செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
மா

மா1 mā, பெ.(n.)

   மகரமெய்யும் ஆகார உயிரும் சேர்ந்த உயிர்மெய் நெட்டெழுத்து; the compound of m and a.

     [ம் + ஆ – மா.]

 மா2 mā, பெ.(n.)

   இயற்சீர் இறுதியிலுள்ள நேரசையைக் குறிக்கும் சொல்; symbolic expression for {}, ending an {}

மாமுன் நிரையும் விளமுன் நேரும்.

 மா3 mā, பெ.(n.)

   1. பெருமை; greatness.

     “அங்கண் மாஞாலம்” (நாலடி, 148);.

   2. வலி (பிங்.);; strength.

 மா4 mā, கு.பெ.எ.(adj.)

   1. ஒருவரின் அல்லது ஒன்றின் நல்ல, கெட்ட குணங்களை மிகுதிப்படுத்தும் பெயரடை; an adjective indicating the highest degree of anything good or bad.

   2. பெரிய; extensive.

   3. மிகவும்; very.

 மா5 mā, பெ.(n.)

   மாமரம் (பிங்.);; mango tree.

 மா6 mā, பெ.(n.)

   அழைக்கை (பிங்.);; calling, call.

 மா7 māttal, பெ.(n.)

   அளத்தல்; to measure.

மான் – மா. மாத்தல் = அளத்தல். இவ் வினை இன்று வழக்கற்றது. ஆயின், மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர் 1/20 என்னும் கீழ்வாயிலக்கத்தைக் குறித்து வழங்குகின்றது. அதனால், நிலவளவையில் ஒரு வேலியின் 1/20 பாகம் மா எனப்படுகின்றது. “மாநிறை வில்லதும் பன்னாட்காகும்” (புறம்.184); என்பது, இதன் தொன்றுதொட்ட வழக்கை யுணர்த்தும்.

 மா8 mā, பெ.(n.)

   1. விலங்கு; animal, beast.

     “மாவும் மாக்களுமையறி வினவே” (தொல். பொருள்.587);.

   2. குதிரை; horse.

     “அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா” (குறள், 814);.

   3. யானை (அக.நி.);; elephant.

   4. குதிரை, பன்றி, யானைகளின் ஆண் (சூடா.);; male of horse, pig, elephant.

   5. மடங்கலோரை (சூடா.);; leo of the zodiac.

   6. வண்டு; bee.

     “மாவுடைத் தார்” (பு.வெ.6-7 கொளு);.

   7. அன்னம்; swan.

     “மடநடை மாயினம்” (கலித்..92:17);.

   8. விலங்கு வடிவமாய்ப் பிறக்கும் மானுடம்; human being born with the shape of an animal,

     “மாவு மருளு முளப்பட வாழ்நர்க் கெண் பேரெச்சம்” (புறநா:28);.

 மா9 mā, பெ.(n.)

   1. சீலை, துணி (அக.நி.);; cloth.

   2. ஆணி (அக.நி.);; nail.

 மா10 mā, பெ.(n.)

   துன்பம் பொறுக்கை (அரு.நி.);; bearing with patience.

 மா11 mā, பெ.(n.)

   வெறுப்பு (சூடா.);; dislike, disquest.

 மா12 mā, இடை.(part.)

   ஓர் அசைச் சொல்; an expletive.

     “விளிந்தன்று மாதவ” (நற்.178);.

 மா13 mā, பெ.(n.)

   1. திருமகள்; Tirumagal.

     “மாமறுத்த மலர்மார்பின்” (புறநா.7);.

   2. செல்வம் (யாழ்.அக.);; treasure.

   3. கலைமகள் (சங்.அக.);; Saraswathi.

 மா14 mā, பெ.(n.)

   ஒரு முகத்தல் அளவுக்கலம்; name of a measuring vessel.

     “மாத்தால் அறுகலமும்” (தெ.க.தெ.

   8.211-6).

 மா15 mā, பெ.(n.)

   1. மாற்று; degree of fineness of gold assayed by a touch – store.

     “ஒட்டறும் செம்பொன் னொக்கவொருமாவுங் குறையாமல்” (பெரிபு. ஏயர் கோன்.137);.

   2. ஒரு நிறை (தொல்.எழுத்து.170, உரை);; a measure of weight.

   3. கீழ்வாயிலக்கத்துளொன்று (பிங்.);; the fraction 1/20.

 மா16 mā, பெ.(n.)

   1. வயல் (பிங்.);; field.

   2. நிலம்; land, tract of land.

     “மருதமாவின் தலையன” (இரகு.நாட்டுப்.56);.

   3. இருபதில் ஒரு பகுதி கொண்ட நிலவளவை; a superficial measure 1/20 veli = 100 kuli.

     “மாநிறை வில்லதும் பன்னாட் காகும்” (புறநா.184);.

 மா17 mā, பெ.(n.)

   கானல் (அரு.நி.);; mirage.

 மா18 mā, பெ.(n.)

   1. அழகு; beauty.

     “மாவீழ் பள்ளி” (ஞானா. 10:6);.

   2. கருமை; blackness.

     “மாயிரும் பீலி” (சிலப்.2:53);.

   3. வண்ணம்; colour.

     “காமரு குவளைக் கழுநீர் மாமலர்”. (சிலப்.4:40);.

   4. மாமைநிறம்; paleness caused by love-sickness.

     “அம்மா வரிவை” (புறநா.147);.

 மா19 mā, பெ.(n.)

   1. அரிசி முதலியவற்றின் மாவு; flour, meal, dough, powder.

     “காயங் கொண்டன மாவிருந்து” (மலைபடு.126);.

   2. துகள்; dust.

     [மாவு → மா.]

 மா2௦ mā, பெ.(n.)

   நஞ்சுக்கொடி (வின்.);; after -birth.

தெ. மாவீ.

 மா21 mā, பெ.(n.)

   உறுதிமொழி; source of perception, authority.

     “தெளிந்ததெல்லாம் மாவென்று கொண்டு” (நீலகேசி.5);.

மாகக்கல்

 மாகக்கல் mākakkal, பெ.(n.)

   கானகக்கல் (யாழ்.அக.);; a kind of metallic ore.

மாகடம்பு

 மாகடம்பு mākaḍambu, பெ.(n.)

   நீண்ட செடி வகை (L.);; Indian lantana.

     [மா = பெரிய, நீண்ட. மா + கடம்பு.]

மாகட்டகம்

 மாகட்டகம் māgaṭṭagam, பெ.(n.)

   செந்நாயுருவி (சங்.அக.);; a kind of dog – prick.

மாகண்டம்

 மாகண்டம் mākaṇṭam, பெ.(n.)

   அதிகண்டம் (யாழ்.அக.);; a division of time.

மாகதமுருகி

 மாகதமுருகி māgadamurugi, பெ.(n.)

   மனமுருகி; a plant (சா.அக.);.

     [மாகதம் + உருகி.]

மாகதம்

மாகதம்1 mākadam, பெ.(n.)

   1. செங்குளவி; a red-beetle.

   2. சீரகம்; cumin (சா.அக.);.

     [மா + கதம்.]

 மாகதம்2 mākadam, பெ.(n.)

   1. மகதநாடு தொடர்பானது; that which pertains to Magadha or South Bihar.

   2. மகதம்; {}.

     “மாகதக் கொங்கர் கோமான்” (பாரத. பதினாறாம்.90);.

மாகதர்

மாகதர் mākadar, பெ. (n.)

   1. வடநாட்டிலுள்ள மகதநாட்டார். (யாழ்.அக.);; inhabitants of Magadha, in North India.

   2. தென் னாட்டுள்ள நடுநாடாகிய மகதநாட்டினர்;(msc);; inhabitants of {}.

   3. அரசர் திருமுன் இருந்து அவர் புகழ்பாடும் தொழிலினர் (சிலப் 5, 48.);; professional Minister’s who assuming a sitting posture in the presence of sovereigns sing their praises and exploits.

     [Skt. {} → த. மாகதர்.]

மாகதி

மாகதி mākadi, பெ. (n.)

   1. பிராகிருத மொழி வகை;{},

 a secondary {} language.

   2. திப்பிலி (மலை);; long pepper.

   3. முல்லைவகை (நாமதீப.346);; trichotomus – flowering smooth jasmine.

   4. ஊசிமுல்லை (பிங்.);; eared jasmine

   5. சீனிச்சருக்கரை (சங்.அக.);; sugar.

     [Skt. {} → த. மாகதி.]

மாகத்தார்

மாகத்தார் mākattār, பெ.(n.)

   1. மாகர் பார்க்க; see {}.

     “மாகத்தார் தேவிமாரும்” (கம்பரா.திருவடிதொழுத.66);.

   2. ஒரு குழுவினர் (தொல்.சொல்.167, உரை);; persons belonging to a particular class.

மாகத்தி

மாகத்தி1 mākatti, பெ.(n.)

   தில்லை மரம்; a tree (சா.அக.);.

     [மா + கத்தி.]

 மாகத்தி2 mākatti, பெ.(n.)

மாகந்தி, 1 பார்க்க; see {}.

மாகந்தி

மாகந்தி mākandi, பெ.(n.)

   1. நெல்லி (மூ.அ.);; emblic murobalan.

   2. அமுக்கிரா (சங்.அக.);; Indian winter cherry.

மாகந்திகம்

 மாகந்திகம் māgandigam, பெ.(n.)

   நெல்லி; a tree emblica officinalis (சா.அக.);.

     [மா + கந்திகம்.]

மாகம்

மாகம்1 mākam, பெ.(n.)

   எருக்கு; a milky shrub – calotropis gigantea (சா.அக.);.

 மாகம்2 mākam, பெ.(n.)

   1. மேலிடம்; upper space.

     “மாக மாடத்து” (கம்பரா. மிதிலைக். 83);.

   2. விண்; sky. air, atmosphere. “மாக

விசும்பின்” (புறநா.35);.

   3. திக்கு; point of the compass.

     “மாகநீள் விசும்பிடை” (சீவக. 569);.

   4. முகில் (சீவக.569, உரை);; cloud.

 மாகம்1 mākam, பெ. (n.)

   கொடுநுகம் (மகம்); (விண்மீன்); (பிங்.);; the 10th naksatra.

     [Skt. {} → த. மாகம்1.]

 மாகம்2 mākam, பெ. (n.)

   1. மேலிடம்; upper space.

     ‘மாக மாடத்து’ (கம்பரா. மிதிலைக். 83.);

   2. வானம்; sky, air, atmosphere.

     ‘மாக விசும்பின்’ (புறநா.35);.

   3. மேல் உலகம்; svarga

     ‘மாகந் தொட நனி நிவந்த கொடி’ (ஞானா. 34,15);.

   4. திக்கு point of the compass.

     ‘மாகநீள் விசும் பிடை’ (சீவக. 569);.

   5. மேகம் cloud. (சீவக.569.உரை.);; cloud.

     [Skt. {}-kha → த. மாகம்.]

மாகயம்

 மாகயம் mākayam, பெ.(n.)

   செய்நஞ்சு (மூ.அ.);; a prepared arsenic.

மாகரணி

 மாகரணி mākaraṇi, பெ.(n.)

   கருங்குன்றி; black jewellers bead black variety of abrus-precatories (சா.அக.);.

     [மா + கரணி.]

மாகரி

 மாகரி mākari, பெ.(n.)

   ஆண்யானை (யாழ். அக.);; male elephant.

     [மா + கரி.]

மாகர்

மாகர் mākar, பெ.(n.)

   தேவர்; celestials.

     “மாகரந்தணர் மற்றுள மானுடர்” (உபதேசகா. சிவபுண்.15);.

 மாகர் mākar, பெ. (n.)

   தஞ்சாவூர் மாவட்டத் திலுள்ள உள்ள ஓர் ஊர்; a village in Thanjavur District.

     [மா(கறள்);+கா]

தற்போது இவ்வூர் மாகரல் என்று மருவியுள்ளது.

மாகறல்

மாகறல் mākaṟal, பெ.(n.)

   செங்கல்பட்டு மாவட்டத்தில் சேயாற்றின் கரையில் உள்ள ஊர்; a town on the banks of {} in the {} Dt.

     “மஞ்சுமலி பூம் பொழிலின் மயில்கண்ட மாடமலி மாகறலுளான” (பெரியபு.330,

   5. சம்பந்தர்); (இல.ஊ.பெ.);.

     [மா + அறல் → மாஅறல் → மாகறல். அறல் = மணல்.]

 மாகறல் mākaṟal, பெ. (n.)

   காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kanchipuram Taluk.

     [மா+(கறள்);கறல்]

மாகலூர்க்கிழான்

 மாகலூர்க்கிழான் mākalūrkkiḻāṉ, பெ.(n.)

   புறப்பொருள்வெண்பாமாலைக்கு உரை எழுதியவர்; commentator for {}.

மறுவ. சாமுண்டிதேவ நாயனார்.

     [மாகலூர் + கிழான்.]

மாகாணம்

மாகாணம் mākāṇam, பெ.(n.)

மாநிலம் பார்க்க; see {}.

     [மா + காணம். காணம் = கண்காணிக்கப்படுவது.]

 மாகாணம் mākāṇam, பெ. (n.)

   1. நாட்டுப் பகுதி; district, province.

   2. ஒரு வரியதி காரியின் (கர்ணத்தின்); ஆய்கையின் கீழ் உள்ள பல சிற்றூர்கள் அடங்கிய நாடு; division of a taluk, consisting of several villages, under the management of one karnam (R.F.);.

   3. மக்கள் கூட்டம்; group of dependants gathered for a common purpose.

     ‘ஆள் மாகாணம்’

     [U. {} → த. மாகாணம்.]

மாகாணி

மாகாணி1 mākāṇi, பெ.(n.)

   பட்டணம்படி என்ற பெயரில் வழங்கிய முகத்தல் அளவை; madras capacity measure.

     “மாகாணி அரிசி” (உ.வ.);.

 மாகாணி3 mākāṇi, பெ.(n.)

   பதினாறில் ஒன்றான கீழ்வாயிலக்கவெண்; the fraction 1/16, as a sum of {}.

மாகாதிமெழுகு

 மாகாதிமெழுகு māgātimeḻugu, பெ.(n.)

   அண்டமுடியினால் செய்யும் ஒரு மெழுகு; a wax like preparation prepared out of skull bone (சா.அக.);.

     [மாகாதி + மெழுகு.]

மாகாத்மியம்

 மாகாத்மியம் mākātmiyam, பெ. (n.)

மகிமை, greatness.

     [Skt. {}-mya → த. மாகாத்மியம்.]

மாகாலன்

 மாகாலன் mākālaṉ, பெ.(n.)

   சிவன்;{}.

மாகாளன்

மாகாளன் mākāḷaṉ, பெ. (n.)

   1. மகாசாத் தனுடைய தலைமைக் கணக்கன்; the chief attendant of {}.

     ‘வீர மாகாள னென்போன்’ (கந்தபு. மாகாளர்வரு.3);

   2. சிவகணத்தலைவரில் ஒருவன் (அபி. சிந்);,

 a commander of Siv’a’s hosts.

     [Skt. {} → த. மாகாளன்.]

மாகாளி

மாகாளி1 mākāḷi, பெ.(n.)

   1. கொற்றவை (பிங்.); {}.

   2. எழுவகைப் பெண்டிரு லொருத்தி; one of catta-{} q.v.

   3. களா வகை (தைலவ.தைல.);; a species of bengal currant.

     [மா = பெரிய. மா + காளி.]

 மாகாளி2 mākāḷi, பெ.(n.)

மாகாளிக் கிழங்கு பார்க்க; see {}.

மாகாளிக்கிழங்கு

 மாகாளிக்கிழங்கு mākāḷikkiḻṅgu, பெ.(n.)

   மலையில் விளையும் நன்னாரி வகை; a kind of sarsaparilla with tubers, growing in hilly tracts.

     [மாகாளி + கிழங்கு.]

மாகீர்த்தி

 மாகீர்த்தி māārtti, பெ.(n.)

   பாண்டியர்களின் சிறப்புப் பெயர்; name speciality of {} king.

     “போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின் கண்ணே” (தொல்.பாயி.உரை.);.

     [மா + கீர்த்தி.]

மாகு

மாகு māku, பெ.(n.)

   1. வலை; net.

     “மாகு சூழவுந் தப்பிய வரிநிறமா” (பாரத.நிரை.69);.

   2. வலையிற் கோத்தமணி; sinker attached to a net.

     “மாகுசேர் வலை” (பெரியபு.அதிபத்த.12);.

மாகுக்கி

 மாகுக்கி mākukki, பெ.(n.)

   பெருவயிறு; a big stomach (சா.அக.);.

     [மா = பெரிய. மா + குக்கி.]

மாகுஞ்சம்

 மாகுஞ்சம் mākuñjam, பெ.(n.)

   தேவதாரு; a kind of fragrant tree. eagle wood (சா.அக.);.

     [மா + குஞ்சம்.]

மாகுடி

மாகுடி mākuḍi, பெ.(n.)

   திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகப் பதிகத்தில் சுட்டும் சிவன் கோயில் உள்ள ஊர் (திருத்தாண்டகப் பதிகம்.285);; a town with Siva shrined, mentioned by {} in his {} – p-padigam.

     “புற்குடி மாகுடி தேவன்குடி நிலக்குடி” (தேவா. திருத்.285);.

மாகுட்டம்

 மாகுட்டம் mākuṭṭam, பெ.(n.)

   பெருங் குட்டம்; leprosy (சா.அக.);.

     [மா + குட்டம்.]

மாகுணத்தி

 மாகுணத்தி mākuṇatti, பெ.(n.)

   புளி கறணைக் கொடி; a creeper.

மாகுத்தம்

 மாகுத்தம் mākuttam, பெ.(n.)

   பூனைக்காலி எனும் செடிவகை; cowhage (சா.அக.);.

மறுவ. மாகுதி.

பூனைக்காலை யொத்ததாய் இருக்கும் ஒரு கொடி.

மாகுலர்

மாகுலர் mākular, பெ.(n.)

   வேடர் (நாமதீப. 156);; hunters, savages.

மாகுலவர்

 மாகுலவர் mākulavar, பெ.(n.)

மாகுலர் (சூடா.); பார்க்க; see {}.

     [மாகுலர் → மாகுலவர்.]

மாகுலி

மாகுலி mākuli, பெ.(n.)

   உயர் குடியிற் பிறந்தவன்; lady of noble birth.

     “மாகுலி மந்திர சண்டிகை” (திருமந்.1216);.

மாகேசம்

மாகேசம் māācam, பெ.(n.)

   வரிக்கூத்து வகை (சிலப்.3:13, உரை);; a masquerade dance.

மாகோசரி

 மாகோசரி māācari, பெ.(n.)

   பேராமல்லி; a species of jasmine (சா.அக.);.

     [மா + கோசரி.]

மாக்கசங்கு

 மாக்கசங்கு mākkasaṅgu, பெ.(n.)

   இந்துப்பு (சங்.அக.);; sodium chloride.

     [மா + கசங்கு.]

மாக்கடற்பிறந்தகோதை

 மாக்கடற்பிறந்தகோதை mākkaḍaṟpiṟandaātai, பெ.(n.)

   திருமகள்; Goddess {} (Lakshmi); as born out of the ocеап.

     [மா + கடல் + பிறந்த + கோதை.]

மாக்கடு

 மாக்கடு mākkaḍu, பெ.(n.)

மாக்கடுக்காய் பார்க்க; see {}.

     [மா + கடு. கடுக்காய் → கடு.]

மாக்கடுக்காய்

 மாக்கடுக்காய் mākkaḍukkāy, பெ.(n.)

   சூரத்துக் கடுக்காய் (தைலவ.தைல.);; a kind of myrobalan from Surat (சா.அக.);.

     [மா + கடுக்காய்.]

மாக்கடுங்கோன்

 மாக்கடுங்கோன் mākkaḍuṅāṉ, பெ. (n.)

   இறைப்பற்று மிகுந்த மன்னன்; pious king, king who indulges inspirituality. (பா.செ.ப.);

     “களைகட்ட மற்றிரண்டோண் மாக்கடுங் கோன் மான பேர்த்தளிய கோன்.”

     [மா+கடுங்கோன்]

மாக்கட்டு

 மாக்கட்டு mākkaṭṭu, பெ.(n.)

   மாவைக் கொண்டு கட்டுங் கட்டு; a soft pasty application made of flour.

     [மாவு → மா + கட்டு.]

     [p]

மாக்கனுடையாள்மூலி

 மாக்கனுடையாள்மூலி mākkaṉuḍaiyāḷmūli, பெ.(n.)

   சதுரக்கள்ளி; a species of euphorbia (சா.அக.);.

     [p]

மாக்கருவி

 மாக்கருவி mākkaruvi, பெ.(n.)

   குதிரைச் சேணம் (சது.);; saddle.

     [மா + கருவி. மா = விலங்கு, குதிரை.]

     [p]

மாக்கல்

மாக்கல் mākkal, பெ.(n.)

   1. எழுத்துக்குச்சி முதலிய செய்தற்குரிய கல் (கொ.வ.);; potstone, greyish blue soft stone used for making pots, slate – pencils, etc.

   2. சவுக்காரக் கல் (வின்.);; soap stone.

     [மாவு → மா + கல்.]

 மாக்கல் mākkal, பெ. (n.)

   சிற்பம் செய்யப் பயன்படுகின்ற ஒரு வகைக் கல்; a steatite stone variety.

     [மாவு+கல்]

மாக்களிக்கட்டு

 மாக்களிக்கட்டு mākkaḷikkaṭṭu, பெ.(n.)

   மாவைக் களியாகச் செய்து புண், கட்டி இவற்றின் மீது வைத்துக் கட்டுகை; a soft pasty external application made by boiling any flour as basis with water.

     [மா + களி + கட்டு.]

மாக்கள்

மாக்கள் mākkaḷ, பெ.(n.)

   1. மாந்தர்; men, people, mankind.

     “தவத்துறை மாக்கள்” (மணிமே.6 97);. “கொலை வினையராகிய மாக்கள்” (குறள், 329);. “ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை” (மணிமே.);.

   2. பகுத்தறிவிலார்; persons wanting in discrimination.

     “மாவு மாக்களு மையறிவினவே” (தொல்.பொருள்.587);. “செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்” (குறள், 420);.

   3. குழந்தைகள்; children.

     “தத்தமாக்களைத் தம்படையாற் சிலர் தடிந்தார்” (கம்பரா. கிங்கர.42);.

மாக்கள்பத்தோன்

மாக்கள்பத்தோன் mākkaḷpattōṉ, பெ.(n.)

   வெள்ளிகோள் (நாமதீப.101);; the planet Venus.

மாக்கா

மாக்கா mākkā, பெ.(n.)

   குதிரைப் பற்களின் நிறவேறுபாடுகளிலொன்று (அகவசா.6);; a colour of horse’s teeth.

மாக்கான்

மாக்கான்1 mākkāṉ, பெ. (n.)

பெருந்தவளை,

 a big frog.

மறுவ மொக்கான்

     [மா-மாக்கு-மாக்கான்]

 மாக்கான்2 mākkāṉ, பெ. (n.)

   பேதை; fool. (கொ.வ.வ.சொ.122);.

     [மாக்கள்-மாக்கன்]

மாக்காப்பு

 மாக்காப்பு mākkāppu, பெ.(n.)

   தெய்வத் திருமேனிக்குச் சாத்தும் அரிசிமாச் சாத்துப்படி; rice flour mixed with water, used in the ceremonial bath of an idol.

     [மாவு → மா + காப்பு.]

மாக்குசம்

 மாக்குசம் mākkusam, பெ.(n.)

   தேன்; honey (சா.அக.);.

மாக்குச்சி

 மாக்குச்சி mākkucci, பெ.(n.)

   கல்லேட்டில் எழுதப் பயன்படும் குச்சி வடிவக் கல் (சிலேட்டுக்குச்சி);; pencil like stone to write with on a slate.

     [மா+குச்சி]

மாக்குமாக்கெனல்

மாக்குமாக்கெனல் mākkumākkeṉal, பெ.(n.)

   1. கதறும் ஒலிக்குறிப்பு; sobbing violently.

     “மாக்கு மாக்கென்று கதறும்” (மாட்டுவா.49);.

   2. வலிமையோடு செய்தற்

   குறிப்பு; doing anything violently,

     “மாக்குமாக்கென்று இடித்தான்” (உ.வ.);.

     [மாக்கு + மாக்கு + எனல் (மாக்கு = ஒலிக்குறிப்புச் சொல்);.]

மாக்குளித்தல்

 மாக்குளித்தல் mākkuḷittal, பெ.(n.)

   மகளிர் விளையாட்டு வகை (வின்.);; a kind of girl’s play.

மாக்கூடம்

 மாக்கூடம் mākāṭam, பெ.(n.)

   பல்; tooth.

மாக்கொடி

 மாக்கொடி mākkoḍi, பெ.(n.)

   பெரிய கொடி; large climber.

     [மா = பெரிய. மா + கொடி.]

மாக்கோதை

மாக்கோதை1 mākātai, பெ.(n.)

   கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைத்த வெள்ளிக் காசில் உள்ள பெயர்; name found on the silver coin collected from {} river bed.

     [மா + கோதை – மாக்கோதை.]

கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை (புறநா.245);யின் நாணயமாக இருக்கலாம். சேரமான் கோக்கோதை மார்பன் (அகநா.346); சேரமான் குட்டுவன்கோ (புறநா.54); போன்ற பல மன்னர்கள் கோதை என்ற பொதுப்பெயர் பெற்றுள்ளனர் (அளக்குடி.தமிழகத் தொல்லியல் சான்றுகள்);.

 மாக்கோதை2 mākātai, பெ.(n.)

   ஒரு சேர அரசன் பெயருடன் வெளியிட்ட நாணயங்கள்; coins of a {} king, with name engraved.

     “கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை” (புறநா.245);.

மாக்கோதை என்று பெயர் பொறித்த ஏழு நாணயங்களும் 3 முத்திரைகளும் கிடைத்துள்ளன. நாயனங்களில் எழுத்துகள் நேர் வடிவிலும்,

முத்திரைகளில் இடவலமாறியும் உள்ளன. அரசனின் தலை பொறிக்கப்பட்டுள்ளது. வெள்ளி நாணயங்கள், வட்ட வடிவம். சுமார் 1.9 செ.மீ. விட்டம், எடை

   2. 1 கிராம். மெல்லிய தகட்டில் அழுத்திய முறையில் செய்யப்பட்டது. கி.மு.100 முதல் கி.பி.100 வரை ஆன காலமாக இருக்கலாம்.

     [p]

மாக்கோலம்

 மாக்கோலம் mākālam, பெ.(n.)

   நீர் சேர்த்த அரிசிமாவால் தரையிலிடும் கோலங்கள்; decorative drawings on the floor with rice flour mixed with water.

     [மாவு → மா + கோலம்.]

மாங்கடை

 மாங்கடை māṅgaḍai, பெ. (n.)

   அரூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Harur Taluk.

     [மா(மாமரம்);+கடை]

மாங்கன்

மாங்கன்1 māṅgaṉ, பெ.(n.)

   படகின் முற்பாகம் போன்ற வடிவுள்ள மீன் வகை (யாழ்ப்.);; a fish that resemble the prow of a boat.

 மாங்கன்2 māṅgaṉ, பெ.(n.)

மாங்காய் பார்க்க; see {}.

மாங்கன்று

 மாங்கன்று māṅgaṉṟu, பெ.(n.)

   மாஞ்செடி (வின்.);; young mango plant.

     [மா + கன்று.]

மாங்கரியான்

 மாங்கரியான் māṅgariyāṉ, பெ.(n.)

   குப்பைமேனி; rubbish plant (சா.அக.);.

மாங்கலியசூத்திரம்

மாங்கலியசூத்திரம் māṅgaliyacūttiram, பெ. (n.)

   1. தாலிச்சரடு (சிலப். 1, 47, அரும்.);; the cord of the marriage-badge.

     [Skt. {} → த. மாங்கலியசூத்திரம்.]

மாங்கலியப்பிச்சை

 மாங்கலியப்பிச்சை māṅgaliyappiccai, பெ. (n.)

   தான் தாலியுடன் வாழும் வகையில் தன் கணவனுயிரைக் காக்குமாறு ஒருத்தி வேண்டுகை; intercession of a wife for the life of her husband, as pleading for the retention of her tali.

     [Skt. {} → த. மாங்கலியபிச்சை.]

மாங்கலியம்

மாங்கலியம் māṅgaliyam, பெ. (n.)

   தாலி (சிலப். 2, 63 உரை.);; marriage badge.

     [Skt. {} → த. மாங்கலியம்.]

மாங்காயிஞ்சி

 மாங்காயிஞ்சி māṅgāyiñji, பெ.(n.)

   மாங்காய் போன்று மணமுள்ள இஞ்சி; ginger smelling like mango fruit.

     [மா → மாங்காய் + இஞ்சி.]

மாங்காயீரல்

 மாங்காயீரல் māṅgāyīral, பெ.(n.)

   சிறு நீரகம்;     [மாங்காய் + ஈரல்.]

ஈரல் போன்று மென்மையாயும் மா போன்று வடிவுடையதாயுமிருப்பதால் இவ்வாறழைக்கப்பட்டு இருக்கலாம்.

மாங்காய்

மாங்காய் māṅgāy, பெ.(n.)

   1. மாவின் காய்; unripe mango fruit.

     “மாங்காய் நறுங்கடி கூட்டுவேம்” (கலித்.109, 23);.

   2. நடுவில் வைரமும் சுற்றிப் பதினொரு சிவப்புக் கல்லும் பதித்துச் செய்த கழுத்தணி யுறுப்பு வகை; a mango – shaped ornamental piece in a necklace, consisiting of a central diamond surrounded by eleven rubies.

   3. விலங்குகளின் விரைக்காய் (இ.வ.);; testicle of quadrupeds.

   4. விலங்குகளின் சிறுநீரகம்; kidney of quadrupeds.

     [மா + காய்.]

மாங்காய்நாண்

மாங்காய்நாண் māṅgāynāṇ, பெ.(n.)

மாங்காய்மாலை பார்க்க (S.I.I.ii, 93, 28);; see {}.

     [மா → மாங்காய் + நாண். மாவினது காய் வடிவில் செய்யப்பட்ட அணி.]

மாங்காய்ப்பட்டடை

 மாங்காய்ப்பட்டடை māṅgāyppaḍḍaḍai, பெ.(n.)

   காலணி வகை (mod.);; a kind of ankle ornament.

     [மா → மாங்காய் + பட்டடை.]

மாங்காய்ப்பால்

மாங்காய்ப்பால்1 māṅgāyppāl, பெ.(n.)

   பாலோடு முப்பழமும் சர்க்கரையுஞ் சேர்த்துக் காய்ச்சிய சாறு; boiled mixture of milk, three kind of fruits and sugar.

     [மா → மாங்காய் + பால்.]

 மாங்காய்ப்பால்2 māṅgāyppāl, பெ.(n.)

மாங்காய்ப்பிசின் பார்க்க; see {}.

மாங்காய்ப்பிசின்

 மாங்காய்ப்பிசின் māṅgāyppisiṉ, பெ.(n.)

   மாமரத்தின் பிசின்; a gum of mango tree (சா.அக.);.

     [மா → மாங்காய் + பிசின்.]

மாங்காய்ப்பிஞ்சு

 மாங்காய்ப்பிஞ்சு māṅgāyppiñju, பெ.(n.)

மாவடு பார்க்க; see {} (சா.அக.);.

     [மா → மாங்காய் + பிஞ்சு.]

மாங்காய்ப்பூட்டு

 மாங்காய்ப்பூட்டு māṅgāyppūṭṭu, பெ.(n.)

   பூட்டு வகை; a kind of padlock (C.E.M.);.

     [மா → மாங்காய் + பூட்டு.]

மாங்காய்மாலை

 மாங்காய்மாலை māṅgāymālai, பெ.(n.)

   மாங்காய் வடிவமான உருக்கள் சேர்த்த கழுத்தணி; necklace containing mango shaped pieces.

     [மா → மாங்காய் + மாலை.]

     [p]

மாங்காய்வற்றல்

 மாங்காய்வற்றல் māṅgāyvaṟṟal, பெ.(n.)

   உப்பில் ஊறவைத்து உலர வைத்த மாவடு; dried pieces of salt pickled mango.

     [மா → மாங்காய் + வற்றல்.]

மாங்கிசக்கல்

 மாங்கிசக்கல் māṅgisakkal, பெ.(n.)

   மருந்து வகையில் ஒன்று; one of the mineral stones (சா.அக.);.

மாங்கிசம்

மாங்கிசம் māṅgisam, பெ. (n.)

   இறைச்சி (மாமிசம்);; flesh;

 meat.

     ‘மாங்கிசத்துடனே விரவின சோறு’ (சிலப். 5, 68, அரும்.);

     [Skt. {} → த. மாங்கிசம்.]

மாங்கிளுவை

 மாங்கிளுவை māṅgiḷuvai, பெ.(n.)

   மாம்பூ; mango balsam (சா.அக.);.

மாங்கு

மாங்கு1 māṅgu, பெ.(n.)

   பாத்திகளில் படியும் தூள் உப்பு; a dry salt spread over the land part.

 மாங்கு2 māṅgu, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

 மாங்கு3 māṅgu, பெ.(n.)

   பிறந்த குழந்தையின் மேற் பற்றியிருக்கும் ஒரு வகைப் பசை (நாஞ்.);; the sticky coating over the body of a new born baby.

மாங்குடி

மாங்குடி māṅguḍi, பெ. (n.)

   திருநள்ளாற்றுக்கு வடமேற்கே 32 கல்தொலைவில் கொல்லுமாங் குடி என்னும் பெயருடன் உள்ளது; a village32 k.m. from Thirunallar.

     [மா(இன்);+குடி]

மாங்குடிமருதனார்

மாங்குடிமருதனார் māṅguḍimarudaṉār, பெ.(n.)

   தலையாலங்கானத்துச் செறுவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் புலவர் குழுவின் தலைவராக இருந்த பெரும்புலவர்; a great poet and chairman of the poets forum during period of {}.

     [மாங்குடி + மருதனார்.]

பத்துப் பாட்டில் ஆறாம் பாடல், அகநானூற்றில் 1, குறுந்தொகையில் 3, நற்றிணையில் 2, புறநானூற்றில் 6 ஆகிய பாடல்களின் ஆசிரியர்.

மாங்குப்பை

 மாங்குப்பை māṅguppai, பெ. (n.)

   ஓமலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Omalur Taluk.

     [மா(மாமரம்+குப்பம்-குப்பை(சிற்றுார்);]

மாங்குழி

 மாங்குழி māṅguḻi, பெ. (n.)

   கல்குளம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kalkulam Taluk.

     [மா+அம்+குழி]

மாங்கொட்டை

 மாங்கொட்டை māṅgoṭṭai, பெ.(n.)

   மாம்பழத்தின் விதை; mango seed.

     [மா + கொட்டை.]

மாங்கொட்டைப்பார்

 மாங்கொட்டைப்பார் māṅgoṭṭaippār, பெ.(n.)

   வெண் சிவப்பு நிறமுடைய கல் வகைகளுள் மிக்க வலுவுடைய ஒன்றாகும்; kind of stone formed under the ground in pale red colour (சா.அக.);.

     [மாங்கொட்டை + பார்.]

மாசகணி

 மாசகணி mācagaṇi, பெ.(n.)

   ஊதாப்பூ; cuspidate leaved jungle geranium (சா.அக.);.

மாசகதாசகம்

 மாசகதாசகம் mācagatācagam, பெ.(n.)

   பசப்புகை (இ.வ.);, குழைத்து செயல்படுத்திக் கொள்ளுதல்; coaxing.

     “மாசகதாசகம் பண்ணித் தன்கையிற் போட்டுக் கொண்டான்” (உ.வ.);.

தெ. மாசிகதாசிக.

மாசகந்தாயம்

 மாசகந்தாயம் mācagandāyam, பெ.(n.)

மாதகந்தாயம் பார்க்க; see {}.

     [மாதக்கந்தாயம் → மாசக்கந்தாயம்.]

மாசக்கடன்

 மாசக்கடன் mācakkaḍaṉ, பெ.(n.)

மாதக் கடன் பார்க்க; see {}.

     [மாதக்கடன் → மாசக்கடன்.]

மாசக்காயுப்பு

 மாசக்காயுப்பு mācakkāyuppu, பெ.(n.)

   உப்பு வகை (C.E.M.);; tannic acid (சா.அக.);.

மாசக்காய்

மாசக்காய் mācakkāy, பெ.(n.)

   1. மருந்துச் சரக்கு வகை; galls.

   2. செடி வகை; dyers oak.

   3. நீண்ட மரவகை; british oak (சா.அக.);.

மாசங்கம்

 மாசங்கம் mācaṅgam, பெ.(n.)

   மாதவிடாய் (வின்.);; menses.

மாசசிவராத்திரி

 மாசசிவராத்திரி māsasivarāttiri, பெ.(n.)

மாதசிவனிரா பார்க்க; see {}.

மாசச்சந்துக்கட்டு

 மாசச்சந்துக்கட்டு mācaccandukkaṭṭu, பெ.(n.)

மாதச்சந்துக்கட்டு பார்க்க; see {}.

மாசச்சித்திரம்

 மாசச்சித்திரம் mācaccittiram, பெ.(n.)

   வரகு; a millet (சா.அக.);.

மாசடி

 மாசடி mācaḍi, பெ.(n.)

   வால் மிளகு; cubebs (சா.அக.);.

மாசடையான்

மாசடையான் mācaḍaiyāṉ, பெ.(n.)

   1. வன்னி மரம்; suma tree – prosopis spicigera.

   2. கஞ்சா; narcotic leaves of a plant (சா.அக.);.

மாசதிசை

 மாசதிசை māsadisai, பெ.(n.)

மாததிசை பார்க்க; see {}.

     [மாததிசை → மாசதிசை.]

மாசதிர்

மாசதிர் mācadir, பெ.(n.)

   பெரிய வியப்பு; great wonder.

     “மாசதிரிது பெற்று” (திவ். திருவாய்.2, 7, 10);.

     [மா + சதிர்.]

மாசத்தி

மாசத்தி mācatti, பெ.(n.)

   1. கரு நொச்சி; a dark green ever green plant found in gardens in hedge row.

   2. பூநாகம்; a small snake in flowers specially of fragrant screw pine (சா.அக.);.

மாசத்துவம்

 மாசத்துவம் mācattuvam, பெ.(n.)

   மொச்சை; field bean.

மாசந்தினி

 மாசந்தினி mācandiṉi, பெ.(n.)

   சாம்பல் நிறச் செடிவகை; a ash coloured plant (சா.அக.);.

மாசனம்

மாசனம்1 mācaṉam, பெ.(n.)

   கஞ்சாவைக் கொண்டு செய்யும் ஒரு வகை மயக்கப் பொருள்; intoxicant prepared from Indian hemp.

 மாசனம்2 mācaṉam, பெ.(n.)

   1. மக்கள் தொகுதி; multitude of people.

     “மாசனங் கார்கெழு கடலெனக் கலந்த” (சீவக.828);.

   2. மந்திரி, போற்றாளி முதலியோர்; royal conunsellors including ministers and priests,

     “சிங்காசன மாசனஞ் சாதுரங்கம்” (திருநூற்.44);.

     [மா + சனம்.]

மாசப்பிசகு

 மாசப்பிசகு māsappisagu, பெ.(n.)

மாதப்பிசகு பார்க்க; see {}.

     [மாதப்பிசகு → மாசப்பிசகு.]

மாசப்பிரவேசம்

 மாசப்பிரவேசம் mācappiravēcam, பெ.(n.)

மாதவிடாய் பார்க்க; see {}.

மாசப்பிறப்பு

 மாசப்பிறப்பு mācappiṟappu, பெ.(n.)

மாதப்பிறப்பு பார்க்க; see {}.

     [மாதப்பிறப்பு → மாசப்பிறப்பு.]

மாசமாசம்

 மாசமாசம் mācamācam, பெ.(n.)

மாதாமாதம் பார்க்க; see {}.

     [மாதாமாதம் → மாசாமாசம் → மாசமாசம்.]

மாசம்

 மாசம் mācam, பெ.(n.)

மாதம் பார்க்க; see {}.

     [மாதம் → மாசம் (இ.வ.);.]

மாசயணி

 மாசயணி mācayaṇi, பெ.(n.)

   உடம்பிலே சிதைந்த அணுக்களை பிரித்து அரத்தத்திலே செலுத்துங் குழல்; lymphatics – lymphatic vessels (சா.அக.);.

மாசரம்

 மாசரம் mācaram, பெ.(n.)

   கஞ்சிமேற் படரும் மேல் ஏடு; the thin creame like coaling on the surface of the rice water (சா.அக.);.

மாசறு – தல்

மாசறு – தல் mācaṟudal,    15 செ.கு.வி.(v.i.) குற்றம் நீங்குதல்; to be blameless or spotless.

     “மாசற்றார் கோள்” (குறள், 311);.

     “மாசறு பொன்னே வலம்புரி முத்தே” (சிலப். 2:73);.

     [மாசு = குற்றம். மாசு + அறு-தல் = நீங்கு-தல்.]

மாசற்ற

மாசற்ற mācaṟṟa, பெ.(n.)

   1. அழுக்கில்லாத; without impurities.

   2. புடமிட்ட; calcined.

     [மாசு + அற்ற.]

மாசற்றகதலம்

 மாசற்றகதலம் mācaṟṟagadalam, பெ.(n.)

   இரும்பு; iron (சா.அக.);.

மாசற்றசோதி

 மாசற்றசோதி mācaṟṟacōti, பெ.(n.)

   சூடம், கற்பூரம்; camphor.

     [மாசற்ற + Skt. சோதி.]

 skt. ஜோதி → த. சோதி.

மாசற்றநீர்

 மாசற்றநீர் mācaṟṟanīr, பெ.(n.)

   பனிக் குடத்து நீர்; liquor amni a discharge in woman just before delivery.

     [மாசற்ற + நீர்.]

மாசற்றமலை

 மாசற்றமலை mācaṟṟamalai, பெ.(n.)

   நாக மலை; mountain containing zinc ore.

     [மாசற்ற + மலை.]

மாசற்றரூபி

 மாசற்றரூபி mācaṟṟarūpi, பெ.(n.)

   கற்பூரம்; Camphor (சா.அக.);.

     [மாசற்ற + உரூபி.]

மாசற்றலிங்கம்

 மாசற்றலிங்கம் mācaṟṟaliṅgam, பெ.(n.)

   கொண்டகச் சீலை; a kind of pure black stone without impurities used for making idols as lingam (சா.அக.);.

     [மாசற்ற + இலிங்கம்.]

மாசற்றவண்ணத்ததூள்

 மாசற்றவண்ணத்ததூள் mācaṟṟavaṇṇattatūḷ, பெ.(n.)

   ஏமமணல்; gold ore (சா.அக.);.

     [மாசற்ற + வண்ணத்தூள்.]

மாசற்றவண்ணம்

 மாசற்றவண்ணம் mācaṟṟavaṇṇam, பெ.(n.)

   அன்னபேதி; green vitriol – sulphate of iron (சா.அக.);.

     [மாசற்ற + வண்ணம்.]

மாசற்றவாளம்

 மாசற்றவாளம் mācaṟṟavāḷam, பெ.(n.)

   தூய்மை செய்த நேர்வாளம்; purified cotton seed (சா.அக.);.

     [மாசற்ற + வாளம்.]

மாசலன்

 மாசலன் mācalaṉ, பெ.(n.)

   கள்வன் (சங்.அக.);; thief.

மாசல்

 மாசல் mācal, பெ. (n.)

   மங்கலாகத் தெரியும் பார்வை; dim light vision,

     [மாசு-மாசல்]

மாசவிடாய்

 மாசவிடாய் mācaviṭāy, பெ.(n.)

மாதவிடாய் பார்க்க; see {}.

     [மாதம் → மாசம் + விடாய்.]

மாசாகை

மாசாகை mācākai, பெ. (n.)

   மரத்தின் முதன்மையான கிளை; prime branch of a tree, (தெ.கோ.சா.3:2);.

     [மா+சாகை]

மாசாதம்

 மாசாதம் mācātam, பெ.(n.)

   கூழ்; poridge semi liquid food.

     [மா + சாதம்.]

மாசாதி

 மாசாதி mācāti, பெ.(n.)

   ஆண் சாதி நான்கு வகையில் ஒன்று; one of four division of men.

     [மா + சாதி.]

மாசாத்தனார்

 மாசாத்தனார் mācāttaṉār, பெ.(n.)

   சிற்றுார்களில் உள்ள சிலை வடிவான அய்யனார் படிவங்களின் மூலவர்; the original source of Ayyanar in the form of terracotta or sudhai forms in the villages.

மாசாத்தன்

மாசாத்தன் mācāttaṉ, பெ.(n.)

ஐயனார் (சிலப்.9, 12, அரும்.);; {}

     [மா + சாத்தன்.]

மாசாத்துவன்

மாசாத்துவன் mācāttuvaṉ, பெ.(n.)

   வணிகருள் ஒரு குடியினர் (சிலப்.1:33, உரை);; a trading family.

மாசாத்துவான்

மாசாத்துவான் mācāttuvāṉ, பெ.(n.)

   சிலப்பதிகாரக் கதைத் தலைவன் கோவலனின் தந்தையார்; father of {}, the hero of silappathikaram.

     “வருநிதி பிறர்கர்ந்தும் மாசாத்துவான் என்பான் இருநிதிக் கிழவன்” (சிலப்.1:33, உரை);.

மாசாந்தம்

மாசாந்தம்1 mācāndam, பெ.(n.)

   பெரும் பொறுமை (வின்.);; great patience.

     [மா + சாந்தம். மா = பெரிய.]

 மாசாந்தம்2 mācāndam, பெ.(n.)

மாதாந்தம் பார்க்க; see {}.

     [மாதாந்தம் → மாசாந்தம் (கொ.வ.);.]

மாசாந்தரம்

 மாசாந்தரம் mācāndaram, வி.எ.(adv.)

   மாதந்தோறும் (கொ.வ.);; monthly, every month, per mensem.

     [மாதந்தோறும் → மாசந்தோறும் → மாசாந்தரம்.]

மாசாமாசம்

 மாசாமாசம் mācāmācam, பெ.(n.)

மாதா மாதம் (கொ.வ.); பார்க்க; see {}.

     [மாதாமாதம் → மாசாமாசம்.]

மாசாலம்

 மாசாலம் mācālam, பெ.(n.)

   ஒர் மாயக் காட்சி; a kind of magic.

மாசி

மாசி1 māci, பெ.(n.)

   1. முகில்; mist, cloud.

     “ஆதி சோவுடைமாசி யவனென” (பிரபுலிங். முனிவர. 19);.

   2. புது வரம்பு; new ridge of paddy field.

   3. கடல் மீன் வகை (இ.வ.);; a sea fish.

     [மாய் → மாயை → மயக்கம் – பொய்த்தோற்றம். மாயை → மாசி – மயக்கத் தோற்றம், மங்கிய தோற்றம், காட்சியை மங்கலாக்கும் முகில்.]

 மாசி2 māci, பெ.(n.)

   1. பதினோராம் மாதம்; the 11th solar month – February – March.

     “மாசிநின்ற மாகூர் திங்கள்” (பதிற்றுப்.59, 2);.

   2. மகம்2 (சிலப்.3, 123, உரை); பார்க்க; see magam.

முகில்கள் அடர்ந்து காட்சியை மங்கலாக மயங்கத் தெரியும் மாதம்.

 மாசி3 māci, பெ.(n.)

   ஒரு வகை மீனைக் காய வைத்து இடித்துத் தயாரிக்கும் பொடி; powdered dry fish.

மாசிகம்

மாசிகம்1 mācigam, பெ.(n.)

   ஒரு மருந்து; a medicine.

 மாசிகம்2 mācigam, பெ.(n.)

   இறந்தோர் பொருட்டு இறந்த ஆண்டில் திங்கள்தோறும் செய்யும் சடங்கு (வின்.);; monthly ceremony for a deceased person, performed during the first year after death.

மாசிகை

 மாசிகை mācigai, பெ.(n.)

   பறவை (சங்.அக.);; bird.

மாசிக்கடா

மாசிக்கடா1 mācikkaṭā, பெ.(n.)

   மாசி மாதத்தில் மிகுதியாகக் கிடைக்கும் வைக்கோலைத் தின்று கொழுத்த காளை (இ.வ.);; fat bull, as fed on straw available in plenty in the month of {}.

     “மாசிக் கடாவும் மார்கழி நம்பியானும் (உ.வ.);”

     [மாசி + கடா.]

 மாசிக்கடா2 mācikkaṭā, பெ.(n.)

   சிற்றுார் தெய்வங்களுக்கு மாசி மாதத்தில் நேர்த்திக் கடனுக்காக வெட்டப்படும் ஆட்டுக்கிடா; ram to be solained during {} month to village deities to fulfil vow.

     [மாசி + கடா.]

மாசிக்காயுப்பு

 மாசிக்காயுப்பு mācikkāyuppu, பெ.(n.)

   மாசிக்காயிலிருந்து திரட்டும் உப்பு; tannic acid.

     [மாசிக்காய் + உப்பு.]

மாசிக்காய்

மாசிக்காய்1 mācikkāy, பெ.(n.)

   ஒரு வகை மருத்துவ குணம் கொண்ட மரம்; a kind of herb tree, useful for medicine.

     [மாசி + காய்.]

 மாசிக்காய்2 mācikkāy, பெ.(n.)

மாசக்காய் (பதார்த்த.1015); பார்க்க; see {}.

     [மாசக்காய் → மாசிக்காய்.]

மாசிக்காய்களிம்பு

 மாசிக்காய்களிம்பு mācikkāykaḷimbu, பெ.(n.)

   ஒக் மரத்திலிருந்து உருவாக்கப்படும் ஒருவகைக் களிம்பு; an ointment prepared from oak gall.

     [மாசிக்காய் + களிம்பு.]

மாசிக்கார்

 மாசிக்கார் mācikkār, பெ.(n.)

   கார் நெல் வகை (இ.வ.);; a kind of {} paddy.

     [மாசி + கார்.]

மாசிக்கால்வார் – த்தல்

மாசிக்கால்வார் – த்தல் mācikkālvārttal,    4 செ.கு.வி.(v.i.)

   வெற்றிலைக் கொடி படர்தற்காக அகத்தி மரம் உண்டாக மாசி மாதத்தில் அகத்தி விதையைப் பதித்தல் (இ.வ.);; to sow agatti seeds in the month of February – March for raising agatti plants to serve as supports for betel – vines.

     [மாசிக்கால் + வார்-,]

மாசிக்கிளி

 மாசிக்கிளி mācikkiḷi, பெ.(n.)

   முன்னோர்களுக்கும், ஊர்த்தெய்வங்களுக்கும் செய்யும் வழிபாடு; a ceremony of worshipping ancesters and deities.

     [ஒருகா. மா+அரிசி+கிளறி]

மாசிக்கோடை

மாசிக்கோடை mācikāṭai, பெ.(n.)

   1. மாசி மாதத்து நெல்விளைவு; summer crop of paddy as harvested in February – March.

   2. வெயிற் காலப் பகுதியான மாசிமாதம்; the month of {}, as part of the summer season.

     [மாசி + கோடை.]

மாசிங்கம்

 மாசிங்கம் māciṅgam, பெ.(n.)

   கலைமான் கொம்பு (சங்.அக.);; horn of a stag.

     [p]

மாசிதறிருக்கை

மாசிதறிருக்கை mācidaṟirukkai, பெ.(n.)

   பகைவரிடத்துக் கவர்ந்த யானை, ஆ முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை; camp for the bibaral distribution of animals captured from one’s enemy.

     “இரப்போர்க் கீதறண்டா மாசிதறிருக்கை” (பதிற்றுப். 76, 8);.

     [மா + சிதறு + இருக்கை.]

மாசித்தகன்னி

 மாசித்தகன்னி mācittagaṉṉi, பெ.(n.)

   நாறு கரந்தை, கொட்டைக் கரந்தை; indian globe thistle (சா.அக.);.

மாசித்தண்ணீர்

மாசித்தண்ணீர் mācittaṇṇīr, பெ.(n.)

   1. மாசி மாதத்துப் பணித் தண்ணிர்; dew water collected in the month of {} (Feb. and March);.

   2. பனி கலந்த தண்ணீர்; water mixed with dew water.

     [மாசி + தண்ணிர்.]

மாசித்தர்மோசம்

மாசித்தர்மோசம் mācittarmōcam, பெ.(n.)

   1. பேரோசனை; a kind of peculiar stone used by siddhars while flying in the aerial regions to afford stability.

   2. ஒரு வகைத் துணைச் சரக்கு a kind ofmineral stone described in Tamil medicinal science (சா.அக.);.

மாசித்திக்கல்

 மாசித்திக்கல் mācittikkal, பெ.(n.)

   கருங்கல்; black granite stone (சா.அக.);.

மாசினி

மாசினி māciṉi, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

     “மாசினி செங்கண்ணன்” (பறாளைப். பள்ளு.74);.

மாசிபத்திரி

மாசிபத்திரி mācibattiri, பெ.(n.)

   1. வாசனைப் பூடு வகை (பதார்த்த.322);; Indian absinth.

   2. பூடு வகை; worm wood, aromatic herb.

   3. கொட்டைக் கரந்தை வகை ((M.M.4);; madras absinth (சா.அக.);.

     [மாசி + பத்திரி.]

மாசிப்பச்சை

 மாசிப்பச்சை mācippaccai, பெ.(n.)

   பூச்செடி வகை (இ.வ.);; a plant (சா.அக.);.

     [மாசி + பச்சை.]

மாசிப்பச்சோபிதம்

 மாசிப்பச்சோபிதம் mācippaccōpidam, பெ.(n.)

   மரமல்லிகை; jasmine tree (சா.அக.);.

மாசிமகம்

 மாசிமகம் mācimagam, பெ.(n.)

   மாசி வெள்ளுவாவும், மக நாண் மீனும் கூடிய நன்னாள் (வின்.);; the full-moon day in {}, when the moon is generally in magam.

     [மாசி + மகம்.]

மாசிமழை

மாசிமழை mācimaḻai, பெ.(n.)

   1. மாசித் திங்களில் உதிரும் மாம்பூக்கள்; mango flowers, as falling in {}.

     “மாசி மழை யுருட்டு”.

   2. மாசி மாதத்தில் பெய்யும் மழை; rain of {} month.

     [மாசி + மழை.]

மாசியம்

மாசியம்1 māciyam, பெ.(n.)

மாசிகம் (வின்.); பார்க்க; see {}.

 மாசியம்2 māciyam, பெ.(n.)

மாசனம் (இ.வ.); பார்க்க; see {}.

மாசிலம்

 மாசிலம் mācilam, பெ.(n.)

   மனோசிலை; red orpiment impure bisphurate of arsenic (சா.அக.);.

மாசிலாமணி

மாசிலாமணி mācilāmaṇi, பெ.(n.)

   1. மறுவற்ற மணி; spotless gem.

   2. கடவுள்; god of {}.

     [மாசு = குற்றம். மாசு + இலா + மணி.]

மாசு

மாசு mācu, பெ.(n.)

   1. மறு; spot.

     “உள்ள மாசறக் களைவோர்” (ஞானா.39, 14);.

   2. அழுக்கு; stain, taint, tarnish.

     “மாசி றூவுடை” (திருமுரு.138);.

   3. குற்றம்; defect, fault, flaw.

     “மாசறு காட்சியவர்க்கு” (குறள், 352);.

   4. கெடுநேர்ச்சி (விபரீதம்); (சி.சி. அளவை.2);; perversity.

   5. கருமை (யாழ்.அக.);; blackness.

   6. இருள்; darkness.

     “மடியென்னு மாசூர” (குறள், 601);.

   7. மேகம் (பிங்.);; cloud.

   8. கரிசு; sin.

   9. தீமை; evil.

     “மாசெனக் கெய்தவும்” (கம்பரா. சிறப்புப்.6);.

   10. தூளி; dust.

     “நெரிந்தன மாசுண நெற்றியே” (தக்கயாகப்.24);.

   11. பால் வீதி மண்டலம்; the milky way. 1

   2. சிறுமை, இழிவு (சூடா.);; trifle. 1

   3. மெய்ம்மலம் (பிங்.);; ordure. 1

   4. நஞ்சுக் கொடி; after birth. 1

   5. பித்தநீர் (பிங்.977);; bile. 1

   6. கோழை (அக.நி.);; phlegm. 1

   7. கண்ணின் காசபடலம்; film in the eye.

     “மாசு மிகுதியாற் கண்ணொளி யிழந்தார்” (சி.போ.பா.8, 4, பக்.186, சுவாமிநா.);. 1

   8. வலைவடம் (நாமதீப.448);; cord of a net.

   தெ. மாசி;   க., ம. மாசு;து. மாயெ.

     [மாய் – தல் = மறைதல், மாய் → மாயம் = திடுமறைவு, மயக்கம், நிலையின்மை. மாய் → மாயை = பொய்த்தோற்றம், பிழைத்தோற்றம். மாயை → மாசி = மயக்கத் தோற்றம். மாசி → மாசு = மறு, இருள், தீமை.]

மாசுகம்

 மாசுகம் mācugam, பெ.(n.)

   பீர்க்கு; ribbed gound.

மாசுகி

 மாசுகி mācugi, பெ.(n.)

   மிளகாய்; chilly (சா.அக.);.

மாசுணம்

மாசுணம் mācuṇam, பெ.(n.)

   1. பெரும் பாம்பு; rock-snake.

     “துஞ்சு மரங் கடுக்கு மாகணம் விலங்கி” (மலைபடு.261);.

   2. பாம்பு; snake.

     “மாசுண மகிழ்ச்சி மன்றல்” (சீவக.189);. “ஐந்தலைய மாசுணங் கொண்டு” (தேவா.257, 3);.

மாசுணி

 மாசுணி mācuṇi, பெ.(n.)

   நாய்ப் பாகல்; a creерег (சா.அக.);.

மாசுதீர்ப்பான்

 மாசுதீர்ப்பான் mācutīrppāṉ, பெ.(n.)

   மயிர் வினைஞன் (சது.);; barber.

     [மாசு + தீர்ப்பான்.]

மாசுபடர்தல்

 மாசுபடர்தல் mācubaḍartal, பெ.(n.)

   கண்ணில் படருமோர் நோய்; an eye disease marked by growth of film (சா.அக.);.

     [மாசு + படர்தல்.]

மாசுமறு

மாசுமறு mācumaṟu, பெ.(n.)

   குற்றம் (பதார்த்த.870);; spot, fault.

     [மாசு + மறு.]

மாசுமறுவற்ற

மாசுமறுவற்ற mācumaṟuvaṟṟa, கு.பெ.எ.(adj.)

   1. எந்த வகை அழுக்கும் இல்லாத, தூய்மையான; pure.

   2. எந்த வகைக் களங்கமும் இல்லாத; blemishless.

     [மாறு + மறு + அற்ற.]

மாசுரசுரம்

 மாசுரசுரம் māsurasuram, பெ.(n.)

   அம்மைச் சுரம்; pox fever (சா.அக.);.

மாசுவாங்கி

 மாசுவாங்கி mācuvāṅgi, பெ.(n.)

   மையொற்றுந் தாள் (பாண்டி.);; blotting paper.

     [மாசு + வாங்கி.]

மாசூன்

 மாசூன் mācūṉ, பெ. (n.)

   சுவையும் நறுமணமும் ஊட்டிய மயக்கவுணவு வகை (C.G.);.; an inebriating preparation, sweetened and spiced.

     [u. {} → த. மாசூன்.]

மாசூரசுரம்

 மாசூரசுரம் māsūrasuram, பெ.(n.)

   ஒரு வகைக் காய்ச்சல் (பைஷஜ.);; cruptive fever.

மாசூல்

 மாசூல் mācūl, பெ. (n.)

   பயிரின் விளைச்சல்; product of a field, produce of grain.

     [U. {} → த. மாசூல்.]

மாசெடி

 மாசெடி māceḍi, பெ.(n.)

   வால்மிளகு; cubebs (சா.அக.);.

