செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
மீ

மீ1 mī, பெ.(n.)

   மகர ஒற்றும் ஈகார உயிரும் இணைந்து ஒலிப்பதனால் இவ்வெழுத்துப் பிறக்கும்; the compound of ‘ம்’ and ‘ஈ’.

     [ம் + ஈ.]

வாயைச் சற்று நீட்டி இசைப்பதால் இவ்வொலி தோன்றும்.

பல்வேறு காலங்களில் இவ்வெழுத்து அடைந்த வரி வடிவ மாற்றங்கள்.

 மீ2 mī, பெ.(n.)

   1. மேலிடம்; top, surface.

     “நாண் மலர் வான்மீ யகத்தே வர” (திருநூற். 84);. “காழ்விரி வகையார மீவரு மிளமுலை” (கலித். 4:9);.

   2. உயரம் (திவா.);; height, elevation, eminence, loftiness.

   3. வானம் (பிங்.);; sky, heavens.

     “மீப்பாவிய விமையோர் குலம்” (கம்பரா.நிகும்பலை.149);.

   4. மேன்மை; greatness, dignity, eminence, esteem, honour, nobility.

     “வெற்றிக் கருளக் கொடியான்றன் மீமீதாடா வுலகத்து” (திவ்.நாய்ச்.13:7);.

   தெ. மீ;க. மே.

 மீ3 mītal,    2 செ.கு.வி.(v.i.)

   மீந்திருத்தல்; to remain.

 மீ4 mīttal,    4 செ.கு.வி.(v.i.)

   மீத்து வைத்தல்; to save for future use.

சம்பளத்தில் மீத்தத் தொகையில் தான் மகளுக்குத் திருமணம் செய்து வைத்தான் (உ.வ.);.

மீகக்கல்

 மீகக்கல் mīkakkal, பெ.(n.)

மீக்கல் பார்க்க; see {}.

மீகண்

மீகண் mīkaṇ, பெ.(n.)

   1. கண்ணின் மேலிடம் (தொல்.எழுத்து.250, உரை);; the region above or over the eye.

   2. மேலிடம் (சங்.அக.);; top, upper or outer surface.

     [மேல்+கண் – மேக்கண் → மீக்கண் → மீகண்.]

மீகான்

மீகான்1 mīkāṉ, பெ.(n.)

   ஒரு பெரிய ஏனம் (மீனவ.);; big vessel or utensil.

 மீகான்2 mīkāṉ, பெ.(n.)

மீகாமன் பார்க்க; see {}.

     ‘நான்முகன் மீகானா’ (தண்டி.37, உரை, எடு.);.

     [மீகாமன் → மீகான்.]

மீகாமன்

மீகாமன் mīkāmaṉ, பெ. (n.)

   கப்பலைச் செலுத்தும் தலைவன் (மாலுமி);; pilot, captain of a vessel.

     ‘மரக்கல மீகாமர்’ (மதுரைக்.321, உரை);.

     “மீகாமன் இல்லா மரக்கலம் ஒருகாலும் ஓடாது” (பழ.);.

 மீகாமன் mīkāmaṉ, பெ.(n.)

   கப்பற்றலைவன் (கப்பித்தான்);; captain of a ship.

     [மிகு-மீகாமன்]

மீகாமன்வலங்கை

மீகாமன்வலங்கை mīkāmaṉvalaṅgai, பெ.(n.)

   18ஆம் நூற்றாண்டில் அறிவானந்த சித்தியார் என்னும் நூலை இயற்றியவர்; author of {}.

     [மீகாமன் + வலங்கை.]

வலங்கை என்பது ஊர்ப்பெயர். இவ்வூர் கும்பகோணம் எனப்படும் குடமுக்குக்கு அருகில் உள்ளது. அரண்மனையில் அரசர்க்கு வலப்புறம் அமர்ந்திருப்போர்க்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பு.

மீகாரம்

மீகாரம் mīkāram, பெ.(n.)

   மாளிகையின் மேலிடம்; upper storey or terrace of a mansion.

     “மீகார மெங்கணு நறுந்துகள் விளக்கி” (கம்பரா.ஊர்தே.3);.

     [மீ + Skt.ஆகாரம்.]

மீகை

மீகை1 mīkai, பெ.(n.)

   மேலெடுத்த கை; uplifted arm.

     “வென்றி யாடிய தொடித்தோண் மீகை” (பதிற்றுப்.40:12);.

     [மீ + கை.]

 மீகை2 mīkai, பெ.(n.)

   புலி தடுக்கிக் கொடி வகை (மலை.);; Mysore thorn a creeper.

மீக்கல்

 மீக்கல் mīkkal, பெ. (n.)

   காக்கைப் பொன் (அப்பிரகம்);; mica (சா.அக.);.

மீக்குணம்

மீக்குணம் mīkkuṇam, பெ.(n.)

   பெரு மிதமாய் நடக்குந் தன்மை; superciliousness.

     “மீட்பில்லோரை மீக்குணம் பழியார்” (முது.காஞ்.22);.

     [மீ + குணம்.]

மீக்குவம்

மீக்குவம் mīkkuvam, பெ.(n.)

   1. மருத மரம்; marudhu tree Terminalia paniculata.

   2. பெரும் பருத்தி; a plant.

   3. கருமருது; black mardhuTerminalia tomentosa.

மீக்கூர்-தல்

மீக்கூர்-தல் mīkārtal,    2 செ.கு.வி. (v.i.)

   அதிகமாதல், பெருகுதல்; to increase, to multiply, to surplus.

     “நாண் மீக்கூரி” (பெருங்.உஞ்ஞைச். 55:94);.

     [மீ + கூர்தல்.]

மீக்கூறல்

 மீக்கூறல் mīkāṟal, பெ.(n.)

   மேம்பாடு (அக.நி.);; superiority, preeminence value.

     [மீக்கூறு → மீக்கூறல்.]

மீக்கூறு

மீக்கூறு1 mīkāṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   உயர்வாகக் கூறுதல்; to praise high of oneself.

     “காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்” (குறள், 386);.

     [மீ + கூறுதல். கூறுதல் = சொல்லுதல், புகழ்ந்து சொல்லுதல்.]

 மீக்கூறு2 mīkāṟu, பெ.(n.)

மீக்கூற்றம், 1 பார்க்க; see {}.

மீக்கூற்றம்

மீக்கூற்றம் mīkāṟṟam, பெ.(n.)

   1. புகழ் (பிங்.);; praise.

     “பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே” (புறநா.135);.

   2. மேலாக மதிக்கப்படும் சொல்; speech or word which wins high regard.

     “புகழ் செல்வ மீக்கூற்றஞ் சேவகம்” (ஏலாதி.1);.

     “யாதுமீக் கூற்றம் யாமில மென்னும்” (கலித்.87:14);.

     [மீக்கூறு → மீக்கூற்றம். மீக்கூறுதல் = உயர்வாகக் கூறுதல்.]

மீக்கூற்று

மீக்கூற்று mīkāṟṟu, பெ.(n.)

மீக்கூற்றம் பார்க்க;see {}.

     “மீக் கூற்றாளர்” (சிலப்.28:149);.

     [மீக்கூற்றம் → மிக்கூற்று.]

மீக்கொள்(ளு)

மீக்கொள்(ளு)1 mīkkoḷḷudal,    13 செ.கு.வி. (v.i.)

   1. உயர்தல்; to ascend, to rise high.

     “அகின்மா புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின் மீக்கொள” (திருவாச.3:92);.

   2. மிகுதல்; to increase.

     “வசையுங் கீழ்மையு மீக்கொள” (கம்பரா. யுத்த. மந்திரப்.99);.

     [மீ + கொள்(ளு);தல்.]

 மீக்கொள்(ளு)2 mīkkoḷḷudal,    13 செ. குன்றாவி. (v.t.)

   1. மேலாக மதித்தல்; to esteem, to honour;

 to be noble.

     “மீக்கொ ளுயர்விழிவு வேண்டற்க” (நன்னெறி, 22);.

   2. மிகுதியாகக் கொள்ளுதல்; to possess in abundance.

     “ஊற்ற மீக்கொண்ட வேலையான்” (கம்பரா.வருணனைவழி.7);.

   3. மேலே அணிதல்; to put on.

     “பாப்புரி யன்ன மீக்கொ டானை” (பெருங்.உஞ்சைக். 42:244);.

     [மீ + கொள்(ளு);தல்.]

மீக்கோள்

மீக்கோள் mīkāḷ, பெ.(n.)

   1. ஏறுகை (பிங்.);; ascent.

   2. மேற்றாங்குகை (வின்.);; upholding.

   3. பொலிவு (அரு.நி.);; abundance, plenty.

   4. மேற்போர்வை; upper garment.

     “மீக்கோ ளுடற்கொடுத்துச் சேர்தல் வழி” (ஆசாரக்.31);. (பிங்.);.

     [மீக்கொள் → மீக்கோள்.]

மீக்கோழை

 மீக்கோழை mīkāḻai, பெ.(n.)

   பாண்டிய வளநாட்டின் பிரிவுகளுள் அடங்கியவொரு நாடு; a country in {}kingdom.

     “பாண்டிய குலாசனி வளநாட்டு மீகோழை தேவதான பிரம தேயம் திருவானைக்காவில்” (கல்.அக.);.

     [மேற்கு → மேல் + கோழை மேக்கோழை → மீக்கோழை.]

ஒருகா. வளங்கொழித்த இடம் கோழை எனப்பட்டிருக்கலாம்.

இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பகுதி. திருவானைக்கா மீக்கோழை நாட்டுள் அடங்கிய ஊர்களுள் ஒன்றாகும் (கல்.அக.);.

மீசநல்லூர்

 மீசநல்லூர் mīcanallūr, பெ. (n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Wandiwash Taluk.

     [மீசல்+நல்லூர்]

மீசப்பரவை

 மீசப்பரவை mīcapparavai, பெ.(n.)

   ஒருவகை மீன் (மீனவ.);; a kind of fish.

கெண்டைமீன் வகையைச் சார்ந்தது.

மீசரன்

மீசரன் mīcaraṉ, பெ.(n.)

   மேலானவன்; superior, great person.

     “கெம்பீரந் தன்னில் மீசரா” (இராமநா.உயுத்.31);.

     [மீசரம் → மீசரன்.]

மீசரம்

மீசரம் mīcaram, பெ.(n.)

   1. மேலானது; that which is superior or great.

இந்தத் தவசம் மீசரமாயிருக்கிறது (வின்.);.

   2. மிகுதி (வின்.);; plenty.

   3. விரைவு (யாழ்ப்.);; speed, hurriedness.

தெ. மீசரமு.

     [மீ + தரம் – மீதரம் → மீசரம்.]

மீசவாரம்

 மீசவாரம் mīcavāram, பெ. (n.)

   நில வுடைமையாளரின் முதல் பங்கு (அ); கண்டு முதலில் மேல் வாரப் பங்கு (W.G.);; the landholder’s share of the crop yield.

     [மீசு + வாரம். மீசு = மிகுதி.]

மீசு

மீசு mīcu, பெ.(n.)

   1. மீது பார்க்க; see {}.

     “துவராடை மீசுபிறக்கிய மெய்யினாரும்” (தேவா.38, 10);.

   2. மிகுதி (யாழ்.அக.);; abundance, copiousness.

     [மீது → மீசு.]

மீசுபொலி

 மீசுபொலி mīcuboli, பெ.(n.)

   அறச் செலவின் பொருட்டு முதலிற் கொள்ளுங் களநெல் (யாழ்ப்.);; grain first taken from the grain heap at the threshing floor for charitable purposes.

     [மீசு + பொலி. பொலி = நெற்குவியல். களத்தில் நெல்லளக்கும் போது முதல் மரக்காலுக்கு நற்சொல்லாக வழங்கும் பெயர். பொல் → பொலி =

செழித்தல், பெருகுதல். நெல்லளக்கும் போது முதலில் அளக்கும் அளவையை, பொலி வளர என்று நற்சொல்லாகக் கூறுவர்.]

