stringed musical instruments, as of violin, or veenai.

     [முறுகு → முறுக்கு + ஆணி.]

முறுக்கான்

முறுக்கான் muṟukkāṉ, பெ.(n.)

   1. முறுக்கிய புகையிலை (இ.வ.);; tobacco.

   2. புகை யிலையுடன் போட்டுக் கொள்ளும் வெற்றிலைப் பாக்கு (நாஞ்.);; betel leaves chewed with tobacco.

ம. முறுக்கான்

     [முறுக்கு → முறுக்கான்.]

முறுக்காறு-தல்

முறுக்காறு-தல் muṟukkāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   கயிற்றின் புரி ஒருநிலைப்பட்டு நேராதல்; to be straightened, smoothed out, as a twisted rope.

     [முறுக்கு + ஆறு-தல்.]

முறுக்காற்று-தல்

முறுக்காற்று-தல் muṟukkāṟṟudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   கூடுதலாக முறுக்கிய நூற்புரியை நெகிழ்த்தல் (வின்.);; to loosen or unwind what is over-twisted.

     [முறுக்கு + ஆற்று-தல்.]

முறுக்கி

 முறுக்கி muṟukki, பெ.(n.)

   முறுக்குங் கருவி; spanner.

     [முறுக்கு → முறுக்கி.]

முறுக்கிக்கொள்(ளு)

முறுக்கிக்கொள்(ளு)1 muṟukkikkoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   1. கயிறு முதலியன திரித்தல்; to twist, as a rope.

   2. திருகுதல்; to wirl.

   3. ஒடித்தல்; to break.

     [முறுக்கு + கொள்(ளு);-தல்.]

 முறுக்கிக்கொள்(ளு)2 muṟukkikkoḷḷudal,    13 செ.குன்றாவி.(v.t.)

   வெற்றிலை யுண்ணுதல்; to chew betel.

     [முறுக்கு + கொள்-தல்.]

முறுக்கித்தாபம்

 முறுக்கித்தாபம் muṟukkittāpam, பெ.(n.)

   நரம்புகளை முறுக்கும் ஒரு வகை இசிவு (சன்னி); நோய்; a kind of delirium marked by twitching of the nerves (சா.அக.);.

     [முறுக்கு + Skt. தாபம்.]

முறுக்கியபால்

 முறுக்கியபால் muṟukkiyapāl, பெ.(n.)

   பிழிந்த பால்; squeezed juice or milk (சா.அக.);.

     [முறுக்கி + பால்.]

முறுக்கிழைச்சேலை

 முறுக்கிழைச்சேலை muṟukkiḻaiccēlai, பெ.(n.)

   முறுக்கு நூலாலான புடவை(வின்.);; saree of twisted thread.

     [முறுக்கு + இழை + சேலை.]

முறுக்கிவிடு – தல்

முறுக்கிவிடு – தல் muṟukkiviḍudal,    18 செ. குன்றாவி. (v.t.)

   1. சுழற்றிவிடுதல்; to spin, as a potter his wheel, to wind, to cause to rotate.

     “முறுக்கி விட்ட குயமகன் றிகிரிபோல” (சீவக.786);.

   2. திருகிவிடுதல்; to twirl, as the moustache.

மீசையை முறுக்கிவிட்டான்.

   3. தூண்டிவிடுதல் (வின்.);; to induce, instigate.

   4. பகை யுண்டாக்குதல் (இ.வ.);; to create ill-feeling between, to set one against another.

மறுவ. முடுக்கி விடுதல், சீண்டி விடுதல்.

     [முறுக்கு + விடு-தல்.]

முறுக்கு

முறுக்கு1 muṟukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கயிறு, நார் முதலியவற்றைத் திரித்தல்; to twist, as a rope.

      “வாய்மடித் திரண்டு கையு முறுக்கி” (கம்பரா.மருத்து.10);.

      “ஐதுணங்கு வல்சி பெய்துமுறுக் குறுத்த” (அகநா.224:12);.

    2. முறுக்காணியைத் திருகுதல்; to twirl.

   3. மிகைபட முறுக்கி ஒடித்தல்; to break.

     “பிடிபடி முறுக்கிய பெருமரப்பூசல்” (அகநா.8);.

   4. சுழற்றுதல்; to spin, as a potter his wheel.

     “முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல” (சீவக.786);.

   5. வெற்றிலையுண்ணுதல் (நாஞ்.);; to chew betel.

   6. கை கால்களைப் பிசைந்து தேய்த்தல் (வின்.);; to chafe, as the hands and legs.

   7. துணி முதலியவற்றைச் சுருளும்படி திரும்புதல்; wring clothes, twist.

முழுக்கால் சட்டையை நன்றாக முறுக்கி பிழிந்து காயப் போடு. மீசையை முறுக்கிக் கொண்டே பேசினார்.

   8. பிறர் தன் அருமை தெரிந்து மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற வகையில் ஒருவகை இறுக்கத்துடன் நடந்து கொள்ளுதல்; get in an affected manner be stiff.

புது மாப்பிள்ளை கொஞ்ச நாள் அப்படித்தான் முறுக்கிக் கொள்வார்!

   தெ. முரகட்டு;க., ம. முருக்கு.

     [முறுகு → முறுக்கு → முறுக்கு-தல்.]

 முறுக்கு2 muṟukkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. செருக்குதல் (உ.வ.);; to be proud, haughty, arrogant.

   2. மாறுபடுதல்; to disagree.

   3. சினத்தல் (யாழ்.அக.);; to be angry.

     [முறுகு → முறுக்கு → முறுக்கு-தல்.]

 முறுக்கு3 muṟukku, பெ.(n.)

   1. திரிக்கை; twisting.

   2. திருகாணியின் சுற்று (இ.வ.);; turn or thread of a screw.

   3. மாறுபாடு (வின்.);; disagreement, discord, rancour.

   4. நூலுருண்டை(இ.வ.);; ball of thread.

   தெ. முரிகாது;க. முறுகு.

     [முறுகு → முறுக்கு.]

முறுக்கவரை, முறுக்காணி, முறுக்குமீசை, முறுக்கு வட்டம், முறுக்கு விரியன் முதலிய கூட்டுச் சொற்கள் முறுக்கவியல் பற்றியன.

 முறுக்கு4 muṟukku, பெ.(n.)

   1. செருக்கு; arrogance, impertinence.

   2. மிடுக்கு; stiffness of manners.

வாலிப முறுக்கில் பேசுகிறான். “கிழமாய் நரைத்து முகந்திரைந்து மிந்தமுறுக்கேன்” (தனிப்பா.1, 88 : 173);.

   3. இதழ் முறுக்குள்ள அரும்புத் தன்மை; compact, unblown condition of bud.

     “முறுக்குடைந் தலர்ந்த மலர்களும்” (காஞ்சிப்பு. திருக்கண். 180);.

   4. கடுமை (இலக்.அக.);; vehemence.

   5. வலிப்பு (இலக்.அக.);; convulsion.

   6. நெறிப்பு (வின்.);; stiffness, as of a person in full dress.

   7. முறுக்கப்பட்ட நிலை; twisted state.

முறுக்கு மீசை. முறுக்குக் கயிறு.

   8. உடல் வலிமைக்கு உரிய இறுக்கம்; robustness of body.

வயதாகி விட்டாலும் உடல் முறுக்கு இன்னும் தளரவில்லை.

     [முறுகு → முறுக்கு.]

 முறுக்கு5 muṟukku, பெ.(n.)

   ஒரு வகையான வலிப்பு; a kind of twisting pain.

     [முறுகு → முறுக்கு.]

 முறுக்கு6 muṟukku, பெ.(n.)

   மாவைப் பிசைந்து நெளிவு வரும்படி கையால் சுற்றிப் பொரித்துச் செய்யப்படும் ஒரு தின்பண்டம்; a kind of snack prepared from rice dough twisted by hand to form a ring and fried in oil.

     [முள் → முறு → முறுகு → முறுக்கு = திருகலாகவுள்ள பலகாரம் (மு.தா.);.]

 முறுக்கு muṟukku, பெ. (n.)

   சிற்பியர் வடிவமைக்கும் ஒரு கையணி; an ornament in sculpture.

     [முறு-முறுக்கு]

முறுக்குக்கட்டை

முறுக்குக்கட்டை muṟukkukkaṭṭai, பெ. (n.)

   1. நரம்புகள் முறுக்கேறிய உடம்பு; robutness of body.

   2. வலியுள்ள உடம்பு; painful body.

     [முறுக்கு + கட்டை.]

முறுக்குக்குழல்

 முறுக்குக்குழல் muṟukkukkuḻl, பெ. (n.)

   முறுக்குச் செய்யப் பயன்படும் குழல்; an instrument that helps to squeeze the batter as ‘{}’.

     [முறுக்கு + குழல்.]

முறுக்குக்கொம்பு

 முறுக்குக்கொம்பு muṟukkukkombu, பெ.(n.)

   திருகிய கொம்பு (வின்.);; twisted horn.

     [முறுக்கு + கொம்பு.]

முறுக்குக்கொலுசு

 முறுக்குக்கொலுசு muṟukkukkolusu, பெ.(n.)

   பெண்கள் காலில் அணியும் ஒரு வகை அணிகலன்; twisted form of anklets worn in the ankle.

     [முறுக்கு + கொலுசு.]

முறுக்குச்சர்ப்பம்

 முறுக்குச்சர்ப்பம் muṟukkuccarppam, பெ.(n.)

   ஒரு வகை நச்சுப் பாம்பு; a poisonous snake.

     [முறுக்கு + Skt. சர்ப்பம்.]

முறுக்குடை-த்தல்

முறுக்குடை-த்தல் muṟukkuḍaittal,    4 செ. குன்றாவி.(v.t.)

முறுக்குவாங்கு-தல் (வின்.); பார்க்க;see {}.

     [முறுக்கு + உடை-த்தல்.]

முறுக்குத்தட்டம்

 முறுக்குத்தட்டம் muṟukkuttaṭṭam, பெ. (n.)

   முறுக்கு பிழியும் கருவி; a device to make a snack murukku.

     [முறுக்கு+தட்டம்]

முறுக்குத்தட்டை

 முறுக்குத்தட்டை muṟukkuttaṭṭai, பெ. (n.)

   முறுக்குப் பிடியின் உள்ளே போட்டுப் பிழிய உதவும் தகடு (கோவை.);; an instrument for making twisted cake.

     [முறுக்கு + தட்டை.]

முறுக்குத்திருப்பு

முறுக்குத்திருப்பு muṟukkuttiruppu, பெ. (n.)

   1. சினம்; anger.

   2. புறக்கணிப்பது போல் (அலட்சியமாக); உடலை முறுக்கிக் கொண்டு முகமெடுத்துப் பாராது திரும்புகை (இ.வ.);; twisting one-self and averting one’s face, as in contempt.

     [முறுக்கு + திருப்பு.]

முறுக்குத்திருவட்டம்

 முறுக்குத்திருவட்டம் muṟukkuttiruvaṭṭam, பெ.(n.)

முறுக்குவட்டம் பார்க்க;see {}.

     [முறுக்கு + திருவட்டம்.]

முறுக்குநூல்

 முறுக்குநூல் muṟukkunūl, பெ.(n.)

   இரு இழைகளைச் சேர்த்து முறுக்கி உண்டாக்கிய நூல்; twisted yarn.

     [முறுக்கு + நூல்.]

முறுக்குநோய்

 முறுக்குநோய் muṟukkunōy, பெ.(n.)

   வயிற்றிலுண்டாகும் ஒரு வகை வலி; griping pain in the stomach.

     [முறுக்கு + நோய். வயிற்றிலுள்ள உறுப்புக்களை முறுக்கி வலியை உண்டாக்கும் நோய்.]

முறுக்குபீன்சு

முறுக்குபீன்சு muṟukkupīṉcu, பெ.(n.)

   சதுரமான திருகலான அவரை வகை; square bean, tursted bean psophocarpus teragonolobus, a large plant with blue flowers -6-8 inches long and 1/2 in wide.

     [முறுக்கு + Eng.பீன்சு.]

முறுக்குப்பட்டு

 முறுக்குப்பட்டு muṟukkuppaṭṭu, பெ. (n.)

   இரண்டு இழைகள் சேர்த்து முறுக்கிய இழையாலான பட்டு; double thread silk.

     [முறுக்கு+பட்டு]

முறுக்குப்பணிகாரம்

 முறுக்குப்பணிகாரம் muṟukkuppaṇikāram, பெ.(n.)

   மாவினால் செய்த தின்பண்ட வகை; a kind of cake, made of flour.

     [முள் → முறு → முறுகு → முறுகல். முறுகு → முறுக்கு = திருகலாகவுள்ள பலகாரம் (மு.தா.);. முறுக்கு + பணிகாரம்.]

முறுக்குப்பண்ணு-தல்

முறுக்குப்பண்ணு-தல் muṟukkuppaṇṇudal,    5 செ.கு.வி.(v.i.)

   செருக்குக் காட்டுதல்; to be stiff in manners, to be haughty.

     [முறுக்கு + பண்ணு-தல்.]

முறுக்குப்புடி

 முறுக்குப்புடி muṟukkuppuḍi, பெ.(n.)

முறுக்குக்குழல் பார்க்க;see {}.

     [முறுக்கு + புடி.]

முறுக்குமீசை

 முறுக்குமீசை muṟukkumīcai, பெ.(n.)

   முறுக்கிவிட்ட மீசை (வின்.);; twisted moustache.

     [முறுக்கு + மீசை.]

முறுக்கும்கள்ளி

 முறுக்கும்கள்ளி muṟukkumkaḷḷi, பெ.(n.)

   ஒருவகைச் செடி; a plant – Pisonia ciculata.

முறுக்குவட்டம்

 முறுக்குவட்டம் muṟukkuvaṭṭam, பெ.(n.)

   நூலை முருக்குங் கருவி; revolving frame for spinning threads.

     [முறுக்கு + வட்டம்.]

முறுக்குவலி

 முறுக்குவலி muṟukkuvali, பெ.(n.)

   சூலை, கடும் வயிற்று வலி; torminia (சா.அக.);.

     [முறுக்கு + வலி. வயிற்றில் ஏற்படும் வலி.]

முறுக்குவளையல்

 முறுக்குவளையல் muṟukkuvaḷaiyal, பெ. (n.)

   வளைவு வளைவாக உள்ள வளையல் வகை; a kind of bangle in twisted form.

     [முறுக்கு + வளையல்.]

     [p]

முறுக்குவாங்கு

முறுக்குவாங்கு1 muṟukkuvāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   புரி (முறுக்கை); நெகிழ்த்துதல்; to untwine.

     [முறுக்கு + வாங்கு-தல்.]

 முறுக்குவாங்கு2 muṟukkuvāṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   உடல் கட்டுவிடுதல்; to be weakened in body;

 loosened body.

     [முறுக்கு + வாங்கு-தல்.]

முறுக்குவாயு

 முறுக்குவாயு muṟukkuvāyu, பெ.(n.)

   உடலில் வளைந்து வளைந்து சென்று வலியை உண்டாக்கும் ஒருவகை ஊதை நோய்; a disease which causes twisting pain in the body (சா.அக.);.

     [முறுக்கு + Skt. வாயு.]

முறுக்குவிடல்

 முறுக்குவிடல் muṟukkuviḍal, பெ.(n.)

   எழும்போது கைகால்களை நீட்டி வளைக்கை; the action made while yawning.

மறுவ. சோம்பல் முறித்தல்

     [முறுக்கு + விடல். விடுதல் → விடல்]

முறுக்குவிரியன்

 முறுக்குவிரியன் muṟukkuviriyaṉ, பெ.(n.)

   விரியன் பாம்பு வகை; a kind of viper.

     [முறுக்கு + விரியன்.]

முறுக்கெடு-த்தல்

முறுக்கெடு-த்தல் muṟukkeḍuttal,    4 செ.குன்றாவி.(v.t.)

முறுக்குவாங்கு1-தல் (இ.வ.); பார்க்க;see {}.

     [முருக்கு + எடு-த்தல்.]

முறுக்கேறல்

 முறுக்கேறல் muṟukāṟal, தொ.பெ.. (vbl.n.)

   நரம்பு வலுவுடையதாகை; nerves becoming strong (சா.அக.);.

     [முறுக்கு + ஏறல்.]

முறுக்கேறிய மஞ்சி

 முறுக்கேறிய மஞ்சி muṟukāṟiyamañji, பெ. (n.)

   யாழுக்குரிய நரம்பினை மீட்டுவதில் செய்யத் தகாதது; the don’t of playing harp.

     [முறுக்கு+ஏறிய+மஞ்சி]

முறுக்கேற்றல்

 முறுக்கேற்றல் muṟukāṟṟal, தொ.பெ. (vbl.n.)

   நரம்பை வலுவுள்ளதாகச் செய்கை; stimulating the nerves (சா.அக.);.

     [முறுக்கு + ஏற்றல்.]

முறுமுறு-த்தல்

முறுமுறு-த்தல் muṟumuṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   முணுமுணுத்தல் (யாழ். அக.);; to murmur, grumble.

மறுவ. முணங்குதல்.

தெ., ம. முருமுரு

முறுவஞ்சி

 முறுவஞ்சி muṟuvañji, பெ. (n.)

   முத்து (மூ.அ.);; pearl.

முறுவற்செடி

 முறுவற்செடி muṟuvaṟceḍi, பெ.(n.)

   சுண்டி மரம்; lettuce – tree.

முறுவலித்தல்

முறுவலித்தல் muṟuvalittal, தொ.பெ.(vbl.n.)

   புன்னகை செய்கை; to smile. ‘

அது முறுவலித்து நகுதலும், அளவே சிரித்தலும், பெருகச் சிரித்தலும் என மூன்றென்ப’ (தொல்.பொருள்.251, உரை);.

     [மு.றுவல் → முறுவலி-த்தல்.]

முறுவல்

முறுவல்1 muṟuval, பெ.(n.)

   1. புன்முறுவல், புன்னகை; smile.

     “புதியதோர் முறுவல் பூத்தாள்” (கம்பரா.சூர்ப்ப.5);.

     “முள்ளெ யிற்றுத் துவர்வாய் முறுவ லழுங்க” (அகநா.39:3);.

      “சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை” (குறுந். 162 : 4);.

      “குறியா நோக்கமொடு முறுவல் நல்கி” (நற்.44:3);.

    2. மகிழ்ச்சி; happiness.

      “பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்” (தொல்.பொருள். 111);.

    3. பல்; tooth.

     “முத்த முறுவல்” (குறள், 1113);.

தெ.முருபு;க. முருவ.

 முறுவல்2 muṟuval, பெ.(n.)

முறுகல், 1 பார்க்க;see {}, 1.

 முறுவல்3 muṟuval, பெ.(n.)

   இறந்து பட்டதொரு பழைய நாடகத்தமிழ் நூல் (சிலப்.உரைப்பாயிரம், பக்.9);; an ancient treatise on dancing, not extant.

 முறுவல்4 muṟuval, பெ.(n.)

முறுவற்செடி பார்க்க;see {}.

முறுவிலி

முறுவிலி muṟuvili, பெ.(n.)

   வவ்வாலோட்டி (பாலவா.400);; cock’s spur.

முறுவெங்கண்ணனார்

முறுவெங்கண்ணனார் muṟuveṅgaṇṇaṉār, பெ.(n.)

கழகக் காலப் புலவர்;a {}poet.

இவர் வெங்கண்ணனார் எனவும் அழைக்கப்படுவர். குறிஞ்சித்திணையைப் பாடுவதில் வல்லவர். இவர் பாடியதாக நற்றிணையில் ஒன்றும், அகநானூற்றில் ஒன்றுமாக இரண்டு பாடல்கள் கிடைக்கின்றன.

சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்

குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்

சோலை வாழை முணைஇ அயலது

வேரல் வேலிச் சிறுகுடி அலறச்

செங்கால் பலவின் தீம்பழ மிசையும்

மாமலை நாட தாமம் நல்கென

வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை

வீயுக விரிந்த முன்றில்

கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே” (நற்.232);.

முறை

முறை1 muṟaittal,    9 செ.கு.வி.(v.i.)

   1. இப்படி இத்தன்மையில் இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு; பொருத்தமான வரையறையோடு கூடியது; proper manner, propriety, normal course.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறை குமுகாயத்தில் (சமுதாயத்தில்); தொன்று தொட்டு இருந்து வருகிறது. முறையாக இசை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவருக்கு நெடுநாளாக ஆசை. புதிய மருத்துவமனை முறைப்படி நாளை தொடக்கப்படும்.

   2. ஒன்று நடைபெறும் தன்மை; way, manner.

பொருளியல் அமைப்பு மாறும்போது வாழ்க்கை முறையும் மாறும். மனதுக்கு ஆறுதல் அளிக்கும் முறையில் அன்புடன் பேசினார்.

   3. இத்தனையாவது எனக்கூறும் வரிசை ஒழுங்கு, தடவை; times.

நகரத்தையே இப்போது தான் முதன் முறையாகப் பார்ப்பது போல் பார்த்தான். எத்தனை முறை படித்தாலும் கொஞ்சம் கூட வெறுப்புத் தட்டாத கதை.

   4. ஒன்றையடுத்து ஒன்று, ஒருவரையடுத்து ஒருவர் என வரையறுத்து அமைக்கும் வரிசை, வரிசையில் ஒன்றின் அல்லது ஒருவரின் தடவை; turn.

வயல்களுக்கு முறை வைத்துத்தான் தண்ணீர் விடப்படும். மருத்துவமனையில் மருத்துவரைப் பார்க்க வரிசையில் தன் முறைக்காகக் காத்திருந்தார்.

   5. இருவருக்கும் இடையில் இப்படிப்பட்டது என்று வரையறுக்கும் உறவு; relationship.

அவர் எனக்கு மாமா முறை.

     [முறு → முறை → முறை-த்தல்.]

 முறை2 muṟaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நெறித்து நிமிர்தல்; to become stiff, hard.

   2. செருக்குறுதல்(உ,.வ.);; to be stiff-necked, haughty.

   3. ஏறவிழித்து நோக்குதல்; to stare.

   தெ. முரி;க. முரித்து.

 முறை3 muṟai, பெ.(n.)

   1. குணம்; deposition.

   2. முறைமை system as in.

   3. மருத்துவ முறை; medicine methode.

   4. மறத்துப் போகை; becoming stiff (சா.அக.);.

     [முறு → முறை.]

 முறை4 muṟai, பெ.(n.)

   1. அடைவு; order, manner, plan, arrangement.

      “முறைமுறை… கழியு மிவ்வுலகத்து” (புறநா.29);.

   2. நியமம்; regularity, system, routine.

   3. ஆள்மாறி மாறி வேலை செய்யும் நியமம்; turn by which work is done.

     “பணிமுறை மாற முந்துவார்” (கம்பரா.ஊர்தேடு. 49);.

   4. தடவை; time, as once, twice.

      “எழுமுறை யிறைஞ்சி” (சீவக.3052);. 5. ஒரு வரிசையில் ஒருவனுக்கு ஒழுங்குப்படி ஒரு வினை நிகழும் தடவை;

 turn. இருமுறை.

தெ. மொர;க.முரெ: ம.முர.

     [முறு → முறை.]

 முறை5 muṟai, பெ.(n.)

   1. பிறப்பு; birth.

     “மறுமுறை யமையத்தும்” (பரிபா.11:139);.

   2. உறவு; relationship by blood or marriage.

     “பொருட்டுமுறை யாதியி னிதற்கிதெனல் பொருளே” (நன்.298);.

     “எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” (குறுந்.40:12);.

   3. உறவுமுறைப்பெயர்; term of relationship.

     “பெரியாரையென்று முறைகொண்டு கூறார்” (ஆசாரக்.91);.

     [முறு → முறை.]

 முறை6 muṟai, பெ.(n.)

   1. ஒழுக்கம்; manners.

     “முறையிலோயைத் தென்புலத் துய்ப்பன்” (கம்பரா.வாலிவதை.117);.

   2. செங்கோல் நெறி; justice.

     “முறைகோடி மன்னவன் செய்யின்” (குறள், 559);.

   3.பழமை; antiquity.

   4. ஊழ்; fate.

     “ஆருயிர் முறைவழிப் படூஉம்” (புறநா.192);.

   5. தன்மை; nature.

      “முத்தீப் பேணு முறையெனக் கில்லென” (மணிமே. 22:48);.

    6. கற்பு; chastity.

      “முகிழ்மயங்கு முல்லை முறைநிகழ்வு காட்ட” (பரிபா.15:39);.

     [முறு → முறை.]

 முறை7 muṟai, பெ.(n.)

   1. நூல்; treatise.

     “இளைய பாலகன் முறைவரை வேனென முயல்வது” (கந்தபு.அவைய.1);.

   2. கூட்டு (பிங்.);; things gathered together.

     [முறு → முறை.]

 முறை8 muṟai,  பெ. (n.)

   எழுத்திலக்கண வகையில் ஒன்று; a kind of orthography.

நன்னூலாரின் எழுத்திலக்கணத்தில் எண், பெயர் முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல்நிலை, ஈற்றுநிலை, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு என்னும் 12 வகையில் ஒன்று. தமிழில் ‘அ’ கரம் முதல் ‘ன’ கரம் ஈறாக எழுத்துக்கள் அமைந்துள்ள முறையினைப் பற்றிப் பேசும் பகுதி (இலக்.கலை.கள.);.

 முறை muṟai, பெ. (n.)

   ஆளத்தி பாடப்படும் முறைகளில் ஒன்று; a method of singing āļatti.

     [முறு-முறை]

முறைகாரன்

முறைகாரன் muṟaikāraṉ, பெ.(n.)

   1. முறைப்படி வேலை பார்ப்போன் (கோயிலொ.78);; one employed to attend to a job, by turns.

   2. முறைமாப்பிள்ளை (உ.வ.); பார்க்க;see,

   3. கோயில் முதலியவற்றில் வேலை செய்யும் உரிமையுடையவன் (சங்.அக.);; one who is entitled to an office, as in a temple.

     [முறை + காரன்.]

முறைகேடு

முறைகேடு muṟaiāṭu, பெ.(n.)

   1. நேர்மைத் தவறு; injustice.

   2. தகுதியற்ற செயல் (வின்.);; unbecoming act.

   3. ஒழுங்கின்மை (இ.வ.);; irregularity, disorder.

   4. கெட்ட நடத்தை (வின்.);; depravity, indecency.

     [முறை + கேடு.]

முறைக்கட்டு

 முறைக்கட்டு muṟaikkaṭṭu, பெ.(n.)

   மரபு வழக்கத்திலுள்ள உறவுமுறைப்படி செய்யும் திருமணம் (யாழ்ப்.);; marriage between persons of specific relationship, as being in accordance with the caste rules.

     [முறை + கட்டு.]

முறைக்காய்ச்சல்

முறைக்காய்ச்சல் muṟaikkāyccal, பெ.(n.)

   இடைவிட்டு முறையாக வரும் காய்ச்சல்; intermittent fever.

     “முறைக்காய்ச்ச றப்பாதவிடமாய்” (அறப்பளீச். 49);.

     [முறை + காயச்சல்.]

முறைக்காரன்

 முறைக்காரன் muṟaikkāraṉ, பெ.(n.)

முறைகாரன் பார்க்க;see {}.

முறைக்காற்று

 முறைக்காற்று muṟaikkāṟṟu, பெ.(n.)

   பருவக்காலங்களில் வீசும் பருவக் காற்று (யாழ்ப்.);; trade winds;monsoon.

     [முறை + காற்று.]

முறைசபம்

 முறைசபம் muṟaisabam, பெ.(n.)

முறைச் சடங்கு பார்க்க;see {}.

     [முறை + Skt. சபம்.]

முறைசாரா

 முறைசாரா muṟaicārā, பெ.அ. (adj.)

   பல்கலைக் கழகத்திலும் பள்ளிக் கூடத்திலும் கற்பிக்கும் முறையிலிருந்து வேறுபட்டது; non-formal.

முறைசாரா கல்விமுறை தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

     [முறை + சாரா.]

முறைசிறத்தல்

முறைசிறத்தல் muṟaisiṟattal, தொ.பெ. (vbl.n.)

   ஒன்று மற்றொன்றனிற் சிறந்து வருதல், மேம்படுகை; to excel.

     “நுவலுங் காலை முறைசிறந் தனவே” (தொல். பொருள்.3);.

     [முறை + சிற-த்தல்.]

முறைசெய்-தல்

முறைசெய்-தல் muṟaiseytal,    1 செ. குன்றாவி.(v.t.)

   1. செங்கோல் நெறி (இராச நீதி); அளித்தல்; to do justice.

     “முறைசெய்து காப்பாற்று மன்னவன்” (குறள், 388);.

   2. தண்டித்தல்; to punish, as the guilty.

     “கழுவிலேற்றி முறைசெய்க வென்று கூற” (பெரியபு.திருஞான.853);.

     [முறை + செய்-தல்.]

முறைசெய்வோர்

முறைசெய்வோர் muṟaiseyvōr, பெ.(n.)

   கட்டளை நிறைவேற்றும் ஏவலாளர்; executive officers.

      “வேந்தன்…. விட்டனன் முறைசெய் வோரை” (திருவாலவா. 13:10);.

     [முறை + செய்வோர்.]

முறைச்சடங்கு

முறைச்சடங்கு muṟaiccaḍaṅgu, பெ.(n.)

   1. பிராமணர்கள் நோன்பிருந்து நீரில்நின்று மறையோத திருவிதாங்கூர் அரசாங்கத்தார் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை நாற்பத்தொன்று அல்லது ஐம்பத்தொரு நாள் நடத்தும் ஒரு பெருஞ்சடங்கு; a religious ceremony lasting for 41 or 51 days, celebrated by the Travancore State once in six years, with fasting and recitation of the {} by Brahmins standing in water.

   2. மழை வேண்டி வருணனைக் குறித்துச் செய்யும் தெய்வ வணக்கம்; a prayer invoking {} for rain in times of drought.

     [முறை + சடங்கு.]

முறைச்சுரம்

 முறைச்சுரம் muṟaiccuram, பெ.(n.)

முறைக்காய்ச்சல் பார்க்க;see {}.

     [முறை + சுரம்.]

முறைத்தண்ணீர்

 முறைத்தண்ணீர் muṟaittaṇṇīr, பெ.(n.)

முறைநீர் (இ.வ.); பார்க்க;see {}.

     [முறை + தண்ணீர்.]

முறைத்து

முறைத்து muṟaittu, வி.எ.(adv.)

   1. கடுமையாக; severely, frowningly.

நீ முறைத்துப் பார்க்கிறாய் என்பதற்காக நான் பேசாமல் இருந்து விடுமுடியுமா?

   2. கூர்ந்து, உற்று; intently.

அந்தக் கடையையே ஏன் முறைத்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறாய்? பட்டிக்காட்டான் இனிப்புக் கடையை முறைத்துப் பார்த்ததுபோல் (பழ.);.

     [முறை → முறைத்து.]

முறைத்துக்கொள்ளு-தல்

முறைத்துக்கொள்ளு-தல் muṟaiddukkoḷḷudal,    16 செ.குன்றாவி.(v.t.)

   பகைத்தல்; make an enemy of some one, antagonize.

நீ எல்லாரையும் முறைத்துக் கொண்டு வாழ முடியாது.

     [முறைத்து + கொள்-தல்.]

முறைத்துப்பார்

முறைத்துப்பார்1 muṟaittuppārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஏற விழித்து நோக்குதல்; to stare.

     [முறைத்து + பார்-த்தல்.]

 முறைத்துப்பார்2 muṟaittuppārttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. குதிரை முதலியன வெகுண்டு நோக்குதல் (வின்.);; to stare in bewilderment, as cattle, horses.

   2. செருக்குறுதல்; to be stiff-necked, haughty.

     [முறைத்து + பார்-த்தல்.]

முறைநிரனிறை

முறைநிரனிறை muṟainiraṉiṟai, பெ.(n.)

   பெயர்களை நிறுத்த முறைக்கேற்ப அவற்றிற்குரிய வினை முதலியவற்றை அடைவே நிறுத்துகை (மாறனலங்.172);; arrangement of a series of verbs in the same order as their respective nouns, opp. to {}.

     [முறை + நிரனிறை.]

முறைநிலைப்பெயர்

முறைநிலைப்பெயர் muṟainilaippeyar, பெ.(n.)

முறைப்பெயர் (தொல். சொல். 165); பார்க்க;see {}.

     [முறை + நிலைப்பெயர்.]

முறைநீர்

 முறைநீர் muṟainīr, பெ.(n.)

   வயலுக்கு முறைப்படிவிடப்படும் பாய்ச்சல்நீர் (C.G.);; water allowed to irrigate fields, in turn or in a regulated manner.

     [முறை + நீர்.]

 முறைநீர் muṟainīr, பெ. (n.)

   வளரும் நெற் பயிருக்கு நாள் முறை வைத்து பாய்ச்சும் நீர்; watering the paddy field on fixed time duration.

     [முறை+நீர்]

முறைபிறழ்வைப்பு

முறைபிறழ்வைப்பு muṟaibiṟaḻvaibbu, பெ.(n.)

   செய்யுட் குற்றங்களு ளொன்று (யாப்.வி.பக்.525);; a defect in poetic composition.

     [முறை + பிறழ் + வைப்பு.]

