செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
மி

மி  mi, பெ.(n.)

   மகர மெய்யும் (ம்); இகர உயிரும் (இ); சேர்ந்து பிறந்த கூட்டெழுத்து;  the compound of ‘ம்’ and ‘இ’.

     [ம் + இ – மி.]

இவ்வெழுத்து கி.மு.3ஆம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை அடைந்துள்ள மாற்றங்கள்.

கி.மு.3 ஆம் நூற்றாண்டுக் குகைக் கல்வெட்டுகளில் {} என்பது போன்றும் கி.பி.5ஆம் நூற்றாண்டில் {} என்பது போன்றும் கி.பி.7ஆம் நூற்றாண்டில் {} என்பது போன்றும் கி.பி.8ஆம் நூற்றாண்டில் {} என்பது போன்றும் கி.பி.12ஆம் நூற்றாண்டில் {} என்பது போன்றும் கி.பி.17ஆம் நூற்றாண்டு முதல் மி என்றும் வழங்கி வருகிறது.

மிக

மிக1 miga, கு.வி.எ.(adv.)

   மிகவும்;  very much;

 abundently.

     “மிகத்தாம் வருந்தியிருப்பரே” (நாலடி, 31);.

     “அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே” (குறுந்.94:2);.

     “உகந்தவை மொழியவு மொல்லான் மிகக் கலுழ்ந்து” (நெடுநல்.156);.

     [மிகு → மிக.]

 மிக2 miga, கு.வி.எ.(adv.)

   1. தன்மையின் மிகுதியைக் காட்டுவதற்கும் ஒன்றிற்கு அழுத்தம் தந்து கூறுவதற்கும் பயன்படுத்தப் படுவது;  used to indicate the highest degree of that which it qualifies or to intensify something which qualities.

அவர் மிக நல்லவர். நீ கூறியது மிகச்சரி.

   2. அடைக்கு அடையாக வரும்போது மிகுதியைக் காட்டுவது;  when it precedes an attribute used to indicate the enormity or immensity of something.

மிகப் பெரிய பொறுப்பு.

     [மிகு → மிக.]

மிகச்சடைச்சி

 மிகச்சடைச்சி  migaccaḍaicci, பெ.(n.)

   வாய்க்காற் சடைச்சி;  a pith plant found grown on the sides of canals, Aeschynomene Palurose (சா.அக.);.

மிகன்மக்கள்

 மிகன்மக்கள்  migaṉmaggaḷ, பெ.(n.)

   பெருமையிற் சிறந்தோர்;  great man.

     [மிகன் + மக்கள்.]

மிகப்படச்சொல்லல்

 மிகப்படச்சொல்லல்  migappaḍaccollal, பெ.(n.)

மிகைப்படக்கூறல் (யாழ்.அக.); பார்க்க; see {}

     [மிகை + படு + சொல்லல்-மிகைப்படுசொல்லல் → மிகைப்படச்சொல்லல் (உ.வ.);.]

மிகற்கை

மிகற்கை  migaṟgai, பெ.(n.)

   வல்லின எழுத்து இரட்டிக்கை;  doubling, as of hard consonant.

     “இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்” (தொல்.எழுத்து.157);.

     [மிகல் → மிகற்கை.]

மிகவல்லோர்

மிகவல்லோர்  migavallōr, பெ.(n.)

   1. அதி வீரர்;  warrior.

   2. அறிஞர்;  wisemen.

     [மிகு → மிக + வல்லோர்.]

மிகவு

மிகவு  migavu, பெ.(n.)

மிகுதி, 1 பார்க்க; see migudi,

   1. ‘தன்வலி மிகவின்கண்’ (குறள், 471,உரை);.

     [மிகு → மிக → மிகவு.]

மிகவும்

 மிகவும்  migavum, வி.அ.(adv.)

மிக பார்க்க; see miga.

     [மிக → மிகவும்.]

மிகாவண்ணம்

 மிகாவண்ணம்  mikāvaṇṇam, பெ. (n.)

   தேரையர் செய்த தமிழ் மருத்துவ (வைத்திய); நூல்;  a medical treatise in Tamil by Theraiyar (சா.அக.);

மிகினித்தபம்

 மிகினித்தபம்  migiṉittabam, பெ.(n.)

   மூத்திரக் குழலில் எற்படும் அழற்சி;  inflammation of the urinary passage, Uretheritis (சா.அக.);.

மிகில்

மிகில்  migil, பெ.(n.)

   1. மிகுகை;  being plentiful or abundant.

   2. பெருமை;  greatness.

“வேத்தவை காவார் மிகன் மக்கள்” (நீதிநெறி. 26);.

“இகலதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர்” (குறள்,855);.

“வருதார் தாங்கி யமர் மிகல் யாவது” (புறநா.62.1);.

“மேனிலை மிகலிகலின் மிடைகழி பிழிவு மேற்சென்று” (கலித்.104:32);. 3. வெற்றி; victory.

“மிகின் மேவன் மெய்ப் பொருள் காணார்” (குறள், 857);.

   4. மிகற்கை பார்க்க; see {}

“வல்லெழுத்து மிகலே” (தொல்.எழுத்து.412);.

க. மிகில்; தெ. மிக்கிலி.

 GOTH. Mikilis; ICEL. Mjok; A.S.micel. O.E.Michel, muchel; E.much.

     [மிகு → மிகல்.]

மிகு

மிகு1 migudal,    21 செ.கு.வி. (v.i.)

   1. அதிகமாதல்;  to exceed, surpass;

 to be in excess.

     “முந்திரிமேற் காணி மிகுவதேல்” (நாலடி, 346);.

     “செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம் போல” (கலித்.13:1);.

   2. பெருகுதல்;  to grow, increase.

     “காப்பு மிகின்” (இறை.16);.

   3. பொங்குதல் (பிங்.);;  to swell.

   4. எழுத்து இரட்டித்தல்;  to be doubled, as a letter.

     “மெல்லெழுத்து மிகினும்” (தொல்.எழுத்து.341);. இகர ஈற்று வினையெச்சத்தின் பின் ஒற்று மிகும்.

   5. நெருங்குதல்;  to crowd.

     “தலைத்தலை மிகூ உம்” (பரிபா.16:14);.

   6. சிறத்தல்;  to be great, to be excellent.

     “அதன்க ணின்று மீடல் மிக்கது” (இறை.3 பக்.44);.

   7. ஒன்றின் மேம்படுதல்;  to be superior.

   8. எஞ்சுதல்;  to remain;

 to be left over;

 to be super fluous.

   9. செருக்குறுதல்;  to be self conceited arrogant.

     “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்” (குறள், 158);.

   10. தீமையாதல்;  to be evil.

     “மிக்கவை செய்தாரை” (குறள்.158);.

க. மிகுற்; தெ. மிகுலு.

     [மீ → மிகு → மிகு தல் (சு.வி.);]

 மிகு2 miguttal,    18 செ.குன்றாவி.(v.t.)

   1. அதிகப்படுத்துதல்;  to augment, make large.

     “பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சாலமிகுத்துப் பெயின்” (குறள், 475);.

   2. விஞ்சுதல்;  to excel, surpass.

   3. பெருக்குதல்;  to increase.

   4. பெருமையாகக் கருதுதல்;  to regard with pride.

     ‘இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும்’ (புறநா.77, உரை);.

   5. மிகுத்துதல் பார்க்க;  see miguttu.

க. மிகிசு.

     [மீ → மிகு → மிகுத்தல்.]

 மிகு3 migu, இடை.(part.)

   நிறைந்த;  full of;

 ful.

வண்ணமிகு படை அணிவகுப்பு. அருள் மிகு தெய்வம்.

     [மீ → மிகு.]

 மிகு4 migu, கு.பெ.எ.(adj.)

   பெரிய;  great.

மிகு உயரமான ஆள்.

     [மீ → மிகு.]

 மிகு5 migu, இடை.(part.)

   ஒர் உவம உருபு;  a word of comparison.

     “மிகுதலுங் குறைதலும் தாழ்தலும் பான்மாறு படுதலும் பாகுபாடுடைய” (தண்டி.34);.

     [மீ → மிகு.]

மிகு வெளிச்சம்

 மிகு வெளிச்சம் miguveḷiccam, பெ.(n.)

   பேரொளி; brilliancy.

     [மிகு+வெளிச்சம்]

மிகுகடும்பத்தியம்

 மிகுகடும்பத்தியம்  migugaḍumbattiyam, பெ.(n.)

   உப்பு, புளி காரமில்லாமல் வெந்நீர் மட்டும் சோற்றுடன் கலந்து உண்ணுகை;  very strict diet without salt, tamarind and chilly.

     [மிக + கடும் + Skt. பத்தியம்.]

மிகுகளிப்பு

 மிகுகளிப்பு  migugaḷippu, பெ. (n.)

   பெரு மகிழ்ச்சி;  pleasure, great pleasure.

     [மிகு + களிப்பு. களிப்பு = மகிழ்ச்சி.]

மிகுகொடையாளன்

மிகுகொடையாளன்  migugoḍaiyāḷaṉ, பெ.(n.)

   1. கொடையிற் சிறந்தவன் (பிங்.);;  great in bounty.

   2. கன்னன் (கர்னன்);; {}.

     [மிகு1 + கொடையாளன்.]

மிகுக்கு-தல்

மிகுக்கு-தல்  miguggudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   மிகு-த்தல் பார்க்க;  see migu.

     [மிகு → மிகுக்கு → மிகுக்கு தல்.]

மிகுண்டம்

 மிகுண்டம்  miguṇṭam, பெ. (n.)

   சாரணை (சங்.அக.);;  a pungent medicinal creeper Trianthema mongyna.

மிகுண்டாகிதம்

 மிகுண்டாகிதம்  miguṇṭāgidam, பெ.(n.)

   பெரும் பூனைக்காலி;  a climbing plant used in medicine (சா.அக.);.

மிகுதம்

மிகுதம்  migudam, பெ.(n.)

   மிகுதி (வின்.);;  abundance; profusion; redundance.

     [மிகு1 → மிகுதம்.]

மிகுதி

மிகுதி  migudi, பெ.(n.)

   1. அதிகம்;  much, abundance.

     “மிகுதிகண் டன்றோ விலனே நீதின் பல்பொருள் வேட்கையிற் சொல்வரை நீவி” (அகநா.379:16, 17);.

இந்தப் பகுதியில் துணி நெய்வதைத் தொழிலாகக் கொண்ட மக்கள் மிகுதி. வலி மிகுதியால் துடித்தாள். எப்போதும் கணக்கில் மட்டும் மிகுதியான மதிப்பெண்கள் வாங்கி விடுவான்.

   2. மிகற்கை (தொல்.எழுத்து.411); பார்க்க; see {}.

   3. நிறைவு (வின்.);;  fulness, satiety.

   4. திரள் (வின்.);;  crowd.

   5. பொலிவு (வின்.);;  increase.

   6. மீதி;  excess, remainder, surplus.

   7. ஒண்மை (திவா.);;  excellence.

   8. செருக்கு;  arrogance.

     “மிகுதியான் மிக்கவை செய்தாரை” (குறள், 158);.

     [மிகு → மிகுதி.]

மிகுதிக்குறை

மிகுதிக்குறை  migudigguṟai, பெ. (n.)

   ஏறத்தாழ நிலத்தை நேரில் அளந்து கணக்கிட்டு எழுதும்போது இவ்வாறு குறித்தல் ஆவண வழக்காகும்;  a measurement of land unite more or less as on script.

     “இன்னான்கெல்லையிலும் உட்பட்ட கருத்தளவில் மிகுதிக் குறை உள்ளடங்க ஊர்க்கொல்லையும்” (சிதம்பரம் கல்வெட்டு.தெ.கல்.தொ.12. கல்.171); (கல்.அக.);.

     [மிகுதி + குறை).]

மிகுதிக்குறைமை

மிகுதிக்குறைமை  migudigguṟaimai, பெ.(n.)

   மிகுவதும் குறைவதும்;  excess or deficiency.

     “மிகுதிக் குறைமையும்” (தெ.இ.கல்.2:425);.

     [மிகுதி + குறைமை. குறைவு → குறைமை.]

மிகுதிச்சொல்

மிகுதிச்சொல்  migudiccol, பெ.(n.)

   வரம்பு கடந்த சொல்;  vaunt, boast.

     “விழுமியோ ரெக்காலுஞ் சொல்லார்” (நாலடி. 346);.

     [மிகுதி + சொல்.]

மிகுதியாய்

 மிகுதியாய்  migudiyāy, கு.வி.எ.(adv.)

மிகுதியும் பார்க்க; see migudiyum.

     [மிகுதி → மிகுதியாய்.]

மிகுதியும்

மிகுதியும்  migudiyum, கு.வி.எ. (n.)

   1. மிகவும் (வின்.);;  greatly, exceedingly.

   2. பெரும்பாலும் (உ.வ.);;  usually, generally.

     [மிகுதி → மிகுதியும்.]

மிகுத்தம்

 மிகுத்தம்  miguttam, பெ.(n.)

   மிகுதி (வின்.);;  abundance.

     [மிகு → மிகுத்தம்.]

மிகுத்திகம்

 மிகுத்திகம்  miguttigam, பெ. (n.)

   வில்வம் (மூ.அ.);;  bael tree Aegle marmelos.

மிகுத்தியல்

மிகுத்தியல்1 miguttiyal, பெ. (n.)

மிகுத்திகம் பார்க்க; see miguttigam.

 மிகுத்தியல்2 miguttiyal, பெ. (n.)

   பெரிய மாவிலிங்க வகை (L.);;  a species of garlic pear.

மிகுத்து-தல்

மிகுத்து-தல்  miguddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மிச்சப்படுத்துதல்;  to save, spare;

 to leave over.

     [மிகு1 → மிகுத்து → மிகுத்து தல்.]

மிகுத்துச்சொல்லல்

மிகுத்துச்சொல்லல்  miguttuccollal, பெ.(n.)

   1. மிகைபடுத்திக் கூறுகை;  making emphatic mention.

   2. புகழ்ந்து கூறுகை (யாழ்.அக.);;  prise, appreciation.

     [மிகுத்து + சொல்லல்.]

மிகுநலம்

 மிகுநலம் migunalam, பெ.(n.)

   மிகுபேறு(செள பாக்கியம்);; good fortune, hale and healthy.

     [மிகு+நலம்]

மிகுந்த

மிகுந்த  migunda, பெ.எ.(adj.)

   1. அதிக அளவிலான, அதிக நிறைவான;  used to express the excess of something, extreme, much.

தலைவர் மிகுந்த சினங்கொண்டு பேசினார். அவர் அறிவில் மிகுந்தவர். பசி மிகுந்து காணப்பட்டார். உதவிக்கு மிகுந்த நன்றி.

     “மிகுந்தும் குறைந்தும் நோய் செய்யும்” (பழ.);.

     “வண்னம் மிகுந்த அண்ணல் யானை” (நற்.273:6);.

   2. மிச்சமான;  remaining.

மிகுந்த பொருளை என்ன செய்வது? (உ.வ.);.

மறுவ. மீந்த.

     [மிகு → மிகுந்த.]

மிகுந்தபண்டம்

மிகுந்தபண்டம்  migundabaṇṭam, பெ.(n.)

   1.எஞ்சிய பண்டம்;  remaining substance after using.

   2.அதிகமான பொருள்;  excessive substance (சா.அக.);.

     [மிகு → மிகுந்த + பண்டம்.]

மிகுந்தவணம்

 மிகுந்தவணம்  migundavaṇam, பெ.(n.)

   தண்ணீர் விட்டான் கொடி (மலை.);;  thorny claimber, water root-Asparagusracemosa (சா.அக.);.

     [மிகுந்த + வணம்.]

மிகுந்திகா

 மிகுந்திகா  migundigā, பெ.(n.)

   பெரு மூங்கில்;  large bamboo (சா.அக.);.

     [மிகு → மிகுந்திகா = நீளம் மிகுந்த மூங்கில்.]

மிகுந்திகி

 மிகுந்திகி  migundigi, பெ.(n.)

மிகுந்த வணம் பார்க்க; see {} (சா.அக.);.

மிகுபத்தம்

 மிகுபத்தம்  migubattam, பெ.(n.)

   பொன்னாவிரை;  tanners cassia – Cassia auriculata(சா.அக.);.

மிகுபத்திரி

 மிகுபத்திரி  migubattiri, பெ.(n.)

   காற்றோட்டி என்னும் கொடி வகை;  thorny caper-Capparis horrida (சா.அக);.

மிகுபலம்

 மிகுபலம்  migubalam, பெ.(n.)

   கோதுமை;  wheat-Triticum vulgare (சா.அக.);.

மிகுபலவந்தம்

 மிகுபலவந்தம்  migubalavandam, பெ.(n.)

   ஆதொண்டை;  a thorny caper, – Capparis horrida alias C.zeylanica (சா.அக.);.

மிகுபித்தர்

 மிகுபித்தர் migubittar, பெ.(n.)

   பூனைக்காஞ் சொறி;  small climbing nettle (சா.அக.);.

மிகுபெயல்

 மிகுபெயல்  migubeyal, பெ. (n.)

மிகுமழை பார்க்க; see {}.

     [மிகு + பெயல். பெயல் மழை.]

மிகுப்பலத்தம்

 மிகுப்பலத்தம்  miguppalattam, பெ.(n.)

   காற்றோட்டி என்னும் செடிவகை (மலை.);;  Ceylon caper-Capparis Zeylanica.

மிகுமணம்

 மிகுமணம்  migumaṇam, பெ.(n.)

   விரிந்த பூ;  blossomed flower.

உலகம் சிரித்தது என்ற தொடரில் உலகம் என்பது அதில் வாழும் மக்களைக் குறித்தது போல, இங்கு மிகுந்த மணம் என்பது, மணமுடைய மலரைக் குறித்தது எனலாம் (சா.அக.);.

     [மிகு + மணம்.]

மிகுமழை

 மிகுமழை  migumaḻai, பெ.(n.)

   அதிக மழை (சூடா.);;  excessive rains.

     [மிகு + மழை.]

மிகுமின்கடத்தி

 மிகுமின்கடத்தி  migumiṉgaḍatti, பெ.(n.)

   மிகக் குறைந்த வெப்ப நிலையில் மின்சாரத்தைத்தடை இல்லாமல் கடத்தும் பொருள்;  super conductor.

     [மிகு + மின் + கடத்தி.]

மிகுவெறி

 மிகுவெறி  miguveṟi, பெ.(n.)

   பெருங் கிறுக்கு, கோட்டி (பைத்தியம்);;  great lunacy.

அவன் மிகுவெறி கொண்டவன்; அவனிடத்தில் பார்த்து பேசு (சா.அக.);.

     [மிகு + வெறி. வெறி = கிறுக்கு, கோட்டி.]

மிகை

மிகை1 migai, பெ.(n.)

   1. மிகுதி;  abundance, excess.

     “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” (குறள், 504);.

   2. சிறந்த பொருள்;  excellent thing.

     “மிகையிரண்டுள” (இரகு.நகரப்.5);.

   3. மேன்மை;  excellence.

     “காரியங்கள் மிகை படர்ந்து” (விநாயகபு.நைமி.25);.

   4. பெருமை;  greatness.

     “மிகை மக்களால்” (நாலடி, 163);.

   5. தேவையற்றது;  that which is unnecessary, superfluous.

     “யான் மிகையோ” (கம்பரா. ஆரணிய. சூர்ப். 139);.

   6. வேண்டு மளவின் மிக்கதென்னுங் குற்றம்;  superfluity; redundancy, a defect in argumentation.

     ” முதற் கடவு ளொருவனே யமையுமாகலின் வேறும் அத்தன்மைய ருண்டெனின் மிகையென்னுங் குற்றமாம்” (சி.போ.பா.1:3, பக்.52, சுவாமிநா.);.

   7. மிஞ்சு பொருள் (உரி.நி.);;  that which remains or is left over, remainder.

   8. அதிகப்படியானது; extra.

     “மிகைக்கை காணாது” (பெருங். உஞ்சைக். 43:149);.

     “உழைக்கோர் புள்ளி மிகையன்று” (திவ்.பெரியாழ்.5, 1, 2);.

மிகைப்படச் சொல்லேல் (பழ.);.

   9. செருக்கு;  arrogance.

     “மிகை நடுக்கெனா” (தொல். பொருள்.260);.

   10. தீச்செயல்;  evil deed.

     “மிகை பல செய்தேன்” (தேவா.1115, 6);.

   11. தவறு;  fault, defect, error.

     “மிகை சீறுபு” (சீவக.281);.

   12. தண்டனை;  punishment.

     “தந்தை யின்ன மென்ன மிகை செய்யினும்” (பிரபோத.4:18);.

   13. துன்பம் செய்கை (அக.நி.);;  troubling, torturing.

   14. வருத்தம் (அ.க.);;  pain.

   15. துன்பம் (யாழ்.அக.);;  sorrow, affliction.

   16. கேடு (வின்.);;  destruction.

   17. உண்மையில் இருப்பதைக் காட்டிலும் அதிகப்படுத்தப் பட்டது, ஒவ்வாத முறையில் அதிகப்படுத்தப் பட்டது;  exaggeration, to excess, too much, that which is over done.

அவர் எழுத்தாளருக்கெல்லாம் எழுத்தாளர் என்றால் அது சற்றும் மிகை இல்லை. அந்த குணச்சித்திர நடிகரின் மிகையான நடிப்பு எரிச்சலைத்தான் கிளப்பியது. கற்றோர் தன்னைத்தானே மிகைப்படுத்திப் பேசுதல் கல்வி கற்றதற்கு அழகல்ல.

க.மிகெ.

     [மிகு → மிகை.]

 மிகை2 migaittal,    4. செ.கு.வி. (v.i.)

   1. அதிகமாதல்;  to increase, swell.

   2. செருக்குறுதல்;  to be proud.

‘மிகைத்துச் செல்லும் படை’ (புறநா.71,உரை);.

     [மிகு → மிகை.]

மிகைசொல்(லு)-தல்

மிகைசொல்(லு)-தல்  migaisolludal,    13 செ.கு.வி. (v.i.)

   பொய்க்குற்றஞ்சாட்டுதல் (வின்.);;  to bring a false accusation.

     [மிகைக + சொல்(லு);-தல்]

மிகைபடக்கூறல்

மிகைபடக்கூறல்  migaibaḍagāṟal, பெ.(n.)

நூற்குற்றம் பத்தனுள் வேண்டுமளவின் மிக்கதைக் கூறுங் குற்றம் (நன். 12);.

மிகைபடு-தல்

மிகைபடு-தல்  migaibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. அதிகப்படுதல்;  to increase; to be excessive.

   2. குற்றத்திற்கு உள்ளாதல் (யாழ்.அக.);;  to be at fault.

     [மிகை + படுதல்.]

மிகைபோடு-தல்

மிகைபோடு-தல்  migaipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

மிகைசொல்(லு);தல் பார்க்க; see {}.

     [மிகை + போடுதல்.]

மிகைமொழி

 மிகைமொழி  migaimoḻi, பெ.(n.)

   உயர்வு நவிற்சியணி (பிங்.);;  hyperbole.

     [மிகை + மொழி.]

மிகையுவமை

மிகையுவமை  migaiyuvamai, பெ.(n.)

   உவமானம் உவமேயம் இரண்டிற்கும் அடிப்படை வேறு என்பதன்றி வேற்றுமை யில்லையென்னும் உவமையணி (வீரசோ. அலங்.14, உரை);;  a simile which states that there is no difference between {} and {} except in their loci.

     [மிகை + உவமை.]

உவமையின் வகைகள்: 1. புகழ்ச்சி உவமை; 2. பழிப்புவமை; 3. விரோத உவமை; 4. கருத்துவமை: 5. இசையுவமை; 6. உண்மை உவமை; 7. ஐயவுவமை; 8. இகழ்ச்சியுவமை; 9. எதிர்ப்பொருளுவமை; 10. அற்புதவுவமை; 11. நோக்குவமை; 12. இதரே தரவுவமை; 13. மிகையுவமை; 14. பண்புவமை; 15. உயர்வுவமை; 16. நியமவுவமை; 17. அநியமவுவமை; 18. தடை யுவமை; 19. தெற்றுவமை; 20. சிலேடை உவமை; 21. துணிவுவமை; 22 உம்மையுவமை; 23. பொருளுவமை; 24. ஒப்புவமை; 25. கூட்டவுவமை; 26. அபூதவுவமை; 27 வாக்கியப் பொருளுவமை; 28. கோவையுவமை; 29. காரணவுவமை; 30. மயக்க வுவமை; 31. பலவியலுவமை; 32. விக்கிரியவுவமை; 33. சந்தானவுவமை (வீரசோ. அலங்.14);.