மீசுமீட்டல்

 மீசுமீட்டல் mīcumīṭṭal, பெ.(n.)

   மேலாக எடுக்கை (யாழ்.அக.);; taking superficially.

     [மீசு + மீட்டல்.]

மீசுரம்

மீசுரம் mīcuram, பெ.(n.)

   1. மீசரம் பார்க்க: see {}.

     “மயல் மீசுரமாகுது.” (தனிப்பா.1, 377:20);.

   2. மிகவும் கடுமை (உக்கிரம்);யானது (யாழ்.அக.);; that which is extremely severe of or fierce.

     [மீசரம் → மீசுரம். மீசரம் = மேலானது, மிகுதி.]

மீசுவைத்தல்

 மீசுவைத்தல் mīcuvaittal, பெ. (n.)

   மேலே வைக்கை (யாழ்.அக.);; placing at the top, priority.

     [மீசு + வைத்தல். மீசு = மேலே, மேற்புறம், மேடு.]

மீசை

மீசை mīcai, பெ.(n.)

   1. ஆண்களின் மேல் உதட்டின்மேல் இருக்கும் முடி; moustache.

     “துடித்த தொடர்மீசைகள் சுறுக்கொள” (கம்பரா. மாரீச.49);. மீசை வளர்க்க ஆசை.

   2. பூனை, புலி போன்ற விலங்குகளின் வாயின் மேல் புறத்தில், பக்கவாட்டில் நீண்டிருக்கும் முடி; whiskers.

   3. கரப்பான் போன்ற பூச்சிகளின் தலையின் இருபுறமும் உள்ள விறைப்பான நீண்ட முடி போன்ற உணர்வு கொம்பு; antenna.

   4. மேலிடம்; upper part.

     “மீசைநீள் விசும்பில்” (சீவக.911);.

   தெ. மீசமு;   க. மீசெ;ம. மீசா.

     [மிசை → மீசை.]

மீசைக்காரன்

 மீசைக்காரன் mīcaikkāraṉ, பெ.(n.)

   இறால் மீன் (மீனவ.); (குழூஉக்குறிச்சொல்);; prawn fish.

     [மிசை + காரன்.]

     [p]

மீசைக்குத்தா

 மீசைக்குத்தா mīcaikkuttā, பெ.(n.)

   ஒருவகைக் கடல் மீன் (மீனவ.);; a kind of sea fish.

மீசைக்கொம்பு

 மீசைக்கொம்பு mīcaikkombu, பெ.(n.)

   ஒருவகைக் கொம்பு; horns which are in an elaborated position.

     [மீசை + கொம்பு. விரிந்து மீசைபோல் இருக்கும் கால்நடைக் கொம்பு.]

மீசைமுறுக்கு தல்

மீசைமுறுக்கு தல் mīcaimuṟukkudal,    5 செ.கு.வி.(v.i.)

   வீரக் குறிப்பாக மீசையைப் பக்கவாட்டில் விரலால் திருகுதல்; to twist the moustache in anger, defiance or challenge.

     “மீசை முறுக்கிச் சினந்து” (தனிப்பா.1, 296 : 6);. எதற்கெடுத்தாலும் மீசையை முறுக்காதே.

     [மீசை + முறுக்குதல். வீரத்தோடு எதிர்த்துச் சண்டையிட அணியமாக இருத்தல்.]

மீசையைமுறுக்குகிறான்

 மீசையைமுறுக்குகிறான் mīcaiyaimuṟuggugiṟāṉ, பெ.(n.)

   சண்டைக்கு வருகிறான்; coming for a fight or a combat.

     [மீசை + ஐ + முறுக்குகிறான்.]

மீச்சிதக்களி

 மீச்சிதக்களி mīccidakkaḷi, பெ.(n.)

   வெள்ளாவிப்பானை; earthern pot used by washer man for boiling clothes with fuller’s earth.

மீச்சிதம்

 மீச்சிதம்  mīccidam, பெ. (n.)

மீச்சிதக்களி பார்க்க; see {}.

மீச்செலவு

மீச்செலவு mīccelavu, பெ.(n.)

   1. வரம்பு மீறிய நடத்தை; arrogant conduct, presumption, forward behaviour.

     “சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணின்” (நீதிநெறி. 17);.

   2. மேற்போகை (யாழ்.அக.);; advancing, progressing.

     [மீ + செலவு. செலவு = நடை, போக்கு, ஒட்டம்.]

மீடம்

 மீடம் mīṭam, பெ.(n.)

   சிறுநீர் (சங்.அக.);; urine.

     [மீள் → மீடம் = குடித்த நீர் சிறுநீராக வெளி வருதல்.]

மீட்சி

மீட்சி1 mīṭci, பெ.(n.)

   1. திரும்புகை; turning, returning.

     “மீட்சியுங் கூஉக்கூஉ மேவு மடமைத்தே” (பரிபா.19:65);.

வறுமையில் இருந்து மீட்சி பெற வழிதான் என்ன?

   2. உடன்போக்கின் வகையுள் ஒன்று (செவிலி, தலைவியைக் காணாது மீண்டு வருதலும், உடன்போய் தலைவனுந் தலைவியு மீண்டு வருதலுமாம்; a kind of accompaniment.

     [மீள் → மீட்சி.]

 மீட்சி2 mīṭci, பெ.(n.)

   1. திருப்புகை; turning (bringing); back, causing to return.

   2. விடுதலை செய்கை (உ.வ.);; releasing redeeming.

   3. கைம்மாறு; recompense.

     “மீட்சிசெய் திறமிலை” (கம்பரா.நாகபா.267);.

     [மீள் → மீட்சி. ஒரு நிலையிலிருந்து விடுபடுதல், மீளுதல்.]

ஒருவர் ஒரு பதவியில் இருக்கும்போது பணி முடியாமலோ, தவறிச் செயற்படும் போதோ மேல் அதிகாரிகள் செய்யும் ஒருவகை நடவடிக்கை.

மீட்டடைவு

 மீட்டடைவு mīḍḍaḍaivu, பெ. (n.)

   நாட்டிய அடைவு வகை; stepping in dance.

     [மீட்டு+அடைவு]

அரைமண்டியில் வலது காலை அதன் இடத்திலேயே தட்டி, வலப்புறமாகத் தோள்களுக்கு இடைப்பட்ட தொலைவு வரை அகற்றித்தட்டி, பின்பு இடது காலை அகற்றித் தட்டி வைத்த வலது காலின் பின்னால் குத்திவைத்த பின்னர் வலது காலையகற்றி வைத்த இடத்திலேயே தட்டுதலும், இதே போன்று இடக்காலால் செய்தலும் இவ்வடைவு ஆகும்.

மீட்டாண்ட நாச்சியார்

மீட்டாண்ட நாச்சியார் mīṭṭāṇṭanācciyār, பெ. (n.)

   1257ஆம் ஆண்டு திருவண்ணாமலை கோயிலுக்குப்பாண்டங்கள் வாங்க110 பொன் வழங்கிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் மனைவி; Meettanda machiyar wife of Koperunsingan(1257); gave 110 gold coins for purchasing articles for the temple,

     [மீட்டு+ஆண்ட+நாச்சி+.ஆர்]

மீட்டிடம்

மீட்டிடம் mīḍḍiḍam, பெ.(n.)

   மீட்பதற்கு உரிய இடம்; place of return.

     “மீட்டிடம் பெற்றுக் கூட்டிடங் கூடி” (பெருங்.உஞ்சைக்.57:75);.

     [மீள் + இடம் – மீட்டிடம்.]

மீட்டு

மீட்டு1 mīṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. மீளச் செய்தல்; to cause to return.

போனவனை மீட்டுக் கொண்டு வந்தான்.

   2. ஒத்தி முதலியவற்றைத் திருப்புதல் (யாழ்.அக.);; to redeem, as mortgaged property

   3. காத்தல் (யாழ்.அக.);; to save.

   4. யாழ் முதலியவற்றின் நரம்பை விரலால் தெறித்தல்; to fillip the strings of lute, etc.

யாழ் மீட்டினான் (உ.வ.);.

   5. வீணை போன்ற இசைக்கருவிகளின் நரம்பை விரலால் அதிரச் செய்தல்; to play on the lute.

வீணையை மீட்டிக் கொண்டு பாடத் தொடங்கினான்.

   6. நாணேற்றுதல்; to fasten the string of a bow.

   7. அள்ளுதல் (யாழ்.அக.);; to take a handful of

   8. நினைவு கூர்தல்; to recall.

நீங்கள் சொன்னதைத் திரும்பவும் மீட்டிப் பார்க்கிறேன்.

க., தெ. மீடு.

     [மீள்தல் → மீட்டுதல்.]

 மீட்டு2 mīṭṭu,    வி.அ..(adv.) திரும்ப; again. further.

     “சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு” (நாலடி, 70);.

     “கேட்டவை தோட்டியாக மீட்டாங்(கு);” (அகநா.286:6);.

     “கோட்டினத் தாயர் மகனன்றே மீட்டொரான்” (கலித்.103:33);.

     [மீள் → மீட்டு.]

மீட்டுணர்வு

மீட்டுணர்வு mīṭṭuṇarvu, பெ.(n.)

   ஒத்த தன்மையுடைமை; recognition of identity or similarity.

     “நினைவு மீட்டுணர்வு நேர்தரும்” (நீலகேசி.119);.

     [மீட்டு + உணர்வு.]

மீட்டுப்பட்டான்

மீட்டுப்பட்டான்  mīṭṭuppaṭṭāṉ, பெ.(n.)

   ஆனிரைகளை மீட்டபொழுது இறந்தவன்; person who died, while collecting back (recovering); the captured cattles.

ஆநிரைகளைப் பகைவரோடு போரிட்டு மீட்டுவிட்டானெனினும், பகைவரால் கொல்லப்பட்டான். மீட்டல் கரந்தை என்ற புறத்திணைக்கு இச்செய்தி இலக்காகி நிற்கின்றது. “ஆந்தைப்பாடி ஈசைபெரும் பாணாரைசரு மருமக்கள் தொறுக் கொண்ட ஞான்று மீட்டுப்பட்டான்” (செங்கம்நடு கற்கள் கி.பி.7ம் நூற்றாண்டு); (கல்.அக.);.

     [மீட்டு + பட்டான்.]

மீட்டுமுறி

 மீட்டுமுறி mīṭṭumuṟi, பெ.(n.)

   ஒத்தியுரிமை நீங்கியதைக் குறிக்கும் ஆவணம் (நாஞ்.);; redemption deed.

     [மீட்டு + முறி.]

மீட்டும்

மீட்டும் mīṭṭum, கு.வி.எ.(adv.)

மீட்டு பார்க்க; see {}.

     “மீட்டு மினி யெண்ணும் வினை” (கம்பரா.பொழிலிறு.5);.

     [மீட்டு → மீட்டும்.]

மீட்டுருவாக்கம்

 மீட்டுருவாக்கம் mīṭṭuruvākkam, பெ.(n.)

   கிடைக்கும் வடிவங்களைக் கொண்டு முன்பு இருந்த வடிவங்களைக் கண்டறியும் முறை; reconstruction.

     [மீள் → மீட்டு + உருவாக்கம்.]

மீட்டெடு

மீட்டெடு1 mīḍḍeḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. காத்தல்; to redeem, rescue, save.

   2. மேலாக எடுத்தல்; to take out superficially.

     [மீட்டு + எடு-த்தல்.]

 மீட்டெடு2 mīḍḍeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   இரையெடுத்தல்; to chew the cud.

     [மீட்டு + எடு-த்தல்.]

மீட்பர்

 மீட்பர் mīṭpar, பெ.(n.)

   காப்பவர் (இரட்சகர்);; saviour, redeemer.

உலக மீட்பர் வந்து விட்டார். மீட்பர் இன்றி உய்ய முடியாது. மீட்பரே அனைத்துக்கும் கரணியமாவர்.

     [மீள் → மீட்பு → மீட்பர்.]

மீட்பு

மீட்பு1 mīṭpu, பெ.(n.)