முறைப்படு-தல்

முறைப்படு-தல் muṟaippaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. அடைவுசெய்தல்; to be in order;to be systematised.

     “முறைப்படச் சூழ்ந்து” (குறள்,640);.

   2. முறையிடுதல்; to complain.

      “அழியச் செய்யா நின்றார்களென்று… முறைப்பட்டால்” (திவ். திருப்பா.11, வியா. பக்.127);.

     [முறை + படு-தல்.]

முறைப்படுத்து-தல்

முறைப்படுத்து-தல் muṟaippaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வரிசைப்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல்; to arrange, put in an order.

நடந்த நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி எழுதிக் கொடுங்கள்.

   2. நெறிமுறைக்கு உட்பட்டதாக்குதல்; systematize, regulate.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பது இன்னும் முறைப்படுத்தப்படவில்லை.

     [முறை + படுத்து-தல்.]

முறைப்பாடு

முறைப்பாடு muṟaippāṭu, பெ.(ո.)

   1. முறையீடு பார்க்க; see {}.

     “பேய்முறைப்பாடு” (தக்கயாகப். 7-ஆம் உறுப்பு);.

   2. அரசிறை (கல்.);; duty, tax.

தெ. முர.

     [முறைபடு → முறைபாடு.]

 முறைப்பாடு muṟaippāṭu, பெ. (n.)

   செய்வினைச் செய்தலைக் குறிக்கும் நாட்டுப்புறச் சொல்; a term denoting causing mythical evil.

     [முறை+பாடு]

முறைப்பாடுதீர்-த்தல்

முறைப்பாடுதீர்-த்தல் muṟaippāṭutīrttal,    4 செ.கு.வி.(v.i.)

   இருவர் தமக்குள்ள பகையைத் தெய்வத்தின் முன் தீர்த்துக் கொண்டு நட்பாதல் (இ.வ.);; to become reconciled to each other and resume friendly relations in the presence of a deity.

     [முறைப்பாடு + தீர்-த்தல்.]

முறைப்பு

முறைப்பு muṟaippu, பெ.(n.)

   1. கடுமை நிறைந்த பார்வை; stern look;glower.

தம்பியின் முணுமுணுப்பை ஒரு முறைப்பில் அடக்கினான். உன் முறைப்பை வேறு யாரிடமாவது வைத்துக் கொள் என்று என் அக்கா சொன்னாள்.

   2. வளைது கொடுக்காமல் இருக்கும் தன்மை, விறைப்பு; stiffness, as of a corpse.

முறைப்பு ஏறவில்லை (உ.வ.);. உன் முறைப்பு என்னை என்ன செய்யும்.

   3. விலையின் ஏற்றம் (இ.வ.);; high price, as of goods.

   4. செருக்கு (வின்.);; haughtiness, impudence.

   தெ., க. முரி;ம. முரை;து.முரெய்.

     [முறை → முறைப்பு.]

முறைப்பெண்

முறைப்பெண் muṟaippeṇ, பெ.(n.)

   1. தான் திருமணம் செய்து கொள்வதற்குக் குடும்ப மரபுப்படி தகுதி உள்ள நெருங்கிய உறவுடைய பெண்; a girl on whom a boy has a customary claim to marry.

   2. அத்தை அல்லது அம்மான் மகள்; the daughter of a maternal uncle or paternal aunt.

அத்தை மகளும் முறைப்பெண் தான். மாமன் மகளும் முறைப்பெண் தான்.

     [முறை + பெண்.]

அத்தை அல்லது அம்மான் மகள்போல் ஒருவனை மணம்புரியும் உறவுமுறையுள்ளவன்.

முறைப்பெயர்

முறைப்பெயர் muṟaippeyar, பெ.(n.)

   உறவுமுறைகாட்டும் பெயர்ச் சொல் (தொல்.சொல்.138);; words indicating akin relationship.

எ.கா. தாய், தந்தை, மகன், மகள், பாட்டி, பாட்டன்.

     [முறை + பெயர்.]

முறைப்பெயர்க்கிளவி

 முறைப்பெயர்க்கிளவி muṟaippeyarkkiḷavi, பெ.(n.)

முறைப்பெயர் பார்க்க;see {}.

     [முறைப்பெயர் + கிளவி.]

முறைமசக்கு

 முறைமசக்கு muṟaimasakku, பெ.(n.)

   கெட்ட நடத்தை; depravity.

     ‘அவன் முறை மசக்காய்த் திரிகிறான்’ (வின்.);.

     [முறை + மசக்கு.]

முறைமன்றம்

 முறைமன்றம் muṟaimaṉṟam, பெ.(n.)

   நீதி மன்றம் (அதாலத்து);; court of justice.

முறைமயக்கி

 முறைமயக்கி muṟaimayakki, பெ.(n.)

   குப்பைமேனி (மலை.);; Indian acalypha.

     [முறை + மயக்கி.]

முறைமயக்கு

முறைமயக்கு1 muṟaimayakkudal,    ஒழுங்கின்மையாக்குதல் (இ.வ.); to put out of order, disarrange.

     [முறை + மயக்கு-தல்.]

 முறைமயக்கு2 muṟaimayakku, பெ.(n.)

   ஒழுங்கின்மை; disorderliness, irregularity.

     [முறை + மயக்கு.]

முறைமயங்கி

 முறைமயங்கி muṟaimayaṅgi, பெ.(n.)

முறைமயக்கி (யாழ்ப்.); பார்க்க;see {}.

முறைமாப்பிள்ளை

 முறைமாப்பிள்ளை muṟaimāppiḷḷai, பெ.(n.)

   அத்தை அல்லது அம்மான் மகன் போல ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறை யுள்ளவன்; boy related in a particular manner to a girl and allowed by caste rules to marry her, as the father’s sister’s son or mother’s brother’s son.

தான் திருமணம் செய்து கொள்வதற்குக் குடும்ப மரபின்படி தகுதி உள்ள நெருங்கிய உறவுடைய ஆண்.

     [முறை + மாப்பிள்ளை.]

முறைமாறு-தல்

முறைமாறு-தல் muṟaimāṟudal,    5 செ.கு.வி. (v.i.) 1.

   ஒழுங்கு தப்பி வருதல்; to fail in propriety or order.

   2. முறைப்படி தண்ணீர் பாய்ச்சுதல் (solsâr.);; to regulate the supply of water for irrigation by turns.

   3. குல வழக்கத்திற்கு மாறாக மணம் புரிதல் (இ.வ.);; to marry against recognised custom.

     [முறை + மாறு-தல்.]

முறைமுதற்கட்டில்

முறைமுதற்கட்டில் muṟaimudaṟkaṭṭil, பெ.(n.)

   அரியணை (சிங்காதனம்);, அரசுக்கட்டில்; throne.

     “மன்பதை காக்கு முறைமுதற் கட்டிலின்” (சிலப்.27:134);.

     [முறை + முதற்கட்டில்.]

முறைமூலம்

 முறைமூலம் muṟaimūlam, பெ.(n.)

   திப்பிலி நாவல்; a kind of {} tree.

     [முறை + மூலம்.]

முறைமை

முறைமை muṟaimai, பெ. (n.)

   1. அடைவு; order.

   2. ஒழுக்கம்; manners, conduct.

      “முறைமையின் புகழு மன்றே மறமி”

   3. செங்கோல் நெறி (அரச நீதி);; justice.

     “உணர்கிலை முறைமை நோக்காய்” (கம்பரா.மாயாசன.19);.

   4. உரிமை; right, propriety.

     “முறைமை யென்ப தொன்றுண்டு” (கம்பரா. நகர் நீங்கு.5);.

   5. உறவு; relationship by blood or marriage.

   6. ஊழ்; fate.

   7. தன்மை; nature.

     [முறை → முறைமை.]

முறையம்பிள்ளை

முறையம்பிள்ளை muṟaiyambiḷḷai, பெ.(n.)

முறையாம்பிள்ளை பார்க்க;see {}.

     “மோட்டுக்கால் முறையம்பிள்ளை கேட்டால்” (குருகூர்ப்.23);.

     [முறையாம்பிள்ளை → முறையம்பிள்ளை.]

முறையாம்பிள்ளை

 முறையாம்பிள்ளை muṟaiyāmbiḷḷai, பெ. (n.)

   ஊர்வேலைக்காரன் (நாஞ்.);; a village servant.

     [முறை + ஆம் + பிள்ளை.]

முறையிடு

முறையிடு1 muṟaiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   உரியவர்களிடம் சொல்லிக் கவனிக்க வேண்டுதல், குறை தீர்க்க வேண்டுதல்; appeal to the authorities, petition.

குடிநீர் வேண்டி சென்னை நகர மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுக் கொண்டார்கள். நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை சொல்லியும், முறையிட்டும் சாலை செப்பனிடப்படவில்லை.

     [முறை + இடு-தல்.]

 முறையிடு2 muṟaiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   குறை சொல்லிக் கொள்ளுதல்; to complain, express grievance.

     “சகந்தானறிய முறையிட்டால்” (திருவாச. 21:3);.

தெ., ம. மொரயிடு;க. மொரெயிடு.

     [முறை + இடு-தல்.]

முறையின்வைப்பு

முறையின்வைப்பு muṟaiyiṉvaippu, பெ. (n.)

   நன்னூலார் கூறும் நூலின் அழகு பத்தினுள் ஒன்றாகிய எடுத்துக் கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது; logical order in the treatment of a subject, systematic treatment, one of ten {}.

     “சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்

நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்

ஒசை யுடைமை யாழமுடைத் தாதல்

முறையின் வைப்பே யுலகமலை யாமை

விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த

தாகுத னுரலிற் கழகெனும் பத்தே” (நன்.13);.

     [முறை → முறையின் + வைப்பு.]

முறையிலார்

 முறையிலார் muṟaiyilār, பெ.(n.)

   கீழ் மக்கள் (சூடா.);; base people, inferior people.

     [முறை + இலார். முறையான வாழ்வு வாழாத மக்கள்.]

முறையீடு

 முறையீடு muṟaiyīṭu, பெ.(n.)

   குறை தீர்க்கக் கோரிக்கை; appeal, petition, prayer.

ஒழுங்குமுறை விற்பனைக் கடைகளில் பொருள் விற்பனை குறித்து மக்களுடைய முறையீட்டைக் கேட்டறிந்தார்.அதிகாரி.

     [முறையிடு → முறையீடு.]

முறையுடையரசன்

முறையுடையரசன் muṟaiyuḍaiyarasaṉ, பெ.(n.)

   செங்கோல்நெறி தவறாத அரசன்; a king who rules his country in a moral path and perform good deeds to his subjects. “தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் முறையுடையரசன் செங்கோல் அவைய” (குறுந்.276:5);.

     [முறையுடை + அரசன்.]

முறையுளி

முறையுளி muṟaiyuḷi, கு.வி.எ. (adv.)

   நியமப்படி; according to order.

     “மூவகை யியக்கமு முறையுளி கழிப்பி” (சிலப்.8:42);.

     [முறை + உளி.]

முறையூர்

 முறையூர் muṟaiyūr, பெ.(n.)

   சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் பாலாற்றின் தென்கரையிலுள்ள ஊர்; a village in {} district in {} Taluk, situated on the banks of {}.

     [முறை + ஊர்..]

மக்கள் தங்களுடைய வழக்குகளைத் தெரிவித்து முறை வேண்டி வந்தவர்கட்கு இந்த ஊர்ப்பெரியவர்கள் முறையாகவும், நேர்மையாகவும், நடுவுநிலை தவறாமலும் அறங்கூறியதால் இவ்வூர் முறையூர் எனப்பட்டிருக்கலாம்.

முறையே

 முறையே muṟaiyē, வி.அ.(adv.)

   சொல்லப்பட்டிருக்கும் வரிசையில் தனித் தனியாக; respectively.

குற்றம் செய்தவருக்கும் குற்றம் செய்யத் தூண்டியவருக்கும் முறையே ஐந்தாண்டு, மூன்றாண்டுக் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது.

     [முறை → முறையே.]

முறையோர்

முறையோர் muṟaiyōr, பெ.(n.)

முறைசெய்வோர் பார்க்க;see {}.

      “மன்னவன் முறையோர்தம்மை முன்விடுப்ப” (திருவாலவா.37.60);.

     [முறை → முறையோர்.]

முறைவன்

முறைவன் muṟaivaṉ, பெ.(n.)

   1. சிவன்;{}.

     “நான்மறை முக்கண் முறைவனுக்கே” (பதினொ.பொன்வண்.52);.

   2. ஒட்டுநர்; driver.

   3. நடத்துநர்; conductor.

   4. யானைப் பாகன்; mahout of an elephant.

     “மேலியன் முறைவர் நூலிய லோசை” (பெருங்.உஞ்சைக்.44:79);.

     [முறை → முறைவன்.]

முறைவாசல்

 முறைவாசல் muṟaivācal, பெ.(n.)

   பல குடித்தனங்கள் இருக்கிற ஒரு வீட்டில் வாசல் தெளித்துக் கூட்டும் வேலையைக் குறிப்பிட்ட நாளைக்குக் குறிப்பிட்ட குடித்தனக்காரர் செய்ய வேண்டும் என்று தங்களுக்குள் பிரித்துக் கொள்ளும் முறை; the turn duty of each resident to keep the front-yard clean.

     [முறை + வாசல்.]

முற்கட்டு

முற்கட்டு muṟkaṭṭu, பெ.(n.)

   பாட்டின் தொடக்கத்தில் உள்ள எடுப்பு; the opening section of a song.

     “முற்கட்டும் பாகமுஞ் சீர்மோனைகளும்” (விறலிவிடு.493);.

     [முள் + கட்டு – முற்கட்டு.]

முற்கந்தெறி-த்தல்

முற்கந்தெறி-த்தல் muṟkandeṟittal,    4 செ.கு,வி. (v.i.)

   1. பல்லி கொட்டுதல்; to cluck, as a lizard.

   2. நாவாற் கொட்டுதல் (வின்.);; to make a sound with the tongue, like the cluck of a lizard.

   3. உடன்பாடின்மை (சம்மதமின்மை);க் குறிப்பாக ஒசை யெழுப்புதல் (யாழ்.அக.);; to express disapprobation by a clucking sound.

     [முற்கம்1 + தெறி-த்தல்.]

முற்கம்

முற்கம்1 muṟkam, பெ.(n.)

   1. பல்லி யெழுப்பும் ஒலி; the cluck of a lizard.

   2. பல்லியின் ஒசைப் போல் நாவாற் கொட்டும் ஒலி (வின்.);; a sound made with the tongue, like the cluck of a lizard.

   3. பெருங்குரல் ஓசை (யாழ்.அக.);; loud noise.

     [முற்கு → முற்கம். முற்கு = எழுத்தில்லாஒலி.]

 முற்கம்2 muṟkam, பெ.(n.)

   1. அவரை, துவரை முதலிய பருப்பு வகை; pulse or other leguminous plant.

   2. பச்சைப் பயறு, சிறுபயறு; green gram.

     “முற்கந் தருவாரும்” (உத்தரரா.அசுவ.30);.

முற்கரம்

முற்கரம் muṟkaram, பெ.(n.)

   1. முசுண்டி என்னும் ஆய்த வகை; sledge-like weapon of war.

     “முற்கரங்களு முசலமும்” (கம்பரா. பிரமாத்திர.108);.

   2. பெரிய தடி (இலக்.அக.);; large club.

   3. சம்மட்டி (யாழ்.அக.);; hammer.

முற்கரவன்

 முற்கரவன் muṟkaravaṉ, பெ.(n.)

   குபேரன் (திவா.Mss.);; Kubera.

முற்கலம்

முற்கலம் muṟkalam, பெ.(n.)

   108 உபநிடதங்களுள் ஒன்று (யாழ்.அக.);; an Upanisad, one of 108.

மறுவ. முத்கலை.

முற்காசு

 முற்காசு muṟkācu, பெ.(n.)

   கோரைக் கிழங்கு (சங்.அக.);; sedge-tuber a fragrant root of a grass – Cyperous rot andus.

முற்கான்னம்

 முற்கான்னம் muṟkāṉṉam, பெ.(n.)

   அரிசியும் சிறுபயறும் தேங்காய்த் துருவலுங் கூட்டிச் செய்த சோறு (இலக்.அக.);; a kind of preparation made of rice, green-gram and coconut – scrapings.

     [முற்கார் + அன்னம்.]

முற்கார்

 முற்கார் muṟkār, பெ.(n.)

மடங்கல் மாதத்தில் (ஆவணியில்); விதைக்கும் கார்ப்பயிர்

 paddy sown in {}.

     [முன் + கார் – முன்கார் → முற்கார்.]

முற்கு

முற்கு muṟku, பெ.(n.)

   1. எழுத்திலா ஒலி; inarticulate sound.

     ‘முற்கு வீளை முதலியன’ (தொல்.சொல்.1, உரை);.

   2. நாவால் கொட்டும் ஒலி (வின்.);; a sound made with the tongue, like the cluck of a lizard.

     [முக்கு → முற்கு.]

முற்குலத்தோர்

 முற்குலத்தோர் muṟkulattōr, பெ.(n.)

   பிராமணர் (பிங்.);; Brahmins.

     [முன் + குலத்தோர்.]

முற்குளம்

முற்குளம் muṟkuḷam, பெ.(n.)

   20வது விண்மீன் (பூராடம்);; the 20th naksatra.

     [முள் + குளம்.]

முற்கூறு

முற்கூறு muṟāṟu, பெ.(n.)

   1. முன்பகுதி; earlier part.

      “முற்கூற்றால்…. உபாயமாகப் பற்றுகிறது” (அட்டாதச.முமுட்சுப்.திவ்ய.6);.

    2. தொடக்கம் (யாழ்.அக.);; beginning.

     [முன் + கூறு.]

முற்கொளுங்கால்

 முற்கொளுங்கால் muṟkoḷuṅgāl, பெ.(n.)

முற்கொழுங்கால் (இலக்.அக.); பார்க்க;see {}.

     [முற்கொழுங்கால் → முற்கொளுங்கால்.]

முற்கொள்(ளு)-தல்

முற்கொள்(ளு)-தல் muṟkoḷḷudal,    10 செ. குன்றாவி. (v.t.)

   முந்துதல்; to go ahead of to anticipate.

     “முற்கொண்டா னரக்க னென்னா” (கம்பரா.நாகபாச.116);.

     “இவரென் மேல் விடாமுன் முற்கொள்வேன்” (கம்பரா. பிரமாத்.85);.

     [முன் + கொள்(ளு);-தல்.]

முற்கொழுங்கால்

முற்கொழுங்கால் muṟkoḻuṅgāl, பெ.(n.)

   25வது நாண்மீன் (பூரட்டாதி); (சூடா.);; the 25th naksatra.

மறுவ. முற்கொளுங்கால்

     [முன் + கொழுங்கால்.]

முற்கொழுங்கோல்

 முற்கொழுங்கோல் muṟkoḻuṅāl, பெ. (n.)

முற்கொழுங்கால் (யாழ்.அக.); பார்க்க;see {}.

மறுவ. முற்கொளுங்கால்

     [முன் + கொழுங்கால்.]

முற்கோபம்

 முற்கோபம் muṟāpam, பெ.(n.)

முன் கோபம் பார்க்க;see {}.

முற்கோள்

 முற்கோள் muṟāḷ, பெ.(n.)

   ஒரு பொருள் பற்றிய உண்மை நிலையை ஏற்காமல் தானே கொண்டிருக்கும் தவறான அல்லது பொருந்தாத கருத்து; prejudice.

     [முன்+கோள்]

முற்சனி

முற்சனி muṟcaṉi, பெ. (n.)

   பத்தாவது விண்மீன் (மகம்); (நாமதீப.107);; the 10th naksatra.

     [முன் + சனி.]

முற்சீர்

முற்சீர் muṟcīr, பெ.(n.)

முதற்சீர் பார்க்க;see {}.

     “அசையிரண்டொன்றின் முற்சீர்” (வீரசோ.யாப்.1);.

     [முதற்சீர் → முற்சீர்.]

முற்பகல்

முற்பகல் muṟpagal, பெ.(n.)

   1. பகற் காலத்தின் முற்பகுதி; forenoon.

     “பிறர்க்கின்னா முற்பகற் செய்யின்” (குறள், 319);.

   2. முன்னாள் (வின்.);; the preceding day.

   3. முற்காலம் (வின்.);; former time.

முற்பகல் 10.00 மணிக்குத் தேர்வு நடைபெறும். “முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்” (பழ.);.

தெ.முந்பகலு

     [முன் + பகல்.]

முற்பக்கம்

முற்பக்கம் muṟpakkam, பெ.(n.)

   1. முன் பகுதி; the front part.

   2. வளர்பிறை (பரிபா.11:31, உரை);; bright fortnight, as the earlier part of a lunar month.

     [முன் + பக்கம்.]

முற்படர்-தல்

முற்படர்-தல் muṟpaḍartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. முன்னே செல்லுதல்; to go before.

   2. மேம்படுதல்; to become exalted.

     “முற்படர்ந்த மொழி மிகுத்தன்று” (பு.வெ. 9:32);.

     [முன் + படர்-தல்.]

முற்படிரம்

 முற்படிரம் muṟpaḍiram, பெ.(n.)

   சந்தனம்; sandal wood.

முற்படு-தல்

முற்படு-தல் muṟpaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   1. ஒரு செயலைச் செய்ய முயலுதல் அல்லது தொடங்குதல்; attempt or begin to do something.

கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போனவனைத் தடுக்க முற்பட்டார். எரிபொருள் பற்றாக்குறை என்பதற்காகக் காடுகளை அழிக்க முற்படக் கூடாது.

   2. காலத்தில் முன்னதாக அமைதல்; precede in time.

இந்த இலக்கண நூல் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகிறது.

   3. முந்துதல்; to precede, go ahead.

   4. முன் அமைதல்; to come before.

     “பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்” (தொல். சொல்.286);.

   5. எதிர்ப்படுதல்; to meet.

     “சிறுமந்தி முற்பட்ட தந்தையை” (நாலடி, 237);.

     [முன் + படு-தல்.]

முற்பட்ட

 முற்பட்ட muṟpaṭṭa, பெ.அ.(adj.)

   காலத்தில் முந்திய; prior in time.

தொல்காப்பியம் கழகக்காலத்துக்கு முற்பட்ட நூல் எனக் கூறலாம்.

முற்பட்டவகுப்பு

 முற்பட்டவகுப்பு muṟpaṭṭavaguppu, பெ.(n.)

   கல்விக்கும் பொருளியல் முன்னேற்றத்துக்கும் அரசின் சிறப்புக் கவனம் தேவை இல்லை என்று குறிப்பிடப்பட்ட இனம்; the communities not included in the list of backward communities, scheduled castes and tribes;

 other communities.

     [முற்பட்ட + வகுப்பு.]

முற்பணம்

முற்பணம் muṟpaṇam, பெ.(n.)

   எதையும் வாங்கியதற்கு அடையாளமாகக் கொடுக்கும் முன்பணம் (அச்சாரம்);; advance, earnest money.

     “முற்பணந் தாரும்” (திருப்பு.730);.

     [முன் + பணம்.]

முற்பனி

 முற்பனி muṟpaṉi, பெ.(n.)

முன்பனி (பிங்.); பார்க்க; see {}.

     [முன்பனி → முற்பனி.]

முற்பழி

முற்பழி muṟpaḻi, பெ.(n.)

முற்பவம்2 (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [முன் + பழி.]

முற்பவம்

முற்பவம்1 muṟpavam, பெ.(n.)

   முற்பிறப்பு; past birth.

     “முற்பவத்திற் செய்த வினை” (வாக்குண்.20);.

     [முன் + Skt. பவம்.]

 முற்பவம்2 muṟpavam, பெ.(n.)

   1. இப்பிறப்பில் முன்செய்த தீவினை; past sins of the present birth.

   2. முற்பிறவியில் செய்த தீவினை; sins of past birth.

     [முன் + Skt. பவம்.]

முற்பா

 முற்பா muṟpā, பெ.(n.)

செய்யுளியற்றும் நான்கு வகைப் பாவினுள் முதலாவதாகிய வெண்பா (சூடா.);;{}

 as the first of the four main metres in Tamil.

மறுவ. வெண்பா.

     [முன் + பா.]

முற்பாடன்

முற்பாடன் muṟpāṭaṉ, பெ.(n.)

   முற்பட்டவன்; one who is ahead of others or first.

     “ஆர்த்திக்கு முற்பாட்னாய்” (திவ்.திருப்பா.4, வியா.பக்.73);.

     [முற்பாடு → முற்பாடன்.]

முற்பாடு

முற்பாடு muṟpāṭu, பெ.(n.)

   1. முற்படுகை; being first or in advance.

     ‘இன்பனா மிடத்தில் முற்பாடு இங்கேயாய்’ (ஈடு,4. 5:8);

   2. முன்னிடம்; front.

     ‘பகைவர்நாட் டெல்லையின் முற்பாடு சென்றுவிட்ட தூசிப்பெரும்படை’ (பதிற்றுப்.33:5, உரை);.

     [முன் + படு – முற்படு → முற்பாடு.]

முற்பாடை

முற்பாடை muṟpāṭai, பெ.(n.)

   மாட்டுக் குற்றம் (பெ.மாட்.21);; a defect in cattle.

முற்பாதி

 முற்பாதி muṟpāti, பெ.(n.)

   முந்திய பகுதி (வின்.);; the first or earlier half.

     [முன் + பாதி. பகுதி → பாதி.]

முற்பார்

 முற்பார் muṟpār, பெ.(n.)

முற்பாதி (யாழ். அக.); பார்க்க;see {}.

முற்பாற்கிழமை

முற்பாற்கிழமை  muṟpāṟkiḻmai, பெ. (n.)

   பழமையான நட்புரிமை; long standing attachment, enduring friendship.

     “முற்பாற் கிழமை முதலற வின்றி” (பெருங். மகத.18:25);.

     [முற்பால் + கிழமை.]

முற்பால்

முற்பால் muṟpāl, பெ.(n.)

முன்பு பார்க்க;see {}.

      “முற்பானிகழ்ந்தவும்” (பெருங். இலாவாண.11:162);.

     [முன் + பால்.]

முற்பிறப்பு

 முற்பிறப்பு muṟpiṟappu, பெ.(n.)

   இந்து மத நம்பிக்கையின்படி இப்போதைய பிறவிக்கு முந்தைய பிறவி; previous birth.

அவன் முற்பிறப்பில் செய்த நல்வினை.

      “முற்பிறப்பில் செய்தவினை இப்பிறப்பில் மூண்டது” (பழ.);.

     [முன் + பிறப்பு.]

முற்பிறவி

 முற்பிறவி muṟpiṟavi, பெ.(n.)

   இந்து மத நம்பிக்கையின்படி இப்போதைய பிறவிக்கு முந்தைய பிறவி; past birth.

     [முன் + பிறவி.]

முற்பூண்

முற்பூண் muṟpūṇ, பெ.(n.)

   திருமங்கல நாண்; marriage-badge.

     “தெம்மாதர் முற்பூண்கவர் மன்னன்” (பாரத. திரெளபதி.87);.

     [முன் + பூண்.]

முற்பெரியான்

முற்பெரியான் muṟperiyāṉ, பெ.(ո.)

   நான்முகன்; Brahma.

     “முற்பெரியானை யாகத்திருப்பை யான்முடிந்து” (சீவக.2464);.

     [முன் + பெரியான்.]

முற்போக்கு

 முற்போக்கு muṟpōkku, பெ.(n.)

   முன்னேற்றத்திற்குத் தேவையான மாற்றங்களை ஏற்கத் தயங்காத போக்கு; being progressive.

முற்போக்கான எண்ணம். அரசின் முற்போக்குக் கொள்கைகள்.

     [முன் + போக்கு.]

முற்ற

முற்ற muṟṟa, கு.வி.எ.(adv.)

   1. முழுதும்; entirely, fully, totally.

     “முற்ற மண்ணிடந்தாவி” (திவ்.நாய்ச்.2:9);.

   2. மிகவும்; exceedingly.

     “முற்ற மூத்து” (திவ். பெரியதி. 1. 3:1);.

   3. முடிய; unto the end.

தெ. முட்ட.

     [முற்று → முற்ற.]

முற்றகப்படு-தல்

முற்றகப்படு-தல் muṟṟagappaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   முற்றுகையில் அகப்படுதல்; to be caught in a siege.

     ‘முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலும்’ (தொல்.பொருள்.181, உரை);.

தெ. முட்டதிபடுத.

     [முற்று + அகப்படு-தல்.]

முற்றதிகாரஆவணம்

 முற்றதிகாரஆவணம் muṟṟadikāraāvaṇam, பெ.(n.)

   எல்லாவற்றுக்குமாகக் கொடுக்கும் அதிகார ஆவணம் (சர்வமுக்தியார் நாமா);; a general power of attorney.

     [முற்று+அதிகார+ஆவணம்]

முற்றதிகாரம்

 முற்றதிகாரம் muṟṟadikāram, பெ.(n.)

   தனி மாந்தன் அல்லது ஓர் அமைப்பு எல்லா அதிகா ரங்களையும் வைத்துக் கொண்டு அடக்கி ஆளும் முறை (சர்வாதிகாரம்);; dictatorship.

     [முற்று+அதிகாரம்]

முற்றதிகாரி

 முற்றதிகாரி muṟṟadikāri, பெ. (n.)

   விருப்பமாக ஆட்சி செய்பவன்; ruler of autocracy.

     [முற்று+அதிகாரி]

முற்றத்திற்குப்போ-தல்

முற்றத்திற்குப்போ-தல் muṟṟattiṟkuppōtal,    8 செ.கு.வி.(v.i.)

   சிறுநீர் போதல் (பிராமணர் வழக்கு);; to pass urine.

     [முற்றம் + போதல் – முற்றம்போ-தல் → முற்றத்திற்குப்போ-தல்.]

முற்றத்துற-த்தல்

முற்றத்துற-த்தல் muṟṟattuṟattal,    3 செ. குன்றாவி.(v.t.)

   முழுதுந்துறத்தல்; to renounce completely.

     ‘முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்’ (குறள், 348, உரை);.

     [முற்ற + துற-த்தல்.]

முற்றன்

முற்றன் muṟṟaṉ, பெ.(n.)

   முழுமையானவன் (பூர்ணன்);; perfect being.

     “முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும்” (தேவா. 648:9);.

     [முற்று → முற்றன் = முழுநிறைவானவன்.]

முற்றமுடிய

 முற்றமுடிய muṟṟamuḍiya, கு.வி.எ.(adv.)

   முழுதும் முடியும் வரை, கடைசிவரை (வின்.);; to the very end.

     [முற்ற + முடிய. முடி → முடிய]

முற்றம்

முற்றம் muṟṟam, பெ.(n.)

   1. வீட்டுள் முன்னிடம்; courtyard of a house.

     “மணன் மலிமுற்றம் புக்க சான்றோர்” (புறநா.178);.

   2. தொட்டி முற்றம், வீட்டின் நான்கு கட்டுகளுக்கு நடுவில் கூரையில்லாமல் இருக்கும் பகுதி; inner yard of a house without roof.

   3. ஊரின் வெளியிடம்; esplanade, open space.

     “வஞ்சி முற்றம் வயக்கள னாக” (புறநா.373);.

   4. பரப்பு; expanse.

     “ஏந்து முலைமுற்றம் வீங்க” (அகநா.51);.

     [முன்றில் → முற்றில் → முற்றம் (வே.க.);]

முற்றரநாதம்

 முற்றரநாதம் muṟṟaranātam, பெ.(n.)

   பெண்களுக்கு முதல் பூப்பின் போது வரும் அரத்தம்; menstrual fluid obtained on the day of puberty, the first menses.

முற்றறிவன்

 முற்றறிவன் muṟṟaṟivaṉ, பெ.(n.)

   எல்லாமறிந்த கடவுள்; God, as the omniscient.

மறுவ. முழுமுதற்பொருள்

     [முற்று + அறிவன்.]

முற்றறிவு

 முற்றறிவு muṟṟaṟivu, பெ.(n.)

   முழுதுணரும் அறிவு; omniscience.

     [முற்று + அறிவு.]

முற்றல்

முற்றல் muṟṟal, பெ.(n.)

   1. மூப்பு (சூடா.);; old age.

   2. முதிர்ச்சி; maturing.

   3. முற்றியது; anything that is fully grown or developed.

     “முற்றன் மூங்கில்” (திவ்.திருச்சந்.52);,

      “இறுகுபுல் மேய்ந்த அறுகோட்டு முற்றல்” (நற்.265:1);.

    4. வயிரம்; hardness, as of the core of a tree.

   5. பழுக்கும் நிலையிலுள்ள முற்றினகாய்; fruit almost ripe.

      “முற்றற் சிறுமந்தி…. குற்றிப் பறிக்கும்” (நாலடி, 237);. 6. முடிகை (சூடா.);;

 completing;

 ending.

   7. திண்மை; strength.

     “முற்றல் யானை” (திவ்.திருச்சந்.52);.

   8. முற்றுகை பார்க்க;see {}.

     “அரண முற்றலும்” (தொல். பொருள். 65);.

   9. வளைவு (யாழ்.அக.);; surrounding, encircling.

   10. வெறுக்கை (யாழ்.அக.);; hating.

   11. நெற்று; dried nut.

க. முய்து.

     [முற்று → முற்றல்.]