மிகையுவமைக்கு எடுத்துக்காட்டு: “நின்முகங் கண்டதுவு நின்கண்ணே திங்களையும் விண்மிசையே கண்டதுவு மிக்கு”

இது மிகையுவமை.

     “இவ்வயிற் கண்டது பொருளையும் பொருவையு மிவ்வயிற் கண்டதென் பதுமிகையுவமை” எனக் கொள்க.

இவ்வுவமையைத் தண்டியாசிரியர் அதிசய வுவமை என்று சொல்லுவர் (வீரசோ.,அலங்.14); தண்டியலங்காரம் கூறும் உவமை வகைகள்:

   1. விரியுவமை; 2. தொகையுவமை, 3. இதரவிதரவுவமை, 4. சமுச்சயவுவமை; 5. உண்மையுவமை; 6. மறுபொருளுவமை; 7. புகழுவமை; 8. நிந்தையுவமை; 9. நியமவுவமை; 10. அநியம வுவமை; 11. ஐயவுவமை; 12. தெரிதருதேற்ற வுவமை; 13. இன்சொல்லுவமை; 14. விபரீத வுவமை; 15. இயம்புதல் வேட்கை யுவமை; 16. பலபொருளுவமை; 17. விகார வுவமை; 18. மோலக வுவமை; 19. அபூத வுவமை; 20. பலவயிற்போலி யுவமை; 21. ஒருவயிற்போலி யுவமை; 22. கூடாவுவமை; 23. பொது நீங்குவமை; 24. மாலையுவமை (தண்டி.32);.

இவ்வுவமை அணி மேலும் அற்புதம், சிலேடை, அதிசயம், விரோதம், ஒப்புமைக் கூட்டம், தற்குறிப்பேற்றம், விலக்கு, ஏது என்னும் எட்டு அணிகளோடும் சேர்ந்து வரும் (தண்டி.33);.

மிக்க

மிக்க1 mikka, கு.பெ.எ.(adj.)

   1. மிகுந்த;  great much.

     “மிக்க பெரும்புகழ் மாவலி” (திவ். பெரியாழ்.18:7);.

     “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” (குறள், 504);.

   2. உயர்ந்த;  excellent, superior.

     “மிக்க வேதியர்” (திவ். கண்ணிநுண்.9);.

     “மாலைநீ தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள் ஆர்ப்ப” (கலித்.118:17);.

க. மிக்க

     [மிகு → மிக்க.]

 மிக்க2 mikka, வி.அ. (adv.)

   மிக;  very.

நீ கூறியது மிக்க சரி.

     [மிகு → மிக்க.]

மிக்ககுளிர்ந்தநிலம்

 மிக்ககுளிர்ந்தநிலம்  miggaguḷirndanilam, பெ.(n.)

   மிகவும் குளிர்ச்சியான நிலம்;  a kind of chilled land.

     [மிக்க + குளிர்ந்த நிலம்.]

ஆசியாவின் நிலப்பிரிவில் (கண்டம்); உள்ள சைபீரிய நாட்டின் வடபகுதியில் இருக்கும் (வர்க்கோயான்ஸ்பர்க்); இடம்; எல்லாப் பகுதிகளைக் காட்டிலும் குளிர்ச்சி மிகுந்த நிலம் (அபி.சிந்.);.

மிக்ககுளிர்வாதம்

 மிக்ககுளிர்வாதம்  miggaguḷirvātam, பெ. (n.)

   உடம்பு வியர்த்துக் குளிர்க் காய்ச்சலுடன் தாகமுண்டாகி, பசியற்று சோர்வையுண்டாக்கும் ஒருவகை நோய்;  a disease marked by fever, excessive perspiration, thirst, chillness etc.

அவன் பாட்டி மிக்க குளிர்வாதத்தினால் துன்பப்படுகின்றார்.

     [மிக்க + குளிர் + Skt. வாதம்.]

மிக்கசெயல்

மிக்கசெயல்  mikkaseyal, பெ.(n.)

   1. அளவிறந்த ஆற்றல்;  extraordinary power.

   2. பெருந்தன்மை;  magnanimity.

     [மிக்க + செயல்.]

மிக்கதண்ணீர்வேட்கை

 மிக்கதண்ணீர்வேட்கை  mikkadaṇṇīrvēṭkai, பெ. (n.)

   மிகுதியான தண்ணீர்த் தாகம்;  excessive thirst.

மிக்க தண்ணீர் வேட்கை மாடுகளுக்கு இருந்த போதிலும் கூவம் ஆற்றில் ஒடும் அழுக்கு நீரைக் குடிக்காது.

     [மிக்க + தண்ணிர் + வேட்கை.]

மிக்கது

மிக்கது  mikkadu, பெ.(n.)

   1. மிகுதியா யிருப்பது;  that which is abundant or excessive.

   2. சிறந்தது;  that which is excellent.

     “அதன்கணின்று மீடல் மிக்கது” (இறை.3 பக்.44);.

   3. ஒன்றின் மேம்பட்டது;  that which is superior.

   4. எஞ்சியது;  that which remains, as of food after a meal.

   5. மீறுகை (அதிக்கிரமச் செய்கை);;  that which oversteps the limits, excess; transgression.

     “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்” (குறள். 158);.

   6. வேறானது;  that which is different.

     “ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்” (திருமந். 1467);.

   7. முறையற்றது (சது.);;  that which is unjust.

க. மிக்கது; தெ. மிகடா.

     [மிகு → மிக்கது.]

மிக்கபெயல்

மிக்கபெயல்  mikkabeyal, பெ. (n.)

மிகு பெயல் (குறள், 732, உரை); பார்க்க; see miցսpeyal.

     [மிக்க + பெயல்.]

மிக்கவர்

மிக்கவர்  mikkavar, பெ. (n.)

   1. மிக்கார், 1 பார்க்க; see {},

   2. பார்ப்பனன் (திவா.);;  Brahmins.

     [மிகு → மிக்க → மிக்கவர்.]

மிக்கவை

மிக்கவை  mikkavai, பெ. (n.)

   1. அடிசில் (அக.நி.);, சோறு;  cooked rice.

   2. ஊன் (அக.நி.);;  meat.

   3. நிறைகை;  being full; abundance.

க. மிக்கவு.

     [மிகு → மிக்க → மிக்கவை.]

மிக்கான்

 மிக்கான்  mikkāṉ, பெ.(n.)

மிக்கார் பார்க்க; see {}.

     [மிக்கார் → மிக்கான்.]

மிக்கார்

மிக்கார்  mikkār, பெ.(n.)

   1. பெரியோர்;  reat persons.

     “மிக்கா ராரடியானென்னின்” (திருவாச.6:48);.

     “கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற மிக்காருள் மிக்க கொளல்” (குறள், 724);.

   3. மிக்கோர் பார்க்க: see {}.

   4. பெரும்பாலோர்;  majority of persons, most people.

     “மிக்கீரு நொந்தீர்கள் போலும்” (கந்தபு. சிங்கமு.374);.

   5. தீமை செய்பவர்;  evil doers.

     “மிக்கார்க் குதவார் விழுமியோர்” (நன்னெறி.36);.

   6. பகைவர் (திவா.);;  foes, enemies.

     [மிகு → மிக்க → மிக்கார்.]

மிக்கிது

மிக்கிது  mikkidu, வி.எ.(adv.)

   மிகுதியான பொருளை, இதனில் மிக்கதை;  that which is too much.

     ‘மாவின் போகத்தில், ஸ்ரீ கோயிலில் கணபதியார்க்கு அமுது செய்வதாகவும், மிக்கிது கொண்டு சித்திரை உத்திரத்திந் நான்று அமுது செய்வதாகவும்’ (செந்தலைக் கல்வெட்டு. கல்வெட்டு அறிக்கை எண். 7/1899); (கல்.அக.);

மிக்கிளமை

 மிக்கிளமை  mikkiḷamai, பெ. (n.)

   மிகுந்த கட்டிளமை (வின்.);; extreme youth.

     [மிகு → மிக்கு + இளமை.]

மிக்கு

மிக்கு1 mikku, பெ.(n.)

   கரும்பு;  sugarcane Saccharam officinarum (சா.அக.);.

     [மிகு → மிக்கு. இனிப்புச் சுவை மிகுந்தது.]

 மிக்கு2 mikku, கு.வி.எ.(adv.)

மிக பார்க்க; see miga.

     “அச்ச மிக்குற்றுழியும்” (சி.போ.பா.6:1/ பக்.120);.

தெ. மிக்கிலி; க. மிக்கு.

     [மிகு → மிக்கு.]

மிக்குண்டம்

 மிக்குண்டம் mikkuṇṭam, பெ.(n.)

மிகுண்டம் பார்க்க; see {} (சா.அக.);.

மிக்கோன்

மிக்கோன்  mikāṉ, பெ. (n.)

   பெரியோன்;  great person.

     “மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாக” (நள.கலிநீங்கு.71);.

     “மிக்கோன் கூறிய மெய்ம்மொழி ஒம்பி” (சிலப்.15:174);.

     “மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப” (மணிமே.12:74);.

     [மிகு → மிக்கு → மிக்கோன்.]

மிக்கோர்

மிக்கோர்  mikār, பெ. (n.)

   அறிஞர்; அறிவுடையோர்; பெரியோர் (திவா.);;  wise person.

     “மிக்கோ ருறையும் விழுப்பெருஞ் செல்வத்து” (மணிமே.22:105);.

     [மிகு → மிக்கு → மிக்கோர்.]

மிசல்கர்ணம்

 மிசல்கர்ணம் misalkarṇam, பெ. (n.)

   தலைமைக் கணக்கன் (அ); சரியாய் நியமனம் பெற்ற கணக்கன்;     [Skt. {}+ U. misl → த. மிசல் கர்ணம்.]

மிசல்தீர்வை

 மிசல்தீர்வை misaltīrvai, பெ. (n.)

   பக்க நிலங்கட்கு அமைந்த தீர்வையை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட தீர்வை;     [U. misl → த. மிசல்தீர்வை.]

மிசல்பந்தி

 மிசல்பந்தி misalpandi, பெ. (n.)

   ஒவ்வொரு சிற்றூரிலும் சிற்றூர் வேலைக்காரரின் பெயர்களைப் பதிவு செய்திருக்கும் நூல்;     [U. misl → த. மிசல்பந்தி.]

மிசாதாரம்

 மிசாதாரம்  micātāram, பெ.(n.)

   மரமஞ்சள்;  tree turmeric (சா.அக.);.

மிசி

மிசி  misi, பெ.(n.)

   1. தாளிசபத்திரி;  a medicinal leaf of a shrub Flacourtia cataphracta.

   2. சதகுப்பை;  dill seed Anethum A. sowa (சா.அக.);.

மிசிகம்

 மிசிகம்  misigam, பெ.(n.)

   பாம்புவளை;  snake hole (சங்.அக.);.

மிசிசாரம்

 மிசிசாரம்  misisāram, பெ.(n.)

   ஒருவகைச் சிற்பநூல்;  a kind of architectural book (அபி.சிந்);.

மிசிரகம்

 மிசிரகம்  misiragam, பெ.(n.)

   தாழ்ந்த வங்கம்;  low grade lead (சா.அக.);.

மிசிரன்

 மிசிரன் misiraṉ, பெ. (n.)

   கல்வி முதலிய வற்றால் உயர்ந்தவருக்கு வழங்கும் பட்டப்பெயர் ‘பட்டபாண மிசிரன் (வின்.);; a honorific title affixed to names of great man and scholars.

     [Skt. {} → த. மிசிரன்.]

மிசிரவர்ணம்

மிசிரவர்ணம் misiravarṇam, பெ. (n.)

   1. சாதிக்கலப்பு (வின்.);; mixed class or tribe.

   2. கலப்பு நிறம்; mixed colour.

     [Skt. {} → த. மிசிரவர்ணம்.]

மிசிரா

 மிசிரா  misirā, பெ.(n.)

   சின்ன முள்ளங்கி;  a kind of radish (சா.அக.);.

மிசிரிப்பருப்பு

 மிசிரிப்பருப்பு  misiripparuppu, பெ.(n.)

   சாலாமிசிரி;  salep orchid (சா.அக.);.

சாலாமிசிரி = எகிப்து நாட்டு கிழங்கு வகை.

மிசிர்தேசம்

 மிசிர்தேசம் misirtēsam, பெ. (n.)

   எகிப்து தேசம்; egypt.

     [Ar. {} → த. மிசிர்தேசம்.]

மிசுக்கன்

மிசுக்கன்  misukkaṉ, பெ.(n.)

   1. ஈனன்;  vile or worthless person.

   2. வறியவன்;  poor man

     [பிசுக்கர் = இழிந்தவன், பயனற்றவன், ஏழை. பிசுக்கர் → பிசுக்கன் → மிசுக்கன்.]

மிசுக்கு

 மிசுக்கு  misukku, பெ. (n.)

   கணக்கு;  computation.

புள்ளிமிசுக்கு, ஒப்படிமிசுக்கு.

மிசுக்கை

 மிசுக்கை  misukkai, பெ. (n.)

   இழிவானது (வின்.);;  trifle, vile or worthless thing.

     [பிசுக்கு = சிறியது, இழிவானது, எந்தப் பொருள் வாங்கினாலும் பிசுக்குக் கேட்பான். பிசுக்கு → மிசுக்கு → மிசுக்கை.]

மிசை

மிசை1 misaidal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. உண்ணுதல்;  to eat a meal.

     “வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்?” (குறள், 85);.

   2. நுகர்தல் (யாழ்.அக.);;  to taste, enjoy, experience.

     [மீ → மி → மிசை → மிசைதல் = உண்ணல்.]

 மிசை2 misai, பெ. (n.)

   1. உணவு;  food.

     “அரிப்பறை வினைஞ ரல்குமிசைக் கூட்டும்” (ஐங்குறு.81);.

   2. சோறு (சூடா.);;  boiled rice.

 Cf.E. mess, to eat; O.Fr. mes; Fr. mets.

     [மீ → மி → மிசை = மிஞ்சியதை உண், உண் (சு.வி.பக்.57);.]

 மிசை3 misai, பெ.(n.)

   1. உயர்ச்சி (சூடா.);;  eminence, elevation.

   2. மேலிடம் (பிங்.);;  elevated place.

   3. மேடு;  hill, mound.

     “அவலா கொன்றோ மிசையா கொன்றோ” (புறநா.187);.

   4. வானம்;  sky.

     “மிசைபாடும் புள்ளின்” (கலித்.46);.

   5. முன்னிடம்;  front.

     “ஈற்றுமிசை யகர நீடலு முரித்தே” (தொல். எழுத்து.312);.

     [மீ. மேலிடம், உயரம், வானம். மீ → மி → மிசை.]

 மிசை4 misai, இடை.(part.)

   ஏழாம் வேற்றுமை யுருபு;  a locative ending.

     “மலைமிசைத் தோன்றும் மதியம் போல்” (நாலடி, 21);.

     [மிசை3 → மிசை4.]

மிசைஞர்

மிசைஞர்  misaiñar, பெ. (n.)

   உண்பவர்;  eaters.

     “இரும்பிண மிசைஞரின்” (ஞானா. 17:31);.

     [மிசை ( = உணவு, சோறு); → மிசைஞர்.]

மிசைத்திரள்

 மிசைத்திரள் misaittiraḷ, பெ.(n.)

   காற்கரடு (பிங்.);;  ankles.

     [மிசை + திரள்.]

பாதத்திற்குமேல் திரண்ட தசைத்திரள்.

மிசைபாடும்புள்

மிசைபாடும்புள் misaipāṭumbuḷ, பெ.(n.)

   வானம்பாடி; the Indian skylark.

     “துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின்” (கலித்.46);.

     [மிசை + பாடு + புள் (மிசை = வானம்);.]

மிசைவடம்

 மிசைவடம் misaivaḍam, பெ.(n.)

   வீரக்கழல் (வின்.);; warrior’s anklering.

     [மிசை + வடம்.]

பாதத்திற்கு மேலுள்ள கணுக்காலில் அணியும் வடம், அணி. வடம் = கனமான கயிறு, கயிறு போன்று மாழையால் செய்த அணிகலன்.

மிசைவு

மிசைவு misaivu, பெ.(n.)

   1. உண்கை; eating.

   2. உணவு; food.

     “முழவு மருள் பெரும் பழஞ்சிலைகெழு குறவர்க் கல்கு மிசைவாகும்” (புறநா.236:2);.

     [மிசை → மிசைவு. மிசை = உணவு.]

மிச்சகம்

 மிச்சகம்  miccagam, பெ.(n.)

   எலுமிச்சை;  lime fruit (சா.அக.);.

மிச்சங்காய்

 மிச்சங்காய்  miccaṅgāy, பெ.(n.)

   எலுமிச்சங்காய்;  lime fruit (சா.அக.);.

மிச்சஞ்சொச்சம்

 மிச்சஞ்சொச்சம்  miccañjoccam, பெ.(n.)

   மீதி (வின்.);;  anything left over, that which can be spared.

     “மிச்சஞ் சொச்சம் வைக்காமல் உண்டு விட்டான்”.

     [மிச்சம் + சொச்சம் (மரபுத் தொடர்);.]

மிச்சப்படுத்து-தல்

மிச்சப்படுத்து-தல்  miccappaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   செலவாவதைத் தவிர்த்தல், சேமித்தல்;  to save.

குளிர் காலத்தில் குறைந்த விலையில் மின் விசிறி வாங்கிப் பணத்தை மிச்சப்படுத்தலாம். எங்கள் குறிப்பைப் பின்பற்றினால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம். ஒரு சிறந்த பெண்ணானவள் தன் கணவனின் மாத ஊதியத்தில் ஒரு பங்கை மிச்சப்படுத்தி குடும்பம் நடத்துவாள். காக்கையானது தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை மிச்சப்படுத்தித் தன் குஞ்சுக்கு ஊட்டும்.

     [மிச்சம் + படுத்து தல்.]

மிச்சமீதி

 மிச்சமீதி  miccamīti, பெ.(n.)

   மிகக் குறைந்த அளவில் அல்லது எண்ணிக்கையில் எஞ்சியிருப்பது;  the leftovers; the remains of something.

மாலையில் சோற்றுப் பானையில் மிச்சமீதி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தாள். எனது தாய் மிச்சமீதி உள்ள காசினை நான் செலவு செய்து விடுவேன் என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.

     [மிச்சம் + மீதி.]

மிச்சம்

மிச்சம்1 miccam, பெ.(n.)

   1. செலவழித்தது, எடுத்தது, கழித்தது போக தங்கியிருப்பது; மீதி;  what is left over.

காய்கறி வாங்கியபின் இரண்டு ரூபாய் தான் கையில் மிச்சம் இருந்தது. சாப்பாட்டுத் தட்டில் உள்ள உணவு வகைகளில் எதையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடு.

   2. ஒரு முழுவேலையில் கொஞ்சம் செய்யப்படாமல் இருக்கும் எஞ்சிய வேலை;  remainder.

இந்த வேலையை இதோடு நிறுத்திக் கொண்டு மிச்சத்தை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். படத்தில் மிச்சத்தையும் வரைந்து முடி.

   3. ஒரு செயலுக்கு எதிர்பார்ப்பது ஒன்றாகவும் கிடைப்பது வேறொன்றாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டுவது, ஒட்டு மொத்தமாகக் கடைசியில் கிடைத்த பயன்;  all that remains.

சந்து (சமாதானம்); செய்யப் போய் நான் அடி வாங்கியதுதான் மிச்சம். பணத்துக்காக அலைந்ததுதான் மிச்சம்.

   4. அதிகம்;  excess.

அவன் மிச்சமாய் எடுத்துக்கொனடான்.

ம. மிச்சம்

     [மிஞ்சு + அம் மிச்சம் (சு.வி.);.]

 மிச்சம்2 miccam, வி.அ.(adv.)

   1. மிக;  very.

மிச்சம் பெரிய வீடு. மிச்சம் நல்ல சாப்பாடு.

   2. நிறைய;  many.

உங்களைப் பார்த்து மிச்சம் நாளாச்சே?

     [மிஞ்சு + அம் மிச்சம் (சு.வி);.]

 மிச்சம்3 miccam, பெ.(n.)

   1. பொய்;  lie; falsity.

     ‘மிச்ச நீங்குதலும்’ (திருநூற்.13, உரை);.

   2. பொய்யறிவு;  false knowledge.

மிச்சம்பிடி-த்தல்

மிச்சம்பிடி-த்தல்  miccambiḍittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. சேமித்தல்; செட்டாயிருந்து பொருள் சேர்த்தல் (கல்வி.வி.1, 1, 2);;  to scrape up, save by means of one’s thrift.

   2. மிச்சப்படுத்துதல்;  save money.

இப்போதே மிச்சம் பிடித்துக் காசு சேர்த்தால் பிற்காலத்தில் உனக்கு உதவும்.

     [மிச்சம் + பிடித்தல்.]

மிச்சம்மீசாடி

 மிச்சம்மீசாடி  miccammīcāṭi, பெ.(n.)

   தேவைக்கும் அதிகமானப் பொருள்;  remaining product (வட்.வழ.அக.);.

     [மிச்சம் + மீசாடி.]

மிச்சவாரம்

 மிச்சவாரம்  miccavāram, பெ.(n.)

   பயிரிடுஞ் செலவு தீர்வை முதலியன கழித்து வயலிலிருந்து கிடைக்கும் வருவாய் (நாஞ்.);;  net income from a field.

     [மிச்சம் + வாரம். வாரம் = வருவாய்.]

மிச்சிரகம்

மிச்சிரகம்  micciragam, பெ. (n.)

   கணித வகையுளொன்று (யாப்.வி.528);;  a mode of calculation.

மிச்சிரகெந்தகம்

 மிச்சிரகெந்தகம்  micciragendagam, பெ.(n.)

   அரிதாரம்;  yellow orpiment (சா.அக.);.

மிச்சில்

மிச்சில்  miccil, பெ.(n.)

   1. எஞ்சிய பொருள்;  remainder.

     “வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்” (குறள், 85);.

     “கொள்ளாமிச்சில்” (புறநா.23:6);.

     “சேடுசினை யுரீஇ உண்ட மிச்சில்” (அகநா. 331:4);.

     “வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்” (குறுந்.56:1);.

     “ஆர்ந்தன வொழிந்த மிச்சில் சேய்நாட்டு” (நற்.43:4);.

   2. எச்சில் (பிங்.);;  leavings, what is left after a meal.

     “உண்டொழி மிச்சிலும்” (சிலப். 15:169);.

   3. கரி (தைலவ.தைல.);;  charcoal, as the remains of fire.

     [மிஞ்சு + இல் மிச்சில் (சு.வி.57);.]

மிச்சில்சீப்பவர்

மிச்சில்சீப்பவர்  miccilcīppavar, பெ.(n.)

   எச்சில் இலை முதலியன வெடுத்து இடத்தைத் தூய்மை செய்வோர்;  servants who remove the leaves, plates, etc., and clean the floor after a meal.

     “மிச்சில் சீப்பவர்” (சீவக.832);.

     [மிச்சில் + சீப்பவர்.]

மிச்சு

 மிச்சு  miccu, பெ.(n.)

   விலாமிச்சு;  a grass with fragrant rootsKhus khus Vetiveria zizanioides (சா.அக.);.

மிச்சை

மிச்சை1 miccai, பெ.(n.)

   1. மிச்சம்

   2, 1 பார்க்க (பிங்.);;  see miccam2 , 1,

   2. அறியாமை;  ignorance.

   3. வறுமை (திவா.);;  poverty.

 மிச்சை2 miccai, பெ.(n.)

   1. எலுமிச்சை;  lime.

   2. விலாமிச்சை;  a grass with fragrant rootsKhus khus Vetiveria zizanioides.

   3. உத்தாமணி;  a twining shrub Demia extensa (சா.அக.);.

 மிச்சை3 miccai, பெ.(n.)

   இலாமிச்சை (தைலவ. தைல.);;  cuscus grass.

     [இலாமிச்சை → மிச்சை.]

மிஞிறு

மிஞிறு miñiṟu, பெ.(n.)

   1. வண்டு (திவா.);; beetle.

     “மிஞிறுமூசு கவுள சிறுகண் யானை” (அகநா.159:16);.

   2. தேனீ; honey bee.

     “மீனேற்றுக் கொடியோன் போன் மிகுதிறார்க்குங் காஞ்சியும்” (கலித்.26:3);.

     “மிஞிறார்க்குங் கமழ் கடாத்த” (புறநா.22:6);.

     [ஞிமிறு → மிஞிறு. ஞிமிறு = வண்டு, தேனீ.]

மிஞிறுணவு

 மிஞிறுணவு miñiṟuṇavu, பெ.(n.)

   தேன் (சா.அக.);; honey.