மாசேனன்

மாசேனன் mācēṉaṉ, பெ.(n.)

   1. கடவுள் (யாழ்.அக.);; god.

   2. அருகன் (சூடா);; Arhat.

   3. குமரக் கடவுள் (யாழ். அக.);; Lord Murugan

   4. திருமால் (யாழ்.அக.);; {}.

மாசேனை

 மாசேனை mācēṉai, பெ.(n.)

   மிகுதி; surplus, mickle much.

     [மா + சேனை.]

மாசை

மாசை mācai, பெ.(n.)

   1. பொன்; gold.

     “மாசை மாக்கடல்” (சீவக.911);.

   2. உழுந்து நிறையளவுள்ள பழைய நாணய வகை; an ancient coin of the weight of a grain of{} or blackgram.

     “மாசையொடு தக்கணை யுதவி” (பெருங். உஞ்சைக்.39, 11);.

மாச்சக்காய்

மாச்சக்காய் māccakkāy, பெ.(n.)

மாசக்காய், 1 பார்க்க; see {}.

     [மாசக்காய் → மாச்சக்காய்.]

மாச்சத்து

 மாச்சத்து māccattu, பெ.(n.)

   புரதச் சத்து; starch.

     [மா + சத்து. Skt. சத்து. த. ஊட்டம்.]

மாச்சரியம்

மாச்சரியம் māccariyam, பெ. (n.)

   1. பொறாமை; envy.

     ‘மாச்சரியத் தாலிகழின் வந்த தென்’ (உபதேசரத். 2);.

   2. பகைமை; malice, hostility.

     ‘மாச்சரியங் கொண்டரக்கர் அட்ட திசை மேலும் மேவினார்’ (இராமநா. யுத். 88.);.

     [Skt. {} → த. மாச்சரியம்.]

மாச்சரேகம்

 மாச்சரேகம் māccarēkam, பெ.(n.)

   மிளகாய் நங்கைச் செடி; a plant.

மாச்சல்

மாச்சல் māccal, பெ.(n.)

   1. சாவுகை (வின்.);; dying, mortality.

   2. மிக்க வருத்தம் (சங்.அக.);; great suffering.

   3. சோம்பல்; laziness, sloth.

     “இந்த வேலை செய்ய இத்தனை மாச்சலா” (நெல்லை வழக்கு);.

     [மாய்ச்சல் → மாச்சல். ஒ.நோ. பாய்ச்சல் → பாச்சல். ஒய்ச்சல் → ஒச்சல்.]

மாச்சாதம்

 மாச்சாதம் māccātam, பெ.(n.)

   கூழ்; paste, gruel.

     [மா + சாதம். Skt. சாதம்.]

மாச்சி

மாச்சி1 mācci, பெ.(n.)

   பாம்புக் கொல்லி; a plant which cures snake bites.

 மாச்சி2 mācci, பெ.(n.)

   கை விலங்கு; fetters (யாழ்ப்.);.

மாச்சிலை

 மாச்சிலை māccilai, பெ.(n.)

   மாக்கல்; pot stone.

     [மா + சிலை. சிலை = ஒலி, கல், மலை, சில் = ஒலிக்குறிப்பு. சில் → சிலை.]

மாச்சீனி

 மாச்சீனி māccīṉi, பெ.(n.)

   குழந்தைக்குரிய மருந்துகளில் ஒன்று; a kind of childish medicine (சா.அக.);.

     [மா + சீனி.]

மாச்சீர்

 மாச்சீர் māccīr, பெ.(n.)

   நேரசையால் இறும் இயற்சீர்; metrical foot of two {} in {}.

     [மா + சீர்.]

மாச்சு

மாச்சு1 māccu, பெ.(n.)

   விலங்கு (வின்.);; fetters.

 மாச்சு2 māccu, பெ.(n.)

   குற்றம்; fault.

     “மாச்சற்ற சோதி” (திருமந்.1160);.

     [மாசு → மாச்சு.]

மாச்சுக்கு

 மாச்சுக்கு māccukku, பெ.(n.)

   மாவைப் போல் நொருங்கும் வெண்மையான சுக்கு; dired ginger without fibre.

     [மா + சுக்கு.]

மாச்சுமாச்சுத்தம்பலம்

 மாச்சுமாச்சுத்தம்பலம் māccumāccuttambalam, பெ.(n.)

   பிள்ளை விளையாட்டு வகை (யாழ்ப்.);; a kind of child’s play.

மறுவ. கிச்சுகிச்சுதம்பலம்.

மாஞாலம்

மாஞாலம்1 māñālam, பெ.(n.)

   பெரிய நிலம்; earth.

     [மா + ஞாலம்.]

 மாஞாலம்2 māñālam, பெ.(n.)

   1. மாசாலம்; a kind of magical art.

   2. பேரூமத்தை; a big variety of dhatura (சா.அக.);.

     [மா + ஞாலம்.]

மாஞ்சா

 மாஞ்சா māñjā, பெ. (n.)

   காற்றாடிக் கயிற்றில் தடவுதற்குக் கண்ணாடிப் பொடியோடு கலந்த பிசின் வகை; a kind of glue, prepared with glass – dust and used to rub the kite- string.

     [U. {} → த. மாஞ்சா.]

மாஞ்சாதம்

மாஞ்சாதம் māñjātam, பெ.(n.)

   அளறு வகை (சி.போ.பா.2, 3, பக்.204);; a hell.

மாஞ்சி

மாஞ்சி1 māñji, பெ.(n.)

   சடாமாஞ்சி; spikenard herb.

     “துத்தமாஞ்சி” (பெருங். மகத.17, 147);.

   2. மணமுள்ளப் பண்ட வகை (திவா.);; a fragrant substance.

 மாஞ்சி2 māñji, பெ.(n.)

   1. சணல்; sunn-hemp.

   2. ஒர் இசை வகை (சங்கீத.காய.21);;(mus.);

 a specific melody type.

மாஞ்சிரோகணி

 மாஞ்சிரோகணி māñjirōkaṇi, பெ.(n.)

   கண்புகைச்சலை நீக்கும் ஓர் பூண்டு; a herb useful for eye diseases (சா.அக.);.

மாஞ்சில்

மாஞ்சில் māñjil, பெ.(n.)

மாஞ்சி, 1 (யாழ்.அக.); பார்க்க; see {}.

மாஞ்சுமாஞ்சு

 மாஞ்சுமாஞ்சு māñjumāñju, பெ. (n.)

ஒய் வில்லாத உழைப்பின் கடுமை:

 hardworking without rest.

     [ஒருகா. பாய்ந்து-பாய்ந்து-பாஞ்சுபாஞ்சு-மாஞ்கமாஞ்சு]

மாஞ்சோறு

 மாஞ்சோறு māñjōṟu, பெ.(n.)

   கடலடிச் சேறு (செங்கை .மீன.);; under sea marsh.

மாடகம்

மாடகம்1 māṭagam, பெ.(n.)

   பாலிகை வடிவான வாசிக்குங் கருவி (நச்.சீவ.1697);; pot shaped musical instrument.

     [மாடம் + அகம்.]

 மாடகம்2 māṭagam, பெ.(n.)

   யாழின் முறுக்காணி; screw-pin of a lute.

     “இடக்கை நால்விரல் மாடகந் தழீஇ” (சிலப்.8, 78);.

 மாடகம் māṭagam, பெ. (n.)

யாழின் உறுப்புகளில் ஒன்று

 a partofharp.

     [மாடு-மாடகம்]

மாடகூடம்

மாடகூடம் māṭaāṭam, பெ.(n.)

   மாடிவிடு; storied house.

     “இம்மாட கூடம்…… அளகையினுமிலது” (பாரத.இராசசூ.12);.

     [மாடம் + கூடம்.]

மாடக்கனி

 மாடக்கனி māṭakkaṉi, பெ.(n.)

   தேவாங்கு; sloth.

மாடக்கனிவாய்

 மாடக்கனிவாய் māṭakkaṉivāy, பெ.(n.)

   கருங்குளவி; a black beetle.

மாடக்கல்

 மாடக்கல் māṭakkal, பெ. (n.)

   ஒசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Hosur Taluk.

     [மாடம் (அடுக்கு);+கல்]

மாடக்குழி

 மாடக்குழி māṭakkuḻi, பெ.(n.)

   வீடுகளில் விளக்கு வைப்பதற்கு அமைக்கப்படும் இடம் (இக்.வ.);; a small niche in the wall of a house to keep an oil lamp.

     [மாடம் + குழி.]

     [p]

மாடக்கோயில்

மாடக்கோயில் māṭakāyil, பெ.(n.)

மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளதாகக் கோச் செங்கணான் கட்டிய சிவக்கோயில் (தேவா.467, 10);; {}

 temple with narrow passage built on mounds by {}.

     [மாடம் + கோயில்.]

 மாடக்கோயில் māṭakāyil, பெ. (n.)

   கோயில் வகைகளில் ஒன்று; a variety in temple construction.

     [மாடம்+கோயில்]

மாடச்சிவிகை

 மாடச்சிவிகை māṭaccivigai, பெ.(n.)

   சிவிகை வகை; a kind of Palanquin.

     [மாடம் + சிவிகை.]

மாடநிலை

மாடநிலை māṭanilai, பெ.(n.)

   உப்பரிகை; terrace.

     “மாடநிலை தெற்றியினிருந்தவர்” (பாரத.வாராணா.57);.

     [மாடம் + நிலை.]

மாடனம்

 மாடனம் māṭaṉam, பெ.(n.)

   முட்டைக்கோசு; cabbage (சா.அக.);.

மாடன்

மாடன்1 māṭaṉ, பெ.(n.)

   1. சிற்றுார்த் தெய்வம்; a village deity.

   2. மூடன்; ignorant, stupid man,

     [மாடம் → மாடன். மாடம் = கோயில்.]

நெல்லை மாவட்டத்தில் ஏராளமான சுடலை மாடன் என்ற பெயரில் சிற்றுார்த் தெய்வங்கள் காணப்படுகிறது.

 மாடன்2 māṭaṉ, பெ.(n.)

   துருசு; blue vitriol – sulphate of copper (சா.அக.);.

மாடன்விற்கொடிச்சி

 மாடன்விற்கொடிச்சி māḍaṉviṟkoḍicci, பெ.(n.)

   கற்பூரம்; camphor (சா.அக.);.

மாடபத்திரம்

மாடபத்திரம் māṭabattiram, பெ. (n.)

மடத்தின் ஆளுவ நிருவாக);ப் பொறுப்பு: one who maintains the monastery. (தெ.சா.8:26:எ.440);.

     “பல்லவதரையன் எழுத்து இப்படிக்கு மாடபத்திரம் திருமலையுடையான் எழுத்து.”

     [மாடம்+பத்தியம்]

மாடபூபதி

 மாடபூபதி māṭapūpadi, பெ.(n.)

   கொச்சி யரசர்க்குரிய பட்டப் பெயர் (நாஞ்.);; a title of the {} of Cochin.

மாடப்புரை

 மாடப்புரை māṭappurai, பெ.(n.)

மாடக்குழி (இ.வ.); பார்க்க; see {}.

     [மாடம் + புரை.]

மாடப்புறா

மாடப்புறா māṭappuṟā, பெ.(n.)

   புறா வகை (தக்கயாகப்.607, உரை);; blue rock-pigeon, species of columba.

     [p]

மாடப்புறாக்கண்ணிறம்

 மாடப்புறாக்கண்ணிறம் māṭappuṟākkaṇṇiṟam, பெ.(n.)

   அமுக்கிரா என்னும் மருந்துச் செடி; a medicinal plant called amukkira, Indian winter cherry, s.sh. withania Somnifera.

     [மாடப்புறா + கண் + நிறம்.]

மாடமாளிகை

 மாடமாளிகை māṭamāḷigai, பெ.(n.)

மாடகூடம் (கொ.வ.); பார்க்க; see {}.

     [மாடம் + மாளிகை.]

மாடமுட்டை

 மாடமுட்டை māṭamuṭṭai, பெ.(n.)

   கண்பீளை; discharge from the eye.

     [மாடம் + முட்டை. மாடம் = புரை. கண்குழி சுவற்றுப் புரை போன்றிருப்பதாகக் கொண்டு, அதன் மருங்கு ஒதுங்கும் அழுக்கு முட்டை வடிவினதாயிருப்பதாய்க் கருதி மாடமுட்டை என்றொரு சொல்லை யமைத்தனர் போலும்.]

மாடம்

மாடம்1 māṭam, பெ.(n.)

   1. மாடி வீடு; storied house.

     “மாட மாளிகைகோபுரங் கூடங்கள்” (தேவா.797, 7);.

   2. வீடு (பிங்.);; house, mansion, hall.

     “மஞ்சுதோய் மாடமணி உத்தரகோச மங்கை” (திருவாச.16, 4);.

   3. மாடக்கோயில் பார்க்க: see {}.

     “எண்டோளீசற் கெழின் மாட மெழுபது செய்து” (திவ்.பெரியதி.6, 6, 8);.

   4. குடிசை (நாஞ்.);; hut.

     “தோட்டக் காவலுக்காக ஒலை மாடம் மடக்கினான்” (நாஞ்.);.

   5. மாடக்குழி பார்க்க;see {}.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); → மல் → மால் = பெருமை, பெருமையுடையவன், வளமை, மலை. மால் → மாள் → மாளிகை = மாடமுள்ள பெருவீடு, அரண்மனை, கோயில், மாள்  மாண். மாணுதல் = மிகுதல், பருத்தல், நிறைதல், நன்றாதல், சிறத்தல், மாட்சிமைப்படுதல், மாண் → மாணம் = மாட்சிமை, மாணம் → மாடம் (வே.க.4:30);.]

 மாடம்2 māṭam, பெ.(n.)

   1. சுவரிலுள்ளடங்கிய புரை; niche.

   2. சுவரிற் பொத்தகம் முதலியன வைக்க உதவும் புரை அல்லது புரைவரிசை; shelf.

     [மடு → மடம் → மாடம் (வே.க.

   4.92).]

 மாடம்3 māṭam, பெ.(n.)

   1. உளுந்து (பிங்.);; black gram.

   2. குன்றி பத்துக் கொண்ட ஒரு நிறை (சுக்கிரநீதி, 105);; a measure of weight of 10 {}.

 மாடம்4 māṭam, பெ.(n.)

   சரக்கறை (சிலப். 6:122);; store room, godown.

மாடலன்

மாடலன்1 māṭalaṉ, பெ.(n.)

   சிலப்பதிகாரத்தில் வரும் கதைமாந்தருள் ஒருவன்; one of the character of {}.

     “மாமறை முதல்வன் மாடல னென்போன்” (சிலப்.15, 13);.

மாடவாழை

 மாடவாழை māṭavāḻai, பெ.(n.)

   பேயன் வாழை (இ.வ.);; Manilla hemp.

மாடவீதி

மாடவீதி māṭavīti, பெ.(n.)

   கோயிலைச் சுற்றியுள்ள தெரு; main street surrounding a temple.

     “விண்ணுயர் மாளிகை மாட விதி” (தேவா.413, 1);.

     [மாடம் + வீதி.]

மாடாக்குழி

 மாடாக்குழி māṭākkuḻi, பெ.(n.)

மாடக் குழி (வின்.); பார்க்க; see {}.

     [மாடக்குழி → மாடாக்குழி.]

மாடி

மாடி1 māṭi, பெ.(n.)

   1. கட்டடத்தின் மேல் தளம்; terrace.

   2. மேனிலையுள்ள வீடு; storied house.

     [முல் → மல் → மால் = பெருமை, வளமை, மலை. மால் → மாள் → மாளிகை = மாடமுள்ள பெரு வீடு, கோயில், அரண்மனை. மாள் → மாண் → மாணுதல் = மிகுதல், பருத்தல், நிறைதல். மாண் → மாணம் = மாட்சிமை, மாணம் → மாடம் → மாடி (வே.க.4:31);.]

 மாடி2 māṭi, பெ.(n.)

   1. இக்கட்டு; distress.

   2. சினம்; anger, passion.

   3. புடவையின் விளிம்பு; hem or border of a garment.

 மாடி3 māṭi,    பெ.(n) சிற்றூர்த் தேவதை (நாஞ்.); a village goddess.

     [மாடன் (ஆ.பா.); → மாடி (பெ.பா.);.]

 மாடி māṭi, பெ. (n.)

   புலி வேடமிடுபவர் (வேலூர் பகுதிகளில்); கையில் வைத்திருக்கும் கருவி; tiger dancers article.

     [மடு+மாடி]

மாடிகை

 மாடிகை māṭigai, பெ.(n.)

   மெய்யுறை (பிங்.);; armour.

மாடிப்படி

 மாடிப்படி māḍippaḍi, பெ.(n.)

   மேல்மாடிக் கட்டடத்திற்கு செல்வதற்கான படிக்கட்டு; flight of stairs and the supporting structure, stair-case.

     [மாடி + படி.]

     [p]

மாடிமுற்றம்

 மாடிமுற்றம் māṭimuṟṟam, பெ.(n.)

   மாடியில் அமைந்த முகப்புத் தட்டு; balustraded platform on the outside o a building with access from an upper floor, balcony.

     “மேல்மாடி முற்றத்திலே” (உ.வ.);.

     [மாடி + முற்றம்.]

மாடியம்

மாடியம் māṭiyam, பெ.(n.)

மாடிகை பார்க்க; see {}.

     “மாடியந் தானை மன்னர்” (சீவக.537);.

மாடிவீடு

 மாடிவீடு māṭivīṭu, பெ.(n.)

   மேல்தளமுள்ள வீடு; mansion with upper terrace, terraced or storied house.

     [மாடி + வீடு.]

மாடு

மாடு1 māṭu, பெ.(n.)

   எருது; ox.

     “பகட்டின மாடுகள்” (கம்பரா.பள்ளி.14);.

     “அடியாத மாடு படியாது” (பழ.);.

     “துள்ளுகிற மாடு பொதி சுமக்குமா?” (பழ.);.

 மாடு2 māṭu, பெ.(n.)

   1. இடம்; place.

     “மாட்டு மாட்டோடி மகளிர்த் தரத்தர” (கலித்.98);.

   2. பக்கம் (சூடா.);; side.

     “மா டெல்லாங் கருங்குவளை வயலெல்லா நெருங்குவளை” (பெரியபு.திருநாட்.17);.

 மாடு3 māṭu,    இடை.(part.) (இலக்.) ஓர் எழுனுருபு; a ending of the oblative of place.

     “மெய் பிரிந் தன்னவர் மாட்டு” (கலித்.87);.

 மாடு4 māṭu, பெ.(n.)

   1. செல்வம்; treasure, wealth.

மாடல்ல மற்றை யவை (குறள், 400);.

   2. பொன் (சூடா.);; gold.

   3. சீர் வரிசை; dowry.

   4. அகன்மணி (அக.நி.);; large gem.

முற்காலத்தில் ஆவும் காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டதனால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. மேலை நாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப் பெற்றது. L. pecu = cattle. pecunia = money. E. Pecuniary (consisting); of money.

மாடுசாயும்வேளை

 மாடுசாயும்வேளை māṭucāyumvēḷai, பெ.(n.)

மாடுவரும்வேளை பார்க்க; see {}.

     [மாடு + சாயும்வேளை.]

மாடுசாய் – த்தல்

மாடுசாய் – த்தல் māṭucāyttal,    4 செ.கு.வி. (v.i.)

   மாடுகளை ஒரு சேர ஒட்டிச் செலுத்துதல் (வின்.);; to drive cattle in herds.

     [மாடு + சாய்-த்தல்.]

மாடுசாய்தல்

 மாடுசாய்தல் māṭucāytal, பெ.(n.)

   மாடுகள் மாலையில் ஒருசேர வீடு நோக்கி வருகை; return home of cattle-herds at dusk.

     [மாடு + சாய்தல்.]

மாடுதின்னி

 மாடுதின்னி māṭudiṉṉi, பெ.(n.)

   ஆத்தின்னி; pulaiya.

     [மாடு + தின்னி.]

மாடுன்னிப்பாசம்

 மாடுன்னிப்பாசம் māṭuṉṉippācam, பெ.(n.)

   அணிப்பிள்ளை; squirrel (சா.அக.);.

     [மாடு + உன்னி + பாசம்.]

மாடுபிடுங்கி

 மாடுபிடுங்கி māḍubiḍuṅgi, பெ.(n.)

   கழுகு வகை (m.m.);; common brown vulture.

     [மாடு + பிடுங்கி.]

மாடுபெயர் – த்தல்

மாடுபெயர் – த்தல் māṭubeyarttal,    4 செ.கு.வி. (v.i.)

   மாடுசாய்-, (வின்.); பார்க்க; see {}.

     [மாடு + பெயர்.]

மாடுமீன்

 மாடுமீன் māṭumīṉ, பெ.(n.)

மாட்டுமீன் பார்க்க; see {}.

     [மாடு + மீன்.]

மாடுவரும்வேளை

 மாடுவரும்வேளை māṭuvarumvēḷai, பெ.(n.)

   மாலை வேளை; evening, as the time when cattle return home after grazing.

     [மாடு + வரும்வேளை.]

மேய்ச்சலான பின் மாடுகள் திரும்பி வரும் காலம்.

மாடுவிரட்டு

 மாடுவிரட்டு māṭuviraṭṭu, பெ. (n.)

   தீமிதி விழாவில் நடைபெறும் மாடுவிரட்டு; a festival observance.

     [மாடு+விரட்டு]

மாடை

மாடை1 māṭai, பெ.(n.)

   1. அரை வராகன் (வின்.);; an ancient coin = 1/2 pagoda.

   2. பழைய நாணய வகை; an ancient gold coin.

வந்த மாடை நெல்லாக்கி (S.l.l.iii, 137);,

   3. பத்துக் குன்றி எடையுள்ள நாணய வகை (சுக்கிரநீதி, 25);; a gold coin weighing ten {}.

     [மாழை → மாடை.]

 மாடை2 māṭai, பெ.(n.)

   1. மாட்டுக் கொம்பு முதலியவற்றின் கீழ்நோக்கிய வளைவு; being bent downwards as horns of cattle.

   2. சாய்வு; slop.

     [உல் → குள் → முள் → முட → முடங்கு → முடங்கி = மூலை. மூலைமுடங்கி என்பது வழக்கு. மாள் → மாடு → மாடை. சாடைமாடை என்பது வழக்கு. நேராகப் பழிக்காமல் சாய்வு போன்ற நேரல் முறையில் பழித்தல் சாடை மாடையாய்த் திட்டுதல் எனப்படும் (மு.தா.226);.]

மாடைக்குமாறி

 மாடைக்குமாறி māṭaikkumāṟi, பெ.(n.)

   மாடை என்னும் பொற்காசுக்கு ஒத்த மதிப்பீடு கொண்ட மாற்றமுடைய பொன்; a gold like thing carrying equal value to that of a gold coin.

     [மாடைக்கு + மாறி.]

மாடைக்கூலி

மாடைக்கூலி māṭaikāli, பெ.(n.)

   வரி வகை (S.I.I.iii, 16, 1);; a kind of tax.

     [மாடை + கூலி.]

மாடைக்கொம்பன்

 மாடைக்கொம்பன் māṭaikkombaṉ, பெ.(n.)

   கீழ்நோக்கி வளைந்த கொம்புள்ள மாடு (வின்.);; bullock with horns bent downwards.

     [மாடை = வளைந்தது. மாடைக் கொம்பு = வளைந்த கொம்பு. மாடைக் கொம்பு → மாடைக் கொம்பன்.]

மாடொதுக்கு – தல்

மாடொதுக்கு – தல் māṭodukkudal,    5 செ.கு.வி. (v.i.)

மாடுசாய்-, (வின்.); பார்க்க; see {}.

     [மாடு + ஒதுக்கு-,]

மாடோட்டும்வேளை

 மாடோட்டும்வேளை māṭōṭṭumvēḷai, பெ.(n.)

   மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் காலை வேளை;     [மாடு + ஒட்டும்வேளை.]

மாட்சி

மாட்சி māṭci, பெ.(n.)

   1. உயர் தன்மை; glory, greatness,

     “எனை மாட்சித் தாகியக் கண்ணும்” (குறள், 750);.

   2. விளக்கம்; clearness, clarity.

     “மூலவோலை மாட்சியிற் காட்ட வைத்தேன்” (பெரியபு.தடுத்தாட்.56);.

   3. அழகு; beauty.

     “நூலோர் புகழ்ந்தமாட்சிய…. புரவி” (பெரும்பாண்.487);.

   4. இயல்பு; nature.

     “மரபுநிலை தெரியா மாட்சியவர்” (தொல்.மரபி.648);.

     [முல் (பொருந்தற் கருத்துவேர்); → மல் → மால். மால் = பெருமை, பெருமையுடையவன், மலை, வளமை, மால் → மாள் → மாளிகை = மாடமுள்ளவீடு, பெருவீடு, அரண்மனை, கோயில், மாள் → மாண் → மாணுதல் = மிகுதல், பருத்தல், நிறைதல், நன்றாதல், சிறத்தல். மாண் → மாட்சி (வே.க.4:30);.]

மாட்சிகம்

 மாட்சிகம் māṭcigam, பெ.(n.)

   ஒர் வகைத் தேன்; a kind of honey secreted by tawny bee’s and considered best (சா.அக.);.

     [மாட்சி → மாட்சிகம்.]

மாட்சிகற்பம்

 மாட்சிகற்பம் māṭcigaṟpam, பெ.(n.)

   நிமிளை பற்பம்; calcined pyrite (சா.அக.);.

மாட்சிமை

மாட்சிமை māṭcimai, பெ.(n.)

மாட்சி, 1 பார்க்க; see {}.

     “மாட்சிமை யுடையோர் கொடுக்கு மரபு போல” (சிலப்.16:23, உரை);.

     [மாட்சி → மாட்சிமை (வே.க.4:30);.]

மாட்டடி

மாட்டடி1 māḍḍaḍi, பெ.(n.)

   மாட்டின் அடி வைப்பு (வின்.);; step or tract of cattle.

     [மாடு → மாட்டு + அடி. மாட்டின் அடி.]

 மாட்டடி2 māḍḍaḍi, பெ.(n.)

   கடுமையான அடி (வின்.);; severe blow, as in beating an ox.

     [மாடு → மாட்டு + அடி. மாட்டை அடிப்பதைப் போன்று கடுமையான அடி.]

மாட்டம்

 மாட்டம் māṭṭam, பெ.(n.)

   சீரகம்; cumin seed (சா.அக.);.

மாட்டறி – தல்

மாட்டறி – தல் māṭṭaṟidal,    2 செ.கு.வி.(v.i.)

   சான்றுக் கையெழுத்திடுதல்; to sign as witness.

     “சேனை யோக நாச்சண்ணனும் மாட்டறிந்தது” (S.I.I.iv, 134);.

     [முல் → முள் → மூள் → மூட்டு → மாட்டு + அறி-,]

மாட்டறை – தல்

மாட்டறை – தல் māṭṭaṟaidal,    2 செ.கு.வி. (v.i.)

   ஆவண முதலியவற்றின் பின்பக்கத்திற் குறிப்பெழுதுதல் (யாழ்ப்.);; to endorse, as on the back of a note.

     [மாட்டு + அறை-,]

மாட்டல்

மாட்டல்1 māṭṭal, பெ.(n.)

   1. மூட்டல் (சூ.நிக.9 – 29);; joint.

   2. வருத்தல் (ஐங்குறு.);; sympathise.

     [மாட்டு → மாட்டல்.]

 மாட்டல்2 māṭṭal, பெ.(n.)

   பெண்கள் அணியும் அணி (இ.வ.);; a woman’s ornament.

     [முல் → முள் → மூள் → மூட்டு → மாட்டு → மாட்டல்.]

     [p]

 மாட்டல் māṭṭal, பெ.(n.)

   மகளிர் காதிலணியும் தோடு முதல் தலைமுடி வரை இணைத்து அணியும் பொன் அணிகலன்; an women ornament.

     [மாட்டு-மாட்டல்]

மாட்டாங்காரப்பயல்

 மாட்டாங்காரப்பயல் māṭṭāṅgārappayal, பெ.(n.)

மாட்டுக்காரப்பயல் (வின்.); பார்க்க; see {}.

     [மாட்டுக்காரப்பயல் → மாட்டாங்காரப்பயல் (கொ.வ.);]

மாட்டாங்கோல்

மாட்டாங்கோல் māṭṭāṅāl, பெ.(n.)

   1. மாட்டை யோட்டுங் கழி (வின்.);; goad, or stick used in driving cattle.

   2. மாட்டுக்கோல் பார்க்க; see {}.

     [மாட்டு + கோல் = மாட்டுக்கோல் → மாட்டாங்கோல் (கொ.வ.);. ]

மாட்டாதார்

மாட்டாதார்1 māṭṭātār, பெ.(n.)

   வன்மை யில்லாதவர் (திவா.);; incapable, incompetent persons.

     [மாட்டுதல் = இயலுதல். மாட்டு → மாட்டாதார்.]

 மாட்டாதார்2 māṭṭātār, பெ.(n.)

   அகப்படாதோர், சிக்கிக்கொள்ளாதோர்; those who entangled.

     [மாட்டுதல் = சிக்குதல். மாட்டு → மாட்டாதார்.]

மாட்டாமை

மாட்டாமை1 māṭṭāmai, பெ.(n.)

   இயலாமை (தண்டி.பொஅணி.69, சூ.உரை);; incapable.

     [முல் → முள் → மூள் → மாள் → மாட்டு. ஒ.நோ. நீள் → நீட்டு. மாளுதல் = முடிதல், செய்யமுடிதல், மாட்டுதல் = முடித்தல், செய்து முடித்தல். மாட்டு → மாட்டாமை. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை.]

 மாட்டாமை2 māṭṭāmai, பெ.(n.)

   மாட்டிக் கொள்ளாமை; not tangled, not catch.

மாட்டார்

மாட்டார் māṭṭār, பெ.(n.)

மாட்டாதார் பார்க்க; see {}.

     “வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே” (அருட்பா. vi. அருள் விளக்க.39);.

     [மாட்டுதல் = இயலுதல். மாட்டு = இயலுதல். மாட்டு → மாட்டார். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை. ஆர் = பலர்பாலீறு.]

மாட்டி

மாட்டி māṭṭi, பெ.(n.)

   1. அழித்து (முல்லை.);; destroy.

   2. எரித்து (சிறுபா.);; burn up.

   3. பொருத்தி (வழ.);; joining.

மாட்டிக்கொடு – த்தல்

மாட்டிக்கொடு – த்தல் māḍḍikkoḍuttal,    4 செ.குன்றாவி.(v.t.) மாட்டிவிடு1- பார்க்க; see {}.

மாட்டிக்கொள்(ளு) – தல்

மாட்டிக்கொள்(ளு) – தல் māṭṭikkoḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   சிக்கிக் கொள்ளுதல்; to be entangled, ensnared or involved.

     [முள் → முள் → மூட்டு. மூட்டுதல் = பொருந்துதல். மூட்டு → மாட்டு. மாட்டுதல் = கொளுவுதல், தீப்பற்ற வைத்தல். மாட்டு → மாட்டி (மு.தா.194);. மாட்டி + கொள்(ளு);-,]

மாட்டிடையன்

 மாட்டிடையன் māḍḍiḍaiyaṉ, பெ.(n.)

   மாடு மேய்க்கும் இடையன்; cowherd.

     [மாடு → மாட்டு + இடையன்.]

மாட்டிறக்கம்

 மாட்டிறக்கம் māṭṭiṟakkam, பெ.(n.)

   மாடு முதலியவை ஆற்றைக் கடந்து செல்லுதற்குரிய இறங்கு துறை (வின்.);; ford across a river for cattle to cross.

     [மாடு + இறக்கம்.]

மாட்டிறைச்சி

 மாட்டிறைச்சி māṭṭiṟaicci, பெ.(n.)

   மாட்டுக் கறி; beef.

     [மாடு + இறைச்சி.]

மாட்டிலையான்

 மாட்டிலையான் māṭṭilaiyāṉ, பெ.(n.)

   பெரிய ஈ (வழக்குச் சொல்);; fly big in size.

     [மாடு = விலங்கு. மாடு → மாட்டு + இலையான்.]

மாட்டிவிடு

மாட்டிவிடு1 māḍḍiviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. தொழுக்கட்டை முதலியவற்றில் சேரவிணைத்தல்; to put in stocks, to shackle.

   2. அகப்படுத்துதல்; to involve one in, to subject one to.

     [முள் → முள் → மூட்டு. மூட்டுதல் = பொருந்துதல். மூட்டு → மாட்டு → மாட்டி (மு.தா.194);. மாட்டி + விடு.]

 மாட்டிவிடு2 māḍḍiviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   போக்குதல்; to remove.

     “மாட்டிவிடு நம்மனத்துமை” (திருவாய் மொழி. நூற்..83);.

     [முள் → முள் → மூட்டு → மாட்டு. மாட்டுதல் = கொளுவுதல், தீப்பற்ற வைத்தல். மாட்டு மாட்டி + விடு (மு.தா.194);. மாட்டும் பொருள் மாட்டப்பட்டதன் வழி போகும் இயல்புடையது.]

மாட்டிவை – த்தல்

மாட்டிவை – த்தல் māṭṭivaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

மாட்டிவிடு1- (வின்.); பார்க்க; see {}.

     [மாட்டுவிடு → மாட்டிவை-,]

மாட்டீ

 மாட்டீ māṭṭī, பெ.(n.)

   பெரிய ஈ; big size fly.

     [மாடு = விலங்கு. மாடு → மாட்டு + ஈ.]

மாட்டு

மாட்டு1 māṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. இணைத்தல் (சூடா.);; to fasten on, button, tackle, hook.

     “சிறுபொறி மாட்டிய பெருங் கல்லடா அர்” (நற்.19);.

   2. தொடுத்தல்; to fix, attach.

     “அம்பினை மாட்டியென்னே” (கம்பரா. நிகும்பலை.96);.

   3. செருகுதல்; to put in, thrust, as fuel.

     “அடுப்பினின் மாட்டு மிலங்ககில்” (காஞ்சிப்பு.நகர்.73);.

   4. பயன்படுத்துதல்; to use, bring into play.

     “வள்ளறான் வல்லவெல்லா மாட்டினன்” (சீவக.1274);.

   5. மனத்திற் கொள்ளுதல்; to grasp, comprehend.

     ” சொன்மாலை யீரைந்து மாட்டிய சிந்தை” (திருவிசை. கருவூ.8, 10);.

   6. கற்றுவல்லனாதல்; to be proficient in.

     “கல்வியை மாட்டாராயினும்” (புறநா.57, உரை);.

   7. அடித்தல்; to beat violently.

     “வின்முறிய மாட்டானோ” (தனிப்பா.i, 41, 80);.

நன்றாய் மாட்டுமாட்டென்று மாட்டிவிட்டான் (உ.வ.);.

   8. விளக்கு முதலியன கொளுத்துதல்; to kindle as a fire, to light, as a lamp.

     “நெய் பெய்து மாட்டிய சுடர்” (குறுந். 398);.

   9. தீப்பற்றவைத்தல்; to burn.

     “விறகிற்… செந்தீ மாட்டி” (சிறுபாண்.156);.

 மாட்டு2 māṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. கூடியதாதல்; to be able.

     “தேவரு நண்ணவு மாட்டா விழுப்பொருளை” (திருவாச.20, 9);.

   2. வலிபெறுதல்; to be competent, to have necessary strength.

     “மாட்டா மனிதன்றன்” (கம்பரா.அதிகா.270);.

     [முள் (பொருந்தற் கருத்து வேர்); → மூள் → மூட்டு. மூட்டுதல் = பொருந்துதல். மூட்டு → மாட்டு (மு.தா.194);. மாள் → மாட்டு (பி.வி. ஒ.நோ. நீள் → நீட்டு. மாளுதல் = முடிதல், செய்ய முடிதல். மாட்டுதல் = முடித்தல், செய்து முடித்தல் (வே.க.4:62);]

 மாட்டு3 māṭṭudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. மாளச் செய்தல்; to kill.

     “மாட்டிய பிள்ளை மறவர் நிறந் திறந்து” (பு.வெ.2, 9);.

   2. அழித்தல்; to destroy.

     “வேட்டுப் புழையருப்ப மாட்டி” (முல்லைப்.26);.

   3. போக்குதல்; to remove, to cause, to disappear.

     “மாயை யவுயவ மாட்டி” (ஞானா. 58, 12);.

     [முள் → முள் → மூட்டு → மாட்டு-தல்.]

 மாட்டு4 māṭṭu, பெ.(n.)

   1. அகன்று கிடப்பினும் அணுகிய நிலையிற் கிடப்பினும் பொருள் முடியுமாற்றாற் கொண்டு கூட்டிச் சொல் முடிபு கொள்ளும் முறை; a mode of construction in verse, which consists in taking together words connected in sense, whether far removed from each other or in close proximity.

     “அகன்று பொருள் கிடப்பினும்…. அணுகிய நிலையினும் இயன்று பொருள் முடியத் தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிய பாட்டியல் வழக்கின்” (தொல். பொருள்.522);.

   2. அடி (இ.வ.);; blow, stroke.

     [முள் → முள் → முட்டு → மாட்டு.]

 மாட்டு5 māṭṭu, பெ.(n.)

   சொல்; word.

     “எனதென்ற மாட்டின்” (சி.போ.3:2);.

     [முள் → மூள் → முட்டு → மாட்டு.]

மாட்டுஅயிரை

 மாட்டுஅயிரை māṭṭuayirai, பெ.(n.)

   பெரிய அயிரை மீன் (மீன.பொ.வ.);; a kind of small fish.

     [மாடு + அயிரை. மாடு = பெரிய.]

     [p]

மாட்டுக்கட்டை

 மாட்டுக்கட்டை māṭṭukkaṭṭai, பெ.(n.)

   மாடு கட்டுந் தறி (இ.வ.);; stake for tying cattle.

     [மாடு + கட்டை.]

மாட்டுக்கயிறு

 மாட்டுக்கயிறு māṭṭukkayiṟu, பெ. (n.)

மாடுகளுக்கு பூட்டும் கயிறு

 a rope for cattle.

     [மாடு+கயிறு]

மாட்டுக்கறை

மாட்டுக்கறை māṭṭukkaṟai, பெ.(n.)

   வரி வகை (S.I.l.v, 499);; a tax.

மாட்டுக்காரன்

மாட்டுக்காரன் māṭṭukkāraṉ, பெ.(n.)

   1. மாட்டிற்குரியவன்; owner of cattle.

   2. மாடு மேய்ப்பவன் (கொ.வ.);; one who tends cattle.

     [மாடு + காரன். காரன் = உடைமையீறு.]

மாட்டுக்காரப்பையன்

மாட்டுக்காரப்பையன் māṭṭukkārappaiyaṉ, பெ.(n.)

   1. மாடு மேய்ப்பவன் (இ.வ.);; neat – herd, cow-boy.

   2. பயனற்றவன (வின்.);; worthless fellow.

     [மாட்டுக்காரன் + பையன்.]

மாட்டுக்காலிற்போடு – தல்

மாட்டுக்காலிற்போடு – தல் māṭṭukkāliṟpōṭudal,    19 செ.குன்றாவி.(v.t.)

   களத்திற் சூடடித்தல் (நாஞ்.);; to tread sheaves on the threshing – floor, by using cattle.

     [மாட்டுக்காலில் + போடு-,]

மாட்டுக்கிடை

மாட்டுக்கிடை māḍḍukkiḍai, பெ.(n.)

   1. மாட்டுமந்தை (இக்.வ.);; herd of cattle.

   2. மாட்டுக்கொட்டில் (வின்.); பார்க்க; see {}.

     [மாடு + கிடை.]

மாட்டுக்கிடைபோடு – தல்

 மாட்டுக்கிடைபோடு – தல் māḍḍukkiḍaipōḍudal, பெ.(n.)

   உரத்திற்காக மாட்டு மந்தையை நிலத்தில் நிறுத்தி வைத்தல்; herd of cattle to be waive due to manure.

     [மாடு → மாட்டு + கிடை + போடு-.]

மாட்டுக்குளம்பு

மாட்டுக்குளம்பு1 māṭṭukkuḷambu, பெ.(n.)

   மாட்டின் பாதநுனி; toa of bulls.

     [மாடு → மாட்டு + குளம்பு.]

     [p]

 மாட்டுக்குளம்பு2 māṭṭukkuḷambu, பெ.(n.)

   பச்சிலைக் கொடி; cow’s hoof (சா.அக.);.

     [மாடு + குளம்பு. மாட்டின் குளம்பு போன்ற வடிவுடையது.]

மாட்டுக்கொட்டகை

 மாட்டுக்கொட்டகை māṭṭuggoṭṭagai, பெ.(n.)

மாட்டுக்கொட்டில் (வின்.); பார்க்க; see {}.

     [மாட்டுக்கொட்டில் → மாட்டுக்கொட்டகை.]

மாட்டுக்கொட்டில்

 மாட்டுக்கொட்டில் māṭṭukkoṭṭil, பெ.(n.)

   மாடு கட்டுமிடம் (வின்.);; cow-shed, cattle shed.

     [மாடு + கொட்டில்.]

மாட்டுக்கொம்பு

மாட்டுக்கொம்பு māṭṭukkombu, பெ.(n.)

   1. மாட்டின் கொம்பு; horn of cattle.

   2. கடல்படு பயிரிற் சிறியது. அணிகலனாய்க் கோத்து அணிதற்குரியது (முகவை. மீன்.);; sea-small plant which is used on ornament.

     [மாடு + கொம்பு.]

 மாட்டுக்கொம்பு2 māṭṭukkombu, பெ.(n.)

   ஓர் மருந்துச் சரக்கு; horns of cattle, a kind of natural body.

மாட்டுக்கொழுப்பு

 மாட்டுக்கொழுப்பு māṭṭukkoḻuppu, பெ. (n.)

   மாட்டின் நிணம்; tallow.

     [மாடு + கொழுப்பு.]

மாட்டுக்கோல்

 மாட்டுக்கோல் māṭṭukāl, பெ.(n.)

   மாடோட்டுஞ் சாட்டைக் கழி; goad or stick used in driving cattle.

     [மாடு → மாட்டு + கோல்.]

மாட்டுச்சாபிகம்

 மாட்டுச்சாபிகம் māṭṭuccāpigam, பெ.(n.)

   கோரோசினை; bezor orientale (சா.அக.);.

மாட்டுச்சிணி

 மாட்டுச்சிணி māṭṭucciṇi, பெ.(n.)

   மாட்டு நாற்றம் (வின்.);; the smell of cattle.

மாட்டுச்செறையா

 மாட்டுச்செறையா māṭṭucceṟaiyā, பெ.(n.)

   மிகப்பெரிய செறையா மீன் (முகவை.மீன.);; a big size of {} fish.

மாட்டுச்சோளி

 மாட்டுச்சோளி māṭṭuccōḷi, பெ.(n.)

   மாட்டின் நெற்றிப் பட்டையில் கோத்துக் கட்டுதற்குரிய சோளி (தஞ்சை.மீன.);; forehead ornament arround the cattle made up of oyster.

     [மாடு → மாட்டு + சோளி]

     [p]

மாட்டுணி

 மாட்டுணி māṭṭuṇi, பெ.(n.)

மாட்டுண்ணி பார்க்க; see {}.

     [மாட்டுண்ணி → மாட்டுணி.]

மாட்டுண்ணி

 மாட்டுண்ணி māṭṭuṇṇi, பெ.(n.)

   பெரிய அளவிலான உண்ணி; acarus, tick on dogs, sheep and cattle which is big in size.

     [மாடு + உண்ணி.]

மாட்டுத்தனம்

 மாட்டுத்தனம் māṭṭuttaṉam, பெ.(n.)

   விலங்கின் தன்மை (வின்.);; bruitishness.

     [மாடு + தனம். மாடு = விலங்கு. தனம் = தன்மையைக் குறிக்கும் பெயரீறு.]

மாட்டுத்தாள்

 மாட்டுத்தாள் māṭṭuttāḷ, பெ.(n.)

   கரட்டுத் தாள்; coarse paper of மட்டித்தாள்.

     [மட்டித்தாள் → மாட்டுத்தாள்.]

மாட்டுத்தாழி

மாட்டுத்தாழி māṭṭuttāḻi, பெ. (n.)

   மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டி; a tub of water for cattle. (கொ.வ.வ.சொ.123);.

     [மாடு+தாழி]

மாட்டுத்தாவணி

 மாட்டுத்தாவணி māṭṭuttāvaṇi, பெ.(n.)

   மாடுகளை வாங்கவும், விற்கவும் உரிய இடம்; cattle fair.

     [மாடு + தாவணி. தாழ்வு → தாவு = வாழிடம், தங்குமிடம் தாவு → தாவணி.]

கோயில் நகரமாம் மதுரை மாநகரில் வெளியூர் பேருந்துகள் நிற்குமிடத்திற்கு மாட்டுத் தாவணி என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் மாடுகள் வாங்கவும், விற்கவும் உரிய இடமாக இருந்தமையால் இப்பெயர் பெற்றுள்ளது எனலாம்.

மாட்டுத்தும்பு

 மாட்டுத்தும்பு māṭṭuttumbu, பெ.(n.)

   மாடு கட்டுவதற்கான கவையுள்ள புரிக்கயிறு; tether for cattle.

     [மாடு + தும்பு.]

மாட்டுநீறு

மாட்டுநீறு māṭṭunīṟu, பெ.(n.)

   ஒரு பொதிமாடு சுமக்கக் கூடிய நான்கு கலங்கொண்ட சுண்ணாம்பு நீறு (G.Tj. D.I.134);; four kalam of quick-lime, as one bullock-load.

     [மாடு + நீறு. நூறு → நூள். நூறு → நீறு.]

மாட்டுப்பட்டி

மாட்டுப்பட்டி māṭṭuppaṭṭi, பெ.(n.)

   மாடடைக்குங் கொண்டித் தொழு; cattle pond.

     “மாட்டுப்பட்டிக் கோரைந்து பணமென்று” (சரவண.பணவிடு.110);.

     [மாடு + பட்டி.]

மாட்டுப்பறங்கிக்காய்

மாட்டுப்பறங்கிக்காய் māṭṭuppaṟaṅgikkāy, பெ.(n.)

   சாம்பற் பூசணி; ash gourd

     “மாட்டுப் பறங்கிக்காய்…. தினங் கறியாய்க் கூட்டிக் கொண்டு” (விறலிவிடு.246);.

     [மாடு + பறங்கிக்காய்.]

     [p]

மாட்டுப்பல்

 மாட்டுப்பல் māṭṭuppal, பெ.(n.)

   அகன்று பெரியதான பல்; large teeth.

     [மாடு + பல்.]

மாட்டுப்பிலாச்சை

 மாட்டுப்பிலாச்சை māṭṭuppilāccai, பெ.(n.)

   பெரிய பிலாச்சை மீன்; a large size of {} fish (சா.அக.);.

     [மாடு + பிலாச்சை.]

மாட்டுப்புத்தி

 மாட்டுப்புத்தி māṭṭupputti, பெ.(n.)

மாட்டறிவு பார்க்க; see {}.

     [மாடு + புத்தி, Skt. புத்தி. த. அறிவு.]

மாட்டுப்பூசணி

மாட்டுப்பூசணி2 māṭṭuppūcaṇi, . பெ.(n.)

சாம்பற்பூசணி பார்க்க; see {}.

     [மாடு + பூசணி.]

மாட்டுப்பூசணி

மாட்டுப்பூசணி2 māṭṭuppūcaṇi, . பெ.(n.)

சாம்பற்பூசணி பார்க்க; see {}.

     [மாடு + பூசணி.]

மாட்டுப்பெண்

 மாட்டுப்பெண் māṭṭuppeṇ, பெ.(n.)

   மருமகள்; daughter-in-law.

     [மணாட்டுப் பெண் → மாட்டுப் பெண்.]

மாட்டுப்பொங்கல்

 மாட்டுப்பொங்கல் māṭṭuppoṅgal, பெ.(n.)

   சுறவத்திங்கள் முதல்நாள் வரும் பொங்கல் நாளையடுத்து வருவதும் கால்நடைகளின் நன்மையைக் கருதிப் பொங்கலிடப் படுவதுமான திருநாள்; festival of ceremonial boiling of rice performed on the second day of the month of {} in order to ensure prosperity of cattle.

     [மாடு + பொங்கல்.]

மாட்டுமழு

 மாட்டுமழு māṭṭumaḻu, பெ.(n.)

   சூடுபோடுகை; branding.

     [மாட்டு + மழு.]

சிற்றூர்த் தெய்வங்களுக்கு நேர்ச்சிக்கடனாக விடப்படும் மாடுகளுக்கு அடையாளமாக காய்ச்சிய இரும்பினால் மாட்டின் மீது சூடு போடுவதும், மந்தை மாடுகளில் தங்களுடையது என அடையாளம் காணுவதற்காக சூடுபோடுவதும், சிற்றுார் மக்களிடையே காணப்படும் பழக்கமாகும்.

மாட்டுமீன்

 மாட்டுமீன் māṭṭumīṉ, பெ.(n.)

   மாடு போன்று தலையில் கொம்புடைய ஒரு வகைக் கடல் மீன்; coffer fish with two horn like growths on the head, it is a sea fish.

     [மாடு → மாட்டு + மீன்.]

மாட்டுமுலைக்காளான்

 மாட்டுமுலைக்காளான் māṭṭumulaikkāḷāṉ, பெ.(n.)

   பசுவின் மடிபோன்றிருக்கும் காளான் வகை (வின்.);; a kind of fungus, as resembling the teat of a cow’s udder.

     [மாட்டுமுலை + காளான்.]

மாட்டுவண்டி

 மாட்டுவண்டி māṭṭuvaṇṭi, பெ.(n.)

   ஒரு மாடு அல்லது இரு மாடுகள் இழுத்துச் செல்லும் மரத்தால் செய்த வண்டி; bullock cart.

     [மாடு + வண்டி.]

     [p]

மாட்டுவலை

 மாட்டுவலை māṭṭuvalai, பெ.(n.)

   வலை வகை, பெருவலையின் ஒரு உறுப்பாகப் பிணைக்கப்பட்டிருக்கும் வலை; a kind of net, a part of net in large net.

     [மாட்டு + வலை.]

மாட்டுவாகடம்

 மாட்டுவாகடம் māḍḍuvākaḍam, பெ.(n.)

   மாட்டின் நோய்களைப் பற்றிக் கூறும் மருத்துவ நூல்; indigenous veterinery science.

மாட்டுவாரம்

 மாட்டுவாரம் māṭṭuvāram, பெ.(n.)

   குடியானவன் உதவும் உழுவு மாட்டுக்குத் தக்கபடி மேல்வாரக்காரன் அவனுக்குக் கொடுக்கும் விளைச்சலின் பங்கு (இ.வ.);; system of sharing {} produce in which the tenent’s portion is determined by the number of yoke of oxen that he furnishes.

     [மாட்டு + வாரம்.]

மாட்டுவி – த்தல்

மாட்டுவி – த்தல் māṭṭuvittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அழியச் செய்தல்; to cause to be ruined.

     “மதுவனந் தன்னை யின்னே மாட்டுவித்தனை நீ யென்னா” (கம்பரா. திருவடி.23);.

     [மாட்டு → மாட்டுவி-,]

மாட்டெ

மாட்டெ2 māṭṭeṟidal, பெ.(n.)

   1. மாட்டு3, 1 பார்க்க; see {}.

   2. மாட்டெறிந் தொழுகல் பார்க்க; see {}.

   3. ஆவணத்தில் மேற்புறத்தே விவரக் குறிப்பு எழுதுகை (வின்.);; docketing on a deed.

     [மாட்டு + எறிதல்.]

மாட்டெறி

மாட்டெறி1 māṭṭeṟidal,    2 செ.கு.வி. (v.i.) ஏறிட்டுக் கூறுதல்; to ascribe, attribute, to apply.

     “பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார்” (ஈடு.2, 2, 4);.

மாட்டெறிந்தொழுகல்

மாட்டெறிந்தொழுகல் māṭṭeṟindoḻugal, பெ.(n.)

   முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்றானதும், ஒரு நூற்பாவிற் கூறிய நெறியை அதனை யொத்த நூற்பாவிதரும் இணைத்துக் கொள்வதுமான உத்தி (நன்.14);;     [மாட்டெறிந்து + ஒழுகல்.]

மாட்டேறு

மாட்டேறு māṭṭēṟu, பெ.(n.)

மாட்டெறிதல், 1, 2 (நன்.164, உரை); பார்க்க; see {}.

மாட்டேற்று

மாட்டேற்று māṭṭēṟṟu, பெ.(n.)

   1. மாட்டெறிந் தொழுகல் பார்க்க; see {}.

   2. மாட்டெறிதல் பார்க்க; see {}.

   3. குறிப்பாகக் கூறுகை (வின்.);; allusion, reference.

மாணம்

மாணம் māṇam, பெ.(n.)

   மாட்சிமை (அக.நி.);; greatmess, excellence.

     [குள் → முள் → மள் → மண் = மாண்பு. மண் = மாட்சிமை. மண் → மாண் → மாணம் (மு.தா.217);.]

மாணல்

மாணல்1 māṇal, பெ.(n.)

   மாட்சிமை (பிங்கல. 1792);; splendour, greatness.

     [மல் → மால் → மாண் → மாணல் (வே.க.4:30);.]

 மாணல்2 māṇal, பெ.(n.)

   1. சாய்வு; slope.

   2. வளைவு; curved, angular.

     [முள் → (மூள்); → (மாள்); → மாண் → மாணல். கோணல் மாணல் என்பது வழக்கு (மு.தா.225);..]

மாணவகன்

மாணவகன் māṇavagaṉ, பெ.(n.)

   1. மணமாகாதவன்; celibate, student.

     “பொச்ச மொழுகு மாணவகன்” (பெரியபு. சண்டேசுர.40);.

   2. பயிலும் மாணவன்; pupil, scholar, roligious student.

     “ஆசான் முன்னே துயில் மாணவகரை” (திருமந்.2163);.

   3. 8 முதல் 16 ஆண்டிற்குட்பட்ட சிறுவன் (யாழ்.அக.);; lad more than eight less than sixteen years of age.

   4. அறிவிலி (யாழ்.அக.);; fool, inexperienced person.

     [மாண் → மாணவன் → மாணவகன் (வே.க.4:7);.]

மாணவகம்

மாணவகம்1 māṇavagam, பெ.(n.)

   கல்வி (சிந்தாமணி நிகண்டு);; learning.

 மாணவகம்2 māṇavagam, பெ.(n.)

   பதினாறு கோவையுள்ள முத்தாரம் (சங்.அக.);; a pearl necklace of sixteen strings.

     [மாண் → மாணவன் → மாணவகம் (மு.தா.131);.]

மாணவன்

மாணவன் māṇavaṉ, பெ.(n.)

   1. கல்வி நிறுவனத்தில் பயிலும் சிறுவன் அல்லது இளைஞன்; student.

   2. மாணவகன், 1 பார்க்க;see {}.

     “மஞ்சனைக் குறுகி யொரு மாணவப் படிவ மொடு” (உத்தரரா.அனுமப்.6);.

     [மாண் → மாணவகன். மாணவனைக் குறிக்கும் வேறு சில பெயர்களும் சிறுவன் சிறுமியைக் குறிப்பனவாகவேயுள்ளன. ஒ.நோ. பிள்ளை = மாணவன், மாணவி, பள்ளிப்பிள்ளை என்னும் வழக்கைக் காண்க.]

 E. pupil, from L. Pubillus, Pupilla, dims of pulas, a boy, pupa – a girl. E. Pedant from Gr. Pais, Paidos a child.

மாணாக்கன் மாணாக்கி என்னும் வடிவங்களும் மாணவன் என்னும் சொல்லுக்கு நேர் மூலமான மாண் என்னும் வடிவமும் அதன் திரிபான மாணி என்பதும் இவற்றுக்கு அடிவழியான கொடி வழிச் சொற்களும் வடமொழியிலில்லை (மு.தா.131);.

மாணவர்மன்

 மாணவர்மன் māṇavarmaṉ, பெ.(n.)

   நரசிம்மவர்மப் பல்லவனிடம் அதிகாரியாகப் பணியாற்றிய ஈழவேந்தன் (சி.பெ.அக.);; prince of ceylon, who worked with Pallava Narasimhavarmar.

மாணவி

 மாணவி māṇavi, பெ.(n.)

மாணாக்கி பார்க்க;see {}.

     [மாணவன் (ஆ.பா.); → மாணவி (பெ.பா.);.]

மாணவை

மாணவை māṇavai, பெ.(n.)

   கற்கும் பெண் (நீலகேசி, 531, உரை);.; female disciple, lady pupil

     [மாண் → மாணவி → மாணவை.]

மாணவ்வியம்

மாணவ்வியம்1 māṇavviyam, பெ.(n.)

   சிறுவர் கூட்டம்; croud of childrens.

 மாணவ்வியம்2 māṇavviyam, பெ. (п.)

   1. பிள்ளைத் தன்மை (யாழ்.அக.);; childhood, boyhood.

   2. மாணவர்குழு (இலக்.அக.);; company of students.

     [மண் → மாண் → மாணி = இளமை. மாண் → மாணவன் = பள்ளிச் சிறுவன்.]

மாணாக்கன்

மாணாக்கன் māṇākkaṉ, பெ.(n.)

மாணவகன், 2 பார்க்க;see {}.

     “இவனோ ரிளமாணாக்கன்” (குறுந். 33);.

     [மாணவகன் → மாணாக்கள்.]

மாணாக்கி

மாணாக்கி māṇākki, பெ.(n.)

   கற்கும் பெண்; female disciple.

     “நும்மகன் மாணாக்கி வணங்கும்” (பெருங்.உஞ்சைக்.37, 110);.

     [மாணவன் → மாணாக்கன். மாணாக்கன் (ஆ.பா.);, மாணாக்கி (பெ.பா.);.]

மாணாமை

மாணாமை1 māṇāmai, பெ.(n.)

   மாட்சிமைப் படாமை; that which is not honour.

     [மாண் → மாணாமை.]

 மாணாமை2 māṇāmai, பெ.(n.)

   ஒரு நிலையில் நில்லாமை (பரிமே.திருக்.1297);; unstable in one condition.

மாணார்

மாணார் māṇār, பெ.(n.)

   பகைவர்; enemies, as those who are without excellence.

     “மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும்” (தொல்.பொருள்.91);.

     [மாண் → மாணார்.]

மாணி

மாணி1 māṇi, பெ.(n.)

   1. மணமாகாதவன்; student, bachelor.

     “கருமாணியா யிரந்த கள்வனே” (திவ்.இயற்.2, 61);.

   2. குறள் வடிவம் (திவ்.பெரியாழ்.1, 4, 1, ஸ்வா.);; dwarf.

   3. அழகு; beauty.

     “மாணிக் குறளுருவாய மாயன்” (திவ். பெரியாழ். 5, 2 5, அரும்);.

   4. ஆண்குறி (யாழ்.அக.);; penis.

க. மாணி.

     [முள் → (மள்); → மண் → மணி = சிறியது. மண் → மாண் = குறள், குறளன், சிவன், இளைஞன்,மிலி. மாண் → மாணி (மு.தா.131.);.]

 மாணி2 māṇi, பெ.(n.)

   மாணவகன்; disciple.

     “புத்தனார் முதன் மாணி….. மொக்கலனெனச் சொன்னான்” (நீலகேசி, 266);.

     [மாணவகன் → மாணி.]

மாணிகை

மாணிகை māṇigai, பெ.(n.)

   எட்டுப் பலம் கொண்ட நிறை; a weight of 8 palams.

     [மாணி + வகை.]

மாணிக்க வாணியன்

மாணிக்க வாணியன் māṇikkavāṇiyaṉ, பெ.. (n.)

   முதல் இராசேந்திரன் காலத்தில் திரு வோத்துரில் விளக்கு வைக்க ஏற்பாடு செய்த வணிகன்; name of a merchant.

     [மாணிக்கம்+வாணியன்]

முதல் இராசேந்திரன் காலத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஒர் ஊரிலிருந்து திருவோத்துருக்கு வந்தவன். (இவன் காலம் கி.பி.1012-1044ஆம் ஆண்டு);.