   1. காப்பாற்றும் நடவடிக்கை; rescue operation.

   வெள்ளம் மற்றும் நில அதிர்வால் பாதிக்கப்பட்ட ஊர்களைக் காப்பாற்ற மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இரவு பகலாக மீட்பு வேலைகள் நடைபெற்றன. 2. ஒருவர் சட்டத்திற்கு முரணாக வைத்திருக்கும் பொருள்களைக் கைப்பற்றுதல்; confiscation, recovery.

பல இலக்க உருபா மதிப்புள்ள தங்கக் கட்டிகள் மீட்பு.

     [மீள் → மீட்பு.]

 மீட்பு2 mīṭpu, பெ.(n.)

   மீட்கை (யாழ்.அக.);; releasing, redemption, salvation.

     [மீள் → மீட்பு.]

மீண்செயல்

 மீண்செயல் mīṇceyal, பெ.(n.)

   எதிர்த் தாக்கம்; reaction.

     [மீள் → மீண் + செயல்.]

மீண்டு

மீண்டு mīṇṭu, பெ.(n.)

மீட்டு பார்க்க; see {}.

     “மீண்டு வாராவழி யருள் புரிபவன்” (திருவாச.2:177);.

     [மீள் → மீண்டு.]

மீண்டும்

மீண்டும் mīṇṭum, வி.அ.(adv.)

   மறுபடியும், திரும்பவும், மேலும்; again, repeatedly, moreover.

     “மீண்டு வாராவழி யருள்புரிபவன்” (திருவாச.2:117);.

     “மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்” (பரிபா.2:11);.

சற்று ஒய்வு எடுத்த பிறகு மீண்டும் எழுதத் தொடங்கினார்.

முதல் பத்தியை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக் கொண்டு இருக்காதே!

     [மீள் → மீண் → மீண்டும்.]

மீதம்

 மீதம் mītam, பெ.(n.)

   மீதி, மிச்சம்; balance, remainder.

மீதம் வைக்காமல் சாப்பிட வேண்டும்.

     [மீதி → மீதம்.]

மீதாடு-தல்

மீதாடு-தல் mīdāṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   கடந்து செல்லுதல்; to transcend, surpass, go beyond.

     “வெற்றிக்கருளக் கொடியான்றன் மீமீதாடா வுலகத்து” (திவ். நாய்ச்.13:7);.

     [மீது + ஆடுதல்.]

மீதாட்சி

மீதாட்சி mītāṭci, பெ.(n.)

மீயாட்சி பார்க்க; see {}.

     “காராண்மை மீதாட்சி உள்ளடங்க” (T.A.S.1, 6:14);.

     [மீது + ஆட்சி – மீதாட்சி.]

மீதான

மீதான mītāṉa, பெ.அ.(adj.)

   1. ஒருவர் மேல் உள்ள; against some one.

ஒருவர் தொழிலாளர் மீதான வழக்குகளை நிருவாகம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரினார்.

   2. முன்பு குறிப்பிட்டதைக் கரணியமாகக் கொண்டு, நிகழ்கிற; concerning, relating to, regarding.

புது திட்ட அறிக்கை மீதான வழக்கு இன்று மக்களவையில் கொண்டு வரப்பட்டது.

     [மீது → மீதான.]

மீதாரி

மீதாரி1 mītāri, பெ.(n.)

   மிச்சம்; that which remains;

 remainder, balance.

உன்னிடத்து ஏதேனும் மீதாரியிருக்கிறதா?

     [மீது + ஆர் மீதார் → மீதாரி.]

ஒருகால் ஊதாரி என்ற வடசொல்லுக்கு எதிர்ச்சொல்லாக மீதத்திலிருந்து மீதாரி என்ற சொல் வழக்குக்கு வந்திருக்கலாம்.

 மீதாரி2 mītāri, பெ.(n.)

   ஒருவகைக் கலப்பு மணப்புகை (வாசனைத் தூபம்); (சைவச. மாணா.9, உரை);; incense composed of various substances.

     [மீது + ஆர் மீதார் → மீதாரி.]

மீதி

மீதி1 mīti, பெ.(n.)

   1. மிச்சம், மீதம்; that which is left over, that which remains, surplus.

மீதி வைக்காமல் சாப்பிடு. செலவு போக மீதி இவ்வளவுதானா?

   2. எஞ்சியிருப்பது; remainder.

எட்டில் மூன்று போனால் மீதி ஐந்து.

மறுவ. மிச்சம்

     [மிகுதி → மீதி.]

 மீதி2 mīti, பெ.(n.)

   1. காட்டுக் கத்தரி (மலை.);; hedge caper.

   2. எட்டி (சங்.அக.);; strychnine tree, nux vomica.

   3. கருஞ்சூரை; aspecies of black thorny shrub (சங்.அக.);.

மீதிகி

மீதிகி mītigi, பெ.(n.)

மீதி2 பார்க்க; see {} (சா.அக.);.

மீதிகுடி

 மீதிகுடி mītiguḍi, பெ. (n.)

   சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chidambaram Taluk.

     [மீதி+குடி]

மீதிடல்

 மீதிடல் mītiḍal, பெ.(n.)

   வளர்கை (இலக். அக.);; growth.

     [மீது + இடல்.]

மீதிரா

 மீதிரா  mītirā, பெ.(n.)

   பெருலவங்கப் பட்டை; thick cinnamon, a bark.

மீதிரை

 மீதிரை mītirai, பெ.(n.)

   சூரைச் செடி;{} plant.

மீதீந்து

 மீதீந்து mītīndu, பெ.(n.)

   பேரரத்தை; greater galangal Alpinia galangal (major);.

மீது

மீது1 mītu, பெ.(n.)

   1. மேற்புறம்; top, outer or upper surface.

   2. மேடு (நாமதீப.535);; elevated or raised place.

     [மீ → மீது.]

 மீது2 mītu, இடை.(part.)

   இடவேற்றுமைப் பொருளில் வழங்கும் சொல்லுருபு;   மேல்; word used as a locative sign, ‘on’ ‘at’,

     “பூவிரி புன்னை மீது தோன்று பெண்ணை” (அகநா.310:12);.

     “தண் வயலூரன் மீது” (நாலடி,389);.

     ‘புத்தகத்தை நாற்காலியின் மீது வை’. அவர் மீது பழி சொல்லாதே! அவர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

     [மீ → மீது.]

 மீது3 mītu, வி.அ.(adv.)

   அதிகம் (வின்.);; over, excess, that which exceeds;

 extra, surplus.

     “மிகவரினு மீதினிய வேழப் பினவும்” (பரிபா.10:15);.

     [மீ → மீது.]

மீதுந்து

 மீதுந்து mītundu, பெ.(n.)

   நெல்லி; Indian gooseberry Emblica myrobalam (சா.அக.);.

மீதுபொலி

 மீதுபொலி mītuboli, பெ.(n.)

மீசுபொலி பார்க்க; see {}.

     [மீசுபொலி → மீதுபொலி.]

மீதுரை

 மீதுரை mīturai, பெ.(n.)

   விளம்பல்;   பலகால் திரும்பத் திரும்பச் சொல்லுதல் (சூடா.);; repetition, tautology.

     [மீது + உரை.]

மீதுரைவேர்

 மீதுரைவேர் mīturaivēr, பெ.(n.)

   ஒருவகை நறுமண மஞ்சள்; musk turmeric Curcuma aromatica.

     [மீதுரை + வேர்.]

மீதூணன்

 மீதூணன் mītūṇaṉ, பெ.(n.)

   பெருந்தீனி தின்போன்; glutton.

     [மீதூண் → மீதூணன்.]

மீதூணருந்தல்

 மீதூணருந்தல் mītūṇarundal, பெ. (n.)

   மிதமிஞ்சி உண்ணுகை; glut to eat in excessive eating.

     [மீதூண் + அருந்தல்.]

மீதூண்

 மீதூண் mītūṇ, பெ.(n.)

   அளவுக்கு அதிகமான உணவு; to eat in excess.

     “மீதூண் விரும்பேல்” (பழ.);.

     [மிகுதி + ஊண். ஊண் = உணவு.]

மீதூர்

மீதூர்1 mītūrtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. மேன்மேல் வருதல்; to increase, to aggravate, to come crowded.

     “துன்பமே மீதூரக் கண்டும்” (நாலடி, 60);.

   2. அடர்தல்; to press hard.

     “மெய்யைந்து மீதூர” (பு.வெ.8:33);.

     [மீது + ஊர்-தல்.]

 மீதூர்2 mītūrtal,    2 செ.குன்றாவி.(v.t.)

   அடர்த்தல்; to subdue.

     “ஒளியாரை மீதூர்ந் தொழுகுவ தல்லால்” (பழ.248);.

     [மீது + ஊர்தல்.]

மீதோல்

மீதோல் mītōl, பெ.(n.)

மீந்தோல் பார்க்க; see {}.

     “மீதோ லெங்கு மினுக்கிகள்” (திருப்பு.623);.

     [மீந்தோல் → மீதோல்.]

மீத்துவை-த்தல்

மீத்துவை-த்தல் mīttuvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மீதப்படுத்துதல் (உ.வ.);, மிச்சப்படுத்துதல்; to save for future use;

 to be thrifty;

 to lay by.

மீத்து வைத்த சொத்தெல்லாம் நெருப்புக்கு இரையாயிற்று.

     [மிகு → மிகுத்து → மீத்து + வை (துணை வினை); த்தல்.]

மீத்தோல்

 மீத்தோல் mīttōl, பெ.(n.)

   மேலேயிருக்கும் தோல், பீத்தோல்; epidermis scarf.

     [மீ + தோல்.]

மீநீர்

மீநீர் mīnīr, பெ.(n.)

   நீரின் மேற்பரப்பு; surface of water.

     “மீநீர் நிவந்த விறலிழை” (பரிபா.21:40);.

     [மீ + நீர்.]

மீந்தது

மீந்தது mīndadu, பெ.(n.)

மீதி1 பார்க்க; see {}.

     [மிகு → மிகுதி → மீதி → மீந்தது.]

மீந்தோல்

மீந்தோல் mīndōl, பெ.(n.)

   மேற்றோல் (தொல்.எழுத்து.251, உரை);; epidermis, superficial skin.

     [மீ + தோல்.]

மீனகாதி

 மீனகாதி mīṉakāti, பெ.(n.)

   கொக்கு; stork, crane.

மீனுக்குப் பகையான கொக்கு.

மீனக்காரி

 மீனக்காரி mīṉakkāri, பெ.(n.)

   மீன ஒரையில் உள்ள காரிகோள் (வின்.);;{} in pisces, considered unpropitious.

     [மீன் → மீனம் + காரி.]

மீனக்கை

 மீனக்கை mīṉakkai, பெ. (n.)

   நாட்டிய நளி நயக்கை; a dance pose.

     [மீனம்+கை]

மீனக்கொடியோன்

மீனக்கொடியோன் mīṉakkoḍiyōṉ, பெ.(n.)

   1. பாண்டியன்;   {}. 2. காமன்;{}.

     [மீன்கொடியோன் → மீனக்கொடியோன்.]

மீனக்கொடுதி

 மீனக்கொடுதி mīṉakkoḍudi, பெ. (n.)

   மீன (பங்குனி); மாதத்தில் காட்டை அழிக்கும் முன் தெய்வத்திற்குப் படைக்கும் கொடைவிழா; a function of making offerings to the deity before setting fire to the forest for new cultivation during the month of Panguni (March-April);.

     [மீனம்+கொடுதி]

மீனங்கம்

 மீனங்கம் mīṉaṅgam, பெ.(n.)

மீன்முள் பார்க்க; see {}.

     [மீன் + Skt. அங்கம்.]

மீனங்கு

 மீனங்கு mīṉaṅgu, பெ.(n.)

   விரியன் பாம்பு (சங்.சக.);; a vіper.

மீனச்சனி

 மீனச்சனி mīṉaccaṉi, பெ.(n.)

மீனக்காரி பார்க்க; see {}.

     [மீனம் + Skt. சனி.]

