செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ப1 pa. பெ. (n.)

   பகரமெய்யும் அகரவுயிரும் சேர்ந்து இதழியைந்து ஒலிக்கும் வல்லெழுத்து; the compound of ப் and அ, being the labial voiceless stop.

 ப2 pa. பெ. (n.)

   1. பஞ்சமமெனப்படும் இளியிசை யினெழுத்து (திவா.);; symbol representing the fifth note of the grant

   2. வினைச்சொல்லினகத்து எதிர்காலப் பொருளில் வருமோரிடைநிலை. (நன்.144.); இது ‘நடப்பான்’ கிடப்பான் முதலியவற்றிற் போலச்சந்தியாயும் வரும்; medial particle in tamil verbs showing, future tense.

பஃதி

பஃதி paḵdi, பெ. (n.)

   பகுப்பு; portion, part

     “இணைப்பஃதியாற் பெயர் பெறுமெனவும்”(தொல். பொ. 645, உரை);

     [பகுதி → பஃதி]

பஃது

பஃது paḵdu, பெ. (n.)

   பத்து; ten.

     “பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட”(தொல். எழுத். 445);

     [பத்து → பஃது]

     [பல் + து → பஃது]

பஃபத்து

பஃபத்து paḵpattu, பெ. (n.)

   நூறு (தொல். எழுத். 482, உரை);; hundred, as ten times ten.

     [பப்பத்து (பத்துப்பத்து); → பஃபத்து]

பஃறி

பஃறி paḵṟi, பெ. (n.)

   1. படகு; boat

     “நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி”(பட்டினப். 30);

   2. மரக்கலம் (சூடா.);; ship, vessel

   3. இரேவதி (தொழுபஃறி); பார்க்க; (திவா.);; the 27th naksatra.

மரத்தில் உட்குடைவாகச் செய்யப்படுவது பஃறி.

ஓடத்தின் வடிவையொத்திருத்தல் நோக்கி (இரேவதி); விண்மீன் தொழுபஃறி எனப் பெயர் பெற்றது.

பஃறியர்

 பஃறியர் paḵṟiyar, பெ. (n.)

   நெய்தனில மாக்கள் (சூடா.);; people of the maritime tract.

     [பஃறி → பஃறியர்]

     [பஃறி= ஒடம் அல்லது திமில். மரக் கலத்தில் கடலில் செல்வோர் பஃறியர்.]

பஃறுளி

பஃறுளி paḵṟuḷi, பெ. (n.)

   குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலாற் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஓர் யாறு; an ancient river south of the river kumari, said to have been swallowed by sea

     “எங்கோ வாழிய… நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”(புறம் – 9.);

நிலத்தைஉட்குடைந்து செல்லும் பேராறு

     [பஃறு → பஃறுளி]

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியனைப் பாடிய நெட்டிமையார் என்னும் புலவர்.

     “நன்னீர்ப் பஃறுளி மணலிலும் பலகாலம் வாழிய”(புறம். 9); என வாழ்த்துவதால் இதன் சிறப்பு விளங்கும்.);

     [பல் + துளி]

பஃறொடை

பஃறொடை paḵṟodai, பெ. (n.)

   பஃறொடை வெண்பா; a stanza in {veṇba} metre of more than four lines.

     “அடிபலவாய்ச் சென்று நிகழ்வ பஃறொடையாம்”(யாப். காளிகை. 5);

     [பல் + தொடை]

பஃறொடைவெண்பா

பஃறொடைவெண்பா paḵṟodaiveṇbā, பெ. (n.)

   நான்கடியின் மிக்கு ஏழடிக்குள் வரும் வெண்பா. (காரிகை, செய். 5, உரை);; a stanza in {veṇba} metre of more than four lines.

     [பல் + தொடை வெண்பா]

     “பாதம் பலவரின் பஃறொடை வெண்பா”(யாப். வி. 62.);

     “ஏழடி இறுதி ஈரடி முதலா ஏறிய வெள்ளைக்கு இயைந்தன அடியே மிக்கடி வருவது செய்யுட்கு உரித்தே”(யாப்.வி.32.மேற்.);

எனவரும் நூற்பாக்களால் மேற்கூறிய கருத்து வலுப்பெறும்.

வெண்பாவின் பொதுவிலக்கணம் பொருந்தி நேரிசை வெண்பாவைப் போலவே அமைந்து நான்கடியின் மிக்க பலவடிகளான் வருவது பஃறொடை வெண்பா எனப்படும்.

 a stanza in {veṇba} metre of more than four lines.

   இது ஒரு வேறுபாட்டாலும் பல வேறுபாட்டாலும் வரப்பெறும்;எ-டு.

     “பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில் என்னோடு நின்றா ரிருவர்;

   அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே;   பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள்;யானை எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார் நன்றென்றேன் தியேன்”(முத்தொள்.);

இஃது ஆறடியான் வந்த வேறுபாட்டு பலவிகற்பப் பஃறொடை வெண்பா.

பஃறொடை வெண்பா பன்னீரடியை, மேலெல்லையாகக் கொண்டது என்பதூஉமாம்.

மேலும் இது ஒத்த விகற்ப பஃறொடை வெண்பா, ஒவ்வா விகற்பப் பஃறொடை வெண்பா என்ற வகையிலும் வரும்.

     “இதனுள்ளும் ஒரூஉத்தொடை பெற்று வருவனவற்றை நேரிசைப் பஃறொடை எனவும், ஒரூஉத்தொடையின்றி வருவனவற்றை இன்னிசைப் பஃறொடை எனவும் வழங்கப்படும்”(இளம். தொல். செய். 114);

மேலும் புறப்பொருட்கண் வரும் வெண்பாக் களைப் பஃறொடை வெண்பா எனவும் பரிபாடற்கு உறுப்பாய் வரும் வெண்பாக்களைப் பரிபாடல் எனவும், கொச்சகக் கலிப்பாவிற்கு உறுப்பாய் வரும் பஃறொடை வெண்பாவைக் கொச்சகக் கலிப்பா எனவும் கூறுவர். (இளம்.தொல்.செய்.147.);

பகங்கொற்றான்

 பகங்கொற்றான் kottāṉpakaṅkoṟṟāṉ, பெ. (n.)

   கொடிவகை; a parasitic leafless plant.

மறுவ. முடக்கத்தான்

     [பசுமை + கொற்றான்]

பகஞ்சான்

 பகஞ்சான் pagañjāṉ, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivagangai Taluk.

     [ஒருகா. பாகன்+சால்]

பகடக்காரன்

 பகடக்காரன் pakaṭakkāraṉ, பெ. (n.)

   சூழ்ச்சிக்காரன் (யாழ்.அக);; artful person.

     [பகட்டு – பகடம் + காரன்]

பகடப்பாடி

 பகடப்பாடி pagaḍappāḍi, பெ.(n.)

   ஆத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a Village in Attur Taluk. –

     [பகடை+பாடி]

பகடம்

பகடம்1 pakaṭam, பெ.(n.)

   1. பகட்டு 2, 6. (யாழ்ப்.); பார்க்க; See {Anagattu.}

   2. நிறங்கொடுக்கை; colouring.

     [ஒருகா,பகட்டு → பகடம்]

 பகடம்2 pakaṭam, பெ. (n.)

   சிலம்பம் (யாழ். அக.);; fencing.

     [பகடு → பகடம்]

     [பகடுபோல் சளைக்காமல் மோதி வெல்ல முயலும் சிலம்பாட்டம்.]

பகடி

பகடி1 pakaṭittal,    5. செ. கு. வி. (v.i.)

   1. அருவருத்தல்; nauseating.

   2. கண்மயங்கப்பண்ணல்; to cause drowsiness, dizziness. (சா.அக.);;

 பகடி2 pakaṭi, பெ. (n.)

   1. எள்ளல்; mockery, ridicule,

     ‘அவன் அவளைப் பகடி செய்து பாட்டுப் பாடினான்’. (வின்.);;

   2. நகையாட்டு; jest, witty repartee.

   3. நகைச்சுவையாளன்; jester, buffoon.

   4. புறப்புனைவாளன்; pretender, imposter

     “குருவேலைப் பகடிகளை மேவாதே”(ஒழிவி. பொது. 3);

   5. கூத்தாடி; pole-dancer. dancer

     “பகடிக்கோ பணம்பத்து”(தண்டலை. 71);

   6. வரிக்கூத்து வகை; (சிலப். 3, 15, உரை);

 a masquerade dance.

     [பகட்டு1 → பகட்டி → பகடி]

 பகடி3 pakaṭi, பெ. (n.)

   1. மூலப்பொருள் மெய்ம்மை; primordial matter, material cause of the word :

     “முத்திபொரு பகடிப்பகை துரந்த புனிதர்”(திருக்கலம். 13.);

   2. வினை. (jaina);; Karma.

     “பற்பதமே பகடிப்பகைவர்”(திருநூற். 3);

     [பகல்-பகலி – பகடி பகல் – பகுத்தல், வகுத்தல், வகுக்கப்பட்ட வினைப்பயன், மாறாத மெய்ம்மை.]

 பகடி4 pakaṭi, பெ. (n.)

   கடையை வாடகைக்கு எடுத்தவரை வெளியேற்ற அவருக்குத் தரப்படும் கூடுதற்பணம்; an amount paid to the present occupant (of business premises); to vocate.

     [பகுதி → பகுடி → பகடி]

பகடிகம்

 பகடிகம் pakaṭikam, பெ. (n.)

   எருமை; buffalo.

     [பகடு → பகடிகம்]

பகடு

பகடு pakaṭu, பெ. (n.)

   1. பெருமை; greatness, hugeness, largeness

     “பகட்டா வீன்ற கொடுநடைக் குழவி”(பெரும்பாண். 243);

   2. பரப்பு; expansiveness

     “பகட்டெழின் மார்பின்”(புறநா. 13);

   3. வலிமை; strength

     “நுண்பூணம்பகட்டு மார்பின்”(புறநா. 88.);

   4. எருது; bull, ploughing ox.

     “பகட்டினானும் மாவினனும்”(தொல். பொ. 76);

     “பகடு நடந்த கூழ்பல்லாரோடுண்க”(நாலடி. 2);

   5. எருமைக் கடா (தொல். பொ. 76);; buffalo bull.

     “பெருமிதப் பகட்டுக்குத் துறையுமுண்டோ”(புறநா. 90);

   6. ஏர்; a team of oxen harnessed to a plough.

     “பகடு புரந்தருநர் பாரமோம்பி”(புறநா. 35);

   7. ஆண் யானை; male elephant

     “பைங்கட் பணைத்தாள் பகட்டுழவன்”(பு. வெ. 8,5.);

     “பகடுதேர் புரவிகாலான் பலவகைப்பட்ட சேனை”(பாரத. பதினோரா. 6);

   8. தோணி. (திவா.);; boat.

   9. தெப்பம் (திவா.);; raft.

   10. மூட்டுப் பொருத்துகள்; joints

     “பகடி னொடித்து”(தக்கயாகப். 483.);

     [புல் → பல் → பர் → பருடு → பகடு]

பகடை

பகடை1 pakaṭai, பெ.(n.)

   1. சூதின் தாயத்திலொன்று; ace upon dice,

     ‘பகடை பன்னிரண்டெட்டு’

   2. எதிர்பாராத ஆகூழ்; sudden smiles of fortune.

தெ. பகட ம. பகட க. பகடெ து. பகட

     [பகடம் → பகடை]

 பகடை2 pakaṭai, பெ. (n.)

   1. போர்வீரன்; warriors

   2. செருமான் குடியைச் சார்ந்தோர் (வின்.);; title of the cakliya caste.

   3. போர் வீரர்களாயிருந்து, போரற்றக்காலத்தில் செருமான் தொழிலை மேற்கொண்ட ஒரு சாரார்; warriors as well as cobblers.

 பகடை3 pakaṭai, பெ. (n.)

   1. போர்; battle.

   2. போரினால் ஏற்படும் துன்பம்; sufferings from the war.

   3. துன்பம், மனக்கலக்கம், வருத்தம்,

 grief, perturbation, agitation of mind.

 பகடை4 pakaṭai, பெ. (n.)

   சிவதை; indian shubarb.

 பகடை pagaḍai, பெ.(n.)

   செருமான் இனத்தைச் சேர்ந்தவன்; a man belonging to cobbler community.

பகடைக்காய்

 பகடைக்காய் pakaṭaikkāy, பெ. ( n.)

   ஒருவகையான சூதாட்டத்தில் விளையாடுபவர் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவராக உருட்டும், புள்ளிகள் கொண்ட, ஆறு பக்கங்களையுடைய மரத்தாலோ மாழையி னாலோ ஆகிய கருவி; a dice

     “உங்களுடைய சண்டையில் என்னைப் பகடைக்காய் ஆக்காதீர்கள்.”(உ.வ.);;

     [பகடை + காய்]

பகடைதப்பு-தல்

பகடைதப்பு-தல் pakaṭaitapputal,    4. செ.கு.வி. (v.i.)

   நேர்ச்சி நெருக்கடியில் தப்பித்துக் கொள்ளுதல் (சென்னை);; to have a narrow escape, to miss narrowly.

தெ. பகடதப்பு.

     [பகடை + தப்பு-,]

பகடையடி-த்தல்

பகடையடி-த்தல் pakaṭaiyaṭittal,    4. செ.கு.வி. (v.t.)

   ஆரவாரமாகப் பேசுதல்;   செருக்கோடு பேசுதல்; to use bombastic language.

     [பகட்டு → பகட்டை → பகடை]

பகட்டுதல் = தற்பெருமை கொள்ளுதல்.

     [பகடை + அடி-,]

பகட்டன்

 பகட்டன் pakaṭṭaṉ, பெ. (n.)

   பொய்ப் பெருமையன் (ஆடம்பரக்காரன்); (கொ.வ.);; top, pompous, stylish person.

     [பகடு → பகட்டு + யானை]

பகட்டியானை

பகட்டியானை pakaṭṭiyāṉai, பெ.( n.)

   விரைந்த செலவையுடைய களிற்றியானை; a male elephant which is moving fast.

     “விரிதார்க் கடும்ப கட்டியானை வேந்தர்”(புறநா.265.9.);.

     [பகடு → பகட்டு + யானை]

பகட்டு

பகட்டு1 pakaṭṭutal,    5. செ.கு.வி. (v.i)

   1. போலி வெளிச்சம் காட்டுதல். (கொ.வ);; to shine with a false glitter, as plated articles.

   2. தற்புகழ்ச்சி செய்தல்; to brag.

   3. பொலிவு பெறுதல்; to be beautiful;to be attractive

     “பாசிழை மடந்தையர் பகட்டு வெம்முலை”(கம்பரா.கார். 110.);

   4. போலிப் பெருமை காட்டுதல்; to make a vain show;to be foppish.

   5. வெறுப்படைதல்; to loathe.

     [பகட்டு → பகட்டு-,]

 பகட்டு2 pakaṭṭutal,    5. செ. குன்றாவி. (v.t.)

   1. மயக்குதல்; to charm, fascinate, allure, wheedle,

     “படர்சடைக ளவைகாட்டி வெருட்டிப் பகட்ட”(தேவா. 676, 2);

   2. கண்மயங்கப் பண்ணுதல்; to make drowsy,

     “தூக்கம் பகட்டுகிறது”

   3. வஞ்சித்தல்; to deceive circumvent misrepresent, as in selling goods.

     “பிறரைப் பகட்டுகையன்றிக்கே”(ஈடு, 5,1,1);.

   4. அதட்டுதல் (வின்.);; to menace bully, hector, threaten in order to effect an object.

     [புல் → பல் → பல்கு → பகு → பகம் → பகடு]

 பகட்டு3 pakaṭṭu, பெ.(n.)

   1. வெளிச்சம்; lustre, brightness, splendour.

   2. தற்பெருமை; bragging.

   3. போலிப் பெருமை; foppery, affectation, ostentation.

     “எல்லாம் பகட்டுக் காண்”(திவ். திருநெடுந். 28, 236.);

   4. கவர்ச்சி; attraction, fascination, allurement.

   5. ஏமாற்று; pretence, deception, plausibility.

   6. அதட்டு; bluff, bluster.

தெ : பகடு

     [பகல் → பகல்]

     [சீ + து → பகற்று → பகட்டு]

 பகட்டு4 pakaṭṭu, பெ. (n.)

   கவர்ச்சித் தன்மை மிகுந்த போலிப் பெருமை; show glamour.

     “அவள் பகட்டாக வேளைக்கொரு சேலை உடுத்துவாள்”

     “சாதாரணப் பொருள்களுக்குக் கூடப் பகட்டான விளம்பரங்கள்”

     “பகட்டு இல்லாத எளிய வாழ்க்கையே சிறந்தது”.

     [பகல் → பகற்று → பகட்டு]

பகட்டுக்கல்

பகட்டுக்கல் pakaṭṭukkal, பெ. (n.)

   தவளைக்கல் என்னும் துணை மருந்துச் சரக்குகளுள் ஒன்று; iron stone, this is one of the 120 kinds of natural substances described in Tamil medicine.

     [பகடு → பகட்டு + கல்]

பகட்டுமுல்லை

பகட்டுமுல்லை pakaṭṭumullai, பெ. (n.)

முயற்சியான் வந்த இளைப்பாலும் பாரம் பொறுத்தலாலும் மனைக்கிழவனை ஏருழுகின்ற எருத்துடன் உவமிக்கும் புறத்துறை (பு.வெ. 10, பொதுப். முல்லைப். 6,);:

 theme of comparing a house holder to a plough- ox, as bearing heavy burdens and getting wearied with intense labour.

     [பகடு → பகட்டு. பகட்டு + முல்லை]

     “வயல்மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும் வியன்மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று”பு : வெ. பொது,41.

வேளாண் தலைவனை உழைப்பாலும் சுமை பொறுத்தலானும் அவனுடைய எருதோடு உவமித்தது பகட்டுமுல்லை என்னும் துறையாம்.

பகடுபோன்று உலகிற்குப் பயன்படும் வேளாளனுடைய இயல்பு மிகுதி என்க.

     “உய்த்தல் பொறுத்தல் ஒழிவின் றொலிவயலுள் எய்த்தல் அறியா திடையின்றி-வைத்த படுநுகம் பூண்ட பகட்டொடு மானும் நெடுமொழி எங்கணவன் நேர்”(பு.வெ.41.);

பகண்டம்

 பகண்டம் pakaṇṭam, பெ. (n.)

   கடலை; ground nut.

பகண்டை

பகண்டை1 pakaṇṭai, பெ. (n.)

 kind of partridge.

     [பகன்றை → பகண்டை]

மறுவ. கதுவாலி (கவுதாரி); பகன்றை. சில்லை. (சூடா); ஒ. நோ. கன்றுக்குட்டி → கண்ணுக்குட்டி, ஈழவழக்கு.

 பகண்டை2 pakaṇṭai, பெ. (n.)

பகன்றை, 3 (இ. வ.); பார்க்க; see {paganraj} 3.

     [பகன்றை → பகண்டை]

 பகண்டை3 pakaṇṭai, பெ. (n.)

   நகையாட்டுப் பாட்டு; song of ridicule.

     “பப்பினையிட்டுப் பகண்டை பாட”(பதினொ. திருவாலங். 1,11.);

     [பகட்டு1 → பகட்டை → பகண்டை]

 பகண்டை pagaṇṭai, பெ.(n.)

   விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vilupuram Taluk.

     [பகன்றை+பகண்டை]

பகநரம்பு

 பகநரம்பு paripāpakanarampu, பெ. (n.)

   பெரும்பாலும் அழுக்கு அரத்தத்தைக் கொண்டு செல்லும் அரத்தக்குழாய்; vein

     [பசுமை + நரம்பு]

பகந்தரவிரணம்

பகந்தரவிரணம் pakantaraviraṇam, பெ. (n.)

   எருவாய்ப் புண்; (பைஷஜ. 277);; fistula in anus.

     [பகந்தரம் + skt {wra} த. இரணம்]

பகந்திரம்

 பகந்திரம் pakantiram, பெ. (n.)

   எருவாய்ப் புண்; fistula in anus.

     [பகந்தரம் → பகந்திரம்]

பகனம்

பகனம் pakaṉam, பெ. (n.)

   1. மூட்டு நழுவல்; dislocation of joint

   2. எலும்பு முறிவு; fracture. (சா. அக.);.

பகன்

பகன் pakaṉ, பெ. (n.)

   கதிர்க்கடவுளருள் ஒருவன்; a sun-god, one of {tuvâtadāśātittar}, q. v.,

     “பகன்றாமரைக் கண் கெடக் கடந்தோன்” (திருக்கோ. 184.);.

பகன்றை

பகன்றை pakaṉṟai, பெ. (n.)

   1. சீந்தில் (மலை.); பார்க்க; gulancha see {šindil}

   2. சிவதை பார்க்க; indian jalap see {Śivadai}

     “பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி”(குறிஞ்சிப். 88.); (பிங்.);

   3. நறையால் என்னும் பூடுவகை; a plant.

   4. கிலுகிலுப்பை; rattle wort

     “பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்”(பதிற்றுப்.76. 12.);

   5. பெருங்கையால் என்னுங்கொடி (சி. அரும்பத);; a kind of herbal creeper.

பகன்றைக்கண்ணி

பகன்றைக்கண்ணி kaṇṇi, பெ. (n.)

   பகன்றைப் பூ மாலை; a garland made up of the flower {paganrai}

     “பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்”(மலைபடு. 459.);

     “பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவையர்”(ஐங்குறு. 87.);

     [பகன்றை + கண்ணி]

பகபகவெனில்

பகபகவெனில் pakapakaveṉil, பெ. (n.)

   1. தீ எரியும்போது உண்டாகும் ஒலிக்குறிப்பு; onom, expr. of crackling of fire,

   2. வயிறு பசியால் எரிதற் குறிப்பு; expr. signifying burning or smarting sensation of hunger,

   3. ஈரடுக்கொலிக் குறிப்பு; reduplication of onom, expr.

   4. வேகக் குறிப்பு; expr. of fast.

     [பட + பட + எனல் → பகபகவெனல்]

பகப்பாண்டி

 பகப்பாண்டி pagappāṇṭi, பெ.(n.)

   பல்லாங் குழியின் வகை; a kind of ‘pallankull’ game.

     [பசு + பாண்டி]

பகப்பாதி

 பகப்பாதி pakappāti, பெ. (n.)

   சித்திரமூலம் என்னும் மூலிகை; ceylon leadwort

மறுவ : கொடுவேலி.

பகமலர்

 பகமலர் pakamalar, பெ. (n.)

   கருப்பை; the womb, uterus.

     [பகம் + மலர்]

பகம்

பகம் pakam, பெ. (n.)

   1. மிகு செல்வம், மறம், புகழ், திரு, அறிவு, நெஞ்சுறுதி என்ற அறுகுணங்கள் (பாரதவசனம், அநுசா. பக். 935.);; the six attributes wealth, {maram pugal, tiru, ñāņam, vairākkiyam.}

   2. பெண்குறி (திவா.);; pudendum muliebre.

     [பல் + பல்கு + பகு → பகம்]

பகரம்

பகரம்1 pakaram, பெ. (n.)

   1. ஒளி (யாழ்.அக.);; lustre, splendour, brilliance.

   2. அழகு; beauty.

     “பகரமாமயில் மிசைவர நினைவது மொருநாளே”(திருப்பு:258);

மறுவ : கொக்குமந்தாரை.

     [பகர் → பகரம்]

 பகரம்2 pakaram, பெ. (n.)

   மாற்று (நாஞ்.);; instdead, in exchange.

     ‘வீட்டுக்குப் பகரமாக நிலம் கிடைத்தது’

     [பகர் → பகரம்]

 பகரம்3 pakaram, பெ. (n.)

     ‘ப’ என்னுமெழுத்து;

 the letter ‘p.’

     ‘ப’-பகர அகரம்

பகரவளைவு

 பகரவளைவு pakaravaḷaivu, பெ. (n.)

     ‘ப’ என்னும் எழுத்தை ஒருபக்கமாகத் திருப்பியது போல் இருக்கும் அடைப்புக்குறி;

 square bracket.

     [பகரம் + வளைவு]

பகராசிகம்

 பகராசிகம் pakarācikam, பெ. (n.)

   சூலி என்னும் மரம்; indian mahogony.

     [பகரம் + ஆசிகம்]

பகரி

 பகரி pakari, பெ. (n.)

   ஆவிரை (பிங்.);; tanner’s senna;tanners cassia

     [பகரம் → பகரி]

பகரிப்பு

பகரிப்பு pakarippu, பெ. (n.)

பகரம்1, பார்க்க; (வின்.);; see pagaram

     [பகரி → பகரிப்பு]

பகரு

 பகரு pagaru, பெ.(n.)

   பணிப்பெருமிதம் (இ.வ.);; prestige of power.

     [Е. power → த. பகரு]

பகர்

பகர்1 pakartal,    4. செ.குன்றாவி. (v.t.)

   1. சொல்லுதல்; to tell, utter, declare, say, announce, pronounce, publish.

     “மற்றைய ராவார் பகர்வர்”(நாலடி,256);

   2. விற்றல்; to hawk, sell,

     “பூவும், புகையும் மேவிய விரையும் பகர்வணர்”(சிலப். 5,14.);

     “பண் அயை சிலம்பு பகர்தல் வேண்டி”(சிலப். 18.);.

     “என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பாற் கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி”(சிலப். 20-61.);

   3. கொடுத்தல்; to give

     “வேழம் வெண்பூப் பகரும் தண்டுறை யூரன்”(ஐங்குறு. 13);

   4. உணர்த்துதல்; indicate

     “பகர்குழல் பாண்டி லியம்ப”(பரிபா. 14,42);.

     [பகு → பகர் → பகர்-பொருள்களைப் பகுத்து விலை கூறுதல். மு. தா.292. வே. க.]

 பகர்2 pakartal,    4. செ.குன்றாவி. (v.t.)

   ஒளிவிடுதல்; to emit lustre

     “பக்கங் கருஞ்சிறுப் பாறை மீதே யருவிகள் பகர்ந்தனைய”(திவ். பெரியாழ் (1,7,8);

     [பகல் → பகர்] வ. மொ. வ. 25

 பகர்3 pakartal,    4. செ.கு.வி. (v.i.)

   பெயர்தல் (நாஞ்.);; to shift, move.

ம. பகருக.

     [பகர் → பகர்தல்]

 பகர்4 pakar, பெ. (n.)

   1. ஒளி; radiance, splendour.

     “சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய்திருவேங் கடத்தானே”(திவ். திருவாய். 6,10,9.);

   2. பங்கம்பாளை (மலை.);; killer worm.

மறுவ : ஆடுதீண்டாப்பாளை.

     [பகல் → பகர்] (வ.மொ.வ. 25.);

பகர்ச்சி

பகர்ச்சி pakarcci, பெ. (n.)

   1. சொல் (நன்.458);; speech, utterance, word.

   2. விலை; price

     “பகர்ச்சி மடவார்”(சிவப்.பிர.நன்னெறி, 23.);.

     [பகர் → பகர்ச்சி]

பகர்ச்சை

 பகர்ச்சை pakarccai, பெ. (n.)

   கோயில், அரண்மனை முதலிய இடங்களின்றும் மதிப்புரவாக அனுப்பும் எடுப்புச் சோறு; Cooked food sent from the temple or {parace} to the houses of Certain dignitaries, as a perquisite.

     “கோயிலிலிருந்து மூத்த பிள்ளை வீட்டுக்குப் பகர்ச்சை போகிறது”; (நாஞ்.);.

     [புகா → புகவு → புகர்ச்சை → பகர்ச்சை]

பகர்த்து-தல்

பகர்த்து-தல் pakarttutal,    5. செ. குன்றா.வி (v.t.)

   பெயர்த்து எழுதுதல் (நாஞ்.);; to transcribe. copy.

ம. பகர்த்துக.

     [பகர்2 → பகர்த்து-,]

பகர்நர்

பகர்நர் pakarnar, பெ. (n.)

   விற்போர்; selling persons

     “கூலம் பகர்நர் குடிபுரந்தரா அக் குடிபுரந்தருநர்”(பதிற். 13-23);.

     [பகர் → பகர்நர்]

பகர்பவர்

பகர்பவர் pakarpavar, பெ. (n.)

   விற்பவர்; salesman.

     “வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயிற்கொண்ட”(கலித்-66,1.);

     [பகர்தல் → பகர்பவர்]

பகர்பு

பகர்பு pakarpu, கு.வி.எ (adj.)

   விளைந்து; to yield.

     “பல்வளம் பகர்பூட்டும் பயனிலம் பைதற”(கலித்.20.);

பகர்ப்பு

 பகர்ப்பு pakarppu, பெ. (n.)

   படி (நாஞ்.);; copy as of an original document.

     [பகு → பகிர் → பகிர்ப்பு]

பகர்வனர்

பகர்வனர் pakarvaṉar, பெ. (n.)

   பொருள்களை விலைக்கு விற்பவர்; sales person

     “நகர நம்பியர் திரிதரு மருகில் பகர்வனர் போல்வதோர் பாண்மையின் நிறுத்த”(சிலப்.3.அரங்.);

     [பகர் → பகர்வனர்]

பகர்விலி

 பகர்விலி pakarvili, பெ. (n.)

   நெய்தல்; white indian water lily.(சா.அக.);;

மறுவ : அல்லி, பகர்விலிகொடி.

     [பகல் → பகர் + இலி]

பகற்கண்

 பகற்கண் pakaṟkaṇ, பெ. (n.)

   பகலில் கண் தெரியாதிருத்தல்; day blindness as opposed to night blindness. (சா.அக.);.

மாலையிற் கண் தெரியாமையாகிய நோயை மாலைக்கண் என்றாற் போல் பகலிற் கண் தெரியாமை பகற்கண் எனப்பட்டது.

பகற்கதிர்

பகற்கதிர் pakaṟkatir, பெ. (n.)

   கதிரவனின் ஒளிக்கதிர்கள்; rays of the sun,

     “பவ்வம் மீ மிசைப் பகற்கதிர் பரப்பி”(பொருந. 135.);

     [பகல் + கதிர்]

பகற்கறி

 பகற்கறி pakaṟkaṟi, பெ. (n.)

   பகற்காலத்தில் உண்ணக்கூடிய கறிவகை; vegetables that can be eaten during the day time as opposed to இராக்கறி, those that can be taken during the night time. (சா.அக.);.

     [பகல் + கறி]

பகற்கள்ளன்

பகற்கள்ளன் pakaṟkaḷḷaṉ, பெ. (n.)

   1. பகலிற் கொள்ளையிடுவோன்; day light thief.

   2. பிறர் பொருளை ஏமாற்றிக் களவு செய்வோன்; one who takes another’s property by asserting a false claim, used in reproach.

     [பகல் + கள்ளன்]

பகற்காலம்.

பகற்காலம். pakaṟkālam, பெ. (n.)

   1. பகற்பொழுது (வின்.);; day time.

   2. வாழ்நாள்; life time.

     ‘மனிதர்க்கு வயது நூறல்லதில்லை’

     [பகல் + காலம்]

பகற்குரட்டை

 பகற்குரட்டை pakaṟkuraṭṭai, பெ. (n.)

   பகலில் விழித்திருக்கும்போதே குறட்டைவிடுதல்; a spasmodic snoring in the day during waking hours. (சா.அக.);.

     [பகல் + குறட்டை → குரட்டை]

பகற்குருடு

பகற்குருடு1 pakaṟkuruṭu, பெ. (n.)

   பகலிற் குருட்டுத்தன்மையுடைய கூகை (சங்.அக.);; owl, as blind by day.

     [பகல் + குருடு]

     ‘பட்டமரத்தில் பகற்குருடு போகிறது’ என்னுந் தொடர் பகற்பொழுதிலும் முன்னே ஒருவர் தீப்பந்தம் பிடித்துச் செல்ல, பின்னே பல்லக்கிற் செல்பவரைக் குத்தலாகக் கூறியது.

 பகற்குருடு2 pakaṟkuruṭu, பெ. (n.)

   காகம்; crow, so called from its dim vision during the day. (சா.அக.);.

பகற்குறி.

பகற்குறி. pakaṟkuṟi, பெ. (n.)

   களவொழுக் கத்திற் பகற்காலத்தே தலைவனுந் தலைவியும் சந்திக்கக் குறிப்பிட்ட இடம். (நம்பியகப். 37.);; place assigned by lovers for clandestine meetings during day-time.

     “பல்பூங் கானல் பகற்குறி வந்துநம் மெய்கவின் சிதைய”[நற். 235 – 4].

     “பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க செறித்தனள் யாயே”(அகநா. 258 – 1.);.

     [பகல் + குறி]

பகற்கொள்ளை

பகற்கொள்ளை1 pakaṟkoḷḷai, பெ. (n.)

   பட்டப் பகலிற் கொள்ளையடிக்கை; daylight dacoity.

     [பகல் + கொள்ளை]

 பகற்கொள்ளை2 pakaṟkoḷḷai, பெ. (n.)

   1. பகற் கொள்ளையடிப்போன்; one who commits decoity by daylight.

   2. விலை, வாடகை, முதலியவற்றில் மீயளவு என்று கூறும் வகையில் பெறுதல்; daylight robbery.

     “இப்பாடப்பொத்தகத்தின் விலை இருநூறு உருவாய் என்றால், இது பகற்கொள்ளை யன்றோ ?”

     [பகல் + கொள்ளை]

பகற்கொள்ளைக்காரன்

 பகற்கொள்ளைக்காரன் pakaṟkoḷḷaikkāraṉ, பெ. (n.)

பகல் தீவட்டிக் கொள்ளைக் காரன் பார்க்க; see {paga tivatti-k-ko ai-k-kāran}

     [பகல் + கொள்ளை + காரன்]

     ‘காரன்’ ஆபா. பெயரீறு.

பகற்கோயில்

பகற்கோயில் pakaṟāyil, பெ. (n.)

   நீராவி மண்டபம் (சீவக. 2860. உரை);; hall in the middle of a tank.

மறுவ : நீராழி ‘மண்டபம்’

     [பகல் + கோயில்]

பகற்பசும்பால்

 பகற்பசும்பால் pakaṟpacumpāl, பெ. (n.)

பகலில் சுரந்து இரவில் கறக்கும் பத்தியத்திற் குதவுகின்ற பால்;(சா.அக.);.

 cow’s milk secreted during the day time and drawn in the night; this milk is said to be useful in diet.

     [பகல் + பசும்பால்]

பகற்பண்

 பகற்பண் pakaṟpaṇ, பெ. (n.)

   பகற்காலத்திற் பாடப்படும் பண்கள். (சங். அக.);; melodies to be sung during day-time.

     [பகல் + பண்]

   பகலிற் பாடப்படும் தேவாரப்பண்கள்;   அவை புறநீர்மை, காந்தாரம், கவுசிகம். இந்தளம், தக்கேசி, நட்டபாடை நட்டராகம்;   காந்தார பஞ்சமம், பஞ்சமம் ஆகிய பத்துமாம்;     “புறநீர்மை காந்தாரம் கெளசிகம் இந்தனமே புகழ்பெறு தக்கேசி நட்டராகம் நட்டபாடை, நறிய பழம்பஞ்சுரம், காந்தார பஞ்சமம், சீர் நன்மைதரு பஞ்சமத் தோடீரைந்தும் பகற்பண்” (இச்செய்யுள் திருவாவடுதுறை யாதீனத்தில் தெரிந்ததாக ஆசிரியர் குறிப்புள்ளது.); (த.சொ.அக.);

பகற்பலி

 பகற்பலி pakaṟpali, பெ. (n.)

   பனைமரம்; palmyra tree. (சா.அக.);.

     [பகல் + பலி]

பனைமரத்தின் களுக்கு கிழிக்கும் பல் போல் இருத்தலால் அது பகற்பலி எனப்பட்டது. பல் + இ = பலி. ‘இ’ உடையை பொருள் பெயரீறு.

பகற்பாடு

பகற்பாடு pakaṟpāṭu, பெ. (n.)

   1. பகற்காலம் (யாழ். அக.);; day time.

   2. பகலிற் செய்யும் வேலை (வின்.);; work done in day-time for one’s livelihood.

     [பகல் + பாடு]

பகற்போசனம்

 பகற்போசனம் pakrpōcaṉam, பெ. (n.)

   பகலுணவு; midday meals.

     [பகல் + skt Basjana]

பகற்போது

பகற்போது pakaṟpōtu, பெ. (n.)

   1. பகற் காலம்; day-time;

   2. பகற்காலத்து மலரும் பூ (சிலப். 2,14,உரை.);; flowers that bloom during day-time.

     [பகல் + போது]

பகற்றீவேள்-தல்

பகற்றீவேள்-தல் pakaṟṟīvēḷtal,    11. செ. குன்றாவி. (v.t.)

   1. பகலிற்பகைவரூர்களை எரித்தல்.; to burn down one’s enemy’s town in broad daylight

     “அகப்பா வெறிந்து பகற்றி வேட்டு”(பதிற்றுப்.3.பதி.);

     [பகல் + தீவேள்-,]

பகலங்காடி

பகலங்காடி pakalaṅkāṭi, பெ. (n.)

நாளங்காடி பார்க்க;{day bazaar,}

     “படியணி நெடுங் கடைப் பகலங் காடியும்”(பெருங். உஞ்சைக். 54. 77.);.

     [பகல் + அங்காடி]

பகலசனம்

 பகலசனம் pakalacaṉam, பெ. (n.)

   பகலுணவு; midday meals;

 dinner.

     [பகல் + skt asna → த. அசனம்]

பகலடி

பகலடி pakalaṭi, பெ. (n.)

   சிங்கியடிக்கை; flapping the arms against the sides.

     [பகல்2 + அடி]

பகலம்

 பகலம் pakalam, பெ. (n.]

   ஆவணம் எழுதினவன் இன்னான் என்பதைக் குறிக்க, அவன் இடும் கையொப்பத்துக்கு முன் சேர்க்கும் மொழி (c.g.);(c.g.);; term prefixed to the signature of the writer of a document indicating that he is the writer thereof.

     [ஒருகா,பகர் → பகல் → பகலம்]

பகலரசு

பகலரசு pakalaracu, பெ. (n.)

   கதிரவன்; sun, as a day king,

     “அகல்வாய் ஞாலம் ஆரிருளுண்ணப் பகலரசோட்டில் பணை யெழுந்தார்ப்ப”(மணிமே 9-17.);

     [பகல் + அரசு]

பகலவன்

பகலவன் pakalavaṉ, பெ. (n.)

   1. பகல் செய்வோன் (திவா.);, பார்க்க; see {pagalŞeyvÖn}.

     “பகல வனையானும்”(கம்பரா. கங்கை. 61.);

     “பகலவன் பைம்பெற்றேரரோ”(இராமா. கரன் 52.);.

   2. பரணிநாள் (பிங்.);; the 2nd {nakşatra}

     [(பகல் + அவன்,);– அவன். தன்மை ஒருமையீறு.]

பகல் → பகலவன் (செல்வி. திச.79. பக். 179.);

பகலாணி

பகலாணி pakalāṇi, பெ. (n.)

   பகல் 4;பார்க்க; see pagal 1,4

     “நுகத்துப் பகலாணி போன்று”(பழ. 339.);

     [பகல் + ஆணி]

பகலாந்தை

 பகலாந்தை pakalāntai, பெ. (n.)

   ஆந்தை வகை (பாண்டிச்);; a kind of owl.

     [பகல் + ஆந்தை]

பகலி

பகலி pakali, பெ. (n.)

   குதிரை நோய் வகை (அசுவசா. 111.);; a disease of horses.

     [பகல் → பகலி]

பகலிருக்கை

பகலிருக்கை pakalirukkai, பெ. (n.)

   1. நாளோலக்க மண்டபம்; council hall, durbar,

     ‘திருக்கடித் தானத்தைப் பகலிருக்கை மாத்ரமாகக் கொண்டு’ (ஈ.டு. 8,6,4);

     “புரிகை நாட்டுச் சிவபுரத்துப் பகலிருக்கையில் திருவமுது செய்தருளாவிருந்து”(s.i.i.iii., 135.);

   2. தனிமையான இடம்; lonely, retiring place solitary place.

     “அவருந் தாமுமாகப் பகலிருக்கையிலே போயிருந்து”(திருவிருத்.99. 467.);

     [பகல் + இருக்கை]

பகலுறக்கம்

 பகலுறக்கம் pakaluṟakkam, பெ. (n.)

பகல்தூக்கம்; (சா.அக.);.

 day sleep as opposed to night sleep.

     [பகல் + உறக்கம்]

பகலை

பகலை1 pakalai, பெ. (n.)

   உருமம் (நண்பகல்);; midday. (சா.அக.);.

     [பகல் → பகலை]

 பகலை2 pakalai, பெ. (n.)

பலகை (கோவை);

 lattice;

     [பகல் → பகலை]

     [பகலை → பலகை]

     [ஒ.நோ.விசிறி → சிவிறி.]

பகலைக்கு

 பகலைக்கு pakalaikku, து.வி. (adv.)

   பகலில்; during day.

     ‘பகலைக்குப் பத்துமணிக்குக் கதிரறுப்பு’;

     [பகல் + ஐ + கு]

பகலோன்

பகலோன் pakalōṉ, பெ. (n.)

   கதிரவன் (பிங்);; sun.

     “நீள்விசும்பு நிலாப்பகலோன்.”(திரு வாச. 15,5);

     “பகலோன் மறைந்த அந்தி ஆரிடை உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு”[அகநா. 201-2.]

     [(பகல் + ஒன்);ஒ-ஆண்பால் ஒருமையீறு.]

பகல்

பகல்1 pakal, பெ. (n.)

   1. பகுக்கை (பிங்,);; dividing separating.

     “நெருநைப் பகலிடங் கண்ணி”(புறநா. 249.);

   2. நடு (திவா.);; middle,

   3. நடுவுநிலைமை; middle position, impartiality

     “அகல்வையத்துப் பகலாற்றி”(பதிற்றுப். 90,9);

   4. நுகத்தாணி; middle or main peg in a yoke.

     “நெடுநுகத்துப் பகல்போல”(பட்டினப். 206);.

   5. முழுத்தம் (பிங்.);; period of two {naligai}

     “ஒரு பகல் காறு நின்றான்”(சீவக. 2200);

   6. அரையாமம்; half of a {yāmam,}

     “அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சார்”(சிலப். 4,81.);

   7. நண்பகல் (கொ. வ.);; midday, noon,

   8. காலைமுதல் மாலை வரையுள்ள காலம்; day, day time, as divided from the night.

     “பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே”(புறநா. 8.);

     “கலைகாட்டையாயு முகூர்த்தம் பகல் கங்குல்”(கூர்மபு. பல்வகை16.);

   9. இளவெயில்; the morning sun.

     “பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்”(பரிபா. 11,96.);

   10. அறுபது நாழிகை கொண்ட நாள் (திவா.);; day of 24 hours.

     “ஒல்வ கொடாஅ தொழிந்த பகலும்”(நாலடி. 169);

   11. ஊழிக்காலம்; the day of destruction of the universe

     “துஞ்சலுறூஉம் பகலுறுமாலை”(பதிற்றுப். 7,8.);

   12. கதிரவன்; sun.

     “பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல்”(மணிமே. 4,92.);

     “வெயில் காலும் பகன்மதி வெருவுற”(திருவிளை. நாக. 10);

   13. பேரொளி (திவா.);; light, radiance, splendour,

   14. வெளி; open place;

 openness, (சீவக. 15 9 6. உரை.);

   15. நாள்; day.

     “ஓர்பகலே யிவனிறந்தனன்”(சீவரக. கத்தரிப்பூ-1.);

     “என் பெழுந்தியங்கும் யாக்கையர் நண்பகற் பலவுடன் கழிந்த உண்டியர்”;(திருமுரு. 130-31);

     “பகலிற் றோன்றும் இகலில் காட்சி”(திருமுரு. 166);

     “நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்”(பொருந. 46);

     “அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி” (பெரும். 2.);

     “பகற்பெயல்… மழைவீழ்ந் தன்ன மாத்தாட் கமுகின்”(பெரும். 362);

     “படவரல் மகளிரொடு பகல்விளையாடி”(பெரும். 387);

     “பகல்செய் மண்டிலம் பாரித் தாங்கு”(பெரும் : 442);

     “—பருவவானத்துப் பகற்பெயற் றுளியின் மின்னுநிமிர்ந்தாங்கு”(பெரும். 484);

     “இரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள்”(முல்லைப்46);

     “பகற்செய்யும் செஞ்ஞாயிறும்”(மதுரைக். 2.);

     “சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு குடமுதற் குன்றஞ் சேர”(மதுரைக். 546);

     “பகலுரு வுற்ற விரவுவர நயந்தோ”(மதுரைக். 549.);

     “மற்றை யாமம் பகலுறக் கழிப்பி”(மதுரைக். 653);

     “பகலிறந் திருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர்”(நெடுல். 33.);

     “இரவும் பகலும் மயங்கிக் கையற்று. மதலைப் பள்ளி மாறுவன விருப்ப”(நெடுல் : 47.);

     “பூமலி சோலை அப்பகல் கழிப்பி”(குறிஞ்சிப்.. 214.);

     “அகலாக் காதலொடு பகல்விளையாடி”(பட்டினப். 104.);

     “வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும்”(பட்டினப். 268.);

     “பாயிருள் நீங்கப் பகல்செய்யா எழுதரு ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பும்”(மலைபடு : 84);

     “பகனிலை தளர்க்குங் கவணுமிழ் கடுங்கல்”(மலைபடு. 206);

     “அரையிருள் யாமத்தும் பகலுந் துஞ்சான்’ (சிலப். 4-81);

     “நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த மாலை”(சிலப். 9-2);

     “பன்மலர்ப் பூம்பொழிற் பகல்முளைத் ததுபோல்”(மணிமே. 92);

     “இரவும் பகலும் இளிவுடன் தரியாது”(மணிமே. 6-67);

     “நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த செம்புற் றியல் போல ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே”(புறநா. 51-11);

நடுநிலைக்கு

     “பகலற்றி இனிதுருண்ட சுடர்நேமி”(புறநா. 17-7);

   16. பிரிதல்; to separare.

     “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்”(குறள். 187);

   17. கூடாமை; that which is not attached.

     “இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்”(குறள்,851);

     “பகலிற் பக்கம் பார்த்துப் பேசு; இரவில் அதுதானும் பேசாதே”(பழ.);

     “பகலிற் பசுவும் தெரியவில்லை; இரவில் எருமை தெரியுமா ?”(பழ.);

     [பகு → பகல், (வ.மொ.வ. 25.);]

ம. பகல்;க. பகல்;தெ. பகளு

 பகல்2 pakal, பெ. (n.)

   அக்குள்; armpit.

மறுவ. கமுக்கட்டு.

 பகல்3 pakal, பெ. (n.)

   1. பிறரோடு கூடாமை; unsociability

     “இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்” (குறள் 851.);

   2. கட்சி (தொல்,சொல். 165,சேனா.);; party.

     [பகு → பகல்]

பகல் வெள்ளி காட்டு-தல்

பகல் வெள்ளி காட்டு-தல் kāṭṭutal,    5. செ.கு.வி. (v.i.)

   காணமுடியாத தொன்றனைக் காட்ட முயலுதல் (யாழ்.அக.);; to attempt an impossibility.

     [பகல் + வெள்ளி + காட்டு-,]

பகல்கனவு

 பகல்கனவு pakalkaṉavu, பெ. (n.)

   மனத்தில் வளர்க்கும் நிறைவேறக் கூடிய வாய்ப்புச் சிறிதும் இல்லாத எண்ணம்; day dream.

     ‘அரசியல் சிக்கல்களுக்கு படையின் மூலம் தீர்வு என்பதெல்லாம் வெறும் பகல்கனவு’

     “என்னை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தால் அது பகல் கனவுதான்”.

     ‘பகல் கனவுலகில் பயணம் செய்யாதே’ (பழ.);

     [பகல் + கனவு]

பகல்செய்வான்

பகல்செய்வான் pakalceyvāṉ, பெ. (n.)

   கதிரவன் (பகற்பொழுதைச் செய்பவன்);; sun.

     “பையுணோய் கூரப் பகல் செய்வான் போய்விழ”(சிலப். 7.50);

     [பகல் + செய்வான்]

பகல்செல்வாயில்

பகல்செல்வாயில் pakalcelvāyil, பெ. (n.)

   சிலப்பதிகாரத்தில் குறிக்கப் பெறும் குணவாயிற்கோட்டம் என்ற இடம்; a place referred in the epic {Silappa digăram.}

     “பகல் செல் வாயிற்படியோர் தம்முன் அகல் இடப்பாரம் அகலநீங்கி”(சிலப். 30-179.);.

     [பகல் + செல் + வாயில்]

பகல்தீவட்டி

 பகல்தீவட்டி pakaltīvaṭṭi, பெ. (n.)

   பெரியோர்கள் செல்லும்போது, அவர்கட்கு முன் பகற் பொழுதிலுங்கூட, மதிப்புரவாகப் பிடித்துக் கொண்டு போகப்படும் தீப்பந்தம்; torch carried by day before distinguished persons as an honour.

     [பகல் + தீவட்டி]

பகல்தீவட்டிக்கொள்ளைக்காரன்

பகல்தீவட்டிக்கொள்ளைக்காரன் kāraṉ, பெ. (n.)

   1. பகற் கொள்ளையடிப்போன். (இ.வ.);; one who commits dacoity by daylight.

   2. அறமல்லாத வழியில் வரும்படி தேடுபவன் (இ.வ.);; person who seeks large, unreasonable gain.

     [பகல்தீவட்டி + கொள்ளைக்காரன்]

பகல்மானம்

 பகல்மானம் pakalmāṉam, பெ. (n.)

   பகற் பொழுது (யாழ்.அக.);; day time.

     [பகல் + மானம்]

பகல்மாறு

பகல்மாறு pakalmāṟu, பெ. (n.)

   1. பகற் பொழுதில்; day-time opp to {irā-māru}

     “சமணர்கள் பகல்மாறு சாப்பிடுவார்கள்”(இ.வ.);;

   2. பகற்பொழுது மாறும்வேளை; evening time, dusk.

     [பகல் + மாறு]

பகல்வத்தி

 பகல்வத்தி pakalvatti, பெ. (n.)

பகல்வர்த்தி பார்க்க; see {paga – vartti}

     [பகல் + வத்தி]

வத்தி = skt.

பகல்வர்த்தி

பகல்வர்த்தி pakalvartti, பெ. (n.)

   வாணவகை; a kind of firework

     “பகல்வர்த்தியதிலதிகமாம்”. (அறப்.சத.43.);

     [பகல் + வர்த்தி]

வர்த்தி = skt.

பகல்வாயில்

பகல்வாயில் pakalvāyil, பெ. (n.)

   கீழ்த்திசை (பகலின் வாயில்);; east as the gate of the day.

     “பகல்வாயி லுச்சிக் கிழான்கோட்டம்”(சிலப். 9,10.);

     “புகர் வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்”(சிலப். கனாத்திறம். 10.);

     [பகல் + வாயில். பகல் ஆகுபெயராகப் பகலவனைக் குறிக்கிறது.]

பகல்விடுதி

 பகல்விடுதி pakalviṭuti, பெ. (n.)

   பகலில் தங்குமிடம் (வின்.);; day lodging

     [பகல் + விடுதி]

பகல்விண்மீன்தோன்றி

 பகல்விண்மீன்தோன்றி pakalviṇmīṉtōṉṟi, பெ. (ո.)

   கண்பார்வையை மிகக் கூர்மையாக்கும் பொன்னாங்காணி என்னும் மூலிகை; sessile plant it is so called because it lends keenness to vision so as to enable one to see the stars in the day time.

பகல்வினையாளன்

 பகல்வினையாளன் pakalviṉaiyāḷaṉ, பெ. (n.)

   முடிதிருத்துவோன் (நிகண்டு);; barber.

     [பகல் + வினையாளன்]

முடியைத் தலையினின்றும் வெட்டிப் பிரித்தலால் முடி திருத்துவோன் பகல்வினை யாளன் எனப்பட்டான். பகல்-பகுத்தல்;பிரித்தல்.

பகல்விளக்கு

 பகல்விளக்கு pakalviḷakku, பெ. (n.)

   பகலில் மதிப்புரவாக இடும் விளக்கு; burnt at daytime as an honour.

     [பகல் + விளக்கு]

பகல்வெய்யோன்

பகல்வெய்யோன் pakalveyyōṉ, பெ. (n.)

   1. நடுவுநிலை விரும்புவோன்; lover of justice.

     “பாடியிருக்கைப் பகல் வெய்யோன்”(சிலப். 26,88.);

   2. நடுவுநிலை தவறாத சேரன் செங்குட்டுவன்; the {céra king Šefiguttuvan.}

     [பகல் + வெய்யோன்]

பகல்வெளிச்சம்

பகல்வெளிச்சம் pakalveḷiccam, பெ. (n.)

   1. பகலொளி (வின்.);; daylight

   2. போலி நடிப்பு.; false action.

     [பகல் + வெளிச்சம்]

பகல்வெளிச்சம் போடு-தல்

பகல்வெளிச்சம் போடு-தல் pōṭutal,    5. செ.கு.வி. (v.i.)

   பகலில் ஏமாற்ற முயலுதல் (கொ.வ.);; to attempt to deceive in broad day light.

     [பகல் + வெளிச்சம் + போடு-,]

பகல்வேடக்கலை

 பகல்வேடக்கலை pagalvēṭaggalai, பெ.(n.)

   விழுப்புரம், திண்டிவனம் பகுதியைச் சார்ந்த குல்லுக்கவர இன மக்கள் நிகழ்த்தும் நாட்டுப் upääsmou; folk dance of Kullukkavara people. [பகல்+வேடம்+கலை]

பகல்வேடக்காரன்

பகல்வேடக்காரன் pakalvēṭakkāraṉ, பெ. (n.)

   1. பகற் காலத்தில் பலவேடம் பூண்டு பிழைப்போன்; a person who lives by amusing people with his disguises during daytime.

   2. வெளிவேடக்காரன்; hypocrite.

     [பகல் + ski veSa த. வேடம் + காரன்]

பகல்வேடம்

பகல்வேடம்1 pakalvēṭam, பெ. (n.)

   1. பகலில் உருமாற்றிக் கொள்கை; disguisement in broad daylight.

   2. ஆடம்பர நடிப்பு; false outward show, pretence.

     [பகல் + வேடம்]

 பகல்வேடம்2 pakalvēṭam, பெ. (n.)

   நல்லவர் போன்ற நடிப்பு; வெளிவேடம்; mask of innocence;dissambling

     ‘உன் பகல் வேடத்தை நம்பி ஏமாறுவதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை’. (உ.வ.);

     [பகல் + வேடம்]

பகளமல்லிகை

 பகளமல்லிகை pakaḷamallikai, பெ. (n.)

   பவளமல்லிகை என்பதன் கொச்சைவழக்கு; coral jasmine. (சா. அக.);.

     [பவளம் → பகளம் + மல்லிகை]

ஒ. நோ. சிவப்பு-சிகப்பு

பகளி

 பகளி pakaḷi, பெ. (n.)

   ஐம்பது வெற்றிலை கொண்ட ஒரு கட்டு; pack of betel leaves.

     [பகல் → பகலி + பசளி = பாதி]

பகழி

பகழி pakaḻi, பெ. (n.)

   1. அம்பு; arrow,

     “விழுத்தொடைப் பகழி.”(புறநா 152.);.

   2. அம்புக் குதை (பிங்.);; foot of an arrow.

ம. பகழி

பாய்ந்த விடத்தைக் குத்திக் கிழித்துச் செல்லுதலின் அம்பு பகழி எனப்பட்டது.

     [பகல்-பிளத்தல்.பகலி → பகழி]

     “வைந்துனைப் பகழி மூழ்கலிற் செவிசாய்த்து”(முல்லைப். 73.);

     “உடுவுறும் பகழி வாங்கிக் கடுவிசை”(குறிஞ்சிப். 170.);

     “புலவு நுனைப் பகழியுஞ் சிலையுமான”(பெரும். 29.);

     “சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவல் எயினர்”(ஜங்-361-1.);

     “வேழம் விழ்த்த விழுத்தொடைப் பகழி”(புறநா.152-1.);

     “பகழிபோல் உண்கண்ணாய்”(கார். 5-2.);

     “களிற்றுமுகந் திறந்த கவளுடைப் பகழ”(அகநா. 132-4.);

     “வடியுறு பகழிக் கொடுவி லாடவர்”(அகநா. 159-5.);

     “அடியமை பகழி யார வாங்கி”(அகநா. 161-3.);

     “அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழி”(அகநா. 167-8.);

     “நோன்சிலைத் தொடையமை பகழித் துவன்று நிலை வடுகர்”(அகநா. 295-15.);

     “கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென”(அகநா. 297-6.);

     “நோன்சிலைச் செவ்வாய்ப் பகழிச் செயிர்நோக் காடவர்”(அகநா. 371-2.);

     “நொவ்வியற் பகழி பாய்த்தெனப் புண்கூர்ந்து”(அகநா. 388-11);

பகழிக்கூத்தர்

பகழிக்கூத்தர் pakaḻikāttar, பெ. (n.)

   திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ், சீவகசிந்தாமணிச் சுருக்கம் ஆகிய நூல்களை இயற்றிய வரும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவருமான புலவர்; a poet who is authered Tirucheudier pillai-t-tamil, and sivaka-sintamani-c-curukkam, 16th திருப்புல்லாணி மாலடியான் தர்ப்பாதனன். இவர் மாலியக் குடும்பத்தில் பிறந்து சிவநெறியைத் தழுவியவர் ஆவர். சேதுபதிகளின் பழைய தலைநகரான புகலூரில் உள்ள மூத்த பிள்ளையாரின் பெயர் பகழிக் கூத்தர் என்பதாகும். இப்பெயராலேயே இப்புலவரும் அழைக்கப்பெற்றுள்ளார். சீவக சிந்தாமணிச் சுருக்கம் என்ற பெயர் கொண்ட நூலின் முகப்பில் ‘செம்பி நாட்டுச் சன்னாசிக் கிராமத்துத் திருப்புல்லாணிமாலடியான் தர்ப்பாதனன் மகன் பகழிக் கூத்தன் வாக்கு’ என்ற தொடர் காணப்படுகின்றது. எனவே சன்னாசி என்பது சேதுநாட்டைச் சேர்ந்த ஊராகும்.

நூல் : ‘திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், சீவக சிந்தாமணிச் சுருக்கம்.

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் : 10 பருவங்களில் 100 செய்யுட்கள் உள்ள இந்நூல் செந்தில் முருகனைப் பிள்ளையாகப் பாடப்பெற்றது. மிகவும் சொல்லழகும்; இனிய நடையும் உடையதாகப் புலவர்களால் பாராட்டப்பெறுவது, திண்டிமம் என்னும் இசைக் கருவியைத் தம் பாப்புலமைக்கு அறிகுறியாக முழங்கிக் கொண்டு புலவர் சிலர் திருச்செந்தூர் முருகன் திருமுன்பு மங்கலப் பாப் பாடிவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீவக சிந்தாமணிச் சுருக்கம் : இந்நூல் 300 ஆசிரிய மண்டிலப்பாக்களால் இயன்றது.)

பகழித்திரள்

 பகழித்திரள் pakaḻittiraḷ, பெ. (n.)

பற்றாக்கை (பிங்.); பார்க்க; see {parakkal} binder for a sheaf of arrows.

     [பகழி + திரள்]

பகவதி

பகவதி pakavati, பெ. (n.)

   கொற்றவை; durga,

     “அகில தலம் விதிர்விதிப்பவரு மடற்கேசரி மேல் பகவதியை யடிவணங்கி”(சேதுபு. தேவிபுர. 25.);

 பகவதி pakavati, பெ. (n.)

   1. தருமதேவதை (பிங்);; the goddess of virtue;

   2. கொற்றவை (துர்க்கை); (திவா.);;{durga},

   3. மலைமகள் (பார்வதி); (நாமதீப. 22);{pārvati].

   4. தாம்பிரபரணி ஆறு (நாமதீப. 526);; the river {tāmpiraparani,}

     [பகவன் → பகவு + அதி.]

 பகவதி pagavadi, பெ.(n.)

   1. அறக்கடவுள் (பிங்.);; the Goddess of Virtue.

   2. துர்க்கை (திவா.);;{}.

   3. மலைமகள்;{}.

   4. தாமிரபரணி ஆறு (நாமதீப. 526);; the river {}.

     [Skt. Bhagavati → த.பகவதி]

பகவதிநாள்

பகவதிநாள் pagavadināḷ, பெ.(n.)

   கணை (பூர); நாள் (திவா.);; the 11″ naksatra.

     [Skt. Bhagavati → த. பகவதி+நாள்]

பகவத்கீதை

பகவத்கீதை pagavatātai, பெ.(n.)

   அருச்சுனன் பொருட்டுக் கண்ணன் மொழிந்ததும் பதினெட்டுப் பகுதியுடையதும் மகாபாரதத்தில் அடங்கியதுமான வடமொழி நூல்; a section of 18 chapters in the {}, containing the sacred instruction of {} to Arjuna.

     [Skt. Bhagavat-{} → த. பகவத்கீதை]

பகவத்விசாயம்

 பகவத்விசாயம் pagavatvicāyam, பெ.(n.)

   கடவுள் தொடர்பான திருவாய் மொழி விளக்கவுரை; the commentary of {}, as consisting of discourses relating to the Supreme Being.

     [Skt.bhagavat-{} → த. பகவத்விசாயம்]

பகவந்தன்

பகவந்தன் pakavantaṉ, பெ. (n.)

   இறைவன் (பகவன்);; lord,

     “மூவருள் முதலான பகவந்த னீயென்று கண்டும்”(நூற்றெட்டுத்,திருப்பூ. 97);.

     [பகவன் → பகவந்தன்]

 பகவந்தன் pagavandaṉ, பெ.(n.)

   இறைவன்; Lord.

     “மூவருள் முதலான பகவ வந்தனீயென்று கண்டும்” (நூற்றெட்டுத். திருப்பு.97);.

     [பகு → Skt. bhaj. பகவன் → Skt. bhagavan, bhagavanta → த. பகவந்தன்]

பகவனாதி

 பகவனாதி pakavaṉāti, பெ. (n.)

   வெள்ளெருக்கு; white flowered madar plant.

     [பகவன் + ஆதி]

பகவன்

பகவன் pakavaṉ, பெ. (n.)

   1. பகவான் பார்க்க; see {pagavān.}

   2. தேவன்; divine being, god,

     “ஆதி பகவன் முதற்றே யுலகு”(குறள்,1.);

   3. அருகன் (திவா.);; arhat

   4. புத்தன் (திவா.);; buddha.

   5. நான்முகன் (பிங்.);;{brahmā}.

   6. திருமால் (பிங்.);;{Thirumal}.

   7. சிவன் (திவா);;{sivan}.

   8. கதிரவன் (பிங்.);; sun.

   9. குரு. (பிங்.);; priest.

   10. திருமாலடியாரான முனிவர்; ascetic devotees of {Tirumāl.}

     “பக்தர்களும் பகவர்களும்”(திவ். பெரியாழ். 4,9,6.);.

     [பகவன்பகு → பகம் → பகவன்]

   பகுத்தளித்துக் காப்பவன்;பலர்க்கும் படியளப்பவன், ஆண்டவன். பக (bhaga); என்னும் இருக்குவேதச் சொற்கு ‘dispenser’, gracious lord patron (applied to gods, esp-to savitri.); RV. என்று மா. வி. அ. பொருள் வகுக்கின்றது. வேளாளன் அறு சாரார்க்கும், அரசன் அடிமையர்க்கும், படியளப்பது போல ஆண்டவனும் பலர்க்கும் உணவைப் பகுத்தளித்துக் காப்பவன் என்னும் கருத்தில் அவனைப் பகவன் என்றனர். இன்றும் ஆண்டவனைப் படியளக்கிறவள் என்று பொதுமக்கள் கூறுவது காண்க. Lord என்னும் ஆங்கிலச் சொல்லும் இதே கருத்துப் பற்றியெழுந்திருப்பது கவனிக்கத்தக்கது.

 E. Lord. OE hlaford (Loaf ward); = bread, keeper.

இனி, அவரவர்க்குரிய நன்மை தீமைகளை வகுப்பவன் என்றுமாம்.

     “பால்வரை தெய்வம்”(சொல். 58); என்று தொல்காப்பியர் கூறுவதை நோக்குக. இனி,பகு-பகவு-பகவன் என்றுமாம். எங்ஙனமாயினும் பொருள் ஒன்றே,”நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர் (தனிப்பாடல்);, பகவன் என்று பல தெய்வங்களுக்கும் பொதுப்பெயரால் வழங்கியதாலேயே முழுமுதலாகிய கடவுளைக் குறிக்க ஆதிபகவன் என்று அடை கொடுத்துக் கூறினார் வள்ளுவர். (மு. தா. 264);

     [பகவு → பகவன்]

பகவபட்டி

 பகவபட்டி bagavabaṭṭi, பெ.(n.)

   ஈரோடு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Erode Taluk. –

     [பகவன்+பட்டி]

பகவான்

பகவான்1 pakavāṉ, பெ. (n.)

   1. பகம் என்பதனாற் குறிக்கப்படும் அறுகுணங்களும் உடைய பெரியார்; great person possessing the six attributes of pagam, the epithet being used after names of certain gods and {Rsis, as akkinipagaván, viyâ $ apâgaván} (வின்.);

   2. பன்னிரு பகலவருள் ஒருவன்;(திவா);; a sun-god, one of {tuvâta-ātittar} q. v.

   3. சிவன் (சூடா.);; sivan.

 பகவான்2 pakavāṉ, பெ. (n.)

   கடவுள்; தெய்வம்; god.

     “இனி மருத்துவரால் முடியாது. பகவான்தான் காப்பாற்ற வேண்டும்.”

     [பகவன் → பகவான்]

பகவிருக்கும்

 பகவிருக்கும் pakavirukkum, பெ. (n.)

   நிலக்கடம்பு; cadamba tree.

     [பக + இருக்கம்]

பகவு

பகவு1 pakavu, பெ. (n.)

   1. துண்டு; slice, bit.

     “எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்”(குறள். 889);

   2. பங்கு (யாழ். அக.);; share, portion.

   3. வெடிப்பு (யாழ். அக.);; crack.

     [பகு → பகவு]

வ. மொ.வ.26.

 பகவு2 pakavu, பெ. (n.)

   வெடியுப்பு; nitre. (சா.அக.);.

     [பகு → பகவு]

பகவூகம்

 பகவூகம் pakavūkam, பெ. (n.)

   பகற்குரட்டை என்னும் புடலங்காய்; round snake gourd. (சா.அக.);.

     [பக + ஊகம்]

பகா

 பகா pakā, பெ. (n.)

   தூதுவளை (சங்.அக.);; climb-ing brinjal.

     [பகு → பகா]

பகாங்குரம்

பகாங்குரம் pakāṅguram, பெ.(n.)

   1. பெண்குறி அரத்தம், அதாவது மாதவிடாய்; menstrual blood.

   2. பெண்குறி (நோனி);யின் முனை; clitoris.

   3. பெண்குறி மயிர்; pubic hair. (சா.அக.);

     [பகு+அங்குரம் – பகாங்குரம்]

பகாசுரன்

பகாசுரன் pakācuraṉ, பெ.(n.)

   1. வீமனால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்; a giant stain by {}.

   2. பெருந்தீனிக்காரன் (இ.வ.);; a glutton.

   3. செய்த வேலைக்குக் கூலி அதிகமாகக் கேட்பவன் (இ.வ.);; one who is extravagant in his demand.

     [Skt. {} → த. பகாசுரன்]

பகாப்பதம்

பகாப்பதம் pakāppatam, பெ. (n.)

   பகுக்கத்தகாத சொல்; word, base or suffix which cannot be analysed into parts, opp. to pagu-padam.

     “பகாப்பத மேழும் பகுபதமொன்பதும் எழுத்தீறாகத் தொடரு மென்ப”(நன். 130);.

     [அணி,அறம், அகலம், தருப்பணம், உத்திரட்டாதி (பகாப்பதம்); ஈரெழுத்து முதல் ஏழெழுத்து ஈறாக வருவது.]