மாணிக்கச்சம்பா

மாணிக்கச்சம்பா māṇikkaccambā, பெ(n.)

   சம்பா நெல் வகை (குருகூர்ப்.58);; a kind of {} paddy.

     [மாணிக்கம் + சம்பா.]

மாணிக்கத்தாள்

மாணிக்கத்தாள் māṇikkattāḷ, பெ.(n.)

   தாசி (M.M.354);;  dancing girl.

     [மாண் → மாணி → மாணிக்கத்தாள்.]

மாணிக்கப்படி

மாணிக்கப்படி māṇikkappaḍi, பெ.(n.)

   மணிகள் கோத்த மேலாடை (இரத்தினங்கி);, மனியாடை; jewelled garment.

     “தனக்காக ஒரு மாணிக்கப்பட்டி சாத்தி” (ஈடு.4, 4, 3);.

     [மாணிக்கம் + படி.]

மாணிக்கப்பட்டி

மாணிக்கப்பட்டி māṇikkappaṭṭi, பெ.(n.)

   சிவப்புப் பட்டிப் பூ; pink trumpet flower.

     “மாணிக்கப்பட்டிப் பூவை மாதேவர்க்கு” (புட்பபலன்.96);.

     [மாணிக்கம் + பட்டி.]

மாணிக்கப்பட்டை

 மாணிக்கப்பட்டை māṇikkappaṭṭai, பெ.(n.)

கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்பு வண்ணப் பட்டை (இ.வ.);:

 red stripes painted on a temple wall or front wall of a house.

     [மாணிக்கம் + பட்டை.]

     [p]

மாணிக்கப்பீடம்

மாணிக்கப்பீடம் māṇikkappīṭam, பெ. (n.)

   மணி வைத்திழைத்த மோதிர வகை (சிலப்.6:96, உரை);; a kind of ring set with rubies.

     [மாணிக்கம் + பீடம்.]

மாணிக்கப்பூடு

 மாணிக்கப்பூடு māṇikkappūṭu, பெ.(n.)

   பிண்டம்; foetus (சா.அக.);.

மாணிக்கமாலை

 மாணிக்கமாலை māṇikkamālai, பெ.(n.)

   வெள்ளை, சிவப்பு வளையங்கள் மாறி மாறி வரத் தொடுத்த பூமாலை வகை (இ.வ.);; a garland with rings of white and red flowers alternating.

     [மாணிக்கம் + மாலை.]

மாணிக்கமின்சேய்

மாணிக்கமின்சேய் māṇikkamiṉcēy, பெ.(n.)

முருகக் கடவுளது படைவீரருள் ஒருவரான வீரவாகு (நாமதீப.37);;{}

 a hero in the retinue of Murugan.

     [மாணிக்கம் + மின்சேய்.]

மாணிக்கம்

மாணிக்கம் māṇikkam, பெ.(n.)

   தொன் மணியிலொன்றும் நான்கு பகுப்பினை யுடையதுமான செந்நிறமணி (திருவிளை. மாணி.38);; ruby, carbuncle of which there are four kinds viz. {}, guruvindam, caukantigam, {} of navamani (q.v.);.

     “குப்பையிலே கிடந்தாலும் மாணிக்கம் மாணிக்கம்தான்” (பழ.);.

மாணிக்கவாசகர்

 மாணிக்கவாசகர் māṇiggavācagar, பெ.(n.)

   ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கருதப்படுபவரும் திருவாசகம், திருக் கோவையார் என்பவற்றின் ஆசிரியரும் சைவசமயக்குரவர் நால்வருளொருவருமான பெரியவர்; a famous Saiva saint, author of {}, and {}, one of four camayakkuravar, probably of the ninth century.

மாணிக்கவாளி

 மாணிக்கவாளி māṇikkavāḷi, பெ.(n.)

   காதணி வகை; an ear ornament.

     [மாணிக்கம் + வாளி.]

மாணிக்காத்தாள்

மாணிக்காத்தாள் māṇikkāttāḷ, பெ.(n.)

   நடன மங்கையருள் ஒரு சாரார் (E.T.ii.162);; a class of dancing girls.

     [மாணிக்கம் → மாணிக்காத்தாள்.]

மாணிக்குறி

 மாணிக்குறி māṇikkuṟi, பெ.(n.)

   ஆண்குறி; penis, male organ.

     [மாணி + குறி.]

மாணிச்சாறு

 மாணிச்சாறு māṇiccāṟu, பெ.(n.)

   இலைப் பிழிவு; juice of leaf.

     [மாணி + சாறு.]

மாணிபந்தம்

 மாணிபந்தம் māṇibandam, பெ.(n.)

   உப்பு; salt (சா.அக.);.

     [மாணி + பந்தம்.]

மாணிப்புண்

 மாணிப்புண் māṇippuṇ, பெ.(n.)

   ஆண் குறியிலுண்டாகும் புண் (M.L.);; venereal sore in the penis, chancre.

     [மாணி + புண்.]

மாணிமலைப்படை

மாணிமலைப்படை māṇimalaippaḍai, பெ.(n.)

   காட்டு காடை; a bird – glide (சா.அக.);.

மாணியரி – தல்

__,

   2 செ. குன்றாவி. (v.t.);

   1. இனப்பெருக்க அழிவு செய்தல்; to circumcise.

   2. விதையெடுத்து ஆண் பிள்ளையைப் பேடியாக்குதல் (வின்.);; to castrate a man.

     [மாணி + அரி-,]

மாணீர்ச்சாறு

 மாணீர்ச்சாறு māṇīrccāṟu, பெ.(n.)

   இலைச்சாறு; juice from the leaf.

மாணு – தல்

மாணு – தல் māṇudal,    12 செ.கு.வி.(v.i.)

மாண் – பார்க்க;see {}.

மாணை

மாணை māṇai, பெ.(n.)

   ஒருவகைக் கொடி; a climber.

     “துறுக லயலது மாணை மாக்கொடி” (குறுந்.36);.

மாண்

மாண்1 māṇṇudal,    12 செ.கு.வி.(v.i.)

   1. மாட்சிமைப்படுதல்; to become excellent, glorious.

     “மாண்டார் வினைத் திட்பம்” (குறள், 665);.

   2. நன்றாதல்; to be good, worthy.

     “மாண்டற் கரிதாம் பயன்” (குறள், 177);.

   3. நிறைதல்; to be full, abundant.

     “மாணாப் பிறப்பு” (குறள், 1002);.

   4. மிகுதல்; to be great

     “மாணப் பெரிது” (குறள், 124);.

     [மால் → மாண்(ணு);–. மால் = பெருமைப் பொருள்.]

 மாண்2 māṇ, பெ.(n.)

   மாட்சிமை; greatness, glory, splendour, excellence, dignity.

     “மாணெழில்…. தோளாய்” (கலித்.20, 15);.

     [மா = பெருமை. மால் → மாள் → மாண் (பு);.]

 மாண்3 māṇ, பெ.(n.)

   1. பள்ளிச் சிறுவன்; school boy.

     “மாணாகி வைய மளந்ததுவும்” (திவ்.பெரியதி.8, 10, 8);.

   2. குறள்வடிவம், குறளன்; dwarf.

     “குறுமாணுருவன் தற் குறியாகக் கொண்டாடும்” (தேவா.164, 5);.

     [மண் → மாண் (வே.க.44:7);.]

 மாண்4 māṇ, பெ.(n.)

   மடங்கு; turn, time.

     “பன்மாண்” (பரிபா.13, 62);.

     [முள் → மூள் → (மாள்); → மாண் (மு.தா.235);.]

மாண்டது

 மாண்டது māṇṭadu, பெ.(n.)

   சிறப்பிக்கப்பட்டது; that which is glory.

     [மாண் → மாண்டது.]

மாண்டல்

மாண்டல்1 māṇṭal, பெ.(n.)

   மாட்சியாகை (சூடா.);; being great, being worthy.

     [மால் → மாண் → மாண்டல்.]

 மாண்டல் māṇṭal, பெ.(n.)

   இறத்தல் (பிங்.);; dying.

     [மாள் → மாண்டல்.]

மாண்டவர்

மாண்டவர் māṇṭavar, பெ.(n.)

மாண்டார்1 பார்க்க; see {}.

     [மாண்டார் → மாண்டவர்.]

மாண்டவர்குழி

 மாண்டவர்குழி māṇṭavarkuḻi, பெ.(n.)

   முதுமக்கட்டாழி புதைக்கும் குழி (இ.வ.);; kistvaens containing earthen jars with fragments of human bones.

     [மாண்டவர் + குழி.]

மாண்டார்

மாண்டார்1 māṇṭār, பெ.(n.)

   மாட்சிமை யுள்ளவர்; the illustrious, the great.

     “வீறெய்தி மாண்டார்” (குறள், 665);.

     [மா = பெரிய. மா → மால் → மாண் → மாண்டார்.]

 மாண்டார்2 māṇṭār, பெ.(n.)

   இறந்தவர்; the dead.

     “மாண்டார் வருவரோ மாநிலத்தீர்” (நல்வழி, 10);.

     [மாள் → மாண்டார்.]

மாண்டூகம்

 மாண்டூகம் māṇṭūkam, பெ.(n.)

மாண்டூக்கியம் (யாழ்.அக..); பார்க்க; see {}.

மாண்டூக்கியம்

மாண்டூக்கியம் māṇṭūkkiyam, பெ.(n.)

   நூற்றெட்டுச் சிற்றிலக்கியங்களுளொன்று; an upanisad, one of 108.

மாண்பு

மாண்பு māṇpu, பெ.(n.)

   1. மாட்சிமை; honour, dignity

     “இல்லவண் மாண்பானால்” (குறள், 53);.

   2. அழகு; beauty.

     “அரன் மிடற்றின்

மாண்பதென்றே

     ” (திருக்கோ.323);.

   3. பெருமை (யாழ்.அக.);; greatness, excellence.

   4. நன்மை (அரு.நி.);; goodness.

     [குள் = பெருமை கருத்துவேர். அறிவாற்ற லதிகார செல்வங்களின் பருமையே பெருமை. குள் → முள் → மள் → மண் → மாண் → மாண்பு (மு.தா.217);.]

மாண்புமிகு

 மாண்புமிகு māṇpumigu, கு.பெ.எ.(adj.)

   அமைச்சர் முதலியோரை அழைக்கும்போது அல்லது குறிப்பிடும் போது பயன்படுத்தும் மதிப்புத் தொடர்; a form of address for a minister.

     “மாண்புமிகு முதலமைச்சர்” (உ.வ.);.

     [மா = பெருமை. மால் → மாள் → மாண்பு + மிகு.]

மாண்மகன்

மாண்மகன் māṇmagaṉ, பெ.(n.)

   பள்ளிச் சிறுவன்; school boy.

     “பண்டு மாண் மகன்றன் செயல் பார்த்தவோ” (தக்கயாகப். 672);.

மாதங்கன்

மாதங்கன் mātaṅgaṉ, பெ.(n.)

   1. அரசகுலப் பெண்ணுக்கும் வேடனுக்கும் பிறந்தோன்; person of mixed caste, the mother being of the ksattiriya caste and the father of the hunter tribe.

   2. சாதியற்றவர் (சண்டாளன்);; out caste.

   3. கீழ்மகன்; base, mean man.

   4. வேடன்; hunter, fowler.

மாதங்கம்

மாதங்கம்1 mātaṅgam, பெ.(n.)

   1. யானை (சூடா.);; elephant.

     “வாம்பரி தேர் மாதங்கத் தானை” (அஷ்டப்.திருவரங்கத்தந்.11);.

   2. அரச மரம் (யாழ்.அக.);; papal tree.

 மாதங்கம்2 mātaṅgam, பெ.(n.)

   1. இளமை (அக.நி.);; youth.

   2. உருவம் (அக.நி.);; shape. figure.

   3. கடல் (அக.நி.);; sea.

   4. உத்தி1 (யாழ்.அக.);; a head ornament.

மாதங்காரி

 மாதங்காரி mātaṅgāri, பெ.(n.)

   சிவன்;{}, as the destroyer of elephant.

மாதங்கி

மாதங்கி mātaṅgi, பெ.(n.)

   1. காளி (சூடா.);;{}.

   2. மலைமகள் (நாமதீப.22);; malai magal.

   3. யாழ்த் தெய்வம் (சிலப்.7, 1, உரை);; the Goddess of {}.

   4. மதங்கி; singing danseuse.

     “கதிர்வேல் பாடு மாதங்கி” (காரிகை, செய்.9, உரை);.

மாதசுரூபிதம்

 மாதசுரூபிதம் mādasurūpidam, பெ.(n.)

   எலி; rat.

மாதச்சுரம்

 மாதச்சுரம் mātaccuram, பெ.(n.)

   மாதத்திற்கொருமுறை வரும் சுரம் (சீவரட்);; intermittend fever, with monthly intervals.

     [மாதம் + சுரம்.]

மாதசுரூபி

__,

பெ.(n.);

   கருவண்டு; black beetle (சா.அக.);.

மாதண்டம்

 மாதண்டம் mātaṇṭam, பெ.(n.)

   அரசவீதி (வின்.);; principal road, king’s high – way.

மாததூரம்

 மாததூரம் mātatūram, பெ.(n.)

மாதவிடாய் பார்க்க; see {}.

     [மாதவிடாய் → மாததூரம்.]

மாதத்தகை

 மாதத்தகை mātattagai, பெ.(n.)

   மிகு சிறப்பு, மிகுதகை; the great.

மாதத்தீட்டு

 மாதத்தீட்டு mātattīṭṭu, பெ.(n.)

மாதவிடாய் பார்க்க;see {}.

மறுவ. மாதவிலக்கு.

     [மாதவிடாய் → மாதத்தீட்டு.]

மாதநம்

 மாதநம் mātanam, பெ.(n.)

   இலவங்கம்; clove (சா.அக.);.

மாதநாலி

 மாதநாலி mātanāli, பெ.(n.)

   ஏலவரிசி; cardamon seed (சா.அக.);.

மாதனம்

 மாதனம் mātaṉam, பெ.(n.)

   கிராம்பு (யாழ்.அக.);; Clove.

மாதப்படி

மாதப்படி1 mātappaḍi, பெ.(n.)

   வரிவகை; a kind of tax (S.I.I.vii, 403);.

     [மாதம் + படி.]

 மாதப்படி2 mātappaḍi, பெ.(n.)

   கோயில் முதலியவற்றுக்கு உதவும் மாதப்படிக் கட்டளை; monthly allowances as to a temple (Insc.);.

மாதப்பலன்

 மாதப்பலன் mātappalaṉ, பெ.(n.)

   பிறந்த மாதம், விண்மீன் கொண்டு இன்ப துன்பம் அறிவது; find out luck and unluck the birth of month.

     [மாதம் + பலன்.]

மாதப்பிறப்பு

மாதப்பிறப்பு mātappiṟappu, பெ.(n.)

   1. திங்களின் முதனாள்; the first day of a month.

   2. கதிரவன் ஓர் ஒரை (இராசி); யிலிருந்து அடுத்த ஒரை (இராசி);யில் செல்லுவதான மாதத் தொடக்கத்தின் சமயம் (பஞ்.);; beginning of a month, being the moment when the sun passes from one {} to the next.

     [மாதம் + பிறப்பு.]

மாதப்புறா

 மாதப்புறா mātappuṟā, பெ.(n.)

   மாரி காலத்தில் நாட்டில் வாழும் நீர்ப்பறவை வகை (வின்.);; a great black -headed gull, as remaining in the country during the rainy season.

     [மாதம் + புறா.]

மாதம்

மாதம் mātam, பெ.(n.)

   1. முப்பது நாள் கொண்ட காலப் பகுதி; month.

   2. ஆண்டின் பன்னிரண்டிலொரு பகுதி; a twelth part of a year.

     [மதித்தல் = அளவிடுதல். மதி = அளவு, அளவிடப் பெற்ற பொருள். ஏற்றுமதி, இறக்குமதி என்னும் சொற்களை நோக்குக. பக்கம், மாதம் முதலிய அளவிற்குத் துணையான நிலா, நிலாவினாற் கணிக்கப் பெறும் கால அளவு, ஒரை. மதி → மாதம். ஒ.நோ.மானம் = அளவு.]

 As. mono;E. moon;Gk. men, mere. L.mensis, mena. Ger. mano, mane, mond. Goth.mena. Lith. menu, menesis, slav. meseci.

இனி, மத்து → மத்தி → மதி = மயக்கஞ் செய்யும் நிலா என்றுமாம். ஒ.நோ. L.luna = moon, lunatic = insane, lunacy = insanity. வடவர் மா3 (அள); என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர். அதன் பொருந்தாமையையும், ஒருகாற் பொருந்துவதாகக் கருதினும் அதுவும் தென்சொல்லே யாதலையும் காண்க. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலி. மாஸ் → மாதம் என்று தலைகீழாகக் காட்டும். மதி என்னும் மூலத்தினின்று மாதம் என்னும் தகரச் சொல்லன்றி மாஸ என்னும் ஸகரச் சொல் எங்ஙனம் தோன்றும் (வ.வ.60);.

மாதரம்

 மாதரம் mātaram, பெ.(n.)

   எலுமிச்சம் பழம்; lime fruit (சா.அக.);.

மாதரழகி

 மாதரழகி mātaraḻki, பெ.(n.)

   பெருந்துளசி; large ocimum somotum (சா.அக.);.

     [மாதர் + அழகி.]

மாதராள்

மாதராள் mātarāḷ, பெ.(n.)

மாதர்1, 1 பார்க்க;see {}.

     “மடமொழி மாதராள்” (நாலடி, 384);.

     [மாதர் → மாதராள்.]

மாதரி

மாதரி1 mātari, பெ.(n.)

   சிலப்பதிகாரத்தில் மதுரையில் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் முதுமகள் (சி.பெ.அக.);; a shepherd old lady who took care of Kannagi at Madurai as per Silappathikaram.

 மாதரி2 mātari, பெ.(n.)

காளி (பிங்.);;{}.

மாதரிச்சை

 மாதரிச்சை mātariccai, பெ.(n.)

   பெண்கள் மேல் உண்டாகும் இச்சை; sexual desire in female.

     [மாதர் + இச்சை.]

மாதருதரக்கட்டி

 மாதருதரக்கட்டி mādarudarakkaṭṭi, பெ.(n.)

   கருப்பாயாசக்கட்டி; abscess in the ulerus (சா.அக.);.

மாதர்

மாதர்1 mātar, பெ.(n.)

   1. பெண்; woman.

     “மறுவுண்டோ மாதர் முகத்து” (குறள், 1117);.

   2. அழகு (பிங்.);; beauty.

     “மாதர்கொண் மாதரெல்லாம்” (திருவாத.பு.திருவம்பல.40);.

   3. பொன் (அக.நி.);; gold.

   4. காதல் (தொல். சொல்.328);; love.

     [மா = அழகு. மா → மாது = அழகு, அழகுள்ள பெண், பெரும்பாலும் அழகினால் ஏற்படும் காதல். மாது → மாதர்.]

பெண்கள் பெரும்பாலும் தாய்மாராதலாலும், தெய்வப் பெண்டிர் தாய்போற் கருதப் பெறுவதாலும், பெண்ணின் பெயர் தாய்க்கருத்தையுங் கொள்ளும். எ-டு. மலைமகள், மலை மடந்தை, மலைமாது. இம்முறையிலேயே, மாதர் என்னும் சொல்லும் தாய்ப் பொருளைப் பெற்றது.

 GK. mater, L.marer, E.mother, G. muotar, mutter, ther, Litemote, slav.mati.

வடவர் காட்டும் மூலம் மா 3.அள.

 derivation from 3 {} very doubtful

என்று மானியர் வில்லியம்சு சமற்கிருத அகரமுதலி குறித்திருத்தல் காண்க (வ.வ.60);.

 மாதர்2 mātar, பெ.(n.)

   ஒரிடைச் சொல் (சூடா.);; an expletive.

மாதர்காய்

 மாதர்காய் mātarkāy, பெ.(n.)

   தேங்காய்; cocoanut.

மாதர்காய்ச்சல்

 மாதர்காய்ச்சல் mātarkāyccal, பெ.(n.)

   காமக் காய்ச்சல்; fever due to passion.

     [மாதர் + காய்ச்சல்.]

மாதர்குணச்சலம்

 மாதர்குணச்சலம் mātarkuṇaccalam, பெ.(n.)

   கந்தகம்; sulphur.

மாதர்குலம்

 மாதர்குலம் mātarkulam, பெ.(n.)

   மகளிர் பிரிவு; class of women.

     [மாதர் + குலம்.]

மாதர்பால்

 மாதர்பால் mātarpāl, பெ.(n.)

   முலைப்பால்; human breast milk.

     [மாதர் + பால்.]

மாதர்பிணி

 மாதர்பிணி mātarpiṇi, பெ.(n.)

   பெண் நோய்; venereal disease.

     [மாதர் + பிணி.]

மாதர்லிங்கம்

 மாதர்லிங்கம் mātarliṅgam, பெ.(n.)

   பெண் குறியின் நடுவிலிருக்கும் ஓர் நரம்புப் பகுதி; clitoris (சா.அக.);.

     [மாதர் + லிங்கம்.]

மாதறி

 மாதறி mātaṟi, பெ.(n.)

   விட்டம், உத்தரம் முதலியவற்றிற்கு உதவும் பெரிய மரத்துண்டு (வின்.);; large timber, beam.

     [மா + தறி. மா = பெரிய. தறி = மரம், மரத்துண்டு.]

மாதளை

மாதளை mātaḷai, பெ.(n.)

மாதுளை, 1 பார்க்க;see {}.

     [மாதுளை → மாதளை.]

மாதளைச்சிலை

 மாதளைச்சிலை mātaḷaiccilai, பெ.(n.)

மாந்தளிர்க்கல் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மாதளை + சிலை. சிலை = கல்.]

மாதவக்கோன்

 மாதவக்கோன் mātavakāṉ, பெ.(n.)

   காட்டில் ஆநிரைகளை மேய்க்கும் இடைச் சாதியர்; idaiyar caste.

மாதவசுந்தரி

 மாதவசுந்தரி mātavasundari, பெ.(n.)

   நிலம்; earth.

மாதவசுரன்

 மாதவசுரன் mātavasuraṉ, பெ.(n.)

   தொன் மணியுளொன்று; one of the nine gems – Topaz.

மாதவசூரி

 மாதவசூரி mātavacūri, பெ.(n.)

   மாலிய வரலாறு (அபி.சிந்.);; a biography of {}.

மாதவதாசர்

 மாதவதாசர் mātavatācar, பெ.(n.)

   திருமால் பத்தர்; a devotee of Tirumal.

மாதவன்

மாதவன் mātavaṉ, பெ.(n.)

   1. திருமால்;{}.

     “மாதவற்கு நான்முகற்கும் வரதன் கண்டாய்” (தேவா.247, 7);.

   2. வசந்தன் (யாழ்.அக.);; god of spring.

     [மா + தவன். மா = பெரிய.]

மாதவமனோகரி

மாதவமனோகரி mātavamaṉōkari, பெ.(n.)

   இராக வகை (பரத.ராக.பக்.103);; a specific – melody type (சா.அக.);.

மாதவம்

மாதவம்1 mātavam, பெ.(n.)

   1. இளவேனில் (பிங்.);; spring.

   2. விடை (வைகாசி); (விதான. குணாகுண.28, உரை);;{},

 the Tamil month

   3. இனிமை (யாழ்.அக.);; sweetness.

   4. மது (பிங்.);; spirituous or fermented liquor.

 மாதவம்2 mātavam, பெ.(n.)

   பெருந்தவம்; great penance.

     “என்ன மாதஞ் செய்ததிச் சிறுகுடில்” (பாரத.கிருட்.80);.

     [மா + தவம். மா = பெரிய.]

மாதவம்பரிவாள்

 மாதவம்பரிவாள் mātavambarivāḷ, பெ.(n.)

   காட்டு முருங்கை; a tree – wild moringa (சா.அக.);.

மாதவம்புரிவாள்

 மாதவம்புரிவாள் mātavamburivāḷ, பெ.(n.)

   தாமரையிலை; a leaf of lotus (சா.அக.);.

     [மாதவம் + புரிவாள்.]

மாதவரொட்டி

 மாதவரொட்டி mātavaroṭṭi, பெ.(n.)

   கருந்துளசி; black species of holy basil (சா.அக.);.

மாதவர்

மாதவர் mātavar, பெ.(n.)

   முனிவர்; asceties risi, as performing austere penance.

     “மாதவர் நோன்பு மடவார் கற்பும்” (மணிமே.22, 208);.

     [மாதவம் → மாதவர்.]

மாதவர்பள்ளி

மாதவர்பள்ளி mātavarpaḷḷi, பெ.(n.)

   முனிவரின் பாழி (ஆசிரமம்); இருப்பிடம்; hermitage.

     “மாதவி மாதவர் பள்ளியு எடைந்தது” (மணிமே.18, 8);.

     [மாதவர் + பள்ளி.]

மாதவறுதி

 மாதவறுதி mādavaṟudi, பெ.(n.)

   திங்கள் முடிவு (யாழ்.அக.);; end of a month.

     [மாதம் + அறுதி.]

மாதவல்லி

 மாதவல்லி mātavalli, பெ.(n.)

   சித்தினி சாதிப் பெண்; one of the four classes of women divided according to their lust (சா.அக.);.

மாதவழகி

 மாதவழகி mātavaḻki, பெ.(n.)

   வட்டக் கிலுகிலுப்பை; round rattle wort, one of varities of crolalaria laburnifolia (சா.அக.);.

மாதவழிச்செலவு

மாதவழிச்செலவு mātavaḻiccelavu, பெ.(n.)

   மாதச் செலவு; monthly expenses.

     “மாதவழிச் செலவுக் கன்று சொன்ன நூறு பொன்னும்” (தெய்வச்.விறலி.380);.

     [மாதம் + வழிச்செலவு.]

மாதவாக்கியம்

 மாதவாக்கியம் mātavākkiyam, பெ.(n.)

   ஆண்டுத் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதிவரையுள்ள காலத்தை நாளாகவும் நாழிகையாகவும் கணக்கிட்டுக் காட்டும் வாய்ப்பாடு;     [மாதம் + வாக்கியம். Skt. வாக்கியம். த. சொற்றொடர்.]

மாதவி

மாதவி1 mātavi, பெ.(n.)

   சிலப்பதிகாரக் காவியத்தில் வரும் கோவலனின் காதல் மனைவி (சி.பெ.அக.);; concupine of Kovalan as per Silappathikaram.

 மாதவி2 mātavi, பெ.(n.)

   1. கிருட்டிணன் தங்கையான சுபத்திரை; Subhadrai, sister of Krishna.

     “மாதவி தான்பெற்ற மதகயம்” (பாரதவெண். 782);.

   2. கண்ணன் மனைவி (யாழ்.அக.);; Krishna’s wife,

   3. துளசி (சங்.அக.);; sac` red basil.

   4. கொற்றவை, (யாழ்.அக.);; Durga.

 மாதவி3 mātavi, பெ.(n.)

   1. பனைவெல்லம்; jaggery, treacle from sweet toddy.

   2. சருக்கரை (சீனி); (யாழ்.அக.);; sugar.

   3. கூட்டிக் கொடுப்பவள் (வின்.);; procuress.

   4. குருக்கத்தி செடி; common delight of the woods.

     “கோதை மாதவி கொழுங் கொடி யெடுப்ப” (சிலப்.14:113);.

   5. கள்ளி; spurge.

 மாதவி4 mātavi, பெ.(n.)

   வசந்த மல்லிகை; jasmine.

மாதவிகை

 மாதவிகை mātavigai, பெ.(n.)

   வசந்தமல்லிக் கொடி; the jasmine grown in the spring season.

மாதவிகொழுநன்

 மாதவிகொழுநன் mātavigoḻunaṉ, பெ.(n.)

   அருச்சுனன் (பிங்.);;  Arjunan.

     [மாதவி + கொழுநன்.]

மாதவிக்கொடி

 மாதவிக்கொடி mātavikkoḍi, பெ.(n.)

   ஒரு வகைக் கொடி; a tall climber.

மாதவிடாய்

மாதவிடாய் mātaviṭāy, பெ.(n.)

   மகளிர் மாதப்பூப்பு; menses.

     “மானேர் விழியணங்கு மாதவிடாயானக்கால்” (விறலிவிடு.836);.

     [மாதம் + விடாய்.]

மாதவிடாய்சன்னி

 மாதவிடாய்சன்னி mātaviṭāycaṉṉi, பெ.(n.)

   மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஒரு வகைக் காய்ச்சல்; fever with attends during menses (சா.அக.);.

     [மாதவிடாய் + சன்னி.]

மாதவிடாய்ச்சூலை

 மாதவிடாய்ச்சூலை mātaviṭāyccūlai, பெ.(n.)

   மாதவிடாய் காலத்தில் உண்டாகும் நோய்l; pain in the abdomen during the periods (சா.அக.);.

     [மாதவிடாய் + சூலை.]

மாதவிடை

 மாதவிடை mātaviḍai, பெ.(n.)

மாதவிடாய் (யாழ்.அக.); பார்க்க; see {}.

     [மாதவிடாய் → மாதவிடை(கொ.வ.);]

மாதவிப்பந்தல்

மாதவிப்பந்தல் mātavippandal, பெ.(n.)

   குருக்கத்திக் கொடிகளாலான பந்தல்; arbour formed by {} creepers.

     “மாதவிப் பந்தல் மேல் பல்காற் குயிலினங்கள் கூவின காண்” (திவ்.திருப்பா.18);.

     [மாதவி + பந்தல்.]

மாதவியசங்கிதை

 மாதவியசங்கிதை mādaviyasaṅgidai, பெ.(n.)

   கால உறுதி; determination of period (சா.அக.);.

மாதவிலக்கு

 மாதவிலக்கு mātavilakku, பெ. (n.)

   மகளிர் மாதப்பூப்பு; mensus.

     [மாதம்+விலக்கு]

மாதா

மாதா mātā, பெ. (n.)

   1. தாய் (பிங்.);; mother

     ‘மாதாபிதாவாகி’ (தேவா.1227,7);.

   2. மலைமகள் (பிங்.);;{}.

   3. கலைமகள் (பிங்.);; Saraswati.

   4. அறிபவன் (சங். அக.);; the knower.

     [Skt. {} → த. மாதா]

மாதாந்தசஞ்சீவி

மாதாந்தசஞ்சீவி mātāndasañsīvi, பெ.(n.)

   1. மாதவிடாய்; menstruation.

   2. நாதநீர்; menstrual fluid (சா.அக.);.

மாதாந்தம்

மாதாந்தம்1 mātāndam, பெ.(n.)

   1. மாத முடிவு (வின்.);; the end of a month.

   2. (அமாவாசை); காருவா (யாழ்.அக.);; new moon.

   3. மாதவிறுதியில் வரும் கிழமை யொன்றில் கோவிலிற் செய்யும் வழிபாடு (வின்.);; worship performed at a shrine on a particular day of the week, as Friday, occuring last in a month.

     [மாதம் + அந்தம்.]

 மாதாந்தம்2 mātāndam, பெ.(n.)

   மாதந் தோறும் கோயிலுக்குச் சென்று வழிபடுகை(இ.வ.);; pilgrimage to a temple for worship once in every month.

     “மாதாந்தம் போய் வந்தார்கள்” (சா.அக.);

மாதாந்தரம்

 மாதாந்தரம் mātāndaram, பெ.(n.)

   மாதந் தோறும் (கொ.வ.);; month by month.

மாதாந்தவெள்ளம்

 மாதாந்தவெள்ளம் mātāndaveḷḷam, பெ.(n.)

   மகளிர் பூப்புநீர்; the menstrual discharge of woman.

     [மாதாந்தம் + வெள்ளம்.]

மாதானம்

 மாதானம் mātāṉam, பெ. (n.)

   சீர்காழி வட்டத்தில் சீர்காழி பழையார் வழிச்சாலையில் அமைந்துள்ள ஒரு ஊர்; a village in Sirkazhi on the way to Sirkazhi Pazhayar road.

     [மா+தானம்]

மாதானுபங்கி

மாதானுபங்கி mātāṉubaṅgi, பெ.(n.)

   திருவள்ளுவர்; Tiruvalluvar.

     “மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப் போதார்” (வள்ளுவமா.21);.

மாதாரி

 மாதாரி mātāri, பெ. (n.)

   மாதாரை எனும் பெரும் மத்தளம்; a percussion instrument.

     [மாது-மனதாரி]

மாதாரிகள்

 மாதாரிகள் mātārigaḷ, பெ. (n.)

   கம்பளத்து நாயக்கர்களுக்குச் சேவைப் பலகையைச் செய்து கொடுக்கும் தொழிலாளர்; a division of workers who make drums.

     [மாதர்-மாதாரி]

மாதி

மாதி1 māti, பெ.(n.)

   1. வட்டமாயோடல் (சூடா.);; circular motion.

     “மாதி வட்ட மோடினார்” (கம்பரா.பிரமாத்திர.135);.

   2. கோள் சுற்று (வின்.);;(Astron.);

 revolution of a planet.

 மாதி2 māti, பெ.(n.)

   மாமரம்; mango tree.

     “மாதி மணங்கமழும் பொழில்” (திருவிசை. சேந்த. 2, 2);.

மாதிகம்

 மாதிகம் mātigam, பெ.(n.)

   குதிரை மார்க்கம்; гаce couгse.

மாதிகா

 மாதிகா mātikā, பெ.(n.)

   முட்பால; jack tree (சா.அக.);.

மாதிசை

மாதிசை1 mātisai, பெ.(n.)

   நான்கு திக்குகள்; the four cardinal points of the campas.

     [மா + திசை.]

மாதிசை2

__,

பெ.(n.);

   ஒருவனுக்கு, பிறப்பியத்தில் ஒருகோளின் நடப்புக் காலம் (மகாதிசை);; period of influence of a planet with reference to the natal house in a horoscope.

மாதினி

 மாதினி mātiṉi, பெ.(n.)

   சிறுவழுதலை; brinjal plant (சா.அக.);.

மாதிரி

மாதிரி1 mātiri, பெ.(n.)

   1. உண்மைக்கு ஒத்த நிலையில் இருப்பது; pattern, sample, specimen, model.

   2. முறை; manner, way.

   3. தன்மை; kind.

     [மா = அளவு. மா → மாதிரி. ஒரே அளவுடையது, ஒன்று போலிருப்பது.]

 மாதிரி2 mātiri, பெ.(n.)

அதிவிடை (தைலவ. தைல.); பார்க்க;see {}.

மாதிரிமங்கலம்

 மாதிரிமங்கலம் mātirimaṅgalam, பெ. (n.)

   நன்னிலம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Nannilam Taluk.

     [மாதாளி+மங்கலம்]

மாதிலகம்

 மாதிலகம் mātilagam, பெ.(n.)

   பொன்னூமத்தை; dhalura bearing yellow or gold coloured flowers (சா.அக.);.

மாதீர்த்தன்

மாதீர்த்தன் mātīrttaṉ, பெ.(n.)

   குறுந்தொகைப் பாடல் (113); இயற்றிய புலவர் (சி.பெ.அக.);; a poet who had contributed to kurunthogai.

மாது

மாது1 mātu, பெ.(n.)

   பெருமை; greatness.

     “மாதுபடு நோக்கினவர்” (சீவக.499);.

 மாது2 mātu, பெ.(n.)

   குற்றம் (அருநி.);; fault, defect.

 மாது3 mātu, பெ.(n.)

   1. கன்னி ஒரை; virgo, a zodiacal sign.

   2. ஓர் அசைச்சொல் (தொல்.சொல்.281);; an expletive.

மாதுகாமம்

 மாதுகாமம் mātukāmam, பெ.(n.)

   பவளம்; coral (சா.அக.);.

மாதுகுத்துதல்

 மாதுகுத்துதல் māduguddudal, பெ.(n.)

   பிள்ளை விளையாட்டு வகை (இ.வ.);; a children’s game.

மாதுக்களெழுவர்

 மாதுக்களெழுவர் mātukkaḷeḻuvar, பெ.(n.)

   எழுவகைப் பெண்டிர் (சங்.அக.);; the seven divine mothers.

மாதுங்கம்

மாதுங்கம் mātuṅgam, பெ.(n.)

மாதுளை, 2 (மூ.அ.); பார்க்க;see {}.

மாதுங்கராகம்

 மாதுங்கராகம் mātuṅgarākam, பெ.(n.)

   மருதப்பண் வகை (பிங்.);; a melody type of the agricultural tract.

மாதுநாதம்

 மாதுநாதம் mātunātam, பெ.(n.)

   பெண்கள் மாதவிலக்கின் போது காணும் அரத்தம்; menstrual blood.

     [மாது + நாதம்.]

மாதுநீர்

 மாதுநீர் mātunīr, பெ.(n.)

   மகப்பேறு முன் பனிக்குடம் உடைந்து பிறப்புறுப்பு வழியாக வெளிப்படும் நீர்; liquor amni.

     [மாது + நீர்.]

மாதுபாகம்

 மாதுபாகம் mātupākam, பெ.(n.)

   பெண் பக்கம்; woman’s side.

     [மாது + பாகம்.]

மாதுபாதியன்

 மாதுபாதியன் mātupātiyaṉ, பெ.(n.)

   உடலின் ஒரு பகுதி பெண்ணாகவுள்ள சிவன் (சி.பெ.அக.);; Siva, as having Parvathi as one part of his body.

     [மாது + பாதியன்.]

மாதுமாது

 மாதுமாது mātumātu, பெ. (n.)

   மணலைக் குவித்து பதினான்கு குழிகளில் எதிலாவது சிறு கல்லினை ஒளித்து வைக்கும் விளையாட்டு; a children’s game in which they repeat the word ‘madumadu’. (த.நா.வி.);.

     [மாதுமாது-(ஒலிக்குறிப்பு);]

மாதுமை

மாதுமை mātumai, பெ.(n.)

   1. பெண் தன்மை; womanliness.

     “மாதுமைக் குணங்களான செளந்தர்யாதிகள்” (திவ்.திருவாய். 4, 2, 7, பன்னீ.);.

   2. அறிவின்மை; ignorance.

     “ஞால மாதுமை யுடைத்து” (கம்பரா.பிணிவீ.88);.

மாதுறுப்பு

 மாதுறுப்பு mātuṟuppu, பெ.(n.)

   மகளிரணியும் உத்தி யென்னும் தலையணி (யாழ்.அக.);; a head ornament of women.

     [மாது + உறுப்பு.]

மாதுலங்காதிக்கிருதம்

 மாதுலங்காதிக்கிருதம் mādulaṅgādikkirudam, பெ.(n.)

   மாதுலங்காய்ச் சாறால் செய்த ஒர் மருந்து நெய்; a medicated ghee prepared with the juice of the citron fruit as chief ingredient (சா.அக.);.

மாதுலநாதம்

 மாதுலநாதம் mātulanātam, பெ.(n.)

   கருந்துளசி; black variety of holy basil (சா.அக.);.

மாதுலன்

மாதுலன் mātulaṉ, பெ. (n.)

   1. தாயுடன் பிறந்த ஆண், மாமன்; maternal uncle.

     ‘ஒரு சாரவன் மாதுலனென (கல்லா. 43, 24);

   2. பெண் கொடுத்த மாமன்; father-in-law.

   3.’நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்’ (கம்பரா. ஆற்றுப்.3.);

     [Skt. {} → த. மாதுலன்.]

மாதுலம்

 மாதுலம் mātulam, பெ.(n.)

   அடுக்கு ஊமத்தை; dhatura bearing multi coralled petals (சா.அக.);.

மாதுலர்

 மாதுலர் mātular, பெ.(n.)

   மாமன்மார்; uncles.

மாதுளங்கனி

 மாதுளங்கனி mātuḷaṅgaṉi, பெ. (n.)

இலகு லீசர் சிற்பத்தின் ஒரு சிறப்புக் குறியீடு

 a term used in sculpture.

     [மாதுளம்+கனி]

மாதுளை

மாதுளை mātuḷai, பெ.(n.)

   1. மரவகை (திவா.);; pomegranate.

   2. பேரெலுமிச்சை; ciron lemon.

மாதுளைரசம்

 மாதுளைரசம் mātuḷairasam, பெ.(n.)

   மாதுளம் பழத்தின் சாறு; juice of pomegranate ruit, extremely pleasant to taste and refreshing.

     [மாதுளை + ரசம். Skt. ரசம். த. சாறு.]

மாதுளைவித்து

 மாதுளைவித்து mātuḷaivittu, பெ.(n.)

   மாதுளைவிதை; seeds of pomegranate fruit.

மாதுவசை

 மாதுவசை mātuvasai, பெ.(n.)

   பெண் வசம்பு (தைலவ.தைல.);; a kind of sweet flag.

மாதுவம்

 மாதுவம் mātuvam, பெ.(n.)

மாதுலர் பார்க்க;see {}.

மாதூகம்

 மாதூகம் mātūkam, பெ.(n.)

   இலுப்பை மரம்;  mowah tree (சா.அக.);.

மாதூர்காரகன்

 மாதூர்காரகன் mātūrgāragaṉ, பெ.(n.)

   நிலவு; the moon (சா.அக.);.

மாதேசி

 மாதேசி mātēci, பெ.(n.)

   எலுமிச்சை; lime (சா.அக.);.

மாதேவன்

மாதேவன் mātēvaṉ, பெ.(n.)

   1. சிவன்;{}.

     “மாதேவன் வார் கழல்கள்” (திருவாச. 7, 1);.

   2. ஏகாதசருத்திரருள் ஒருவர் (திவா.);; a rudran, one of {}.

     [மா + தேவன்.]

மாதேவப்பட்டினம்

 மாதேவப்பட்டினம் mātēvappaṭṭiṉam, பெ. (n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்; a village in Thanjavur district.

     [மாசுதேவன்+பட்டினம்]

இவ்வூரின் முந்தைய பெயர் மகாதேவப் பட்டினம்.

மாதேவி

மாதேவி mātēvi, பெ.(n.)

   1. மலைமகள் (கூர்மபு.திரு.20);;{}.

   2. அரசி; queen.

     “புரவலன் துயில மாடே… மாதேவி யிருப்ப” (பெரியபு.மெய்ப்பொரு.10);.

   3. செங்கழுநீர் (மலை.);; purple Indian water lily.

     [மா + தேவி.]

மாதை

மாதை mātai, பெ.(n.)

   திருவாமத்தூர் என்னும் சிவத்தலம்; a {} shrine.

     “மாந்தமுமாகி நின்றார் மாதை நாதர்” (தமிழ்நா.111);.

மாதொருபாகனார்

மாதொருபாகனார் mātorupākaṉār, பெ.(n.)

சிவன்;{}.

     “மாதொரு பாகனார் தாம் வருவர்” (சி.சி2, 25);.

மாதோ

 மாதோ mātō, பெ.(n.)

   அசைச் சொல்; expletive article.

மாதோசம்நீக்கி

 மாதோசம்நீக்கி mātōcamnīkki, பெ.(n.)

   புளியாரை; sour sorrel.

மாத்தகை

 மாத்தகை māttagai, பெ.(n.)

   பெருந்தகுதி யுள்ளவன் (யாழ்.அக.);; person of great worth.

     [மா = பெரிய. தகை → தகைவு. மா + தகை. ஒ.நோ. பெருந்தகை, ஆண்டகை.]

மாத்தம்

 மாத்தம் māttam, பெ.(n.)

   அலரி; oleander.

மாத்தம்மா

 மாத்தம்மா māttammā, பெ. (n.)

நாட்டுப்புறக் கதைகளில் சொல்லப்படும் பெண்தெய்வம்

 a female deity in folklore.

     [மாத்து+அம்மா]

மாத்தல்

மாத்தல் māttal, பெ.(n.)

   மா ஒன்றுக்கு இவ்வளவு என்று நெல் அளக்கை; measure the paddy as for {}.

     “நிலம் யாண்டு பதினாறாவது முதல் கைக்கொண்டு உழுது அச்சுவற்கம் இறுத்தும் மாத்தல் பதினறு கலனே தூணியாக வந்த பாட்டம் அளக்கவும்” (தெ.க.தொ.5, கல்.243);.

     “இந்நிலத்தால் மாத்தல் இருபத்து இருகலமாகவுந் நெல் குடுப்போமானோம்” (தெ.க.தொ.5 கல்.244);.

     [மான் → மா → மாத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. ஆயின், மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர் 1/20 என்னும் கீழ் வாயிலக்கத்தைக் குறித்து வழங்குகின்றது. அதனால் நிலவளவையில் ஒருவேலியின் 1/20 பாகம் மா எனப்படுகிறது.

     “மாநிறைவில்லதும் பன்னாட்காகும்” (புறநா.184);

என்பது இதன் தொன்று தொட்ட வழக்கை யுணர்த்தும் (வே.க.4:35);.]

மாத்தான்

மாத்தான் māttāṉ, பெ.(n.)

   பெரியோன்; great person.

     “மால் பிரம னறியாத மத்தானை” (தேவா.818, 4);.

     [மா = பெரிய. மா → மாத்தான்.]

மாத்தி

 மாத்தி mātti, பெ. (n.)

   கும்பகோணம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kumbakonam Taluk.

     [மத்தி-மாத்தி]

மாத்திக்கு

மாத்திக்கு māttikku, பெ.(n.)

   முத்திநெறி; path of salvation as the great path.

     “மாத்திக்கே செல்லும் வழியது” (திருமந். 1841);.

மாத்தியாகி

 மாத்தியாகி māttiyāki, பெ.(n.)

   துறவிற் பெரியராகிய ஞானி வகையார் (யாழ்.அக.);; a class of sages, as great in renouncing.

     [மா +தியாகி.]

மாத்திரத்தில்

மாத்திரத்தில் māttirattil,    வி.எ.(adv) உடனே; instantaneously.

     “அவன் கேட்ட மாத்திரத்திற் கொடுத்தான்” (உ.வ.);.

     [மாத்தரம் → மாத்திரத்தில் (வே.க.4:36);.]

மாத்திரம்

மாத்திரம்1 māttiram, பெ.(n.)

   தனிமை (சங்.அக.);; loneliness.

 மாத்திரம்2 māttiram, வி.எ.(adv.)

   மட்டும்; only, solely, exclusively, merely, alone.

அதை மாத்திரம் எடு (உ.வ.);.

     [மட்டு = அளவு. மட்டும் = மாத்திரம் (வே.க.4:36);.]

 மாத்திரம்3 māttiram, பெ.(n.)

   அளவு; limit, extent.

     “வெளவினன் முயங்கு மாத்திரம்” (கலித்.47, 22);.

 மாத்திரம்4 māttiram, பெ.(n.)

   தும்பி (சங்.அக.);; wasp.

மாத்திரி

மாத்திரி1 māttiri, பெ.(n.)

   வசம்பு; a plant – sweet flag acorus calamus, it has under ground stem used in mediane.

 மாத்திரி2 māttiri, பெ.(n.)

   நீட்டலளவு; linear measurement, meter.

     [மா = அளவு. மா → மாத்திரி (இக்.வழ.);.]

மாத்திரை

மாத்திரை1 māttirai, பெ.(n.)

   1. நொடிப்பொழுது; moment, measure of time 2/5 of a second = 1/60 {}.

     “சகமூன்றுமொர் மாத்திரை பார்க்குமெங்கள் கண்ணவனார்” (திருநூற்.25);.

   2. கண்ணிமைத்தல் அல்லது கை நொடித்தலளவான நேரம் (தொல். எழுத்து.6);; the time of winking one’s eyes or of snapping one’s fingers.

     “கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை” (தொல். எழுத்து.6);.

   3. செய்யுளில் வரும் எழுத்தொலியினளவு;     “மாத்திரை எழுத்தியல்” (தொல். பொருள். 313);.

   4. குற்றெழுத்து (யாழ்.அக.);; short vowel.

   5. குருவிற் பாதி (அரு.நி.);; a syllabic instant, half of kuru.

   6. காலவிரைவு (பிங்.);; swiftness of time.

   7. அளவு; measure, limit, as of time.

     “மாத்திரையின்றி நடக்குமேல்” (நாலடி, 242);.

   8. மிகச் சுருக்கமான இடம்; minute portion of space.

     “அரை மாத்திரையிலடங்குமடி” (தேவா.970, 7);.

   9. குளிகை (அரு.நி.);; medicinal pill.

   10. துறவியின் தண்டக மண்டல முதலியன; staff, water bowl and other articles of ascetics.

     “சந்யாசிகள்… மாத்திரை தொடக்கமானவற்றைக் கையிலே கூடக்கொண்டு திரிவார்களாயிற்று”(ஈடு.4 8, 4);.

   11. நல்வாய்ப்பு (யாழ்.அக.);; luck, fortune.

     [மா= அளவு. மா → மாத்திரை (வே.க.4:36);.]

 மாத்திரை2 māttirai, பெ.(n.)

   இரண்டரை நாழிகையை எட்டுக் கூறிட்ட அளவு; the time measure of 2 1/2 {} is divided by eight, i.e. 7 1/2 minutes.

     “இரண்டரை நாழிகையை எட்டுக் கூறிட்டு ஒரு கூறென்றறிக” (சிலப்.3:26);.

 மாத்திரை3 māttirai, பெ.(n.)

   1. காதணி வகை; an ear ornament.

     “செம்பொன் மாத்திரை செரீஇய காதினர்” (பெருங்.மகத.17, 157);.

   2. இசைச்சுரப் பகுதி (திவா.);; interval in the musical scale, quartertone.

 மாத்திரை4 māttirai, பெ.(n.)

   சிறிய வில்லை வடிவ மருந்து; tablet, pill.

மறுவ. குளிகை.

     [மா = அளவு. மா → மாத்திரை. ஒரே அளவினது.]

மாத்திரைக்கோல்

மாத்திரைக்கோல் māttiraikāl, பெ.(n.)

   இறும்பர் (சித்தர்); முதலியோர் கையிற் கொள்ளும் வரையிட்ட மந்திரக் கோல்; magic staff carried by cittar, etc.

     “விளங்கு செங்கையின் மாத்திரைக் கோலும்” (திருவாலவா.13, 4);.

   2. மந்திரவாதியின் கைக்கோல் (வின்.);; conjuror’s wand.

   3. அளவுகோல்; measuring rod.

     “மாத்திரைக் கோலொக்குமே” (நல்வழி);.

     [மாத்திரை + கோல் (வே.க.4:36);.]

மாத்திரைச்சுதகம்

 மாத்திரைச்சுதகம் māddiraiccudagam, பெ.(n.)

மாத்திரைச்சுருக்கம் பார்க்க;see {}.

     [மாத்திரை + சுதகம்.]

மாத்திரைச்சுருக்கம்

மாத்திரைச்சுருக்கம் māttiraiccurukkam, பெ.(n.)

ஒரு பொருள் தந்து நிற்கும் ஒரு சொல் ஒரு மாத்திரை குறையுமிடத்து வேறொரு பொருள் தந்து நிற்குஞ் சொல்லணி (தண்டி.95, உரை);;(Rhet.);

 a literary device in which a word becomes a different word by shortening its sound – value by a {}.

மாத்திரைதிரட்டல்

 மாத்திரைதிரட்டல் māddiraidiraṭṭal, பெ.(n.)

   அளவுப்படி உருண்டை உருட்டுகை; making pills with fingers.

     [மா = அளவு. மா → மாத்திரை = ஒரே அளவுடையது. மாத்திரை + திரட்டல்.]

மாத்திரைவருத்தனம்

மாத்திரைவருத்தனம் māttiraivaruttaṉam, பெ.(n.)

   ஒரு பொருள் தந்து நிற்கும் ஒரு சொல் ஒரு மாத்திரை கூடுமிடத்து வேறொரு பொருள் தந்து நிற்குஞ் சொல்லணி (தண்டி.95, உரை);;     [மாத்திரை + வருத்தனம்.]

மாத்து

மாத்து1 māttu, பெ.(n.)

   1. செருக்கு; arrogance.

     “மாமாத்தாகிய மாலயன்” (தேவா.1019, 1);.

   2. அடித்தல் அல்லது உதைத்தல் (இக்.வ.);; beating or kicking.

அவனை அவன் தந்தை ஒரு மாத்து மாத்திவிட்டார்.

 மாத்து2 māttu, பெ.(n.)

   பெருமை; greatness.

     “பெறுமாத் தொடும்” (திருக்கோ.373);.

     [மா = பெருமை. மா → மாத்து.]

 மாத்து3 māttu, பெ.(n.)

   சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசைய வொண்ணாது தடுத்து நிறுத்துகை (இ.வ.);; mate with pawns.

 மாத்து4 māttu, பெ.(n.)

   தங்கம்; refined gold.

மாத்து-தல்

மாத்து-தல் māddudal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அடித்தல்; to beat.

அவனை நன்றாக மாத்தினான். (இ.வ.);.

     [மாறு-மாற்று-மாத்து]

மாத்துப்பொதி

 மாத்துப்பொதி mādduppodi, பெ.(n.)

   நெருஞ்சி; a prostate plant with thorny fruits-small caltrops (சா.அக.);.

மாத்துருகம்

 மாத்துருகம் mātturugam, பெ.(n.)

   பசுவை போன்ற ஓர் வகை மான்; a species of deer resembling cow (சா.அக.);.

மாத்துவம்

மாத்துவம் māttuvam, பெ.(n.)

   பெருமை; greatness.

     “மாத்துவத் தான் மறைந்தார் மற்று” (சிலப்.21, இறுதி வெண்பா);.

     [மா → மாத்து → மாத்துவம்.]

 மாத்துவம் māttuvam, பெ. (n.)

   மாத்துவரின் (துவைதம்); இருமைக் கோட்பாடு; dualist or Dvaita school of Madhva.

     [Skf. {} → த. மாத்துவம்.]

மாத்துவர்

 மாத்துவர் māttuvar, பெ. (n.)

   மாத்துவர் மதத் தினரான துவைதிகள்; followers of Madhva’s Dvaita philosophy.

     [Skt. {} → த. மாத்துவர்.]

மாத்துவிகம்

 மாத்துவிகம் māttuvigam, பெ.(n.)

   இலுப்பைப் பூவிலிருந்து எடுக்கப்படும் வெறியம் (சாறாயம்); (சங்.அக.);; arrack extracted from mahua flowers.

மாநகரத்தந்தை

 மாநகரத்தந்தை mānagarattandai, பெ.(n.)

   மாநகராட்சியின் ஆளுகைக் குழுத்தலைவர்; Mayar.

     [மாநகரம் + தந்தை.]

மாநகரம்

 மாநகரம் mānagaram, பெ. (n.)

   பத்து இலக்கத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகரம்; city.

     [மா + நகரம்.]

மாநகராட்சி

 மாநகராட்சி mānagarāṭci, பெ.(n.)

   மாநகரத்தை ஆளும் உள்ளாட்சி அமைப்பு; corporation of a city.

     [மா + நகராட்சி.]

மாநடன்

 மாநடன் mānaḍaṉ, பெ.(n.)

சிவன் (சங்.அக.);;{}.

     [மா + நடன்.]

மாநரகம்

 மாநரகம் mānaragam, பெ.(n.)

   மாந்தப் பிறப்பில் பெருங்கேடு புரிந்தோர் இறப்பிற்குப் பின் சென்று சேர்வதாகக் கருதப்படுவது, அளறு; the great hell.

     [மா + நரகம். மா = பெரிய.]

மாநாகம்

மாநாகம் mānākam, பெ.(n.)

   பாம்பு வகை (நாமதீப.261);; a kind of snake.

     [மா + நாகம்.]

மாநாடு

மாநாடு mānāṭu, பெ.(n.)

   1. பேரளவிலான மக்கள் கலந்து கொள்ளும் கூட்டம்; conference.

   2. ஒரு பொருண்மை குறித்து கலந்துரையாடும் கூட்டம்; a place where consult in a meaning.

     [மா + நாடு.]

 மாநாடு mānāṭu, பெ. (n.)

   வணிகர் கூட்டம்; traders gatherings, trader’s meeting. (தெ.கோ.சா.3:2);.

     [மா+நாடு]

மாநாட்டுப்பந்தல்

 மாநாட்டுப்பந்தல் mānāṭṭuppandal, பெ.(n.)

   திரளான மக்கள் அமர்வதற்கேற்ற வகையில் அமைக்கப்படும் மிகப் பெரிய பந்தல்; temporary shelter for the conference.

     [மாநாடு + பந்தல்.]

மாநாதன்

 மாநாதன் mānātaṉ, பெ.(n.)

திருமால்;{}.

மறுவ. மாமணாளன்

     [மா + நாதன்.]

மாநிறக்கல்

 மாநிறக்கல் māniṟakkal, பெ.(n.)

   நீலக்கல்; a gem of blue colour.

     [மாநிறம் + கல்.]

மாநிறம்

 மாநிறம் māniṟam, பெ.(n.)

   பொது நிறம்;     [மா + நிறம்.]

மாநிலங்களவை

 மாநிலங்களவை mānilaṅgaḷavai, பெ.(n.)

   சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களோடு குடியரசுத் தலைவரால் அமர்த்தப்பட்டவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியப் நாடாளுமன்றத்தின் அவை; upper house of the Indian parliament.

     [மாநிலங்கள் + அவை.]

மாநிலங்களவைஉறுப்பினர்

 மாநிலங்களவைஉறுப்பினர் mānilaṅgaḷavaiuṟuppiṉar, பெ.(n.)

   இந்திய நாடாளு மன்றத்தின் மேலவை உறுப்பினர்; member of parliament (Rajyashabha); in India.

மாநிலம்

மாநிலம் mānilam, பெ.(n.)

   1. இந்தியாவின் அரசியலமைப்பிற்காகப் பிரிக்கப்பட்ட பகுதி; state.

   2. நிலம்; earth.

     “மாநிலஞ் சேவடியாக” (நற்.கடவுள்);.

     [மா + நிலம்.]

மாநீர்

மாநீர்1 mānīr, பெ.(n.)

   கடல் (மணிமே.14:73);; sea.

     [மா + நீர் மா = பெரிய.]

 மாநீர்2 mānīr, பெ.(n.)

   தண்ணீர்; water.

     [மா + நீர்.]

மாநோன்பு

மாநோன்பு mānōṉpu, பெ.(n.)

   1. காருவா (அமாவாசை); நாளன்று நோற்கப்படும் நோன்பு; the feast on the new moon day.

   2. மாகநோன்பு (கொ.வ.);; the festival of {}.

     [மா + நோன்பு.]

மாந்தஇசிவு

 மாந்தஇசிவு māndaisivu, பெ.(n.)

   மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் இசிவு நோய்; infantile convulsions with delirium due to indigestion.

     [மாந்தம் + இசிவு.]

மாந்தகணம்

 மாந்தகணம் māndagaṇam, பெ.(n.)

   குழந்தைகளுக்கு வரும் கணை நோய் வகை (பைஷஜ.);; a wasting disease, in children, Table mesenterica.

     [மாந்தம் + கணம்.]

மாந்தக்கட்டி

மாந்தக்கட்டி māndakkaṭṭi, பெ.(n.)

   குழந்தைகளுக்கு வரும் கட்டி வகை (சாரங்க. 236);; a kind of tumour, in children.

     [மாந்தம் + கட்டி.]

மாந்தக்கொதி

 மாந்தக்கொதி māndakkodi, பெ.(n.)

   குழந்தைநோய் வகை (யாழ்.அக.);; fever from indigestion, chiefly in children.

     [மாந்தம் + கொதி.]

மாந்தசன்னி

 மாந்தசன்னி māndasaṉṉi, பெ.(n.)

மாந்த இசிவு பார்க்க; see {}.

     [மாந்தம் + சன்னி.]

மாந்தச்சங்கிலி

 மாந்தச்சங்கிலி māndaccaṅgili, பெ. (n.)

   கருத்தொன்றை வெளிப்படுத்தும் வகையிலோ -எதிர்ப்பைக் காட்டும் வகையிலோ திரண்டு வந்து சாலையோரத்தில் ஒருவரோடொருவர் கை கோர்த்து நிற்றல்; people forming a chain by joining hands to demonstrate their support or protest.

     [மாந்தன்+சங்கிலி]

மாந்தத்தையறுக்கி

 மாந்தத்தையறுக்கி māndattaiyaṟukki, பெ. (n.)