முற்றளபெடை

முற்றளபெடை muṟṟaḷabeḍai, பெ.(n.)

   அடியின் எல்லாச் சீர்க் கண்ணும் அளபெடை வரத்தொடுப்பது (யாப்.வி.48);; lengthening of sound by {} in all the feet of a line.

     [முற்று + அளபெடை.]

எ.டு. ஆஅ னாஅ நீஇ ணீஇர்.

முற்றவிடு-தல்

முற்றவிடு-தல் muṟṟaviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. முதிரும்படிவிடுதல் (உ.வ.);; to allow to mature or ripen, as fruits.

   2. முற்றத்துற-த்தல், பார்க்க;see {}.

     “மற்றவன் பாசங்கள் முற்றவிட்டு” (திவ்.திருவாய்.8. 2:11);.

     [முற்ற + விடு-தல்.]

முற்றவும்

முற்றவும் muṟṟavum, கு.வி.எ. (adv.)

   முழுவதும்; entirely, fully.

     “வீடுமின் முற்றவும்” (திவ். திருவாய். 1. 2:1);.

     [முற்று → முற்றவும்.]

முற்றவெளி

 முற்றவெளி muṟṟaveḷi, பெ.(n.)

   வெளியிடம்; open space;esplanade.

திருமுற்றவெளி.

மறுவ. வெட்டவெளி

     [முற்றம் + வெளி.]

முற்றவை

முற்றவை1 muṟṟavai, பெ.(n.)

   அறிவால் முதிர்ந்தோர் கூடிய அவை; assembly of wise men.

     “கற்றோர் மொய்த்த முற்றவை நடுவண்” (பெருங்.உஞ்சைக்.36:245);.

     [முற்று + அவை.]

 முற்றவை2 muṟṟavai, பெ.(n.)

   பாட்டி; grand mother.

     “நற்றவை யென்னைப் பெற்ற முற்றவை” (தேவா.186, 7);.

க. முத்தவ்வெ

     [முற்று + அவ்வை.]

முற்றாக

 முற்றாக muṟṟāka, வி.அ.(adj.)

   முற்றிலும்; entirely;

 in its entirety.

எந்த நாகரிகத்தையும் முற்றாக அழித்துவிட முடியாது. இப்படிப்பட்டக் கருத்துக்கள் மக்களைவிட்டு முற்றாக நீங்க வேண்டும்.

     [முற்று → முற்றாக.]

முற்றாமை

முற்றாமை muṟṟāmai, பெ.(n.)

   1. முடிவு பெறாமை (சங்.அக.);; incompleteness.

   2. ஏலாமை (உ.வ.);; impossibility.

     [முற்று + ஆ – முற்றா → முற்றாமை.]

முற்றாய்தம்

முற்றாய்தம் muṟṟāytam, பெ.(n.)

   தன் மாத்திரையில் குறையாமல் ஒலிக்கும் ஆய்தவெழுத்து; the letter ‘k’ in its full quantity.

      “முற்றாய்த மெட்டு” (நன்.90, விருத்.);.

     [முற்று + ஆய்தம்.]

எ.டு. எஃகு, கஃசு, அஃகான்.

முற்றாவுரு

முற்றாவுரு muṟṟāvuru, பெ.(n.)

   குழந்தை; child.

     “ஒர் முற்றாவுருவாகி யாலம் பேரிலை யன்னவசஞ்செய்யு மம்மானே” (திவ். திருவாய்.8.3:4);.

     [முற்று + ஆ + உரு.]

முற்றி-த்தல்

முற்றி-த்தல் muṟṟittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   முடித்தல்; to complete, finish.

     “முடியாக் கருமமாயினும் முடியும் வாயின் முற்றித்து” (பெருங்.மகத.1:69);.

     [முற்று → முற்றி → முற்றி-த்தல்.]

முற்றிகரம்

 முற்றிகரம் muṟṟigaram, பெ.(n.)

முற்றிய லிகரம் பார்க்க;see {}.

     [முற்று + இகரம்.]

முற்றிகை

முற்றிகை muṟṟigai, பெ.(n.)

முற்றுகை, 1 (இ.வ.); பார்க்க;see {}, 1.

     [முற்றிக்கை → முற்றிகை.]

முற்றிக்கை

முற்றிக்கை muṟṟikkai, பெ.(n.)

முற்றுகை, 1 (வின்.); பார்க்க;see {}, 1.

தெ. முத்ததி;க. முத்திகெ (g.);.

     [முற்றுகை → முற்றிக்கை.]

முற்றின

 முற்றின muṟṟiṉa, பெ.எ.(adj.)

   நன்றாக விளைந்து காய்த்தது; which is well fertilited became callous.

     “முற்றின தேங்காய்”.

     [முற்று → முற்றி → முற்றின.]

முற்றினநோய்

 முற்றினநோய் muṟṟiṉanōy, பெ.(n.)

   நாட்பட்ட நோய்; chronic diseases.

     [முற்றின + நோய்.]

முற்றினவெள்ளை

 முற்றினவெள்ளை muṟṟiṉaveḷḷai, பெ.(n.)

   தோல் (மேக); நோய் வகை (M.L.);; gleet.

     [முற்றின + வெள்ளை.]

முற்றிமை

முற்றிமை muṟṟimai, பெ.(n.)

   முதிர்ந்த அறிவு (ஞானம்);; mature wisdom.

     “முற்றிமை சொல்லின்” (சீவக.2511);.

     [முற்று → முற்றி → முற்றிமை.]

முற்றியலிகரம்

 முற்றியலிகரம் muṟṟiyaligaram, பெ.(n.)

   தன்மாத்திரையிற் குறையாத இகரம் (யாழ்.அக.);; the letter ‘i’ in its full quantity or sound value.

எ.டு. வேலி, செடி, கூலி.

     [முற்று + இயல் + இகரம்.]

குற்றியலிகரம் அல்லாதென எல்லாம் முற்றியலிகரம்.

முற்றியலுகரம்

முற்றியலுகரம் muṟṟiyalugaram, பெ.(n.)

   தனது மாத்திரை ஒசையில் குறையாத உகரம் (நன்.164, விருத்.);; the letter ‘u’ in its full quantity or sound value.

எ.டு. அது, இது, எது.

     [முற்று + இயல் + இகரம்.]

குற்றியலுகரம் அல்லாதென எல்லாம் முற்றியலுகரம்.

     [முற்று + இயல் + உகரம்.]

முற்றியார்

முற்றியார் muṟṟiyār, பெ.(n.)

   முற்றுகை செய்தவர்; besiegers.

     “முற்றியார் முற்றுவிட” (பு.வெ.6:25);.

தெ. முத்ததீந்சுவாரு

     [முற்று → முற்றியார்.]

முற்றியைபு

முற்றியைபு muṟṟiyaibu, பெ.(n.)

   அடியின் எல்லாச் சீரிலும் இயைபு வரத் தொடுப்பது (யாப்.வி.48);; rhyming of the last letter in all the feet of a line.

எ.டு. புயலே குழலே மயிலே யியலே.

     [முற்று + இயைபு.]

முற்றிலும்

முற்றிலும் muṟṟilum, கு.வி.எ.(adv.)

   1. முழுவதும்; entirely, fully, totally.

நான் சொல்வது முற்றிலும் உண்மை. சில வகை மீன் இனங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. அவருடைய இலக்கிய நோக்கு முற்றிலும் மாறுபட்டது.

   2. எல்லா வகையிலும்; wholly, completely.

அவருடையக் கோரிக்கை முற்றிலும் மறுக்கப்பட்டது.

     [முற்று → முற்றிலும்.]

முற்றில்

முற்றில்1 muṟṟil, பெ.(n.)

   1. சிறுமுறம்; small winnow.

     “முற்றில் சிற்றிலுண்ணொந்து வைத்து” (சீவக. 1099);.

   2. முறம் போன்ற பதினாறாவது விண்மீன் (விசாகம்); (திவா.);; the 16th naksatra, as resembling a winnow.

   3. சிப்பி வகை (தொல். பொருள். 584, உரை);; a kind of shell – fish.

     [முற்று → முற்றில்.]

 முற்றில்2 muṟṟil, பெ.(n.)

முற்றம், 1 பார்க்க;see {}, 1.

     [முன்றில் → முற்றில்.]

முற்றிழை

முற்றிழை muṟṟiḻai, பெ. (n.)

   1. வேலைப் பாடுடன் கூடிய அணிகளை அணிந்த பெண்; lady, as bedecked with ornaments of finished work-manship.

     “பெற்றிலேன் முற்றிழையை” (திவ். பெரியதி.3.7:8);.

   2. வேலைப்பாடு திருந்திய அணிகலன்; bedecked ornaments.

     [முற்று + இழை.]

முற்று

முற்று1 muṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. முதுமையடைதல் (பிங்.);; to be advanced in age.

   2. முதிர்தல்; to become mature, to ripen.

     “முற்றி யிருந்த கனியொழிய” (நாலடி.19);. கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும் (பழ.);.

   3. முழுவளர்ச்சி யுறுதல்; to be fully grown.

     “ஒர் முற்றா வுருவாகி” (திவ். திருவாய். 8.3:4);. 4. வயிரங் கொள்ளுதல் (சூடா.);;

 to become hardened, as the core of a tree.

   5. முடிதல்; to come to an end, to be finished.

     “தங்கரும முற்றுந் துணை” (நாலடி, 231);. 6. இறத்தல்;

 to die.

     “மாற்றமுந் தாரானா லின்று முற்றும்” (திவ்.பெரியாழ்.2.10:1);.

தெ. முதுரு;க. முது;ம. முத்துக.

     [முது → (முத்து); → முற்று → முற்று-தல்.]

 முற்று2 muṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. மூண்டெழுதல், பெருகுதல்; to abound, increase.

     “முற்றெரிபோற் பொங்கி” (பு.வெ.8:16);.

   2. தங்குதல்; to abide, dwell.

     “குடகடன் முற்றி” (மதுரைக்.238);.

   3. நிறைவேறுதல்; to be fulfilled, as one’s desire.

     “இமையோர்க் குற்ற குறைமுற்ற” (கம்பரா.கடல்காண்.11);.

   4. போலுதல்; to be similar.

     “எழுமுற்றுந் தோளார்” (சீவக. 1870);.

     [முற்று1-தல் → முற்று2-தல்.]

 முற்று3 muṟṟudal,    5 செ.கு.ன்றாவி.(v.t.)

   1. செய்து முடித்தல்; to complete, finish.

     “வேள்வி முற்றி” (புறநா.15);.

   2. அழித்தல்; to destroy, kill.

     “முற்றினன் முற்றின னென்று முன்புவந்து” (கம்பரா.கும்பகர்.311);.

   3. மேற் கொள்ளுதல்; to get upon.

     “சுளிமுகத் துவாவின் முற்றி” (ஞானா.26);.

   4. தேர்ச்சி

   பெறுதல்; to become expert in.

     “புரவிப் போருங் கரப்பறக் கற்று முற்றி” (சீவக. 1678);.

     [முற்று1 – தல் → முற்று3 – தல்.]

 முற்று4 muṟṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. சூழ்தல்; to surround.

     “பாண்முற்றுக நின்னாண்மகி ழிருக்கை” (புறநா.29);.

   2. கோட்டையைச் சூழ்ந்து பொருதல், வளைத்தல்; to besiege, blockade.

      “முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும்” (தொல்.பொருள்.68);.

    3. அடைதல்; to approach, reach.

     ‘அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி’ (இலக்.வி.754, உரை);.

க. முத்து

     [முறு → முற்று → முற்று-தல்.]

 முற்று5 muṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. சில மரங்கள், காய்கள் மிகுதியான வளர்ச்சி அடைதல்; certain vegetables become over ripe, of coconut, become ripe.

முருங்கைக் காய் முற்றுவதற்கு முன்பே பறித்துவிடு. முற்றிய தேங்காயாகப் பார்த்து வாங்கிவா.

   2. நோய் குணப்படுத்த முடியாத நிலையை அடைதல்; of illness get to an advanced state.

நோயை முற்றவிட்டு விடாதே.

   3. சண்டை முதலியவை உச்சக்கட்ட நிலையை அடைதல்; of issues, problem, etc., get aggravated, reach a critical stage.

அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்ச்சண்டையானது முற்றிக் கை கலப்பில் முடிந்தது. வேலை நிறுத்தம் செய்யும் அளவுக்கு தொழிலாளர் கோரிக்கை எப்படி முற்றியது?

   4. முடிவுக்கு வருதல், முடிதல்; come to an end, be finished.

கதை இந்த இதழோடு முற்றிற்று. அடுத்த ஆண்டோடு படிப்பு முற்றும்.

     [முற்று1 – தல் → முற்று5 – தல்.]

 முற்று6 muṟṟu, பெ.(n.)

   1. முழுமை; perfection, completeness.

     “முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினுங் கொடுப்பாரிலை” (தேவா.648, 9);.

   2. முழுமையானது (அக.நி.);; that which is complete.

   3. முதிர்ச்சி; ripeness, maturity.

     “கற்றை யீந்தின் முற்றுக்குலை யன்ன” (நற்.174);,

      “கோடுமுற் றிளந்தகர் பாடுவிறந் தியல” (அகநா.378:7);.

    4. முடிவு (சூடா.);; end.

     [முற்று1 → முற்று5.]

 முற்று7 muṟṟu, பெ.(n.)

   வினைமுற்று; finite verb.

     “வினையொடு முடியினும் விளம்பிய முற்றே” (நன்.333);.

 முற்று8 muṟṟu, பெ.(n.)

முற்றுகை பார்க்க;see {}.

     “முற்றியார் முற்று விட” (பு.வெ.6:25);.

     [முறு → முற்று.]

முற்றுகரம்

முற்றுகரம் muṟṟugaram, பெ.(n.)

முற்றிய லுகரம் (நன்.94, உரை); பார்க்க;see {}.

எ.டு. அது, இது, எது.

     [முற்று + உகரம்.]

முற்றுகை

முற்றுகை muṟṟugai, பெ.(n.)

   1 கோட்டையைப் பகைவர் படை வளைக்கை; blockade, siege.

   2. சூழ்கை; surrounding.

   3. நிறைவேறுகை; completion.

   4. நெருக்கடி (வின்.);; distress, want.

     [முற்று → முற்றுகை.]

முற்றுச்சொல்

முற்றுச்சொல் muṟṟuccol, பெ.(n.)

   வினை முற்றாகிய சொல் (பதம்); (திருமுரு.102, உரை);; finite verb.

     [முற்று + சொல்.]

முற்றுணர்வு

 முற்றுணர்வு muṟṟuṇarvu, பெ.(n.)

   எல்லா மறியுந்தன்மை; omniscience.

     ‘முற்றுணர்வி னனாதல்’ (சூடா.);.

     [முற்று + உணர்வு.]

முற்றுத்தொடர்

 முற்றுத்தொடர் muṟṟuttoḍar, பெ.(n.)

   வினை முற்றினை முதலாகக் கொண்டு அமையும் சொற்றொடர்; a complete sentence, as consisting of a finite verb.

மறுவ. வினைமுற்றுத் தொடர். (எ.கா.); வந்தான் கண்ணன் (தெரிநிலைவினை முற்றுத் தொடர்);. நல்லன் கண்ணன் (குறிப்பு வினை முற்றுத் தொடர்);.

     [முற்று + தொடர்.]

முற்றுத்தொடர்மொழி

 முற்றுத்தொடர்மொழி muṟṟuttoḍarmoḻi, பெ.(n.)

   எழுவாயும் பயனிலையுங் கொண்டு பொருள் முடிவுபெற்று வரும் தொடர் (யாழ்.அக.);; a complete sentence, as consisting of a subject and a predicate.

எ.டு. கண்ணன் வந்தான். கந்தன் அழகன்.

     [முற்று + தொடர்மொழி.]

முற்றுத்தொடை

முற்றுத்தொடை muṟṟuttoḍai, பெ.(n.)

   அளவடி நான்குசீர்களிலும் மோனை முதலாயின வரத்தொடுப்பது (இலக்.வி.723, உரை);; versification in which {} etc., occur in all the feet of an {} verse.

     [முற்று + தொடை.]

முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி muṟṟuppuḷḷi, பெ.(ո.)

   1. பொருள் நிறைவான தொடரின் இறுதியில் இடப்படும் புள்ளி; a punctuation full stop.

   2. இறுதி, முடிவு; end.

இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து விட்டாயா?

     [முற்று + புள்ளி.]

முற்றுப்பெறு-தல்

முற்றுப்பெறு-தல் muṟṟuppeṟudal,    13 செ.கு.வி.(v.i.)

   முடிவடைதல்; to be finished.

மக்கட் தொகைக் கணக்கெடுக்கும் பணி முற்றுப்பெற்றுவிட்டது.

     [முற்று + பெறு – தல்.]

முற்றுமடக்கு

முற்றுமடக்கு muṟṟumaḍakku, பெ.(n.)

   ஒரு செய்யுளின் முதலடி முழுதும், பின் மூன்றடியாக மடங்கி வேறுவேறு பொருளைத் தரும் சொல்லணி வகை (தண்டி.சொல்.4, உரை);; repetition of the whole of the first line of a stanza, as the second, third and fourth lines, though conveying different meanings.

எ.டு. பிரம புரத்தவன் பெம்மான் எம்மான்

பிரம புரத்தவன் பெம்மான் எம்மான்

பிரம புரத்தவன் பெம்மான் எம்மான்

பிரம புரத்தவன் பெம்மான் எம்மான்

     [முற்று + மடக்கு.]

முற்றுமுடுகுவெண்பா

 முற்றுமுடுகுவெண்பா muṟṟumuḍuguveṇpā, பெ.(n.)

   நான்கடியும் முடுக்கு ஒசையாக வரும் வெண்பா (சங்.அக.);; a {},

 which has a quick flowing rhythm in all the four lines.

     [முற்று + முடுகு + வெண்பா.]

எ.டு.

கடலை பயறொடு துவரையெள் அவல்பொரி

சுகியன் வடைகனல் கதலியின் அமுதொடு

கனியு முதுபல கனிவகை நலமிவை இனிதாகக்

கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற

அமுது துதிகையில் மனமது களிபெற

கருணை யுடனளி திருவருள் மகிழ்வுறநெடிதான (திருப்புகழ்);

முற்றுமுணர்தல்

முற்றுமுணர்தல் muṟṟumuṇartal, பெ.(n.)

   சிவனுடைய எண்குணத் தொன்றாகிய எல்லாம் அறியுந்தன்மை (குறள், 80, உரை);; being omniscient, one of {}.

     [முற்றும் + உணர்தல்.]

முற்றுமுதிர்வு

முற்றுமுதிர்வு1 muṟṟumudirvu, பெ.(n.)

   மதிற்குள்ளிருந்த நொச்சி மன்னனின் முரசம் காலையிலேயே முழங்கக் கேட்ட மதிற்கு வெளியே இருந்த உழிஞை மன்னனின் வெகுளியைக் கூறும் புறத்துறை (பு.வெ.உழி.23);; a theme in puram which shows the fury of the {} king, who was outside the fortress, when he hears the early morning pealing of drums from the Nocchi king fortress.

     [முற்று + முதிர்வு.]

 முற்றுமுதிர்வு2 muṟṟumudirvu, பெ.(n.)

   இளமையிலேயே கேள்வி, கல்வி அறிவு மிகையாக பெற்று இருக்கை; a person who has youth knowledge of literate question, one who is pedantic at youth.

அவன் முற்றும் முதிர்வு பெற்றவன்.

     [முற்று + முதிர்வு.]

முற்றுமுரண்

முற்றுமுரண் muṟṟumuraṇ, பெ.(n.)

   அளவடியின் சீர்முழுவதும் முரண்வரத் தொடுப்பது (யாப்.வி.48);; versification in which {} occurs in all the feet of an {} verse.

எ.டு. துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தெனை முனியாது.

     [முற்று + முரண்.]

முற்றுமோனை

முற்றுமோனை muṟṟumōṉai, பெ.(n.)

   அளவடியின் எல்லாச்சீர்களிலும் மோனை வரப்பாடுவது (யாப்.வி..48);; versification in which alteration of the initial letter occurs in all of feet of an {} verse.

     [முற்று + மோனை.]

எ.டு. “அயில்வேல் அனுக்கி யம்பலைத் தமர்ந்த”.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு.

முற்றும்

முற்றும்1 muṟṟum, பெ.(n.)

   1. முழுதும், முற்றிலும்; wholly, entirely.

     “இன்று முற்று முதுகுநோவ” (திவ்.நாய்ச்.2:2);. முற்றும் நனைந்தபின் முக்காடு எதற்கு? (பழ.);. முற்றும் துறந்த முனிவர்.

   2. எல்லாம் (சூடா.);; all.

     [முற்று → முற்றும்.]

 முற்றும்2 muṟṟum, வி.அ.(adv.)

   சுற்றும் என்பதோடு இணைந்து வரும் சொல்; a word which occurs in combination with {}.

சுற்றும் முற்றும் நன்றாகப் பார்.

முற்றும்மை

முற்றும்மை muṟṟummai, பெ.(n.)

   பெரும் பான்மையும் எச்சப் பொருளில்லாமல் வரும் உம்மிடைச் சொல்; connective particle.

எல்லாரும் வந்தார் என்பதில் எஞ்சாப் பொருள் தருதலால் முற்றும்மை.

     “முற்றும்மை யொரோவழி யெச்சமு மாகும்” (நன்.426);.

     [முற்று + உம்மை.]

முற்றுருவகம்

முற்றுருவகம் muṟṟuruvagam, பெ.(n.)

உவமான உவமேயங்கள் முழுவதும் உருவகம்

   செய்யப்படும் அணி (தண்டி.35:13);; complete metaphor;metaphor in which there is similarity in all respects between the objects of comparison.

எ.டு.

     “விழியே களிவண்டு மென்னகையே தாது

மொழியே முருகுலாந் தேறல் – பொழிகின்ற

தேமருவு கோதைத் தெரிவை திருமுகமே

தாமரையென் னுள்ளத் தடத்து”

   தேன் மருவிய கூந்தலை யுடைய தெரிவையின் திருமுகமே தாமரை;   விழிகளே களிக்கப் படாநின்ற வண்டு;   மெல்லியவாகிய நகையே தாது;மொழியே நறுநாற்ற முலாவுகின்ற மது என்று உவமான உவமேயங்கள் முழுவதும் உருவகம் செய்யப்பட்டதால் முற்றுருவகம்.

     [முற்று + உருவகம்.]

முற்றுழிஞை

முற்றுழிஞை muṟṟuḻiñai, பெ.(n.)

   முப்புரங்களை சிவன் அழித்த போது அணிந்திருந்த உழிஞைப் பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை (பு.வெ.6:8);; a theme describing the excellence of the {} garland which {} wore when He destroyed tiri-puram.

     [முற்று + உழிஞை.]

உழிஞை ஒழுக்கம் இறைவனாலும் மேற்கொள்ளப்பட்ட தென அவ்வொழுக்கத்தினைப் பாராட்டுதலே கருத்தாகக் கொள்க.

முற்றுவமை

 முற்றுவமை muṟṟuvamai, பெ. (n.)

   எல்லா வகையாலும் உவமையும் பொருளும் ஒத்துவர அமைக்கும் உவமை; simile, in which comparison holds good in all respects.

     [முற்று + உவமை.]

முற்றுவிடு-த்தல்

முற்றுவிடு-த்தல் muṟṟuviḍuttal,    18 செ. குன்றாவி.(v.t.)

   முற்றுகையை நீக்குதல்; to cause a siege to be raised.

     ‘முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலு’ (தொல்.பொருள்.181, உரை);.

     [முற்று + விடு-த்தல்.]

முற்றுவினை

முற்றுவினை muṟṟuviṉai, பெ.(n.)

   வினை முற்று; finite verb.

     “முற்றுவினைப் பதமொன்றே” (நன்.324);.

      ‘அவன் வந்தான்’.

     [முற்று + வினை.]

முற்றுவினைப்பதம்

முற்றுவினைப்பதம் muṟṟuviṉaippadam, பெ.(n.)

   வினைமுற்றுச் சொல்; finite verb.

     “முற்றுவினைப்பதம் ஒன்றே மூவொன்பானாம்” (நன்.324);.

     [முற்று + வினை + பதம்.]

நன்னூலார் கருத்துப்படி வினை முற்றுச் சொற்கள் 27. படர்க்கையில் – 5 பால். தன்மையில் ஒருமை, பன்மை-2 பால், முன்னிலையில் ஒருமை பன்மை 2-பால். இவ்வொன்பது பாலினையும் மூன்று காலத்தினும் முரண இருபத்தேழு.

முற்றூட்டு

முற்றூட்டு1 muṟṟūṭṭu, பெ.(n.)

   1. முழுமையும் நுகர்வுடைய நிலம்; land in the exclusive possession and enjoyment of the owner.

இவ்விடம் எந்தையது முற்றூட்டு (திருக்கோ. 252, உரை);.

   2. வரியில்லாநிலம் (சர்வ மானியம்);; land given in endowment, free of tax.

இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்குத் தேவதான மாவதாகவும்’ (தெ.இ.கல்.தொ.3:45);.

   3. முழுமையும் நுகர்வுடையது; anything which is exclusively enjoyed, as of right.

     “அப்புகரை எனக்கு முற்றூட்டாக் கினவன்” (ஈடு,1. 7:3);.

   4. புலவர், கணியன், கலைஞர் ஆகிய முத்திறத் தோர்க்கும் இறையிலியாக அளிக்கப் பெறும் நிலம்; tax free land, donated for pandit, astrologer, and artist.

     “பூம்புலியூர் நாடகஞ்செய் நாவலன் பெற்ற நிலம்” (முதற் குலோத்துங்கன், தெ.இ.கல். தொ.7, கல்.753);.

     [முற்று + ஊட்டு.]

அரசியல் வினைஞர், பொருநர் (போர் மறவர்); பொதுநலவூழியர், புலவர், கலைஞர், வணிகர், மறையோர் முதலியோர்க்கும் அறைச்சாலை, மடம், கோயில் முதலியவற்றுக்கும் அளித்த நிலம் நிலக் கொடையாகும். அது முற்றூட்டு, இறையிலி, இறை நிலம், நிலவிறை ஆகிய நால்வகை நிலைமையிலும், நிலம் ஊர் நாடு என்னும் மூவகையளவிலும் கொடுக்கப்பட்டது. ஒருவகை வரியுமில்லாதது முற்றூட்டு அது உறாவரை, காசுகொள்ளா, இறையிலி எனவும் படும். அரசிறை மட்டும் நீங்கியது இறையிலி. இறையிறுக்கும் நிலம் இறைநிலம். நிலத்தில் வரும் இறையை மட்டும் நுகர்வது நிலவிறை (பழ.த.ஆ.பக்.90);.

 முற்றூட்டு2 muṟṟūṭṭu, பெ.(n.)

   அறுவடை முடிவில் தவசமாகச் செலுத்தும் குத்தகை; lease paid as grains after reaing.

கார், சம்பா, நவிரை ஆகிய பட்டங்களின் முடிவில், குத்தகைக்குரிய நெல்லளவை அவ்வக் காலங்களில் செலுத்துதல். “இந்நிலம் அடைகொண்டோனே, இந்நிலம் உழுது பயிர் ஏற்றி முற்றூட்டும் கொண்டு வந்து திருமுற்றத்து அளப்பதாகவும்” (முதல் இராசேந்திரன்.தெ.கல்.தொ.5, கல்.678);.

முற்றெச்சம்

முற்றெச்சம் muṟṟeccam, பெ.(n.)

   எச்சப் பொருளில் வரும் முற்று (நன்.351);; finite verb, used participially.

வினைமுற்றே எச்சப் பொருளில் ஆளப்படுவது. “கண்டனன் மகிழ்ந்தனன்” என்னும் தொடர் முற்றெச்சத்தில், “கண்டு மகிழ்ந்தான்” என வருவது.

     [முற்று + எச்சம்.]

முற்றெதுகை

முற்றெதுகை muṟṟedugai, பெ. (n.)

   அளவடியின் எல்லாச்சீர்க் கண்ணும் எதுகைவரத் தொடுப்பது (யாப்.வி.48);; rhyming of the second letter in all the feet of an {} verse.

எ.டு. கன்னியம் புன்னை யின்னிழல் துன்னிய.

     [முற்று + எதுகை.]

முற்றெரிவு

 முற்றெரிவு muṟṟerivu, பெ.(n.)

   முழுமையும் எரிக்கை (சர்வங்க தகனம்); ; burning the whole.

     [முற்று+எரிவு]

முற்றெருத்தின்செவி

 முற்றெருத்தின்செவி muṟṟeruttiṉcevi, பெ.(n.)

   எழுத்தாணி போன்ற பூவுள்ள ஒருவகைப் பூண்டு (யாழ்.அக.);; style plant, having a style – like flower.

முற்றை

முற்றை muṟṟai, கு.வி.எ.(adv.)

   முன்பு; formerly, before.

     “முற்றையு முடையமோ மற்றே” (நற்.374);.

ம. முத்த.

     [முன் → முற்றை.]

முற்றொண்டை

 முற்றொண்டை muṟṟoṇṭai, பெ.(n.)

   முள்ளுள்ள ஒரு வகைப் பூடு; thorny creeper – Capparis horrida alias c. quadriflora (சா.அக.);.

முற்றொப்பு

முற்றொப்பு muṟṟoppu, பெ.(n.)

   முழுவதும் ஒத்திருக்கை (சிவசமவா.55);; complete resemblance.

     [முற்று + ஒப்பு.]

முலகாத்து

 முலகாத்து mulakāttu, பெ. (n.)

   சந்திப்பு (இ.வ.);; interview, meeting.

த.வ. நேர்காணல், செவ்வி.

     [Ar. {} → த. முலகாத்]

முலங்கம்

முலங்கம்1 mulaṅgam, பெ.(n.)

   சல்லிக்கொடி, சல்லிக்குடல்; mesentry.

 முலங்கம்2 mulaṅgam, பெ.(n.)

   அதிமதுரம், பூடு வகை; liquorice – plant, Glycy rrhiza glabra.

முலத்தி

 முலத்தி mulatti, பெ.(n.)

   இலந்தை; a small thorny tree jujubatree – Zizyphus jujuba (சா.அக.);.

முலமுலெனல்

 முலமுலெனல் mulamuleṉal, பெ. (n.)

   ஒரொலிக் குறிப்பு (வின்.);; onom. expr. signifying humming buzzing, as of flies.

முலவை

 முலவை mulavai, பெ.(n.)

   நாய் (சங்.அக.);; dog.

     [முவ்வை → முலவை.]

முலாகலம்

 முலாகலம் mulākalam, பெ.(n.)

   பொடுதலை; a prostate plant – Lippia nadiflora (சா.அக.);.

முலாங்காய்

 முலாங்காய் mulāṅgāy, பெ.(n.)

   கும்மட்டிக் காய்; a kind of fruit of melon variety.

     [முலாம் + காய்.]

முலாங்கொடிவேர்

 முலாங்கொடிவேர் mulāṅgoḍivēr, பெ. (n.)

   முலாங்கொடியினுடைய வேர்; root of the {} creeper.

     [முலாங்கொடி + வேர்.]

முலாம்

 முலாம் mulām, பெ. (n.)

   பொன் வெள்ளிப்பூச்சு; gilding, electro-plating.

த.வ.மேற்பூச்சு

     [Ar. {} → த. முலாம்]

முலாம்பன்னி

 முலாம்பன்னி mulāmbaṉṉi, பெ.(n.)

   பன்றி வகைகளுள் ஒன்று; a kind of pig.

முலாம்பழம்

 முலாம்பழம் mulāmbaḻm, பெ.(n.)

   சந்தன நிறத்தோலையும் நீர்ச்சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய, அளவில் சிறிய பூசணி போன்ற பழம்; musk – melon.

 E. melon

     [p]

முலாயம்

 முலாயம் mulāyam, பெ.(n.)

   ஒருவகைப்பூடு; a kind of herb (சா.அக.);.

முலை

முலை mulai, பெ. (n.)

   1. பெண்ணின் மார்பகம்; woman’s breast.

     “முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டேன்” (தொல். பொருள். 77);.

     “முலையிடை முனிநர் சென்ற ஆறே” (குறுந். 39:4);,

     “சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி” (நற்.9:6);,

     “முலைபொலியாக மருப்ப நூறி” (புறநா.25:10);.

   2. பெண் விலங்குகளின் உடலில் பாலுண்டாகுமிடம்; beast’s dug.

   க. மேலெ;   ம. முல;துளு. முரிரெய்.

முலைகுடி

முலைகுடி mulaiguḍi, பெ. (n.)

   1. முலை குடிப்பிள்ளை (வின்.); பார்க்க; see {}.

   2. பேதையன் (இ.வ.);; simpleton, inexperienced person.

ம. முலகுடி.

     [முலை + குடி.]

முலைகுடிப்பிள்ளை

முலைகுடிப்பிள்ளை mulaiguḍippiḷḷai, பெ.(n.)

   1. கைக்குழந்தை; infant.

   2. பெண்ணின் மார்பில் பால் குடிக்கும் பிள்ளை; suckling child.

     [முலைகுடி + பிள்ளை.]

முலைகுயன்மீன்

 முலைகுயன்மீன் mulaiguyaṉmīṉ, பெ.(n.)