     [பகா + பதம் (வட);.] pada-word.

     “பகுப்பாற் பயனற்று இடுகுறியாகி முன்னே யொன்றாய் முடிந்தியல்கின்ற பெயர்வினை யிடையுரி நான்கும் பகாப்பதம்”(நன்.131.);

பகாப்பிடுகு

 பகாப்பிடுகு pagāppiḍugu, பெ.(n.)

   பல்லவரது பட்டப் பெயர்களுள் ஒன்று; the title of the Pallava kings.

பகாப்பொருள்

 பகாப்பொருள் pakāpporuḷ, பெ. (n.)

   கடவுள். (யாழ்.அக.);; god, as indivisible.

     [பகா + பொருள்]

பகாய்பாக்கி

 பகாய்பாக்கி pakāypākki, பெ.(n.)

   பழைய நிலுவை (C.G.);; old balance, arrears.

     [U. {}-baqi → த. பகாய்பாக்கி]

பகாரம்

பகாரம் pakāram, பெ. (n.)

   அழகு; beauty, splendour.

     “விகாரமுறு குரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற”(திருப்பு.186);.

     [பகரம் → பகாரம்]

 பகாரம் pakāram, பெ. (n.)

   1. அழகு; beauty, splendour

     “விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற”(திருப்பு. 186.);

   2. பகரம் என்னும் எழுத்தைக் குறிக்கும் ஒலிவடிவம்; the pronounciation of letter ‘ப’ (P);

     “இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்”(தொல். 1-97);

     [பகரம் → பகாரம்]

பகாரிசம்

 பகாரிசம் pakārisam, பெ.(n.)

   பெண்களின் உடம்பில் கோளாறடைந்த காற்றானது (வாயுவானது); பெண்குறி(நோனி);ப்பாதையில் தங்கி அவ்விடத்தில் சதை வளர்ந்து காளானைப் போல் பருத்துத் தீய (துர்); நீர் வழிவதால் தீய நாற்றத்தை வீசும் ஒரு நோய்; a disease of the vagina in which the deranged (vayu); wind humour etc., of the body is lodged in the vaginal region giving rise to crops of soft polypus in the passage which after sometime assumes the shape of a mushroom secreting foul smelling fluid c.f. இலிங்காரிசம். (சா.அக.);

பகார்

 பகார் pakār, பெ. (n.)

   புள்ளிக் காரனால் ஏற்படுத்தப்படும் விளைச்சல் மதிப்பு (R.F);; value of a crop. fixed by an appraiser

     [பகர் → பகார்]

பகாலம்.

 பகாலம். pakālam, பெ. (n.)

   மண்டையோடு (யாழ். அக.);; skull, especially human skil.

     [கபாலம் → பகாலம்]

பகாலி

பகாலி pakāli, பெ. (n.)

   சிவதுளசி; siva’s basil. (சா.அக.);.

 பகாலி pakāli, பெ. (n.)

   1. சிவன் (யாழ். அக);;Śiva as holding a skull.

   2. சிவதுளசி; siva’s basil.

பகாவின்பம்

 பகாவின்பம் pakāviṉpam, பெ. (n.)

   வீடுபேறு; the bliss of salvation

     [பகு + ஆ (எ.ம.இ); + இன்பம்]

 பகாவின்பம் akāviṉpam, பெ. (n.)

   வீடுபேற்றின்பம் (சங். அக.);; the bliss of salvation.

     [(பகு + ஆ + இன்பம்); ஆ. எதிர்மறை இடைநிலை.]

பகி

பகி paki, பெ. (n.)

   பகலிற் பதினைந்தாம் முழுத்தம் (சங். அக.);; the 15th {muluttam} of the day time.

     [பகல் → பகி]

பகிகண்டம்

 பகிகண்டம் pakikaṇṭam, பெ. (n.)

   பிடரி; nape of the neck. (சா.அக.);

     [பகி + கண்டம்]

பகிசங்கை

 பகிசங்கை pagisaṅgai, பெ.(n.)

   மலங்கழிக்கை; evacuation of the bowels, dist.fr. {}.

     [Skt. {} → த. பகிசங்கை]

பகிசுகரி-த்தல்

பகிசுகரி-த்தல் pagisugarittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   விலக்குதல்; to expel excommunicate, boycott.

     [Skt. {} → த. பகிசுகரி-,]

பகிசுகாரம்

 பகிசுகாரம் pagisugāram, பெ.(n.)

   விலக்குகை; expulsion, excommunication ostracism, boycott.

     [Skt. {} → த. பகிசுகாரம்]

பகிடி

 பகிடி pakiṭi, பெ. (n.)

பகடி பார்க்க; (வின்.);; See {pagad,}

தெ. பகிடி.

     [பகடி → பகிடி]

     ‘பகிடிக்குப் பத்துக்காக; திருப்பாட்டுக்கு ஒரு காசு’. (பழ.);

     ‘பகிடியைப் பாம்பு கடித்தது போல’.(பழ.);

பகிரங்கம்

 பகிரங்கம் pagiraṅgam, பெ.(n.)

   வெளிப்படை; publicity, openness.

     [Skt. {} → த. பகிரங்கம்]

பகிரண்டம்

பகிரண்டம் pagiraṇṭam, பெ.(n.)

   வெளிப் புடவி (அண்டம்);; the outer spaces of the universe.

     “மல்லாண்ட தடக்கையாற் பகிரண்டமகப்படுத்த காலத்து” (திவ்.பெரியதி. 11,6:2);.

த.வ.பேரண்டம்

     [Skt. {} → த. பகிரண்டம்]

பகிரதன்

பகிரதன் pagiradaṉ, பெ.(n.)

பகீரதன் பார்க்க;see {}.

     “பகிரத னெனும் பார்த்திபன் வந்தனன் பரிவால்” (கம்பரா.அகலி.43);.

பகிரதிப்பூடு

 பகிரதிப்பூடு pakiratippūṭu, பெ. (n.)

   கற்பூர வள்ளி; camphor creeper thick leaved lavender (சா.அக.);.

     [பகிரதி + பூடு]

     [பூண்டு → பூடு]

பகிரந்தரசத்தி

பகிரந்தரசத்தி pagirandarasatti, பெ.(n.)

   1. தாமரை வளையம்; lotus stalk.

   2. உண்டாக்கும், காக்கும், அழிக்கும் ஆற்றல் (சத்தி); (சா.அக.);; the power of creating, acting and destroying.

பகிர்

பகிர்1 pakirtal,    4. செ.குன்றா.வி. (v.t)

   1. பங்கிடுதல்; to divide into shares, distribute, parcel out, apportion,

     “பொற்புமிக்க மாயன் பகிரு மமிர்தந்தனை”(கந்தபு. மகாசாத்.20.);

     ‘இந்த வேலையை நாம் மூவரும் பகிர்ந்து கொண்டால் விரைவாய் முடித்துவிடலாம்’.

     ‘இருப்பது ஒரு காணி, அதை எத்தனை பேருக்குப்பகிர்வது ?’

   2. பிளத்தல்.

 to break. split,

 பகிர்2 pakirtal,    2. செ.கு.வி (v.i.)

   பிரிதல்; to separate.

     “பரதனு மிளவலு மொருநொடி பகிராது”(கம்பரா. திருவவ. 131.);

     [பகு → பகிர்-,]

 பகிர்3 pakir, பெ. (n.)

   1. பங்கு; share, section, portion

     “கோசலை கரத்தினோர் பகிர் தாமுற வளித்தனன்”(கம்பரா. திருவவ. 89.);

   2. துண்டம்; piece

     ‘திங்களின் பகிர்புரை…… எயிறு’ (திருவிளை. நாகமெய்த. 15.);

   3. வெடியுப்பு (யாழ். அக.);; saltpetre,

   4. வெடிப்பு; crevice

     [பகு → பகிர்] (செல்வி.75. ஆனி.பக்.531);

பகிர்கமி-த்தல்

பகிர்கமி-த்தல் pakirkamittal,    11. செ.கு.வி. (v.i.)

   வெளிக்குப் போதல்; to ease oneself

     ‘பகிர் கமிக்குங் காலத்து நாய்க்குக் கொடுக்கின்றோமென நினைந்துவிட நல்லதர்மமாமோ’ (நீலகேசி,223,உரை);

     [பகிர் + கமி-,]

பகிர்ச்சி

பகிர்ச்சி pakircci, பெ. (n.)

   1. பகுதி; division.

   2. பகுப்பு; classififcation.

     [பகிர் → பகிர்ச்சி]

பகிர்த்தேசம்

பகிர்த்தேசம் pakirttēcam, பெ. (n.)

   1. ஊர்ப்புறம்; outskirts, vicinity, as of a town.

   2. மலங்கழித்தற்குரிய இடம்; கழிப்பிடம்; privy.

     [பகிர்3 + தேசம்]

பகிர்ந்துகொள்-ளுதல்

பகிர்ந்துகொள்-ளுதல் pakirntukoḷḷutal,    15. செ.கு.வி. (v.i.)

   மகிழ்ச்சி துன்பம் முதலியவற்றைப் பிறருடன் பரிமாறிக் கொள்ளுதல்; share one’s experience, happiness, sorrow, etc, with another.

     “எழுத்தாளன் தன் நுகர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள எழுதுகிறான்”

     “உறுப்பினர்களின் வருத்தத்தைத் தானும் பகிர்ந்து கொள்வதாக அமைச்சர் கூறினார்.”

     [பகிர் → பகிர்ந்துகொள்-,]

பகிர்யாகம்

 பகிர்யாகம் pakiryākam, பெ. (n.)

   வெளிப்படப் புரியும் வழிபாடு; external worship opp to {andar-yagam}

     [பகிர் + யாகம்]

பகிர்விடு-தல்

 பகிர்விடு-தல் pakirviṭutal, செ. கு. வி. (v.i.)

   பிளத்தல் (சங்.அக.);; to break in to pieces

     [பகிர் + விடு-,]

பகிர்வு

 பகிர்வு pakirvu, பெ. (n.)

   பங்கீடு; sharing. distribution, as of power etc;

     ‘அதிகாரப் பகிர்வு’

     ‘வருவாய் சீரற்ற முறையில் பகிர்வு செய்யப்படுகிறது.’

     [பகிர் → பகிர்வு] (வே.க.);

பகிறு

 பகிறு pakiṟu, பெ. (n.)

   செருக்கு; pride.

ஒருகா.

     [பகிர் → பகிறு]

பகீரதன்

 பகீரதன் paāradaṉ, பெ.(n.)

   சாம்பலாய்ப் போன வரும் தன் மூதாதையருமான சகரர்கள் நற்கதியடைதற் பொருட்டு வானத்தினின்று கங்கையை நிலத்திற்குக் கொணர்ந்து பாதாளத்துச் செலுத்தியதாகச் சொல்லப்படும் ஞாயிற்று (சூரிய);க் குலத்து அரசன்; an ancient king of the solar race who is believed to have brought down the sacred {} from the heaven to the earth and conducted her to the nether world in order to purify the ashy remains of his ancestors.

     [த. பகிரதம் → Skt. → பகீரதன்]

தென்புலத்தார் வழிபாடு தமிழ் மரபு. பகுப்புண்ட மடல் கொண்ட பனையின் பெயர் பகிரம் – பகிரதம். பகிரதன் எனும் சொல் பனையன் எனப் பொருள்படும். பனையன் என்னும் பெயர் பகிரதன் – பகீரதம் என வடமொழியில் திரிந்தது எனலாம்.

பகீரதப்பிரயத்தனம்

 பகீரதப்பிரயத்தனம் paāradappirayaddaṉam, பெ.(n.)

   கங்கையைக் கொண்டு வருதற்குப் பகீரதன் செய்த முயற்சி, பெரு முயற்சி; super human effort, as that of Bagiratan in bringing down the sacred {}.

     [Skt. {}-prayatna → த. பகீரதப் பிரயத்தினம்]

பகீரதம்

 பகீரதம் paāradam, பெ.(n.)

   பனைச் சருக்கரை; palmyra sugar (சா.அக.);

பகீரதி

பகீரதி paāradi, பெ.(n.)

   பகீரதனால் கொண்டு வரப்பட்ட ஆறு, கங்கை; the sacred {}, as brought down by {}.

     “பகீரதி

மணங்கொளச் சடை வைத்த மறையவன்” (தேவா.497,9);.

     [Skt. Bhagirathi → த. பகீரதி]

பகீரெனல்

பகீரெனல்1 paāreṉal, பெ. (n.)

   அச்சக்குறிப்பு; expr. signifying the state of being greatly terrifed

     “இறப்பொடு பிறப்பையுள்ளே யெண்ணினனெஞ்சது பகீரெனும்”(தாயு.சின்மயா. 5);

   2. திடீரென மனக்கலக்கமுறுதற் குறிப்பு (வின்.);; the state of being perturbed suddenly.

     [பகீர் + எனல்]

 பகீரெனல்2 paāreṉal, பெ. (n.)

   அச்சம், நேர்ச்சி முதலியவற்றால் மனத்தில் அச்சம் பரவுதல் அல்லது தாக்குதல்; get a fright have a frightening feeling.

     “இரவில் வீட்டின் கொல்லைக் கதவு மூடப்படவில்லை என்பது நினைவுக்கு வந்ததும் பகீரென்றது.”

     [பகீர் + எனல்]

பகீலெனல்

 பகீலெனல் paāleṉal, பெ. (n.)

பகீரெனல் பார்க்க; see pakirenal.

     “ஏந்துகொம்பைக்கண்டு பகீலென்று மனஞ்சோர்ந்து”(விறலிவிடு.);

     [பகீல் + எனல்]

பகு

பகு1 pakutal,    6. செ.கு.வி. (v.i.)

   1. பிளவு படுதல்; to be spilit, divided,

     “சக்கரவாளச் சிலை பக”(திருப்பு.841);.

   2. பிரிவு படுதல்; to be at variance disunited;to separate

     “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்”(குறள். 187.);

     [பொகு → பகு → பகு-,]

 பகு2 pakutal,    4. செ.குன்றா.வி. (v.t.)

   பாகமாய்ப் பிரித்தல்; to divide

     “பகுந்துனக்கு வைத்தகோலறைக்கு”(திருவாலவா. 30,30.);

ம. பகுக, தெ. பகுலு

 பகு3 ttal,    11. செ.குன்றா.வி. (v.t.)

   1. பங்கிடுதல்; to distribute, apportion, allot

     “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல்”(குறள், 322.);

   2. வகைப்படுத்துதல் (வின்.);; to classify

   3. வகுத்துத்தெளிவாய்க்கூறுதல் (வின்.);; to explain analytically

     ‘இந்த எண்ணை மேலும் பகுக்க முடியாது’

   4. கொடுத்தல் (பிங்.);; to give

   5. வெட்டுதல் (பிங்.);; to divide, cut into piees

   6. பிடுங்குதல்; to root out, tear off

     “பாதவ மொன்று பகுத்தான்”(கம்பரா, இலங்கையெரி. 55.);

   7. கோது நீக்குதல்; to remove impurities.

     “பண்ணுறு சுளைகள் கையாற் பகுத்துணக் கொடுத்ததன்றே”(சீவக. 2724.);

     [பொகு → பகு → பகுத்தல்]

ம. பகுக்க,

தெ. பகுலுட்சு,

 பகு4 pakutal,    4. செ.கு.வி. (v.i.)

   வணிகர் எண்குணத் தொன்றாகிய பங்கிடல்; to divide

     “செழுங்கோள் வாழை யகவிலைப் பகுப்பும்”(புறநா. 168.);

 பகு5 paku, பெ. அ (adj.)

   அதிகமான; many, much

     “பகுவொளிப் பவழஞ் செவ்வாய்”(சீவக. 2801.);

ஒருகா : மிகு → பகு

பகு என்னும் சொல் தென்சொல் என்பதற்குக் காரணங்கள்

   1. வடமொழியில் பகு என்னுஞ் சொற்கு மூலமாகக் காட்டப்படும் bhaj என்பதற்கு ஆணிவேரேனும், வரலாறேனும் இல்லை.

அதோடு bhaj (to divide); என்னும் மூலத்தினின்று வேறுபட்டதாக bhanj (to break); என்றொரு மூலம் காட்டப்படுகின்றது. உண்மையில் இரண்டும் ஒன்றே. தமிழ்ப்

பகுதியின் திரிந்த வடிவுகளே வடமொழியில் மூலமாகக் காட்டப்பெறுகின்றன. பகுதிக்கும் முந்தியது மூலம் அல்லது வேர்.

   2. bhaj என்னும் மூலத்தின் திரிவுகளாக; bhakti, bhagavan, bhaga, bhagya முதலிய சில சொற்களே வடமொழியிற் காட்டப் பெறுகின்றன. தமிழிலோ, நாற்பதிற்கு

மேற்பட்ட சொற்கள் பகு என்னும் பகுதியினின்று திரிந்துள்ளன.

   3. பகுதி, பக்கம், பாகம் முதலிய பல சொற்களும் பகு என்னும் ஒரே பகுதியினின்று திரிந்திருக்கவும், அவற்றின் திரிபுகளான ப்ரக்ருதி பஷம் bhaga முதலிய

வடசொற்கள் வெவ்வேறெழுத்துக்களைக் கொண்டனவாய் வெவ்வேறு மூலத்தனவாகக் காட்டப்படுகின்றன. (மு. தா. 266.);

பகுசா

 பகுசா pagucā, கு.வி.எ.(adv.)

   பெரும் பான்மையாய் (அனேகமாய்);; very likely, for the most part.

த.வ.பெரும்பகுதி

     [Skt. {} → த. பகுசா]

பகுசாரம்

பகுசாரம் pakucāram, பெ. (n.)

   1. நறுவிலி; sebesten.

   2. அதிசாரம்; diarrhoea (சா.அக.);;

பகுசுருதியாகமம்

பகுசுருதியாகமம் pagusurudiyāgamam, பெ.(n.)

   சைனாகமம் மூன்றனுள் ஒன்று (சீவக.213,உரை);; one of the three {}.

     [Skt. bahu-{} → த. பகுசுருதியாகமம்]

பகுசுவாசம்

 பகுசுவாசம் pagusuvāsam, பெ.(n.)

   மேல் மூச்சு (சா.அக.);; hard breath;heavy breathing.

பகுசொல்

பகுசொல் pakucol, பெ. (n.)

   முதனிலை, ஈறு முதலிய உறுப்புக்களாகப் பகுக்கப்படும் சொல்; word divisible with root and suffix.

     [பகு + சொல்]

செல்வி. திச. 79; பக்.180.

     [பகுத்து + அறிவு]

பகுதம்

பகுதம் pakutam, பெ. (n.)

   நிகழ்ந்து கொண்டிருப்பது; that which is under consideration;subject on hand

     “பகுத மன்றியே மற்றுள தொழில்களிற் பற்றார்”(ஞானவா.திதி. 2.);

பிரா. பகுதம்

     [பகு → பகுதம்]

பகுதாகம்

 பகுதாகம் pagutāgam, பெ.(n.)

   அதிக நீர் வேட்கை (சா.அக.);; indefatigable thirst, unquenchable thirst.

     [Skt. bahu → த. பகு]

பகுதானிய

பகுதானிய pakutāṉiya, பெ. (n.)

   ஆண்டு வட்டம் அறுபதனுள் பன்னிரண்டாவது; the 12th year of the jupiter cycle of sixty years.

பகுதி

பகுதி1 pakuti, பெ. (n.)

   1. பகுப்பு; portion, part, allotment, division,

     “அண்டப் பகுதியினுண்டைப் பிறக்கம்”(திருவாச.3.1.);.

   2. வேறுபாடு; difference.

     “மயங்கிய தகுதியல்லது பகுதி யின்றெனின்”(ஞானா. 35,5.);.

   3. திறை; tribute.

     “இது பகுதி கொள்கெனா”(அரிச். பு. நகர்நீ. 111.);.

   4. வருவாய் (சூடா.);; income

   5. வரி; revenue.

   6. இதழின் வரிசை எண்; number, as of a periodical.

தெயகிதி க.பகதி. ம.பகுதி.

     [பகு → பகுதி]

பகுதி (திறை);.

பகு → பகுதி = பிரிவு, கூறு, கண்டுமுதலில் ஆறிலொரு கூறான அரசிறை, பகுசொல்லுறுப்பாறனுள் ஒன்றான முதனிலை.

பகுதி விகுதி என்னும் தென்சொற்களின் பொருளும், ப்ரக்ருதி, விக்ருதி என்னும் வடசொற்களின் பொருளும் வெவ்வேறாம்.

பகுதி = கூறு

விகுதி = ஈறு

விகுதல் = முடிதல்

ப்ரகதி = இயற்கை (முன்செய்யப்பட்டது); (இயல்பு);

விக்ருதி = விகாரம்.

பகுதியும் (திரிபை); (விகாரத்தை); அடையக் கூடுமாதலானும், சந்திசாரியை, இடைநிலை என்பவும் திரியை உண்டு பண்ணுதலாலும் விகுதி என்னும் உறுப்பிற்குத்

திரிபு என்னும் பொருள் முதனிலை, இறுதிநிலை யென்று பெயர் பெறுதலானும், அவற்றிற்கு கூறு ஈறு என்பனவே சொற்பொருள் என்பது துணியப்படும்.

களத்தில் முதலாவது அரசனுக்குச் செலுத்தப்படும் பகுதி சிறப்பாகப் பகுதி என்றே பெயர் பெற்றதுபோல், பகு சொல்லுறுப்புக்களுள் முதன்மையானதும்

பகுதியென்றே பெயர் பெற்றதென்க. ஆகவே பகுதி, விகுதியென்பன ப்ரக்ருதி, விக்ருதி என்பனவற்றின் திரிபல்லனவென்று தெளிந்து கொள்க. (மு.தா.பக். 263.);

பகுதி விகுதியென்னும் தென்சொற்களின்றே ப்ரக்ருதி, விக்குதி என்னும் வடசொற்களைத் திரித்துக் கொண்டு அவற்றிற்குப் பொருந்தப் புளுகலாக வேறுபொருள்

கூறுகின்றனர் வடவர் என்க.

பகம் பகு → பகம் = பகுதி, ஆறு என்னும் தொகை.

வேளாளன் விளைவு, அரசன் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்ற அறுவர்க்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதாலும், பகுசொல் பகுதி விகுதி சந்தி சாரியை

இடைநிலை வேறுபடு (விகாரம்); என்னும் ஆறுறுப்புக்களாய்ப் பகுக்கப்பட்டதனாலுமே, பகம் என்னும் சொற்கு ஆறு என்னும் தொகைப் பொருள் தோன்றிற்று.

 பகுதி2 pakuti, பெ. (n.)

   1. முதன்மைப் பொருள்; primordial matter.

     “பகுதியென்றுள தியாதினும் பழையது”(கம்பரா. மீட்சி. 100);

   2. சொல்லின் முதனிலை; base of a word.

     “தத்தம் பகாப்பதங்களே பகுதியாகும்”(நன். 134);

     “பகுதி விகுதியிடைநிலை சாரியை”(551. 133.);.

   3. தன்மை; nature,Character.

     “மடியா துயர்ந்த நெடியோர் பகுதியும்”(ஞானா. 39,3);.

   4. படை (திவா.);; forces, army.

     “பின் செலும் பகுதி” (இரகு. திக்குவி. 55.);.

   5. அமைச்சர்; minister.

   6. கூட்டம் (அக. நி.);; crowd, gathering.

   7. அடியொன்றுக்கு ஒன்பதெழுத்து வருஞ்சந்தம் (வீரசோ.யாப்.33. உரை.);;   8. பகை, நொதுமல், நண்பு எனும் மக்கட் பிரிவு; section in the human being.

     “தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற் பாற்பட் டொழுகப் பெறின்”(குறள். 111.);

     “கருவிகளாறும் முறையே தன்னியல்பில் நிற்றலின் பகுதியாம்”(சிவஞா. நன். 133.); என்ற சிவஞான முனிவர் விளக்கமும் நோக்கத்தக்கது.

     [பகு → பகுதி]

 பகுதி3 pakuti, பெ. (n.)

   1. வருவாய் வட்டத்தின் உட்பிரிவு (நாஞ்.);; administrative sub-division of a taluq.

   2. உரிமைப்பட்டது; that which belongs to a person.

     “தம்முடைய பகுதியல்லாதனவற்றை”(குறள்,376,மணக்.);

     [பகு → பகுதி]

 பகுதி4 pakuti, பெ. (n.)

   1. ஒரு முழுமை, பரப்பு, தொகுப்பு முதலியவற்றின் உறுப்பாக உள்ளது, பிரிவு; part portion.

     “தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது.”

     “கட்டுரையின் முதல் பகுதியை எழுதி முடித்துவிட்டேன்”

     “வீட்டின் ஒரு பகுதியைக்கட்டி முடித்துவிட்டேன்”

   2. ஒன்றை ஒட்டிய பக்கம்;இடம்; (adj.);

 adjacent, area,

     “வீட்டின் பின்பகுதியில் தோட்டம்”

     “இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழுப்பு நிலக்கரி இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது”

   3. கீழ்வாய் இலக்க எண்ணில் கோட்டுக்குக் கீழ் உள்ள எண்; denominator,

     “2/3 என்பதில் 3 என்பது பகுதி, 2 என்பது தொகுதி”.

     [பகு → பகுதி]

பகுதிகட்டு-தல்

பகுதிகட்டு-தல் pakutikaṭṭutal,    5. செ.கு.வி (v.i.)

   1. அரசர்க்கு இறைகொடுத்தல்; to pay the taxes to pay tribute, as a petty king to his suzerin.

   2. பங்கிடுதல்; to share (த.சொ.அக.);

     [பகுதி + கட்டு-,]

பகுதிக்காற்பிறை

 பகுதிக்காற்பிறை pakutikkāṟpiṟai, பெ. (n.)

   ஙூ,சூ,பூ,யூ,வூ, என்ற வடிவெழுத்துக்களில் ஊகாரவொலியைக் குறிக்க வரையப்படும் கீழ்க்கோடும் பிறைபோன்ற குறியும்; the vertical downward stroke with its loop at the end in the vowel-consonants ஙூ,சூ,பூ,யூ,வூ, being the symbol of the vowel element ‘ஊ’ in them.

     [பகுதிக்கால் + பிறை]

பகுதிக்கால்

 பகுதிக்கால் pakutikkāl, பெ. (n.)

   ஙு,சு,பு,யு,வு, என்ற வடிவெழுத்துக்களில் உகரவொலியின் குறியாக வரையப்படும் கீழ்க்கோடு (வின்.);; the vertical downward stroke in the vowel consonants ஙு,சு,பு,யு,வு,

 being the symbol of the vowel element ‘உ’ in them.

     [பகுதி + கால்]

பகுதிக்கிளவி

பகுதிக்கிளவி pakutikkiḷavi, பெ. (n.)

   தகுதி பற்றியும் வழக்கு பற்றியும் வழங்கும் சொற்கள்; expressions used euphe- mistically-or sanctioned by usage.

     “தகுதியும் வழக்கும் தழீஇயினவொழுகும் பகுதிக் கிளவி வரைநிலையிலவே”(தொல்,சொல்.17. சேனா);

     [பகுதி + கிளவி]

பகுதிப்பொருள்விகுதி

பகுதிப்பொருள்விகுதி pakutipporuḷvikuti, பெ.( n.)

   தனக்கு ஒரு பொருளின்றிப் பகுதியின் பொருளிலேயே வரும் விகுதி (சீவக.247. உரை);; suffix added on to a word without changing its sense as ka in avaigal.

     [பகுதி + பொருள் + விகுதி.]

விகுதி = Skt.

பகுதியெண்

 பகுதியெண் pakutiyeṇ, பெ. (n.)

   கீழ்வாய் இலக்க வெண்ணிற் கீழிருக்கும் எண் (இக்.வ.);; denominator of a fraction.

     [பகுதி + எண்]

பகுதூக்கம்

 பகுதூக்கம் pagutūggam, பெ.(n.)

   மிகுந்த தூக்கம் (சா.அக.);; excessive sleep.

     [பகு+தூக்கம்]

     [Skt. bahu → த. பகு]

பகுத்தன்

பகுத்தன் pakuttaṉ, பெ. (n.)

   செம்படவச் சாதியாரின் பட்டப்பெயர் (E. T. Vi, 352);; caste title of cembadavar.

பகுத்தறி-தல்

பகுத்தறி-தல் pakuttaṟital,    2. செ.குன்றா.வி. (v.t.)

   கரணிய, காரியங்களை மனத்தில் கொண்டு செய்திகளை வகைப்படுத்தி உணர்தல்; to distinguish, discriminate, reason analytically.

     ”உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறியும் ஆற்றல் உண்டு”

     [பகுத்து + அறி-,]

     ‘பகுத்து அறியாமல் துணியாதே படபடப்பாகச் செய்யாதே’ (பழ.);

பகுத்தறிவு

பகுத்தறிவு pakuttaṟivu, பெ. (n.)

   1. பகுத்தறியும் திறன்; reasoning;

 power of discrimination.

     ‘மனிதனின் பகுத்தறிவு, இயற்கையை அவன் வெற்றி கொள்ள உதவியது’

   2. நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் எதையும் சிந்தித்து ஏற்றுக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட முறை; rationality.

     “பகுத்தறிவு இயக்கம் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பெற்றது”(உ.வ.);

பகுத்திரரோகசமனி

 பகுத்திரரோகசமனி paguttirarōgasamaṉi, பெ.(n.)

   திருநாமப் பாலை (சா.அக.);; wild sarsaparilla.

பகுத்துண்(ணு)-தல்

பகுத்துண்(ணு)-தல் tal, செ.குன்றா.வி. (v.t.)

   1. ஏழைகள் முதலியோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்து எஞ்சியதை உண்ணுதல்; to eat food after feeding the poor, etc.

     “பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல்” (குறள், 322.);

     [பகு → பகுத்து + உண் (ணு);-,]

பகுத்துப்பார்-த்தல்

பகுத்துப்பார்-த்தல் pakuttuppārttal,    11. செ.குன்றா.வி, (v t.)

   ஒரு பொருளைச் செவ்வை யாகச் சோதித்துப் பார்த்தல் (வின்.);; to survey in detail;

 to Scrutinise

     [பகு → பகுத்து + பார்-,]

பகுத்துவம்

பகுத்துவம் pakuttuvam, பெ. (n.)

   1. மிகுதி; abundance, multitude;

   2. இசையில் மிக்குவரும் சுரம்; the note that occurs most in a musical piece.

     [பகு → பகுத்துவம்]

பகுநாயகம்

பகுநாயகம் pagunāyagam, பெ.(n.)

   செல்வராட்சி (வெகுநாயகம்);; plutocracy.

     “பகுநாயகம் ஜகத்து என்கிறதைத் தவிர்த்துக் குறுகவிட்டு வைத்தார்களிறே சில வேதாந்திகள்” (திவ்.திருநெடுந்.2,வ்யா.பக்.19);.

     [Skt. {} → த. பகுநாயகம்]

பகுபதம்

பகுபதம் pakupatam, பெ. (n.)

   முதனிலை, ஈறு முதலியனவாகப் பிரிக்கக்கூடிய மொழி (நன். 128);;     “பகாப்பத மேழும் பகுபத மொன்பதும் எழுத்தீ றாகத் தொடரு மென்ப”(நன். 130);

     “பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின் வருபெயர் பொழுதுகொள் வினைபகுபதமே”(நன். 132.);

     [பகு + பதம்]

     [வட.pada-சொல்.]

பகுபதவுறுப்பு

பகுபதவுறுப்பு pakupatavuṟuppu, பெ. (n.)

   முதனிலை, ஈறு இடைநிலை, சாரியை, சந்தி, திரிபு (வேறுபாடு); என்ற சொல்லுறுப்புக்கள் (நன்.133. உரை,);; vigudi,iợainilai, šāriyai, šandi, vigāram}.

     [பகுபதம் + உறுப்பு]

பதம் =Skt

பகுபித்தம்

 பகுபித்தம் bagubittam, பெ.(n.)

   அதிக பித்தம்; excessive bile. (சா.அக.);

     [Skt. bahu → த. பகு]

பகுபுத்தி பாதி

 பகுபுத்தி பாதி pāti, பெ. (n.)

   கல்லுருவி; blistering plant

பகுப்பு

பகுப்பு pakuppu, பெ. (n.)

   பிரிவு; division, classification

     “பகுப்பாற் பயனற்று”(நன்.131);

     [பகு → பகுப்பு] (வ.மொ.வ.25);

பகுப்பு = பிரிப்பு.

பகுமதி

பகுமதி pagumadi, பெ.(n.)

பகுமானம் பார்க்க;see {}.

     “பகுமதி நிமித்தமாகப் போர்த்தே னென்னில்” (நீலகேசி,272,உரை);.

     [Skt. bahumati → த. பகுமதி]

பகுமானம்

பகுமானம் pagumāṉam, பெ.(n.)

   பெரு மதிப்பு; high esteem, great respect;honour, dignity.

     “பாட்டொன்றோ வென்ன பகுமானம்” (பஞ்ச.திருமுக.924);.

     [Skt. bahu → த. பகு]

பகுமூத்திரம்

 பகுமூத்திரம் pagumūttiram, பெ.(n.)

   நீரிழிவு; diabetes.

     [Skt. bahu → த. பகு]

மோள்+திரம் – (மோட்டிரம்); → மோத்திரம் → மூத்திரம் த. மூத்திரம் → Skt. {}

பகும்புல்

 பகும்புல் pakumpul, பெ. (n.)

   அக்கமணி;{rudrākSa} bead.

பகுளம்

 பகுளம் pakuḷam, பெ. (n.)

   மிகுதி; excessiveness, abundance. (சா.அக.);.

பகுளாங்கிசம்

 பகுளாங்கிசம் pakuḷāṅkicam, பெ. (n.)

   ஓதியமரம்; indian ash tree. (சா.அக.);.

பகுவசனம்

பகுவசனம் paguvasaṉam, பெ.(n.)

   பன்மை (வீரசோ.வேற்.4,உரை);; plural number.

     [Skt. bahu +{} → த. பகுவசனம்]

பகுவபஞ்சம்

பகுவபஞ்சம் baguvabañjam, பெ.(n.)

   நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று; an Upanisad, one of 108.

     [Skt. bahva-{} → த. பகுவபஞ்சம்]

பகுவாதா

 பகுவாதா pakuvātā, பெ. (n.)

   ஆலமரம்; banyan tree.

பகுவாய்

பகுவாய் pakuvāy, பெ. (n.)

   1. அகன்றவாய்; wide open mouth.

     “பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்து”(திவ். பெரியதி. 6,5,6);.

   2. தாழி (சங்.அக.);; large-mouthed vessel;

   3. பிழா (திவா.);; a vessel for baling water.

   4. பிளந்தவாய்; spilited mouth,

     “பல்பொறிப் பகுவாய்ப்படம் புடைபரப்பி”(திவிளை.நாக.15.); (த.சொ.அக.);

     [பகு + வாய்]

 பகுவாய் pakuvāy, பெ. (n.)

   பெரியவாய்; wide openmouth.

     “பகுவாய் ஞமலியொடு பைம்புதலெருக்கி”(பெரும்பாண். 112.);

     “வாளைப் பகுவாய் கடுப்ப”(நெடுநல். 143.);

     “கிம்புரிப் பகுவாய் அம்பணம் நிறைய”(நெடுநல். 96.);

     “பகுவாய்த் தடவிற் செந்நெருப்பார”(நெடுநல். 66.);

     “பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்”(ஐங்குறு. 299-2);

     “பைங்காற் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை”(புறநா. 342-7);

     “கிம்புரிப் பகுவாய் கிளர்முத் தொழுக்கத்து”(சிலப். 5-150);

     “பல்லுயிர் பருகும் பகுவாய்க் கூற்றம்”(சிலப். 5219);

     “வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்”(சிலப். 6-95);

     “பலர்புகத் திறந்த பகுவாய் வாயில்”(மணிமே. 7-92.);

பகுவாய்ப்பறை

 பகுவாய்ப்பறை pakuvāyppaṟai, பெ. (n.)

   பறைவகை (பங்.);; a kind of drum.

     [பகுவாய் + பறை]

பகுவாரகம்

 பகுவாரகம் pakuvārakam, பெ. (n.)

   நறுவிலி; sebestin plum. (சா.அக.);.

பகுவாரம்

 பகுவாரம் pakuvāram, பெ. (n.)

   நறுவிலி; Sebestin fruit. (சா.அக.);.

மறுவ : பகுவாரகம்.

பகுவொளி

பகுவொளி pakuvoḷi, பெ. (n.)

   பேரொளி; dazzling brightness, splendour.

     “பகுவொளிப் பவழஞ் செவ்வாய்”(சீவக. 2801);

     [பகு + ஒளி]

பகூதகன்

பகூதகன் paātagaṉ, பெ.(n.)

   துறவி (சன்னியாசி);கள் நால்வருள் ஏழு வீடுகளில் பிச்சையெடுத்துண்டு மரபொழுக்கப் (நியம);ப்படி யொழுகும் துறவி (சூதசங். ஞான யோக 6:3);; ascetic who lives on the alms from seven houses, one of four {}.

த.வ.ஏழுக இரப்புத்துறவன்

     [Skt. {} → த. பகூதகன்]

பகூதகம்

பகூதகம் paātagam, பெ.(n.)

   துறவு (சன்னியாசம்); நான்கனுள் ஏழு வீடுகளில் மட்டும் இரந்துண்டு (பிச்சை – எடுத்து); மரபொழுக்கப் (நியம);படியொழுகும் துறவு (சன்னியாச); வகை (கைவல்.சந்தே.158);; a kind of asceticism in Which the ascetic lives on alms from seven houses, one of four {}.

த.வ.ஏழக இரப்புத்துறவு

     [Skt. {} → த. பகூதகம்]

பகேசிகை

பகேசிகை paācikai, பெ. (n.)

   காயாமரம். (நாமதீப. 372.);; barren tree. (tree not baring any fruit.);

பகேடா

பகேடா paāṭā, பெ.(n.)

   1. சண்டை, தொந்தரவு; wrangling, dispute, quarrel.

   2. வம்பு செய்பவ-ன்-ள்; quarrelsome person.

     ‘அவள் பெரிய பகேடா’. (இ.வ.);.

த.வ.வம்பாளன், வம்பாடி

     [U. {} → த. பகேடா]

பகேடாவேலை

 பகேடாவேலை paāṭāvēlai, பெ.(n.)

   சிக்கலான வேலை; troublesome or vexatious business.

     [U. {} → த. பகேடா]

பகை

பகை1 pakai, பெ. (n.)

   1. உடன்பாடின்மை; hatred, enmity.

     “பகையென்னும் பண்பில தனை”(குறள். 871.);

     ”எக்காலம் பகைமுடித்துத் திரெளபதியும் குழல் முடிக்கவிருக்கின்றாளே”(பாரத.கிருட்டின. 22.);

   2. பகைஞன்; enemy, opponent.

     “உறுபகை யூக்க மழிப்ப தரண்”(குறள்,744.);.

     “பகை முன்னர் வாழ்க்கை செயலும்”(திரிகடு. 4.);

   3. மாறு; disagreement, counteraction contrast, contrariety.

     “நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார்”(ஐங்குறு. 187.);

   4. பகைத்தானம் பார்க்க; (astrol.); see {pakai-t-tánam}.

   5. மானக்கேடு; injury;discourtesy.

     “எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை”(குறள்,1225.);

   6. பகைநரம்பு (சிலப். 8,33.); பார்க்க; see pagai narumbu.

   7. தன்னுயர்ச்சிக்குக் கேடுவிளைக்கும் காமம், காழ்ப்புணர்வு முதலிய உட்பகை; mental defects, as internal enemies preventing the advancement of the soul.

   8. பகையாக்கல் (பு.வெ. 9,37, உரை.); பார்க்க;{pagai-y-akkal}

     [பகு → பகை] (வே. க.); (செல்வி.75. ஆனி. பக். 532);

 பகை2 pakaittal,    11. செ.குன்றா.வி. (v.t.)

   1. மாறுபாடுகொள்ளுதல்; to hate, oppose

     “பகைத்திட்டார் புரங்கண் மூன்றும்”(தேவா. 642,1.);

   2. அடித்தல் (அக. நி.);; to beat, strole.

   3. சார்தல். (அக. நி.);; to depend.

க. பகெ.

     [பகு → பகை → பகைத்தல்.]

     ‘பகைக்கச் செய்யேல்’ (பழ.);

 பகை3 pakai, பெ. (n.)

   உடல்; body. (சா.அக.);

     [பகு → பகை]

 பகை pagai, பெ.(n.)

ஏழிசைத் தொகுதியில் மூன்று மற்றும் ஆறாம் நரம்பு குறிக்கின்ற சொல். a word referring to 3rd and 6th string in harp.

     [பகு-பகை]

பகை நரம்பு

பகை நரம்பு narampu, பெ. (n.)

   யாழில் நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாயுள்ள பகை நரம்புகள்; the third and the sixth strings from the (adj.);string of a lute in a tune, as discordant.

     “வெம்பகை நரம்பி னென்கைச் செலுத்தியது”(மணிமே. 4,70.);

     “நரம்பிசையாற் பிறந்த பொல்லமை; அவை அதிர்வு, ஆர்ப்பு, கூடம், செம்பகையென நான்கு”(சிலப். வேனிற். 27,29);

     [பகை + நரம்பு]

     ‘ஆறும்மூன்றும், கூடமெனினும் பகையெனினும் ஒக்கும்’ (அடி.சிலம்பு,8 : 33); என்ற குறிப்பும் நோக்குக.

பகைக்கட்டி

பகைக்கட்டி pakaikkaṭṭi, பெ. (n.)

   1. உடலிலுண்டாகும் கழலை முதலிய புண்; malignant growth.

   2. படரும் புண்; spreading ulcer.

     [பகை + கட்டி]

பகைசரக்கு

 பகைசரக்கு pakaicarakku, பெ. (n.)

   மாற்றுச் சரக்கு (இ. வ.);; antidote

     [பகை + சரக்கு]

பகைசாதி-த்தல்

பகைசாதி-த்தல் pakaicātittal,    18. செ.கு.வி. (v.i.)

   வன்மங் கொள்ளுதல்; to cherish hatred.

     [பகை + சாதி-,]

சாதி = Skt

     [சாதி-சாதனை என்னும் வட சொல்லின் திரிபு வினையாக வந்தது.]

பகைஞன்

பகைஞன் pakaiñaṉ, பெ. (n.)

   பகைவன்;  enemy

     “தங்குலப் பகைஞர் தம்பால்”(கம்பரா.சடாயுவுயிர்,86.);

     [பகை → பகைஞன்]

பகைதணிவினை

பகைதணிவினை pakaitaṇiviṉai, பெ. (n.)

   தூதுசெல்வினை. (நம்பியகப்.75. உரை);; the act of going on a peace mission between enemy-kings, embassy.

     [பகை + தணிவினை]

பகைத்தானம்

 பகைத்தானம் pakaittāṉam, பெ. (n.)

   கோள்நிலையின் பகை வீடு;     [பகை + தானம்.]

தானம் ஸ்தானம் என்ற வடசொல்லின் திரிபு.

 Skt. ஸ்தானம் → தானம்

பகைத்தி

பகைத்தி pakaitti, பெ. (n.)

   பகைப்பெண்; a woman who is one’s enemy.

     “பகைத்தியா லொருந்தி வண்ணமே”(சீவக. 1488.);

     [பகைவன் → பகைத்தி. ஒநோ. புலையன் → புலைத்தி]

பகைத்தொடை

பகைத்தொடை pakaittoṭai, பெ. (n.)

   1. முரண்டொடை பார்க்க; see {murantodai.} (gram.); antithesis

   2. மாறுபட்டவற்றின் சேர்க்கை (ஈடு);; a string of articles of different kinds, as of beads.

     [பகை + தொடை]

பகைநாள்

பகைநாள் pakaināḷ, பெ. (n.)

   1. ஒருவர் பிறந்த விண்மீனுக்கு முந்திய விண்மீன் (யாழ்.அக.);; the day preceding one’s birthday;

   2. செய்யுட் பொருத்தத்தில் பொருத்தமற்ற நாள் (சங்.அக.);;     “சொல்லியநாண் மூவொன்பதாகத் துணிந்தொன்று-புல்லிய மூன்றைந் தேழ் பொருந்தாவம்” (வெண்பாப்);

     [பகை + நாள்]

இவ்வாரன்றி, “ஆதிரை, பரணி,ஆரலாயிலிய முப்பூரங் கேட்டைதீதுறு விசாகஞ் சோதி சித்திரைமகமீராறும் நற்காரியத்திற்காகா” எனத் தமிழ் மொழி அகராதி கூறுகிறது.

பகைநீர்

 பகைநீர் pagainīr, பெ.(n.)

   விதை முளைத்த மூன்றாம் நாள் பாய்ச்சும் நீர்; watering the field on the third day of the transplantation of paddy sapling.

     [பகை+நீர்]

பகைப்படல்

 பகைப்படல் pakaippaṭal, பெ. (n.)

   பகையாதல்; to become inimical.

     [பகை + படல்]

பகைப்படை

பகைப்படை pakaippaṭai, பெ. (n.)

அறுவகைப் படையுள் பகைவர் படையிலிருந்து விலக்குண்டு அடைந்தோராலேனும் அப்படையினின்றும் வேறுபடுத்து வசமாக்கிக் கொள்ளப்பட்டோராலேனும்

   அமைந்த படை (குறள்,762,உரை); (சுக்கிர நீதி,303.);; army comprising of men who have been dismissed or enticed away from the forces of one’s enemy, one of {aruvagaip-padai}, q. v.

     [பகை + படை]

பகைப்புலம்

பகைப்புலம் pakaippulam, பெ. (n.)

   1. எதிரியின் இடம்; enemy’s country or position.

     “பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த”(சிலப். 26,180.);

   2. போர்க்களம்; battle-field

     ‘இரண்டு பக்கத்தானும் படைவந்த பகைப்புலத்தை யொக்க’ (மதுரைக். 402,உரை.);

     [பகை + புலம்]

பகைமுனை

பகைமுனை cūṭutalpakaimuṉai, பெ. (n.)

   போர்க்களம்; battle field

     “இருதலை வந்த பகைமுனை கடுப்ப” (மதுரைக்.402.);

     [பகை + முனை]

பகைமுன்னெதிரூன்றல்

பகைமுன்னெதிரூன்றல் pakaimuṉṉetirūṉṟal,    16. செ.கு.வி. (v.i.).

   எண்வகை வெற்றியின் ஒன்றாகிய பகைவர்க்கு முன்னெதிர்த்தல்; to fight facing each other,

     [பகைமுன் + எதிரூன்றல்]

     [இஃதுஎண்வகை வெற்றியினொன்று; இதற்குக் காஞ்சிவேய்தலுண்டு. (சூடா.12.92);]

வேய்தல் = சூடுதல்.

பகைமேற்செல்லல்

 பகைமேற்செல்லல் pakaimēṟcellal, பெ. (n.)

   எண்வகை வெற்றியின் ஒன்றாகியமாற்றாரைப் பொரப்போதல்; to go for war with enemies.

பகைமை

பகைமை pakaimai, பெ. (n.)

   எதிர்ப்பு; hatred, enmity antagonism

     “பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும்” (குறள்,709.);

     ‘கருத்து வேறுபாடு பகைமையை ஏற்படுத்தி விடுகிறது’ (உ.வ.);

     [பகை + மை. (மை-பண்புப் பெயரீறு);]

பகையகம்

பகையகம் pakaiyakam, பெ. (n.)

   1. பகைப்புலம் (புறநா.13, உரை);, பார்க்க; see {pagas →p →pulam}

     [பகை + அகம்]

பகையணி

 பகையணி pagaiyaṇi, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [பகை+அணி]

பகையாக்கல்

பகையாக்கல் pakaiyākkal, பெ. (n.)

   வேற்றரசருடன் பகை கொள்ளுகை (குறள்,485,உரை.);; making enemies of neighbouring kings.

     [பகை + ஆக்கல்]

பகையாளி,

பகையாளி, pakaiyāḷi, பெ. (n.)

பகைவன் பார்க்க; “மறுநாளெதிர்வரிற் பகையாளியாகும்” (திருவேங். சத. 69.);

பகை + ஆள் + இ-உடைமைப் பொருள் ஈறு

     ‘பகையாளி குடியை உறவாடிக் கெடு’ (பழ.);

பகைர்சரத்

 பகைர்சரத் pagaircarat, கு.வி.எ.(adv.)

   கட்டுப்பாடு இல்லாமல்; without any condition, unconditionally.

     [U. baghair+shart → த. பகைர்சரத்]

பகைவன்

பகைவன் pakaivaṉ, பெ. (n.)

   1. எதிரி; foe, enemy.

     “பகைவர் பணிவிடநோக்கி” (நாலடி, 241.);

     “பகைவனுக்கு அருள்வாய்நன்னெஞ்சே.” (பாரதி.);

   2. போரில் எதிர்ப்படையில் உள்ளவன்; enemy in a war,

     ‘பகைவர் நாட்டு ஒற்றன்’. (உ.வ.);

     ‘பகைவர் உறவு புகை எழு நெருப்பு’ (பழ.);

பகைவயிற்பிரிவு

பகைவயிற்பிரிவு paḻpakaivayiṟpirivu, பெ. (n.)

   மாற்று வேந்தரொடு போர் கருதிப் பிரிதல் (இளம்.தொல்.பொருள்.27);; the act of going on a war between enemy and kings.

இதனுள் அரசன் தலைமகனாயழிப் பகைதணிவினைப் பிரிவு எனவும் அவனொடு சிவணிய ஏனோர் தலைவராயுழி வேந்தற்குற்றுழிப் பிரிவு எனவும் இதனை இருவகையாகக் கொள்க” (இளம். தொல். பொருள்.30.);

     [பகை + வயின் + பிரிவு]

பகைவருக்கும்

பகைவருக்கும் pakaivarukkum, பெ. (n.)

   மனக்குற்றங்கள் காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என புலம்பனின் உட்பகை களாயுள்ள ஆறு குற்றங்கள் (குறள்,அதி,44);; mental defects, internal foes, numbering six, {viz, kāmam, veguļi, kadumparrullam, māņam uvagai,madam.}

     [பகை + வருக்கம்]

வருக்கம்=Skt

பகோடா

 பகோடா paāṭā, பெ.(n.)

பக்கோடா பார்க்க;see {}.

த.வ. முறுவடம்

     [Skt. {} → த. பகோடா]

பக்ககம்

பக்ககம் pakkagam, பெ. (n.)

 side.

   2. பின்வாசற்கதவு; back door.

     [பக்கம் + அகம்]

பக்கக்கால்

பக்கக்கால் pakkakkāl, பெ. (n.)

   1. பக்கக்குத்துக்கால் பார்க்க; see {pakka-k-kuttuk kāl}

   2. பக்கத்துணை பார்க்க; see {pakka-t-tuṇai}

     [பக்கம் + கால்]

பக்கக்குடுமி

 பக்கக்குடுமி pakkakkuṭumi, பெ. (n.)

   சிலுப்பா; side-locks of hair on the temples of men (வின்.);

     [பக்கம் + குடுமி]

பக்கக்குத்துக்கால்

 பக்கக்குத்துக்கால் pakkakkuttukkāl, பெ. (n.)

   உத்தரத்தின் மேலுள்ள குற்றிவகை; queen post.

     [பக்கம் + குத்து + கால்]

பக்கக்கை

 பக்கக்கை pakkakkai, பெ. (n.)

   கைமரம்; rafter.

     [பக்கம் + கை]

பக்கசூலை

பக்கசூலை pakkacūlai, பெ. (n.)

   1. சூலை வகை (கொ. வ.);; pain in the sides, inflammation of the liver.

   2. கதிர்மறை, நிலாமறை பிடிக்கும் விண்மீனிற்கு இருபுறமுமுள்ள விண்மீனொன்றிற் பிறந் தவர்க்கு நேரிடுவதாகக் கருதப்படும் துன்பம்; distress believed to afflict those whose natal stars are adjacent to the lunar asterism at the time of the solar or the lunar eclipse.

     [பக்கம் + சூலை]

{skt. sula}- pain, disease.

பக்கச் செடில்

 பக்கச் செடில் pakkacceṭil, பெ. (n.)

   விலாவில் இரும்புக் கொக்கிகளைக் குத்தியாடுஞ் செடிலாட்ட வகை (வின்.);; swinging of a person, under a vow, by running strips of iron through the sides.

     [பக்கம் + செடில்]

     [P]

பக்கச் சொல்லாளி

பக்கச் சொல்லாளி pakkaccollāḷi, பெ. (n.)

   1. துணைநின்று பேசுவோன்; spokesman, advocate.

   2. சரக்கை வாங்கும் பொருட்டு அதன் நலத்தை உயர்த்திச் சொல்லி இனிமையாய்ப் பேசுபவன்; puffer.

     [பக்கம் + சொல் + ஆளி]

பக்கச்சட்டம்

 பக்கச்சட்டம் pakkaccaṭṭam, பெ.(n.)

   குறுக்குச்சட்டம் இரண்டையும் இணைக்கும் பக்கச்சட்டம்; a side wooden plank connecting the other two,

     [பக்கம்+சட்டம்]

பக்கச்சித்திரை

பக்கச்சித்திரை pakkaccittirai, பெ. (n.)

   வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரும் நாண்மி, அறுமி, எண்மி, தொன்மி, பிறை பன்னிரண்டாம். பதினான்காம் நாள்கள்; the fourth, sixth, eighth, ninth, twelfth and fourteenth fifty in {cukkila-pałcam and KiruSṇapalam}

     “அளவுறு நான் கொன்பதாறெட்டீராறீரேழான பக்கம்-விழைவுறு தீப்பக்கச் சித்திரை”(விதான. பஞ்சாங்,1.);.

     [பக்கம் + சித்திரை]

பக்கச்சுருள்

பக்கச்சுருள் pakkaccuruḷ, பெ. (n.)

   1. மணமகள்வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படும் அன்புப் பரிசு; additional presents made to a bridegroom by the bride’s party;

   2. திருமணத்தில் மணமகனின் உற்றார்க்குச் செய்யும் அன்புப் பரிசு; presents made to bridegroom’s relatives at a marriage.

     [பக்கம் + சுருள்]

பக்கச்சுவர்

 பக்கச்சுவர் pakkaccuvar, பெ. (n.)

   கட்டடத்தின் இரண்டு பக்கங்களிலும் எழுப்பப்படும் சுவர் (இ.வ.);; side-wall of a building.

     [பக்கம் + சுவர்]

பக்கச்சொல்

பக்கச்சொல் pakkaccol, பெ. (n.)

   1. பக்கத்திலிருப்போர் சொல்லும் சொல்; words of neighbours.

     “பக்கச் சொல் பதினாயிரம்”(கொ. வ.);

   2. பரிந்துரை நுதலிய துணைச் சொல் (வின்.);; recommendation, word in one’s favour.

   3. தகுதி பற்றியும் வழக்குப் பற்றியும் வழங்கும் சொற்கள் (தொல். சொல். 17, உரை);; expressions used euphemistically or sanctioned by usage.

   4. குறியாகக் கருதப்படுவதும் எதிர்பாராது பக்கத்திலிருந்து கேட்கப்படுவதுமான சொல் (இ. வ.);; words heard chance- wise and believed to forebode good or evil.

     [பக்கம் + சொல்]

பக்கஞ்செய்-தல்

பக்கஞ்செய்-தல்   4. செ. கு. வி (v.i.)    ஒளிவிடுதல்; to emit lustre, as a gem.

     “முத்தாமணி ரத்னங்கள்… பக்கஞ் செய்து தோன்றுகையாலே”(திவ். திருநெடுந் 21, பக்.175.);

     [பகல் → பக்கல் → பக்கல் செய்தல் → பக்கஞ்செய்தல்]

பக்கடு-த்தல்

பக்கடு-த்தல்   3. செ. கு. வி. (v.i)    நொறுங்குதல்; to be crushed.

     “பக்கடுத்தபின் பாடியுய்ந்தா னன்றே”(தேவா. 785, 11.);.

     [பகு → பக்கு + அடு-,]

பக்கணம்

பக்கணம்1 pakkaṇam, (n.)    1. வேடர் குடியிருப்பு (திவா.); quarters of {védar} caste;

   2. ஊர் (சூடா.);; town, village;

   3. அயல்நாட்டுப் பண்டம் விற்குமிடம் (யாழ்.அக.);; place where foreign goods are sold.

     [பாக்கம் → பாக்கணம் → பக்கணம்]

 பக்கணம்2 pakkaṇam, பெ. (n.)

   சிற்றுண்டி; comestibles, eatables.

     “விமலேச பக்கணந்தரவேண்டு மென்றிரந்தனன்”(விநாயகபு. 80, 572);

     [பகு → பக்கு + ஆணம்]

     [பக்காணம் → பக்கணம்]

பக்கதன்மம்

பக்கதன்மம் pakkataṉmam, பெ. (n.)

   துணிபொருட்கு இடனாயுள்ள பக்கத்தின் தன்மை;(மணிமே. 29,71.);;     [பக்கம் + தன்மம்]

பக்கதி

பக்கதி pakkati, பெ. (n.)

   1. சிறகினடி; the root of a bird’s wing.

   2. முழுநிலாநாளின் அடுத்த நாள்; the first tidi of a lunar fortnight.

ஒருகா. [பக்கல் → பக்கதி]

பக்கத்தம்

பக்கத்தம் pakkattam, பெ.( n.)

   1. குட்டுதல்; dealing a blow with the fist or knukle cuffing on the head

   2. மார்பில் குட்டுதலாகிய காமச்செய்கை; a gentletas on the breast- a sexual play act for increasing the passion. (சா.அக.);

பக்கத்தார்

பக்கத்தார் pakkattār, பெ. (n.)

   1. அடுத்தவர்; neighbours.

     “பக்கத்தார் யாரையு மையுறுதல்”(நீதிநெறி. 35.);

     “பலநாளும் பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்.”(நாலடி. 214);

   2. நாட்டுப்புறத்தார் (கொ.வ.);; countrymen.

   3. கட்சியார்; partisans.

   4. அயலார்; strangers.

     ‘பக்கத்தாரைக் கூப்பிடாதே’.

     [பக்கம் → பக்கத்தார்]

பக்கத்துக் குத்துக் கால்

 பக்கத்துக் குத்துக் கால் kāl, பெ. (n.)

   முகட்டுக் கையைத் தாங்குவதற்கு உத்தரத்தின்மேல் நிறுத்துங்கால் (சென்னை. வழ.);; queen-post.

     [பக்கம் + அத்து + குத்து + கால்]

அத்து = சாரியை.

பக்கத்துக்கால்

 பக்கத்துக்கால் pakkattukkāl, பெ. (n.)

பக்கத்துணை பார்க்க; see {pakka-t-tunai.}

     ‘அவனுக்குப் பக்கத்துக்கால் அதிகம் உண்டு’.

     [பக்கம் + அத்து + கால்]

அத்து = சாரியை

பக்கத்துக்கிளி

 பக்கத்துக்கிளி pakkattukkiḷi, பெ. (n.)

   கிளித்தட்டு விளையாட்டில் தட்டுக்குள்ளே புகுபவன்(வின்.);; the player who passes through the squares in the game of {kill-ttațţu.}

     [பக்கம் + அத்து + கிளி]

பக்கத்துணை

 பக்கத்துணை pakkattuṇai, பெ. (n.)

   பக்கவுதவி (கொ.வ.);; help, support.

     [பக்கம் + துணை]

பக்கத்துணைவி

 பக்கத்துணைவி pakkattuṇaivi, பெ. (n.)

   நோயாளிக்கு அணுக்கத் தொண்டராய் இருக்கும் பெண்மகள்; nurse a female attendant in a hospital. (சா.அக.);

     [பக்கம் + துணைவி]

பக்கத்துமீட்சி

பக்கத்துமீட்சி pakkattumīṭci, பெ. (n.)

   யாண்டுத் தீயில்லை ஆண்டுப் புகையுமில்லை என்பது போல் துணிபொருளேதுவின் மறுதலையுரை (மணிமே. 29. 67.);; negative concomitance between the major and the minor terms.

     [பக்கம் + அத்து + மீட்சி]

அத்து = சாரியை.

பக்கத்துவாட்டம்

 பக்கத்துவாட்டம் pakkattuvāṭṭam, பெ. (n.)

   மழை நீர் போகும்படி தளத்தில் ஏற்படுஞ் சரிவு; side-slope. (இ. வ.);

     [பக்கத்து + வாட்டம்]

பக்கத்தெலும்பு

 பக்கத்தெலும்பு pakkattelumpu, பெ. (n.)

   விலாவெலும்பு(வின்.);; rib.

     [பக்கம் + அத்து + எலும்பு]

பக்கநாள்

 பக்கநாள் pakkanāḷ, பெ. (n.)

எதிர்நோக்கு நாண்மீன் பார்க்க; see {}

     [பக்கம் + நாள்]

பக்கநேத்திரம்

பக்கநேத்திரம் pakkanēttiram, பெ. (n.)

   இசிவு நோய் வகை (தஞ்.சர. iii. 194);; a kind of delirium.

     [பக்கம் + நேத்திரம்]

பக்கபலம்

பக்கபலம்1 pakkapalam, பெ. (n.)

   வலுவான ஆதரவு; tower of strength;

 support ma in stay of something

     “அப்பா இறந்தபிறகு குடும்பத்திற்கு உன் மாமாதான் பக்கபலமாக இருந்தார்”(உ.வ);

     ‘பாட்டரங்கில் கின்னரமும் மதங்கமும் (மிருதங்கம்); பாட்டுக்கு நல்ல பக்கபலமாக அமைந்தன’. (உ.வ.);

     [பக்கம் + பலம்]

 பக்கபலம்2 pakkapalam, பெ. (n.)

   உதவி (கொ.வ);; help.

     [பக்கம் + பலம்]

பக்கபாதம்

 பக்கபாதம் pakkapātam, பெ. (n.)

   ஒருதலைப் பக்கம் (இலக்.அக);; partiality.

     [பக்கம் + பாதம்]

பக்கப்பகந்திரம்

 பக்கப்பகந்திரம் pakkappakantiram, பெ. (n.)

   ஆண்குறியில் இலிங்கப்பக்கத்தில் வரும் புண் கட்டி; fistula on either side of the privities.

     [பக்கம் + பகந்திரம்]

பக்கப்படு-தல்

பக்கப்படு-தல் pakkappaṭutal, செ. கு. வி. (v.i.)

   ஒருதலையாயிருத்தல்; to be partial

     “பக்கம் படாமை”(சிறுபஞ் 77.);

     [பக்கம் + படு-, ல்]

பக்கப்படுவன்

 பக்கப்படுவன் pakkappaṭuvaṉ, பெ. (n.)

   கண்கடுத்து சிவந்து வலித்து, வெள்விழியில், அழிந்த புண்போல் குத்தலுண்டாகி, உடனே முளையைப் போல படுவன் வெளியில் தள்ளிச் சீழ்பிடித்து உடைந்து, நீரொழுகித் துன்புறுத்தும் கண்ணோய் வகை; an eye disease marked by irritation, inflammation with pin prick pain on the white of the eye, due to ulcerous growth of flesh followed by supuration and Purulant discharge. (சா.அக);

     [பக்கம் + படுவன்]

பக்கப்பத்தி

 பக்கப்பத்தி pakkappatti, பெ. (n.)

   முதன்மைக்கட்டடத்தைச் சாரவைத்துக் கட்டப்படும் தாழ்வாரம்; pent – house

     [பக்கம் + பத்தி]

பக்கப்பலகை

 பக்கப்பலகை pakkappalakai, பெ. (n.)

   பக்கங்களிற் சேர்க்கும் பலகை (இ. வ);; side- plank.

     [பக்கம் + பலகை]

பக்கப்பழு-த்தல்

பக்கப்பழு-த்தல் pakkappaḻuttal,    4. செ.கு.வி (v.i.)

   மிக முதிர்தல்; to become very ripe.

     “பக்கப் பழுத்த கிழவன் முன்னே வெட்க மென்னடி”(வள்ளி, கதை. Ms);

     [பாங்கு-பாக்கு-பாக்கம்-பக்கம்(செம்மையுறல், நிறைவுறுதல், முதிர்தல்]

     [பக்கம் + பழு-,]

பக்கப்பாட்டு

 பக்கப்பாட்டு pakkappāṭṭu, பெ.( n.)    துணைப்பாட்டு (இக்.வ.); supporting chorus or song sung by accompanists :

     [பக்கம் + பாட்டு]

பக்கப்பாளை

 பக்கப்பாளை pakkappāḷai, பெ. (n.)

   பெரியபாளையைச் சேர்ந்திருக்குஞ் சிறுபாளை (இ. வ);; tuberculus sinus axilla;

     [பக்கம் + பாளை]

     [P]

பக்கப்பிடிப்பு

 பக்கப்பிடிப்பு pakkappiṭippu, பெ. (n.)

   உடம்பின் ஒரு பகுதியிற் காணும் நரம்புப் பிடிப்பு; a spasam occuring on one side of the body.

     [பக்கம் + பிடிப்பு]

பக்கப்பிறந்தநாள்

 பக்கப்பிறந்தநாள் pakkappiṟantanāḷ, பெ. (n.)

   பிறந்த மாதமல்லாத மாதங்களில் வரும் பிறந்த நாள்; the day of ones natal star occuring in a month other than the month in which one was born.

     [பக்கம் + பிறந்தநாள்]

பக்கப்பிளவை

 பக்கப்பிளவை pakkappiḷavai, பெ. (n.)

   நீரிழிவு நோயினால் அரத்தம் கெட்டுப் பிடரி, முதுகு பிட்டம் இவற்றின் ஒரு பக்கத்திற் காணும் கட்டி; corbuncle, generally occurs on one side of nape of the neck, the back and buttocks.

     [பக்கம் + பிளவை]

பக்கப்பிளாச்சு

 பக்கப்பிளாச்சு pakkappiḷāccu, பெ.(n.)

   கட்டைவண்டியில் ஒட்டுபவர் அமர்வதற்காகப் பொருத்தப்படும் சட்டம்; wooden piece fixed in a cart to enable the cart driver to sit.

     [பக்கம்+பிளாச்சு]

     [P]

பக்கப்பூ

பக்கப்பூ pakkappū, பெ. (n.)

   ஒப்பனைப்பூ, (குறள். 1316 மணக்);; decorating flower.

     [பக்கம் + பூ]

பக்கப்போலி

 பக்கப்போலி pakkappōli, பெ. (n.)

   துணி பொருட்கிடனாதலாகிய பக்கலக்கணத்திற் குறைபாடுடைத்தாயும் ஒருபுடையொத்துப் பக்கம் போலத்தோன்றுவது;   அது துணி பொருட்கு இடனாகாததும், துணியும் பொருட்கு ஒருமருங்கிடனாகாததும், துணி பொருட்கிடனாவதும், துணிந்த பொருட்கு ஒருமருங்கிடனாவதும் என நான்கு வகைப்படும்; fallacious minor term.

     [பக்கம் + போலி]

பக்கமிடு-தல்

பக்கமிடு-தல் pakkamiṭutal,    20. செ.கு.வி. (v.i.)

   மலங்கழித்தல்; to ease, (இ.வ.);;

     [பக்கம் + இடு-,]

பக்கமூலம்

பக்கமூலம் pakkamūlam, பெ. (n.)

   1. கமுக் கட்டு; armpit.

   2. சிறகினடி; root of a bird’s wing.

     [பக்கம் + மூலம்]

பக்கம்

பக்கம்1 pakkam, பெ. (n.)

   1. சாரி, மருங்கு; side,

     “பக்கநோக்கி நிற்கும்”(திவ், திருவாய். 5,5,5);

   2. விலாப்புறம்; side of the body extending from the shoulder to the hip.

   3. அருகு (சூடா);; neighbourhood, nearness.

   4. இடம்; place

     “ஊழையு முப்பக்கங் காண்பர்”(குறள்,620.);

   5. நாடு; country, region.

   6. வீடு (யாழ். அக.);; house

   7. சிறகு; wing feather

     “இசைபடு பக்க மிருபாலுங் கோலி”(பரிபா. 21,31.);

     “நின் பக்கமாதியொப்பில் சிரங்கமெல்லாம்”(சேதுபு, காலோடை,29);,

   8. அம்பிறகு (யாழ்.அக);; wing of the arrow.