    பாவட்டை; a tree – pavattai Indica.

மாந்தநேயன்

 மாந்தநேயன் māndanēyaṉ, பெ. (n.)

 humanitarian.

     [மாந்தன்+நேயன்]

 மாந்தநேயன் māndanēyaṉ, பெ. (n.)

   ஒருவர் மற்றொருவர்மீது காட்டும்பரிவுகலந்த உணர்வு(மனிதாபிமானம்);; humanitarianism,

     [மாந்தன்+பரிவு]

மாந்தநேயம்

மாந்தநேயம் māndanēyam, பெ. (n.)

மாந்தன் மாந்தனை மதித்துச் செலுத்தும் 9

 sirup love for one another;humanism.

     [மாந்தன்+நேயம்]

மாந்தனாதி

 மாந்தனாதி māndaṉāti, பெ.(n.)

   சூடாலைக் கல்; a kind of load stone.

மாந்தனுால்

 மாந்தனுால் māndal, பெ.(n.)

மாந்தனது தோற்றம், வளர்ச்சி, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் பற்றி ஆராயும் அறிவுத்துறை:

 anthropology.

     [மாந்தன்+நூல்]

மாந்தன்

மாந்தன்1 māndaṉ, பெ.(n.)

   நமரை வாழை; green banana.

 மாந்தன்2 māndaṉ, பெ.(n.)

   ஆண்மகன்; male person.

     “அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார்” (சூளா.தூது.40);.

மாந்தபத்திரம்

 மாந்தபத்திரம் māndabattiram, பெ.(n.)

   வில்வயிலை; bael leaf, aegle marmeleps.

மாந்தப்புல்

மாந்தப்புல் māndappul, பெ.(n.)

   காவட்டம் புல் (பதார்த்த.375);; citronella grass.

     [மாந்தம் + புல்.]

மாந்தமாத்திரை

 மாந்தமாத்திரை māndamāttirai, பெ.(n.)

   செரியாமை, பசியின்மை, முதலிய மாந்த நோய்களுக்குக் கொடுக்கும் மாத்திரை; pill given for diseases caused by {}.

     [மாந்தம் + மாத்திரை.]

மாந்தம்

மாந்தம் māndam, பெ.(n.)

   1. குழந்தை நோய் வகை; infantile diarrhea.

   2. மந்தத்தால் குழந்தைகட்கு வரும் கணைநோய் (வின்.);; infantile convulsion due to indigestion.

   3. மாந்தப்புல் பார்க்க; see {}.

   4. செரியாமை (யாழ்.அக.);; indigestion.

     [மொத்து = தடித்த – வன் – வள் – து, சுறுசுறுப்பில்லாத – வன் – வள் – து. மொத்து → மத்து மந்து → மந்தம் = செரிமான உறுப்பின் சுறுசுறுப்பின்மை, செரியாமை. மந்தம் → மாந்தம் = செரியமையாற் குழந்தைகட்குண்டாகும் நோய். வடவர் காட்டும் மூலமும் இதுவே (வ.வ.61);.]

மாந்தரஞ்சேலிரும்பொறை

மாந்தரஞ்சேலிரும்பொறை māndarañjēlirumboṟai, பெ.(n.)

   சேர மன்னன் (புறநா.53, 125);; a {} king.

மாந்தரன்

மாந்தரன் māndaraṉ, பெ.(n.)

   பழைய சேரவரசன் (பதிற்றுப்.90);; an ancient {} king.

மாந்தரோகம்

 மாந்தரோகம் māndarōkam, பெ.(n.)

   மாந்த நோய்; a disease in children caused by the fermentation of acids in the stomach due to fermentation.

     [மாந்தம் + Skt. ரோகம் → த. நோய்.]

மாந்தர்

மாந்தர் māndar, பெ.(n.)

   1. மக்கள்; human beings.

     “மாந்தர் மக்களென்னும் பெயரும்” (தொல்.சொல். 163);.

   2. ஆடவர்; male persons.

     “தோள் சேர்ந்த மாந்தர் துயர்கூர” (கலித்.145, 13);.

   3. ஊர்க்காவலர்; watchman.

     “நல்லிருள் மாந்தர் கடிகொண்ட கங்குல்” (கலித்.142, 33);.

மாந்தர்போகம்

 மாந்தர்போகம் māndarpōkam, பெ.(n.)

   மாதர் போகம்; intercourse with woman.

     [மாதர் + Skt. போகம்.]

மாந்தலை

 மாந்தலை māndalai, பெ.(n.)

   கன்னமுது (பாயச); முதலியவற்றில் சுவை பெருக இடுவதற்காக காய வைத்த மாம்பழச் சாறு (நாஞ்.);; a jelly like preparation of dried mango-juice.

மாந்தல்

மாந்தல் māndal, பெ.(n.)

   1. குடித்தல்; drinking.

   2. உண்ணுதல்; eating.

   3. ஊழ்வினைப் பயனை நுகர்தல்; experiencing the sorrows and pleasures being the result or outcome of what he had done (bad or good); in the previous birth.

     [மாந்து → மாந்தல்.]

மாந்தளிர்

 மாந்தளிர் māndaḷir, பெ.(n.)

   துவர்ப்புச் சுவைப் பத்தனுள் ஒன்றாகிய மாமரத்துளிர் (யாழ்.அக.);; tender leaf of mango, one of ten tuvar taste (q.v.);.

     [மா + தளிர்.]

மாந்தளிர்க்கல்

 மாந்தளிர்க்கல் māndaḷirkkal, பெ.(n.)

   ஒருவகை மணிக்கல் (இ.வ.);; a kind of precious stone.

     [மாந்தளிர் + கல்.]

மாந்தளிர்ச்சிலை

 மாந்தளிர்ச்சிலை māndaḷirccilai, பெ.(n.)

   காவிக்கல் (யாழ்.அக.);; red ochre.

     [மாந்தளிர் + சிலை.]

மாந்தளிர்நாணான்

மாந்தளிர்நாணான் māndaḷirnāṇāṉ, பெ.(n)

   மன்மதன் (நாமதீப.59);; god of love.

     [மாந்தளிர் + நாணான்.]

மாந்தளிர்ப்பச்சை

 மாந்தளிர்ப்பச்சை māndaḷirppaccai, பெ.(n.)

   சிலமான் கல் (சங்.அக.);; agate.

     [மாந்தளிர் + பச்சை.]

மாந்தவலி

 மாந்தவலி māndavali, பெ.(n.)

   மாந்தத்தினால் குழந்தைகளுக்குக் காணும் இசிவு; trismus noscentium.

     [மாந்தம் + வலி.]

மாந்தவளத்துறை

 மாந்தவளத்துறை māndavaḷattuṟai, பெ.(n.)

நடுவணரசின் கல்வித்துறை:

 human resource department (Education department);.

     [மாந்தர்+வளம்+துறை]

மாந்தவளம்

 மாந்தவளம் māndavaḷam, பெ. (n.)

   மாந்தனின் ஆற்றலாகிய வளம்; human resource.

     [மாந்தர்+வளம்]

மாந்தவிரைப்பு

 மாந்தவிரைப்பு māndaviraippu, பெ.(n.)

   குழந்தைகளுக்கு வரும் இரைப்பு நோய் (இங்.வை.);; infantile laryngitis, child – crowing.

     [மாந்தம் + இரைப்பு.]

மாந்தவிழுப்பு

 மாந்தவிழுப்பு māndaviḻuppu, பெ.(n.)

மாந்தஇசிவு பார்க்க;see {}.

     [மாந்தம் + இழுப்பு.]

மாந்தா

மாந்தா māndā, பெ.(n.)

மாந்தாதா பார்க்க;see {}.

     “மாந்தா முதன் மன்னவர்” (கம்பரா.அயோமுகி.73);.

மாந்தாதா

மாந்தாதா māndātā, பெ.(n.)

   சூரிய குலத்திற் புகழ்பெற்ற ஓர் அரசன்; a famous king of solar race.

     “மாந்தாதா வென்பான் வழி பட்டான்” (காஞ்சிப்பு.அந்தர்வே.46);.

மாந்தாளி

மாந்தாளி māndāḷi, பெ.(n.)

   பண் வகை (பரத.ராக.பக்.104);; a specific melody type.

மாந்தாளிப்பச்சை

 மாந்தாளிப்பச்சை māndāḷippaccai, பெ.(n.)

   பச்சைக்கல் வகை (இ.வ.);; a variety of green stone.

     [மாந்தாளி + பச்சை.]

மாந்தி

மாந்தி1 māndi, பெ.(n.)

   1. மாமரம் (சூடா.);; mango.

   2. திருமணச் சடங்கினுளொன்று (வின்.);; a marriage ceremony.

 மாந்தி2 māndi, பெ.(n.)

   குளிகன் (அக.நி.);; a invisible planet.

மாந்தித்தை

 மாந்தித்தை māndittai, பெ.(n.)

   மாவிலிங்கம்; a tree – crataeva roxurghil.

மாந்தியம்

 மாந்தியம் māndiyam, பெ.(n.)

   மந்தமா யிருக்கை (யாழ்.அக.);; becoming dull.

     [மந்தம் → மாந்தம் → மாந்தியம்.]

மாந்திரவஞ்சி

 மாந்திரவஞ்சி māndiravañji, பெ.(n.)

   சாப்பிரவிரை; monkey turmeric – Bixa orellana (சா.அக.);.

மாந்திரீகன்

 மாந்திரீகன் māndirīkaṉ, பெ. (n.)

   மந்திர ஆற்றலால் சிறந்த ஆற்றலைச் செலுத்துபவன் (இ.வ.);; one who exercises supernatural powers by means of mantras.

     [Skt. {} → த. மாந்திரீகன்.]

மாந்திரை

 மாந்திரை māndirai, பெ.(n.)

மாந்தலை பார்க்க;see {}.

     [மாந்தலை → மந்தரை → மாந்திரை.]

மாந்திவிழுப்பு

 மாந்திவிழுப்பு māndiviḻuppu, பெ.(n.)

   குழந்தைகளுக்கு உண்டாகும் இழுப்பு நோய்;  fits in children.

     [மாந்தம் → மாந்தி + இழுப்பு.]

மாந்து

மாந்து1 māndudal,    16 செ.குன்றாவி.(v.t.)

   1. உண்ணுதல்; to eat, feed.

     “மடமந்தி…. வாழைத் தீங்கனி மாந்தும்” (தேவா.909, 5);.

   2. குடித்தல்; to drink.

     “தேம்பிழி நறவ மாந்தி” (கம்பரா.நாட்டுப்.8);.

   3. நுகர்தல்; to experience as pleasure and pain, to enjoy.

     “கன்னியின் நல மாந்தினள்” (பாகவத.);.

 மாந்து2 māndudal,    16 செ.கு.வி.(v.i.)

   1. வருந்துதல்; to be distressed,

     “மணி பிரியரவின் மாந்தி” (கம்பரா.தைல.63);.

   2. இறத்தல்; to be ruined, to perish, die.

     “மயிர்பட மாந்தும் படியிறே இவள்படி” (ஈடு.7, 3, 2);.

   3. அவிந்தடங்குதல்; to be extinct.

   4. ஊக்கமழிதல் (யாழ்.அக.);; to become dispirited.

மாந்துளிர்

 மாந்துளிர் mānduḷir, பெ.(n.)

   மாமரத்தின் இளந்தளிர்; the tender leaves of the mango tree which are red in colour.

     [மா + துளிர்.]

மாந்தை

மாந்தை1 māndai, பெ.(n.)

   1. நோய் வகை (யாழ்.அக.);; a disease.

   2. சேரனுக்குரிய ஒரு நகரம் (அகநா.127);; an ancient town of the {} kingdom.

 மாந்தை2 māndai, பெ.(n.)

   இலங்கையில் இன்று மாதோட்டம் என வழங்கும் ஊரின் பண்டைப் பெயர்; old name of the present {} in Sri Lanka.

இராவணனின் மனைவி மண்டோதரி பிறந்த ஊர். அவளுடைய தந்தையான மயனின் தலைநகரம்.

 மாந்தை3 māndai, பெ.(n.)

   பெண்கள் அணியும் பல வண்ணங்களால் அமைந்த மேலாடை; a colourful dress of women.

 மாந்தை māndai, பெ. (n.)

   கொங்கு நாட்டின் தலைநகரமாக விளங்கிய கோவை மாவட்டத்தில் உள்ள ஊர்; a village in Kovai, head quarters in Kongunadu.

     [மா+அந்தை]

இது சேரர்க்கு உரிய தலைநகரமாக விளங் கியது. இமயவர்மன் நெடுஞ்சேரலாதன் மாந்தைப் பட்டினத்தில் பொன் முதலான பெருஞ் செல்வத்தைப் புதைத்து வைத்திருந்தான் என்று மாமூலனார் கூறுகின்றார்.

மாந்தொட்டு பச்சை

மாந்தொட்டு பச்சை māndoṭṭubaccai, பெ. (n.)

   1 காணிக்கை; offering.

   2. நன்கொடை,

 donation.

     “புஷ்பராகம் ஒன்று மாந்தொட்டு பச்சை தொண்ணுற்றொண்று” (தெ.சா.7:4: எ.53);.

     [மாந்தொட்டு+பச்சை]

மாந்தோட்டுப்பச்சை

மாந்தோட்டுப்பச்சை māndōṭṭuppaccai, பெ.(n.)

   மரகத வகை; a kind of emerald (S.I.I.vii, 22);.

மாந்தோட்டுப்பொத்தி

 மாந்தோட்டுப்பொத்தி māndōṭṭuppotti, பெ.(n.)

மாந்தோட்டுப்பச்சை பார்க்க;see {}.

மாந்தோப்பு

 மாந்தோப்பு māndōppu, பெ.(n.)

   மாமரங்களின் தொகுப்பு; crowd of mango tree.

     [மா + தோப்பு. மா = மாமரம். தொகுப்பு → தோப்பு.]

மான

மான māṉa, இடை.(Part.)

   ஒர் உவமைச் சொல் (தொல்.பொருள்.287);; a word of comparison.

     [மான் = ஒப்பு. மான் → மான.]

மானகம்

 மானகம் māṉagam, பெ.(n.)

   ஒரு வகை மலையாள சேம்பு; colacasia indica (சா.அக.);.

மானகவசன்

மானகவசன் māṉagavasaṉ, பெ.(n.)

   மானத்தையே காப்பாகத் தாங்கியோன்; man whose armour is self – respect.

     “பராக்ரமக் கைதவன் மானகவசன் கொற்கை வேந்தன்” (பெருந்தொ.949);.

     [மானம் + கவசன்.]

மானகிரி

 மானகிரி māṉagiri, பெ. (n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur.Taluk.

     [மால்(தொடர்ச்சி);-மால்-மான+கிரி]

மானக்கஞ்சாறநாயனார்

மானக்கஞ்சாறநாயனார் māṉakkañjāṟanāyaṉār, பெ.(n.)

   நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர் (பெரியபு.);; a canonized {}, one of 63.

மானக்கவரி

மானக்கவரி māṉakkavari, பெ.(n.)

   1. கவரிமான்; yak, bos grunnieus as too sensitive to survive the loss of a single hair.

   2. சாமரை; ornamental whisk, made of yak’s tail.

     “மானக்கவரி மணிவண்டகற்ற” (சீவக.2120);.

     [மான் → மான + கவரி.]

மானக்குருடன்

 மானக்குருடன் māṉakkuruḍaṉ, பெ.(n.)

   முழுக்குருடன் (வின்.);; totally blind man.

     [மான் → மானம் + குருடன். மானம் = ஒப்புமை, அளவு.]

மானக்குறை

 மானக்குறை māṉakkuṟai, பெ.(n.)

மானக் கேடு (வின்.); பார்க்க; see {}.

     [மான் → மானம் + குறை. மானம் = ஒப்புமை, அளவு, மதிப்பு, பெருமை, வலிமை.]

மானக்கேடு

 மானக்கேடு māṉakāṭu, பெ.(n.)

   பெருமைக்கேடு (வின்.);; dishonour, disagree, ignominy.

     [மானம் + கேடு. மானம் = பெருமை.]

மானக்லை

 மானக்லை māṉaklai, பெ.(n.)

   அரையாடை; waist cloth.

     [மான + கலை.]

மானங்கா – த்தல்

மானங்கா – த்தல் māṉaṅgāttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   ஒருவன் அல்லது ஒருத்தியின் மானத்தைப் பேணுதல்; to preserve one’s self-respect, chastity or honour.

     [மானம் + கா-.]

மானங்காட்டு – தல்

மானங்காட்டு – தல் māṉaṅgāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   கூரைக்கு முட்டுக் கொடுத்தல் (இ.வ.);; to support roof by struts.

     [வானம் → மானம் + காட்டு-,]

மானங்குல மானம்

 மானங்குல மானம் māṉaṅgulamāṉam, பெ. (n.)

படிமங்களின் உயரத்தினை முடிவு செய்வதில், பின்பற்றப்படும் மரபு

 a measuring methodin Sculptuting.

     [மான்+அங்குலம்+மானம்]

மானங்கெட்டவன்

 மானங்கெட்டவன் māṉaṅgeṭṭavaṉ, பெ. (n.)

   மானமிழந்தவன் (கொ.வ.);; person devoid of shame or self-respect.

     [மானம் + கெட்டவள்.]

மானங்கெட்டவள்

மானங்கெட்டவள் māṉaṅgeṭṭavaḷ, பெ.(n.)

   1. வெட்கங் கெட்டவள் (வின்.);; shameless woman.

   2. கற்பிழந்தவள் (கொ.வ.);; unchaste woman.

     [மானம் + கெட்டவள்.]

மானசதீட்சை

மானசதீட்சை māṉasatīṭsai, பெ. (n.)

   நோன்புவகை ஏழனுள் சீடனது மனத்துள் ஒகசித்தியால் ஆசிரியன் நுழைந்து அவனுக்கு மன, மொழி, மெய் ஆகியவற்றால் தூய தாக்கும் நோன்பு வகை (சைவச. ஆசாரி. 65, உரை);;     [Skt. {} → த. மானசதீட்சை.]

மானசாரம்

மானசாரம் māṉacāram, பெ.(n.)

   கட்டடச் சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று (இருசமய. சிற்பசாத்.);; a treatise on architecture, one of 32 {}.

 மானசாரம் māṉacāram, பெ. (n.)

   சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று; a treatise on architecture, one of 32 {}.

     ‘மானகற் பாரியஞ் சிருட்ட மானசாரம்’ (இருசமய, சிற்பசாத். 2);.

     [Skt. {} → த. மானசாரம்.]

மானசாலயம்

 மானசாலயம் māṉacālayam, பெ.(n.)

   அன்னப் பறவை; a bird swan.

     [மான + சாலயம்.]

மானசிகநரம்பு

 மானசிகநரம்பு māṉasiganarambu, பெ.(n.)

   விதான நரம்பு; phrenic nerve (சா.அக.);.

மானசீகம்

 மானசீகம் māṉacīkam, பெ. (n.)

   மனத்தில் மட்டும் இருப்பது, உள்ளத்தில் நினைப்பது ; that which is or which is done in the mind.

     ‘அவர் பிழைக்க வேண்டும் என்று மானசீகமாக வணங்கினாள். என்னுடைய மானசீக குரு.’ (உ.வ.);.

மானட்கி

 மானட்கி māṉaṭki, பெ.(n.)

   பூசணிக்காய்; pumpkin (சா.அக.);.

மானதண்டு

மானதண்டு māṉadaṇṭu, பெ.(n.)

   அளவைக் கோல்; measuring rod.

     “விண்ணினுக் களவாய் வைத்த மானதண் டனைய வெற்பில்” (இரகு.திக்கு.144);.

     [மானம் + தண்டு. மானம் = அளவு, அளவுக்கருவி.]

மானதி

 மானதி māṉadi, பெ. (n.)

   திருச்செங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruchengodu Taluk,

     [மான்+அத்தி]

மானத்தாட்சி

 மானத்தாட்சி māṉattāṭci, பெ.(n.)

மானக்கேடு பார்க்க;see {}.

     [மானம் + தாழ்ச்சி. தாழ்ச்சி → தாட்சி.]

மானத்தாழ்ச்சி

 மானத்தாழ்ச்சி māṉattāḻcci, பெ.(n.)

   மானக்கேடு; ignominy.

     [மானம் + தாழ்ச்சி.]

மானத்தாழ்வு

 மானத்தாழ்வு māṉattāḻvu, பெ.(n.)

மானக்கேடு (வின்.); பார்க்க;see {}.

     [மானம் + தாழ்வு.]

மானத்தைவாங்கு – தல்

மானத்தைவாங்கு – தல் māṉaddaivāṅgudal,    7 செ.கு.வி.(v.i.)

   மதிப்பை இழக்கச் செய்தல்; cause or bring disgrace.

     [மானத்தை + வாங்கு-,]

மானத்தோல்

 மானத்தோல் māṉattōl, பெ.(n.)

   பீசம்; testicle (சா.அக.);.

மானன்

மானன்1 māṉaṉ, பெ.(n.)

   1. மானி2, 1 (சங்.அக.); பார்க்க;see {}.

   2. தலைவன் (யாழ்.அக.);; chief.

 மானன்2 māṉaṉ, பெ.(n.)

   1. வேடன்; hunter.

   2. மூடன்; dullard.

மானபோதம்

மானபோதம் māṉapōtam, பெ.(n.)

   சிற்ப நூல் முப்பத்திரண்டனுள் ஒன்று (இருசமய. சிற்பசாத்.3);; a treatise on architecture, one of 32 {}.

மானமரியாதை

 மானமரியாதை māṉamariyātai, பெ.(n.)

   மதிப்பு (வின்.);; honour, dignity.

     [மானம் + மரியாதை.]

மானமர்

 மானமர் māṉamar, பெ.(n.)

   கள்ளி; spurge.

மானமா

மானமா māṉamā, பெ.(n.)

   கவரிமான்; yak, as extremely sensitive.

     “மானமா வனைய மாட்சியர்” (கம்பரா.உருக்காட்.19);.

     [p]

மானமாரி

 மானமாரி māṉamāri, பெ.(n.)

வானம் பார்த்தநிலம் பார்க்க;see {}.

     [மானம் + மாரி]

மானமுறு – தல்

மானமுறு – தல் māṉamuṟudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   பார்த்தல்; to see.

     “நும்மாண் மானமுற லுற்றது கொல்” (சேதுபு.காசிப.9);.

     [மானம் + உறு-]

மானமூடு

மானமூடு1 māṉamūṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   உடை முதலியவற்றால் உடலை மறைத்து மானம் பேணுதல்; to conceal one’s shame by covering the body with dress.

     [மானம் + மூடு-]

 மானமூடு2 māṉamūṭudal, பெ.(n.)

   வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகை; cloud sky.

இரண்டு நாளாக மானம் மூடிக்கிட்டு கிடக்குது (பே.வ.);ழூ

     [வானம்மூடுதல் → மானமூடுதல் (கொ.வ.);.]

மானம்

மானம்1 māṉam, பெ.(n.)

   1. மதிப்பு; honour, dignity.

     “நன்றேகாண் மான முடையார் மதிப்பு” (நாலடி, 294);.

   2. கற்பு; chastity.

   3. பெருமை; pride, eminence.

     “புகழு மானமு மெடுத்து வற்புறுத்தலும்” (தொல். பொருள்.41);.

   4. புலவி; bouderie, sulks.

     “மான மங்கையர் வாட்டமும்” (சீவக.2382);.

   5. வலிமை (சூடா.);; strength.

   6. சூளுரை (சபதம்);; vow.

     “அப்படியே செய்வேனென மானஞ் செய்து” (இராமநா.அயோத்.7);.

   7. கணிப்பு; computation.

   8. அளவுக் கருவி; instrument or means of measurment.

   9. மாற்றாணி (திருக்கோ.335, உரை);; touch – needle.

   10. பட்டணம்படியில் அரைப்படி கொண்ட அளவு (G.Sm.D.I.l.286);;  half a Madras measure.

   11. ஒப்புமை; comparison.

     “மானமில்லுயர் மணிவண்ணன்” (சீவக.2747);.

    12. அன்பு; love, affection.

     “பாலும் நீரும்போல மானம் வைத் தாண்டீரே” (இராமநா.அயோத்.7);.

   13. ஒட்டுறவு; attachment.

     “மறத்திடை மானமேற் கொண்டு” (பு.வெ.5, 6);.

   14. அவமானம்; disgrace.

     “மானத் தலைவருவ செய்யவோ” (நாலடி, 198);.

    15. இலச்சை; shame.

     “வஞ்சியை மீட்கிலே னென்னு மானமும்” (கம்பரா. சடாயுவுயிர்நீ. 145);.

   16. குற்றம்; fault

     “மெய்ந்நிலை மயக்க மான மில்லை” (தொல்.எழுத்து.47);.

   17. வானூர்தி; aerial chariot.

     “மானமிசையூர்ந்து” (கந்தபு. அசுரர்யா.14);.

   18. கோவில் விமானம்; vaulted roof o the inner shrine of a temple.

     “பொன்மானந் தனக்கு வடமேற்றிசை” (திருவிளை. கல்லானைக்.3);.

   19. மண்டபம் (பிங்.);; pillared hall.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); → மல் → மன். மன் = பெருமை, பெரியோன், கணவன், அரசன், அரசு. மன் → மான் → மானுதல் = ஒத்தல். மான் → மானம் (வே.க.4:34);.]

 மானம்2 māṉam, பெ.(n.)

   அளவு, மதிப்பீடு; measurement, estimation.

 மானம்3 māṉam, பெ.(n.)

   1. மான்மதம் (கத்தூரி);; musk.

   2. புனுகு (சவ்வாது);; civet.

 மானம்4 māṉam, பெ.(n.)

   வான்; sky.

     “செம்மானஞ் செற்று…… மிளிருஞ் சடைக்கற்றை வேதியனே” (தேவா.1200,10);.

     [மால் → மான் → மானம் (வே.க.4:38);.]

 மானம்5 māṉam, பெ.(n.)

   1. ஒரு தொழிற் பெயர் விகுதி; a nominal suffix.

     ‘பிடிமானம்’, ‘சேர்மானம்’.

   2. தொறுப் பொருளில் வரும் இடைச்சொல்; an adverbial suffix meaning continuity.

     “தினமானம் இது நடந்து வருகிறது”.

     [மன் → மான் → மானம்.]

 மானம்6 māṉam, பெ.(n.)

   நிலை, தன்மை போன்ற பொருளில் வரும் பின்னொட்டு; a suffix meaned for state of a thing.

     [மா → மான் → மானம்.]

ஒண்டமிழ் மொழியில் ஒரெழுத்து ஒருமொழியாய் நிற்பவை 42 எழுத்துகள். அவற்றுள் மா என்பது ஒர் எழுத்து மொழியாகும். அதற்கு அழகு, அறிவு, ஆணி, அரைத்த மாவு, இருபதில் ஒரு பங்கான ஓரெண், மரம், குதிரை, செல்வம்,

நிறம், பெரிய, பெருமை, மிகுதி, மேன்மை, விலங்கு, அளவு என்ற பொருள்களுடன் நிலை என்ற பொருளும் உண்டென உணர்க.

   1. அடிமானம் = கீழ் மட்டத்தின் நிலை, அடிப்படை நிலை;   2. அடைமானம் = ஒரு பொருளுக்கு ஈடாக அடைவு செய்யும் நிலை;   3. அவமானம் = தன் மதிப்பின் தாழ்நிலை;   4. இனமானம் = இனப்பற்றின் நிலை;   5. கட்டுமானம் = கட்டப்படுகின்ற கட்டடப் பணியின் நிலை;   6. கனபரிமானம் = பலகை, தகடு போன்ற தட்டையான பொருள்களின் தடித்த நிலை;   7. காலமானம் = காலத்தின் நிலை;   8. செரிமானம் = உண்ட உணவு செரிக்கும் நிலை;   9. தன்மானம் = தன் தகுதியின் நிலை;   10. தீர்மானம் = ஒரு கருத்தைப் பற்றிய தீர்வு செய்த நிலை;   11. தேய்மானம் = ஒரு பொருள் தேய்ந்து, குறைந்த நிலை;   12. படிமானம் = கீழ்ப்படிதலின் நிலை;   13. பிடிமானம் = ஒன்றைப் பற்றிக் கொண்ட நிலை;   14. பெறுமானம் = ஒன்றன் மதிப்பீட்டு நிலை;   15. மொழிமானம் = ஒருமொழியைப் பற்றிய நிலை;   16. வருமானம் = ஒன்றன் மூலம் வருகின்ற வரவின் நிலை.

 மானம்7 māṉam, பெ.(n.)

   1. ஆமணக்கு; cas- tor plant.

   2. ஆண் அல்லது பெண்குறி; male or female genital.

மானம்கீழ்மாறுவாங்கு – தல்

மானம்கீழ்மாறுவாங்கு – தல் māṉamāḻmāṟuvāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   அதிகாலைப் பொழுது; early morning.

     [மானம் + கீழ்மாறுவாங்கு-தல்]

மானம்பாடி

 மானம்பாடி māṉambāṭi, பெ.(n.)

   வானம்பாடி (வின்.);; the Indian skylark.

     [மானம் + பாடி. வானம்பாடி → மானம்பாடி (இ.வ.);]

மானம்பார் – த்தல்

மானம்பார் – த்தல் māṉambārttal,    4 செ.கு.வி. (v.i.)

   இறத்தல்; to die.

     [வானம் → மானம் (கொ.வ.); மானம் + பார்-]

மானம்பார்த்தபூமி

 மானம்பார்த்தபூமி māṉambārttapūmi, பெ.(n.)

   மழைநீரால் மட்டுமே பயிர் செய்யப்படும் நிலம்; rain-fed arable land.

மறுவ. மானாவாரி நிலம்.

     [மானம் + பார்த்தபூமி. வானம் → மானம் (இ.வ.);]

மானல்

மானல்1 māṉal, பெ.(n.)

   1. மயக்கம் (சூடா.);; confusion.

   2. ஐயப்படுதல் (வின்.);; doubting.

     [மால் → மான் → மானல். மால் = மயக்கம்]

 மானல்2 māṉal, பெ.(n.)

   1. ஒப்பு (சூடா.);; comparison, resemblance.

   2. இலிச்சை (அக.நி.);; see shame.

     [மான் → மானல்]

மானவட்டில்

மானவட்டில் māṉavaṭṭil, பெ.(n.)

   அளவுக் கிண்ணம்; measuring cup.

     “பொன்னின் மானவட்டில் ஒன்று” (S.I.I.ii, 4);.

     [மானம் + வட்டில். மானம் = அளவு]

மானவன்

மானவன்1 māṉavaṉ, பெ.(n.)

   மாந்தன்; man.

 மானவன்2 māṉavaṉ, பெ.(n.)

   1. பெருமை யுடையவன்; man of honour.

     “ஆர்த்தடு மானவன்” (கந்தபு.துணைவ.32);.

   2. அரசன்; King.

     “மானவன் மந்திரி” (கலிங்.365);.

   3. சேனைத் தலைவன் (திவா.);; commander of army.

   4. வீரன் (சது.);; hero, champion.

     [மானம் = பெருமை, பெரியோன், வலிமை. மானம் → மானவன்]

மானவாரி

மானவாரி māṉavāri, பெ.(n.)

   1. மானவாரி நிலம் பார்க்க; see {}.

   2. மழையை நம்பி விளையும் விளைச்சல் (வின்.);; cultivation, whether wet or dry, dependent upon rain.

   3. சுறவத் திங்களில் விளையும் நெல் (வின்.);; a kind of paddy that matures in the month of {}.

     [மானம் + வாரி. வானம் → மானம்.]

மானவாரிக்குளம்

 மானவாரிக்குளம் māṉavārikkuḷam, பெ.(n.)

   மழை பெய்து நிரம்பும் ஏரி; rain fed tank.

     [மானவாரி + குளம்]

மானவாரிநிலம்

 மானவாரிநிலம் māṉavārinilam, பெ.(n.)

மானம்பார்த்தநிலம் பார்க்க;see {}.

     [மானவாரி + நிலம்]

மானவாரிப்பத்து

 மானவாரிப்பத்து māṉavārippattu, பெ.(n.)

மானவாரிப்பற்று பார்க்க;see {}.

     [மானவாரிப்பற்று → மானவாரிப்பத்து. பற்று →பத்து]

மானவாரிப்பற்று

 மானவாரிப்பற்று māṉavārippaṟṟu, பெ.(n.)

   மானவாரிக் குளத்து நீரால் விளையும் நிலங்களின் மொத்த விளைச்சலிற் பேர் பாதியை அரசு தீர்வையாகக் கைக் கொண்டு தண்டும் முறை; a method of collecting revenue of land under rainfed tanks, whereby the Government takes one half of the gross produce (R.T.);.

     [மானவாரி + பற்று]

மானவாரிப்புன்செய்

 மானவாரிப்புன்செய் māṉavārippuṉcey, பெ.(n.)

   மழையால் மட்டுமே விளையும் புன்செய் நிலம்; rain fed dry land.

     [மானவாரி + புன்செய்.]

மானவிறல்வேள்

மானவிறல்வேள் māṉaviṟalvēḷ, பெ.(n.)

   முற்காலத்துச் சிற்றரசர் சிலருக்கு வழங்கிய பட்டப் பெயர்; an ancient title of certain chiefs.

     “மான விறல்வே எழும்பி லன்ன” (மதுரைக்.344);.

     “மானவிறல்வேள் வயிரிய மெனினே” (மலைபடு.164);.

மானவிலங்கு

 மானவிலங்கு māṉavilaṅgu, பெ.(n.)

   கவரிமான்; the yak.

மானவு

 மானவு māṉavu, பெ.(n.)

   தெளிவு (சது.);; clearness.

மானவெளி

 மானவெளி māṉaveḷi, பெ.(n.)

   திறந்த வெளியாயிருக்கும் வீட்டின் உள்முற்றம்; open quandrangle in a house.

     [மானம் + வெளி]

மானவேதியன்

 மானவேதியன் māṉavētiyaṉ, பெ.(n.)

   வேதங்கற்றவன் (வின்.);; one learned in the {}.

மானாகம்

 மானாகம் māṉākam, பெ.(n.)

   பெருநாரை (வின்.);;сyrus craпе.

     [p]

மானாகிமூலி

 மானாகிமூலி māṉākimūli, பெ.(n.)

   இஞ்சி; ginger (சா.அக.);.

மானாங்காணி

 மானாங்காணி māṉāṅgāṇi, பெ.(n.)

   உத்தரத்தின் மேல் நோக்கிய அமைப்பு (கம்.வழ.);; upright pattern of a pillar.

     [மானம் = வானம். மானம் + காணி. மானங்காணி → மானாங்காணி (கொ.வ.);

மானாங்குலம்

மானாங்குலம் māṉāṅgulam, பெ.(n.)

   நீட்டலளவு வகை (சிற்பரத்.18);; a linear measure, one-six of a talam.

மானாதிபட்சி

மானாதிபட்சி māṉātibaṭci, பெ.(n.)

   1. கருங்காக்கை; black crow.

   2. நால்வகைச் சாதியில் கடைச்சாதியர்; the last class of human being.

மானாபரனநல்லூர்

 மானாபரனநல்லூர் māṉāparaṉanallūr, பெ. (n.)

   அம்பாசமுத்திர வட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Ambasamuthiram (Thirunelveli);,

     [மானம்+ஆபரணன்+நல்லூர்]

மானாமதி

 மானாமதி māṉāmadi, பெ. (n.)

   செங்கற்பட்டு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Chenglepet Taluk.

     [மான்+அம்+மத்தி]

மானாமதுரை

மானாமதுரை māṉāmadurai, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்தில் வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள ஊர்; it is in Sivagangai (Dt.); river bank of vaigai.

பெயர்க்காரணம்: 14ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை மாணவீரன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சி செய்தான். இவன் பெயரால் மானவீரன் மதுரை என்பது நாளடைவில் மானாமதுரை என வழங்கலாயிற்று.

மானார்

மானார்1 māṉār, பெ.(n.)

   பெண்டிர்; woman.

     “மட்டுப் படாக் கொங்கை மானார் கலவி மயக்கத்திலே” (தனிப்பா.i, 149, 54);.

 மானார்2 māṉār, பெ.(n.)

   பகைவர் (சங்.அக.);; enemies.

 மானார்3 māṉār, பெ.(n.)

   இலைக்கள்ளி; leaf spurge (சா.அக.);.

மானாள்

 மானாள் māṉāḷ, பெ.(n.)

   பெண்; woman, girl.

     “ஒருத்தர்கிட்ட மானாளை விட்டேனோ” (விறலிவிடு.);.

மானாவாரி

மானாவாரி1 māṉāvāri, பெ.(n.)

மானவாரி பார்க்க;see {}.

     [மானவாரி → மானாவாரி]

 மானாவாரி2 māṉāvāri, பெ.(n.)

   1. மனப் போக்கு (இ.வ.);; whim, fancy.

   2. பெருவாரி, தாந்தின்னி (இ.வ.);; absolue or exclusive enjoyment.

     “அவன் அதை மானாவாரியாய் பயன்படுத்துகிறான்” (உ.வ.);.

   3. பொறுப்பின்மை; want of attention or care.

 மானாவாரி3 māṉāvāri, பெ.(n.)

   மழை நீரை மட்டுமே நம்பி விளையும் விளைச்சல்; dry cropping, cultivation in rain fed tracts.

மானாவி

மானாவி māṉāvi, பெ.(n.)

   1. ஒன்பான் இரவு (நவராத்திரி);த் திருவிழா; the {} festival.

     “மானாவி சமைப்பாரைப் போலே” (ஈடு.10, 9, 4);.

   2. மானாவிச்சோலை பார்க்க;see {}.

     “மானாவிபோலே ஆவதழிவதாம் விபூதி” (திருவிருத்.66, வ்யா.);.

க. மானானி

மானாவிச்சோலை

மானாவிச்சோலை māṉāviccōlai, பெ.(n.)

   ஒன்பான் இரவு (நவராத்திரி); விழாவில் அமைக்கும் (அலங்கார); ஒப்பனைச் சோலை; pleasure grove, temporarily formed for the {} festival.

     “மானாவிச் சோலை போல ஆவதழிவதான” (ஈடு.6, 9 1);.

மானி

மானி1 māṉittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நாணுதல்; to be bashful, to become ashamed

     “கூற்றமும்….. மானித்தது” (பு.வெ.7, 25, உரை);.

   2. செருக்குதல், இறுமாப்புக் கொள்ளுதல்; to be proud.

     “நின்னைப் பணியாது மானித்து நின்ற அரசன்” (நீலகேசி, 529, உரை);.

     [முல் → மல் → மன் = பெருமை, பெரியோன், மன் → மான். மானுதல் = ஒத்தல். மான் → மானி (வே.க.4: 35);]

 மானி2 māṉittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   பெருமைப்படுத்துதல்; to respect, honour, treat reverently.

     ” நாணிமானித் தோமே நாமென்பார்” (காளத்.உலா.243);.

     [மான் = பெருமை. மான் → மானி-,]

 மானி3 māṉi, பெ.(n.)

   1. மதிப்புள்ளவ-ன்-ள்; person of honour.

   2. செருக்குள்ளவ – ன் – ள், இறுமாப்புள்ளவ – ன் – ள்; proud person.

     “களி மடி மானி” நன்.39).

     [மானம் → மானி]

 மானி4 māṉi, பெ.(n.)

   மங்கையர்க்கரசியார்; a canonized {} saint.

     “வரிவளையாள் மானிக்கு நேசனுக்கு மடியேன்” (தேவா.738, 11);.

 மானி5 māṉi, பெ.(n.)

   அளவைக்கருவி; instrument of measurement, meter.

   1. அழுத்தமானி = உடலின் குறை – மிகை அழுத்தங்களை அளக்கும் கருவி;   2. உப்புமானி = ஓரிடத்தில் இருக்கும் உப்பின் அளவை அளக்கும் கருவி;   3. ஒலிமானி = ஒலியின் அளவை அளக்கும் கருவி;   4. குடிநீர்மானி = குழாய் மூலம் பயன்படுத்தும் குடிநீரை அளக்கும் கருவி;   5. கோணமானி = கோணங்களை அளக்கும் கருவி;   6. சுரமானி = உடலின் சுரத்தை அளக்கும் கருவி;   7. நில அதிர்வுமானி = நில நடுக்கத்தை அளக்கும் கருவி;   8. நீர்மமானி = நீர்மப் பொருள்களை அளக்கும் கருவி;   9. பாகைமானி = வட்டச் சிறுபகுதியை அளக்கும் கருவி;   10. பால்மானி = பாலில் கரைந்துள்ள நீரை அளக்கும் கருவி;   11. மழைநீர்மானி = பெய்யும் மழை நீரை அளக்கும் கருவி;   12. மின்மானி = பயன்படுத்திய மின்சாரத்தை அளக்கும் கருவி;   13. வெப்பமானி = வெப்பத்தை அளக்கும் கருவி.

   14. பால்மானி = பாலில் நீரளவை அளக்கும் மானி.

     [p]

 மானி6 māṉi, பெ.(n.)

   மாமன் (இ.வ.);; uncle.

மானிகை

 மானிகை māṉigai, பெ.(n.)

   வெறியம் (சாறாயம்); (சங்.அக.);; spirituous liquor.

மானிடசென்மம்

மானிடசென்மம் māṉiḍaseṉmam, பெ. (n.)

   1. மக்கட் பிறப்பு; birth as a human being.

   2. மானிடம் (வின்.);; mankind, ingeneral.

த.வ. மாந்தப்பிறப்பு

     [Skt. {}+janma → த. மானிடசென்மம்.]

மானினி

 மானினி māṉiṉi, பெ.(n.)

   பெண் (சூடா.);; womап.

மானிய ஆடுர்

 மானிய ஆடுர் māṉiyaāṭur, பெ. (n.)

   சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Chidambaram Taluk.

     [மானியம்+ஆடு+ஊர்]

மானியம்

மானியம் māṉiyam, பெ. (n.)

   1. சிற்றூர் மேம்பாட்டுக்காகச் செய்த நன்மைக்குப் பலனாக விடப்பெற்ற இறையிலி நிலம்; land held either rent free or at a low rate of rent in consideration of services rendered to a village community (R.F.);

   2. நிலத்தின் தீர்வையை மானமாகப் பெறும் கற் கழுவனீர்; grant of revenue of a certain extent of land.

   3. அளவிடுகை. (யாழ்.அக.);; computation.

     [Pkt. {} → த. மானியம்.]

மானியார்

மானியார் māṉiyār, பெ.(n.)

மானி3 பார்க்க;see {}.

     “மானியார் தாமு மஞ்சி” (பெரியபு.திருஞான.696);.

மானிறம்

 மானிறம் māṉiṟam, பெ.(n.)

   வெளிறின மஞ்சள் நிறம் (இ.வ.);; fawn colour, tawny colour.

     [மான் + நிறம்]

மானிறைச்சி

 மானிறைச்சி māṉiṟaicci, பெ.(n.)

   மான்கறி; flesh of deer.

     [மான் + இறைச்சி.]

மானு – தல்

மானு – தல் māṉudal,    16 செ.குன்றாவி.(v.t.)

மான்5 – (வின்.); பார்க்க;see {}.

மானுடதீர்த்தம்

மானுடதீர்த்தம் māṉuḍatīrttam, பெ. (n.)

   ஐவகை தெய்விய நீர்த்துறைகளுள் சிறு விரல் மூலம் விடும் மந்திர நீர் (சைவச பொது. 66, உரை);; sanctified water ceremoniously poured down through the little finger one of {}.

     [Skt. {} → த. மானுடதீர்த்தம்.]

மானுடம்

மானுடம் māṉuḍam, பெ. (n.)

மானிடசென்மம் பார்க்க;see {} – senmam.

     ‘கிலுத்த மானுட மலான மற்றை மானுடமில்லை’ (காஞ்சிப்பு.நகரேற்.106.);

     ‘ஊர்வபதி னொன்றா மொன்பது மானுடம்’ (குறள்/, 62, உரை);.

   2. மானிடவேள்வி. (வின்.);;{}.

     [Skt. {} → த. மானுடம்.]

மானுயர்

மானுயர் māṉuyar, பெ.(n.)

   மக்கட் பிறப்பினர்; human beings.

     “மானுயரென்னப்படுபவர்” (நீலகேசி. 86);.

     [மான் + உயர்.]

மானேந்தி

 மானேந்தி māṉēndi, பெ.(n.)

   நிலவு; moon.

மானேந்திமூலி

 மானேந்திமூலி māṉēndimūli, பெ.(n.)

   ஈசுர மூலி; a twicer.

மானேறு

மானேறு māṉēṟu, பெ.(n.)

   1. கலைமான்; stag.

   2. பன்னிரண்டாம் விண்மீன்; the12th naksatra.

மானோட்டி

 மானோட்டி māṉōṭṭi, பெ.(n.)

   மான்கள் பயிரை மேயாமல் வெருட்டும் ஊழியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலம் (R.T.);; land given as service – inam for driving the deer away from crops.

மான்

மான்1 māṉ, பெ.(n.)

   1. ஒருவகை விலங்கு; deer, hart, antelope, fawn.

     “மானினுரிவை தைஇய வூன் கெடு மாயின்” (திருமுரு. 128);.

   2. விலங்கின் பொது (பிங்.);; animal, beast.

   3. குதிரை; horse.

     “தெம்முனையுண் மானொடு தோன்றி” (பு.வெ.10, பொது.5);.

   4. அரிமா; lion.

     “விலங்கு மான்குரல் கேட்பின் வெருவுவை” (கலித்.13);.

   5. மகரமீன் (பிங்.);; magara fish.

   6. மகரவோரை (பிங்.);; capricorn of he zodiac.

தெ., க., ம., து. மான்.

     [மா → மான்.]

     [p]

 மான் māṉ, இடை.(part)

   1. பெயர் விகுதி; affix to nouns.

     “வேண்மான்.”

   2. படியாக என்னும் பொருளில் வரும் இடைச் சொல் (தொல்.சொல்.463, உரை);; particle meaning ways, times etc.

 மான்3 māṉ, பெ.(n.)

   1. பெருமை;     “மானென்றுரைத்த புத்தி வெளிப்பட்டு” (மணிமே.27:207);.

     “மானாங்காரமனங் கெட” (திவ்.திருவாய். 10, 7, 11);.

   2. மூலப் பகுதி;   3. மாந்தன்; human being.

     “மானுடம்பு விடா” (மேருமந்.72);.

   4. பெரியோன்; great person or being.

     “மானே தொழுகை வலி” (சி.போ.12, 4 வெண்பா.3);.

   5. மலை (பிங்.);; mountain.

     [மன் → மான்.]

 மான்4 māṉṉudal,    16 செ.குன்றாவி. (v.t.)

   ஒத்தல்; to resemble, to equal.

     “மன்னர் சேனையை மானு மன்றே” (கம்பரா.ஆற்று.14);

     [மன் → மான் (வே.க.4:34);.]

 மான்5 māṉ, பெ.(n.)

   ஒப்பு (பிங்.);; likeness.

     [மான → மான்.]

 மான்6 māṉtalmāṉṟal,    16 செ.கு.வி. (v.i.)

   1. ஐயுறுதல் (திவா.);; to be doubtful.

   2. மயங்குதல் (சூடா.);; to be confused.

மான்களங்கம்

 மான்களங்கம் māṉkaḷaṅgam, பெ.(n.)

   நிலவிலுள்ள மானுருப் போன்ற மறு (யாழ். அக.);; spot on the moon, fancied to resemble a deer.

     [மான் + களங்கம்.]

மான்களிக்கண்

 மான்களிக்கண் māṉkaḷikkaṇ, பெ.(n.)

   இருவட்டக்கம்பி (யாழ்.அக.);; a kind of wire.

மான்கீரை

 மான்கீரை māṉārai, பெ.(n.)

   கீரை வகை (மூ.அ.);; a kind of pot – herb.

     [மான் + கீரை.]

மான்குளம்பு

மான்குளம்பு māṉkuḷambu, பெ.(n.)

   1 மானின் பாதம்; foot of a deer.

     “மான்குளம்பு அழுத்திய இடத்தை யொத்த” (பொருந.4, உரை);.

   2. அடம்பு; hare – leaf.

     [மான் + குளம்பு.]

     [p]

மான்கை

 மான்கை māṉkai, பெ.(n.)

   சாறாயம்; arrack (சா.அக.);.

மான்கையன்

 மான்கையன் māṉkaiyaṉ, பெ.(n.)

சிவ பெருமான்;{}.

     [மான் + கையன்.]

மான்கொடி

 மான்கொடி māṉkoḍi, பெ.(n.)

   கொடிவகை (யாழ்.அக.);; a creeper.

     [மான் + கொடி.]

மான்கொம்பு

மான்கொம்பு1 māṉkombu, பெ.(n.)

   பாதிரி; white flowered trumpet tree.

     [மான் + கொம்பு.]

 மான்கொம்பு2 māṉkombu, பெ.(n.)

   மானின் தலையில் சுருண்டு திரண்ட கொம்பு; deer’s horn.

     [மான் + கொம்பு.]

     [p]

 மான்கொம்பு māṉkombu, பெ. (n.)

   .திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur.Taluk.

     [மான்+(கோம்பை);கொம்பு]

மான்சாணம்

 மான்சாணம் māṉcāṇam, பெ.(n.)

   மானின் சாணி; funette (சா.அக.);.

     [மான் + சாணம்.]

மான்சாரை

மான்சாரை māṉcārai, பெ.(n.)

   1. நீண்ட மரவகை; auricled leaved glabrous marking-nut.

   2. மரவகை; a species of croton indigo.

மான்செவி

 மான்செவி māṉcevi, பெ.(n.)

மான்செவிக் கள்ளி (வின்.); பார்க்க;see {}.

     [மான்செவிக்கள்ளி → மான்செவி.]

மான்செவிக்கள்ளி

 மான்செவிக்கள்ளி māṉcevikkaḷḷi, பெ. (n.)

   இலைக்கள்ளி (மலை.);; five tubercled spurge.

     [மான்செவி + கள்ளி. மானின் செவி போன்ற இலையையுடைய கள்ளி.]

     [p]

மான்புள்ளிகண்டாங்கி

 மான்புள்ளிகண்டாங்கி māṉpuḷḷigaṇṭāṅgi, பெ.(n.)

   சேலை வகை (இ.வ.);; a kind of saree.

     [மான்புள்ளி + கண்டாங்கி.]

மான்புள்ளிச்சேலை

 மான்புள்ளிச்சேலை māṉpuḷḷiccēlai, பெ.(n.)

   சேலை வகை (இ.வ.);; a kind of sагее.

     [மான் + புள்ளி + சேலை. சீரை → சிலை → சேலை.]

மான்மகன்

மான்மகன் māṉmagaṉ, பெ.(n.)

   1. அயன்; Brahman.

   2. மான்மைந்தன் பார்க்க;see {}.

     “மான்மகன் போல் வருதி ரைய” (சிலப்.7:28);.

     [மான் + மகன்.]

மான்மதச்சாந்து

மான்மதச்சாந்து māṉmadaccāndu, பெ.(n.)

மான்மதச்சேறு பார்க்க;see {}.

     “மான்மதச் சாந்தொடு வந்ததை” (சிலப்.2:68);.

     [மான்மதச்சேறு → மான்மதச்சாந்து.]

மான்மதச்சேறு

 மான்மதச்சேறு māṉmadaccēṟu, பெ.(n.)

 unguient of musk.

     [மான்மதம் + சேறு.]

மான்மதம்

மான்மதம் māṉmadam, பெ.(n.)

   1. கத்தூரி (திவா.);; musk.

   2. சவ்வாது (சிலப்.6, 81, உரை);; civet.

மான்மறி

மான்மறி māṉmaṟi, பெ.(n.)

   1. மான்குட்டி; fawn

     “மான்மறி விழுந்தது கண்டு” (மணிமே.23:115);.

   2. பெண்மான் (மணிமே.23 : 115, அரும்.);; doe.

   3. வள்ளி நாயகி;{}

 the wife of Murugan, as born of a doe.

     “மான்மறி தோண் மணந்த ஞான்று” (பரிபா.9, 8);.

     [மான் + மறி. மறி = குட்டி.]

மான்மறிக்கரத்தான்

 மான்மறிக்கரத்தான் māṉmaṟikkarattāṉ, பெ.(n.)

சிவன்;{}.

மான்மியக்கும்மி

 மான்மியக்கும்மி māṉmiyakkummi, பெ. (n.)

   கும்மிப்பாடல் வகைகளில் ஒன்று; atype of kummi play.

மான்மியம்

மான்மியம் māṉmiyam, பெ.(n.)

   1. மகிமை; glory, greatness.

   2. இடப் பெருமையைக் கூறும் நூல்; treatise on the greatness of a sacred place.

     “சிதம்பர மான்மியம்”

   3. மகத்துவம் பார்க்க;see magattuvam.

மான்முருகு

மான்முருகு māṉmurugu, பெ.(n.)

   1. துளசி; sacred basil.

   2. துரிசு; blue vitriol (சா.அக.);.

மான்மைத்துனன்

மான்மைத்துனன் māṉmaittuṉaṉ, பெ.(n.)

   1 சிவன்;{}.

   2. மான்முருகு, 2 பார்க்க;see {}.

     [மால் + மைத்துனன்.]

மான்மைந்தன்

 மான்மைந்தன் māṉmaindaṉ, பெ.(n.)

மன்மதன் (திருமாலின் மைந்தன்); (சூடா.);;{},

  as the son of {}.

மான்றலை

மான்றலை māṉṟalai, பெ.(n.)

   1. பெரு விரலுஞ் சிறுவிரலு மொழிந்த இடைவிரல் மூன்றுந் தம்மிலொத்து ஒன்றி முன்னே இறைஞ்சி நிற்கும் இணையாவினைக்கை வகை (சிலப்.3, 18, உரை, பக்.96);;   2. ஐந்தாம் விண்மீன்; the fifth naksatra.

     [மான் + தலை.]

மான்றல்

மான்றல் māṉṟal, பெ.(n.)

   மயக்கம்; bewilder – ment.

     “மான்றறீர் மதியினான்” (அரிசமய குலசே.129);.

     [மால் → மான் → மான்றல் (வே.க.4:38);.]

மான்றார்

மான்றார் māṉṟār, பெ.(n.)

   அறிவு மயங்கினவர்; those who are confused in mind.

     “மான்றார் வளியான் மயங்கினார்க்கு” (ஏலாதி, 55);.

     [மன் → மான் → மான்றார்.]

மான்றூதி

 மான்றூதி māṉṟūti, பெ.(n.)

   காஞ்சிரை; a tree nux – vomic.

மான்றோல்

மான்றோல் māṉṟōl, பெ.(n.)

   மான் தோலாகிய இருக்கை (பு.வெ.8, 14, உரை);; deer skin, used by ascetics, etc.

     [மான் + தோல்.]

மான்வேடன்

 மான்வேடன் māṉvēṭaṉ, பெ.(n.)

   மாரீசன்;     [மான் + வேடன்.]

மாபகம்

 மாபகம் māpagam, பெ.(n.)

   தண்ணீர்; water.

மாபட்டைவளை

மாபட்டைவளை māpaṭṭaivaḷai, பெ. (n.)

   அணி கலன்; jewels, ornament.

     “மஞ்சாடியு மிரண்டுமாபட்டைவளை ஆறினால்.”(தெ.சா. 72 எ.891);.

     [மா+பட்டை+வளை]

மாபதுமம்

மாபதுமம் māpadumam, பெ.(n.)

   எண் வகை நிரய (நரக);த் தொன்று (சி.போ.பா. பக்.203);; a hell one of eight naragam (q.v.);.

மாபத்தியன்

மாபத்தியன் māpattiyaṉ, பெ.(n.)

   1. காமன்;{}.

   2. மாமகன்1 (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மா + பத்தியன்.]

மாபனம்

மாபனம் māpaṉam, பெ. (n.)

   1. அளவு; measure.

   2. எடைக்கல்; balance unit.

மாபலன்

 மாபலன் māpalaṉ, பெ.(n.)

   காற்று (பிங்.);; a wind.

     [மா + பலன்.]

மாபலம்

மாபலம் māpalam, பெ.(n.)

   1. மிக்க வலு; immense strength.

   2. மாம்பழம்; mango ripe fruit.

     [மா + Skt. பலம். த. வலு.]

மாபலி

 மாபலி māpali, பெ.(n.)

மாவலிவாணன் பார்க்க;see {}.

மாபலிவாணன்

 மாபலிவாணன் māpalivāṇaṉ, பெ.(n.)

மாவலிவாணன் பார்க்க;see {}.

மாபாடியம்

மாபாடியம் māpāṭiyam, பெ. (n.)

   1. பேருரை; elaborate commentary.

     ‘சிவஞானபோத மாபாடியம்’

   2. பாணினி சூத்திரங்களுக்குப் பதஞ்சலியார் செய்த பேருரை. (நன். 373, விருத்.);;{}

 commentary on the {} of {}.

     [Skt. {} → த. மாபாடியம்.]

மாபாதகம்

மாபாதகம் māpātagam, பெ.(n.)

   பெருங்கரிசு; the five great sins.

     “மாபாதகத்தைத் தவிர்த்தா னன்றே” (கடம்ப.பு.இலீலா.344);.

     [மா + Skt. பாதகம்.]

மாபாரதம்

மாபாரதம் māpāradam, பெ.(n.)

   1. பெரும் பாரதம்; the great epic.

   2. கெளரவ பாண்டவர்க்குள் நிகழ்ந்த பெரும்போர்; the great war between the {} and the Kouravas.

     “தேவாசுர ராமாயண மாபாரத முளவென்று” (கலிங். 459);.

     [மா + பாரதம். மா = பெரிய.]

மாபாவி

மாபாவி māpāvi, பெ.(n.)

   தீயோன் (பெரும்பாவி); (திவ்.திருவாய்.5, 1, 7);; great sinner.

     [மா + பாவி.]

மாபிசை – தல்

மாபிசை – தல் māpisaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   பிசறுதல்; mixing.

     [மா + பிசை-,]

மாபுராணம்

மாபுராணம் māpurāṇam, பெ.(n.)

   இடைச் சங்கத்து வழங்கிய இலக்கண நூல் (இறை.1, பக்.5);; a grammer of the middle sangam.

மாபுறயாகம்

 மாபுறயாகம் māpuṟayākam, பெ.(n.)

   வெளிப்பூசை (யாழ்.அக.);; external worship.

     [மா + புறயாகம்.]

மாபுலி

 மாபுலி māpuli, பெ.(n.)

   அரிமா (யாழ்.அக.);; lion.

மாபூதி

 மாபூதி māpūti, பெ.(n.)

   நிரயங்களில் ஒன்று; a hell.

     [மா + பூதி.]

மாப்பட்டாடை

மாப்பட்டாடை māppaṭṭāṭai, பெ.(n.)

   வரி வகை; a tax (S.l.l.vii, 404);.

     [மா + பட்டாடை.]

மாப்பணம்

மாப்பணம்1 māppaṇam, பெ.(n.)

   பண்டைக்கால காசு வகைகளுள் ஒன்று; a kind of coin.

     “நெய்விலைக்கு எருதுக்கு ரண்டு மாப்பணமும் எண்வகைப் பலரையும்” (திருமலை. செப். 2/1646, பக்.89);.

 மாப்பணம்2 māppaṇam, பெ.(n.)

   1. நாணய வகை; a coin (S.I.I.v.224);.

   2. வரி வகை; a tax(S.I.I.VIII, 139);.

     [மா + பணம்.]

மாப்பண்டம்

 மாப்பண்டம் māppaṇṭam, பெ.(n.)

   மாவினால் செய்த பலகாரம்; cakes prepared with rice flour.

     [மா + பண்டம். மா = மாவு.]

மாப்பதக்கு

மாப்பதக்கு māppadakku, பெ.(n.)

   வரி வகை; a tax (S.I.I.vii.30);.

     [மா + பதக்கு.]

மாப்பலகை

 மாப்பலகை māppalagai, பெ.(n.)

   மாக்கல் (யாழ்.அக.);; pot-stone, pumice stone.

     [மா + பலகை. மா = மாவு. பலகை = பலகை வடிவானகல்.]