மீனஞ்சு

 மீனஞ்சு mīṉañju, பெ.(n.)

   மீன் கொல்லிப் பூடு; a kind of plant killing fish ratle wort Crotolaria paniculata.

     [மீன் + நஞ்சு.]

மீனஞ்சுவன்னி

 மீனஞ்சுவன்னி mīṉañjuvaṉṉi, பெ.(n.)

   கடல் நுரை; bone of cuttle fish.

     [மீனஞ்சு + வன்னி.]

மீனஞ்சுவள்ளி

 மீனஞ்சுவள்ளி mīṉañjuvaḷḷi, பெ.(n.)

மீனஞ்சுவன்னி பார்க்க; see {}.

     [மீனஞ்சு + வள்ளி.]

மீனத்துவசன்

மீனத்துவசன் mīṉattuvasaṉ, பெ.(n.)

மீன்கொடியோன் பார்க்க; see {}.

     “வரிபயின் மீனத்துவசன் முன்னே” (திருவிளை.பயகர.29);.

     [மீன் + அத்து + Skt. துவசன்.]

மீனநிலயம்

மீனநிலயம் mīṉanilayam, பெ.(n.)

   1. மீன்களின் இருப்பிடமான கடல்; sea, as the abode of fish.

     “மூதூர் மீனநிலயத்தி னுகவீசி” (கம்பரா.பொழிலிறுத்.2);.

   2. மீன் காட்சியகம்; aquarrium.

     [மீன் + நிலையம்.]

மீனன்

மீனன் mīṉaṉ, பெ.(n.)

   மீனவோரையை வீடாகவுடையவான வியாழன் (நாமதீப.100);; Jupiter, as the lord of pisces.

     [மீன் → மீனன்.]

மீனமரம்

 மீனமரம் mīṉamaram, பெ.(n.)

   மலைவேம்பு; a species of margosa tree.

மீனமாதம்

 மீனமாதம் mīṉamātam, பெ.(n.)

   பன்னிரண்டாவது தமிழ் (பங்குனி); மாதம்; Tamil month of {}.

     [மீனம் + மாதம்.]

மீனம்

மீனம்1 mīṉam, பெ.(n.)

   விண்மீன்; star.

     “மீனத் திடை நிலை” (மணிமே.11:42);.

     [மின் → மீன் → மீனம். மின் = மின்னுதல், ஒளிவீசுதல்.]

 மீனம்2 mīṉam, பெ.(n.)

   1. மீன் (திவா.);; fish.

   2. மேழத்திலிருந்து பன்னிரண்டாம் வோரை (பிங்.);; pisces of the zodiac.

   3. பன்னிரண்டாவது தமிழ் மாதம் (பங்குனி);; the 12th month of Tamil.

     “மீனமதி யுத்தரத்தங் கெழுந் தருளி” (திருவாலவா. 4:16);.

     [மீன் → மீனம்.]

மீனம்பர்

 மீனம்பர் mīṉambar, பெ.(n.)

   மீன் வயிற்றிலகப்படும் ஒருவகை மணப்பொருள்; ambergris, grey amber, Ambragrisea.

     [மீன் + {} அம்பர்.]

மீனம்பல்

 மீனம்பல் mīṉambal, பெ. (n.)

மீனம்பர் (யாழ்.அக.); பார்க்க; see {}.

மீனம்பாக்கம்

 மீனம்பாக்கம் mīṉambākkam, பெ.(n.)

   சென்னை மாநகரிலுள்ள ஓர் ஊர்; a part of city in Chennai.

{மீனம் + பாக்கம்.]

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த ஊர். வானூர்தி நிலையம் (உள்நாடு மற்றும் வெளிநாட்டு); உள்ளது.

மீனரசு

மீனரசு mīṉarasu, பெ.(n.)

   1. விண் மீன்களின் அரசான நிலவு,

 moon, as king of the stars.

     “மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து” (சிலப்.4:26);.

   2. மீனைக் கொடியாகக் கொண்ட பாண்டிய அரசு;{} government.

     [மீன் + அரசு.]

மீனராசி

 மீனராசி mīṉarāci, பெ.(n.)

மீனவோரை பார்க்க;see {}.

     [மீனம் + Skt. இராசி.]

மீனறுவடைக்காலம்

 மீனறுவடைக்காலம் mīṉaṟuvaḍaikkālam, பெ.(n.)

   மீன் பிடிக்கும் காலம்; fish catching season.

தற்போது கழிமுகப் பண்னையில் மீன் அறுவடைக் காலம்.

     [மீன் + அறுவடை + காலம்.]

மீனவக்கெளுத்தி

 மீனவக்கெளுத்தி mīṉavakkeḷutti, பெ.(n.)

   ஒருவகைக் கெளுத்தி மீன்; a species of fish Macrene.

மீனவணம்

 மீனவணம் mīṉavaṇam, பெ. (n.)

   நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Nagappattinam.

     [மீன்+ஆவணம்(தெரு);]

மீனவன்

மீனவன்1 mīṉavaṉ, பெ.(n.)

   1. மீன்கொடி யுடையவனான பாண்டியன்;{} king, as flying the fishbanner.

     “தேனார் கமழ் தொங்கன் மீனவன் கேட்ப” (காரிகை. பாயி.2);.

   2. மீன் பிடிக்கும் இனத்தவர்; fisher man caste.

   3. மீன் பிடிக்கும் தொழிலாளி; a man who take fishing as his vocation.

     [மீன் → மீனவன்.]

 மீனவன்2 mīṉavaṉ, பெ. (n.)

   மீனைக் கொடியாகக் கொண்டோன் காமன்; Kama, as having the fishemblem on his banner,

     “மாதர் மேனியல்லால் வில்லில்லை மீனவர்க்கு” (தேசிகப்.4:15);.

     [மீன் → மீனவன்.]

மீனவல்லிகை

 மீனவல்லிகை mīṉavalligai, பெ.(n.)

   மீன்கொத்திக் குருவி; a bird with long beak kingfisher, darter.

மீனவிராசி

 மீனவிராசி mīṉavirāci, பெ. (n.)

மீன வோரை பார்க்க; see {}.

மீனவுச்சன்

மீனவுச்சன் mīṉavuccaṉ, பெ.(n.)

மீன வோரையை உச்சவிடமாகக் கொண்ட வெள்ளி (சுக்கிரன்); (நாமதீப.101);: {},

 as having his exaltation in pisces.

     [மீனம் + உச்சன்.]

மீனவோரை

 மீனவோரை mīṉavōrai, பெ.(n.)

   மேழவோரையிலிருந்து பன்னிரண்டாம் ஒரை; pisces of the zodiac.

     [மீனம் + ஒரை.]

மீனா

 மீனா mīṉā, பெ.(n.)

   வயிரம் பாய்ந்த ஒரு மரவகை (Nels.);; a kind of hard wood, Spondia aurentalis.

மீனாங்கன்

 மீனாங்கன் mīṉāṅgaṉ, பெ.(n.)

   காமன் (சங்.அக.);;{}.

மீனாஞ்சு

மீனாஞ்சு mīṉāñju, பெ.(n.)

   1. மீனஞ்சு பார்க்க; see {}.

   2. நெருப்புக் கட்டி; an abscess wtih burning sensation (சா.அக.);.

மீனாடு

 மீனாடு mīṉāṭu, பெ. (n.)

சிந்துவெளிப் பகுதிக்கு வழங்கிய பழைய பெயர்:

 Indus valley area known as meennadu (fish land);.

மீனாடு (விபுலானந்தர்-யாழ்நூல்);.

     [மீன்+நாடு]

மீனாட்சி

மீனாட்சி1 mīṉāṭci, பெ.(n.)

மதுரையை உறைவிடமாகக் கொண்ட தெய்வம்: {},

 the tutelary Goddess of Madurai.

     [மீன் + ஆட்சி. மீனைக் கொடியில் சின்னமாகக் கொண்டவள்.]

 மீனாட்சி2 mīṉāṭci, பெ.(n.)

   பொன்னாங் கண்ணி; a medicinal prostate plant Illecebrum sessile (சா.அக.);.

மீனாட்சிசுந்தரக்கவிராயர்

மீனாட்சிசுந்தரக்கவிராயர் mīṉāṭsisundarakkavirāyar, பெ.(n.)

   19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; a Tamil poet, who belongs to the 19th centuary.

இவர் கழுகுமலைத் திரிபந்தாதி, முருகர் அனுபூதி, எட்டையபுரம் இளவரசர் ஒருதுறைக் கோவை, வண்டுவிடு தூது, குதிரைமலைப் பதிகம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். பாண்டிய நாட்டு முகவூரைச் சேர்ந்தவர். தந்தைப் பெயர் கந்தசாமி புலவர்.

மீனாட்சிசுந்தரனார் தெ.போ.

 மீனாட்சிசுந்தரனார் தெ.போ. mīṉāṭsisundaraṉārtepō, பெ. (n.)

பலராலும்

   பாராட்டப் பெற்ற தமிழ் அறிஞர்; a famous Tamil scholar, felicitated by many.

மீனாட்சிசுந்தரம்பிள்ளை

மீனாட்சிசுந்தரம்பிள்ளை mīṉāṭsisundarambiḷḷai, பெ.(n.)

   தமிழ்ப் புலவர்; a Tamil poet who lived in the 19 centuary.

திருச்சிக்கருகில் எண்ணெயூரில் 1815ல் பிறந்தவர். உறையூர் புராணம், சீகாழிக் கோவை முதலிய நூல்களை எழுதியவர்.

மீனாண்டி

 மீனாண்டி mīṉāṇṭi, பெ. (n.)

   சருக்கரை (சங்.அக.);; sugar.

மீனாம்பூச்சி

 மீனாம்பூச்சி mīṉāmbūcci, பெ.(n.)

   ஒளி வீசும் ஒருவகைப் பூச்சி; fire – fly.

மறுவ. மின்மினிப் பூச்சி, மின்மினி.

     [மின்னாம்பூச்சி → மீனாம்பூச்சி.]

மீனாய்

மீனாய் mīṉāy, பெ.(n.)

   1. நீர்நாய் (யாழ்.அக.);; otter, Lutra vulgaris.

   2. ஒரு வகை மீன்; a kind of fish.

நீரில் வாழும் நாய் வடிவில் உள்ள நீர்வாழ் விலங்கு.

     [மீன் + நாய்.]

மீனாலயம்

 மீனாலயம் mīṉālayam, பெ.(n.)

மீனநிலயம் (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [மீன் + ஆலயம்.]

மீனாவளல்

 மீனாவளல் mīṉāvaḷal, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [மீன்+(வளவு);வளவல்-வளல்]

மீனிரைதல்

 மீனிரைதல் mīṉiraidal, பெ.(n.)

   மீன் நீந்துதலாலும் வால் துடுப்பைச் சுழற்றி யடித்தலாலும் உண்டாகும் ஒலி; sound created by fish while swimming and twisting its tail paddle.

     [மீன் + இரைதல்.]

மீனிறக்கம்

 மீனிறக்கம் mīṉiṟakkam, பெ.(n.)

   மீன்கள் இயல்பாய் மேயும் இடத்தினின்று கரையை நோக்கி வருகை; migration of fish from its natural abode towards coastal areas.

மீனிறக்கம் கண்டேன் வலையை விரி(மீனவ.);.

     [மீன் + இறக்கம்.]

மீனிலா

 மீனிலா mīṉilā, பெ.(n.)

   விண்மீன் ஒளி (இ.வ.);; star light.

     [மீன் + நிலா.]

மீனீரலெண்ணெய்

 மீனீரலெண்ணெய் mīṉīraleṇīey, பெ. (n.)

மீனெண்ணெய் பார்க்க; see {}.

     [மீன் + ஈரல் + எண்ணெய்.]

மீனு

 மீனு mīṉu, பெ.(n.)

   வாலேந்திர போளம்; myrrh agum resin used in medicines.

மீனுணங்கல்

மீனுணங்கல் mīṉuṇaṅgal, பெ.(n.)