     [மிஞிறு + உணவு.]

மிஞ்சகம்

 மிஞ்சகம் miñjagam, பெ.(n.)

   எலுமிச்சை; lime (சா.அக.);.

மிஞ்சி

மிஞ்சி1 miñji, பெ.(n.)

   கையில் கணையாழி (மோதிர); விரலிலும் காலில் இரண்டாவது விரலிலும் அணியும் கணையாழி வகை; ring worn on the ring finger or the second toe.

     “கால் மிஞ்சிக்காரன் பின் போனாள்” (தனிப்பா.ii, 138:351);.

க. மிஞ்சு

     [மீ → மிச்சு → மிஞ்சி.]

திருமணமான ஆண் கால்விரலில் அணியும் அணிகலன் மிஞ்சி, திருமணமானப் பெண் கால் விரலில் அணிவது மெட்டி என்னும் அணிகலன்.

     [p]

 மிஞ்சி2 miñji, பெ.(n.)

   முஞ்சிப் புல்லால் செய்த அரைஞாண்; waistcord made of {} grass.

     [முஞ்சி1 → மிஞ்சி2. முஞ்சி = ஒருவகை நாணல் புல்.]

மிஞ்சிகம்

 மிஞ்சிகம் miñjigam, பெ.(n.)

   பெண்களின் மயிர்முடி (பிங்.);; lock of women’s hair.

மிஞ்சிகை

மிஞ்சிகை miñjigai, பெ.(n.)

   1. குண்டலம் (அக.நி.);; a kind of earring.

   2. பேழை (அரு.நி.);; box.

     [மஞ்சிகை (= பெட்டி); → மிஞ்சிகை.]

மிஞ்சினவன்

மிஞ்சினவன் miñjiṉavaṉ, பெ. (n.)

   1. அடங்காதவன் (வின்.);; perverse, unmanageble man.

   2. மேற்பட்டவன் (இ.வ.);; one who is preeminent.

     [மிஞ்சுதல் = வரம்பு மீறுதல், செருக்குக் கொள்ளுதல், மிஞ்சு → மிஞ்சினவன்.]

மிஞ்சிபோனால்

 மிஞ்சிபோனால் miñjipōṉāl, வி.அ.(adv.)

   மிக அதிகமாகக் கணித்தால் கூட; at the most.

   அந்தப் பெண்ணுக்கு மிஞ்சிப்போனால் பதினேழு வயது தான் இருக்கும்;மிஞ்சி போனால் அவன் ஒரு கல் தொலைவு கூடப் போயிருக்க மாட்டான்.

     [மிஞ்சி + போனால்.]

மிஞ்சிப்போ-தல்

மிஞ்சிப்போ-தல் miñjippōtal,    8 செ.கு.வி. (v.i.)

   எல்லை மீறிப் போதல்; to exceed limits;

 to go to far.

     ‘அவர் செயல் மிஞ்சிப் போய் விட்டது’ (உ.வ.);.

     [மிஞ்சு → மிஞ்சி + போ-தல்.]

மிஞ்சு

மிஞ்சு1 miñjudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. மீதமாதல்; be left over;

 remain.

விற்றது போக இரண்டு காணி நிலம் மட்டும்தான் நமக்கு மிஞ்சுகிறது. நான்கு பேருக்குத்தான் சமைத்தேன் இருந்தாலும் சோறு (சாதம்); மிஞ்சி விட்டது. இவ்வளவு செய்தும் பயன் இல்லை, வருத்தம் தான் மிஞ்சுகிறது.

   2. திறன், இயல்பு, அளவு போன்றவற்றை அதிகம் கொண்டிருப்பதால் முன்நிலையில் இருத்தல், முந்துதல், விஞ்சுதல்; excel, outdo.

திரைப்படத் துறையில் தன்னை யாரும் மிஞ்சக்கூடாது என்ற எண்ணம் அந்த இயக்குநருக்கு இருந்தது. நீ குருவை மிஞ்சிய சீடனா?

   3. குறிப்பிட்ட வரம்பை, ஒழுங்கை கடத்தல், கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போதல், மீறுதல்; exceed;

 go beyond limits.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் (அமிர்தமும்); நஞ்சு. காலம் தாழ்த்தினால் காரியம் மிஞ்சிவிடும். அவன் என் பேச்சையும் மிஞ்சிப் போய்விடுவான் போலிருக்கிறது. தேர்தலில் வழக்கமாக வெற்றிபெறும் தலைவரை விட இந்த முறை புதியதாக தேர்தலில் நின்றவர் ஒட்டு எண்ணிக்கையில் மிஞ்சிப் போனார்.

தெ., க. மிஞ்சு.

     [மீ → மி → மிஞ்சு → மிஞ்சுதல் (சு.வி.57);.]

 மிஞ்சு2 miñjudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மிகுதல்; to increase.

     “பகல்கண் மிஞ்சி” (சீவக.255);.

     “மிஞ்சிய கருமம் அஞ்சச் செய்யும்” (பழ.);.

   2. செருக்குதல் (வின்.);; to become proud;

 to be elevated.

தெ., க. மிஞ்சு.

     [மிஞ்சு1 → மிஞ்சு2-தல்.]

 மிஞ்சு3 miñju, பெ.(n.)

   1. மிகுவது (அக.நி.);; excess.

     “மிஞ்சினது கொண்டு மேற்கே போகல் ஆகாது” (பழ.);.

   2. வண்டு (அக.நி.);; beetle.

     [மிஞ்சு1 → மிஞ்சு3.]

மிடன்

மிடன் miḍaṉ, பெ.(n.)

   1. வலிமை; strength.

   2. மகன்; son.

   3. நிலவு; moon.

     [மிடல் → மிடன்.]

மிடறுகம்மல்

 மிடறுகம்மல் miḍaṟugammal, பெ. (n.)

   தொண்டைக்கம்மல்; sore throat (சா.அக.);.

     [மிடறு + கம்மல்.]

மிடறுசெய்-தல்

மிடறுசெய்-தல் miḍaṟuseytal,    1 செ.கு.வி. (v.i.)

   பெருங்குரலெடுத்தல் (ஈடு, 3, 8, பிர.);; to raise one’s voice.

     [மிடறு + செய்-தல்.]

மிடறுதண்ணீர்

 மிடறுதண்ணீர் miḍaṟudaṇṇīr, பெ.(n.)

   ஒரு முறை விழுங்கும் நீரளவு; a gulp or a draught of water Haustus (சா.அக.);.

     [மிடறு + தண்ணீர்.]

மிடறுதின்(னு)-தல்

மிடறுதின்(னு)-தல் miḍaṟudiṉṉudal,    13 செ.கு.வி.(v.i.)

   தொண்டையில் அரிப்புண்டாதல்; to irritate in the throat.

     “மிடறு தின்றால் சொறிய வொண்ணாதாற் போல” (திவ்.பெரியதி. 1, 1:5, வியாக். பக்.37);.

     [மிடறு + தின்னுதல்.]

மிடற்றுக்கருவி

மிடற்றுக்கருவி miḍaṟṟukkaruvi, பெ.(n.)

   இன்னிசையெழுப்பும் கண்டம் (தக்கயாகப். 638, சிறப்புக் குறிப்பு);; throat, considered, a musical instruments.

     [மிடறு + கருவி.]

மிடற்றுத்துவாரம்

 மிடற்றுத்துவாரம் miḍaṟṟuttuvāram, பெ. (n.)

   குரல்வளைத் துளை; entrance of the larynxAdifus (சா.அக.);.

     [மிடறு + Skt. துவாரம்.]

மிடற்றுநோவு

 மிடற்றுநோவு miḍaṟṟunōvu, பெ.(n.)

   தொண்டை வலி (M.L.);; laryngitis.

     [மிடறு + நோவு.]

மிடல்

மிடல் miḍal, பெ.(n.)

   1. வலி; strength.

     “மிடல் புக் கடங்காத வெம்முலையோ பாரம்” (சிலப். 7:17);.

   2. மிடன், 2, 3 பார்க்க; see {}, 2,

   3. “அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின்” (கலித்.2:2);.

     “நெடுமிடல் சாய்த்த பசும்பூட் பொருந்தலர்” (அகநா. 266:12);.

     “நள்ளாதார் மிடல் சாய்த்த” (புறநா.125:5);.

மிடா

மிடா miṭā, பெ.(n.)

   1. வெறியம் (சாராயம்); காய்ச்சுதல் முதலியவற்றுக்குப் பயன்படும் பெரிய மண் பானை; large earthen pot used especially for keeping fermented country liquor.

     “சோறு செப்பினாயிரம் மிடா” (சீவக. 692);. மாந்தரை மிரட்டும் பேய்கள் மிடா சோறு தின்னும் வல்லமை படைத்தவை.

   2. பானை; pot.

     [முழா → முடா → மிடா (வே.க.முல்.4:47);]

மிடாச்சு

 மிடாச்சு miṭāccu, பெ.(n.)

   ஒருவகை மரம் (சங்.அக.);; tripterocarp dammar.

     [மிடா → மிடாச்சு.]

மிடாபோல் பெரிய அடிப்பகுதியை யுடைய மரம்.

மிடாத்தவளை

மிடாத்தவளை miṭāttavaḷai, பெ.(n.)

   பெருந்தவளை (M.M.90);; bull frog.

     [முழா → முடா → மிடா + தவளை = பெருந்தவளை (வே.க.முல்.4);.]

     [p]

மிடி

மிடி1 miḍi, பெ.(n.)

   1. வறுமை (சூடா.);; poverty, want.

   2. துன்பம்; affliction.

     “மிடி யென்னுங் காரணத்தின்” (நாலடி, 56);.

 மிடி2 miḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வறுமையுறுதல்; to be poverty stricken, destitute.

     ‘மிடித்தார்க்குச் சுற்ற மின்றா யிருந்தது’ (சீவக.2535, உரை);.

   2. குறைவுறுதல்; to be scanty.

மிடிமை

 மிடிமை miḍimai, பெ.(n.)

   வறுமை (யாழ்.அக.);; poverty, want.

     “மிடிமையிலும் படிமை நன்று” (பழ.);.

     [மிடி → மிடி.மை.]

மிடியன்

மிடியன் miḍiyaṉ, பெ.(n.)

   வறியன்; poor, indigent person.

     “அமுதினை மிடியன் மேவியே யுண்டனனென” (பிரபுலிங்.மருள.5);.

     [மிடி → மிடியன்.]

மிடிவு

 மிடிவு miḍivu, பெ.(n.)

மிடிமை (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [மிடி → மிடிவு.]

மிடுக்கன்

மிடுக்கன் miḍukkaṉ, பெ. (n.)

   1. வலிமை யுடையோன்; strong, powerful man.

   2. முருடன்; rough, coarse person.

   3. இறுமாப்புடையவன் (இ.வ.);; proud conceited man.

   4. முருட்டுத்தனம் (வின்.);; coarseness..

     [மிடுக்கு → மிடுக்கன்.]

மிடுக்கு

மிடுக்கு miḍukku, பெ.(n.)

   1. வலிமை; strength.

     “மிடுக்கிலாதானை வீமனே……. என்று” (தேவா.647, 2);.

   2. செருக்கு (வின்.);; pride;

 stiffness of manners.

மிடுக்காகப் போ.

   3. இளமைத் துடிப்பு; youthful, vitality.

வாலிப மிடுக்கு.

   4. தோற்றம்; imposing appearance.

   தெ. க. மிடுகு;ம. மிடுக்கு.

மிடுபுடலை

 மிடுபுடலை miḍubuḍalai, பெ. (n.)

   பேய்ப் புடலை; a bitter kind of wild snake gourd Tricosanthus laciniosa (சா.அக.);.

மிடுமிடு–த்தல்

மிடுமிடு–த்தல் miḍumiḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   விரைதல் (யாழ்.அக.);; to hasten.

     [மிடுமிடெனல் → மிடுமிடு-த்தல்.]

மிடுமிடுப்பு

 மிடுமிடுப்பு miḍumiḍuppu, பெ.(n.)

   விரைவு (யாழ்.அக.);; haste.

     [மிடுமிடு → மிடுமிடுப்பு.]

மிடுமிடெனல்

 மிடுமிடெனல் miḍumiḍeṉal, பெ.(n.)

   விரைவுக்குறிப்பு (யாழ்.அக.);; onom. Expr. of haste.

மிடை

மிடை1 miḍaidal,    2 செ.கு.வி.(v.i.)

   1. செறிதல்; to be close set or crowded.

     “வேன்மிடைந்த வேலியும் பிளந்து” (சீவக. 279);.

   2. நிறைதல் (அரு.நி.);; to be full.

   3. கலத்தல்; to be mixed, mingled.

     “பொய்யோ டிடைமிடைந்த சொல்” (நாலடி, 80);.

   4. வருந்துதல் (சங். அக.);; to be distressed.

க. மிடுகு

     [மிசை → மிடை → மிடை-தல்.]

 மிடை2 miḍaidal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. செறிதல்; to set closely;

 to crowd.

   2. பின்னுதல்; to weave, as mat, etc.

   3. மிகுத்திடல்; to increase.

     [மிசை → மிடை → மிடை-தல்.]

 மிடை3 miḍai, பெ.(n.)

   1. பரண்; platform for watching, loft in a cornfield.

     “நல்லவர் கொண்டார் மிடை” (கலித்.103);.

   2. புணர்ச்சி; sexual union.

     “மிடையொடு விழைவு வேரறுத்த வீரர்கள்” (சூளா.முத்.5);.

   3. தூறு (வின்.);; bush, small shrub.

     [மிசை → மிடை. மிசை = மேல், மேலிடம்.]

 மிடை4 miḍai, பெ.(n.)

   நெருக்கம்; closeness.

     “பசுக்களை மிடையற மேய்க்கும்படி பண்ணினலனே” (திவ்.பெரியாழ். 2, 3:7 வியா. பக்.292);.

     [மிசை → மிடை.]

மிடைதுாறு

மிடைதுாறு miḍaiṟu, பெ.(n.)

   நெருங்கிய காடு; thick forest.

     [மிடை4 + தூறு. தூறு = காடு.]

மிட்டா

மிட்டா miṭṭā, பெ.(n.)

   1. நாட்டின் உட்பகுதி, வட்டம்; subdivision of a district.

   2. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி; possession.

   3. சொத்து; property.

   4. உரிமை; responsibility.

த. மிட்டா → இ. மிட்டா (mittha.);

     [முட்டா → மிட்டா. முட்டா = 1. ஊர்க்கிழமை, குறுநில ஆட்சி. 2 சொத்து (வே.க.4, பக்.53);.]

மிட்டாதாரி

 மிட்டாதாரி miṭṭātāri, பெ.(n.)

   மிட்டாதாருக் குரியது (R.T);; that which belongs to a {}.

     [மிட்டா + தாரி. தாரி = வடமொழிப் பின்னொட்டு.]

மிட்டாதார்

 மிட்டாதார் miṭṭātār, பெ.(n.)

   மிட்டாவுக்கு உரியவன்; male proprietor of a {}.

     [மிட்டா + தார். தார் = வடமொழிப் பின்னொட்டு.]

 மிட்டாதார் miṭṭātār, பெ. (n.)

   நிலக்கிழார்; land lord.

     [H. {} → த. மிட்டாதார்.]

மிட்டாதார்னி

 மிட்டாதார்னி miṭṭātārṉi, பெ.(n.)

   மிட்டாவுக்கு உரியவள்r (C.G.);; female proprietor of a {}.

     [மிட்டா + தார்னி. தாரி (ஆ.பா.); தாரினி (பெ.பா.);. தாரினி → தார். தார்னி = வடமொழிப் பின்னொட்டு.]

மிட்டாய்

 மிட்டாய் miṭṭāy, பெ. (n.)

   பண்ணிகார வகை; sweetmeat.

     [Ar. {} → த. மிட்டாய்.]

மிட்டாய்க்காரன்

 மிட்டாய்க்காரன் miṭṭāykkāraṉ, பெ. (n.)

   மிட்டாய் விற்பவன்; confectioner, dealerin sweetmeats.

     [Ar. {} → த. மிட்டாய்க்காரன்.]

மிட்னமல்லி

 மிட்னமல்லி miṭṉamalli, பெ. (n.)

   சைதாப் பேட்டை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Saidapet Taluk.

     [மேட்டு+இன்+மல்லி]

மிணர்

 மிணர் miṇar, பெ.(n.)

மிணறு பார்க்க; see {}.

மிணறு

 மிணறு miṇaṟu, பெ.(n.)

   ஒருவாயளவு கொண்ட நீர்மப் பண்டம்; draught, a quantity of liquid taken at one swallow.

     [மிடறு → மிணறு.]

மிணாட்டி

மிணாட்டி miṇāṭṭi, பெ.(n.)

   மணாட்டி (மனைவி); என்னும் சொல்லின் திரிபு; other word of a wife (கல்.அக.);.

     “இது மாறுவான் தந் மிணாட்டியை பரைமாயன்றுக்குக் குடுப்பான் (தெ.இ.கல்.தொ.12, கல்.164);.

     [மனையாட்டி → மிணாட்டி.]

மிணுமிணு-த்தல்

மிணுமிணு-த்தல் miṇumiṇuttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. வாய்க்குள் தானே சொல்லுதல்; to mumble, speak with a low reiterated sound.

     “தீமுகந்தனில் வாய் மிணுமிணுத்து நெய்சிந்தி” (பிரபோத.10:8);.

   2. கமுக்கம் பேசுதல் (யாழ்.அக.);; to murmur, as a secret.

   3. மந்திரஞ் சொல்லுதல் (இ.வ.);; to utter incantations.

மிணுமிணுப்பு

 மிணுமிணுப்பு miṇumiṇuppu, பெ. (n.)

   முணுமுணுப்பு (யாழ்.அக.);; mumbling.

     [மிணுமிணு → மிணுமிணுப்பு.]

மிணுமிணுப்புக்காரன்

 மிணுமிணுப்புக்காரன் miṇumiṇuppukkāraṉ, பெ.(n.)

   மந்திரஞ் செய்வோன் (இ.வ.);; magician.

     [மிணுமிணுப்பு + காரன்.]

மிண்டன்

மிண்டன் miṇṭaṉ, பெ.(n.)

   1. திண்ணியோன் (சூடா.);; strong man.

   2. அறிவில்லாதவன்; ignorance.

     “மிண்டர் பாய்ந்துண்ணுஞ் சோற்றை” (திவ். திருமாலை.14);.

     [மிண்டு → மிண்டன்.]

மிண்டி

மிண்டி1 miṇṭi,    வி.எ.(adv.) நெருங்கி; dense, compact close together.

     “சிரத்தினிற் கனத்து மிண்டி” (பரராச சேகரம்); (சா.அக);.

     [மிண்டு → மிண்டி.]

 மிண்டி2 miṇṭi, பெ.(n.)

   நெம்பு தடி (யாழ்.அக.);; staff or post used as a lever.

க. மிண்டு.

     [மிண்டு → மிண்டி.]

மிண்டிபோடு தல்

மிண்டிபோடு தல் miṇṭipōṭudal,    19 செ. குன்றாவி.(v.t.)

   நெம்பு தடியாலெடுத்தல் (யாழ்.அக.);; to raise by a lever;

 to break up.

     [மிண்டி + போடு-தல்.]

மிண்டிமரம்

 மிண்டிமரம் miṇṭimaram, பெ.(n.)

   உலுக்கு மரம்; ulukku tree.

     [மிண்டி + மரம்.]

மிண்டு

மிண்டு1 miṇṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. நெருங்குதல்; to throng.

     “பொதும்பிடை வரிவண்டு மிண்டி” (திவ்.பெரியதி.4, 10 : 2);.

   2. நிறைதல்; to be full.

   3. வலியதாதல்; to be hard.

     “மிண்டு மனத்தவர்” (சேந்.திருப்பல்.2);.

   4. மதங்கொள்ளுதல்; to be exultant, vain.

     “கருணை மட்டுப் பருகிக் களித்து மிண்டுகின்றேனை” (திருவாச.6:33);.

   5. போரில் கலத்தல்; to join battle.

     “தேர்மிசைக் கண்டு மிண்டுவீர்” (பாரத. நிரை.54);.

 மிண்டு2 miṇṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. நெம்புதல்; to try, lift, as with a lever.

   2. குத்திக் கிளப்புதல்; to thrust.

     “மிளிர மிண்டி” (பெரும்பாண்.92);.

   3. செருக்காகப் பேசுதல்; to talk harshly or arrogantly.

     “பிண்டியர்கள் மிண்டுமொழி” (தேவா.49, 10);.

   4. முன்தள்ளுதல் (வின்.);; to push, to force forward.

 மிண்டு3 miṇṭu, பெ.(n.)

   1. வலிமை; strength.

     “விரலூன்றி மிண்டது தீர்த்த” (தேவா. 510, 8);.

   2. முட்டு (யாழ்.அக.);; prop. support.

   3. துணிவு; bravery, courage.

     “இராவணன் கொண்டு மிண்டாய்ப் போகையில்” (இராமநா.ஆரணி.26);.

   4. அறிந்து செய்யும் குற்றம்; wilful fault, crime.

   5. துடுக்கு; mischief.

     “மிண்டுகள் செய்து பின்பு வீண்பழி போடுவானை” (ஆதியூரவதானி.61);.

   6. இடக்கர்ப் பேச்சு; vulgar talk;

 vulgarity.

     “மிண்டுறு கயவ னோர்நாள்” (திருவாலவா. 35:9);.

   7. செருக்கிக் கூறும் மொழி; presumptuous speech.

     “வானோரர் தானவர் துற்று மிண்டுகள் பேசி” (திருவாலவா. 4:7);.

மிண்டை

மிண்டை miṇṭai, பெ. (n.)

   கண்ணின் கருவிழி; apple of the eye.

     ‘விழித்திருக்க மிண்டையைக் கொள்வான்’ (கலித்.108, உரை);.

     [முண்டை → மிண்டை = கருவிழி (வே.க. முல்.5);.]

     [p]

மித-த்தல்

மித-த்தல்  midaddal,    3 செ.கு.வி.(v.i.)

   1. நீர் முதலியவற்றின் மேற்பரப்பில் மூழ்காமல் நிலைகொள்ளுதல்; to float.

     “சுரையாழ அம்மி மிதப்ப” (நன். 152, விருத்.);.

நீ தண்ணீரில் எவ்வளவு நேரம் மிதப்பாய்? இரும்பு நீரில் மிதக்காது.

   2. மேலெழுப்புதல் (வின்.);; to rise high in the sky.

   3. அளவில் மேற்குவிதல்; to be heaped in a measure, as corn.

மிதக்க அள.

   4. வீண் பெருமை பண்ணுதல் (வின்.);; to assume, to pretend to a character above the reality.

   5. மிகுதல்; to be abundant;

 to be in excess.

     “வெம்பு நீர் மிதப்ப மாந்தி” (விநாயகபு. 74:226);.

   6. கீழ் இறங்காமல் காற்றில் அலைதல்; to be borne in the air.

பறவைகளின் இறகுகள் காற்றில் மிதந்து சென்றன. அவன், கற்பனையில் மிதக்கிறான்.

     [மீ → மீது → மித → மித-த்தல் = மேற்கிடத்தல் (சு.வி.57);.]

மிதக்கங்காய்

 மிதக்கங்காய் midakkaṅgāy, பெ.(n.)

   தும்மட்டி (யாழ்.அக.);; country cucumber.

     [p]

மிதக்கு-தல்

மிதக்கு-தல்  midakkudal,    5 செ.கு.வி.(v.i.)

மித-த்தல் பார்க்க; see mida.

     [மித-த்தல் → மிதக்கு-தல்.]

மிதசுரம்

 மிதசுரம் midasuram, பெ. (n.)

   எழுவகைப் பண்களில் (சுரம்); நான்காவதாகிய ‘ம’ என்ற பண்; middle tone.

     [மித + Skt. சுரம்.]

மிதடி

 மிதடி midaḍi, பெ.(n.)

   நீர் (பிங்.);; water.

     [மித → மிதடி. மிதப்பதற்குப் பயன்படும் பொருள்.]

மிதடு

 மிதடு midaḍu, பெ.(n.)

   மூளை (C.G.);; brain.

   தெ. மெதடு;க. மிதுளு.

மிதந்தபுத்தி

 மிதந்தபுத்தி  midandabuddi, பெ.(n.)

மிதந்தவறிவு பார்க்க; see {}.

மிதந்தவறிவு

 மிதந்தவறிவு midandavaṟivu, பெ.(n.)

   மேலெழுந்த அறிவு (இ.வ.);; superficial knowledge.

     [மிதந்த + அறிவு.]

மிதப்பு

மிதப்பு  midappu, பெ. (n.)

   1. நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை; floating.

     “பால்கடை நுரையின் பரூஉ மிதப் பன்ன” (அகநா.224:6);.