   9. வால் (யாழ்.அக);; tail.

   10. நட்பு; (சூடா);

 affection, friendship.

   11. அன்பு (யாழ்.அக);; love,kindness.

   12. சுற்றம்; relation

     “பக்கஞ்சூழ வடமீன் காட்டி”(கல்லா. 18);

   13. தலைமுறை (யாழ்.அக);; family

   14. சேனை; army;

     “தாவரும் பக்கமெண்ணிரு கோடியின் தலைவன்”(கம்பரா. இலங்கைக் கேள்வி. 40.);

   15. அரசயானை (யாழ். அக);; royal elephant

   16. பிறை நாள் (திவா.);; lunar day பக்கம்

   17. பதினைந்து நாள் கொண்ட காலம்; lunar fortnight.

     “பகலிராப்பக்க மேதிங்கள்”(காஞ்சிப்பு. காயாரோகண. உ.);

     “முன்பக்கமி சையிற்பாலும் பின்பக்கமாவினறுங் கோமயரசமுமாகாரங் கொண்டிடலுமாம்”(சூத. வான. 8);

   18. கூறு; portion, section

     “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்”(தொல். பொ. 75);:

   19. பொத்தகத்தின் பக்கம்; page.

   20. நூல்; treatise

     “வாயினுங் கையினும் வகுத்த பக்கமொடு”(தொல். பொ. 41.);

   21. கோட்பாடு; theory, opinion.

   22. துணி பொருளுள்ள இடம்;     “பக்கந் துணிபொருளுக் கிடமாம்”(சி.சி.அளவை. 9.);

   23. அனுமானத்தின் உறுப்பினுள் மலை நெருப்புடைத்து என்றது போன்ற உறுதியுரை (மணிமே. 29,59.);;   24. மறுதலைப்பொருள் பார்க்க; (யாழ்.அக);; see {maruthalai-p-porul} necessary assumption.

   25. தன்மை; state, quality

     “வாலிதாம் பக்கமி ருந்தைக்கிருந் தன்று”(நாலடி.285.);

   26. கையணி (யாழ். அக);; ornament for the hand.

   27. நரை (யாழ்.அக);; greyness of the hair.

மறுவ : மாடு, சிறை, உழி, மருங்கு, ஞாங்கர், முன், பால், புடை, பாங்கர், பாரிசம் புறம், அயல்.

     [பக்கு → பக்கம்]

வ. மொ. வ பக். 25.

   அக்கம்பக்கம், பக்கக்கன்று, பக்ககுடுமி, பக்கச்சுவர், பக்கச்சொல், பக்கச்சூலை, பக்கத்துணை, பக்கத்து வீடு, பக்கப்பலகை, பக்கப்பாட்டு, பக்கப்பாளை, பக்கமேளம், பக்கவடம், பக்கவதி, பக்கவளை, பக்கவாட்டு, பக்க வெட்டு, பக்கவேர் முதலிய கூட்டுச் சொற்கள் தொன்றுதொட்டு உலக வழக்கில் வழங்கிவருகின்றன : பக்கம்-செல்வி 75-527;   79 – 80

பக்கம் என்பதன் விளக்கம்

பக்கம், பாகம் என்னும் இரண்டும் பகு என்னும் ஒரே முதனிலையினின்று தோன்றி யிருக்கவும் வடவர் அவற்றுள் முன்னதை ஆரிய இயல்பு வல்லொலிப் பகரத்திலும்,

பின்னதைக் கனைப்பொலிப்பகரத்திலும் (bh);, தொடங்கியிருக்கின்றனர். அதற்கேற்ப பக்கம்

என்பதற்குப் பக்ஷ் என்பதையும், பகவன், பங்கு, பாகம் என்பவற்றிற்குப் பஜ் (bhaj); என்பதையும், மூலமாகக் கொண்டிருக்கின்றனர். இங்ஙணம் ஒரு மூலச் சொல்லையே வெவ்வேறு மூலத்தினவாகக் காட்டுவது வடவர் வழக்கம்.

பக்ஷ் என்பது பக்கு என்பதன் திரிபு. தாதுபாட என்னும் நூல் அதற்குப் பற்று, கொள், எடு என்றே பொருள் கூறும். ஆயின், வில்சன் அகரமுதலி பக்கம் (பக்ஷ); என்னும் சொற்கேற்பப் பக்கஞ் சார்தல் என்று பொருளுரைக்கும்.

பக்கம் என்னும் சொற்குத் தமிழிலும் பகுதி, கூறு, நூற்பகுதி, நூல், புறம் (side);, ஏட்டுப்புறம் (page);, அருகு, அண்மை, இடம், வீடு, நாடு, விலாப்புறம், சிறகு, இறகு, அம்பிறகு, கை, கையணி, நட்பு, அன்பு, சுற்றம், மரபு (வமிசம்);, சேனைப் பகுதி, சேனை, பதினைந்து பிறைநாட்காலம், பிறைநாள், மேற்கோள், (Proposition); துணிபொருட் கூற்று, தன்மை எனப் பல பொருள்களுண்டு.

கை, சிறகு என்னும் சொற்கள் பக்கத்தைக் குறிப்பது போன்றே பக்கம் என்னும் சொல்லும் கையையும் சிறகையும் குறிக்கும். வடவர் சிறகுப் பொருளினின்று பறவைப் பொருளை விரித்திருக்கின்றனர் எனக் கருதலாம். (வ.மொ.வ.பக்.30);

     [P]

 பக்கம்2 pakkam, பெ. (n.)

   ஒளி; lustre, brilliance, as of gems.

     “பக்கஞ்செய்து” (திவ்.திருநெடுந், 21. பக் 175);

     [பகல் → பக்கல் → பக்கம்]

 பக்கம்3 pakkam, பெ. (n.)

   ஒன்றிற்கு வடிவமைப்பைத் தருகிற பகுதி அல்லது பரப்பு; side (which gives dimension);

     “சதுரத்துக்கு நான்கு பக்கங்களும் சமம்”

     “வீட்டின் பக்கச் சுவர்களுக்கு மட்டும் இன்னும் வெள்ளையடிக்க வேண்டும்.”

   2. சுட்டப்படும் திசையில் அமைந்திருக்கும் பகுதி; side (with reference to a centre);

     “வீட்டின் பின்பக்கம் மழையில் இடிந்துவிட்டது”

     “ஊர்திகள் சாலையில் இடது பக்கமாகச் செல்ல வேண்டும்”

     “ஆறு ஊரின் கிழக்குப் பக்கம்தான் ஒடுகிறது”

     “பகலில் பக்கம் பார்த்து பேசு, இரவில் அதுவும் பேசாதே”(பழ.);

   3. குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்திருக்கும் பகுதி; location by the side of the sth.

     “மலைப்பக்கம் அமைந்திருக்கும் வீடு”

     “ஆற்றுப் பக்கம் காலார நடந்து விட்டு வருவோமா ?”

   4. (ஒருவரை அல்லது ஒன்றை); நெருங்கி இருக்கும் இடம்; nearness.

     “அம்மாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான்”

     “கதவுப் பக்கமாக நின்று கொண்டிருந்தான்”

   5. தரப்பு;சார்பு; a party or group to a quarrel etc.

     “நான் யார் பக்கமும் பேச இல்லை”

     “வல்லரசு நாடுகள் மற்ற நாடுகளைத் தம் பக்கம் இழுக்க முயல்கின்றன.”

   6. ஒரு தாள்;தாளின் ஒருபுறம்; page;one side of a sheet.

     “செய்தித் தாளின் நடுப்பக்கத்தை மட்டும் காணவில்லையே.”

     “அந்தப் பாட்டு முப்பதாவது பக்கத்தில் உள்ளது”.

 பக்கம்4 pakkam, பெ. (n.)

   உணவு (யாழ்.அக);; food.

     [பாகம் → பகம் → பக்கம்]

பக்கம்வை-த்தல்

பக்கம்வை-த்தல் pakkamvaittal,    4. செ.கு.வி. (v.i.)

   பக்கத்தில் மூடுவெடித்துக் கிளையிடுதல் (நாஞ்.);; to put forth shoots from the stem

     [பக்கம் + வை]

பக்கரசம்

பக்கரசம் pakkaracam, பெ. (n.)

   1. தேன்; honey.

   2. தூய்மையான சாறு; pure fresh juice.

   3. தூய்மையாக்கப்பட்ட இதளியம்; purified mercury (சா.அக.);;

     [பக்கம் + ரசம்]

பக்கரிஎலும்பு

 பக்கரிஎலும்பு pakkarielumbu, பெ.(n.)

   விலா எலும்பு; rib.

மறுவ பக்க எலும்பு

     [பக்கம்-பக்கல்-பக்கலி-பக்கரி+எலும்பு]

பக்கரை

பக்கரை pakkarai, பெ. (n.)

   1. அங்கவடி;   அடிக்கொளுவி; stirrup.

     “கலணை விசித்துப் பக்கரையிட்டுப் புரவி செலுத்தி”(திருப்பு.405.);

   2. சேணம்; saddle.

     “பக்கரை பதைப்ப யாத்து”(சூளா.கல்யா.14.);

   3. பை; bag, pocket,

   4. பக்கறை2, 1, பார்க்க; See {pakkarai,2} 1.

தெ. பக்கர. க. பக்கரெ.

பக்கர்

பக்கர் pakkar, பெ. (n.)

   இனத்தார்; relation, kindred.

     [பக்கம்-பக்கர்.செல்வி. திச. 79. ப. 189]

     [பக்கல் → பக்கர்]

பக்கறை

பக்கறை1 pakkaṟai, பெ. (n.)

   பல்லில் கறுப்புக் கறை ஏற்றுகை (வின்.);; artificial blackening of the teeth.

     [பல்கறை = பற்கறை-பக்கறை]

ஒ.நோ. நல் + கீரன் = நக்கீரன்

 பக்கறை2 pakkaṟai, பெ. (n.)

   1. துணியுறை; canvas covering;

     “ஏந்து வெள்ளைப் பக்கறையிடாலினான்”(விறலிவிடு);

   2. பக்கரை பார்க்க; see pakkarai.

   3. குழப்பம் (யாழ்.அக);; confusion

     [பகு-பக்கல்-பக்கர்-பக்கறை]

     [பிளவுபடல், குழப்பமடைதல்]

பக்கல்

பக்கல் pakkal, பெ. (n.)

   1. நாள்; the day.

   2. மாதநாள்; particular day of a month.

   3. பக்கம்; side,

     “என்பக்கலுண்டாகில்”(பெரியபு : இயற்பகை. 7.);

   4. இனம்; class.

     [பக்கு → பக்கம் → பக்கல் வே. க.]

பக்கவடம்

 பக்கவடம் pakkavaṭam, பெ. (n.)

   நிலையின் நெடுக்குமரம் (இ.வ.);; longitudinal posts of the frame of a door or window

     [பக்கம் + வடம்]

பக்கவலி

 பக்கவலி pakkavali, பெ. (n.)

   விலாப்பக்கத்தில் வலியை உண்டாக்கும் ஒரு வகை நரம்பு நோய்; intercostal neuralgia.

     [பக்கம் + வலி]

பக்கவளை

பக்கவளை pakkavaḷai, பெ. (n.)

   1. முகட்டு வளைக்குக்கீழே இடப்படும் சிறுமரம்; purin

   2. பொண்டான் (எலிவளை); (வின்.);; a rat hole.

     [பக்கம் + வளை]

பக்கவழி

பக்கவழி pakkavaḻi, பெ. (n.)

   1. சுற்றுவழி; indirect way, round about way.

   2. குறுக்குவழி (இ.வ.);; short cut.

     [பக்கம் + வழி]

பக்கவாட்டு

பக்கவாட்டு pakkavāṭṭu, பெ. (n.)

   1. பக்கங்களிற் சார்ந்துள்ளது; that which is side long.

   2. நேர்தொடர்பற்றது; that which is subsidiary or beside the main point at issue.

     ‘பெட்டியின் பக்கவாட்டுப்பகுதியில் கீறல் விழுந்துள்ளது’

     ‘தொடர்வண்டி, தடம்புரண்டு பக்கவாட்டில் சரிந்துள்ளது’. (உ.வ.);;

     [பக்கம் + பக்கவாட்டு]

பக்கவாட்டுத்தோற்றம்

 பக்கவாட்டுத்தோற்றம் pakkavāṭṭuttōṟṟam, பெ. (n.)

   ஒன்றின் அல்லது ஒருவரின் இடது அல்லது வலது பக்கத்தோற்றம்; profile.

     ‘பக்கவாட்டுத் தோற்றத்தில் பார்த்தால் நீ என் தம்பியைப் போல இருக்கிறாய்’

     ‘பெட்டியின் பக்கவாட்டுப் பகுதியில் கீறல் விழுந்துள்ளது’

     ‘தொடர்வண்டி, தடம்புரண்டு பக்கவாட்டில் சரிந்துள்ளது’ (உ.வ.);;

மறுவ : பக்கவெட்டுத்தோற்றம்

     [பக்கவாட்டு + தோற்றம்]

     [பக்கம் → பக்கவாட்டு + தோற்றம்]

பக்கவாதம்

பக்கவாதம்1 pakkavātam, பெ. (n.)

   உடலின் மூளையில் அரத்தக் கசிவு அல்லது உறைவுகாரணமாக ஒருபக்கத்தை உணர்ச்சியறச் செய்யும் நோய்வகை (பைஷஜ – 302);; partiality; a attack on one side of the body,

     ‘பக்கவாத நோய் உள்ளவர்கள் உடனடியாக முறையான மருத்துவம் மேற்கொள்ளவேண்டும்.’ (உ.வ.);;

     [பக்கம் + வாதம்]

 பக்கவாதம்2 pakkavātam, பெ. (n.)

   ஒருதலைக் கண்ணோட்டம்; adopting or favouring one side,

     “யான் பக்கவாதம் சொல்கிலேன்”(அருட்பா,vi, உய்வகை கூறல்,4);.

     [பக்கம் + வாதம்]

பக்கவாத்தியம்

 பக்கவாத்தியம் pakkavāttiyam, பெ. (n.)

   வாய்ப்பாட்டுக்குத் துணையான இசைக் கருவிகள் (கொ.வ.);; instrumental accompaniments, as in a musical consert.

     ‘பாடகருக்கு இன்று சரியான பக்க வாத்தியம் அமையவில்லை’ (உ.வ.);;

     ‘வீணை இசையரங்கில் பக்கவாத்தியமாக மிருதங்கம் மட்டும்போதுமா?’ (உ.வ.);;

     [பக்கம் + வாச்சியம் → வாத்தியம்]

பக்கவாத்தியர்

பக்கவாத்தியர் pakkavāttiyar, பெ.( n.)

   வாய்ப்பாட்டுக்குத் துணையாக நிற்கும் இசைக்கருவியாளர் (S.I.I.ii. 275.);; those who play upon musical instrument in accompaniment to music.

     [பக்கம் + வாச்சியம் → வாத்தியம் → வாத்தியர்]

பக்கவாயு

பக்கவாயு pakkavāyu, பெ. (n.)

   1. கல்லீரலின் நோய் வகை; cirrhosis of liver.

   2. அன்டவாயு (வின்.);; sarcoce with swelling in the side,

   3. பக்கவாதம்1 பார்க்க; (இ.வ.); see {pakka-Vådam}

     [பக்கம் + வாயு]

பக்கவாரி

பக்கவாரி1 pakkavāri, பெ. (n.)

   வெந்நீர்; hot Water.

     [வெக்கை + வரி → பக்கவாரி]

 பக்கவாரி2 pakkavāri, பெ. (n.)

   ஒருவகைக் கொள்ளை நோய்; a kind of epidemic extending to the neighbouring parts. (சா.அக.);;

பக்கம் = ஒருபகுதி. ஒருபகுதியில் வாழும் மக்கள் பெரும்பான்மையரை அழிவுறுத்தும் நோய்.

     [பக்கம் + வாரி]

பக்கவிசிவு

பக்கவிசிவு pakkavicivu, பெ. (n.)

   1. பக்கத்து விலா புடைத்துக் காணும்படியுண்டாகும் ஒருவகை இசிவு; any convulsion or spasm marked by alternating contraction and relaxation extending to the intercoastal region,

   2. இசிவு நோயால் உடம்பு ஒரு பக்கமாக வளைத்துக் கொள்ளுதல்; atonic bending of the body to one side-pleurotonous.

     [பக்கம் + இசிவு]

பக்கவிலா

 பக்கவிலா pakkavilā, பெ. (n.)

   விலாவெலும்பின் கீழாகவுள்ள, வயிற்றின் கீழாகவுள்ள, வயிற்றின் இருபக்கத்துப் படைப்பு; the upper leteral region of the abdomen next below the lowest rib (சா.அக.);;

     [பக்கம் + விலா]

பக்கவிளைவு

 பக்கவிளைவு pakkaviḷaivu, பெ. (n.)

   மருத்துவமும் மருந்தும் நோய் தீர்க்கும்போது ஏற்படுத்தும் பிற எதிர்மறை விளைவு; side effect (of a treatment, medicine.);

     [பக்கம் + விளைவு]

பக்கவீக்கம்

 பக்கவீக்கம் pakkavīkkam, பெ. (n.)

   வயிற்றுப்பிசம், பெருவயிறு முதலிய நோய்களில் காணப்படும் விலாப்பக்கத்து வீக்கம்; swelling of the hypochondric region observed in case of tympanitis abdominal dropsy. (சா.அக.);;

மறுவ : பக்கவீச்சு

     [பக்கம் + விக்கம்]

பக்கவெட்டி

 பக்கவெட்டி pakkaveṭṭi, பெ. (n.)

பக்கவெட்டு. பார்க்க; (இ.வ.); see {pakkaveffu.}

     [பக்கம் + வெட்டி]

பக்கவெட்டு

பக்கவெட்டு pakkaveṭṭu, பெ. (n.)

   1. அறுத்த மரத்தின் பக்கவாட்டுத் துண்டு (இ.வ.);; the outside rough pieces left in sawing a log into planks.

   2. பக்கவாட்டு (இ.வ.); பார்க்க; See {pakka-wall}

   3. சாடையாய்க் குத்திப் பேசுகை (கொ.வ.);; indirect hit.

     [பக்கம் + வெட்டு]

பக்கவெட்டுத்தொற்றம்

 பக்கவெட்டுத்தொற்றம் pakkaveṭṭuttoṟṟam, பெ. (n.)

   ஒரு பொருளின் உட்பகுதியைக் காட்டக் கூடிய பக்கவாட்டில் வெட்டியது போன்ற காட்சி; side view.

     “நெஞ்சாங்குலையின் பக்கவெட்டுத் தோற்றத்தை வரைக”

     [பக்கவெட்டு + தோற்றம்]

     [P]

பக்கவெட்டுப் போடு-தல்

பக்கவெட்டுப் போடு-தல் pōṭutal,    19. செ. குன்றாவி.(v.t)

   கூச்சங் காட்டுதல்; to tickle one in the side.

     [பக்கவெட்டு + போடு-,]

பக்கவேர்

பக்கவேர்  pakkavēr, பெ. (n.)

   பக்கவாட்டிற் செல்லும் வேர்; secondary root of a tree. (ஈடு,2,6,6);

   2. பொருள் வேறுபடுத்தும் சொல்லின் வேர்ப்பகுதி; root of the word that which is raid another meaning.

வேர் ஆணிவேர், பக்கவேர், கிளைவேர், சிறுகிளைவேர் எனப் பலதிறப்படும்.

   குல் என்பது ஓர் ஆணிவேர். அதனின்று குலம், குலவு, குலாவு, குலை முதலிய சொற்கள் பிறக்கும்;இவை ஒருவகைப் பொருட்கூட்டம் பற்றியன.

கல் என்பது குல் என்பதினின்று திரிந்த பக்கவேர். வேர் என்னும் உவமையாகு பெயர் பற்றி வேர்ச் சொல்லை வேறாக முத்திறப்படுத்திக் கூறினும் மூலமும் திரிவும் என்னும் முறையில், வேர், அடி,

   முதனிலை என்னும் வகையீடும் ஆணிவேர் பக்கவேர்;கிளைவேர் என்னும் வகையீடும் ஒன்றேயெனக் கொள்க, (வே.க.முகவுரை);

பக்காசயம்

 பக்காசயம் pakkācayam, பெ. (n.)

   இரைக்குடர்; a receptade for receiving food- stomach, belly (சா.அக.);.

     [பக்கம் + ஆசயம்]

பக்கான்

 பக்கான் pakkāṉ, பெ. (n.)

   வானம்பாடிப் பறவை (யாழ்.அக);; sherphed koel.

     [பக்கு → பக்கான். பக்கு = இறகு, இறகுடைய பறவை. பக்கம் → பக்கு என்பது பக்கச்சிறகு. பக்கச் சிறகையுடைய பறவைகள் பொது வாகப் ‘பக்கி’ என்றும் அழைக்கப்பட்டன.]

பக்கான்னம்

 பக்கான்னம் pakkāṉṉam, பெ. (n.)

   சமைக்கப்பட்ட சோறு (யாழ்.அக);; cooked food.

     [பக்குவம் + அன்னம் → பக்கான்னம். பக்குவம். செய்யப்பட்ட உணவு பக்கான்னம் எனப்பட்டது. பாங்குபடச் செய்தலும் பாகம்படச் செய்தலும் இப்பொருளையும் சுட்டும். ஒ.நோ. நளபாகம்]

பக்காயம்

 பக்காயம் pakkāyam, பெ. (n.)

   தொட்டி (இ.வ.);; tub.

     [ஒருகா. பற்றாயம் → பத்தாயம் → பக்காயம்]

பக்காளி

பக்காளி pakkāḷi, பெ. (n.)

   எருத்தின் மேல் நீரேற்றிக்கொணர்பவன்(வின்.);; one who carries water in a leather sack on a bullock.

   2. பக்கறை2 1 பார்க்க; see {pakkarai}.

     ‘சோற்றுப்பக்காளி’

     [பங்காளி → பக்காளி.]

பக்காளிமாடு

 பக்காளிமாடு pakkāḷimāṭu, பெ. (n.)

   படுக்காளிமாடு(வின்.);;பார்க்க; see {pagukkālimāgu}

     [படுக்காளி → பக்காளி + மாடு]

பக்கி

பக்கி pakki, பெ. (n.)

   1. சதுரக்கள்ளியில் தங்கும் ஒருவகைப் பறவை; bird

     “நிணம்பருக பக்கி யுவணங்கழுகு”(திருப்பு. 319.);

     “பாலுணும்பு புள்ளிப்பிமீன்பக்கி”(ஒழிவி. சத்திநி.14.);

   2. இவறன் (இ.வ);; miser,

     [பக்கு-பக்கி]

   பக்கு சிறகு. பக்கி-சிறகுடைய பறவை;பக்கான் பார்க்க; இச்சொல் வடமொழியில் ‘பட்சி’ எனத் திரிந்தது.

பக்கி வகைகள் :

   1. காட்டுப்பக்கி,

   2. நீண்டவால் பக்கி,

   3. சிறுபக்கி,

   4. புள்ளிப்பக்கி.

 பக்கி2 pakkittal,    11. செ. குன்றாவி (v.t.)

   உண்ணுதல் (திவா,);; to eat

     [புகு-புக்கித்தல்-பக்கித்தல்]

 பக்கி3 pakkittal,    11. செ. குன்றாவி (v.t)

   உண்ணுதல் (திவா.);; to eat

     [புகு-புக்கித்தல்-பக்கி-,]

 பக்கி4 pakki, பெ. (n.)

   ஒருவர் அல்லது இருவர் இவர்ந்து செல்லக்கூடிய பளுவில்லாத குதிரை வண்டி; buggy.

     “ஒயிலான பக்கி கோச்சு”(பிரதாப.விலா 9);

 பக்கி pakki, பெ.(n.)

   இருளர் குடியினரின் நீண்ட கதைப்பாடல்; a narrative song of the Irula tribes. –

     [ஒருகா. பறவை – பறக்கி-பக்கி]

பக்கிசை

பக்கிசை1 pakkicaittal, செ. கு. வி (v.i)

   ஒலி விட்டிசைத்தல்; to sound, break in, as in a hiatus.

     [பகு → பக்கு + இசை-,]

 பக்கிசை2 pakkicaittal, செ. குன்றாவி (v.t)

   வேறுபடுத்திக்கூறுதல்; to differentiate.

     “அதுவும் இதுவு மெனப் பக்கிசைத் தோதப்பட்ட”(சி.போ சிற்.12,4,பக். 24);.

     [பகு → பக்கு + இசை-,]

பக்கிடு

பக்கிடு1 pakkiṭutal, செ.கு.வி (v.i)

   1. வெடித்தல்; to part, crack, give way, split,

   2. வடுப்படுதல்; to form a scab.

   3. திடுக்கிடுதல்; to throb, as the heart through fear.

     [பகு → பக்கு + இடு-,]

 பக்கிடு2 pakkiṭutal, செ. கு. வி (v.i)

   ஆறிவரும் புண்களின் மேல் வடுவுண்டாதல்; to part, crack, giveway, split,

     [பக்கு → பக்கிடு-,]

பக்கிணி

பக்கிணி pakkiṇi, பெ. (n.)

   ஒர் இரவும் அதற்கு முன் பின்னுள்ள இரு பகலும்; a night with the two days enclosing it.

     “ஞாதியர்க்கும் பக்கிணிமேல்”(ஆசெளச. 15.);

     [பகல் → பக்கல் → பக்கனி → பக்கிணி]

பக்கித்தட்டான்

 பக்கித்தட்டான் pakkittaṭṭāṉ, பெ. (n.)

   தட்டாரப்பூச்சி; dragon fly.

     [பக்கி + தட்டான்]

பக்கிராசன்

 பக்கிராசன் pakkirācaṉ, பெ. (n.)

   பறவைகட்கு அரசனான கருடன்; garuda, as the lord of birds.

     [பக்கி + அரசன் → ராசன்]

பக்கிள்

 பக்கிள் pakkiḷ, பெ. (n.)

   கோட்டான் (இலங்.);; rock horned owl,

     ‘பக்கிள் அலறுவது தீநிமித்தம்’ (உ.வ.);

பக்கு

பக்கு1 pakkutal,    5. செ. கு. வி.(v.i.)

பகுத்தல்,t

 to break, to divide.

பகு-பகுத்தல்

     [பகு → பக்கு, வ.மொ.வ. பக். 25.]

 பக்கு2 pakkutal,    2. செ.குன்றாவி. (v.t.)

   1. பக்குவம் செய்தல், பாகம்படச்செய்தல் (பாங்கு படசெய்தல்);; to do perfeetly

   2. சமைத்தல்; to cook,

     [பகு → பக்கு]

 பக்கு3 pakku, பெ.( n.)

   1. பிளப்பு; fracture, break, crack,

   2, கவர்படுகை; double-dealing, duplicity,

     “தங் கள்ளத்தாற்பக்கான பரிசொழிந்து”(தேவா 17,3,);

   3. பை; bag

     “பக்கழித்துக்; கொண்டீயெனத்தரலும்”(கலித்; 65,14);

     “அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கிற் றோன்றும்”(ஐங்குறு,271);

   4. மரப்பட்டை(வின்.);; outer bark of a tree.

   5. புண்ணின் அசறு(வின்.);; scab of a sore.

   6. பல்லின் பற்று(வின்.);; tartar on the teeth.

   7. காய்ந்து போன மூக்குச்சளி(வின்.);; dried mucus of the nose.

   8. சோறு முதலியவற்றிலுண்டாகும் பொருக்கு(வின்.);; scum formed on a prepared dish

தெ. பக்கு.

     [பகு → பக்கு]

பக்குக்கட்டு-தல்

பக்குக்கட்டு-தல் pakkukkaṭṭutal,    20. செ.கு.வி. (v.i)

பக்கிடு2(வின்.); பார்க்க; see {pakkidu}

     [பக்கு + கட்டு-,]

பக்குடுக்கை நன்கணியார்

பக்குடுக்கை நன்கணியார் naṉkaṇiyār, பெ. (n.)

   கடைக் கழகக் காலத்துப் புலவர்;   புறநானூற்று 194 ஆம் பாடலின் ஆசிரியர்; a poet in sangam age and author of puram 194.

 பக்குடுக்கை நன்கணியார் pakkuḍukkainaṉkaṇiyār, பெ.(n.)

   கடைக்கழகக் காலப் புலவர்; a poet of sangam age.

     [பக்கு+உடுக்கை+நல்+கணியார்]

பக்குப்பக்கெனல்

பக்குப்பக்கெனல் pakkuppakkeṉal, பெ. (n.)

   1. அச்சக்குறிப்பு; onom expr. of throbbing rapidly, as the heart through fear.

     ‘பக்குப்பக்கென்று மனம் துடிக்கின்றது’.

   2. திடீரென்று எழும் ஒலிக்குறிப்பு; abrupt sensation or gesture,

   3. வெடிக்கச் சிரித்தற்குறிப்பு; bursting laughter.

   4. அடுத்தடுத் துண்டாம் ஒலிக்குறிப்பு; repeated thuds.

     ‘பக்குப்பக்கென்று இடித்தான்’

     [படக்கு → பக்கு. + பக்கு + எனல்]

பக்குவகாலம்

பக்குவகாலம் pakkuvakālam, பெ. (n.)

   1. தகுதியான காலம்; proper time.

   2. பெண் பூப்பெய்தும் காலம் (கொ.வ);; age of puberty.

     [பக்குவம் + காலம்]

பக்குவசாலி

பக்குவசாலி pakkuvacāli, பெ. (n.)

   1. தகுதியுள்ளவன்; competant person.

   2. ஆதன் பக்குவமானவன்; one ripe for salvation.

     [பக்குவம் + சாலி]

பக்குவஞ்சொல்(லு)-தல்

பக்குவஞ்சொல்(லு)-தல் tal,    8. செ.கு.வி. (v.i.)

   1. மன்னிப்புக்கேட்டல்; to tender apology.

   2. செய்வகை சொல்லுதல்; to give instructions concerning any work or business.

     [பக்குவம் + சொல்]

பக்குவன்

பக்குவன் pakkuvaṉ, பெ. (n.)

பக்குவி1, பார்க்க; See {pakkuv’}

     [பக்குவம் → பக்குவன்]

பக்குவப்படு-தல்

பக்குவப்படு-தல் pakkuvappaṭutal,    2. செ.கு.வி (v.i.)

   பக்குவமாதல்(வின்.);;பார்க்க; see {pakkuvam-à}.

     [பக்குவம் + படு]

பக்குவப்படுத்து-தல்

பக்குவப்படுத்து-தல் pakkuvappaṭuttutal,    20. செ. கு. வி (v.i.)

   பதப்படுத்துதல்; preserve

     “துன்பங்களால் துவண்டு போகாமல் மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்”;

     “மீனைப் பக்குவப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்”.

     [பக்குவம் + படுத்து-,]

பக்குவமா-தல்

பக்குவமா-தல் pakkuvamātal,    7. செ. கு. வி. (v.i.)

   1. தகுதியாதல்; to become fit, competant, suitable.

   2. பூப்படைதல் (கொ.வ.);; to attain pudberty, as a girl.

   3. ஆதன் பக்குவமடைதல்.

 to become mature or perfected, as the Soul.

     [பக்குவம் + ஆ-தல்]

பக்குவம்

பக்குவம் pakkuvam, பெ. (n.)

   1. குறிப்பிட்ட உணவுக்கே உரிய திண்ம அல்லது நீர்ம நிலையோ சுவையோ மாறிவிடாமல் இருக்கவேண்டிய அளவானதன்மை;     “சரியான பக்குவத்தில் இறக்காவிட்டால் பாகு இறுகிவிடும்”

     “திங்கூழில் எல்லாம் பக்குவாக இருக்கிறது”.

   2. நிலைத் திணைகளில் காய்த்தல், பூத்தல் முதலியவற்றுக்கான பருவம்; stage or season (for an event in the growth of a plant);

     “மாமரங்கள் காய்க்கும் பக்குவத்தில் இருக்கின்றன”;

     “பயிர் பூக்கும் பக்குவத்துக்கு வந்து விட்டது”

   3. ஒருவரின் நிலை அறிந்து செயல்படும் தன்மை;   சிக்கல் முதலியவற்றை சமாளிக்கத் தேவையான முதிர்ச்சிப் பாங்கு; proper manner : maturity.

     “அவர் சினமுடையவர்தான்; இருந்தாலும் பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்”.

     [பகு → பக்கு → பக்குவம்]

சமையலுக்குரிய பொருள்களைச் சரியான பகுப்பில் சேர்த்தும் கூட்டியும் சரியான வேக்காட்டில் அல்லது கொதிநிலையில், இறக்கிச் சுவைக்கத் தக்கதாய்ச் செய்தல் பக்குவம் எனப்பட்டது. பகு → பாகம் – பாகஞ்செய்தல் என்பதும் அப்பொருளதே. நுகர்ச்சிக்கு அல்லது பயன்பாட்டுக்கு உரிய சரியான நிலை பக்குவமாயிற்று.

பக்குவர்

பக்குவர் pakkuvar, பெ. (n.)

   1. கரும காண்டிகர், பத்திகாண்டிகர், ஞான காண்டிகர், என்று மூவகைப்படும் வேதமத வொழுக்கத்தவர்; persons devoted to {wiedic} practice, of three classes, viz., {karuma-kāņțikar, pattikaņțikar, riaņa kāņțikar} (வின்.);

   2. மருத்துவர் (யாழ்.அக.);; physicians.

     [பக்கு → பக்குவம் → பக்குவர்]

பக்குவாசயம்

பக்குவாசயம் pakkuvācayam, பெ. (n.)

   இரைப்பை; stomach;

     “பக்குவாசயத்தி னன்ன பானத்தை”(சிவதரு. சனன.7.);

     [பக்குவம் + ஆசயம்]

ஆசயம் → skt as Raya

பக்குவாத்துமா

 பக்குவாத்துமா pakkuvāttumā, பெ.( n.)

   வீடுபேறயடைதற்கு உரியவ-ன்-ள்; person fit for salvation.

மறுவ : பக்குவசாலி

     [பக்குவம் + skt {சிman} → ஆத்துமா]

பக்குவாளி

பக்குவாளி pakkuvāḷi, பெ. (n.)

   1. பக்குவி1 பார்க்க; see {pakkuv}.

   2. மருத்துவன்; physician

     [பக்குவம் + ஆளி]

பக்குவி

பக்குவி pakkuvi, பெ. (n.)

   1. தகுதியுடையவள்,

 competent woman.

   2. பூப்படைந்த பெண் (இ.வ.);; girl who has attained puberty.

     [பக்குவம் → பக்குவி]

பக்குவிடு-தல்

பக்குவிடு-தல் pakkuviṭutal,    7. செ. கு. வி. (v.i.)

   1. பிளத்தல்; to be split, cracked as the ground

     “தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும்”(குறள், 1068.);;

   2. தோலறுதல் (வின்.);; to break, as the skin from a blow of a rattan.

     [பக்கு + விடு,]

பக்கெனல்

பக்கெனல் pakkeṉal, பெ. (n.)

   1. சிரிப்பின் ஒலிக்குறிப்பு; bursting, as with sudden laughter;

   2. அச்சம், வியப்பு, முதலியவற்றின் குறிப்பு; throbbing through fear or surprise,

   3. வெடித்தற்குறிப்பு; splitting, cracking.

   4. விரைவுக் குறிப்பு; being sudden.

     [பக்கு + எனல்]

பக்கோடா

 பக்கோடா pakāṭā, பெ.(n.)

   கடலை மாவில் நீர் ஊற்றிப் பிசைந்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை முதலியவற்றைச் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு எடுக்கும் ஒரு வகைத் தின்பண்டம்; a kind of spicy savoury prepared from chickpea paste and fried in oil.

த.வ. முறுவடம்

     [U. {} → த. பக்கோடா]

பக்தன்

 பக்தன் paktaṉ, பெ.(n.)

   இறையுணர்வாளன், கடவுள் பற்று உள்ளவன்; pious; godly man.

த.வ. பத்தன்

     [Skt. bhakta → த. பக்தன்]

பக்தவத்சலன்

 பக்தவத்சலன் paktavatcalaṉ, பெ.(n.)

அடியவர்களுக்கு அன்பனான கடவுள் (உ.வ.);.

 God, as fond of His devotees.

த.வ. அடியார்க்கருளி

     [Skt. bhakta-vatsala → த. பக்தவத்சலன்]

பக்தாதாயம்

 பக்தாதாயம் paktātāyam, பெ.(n.)

   நெல் வருவாய்; revenue in paddy.

     [Skt. bhakta +{} → த. பக்தாதாயம்]

பக்தி

பக்தி pakti, பெ.(n.)

   1. கடவுள் குரு முதலியோரிடத்தில் காட்டும் அன்பு; piety;

 faith;

 devotion, as to a deity, guru, etc.

   2. வழிபாடு (வின்.);; service, worship.

த.வ. பத்திமை, இறையன்பு

     [த. பத்தி → Skt. bhakti → த. பக்தி]

பக்திச்சுவாலகர்

 பக்திச்சுவாலகர் pagticcuvālagar, பெ.(n.)

   இறைத் (தேவ); தூதர் வகையினர்; an order of angels.

பக்திநூல்

 பக்திநூல் paktinūl, பெ.(n.)

   கடவுளிடத் துண்டான அன்பு, போற்றல், இரக்கம் (தயை);, இறையுணர்வு, பத்தி, ஊழ்கம் (தியானம்); முதலியவற்றால் ஆதன் கரிசி(பாவத்தி);னின்று விடுதலைப் பெற்றுத் தூய (பரிசுத்த); நிலையில் வீடுபேறு (விதேக முத்தி); அடைவதைப் பற்றிக்கூறும் நூல் (சா.அக.);; book of science and Philosophy of piety that liberates the soul from sins and reveals the truths of perfection through devotion, prayer, piety, reverence and meditation.

த.வ.தெய்வப்பனுவல்

     [ த. பத்தி → Skt. bhakti → த. பக்தி]

பக்திமான்

 பக்திமான் paktimāṉ, பெ.(n.)

   இறைப்பற்று (கடவுள் பத்தி); நிறைந்தவர்; devotee.

     ‘அவர் பெரிய பக்திமான்’ (இ.வ.);.

த.வ. இறைப்பற்றாளன்

     [த. பத்தி → Skt. bhakti → த. பக்தி]

பக்தியோகம்

 பக்தியோகம் paktiyōkam, பெ.(n.)

   பயன் கருதாது கடவுளை வழிபடுதலால் விண்ணுலக வாழ்வை அடைவதற்குரிய வழிவகை; piety or devotion without the expectation of any reward, as a means of salvation.

     [Skt. bhakti → த. பக்தி]

பக்து

 பக்து paktu, பெ.(n.)

கு.வி.எ. (adj.);

   மாத்திரம்; only, merely, simply.

     [U. faqt → த. பக்து]

பக்தை

பக்தை paktai, பெ.(n.)

   இறைப்பற்றுள்ளவள் (தென்.இந்.சேடத்.பக்.313);; woman devotee.

     [Skt. {} → த. பக்தை]

பக்ரீத்

 பக்ரீத் pakrīt, பெ.(n.)

   ஒரு முகம்மதியப் பண்டிகை; a Muhammadan festival.

     [Skt. {} → த. பக்ரீத்]

பக்ரு

 பக்ரு pakru, பெ. (n.)

   செருக்கு; pride.

     [Аr. fakhr → த. பக்ரு]

பங்கசார்த்தம்

 பங்கசார்த்தம் paṅgacārttam, பெ.(n.)

   இவறன்மை (உலோபத்தனம்); (யாழ்.அக.);; miserlines.

பங்கசூரணம்

பங்கசூரணம் paṅgacūraṇam, பெ.(n.)

   1. தாமரை வேர்ச் சூரணம்; powder of lotus root.

   2. தாமரை வேர்; lotus root. (சா.அக.);

     [பங்கம்=சூரணம்]

பங்கடை

 பங்கடை paṅgaḍai, பெ.(n.)

   அழகில்லாத அரு வருப்பான தோற்றம்; ugly aapearance.

அந்தப்பங்கடை இங்கு ஏன் வந்தாள்? (இ.வ.);

மறுவபங்கரை.

     [போங்கு-பங்கு—பங்கடை]

பங்கணம்

 பங்கணம் paṅgaṇam, பெ.(n.)

   தாழ்த்தப்பட்ட வராகக் கருதப்படுவோர் வாழும் இடம் (யாழ்.அக.);; the quarters of the outcastes.

     [Skt. {} → த. பங்கணம்]

பங்கணி

பங்கணி paṅkaṇi, பெ. (n.)

பங்கம்பாளை,

   1. (மலை); பார்க்க; see {pangampája;}

மறுவ. ஆடுதின்னாப்பாளை.

     [பங்கு + அணி]

பங்கதாசி

 பங்கதாசி paṅkatāci, பெ. (n.)

   கவிழ்தும்பை; stooping leucas. (சா.அக.);

மறுவ. பங்கதாவிகம்

பங்கதாளம்

பங்கதாளம் paṅgatāḷam, பெ.(n.)

   தாள வகை (பரத. தாள.4,உரை);; a variety of time measure.

     [Skt. {} → த. பங்க]

தாள் = கால், அடி. தாள் → தாளம் = ஆடுபவர் காலால் தட்டும் காலக் கணிப்பு. ஆட்டத்திற்கும் பாட்டிற்கும் உரிய காலக் கணிப்பு, காலக் கணிப்பிற்குத் தக்க இசைக் கருவி. த. தாளம் → Skt. {}.

பங்கத்தி

 பங்கத்தி paṅgatti, __. பெ.(n.)

   விலா பக்கத்தில் ஏற்படும் குத்தல் நோய்; pin prick or shooting pain felt on the side. (சா.அக.);.

பங்கனி

 பங்கனி paṅkaṉi, பெ. (n.)

   பங்கம்பாளை; worm – killer (சா.அக.);

மறுவ, ஆடுதின்னாப்பாளை.

பங்கன்

பங்கன்1 eṉappaṭṭatupaṅkaṉ, பெ. (n.)

   பாகங் கொண்டவன்; shares; one who has another by his side,

     “மலைமங்கை தன் பங்கனை” (திவ். பெரியதி. 7, 10, 3);

     “வேயுறுதோளி பங்கன் விடமுண்டகண்டன்” -தேவா.

     [பங்கு → பங்கன்] வே.க.

 பங்கன்2 vēkapaṅkaṉ, பெ. (n.)

இவறன் (இ.வ.);:

 miser.

     [பங்கு → பங்கன்=சிறுமையுடையோன்; கஞ்சன்.]

பங்கப்படு-தல்

பங்கப்படு-தல் paṅkappaṭutal,    20. செ.கு.வி. (v.i.)

   சிறுமையடைதல்; to fall into disgrace; to be degraded.

     ‘பங்கப்படாதுய்யப்போமின்’ (திவ்பெரியாழ். 5,2,4);;

     [பங்கம் + படு-,]

பங்கப்பாடு

பங்கப்பாடு paṅkappāṭu, பெ. (n.)

   1. குறையுறல்; deformity.

   2. இழிவுறல்; multilation.

   3. பழுதுறல்; becoming defective.

     [பங்கம் + பாடு]

பங்கப்பிரபை

பங்கப்பிரபை baṅgabbirabai, பெ.(n.)

   ஏழு நிரய (நரக);த் தொன்று (சீவக.2817,உரை);; a hell, one of elu-naragam.

     [Skt.{}+pirapa → த. பங்கப்பிரபை]

பங்கமழி-தல்.

பங்கமழி-தல். paṅkamaḻital,    1. செ.கு.வி. (v.i.).

   மானமிழத்தல்; to fall into disgrace; to lose honour or credit.

     ‘ஆயிரங் குதிரையை அறவெட்டின போராளி இப்போது பறைச்சேரி நாயோடே பங்கமழிகிறான்’ (பழ.);

     [பங்கம் + அழி-தல்]

பங்கமழிதல் ஆடை குலைதல் என்னும் பொருளில் மானமிழத்தலைக் குறித்தது.

பங்கம்

பங்கம்1 paṅgam, பெ. (n.)

   1. தோல்வி; defeat. discomfiture

     “செய்ய களத்து நங்குலத்துக் கொவ்வாப் பங்கம் வந்துற்றதன்றி” (கம்பரா. கும்பக.15);

   2. குற்றம்; defect

     “பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச் சரமே” (தேவா. 46,9);

   3. அழகன்மை; distortion, contortion of the limbs, deformity

     “பிலவகபங்கு வாண்முகம்” (திருப்பு. 18);

   4. மானக்கேடு; disgrace, detriment to one’s reputation

     “பங்கக் கவிதை பரமன் சொல” (திருவாலவா. 16, 22);.

   5. வெட்கம் (நாஞ்.);; indecency, shame.

   6. கேடு; vialation, desecration, profanation; injury run

     “அற்பங்க முறவரு மருணன் செம்மலை” (கம்பரா. சடாயு.8);

   7. இடர் (பிங்.);; trouble, obstacle

   8. துண்டு (வின்.);; piece

   9. பங்கு;  portion

     “பங்கஞ் செய்த மடவாளொடு” (தேவா. 855, 5.);

   10. பிரிவு; division

     “பங்கம்படவிரண்டு கால் பரப்பி” (திருவாலவா. 16,22.); கீழ்க் குறிப்பு);.

   11. நல்லாடை (சிலப். 14, 108, உரை.); (திவா.);; superior garment of ancient times.

   12. சிறுதுகில் (பிங்.);; a small piece of cloth.

   13. பங்கதாளம் பார்க்க; see {pangatãlam}

     “அங்க முபாங்க மாகிடுநேர் பங்கமுடன்’. (பரத. தாள. 4.);

   14. குளம் (சூடா.);; tank

   15. அலை (வின்.);; wave.

     [பங்கு → பங்கம்]

பங்கு → பங்கம் என்பது கூறுபடுதல், மூளியாதல் எனப்பொருள்பட்டு, வழிப்பொருள்களும் இணைந்துள்ளன. ‘பங்கம்’ வடமொழியில் வழங்கினும் மானியர் வில்லியம்சு அகரமுதலி அதற்கு வேர் காட்டவில்லை. கிழி, கிழிவு, கூறை, துண்டு, துணி என்பன போலப்பங்கு என்பதும் ஆடையைக் குறித்தது; பங்கம் நல்லாடையுமாயிற்று.

 பங்கம்2 paṅkam, பெ. (n.)

   முடம் (அக. நி.);; lameness

     [பங்கு → பங்கம்]

 பங்கம்3 paṅkam, பெ. (n.)

   பந்தயம் (யாழ்ப்.);; wager.

     [பங்கு → பங்கம்]

போட்டி விளையாட்டில் ஈடுபடுவோர் தமது பங்காக நடுவரிடம் கொடுத்து வைக்கும் பணயத்தொகை பங்கம் எனப்பட்டுப் பந்தயத்தைக் குறித்தது.

 பங்கம் paṅgam, பெ.(n.)

   நாணம்;   வெட்கம்; shyness.

     [பின்கு-பங்கு-பங்கம்]

பங்கம்பாலை

பங்கம்பாலை paṅkampālai, பெ. (n.)

பங்கம்பாளை, 1 பார்க்க; see {pangam -palait.}

     [பங்கம் + பாலை]

பங்கம்பாளை

பங்கம்பாளை paṅkampāḷai, பெ. (n.)

   1. ஆடுதின்னாப்பாளை (மலை.);; worm;killer,

   2. அரிவாள்மனைப் பூண்டு; sickle;leaf.

   3. வட்டத் திருப்பி; wound plant.

   4. பொன் முசுட்டை; a kind of medicinal herb.

     [பங்கம் + பாளை]

பங்கயச்செல்வி

பங்கயச்செல்வி paṅgayaccelvi, பெ. (n.)

   தாமரையிலுள்ள திருமகள் (இலக்குமி);;{}, as seated on a lotus.

     “பங்கயச் செல்வி பாண்டிமா தேவி” (தேவா.868,1);.

     [Skt. {} → த. பங்கயம்]

பங்கயன்

பங்கயன் paṅgayaṉ, பெ.(n.)

   1. தாமரையில் தோன்றிய நான்முகன்;{},

 as lotus- born.

   2. பகலவன்; Sun, as Lord of the lotus.

     [Skt. {} → த. பங்கயன்.] ‘ன்’ ஆ.பா.ஈறு

பங்கயப்படு

பங்கயப்படு paṅgayappaḍu, பெ.(n.)

   தாமரை மடு; lotus tank.

     “பங்கயப்படு வொத்துளை பாவாய்”(சீவக.898);.

 Skt. {} → த. பங்கயம்.

பங்கயப்பீடிகை

பங்கயப்பீடிகை paṅgayappīṭigai, பெ.(n.)

   புத்தரது பாதங்கள் அமைந்த தாமரைப்(பதும); பீடம்; lotus-shaped pedestal of Buddha’s feet.

     “அறவோன் பங்கயப் பீடிகை” (மணிமே, 28:211);.

     [Skt. {} → த. பங்கயம்]

பங்கயம்

பங்கயம் paṅgayam, பெ.(n.)

   1. சேற்றில் தோன்றும், தாமரை; Lotus, as mud-born.

     “பங்கயங் காடு கொண் டலர்ந்த பாங்கெலாம்” (சூளா.நாட்டு.2);

   2. தாமரை வடிவினதாகிய ஒரு கருவி; a lotus – shaped weapon.

     “மணிமலர்ப் பங்கயந் தண்டம்” (கந்தபு. விடைபெறு.37);.

   3. நாரை (இலக்அக);; heron.

     [Skt. {} → த. பங்கயம்]

வடமொழியில் {} என்னும் சொல்லிற்குச் சேற்றில் பிறந்தது என்று பொருள். மாலையில் குவியும் மலரினையுடைய ஒரு வகைத் தாமரை போன்ற பயிர் வகைகள் உள்ளன. இது மண், சேறு, சகதி, களிமண் போன்ற பொருள்களுள்ள {}

என்னும் சொல்லிலிருந்து வளர்ந்தது. தமிழில் தாமரை போன்ற பொருள்களுள்ள பங்கயமும், சேறு போன்ற பொருள்களுள்ள பங்கயமும் வழக்கில் இருக்கின்றன. ஆயினும், பங்கயன், பங்கயம் என்பன போல வருவன வடசொல் pankajaவிலிருந்து வளர்ந்தனவாக இருக்கின்றன. பங்கம் என்னும் சொல்லிலிருந்து நேரடியாக இவ்வாறான சொற்கள் வளருவதற்கு இடமுண்டு. அவ்வகையைத் தவிர்த்து pankaja விலிருந்து சொற்கள் வளர்ந்து வந்துள்ளமை pankaja என்னும் சொல்லின் பெருவழக்கைக் காட்டுகிறது.

பங்கரம்

 பங்கரம்  paṅkaram, பெ. (n.)

   அதிவிடையம்; Indian atees. (சா.அக.);

பங்கறை

பங்கறை paṅkaṟai, பெ. (n.)

   1. அழகின்மை; ugliness, deformity.

   2. அழகில்லாதவ →ன் →ள் (கொ.வ,);; an ugly person.

     [பங்கு + அறு + ஐ]

உறுப்புக் குறையை உறுப்பறை என்பது போல் மூளிபட்ட நிலை பங்கறை எனப்பட்டது.

பங்கலத்தான்

 பங்கலத்தான் paṅgalattāṉ, பெ.(n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [பங்கலம்+அத்து+ஆன்]

பங்கலா

 பங்கலா paṅgalā, பெ.(n.)

பங்களா பார்க்க;see {}.

     [U. {} → த. பங்கலா]

பங்களப்படை

பங்களப்படை cāakapaṅkaḷappaṭai, பெ. (n.)

   பதர் போன்ற கூட்டுப்படை; a newly enlisted army, useless as chaff.

     “பங்களப் படை கொண்டு தனிவீரஞ் செய்வாரை” (ஈடு, 6, 6, 1);.

பங்கு → பங்களம் = குறைபாடுடையது; பயனற்றது.

     [பங்களம் + படை]

பங்களா

 பங்களா paṅgaḷā, பெ.(n.)

   தோட்ட வீடு, வளமனை; bungalow.

     [U. {} → த. பங்களா]

பங்களிப்பு

 பங்களிப்பு paṅkaḷippu, பெ. (n.)

   ஒன்றிற்குத் தன் பங்காகத் தரப்படுவது; contribution.

     “தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தன் பங்களிப்பு என்ன என்பதை ஒவ்வொரு எழுத்தாளனும் எண்ணிப் பார்க்க; வேண்டும்.”

     [பங்கு + அளிப்பு]

பங்கவாசம்

பங்கவாசம் paṅgavācam, பெ.(n.)

   சேற்றில் வாழும் நண்டு (யாழ்.அக.);; crab, as living in mud.

     [Skt. {} → த. பங்கவாசம்]

பதி → வதி = தங்குமிடம். வதி → வஸ் → வாஸ் (வ.வ.2.83);. வாஸ் → வாஸ → த. வாசம்.

பங்கா

 பங்கா paṅgā, பெ.(n.)

   ஆட்டுதற்குரிய தூங்கு விசிறி வகை (வின்.);; punkan, a large swinging fan.

     [U. {} → த. பங்கா]

     [p]

பங்காதாயம்

 பங்காதாயம்āṭutiṉṉāppāḷaipaṅkātāyam, பெ. (n.)

   கூட்டு வணிகத்தில் ஒருவர் செய்துள்ள முதலீட்டிற்கு உரிய ஊதியம்; dividend.

     [பங்கு + ஆதாயம்]

பங்காரம்

பங்காரம்2 paṅkāram, பெ. (n.)

   வரம்பு (யாழ். அக);; limit, boundry.

     [பங்கு + ஆர் → ஆரம்]

 பங்காரம் paṅgāram, பெ.(n.)

   கள்ளக்குறிஞ்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakkuricci Taluk.

     [பங்கு+ஆரம்]

பங்காரு

 பங்காரு paṅgāru, பெ.(n.)

   பொன் (இ.வ.);; gold.

பங்காலி

 பங்காலி paṅkāli, பெ. (n.)

   வெளவால்; bat.

பங்காளசம்பா

 பங்காளசம்பா paṅgāḷasambā, பெ.(n.)

   ஒரு வகை நெல்; a kind of paddy.

     [பங்காளம்+சம்பா]

பங்காளன்

 பங்காளன் paṅkāḷaṉ, பெ. (n.)

பங்காளி பார்க்க; see {pangali}

     [பங்கு + ஆளன்]

பங்காளபாத்து

 பங்காளபாத்து paṅgāḷapāttu, பெ.(n.)

   தயிரில் செய்த உணவு வகை; rice mixed with curds and seasoned.

பங்காளமுத்து

 பங்காளமுத்து paṅgāḷamuttu, பெ.(n.)

   போலி முத்து; false or imitation pearl, as from Bengal.

     [பங்காளம்+முத்து]

முள் → முட்டு → முத்து = உருண்டை வடிவாயிருக்கும் சிறு பொருள், தொண் (நவ); மணிகளுள் ஒன்று.

பங்காளம்

பங்காளம் paṅgāḷam, பெ.(n.)

   1. வங்காள நாடு; Bengal.

   2. ஒரு பண் (இராகம்); (பரத. இராக.56);; a specific melody – type.

     [Skt. {} → த . பங்காளம்]

பங்காளா

பங்காளா paṅgāḷā, பெ.(n.)

   1. ஒரு வகை வாழை; a kind of plantain.

   2. பண் வகை; a kind of melody-type.

     [பங்ககாளம் → பங்காளா]

பங்காளி

பங்காளி1 paṅkāḷi, பெ. (n.)

   1. உடன் கூட்டாயிருப்பவன்; shareholder, partner, co →parcener,

   2. தாய் வழி உறவின் முறையர்; agnate,kinsman.

     [பங்கு + ஆளி]

     [பங்கு → பங்காளி]

     ‘பங்காளியையும் பனங்காயையும் பதம்பார்த்து வெட்ட வேண்டும்’ (பழ.);

     ‘பங்காளி குடிகெடுக்க, வெங்காயம் குழிபோடச் சொன்னது போல’ (பழ.);

     ‘பங்காளி விடு வேகிறது; சுங்கான் கொண்டு தண்ணீர்விடு’ (பழ);

 பங்காளி2 paḻpaṅkāḷi, பெ. (n.)

   ஊரார் நில உரிமை களை வகுத்தெழுதும் பணியாளன் (கடம்பர் உலா, 50);; an officer whose duty was to prepare a record of all the holdings in a village.

     [பங்கு + ஆளி]

பங்காளிக்காய்ச்சல்

 பங்காளிக்காய்ச்சல் paṅkāḷikkāyccal, பெ. (n.)

   பங்காளிகளுக்கு இடையே ஏற்படும் போட்டியும் பொறாமையும்; jealousy among those who are agnates.

     [பங்காளி + காய்ச்சல்]

பங்காளிச்சி

 பங்காளிச்சி paṅkāḷicci, பெ. (n.)

   பங்காளியின் மனைவி (இ.வ.);; wife of an agnate.

     [பங்கு + ஆளி + சி]

சி-பெண்பால் ஒருமையீறு

பங்கி

பங்கி1 paṅki, பெ. (n.)

   1. ஆண்மக்களின் மயிர்; man’s hair.

     “பங்கியை வம்பிற்கட்டி” (சீவக. 2277.);

   2. விலங்குகளின் மயிர்(பிங்);; hair of animals.

   3. கஞ்சா; a narcotic and intaxicating plant.

     “பங்கிச்சாற்றாட்டி” (தைல.தைலவ.105);

   4. சாதிலிங்கம்; vermilion red sulphurate of mercury oxide.

   5. தெரிநிலைவினைப்பகுதி; base of a word that which is the state of clear indication.

   6. பிறமயிர் (சூடா. 2; 101.);; other hairs.

     [பங்கு → பங்கி]

 பங்கி2 paṅkittal,    11. செ.குன்றாவி. (v.t.)

   1. வெட்டுதல்; to mutilate; to cut off;     “அங்கத் தெவையுமழியச் சிலரைப்பங்கித்தடைவார்” (சிவதரு. கவர்க்க நரக.78.);

   2. பகுத்தல்; to partition, divide.

   3. பங்கிடுதல்; to opportion.

     [பங்கு →பங்கி → பங்கி -,]

 பங்கி3 paṅki, பெ. (n.)

   வகை; variations kinds,

     “பாணியின் பங்கி யம்பர மெங்கும் விம்மின” (கம்பரா.கைகேயி.60);

     [ஒருகா:வங்கி → பங்கி]

 பங்கி4 paṅki, பெ. (n.)

   1. தன்னுடைய பாகமாகப் பெற்றுக்கொள்பவன்; one who appropriates, one who receives his share.

     “‘நஞ்சினைப்பங்கியுண்ட தோர் தெய்வ முண்டோ” (தேவா.392,6);

   2. ஆறாண்டிற்கொரு முறை சீட்டுப் போட்டுச் சிற்றுார் நிலத்தைச் சிற்றுார் மக்களுக்குக் கொடுக்கும் பற்றடைப்பு முறை (W.G.);; an obsolete system of village tenure in Tinnevelly by which the fields we divided by lot once in every six years among the villages.

     [பங்கு → பங்கி]

 பங்கி5 aḻkarkalampaṅki, பெ. (n.)

சடைக்கஞ்சா.(தைலவ.தைல 105); பார்க்க; bhang

 a variety of indian hemp.

பங்கிகவாசம்

 பங்கிகவாசம் paṅkikavācam, பெ. (n.)

பங்கவாசம் (சங்.அக);; பார்க்க; see {pangavāSam}

     [பங்கவாசம் → பங்கிகவாசம்]

பங்கிடு-தல்

பங்கிடு-தல் paṅkiṭutal,    4. செ. குன்றாவி

   1. பகுத்துக் கொடுத்தல் (கொ.வ.);; to divide parcel out, distribute, apportion, allot

   2. ஏற்படுத்துதல் (வின்.);; to destine

     [பகு → பங்கு + இடு-தல்]

பங்கிட்டநாள்

 பங்கிட்டநாள் paṅkiṭṭanāḷ, பெ. (n.)

இரண்டிராசி கலந்த உடு (வின்.);; {naksatra}

 forming part of two zodiacal signs.

     [பங்கு + இட்ட + நாள்]

பங்கித்தபால்

 பங்கித்தபால் paṅkittapāl, பெ. (n.)

   பங்கியி லனுப்பும் அஞ்சல்; parcel post

     [பங்கி + தபால்]

பங்கிப்

 பங்கிப் paṅkip, பெ. (n.)

   சாதிலிங்கம் (சங்.அக);; Vermilion.

பங்கியடி-த்தல்

பங்கியடி-த்தல் paṅkiyaṭittal,    4. செ.கு.வி.(v.i.)

   1. கஞ்சாப்புகை குடித்தல்; to smoke ganja.

   2. கஞ்சா; to eat bhang.

     [பங்கி + அடி-,]

பங்கியிலை

 பங்கியிலை paṅgiyilai, பெ.(n.)

   கஞ்சாயிலை; leaf of cannabis sativa. (சா.அக.);

பங்கிலம்

 பங்கிலம் paṅkilam, பெ. (n.)

   தெப்பம், (யாழ்.அக.);; raft

     [பங்கி → பங்கிலம்]

பங்கில்லம்

 பங்கில்லம் paṅgillam, பெ.(n.)

   நத்தைச் சுண்டி; bristly button weed;shaggy button weed. (சா.அக.);

த.வ.குழிமீட்டான்

பங்கிவித்து

 பங்கிவித்து paṅgivittu, பெ.(n.)

   கஞ்சாவிதை; seed of cannabis sativa. (சா.அக.);

பங்கீடு

பங்கீடு paṅāṭu, பெ. (n.)

   1.பங்கிடுகை (திவா);; dividing, sharing, allotting, distributing,

   2. வகுத்தற் கணக்கு;   3. திட்டம் (வின்.);; (adj.);

 settlement of a dispute; disposal of affairs.

   4. வழி; measures,means

     [பகு → பங்கு + இடு → (முதல்நீண்டது);]

 பங்கீடு2 paṅāṭu, பெ. (n.)

   கணக்கு விளத்தம்; account.

     “குடிகளுக்குப் பங்கீடு சொல்லப் பயங் கொண்டு” (சரவண. பணவிடு.133);

     [பங்கு → பங்கீடு] (வே.க.);

பங்கீட்டுஅட்டை

 பங்கீட்டுஅட்டை paṅāṭṭuaṭṭai, பெ. (n.)

   உணவுப் பொருள்கள் பெறுவதற்கான அடையாள அட்டை; Ration card;family card.

     [பங்கீடு+அட்டை]

பங்கு

பங்கு1 vēkapaṅku, பெ. (n.)

   1. பாகம்; share portion. part.

     ”பட்குலவு கோதையுந்தானும்” (திருவாச. 16.9);

   2. பாதி (சூடா.);; moiety half.

   3. பக்கம்; side, party.

     ‘என்பங்கில் தெய்வம் இருக்கிறது’;

   4. இரண்டு அல்லது இரண்டரை ஏக்கர் நன்செயும் பதினாறு ஏக்கர் புன்செயுங் கொண்ட நிலம் (C.G.288);; sixteen acres of dry land and two or two and a half of wet land.

ம. பங்கு.

     [பகு → பக்கு → பங்கு] (வே.க.);

 பங்கு2 vēkapaṅku, பெ. (n.)

   1. முடம் (பிங்.);; lameness;

     “ஒருத்தலைப்பங்குவி னுர்தி” (கம்பரா. மந்திரப். 66);

   2. முடவன்; lame person: cripple,

     “பங்கொரு வனொப்பரியவையத்திலோடி வந்து” (தேவையுலா, 25);,

   3. சனி; saturn, as a lame planet

     “அந்தணன்பங்குவினில்லத் துணைக் குப்பா லெய்த” (பரிபா.11.7);

 பங்கு3 paripāpaṅku, பெ. (n.)

   1. மாவட்டப்பகுதி (புதுவை.வ);; district.

   2. தலைப்பாகை; turban

     “சிவகாங்கை யொர்பங்காக” (விரிஞ்சை முருகன்பிள்ளைத். தாலப்.1.);

   3. பாதி; half

   4. கூறுபாடு; division. (சா.அக.);

பங்குகொள்(ளு)-தல்

பங்குகொள்(ளு)-தல் paṅkukoḷḷutal, செ.கு.வி (v.i.)

   1. பணி,போராட்டம் நிகழ்ச்சி போன்றவற்றில் இடம் பெற்றுச் செயல்படுதல்; கலந்து கொள்ளுதல்; take part; participate.

     ‘விழாவில் அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்கவேண்டும்’

   2. மற்றொருவருடைய இன்பதுன்பங்களைத் தனதாகக் கொள்ளுதல்; share someone’s joy, sorrow, etc.

     “பிறருடைய இன்பதுன்பங்களில் பங்கு கொள்ளாமல் இருப்பது நாகரிகமா?”(உ.வ.);;

பங்குக்காணி

 பங்குக்காணி cāakapaṅkukkāṇi, பெ. (n.)

   கூட்டுப்பங்கான நிலம் (வின்.);; land owned in common.

     [பங்கு + காணி]

பங்குக்காரன்

பங்குக்காரன் paṅkukkāraṉ, பெ. (n.)

   1. பங்குக்குடையவன் (c.g.);; co sharer, share holder,

   2. சிற்றுார்களில் மிகுதியான நிலமுள்ளவன் (இ.வ.);; the biggest share holder in the lands of a village.

     [பங்கு + காரன்]

பங்குசம்

 பங்குசம் nākarikamāuvapaṅkucam, பெ. (n.)

   தலைக்கோலம் (பிங்.);; head-dress.

பங்குடிப்பறையன்

 பங்குடிப்பறையன் paṅkuṭippaṟaiyaṉ, பெ. (n.)

   சிற்றுார் ஊழியமில்லாப்பறையன் (இ.வ.);; a {pariah} who is not a village servant.

     [பைங்குடி + பறையன் → பங்குடிப்பறையன்]

பங்குதாரன்

 பங்குதாரன் paṅkutāraṉ, பெ. (n.)

பங்குக்காரன்; பார்க்க; see {pangukkāraṇ}

     [(பங்கு + தாரன்); தாரன் என்ற வடசொல் உடைமைப்பொருளது]

பங்குதை

 பங்குதை paṅkutai, பெ. (n.)

பங்கறை (யாழ்.அக.);; பார்க்க; see {parigarai}

     [பங்கறை → பங்குதை]

பங்குநெல்

 பங்குநெல் paṅkunel, பெ. (n.)

நெல்வகை (இ.வ.);:

 a kind of paddy.

     [பங்கு + நெல்]

பங்குனன்

பங்குனன் paṅguṉaṉ, பெ.(n.)

   மானேறு (உத்தர); நாளிற் பிறந்த அருச்சுனன்; Arjuna, as having been born in the uttara-phalguni naksatra.

     “வென்றிப் பங்குனனென்னு நாமம் பகுதியாற் படைத்திட்டானே” (பாரத. சம்பவ. 83);.

     [Skt. {} → Pkt. Phagguna → த. பங்குனன்]

பங்குனி

பங்குனி paṅkuṉi, பெ. (n.)

   1. பன்னிரண்டாம் மாதம்; the 12″ month of the solar year, march-April

     “வெய்யோன்… பங்குனிப்பருவஞ் செய்தான்” (சீவக. 851.);

   2. உத்தரம் பார்க்க; (பிங்);; see the 12″ naksatra

     ‘பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும் இல்லை;’ (பழ.);

     ‘பங்குனிமாதம் பகல்வழி நடந்தவன் பெரும்பாவி’ (பழ.);

     [பல்குனி → பங்குனி]

மீனமாதத்தைக் குறிக்கும் வடசொல்.

 பங்குனி paṅguṉi, பெ.(n.)

   மீன மாதம், பன்னிரண்டாம் மாதம்; the 12th month of the solar year, March – April.

     “வெய்யோன்…. பங்குனிப் பருவஞ் செய்தான்” (சீவக.851);.

     [Skt. phaguni → Pkt. phaguni → த. பங்குனி]

பங்குனிக்கதிர்

 பங்குனிக்கதிர் paṅguṉikkadir, பெ.(n.)