மாப்பிடி

 மாப்பிடி māppiḍi, பெ.(n.)

   மாவினாற் பிடிக்கப்பட்ட பண்ணியாரம் (யாழ்.அக.);; cake made of flour.

     [மா + பிடி. மா = மாவு.]

மாப்பிலாச்சை

மாப்பிலாச்சை māppilāccai, பெ.(n.)

   நீல நிறமுடையதும் நான்கடி வளரத் தக்கதுமான கடல் மீன் வகை; sea-fish, bluish attaining 4ft. in length.

     [மா + பிலாச்சை. மா = பெரிய.]

     [p]

மாப்பிள்ளை

மாப்பிள்ளை1 māppiḷḷai, பெ.(n.)

   1. மண மகன்; bridegroom.

     “உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவானம்மே” (குற்றாலக்.குற.63);.

   2. மகளின் கணவன்; daughter’s husband.

   3. அளியன் (நாமதீப.198);; brother-in-law.

   4. மாமன் மகன் (நாமதீப.198);; maternal uncle’s son.

   5. அத்தை மகன் (நாமதீப.198);; paternal aunt’s son.

   6. தங்கையின் கணவன்; younger sister’s husband.

     [மணாட்டுப்பிள்ளை → (மாட்டுப்பிள்ளை); → மாப்பிள்ளை. ஒ.நோ. மணாட்டுப்பெண் → மாட்டுப்பெண்.]

 மாப்பிள்ளை2 māppiḷḷai, பெ.(n.)

   1. கேரள நாட்டிலுள்ள கிறித்தவருக்கும், அரபியருக்கும் வழங்கும் பட்டப் பெயர்; honourary title given to colonists in the west coast, as syrian Christians or Arabs (G.s.D.I.190);.

   2. மலையாள முதலிய மேலைக்கடற்கரையில் வாழும் ஒருசார் மகமதிய வகுப்பார்; moppilah, a class of muhammadans on the west coast (G.s.D.I.26);.

 மாப்பிள்ளை3 māppiḷḷai, பெ.(n.)

   மந்திரங்களுக்காக மாவினாற் செய்து வைக்கும் பொம்மையுருவம் (இ.வ.);; a small figure of rice flour, used in magic rites.

     “மாப்பிள்ளை மஞ்சட்பிள்ளை”.

     [மா + பிள்ளை. மா = மாவு. பிள்ளை வடிவத்தை மாவில் வடித்துவைத்தல்.]

மாப்பிள்ளை அழைப்பு

 மாப்பிள்ளை அழைப்பு māppiḷḷaiaḻaippu, பெ.(n.)

   திருமணம் நடக்கும் இடத்துக்கு மாப்பிள்ளையை உரிய மதிப்புடன் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்வு; the ceremony of receiving and taking the bridegroom in a procesion to the wedding.

     [மாப்பிள்ளை + அழைப்பு.]

மாப்பிள்ளை ஆணி

 மாப்பிள்ளை ஆணி māppiḷḷaiāṇi, பெ.(n.)

மாப்பிள்ளையாணி பார்க்க;see {}.

மாப்பிள்ளை பத்தியம்

 மாப்பிள்ளை பத்தியம் mābbiḷḷaibattiyam, பெ. (n.)

   ஒரு வகையான நாட்டுப் பாடல்; a variety of a folk song.

     [மாப்பிள்ளை+பத்தியம்]

மாப்பிள்ளைக்கடா

 மாப்பிள்ளைக்கடா māppiḷḷaikkaṭā, பெ.(n.)

   பொலியெருது (கொ.வ.);; covering bull.

     [மாப்பிள்ளை + கடா.]

     [p]

மாப்பிள்ளைச்சம்பா

 மாப்பிள்ளைச்சம்பா māppiḷḷaiccambā, பெ.(n.)

   உயர்ந்த சம்பா நெல் வகை (இ.வ.);; a superior kind of paddy.

     [மாம்பிள்ளை + சம்பா.]

மாப்பிள்ளைமுறுக்கு

 மாப்பிள்ளைமுறுக்கு māppiḷḷaimuṟukku, பெ.(n.)

   மணமகனிடத்துக் காணப்படுவது போன்ற போலி மிடுக்கான நடத்தை (இ.வ.);; stiffness of manners, as of a bridegroom.

     [மாப்பிள்ளை + முறுக்கு.]

மாப்பிள்ளையாணி

மாப்பிள்ளையாணி māppiḷḷaiyāṇi, பெ.(n.)

   1. மாட்டு வண்டியின் நடுப்பகுதியில் இருந்து மாடுகள் பூட்டுவதற்குரிய இடத்தில் வைக்கும்ஆணி; nail in bullock cart.

   2. கலப்பைக் குற்றியோடு மேழியைச் சேர்க்கும் ஆணி; a nail joining the plough share to the plough.

     [மாப்பிள்ளை + ஆணி.]

மாப்பிள்ளைவீரன்

 மாப்பிள்ளைவீரன் māppiḷḷaivīraṉ, பெ.(n.)

   ஒரு சிற்றூர் தேவதை (இ.வ.);; a village demon.

     [மாப்பிள்ளை + வீரன்.]

மாப்பு

மாப்பு māppu, பெ.(n.)

   1. மிகுதி; abundance.

   2. மீன்றிரள்; shoal of fish.

   3. மன்னிப்பு; excuse.

இந்தத் தடவை மட்டும் உனக்கு மாப்பு விடுகிறேன் (பே.வ.);.

     [மா → மாப்பு.]

 மாப்பு māppu, பெ. (n.)

   மன்னிப்பு; forgiving, excuse.

இந்த ஒரு பிழைக்கு மாப்பு செய்ய வேண்டும். (இ.வ.);.

     [மன்னிப்பு – மாப்பு (கொ.வ);]

மாப்புக்காரள்

 மாப்புக்காரள் māppukkāraḷ, பெ.(n.)

 a kind of fish.

மாப்புநெத்திலி

 மாப்புநெத்திலி māppunettili, பெ.(n.)

   கடற்பரப்பில் கூட்டமாய் மேயும் நெத்திலி மீன்; a group of nettili fish go surface of the sea.

     [மாப்பு + நெத்திலி.]

மாப்புமீன்

 மாப்புமீன் māppumīṉ, பெ.(n.)

   கூட்டமாய்க் கடற்பரப்பின் மேல் மேயும் மீன்கள் (செங்கை. மீனவ.);; a group of fish roming their foods on the surface of the sea.

     [மாப்பு + மீன். மாப்பு = திரள்.]

மாப்புவலை

 மாப்புவலை māppuvalai, பெ.(n.)

   மீன் திரளைப் பிடிக்கும் வலை (இ.வ.);; net for catching fish in shoals.

     [மாப்பு + வலை.]

மாப்புவிடு – தல்

மாப்புவிடு – தல் māppuviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   மன்னித்தல் (முகவை. மீன.);; to excuse, pardon.

     [மாப்பு + விடு – தல்.]

மாப்பூச்சி

 மாப்பூச்சி māppūcci, பெ.(n.)

   பேன் வகை (அபி.சிந்.);; a kind of louse.

     [மா + பூச்சி.]

மாப்பெடுக்காதமீன்

 மாப்பெடுக்காதமீன் māppeḍukkātamīṉ, பெ.(n.)

   தனியொன்றாய் மேயும் மீன் (செங்கை.மீன.);; a single fish catching the foods in lonely.

மாப்பெருத்தல்

 மாப்பெருத்தல் māpperuttal, பெ.(n.)

   மீன் கூட்டம் சேர்த்தல் அல்லது சேர்தல் (செங்கை. மீன.);; a unity of fishes.

மாமகன்

மாமகன்2 māmagaṉ, பெ.(n.)

   1. அம்மான்; maternal uncle.

   2. இவறன் மரலையன், ஈயாமாரி, பேராசையுடையவன்; miser.

     [மா + மகன்.]

மாமகம்

மாமகம்1 māmagam, பெ.(n.)

   காசாய வகை; an ancient tax in cash (S.I.l.l.82);.

     [மா + மகம்.]

 மாமகம்2 māmagam, பெ.(n.)

   மகாமகம்; a great luni-solar festival.

     “கங்கை மாமகந் தோறும் வந்து” (திருவிளை.அருச்சனை.25);.

     [மா + மகம்.]

மாமடி

மாமடி māmaḍi, பெ.(n.)

   1. மாமன், 1 பார்க்க; see {}.

     “மாமடி ஸ்ரீவல்லப தேவர்” (T.A.S.i, 257);.

   2. மாமனார் பார்க்க;see {}.

     “மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி” (தேவா.324, 7);.

மாமடிகள்

மாமடிகள் māmaḍigaḷ, பெ.(n.)

மாமடி பார்க்க; see

     “மற்றை மாமடிகளிடு சாபமும்” (குமர.பிர.மீனாட்.பிள்.67);.

மாமணி

 மாமணி māmaṇi, பெ.(n.)

   மாணிக்கம் (சூடா.);; ruby.

     [மா + மணி.]

மாமதக்காணம்

 மாமதக்காணம் māmadakkāṇam, பெ.(n.)

   பேய்க்கொள்; wild horsegram.

மாமனார்

மாமனார் māmaṉār, பெ.(n.)

   கணவன் அல்லது மனைவியின் தந்தை (பிரபோத:11, 93);; father-in-law, wife’s or husband’s father.

     [மாமன் → மாமனார்.]

மாமன்

மாமன் māmaṉ, பெ.(n.)

   1. தாயின் உடன் பிறந்தோன்; mother’s brother, maternal uncle.

     “மாமனு மருகனும் போலு மன்பின” (சீவக.432.);.

   2. மாமனார் பார்க்க;see {}.

     “மாமனே லிமவான்” (திருவிசை கருவூ.பதி.8, 5);.

   3. அத்தையின் கணவன் (வின்.);; father’s sister’s husband.

   4. பெண்கள் தங்கள் கணவரை அழைக்கும் பெயர்; a term used by women in addressing their husbands (C.G.);.

   தெ. மாம;ம. மாமன்.

     [அம்மான் → மாமன்.]

மாமன்கிடா

 மாமன்கிடா māmaṉkiṭā, பெ.(n.)

   மண மக்களுக்கு தாய்மாமன் சீர்வரிசையில் ஒன்றாக கொடுக்கப்படும் ஆட்டுக்கிடா; ram gift given by maternal uncle to his sister’s son or daughter marriage occasion.

     [மாமன் + கிடா.]

மாமன்நீர்

 மாமன்நீர் māmaṉnīr, பெ. (n.)

பருவமடைந்த பெண்ணுக்குப் பத்து நாள் தாய்மாமன் தலைக்குத் தண்ணீர் ஊற்றும் சடங்கு

 aritual done by maternal uncle.

     [மாமன்+நீர்]

மாமன்னன்

 மாமன்னன் māmaṉṉaṉ, பெ.(n.)

   பேரரசன்;еmpегог.

     [மா + மன்னன். மா = பெரிய.]

மாமம்

 மாமம் māmam, பெ.(n.)

   மஞ்சள்; turmeric.

மாமரத்தின்புல்லுருவி

 மாமரத்தின்புல்லுருவி māmarattiṉpulluruvi, பெ.(n.)

   மாமரத்தை அழிக்கும் ஒருவகை பூச்சிகள்; parasitic plant growing on mango tree.

     [மாமரம் + அத்து + இன் + புல்லுருவி.]

மாமரம்

மாமரம்1 māmaram, பெ.(n.)

   மரவகை (பிங்.);; mango tree.

     “வளிவாங்கு சினைய மாமரம் வேர்கீண் டுயர்ந்துழி யுள்ளன பயம்பிடைப் பரப்பி” (பரிபா.7:14-5);.

மாமருத்துநூலோர்

 மாமருத்துநூலோர் māmaruttunūlōr, பெ.(n.)

   மருத்துவர்; physicians.

     [மா + மருத்து +நூலோர். மா = பெரிய. மருந்து → மருத்து. நூலோர் = நூலின் பொருளுணர்ந்தோர். நூலறிவுடையோர், அறிஞர்.]

மாமரையோன்

 மாமரையோன் māmaraiyōṉ, பெ.(n.)

   இதளியம் (இரசம்);; mercury.

மாமறையோன்

 மாமறையோன் māmaṟaiyōṉ, பெ.(n.)

   ஈசுவரமூலி என்னும் பெருமருந்து; a twining plant – indian birthwort.

மாமலகம்

 மாமலகம் māmalagam, பெ.(n.)

   நெல்லிக் காய்; fruit indian gooseberry.

மாமலத்து

 மாமலத்து māmalattu, பெ.(n.)

மாமிலத்து (வின்.); பார்க்க;see {}.

மாமலர்

மாமலர் māmalar, பெ.(n.)

சரக்கொன்றை பார்க்க;see {}.

     “மாமலர்த் தெரியலான்” (சீவக.220038);.

     [மா + மலர்.]

மாமலற்கண்ணி

 மாமலற்கண்ணி māmalaṟkaṇṇi, பெ.(n.)

   சங்கிலை; leaves of the plant.

மாமலி

 மாமலி māmali, பெ.(n.)

   அத்தி; fig- Ficus – racemosa.

மாமலைபுரம்

 மாமலைபுரம் māmalaiburam, பெ. (n.)

   மாமல்லபுரத்தின் பழைய பெயர்களுள் ஒன்று; one of the old names of mamallapuram (சுவடிப்பதிப்பு நூல்);.

     [மா + மலை + புரம்.]

மாமல்லன்

 மாமல்லன் māmallaṉ, பெ.(n.)

   மகேந்திர வர்மப் பல்லவனின் மகன் நரசிம்மவர்மனின் பட்டப்பெயர்களுள் ஒன்று; one of the titles of Narasimhavarman, son of Mahendravarma Pallavan.

     [மா + மல்லன். மா = பெரிய.]

மாமல்லபுரம்

மாமல்லபுரம் māmallaburam, பெ.(n.)

   கிழக்குக் கடலோரச் சாலையில் சென்னைக்குத் தெற்கே 60 அயிரமாத்திரி (கிலோமீட்டர்); தொலைவில் அமைந்துள்ள சிற்பக் கலை நகரம்; a town with stone sculptures, 60 kilometer south of Chennai on the East Coast Road.

மறுவ. மகாபலிபுரம். மல்லை, கடல்மல்லை, மாமலைபுரம்.

     [மா + மல்லன் + புரம் = மாமல்லபுரம்.]

இவ்வூர் “உலகப் பண்பாட்டுச் சின்னம்” உள்ள ஊராக அறிவிக்கப்பட்டுள்ளது. நரசிம்மவர்மப் பல்லவனின் பட்டப் பெயரால் அமைந்துள்ளது. பல குடைவரைக் கோயில்களும், கட்டுக் கற்றளிகளும் சிறப்பாக வுள்ளன._அர்ச்சுனன் தவம் என்னும் பாறை செதுக்குச் சிற்பம் பெரும்புகழ் பெற்றுள்ளது. அண்மையில் கழகக் காலத் துறைமுகம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளது. மாமலைபுரம் என்றும் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற ஊர்.

மாமல்லை

மாமல்லை māmallai, பெ.(n.)

மாமல்லபுரம் பார்க்க; see {}.

     “மாமல்லை கோவில்” (திவ்.இயற்.2, 70);.

     [மாமல்லபுரம் → மாமல்லை (மரூஉ);.]

மாமாங்கக்குளம்

மாமாங்கக்குளம் māmāṅgakkuḷam, பெ.(n.)

   கும்பகோணத்தில் 12 ஆண்டுகட்கு ஒரு முறை புண்ணிய நதிகளின் நீர் ஊறுவதாகக் கருதப்படும் ஒரு கோயில் குளம்; a temple tank at {}where the waters from sacred rivers are supposed to spring in.

     [மாமாங்கம் + குளம்.]

மாமாங்கக்குழி

மாமாங்கக்குழி māmāṅgakkuḻi, பெ.(n.)

   திருமுருகன்பூண்டியில் பிள்ளையார் கோயிலுக்கு எதிரில் 12 ஆண்டுகட்கு ஒருமுறை நீர் சுரக்கும் குழி; a small spring in the sheet rock in front of pillaiyar koil at {} where holy water is supposed to spring in (சி.பா.அக.);.

     [மாமாங்கம் + குழி.]

மாமாங்கம்

மாமாங்கம்1 māmāṅgam, பெ.(n.)

   1. பன்னிரண்டு ஆண்டுகள் கொண்ட காலம்; a period of twelve years.

   2. நீண்ட காலம்; long period.

     [மா + மாங்கம்.]

 மாமாங்கம்2 māmāṅgam, பெ.(n.)

மகாமகர் பார்க்க;see {}.

 மாமாங்கம்3 māmāṅgam, பெ.(n.)

   சேலம் புறநகரில் அமைந்துள்ள ஊர்; a sub urban village of salem city.

மாமாசி

 மாமாசி māmāci, பெ.(n.)

   சடாமாஞ்சில்; root of a medicinal grass.

மாமாத்தியன்

மாமாத்தியன் māmāttiyaṉ, பெ.(n.)

மாமாத்திரன் (நாமதீப.177); பார்க்க;see {}.

மாமாத்து

மாமாத்து1 māmāttu, பெ.(n.)

   மருத்துவன் (பிங்.);; physician.

     “மலர்புகழ் மாமாத்திரர்தங் குலம் பெருக” (பெரியபு. சிறுதொண்ட.2);.

 மாமாத்து1 māmāttu, பெ.(n.)

   மிகப்பெரியது; that which is very great.

     “மறையோர் தமையும் பசவினையும் மாமாத்தென வெண்” (சிவதரு. பாவ.50);

 மாமாத்து2 māmāttu, பெ.(n.)

   1. பெருஞ் செருக்கு; great arrogance

     “மாமாத்தாகிய மாலயன்” (தேவா.1019, 1);.

   2. மாய்மாலம் (இ.வ.);; pretension, sham.

மாமான்

மாமான் māmāṉ, பெ.(n.)

   1. மாமன், 1 பார்க்க;see {}.

     “மாமான் மகளே.” (திவ்.திருப்பா.9);.

   2. மாமனார் பார்க்க;see {}.

     “மாமான் சூட்டொடு கண்ணி” (சீவக.484);.

     [மாமன் → மாமான்.]

மாமாயி

மாமாயி māmāyi, பெ.(n.)

   1. மலைமகள்; Malaimagal.

   2. பெரியம்மைக்குரிய தேவதை; the Goddess of small-pox.

     [மா + மாயி. மா = பெரிய. மகமாயி → மாமாயி.]

மாமாயை

மாமாயை māmāyai, பெ.(n.)

   1. மலைமகள் (கூர்மபு.திருக்கல்.20);; Malaimagal.

   2. சுத்த மாயை (சி.போ.பா.2, 2, பக்.133, புதுப்.);; pure {}.

     [மா + மாயை.]

மாமாலம்

மாமாலம் māmālam, பெ.(n.)

   1. பெரு வஞ்சனை; great deceitfulness.

   2. போலி பகட்டு (கொ.வ.);; pretension.

     [மா + மாயம்.]

மாமாலை

மாமாலை māmālai, பெ.(n.)

   செடி வகை (பதார்த்த.251);; a plant.

மாமி

மாமி māmi, பெ.(n.)

   1. அம்மான் மனைவி; maternal uncle’s wife.

     “அன்புடைய மாமனு மாமியு நீ” (தேவா.1228, 1);.

   2. மனைவி யினுடைய அல்லது கணவனுடைய தாய்; mother-in-law, wife’s or husband’s mother.

     “சிறக்கு மாமியர் மூவர்க்கும்” (கம்பரா.சூளா.33);.

   3. அத்தை (வின்.);; father’s sister.

     [மாமன் (ஆ.பா.); → மாமி (பெ.பா.);.]

மாமிசபட்சணம்

 மாமிசபட்சணம் māmisabaṭsaṇam, பெ. (n.)

   ஊனுணவு; flesh eating.

     [Skt. {} → த. மாமிசபட்சணம்.]

மாமிசபட்சணி

மாமிசபட்சணி māmisabaṭsaṇi, பெ. (n.)

   1. ஊனுண்போன் (வின்.);; flesh eater.

   2. புலாலுண்ணும் விலங்கு (இக்.வ.);; flesh eating animal, dist.fr. {}.

     [Skt. {} → த. மாமிசபட்சணி.]

மாமிசம்

மாமிசம் māmisam, பெ. (n.)

   1. தசை; flesh muscle.

   2. இறைச்சி; meat.

     [Skt. {} → த. மாமிசம்.]

மாமிசி

 மாமிசி māmisi, பெ.(n.)

   சடாமாஞ்சி பூண்டு (தைலவ.தைல);; spikenard herb.

மாமியார்

மாமியார் māmiyār, பெ.(n.)

மாமி, 2 பார்க்க;see {}.

மாமியார் வீடு

 மாமியார் வீடு māmiyārvīṭu, பெ. (n.)

   சிறைச்சாலை; jail.

     [மாமி+ஆர்+விடு]

மாமியார்வீடு

மாமியார்வீடு māmiyārvīṭu, பெ.(n.)

   1. மனைவியின் அல்லது கணவனின் தாய்வீடு; mother-in-law’s house.

   2. சிறை; prison, jail (பே.வ.);.

     [மாமியார் + வீடு.]

மாமிலத்து

 மாமிலத்து māmilattu, பெ.(n.)

   அரசிறைக் குரியது (வின்.);; that which pertains to revenue.

மாமுகத்தன்

 மாமுகத்தன் māmugattaṉ, பெ.(n.)

மாமுகவன் (உரி.நி.);பார்க்க;see {}.

மாமுகன்கை

 மாமுகன்கை māmugaṉgai, பெ.(n.)

   ஐந்து; five.

     [மா + முகன் + கை.]

மாமுகவன்

மாமுகவன் māmugavaṉ, பெ.(n.)

   யானை முகத்தவன்;பிள்ளையார்;{},

 God with Elephant face.

     “மாமுகவ ரர்ச்சிக்க” (பூவண.உலா.21);.

மாமுகி

 மாமுகி māmugi, பெ.(n.)

   நாயுருவி; a plant indian burr.

மாமுகிலை

 மாமுகிலை māmugilai, பெ.(n.)

   துளசி; a sacred plant, holy basil.

மாமுடி

 மாமுடி māmuḍi, பெ.(n.)

   நெட்டி (மலை.);; sola pith.

மாமுண்டி

 மாமுண்டி māmuṇṭi, பெ. (n.)

   திருச்செங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruchengodu Taluk.

     [மா+முண்டி]

மாமுனி

மாமுனி1 māmuṉi, பெ.(n.)

   1. பெருந்துறவி; great ascetic.

     “இராமநுசானென்னும் மாமுனியே” (திவ்.இராமாநுச.16);.

   2. அருகன் (பிங்.);;{}.

   3. வசிட்டன் (யாழ்.அக.);;{}

     [மா + முனி. மா = பெரிய]

 மாமுனி2 māmuṉi, பெ.(n.)

   நாயுருவி (மலை.);; a plant growing in hedges and thickets.

மாமூலனார்

 மாமூலனார் māmūlaṉār, பெ.(n.)

மாமூலர் பார்க்க;see {}.

மாமூலர்

மாமூலர் māmūlar, பெ.(n.)

   அகநானூற்றில் 27 பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் நற்றிணையில் இரண்டு பாடலும் பாடிய கழகக்காலப் பெரும்புலவர்; a great poet of sargam period whose verses 27 of {} one of {} and two of {} were available.

மாமூலி

 மாமூலி māmūli, பெ.(n.)

   வெண் காக்கட்டான்; a twiner learning white flowers.

மாமூல்

 மாமூல் māmūl, பெ. (n.)

   பழைய வழக்கம்; that which is established, customary or usual, established usage, immemorial custom.

     [Skt. {} → த. மாமூல்.]

மாமூல்கடமை

 மாமூல்கடமை māmūlkaḍamai, பெ. (n.)

   குலவழக்கப்படி ஏற்பட்ட வரித்திட்டம் (உ.வ.);; revenue rate fixed by longstanding custom.

     [Skt. {} → த. மாமூல்+கடமை.]

மாமேதம்

மாமேதம் māmētam, பெ.(n.)

   குதிரை வேள்வி; horse-sacrifice.

     “மாமேதமுன் மகமுள்ளன” (சேதுபு.அனும.8);.

மாமேரு

மாமேரு māmēru, பெ.(n.)

   மேருமலை; Mt.{}

     “மாமேரு விடையை நூறி” (தக்கயாகப்.108);.

     [மா + மேரு. மா = பெரிய.]

மாமை

மாமை māmai, பெ.(n.)

   1. அழகு; beauty.

     “மணி மிடை பொன்னின் மாமை சாய” (நற்.304);. “மாந்தளிர்போன் மின்னிய மாமை விளர்ப்பதென்” (தஞ்சைவா.22);.

   2. கருமை; black colour.

     “மாமைக் களங்கனி யன்ன” (மலைபடு.35);.

   3. வண்ணம்; colour.

     “நெடுந்தகை தற்கண்டு மாமைத் தகையிழந்த” (பு.வெ.12, 2);.

   4. மேனி; form.

     “மாமை பொன்னிறம் பசப்ப” (பு.வெ.11, பெண்பாற்.6);.

   5. துன்பம் (அரு.நி.);; grief. distress.

மாமோகம்

மாமோகம் māmōkam, பெ.(n.)

   ஐம்புல நுகர்ச்சியிற் பற்று (சி.போ.பா.2, 2, பக்.169);; attachment to the objects of the senses.

மாம்

 மாம் mām, பெ.(n.)

   மாமரம்; mango tree.

     [மாமரம் → மாம்.]

மாம்படை

 மாம்படை māmbaḍai, பெ.(n.)

   வாழை; plantain tree.

மாம்பம்

 மாம்பம் māmbam, பெ.(n.)

   நெல்லிப் பருப்பு; the kernel of the fruit of indian goose berry (சா.அக.);.

மாம்பருப்பு

 மாம்பருப்பு māmbaruppu, பெ.(n.)

   மாங் கொட்டையினுள்ளிருக்கும் பருப்பு; the seed or kernel inside the mango nut.

     [மா + பருப்பு.]

மாம்பழக்கட்டு

 மாம்பழக்கட்டு māmbaḻkkaṭṭu, பெ.(n.)

   புடவை உடுக்கும் வகையிலொன்று; a.mode of wearing saree.

     [p]

மாம்பழக்கெளிறு

மாம்பழக்கெளிறு māmbaḻkkeḷiṟu, பெ.(n.)

   மீன் வகை; a kind of fish.

     “சாலு மாம்பழக் கெளிறு” (பறாளை. பள்ளு.16);.

     [மாம்பழம் + கெளிறு.]

மாம்பழக்கொடுக்கு

 மாம்பழக்கொடுக்கு māmbaḻkkoḍukku, பெ.(n.)

மாம்பழக்கட்டு பார்க்க;see {}.

     [மாம்பழம் + கொடுக்கு.]

மாம்பழக்கொன்றை

 மாம்பழக்கொன்றை māmbaḻkkoṉṟai, பெ.(n.)

   மஞ்சட்கொன்றை; siamese tree.

     [மாம்பழம் + கொன்றை.]

மாம்பழச்சிட்டு

 மாம்பழச்சிட்டு māmbaḻcciṭṭu, பெ.(n.)

   ஒருவகை சிறு பறவை (வின்.);; a kind of little bird.

     [மாம்பழம் + சிட்டு.]

     [p]

மாம்பழம்

மாம்பழம்1 māmbaḻm, பெ.(n.)

   மாங்கனி; mango fruit.

 மாம்பழம்2 māmbaḻm, பெ.(n.)

   புடவை யுடுத்தும் போது செருகும் முடிப்பு (இ.வ.);; a kind of knot made when wearing a saree.

மாம்பழவண்டு

 மாம்பழவண்டு māmbaḻvaṇṭu, பெ.(n.)

   சிலவகை மாம்பழங்களுள் வாழும் வண்டு வகை (அபி.சிந்.);; an insect inside some species of mango fruits.

     [மாம்பழம் + வண்டு.]

மாம்பழவுண்ணி

மாம்பழவுண்ணி māmbaḻvuṇṇi, பெ.(n.)

   பெரிய உண்ணி வகை; a species of big cattle-tick.

     “மாம்பழத்தின் கந்தமும் அறியாதவற்றை மாம்பழவுண்ணி யென்று சொல்லுமா போல” (ஈடு.9, 9, 6);.

     [மாம்பழம் + உண்ணி.]

மாம்பாலிருள்

 மாம்பாலிருள் māmbāliruḷ, பெ.(n.)

   இரும்பகம் எனும் மரவகை; a kind of tree.

மாம்பால்

மாம்பால்1 māmbāl, பெ.(n.)

   மாங்காய்க் காம்பிலிருந்து கசியும் பால்; milky exudence in the stalk of unripe mangoes.

     [மா + பால். மா = மங்காய்.]

 மாம்பால்2 māmbāl, பெ.(n.)

   சருக்கரை, அரிசிமா, மாம்பழம் முதலியவற்றாற் செய்த கூழ்; a jelly of mangoes with sugar, rice – flour, etc. {}.

     [மா + பால். மா = மாவு.]

மாம்பிசின்

 மாம்பிசின் māmbisiṉ, பெ.(n.)

   மாமரத்துப் பால்; gum of mango – tree.

     [மா + பிசின். மா = மாமரம்.]

மாம்பிஞ்சு

மாம்பிஞ்சு māmbiñju, பெ. (n.)

   1. மாவடு; tender mango.

   2. மாவடு போன்ற வடிவிற் செய்த கழுத்தணி யுரு; a pendant in a necklace, shaped like tender mango fruit.

     [மா + பிஞ்சு. மா = மாமரம்.]

மாம்பிரம்

 மாம்பிரம் māmbiram, பெ.(n.)

   சிறுதேக்கு (சங்.அக.);; beetle-killer.

மாம்புளி

 மாம்புளி māmbuḷi, பெ.(n.)

   புளிமா; indian hog plum.

மாம்புளிச்சி

 மாம்புளிச்சி māmbuḷicci, பெ.(n.)

மாம்புளி பார்க்க; see {}.

     [மா + புளிச்சி.]

மாம்பூ

 மாம்பூ māmbū, பெ.(n.)

   மாமரத்தின் பூ; flower of the mango tree.

     [மா + பூ.]

மாம்பூச்சி

 மாம்பூச்சி māmbūcci, பெ.(n.)

   சருக்கரை முதலியவற்றில் விழும் வெண்ணிறமுள்ள சிறுபூச்சி வகை (இ.வ.);; a small white insect infesting sugar etc.

     [மா + பூச்சி.]

மாம்போழ்

மாம்போழ் māmbōḻ, பெ.(n.)

   மாவடுவின் பிளவு; section of a tender mango, cut lengthwise.

     “மாம்போழு மெழுதிற்று” (திருக்கோ.79);.

     [மா + போழ்.]

மாயகம்

 மாயகம் māyagam, பெ.(n.)

   விளாமரம் (சங். அக.);; wood apple tree.

மாயக்கன்னி

 மாயக்கன்னி māyakkaṉṉi, பெ.(n.)

   குப்பைமேனி; a plant acalypha indica a vermifuge and expectorant.

மாயக்கலை

 மாயக்கலை māyakkalai, பெ.(n.)

   சந்திரக் கலை; the vital air passing through the left nostril.

மாயக்கள்ளி

 மாயக்கள்ளி māyakkaḷḷi, பெ.(n.)

   மயக்கி ஏமாற்றுபவள் (வின்.);; artful women.

     [மாயம் + கள்ளி.]

மாயக்காய்

மாயக்காய்1 māyakkāy, பெ.(n.)

   ஒக் மரத்தின் கொட்டை; oak nut.

 மாயக்காய்2 māyakkāy, பெ.(n.)

மாசிக் காய் (இ.வ.); பார்க்க;see {}.

மாயக்காரன்

மாயக்காரன் māyakkāraṉ, பெ.(n.)

   1. வஞ்சகம்; hypocrite.

   2 செப்பிடு வித்தைக்காரன்; conjurer, juggler.

     [மாயம் + காரன்.]

மாயக்காரி

மாயக்காரி māyakkāri, பெ.(n.)

   1. மாயக் கள்ளி பார்க்க;see {}.

   2. மாயக்காரன் பார்க்க;see {}.

     [மாயக்காரன் (ஆ.பா.); → மாயக்காரி(பெ.பா.);]

மாயக்குரம்பை

மாயக்குரம்பை māyakkurambai, பெ.(n.)

   உடல் (நிலையற்றது);; body, as unstable.

     “மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு” (தேவா.29, 3);.

     [மாயம் + குரம்பை.]

மாயக்கூத்தன்

மாயக்கூத்தன் māyakāttaṉ, பெ.(n.)

   திருமால்;{}, as one whose actions are wonderful.

     “வண்குட பானின்ற மாயக் கூத்தன்” (திவ்.திருவாய்.8, 2, 4);.

     [மாயம் + கூத்தன்.]

மாயசிகிச்சை

 மாயசிகிச்சை māyasigissai, பெ.(n.)

   காந்தப்பண்டுவம் (மாந்திர சிகிச்சை);; magnetic healing.

     [மாயம் + Skt. சிகிச்சை.]

மாயச்செயல்

மாயச்செயல் māyacceyal, பெ.(n.)

   1. மாயையின் தோற்றமாகிய உலகம்; the effects of {}, its various changes and manifestations in nature.

   2. மாயையின் விளைவுகள்; the body, accessory instruments, world and enjoyments, considered as the products of {}.

மாயத்தி

மாயத்தி1 māyatti, பெ.(n.)

   முத்திருக்கஞ் செவி; a plant asaram europacun.

 மாயத்தி2 māyatti, பெ.(n.)

மாயக்கள்ளி (இ.வ.); பார்க்க;see {}.

மாயன்

மாயன் māyaṉ, பெ.(n.)

   1. கரியன்; dark complexioned person.

     “வண்ணமு மாய வைனிவன் சேயன்” (தொல்.பொ.307, உரை);.

   2. திருமால்;{}.

     “மாயனாய்….. மலரவனாகி” (தேவா.1050, 6);.

   3. வஞ்சகன் (பிங்.);; deceitful person.

     [மாயம் → மாயன் (வே.க.4:62);.]

மாயன்மாலை

 மாயன்மாலை māyaṉmālai, பெ.(n.)

   துளசி; holy basil plant.

     [மாயன் + மாலை. மாயன் = திருமால்.]

மாயன்வித்து

 மாயன்வித்து māyaṉvittu, பெ.(n.)

   வெள்ளரி விதை; seeds of cucumber fruit.

     [மாயன் + வித்து.]

மாயன்விந்து

 மாயன்விந்து māyaṉvindu, பெ.(n.)

   முகப் பூச்சு; yellow orpiment.

     [மாயன் + விந்து.]

மாயப்புணர்ச்சி

மாயப்புணர்ச்சி māyappuṇarcci, பெ.(n.)

   தலைவன் தலைவியரது களவுக் கூட்டம் (தொல்.பொருள்.92, உரை);;     [மாயம் + புணர்ச்சி.]

மாயப்பெண்

மாயப்பெண் māyappeṇ, பெ.(n.)

   1. மாறு வேடம் பூண்ட பெண்; disguised woman.

   2. பெண் வேடமிட்ட ஆண்; man in the garb of a woman.

     [மாயம் + பெண்.]

மாயப்பொடி

மாயப்பொடி māyappoḍi, பெ.(n.)

   மாயத் தன்மை செய்யும் பொடி (உபதேசகா. சிவபுண். 288);; powder with magic properties.

     [மாயம் + பொடி.]

மாயப்போர்

மாயப்போர் māyappōr, பெ.(n.)

   1. வியப்பான (அற்புதமான); போர்; wonderful, miraculous warfare.

     “மாயப் போர் வல்லானை” (தேவா.698, 3);.

   2. ஏய்ப்பு (வஞ்சக);ப் போர்; treacherous warfare.

     “மாயப்போர் மன்னன் மதில்” (பு.வெ.6:11);.

     [மாயம் + போர்.]

மாயமந்திரம்

மாயமந்திரம் māyamandiram, பெ.(n.)

   1. மாயம் பண்ணும் மந்திரம்; mantram having magic powers.

     “உன்முகம் மாய மந்திரந்தான் கொலோ” (திவ்.நாய்ச்.2, 4);.

   2. மந்திரம் பார்க்க;see mandiram.

     [மாயம் + மந்திரம்.]

மாயமயக்கி

 மாயமயக்கி māyamayakki, பெ. (n.)

   மயக்கஞ் செய்பவர்; artful, bewitching woman.

     “மாயமயக்கி மருமகளே” (நாஞ்.);.

     [மாயம் + மயக்கி.]

மாயமாமூலி

 மாயமாமூலி māyamāmūli, பெ.(n.)

   உடம்பிலிருக்கும் பித்து, அங்கப் பிச்சு; the bile in human body.

     [மாயம் + மாமூலி.]

மாயமாலம்

மாயமாலம் māyamālam, பெ.(n.)

   1. மாய் மாலம் பார்க்க;see {}.

   2. வஞ்சனை யுள்ள பேய் (வின்.);; deceitful devil.

     [மாயம் + மாலம்.]

மாயம்

மாயம் māyam, பெ.(n.)

   1. மாயை; illusion false appearance.

     “வருந்திட மாயஞ் செய்து நிகும்பலை மருங்கு புக்கான்” (கம்பரா. மாயா சீதை.96);.

   2. வஞ்சனை (திவா.);; deception.

     “மாய மகளிர் முயக்கு” (குறள்.918);.

   3. போலி நடிப்பு; hypocrisy.

   4. பொய்; falseness, treachery.

     “வந்த கிழவனை மாயஞ் செப்பி” (தொல்.பொ.114);.

   5. அறிவியலுக்குப் புறம்பானது; spritual ignorance.

     “மாய நீங்கிய சிந்தனை” (கம்பரா.சித்திர.51);,

   6. கனவு; dream.

     “மாயக் கொல்லோ வல்வினை கொல்லோ” (சிலப்.16, 61);.

   7. நிலையின்மை; uncertainty, instability.

     “என் மாயவாக்கை யிதனுட் புக்கு” (திவ்.திருவாய்.10, 7, 3);.

   8. வியப்பு: wonder, astonishment.

     “மாயவன் செற்றள்ளற் பொய்ந்நிலத்தே” (திருவிருத். 100, உரை);.

   9. அழகு (சூடா.);; beauty.

   10. தீமை; wickedness. 1

   1. காமம் கலந்தத் தன்மை; lasciviousness.

     “கண்டேனின் மாயங் களவாதல்” (கலித்.90);. 1

   2. கருப்பு (சூடா.);; blackness.

     [முல் (பொருந்தற்கருத்துவேர்); → முள் → மள் → மள்கு → மள்குதல் = ஒளி குறைதல், குறைதல். மள்கு → மழுகு → மழுகுதல் = ஒளி குறைதல். மழு → மழுங்கு. மழுங்குதல் = ஒளி குறைதல், பொலிவழிதல், கவனிப்பின்றி மறைந்து போதல், கெடுதல். மழுங்கு → மங்கு. மங்குதல் = ஒளி குறைதல், நிறங்குன்றுதல், பெருமை குறைதல், குறைதல், கெடுதல், சாதல். மள்கு → மட்கு. மட்குதல் = மயங்குதல், ஒளி மங்குதல், அழுக்கடைதல், வலி குன்றுதல், கருத்துப் போதல். மள்கு → மாள்கு → மாழ்கு. மாழ்குதல் = கலத்தல், மயங்குதல், சோம்புதல், மங்குதல், கெடுதல். மாள் → மாய். ஒ.நோ. நோள் → நோய். நோளையுடம்பு = நோயுண்டவுடம்பு. மாய் → மாயம் (வே.க.4:61);.]

 மாயம்2 māyam, பெ.(n.)

   1. உயரம்; height.

   2. நீளம்; length.

   3. தொகை; sum.

     [மாய் → மாயம்.]

 மாயம்3 māyam, பெ.(n.)

   பித்தளை; brass.

     “மாயமேகலா பாரம் வாரியே” (தக்கயாகப். 502);.

மாயயாக்கை

 மாயயாக்கை māyayākkai, பெ.(n.)

   மாய உடம்பு; magic body.

     [மாயம் + யாக்கை.]

மாயரூபம்

 மாயரூபம் māyarūpam, பெ.(n.)

மாயரூவம் பார்க்க;see {}.

     [மாய + உருவம் → ரூபம்.]

மாயலேரி

மாயலேரி māyalēri, பெ. (n.)

   1. அருப்புக் கோட்டைவட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Aruppukkottai Taluk.

   2. சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivaganga Taluk.

     [மாயல்(வறண்டுபோதல்);+ஏரி]

மாயவண்ணன்

 மாயவண்ணன் māyavaṇṇaṉ, பெ.(n.)

திருமால்;{}

 as dark-coloured.

     “மாய வண்ணனை மனனுறப் பெற்று”

     [மாயம் + வண்ணன்.]

மாயவன்

மாயவன் māyavaṉ, பெ.(n.)

   கருநிறமுடைய திருமால்;{}.

     “மாயவன் மாய மதுவால்” (பு.வெ.9:40);. “பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்” (சிலம்பு. படர்க்கைப். பரவல்.2);.

     [மாய் → மாயவன் (வே.க.4:62);.]

மாயவன்சோதரி

 மாயவன்சோதரி māyavaṉcōtari, பெ.(n.)

   துர்க்கை; durgai.

     [மாயவன் + Skt. சோதரி.]

மாயவன்மூலி

மாயவன்மூலி māyavaṉmūli, பெ.(n.)

   1 திருமால்கரந்தை எனும் செடி; a plant – Sphoeranthus idnicus.

   2. துளசி; holy basil plant.

     [மாயவன் + மூலி.]

மாயவன்மேனி

 மாயவன்மேனி māyavaṉmēṉi, பெ.(n.)

   நாகப் பச்சை (சங்.அக.);; a green stone.

     [மாயவன் + மேனி.]

மாயவன்விந்து

மாயவன்விந்து māyavaṉvindu, பெ.(n.)

   1. திருமால்கரந்தை எனும் செடி;  a herb.

   2. வெள்ளரி விதை; cucumbar seed.

     [மாயவன் + விந்து.]

மாயவள்

மாயவள் māyavaḷ, பெ.(n.)

   1. கரிய நிறமுடையவள்; woman of dark complexion.

   2. கொற்றவை; durga.

     “மாயவளாடிய மரக்கா லாடலும்” (சிலப்.6, 59);.

   3. தெய்வப் பெண் (பிங்.);; female goddess.

   4. இடாகினி (சூடா.);; a female goblin.

     [மாயம் → மாயவள் (வே.க.4:61);.]

மாயவாழ்க்கை

 மாயவாழ்க்கை māyavāḻkkai, பெ.(n.)

   நிலையில்லா உலக வாழ்க்கை; worldly life which is not real.

     [மாயம் + வாழ்க்கை.]

மாயவாழ்வு

 மாயவாழ்வு māyavāḻvu, பெ.(n.)

   நிலையற்ற வாழ்வு; transitory life.

     [மாயம் + வாழ்வு.]

மாயவிஞ்சை

மாயவிஞ்சை māyaviñjai, பெ.(n.)

மாய வித்தை பார்க்க;see {}.

     “மாயவிஞ்சை மந்திரமோதி” (மணி.18, 148);.

     [மாயவித்தை → மாயவிஞ்சை.]

மாயவித்தை

 மாயவித்தை māyavittai, பெ.(n.)

   இந்திரசால வித்தை; magical art, sleight of hand, art of producing illusion, sorcery.

     [மாயம் + வித்தை.]

மாயவித்தைக்காரன்

 மாயவித்தைக்காரன் māyavittaikkāraṉ, பெ.(n.)

   இந்திர சாலஞ் செய்வோன்; sorcerer, magician.

     [மாயவித்தை + காரன்.]

மாயவேடம்

மாயவேடம் māyavēṭam, பெ.(n.)

   பொய்யுரு; disguise.

     “வெகுளி பொங்கவிட்டது மாயவேடம்” (கம்பரா. சடாயுவுயிர்.64);.

     [மாயம் + வேடம். Skt. வேடம். த. புணைவு. மாயப்புணைவு பார்க்க.]

மாயா

மாயா māyā, பெ. (n.)

மாமன், 1, 2, 3 பார்க்க;see {}.

     [மாமன் → மாமா.]

மாயாகாரியம்

 மாயாகாரியம் māyākāriyam, பெ.(n.)

மாயச்செயல் பார்க்க;see {}.

மாயாசாலம்

 மாயாசாலம் māyācālam, பெ.(n.)

   வஞ்சனை (வின்.);; dissimulation, deceit.

     [மாயம் + சாலம்.]

 மாயாசாலம் māyācālam, பெ.(n.)

மாய வித்தை (வின்.); பார்க்க;see {}.

     [மாயம் + சாலம்.]

மாயாதி

 மாயாதி māyāti, பெ.(n.)

   மாந்தக்காவு (நரபலி);; human sacrifice.

மாயாதேவி

மாயாதேவி māyātēvi, பெ.(n.)

   1. மாயையாகிய தேவி (தக்கயாகப்.616, உரை);; the goddess of {}.

   2. புத்தரின் தாய் (சூடா.);; the mother of Goutama buddha.

     “மாயாதேவி சுதன்”.

     [மாயை + தேவி.]

மாயாபாசம்

 மாயாபாசம் māyāpācam, பெ.(n.)

   மாயையாகிய உறவு (யாழ்.அக.);; the bondage of {}.

     [மாயம் + Skt. பாசம்.]

மாயாமந்திரம்

 மாயாமந்திரம் māyāmandiram, பெ.(n.)

   மந்திர வகை (யாழ்.அக.);; a mantram.

     [மாயம் + மந்திரம்.]

மாயாமம்

 மாயாமம் māyāmam, பெ.(n.)

   புளி; tamarind.

மாயாமாலம்

மாயாமாலம் māyāmālam, பெ.(n.)

   மும் மலத்துளொன்றான மாயையாகிய மலம் (சி.சி.2, 85, உரை);;{}, one of mu – m – malam (q.v.);.

     [மாயம் + மலம்.]

மாயாளம்

 மாயாளம் māyāḷam, பெ.(n.)

   பாசாங்கு (இ.வ.);; pretension.

     [மாயம் → மாய்மாலம் → மாயாளம் (கொ.வ.);.]

மாயாளி

மாயாளி māyāḷi, பெ.(n.)

   வட்டத் திருப்பி (தைலவ.தைல.33);; kidney leaved bracteate moon-seed.

 மாயாளி māyāḷi, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Sivaganga Taluk.

     [மாயன்+ஆளி]

மாயாள்

மாயாள் māyāḷ, பெ.(n.)

மாயோள்1, 3 பார்க்க (நாமதீப.117);;see {}.

     [மாயோள் → மாயாள்.]

மாயாவாதம்

மாயாவாதம் māyāvātam, பெ. (n.)

   உலகம் யாவும் மாயையே என்று பெளத்தம் அத்துவைத மதங்களில் கூறப்படும் கொள்கை; the doctrine that regards the material universe as an illusion, applied to the doctrines of the Advaita and Buddhism.

     ‘மிண்டிய மாயாவாத மென்னுஞ் சண்ட மாருதம்’ (திருவாச. 4, 54.);

     [Skt. {} → த. மாயாவாதம்.]

மாயாவாதி __. பெ.(n.)

மாயாவாதி __. பெ.(n.) māyāvātibe,  follower of maya-vadam.

     “சதசத் விலசஷணம் என்று….. மாயாவாதி சொல்லுமா போலே” (திவ்.இயற். திருவிருத்.22, வியா.145);.

     [மாயம் + வாதி.]

மாயாவிமோசனம்

 மாயாவிமோசனம் māyāvimōcaṉam, பெ.(n.)

   மாயையினின்று நீங்குகை (யாழ். அக.);; freedom from {}.

     [மாயை → மாயா + Skt. விமோசனம்.]

மாயாவீடு

 மாயாவீடு māyāvīṭu, பெ.(n.)

   முத்தி; heaven.

மாயி

மாயி1 māyi, பெ.(n.)

   மாயாவதி; adherent of {}.

     “மாயியை நிசேதிக்கைக்காக அர்த்தம் அருளிச் செய்கிறார்” (ஈடு.1, 5, 4, ஜீ.);.

 மாயி2 māyi, பெ.(n.)

   ஆண் பெண்களைக் களவிற் புணர்ப்பிக்கும் ஆண் மகன் (சுக்கிரநீதி, 369);; go -between, panderer.

 மாயி3 māyi, பெ.(n.)

கொற்றவை;{}.

     “என்னன்னையா மாயியை” (பிரபோத.18, 73);.

     [மய் → மாய் → மாயி (கொ.வ.);.]

மாயிகாஞ்சனம்

மாயிகாஞ்சனம் māyikāñjaṉam, பெ. (n.)

   வித்தியாதரருடைய தந்திர வகை (பெருங்.இலாவாண.1, 67);; a magic art of the {}.

     “செவியிற்கேட்கு மாயிகாஞ்சனம்” (பெருங்.இலாவண.1, 67);.

மாயிடம்

மாயிடம் māyiḍam, பெ.(n.)

   எருமை; buffalo.

     “வந்து மாயிட மாகி வளர்ந்ததே” (யசோதர.3, 45);.

     [மை = கருப்பு. மை → மகி → மகிஷ → மயிஷ → மயிஷம் → மயிடம் → மாயிடம்.]

மாயிரம்

மாயிரம் māyiram, பெ.(n.)

   புறமாயுள்ளது; that which is outside, outward.

     “மாயிர நேமியாதி” (தக்கயாகப்.440);.

மாயிலி

 மாயிலி māyili, பெ.(n.)

   படகு வகை (வின்.);; a kind of boat.

மாயு

 மாயு māyu, பெ.(n.)

   பித்தம் (யாழ்.அக.);; bile.

மாயுச்சம்

 மாயுச்சம் māyuccam, பெ.(n.)

   நாகமணல்; sand containing zinc ore.

மாயுநாடி

 மாயுநாடி māyunāṭi, பெ.(n.)

   பித்தநாடி (வின்.);; a pulse indicating bilious humour.

மாயூரம்

மாயூரம் māyūram, பெ. (n.)

   1. மயில்; Peacock;

   2. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்;{},

 a siva shrine in the Tanjore District.

     [Skt. {} → த. மாயூரம் → த. மயில்.]

மாயை

மாயை māyai, பெ.(n.)

   1. மூலப் பொருள்; primordian matter.

     “பூதலயமாகின்ற மாயை முதலென்பர் சிலர்” (தாயு. பரிபுரணா.6);.

   2. மும்மலத்துள் விந்து, மோகினி, மாயேயம் என்று மூவகைப்பட்ட மலம்; matter, one of mu-m-malam, (q.v.); of three kind of vindu, {}.

     “‘இவற்றுண் மாயை தெருளும் விந்து மோகினி, மாயேய மென விவை மூன்று திறமாய்” (பிரபோத.46, 7);.

   3. பொய்த்தோற்ற வுரு ; unreal or illusory image, phantom, apparition.

   4. மாயவித்தை; sorcery, withc croft magic.

     “மாயை யினொளித்த மணி மேகலை தனை” (மணிமே.18, 155);.

   5. வஞ்சகம் (சூடா.);; deception, fraud, trick.

   6. மீமாந்த திறன்; extra ordinary or super human power.

   7. மாயாதேவி பார்க்க;see {}.

   8. மாயாபுரி பார்க்க;see {}.

   9. நிரயவகை (சிவதரு. சுவர்க்க. நரகவி.117);; a hell.

   10. தூய்மையற்ற மாயை;{}.

     “ஆதியோதிய மேதகு மாயை” (ஞான);.

   11. மாய பஞ்சகத்துள் ஒன்றாகிய மாயை;{}, one of {}.

   12. பொய்தோற்றம்; illusion, unreality.

   13. கொற்றவை; kali.

   14. உமையம்மை (நாமதீப.22);; Umaiyammai.

   15. திரோதான சத்தி (நாமதீப.753);; a boom of siva’s energy, which hides spiritual truth from the souls.

     [மள் → மய் → மாய் → மாயை. ஒ.நோ. சாய் → சாயை (வே.க.4:62);.]

மாயைமலம்

 மாயைமலம் māyaimalam, பெ.(n.)

மும் மலத்துளொன்றான மாயையாகிய மலம்;{}

 one of the mummalam.

     [மாயை + மலம்.]

மாயையுற்றாள்

 மாயையுற்றாள் māyaiyuṟṟāḷ, பெ.(n.)

மாயை (வின்.); பார்க்க;see {}.

     [மாயை + உற்றாள்.]

மாயோனாடல்

மாயோனாடல் māyōṉāṭal, பெ.(n.)

   அல்லியம், மற்கூத்து, குடக்கூத்து எனத் திருமாலாடிய கூத்து வகைகள் (சிலப்.6: 48, 49, 55);; dances of {}, viz. alliyam, {}.

     [மாயோன் + ஆடல்.]

மாயோனாள்

மாயோனாள் māyōṉāḷ, பெ.(n.)

இருபத் திரண்டாம் நாண்மீனான திருவோணம் (சூடா.);;{}

 the 22nd {}.

     [மாயோன் + நாள்.]

மாயோன்

மாயோன் māyōṉ, பெ.(n.)

   1. கரு நிறமுடையவன் (பரிபா.3, 1, உரை);; dark coloured person.

   2. திருமால்;{}.

     “மாயோன் மேய காடுறை யுலகமும்” (தொல். பொருள்.5);.

     [மாய் → மாயோன். மாய் = கருமை.]

மாயோன்பூடு

 மாயோன்பூடு māyōṉpūṭu, பெ.(n.)

   துளசி (சங்.அக.);; sacred basil.

     [மாயோன் + பூடு.]

மாயோன்மருகன்

 மாயோன்மருகன் māyōṉmarugaṉ, பெ.(n.)

முருகக் கடவுள் (சூடா.);;{}, a

 s of nephew {}.

     [மாயோன் + மருகன்.]

மாயோன்விந்து

 மாயோன்விந்து māyōṉvindu, பெ.(n.)

   முகப்பூச்சு (சங்.அக.);; yellow orpiment.

     [மாயோன் + விந்து.]

மாயோள்

மாயோள்1 māyōḷ, பெ.(n.)

   1. கரு நிறமுடையவள்; dark coloured woman.

     “மாயோள் முன்கை ஆய்தொடி” (பொருந. 14);.

   2. மாமை நிறமுடையவள்; woman of dark-brown colour.

     “மாயோர் பசனை நீக்கினன்” (ஐங்குறு.145);.

   3. பெண் (திவா.);; woman.

     “ஒடுங்கீ ரோதி மாஅயோளே” (அகநா.86);.

     [மாய் → மாயம் → மாயோள் (வே.க.4:62);.]

 மாயோள்2 māyōḷ,    பெ.(n) வஞ்சகி (வின்.); dissembling woman.

     [மாய் → மாயோள். மாய் = வஞ்சகம், கருமை, மயக்கம்.]

மாய்

மாய்1 māytal,    2 செ.கு.வி.(v.i:)

   1. மறைதல்; to hide, vanish.

     “களிறுமாய் செருந்தியொடு” (மதுரைக்.172);.

   2. அழிதல்; to perish, to be annihilated, terminated.

     “குடியொடுமாய்வர் நிலத்து” (குறள்.898);.

   3. இறத்தல்; to die.

     “தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்” (மலைபடு.553);.

   4. ஒளி மழுங்குதல்; to become lustreless, as the setting sun.

     “பகன்மாய” (கலித்.143);.

   5. கவலை மிகுதியால் வருந்துதல்; to suffer from over, annexiety as in love-sickness.

   6. அறப்பாடுபடுதல்; to wear oneself to death.

     “அந்த வேலையில் மாய்ந்து கொண்டிருக்கிறேன்” (உ.வ.);.

     [முல் (பொருந்தற் கருத்துவேர்); → முள் → முய் மய் → கருப்பு, இருள். மைம்மை = கருமை, இருண்மை. மய → மயப்பு → மப்பு = மயக்கம், மட்டித் தன்மை, செருக்கு, செரியாமை. மள்கு → மட்கு. மட்குதல் = மயங்குதல், ஒளி மங்குதல், அழுக்கடைதல், வலி குன்றுதல். மள்கு → மாழ்கு. மாழ்குதல் = கலத்தல், மயங்குதல், சோம்புதல், மங்குதல், கெடுதல், மாள்கு → மாள். மாள்தல் = கெடுதல், கழிதல், அழிதல், சாதல், முடிதல், இயலுதல், மாள் → மாய். ஒ.நோ. நோள் → நோய். நோளையுடம்பு = நோயுண்டவுடம்பு (வே.க.4:61);.]

 மாய்3 māyttal,    2 செ.குன்றாவி.(v.t.)

   1. மறைத்தல்; to hide.

     “களிறு மாய்க்குங் கதிர்க் கழனி” (மதுரைக்.247);.

   2. கொல்லுதல்; to kill.

     “மாய்த்த லெண்ணி வாய் முலை தந்த” (திவ்.திருவாய்.4, 3, 4);.

   3. அழித்தல்; to destroy, put an end to.

     “குரம்பை யிது மாய்க்க மாட்டேன்” (திருவாச.5, 54);.

   4. வருத்துதல் (கொ.வ.);; to afflict.

   5. தீட்டுதல்; to grind and sharpen.

     “மாய்த்தபோல மழுகு நுனை தோற்றி” (அகநா.5);.

     [மாள் → மாய்.ஒ.நோ. நோள் → நோய். நோளையுடம்பு = நோயுண்டவுடம்பு.]

 மாய்4 māy, பெ.(n.)

   நரி (இராசவைத்.146);; jackle.

 மாய்5 māy, பெ.(n.)

   ஆச்சா மரம் (மலை.);; sal tree.

மாய் –

மாய் – 2 māytal,    2 செ.குன்றாவி.(v.t.)

   மறத்தல்; to forget.

     “மாயா வுள்ளமொடு பரிசிறுன்னி” (புறநா.139);.

     [மாய்தல் = மறைதல். மறத்தல் = நினைவிலிருந்து மறைதல்.]

மாய்கை

மாய்கை1 māykai, பெ.(n.)

   1. வெண்ணீர்; semen.

   2. கருக்குழந்தையின் நஞ்சுக் கொடி; naval cord (சா.அக.);.

 மாய்கை2 māykai, பெ.(n.)

   1. பொய்த் தோற்றம் (கொ.வ.);; illusion.

   2. மயக்கம்; giddiness.

     [மாய் → மாய்கை (வே.க.4:61);.]

மாய்கைவல்லவன்

 மாய்கைவல்லவன் māykaivallavaṉ, பெ.(n.)

   சித்தரில் தேறினவன்; best of siddhars who had conquered passions.

மாய்ச்சல்

மாய்ச்சல்1 māyccal, பெ.(n.)

   சோம்பல்; laziness.

     [மாய் → மாய்ச்சல்.]

 மாய்ச்சல்2 māyccal, பெ.(n.)

   1. சாவு (யாழ்.அக.);; death.

   2. மறைவு (சது.);; hiding, vanishing.

   3. வருத்தம் (வின்.);; great difficulty or trouble.

     [மாய் → மாய்ச்சல் (வே.க.4:61);.]

மாய்ச்சி

 மாய்ச்சி māycci, பெ.(n.)

   பூட்டுவிலங்கு (யாப்.);; manacles, shackles.

மாய்ப்பு

மாய்ப்பு māyppu, பெ.(n.)

மாய்ச்சல்2, 1, 2 (வின்.); பார்க்க;see {}.

     [மாய் → மாய்ச்சல் → மாய்ப்பு (வே.க.4:61);.]

மாய்மாலம்

மாய்மாலம் māymālam, பெ.(n.)

   1. போலி நடிப்பு (கொ.வ.);; hypocrisy, dissimulation, pretension.

   2. மோசடி (யாழ்.அக.);; deceit.

     [மாய் + மாலம் (வே.க.4:61);.]

மாய்வு

மாய்வு māyvu, பெ.(n.)

   1. மாய்ச்சல், 1 பார்க்க;see {}.

     “மாய்வு நிச்சயம் வந்துழி” (கம்பரா.இராவணன்வதை.182);.