   ஒருவகைக் கடல் மீன் (யாழ்ப்.);; a kind of sea – fish.

     [முலை + குயன் + மீன்.]

     [p]

முலைகொடு – த்தல்

முலைகொடு – த்தல் mulaigoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   குழந்தைக்கு முலைப்பால் ஊட்டுதல் (C.G.);; to suckle a child.

     [முலை + கொடு-த்தல்.]

முலைக்கச்சு

 முலைக்கச்சு mulaikkaccu, பெ.(n.)

   பெண்களணியும் மார்புச் சட்டை; bodice, stays for the breast.

     [முலை + கச்சு.]

முலைக்கடுப்பு

முலைக்கடுப்பு mulaikkaḍuppu, பெ. (n.)

   குழந்தை பால் குடிக்காமல் பால் அதிகம் தங்குவதால் முலையிலேற்படும் வலி; pain in the breast or udder, due to excessive secretion of milk.

     ‘முலைக்கடுப்புக் கெடக் கறந்து’ (திவ். திருப்பா.11, உரை);.

     [முலை + கடுப்பு.]

முலைக்கட்டி

 முலைக்கட்டி mulaikkaṭṭi, பெ.(n.)

   முலையி லுண்டாகுங் கட்டி; mammary abscess.

     [முலை + கட்டி.]

முலைக்கட்டு

முலைக்கட்டு mulaikkaṭṭu, பெ. (n.)

   1. முலைக்கச்சு பார்க்க (வின்.);; see mulai-k-kaccu.

   2. முலையிற் திரண்டு நிற்கும் பாற்கட்டு; accumulation of milk in the breast.

     [முலை + கட்டு.]

முலைக்கண்

முலைக்கண் mulaikkaṇ, பெ.(n.)

முலைக்காம்பு பார்க்க; see {}.

     “துணைமுலைக் கண்கடோய் சுவடு” (திருவாச.29:5);.

ம. முலக்கண்

     [முலை + கண்.]

முலைக்கருத்தல்

 முலைக்கருத்தல் mulaikkaruttal, தொ. பெ.(vbl.n.)

   கருப்பக்குறி; blacking or pigmentation of the areola and nipple – a sign of pregnancy.

     [முலை + கருத்தல்.]

முலைக்கருப்பு

 முலைக்கருப்பு mulaikkaruppu, பெ.(n.)

   முலையின் முன்னுள்ள கருப்பு பாகம்; the black or brownish space surrounding the nipple of the female breast, this is called Areola papillaris.

     [முலை + கருப்பு.]

முலைக்காம்பு

 முலைக்காம்பு mulaikkāmbu, பெ.(n.)

   முலை முகம், கொங்கையின் நுனிப் பகுதி (C.G.);; nipple, teat – Acromastrum.

     [முலை + காம்பு.]

முலைக்காம்புவாதம்

 முலைக்காம்புவாதம் mulaikkāmbuvātam, பெ.(n.)

   முலைக்காம்பை வாளால் அறுப்பது போல் வலியை உண்டாக்கும் ஒருவகைக் காற்று பிடிப்பு (வாத); நோய்; a disease of the breast marked by intense pain as if cut by a saw (சா.அக.);.

     [முலைக்காம்பு + Skt.வாதம்.]

முலைக்காம்புவிரணம்

 முலைக்காம்புவிரணம் mulaikkāmbuviraṇam, பெ.(n.)

முலைக்காம்புவீக்கம் பார்க்க; see {}.

     [முலைக்காம்பு + Skt.விரணம்.]

முலைக்காம்புவீக்கம்

 முலைக்காம்புவீக்கம் mulaikkāmbuvīkkam, பெ.(n.)

   முலைக்காம்பு வெடித்துப் புண்ணாகும் ஒருவகை நோய்; inflammation of the nipple – Acromastitis.

மறுவ. முலைக்காம்புவிரணம்

     [முலைக்காம்பு + வீக்கம்.]

முலைக்கால்

முலைக்கால்1 mulaikkāl, பெ.(n.)

முலை பார்க்க; see mulai.

     “தடமுலைக் கால்கள்சாய” (சீவக.2542);.

     [முலை + கால்.]

 முலைக்கால்2 mulaikkāl, பெ.(n.)

   ஆட்டுக்கல் (யாழ்.அக.);; grinding stone.

முலைக்கிரந்தி

முலைக்கிரந்தி1 mulaikkirandi, பெ.(n.)

முலைப்புண் பார்க்க; see {}.

     [முலை + கிரந்தி.]

 முலைக்கிரந்தி2 mulaikkirandi, பெ. (n.)

   பூடுவகை; a plant, Barleria vitida.

     [முலை + கிரந்தி.]

முலைக்குத்து

முலைக்குத்து mulaikkuttu, பெ.(n.)

   1. முலைக்கடுப்பு பார்க்க; see {}.

   2. முலையில் ஊசியினால் குத்தினாற்போல் வலி உண்டாகும் நோய் வகை; piercing pain or lancinating pain in the breast – Mammary neuralgia – or may occur before the abscess is formed.

     “முலைக்குத்து சவலைப் பிள்ளைக்குத் தெரியுமா?” (பழ.); (சா.அக.);.

     [முலை + குத்து. முலையில் ஊசி குத்தினாற் போன்று வலியுண்டாக்கும் நோய் வகை.]

முலைக்கோள்

முலைக்கோள் mulaikāḷ, பெ.(n.)

   முலைப் பால் உண்ணுகை; suckling.

     “முலைக்கோள் விடாஅ மாத்திரை” (பொருந.141);,

     “முலைக்கோண் மறந்த புதல்வனொடு” (புறநா.211:21);.

     [முலை + கோள்.]

முலைசப்பல்

 முலைசப்பல் mulaisappal, பெ.(n.)

முலைகுடிப்பிள்ளை பார்க்க; see {}.

முலைசூப்பல்

 முலைசூப்பல் mulaicūppal, பெ.(n.)

   குழந்தை தாய் முளையுண்ணல்; to suck the breast (சா.அக.);.

முலைச்சிலந்தி

 முலைச்சிலந்தி mulaiccilandi, பெ.(n.)

   கொங்கையில் உண்டாகும் புண்கட்டி வகை (வின்.);; a kind of tumour in the breasts.

     [முலை + சிலந்தி. சிலந்தி = புண், புண் கட்டி.]

முலைத்தடம்

முலைத்தடம் mulaittaḍam, பெ.(n.)

   ஒரு வகை மார்பணி (M.E.R.720 of 1916-B);; a kind of chest ornament.

மறுவ. முலைத்தளம்

     [முலை + தடம்.]

முலைத்தளம்

 முலைத்தளம் mulaittaḷam, பெ.(n.)

   கோவில் சிலைகளுக்கு அணிவிக்கும் பொன் முதலிய மாழைகளால் செய்த முலைக்கச்சு (நாஞ்.);; a kind of metal stays for the breast, used for images in temples.

     [முலை + தளம்.]

முலைத்தாசி

 முலைத்தாசி mulaittāci, பெ.(n.)

   இலைக் கள்ளி; leaf spurge – Euphorbia nerifolia (சா.அக.);.

முலைத்தாய்

முலைத்தாய் mulaittāy, பெ.(n.)

   ஐவகைத் தாயரில் குழந்தைக்குப் பால் தருபவள்; wet nurse, one of {}.

     “பல்வினைக்கும் முலைத்தாய் பயந்தார்” (சீவக. 3096); (பிங்.);.

     [முலை + தாய்.]

ஐவகைத் தாயர் :

   1. ஈன்ற தாய்,

   2. ஊட்டுந்தாய்,

   3. முலைத்தாய்,

   4, செவிலித்தாய்,

   5. கைத்தாய் (சா.அக.);.

முலைப்பரிசம்

 முலைப்பரிசம் mulaipparisam, பெ.(n.)

முலைப்பாற்கூலி (இ.வ.); பார்க்க; see {}.

     [முலை + பரிசம். பரிசு → பரிசம்.]

முலைப்பாற்கூலி

முலைப்பாற்கூலி mulaippāṟāli, பெ.(n.)

   மணப்பெண்ணின் தாய்க்கு, அவளை வளர்த்ததன் பொருட்டு மணமகன் கொடுக்கும் பரிசப்பணம் (G.Tj.D.l,73);; bride – price, money presented by the bride – groom to the bride’s mother as compensation for having nourished her during her infancy.

     [முலைப்பால் + கூலி.]

முலைப்பாலி

 முலைப்பாலி mulaippāli, பெ.(n.)

   புற்றிலுள்ள கரையான் திரள் (யாழ்.அக.);; termites in an ant-hill.

     [முலை + பாலி.]

முலைப்பாலெண்ணெய்

முலைப்பாலெண்ணெய் mulaippāleṇīey, பெ.(n.)

   1. தாய்ப்பாலுடன் கலந்து பச்சைக் குழந்தைகளுக்கு ஊட்டும் ஆமணக்கெண்ணெய் (வின்.);; mixture of mother’s milk and castor oil, given to babies.

   2. தலையில் தேய்த்துக் கொள்ளும் மருந்து கலந்த எண்ணெய் (இ.வ.);; a medicinal oil used for the head.

     [முலைப்பால் + எண்ணெய்.]

முலைப்பால்

முலைப்பால் mulaippāl, பெ. (n.)

   தாய்ப் பால்; mother’s milk.

     “முலைப்பாற் காலத்து முடிமுறையெய்தி” (பெருங்.உஞ்சைக்.33:52);.

     [முலை + பால்.]

முலைப்பால்கூலி

 முலைப்பால்கூலி mulaippālāli, பெ.(n.)

முலைப்பாற்கூலி பார்க்க; see {}.

     [முலைப்பால் + கூலி.]

முலைப்பால்மீன்

 முலைப்பால்மீன் mulaippālmīṉ, பெ. (n.)

   ஒருவகைக் கடல்மீன் (யாழ்ப்.);; a kind of sea-fish.

     [முலைப்பால் + மீன்.]

முலைப்பால்விரை

முலைப்பால்விரை mulaippālvirai, பெ.(n.)

   கருப்புக்கொள்(ளு); (M.M.658);; black horse – gram.

முலைப்புண்

 முலைப்புண் mulaippuṇ, பெ. (ո.)

   கொங்கையில் உண்டாகும் புண் (கிரந்தி);; venereal eruption in the breasts.

     [முலை + புண்.]

சிற்றின்ப ஒழுக்கக் கேட்டினால் முலையில் உண்டாகும் புண். இது முலைச் சிலந்தியின் வேறானது.

முலைப்புற்று

 முலைப்புற்று mulaippuṟṟu, பெ.(ո.)

   கொங்கையில் வரும் புற்று நோய்; cancer breast (சா.அக.);.

முலைமற-த்தல்

முலைமற-த்தல் mulaimaṟattal,    4 செ.கு.வி.(v.i.)

   குழந்தை, பால்குடி மறத்தல் (வின்.);; to be weaned.

மறுவ. பால்மறத்தல்

     [முலை + மற-த்தல்.]

முலைமறு-த்தல்

முலைமறு-த்தல் mulaimaṟuttal,    4 செ.கு.வி. (v.i.)

   ஆ(ன்); முதலியன பால் கொடுக்க மறுத்தல் (இ.வ.);; to cease to give milk, as a cow.

     [முலை + மறு-த்தல்.]

முலைமார்பு

முலைமார்பு mulaimārpu, பெ.(n.)

   1. இதயம்; heart.

   2. மார்பு; breast.

     [முலை + மார்பு.]

முலைமுகம்

முலைமுகம் mulaimugam, பெ.(n.)

   1. முலைக்காம்பு (C.G.); பார்க்க; see {}.

   2. கொங்கை; woman’s breast.

     “முத்தார மார்பின் முலை முகந்திருகி” (சிலப். பதிக.34);.

     [முலை + முகம்.]

முலைமூக்கரிவாள்

முலைமூக்கரிவாள் mulaimūkkarivāḷ, பெ.(n.)

   வெற்றிலைக் காம்பை அரிய உதவும் இலை மூக்கரிகத்தி (நாமதீப.421);; a knife for cutting the stems of betel leaf.

     [முலை + மூக்கரிவாள்.]

முலையமுது

 முலையமுது mulaiyamudu, பெ.(ո.)

   முலைப்பால்; mother’s milk.

     [முலை + அமுது.]

முலையழற்சி

 முலையழற்சி mulaiyaḻṟci, பெ.(n.)

   பால் மடியிலுண்டாகும் வலி (M.L.);; inflammation of the udder, garget.

     [முலை + அழற்சி.]

முலையெழு-தல்

முலையெழு-தல் mulaiyeḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   பெண் பருவமடைதல்; to become an adolescent girl.

     “பிராட்டி முலையெழுந்தாப் போலேயோ நான் முலையெழுந்தபடி ” (திவ்.நாய்ச்.8:4, வியா.);

     [முலை + எழு-தல்.]

முலைவிலை

முலைவிலை mulaivilai, பெ. (n.)

முலைப் பாற்கூலி பார்க்க; see {}.

     “வரைந் தெய்துதற்கு முலைவிலையோடு புகுந்து பொன்னணிவா னின்றாரு முளர்” (இறை. களவி.23, பக்.715);,

     “முலைவிலையும் பள்ளியாரே கொள்ளப் பெறுவார்” (TA.S.ii, 81);.

     [முலை + விலை.]

முலைவெடிப்பு

 முலைவெடிப்பு mulaiveḍippu, பெ.(n.)

   முலைக்காம்பு புண்படுகை; sore teats.

மறுவ. முலைக்காம்பு வீக்கம்

     [முலை + வெடிப்பு.]

முல்லங்கிமோகரா

முல்லங்கிமோகரா mullaṅgimōkarā, பெ.(n.)

   பழைய நாணய வகை (சரவண. பணவிடு.62);; an ancient coin.

முல்லனம்

 முல்லனம் mullaṉam, பெ. (n.)

   வேலூர் மாவட்டத்தில் வேலூர் கோட்டைக்கு அருகில் உள்ள ஓர் ஊர்; a village near fort in Vellore.

     [முள்+வனம்]

முல்லை

முல்லை1 mullai, பெ.(n.)

   1. பச்சைநிறக் காம்பில் சிறிய வெண்ணிற இதழ்களைக் கொண்ட நறுமணம் மிகுந்த பூ; Arabian jasmine, Jasminum sambac.

     “முல்லை வைந்நுனை தோன்ற” (அகநா.4);.

     “பாசிலை முல்லை முகைக்கும்” (புறநா.117:9);,

     “கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை” (குறுந்.62:1);.

     “உள்ளினள் உறைவோள் ஊரை முல்லை” (நற்.59:8);. 2. கொடிவகை (L.);;

 trichotomus-flowering smooth jasmine, Jasminum trichotomum.

   3. காட்டு மல்லிகை; wild jasmine.

   4. ஊசிமல்லிகை; eared jasmine.

   5. கொடிவகை; pointed leaved wild jasmine, Jasminum malabaricum.

   6. ஈசுரமூலி; Indian birthwort.

   7. ஐந்திணையுள் ஒன்றான காடும் காடு சார்ந்த முல்லைநிலம் (தொல்.பொருள்.5);; forest, pastoral tract, one of ai-n-{}.

   8. முல்லைநிலப் பண்வகை; a melody type of the forest tracts.

   9. சாதாரிப்பண் (பிங்.);; a secondary melody type.

   10. உரிப் பொருளில் ஒன்றாகிய இருத்தல்; patient endurance of a lady during the period of separation from her lover.

     “முல்லைசான்ற புரவு” (மதுரைக்.285);.

   11. கற்பு; chastity.

     “தானுடை முல்லை யெல்லாந் தாதுகப் பறித்திட்டானே” (சீவக.686);.

   12. சிறப்பியல்பு (பு.வெ.8 : 17, உரை);; chief characteristic.

   13. வெற்றி; victory.

     “முல்லைத்தார்ச் செம்பியன்” (பு.வெ.9 : 34);.

   14. முல்லைப் பாட்டு பார்க்க; see {}.

     “பாணிரண்டு முல்லை” (பத்துப்பாட்டு, தனிப்பா.); (தக்கயாகப்.54, உரை);.

   15. முல்லைக்குழல் பார்க்க (சிலப்.17, பாட்டு 3);; see {}.

   தெ. முல்ல;   க. முல்லெ;ம.முல்ல.

     [முல் → முல்லை. முல் = மென்மை.]

 முல்லை2 mullai, பெ.(n.)

   குத்தகை (யாழ்ப்.);; contract of lease.

     [முல் → முல்லை.]

ஒருபொருள் முழுவதையும் குறித்த காலத்திற்குப் பயன்படுத்தச் செய்துகொள்ளும் ஒப்பந்தமே குத்தகை.

முல்லைக்கருப்பொருள்

 முல்லைக்கருப்பொருள் mullaikkarupporuḷ, பெ.(n.)

   முல்லை நிலத்தில் இருக்கும் பொருள்கள்; men beasts and other living creatures and other things peculiar to wood land districts such as mullai {} etc.

முல்லை நீர், முல்லைப்புள், முல்லை நில மாக்கள், முல்லை யாழ், முல்லைப் பூ.

   முல்லைக்குரியகருப்பொருள் : தெய்வம் – மால்;   உயர்ந்தோர் – குறும்பொறை நாடன், தோன்றல்;   தாழ்ந்தோர் – இடையர் இடைச்சியர்;   புள் – காட்டுக் கோழி;   விலங்கு – மான், முயல்;   ஊர் – பாடி;   நீர் – குறுஞ்சுனை, கான்யாறு;   பூ – முல்லை. கொன்றை, காயா;   மரம் – குருந்து;   உணவு – வரகு, சாமை;   பறை – ஏற்றுப்பறை;   யாழ் – முல்லையாழ்;   பண் – சதாரி;தொழில் – சாமை, வரகு விதைத்தல், கடாவிடுதல், விடைதழுவல், குரவையாடல் முதலாயின (அகநா.);.

முல்லைக்காரன்

முல்லைக்காரன் mullaikkāraṉ, பெ. (n.)

   1. குத்தகைக்காரன் (யாழ்ப்.);; lessee.

   2. பண்ணை வேலை பார்ப்பவன்; one who cultivates the land and looks after the cattle, etc., of a land-owner.

     [முல்லை + காரன்.]

முல்லைக்காலம்

 முல்லைக்காலம் mullaikkālam, பெ.(n.)

   மடங்கல், கன்னி (ஆவணி, புரட்டாசி); மாதமாகிய மழைக் காலம்; the two rainy months of August and September.

     [முல்லை + காலம்.]

முல்லைக்குழல்

முல்லைக்குழல் mullaikkuḻl, பெ.(n.)

   முல்லைக்கொடியால் அமைத்த வளையத்தை வாயினிடத்தே செறித்த இசைக் குழல் (சிலப்.17, பாட்டு, 3, உரை);; a flute or pipe with mouth – piece made of mullai creeper.

     [முல்லை + குழல்.]

முல்லைச்சிலந்தி

முல்லைச்சிலந்தி mullaiccilandi, பெ.(n.)

முலைச்சிலந்தி (இராசவைத்.98, உரை); பார்க்க; see mulai-c-cilandi.

     [முலைசிலந்தி → முல்லைச்சிலந்தி.]

முல்லைச்சூட்டு

முல்லைச்சூட்டு mullaiccūṭṭu, பெ.(n.)

   கற்பிற்கறிகுறியாக தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை; chaplet of mullai flowers, as the emblem of chastity.

     “பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார்” (சீவக. 624);.

     [முல்லை + சூட்டு.]

முல்லைத் தீம்பாணி

 முல்லைத் தீம்பாணி mullaittīmbāṇi, பெ. (n.)

   இன்றைய மோகன இராகத்தின் பண்டைய பெயர்; ancient Tamil name of ‘mögana rāga’ in music.

     [முல்லை+திம்+பாணி]

முல்லைநிலப்பயிர்

 முல்லைநிலப்பயிர் mullainilappayir, பெ.(n.)

   காராமணி, சாமை, வரகு; important pulses and millets grown in wood tracts (சா.அக.);.

     [முல்லை + நிலம் + பயிர்.]

முல்லைநிலப்புள்

 முல்லைநிலப்புள் mullainilappuḷ, பெ.(n.)

   காட்டுக் கோழி; a bird jungle bowl (சா.அக.);.

     [முல்லை + நிலம் + புள்.]

     [p]

முல்லைநிலமரம்

 முல்லைநிலமரம் mullainilamaram, பெ. (n.)

   முல்லை நிலத்து மரம்; plants growing in wood or silvan tracts.

     [முல்லை + நிலம் + மரம். கொன்றை, துளசி, காந்தள் முதலிய மரம்.]

முல்லைநிலவிலங்கு

 முல்லைநிலவிலங்கு mullainilavilaṅgu, பெ.(n.)

   மான், முயல் போன்ற விலங்குகள்; deer, rabbit etc. animals that live in silvan tracts.

     [முல்லை + நிலம் + விலங்கு.]

முல்லைப்பண்

 முல்லைப்பண் mullaippaṇ, பெ.(n.)

   முல்லை நிலத்துக்குரிய பெரும்பண் வகை (திவா.);; primary melody-type of the forest tract.

     [முல்லை + பண்.]

முல்லைப்பல்

 முல்லைப்பல் mullaippal, பெ.(n.)

   முல்லை யரும்பு போன்ற பல்; teeth resembling the jasmine bud (சா.அக.);.

     [முல்லை + பல்.]

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு mullaippāṭṭu, பெ.(n.)

   பத்துப்பாட்டினுள் நப்பூதனார் பாடிய பாட்டு; a poem in Pattu-p-{} by {}.

     [முல்லை + பாட்டு.]

பதினெண் மேற்கணக்கில், தலைவனைப் பிரிந்து இருக்கும் தலைவியின் இயல்பைக் கூறும் நூல்.

   பத்துப்பாட்டிலே மிகச் சிறிய அடியளவை உடைய பாடல் இது; 103 அடிகளையுடையது;ஆசிரியப்பாவால் இயன்றது. ஆசிரியர் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் ஆவர். இது முல்லைத் திணைக்கு உரிய இருத்தல் ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறுகிறது. போர்மேற் சென்ற தலைவன் திரும்பி வருமளவும் அவன் கூறிய சொல் திறம்பாது ஆற்றியிருந்த தலைவியின் செயலைக் கூறுகிறது. இடையே அகத்திணையான முல்லைக்குத் தொடர்பான புறவொழுக்கமாகிய வஞ்சினையும் கூறுகிறது. முல்லைத் திணையை வருணிக்கும் மற்றப் பாடல்கள் எல்லாவற்றினும் இம் முல்லைப்பாட்டு நுட்ப மிகவுடையதாய்க் காணப்படுகிறது.

பாட்டின் தொடக்கத்தில் கார்கால வருணனையும், இறுதியில் முல்லை நிலத்தின் இயல்பும், இடையில் அரசனின் பாசறை அமைப்பும் நுவலப்படுகின்றன. ‘கானம் நந்திய செந்நிலப் பெருவழி’யின் அழகு சுவைபடக் கூறப்படுகிறது.

மன்னன் பாசறையில், இடையில் வாளேந்திக் கையில் விளக்கேந்தி, அணையும் விளைக்கை அணையாது காக்கும் மங்கையர் உள்ளனர். கண்ணைக் காக்கும் இமை போல அரசனுக்குப் பாதுகாவலராய்ப் பெருமூதாளர் உள்ளனர். நாழிகை வட்டில் கொண்டு நாழிகை அறியும் நாழிகைக் கணக்கர் உள்ளனர். அடுத்து யவனர்களும் உள்ளார்கள்.

     ‘மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து

வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்’ -முல்லை : 59-61

யவனர் இயற்றிய புலித்தொடர் சங்கிலியும், பாவை விளக்கும் முல்லைப்பாட்டில் இடம் பெறுகின்றன.

     ‘உடம்பின் உரைக்கும் உரையா நாவின்

படம்புகு மிலேச்சர்’ என மிலேச்சர்கள் வருணிக்கப்படுகிறார்கள்.

இப் பாட்டு கருத்தாழம் மிகுந்து, முல்லையின் முதல், கரு, உரிப்பொருள்களைத் திறம்பட வருணிக்கிறது. முல்லைப் பாட்டின் தலைவி, நெஞ்சை ஆற்றி நிற்பதால், ‘நெஞ்சாற்றுப்படை’ என்றும் பிறிதொரு பெயர் கூறுவர் சிலர் (சி.பா. இலக்கிய வரலாறு);.

முல்லைமாறி

முல்லைமாறி mullaimāṟi, பெ.(n.)

   1. கற்பு நிலை பிறழ்ந்த-வன்-வள்; a person not stable with chastity.

   2. முடிச்சுமாறி (இ.வ.);:

 pickpocket.

     [முல்லை + மாறி.]

முல்லை, கற்புக்குக் குறியீடாக மக்கள் வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் குறிப்பிடப் பெறும் மலர்.

முல்லையர்

 முல்லையர் mullaiyar, பெ.(n.)

முல்லையாளர் (திவா.); பார்க்க; see {}.

     [முல்லை → முல்லையர்.]

முல்லையாளர்

 முல்லையாளர் mullaiyāḷar, பெ.(n.)

   முல்லைநிலமக்கள் (திவா.);; herdsmen and shepherds, as inhabitants of the forest tract.

     [முல்லை + ஆளார்.]

முல்லையாழ்

முல்லையாழ் mullaiyāḻ, பெ.(n.)

   1. முல்லைப் பண் (பிங்.);; primary melody type of the forest tract.

   2. முல்லை நில மக்களால் இசைக்கப்படும் இசைக் கருவி; a musical instrument played by the people of the mullai-tract called penta-chord.

ஐந்து நரம்புகளுள்ள யாழ் முல்லை நிலத்தில் இசைக்கப்பட்டது (சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில-தமிழ்ச் சொற்களஞ்சியம், பக்.723);.

     [முல்லை + யாழ்.]

முல்லையாழ்த்திறம்

 முல்லையாழ்த்திறம் mullaiyāḻttiṟam, பெ.(n.)

   செவ்வழிப் பண்ணினம் (பிங்.);; secondary melody type of {} class.

     [முல்லையாழ் + திறம்.]

முல்லையுரிப்பொருள்

முல்லையுரிப்பொருள் mullaiyuripporuḷ, பெ.(n.)

முல்லை1, 10 பார்க்க; see mullai 1, 10.

     [முல்லை + உரி + பொருள்.]

முல்வயன்

 முல்வயன் mulvayaṉ, பெ.(n.)

முல்வாயன் (யாழ்.அக.); பார்க்க; see {}.

முல்வாயன்

 முல்வாயன் mulvāyaṉ, பெ.(n.)

   கறையான் வகை (யாழ்.அக.);; a kind of white ant.

     [முள் + வாயன் – முள்வாயன் → முல்வாயன்.]

முளகரணை

 முளகரணை muḷagaraṇai, பெ.(n.)

   மிளகு கரணை (வின்.);; lopez root.

தெ. மொளககூர.

     [மிளகுகரணை → முளகரணை.]

முளகரியம்

 முளகரியம் muḷagariyam, பெ.(n.)

   அகத்தி (சங்.அக.);; West Indian pea-tree.

முளகாய்

 முளகாய் muḷakāy, பெ.(n.)

   மிளகாய்; chilly (சா.அக.);.

     [மிளகாய் → முளகாய் (கொ.வ.);.]

முளகி

 முளகி muḷagi, பெ.(n.)

மிளகுச்சம்பா நெல் வகை;a {}

 paddy of superior quality (சா.அக.);.

     [மிளகி → முளகி.]

முளகு

 முளகு muḷagu, பெ.(n.)

   கருப்பு மிளகு; black реpper (சா.அக.);.

     [மிளகு → முளகு (கொ.வ.);.]

முளச்சூரிச்சி

 முளச்சூரிச்சி muḷaccūricci, பெ.(n.)

   தூதுவளை; a prickly Climber – Solanum trilobatum (சா.அக.);.

முளராவள்ளி

 முளராவள்ளி muḷarāvaḷḷi, பெ.(n.)

   மர வள்ளி; tapioca – Mani hot utilissima (சா.அக.);.

முளரி

முளரி muḷari, பெ.(n.)

   1. தாமரை; lotus.

     “முளரிமுக நாகம்” (சீவக.2870);,

     “முளரி மருங்கின் முதியோள் சிறுவன்” (புறநா. 278:2);.

   2. கோடாகோடி; ten million crores.

     “கடாமுகத்த முளரிக் கணக் கவால்” (கம்பரா.வானரர்க.32);.

   3. நான்முகனு லகம் (தக்கயாகப்.240, உரை);; Brahma’s world.

   4. முட்செடி (பிங்.);; bramble,

   5. காடு (பிங்.);; jungle.

   6. முட்கள்ளி; thorny twig, used by birds in building nests.

     “முளரியங் குடம்பை” (நற்.384);. 7. விறகு;

 firewood.

     “தகரமுளரி நெருப்பமைத்து” (நெடுநல்..55);.

   8. வேள்வி விறகு (யாழ்.அக.);; sacrificial fuel.

   9. நெருப்பு (பிங்.);; fire.

   10. கடைக் கொள்ளி (பிங்.);; firebrand.

   11. காய்ச்சல் (இராசவைத்.163);; fever.

   12. நுண்மை (சூடா.);; subtletly.

தெ. முளலரு;க., ம. முளலர்.

     [முள் + அலரி.]

முளரிநாளம்

 முளரிநாளம் muḷarināḷam, பெ.(n.)

   தாமரை வளையம்; the coil of the stalk of the lotus.

     [முளரி + நாளம்.]

முளரிப் பூ

 முளரிப் பூ muḷarippū, பெ.(n.)

இளஞ்சிவப்பு

   நிற இனிய மணமுள்ள அழகு ரோசா மலர்; thomy shrub bearing beautiful and sweet smelling flowers.

     [முளரி+பூ]

முளரிப்பகை

 முளரிப்பகை muḷarippagai, பெ.(n.)

   நிலவு; moon, as the enemy of the lotus.

     [முளரி + பகை.]

முளரிப்பாவை

முளரிப்பாவை muḷarippāvai, பெ.(n.)

   செந்தாமரை மலரில் இருக்கும் அலைமகள் (இலக்குமி);; Laksmi, as seated on a lotus.

     “பவளவாய் முளரிப்பாவை” (பாகவத.i, பரிட்சித்துவின்.64);.

     [முளரி + பாவை.]

முளரியான்

 முளரியான் muḷariyāṉ, பெ.(n.)

தாமரை மலரில் இருக்கும் நான்முகன்;{},

 a seated on a lotus.

     [முளரி → முளரியான்.]

முளளககாரா

 முளளககாரா muḷaḷagagārā, பெ. (n.)

   ஒரு வகைச்சிறு கடல் மீன்; a kind of sea fish small in size.

     [முள்ளு+காரா]

முளவு

முளவு1 muḷavu, பெ.(n.)

   1. முள்ளம் பன்றி; porcupine, Hystrix leucura.

     “முளவுமாத் தொலைச்சிய” (புறநா.325:5);.

   2. முட்கோல்; goad.

      “முளவுகோல் கயிறுபற்றி” (கந்தபு. சூர. வதை.45);.

     [முள் → முளவு.]

 முளவு2 muḷavu, பெ.(n.)

   1. முள்; thorn.

   2. முட்புதர்; thorn shrub.

   3. முண் முருங்கை; East Indian coral tree.

     “முளவு முருக்கு முருங்க வொற்றி” (பெருங். உஞ்சை. நரும.51:44);.

     [முள் → முளவு.]

முளா

முளா muḷā, பெ.(n.)

   முள்ளம் பன்றி (நாமதீப. 221);; porcupine.

மறுவ. முளவு

     [முள் → முளா.]

 முளா2 muḷā, பெ.(n.)

முள்ளங்கி (மலை.); பார்க்க;see {}.

முளி

முளி1 muḷidal,    2 செ.கு.வி.(v.i.)

   1. உலர்தல்; to dry.

     “முளிமுதல் மூழ்கிய வெம்மை” (கலித்.16);,

     “முளிபுற் கானங் குழைப்பக் கல்லென” (புறநா.160:2);,

     “முளியிலை கழித்தன முகிழிண ரொடுவரு” (நற்.53:7);.

   2. வேதல்; to burn;to be scorched.

     “ஆரெயி லோரழ லம்பின் முளிய” (பரிபா.5:25);.

   3. கெடுதல்; to perish.

     “முளிந்த தீவினையான்” (விநாயகபு. 22:2);.

    4. முற்றுதல்; to mature.

     “முளிபுல்லுங் கானமுஞ் சேரார்” (ஆசாரக்.57);.

    5. தோய்தல்; to curdle.

     “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்” (குறுந். 167);.

க. முளி.

 முளி2 muḷittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. உலர்தல் (நாமதீப.757);; to dry.

   2. வறத்தல் (யாழ்.அக.);; to become dried.

    3. காய்தல் (யாழ்.அக.);; to become scorched.

 முளி3 muḷidal,    2 செ.கு.வி. (v.i.)

   பொங்குதல்; to boil up.

சோறு முளிந்து வருகிறது (உ.வ.);.

     [மிளிர் → மிளி → முளி → முளி-தல்.]

 முளி4 muḷi, பெ.(n.)

   1. உலர்ச்சி; dryness.

     “முளிவெள்ளெலும்பும்” (தேவா.326, 6);.