   மீன (பங்குனி); மாதத்தில் உழமண் தரையில் கதிர்போல் வளரும் பூநீறு; a crop like growth of effloresent, salt said to be found on the soil of fuller’s earth in the month of March. (சா.அக.);

     [Skt. phalguni → Pkt. phaguni → த. பங்குனி]

பங்குனியுத்தரம்

பங்குனியுத்தரம் paṅguṉiyuttaram, பெ.(n.)

   மீன (பங்குனி); மாத வெள்ளுவாவும் மானேறு விண்மீனும் (உத்தரமும்); கூடிய ஒரு சிறப்பு நாள் (இறை.கள.17,உரை);; special festival day when the moon is in conjunction with the 12th naksatra.

     [பங்குனி+உத்தரம்]

பங்குபகிர்ச்சி

 பங்குபகிர்ச்சி paṅkupakircci, பெ. (n.)

   பாகம் (வின்.);; share portion.

     [பங்கு + பகிர் + சி-தொழிற்பெயரீறு]

பங்குபட்டநாள்

 பங்குபட்டநாள் paṅkupaṭṭanāḷ, பெ. (n.)

இரண்டு நாட்களில் தொடுத்துவரும் உடு (வின்.);; {naksatra}

 with which the moon is in conjunction through parts of two days.

     [பங்கு + பட்ட + நாள்]

பங்குபாகம்

பங்குபாகம் paṅkupākam, பெ. (n.)

   1. பங்கு; share portion.

   2. பாகப்பிரிவினை; partition.

     “அண்ணனும் தம்பியும் பங்குபாகம் செய்து கொண்டார்கள்” (வின்.);;

     [பங்கு + பாகம்]

பங்குபிரிந்தவர்

 பங்குபிரிந்தவர் paṅkupirintavar, பெ.(n.)

   தாயபாகம் பிரித்துக்கொண்டவர்; those who are divided in estate, as heirs.(வின்.);.

     [பங்கு + பிரிந்தவர்]

பங்குமால்

 பங்குமால் paṅkumāl, பெ. (n.)

   பங்குக்குறிப்பு (C.G.);; list of shares,

     [பங்கு + மால்-உருது. “குறிப்பு” என்ற பொருளது]

பங்குரை

 பங்குரை paṅkurai, பெ. (n.)

   அதிவிடையம் என்னும் மருந்துச்சரக்கு (தைலவ. தைல);; a bazaar drug called indian atees.

பங்குவழி

 பங்குவழி paṅkuvaḻi, பெ. (n.)

   ஊர்நிலத்தை ஒரளவுள்ள பலபங்குகளாகப் பிரித்துப் பங்குநிலத்தின் தகுதிப்படி ஒவ்வொரு வருக்குங் கொடுக்கும் முறை; a system of land tenure in which the lands of a village are for purposes of convenient enjoyment divided into many shares each consisting of a fixed number of acres and assigned to each holder with refernce to quality of the Soil, situation,etc.

     [பங்கு + வழி]

பங்குவழிநிலம்

 பங்குவழிநிலம் paṅkuvaḻinilam, பெ. (n.)

   பங்குவழிப்படி நுகர்தற்குரிய நிலம் (C.G);; land enjoyed under {pangu-val} systems

     [பங்கு + வழி + நிலம்]

பங்குவழியினாம்

 பங்குவழியினாம் paṅkuvaḻiyiṉām, பெ. (n.)

   வேளாண்மை வளர்ச்சிக்காக ஒரு கூட்டத் தாருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கும் நிலம் (R.T);; land granted to a body of persons in common, for the encouragement of cultivation

     [பங்கு + வழி + இனாம்]

பங்குவாதம்

பங்குவாதம் paṅguvātam, பெ.(n.)

   இடுப்பில் இடைநின்ற காற்று விரைப்பு அடைவதினால் இரண்டு தொடைகளின் நரம்புகளை இழுத்து முடமாக்கும் ஓர் ஊதை (வாத); நோய்; a kind of rheumatic affection in which the nerve trunks of both the legs are drawn up owing to the deranged vayu lying about the region of the waist, thus rendering the patient completely lame.

   2. உடம்பின் கீழ்ப்பாகத்தையாவது இடுப்பினின்று கால் வரை வளியினால் உணர்ச்சி (சுவர்ணை); யற்றதாகவும் அசைக்க முடியாததாகவும் செய்யுமோர் ஊதை நோய்; paralysis of both the legs and lower part of the body with loss of both sensation and movement.

பங்குவாளி

பங்குவாளி paṅkuvāḷi, பெ. (n.)

   சிறுநிலக்கிழார்(G.Tn. D.311);; mirasdars.

     [பங்கு + ஆள் + இ]

     [பங்குஆளி → பங்குவாளி]

பங்குவீதம்

பங்குவீதம்1 paṅkuvītam, பெ. (n.)

   சமமாயுள்ள பங்கு (வின்.);; equal shares.

     [பங்கு + வீதம்]

 பங்குவீதம்2 paṅkuvītam, வி.எ. (adv.)

   விழுக்காட்டின்படி (இ.வ.);; pro rate.

     [பங்கு + வீதம்]

பங்கூரம்

பங்கூரம் vaṭacolpaṅāram, பெ. (n.)

   1. அதிவிடையம்; atis shrub.

   2. மரமஞ்சள் பார்க்க; (மலை);; tree turmeric,

பங்கூறம்

 பங்கூறம் paṅāṟam, பெ. (n.)

   மரமஞ்சள் பார்க்க; (மலை);; tree turmeric.

பங்கேருகம்

பங்கேருகம் paṅārugam, பெ.(n.)

   சேற்றில் தோன்றும் தாமரை; lotus, as mud – born.

     “இராமநாதன் பாதபங்கேருகங்கள்” (சேதுபு. தோத்.40.);

     [Skt. {}-ruha → த. பங்கேருகம்]

பங்கோற்பயிண்டு

பங்கோற்பயிண்டு paṅāṟpayiṇṭu, பெ. (n.)

   சிறையில் அடைக்கை; imprisonment in a jail.

     “பங்கோற் பயிண்டு பருவிலங்கு மாட்டி” (பஞ்ச.திருமுக.1732.);

பச-த்தல்

பச-த்தல் pacattal,    1 செ.கு.வி. (v.i.)

   1. பசுமையாதல்;  to be green

     “மாலுமோர் பாலோங்கிய வண்ணம் போன்று மொளிநிறம் பசந்து தோன்ற” (திருவிளை. யானையெய்.27);

   2. காமத்தால் மேனி பசலை நிறமாதல்; to turn sallow or pale, as the skin through love-sickness.

     “உங்களங்கம் பித்தியைப்போற் பசப்பதுரை செய்யுமே” (புகலூரந்தாதி, நங்களங்கம் என்ற முதற்குறிப்புப் பாடலிலறிக.);

   3. காமநோய் முதலியவற்றால் ஒளிமங்குதல்; to lose lustre, complexion or colour through love sickness.

     “பூப்போலுண்கண் பசந்து” (புறநா. 96);

   4. மங்கிப்போதல். (வின்.);; to become dim, as twilight

   5. பொன்னிறங் கொள்ளுதல்; to become goldent, as the sky in the evening.

     “திசைமுகம் பசந்து” (சிலப். 4,5.);

   6. காமமேலீட்டினால் உடம்பின் நிறம் வேறுபட்டுப் பொன்னிறப் புள்ளியுண்டாதல்; change of complextion by appearance of yellow dots or patches in the body said to due to excess of sexual passion or lonely sickness.

     “நறுநுதல் பசத்தல் அஞ்சிச்சிறுமை உறுவோ செய்பறியலரே” (நற்.1-8);

     “பல்லிதழ் உண்கண் பசத்தல் மற்றெவளோ” (ஐங்.170-4);

     “ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல் ஓரார் கொல் நம் காதலரே” (ஐங்.225-4);

     “நன்னுதல் பசத்தலாவது துண்ணி” (ஐங்.234-2); “முயங்கி கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்” (குறள்-1238);

     “நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து” (குறள்.1278);

     [பசப்பு → பச-,]

பசகன்

 பசகன் pacakaṉ, பெ. (n.)

சமையற்காரன். (யாழ்.அக.);

 cook.

பசக்கு

பசக்கு pacakku, பெ.(n.)

   1. பொருள்; substance.

   2.திறன்; ability.

     [பச → பசக்கு]

பசக்கெனல்

 பசக்கெனல் pacakkeṉal, பெ. (n.)

   திடீரேனற்குறிப்பு; onom. expr. signifying Suddenness.

     [பசக்கு + எனல்]

பசங்கம்

 பசங்கம் pacaṅkam, பெ. (n.)

   வேலை; affair business, matter, cook.

     ‘என் பசங்கத்துக்கு வாராதே” (இ.வ.);

பசங்கள்

 பசங்கள் ivapacaṅkaḷ, பெ. (n.)

   பயல்கள் என்பதன் கொச்சை வழக்கு; corr.of.பயல்கள்.

     [பயல்கள் → பசங்கள்]

பசடன்

 பசடன் pacaṭaṉ, பெ. (n.)

   அறிவிலான்; ignorant person;

     ‘புன்பசடர் செய்த குற்றம் பொறுத்திடவும் வேண்டாமோ” (வள்ளி. கதை. ms);

     [ஒருகா:அசடன் → பசடன்]

ஒ.நோ. கசடன்.

பசண்டை

பசண்டை kacaṭaṉpacaṇṭai, பெ. (n.)

   1. பசுமை; verdure

   2. ஈரம்; moisture

   3. நன்னிலை; easy circumstances.

     [பசுமை + பசண்டை]

பசத்தீபனம்

 பசத்தீபனம் pacattīpaṉam, பெ. (n.)

உணவு வேட்கை; (வின்.);

 appetite,

     [பசி + திபனம்]

பசந்ததுவரை

பசந்ததுவரை pacantatuvarai, பெ. (n.)

   1. பேய்த்துவரை; a better lomnd pf dholl.

   2. காட்டுத்துவரை; wild red gram.

     [பசந்த + துவரை]

பசந்தம்

 பசந்தம் pacantam, பெ. (n.)

   நேரம்; time, opportunity

பசந்து

பசந்து pacantu, பெ. (n.)

   1. மிகு நேர்த்தி; elegance; beauty; attractiveness; fireness.

     ‘பசந்தெனவே சென்று’ (கவிகுஞ்.2.);

   2. உயர்ந்த மாம்பழம்; a superior kind of mango fruit

     [பசந்தம் → பசந்து]

பசந்தெழுபரவரல்

பசந்தெழுபரவரல் pacanteḻuparavaral, பெ. (n.)

   பசலை பாய்தலால் வருந்துன்பம்; affiction due to the love affair.

     “பசந்தெழுபருவரல்தீர நயந்தோர்க்குதவா நாரின் மார்பே” (நற்.205.8);.

     [பசந்து + எழு + பருவரல்]

பசனமா-தல்

பசனமா-தல் pacaṉamātal,    6. செ.கு.வி. (v.i.)

   செரிமானமாதல்; being digested.

     [பசனம் + ஆ-,]

பசனம்

பசனம் pacaṉam, பெ. (n.)

   1. சமைத்தல்; cooking.

   2. சிற்றின்பம்; sexual pleasure

   3. செரிமான ஆற்றல்; a digestive secretion

 பசனம் pasaṉam, பெ. (n.)

   சமையல்; cooking.

     [Skt. pacana → த. பசனம்]

பசனை

 பசனை pasaṉai, பெ.(n.)

   கடவுளைப் போற்றிப் பாடுகை; chanting devotional songs.

     [Skt. bhajana → த. பசனை]

பசபச-த்தல்

பசபச-த்தல் pacapacattal,    11. செ. கு. வி. (v.i.),

   1. தினவெடுத்தல் (வின்.);; to itch.

   2. முறுமுறுத்தல்; to chatter; to grumble in a suppressed tone.

     [பசத்தல் → பசபச_,]

பசபசத்தான்

 பசபசத்தான் pacapacattāṉ, பெ. (n.)

   அலப்புவோன்; chatterer.

     [பசபச + அத்து + ஆன்]

பசபசப்பு

பசபசப்பு1 pacapacappu, பெ. (n.)

   1. தினவு; itching.

   2. அலப்புகை; chattering.

     [பசபச → பசபசப்பு]

 பசபசப்பு2 pacapacappu, பெ. (n.)

   கோள் சொல்லுதல் (பாண்டிச்);; tale-bearing.

 பசபசப்பு3 pacapacappu, பெ. (n.)

 redupl. of பசப்பு_,

 tale-bearing.

மறுவ: பசபசத்தல்.

     [பசபச → பசபசப்பு]

     [பசப்பு + பசப்பு → பசபசப்பு]

பசபசெனல்

 பசபசெனல் pacapaceṉal, பெ. (n.)

 onom expr. signifying itching sensation.

 onom. expr. signifying chattering.

 onom. expr. signifying drizzling.

 expr. signifying staring blankly.

     ‘பசபசென்று விழிக்கிறான்’.

     [பசபச + எனல்]

பசப்பு

பசப்பு1 pacapputal,    5 செ.குன்றாவி (v.t.)

   இன்முகங்காட்டி ஏய்த்தல்; to deceive, allure, fascinate, gain the affection

     “தந்திரமாய் மாதைப் பசப்பவென்று” (விறலிவிடு.);

     [பச → பசப்பு]

 பசப்பு2 pacapputal,    5. செ.குன்றா.வி. (v.i.)

அலப்புதல்;(வின்.);

 to chatter, talk too much

மறுவ: ஓயாமற்பேசுதல், மயக்குதல்.

 பசப்பு3 mayakkutalpacappu, பெ. (n.)

   1. பச்சைநிறம்; green colour.

     “பால் பொன் பசப்புக்கார் வண்ணம்” (திவ். இயற். நான்மு. 24.);

   2. மகளிர்க்குப் பிரிவாற்றாமையால் உண்டாம் நிறவேறுபாடு. (தொல். சொல். 308);. (குறள், 1182.);,

 sallow complexion of women due to love-sickness.

   3. ஈரப்பற்று (யாழ்.அக.);; moisture.

   4. நலமான நிலை; healthy condition (இ.வ.);

   5. வளம்; wealth, prosperity.

   6. பொன்மை; gold colour.

     [பசுமை → பசப்பு]

பசமநத்திரம்

 பசமநத்திரம் pacamanattiram, பெ. (n.)

பசமருத்திரம் (வின்.); பார்க்க; see {pனயர்ன}

பசமந்ததிரம்

 பசமந்ததிரம் viṉpacamantatiram, பெ. (n.)

பசமருத்திரம். (யாழ். அக.); பார்க்க; see pasamaruttiram.

பசமருத்திரம்

 பசமருத்திரம்ṉayarṉapacamaruttiram, பெ. (n.)

   மரமஞ்சள் (சங். அக.);; tree turmeric.

     [ஒருகா,பசுமை + மருத்திரம்]

பசமூலி

 பசமூலி pacamūli, பெ. (n.)

   பச்சிலை மூலிகை; medicinal herb.

     ‘எல்லாப் பசமூலிகைகளையும் கடையில் வாங்க முடியாது; நாமே முயன்று கண்டு பிடிக்க வேண்டும்’.

மறுவ: பச்சை மூலி.

     [பச்சைமூலி → பசமூலி]

பசம்பை

பசம்பை1 pacampai, பெ. (n.)

   கழுத்து; neck. (சா. அக.);

 பசம்பை2 akapacampai, பெ. (n.)

   மரமிணைக்கை; dove-tailing in cabinet work. (வின்.);

பசரிகம்

 பசரிகம் pacarikam, பெ. (n.)

   பூனைக்காஞ் சொறி; small climbing nettle. (சா.அக.);

மறுவ: கருங்காஞ் சொறி

பசறு

 பசறு pacaṟu, பெ. (n.)

பச்சிலைச் சாறு; (வின்.);

 expressed juice of green herbs.

தெ. பசறு

     [பசள் → பசளு → பசறு]

பசறை

 பசறை pacaṟai, பெ. (n.)

   கோழிக்கீரை; Indian purane. small variety of spinach. (சா.அக.);

மறுவ: சிறுபசலைக்கீரை.

     [பசளை — பசறை]

பசற்றனம்

பசற்றனம் pacaṟṟaṉam, பெ. (n.)

   இளமைப் பண்பு; boyishness

     “உன் பசற்றனமிறே நலிகைக்கடி” (ஈடு. 9, 5, 6);

க. பகரளதன,

     [பசல் + தனம்]

பசலத்தி

பசலத்தி pakalepacalatti, பெ. (n.)

   1. உதி1 பார்க்க; see uti’2; trumpet flower.

   2. பார்க்க; இராப்பாலை; wooly crispate trumpet flower.

   3. கடலாத்தி; a sea plant.

     [பசுமை → பசல் + அத்தி]

பசலி

பசலி pasali, பெ.(n.)

   நிலவரி வாங்கும் தொடராண்டாக கி.பி.1555 முதல் அக்பரால் அறிவிக்கப்பட்ட வருவாய்த்துறை ஆண்டு; a revenue year meant for tax collection introduced by the emperor Akbar from 1555 A.D.

த.வ. நிலவரி ஆண்டு

     [Ar. Pers. fasil – separating → U. fasali → த. பசலி]

அரபி மொழியில் அறுவடையையும் அறுவடைக் காலத்தையும் குறித்த சொல் நாளடைவில் அறுவடைக் காலத்தில் வாங்கும் வரியையும் நிலவரி ஆண்டையும் குறிப்பதாயிற்று. கி.பி.1-7-591 முதல் வழக்கூன்றிய இச்சொல்லாட்சி அரபி பாரசீக மொழிகளின் வாயிலாக உருதுமொழியில் இடம் பெற்றுள்ளது எனவும், கி.பி.1555 முதல் இந்தியாவில் பேரரசர் அக்பரால் இது நிலவளிவாங்கும் தொடராண்டாக மாறியது எனவும் கூறுவர்.

அக்பருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மூவேந்தர் காலத்தில் நிலவரித் திட்டம் தமிழகத்தில் நடப்பில் இருந்தது. பசலி என்னும் சொல்லை ஆள்வதால் அக்பர் காலத்திலிருந்துதான் நிலவரி முறை இந்தியாவில் அறிமுக மாயிற்று என்னும் தவறான வரலாற்றுக் குறிப்பு இடம் பெற வழி வகுத்துவிடும். ஆதலின் பசலி என்பதை ஆள வேண்டிய நிலை இருப்பின் நிலவரி ஆண்டு என்பது பொருந்தும்.

பசலிக்குட்டை

 பசலிக்குட்டை pasalikkuṭṭai, பெ.(n.)

   திருப்பத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Thiruppattur Taluk.

     [பாசி-பாசல்-பசலி+குட்டை]

பசலை

பசலை1 pacalai, பெ. (n.)

   1. அழகுத்தேமல்.

 beauty spots on the skin of a woman

     “பசலை சேர்முலை மங்கையர்” (கந்தபு. இரணியன்த். 56);

   2. பொன்னிறம்,

 gold colour.

     “பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ” (புறநா. 155);

   3. காம நோயால் உண்டாம் நிறவேறுபாடு; sallowness, paleness of complexion from love-sickness.

     “பசலை பாயப் பிரிவு தெய்யோ” (ஐங்குறு. 231);

   4. இளமை; infancy, tenderness,

பசலை நிலவின் (புறநா. 392.);

   5. கவலையின்மை; carelessness, indifference.

     ‘அவன் மிகவும் பசலையாயிருக் கிறான்’ இ.வ.

   6. பசளை பார்க்க; (பதார்த்த. 598); see {pasasai}

க. பசலெ

     [பசுமை → பசலை]

 பசலை2 pacalai, பெ. (n.)

   1. மனக்கவலை; restlessness of mind;

     “நித்தை நீள் பசலைப் பேரோர் விரகெனும் வேலின் வீழ” (சீவக. 3080);

   2. வருத்தம்; affliction.

     “சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்” (முல்லைப். 12.);

     [பசல் → பசலை]

பசலை மண்

 பசலை மண் maṇ, பெ. (n.)

   மணலும் களிமண்ணும் சேர்ந்தது; sand mixed with clay, back mould. (சா.அக.);

     [பசலை + மண்]

பசலை மரம்

பசலை மரம் maram, பெ. (n.)

   பயன்றமரம்; fruit tree. (S. I. I. iv, 105.);

     [பசலை + மரம்]

பசலைக் கதை

 பசலைக் கதை katai, பெ. (n.)

   வீண்கதை; purposeless stories.

     [பசலை + கதை]

பசலைக் கீரை

 பசலைக் கீரைārai, பெ. (n.)

ஒருவகை உண்ணக்கூடிய கீரை,

 an edible green.

மறுவ: பசலைக்கீரை, கோழிக்கீரை

     [பசலை + கீரை]

பசலைக்கல்

 பசலைக்கல்  pacalaikkal, பெ. (n.)

சுண்ணாம்பு கலந்த களிமண்:

 clay, mart (pond.);

     [பசளை + கல்]

பசலைபாய்தல்

பசலைபாய்தல் pacalaipāytal, பெ. (n.)

   காமநோயால் மகளிர்க்கு உண்டாகும் நிறவேறுபாடு; sallowness, paleness of complexion from love sickness.

     “பசலை பாயப்பிரிவு தெய்யோ” (ஐங்குறு. 231.); (தொல். III 266—3.);

பசலையள்

பசலையள் pacalaiyaḷ, பெ. (n.)

   பசலைகொண்டவள்; beauty spots on the skin of a woman

     “மேனி மறைத்த பசலையள் ஆனாது” (கலி. 143-6.);

     “நன்னிறம் பரந்த பசலையள்” (அகம் 234-17.);

     [பசலை → பசலையள்]

பசல்

பசல்1 coṟipacal, பெ. (n.)

   சிறுவன். (நன். 122, மயிலை); (ஈடு, 9, 5, 6);; boy.

     [பயல் → பசல்]

க. பகலெ

பசளி

பசளி pacaḷi, பெ. (n.)

   1. மடைமுகம்; margin or head of a channel.

   2. பசளை பார்க்க; see {pasasai}

     [பசளை → பசளி]

பசளை

பசளை pacaḷai, பெ. (n.)

   1. கீரைவகை; spinach, (I.);

   2. ஒருவகைக் கீரை; purslane.

   3. கீரைவகை; malabar nightshade.

   4. கோழிக்கீரை; common Indian purslane (வின்.);

   5. காட்டுமஞ்சரி பார்க்க; see {kiய manjari}

   6. குழந்தை; infant, tender child.

   7. உரம், (யாழ்.அக.);

 manure, compost.

     [வயலை → வசலை → பசலை → பசளை]

மறுவ: கொடிப்பசலை; கொத்துப்பசளை

பசளைக்கதை

 பசளைக்கதை pacaḷaikkatai, பெ. (n.)

பசலைக்கதை (யாழ். அக.); பார்க்க; see {pasalikkatai}

     [பசளை + கதை]

பசளைக்கலம்

பசளைக்கலம் pacaḷaikkalam, பெ. (n.)

   பச்சைப் பானை; unburnt pot,

     ‘பசளைக் கலம் நெரித்தாற் போலே’ (ஈடு. 7,4,5);

     [பசளை + கலம்]

பசளைமண்

 பசளைமண் pacaḷaimaṇ, பெ. (n.)

   உரமுள்ள மண்; good loam.

     [பசளை + மண்]

பசள்

 பசள் pacaḷ, பெ. (n.)

   பலா, (சங். அக.);; jack fruit tree.

பசவ்வியம்

 பசவ்வியம் pacavviyam, பெ. (n.)

   புல். (சங். அக.);; grass

பசாசம்

பசாசம்1 pacācam, பெ. (n.)

   1. பெருவிரலுஞ் கட்டுவிரலும் நீங்க ஒழிந்த மூன்று விரலுந் தம்மிற் பொலிந்து நிற்கும் இணையா விணைக்கை (சிலப். 3, 18, உரை);; a gesture with one hand in which the fingors other than the thumb and the yorefinger are joined together and held up right.

 பசாசம்2 pacācam, பெ. (n.)

   இரும்பு; iron.

     “காந்தங் கண்ட பசாசத்தவையே” (சி.போ.5);

 பசாசம்1 pacācam, பெ.(n.)

பெருவிரலுஞ் சுட்டுவிரலும் நீங்க ஒழிந்த மூன்று விரலுந் தம்மிற் பொலிந்து நிற்கும் இணையா வினைக்கை வகை (சிலப்.3,18,உரை);;({});.

 a gesture with one hand in which the fingers other than the thumb and the forefinger are joined together and held upright.

     [Skt. {} → த. பசாசம்]

 பசாசம்2 pacācam, பெ.(n.)

   இரும்பு; iron.

     “காந்தங்கண்ட பசாசத் தவையே” (சி.போ.5);.

     [Skt. pacana → த. பசனம்]

பசாசரதம்

பசாசரதம் pacācaradam, பெ.(n.)

   பேய்த்தேர்; mirage, as a goblin’s car.

     “ஒத்தன பசாசரதமே” (அரிச்.பு.விவாக.107);.

     [Skt. pacana → த. பசனம்]

பசாசு

பசாசு pacācu, பெ. (n.)

   பேய்; devil, vampire, goblin, demon, fiend.

நரிபசாசேனம் (திருவாலவா.28,64);.

பசாடு

 பசாடு cipōpacāṭu, பெ. (n.)

   மாசு; film,as in the eye, speck, as in a gem, scum, as on the Surface of water.

     ‘மாசாட்டியம்’ என்பது கண்ணொளி மங்குதலைக் குறிக்கும் சிற்றுார்ப்புற வழக்கு.

     [மாசாடு → மாசாட்டியம். மாசாடு → பாசாடு → பசாடு]

 பசாடு pacāṭu, பெ. (n.)

   மாசு (யாழ்ப்.);; film, as in the eye;

 speck, as in a gem;

 scum, as on the surface of water.

பசாடுரி-த்தல்

பசாடுரி-த்தல் pacāṭurittal,    4. செ.கு.வி. (v.i.)

   விழியின்தோட்டைவுரித்தல்; to remove film from the eye.

     [மாசாடு → பாசாடு → பசாடு + உரி-,]

 பசாடுரி-த்தல் pacāṭurittal, செ.கு.வி. (v.i.)

   விழியின் தோட்டை உரித்தல் (யாழ்ப்.);; to remove film from the eye.

பசாடை

 பசாடை pacāṭai, பெ. (n.)

பசாடு. (யாழ்ப்.); பார்க்க; see {pašādu}

     [பசாடு → பசாடை]

பசாந்திரியம்

 பசாந்திரியம் pacāntiriyam, பெ. (n.)

   ஓதியமரம்; Indian ash tree

பசானம்

பசானம்āṭaiccampāpacāṉam, பெ. (n.)

பசான். (I.M.P.Tn.383.); பார்க்க; see {pasān.}

     [பசான் → பசானம்]

   1. அறுதிங்களில் விளையும் சம்பா நெற்பயிர்; a particular type of a paddy of five or six months duration (harvester sometime in January);

     “இந்நெல் அளக்குமிடத்து கார்பாதி பசானம் பாதி அளப்பதாகவும்” (தென்க.தொ.32 பக்-168);

பசான்

பசான் cāakapacāṉ, பெ. (n.)

   1. மேழ (சித்திரை); மாதத்தில் அறுவடையாகும் ஒருவகை நெல்; a kind of paddy harvested in the month of cittirai.

   2. பசான் நெல்லின் அறுவடைக் காலம்;  harvest time of {pasān} paddy

     ‘இராஜராஜ தேவர்க்கு யாண்டு இருபத்தெட்டாவது பசான் முதல்’ (s.i.ii.132.);

மறுவ. கோடைச்சம்பா.

பசாமி

 பசாமி pacāmi, பெ. (n.)

   ஞாழல்;  a species of fragrant tree. different shrubs such as Cassia jasmine etc. (சா.அக.);

பசார்

 பசார் pacār, பெ.(n.)

   திண்டிவனம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tindivanam Taluk.

     [பசளை-பசர்-பசார்]

பசி

பசி2 paḻpaci, பெ. (n.)

   1. உயிர்த்துன்பம் பன்னிரண்டனுள் ஒன்றாகிய உணவு வேட்கை; hunger, appetite, craving for food, one of {பyir-t-tunbam.v.}

     “பசிப்பிணி யென்னும் பாவி” (மணிமே.11,80);

   2. வறுமை; poverty

     “தொல்பசியறியா” (பெரும்பாண்.253);

   3. தீ (யாழ்.அக.);; fire.

பசிக்கொடுமையின் அடைமொழிகள்

     “ஆடுபசி யுழந்தநின் னிரும்பே ரொக்கலொடு நீடுபசி யொராஅல்வேண்டி” (பொருந.61 -62);

     “ஒல்குபசி யுழந்த வொடுங்குநுண் மருங்குல்” (சிறுபாண்.135);

     “அழிபசி வருத்தம் வீட” (சிறுபாண்.140);

     “பழம்பசி கூர்ந்தவெம் மிரும்பே ரொக்கலொடு” (சிறுபாண்.25);

     “ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரச் சோறடு குழிசி” (சிறுபாண்.365);

     “ஈன்றுகாண் மடிந்த பிணவுப்பசி கூர்ந்தென” (நற்.29-3);

     “ஒய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி” (நற்.43-3);

     “பசிஅட முடங்கிய பைங்கண் செந்நாய்” (நற்.103-6);

     “கயந்தலை மடப்பிடி உயங்கு பசி களைஇயர்”(நற்.137-6);

     “உறுபசிக் குறுநரி குறுகல் செல்லாது” (நற்.164.9);

     “ஊன்தின் பிணவின் உட்குபசி களைஇயர்” (நற்.322-5);

     “களரிப் புளியிற் காய்பசி பெயர்ப்ப” (நற்.374-3);

     “வாழி ஆதன்! வாழி அவினி பசியில் ஆகுக! பிணிசேண் நீங்குக” (ஐங்குறு.5-2);

     “கரும்பசி களையும் பெரும்புனல் ஊர” (ஐங்குறு.65-2);

     “பசிதின வருத்தும் பைதறு குன்றத்து” (ஐங்குறு.305-2);

     ‘மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே” (ஐங்குறு.497-3);

க. பசி. ம. பயி.

     ‘பசிக்குக் கறி வேண்டாம்; தூக்கத்திற்குப் பாய்வேண்டாம்’ (பழ.);

     ‘பசிருசி அறியாது, தூக்கம் சுகம் அறியாது’ (பழ.);

பசி-த்தல்

பசி-த்தல் pakpacittal,    11.செ.கு.வி. (v.i.)

   பசிகொள்ளுதல்; to be hungry.

     “பசிப்புயி ரறியாப் பான்மைத்து” (மணிமே.14,58.);

     “பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ” (நாலடி. 320-2);

     “பண்ணழிந்து ஆர்தலின் நன்று பசித்தல்” (நான்மணி.15-3);

     “நாணில் வாழ்க்கை பசித்தலில் துவ்வாது” (முதுமொழி. 33–1);

க. பசி, ம. பயிக்க

     [பசி → பசி-,]

     ‘பசிவந்தால் பத்தும் பறக்கும்’ (பழ.);

     ‘பசித்தவன் தின்னாததும் இல்லை பகைத்தவன் சொல்லாததும் இல்லை’. (பழ.);

பசிகரி.

 பசிகரி. pacikari, பெ. (n.)

   எள்; sesame.

பசிகொள்ளல்

 பசிகொள்ளல் pacikoḷḷal, பெ. (n.)

   பசியெடுத்தல்; getting hunger or appetite.

     [பசி + கொள்ளல்]

பசிக்குறைவு

 பசிக்குறைவு paḻpacikkuṟaivu, பெ. (n.)

   பசியில்லாதிருத்தல்; loss of appetite or poor appetite.

     [பசி + குறைவு]

பசிக்கொடுமை

 பசிக்கொடுமை pacikkoṭumai, பெ. (n.)

   பசியால் ஏற்படும் கொடுமை; severity of hunger. (சா.அக.);

     [பசி + கொடுமை]

பசிக்கொட்டாவி

 பசிக்கொட்டாவி pacikkoṭṭāvi, பெ. (n.)

   பசியால் உண்டாகும் கொட்டாவி; yawning from hunger.

     [பசி + கொட்டாவி]

பசிச்சோர்வு

 பசிச்சோர்வு paciccōrvu, பெ. (n.)

   பசியால் ஏற்படும் சோர்வு; ithering through hunger.

     [பசி + சோர்வு]

பசிதகனி

 பசிதகனி pacitakaṉi, பெ. (n.)

   சோறு. (சங்.அக.);; cooked rice.

     [பசி + தகனி]

பசிதம-த்தல்

பசிதம-த்தல் pacitamattal,    3. செ.கு.வி. (v.i.)

   பசியாறுதல்; a appearing hunger.

     [பசி + தம-,]

பசிதம்

 பசிதம் pacitam, பெ. (n.)

   உணவு வேட்கை; appetite. (வின்.);

     [பசி → பசிதம்]

பசிதாகம்

 பசிதாகம் pacitākam, பெ. (n.)

   சோறும் தண்ணீரும் வேண்டல்; hunger and thirst; a craving for food and water.

     [பசி + தாகம்]

பசிதாளல்

 பசிதாளல் pacitāḷal, பெ. (n.)

   பசிபொறுத்தல்; to endure or put up with hunger, to tolerate hunger, keeping wolf from the door.

     [பசி + தாளல்]

பசிதின்னுதல்

 பசிதின்னுதல் pacitiṉṉutal, பெ. (n.)

   பசிவருத்துகை; suffering caused by hunger.

     [பசி + தின்னுதல்]

     ‘பசியாமல் இருக்க மருந்து கொடுக்கிறேன் பழையது இருந்தால் போடு என்றானாம்.’ (பழ.);

பசிது

பசிது pacitu, பெ. (n.)

   பசியது; that which is green.

     “பசிது கரிதென்று” (திவ்.இயற்.3.56.);;

க. பசிது

     [பசுமை–பசிது]

பசிதுாண்டி

 பசிதுாண்டி paciṇṭi, பெ. (n.)

   பசியை விரைவாக்குவது; drug that stimulater hunger.

     [பசி + துரண்டி]

பசித்தாக்கம்

 பசித்தாக்கம் pacittākkam, பெ. (n.)

   பசிக்கொடுமை; suffering from hunger.

     [பசி + தாக்கம்]

     ‘பசிக்குப் பனம்பழம் தின்றால் பித்தம்பட்டயாடு படட்டும்’. (பழ.);

பசித்துவாழ்-தல்

பசித்துவாழ்-தல் pacittuvāḻtal,    16. செ.கு.வி. (v.i.)

   எளியவாழ்வு வாழ்தல் (s.i.i.vi.149);; to live in indigent circumstances

     [பசித்து + வாழ்-,]

பசிநாள்

பசிநாள் aṟiyalākiṟatupacināḷ, பெ. (n.)

   பசியையுடைய காலம்;  the time of hungry.

     “பாடிநின்ற பசிநாட்கண்ணே” (புறநா.237-2);

மறுவ: பசிநேரம்.

     [பசி + நாள்]

     ‘பசியுற்ற நேரத்தில் கிடைக்காத பாலும் பழமும் பசியற்ற நேரத்தில் ஏன்?’. (பழ.);

பசிநோய்

பசிநோய் paḻpacinōy, பெ. (n.)

   பசியாகிய நோய்; the hungry as a sick.

     “மாந்தர் பசிநோய் மாற்றக் கண்டாங்கு” (மணிமே.20-32);

     “பேணா மாக்கள் பேசார் பிணித்தோர், படிவநோன்பியர் பசிநோயுற்றோர்” (மணிமே. 28,224.);

     [பசி + நோய்]

பசிந்து

பசிந்து turaṇṭi, பெ. (n.)

   வெண்ணிற முள்ளதும் 15 அங்குலம் வரை வளர்வதுமான கடல்மீன் வகை; a seafish, silvery, attaining 15 in. in length, drepame punctata.

முள் மிகுதியாகக் காணப்படுவதும் வாவல் போலும் உருவமைப்புடையதும் இம்மீன் என அறியலாகிறது.

பசிபடுமருங்கலை

பசிபடுமருங்கலை pacipaṭumaruṅkalai, பெ. (n.)

   பசித்த வயிறு; hungry stomoch.

     “பசிபடுமருங்கலை கசிபு, கைதொழாஅ” (புறநா.260-6);

பசிபட்டினி

 பசிபட்டினி pacipaṭṭiṉi, பெ. (n.)

   உண்ணாது வருந்துகை; hunger and starvation.

     [பசி + பட்டினி]

பசிபட்டினியாயிரு-த்தல்

பசிபட்டினியாயிரு-த்தல் pacipaṭṭiṉiyāyiruttal,    1. செ.கு.வி. (v.i.)

   உண்ணாது வருந்தியிருத்தல்; starving being famished.

     [பசி + பட்டினியாய் + இரு-,]

பசிபொறாதவன்

 பசிபொறாதவன் puṟanāpacipoṟātavaṉ, பெ. (n.)

   பசியைப்பொறுக்கமாட்டாதவன்; one who cannot endure hunger.

     [பசி + பொறாதவன்]

பசிப்பகை

பசிப்பகை pacippakai, பெ. (n.)

   1. பசியை நீக்கும் உணவு; the food to avoid the hungry.

   2. பசியை நீக்கும் வள்ளல்; philanthropist.

     “பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகி” (புறநா.212.7);

     “தன்பகை கடிதலன்றியும் சேர்ந்தோர் பசிப்பகை வல்லவன் மாதோ” (புறநா.400-17.);.

     “நின்பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே” (புறநா.181,10.);

     [பசி + பகை]

பசிப்பகைஞன்

பசிப்பகைஞன் pacippakaiñaṉ, பெ. (n.)

   இரப்போர் பசிதீர்க்கும் வள்ளல்; philanthropist

     “கொடையெதிர்ந்து ஈர்ந்தையோனே பாண்பசிப் பகைஞன்”(புறநா.180, 7);

     [பசி + பகைஞன்]

பசிப்பாழி

பசிப்பாழி pacippāḻi, பெ. (n.)

   உடம்பு; body which is the seat of hunger.

     “பசிப்பாழி மூலமறுப்பார்” (சைவச.பொது.429.); (த.சொ.அக.); (சா.அக.);

     [பசி + பாழி]

பசிப்பிணி

பசிப்பிணி pacippiṇi, பெ. (n.)

   1. பசியாகிய நோய்; hungry as disease.

   2. பசியென்னும் துன்பநோய்; hungry.

     “குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொரு புறங்கடை நிறுத்தும் பசிப்பிணி யென்னும் பாவி” (மணிமே.11.76,80);

     “மக்கள் தேவர் எனஇரு சார்க்கும் ஒத்தமுடிவின் ஒரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல்” (மணிமே.12.18);

     “பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென ஆதிரையிட்டனள் ஆருயிர் மருந்தென” (மணிமே.16, 134);

     “பசிப்பிணி தீர்த்த பாவையை யேத்தி” (மணிமே.28, 234);

     [பசி + பிணி]

பசிப்பிணிமருத்துவன்

பசிப்பிணிமருத்துவன் pacippiṇimaruttuvaṉ, பெ. (n.)

   பசியைத் தீர்க்கும் வள்ளல்; philanthropist.

     “பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமினெமக்கே” (புறநா.173,11);

     [பசி + பிணி + மருத்துவன்]

பசிப்பிணிமருந்து

பசிப்பிணிமருந்து pacippiṇimaruntu, பெ. (n.)

   பசியாகிய நோயைத் தீர்க்கும் உணவு; food, that cure the disease of hunger

     “பசிப்பிணி மருந்தெனும் அங்கையி னேந்திய அமுத சுரபியை” (மணிமே.28,217);

     [பசி + பிணி + மருந்து]

பசிப்பு

பசிப்பு pacippu, பெ. (n.)

   1. பசி; hunger

   2. பசித்தல்; being hungry. (சா.அக.);

     [பசி → பசிப்பு]

பசிமந்தி-த்தல்

பசிமந்தி-த்தல் pacimantittal,    1௦. செ.கு.வி. (v.i.)

   1.பசிக்குறைவுபடல்; dullness of appetite

   2. பசியெடாதிருத்தல்; loss of appetite.

     [பசி + மந்தி_,]

பசிமான்

 பசிமான் pacimāṉ, பெ. (n.)

   அரிமா; lion (சா.அக.);.

     [பசி + மான்]

     [P]

பசிமூட்டல்

 பசிமூட்டல் pacimūṭṭal, பெ. (n.)

   பசியெழுப்பல்; kindling of appetite. (சா.அக.);.

     [பசி + மூட்டல்]

பசியன்

பசியன் paciyaṉ, பெ. (n.)

   பசியுடையவன்; hungry man

     “பசியராயிருக்குமவர்கள் சேறு சமையப் பற்றாமல் வெந்தது கொத்தையாக வாயிலிடுமா போலே” (ஈ.டு.1,3,1.);

     [பசி → பசியன்]

     ‘பசித்தவன் பழங்கணக்குப்பார்த்ததுபோல’ (பழ.);

     ‘பசித்தவனுக்குப் பால் அன்னம் இட்டாற்போல’ (பழ.);

     ‘பசித்தவன் மேல் நம்பிக்கை வைக்கலாமா?’ (பழ.);

பசியம்

 பசியம் paciyam, பெ. (n.)

   கயிறு. (யாழ்.அக.);; rope

பசியாட்டி

பசியாட்டி paḻpaciyāṭṭi, பெ. (n.)

பசித்திருப்பவள்

 hurgy Woman. starving woman,

     “காய்பசி யாட்டி காயசண்டிகை” (மணிமே.19,33.); (சா.அக.);.

     [பசி + ஆட்டி]

ஒநோ. மூதாட்டி

பசியான்

பசியான் paciyāṉ, பெ. (n.)

   பசுமை நிறத்தவன்; dark coloured person.

     “செவ்வாய் பசியாய் பெருங்கருணைத்தெய்வமே”(காஞ்சிப்பு. வலம்புரி. 39.);

     [பசியன் → பசியான்]

பசியாமை

 பசியாமை mūtāṭṭipaciyāmai, பெ. (n.)

   பசியெழாமை; absensce of appetite, non rising of gastric fire.

     [பசி + ஆ(எ.ம.); + மை]

பசியார்

 பசியார் pasiyār, பெ.(n.)

   திண்டிவனம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tindivanam Taluk.

     [பாசி+ஆர்]

பசியாறு-தல்

பசியாறு-தல் paciyāṟutal,    1. செ.கு.வி. (v.i.)

   பசிதணிய உணவு உண்ணுதல்; to appease, hunger

     ‘நீங்கள் பசியாறி விட்டீர்களா?’. (உ.வ.);

     [பசி + ஆறு-,]

பசியாற்று

பசியாற்று1 paciyāṟṟutal,    7. செ.கு.வி. (v.i.)

   உண்டு பசியைத் தணித்தல்; to appease hunger, eat, take food.

     [பசி + ஆற்று-,]

 பசியாற்று2 paciyāṟṟutal,    5. செ.குன்றாவி. (v.t.)

   உண்பித்தல்; to feed ‘

வந்தவர்களைப் பசியற்றி அனுப்பி வைத்தேன்’. (யாழ்ப்.);

     [பசி + ஆற்று-,]

பசியிலைக்கறி

 பசியிலைக்கறி paciyilaikkaṟi, பெ. (n.)

   பச்சிலைக்கறி; dish of greens. (சா.அக.);

     [பச்சிலைக்கறி → பாசிலைக்கறி → பசியிலைக்கறி]

பசியெடாமை

 பசியெடாமை paciyeṭāmai, பெ. (n.)

   பசியெடுக்காதிருத்தல்; non rising of gastric fire.

     [பசி + எடாமை]

பசியெடுதல்

 பசியெடுதல் eṭāmai, பெ. (n.)

   பசியுண்டாகை; feeling hungry.

     [பசி + எடுத்தல்]

பசியெழுப்பல்

 பசியெழுப்பல் eṭuttalpaciyeḻuppal, செ. கு. வி. (v.i.)

   பசியேற்படல்; feeling of hungry, apperence of hunger. (சா.அக.);

     [பசி + எழுபல்]

பசியெழுப்பி

 பசியெழுப்பி pasiyeḻuppi, பெ. (n.)

   பசியைத்தூண்டும் மருந்து; drug that kindles the gastric fire. (சா.அக.);

     [பசி + எழுப்பி]

 பசியெழுப்பி eḻuppipaciyeḻuppi, பெ. (n.)

   பசியைத்தூண்டும் மருந்து; drug that kindles the gastric fire. (சா.அக.);

     [பசி + எழுப்பி]

பசியெழும்பல்

 பசியெழும்பல் eḻuppipaciyeḻumpal, பெ. (n.)

   பசியேற்படல்; feeling hungry.

     [பசி + எழும்பல்]

பசியேப்பம்

 பசியேப்பம் eḻumpalpaciyēppam, பெ. (n.)

   பசி மிகுதியில் உண்டாம் தேக்கெறிவு; belching due to excessive hunger.

     [பசி + ஏப்பம்]

     ‘பசியேப்பக் காரனும் புளியேப்பக் காரனும் கூட்டுப்பயிர் இட்டது போல’ (பழ.);

பசிரி

பசிரி paḻpaciri, பெ. (n.)

   பசளைக் கொடி; creeping purslane.

     “பசரிகைக் கொண்டு,செல்வான்” (உபதேசகா. சிவத்துரோக. 501,);

பசிரிவகை: குதிரைப் பசிரி, பெரும் பசிரி வரட் பசிரி எனத் த. சொ. அக. கூறும்.

மறுவ. பாவிரி. (சூடா. நி.);

     [வயலை → வயிலி → பயிரி → பசிரி]

பசிளசாதி

 பசிளசாதி paciripaciḷacāti, பெ. (n.)

   ஆண்சாதி, நான்குவகையுள் ஒன்று (சாமசாதி);; one of the four classes of men divided according to their lust (சா.அக.);

     [பசிளம் + சாதி]

பசு

பசு pasu, பெ. (n.)

   பால்; milk (சா.அக.);.

     [பி.க → பைசு]

 பசு pasu, பெ. (n.)

   1. ஆ; cow.

   2. எருது; ox.

   3. விடையோரை; rishaba.

   4. வேள்விவிலங்கு; animal meant for sacrifice.

     [Skt. {} → த. பசு.]

பசு-த்தல்

பசு-த்தல் cātipacuttal,    11 செ.கு.வி. (v.i.),

   பசுமையாதல்; to be green.

     “பசுத்து மரகதம் போலே யிருக்கிற மடக்கிளியே” (திவ்.பெருமாள்.தனியன்,3.);

     [பசு-மை → பசு-,]

பசுகுபசுகெனல்

பசுகுபசுகெனல்ālpacukupacukeṉal, பெ. (n.)

பசுமை நிறமாதற்குறிப்பு.

 expr. signigying green appearance;

     “மலைபேரமாட்டாதே பலகால் வர்ஷிக்கையாலே…..பசுகுபசுகு என்றிருக்குமே” (ஈடு. 4,44);

     [பசுகு + பசுகு + எனல்]

பசுகை

 பசுகை eṉalpacukai, பெ. (n.)

   சிறிய விலங்கு (யாழ்.அக.);; little animal.

பசுக்கற்கதவு

பசுக்கற்கதவு pacukkaṟkatavu, பெ. (n.)

பலகைகளால் இணைக்கப்பட்ட கதவு; (இ.வ.); (கட்டட. நாமா. 22.);

 batten door.

     [பசுக்கல் + கதவு]

பசுக்கற்சன்னல்

பசுக்கற்சன்னல் pasukkaṟsaṉṉal,  katavu,

பெ. (n.);

மரத்தாற் செய்த கதவுகளையுடைய காலதர் (கட்டட. நாமா. 23.);

 batten window.

     [பசுக்கல் + கதவு]

பசுக்கல்

 பசுக்கல் maṭakkiḷiyētivperumāḷtaṉiyaṉpacumaipacupacukkal, பெ. (n.)

பலகைகளை இணைக்க உதவும் ஆணிவகை; (இ.வ.);

 batten nails

     [பசுக்கல் + ஆணி]

பசுக்காணி

 பசுக்காணி katavupacukkāṇi, பெ.(n.)

   ஒருவகை உயர்ந்த சேலம் வேட்டி; a kind of superior salem-cloth.

     [பசு + காணி]

பசுக்கோசுரம்

 பசுக்கோசுரம் kāṇipacukācuram, பெ. (n.)

   சிறுநாகப்பூ, (சங்.அக.);; iron wood of ceylon;

     [பசு + கோசுரம்]

பசுக்கோல்

 பசுக்கோல்ācurampacukāl, பெ. (n.)

   பலகை யிணைக்கை; battening

     [பசு + கோல்]

பசுங்கண்கடவுள்

பசுங்கண்கடவுள் pacuṅkaṇkaṭavuḷ, பெ. (n.)

   உருத்திரன் (சிவன்);; rudra (sivan);,

     “படரணி அந்திப் பகங்கண்கடவுள்” (கலித்.101-24);

     [பகங்கண் + கடவுள்]

பசுங்கதிர்

 பசுங்கதிர் kaṭavuḷpacuṅkatir, பெ. (n.)

பகங்கதிர்க்கடவுள் (பிங்.); பார்க்க; see {pasu-si. kadr-k-kagaw}

     [பசுமை + கதிர்]

பசுங்கதிர்க் கடவுள்

பசுங்கதிர்க் கடவுள் kaṭavuḷ, பெ. (n.)

   திங்கள்; moon, as cool rayed.

     “பசுங்கதிர்க் கடவுள் யோகம் பழிப்பற நுனித்து” (சீவக.62,);

     [பசுமை + பசும் + கதிர் + கடவுள்]

பசுங்கதிர்த்தே

 பசுங்கதிர்த்தே kaṭavuḷpacuṅkatirttē, பெ. (n.)

பசுங்கதிர்க் கடவுள் (சூடா.); பார்க்க; see {pasuri (adj.); }

     [பசு + கதிர் + தே]

பசுங்கம்பளம்

பசுங்கம்பளம் tēpacuṅkampaḷam, பெ. (n.)

   பசுமையான கம்பளம்; wollen as in the colou of green

     “பொன்னி னூசி பசுங்கம் பளத்து” (மணிமே.29, 17);

     [பசுமை + கம்பளம்]

பசுங்கரந்தை

பசுங்கரந்தை kampaḷampacuṅkarantai, பெ. (n.)

   1. கரந்தை வகை.

 a kind of basil.

   2. ஒரு வகை கரந்தை; a kind of sweet basil.

     [பசுமை + கரந்தை]

பசுங்கருப்பூரம்

பசுங்கருப்பூரம் karantaipacuṅkaruppūram, பெ. (n.)

பச்சைக் கருப்பூரம் பார்க்க; see {baccal-kkaruppira}

     “தூநறும் பசுங்கர்ப்பூரச் கண்ணத்தால்” (பெரியபு. தடுத்தாட்.17.);.

     [பசுமை + கருப்பூரம்]

பசுங்கரை

 பசுங்கரை karuppūrampakaṅkarai, பெ. (n.)

   சிற்றூர் நிலங்களைப் பொதுவில் வைத்து நுகரும் நிலவுரிமைமுறை; a kind of tenure in which lands are enjoyed in common by coparceners of a village, who may either cultivate them in common or parcel them out from time to time amongst themselves for their several cultivation, the right of each Iving to a definite proportion of the whole but not to anyone field or piece of land in particular, opp. to {arudi -k-karai.}

     [பசுமை → பசு + கரை]

பசுங்கறி

பசுங்கறி kaḷaipacuṅkaṟi, பெ. (n.)

   பசிய மிளகு சேர்த்த உணவு; food prepared with tender pepper.

     “கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி” (மலைபடு,521);

     [பசுமை + கறி]

பசுங்கலம்

பசுங்கலம் kalpacuṅkalam, பெ. (n.)

   பசுமையான மட்கலம்; raw earthen vessel

     “ஈர்மண் செய்கை நீர்படு பகங்கலம்” (நற்.308, 9);

     “பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல” (குறுந்:29,);

பசுங்கல்

பசுங்கல் karaipacuṅkal, பெ. (n.)

   சந்தனம் அரைக்கும் கல்; stone for grinding sandal

     “பேருலகம் பசுங்கல்லாக” (கம்பரா.கடல் காண்.10.);.

     [பசுமை + கல்]

பசுங்களை

 பசுங்களை pacuṅkaḷai, பெ. (n.)

   பச்சைக்கல். (யாழ்.அக.);; emerald.

     [பசுமைகல் → கள் → களை]

பசுங்கழை

பசுங்கழை kuṟunpacuṅkaḻai, பெ. (n.)

   பசுமையான மூங்கில்; greenish, enriched bamboo.

     “கான யானை கைவிடு பசுங்கழை” (குறுந்:54, 3);

     “விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்” (குறுந்:74, 2);.

     “குவையுடையப் பசுங்கழை தின்ற கயவாய்ப் பேதையானை” (குறுந்.179, 5);

     [பசுமை + கழை]

பசுங்காஞ்சொறி

 பசுங்காஞ்சொறி kāṭupakaṅkāñcoṟi, பெ. (n.)

   சிறுகாஞ்சொறி; climbing nettle.(சா.அக.);

     [பகமை → பசு + காஞ்சொறி]

பசுங்காடு

பசுங்காடு kaṟipacuṅkāṭu, பெ. (n.)

   பசுமையான அடர்த்தியான காடு; greenish; thickest forest.

     “முதைபடு பசுங்காட்டரிற்பவர் மயக்கி” (அகநா.262-1);

     [பகம் →மை + காடு)

பசுங்காய்

பசுங்காய் pakaṅkāy, பெ. (n.)

   1. முற்றாத தவசம்; immature paddy or other grain in the ear.

   2. இளங்காய்; unripe fruit.

   3. பாக்குவகை; a kind of arecanut.

     “இன்னீரிளம்பசுங் காயும்” (சீவக. 2473);.

     “கோடை யுதிர்த்த குவிகட் பசுங்காய்” (அகநா.315, 11);

     “பூவொடு வளர்த்த மூவாப் பசுங்காய்” (அகநா.335, 23 );

     “புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்”. (அகநா.363, 6);

     [பசுமை + காய்]

பசுங்கிளி

பசுங்கிளி kāypacuṅkiḷi, பெ. (n.)

   பச்சைக்கிளி; green parrot

     “பசுங்கிளிச் சிறையென” (பெருங். இலாவாண.3.62.);

     [பசுமை + கிளி]

பசுங்கிளிமாது

 பசுங்கிளிமாது kiḷipacuṅkiḷimātu, பெ. (n.)

   சங்கினிச் சாதியாகிய பெண்; நான்கு சாதியாருள் ஒருவகை; one of the four classes of women dirvided accorting to their lust i.e {sangini-} the second of the four (சா.அக.);

     [பசு-மை + கிளி + மாது]

பசுங்கிளை

 பசுங்கிளை mātupacuṅkiḷai, பெ. (n.)

   பச்சைக்கிளை; green young branch (சா.அக.);

     [பசு-மை + கிளை]

பசுங்கீரை

பசுங்கீரை pasuṅārai, பெ. (n.)

   1. பச்சையிலைக்கறி; vegetable greens,

   2. ஒரு வகை பச்சைப்புல்; a kind of green glass.(சா.அக.);

     [பசு-மை + கீரை]

பசுங்குடி

பசுங்குடிāraipacuṅkuṭi, பெ. (n.)

   1. தகுதியான குடி; respectable family.

   2. உழவன்; hus-bandman.

     [பசுமை + குடி]

பசுங்குடை

பசுங்குடை kuṭipacuṅkuṭai, பெ. (n.)

   1. பனங்குருத்தாற் செய்த பூங்குடலை; flower basket as it made form tender palm leaves.

     “இரும்பமை பகங்குடை பலவுடன் பொதிந்து” (புறநா.168.2);

     “அவல் வகுத்த பசுங்குடையான்” (புறநா:352.3);

   2. பனையோலையால் செய்யப்பட்ட கிண்ணம் போன்ற உண்கலம், தொன்னை; a kind of cup made of palmleaves.

     “பயிலிதழ்ப் பகங்குடை” (அகநா:30, 10);

     [பசுமை + குடை]

பசுங்குழவி

பசுங்குழவி kuṭaipacuṅkuḻvi, பெ. (n.)

   இளங்குழந்தை; tender child.

     “ஒருவாத பசுங்குழவியுடனிருத்தி” (திருவிளை. பழியஞ். 7.);

     [பசுமை + குழவி]

பசுங்குளவி

 kuḻvipacuṅkuḷavi,

பெ. (n.);

   மலைப்பச்சை என்னும் நறுமணச் செடியின் இலைகள்; fragranced leaves of malai-paccai shrub,

     “பெருந்தண் கெல்லினச் சிறுபகங்குளவி கடிபதங் கமழும் கூந்தல்” (நற்.346, 9);

     [பசுமை + குளவி]

பசுங்கூட்டு

பசுங்கூட்டு1 pasuṅāṭṭu, பெ. (n.)

   நறுமணக் கலவை; perfume of sandal and other fragrant ingredients.

     ‘நறிய சாத்தம்மியிலே கத்தூரி முதலிய பகங்கூட்டரைக்க’ (நெடுநல். 50, உரை); [பசுமை + கூட்டு]

 பசுங்கூட்டு2 pasuṅāṭṭu, பெ. (n.)

   சுண்ணாம்புச் சாந்து; ground lime,

     “ஆட்டாண்டு தோறும் பசுங்கூட்டாலே ஜீர்ணேத்தாரம் பண்ண வேண்டுகையாலும்” (s.i.i.v.ii,501.);

     [பசுமை + கூட்டு]

பசுங்கூறு

 பசுங்கூறு pacuṅāṟu, பெ. (n.)

பசுங்கரை பார்க்க; see paśurikarai

     [பசுமை + கூறு]

பசுங்கொடி

 பசுங்கொடி pacuṅkoṭi, பெ. (n.)

   அறுகு (மலை);; bermuda grass.

     [பசுமை + கொடி]

பசுங்கொண்டி

 பசுங்கொண்டி pacuṅkoṇṭi, பெ. (n.)

   வெள்வேல்; foreign white sundra. (சா.அக.);

     [பசுமை + கொண்டி]

பசுங்கொத்தான்

 பசுங்கொத்தான் koṇṭipacuṅkottāṉ, பெ. (n.)

   கொற்றான்; baloon wine.

மறுவ. முடக்கத்தான், முடக்கொத்தான், முடக்கற்றான், இந்திரவல்லி,

     [பசுமை + கொற்றான் → கொத்தான்]

பசுங்கோரை

 பசுங்கோரை koṟṟāṉcuṅārai, பெ. (n.)

   புல் வகை; a kind of Sedge.

     [பசுமை + கோரை.]

பசுங்கோலா

பசுங்கோலாāraipacuṅālā, பெ. (n.)

   பச்சைநிறமானதும் கரும்புள்ளி கலந்ததும் இரண்டடிவரை வளரக்கூடியதுமான மீன் வகை; garfish, green dotted with black, attaining 2ft in length, belong annulata.

     [பசுமை + கோலா]

பசுண்டி

 பசுண்டிālāpacuṇṭi, பெ. (n.)

   சீரகம் (மலை.);; cumin.

பசுத்தக்காளி

 பசுத்தக்காளி pacuttakkāḷi, பெ. (n.)

   தக்காளி வகை (வின்.);; a shrub of the physalisgenus.

     [பசு + தக்காளி]

பசுநா

 பசுநா nākkupacunā, பெ. (n.)

 perh.

பிராய். (சூடா.); பார்க்க; see {piray} paper tree

     [பசுமை + நா]

பசுநாகம்

 பசுநாகம் narampupacunākam, பெ. (n.)

   வில்வமரம்; bilva tree. (சா.அக.);.

     [பசுமை + நாகம்]

பசுநாக்கி

 பசுநாக்கி nākampacunākki, பெ. (n.)

   ஒரு வெண்ணிறமான நாக்குமீன்; white indian sole fish. (சா.அக.);

     [மறுவ: பகநா, பசுநாக்கிலை.]

     [பகமை + நாக்கு.]

பசுநிலா

பசுநிலா nāpacunilā, பெ. (n.)

   தண்ணிய நிலவொளி; moon light

     “பசுநிலா விரிந்த பல் கதிர் மதியில்” (அகநா.57-11);

     [பசுமை + நிலா]

பசுநுணலை

 பசுநுணலை nilāpacunuṇalai, பெ. (n.)

   பச்சைத் தவளை; green frog. (சா.அக.);

     [பசுமை + நுணலை]

பசுநெய்

பசுநெய் nuṇalaipacuney, பெ. (n.)

   குளிர்ந்த நறுநெய்; perfumed oil used by women, for smoothing the body, in ancient times.

     “பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை”. (நற்.40, 8);

     [பசும் + நெய்]

பசுந்தடி

பசுந்தடி takkāḷipacuntaṭi, பெ. (n.)

   பச்சை ஊன்தசை; piece of raw meat.

     “விசும்பாடெருவை பசுந்தடி தடுப்ப” (புறநா.64-4);

     [பசுமை + தடி-பசுந்தடி]

பசுந்தண்டு

பசுந்தண்டு pacuntaṇṭu, பெ. (n.)

     “குவளைப் பூவின் தண்டு கொண்டு”

 greenish stem of {kuvalai} flower.

     “பச்சைக் குவளைப் பசுந்தண்டு கொண்டு” (பரிபா.11-102);

பசுந்தமிழ்

 பசுந்தமிழ் paripāpacuntamiḻ, பெ. (n.)

   செந்தமிழ்; refined tamil.

     ‘இதனைப் பசுந்தமிழாற் சொல்லின்’

     [பசுமை + தமிழ்]

பசுந்தரை

 பசுந்தரை tamiḻpacuntarai, பெ. (n.)

   புற்றரை; grassy ground, Verdant field.

     [பசு-மை + தரை]

பசுந்தழைப்பால்

 பசுந்தழைப்பால் taraipacuntaḻaippāl, பெ. (n.)

   பச்சைத் தழையின் சாறு; juice of green leaves, herbs etc. (சா.அக.);

     [பசும் + தழை + பால்]

பசுந்தாளெரு

 பசுந்தாளெரு urampacuntāḷeru, பெ. (n.)

   தழையுரம் (இ.வ.);; green leaves, used as manure.

     [பசுந்தாள் + எரு]

பசுந்தாள்உரம்

பசுந்தாள்உரம் pacuntāḷuram, பெ. (n.)

   1. தழைக்காக வளர்க்கப்பட்ட பயிரை அந்த நிலத்திலேயே உழுது சேர்க்கும் உரம்; green manure.

   2. நாற்று நடுவதற்கு முன்னால் சேற்று நிலத்தில் பல்வேறு இலைதழைகளைப் போட்டு உரமாக்குதல்; to make green manure before the transplantation in the field. (பகந்தாள் + உரம்);

பசுந்துணி

பசுந்துணி erupacuntuṇi, பெ. (n.)

   பசிய தசைத்துண்டம்; piece of raw meat.

     “அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணி” (சிலப்.20-34);

     [பசுமை + துணி]

பசுந்துளவினவை

பசுந்துளவினவை pacuntuḷaviṉavai, பெ. (n.)

   பசிய துளவமாலை; green coloured holibasil garland.

     “கள்ளணி பசுந்துள வினவை” பரிபா.15-54)

பசுபதி

 பசுபதி basubadi, பெ. (n.)

   சிவன்; God.

     [Skt. {}-pati → த. பசுபதி.]

பசுபதிநாயனார்

பசுபதிநாயனார் pacupupakapacuppupacupatināyaṉār, பெ. (n.)

   அறுபத்துமூவருள் ஒருவர்; a canonized {Šaivasaint} one of 63, {nayanmar.}

     [பசுபதி + நாயனார்]

மறுவ: உருத்திர பசுபதியார்.

     “நீடுமன்பினி லுரபத்திர மோதிய நிலையால் ஆடுசேவடி யருகுற அணைந்தனரவர்க்குப் பாடு பெற்றசீ ருருத்திர பசுபதி யாராங் கூடு நாமமு நிகழ்ந்தது குவலயம் போற்ற” என்பது பெரியபுராணம்.

பசுப்பு

பசுப்பு neypacuppu, பெ. (n.)

   1. பசுமை; greenness;

     “ஆற்றங்கரைப் பகத்தானக்கரையோ டிக்கரையாய்த் தோற்றும் பசுப்பைத் தொடர்வுறுமே” (பாடு.29, நெஞ்சிற்.);

   2. பசுமை கலந்த மஞ்சள் நிறம் (நாநாரத்த.674.);; greenish yellow. தெ. பசுபு (பக-பசுப்பு);

பசுமஞ்சள்

பசுமஞ்சள் ulakampacumañcaḷ, பெ. (n.)

   மஞ்சள் வகை; a kind of turmeric

     “சிறுபசுமஞ்ச ளொடு நறுவிரை தெளித்து” (திருமுருகு.235);

     [பசுமை + மஞ்சள்]

பசுமண்

 பசுமண் mañcaḷpacumaṇ, பெ. (n.)

   கிளியின் எச்சம்; parrots excreta.(சா.அக.);

பசுமண்கலம்

பசுமண்கலம் cāakapacumaṇkalam, பெ. (n.)

   பச்சைமண் பாத்திரம்; an burnt clay vessel.

     “பசுமண் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று” (குறள்.660);

     [பசுமை + மண் + கலம்)

பசுமந்தம்

 பசுமந்தம் kalampacumantam, பெ. (n.)

   வேம்புமரம் (வேப்பமரம்);; neem tree (சா.அக.);

பசுமயில்

பசுமயில் cāakapacumayil, பெ. (n.)

   பசுமை கலந்த பொன்னிறமான மயில்; greenish golden coloured peacock.

     “பழனக் காவிற் பசுமயிலாலும்” (பதிற்றுப்.27, 8);

     [பசுமை-பசும் + மயில்]

பசுமரல்

பசுமரல் mayilpacumaral, பெ. (n.)

   பசியநிறமுடைய மரல் என்னும் ஒருவகைக் களைக் கொடி; a shrub weed.

     “பருவிலைக் குளவியோடு பசுமரல் கட்கும்” (குறுந்.100, 2.);

பசுமருந்து

 பசுமருந்து pacumaruntu, பெ. (n.)

   பச்சிலைகளாலான மருந்து (வின்.);; medicine prepared from herbs.

     [பசுமை + மருந்து]

ஒருகா. பச்சிலைமருந்து

பசுமலர்

 பசுமலர் paccilaimaruntupacumalar, பெ. (n.)

   அப்போது பறித்தமலர்; undried, fresh flower. (சா.அக.);

     [பகம் + மலர்]

பசுமலைக் குழலூற்று

பசுமலைக் குழலூற்று kuḻlūṟṟu, பெ. (n.)

   தமிழ் மருந்துகளில் துணைச் சரக்காகப் பயன்படும் பேரோசனை; an unknown drug forming one 120 kinds of natural substances in tamil medicines. (சா.அக.);

     [பசும் + மலை + குழலூற்று)]

பசுமிளை

 பசுமிளை pacumiḷai, பெ. (n.)

   பசிய காவற்காடு; thickest forest as fenced enclosure.

     [பசு-மை-பசு + மிளை]

பசுமுன்னை

பசுமுன்னை pacumuṉṉai, பெ. (n.)

   முன்னைவகை (பதார்த்த, 388.);; dusky firebrand tree.

     [பசு-மை → பசு + முன்னை]

பசுமுன்னைக்கீரை

 பசுமுன்னைக்கீரை muṉṉaipacumuṉṉaikārai, பெ. (n.)

   நறுமுன்னை; dusky fire brand tree. (சா.அக.);

     [பசுமுன்னை + கீரை]

பசுமுன்னைவேர்

 பசுமுன்னைவேர்āraipacumuṉṉaivēr, பெ. (n.)

   உணவில் விருப்பத்தை உண்டாக்கும் பசுமுன்னையின் வேர்; the root of {pašumuņņai} inducimg appetite of craving for food.

     [பசுமுன்னை + வேர்]

பசுமுல்லை

 பசுமுல்லை pacumullai, பெ. (n.)

   ஒரு வகை முல்லைக் கொடி; a kind of jasmine (சா.அக.);

     [பசு-மை-பசு + முல்லை]

பசுமூலி

பசுமூலி pacumūli, பெ. (n.)

   1. பச்சைமூலாகை; any green herbacious plant

   2. பச்சைப்புல்; green grass.

     [பசு-மை + மூலி]

பசுமெழுக்கு

பசுமெழுக்கு mūlipacumeḻukku, பெ. (n.)