   2. தெப்பம்; boat, ship, raft, as floating.

     “கடலி லமிழ்ந்துவார்.அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமா போலே” (ஈடு. 5:8 பிர.);.

   3. தூண்டில், வலை முதலியவற்றில் நீர் மேல் மிதக்குமாறு அமைத்த மரச்சக்கை; float of a finishing line, net, etc.

     “தூண்டிற்காரனுக்கு மிதப்புமேலே கண்” (பழ.);.

   4. மேலெழுந்த; superficiality.

   5. செழிப்பு; plenty.

   6. துன்பம் (வின்.);; sulkiness.

     ‘தம்பிக்குக் கொஞ்சம் மிதப்பாயிருக்கிறது’.

   7. உயர்ச்சி (யாழ்.அக.);; height, loftiness.

   8. மேடு (சங்.அக.);; elevated place.

   9. திடீர் மேல்நிலை அல்லது வெற்றி தந்த நிலை;   மமதை, செருக்கு; euphoria, elation, gloating with pride.

அந்தக் கட்சியினர் இன்னும் வெற்றியின் மிதப்பிலிருந்து விடுபடவில்லை. பணம் போனால் மிதப்பும் போய்விடும்.

     [மித → மிதப்பு = செருக்கு (சு.வி.57);.]

மிதப்புக்கட்டை

மிதப்புக்கட்டை midappukkaṭṭai, பெ.(n.)

   1. நங்கூரம் கற்பாறை மீன்பிடிவலை முதலியன நீரின் கீழ்க் கிடப்பதை யுணர்த்தும் பொருட்டு அவற்றிற்கு நேர் மேலாக மிதக்கவிடுங் கட்டை; buoy.

   2. மரக்கட்டை;   தக்கை; cark.

     [மிதப்பு + கட்டை.]

 மிதப்புக்கட்டை midappukkaṭṭai, பெ. (n.)

   மீன் பிடி தூண்டிற் கயிற்றிலிணைந்த சிறு கட்டைத் துண்டு; a small log connected to fish hook. –

மிதப்புப்புத்தி

 மிதப்புப்புத்தி  midappuppuddi, பெ.(n.)

மிதந்தவறிவு பார்க்க; see {}.

மிதப்புவலை

 மிதப்புவலை  midappuvalai, பெ. (n.)

   நீரின் மேல் மிதந்துக் கொண்டிருக்கும் மீன்பிடி வலை; a fishing net which floats on the surface of the water.

     [மிதப்பு + வலை.]

     [p]

மிதமான

 மிதமான midamāṉa, பெ.எ. (adj.)

   நடுத்தரமானது (மீனவ.);; medium quality.

மிதமான வெப்பம் நிலவியது.

     [மிதம் → மிதமான.]

மிதமிஞ்சிக்கொழுத்தல்

 மிதமிஞ்சிக்கொழுத்தல் midamiñjikkoḻuddal, பெ.(n.)

   அளவு கடந்து கொழுத்த நிலை; excessive copulency obesity.

     [மிதமிஞ்சி + கொழுத்தல்.]

மிதமிஞ்சு-தல்

மிதமிஞ்சு-தல் midamiñjudal,    5 செ.கு.வி. (v.i.)

   அளவுக்கு அதிகமாதல், அளவு கடந்து போதல்; be immoderate, gobeyond reasonable limits.

மிதமிஞ்சிய மகிழ்ச்சி..

மிதம்

மிதம்  midam, பெ. (n.)

   1. அதிகமாகவோ, குறைவாகவோ இல்லாத நிலை, அளவானது, நடுநிலை; moderation, sensible limits.

மிதமான குளிர். மிதமான பழக்க வழக்கங்கள். அதிக வேகம் வேண்டாம் மிதமாகச் செல்!

   2. பொறுமை (நிதானம்);; moderation.

   3. நடுத்தரமானது (சங்.அக.);; medium quality.

     [மெது → மிது → மிதம்.]

மிதலை

மிதலை  midalai, பெ.(n.)

   கொப்பூழ் (சது.);; navel.

     [இதலை → மிதலை. இதலை = கொப்பூழ்.]

 மிதலை midalai, பெ.(n.)

   1. இராமாயணக் கதையில் விதேகநாட்டின் தலைநகர்; the capital of {} in Ramayana Story.

‘பொன்மதின் மிதிலை புக்கார்’ (கம்பரா. மிதிலைக்.5);.

   2. விதேகநாடு (வின்.);; the ancient realm of Mithilai, now identified with Champaran and Darbhanga districts.

மிதழ்

 மிதழ் midaḻ, பெ.(n.)

மிதடு (C.G.); பார்க்க; see {}.

மிதவல்

 மிதவல்  midaval, பெ.(n.)

   மீன்பிடிக்க ஏதுவாய் அல்லது இதமாய் இருக்கை; fit or warmness condition of fishing.

காற்றும் கடலும் மிதவலாயிருப்பதால் மீன்பிடிக்கப் போகலாம் (மீனவ.);.

     [மிதம் → மிதவல்.]

மிதவல்காற்று

 மிதவல்காற்று midavalkāṟṟu, பெ.(n.)

   கடற்பரப்பில் காற்று குறைவாய் இருக்கை; airless at the seashore.

கடற்பரப்பில் மிதவல் காற்று குறைவாய் வீசுகிறது.

     [மிதவல் + காற்று.]

மிதவாதி

 மிதவாதி midavādi, பெ.(n.)

   பொறுமையான கொள்கையாளன்; moderate.

     [மெது → மிது → மிதம் + Skt. வாதி.]

 மிதவாதி midavādi, பெ. (n.)

   மென்போக்காளன்; moderate person.

     [Skt. mita-{}(n.);

→ த. மிதவாதி.]

மிதவை

மிதவை1 midavai, பெ.(n.)

   1. நீரில் மிதந்து செல்லக் கூடிய தெப்பம் போன்ற அமைப்பு; raft or raft like structure which floats on the water.

     “வெண்கிடை மிதவையர்” (பரிபா.6:35);. தண்ணீரில் தெப்பம் கொண்டு பயணம் செய்யலாம்.

   2. கடல், பெரிய கால்வாய் முதலியவற்றில் ஊறு நேரும் இடங்களைச் சுட்டிக் காட்டுவதற்காக மிதக்க விடப்பட்டிருக்கும் பொருள்; buoy.

   3. நீரில் விழுந்தவர்களைக் காப்பாற்றும் பொருட்டு வைக்கப்பட்டிருக்கும், நீரில் மிதக்கக் கூடிய வளையம்; lifebuoy.

     [மித → மிதவை.]

கடல் மற்றும் ஆறு முதலியவற்றின் நீரில் மூழ்கி உள்ள பாறைகளையும், ஆழம் குறைந்த இடங்களையும் தெரிந்து கொள்ள பயன்படுவது மிதவை.

மிதவைகளை மாழை (உலோகம்);யால் உண்டாக்கி பலவண்ண நிறங்கள் பூசி, வரிசை எண்களையும் குறிப்பிட்டு இருப்பர்.

மிதவைகளில் விளக்குகள் இருக்கும். மிதவைகளில் உள்ள விளக்கு நிறங்களின் மூலம் மாலுமிகளுக்கு எச்சரிக்கை செய்வர். மிதவைகளை ஒருவகையில் கலங்கரை விளக்கம் என்றே சொல்வர். மிதவைகளில் மணியோசையும் உண்டு, ஊதல் ஒசையும் உண்டு. கடலில் உண்டாகும் நிகழ்வுகளுக்கு ஏற்ப அதனைப் பயன்படுத்துவர் (குழ.கலை.கள.);.

     [p]

 மிதவை2 midavai, பெ.(n.)

   1. சோறு (சூடா.);; boiled rice.

   2. கூழ்; porridge, gruel.

     “ஆய்மக ளட்ட வம்புளி மிதவை” (புறநா. 215:4);.

   3. கும்மாயம்; a preparation of dhal.

     “உழுந்து தலைப் பெய்த கொழுங்களி மிதவை” (அகநா.86:1);.

     [மித → மிதவை.]

மிதவைப்பயிரிகள்

 மிதவைப்பயிரிகள் midavaippayirigaḷ, பெ. (n.)

   நீரில் மிதந்து வாழும் பயிரிகள்; phytoplankton.

     [மிதவை + பயிரிகள்.]

மிதவைப் பயிரிகள் பச்சை நிறத்தில் இருக்கும். நீரில் உள்ள உப்புகள், போன்றவற்றை உறிஞ்சி கதிரவன் ஒளி உதவியுடன்தான் உயிர்வாழ்வதற்கேற்ற உணவினை ஆக்கிக் கொள்ளும் தன்மையுடைவை (குழ.கலை.க.);.

மிதவையுயிரிகள்

 மிதவையுயிரிகள்  midavaiyuyirigaḷ, பெ.(n.)

   கடல், ஏரி, குளம், குட்டை முதலிய நீர்நிலைகளில் மிதந்து கொண்டே அலைந்து திரிந்து வாழும் உயிரிகள்; plankton.

     [மிதவை + உயிரிகள்.]

மிதவைவலை

 மிதவைவலை  midavaivalai, பெ.(n.)

   மீன்பிடி வலை வகை; a kind of fishing net.

     [மிதவை + வலை.]

மிதவைவிலங்குகள்

 மிதவைவிலங்குகள் midavaivilaṅgugaḷ, பெ.(n.)

   மிதவைப் பயிரிகளை உணவாக உண்டு வாழும் மிதவைச் சிற்றுயிரிகள்; zoo plankton.

     [மிதவை + விலங்குகள்.]

   வகைகள்: புரோட்டோ சோவா என்னும் ஓரணு உயிர், செல்லி மீன், கடல் வண்ணத்தி, நீர்த்தெள்ளு, கடல் சாமந்தி, நண்டு, இறால், ஈர்க்கிறால் போன்ற மெல்லுடலிகள்;ஒட்டு மீன்கள், ஒடி விண்மீன், கடல் முள்ளெலி, கடல் வெள்ளரி போன்ற முட் டோலிகள் (குழ.கலைக்கள.);.

மிதாசனம்

 மிதாசனம் mitācaṉam, பெ. (n.)

   அற்பவுணவு (யாழ்.அக.);; scanty food.

     [Skt. {} → த. மிதாசனம்.]

மிதி

மிதி1 mididdal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. காலின் அடிப்பகுதிபடும் வகையில் ஒன்றின் மீது காலைப் பதித்தல்;   ஒன்றின் மீது வேகத்துடன் காலை இறக்குதல்;   உதைத்தல்; step on, tread or stamp.

சாணியை மிதித்து விடாதே. பார்த்து நடந்து வா! சண்டையில் வேகமாக அவனைக் கீழே தள்ளி நெஞ்சில் மிதித்தான். கோழி மிதித்து குஞ்சு சாகுமா?

   2. மிதிவண்டியை இயங்கச் செய்வதற்காக அதற்கான பாகத்தில் காலை வைத்து விசையுடன் அழுத்துதல்; pedal (a bicycle); hard.

   மழை வருவது போல இருந்ததால் மிதிவண்டியை அவன் வேகமாக மிதித்தான். அந்த மேட்டைக் கடக்க மிதிவண்டியை மிதித்ததில் அவனுக்கு வியர்த்துக் கொட்டிவிட்டது. 3. அடிவைத்தல்; to tread on.

மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டா? (பழ.);. சேற்றை மிதிக்காதே.

   4. காலால் துவைத்தல்; to tread down, trample on.

     “மிதித்தேறி யீயுந் தலைமே லிருத்தலால்” (நாலடி, 61);.

   5. இகழ்தல்; to insult, dishonour.

     “மிதித்திறப்பாரு மிறக்க” (நாலடி, 61);.

   6. பாய்தல்; to rush or dash against, to attack, as a door of a fort.

     “போரார் கதவ மிதித்த தமையுமோ” (கலித்.90:12);.

     [மொத்துதல் = வலுக்க அடித்தல். மொத்து → மத்து. மத்தித்தல் = வலுவாக பொருதல். மத்து → மத்தி → மதி → மதித்தல் = மோதுதல், அழுத்துதல். மதி → மிதி → மிதித்தல் = காலால் மோதுதல்.]

 மிதி2 mididdal,    4 செ.கு.வி.(v.i.)

   குதித்தல் (சூடா.);; to jump.

     [மித → மிதி → மிதித்தல்.]

 மிதி3 midi, பெ.(n.)

   1. மிதிக்கை; treading.

     “மிதியின் றிடைபொலி சென்றன” (இரகு. யாகப்.21);.

     “குருகுஊது மிதியுலைப் பிதிர்விற் பொங்கி” (அகநா.202);.

     “உலைவாங்கு மிதிதோல் போல” (குறுந்.172:6);.

   2. அடி வைப்பு; tread.

     “மகனார்தம் மிதியாம்” (இரகு. தசரதன்சாப.109);.

   3. படிக்கல் (C.G.);; step in a tank or well.

   4. நெய்வார் கருவிகளு ளொன்று (சங்.அக.);; treadle of weaver’s loom.

   5. மிதித்துத் திரட்டப் பெற்ற கவளம்; food trampled and formed into a ball.

     “நெய்ம்மதி பெறா அது ” (புறநா.44);.

   6. நடை; walking;

 gait.

     “பலதுரக மிதியிற் றகுபல தாளவிதம் பெற்றிட” (இரகு.யாகப்.18);.

க. மிதி

 மிதி4 midi, பெ.(n.)

   1. அளவு; measure.

   2. அறிவு (சங்.அக.);; knowledge.

   3. அறிவாற்றல்; intellect.

   4. சான்று (யாழ். அக.);; evidence.

   5. அழகு; beauty.

     [மதி → மிதி. மதி = அளவு.]

மிதிகட்டை

 மிதிகட்டை midigaṭṭai, பெ.(n.)

   கால் குழியில் புணிமாற்றுவதற்காக மிதிக்கப்படும் கட்டை (நெசவு);; wooden log which is tread for the purose of changing the ‘puni’.

     [மிதி + கட்டை.]

     [p]

மிதிகல்

 மிதிகல்  midigal, பெ.(n.)

   ஏற்றத்தில் நீர் இறைப்பவர் நிற்பதற்குரிய நீண்ட இரு கருங்கற்கள்;   படிகல் (கிணற்றில் மேற்பக்கத்தில் மூன்றடியில் பொருத்தப் படுவது); (நெசவு);; stone laid on the upper side of the well to stand, for the person who bail water from the lift.

     [மிதி + கல்.]

மிதிகீரை

 மிதிகீரை midiārai, பெ.(n.)

   பூடுவகை (இ.வ.);; a plant Asystasia coromandelina.

     [மிதி + கீரை.]

மிதிகோரை

 மிதிகோரை midiārai, பெ.(n.)

   கோரை வகை (வின்.);; a kind of sedge.

     [மிதி + கோரை.]

மிதிக்கட்டில்

 மிதிக்கட்டில் midikkaṭṭil, பெ.(n.)

   மிதிக் கட்டையைத் தாங்கும் மரம் (நெசவு);; a wooden rod which bears the treadles.

     [மிதி + கட்டில்.]

மிதிக்கரணைக்கோல்

 மிதிக்கரணைக்கோல் midikkaraṇaikāl, பெ.(n.)

   நெசவுத் தறியில் பன்னைக்குக் கீழ் மிதிக்கட்டையை மிதிக்கும் நேரத்தில் புணிமாறி வரப் பயன்படுத்துப்படும் நீளத்தில் குறைந்த இருகோல்கள்; two short poles which helps to change the ‘puni’ when treading the treadles in the loom.

     [மிதி + கரணை + கோல்.]

மிதிதோல்

மிதிதோல் mididōl, பெ.(n.)

   துருத்தி; bellows.

     “உலை வாங்கு மிதி தோல்” (குறுந்.172);.

     [மிதி + தோல்.]

மிதிபட்டடை

 மிதிபட்டடை midibaḍḍaḍai, பெ.(n.)

   மிதி பலகை (யாழ்.அக.); பார்க்க; see midi palagai.

     [மிதி + பட்டடை. பட்டடை = பாதம் வைக்கும் படிபலகை.]

மிதிபயறு

 மிதிபயறு midibayaṟu, பெ. (n.)

   வயலிற் கதிரறுக்குமுன் விதைக்கப்பட்டு அறுவடையான பின் விளைந்து முதிரும் பயறு வகை (நாஞ்.);; seeds of pulse sometimes sown in paddy fields just before harvest and maturing after harvest, as being trampled upon by reapers.

     [மிதி + பயறு.]

மிதிபலகை

 மிதிபலகை  midibalagai, பெ. (n.)

   பாதம் வைக்கும் படிப் பலகை (வின்.);; foot stool.

மறுவ. மிதிபட்டடை

     [மிதி + பலகை.]

மிதிபாகல்

 மிதிபாகல் midipākal, பெ. (n.)

   நஞ்சை முறிக்கும் ஒருவகைப் பாகல்; small variety of bitter gourd which is useful as antidote to arsenical and mercurial poisoning. The plant is a prostate creeper.

     [மிதி + பாகல்.]

மிதிபாவை

 மிதிபாவை midipāvai, பெ.(n.)

மிதிபாகல் பார்க்க; see {}.

     [மிதி + பாவை. பாகல் → பாகை → பாவை.]

மிதிமனை

 மிதிமனை midimaṉai, பெ. (n.)

   கைத்தறி நெசவில் புனி விழ உதவும் கருவி; an implement in handloom weaving.

     [மிதி+மனை]

மிதிமரம்

மிதிமரம்  midimaram, பெ.(n.)

   1. படியாயுள்ள பலகை; stepboard.

   2. நெசவுக் கருவியுறுப்புளொன்று; treadle of a loom.

   3. ஏற்றக்காரன் கிணற்றின் மேல் நின்று கொண்டு நீரிறைக்குமாறு அமைக்கப்படும் மரம்; tread in a well for one to stand on, when baling.

   4. மிதிபலகை (யாழ்.அக.); பார்க்க; se e midipalagai.

     [மிதி + மரம்.]

மிதிமுளைக்குச்சி

 மிதிமுளைக்குச்சி midimuḷaikkucci, பெ.(n.)

   நெசவுத் தறியில் மிதிக்கட்டையில் உள்ள சிறுகுச்சிகள் (நெசவு);; small poles in the treadles of the weavers loom.

     [மிதி + முளைக்குச்சி.]

     [p]

மிதியடி

மிதியடி midiyaḍi, பெ.(n.)

   1. காலில் உள்ள தூசு முதலியவற்றை அகற்றிக் கொள்வதற்காக கயிறு, நார் போன்றவற்றால் செய்யப்படும் சொரசொரப்பான பரப்புடைய சிறு விரிப்பு; door mat.

   2. செருப்பு, மரப் பலகையாலான காலணி; sandal foot wear.

நடக்கும் போதே மிதியடியின் வார் அறுந்து விட்டது. “திருவடியின் மிதியடியும்” (கோயிற்பு. பதஞ். 11);.

     [மிதி + அடி.]

மிதியடிக்கொட்டை

 மிதியடிக்கொட்டை midiyaḍikkoḍḍai, பெ.(n.)

   பாதுகைக் குமிழ் (பிங்.);; knob in sandals.

     [மிதியடி + கொட்டை.]

மிதியிடல்

 மிதியிடல் midiyiḍal, பெ.(n.)

   எண்ணெய் பூசித் தேய்க்கை; to mollify contracted or diseased limbs by rubbing them with oil and massaging (சா.அக.);.

மிதியிடு

மிதியிடு1 midiyiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   காலடியால் குறி செய்தல்; to make a tract or impression by one’s foot.

     [மிதி + இடு-தல்.]

 மிதியிடு2 midiyiḍudal,    18 செ. குன்றாவி. (v.t.)

   காலால் துவைத்தல்; to tread under foot.

     [மிதி + இடு-தல்.]

மிதியில்

 மிதியில் midiyil, பெ.(n.)

   மிதிக்கை (யாழ்.அக.);; treading.

     [மிதி + மிதியல்.]

மிதியுழல்கோல்

 மிதியுழல்கோல் midiyuḻlāl, பெ.(n.)

   இருமிதிக்கட்டைகளையும் இணைத்து இயக்க உதவும் இரும்பாலான கோல் (நெசவு);; an iron rod, which helps to join the two treadle of weavers loom to activate.

     [மிதி + உழல் + கோல்.]

மிதிலைநாடி

மிதிலைநாடி midilaināṭi, பெ.(n.)

   மிதிலை நகரில் பிறந்த சீதை;{} as born in the country of Mithilai.

     “மிதிலை நாடியை” (கம்பரா.பிணிவீட்.21);.

     [மிதிலை + நாடி.]

மிதிவண்டி

 மிதிவண்டி midivaṇṭi, பெ.(n.)

   மிதித்து ஓட்டப்படும் வண்டி, ஈருருளி வண்டி; bicycle, as being propelled by pedalling.

     [மிதி + வண்டி.]

     [p]

மிதிவிழுதல்

 மிதிவிழுதல் midiviḻudal, பெ. (n.)

ஒயிலாட்டத்தில், கால்களின் இயக்கம்

 movement of steps in oyilättam.

     [மிதி+விழுதல்]

மிதுகயம்

 மிதுகயம்  midugayam, பெ.(n.)

   கையாந்தகரை; a prostate plant Eclipta prostate (சா.அக.);.

மிதுகெந்தா

 மிதுகெந்தா midugendā, பெ.(n.)

   மகிழம்பூ; a very fragrant flower of a tree Mimusops elengi (சா.அக.);.

மிதுக்க வற்றல்

 மிதுக்க வற்றல் midukkavaṟṟal, பெ.. (n.)

   திருநெல்வேலி மாவட்ட திருமண விருந்துகளில் பரிமாறப்படும் உணவுப்பண்டம்; aside dish in marriage feast in Thirunelveli district.

     [மிதுக்கம்+வற்றல்]

மிதுக்காங்காய்

 மிதுக்காங்காய் midukkāṅgāy, பெ.(n.)

   வெள்ளரிக்காய்; cucumber (சா.அக.);.

மிதுக்காய்

 மிதுக்காய் midukkāy, பெ.(n.)

மிதுக்கை பார்க்க; see midukkai.

மிதுக்கு

 மிதுக்கு  midukku, பெ.(n.)

மிதுக்கை பார்க்க; see midukkai.

மிதுக்கை

மிதுக்கை  midukkai, பெ.(n.)

   1. வெள்ளரிக் கொடி; cucumber’s creeper.

   2. தும்மட்டி; country cucumber.

மிதுனக்குடைமூலி

 மிதுனக்குடைமூலி miduṉakkuḍaimūli, பெ.(n.)

   பிரண்டை; a medicinal climber Vitis quardrang ularis (சா.அக.);.

மிதுனராசி

 மிதுனராசி miduṉarāci, பெ. (n.)

   ஆண்- பெண் இரட்டை ஒரை; twin sign of the zodic – gemini.

த.வ. ஆடவை

     [Skt. mituna +rasi → த. மிதுனராசி.]

மிதுனி

 மிதுனி miduṉi, பெ.(n.)

   கரிக்குருவி (சங்.அக.);; king crow.

மிதுரி

மிதுரி1 miduri, பெ.(n.)

   வெள்ளை நீலாம்பரம் (சங்.அக.);; crested purple nail dye.

 மிதுரி2 miduri, பெ.(n.)

   செம்முள்ளி (சா.அக.);; a thorny plant Barleria prionitis.

மித்தாச்சமயம்

மித்தாச்சமயம் mittāccamayam, பெ. (n.)

   பொய்ச்சமயம்; falsereligion

     ‘மித்தாச்சமயத் தனை வரும்’ (திருநூற்.90.);

     [Skt. mithya → த. மித்தாச்சமயம்.]

மித்தியம்

 மித்தியம் mittiyam, பெ. (n.)

   பொய்;     [Skt. mithya → த. மித்தியம்.]

மித்தியாநயம்

மித்தியாநயம் mittiyānayam, பெ. (n.)

   ஏழிசை நயங்களைப் பிழைபடப் பயன்படுத்தும் முறை. (மேரு மந் 704 உரை);;     [Skt. {}-naya → த. மித்தியாநயம்.]

மித்தியாவாதி

மித்தியாவாதி mittiyāvāti, பெ. (n.)

   பொய்யன் (ஈச்சுரநிச்சயம், 179);; liar.

     [Skt. {} → த. மித்தியாவாதி.]

மித்திரத்துரோகி

 மித்திரத்துரோகி mittiratturōki, பெ. (n.)

   நண்பன் போல் நடித்துத் தீங்கு புரிவோன் (வின்.);; traitor, asbetraying friendship.

     [Skt. mitra+{} → த. மித்திரத் துரோகி.]

மித்திரன்

மித்திரன் mittiraṉ, பெ. (n.)