   கருவாடு; salted, dried fish.

     “பன்மீ னுணங்கற் படுபுள் ளோப்புதும்” (அகநா.80:6);.

     [மீன் + உணங்கல்.]

மீனுரசுதல்

 மீனுரசுதல் mīṉurasudal, பெ.(n.)

   குழம்புக்காக மீன்களின் செதில்கள் நீங்குமாறு செய்கை; removal of scales of fishes.

குழம்புக்கு மீனுரசிவிட்டாயா?

     [மீன் + உரசுதல்.]

மீனூர்தி

மீனூர்தி mīṉūrti, பெ.(n.)

   மீனை ஊர்தியாக உடையவனான வருணன் (நாமதீப.82);;{},

 as having a fish as his vehicles.

     [மீன் + ஊர்தி.]

மீனெண்ணெய்

மீனெண்ணெய்1 mīṉeṇīey, பெ.(n.)

   1. மீனிலிருந் தெடுக்கும் நெய் (M.M.462);; Malabar oil, Oleum pisces.

   2. ஒருவகை மீனின் கல்லீரலிலிருந்து எடுக்கும் நெய்; cod liver oil, Oleum morrhuae.

     [மீன் + எண்ணெய்.]

 மீனெண்ணெய்2 mīṉeṇīey, பெ.(n.)

   காட் என்ற மீனின் கல்லீரலிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்; codliver oil (fish oil);.

     [மீன் + எண்ணெய்.]

மீனெய்

மீனெய் mīṉey, பெ.(n.)

   மீனிலிருந்து வடிக்கும் நெய்; fishoil.

     “மீனெய்யொடு நறவு மறுகவும்” (பொருந.215);.

     [மீன் + நெய்.]

மீனெரிஞ்சான்

 மீனெரிஞ்சான் mīṉeriñjāṉ, பெ.(n.)

மீன் கொல்லி (மலை.); பார்க்க; see {}.

     [மீன் + எறிஞ்சான் மீனெறிஞ்சான் → மீனெரிஞ்சான்.]

மீனெறி

 மீனெறி mīṉeṟi, பெ.(n.)

   மீன்கொத்திக் குருவி; a bird with long beak king fisher.

மீனெறிதூண்டிலார்

மீனெறிதூண்டிலார் mīṉeṟitūṇṭilār, பெ.(n.)

   கழகப் காலப் புலவர்;{} poet.

     [மீனெறி + தூண்டிலார்.]

இவர் யானை இழுத்துவிட்ட மூங்கிலுக்கு, மீன் பிடிப்பவர் மேலே இழுத்த தூண்டிலை உவமை கூறியதனால் இப்பெயர் பெற்றார். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் பாடிய பாடலொன்று குறுந்தொகையில் உள்ளது.

     “யானே யீண்டை யேனே யென்னலனே

ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்

கான யானை கைவிடு பசுங்கழை

மீனெறி தூண்டிலின் நிவக்கும்

கானக நாடனொடு ஆண்டொழிந்தன்றே” (குறுந்:54);.

மீனெறிபறவை

 மீனெறிபறவை mīṉeṟibaṟavai, பெ.(n.)

மீன்கொத்தி (திவா.); பார்க்க; see {}.

     [மீன் + எறி + பறவை.]

மீனெலும்பு

 மீனெலும்பு mīṉelumbu, பெ.(n.)

மீன்முள் பார்க்க; see {}.

     [மீன் + எலும்பு.]

மீனேறு

மீனேறு mīṉēṟu, பெ.(n.)

   சுறாமீன் (திவா.);; shark.

     “மீனே றுயர்த்த கொடிவேந்தனை வென்ற பொற்பிற் றானே றனையா னுளன் சீவக சாமி யென்பான்” (சீவக.6);.

     [மீன் + ஏறு.]

மீன்

மீன்1 mīṉ, பெ.(n.)

   1. விண்மீன்; star.

     “பதியிற் கலங்கிய மீன்” (குறள், 1116);.

   2. பதினான்காம் விண்மீனாகிய நெய்ம்மீன் (சித்திரை);; the 14th naksatra.

   3. பதின்மூன்றாம் விண் மீனாகிய கைம்மீன் (அத்தம்);; the 13th naksatra.

க. மீன்.

     [மின் → மீன். மீன் = மின்னும் வெண்ணிற மீன்.]

 மீன்2 mīṉ, பெ.(n.)

   1. உடலில் அமைந்திருக்கும் சிறகு போன்ற செதிலாலும், வாலாலும் நீந்திச் செல்லக் கூடிய நீர் வாழ் உயிரினம் (பிங்.);; fish.

   2. மீனவோரை (சூடா.);; pisces of the zodiac.

   3. மீன்கோட்பறை (யாழ்.அக.); பார்க்க; see {}.

   4. சுறா (வின்.);; shark.

     [மின் → மீன்.]

மீன் வகைகள் :

   1. விரால் மீன்,

   2. குறவை மீன்,

   3. அயிரை மீன்,

   4. இறால் மீன்,

   5. கெண்டை மீன்,

   6. சன்னக் கெண்டை,

   7. பேராரல் மீன்,

   8. சிற்றாரல் மீன்,

   9. கச்சல் மீன்,

   10. உழுவை மீன்,

   11. கொடுவா மீன்,

   12. வாளை மீன்,

   13. சேல் கெண்டை,

   14. கெளிற்று மீன்,

   15. ஒலை வாளை,

   16. சுறா மீன்,

   17. கொள்ளி மீன்,

   18. சன்ன கூலி,

   19. திருக்கை மீன்,

   20. மடவை மீன்,

   21. சுரும்பு மீன்,

   22. உல்ல மீன்,

   23. கற்றலை மீன்,

   24. வெள்ளை வெளவால்,

   25. கருவெளவால்,

   26. நெய்த் தோலி,

   27. மயிறி மீன்,

   28. விலாங்கு மீன்,

   29. கிழங்கான் மீன்,

   30. வஞ்சிரம் மீன்.

மீன் அமர்வு

 மீன் அமர்வு mīṉamarvu, பெ.(n.)

   சம தரையில் தாமரை அமர்வு நிலையில் அமர்ந்து பின்புறம் கைகளைக் கட்டியபடி செய்யும் அமர்வு வகை; a kind of {} positure.

     [மீன் + அமர்வு.]

மீன் ஆயம்

 மீன் ஆயம் mīṉāyam, பெ.(n.)

   மீன் பிடித்தலுக்கு வாங்கும் வரி; tax, a levy.

மீன் ஆயம் கட்டி விட்டீர்களா?

     [மீன் + ஆயம்.]

சோழர் காலத்தில் மீனவர்களிடம் வாங்கிய வரி.

மீன்கட்டை

 மீன்கட்டை mīṉkaṭṭai, பெ.(n.)

   கட்டுமரம் (இ.வ.);; catamaran, fishing raft.

     [மீன் + கட்டை.]

மீன்கண்

 மீன்கண் mīṉkaṇ, பெ.(n.)

   ஒருவகை மணிக்கல் (சங்.அக.);; pearl, a kind of gem.

     [மீன் + கண். மீனின் கண் போன்ற மணிக்கல், முத்து.]

மீன்கண்டம்

 மீன்கண்டம் mīṉkaṇṭam, பெ.(n.)

   மீன் துண்டு; piece of fish (meat); curry.

     [மீன் + கண்டம்.]

மீன்கண்ணணிந்தோன்

மீன்கண்ணணிந்தோன் mīṉkaṇṇaṇindōṉ, பெ.(n.)

   சிவன் (நாமதீப.12);;{}.

     [மீ + கண் = மேலுள்ள கண், நெற்றிக்கண். மீ + கண் → மீங்கண் → மீன்கண் + அணிந்தோன்.]

மீன்கருவாப்பு

 மீன்கருவாப்பு mīṉkaruvāppu, பெ.(n.)

   மீன் கூட்டம் (மீனவ.);; mass of fishes.

மீன்கல்

 மீன்கல் mīṉkal, பெ.(n.)

   மீனின் தலையி லுண்டாகும் கெட்டியான வெளுத்த கல். இதைத் தண்ணீரிலுரைத்து குடிக்க கல்லடைப்புப் போகும்; a white stone grown in the head of some fish. It is a good diuretic, even it removes stone in the bladder and kidney.

     [மீன் + கல்.]

மீன்கவிச்சு

 மீன்கவிச்சு mīṉkaviccu, பெ.(n.)

   மீன் நாற்றம்; unpleasant smell of fish, stink.

     [மீன் + கவிச்சு. கவிச்சு = புலால் நாற்றம்.]

மீன்காட்சியகம்

 மீன்காட்சியகம் mīṉgāṭciyagam, பெ.(n.)

   வகைவகையான மீன்களும் பிற நீர் வாழ் உயிரினங்களும் நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் இடம்; aquarium.

     [மீன் + காட்சியகம்.]

மீன்காரன்

மீன்காரன் mīṉkāraṉ, பெ.(n.)

   1. மீன் விற்போன்; fish monger.

   2. செம்படவன் (வின்.);; one who belongs to fisherman caste.

மறுவ. மீனவர், பரவர்.

க. மீனுகாரா.

     [மீன் + காரன்.]

மீன்காரி

மீன்காரி mīṉkāri, பெ.(n.)

   1. மீன் விற்பவள்; fish woman.

   2. செம்படத்தி (வின்.);; woman of the fisherman caste.

     [மீன்காரன் (ஆ.பா.); → மீன்காரி (பெ.பா.);.]

மீன்குஞ்சு

 மீன்குஞ்சு mīṉkuñju, பெ.(n.)

   மீனின் இளமை; young fishes, minnow.

     “மீன் குஞ்சுக்கு (குட்டிக்கு); நீச்சல் பழக்க வேண்டுமா?” (பழ.);.

     [மீன் + குஞ்சு.]

மீன்கள் முட்டையிட்டுப் பொரித்த குஞ்சு.

மீன்குத்தி

மீன்குத்தி mīṉkutti, பெ.(n.)

   1. மீன் கொத்தி (வின்.); பார்க்க; see {}.

   2. பாரைக் கோல் (பிங்.);; crowbar, pickaxe.

     [மீன் + குத்தி. கொத்தி → குத்தி.]

மீன்குத்திக்குருவி

 மீன்குத்திக்குருவி mīṉkuttikkuruvi, பெ.(n.)

மீன்குத்தி பார்க்க; see {}.

     [மீன் + குத்தி + குருவி.]

மீன்குழம்பு

 மீன்குழம்பு mīṉkuḻmbu, பெ.(n.)

   மீன் அல்லது மீன் துண்டம் இட்ட குழம்பு (வின்.);; fish sauce.

     “மீன் குழம்போ தேன் குழம்போ?” (பழ.);.

     [மீன் + குழம்பு.]

மீன்கூடு

 மீன்கூடு mīṉāṭu, பெ.(n.)

   மீன்பிடிக்குங் கருவி வகை (வின்.);; fishing contrivance.

     [மீன் + கூடு.]

மீன்கொடியோன்

மீன்கொடியோன் mīṉkoḍiyōṉ, பெ.(n.)

   1. மீன் வடிவம் பொறித்த கொடியையுடைய காமன் (யாழ்.அக.);; Kaman, one who has the fish as the emblem of his banner.

   2. பாண்டியன் (வின்.);;{} king.

     [மீன் + கொடியோன்.]

மீன்கொத்தி

மீன்கொத்தி mīṉkotti, பெ.(n.)

   1. சிச்சிலிப் பறவைப் பொது (குற்றா.குற.87:3);; kingfisher, darters.

   2. சிச்சிலிப் பறவை வகை; lesser.

 kingfisher, species of alcedo.

   3. சிச்சிலிப் பறவை வகை; pied kingfisher, species of ceryle.

   4. சிச்சிலிப் பறவை வகை; white breasted or larger kingfisher. Halcyon smyrnensis.

மறுவ. பொன்னான்தட்டான்.

     [மீன் + கொத்தி.]