   புதுமேழுக்கு; new polishing for mud floor.

     “பாகு குத்த பசுமெழுக்கில்” (பட்டினப்.166.);.

     [பசு-மை + மெழுக்கு]

பசுமை

பசுமை meḻukkupacumai, பெ. (n.)

   1. பச்சைநிறம் (திவா.);; greenness, verdure

   2. குளிர்ச்சி (அகநா.57.);

 coolness moistness.

   3. இளமை; (தெ.க.பசி.);

 youth, tenderness

     “பசுந்தாட்பாம்பினாற்புரி நூல்” (திருவிளை.திருவால. 20);

     ‘பசுங்காய்’

   4. அழகு (திருநூற்.1.);; elegance, beauty, pleasantness

   5. புதுமை. (பட்டினப். 166.);. க.பசிமெ.ம.பசீம.

 newness, freshness, rawness

   6. சாரம் (யாழ்.அக.);; essence, essential part of a thing.

   7. நன்மை (காஞ்சிப்பு.நாட்டுப். 70);; good, advantage.

   8. செவ்வி (யாழ்.அக.);; season, righttime

     “பசுந்தாமரைத்தாள்” (திருநூற், 23.);

   9. உண்மை; truth reality

     “உள்ள பசுமை சொல்லு” (வின்.);

   10. பசுமைகலந்த பொன்னிறம்; greenish yellow

தெ. பசிமி.

   11. செல்வம் (யாழ்.அக.);; easy circumstances, prosperity.

   12. சால்வை வகை; cashmere shawl; (வின்.);

   13. மயிர் (அக.நி);; hair

     [பக-பசுமை]

பசுமைப்புரட்சி

 பசுமைப்புரட்சி pakapacumaipacumaippuraṭci, பெ. (n.)

   புதுமை முறைகளால் குறுகிய காலத்தில் அதிக விளைச்சல் ஏற்படும் வகையில் வேளாண்மையில் நடக்கின்ற பெரும்மாற்றம்; great change that took place with in a short period in agriculture resulting in large yields; green revolution. [பசுமை + புரட்சி]

பசுமைலையடிமண்

 பசுமைலையடிமண் pacumailaiyaṭimaṇ, பெ. (n.)

   மஞ்சட்கல்; a kind of yellow stone forming mountains of hills. (சா.அக.); [பசுமலை + அடிமண்]

பசுமைவெளியுப்பு

 பசுமைவெளியுப்பு puraṭcipacumaiveḷiyuppu, பெ. (n.)

   வளையலுப்பு; a kind of medicinal salt, glass gall (சா.அக.);

மறுவ. வளையலுப்பு.

     [பசுமை + வளை (வெளி);யல் + உப்பு]

பசும்படி

பசும்படி paṭṭupacumpaṭi, பெ. (n.)

   1. பச்சிலை களைக் கொண்டு செய்யும் மருந்து; a coarse medicine prepaed from greens.

   2. மஞ்சள் மங்குத்தான்; yellow magoostan. (சா.அக.);

     [பசுமை-பசும் + படி]

பசும்பதம்

 paṭipacumpatam,

பெ. (n.);

   1. உணவுக்குரிய பொருள்கள்; raw material for food.

     ‘பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும்’ (பட்டினப். 2 0 3,உ ரை.);

   2. இளம்பருவம்; infancy childhood

     ‘பாளைப் பசும்பதத்தும்’

மறுவ. அரிசியும் கறியும்.

விளைந்த நெல்லும் பறிக்குங் காய்களும் அரியும் கறியுமென்று பெயர் பெறும் எனத் (த.சொ.அக.); கூறும்.

     [பசுமை-பகம் + பதம்]

பசும்பட்டு

பசும்பட்டு periyapurāṇampacumpaṭṭu, பெ. (n.)

   நேர்த்தியான பட்டு; fine silk

     “உரித்தவுரி பசும்பட்டா” (கோயிற்பு. பதஞ்சலி.32.);

     [பசுமை – பசும் + பட்டு]

பசும்பயறு

 பசும்பயறு patampacumpayaṟu, பெ. (n.)

   சிறுபறு (பிங்,);; green gram.

மறுவ. பாசிப்பயறு

     [பசுமை-பகம் – பயறு]

பசும்பழப்பாகல்

பசும்பழப்பாகல் payaṟupacumpaḻppākal, பெ. (n.)

   அன்று பழுத்த பழத்தையுடைய பாகற்கொடி; balsam creeper having.

     “பலவுக்காய்ப் புறத்த பசும்பழப்பாகல்” (அகநா.255-13);

     [பசுமை + பழம் + பாகல்]

பசும்பாண்டில்

பசும்பாண்டில் pākalpacumpāṇṭil, பெ. (n.)

   மணிகள் அழுத்திய பொன்னால் இயன்ற பாண்டில் என்னும் அணிகலன்; an ornament made by gold and gems.

     “தபாலம் பசும் பாண்டில் காசுநிரை அல்குல்” (ஐங்.310.);

     [பசுமை-பசும் + பாண்டில்]

பசும்பாம்பு

பசும்பாம்பு pāṇṭilpacumpāmpu, பெ. (n.)

   பச்சைப்பாம்பு; greenish snake,

     “சினைப்பசும்பாம்பின் சூன் முதிர்ப்பன்ன” (குறுந். 35-2);

     [பசு-மை + பாம்பு]

பசும்பாவை

பசும்பாவை pāmpupacumpāvai, பெ. (n.)

   சிறியபசிய விளையாட்டுப்பாவை; play-thing, like a doll prepared by green leaves.

     “சிறுபகம் பாவையும் எம்மும் உள்ளார்” (குறுந்:278, 3);

     [பசுமை + பாவை]

பசும்பிடி

பசும்பிடி pāvaipacumpiṭi, பெ. (n.)

   பச்சிலைமரம்; mysore gamboge.

     “பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து” (பதிற்றுப்.81-25);

     “பசும்பிடி வகுளம்” (குறிஞ்சிப்,70.);

     “பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து” (பதிற்றுப்.81-25);

     “பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாயாம்பல்” (பரிபா.19-75);

மறுவ. அறுகி

     [பசுமை + பிடி]

பசும்பிறப்பு

பசும்பிறப்பு piṭipacumpiṟappu, பெ. (n.)

சமணமதங் கூறும் அறுவகைப் பிறப்புக்களுள் மூன்றாவது; (jaina.);

 the third of six kinds of birth,

     ‘பசும்ம் பிறப்புஞ் செம்ம் பிறப்பும்’ (மணிமே.27, 151);

     [பசுமை + பிறப்பு]

பசும்புண்

பசும்புண் piṟappupacumpuṇ, பெ. (n.)

   புதுப்புண்; green wound.

     “மெய்யது வியரே மிடற்றது பசும்புண்” (புறநா.100.);

     [பசுமை + புண்]

பசும்புற்றரை

 பசும்புற்றரை pulpacumpuṟṟarai, பெ. (n.)

   பசுமையான புற்கள் நிரம்பிய தரை (சூடா.);; beautiful lawn.

மறுவ. சாட்டுவலம்.

     [பசும்புல் + தரை]

பசும்புல்

பசும்புல் puṇpakampul, பெ. (n.)

   1. பச்சைப்புல்; green grass.

     “பசும்புற் றலைகாண் பரிது” (குறள்.16);

   2. விளைபயிர் (பிங்.);,

 growing crop.

     [பசு-மை + புல்]

பசும்பூ

 பசும்பூ taraipacumpū, பெ. (n.)

   பச்சைப்பூ; green flower. (சா.அக.);

     [பசு-மை + பூ]

பசும்பூணவை

பசும்பூணவை vaḻutipacumpūṇavai, பெ. (n.)

பொன்னிறமுடைய திருமால்; {Thirumal}

 have a fine gold colour.

     “பாம்பு படிமஞ் சாய்த்தோய் பசும்பூணவை” (பரிபா.4-47);

பசும்பூண்பாண்டியன்

பசும்பூண்பாண்டியன் pūpacumpūṇpāṇṭiyaṉ, பெ. (n.)

   ஒரு பாண்டிய அரசன்; a king of {pändiya} kingdom,

     “கோழி வாகைப்பறந்தலைப் பசும்பூண் பாண்டியன் வினைவலதிகன்” (குறுந். 393-4); “பலர்புகழ் திருவிற் பகம்பூண் பாண்டியன்” (அகநா.338, 5);

     “வாடாப் பூவிற் கொங்கரோட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன்” (அகநா.253, 5); “செல்லா நல்லிசை விசும்பிவர் வெண்குடைப் பசும்பூண் பாண்டியன்” (அகநா.162-21); [பசும்பூண் + பாண்டியன்]

பசும்பூண்பொறையன்

பசும்பூண்பொறையன் pāṇṭiyaṉpacumpūṇpoṟaiyaṉ, பெ. (n.)

   அகநானூற்றில் குறிப்பிடப்படும் ஒரு சேர அரசன்; a {céra} king mentimed in the {Agananuru}.

     “மறமிகு தானைப் பசும்பூட் பொறையன்” (அகநா.303-4);

     [பசும்பூண் + பொறையன்]

பசும்பூண்வழுதி

 பசும்பூண்வழுதி poṟaiyaṉpacumpūṇvaḻuti, பெ. (n.)

   நற்றிணையில் குறிப்பிடப்பெறும் ஒரு பாண்டிய அரசன்; a {Pandya} king mentioned in the {Narriņai}

     [பசும்பூண் + வழுதி]

பசும்பை

பசும்பை paripāpacumpai, பெ. (n.)

   வணிகர்கள் தோளில் மாட்டிக்கொள்ளும் நீண்டபை வகை; a pedlar’s pack carried over the shoulder.

     “பசும்பை தோளேற்றி” (திருவாலவா.236);

க. பசும்பெ.

     (பசுமை + பை);

பசும்பொன்

பசும்பொன் paipacumpoṉ, பெ. (n.)

   1. மாற்றுயர்ந்த பொன்; fine gold,

     “பாணன் சூடிய பசும்பொற்றாமரை” (புறநா.141);.

   2. கிளிச்சிறை பார்க்க; a kind of gold

     “பசும்பொன் புனைந்த பாவை” (மதுரைக். 410.);

     “நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளான்” (பெரும்பாண்.164.);

     “செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை” (மதுரைக்.410.);

     “பசும்பொன் அவிரிழை பையநிழற்ற” (ஐங்குறு.74-2);

     “திருமணி பொருத திகழ்விடு பசும்பொன்” (பதிற்றுப்.16-15);

     “இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத்து” (பதிற்றுப்.39-14);

     “மணிபொரு பசும்பொன்கொல்” (கலித்.1434);

     “செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன்” (புறநா.9-9);

     “முடி புனைந்த பசும்பொன்னின்” (புறநா-403);

     “மைதீர் பசும்பொன்மேல் மாண்ட மணியழுத்தி” (நாலடி.347-1);

     “வீறுயர் பசும்பொன் பெறுவதிம்மாலை” (சிலப்.8-165);

     “தோமறு பசும்பொன் பூரணகும்பத்து” (சிலப்.5, 152);

     “பாவை விளக்குப் பசும்பொற் படாகை” (சிலப்.5, 154);

மறுவ: ஒட்டற்ற பொன்.

     [பசு-மை + பொன்]

 பசும்பொன் poṉpacumpoṉ, பெ. (n.)

   சிவகங்கை மாவட்டத்திலுள்ள புகழ்மிகு சிற்றுர்; a familier and popular village in Sivagangai Dt.

பசும்பொன்உலகம்

பசும்பொன்உலகம் pacumpoṉulakam, பெ. (n.)

துறக்கவுலகம்; (adj.);

 elysium.

     “பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட” (பரிபா.2, 3);

     [பசும்பொன் + உலகம்]

பசுவா

 பசுவா uppupacuvā, பெ. (n.)

   செம்பழுப்புவண்ணக் கடல்மீன் (செங்கை. மீன);; a kind of red coloured sea fish.

மறுவ. பசுவாமீன்

பசுவாட்டம்

 பசுவாட்டம் pacuvāmīṉpacuvāṭṭam, பெ. (n.)

   பல்லாங்குழியாட்டவகை (யாழ்.அக.);; a game of {pallánkuli}.

     [பசு + ஆட்டம்]

பசுவாமீன்

 பசுவாமீன்āṭṭampacuvāmīṉ, பெ. (n.)

   சிவப்பு நிறமுள்ள கடல்மீன் வகை; a sea-fish rose-coloured.

மறுவ: பசுவா.

     [பசுவா + மீன்]

பசுவின் தக்காளி

பசுவின் தக்காளி takkāḷi, பெ. (n.)

   தக்காளி வகை; a shrub of the physalis genus.

     [பசுமை → பசுவின் + தக்காளி]

பசுவெயில்

 takkāḷipacuveyil,

பெ. (n.);

   மாலைவெயில்; evening sun.

     “செல்சுடர்ப் பசுவெயிறோன்றி யன்ன” (மதுரைக், 411.);

     [பசுமை → பசு + வெயில்]

பசுவிழுதல்

 பசுவிழுதல் mīṉpacuviḻutal, பெ. (n.)

   பல்லாங்குழியாட்டத்தில் ஒரு குழியில் ஆறு அல்லது நாலுகாய்கள் ஒருங்கே தங்குகை; collection of six or four seeds in a hole at a time in the games of {palláñkull}

     [பசு + விழுதல்]

பசுவை

 பசுவை veyilpacuvai, பெ. (n.)

   ஓர் மீன்; red soldier fish,

     [பசு → பசுவை]

பசேரெனல்

 பசேரெனல் pacupacuvaipacēreṉal, பெ. (n.)

   பசுமையாயிருத்தற் குறிப்பு; expr signifing greenness.

     [பசுமை → பசேர் + எனல்]

பசை

பசை1 eṉalpacai, பெ. (n.)

   1. ஒட்டுநிலை; stickiness, tenacity, adhesiveness.

   2. பிசின்; glue, paste, cement

     “பத்தல் பசையொடு சேர்த்தி” (மலைபடு. 26.);

   3. சாரம்; glutinous substance in fruits, roots, etc, sap; juice.

     “பசை நறவின்” (கம்பரா. கங்கைப். 5.);

   4. ஈரம்; moisture.

     “வேரோடும் பசையற” (கம்பரா. தாடகை.3.);

   5. பத்தி; devotion.

     “பரமனை நினை பசையொடு” (தேவா.833.11.);

   6. அன்பு; love, affection

     “வீறிலேன் பசையினாற் றுஞ்சி” (சீவக. 1814.);.

   7. பற்று (யாழ்.அக.);; desire, attachment

   8. இரக்கம்; compassion mercy.

     “பசையுற்றாள்” (கம்பரா.கைகேசி. 42);

   9. பயன்; gain, profit

     ‘வணிகத்தில் சிறிதும் பசையில்லை’

   10. செல்வம்; property, possession

     ‘அவனிடத்திற் உடலிலே பசையில்லை’

   12. முழவின் ஒரு பக்கத்தில் ஓட்டும் பசைப் பண்டம்; paste applied to a drum head to improve the sound.

ம. பச. தெ. பச. க. பச.

     [பசுமை → பசை]

 பசை2 pacaipacaital,    4. செ.கு.வி. (v.i.)

   1. அன்பு கொள்ளுதல்; to be kind, affectionate.

     “பசைந்த சிந்தை”(கம்பரா.கிளைகண்டு.114.);

     “பசைதல் பரியாதார் மேல்” (நாலடி.);

   2. நட்புக் கொள்ளுதல்; to become acquainted.

பசைகாரம்

     “இயல்பிலாதார்கட் பசைந்த துணையும்” (நாலடி.187.);

   3. செறிதல்; to be dense.

     “பசை நிழலாலினை” (காஞ்சிப்பு. பன்னிரு. 275.);

   4. இளகுதல் (வின்.);; to become glutinous, viscows or tempered, as clay (வின்.);

   5. பசை3-(நெல்லை.); பார்க்க; see {pašas}

   6. தாராளமாதல் (வின்.);; to be liberal, benevolent (வின்.);

 பசை3 viṉpacaital, செ.குன்றா.வி. (v.t.)

   1. ஒட்டவைத்தல்; to stick together, unite, fill cracks in iron, by beating

   2. ஒன்று சேர்த்தல்; to gather, get ready, as necessary materials.

     “அரவமும் வெற்புங் கடலும் பசைந்தங்கமுது படுப்ப” (திவ். இயற்.3.64);

   3. பதமாக்குதல்; to temper, as hot iron

     ‘இரும்பைப் பசையும் மட்டை’ (வின்.);

     [பசை → பசை-,]

 பசை4 pacaipacaittal,    11. செ.கு.வி. (v.i.)

   மை முதலியன நன்றாய்ப் பதிதல்; to make a deep impression as ink or paint.

     [பசை → பசை-,]

 பசை5 pacaipacaital,    4. செ.குன்றா.வி. (v.t.)

   பிசைதல் என்பதன் மறுவடிவம்; corr of pisai

     [பிசை → பசை-,]

 பசை6 pacaipacai, பெ. (n.)

   உயவெண்ணெய் (தஞ்.);; a kind of lubricant for carts.

பசைகாரம்

 பசைகாரம் pacaikāram, பெ. (n.)

   காரங்கூட்டிய பசை; gum with pungency.

     [பசை + காரம்]

பசைந்தார்

பசைந்தார் kuḻuukkuṟipacaintār, பெ. (n.)

   நண்பர்; friends,

     “பசைந் தாரிற் றீர்தலிற் றிப்புகுத னன்று” (நான்மணி.15.);

     [பசை3 → பசைந்தார்]

பசைபிடி

 பசைபிடி paṭampacaipiṭi, பெ. (n.)

   வழவழப்பு; slimness, slipperiness.

     [பசை + பிடி]

பசைப்படம்

பசைப்படம் pacaintārpacaippaṭam, பெ. (n.)

   கஞ்சி பூசிப் படமெழுத அணியம் செய்த துணி (பஞ்சதசப்பிர.பக்.2.);; cloth smeared with paste and prepared for painting.

     [பசை + படம்]

பசைமட்டை

 பசைமட்டை piṭipacaimaṭṭai, பெ. (n.)

   காய்ச்சின இரும்பை நீரால் பதமாக்கும் மட்டை (யாழ்.அக.);; piece of palmyra stalk used by blacksmiths in tampering iron. [பசை + மட்டை]

பசைமண்

 பசைமண் maṭṭaipacaimaṇ, பெ. (n.)

   களிமண் (பாண்டிச்.);; clay.

     [பசை + மண்]

பசையடி

 பசையடி maṇpacaiyaṭi, பெ. (n.)

   கஞ்சியிடாமல் முதலில் ஆடையை வெளுக்கை (யாழ்ப்.);; first washing of a new cloth without starching.

     [பசை + அடி]

பசையாப்பு

பசையாப்பு aṭipacaiyāppu, பெ. (n.)

   உலகப் பற்றாகிய தொடர்ச்சி; bond of worldly attachment

     “உன்பாத கமலந்தொழுவேங்கள் பசையாப்பவிழப் பணியாயே” (சீவக.1242.);

     [பசை + யாப்பு]

பசையெடுப்பான்

பசையெடுப்பான் eṉappaṭṭatupacaiyeṭuppāṉ, பெ. (n.)

   கருஞ்சாம்பல், கருப்பு, வெண்மை, செம்பருப்பு ஆகிய வண்ணங்களை உடைய ஒருவகைத் தென்னிந்தியப் பறவை; a multicoloured bird, which is found in South Indian.

இதன் வகைகள்

   1. செம்பழுப்பு வயிற்றுப் பசையெடுப்பான்

   2. கருநீல நெற்றிப் பசையெடுப்பான்.

     [P]

பசைவு

பசைவு pacaivu, பெ. (n.)

   அன்பு; compassion, kindness, affection, attachment

     [பசை1 → பசைவு]

பச்சகானாம்

பச்சகானாம் paccakāṉām, பெ. (n.)

   1. கூத்தாடிப் பையன்; dancing boy.

   2. சிறு துணி; small cloth, as given to boys.

     [U. {} → த. பச்சகானா]

பச்சக்கம்

பச்சக்கம் paccakkam, பெ.(n.)

   நேர்ச்சான்று (பிரத்தியட்சப் பிரமாணம்);; direct proof. perception.

     “மற்ற பச்சக்கமாகும்” (மேருமந்.1320);.

     [Skt. {} → Pkt. paccakka → த. பச்சக்கம்]

பச்சடம்

பச்சடம் pañcatirumukapaccaṭam, பெ. (n.)

பார்க்க; see paccavadam,

     “கற்பனை யலங்கார மாக்கோவை பாடினுங் கன வரிசையொரு பச்சடம்” (திருவேங்.சத.29);

     [பச்சவடம் → பச்சடம்]

பச்சடி

பச்சடி1 paccaṭi, பெ. (n.)

   பச்சையாகவே பாகம் பண்ணிய துவையற்கறி; a culinary preparation from row vegetables, seasmed vegetablese curry. (சா.அக.);.

     [பச்சு → பச்சடி]

 பச்சடி2 mutāpaccaṭi, பெ. (n.)

   1. பச்சையாகவே அணியப் படுத்திய தொடுகறி; a kind of relish generally made of minced vegetables.

     ‘புளிப்பான பச்சடியால்’ (பதார்த்த:1370);

   2. நற்பேறு; prosperity, command of money,

     ‘பச்சடி கண்டால் ஒட்டடி மகளே’ (பழ.);

தெ. பட்சடி கபச்சடி, ம.பச்சடி.

     [பசுமை → பச்சை + அடிசில் = பச்சடி]

     [பச்சு → பச்சடி]

பச்சடியன்

 பச்சடியன் mutāpaccaṭiyaṉ, பெ. (n.)

   வெண்மையிற் கறுப்புப் புள்ளியுள்ள மாடு (யாழ்.அக.);; white bull or cow with black spots.

     [பச்சடி → பச்சடியன்]

பச்சநாவி,

 பச்சநாவி, paccanāvi, பெ. (n.)

   வச்சநாவி(இ.வ.); பார்க்க; nepal aconite

ம. பச்சநாபி.

     [பச்சை+ நாவி]

பச்சன்னியம்,

 பச்சன்னியம், paccaṉṉiyam, பெ. (n.)

   மரமஞ்சள் (மலை,);; tree turmeric.

பச்சமஞ்சள்

 பச்சமஞ்சள் paccamañcaḷ, பெ. (n.)

   மரமஞ்சள்; tree tumeric. (சா.அக.);.

     [பச்சை + மஞ்சள்]

பச்சம்

பச்சம் paccam, பெ.(n.)

பட்சம் பார்க்க;see {}

     “பச்சம் முடை யடிகடிருப் பாதம்” (தேவா.166,2);.

     [Skt. {} → த. பச்சம்]

பச்சரிசி

பச்சரிசி1 paccarici, பெ. (n.)

   1. நெல்லைப் புழுக்காமற் காயவைத்துக் குத்தியெடுத்த அரசி; rice hulled without boiling, opp. to {pulungal.}

   2. மாமரவகை (இ.வ.);; a kind of mango.

     [பச்சை + அரிசி.]

 பச்சரிசி2 paccarici, பெ. (n.)

   அம்மான் பச்சரிசி; an annual with procumbent brances.

     “பிரமி விளா பச்சரிசி பீளை சங்கு வேளை” (தைலவ.தைல.135);

   2. மாமரவகை(இ.வ.);; a kind of mango.

     [பச்சை + அரிசி.]

பச்சவாதம்

பச்சவாதம் paccavātam, பெ.(n.)

   உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியறச் செய்யும் நோய் வகை. (பைஷஜ.302);; paralytic attack on one side of the body, Hemiplegia.

     [Skt. {} → → த. பச்சவாதம்]

பச்சவாயு

 பச்சவாயு paccavāyu, பெ.(n.)

   வளி (வாயு);யினால் உடம்பின் ஒரு பக்கத்தில் உணர்ச்சி இல்லாமல் போகை; loss of sensation on either side of the body due to the deranged condition of vayu prevailing on that side. (சா.அக.);

த.வ.பக்கஊதை

     [த. பக்கம் → Skt. {} → த. பட்சம் → பச்சம்]

பச்சாகிலியம்

 பச்சாகிலியம் paccākiliyam, பெ. (n.)

   சண்பகம்; champak tree, (சா.அக.);.

பச்சாது

 பச்சாது paccātu, கு. பெ.எ. (adv.)

   பின்பு (யாழ்.அக.);; afterwards.

     [Skt. {} → த. பச்சாது]

பச்சாத்தாபம்

பச்சாத்தாபம் paccāttāpam, பெ.(n.)

   1. கழிவிரக்கம் கொள்ளுகை; repentance;

 regret, contrition

   2. இரக்கம்; compassion, pity.

     [Skt. {} → த. பச்சாத்தாபம்]

பச்சான் கள்ளி

 பச்சான் கள்ளி kaḷḷi, பெ. (n.)

   கண்டக்கள்ளி; round milk hedge.

     [பச்சான் + கள்ளி]

பச்சாளை

பச்சாளை1 cāakapaccāḷai, பெ. (n.)

   கொச்சி; mercuric chloride. (சா.அக.);.

மறுவ, சவ்விர வைப்பு கொச்சி வீரம்.

     [பச்சை → பச்சாளை]

 பச்சாளை2 paccāḷai, பெ. (n.)

   பயிர்கட்குவரும் நோய்வகை (நெல்லை);; a disease of crops.

     [பச்சை → பச்சாளை]

பச்சி

 பச்சி pacci, பெ.(n.)

   ஒரு வகை மாப்பண்டம்; a kind of cake.

த.வ.மாவேய்ச்சி, வேய்ச்சி

     [U. {} → பஜ்ஜி → த. பச்சி]

பச்சினி

பச்சினி pacciṉi, பெ.(n.)

   1. பத்தாம் மாதம்; tenth month.

   2. பத்து மாதம் நிறைந்த கருப்பவதி; a woman of full term pregnancy i.e., ten months pregnant woman. (சா.அக.);

பச்சிமதோகரன்

பச்சிமதோகரன் paccimatōkaraṉ, பெ.(n.)

   1. தட்டான்; goldsmith.

   2. கள்வன்; thief.

     [Skt. {}-hara → த. பச்சிமதோகரன்]

பச்சிமப் பிறை

 பச்சிமப் பிறை piṟai, பெ. (n.)

   இளம்பிறை (யாழ்.அக.);; crescent

     [பச்சிமம் + பிறை]

பச்சிமம்

பச்சிமம் paccimam, பெ. (n.)

   மேற்கு; west

     “மற்றையர்க்குப் பச்சிமமே மாண்பு” (சைவச. பொது.270.);

   2. பின்புறம்; back.

     “பச்சிமத்தினு முகத்தினு மருங்கினும் பகழி…..உமிழ.” (கம்பரா.யிரமாத்.71.);

   3. பின்பட்டது; that which is late or after-time.

     “விப்பிரர் பச்சிம புத்தியர்” (வின்.);

பச்சியகுன்மக்கட்டி

 பச்சியகுன்மக்கட்டி pacciyaguṉmaggaṭṭi, பெ.(n.)

   பருத்த குன்மக்கட்டி; matured and enlarged abdominal tumour (சா.அக.);.

     [பச்சிய குன்மம்+கட்டி]

பச்சியமானகுன்மம்

 பச்சியமானகுன்மம் pacciyamāṉaguṉmam, பெ.(n.)

பச்சியகுன்மக்கட்டி பார்க்க (சா.அக.);;see {}.

பச்சியம்

 பச்சியம் viṉpacciyam, பெ. (n.)

   வியப்புக் குறிப்பு. (யாழ்.அக.);; an expression signifying wonder.

பச்சிராசன்

 பச்சிராசன் paccirācaṉ, பெ.(n.)

   கருடன்; Brahmini kite (சா.அக.);.

 Skt. pakshi + raja]

பச்சிரும்பு

பச்சிரும்பு paccirumpu, பெ. (n.)

   உருகின இரும்பு; molten iron

     “பச்சிரும்பெஃகிட்பங்கு” (சீவக.2303.);

     [பசுமை → பச்சு + இரும்பு]

பச்சிறைச்சி

பச்சிறைச்சி pacciṟaicci, பெ. (n.)

   1. பச்சூன் (யாழ்.அக.);; raw meat, flesh,

   2. ஆறாப்புண்; green Wound.

     [பச்சை → பச்சு + இறைச்சி]

பச்சிலை

பச்சிலை eṉṉappaṭṭatupaccilai, பெ. (n.)

   1. பச்சையிலை (பிங்.);; green, fresh leaf.

   2. மரவகை (திவா.);; Mysore gamboge l.tr.,

   3. பச்சிலைகளால் ஆகிய மருந்து (வின்.);; medicament consisting of leaves.

   4. பன்றிவாகை (L.);; tube-in-tube. wood.

   5. நறைக்கொடி (புறநா.168, உரை.);; a fragrant creeper.

   6. ஒருவகைப்புகைச்சரக்கு (சிலப்.5, 14, உரை.);; a fumigating substance.

   7. ஒரு வகைத் துகில் (சிலப்.14.108,உரை.);; a kind of ancient garment.

க. பச்செல ம. பச்சில

க. பச்சாரி (மரவகை.);

     [பச்சை + இலை]

பச்சிலைப்பட்டு

பச்சிலைப்பட்டு paccilaippaṭṭu, பெ. (n.)

இலைத் தொழிலையுடைய பட்டு:

 silk cloth with leaf like figures.

     “பச்சிலைப் பட்டு முத்தும் பவளமு மிமைக்கு மல்குல்” (சீவக.2090.);

     [பகமையிலை → பச்சிலை + பட்டு]

பச்சிலைப்பாம்பு

 பச்சிலைப்பாம்பு paccilaippāmpu, பெ. (n.)

   மருந்தாகப் பயன்படும் இலை; leaves {sed} medicinally. (வின்.);

     [பச்சிலை + பாம்பு]

பச்சிலையோணான்

 பச்சிலையோணான் paccilaiyōṇāṉ, பெ. (n.)

பச்சோணான் (யாழ்.அக.);; பார்க்க; see{рассбnan}

     [பச்சிலை + ஓணான்]

பச்சுடம்பு

பச்சுடம்பு paccuṭampu, பெ. (n.)

   1. பிள்ளைப் பேற்றால் மெலிந்த உடல்; tender body of a woman after childbirth.

   2. குழந்தையின் தளிருடல்; tender body an infant.

   3. அம்மைப்புண் காயாத உடம்பு (வின்.);; body still having sore from smallpox,

     [பச்சை → பச்சு + உடம்பு]

     [பசு → பச்சு → பச்சுடம்பு]

     (மு.தா. 46.);

பச்சுதி

பச்சுதி paccuti, பெ. (n.)

   நழுவுகை; slip.

     “பச்சுதியின்றி நின்று” (மேருமந்.876.);.

பச்சுளி

 பச்சுளி mērumanpaccuḷi, பெ. (n.)

   செடிவகை; wolly patchouli.

பச்சுவடம்

பச்சுவடம் paccuvaṭam, பெ. (n.)

   மேற்போர்வை விரிப்பு, திரை முதலியவற்றுக்குப் பயன்படும் நீண்டசீலை (கோயிலோ. 94.);; a long piece of cloth, used as a blanket, bed sheet Or screen.

தெ.பட்சடமு. க. பச்சபட. ம. பச்சவடம்.

பச்சூன்

பச்சூன் paccūṉ, பெ. (n.)

     “பச்சிறைச்சி பார்க்க; see {paccialcci}

     “முதுநரி பச்சூன் கொள்ளை மாந்தி” (நற்.352.);

     [பசுமை + ஊன்]

பச்செனல்

பச்செனல் pacceṉal, பெ. (n.)

   பசுமையாதற் குறிப்பு; expr of being green or verdant

     ‘பச்சென்று பசத்தது’ (தொல்,சொல்.261.உரை.);

     [பசுமை → பச்சு + எனல்]

பச்செனவு

பச்செனவு pacceṉavu, பெ. (n.)

   1. பச்சை,

 greenness, verdure.

   2. ஈரம்; moistness. dampness, sap.juice.

   3. பொலிவு; plumpness;fulness

     [பசுமை → பச்சு + எனவு]

பச்சேரி

 பச்சேரி paccēri, பெ. (n.)

   பள்ளர்சேரி (நெல்லை);; the quarters of the pallar caste.

     [பள் + சேரி = பட்சேரி என்பதன் கொச்சை வடிவமே பச்சேரி என்பது]

பச்சை

பச்சை paccai, பெ. (n.)

   1. பசுமைநிறம்; green colour; greenness,

     “பச்சைமா மலைபோல் மேனி” (திவ்.திருமாலை.2.);

     ‘பச்சைப் பசேல் என்ற புல்வெளிகள்’.

   2. ஒன்பான் மணிகளுள் ஒன்றான பச்சைக்கல்; emerald

   3. பயறு; pulse or careals

     ‘இறந்த விட்டிலிருந்து ஊரார்க்குப் பச்சை போடுவார்கள்’ (நெல்லை.);

   4. வெற்றிலை; betel leaf

     ‘பச்சை கொடுத்தால் பாவந்தீரும்; வெள்ளை கொடுத்தால் வினைதீரும்’ (பழ.);

   5. நீருமரி பார்க்க; see {ninumari;}

 seaside indian saltwort.

   6. நறுமணப் புல்வகை (பிங்.);; a fragrant grass,

   7. பச்சைகுத்திய அடையாளம் (நெல்லை.);

 tattoo.

   8. பசப்பு நிறம்; paleness, as of a maid separated from her lover.

     “பச்சை தீருமென் பைங்கொடி” (தேவா.497,2.);

   9. திருமால் (பிங்.);, {Tiruma,}

   10. திருமாலின் தோற்றரவுள் ஒருவன் பிரத்தியும்நன்; a {woha} manifestation of visnu.

     “பொன்கட் பச்சை பைங்கண் மாஅல்” (பரிபா:3,82);

   11. புதன் (பிங்.);; the planet mercury.

   12. நன்கொடை (சீவக,823, உரை);; present, as to a newly married pair.

   13. காணிக்கை (ஈடு,5,1,3);; offering to a superior or a deity,

   14. கப்பம்; tribute,

     “ராஜாக்கள் கொண்டு வந்த பச்சை” (ஈடு.4,1,1);.

   15. கைம்மாறு; compensation, return.

     “நல்லுதவியாவது பச்சைகொள்ளாதே உபகரிக்கை” (ஈடு,2,3,4.);.

   16. சமைத்தற்குரிய உணவுப் பொருள்; provisions.

     “நெடுநாள் பச்சைதேடி விருந்திட்டாய்” (ஈடு,1,6,1.);.

   17. பச்சைக் கலியாணம் பார்க்க; see {paccaik kaliyāņam}

   18. வேகாதது; rawness, as food uncooked;

பச்சைப்புலால்.

   19. முற்றாதது; tenderness, unripeness, greenness, as of fruit

     ‘பச்சைக்காய்’.

   20. உலாரதது; that which is not seasoned, dried or tanned.

பச்சைமரம்.

   21.ஆறாதது; that which is fresh or not healed

     ‘பச்சைப்புண்’.

   22. தூய்மை செய்யப் படாதது; that which is impure, crude, as ore.

     ‘பச்சைக் கந்தகம்’

   23. தோல் (திவா.);; skin, hide

     “புதுவது போர்த்த பொன்பேற் பச்சை” (மலைபடு.29,);

   24. போர்வை; covering, as of the body of a {ya!}

     “புகழ்வினைப் பொலிந்த பச்சையொடு” (சிறுபாண்.226.);

   25. குளிர்ச்சி; freshness as water not boiled; coolness.

     ‘பச்சைத்தண்ணீர்’.

   26. இழிவழக்கு; vulgarity,

     ‘பச்சையாய்ப் பேசுகிறான்’.

   27. வெளிப்படை யானது; that which is frank, open.

     ‘நடந்ததைப் பச்சையாய்ச் சொன்னான்’

   28. மிகுதி; intensity, excess.

     ‘பச்சைக்கைப்பு’ (யாழ்ப்.);

   29. பயன் (அரும்பொருள் நிகண்டு);; profit

   30. அநாகரிகம்; rudeness, crudeness, wildness

     ‘பச்சைப்பேச்சு’

     [பசு → பச்சு → பச்சை] (மு.தா.46);

     ‘பச்சைச் சிரிப்புப் பல்லுக்குக் கேடு; தூவு பருக்கை வயிற்றுக்குக் கேடு’ (பழ.);

மறுவ:பச்சிலை, இஞ்சி

 பச்சை2 iñcipaccai, பெ. (n.)

   ஒருவகை நறுமணச் செடி; acheen leaf, indian marjoram.

இதன் வகைகள்:

   1. திருநீற்றுப் பச்சை–

 holy ashes leaf.

   2. கடற்(சமுத்திராப்);பச்சை

 sea green

   3. மலைபச்சை

 hill green

   4. தென்பச்சை

 honey green

   5. வேனிற்பச்சை

 summer green

   6. நஞ்சறப்பச்சை

 poison cutting green

   7. அவுரிப்பச்சை

   8. கதிர்ப்பச்சை

 a fragrant plant.

   9. வங்காளப்பச்சை

 Sub acetate of copper.

   10. மாரிப்பச்சை

     ‘பச்சை மரம் படப் பார்ப்பான்’ (பழ.);

 பச்சை3 paḻpaccai, பெ. (n.)

   1. பச்சாளை (யாழ்.அக.);; பார்க்க; see {paccalai}

   2. பூடுவகை (புட்ப.5);; a shrub.

தெ. பச்ச க.ம. பச்ச

     [பசுமை → பச்சை]

பச்சை இராப்பாடி

 பச்சை இராப்பாடி irāppāṭi, பெ. (n.)

   பச்சை நிறமான இராப்பாடிக் குருவி; green bool bool(சா.அக.);

     [பச்சை + இராப்பாடி]

பச்சை எருவை

 பச்சை எருவை eruvai, பெ. (n.)

   பச்சையாகவே துரிசி முதலிய மருந்துகளை நல்லெண்ணெயில் அரைத்து புண்களுக்கு இடும் ஒருவகைப் பூசுமருந்து; an external ointment prepared by grinding copper sulphate and other drugs and mixing and grinding them in gingelly oil.

     [பச்சை + எருவை]

பச்சை நாகேசுரம்

 பச்சை நாகேசுரம் nāācuram, பெ.(n.)

   பழுத்தும் பச்சை நிறம் மாறாத ஒருவகை வாழைப்பழம்; green plantain fruit which is green even when fully riped (சா.அக);.

ஒருகா.நவரைவாழை

     [பச்சை + நாகேசுரம்]

பச்சை போடுதல்

 பச்சை போடுதல் paccaipōṭudal, செ.குன்றாவி.(v.t.)

நடவு முடித்த பிறகு சிறிதாக நாற்றைக் கட்டி நடுவில் போடுதல்(வடார்க்.);:

 to lay a few saplings in the middle of the field after finishing the work of transplantation.

     [பச்சை+போடு]

பச்சை வயிறு

பச்சை வயிறு vayiṟu, பெ. (n.)

   1. பிள்ளை பெற்ற வயிறு; painful abdomen after parturition.

   2. வெந்த வயிறு; inflamed abdomen.

   3. வெறும் வயிறு; empty stomach. (சா.அக.);

     [பச்சை + வயிறு]

பச்சை விச்சை

 பச்சை விச்சை viccai, பெ. (n.)

   குருவிச்சை; ovate leaved ivory wood.

     [பச்சை + வில்]

பச்சைஅலரி

 பச்சைஅலரி paccaialari, பெ. (n.)

   திருவாச்சிப்பூ; foreign oleander (சா.அக.);

     [பசுமை + அலரி]

பச்சைஆமை

 பச்சைஆமை paccaiāmai, பெ. (n.)

   கடலாமையின் ஒருவகை இனம்; a kind of sea turtle.

     [பச்சை + ஆமை]

பச்சைகட்டு

பச்சைகட்டு paccaikaṭṭu, பெ. (n.)

   1. சிற்றூரில் பெருஞ்செல்வனைக் கண்டு கொள்ளக் கொடுக்கும் சிறு நன்கொடை; trifling presents, commonly to the headman of a village

   2. அமைதிசெய்யும் மருந்து; mitigative medicine, lenitive

   3. குறுங்கால அமைதி; mitigation, temporary relief.

     [பச்சை + கட்டு]

பச்சைகுத்தி

பச்சைகுத்தி paccaikutti,    1. குறவர்சாதிவகை (G.Sm.D.I.i.152.); a sect of {kurava} Caste

   2. வேளாளர்வகை (G.Sm.D.I.i.152.);; a sect of {veala castle}

     [பச்சை + குத்தி]

பச்சைகுத்து-தல்

பச்சைகுத்து-தல் paccaikuttutal,    9. செ.கு.வி. (v.i.).

   உடலிற்பச்சைக்கோலம் பதித்தல் (இ.வ.);; to tattoo

     [பச்சை + குத்து,]

மஞ்சள் பொடியையும் அகத்திக் கீரையையும் அம்மியில் வைத்தரைத்து, ஒரு மெல்லிய துணியின்மேல் இவ்வரைத்த விழுதைப் பரப்பித் திரியாகத்திரிப்பர். பின்னர் அதனை விளக்கெண்ணெய் விளக்கில் கொளுத்துவார்கள். கொளுத்திய இத்திரியையும் விளக்கையும் ஒரு புதிய மண்கலத்தினால் மூடுவர். அப்போது திரியெரிந்து சட்டியின் உள்பாகத்தில் கரி படியும். படிந்த கரியைச் சுரண்டியெடுத்துத் தண்ணீரிலோ முலைப்பாலிலோ கரைத்துக் கொள்வர். அகத்திக் கீரைக்குப் பகரமாகத் திரி செய்வதில் அறுகம்புல்லையோ கரிசலாங்கண்ணியையோ பயன்படுத்தலாம்.

இரண்டு மூன்று தையல்ஊசிகளைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு, பச்சைகுத்த விரும்புமிடத்தில், மையில் தோய்த்த குச்சியொன்றினால் விருப்பமான ஓவியத்தை வரைந்து அதன்மேல் மேற்கூறிய ஊசியால் கரைசலில் தோய்த்துக் குத்துவர். குத்திய இடத்தைக் குளிர்ந்த நீரினால் தூய்மை செய்வர் நோவையும் வீக்கத்தையும் தடுக்க எண்ணெயும் மஞ்சளும் தேய்ப்பர். (ethnographic notes in south india. Edgar thurston.);

பச்சைக் குவடு

 பச்சைக் குவடு kuvaṭu, பெ. (n.)

   பச்சைக்கல் (மரகதம்);; green gem, emerald.

     [பச்சை + குவடு]

பச்சைக்கச்சோலம்

பச்சைக்கச்சோலம் paccaikkaccōlam, பெ. (n.)

   1. பச்சைப்பூலாங்கிழங்கு; green poola root

   2. பச்சை ஏலக்காய்த்தோல்; undried capsules of cardamom.(சா.அக.);.

     [பச்சை + கச்சோலம்]

பச்சைக்கடலை

 பச்சைக்கடலை paccaikkaṭalai, பெ. (n.)

   வேகவைக்காத, வறுக்கப்படாத கொண்டைக் கடலை; raw bengal gram that is not roasted or boiled.

     [பச்சை + கடலை]

பச்சைக்கடுகு

 பச்சைக்கடுகு paccaikkaṭuku, பெ. (n.)

   செங்கடுகு; raw mustard.(சா.அக);.

     [பச்சை + கடுகு]

பச்சைக்கடுகுரோகணி

பச்சைக்கடுகுரோகணி paccaikkaṭukurōkaṇi, பெ. (n.)

   1. உலராத கடுகுரோகணி; undried black hellibore.

   2. பச்சை நிறமுள்ள கடுகுரோகணி; green coloured hellibore. (சா.அக.);.

     [பச்சை + கடுகு + ரோகணி]

பச்சைக்கடுக்காய்

பச்சைக்கடுக்காய் paccaikkaṭukkāy, பெ. (n.)

   1. உலராத கடுக்காய்; undried gall nut

   2. அரிதகிக் கடுக்காய்; green gall nut.

     [பச்சை + கடுக்காய்]

பச்சைக்கட்டி

 பச்சைக்கட்டி paccaikkaṭṭi, பெ. (n.)

   பழுக்காத கட்டி; unriped or unmatured abscess unfit for opening or incision. (சா.அக.);.

     [பச்சை + கட்டி]

பச்சைக்கட்டு

 பச்சைக்கட்டு paccaikkaṭṭu, பெ. (n.)

   அமைதி செய்யும் மருந்து; any green drug which allays the disease (சா.அக.);.

     [பச்சை + கட்டு]

பச்சைக்கந்தம்

 பச்சைக்கந்தம் paccaikkantam, பெ. (n.)

   தூய்மை செய்யாத கந்தகம் (கொ.வ.);; raw Sulphur, as impure.

மறுவ. பிறவிக்கந்தகம்.

     [பச்சை + கந்தகம்]

பச்சைக்கயர்

 பச்சைக்கயர் paccaikkayar, பெ.(n.)

   கடுங்கசப்பு (யாழ்ப்.);; extreme astringency; intense bitterness.

     [பச்சை + கயர்]

     [கசப்பு → கயப்பு → கயர்]

பச்சைக்கரகம்

 பச்சைக்கரகம் paccaiggaragam, பெ.(n.)

   அம்மன் வழிபாட்டில் எடுக்கும் கரக வகை; temple ritual.

     [பச்சை+கரகம்]

பச்சைக்கரி

 பச்சைக்கரி paccaikkari, பெ. (n.)

   ஈரமான கரி; wet or moist charcoal.

     [பச்சை + கரி]

பச்சைக்கருப்பூரம்

பச்சைக்கருப்பூரம் paccaikkaruppūram, பெ. (n.)

   கருப்பூரவகை (பதார்த்த.1075.);; medicated camphor, menthol, crude camphor.

க. பச்சக்கர்பூர

     [பச்சை + கருப்பூரம்]

பச்சைக்கலியாணம்

 பச்சைக்கலியாணம் paccaikkaliyāṇam, பெ.(n.)

   திருமணத்தின் நாலாம் நாளில் மணமக்களை வாழ்த்திப் பரிசு வழங்கும் சடங்கு (இ.வ.);; ceremoney on the fourth day in a marriage festival, as the time of presenting gifts.

     [பச்சை + கலியாணம்]

பச்சைக்கல்

பச்சைக்கல் kuṟikkiṉṟatupaccaikkal, பெ. (n.)

   1. சுடாத செங்கல்; unburnt brick,

   2. பச்சைமணி; emerald.

   3. பசுங்கல் வகை (வின்.);; jade, a hard dark greenstone,

   4. கல்வகை (வின்.);; greenstone, principally of felspar and horn blende,

   5. காதணி வகை (கொ.வ.);; pendant emerald, used as an ear ornament

     [பச்சை + கல்]

பச்சைக்கல்யாணி

 பச்சைக்கல்யாணி paccaikkalyāṇi, பெ. (n.)

   கதிரவனின் தேர்க்குதிரைகளுளொன்று; one of the seven mythical horses of the sun’s chariot.

     [பச்சை + Skt.கல்யாணி]

பச்சைக்கள்ளன்

 பச்சைக்கள்ளன்  paccaikkaḷḷaṉ, பெ. (n.)

   பெருந்திருடன் (வின்.);; desperate thief; downright villain.

     [பச்சை + கள்ளன்]

பச்சைக்காடை

 பச்சைக்காடை paccaikkāṭai, பெ. (n.)

   காடை வகையுள் ஒன்று; a kind of {kadai}.

மறுவ. பொன்னாந்தட்டான்

     [P]

பச்சைக்காய்ச்சி

பச்சைக்காய்ச்சி paccaikkāycci, பெ. (n.)

   1. காயத்துள்ள மரம் (யாழ்ப்.);; tree with green fruit

   2. ஒருவகைத் தென்னை (இ.வ.);; a kind of coconut tree.

     [பச்சை + காய்ச்சி]

பச்சைக்காளான்

 பச்சைக்காளான் paccaikkāḷāṉ, பெ. (n.)

   ஊதையை நீக்குவதற்கு உதவும் ஒருவகைக் காளான்; green mushroom used in rheumatic affections. (சா.அக.);.

     [பச்சை + காளான்]

பச்சைக்கிளி

பச்சைக்கிளி paccaikkiḷi, பெ. (n.)

   1. கிளிவகை.; a variety of parrot

   2. வெட்டுக் கிளி; green locust, grass hoper

   3. சிறுவர் விளையாட்டு வகை; a boy’s game

   4. துருக,

 blue-vitriol (சா.அக.);.

     [பச்சை + கிளி]

பச்சைக்கிளிமீன்

 பச்சைக்கிளிமீன் paccaikkiḷimīṉ, பெ. (n.)

   பச்சை வண்ணக் கிளிமூக்குமீன்; parrot fish. (சா.அக.);

     [பச்சை+ கிளிமீன்]

பச்சைக்கிளுவை

பச்சைக்கிளுவைāṟumpaccaikkiḷuvai, பெ. (n.)

   1. பச்சை வண்ணப்பட்டையுள்ள கிளுவைமரம்; green barked hill balsam tree.

   2. பச்சைநிற சிறவிப்புள்; common teal.

   3. பஞ்சித் தணக்கு; Katearah gum tree.

   4. கிளுவை மீன்; a kind of small cell fish.

     [பச்சை + கிளுவை]

பச்சைக்குங்கிலியம்

 பச்சைக்குங்கிலியம் paccaikkuṅkiliyam, பெ. (n.)

   குங்கிலியவகை (வின்.);; a kind of resin of the indian bdellium

     [பச்சை + குங்கிலியம்]

மறுவ. வெள்ளைக்குங்கிலியம்.

குங்கிலியம் =Skt.

பச்சைக்குங்குமப்பூ

 பச்சைக்குங்குமப்பூ paccaikkuṅkumappū, பெ. (n.)

   உலர வைத்துப் பதப்படுத்தாத குங்குமப்பூ; an undried European saffron. (சா.அக.);

     [பச்சை + குங்குமம் + பூ]

த. குங்குமம் Skt. kumkum.

பச்சைக்குதிரை

பச்சைக்குதிரை1 paccaikkutirai, பெ. (n.)

   விளையாட்டு வகை (GTn. D1,105);; leap frog, a game

     [பாய்ச்சல் → பாச்ச → பச்சை + குதிரை]

     [P]

 பச்சைக்குதிரை2 paccaikkutirai, பெ. (n.)

   கதிரவனுடைய பகங்குதிரை (தொன்.);; sun’s green coloured horse (myth.);

     “ஞாலங் காவலுடைய வனொரு நாட் பச்சைக் கோடகங் கரப்ப” (சேதுபு. வேதாள. 45.); (த.சொ.அக.);

     [பச்சை + குதிரை]

பச்சைக்குப்பி

பச்சைக்குப்பி paccaikkuppi, பெ. (n.)

   மதுவடைக்குங் குப்பிவகை (பெரும்பாண்.382, உரை);; a green flask, used in ancient times for keeping liquor.

     [பச்சை + குப்பி]

பச்சைக்குருவி

 பச்சைக்குருவி paccaikkuruvi, பெ. (n.)

   குருவி வகையுள் ஒன்று; a kind of sparrow.

     [பச்சை + குருவி]

இதன் இறகுப் போர்வையில் பல நிறங்களிருந்த போதும் பச்சையே மேலிட்டு நிற்பதால் இப்பெயர் பெற்றது. வீட்டுத் தோட்டங்களிலும் பழத் தோட்டங்களிலும் தோப்புகளிலும் இணையாக வாழும்.

பச்சைக்குறவன்

பச்சைக்குறவன்1 paccaikkuṟavaṉ, பெ. (n.)

   பெரும்பாசாங்குக்காரன் (கொ.வ.);; a downright knave, veatable villain or hypocrite.

     [பச்சை + குறவன்]

பச்சைக்குறவான்

பச்சைக்குறவான்2 paccaikkuṟavāṉ, பெ. (n.)

   ஒரு நீல நிற கடல்மீன்; a kind of blue trigger sea fish. (சா.அக.);.

     [பச்சை + குறவான்]

பச்சைக்குழந்தை

பச்சைக்குழந்தை paccaikkuḻntai, பெ. (n.)

   1. இளங்குழவி; tender, new-born infant

   2. வளரிளங் குழந்தை; baby, young child.

     [பச்சை + குழந்தை]

பச்சைக்கூடு

பச்சைக்கூடு paccaikāṭu, பெ. (n.)

   1. பருவுடல்; gross, physical body.

   2. பருத்த உடம்பு; Stout body.

     [பச்சை + கூடு]

பச்சைக்கெந்தி

 பச்சைக்கெந்தி paccaikkenti, பெ. (n.)

   தூய்மைசெய்யப்படாத கந்தகம்; impure Sulphur (சா.அக.);.

     [பச்சை + கெந்தி]

பச்சைக்கொட்டை

பச்சைக்கொட்டை paccaikkoṭṭai, பெ. (n.)

   பூவந்தி (M.M.843.);; soap nut

   2. வானத்தாமரை

 sky lotus,

     [பச்சை + கொட்டை]

பச்சைக்கொத்தமல்லி

 பச்சைக்கொத்தமல்லி paccaikkottamalli, பெ. (n.)

   கறிக்குதவும் கொத்தமல்லிக்கீரை; green leaves of coriander used in the preparations of curries. (சா.அக.);.

     [பச்சை + கொத்துமல்லி → கொத்தமல்லி]

பச்சைக்கொம்பு

 பச்சைக்கொம்பு paccaikkompu, பெ. (n.)

இஞ்சி (மலை.);

 green ginger.

     [பச்சை + கொம்பு]

பச்சைக்கொல்லன்

 பச்சைக்கொல்லன் paccaikkollaṉ, பெ. (n.)

   வேலைத் திறமையற்ற கொல்லன் (யாழ்ப்.);; clumsy blacksmith.

     [பச்சை + கொல்லன்]

பச்சைக்கோடு

 பச்சைக்கோடு paccaikāṭu, பெ. (n.)

   மணிகளுள் ஒன்றான பச்சைக்கல் (மரகதம்); (யாழ்.அக.);; emerald.

     [பச்சை + கோடு]

பச்சைக்கோரான்

 பச்சைக்கோரான் paccaikārāṉ, பெ. (n.)

   சிறுமரவகை (L.);;  long leathery elliptic oblong obtuse leaved jungle geranium.

மறுவ. இரும்பரிப்பி

     [பச்சை + கோரான்]

பச்சைக்கோலம்

 பச்சைக்கோலம் paccaikālam, பெ.(n.)

   நாட்டுப்புறக் கைவினைக் கலை; fineart feature in rural handicrafts.

     [பச்சை+கோலம்]

பச்சைச்சடையன்

 பச்சைச்சடையன் paccaiccaṭaiyaṉ, பெ. (n.)

   பச்சைநிறமான சடையுடை காவற்றெய்வம் (பைரவன்); (யாழ்.அக.);; bairava, as having green locks of hair.

     [பச்சை + சடையன்]

பச்சைச்சார்த்து-தல்

 பச்சைச்சார்த்து-தல் paccaiccārttutal, செ.கு.வி. (v.i.)

   தெய்வத் திருமேனிகளுக்கு அணிகலன் முதல் ஆடை வரை அனைத்தும் பச்சை வண்ணமாகக் குறிப்பிட்ட நாளில் அணிவித்தல்; adorn to idols having green ornaments and clothes in a particular day.

     ‘வினைதீர்த்தான் கோயிலில் இன்று பச்சை சார்த்துதல் நடக்கிறது; போகலாமா?’ (உ.வ.);

பச்சைச்சேர்வை

 பச்சைச்சேர்வை uvapaccaiccērvai, பெ. (n.)

   நெருப்புக்காட்டாதபடி, பச்சையாகவே மருந்துகளை அரைத்துக் கலத்தல்; a paste made by mixing several green or fresh herbs or other raw drugs reduced to a pulp without subjecting it to heat.

     [பச்சை + சேர்வை]

பச்சைத்தண்ணீர்

 பச்சைத்தண்ணீர் uvapaccaittaṇṇīr, பெ. (n.)

   காய்ச்சாத குளிர்ந்த நீர் (வின்.);; cold, unboiled water.

     [பச்சை + தண்ணீர்]

உனக்கு அன்றாடம் வெந்நீர் வேண்டுமா? பச்சைத்தண்ணீரில் குளித்தால் ஆகாதா? (உ.வ.);

பச்சைத்தவளை

பச்சைத்தவளை paccaittavaḷai, பெ. (n.)

   தவளை வகை(M.M 80);; tinkling frog,

     [பச்சை + தவளை]

பச்சைத்தான்றி

 பச்சைத்தான்றி paccaittāṉṟi, பெ. (n.)

   உலராத தான்றிக்காய்; undried fruit or nut of the tree called devils abode, one of the three myrobalans (சா.அக.);.

     [பச்சை + தான்றி]

பச்சைத்தாலி

 பச்சைத்தாலி paccaittāli, பெ.(n.)

திருமணப் புதிய தாலி: the tali as it is on the marriage day.

     [பச்சை+தாலி]

     [P]

பச்சைத்தாள்

 பச்சைத்தாள் paccaittāḷ, பெ. (n.)

   தவசமணி முற்றாத தாள் (வின்.);; green stalks, showing immaturity in the grain.

     [பச்சை + தாள்]

பச்சைத்திப்பிலி

 பச்சைத்திப்பிலி paccaittippili, பெ. (n.)

   சிவந்த நீர்ப்பசையுள்ள திப்பிலி; raw, long pepper containing red juice.(சா.அக.);.

     [பச்சை + திப்பிலி]

பச்சைத்துருசு

 பச்சைத்துருசு paccaitturucu, பெ. (n.)

   பிறவித் துருக; blue vitriol found in nature as opposed to

வைப்புத் துருசு.

 prepared blue vitriol (சா.அக.);.

     [பச்சை + துருசு]

பச்சைத்தேயிலை

பச்சைத்தேயிலை paccaittēyilai, பெ. (n.)

   தேயிலை( M.M.883);; raw leaf of tea (Hybrid);

     [பச்சை + தேயிலை]

பச்சைத்தேரை

பச்சைத்தேரை paccaittērai, பெ. (n.)

   தேரை தேரை வகை (கம்பரா.நாட்டுப்.13);; a species of toad.

     [பச்சை + தேரை]

பச்சைத்தைலம்

 பச்சைத்தைலம் paccaittailam, பெ. (n.)

   புண்புரைகளை ஆற்ற பசுமருந்து மூலிகை களைக்கொண்டு அணியமாக்கும் எண்ணெய்; medicated oil prepared from the leaves of the herbeceous plants for curing raw sores with sinuses.(சா.அக.);.

     [பச்சை + Skt.தைலம்]

பச்சைத்தோல்

பச்சைத்தோல் paccaittōl, பெ. (n.)

   1. பதனிடாத்தோல்; raw, untanned skin, pelt.

   2. புண் ஆறினபின்பு தோன்றும் புதுத்தோல்; new skin formed on a healing sore.

     [பச்சை + தோல்]

பச்சைநஞ்சு

பச்சைநஞ்சு paccainañcu, பெ. (n.)

   1. கொடிய நஞ்சு; strong poison.

   2. தீயோன் (யாழ்.அக.);; atrocious villain.

   3. செய்ந்நஞ்சு; chemical poison.

   4. பாம்பின் நஞ்சு; snake poison

   5. பிறந்த குழந்தையின்நஞ்சுக்கொடி; navel cord of the new-born baby.

     [பச்சை + நஞ்சு]

பச்சைநன்னாரி

 பச்சைநன்னாரி paccainaṉṉāri, பெ. (n.)

   உலரவைத்துப்பதப்படுத்தாத நன்னாரி; underied unseasoned sarsaparilla fresh roots of sarsaparilla. (சா.அக.);.

     [பச்சை + நன்னாளி]

பச்சைநரம்பு

 பச்சைநரம்பு paccainarampu, பெ. (n.)

உடலில் அழுக்கு அரத்தம் ஒடும்நாளம் (இ.வ.);

 vein

     [பச்சை + நரம்பு]

பச்சைநாடன்

 பச்சைநாடன் paccaināṭaṉ, பெ. (n.)

   நமரை வாழை. (கொ.வ.);; green banana.

     [பச்சை + நாடன்.]

பழம் பழுத்தாலும் மேலே பச்சை நிறம் மாறாதிருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.

பச்சைநாடம்

பச்சைநாடம் paccaināṭam, பெ. (n.)

பச்சைநாடன்(GSm.D.I.i.215.); பார்க்க; see {paccar →nadan}

     [பச்சை + நாடம்]

பச்சைநாபி

 பச்சைநாபிēṟpaṭṭatupaccaināpi, பெ. (n.)

   ஒருவகை மருந்து; a kind of siddha medicine.

     [பச்சை + நாவி → நாபி]

த. நாவி → Skt.{Nåb}

பச்சைநாமத் தவளை

 பச்சைநாமத் தவளை tavaḷai, பெ. (n.)

   பச்சை நிறமான தவளைவகை; green coloured frog.

     [பச்சை + நாமம் + தவளை]

பச்சைநாறாக் கரந்தை

 பச்சைநாறாக் கரந்தை karantai, பெ. (n.)

   பச்சைநிறச்சிவகரந்தை; undried ie, fresh and green shiva’s basil. (சா.அக.);.

     [பச்சை + நாறா + கரந்தை]

பச்சைநாவி

பச்சைநாவி1 paccaināvi, பெ. (n.)

   ஒருவகை மருந்து; a kind of medicine; nepal aconite.

     “பச்சை நாவி யபினி” (விறலிவிடு.623.);

மறுவ, வச்சநாவி, பச்சை நாவிக்கிழங்கு

     [பச்சை + நாவி]

 பச்சைநாவி2 paccaināvi, பெ. (n.)

   1. நச்சுநாவிக்கிழங்கு; aconite root,

   2. கலப்பைக் கிழங்கு; country aconite

   3. பூனைமணத்தி; civet

   4, நறும்பூதி (சவ்வாது);; zibet

   5. மான்மணத்தி; musk

   6. குழந்தையின் கொப்பூழ்க் கொடி; the navel cord.(சா.அக.);.

     [பச்சை + நாவி]

மறுவ. காந்தட் கிழங்கு

பச்சைநிற நிற்களன்

 பச்சைநிற நிற்களன் niṟkaḷaṉ, பெ. (n.)

   துரிசு (யாழ்.அக.);; blue Vitriol.

மறுவ. பச்சை நிறத்தான்

     [பச்சை + நிறம் + நிற்களன்]

பச்சைநிறத்தாள்

 பச்சைநிறத்தாள் paccainiṟattāḷ, பெ. (n.)

   துரிசு(யாழ்.அக.);; blue vitriol copper sulphate.

     [பச்சை + நிறத்தாள்]

பச்சைநிலைக்கொடி

 பச்சைநிலைக்கொடி paccainilaikkoṭi, பெ. (n.)

   முசுமுசுக்கை; bristly bryony.(சா.அக.);.

     [பச்சை + நிலைக்கொடி]

மறுவ. பச்சை நிறக்கொடி..

பச்சைநீருள்ளி

பச்சைநீருள்ளி paccainīruḷḷi, பெ. (n.)

வெள்ளைப்பூண்டு(M.M. 733.); பார்க்க; see {ves appūndu}

 garlic.

     [பச்சை + நீர் + உள்ளி]

பச்சைநீர்

பச்சைநீர் paccainīr, பெ. (n.)

   1. குளிர்ந்த நீர்; cold water.

   2. புண்களை ஆற்றும் துரிசு சேர்ந்த மருந்து நீர்; a lotion preparatioon with blue vitriol.

மறுவ. பச்சைத் தண்ணீர்

     [பச்சை + நீர்]

பச்சைநெல்

பச்சைநெல் paccainel, பெ. (n.)

   1. ஈரநெல்; undried paddy.

   2. அவிக்காத நெல்; unboiled paddy; raw paddy.

   3. பசுமை நிறமான நெல்; green or yellow paddy.

   4. முதிராத நெல்; not fully matured paddy.

     [பச்சை + நெல்]

பச்சைபச்சையாய்ப்பேசு

பச்சைபச்சையாய்ப்பேசு1 paccaipaccaiyāyppēcutal,    9. செ.கு.வி. (v.i.)

   இடக்கர்ச் சொற்களை வெளிப்படையாகச் சொல்லுதல்; to speak grossly vulgar and indecent language.

     [பச்சை + பச்சை + ஆக + பேசு-,]

 பச்சைபச்சையாய்ப்பேசு2 paccaipaccaiyāyppēcutal,    9. செ.கு.வி. (v.t)

   இடக்கர்ச் சொற்களைச் சொல்லித் திட்டுதல்; to insult by uttering abusive or obscene words.

     [பச்சை + பச்சை + ஆக + பேசு-,]

பச்சைபரப்பு-தல்

பச்சைபரப்பு-தல்  paccaiparapputal,    4. செ.கு.வி. (v.i.)

   பள்ளையம் போடுதல்; to offer cooked rice, etc., to a deity in fulfilment of a vow, tj.

     [பச்சை + பரப்பு]

பச்சைபாடி

 பச்சைபாடி paccaipāṭi, பெ. (n.)

   காய் கறியுதவுகை (வின்.);; present of vegetables.

     [பச்சை + படி → பச்சை + பாடி]

பச்சைபிடி-த்தல்

பச்சைபிடி-த்தல் paccaipiṭittal,    4. செ.கு.வி. (v.i.)

   1. செழிக்கத் தொடங்குதல்

 to begin to flourish

     ‘பயிர் இப்போதுதான் பச்சை பிடித்திருக்கிறது.’

   2. திருமண வீட்டிற்கு வந்த காய்கறிகளை ஊழியர்கள் முதலியோர் கைப்பற்றுதல்(வின்.);; to seize on some of the fruits brought to a wedding house.

     [பச்சை + பிடி-,]

பச்சைபூசுதல்

 பச்சைபூசுதல் paccaipūcutal, பெ. (n.)

   திருமணத்தின் நாலாம்நாள் மணமக்களின் நெற்றியிலும் கைகளிலும் கலவை (குங்குமப் பூவைக் குழைத்துப்); பூசும் பார்ப்பனச் சடங்கு வகை; a ceremony of marking the foreheads and the arms of a bride and bridegroom with vermilion on the fourth day of the wedding {(brāh.);}

     [பச்சை + பூசுதல்]

பச்சைபோய் வெள்ளையாவான்

 பச்சைபோய் வெள்ளையாவான் veḷḷaiyāvāṉ, பெ. (n.)

   தாளிப்பனை; talipot tree, (சா.அக.);

     [பச்சைபோய் + வெள்ளையாவான்]

பச்சைப் பாண்டம்

 பச்சைப் பாண்டம் pāṇṭam, பெ. (n.)

   சூளையில் வைத்துச் சுட்டெடுக்காத மண்பாண்டம்; unburnt earthen vessel.

     ‘பச்சைப் பாண்டத்தில் பாலை வைத்தால் பாலும் உதவாது; பாண்டமும் உதவாது.’ (பழ.);

பச்சைப்பசும்பொய்

பச்சைப்பசும்பொய் paccaippacumpoy, பெ. (n.)

   முழுப்பொய்; gross, barefaced lie.

     “யான்கிலேன்……பச்சைப் பசும்பொய்கள் பேசவே” (திவ்.திருவாய், 3,9,7.);

     [பச்சைபசு(ம்); + பொய்]

பச்சைப்பசேரெனல்

 பச்சைப்பசேரெனல் paccaippacēreṉal, பெ. (n.)

   மிகுபசுமையாயிருத்தற் குறிப்பு; expr. signifying deep green colour. (வின்.);

     [பச்சை + பசேர் + எனல்]

ஒருகா. பச்சைப் பசேலெனல் → பச்சைப் பசேரெனல்

பச்சைப்படாம்

பச்சைப்படாம் paccaippaṭām, பெ. (n.)

பச்சவடம். பார்க்க; see {paccavadam.}

     “கால் வீழ்ந்த பச்சைப்படாமும்” (தொல்.பொ.46, உரை, பக்.433);

     [பச்சை + படாம்]

பச்சைப்படி

 பச்சைப்படி paccaippaṭi, பெ. (n.)

   அவியாமற் கொடுப்பது; paddy given as wages without boiling it (சா.அக.);

     [பச்சை + படி]

பச்சைப்படிகொடு-த்தல்

பச்சைப்படிகொடு-த்தல் paccaippaṭikoṭuttal,    4. செ.கு.வி. (v.i.)