   1. நண்பன்; friend, ally, adherent.

     ‘மித்திரர் வதன நோக்கான்’ (கம்பரா. மாயாசீ. 60);.

   2. உறவினன். (நாமதீப. 188);; relative.

   3. பன்னிருஆதித்தரு ளொருவன். (நாமதீப. 66.);; adeity repre- senting the sun, one of {}.

   4. கதிரவன்; sun.

     [Skt. {} → த. மித்திரன்.]

மித்திரபேதம்

மித்திரபேதம் mittirapētam, பெ. (n.)

   நட்பினரைப் பிரிக்கை (பஞ்சதந். கதைவா. 9.);; sowing discord among friends.

     [Skt. mitra + {} → த. மித்திரபேதம்.]

மித்திரம்

மித்திரம்  mittiram, பெ.(n.)

   வெங்காரம்; borax (சா.அக.);.

 மித்திரம் mittiram, பெ. (n.)

   நட்பு; friendship, affection.

     ‘மித்திர வச்சிரவ ணற்கு விருப்பர் போலும்’ (தேவா.598,9);ழூ

     [Skt. mitra → த. மித்திரம்1]

மித்திராவயல்

 மித்திராவயல் mittirāvayal, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [முத்தரையர்+வயல்]

மித்துருப்பதமை

 மித்துருப்பதமை  midduruppadamai, பெ. (n.)

   ஈய மணல்; lead ore (சா.அக.);.

மிந்தாச்சொல்

மிந்தாச்சொல் mindāccol, பெ.(n.)

   இந்துப்பு (சு.வை.ர.125);; rock salt.

மினக்கெடு-தல்

மினக்கெடு-தல் miṉakkeḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   காலம் வேலை முதலியன வீணாகுதல் (உ.வ.);; to waste time, labour, etc.

மறுவ. மெனக்கெடுதல்

     [வினைகெடுதல் → மினைகெடுதல் → மினக்கெடுதல்.]

மினக்கேடு

 மினக்கேடு miṉakāṭu, பெ.(n.)

   காலம் வேலை முதலியன வீணாகுகை (உ.வ.);; waste of time, labour, etc.

     [மினக்கெடு . மினக்கேடு.]

மினச்சல்

 மினச்சல் miṉaccal, பெ. (n.)

   விளவங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vilavancode Taluk.

     [ஒருகா நத்தம் – நத்தல்-நச்சல்-அக்சல் மீள்+.அச்சல்]

மினவு தல்

மினவு தல் miṉavudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   நலமறிதல் (யாழ்.அக.);; to greet;

 to make kindly enquiries of.

     [வினவுதல் → மினவுதல்.]

மினான்

 மினான் miṉāṉ, பெ.(n.)

   ஊர்க் கணக்கன் (வின்.);; a village accountant.

ம. மேனவன்

மினிக்கி

 மினிக்கி miṉikki, பெ.(n.)

   ஒருவகை மரம் (பச்.மூ.);; a kind of tree.

மினிச்சி

 மினிச்சி miṉicci, பெ.(n.)

   ஒருவகை நஞ்சு (இரசித பாஷாணம்);; a kind of arsenic acting on mercury and copper.

மினிப்பூச்சி

 மினிப்பூச்சி miṉippūcci, பெ. (n.)

   மின் மினிப்பூச்சி; fire fly (சா.அக.);.

     [மினி + பூச்சி.]

மினிரம்

 மினிரம் miṉiram, பெ. (n.)

   காரீயக்கல்; graphite (சா.அக.);.

மினுக்கன்வளையல்

மினுக்கன்வளையல் miṉukkaṉvaḷaiyal, பெ.(n.)

   வளையல் வகை; a kind of bangle.

     “இத்தேவர்க்குக் கொடுத்த மினுக்கன் வளையல் இரண்டினால்” (தெ.இ.க.தொ. vii, 8:128);.

     [மினுக்கன் + வளையல். ஒளிவீசும் வளையல்.]

மினுக்கம்

மினுக்கம் miṉukkam, பெ.(n.)

   1. ஒளி; polish, brightness.

   2. சிறப்பு; excellence.

     “சில மினுக்கங்களுண்டிறே” (ஈடு,7. 6:4);.

   3. பகட்டு (வின்.);; showiness, show.

     [மினுக்கு → மினுக்கம்.]

மினுக்கல்

 மினுக்கல் miṉukkal, பெ.(n.)

மினுக்கம் (சங்.அக.); பார்க்க; see {}.

மினுக்கி

மினுக்கி miṉukki, பெ.(n.)

   1. தன்னை அழகுபடுத்திக்கொள்பவன்ள்; one who beautifies one self.

     “மீதோலெங்கு மினுக்கிகள்” (திருப்பு.623);.

   2. பகட்டுபவள் (இ.வ.);; showy, attractive woman.

     [மினுக்கு → மினுக்கி.]

 மினுக்கி miṉukki, பெ.(n.)

   ஒப்பனை ஆர்வ முடையவர் (சிங்காரி);; gally dressed women.

     “மேட்டு நிலத்தை உழுதவனும் கெட்டான், மேனாமினுக்கியைக் கட்டிக் கொண்டவனும் கெட்டான்”(பழ);.

மினுக்கு

மினுக்கு1 miṉukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. பளபளப்புண்டாக்குதல், மிளிர்தல்; to polish brighten, beautify.

     “தண் புனலின் மினுக்கி யுளைவகிர்ந்தன” (அழகர்கல.10);.

ஏனத்தைத் தேய்த்துக் கழுவி மினுக்கி வைத்திருந்தாள்.

   2. அரிசி தீட்டுதல்; to remove bran from rice in polishing.

     [மினங்குதல் → மினுக்குதல்.]

 மினுக்கு2 miṉukkudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. மிளிர்தல்; polish, brighten.

   2. பகட்டுதல்,பகட்டுக்காட்டுதல்; be glamorous;

 flaunt.

குலுக்கி மினுக்கி வருவதைப்பார்!

   3. துணி முதலியவற்றைத் தேய்த்தல்; press clothes.

இந்த வேட்டியைக் கஞ்சி போட்டு மினுக்க வேண்டும்.

     [மினுங்குதல் → மினுக்குதல்.]

 மினுக்கு3 miṉukku, பெ.(n.)

மினுக்கம் பார்க்க; see {}.

     [மினுங்கு → மினுக்கு.]

மினுக்குத்தகடு

 மினுக்குத்தகடு miṉugguttagaḍu, பெ.(n.)

   காக்காய்ப் பொன்; tinsel, mica.

     [மினுக்கு + தகடு.]

மினுக்குத்தொடர்

மினுக்குத்தொடர் miṉukkuttoḍar, பெ.(n.)

   அணிகலன் வகை; a kind of jewel.

     “தேவர்பூணும் மினுக்குத் தொடராலும்” (தெ. இ.கல்.தொ.5:234);.

மினுக்குப்பசை

 மினுக்குப்பசை miṉukkuppasai, பெ.(n.)

   நெய்வார் இடும் பசை வகை (வின்.); (நெசவு);; a varnish used by weavers.

     [மினுக்கு + பசை.]

நெய்யும் துணி பளபளக்க வேண்டி பசையூட்டுதல்.

மினுக்குமினுக்கெனல்

 மினுக்குமினுக்கெனல் miṉukkumiṉukkeṉal, பெ.(n.)

   ஒளி குன்றுகை; glimmering;

 flickering.

விளக்கு மினுக்கு மினுக்னெ எரிகின்றது.

     [மினுக்கு + மினுக்கு + எனல்.]

மினுக்குமினுக்கென்று

 மினுக்குமினுக்கென்று miṉukkumiṉukkeṉṟu, வி.அ. (adv.)

   ஒளிர்தல் குன்றித் தோன்றுகை; glimmering.

நெடுந் தொலைவில் உள்ள கோவிலின் விளக்கு மினுக்குமினுக்கென்று எரிந்து கொண்டு இருந்தது.

     [மினுக்கு + மினுக்கு + என்று.]

மினுக்கெண்ணெய்

மினுக்கெண்ணெய் miṉukkeṇīey, பெ.(n.)

   1. உடலுக்குப் பளபளப்புண்டாகும் எண்ணெய் வகை; an oil used in toilet.

   2. மரச் சாமான்களுக்குரிய பூச்செண்ணெய்; a varnish.

     [மினுக்கு + எண்ணெய்.]

மினுங்கு-தல்

மினுங்கு-தல் miṉuṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. ஒளிவீசுதல்; to glitter, shine.

     “வனமாலை மினுங்க” (திவ்.நாய்ச்.14:2);.

   2. விளக்கமாய்த் தோன்றுதல்; to appear bright.

     “அழகு மினுங்கியிருப்பது” (திவ்.திருமாலை, 23, வியா, பக்.81);.

க. மினுகு

     [மின் → மின்னு → மினுங்கு → மினுங்குதல்.]

மினுங்குபொழுது

 மினுங்குபொழுது miṉuṅguboḻudu, பெ.(n.)

   மாலை வேளை (யாழ்.அக.);; dusk.

     [மினுங்கு + பொழுது.]

மினுங்குவாரப்பொழுது

 மினுங்குவாரப்பொழுது miṉuṅguvārappoḻudu, பெ.(n.)

மினுங்குபொழுது (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [மினுங்கு + வாரம் + பொழுது.]

மினுப்பி

மினுப்பி miṉuppi, பெ.(n.)

   குங்கிலியத்தையும், கற்பூரத்தையும் ஒன்றாகக் கூட்டி பொடியாக்கி குழைத்துச் செய்யும் மின்னு நெய் செய்யும் வகை; spirit varnish prepared by mixing hot alcohol with 6 parts of piney dammer and one part of camphor.

     [மின்-மினுப்பி]

மினுமினு-த்தல்

மினுமினு-த்தல் miṉumiṉuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒளிர்தல் (உ.வ.);; to glitter, dazzle.

   2. ஒளிகுன்றுதல் (இ.வ.);; to glimmer, flicker.

   3. விட்டு விட்டு, முழு வெளிச்சத்துடன் ஒளிர்தல்; shine brightly but intermittently, glitter.

விளக்கொளியில் அவள் நகைகள் மினுமினுத்தன. பட்டுச் சட்டை மினுமினுக்க நடந்து வந்தான்.

மினுமினுப்பு

மினுமினுப்பு1 miṉumiṉuppu, பெ.(n.)

   விட்டு விட்டுப் புலப்படும் ஒளிர்வு; polish, glitter.

     [மினுமினு → மினுமினுப்பு.]

 மினுமினுப்பு2 miṉumiṉuppu, பெ. (n.)

   சளி மிகுதியினால் உடம்பின் தோலின் மேல் ஏற்படும் ஒருவகை நிலைமை; good lustre caused by phlegm humour in the body.

மினெறிவேல்

 மினெறிவேல் miṉeṟivēl, பெ. (n.)

நீண்ட ஈட்டி:

 kance.

     [மீள்+எறி+வேல்]

மின்

மின்1 miṉ, பெ.(n.)

   1. ஒளி (சூடா.);; flash, glitter.

     “மின்மின் கொள் கவசம்” (கம்பரா. நிகும்பலை.84);.

     “மின்னின் றூவி இருங்குயில் பொன்னின்” (குறுந்.192:3);.

     “மின்னுகு தளிரன்ன மெலிவுவந் துரைப்பதால்” (கலித். 48:19);.

     “மின்னிலைப் பொலிந்த விளங்கிணர் அவிழ்பொன்” (அகநா.80 ,11);.

   2. மின்னல்; lightning.

     “மின்னினிகழ்ந் தாகாசத்திற் காணாது” (மணிமே.29:238);.

     “மின்கம்பிகள் அறுந்து கிடந்தன”.

   தெ. மின்னுகு;   க. மின்னு;ம.மின்.

 மின்2 miṉ, இடை.

   முன்னிலை யேவற்பன்மை ஈறுகளில் ஒன்று (விகுதி யுளொன்று);; a verbal suffix of the imperative plural.

     “இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல்ஒ ரனைய என்மனார் புலவர்” (தொல்.சொல்.வினை.27);.

 மின்3 miṉ, பெ.(n.)

   பெண்; woman.

     “மின்னன்மை விபசாரத்து…… மடிந்திடும்” (நீதிசாரம்.60);.

 மின்4 miṉ, பெ.(n.)

   தாழைவேர்; shrup screw pine found grown near seashore Pandanam oderatisima (சா.அக.);.

 மின்5 miṉ, பெ.(n.)

   1. மின்னாற்றல், மின்சாரம்; electricity.

   2. மின்சாரத்தால் இயங்கும் பொருளின் பெயர்களுக்கு முன் இடம்படும் அடைச்சொல்; a suffix of the things those operated by electricity.

மின்காந்தம், மின்தொடர் வண்டி.

மின்கசிவு

 மின்கசிவு miṉkasivu, பெ.(n.)

   கம்பியில் செல்லும் மின்சாரம் அருகில் உள்ள ஈரப்பகுதி சுவரிலோ பொருத்தியிருக்கும் கூரையிலோ பரவுதல்; electrical leakage.

மின் கசிவினால் தீப்பிடித்தல் முதலான ஏதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

     [மின் + கசிவு.]

மின்கடமாலை

 மின்கடமாலை miṉkaḍamālai, பெ.(n.)

   மின்னூக்கி; battery (சா.அக.);.

மின்கலம்

 மின்கலம் miṉkalam, பெ.(n.)

   வேதியியல் முறையில் மின்சாரம் செய்யும் அமைப்பு; battery, cell.

     [மின் + கலம்.]

மின்காந்தம்

 மின்காந்தம் miṉkāndam, பெ.(n.)

   கம்பிச் சுருள் வழியாக மின்சாரம் பாய்ந்து கொண்டு இருக்கும் வரை காந்த ஆற்றலைப் பெற்றிருக்கும் மாழைத் துண்டு; electromagnet.

     [மின் + காந்தம்.]

மின்கொடி

 மின்கொடி miṉkoḍi, பெ.(n.)

   பெண்; woman (சா.அக.);.

     [மின் + கொடி.]

மின்னலைப் போன்ற கொடி இடையை யுடைய பெண்.

மின்சார யந்திரம்

 மின்சார யந்திரம்  miṉcārayandiram, பெ. (n.)

   மின்னாற்றலை யுண்டாக்கும் பொறி; eletric machine or generator.

     [மின்சாரம் + எந்திரம்]

மின்சாரக்கம்பி

மின்சாரக்கம்பி miṉcārakkambi, பெ.(n.)

   மின்னாற்றலைக் கடத்தும் கம்பி (வின்.);; electric wire.

     [மின்1 + சாரம் + கம்பி.]

மின்சாரக்காந்தம்

 மின்சாரக்காந்தம் miṉcārakkāndam, பெ.(n.)

மின்காந்தம் பார்க்க; see {}.

     [மின்சாரம் + காந்தம்.]

மின்சாரக்காந்தி

 மின்சாரக்காந்தி miṉcārakkāndi, பெ.(n.)

   மின்விளக்கு; electric light (சா.அக.);.

மின்சாரக்குப்பி

 மின்சாரக்குப்பி miṉcārakkuppi, பெ.(n.)

   மின் ஆற்றலைப் பெருக்கக் கூடிய மின்கலம்; electric cell (சா.அக.);.

மின்சாரத்திருக்கை

 மின்சாரத்திருக்கை miṉcārattirukkai, பெ.(n.)

   கடலில் வாழும் ஒரு வகைத் திருக்கை மீன்; a fish Torpedo Ray.

மின்சாரத்தைத் தொட்டால் எப்படிக் கை முழுவதும் சிறிது நேரம் உணர்ச்சியற்றுப் போகிறதோ அதைப் போன்ற ஆற்றலை உடைய மீன் (சா.அக);.

     [மின்சாரம் + திருக்கை.]

     [p]

மின்சாரமருத்துவம்

 மின்சாரமருத்துவம் miṉcāramaruttuvam, பெ.(n.)

   மின்சார ஆற்றலை உடம்பில் ஊட்டி செய்யும் மருத்துவம்; electric treatment or magnetic cure.

     [மின்சாரம் + மருத்துவம்.]

மின்சாரமானி

 மின்சாரமானி miṉcāramāṉi, பெ.(n.)

   மின்னோட்டத்தை யளக்குங் கருவி (பாண்டி.);; volt meter.

     [மின்சாரம் + மானி.]

மின்சாரம்

 மின்சாரம் miṉcāram, பெ.(n.)

   விளக்குகளை ஒளிரச் செய்தல், இயந்திரங்களை இயக்குதல் முதலியவற்றிற்குப் பயன்படும் மின் அணுக்களின் வழி கிடைக்கும் ஆற்றல், வடிவம்; electricity.

     [மின் + சாரம். சாறு → சாரு → சாரம்.]

மின்சாரவண்டி

 மின்சாரவண்டி  miṉcāravaṇṭi, பெ.(n.)

   மின்னாற்றலால் இயங்கும் வண்டி; electric tram or train.

     [மின்சாரம் + வண்டி]

மின்சாரவிளக்கு

 மின்சாரவிளக்கு  miṉcāraviḷakku, பெ.(n.)

மின்விளக்கு பார்க்க; see milwilakku.

     [மின்சாரம் + விளக்கு.]

மின்சாரவெளிச்சம்

 மின்சாரவெளிச்சம்  miṉcāraveḷiccam, பெ.(n.)

   மின் ஆற்றலைக் கொண்டு ஆக்கும் ஒளி(வெளிச்சம்);; electric light (சா.அக.);.

     [மின்சாரம் + வெளிச்சம்]

மின்தடங்கல்

 மின்தடங்கல்  miṉtaḍaṅgal, பெ.(n.)

   தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மின்னோட்டம் இடையே நின்று விடுகை; power failure,

நிகழ்ச்சியின் போது கிட்டத்தட்ட ஐந்து மணித்துளி மின்தடங்கல் ஏற்பட்டதற்கு வருந்துகிறோம்.

     [மின் + தடங்கல்.]

மின்தடை

மின்தடை  miṉtaḍai, பெ.(n.)

   1. மின் அளவைக் குறைத்துப் பாய்வதற்காகப் பயன்படுத்தும் தடையமைப்பு:

 resistance.

   2. மின்தடங்கல் பார்க்க; see mintagarigal

     [மின் + தடை.]

மின்துகள்

மின்துகள்  miṉtugaḷ, பெ.(n.)

   அணுக் கருவினுள் மின்னோட்டத்திற்குக் கரணியமான 555 résir; atomic particles circulated in Nucleus caused for electricity.

     [மின் + துகள்.]

மின்தொகுப்பு

 மின்தொகுப்பு  miṉtoguppu, பெ.(ո.)

வெவ்வேறு மின் நிலையங்களில் இருந்து வரும் மின் ஆற்றலைப் பெற்று, அதைப் பயன்படுத்துவதற்கெனப் பிரித்து அனுப்பும் அமைப்பு

 grid.

     [மின் + தொகுப்பு.]

மின்தொடர்வண்டி

 மின்தொடர்வண்டி  miṉtoḍarvaṇḍi, பெ.(n.)

   மின்சாரத்தின் மூலமாக ஒடும் தொடர்வண்டி; electric train.

     [மின் + தொடர் + வண்டி]

     [P]

மின்னஞ்சல்

 மின்னஞ்சல் miṉṉañjal, பெ.(n.)

   இணைய வழி நடைபெறும் அஞ்சல் சேவை; electronic mail, email.

     [மின் + அஞ்சல்.]

மின்னணு

 மின்னணு miṉṉaṇu, பெ. (n.)

மின்துகள் பார்க்க; see {}.

     [மின் + அணு.]

மின்னணுவியல்

 மின்னணுவியல் miṉṉaṇuviyal, பெ.(n.)

   மின்னணுவின் இயக்கம் குறித்தும், அதனை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த அறிவியல் குறித்தும் விளக்கும் துறை; electronics.

     [மின்னணு + இயல்.]

மின்னற்கொடி

மின்னற்கொடி miṉṉaṟkoḍi, பெ.(n.)

   1. நீண்ட கொடி போல் தோன்றும் மின்னல் ஒளி; flash of lighting.

   2. மின்னலின் ஒளிக்கொடி (சூளா.தூது.11);; streak of lightning.

     [மின்னல் + கொடி.]

மின்னற்றழுக்கு

 மின்னற்றழுக்கு miṉṉaṟṟaḻukku, பெ.(n.)

   நாகமணல் (யாழ்.அக.);; lead ore.

மின்னலி-த்தல்

மின்னலி-த்தல் miṉṉalittal,    4 செ.கு.வி. (v.i.)

   மின்னுதல்; to flash as lightning.

     “மின்னலிக்கும் வணக்கத் திடையாளையும்” (பதினோ. திருவேகம். திருவந்.74);.

     [மின்னுதல் → மின்னலித்தல்.]

மின்னல்

மின்னல்1 miṉṉal, பெ.(n.)

   1. மழை முகிலில் தோன்றும் மின்னொளி (சூடா.);; lightning.

மின்னினால் மழை பெய்யுமா?

   2. ஒளிமிக்க காசு (நாணயம்);; bright coin.

     “திருவாங்கோட்டு மின்னல்” (பணவிடு.137);.

     [முல் → (மில்); → மின் → மின்னல் (மு.தா.);.]

   பெரும்பாலும் மழைக்காலத்தில் முகில்களுக் கிடையே ஏற்படும் மின்னோட்டத்தின் விளைவாக உண்டாகக் கூடியது;   வானில் சில நொடிப் பொழுதில் மிகுந்த வேகத்துடன் பரவி மறையும் தன்மை வாய்ந்தது;இடியுடன் கூடிய ஒளிப்பிழம்பு.

 மின்னல்2 miṉṉal, பெ.(n.)

   1. நாகமணல்; zinc ore.

   2. அறிவன் (புதன்); கோள்; mercury (சா.அக.);.

 மின்னல் miṉṉal, பெ. (n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arakkonam Taluk.

     [ஒருகா. மின்னல் தாக்கிய இடம்]

மின்னல்கொடி

 மின்னல்கொடி miṉṉalkoḍi, பெ.(n.)

மின்னற்கொடி பார்க்க; see {}.

     [மின்னல் + கொடி.]

மின்னாக்கி

 மின்னாக்கி miṉṉākki, பெ.(n.)

   மின்சாரத்தை உருவாக்கும் கருவி; generator.

     [மின் + ஆக்கி.]

மின்னாமொழி

 மின்னாமொழி miṉṉāmoḻi, பெ. (n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுார்; a willage in Arantangi Taluk,

     [மின்னம்+மொழி]

மின்னாம்பள்ளி

 மின்னாம்பள்ளி miṉṉāmbaḷḷi, பெ. (n.)

   சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk.

     [மின்னல்+பள்ளி]

மின்னாம்பூச்சி

 மின்னாம்பூச்சி miṉṉāmbūcci, பெ.(n.)

மின்மினி பார்க்க (இ.வ.);; see {}.

     [மின் + ஆம் + பூச்சி.]

 மின்னாம்பூச்சி miṉṉāmbūcci, பெ. (n.)

   மின்மினிப்பூச்சி; glow warm.

     [மின்னும்+பூச்சி]

மின்னார்

மின்னார் miṉṉār, பெ.(n.)

   அழகிய பெண்டிர்; women with dazzling beauty.

     “மின்னார்க் ளின்பமே மெய்யென்றும்” (தாயு. மெளன.4);.

     [மின் → மின்னார்.]

மின்னாற்றல்

 மின்னாற்றல் miṉṉāṟṟal, பெ.(n.)

   மின்சாரத்தின் ஆற்றல்; electric power.

     [மின் + ஆற்றல்.]

மின்னி

மின்னி miṉṉi, பெ.(n.)

   1. கருங்காக்கணம்; mussellshell creeper.

   2. நீர்ப்பயறு; a leguminous plant.

     [முன் → முன்னி → மின்னி = முல்லை நிலத்தில் இயற்கையாக விளையும் ஒரு சிறு பயறு (வே.க.4.);]

மின்னிடை

 மின்னிடை miṉṉiḍai, பெ.(n.)

   மின்னல் போன்ற கொடி இடையை யுடையவளான பெண்; woman as having a waist like a streak of lightning.

     [மின் + இடை.]

மின்னிட்டான்புழு

 மின்னிட்டான்புழு miṉṉiṭṭāṉpuḻu, பெ. (n.)

   மின்மினி பூச்சி; fire fly (சா.அக.);.

மறுவ. மினுக்கட்டான்பூச்சி.

     [மினிட்டான் + புழு.]

மின்னிப்பயறு

மின்னிப்பயறு miṉṉippayaṟu, பெ.(n.)

மின்னி, 2 பார்க்க (வின்.);; see {} 2.

     [மின்னி + பயறு.]