   2. மாய்ச்சல் 2 பார்க்க;see {}.

     [மாய் → மாய்வு (வே.க.4:61);.]

மார

 மார māra, பெ.(n.)

   மகிழமரம்; a tree with very fragrant flowers (சா.அக.);.

மாரகன்

மாரகன் māragaṉ, பெ.(n.)

   1. மரணத்தை யுண்டாக்குவோன் (யாழ்.அக.);; one who causes death.

   2. மரணத்திற்குக் கரணியமான கோள்நிலை (கிரகம்);;(Astrol.);

 the planet which causes or indicates death.

மாரகாகளம்

மாரகாகளம் mārakākaḷam, பெ.(n.)

   குயில்; a bird indian cuckoo, as the trumpet of {}.

     “மாரகாகள மெழுவதோர் மதுமலர்க் காவில்” (பாரத. குருகுல.8);.

மாரக்கம்

 மாரக்கம் mārakkam, பெ.(n.)

   கையாந்தகரை; a prostate plant (சா.அக.);.

மாரங்கியூர்

 மாரங்கியூர் māraṅgiyūr, பெ. (n.)

   திருக்கோவிலுர் வட்டத்திலுள்ள சிற்றுர்; avillage in Tirukkoyilur Taluk.

     [மாரன்+அங்கன்+ஊர்]

மாரசம்

 மாரசம் mārasam, பெ.(n.)

   வெள்ளி துகள் (சங்.அக.);; calcinated silver.

மாரசயன்

 மாரசயன் mārasayaṉ, பெ.(n.)

 the buddha, as conqueror of {}.

மாரடம்

 மாரடம் māraḍam, பெ.(n.)

   மருக்காரை; a plant gardenia.

மாரடி

மாரடி1 māraḍittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. இழவில் அழும்பொழுது மார்பில் மகளிர் அடித்துக் கொள்ளுதல்; to beat the breast, as when bewail the dead.

     “மாரடித் திரியும்” (அரிச்.பு.நாட்.36);.

   2. வருந்துதல்; to worry oneself.

     [மார் + அடி-,]

 மாரடி2 māraḍi, பெ.(n.)

மாரடிநோன்பு பார்க்க;(madr.); see {}.

மாரடித்திருநாள்

 மாரடித்திருநாள் māraḍittirunāḷ, பெ.(n.)

மாரடிநோன்பு பார்க்க;see {}.

மாரடிநோன்பு

 மாரடிநோன்பு māraḍinōṉpu, பெ.(n.)

   மொகரம் பண்டிகையில் முகம்மதியரில் ஒரு வகுப்பார் மாரடித்துக் கொள்வதாகிய சடங்கு; a religious observance of a sect of muhammadans during the mohurrum festival, characterised by beatings on the breast.

     [மாரடி + நோன்பு.]

மாரடிப்பாட்டு

 மாரடிப்பாட்டு māraḍippāḍḍu, பெ.(n.)

   மாரடித்து அழும் போது பாடும் ஒப்பாரிப் பாட்டு; mourning song sung.

     [மாரடி + பாட்டு.]

மாரடிப்பு

மாரடிப்பு māraḍippu, பெ.(n.)

   1. பெரும் ஏதம்; great affliction, as leading to the beating of breasts.

   2. பெருந்துன்பம்; great worry.

     [மாரடி → மாரடிப்பு.]

மாரடைப்பு

மாரடைப்பு māraḍaippu, பெ.(n.)

   1. மூர்ச்சை; fainting, swooning.

   2. நெஞ்சாங்குலையில் ஏற்படும் குருதி யடைப்பு;  heart attack.

   3. மார்புநோவு, 1 (வின்.); பார்க்க;see {}.

     [மார் + அடைப்பு.]

மாரட்டம்

மாரட்டம் māraṭṭam, பெ.(n.)

   மராட்டிய நாடு; the Maharatta country.

     “மாலை மாரட்டதித் தகதித்தன…. குதிரை” (சீவக. 2161);.

மாரணஞ்செய்தல்

 மாரணஞ்செய்தல் māraṇañjeytal, தொ.பெ. (vbl.n.)

   இறக்கும்படியாக மந்திரத்தால் அல்லது செய்வினையால் செய்கை; causing death by magic or witch craft.

மாரணமந்திரம்

 மாரணமந்திரம் māraṇamandiram, பெ. (n.)

   இறப்பை உண்டாக்கும் மந்திரம்; mandiram causing death. (சா.அக.);.

மாரணம்

மாரணம் māraṇam, பெ. (n.)

   1. இறப்பு; death.

     “மாரணஞ் செயலன்றி வதிவனோ” (சேதுபு. இராமனருச். 188);.

   2. அழிவு (இலக். அக.);; destruction.

   3. எட்டுவகை கருமத்துள் ஒருவனை மந்திரத்தாலிறக்கச் செய்யும் கலை; the art of causing one’s death by incantation, one of {}-karumam.

     ‘நெஞ்சமாகிய பாதரச மாரணமாய் விடும்’ (தாயு. பாயப்புலி.25);. manthiram causing death. (சா.அக.);.

     [Skt. {} → த. மாரணம்.]

மாரணவேதர்

 மாரணவேதர் māraṇavētar, பெ. (n.)

   பொன்னாக்கும் முறைகளை இயற்றிய சித்தர்களிலொருவர்; one of the Siddhars who is an alchemist. (சா.அக.);.

மாரணி

மாரணி māraṇi, பெ.(n.)

காஞ்சுரை (நாமதீப.299); பார்க்க;see {}.

மாரண்டம்

மாரண்டம் māraṇṭam, பெ.(n.)

   1. பாம்பு முட்டை; eggs of snake.

   2. பாதை; way, path.

     [மார் + அண்டம்.]

மாரதந்தி

 மாரதந்தி māradandi, பெ.(n.)

   காமனின் யானை; elephant of {}.

மாரதனுசு

 மாரதனுசு māradaṉusu, பெ.(n.)

   காமன்வில்; bow of {}.

     [மார் + தனுசு.]

மாரதன்

மாரதன் māradaṉ, பெ.(n.)

   தேர்ப்படை வீரன்; a warrior on a chariot.

     “அதிரதரே மாரதரே” (பாரதவெண்.உத்தி.455);.

     [மா + ரதன். (வ); ரதம் → த. தேர். ரதம் → ரதன்.]

மாரத்துச்சாமை

 மாரத்துச்சாமை mārattuccāmai, பெ.(n.)

   சாமை வகை (வின்.);; a kind of millet.

மாரந்தை

 மாரந்தை mārandai, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivaganga Taluk.

     [மாறன்+அந்தை]

மாரனாலயம்

 மாரனாலயம் māraṉālayam, பெ.(n.)

 pudendum muliebre.

     [மாரன் + ஆலயம்.]

மாரனி

 மாரனி māraṉi, பெ. (n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruppattur Taluk.

     [மரல்-மாரல்-மாரலி-மாரனி]

மாரன்

மாரன் māraṉ, பெ.(n.)

   1. காமன் (பிங்.);;{}.

     “மாரனார் வரிவெஞ் சிலைக்கு” (திவ்.பெருமாள்.3, 3);.

   2. புத்தரை மயக்க முயன்று அவரால் தோல்வியுண்ட ஒரு தேவன்; a god who tempted the Buddha but was vaniquished by him.

     “மாரனை வென்று வீரணாகி” (மணிமே.30, 11);.

மாரன்புட்பம்

 மாரன்புட்பம் māraṉpuṭpam, பெ. (n.)

   காமனுடைய பூ; flower of {}.

     [மாரன் + புட்பம். வ. புட்பம் → த. மலர்.]

மாரபேரி

 மாரபேரி mārapēri, பெ.(n.)

   காமன் முரசு; drum of {}.

     [மாரன் + பேரி.]

மாரப்பற்று

மாரப்பற்று mārappaṟṟu, பெ.(n.)

   கருப்பூர வகை (சிலப்.14, 109, உரை);; a kind of camphor.

மாரம்

மாரம் māram, பெ.(n.)

   1. கோடக சாலை எனும் செடி (மலை.);; a very small plant.

   2. மரணம்; death.

மாரளிடுக்கி

மாரளிடுக்கி māraḷiḍukki, பெ.(n.)

   1. மோகம்; lust.

   2. போகம்; sexual union (சா.அக.);.

மாரவேள்

மாரவேள் māravēḷ, பெ.(n.)

மாரன், 1 பார்க்க;see {}.

     “தேவன்மேன் மாரவே ளிங்குநின் றெய்யவும்” (கம்பரா.தாடகை.1);.

     [மார் + வேள்.]

மாராசன்

 மாராசன் mārācaṉ, பெ.(n.)

   அரசன் (இ.வ.);; king.

மாராசி

மாராசி mārāci, பெ.(n.)

   அரசி (colas.11, 238);; queen.

மாராசு

 மாராசு mārācu, பெ.(n.)

   அலரி; a flower – oleander.

மாராட்டகம்

மாராட்டகம் mārāṭṭagam, பெ.(n.)

   மராட்டிய மாநிலத்துக் குதிரை (திருவாலவா. 27, 73);; Maharatta horse.

மாராட்டம்

மாராட்டம்1 mārāṭṭam, பெ.(n.)

   1. மாரட்டம் (திருவிளை.நரிபதி.106); பார்க்க;see {}.

   2. ஊர்; town.

     [மாரட்டம் → மாராட்டம்.]

 மாராட்டம்2 mārāṭṭam, பெ.(n.)

   1. துன்பம்; trouble.

   2. ஆள் மாறாட்டம்; false impersonation.

மாராட்டு

மாராட்டு mārāṭṭu, பெ.(n.)

மாரட்டம்2, 2 பார்க்க;see {}, 2,

     “மாராட்டரசை யிறக்கி” (விக்கிரம.உலா.);.

     [மாரட்டம் → மாராட்டு.]

மாராணி

மாராணி mārāṇi, பெ.(n.)

மார்பாணி, 1 (M.L.); பார்க்க;see {}.

     [மார்பாணி → மாராணி.]

மாராதம்

 மாராதம் mārātam, பெ.(n.)

   மன்மதன் தேர்; chariot of {}.

மாராத்தளி

 மாராத்தளி mārāttaḷi, பெ. (n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivaganga Taluk.

     [மால்-மாரல்+தளி]

மாராப்பு

மாராப்பு mārāppu, பெ.(n.)

   1. பெண்கள் தம் மார்பின் மேலிடுஞ் சீலைப்பகுதி; the portion of a saree, covering the bosom of women.

   2. முதுகுடன் இணைத்து மூட்டைக் கட்டுங் கச்சை (சீதக்.36);; band for holding a pack on the back, fastened over the chest.

     [மார் + யாப்பு → மாராப்பு.]

     [p]

மாராப்புக்கடா

 மாராப்புக்கடா mārāppukkaṭā, பெ.(n.)

   உடல் முழுதும் கருநிறமும் வலது மார்பு அல்லது இடது மார்பில் மட்டும் சிறிது வெண்ணிறமும் கொண்ட ஆட்டுக்கடா (நாஞ்.);; black sheep or goat with white spots in its right or left breast.

     [மாராப்பு + கடா.]

மாராப்புக்கொட்டகை

 மாராப்புக்கொட்டகை mārāppuggoṭṭagai, பெ.(n.)

   பந்தலின் பக்கச் சுவர் போல் முன்னும் பின்னும் மாற்றியமைக்கப் பயன்படும் தட்டி (செங்கை.வழ.);; a screen used as side wall of pandal, and make turn front and back.

     [மாராப்பு + கொட்டகை.]

மாராப்புச்சீலை

மாராப்புச்சீலை mārāppuccīlai, பெ.(n.)

   1. மாராப்பு, 1 (வின்.); பார்க்க;see {}.

   2. மாராப்பு, 2 (யாப்.); பார்க்க;see {}.

     [மாராப்பு + சீலை.]

மாராப்புப்பட்டை

மாராப்புப்பட்டை mārāppuppaṭṭai, பெ.(n.)

   1. மாராப்பு, 2 பார்க்க;see {}.

   2. கத்தியின் கச்சை; sword belt.

     [மாராப்பு + பட்டை.]

மாராப்புமல்

 மாராப்புமல் mārāppumal, பெ.(n.)

   கை மரங்களை இணைக்கும் குறுக்கு மரம் (நெல்லை.வழக்.);; a wooden gross frame joint the frame.

மாராயக்குறி

 மாராயக்குறி mārāyakkuṟi, பெ.(n.)

மாராயச்சீட்டு (நாஞ்.); பார்க்க;see {}.

     [மாராயச்சீட்டு → மாராயக்குறி.]

மாராயச்சீட்டு

 மாராயச்சீட்டு mārāyaccīṭṭu, பெ.(n.)

   மாராயப்பணம் பெற்றுக் கொண்டதற்குரிய பற்றுச் சீட்டு (நாஞ்.);; receipt

 acknowledging payment of {}.

     [மாராயம் + சீட்டு.]

மாராயஞ்சொல்(லு)-தல்

மாராயஞ்சொல்(லு)-தல் mārāyañjolludal,    8 செ.குன்றாவி.(v.t.)

   நற்செய்தி கூறுதல் (வின்.);; to given good news.

     [மாராயம் + சொல்-,]

மாராயஞ்சொல்லுபவன்

 மாராயஞ்சொல்லுபவன் mārāyañjollubavaṉ, பெ.(n.)

   வண்ணான் (இ.வ.);; washerman, as the bearer of good news.

     [மாராயம் + சொல்லுபவன்.]

மாராயம் = நற்செய்தி. சிற்றுார்களில் பெண்கள் பூப்பெய்தல் முதலிய நன்னிகழ்வுகளை வண்ணான் சென்று சொல்வதால் வந்த பெயராகலாம்.

மாராயன்

மாராயன் mārāyaṉ, பெ.(n.)

   1. அரசன்; king.

   2. அரசனாற் பெறும் பட்டப் பெயர்; honorary title bestowed by a king.

     “பஞ்சவ மாராயன்….. கொங்காள்வான்” (Insc.);.

   3. திருவிதாங்கூரில் உவச்சரை யொத்த ஒரு சாதி (நாஞ்.);; a caste in Travancore, corresponding to uvaccarai.

     [மா + அரையன்.]

மாராயப்பணம்

 மாராயப்பணம் mārāyappaṇam, பெ.(n.)

   நிலத்துக்குரியவன் பாட்டக் காரனிடமிருந்து பாட்டவுறுதியின் பொருட்டு முற்பட வாங்கும் பணம் (நாஞ்.);; advance money received by the owner of a fixed from the lessee thereof as security for the due payment of rent.

     [மாராயம் + பணம்.]

மாராயப்பாட்டம்

 மாராயப்பாட்டம் mārāyappāṭṭam, பெ.(n.)

   மாராயப் பணம் வாங்கும் பாட்ட வகை (நாஞ்.);; a lease in which a sum is received in advance from the lessee as security for the due payment of rent, dist. fr. {}.

     [மாராயம் + பாட்டம்.]

மாராயம்

மாராயம் mārāyam, பெ.(n.)

   1. வேந்தனாற் பெறுஞ் சிறப்பு; honour bestowed by a king.

     “மாராயம் பெற்ற நெடு மொழியானும்” (தொல்.பொருள்.63);.

   2. மகிழ்ச்சி; happiness, gladness.

     “சிவன் மாராய மிங்கண் மிக்குறுக” (திருவாணைக். நானவழி.36);.

   3. நற்செய்தி (இ.வ.);; good news, auspicious tidings.

   4. பாராட்டுச் சொல் (வின்.);; compliment, congratulations.

   5. பெண்ணின் பூப்புச் செய்தியைச் சுற்றத்தார்க்கு அறிவிக்கை (இ.வ.);; announcement of a girl’s puberscence to her relatives.

     [மா + அரையன் → மாராயன் → மாராயம்.]

மாராயவஞ்சி

மாராயவஞ்சி mārāyavañji, பெ.(n.)

   அரசனாற் சிறப்பெய்திய வெற்றி வீரரின் பெற்றிமையைக் கூறும் புறத்துறை (பு.வெ.3, 11);;     [மாராயம் + வஞ்சி.]

மாராழம்

 மாராழம் mārāḻm, பெ.(n.)

   மார்பளவுள்ள ஆழம்; depth up to one’s breast, as of water.

     [மார் + ஆழம்.]

மாரி

மாரி1 māri, பெ.(n.)

   1. நீர் (பிங்.);; water.

   2. மழை (பிங்.);; rain, shower.

     “மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்” (புறநா.35);.

   3. மேகம்; cloud.

     “மாரி மாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு” (குறள், 211);.

   4. மாரிக் காலம் பார்க்க;see {}.

     “மாரி மலைமுழைஞ்சின் மன்னிக் கிடந்துறங்கும்” (திவ்.திருப்பா.23);.

   5. பூராடம் (பிங்.);; the 20th nakstra.

   6. கள் (பிங்.);; toddy, liquor.

   7. புள்வகை (பிங்.);; a bird.

     [முல் (பொருந்தற்கருத்து வேர்); → மல் → மால் → மார் → மாரி (வே.க.4-43);.]

 மாரி2 māri, பெ.(n.)

   1. மரணம் (பிங்.);; death.

   2. சின்னம்மை; small-pox.

   3. சின்னம்மைக்குரிய தேவதை; the goddess of small pox.

   4. கொற்றவை (பிங்.);; Durgai.

     [மால் → மார் → மாரி.]

 மாரி3 māri, பெ.(n.)

 a word (which combines with nouns); to mean a shower of something.

மாரிக்கார்

 மாரிக்கார் mārikkār, பெ.(n.)

   கார் நெல் வகை (R.T.);;  a kind of paddy that grows and matures in the rainy season.

     [மாரி + கார்.]

மாரிக்காலம்

 மாரிக்காலம் mārikkālam, பெ.(n.)

   மழைக்காலம்; the monsoon, rainy season.

     [மாரி + காலம்.]

மாரிமா

மாரிமா mārimā, பெ.(n.)

   1. காட்டுமா; Indian hog plum.

   2. நீண்ட மரவகை; South sea Islands hog plum.

மாரிமுத்தாப்பிள்ளை

 மாரிமுத்தாப்பிள்ளை mārimuttāppiḷḷai, பெ. (n.)

   இசைப்பாக்களில் புகழாப் புகழ்ச்சி வழிபாடு (கீர்த்தனைகளில் நிந்தைத் துதி); அமைத்துப் பாடுவதைப் பெருவழக்காகக் கொண்டு வந்த இசைப்பண் மேதை; an exponant in Tamil music.

     [மாரிமுத்து+பிள்ளை]

மாரிமுத்து

மாரிமுத்து mārimuttu, பெ.(n.)

மாரி2 பார்க்க;see {}.

     [மாரி + முத்து.]

மாரிமூலை

 மாரிமூலை mārimūlai, பெ. (n.)

   வடகிழக்கு மூலை; north east side.

     [மாரி+மூலை]

மாரியம்மன்

மாரியம்மன்1 māriyammaṉ, பெ.(n.)

   வெப்பு நோயிலிலிருந்து மக்களைக் காப்பதாக நம்பப்படும் தமிழ்நாட்டுத் தெய்வம்; a rural female diety who is behind to save the people from the disceases of heat.

     “எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்துமாரி” (பாரதியார்);.

     [மாரி + அம்மன்.]

 மாரியம்மன்2 māriyammaṉ, பெ.(n.)

மாரி2, 3 பார்க்க;see {}.

     [மாரி → மாரியம்மன்.]

மாரியம்மன்கொண்டாடி

 மாரியம்மன்கொண்டாடி māriyammaṉkoṇṭāṭi, பெ.(n.)

   மாரியம்மனின் அருள் பெற்று ஆடுபவன் (வின்.);; one possessed by the spirit of {}.

மறுவ. மாரியம்மன் மருளாடி.

     [மாரியம்மன் + கொண்டாடி.]

மாரியம்மை

 மாரியம்மை māriyammai, பெ.(n.)

மாரியம்மன் (வின்.); பார்க்க;see {}.

     [மாரியம்மன் → மாரியம்மை.]

மாரியாத்தாள்

 மாரியாத்தாள் māriyāttāḷ, பெ.(n.)

மாரியம்மன் (இ.வ.); பார்க்க;see {}.

     [மாரியம்மன் → மாரியாத்தாள். அம்மன் → அம்மா → ஆத்தா (கொ.வ.);.]

மாரியான்பாரை

 மாரியான்பாரை māriyāṉpārai, பெ. (n.)

ஒரு வகை மீன்:

 horse malkerel.

     [மாரியான்+பாரை]

மாரியாயி

 மாரியாயி māriyāyi, பெ.(n.)

மாரியம்மன் (இ.வ.); பார்க்க;see {}.

     [மாரியம்மன் → மாரியாயி. அம்மன் → அம்மா → ஆயி (இ.வ.);.]

மாரியுள்ளான்

 மாரியுள்ளான் māriyuḷḷāṉ, பெ.(n.)

   உள்ளான் வகை; common snipe, Gallingo scopacinus, as a bird of cold water (m.m.);.

     [மாரி + உள்ளான்.]

     [p]

மாரிழவு

 மாரிழவு māriḻvu, பெ.(n.)

   இழவில் மாரடித்துக் கொள்ளுகை (வின்.);; bewailing the dead by beating one’s breast.

     [மார் + இழவு.]

மாரிவலை

 மாரிவலை mārivalai, பெ.(n.)

   மீன் பிடிக்க உதவும் வலையின் பெயர்; a kind of fishing net.

     [மாரி + வலை.]

மாரிவெண்கோ

மாரிவெண்கோ māriveṇā, பெ.(n.)

   ஒளவையாரால் பாடப்பெற்ற சேரவரசன்; a Chera king, praised by Avvaiyar.

     “மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது” (புறநா.367, அடிக்குறிப்பு.);.

மாரீசன்

மாரீசன் mārīcaṉ, பெ. (n.)

   இராமாயணத்தில் இராவணன் ஏவலாற் பொன்மானுருக் கொண்ட அரக்கன்; a {}, who, in the guise of a golden deer and at {} instigation, enticed {} away from his hermitage.

     ‘இந்திய மடக்கி நின்ற மாரீச னிருக்கை சேர்ந்தான்’ (கம்பரா. மாரீச. 169.);.

     [Skt. {} → த. மாரீசன்.]

மாரீசம்

மாரீசம் mārīcam, பெ. (n.)

   1. ஏய்ப்பு, வஞ்சகம் (வின்.);; hypocrisy, dissimulation.

   2. மூர்ச்சை (இராசவைத்.103);; swoon.

     [Skt. {} → த. மாரீசம்.]

மாருசி

மாருசி mārusi, பெ.(n.)

மிளகு (இராசவைத். அரும்.பக்.92); பார்க்க;see {}.

மாருதகணம்

 மாருதகணம் mārudagaṇam, பெ. (n.)

   தேமாங்கனி என்னும் வாய்பாடு பற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத் தகாததும் அமங்கலமுமான செய்யுட்கணம். (திவா.);; metrical foot of {} and one nirai (two);, as {}, considered inauspicious at the commencement of a poem.

மாருதன்

மாருதன் mārudaṉ, பெ. (n.)

   காற்றுக்கடவுள்;{}, the God of wind.

     “மாருத னிசைந்து … தேரின் மீமிசைப் பாய்ந்து” (கந்தபு. படையெ.2);

     [Skt. {} → த. மாருதன்.]

மாருதம்

மாருதம் mārudam, பெ. (n.)

   காற்று (பிங்.);; wind.

     ‘மறிகடலு மாருதமும்’ (திவ். இயற்.1, 10);.

     [Skt. {} → த. மாருதம்.]

மாருதி

மாருதி mārudi, பெ. (n.)

   1. அனுமான்; Hanuman, as a son of the wind-god.

     ‘மாருதியல்ல னாகி னீயெனு மாற்றம் பெற்றேன்’ (கம்பரா.அங்கத.13);.

   2. வீமன் (பிங்);;{},

 as a son of the wind-god.

     [Skt. {} → த. மாருதி.]

மாரெரிச்சல்

 மாரெரிச்சல் mārericcal, பெ.(n.)

   செரியாமையாலுண்டாகும் மார்பெரிச்சல் நோய் (M.L.);; heart burn, chest burn due to indigesting food.

     [மார் + எரிச்சல்]

மாரோடம்

மாரோடம் mārōṭam, பெ.(n.)

   செங்கருங்காலி; red catechu.

     “ஆய்பூந் தில்லையு மணிமாரோடமும்” (பெருங். உஞ்சைக்.50, 31);.

மார்

மார்1 mār, பெ.(n.)

   1. மார்பு, 1, 2 பார்க்க;see {}.

     “இப்பாதகன் மாரினெய் வனென்று” (கம்பரா.இராவணன்வதை.192);.

   2. நான்கு முழவளவான நீட்டலளவை; measure of the distance between the tips of the middle fingers when the arms are outstretched = 1 fathom = 4 cubits = 2 yards.

     [முல் (பொருந்தற் கருத்துவேர்); → மல் → மர் → மரு. மருவுதல் = கலந்திருத்தல், தழுவுதல், பயிலுதல், புணர்தல். மரு → மருமம் = தழுவும் மார்பு, உயிர்நாடியான உறுப்பு, உடம்பு, மறை பொருள். மரு → மார் (வே.க.4:39);.]

 மார்2 mār, பெ.(n.)

   1. ஓர் அசை (தொல். எழுத்து.186);; an expletive.

   2. பல்லோர் படர்க்கை விகுதியுள் ஒன்று (தொல்.சொல்.209);; a plural ending of verbs in the third person.

   3. ஒரு வியங்கோள் விகுதி (நன்.);; honorific termination in the optative mood.

   4. ஒரு பன்மை விகுதி; a plural ending of nouns,

     ” தாய்மார் மோர் விற்கப் போவர்” (திவ்.பெரியாழ்.3, 1, 9);.

     [முல் (இளமைக் கருத்துவேர்); → முள் → மள் → மழ → மக = இளமை, பிள்ளை, மகன் அல்லது மகள். மக → மகன் = குழந்தை, ஆண் பிள்ளை, புதல்வன், விளையாடும் பருவத்துப் பெயரீறு. மகன் → மகார் = புதல்வர், சிறு பிள்ளைகள். மகன் → மான் = ஆண்பாற் பெயரீறு. எ-டு. திருமகன் → திருமான். பெருமகன் → பெருமான். மகள் → மாள். (எ.டு); பெருமகள் → பெருமாள் → பெருமா (கொச்சை.); → வேண்மாள். மகன் → மகர் → மார் (வே.க.4:7);.]

 மார்1 mār, பெ.(n.)

   நீர்விட்டுக் கடைந்த தயிர்; buttermilk, curd diluted with water.

     “நாண் மோர் மாறும் …………. ஆய்மகள்” (பெரும்பாண். 160);.

     ‘மோரைத் தெளித்தாலும் திருமணம் (கலியாணம்); தான், முத்தைத் தெளித்தாலும் திருமணம் (கலியாணம்); தான்’ (பழ.);.

   ம. மோர்;   க. மொசரு, மசரு (தயிர்);;   து. மொசரு (தயிர்);;   குட. மோரி, கட்டிமோரி (தயிர்);;   கோத. மொசர்;துட. மொர்: பட. மொசரு (தயிர்);.

     [முள் → முளி. முளிதல் = பொங்குதல். முள் → முறு. முளி தயிர் = நன்றாய்த் தோய்ந்த தயிர். முண்டகம் = கள். (முள்); → முர → முரப்பு. முரத்தல் = புளித்தல். முர → மோர் (மு.தா.63);]

 மார்1 mār, பெ. (n.)

   நீர்விட்டுக் கடைந்த தயிர்; buttermilk, curd diluted with water.

     “நாண் மோர் மாறும் …………. ஆய்மகள்” (பெரும்பாண். 160);.

     ‘மோரைத் தெளித்தாலும் திருமணம் (கலியாணம்); தான், முத்தைத் தெளித்தாலும் திருமணம் (கலியாணம்); தான்’ (பழ.);.

   ம. மோர்;   க. மொசரு, மசரு (தயிர்);;   து. மொசரு (தயிர்);;   குட. மோரி, கட்டிமோரி (தயிர்);;   கோத. மொசர்;துட. மொர்: பட. மொசரு (தயிர்);.

     [முள் → முளி. முளிதல் = பொங்குதல். முள் → முறு. முளி தயிர் = நன்றாய்த் தோய்ந்த தயிர். முண்டகம் = கள். (முள்); → முர → முரப்பு. முரத்தல் = புளித்தல். முர → மோர் (மு.தா.63);]

மார்கழி

மார்கழி mārkaḻi, பெ. (n.)

   சிலைத் திங்கள் சூரிய மாதம் பன்னிரண்டுள் ஒன்பதாவது; the ninth solar month = December – January.

     “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்’ (திவ். திருப்பா..1);

     [Skt. {} → த. மார்கழி.]

மார்கோல்தண்டு

 மார்கோல்தண்டு mārāltaṇṭu, பெ.(n.)

   கடலில் மரக்கலத்தைத் திருப்ப ஏதுவாகும் துடுப்பு (தஞ்சை.மீனவ.);; a paddle to which turn the boat.

     [மார்கோல் + தண்டு.]

மார்க்கடம்

மார்க்கடம் mārkkaḍam, பெ. (n.)

   குரங்குக் கூட்டம்; crowd of monkeys.

     “மார்க்கடஞ் சூழ்ந்த வைப்பின்” (கம்பரா. விபீடண.132);.

மார்க்கட்டி

 மார்க்கட்டி mārkkaṭṭi, பெ.(n.)

   மார்பில் வரும் புண் (M.L.);; abcess in the breast, cancer of the breast.

     [மார் + கட்டி.]

மார்க்கட்டு

மார்க்கட்டு1 mārkkaṭṭu, பெ.(n.)

   1 மார்பின் உறுதியமைப்பு; healthy development of the chest.

   2. மார்புக் கச்சை (இ.வ.);; bodice.

     [மார் + கட்டு.]

 மார்க்கட்டு2 mārkkaṭṭu, பெ.(n.)

   மார்பின் குறுக்கேயிடும் வேட்டிக் கட்டு (இ.வ.);; fastening of a cloth over the chest.

     [மார் + கட்டு.]

     [p]

மார்க்கணன்

 மார்க்கணன் mārkkaṇaṉ, பெ.(n.)

   இரப்போன் (வின்.);; mendicant, begger.

மார்க்கணம்

மார்க்கணம் mārkkaṇam, பெ.(n.)

   1. அம்பு (உரி.நி.);; arrow.

   2. இரப்பு; asking, begging.

   3. தேடுகை (வின்.);; search, inquiry.

மார்க்கண்டன்

மார்க்கண்டன் mārkkaṇṭaṉ, பெ.(n.)

   என்றென்றும் பதினாறகவை யுடையானா யிருக்குமாறு வரம் பெற்ற ஒரு முனிவன் (கந்தபு.மார்க்கண்.252);; a sage blessed with the boon of eternal youth of sixteen years.

மார்க்கண்டம்

மார்க்கண்டம்1 mārkkaṇṭam, பெ.(n.)

மார்க்கண்டவெலும்பு பார்க்க; see {}.

     [மார் + கண்டம்.]

 மார்க்கண்டம்2 mārkkaṇṭam, பெ.(n.)

   1. மார்புப் பகுதி; breast, chest.

     “மார்க்கண்டந் துடிக்குதிங்கே மணவாளன் மாண்பிருக்க” (கோவ.க.);.

   2. மாரின் கறி; flesh of the chest.

     [மார் + கண்டம்.]

மார்க்கண்டவெலும்பு

 மார்க்கண்டவெலும்பு mārkkaṇṭavelumbu, பெ.(n.)

   மார்பெலும்பு; breast bone, sternum.

     “அவனுக்கு மார்க்கண்ட வெலும்பு தெரிகின்றது” (உ.வ.);.

     [மார்க்கண்டம் + எலும்பு.]

மார்க்கண்டவைத்தியன்

 மார்க்கண்டவைத்தியன் mārkkaṇṭavaittiyaṉ, பெ.(n.)

   போலி வைத்தியன் (இ.வ.);; quack doctor.

மார்க்கண்டி

மார்க்கண்டி1 mārkkaṇṭi, பெ.(n.)

   மாரெலும்பு; sternum.

 மார்க்கண்டி2 mārkkaṇṭi, பெ.(n.)

மார்க் கண்டன் பார்க்க; see {}.

     “உலந்த மார்க்கண்டிக்காகி யக்காலனை யுதை கொண்ட” (திருவிசைப். திருவாலி. கோயில். 2, 3);.

மார்க்கண்டேயனார்

மார்க்கண்டேயனார் mārkkaṇṭēyaṉār, பெ.(n.)

   தலைக் கழகத்திருந்தவருள் ஒருவராகக் கருதப்படுபவரும் புறநானூற்றின் 365-ஆம் பாட்டியற்றியவருமாகிய புலவர்; a poet ascribed to the first {}, author of the 365th verse in {}.

மார்க்கண்டேயன்

மார்க்கண்டேயன் mārkkaṇṭēyaṉ, பெ.(n.)

மார்க்கண்டன் பார்க்க;see {}.

     “தொழுதெழு மார்க்கண்டேயன்” (தேவா. 42, 1);.

மார்க்கண்டேயபுராணம்

 மார்க்கண்டேயபுராணம் mārkkaṇṭēyaburāṇam, பெ.(n.)

   பதினெண் தொன்மத்து ளொன்று; a chief {}, one of {}.

மார்க்கண்டேயம்

 மார்க்கண்டேயம் mārkkaṇṭēyam, பெ.(n.)

மார்க்கண்டேயபுராணம் (அபி.சிந்.); பார்க்க;see {}.

மார்க்கபம்

 மார்க்கபம் mārkkabam, பெ.(n.)

   மார்புச் சளி; phlegm in the chest.

     [மார் + கபம்.]

மார்க்கம்

மார்க்கம் mārkkam, பெ. (n.)

   1. வழி (பிங்.);; road, path, way, orbit.

   2. நெடுந்தெரு (பிங்.);; street, long street.

   3. ஒழுங்கு (உ.வ..);; regularity, order .

   4. முறை; manner.

     ‘இன் னுயிர் போமார்க்கம்’ (நாலடி, 323);.

   5. ஒழுக்கம் (வின்.);; conduct, behaviour, course of duty.

   6. சமயம் (பிங்);; religion.

   7. மூலம்; first principle, cause.

   8. குலம்; Lineage, line of family

அவன் வேரற மார்க்க முடித்த விலாளிகள் நாயகன்’ (திருப்பு. 266.);.

   9. மறுதலை. (அக.நி.);; alternative.

   10. ஆராய்ச்சி (யாழ்.அக.);; investigation.

   11. வழி; ways, means.

     ‘மார்க்கமொன்றறிய மாட்டா மனிசரிற் றுரிசனாய மூர்க்கனேன்’ (திவ். திருமாலை, 32.);

   12. மார்கழி. பார்க்க;see {}.

   13. மான்மணத்தி. (யாழ். அக.);; musk.

   14. அகப்பொருட்டுறை. (இலக். வி. 583. உரை.);; theme of love poetry.

   15. கூத்து வகை. (பிங்.);; a kind of dance.

   16. தாள வகையுள் ஒன்று (சது);; an element of time-measure, one of ten {}.

   17. குதிரையடி நிலை; pace of horse.

     ‘பரிப்புரவி மார்க்கம் வருவார்.’ (பரிபா. 9, 51.);

   உலகம்(யாழ். அக.);; world.

     [Skt. {} → த.மார்க்கம்.]

மார்க்கல்

 மார்க்கல் mārkkal, பெ.(n.)

   ஒரு வகை மாக்கல்; a kind of soft stone.

     [மாக்கல் → மார்க்கல் (கொ.வ.);]

மார்க்கவம்

 மார்க்கவம் mārkkavam, பெ.(n.)

   கையாந்தகரை (தைலவ.தைல.);; a plant found in wet places.

மார்க்குழி

 மார்க்குழி mārkkuḻi, பெ.(n.)

மார்புக்குழி பார்க்க;see {}.

     [மார்பு + குழி.]

மார்க்கூடு

 மார்க்கூடு mārkāṭu, பெ.(n.)

   மார்பெலும்புக் கூடு; ribs, as enclosing the chest.

     [மார் + கூடு.]

     [p]

மார்க்கூடுபின்னுதல்

மார்க்கூடுபின்னுதல் mārkāṭubiṉṉudal, பெ.(n.)

   1. மார்க்கூடு சதைப் பற்றின்றி எலும்பு மயமாயிறுகித் தட்டையா யிருக்கை (M.L.);; ossification of costal cartilages of ribs and consequent flattening and rigidity of the chest-wall.

   2. உடல் மெலிவால் மார்பெலும்பு வெளித் தோன்றுகை; projection of breast bones outward on account of emaciation of the body.

     [மார்க்கூடு + பின்னுதல்.]

மார்ச்சலம்

 மார்ச்சலம் mārccalam, பெ.(n.)

   மார் நீர்க்கோவை; bronchial catarrh or cold in the chest.

     [மார் + Skt. சலம்.]

மார்ச்சாலநியாயம்

 மார்ச்சாலநியாயம் mārccālaniyāyam, பெ.(n.)

   ஒரு தலை சார்பான முடிவு (வின்.);; biassed judgment, as that of a cat.

     [Skt. {} → த. மார்ச்சாலநியாயம்.]

மார்ச்சாலம்

மார்ச்சாலம் mārccālam, பெ. (n.)

   1. பூனை; cat.

   2. கோமேதகம்; a gem, cat’s eye – cinnamon stone.

   3. மரநாய்; pole, cat or palmyra dog. (சா.அக.);.

     [Skt. {} → த. மார்ச்சாலம்.]

மார்ச்சிரங்கு

 மார்ச்சிரங்கு mārcciraṅgu, பெ.(n.)

மார்ச்சிலந்தி பார்க்க (M.L.);;see {}.

     [மார்ச்சிலந்தி → மார்ச்சிரங்கு.]

மார்ச்சிலந்தி

 மார்ச்சிலந்தி mārccilandi, பெ.(n.)

   முலைப்பக்கத் துண்டாகும் புண்;  mammary abscess.

     [மார் + சிலந்தி.]

மார்தட்டு – தல்

மார்தட்டு – தல் mārdaṭṭudal,    4 செ.கு.வி.(v.i.)

   1. போட்டிப்போடுதல்; to challenge, to complete with.

     “அவர்களையும்…….. சிவனோட மார்தட்டுகிறார்” (திருவிருத்.96, வியா.பக். 455, அரும்.);.

   2. குறித்த துறையில் தான் மேம்பட்டவனென்பதைக் குறிப்பிக்குமாறு மார்பைத் தட்டுதல்; to boast of one’s powers in a particular line, as by striking the chest.

     ”அன்னதானத்துக்கு மார்தட்டிய துரை” (தனிப்பா.ii, 236, 4);.

   3. தற்பெருமை யடைதல்; to pride oneself.

     “நானென்று மார்தட்டும்” (திருப்பு.1223);.

     [மார் + தட்டு-.]

மார்த்தாண்டன்

மார்த்தாண்டன் mārttāṇṭaṉ, பெ. (n.)

   கதிரவன் (பிங்.);; the sun.

     ‘மார்த்தாண்டர் பன்னிருவ ருலாவல் போலும்’ (திருப்போ. சந்த ஊசல்.2.);

     [Skt. {} → த. மார்த்தாண்டன்.]

மார்த்தோல்

 மார்த்தோல் mārttōl, பெ.(n.)

   கள் இறக்கும் மரமேறிகள் மார்பிலிடுந் தோல் (இ.வ.);; toddy-drawer’s breast-leather.

     [மார் + தோல்.]

     [p]

மார்நீர்க்கோவை

மார்நீர்க்கோவை mārnīrkāvai, பெ.(n.)

   1. நுரையீரலைச் சுற்றியிருக்கும் மென்படலத்தின் இடையில் நீர் தங்குவதால் ஏற்படும் ஒருவகை நோய்; a kind of diseases affecting the memberanous coating of the lungs by causing inflammation and the collection of fluid.

   2. பக்க சூலை; pleuritic effusion.

     [மார் + நீர்க்கோவை.]

மார்நோவு

 மார்நோவு mārnōvu, பெ.(n.)

மார்வலி பார்க்க;(M.L.); see marvali.

     [மார்வலி → மார்நோவு.]

மார்பகம்

மார்பகம் mārpagam, பெ.(n.)

மார்பு பார்க்க;see {}.

     “சீதை கொண்கனைத் திருவுறை மார்பகஞ் சேர்த்தான்” (கம்பரா. அயோத்.மந்திரப்.59);.

     [மார் → மார்பம் → மார்பகம் (வே.க.4:39);.]

மார்பம்

மார்பம் mārpam, பெ.(n.)

மார்பு1, 2 பார்க்க;see {}.

     “பொன்றுஞ்சு மார்பம்” (சிலப்.19, 61);.

     [மார் → மார்பு → மார்பகம் (வே.க.4:39);.]

மார்பாணி

மார்பாணி mārpāṇi, பெ.(n.)

   1. ஒரு வகை மார்புப் புண் (வின்.);; a kind of eruption on the breast.

   2. தலைமையாணி (வின்.);; capital or principal nail, king pin.

   3. தண்டனையாக மார்பில் தைக்கும் ஆணி; nail driven into one’s chest, as a punishment.

     “எதிர்த்தவர் மார்பாணி” (தமிழ்நா.293);.

     [மார்பு + ஆணி.]

மார்பின்னுதல்

 மார்பின்னுதல் mārpiṉṉudal, பெ.(n.)

மார்க்கூடுபின்னுதல் பார்க்க (M.L.);;see {}.

     [மார்க்கூடு + பின்னுதல் → மார்பின்னுதல்.]

மார்பு

மார்பு mārpu, பெ.(n.)

   1. நெஞ்சு; bosom, breast, chest.

     “கள்ளற்றே கள்வதின் மார்பு” (குறள்,1288);.

   2. முலை (வின்.);; woman’s breast.

   3. வடிம்பு; rim, top.

     “ஏணி யெய்தா நீணெடு மார்பின்….. கூடு” (பெரும்பாண்.245);.

   4. தடாகம்; tank.

     “மார்பின்மை படி… குலவரை” (பரிபா.15, 9);.

   5. அகலம் (சது.);; breadth.

   6. மார்1 (இ.வ.); பார்க்க; see {}.

   7. கருப்பூர வகை (சிலப்.14, 109, உரை);; a kind of camphor.

ம. மார்பு

     [மருவுதல் = கலந்திருத்தல், தழுவுதல். மரு → மருமம் = தழுவும் மார்பு. மரு → மார் → மார்பு (வே.க. 4:39);.]

மார்புக்குழி

மார்புக்குழி mārpukkuḻi, பெ.(n.)

   1. மார் பெலும்பின் கீழுள்ள குழி; heart pit.

   2. நெஞ்சங்குலை உறுப்புக்களடங்கிய நெஞ்சின் அறை; thoracic cavity.

     [மார்பு + குழி.]

மார்புச்சளி

 மார்புச்சளி mārpuccaḷi, பெ.(n.)

மார்ச்சளி பார்க்க;(M.L.); see {}.

     [மார்ச்சளி → மார்புச்சளி.]

மார்புநோவு

மார்புநோவு mārpunōvu, பெ.(n.)

   1. மார்பி லுண்டாம் வலி வகை; breast-pang, angina pectoris.

   2. மார்பின் சதையி லுண்டாம் நோவு வகை; pleurodynia, pain in the chest.

     [மார்பு + நோவு.]

மார்புற

 மார்புற mārpuṟa, கு.வி.எ.(adv.)

   மார்போடு சேர்த்து; close to the chest.

     [மார்பு + உற.]

மார்புவீக்கம்

 மார்புவீக்கம் mārpuvīkkam, பெ.(n.)

   நெஞ்சு வீங்கியிருக்கை;     [மார்பு + வீக்கம்.]

மார்பூசி

 மார்பூசி mārpūci, பெ.(n.)

   மேலாடை யிலணியும் ஊசி (வின்.);; breast – pin, brooch.

     [மார்பு + ஊசி.]

மார்பெலும்பு

 மார்பெலும்பு mārpelumbu, பெ.(n.)

   நெஞ்செலும்பு;   விளா; rib.

     [மார்பு + எலும்பு.]

 மார்பெலும்பு mārpelumbu, பெ.(n.)

மார்க்கண்டவெலும்பு (வின்.); பார்க்க;see {}.

     [மார்பு + எலும்பு.]

மார்பொட்டி

 மார்பொட்டி mārpoṭṭi, பெ. (n.)

   அடையாளக் குறியுடைய முத்திரைப்பொறி; badge.

     [மார்பு+ஒட்டி]

மார்வம்

மார்வம் mārvam, பெ.(n.)

மார்பு, 1 பார்க்க;see {}.

     “கோளரியா யொண்டிறலோன் மார்வத்துகிர் வைத்தது” (திவ்.இயற்.2, 18);.

     “மைந்தர் மார்வம் வழிவந்த செந்தளிர் மேனியார் செல்ல நீர்ப்ப” (பரிபா.8:122-3);.

     [மார் → மார்பு → மார்வம்.]

மார்வலி

 மார்வலி mārvali, பெ.(n.)

மார்புநோவு (இ.வ.); பார்க்க;see {}.

     [மார் + வலி.]

மார்வாடி

 மார்வாடி mārvāṭi, பெ. (n.)

மார்வாரி பார்க்க;see {}.

மார்வாரி

 மார்வாரி mārvāri, பெ. (n.)

   வடஇந்தியா விலுள்ள மார்வார் நாட்டிலிருந்து வந்து கொடுக்கல் வாங்கல் வணிகம் முதலிய தொழில் புரியும் ஓர் இனத்தவர்; a caste of traders and money lenders, from {} in North India.

     [Skt. {} → த. மார்வாரி.]

மார்வு

மார்வு mārvu, பெ.(n.)

மார்பு, 1 பார்க்க;see {}.

     “நின்மார் விற் றார்கோலி மழை” (பு.வெ. 9, 16);.

     [மார்பு → மார்வு (கொ.வ.);]

மார்வுதட்டு – தல்

மார்வுதட்டு – தல் mārvudaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒன்று செய்ய ஊக்கத்துடன் முன் வருதல்; to be ready, to be prepared, to be eager to act.

     “இவர்களுக்கு வந்த தொன்றுக்கு அவன் மார்வு தட்டிக் கொண்டு வரும்” (ஈடு.10, 2, 1);.

     [மார்வு + தட்டு-,]

மார்வெழுத்து

மார்வெழுத்து mārveḻuttu, பெ.(n.)

   ஒருவனுக்கு அடிமை என்பதற்குக் குறியாக அவ்வடிமையின் மார்பிற் பொறிக்கப்பட்ட தலைவன் பெயர் அல்லது சூட்டுக் குறி (ஈடு.5, 10-ப்ர.);; name or mark of a lord imprinted on the breast of his slave.

     [மார்பு + எழுத்து.]

மாறனகப்பொருள்

 மாறனகப்பொருள் māṟaṉagapporuḷ, பெ.(n.)

   திருக்குருகைப் பெருமாட்கவிராயர் இயற்றிய அகப் பொருணூல்; a treatise on Agapporul by Tiru-k-kurukkai-pperuma{}.

     [மாறன் + அகப்பொருள்.]

மாறனலங்காரம்

மாறனலங்காரம் māṟaṉalaṅgāram, பெ.(n.)

   கி.பி.1525இல் திருக்குருகைப் பெருமாட் கவிராயர் இயற்றிய அணி நூல்; a treatise on poetics by Tiru-k-kurugas-p-{}, written in 1525 A.D.

     [மாறன் + அலங்காரம்.]

மாறனாடு

 மாறனாடு māṟaṉāṭu, பெ.(n.)

மாறை பார்க்க;see {}.

மாறனேரி

 மாறனேரி māṟaṉēri, பெ. (n.)

   பாண்டிய நாட்டில் உள்ள ஊர்; a village in Pandiya nadu.

     [மாறன்-ஏரி]

இவ்வூர் முற்காலத்தில் மாறமங்கலம் என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கிருந்த ஏரியின் சிறப்பால் மாறனேரியாயிற்று என்பர்.

மாறன்

மாறன்1 māṟaṉ, பெ.(n.)

   1. வலிய பாண்டியன்;{} king.

     “பூந்தார் மாற” (புறநா.55);.

   2. சடத்திற்கு மாறான நம்மாழ்வார் (சகோபன்);; a {} saint.

     [மாறு → மாறன் (வே.க.4:78);.]

 மாறன்2 māṟaṉ, பெ.(n.)

மாற்றான், 1 பார்க்க;see {}.

     “வல்வினைக்கோர் மாறன்” (திருவரங்கத்தந்.காப்.5);.

     [மாறு → மாறன். மாறு = பகை.]

மாறன்எயினான்

 மாறன்எயினான் māṟaṉeyiṉāṉ, பெ.(n.)

   மாறன்காரி என்ற பாண்டிய அமைச்சரின் தம்பி (சி.பெ.அக.);; brother of {}, a minister in {} kingdom.

     [மாறன் + எயினாள்.]

மாறன்காரி

 மாறன்காரி māṟaṉkāri, பெ.(n.)

   நெடுஞ் சடையன் பராந்தகனின் அமைச்சர்; a minister in the court of {}.

மாறன்சடையன்

 மாறன்சடையன் māṟaṉcaḍaiyaṉ, பெ.(n.)

   வரகுண பாண்டியனின் வேறுபெயர்; other name of {}.

மாறன்பொறையனார்

 மாறன்பொறையனார் māṟaṉpoṟaiyaṉār, பெ.(n.)

   பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பது என்னும் நூலின் ஆசிரியர்; author of Aindinai-Aymbadu classified in {}.

மாறல்

மாறல் māṟal, பெ.(n.)

   மூலக்கரணியம் (வின்.);; reason, cause.

     [மாறு → மாறல் (வே.க.4:78);.]

மாறல்சுரம்

மாறல்சுரம் māṟalcuram, பெ.(n.)

   காய்ச்சல் வகை (தஞ்சை.சர.11, 307);; a kind of fever (சா.அக.);.

     [மாறு → மாறல் + சுரம்.]

மாறவச்சிரம்

 மாறவச்சிரம் māṟavacciram, பெ.(n.)

   வஞ்சிரக்கல்; diamond (சா.அக.);.

மாறவர்மன் அரிகேசரி

 மாறவர்மன் அரிகேசரி māṟavarmaṉariācari, பெ.(n.)

   சுந்தரபாண்டியன் என்ற பெயரில் அரசாண்ட பாண்டிய மன்னன்; a pandya king who ruled at Madurai with the title Sundara {}.

இவன் தந்தை சேந்தன் செழியன், கூன் பாண்டியன் என்று பெயரும் கூன் மாறிய பின் நின்ற சீர் நெடுமாறன் என்ற பெயரும் கொண்டவன். சமண சமயத்தைச் சேர்ந்தவன். தனக்கு வந்த வெப்பு நோயைத் தீர்க்க முடியாமையால், தனக்கு மருத்துவம் பார்த்த எண்ணாயிரம் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு சில சமணரைக் கழுவிலேற்றியவன். பின்னர் சமணத்தை மறந்து, ஞானசம்பந்தரின் வரவால் சைவ சமயத்தைத் தழுவியவன். அதற்கு உறுதுணையாக அவனது மனைவி சோழன் மகள் மங்கையர்க்கரசியும் அவனது அமைச்சர் குலச்சிறையாரும் இருந்தார்கள்.

மாறவர்மன்அவனிசூளாமணி

 மாறவர்மன்அவனிசூளாமணி māṟavarmaṉavaṉicūḷāmaṇi, பெ.(n.)

   பாண்டியன் கடுங்கோனுடைய மகன்; son of {}.

மாறாக

மாறாக māṟāka, வி.அ.(adj.)

   1. எதிரான வகையில்;חס the contrary.

   2. எதிர்பார்த்தற்கு வேறான வகையில்; on different one.

     [மாறு = எதிர். மாறு → மாறாக..]

மாறாசநீர்

 மாறாசநீர் māṟācanīr, பெ.(n.)

   வடபுல நீர்; the water of the northern region (சா.அக.);.

மாறாடி

 மாறாடி māṟāṭi, பெ.(n.)

   புரட்டன் (வின்.);; cheat, swindler.

     [மாறு → மாறாடி.]

மாறாடு

மாறாடு1 māṟāṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. உருவம் முதலியன மாறுதல்; to change, vary, as from.

     “ஒருவடி வுற்றது மாறாடுறுகாலை” (கம்பரா.முதற்போர்.179);

   2. தடுமாறுதல்; to waver in mind.

     “மாறாடுதி பிண நெஞ்சே” (திருவாச.5, 32);.

   3. மாறிப் புகுதல்; to change places with one another.

     “விடலை யொடுநெஞ்சு மாறாடி” (பெருங். மகத.6, 76);.

     [மாறு → மாறாடு-,]

 மாறாடு2 māṟāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. எதிர்த்து நிற்றல் (இ.வ.);; to oppose.

   2. புரட்டுதல் (வின்.);; to derange, invert.

     “அவன் அதை மாறாடப் பார்க்கிறான்” (உ.வ.);

     [மாறு → மாறாடு-,]

மாறாட்டம்

மாறாட்டம்1 māṟāṭṭam, பெ.(n.)

   தவறு; error.

     “பார்வை மாறாட்ட மின்றி” (மகாராசதுறவு.54);.

     [மாறு → மாறாட்டம்.]

 மாறாட்டம்2 māṟāṭṭam, பெ.(n.)

   1. மாற்றுகை; changing.

   2. புரட்டு; fraud, trickery, cheating, swindling.

   3. தடுமாற்றம்; stumbling, stuttering halting.

   4. பித்து (வின்.);; craziness, aberration of mind.

     [மாறு + மாறாட்டம்.]

மாறாட்டு

 மாறாட்டு māṟāṭṭu, பெ.(n.)

மாறாட்டம் பார்க்க;see {}.

     [மாறாட்டம் → மாறாட்டு.]

மாறாநீர்

மாறாநீர் māṟānīr, பெ.(n.)

   கடல்; sea, ocean.

     “மாறாநீர் வையக்கணி” (குறள், 707, மணக்.);.

மாறாப்பு

மாறாப்பு māṟāppu, பெ.(n.)

   1. முந்தானையைத் தோள்களில் மாறியிடுகை; throwing the upper garment across the shoulder, in dressing.

   2. மாராப்பு, 1 பார்க்க;see {}.

     [மாராப்பு → மாறாப்பு.]

மாறாப்புணர்ச்சி

 மாறாப்புணர்ச்சி māṟāppuṇarcci, பெ.(n.)

   இடைவிடாத நுகர்ச்சி; indulgence without interval.

     [மாறா + புணர்ச்சி.]

மாறாப்புமாலை

 மாறாப்புமாலை māṟāppumālai, பெ.(n.)

   தோள்களில் மாறிக் குறுக்காக இடும் மாலை (நெல்லை.);; garland worn across the shoulders.

     [மாறாப்பு + மாலை.]

மாறாயம்

மாறாயம் māṟāyam, பெ. (n.)

   பெண் பூப் படைந்த செய்தியைத் தாய்மாமனுக்குத் தூதாகச் சென்று சொல்வது; informing maternal uncle about the attainment of puberty (கொ.வ.வ.சொ.123);.

     [மாறு+ஆயம்]

மாறி

மாறி māṟi, பெ.(n.)

   1. பண்டமாற்றுவோன் (வின்.);; one who barters goods.

   2. இரண்டகஞ் செய்வோன் (வின்.);; double – dealing person.

   3. பொன்மாற்று; degree of fineness of gold.

     “திருக்கண்மலர் இரண்டு ஒன்பது மாறி” (S.I.I.ii, 339);.

     [மாறு → மாறி. மாறு = விற்றல், பொய்படுதல்.]

மாறிக்காண்(ணு) – தல்

மாறிக்காண்(ணு) – தல் māṟikkāṇṇudal,    16 செ.குன்றாவி.(v.t.)

   பெருக்குதல் (இ.வ.);; to multiply.

     [மாறி + காண்-.]

மாறிப்போடு – தல்

மாறிப்போடு – தல் māṟippōṭudal,    19 செ. குன்றாவி..(v.t.)

   மாற்றுதல் (வின்.);; to change

     [மாறு → மாறி + போடு-.]

மாறிமாறி

மாறிமாறி māṟimāṟi, பெ.(n.)

   1. முதலில் ஒன்று பிறகு மற்றொன்று என்ற முறையில் மீண்டும் தொடர்ந்து, அடுத்தடுத்து; alternately, one and then the other.

   2. மீண்டும் மீண்டும், திரும்பத் திரும்ப; again and again, repeatedly.

     [மாறி + மாறி. மாறு → மாறி.]

மாறியடி

மாறியடி1 māṟiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   காற்றுத் திருப்பி வீசுதல் (வின்.);; to whiffle, shift about, as wind.

     [மாறு → மாறி + அடி-.]

 மாறியடி2 māṟiyaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஏவினவனையே பேய் திருப்பித் தாக்குதல் (இ.வ.);; to return and attack, as a devil, the very person who incited it.

     [மாறு → மாறி + அடி-,]

மாறியாடு – தல்

மாறியாடு – தல் māṟiyāṭudal,    4 செ.கு.வி. (v.i.)

   காலை மாற்றி நடனமாடுதல்; to change the leg in dancing, as {} at Madurai.

     “கூத்தனார்…… மாறி யாடினார்” (திருவாலவா. 52, 13);.

     [மாறு → மாறி + ஆடு-,]

மாறிருமார்பினள்

 மாறிருமார்பினள் māṟirumārpiṉaḷ, பெ.(n.)

   திருமகள் (பிங்.);; Tirumagal.

     [மால் + திருமார்பினள்.]

மாறிவிழு – தல்

மாறிவிழு – தல் māṟiviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. தலைகீழாய் விழுதல்; to fall headlong.

   2. பேச்சு முன்னுக்குப் பின் முரண்படுதல்; to inconsistent.

     [மாறு → மாறி + விழு-,]

மாறு

மாறு1 māṟudal,    5 செ.கு.வி.(v.i)

   1. வேறுபடுதல்; to become changed, exchanged, altered, reversed.

     “மாறா மனங்கொண்டு” (திருநூற்.47);.

   2. பின் வாங்குதல்; to withdraw.

     “சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை” (பெரும்பாண்.136);.

   3. குணமாதல்; to be cured.

     “நோய் இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது” (உ.வ.);.

   4. இருப்பிடம் வேறுபடுதல் (இ.வ.);; to have a change of residence.

   5. நீங்குதல்; to cease, as from sleep.

     “உறக்கம் மாறினான்” (கம்பரா. ஆறுசெ.7);.

   6. முதுகிடுதல்; to retreat, as showing one’s back.

     “மாறாமைந்தின்” (மலைபடு.332);.

   7. கூத்தாடுதல்; to dance.

   8. இறத்தல்; to die.

     “இவ்வான் மாக்கள் மாறிப் பிறந்துவரும்” (சி.போ.சிற்.2, 3, பக்.47);.

   9. இல்லையாதல்; to be non-existent.

     “பரப்புமாறப் பூத்துக்குளிர்ந்த புனலை” (ஈடு.2, 8, 2);.

   10. பொய்படுதல்; to become false.

     “நாவிற் புனைந்த நன்கவிதை மாறாமை மேவி” (பரிபா.6, 8);.

   11. சரிப்படுதல்; to be corrected in state, place, form or appearance.

க. மாறு.

     [முல் (வளைதற் கருத்துவேர்); → முர் → முரு → முருகு = பிறைபோல் வளைந்த காதணி. முரு → முரி. முரிதல் = வளைதல், வளைந்து ஒடிதல், கெடுதல், தோல்வியுறுதல், சிதறுதல், தளர்தல், தவறுதல், நீங்குதல், நிலை கெடுதல், குணங் கெடுதல். முரி = வளைவு, துண்டு, முழுதிற் குறைவானது, எழுதிய ஒலை நறுக்கு, இசைப்பாவில் இறுதிப் பகுதி, முறிவு = மடிப்பு, சுருக்கை. முரு → முறு → முறுகு. முறுகுதல் = திருகுதல், விரைதல், முதிர்தல். முறு → முற்று. முற்றுதல் = சூழ்தல், கோட்டையைச் சூழ்ந்து பொருதல், முறு → மறு. மறுத்தல் = திருப்புதல், திரும்பச் செய்தல், மாற்றுதல், தடுத்தல், நீக்குதல், தடை கூறுதல், இல்லையென்னுதல். மறு → மாறு – (வே.க.4:71);.]