ஆறுகுளம் முதலிய நீர் நிலைகளில் உள்ள மீன்களைப் பிடித்துத் தின்னும் நீண்ட அலகுடன் நீலமும், பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் ஒரு சிறு பறவை.

     [p]

மீன்கொல்லி

மீன்கொல்லி mīṉkolli, பெ.(n.)

   1. செடி வகை; rattlewort, Crotalaria pulcherrima.

   2. செடிவகை; rattlewort, Crotalaria laburnifolia.

     [மீன் + கொல்லி.]

மீனைத் தன் இதழ்களால் வளைத்துப் பிடித்துத் தனக்கு இரையாக்கிக் கொள்ளும் செடிவகை.

மீன்கொல்லிப்பூனை

 மீன்கொல்லிப்பூனை mīṉkollippūṉai, பெ.(n.)

   மீன் பிடித்துண்ணும் பூனை வகை; fishing tigercat, Felis viverrina.

     [மீன் + கொல்லி + பூனை. கொல் → கொல்லி.]

மீன்கொள்ளி

 மீன்கொள்ளி mīṉkoḷḷi, பெ.(n.)

மீன்கொல்லி பார்க்க; see {}.

     [மீன் + கொள்ளி. கொல்லி → கொள்ளி.]

மீன்கொழுப்பு

 மீன்கொழுப்பு mīṉkoḻuppu, பெ.(ո.)

   திமிங்கிலத்தின் எண்ணெய் (தைலம்); (இங்.வை.);; spermaceti Cetaceum.

     [மீன் + கொழுப்பு.]

மீனிலிருந்து எடுக்கப்படும் கொழுப்பு. இது சத்து மருந்தாகவும் பயன்படுகிறது.

மீன்கோட்பறை

மீன்கோட்பறை mīṉāṭpaṟai, பெ.(n.)

   நெய்தனிலப் பறை (இறை.1, பக்.17);; drum of the maritime tract.

     [மீன் + கோட்பறை.]

மீன்சாறு

 மீன்சாறு mīṉcāṟu, பெ.(n.)

   மீன்குழம்பு; fish curry, saucy.

     [மீன் + சாறு.]

மீன்சிதள்

 மீன்சிதள் mīṉcidaḷ, பெ.(n.)

மீன்செதிள் பார்க்க; see {}.

     [மீன் + சிதள். செதிள் → சிதள்]

மீன்சினை

மீன்சினை mīṉciṉai, பெ.(n.)

   சிறகு போலக் காணப்படும் மீனின் உறுப்பு (வின்.);; fin.

     [மீன் + சிறகு.]

 மீன்சினை mīṉciṉai, பெ.(n.)

   1. மீன் முட்டை; fish spawn, roe corn.

     “சிறுமீன் சினையினு நுண்ணிதே யாயினும்” (நறுந்.);.

   2. மீனின் கொழுப்பு (யாழ்.அக.);; fat extracted from fish.

     [மீன் + சினை. சினை = முட்டை.]

 மீன்சினை mīṉciṉai, பெ. (n.)

மீன் முட்டை fish roe.

     [மீன்+சினை]

மீன்சினைப்பாடு

 மீன்சினைப்பாடு mīṉciṉaippāṭu, பெ.(n.)

   கருவுற்ற மீனின் முட்டைகள் (செங்கை. மீனவ.);; fertilized eggs of fish.

     [மீன் + சினை + பாடு.]

மீன்சிலாம்பு

 மீன்சிலாம்பு mīṉcilāmbu, பெ.(n.)

   கணவாய் மீன் ஓடு; cuttle fish bone.

     [மீன் + சிலாம்பு.]

இதைத் தவறுதலாய்க் கடல் நுரையென்றும் சொல்லிக் கடையில் விற்பதுண்டு.

     [மீன் + சிறகு.]

மீன்சீவுதல்

 மீன்சீவுதல் mīṉcīvudal, பெ.(n.)

   மீனைப் பதப்படுத்துகை; to be seasoned of fishes.

     [மீன் + சீவுதல்.]

மீன்சூடு

 மீன்சூடு mīṉcūṭu, பெ.(n.)

   சுட்ட மீன்; fish fry.

மறுவ. கருவாடு

     [மீன் + சூடு.]

மீன்சூப்பு

 மீன்சூப்பு mīṉcūppu, பெ.(n.)

   மீனிலிருந்து செய்யப்பட்ட கருக்கு நீர்; fish soup.

     [மீன் + சூப்பு. E. Soup → த. கருக்கு நீர்.]

மீன்செகிள்

 மீன்செகிள் mīṉcegiḷ, பெ.(n.)

மீன்செதிள் (வின்.); பார்க்க; see {}.

     [மீன் + செகிள். செதில் → செகிள்.]

மீன்செடி

மீன்செடி mīṉceḍi, பெ.(n.)

மீன்கவிச்சு (மாட்டுவா.160); பார்க்க; see {}.

     [மீன் + செடி.]

மீன்செதில்

 மீன்செதில் mīṉcedil, பெ. (n.)

மீன்செதிள் (வின்.); பார்க்க; see {}.

     [மீன் + செதில். செதிள் → செதில்.]

மீன்செதிள்

 மீன்செதிள் mīṉcediḷ, பெ.(n.)

   மீனின் மேற்புறத்துள்ள தகடு போன்ற அமைப்புகள் (வின்.);; fish scales.

     [மீன் + செதிள்.]

மீன்செய்குளம்

 மீன்செய்குளம் mīṉceykuḷam, பெ.(n.)

மீன்காட்சியகம் பார்க்க; see {}.

     [மீன் + செய் + குளம்.]

மீன்செலு

 மீன்செலு mīṉcelu, பெ.(n.)

மீன்செதிள் (வின்.); பார்க்க; see {}.

     [மீன் + செலு. செதிள் → செலு.]

மீன்செவுள்

 மீன்செவுள் mīṉcevuḷ, பெ.(n.)

   மீன் முதலிய நீர்வாழ் உயிரிகளின் கன்னத்தினருகேயுள்ள மூச்சு உறுப்பு; gill.

     [மீன் + செவுள்.]

மீன்தலைக்கல்

 மீன்தலைக்கல் mīṉtalaikkal, பெ.(n.)

மீன்கல் பார்க்க; see {}

     [மீன் + தலை + கல்.]

மீன்தலைவாளம்

 மீன்தலைவாளம் mīṉtalaivāḷam, பெ.(n.)

   மீனெலும்பு (யாழ்.அக.);; fish bone.

மீன்தென்படுதல்

 மீன்தென்படுதல் mīṉdeṉpaḍudal, பெ.(n.)

   கண்ணிற் காணுமாறு நீர்ப்பரப்பின் மேல் மீன் தெரிகை; fishes as seen on the surface of water.

     [மீன் + தென்படுதல்.]

மீன்தெளித்தல்

 மீன்தெளித்தல் mīṉteḷittal, பெ.(n.)

   மீனைப் பரப்புகை; spreading of fishes for drying.

     [மீன் + தெளித்தல்.]

மீன்தைத்தல்

 மீன்தைத்தல் mīṉtaittal, பெ.(n.)

   வலையில் நெருக்கமாய் மீன் அகப்படுகை; trapping of fishes in large quantity in net.

மறுவ. மீன்பாடு

     [மீன் + தைத்தல்.]

மீன்படப்பு

 மீன்படப்பு mīṉpaḍappu, பெ.(n.)

   மீன்களை வெய்யிலிற் காய வைப்பதற்காக உண்டாக்கப் பட்ட பனை நாராலான விரிப்பு; a spread, made from palmyra fibres to dry fishes.

     [மீன் + படப்பு.]

மீன்படுதல்

 மீன்படுதல் mīṉpaḍudal, பெ.(n.)

   வலையில் மீன் அகப்படுகை; to entrap fishes into fishing net.

மறுவ. மீன்தைத்தல், மீன்பாடு.

     [மீன் + படுதல்.]

மீன்படுபள்ளம்

 மீன்படுபள்ளம் mīṉbaḍubaḷḷam, பெ.(n.)

   மீன் தங்குவதற்குரியதாக கடலில் இயற்கையாக அமைந்த பள்ளம்; naturally formed ditch in the sea where the fishes hide.

     [மீன் + படு + பள்ளம்]

மீன்படை

 மீன்படை mīṉpaḍai, பெ.(n.)

   மீன் கூட்டம்; thick fish population.

     [மீன் + படை.]

மீன்பண்ணை

 மீன்பண்ணை mīṉpaṇṇai, பெ.(n.)

   மீன் வளர்க்குமிடம்; fish farm.

     [மீன் + பண்ணை.]

மீன்பரத்துதல்

 மீன்பரத்துதல் mīṉparaddudal, பெ.(n.)

மீன் தெளித்தல் பார்க்க; see {}.

     [மீன் + பரத்துதல்.]

மீன்பரவர்

 மீன்பரவர் mīṉparavar, பெ.(n.)

   மீன்பிடி தொழில் செய்வாருள் ஒரு வகுப்பினர்; a sect of fishermen community.

     [மீன் + பரவர்.]

மீன்பரிசம்

 மீன்பரிசம் mīṉparisam, பெ.(n.)

   மீன் விலை; fish (rate); price.

     [மீன் + பரிசம்.]

மீன்பறி

 மீன்பறி mīṉpaṟi, பெ. (n.)

   மீன்பிடிக்குங் கூட்டுங் பொறி; fishpot, basket trap for fishing.

     [மீன் + பறி. பறி = மீன் பிடிக்குங் கருவி.]

     [p]

மீன்பறிசல்

 மீன்பறிசல் mīṉpaṟisal, பெ.(n.)

மீன்பறி பார்க்க; see {}.

     [மீன் + பறி. பறி = மீன் பிடிக்குங் கருவி கூடை.]

மீன்பலுக்குதல்

மீன்பலுக்குதல் mīṉpalukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   மீன் இனப்பெருக்கம் செய்தல்; fish productivity.

     [மீன் + பலுக்குதல்.]

மீன்பாடு

 மீன்பாடு mīṉpāṭu, பெ.(n.)

   மீன்கள் வலையுட் படுகை (யாழ்ப்.);; catch of fish in the net.

     “பாவி போன இடம் மீன்பாடு அத்துப் போச்சு”.

மறுவ. மீன் தைத்தல், மீன் படுகை.

     [மீன் + பாடு. பாடு = மீன்பிடிக்கை.]

மீன்பாட்டம்

மீன்பாட்டம் mīṉpāṭṭam, பெ.(n.)

   மீன் பிடிப்பதற்கு வாங்கும் வரி (தெ.இ.க.தொ.3, 115);; tax on fishing.

     [மீன் + பாட்டம். பாட்டம் = வரி.]

மீன்பாய்

 மீன்பாய் mīṉpāy, பெ.(n.)

   பனைநாரால் செய்யப்பட்ட விரிப்பு, பனைபாய்; a spread or mat made of palmyrah fibres.

மறுவ. பனையாய்

     [மீன் + பாய்.]

மீனைக் கருவாடாக்குதற்காகப் பனை நாரினால் செய்யப்பட்ட விரிப்பு.

மீன்பாய் தல்

மீன்பாய் தல் mīṉpāytal,    1 செ.கு.வி.(v.i.)

   கடற்பரப்பில் நீந்தும் மீன் நீர் மட்டத்தின் மேல் துள்ளிப் பாய்தல்; leaping and galloping of the fish while swimming on the surface of water.

     [மீன் + பாய்தல்.]

மீன்பிசினி

 மீன்பிசினி mīṉpisiṉi, பெ.(n.)

   மீன் கொழுப்பிலிருந்து செய்யப்படும் பொருள்; glue taken from fish fat.

     [மீன் + பிசினி.]

மீன்பிடி

மீன்பிடி1 mīṉpiḍi, பெ.(n.)

   பாணருள் ஒரு சாரார் (E.T.4:31);; a subdivision of the {} caste.

     [மீன் + பிடி. மீன் பிடிக்கும் பாணர் இனத்தவர்.]

 மீன்பிடி2 mīṉpiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   வலை மற்றும் தூண்டிலின் மூலம் மீன் பிடித்தல்; catching of fish with the help of net and fish hook.