   2. வாட்டம் (பிங்.);; faded condition.

   3. வற்றிய பொருள்; that which is dry.

நெல்லிமுளி.

 முளி5 muḷi, பெ.(n.)

   1. உடல் மூட்டு; joint of the body.

     “திகழ்முச் சாணென்பு முளியற” (தத்துவப்.133);.

   2. மரக்கணு (யாழ்.அக.);; knot in trees.

   3. கணுக்கால் (வின்.);; ankle.

     [முழி → முளி5.]

 முளி6 muḷi, பெ.(n)

   செம்முள்ளிச் செடி வகை (தைலவ.தைல.72);; thorny nail-dye.

     [முள் → முளி6.]

முளிதயிர்

முளிதயிர் muḷidayir, பெ.(n.)

   இறுகிய கட்டித்தயிர்; thick curd.

     “முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்” (குறுந்.167:1);.

     [முளி + தயிர்.]

முளிவெதிர்

முளிவெதிர் muḷivedir, பெ.(n.)

   உலர்ந்த மூங்கில்; tried bamboo.

     “முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசை” (குறுந். 304:2);.

     [முளி + வெதிர். வெதிர் = மூங்கில்.]

முளு-தல்

முளு-தல் muḷudal,    2 செ.கு.வி. (v.i.)

முளி3-தல் பார்க்க;see {}.

சோறு முளுந்து வருகிறது (இ.வ.);.

     [முளி → முளு → முளு-தல்.]

முளை

முளை1 muḷaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. பயிரில் முளை முதலியன தோன்றுதல்; to spring, to sprout, as shoots;

 to germinate as seeds.

நிலத்தில் போட்ட விதை முளைத்துவிட்டது (உ.வ.);.

     “ஒன்றாய் முளைத்தெழுந்து” (திருவாச. 10: 8);.

   2. கதிரவன் தோன்றுதல்; to rise, appear, come to light.

     “காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப” (மணிமே.8:18);.

வெள்ளி முளைத்துவிட்டது.

   3. உடலில் புதிதாக உறுப்புகள் வளர்தல்; to grow as teeth, horns, hair.

மாட்டுக்குக் கொம்பு முளைத்து விட்டது (உ.வ.);, பையனுக்கு மீசை முளைக்க ஆரம்பித்துவிட்டது (உ.வ.);.

ம. முளை;க. மொளெ;தெ. மொலத்சு.

     [முல் → முள் → முளை → முளை-த்தல்.]

 முளை2 muḷaidal,    2 செ.கு.வி.(v.i.)

முளை1-த்தல் பார்க்க;see {}.

போட்ட விதை இன்னும் முளையவில்லை (உ.வ.);.

     [முல் → முள் → முளை → முளை-த்தல்.]

 முளை3 muḷai, பெ. (n.)

   1. வித்தினின்று முளைத்த சிறு வெளிப்பாடு; shoot, tender shoot of trees or plants, seed – leaf.

     “வித்திய வெண்முளை” (ஐங்குறு.29);. “முற்றா மூங்கில் முளைதரு பூட்டும்” (அகநா.85.8);.

      “இருவெதிர் ஈன்ற ஏற்றிலைக் கொழுமுளை” (நற்.116:4);.

      “வன்றிணி நீண்முளை போலச் சென்றவண்” (புறநா. 73:10);.

பயறு முளைவிட்டுள்ளது. வயலில் போட்ட உளுந்து முளைத்துவிட்டது. அந்த இடத்தில் புல்கூட முளைக்கவில்லை.

    2. மரக்கன்று; young tender plant, seedling.

     “அதன்றாள் வழியே முளையோங்குபு” (சீவக.223);.

   3. மூங்கில் (பிங்.);; bamboo.

தெ. மொலக;க. மொளெ;ம. முள;து. முளெ.

 E. shoot, to dart;to thrust forward;to send forth new parts, as a plant (சு.வி.42);.

     [முள் → முளை = முற்படும் அல்லது முட்டும் வேர் (சு.வி.42);.]

 முளை4 muḷai, பெ.(n.)

   1. தண்டாய்தம் (பிங்.);; club with knobs.

     “முசுண்டியு முளையும்” (கம்பரா.பிரமாத்.108);.

   2. குறுந்தறி; peg, stake.

      “குத்து முளை செறித்த விதானத்து” (பெருங்.இலாவான.5:24);.

கன்றை முளை அடித்துக்கட்டு.

    3. திரிகையின் அச்சு (இ.வ.);; pivot, as of a millstone.

   4. திரிகையின் கைப்பிடி (இ.வ.);; handle, as of a millstone.

   5. பிளப்பில் அடிக்க உதவும் கூர்மையான சிறிய மரத்துண்டு; wedge-shaped piece of wood used for tightening or securing.

மரப்பிளப்பில் ஒரு முளையை அடித்துப் பையை மாட்டு.

   6. முனை; sharp end or point.

     “முள் ளுறழ் முளை யெயிற்று” (கலித்.4);.

     [முளை3 → முளை4.]

 முளை5 muḷai, பெ.(n.)

   1. தோலில் எழும் கட்டியின் முளை; core of a boil.

கட்டி உடைந்தாலும் முளை வெளிவரவில்லை.

   2. மூலமுளை; piles.

     [முளை3 → முளை5.]

 முளை6 muḷai, பெ.(n.)

   1. கதவு முதலியவற்றின் குடுமி; pivot, pin of a door.

   2. நாதாங்கி மாட்ட உதவும் கதவுறுப்பு (வின்.);; staple of a padlock.

   3. முத்திரைச்சு (யாழ்.அக.);; die.

   4. ஒரு பழைய நாணயம்; an ancient coin.

     [முளை3 → முளை6.]

 முளை7 muḷai, பெ.(n.)

   1. இளமை; tenderness.

     “முளையமை திங்கள்” (கம்பரா.கும்பக.16);.

   2. சிறுகுழந்தை; little child.

   3. மகன் (பிங்.);; son.

ம.முள;து.முளெ;க.மொளெ;தெ. மொலக்க.

     [முல் → முள் → முளை. முல் – இளமைக் கருத்துவேர்.]

 முளை muḷai, பெ. (n.)

   மாடுகளைக் கட்ட நிலத்தில் ஊன்றும் தடித்த மரக்குச்சி; a short pole fixed to tie the cattle in one place.

மறுவ முளைக்குச்சி

     [முள்-முளை]

முளை ஒதுங்கல்

 முளை ஒதுங்கல் muḷaioduṅgal, பெ. (n.)

   விதை நெல்லை ஐந்து நாள் காய வைத்து எடுத்து வைத்தல்; preserving the choice paddy for seeding purpose.

     [முளை (முளை நெல்);+ஒதுங்கல்]

முளைகடாவு

முளைகடாவு1 muḷaigaṭāvudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஆப்படித்தல்; to drive a wedge.

     [முளை + கடாவு-தல்.]

 முளைகடாவு2 muḷaigaṭāvudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   அடக்கி வைத்தல்; to restrain, restirct.

     [முளை + கடாவு-தல்.]

முளைகட்டல்

 முளைகட்டல் muḷaigaṭṭal, பெ.(n.)

   திருமணம் முதலிய நிகழ்வின் போது ஒன்பான் தவசங்களைப் பாலிகைளில் விதைக்கும் ஒரு சடங்கு; ceremony of sowing nine kinds of seeds in pots and allowing them to sprout, as in weddings, festivals, etc.

     [முளை + கட்டல். கட்டல் = முளை தோன்றுவதற்காக தவசத்தை விதைத்தல்.]

முளைகட்டு-தல்

முளைகட்டு-தல் muḷaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

முளைக்கட்டு-தல் பார்க்க;see {}.

முளைக்கட்டு-தல்

முளைக்கட்டு-தல் muḷaikkaṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   1. செம்மண்ணால் துவரை முதலிய பயறுவகைகளைப் பதம் செய்தல்; to season pigeon – pea by mixing it with wet red loam, in preparing dholl.

   2. ஊறவைத்த விதையை நீரில்லாமல் மூடி வைத்து முளை வரும்படி செய்தல்; process pulses by making them sprout.

முளைக்கட்டிய கொத்துக் கடலையில் புரதச் சத்து அதிகம்.

     [முளை3 + கட்டு-தல்.]

முளைக்காசரி

 முளைக்காசரி muḷaikkācari, பெ.(n.)

   மரக்காளான்; mushroom growing on a tree (சா.அக.);.

முளைக்காம்பு

 முளைக்காம்பு muḷaikkāmbu, பெ.(n.)

   சிறு தடி; pole or stake set up on the ground to tie the cow, and other cattles, yoke.

கொட்டகையில் மாடு கட்டுவதற்காகத் தரையில் அறையப் பட்டிருக்கும் சிறுதடி. தறி முள்ளங் குச்சி என்றும் கூறுவர். தரையில் மாடுகட்ட முளைக்காம்பு அடிச்சிட்டியா?

     [முளை + காம்பு.]

முளைக்காற்கோதை

முளைக்காற்கோதை muḷaikkāṟātai, பெ. (n.)

   நெல் முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை; a garland of paddy-sprouts.

     “முளைக்காற் கோதை துயல்வர” (பெருங். இலாவாண.5:23);.

     [முளை3 + கால் + கோதை.]

முளைக்கீரை

முளைக்கீரை muḷaikārai, பெ.(n.)

   உணவுக்குப் பயன்படும் கீரை வகை; a kind of edible greens.

தெ. மொலக்கீர

     [முளை3 + கீரை.]

இது இளஞ்சிவப்பு நிறக்காம்புகளையும் சிறு சிறு இலைகளையும் உடைய கீரை வகை.

முளைக்குச்சி

 முளைக்குச்சி muḷaikkucci, பெ.(n.)

   நுகத்தடியில் பூட்டுங்கோல் (உ.வ.);; pin, as of a yoke.

     [முளை + குச்சி.]

 முளைக்குச்சி muḷaikkucci, பெ. (n.)

கால் நடைகளைக் கயிற்றில் கட்டுவதற்காக நிலத்தில் நடப்படும் சிறிய மரக்கம்பு

 a short polefixed to tie the cattle in one place.

     [முளை+குச்சி]

முளைக்குச்சு

 முளைக்குச்சு muḷaikkuccu, பெ.(n.)

முளைக்குச்சி பார்க்க;see {}.

     [முளை + குச்சு.]

முளைக்குடம்

முளைக்குடம் muḷaikkuḍam, பெ.(n.)

   திருமணம் போன்ற விழாக்களில் வைக்கப்படும் முளைவிட்ட ஒன்பான் தவசங்கள் நிறைந்த மட்பாண்டம்; pot in which nine kinds of pulses are sown and allowed to sprout on auspicious occasions.

     “முளைக்குடந் தூபம்…. வைம்மின்” (திருவாச.9:1);.

     [முளை + குடம்.]

முளைக்கூச்சு

 முளைக்கூச்சு muḷaikāccu, பெ.(n.)

முளைக்குச்சி (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [முளைக்குச்சி → முளைக்கூச்சு.]

முளைக்கூர்ச்சு

 முளைக்கூர்ச்சு muḷaikārccu, பெ.(n.)

முளைக்குச்சி (வின்.); பார்க்க;see {}.

     [முளைக்குச்சி → முளைக்கூர்ச்சு.]

முளைக்கேசிகம்

 முளைக்கேசிகம் muḷaigācigam, பெ. (n.)

   வெண்துத்திப் பூக்கள்; abutilon with white flowers (சா.அக.);.

முளைக்கொட்டு

முளைக்கொட்டு1 muḷaikkoṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

முளைக் கட்டு-தல் பார்க்க;see {}.

     [முளை + கொட்டு-தல்.]

 முளைக்கொட்டு2 muḷaikkoṭṭu, பெ.(n.)

   1. கரகமெடுத்தல் போன்ற விழாக்களின் இறுதியில் மகளிர் முளைப் பாலிகையை எடுத்துக் கொண்டு போய் நீரில் விடுஞ்செயல் (இ.வ.);; ceremony of women taking the {} to a river or tank and casting it away, as at the close of a karagam festival.

   2. மகளிர் முளைப் பாலிகையைச் சுற்றி ஆடும் கும்மிக் கூத்து (வின்.);; singing and dancing by women around pots of growing sprouts (w.);.

மறுவ. முளைப்பாலிகை கொட்டு

     [முளை + கொட்டு.]

முளைக்கோடு

முளைக்கோடு muḷaikāṭu, பெ.(n.)

   மூங்கில் முளை போன்ற கொம்பு; horn as like a bamboo bud.

     “நாகுபிடி நயந்த முளைக்கோட்டிளங்களிறு” (குறுந்.346:1);.

     [முளை + கோடு.]

முளைக்கோல்

முளைக்கோல் muḷaikāl, பெ.(n.)

   நிலத்தில் அடித்த கோல்; pole or stake set up on the ground.

      “முளைக்கொற் பெருந்திரை வளைத்த வட்டத்து” (பெருங். உஞ்சைக். 47:45);.

     [முளை + கோல்.]

முளைச்சாறுமூலி

 முளைச்சாறுமூலி muḷaiccāṟumūli, பெ.(n.)

   பாலூட்டி வகைகளில் ஆண்பால் உறுப்புக்கு இணையான சுரப்பிக் கூட்டத்தால் ஆன பெருஞ்சுரப்பிச் செடி; a prostate plant – Gratiola moniera (சா.அக.);.

முளைதெளி-த்தல்

முளைதெளி-த்தல் muḷaideḷiddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. திருமணம் போன்ற விழாக்களில் பாலிகைகளில் ஒன்பான் தவசங்களை விதைத்தல் (இ.வ.);; to perform the ceremony of sowing nine kinds of seeds in pots, as at wedding, festivals, etc.

   2. முளைத்த விதையை வயலில் விதைத்தல் (வின்.);; to sow a field with grains that have been allowed to sprout.

     [முளை + தெளி-தல்.]

முளைத்தண்டு

 முளைத்தண்டு muḷaittaṇṭu, பெ.(n.)

முளைக்கீரை (இ.வ.); பார்க்க;see {}.

     [முளை + தண்டு.]

முளைத்தண்ணீர்

முளைத்தண்ணீர் muḷaittaṇṇīr, பெ. (n.)

   1. நெல் முளைக்குப் பாய்ச்சிய நீர்; water for seedings.

   2. முளை கிளம்பியதும் வயலினின்று வடிக்கும் நீர் (இ.வ.);; water drained from fields after the sprouting of the seeds.

     [முளை + தண்ணீர்.]

முளைத்தவசம்

முளைத்தவசம் muḷaittavasam, பெ.(n.)

   1. ஒன்பான் தவசம் (நவதானியம்);; the nine kinds of grain.

   2. ஊற வைத்து முளையுண்டான பின் உலர்த்தி வறுத்த தவசம்; malt;

 grain steeped in water and dried in a kiln.

     [முளை + தவசம்.]

முளைத்தானியம்

 முளைத்தானியம் muḷaittāṉiyam, பெ.(n.)

முளைத்தவசம் பார்க்க;see {}.

     [முளை + Skt. தானியம்.]

முளைத்தாலி

முளைத்தாலி muḷaittāli, பெ.(n.)

   1. கழுத்தணியிற் கோக்கும் முளைபோன்ற பொன்னகை (திவ்.திருப்பா.7, வியா. பக்.99);; a kind of gold bead for stringing in a necklace, shaped like tender shoots.

   2. சிறுமியர் கழுத்திலணியப் பெறும் சிறுமணி மாலை; a kind of neck-lace worn by girl-child.

     [முளை + தாலி.]

முளைத்தாழ்வு

 முளைத்தாழ்வு muḷaittāḻvu, பெ.(n.)

   விதை முளையாமை (வின்.);; failure of seeds to sprout.

     [முளை + தாழ்வு.]

தரம் தாழ்வான, குறைவான விதையாகையால் முளைப்பதில்லை.

முளைத்திங்கள்

முளைத்திங்கள் muḷaittiṅgaḷ, பெ.(n.)

   பிறை நிலவு; crescent moon.

     “முளைத் திங்கள் சூடி” (தேவா.257, 2);.

     [முளை + திங்கள்.]

முளைத்தேங்காய்

 முளைத்தேங்காய் muḷaittēṅgāy, பெ. (n.)

   முளைவிட்ட தேங்காய் (உ.வ.);; coconut that has sprouted before planting.

     [முளை + தேங்காய்.]

முளைநீர்

 முளைநீர் muḷainīr, பெ. (n.)

விதை நெல் முளைத்தவுடன் பாய்ச்சும் நீர்

 watering the paddy field as soon as the seed sprouts.

மறுவ. எடுப்பு நீர், கங்களவு

முளைப்பயறு

 முளைப்பயறு muḷaippayaṟu, பெ.(n.)

   முளையுடன் கூடிய பயறு; pulses which have just sprouted.

     [முளை + பயறு.]

முளைப்பருப்பு

 முளைப்பருப்பு muḷaipparuppu, பெ.(n.)

   செம்மண் கொண்டு முளைகட்டிய பருப்பு; dholl prepared from pigeon – pea seasoned by mixing it with wet red loam.

     [முளை + பருப்பு.]

முளைப்பாரி

முளைப்பாரி muḷaippāri, பெ.(n.)

   1. முளைப் பாலிகை பார்க்க;see {}.

   2. வீட்டில் யாராவது இறந்தபின் ஒன்பான் தவசங்களை (நவதானியங்களை); விதைத்து, அது வளரும் செழிப்பை பொருத்து, குடும்ப நன்மை தீமைகள் கணிக்கப்படும்; a custom of sowing the nine pulses in a pot, after one’s death in a house and foretell the good or bad times that come’s to the following years by its growth.

     [முளை + பாரி.]

முளைப்பாலிகை

முளைப்பாலிகை muḷaippāligai, பெ. (n.)

   திருமணம் போன்ற விழாவுக்காக ஒன்பான் தவசங்கள் (நவதானியம்); முளைக்க வைத்த மட்பாண்டம்; pot in which nine kinds of seeds are sown, as at weddings, festivals, etc.

     “வெண்டாமரை முளைப் பாலிகை” (வெங்கைக்கோ.97);.

மறுவ. முளைப்பாரி

     [முளை + பாலிகை.]

சிற்றூர்த் தெய்வங்களுக்குக் குறிப்பாகப் பெண் தெய்வங்களுக்கு கன்னி (புரட்டாசி); மாதத்தில் மழை வேண்டி மட்பாண்டங்களில் ஒன்பான் தவசங்களை முளையிட்டு வழிபடும் பழக்கம் இன்றும் கிராம மக்களிடம் காணப்படுகிறது.

முளைப்பு

 முளைப்பு muḷaippu, பெ.(n.)

   விதைகள் முளைக்கும் செயல்; seeds germination.

புழுதியாக உழுதால் எள் முளைப்புச் சிறப்பாக இருக்கும். வேளாண் அலுவலகம் மூலமாக நல்ல முளைப்புத் திறன் உள்ள விதைகளைப் பெற வேண்டும்.

     [முளை → முளைப்பு.]

 முளைப்பு muḷaippu, பெ.(n.)

   பல் முளைக்கை (தசனோற்பவம்);; dentition, teething.

     [முளை-முளைப்பு]

முளைப்புழுதிச்செய்

முளைப்புழுதிச்செய் muḷaippuḻudiccey, பெ.(n.)

   நாற்றங்கால் நிலம்; seedling bed.

     “இத்தேவர் திருமுளைப்புழுதி செய்க்குத் தெற்கும்” (தெ.இ.கல்.தொ.8, கல்.585);.

     [முளை + புழுதி + செய். நாற்றங்கால் விழுவதற்கு ஏற்ற வகையில் பண்படுத்திய நிலம்.]

முளைமால்

முளைமால் muḷaimāl, பெ.(n.)

   1. ஏரியில் நீர்பெருகும் அளவைக் குறித்தற்கு முளையடித்த எல்லைக் கட்டு (இ.வ.);; boundary fixed by pegs, marking the utmost spread of water in a tank.

   2. ஏரியின் உள்வாயில் விளைச்சல் செய்யக் கூடாதென வரையறுத்த எல்லை (R.T.);; a certain limit in the bed of a tank within which cultivation is prohibited.

     [முளை + மால்.]

முளைமூலம்

முளைமூலம் muḷaimūlam, பெ.(n.)

   மலவாயில் முளையோடு கூடிய மூல நோய் (பதார்த்த.416, உரை);; piles, fistula in ano.

     [முளை + மூலம்.]

முளையடி-த்தல்

முளையடி-த்தல் muḷaiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. முளையை அடித்து உட்செலுத்துதல்; to nail, to drive pegs.

   2. காசில் (நாணயத்தில்); முத்திரை பதித்தல் (வின்.);; to coin;to stamp metal.

     [முளை + அடி-த்தல்.]

முளையரில்

முளையரில் muḷaiyaril, பெ.(n.)

   மூங்கிற்றூறு; thicket of bamboos.

     “முளையரிற் பிணங்கிய முள்ளுடை யிலவத்து” (பெருங்.உஞ்சைக்.56:9);.

     [முளை + அரில்.]

முளையாணி

முளையாணி muḷaiyāṇi, பெ.(n.)

   1. கதவு நின்றாடும் இரும்புக் குடுமி (யாழ்.அக.);; iron pin of a door.

   2. தாழ்ப்பாள் விழும் இரும்புக் கூடு (வின்.);; staple.

     [முளை + ஆணி.]

முளையான்

 முளையான் muḷaiyāṉ, பெ.(n.)

   சிறு குழந்தை; little child.

     ‘இந்த முளையான் பேச்சை யார் கேட்கிறது’ (வின்.);.

     [முளை → முளையான் (வே.க.);.]

முளையுருளி

முளையுருளி muḷaiyuruḷi, பெ.(n.)

   1. வாடி யழிந்த பயிர்; withered crops.

   2. இளமையிற் கேடடைந்தவன்; person spoilt even in his boyhood.

     [முளை + உருள் – முளையுருள் → முளையுருளி.]

முளையெறி-தல்

முளையெறி-தல் muḷaiyeṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   முளைத்த விதையை வயலில் விசிறுதல்; to sow grain that has been allowed to sprout.

     [முளை + எறி – தல்.]

முளைவாளெயிற்றள்

முளைவாளெயிற்றள் muḷaivāḷeyiṟṟaḷ, பெ.(n.)

   நாணல் முளை போன்ற ஒளியுடைய பல்லினள்; brightness of teeth as like kaus spilt.

     “இளையள் முளைவாள் எயிற்றள்” (குறுந்.119:3);.

     [முளை + வாள் + எயிற்றள்.]

முளைவிடு-தல்

முளைவிடு-தல் muḷaiviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   விதை போன்றவற்றில் இருந்து முளை கிளம்புதல்; germinate, put forth shoots.

அவரைவிதை முளைத்து விட்டது.

     [முளை + விடு-தல்.]

முளைவித்திரதி

 முளைவித்திரதி muḷaividdiradi, பெ.(n.)

   பிள்ளை பெற்ற பெண்களுக்கு பாலிருந்தாலும் இல்லா விட்டாலும் முலையின் நரம்புகளில் உண்டாகும் ஒருவகையான சீழ்க்கட்டி; a kind of abscess in the breast of woman (சா.அக.);.

     [முலை + Skt. வித்திரதி.]

முள்

முள்1 muḷ, பெ.(n.)

   1. மரஞ்செடி, கொடிகளில் கூர்மையுடையதாய்ச் சிறுகுச்சி போற் காணப்படும் பகுதி; thorn, brier, thistle, bristle, spine.

     “இளைதாக முண்மரங் கொல்க” (குறள், 879);,

     “முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்” (அகநா.6:19);,

     “முழுவலி முள்ளெயி றழுத்திய கதவி” (நற். 18:3);. காலில் முள் குத்திவிட்டது.

   2. குத்தக் கூடிய கூர்மையுடைய பொருள்; anything sharp or pointed, as fish-bone, porcupine’s quill, etc.

மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டுவிட்டது.

   3. தாற்றுக்கோல்; goad, spur.

      “முள்ளிட் டூர்மதி வலவ” (ஐங்குறு.481);.

    4 . கடிவாளம்; bit.

     “முள்ளுறீஇச் செய்கயி றாய்ந்தன” (சீவக. 2214);.

   5. இறகினடி; quill or springing point of feather.

      “இதன் முட் செந்நனை” (அகநா.23);.

    6. பலாக்காய்மேற் காணப்படும் கூரிய முனைகள் (வின்.);; the rough points on the rind of the jack fruit.

   7. முள் வடிவாகச் செய்யப்பட்ட கருவி; fork;

 sharp-pointed instrument.

   8. துலாக் கோலின் நடுவில் சம நிலையைக் காட்டும் ஊசி; index of a balance.

   9. கடிகாரத்தில் காலத்தைக் காட்டும் ஊசி; hand of a clock or time-piece.

   10. கூர்மை; sharpness.

     “முள்வாய்ச் சங்கம்” (சிலப்.4:78);.

   11. நுண்மை (சூடா.);; minuteness.

   12. புறாவின் ஆண்குறி (இ.வ.);; male organ of a pigeon.

   தெ., க., ம. முள்ளு;து. முள்.

     [முல் = கூர்மை. முல் → முள்.]

     “முள்ளுமேல் சீலை போட்டால் மெல்ல மெல்ல தான் எடுக்க வேண்டும்”.

     ” முள்ளுக்குக் கூர்மையும் துளசிக்கு மணமும் இயற்கை” (பழ.);,

     “முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?” (பழ.);.

முள்கரண்டி

 முள்கரண்டி muḷkaraṇṭi, பெ.(n.)

   உணவுப் பொருளைக் குத்தி எடுத்துச் சாப்பிடுவதற்குப் பயன்படக் கூடிய வகையில் முன்பகுதியில் கூரிய முனைகளை உடைய கருவி; fork.

     [முள் + காண்டி.]

     [p]

முள்கா-த்தல்

முள்கா-த்தல் muḷkāttal,    6 செ.கு.வி.(v.i.)

   குந்தியிருத்தல்; to sit with arms and legs folded.

     “சான்றோர் முசுப்போல முள்காந்திருப்பர்” (நன்.96, விருத்.);

     [முள்கு + ஆ-த்தல்.]

முள்கு-தல்

முள்கு-தல் muḷkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. முயங்குதல்; to embrace,

     “இளமுலை முகிழ்செய முள்கிய” (கலித்.125);.

   2. உட்செல்லுதல்; to enter;pierce.

     “அமர்க்க ணாமா னருநிற முள்காது” (நற்.165);.

தெ. மெலிகொநு, மெலகு.

முள்கொடிச்சி

 முள்கொடிச்சி muḷkoḍicci, பெ.(n.)

   கண்டங்கத்திரி; thorny plant – Solanum јасquini (சா.அக.);.

முள்சீதா

 முள்சீதா muḷcītā, பெ.(n.)

முள்ளுச்சீத்தா பார்க்க;see {}.

     [முள்ளுச்சீத்தா → முள்சீதா.]

முள்பட்டறை

 முள்பட்டறை muḷpaṭṭaṟai, பெ.(n.)

   வார்படக் கருவிகள் செய்யும் பட்டறை (முள்ளுப் பட்டறை); (கோவை.);; factory where, casting metals, and manufacturing, instrument from it.

முள்மகிழ்

 முள்மகிழ் muḷmagiḻ, பெ.(n.)

   ஒருவகை மரம் (L.);; a kind of woolly ironwood, Sideroxylon tomentosum.

     [முள் + மகிழ்.]

முள்முரண்டை

 முள்முரண்டை muḷmuraṇṭai, பெ.(n.)

   கொடிவகை (L.);; necklace berried climbing caper, Muma arenaria.

     [முள் + முரண்டை.]

முள்மூவிதழ்

 முள்மூவிதழ் muḷmūvidaḻ, பெ.(n.)

   சப்பாத்துக் கற்றாழை;இலைக்கற்றாழை; prickly aloe – Spiked aloe (சா.அக.);.

     [முள் + மூவிதழ்.]

முள்ளங்கத்திரி

 முள்ளங்கத்திரி muḷḷaṅgattiri, பெ.(n.)

   கத்திரி வகை (L.);; woolly sinuate bluish – flowered prickly nightshade, Solanum melongena.

     [முள் + அம் + கத்தரி.]

முள்ளங்கி

முள்ளங்கி muḷḷaṅgi, பெ.(n.)

   சமையலில் பயன்படுத்தும் வெள்ளை நிறத்தில் அல்லது வெளிர்ச் சிவப்பு நிறத்தில் கூம்பு போன்ற வடிவத்தில் உள்ள கிழங்கு; a kind of radish, Raphanus sativus.

முள்ளங்கிக் குழம்பு.

தெ. முள்ளங்கி;க. மூலங்கி;ம. முள்ளங்கி.

வேர்ப்பகுதியில் உணவைச் சேர்த்து வைக்கும், சமையலுக்குப் பயன்படும் காய்கறி வகை.

முள்ளங்கி வகைகள்:

   1) முள்ளங்கி,

   2) வெள்ளை முள்ளங்கி,

   3) மஞ்சள் முள்ளங்கி,

   4) சிவப்பு முள்ளங்கி,

   5) சுவற்று முள்ளங்கி அல்லது ஆற்று முள்ளங்கி,

   6) பெரிய முள்ளங்கி,

   7) சின்ன முள்ளங்கி,

   8) சதுர முள்ளங்கி,

   9); வன முள்ளங்கி (சா.அக.);.

முள்ளங்கிழங்கு

முள்ளங்கிழங்கு muḷḷaṅgiḻṅgu, பெ.(n.)

   1. முள்ளங்கிக் கிழங்கு; root tuber of radish.

   2. ஒரு வகை வள்ளிக் கொடி (வின்.);; thorny yam, Dioscorea tomentosa.

     [முள்ளங்கி + கிழங்கு.]

முள்ளங்கீரை

 முள்ளங்கீரை muḷḷaṅārai, பெ.(n.)

முட்கீரை (வின்.); பார்க்க;see {}.

     [முள் + அம் + கீரை.]

முள்ளஞ்சங்கு

 முள்ளஞ்சங்கு muḷḷañjaṅgu, பெ.(n.)

   முட்களை யுடைய சங்குவகை (வின்.);; a conch armed with spikes.

     [முள் + அம் + சங்கு.]

முள்ளஞ்சாயல்

 முள்ளஞ்சாயல் muḷḷañjāyal, பெ. (n.)

   அலையில் மிதக்கும் தென்னை ஒலை நிழல் பகுதி; shadow caused by coconut tree branches laid on the surface of the Sea enabling the fisherman to catch wavval variety of fish.

     [முள்ளம்+சாயல்(நிழல்);]

முள்ளடி

 முள்ளடி muḷḷaḍi, பெ.(n.)

   துப்பு (இ.வ.);; clue;trace.

     [முள் + அடி.]

முள்ளடிக்கூலி

 முள்ளடிக்கூலி muḷḷaḍikāli, பெ.(n.)

   துப்புக்கூலி (இ.வ.);; payment for furnishing clue, as to a theft.

     [முள்ளடி + கூலி.]

முள்ளந்தண்டு

முள்ளந்தண்டு muḷḷandaṇṭu, பெ.(n.)

   முதுகிலுள்ள நடு எலும்பு (C.G.);; vertebral column, backbone, spine.

மறுவ. தண்டுவடம்

     [முள் + அம் + தண்டு.]

 முள்ளந்தண்டு muḷḷandaṇṭu, பெ.(n.)

   முதுகுத் தண்டிலிருக்கும் 33 முள் எலும்புகள் (கசே ரூபம்);; the thirty three vertebrae.

   2. முதுகெலும்பு; back bone.

     [முள்+தண்டு]

முள்ளந்தண்டு நீர்க்கோவை

 முள்ளந்தண்டு நீர்க்கோவை muḷḷandaṇṭunīrkāvai, பெ.(n.)

   முள்ளந்தண்டில் இறங்கி நிற்கும் ஊதை நீர் (கசேரு நீர்க்கோவை);; a collection of morbid fluid in the vertebral column-Hydrorochis.

     [முள்ளந்தண்டு+நீர்+கோவை]

முள்ளந்தண்டுக்கொடி

 முள்ளந்தண்டுக்கொடி muḷḷandaṇḍukkoḍi, பெ.(n.)

   முள்ளந்தண்டிற்குள் ஒடும் ஒரு வெண்மையான கயிறு போன்ற நரம்புக் கொடி; a long cord or column of nervous matter contained in the canel of the spine – Spinal cord (சா.அக.);.

     [முள்ளந்தண்டு + கொடி.]

முள்ளந்திருக்கை

முள்ளந்திருக்கை muḷḷandirukkai, பெ.(n.)

   1. பச்சை நிறமுடையதும் குறுக்கில் 2 அடியும் நெடுக்கில் 5 அடியும் வளர்வதான திருக்கை வகை; sting-ray, greenish, attaining 5 ft. in length and 2 ft. across the disc, Urogymnus asperrimus.

   2. வெண் சிவப்பு நிறமும் 8 விரலம் வரை வளர்ச்சியுமுடைய கடல் மீன்; sea – fish. pinkish, attaining 8 inch. in length, Halieutea stellata.

     [முள் + அம் + திருக்கை.]

முள்ளன்பலாச்சை

 முள்ளன்பலாச்சை muḷḷaṉpalāccai, பெ.(n.)

முள்ளம்பலாச்சை பார்க்க;see {}.

     [முள்ளம்பலாச்சை → முள்ளன்பலாச்சை.]