   தக்கார்க்குப் பழ வகைகளைக் கொடுத்து உதவுதல்(இ.வ.);; to give fresh fruits as presents to worthy persons etc,

     [பச்சை + படி + கொடு-,]

     ‘பச்சை கொடுத்தால் பாவந்தீரும்; வெள்ளை கொடுத்தால் வினை தீரும்’ (பழ.);

பச்சைப்பட்டி

 பச்சைப்பட்டி pacēreṉalpaccaippaṭṭi, பெ. (n.)

   விதைப்பதற்கு முன் வயலில் இடப்படும் சாணம் முதலிய எரு (வின்.);; raw or undried manure applied to land shortly before sowing.

     [பச்சை + பட்டி]

பச்சைப்பணம்

 பச்சைப்பணம் paḻpaccaippaṇam, பெ. (n.)

   வரிவகை(pudu.inSC);; a tax.

     [பச்சை + பணம்]

பச்சைப்பதம்

பச்சைப்பதம் paccaippatam, பெ. (n.)

   1. தவசத்தின் முற்றாப்பருவம்; immaturity of Grain;

   2. நன்றாய் வேகாத நிலைமை; the state of being

 under-boiled

     [பச்சை + பதம்]

பச்சைப்பயறு

பச்சைப்பயறு paccaippayaṟu, பெ. (n.)

   1. பாசிப்பயறு (பதார்த்த.840.);,

 green gram.

   2. உழுந்து வகை; blackgram.

     [பச்சை + பறு]

பச்சைப்பயறுகட்டு

 பச்சைப்பயறுகட்டு paccaippayaṟukaṭṭu, பெ. (n.)

   பச்சை பயறு கலந்த பொங்கல்; preparation with rice and green gram.

     [பச்சைப்பயறு + கட்டு]

பச்சைப்பருப்பு

 பச்சைப்பருப்பு paccaipparuppu, பெ. (n.)

   சிறுபயற்றம் பருப்பு.(இ.வ.);; split green gram.

     [பச்சை + பருப்பு]

பச்சைப்பலா

பச்சைப்பலா paccaippalā, பெ. (n.)

   1. ஈரப்பலா; young jack fruit

   2. சீமைப்பலா; foreign jack

   3. குரங்குப் பலா; monkey jack (சா.அக.);

மறுவ. ஆசினி

     [பச்சை + பலா]

பச்சைப்பல்லக்கு

 பச்சைப்பல்லக்கு paccaippallakku, பெ. (n.)

பாடை.(கொ.வ.);

 bier, hearse.

மறுவ. கால்கழிகட்டில்

     [பச்சை + பல்லக்கு]

பச்சைப்பாக்கு

பச்சைப்பாக்கு paccaippākku, பெ. (n.)

   1. உலரவைக்காத பாக்கு; unripe or undried areca_nut. (வின்.);;

   2. அவிக்காத பாக்கு; arecanut not boiled.

     [பச்சை + பாக்கு]

பச்சைப்பாடம்

 பச்சைப்பாடம் paccaippāṭam, பெ. (n.)

   இரு கூறாய்ப் பிளந்த மீனில் உப்பிட்டுக் காற்றுப் புகாமல் வைத்துப் பாடஞ் செய்தல் (தஞ்சை.மீனவ.);; fish preservation with salt.

பச்சைப்பாட்டம்

 பச்சைப்பாட்டம் paccaippāṭṭam, பெ. (n.)

   ஒவ்வொரு பருவகாலத்திற்கும் தவசங்களாகவும். தவசங்களுக்கு ஈடாகப் பணமாகவும் செலுத்தும் வரி; tax either in money or in king.

     [பச்சை + பாட்டம்]

பச்சைப்பாதிகம்

 பச்சைப்பாதிகம் paḻpaccaippātikam, பெ. (n.)

   வெள்ளை வாடா மல்லிகை; white variety of everlasting jasmine.

     [பச்சை + பாதிகம்]

பச்சைப்பானை

 பச்சைப்பானை paccaippāṉai, பெ. (n.)

   சுடாத பானை; unburnt earthen pot. (வின்.);

     ‘பச்சைப்பானை காயுமுன்னே பாவிமகன் போனானே’ (நாட்டுப்);

     [பச்சை + பானை]

பச்சைப்பாம்பு

 பச்சைப்பாம்பு paccaippāmpu, பெ. (n.)

நீண்டகோடுகளையும் மெல்லிய உடலையும் உடைய பச்சை நிறப் பாம்புவகை; (கொ.வ.);

 whip-snake,

     [பச்சை + பாம்பு]

பச்சைப்பாலகன்

 பச்சைப்பாலகன் paccaippālakaṉ, பெ. (n.)

   இளங்குழந்தை பச்சைப்பிள்ளை; newborn baby.

மறுவ. பச்சைக் குழந்தை

     [பச்சை + பாலகன்]

பச்சைப்பால்

பச்சைப்பால் paccaippāl, பெ. (n.)

   காய்ச்சாத பால்; fresh, unboiled milk,

     “உதயமதிற் பச்சைப்பாலுண்” (பதார்த்த:1361.);

     ‘அவனைக் கறக்கவிட்டால் பச்சைப் பாலாக் குடித்திடு வான்’ (உ.வ.);

     [பச்சை + பால்]

பச்சைப்பிடி-த்தல்

 பச்சைப்பிடி-த்தல் paccaippiḍittal, செ.கு.வி. (v.i.)

   ஊன்றிய பயிர் ஊட்டமாக வளர்வதற்கு அறிகுறியாகப் பச்சை நிறம் தோன்றுதல்; of crops, turn rich green.

     ‘தழைச் சத்துப் போட்ட பிறகு நெற்பயிர் பச்சை பிடித்து வளர்கிறது’ (உ.வ.);

     [பச்சை + பிடி-,]

பச்சைப்பிடிசுற்று-தல்

பச்சைப்பிடிசுற்று-தல் paccaippiṭicuṟṟutal,    4. செ.கு.வி. (v.i.)

   மணமக்கள் ஊஞ்சலில் வீற்றிருக்கும்போது பலநிறமுள்ள சோற்றுத் திரளைக் கொண்டு அவர்களைச் சுற்றுதல்; to wave balls of coloured rice round a bride and bridgegroom when seated on a swing.

     ‘பொண்ணு மாப்பிள்ளைக்குப் பச்சைப் பிடி சுத்திப் போடுங்க.’ (உ.வ.);

     [பச்சை + பிடி + சுற்று-,]

பச்சைப்பிறா

 பச்சைப்பிறா paccaippiṟā, பெ. (n.)

   கல்லிரும்பிலை என்னும் மூலிகை; a kind of medicinal herb.

     [பச்சை + பிறா]

பச்சைப்பிள்ளை

பச்சைப்பிள்ளை paccaippiḷḷai, பெ. (n.)

   1. பிறந்தகுழந்தை; new born infant.

   2. அறியாப்பிள்ளை; innocent, little child.

     [பச்சை + பிள்ளை]

பச்சைப்பிள்ளைத் தாய்ச்சி

 பச்சைப்பிள்ளைத் தாய்ச்சி tāycci, பெ. (n.)

   கைக்குழந்தையை யுடைய இளந்தாய்(வின்.); (வின்.);; a woman having a babe in arms.

மறுவ. பச்சைப்பிள்ளைக்காரி

     [பச்சைப்பிள்ளை + தாய் + சி]

பச்சைப்புண்

பச்சைப்புண் paccaippuṇ, பெ. (n.)

   1. ஆறாப்புண்(கொ.வ.);; green wound.

   2. உலராதபுண்; undried wound

   3. புதுப்புண்; fresh wound

   4. மருந்திடப்படாத புண்; untreated wound, raw wound.

     [பச்சை + புண்]

     ‘பச்சைப் புண்ணில் ஊசியெடுத்துக் குத்தியது போல’ (பழ.);

பச்சைப்புனுகு

 பச்சைப்புனுகு paccaippuṉuku, பெ. (n.)

   பதப்படுத்தாத பூனைமணத்தி; civet drawn in a raw state, Crude Civet.

     [பச்சை+ Skt,புனுகு]

பச்சைப்புறா

பச்சைப்புறா paccaippuṟā, பெ. (n.)

 green pigeon,

     [பச்சை + புறா]

     “இப்பச்சைப்புறா பழந்தின்று வாழ்கின்ற இனம்; மர உச்சிகளிலிருந்து தரைக்கு இறங்கு வதில்லை; கூட்டமாகவும் இலை மறைவாகவும் வாழும். அத்தி, ஆல் முதலிய பழமரங்களில் விருப்பத்துடன் வாழும். இவை நன்றாகத் தொலைதூரம் பறக்கும் ஆற்றலுள்ளவை. இவற்றின் குரல் தாழ்ந்த ஓசையுடன் குழல் வாசிப்பது போல் காதுக்கு இனிமையாக இருக்கும்.” எனக் கலைக் களஞ்சியம் தெரிவிக்கின்றது. (கலைக். 6 →634);

     [P]

பச்சைப்புல்

 பச்சைப்புல் paḻpaccaippul, பெ. (n.)

   பசும்புல்; green grass as opposed to .

காய்ந்த புல்.

 dry grass

     [பச்சை + புல்]

பச்சைப்புளி

பச்சைப்புளி paccaippuḷi, பெ. (n.)

   1. புளியங்காய்; unriped tamarind fruit.

   2. பொங்கவிடாத குழம்புவகை(இ.வ.);(இ.வ.);; a kind of unboiled sauce or relish mainly consisting of seasoned tamarind.

மறுவ. பச்சைப் புளிச்சாறு.

     [பச்சை + புளி]

பச்சைப்புளிப்பு

 பச்சைப்புளிப்பு paccaippuḷippu, பெ. (n.)

   கடும்புளிப்பு;  excessive sourness.

     ‘குழம்பு பச்சைப் புளிப்பாய் புளிக்கிறது’ (உ.வ.);

     [பச்சை + புளிப்பு]

பச்சைப்புளுகன்

பச்சைப்புளுகன் paccaippuḷukaṉ, பெ. (n.)

   1. வீணாக வீண்பெருமை பேசுவோன்,

 great boaster

   2. பெரும்பொய்யன்; veritable, dowunright liar.

     [பச்சை + புளுகன்]

பச்சைப்புழு

 பச்சைப்புழு paccaippuḻu, பெ. (n.)

   மொச்சை, அவரை முதலியவற்றில் காணப்படும் பச்சை நிறமான புழுவகை (யாழ்.அக.);; palmer worm, hairy Caterpillar.

     [பச்சை + புழு]

பச்சைப்பூ

பச்சைப்பூ paccaippū, பெ. (n.)

   1. பால்குடிக்கிற குழந்தை (இ.வ.);; suckling.

   2. பசும்பூ, பைம்பூ; green flower,

   3. காயாதபூ; undriedflower

   4. அப்பொழுது கொய்த பூ; newly plucked flower; fresh flower.

     [பச்சை + பூ]

பச்சைப்பூநாகம்

 பச்சைப்பூநாகம் paccaippūnākam, பெ. (n.)

   அப்போது தோண்டியெடுத்த பூநாகம்; fresh earthworm.

மறுவ. நாக்குப்பூச்சி, நாவாய்ப்புழு, நாங்கூழ்ப் புழு.

     [பச்சை + பூ + நாகம்]

பச்சைப்பூரம்

பச்சைப்பூரம்āṟukiṟatupaccaippūram, பெ. (n.)

   1. ஒருவகைக் கருப்பூரம் (பதார்த்த.1073);; medicated comphor.

   2. தூய்மை செய்யாத பூரம்; un purified subchloride of mercury.

மறுவ. பச்சைக் கருப்பூரம்

     [பச்சை + பூரம்]

பச்சைப்பெருமாள்

பச்சைப்பெருமாள் paccaipperumāḷ, பெ. (n.)

   1. திருமால்; { Tirumāl}

 as green in colour,

     “பச்சைமா மலைபோல் மேனி” (திவ்.);

   2. மூன்று மாதத்தில் விளையும்நெல்வகை; a kind of paddy that matures in three months. (சா.அக.);

     [பச்சை + பெருமாள்]

பச்சைப்பை

 பச்சைப்பை paccaippai, பெ. (n.)

   ஒருவகைக் கொடி; an unknown creeper.

     [பச்சை + பை]

பச்சைப்பொட்டு

பச்சைப்பொட்டு1 paccaippoṭṭu, பெ. (n.)

   நெற்றியிற் பச்சைகுத்தியமைத்த பொட்டு (வின்.);; a round mark tatooed on the forehead.

     [பச்சை + பொட்டு.]

 பச்சைப்பொட்டு2 paccaippoṭṭu, பெ. (n.)

   நடிப்பு(யாழ்ப்.);; falso show, pretension to wealth, learning or piety.

     [பச்சை+ பொட்டு]

பச்சைப்பொய்

 பச்சைப்பொய் vantatākalāmpaccaippoy, பெ. (n.)

 gross, downright lie.

     [பச்சை + பொய்]

பச்சைமஞ்சள்

 பச்சைமஞ்சள் paccaimañcaḷ, பெ. (n.)

உலர வைத்துப் பதப்படுத்தாத மஞ்சள்,

 undried and unseasoned turmeric

     [பச்சை + மஞ்சள்]

பச்சைமணி

பச்சைமணி paḻpaccaimaṇi, பெ. (n.)

   1. பசுமை நிறமுடைய ஒளிக்கல் (மரகதம்);; emerald.

   2. நிலநீறு (பூநீறு);; efflorescence on the soil of fullers earth. (சா.அக.);

     [பச்சை + பிடி]

பச்சைமண்

பச்சைமண் paccaimaṇ, பெ. (n.)

   1. ஈரமுள்ள மண் (வின்.);; moist earth

   2. மட்பாண்டங்களுக்காகப் பிசைந்த மண்; tempered clay, as for pots, opp. to {cutta-man.}

   3. இளங்குழந்தை; young infant; tender child.

பச்சை மண்ணுக்கு என்ன தெரியும்?

     “அவள் ஒண்ணுந் தெரியாத பச்சை மண்ணு” (உ.வ.); (கொ.வ.);

   4. வேகாத மண்,

 unburnt mud.

     [பச்சை + மண்]

     ‘பச்சை மண்ணும் கட்ட மண்ணும் ஒட்டுமா?’ (பழ.);

பச்சைமதலை

 பச்சைமதலை paccaimatalai, பெ. (n.)

பச்சைப்பிள்ளை(வின்.);; பார்க்க; see {paccal →ppista}

     [பச்சை + மதலை]

பச்சைமரம்

பச்சைமரம் paccaimaram, பெ. (n.)

   1. (வின்.);; மரம்; living tree

   2. வேலைக்குத் தகுதியாக்கப்படாத மரம்; unseasoned

     [பச்சை + மரம்]

     ‘பச்சை மரத்துக்கு இத்தனையென்றால் படாத மரத்துக்கு எத்தனை?’ (பழ.);

பச்சைமா

பச்சைமா varukiṉṟaṉapaccaimā, பெ. (n.)

   1. பச்சைமாப்பொடி. பார்க்க; see {paccal māppogi}

   2. பணிகாரமா; raw, unbaked dough paste.

   3. வறுக்காத மாவு; flour not heated or fried.

     [பச்சை + மா]

பச்சைமாப்பொடி

பச்சைமாப்பொடி paccaimāppoṭi, பெ. (n.)

   1. குழம்பு செய்ததற்கு உதவும் அரிசிமாப்பொடி; rice flour used in preparing sauce.

   2. தெய்வத் திருமேனிகளுக்கு திருமுழுக்காட்டுச் செய்யப்பயன்படும் பொடி; rice flour used for the divine both of idols.

     [பச்சை + மா + பொடி]

பச்சைமிளகாய்

 பச்சைமிளகாய் paccaimiḷakāy, பெ. (n.)

   பழுக்காத மிளகாய், பச்சை நிறமுள்ள மிளகாய் (கொ.வ.);; green Chilli.

     [பச்சை + மிளகாய்]

பச்சைமீன்

பச்சைமீன் paccaimīṉ, பெ. (n.)

   1.உலராத மீன்; unseasoned fish as opposed to

கருவாடு; (உலர்ந்த மீன்);

 dried fish,

   2. அப்போது பிடித்த மீன்; fresh fish.

   3. அவிக்காத மீன்; fish not cooked.

     [பச்சை + மிளகு]

பச்சைமூங்கில்

 பச்சைமூங்கில் paccaimūṅkil, பெ. (n.)

 wet bamboo which is green in colour as opposed to

உலர்ந்த மூங்கில்.

 dried bamboo. (சா.அக.);

     [பச்சை + மூங்கில்]

பச்சைமேனி

 பச்சைமேனி paccaimēṉi, பெ. (n.)

   துரிசு; blue vitriol. (சா.அக.);

     [பச்சை + மூங்கில்]

பச்சைமோர்

 பச்சைமோர் paccaimōr, பெ. (n.)

   காய்ச்சாத மோர்; butter milk that is not heated. (heated milk is administered for patients); (சா.அக.);

     [பச்சை + மோர்]

பச்சையட்டை

 பச்சையட்டை paccaiyaṭṭai, பெ. (n.)

   பச்சை நிற அட்டை; green leech.

     [பச்சை + அட்டை]

பச்சையன்

 பச்சையன் paccaiyaṉ, பெ. (n.)

திருமால். (யாழ்.அக.);; {tirumal.}

     [பச்சை + அன்]

பச்சையப்பர்

பச்சையப்பர் paḻpaccaiyappar, பெ. (n.)

   17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரும் செல்வரும் வள்ளலும் ஆனவர்; an eminent rich person and a philonthac plust.

இவர் தம்முடைய இருபத் தெட்டாம் அகவையில் கம்பெனி ஆங்கிலக்குழழும ஆட்சியில் முதன்மையான பொறுப்புகளை மேற் கொண்டிருந்த இராபர்த்து சோசப்புசலிவன் என்பவரின் தலைமை மொழி பெயர்ப்பாளர் ஆனார். புகழும் பெருஞ் செல்வமும் பச்சையப்பருக்கு நாள்தோறுங் குவிந்து கொண்டே இருந்தன. சலிவனுடைய அரசியல் அலுவல்களில் இவர் பேருதவி புரிந்தார். தஞ்சாவூர் மன்னருக்கு மொழி பெயர்ப்பாளராகவும் வைப்பகத் தொடர் பாளராகவும் இருந்து சென்னை அரசுக்கு மன்னர் செலுத்த வேண்டிய கப்பங்கள் ஒழுங்காகச் செலுத்தப்படுவதற்கு உதவி புரிந்தார். 1784ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் குடியேறினார். தஞ்சை மன்னருக்குச் சென்னை அரசினரால் தொல்லை நேராமல் பாதுகாத்தார். மன்னர் இவரைப் பெரிதும் பாராட்டிப் போற்றிக் காத்து வந்தார்.

இவருடைய முதல் மனைவிக்குப் பிள்ளையில்லாதபடியால் திருமறைக் காட்டைச் சேர்ந்த பழநியாயி என்பவரை இரண்டாவது மனைவியாகத் திருமணஞ் செய்து கொண்டார். இவளிடம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 1791இல் இவருக்குப் பக்கவலிப்பு நோய் கண்டது. 1794இல் உடல் நிலை கவலைக்கிடமாயிற்று. அதே ஆண்டில் காலமானார். இவர் தேடிய பொருள் பல இலட்சக்கணக்கில் இருந்தது. இவர் தம்முடைய காலத்திலேயே அறங்கள் பலவற்றைச் செய்தார். கடவுளிடத்தில் மிகுந்த பற்றுடைய இவர் கோயில் திருப்பணி முதலியவற்றையுஞ் செய்தார். இவர் மறைந்த பிறகு இவருடைய பொருள்களைப் பொருட் பாதுகாப்புக் குழுவினர் பாதுகாத்து இவருடைய அறங்களையெல்லாம் நடத்தி வருகின்றனர் சென்னையிலும், காஞ்சிபுரத்திலும் இவர் பெயர் தாங்கிய கலைக்கல்லூரிகளும், மேல்நிலைப்பள்ளிகளும் சிறப்புற நடந்து வருகின்றன)

பச்சையம்

 பச்சையம் paccaiyam, பெ. (n.)

 chlorophyll.

மறுவ: பாசியம்

     [பச்சை → பச்சையம்]

பச்சையம்மன்

 பச்சையம்மன் paccaiyammaṉ, பெ. (n.)

   பார்க்க; பச்சையம்மாள் (இ.வ.);; rice flour used in preparing sauce.

     [பச்சை + அம்மன்]

பச்சையம்மாள்

 பச்சையம்மாள் paccaiyammāḷ, பெ. (n.)

   ஒரு சிற்றூர்ப்புறப் பெண் தெய்வம்; a village goddess.

     [பச்சை + அம்மாள்]

பச்சையரிசி

 பச்சையரிசி paccaiyarici, பெ. (n.)

   நெல்லை வேகவைக்காது குத்தியெடுத்த அரிசி; raw rice

     [பச்சை + அரிசி]

பச்சையலரி

 பச்சையலரி paccaiyalari, பெ. (n.)

சீமையலரி,

 yellow oleander.

மறுவ. திருவாச்சிப்பூ.

     [பச்சை + அலரி]

பச்சையாய்த் தின்றல்

 பச்சையாய்த் தின்றல் tiṉṟal,    காய்கறிகளையோ, ஊனையோ பச்சையாய்த் தின்னுதல்; eating green vegetables and raw meat without boiling or Cooking them.

     [பச்சையாய் + தின்றல்]

பச்சையாய்ப் பேசு-தல்

பச்சையாய்ப் பேசு-தல் pēcutal,    19. செ.கு.வி (v.i.)

செ.குன்றா.வி (v.t.);

   1. வெளிப்படையாய்ப் பேசுதல்; to be out spoken,

   2. பச்சைபச்சையாய்ப்பேசு, பார்க்க; see {расса расса →y →ay →р →рёSu →,}

     [பச்சையாய் + பேசு-,]

பச்சையிரும்பு

பச்சையிரும்பு paccaiyirumpu, பெ. (n.)

   1. காய்ச்சாத இரும்பு; untampered iron.

   2. தேனிரும்பு; pure iron.

   3. இரும்பு வகை (வின்.);; cold iron.

     [ம. பச்சிரும்பு]

     [பச்சை + இரும்பு]

பச்சையிறைச்சி

 பச்சையிறைச்சிāṟukiṟatupaccaiyiṟaicci, பெ. (n.)

   சமைக்காத புலால்; uncooked meat. (சா.அக.);

     [பச்சை + இறைச்சி]

பச்சையிளநாவி

 பச்சையிளநாவி paccaiyiḷanāvi, பெ. (n.)

   மூன்று மாதத்திய பிண்டம்; foetus three months old. (சா.அக.);

     [பச்சை + இளநாவி]

பச்சையிளநீர்

 பச்சையிளநீர் paccaiyiḷanīr, பெ. (n.)

   பச்சைநிற இளநீர்; water of green tender coconut.

     [பச்சை + இளநீர்]

பச்சையீரம்

 பச்சையீரம் paccaiyīram, பெ. (n.)

   அதிக ஈரம் (வின்.);; excessive dampness.

     [பச்சை + ஈரம்]

     ‘பானை பச்சையீரமாக இருக்கிறது.’ (குய.வழ.);

பச்சையுடம்பு

பச்சையுடம்பு kuyavaḻpaccaiyuṭampu, பெ. (n.)

   1. பிள்ளை பெற்றவளின் மெல்லியவுடம்பு; the delicate body of a woman after parturition.

   2. பச்சைநிறவுடம்பு; green pallor of the skin.

   3. நோயாளியின் மெலிந்தவுடம்பு; emaciated body of a convalescent. (சா.அக.);

     [பச்சை + உடம்பு]

பச்சையுடல்

 பச்சையுடல்  paccaiyuṭal, பெ. (n.)

   புண்பட்டவுடம்பு; body subjected to operation or inflincted by wound. (சா.அக.);

     [பச்சை + உடல்]

பச்சையுப்பு

பச்சையுப்பு paccaiyuppu, பெ. (n.)

   1. தனியுப்பு. (வின்.);

 unmixed salt

   2. கட்டாதவுப்பு; salt not consolidated or fixed.

   3. சோற்றுப்பு;  common salt (சா.அக.);

     [பச்சை + உப்பு]

பச்சையெண்ணெய்

 பச்சையெண்ணெய் uppupaccaiyeṇīey, பெ. (n.)

   வேகவைக்காத ஆமணக்கு முத்திலிருந்து எடுக்கும் எண்ணெய்; cold drawn castor oil.

     [பச்சை + எண்ணெய்]

பச்சையெழுது-தல்

பச்சையெழுது-தல் paccaiyeḻututal, செ. குன்றா. வி. (v.t)

   திருமணம் முதலிய சிறப்புகளில் கொடுத்த நன்கொடைகளுக்குக் கணக்கிடுதல் (சீவக.829, உரை);; to make a list of presents given on a marriage occasion, etc.

     [பச்சை + எழுது-,]

பச்சைரதி

பச்சைரதி paccairati, பெ. (n.)

   வயிரங்களை எடைபோடும் ஒருவகை நிறையளவு; standard weight = 5/16 gr. troy, used in weighing diamonds.

     [பச்சை + ரதி]

பச்சைவசம்பு

 பச்சைவசம்பு paccaivacampu, பெ. (n.)

   உலர்ந்து பசுமையாகவுள்ள வசம்பு; fresh sweet flag (undried);.

     [பச்சை + வசம்பு]

பச்சைவஞ்சி

 பச்சைவஞ்சி paccaivañci, பெ. (n.)

   பசுமையாகவுள்ள சீந்தில்; fresh moon creeper.

     [பச்சை + வஞ்சி]

பச்சைவடம்

பச்சைவடம் paccaivaṭam, பெ. (n.)

பச்சவரம் பார்க்க; (ஈடு 4, 8, 2); seе {рассаиалат.}

     [பச்சை + வடம்]

பச்சைவடிவாள்

 பச்சைவடிவாள் paccaivaṭivāḷ, பெ. (n.)

   பச்சை பாம்பு; greenish snake. (சா.அக.);

     [பச்சை + வடிவாள்]

பச்சைவளை

 பச்சைவளை paccaivaḷai, பெ. (n.)

   பொன் இடையிட்டதும் பச்சைக் கண்ணாடியாலானதுமான கையணிவகை; glass bracelet ornamented with gold.

     [பச்சை + வளை]

     ‘பச்சைவளை பவளவளையம்மே’ (நாட்.);

பச்சைவழித்தல்

 பச்சைவழித்தல் paccaivaḻittal, பெ. (n.)

பச்சை பூசுதல் பார்க்க; see {paccai pūšu-,}

     [பச்சை + வழித்தல்]

பச்சைவாழை

பச்சைவாழை nāṭpaccaivāḻai, பெ. (n.)

   1. பச்சை நாடான் பார்க்க; see {paccal magam.}

   2. வாழை வகை; dwarf banana

   3. சமைக்காத வாழைக்காய்; raw plantain which is not cooked

   4. சீனத்து வாழை; musa chiniasis

     [பச்சை + வாழை]

பச்சைவில்

பச்சைவில் paccaivil, பெ. (n.)

   1. வானவில், (நாமதீப. 114.);

 rainbow

   2. காமன் வில் (சங்.அக.);; bow of indian cupid.

     [பச்சை + வில்]

பச்சைவீடு

 பச்சைவீடு paccaivīṭu, பெ. (n.)

பருவ மெய்திய பெண்ணை மறைவாய் இருத்தி வைத்தற்குரிய பசுந்தழையாலான குடில்; (செங்கை.மீன.);

 green {olā} hut which is used for age attend.

     [பச்சை + வீடு]

பச்சைவெட்டான்

 பச்சைவெட்டான் paccaiveṭṭāṉ, பெ. (n.)

   வாழை வகை; a kind of plantain.

     [பச்சை + வெட்டான்]

பச்சைவெட்டு

பச்சைவெட்டு paccaiveṭṭu, பெ. (n.)

   1. தூய்மை செய்யப்படாத நச்சு மருந்து; medicinal mineral used in its crude condition. (வின்.);.

   2. வெளிப்படை, (கொ.வ.);; openness, bluntness

   3. பழுக்காத காய்; unripe fruit,

   4. வாய் வேகச் செய்யும் மருந்து; medicine causing inflammation of the mouth.

     [பச்சை + வெட்டு]

பச்சைவெட்டுக்கல்

 பச்சைவெட்டுக்கல் paccaiveṭṭukkal, பெ. (n.)

பச்சைக்கல் பார்க்க; see {pacal. k-ka }

     [பச்சை + வெட்டு + கல்]

பச்சைவெட்டுச்சந்தனம்

 பச்சைவெட்டுச்சந்தனம் paccaiveṭṭuccantaṉam, பெ. (n.)

   அரைத்த சந்தனம்; paste of Sandal wood.

     [பச்சை + வெட்டு + சந்தனம்]

பச்சைவெட்டுவேதை

 பச்சைவெட்டுவேதை paccaiveṭṭuvētai, பெ. (n.)

   கட்டுவகையில்லாமலே நெருப்புக் கோரும் சரக்குகளைக் கொண்டு செய்யும் வேதை முறை; in alchemy the process of transmutation without consolidation.

     [பச்சை + வெட்டு + வேதை]

பச்சைவெட்டை

பச்சைவெட்டை paccaiveṭṭai, பெ. (n.)

   சந்தன வகை (சிலப்.14,108, உரை);; a kind of Sandal

     [பச்சை + வெட்டை]

பச்சைவெண்ணெய்

 பச்சைவெண்ணெய் paccaiveṇīey, பெ. (n.)

   காய்ச்சாத பாலிலிருந்து எடுக்கும் வெண்ணெய் (கொ.வ.);; butter churned from unboiled milk.

     [பச்சை + வெண்ணெய்]

பச்சைவெயில்

பச்சைவெயில் paccaiveyil, பெ. (n.)

   மாலைக் காலத்து வெயில்; evening sun.

     “பசந்து என்றார் மாலைக் காலத்துப் பரந்த பச்சை வெயிலை” (சிலப்.4, 5, உரை.);

     [பச்சை + வெயில்]

மாலைவெயில் வெப்பங்குன்றியமையால் பச்சை வெயிலாயிற்று.

பச்சைவெள்ளம்

 பச்சைவெள்ளம் veyilāyiṟṟupaccaiveḷḷam, பெ. (n.)

பச்சைத்தண்ணீர் பார்க்க; see {paccal-t-tamir}

     [ம.பச்சவெள்ளம்]

     [பச்சை + வெள்ளம்]

பச்சைவேலி

 பச்சைவேலி paccaivēli, பெ. (n.)

   உயிர்வேலிகள்; fence as living shrubs.

     [பச்சை + வேலி]

பச்சைவேலிப்பயிர்கள்

பச்சைவேலிப்பயிர்கள் paccaivēlippayirkaḷ, பெ. (n.)

   வேலிக்கென்றே ஏற்பட்ட நிலைத்திணைகளைப் பயிர்செய்து அவற்றை வேலியாக்குதல்; green fencing plants.

இவ்வகை வேலிகளில் சில தட்பவெப்ப நிலைக்கு ஏற்றனவும் மற்றும் சில எவ்விடத்திற்கும் ஏற்றனவுமாகப் பல வகைப்படும். இவற்றில் சில வயல்களுக்கும் சில தோட்டங்களுக்கும் சில பூந்தோட்டங்களுக்கும், அவற்றில் சில வளி மறையாகக் (wind-screens); காற்றின் வேகத்தைத் தடுப்பதற்கும் சில அரிப்பினை தடுப்பதற்கும் பயன்படுகின்றன.

மறுவ: உயிர்வேலி. உயிர்வேலி நிலைத்திணைகளின் பெயர்கள்

   1. கற்றாழை வகைகள்

   2. கள்ளி வகைகள்

   3. இளுவை வகைகள்

   4. சீமைவகைகள்

   5. மைசூர் முள்வேலி

   6. கொடுக்காய்ப்புளி

   7. சீமை ஆவிரை

   8. மூங்கில், வேறுவகை

   1. யானைக் கற்றாழை

   2. கோல்கன்னி

   3. சப்பாத்தி

   4. கிளுவை

   5. கொடுக்காப்புளி

   6. சீமை ஆவிரை

   7. தங்க அலரி

   8. ஆதொண்டை

   9. திவிதிவிசெடி

   10. கழற்செடி

   11. ஆடாதோடை

   12. ஆமணக்கு இனங்கள்

   13. கம்பளிப்பூச்சிச் செடி

   14. பிஞ்சில் சங்கம்

   15. பூவரசு

   16. சவுக்கு

   17. பொன்னலரி

   18. களாக்காய்

   19. மருதோன்றி

   20. நாகதாளி

   21. விராளி

   22. கண்ணாடிக்கள்ளி

     [பச்சைவேலி + பயிர்கள்]

பச்சைவேல்

 பச்சைவேல் veḷḷampaccaivēl, பெ. (n.)

சீமைவேல். (l.);

 jerusalem thorn, green babool,

     [பச்சை + வேல்]

பச்சோணான்

 பச்சோணான் paccōṇāṉ, பெ. (n.)

   ஒணான் வகை; Chameleon.

     [பச்சை + ஒணான்]

பச்சோந்தி

பச்சோந்தி paccōnti, பெ. (n.)

   1. தான் இருக்கும் இடத்தின் சூழலுக்கு ஏற்பத் தன் தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையை இயற்கையாகப் பெற்ற ஒருவகை ஓணான்; chameleon,

   2. நிலையான தன்மை இல்லாதவன்; சூழ்நிலைக்குத் தகுந்தபடி மாறுபவன்,

 opportunist.

     “நம் கட்சியில் பச்சோந்திகளுக்கு இடம் தரக்கூடாது”

     [பச்சை + ஒந்தி]

மறுவ: பச்சை ஓணான்

ஒதி

சரடம்

ஒமான்

தண்டு

ஒந்தி

தம்முடைய நிறத்தை எளிதாக, விரைவில் பெரிதும் மாற்றிக் கொள்ளக் கூடிய ஆற்றலுள்ளதும் வடிவில் ஒணான் போன்றதுமான விலங்கு (கலைக்.6.638);.

     [P]

பச்சோலை

பச்சோலை accōlai, பெ. (n.)

   காயாத ஒலை;  greenola,

     “பச்சோலைக் கில்லை யொலி” (நாலடி, 256);.

க. பச்சோலெ, ம பச்சோல

     [பச்(சை); + ஒலை]

பஞிலம்

பஞிலம் pañilam, பெ. (n.)

பஞ்ஞிலம். பார்க்க; see {paihilam,}

     “பன்னூறடுக்கிய வேறுபடு பஞிலம்” (புறநா. 62, 10, கீழ்க்குறிப்பு);

     [பஞ்ஞிலம் → பஞிலம்]

பஞ்சகசாயம்

பஞ்சகசாயம் pañjagacāyam, பெ.(n.)

   1. ஐந்து வகைச் சரக்குகளான தேன், நெய், பால், வாழை, சருக்கரை, இவைகளைக் கொண்டு ஆயுள்வேத முறையில் வடிக்கும் ஒரு குடிநீர்; a decoction extracted by boiling a mixture of substances viz, honey, ghee, milk, plantain and sugar.

   2. நெல்லி, தும்பை, கடுக்காய், வெள்ளி லோத்திரம், மஞ்சிட்டி ஆகிய இவ்வைந்து சரக்குகளையும் கொண்டு தமிழ் முறைப்படி இறக்கும் கருக்கு நீர் (சா.அக.);; a kind of decoction extracted from five drugs viz. goose berry leucas flower, gall nut, wood apple fruit shell, Indian madder.

   3. ஐந்து வகை மருந்துகள்; five varieties of decoction ‘seperately or as a whole.

     [பஞ்சம்+கசாயம்]

பஞ்சகற்பமாத்திரை

 பஞ்சகற்பமாத்திரை pañjagaṟpamāttirai, பெ.(n.)

   சந்தனம், மஞ்சள், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய் இவைகளை சமனெடை கொண்டு, ஆடாதோடைச் சாற்றினா லரைத்துத் திரட்டி உலர்த்திய மாத்திரை. இதனால் மலச்சிக்கல், வெள்ளை, அரத்தக்கொதிப்பு, தாதுத் தளர்ச்சி போகும்; pill or tablet containing sandal, turmeric and the three myrobalans. It is said to cure constipation. White discharge, blood pressure and weakness.

     [பஞ்சம்+கற்பம்+மாத்திரை]

பஞ்சகற்பம்

பஞ்சகற்பம் pañjagaṟpam, பெ.(n.)

   கத்தூரி மஞ்சள், மிளகு, வேப்பங் கொட்டை, கடுக்காய்த் தோல், நெல்லிப் பருப்பு என்ற ஐவகைப் பண்டங்களாலாகியதும் தலையிற் பூசப்படுவதுமான மருந்துப் பூச்சு வகை (திருமந்.849);; medicinal paint for the head, made of five ingredients, viz., {}, nelli-p-paruppu.

     [பஞ்ச+கற்பம்]

     [Skt. {} → த. பஞ்ச]

பஞ்சகவ்வியம்

பஞ்சகவ்வியம் pañjagavviyam, பெ.(n.)

   ஆவினின்று கிடைக்கும் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் என்ற ஐந்து பொருள் களைக் கொண்டு மந்திரப்படிச் சேர்க்கப் படுவது; the five products of the cow mixed together while reciting mantras, viz., milk, curd, ghee, urine and dung.

     “பஞ்சகவ்வியம் கொள்ளவோர் பசுவருளென்றான்” (உத்தரரா. அசுவ.129);.

     [Skt. {}+gavya → த. பஞ்சகவ்வியம்]

பஞ்சகாயம்

 பஞ்சகாயம் pañjakāyam, பெ.(n.)

   திரிபலை, வெங்காயம், காயம் என்ற ஐவகை மருந்துச் சரக்கு; the five medicinal substances, viz., tiripalai, {}, etc.,

     [பஞ்சம்+காயம்]

பஞ்சகாரகம்

 பஞ்சகாரகம் pañjagāragam, பெ.(n.)

   காயம், வெள்ளுள்ளி, வெங்காயம், கடுகு, வெந்தயம் என்ற ஐவகைச் சரக்கு (சங்.அக.);; the five pungent substances, viz., {}, vendayam.

     [Skt. {} → த. பஞ்சகாரகம்]

பஞ்சகாரம்

 பஞ்சகாரம் pañjakāram, பெ.(n.)

   ஐந்து வகையான காரச் சரக்குகள்; five kinds of alkaline.

     ‘சீனக்காரம் அல்லது படிகாரம், வெண்காரம், பூங்காரம், காடிக்காரம், சவர்காரம்’ (சா.அக.);.

பஞ்சகாலம்

பஞ்சகாலம்1 pañjakālam, பெ.(n.)

   காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல், மாலை (பிராதக் காலம், சங்கவகாலம், மத்தியான்ன காலம், அபரான்னகாலம், சாயங்காலம்); என முறையே காலை முதல் அவ்வாறு நாழிகை கொண்ட ஐந்து பகற்பகுதிகள்; the five divisions of day-time, viz., {}.

     “பஞ்ச கால முறைமை…. அனுஷ்டித்து வருகிற….. கூரத் தாழ்வான்” (பட்டர்வைபவம்,பக்.1);.

     [பஞ்சம்+காலம்]

     [Skt. {} → த. பஞ்சம்]

 பஞ்சகாலம்2 pañjakālam, பெ.(n.)

   வறுமைக் காலம்;   அகவிலை குறைந்த காலம்; time of famine.

     “கார் தட்டிய பஞ்ச காலத்திலே” (தனிப்பா.i,236:4);.

     [பஞ்சம்+காலம்]

பஞ்சகாவியம்

 பஞ்சகாவியம் pañjakāviyam, பெ.(n.)

   சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தா மணி, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெரும் வனப்புகள் (காவியங்கள்);; the five great epics in Tamil, viz., {}.

த.வ.ஐம்பெருங்காப்பியம்

     [Skt. {} → த. பஞ்ச]

பஞ்சகிருத்தியம்

பஞ்சகிருத்தியம்1 pañjagiruttiyam, பெ.(n.)

   ஆதன் மும்மலங்களை ஒழித்து வீடு பெறு வதற்குத் துணையாய் இருக்கும் படைக்கை, நிலைபேறு, அழிக்கை, மறைக்கை, அருளுகை (சிருட்டி, திதி, சங்காரம், திரோபாவம், அனுக்கிரகம்); என்ற கடவுளின் ஐந்தொழில் (சி.சி.1, 36);; the five functions of God, designed by Divine Grace for the deliverance of the souls, viz., {}

   2. படைக்கலத்தாற் பொரும்பொழுது வீரன் செய்ததற்குரிய தொடை, விலக்கு, செலவு சேமம், தவிர்த்துவினை செயல் என்ற ஐந்தொழில் (சீவக.1676, உரை);; the five acts of a warrior in a fight with weapons, viz., {}, vilakku, {}.

த.வ. ஐந்தொழில்

     [Skt. {} → த. பஞ்சகிருத்தியம்]

 பஞ்சகிருத்தியம்2 pañjagiruttiyam, பெ.(n.)

   உழுது பயிர் செய்தல், பொருள்களை நிறுத்து விற்றல், நூல் நூற்றல், எழுதுதல், படை கொண்டு காரியம் பயிலுதல் ஆகிய ஐந்து தொழில்கள்; the five occupations, viz., agriculture, trade, weaving, writing and fighting.

     [பஞ்சம் + கிருத்தியம்]

பஞ்சகுத்தம்

 பஞ்சகுத்தம் pañjaguttam, பெ.(n.)

   ஐந்துறுப்பு களையும் அடக்கும் ஆமை (யாழ். அக.);; tortoise, as hiding its five limbs.

     [Skt. {}+ gupta → த. பஞ்சகுத்தம்]

பஞ்சகெளடம்

 பஞ்சகெளடம் pañjageḷaḍam, பெ.(n.)

   சுத்தகெளடம், கானகுப்சம், சாரசுவதம், உற்கலம், மிதிலை என்ற ஐம்பகுதி கொண்ட பழைய கெளடப் பகுதி (சது.);; the ancient province of gaur, comprising the five districts, {}, mitilai.

     [Skt. {} → த. பஞ்சகெளடம்]

பஞ்சகெளவியம்

பஞ்சகெளவியம் pañjageḷaviyam, பெ.(n.)

பார்க்க பஞ்சகவ்வியம்;see {}-kavviyam.

     “பாங்கினாற் பஞ்ச கெளவிய மஞ்செனு மமிர்தம்” (சிவரக. நாரத.4);.

பஞ்சகோசம்

பஞ்சகோசம் pañjaācam, பெ.(n.)

   அன்னமய கோசம், பிராணமயகோசம், மனோமயகோசம், விஞ்ஞான மயகோசம், ஆனந்தமயகோசம் என ஆன்மாவை மூடிக் கொண்டுள்ள ஐவகைக் கோசங்கள் (சி.சி.ப்ர.மாயா.8.);; the five vestures of the soul, viz., {}.

     [Skt. {} → த. பஞ்சகோசம்]

பஞ்சகோணம்

 பஞ்சகோணம் pañjaāṇam, பெ.(n.)

   ஐந்து நேர்க் கோடுகளாற் சூழப்பட்ட வடிவம் (வின்.);; pentagon.

     [Skt. {} → த. பஞ்சம்]

பஞ்சகோலகிருதம்

 பஞ்சகோலகிருதம் pañjaālagirudam, பெ.(n.)

   குன்மம், பச்சை நோய், மண்ணீரல், விருத்தி, இருமல், காய்ச்சல் இவைகளைப் போக்க வேதிமுறைப்படி செய்து கொடுக்கும் ஒரு மருந்து; an ayurvedic medicinal ghee phlegm, dyspepsia, chlorosis, enlarged spleen, cough and fevers (சா.அக.);

     [பஞ்சம்+கோலம்+கிருதம்]

பஞ்சகோலம்

 பஞ்சகோலம் pañjaālam, பெ.(n.)

   சுக்கு, திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திர மூலம் என்ற ஐவகைப் பண்டங்களின் கூட்டு; mixture of the five drugs, {}, tippali, tippali-{}, cevviyam, cittira-{}.

     [Skt. {} → த. பஞ்சகோலம்]

பஞ்சக்கும்மி

 பஞ்சக்கும்மி pañjakkummi, பெ.(n.)

   வற்கடத்தின்(பஞ்சத்தின்); கொடுமையைப் பாடும் கும்மி; a kummiplaynarrating the woes of famine.

     [பஞ்சம்+கும்மி]

பஞ்சங்கூறு-தல்

பஞ்சங்கூறு-தல் pacaipacaivupañcaṅāṟutal,    1. செ.குன்றா.வி. (v.t)

   ஏழைபோல நடித்தல் (வின்.);; to pretend to be poor, profess poverty

     [பஞ்சம் + கூறு-,]

பஞ்சசத்தி

 பஞ்சசத்தி pañsasatti, பெ.(n.)

   பராசக்தி, திரோதானசத்தி அல்லது ஆதிசக்தி, இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியா சத்தி என்ற ஐவகைச் சிவ சத்திகள் (சதாசிவ.);; the five energies of {}, viz., {} or {}.

பஞ்சசனன்

பஞ்சசனன் pañsasaṉaṉ, பெ.(n.)

   கிருட்டிண னால் கொல்லப்பட்ட ஒர் அசுரன்; an asura slain by {}.

     “பஞ்சசனனுடலில் வளர்ந்து போய்” (திவ். நாய்ச்.7,2);.

     [Skt. {} → த. பஞ்சசனன்]

பஞ்சசன்மவாதனம்

பஞ்சசன்மவாதனம் pañsasaṉmavātaṉam, பெ.(n.)

   ஓக வகை; a {} posture.

     “பஞ்சசன்ம வாதனத்திடைப் பண்பொடு மிருந்து” (விநாயகபு.80,716);.

பஞ்சசமிதி

பஞ்சசமிதி pañsasamidi, பெ.(n.)

   உணவுத் தூய்மை, நிறைவு, நோன்பு, ஒதல், இறைப்பற்று என்ற ஐந்து ஒழுக்கங்கள் (மேருமந்.145, உரை.);; the five kind of discipline, viz., {}, tirupti, tavam, attiya-{}, deyva-patti.

பஞ்சசயனம்

பஞ்சசயனம் pañsasayaṉam, பெ.(n.)

   1. அன்னத்தூவி, பூ, இலவம் பஞ்சு, கோரை, மயிர் இவற்றால் அமைந்த ஐவகைப் படுக்கை (திவா.);; the five kinds of bed stuffed variously with swan-feathers, flowers, silk- cotton, sedge and hair.

   2. அழகு, குளிர்ச்சி, மெதுத் தன்மை, மிகுமணம், வெண்மை என்ற ஐவகைத் தன்மை கொண்ட படுக்கை; good bed having the five qualities of being beautiful, cool, soft, fragrant and white;

     “மெத்தென்ற பஞ்சசயனத்தின் மீதேறி” (திவ்.திருப்பா.19,வ்யா.);.

     [Skt. {} → த. பஞ்சசயனம்]

பஞ்சசரக்கு

 பஞ்சசரக்கு pañsasarakku, பெ.(n.)

   வீரம், சவுரி, இலிங்கம், அரிதாரம், பூரம் ஆகிய இவ்வைந்துவகைச் சரக்குகள்; the five kinds of minerals, corrosive sublimate, yellow arsenic, vermilion, orpiment and subchloride of mercury (சா.அக.);.

     [Skt. {} → த. பஞ்ச]

பஞ்சசரன்

பஞ்சசரன் pañsasaraṉ, பெ.(n.)

   காமன் (மன்மதன்);; the god of love.

     “கன்னல் விற் பஞ்சசரனாதியோர்” (சிவக்.பிரபந்.பக்.247);.

     [Skt. {}+sara → த. பஞ்சசரன்]

பஞ்சசரம்

பஞ்சசரம் pañsasaram, பெ.(n.)

   ஐந்து சரடுடைய தாழ்வடம்; a necklace of five strings.

     “த்ரிஸரம் பஞ்சஸரம் ஸப்தஸரம் என்றற் போலே சொல்லுகிற முத்து வடங் களையும்” (திவ்.அமலனாதி.10,வ்யா. பக்.104);.

     [Skt. {}+sara → த. பஞ்சசரம்]

பஞ்சசரி

பஞ்சசரி pañsasari, பெ.(n.)

   ஐந்து சரங்கொண்ட அணி வகை (S.I.I. ii, 181.);; ornament of five strings.

பஞ்சசருக்கரை

 பஞ்சசருக்கரை pañsasarukkarai, பெ.(n.)

   சீந்தில் துண்டு, நீர்வள்ளிக்கிழங்கு, நிலப்பனைக் கிழங்கு, நிலக்குமிழ் வேர், கற்கோவைத் தண்டு; இவைகள் ஒவ்வொன் றிலும் இருந்து காய்ச்சி தனித்தனியே வாங்கிய ஐந்து வகைச் சருக்கரை. இதை வங்க பற்பத்தில் கலந்து கொடுக்க நீரழிவு போகும் (சா.அக.);; calcified tin given with the five salts extracted from each of the above drugs separately.

பஞ்சசாதனம்

பஞ்சசாதனம் pañjacātaṉam, பெ.(n.)

   ஒகிகளுக்குரிய இருக்கை, ஒகக் கச்சை, கோல், கமண்டலம், மந்திரமாலை ஆகிய துறவிக்குரிய ஐங்கருவிகள் (சி.சி.ப்ர.மாயா.15);; the five requisites of a {}, viz., {}.

     [பஞ்ச+சாதனம்]

     [Skt. {} → த. பஞ்ச]

பஞ்சசாதாக்கியம்

பஞ்சசாதாக்கியம் pañjacātākkiyam, பெ.(n.)

சிவசாதாக்கியம், அமுர்த்தி

   சாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், கர்த்திரு சாதாக்கியம், கன்ம சாதாக் கியமென்ற ஐவகைச் சிவபேதங்கள் (தத்துவப்.191,உரை.);; the five manifestations of {}, viz., {}, karttiru, {}.

     [Skt. {} → த. பஞ்சசாதாக்கியம்]

பஞ்சசாரம்

பஞ்சசாரம் pañjacāram, பெ.(n.)

   1. ஐந்து வகை சாரங்கள் – நவச்சாரம், சத்திசாரம், சிவசாரம், எவட்சாரம், கதலிச்சாரம்; the five kinds of acid salts viz., salt petre or nitrate of potash, salammonial, sakthi, salt, siva salt and plantin salt

   2. ஐந்து வகை சத்துகள்; அவையாவன, காய்ச்சியப் பால், சருக்கரை, தேன், திப்பிலி, நெய் ஆகிய வைகளை நன்றாகக் கலக்கி பயன்படுத்தும் ஒரு ஆயுள் வேத மருந்து. an ayurvedic compound consisting of boiled milk, sugar, honey, piper longum and clarified butter well stirred up (சா.அக.);.

பஞ்சசிகை

 பஞ்சசிகை pañsasigai, பெ.(n.)

   மழிப்பு பண்ணத்தகாத உச்சி, புருவங்கள், முழங்கைகள் என்ற ஐந்திடங்கள் (சங்.அக.);; the five parts of the body that must not be shaved, viz., crown of the head, brows and fore-arms.

     [Skt. {}+sikai → த. பஞ்சசிகை]

பஞ்சசித்தர்

 பஞ்சசித்தர் pañsasittar, பெ.(n.)

   ஐந்து சித்தர்கள், அசுவினி தேவர், அகத்தியர், புலத்தியர், இராமதேவர், யூகிமுனி (சா.அக.);; the five well siddhars viz., Asavin kumar, Agastyar, Pulastyar, Rama devar or Yacob and Uginumi.

பஞ்சசியம்

 பஞ்சசியம் pañsasiyam, பெ.(n.)

 lion, as broad-faced.

     [Skt. {} → த. பஞ்ச சியம்]

பஞ்சசிலேத்துமம்

 பஞ்சசிலேத்துமம் pañsasilēttumam, பெ.(n.)

   ஐந்து சிலேத்தும வகைகள், அவலம்பகம், கிலேதம், போதகம், தற்பககம், சந்திகம்; the five phlegms humours viz., avalampagam, kiletham, pothagam, tharpagam and santhigam (சா.அக.);.

பஞ்சசீதம்

 பஞ்சசீதம் pañjacītam, பெ.(n.)

   பொன்னாங் காணி, சிறுகீரை, ஆவாரை, வல்லாரை, சீந்தில் எனும் ஐந்தின் பொதுப் பெயர்; five plants of herbs that cause cold. (சா.அக.);.

பஞ்சசீலம்

பஞ்சசீலம் pañjacīlam, பெ.(n.)

   காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தலாகிய பெளத்த ரொழுக்கம் (மணிமே.21:57,உரை.);; the five rules of conduct, viz., abstinence from passion, killing, toddy-drinking, lying and stealing.

     [Skt. {} → த. பஞ்சசீலம்]

பஞ்சசுண்ணக்குகை

 பஞ்சசுண்ணக்குகை pañsasuṇṇaggugai, பெ.(n.)

   ஐந்து சுண்ணாம்பினால் செய்த மூசை; crucible made out of the five calciums (சா.அக.);.

பஞ்சசுண்ணம்

 பஞ்சசுண்ணம் pañsasuṇṇam, பெ.(n.)

   ஐந்து வகைச் சுண்ணம், குக்கிடத்தின் சுண்ணம், காரக் கிளிஞ்சில் சுண்ணம், வெள்ளைக்கல் சுண்ணம், கடல் நுரைச் சுண்ணம், வலம்புரிச் சங்கின் சுண்ணம்; the five calciums or slaked limes viz. fowls excreta, bivale shell calcium, lime stone calcium, cutle fish calcium and right tuisted conch shell calcium (சா.அக.);.

பஞ்சசுத்தி

பஞ்சசுத்தி1 pañsasutti, பெ.(n.)

   1. மன வழிபாட்டில் அன்றாட கரிசு தூய்மை, ஆதன் தூய்மை, மந்திர நீராற் தூய்மை, மந்திரத் தூய்மை என்ற ஐவகைத் தூய நடப்பு (சி.சி.8,20, நிரம்ப.);; the five kinds of purification in mental worship, viz., {}, tíraviyacutti, mantiracutti, {}

   2. பூசைக்கு இன்றி யமையாத ஆத்மசுத்தி, தானசுத்தி, மந்திர சுத்தி, திரவியசுத்தி, தேவசுத்தி என்ற ஐவகைச் சுத்திக்கிரியை; the five kinds of purification indispensable for worship, viz., {},{}, mantiracutti, {}.

 பஞ்சசுத்தி2 pañsasutti, பெ.(n.)

   1. தமிழ் மருத்துவத்தில் சொல்லியுள்ள ஐந்து வகை சுத்தி முறைகள்; the five kinds of cleaning or purifying process adopted in Tamil medicine.

   1. மண்ணிற்குள் புதைத்து வைத்தல்

   2. தண்ணீர், கடுக்கு நீர், எரிநீர், செயநீர், புளித்தசாறு முதலியவைகளால் கழுவுதல்

   3. அவித்தல், புடமிடல், எரித்தல் முதலியவை

   4. காற்றில் உலர வைத்தல்

   5. கதிரவன் ஒளியில் இடல்’.

   2. சைவ சமயத்தைத் தழுவியவர்கள் கைக்கொள்ளும் தூய்மைப்படுத்தும் முறைகள்; the five kinds of purification practised among saivites.

     ‘1.குளியல்

   2. உள்ளொடுக்கம்

   3. ஏனத்தூய்மை

   4. இலிங்க தூய்மை, இலிங்க வழிபாடு

   5. மந்திர உச்சரிப்பு;ஐந்தெழுத்து ஒதுதல், வணக்கம், ஐவகைத் தூய்மை, ஆதன் தூய்மை, இலிங்கத்தூய்மை, திரவிய தூய்மை, பூதத்தூய்மை, மந்திரத்தூய்மை’ (சா.அக.);.

பஞ்சசூனை

 பஞ்சசூனை pañjacūṉai, பெ.(n.)

   வீட்டில் உயிர்கட்குத் தற்செயலாய்க் கேடு விளைக்கக் கூடிய அடுப்பு, அம்மி, துடைப்பம், உரலுலக்கை, நீர்க்குடம் என்ற ஐவகைப் பண்டங்கள் (யாழ்.அக.);; the five household articles, capable of causing harm to animal life, viz., oven, grinding stone, broom, pestle and mortar, and water-pot.

     [Skt. {} → த. பஞ்சசூனை]

பஞ்சடை-தல்

பஞ்சடை-தல் kampupañcaṭaital,    1. செ.கு.வி. (v.i.)

   பசி முதலியவற்றால் பார்வை மங்குதல்; to grow dim, as the eyes of one who is famished with hunger or dying.

     “காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே” (பட்டினத். திருப்பா,பக்.166.);

     [பஞ்சு + அடை-,]

திணிவின்மையால் வலுவற்றிருக்கும் பஞ்சுபோல் பசியினால் உடல்வலிமை குன்றிப் பார்வை மங்கிய நிலை பஞ்சடைதல்’ எனப்பட்டது.

பஞ்சடைப்பு

 பஞ்சடைப்பு pañjaḍaippu, பெ.(n.)

   கண் பஞ்சடைந்த நிலை; the state where in the eye looks grim, dim and dark losing its reflex action (சா.அக.);.

மறுவ. பூஞ்சகன்

பஞ்சட்டை

 பஞ்சட்டைāṟupañcaṭṭai, பெ. (n.)

நொய்ம்மை (நெல்லை;);

 weak condition

     ‘பஞ்சட்டைக்கால்’.

பஞ்சட்டைக்கம்பு

 பஞ்சட்டைக்கம்பு pañcaṭṭaikkālpañcaṭṭaikkampu, பெ. (n.)

நூல் நூற்பதற்கேனும் பஞ்சுவெட்டு வதற்கேனும் பயன்படுத்தும் ஒரு கருவி (நாஞ்.);; an instrument used in spinning.

     [பஞ்சு + அட்டை + கம்பு]

பஞ்சணகுலம்

 பஞ்சணகுலம் pañjaṇagulam, பெ.(n.)

   பெருந்திருக்கம்மியன் (விசுவகர்ம குலம்); (மங்களே.சிறப்புப்);; the caste of {}.

     [Skt. {} → த. பஞ்சண]

பஞ்சணாவமிர்தம்

 பஞ்சணாவமிர்தம் pañjaṇāvamirtam, பெ.(n.)

   புனல் முருங்கை; three leaved indigo. (சா.அக.);

பஞ்சணிப்படலம்

 பஞ்சணிப்படலம் pañjaṇippaḍalam, பெ.(n.)

   பீளை சேர்ந்து பார்வை புகைச்சலும் கண் உறுத்தலும் ஒரு புறப் பார்வையும் உண்டாக்கும் கண்ணோய் வகை. (சா.அக.);; an eye disease characterised by irritation, discharge from the eye squint eye etc. (சா.அக.);.

பஞ்சணை

 பஞ்சணை eṉappaṭṭatupañcaṇai, பெ. (n.)

   பஞ்சுமெத்தை; cushion stuffed with cottion; cotton mattress

     “கனகதண்டி மேலுக்குப் பஞ்சணையில்லை பார்க்க; (தனிப்பா.);

     [பஞ்சு + அணை]

பஞ்சதசப்பிரகரணம்

 பஞ்சதசப்பிரகரணம் pañsadasappiragaraṇam, பெ.(n.)

   ஓர் அத்துவைத நூல்; a treatise on advaita.

பஞ்சதசி

பஞ்சதசி pañsadasi, பெ.(n.)

   காருவா (அமாவாசை); அல்லது வெள்ளுவா (பெளர்ணமி); (சைவச.பொது.12.);; the new moon or the fullmoon.

பஞ்சதந்திரம்

 பஞ்சதந்திரம் pañjadandiram, பெ.(n.)

   மித்திரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்கிரகம், அர்த்தநாசம், அசம்பிரேட்சியதுரித்துவம் என ஐம்பகுதியுடையதாய்த் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்; the Tamil version of {}-tantra consisting of five books, viz., mittira-{}, {}, candi- vikkiragam, artta-{}, {}- karittuvam.

     [Skt. {}+tantira → த. பஞ்சதந்திரம்]

பஞ்சதம்

 பஞ்சதம் pañjadam, பெ.(n.)

 death, as being the dissolution of the five elements.

     [Skt. {} → த. பஞ்சதம்]

பஞ்சதாரை

பஞ்சதாரை1 pañjatārai, பெ.(n.)

   விக்கிதம், வற்சிதம், உபகண்டம், சவம், உபசவம் அல்லது மாசவம் என்ற ஐவகைக் குதிரை நடை;     “the five paces of a horse, viz., vikkidam, {}.

     “புக்குள பஞ்சதாரையோடு (திருவாலவா,28,47);, (பு.வெ.ஒழிபு,வென்றிப். 13,உரை.);

     [Skt.{} → த. பஞ்சதாரை]

 பஞ்சதாரை2 pañjatārai, பெ.(n.)

   சருக்கரை; pure cane-sugar, refined sugar.

     “வீழ்சுவையினும் விரும்பத்தக்கதெனும் பஞ்சதாரையினில்” (மாறனங்.235,உரை.);.

க.ம.பஞ்சதாரா

     [Skt. {} → த. பஞ்சதாரை]

பஞ்சதாளப்பிரபந்தம்

பஞ்சதாளப்பிரபந்தம் bañjatāḷabbirabandam, பெ.(n.)

   ஐந்து தாளத்தால் அமைந்தது (சிலப்.3:154, உரை.);; that which is composed of the five {}.

பஞ்சதாளம்

பஞ்சதாளம் pañjatāḷam, பெ.(n.)

   சிவ பெருமானது ஐந்து முகத்தினின்றும் பிறந்த தாகச் சொல்லப்படும் கச்சற்புடம், சாசற்புடம், சட்பிதாபுத்திரகம், சம்பத்து வேட்டம், உற்கடிதம் என்ற ஐந்து தாளங்கள் (பரத.தாள.2.);; time- measures, viz., {} – puttirakam, {} said to have originated from the five faces of Siva.

     [Skt. {} → த. பஞ்சதாளம்]

பஞ்சதிரவியம்

பஞ்சதிரவியம்1 pañjadiraviyam, பெ.(n.)

   மலைபடு பொருள், காடுபடு பொருள், நாடுபடு பொருள், நகர்படுபொருள், கடல்படு பொருள் என்ற ஐவகைப் பொருள்கள்; the five kinds of products, viz., {}-tiraviyam, {}.

     [Skt. {} → த. பஞ்ச]

 பஞ்சதிரவியம்2 pañjadiraviyam, பெ.(n.)

   மஞ்சள், மா, நெல்லி முள்ளி, திரவியப் பட்டை முதலிய முழுக்காட்டுப் பொருள்கள் (S.I.I.V,86.);; the five articles used in bathing an idol, viz., {}, etc.

     [Skt. {} → த. பஞ்ச]

பஞ்சதிராவிடம்

 பஞ்சதிராவிடம் aṇaipañcatirāviṭam, பெ. (n.)

   விந்தியத்திற்குத் தெற்கேயுள்ள திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம், கூர்ச்சரம் என்ற ஐந்து திராவிடமாநிலங்கள்; the five provinces south of the {vindhyās, viz., tiravidam, āndiram, kaņņaçlam, makārāțțiram, kūrccaram.}

     [பஞ்சம் Skt + திராவிடம்]

பஞ்சம் = Skt.

பஞ்சதீக்கிகம்

 பஞ்சதீக்கிகம் pañjatīggigam, பெ.(n.)

   வயிறு, கண், கை,மார்பு, மூக்கு, ஆகிய உடம்பின் ஐந்து உறுப்புகள்; five parts of the body viz – abdomen, eye, arms, chest and nose (சா.அக.);.

பஞ்சதீபாக்கினி

 பஞ்சதீபாக்கினி pañjatīpākkiṉi, பெ.(n.)

   சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் ஆகிய பசியை எழுப்பும் ஐந்து வகை சரக்குகள்; the five drugs that stimulate hunger, fire in the stomach viz- dried ginger, black pepper, long pepper, cumin seeds and cardomum (சா.அக.);.

பஞ்சதீர்க்கம்

 பஞ்சதீர்க்கம் pañjatīrkkam, பெ.(n.)

   உடல் இலக்கணப்படி நீண்டிருக்க வேண்டிய புயம், கண், வயிறு, மூக்கு, மார்பு என்ற ஐவகை உடலுறுப்புகள்; the five parts of the body which ought to be long according to the ideal of personal beauty, viz, the arms, eyes, abdomen, nose and breast.

     [Skt. {} → த. பஞ்சதீர்க்கம்]

பஞ்சதீர்த்தம்

பஞ்சதீர்த்தம் pañjatīrttam, பெ.(n.)

   தேவர், முன்னோர், இருடிகள், பூதம், மாந்தர் என்ற ஐவர்க்குமாக உள்ளங்கையின் பல பக்கங் களினின்று வெளிவிடப்படும் நீர் (சைவச. பொது. 66, உரை.);; water poured from the palm of the hand to {} and human beings.

     [Skt. {} → த. பஞ்சதீர்த்தம்]

பஞ்சது

பஞ்சது pañcatu, பெ. (n.)

   1. குயில்; koel,

   2. நேரம்; time,

பஞ்சதுட்டன்

பஞ்சதுட்டன் pañjaduṭṭaṉ, பெ. (n.)

பஞ்சமாபாதகன் பார்க்க;see {}.

     “பஞ்ச துட்டனைச் சாதுவேயென்று” (தேவா.648,5.);.

     [Skt. {} → த. பஞ்சதுட்டன்]

பஞ்சதூபம்

 பஞ்சதூபம் pañjatūpam, பெ.(n.)

   அகில், சாம்பிராணி, குந்துருக்கம், குக்குலு, சூடன் என்ற ஐவகையான புகைத்தற்குரிய நறுமணப் பொருட்கள் (சங்.அக.);; the five kinds off incense, viz, agil, {}, kundurukkam, kukkulu, {}.

     [Skt. {} → த. பஞ்சதூபம்]

பஞ்சத்துரோகம்

 பஞ்சத்துரோகம் pañjatturōkam, பெ.(n.)

பார்க்க பஞ்சமாபாதகம்;see {}.

பஞ்சநதம்

 பஞ்சநதம் pañjanadam, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு என்னும் இடம்;{} district.

பஞ்சநமசுகாரம்

பஞ்சநமசுகாரம் pañsanamasukāram, பெ.(n.)

   அருகர், சித்தர்,சமயத்தலைவர், ஆசிரியர், சாதுக்கள் என்ற ஐவரையும் முறையே வணங்குதற்குறியாகச் சைன மதத்தில் வழங்கும் அ,சி,ஆ,உ,சா என்ற ஐந்தெழுத்துக்களாலாகிய மந்திரம் (சீவக. 951, உரை.);; a mantra of five letters, viz., a, ci, {}, u, {} being the initial letters respectively of arukar, cittar, {}.

     [Skt. {}]

பஞ்சநாடி

பஞ்சநாடி pañjanāṭi, பெ.(n.)

   1. பஞ்சேந்திரியம்; the five senses of the body.

   2. உடம்பிலுள்ள ஐந்து வகை நாடிகள்; the five kinds of pulsations in the body.

     ‘அவைகள், வாத நாடி, பித்த நாடி, ஐய நாடி, பூதநாடி, குருநாடி’ (சா.அக.);.

     [பஞ்ச+நாடி]

பஞ்சநாதம்

பஞ்சநாதம் pañjanātam, பெ.(n.)

   ஐந்து வகையான இசைக் கருவிகள் (பஞ்சுமாசத்தம்); (பெரியபு. அதிபத். 19.);; the five kinds of musical instruments.

     [Skt. {} → த. பஞ்சநாதம்]

பஞ்சநிவாரணம்

 பஞ்சநிவாரணம் pañcanivāraṇam, பெ. (n.)

   பஞ்சத்தால் நலிவுற்றோர்க்கு தக்க உதவியை அரசும் தனியாரும் செய்து காப்பாற்றுதல்; relief measures by the government and private to face the famine people.

     [பஞ்சம் + நிவாரணம்]

நிவாரணம்-Skt

பஞ்சநீராஞ்சனம்

 பஞ்சநீராஞ்சனம் pañjanīrāñjaṉam, பெ.(n.)