     [மீன் + பிடி த்தல்.]

மீன்பிடிகாரர்

 மீன்பிடிகாரர் mīṉpiḍikārar, பெ.(n.)

   வலைஞர் (யாழ்.அக.);;  fishermen, men of the fishermen caste.

     [மீன்பிடி + காரர்.]

மீன்பிடிக்கருவி

 மீன்பிடிக்கருவி mīṉpiḍikkaruvi, பெ.(n.)

   மீனைப்பிடிக்கப் பயன்படும் தூண்டில், வலை, கட்டுமரம், படகு, மரக்கலம் போன்றவை; catching of fish with the help of fishhook, net, catamaran, etc.

     [மீன்பிடிக்கும் + கருவி.]

மீன்பிடித்தட்டு

 மீன்பிடித்தட்டு mīṉpiḍittaḍḍu, பெ.(n.)

   மீன்களைப் பிடித்து வைப்பதற்காக உடன் வைத்துக் கொள்ளும் ஒருவகைக் கூடை; a kind of basket to collect fishes, caught.

     [மீன்பிடி + தட்டு.]

மீன்பிடித்துறைமுகம்

 மீன்பிடித்துறைமுகம் mīṉpiḍittuṟaimugam, பெ.(n.)

   மீன்பிடிபாட்டிடம்; fishing harbour.

     [மீன் + பிடி + துறைமுகம்.]

மீன்பிரால்

 மீன்பிரால் mīṉpirāl, பெ.(n.)

மீன்செதிள் (யாழ்.அக.); பார்க்க; see {}.

மீன்பிலால்

 மீன்பிலால் mīṉpilāl, பெ.(n.)

மீன் செதிள் பார்க்க; see {}.

மீன்பீலி

மீன்பீலி1 mīṉpīli, பெ.(n.)

   காற்சிறு விரலில் அணியும் மீனுருவான கணையாழி (வின்.);; fish shaped ring worn on the little toe.

     [மீன் + பீலி. பீலி = மகளிர் அணியும் கால் விரலணி.]

 மீன்பீலி2 mīṉpīli, பெ.(n.)

   கெண்டைப் பீலி மீன்; a kind of fresh water fish.

மீன்புகையூட்டல்

 மீன்புகையூட்டல் mīṉpugaiyūṭṭal, பெ.(n.)

   புகையூட்டி மீன் பதனிடுகை; tanning of fishes by smoking.

     [மீன் + புகை + ஊட்டல்.]

மீன்புளி

 மீன்புளி mīṉpuḷi, பெ.(n.)

   மலையாத்தி; Malabar mountain ebony.

மீன்பொறுக்கு தல்

மீன்பொறுக்கு தல் mīṉpoṟukkudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   வலையிலிருந்து மீனை இனம், அளவு வாரியாகத் தனித்தனியாகப் பொறுக்கிப் பிரித்தல்; to sort out the fishes from the mass or heap according to their species, and size.

     [மீன் + பொறுக்குதல்.]

மீன்மடை

 மீன்மடை mīṉmaḍai, பெ.(n.)

   குளங் குட்டைகளில் மீன்பிடித்தற்கு அமைத்த சிறிய மண்ணணை (இ.வ.);; small bund of mud made across a stream or pond for catching fish.

     [மீன் + மடை. மடை = மதகு, மதகுப்பலகை, சிறிய அணை.]

மீன்மண்டியாள்

 மீன்மண்டியாள் mīṉmaṇṭiyāḷ, பெ.(n.)

   மீன் மொத்த வணிகர் (நெல்லைமீனவ.);; wholesale fish merchant.

     [மீன் + மண்டி + ஆள். மண்டி = பொருள்கள் விற்குமிடம்.]

பொருள்கள் மண்டியிருத்தலால் மண்டி எனப்பட்டது.

மீன்மலம்

 மீன்மலம் mīṉmalam, பெ.(n.)

   மீனம்பர் (யாழ்.அக.);;பார்க்க see {}.

     [மீன் + மலம்.]

மீன்மிதப்பு

 மீன்மிதப்பு mīṉmidappu, பெ.(n.)

   மீனிற் குள்ளிருக்கும் காற்றும் பை; air bladder of fish.

     [மீன் + மிதப்பு. மிதப்பு = மிதக்கப் பயன்படும் உறுப்பு.]

மீன்மீசை

 மீன்மீசை mīṉmīcai, பெ.(n.)

   மீனின் வாய்ப்புறம் நீட்டிக் கொண்டிருக்கும் இழைகள்; string or fibre like part in front of the fish mouth.

     [மீன் + மீசை.]

மீன்முளைத்தல்

 மீன்முளைத்தல் mīṉmuḷaittal, பெ.(n.)

   விடியல் வேளையில் விண்மீன் வெளிப்படத் தோன்றுகை (உ.வ.);; visible appearance of the stars in the sky, at morning twilight.

     [மீன் + முளைத்தல்.]

மீன்முள்

 மீன்முள் mīṉmuḷ, பெ.(n.)

   மீனெலும்பு; fish bone, fish spine or thorn.

     [மீன் + முள்.]

மீன்வச்சிரம்

 மீன்வச்சிரம் mīṉvacciram, பெ.(n.)

   மீன்பிசின் வகை (இங்.வை.);; isinglass, fishglue, llthyocolla.

     [மீன் + Skt. வச்சிரம்.]

மீன்வலையர்

 மீன்வலையர் mīṉvalaiyar, பெ.(n.)

   வலையர், வலைஞர், பரதர், பரதவர், பரவர், பரவா என்னும் பெயர்களாலும் அழைக்கப்படும் மீன் பிடிப்பவர்; people who do fishing.

மறுவ. செம்படவன்

     [மீன் + வலையர்.]

மீன்வளம்

 மீன்வளம் mīṉvaḷam, பெ. (n.)

   தரமான மீன்கள் இருக்கும் இடத்தையும், மீன்களின் பெருக்கத்தையும் கூறுகை; place of qualitative fishes and good fishes.

     [மீன் + வளம்.]

மீன்வெட்டி

 மீன்வெட்டி mīṉveṭṭi, பெ.(n.)

   சுறாமீன் (சங்.அக.);; shark.

     [மீன் + வெட்டி. வெட்டு → வெட்டி.]

     [p]

மீன்வெளிச்சம்

 மீன்வெளிச்சம் mīṉveḷiccam, பெ.(n.)

மீனிலா (இ.வ.); பார்க்க; see {}.

     [மீன் + வெளிச்சம்.]

மீன்வேடன்

மீன்வேடன் mīṉvēṭaṉ, பெ.(n.)

   1. சிவன்; God {}.

   2. செம்படவன்; fisherman.

     [மீன் + வேடன்.]

மீன்வேட்டுவர்

 மீன்வேட்டுவர் mīṉvēṭṭuvar, பெ.(n.)

   மீன்பிடிதொழிலை அதிக ஈடுபாட்டுடன் வேட்டைத் தொழிலாகக் கருதி விரும்பிச் செய்வோர்; those who desires to engage themselves in fishing as hunting.

     [மீன் + வேட்டுவர்.]

மீன்வேட்டை

 மீன்வேட்டை mīṉvēṭṭai, பெ.(n.)

   மீன் பிடிக்கை (வின்.);; fishing, angling.

     [மீன் + வேட்டை. வேட்டை = மீன்பிடித்தல்.]

மீபார்க்கெல்லை

 மீபார்க்கெல்லை mīpārkkellai, பெ.(n.)

   மேற்புற எல்லை; western side boundary (கல்.அக.);.

மீப்பாய்

 மீப்பாய் mīppāy, பெ.(n.)

   மீன்பிடிப் படகில் பயன்படும் ஒரு வகைப் பாய்; mast used in the fishing boat.

பாய்ப் பருமலின் மேலே விரிக்கப்படும் பாய் (நெல்லைமீனவ.);.

     [மீ + பாய்.]

மீப்பு

மீப்பு mīppu, பெ.(n.)

   1. மிகுதி (புறநா.104, உரை);; abundance.

   2. மேன்மை; excellence, greatness, esteem, honour.

     “மீப்பில்லோரை” (முது.காஞ்.22);.

     [மீ → மீப்பு.]

மீப்போர்-த்தல்

மீப்போர்-த்தல் mīppōrttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மேலே போர்த்தல்; to put on, cover with, as a shawl.

     “மீப்போர்த்த கருந்தோலாற் கண்விளக்கப் பட்டு” (நாலடி, 47);.

     [மீ + போர்த்தல்.]

மீப்போர்வை

மீப்போர்வை mīppōrvai, பெ.(n.)

   மேற் போர்வை; outer covering, coat.

     “பொய்ம்மறைக்கு மீப்போர்வை மாட்சித் துடம்பானால்” (நாலடி, 42);.

     [மீ + போர்வை.]

மீமகன்

 மீமகன் mīmagaṉ, பெ.(n.)

   இப்போதைய முறைமையை முற்றிலும் அழித்துப் புதிய நிலையை உண்டாக்குபவனாக இருப்பவன்; one who creates new once in supersession of existing customs.

மீமாஞ்சை

மீமாஞ்சை mīmāñjai, பெ. (n.)

   1. பூர்வ மீமாஞ்சை உத்தரமீமாஞ்சை என்ற இரு பிரிவினையுடையதாய் வேதவேதாந்தப் பொருள்களை விவரித்தற்குக் கருவியாயுள்ள சாத்திரம்; the twin systems of {} and Uttara {}, being the means of understanding the {} and {}.

   2. பூர்வ மீமாஞ்சை இந்துமதக் கொண்முடிபு; a system of Hindu Philosphy .

     ‘புவனியுற்ற தருக்கமும் பொருந்திய மீமாஞ்சையும்'(மச்சபு. பிரமமு. 4);.

     [Skt. {} → த. மீமாஞ்சை]

மீமிசை

மீமிசை1 mīmisai, பெ.(n.)

   1. மிக்கது (பிங்.);; that which exceeds or abounds.

   2. மீமிசைச்சொல் பார்க்க; see {}.

     “மீமிசை யென்று பெயராய் அர்த்தத் தினுடைய அதிசயத்தைக் காட்டக் கடவது” (திவ். பெரியதி.8, 1:7, வியா.);.

     [மீ + மிசை.]

 மீமிசை2 mīmisai, வி.அ. & இடை.(adv. & prep.)

   மேலிடத்தில்; above, over.

     “கள்ளி மீமிசைக் கலித்த வீநறு முல்லை” (நற்.169:5);.

     “கொல்களிற்று மீமிசை” (புறநா.9:7);

     “நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கு” (அகநா.9:9);.

     “மீமிசைத் தாஅய வீஇ சுமந்து” (குறுந்.200:2);.

     [மீ + மிசை.]

மீமிசைச்சொல்

 மீமிசைச்சொல் mīmisaissol, பெ.(n.)

   சிறப்புப் பொருளைத் தெரிவித்தற்கு முன்னுள்ள சொல்லின் பொருளிலேயே, அடுத்து வருஞ்சொல்; pleonasm, word redundantly used.

     [மீமிசை + சொல்.]

மீமிசையண்டம்

மீமிசையண்டம் mīmisaiyaṇṭam, பெ.(n.)

   துறக்கம் (மோட்சம்);; the highest heaven, celestial.

     “மீமிசை யண்ட மாண்டி ருப்பாற்கு” (திவ்.பெரியதி.2, 1:4);.

     [மீமிசை + அண்டம். அண்டம் = உலகம்.]

மீயச்சூர்

 மீயச்சூர் mīyaccūr, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒர் ஊரின் பெயர்; a village in Thanjavur Dist.

     “தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்” (இலக். .ஊர்.);.

மீயடுப்பு

மீயடுப்பு mīyaḍuppu, பெ.(n.)

   புடையடுப்பு (தொல்.சொல்.17, உரை);; side oven, supplemental oven.

மறுவ. கொடியடுப்பு.

     [மீ + அடுப்பு.]

     [p]

மீயாட்சி

மீயாட்சி mīyāṭci, பெ.(n.)