மின்னியல்

 மின்னியல் miṉṉiyal, பெ.(n.)

   மின்சார ஆக்கம், பயன்பாடு முதலியவைக் குறித்தும் மின்சாரத்தால் இயங்கும் பொறிகள் குறித்தும் விளக்கும் துறை; the study of electricity;

 electrical engineering.

     [மின் + இயல்.]

மின்னியார்த்தல்

மின்னியார்த்தல் miṉṉiyārttal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒளிவீசுதல் (யாழ்.அக.);; to dazzle.

     [மின்னு + ஆர்த்தல்.]

மின்னியிலை

 மின்னியிலை miṉṉiyilai, பெ.(n.)

   முன்னை யிலை; leaf of {}.

     [முன்னி → மின்னி + இலை.]

மின்னு-தல்

மின்னு-தல் miṉṉudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மின்னல் பளீரெனத் தோன்றுதல்; flash.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல (பழ.);.

     “மின்னுவிடச் சிறிய வொதுங்கி மென்மெல” (அகநா.8:14);.

   2. ஒளி பட்டுப் பளபளத்தல்;   விட்டு விட்டு ஒளிர்தல்; shine;

 glitter;

 dazzle.

   கதிரவன் ஒளியில் அவள் கூந்தல் மின்னியது. சாணை தீட்டியவுடன் கத்தி பளபளவென மின்னியது. இருட்டில் பூனையின் கண்கன் மின்னின. 3. கண்களில் முகத்தில் ஆர்வம், ஆசை முதலியவை தெளிவாகப் புலப்படும் வகையில் வெளிப்படுதல்;   மிளிர்தல்; glitter, brighten up.

அவன் சொன்ன கதையைக் கண்களில் மகிழ்ச்சி மின்னக் கேட்டுக் கொண்டு இருந்தது குழந்தை.

     [மின் → மின்னு → மின்னு-தல்.]

மின்னுக்கொடி

மின்னுக்கொடி miṉṉukkoḍi, பெ.(n.)

மின்னற்கொடி பார்க்க; see {}.

     “மின்னுக் கொடி யொன்று மீவிசும்பில் தோன்றுமால்” (சிலப்.29:9);.

மின்னுந்து

 மின்னுந்து miṉṉundu, பெ.(n.)

   மின்சார வண்டி (டிராம் வண்டி);; electrictrain.

     [மின்+உந்து]

     [P]

மின்னூட்டம்

 மின்னூட்டம் miṉṉūṭṭam, பெ.(n.)

   மின்னாற்றலை மின்கலத்தில் ஏற்றுகை; charge the cell or battary.

     [மின் + ஊட்டம்.]

மின்னூதுதல்

மின்னூதுதல் miṉṉūdudal,    5 செ.கு.வி.(v.i.)

   நகையில் அதனுருக்களைப் பொடி வைத்துச் சேர்த்தல் (இ.வ.);; to solder in making jewel.

     [மின் + ஊதுதல்.]

மின்னூல்

மின்னூல்1 miṉṉūl, பெ.(n.)

   மெய்ந்நூல் (வின்.);; sacred writing.

     [மெய்ந்நூல் → மின்னூல்.]

 மின்னூல்2 miṉṉūl, பெ.(n.)

   1. பூநூல்; sacred thread.

   2. மகளிர் கழுத்தணி வகை; woman’s necklace of three strands.

     [முந்நூல் → மின்னூல்.]

     [p]

மின்னெறிதல்

மின்னெறிதல் miṉṉeṟidal,    2 செ.கு.வி.(v.i.)

மின்னுதல் பார்க்க (யாழ்.அக.);; see {}.

     [மின்1 + எறிதல்.]

மின்னேற்றம்

 மின்னேற்றம் miṉṉēṟṟam, பெ.(n.)

மின்னூட்டம் பார்க்க; see {}.

மின்னைவேர்

 மின்னைவேர் miṉṉaivēr, பெ.(n.)

   முன்னை வேர் (சா.அக.);; root of {}.

     [மின்னை + வேர்.]

மின்னொழுகுதல்

 மின்னொழுகுதல் miṉṉoḻugudal, பெ.(n.)

   மின்னல் பாய்கை (இ.வ.);; stroke of lighting.

     [மின் + ஒழுகுதல்.]

மின்னொழுக்கு

மின்னொழுக்கு miṉṉoḻukku, பெ.(n.)

   1. மின்னல் பாய்கை (M.L.);; stroke of lightning.

   2. மின்கசிவு; electrical leakage.

     [மின் + ஒழுக்கு.]

மின்னோட்டம்

 மின்னோட்டம் miṉṉōṭṭam, பெ.(n.)

   மின்சாரம் பாய்தல்; flow of current.

     [மின் + ஒட்டம்.]

மின்பிரவாகம்

 மின்பிரவாகம்  miṉpiravākam, பெ.(n.)

மின்னோட்டம் பார்க்க; see minoliam (சா.அக.);.

மின்மணல்

 மின்மணல்  miṉmaṇal, பெ. (n.)

   வெள்ளி மணல்; silverore (சா.அக.);.

     [மின் + மணல்.]

மின்மயமாக்கு-தல்

மின்மயமாக்கு-தல்  miṉmayamākkudal,    5 செ.குன்றாவி, (v.t.)

   எரியாற்றலாலோ வேறு வகையிலோ இயங்கும் பொறிகளை முழுவதுமாக மின்சாரத்தால் இயங்குமாறு மாற்றி அமைத்தல்; electrification.

இருபெரும் நகரங்களுக்கு இடையே உள்ள தொடர் வண்டிப்பாதை மின்மயமாக்கப்பட்டுவருகிறது.

     [மின் + மயம் + ஆக்கு-தல்.]

மின்மானி

 மின்மானி miṉmāṉi, பெ.(n.)

மின்சாரமானி பார்க்க; see {}.

மின்மாற்றி

 மின்மாற்றி  miṉmāṟṟi, பெ.(n.)

   நெடுந் தொலைவு கம்பிகளின் மூலம் கொண்டு செல்வதற்கு அல்லது பயன்படுத்தும் அளவிற்கு ஏற்ற வகையில் மின்சாரத்தின் அழுத்தத்தையும், அளவையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யும் பொறி; transformer.

     [மின் + மாற்றி.]

மின்மினி

மின்மினி miṉmiṉi, பெ.(n.)

   இரவில் ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி; firefly.

     “மதியாதவன் கதிர் மின்மினிபோ லொளிர்” (அஷ்டப். திருவேங்கடத்தந்.20);. “நிலம் படு மின்மினி போல் பலவுடன்” (அகநா.67:16);. “பன்மர உயர்சினை மின்மினி விளக்கத்து” (நற். 44:10);.

     [மினுமினு → மின்மினி. மினுமினுத்தல் = ஒளிவிடுதல்.]

இருட்டில், பறக்கும்போது ஒளிவிட்டு மின்னும் உறுப்பை வயிற்றுப் பகுதியில் கொண்ட ஒரு சிறு பூச்சி.

மின்மினிநெல்

மின்மினிநெல் miṉmiṉinel, பெ.(n.)

   நெல் வகை (பெரும்பாண்.305, உரை);; a kind of paddy.

மின்மினிபற-த்தல்

மின்மினிபற-த்தல் miṉmiṉibaṟattal,    3 செ.கு.வி.(v.i.)

   ஒளிமிகுதியாற் கண்ணொளி மழுங்குதல்; to grow dim;

 to be dazed, as the eye.

     “மின்மினி பறவா நின்றது காணும்” (ஈடு, 3, 7:4);.

     [மின்மினி + பறத்தல்.]

மின்மினிப்பூச்சி

 மின்மினிப்பூச்சி miṉmiṉippūcci, பெ.(n.)

மின்மினி பார்க்க; see {}.

     [மின்மினி + பூச்சி.]

மின்முலாம்

 மின்முலாம் miṉmulām, பெ.(n.)

   பொருள்களின் மேல் மின்னியல் (வேதி.); முறைப்படி பூசப்படும் மாழைப் பூச்சு; electroplating.

பாண்டங்களின் மீது மின் முலாம் பூசினால் நீண்ட நாட்களுக்கு அழியாமல் இருக்கும்.

     [மின் + அரபு. முலாம்.]

அரபு. முலம் மா → த. முலாம்.

மின்வாகி

 மின்வாகி miṉvāki, பெ. (n.)

   மின்வாய்; electrode (சா.அக.);.

மின்வாங்கி

 மின்வாங்கி miṉvāṅgi, பெ.(n.)

   மின்னலைத் தன்னிடம் பெற்றுக் கொள்ளும் கருவி; lightning conductor.

மறுவ. மின்தாங்கி, இடிதாங்கி.

     [மின் + வாங்கி.]

இக்கருவி மாழைகளால் செய்யப்பட்டக் கம்பிகளைக் கொண்டது. கட்டடங்களின் வழியே நிலத்திற்குள் அழுந்தப்பதித்திருப்பது. இவ்வாறு செய்வதால் கம்பிகளின் வழியே மின்சாரம் நிலத்திற்குள் சென்று விடுவதால் இடி விழுவது தடுக்கப்படுகிறது (அபி.சிந்.);.

மின்விசிறி

 மின்விசிறி miṉvisiṟi, பெ.(n)

   காற்று வீசச் செய்யக் கூடிய இறக்கைகளை மின்சாரத்தால் இயக்கும் பொறி; electric fan.

     [மின் + விசிறி.]

     [p]

மின்விளக்கு

 மின்விளக்கு miṉviḷakku, பெ.(n.)

   மின்சார ஆற்றலால் ஒளிதரும், ஒளிரும் விளக்கு; electric light.

மின் விளக்கு ஒப்பனை செய்த வீடு.

     [மின் + விளக்கு.]

மின்வெட்டு

 மின்வெட்டு miṉveṭṭu, பெ.(n.)

   மின்சாரம் தேவையான அளவு கிடைக்காத காலங்களில் மின்சாரத்தைக் குறிப்பிட்ட கால அளவு நிறுத்தி விடுகை; current cut.

     [மின் + வெட்டு.]

மிமிதை

 மிமிதை  mimidai, பெ.(n.)

   கல்லுப்பைக் கட்டும் ஒருவகைப் பூடு (சா.அக.);; a herb, it is said to consolidate rock salt.

மியா

மியா miyā, இடை.(part.)

   ஒரு முன்னிலையசைச் சொல் (தொல்.சொல்.276);; a suffix added to verbs in second person, imperative mood.

மியூலசீவி

 மியூலசீவி miyūlacīvi, பெ.(n.)

மியூல் பார்க்க; see {}. (சங்.அக.);.

மியூல்

 மியூல் miyūl, பெ.(n.)

   பூடுவகை (யாழ்.அக.);; a plant.

மிரசன்

 மிரசன் mirasaṉ, பெ. (n.)

   பெருங்காயம்; asafoetida (சா.அக.);.

மிரட்சி

மிரட்சி1 miraṭci, பெ.(n.)

   அச்சம் நிறைந்த கலக்கம், மருட்சி; fright, dismay;

 be wilderment.

நேராய்வில் அவன் மிரட்சியுடன் பதில் சொன்னான்.

     [மிரள் → மிரட்சி.]

 மிரட்சி2 miraṭci, பெ.(n.)

   அடிக்கடி மிரளும் மாட்டு வகை (அபி.சிந்.);; a class of bull.

மிரட்டல்

 மிரட்டல் miraṭṭal, பெ.(n.)

   செய்கையால், பேச்சால் அச்சப்படச் செய்தல்; threat;

 intimidation.

தந்தை, மகனை வரும் காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் கூடுதலாக எடுக்கவில்லை என்றால் உதைப்பேன் என்று மிரட்டினார்.

     [மிரள் (த.வி.); → மிரட்டு (பி.வி.);.]

மிரட்டி

 மிரட்டி miraṭṭi, பெ.(n.)

   பேய்மிரட்டி; a plant-Malabar catmint, – Anisomeles mlabarica (சா.அக.);.

மிரட்டினி

 மிரட்டினி miraṭṭiṉi, பெ.(n.)

   சொக்குப் பொடி (சங்.அக.);; magic powder.

     [மிரட்டு → மிரட்டி → மிரட்டினி.]

மிரட்டிவாங்கு-தல்

மிரட்டிவாங்கு-தல் miraṭṭivāṅgudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   அச்சுறுத்திக் கைப்பற்றுதல் (C.G.);; to extort.

     [மிரள் → மிரட்டு + வாங்கு-தல்-மிரட்டி வாங்கு-தல். வாங்கு – துணை வினை.]

மிரட்டு

மிரட்டு1 miraṭṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. தன்நோக்கம் நிறைவேற அல்லது பிறர் நோக்கத்தை முறியடிக்கச் செய்கையாலோ அல்லது பேச்சாலோ அச்சப்பட வைத்தல்,அச்சுறுத்துதல்; threaten by word or act intimidate.

வேலை நிறுத்தத்தைக் கைவிடாவிட்டால் கதவடைப்பு செய்வோம் என்று நிருவாகம் தொழிலாளர்களை மிரட்டியது.நள்ளிரவில் திருடன் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் உள்ளப் பொருள்களைக் கொள்ளையடித்தான்.

   2. மயக்குதல்; to fascinate to deceive.

“விழித்து மிரட்டி” (திருப்பு.1042);.

     [மிரள்-தல் → மிரட்டு-தல்]

மிரண்டபார்வை

 மிரண்டபார்வை miraṇṭapārvai, பெ.(n.)

   நடுக்கம் உள்ள பார்வை; treambled look (சா.அக.);.

மிரண்டுபோ-தல்

மிரண்டுபோ-தல் miraṇṭupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   அச்சத்தினால் செயலிழந்து நிலை குலைந்துபோதல்; get frightened.

துமுக்கி (துப்பாக்கி);யைக் கண்டதும் பயணிகள் மிரண்டு போனார்கள்.

     [மிரண்டு + போதல்.]

மிரதம்

 மிரதம்  miradam, பெ.(n.)

   பாம்பு; snake (சா.அக.);.

மிரளமிரள

 மிரளமிரள miraḷamiraḷa, வி.அ.(adv.)

   விழிகளை அங்குமிங்கு உருட்டியபடி; to look at someone or something in perplexity.

கனவு கண்டு அஞ்சி எழுந்து மிரள மிரள விழித்தான். வகுப்பறையில் தூங்கியிருந்து ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவன் ஒன்றும் புரியாமல் மிரள மிரளப் பார்த்தான்.

மிரள்(ளு)தல்

மிரள்(ளு)தல் miraḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   1. அச்சத்தினால் கலக்கமடைந்து கட்டுப்பாடு இழத்தல்; get frightened or scared, lose control when scared.

   2. மயங்கி அஞ்சுதல்; to be freightened, startled.

குடையைக் கண்டால் மாடு மிரளும்.

மிரழ்-தல்

மிரழ்-தல் miraḻtal,    2 செ.கு.வி.(v.i.)

மிரள் தல் (யாழ்.அக.); பார்க்க; see miral.

மிராசு

மிராசு mirācu, பெ. (n.)

   1. நிலவுரிமை, அது தொடர்பாக குலமுறையாய் வரும் முழு உரிமை (W.G.);; absolute hereditary right or claim to lands or office.

   2. குல வழியாய் வந்த சொத்து (வின்.);; heritage, patrimony.

     [U. {} → த. மிராசு.]

மிராசுதாரன்

 மிராசுதாரன் mirācutāraṉ, பெ. (n.)

   நில வுரிமைக்காரன் (வின்.);; hereditary proprietor or any right to office or property.

த.வ. நிலக்கிழான்

     [U. {} → த. மிராசுதாரன்.]

மிராண்டி

 மிராண்டி mirāṇṭi, பெ. (n.)

மிருகாண்டி பார்க்க;see {}.

மிரிகி

 மிரிகி  mirigi, பெ. (n.)

   காக்கைவலிப்பு; a disease;

 epilepsy.

மிரிகை

 மிரிகை  mirigai, பெ. (n.)

   யாழ்ப்பிருடை (வின்.);; tuning key for the cords of a lute.

மிரிசனம்

 மிரிசனம் mirisaṉam, பெ.(n.)

மிரிசம் பார்க்க; see {} (சா.அக.);.

மிரிசபத்திரி

 மிரிசபத்திரி mirisabattiri, பெ.(n.)

   வறட்சுண்டி; a sensitive plant Mimosa triprictra (சா.அக.);.

மிரிசம்

 மிரிசம் mirisam, பெ.(n.)

   மிளகு; pepper Piper nigrum.

     [மிரியல் → மிரிசம்.]

மிரிசி

 மிரிசி mirisi, பெ.(n.)

மிரிசம் பார்க்க; see {} (சா.அக.);.

மிரிஞ்சி

 மிரிஞ்சி miriñji, பெ.(n.)

   செம்முருங்கை; red Indian laburnum Hyperanthera moringa (சா.அக.);.

மிரிநாளம்

 மிரிநாளம் mirināḷam, பெ.(n.)

   தாமரை (மலை.);; lotus.

மிரியம்

மிரியம்  miriyam, பெ.(n.)

   மிளகு (பிங்.);; pepper.

தெ. மிரியமு

     [மிரியல் → மிரியம் (மு.தா.155);.]

மிரியற்கொடி

 மிரியற்கொடி miriyaṟkoḍi, பெ.(n.)

   மிளகுக் கொடி; pepper creeperPiper nigrum (சா.அக.);.

     [மிரியல் + கொடி.]

மிரியலகம்

 மிரியலகம்  miriyalagam, பெ.(n.)

மிரியல் பார்க்க; see miriyal (சா.அக.);.

     [மிரியல் + அகம்.]

மிரியல்

மிரியல்  miriyal, பெ.(n.)

   மிளகு; pepper.

     [(நுள்); → நெள் → நெரி → நெரியல் → மெரியல் → மிரியல் (மு.தா.155);.]

மிரியாகூந்தல்

 மிரியாகூந்தல் miriyāāndal, பெ.(n.)

   குதிரை வாலி தவசம், ஒருவகைப் புன்செய்ப் பயிர்; poor man’s horse millet.

மிரியாதியெண்ணெய்

 மிரியாதியெண்ணெய் miriyātiyeṇīey, பெ. (n.)

   கண் புகைச்சல் முதலிய கண் நோய்களுக்குப் பயன்படுத்தும் ஒருவகை எண்ணெய்; a medicated oil for eye disease (சா.அக.);.

மிரியார்கூந்தல்

 மிரியார்கூந்தல் miriyārāndal, பெ. (n.)

   சவுரிக் கொடி; a big creeper Trichosanthes Palmata (சா.அக.);.

மிரியாலிகம்

 மிரியாலிகம் miriyāligam, பெ. (n.)

   சித்தரத்தை (சங்.அக.);; lesser galangal Alpinia galang.

மிரியால்

 மிரியால் miriyāl, பெ.(n.)

மிரியம் (சங்.அக.); பார்க்க; see miriyam.

தெ. மிரியாலு

மிருககாமினி

 மிருககாமினி mirugagāmiṉi, பெ.(n.)

   வாய் விளங்கம் (மூ.அ.);; common windberry.

மிருகக்கொட்டை

 மிருகக்கொட்டை mirugaggoṭṭai, பெ.(n.)

   கும்பாதிரி மரம்; lac tree.

மிருகசிரம்

மிருகசிரம் mirugasiram, பெ. (n.)

   1. ஆட் காட்டி விரலையும் சுண்டு விரலையும் நிமிர்த்தி மற்ற விரல்களை ஒரு சேர வைக்கும் முத்திரை வகை. (பரத. பாவ. 18.);

{}) a hand-pose in which the index finger and the little finger are stretched out and the rest are kept closed.

   2. மிருக சீருடம் பார்க்க;see miruga-{}.

     [Skt. {} → த. மிருகசிரம்.]

மிருகசீருடம்

 மிருகசீருடம் mirugacīruḍam, பெ. (n.)

   மாழ்கு, ஐந்தாம் விண்மீன்; the fifth {}.

     [Skt. {} → த. மிருகசீருடம்.]

மிருகண்மூலம்

 மிருகண்மூலம் mirugaṇmūlam, பெ.(n.)

   திப்பிலிவேர் (சங்.அக.);; longpepper root.

மிருகத்தனம்

 மிருகத்தனம் mirugattaṉam, பெ. (n.)

   விலங்கின் தன்மை; beastly nature – brutishness.

மிருகபத்திரி

 மிருகபத்திரி  mirugabattiri, பெ.(n.)

   வறட்சுண்டி; floating sensitive plant.

மிருகமதவாசை

 மிருகமதவாசை mirugamadavācai, பெ.(n.)

   கத்தூரி மல்லிகை (மூ.அ.);; musk jasmine.

மிருகம்

மிருகம்1 mirugam, பெ. (n.)

   1. மான் (சூடா.);; deer, an telope.

   2. விலங்கின் பொது (சூடா.);; animal in general.

   3. பன்றி (வின்.);; pig, hog.

   4. யானைவகை (யாழ். அக.);; a kind of elephant.

   5. கத்தூரிமான் (யாழ்.அக.);; musk deer.

   6. மிருகசீருடம் (யாழ். அக.); பார்க்க;see miruga-{}.

   7. பாம்பு; snake. (நாமதீப. 258);.

மிருகாண்டி

 மிருகாண்டி mirukāṇṭi, பெ. (n.)

   விலங்காண்டி (வின்.);; rustic;ill-bred person.

     [Skt. {} → த. மிருகாண்டி.]

மிருகாலா

 மிருகாலா mirukālā, பெ.(n.)

   நன்னீர்மீன்; cirrhina mrigala (mingal); (சா.அக.);.

மிருக்கெண்ணெய்

 மிருக்கெண்ணெய் mirukkeṇīey, பெ. (n.)

   ஒருவகை எண்ணெய், மெருகெண்ணெய்; a kind of oil for polish (சா.அக.);.

     [மெருகு → மிருகு + எண்ணெய்.]

மிருங்கம்

 மிருங்கம் miruṅgam, பெ.(n.)

   கையாந்தகரை (மலை.);; a plant.

மிருஞ்சி

 மிருஞ்சி miruñji, பெ.(n.)

   செம்முருங்கை; a red species of hyperanthera moringa (சா.அக.);.

மிருடாகம்

 மிருடாகம் miruṭākam, பெ.(n.)

   மாமரம்; mango tree Mangifera indica (சா.அக.);.

மிருடாலகம்

 மிருடாலகம் miruṭālagam, பெ.(n.)

மிருடாகம் பார்க்க; see {}.

மிருடி

 மிருடி miruḍi, பெ.(n.)

   மான்; deer (சா.அக.);.

மிருணாலம்

 மிருணாலம் miruṇālam, பெ.(n.)

   தாமரை நூல் (யாழ்.அக.);; lotusfibre.

மிருணாலி

 மிருணாலி miruṇāli, பெ.(n.)

   தாமரை (மூ.அ.);; lotus.

 மிருணாலி miruṇāli, பெ. (n.)

   தாமரை (மூ.அ.);; lotus.

     [Skt. {} → த. மிருணாலி.]

மிருதங்கம்

மிருதங்கம் mirudaṅgam, பெ.(n.)

   மூங்கில் (யாழ்.அக.);; bamboo.

 மிருதங்கம் mirudaṅgam, பெ. (n.)

   1. மத்தளம் (உ.வ.);; a kind of drum.

   2. ஒலி;   3. மூங்கில் (யாழ்.அக.);; bamboo.

   யதிகளில் ஒன்று. (பரத. தாள.53.);; a kind of yati.

     [Skt. {} → த. மிருதங்கம்]

மிருதபலி

 மிருதபலி  mirudabali, பெ.(n.)

   பேய்ப்புடல்; wild snake gourd useful for fever (சா.அக.);.

மிருதம்

 மிருதம்  mirudam, பெ.(n.)

   தண்ணீர்விட்டான் (மலை.);; climbing asparagus.

மிருதவள்ளி

 மிருதவள்ளி mirudavaḷḷi, பெ.(n.)

   வள்ளிக் கிழங்கு; sweet potato Ipomoca batatas (சா.அக.);.

மிருதாசியம்

 மிருதாசியம் mirutāciyam, பெ.(n.)

   கருப்பறுகு; a black variety of rub grass.

மிருதாரசிங்கி

மிருதாரசிங்கி mirutārasiṅgi, பெ. (n.)

   1. தூய்மை செய்யப்படாத ஈயம்; impure oxide of lead, plumbi oxidum.

   2. ஈயம் (யாழ். அக.);; lead.

   3. வைப்பு நஞ்சு வகை. (பதார்த்த 1159, தலைப்பு.);; a plant, பூடுவகை. (யாழ். அக.);

     [U. {} → த. மிருதாரசிங்கி.]

மிருதி

மிருதி mirudi, பெ. (n.)

   1. நினைவு; remembrance.