   விளக்கு, தாமரை, சீலை, தளிர் இவற்றைத் தெய்வத்துக்கு முன் சுழற்றியும் அதற்கு முன் தண்டனிட்டும் புரியும் ஐவகைப் பூசனைச் செயல் (யாழ்.அக.);; worship of an idol in five ways, viz., waving of lamp, lotus, cloth and leaf and then falling prostrate before it.

த.வ. ஐம்பூசனை

     [Skt. {} → த. பஞ்சம்]

பஞ்சந்தாங்கி

பஞ்சந்தாங்கி1 pañcantāṅki, பெ. (n.)

   வற்கடக்காலத்தில் உதவுவது; a means of support in times of famine as a field.

     [பஞ்சம் + தாங்கி]

 பஞ்சந்தாங்கி2 tāṅkipañcantāṅki, பெ. (n.)

   கேழ்வரகு; ragi.

     [பஞ்சம் + தாங்கி]

வற்கடக் காலத்தில் ஏழைஎளியவர்களும் வாங்கத்தக்க மலிவுவிலை உணவுப் பண்டம் ஆதலின் கேழ்வரகு பஞ்சந்தாங்கி எனப்பட்டது.

பஞ்சந்தாளி

பஞ்சந்தாளி1 pañcantāḷi, பெ. (n.)

கருவேப்பிலை பார்க்க; 3. see {karuvẽppila}i

     [பஞ்சம் + தாளி]

பஞ்சபடலம்

 பஞ்சபடலம் bañjabaḍalam, பெ.(n.)

   கருவிழியில் ஏற்படும் ‘தசை, நீர், அரத்தம், வரி, வெண்சதை’ என்னும் ஐந்து வகைப் படலங்கள்; in the black of the eye which is divided into five varieties. (சா.அக.);.

பஞ்சபட்சிக்காதல்

 பஞ்சபட்சிக்காதல் bañjabaṭcikkātal, பெ.(n.)

   ஐவகைப்பட்சிகளின் ஒலியைக் கொண்டு குறி சொல்லும் நூல்; treatise on sooth saying from the notes of {}.

     [பஞ்ச(ம்);+பட்சி+காதல்]

பஞ்சபட்சிசாத்திரம்

 பஞ்சபட்சிசாத்திரம் bañjabaṭcicāttiram, பெ.(n.)

   வல்லூறு,ஆந்தை, காகம்,கோழி, மயில் ஆகிய பறவைகள் எழுப்பும் ஒலிகளை வைத்துப் பலன் சொல்லும் கணிய முறை; system off divination from the call of certain birds.

     [Skt. {} → த. பஞ்சபட்சிசாத்திரம்]

பஞ்சபட்சிபாடாணம்

பஞ்சபட்சிபாடாணம் bañjabaṭcibāṭāṇam, பெ.(n.)

   வைப்பு நஞ்சு வகை (வினி.);; a prepared arsenic.

     [Skt. {} → த. பஞ்ச பட்சிபாடாணம்]

மச்சமுனி ‘800-இல் சொல்லியபடி பூரசம், அப்பு ரசம், மகாரசம், பச்சை, வெள்ளை, மனோசிலை, வீரம், இலிங்கம் இவைகளைப் பொடித்து குப்பியில் அடைத்து சீலைமண் ஏழு செய்து தாழியில் மணலிட்டு வைத்து குறுகத்தீயிட்டு ஆறு சாமம் எரிந்து தணல் ஆறிய பின் குப்பியை உடைத்துப் பார்க்க நஞ்சாகும்’ (சா.அக.);.

பஞ்சபட்சிவேளை

பஞ்சபட்சிவேளை bañjabaṭcivēḷai, பெ.(n.)

   1. ஐவகைப்புட்களால் குறியறியும் நேரம்; auspicious hour ascertained by augury.

   2. காருவா, வெள்ளுவாக்களின் (அமாவாசை பூர்ணிமைகளின்);இடையே ஐவகைப் புட்களின் உண்டி, துயில், நடை, அரசு, சாவுகளினின்று அறியும் குறி; augury from the eating, sleeping, walking, ruling and dying of {} between the full and the new moon.

     [Skt. {} → த. பஞ்சபட்சி+வேளை]

பஞ்சபத்திரகசாயம்

 பஞ்சபத்திரகசாயம் bañjabattiragacāyam, பெ.(n.)

   பற்பாடகம், கோரைக் கிழங்கு, சீந்தில் கொடி, அதிவிடயம், நிலவேம்பு, இவைகள் சேர்ந்த கருக்கு நீர்; decoction prepared out of fever plant root of Indian papryus, stem moon creeper, Indian atees and ground neem (சா.அக.);.

பஞ்சபத்திரம்

பஞ்சபத்திரம்1 bañjabattiram, பெ.(n.)

   கடவுளுக்குப் படைத்தற்குரிய படையலமுது வகை (நைவேத்திய வகை); (S.I.I.iv,141.);; offering of food stuffs, made along with cooked rice, to a deity.

     [Skt. {}+bhadha → த. பஞ்சபத்திரம்]

 பஞ்சபத்திரம்2 bañjabattiram, பெ.(n.)

   ஐந்து வகை இலைகள்;   ஆடாதோடை, கரிசலை, நொச்சி, அழவணை, கண்டங்கத்திரி; the herbacous leaves of Malabar winter cherry, eclipse plant, five leaved notchy and nail dye (சா.அக.);.

பஞ்சபரமேட்டிகள்

பஞ்சபரமேட்டிகள் bañjabaramēṭṭigaḷ, பெ.(n.)

   அருகர், சித்தர், ஆசாரியர், ஆசிரியர், துறவி என்ற ஐவகை சைன சமயப் பெரியார் (சிலப்.10,18,உரை.);; five chief worthies, viz., arugar. {}.

     [Skt. {} → த. பஞ்சபரமேட்டிகள்]

பஞ்சபரிவர்த்தனம்

பஞ்சபரிவர்த்தனம் bañjabarivarttaṉam, பெ.(n.)

   உயிர் செயற்பாட்டுக்குரிய பொருள் (திரவியம்);, இடம் (க்ஷேத்திரம்);, காலம், பவம், கரிசு (பாவம்); ஆகிய ஐவகைப்பட்ட நிலைமைகள் (நீலகேசி,1,உரை.);; the five conditions of one’s activities, viz., diraviyam, {}, pavam, {}.

     [Skt. {}+parivarttana → த. பஞ்ச பரிவர்த்தனம்]

பஞ்சபரிவர்த்தனை

பஞ்சபரிவர்த்தனை bañjabarivarttaṉai, பெ.(n.)

   கருமம், அவிச்சை, மணம், சுவை, மாயைத் தொடர்பு (வாசனை,உருசி, மாயா சம்பந்தம்); என ஐவகையாய் மாறி வரும் செய்திகள் (மேருமந்.71,உரை.);; the five conditions that come in rotation, viz., karumam, aviccai, {}.

     [Skt. {}+parivar+{} → த. பஞ்ச பரிவர்த்தனன்]

பஞ்சபர்வம்

பஞ்சபர்வம் bañjabarvam, பெ.(n.)

   ஒவ்வொரு மாதத்திலும் வரும் சங்கரமணம் என்னும் ஐந்து நோன்பு நாள்கள்;   அவை கரும்பக்கத்தின் எட்டாவது பதினான்காவது அல்லது பதினோராவது பிறை நிலை (திதி);யும் தெய்வத்துக்குரிய நாண்மீனும் வெள்ளுவா காருவா நாள்களும் என ஐந்தாகும்.(இ.வ.);; the five ceremonial days in a month, viz., {}, eighth and the fourteenth titi of the dark half or the 11th titi and the day of a deity, the newmoon and the fulmoon

   2. ஒவ்வொரு பக்க (பட்ச);த்திலும் வரும் ஐந்து நோன்பு நாள்கள் (வின்.);; the five ceremonial days in each lunar fortnight.

     [Skt. {} + parvam → த. பஞ்சபர்வம்]

பஞ்சபலோதகம்

பஞ்சபலோதகம் bañjabalōtagam, பெ.(n.)

   எலுமிச்சை, நாரத்தை, தமரத்தை, கொழுஞ்சி, மாதுளை என்ற ஐவகைப் பழங்களிலிருந்து எடுக்கும் சாறு (தத்துவப்.65,உரை.);; juice extracted from {}, tamarattai, {} and {} fruits.

     [Skt. {}+phola+utaka → த. பஞ்ச பலோதகம்]

பஞ்சபல்லவம்

 பஞ்சபல்லவம் bañjaballavam, பெ.(n.)

   பூசனைக்குரிய ஆத்தி, மா, முட்கிளுவை, முல்லை, வில்வம் என்ற ஐந்தன் தளிர்கள் (யாழ்.அக.);; springs off {}, mullai vilvam used for worship.

     [Skt. {}+ pallavam → த. பஞ்சபல்லவம்]

பஞ்சபாடாணம்

பஞ்சபாடாணம் pañjapāṭāṇam, பெ.(n.)

   ஐந்து வகை நஞ்சுகள் (சா.அக.);; five kinds of poisonous drugs;

   1. தாளகம்; yellow orpiment,

   2. கௌரி; yellow oxide of arsenic,

   3. இலிங்கம்; cinnabar,

   4. வெள்ளை; white arsenic,

   5. வீரம்; corrosive sublimate

பஞ்சபாணன்

 பஞ்சபாணன் pañjapāṇaṉ, பெ.(n.)

   காமன் (ஐங்கணையோன்); (திவா.);;{}, as armed with five arrows.

     [Skt. {} → த. பஞ்சபாணன்]

பஞ்சபாணம்

 பஞ்சபாணம் pañjapāṇam, பெ.(n.)

   தாமரை மலர், அசோக மலர், மாமலர், முல்லை மலர், கருங்குவளை மலர் என்ற ஐவகை காமனுடைய மலரம்புகள் (பாணங்கள்);; the five arrows off {}, viz., {}.

     [Skt. {} → த. பஞ்சபாணம்]

பஞ்சபாணாவத்தை

 பஞ்சபாணாவத்தை pañjapāṇāvattai, பெ.(n.)

   காமநோயால் உண்டாகும் (சுப்பிர யோகம், விப்பிரயோகம், சோகம், மோகம் மரணம் என்ற); ஐவகைத் துன்பநிலை (சூடா.);; the five states of love-stricken persons, viz., {}.

     [Skt. {} → த. பஞ்ச பாணாவத்தை]

பஞ்சபாணி

பஞ்சபாணி pañjapāṇi, பெ.(n.)

   மலைமகள்;{}.

     “பஞ்சபாணி தந்த முருகோனே” (திருப்பு.682);.

     [Skt {} → த. பஞ்சபாணி]

பஞ்சபாண்ட செந்தூரம்

 பஞ்சபாண்ட செந்தூரம் pañsapāṇṭasendūram, பெ.(n.)

   பிரமமுனி மருத்துவ நூலிற் சொல்லியுள்ளள ஒரு வகைச் செந்தூரம்; a red oxide prepared by process of calcination according to the principles laid down in Brahmamuni work in medicine (சா.அக.);.

பஞ்சபாண்டவர்

பஞ்சபாண்டவர் pañjapāṇṭavar, பெ.(n.)

   பாண்டுவின் புதல்வர்களான தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகதேவன் என்ற ஐவர்; the five {} brothers, sons of king {}, viz., {}.

     “பஞ்சபாண்ட வர்க்காகி….. தூதுசென்று” (பெரியதி.2,3,5.);.

     [Skt. {} → த. பஞ்ச பாண்டவர்]

பஞ்சபாண்டவர் முல்லை

பஞ்சபாண்டவர் முல்லை mullai, பெ. (n.)

   செடிவகை (பரராச ii,116);; a shrub.

     [பஞ்சபாண்டவர் + முல்லை]

பஞ்சபாண்டவர்கள் படுக்கை

பஞ்சபாண்டவர்கள் படுக்கை pañjapāṇḍavarkaḷpaḍukkai, பெ.(n.)

   மலைக் குகையிலுள்ளள கற்படுக்கை; stone-beds in the caves of a hill.

     “பஞ்சபாண்டவர்கள் படுக்கை பொற்றைக்குக் கிழக்கு” (T.A.S.i.262.);.

     [Skt. {} → த. பஞ்சபாண்டவர்]

பஞ்சபாதகன்

பஞ்சபாதகன் pañjapātagaṉ, பெ.(n.)

பஞ்சமாபாதகன் பார்க்க;see {}.

     “பாய வெண்டிரை நிலத்துழல் பஞ்சபாதகரே” (உபதேசகா.உருத்திராக்.53);.

     [Skt. {} → த. பஞ்சபாதகன்]

பஞ்சபாதகம்

 பஞ்சபாதகம் pañjapātagam, பெ.(n.)

பஞ்சமாபாதககம் பார்க்க (திவா.);;see {}.

     [Skt. {} → த. பஞ்சபாதகம்]

பஞ்சபாத்திரம்

பஞ்சபாத்திரம்1 pañjapāttiram, பெ.(n.)

   வழிபாட்டில் (அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நாநீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு); பயன்படுத்தப்படும் ஐந்து நீர்வட்டில்கள் (வின்.);; the five cups used in worship to hold water for arkkiyam, {}.

     [Skt. {} → த. பஞ்சபாத்திரம்]

 பஞ்சபாத்திரம்2 pañjapāttiram, பெ.(n.)

   அகன்ற வாயுள்ள தண்ணீர் ஏனம் (இ.வ.);; water-vessel with a wide mouth.

     [Skt. {} → த. பஞ்சபாத்திரம்]

பஞ்சபாரதியம்

 பஞ்சபாரதியம் pañjapāradiyam, பெ.(n.)

   பண்டைய இசை நூல்; a treatise on music, notextant.

     [பஞ்சம் (ஐந்து);+பாரதியம்]

பஞ்சபாரதீயம்

 பஞ்சபாரதீயம் pañjapāratīyam, பெ.(n.)

   நாரத முனிவர் இயற்றியதாகக் கருதப்படும் ஓர் இசைத்தமிழ் நூல் (சிலப்.உரைப்பா.);; a Tamil musical work attributed to the sage {}.

பஞ்சபாலை

பஞ்சபாலை mullaipañcapālai, பெ. (n.)

   ஒருவகை நெல்; a kind of paddy.

     “அருச்சனம் பஞ்சபாலை” (பறாளை.பள்ளு.23.);

     [பஞ்சம் + பாலை]

பஞ்சபிராணாவத்தை

பஞ்சபிராணாவத்தை bañjabirāṇāvattai, பெ.(n.)

   மாந்தருக்குக் காமத்தினால் ஏற்படும் ஐந்து வகைத் துன்பங்கள் அவை; effects of love on men and women.

   1. நேசிப்பவரைப் பற்றி எப்பொழுதும் நினைப்பதும், பேசுவதும்,

   2. பெரு மூச்செறிதலும் அழுதலும்,

   3. அருவருத்தல்

   4. அனத்துதல்.

   5. ஓலமிட்டு அலறல் (சா.அக.);

பஞ்சபீசம்

பஞ்சபீசம் pañjapīcam, பெ.(n.)

   மாழைகளின் தன்மையைப் போக்கித் தங்கச் செம்பாக மாற்றிப்பொன்னின் குணத்தை உண்டாக்கும் ஐந்து வகை செம்புப்பொடி; the alchemical substance known as philosopher’s powder used for converting the following metals into alchemical copper before they are transmuted into gold viz.,

   1. தங்கச் செம்பு; gold copper,

   2. வெள்ளிச் செம்பு; silver copper,

   3. அப்பிரகச்செம்பு; mica copper,

   4. காந்தச் செம்பு; magnetic copper,

   5.அயச் செம்பு; ferrou copper. (சா.அக.);.

பஞ்சபுலன்

 பஞ்சபுலன் bañjabulaṉ, பெ.(n.)

   ஐம்புலன்கள்;   மெய், வாய், கண், மூக்கு, செவி; the five sense organs viz, skin, mouth (tongue);, eye, nose and ear (சா.அக.);.

பஞ்சபூசாவந்தம்

 பஞ்சபூசாவந்தம் pañjapūcāvandam, பெ.(n.)

   கொடிறு விண்மீனைப் (பூச நட்சத்திரத்தைப்); போல ஐந்து உருக்களைக் கொண்ட காதணி வகை; ear-ring having small pieces of stones arranged like the five stars of {}.

     [Skt. {} → த. பஞ்ச பூசாவந்தம்]

பஞ்சபூடணதைலம்

 பஞ்சபூடணதைலம் pañjapūṭaṇadailam, பெ.(n.)

   அதிமதுரம், இலவங்கம் பட்டை, நன்னாரி, கருஞ்சீரகம், முத்தக்காசு ஆகிய இவ்வைந்தும் சேர்த்துச் செய்யும் ஒரு தலை முழுக்கெண்ணெய்; a bathing medicated oil prepared with the following drugs. liquorice root or root of honey creeper, cinnamon bark, sarsaparilla, black cumin seeds and coray root (சா.அக.);.

     [பஞ்சம்+பூடணம்+தைலம்]

பஞ்சபூதக்குகை

 பஞ்சபூதக்குகை pañjapūtaggugai, பெ.(n.)

   கடல் நுரை, கற்சுண்ணம், சாரம்,கல்லுப்பு,சீனம் ஆகிய ஐந்து சரக்கினால் செய்த மூசை; a crucible made out of the following five drugs viz., cutile fish (see a froth); time stone, salammoniac, sea salt and alum. This is used for alchemic purpose (சா.அக.);.

பஞ்சபூதக்கூறு

பஞ்சபூதக்கூறு pañjapūtakāṟu, பெ.(n.)

   உடம்பினுள் அமைந்துள்ள ஐம்பூதத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பொருந்திய ஐந்து வகைப் பொருள் வகுப்புகள், ஆகவே இவ்வகுப்புகள் முழுவதும் 5 x 5 அல்லது 25 பிரிவுகள் ஆகும்;   25 constitutional parts of the human body which are proportioned as five substances to each of the five lements composing the body viz;   1. நில (பிருதிவி); வகுப்பு – 5 மயிர், எலும்பு, தோல், சதை, நரம்பு; earth-hair, bone, skin, flesh and nerve.

   2. அப்பு வகுப்பு – 5 நீர், இரத்தம், மச்சை, வெண்ணீர், கொழுப்பு; water – lymph, blood, marrow, semon and fat.

   3. தீ (தேயு); வகுப்பு – 5, உணவு, துஞ்சல், அச்சம், சோம்பல், போகம்; fires – food, sleep, fear, laziness and sexuality.

   4. காற்று (வாயு); வகுப்பு – 5, உடலோடு கிடத்தல், இருக்கை, நடத்தல், இருத்தல், நிற்றல்; air – lying, simply, remaining, walking, sitting and standing.

   5. வான் (ஆகாய); வகுப்பு – 5, காமம், பகை (குரோதம்);, சினம் (கோபம்);, மதம், மாச்சரியம்; sky – evil passions lust, anger, desire infatuations and envy (சா.அக.);.

பஞ்சபூதச்சரக்கு

 பஞ்சபூதச்சரக்கு pañjapūtaccarakku, பெ.(n.)

   தாளகம், வீரம், கெளரி, வெள்ளை, லிங்கம் என்ற ஐவகை மருந்துச் சரக்குகள் (சங்.அக.);; the five medicinal substances {}, kauri, {}.

     [பஞ்சம்+பூதம்+சரக்கு]

     [Skt.{} → த. பஞ்சபூதம்]

பஞ்சபூததாதுப் பொருள்கள்

 பஞ்சபூததாதுப் பொருள்கள் pañjapūtatātupporuḷkaḷ, பெ.(n.)

   சட்டை முனி நிகண்டில் சொல்லிய ஐந்து பூதங்களையும் குறிக்கும் தாது சரக்குகள்; five minerals referring the five elements. They are yellow orpiments, corrosive sublimate, yellow arsenic and vermilion. (சா.அக.);.

பஞ்சபூதநாடி

 பஞ்சபூதநாடி pañjapūtanāṭi, பெ.(n.)

   ஊதை (வாத); நாடி, பித்த நாடி, சிலேட்டும நாடி, குரு நாடி, பூத நாடி; vatha pulse;

 pitha pulse, kapha pulse, guru pulse and bhutha pulse. (சா.அக.);.

     [பஞ்சபூதம்+நாடி]

பஞ்சபூதநிறம்

பஞ்சபூதநிறம் pañjapūtaniṟam, பெ.(n.)

   ஐம்பூதங்களின் வண்ணம்; colour of the five elements.

   1. நிலம் (பிருதிவி);, மண் (earth); – பொன்னிறம்; golden colour.

   2. அப்பு (நீர்); water- பளிங்கு நிறம்; crystial colour.

   3. தீ (தேயு);, நெருப்பு; fire – செம்பு நிறம் copper colour.

   4. வளி (வாயு);, காற்று; air – கருப்பு

பஞ்சபூதமூலி

 பஞ்சபூதமூலி pañjapūtamūli, பெ.(n.)

   ஐம்பூதங்களையும் குறிக்கும் மருந்து மூலிகைகள், வெள்ளெருக்கு, மாவிலிங்கம், கொடிவேலி, புனல் முருங்கை, பீர்க்கு; the five kinds of medicinal plants referring to the five elements viz., white madar, lingam tree, Ceylon lead wort, wild morunga and luffa (ribbed ground);(சா.அக.);.

     [பஞ்சம்+பூதம்+மூலி]

பஞ்சபூதம்

 பஞ்சபூதம் pañjapūtam, பெ.(n.)

   ஐந்து பூதங்கள் – மண், நீர், நெருப்பு, காற்று, விண்; the five elements viz., earth, water, fire, air and sky (சா.அக.);.

     [Skt. {} → த. பஞ்சம்+பூதம்]

பஞ்சபூதவெழுத்து

பஞ்சபூதவெழுத்து pañjapūtaveḻuttu, பெ.(n.)

   ஐம்பூத வகுப்பின்படி பிரித்த மந்திர எழுத்துகள்; the five kinds of substances divided according the mantra words.

   1. மண் (பிருதிவி);, அ- A ந- Na ஐயும், lyu.

   2. அப்பு, இ- I ம- Ma கிலியும், kiliyu

   3. தீ (தேயு);, உ- u சி- si சவ்வும், cavvu

   4. வளி (வாயு);, எ- E வ- va றீயும், ree

   5. விண் (ஆகாயம்);, ஒ- o ய- ya ஸ்ரீயும், sree(சா.அக.);

பஞ்சப்படி

 பஞ்சப்படி pañcappaṭi, பெ. (n.)

   அகவிலைப் படி; dearness allowance.

     [பஞ்சம் + படி]

பஞ்சப்பாட்டு

 பஞ்சப்பாட்டு pañcappāṭṭu, பெ. (n.)

ஓயாது தனது ஏழைமையைக் கூறுங் கூற்று; (கொ.வ.);

 poverty, as the burden of one’s song.

     [பஞ்சம் + பாட்டு]

பஞ்சப்பிரமம்

பஞ்சப்பிரமம் pañjappiramam, பெ.(n.)

   1. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று; an upanisad, one of 108.

   2. ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்ற சிவனைம் முகங்கள் (அபி.சிந்.);; the five faces of Siva, viz., {}

   3. சிவபெரு மானது ஐந்து திருமுகம் பற்றிய மந்திரங்கள்; the mantras relating to the five faces of Siiva

     ” அடைவுறு பஞ்சப் பிரம மந்திரத்தால்” (காஞ்சிப்பு.சனற்.14);.

த.வ.ஐம்பரம்

     [Skt. {}-brahma → த. பஞ்சப்பிரமம்]

பஞ்சமகர்

 பஞ்சமகர் pañjamagar, பெ.(n.)

   கட்டரங்கு (சதுரங்கம்); ஆட்டத்தில் இரு பக்கங்களின் காய்களும் சேர்ந்து ஐந்தாவதால் விளையாட்டு முடிவுறுகை; a way of ending a game in chess, when the total of pieces on both sidess is five.

     [Skt. {}+muhra → த. பஞ்சமகர்]

பஞ்சமகா பாவங்கள்

 பஞ்சமகா பாவங்கள் pañjamakāpāvaṅgaḷ, பெ.(n.)

   கொலை, களவு, காமம், கள்ளுண்டல், பொய்; the five capital vices viz., murder, theft, lust, intoxicating drink and lie (சா.அக.);.

     [பஞ்சம்+மகா+பாவங்கள்]

பஞ்சமகாவிரதம்

 பஞ்சமகாவிரதம் pañjamakāviradam, பெ.(n.)

அகிம்சை, சத்தியம், அத்தேயம், பிரம்மசரியம், அபரிக்கிரகம் என்ற துறவி களுக்குரிய ஐம்பெரும் நோன்புகள் (மேருமந், முக.xv.);;{},

 aparikkiragam (non- killing, truth speaking, non-stealing, celibacy and not taking gifts.);

த.வ. ஐம்பான் நோன்பு

     [Skt. {}- vrata→ த. பஞ்ச மகாவிரதம்]

பஞ்சமசுருதி

 பஞ்சமசுருதி pañsamasurudi, பெ.(n.)

   ஏழிசை களுள் ஒன்று (பரத.);; fifth note of the gamut.

     [Skt. {} → த. பஞ்சமசுருதி]

பஞ்சமணம்

பஞ்சமணம் pañjamaṇam, பெ.(n.)

   ஐந்து வகையான இன்சுவை பொருள்கள் (பஞ்ச வாசம்); (பொதி. நி.30.);; the five aromatics.

     [Skt. {}→ த. பஞ்ச]

பஞ்சமதி

 பஞ்சமதி paḻaipañcamati, பெ. (n.)

நிலத்தைக் கெடுத்ததன் பொருட்டுக் குடிகளிடத்து வாங்கப்படும் இழப்பீட்டுப் பொருள்; penalty imposed on tenants for damage to the land in their occupation.

     [பஞ்சம் + மதி]

பஞ்சமம்

பஞ்சமம் pañjamam, பெ.(n.)

   1. ஐந்தாவது; the fifth

     “பஞ்சமத்தையமைக்க” (சிவதரு.சிவ.69);.

   2. ஏழிசைகளுள் ஐந்தாவது; fifth note of the gamut, one of {}.

     “பஞ்சமத்தி யற்றும் வீணை” (பிரமோத்.3,44);.

   3. குறிஞ்சி அல்லது பாலைப் பண் வகை (பிங்.);; a secondary melody – type of the {} or {} class.

   4. அழகு (யாழ்.அக.);; beauty.

   5. திறமை;   வல்லமை (சாமர்த்தியம்); (யாழ்.அக.);; cleverness, skill.

     [Skt. {} → த. பஞ்சமம்]

பஞ்சமரபு

 பஞ்சமரபு matipañcamarapu, பெ. (n.)

   அறிவனார் இயற்றிய ஒர் இசைத்தமிழ் நூல் (சிலப்.உரைப்பா.);; a Tamil musical treatise by {Arivaņār.}

     [பஞ்சம் + மரபு]

பஞ்சமர்

 பஞ்சமர் pañjamar, பெ.(n.)

   ஆரியர் வரவுக்குப் பின் புகுத்தப்பட்ட நால்வருணப் பிரிவை ஏற்றுக்கொள்ளாத ஐந்தாம் பிரிவினர்; non- caste Hindus outside the four-fold caste system introduced after the advent of Aryans.

     [Skt. {} → த. பஞ்சமர்]

பஞ்சமலம்

 பஞ்சமலம் pañjamalam, பெ.(n.)

   ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்ற ஐவகை மலங்கள் (பிங்.);; the five impurities bringing the soul into bondage, viz.,{}.

     [Skt. {}+malam → த. பஞ்சமலம்]

பஞ்சமவேதம்

பஞ்சமவேதம் pañjamavētam, பெ.(n.)

   ஐந்தாம் மறையாகக் கருதப்படும் மகாபாரதம்; the {}, considered as the fifth {}.

     “பஞ்சவேதமான மகாபாரதத்தில் எழுதக்கூடாதிறே” (திவ்.பெரியதி.1,1,வ்யா. பக்.48);.

     [Skt. {} → த. பஞ்சவேதம்]

பஞ்சமாசத்தக்கருவி

 பஞ்சமாசத்தக்கருவி pañjamācattakkaruvi, பெ.(n.)

   தோற் கருவி, துளைக்கருவி, நரப்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்ற ஐவகை இசைக் கருவிகள் (திவா.);; the five kinds of musical instrument, viz., {}, narappu-k-karuvi, {}.

     [Skt. {}+ma+catta → த. பஞ்சமாசத்தம்]

பஞ்சமாசத்தம்

பஞ்சமாசத்தம் marapupañcamācattam, பெ. (n.)

   செண்டை, திமிலை, சேகண்டி, கைத்தாளம், காளம் என்றும், தத்தளி, மத்தளி, கரடிகை, தாளம், காகளம் என்றும் இருவேறு வகையாய்ச் சொல்லும் ஐவகைப்பறை (T.A.S.V.172);; the fivedrums, viz, {cenţai, timilai, cēgandi, kai-t-tālam, kālam ortattali, mattļi, karaợigai, tālam, kākalam.}

     [பஞ்சம் Skt + மா + சத்தம் Skt]

பஞ்சமாபாதகன்

பஞ்சமாபாதகன் pañjamāpātagaṉ, பெ.(n.)

   கொடுஞ்செயல் செய்தோன்; one guilty of heinous sins.

     “பஞசமாபாதக ரெனினும்” (உபதேசகா.விபூதி.12);.

த.வ. பாழ்வினையாளன்

     [Skt. {} → த. பஞ்சமா பாதகன்]

பஞ்சமாபாதகம்

 பஞ்சமாபாதகம் pañjamāpātagam, பெ.(n.)

   கொலை, பொய், களவு, கள்ளூண், ஆசிரியரைப் பழித்தல் என்ற ஐவகைக் கொடுஞ்செயல் (வின்.);; the five heinous sins of killing, lying, stealing, drinking and abusing one’s guru.

த.வ. பாழ்வினை

     [Skt. {} → த. பஞ்சமா பாதகம்]

பஞ்சமாரி

 பஞ்சமாரி pañjamāri, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [புன்செய்+வாரி]

பஞ்சமி

பஞ்சமி pañjami, பெ.(n.)

   1. ஐந்தாம் நாள் (திதி);; fifth lunar day.

     “பஞ்சமிப் பெயர் படைத்துள திதி” (கம்பரா.மீட்சிப்.140);

   2. இருபத்து ஏழு விண்மீன்களுள் கடைசி ஐந்து; the last five of the 27 {}.

   3. ஐந்தாம் வேற்றுமை; the fifth case.

     “பஞ்சமியாகிய இன் ஐந்தாம் வேற்றுமையாம்” (பி.வி.6,உரை.);

   4. மலைமகள் (நாமதீப.23);;{}.

த.வ. ஐம்மி

     [Skt. {} → த. பஞ்சமி]

பஞ்சமித்திரம்

பஞ்சமித்திரம் pañjamittiram, பெ.(n.)

   1. நல்லெண்ணெய், தேங்காய்ப் பால், இலுப்பைப் பூச்சாறு, ஆவின் நெய், தேன் ஆகிய இவ்வைந்துங் கலந்த கூட்டு; a mixture of five liquid substances viz., gingelly oil, cocoanut milk, juice of mowah flower, cow’s ghee and honey.

   2. மாழை (உலோகங்);களை உருக்கும்பொழுது அதைப் வேதிக்கச் செய்யும்படி சேர்க்கும் ஐந்து வகை நட்புச் (மித்துரு); சரக்குகள்; the five friendly drugs capable of effecting a change in metals viz., jew – eller’s bead, ghee, jaggery, alkaline substance like borax, honey

   3. உயர்ந்த செம்பு கிடைக்க வேண்டி இச்சரக்குகளை இட்டு உருக்க பயன்படும்; to obtain superior or high class copper these are used when melting it (சா.அக.);.

பஞ்சமுகச் செப்புச் சலாகை

பஞ்சமுகச் செப்புச் சலாகை pañjamugacceppuccalāgai, பெ.(n.)

   அறுவை (சத்திர);க் கருவி இருபத்து ஆறில் ஒன்றான; five faced copper probe, this is one of the 26 surgical instrument. (சா.அக.);.

பஞ்சமுகன்

பஞ்சமுகன்1 pañjamugaṉ, பெ.(n.)

   சிவன் (சூடா.);; Siva.

     [Skt. {} → த. பஞ்சம்]

 பஞ்சமுகன்2 pañjamugaṉ, பெ.(n.)

   அரிமா (சிங்கம்); (யாழ்.அக.);; lion.

     [Skt. {} → த. பஞ்ச]

பஞ்சமுகமுத்திரை

 பஞ்சமுகமுத்திரை pañjamugamuttirai, பெ.(n.)

   இருகையினுமுள்ள ஆட்காட்டிவிரல், பெருவிரல், நடுவிரல், சிறு விரல்களைத் தம்முட்கோத்துப் பிடித்தபின் மோதிர விரல்களை நடுவே நிமிர்த்திக் காட்டும் முத்திரை வகை; a hand-pose in which the intertwined with those of the other, the ringfingers being held erect

     [பஞ்சம் + முகம் + முத்திரை]

     [P]

பஞ்சமுகம்

பஞ்சமுகம்1 pañjamugam, பெ.(n.)

   அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தும் கருவி வகை (தஞ்.சா. iii, 40.);; a kind of surgical instrument.

     [Skt. {} → த. பஞ்சம்+முகம்]

பஞ்சமுகருத்திரி

 பஞ்சமுகருத்திரி pañjamugaruttiri, பெ.(n.)

   காட்டாமணக்கு; wild castor plant (சா.அக.);.

பஞ்சமுகவாசம்

பஞ்சமுகவாசம் pañjamugavācam, பெ.(n.)

பஞ்சவாசம் பார்க்க;see {}

     “அமிழ்தனைய பஞ்சமுக வாசமமைத்து” (சீவக.2026);.

     [பஞ்சமுகம்+வாசம்]

பஞ்சமுகவாத்தியம்

பஞ்சமுகவாத்தியம் pañjamugavāttiyam, பெ.(n.)

முரசு (திருவாரூ.351அரும்.); பார்க்க; see {paiaramamurašu.}

     [பஞ்சமுகம் + வாத்தியம்]

வாத்தியம் = இசைக்கருவி

பஞ்சம் = skt.

     [P]

பஞ்சமுகாத்திரம்

 பஞ்சமுகாத்திரம் pañjamukāttiram, பெ.(n.)

   ஐம்முகங்கொண்ட கருவி வகை; a five pointed weapon.

     [Skt. {}-mukha+ttiram → த. பஞ்ச முகாத்திரம்]

பஞ்சமுட்டிக்கஞ்சி

 பஞ்சமுட்டிக்கஞ்சி pañjamuṭṭikkañji, பெ.(n.)

   துவரை, கடலை, உளுந்து, சிறு பயறு, பச்சரிசி இவ்வைந்தும் வகைக்கு ஒரு பிடி எடுத்து, தனித்தனியே மெல்லிய சீலைகளில் முடிந்து ஒரு ஏனத்தில் போட்டு அதில் ஆற்று நீர் ஊற்றி எட்டில் ஒரு பங்காய்க் காய்ச்சும் கஞ்சி; a kind of conjee -porridge prepared with the following five substances viz., red gram, black gram, green gram and raw rice. It is useful for emaciated patients. It cures billiousness, phlegm and wind humours. Tie each substance in a muslin cloth and put them in a vessel containing river water which is boiled down to one eight. (சா.அக.);. இக்கஞ்சி நோயாளிக்குக் கொடுப்பது. இதனால் பித்தம்,இளைப்பு, கபம், காற்று தீரும்.

     [Skt. {} → த. பஞ்ச+முட்டி+கஞ்சி]

பஞ்சமுத்திரை

பஞ்சமுத்திரை1 pañjamuttirai, பெ.(n.)

   1. பாதங்களில் காணப்படும் (பதுமம், சங்கம், மகரம், சக்கரம், தண்டம் என்ற); ஐந்து அடையாளங்கள்; the five marks on a person’s foot, viz., padumam, {}, magaram, {}

     “திருவடியிற் றிருப்பஞ்ச முத்திரையுந் திகழ்ந் திலங்க” (பெரியபு.மானக்.24);

   2. திருநீறு, உருத்திராக்கம், பூணூல், உத்தரீயம், உட்டிணீடம் என்று ஆசாரியர்க்கு உரியன வாகச் சொல்லப்படும் ஐந்து அடையாளங்கள் (சைவசா.ஆசாரிய.45,உரை.);; the five sacerdotal signs of an {}, viz., {}.

     [பஞ்சம்+முத்திரை]

     [Skt. {} → த. பஞ்சம்]

 பஞ்சமுத்திரை2 pañjamuttirai, பெ.(n.)

   ஐந்து கருவி வடிவங்களாகச் செய்து சேர்த்த காலணிகலன் (சீகாழிக்.411.);; an ornament worn on the foot, consisting of pieces shaped like the five weapons of {}.

     [பஞ்சம்+முத்திரை]

     [Skt. {} → த. பஞ்சம்]

 பஞ்சமுத்திரை3 pañjamuttirai, பெ.(n.)

   1. சிவ தவத்தோருக்குரிய அடையாளங்கள் அல்லது சின்னங்கள்;   உருத்திராக்கம், கமண்டலம், காவி வேட்டி, சடைமுடி, ஒகதண்டு; the five distinguishing marks of the Siva mendicants viz- holy beads, dried shell of battle gouard reddish brown cloth, tursted tuft of hairs of the head and yoga rod or stick

   2. ஒக சாதனைக்காக ஏற்பட்ட ஐந்து வகை ஒகவிருக்கை; the five different postures of a practising yogi. (சா.அக.);

     [பஞ்சம்+முத்திரை]

பஞ்சமூர்த்தி

 பஞ்சமூர்த்தி pañjamūrtti, பெ. (n.)

   சிவபிரானுக்குரிய சதாசிவன் மகேசுவன், உருத்திரன், விட்டுணு, பிரமன்,என்ற ஐந்து மூர்த்தங்கள் (இ.வ.);;     [பஞ்சம் Skt + மூர்த்தி]

பஞ்சமூலம்

 பஞ்சமூலம் pañjamūlam, பெ (n.)

   சிறுபஞ்ச மூலம் என்ற இருதிறமான ஐவகை வேர்கள் (யாழ்.அக.);; five medicinal roots, of two kinds viz, {perum-pañijamūlam, ciruparicamūlam}

     [பஞ்சம் Skt + மூலம்]

பஞ்சமூலவேர்

பஞ்சமூலவேர் pañjamūlavēr, பெ.(n.)

   மூலிகைவேர்;   1. குமிழ்; cashmerètree

   2. பூதப்பூ; indian trumpet flower

   3. முன்னை; indian headache tree

   4. பாதிரி; trumpet flower

   5. வில்வம்; bael tree (சா.அக.);

     [பஞ்சம்skt + மூலம் + வேர்]

பஞ்சமூலி

 பஞ்சமூலி pañjamūli, பெ. (n.)

   மாவிலிங்கம், சித்திர மூலம், வாலுளுவை, முருங்கை என்ற ஐவகை மருந்துச் சரக்கு; the five medicinal herbs viz. {velkerukku, māviliñgam cittiramūlam, vālustuvaimurungai}

     [பஞ்சம்.skt + மூலி]

பஞ்சமூலிகற்பம்

பஞ்சமூலிகற்பம் pañjamūligaṟpam, பெ. (n.)

   ஐந்துவகை மூலிகைகள் ஏலம், பத்திரி,தக்கோலம், சாதிக்காய், கோலவித்து (திருமூ—600);; the five drugs useful in rejuvenation viz-cardamom, mace,culeb pepper, nutreg and root of long pepper (சா.அக.);

     [பஞ்சம் Skt + மூலி + கற்பம்]

பஞ்சமூலிகை

பஞ்சமூலிகை pañjamūligai, பெ.(n.)

   கற்பத் திற்கு உதவும் ஐந்து வகை மூலிகைகளான: ஏலம், பத்திரி, தக்கோலம், சாதிக்காய், கோலவித்து (திருமூ.600);; the five drugs useful in rejuvenation viz., cardamon, mace, cubeb pepper, nutmeg and root of long pepper(சா.அக.);.

     [பஞ்சம்+மூலிகை]

பஞ்சமூலித்தைலம்

பஞ்சமூலித்தைலம் pañjamūlittailam, பெ. (n.)

   1. பொடுதலை, தக்காளி, முசுமுகக்கை, மயிற்பீலி ஆகிய இவ்வைந்து மூலிகைகளையும் சேர்த்து இறக்கிய முழுக்காட்டும் எண்ணெய்; a medicated bathing oil prepard from the five drugs viz-wild long pepper tomato (country); bristly rough bryony, peacocks tail. Ref: dhanvanthri thailam. 500,

   2. பொன்னா வரை,தசபலம், முதியோர் கூந்தல், நெய்ச்சிட்டி, வல்லாரை ஆக விவ்வைந்தும் சேர்த்து வடித்தெடுத்த எண்ணெய்; a herbacious oil prepared from the following five herbs Viz-tanner’s casia, thasapalam, Virginian siliria. ash coloured fleabane and indian pennywort

     [பஞ்சமூலி + தைலம்]

பஞ்சமேளம்

 பஞ்சமேளம் pañjamēḷam, பெ.(n.)

   சாவில் வழங்கும் சங்கு, சாலர், தவுல், மத்தளம், பம்பை என்ற ஐவகை இசைக் கருவிகள் (நெல்லை);; the five kinds of drum, used at funerals, viz., {}, tavul, {}, pampai.

     [Skt. {} → த. பஞ்சம்]

பஞ்சம்

பஞ்சம் pālaipañcam, பெ. (n.)

   சிறுவிலைக்காலம்; scarcity, favuine, dearth.

     “பஞ்சப் பொழுது பகுத்துண்பான்” (சிறுபஞ்.79);

ம. பஞ்சம்

     “பஞ்சம் இல்லாக்காலத்தில் பசி பறக்கும்.” (பழ.);

     “பஞ்சத்திலே பிள்ளையை விற்றது போல.” (பழ.);

திணிவின்மையால் வலிவுற்றிருக்கும் பஞ்சு போல் பொருள் வளங்குன்றியிருக்கும் நிலை பஞ்சம் எனப்பட்டது.

 பஞ்சம் pañjam, பெ.(n.)

   ஐந்து (சூடா.);; five.

     [Skt. {} → த. பஞ்சம்]

பஞ்சம்பசி

 பஞ்சம்பசி eṉappaṭṭatupañcampaci, பெ. (n.)

   வற்கமும் பசியும்; scarcity and hunger.

     [பஞ்சம் + பசி]

பஞ்சம்பிழை-த்தல்

பஞ்சம்பிழை-த்தல் pacipañcampiḻaittal,    4. செ.கு.வி. (v.i.)

   வற்கடக் காலத்தில் வேலை வாய்ப்புத் தேடி வேற்றுார்க்குச் சென்று உழைத்து உயிர் வாழ்தல்; due to the famine to search the job in other places to live. [பஞ்சம் + பழை-,]

பஞ்சயாகம்

பஞ்சயாகம் pañjayākam, பெ. (n.)

   1. பஞ்சமகாயாகம் (பிங்.); பார்க்க;see {}.

   2. கன்மயாகம், செபயாகம், ஞானயாகம், தவயாகம், ஊழ் (தியான); யாகம் என்ற ஐவகை வழிபாட்டு முறை (சிவதரு. ஐவகை1 , உரை.);; five kinds of worship, viz., {}.

     [Skt. {} → த. பஞ்சயாகம்]

பஞ்சரட்டை

பஞ்சரட்டை pañjaraṭṭai, பெ. (n.)

   பறவை வகை (தஞ்.சர.iii.160.);; a kind of bird.

     [ஒருகா,பஞ்சரம் → பஞ்சரட்டை]

பஞ்சரம் = பறவைக்கூடு

பஞ்சரத்தினம்

பஞ்சரத்தினம் pañjarattiṉam, பெ.(n.)

   1. செம்மணி, முத்து அல்லது வயிடூரியம், வயிரம், பச்சை, நீலம் என்ற ஐவகை மணிகள்; the five kinds of precious stones, viz., {} muttu or {}, vayiram, paccai, {}.

   2. ஐந்து செய்யுள் கொண்ட நூல் (பிரபந்தம்);; a poem of five stanzas.

     [Skt. {}+rattina → த. பஞ்சரத்திம்]

பஞ்சரம்

பஞ்சரம்1 pañjaram, பெ.(n.)

   பறவையடைக்குங் கூடு (திவா.);; bird-cage, nest.

   2. உடம்பு (யாழ்.அக.);; human body.

   3. மட்கலம் வனையுங்கூடம்; pottery.

   4. இடம்; place, location, place of abode.

     ‘வெஃகாவும் பாடகமு ரகமும் பஞ்சரமா நீடியமால்’ (யாப்.வி.95,உரை பக்.363.);

   5. கோயிற் கருவறையின் ஒருபகுதி (வின்.);; a portion of the inner sanctuary in a temple.

   6. பார்க்க; செருந்தி. (சூடா.);

 panicled golden-blossomed pear tree

   7. கழுகு (வின்.);; eagle.

     [P]

 பஞ்சரம்2 pañjaram, பெ.(n.)

   விமானத்தில், நான்கு பக்கமுனைப் பகுதிகளில் கிளிக்கூண்டு போன்ற அமைப்பில் அமைக்கப்பெறும் சிற்ப வேலைப்பாடு மிகுந்த பகுதி; architectural work in the temple vimana’s.

 பஞ்சரம்3 pañjaram, பெ.(n.)

வனையும் கூடம்,

 pottery (w.t.);

பஞ்சரி

பஞ்சரி1 pañjarittal,    11.செ.குன்றா.வி. (w.t.)

   தொந்தரவு படுத்துதல்; to press, importune

     “பஞ்சரித்து நின்னைப் பலகாலிரந்த தெலாம்” (தாயு.பராபர.83.);.

 பஞ்சரி2 pañjarittal, செ.கு.வி.(v.i.)

   1. கொஞ்சிப்பேசுதல் (யாழ்.அக.);; to lisp to indulge in amorous talk.

     “பஞ்சரித்துத்தா பனமேயென” (திருப்பு.574.);

   2. விரிவாய்ப் பேசுதல்; (யாழ்.அக.);; to talk at length.

     [பஞ்சலி → பஞ்சனி-,]

     [ஒருகா.பஞ்சரித்தல்= மனந்தடுமாறுதல்]

 பஞ்சரி3 pañjari, பெ (n.)

   அவரை; bean, country bean

   2. ஒரு வீசையளவு; a viss measure.

பஞ்சரை-த்தல்

பஞ்சரை-த்தல் pañjaraittal,    1.செ.கு.வி. (v.i.)

   கொட்டையெடுத்தல்; to gin cotton.

     [பஞ்சு + அரை-,]

பஞ்சர்

 பஞ்சர் pañjar, பெ.(n.)

   தரிசு நிலம்; waste or fallow land.

     [Vandhya → U. {} → த. பஞ்சர்]

பஞ்சலட்சணம்

 பஞ்சலட்சணம் pañjalaṭcaṇam, பெ.(n.)

   எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி என்ற ஐவகைத் தமிழ் இலக்கணம்; the five sections of Tamil grammar, viz., {}.

     [Skt. {} → த. பஞ்சலட்சணம்]

பஞ்சலத்தார்

பஞ்சலத்தார் pañjalattār, பெ.(n.)

   பஞ்ச கம்மாளர் (I.M.P.Cg.692.);; the five artisan communities.

     [Perh. {} → த. பஞ்சலத்தார்]

பஞ்சலவணபற்பம்

 பஞ்சலவணபற்பம் bañjalavaṇabaṟbam, பெ.(n.)

   ஐந்து வகை உப்புகளைக் கொண்டு செய்யும் உப்புப் பற்பம். இது செரியாமைக்குக் கொடுக்கப்படும் மருந்து; the calcified powder prepared out of the five salts. which is given for indigestion (சா.அக.);.

பஞ்சலவணம்

 பஞ்சலவணம் pañjalavaṇam, பெ.(n.)

ஐந்து வகை உப்புகள் – இந்துப்பு, கல்லுப்பு, கறியுப்பு,

   வளையலுப்பு, வெடியுப்பு; sindh salt, rock salt, common salt, glass gall and nitre (சா.அக.);.

பஞ்சலாங்கலதானம்

பஞ்சலாங்கலதானம் pañjalāṅgalatāṉam, பெ.(n.)

   ஐந்து ஏர்களை நிலத்துடன் அந்தணர்க்கு உதவுந்தானம்; a gift of five ploughs with lands to Brahmins.

     “பஞ்சலாங்கலதானத்தின் பகுதியை” (கூர்மபு. தானமுரை.64);.

     [Skt. {} → த. பஞ்சலாங்கல தானம்]

பஞ்சலி-த்தல்

பஞ்சலி-த்தல்   11. செ.கு.வி. (v.i.)    மாறுதல்; to be upset mentally.

     “மதுமயக் கத்தாற் பஞ்சலித்து” (சிலப்.10.13,உரை);.

     [பதம்சலி → பஞ்சலி-,]

பஞ்சலிங்கம்

பஞ்சலிங்கம் pañjaliṅgam, பெ.(n.)

   சிவனைக் குறிக்கும் ஐந்து வகை இலிங்கங்கள்;   நில (பிருதிவி);லிங்கம், அப்புலிங்கம், நெருப்பு (தேயு);லிங்கம், காற்று (வாயு);லிங்கம், விண் (ஆகாய); லிங்கம். ஆகவே, ஐம்பூதங்களையும் கொண்ட இந்த லிங்கங்கள் ஐந்து இடங்களில் நிறுவப்பட்டிருக்கின்றன; the five kinds of lingam (phallus); referring to emblem of {} and they are: Prithivi lingam, appu lingam, theyu lingam, vayu lingam, aukasa lingam. Representing the five elements the following are the five places in South India where they establised.

   1. காஞ்சிபுரம் – Conjeevaram where there is the Prithivi lingam made of each.

   2. சம்புகேசுவரம் – Jambukeswaram (Thiruvanaikaval); near Trichy where Appullingam is established water excides perpetually under it.

   3. திருவண்ணாமலை- Thiruvannamalai where the Tejolingam sparkles with light.

   4. காளத்தி – Kallathi where Vayu lingam is established a lamp near the lingam constantly flickers showing that the win and or air is blowing. The other lamps there do not flicker.

   5. சிதம்பரம் – Chidambaram where Akasa lingam or etheral lingam is kept in the temple. (சிதம்பர ரகசியம்); (சா.அக.);.

     [Skt. {}+lingam → த. பஞ்சலிங்கம்]

பஞ்சலிப்பு

 பஞ்சலிப்பு pañjalippu, பெ. (n.)

   வற்கடத்தின் வருத்தம்; adverse

பஞ்சலோகசிந்தூரம்

 பஞ்சலோகசிந்தூரம் pañsalōkasindūram, பெ.(n.)

   பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, காந்தம் என்னும் ஐந்து வகை மாழைகளைக் கொண்டு செய்த சிவப்புப் பொடி; red oxide by calcining the five metals viz-gold, silver, copper, iron, magnet (சா.அக.);.

பஞ்சலோகப்புரவி

 பஞ்சலோகப்புரவி pañjalōkappuravi, பெ.(n.)

   ஐந்து வகை மாழைகளைக் கொண்டு சீன நாட்டவரால் உண்டாக்கியதாகக் கருதப்படும் ஒரு வான ஊர்தி; a kind of aeroplane in the shape of horse constructed by the ancient Chinese out of five metals (சா.அக.);.

பஞ்சலோகம்

பஞ்சலோகம் pañjalōkam, பெ.(n.)

   1. பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்னும் ஐவகைத் தாதுக்கள் (பிங்);.; the five kinds of metal, {}, irumbu, cembu, {}, {}.

   2. ஐவகை மாழை (உலோக);க் கலப்பு; amalgam of the five metals.

     [Skt. {} → த. பஞ்சலோகம்]

பஞ்சவர்

பஞ்சவர் pañjavar, பெ.(n.)

பஞ்சபாண்டவர் பார்க்க;see {}.

     “பஞ்ச வர்க்குத் தூது நடந்தானை” (சிலப்.17);.

பஞ்சவர்க்கம்

 பஞ்சவர்க்கம் pañjavarkkam, பெ.(n.)

   ஆல், அரசு, அத்தி, நாவல், இத்தி எனும் ஐந்து வகை துவர்ப்புச் சுவையுள்ள மரங்களின் பட்டை; five peepal tree, fig tree, jamoon tree and rhomboid leaved fig tree (சா.அக.);.

     [பஞ்சம்+வர்க்கம்]

பஞ்சவர்ணக்கிளி

பஞ்சவர்ணக்கிளி pañjavarṇakkiḷi, பெ.(n.)

   ஐந்து நிறமுடைய கிளி வகை; macaw, a species of parrot, Trichoglossus, as having five colours.

     “கிள்ளையும் பஞ்சவர்ணக்கிளிக் கூட்டமும்” (குற்றா.குற. 87,3);.

     [பஞ்சம்+வர்ணம்+கிளி]

பஞ்சவர்ணப்பூ

பஞ்சவர்ணப்பூ pañjavarṇappū, பெ.(n.)

   பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய ஐந்து நிறமுடைய பூ; flowers with five colours.

   2. பஞ்சவர்ணம் பார்க்க (சா.அக.);;see {}.

     [Skt.பஞ்ச+வர்ண+பூ]

பஞ்சவர்ணம்

 பஞ்சவர்ணம் pañjavarṇam, பெ.(n.)

   வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற ஐவகை நிறம்; the five colours, white, black, red, yellow, green.

     [Skt. {} → த. பஞ்சம்]

     [த. வண்ணம் → Skt. வர்ணம்]

பஞ்சவர்ணவுப்பு

 பஞ்சவர்ணவுப்பு pañjavarṇavuppu, பெ.(n.)

   கட்டியவுப்புக்கு ஐந்து வண்ணம் ஏற்றி மணியாகச் செய்து தாழ்வடமாய்க் கோத்து ஒதுகைக்குப் பயன்படுத்தும் உப்பு; consolidated salt to which five colours are imparted and beads made. These beads if used in worship (சா.அக.);.

     [பஞ்சவர்ணம்+உப்பு]

பஞ்சவறிவு

 பஞ்சவறிவு pañjavaṟivu, பெ.(n.)

   பகுத்தறிவு, மெய்யறிவு, பேரறிவு, ஆதன் அறிவு, தத்துவ அறிவு; reasoning power, senses of the body, wisdom, knowledge of soul and philosophy (சா.அக.);.

பஞ்சவற்கலம்

 பஞ்சவற்கலம் pañjavaṟkalam, பெ.(n.)

   அத்தி, அரசு, ஆல், பூவரசு, வேல் என்பவற்றின் பட்டை (மலை.);; bark of the five tree satti, {}.

     [Skt. {}+varka → த. பஞ்சவற்கலம்]

பஞ்சவாசம்

பஞ்சவாசம் pañjavācam, பெ.(n.)

   இலவங்கம், ஏலம், கருப்பூரம், சாதிக்காய், தக்கோலம் என்ற ஐந்து வகை நறுமணப் பொருட்கள் (சிலப். 5,26,உரை.);; the five aromatics, viz., {}.

     [Skt. {} → த. பஞ்சவாசம்]

பஞ்சவிருத்தி

பஞ்சவிருத்தி pañjavirutti, பெ.(n.)

   மாபூதம் 5, தன்மாத்திரை 5, கருமவுறுப்புகள் (கன்மேந்திரியம்); 5, உணர்தற்குரிய பொறிகள் (ஞானேந்திரியம்);5, மனம், அகங்காரம், மகத்து, மூலப்பகுதி, ஆதன் ஆகிய இருபத்தைந்து மூலப் பொருள்கள் (குறள்,27,உரை.);; reals, 25 in number, viz., 5 {}, 5 {}.

     [Skt. {} → த. பஞ்சவிருத்தி]

பஞ்சவில்வம்

பஞ்சவில்வம் pañjavilvam, பெ.(n.)

   1. வில்வம், நொச்சி, மாவிலங்கை, முட்கிளுவை, விளா

   ஆகிய ஐந்து வகை மரங்கள்; the five kinds of trees viz., bael, notchy, lingam tree, thorny balsam and wood apple.

     “வில்வ நொச்சி மாவிலங்கை முட்கிளுவை வெள்ளில் பஞ்ச வில்வமென்பார்” (சிவராத்.பு. சிவமான். 37);.

   2. சில நூல்களின்படி வில்வம், ஆத்தி, மா, முட்கிளுவை, முல்லை; according to some literature bael, common mountain ebony, lingam tree, thorny balsam and wood apple (சா.அக.);.

     [Skt. {}+vilva → த. பஞ்சவில்வம்]

பஞ்சவேம்பு

 பஞ்சவேம்பு pañjavēmbu, பெ.(n.)

   ஐந்து வகை வேம்பு – நல்வேம்பு, மலைவேம்பு, நிலவேம்பு, கறிவேம்பு, சிவனார் வேம்பு; the five kinds of neem-margosa, common bead tree, ground neem, curry leaf neem, Shiva’s neem. (சா.அக.);

பஞ்சா

பஞ்சா pañjā, பெ.(n.)

   புலியாட்டம் ஆடுபவர் வைத்திருக்கும் கருவி; musical instrument.

     [புஞ்சு+பஞ்சர்]

 பஞ்சா pañjā, பெ.(n.)

   1. கைப்பிடி; clutch, grasp of the hand.

   2. நீட்டிய விரற் கை; hand with the five fingers extended.

   3. மொகரம் விழாக் காலங்களில் சியா முகமதியர் எடுத்துச் செல்லும் கைக்குறி விருது; figure of the hand carried as an emblem by Shiah Muslims in Moharrum festivals.

     [U. {} → த. பஞ்சா]

பஞ்சாகசூரணி-த்தல்

பஞ்சாகசூரணி-த்தல் pañjākacūraṇittal,    4 செ.கு.வி.(v.i.)

   மெதுவாகும்படி பொடி செய்தல்; pulversing so as to become soft (சா.அக.);.

பஞ்சாக்கரப் பஃறொடை

 பஞ்சாக்கரப் பஃறொடை pañjākkarappaḵṟoḍai, பெ.(n.)

   பண்டார சாத்திரத்துள் பின் வேலப்பதேசிகர் இயற்றிய நூல்; a Siava {}, treatise by {}, one of {}.

     [பஞ்சாக்கரம்+பஃறொடை]

பஞ்சாக்கரம்

பஞ்சாக்கரம் pañjākkaram, பெ.(n.)

பஞ்சாட்சரம் பார்க்க;see {}.

     “எந்தைபிரான் பஞ்சாக்கரம் போல்” (திருவாலவா.திருநகரச்.3);.

     [Skt. {} → த. பஞ்சாக்கரம்]

பஞ்சாக்கினி

பஞ்சாக்கினி pañjākkiṉi, பெ.(n.)

   1. தவஞ் செய்வோன் தன்னைச் சுற்றி நான்கு திசை

   களிலும் மூட்டிய நான்கு தீ(அக்கினி);யும் மேலே காய்கிற கதிரவனும் (சூரியனும்); ஆகிய ஐவகைத் தீ (அக்கினி);; the five fires amidst which an ascetic practises self- mortification, four fires at the four points of the compass the fifth being the sun.

     “பஞ்சாக்கினி முதலியவற்றினின்று அரிய தவசுகளைச் செய்தும்” (சி.சி.8,11,மறைஞா.);

   2. அராகம்,வெகுளி, காமம், சடம், தீபனம் என்ற ஐவகைத் தேகாக்கினி (பிங்.);; the five mystic fires of the body, viz., {}

   3. (உதராக்கினி);, சூரியதாபாக்கினி, (தவாக்கினி);, நிதாக காலாக்கினி, இரவிகாந்தக்கினி என்ற ஐவகைத் தீ(சங்.அக.);; the five kinds of fires, viz., {}.

   4. சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம், ஏலம் என வயிற்றுத் தீயைக் கிளரச் செய்யும் ஐவகை மருந்துச் சரக்கு (தைலவ.தைல.16.);; the five kinds of stomachics, viz., cukku, tippali, milagu, {}.

     [Skt. {} → த. பஞ்சாக்கினி]

பஞ்சாக்கினி வித்தை

பஞ்சாக்கினி வித்தை pañjākkiṉivittai, பெ.(n.)

   ஆதன் வானுலகத்தினின்று பிறந்ததற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் என்னும் ஐந்திடத்தையும் தீயாகவும் தன்னை ஆகுதியாகவும் வைத்துப் புரியும் ஊழ்கம் (தியானம்); (சி.போ.பா.பக்.200);; meditation in which the five regions, heaven, clouds, earth, father and mother, travelled by a soul from heaven to earth are considered as five fires and the self as an offering made in it.

     [Skt. {} +vitta → த. பஞ்சாக்கினிவித்தை]

பஞ்சாக்கினிக்கொடி

 பஞ்சாக்கினிக்கொடி pañjākkiṉikkoḍi, பெ.(n.)

   வேலிப் பருத்தி, காட்டுக் கருணை, மரல், புளி நறளை, நறளைக்கிழங்கு என்ற ஐவகைக் கொடிகள் (சங்.அக.);; the five creepers, viz., {}, maral, {}.

     [Skt. {} → த. பஞ்சாக்கினி]

பஞ்சாங்கக்காரன்

பஞ்சாங்கக்காரன் pañjāṅgakkāraṉ, பெ. (n.)

   1. கணியன்; one proficient in preparing almanac, astrologer.

   2. பார்ப்பனர் அல்லாதவரின் போற்றாளி (புரோகிதன்);; a class of Brahmins who officiate as priests to certain castes of non-Brahmins.

த.வ. ஐந்தியன்

     [பஞ்சாங்கம்+காரன்]

பஞ்சாங்கபலன்

 பஞ்சாங்கபலன் bañjāṅgabalaṉ, பெ.(n.)

   அந்தந்த ஆண்டுக்கு ஐந்தியம் (பஞ்சாங்கம்); கூறும் பலன்; astrological forecasts for the year as given in the almanac.

த.வ.ஐயுறுப்புப் பலன்

     [Skt. {} → த. பஞ்சாங்கம்+பலன்]

பஞ்சாங்கப்புடம்

 பஞ்சாங்கப்புடம் pañjāṅgappuḍam, பெ.(n.)

   ஐந்து வகை அங்கமும் பொருந்திய புடம்; calcination satisfying the five conditions required (சா.அக.);.

     [பஞ்சாங்கம்+புடம்]

பஞ்சாங்கமவிழ்-த்தல்

பஞ்சாங்கமவிழ்-த்தல் pañjāṅgamaviḻttal,    4 செ.கு.வி.(v.i.)

   1. வீண் கதைப் பேசுதல்; to bring in irrelevant matters.

   2. பொய் கதை புனைதல்; to fabricate false stories.

த.வ. கட்டுக்கதை பேசுதல்

     [Skt. {} → த. பஞ்சாங்கம்]

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்1 pañjāṅgam, பெ.(n.)

   1. நாள், கிழமை, விண்மீன், ஒகம்,கரணம் (திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்); என்ற ஐந்து உறுப்புகளுடைய கலைக் குறிப்பு (பிங்.);; almanac, as comprising five parts, viz., titi, {}

   2. பிறப்பியம் (சாதகம்); (இ.வ.);; horoscope

   3. சடங்காளனுக்கு (புரோகிதத்துக்கு); விடப்படும் நல்கை (மானியம்);; inam or grant of land held on favourable terms by the village priest for his service.

   4. சடங்காண்மை (புரோகிதத் தொழில்);; office of the ceremonial priest of certain non- Brahmin castes.

   5. குதிரை (யாழ்.அக.);; horse

   6. ஆமை (யாழ்.அக.);; tortoise.

த.வ. ஐந்தியம்

     [Skt. {} → த. பஞ்சாங்கம்]

பஞ்சாங்கவணக்கம்

பஞ்சாங்கவணக்கம் pañjāṅgavaṇakkam, பெ.(n.)

   முழங்கால்கள், கைகள், தலையாகிய ஐந்து உறுப்புக்கள் நிலந்தோய வணங்குகை; prostration with the knees, hands and head touching the earth.

     “அட்டாங்கமுடன் பஞ்சாங்க முடனாதல்… பணிவோர்” (திருவிளை.மூர்த்தி.30);.

     [Skt. {} → த. பஞ்சாங்கம்+வணக்கம்]

பஞ்சாங்கி

 பஞ்சாங்கி pañjāṅgi, பெ.(n.)

   முறிவு மருத்துவத்தில் ஒரு வகைக் கட்டு; a kind of bandage in surgery. (சா.அக.);

பஞ்சாசது

 பஞ்சாசது pañjācadu, பெ.(n.)

பஞ்சாசத் (சங்.அக.); பார்க்க;see {}.

பஞ்சாசத்

பஞ்சாசத் pañjācat, பெ.(n.)

   ஐம்பது; fifty

     “பஞ்சாசத்கோடி” (சிவதரு.கோபுர.77.);.

     [Skt. {} → த. பஞ்சாசத்]

பஞ்சாசாரியர்

பஞ்சாசாரியர் pañjācāriyar, பெ.(n.)

   கோயில் பூசகர் (S.I.I. ii, 111.);; temple priests.

     [Skt. {} → த. பஞ்சாசாரியர்]

பஞ்சாச்சரியம்

 பஞ்சாச்சரியம் pañjāccariyam, பெ.(n.)

   அருகக் கடவுள் பொருட்டு நிகழும் பொன்பொழிவு (கனகவர்ஷம்);, மலர்ப்பொழிவு (புஷ்பவர்ஷம்);, ஆலவட்டம் (மந்தமாருதம்);, மங்கலவாழ்த்து (சுபகோஷம்);, தேவமுரசம் (தேவதுந்துபி); என்ற ஐந்து வியப்புக்குரிய நிகழ்ச்சிகள் (நரிவிருத்.);; the five heavenly wonders, viz., {}-tundupi.

த.வ. ஐஞ்சடங்கு

     [Skt. {} → த. பஞ்சாச்சரியம்]

பஞ்சாடரி

 பஞ்சாடரி pañjāṭari, பெ.(n.)

   சிற்பங்கள் நிறுவப் பெறும் மேடை; gallery with sculptures.

     [பஞ்ச(ம்);+ஆடரி]

பஞ்சாட்சரக்காவடி

 பஞ்சாட்சரக்காவடி pañjāḍcarakkāvaḍi, பெ.(n.)

   திருநீறு (விபூதி);க் காவடி (நாஞ்.);; a {} in which the main offering is the sacred ash.

த.வ. திருநீற்றுக்காவடி

     [Skt. {} → த. பஞ்சாட்சரம்]

பஞ்சாட்சரக்கோயில்

 பஞ்சாட்சரக்கோயில் pañjāṭcarakāyil, பெ.(n.)

   திருநீற்று(விபூதி);ப்பை (நாஞ்சி.);; bag containing sacred ashes.

த.வ. நீற்றுப்பை

     [Skt. {} → த. பஞ்சாட்சரம்]

பஞ்சாட்சரப்படி

 பஞ்சாட்சரப்படி pañjāḍcarappaḍi, பெ.(n.)

   சிதம்பரம் கோயிலுள் சிற்சபையில் ஏறுதற் கமைந்த ஐந்துபடிகள்; the five steps leading to {} in Chidambarm temple.

த.வ. ஐந்தெழுத்துப்படி

     [Skt. {} → த. பஞ்சாட்சரம்]

பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம் pañjāṭcaram, பெ.(n.)

   1. சிவனை அதி தெய்வமாகக் கொண்டதும் ‘நமசிவாய’ என்று ஐந்து எழுத்துகளாலானதுமான மந்திரம்; the five lettered mantra whose presiding deity is Siva, viz., na ma ci vaya

   2. திருநீறு (இ.வ.);; sacred ashes.

     [Skt. {} → த. பஞ்சாட்சரம்]

பஞ்சாட்சரவருணி

 பஞ்சாட்சரவருணி pañjāṭcaravaruṇi, பெ.(n.)

   நெல்லிக்காய்; Indian goose berry. (சா.அக.);

பஞ்சாணுவிரதம்

பஞ்சாணுவிரதம் pañjāṇuviradam, பெ.(n.)