 மாறு2 māṟudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   1. விற்றல்; to sell, to exchange, as goods, barter.

     “நாண்மோர் மாறும்” (பெரும்பாண். 160);.

   2. பணிசெய்தல்; to comply with, as an order.

     “முன்னின பணிமுறை மாற முந்துவார்” (கம்பரா.ஊர்தேடு.49);.

   3. கைவிடுதல்; to forsake, cease to support.

     “புரிபுநீ புறமாறி” (கலித்.15);.

   4. பிறனுக்குதவுதல்; to give, or render help.

     “பனவனுக்காப் பாமாறியார்க்கு” (குமர.பிர.மீனாட்.இரட்5);.

   5. கழித்தல்; to remove, caste away.

     “மாறுமென் மலரும்” (பரிபா.6, 46);.

   6. மறுத்தல் (யாழ்ப்.);; to deny.

   7. எண் பெருக்குதல்; to multiply.

     “ஜம்பாலும் பொதுவுமான ஆளானும் மாற நூற்றெட்டாம்” (நன்.269, மயிலை);.

   8. அடித்தல் (இ.வ.);; to belabour, thrash.

     [மறு → மாறு-, (வே.க.4:78);]

 மாறு3 māṟu, பெ.(n.)

   1. வேறுபாடு; mutation, change.

     “மாறிலாத மாக்கருணை வெள்ளமே” (திருவாச.5, 91);.

   2. எதிர்; contradiction.

     “அவன் எதற்கும் மாறாயிருக்கிறான்” (உ.வ.);

   3. பகை; enmity, hostility.

     “மாற்றிரு வேந்தர்” (புறநா.42);.

   4. ஒவ்வாதது; anything which disagrees or is unsuitable.

     “மாறல்ல துய்க்க” (குறள், 944);.

   5. ஒப்பு; similarity, equality.

   6. மாற்றுருப்படி; change or substitute, as of garment, alternative.

     “மாறுசாத்தி யென்பிழை பொறுப்பீர்” (பெரியபு. அமர்நீதி. 24);.

     “ஈதலான் மாறு வேறுண்டோ” (கம்பரா.உருக்கா.24);.

   7. கைம்மாறு; recompense, return.

     “வழக்கொடு மாறுகொளன்று” (திவ்.இயற். பெரிய. திருவந்:13);.

   8. மறுமொழி (உத்தரம்);; reply.

     “மாறெதிர் கூறி மயக்குப்படுகுவாய்” (கலித்.116, 15);.

   9. இம்மை நீங்கும் இறப்பு; death.

     “நகாஅ லென வந்தமாறே” (புறநா. 273);.

   10. இறப்பின் பின் பிறப்பு; birth.

     “மாற்றிடைச் சுழலு நீரார்” (மேருமந்.136);.

   11. குப்பை கூளம் நீக்கும் துடைப்பம்; broom.

     “சல்லிகளை மாறெடுத்துத் தூர்த்தும்” (பணவிடு.285);.

   12. துடைப்பம் போலுதவும்

   பருத்தி முதலியவற்றின் தூறு; dried stock, as of cotton plant.

   13. தூறு போன்றமிலாறு; twing or branch without leaves.

   14. வளாறு போன்ற பிரம்பு; rattan.

     “மாற்றாலாற்றப் புடையுண்டும்” (சீவக.2794);.

   15. மாறுதல் நேரும் வகை; manner, method.

     “விளங்கக் கேட்ட மாறு கொல்” (புறநா.5);.

க. மாறு.

     [முல் (வளைதற் கருத்து வேர்); → முர்- → முரு → முறு → மறு → மாறு.]

 மாறு4 māṟu, இடை.(part.)

   1. காரணப் பொருளுணர்த்தும் ஓரிடைச் சொல் (தொல். சொல்.252, உரை);; a suffix meaning cause.

   2. தொறுப் பொருளில் வரும் ஓர் இடைச் சொல்; an adverbial suffix meaning continuity.

     “பகல்மாறு வருகிறான்” (உ.வ.);.

     [மறு → மாறு.]

மாறுகண்

மாறுகண் māṟugaṇ, பெ.(n.)

   கோணல் (வக்கிரக்); கண்; squint eye.

     “மாறு கண்ணாகியு மிருந்திடில்” (காசிக. மகளிர். 50);.

     [மாறு + கண்.]

மாறுகம்

மாறுகம் māṟugam, பெ.(n.)

   சீலை (சது.);; cloth.

மாறுகால்

__,

பெ.(n.);

   1. தேசிக் கூத்திற்குரிய கால் வகை (சிலப்.3, 16, உரைக்கீழ்க் குறிப்பு, பக்.90);; a leg-pose in tech-k-{}.

   2. ஒரு கைக்கு எதிர்த் திசையில் உள்ள கால்; opposite direction of leg to one side hand.

     [மாறு + கால்.]

மாறுகாலம்

 மாறுகாலம் māṟukālam, பெ.(n.)

   பெண்ணின் மாதவிடாய் நிற்பாடு; meno pause (சா.அக.);.

     [மாறு + காலம்.]

மாறுகால்மாறுகை

 மாறுகால்மாறுகை māṟugālmāṟugai, பெ.(n.)

   ஒரு பக்கத்துக் கையும் மறு பக்கத்துக் காலும்; one hand and opposite direction of the leg.

மாறுகால்மாறுகைவாங்கு – தல்

மாறுகால்மாறுகைவாங்கு – தல் māṟugālmāṟugaivāṅgudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஒரு பக்கத்துக் கையையும் மறு பக்கத்துக் காலையும் தண்டனையாக வெட்டுதல்; to cut off a leg and a hand on the opposite sides of a person’s body, by way of punishment.

     [மாறுகால் + மாறுகை + வாங்கு-,]

மாறுகூலி

 மாறுகூலி māṟuāli, பெ.(n.)

   மரமேறுவார் பெறுங் கூலி; wages paid to climbers of palm trees.

மாறுகொளக்கூறல்

மாறுகொளக்கூறல் māṟugoḷagāṟal, பெ.(n.)

   நூற்குற்றம் பத்தனுள் முன்னொடு பின் முரணாகக் கூறும் குற்றவகை (நன்.12);; inconsistency in statements, one of ten {}.

     [மாறுகொளல் + கூறல்.]

மாறுகொள்(ளு) – தல்

மாறுகொள்(ளு) – தல் māṟugoḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   பண்டமாற்றாகக் கொள்ளுதல்; exchange the things.

     [மாறுபடு → மாறுகொள்.]

மாறுகொள்ளாவுணவு

 மாறுகொள்ளாவுணவு māṟugoḷḷāvuṇavu, பெ.(n.)

   மாறுபாடில்லா உணவு; not in compatible diet.

     [மாறுகொள்ளா + உணவு.]

மாறுகோள்

மாறுகோள் māṟuāḷ, பெ.(n.)

   1. மாறுபாடு பார்க்க;see {}.

     “இது மாறுகோளுறை” (சி.போ.பா.பக்.11, சுவாமிநா.);.

   2. மாறுபாடு, 3 பார்க்க;see {}.

     “மூவகை மாறு கோளும் இல்லாத உணவை” (குறள், 945, உரை);.

     [மாறுகொள் → மாறுகோள்.]

மாறுதண்டு

 மாறுதண்டு māṟudaṇṭu, பெ.(n.)

   தோணியின் வலப்பக்கத்தே வலிக்கப்படும் துடுப்பு; drive the left side of boat.

     “மாறுதண்டு ஏலேலோ” (நாட்டார் பாடல்);.

     [மாறு + தண்டு.]

மாறுத்தரம்

 மாறுத்தரம் māṟuttaram, பெ.(n.)

   மறுமொழி (வின்.);; answer, reply.

மாறுபடப்புணர் – தல்

மாறுபடப்புணர் – தல் māṟubaḍabbuṇartal,    2 செ.குன்றாவி.(v.t.)

   சரி நுகர்ச்சி விளையும்படி செய்யாமல் புணருதல்; without mutual satisfaction, coitous.

     [மாறுபடல் + புணர்-.]

மாறுபடு – தல்

மாறுபடு – தல் māṟubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. மாறிப்போதல் (சங்.அக.);; to be changed.

   2. முரணுதல்; to be opposed, to disagree, differ, to be discordant, to be in contrst.

   3. பகைமை கொள்ளுதல்; to be inimical.

     “மாறுபட்டஞ்சென்னை வஞ்சிப்ப” (திருவாச.6, 11);.

     [மாறு + படு-,]

மாறுபடுபுகழ்நிலை

மாறுபடுபுகழ்நிலை māṟubaḍubugaḻnilai, பெ.(n.)

   சொல்லக் கருதிய பொருளை விடுத்து அதனைப் பழிக்கும் பொருட்டு வேறொன்றை வெளிப்படையாகப் புகழும் அணி வகை (தண்டிபொருள். 28);;     [மாறுபடு + புகழ்நிலை.]

     “கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை” (தண்டிபொருள்.28);.

புலவர் தான் கருதிய பொருளை மறைத்து அதனைப் பழித்தற்கு வேறொன்றினைப் புகழ்வது மாறுபடு புகழ்நிலை என்னும் அணியாகும்.

     “இரவறியா யாவரையும் பின்செல்லா நல்ல தருநிழலுந் தண்ணீரும் புல்லும் – ஒருவர் படைத்தனவுங் கொள்ளாவிப் புள்ளிமான் பார்மேற் என வரும்றுடைத்தனவே யன்றோ துயர்”

இப்பாடலில் மானைப் புகழ்தலால் இரப்போரின் இழிநிலையைப் பழிக்குமாறு பாடுவதால் இது மாறுபடு புகழ்நிலை யணியாகும்.

மாறுபடுபொருண்மொழி

மாறுபடுபொருண்மொழி māṟubaḍuboruṇmoḻi, பெ.(n.)

   முன் மொழிந்ததற்கு மாறாகப் பொருள் தோன்றிவருஞ் சொல்லுடையதாகிய அணி வழு (தண்டி.100);;     [மாறுபடு + பொருண்மொழி.]

மாறுபாடு

மாறுபாடு māṟupāṭu, பெ.(n.)

   1. பகைமை; opposition.

   2. முறைகேடு; perverseness.

   3. ஒவ்வாமை; unsuitability, disagreeble ness, discrepancy.

     “மாறுபாடில்லாத வுண்டி” (குறள், 945);.

   4. புரட்டு; double dealing.

     [மாறு → மாறுபாடு.]

மாறுபாட்டுக்காரன்

மாறுபாட்டுக்காரன் māṟupāṭṭukkāraṉ, பெ.(n.)

   1. புரட்டன்; double – dealer.

   2. மறுத்துப் பேசுபவன்; one who contradicts.

     [மாறுபாடு + காரன்.]

மாறுமுகம்

மாறுமுகம் māṟumugam, பெ.(n.)

   நினைத்தவாறு மாற்றிக் கொள்ளும் முகவடிவு; face changeable at will.

     “மாறுமுகக் கொண்டு பொருவல் லவுணர்” (கந்தபு.தேவர்கள் போற்.4);.

     [மாறு + முகம்.]

மாறுரை

மாறுரை māṟurai, பெ.(n.)

   மறுமொழி; reply.

     “தர்க்கமவைக் கெலாம்….. கன்னி மாறுரை கூறினாள்” (திருவாதபு, புத்தரை.86);.

     [மாறு + உரை.]

மாறுவார்க்கை

 மாறுவார்க்கை māṟuvārkkai, பெ.(n.)

   ஒன்றிலிருப்பதை மற்றொன்றில் வார்த்தல்; to transfer by pouring from one to the other as blood from one animal to the other (சா.க.அ.);.

     [மாறு + வார்க்கை.]

மாறுவேடப்போட்டி

 மாறுவேடப்போட்டி māṟuvēṭappōṭṭi, பெ.(n.)

   மாறுவேடத்தில் வந்து நடித்துக் காட்டும் பலரில் சிறப்பாகச் செய்தவரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி;  fancy dress competition.

     [மாறுவேடம் + போட்டி.]

மாறுவேடம்

 மாறுவேடம் māṟuvēṭam, பெ.(n.)

   உண்மையான தோற்றத்தை மறைத்துப் போட்டுக் கொள்ளும் புனைவு; disguise fancy dress.

     [மாறு + வேடம்.]

மாறேவி

 மாறேவி māṟēvi, பெ.(n.)

   அரிதாரம் (சங்,அக.);; yellow orpiment.

மாறை

மாறை māṟai, பெ.(n.)

   பாண்டி மண்டலத்துள்ள ஒரு நாடு (தஞ்சைவா.14);; a division of the {} country.

மாறொடை

 மாறொடை māṟoḍai, பெ.(n.)

   துளசி (சங்.அக.);; holy basil.

மாறொலி

 மாறொலி māṟoli, பெ.(n.)

   எதிரொலி (இ.வ.);; echo.

     [மாறு + ஒலி.]

மாறோகம்

மாறோகம் māṟōkam, பெ.(n.)

   பாண்டி நாட்டிற் கொற்கையைச் சூழ்ந்த பகுதி (தொல்.சொல்.164, சேனா.புதுப்.கீழ்க்குறிப்பு);; the portion of the {} country round {} in Tinnevelly District.

மாறோக்கம்

மாறோக்கம் māṟōkkam, பெ.(n.)

மாறோகம் (புறநா.37); பார்க்க;see {}.

 மாறோக்கம் māṟōkkam, பெ. (n.)

   1. நப்ப சலையாரின் ஊர்; name of the hamlet where the sangam poetess Nappasalaiyar lived.

   2. வெள்ளோக்கத்தா உழுவித் துண்ணும் வேளாளர்க்கும் வேறான உழுதுண்ணும் குடிமக்கள் வாழும் ஊர்; name of a hamlet where the tillers of the landagriculturists live.

     [மாறு+ (ஒக்கல்);ஒக்கம்]

மாறோதியம்பன்

 மாறோதியம்பன் māṟōtiyambaṉ, பெ.(n.)

   சாரைப் பாம்பு; a kind of snake (சா.அக.);.

மாற்கடலன்

மாற்கடலன் māṟkaḍalaṉ, பெ.(n.)

   போரில் உயிர் நீத்த ஒரு வீரன்; name of a hero, who lost his life in a battle.

     “வாணகோ முத்தரைசரு நாடு பாவிய மேற்கோவலூர் மேல் வந்து தஞ்சிற்றப் படிகளை எறிந்த ஞான்று பட்டான் சேவர்பரி அட்டுங் கொள்ளி துருமாவனார் மகன் மாற்கடலன்” (த.நா.தொ.1971/69);.

     [மால் + கடல் + அன்.]

மாற்கண்டன்

மாற்கண்டன் māṟkaṇṭaṉ, பெ.(n.)

மார்க் கண்டன் பார்க்க;see {}.

     “மாற்கண்டன் கண்ட வகையே வரும்” (திவ்.இயற்.நான்மு.15);.

மாற்சாலமோகினி

 மாற்சாலமோகினி māṟcālamōkiṉi, பெ.(n.)

   குப்பைமேனி; a plant (சா.அக.);.

மாற்சாலம்

மாற்சாலம் māṟcālam, பெ.(n.)

   1. கோமேதகம்; one of the nine gems.

   2. பூனை; cat (சா.அக.);.

மாற்பித்தியார்

மாற்பித்தியார் māṟpittiyār, பெ.(n.)

   புறநா.251, 252 ஆகிய பாடல்களைப் பாடிய கழகக் காலப் புலவர்; sangam age poet with verses 251, 252 of Purananuru to his credit.

மாற்பேறு

மாற்பேறு māṟpēṟu, பெ.(n.)

   வேலூர் மாவட்டத்தில் திருமால்பூர் என்று வழங்கும் ஊரின் முன்னைப் பெயர்; a town in velur Dt. with the present name {}.

     “செப்பரிய புகழ் பாலித் திருநதியின் தென்கரைபோய் மைப்பொலியும் கண்டர் திருமாற்பேறு மகிழ்ந்து இறைஞ்சி” (பெரியபு.34-1002);.

     “மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற்பேறு” (பெரியபு.25 – 31 – 3 – 4);.

     [மால் + பேறு.]

மாற்ற

மாற்ற māṟṟa,    இடை.(part.) ஒருவமைச் சொல் (தொல்.பொருள்.286); a term of comparison.

மாற்றமாடு-தல்

 மாற்றமாடு-தல் māṟṟamāṭudal, செ.குன்றா.வி. (v.t.)

   சொல்லாடுதல், உரையாடுதல்; to speak.

   தெ. மாற்றாடு – மாட்டாடு;க. மாத்தாடு

     [மாற்றம்+ஆடு]

   மாற்றம்-சொல்;ஆடு என்பது ஒரு துணை வினை.

மாற்றமிலி

 மாற்றமிலி māṟṟamili, பெ.(n.)

   வாய் வாளாயிருப்போன், பேசாதிருப்போன்; silent ascetic.

     [மாற்றம் + இலி. மாற்றம் = சொல்.]

மாற்றம்

மாற்றம் māṟṟam, பெ.(n.)

   1. மாறுபட்ட நிலை; diversity.

     “மாற்றமாம் வையகத்தின்” (திருவாச.1, 81);.

   2. வஞ்சின மொழி; word of challenge, vow.

     “மாற்ற மாறான் மறவிய சினத்தன்” (புறநா.341);.

   3. பகை; hatred, enmity.

     “மாறுகொளுழுவையு மாற்றந் தீர்ந்தவே” (நைடத. கான்புகு.3);.

   4. கடிவு (பரிகாரம்); (வின்.);; remedy.

   5. மாறி சொல்லும் விடை; answer.

     “மாறுதலைக் கடாஅ மாற்றமும்” (தொல்.பொருள். 659);.

   6. சொல்; word.

     “விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான்” (குறள், 689);.

   7. பேச்சு; speech.

     “மாற்ற முரைக்கும் வினைநலம்” (நான்மணி.45);.

   8. தருக்கம்; logic, debate.

     “மன்பெரியான் றிருந்தவையுண் மாற்றந் தாவெனச் சொன்னாள்” (நீலகேசி, 169);.

   தெ. மாட;   க. மாடு;ம. மாட்டம்.

     [முள் (வளைதற் கருத்துவேர்); → முர் → முரு → முரி. முரிதல் = வளைதல், வளைந்து ஒடிதல். முரு → முறு → முறுகு → முறுகுதல் = திருகுதல், விரைதல், முறு → மறு → மாறு. மாறுதல் = வேறுபடுதல், பின்வாங்குதல், குறைதல். மாறு → மாற்று = வேறுபடுத்துகை, ஒழிக்கை மாற்று மருந்து, பண்டமாற்று, விலை, மாற்றுடை, பொன்வெள்ளி உரைமாற்று, மாற்று நிறம், எதிர், ஒப்புமை, வலிமை, ஒரோமாடு ஒரு நாளில் உழக்கூடிய நிலம். மாற்று → மாற்றம் (வே.க.4:79);.]

மாற்றரசன்

மாற்றரசன் māṟṟarasaṉ, பெ.(n.)

   பகை வேந்தன்; hostile king.

     “மாற்றரசர் மணிமுடியும்” (திவ்.பெரியதி.4, 4,1);.

     [மாற்று + அரசன். மாற்று = பகை.]

மாற்றற்சுரம்

 மாற்றற்சுரம் māṟṟaṟcuram, பெ.(n.)

   முறை சுரம்; intermittent fever.

     [மாற்று → மாற்றல் + சுரம்.]

மாற்றலர்

மாற்றலர் māṟṟalar, பெ.(n.)

   பகைவர்; enemies, foes.

     “முனைமுகத்து மாற்றலர் சாய” (குறள், 749);.

     [மாற்று = பகை. மாற்று → மாற்றலர்.]

மாற்றல்

மாற்றல்1 māṟṟal, பெ.(n.)

   ஒரு பணியிடத்தி லிருந்து மற்றொரு பணியிடத்திற்கு அல்லது ஒர் அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்குச் செல்லுதல்; transfer.

     [மாற்று → மாற்றல்.]

 மாற்றல்2 māṟṟal, பெ.(n.)

   கொடாமை (பிங்.);; refusing to give.

மாற்றவன்

மாற்றவன்1 māṟṟavaṉ, பெ.(n.)

   உடன் கிழவன் (யாழ்.அக.);; rival lover.

     [மாற்று → மாற்றவன்.]

 மாற்றவன்2 māṟṟavaṉ, பெ.(n.)

மாற்றான், 1 பார்க்க;see {}.

     “மாற்றவற் காகிவந்து” (கம்பரா.வாலிவ.19);.

     [மாற்றான் → மாற்றவன்.]

மாற்றவள்

மாற்றவள் māṟṟavaḷ, பெ.(n.)

மாற்றாள் பார்க்க; see {}.

     “மாற்றவளைக் கண்டக்கா லழலாதோ மனமென்றாள்” (கம்பரா.சூர்ப்ப.122);.

     [மாற்றாள் → மாற்றவள்.]

மாற்றாஞ்சகோதரன்

 மாற்றாஞ்சகோதரன் māṟṟāñjaātaraṉ, பெ.(n.)

   மாற்றாந்தாய்மகன் (இ.வ.);; step brother, step mother’s son.

மாற்றாடிச்சி

 மாற்றாடிச்சி māṟṟāṭicci, பெ.(n.)

மாற்றாள் (யாழ்.அக.); பார்க்க;see {}.

மாற்றாட்டி

மாற்றாட்டி māṟṟāṭṭi, பெ.(n.)

மாற்றாள் பார்க்க;see {}.

     “அந்த மாற்றாட்டிக் கன்பாய்” (உத்தரரா.இலவண.4);.

     [மாற்றாள் → மாற்றாட்டி.]

மாற்றாண்மை

மாற்றாண்மை māṟṟāṇmai, பெ.(n.)

   பகைமை; enmity, hatred.

     “மாற்றாண்மை நிற்றியோ வாழி கனையிருளே” (திவ். திருவாய்.2, 1, 7);.

     [மாறு → மாற்று → மாற்றாண்மை.]

மாற்றாந்தகப்பன்

 மாற்றாந்தகப்பன் māṟṟāndagappaṉ, பெ.(n.)

   தன் தந்தைக்குப் பின் தாயை மறுமணஞ் செய்து கொண்டதால் தகப்பனாகக் கருதப்படுபவன்; step father.

     [மாறு → மாற்று → மாற்றாம் + தகப்பன்.]

மாற்றாந்தாய்

 மாற்றாந்தாய் māṟṟāndāy, பெ.(n.)

   தன் தந்தையின் மறுதாரம் (கொ.வ.);; step mother.

     [மாறு → மாற்று → மாற்றாம் + தாய்.]

மாற்றாந்தாய்மனப்பான்மை

 மாற்றாந்தாய்மனப்பான்மை māṟṟāndāymaṉappāṉmai, பெ.(n.)

   சமமாகக் கருதி நடத்தப்பட வேண்டியவர்களில் தான் விரும்பியவருக்கு மட்டும் எல்லாச் சலுகையும் அளித்து விரும்பாதவரை முற்றாக ஒதுக்கும் போக்கு, ஒருதலையான நடத்தை; stepmotherly attitude, partiality.

     [மாற்றாந்தாய் + மனப்பான்மை.]

மாற்றான்

மாற்றான் māṟṟāṉ, பெ.(n.)

   1. பகைவன்; enemy.

     “தன்வலியு மாற்றான் வலியும்” (குறள், 471);.

     “மாற்றானுக்கு இடம் கொடேல்” (நீதிநூல். ஆத்திச்சூடி);.

   2. ஒட்டுப் பலகை; a piece of wood, joined to a board of insufficient length.

   3. மாற்று மருந்து (நாஞ்.);; antidote, neutra liusing agent.

     “எட்டிக்கு மாற்றான் நவ்வல்”.

     “மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்” (உலக நீதி.3);.

     [மாற்று = பகை. மாற்று → மாற்றான்.]

மாற்றாள்

மாற்றாள்1 māṟṟāḷ, பெ.(n.)

   உடன்கிழத்தி; co-wife, rival wife.

     “மாலதி மாற்றாண் மகவுக்குப் பாலளிக்க” (சிலப்.9:5);.

     [மாற்று → மாற்றாள்.]

 மாற்றாள்2 māṟṟāḷ, பெ.(n.)

   1. ஒரு ஆளுக்கு மாற்றாக நிறுத்தப்படும் ஆள்;  install another man as spare.

   2. சுழற்சி முறைப் பணியில் ஒருவரை விடுவிக்க வரும் அடுத்த ஆள்; reliever.

     [மாற்று + ஆள்.]

மாற்றிலக்கம்

 மாற்றிலக்கம் māṟṟilakkam, பெ.(n.)

   கணக்கு வகை; logarithm.

     [மாற்று + இலக்கம்.]

மாற்று

மாற்று1 māṟṟudal,    5 செ.குன்றாவி.(v.t)

   1. வேறுபடுத்துதல்; to change, alter.

     “பிறப்பு மாற்றினை” (கம்பரா.வீடண.8);.

   2. செம்மைப்படுத்துதல் (வின்.);; to rectify, convert, cure, set right.

   3. நீக்குதல்; to dispel, relieve, remove.

     “அப்பசியை மாற்றுவார்” (குறள், 225);.

   4. கெடுத்தல் (வின்.);; to derange, change or alter for the worse.

   5. ஒடச் செய்தல்; to repel, expel.

     “வில்லோர் மாற்றி” (ஐங்குறு. 267);.

   6. தடுத்தல்; to hinder, prevent.

     “மாற்றருங் கூற்றம்” (தொல்.பொருள்.79);.

   7. மறுத்துரைத்தல்; to deny, refuse.

     “உள்ளதின் றென்று மாற்றலன்” (கம்பரா. பள்ளியடை.113);.

   8. அழித்தல்; to destroy, to cancel, repeal.

     “புவிபடைத் தளித்து மாற்றி” (கந்தபு.யுத்தகாண்.ஏமகூ.1);.

   9. ஒடுக்குதல் (வின்.);; to cause involution, reduce the universe to its primitive elements.

   10. மறைத்தல்; to conceal, hide.

     “பூழிமாலை தள்ளருஞ் சுடர்கண் மாற்றி” (கந்தபு. யுத்தகாண். ஏமகூ.22);.

   11. நாணயம் மாற்றுதல்; to change, as money.

   12. பண்ட மாற்றுதல்; to exchange, barter, traffic, trade.

   13. இருப்பிட வேறுபடுத்துதல்; to shift, to transfer, as from a place.

அவன் வீட்டை மாற்றிவிட்டான் (உ.வ.);.

   14. (மாலியம்); ஒரிடத்துச் சமைத்த வுணவை வேற்றிடத்துக்கு அனுப்புதல்; to send food from one place to another (vaisn);.

   15. பெருக்கிச் சுத்தஞ் செய்தல் (வின்.);; to sweap, cleanse, as a house.

     “நுண்டுகளோடு கண்ண மாற்றுதி” (கந்தபு. அரசுசெய்.7);.

     [மாறு → மாற்று (வே.க.4:78);.]

 மாற்று2 māṟṟudal,    5 செ.கு.வி.(v.i.)

   1. இடைவிடுதல்; to be interrupted.

     “மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும்பசுக்கள்” (திவ்.திருப்பா.21);.

   2. ஒழிதல்; to fail, as rains.

     “வறந்தெற மாற்றிய வானமும்” (கலித்.146);.

   3. சுணங்குதல் (வின்.);; to detain.

     [மாறு → மாற்று-,]

 மாற்று3 māṟṟu, பெ.(n.)

   1. வேறுபடுத்துகை; changing.

   2. ஒழிக்கை; removal, destruction.

     “மாற்றே மாற்றலிலையே” (பரிபா.4, 53);.

   3. மாற்றுமருந்து பார்க்க;see {}.

   4. பண்டமாற்று; barter – exchange, sale.

   5. விலை (யாழ்.அக.);; price.

   6. வண்ணான் வெளுத்த உருப்படி (இ.வ.);; clothes freshly washed by washerman.

   7. சிறப்பு செய் காலங்களில் பந்தல் நடைபாவாடை முதலியவற்றுக்காக ஊரார் பயன்படுத்த வண்ணானாற் கொடுக்கப்படும் துணிகள் (இ.வ.);; clothes supplied by washerman to villagers, to be used by them for pandal, etc. on auspicious or inauspicious occasions.

   8. மாற்றுப்புடவை (இ.வ.); பார்க்க;see {}.

   9. பொன் வெள்ளிகளின் உரைமாற்று; degree of fineness of gold or silver, as indicated the touchstone.

     “மாற்றளவற்ற பொன்னுடுத்தாய்” (அஷ்டப்.அழகரந்.2);.

    10. தங்கம் (சங்.அக.);; gold.

   11. ஒரணை மாடு ஒரு நாளில் உழும் நிலம் (வின்.);; measure of land as much as a yoke of oxen can plough in a day.

   12. எதிர் (யாழ்.அக.);; rival.

   13. உவமை; similarity, resemblance.

     “மாற்றிரி யாடிப் பாவையோடு” (ஞானா.6, 20);.

   14. வலிமை; strength, power.

     “மாற்றாரை மாற்றழிக்க வல்லானை” (திவ்.திருப்பா.15);.

   15. வண்ணம் (ஈடு.4, 3, 7, ஜீ);; colour.

     [முல் (வளைந்தற் கருத்து வேர்); → முர் → முரு → முரி. முரிதல் = வளைதல், வளைந்து ஒடிதல். முரு → முறு → முறுகு → முறுகுதல் = திருகுதல், விரைதல் -முறு → மறு → மாறு → மாறுதல் = வேறுபடுதல், பின் வாங்குதல், குறைதல். மாறு → மாற்று (வே.க.4:78);.]

மாற்றுஒற்றையர்ஆட்டம்

 மாற்றுஒற்றையர்ஆட்டம் māṟṟuoṟṟaiyarāṭṭam, பெ.(n.)

   விளையாட்டுப் போட்டிகளில் ஒருவர் விளையாடிய பின் மீண்டும் மற்றொருவருடன் விளையாடும் போட்டி; reverse singles.

     [மாற்று + ஒற்றையர் + ஆட்டம்.]

மாற்றுக்கட்டுச்சாகுபடி

 மாற்றுக்கட்டுச்சாகுபடி māṟṟukkaḍḍuccākubaḍi, பெ.(n.)

   ஒரு ஆண்டு விட்டு மறு ஆண்டு வேளாண்மை செய்யும் முறை (இ.வ.);; cultivation in alternate years.

     [மாற்று + கட்டு + சாகுபடி.]

மாற்றுக்கட்டை

மாற்றுக்கட்டை māṟṟukkaṭṭai, பெ.(n.)

   1. பொன் முதலியவற்றின் தாழ்ந்த தரம்; inferiority in quality, as of gold.

   2. கெட்ட நடத்தையுடையவ-ன்-ள் (இ.வ.);; dissolute man or woman.

     [மாற்று + கட்டை.]

மாற்றுக்கதை

 மாற்றுக்கதை māṟṟukkadai, பெ.(n.)

   எதிர் மாறாகச் சொல்லும் விடுகதை (வின்.);; conundrum proposed in return.

     [மாற்று + கதை.]

மாற்றுக்குறைச்சல்

மாற்றுக்குறைச்சல் māṟṟukkuṟaiccal, பெ.(n.)

மாற்றுக்கட்டை, 1 பார்க்க;see {}.

     “திருவாங்கோட்டு மின்னல் மாற்றுக் குறைச்சலென்றும்” (பணவிடு.137);.

     [மாற்று + குறைச்சல்.]

மாற்றுக்கொடி

 மாற்றுக்கொடி māṟṟukkoḍi, பெ.(n.)

மாற்றுக்கதை (வின்.); பார்க்க;see {}.

     [மாற்று + கொடி.]

மாற்றுக்கொடு – த்தல்

மாற்றுக்கொடு – த்தல் māṟṟukkoḍuttal,    4 செ.கு.வி.(v.i.)

    பேற்றுக் காலங்களில் மாற்றுடையாகக் கொடுக்கப்படும் புடவை; to supply a change of clothes, commonly to womens in their confinement, etc.

     [மாற்று + கொடு. மாற்று = உடை.]

மாற்றுச் சான்றிதழ்

 மாற்றுச் சான்றிதழ் māṟṟuccāṉṟidaḻ, பெ. (n.)

   ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து மற்றோர் கல்வி நிறுவனத்திற்குச் செல்லும்போது முதல் நிறுவனத்தார் கொடுக்கும் சான்றிதழ்; transfer certificate.

     [மாற்று+சான்றிதழ்]

மாற்றுடை

மாற்றுடை māṟṟuḍai, பெ.(n.)

   1. மாற்றி யுடுத்தும் ஆடை (வின்.);; change of clothes.

   2. விலையுயர்ந்த ஆடை (யாழ்.அக.);; costly saree or garment.

     [மாற்று + உடை.]

மாற்றுதவி

 மாற்றுதவி māṟṟudavi, பெ.(n.)

   கைம்மாறு; help rendered in return.

     [மாற்று + உதவி.]

மாற்றுத் திறனாளர்

 மாற்றுத் திறனாளர் māṟṟuttiṟaṉāḷar, பெ.

   ஊனமுற்றோர்; physically handicaped, disabled persons, physically challenged.

மறுவ மாற்றுத்திறனாளி

     [மாற்று+திறனாளர்]

மாற்றுத் திறன்

 மாற்றுத் திறன் māṟṟuttiṟaṉ, பெ. (n.)

   உறுப்புக்குறைவு உள்ளவரிடம் காணப்படும் filmsmun; talent seen in physicaly handicaped.

     [மாற்று+திறன்]

மாற்றுத்தாய்

மாற்றுத்தாய் māṟṟuttāy, பெ.(n.)

மாற்றுத்தாய் பார்க்க; see {}.

     “மாற்றுத்தாய் சென்று வனம்போகே யென்றிட” (திவ்.பெரியாழ்.3, 9, 4);.

     [மாற்றாந்தாய் → மாற்றுத்தாய்.]

மாற்றுபகாரம்

மாற்றுபகாரம் māṟṟubakāram, பெ.(n.)

மாற்றுதவி பார்க்க; see {}.

     “நின்னருள் நிகர்க்கு மாற்றுபகாரம்” (பெருங்.நரவாண.3,143);.

     [மாற்று + Skt. உபகாரம் → த. உதவி.]

மாற்றுப் பெயர்

 மாற்றுப் பெயர் māṟṟuppeyar, பெ.(n.)

   ஒரு பெயர்ச் சொல்லுக்கு அல்லது ஒரு பெயர்த் தொடருக்கு மாற்றாகப் பயன்படுத்தும் சொல்;ргопоuп.

மறுவ. பகரப்பெயர்

     [மாறு-மாற்று+பெயர்]

மாற்றுப்புடவை

 மாற்றுப்புடவை māṟṟuppuḍavai, பெ.(n.)

   மாற்றியுடுத்தும் புடவை; change of saree, spare sareе.

     [மாற்று + புடவை.]

மாற்றுமருந்து

 மாற்றுமருந்து māṟṟumarundu, பெ.(n.)

   கொடிய மருந்து நஞ்சு முதலியவற்றின் தன்மையை நீக்கக் கொடுக்கும் மருந்து (வின்.);; antidote, medicine given to nullify the injurious effect of another medicine.

     [மாற்று + மருந்து.]

மாற்றுமாலை

 மாற்றுமாலை māṟṟumālai, பெ.(n.)

   மாலை மாற்றில் பயன்படுத்தும் பூமாலை (இ.வ.);; garland exchanged between the bridal pair.

     [மாற்று + மாலை.]

மாற்றுமை

மாற்றுமை māṟṟumai, பெ.(n.)

   மாறுபாடு; contrariety, diversity.

     “மாற்றுமை கொண்ட வழி” (கலித்.12);.

     [மாற்று → மாற்றுமை.]

மாற்றுயர்பொன்

 மாற்றுயர்பொன் māṟṟuyarpoṉ, பெ.(n.)

   தங்கம்; gold (சா.அக.);.

     [மாற்று + உயர்பொன்.]

மாற்றுயர்வுவேதை

 மாற்றுயர்வுவேதை māṟṟuyarvuvētai, பெ.(n.)

   பொன்னுக்குப் பழுப்பேற்றி மாற்றுயர்ந்த தங்கம் போலச் செய்யும் மருந்து; a device to increase the degree of fineness in gold (சா.அக.);.

     [மாற்றுயர்வு + வேதை.]

மாற்றுவேந்தன்

மாற்றுவேந்தன் māṟṟuvēndaṉ, பெ.(n.)

மாற்றரசன் பார்க்க;see {}.

     “மாற்றுவேந்தர் எயிற் புறத்து” (சிலப்.3:14, அரும்.உரை);.

     [மாறு → மாற்று + வேந்தன். மாறு = பகை.]

மாற்றெண்

 மாற்றெண் māṟṟeṇ, பெ.(n.)

மாற்றிலக்கம் பார்க்க;see {}.

     [மாற்று + எண்.]

மாற்றேர்

 மாற்றேர் māṟṟēr, பெ.(n.)

   தனக்குப் பிறனொருவன் விட்ட ஏருக்குப் பதிலாக விடும் ஏர்; plough lent to a person in return for a loan of his plough.

     [மாற்று + ஏர்.]

மாற்றேர்விடுதல்

 மாற்றேர்விடுதல் māṟṟērviḍudal, பெ.(n.)

   தனக்கு ஒருவன் ஏர் உதவி உழுது கொடுத்ததற்கு மாற்றாக அவன் நிலத்தைத் தன்னேர்விட்டு உழுது கொடுத்தல் (நாஞ்.);; ploughing in exchange.

     [மாற்றேர் + விடுதல்.]

மாற்றோர்

மாற்றோர் māṟṟōr, பெ.(n.)

   பகைவர்; enemies, foes.

     “மாற்றோர் கூற்றே” (திருமுரு.257);.

     “மாற்றோ ரும்மிலர் கேளிரு மிலரெனும் வேற்றுமை யின்றது போற்றுநர்ப் பெறினே” (பரிபா.4:54-5);.

     [மாறு → மாற்று → மாற்றோர். மாறு = பகை.]

மாற்றோலைப்படு – தல்

மாற்றோலைப்படு – தல் māṟṟōlaippaḍudal,    20 செ.கு.வி.(v.i)

   ஓர் அட்டவணையினின்றும் நீக்கி வேறோரட்டவணையிற் சேர்க்கப் பெறுதல்; to be transferred from one list to another.

     “எம்மை மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே” (திவ்.நாய்ச்.10, 2);.

     [மாற்று + ஒலைப்படு-,]

மாலகம்

மாலகம்1 mālagam, பெ.(n.)

   செம்பருத்தி வகை; lotus bendy.

     [p]

 மாலகம்2 mālagam, பெ.(n.)

   வேம்பு (மூ.அ.);; neem.

மாலக் கயிறு

மாலக் கயிறு mālakkayiṟu, பெ. (n.)

   உறுதியான நீண்ட கயிறு; strong rope. (வ.வ.தொ.க.36);.

     [மால்+அ+கயிறு]

மாலக்கண்ணி

 மாலக்கண்ணி mālakkaṇṇi, பெ.(n.)

   நீள, அகல வேறுபாடுடைய ஒரு வகை மீன்பிடி வலை; fishing net with a different length and breath.

     [மால + கண்ணி.]

மாலதி

மாலதி māladi, பெ. (n.)

   1. மல்லிகை (சூடா.);; arabian jasmine.

   2. சிறு செண்பகம் (சூடா.);; cenpaka flower tree.

   3. சந்திரிகை. (இலக். அக.);; moon light.

   4. விளக்குத் தண்டு (பிங்.);; lamp-stand.

   5. நிருவாணம்; salvation.

     [Skt. {} → த. மாலதி.]

மாலதீவு

 மாலதீவு mālatīvu, பெ.(n.)

   மலையாளக் கடற்கரையை அடுத்துள்ள மாலை போன்றமைந்துள்ள தீவுகள் (வின்.);; Maldive islands.

     [மாலை + தீவு.]

மாலதீவுத்தேங்காய்

 மாலதீவுத்தேங்காய் mālatīvuttēṅgāy, பெ.(n.)

   கடற்றெங்கு (வின்.);; double coconut.

     [மாலைத்தீவு + தேங்காய்]

மாலந்து

 மாலந்து mālandu, பெ.(n.)

   கீழ்க்காய் நெல்லி; a plant – phyllanthus niruri.

மாலன்

மாலன்1 mālaṉ, பெ.(n.)

திருமால்;{}.

     [மால் → மாலன். மால் = கருமை, கருநிற திருமால்]

 மாலன்2 mālaṉ, பெ.(n.)

   வேடன்; hunter.

     [மால் = வஞ்சகம், ஏமாற்று. மால் → மாலன் ஏமாற்றிக் கொல்பவன், வேடன்.]

மாலபதி

 மாலபதி mālabadi, பெ.(n.)

   உடம்பின் கொழுப்பு; fat of the human body.

மாலமத்திரி

 மாலமத்திரி mālamattiri, பெ.(n.)

   வட்டத்திருப்பி; a twiner – cissampelos paneira.

மாலமாயம்

 மாலமாயம் mālamāyam, பெ.(n.)

   பேயின் தந்திரம் (வின்.);; deceit or trick of a devil.

     [மாலம் + மாயம்.]

மாலம்

மாலம் mālam, பெ.(n.)

   1. பேய்; devil.

   2. குங்குமம் (மூ.அ.);; saffron.

     [மால் = மாலம். மால் = கருமை, செம்மை]

மாலயம்

மாலயம்1 mālayam, பெ.(n.)

   சந்தனம் (மலை.);; sandal wood.

 மாலயம்2 mālayam, பெ.(n.)

மாளயம் பார்க்க;see {}.

மாலயற்கரியான்

 மாலயற்கரியான் mālayaṟkariyāṉ, பெ.(n.)

சிவபெருமான்;{}.

     [மால் + அயன் + அரியான். மால் = திருமால். அயன் = பிரமண். அரியான் = இருவராலும் அடிமுடி காண இயலாப் பரம்பொருள்]

மாலரும்பு

 மாலரும்பு mālarumbu, பெ.(n.)

   மயக்கம் தரும் பொருள் வகை (தைலவ.தைல.);; an intoxicating drug.

மாலர்

மாலர்1 mālar, பெ.(n.)

   1. பிராமணப் பெண்ணுக்குஞ் சூத்திரனுக்கும் பிறந்தோர் (வின்.);; children born of a brahmin mother and a sudra father.

   2. வேடர் (அக.நி.);; hunters, savages.

   3. புலைஞர் (அக.நி.);; out castes.

தெ. மால.

 மாலர்2 mālar, பெ.(n.)

   மெய்யுறை (அக.நி.);; armour.

மாலலங்கல்

 மாலலங்கல் mālalaṅgal, பெ.(n.)

   துளசி; holy basil.

மாலவன்

 மாலவன் mālavaṉ, பெ.(n.)

   அறிவன் கோள் (திவா.);; the planet mercury.

மாலவன்குன்றம்

 மாலவன்குன்றம் mālavaṉkuṉṟam, பெ.(n.)

   திருப்பதிக் குன்றம்; a hill shrine Tiruppati.

     [மாலவன் + குன்றம். மாலவன் = திருமால்.]

தமிழ்நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்தது திருவேங்கட மலையாகும். இம்மலை மாலவன்குன்றம்.

மாலவம்

 மாலவம் mālavam, பெ.(n.)

   ஒரு நாடு; a country.

மாலவித்தை

மாலவித்தை mālavittai, பெ.(n.)

   வஞ்சகம்; deceit, cunning.

     “மாலவித்தைப் பெண்கள் மன்னக் கேசாள்” (விறலிவிடு. 506);.

     [மால் + வித்தை. மால் = மயக்கம், கருமை, ஏமாற்று, வஞ்சகம்]

மாலா

 மாலா mālā, பெ.(n.)

   நடுமுள் மட்டுமேயுள்ள வெண்ணிறக் கடல் மீன் (நெல்லை.மீனவ.);; a kind of sea fish which is white in colour with middle spine.

     [p]

மாலாகாரன்

 மாலாகாரன் mālākāraṉ, பெ.(n.)

மாலைக்காரன் பார்க்க;see {}.

     [மாலைக்காரன் → மாலாக்காரன் (கொ.வ.);]

மாலாதீபகம்

மாலாதீபகம் mālātīpagam, பெ. (n.)

   1. ஒரு சொல் மாலைபோலத் தொடர்ந்து எல்லா வாக்கியங்களோடும் சென்று பொருள்

   தருவதாகிய அணிவகை;     [Skt. {}-dipaka → த. மாலாதீபகம்.]

மாலாதுரிசினம்

 மாலாதுரிசினம் mālāturisiṉam, பெ.(n.)

   பூனை; cat (சா.அக.);.

மாலானி

 மாலானி mālāṉi, பெ.(n.)

   சிறு சண்பகம்; small flowers which are fragrant michelia nilagirica.

மாலாபலம்

 மாலாபலம் mālāpalam, பெ.(n.)

   உருத்திராக்க மணி (சங்.அக.);; rudraksa bead.

     [மாலா + பலம்.]

மாலாழி

 மாலாழி mālāḻi, பெ.(n.)

   ஆயிரம் முனைகளுடைய திருமாலின் சக்கரப்படை (சகத்திரதாரம்);; discuss of Vishnu as thousand pointed.

     [மால்+ஆழி]

மாலி

மாலி1 māli, பெ.(n.)

   மாலையணிந்தோன்; one who wears a garland.

     [மாலை → மாலி]

 மாலி2 māli, பெ.(n.)

   1. கள் (சூடா.);; toddy.

   2. ஒர் அரக்கன் (அரு.நி.);; a wicked gigantic person.

 மாலி3 māli, பெ.(n.)

   பகலவன்; sun.

 மாலி4 māli, பெ.(n.)

   தோட்டக்காரன்; gardener.

மாலிகாரேகை

 மாலிகாரேகை mālikārēkai, பெ.(n.)

மாலிகாவரிகை பார்க்க;see {}.

     [மாலிகை → மாலிகா + ரேகை]

த. ரேகை → வ. வரிசை.

மாலிகாவரிகை

 மாலிகாவரிகை māligāvarigai, பெ.(n.)

   நல்வாழ்வைக் குறிக்கும் கைவரிகை (திருவாரூர்க்குற. mss.);; a kind of distinctive mark on the palm, believed to indicate prosperity.

     [மாலிகை → மாலிகா + வரிகை]

மாலிகை

மாலிகை1 māligai, பெ.(n.)

   1. சிறு மாலை (சூடா.); (இரகு.திக்குவி.9);; garland, string of flowers.

   2. வரிசை (வின்.);; row, series.

     [முல் (பொருந்தற்கருத்து வேர்); → மல் → மால் → மாலை = தொடுக்கப்பட்டது, வரிசையாகப் பொருந்தியது. மாலை → மாலிகை. ‘கை’ சிறுமைப் பொருட் பின்னொட்டு. ஒ.நோ. குடி = குடிகை (சிறுகோயில்); (வே.க.4:38.);]

 மாலிகை2 māligai, பெ.(n.)

   சீமைச் சணல்; flax.

மாலிகைத்துவரை

 மாலிகைத்துவரை māligaittuvarai, பெ.(n.)

   சின்ன துவரை; small sized red – gram.

     [மாலிகை + துவரை]

மாலிக்

மாலிக் mālik, பெ. (n.)

   1. சொத்துக்கு உரியவன்;   2. இறைவன்; lord, king.

     [Ar. {} → த. மாலிக்.]

மாலிசு

 மாலிசு mālisu, பெ. (n.)

   குதிரை முதலிய வற்றைத் தேய்த்துத் தூய்மைப் படுத்துகை (இ.வ.);; rubbing, as a horse;scrubbing, polishing, as a floor.

     [Persn. {} → த. மாலிசு.]

மாலினி

மாலினி1 māliṉi, பெ.(n.)

   பூமாலைக்காரி; flower wearing women.

 மாலினி2 māliṉi, பெ.(n.)

   1. கொற்றவை; Durgai.

   2. மலைமகள் (நாமதீப.20);; Malaimagal.

 மாலினி māliṉi, பெ. (n.)

   1. காளி (பிங்.);;{}.

   2. மலைமகள் (நாமதீப. 20.);;{}.

     [Skt. {} → த. மாலினி.]

மாலினியாமாதா

 மாலினியாமாதா māliṉiyāmātā, பெ.(n.)

   கிழ்க்காய் நெல்லி; phyllanthus niruri (சா.அக.);.

மாலினுக்கிளையநங்கை

மாலினுக்கிளையநங்கை māliṉukkiḷaiyanaṅgai, பெ.(n.)

மாலினி, 1 (சூடா.); பார்க்க;see {}.

மாலினுக்கிளையாள்

மாலினுக்கிளையாள் māliṉukkiḷaiyāḷ, பெ.(n.)

மாலினி, 1 (பிங்.); பார்க்க;see {}.

     [மாலினுக்கு + இளையாள்]

மாலினுடல்மேனி

 மாலினுடல்மேனி māliṉuḍalmēṉi, பெ.(n.)

   நாகப்பச்சை; a kind of gem.

மாலின்தாரம்

 மாலின்தாரம் māliṉtāram, பெ.(n.)

   அரிதாரம்; yellow orpiment.

மாலின்நேத்திரம்

 மாலின்நேத்திரம் māliṉnēttiram, பெ.(n.)

   கல்தாமரை; dry lotus found in the crevices of rocks and mountains (சா.அக.);.

மாலின்யம்

மாலின்யம் māliṉyam, பெ. (n.)

   1. கேடுறுகை; being spoiled.

   2. அழுக்கு (இலக்.அக.);; dirt.

     [Skt. {} → த. மாலின்யம்.]

மாலிமி

 மாலிமி mālimi, பெ.(n.)

   இளமையிற் செய்யும் நட்பு (சது.);; youthful friendship.

மாலிமை

மாலிமை mālimai, பெ.(n.)

   பெருமிதம்; dignity, eminence, honour.

     “ஒருவன்கீழ் மாலிமையாய்ப் பெண்டிருந்து வாழ்ந்ததல்லால்” (தெய்வச். விறலி விடு.289);.

மாலியம்

மாலியம்1 māliyam, பெ.(n.)

   பூ (சங்.அக.);; flower.

     “பிந்தைக் காட்டு மாலியற்கள்” (காஞ்சிப்பு. நகரப்.35);.

 மாலியம்2 māliyam, பெ.(n.)

   திருமாலை வழிபடுபவர்; vaishnavitties.

மாலியவான்

மாலியவான் māliyavāṉ, பெ. (n.)

   1. இராவணன் பாட்டனாகிய தலைமை யமைச்சன். (கம்பரா. இலங்கைகா. 6.);; a {}, grandfather and chief counsellor of {}.

   2. ஒரு மலை. (கந்தபு. அண்டகோ. 34.);

 a mount.

   3. 513 சிகரங்களையும் 65 மேனிலைக் கட்டுகளை யுமுடைய கோயில் (சுக்கிரநீதி, 230);; temple with 513 towers and 65 floors.

     [Skt. {} → த. மாலியவான்.]

மாலியாங்கம்

மாலியாங்கம் māliyāṅgam, பெ.(n.)

   பல வகை மாலைகளைத் தொடுக்க உதவுந் தெய்வ மரம் (தக்கயாகப்.757, கீழ்க்குறிப்பு);; a celestial tree which gives various kinds of garlands.

மாலிருஞ்சோலை

மாலிருஞ்சோலை māliruñjōlai, பெ.(n.)

   மதுரை மாவட்டத்திலுள்ள அழகர்மலை (திவ்.பெரியாழ்..2, 7, 11);; the {} hills near Madurai.

     [மால் = திருமால். மால் + இருஞ்சோலை.]

மாலுகம்

மாலுகம் mālugam, பெ.(n.)

   1. பேரேலம்; greater cardamom.

   2. வால் மிளகு; tail pepper (சா.அக.);.

மாலுக்கிளையாள்

மாலுக்கிளையாள் mālukkiḷaiyāḷ, பெ.(n.)

   1. கொற்றவை; Durgai.

   2. மால் தங்கை; sister of {}.

மாலுங்கம்

 மாலுங்கம் māluṅgam, பெ.(n.)

   புளி மாதுளை; sour pomegranate fruit.

மாலுடைக்கண்டன்

 மாலுடைக்கண்டன் māluḍaikkaṇḍaṉ, பெ.(n.)

   நவமணிகளிளொன்றான புட்பராகம் (யாழ்.அக.);; topaz.

மாலுதல்

மாலுதல் māludal, பெ.(n.)

   மயங்குதல்; getting giddy, being charmed.

     [முல் → மால் → மாலுதல் (வே.க.4:37);]

மாலுதானம்

 மாலுதானம் mālutāṉam, பெ. (n.)

   பச்சைப் பாம்பு (சூடா.);; whipsnake.

     [Skt. {} → த. மாலுதானம்.]

மாலுந்திவந்தோன்

 மாலுந்திவந்தோன் mālundivandōṉ, பெ.(n.)

   திருமாலின் உந்தியில் தோன்றிய பிரமன் (பிங்.);;{}, as born of the naval of {}.

     [மால் + உந்தி + வந்தோன்.]

மாலுமாருதம்

 மாலுமாருதம் mālumārudam, பெ.(n.)

   நாரை; crane.

     [p]

மாலுமி

 மாலுமி mālumi, பெ. (n.)

   கப்பலோட்டி (பிங்.);; captain of a vessel, pilot, navigator.

     [U. muallin → த. மாலுமி.]

மாலுறல்

மாலுறல்1 māluṟal, பெ.(n.)

   மாறுபாடாய் நினைக்கை; negative thinking.

     [மால் + உறல்.]

 மாலுறல்2 māluṟal, பெ.(n.)

   மயங்கல்; getting giddy.

மாலூர்

 மாலூர் mālūr, பெ.(n.)

   துவரை; redgram (சா.அக.);.

மாலூர்தி

 மாலூர்தி mālūrti, பெ.(n.)

   திருமாலின் ஊர்தியாகிய கருடன் (யாழ்.அக.);; kite, as the vehicle of {}.

     [மால் = திருமால். மால் + ஊர்தி]

மாலை

மாலை1 mālai, பெ.(n.)

   1. பகலும் இரவுங் கலக்கும் அந்திப் பொழுது (பிங்.);; evening.

     “மாலை யுழக்குந் துயர்” (குறள்,1135);.

     “காரும் மாலையும் முல்லை” (தொல். பொருள். 61);.

   2. இரா (பிங்.);; night, midnight.

     “மாலையும்படா விழித்திரளது” (தக்கயாகப். 155);.

   3. இருள்; darkness.

     “மாலை மென்கேசம்” (திருப்பு.32);.

   4. காலம்; time, opportunity.

     “வஞ்சமென் றுணர்ந்த மாலைவாய்” (கம்பரா. திருவவ.51);.

   5. குற்றம் (தொல்.சொல்.396, – உரை);; fault.

   6. பச்சைக்கற் குற்றவகை (சிலப்.14, 184, உரை);; a flaw in emerald.

   7. இயல்பு; nature, natural, quality.

     “கைசெய்தூண் மாலையவர்” (குறள், 1035);.

   8. பண்பு (பிங்.);; disposition.

   9. தொடுக்கப்பட்டது, வரிசையாகப் பொருந்தியது; anything strung together.

   10. தொடுத்த பூந்தொடை; garland, wreath of flowers.

     “மாலை போற்றூங்குஞ் சினை” (கலித்.106, 27);.

   11. மணமாலைபோல தொடுத்த அல்லது கட்டிய மணிமாலை அல்லது முத்து மாலை;   மகளிரணி வடம் (பிங்.);; woman’s necklace or string of jewels, beads, etc.

   12. பூமாலை போன்ற பாமாலை (சிற்றிலக்கிய வகை); ; a kind of poem.

திருவரங்கத்து மாலை.

   13. வரிசை; line, row.

     “மாலை வண்டினம்” (சீவக.2397);.

   14. கயிறு; cord, bond.

     “மாலையு மணியும்” (பரிபா.5, 67);.

   15. பண்குடிப் பெண்ணாகிய விறலி; woman who sings and dances.

     “பாணர் மாலையர் மாலை யெய்தி” (திருவாலவா.54, 26);.

   16. பெண் (திருக்கோ.1, உரை.பக்.9);; woman.

   17. முத்துமாலை போன்ற வடிவம்; string shape. மாலைமாலையாய்க் கண்ணீரை வடித்தாள் (உ.வ.);.

     [முல் (பொருந்தற்கருத்து வேர்); → மல் → மால் = மயக்கம், மயக்கும் ஆசை, ஆசை வகையுள் கடுமையான காமம், இடம் பொருள் தெரியாவண்ணம் கண்ணை மயக்கும் இருட்டு, இருள் நிறமான கருமை, கருநிறமான திருமால், கருமுகில், ஆரிய முத்திருமேனிக் கொள்கைப்படி காவல்தொழிலால் திருமாலை யொத்தவனான மாலியச் சோழன்.]

மால் → மாலை.

பூமாலையையும் பொழுது மாலையையுங் குறிக்கும் மாலை யென்னுஞ் சொல் ஒன்றே. சென்னைப் பல்கலைக்கழகப் பேரகரமுதலியில் அவ் விரண்டையுங் குறிக்குஞ் சொல் வெவ்வேறென்று, காட்டப்பட்டுள்ளது. இது பூமாலையைக் குறிக்குஞ் சொல்லை வடசொல்லென்று காட்ட வகுத்த சூழ்ச்சியே (வே.க.41:38);]

 மாலை2 mālai, பெ.(n.)

   ஒருவகை வலை; a kind of net.

 மாலை3 mālai, பெ.(n.)

   கல்லறைக் கட்டடம் (முகவை.வழக்.);; sepulchre building.

மாலை நிலை

 மாலை நிலை mālainilai, பெ.(n.)

   உடன்கட்டை ஏறுகை (சக்கமனம்);; self immolation of a Hindu widow on her husband’s funeral pуre.

     [மாலை+நிலை]

மாலைகட்டி

 மாலைகட்டி mālaigaṭṭi, பெ.(n.)

   கோயிலுக்குப் பூமாலை கட்டுவோன் (இ.வ.);; one who makes garlands of flowers for use in temples.

     [மாலை + கட்டி.]

மாலைக்கண்

மாலைக்கண் mālaikkaṇ, பெ.(n.)

   1. இரவிற் கண் தெரியாமை; night blindness.

   2. பார்வைக் குறைவு; defective sight.

     “மாலை வண்டின மாலைக்கண் கொண்டவே” (சீவக.2397);.

     [மாலை + கண். மாலை = அந்திநேரம்.]

மாலைக்கண்ணன்

மாலைக்கண்ணன் mālaikkaṇṇaṉ, பெ. (n.)

   1. இரவுக்குருடன்; person suffering from night- blindness.

   2. பார்வைக்குறைவுள்ளவன்; purblind man.

     [மாலை + கண்ணன். மாலை = அந்தி நேரம்]

மாலைக்கயிறு

 மாலைக்கயிறு mālaikkayiṟu, பெ.(n.)

   பந்தல் அமைக்கப் பயன்படும் கயிற்று முடிச்சு வகை (சென்னை.வழ.);; a kind of knot in горе.

மாலைக்கல்

 மாலைக்கல் mālaikkal, பெ.(n.)

   படிகக்கல்; crystal.

     [மாலை + கல்.]

மாலைக்கல்லூரி

மாலைக்கல்லூரி mālaikkallūri, பெ.(n.)

   1. அலுவற்பணி செய்வோரும் பகலில் சென்று பயில இயலாதோரும் பயிலும் வகையில் பாடவேளை அமைக்கப்பட்ட கல்லூரி; evening college.

   2. கல்லூரி இட நெருக்கடியைக் கரணியங் காட்டியும், பிறவற்றைக் காட்டியும் பிற்பகல் வேளையில் பாடம் நடத்தப் பெறுங் கல்லூரி (இக்.வழ.);; evening session in colleges.

     [மாலை + கல்லூரி.]