முள்ளன்றம்

 முள்ளன்றம் muḷḷaṉṟam, பெ. (n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; avillage in Arakonam Taluk.

     [ஒருகா முள்+மன்றம்]

முள்ளம்பன்றி

 முள்ளம்பன்றி muḷḷambaṉṟi, பெ.(n.)

தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு உடலின் மேல் பகுதி முழுவதும் முள் போன்ற கூர்மையான மயிர்கள்

     [p]

   நிறைந்ததும் குட்டையான கால்களை உடையதுமான ஒரு சிறிய காட்டு விலங்கு; porcupine, Hystrix hirsutirostris.

அவனுடைய தலைமுடி முள்ளம்பன்றி போல உள்ளது.

தெ. முள்ளம்பந்தி;ம. முள்ளம்பந்நி.

     [முள் + அம் + பன்றி.]

முள்ளம்பாலச்சை

முள்ளம்பாலச்சை muḷḷambālaccai, பெ. (n.)

   1. வெளிறின பழுப்பு நிறமும் இரண்டு அடி வரை வளர்வதுமான கடல் மீன் வகை; sea – fish, light brown, attaining 2 feet in length, Dioden hystrix, as covered with spines.

   2. பழுப்பு அல்லது கறுப்பு நிறமுடையதும் 13 விரலம் (அங்குலம்); வரை வளர்வதுமான கடல் மீன் வகை; sea-fish, brown or black, attaining 13 inch in length, Tetrodon patoca.

     [முள் + அம் + பலாச்சை. பலாச்சை = மீன்வகை.]

முள்ளரம்

 முள்ளரம் muḷḷaram, பெ. (n.)

   இரும்பிலுள்ள மேடு, பள்ளங்களைத் தேய்த்துச் சரி செய்ய உதவும் இரண்டு பக்கங்களிலும் முள் அமைப்பில் இருக்கும் அர வகை; spiked file on both side.

     [முள்+அரம்]

முள்ளரிகொக்கி

 முள்ளரிகொக்கி muḷḷarigoggi, பெ.(n.)

   தூண்டிலில் புழுவை மாட்டப் பயன்படும் கொக்கி (கோவை.);; fist-hook.

     [முள்ளரி + கொக்கி.]

முள்ளருகல்

 முள்ளருகல் muḷḷarugal, தொ.பெ.(vbl.n.)

   சிறுநீர்க் குழாயில் முள் குத்துவதுபோல் வலிக்கை; a disease inflammation in the tip of the penis.

     [முள் + அருகல். முள்ளருகல் போல் வலிக்கை.]

முள்ளல்

முள்ளல் muḷḷal, பெ.(n.)

   1. கருவாடு; dry fish.

   2. மீன் வகை (கோவை.);; a kind of fish.

முள்ளழுவேணை

 முள்ளழுவேணை muḷḷaḻuvēṇai, பெ.(n.)

   அழுவணை மரம்; law sonia spinosa.

     [முள் + அழுவேணை. அழுவணை → அழுவேணை.]

முள்ளாங்கத்திரி

 முள்ளாங்கத்திரி muḷḷāṅgattiri, பெ.(n.)

முள்ளங்கத்தரி (மூ.அ.); பார்க்க;see {}.

     [முள்ளங்கத்தரி → முள்ளாங்கத்தரி.]

முள்ளாணி

முள்ளாணி muḷḷāṇi, பெ.(n.)

   1. பாதத்தில் குத்திய முள் உள்ளே தங்கி அந்த இடம் கருப்பாக மாறுகை; Blackening of the skin in the sole, where the thorn is priched.

   2. பாதத்தில் தானாகவே ஆணி வருகை; callosity of the sole caused by the frequent pricking of thorns and sharp edged stones.

முள்ளாம்பன்னிச்செடி

 முள்ளாம்பன்னிச்செடி muḷḷāmbaṉṉicceḍi, பெ.(n.)

   முட்செடி வகைகளுள் ஒன்று (கோவை.);; a kind of plant.

     [முள்ளம் + பன்னிசெடி.]

முள்ளார்மீன்

 முள்ளார்மீன் muḷḷārmīṉ, பெ. (n.)

   ஒருவகைச் சிறு கடல் மீன்; a kind of sea fish.

     [முள்+ஆர்+மீன்]

முள்ளாறு

 முள்ளாறு muḷḷāṟu, பெ. (n.)

   வெள்ளை நிறமுடைய ஒருவகைக் கடல் மீன் (இராமமுழியன்);; silvery sea-fish.

முள்ளாவலை

 முள்ளாவலை muḷḷāvalai, பெ. (n.)

   கடலடித் தரையில் உள்ள மீன்களைப் பிடிப்பதற்காகக் கனமான எடைக்கல் அல்லது சுடு மண் உருளை கட்டப்பட்ட வலை; a type of fishing net.

     [முள்ளுதல் – (முகந்து அள்ளுதல்); முள்முள்ளான்+வலை]

முள்ளி

முள்ளி1 muḷḷi, பெ.(n.)

   1. முள்ளுள்ள செடி (நன்.62, உரை);; thorny plant.

     “கள்ளி யேய்ந்த முள்ளியம் புறங்காட்டு” (புறநா. 363:20);.

   2. கத்திரி வகை; Indian nightshade.

     “முள்ளுச் செழுமல ரோன்” (திவ்.இயற். சிறிய.ம.தனியன்);.

   3. மருதோன்றி (L.);; nail dye, Barleria.

   4. கழுதை முள்ளி; holly – leaved bear’s-breech.

   5. தாழைச் செடிவகை; fragrant screw-pine.

     “கூர்முண் முள்ளி” (அகநா.26);. 6. கள் (பரி.அக.);;

 toddy.

தெ. முலக;க., ம. முள்ளி.

     [முள் → முள்ளி.]

வகைகள்:

   1) அடுக்கு முள்ளி,

    2);ஆற்றுமுள்ளி (அ); கழுதைமுள்ளி,

    3) செம்முள்ளி,

    4) வெள்ளை முள்ளி,

    5) நீர் முள்ளி,

    6) கறிமுள்ளி,

    7); பப்பர முள்ளி (சா.அக.);.

 முள்ளி2 muḷḷi, பெ.(n.)

   வற்றிய பொருள்; that which is dry.

 முள்ளி muḷḷi, பெ. (n.)

   மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurantakam Taluk.

     [முள்-முள்ளி]

முள்ளிக்காய்

 முள்ளிக்காய் muḷḷikkāy, பெ. (n.)

   ஒரு வகைச் செடி; a plant – Solanum xanthocarpum.

முள்ளிக்கீரை

 முள்ளிக்கீரை muḷḷikārai, பெ.(n.)

முட்கீரை (மூ.அ); பார்க்க;see {}.

முள்ளிக்குடி

 முள்ளிக்குடி muḷḷikkuḍi, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [முள்-முள்ளி+குடி]

முள்ளிச்சங்கு

 முள்ளிச்சங்கு muḷḷiccaṅgu, பெ.(n.)

   புறப்பரப்பு முழுவதும் கூரான முட்கள் போன்ற அமைப்புடைய சங்கு; conch which has thorn like structure on its top.

     [முள்ளி + சங்கு.]

முள்ளிடுக்கி

 முள்ளிடுக்கி muḷḷiḍukki, பெ.(n.)

முள் வாங்கி (வின்.); பார்க்க;see {}.

     [முள் + இடுக்கி.]

முள்ளித்தலாதி

 முள்ளித்தலாதி muḷḷittalāti, பெ.(n.)

   வெங்காயம்; onion – Alliumcepa.

முள்ளிப்பாளையம்

 முள்ளிப்பாளையம் muḷḷippāḷaiyam, பெ. (n.)

   வேலூர்க்கு அருகில் உள்ள ஒரு ஊர்; a village near the Vellore.

     [முள்ளி+பாளையம்]

அடர்ந்த முள்ளிச் செடிகள் எங்கும் நிறைந்த பகுதியில் உண்டான ஊர். “முள்ளிப்பாளையம்” காரணப் பெயர்.

முள்ளிப்பிஞ்சு

 முள்ளிப்பிஞ்சு muḷḷippiñju, பெ.(n.)

   பிஞ்சு முள் கத்திரி; tender thorned brinjal – Solonum melongena (சா.அக.);.

முள்ளிப்பூ

முள்ளிப்பூ muḷḷippū, பெ.(n.)

   வரிக்கூத்து வகை (சிலப்.3:13, உரை);; a masquerade dance.

முள்ளியார்

 முள்ளியார் muḷḷiyār, பெ.(n.)

   ஆசாரக் கோவை நூலின் ஆசிரியரான பெருவயின் முள்ளியார்; author of {}.

முள்ளியூர்பூதி

 முள்ளியூர்பூதி muḷḷiyūrpūti, பெ.(ո.)

கடைக்கழகப் புலவர்;{}

 poet.

முள்ளிறால்

 முள்ளிறால் muḷḷiṟāl, பெ.(n.)

   பாரையிறால்; spiny lobster (சா.அக.);.

     [முள் + இறால்.]

முள்ளிற்கச்சிகம்

 முள்ளிற்கச்சிகம் muḷḷiṟgaccigam, பெ.(n.)

   கொழுமிச்சை, நாரத்தை; bitter orange (சா.அக.);.

முள்ளிலவம்

 முள்ளிலவம் muḷḷilavam, பெ.(n.)

முள்ளிலவு பார்க்க;see {}.

     [முள்ளிலவு → முள்ளிலவம்.]

முள்ளிலவம்பட்டை

 முள்ளிலவம்பட்டை muḷḷilavambaṭṭai, பெ. (n.)

   இலவமரத்தின் பட்டை; bark of silk cotton tree, Bombax malabaricum (சா.அக.);.

     [முள் + இலவம் + பட்டை.]

முள்ளிலவு

முள்ளிலவு muḷḷilavu, பெ.(n.)

   ஒருவகை இலவமரம் (சீவக.788);; a kind of red flowered silk-cotton tree.

     [முள் + இலவு.]

முள்ளிலைச்சாறு

 முள்ளிலைச்சாறு muḷḷilaiccāṟu, பெ.(n.)

   எட்டிச்சாறு; juice of the leaves of nux vomica tree (சா.அக.);.

முள்ளில்லாக்கற்றாழை

 முள்ளில்லாக்கற்றாழை muḷḷillākkaṟṟāḻai, பெ. (n.)

   நாகபடக் கற்றாழை; snake hood aloe.

முள்ளிழைப்புளி

 முள்ளிழைப்புளி muḷḷiḻaippuḷi, பெ.(n.)

   இழைப்புளி வகை; plane with serrated bit.

     [முள் + இழைப்பு + உளி.]

முள்ளிவேர்

 முள்ளிவேர் muḷḷivēr, பெ.(n.)

   நீர் முள்ளி வேர்; root of hygrophila auricalata alias Astercantha longifolia (சா.அக.);.

     [முள்ளி + வேர்.]

முள்ளீயூர்ப்பூதியார்

முள்ளீயூர்ப்பூதியார் muḷḷīyūrppūtiyār, பெ.(n.)

கழக காலப் புலவர்;{}

 poet.

     [முள்ளீயூர் + பூதியார்.]

நன்னனுடைய நவிர மலையைச் சிறப்பித்துத் தம் செய்யுளில் பாடியுள்ளார் (அகநா.173);.

இச்செய்யுளைப் பாடியவர் முன்னியூர் வழுதியார் எனவும் பாட வேறுபாடு உண்டு.

     “அறந்தலைப் பிரியா தொழுகலுஞ் சிறந்த

கேளிர் கேடு பல வூன்றலும் நாளும்

வருந்தா வுள்ள மொடிருந்தோர்க் கில்லெனச்

செய்வினை புரிந்த நெஞ்சினர் நறுநுதன்

மையீ ரோதியரும் பட ருழத்தல்

சின்னாட் டாங்கல் வேண்டுமென்று நின்

நன்மா ணெல்வளை திருத்தினராயின்

வருவர் வாழி தோழி பலபுரி

வார் கயிற் றொழுகை நோன் சுவற்கொளீஇப்

பகடுதுறை யேற்றத் துமண்விளி வெரீஇ

உழைமா னம்பிணை யினனிரிந்தோடக்

காடுகவி னழிய வுரைஇக் கோடை

நின்றுதின விளிந்த வம்பணை நெடுவேய்க்

கண்விடத் தெறிக்கு மண்ணா முத்தங்

கழங்குறழ் தோன்றல் பழங்குழித் தாஅம்

இன்களி நறவி னியறேர் நன்னன்

விண்பொரு நெடுவரைக் கவாஅற்

பொன் படு மருங்கின் மலையிறந்தோரே” (அகநா.173);.

முள்ளுக்கடம்பு

 முள்ளுக்கடம்பு muḷḷukkaḍambu, பெ. (n.)

   ஒருவகைச் செடி (L.);; Nepal berberry.

     [முள் + கடம்பு.]

முள்ளுக்கடம்பை

 முள்ளுக்கடம்பை muḷḷukkaḍambai, பெ. (n)

முள்ளுக்கடம்பு பார்க்க;see {}.

     [முள்ளுக்கடம்பு → முள்ளுக்கடம்பை.]

முள்ளுக்கத்திரி

 முள்ளுக்கத்திரி muḷḷukkattiri, பெ.(n.)

முள்ளங்கத்தரி (இ.வ.); பார்க்க;see {}.

     [முள்ளங்கத்தரி → முள்ளுக்கத்தரி.]

முள்ளுக்கரப்பன்

 முள்ளுக்கரப்பன் muḷḷukkarappaṉ, பெ. (n.)

முள்ளுக்கரப்பான் (வின்.); பார்க்க;see {}.

     [முள்ளுக்கரப்பான் → முள்ளுக்கரப்பன்.]

முள்ளுக்கரப்பான்

 முள்ளுக்கரப்பான் muḷḷukkarappāṉ, பெ. (n.)

   மேல் தோலில் படரும் நோய் வகை (உ.வ.);; a kind of eruption with pimples.

     [முள் + கரப்பான் – முள்கரப்பான் → முள்ளுக்கரப்பான்.]

முள்ளுக்கற்றாழை

 முள்ளுக்கற்றாழை muḷḷukkaṟṟāḻai, பெ.(n.)

   முள்ளுடைய கற்றாழை. இதன் இரு பக்கத்திலும் முனையிலும் முட்கள் பொருந்தியிருக்கும்; prickly aloe, spiked aloe (சா.அக.);.

முள்ளுக்களா

முள்ளுக்களா muḷḷukkaḷā, பெ.(n.)

   1. ஒரு வகைக் களாச் செடி (நெல்லை.);; fascicled leaved spinous berberry.

   2. முள்ளுக் கடம்பு (L); பார்க்க;see {}.

     [முள் + களா → முள்ளுக்களா..]

முள்ளுக்காரை

 முள்ளுக்காரை muḷḷukkārai, பெ.(n.)

   சிறு மரவகை (வின்.);; common emetic nut, Randia dumetorum.

     [முள் + காரை → முள்ளுக்காரை.]

 முள்ளுக்காரை muḷḷukkārai, பெ. (n.)

   காரை மீன் வகையுள் ஒன்று; silver bellies.

     [முள்ளு+காரை.]

முள்ளுக்கீரை

 முள்ளுக்கீரை muḷḷukārai, பெ.(n.)

முட்கீரை (வின்.); பார்க்க;see {}.

     [முட்கீரை → முள்ளுக்கீரை.]

முள்ளுக்குத்தி

 முள்ளுக்குத்தி muḷḷukkutti, பெ. (n.)

   நெய்யப்பட்ட சேலையை அகலவாக்கில் தொய் வின்றி இழுத்துப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் முள் சட்டம்; a frame to hold tightly in handloom.

     [முள்-முள்ளு+குத்தி]

முள்ளுக்குப்பை

 முள்ளுக்குப்பை muḷḷukkuppai, பெ.(n.)

   கொட்டையிலந்தை; seed jujube – Zizyphus zуlopyra (சா.அக.);.

முள்ளுக்கூலி

 முள்ளுக்கூலி muḷḷukāli, பெ.(n.)

முள்ளடிக் கூலி பார்க்க;see {}.

     [முள் + கூலி → முள்ளுக்கூலி.]

முள்ளுக்கொடிச்சி

 முள்ளுக்கொடிச்சி muḷḷukkoḍicci, பெ. (n.)

   தூதுவளை; a climber – Solanum trilobatum.

     [முள் + கொடிச்சி → முள்ளுக்கொடிச்சி.]

முள்ளுச்சங்கு

முள்ளுச்சங்கு1 muḷḷuccaṅgu, பெ.(n.)

   சங்கஞ்செடி (L.);; mistletoe berry thorn.

     [முள் + சங்கு → முள்ளுச்சங்கு.]

 முள்ளுச்சங்கு2 muḷḷuccaṅgu, பெ.(n.)

முள்ளஞ்சங்கு பார்க்க;see {}.

     [முள்ளஞ்சங்கு → முள்ளுச்சங்கு.]

முள்ளுச்சம்பா

முள்ளுச்சம்பா muḷḷuccambā, பெ.(n.)

   ஒருவகை நெல் (நாமதீப.351, குறிப்பு);; a kind of paddy.

     [முள் + சம்பா → முள்ளுச்சம்பா.]

முள்ளுச்சிரங்கு

 முள்ளுச்சிரங்கு muḷḷucciraṅgu, பெ.(n.)

   நாய்முள் (M.L.);; urticoria.

     [முள் + சிரங்கு → முள்ளுச்சிரங்கு.]

முள்ளுச்சீங்கை

 முள்ளுச்சீங்கை muḷḷuccīṅgai, பெ.(n.)

   முள்ளுச் சீயக்காய் மரம்; soap nut tree – Acacia pinnata (சா.அக.);.

முள்ளுச்சீத்தா

 முள்ளுச்சீத்தா muḷḷuccīttā, பெ.(n.)

   புளிப்பலா; a plant, Anona muricata (சா.அக.);.

     [முள் + சீத்தா.]

முள்ளுச்சீயக்காய்

 முள்ளுச்சீயக்காய் muḷḷuccīyakkāy, பெ.(n.)

   சீயக்காய்; soap-nut tree, Acacia pinnata (சா.அக.);.

     [முள் + சீயக்காய்.]

முள்ளுச்சுண்டெலி

 முள்ளுச்சுண்டெலி muḷḷuccuṇṭeli, பெ. (n.)

   முட்போன்ற மயிருள்ள வயற் சுண்டெலி வகை; spiny mouse, a kind of field mouse, as having fine spinous fur.

     [முள் + சுண்டெலி → முள்ளுச்சுண்டெலி.]

முள்ளுச்சுறா

 முள்ளுச்சுறா muḷḷuccuṟā, பெ.(n.)

   சுறா மீன் வகை; a kind of shark fish.

     [முள் + சுறா.]

முள்ளுச்சூலி

 முள்ளுச்சூலி muḷḷuccūli, பெ.(n.)

   சதுரக் கள்ளி; a spurge, Euphorbia quadrangularis (சா.அக.);.

முள்ளுடுப்பை

 முள்ளுடுப்பை muḷḷuḍuppai, பெ.(ո.)

   கொட்டையிலந்தை (L.);; woody – fruited jujube.

முள்ளுடைமூலம்

முள்ளுடைமூலம் muḷḷuḍaimūlam, பெ.(n.)

   1. முட்செடிப் பொது (பிங்.);; thorny plant.

   2. முட்கள் பொருந்திய வேர் (வின்.);; spiked root.

     [முள் + உடை + மூலம்.]

முள்ளுநங்கை

 முள்ளுநங்கை muḷḷunaṅgai, பெ.(n.)

   பாம்பு கடிக்குப் பயன்படுத்தும் ஒருவகை வேர்; a kind of root used as an antidote in snake poisons.

முள்ளுநாயகம்

 முள்ளுநாயகம் muḷḷunāyagam, பெ.(n.)

   தைத்த முள்ளை வெளிப்படுத்துங் குணமுள்ள இலைகளை யுடைய கொடி வகை; a creeper whose leaves are used in extracting thorns.

முள்ளுபிளாச்சி

 முள்ளுபிளாச்சி muḷḷubiḷācci, பெ. (n.)

   முள்ளம்பன்றி மீன் வகை; porcupine fish.

     [முள்ளு+பிளாச்சி]

முள்ளுப்படுகளம்

 முள்ளுப்படுகளம் muḷḷuppaḍugaḷam, பெ.(n.)

   வேண்டுதலை நிறைவேற்றுதற்கு மக்கள் படுக்கும் முள்ளாலான படுக்கை (இ.வ.);; bed of thorns or spikes on which people lie in fulfilment of vows.

     [முள் + படுகளம்.]

முள்ளுப்பலகை

 முள்ளுப்பலகை muḷḷuppalagai, பெ.(n.)

   கொத்துப் பலகையின் மறுபெயர்; other name for the wooden plank which helps to grub salt from the salt-pan.

     [முள் + பலகை.]

முள்ளுப்பலா

 முள்ளுப்பலா muḷḷuppalā, பெ.(n.)

   பலா மரவகை (யாழ்.அக.);; a kind of jack-fruit tree.

     [முள் + பலா.]

முள்ளுப்பலாச்சி

முள்ளுப்பலாச்சி muḷḷuppalācci, பெ.(n.)

   வெளிறின பழுப்பு நிறமுள்ளதும் 25.5 விரலம் (அங்குலம்); நீளம் வளர்வதுமான கடல் மீன் வகை; sea – porcupine, light brown, attaining 25.5 inch in length.

முள்ளுப்போடு-தல்

முள்ளுப்போடு-தல் muḷḷuppōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   இடையூறு செய்தல்; to throw obstacles in one’s way.

     [முள் + போடு-தல்.]

முள்ளுப்போட்டடை-த்தல்

முள்ளுப்போட்டடை-த்தல் muḷḷuppōḍḍaḍaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   முட்கள் நிறைந்த பூண்டுகளைக் கொண்டு வேலி வைத்தல் (வின்.);; to hedge with thorny shrubs.

     [முள் + போடு + அடை-த்தல்.]

முள்ளுமுனை

 முள்ளுமுனை muḷḷumuṉai, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [முள்ளு+முனை]

முள்ளுமுருக்கு

முள்ளுமுருக்கு muḷḷumurukku, பெ.(n.)

   1. ஒருவகை மரம்; East Indian coral tree,

 Erythrina indica.

   2. வெள்ளைக் கலியாண முருக்கு (L.);; coral tree of the Eastern Ghats.

   3. முண் முருக்கு (L.);; coral tree of the Western Ghats.

   4. புரசமரம்; palas tree.

   5. மரவகை; holly leaved berberry.

     [முள் + முருக்கு.]

முள்ளுமுருங்கை

முள்ளுமுருங்கை muḷḷumuruṅgai, பெ.(n.)

   1. முள்ளுமுருக்கு பார்க்க;see {}.

   2. மரவகை; holly – leaved berberry, Berberis nepalensis.

     [முள் + முருங்கை.]

முள்ளுறி

 முள்ளுறி muḷḷuṟi, பெ. (n.)

   ஒரு வகை மீன்; marked fikfish.

     [முள்+ஊறி]

முள்ளுளி

 முள்ளுளி muḷḷuḷi, பெ.(n.)

   கற்றச்சரின் உளி. வகை; stone – cutter’s smoothing chisel.

     [முள் + உளி.]

முள்ளுவாங்கி

 முள்ளுவாங்கி muḷḷuvāṅgi, பெ.(n.)

முள் வாங்கி பார்க்க;see {}.

     [முள் + வாங்கி → முன்ளுவாங்கி.]

முள்ளுவாடி

முள்ளுவாடி muḷḷuvāṭi, பெ.(n.)

   தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரியிலிருந்து ஏறத்தாழ 30 கல்லண்மாத்திரி (கிலோ மீட்டர்); தொலைவிலுள்ள ஊர்; a city in Tarmapuri district, 30 k.m. away from Tarmapuri.

அக்காலத்தில் முட்செடிகள் நிறைந்த காடாக இருந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

 முள்ளுவாடி muḷḷuvāṭi, பெ. (n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [முள்-முள்ளு+வாடி]

முள்ளுவாயு

 முள்ளுவாயு muḷḷuvāyu, பெ. (n.)

   முள் குத்தினால் உண்டாகும் வலியைப் போல, வலியை உண்டாக்கும் ஒரு வகைக் காற்றுப் பிடிப்பு நோய்; a kind of rheumatism attended with shooting pin prick pain.

     [முள் + Skt. வாயு.]

முள்ளுவாளை

 முள்ளுவாளை muḷḷuvāḷai, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

முள்ளுவெள்ளரி

 முள்ளுவெள்ளரி muḷḷuveḷḷari, பெ.(n.)

முள்வெள்ளரி பார்க்க;see {}.

ஆண் உறுப்புக்கு பெருஞ்சுரப்பியை உண்டாக்கும் காய் (சா.அக.);.

முள்ளுவேங்கை

 முள்ளுவேங்கை muḷḷuvēṅgai, பெ.(n.)

   மலைவேங்கை மரம் (L.);; spinous kino-tree.

     [முள் + வேங்கை.]

முள்ளூர்க்கானம்

முள்ளூர்க்கானம் muḷḷūrkkāṉam, பெ.(n.)

   முள்ளூர் என்னும் ஊரையடுத்த காடு; a forest near {}.

     “முள்ளூர்க் கான வந்து நள்ளென் கங்குல்” (குறுந். 312:3);.

முள்ளூர்மலை

முள்ளூர்மலை muḷḷūrmalai, பெ.(ո.)

   மலையமான் திருமுடிக்காரியின் மலை; a mountain belonging to {}.

     “முள்ளூர் மன்னன் கழல் தொடிக்காரி” (அகநா.209:12);,

     “பயன்கெழு முள்ளூர்” (புறநா.123);.

     [முள்ளூர் + மலை.]

இம்மலை தற்போது செஞ்சி வட்டத்தில் உள்ளது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரியின் மலை. சோழன் இராயசூயம்வேட்ட பெருநற்கிள்ளி பகைவர்க்கஞ்சி இம்மலையில் பல நாள் மறைந்திருந்தான் என்று புறநானூறு கூறுகிறது.

முள்ளெடுக்கி

 முள்ளெடுக்கி muḷḷeḍukki, பெ.(n.)

முள்வாங்கி பார்க்க;see {}.

     [முள் + எடுக்கி.]

முள் எடுக்கும் சிறிய இடுக்கியும், காதில் அழுக்கு எடுக்கும் குச்சி போன்ற தகடும் இணைந்த கருவி (முள் இடுக்கி);.

முள்ளெலி

முள்ளெலி muḷḷeli, பெ.(n.)

   எலிவகை (M.M.290);; a hedge-hog, Erinaceus micropus.

     [முள் + எலி.]

முள்ளெலும்பு

 முள்ளெலும்பு muḷḷelumbu, பெ.(n.)

   முள்ளந்தண்டின் எலும்பு; vertebra.

மறுவ. தண்டுவடம்.

     [முள் + எலும்பு.]

நடுவில் துளை உடையதும் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி அமைந்து இருப்பதுமான வளைய வடிவிலான எலும்பு.

முள்வறையன்

 முள்வறையன் muḷvaṟaiyaṉ, பெ.(n.)

   மரத்தை அரிக்கும் கறையான் வகை (யாழ்ப்.);; termite that gnaws the wood.

முள்வாங்கி

 முள்வாங்கி muḷvāṅgi, பெ.(n.)

   முள்ளெடுக்குங் கருவி; thorn pincers.

     [முள் + வாங்கி. வாங்கு → வாங்கி.]

     [p]

முள்வாங்கி. கால் பாதங்களில் தைத்த முள்ளை எடுக்கப் பயன்படுத்தும் ஒரு சிறு கருவி.

முள்வாயன்

 முள்வாயன் muḷvāyaṉ, பெ.(n.)

முள் வறையன் பார்க்க;see {} (சா.அக.);.

     [முள் + வாய் – முள்வாய் → முள்வாயன்.]

முள்வாளி

 முள்வாளி muḷvāḷi, பெ.(n.)

முள்வேலி (நாஞ்.); பார்க்க;see {}.

முள்வாளை

முள்வாளை muḷvāḷai, பெ.(n.)

   நீலங் கலந்த பச்சை நிறமுடையதும் 12 அடி வரை வளர்வதுமான வாளை மீன் வகை; large herring-like fish, bluish green, attaining 12 ft. in length, Chirocentrus dorab.

முள்வாழ்வேலி

 முள்வாழ்வேலி muḷvāḻvēli, பெ.(n.)

   உயிர் வேலி; fence made by thorny plants.

முள்வெண்டை

 முள்வெண்டை muḷveṇṭai, பெ.(n.)

   சுணையுள்ள வெண்டைக்காய்; hairy lady’s finger – Hibicus esculentus (சா.அக.);.

     [முள் + வெண்டை.]

முள்வெள்ளரி

 முள்வெள்ளரி muḷveḷḷari, பெ.(n.)

   கொடிவகை (சூடா.);; kakri – melon.

     [முள் + வெள்ளரி.]

முள்வேங்கை

 முள்வேங்கை muḷvēṅgai, பெ.(n.)

   மலை வேங்கைமரம் (L.);; spinous kino tree.

     [முள் + வேங்கை.]

முள்வேலி

முள்வேலி muḷvēli, பெ.(n.)

   1. முள்ளால் செய்யப்பட்ட அடைப்பு; fence of thorn.

     “அமரினிட்ட வரு முள்வேலி” (புறநா.301);.

   2. முட்களை யுடைய இரும்புக் கம்பியாலான வேலி; fence of barbed wire.

   3. முள் நிறைந்த கிளைகளால் ஏற்படுத்திய தடுப்பு; fence made of thorny branches of trees.

அரசுக்குச் சொந்தமான இடத்தில் முள்வேலி அமைத்தது யார்?

   4. வேளாண்மை செய்த நிலத்திற்குப் பாதுகாப்புக்காக அமைக்கப்படும் முள்ளால் ஆன வேலி (கோவை.);; thorny fence made to protect the farm.

     [முள் + வேலி.]

முள்வேல்

முள்வேல் muḷvēl, பெ.(n.)

   1. நீருடை குடைவேல் மரம்; buffalo thorn cutch.

   2. முள்ளுடைய வேல மரவகை; entire leaved staff – tree, Gymnosporia emarginata.

     [முள் + வேல்.]

முழ

முழ muḻ, பெ.(n.)

முழவு, 1, 2 3 பார்க்க; see {}, 1, 2, 3.

     “தின்வளி விசித்த முழவொடா குளி” (மலைபடு.3);.

முழக்கட்டை

 முழக்கட்டை muḻkkaṭṭai, பெ.(n.)

   நீளக் குறைவானது (வின்.);; anything short of the full meausre, as a piece of cloth.

     [முழம் + கட்டை.]

சட்டை, சேலை, வேட்டி…. முதலியவை உடுப்பதற்குப் போதிய நீளம் இல்லாமல் இருக்கை.

முழக்கம்

முழக்கம் muḻkkam, பெ.(n.)

   1. பேரொலி; loud sound, as of thunder or of drums.

     “துருமிடி சேர்ந்த முழக்கம் புரையும்” (பரிபா.7:82);.

   2. ஆரவாரம்; clamour, hubbub, roar.

     [முழங்கு → முழக்கு → முழக்கம்.]

முழக்கு

முழக்கு1 muḻkkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பேரொலி எழுப்புதல்; roar.

இடி முழங்கியது.

   2. நீட்டி முழக்கமிடுதல் (கோசமிடுதல்);; shout slogans; thunder.

தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முழங்கினார்கள்.

   3. இசைக் கருவியை ஒலிப்பித்தல்; to sound, to beat a sounding instrument.

     “குணில் வலத் தேந்தி முழக்கினாலென” (கம்பரா. கும்பக. 346);.

   4. பெருஞ்சிறப்பு (விமரிசை); பெறச் செய்தல்; to do a thing pompously.

     [முழங்கு → முழக்கு → முழக்கு-தல்.]

 முழக்கு2 muḻkku, பெ.(n.)

   ஒலி (வின்.);; sound noise.

க. முழகு

     [முழங்கு → முழக்கு.]

முழக்குழி

 முழக்குழி muḻkkuḻi, பெ.(n.)

   மருந்து புடம் போடுவதற்காகத் தோண்டும் ஒருமுழ ஆழக்குழி; a pit one cubic deep dug up for purpose of calcining medicines (சா.அக.);.

     [முழம் + குழி.]

முழக்கோல்

முழக்கோல் muḻkāl, பெ.(n.)

   1. அளவு கோல்; measuring rod.

   2. எட்டு முழங் கொண்ட அளவுகோல்; a measuring rod of eight cubits.

   3. இரண்டு தச்சு முழமுள்ள அளவுகோல்; mason’s rule of two cubits, about 33 inches.

     [முழம் + கோல்.]

முழங்காற்கரப்பான்

முழங்காற்கரப்பான் muḻṅgāṟkarappāṉ, பெ.(n.)

கரப்பானோய்வகை (தஞ்.சர.iii:92);;a kind of {}.

     [முழங்கால் + கரப்பான். முழங்காலில் ஏற்படும் கரப்பான் நோய்.]

முழங்காற்சில்

 முழங்காற்சில் muḻṅgāṟcil, பெ.(n.)

   காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்புப் பூட்டின் மேற்பாகம் (வின்.);; knee – cap – patella.