   1. நிலங்களின் குத்தகைப் பங்குரிமை; right for share in the land lease.

   2. நில முதலியவற்றின் மேலதிகாரம் (கல்.);; proprietorship, overlordship, as of land.

     [மீ + ஆட்சி.]

நிலத்திற்கு உரிமையாளராகிய ஆட்சியாளர், தன்னிடம் குத்தகைக்குப் பெற்றுப் பயிரிடுபவரிடம் விளைச்சலில் பங்குரிமை ஆட்சி பெறுதலின், ஆட்சி மேல் ஆட்சி பெறுதலின் மீயாட்சி என்று கூறப்பட்டது (கல்.அக.);.

மீயான்

 மீயான் mīyāṉ, பெ.(n.)

மீகாமன் (சங்.அக.); பார்க்க; see {}.

     [மீகான் → மியான்.]

மீயாளுங்கணத்தார்

 மீயாளுங்கணத்தார் mīyāḷuṅgaṇattār, பெ.(n.)

   மேற்பார்வை செய்யும் கூட்டம்; members of the supervising body.

     [மீயாள் + கணத்தார்.]

மீயாளுங்கணம்

மீயாளுங்கணம் mīyāḷuṅgaṇam, பெ. (n.)

மேலதிகாரம் செய்யும் குழு

 a committee which has the controlling power. (தெ.கோ.சா.3:2);.

     [மீ+ஆளும்+கணம்]

மீயாள்(ளு)-தல்

மீயாள்(ளு)-தல் mīyāḷḷudal,    10 செ. குன்றாவி.

 to exercise overlordship, to boss over.

     “உத்திரவேதிச் சதுர்வேதி மங்கல மீயாளுங் கணத்தாருள்” (தெ.இ.கல்.தொ.3:2);.

     [மீ + ஆள்ளு)தல்.]

மீயை

 மீயை mīyai, பெ.(n.)

   செங்குடை (பிங்.);; umbrella made of red cloth.

மீரம்

 மீரம் mīram, பெ.(n.)

   கடல் (யாழ்.அக.);; sea.

மீராசு

மீராசு mīrācu, பெ.(n.)

   1. ஆதாயம்; gain.

   2. வருமானம்; income, profit.

   3. பயன்படுகை; usefulness.

மீராளுர்

 மீராளுர் mīrāḷur, பெ. (n.)

   சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chidambaram Taluk.

     [மீரான்+ஊர்]

மீறல்

 மீறல் mīṟal, பெ. (n.)

   சட்டம், உரிமை முதலியவற்றை மீறும் செய்கை; violation of rules, rights, etc, infringement.

மனித உரிமை மீறல்கள் அதிகமாகி வருவதை எதிர்த்துப் போராடினார்கள்.

     [மீறு → மீறல்.]

மீறான்கனியண்ணாவி

மீறான்கனியண்ணாவி mīṟāṉkaṉiyaṇṇāvi, பெ. (n.)

   19ஆம் நூற்றாண்டில் குறமாது என்னும் நூலை இயற்றியவர்; an author who wrote ‘{}’, during 19th century.

மீறு

மீறு1 mīṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. ஆணை முதலியன கடத்தல் (உ.வ.);; to break, as a law, to violate, infringe, as a right, tresspass.

   2. மேற்போதல் (நாமதீப. 763);; to go beyond, exceed ones limit.

   3. அதிகாரஞ் செய்தல்; to dominate.

க. மிறு

     [மீள்4 → மீறு.]

 மீறு2 mīṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. எஞ்சி யிருத்தல் (வின்.);; to be in excess, to remain over.

   2. மிகுதல்; to be great.

     “மீறுகாத லளிக்கும்” (திருப்பு.923);.

   3. பெரிதாய் வளர்தல்; to grow lofty, as a tree, to grow stout, as a person.

   4. செருக்கடைதல் (இ.வ.);; to be haughty, to be arrogant.

   5. சட்டம், நெறி (விதி); போன்றவற்றைப் பின்பற்றாமல் விடுதல்;   புறக்கணித்தல்; transgress, violate, break rules, etc.

வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். தடை ஆணையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

க. மிறு.

     [மீள் → மீறு.]

மீலம்

 மீலம் mīlam, பெ.(n.)

   வானம் (சங்.அக.);; sky.

மீள

மீள mīḷa, கு.வி.எ.(adv.)

   மறுபடியும்; once again.

     “உன் வயிற்றுட் கடைநாட் சென்றுறைந்து மீள வருந்தேவரை” (திருவேங்கடக்கலம்.11);.

     [மீள் → மீள.]

மீளக்கொடு-த்தல்

மீளக்கொடு-த்தல் mīḷakkoḍuttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   திரும்பக் கொடுத்தல்; to return.

     “மீளக் கொடுக்குமாப் போலே” (ரஹஸ்ய.410);.

     [மீள் → மீள + கொடுத்தல்.]

மீளவும்

 மீளவும் mīḷavum, கு.வி.எ.(adv.)

மீள பார்க்க; see {}.

     [மீள → மீளவும்.]

மீளாக்கடன்

மீளாக்கடன் mīḷākkaḍaṉ, பெ.(n.)

   தீராக் கடன் (கூட்டுறவு.1);; irredeemable debt.

     [மீள் + ஆ + கடன்.]

மீளாக்கதி

 மீளாக்கதி mīḷākkadi, பெ.(n.)

   வீடுபேறு (மோட்சம்); (பிங்.);; salvation, as a state from which there is no return, attainment, emancipation.

     [மீள் + ஆ + கதி. கதி = பற்றுக்கோடு, நிலைமை, இயல்பு.]

மீளாக்காட்சி

 மீளாக்காட்சி mīḷākkāṭci, பெ.(n.)

மீளாக் கதி பார்க்க; see {}.

     “மீளாக் காட்சி தருதி” (கல்லா.முருகக்);.

     [மீள் + ஆ + காட்சி.]

மீளாநரகம்

 மீளாநரகம் mīḷānaragam, பெ.(n.)

மீளாவளறு பார்க்க; see {}.

     [மீளா + Skt. நரகம்.]

மீளாநோய்

 மீளாநோய் mīḷānōy, பெ.(n.)

   குணமாகாத நோய்; an incurable or chronic disease.

     [மீளா + நோய்.]

மீளாவளறு

 மீளாவளறு mīḷāvaḷaṟu, பெ.(n.)

   மீட்சி யில்லாத நிரய வகை; a hell, considered a region of eternal damnation.

     [மீள் + ஆ + அளறு.]

மீளாவழி

மீளாவழி mīḷāvaḻi, பெ.(n.)

மீளாக்கதி பார்க்க; see {}.

     “கழல்க ணினைவாரை மீளாவழியின் மீட்பனவே” (பெரியபு. நமிநந்தி. 33);.

     [மீள் + ஆ + வழி.]

மீளி

மீளி1 mīḷi, பெ.(n.)

   1. மீளுகை; retrieval, returning.

     “இரவில் வந்து மீளியுரைத்தி” (திருக்கோ. 151);.

   2. இரங்கல் (அரு.நி.);; pity, sympathy.

     “மீளி மொய்ம்பொடு நிலனெறியாக் குறுகி” (அகநா.93:18);.

     [மீள் → மீளி.]

 மீளி2 mīḷi, பெ.(n.)

   1. தலைவன்; lord, chieftain.

     “மீளி… ஆகோள் கருதின்” (பு.வெ.1:20);.

   2. பாலைநிலத் தலைவன் (சூடா.);; chief of a desert tract.

   3. இறை (அரு.நி.);; king, sovereign.

   4. படைத் தலைவன் (நாமதீப.139);; commander of an army.

   5. திண்ணியன் (பிங்.);; strong man.

   6. பெருமையிற் சிறந்தோன் (பிங்.);; great man, worthy man.

   7. வலிமை (பிங்.);; strength.

   8. வீரம்; valour, bravery.

     “மீளி முன் பினாளிபோல” (புறநா.207);.

   9. பெருமை; greatness.

   10. தலைமை; merit, distinction.

     “மீளிக் கடற்றானை” (பு.வெ.7:5);.

   11. கூற்றுவன்; Yama, king of Dharma.

     “மீளியுடம்பிடித் தடக்கை” (பெரும்பாண்.75);.

   12. பேய்; devil, spirit.

     “சியமாவு மீளியும்” (கம்பரா. மூலபல.80);.

   13. இளைஞன்; youth, young man, lad.

     “வீவி லாற்றலொர் மீளி” (சீகாளத். பு.கண்ணப்ப.50);.

   14. ஏழகவை முதல் பத்தகவை முடியுமளவுள்ள பருவம் (பன்னிருபா. 228);; period of life between the seventh and tenth years.

     [மீள் → மீளி.]

மீளிமை

மீளிமை mīḷimai, பெ.(n.)

   1. வலிமை; strength, prowess.

     “அடக்க முடையவன் மீளிமை” (இன்.நாற்.40);.

   2. வீரம்; bravery, heroism, valour.

     “வன்படை…. மீளிமைக் கடையாளமோ” (திருவானைக்.நகரப்.35);.

     [மீளி → மீளிமை.]

மீளும்நோய்

 மீளும்நோய் mīḷumnōy, பெ.(n.)

   குணமாகும் நோய்; curable disease.

     [மீள் → மீளும் + நோய்.]

மீள்

மீள்1 mīḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   1. திரும்புதல்; to return.

     “போகத்து மன்னியும் மீள்வர்கள்” (திவ்.திருவாய்.4, 1:8);.

வளையம் மீளும் தன்மையை இழந்துவிட்டது.

   2. இல்லையாதல்; to disappear, vanish.

     “பேதைமை மீளச் செய்கை மீளும்” (மணிமே. 30:119);.

   3. காப்பாற்றப்படுதல்; to be cured, as of a disease;

 to be rescued, redeemed, liberated.

சாகும் தறுவாயில் இருந்த பெரியவரை மருத்துவர்கள் பாடுபட்டு மீளக் கொண்டுவந்தனர்.

 மீள்2 mīḷtalmīṭṭal,    13 செ.குன்றாவி. (v.t.)

   1. சிறையினின்று வெளியேற்றுதல்; to liberate, extricate, release.

   2. திரும்பக் கொணர்தல்; to bring, back, recover.

     “எயில்…… இரும்புண்ட நீரினு மீட்டற் கரிதென” (புறநா.21);.

   3. போக்குதல்; to remove;

 to eradicate, to cause to disappear.

     “தொண்டர் வருத்த மீட்பாராய்” (பெரியபு. திருநா. 304);.

   4. செலுத்துதல்; to cause to go.

     “மீளாவழியின் மீட்பனவே” (பெரியபு. நமிநந்தி. 33);.

   5. காத்தல்; to redeem, restore, rescue.

   6. விடுபடுதல்; recover from, get over.

அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவில்லை. மீளாத் துயரில் ஆழ்ந்தார்.

 மீள்3 mīḷtal,    16 செ.கு.வி.(v.i.)

   அசை யிடுதல் (யாழ்.அக.);; to chew the cud.

 மீள்4 mīḷḷudal,    16 செ.குன்றாவி.(v.t.)

   கடத்தல் (பிங்.);; to pass beyond, to kidnap.

 மீள்5 mīḷtal,    16 செ.கு.வி.(v.i)

   1. விடுவித்துத் தம் வயம் பெறுதல்; to recover, regain, taken aback.

கடத்தப்பட்ட சிலையை மீட்க நடவடிக்கை எடுத்தனர். கடத்தல் காரனிடமிருந்து குழந்தையை மீட்டனர். நம் எல்லைப் பகுதியை மீட்கத்தான் இந்தப் போர்.

   2. திரும்பப் பெறுதல்; redeem, retain.

வீட்டை இந்த ஆண்டாவது மீட்க வேண்டும்.

மீவான்

மீவான் mīvāṉ, பெ.(n.)

மீகாமன் (நாமதீப. 172); பார்க்க; see {}.

     [மீகாமன் → மீவான். மீகாமன் = மாலுமி.]