மாலைக்காசம்

 மாலைக்காசம் mālaikkācam, பெ.(n.)

   கண் நோயால் மாலை நேரத்தில் தீவ ஒளி வேறாய்க் காட்டும் ஒருவகைக் கண்நோய்; an eye disease affecting the sight.

     [மாலை + காசம்]

மாலைக்காதம்

 மாலைக்காதம் mālaikkātam, பெ.(n.)

   மாலைநேரம்; evening time.

     [மாலை + காதம்]

மாலைக்காமாலை

மாலைக்காமாலை mālaikkāmālai, பெ.(n.)

மாலைக்கண், 1 (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [மாலை + காமாலை]

மாலைக்காரர்

மாலைக்காரர் mālaikkārar, பெ.(n.)

   மாலை தொடுப்போர்; garland makers.

     “மாலைக்காரருங் காலக் கணிதரும்” (மணிமே.28, 40);.

     [மாலை + காரர். ‘காரர்’ உடைமை குறித்த ஈறு.]

மாலைக்காலம்

 மாலைக்காலம் mālaikkālam, பெ.(n.)

   மாலை நேரம்; evening time.

     [மாலை + காலம்.]

மாலைக்குளி

மாலைக்குளி mālaikkuḷi, பெ.(n.)

மாலைக் குளியல் (பதார்த்த.1307); பார்க்க;see {}.

     [மாலைக்குளியல் → மாலைக்குளி]

மாலைக்குளியன்

மாலைக்குளியன் mālaikkuḷiyaṉ, பெ.(n.)

   மாலையிற் குளித்து அழகுபடுத்திக் கொள்பவன் (விறலிவிடு.237);; fob, dandy, as bathing in the evenings.

     [மாலை + குளியன். மாலை = அந்திவேளை]

மாலைக்குளியல்

மாலைக்குளியல் mālaikkuḷiyal, பெ.(n.)

   அந்தி நேரத்துக் குளியல் (பதார்த்த, 130, தலைப்பு);; evening bath.

     [மாலை + குளியல். மாலை = அந்தி வேளை]

மாலைக்கோவில்

 மாலைக்கோவில் mālaikāvil, பெ.(n.)

   உருவம் வகுக்காத சிலையை வைத்து வணங்கும் கோயில் (இ.வ.);; shrine where a shapeless stone is worshipped.

     [மாலை + கோவில்]

மாலைசாத்து – தல்

மாலைசாத்து – தல் mālaicāddudal,    5 செ.கு.வி.(v.i.)

    மாலையால் அழகுபடுத்திக் கொள்ளல் (வின்.);; to adorn with garlands as a deity.

     [மாலை + சாத்து-]

மாலைசூட்டு – தல்

மாலைசூட்டு – தல் mālaicūṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

மாலையிடு – தல் பார்க்க;see {}.

     [மாலையிடு → மாலைசூட்டு-,]

மாலைச்சுரம்

 மாலைச்சுரம் mālaiccuram, பெ.(n.)

   சாயுங்காலத்தில் காணும் காய்ச்சல்; fever that comes in the evening (சா.அக.);.

     [மாலை + சுரம்.]

மாலைத்தீவகம்

மாலைத்தீவகம் mālaittīvagam, பெ.(n.)

மாலாதீபகம்3 பார்க்க;see {}.

மாலைத்தீவு

 மாலைத்தீவு mālaittīvu, பெ.(n.)

   மேற்குக் கடற்கரையை யடுத்து மாலைபோல் அமைந்துள்ள தீவுக் கூட்டம்; Maldives.

     [மாலை + தீவு]

மாலைநிலை

மாலைநிலை mālainilai, பெ.(n.)

   இறந்த கணவனுடைய எரியில் தீப்பாயும் பொருட்டு அவன் மனைவி மாலைக் காலத்து நின்றநிலை கூறும் புறத்துறை (தொல். பொருள்.77, இளம்பூ.); (பு.வெ.10, 8);; theme describing the condition of a wife preparing to immolate herself, in an evening, on the funeral pyre of her deceased husband.

     [மாலை + நிலை]

மாலைநுழைஞ்சான்

 மாலைநுழைஞ்சான் mālainuḻaiñjāṉ, பெ.(n.)

   மாலையில் மணல் தரையில் தங்குவதும் கரியவுடலும் வெண்மார்பு முடையதுமான குருவி வகை (வின்.);; a dark white-breasted little bird which nestles in the sand at dusk.

     [மாலை + நுழைஞ்சான்]

     [p]

மாலைநேரம்

 மாலைநேரம் mālainēram, பெ.(n.)

   அந்தி வேளை (வின்.);; evening.

     [மாலை + நேரம்]

மாலைப்படிகம்

 மாலைப்படிகம் mālaippaḍigam, பெ.(n.)

   பளிங்கு (யாழ்.அக.);; crystal.

     [மாலை + படிகம்]

மாலைப்பண்

 மாலைப்பண் mālaippaṇ, பெ.(n.)

   அந்திக்குரிய பண்; melody type suited to the evenings.

     [மாலை + பண்.]

மாலைப்பதநீர்

 மாலைப்பதநீர் mālaippadanīr, பெ.(n.)

   மாலையிலிறக்கிய பதநீர் (வின்.);; sweet toddy fresh drawn in the evening.

     [மாலை + பதநீர்.]

மாலைப்பதனி

 மாலைப்பதனி mālaippadaṉi, பெ.(n.)

மாலைப்பதநீர் (வின்.); பார்க்க;see {}.

     [மாலை + பதனி. பதநீர் → பதனி (இ.வ.);]

மாலைப்பூத்தல்

 மாலைப்பூத்தல் mālaippūttal, பெ.(n.)

   மணக்காலம் நேருகை; arrival of the time of marriage.

     [மாலை + பூத்தல்]

மாலைப்பொழுது

 மாலைப்பொழுது mālaippoḻudu, பெ.(n.)

   அந்திப்பொழுது; evening time.

     [மாலை + பொழுது]

மாலைமசங்கல்

 மாலைமசங்கல் mālaimasaṅgal, பெ.(n.)

மாலைமயங்குநேரம் (இ.வ.); பார்க்க;see {}.

     [மாலை + மசங்கல்.]

மாலைமசங்குநேரம்

 மாலைமசங்குநேரம் mālaimasaṅgunēram, பெ.(n.)

மாலைமயங்குநேரம் பார்க்க;see {}.

     [மாலைமயங்குநேரம் → மாலைமசங்குநேரம்]

மாலைமயங்குநேரம்

 மாலைமயங்குநேரம் mālaimayaṅgunēram, பெ.(n.)

   அந்திக் காலத்து மங்கற் பொழுது (இ.வ.);; dusk of evening.

     [மாலை + மயங்கும் நேரம். மயங்குதல் = கலத்தல், கலங்குதல். பகலும் இரவும் கலக்கும் காலம்.]

மாலைமாடப்புரவி

 மாலைமாடப்புரவி mālaimāṭappuravi, பெ.(n.)

   குரங்கு; monkey (சா.அக.);.

மாலைமாற்று

மாலைமாற்று1 mālaimāṟṟu, பெ.(n.)

   மணமக்கள் தத்தம் கழுத்திலணிந்த மாலைகளை மாற்றிக் கொள்ளும் மணவினை; the ceremony of exchanging garlands by the bride and the bridegroom.

   2. மணவிழாவில் மணமக்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி மாலை யிடுதல்; to exchange garlands, as bridegroom and bride in a marriage.

     [மாலை + மாற்று.]

 மாலைமாற்று2 mālaimāṟṟu, பெ.(n.)

   எழுத்துக்களை ஈறு முதலாகப் படிக்குமிடத்தும் பாட்டு மாறாமல் இருக்கும் மிறைக்கவி வகை (யாப்.வி.பக்.493);;     “திருமாலை மாற்று” (தேவா.123, தலைப்பு);.

     [மாலை + மாற்று.]

மாலையணி

மாலையணி1 mālaiyaṇidal,    2 செ.கு.வி. (v.i.)

   புணர்ச்சியின்பந் துய்த்தல்; to enjoy sexual pleasure, lit. to adorn with a garland.

     “மாலையணிய விலைதந்தான்” (பரிபா:20, 79);.

     [மாலை + அணி-,]

 மாலையணி2 mālaiyaṇi, பெ.(n.)

   அணி வகை (சங்.அக.);; a figure of speech.

     [மாலை + அணி.]

மாலையந்தி

மாலையந்தி mālaiyandi, பெ.(n.)

   பகலும் இரவும் சந்திக்கும் அந்தி வேளை; evening twilight, dusk, dist. fr. {}.

     “காலையந்தியும் மாலையந்தியும்” (புறநா.34);.

     [மாலை + அந்தி.]

மாலையாகாலம்

 மாலையாகாலம் mālaiyākālam, பெ.(n.)

மாலையந்தி (யாழ். அக.); பார்க்க; see {}.

     [மாலை + ஆ + காலம்.]

மாலையிடு – தல்

மாலையிடு – தல் mālaiyiḍudal,    17 செ.குன்றாவி. (v.t)

   மாலை சூட்டி மணத்தல்; to marry, as the bride garlanding the bridegroom.

     “கரித்தோலையிட்டாடுந் தொழிலுடை யோனை முன்னாண் மாலையிட்டாயி தென்னே” (அருட்பா.1, வடிவுடை.13);.

     [மாலை + இடு-,]

மாலையிட்டவன்

 மாலையிட்டவன் mālaiyiṭṭavaṉ, பெ.(n.)

   கணவன் (கொ.வ.);; husband, as one who garlanded his bride.

     [மாலை + இட்டவன்.]

மாலையிட்டுப்பிறத்தல்

 மாலையிட்டுப்பிறத்தல் mālaiyiṭṭuppiṟattal, பெ.(n.)

   தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிப் பிறத்தல்; child born with the naval cord round the neck.

     [மாலையிட்டு + பிறத்தல்.]

மாலையீடு

மாலையீடு mālaiyīṭu, பெ.(n.)

   1. மாலை சூட்டு பார்க்க; see {}.

     “மாலையீட்டுப் படலம்” (இரகு.);.

   2. உடன் கட்டையேறியவளுக்கு எழுப்பிய நினைவுக் கட்டடம் (இலக்.வி..619);; monument for wife who immolates herself in the funeral pyre of her deceased husband.

   3. அரசர் முதலியவரின் நினைவுச் சின்னம் அமைந்த ஈமம்; cremation ground where monuments for deceased chiefs are erected (Rd);.

     [மாலையிடு → மாலையீடு.]

மாலையுவமை

மாலையுவமை mālaiyuvamai, பெ.(n.)

   பூமாலைபோல் உவமை பல ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் வரும் அணி வகை (தண்டி.30, 24);;     [மாலை + உவமை.]

மாலைவடம்

 மாலைவடம் mālaivaḍam, பெ.(n.)

   தேர் இழுத்தற்கான பெரிய வடக்கயிறு (இ.வ.);; large, long rope for dragging a temple car.

     “இந்தத் தேருக்கு மாலை வடம் இன்னும் பூட்டவில்லை” (உ.வ.);.

     [மாலை +வடம்.]

     [p]

மாலைவன்னி

 மாலைவன்னி mālaivaṉṉi, பெ.(n.)

   அதி மதுரம் (சங்.அக.);; liquorice plant.

மாலைவரச்செட்டி

 மாலைவரச்செட்டி mālaivaracceṭṭi, பெ.(n.)

   பல்லி; lizard (சா.அக.);.

மாலைவாங்கு – தல்

மாலைவாங்கு – தல் mālaivāṅgudal,    5 செ.கு.வி.(v.i.)

   பரிசங் கொடுத்தல்; to pay for sexual pleasure lit. to purchase a garland,

     “மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென” (சிலப்.3:166);.

     [மாலை + வாங்கு-,]

மாலைவாரம்

 மாலைவாரம் mālaivāram, பெ.(n.)

   அந்திப் பொழுது; evening time.

     [மாலை + வாரம்.]

மாலைவெயில்

மாலைவெயில் mālaiveyil, பெ.(n.)

   அந்திப் பொழுதின் மஞ்சள் வெயில் (பதார்த்த:1297);; yellow glow of the evening sun.

     [மாலை + வெயில்]

மாலைவெள்ளி

 மாலைவெள்ளி mālaiveḷḷi, பெ.(n.)

   அந்தியிற் றோன்றும் (சுக்கிரன்); வெள்ளி விண்மீன் (வின்.);; venus, when it appears as the evening star.

     [மாலை + வெள்ளி]

மாலோன்

மாலோன் mālōṉ, பெ.(n.)

   1. திருமால் (சூடா);;{}.

     “அப்புரவலனு மாலோனெனி லவளுந் திருவாமெனில்” (தஞ்சைவா.366);.

   2. இந்திரன் (சங்.அக.);;{}.

   3. அறிவன் கோள் (சங்.அக.);; the planet mercury.

     [மால் → மாலோன்.]

மால்

மால்1 mālludal,    16 செ.கு.வி.(v.i.)

   மயங்குதல்; to be confused, perturled.

     “மான்று வேட்டெழுந்த செஞ்செவி யெருவை” (அகநா.3);.

     [மல் → மல்லல் = மிகுதி, வளம், செல்வம், வலிமை, பொலிவு, அழகு. மல் → மலை. மலைதல் = ஒத்தல், எதிர்த்தல், பகைத்து மாறுபடுதல், போராடுதல். மல் → மலை → மலைத்தல் = மாறுபடுதல், பொருதல், வருந்துதல். மல் → மால்(லு);, மலைதல் = மயங்குதல். மலைத்தல் = மயங்குதல். மல் → மால் (வே.க.4:37]

பல பொருள்கள் ஒன்று சேர்வதால் குழம்பலும் குழப்பமும் கலக்கமும் மயக்கமும் உண்டாகும். நீரும் மண்ணும் சேரின் கலங்கல் அல்லது கலுழி யெனப்படுவதும், நீரும் பிற பொருளும் சேர்ந்து திண்ணமாயின் குழம்பு அல்லது குழம்பல் எனப்படுவதும், பகலும் இரவும் மயங்கும் (கலக்கும்); வேளை மசங்கல் (மயங்கல்); எனப்படுவதும் காண்க. ஒ.நோ: கல → கலகு → கலங்கு → கலக்கு

→ கலக்கம். ஒரு கவர்த்த வழியைக் காணின் எது வழியென்று தெரியாது கலங்கவும், அறியாதார் பலர் கூடியிருக்கக் காணின் அவருட் காண வேண்டியவர் யாரென்று தெரியாது மயங்கவும் நேரும். இதனால் பொருட் கலக்கம் மனக் கலக்கத்திற்கும் ஏதுவாம்.

அமைதியான மனத்தில் கவலை அல்லது அச்சம் கலப்பின் மனக்கலக்கம் உண்டாகும். மனத்தெளிவு முற்றும் நீங்குவதே மயக்கம். அது தீய பொருள் உடம்பிற் கலப்பதாலும் உண்டாகும் (வே.க.4:37);.

 மால்2 mālludal,    16 செ.கு.வி.(v.i.)

   மாட்சிப்படுதல்; to be magnified, glorified.

     “மான்ற பூண் முலையினாள்” (காஞ்சிப்பு. திருக்கண்.174);.

     [மல் → மால்.]

 மால்3 mālludal,    16 செ.கு.வி.(v.i.)

   எழுதகம் அமைத்தல் (வின்.);; to form moul – dings on a pillar or wall

     “மால்கிறேன், மாலினேன்”.

 மால்4 māl, பெ.(n.)

   1. மயக்கம்; illusion, delusion, aberration of mind, dullness, stupor, confusion.

     “பரேரம் புழகுடன் மாலங் குடைய மலிவன மறுகி” (குறிஞ்சிப்.96);.

   2. ஆசை (பிங்.);; desire.

     “என் பேய் மன மால் கொண்டதே” (திருநூற்.1);.

   3. காமம்; love, lust.

     “மடப்பிடி கண்டு வயக்கரி மாலுற்று” (பரிபா.10, 42);.

   4. கருமை (பிங்.);; blackness.

     “மால்கடல்” (பெரும்பாண்.487);.

     [மல் → மால் (வே.க.4:37);]

 மால்5 māl, பெ.(n.)

   1. பெருமை (பிங்.);; greatness.

     “சினமால் விடை யுடையான்”

   2. பெருமையுடையவன்; great man.

     “மாமஞ்ஞை யூர்ந்து நின்றமால்” (சீவக.286);.

   3. திருமால்; Tirumal.

     “நீர் செல நிமிர்ந்த மாஅல் போல” (முல்லைப்.3);.

   4. அருகன் (சூடா.);; arhat.

     “இன்பக் கடலாக்கித் தரு மாலை” (சீவக.961);.

   5. வானவத்தலைவன் (இந்திரன்); (பிங்.);;{}.

     “தன்றிரு மகனெனப் பெற்றமால்” (குமர.பிர.முத்து. காப்.6);.

   6. காற்று (பிங்.);; wind.

   7. அறிவன் கோள் (பிங்.);; the planet mercury.

   8. சோழன் (பிங்.);; Cola king.

   9. மலை (அக.நி.);; mountain.

   10. வளமை (அக.நி.);; plenty, fertility.

   11. பழமை (அக.நி.);; antiquity.

   12. மேகம் (பிங்.);; cloud.

   13. மால்பு (பிங்.);பார்க்க;see {}.

   14. விட்டிணு கரந்தை (மூ.அக.);; a plant that grows only in hot and dry places.

     [முல் (பொருந்தற் கருத்து வேர்); → மல் → மால் (வே.க.4:30);]

 மால்6 māl, பெ.(n.)

   1. எழுதகக் கருவி (வின்.);; wooden mould for forming the mouldings of a pillar or cornice of wall.

   2. செங்கற்கட்டளை (இ.வ.);; mould for making bricks.

   3. காளவாய் (இ.வ.);; brick – kiln.

   4. மாதிரி (வின்.);; form, plan, fashion.

   5. எல்லை; demarcation, limit.

   6. வலை வகை (வின்.);; a kind of net.

   7. கொட்டடி (இலாயம்);; stable, stall.

   8. அரசிறை வகை (வின்.);; quit, rent.

   9. சொத்து; property.

 மால்7 māl, பெ.(n.)

   1. வலையின் ஒரு கூறு (மீனவ.வழக்.);; section of a fishing net.

   2. செல்வம்; wealth.

 மால் māl, பெ. (n.)

நிலக்கடலைப் பயிரில் பூவிட்ட பின் நிலத்தில் இறங்கும் விழுது

 side root buds penetrating the earth after the groundnut plantflowered.

     [மா-மால்]

 மால்1 māl, பெ. (n.)

   1. எழுதகக்கருவி (வின்.);; wooden mould for forming the mouldings of a pillar or cornice of wall.

   2. செங்கற் கட்டளை. (இ.வ.);; mould for making bricks.

   3. காளவாய். (இ.வ.);; brick – kiln.

   4. முன் வடிவு (மாதிரி); (வின்.);; form, plan, fashion.

   5. எல்லை. (வின்.);; demarcation, limit.

   6. வலை வகை (வின்.);; a kind of net.

   7. கொட்டில், இலாயம் (வின்);; stable, stall.

   8. அரசிறை வகை. (வின்);; quit – rent.

   9. சொத்து; property.

     [Ar. {} → த. மால்.]

 மால்2 māl, பெ. (n.)

   அரண்மனை; Palace.

     ‘திருமலைநாயக்கர்மால்’

     [Ar. {} → த. மால்.]

மால்கங்கணி

 மால்கங்கணி mālkaṅgaṇi, பெ.(n.)

   வாலுளுவை (இ.வ.);; black-oil.

மால்கங்கணிவிதை

 மால்கங்கணிவிதை mālkaṅgaṇividai, பெ.(n.)

   வாலுளுவைரிசி; seed of intellect plant.

மால்கண்டகன்

 மால்கண்டகன் mālgaṇṭagaṉ, பெ.(n.)

   புட்பராகம்; one of the nine germs.

மால்கந்தி

 மால்கந்தி mālkandi, பெ.(n.)

   அரிதாரம்; yellow orpiment (சா.அக.);.

மால்கயிறு

 மால்கயிறு mālkayiṟu, பெ.(n.)

   வலையை வாங்குதற்குரிய வலைக்கயிறு (செங்கை. மீனவ.);; twaist of the fishing net.

     [மால் + கயிறு.]

மால்கரந்தை

 மால்கரந்தை mālkarandai, பெ.(n.)

   திருமால்கரந்தை எனுஞ் செடி (மூ.அ.);; a plant that grows only in hot and dry places.

     [மால் + கரந்தை. மால் = திருமால்]

மால்காரை

மால்காரை mālkārai, பெ.(n.)

   கருந்துளசி; black variety of holy basil.

மால்குறி – த்தல்

__,

   4 செ.கு.வி. (v.i.);

   மனை கட்டுவதற்கு முன்பாக எல்லையை வரையறை செய்து அடையாளமாக குச்சி நடுதல் (முது.வழ.);; to plant a small stick as pole, to determine the boundry of the housing plot, before construction.

     [மால் = எல்லை. மால் + குறி-,]

மால்குசாரி

 மால்குசாரி mālkucāri, பெ. (n.)

   வரிசெலுத்து தற்குரிய நிலம் (C.G.);; land liable to pay revenue to government, opp. to {}.

     [U. {} → த. மால்-குசாரி.]

     [Skt. {} → த. மாருதகணம்.]

மால்சந்தனம்

 மால்சந்தனம் mālcandaṉam, பெ.(n.)

   செஞ்சந்தனம்; red sandal wood.

மால்சமயத்தோர்

 மால்சமயத்தோர் mālcamayattōr, பெ.(n.)

திருமாலையே முதற்கடவுளாக வணங்கும் கொள்கையோர் (பிங்.);;{}

 as devotees of {}.

     [மால் + சமயத்தோல். மால் = திருமால்.]

மால்சாமீன்

 மால்சாமீன் mālcāmīṉ, பெ. (n.)

   பிணைய சொத்து (C.G.);; property security.

     [Ar. {} + {} → த. மால்சாமீன்.]

மால்தங்கை

மால்தங்கை māltaṅgai, பெ.(n.)

   1. உமை;{}.

   2. நஞ்சு வகை (யாழ்.அக.);; a kind of mineral poison.

     [மால் + தங்கை.]

மால்தாயம்

 மால்தாயம் māltāyam, பெ.(n.)

   கருநெய்தல் எனும் கொடி; a kind of creeper (சா.அக.);.

மால்தார்

 மால்தார் māltār, பெ. (n.)

   உரிமையன் (இ.வ.);; proprietor.

     [Ar. {} → த. மால்தார்.]

மால்தீபலம்

 மால்தீபலம் māltīpalam, பெ.(n.)

   சாதிக்காய்; net meg (சாஅக.);.

மால்துயில்

 மால்துயில் māltuyil, பெ.(n.)

   ஆலமரம்; banyan tree (சா.அக.);.

மால்தேவி

 மால்தேவி māltēvi, பெ.(n.)

   அரிதாரம்; yellow orpiment (சா.அக.);.

மால்தேவிமச்சினி

 மால்தேவிமச்சினி māltēvimacciṉi, பெ.(n.)

   அப்பிரகம்; mica (சா.அக.);.

மால்தொடை

 மால்தொடை māltoḍai, பெ.(n.)

   துளசி (மலை.);; sacred basil.

     [மால் + தொடை. மால் = திருமால். தொடை = தொடுக்கப்பட்டது, மாலை. ஒ.நோ. உடுக்கப்படுவது உடை.]

மால்நிறம்

 மால்நிறம் mālniṟam, பெ.(n.)

   பச்சை; green (சா.அக.);.

     [மால் + நிறம். மால் = திருமால்]

மால்பண்டாரி

மால்பண்டாரி mālpaṇṭāri, பெ. (n.)

   1. வீட்டுப் பொருள்களைப் பாதுகாக்கும் மேலாள்; steward, store keeper.

   2. கப்ப லுரிமையாளனுடைய கீழாள் (Naut.);; clerk of a ship owner.

     [Ar. {} + {} → த. மால்பண்டாரி.]

மால்பரிதி

 மால்பரிதி mālparidi, பெ.(n.)

   உடம்பின் கொழுப்பு; fat of the human body (சா.அக.);.

மால்பாகலட்சுமி

 மால்பாகலட்சுமி mālpākalaṭcumi, பெ.(n.)

   அரிதாரம்; yellow orpiment (சா.அக.);.

மால்பு

மால்பு mālpu, பெ.(n.)

   கண்ணேணி, மூங்கில் ஏணி; bamboo ladder.

     “நிலை பெய்திட்டமால்பு நெறியாக” (மலைபடு.316);.

மால்போடு – தல்

மால்போடு – தல் mālpōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   எல்லை வரைதல் (இ.வ.);; to draw a plan, to demarcate.

     [மால் + போடு-, மால் = எல்லை]

மால்போடு-தல்

மால்போடு-தல் mālpōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   எல்லை வரைதல் (இ.வ.);; to draw a plan;

 to demarcate.

     [Ar. {} → த. மால்+போடு-தல்.]

மால்முடி – தல்

மால்முடி – தல் mālmuḍidal,    4 செ.கு.வி.(v.i.) வலைபின்னுதல் (இ.வ.); to make a net.

     [மால் + முடி-, மால் = வலை. முடி = முடிச்சு போடுதல், பின்னுதல், கட்டுதல், தென்னை யோலைப் பின்னுதலை தென்னை முடிதல் என்றும், பையின் தலைப்பைக் கட்டிக் கொடுத்தலை முடிந்து கொடு என்றும் வழங்கும் வழக்குண்மையை யறிக.]

மால்முடி-தல்

மால்முடி-தல் mālmuḍidal,    4 செ.கு.வி. (v. i.)

   வலை பின்னுதல் (இ.வ.);; to make a net.

     [Ar. {} → த. மால்முடி-தல்.]

மால்முப்பு

 மால்முப்பு mālmuppu, பெ.(n.)

   தலைப் பிண்டம்; foetus of first confinement (சா.அக.);.

மால்முருகு

 மால்முருகு mālmurugu, பெ.(n.)

   துளசி (மலை.);; sacred basil.

     [மால் + முருகு. மால் = திருமால்.]

மால்மேனி

 மால்மேனி mālmēṉi, பெ.(n.)

   துருசு; copper sulphate (சா.அக.);.

மால்மைத்துனன்

மால்மைத்துனன் mālmaittuṉaṉ, பெ.(n.)

   1. சிவன்;{}.

   2. துருசு; blue vitriol.

     [மால் + மைத்துனன். மால் = திருமால்]

மால்மைந்தன்

மால்மைந்தன் mālmaindaṉ, பெ.(n.)

   காமன் (நாமதீப.57);;{}, a son of {}.

     [மால் + மைந்தன். மால் = திருமால்]

மால்வார்

 மால்வார் mālvār, பெ.(n.)

   பழச்சாறு; a kind of fruits juice.

மால்விளக்கு

 மால்விளக்கு mālviḷakku, பெ.(n.)

   தோணியின் பின்னால் கட்டும் விளக்கு (நெல்லை.);; a lamp fixed in backside of the boat.

     [மால் + விளக்கு. மால் = வலை, மீன்பிடி வலை.]

மால்விளையாட்டு

 மால்விளையாட்டு mālviḷaiyāṭṭu, பெ.(n.)

   இன்ப நுகர்ச்சி; sexual intercourse.

     “இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல் வழங்கு நல்லூண் உண்ணும் போதும், மால்விளையாட்டின் போதும்” (பாம்பன்சுவாமிகள் – சண்முகக் கவசம்);.

மால்வீடு

 மால்வீடு mālvīṭu, பெ.(n.)

   சாளக்கிராமம் (யாழ்.அக.);; black fossil ammonite.

மால்வெட்டு – தல்

மால்வெட்டு – தல் mālveṭṭudal,    5 செ. குன்றாவி.(v.t.)

   1. மாதிரி செய்தல் (வின்.);; to cut out a form or pattern make a plan or diagram.

   2. பாத்தியமைத்தல் (யாழ்.அக.);; to form plots bounded by ridges.

     [மால் + வெட்டு-.]

மால்வெட்டு-தல்

மால்வெட்டு-தல் mālveṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   முன்வடிவு (மாதிரி); செய்தல். (வின்.);; to out a form or pattern, make a plan or diagram.

   2. பாத்தியமைத்தல் (யாழ். அக.);; to form plots bounded by ridges.

   3. கையூட்டு தருதல்; to bribe (இ.வ.);.

     [Ar. {} → த. மால்+வெட்டு-தல்.]

மாள

மாள māḷa,    இடை.(part.) ஒரு முன்னிலையசை (தொல்.சொல்.298, உரை); an expletive used with verbs in second person.

மாளசப்பிளவை

 மாளசப்பிளவை māḷasappiḷavai, பெ.(n.)

   ஆறாத பிளவை; conhealing (சா.அக.);.

மாளயம்

மாளயம் māḷayam, பெ. (n.)

   1. மாளயபட்சம்; the dark fortnight in the lunar month of {}.

     ‘கன்னி வியன்றிங்கள் வெண்டிங்கள் மெலியும் பக்க மாளயத்தை’ (சேதுபு. துராசா.13);.

   2. முன்னோற்குக் கன்னி (பாத்திரபத); மாதத்துக் கரும்பக்கத்து கிருட்டிணபட்சம்);ச் செய்யும் சடங்கு; offerings to deceased ancestors made during {}.

     [Skt. {} → த. மாளயம்.]

மாளவகவுளம்

 மாளவகவுளம் māḷavagavuḷam, பெ. (n.)

   ஓர் பண் வகை; a musical mode.

     [Skt. {}-gauda → த. மாளவகவுளம்.]

மாளவம்

மாளவம் māḷavam, பெ.(n.)

   பண்டிருந்த ஐம்பத்தாறு நாடுகளுள் ஒன்று; the country of Malwa one of 56, (q.v.);.

     “வான் குளம்புடையன மாளவத்தகத்த” (சீவக.2159);.

 மாளவம் māḷavam, பெ. (n.)

   ஐம்பத்தாறு நாடு களுள் ஒன்று; country of Malwa, oneof 56 {}.

     ‘வான்குளம் புடையன மாளவத் தகத்த’ (சீவக. 2159);.

     [Skt. {} → த. மாளவம்.]

மாளவி

மாளவி māḷavi, பெ.(n.)

   ஒரு பண் (பரத. இராக.56);; a specific melody – type.

மாளிகை

மாளிகை1 māḷigai, பெ.(n.)

   மாடி வீட்டின் மேல் நிலம் (திவ்.பெரியாழ்.2, 7, 3, வ்யா, பக்.393);; top floor of a storied building.

     [மால் → மாள் → மாளிகை.]

 மாளிகை2 māḷigai, பெ.(n.)

   1. அரண்மனை (பிங்.);; palace.

   2. கோயில்; temple.

     “உத்த ரகோசமங்கை…. மாளிகை பாடி” (திருவாச.16, 3);.

   3. மாடமுள்ள பெருவீடு (பிங்.);; mansion.

     “மறையவர்க்கு மாளிகைகள் பல சமைத்தார்” (பெரியபு.கோச்செங்.16);.

   4. வீடு (உரி.நி.);; house.

     [முல் (பொருந்தற் கருத்துவேர்); → மல் → மால் = பெருமை, பெருமையுடையவன், வளமை, மலை. மாலுதல் = மாட்சிப்படுதல். மால் → மாள் → மாளிகை (வே.க.4:30);. வ. மாளிகா. வடவர் மாலிமா என்னுஞ் சொல்லை மாலா என்பதனொடு தொடர்புபடுத்தி மேன்மாடியுள்ள வீடு என்று பொருளுரைப்பர். மலரடுக்குப் போன்ற மாடியடுக்கு என்பது அவர் கருத்துப் போலும்.

     “a white washed upper,storied house

     ” என்னும் பொருளை போனியர் வில்லியம்சு அகரமுதலி எங்ஙனம் பெற்றதோ அறிகிலம் (வ.வ.64);.]

மாளிகைக்கோல்

 மாளிகைக்கோல் māḷigaigāl, பெ.(n.)

   நீட்டலளவைக் கருவி வகை; a measuring rod.

     [மாளிகை + கோல்.]

மாளிகைச்சாந்து

மாளிகைச்சாந்து māḷigaiccāndu, பெ.(n.)

   உயர்ந்த கலவைச் சந்தனம்; scented sandal paste of superior quality.

     “இவள் ஆதரித்துச் சாத்தின மாளிகைச் சாந்தை” (திவ்.திருப்பல்.8 வியா.);.

     [மாளிகை + சாந்து (வே.க.4:30);.]

மாளிகைநாயகம்

மாளிகைநாயகம் māḷigaināyagam, பெ.(n.)

   அரண்மனை முறைமை (விசாரணை); மண்டபம் (S.I.I.iv, 336);; the office of a seneschal or chamberlain.

     [மாளிகை + நாயகம்.]

மாளிகைமேடு

 மாளிகைமேடு māḷigaimēṭu, பெ. (n.)

   கடலூர் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Cuddalore Taluk.

     [மாளிகை+மேடு]

மாளிகைவாழ்பவன்

 மாளிகைவாழ்பவன் māḷigaivāḻpavaṉ, பெ.(n.)

   ஊர்க்குருவி; sparrow bird (சா.அக.);.

     [p]

மாளிமந்தம்

 மாளிமந்தம் māḷimandam, பெ.(n.)

   இந்துப்பு (சங்.அக.);; rock salt.

மாளுளுவை

 மாளுளுவை māḷuḷuvai, பெ.(n.)

   கடல் மீன் வகை; a kind of sea fish.

     [p]

மாளுவம்

மாளுவம் māḷuvam, பெ.(n.)

மாளவம் பார்க்க;see {}.

     “குடகக் கொங்கரு மாளுவ வேந்தரும்” (சிலப்.30:159);.

     [மாளவம் → மாளுவம்.]

மாளை

 மாளை māḷai, பெ.(n.)

   புளியம் பட்டை (சங்.அக.);; bark of tamarind tree.

மாள்(ளு) – தல்

மாள்(ளு) – தல் māḷḷudal,    16 செ.கு.வி.(v.i.)

   1. சாதல்; to die.

     “வஞ்சமுண்மையேன் மாண்டிலேன்” (திருவாச.5, 93);.

   2. அழிதல்; to perish.

     “அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள்” (ஈடு.4:7, 3);.

   3. கழிதல்; to be exhausted, expended or finished.

     “மாளாவின்ப வெள்ளம்” (திவ்.திருவாய்.4, 7, 2);.

   4. இயலுதல்; to be within one’s ability.

     “அது செய்ய மாளாது” (உ.வ);.

   க. மாள்;ம. மாள்குக.

     [முல் (பொருந்தற் கருத்துவேர்); → முள் → மள் → மள்கு → மட்கு. மட்குதல் = மயங்குதல், ஒளி மயங்குதல், அழுக்கடைதல், வலி குன்றுதல். மள்கு → மாள்கு → மாழ்கு = கலத்தல், மயங்குதல், சோம்புதல், மங்குதல், கெடுதல், மாள்கு → மாள் (வே.க.4:61);.]

மாழா – த்தல்

மாழா – த்தல் māḻāttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. மயங்குதல்; to be fascinated, to be confused, be wildered.

     “மனங்கவில் பின்றி மாழாந் தெழுந்து” (பொருந.91);.

   2. ஒளி மங்குதல்; to fade, to become dim.

     “நாண்மதியே…. மாழாந்து தேம்புதியால்” (திவ்.திருவாய்.2, 1, 6);.

     [மாழ்கு → மாழா-, (வே.க.4:60);]

மாழாம்பலம்

மாழாம்பலம் māḻāmbalam, பெ.(n.)

   தூக்கம் (அக.நி.);; sleep.

     [மாழா → மாழாம்பலம் (வே.க.4:61);.]

மாழை

மாழை1 māḻai, பெ.(n.)

   1. இளமை; youth.

     “மாழை மடமான் பிணையியல் வென்றாய்” (கலித்.131);.

   2. அழகு; beauty.

     “மாழை நோக்கொன்றும் வாட்டேன்மினே” (திவ். திருவாய். 2, 4, 10);.

   3. பேதைமை; innocence, ignorance.

     “மாழை மென்னோக்கி” (திருக்கோ.61);.

   4. மாமரம் (பிங்.);; mango.

     “மாழை யிளந்தளிரே” (கம்பரா. வரைக்காட்சி. 55);.

   5. மாவடு; green tender mango fruit.

     “மாழை யொண்கண் பரவை” (தேவா.740, 10);.

   6. புளிமா (பிங்.);; Indian hog plum.

   7. மகளிர்க்கூட்டம் (அக.நி.);; assembly of women.

   8. ஒலை (பிங்.);; palm leaf.

     [முள் → மள் → மள்ளன் = இளைஞன். மள் → மள → மழ – இளமை (வே.க.4-5); மழ (மாழ); → மாழை.]

 மாழை2 māḻai, பெ.(n.)

   1. மாழை (உலோக);க் கட்டி (பிங்.);; lump of metal.

     “கனகமாழையால்” (சீவக.913);.

   2. பொன் (பிங்.);; gold.

     “உருகி மாழையும் வெள்ளியும்” (தணிகைப்பு. சீரி.374);.

   3. திரட்சி (பிங்.);; roundness.

     [முல் (பொருந்தற் கருத்துவேர்); → மல். மல் = பருமை, வளம், வலிமை, மற்போர், மல்லன். பல அணுக்கள் அல்லது உறுப்புகள் அல்லது பொருள்கள் பொருந்துவதால் (ஒன்று சேர்வதால்); திரட்சி அல்லது பருமை உண்டாகும். ஒ.நோ.சேரே திரட்சி (தொல்.25-65); மிகுதியால் வளமும் பருமையால் வலிமையும் உண்டாகும். இருவர் அல்லது இருபடைகள் பொருந்தி அல்லது கூடிப் பொருவதே போர். மல் → மால் = பெருமை, பெருமையுடையவர், வளமை, மலை. மால்- → மாள் → மாழை (வே.க.4:31);.

மாழைக்கோல்

 மாழைக்கோல் māḻaikāl, பெ.(n.)

   அறுவைக்கு பயன்படும் வெள்ளி அல்லது செம்பி னாற் செய்த ஊசி(சோதனைக் கோல்);; surgeon’s needle or instrument made of silver or copper.

     [மாழை+கோல்]

மாழ்கி

மாழ்கி māḻki, பெ.(n.)

   தொட்டாற் சுருங்கி எனுஞ்செடி; a sensitive plant.

     “யாதினு மாழ்குமம் மாழ்கியும்” (நீலகேசி, 365);.

மாழ்கு

மாழ்கு1 māḻkudal,    7 செ.கு.வி.(v.i.)

   1. மயங்குதல்; to be bewildered, to be fascinated.

     “குழறி மாழ்கி” (கம்பரா. மாரீசன்வதை.237);.

   2. கெடுதல்; to be spoiled or lost.

     “ஒஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை” (குறள், 653);.

   3. சோம்புதல் (திவா.);; to grow lazy.

   4. கலத்தல் (வின்.);; to mingle, to hold, intercourse.

   5. மூழ்குதல், மாய்தல்; to be engrossed.

க. மாழ்கு.

     [முல் (பொருந்தற் கருத்துவேர்); → முள் → மள் → மள்கு → மள்குதல் = ஒளி குறைதல். மள்கு → மாள்கு → மாழ்கு (வே.க.4:50);.]

 மாழ்கு2 māḻku, பெ.(n.)

   சுருள்; curl.

     “அட்டை முதலாயினவும் மாழ்கு நீங்கினாற் காரணமின்றி முன்பு போலேயாம்” (நீலகேசி, 365, உரை);.

 மாழ்கு3 māḻku, பெ.(n.)

   ஐந்தாம் நாண்மீன் (பிங்.);; the fifth naksatra.

மாவகம்

மாவகம் māvagam, பெ.(n.)

   1. இலுப்பை; a long leaved bassia.

   2. சுராலை (சாம்பிராணி);; frakincense.

   3. காஞ்சிரை; a tree yielding a very poisonous nut nuxvomica (சா.அக.);.

மாவச்சிரம்

 மாவச்சிரம் māvacciram, பெ.(n.)

   குங்கும மரம்; european saffron.

மாவடம்

 மாவடம் māvaḍam, பெ.(n.)

   மாம்பலகை (இ.வ.);; mango plank.

     [மா + வடம்.]

மாவடி

மாவடி māvaḍi, பெ.(n.)

   1. மாவடு பார்க்க;see {}.

   2. மாம்போழ் பார்க்க;see {}.

     “மாவடி மடக்கண் மாதர்” (பெருங். மகத.25, 149);.

மாவடு

மாவடு māvaḍu, பெ.(n.)

   மாவின் பிஞ்சு; tender, unripe mango.

     “மாவடு வகிரன்ன கண்ணி” (திருவாச.24, 8);.

     [மா + வடு.]

மாவடை

மாவடை māvaḍai, பெ.(n.)

   1. நிலத்திலடங்கிய விலங்குகள்; game found on the land conveyed, a term used in conveyancing.

     “மாவடை மரவடை” (உ.வ.);.

   2. சிற்றுாரில் கால்நடை அடையும் இடம்; pen for village cattle (R.F.);.

     [மா + அடை. மா = விலங்கு.]

 மாவடை1 māvaḍai, பெ. (n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுார்; a willage in Arantangi Taluk.

     [மா(விலங்கு);+அடை]

 மாவடை2 māvaḍai, பெ. (n.)

   குதிரை கட்டுமிடம்; horse stable.

     [மா+அடை]

மாவடைகடமை

 மாவடைகடமை māvaḍaigaḍamai, பெ.(n.)

   கிராமத்தில் கால்நடைகள் அடையும் பொதுவிடத்திற்கான வரி; tax for cattle stall.

     [மா + அடை + கடமை]

மாவடைமரவடை

மாவடைமரவடை māvaḍaimaravaḍai, பெ.(n.)

   ஆவணங்களில் நிலத்திலடங்கிய விலங்கு மரங்களைக் குறிக்க வழங்கும் மரபுத் தொடர் (கோயிலொ.64);; an expression used, in conveyancing to denote game and trees on the land conveyed.

     [மாவடை + மரவடை]

மாவட்டஆட்சியர்

 மாவட்டஆட்சியர் māvaṭṭaāṭciyar, பெ.(n.)

   ஒரு மாவட்டத்தில் வரி தண்டுதல், ஆளுமை, சட்டம், ஒழுங்கு முதலியவற்றுக்கான முதன்மைப் பொறுப்பில் உள்ள உயர் அரசு அதிகாரி; highest official in the district for revenue collection law and order, development programmes, etc. district collector.

     [மாவட்டம் + ஆட்சியர்]

மாவட்டணம்

 மாவட்டணம் māvaṭṭaṇam, பெ.(n.)

   நெடும் பரிசை, பரிசுக்கேடயம் (பிங்.);; long shield.

மாவட்டம்

மாவட்டம்1 māvaṭṭam, பெ.(n.)

   பெரு வட்டம்; long circle.

     [மா = பெரிய. மா + வட்டம்]

 மாவட்டம்2 māvaṭṭam, பெ.(n.)

   ஆளுகைக் கெளிதாயிருக்கும் பொருட்டு மாநிலத்தின் பரப்பில் ஏற்படுத்திக் கொள்ளும் பிரிவு; district.

மாவட்டை

 மாவட்டை māvaṭṭai, பெ.(n.)

   செவ்வட்டை (சங்.அக.);; a species of leech.

     [மா + அட்டை]

மாவணங்கி

 மாவணங்கி māvaṇaṅgi, பெ.(n.)

   குங்குமப்பூ; crocus sativus (சா.அக.);.

மாவண்டூர்சிங்கன்

 மாவண்டூர்சிங்கன் māvaṇṭūrciṅgaṉ, பெ.(n.)

   கம்பருக்கு எழுத்தாணி செய்து கொடுத்த கம்மியர்; a blacksmith who made a stylus for kambar.

     [மாவண்டூர் – ஊர்ப்பெயர்;

சிங்கன் – ஆள்பெயர்]

ஆழியான் ஆழி ஆயனெழுத் தாணி யென்பான்.

கோழியான் குன்றெறிய வேலென்பான் – பூழியான். அங்கை மழுவென்பான் அருள் பெரிய மாவண்டுர்ச் சிங்கன் உலைக்களத்திற் சென்று.

மாவதம்

மாவதம் māvadam, பெ.(n.)

   கரிசுகள் யாவும் விலகக் கைக்கொள்ளும் சூளி (அருங்கலச். 87);; vow to abstain from all sins.

மாவதை

 மாவதை māvadai, பெ.(n.)

   தேனற்ற தேன் கூடு (யாழ்.அக.);; empty honey – comb.

மாவத்திருப்பு

 மாவத்திருப்பு māvattiruppu, பெ. (n.)

   கும்பகோணம் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Kumbakonam Taluk.

     [மா+அத்தி+இருப்பு]

மாவயிரக்கல்

மாவயிரக்கல் māvayirakkal, பெ.(n.)

   நிலத்தினடியில் அகப்படுங் மாழைப் பொருள் வகை; felspar (M.M.159);.

மாவரி

 மாவரி māvari, பெ.(n.)

   சல்லடை (யாழ்ப்.);; sieve.

மாவலன்

 மாவலன் māvalaṉ, பெ.(n.)

மாவலான் (சூடா.); பார்க்க; see {}.

மாவலா

 மாவலா māvalā, பெ.(n.)

   கடல் மீன் வகை; a kind of sea fish.

     [p]

மாவலான்

மாவலான் māvalāṉ, பெ.(n.)

   1. குதிரை யேற்றத்தில் வல்லவன்; one skilled in horsemanship.

     “கைக்கொண்டான் மாவலான்” (பு.வெ.6, 24);.

   2. குதிரைப் பாகன்; Groom.

   3. யானைப் பாகன் (நிகண்டு);; mahout.

     [மா + வலான். மா = விலங்கின் பொதுப் பெயர், குதிரை. வல்லவன் → வலான்]

மாவலி

மாவலி māvali, பெ.(n.)

   1. திருமாலால் ஒடுக்கப்பட்ட ஒர் அசுரன்; an asuran subdued by {}.

     “மூரிவார் சிலை மாவலி” (மணிமே.19 : 54);.

   2. தீப்பொறி சிதறும் கார்த்திகை வாண வகை (இ.வ.);; a kind of home made fireworks, encased in cloth and throwing out sparks.

மாவலிகங்கை

மாவலிகங்கை māvaligaṅgai, பெ.(n.)

   ஈழத்திலுள்ள பேராறு (திருவாலவா.25, 12);; a large river in Ceylon.

மாவலிக்கிழங்கு

மாவலிக்கிழங்கு māvalikkiḻṅgu, பெ.(n.)

மாகாளிக்கிழங்கு (பதார்த்த.428); பார்க்க;see {}.

மாவலிபுரம்

 மாவலிபுரம் māvaliburam, பெ.(n.)

மாமல்லபுரம் பார்க்க;see mamallapuram.

மாவலிவாணன்

மாவலிவாணன் māvalivāṇaṉ, பெ.(n.)

   1. மாவலியின் மரபினராய்க் கருதப்படும் தமிழ்நாட்டுச் சிற்றரசு பரம்பரை; a dynasty of ruling chiefs in Tamil country, said to be the descendants of {}.

     “வையமொரு கோலாற் புரந்தருண் மாவலி வாணன்” (S.l.l.iv.98);.

   2. பெருந் தீனிக்காரன் (நாஞ்.);; glutton.

     “அவன் மாவலி வாணன் அப்பம் ஆயிரமானாலும் ஒரு நொடியில் தீர்த்துவிடுவான்” (நாஞ்.);.

மாவளத்தான்

மாவளத்தான் māvaḷattāṉ, பெ.(n.)

   சோழன் நலங்கிள்ளியின் தம்பி; younger brother of {}.

     “சோழன் நலங்கிள்ளி தம்பி மாவலித்தாறும் தாமப்பல் கண்ணனும் வட்டுப் பொருவுழி ” (புறநா.43);.

மாவளவன்

 மாவளவன் māvaḷavaṉ, பெ.(n.)

   மருத்துவர் தாமோதரனாரால் பாடப் பெற்ற சோழ மன்னன் (சி.பெ.அக.);; a {} king praised by the poet {}.

மாவாகம்

மாவாகம் māvākam, பெ.(n.)

மாவகம், 3 பார்க்க;see {}.

மாவாட்டு

மாவாட்டு1 māvāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   மாவாக ஆகும்படி அரைத்தல்; grind to paste.

     [மா + ஆட்டு-, மா = மாவு.]

 மாவாட்டு2 māvāṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   செய்த செயலையே திரும்பத் திரும்பச் செய்து காலம் போக்குதல்; repeat the same action to delay the things.

     [மாவு + ஆட்டு-,]

மாவாட்டுதலைப் போலச் செய்ததையே திரும்ப திரும்பச் செய்தல்.

மாவிசாலி

 மாவிசாலி māvicāli, பெ.(n.)

   பாசிப்பயறு; a variety of green gram (சா.அக.);.

மாவிஞ்சி

 மாவிஞ்சி māviñji, பெ.(n.)

   மாங்காயைப் போல் மணமுடைய ஒரு வகை இஞ்சி; ginger smelling like mango, mango – ginger.

     [மா + இஞ்சி]

மாவிடக்கட்டி

 மாவிடக்கட்டி māviḍakkaḍḍi, பெ.(n.)

   காட்டு மருக்கொழுந்து; wild variety of maid’s loue (சா.அக.);.

மாவிடை

மாவிடை1 māviḍai, பெ.(n.)

மாவடை பார்க்க;see {}.

 மாவிடை2 māviḍai, பெ.(n.)

   மரச்செறிவு; grove.

மாவிடைமரவிடை

 மாவிடைமரவிடை māviḍaimaraviḍai, பெ.(n.)

மாவடைமரவடை பார்க்க;see {} (W.G.);.

     [மாவடைமரவடை → மாவிடைமரவிடை]

மாவிட்டம்

 மாவிட்டம் māviṭṭam, பெ.(n.)

   கடனுரை (சங்.அக..);; cuttle – bone.

மாவிதை

 மாவிதை māvidai, பெ.(n.)

   மாம் பருப்பு; seed or kernel of mango fruit which can used as astringent.

     [மா + விதை. மா = மாமரம்]

மாவிப்பட்டை

 மாவிப்பட்டை māvippaṭṭai, பெ.(n.)

   மாவிலிங்கமரப் பட்டை (சங்.அக.);; bark of {} tree.

மாவியம்

 மாவியம் māviyam, பெ.(n.)

   பற்பம்; calcined medicinal powder (சா.அக.);.

மாவிரதம்

மாவிரதம் māviradam, பெ.(n.)

   1. சிவனிய மதத்தின் உட்பிரிவு (பிங்.);; a sect of saivaism.

     “வந்தணைந்த மாவிரத முனிவரைக் கண்டு” (பெரியபு.மானக்கஞ். 26);.

   2. மாவதம் பார்க்க;see {}.

மாவிருக்கம்

 மாவிருக்கம் māvirukkam, பெ.(n.)

   சதுரக் கள்ளி (மலை.);; squar spurge.

மாவிறை

 மாவிறை māviṟai, பெ.(n.)

   ஊர்களிலும் நெடுஞ்சாலைளிலும் அரசு அமைக்கும் குதிரை கொட்டடி போன்ற கட்டுத்தறிகட்கு அரசு பெறும் வரி; tax on cattle stall, horse-stable on highways and villages.

     [மா = விலங்கு, குதிரை.]

மாவிலங்கு

மாவிலங்கு1 māvilaṅgu, பெ.(n.)

   ஒரு வகை மரம்; a kind of tree.

இதன் பட்டை, வேர் ஆகிய பகுதிகள் மருத்துவக் குணமுடையது.

 மாவிலங்கு māvilaṅgu, பெ.(n.)

மாவிலிங்கம் (நாமதீப.327); பார்க்க;see {}.

மாவிலங்கை

மாவிலங்கை māvilaṅgai, பெ.(n.)

   அருவா நாடும், அருவா வடதலைநாடும் சேரும் இடத்தில் இருந்த ஒய்மாநாட்டு நல்லியக் கோடன் ஊர்; place of {}, located between Aruva Nadu & Aruvā vadatalai {}.

     “பொருபுனல் தரூஉம் போக்கருமரபின் தொன்மாவிலங்கைக் கருவொடு பெயரிய நன்மா விலங்கை மன்னருள்ளும்” (சிறுபா.120);.

 மாவிலங்கை2 māvilaṅgai, பெ.(n.)

மாவிலங்க2ம் (சங்.அக.); பார்க்க;see {}.

மாவிலந்தம்

 மாவிலந்தம் māvilandam, பெ.(n.)

   விடத்தேர் (மலை.);; a thorny tree.

மாவிலி

 மாவிலி māvili, பெ.(n.)

   மாவுலிங்கம்; a tree – Crataevanutvala.

மாவிலிங்கப்பட்டை

 மாவிலிங்கப்பட்டை māviliṅgappaṭṭai, பெ.(n.)

   அரைத்து மோரில், கலந்து குடித்தால் மேகம், கல்லடைப்பு போன்ற நோய்களை நீக்கும் தன்மையுடைய மரப்பட்டை; bark of the tapia it taken with butter milk stone in the bladder, megam will disappear (சா.அக.);.

     [மாவிலிங்கம் + பட்டை.]

மாவிலிங்கம்

மாவிலிங்கம் māviliṅgam, பெ.(n.)

   1. மர வகை; round – berried cuspidate-leaved lingam tree.

   2. பெரியமாவிலங்கம் பார்க்க;see periya-{}.

   3. மாகலிங்கம்;see {}.

மாவிலிங்கு

 மாவிலிங்கு māviliṅgu, பெ.(n.)

மாவி லிகங்கம் பார்க்க;see {}.

மாவிலிங்கை

மாவிலிங்கை māviliṅgai, பெ.(n.)

மாவி லிங்கம்2 பார்க்க;see {}.

மாவிலுப்பைத்தோணி

 மாவிலுப்பைத்தோணி māviluppaittōṇi, பெ.(n.)

   இலுப்பை மரத்தில் செய்யப்பட்ட பெருந்தோணி; a boat made up of illuppai tree.

     [மா + இலுப்பை + தோணி.]

மாவிலைத்தண்டு

 மாவிலைத்தண்டு māvilaittaṇṭu, பெ.(n.)

   வாசல் நிலைக்கால் சட்டத்தில் மாவிலைத் தண்டு போன்று செதுக்கப்படும் ஓவியம்; a sculpture of mango leaves engrave in door-frame entrance.

     [மா + இலை + தண்டு.]

மாவிலைத்தோரணம்

 மாவிலைத்தோரணம் māvilaittōraṇam, பெ.(n.)

   மங்கலமாக வீடு முதலியவற்றின் முகப்பில் மாவிலையாற் கட்டுந்தோரணம் (இ.வ.);; festoon of mango leaves hung over the door of a house, temple etc., as a sign of auspiciousness.

     [மா = மாமரம் . மா + இலை = மாவிலை. மாவிலை + தோரணம்.]

     [p]

மாவிளக்கு

 மாவிளக்கு māviḷakku, பெ.(n.)

   திருக் கோயில் முன்பு சருக்கரை சேர்த்துப் பிசைந்த மாவில் அகல் போலும் குழி செய்து அதில் நெய்யூற்றிப் பஞ்சுத் திரியிட்டு ஏற்றுந் திருவிளக்கு (இ.வ.);; flour, light lamp made of sugared dough with cotten wick, fed with ghee and placed in the presence of a deity.

     [மா + விளக்கு. மா = மாவு.]

மாவிளக்குமா

 மாவிளக்குமா māviḷakkumā, பெ. (n.)

   மாவிளக்கேற்ற உதவும் மாவகை (இ.வ.);; dough used for {}.

     [மாவிளக்கு + மா. மா = மாவு.]

மாவிளம்

மாவிளம் māviḷam, பெ.(n.)

   1. வில்வம் (பிங்.);; bael tree-Aegle marmelos.

   2. மாம்பருப்பு; kernel or seed of mango fruit.

மாவீதல்

 மாவீதல் māvītal, பெ.(n.)

   நிலம் பங்கிடுகை (இ.வ.);; apportionment of land.

     [மா + ஈதல். மா = நிலம்.]

மாவீரன்

மாவீரன்1 māvīraṉ, பெ.(n.)

   பெருவீரன்; great warrior.

     [மா + வீரன்.]

 மாவீரன்2 māvīraṉ, பெ.(n.)

சிவன்;{}.

மாவீர்க்கு

 மாவீர்க்கு māvīrkku, பெ.(n.)

   மாவிலையின் நடுத்தண்டு; the mid rib mango leaf.

     [மா + ஈர்க்கு.]

மாவு

மாவு1 māvu, பெ.(n.)

   1. அரிசி முதலியவற்றின் அரைத்த தூள்; flour, meal, powder.

   2. மேற்படியும் நுண்தூசி, துகள்; dust.

 மாவு2 māvu, பெ.(n.)

மா6 பார்க்க;see {}.

மாவுக்கறி

மாவுக்கறி māvukkaṟi, பெ. (n.)

   மாவு போல இருக்கும் இறைச்சி; delicate flesh. (கொ.வ. வ.சொ.123);.

     [மாவு+கறி]

மாவுக்கல்

 மாவுக்கல் māvukkal, பெ.(n.)

   ஒருவகை மென்மையானக் கல்; soft stone used for making vessels etc.

     [மாவு + கல்.]

மாவுக்காய்

மாவுக்காய் māvukkāy, பெ.(n.)

மாவகம், 3 பார்க்க (இ.வ.);;see {}.

மாவுச்சட்டி

 மாவுச்சட்டி māvuccaṭṭi, பெ. (n.)

   கல்கலந்து செய்யப்பட்ட ஏனம்; a vessel.

     [மாவு+சட்டி]

மாவுச்சத்து

 மாவுச்சத்து māvuccattu, பெ.(n.)

   அரிசி, கோதுமை, சோளம், உருளைக் கிழங்கு முதலியவற்றில் உள்ளதும் உடல் உழைப்புக்குத் தேவையான ஊட்டத்தைத் தருவதுமான மாவூட்டப் பொருள்; carbohydrate, starch.

     [மாவு + சத்து.]

மாவுச்சுக்கு

 மாவுச்சுக்கு māvuccukku, பெ.(n.)

   மாவைப்போல் மெல்லிய ஒரு வகைச் சுக்கு; dry ginger which has not much of fibre (சா.அக.);.

     [மாவு + சுக்கு.]

மாவுத்தன்

மாவுத்தன் māvuttaṉ, பெ. (n.)

   யானைப்பாகன்; elephant-driver.

     ‘மாவுத்தர் நெய்ய வேலெடுத்து’ (பணவிடு.261.);.

     [H. {} → த. மாவுத்தன்.]

மாவுப்பு

 மாவுப்பு māvuppu, பெ.(n.)

   தலைமுடியுப்பு; a kind of salt extracted from the human skull (சா.அக.);.

மாவுரம்

 மாவுரம் māvuram, பெ.(n.)

   வலிமை; strength.

     [மா + உரம்.]

மாவுலாசி

 மாவுலாசி māvulāci, பெ.(n.)

மாவுளாச்சி (இ.வ.); பார்க்க;see {}.

 மாவுலாசி māvulāci, பெ. (n.)

   ஒரு வகை மீன்; sea fish.

     [மா+உலாசி]

மாவுலாச்சி

 மாவுலாச்சி māvulācci, பெ.(n.)

மாவுளாச்சி (இ.வ.); பார்க்க;see {}.

மாவுளாச்சி

மாவுளாச்சி māvuḷācci, பெ.(n.)

   நீலநிற முடையதும் 4 அடி நீளம் வளர்வதுமான கடல் மீன் வகை; a sea fish bluish, attaining 4 ft. in length.

     [p]

மாவெனல்

 மாவெனல் māveṉal, பெ.(n.)

   அழைத்தற் குறிப்பு (பிங்.);; onom. expr. signifying calling.

     [மா + எனல்.]

மாவேந்தன்

 மாவேந்தன் māvēndaṉ, பெ. (n.)

   முத்தமிழ் நாட்டு அல்லது தமிழகத் தலைவன்; emperor,

     [மாசி+வேந்தன்]