     [முழங்கால் + சில்.]

முழங்காற்சில்லி

 முழங்காற்சில்லி muḻṅgāṟcilli, பெ.(n.)

முழங்காற்சில் பார்க்க;see {}.

முழங்காற்படியிடு-தல்

முழங்காற்படியிடு-தல் muḻṅgāṟpaḍiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   முழந்தாளைக் கீழிட்டு வணங்குதல் (வின்.);; to kneel down.

     [முழங்கால் + படி + இடு-தல்.]

முழங்காற்பிடிப்பு

முழங்காற்பிடிப்பு muḻṅgāṟpiḍippu, பெ.(n.)

   1. முழங்கால் வீங்கிக் கடுத்து நடக்க முடியாமற் போகை; rheumatism affecting the knee joint swelling of the knee joint due to gonorrheal rheumatism.

   2. முழங்காலில் கெட்ட நீர் வந்து தங்குவதாலேற்பட்ட ஒரு வகையானக் காற்றுப் பிடிப்பு நோய்; collection of morbid fluid in synovial cavity of the knee – Synovitis (சா.அக.);.

     [முழங்கால் + பிடிப்பு.]

முழங்காலிடு-தல்

முழங்காலிடு-தல் muḻṅgāliḍudal,    20 செ.கு.வி.(v.i.)

முழங்காற்படியிடு-தல் பார்க்க;see {}.

     [முழங்கால் + இடு-தல்.]

முழங்கால்

முழங்கால்1 muḻṅgāl, பெ.(n.)

   1. தொடைக்குக் கீழே காலை மடக்கி நீட்டக் கூடிய மூட்டு அமைந்திருக்கும் பகுதி; knee part of the leg from knee to ankle.

     ‘முழங்கால் தெரியும்படி அவன் அரைக்கால் சட்டை அணிந்திருந்தான்’, ‘முழங்காலில் சரியான அடி’

   2. முட்டிக்காற் பின்னல்; knock-knee.

   தெ. மோகாலு;   க. மொழகாலு;ம. முழக்கால்.

     [முழம் + கால் – முழங்கால் = நடுப்பொருத்தி னின்று அடிவரைப்பட்ட அல்லது முழ அளவான கால். முழங்கால் மூட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு.]

முழங்கால்படியிடு-தல்

முழங்கால்படியிடு-தல் muḻṅgālpaḍiyiḍudal,    20 செ.கு.வி.(v.i.)

முழங்காலிடு – தல் பார்க்க; see {}.

     [முழங்கால் + படியிடு-தல்.]

முழங்கால்பிடிப்பு

 முழங்கால்பிடிப்பு muḻṅgālpiḍippu, பெ.(n.)

   பால்வினை நோய் தாக்கப்பட்டதால் உண்டான முழங்கால் பிடிப்பு வலிநோய்; a painful disease affecting the knee from venereal causes – Gout (சா.அக.);.

     [முழங்கால் + பிடிப்பு.]

முழங்கால்பொருத்து

 முழங்கால்பொருத்து muḻṅgālporuttu, பெ.(n.)

   முழங்காலின் மூட்டு; knee joint (சா.அக.);.

     [முழங்கால் + பொருத்து. பொருத்து = முழங்கால் மூட்டு.]

முழங்கால்முட்டி

முழங்கால்முட்டி muḻṅgālmuṭṭi, பெ.(n.)

   1. முட்டிக்கால், 2 பார்க்க;see {}, 2. 2.

   முழங்காற் சில்லைத் தரையிலுன்றிப் போடுவதாகிய தோப்புக் கரணத் தண்டனை (இ.வ.);; coming down heavily on the knees as a punishment.

     [முழங்கால் + முட்டி.]

முழங்கால்முட்டு

முழங்கால்முட்டு muḻṅgālmuṭṭu, பெ. (n.)

   1. தொடையும் காலும் சேருமிடம் (M.L.);;knee.

   2. முழங்கால்முட்டி, 1 பார்க்க;see {}, 1.

     [முழங்கால் + முட்டு.]

முழங்கால்வலி

 முழங்கால்வலி muḻṅgālvali, பெ.(n.)

   முழங்கால் முட்டில் உண்டாகும் வலி (M.L.);; arthritis, inflammation of the knee.

முழங்கால்வாதம்

 முழங்கால்வாதம் muḻṅgālvātam, பெ.(n.)

முழங்காற்பிடிப்பு பார்க்க;see {}.

     [முழங்கால் + Skt. வாதம்.]

முழங்கால்வீக்கம்

 முழங்கால்வீக்கம் muḻṅgālvīkkam, பெ. (n.)

   முழங்காலில் உண்டான வீக்கம்; swelling of the knee joint through inflammation – House maid’s knee (சா.அக.);.

     [முழங்கால் + விக்கம்.]

முழங்கு-தல்

முழங்கு-தல் muḻṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. இடி, பீரங்கி போன்றவை அல்லது வாச்சியங்கள் பேரொலி எழுப்புதல்; thunder, cannon, etc. roar, rumble, of an ensemble sound loudly.

இடி முழங்கி மின்னல் வெட்டிப் பலத்த மழை பெய்தது. பீரங்கிகள் முழங்கத் தரப்பட்ட அணிவகுப்பு மதிப்புரவை இந்திய முதன்மை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். மேளம் முழங்க மிகவும் அழகாக நடந்தது ஊர்வலம்.

     “எழிலி முழக்குந் திசையெல்லாம்” (நாலடி.392);,

     “முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுரை” (அகநா.70:14);,

     “முழங்கு முந்நீர் முழவதும் வளைஇப்” (புறநா.18:1);.

     “நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்ட” (குறுந்.251:7);.

     “முழங்குதிரை கொழீஇய மூரியெக்கர்” (நற்.15:1);.

   2. உரக்க மேடையில் பேசுதல்; thunder out a speech.

நிருவாகத்திற்கு எதிரான செய்திகளைத் தொழிலாளர்கள் முழங்கினார்கள். கூட்டத்தில் முழங்கி என்ன பயன்?

     “தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் முன்றினு முழங்கும்” (இலக். கொத்.7);.

க.முழுகு.

     [முழா → முழ → முழங்கு → முழங்கு-தல்.]

முழங்கை

முழங்கை muḻṅgai, பெ.(n.)

   1. கையில் மணிக்கட்டுக்கும் தோளுக்கும் இடையிலுள்ள பாகம்; forearm.

     “முழங்கைப் புண்போல முனை குலைந்த நிற்கிறது” (பழ.);,

     “முழங்கையிற் பட்ட சுகம் போல” (பழ.);.

   2. கையின் மேற்பாகமும் அதன் கீழ்ப்பாகமும் கூடுமிடம் (வின்.);; elbow.

க. மொழகை.

     [முழம்+கை-முழங்கை = கையின் நடுப் பொருத்தினின்று நுனி வரைப்பட்ட அல்லது முழு அளவான கை.]

     [p]

முழங்கைப்பிடிப்பு

 முழங்கைப்பிடிப்பு muḻṅgaippiḍippu, பெ.(n.)

   முழங்கையில் ஏற்படும் காற்றுப்பிடிப்பு நோய்; arthrtic pain at the elbow – Anconagra (சா.அக.);.

     [முழங்கை + பிடிப்பு.]

முழத்தின்கீழளவை

 முழத்தின்கீழளவை muḻttiṉāḻḷavai, பெ.(n.)

   நீட்டலளவையுள் ஒன்று. முழம் என்ற அளவைக்குக் கீழ்ப்பட்ட சாண், விரல், தோரை முதலிய அளவைகள்; a measurement in linear measurement, which is below the measurement of cubit as {}.

     [முழம் + அத்து + இன் + கீழ் + அளவை. முழத்திற்குக் கீழ்ப்பட்ட அளவுகள்.]

முழந்தாட்கச்சு

முழந்தாட்கச்சு muḻndāṭkaccu, பெ.(n.)

   1. முழங்காலிற் கட்டும் கச்சை; garter.

   2. சல்லடம்; short drawers;half pantaloons.

     [முழந்தாள் + கச்சு.]

முழந்தாள்

முழந்தாள் muḻndāḷ, பெ.(n.)

முழங்கால் (சூடா.); பார்க்க;see {}.

     “முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி” (குறு.394:1);.

முழந்து

 முழந்து muḻndu, பெ.(n.)

முழங்கால் (சூடா.); பார்க்க;see {}.

     [முழந்தாள் (முழம் + தாள்); → முழந்து = முழங்கால் (சூடா.); (வே.க.);.]

முழமிடு-தல்

முழமிடு-தல் muḻmiḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

முழம்போடு1-தல், 1 (வின்.); பார்க்க;see {} 1.

     [முழம் + இடு-தல்.]

முழம்

முழம் muḻm, பெ.(n.)

   இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு; cubit, measure from the elbow to the tip of the middle finger = 2 span.

இரண்டு முழம் மல்லிகைப்பூக் கொடு. “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” (நல்வழி.28);.

தெ. முர;க. மொழ;ம., து. முழம்.

     [முள் → முழி → முழம் = கைந்நடுப் பொருத்தினின்று அதன் நுனிவரையுள்ள நீட்டலளவு.]

முழம்போடு

முழம்போடு1 muḻmbōṭudal,    19 செ. குன்றாவி.(v.t.)

   1. கையால் முழவளவாக அளத்தல் (வின்.);; to measure with the fore arm.

   2 ஆழம் பார்த்தல்; to sound a person.

   3. ஆளின் தன்மையை ஆய்ந்து மதிப்பிடுதல்; to measure a person’s quality.

     [முழம் + போடு-தல்.]

 முழம்போடு2 muḻmbōṭudal,    20 செ.கு.வி.(v.t.)

   பொருந்தாப் பொய் பேசுதல் (இ.வ.);; to utter baseless falsehood.

     [முழம் + போடு-தல்.]

முழல்

முழல் muḻl, பெ.(n.)

   1. புதர்கள் செறிந்த இடத்தில் உள்ள முட்கொடி; a thorny bushy creeper – Caesalpina bonducella.

   2. கெச்சக்காய்; nut of bond ucella – fever nut.

   3. கழற்சிக்காய்; bondue – nut.

முழவம்

முழவம் muḻvam, பெ.(n.)

   1. முழவு, 1 (பிங்.); பார்க்க;see {}.

     “மண்கனை முழவம் விம்ம” (சீவக.628);.

   2. முழவு, 2 பார்க்க;see {}.

     “தண்ணுமைப்பின்வழி நின்றது முழவே” (சிலப்.3:141);.

     “நாறுகமழ் வீயும் கூறுமிசைமுழவமும்” (பரிபா.8:99);.

     [முழா → முழவு → முழவம். ஒ.நோ. முரசு → முரசம். ‘அம்’ பெருமைப் பொருட்பின்னொட்டு.]

முழவரிசை

முழவரிசை muḻvarisai, பெ.(n.)

   சோழர் காலத்தில் வாங்கிய வரிவகை (தெ.இ.கல். தொ.7:51);; a kind of tax in {}.

முழவு

முழவு1 muḻvu, பெ.(n.)

   1. முரசு; drum.

      “முழவின் முழக்கீண்டிய” (சீவக.2399);. “முழவுறழ் திணிதோள் நெடுவே ளாவி” (அகநா.61:15);,

      “முழவிசைப் புணரி எழுதரும்” (நற்.67:11);, “மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென” (புறநா.50:12);.

    2. குடமுழா (பிங்.);; large loud-sounding drum, hemispherical in shape.

   3. தம்பட்டம் (பிங்.);; tomtom.

   4. பால்கறத்தற்குரிய ஏனம்; vessel for milk.

     “முழுவிற் பிழிந்த பால்வழிநுரை” (கம்பரா. கார்கால.47);.

   5. ஏனம் முதலியன வார்த்தற்குரிய கரு; mould for casting a vessel.

ம. முழாவு.

     [முழா → முழவு.]

 முழவு2 muḻvudal,    5 செ.கு.வி.(v.i.)

   நெருங்கிப் பழகுதல் (இ.வ.);; to move on intimate terms.

     [முழுவு → முழவு → முழவு-தல்.]

 முழவு3 muḻvu, பெ.(n.)

   பனைமரத்தின் அடிப்பகுதி; bottom of the palmara tree.

     “முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணை” (குறுந்.301:1);.

     [முழவு1 → முழவு3.]

முழவுகட்டு-தல்

முழவுகட்டு-தல் muḻvugaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஏனஞ் செய்யக் கருகட்டுதல் (இ.வ.);; to prepare mould for casting vessels.

     [முழவு + கட்டு-தல்.]

முழவுக்கனி

முழவுக்கனி muḻvukkaṉi, பெ.(n.)

   திரண்ட பலாப்பழம் (சங்.அக.);; jack-fruit.

     [முழவு1 + கனி.]

முழவுமண்

முழவுமண் muḻvumaṇ, பெ.(n.)

   1. இனிது ஒலிக்க முழவில் வாய்ப் பூச்சிடும் கரிய சாந்து (யாழ்.அக.);; black paste smeared on the head of a drum.

   2. கருக்கட்டுங் களிமண்; clay used in making moulds.

     [முழவு + மண்.]

முழவுமேளம்

முழவுமேளம் muḻvumēḷam, பெ.(n.)

   1. முழவு முதலிய கருவிகளின் கூட்டம் (இ.வ.);; band of musical instruments, including {}.

   2. பறைவகை (வின்.);,

 kettle – drum.

     [முழவு + மேளம்.]

முழா

முழா1 muḻā, பெ.(n.)

முழவு பார்க்க;see {}.

     [முழு → முழா.]

 முழா2 muḻā, பெ.(n.)

   திரட்சி; accumulation.

     [முள் → முழு → முழா = திரட்சி.]

முழாசு

முழாசு1 muḻācudal,    5 செ.கு.வி.(v.i.)

   கொழுந்துவிட்டெரிதல் (சுவாலித்தல்); (யாழ்ப்.);; to burst into a flame, blaze up.

     [முழா → முழாசு → முழாசு-தல் = பெருநா விட்டு எரிதல்.]

 முழாசு2 muḻācu, பெ.(n.)

   தீக்கொழுந்து (சுவாலை); (யாழ்ப்.);; blaze, conflagration.

     [முழா → முழாசு = பெருநா தீநா..]

முழால்

முழால் muḻāl, பெ. (n.)

   தழுவுகை; embracing,

     “சிறார் முலை முழாலிற் பில்கி” (சீவக.2541);.

     [முழுவல் → முழால்.]

முழாள்

முழாள் muḻāḷ, பெ.(n.)

   1. வளர்ச்சியடைந்த பெரிய ஆள்; adult person.

   2. வயது வந்த வேலையாள் (வின்.);; adult workman.

     [முழு + ஆள்.]

முழாவு

முழாவு1 muḻāvudal,    5 செ.கு.வி. (v.i.)

முழவு-தல் (இ.வ.); பார்க்க;see {}.

 முழாவு2 muḻāvudal,    5 செ.கு.வி.(v.i.)

   நெருங்கிப் பழகுதல் (இ.வ.);; familiarity.

     [முழவு → முழாவு → முழாவு-தல் (வே.க.);]

முழாவுசால்

 முழாவுசால் muḻāvucāl, பெ.(n.)

   நிறை உழவு சால் (யாழ்ப்.);; the last or exterior furrow in ploughing.

     [முழாவு + சால்.]

முழி

முழி1 muḻidal,    4 செ.குன்றாவி.(v.t.)

   உமிழ்தல்; to spit.

 முழி2 muḻi, பெ.(n.)

   1. எலும்புப்பூட்டு; joint, as of the body.

   2. கரும்பு, மூங்கில் முதலியவற்றின் கணு; joint of bamboo, sugarcane node.

தெ.மேட;க., து. முடி;ம. முளி

     [மொழி → முழி.]

 முழி3 muḻi, பெ.(n.)

   விழி; eye, eye-ball.

சும்மா முழிக்கவே கண்ணெக் காணோம் சிமிட்டி முழிக்கிற தெங்கே (கோவை.);.

 முழி4 muḻittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கண் திறத்தல்; to open the eyes.

    2. தூக்கத்திலிருந்து எழுதல்; to wake up from sleep.

     [விழி-த்தல் → முழி-த்தல்.]

முழிக்குருடு

 முழிக்குருடு muḻikkuruḍu, பெ.(n.)

   முழுக்கண் குருடு; complete blindness (சா.அக.);.

முழிங்கள் திரப்பட்டு

 முழிங்கள் திரப்பட்டு muḻiṅgaḷtirappaṭṭu, பெ. (n.)

   திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Tiruvalur.

     [முழிங்கள்+திரம்+பற்று]

முழித்துக்கொள்ளு-தல்

முழித்துக்கொள்ளு-தல் muḻiddukkoḷḷudal,    13 செ.கு.வி.(v.i.)

   விழித்துக் கொள்ளுதல்; to wake up.

முழிப்பு

 முழிப்பு muḻippu, பெ.(n.)

   விழிப்பு; waking up.

     [முழி → முழிப்பு.]

முழியாங்கண்ணன்

 முழியாங்கண்ணன் muḻiyāṅgaṇṇaṉ, பெ. (n.)

   பெரிய கண்களையுடையவன் (கோவை.);; one who has got large eyes.

மறுவ. முண்டக்கண்ணன்

முழு

முழு1 muḻuttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. முழுமையாதல் (இலக்.அக.);; to be whole,entire.

     “முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற்” (நற்.18:3);,

முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்” (புறநா.52:2);.

   2. திரளுதல், பருத்தல்; conglomeration.

     [முள் → முழு → முழு-த்தல்.]

 முழு2 muḻu, கு.பெ.எ.(adj.)

   1. பிரிக்கப்படாத, குறைக்கப்படாத நிலையில் உள்ள அனைத்தும், எல்லாம்; all, entire, whole.

     “முழுவலி முதலை” (திவ்.பெரியதி.5.8:3);.

குழந்தை முழுப் பழத்தையும் சாப்பிட்டு விட்டது. தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற மக்களின் முழு ஒத்துழைப்பும் தேவை. அவர்தன் முழுப்பலத்தையும் பயன்படுத்தித் தூக்கினார்.

   2. பருத்த; large.

     “முழுமத றொலைந்த கோளி யாலத்து” (புறநா.58);,

     “முழுமுதல் துமிய உருமெறிந் தன்றே” (அகநா.68:7);,

     “கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி” (குறுந்.80:1);,

முழுமூடன், முழுத்தொகை, முழுமதி, முழுப் பூசினிக்காயைச் சோற்றோடு மறைப்பது போல,

      “முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டுமா?”

   3. குறையே இல்லாத, நிறைவான; complete.

வேலை நிறுத்தம் முழுவெற்றி செயல்முறை அறிவுபெற்ற பின்புதான் மருத்துவக்கல்வி பயின்ற மாணவன் முழு மருத்துவன் ஆகிறான்.

   4. விடுபடுதல் இல்லாத; total.

இதற்கு முழு விற்பனை வரிஉண்டு. நாளை நாடு முழுவதும் கடை அடைப்புக் கடைபிடிக்கப்படும்.

     [முள் → முழு. முல் → முள். முல் = பொருந்துதல்.]

முழுக

முழுக muḻuga, கு.வி.எ.(adv.)

   முழுவதும்; wholy, entirely.

     “மதிலுமாடமு மாடகச்செய் குன்று முழுகக் குழாமீண்டி” (திருவாரூ.142);.

     [முழுகு → முழுக (வே.க.முல்6);.]

முழுகல்

முழுகல் muḻugal, தொ.பெ.(vbl.n.)

   1. தலை முழுகல்; oil bath after menses.

   2. குளித்தல்; bathing (சா.அக.);.

     [முழுகு → முழுகல்.]

முழுகவிடு-தல்

முழுகவிடு-தல் muḻugaviḍudal,    18 செ. குன்றாவி. (v.t.)

   1. பொருள் முதலியன தொலையும்படி விடுதல்; to let a thing go to ruin.

   2. அடைவு வைத்த பொருளை மீட்க முடியாதிருத்தல் (இ.வ.);; to be unable to redeem, as a pledged thing.

     [முழுகு + விடு-தல்]

முழுகாமலிரு-த்தல்

முழுகாமலிரு-த்தல் muḻukāmaliruttal,    3 செ.கு.வி. (v.i.)

   கருவுற்றிருத்தல்; to be pregnant.

அவன் மனைவி மூன்று மாதமாய் முழுகாமலிருக்கிறாள்.

மறுவ. உண்டாயிருத்தல், மாதமாயிருத்தல், பிள்ளையாண்டிருத்தல்.

     [முழுகாமல் + இரு-த்தல்.]

முழுகிக்கிட-த்தல்

முழுகிக்கிட-த்தல் muḻugiggiḍattal,    3 செ.கு.வி.(v.i.)

   1. முழுவதும் முடங்கிக் கிடத்தல்; to be involved completely.

அவன்சொத்து முழுவதும் வணிகத்தில் முழுகிக் கிடக்கிறது.

   2. ஆழ்ந்து ஈடுபட்டிருத்தல்; to be absorbed, engrossed.

அவன் காமக் களியாட்டில் முழுகிக் கிடக்கிறான்.

   3. நீரில் அமிழ்ந்திருத்தல்; to be under water.

அடைமழையினாற் பயிர் முழுகிக் கிடக்கிறது.

     [முழுகு → முழுகி + கிட-த்தல்.]

முழுகிப்போ-தல்

முழுகிப்போ-தல் muḻugippōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. அமிழ்ந்து போதல்; to sink, founder;to be drowned.

நேற்று வந்த பெருவெள்ளத்தில் ஊர் முழுவதும் முழுகிப் போயிற்று (உ.வ.);.

   2. அடியோடு கெடுதல்; to be ruined, swallowed up.

சூதாட்டினால் அவன் குடி முழுகிப் போயிற்று.

   3. அடைவு வைத்த சொத்து மீட்கமுடியாது கடனுக்கு உட்பட்டுவிடுதல் (இ.வ.);; to be entirely lost beyond redemption.

அவன் அடைவு வைத்த நகை முழுவதும் முழுகிப் போய்விட்டது (உ.வ.);.

     [முழுகு → முழுகி + போ-தல்.]

முழுகு-தல்

முழுகு-தல் muḻugudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. குளித்தல்; to bathe the entire body by dipping or pouring.

   2. வினை முயற்சித்தல், அழுந்தியிருத்தல்; to be entirely immersed, as in business.

   3. அமிழ்ந்து போதல்; to sink.

கப்பல் முழுகிவிட்டது.

   4. மாதவிடாயடைதல் (வின்.);; to be in menses.

   5. தீர்க்க முடியாத அளவு கடன் மிகுந்ததால் சொத்து மீட்க முடியாமல் கடனுள் அமிழ்து போதல் (இ.வ.);; to be irretrievably involved in debts.

அவன் கடனில் முழுகி விட்டான்.

தெ. முனுகு;க. முழு;ம. முழகுக.

முழுகு = L. mergo, mergere, F. merger, E. merge.

இதினின்று emerge, submerge முதலிய சொற்கள் பிறக்கும். L. mers. இதினின்று immerse, submerse முதலிய சொற்கள் பிறக்கும் (வே.க.முல்6);.

     [முள் → முழு → முழுகு → முழுகு-தல் (வ.மொ.வ.);.]

முழுக்க

முழுக்க muḻukka, கு.வி.எ.(adv.)

   முழுதும்; wholly, entirely, altogether, completely.

     ‘உயிரை முழுக்க சுடுதலின்’ (சீவக.1966, உரை);.

நான் மழையில் முழுக்க நனைந்துவிட்டேன். ஊர் முழுக்க உன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள். குடம் சாய்ந்ததில் சமையல் அறை முழுக்கத் தண்ணீர்!

     [முழு → முழுக்க.]

முழுக்கட்டி

முழுக்கட்டி muḻukkaṭṭi, பெ.(n.)

   1. உடையாத ஒர் உருண்டை வடிவம்; thing that unbreakable globally form.

   2. பனி, பால், தயிர் முதலியவை கல்லைப் போல் இறுகிய நிலை; stone like formation of mist, milk and curd.

     “முழுக்கட்டி பெயர்க்கிற பன்றிக்கு கொழுக் கட்டி விட்டதுபோல” (பழ.);.

     [முழு + கட்டி.]

முழுக்கமுழுக்க

 முழுக்கமுழுக்க muḻukkamuḻukka, வி.அ. (adv.)

   வேறு யாரையும் எதையும் சார்ந்து இருக்காமல் முழு அளவில்; entirely not depending others for anything, complete self-dependent.

இந்தத் தொழிற்சாலை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது. கல்யாணச் செலவு முழுக்கமுழுக்க என்னையே சார்ந்தது.

முழுக்கருப்புப்பனிநீர்

முழுக்கருப்புப்பனிநீர் muḻukkaruppuppaṉinīr, பெ.(n.)

   சேங்கொட்டையிட்டுப் பதப்படுத்திய நிலத்தில் 8 மாதம் சென்ற பிறகு அவுரிச் செடியை விளைத்து நான்காம் தரத்தில் விளைந்த பயிரின் மேல் தங்கிய நீர்; இப்பனி நீரில் கொக்கினுடைய இறகைப் போட காக்கையின் இறகைப்போல கருப்பாகும் கழுவினாலும் நிறம் போகாது; dew water obtained by certain method dyes the white feather of the stork into permanent black, the method of obtaining the dew is given above (சா.அக.);.

     [முழு + கருப்புப்பனிநீர்.]

முழுக்களவாளி

 முழுக்களவாளி muḻukkaḷavāḷi, பெ.(n.)

   பெருந்திருடன்; great thief, robber.

     [முழு + களவாளி.]

முழுக்காடு-தல்

முழுக்காடு-தல் muḻukkāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   எண்ணெய் தேய்த்துக் குளித்தல்; oil bathing.

     “எண்ணெய் சேர்த்தே முழுக்காடுவார்” (அறப்பளீச்.50);.

க. முழுகாடு

     [முழுக்கு + ஆடு-தல்.]

முழுக்காட்டு

முழுக்காட்டு1 muḻukkāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   எண்ணெய்க் குளிப்பு செய்வித்தல்; to take oil bathe.

     “கடல்வேந்தை யவன்புனலான் முழுக்காட்டு முறைமை யென்கோ” (செளந்த.103);.

     [முழுக்கு + ஆட்டு-தல்.]

 முழுக்காட்டு2 muḻukkāṭṭudal,    5 செ. கு.வி.(v.i.)

   குளிக்கச் செய்தல்; to bathe some one.

குழந்தைக்கு எண்ணெய் தேய்த்து முழுக்காட்டினேன்.

     [முழுக்கு + ஆட்டு-தல்.]

முழுக்காப்பு

 முழுக்காப்பு muḻukkāppu, பெ.(n.)

   கோயில்களில் கடவுட் திருமேனியின் மீது சந்தனஞ்சாத்தி ஒப்பனை செய்யுஞ் சடங்கு (இ.வ.);; ceremony of daubing the idol completely with sandal paste, in temples.

     [முழு + காப்பு.]

முழுக்காய்

 முழுக்காய் muḻukkāy, பெ.(n.)

   பழுக்கும் பருவத்தின் காய் (வின்.);; fruit almost ripe;

 ripening stage of a fruit.

     [முழு + காய்.]

முழுக்காளி

முழுக்காளி muḻukkāḷi, பெ.(n.)

   1. முத்துக் குளிப்போன் (வின்.);; diver for pearls.

   2. இழவுக்குக் குளிக்க வேண்டிய நெருங்கிய உறவினன் (இ.வ.);; a near relation of a person, as one who is under obligation to bathe on his death.

     [முழுக்கு + ஆளி.]

முழுக்கு

முழுக்கு1 muḻukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

முழுத்து-தல் பார்க்க;see {}.

     “அயில்களும் வாளுந் தோள்களின் முழுக்கினர்” (கம்பரா.அதிகாய.98);.

க. முழுகிசு.

     [முழுகு → முழுக்கு → முழுக்கு-தல்.]

 முழுக்கு2 muḻukku, பெ.(n.)

   1. நீரில் தலை அமிழக் குளிக்கை; bath, bathing.

பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.

    2 .மாதவிடாய் (இ.வ.);; menses.

தெ. முனுகு;க. முழுகு;ம. முலுகு;து. முலு.

     [முழுகு → முழுக்கு.]

முழுக்குநிற்பாடு

முழுக்குநிற்பாடு muḻukkuniṟpāṭu, பெ.(n.)

   45ஆவது வயதில் பெண்களுக்கு மாதவிடாய் நிற்றல்; stoppage of menses at the age of 45 – Menopause.

     [முழுக்கு + நிற்பாடு.]

முழுக்குப்போடு-தல்

முழுக்குப்போடு-தல் muḻukkuppōṭudal,    19 செ.குன்றாவி.(v.t.)

   இதுவரை இருந்து வந்த தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுதல்; sever one’s connection, bid farewell to something, leave something one for all.

தன் பேச்சை யாரும் கேட்கவில்லை என்ற சினத்தின் காரணமாககழகத்திற்கு முழுக்குப் போட்டு விட்டார். படிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டுத் தந்தையின் தொழிலில் இறங்கிவிட்டான்.

     [முழுக்கு + போடு-தல்.]

முழுக்குமுறை

முழுக்குமுறை muḻukkumuṟai, பெ.(n.)

   1. பிள்ளைப்பேற்றின்பின் ஒன்றுவிட்டொரு நாள் முறையாக குளிக்குங் காலம்; the period soon after child-birth, during which the mother takes baths on alternate days.

   2. பிள்ளைப் பேற்றின்பின் முறையாகக் குளிக்கும் நாள்; the alternate days when a woman after child-birth takes baths.

     [முழுக்கு + முறை.]

முழுக்குழவி

முழுக்குழவி muḻukkuḻvi, பெ.(n.)

   முது கன்று; full-grown or weaned calf.

     “மோட்டெருமை முழுக்குழவி” (பட்டினப்.14);.

     [முழு + குழவி.]

முழுக்கூழ்

முழுக்கூழ் muḻukāḻ, பெ.(n.)

   கலக்கம்; utter confusion.

     “செய்தாய் முழுக்கூழ்” (நீலகேசி.399);.

     [முழு + கூழ்.]

முழுக்கெண்ணெய்

 முழுக்கெண்ணெய் muḻukkeṇīey, பெ. (n.)

   தலைமுழுகும் நெய்மம் (தைலம்);; bathing oil (சா.அக.);.

     [முழுக்கு + எண்ணெய்.]

முழுக்கைத்தட்டு

 முழுக்கைத்தட்டு muḻukkaittaṭṭu, பெ.(n.)

கும்மியாட்டத்தில் கைகளைத் தட்டும் முறை:

 clapping in kummi dance.

     [முழு+கை+தட்டு]

முழுங்காற்சிப்பி

 முழுங்காற்சிப்பி muḻuṅgāṟcippi, பெ.(n.)

முழங்காற்சில் (வின்.); பார்க்க;see {}.

     [முழங்கால் + சிப்பி.]

முழுங்காற்சில்லு

 முழுங்காற்சில்லு muḻuṅgāṟcillu, பெ.(n.)

முழங்காற்சில் பார்க்க;see {}.

     [முழங்கால் + சில்லு. சில் → சில்லு.]

முழுங்கித்தொலை-த்தல்

முழுங்கித்தொலை-த்தல் muḻuṅgittolaittal,    4 செ.கு.வி.(v.i.)

   சினத்துடன் சாப்பிடச் சொல்லுதல் (கோவை.);; abusing word, used in anger, to command a person to eat.

     [முழுங்கு → முழுங்கி + தொலை-த்தல்.]

முழுங்கு

முழுங்கு1 muḻuṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   முழுகுதல்; to sink குடம் தண்ணீரில் முழுங்கி விட்டது.

     [முழுகு – முழுங்கு → முழுங்கு-தல்.]

 முழுங்கு2 muḻuṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   தொண்டைக்குள் அல்லது வயிற்றிற்குள் முழுகச் செய்தல், விழுங்குதல்; to swallow, gulp, as food.

மாத்திரை முழுங்கினான்.

தெ. மிங்கு

     [முழுகு → முழுங்கு → முழுங்கு-தல்.]

முழுசு

முழுசு1 muḻusudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முட்டுதல்; to rub, strike against.

     “பிள்ளைகள் முலைக்கீழ் முழுசினவாறே பால்சுரக்கும்” (ஈடு, 5,3:3);.

   2. முத்தமிடுதல்; to kiss.

     “அழுத்தந் தழுவாதே முழுசாதே” (திவ்.பெருமாள்.9:6);.

     [முல் (பொருந்தல்); → முள் → முழு → முழுவு. முழுவு → முழுசு → முழுசு-தல். ஒ.நோ. பரவு → பரசு; விரவு →விரசு.]

 முழுசு1 muḻusudal,    5 செ.கு.வி.(v.i.)

   உட்புகுதல்; to dive, dip, get in, entire.

     “முழுசி வண்டாடிய தண்டுழாயின்” (திவ். பெரியதி.2.8:7);.

     [முல்(துளைத்தல்); → முள் → முழு → முழுசு → முழுசு-தல் (வே.க.முல்.6);.]

 முழுசு3 muḻusu, பெ.(n.)

முழுமை, 1 (உ.வ.); பார்க்க;see {}, 1.

     [முழுது → முழுசு.]

 முழுசு4 muḻusu, பெ.எ. (adj.)