     ‘யதார்த்த மிருதிஞானத் திற்கு விடயமாய்’ (சிவசம.பக்.41.);

   2. அறநூல்; smrti, Hindu Law treatise.

   3. அறநூல் வல்லோன்; one learned in smrti.

     ‘மெய்யா மிருதிகள்’ (திருவிளை. உலவாக்.19);.

   4. மலை மகள்; Parvati. (கூர்மபு. தருக் கலியாண. 22.);

     [Skt. smrdi → த. மிருதி.]

மிருது

மிருது1 mirudu, பெ. (n.)

   1. மென்மை (சூடா.);; softness.

   2. சாந்தம் (சங்.அக.);; gentleness, mildness, benignancy.

   3. மந்தம் (யாழ்.அக.);; slowness.

   4. மழுங்கல். (யாழ். அக.);; bluntness.

   5. நொய்ம்மை (யாழ்.அக.);; low quality.

   6. இசைவகையுள் ஒன்று (பரத.இராக 47.);; a kind of musical note.

   7. மிருதுபலா. (சங். அக.); பார்க்க;see {}.

   8. சமுத்திரப் பாலை. (மலை.);; elephant creeper.

   9. வெள்ளரி (நாமதீப. 336.);; cucumber.

     [Skt. mrdu → த. மிருது]

 மிருது2 mirudu, பெ. (n.)

மிருதி1 (அரு. நி); பார்க்க;see miruti1

     [Skt. mrti → த. மிருது.]

மிருதுபலம்

 மிருதுபலம்  mirudubalam, பெ.(n.)

   பேரீந்து (மூ.அ.);; date palm.

மிருதுபலா

 மிருதுபலா mirudubalā, பெ. (n)

   நெல்லி (மலை.);; emblic myrobalan.

மிருதுமம்

 மிருதுமம்  mirudumam, பெ.(n.)

   இலாமிச்சை (சங்.அக.);; cuscus grass.

மிருதுளம்

மிருதுளம் miruduḷam, பெ. (n.)

   மென்மை யானது; that which is soft, tender.

     ‘மிருதுள மிருதுள நவமணி’ (திருப்பு. 319.);.

     [Skt. mrdula → த. மிருதுளம்]

மிருதூற்பலம்

 மிருதூற்பலம் mirutūṟpalam, பெ.(n.)

   கரு நெய்தல்; blue Indian waterlilly.

மிருதூவிகம்

 மிருதூவிகம் mirutūvigam, பெ.(n.)

   மூங்கில்; bamboo (சா.அக.);.

மிருத்திகம்

 மிருத்திகம்  miruttigam, பெ. (n.)

   கொடி முந்திரி (சங்.அக.);; grape vine.

மிருத்திகை

மிருத்திகை  miruttigai, பெ.(n.)

   1. மண்; earth.

   2. ஒருவகை உவர்மண்; a kind of fuller’s earth (சா.அக.);.

மிருத்தியகெந்தம்

மிருத்தியகெந்தம்  miruttiyagendam, பெ. (n.)

   1. கல்லுப்பு; rock salt.

   2. சிறு செண்பகம்; small champauk Michelia nilagirica with small flowers (சா.அக.);.

மிருத்தியம்

 மிருத்தியம்  miruttiyam, பெ.(n.)

மிருத்திகை பார்க்க; see miruttigai (சா.அக.);.

மிருத்தியல்

 மிருத்தியல்  miruttiyal, பெ.(n.)

   தூதுவளை (சங்.அக.);; climbing brinjal.

மிருத்தியு

மிருத்தியு miruttiyu, பெ. (n.)

   1. இறப்பு; death.

     ‘மிருத்தியுவை வெல்வான்’ (சேதுபு. துரா.27);.

   2. இயமன். (யாழ்.அக.);; yama.

   3. தீராப்பகைவன்; inveterate enemy.

     ‘அவன் எனக்கு மிருத்தியுவாய்த் தலைப்பட்டான்.’

   4. ஆணவமலம். (சி.போ. 4,2, சிற். பக்.96.);;({}.);

 matter which is eternally encasing the soul.

     [Skt. mrtyu → த. மிருத்தியு.]

மிருத்தியுபலம்

 மிருத்தியுபலம்  miruttiyubalam, பெ.(n.)

   இலந்தை (மூ.அ.);; jujubetree.

மிருத்தியுபலை

மிருத்தியுபலை  miruttiyubalai, பெ.(n.)

   1. வாழை (மூ.அ.);; plantain.

   2. மூங்கில்; bamboo (சங்.அக.);.

மிருத்தியுபிரசூனம்

 மிருத்தியுபிரசூனம் miruttiyubiracūṉam, பெ.(n.)

   கரும்பு (யாழ்.அக.);; sugarcane.

மிருத்தியுபுட்பம்

 மிருத்தியுபுட்பம் miruttiyubuṭbam, பெ.(n.)

   கரும்பு; sugarcane Saccharum officinarum (சா.அக.);.

மிருத்து

மிருத்து1 miruttu, பெ. (n.)

   மண்; earth.

     ‘இரு நில மிருத்திட்டு’ (மதுரைப்பதின். 62.);.

     [Skt. mrt → த. மிருத்து1]

 மிருத்து2 miruttu, பெ. (n.)

   1. இறப்பு; death.

   2. எமன்; yama.

     [Skt. mrtya → த. மிருத்து2]

மிருத்துசம்

 மிருத்துசம் miruttusam, பெ.(n.)

   மூங்கில்; bamboo (சா.அக.);.

மிருத்துவிகா

 மிருத்துவிகா miruttuvikā, பெ. (n.)

   புளி கொடி முந்திரி; sour grapes Vitis vinifera (சா.அக.);.

மிருத்துவீசம்

 மிருத்துவீசம் miruttuvīcam, பெ.(n.)

   மூங்கில் (யாழ்.அக.);; spiny bamboo.

மிருநாறம்

 மிருநாறம் mirunāṟam, பெ.(n.)

   தாமரை; lotus (சா.அக.);.

மிருநாளம்

மிருநாளம் mirunāḷam, பெ.(n.)

   1. தாமரைத் தண்டு; stalk of the lotus.

   2. இலாமிச்சை (தைலவ.தைல.);; cuscus grass.

மிருநாளீசம்

 மிருநாளீசம் mirunāḷīcam, பெ.(n.)

   தாமரையின் நரம்பு (தாமரைத் தாது);; filaments of lotus flower, fibres of lotus (சா.அக.);.

மிருந்தாலகம்

மிருந்தாலகம் mirundālagam, பெ.(n.)

   1. உவர் மண் (சங்.அக.);; fuller’s earth.

   2. துவரை (மலை.);; dholl.

மிருமணி

 மிருமணி  mirumaṇi, பெ.(n.)

   சுவர் முள்ளங்கி (சங்.அக.);; a parasitic plant growing on walls.

மிறல்

 மிறல் miṟal, பெ.(n.)

   பெருமை (யாழ்.அக.);; greatness.

     [விறல் → மிறல். விறல் = பெருமை, வீரம்.]

மிறுக்கு

மிறுக்கு miṟukku, பெ.(n.)

   1. துன்பம்; sorrow, trouble.

   2. தொல்லை; difficulty.

     “சாலமிறுக் குடைத்து” (ஈடு.2, 5:10);.

   3. மிடுக்கு (திவ். பெரியாழ்.3. 4:10 வியா.);; stiffness of manners.

     [மிறை → மிறுக்கு. மிறை = துன்பம், வருத்தம்.]

மிறுங்கம்

 மிறுங்கம் miṟuṅgam, பெ.(n.)

   கையாந்தகரை; a prostate plant Eclipta prostate (சா.அக.);.

மிறுங்காவியம்

 மிறுங்காவியம் miṟuṅgāviyam, பெ.(n.)

   பெருந்தேட் கொடுக்கி;{} (சா.அக.);.

மிறுங்கு-தல்

மிறுங்கு-தல் miṟuṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. இறுகுதல்; to harden.

   2. மாறுபடுதல் (திவ். பெரியாழ்.2:6, பிர.பக்.358);; to be opposed or inimical.

மிறுசீரம்

 மிறுசீரம் miṟucīram, பெ.(n.)

   இலாமிச்சை (மலை.);; cuscus grass.

மிறுதார்சிங்கி

 மிறுதார்சிங்கி miṟutārciṅgi, பெ.(n.)

   சிங்கி நஞ்சு (பாஷாணம்);; a kind of arsenic.

மிறுதுஞ்சம்

 மிறுதுஞ்சம் miṟuduñjam, பெ.(n.)

   பெருங்காயம்; asafoetide (சா.அக.);.

மிறுதுபலா

 மிறுதுபலா miṟudubalā, பெ.(n.)

மிறுந்து பார்க்க; see {}.

மிறுதுபலிகம்

 மிறுதுபலிகம் miṟudubaligam, பெ.(n.)

பெருஞ்சீரகம்,

 common anise (சா.அக.);.

மறுவ. சோம்பு

     [p]

மிறுதுபுட்பம்

 மிறுதுபுட்பம் miṟudubuṭbam, பெ. (ո.)

   வாகை;{} tree Albizzialebbek (சா.அக.);.

மிறுதுபூகம்

 மிறுதுபூகம் miṟudupūkam, பெ.(n.)

   பெருங் குரும்பை; bowstring, hemp, stemless plant Sansaviera zeylanica (சா.அக.);.

மிறுத்தாரி

 மிறுத்தாரி miṟuttāri, பெ.(n.)

   யானை கற்றாழை அல்லது பெருங் கற்றாழை; large aloeAgave Veracruz (சா.அக.);.

மிறுத்தாலகம்

 மிறுத்தாலகம் miṟuttālagam, பெ.(n.)

   துவரை; redgram (சா.அக.);.

மிறுத்தாவிகம்

 மிறுத்தாவிகம் miṟuttāvigam, பெ.(n.)

   பெருநாரத்தை; a large citrus variety (சா.அக.);.

மிறுந்திகம்

மிறுந்திகம்1 miṟundigam, பெ.(n.)

மிறுந்து பார்க்க; see {}.

 மிறுந்திகம்2 miṟundigam, பெ.(n.)

   கொடி முந்திரி; a creeper grapes Vitis vinifera (சா.அக.);.

மிறுந்து

 மிறுந்து miṟundu, பெ.(n.)

   நெல்லி; Indian gooseberry tree Emblica officinalis (சா.அக.);.

மிறை

மிறை1 miṟaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   துன்புறுத்துதல்; to oppress, harass.

     “மிறைத்தார் புரமெய்த வில்லிமை” (பதினோ. திருவே.தி.59);.

 மிறை2 miṟaittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. விறைத்தல்; to become stiff, as a limb.

     “குறைத்தலை மிறைத்துக் கூத்து நின்றாடின” (கம்பரா.வேள்வி:54);.

     “ஒருகை யிரும்பிணத் தெயிறு மிறையாக” (புறநா. 284:6);.

   2. மிடுக்காயிருத்தல்; to be stuck up with pride, to be stiff in manners.

     “அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து” (திவ்.பெரியார்.3. 4:10);.

   3. துன்பப்படுதல் (சூடா.);; to suffer;

 to be afflicted.

   4. பாடுபடுதல் (யாழ்.அக.);; to labour hard.

 மிறை3 miṟai, பெ.(n.)

   1. அச்சம் (திவா.);; fear.

   2. குற்றம் (திவா.);; fault, defect.

   3. வருத்தம்; trouble.

     “அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு” (குறள், 847);.

   4. துன்பம்; torment.

   5. அரசிறை (சூடா.);; tax.

   6. வளைவு; bend, curve.

     “மிறைக்கொளி திருத்தினானே” (சீவக.284);.

தெ. மெர.

     [முல் = வளைதற்கருத்து. முல் → முரு = வளைவு. முருகுதல் = வளைதல். முரு → முறு → முறை = வளைவு. முறை → மிறை = வளைவு (வே.க.4:75);. ஒ.நோ. முண்டு → மிண்டு. முடுக்கு → மிடுக்கு.]

மிறைகோல்

 மிறைகோல் miṟaiāl, பெ.(n.)

   களத்தில் கதிர் அல்லது வைக்கோலை ஈரங்காய்வதற்காக புரட்டிவிட உதவும் வளைந்த கம்பி பொருத்தப் பட்ட கோல்; an implement used by the agriculturists on the threshold.

மறுவ. மெரகோல்.

     [மிடை-மிறை+கோல்]

மிறைக்கவி

 மிறைக்கவி miṟaikkavi, பெ.(n.)

   சித்திரக் கவி (திவா.);; variety of metrical composition.

     [மிறை + Skt. கவி..]

மிறைக்கொளிதிருத்து-தல்

மிறைக்கொளிதிருத்து-தல் miṟaikkoḷidiruddudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   ஆய்தத்தை வளைவு நீக்குதல்; to straighten out, as a bent weapon.

     “மிறைக் கொளி திருத்துவார்” (சீவக.2293);.

     [மிறை + கொள் + திருத்துதல்.]

மிறைக்கொளுவு-தல்

மிறைக்கொளுவு-தல் miṟaikkoḷuvudal,    5 செ.குன்றாவி. (v.t.)

மிறைக்கொளி திருத்து–தல் பார்க்க; see {}.

     “எஃக மிறைக் கொளீஇ” (பு.வெ.8:21);.

     [மிறை + கொளுவு தல். கொளுவுதல் = கூறாக்குதல், வளைவு நீக்குதல்.]

மிற்கு

மிற்கு miṟku, பெ.(n.)

   1. இரை (அக.நி.);; food.

   2. பேசுகை (அரு.நி.);; speaking.

   3. மென்மை (அக.நி.);; softness.

மிலாகத்து

 மிலாகத்து milākattu, பெ. (n.)

   சந்திப்பு (P.T.L.);; meeting, interview.

     [H. {} → த. மிலாகத்து]

மிலாங்கிலி

மிலாங்கிலி milāṅgili, பெ.(n.)

   1. செங்காந்தள் (மலை.);; red species of Malabar glorylilly.

   2. திருநீற்றுப் பச்சை (சங்.அக.);; sweet basil.

மிலாடு

மிலாடு milāṭu, பெ.(n.)

   மலையமான் நாடு (M.P.S.A.525);; country of {}.

     [மலையமான் நாடு → மலைநாடு → மலாடு → மிலாடு.]

இச்சொல் கல்வெட்டுக்களில் ‘மலாடு’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. நடுநாட்டின் வளநாடுகளில் ஒன்று.

நடுவில் மண்டலத்துப் பெண்ணை வடகரை மலாடாகிய ஐந்நாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக்கோயிலூர் (தெ.கல்.தொ.7. கல்.936);.

மிலாடுடையார்

மிலாடுடையார் milāḍuḍaiyār, பெ.(n.)

மலையமான் நாட்டின் அரசன், மெய்ப்பொருள் நாயனார்; {}.

     “இரண்டு கையுடையாராகக் கனமாகச் செய்த தத்தா நமரேகாண் என்ற மிலாடுடையார் ஒருவர்” (தெ.கல்.தொ.2:2, கல்.40);.

     [மிலாடு + உடையார்.]

மிலாரடி

மிலாரடி milāraḍi, பெ. (n.)

   1. கலக்கம்; perturbation;

 dilamma.

   2. உன்மத்தன்; unfeelingness;

 stupor, stupefaction.

     [மலாரடி → மிலாரடி. மலாரடி = கலக்கம்.]

மிலார்

மிலார் milār, பெ.(n.)

   விளாறு; twig.

     [வளார் → விளார் → மிலார். வளார் = வளைந்த சிறு போத்து (மு.தா.70);.]

மிலாறு

மிலாறு milāṟu, பெ.(n.)

   விளாறு (C.G.);; twig, switch.

     [மிலார் → மிலாறு (மு.தா.70);.]

மிலேச்சத்தனம்

 மிலேச்சத்தனம் milēccattaṉam, பெ. (n.)

   அநாகரிகம்; barbarism.

     [Skt. {} → த. மிலேச்சத்தனம்]

மிலேச்சன்

மிலேச்சன் milēccaṉ, பெ. (n.)

   1. நாகரிகமற்ற புறநாட்டான்; barbarian, uncivilised foreigner.

     ‘மிலேச்ச ரேறலின்’ (சீவக. 216);.

   2. திருத்தமற்ற மொழியைப் பேசுவோர். (சீவக. 93 உரை);; person speaking barbarous language.

   3. அறிவீனன் (யாழ்.அக.);; ignorant person.

   5. வேடன் (யாழ்.அக.);; hunter.

   6. தாழ்ந்தோன் (யாழ். அக.);; low person.

   7. ஆரியன்; aryan. (அக.நி.);

     [Skt. {} → த. மிலேச்சன்]

மிலேச்சம்

மிலேச்சம் milēccam, பெ. (n.)

   1. சரசுவதி ஆற்றின் வடகரையில் பழந்திரவிடர் வாழ்ந்த நாடு (சது.);; Non-Aryan country situated on the northern bank of river Sarasvadi.

     [Skt. {} → த. மிலேச்சம்]

மிலேச்சாசம்

 மிலேச்சாசம் milēccācam, பெ. (n.)

   கோதுமை. (மலை);; wheat.

     [Skt. {} → த. மிலேச்சாசம்]

மிலை

மிலை1 milaidal,    2 செ.கு.வி.(v.i.)

   சூடுதல்; to put on wear.

     “உழிஞைப் பவரொடு மிலைந்து” (புறநா.77);.

     [மலை → மிலை. மலைதல் = சூடுதல்.]

 மிலை2 milaittal,     4 செ.கு.வி.(v.i.)

    1. மயங்குதல்; to be bewildered.

     “மிலைத்தலைந்தேனை” (திருவாச.6:40);.

   2. கனைத்தல்; to low, as a cow.

     “எப்படி யூரா மிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்னும்” (திவ்.இயற்.திருவிருத்.94);.

     [மலைத்தல் → மிலைத்தல்.]

 மிலை3 milai, பெ.(n.)

   தலைமேலணி; head ornament.

     [மிலை1 → மிலை3.]

மிலைச்சம்

 மிலைச்சம்  milaiccam, பெ.(n.)

   சாதிலிங்கம் (சங்.அக.);; vermilian.

மிலைச்சுதல்

மிலைச்சுதல்  milaiccudal,    5 செ.குன்றாவி. (v.t.)

மிலை1-தல் பார்க்க; see milai.

     “நலம்பெறு சென்னி நாமுற மிலைச்சி” (குறிஞ்சிப்.116);.

     [மிலை1 → மிலைச்சு → மிலைச்சுதல்]

மில்லாங்கயிறு

 மில்லாங்கயிறு millāṅgayiṟu, பெ.(n.)

   படகில் பயன்படுத்தும் ஒருவகைக் கயிறு; a kind of rope used in boat.

பாய்மரக்கப்பலிற் பாயை நிறுத்துதற் பொருட்டு கட்டப்பெறுவது மில்லாங் கயிறு.

மிளகம்மை

 மிளகம்மை miḷagammai, பெ.(n.)

   ஒரு வகை அம்மை நோய்; a kind of pox (சா.அக.);.

     [மிளகு + அம்மை. மிளகு போன்ற கொப்புளம் உண்டாக்கும் அம்மை நோய்.]

மிளகரணை

 மிளகரணை miḷagaraṇai, பெ. (n.)

மிளகு கரணை (வின்.); பார்க்க; see {}.

மிளகரந்தி

 மிளகரந்தி miḷagarandi, பெ. (n.)

மிளகு கரணை (வின்.); பார்க்க; see {}.

மிளகறுப்பான்

 மிளகறுப்பான் miḷagaṟuppāṉ, பெ.(n.)

   நெல் வகை; a kind of paddy.

மிளகறையன்

 மிளகறையன் miḷagaṟaiyaṉ, பெ.(n.)

   புடவை வகை (யாழ்.அக.);; a kind of saree.

மிளகாணம்

மிளகாணம் miḷakāṇam, பெ.(n.)

   மிளகாய்க்குப் பதிலாக மிளகு சேர்த்துச் சமைத்த குழம்பு (யாழ்ப்.);; sauce prepared with pepper instead of chillies.

     [மிளகு + ஆணம்2. ஆணம் = குழம்பு.]

மிளகாயரை த்தல்

மிளகாயரை த்தல் miḷakāyaraittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஏமாந்தவனை ஆட்டிப் படைத்தல்; one who credulous to distribute.

கொஞ்சம் அயர்ந்தால் போதும் தலையிலே மிளகாய் அரைத்துவிடுவாயே (உ.வ.);.

     [மிளகாய் + அரைத்தல்.]

மிளகாயிலை

 மிளகாயிலை miḷakāyilai, பெ.(n.)

   மிளகாயினிலை;   மிளகாய் இலைகளில் உள்ள சாற்றைச் செப்புக் காசுகளின் மேல் தடவி இலைகளில் பொதிந்து புடம்போடப் பயன்படுத்துவர்; leaf of chilly plant a piece of copper is covered by the paste of this leaf, luted and subjected to [புடம்/pudam] calcination fire, it become calcined powder (சா.அக.);

     [மிளகாய் + இலை.]

மிளகாய்

மிளகாய் miḷakāy, பெ.(n.)

   1. காரமுள்ள காய் விளையும் செடி வகை; chilly plant Capsicum frutescens.

   2. கறி மிளகாய்; chilly used for curry preparations Сарsicum annum Spanish pepper, red pepper.

   3. மிளகுகாய்; carienne pepper.

தெ. மெரப்பக்காய்

வகைகள்: 1. மிளகாய், 2. சிவப்பு மிளகாய், 3. பச்சை மிளகாய், 4. கொள்ளி மிளகாய், 5. சீமை மிளகாய், 6. காந்தாரி மிளகாய், 7. சீனத்து மிளகாய், 8. ஈர மிளகாய், 9. சீமைப் பச்சை மிளகாய், 10. ஊசி மிளகாய். மிகு உறைப்பான மிளகாய். இது கதிர் வெப்பத்தைப் புசிப்பதனால் மிக உறைப்பாக இருக்கும் (சா.அக.);.

மிளகாய் காரமுடையப் பொருள். ஊசிமிளகாய், குடைமிளகாய் முதலியன நடு ஆசியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இச்செடி நம் நாட்டினதன்று. அயல்நாட்டினின்று இந்திய முன்னோர் நம்நாட்டிற்குக் கொண்டுவந்துப் பயிராக்கினர். இக்காயினைக் காயாகவும், பழமாகவும் உலர்த்தியும், கறி முதலியவற்றிற்குப் பயன்படுத்துவர் (அபி.சிந்:);.

நம் நாட்டில் காரத்திற்கு மிளகையே பயன்படுத்தி வந்தனர். இதே போல் காரமுடைய காயை இங்கு இறக்குமதி செய்தபின் மிளகு போன்ற காரமுடைய காயானதால் மிளகாய் என்ற வழங்கினர்.

முள் போன்று மேற்பரப்புடையதானதால் முள் → முளகு என்றானது.

     [முள் → முளகு → முளகாய் → மிளகாய் (மு.தா.ப.155);.]

மிளகாய்ச்சக்களத்தி

 மிளகாய்ச்சக்களத்தி miḷakāyccakkaḷatti, பெ.(n.)

   மிளகாய் செடி போன்று தோற்றமுடைய களைச் செடிவகை (மூ.அ.);; a weed, vinea pusilla.

     [மிளகாய் + சக்களத்தி. சக்களத்தி = போலி, போலிபொருள்.]

மிளகாய்ப்பழம்

 மிளகாய்ப்பழம் miḷakāyppaḻm, பெ.(n.)

   காய்ந்த அல்லது பழுத்த மிளகாய்; ripe and dried red chilly as opposed to (பச்சை மிளகாய்); green chilly.

     [மிளகாய் + பழம்.]

மிளகாய்ப்புள்

 மிளகாய்ப்புள் miḷakāyppuḷ, பெ.(n.)

   நீள் சிறகும் தோலடியும் உடைய கடற் பறவை வகை (வின்.);; a kind of gull.

     [மிளகாய் + புள்.]

மிளகாய்ப்பூண்டு

 மிளகாய்ப்பூண்டு miḷakāyppūṇṭu, பெ. (n.)

மிளகாய்ச்சக்களத்தி பார்க்க; see {}.

     [மிளகாய் + பூண்டு.]

மிளகாய்ப்பொடி

 மிளகாய்ப்பொடி miḷakāyppoḍi, பெ.(n.)

   குழம்புக்குத் துணைப்பொருளாய்ப் பயன்படும் மிளகாய்த் தூள்; powder of chillies with spices, used as a relish.

     [மிளகாய் + பொடி.]

மிளகாய்மீன்

 மிளகாய்மீன் miḷakāymīṉ, பெ.(n.)

   ஒருவகை மீன்; a kind of fish.