   முழுமை; whole, entireness.

எல்லாப் பணியாரத்தையும் முழுசாய்த் தின்று விட்டான் (உ.வ.);.

     [முழுது → முழுசு.]

முழுச்சவரம்

 முழுச்சவரம் muḻuccavaram, பெ.(n.)

   மயிர் முற்றுமாக மழிக்கை (உ.வ.);; shaving the body and not merely the head.

     [முழு + Skt. சவரம் → த. மழி-த்தல்.]

முழுச்செம்பு

முழுச்செம்பு muḻuccembu, பெ.(n.)

   தென்னிந்தியாவில் வழங்கிய பழைய நாணய வகை (பணவிடு.140);; an ancient South Indian coin.

     [முழு + செம்பு.]

முழுச்செளரம்

 முழுச்செளரம் muḻucceḷaram, பெ.(n.)

முழுச்சவரம் (வின்.); பார்க்க;see {}.

     [முழு + Skt. சௌரம்.]

முழுச்செவிடு

 முழுச்செவிடு muḻucceviḍu, பெ.(n.)

   சிறிதும் ஒசை கேளாமை; complete deafness – Anacusia (சா.அக.);.

     [முழு + செவிடு]

முழுச்சோம்பேறி

 முழுச்சோம்பேறி muḻuccōmbēṟi, பெ.(n.)

   மிகுந்த சோம்பலுள்ளவ-ன்-ள்; great sluggard.

     “முழுச்சோம்பேறி முள்ளுள்ள வேலி” (பழ.);.

     [முழு + சோம்பேறி.]

முழுது

முழுது1 muḻudu, பெ. (n.)

   எஞ்சாமை; all, whole, entirely.

     “வேர்முழு துலறி நின்ற புழற்காற்” (அகநா.145:1);,

     “முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ” (குறுந்.210:3);,

     “சுடர்முழு தெறிப்பத் திரங்கிச் செழுங்காய்” (நற்.26:5);,

     “திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி” (புறநா.2:19);.

கனவு முழுதும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.

     [முழு → முழுது.]

 முழுது2 muḻudu, வி.எ.(adv.)

முழுதும் (தொல்.சொல்.326); பார்க்க;see {}.

      “முழுதும் நனைந்தவருக்கு முக்காடு எதற்கு?” (பழ.);.

     [முழு → முழுது.]

முழுதுகண்டராமன்

 முழுதுகண்டராமன் muḻudugaṇṭarāmaṉ, பெ.(n.)

   ஒரு பாண்டிய மன்னன் பெயர்; name of a {} king.

முழுதும்

முழுதும் muḻudum, வி.எ.(adv.)

   எஞ்சுதலின்றி; wholly, entirely.

     “முழுதும் வெண்ணெ யளைந்து தொட்டுண்ணும்” (திவ்.பெருமாள். 7:8);.

முழுதொருங்குணர்ந்தோன்

முழுதொருங்குணர்ந்தோன் muḻudoruṅguṇarndōṉ, பெ.(n.)

   1. அருகன் (திவா.);; Arhat.

   2. கடவுள் (யாழ்.அக.);; God.

   3. சிவன் (யாழ்.அக.);;{}.

     [முழுது + ஒருங்கு + உணர்ந்தோன்.]

முழுதோன்

முழுதோன் muḻutōṉ, பெ.(n.)

   கடவுள்; God.

     “முழுதோன் காண்க’ (திருவாச.3:29);.

     [முழுவது → முழுது → முழுதோன் = கடவுள்.]

முழுத்த

முழுத்த1 muḻutta, பெ.எ.(adj.)

   முதிர்ச்சி பெற்ற; fully developed.

     “முழுத்த வின்பக்கடல்” (திருக்கரு.கலித்.அந்.);.

     [முழு → முழுத்த.]

 முழுத்த2 muḻutta, வி.எ.(adv.)

முழுதும் பார்க்க; see {}.

     “ஏத்தி வந்த தெல்லா முழுத்த” (புறநா.372:2);.

     [முழு → முழுத்த.]

முழுத்தக்கம்பு

 முழுத்தக்கம்பு muḻuttakkambu, பெ.(n.)

முழுத்தக்கால் (இ.வ.); பார்க்க;see {}.

     [முழுத்தம் + கம்பு.]

முழுத்தக்கால்

முழுத்தக்கால் muḻuttakkāl, பெ.(n.)

   மணப்பந்தர்க்கு நல்வேளையில் முதலாக நாட்டும் கால் (வின்.);; first post fixed at an auspicious moment for erecting a pandal for a marriage.

     [முழுத்தம் + கால்.]

மணமனையில், மணநாளுக்கு முன் 3, 5, 7, 9 ஆகிய ஒற்றித்த நாட்களுள் ஒன்றில், நல்ல வேளையில் முழுத்தக் கால் நாட்டிப் பந்தல் அல்லது கொட்டகை போடப்படும்.

முழுத்தசுரம்

 முழுத்தசுரம் muḻuttasuram, பெ.(n.)

   சுரநோய் வகை (யாழ்.அக.);; a kind of fever.

     [முழுத்த + சுல் = வெப்பப்பொருள். சுல் → சுர் → சுரம். த.சுரம் → Skt.jvara.]

முழுத்தநாடி

 முழுத்தநாடி muḻuttanāṭi, பெ.(n.)

   நல்லோரை (வின்.);; auspicious time.

     [முழுத்தம் + நாடி.]

முழுத்தநாள்குறி-த்தல்

முழுத்தநாள்குறி-த்தல் muḻuttanāḷkuṟittal,    4 செ.கு.வி.(v.i.)

   திருமணச் சடங்கிற்காக நல்ல நாள் பார்த்தல்; fix an auspicious day for marriage.

மகளுக்கு இன்று முழுத்த நாள் குறித்தல் விழா நடைபெற்றது.

மறுவ. மணவுறுதி நாள்.

     [முழுத்தம் + நாள் + குறி-த்தல்.]

முழுத்தநெல்போடு-தல்

முழுத்தநெல்போடு-தல் muḻuddanelpōṭudal,    20 செ.கு.வி.(v.i.)

   இரண்டு புதுப் பானைகளில் ஒன்றில் நெல்லையும் மற்றொன்றில் நீரையும் இடுதல் (கோவை.);; just two days before the marriage its the custom of Senthalai Kounder caste the priest to take two pots, and place paddy in one and water in another.

செந்தலைக் கவுண்டர் இனத்தில் திருமணத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு காலையில் சீர்க்காரர்கள் இரண்டு புதுப் பானைகளில் ஒன்றில் நெல்லையும் மற்றொன்றில் நீரையும் இடுவர்.

     [முழுத்தம் + நெல் + போடு-தல்.]

முழுத்தம்

முழுத்தம் muḻuttam, பெ.(n.)

   1. திருமணத்தில் குறித்த நல்வேளையில் நடத்தும் தாலிகட்டும் நிகழ்வு; the main event of tying the {}, in a wedding ceremony in an auspicious hour.

முழுத்தம் முடிந்த பிறகு வருகிறாயே!

   2. நல்ல சடங்கு நிகழ்த்துவதற் குரிய நேரம்; auspicious hour.

நாளைக் காலை எட்டு மணிக்கு நல்ல முழுத்தம் இருக்கிறது.

   3. நேரம்; moment, time.

   4. ஒன்றரை மணி அல்லது மூன்றே முக்கால் நாழிகை நேரங் கொண்ட ஒரு காலவளவை; a division of time = 3 3/4 {} = 1 1/2 hours.

   5. இரண்டு நாழிகை கொண்ட காலப்பகுதி; a division of time of two {}.

   6. திருமணம்; marriage, wedding.

முழுத்தம்பார்-த்தல்

முழுத்தம்பார்-த்தல் muḻuttambārttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. திருமணம் முதலிய நல்நிகழ்வுகளுக்கு நல்ல நேரம் ஆய்ந்தறிதல்; to find out an auspicious time,

 like marriage, house-warning etc.

   2. முழுத்தம்வை-த்தல் பார்க்க;see {}.

     [முழுத்தம் +ண் பார்-த்தல்.]

முழுத்தம்வை-த்தல்

முழுத்தம்வை-த்தல் muḻuttamvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   மணவிழா முதலிய நற் செயல்களுக்கு நேரங்குறித்தல்; to fix an auspicious time, as for a wedding.

     [முழுத்தம் + வை-த்தல்.]

முழுத்து-தல்

முழுத்து-தல் muḻuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அமிழ்த்துதல்; to plunge, dip in, drown.

     “துதிக்கை முழுத்திற்று” (ஈடு, 3.5:1);.

     [முல் (துளைத்தல்); → முள் → முழு → முழுகு → முழுசு → முழுது → முழுத்து → முழுத்து-தல் (வே.க.);.]

முழுத்தும்

முழுத்தும் muḻuttum, வி.எ.(adv.)

முழுதும் பார்க்க;see {}.

     “முழுத்தும் பழுதற்ற முத்தமிழின்” (சிலப்.உரைச்சிறப்.பக்.1);.

முழுத்துவரை

 முழுத்துவரை muḻuttuvarai, பெ.(n.)

   உடைக்கப்படாத முழுத்துவரை; redgram pulse-Cajamuscajan.

     [முழு + துவரை.]

முழுத்துவி-த்தல்

முழுத்துவி-த்தல் muḻuttuvittal,    4 செ. குன்றாவி.(v.t.)

முழுத்து-தல் பார்க்க;see {}.

     “மன்னவரை….. முழுத்து விப்பன் செங்குருதிமுன்” (பாரதவெண்.126);.

     [முழுத்து → முழுத்துவி → முழுத்துவி-த்தல் (வே.க.முல்6);.]

முழுத்தேங்காய்

 முழுத்தேங்காய் muḻuttēṅgāy, பெ.(n.)

   உடைபடாத தேங்காய் (வின்.);; unbroken coconut.

     [முழு + தேங்காய்.]

முழுத்தொகை

முழுத்தொகை muḻuttogai, பெ.(n.)

   1. வட்டியுடன் கூடிய முதல்; capital and interest.

   2. மொத்தம்; total.

     [முழு + தொகை.]

முழுநாயகம்

 முழுநாயகம் muḻunāyagam, பெ.(n.)

   கொடி வகை (சங்.அக.);; a creeper.

முழுநாள்

 முழுநாள் muḻunāḷ, பெ.(ո.)

   ஒர் ஒரைக்குள்ளாகவே முழுதும் அமையும் விண்மீன் (சங்.அக.);; naksatra falling entirely within a zodiacal sign.

     [முழு + நாள். நாள் = விண்மீன்.]

முழுநீறுபூசியமுனிவர்

முழுநீறுபூசியமுனிவர் muḻunīṟupūciyamuṉivar, பெ. (n.)

தொகையடி யாருள் ஒருசாராரும் உடல் முழுவதும் திருநீற்றை அணிபவருமான சிவனடியார் (தேவா.738,10);;{}

 devotees who besmear sacred ashes all over their bodies, one of {}.

     [முழு + நீறு + பூசியமுனிவர்.]

இறைவனுடைய அடியவர்களின் மேனியில் அழகு செய்யும் சிவச் சின்னங்கள் திருவெண்ணீரும், அக்கமணியும் (உருத்திராட்சமும்); ஆகும்.

திருநீறு (கற்பகம், அநுகற்பகம், உபகற்பகம் என்று); மூன்று வகைப்படும்.

இம்மூன்று வகையான திருநீற்றையும் அணிவதினால் பிறவிப் பிணியைப் போக்கி நலம் பெற வழி உண்டாகிறது.

நோயின்றியும் கன்றையுடையதுமான ஆவின் சாணத்தை ஐந்தெழுத்து (பஞ்சாகூர); மறைமொழியைச் சொல்லி ஏற்று ஆனைந்து (பஞ்சகவ்யம்); விட்டுப் பிசைந்து உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். சிவனிரா (சிவராத்திரி); அன்று சிவ மறைமொழியில் வேள்விகள் நடத்தி நெருப்பில் இட வேண்டும்.

கொழுந்துவிட்டு எரியும் ஓமத்தீயில் சாணம் வெள்ளைப் பொடியாக – நீராக எரிந்து விடுகின்றது.

இத்திருநீற்றை சிவபெருமானார் திரு வடிகளை வாழ்த்தி வணங்கி, பயபக்தியுடன் எடுத்தல் வேண்டும். இத்தகைய திருவெண்ணீறு ‘கற்பகம்’ என உரைக்கப்படும்.

காட்டிலே உலர்ந்து கிடக்கும் ஆவின் சாணத்தைப் பொடி செய்து, ஆவின்நீரை ஊற்றி, நன்றாக பிசைந்து உலர்த்த வேண்டும். திருஓமம் வளர்த்துக் கொழுந்து விட்டு எரியும் ஒமத்தீயில் இட்டு எரிக்க வேண்டும். இத்திருவெண்ணீறு இரண்டாம் வகை (அநுகற்பகம்);.

ஆக்கள் மேயும் காட்டில் மரங்கள் பற்றி எரிந்து அதனால் உண்டான நீரும், ஆக்கள் கட்டி வைத்த இடங்களில் தீப்பற்றி வெந்துபோன நீரும், செங்கல் கட்ட காளவாயிலில் உண்டான நீரும், ஆகிய இவற்றைத் தனித்தனியே ஆவின் நீரினால் நன்றாகப் பிசைந்து உலர்த்த வேண்டும். அவற்றை மறைமொழி ஓதி உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு செய்யப்பட்ட உருண்டைகளை மடங்களில் உள்ள நெருப்பில் (சிவாக்கினியில்); இட்டு வேக வைத்தல் வேண்டும். இப்படித் தீயில் இட்டு எடுத்த திருநீறு மூன்றாம் வகைத் திருநீராகும் (‘உபகற்பம்’);.

இவற்றுள் எந்த வெண்ணீற்றையாயினும் உடல் முழுவதும் பூசிக் கொள்ளலாம். ஆனால் திருநீற்றை பூசிக் கொள்வதற்கென்று சில நெறிமுறைகள் உண்டு. அதைத் தட்டாமல் கடைப்பிடித்தல் வேண்டும்.

தூய்மையில்லாத இடங்களில் நடக்கும் போது திருநீறு அணியவே கூடாது. திருநீற்றை அணியும் போது அவற்றைக் கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு முழுநீறு பூசிய முனிவர்களைச் சுந்தர மூர்த்தி நாயனார் தொகையடியார்களில் ஒருவராக்கிச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

முழுநீள

 முழுநீள muḻunīḷa, பெ.அ.(adj.)

   கதை, திரைப்படம், முதலியவை குறித்து வருகையில் வழக்கமாக எதிர்பார்க்கப்படும் நீளத்திலும் குறிப்பிடப்படும் தன்மையிலும் உள்ள; ful length of story, film, etc.

காதல் கதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்தவர் இப்போது முழுநீளத் துப்பறியும் கதை எழுத தொடங்கி யிருக்கிறார். முழு நீள நகைச் சுவைப்படம்.

     [முழு + நீள. நீளம் → நீள.]

முழுநெறி

முழுநெறி muḻuneṟi, பெ.(n.)

   1. இத ழொடிக்கப்படாத முழுப்பூ (சிலப்.2:14, உரை);; full flower with the calyx.

   2. புறவித ழொடிக்கப்பட்ட முழப்பூ; full flower without the calyx.

     “குவளைக் கூம்பவிழ் முழுநெறி” (புறநா.116 : 2);.

   3. முற்றிய இலைகளால் நெருக்கமாகக் கட்டப்பட்ட தழையுடைய பூ; a dress made of dry leaves with dense cumulative.

     “கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி” (குறுந்.80:1);.

     [முழு + நெறி.]

முழுநோக்கு

முழுநோக்கு muḻunōkku, பெ.(n.)

   1. ஒன்றை அனைத்துக் கோணங்களிலும் நோக்குதல்; viewing the thing by all angle and aspect

   2. கோளொன்று முழுமையாக நோக்குகை; full aspect of a planet, one of four Kiraga-{}.

     “கன்னிமதி முழுநோக் கெய்தி” (பிரபுலிங். மாயை யினுற்பத்தி.58);.

மறுவ. முழுப்பார்வை

     [முழு + நோக்கு.]

முழுந்து

முழுந்து1 muḻundu, பெ.(n.)

முழுமை, 1 பார்க்க;see {},

   1. “முழுந்து சுகவடிவாம்” (ஞானவா.சனக.14);.

     [முழுது → முழுந்து.]

 முழுந்து2 muḻundudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விழுங்குதல்; to swallow.

     “முத்திப் பராமிழ்த முழுந்திட” (பாடு.92:7);.

     [முழுகு → முழுங்கு → முழுந்து → முழுந்து-தல்.]

முழுப்பங்கு

 முழுப்பங்கு muḻuppaṅgu, பெ.(n.)

   நிலத்துரிமையில் உட்பிரிவில்லாத தனிப்பங்கு (வின்.);; whole or undivided share, as in land owned in definite shares.

     “முழுப் பங்குக்காரனுக்கு முந்திரிப் பங்குக்காரன் மிண்டன்” (பழ.);.

     [முழு + பங்கு.]

முழுப்பாய்சுருட்டி

 முழுப்பாய்சுருட்டி muḻuppāycuruṭṭi, பெ.(n.)

   ஏமாற்றுக்காரன் (பெரு மோசக்காரன்);; swindler, great cheat, traitor.

     [முழு + பாய்சுருட்டி.]

முழுப்பார்வை

முழுப்பார்வை muḻuppārvai, பெ.(n.)

முழுநோக்கு (மங்களே.3:32, உரை); பார்க்க;see {}.

மறுவ. முழுநோக்கு.

     [முழு + பார்வை.]

முழுப்புரட்டன்

முழுப்புரட்டன் muḻuppuraṭṭaṉ, பெ.(n.)

   1. முழுப்புளுகன் பார்க்க;see {}.

   2. முழுப்பாய்சுருட்டி பார்க்க;see {}.

     [முழு + புரட்டன்.]

முழுப்புளுகன்

 முழுப்புளுகன் muḻuppuḷugaṉ, பெ.(ո.)

   பெரும்பொய்யன் (வின்.);; downright liar.

     [முழு + புளுகன்.]

முழுப்பொய்

 முழுப்பொய் muḻuppoy, பெ.(n.)

   பெரும் பொய்; downright lie.

     [முழு + பொய்.]

முழுப்பொருள்

முழுப்பொருள் muḻupporuḷ, பெ.(ո.)

   கடவுள்; the Supreme being.

     “மனவாக்கினுக்கு மெட்டாத முழுப்பொருளா முதல்வா” (சிவரக.கணபதிகுமர.7);.

     [முழு + பொருள்.]

முழுமகன்

 முழுமகன் muḻumagaṉ, பெ.(n.)

   அறிவிலி (திவா.);; fool.

     [முழு + மகன்.]

முழுமக்கள்

முழுமக்கள் muḻumakkaḷ, பெ.(n.)

   அறிவிலார்; fools, as barely satisfying the definition of human beings.

     “முழுமக்கள் காதலவர்” (திரிகடு.9);.

     [முழு + மக்கள்.]

முழுமணி

முழுமணி muḻumaṇi, பெ.(n.)

   1. துளையிடாத மணி; unpierced gem.

   2. குற்றமற்ற மணி (இரத்தினம்);; flawless gem.

     “முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா” (நீதிநெறி.13);.

     [முழு + மணி.]

முழுமதி

முழுமதி muḻumadi, பெ.(n.)

   முழுநிலவு, உவா; full moon.

     “முழுமதி புரைமுகமே” (சிலப். 7, பாட்டு.14);.

மறுவ. நிறைமதி, முழுநிலா, வெண்ணிலா.

     [முழு + மதி.]

முழுமனசு

 முழுமனசு muḻumaṉasu, பெ.(n.)

   முழு வொப்புதல் (உ.வ.);; entire willingness, full accord, whole-heartedness.

     [முழு + மனசு.]

முழுமனதாக

 முழுமனதாக muḻumaṉatāka, வி.அ.(adj.)

   முழுமனத்தோடு, முழு ஒப்புதலோடு; whole heartedly, whole hearted.

முழு மனதாகச்சொல்.

     [முழு + மனதாக.]

முழுமனதான

 முழுமனதான muḻumaṉatāṉa, பெ.அ. (adj.)

   முழு ஒப்புதலோடு; whole hearted.

முழுமனதான ஒத்துழைப்பு.

     [முழு + மனதான.]

முழுமனத்தோடு

 முழுமனத்தோடு muḻumaṉattōṭu, வி.அ.(adj.)

   தயக்கமோ, நிறைவின்மையோ இல்லாமல் முழு விருப்பத்தோடு; whole heartedly.

இந்தத் திட்டத்தை முழு மனத்தோடு வரவேற்கிறோம்.

     [முழு + மனத்தோடு.]

முழுமனை

முழுமனை muḻumaṉai, பெ.(n.)

   2400 ச.அடி கொண்ட நிலப்பகுதி (வின்.);; ground measuring 2400 sq.ft.

     [முழு + மனை.]

முழுமன்

முழுமன்1 muḻumaṉ, பெ.(n.)

முழுமகன் பார்க்க;see {}.

     “சனகியைக் கவர்ந்துபோய முழுமனை” (அரிசமய. குலசேகர.143);.

     [முழு → முழுமன்.]

 முழுமன்2 muḻumaṉ, பெ.(n.)

   அரைக்கும் பொழுது சிதைபடாது விழும் முழுக்கூலமணி (இ.வ.);; grain escaping unbroken in the process of grinding.

     [முழு → முழுமன்.]

முழுமிடறுசெய்-தல்

முழுமிடறுசெய்-தல் muḻumiḍaṟuseytal,    1.செ.குன்றாவி.(v.t.)

   வாய்நிறையக் குடித்தல்; to drink in large mouthfuls.

     “முழுமிடறு செய் தனுபவித்து” (ஈடு, 2, 3:9);.

     [முழு + மிடறு + செய்-தல்.]

முழுமுதல்

முழுமுதல் muḻumudal, பெ.(n.)

   1. கடவுள்; God, as the Sole Cause.

     “பொன்னம்பலத்தெம் முழுமுதலே” (திருவாச. 21: 3);.

   2. மரத்தின் அடிப்பகுதி; stem, as of a tree.

     “யாஅத்து….. முழுமுதல்” (குறுந்.255);,

     “நல்லரை முழுமுதல் அவ்வயின் தொடுத்த” (நற்.354:6);,

      “நொன்னிலை முழுமுத றுமியப் பண்ணி” (அகநா.145:10);.

     [முழு + முதல்.]

முழுமுற்றும்

முழுமுற்றும் muḻumuṟṟum, கு.வி.எ.(adv.)

முழுதும் பார்க்க;see {}.

     “முழு முற்றுந் தானே விளக்காய்” (சீவக.1870);.

     [முழு + முற்றும்.]

முழுமூச்சாக

 முழுமூச்சாக muḻumūccāka, வி.அ.(adv.)

   ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டி ஒன்றினுள் செலுத்தி; doing a thing with full involvement.

வணிகத்தில் முழுமூச்சாக இறங்கிவிட்டார்.

     [முழு + மூச்சாக.]

முழுமூச்சு

முழுமூச்சு muḻumūccu, பெ.(n.)

   1. முழுத் திறனுடன் செய்யும் முயற்சி (உ.வ.);; utmost effort, as with full breath.

   2. விடாத் தீர்மானம் (இ.வ.);; inflexible determination.

   3. மூச்சுத் திணறுகை (வின்.);; breathlessness.

     [முழு + மூச்சு.]

முழுமூச்சுடன்

 முழுமூச்சுடன் muḻumūccuḍaṉ, வி.அ. (adv.)

முழுமூச்சாக பார்க்க;see {}.

முழுமூடன்

முழுமூடன் muḻumūṭaṉ, பெ. (n.)

   பெரு முட்டாள் (திருவேங்.சத.49);; great fool.

     [முழு + மூடன்.]

முழுமேனியழகன்

 முழுமேனியழகன் muḻumēṉiyaḻkaṉ, பெ.(n.)

   எல்லா உடலுறுப்புகளும் அழகாய் அமைந்தவன்(சர்வாங்கசுந்தரன்);; one perfect in every limb, embodiment of beauty.

     [முழுமேனி+அழகன்]

முழுமை

முழுமை muḻumai, பெ.(n.)

   1. குறைகளோ தடங்கலோ இல்லாத இயல்பான இறுதி, நிறைவு; completion, wholeness.

ஒவியத்தை முழுமையாக வரைந்து விடு, பாதியில் நிறுத்திவிடாதே. நூல் முழுமை பெறவில்லை.

   2. எல்லாம் அமைந்த மொத்தம், எதுவும் விட்டுப் போகாத தன்மை; completeness, totality.

இசையைப் போல முழுமையான கதை வேறு எதுவும் இல்லை. புரட்சியை முழுமையாக ஒடுக்க முடியாது.

   3. எல்லாம் (பிங்.);; entireness.

   4. பருமை; great size.

     “துங்க முழு வுடற்சமணச் சூழ்ந்து மகிழ்வார்” (பெரியபு.திருநாவு.39);.

     [முழு + முழுமை.]

முழுவதற்கும்

 முழுவதற்கும் muḻuvadaṟkum, வி.அ.(adv.)

   மொத்த அளவிற்கும், முழுமைக்கும்; to the whole or entire.

இந்தச் சட்டம் நாடு முழுவதற்கும் பொருந்தும்.

     [முழு → முழுவதற்கும.]

முழுவது

முழுவது muḻuvadu, பெ.& கு.வி.எ.(n.& adv.)

முழுவதும் பார்க்க;see {}.

     “அகலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன்” (புறநா.34:15);.

     [முழு → முழுவது.]

முழுவதும்

முழுவதும்1 muḻuvadum, பெ.(n.)

   முழுமை; whole.

     “முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன்” (திருவாச.3:12);.

     [முழு → முழுவதும்.]

 முழுவதும்2 muḻuvadum, கு.வி.எ.(adv.)

   முழுமையாக; wholly, totally, completely.

     “நின்னையேத்த முழுவதுமே” (திருவாச5:6);,

     “முருங்கக் கலிங்க முழுவதும் வளைஇப்” (அகநா.136:20);.

நான்கு கிழமையாகப் பூட்டிக்கிடந்ததில் வீடு முழுவதும் தூசி. சாலை முழுவதும் கூட்டம். இரவு முழுவதும் தூங்கவில்லை.

     [முழு → முழுவதும்.]

முழுவன்

 முழுவன் muḻuvaṉ, பெ.(n.)

   முழுது; whole.

கடன் முழுவனும் தீர்த்து விட்டான் (உ.வ.);.

     [முழுமன் → முழுவன் (வே.க);.]

முழுவலயம்

முழுவலயம்1 muḻuvalayam, பெ.(n.)

   முழுமையான வட்டம் (யாழ்.அக.);; full circle.

     [முழு + வளையம் – முழுவளையம் → முழுவலயம்.]

 முழுவலயம்2 muḻuvalayam, பெ.(n.)

   வெற்றி (யாழ்.அக.);; victory.

     [முழுவலம் → முழுவலயம்.]

முழுவலி

முழுவலி muḻuvali, பெ.(n.)

   1. மிக்க வலிமை; great strength.

     “முழுவலி வயவர்”(பு.வெ.7:17);.

   2. நிறைந்த வலிமையுள்ளவ-ன்-ள்; powerful person, person of great strength.

     [முழு + வலி.]

முழுவல்

முழுவல்1 muḻuval, பெ.(n.)

   நீர்ப்பறவை வகை; an aquatic bird.

     “ஒடுங்கு சிறை முழுவலும்”(மணிமே.8:29);.

     [முழுகு → முழுவல்.]

 முழுவல்2 muḻuval, பெ.(n.)

   விடாது தொடர்ந்த அன்பு; perfect love.

     “முழுவற்கடல் பெருத்தான்” (தணிகைப்பு. நந்தியு.6);.

     [முள் → முழு → முழுவு → முழுவல்.]

முழுவழிக்கை

 முழுவழிக்கை muḻuvaḻikkai, பெ.(n.)

   உடல் முழுவதும் மயிர் மழிக்கை (சர்வாங்க சவரம்);; shaving the whole body.

     [முழு+மழிக்கை]

முழுவாசி

முழுவாசி muḻuvāci, பெ.(n.)

   1. முழுமை (வின்.);; whole.

   2. முற்றின நென்மணி (இ.வ.);; fully developed grain.

     [முழு + வாசி. வாய் = இடம். வாய் → வாயி → வாசி.]

முழுவாசியும்

 முழுவாசியும் muḻuvāciyum, கு.வி.எ. (adv.)

   பெரும்பகுதியும்; to a great extent, almost completely.

வீட்டு வேலை முழுவாசியுந் தீர்ந்து விட்டது (உ.வ.);.

     [முழுவாசி → முழுவாசியும்.]

முழுவி

 முழுவி muḻuvi, பெ. (n.)

   சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk.

     [முழுவல்-முழுவி]

முழுவின்பம்

 முழுவின்பம் muḻuviṉpam, பெ.(n.)

   முழு மகிழ்ச்சி (சொரூபானந்தம்);; perfect bliss.

     [முழு+இன்பம்]

முழுவீச்சில்

 முழுவீச்சில் muḻuvīccil, வி.அ.(adv.)

   ஒரு செயல் வேகமாகவும் மும்முரமாகவும்; in full swing.

தேர்தலுக்காண தேதிகள் அறிவிக்கப் பட்டவுடன் செய்தி பரப்புதல் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

     [முழு + வீச்சில். வீச்சு → விச்சில் = வலிமை.]

முழுவு-தல்

முழுவு-தல் muḻuvudal,    5 செ.கு.ன்றாவி.(v.t.)

   1. முத்தமிடுதல்; to kiss.

     “வந்தென் முலை முழுவித் தழுவி” (திருக்கோ.227);.

   2. பொருந்தித் தொடுதல்; to touch.

   3. தழுவுதல்; entwine.

     [முள் → முழு → முழுவு → முழுவு-தல்.]

முழுவென்பு

 முழுவென்பு muḻuveṉpu, பெ.(n.)

   எலும்புக் கூடு (திவா.);; skeleton.

     [முழு + என்பு. எலும்பு → என்பு.]

முழுவெலும்பு

 முழுவெலும்பு muḻuvelumbu, பெ.(n.)

முழுவென்பு பார்க்க;see {}.

     [முழு + எலும்பு.]

முழை

முழை1 muḻaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   துளைத்தல்; to pierce, bore.

     “முழைத்த வான்புழை” (பாரத. காண்டவ.17);.

     [முழு → முழை → முழை-த்தல்.]

 முழை2 muḻaidal,    2 செ.கு.வி.(v.i.)

   நுழைதல் (இ.வ.);; to enter.

     [முழு → முழை → முழை-தல்.]

 முழை3 muḻai, பெ.(n.)

   1. குகை; large mountain cave, cavern, den.

     “அவ்விசை முழை யேற்றழைப்ப” (பரிபா.1963);,

     “வாள்வரி வயப்புலி கன்முளை யுரற” (அகநா.168.12);,

     “கன்முழை யருவிப் பன்மலை நீந்தி” (புறநா.147:1);.

   2. துளை; bore.

   3. துளைத்தல் போல் துழாவும் துடுப்பு (வின்.);; spatula ladle.

     [முழு → முழை (வே.க.);.]

முழைஞ்சு

முழைஞ்சு muḻaiñju, பெ.(n.)

   1. துளை; hole.

     “குழன் முழைஞ்சு களினூடு குமிழ்த்து” (திவ். பெரியாழ்.3. 6:11);.

   2. குகை; den.

     “மாரிமலை முழைஞ்சில் மன்னி” (திவ்.திருப்பா.23);.

     [முழை3 → முழைஞ்சு.]

முழைத்தல்

முழைத்தல் muḻaittal, பெ.(n.)

   1. எழுத்திலா வோசை (சது.);; inarticulate sound, vocal sound having no corresponding written character.

   2. எழுத்தில்லா மொழி (வின்.);; language not possessing a written alphabet or characters.

முழையூர்

 முழையூர் muḻaiyūr, பெ. (n.)

   காரைக்கால்வட்டத்தில் உள்ள ஒரு ஊர்; a village in Karaikkal.

     [முழை(குகை);+ஊர்]

இது குறும்பர் நாட்டு ஊர்களில் ஒன்றாகும். இதனைத் தலைமையிடமாகக் கொண்ட நாடு முழையூர்நாடு என்னும் பெயருடன் திகழ்கின்றது.

முழையூர் நாட்டுக்கோன்

 முழையூர் நாட்டுக்கோன் muḻaiyūrnāṭṭukāṉ, பெ. (n.)

திருநள்ளாற்றுச் சிவன் கோயிலில்

     “சோலை இடர் தீர்த்தான் முழையூர் நாட்டுக் கோன்” என்று குறிக்கப்பட்டவன்;

 a person mentioned in temple inscription.

     [முழையூர்+நாட்டு+கோன்]

முவட்டிபண்டு

 முவட்டிபண்டு muvaṭṭibaṇṭu, பெ.(n.)

   எட்டிப்பழம் (பரி.அக.);; fruit of nux vomica.

தெ. முஷ்டிபண்டு

முவலம்

 முவலம் muvalam, பெ.(n.)

   அவுபல செய் நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison.

முவ்வை

 முவ்வை muvvai, பெ.(n.)

   நாய் (பரி.அக.);; dog.