     [p]

மிளகாய்வற்றல்

 மிளகாய்வற்றல் miḷakāyvaṟṟal, பெ.(n.)

   வெயிலில் காய வைத்த மிளகாய்; dried chilli.

     [மிளகாய் + வற்றல்.]

மிளகி

மிளகி miḷagi, பெ. (n.)

மிளகுச்சம்பா (நாமதீப.351); பார்க்க; see {}.

     [முல் → முள் → முளகு → முளகி → மிளகி (மு.தா. 155);]

மிளகு

மிளகு miḷagu, பெ. (n.)

   1. சமையலில் பயன்படுத்தும் சின்னஞ்சிறிய காரமான கருப்பு நிறக்காய்; black pepper.

   2. கொடிவகை; black pepper, Piper nigrum.

   3. திரிகடுகத் தொன்றான மிளகுக் கொடியின் காய்; peppercorn, one of {}.

     “மிளகறி யுலக்கையின்” (பதிற்றுப்.41);.

     “மிளகு சிறுத்தாலும் வீரியம் போகாது”,

     “மிளகுபெய் தனைய சுவைய புன்காய்” (நற். 66:1);.

   4. மிளகுச்சம்பா பார்க்க; see {}.

   5. கிச்சிலிக் கரணை (வின்.);; lopez root.

   ம. மிலகு;க. மெழக.

வகைகள்:

   1. வெள்ளை மிளகு,

   2. கருப்பு மிளகு,

   3. கொச்சி மிளகு,

   4. பச்சை மிளகு (சா.அக.);.

     [முல் → முள் → முளகு → மிளகு (மு.தா.);.]

கொடியாகப் படரும் ஒரு பயிரின் கனிதான் மிளகு. இது மிகுதியாக கேரளநாட்டில் பயிராகிறது. மிளகுக் கொடி நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் பலன் கொடுக்கத் தொடங்கும் வாழ்நாள் 50 ஆண்டுகள் என்பர். அதற்கு மேலும் வாழ்வதுண்டு. போர்த்துக்கீசியர் பரப்பிய மிளகாய்க்கு முன் மிளகையே தமிழர் பயன்படுத்தி வந்தனர். வெளிநாட்டினர் இந்நாட்டிற்கு வழிகண்டுபிடிக்க முற்பட்டது மிளகு போன்ற நறுமணப் பொருளுக்காகவே என்பர் (குழந்.கலை.);.

மிளகுக்கஞ்சி

 மிளகுக்கஞ்சி miḷaguggañji, பெ.(n.)

   குரங்கு; monke, (சா.அக.);.

     [மிளகு + கஞ்சி.]

மிளகுக்கரணை

 மிளகுக்கரணை miḷaguggaraṇai, பெ.(n.)

   கிச்சிலிக்கரணை; lopez root.

     [மிளகு + கரணை.]

மிளகுக்கருக்கு

 மிளகுக்கருக்கு miḷaguggaruggu, பெ.(n.)

   மிளகுப் பொடியால் செய்யும் குடிநீர் (கருக்கு);; tincture of pepper.

     [மிளகு + கருக்கு.]

மிளகுக்கறி

மிளகுக்கறி miḷaguggaṟi, பெ.(n.)

   1. மிளகுங் காடியுஞ் சேர்ந்த கறி (பரவ.);; curry containing black pepper and vinegar.

   2. மிளகாணம் பார்க்க; see {}.

     [மிளகு + கறி.]

மிளகுக்காயின்காம்பு

 மிளகுக்காயின்காம்பு miḷaguggāyiṉgāmbu, பெ.(n.)

   மிளகுச் செடியில் மிளகு நீங்கிய உலர்ந்த காம்பு; the stalk of the pepper bunch (சா.அக.);.

     [மிளகு + காய் + இன் + காம்பு.]

மிளகுக்காய்

 மிளகுக்காய் miḷaguggāy, பெ.(n.)

   ஒருவகைக் காரமான காய், அழற்காய்; a kind of pungent fruit (சா.அக.);.

     [மிளகு + காய்.]

மிளகுக்கியாழம்

 மிளகுக்கியாழம் miḷaguggiyāḻm, பெ.(n.)

   மிளகைக் கொண்டு வடித்த கருக்கு நீர் (கஷாயம்);; pepper decoction prepared without frying it relieves kapha diseases;

 decoction prepared after charing it is used for pitha diseases (சா.அக.);.

     [மிளகு + கியாழம்.]

மிளகுக்குத்தல்

 மிளகுக்குத்தல் miḷagugguttal, பெ.(n.)

   மிளகை ஊசியில் குத்தி நெருப்பில் காட்டி புகை பிடிக்கை; inhalation of the pepper smoke (சா.அக.);.

     [மிளகு + குத்தல்.]

மிளகுக்குழம்பு

 மிளகுக்குழம்பு miḷagugguḻmbu, பெ.(n.)

மிளகாணம் பார்க்க; see {}.

     [மிளகு + குழம்பு.]

மிளகுச் சம்பா

மிளகுச் சம்பா miḷaguccambā, பெ. (n.)

   நெல் வகை; a kindofpaddy (வ.வ.வே.க.37);.

     [மிளகு+சம்பா]

மிளகுச்சம்பா

மிளகுச்சம்பா miḷaguccambā, பெ.(n.)

   மிளகு போன்ற சிறுமணிகளையுடைய உயர்ந்த சம்பா நெல்வகை (பதார்த்த.813);;{} of superior quality, as having grains like peppercorn.

     [மிளகு + சம்பா.]

மிளகுச்சாரணை

 மிளகுச்சாரணை miḷaguccāraṇai, பெ.(n.)

   ஒருவகைச் செடி; a plant (சா.அக.);.

     [மிளகு + சாரணை.]

மிளகுச்சாறு

 மிளகுச்சாறு miḷaguccāṟu, பெ.(n.)

மிளகுத்தண்ணீர் (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [மிளகு + சாறு.]

மிளகுச்சோறு

 மிளகுச்சோறு miḷaguccōṟu, பெ.(ո.)

   மிளகுப்பொடி, சீரகம் முதலியன சேர்த்து செய்த பொங்கல் வகை (யாழ்.அக.);; boiled rice, prepared with pepper powder cumin etc.

     [மிளகு + சோறு.]

மிளகுதிரி

 மிளகுதிரி miḷagudiri, பெ.(n.)

   அம்மை நோய் வகை (வின்.);; a species of small pox.

     [மிளகு + உதிரி. மிளகை உதிரியாகப் போட்டாற்போல் கொப்புளம் போடும் அம்மை வகை.]

மிளகுத்தக்காளி

 மிளகுத்தக்காளி miḷaguttaggāḷi, பெ.(n.)

   காரற் கத்திரி; brinjal

     [மிளகு + தக்காளி.]

மிளகுத்தண்ணீர்

 மிளகுத்தண்ணீர் miḷaguttaṇṇīr, பெ.(n.)

   மிளகு மிகுதியாகச் சேர்த்த சாறு (ரசம்);; mulligatawny, a soup highly seasoned with pepper.

     [மிளகு + தண்ணீர்.]

மிளகுத்தரகு

மிளகுத்தரகு miḷaguttaragu, பெ.(n.)

   மிளகு வணிகர்கள் கொடுக்கும் வரி (I.M.P.S. A. 140);; an ancient tax on pepper.

     [மிளகு + தரகு.]

மிளகுத்துவரை

 மிளகுத்துவரை miḷaguttuvarai, பெ.(n.)

   சின்னத் துவரை; small leaved ebony Diospyros microphylas (சா.அக.);.

     [மிளகு + துவரை.]

மிளகுத்தூள்

 மிளகுத்தூள் miḷaguttūḷ, பெ.(n.)

   மிளகின் தூள்; powder of pepper (சா.அக.);.

     [மிளகு + தூள்.]

மிளகுத்தைலம்

மிளகுத்தைலம் miḷaguttailam, பெ.(n.)

   மிளகு சேர்த்து வடித்த எண்ணெய் (இராசவைத்.159);; a medicinal oil prepared from pepper.

     [மிளகு + Skt. தைலம்.]

மிளகுநங்கை

மிளகுநங்கை miḷagunaṅgai, பெ.(n.)

   செடிவகை (М.М.562);; pepper {}, Polygala chinensis.

     [மிளகு + நங்கை.]

மிளகுநீர்

 மிளகுநீர் miḷagunīr, பெ.(n.)

மிளகுத் தண்ணீர் பார்க்க; see {}.

     [மிளகு + நீர்.]

மிளகுபட்டினி

 மிளகுபட்டினி miḷagubaṭṭiṉi, பெ.(n.)

   மகப்பேறு வேண்டிச் சில மிளகு மட்டும் உட்கொண்டு பசிபொறுத்திருக்கும் நோன்பு; a fast which consists in taking only a few grains of pepper as food, undertaken by a childless person with a view to be blessed with a child.

     [மிளகு + பட்டினி.]

மிளகுப்பட்டுமணி

 மிளகுப்பட்டுமணி miḷaguppaṭṭumaṇi, பெ.(n.)

   கழுத்தணி வகை (பரவ.);; kind of necklace.

மிளகுப்புளிப்பு

 மிளகுப்புளிப்பு miḷaguppuḷippu, பெ. (n.)

   எலுமிச்சைச் சாறு கலந்த மிளகு ஊறுகாய்; pepper pickle in the juice of lime (சா.அக.);.

     [மிளகு + புளிப்பு.]

மிளகுப்பெட்டி

 மிளகுப்பெட்டி miḷaguppeṭṭi, பெ.(n.)

   அஞ்சறைப் பெட்டி (இ.வ.);; box of condiments.

     [மிளகு + பெட்டி.]

மிளகுப்பொடி

மிளகுப்பொடி miḷaguppoḍi, பெ.(ո.)

   1. மிளகுத்துள் (தெ.இ.கல்.தொ.2:127);; powdered pepper.

முட்டை அடையில் மிளகுத் பொடியைத் தூவிக் கொடு.

   2. மிளகும் சீரகமும் உப்புங் கலந்து சோற்றோடு உண்ண உதவும் பொடி; powdered pepper with cumin and salt used as a relish.

     [மிளகு + பொடி.]

மிளகுரசம்

 மிளகுரசம் miḷagurasam, பெ.(n.)

மிளகுத் தண்ணீர் பார்க்க; see {}.

     [மிளகு + Skt. ரசம்.]

மிளகுவட்டம்

 மிளகுவட்டம் miḷaguvaṭṭam, பெ.(n.)

   கழுத்தணி வகை (பரவ.);; a kind of necklace.

     [மிளகு + வட்டம். மிளகு போல் செய்யப்பட்ட உருக்களையுடைய கழுத்தணி.]

     [p]

மிளகுவல்லி

 மிளகுவல்லி miḷaguvalli, பெ.(n.)

   மிளகுக் கொடி; pepper creeper Piper nigrum (சா.அக.);.

     [மிளகு + வல்லி. வல்லி = கொடி.]

மிளகெண்ணெய்

 மிளகெண்ணெய் miḷageṇīey, பெ. (n.)

மிரியாதியெண்ணெய் பார்க்க; see {}.

     [மிளகு + எண்ணெய். மிளகை முதன்மையாகக் கொண்டு செய்யப்படும் மருந்தெண்ணெய்.]

மிளகெலி

மிளகெலி miḷageli, பெ. (n.)

   மிளகுக் கொடிகளைக் கடித்தழிக்கும் எலி வகை (M.M.676);; pepper rat as damaging pepper vine.

     [மிளகு + எலி.]

மிளகோதனம்

மிளகோதனம் miḷaātaṉam, பெ.(n.)

மிளகுச்சோறு (பதார்த்த.1404); பார்க்க; see {}.

     [மிளகு + ஒதனம். ஒதனம் = சோறு, உணவு.]

மிளகோரை

மிளகோரை miḷaārai, பெ. (n.)

மிளகுச் சோறு பார்க்க; see {}.

     [மிளகு + ஒரை3. ஒரை = சோறு.]

மிளப்பு

 மிளப்பு miḷappu, பெ.(n.)

   இலவங்கம் (சங். அக.);; wild cinnamon.

மிளம்பர்

 மிளம்பர் miḷambar, பெ. (n.)

   மீன் வயிற்றி லிருந்து பெறப்படும் அம்பர் எனும் ஒரு வகை மணப்பொருள்; ambergris.

மறுவ. ஒர்க்கோவை, ஒக்கோவை

     [மீன்+அம்பர்]

மிளாறு

 மிளாறு miḷāṟu, பெ.(n.)

   சவுக்கு, புளி முதலிய மரத்தின் வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள இளங்கொம்பு; the flexible twig of certain trees, such as tamarind.

மாணவன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக இப்படியா புளிய மிளாறினால் அடிக்க வேண்டும்.

     [வளாறு → மிலாறு → மிளாறு.]

மிளிர்

மிளிர்1 miḷirtal,    2 செ.கு.வி.(v.i.)

   1. புரளுதல்; to turn, roll, as eyes.

     “மீநில மெய்தி மிளிர்ந்துருகா” (சீவக. 1384);.

     “கெண்டை யொண்கண் மிளிர” (திவ். பெரியதி.3, 7:2);.

   2. கீழ்மேலாதல்; to be upset,

 to be turned topsy turvy.

     “உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி” (பெரும்பாண்.92);.

   3. குதித்தல்; to jump. “மிளிர்ந்துவீ ழருவியும்” (சீவக. 148);.

   4. ஒளிர்தல்; to shine, gleam.

     “மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே” (திருவாச.1: 38);.

   5. பெருமை யடைதல் (வின்.);; to become famous.

     [முல் (மில்); → மின் → மின்னல். (மில்); வில் = ஒளி, முல் → முள் → மள் → மண் → மணி = விளங்கும் கல். முள் → (மிள்); → மிளிர் = ஒளிர்தல் (மு.தா.ப.139);.]

 மிளிர்2 miḷirttal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. புரட்டுதல்; to roll, turn over.

     “மால்வரை மிளிர்க்கு முருமினும்” (நற்.2);.

   2. கீழ் மேலாக்குதல்; to upset.

     “பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கன பெயல்” (கலித்.45);.

     [மிளிர்1 தல் → மிளிர்2 த்தல்.]

 மிளிர்3 miḷir, பெ.(n.)

   1. ஒளி (ஆ.நி.8:11);; light, spledndour.

   2. பெருமை (யாழ்.அக.);; greatness.

     [மிளிர்2. → மிளிர்3.]

மிளிர்வை

மிளிர்வை miḷirvai, பெ. (n.)

   குழம்பிலிடுங் கறித்துண்டு; pieces of flesh and vegetables in sauce.

     “கருங்கண் வராஅற் பெருந்தடி மிளிர்வை யொடு” (நற்.60);.

     [மிளிர் → மிளிர்வை.]

மிளிறு

மிளிறு miḷiṟu, பெ.(n.)

   1. கரடி (சது.);; bear.

   2. காகம்புல்; a grass.

மிளிறை

 மிளிறை miḷiṟai, பெ.(n.)

   அரிவாள் மூக்குப் பூண்டு; billhook nose.

மிளை

மிளை miḷai, பெ.(n.)

   1. காவற்காடு; wood, forest, serving as a defence.

     “செல்லா வருமிளை புகுமின்” (சீவக. 1142);.

   2. குறுங்காடு; thicket copse.

     ” அருமிளைக் குண்டகழி” (பு.வெ.6:5);.

   3. சிறுதூறு:

 bush.

     “முயறுளர் மிளை முயறுள” (திவ். பெரியதி. 8.7:3);.

   4. கட்டுவேலி (சிலப்.13:183, உரை);; fenced enclosure.

   5. காவல்; guard, watch,

     “மிளைசூழ் கோவலர்” (மலைபடு. 409);.

   6. ஊர்ப்பெயர்; a village name.

க. மிளே.

     [மிடை → மிளை. மிடை = தூறு.]

மிளைகிழான்நல்வேட்டனார்

மிளைகிழான்நல்வேட்டனார் miḷaigiḻāṉnalvēṭṭaṉār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a {} poet.

     [மிளை + கிழான் + நல்வேட்டனார். மிளை என்பது ஊர்ப்பெயர்.]

நல்வேட்டனார் என்று வேறு அடையின்றியும் இவர் பெயர் காணப்படுகின்றது. வேளாண் மரபினர். இவர் பேய்க் காஞ்சியைத் தலைமகன் தனக்கு உவமை கூறியதாகப் பாடியுள்ளார் (நற்.349);. இவர் ஐந்து திணையையும் பாடுவதில் வல்லவர். அடைக்கலமாக

வந்தோர்க்கு ஏற்படும் துன்பத்தைப் போக்குவதே செல்வம் எனப்படும். ஏனையச் செல்வம் தவப்பயனால் எய்துவன வாமென்கிறார் (நற்.210);. நற்றிணையில் 4 பாடல்களும் குறுந்தொகையில் 1 பாடலும் இவர் பாடியவையாகும்.

     “பல்வீ படரிய பசுநனைக் குரவம்

பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச்

சினையினி தாகிய காலையுங் காதலர்

பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்

கண்ணிய ஆண்மை கடவ தன்றென

வலியா நெஞ்சம் வலிப்ப

வாழ்வேன் தோழியென் வன்க னானே” (குறுந். 341);.

மிளைக்கந்தனார்

மிளைக்கந்தனார் miḷaikkandaṉār, பெ.(n.)

   குறுந்தொகை 196ஆம் பாடலைப் பாடிய கழகக் காலப் புலவர்; a {} poet.

     [மிளை + கந்தனார்.]

இவரின் இயற்பெயர் கந்தனார். மிளை என்னும் ஊரினைச் சேர்ந்தவராதலின் மிளைக் கந்தனார் என வழங்கப்பட்டார். பாரி வள்ளலின் பறம்புமலையின் சுனைநீரைப் பற்றிப் பாடியுள்ளதால் பாரியின் காலத்தைச் சேர்ந்தவராகலாம்.

     “வேம்பின் பைங்காயென் தோழி தரினே

தேம்பூங் கட்டி யென்றனிர் இனியே

பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்

தைஇத் திங்கட் டண்ணிய தரினும்

வெய்ய உவர்க்கும் என்றனிர்

ஐய அற்றால் அன்பின் பாலே” (குறுந்.196);.

மிளைப்பெருங்கந்தனார்

மிளைப்பெருங்கந்தனார் miḷaipperuṅgandaṉār, பெ.(n.)

   கழகக் காலப் புலவர்; a thamizhkkazhagam poet.

     [மிளை + பெரும் + கந்தனார்.]

காமத்தின் இயல்பை குறுந்தொகை 136, 204, 234 ஆகிய பாடல்களில் அழகாக எடுத்தியம்பும் பாங்கு போற்றுதற்குரியது.

     “சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்து

எல்லுறு பொழுதின் முல்லை மலரும்

மாலை என்மனார் மயங்கி யோரே

குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும்

பெரும்புலர் விடியலும் மாலை

பகலும் மாலை துணையிலோர்க்கே” (குறுந்.234);

மாலைக் காலத்தில் மட்டுமே காமநோய் மிகுதியாக வருத்தும். காதலர் பிரிந்து தமியராயினார்க்கு எல்லாச் சிறுபொழுதும் மாலைக்காலம் போன்றே நோயை மிகுவிக்கும் என்பது கருத்து. மிளைக் கந்தனரும் இவரும் வேறுவேறு என்றும் கூறப்படுகிறது.

மிளைவேள்தித்தனார்

மிளைவேள்தித்தனார் miḷaivēḷtittaṉār, பெ.(n.)

   குறுந்தொகை 284ஆம் பாடலைப் பாடிய கழகக் காலப் புலவராவார்; a {} poet.

     [மிளை + வேள் + தித்தனார்.]

     “பொருத யானைப் புகாமுகங் கடுப்ப

மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்

ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்

அறவ னாயினும் அல்ல னாயினும்

நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ

வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி

கொன்னிலைக் குரம்பையின் இழிதரும்

இன்னா திருந்தஇச் சிறுகுடி யோரே” (குறுந்.284);

இவர் உழுவித்துண்ணும் வேளாண் மரபைச் சேர்ந்தவர்.

மிழறு-தல்

மிழறு-தல் miḻṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

மிழற்றுதல் பார்க்க; see {}.

     [முழா → மிழா (வே.க.முல்.4);.]

மிழற்றல்

மிழற்றல் miḻṟṟal, பெ.(n.)

   1. சொல்லுகை (சூடா.);; speaking.

   2. மிழலை1 பார்க்க (யாழ்.அக.);; see {}.

   3. பேசுவதால் எழும் மொழி (யாழ்.அக.);; noise of speaking.

     [மிழற்று → மிழற்றல்.]

மிழற்று-தல்

மிழற்று-தல் miḻṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. மழலைபோல் இனிமையாகப் பேசுதல்; to prattle as a child.

     “பண்கள் வாய்மிழற்றும்” (கம்பரா.நாட்டு.10);.

   2. மெல்லக் கூறுதல்; to speak softly.

     “யான் பலவும் பேசிற் றானொன்று மிழற்றும்” (சீவக. 1626);.

மிழலை

மிழலை1 miḻlai, பெ.(n.)

   மழலைச் சொல் (சூடா.);; prattle, lisp.

     [மிழற்று → மிழலை. மிழற்றுதல் = மழலைச் சொல் பேசுதல்.]

 மிழலை2 miḻlai, பெ.(n.)

மிழலைக்கூற்றம் பார்க்க; see {}.

     “புனலம் புதவின் மிழலையொடு” (புறநா.24);.

மிழலைக்கூற்றம்

மிழலைக்கூற்றம் miḻlaikāṟṟam, பெ.(n.)

   சோணாட்டின் ஒரு பகுதி (புறநா.24, உரை);; a division of {}.

     “மிழலைக் கூற்றத்து வடபாம்பாற்றுச் சுந்தர பாண்டிய நல்லூர் சிறுவம்பூர்” (தெ.கல்.தொ.5, கல். 987);.

     [மிழலை + கூற்றம்.]

தஞ்சை, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த பகுதி மிழலைக் கூற்றம். இது வேள்எவ்வி ஆண்ட பகுதி. பாண்டி நாட்டின் இராசேந்திர சோழ வளநாட்டின் உட்பிரிவுகளுள் ஒன்று.

மிழலைச்சதகம்

மிழலைச்சதகம் miḻlaiccadagam, பெ.(n.)

   16ஆம் நூற்றாண்டில் சர்க்கரைப் புலவர் மிழலை நாட்டின் பெருமையைப் பற்றிப் பாடிய சதகம்; a sadagam on the greatness of {}, by Cakkarai pulavar.

     [மிழலை2 + சதகம். சதகம் = 100 பாடல்கள் கொண்ட சிற்றிலக்கிய வகை.]

மிழலைநாடு

மிழலைநாடு miḻlaināṭu, பெ.(n.)

   பழந்தமிழ்ச் சோழ நாடுகளுள் ஒன்று; an ancient {} country in Tamil nadu.

     “வடகரை மிழலை நாடு” (திருவிசலூர் கல்வெட்டு. தெ.கல். தொ.23, கல்.22);. “நீதி வழுவா நெறியினராய் நிலவுங் குடியால் நெடுநிலத்து மீது விளக்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை” (பெரியபு.23:1);.

     [மிழலை + நாடு.]

கும்பகோணம் வட்டத்தின் கிழக்குப் பகுதியில் காவிரியின் வடகரையிலுள்ள சோழபுரம், சேய்ஞ்ஞலூர், திருவாய்பாடி மிழலை, திருத்தேவன்குடி ஆகிய ஊர்களடங்கிய பகுதி மிழலை நாடாகும். மிழலைநாடு பற்றிய தமது ஆய்வில் அறிஞர் ஒருவர் இராசேந்திர சிங்க வளநாடு என்பது காவிரியாற்றின் வடகரையில் இருந்த ஒரு பெரிய நிலப்பரப்பாகும். இவ் வளநாட்டில் 20 உள்நாடுகள் இருந்தன என்றும், அதில் ஒன்றே மிழலை நாடு என்றும், அம்மிழலை நாடு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டத்தில் காவிரியாற்றுக்கு வடக்கே மண்ணியாற்றின் தென்கரை வரையில் அமைந்திருந்ததோர் வளநாடு என உரைக்கிறார். மேலும் பெருமிழலை அந்நாட்டின் தலைநகர் என்றும் கழகக் காலத்தில் (சங்க காலத்தில்); சுட்டப்படும் மிழலைக் கூற்றம் பாண்டிய நாட்டுப் பகுதி என்பது இவர் எண்ணம் (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு23, பக்.163:66);.

மிழா

மிழா miḻā, பெ.(n.)

   பருத்த ஆண்மான்; stag, male of red deer or of other large kinds of deer.

     [முழா → மிழா (வே.க.முல்.4);.]