   சமணருள் இல்வாழ்வான் மேற்கொள்ளும் ஐந்து நோன்புகள் (மேருமந்.கதை.24);; the five vows practised by laymen.

பஞ்சாதி

பஞ்சாதி pañjāti, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Sivagangai Taluk.

     [பஞ்சு+(அத்தி);ஆதி]

 பஞ்சாதி pañjāti, பெ.(n.)

   1. தனித்தனி பெரும்பாலும் ஐம்பது சொற்கள் கொண்ட எசுர்(வேத);ப் பகுதி; sections of {} each containing about fifty words

   2. வேதப் பகுதி; a {} passage.

     [Skt. {} → த. பஞ்சாதி]

பஞ்சாத்தி

 பஞ்சாத்தி pañjātti, பெ.(n.)

   விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vilupuram Taluk.

     [பஞ்சு+(அத்தி);ஆதி]

பஞ்சாத்திகாயம்

பஞ்சாத்திகாயம் pañjāttikāyam, பெ.(n.)

   சீவாத்திகாயம், தர்மாத்திகாயம், அதர்மாத்தி காயம், ஆகாசாத்திகாயம், புற்காலாத்திகாயம் அல்லது அசீவாத்திகாயம் என்ற ஐந்து சைன மத தத்துவங்கள் (திருநூற்.23,உரை.);; the five ontological categories under which reals are distributed, viz., {}.

     [Skt. {} → த. பஞ்சாத்திகாயம்]

பஞ்சாமியம்

 பஞ்சாமியம் pañjāmiyam, பெ.(n.)

   இலந்தை; jujube (சா.அக.);.

பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் pañjāmirtam, பெ.(n.)

   வாழைப்பழம், தேன், சருக்கரை, நெய், திராட்சை என்ற இனிய பண்டங்களால் செய்வதும் இறை முழுக்காட்டிற்குப் பயன்ப டுத்துவதுமான பண்டம் (TA.S.I.268);; a mixture of five delicious substances, usually, plantain, honey, sugar, ghee, grape used for anointing idols. த.வ.ஐயமுது, ஐந்தமுதம்

     [Skt. {} → த. பஞ்சாமிர்தம்]

பஞ்சாமிலம்

 பஞ்சாமிலம் pañjāmilam, பெ.(n.)

   இலந்தை, மாதுளை, புளியாரை, நெல்லி, எலுமிச்சை என்ற புளிப்புச் சுவையுள்ள ஐவகை மரங்கள் (சங்.அக.);; the five acid-producing plants, viz., ilandai, {}, nelli, elumiccai. த.வ.ஐம்புளிகம்

     [Skt. {} → த. பஞ்சாமிலம்]

பஞ்சாயத்தார்

 பஞ்சாயத்தார் pañjāyattār, பெ.(n.)

   வழக்குத் தீர்ப்பாளர்; arbitrators, mediators;

 assessors, jurors.

த.வ. ஊரவையார்

     [U. {} → த. பஞ்சாயத்து]

பஞ்சாயத்து

பஞ்சாயத்து pañjāyattu, பெ. (n.)

   1. பெரும்பாலும் தீர்ப்பாளர் ஐவர் கூடி வழக்கை ஆராயும் ஊர்மன்றம் (சபை);; a body of persons sitting as a court of arbitration, usually five in number.

   2. வழக்குத் தீர்ப்பாளரால் செய்யப்படும் வழக்கு ஆராய்வு; arbitration by disinterested persons chosen by the contending parties.

த.வ. ஊரவை, ஐந்தாயம், பேராயம்

     [U. {} → த. பஞ்சாயத்து]

பஞ்சாயத்து நாமா

 பஞ்சாயத்து நாமா pañjāyattunāmā, பெ.(n.)

   பொது நல முறைமடல் (மனு);; general affidavit inquest;

 report.

     [U. {} → த. பஞ்சாயத்துநாமா]

பஞ்சாயத்துயூனியன்

 பஞ்சாயத்துயூனியன் pañjāyattuyūṉiyaṉ, பெ.(n.)

   ஊராட்சி ஒன்றியம்; panchayat union.

த.வ. ஊராட்சி ஒன்றியம்

     [Skt. {} +E. Union → த. பஞ்சாயத்து யூனியன்]

பஞ்சாயுதபாணி

 பஞ்சாயுதபாணி pañjāyudapāṇi, பெ.(n.)

ஐம்படைக்கையினன், திருமால்;{},

 as holding five weapons in his hand.

     [Skt. {}(n); → த. பஞ்சம்+ஆயுதம்+பாணி]

பஞ்சாயுதமணி

 பஞ்சாயுதமணி pañjāyudamaṇi, பெ.(n.)

   ஐவகை வுருக்களாலான சிறுவர் கழுத்தணி வகை (யாழ்ப்.);; a necklace of gold beads with {} as pendant, worn by children.

த.வ.ஐம்படைத்தாலி

     [Skt. {} → த. பஞ்சம்+ஆய்தம்+மணி]

பஞ்சாயுதம்

பஞ்சாயுதம் pañjāyudam, பெ.(n.)

   1. சங்கம், சக்கரம், தண்டு (கதை);, வில் (சார்ங்கம்);, வாள் (கட்கம்); என்ற திருமாலின் ஐவகைக் கருவிகள்; the five weapons of {}, viz., {}

   2. ஐம்படைத்தாலி (விதான.மைந்தர்.1.);; a gold ornament worn by women and children.

த.வ.ஐம்படை

     [Skt. {} → த. பஞ்சம்+ஆயுதம்]

பஞ்சாய்

 பஞ்சாய் pañjāy, பெ.(n.)

   புகை காட்டும் கருவி (தூபக்கால்); (வின்.);; censer.

     [U. {} → த. பஞ்சாய்]

     [p]

பஞ்சாரங்கட்டி

 பஞ்சாரங்கட்டி pañjāraṅgaṭṭi, பெ.(n.)

   பஞ்சார மாலையணியும் மகளிரைக் கொண்ட இடையர் வகுப்பு; a sub-division of the idaiyar caste, so named from the {} necklace worn by their women.

     [பஞ்ச+ஆரம்+கட்டி]

பஞ்சாரம்

 பஞ்சாரம் pañjāram, பெ.(n.)

   மூங்கில் கீற்றால் பின்னப்பட்ட கோழிக்கூடு; a basket for hen.

     [பஞ்சாரம்- பஞ்சாரம்]

பஞ்சாரூடபத்திரம்

 பஞ்சாரூடபத்திரம் bañjārūṭabattiram, பெ.(n.)

   கொடுத்தவன், வாங்கியவன், சான்றாளர்களிருவர், எழுதியவன் ஆகிய இவ்வைவரும் கையொப்பமிட்ட ஆவணம் (சங்.அக.);; a document having the signature of the executant, executee, two witnesses and the scribe.

     [Skt. {}-patra → த. பஞ்சாரூட பத்திரம்]

பஞ்சார்க்கம்

பஞ்சார்க்கம் pañjārkkam, பெ.(n.)

   தூமம், விதிபாதம், இந்திரதனு, பரிவேடம்,கேது என்ற ஐந்து கரந்துறை கோள்கள் (விதான. குணாகுண.55.);; the five celestial phenomena of daily occurrence regarded as exerting evil influence, viz., {}.

     [Skt. {} → த. பஞ்சார்க்கம்]

பஞ்சாளத்தார்

 பஞ்சாளத்தார் pañjāḷattār, பெ.(n.)

பஞ்சகம்மாளர் பார்க்க;see {}.

தெ.பஞ்சாணுலு

பஞ்சாவயவம்

பஞ்சாவயவம் pañjāvayavam, பெ.(n.)

   தருக்க நூலில் (சாத்திரத்தில்); வரும் மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, உபநயம், நிகமம் என்பன (சி.சி.அளவை,11, சிவாக்.);; the five elements in a logical statement, viz., {}, upanayam, nigamam.

     [Skt. {} → த. பஞ்சாவயவம்]

பஞ்சாவரணம்

பஞ்சாவரணம் pañjāvaraṇam, பெ.(n.)

   தளம், தளாக்கிரம், பீடத்தின் கண்டம், கீழ்ப்பீடம், ஆதார சிலை என்னும் இலிங்கபீடத்தின் ஐவகை உறுப்பு (சைவச.பொது.59.);; the five sections of the pedestal of a {}.

     [Skt. {} → த. பஞ்சாவரணம்]

பஞ்சீகரணம்

பஞ்சீகரணம் pañjīkaraṇam, பெ.(n.)

   நுண்ணுடற் கூறு கொண்ட (சூக்கும); பூதங்கள் ஒவ்வொன்றையும் இரண்டு சம பாகமாகப் பிரித்துஒரு பாகத்தைத் தன் பருவுடல்(ஸ்தூல); பூதத்திலும் மற்றொரு பாகத்தை நான்கு சமபாகமாகப் பிரித்து ஒவ்வொரு சிறு பாகத்தையும் மற்ற நான்கு பருவுடல் (ஸ்தூல); பூதங்களிலும் சேர்க்கை (கைவல்.தத்.10.);; the process of dividing each of the five subtler elements into two equal parts and apportioning one part to its corresponding grosser element and one-fourth of the other part to each of the other grosser elements.

     [Skt. {} → த. பஞ்சீகரணம்]

பஞ்சு (n.)

 பஞ்சு (n.)   தூய்மை செய்வோன்; cotton-cleaner      [பஞ்சு + கொட்டி]

பஞ்சு கொட்டுதல்

பஞ்சு கொட்டுதல் pañjugoṭṭudal,    5.செ.கு.வி (v.i.)

கடை- பார்க்க; see {pañju kaợai}

     [பஞ்சு + கொட்டு-,]

பஞ்சு கொண்டான்

 பஞ்சு கொண்டான் pañjugoṇṭāṉ, பெ.(n.)

   திருவரங்கத்தைக் கொள்ளையிட்ட போது அம்முகமதியர்கட் கஞ்சாது எதிர்த்து நின்று கொள்ளையிடா தவாறு தடை செய்தவர்; a Hindu warrior.

பஞ்சு போலோடு-தல்

பஞ்சு போலோடு-தல் pañjupōlōṭudal,    5.செ.கு.வி (v.i.)

பஞ்சுபோல் பறத்தல் பார்க்க; see {pañupd para}

     [பஞ்சு + போல் + ஒடு-,]

பஞ்சுகடை-தல்

பஞ்சுகடை-தல் pañjugaḍaidal,    3. செ.கு.வி (v.i.)

   1. கொட்டையெடுக்கப் பஞ்சைப்பானை யிலிட்டுக் கோலாற் கடைதல் (வின்.);; to tousle cotton with a turning stick in a pot.

   2. வில்லாற் பஞ்சைத் தெறித்துக் கொட்டை கோதுகளின்றித் தூய்மை செய்தல்; to beat cotton with a rod or a machine like a bowstring, for removing seeds.

     [பஞ்சு + கடை-,]

பஞ்சுகுர்-தல்

பஞ்சுகுர்-தல் pañjugurtal,    1. செ.கு.வி (v.i.)

   பருத்தியைக் கையாற் பன்னுதல் (வின்.);; to tousle Cotton with the fingers for separating the Seeds

     [பஞ்சு + ககிர்-]

பஞ்சுக்காரச்செட்டி

பஞ்சுக்காரச்செட்டி pañjukkāracceṭṭi, பெ.(n.)

பார்க்க; (ET-Vi.17);

     ‘பஞ்சுக்காரச் செட்டித்தெரு’ (இ.வ.);

     [பஞ்சுக்காரன் + செட்டி]

பஞ்சுக்காரன்

பஞ்சுக்காரன் pañjukkāraṉ, பெ. (n.)

   வகையான்; a sub-division of {vēlāļas} (E.T,Vi,17);

     [பஞ்சு + காரன்]

பஞ்சுக்கொட்டை

பஞ்சுக்கொட்டை1 pañjukkoṭṭai, பெ. (n.)

அமைந்த பஞ்சுத்திரள்:

 handful of cotton prepared for removing seeds

     [பஞ்சு + கொட்டை]

 பஞ்சுக்கொட்டை2 pañjukkoṭṭai, பெ. (n.)

 seed. (சா.அக);

     [பஞ்சு + கொட்டை]

பஞ்சுசெடி

 பஞ்சுசெடி pañsuseḍi, பெ. (n.)

   பஞ்சு விளையும் பருத்திச்செடி; common cotton plant (சா.அக.);

     [P]

பஞ்சுத்துணி

 பஞ்சுத்துணி pañjuttuṇi, பெ. (n.)

   புண்களுக்கு இடும் பஞ்சாலாகிய துணி; linen scraped into a soft substance and used for dressing and cleaning wounds and sores (சா.அக.);

     [பஞ்சு + துணி]

பஞ்சுத்துய்

பஞ்சுத்துய் pañjuttuy, பெ. (n.)

   பஞ்சுநுனி; ends of cleaned cotton

     ‘காட்டுத் தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலு மாகலின்’ (குறள்,360. உரை.);

     [பஞ்சு + துய்]

பஞ்சுநாளகக்கொடி

 பஞ்சுநாளகக்கொடி pañjunāḷagaggoḍi, பெ. (n.)

   என்னும் மூலிகை; a kind of herb (சா.அக.);

     [பஞ்சு + நாளகம் + கொடி]

பஞ்சுநாளகம்

 பஞ்சுநாளகம் pañjunāḷagam, பெ. (n.)

   என்னும் மூலிகை; a kind of herb (சா.அக.);

     [பஞ்சு + நாளகம்]

பஞ்சுநீலப்பாணி

 பஞ்சுநீலப்பாணி pañjunīlappāṇi, பெ. (n.)

 blue vitriol copper sulphate (சா.அக.);

     [பஞ்சு + நீலம் + பாணி]

பஞ்சுபடு-தல்

பஞ்சுபடு-தல் bañjubaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   எளிமையில்; to become light or useless, to bevalueless

     “பஞ்சுபடுசொல்லனிவன்” (தாயு.தே.சோ.5.);

     [பஞ்சு + படு-,]

பஞ்சுபற-த்தல்

பஞ்சுபற-த்தல் bañjubaṟattal,    3. செ.கு.வி. (v.i.)

 be soft and tender as cotton, said of green fruits

     ‘பஞ்சு பறக்கிறதாய்க் காய்கறி வாங்கி வா” (இ.வ.);

     [பஞ்சு + பற-,]

பஞ்சுபிலி

பஞ்சுபிலி bañjubili, பெ. (n.)

பஞ்சுப்பிலி see {pañju-p-pili} (s.i.i.v.168);

     [பஞ்சு + பிலி]

பஞ்சுபோல் தட்டல்

 பஞ்சுபோல் தட்டல் pañjupōltaṭṭal, செ.கு.வி. (v.i.)

   பஞ்சுபோல நையும்படி இடித்தல்; pounding into a soft pulp (சா.அக.);

     [பஞ்சு + போல் + தட்டல்]

பஞ்சுபோல் பற-த்தல்

பஞ்சுபோல் பற-த்தல் pañjupōlpaṟattal,    3. செ.கு.வி (v.i.)

   முழுவதும் அறவே நீங்குதல்; getting rid off entirely (சா.அக.);

     [பஞ்சு + போல் + பறத்தல்]

பஞ்சுபோல்வெளு-த்தல்

பஞ்சுபோல்வெளு-த்தல் pañjupōlveḷuttal,    2. செ.கு.வி (v.i.)

   பஞ்சுபோல் தூய வெண்மையாதல்; to become as white as Cotton

     [பஞ்சு + போல் + வெளு-,]

பஞ்சுப்பாசி

 பஞ்சுப்பாசி pañjuppāci, பெ. (n.)

   மென்மையானதொரு பாசி (தஞ்சை.மீன);; a kind of moss.

பஞ்சுப்பீலி

 பஞ்சுப்பீலி pañjuppīli, பெ. (n.)

   பஞ்சு தொடர்பான ஒரு பழைய வரி (கல்);; an ancient tax on cotton

     [பஞ்சு + பீலி]

பஞ்சுப்பொதி

 பஞ்சுப்பொதி pañjuppodi, பெ. (n.)

   மூட்டை; cotton bale

     ‘பஞ்சுப்பொதியில் நெருப்புப்பட்டதுபோல’ (பழ.);

     ‘பஞ்சுப்பொதியில் பட்ட அம்பு போல’ (பழ.);

     ‘பஞ்சையும் நெருப்பையும் ஒன்றாய் வைக்கலாமா?’ (பழ.);

     ‘பஞ்சும் நெருப்பும் போல’ (பழ.);

     [பஞ்சு + பொதி]

பஞ்சுமயிர்

 பஞ்சுமயிர் pañjumayir, பெ. (n.)

   மெல்லிய இறகு; soft feather of birds constituting a bed. (சா.அக.);

     [பஞ்சு + மயிர்]

பஞ்சுமிட்டாய்

 பஞ்சுமிட்டாய் pañjumiṭṭāy, பெ. (n.)

   பந்துபோல் சுற்றியிருக்கும், வண்ணப்பஞ்சு போன்ற சீனிப்பாகினால் செய்யப்பட்ட தின்பண்டம்; candy-floss; cotton candy.

     [பஞ்சு + மிட்டாய்]

மிட்டாய் = அரபிச்சொல்

பஞ்சுமூலி

 பஞ்சுமூலி pañjumūli, பெ.(n.)

 plant (சா.அக.);

     [பஞ்சு + மூலி]

பஞ்சுரம்

பஞ்சுரம் pañjuram, பெ. (n.)

   அல்லது பாலை யாழ்த் திறத்தொன்று (பிங்.);;     “வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்” (ஐங்குறு. 311);

ஒருகா. [பைஞ்சுரம் → பஞ்சுரம்]

பஞ்சுருட்டான்

 பஞ்சுருட்டான் pañjuruṭṭāṉ, பெ.(n.)

   சிறியதும் பச்சை நிறத்தில் உள்ளதுமான ஒரு பறவை; a small and green coloured bird-bee eater.(சா.அக.);

     [பைஞ்சுருட்டான் → பஞ்சுருட்டான்]

     [P]

பஞ்சுருட்டான்வேர்

 பஞ்சுருட்டான்வேர் pañjuruṭṭāṉvēr, பெ.(n.)

   பஞ்சுருட்டன் குருவியின் கூட்டில் கிடைக்கும் மருத்துவப் பண்புடைய செடியின் வேர்; a kind of root herb which is obtained in {pañjuruttan kuruvi’s} nest.

     [பஞ்சுருட்டான் + வேர்]

பஞ்சுருத்தான்

 பஞ்சுருத்தான் pañjuruttāṉ, பெ. (n.)

பார்க்க; see {paர்பrugan}

     [பஞ்சுருட்டான் → பஞ்சுருத்தான்]

பஞ்சுவணம்

பஞ்சுவணம் pañjuvaṇam, பெ. (n.)

 sacrifice.

     “பங்கப்படாத பஞ்சுவணம் வாசபேயம்” (உத்தரரா. திக்குவி. 117);

     [பஞ்சு + உவணம்]

பஞ்சுவாய்க் கொள்ளு

பஞ்சுவாய்க் கொள்ளு1 pañjuvāykkoḷḷudal,    16. செ.கு.வி. (v.i.)

நெல் விதைத்த நான்கு அல்லது ஐந்தாம்நாள் நென்முனையிற் பஞ்சுபோன்ற பொருள் தோன்றுதல் (வின்.);,

 to form a cotton lire substance on the eye of spronting paddy on the fourth or fifth day after sowing.

     [பஞ்சுவாய் + கொள்ளு-,]

 பஞ்சுவாய்க் கொள்ளு2 pañjuvāykkoḷḷudal,    16. செ.கு.வி. (v.i.)

   குழந்தை, தாய்முலை பற்றிப் பால் குடித்தல்; being nursed by the mother’s milk. (சா.அக.);

     [பஞ்சு + வாய் + கொள்ளு-,]

பஞ்சூகம்

 பஞ்சூகம் pañjūkam, பெ. (n.)

 greatness.

பஞ்செட்டி

 பஞ்செட்டி pañjeṭṭi, பெ.(n.)

   பொன்னேரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in PonneriTaluk.

     [பஞ்சு+அட்டி]

பஞ்சேந்திரியம்

 பஞ்சேந்திரியம் pañjēndiriyam, பெ.(n.)

   மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்பொறிகள் (பிங்.);; the five organs of sense, viz., mey, {}, cevi.

     [Skt. {] → த. பஞ்சேந்திரியம்]

பஞ்சேறு

பஞ்சேறு pañjēṟu, பெ. (n.)

சாணம்,

 owdung, as greenish.

     ‘பைந்சேறு மெழுகிய வடிவ நன்னகர் (பெரும்பாண்.298);

     [யை + சேறு]

பஞ்சை

பஞ்சை pañjai, பெ.(n.)

   1. வற்கடம்; famine.

     ‘காலம் நிரம்ப பஞ்சையாயிருக்கிறது’

   2. நல்குரவு (யாழ்.அக.);; indigence, poverty.

   3.ஏழை; indigent person.

     “இந்தப் பஞ்சைகள் முகம்பாரும்” (சர்வசமய 188.);

   4. வலிமை யற்றவன்; emaciated, weak person.

   5. இவறற்றன்மையுள்ளவன்; mean minded person,

     “அப்பஞ்சைகள் வங்கணம் போதும்” (தனிப்பா. 1, 412, 49.);

   6. பாண்டிய வேளாளரின் வகையான் (இ.வ.);; a sub division of {pândya vēlālas.}

தெ. பஞ்ச. க. பஞ்செ.

     ‘பஞ்சை நாரி பணியாரம் சுட்டாள்; வீங்கிநாரி விசாரப்பட்டாள்’ (பழ.);

     [பஞ்சம் → பஞ்சை]

பஞ்சைக்கோலம்

 பஞ்சைக்கோலம் pañjaikālam, பெ. (n.)

 attire, beggarly dress.

     [பஞ்சை + கோலம்]

பஞ்சைத்தனம்

பஞ்சைத்தனம் pañjaittaṉam, பெ. (n.)

   1. ஏழைமை,

 poverty.

   2. இவறற்றன்மை; niggardliness,

க. பஞ்செதெந

     [பஞ்சை + தனம்]

பஞ்சைப்பனாதி

பஞ்சைப்பனாதி pañjaippaṉāti, பெ. (n.)

   ஏதிலி (மதி. க. 61);; useless person, vagabond.

     [பஞ்சை + பனாதி]

பஞ்சைப்பாட்டு

 பஞ்சைப்பாட்டு pañjaippāṭṭu, பெ. (n.)

பார்க்க; see {parappaiய}

     [பஞ்சம் + பாட்டு → பஞ்சைப்பாட்டு]

பஞ்சைமயிர்

 பஞ்சைமயிர் pañjaimayir, பெ. (n.)

 soft hair like that of a cat. (சா.அக.);

மறுவ. மென்மயிர், புன்மயிர்

     [பஞ்சை + மயிர்]

பஞ்சைமொழிபகரல்

 பஞ்சைமொழிபகரல் bañjaimoḻibagaral, பெ. (n.)

   பணமில்லை யென ஏழைமை கொண்டாடல்; pleading poverty (சா.அக.);

     [பஞ்சைமொழி + பகரல்]

பஞ்சையன்

பஞ்சையன்1 pañjaiyaṉ, பெ. (n.)

 person beggarly in dress and manners.

     [பஞ்சம் → பஞ்சையன்]

 பஞ்சையன்2 pañjaiyaṉ, பெ. (n.)

   வலு வற்றவன்; man of weak constitution (சா.அக.);

     [பஞ்சு → பஞ்சை → பஞ்சையன்]

பஞ்சோட்டி

 பஞ்சோட்டி pañcōṭṭi, பெ. (n.)

   ஒருவகை மூலிகை; a kind of herb. (சா.அக.);

     [ஒருகா.பஞ்சம் + ஒட்டி]

பஞ்ஞிலம்

பஞ்ஞிலம் paññilam, பெ. (n.)

   1. மக்கட் டொகுதி; people, populace

     “நனந்தலைப் பஞ்ஞிலம் வருகவிந் நிலமென” (பதிற்றுப். 17.9);

     [பசுமைநிலம் → பஞ்ஞிலம்]

பஞ்ஞீலி

பஞ்ஞீலி paññīli, பெ. (n.)

   1. மக்கட்பரப்பு (சூடா.);; population;

   2. திருப்பைஞ்ஞீலி என்னும் சிவத்தலம் (த.சொ.அக.);; a place name of Sivan temple

பஞ்ஞீல்

 பஞ்ஞீல் paññīl, பெ. (n.)

பஞ்ஞிலம் (திவா.); பார்க்க; see {paññilam.}

     [பஞ்ஞிலம் → பஞ்ஞீல்]

பட

பட paṭa,    ஓர் உவமஉருபு; a particle of comparison.

     “மலைபட வரிந்து” (சீவக. 56);

     [படு → பட]

படகம்

படகம்1 paṭakam, பெ. (n.)

   1. திரைச்சீலை; (வின்.);

 curtain.

   2. படக்கிருகம் (யாழ்.அக.);;பார்க்க; see {padak-kirugam.}

     [படம் + படகம்]

     (மு.தா.122.);

 படகம்2 paṭakam, பெ. (n.)

   நிலவளவு; a measure of land. (I.M.P. cg. 193, ft.);

     [படி + அகம்]

 படகம்3 paṭakam, பெ. (n.)

   1. அகமுழவுகளுள் ஒன்று (சிலப். 3, 27, உரை);; drum of the a {gamulawu} class.

   2. சிறுபறைவகை; small drum, tabor.

     “பெருவா யொருமுகப் படகம் பெருக்க” (கல்லா. 8);

   3. போர்ப்பறை; kettle-durm, war-drum.

     “வட்ட வானமெனும் வான்படகத்தைக் கொட்டுமண் மகள்” (கந்தபு. உயுத்தகா. முதனாட். 53);

   4. கலகம் (யாழ்.அக.);; rebellion.

 படகம்4 paṭakam, பெ. (n.)

பற்பாடகம் (மூ.அ); பார்க்க; see {paroadagam,} fever plant.

 படகம்5 paṭakam, பெ. (n.)

   1. பரண் (அக.நி);; watch-tower.

   2. விட்டுணுக் கரந்தை (யாழ்.அக.);; பார்க்க; see {Vishnrukarantai}

 a plant that grows in hot and dry places.

   3. கோல் (யாழ்.அக.);; stick.

   4. கவரிமா (சூடா.);; yak.

     [படி + அகம்]

படகாரன்

படகாரன் paṭakāraṉ, பெ. (n.)

   1. நெய்வோன்; weaver.

   2. ஓவியன்; painter.

     [படம் + காரன்]

படகிராசன்

படகிராசன் paṭakirācaṉ, பெ. (n.)

   1. கட்டியலுப்பைக் கொண்டு செய்யும் உப்புமணி; salt beads prepared from consolidated salt.

   2. கட்டிய உப்பு; consolidated salt. (சா.அக.);

படகு

படகு paṭaku, பெ. (n.)

   1. சிற்றோடம்; small boat.

   2. பாய்கட்டிய தோணி (வின்.);; dhoney, large boat.

தெ. படவ. ம. படகு.

 Low.L. bargia, Gr baris.

 O.Fr. barge, a boat.

 Low L. barca, Fr. bargue,

 Ebark, bargue, a ship of small size.

 barge-bark.

ட-ர போலி.ஒநோ. முகடி → முகரி, குடகு → coorg

     [படம் → படகு] (வ.மொ.வ195);

படகு ஓட்டம்

 படகு ஓட்டம் paḍaguōḍḍam, பெ.(n.)

   தங்களுக்கு இடையே போட்டியின் போது நீண்ட மூங்கில் கழிகளை ஊன்றிப் படகு ஓட்டுதல்; boat centipede race.

     [படகு+ஓட்டம்]

படகுக்காரன்

 படகுக்காரன் paṭakukkāraṉ, பெ. (n.)

   படகுக்கு உரியவன்; boat owner.

     [படகு + காரன்]

படகுடி

 படகுடி paṭakuṭi, பெ. (n.)

கூடாரம் (சங்.அக);

 tent.

     [படம் + குடில் → குடி]

     [P]

படகுவலித்-தல்

 படகுவலித்-தல் paṭakuvalittal, செ.கு.வி (v.i.)

   படகைச் செலுத்துதல் (வின்.);; to row a boat.

     [படகு + வலி-,]

படகோட்டி

 படகோட்டி paṭaāṭṭi, பெ. (n.)

   படகைச் செலுத்துபவன்; boat-man, (வின்.);

     [படகு + ஒட்டி]

படக்கிருகம்

 படக்கிருகம் paṭakkirukam, பெ. (n.)

   கூடாரம்; tent.

     [படம் + skt. Gruha → த. கிருகம்]

படக்கு

 படக்கு paṭakku, பெ. (n.)

   பட்டாசு; fire works. crackers.

     [பட → படக்கு]

படக்குப்படக்கெனல்

படக்குப்படக்கெனல் paṭakkuppaṭakkeṉal, பெ. (n.)

   அச்சக்குறிப்பு; onom, expr, signifying.

   1. throbbing as the heart through fear or guilt.

   2. நாடி முதலியன விரைந்து அடித்தற் குறிப்பு; quick beating, as the pulse from fever.

     “தாது படக்குப் படக்கென்று அடித்துக் கொள்ளுகின்றது”

     [படக்(கு); + படக்(கு); + எனல்]

படக்கெனல்

 படக்கெனல் paṭakkeṉal, பெ. (n.)

 onom, expr: signifying suddeness.

     ‘அவனுக்குப் படக்கென்று உயிர் சென்றது’

     [படக் + எனல்]

படங்கடி-த்தல்

படங்கடி-த்தல் paṭaṅkaṭittal,    18 செ.குன்றாவி. (v.t.)

   பொய்யை மெய்போற் பேசுதல் (வின்.);; to represent a false case as if it were true.

     [படங்கு + அடி-,]

படங்கன்

 படங்கன் paṭaṅkaṉ, பெ. (n.)

படங்கான் (வின்.); பார்க்க; see {pagangāṇ.}

     [படங்கு → படங்கன்]

படங்கம்

படங்கம்1 paṭaṅkam, பெ. (n.)

   சப்பங்கி3;பார்க்க; see sambangi sappan-wood.

     [படங்கு + படங்கம்]

 படங்கம்2 paṭaṅkam, பெ. (n.)

   கூடாரம்; tent

     “படங்கத்துளேற்றிய….. விளக்கு” (அரிச், பு. விவாக.83.);

     [படங்கு → படங்கம்] (மு.தா.123);

     [P]

படங்கான்

படங்கான்1 paṭaṅkāṉ, பெ. (n.)

   1. அறுவிரல நீளம் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை; a sea-fish, dull grey, atttaining 6 in inlength, rhynchobatus djeddensis.

   2. எழுவிரல நீளம் வளர்வதும் செம்மை கலந்த சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை; ray, reddish grey, attaining 7 in in length, rhinobatus granulatus.

   3. அறுவிரல நீளம் வளர்வதும் செம்மை கலந்த சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை; ray, reddish grey, attaining 6 in in length, rhinobatus halavi.

     [படங்கு → படங்கான்]

வகைகள்:

   1. படங்கான்

   2. கொம்பன் படங்கான்

   3. மெத்தைப் படங்கான்

   4. கோணப் படங்கான்.

 படங்கான்2 paṭaṅkāṉ, பெ. (n.)

   அகன்ற பூரான்; broad kind of centipade.

     [படங்கு + படங்கான்] (முதா.124);

படங்கு

படங்கு 1 paṭaṅku, பெ. (n.)

   1. ஆடை; cloth for wear.

     “படங்கினார் கன்னியர்” (திருமந். 2916);

   2. கூடாரம் (சூடா);; tent.

   . மேற்கட்டி (சூடா);; awning, canopy.

   3. பெருவரிச்சல் (வின்.);; broad lath at the ridge or eves of a roof.

     [படம் → படங்கு] (மு.தா.123);

 படங்கு2 paṭaṅku, பெ. (n.)

   மெய்போற் பேசுகை (வின்.);; sophistry.

     [ஒருகா → பட்டாங்கு → படங்கு]

 படங்கு3 paṭaṅku, பெ. (n.)

   பெருங்கொடி (பிங்.);; standard; large banner.

 படங்கு4 paṭaṅku, பெ. (n.)

   சுராலை (சாம்பிராணி);ப் பதங்கம் (தைலவ. தைல);; extracted essence of frankincense.

 படங்கு5 paḍaṅgu, பெ. (n.)

   1. படம் (இ.வ.); பார்க்க; see padam4

   2. அடிப்பாகம்; foot, lower end, as of a gunstock.

     ‘துமுக்கி (துப்பாக்கி);ப் படங்கு’

படங்குந்தி நில்-தல் (படங்குந்தி நிற்றல்)

படங்குந்தி நில்-தல் (படங்குந்தி நிற்றல்) paḍaṅgundiniltalpaḍaṅgundiniṟṟal,    14. செ.கு.வி. (v.i.)

முன்காலை ஊன்றி நிற்றல் (சூடா. 9, 53);:

 to stand on tip-toe.

     [படம்4 + குந்தி + நிற்றல்]

படங்குவீடு

படங்குவீடு paṭaṅkuvīṭu, பெ. (n.)

   கூடார வீடு; tent.

     “படங்குவிடுகள் விரித்தனர்” (பாரத. சூது. 109);

     [படங்கு + விடு]

படசுழற்று குச்சு

 படசுழற்று குச்சு paḍasuḻṟṟugussu, பெ. (n.)

   நெசவாளி படமரத்தை எதிர்பக்கமாகச் சுழற்றி முட்டும் குச்சி; a stick used for anti rotation in weaving.

     [படம்+சுழற்று+குச்சு]

படச்சரம்

 படச்சரம் paṭaccaram, பெ. (n.)

   பழம்புடைவை (யாழ்.அக.);; worn-out garment.

படதீபம்

படதீபம் paṭatīpam, பெ. (n.)

நாகதீபம் பார்க்க; see nagadeepam,

     “படதீப முதலாய பரிந்தியற்றி” (உபதேசகா. உருத்திராக். 161);;

 a kind of lamp.

     [படம் + தீபம்]

படநெடுமதில்

படநெடுமதில் paṭaneṭumatil, பெ. (n.)

   பெருங் கொடிகளையுடைய நீண்டமதில்; fortification.

     “கொடும் பட நெடுமதில் கொடித்தேர் வீதியுள்” (சிலப்.27-152);

     [படம் + நெடு + மதில்]

படந்தெரி-தல்

படந்தெரி-தல் paṭanterital,    3. செ.கு.வி. (v.int.)

   விளக்கில் எண்ணெயற்றபோது திரி பரந்து எரிதல்; to burn with a broad flame, as a wick without oil.

     [படர்ந்து → படந்து + எரி-,]

படனம்

படனம் paṭaṉam, பெ. (n.)

   1. படிக்கை; act of spreading reciting.

   2. மனப்பாடம் (வின்.);; lesson learned by heart.

     [ஒருகாபடி → படனம்]

படன்

படன் paṭaṉ, பெ. (n.)

   1. படைவீரன் (யாழ்.அக.);; warrior,

   2. காலதுாதன் (இ.வ.);

 yama’s messenger.

   3. இழிந்தோன் (யாழ்.அக.);; degraded person.

   4. பேய்; (வின்.);

 goblin.

     [படு → படன்]

படபட-த்தல்

படபட-த்தல் paṭapaṭattal,    11. செ.கு.வி. (v.i.)

   1. பேச்சு முதலியவற்றில் விரைதல்; to be over hasty, as in speech;

   2. குளிர் முதலியவற்றால் நடுங்குதல்; to tremble through fear;

 to shiver, as from cold fever or ague.

     “படபடத்துடல் சோருவன்” (குற்றா. தல, வேடன்வலம் 47.);.

   3. சினத்தால் மனங்கலங்குதல்; to be agitated through rage.

     ‘அவன் பட-படக்கிறான்’

   4. பண்டம் விழுதல் முதலியவற்றால் ஒலியுண்டாதல்; to rattle, as things falling, rolling or breaking.

     [படபட → படபடத்தல்]

படபடப்பு

படபடப்பு paṭapaṭappu, பெ. (n.)

   1. துடிப்பு; precipitancy, agitation, as through fear or anger;

   2. பேச்சு முதலியவற்றில் விரைவு; over hastiness, as in speech.

   3. நடுக்கம்; shivering, quivering, as from cold or ague.

     [படபட → படப்படப்பு]

படபடெனல்

படபடெனல் paṭapaṭeṉal, பெ. (n.)

   1. துடித்தற் குறிப்பு; onom, expr, signifying throbbing, quivering.

     “படபடென நெஞ்சம் பதைத்து” (தாயு. கருணா. 9);

   2. விரைந்து பேசுதற் குறிப்பு; speaking in haste, as through fear, anger.

   3. அசைதற் குறிப்பு; shaking, quaking tottering.

   4. வெடித்தற் குறிப்பு; bursting, breaking, falling with a rating noise.

   5. கடுமைக்குறிப்பு; hurry, as in preparation for a journey.

   6. களைப்புக் குறிப்பு; exhaustion.

     ‘எனக்குப் படபடென்று வருகிறது’

     [படபட + எனல்]

படப்பம்

 படப்பம் paṭappam, பெ. (n.)

   மருங்கிலூர் சூழ்ந்த நகரம்; town surrounded by villages (வின்.);

     [ஒ.நோ.மடப்பம் → படப்பம்]

 படப்பம் paḍappam, பெ.(n.)

   காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kanchipuram Taluk.

     [படப்பை-படப்பம்]

படப்பயம்

 படப்பயம் paṭappayam, பெ. (n.)

   காரணமற்ற அச்சம்; baseless panic.

     [படம் + பயம்]

பயம் = skt

படப்பாதி

 படப்பாதி paṭappāti, பெ. (n.)

   மரப் பலகைகளைப் பொருத்துந் தச்சு வேலை வகை; joining in carpentry. (வின்.);

     [படு + பாதி → படப்பாதி]

படப்பு

படப்பு paṭappu, பெ. (n.)

   1. வைக்கோற்போர்; hay-rick.

     “மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே” (புறநா. 334);

   2. கொல்லை; enclosed garden.

     “மனைப்படப்பிற் கடற் கொழுந்து வளை சொரியும்” (பெரியபு. திருநாவுக். 174);

   3. படப்பை8 (யாழ்ப்.); பார்க்க; see {pagарраі.}

     [பள் → படு → படப்பு]

     [P]

படப்பை

படப்பை paṭappai, பெ. (n.)

   1. தோட்டக் கூறு; garden; enclosed garden.

     “பூவிரி படப்பைப் புகார் மருங் கெய்தி” (சிலப். 6, 32);

     “கிளைமலர்ப் படப்பைக் கிடங்கிற்” (கிறு-160);.

     “நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை”(பெரும்-321);.

     “அடையா வாயின் மிளைசூழ் படப்பை” (பெரும்-401);.

     “கழிகுழ்படப்பை (பட்-32);.

     “உடைகடற் படப்பையெம் உறைவின் ஊர்க்கே” (நற்.67-12);.

     “பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன”

     “கானலம் படப்பை”

     “கழனியம் படப்பைக் காஞ்சி யூர” (குறுந் 127-3.);.

     “நெடுவரைப் படப்பை (ஐங்.251-3.);.

     “தண்கடற் படப்பை மென்பா லனவும்” (பதிற்று.30-8);.

     “பண்ணண் சிறுகுடிப் படப்பை” (அகம்:54-14);.

     “பாசவற் படப்பை யாரெயில்” (புறம்.6-14.);.

     “பெரும்புனற் படப்பையவ ரகன்றலை நாடே.” (புறம்.98-20);.

     “பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே” (புறம்.126-23);.

     “சூரல் புறவின் அணில்பிளிற்றும் சூழ்படப்பை” (ஐந்.எழு.35-1.);.

     “முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை” (ஐந்எழு.36-1);.

     “நெய்தற் படப்பை நிறைகழித் தண் சேர்ப்பன்” (தி.மொ.41-1);.

     “இளைசூழ் படப்பை இழுக்கிய ஏனத்து” (சிலப்.12-24);.

     “காவிரிப் படப்பைப் பட்டினம் தன்னுள்” (சிலப்.15-151);.

   2. புழைக்கடை; backyard,

     “எம்படைப்பைக் காஞ்சிக் கீழ்” (கலித். 108.);

   3. பக்கத்துள்ள இடம்; adjoining region or locality.

     “வாழ்முர் வேலிச் சூழ்மிளைப் படப்பை” (பெரும்பாண். 126);

   4. ஊர்ப்புறம்; vicinity or outskirt of a town.

     “அன்னமுங் குயிலும் பயிலுநீள் படப்பை யத்தினாபுரியை மீண்டடைந்தான்” (பாரத. குருகுல. 95);

   5. நாடு. (வின்.);; rural parts, country.

   6. மருத நிலத்தூர் (சது);; agricultural town or village.

   7. ஆன்கொட்டில்; cow stall.

   8. பனங்கொட்டையைத் திரட்டி உலர்த்துங் கொல்லை; enclosure for collecting and drying palmyra fruits.

     [படப்பு → படப்பை]

 படப்பை paḍappai, பெ.(n.)

   காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள ஓர் ஊர்; a village in Kanchipuram Taluk.

     [பாடம்-படம்-படப்பை]

படப்பொறி

படப்பொறி paṭappoṟi, பெ. (n.)

   1. நாகத்தின் படத்திலுள்ள புள்ளிகள் (சூடா.);; spots on the hood of a cobra.

   2. துத்தி1, 1 பார்க்க; (மலை.);;see {tutti;}

 evening mallow.

     [படம் → படப்பொறி]

படமகி

 படமகி paṭamaki, பெ. (n.)

   கசப்பு வெட்பாலை;படமகிப்பாலைமரம்; a kind of {vetpālai} herb.(சா.அக.);

படமக்கி

 படமக்கி paṭamakki, பெ. (n.)

படமடக்கி பார்க்க; (சங்.அக.); see {padamaggakki}

     [படமடக்கி → படமக்கி]

படமஞ்சரி

படமஞ்சரி paṭamañcari, பெ. (n.)

   ஒருவகைப் பண் (பரத.இராக. 56);; a specific melody type.

     [படம் + மஞ்சரி]

படமஞ்சி

 படமஞ்சி paḍamañji, பெ.(n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur.Taluk.

     [படை+மஞ்சி]

படமடக்கி

 படமடக்கி paṭamaṭakki, பெ. (n.)

   தாழை பார்க்க; (மலை);; see talai, fragrant screwpine.

     [படம் + அடக்கி]

படமடை

படமடை paṭamaṭai, பெ. (n.)

     “படமடைக் கொண்ட குறுந்தா ணுடும்பின்” புறம் (பா.பே.326-9.);.

படமண்டபம்

 படமண்டபம் baḍamaṇḍabam, பெ. (n.)

படமாடம் பார்க்க; see {padamādam.}

     [படம் + மண்டபம்]

படமரக்காடி

 படமரக்காடி paḍamarakkāḍi,    பெ.(n) நெசவுக் கருவியான படமரத்திலுள்ள சிறிய நீண்ட பள்ளம்; middle furrow in the wooden component in loom.

     [படமரம்+காடி]

படமரக்குச்சி

 படமரக்குச்சி paḍamarakkucci, பெ.(n) படமரத்தைச் சுழற்றுவதற்குரிய சிறிய கொம்பு a stick in loom.

     [படை+மரம்+குச்சி]

படமரத்து மெட்டுக் கம்பி

 படமரத்து மெட்டுக் கம்பி paḍamarattumeḍḍukkambi, பெ.(n.)

   படமரத்தைச் சுழற்றுவதற்குரிய கம்பி; a stick used to rotate. [படமரம்+.அத்து+மெட்டு+கம்பி]

படமரத்துளை

 படமரத்துளை paḍamarattuḷai, பெ.(n.)

படமரக்குச்சி செருகப்படும் துளை, a hole in the boat to pole.

     [படை+மரம்+துளை]

படமரம்

 படமரம் paṭamaram, பெ. (n.)

   நெசவுக் கருவி வகை; fore-roll of a loom, weaver’s beam.

     [படம் + மரம்]

ஒ.நோ. படைமரம்.

படமாடம்

படமாடம் paṭamāṭam, பெ. (n.)

   கூடாரம்; tent.

     “கழிப்பட மாடங் காலொடு துளங்க” (பெருங். உஞ்சைக். 44, 42.);

     [படம் + மாடம்]

படமாளிகை

படமாளிகை paṭamāḷikai, பெ. (n.)

படமாடம் பார்க்க; see {padamāợam.}

     “ஏகு நெறிக் கிடையே படமாளிகை” (சிவரக. தேவியிமைய. 12.);

     [படம் + மாளிகை]

படமெடு-த்தல்

படமெடு-த்தல் paṭameṭuttal,    18. செ.குன்றா.வி. (v.t.)

படம்பிடி-, பார்க்க; see {padampiqi-,}

     [படம் + எடு-,]

 படமெடு-த்தல் paṭameṭuttal,    3. செ.கு.வி. (v.i.)

   1. பாம்பு தன் படத்தை விரித்து நிற்றல்; to spread hood as a cobra (வின்.);;

   2. புகைப்படக் கருவியால் படம் எடுத்தல்; to shoot a photo v.ith a still camara.

   3. திரைப்படம் எடுத்தல்; to produce a film.

     [படம் + எடு-,]

படமொடுக்கு-தல்

படமொடுக்கு-தல் paṭamoṭukkutal,    9. செ.கு.வி. (v.i)

   பாம்பு தன் படத்தைச் சுருக்கிக் கொள்ளுதல்; to contract hood, as a cobra.

     [படம் + ஒடுக்கு-,]

படம்

படம் paṭam, பெ. (n.)

   1. சீலை (பிங்.);; cloth for wear;

மாப்பட நூலின் றொகுதிக் காண்டலின்” (ஞான. 14, 21.);

   2. சித்திரச் சீலை (பிங்.);; painted or printed cloth.

     “இப்படத் தெழுது ஞானவாவி” (காசிக. கலாவ. 2);

   3. சட்டை; coat, jacket.

     “படம்புக்கு” (பெரும்பாண். 69);

   4. போர்வை; upper garment cloak.

     “வனப் பகட்டைப் படமாக வுரித்தாய்” (தேவா. 32, 7);

   5. உடல்; body.

     “படங்கொடு நின்றவிப் பல்லுயிர்” (திருமந். 2768);

   6. சித்தரமெழுதிய படம்; picture map.

   7. திரைச்சீலை(பிங்.);; curtain, screen of cloth, especially around a tent.

   8. பெருங்கொடி (பிங்.);; large banner.

   9. விருதுக் கொடி (பிங்.);; distinguishing fag, ensign.

     [பட்டம் → படம்] வ.மொ.வ.196

 படம்2 paṭam, பெ. (n.)

   1. யானைமுகபடாம்; ornamental covering for an elephant’s face.

     “வெங்கதக் களிற்றின் படத்தினால்” (கலிங், 89); (பிங்.);

மறுவ: ஆதொண்டை.

     [பட்டம் → படம்] வ.மொ.வ196

 படம்3 paṭam, பெ. (n.)

   1. பாம்பின் விரிந்த தலையிடம்; cobra’s hood.

     “பைந்நாப் படவரவேரல்குலுமை” (திருவாச. 34, 1);

   2. காற்றாடி; kite made of cloth or paper.

     “மணிப் பொலம் பூட்சிறார் விடுக்கும் வான் படம்” (காஞ்சிப்பு. நகர. 98);

     [பட்டம் → படம்] வ.மொ.வ.196

 படம்4 paṭam, பெ. (n.)

கதையின் அடிப்படையில் அமைந்த காட்சிகளைக் கலைநுணுக்கங்களோடு ஒளிப்படச் சுருளில் பதிவுசெய்து திரையில் காட்டும் திரைப்படம்.

 a film, a movie, cinema.

 படம்4 paṭam, பெ. (n.)

   பாதத்தின் முற்பகுதி; instep.

     “படங்குந்தி நிற்றல்” (சூடா. 9, 53);

படம்பிடி-த்தல்

படம்பிடி-த்தல் paṭampiṭittal,    4. செ.குன்றா.வி (v.t.)

   ஒளியின் உதவியால் கருவிகொண்டு ஒளிப்படம் பிடித்தல்; to photograph.

     [படம் + பிடி-,]

படம்புகு-தல்

படம்புகு-தல் paṭampukutal, செ.கு.வி (v.i)

   சட்டை விடுதல்; to put on a coat or jacket.

     “அடிபுதை யரணமெய்திப் படம்புக்கு” (பெரும்பாண். 69);.

     [படம் + புகு-,]

படம்விரி-த்தல்

படம்விரி-த்தல் paṭamvirittal, பெ. செ.கு.வி. (v.i.)

படமெடு2-, பார்க்க; (வின்.); see {padam.edu.}

     [படம் + விரி-,]

படரடி

 படரடி paṭaraṭi, பெ. (n.)

   சிதறவடிக்கை; scattering beating. (வின்.);

     [படர் + அடி]

படரப்பன்

 படரப்பன் paṭarappaṉ, பெ. (n.)

   கக்கல் செய்ய வைக்கும் ஒருவகை மூலிகை; a kind of emetic nut. (சா.அக.);

மறுவ: படராப் பாண்.

     [படர் + அப்பன்]

படராமூக்கி

 படராமூக்கி paṭarāmūkki, பெ. (n.)

   வெண்ணா யுருவி; white flowered indian bur. (சா.அக.);

     [படரா + மூக்கி]

படரி

படரி paṭari, பெ. (n.)

   1. படர்கொடி; a creeping plant.

   2. இலந்தை; jujube.

     [படர் → படரி]

படரிலந்தை

 படரிலந்தை paṭarilantai, பெ. (n.)

   படரக்கூடிய இலந்தை வகை (இ.வி.);; a kind of jujube.

     [படர் + இலந்தை]

     [P]

 படரிலந்தை paḍarilandai, பெ. (n.)

   நிலத்தில் ஆழ வேரூன்றிப்படரும் இலந்தைச் செடி; a kind of lant.

     [P]

     [படர்+இலந்தை]

படருப்பு

படருப்பு paṭaruppu, பெ. (n.)

   1. நிலத்தில் படரும் உப்பு; ioncrustoction of salt.

   2. உழமண் தரையில் படரும் உப்பு; mealy power.

   3. முடியண்டப்படருப்பு; a whitish crust or light crystallization found deposited on the human skull. (சா.அக.);

     [படர் + உப்பு]

படரை

 படரை paṭarai, பெ. (n.)

   ஆவிரை (சங்.அக.);;பார்க்க; see {padāraī, tanner’s }

 senna.

     [படர் → படரை]

     [P]

படரைக்கீரை

 படரைக்கீரை paṭaraikārai, பெ. (n.)

   ஆரை; a kind of editle green.

     [படரை + கீரை]

படர்

படர் paṭar,    4 பெ. (n.)

   பரவும் தோல்நோய்; a kind of itches.

     [படல் → படர்] (மு.தா.125);

 படர்2 paṭar, பெ. (n.)

   1. செல்லுகை; passing proceeding.

     “படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் (மதுரைக், 431);.

   2. ஒழுக்கம் (சூடா);; uprigh conduct or behaviour.

   3. வருத்தம்; sorrow affliction, distress, anxiety. trouble

     “‘பானாள்யாம் படர்கூர” (கலித். 30.);

   4. தேமல்; spreading spots on the skin

   5. நோய்; pain, disease.

   6. தூறு; thick bush especially of creepers.

     “பவள நண்படர்க்கீழ் (திவ். திருவாய் 9, 2,5.);.

   7. நினைவு; thought reflection

     “அரிவைக்கின்ன வரும்படர் தீர” (நெடுநல், 166.);.

   8. பகை (அக.நி);; hostility enmity.

   9. மேடு; rise, elevation mount hillock. (வின்.);;

   10. வழி (யாழ்.அக.);; path

   11. துகிற்கொடி (அக.நி);; flag.

     [படல் → படர்]

 படர்3 paṭar, பெ. (n.)

   1. படைவீரர்;  warriors, soldiers.

     “படர் கிடந்தனர் (கம்பரா. நாகபாச. 137);

   2. காலதூதர்;  yama’s messengers.

     “புலப்பட நிலைப்படருரைப்பார்” (திருவாலவா. 33, 11);

   3. ஏவல் செய்வோர் (யாழ்.அக.);; servants attendants.

   4. இழிமக்கள் (யாழ்.அக.);

 people of low caste.

     [படல் → படர்]

 படர்4 paṭar, பெ. (n.)

   தறுகண்மை; cruelty.

     “படரெருமைப் பகட்டின் மிசை” (தக்க யாகப். 463);

     [படல் → படர்]

படர் சுணங்கு

 படர் சுணங்கு paṭarcuṇaṅku, பெ. (n.)

   உடலில் படரும் தேமல்; yellow patches (adj.);on the skin especially in females on the breast which is considered as adding to beauty. (சா.அக.);

     [படர் + சுணங்கு]

படர்-தல்

படர்-தல் paṭartal,    4 செ.கு.வி. (v.i)

   1. ஓடுதல்; to run.

     “அன்னை யலறிப் படர்தர” (கலித். 51);

   2. கிளைத்தோடுதல்; to spread, as a creeper; to ramify, branch out in different directions.

     ‘கொடி படருகிறது’

   3. பரவுதல்; to overspread, as spots or eruptions on the skin; to spread as light, fire, rumour epidemic.

     “ஊழித்தீப் படர்ந்து” (கல்லா.கண);

   4. பெருகுதல்; to be diffused as air, knowledge; to pervade, as perfume.

     “படரொளிப் பரப்பே” (திருவாச. 22, 8);

   5. அகலுதல் to expand; to be wide, as chest, face.

     ‘படர்ந்த மார்பு’

   6. வருந்துதல்; to suffer; to be distressed.

     “துணை படர்ந் துள்ளி” (அகநா. 38);

     “எடுத்தல் திரீஇ யிடத்தொறும் படர்தலிற்” (அகம்.171-11);

     “பகைப்புலம் படர்தலு முரியன்” (புறம்.69-14);

     [படல் → படர் → படர்-,]

 படர்-தல்1 paṭartal,    2. செ.குன்றா.வி. (vt.)

   1. விட்டுநீங்குதல்; to leave, abandon.

     “தூயாப் படர்பின்னா” (சிறுபஞ். 14);

   2. அடைதல்; to reach, arrive at

     “சேவடி படருஞ் செம்ம லுள்ள மொடு” (திருமுரு. 62);.

   3. நினைத்தல் to think of, consider.

     “திரையறப்படர்குவிராயின்” (பெரும்பாண். 35);

   4. பாடுதல் to sing, dwell on.

     “நீத்தான்றிறங்கள் படர்ந்து (கலித். 131);

     [படல் → படர்-,]

படர்அவலம்

படர்அவலம் paṭaravalam, பெ. (n.)

   படர்கின்ற துன்பம்; continuous suffering.

     “அரும்படர் அவலம்” (ஐங்.485-1);

     [படர் + அவலம்]

படர்காய்

படர்காய் paṭarkāy,    4 பெ. (n.)

   1. பீர்க்கு; luffa creeper.

   2. கொடியின்காய்; fruit of any creeper as அவரை been.

   3. பூசனி; pumpkin. (சா.அக.);

     [படர் + காய்]

 படர்காய் paṭaṟkāy, பெ. (n.)

   தக்காளி; Indian tomato. (சா.அக.);

     [படர் + காய்]

படர்கின்ற பந்து

 படர்கின்ற பந்து paṭarkiṉṟa, பெ. (n.)

   கொப்புளமாகாது படர்ந்து புண்ணாகும் நோய்வகை; infective gramuloma.

     [படர்கின்ற + பற்று]

படர்கூர்ஞாயிறு

படர்கூர்ஞாயிறு paṭarkarñāyiṟu, பெ. (n.)

   வெயில் மிகுதியாகித் துன்பப்படுத்தும் ஞாயிறு; stroking sun.

     “வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றும் செக்க ரன்ன” (மது,431);.

     [படர் → கூர் + ஞாயிறு]

படர்கொடி

படர்கொடி paṭarkoṭi, பெ. (n.)

   1. நின்று வளராது படரும் கொடி; any kind of running plant.

   2. பீர்க்கு, பார்க்க; (மலை.); see pirkku sponge gourd.

     [படர் + கொடி]

படர்கொள் மாலை

படர்கொள் மாலை paṭarkoḷmālai, பெ. (n.)

   துன்பம்தரும் மாலைப்பொழுது; evening love sick.

     “படர்கொண் மாலைப் படர்தந்தாங்கு” (அகம்.303-14);

படர்க்காரை

 படர்க்காரை paṭarkkārai, பெ. (n.)

   காரைச் செடி; thorny webera. (சா.அக.);

     [படர் + காரை]

படர்க்கை

படர்க்கை paṭarkkai, பெ. (n.)

   இடம் மூன்றனுள் தன்மை, முன்னிலைகள் அல்லாத இடம்; third person, one of three itam q.v.

     “எல்லாருமென்னும் படர்க்கை யிறுதியும்” (தொல். எழுத் 191);.

படர்செண்பகக்கொடி

 படர்செண்பகக்கொடி paṭarceṇpakakkoṭi, பெ. (n.)

   கொடிச்சம்பங்கி; a variety of champak (creeper);.

     [படர் + செண்பகக்கொடி]

படர்செண்பகம்

 படர்செண்பகம் paṭarceṇpakam, பெ. (n.)

   கொடிச் செண்பகம்; champak creeper. (சா.அக.);

     [படர் + செண்பகம்]

படர்ச்சி

படர்ச்சி paṭarcci, பெ. (n.)

   1. செலவு; passing, proceeding, going.

     “பாயிருட் கணவனைப் படர்ச்சி நோக்கி” (பு.வெ. 13, பெண்பாற் 19, கொளு);

   2. நல்லொழுக்கம்; moral conduct.

     “அரத்திற்றிரியாப் படர்ச்சி” (நன். பொது. 46);

   3. கொடியோடுகை; running, extending, creeping, as a vine.

   4. ஊழ்வினை; fate. “படர்ச்சியின் வயத்தாலோர்நாள்” (சேதுபு. சீதைகு. 31);

   5. பரந்த வடிவு (சூடா);;ехрanse, open spaсе.

   6. பரவுகை; spreading as darkness light, fire, spots, eruptions.

படர்தடிப்பு

படர்தடிப்பு paṭartaṭippu, பெ. (n.)

   1. வண்டிக்கடி; beetle bite.

   2. சில நஞ்சுக்கடியினால் உடம்பில் பல இடங்களில் சதை தடித்துக் காணுதல்; thick spots or raised parches spreading on the skin due to poisonous bites of insects. (சா.அக.);

     [படர் + தடிப்பு]

படர்தவசி

 படர்தவசி paṭartavaci, பெ. (n.)

   சன்னிநாயகம்; any plant capable of or having the critue of carring apopley of any kind probable refering here to some spreading creeper. (சா.அக.);

     [படர் + தவசி]

படர்தாமரை

படர்தாமரை paṭartāmarai, பெ. (n.)

   1. தோல் மேற்படரும் நோய் வகை (வின்.);; ringworm, tinea.

   2. தேமல்வகை; tetter, herpes.

   3. மனவமைதியில்லாதவ-ன்-ள்; a person of restless temperament. (நெல்லை.);

மறுவ; படுதாமரை

     [படர் + தாமரை]

படர்தேமல்

படர்தேமல் paṭartēmal, பெ. (n.)

   1. படர்தாமரை, பார்க்க; see {pagartāmarai,}

   2. தேமல்; spreading spots on the skin.

     [படர் + தேமல்]

படர்த்தி

படர்த்தி paṭartti, பெ. (n.)

படர்ச்சி,3, 6, பார்க்க; see {padarcci}

சதைப்படர்த்தி

     [படர் → படர்த்தி]

படர்நெல்லி

 படர்நெல்லி paṭarnelli, பெ. (n.)

   கொடிநெல்லி; goose berry creeper of the phyllanthus genus. (சா.அக.);

     [படர் + நெல்லி]

படர்நோய்

படர்நோய் paṭarnōy, பெ. (n.)

   நினைவினால் உண்டாம் வருத்தம்; anxiety, anxious thought.

     “அயர்வொடு நின்றே னரும்படர் நோய் தீர” (பு.வெ. 11, பெண்பாற் 9);

   2. குட்டம்; skin disease rafridly sprecdiy.

   3. தொற்று நோய்; infectous disease such as cholere, small pox ete. spreading to the surrounding places.

     [படர் + நோய்]

படர்பயிர்

படர்பயிர் paṭarpayir, பெ. (n.)

   படர்கின்ற கொடி; climber, creeper, as a spreading plant.

     “படர்பயிர்க்குக் கொளு கொம்பால் கொள்கையாலே” (குற்றா. தல. மந்தமா 34);

     [படர் + பயிர்]

படர்புண்

படர்புண் paṭarpuṇ, பெ. (n.)

   உடம்பில் பரவிக் கொண்டே வரும் புண்வகை (இங். வை. 302);; spreading ulcer.

     [படர் + புண்]

படர்மலி அருநோய்

படர்மலி அருநோய் paṭarmaliarunōy, பெ. (n.)

   காதல்நோயால் வந்த பசலைநோய்; anxious thought with love affair.

     “நன்னுதல் பாய படர்மலி அருநோய்” (நற்.282-3);.

     “நன்னுதற் பசந்த படர்மலி அருநோய் (நற்.322-9.);.

படர்மலி வருத்தம்

படர்மலி வருத்தம் paḍarmalivaruttam, பெ. (n.)

   காதல்நோயால் வந்த மிகுதுன்பம்; excess distress in love affair.

     “படர்மலி வருத்தமொடு பலபுலத் தசைஇ” (அகம்.398-2);.

படர்மல்லிகை

படர்மல்லிகை1 paṭarmallikai, பெ. (n.)

சாதிமல்லிகை பார்க்க; (வின்.);; see {sathimalligai,}

 large flowered jasmine.

     [படர் + மல்லிகை]

 படர்மல்லிகை2 paṭarmallikai, பெ. (n.)

   கொடிமல்லிகை; creeper jasmine. (சா.அக.);

     [படர் + மல்லிகை]

படர்முன்னை

 படர்முன்னை paṭarmuṉṉai, பெ. (n.)

   காதல்நோயால் வந்த மிகுதுன்பம்; pointed leaved hogwood. (சா.அக.);

     [படர் + முன்னை]

படறுபறச்சி

 படறுபறச்சி paṭaṟupaṟacci, பெ. (n.)

   நிலவாகை; east indian senna. (சா.அக.);

     [படரும் + பறச்சி]

படற்கள்ளி

 படற்கள்ளி paṭaṟkaḷḷi, பெ. (n.)

சப்பாத்துக் கள்ளி. (வின்.);; பார்க்க; see {šappāttukkalli} common prickly-pear.

     [படல் + கள்ளி]

     [P]

படற்றி

 படற்றி paṭaṟṟi, பெ. (n.)

   வாழைவகை (நாஞ்.);; a kind of plantain.

     [ஒருகா,படர் → படர்த்தி → படற்றி]

படலம்

படலம் paṭalam, பெ. (n.)

   1. கூட்டம்; mass as of clouds; heap, drift, as of dust stellar group.

     “உதிர்ந்த துடுபடலம்” (கந்தரலங்12);

     “கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர்” (மணிமே.28-110);

   2. நூலின் பகுதி; chapter or section in a poem or treatise.

   3. மேற்கூரை; canopy

     “உள்ளொளிப் படலத்து…. கட்டிலும்” (பெருங். உஞ்சைக்.57,52.);

   4. கூடு; the hollow, as of a crown.

     “இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலத்து” (பதிற்றுப்.39,14,);

   5. கண்படலம்

 film or cataract in the eye.

     “படலமுரித்த விழி” (திருப்போ.சந்.மாலை.20.);

   6.அடுக்கு; lamina, layer,scale, cuticle.

   7. நிலவுலகம்,

 region; world.

     “ஏணிபோகிய கீழ்நிலைப் படலம்” (ஞான.54);

   8. மணிக் குற்றம் (வின்.);; flaw. obscurity, dimnes or opaque spot in a gem.

   9. பரிவாரம் (யாழ்.அக.);; train retinue.

   10. பொட்டு (யாழ்.அக.);; tilka.

   11. படல், 1,2, (யாழ்.அக.);; see padal 1, 2 பார்க்க;   12. மூடி; cover.

   13. மாசு; stain.

   14. சவ்வு; membrance.

     [படல் → படலம்] (மு.தா.123,124.);

படலி

 படலி paṭali, பெ. (n.)

துளசி,

 holy basli (சா.அக.);

     [படர் → மடல் →படலி]

     [துளசிச்செடி படர்ந்து, செழித்து வளர்வது எண்ணத்தக்கது]

படலிகை

படலிகை1 paṭalikai, பெ. (n.)

   வட்டவடிவு (பிங்);; circle, circular surface.

   2 கைம்மணி (பிங்);; handbell

   3. பெரும்பீர்க்கு (பிங்);; a large species of lufta.

   4. இளைப்பு (வின்.);; weariness fatigue.

   5. ஒரு கொடி; creepeer.

     [படல் → படலிகை]

 படலிகை2 paṭalikai, பெ. (n.)

   1. கண்ணோய் வகை; cataract of the eye.

     “படலிகை வாங்கிய நோக்கத்தார்” (கந்தபு.மார்க்.68);

   2. பூவிடு பெட்டி; basket or tray for flowers.

     “படலிகை கொண்டுவாழ்த்தி” (சீவக. 2707 உரை);

     [படர் → படல் → படலிகை] (மு.தா.123.);

 படலிகை3 paṭalikai, பெ. (n.)

   ஓர்அளவு; a measure of quantity.

     “வெற்றிலை படலிகையால் ஒரு பற்று” (S.l.l. iii, 10);

     [படர் → படல் → படலிகை] (மு.தா.123);

 படலிகை paḍaligai, பெ.(n.)

   தோலாற் செய்யப்பட்ட இசைக்கருவி; a percussion muscial instrument.

     [படலி-படலிகை]

படலிடம்

படலிடம் paṭaliṭam, பெ. (n.)

   குடிசை (கல்லா.96);; hut, as made of leaves.

     [படல் + இடம்]

     [P]

படலியம்

படலியம் paṭaliyam, பெ. (n.)

   குதிரைப் பண்ணமைக்கும் கருவிகளுள் ஒன்று; one of the equipments of a horse.

     “படலியம் பழுக்கமொடு” (பெருங். இலாவாண. 18, 14);

     [படல் → படலியம்]

படலெலைவஞ்சி

 படலெலைவஞ்சி paṭalelaivañci, பெ. (n.)

   கீழ்க்காய் நெல்லி; feather foil (சா.அக.);

     [படல் + இலை + வஞ்சி → படலெளைவஞ்சி]

படலை

படலை1 paṭalai, பெ. (n.)

   1. படர்கை (பிங்);; spreading expanding.

   2. பரந்த இடம்; expanses.

     “படலை மார்பினிற் கொன்றை மாலிகை” (குற்றா. குற, 13);

   3. வாயகன்ற பறை (சூடா.);; broad-headed drum.

   4. தழை (புறநா.319, கீழ்க்குறிப்பு);; leaves.

   5. படலை மாலை பார்க்க; see {padalal-malai}

     “வண்சினைக் கோங்கின்றண்கமழ் படலை” (ஐங்குறு. 370);

     “பல்லான் கோவலர் படலைக் கூட்டும்” (ஐங்,476-3);

     “பல்லான் கோவலர் படலை துட்ட” (புறம்:265-4);

     “குருந்தலை வான்படலை சூடிச் சுரும் பார்ப்ப” (ஐந்.எழு.28-1);

மறுவ: குதிரைக்கிங்கிணி மாலை.

     [படர் → படல் → படலை]

 படலை2 paṭalai, பெ. (n.)

   1. கூட்டம்; mass, heap file.drift.

     “மூடின திருட்டலை மூவுலகும்” (கம்பரா. மாரீச. 46);

   2. குதிரைக் கிண்கிணி மாலை; string of small tinkling bells for a horse.

   3. குலையிலுள்ள சீப்பு (நாஞ்);; a bunch of fruits.

     “உடும்பிடு தறுத்த வொடுங்காழ்ப் படலை” (புறம்.325-7);

     ‘வாழைக்குலை யிலிருந்து ஒரு படலை இணுங்கு’ (நாஞ்);

   4. பார்க்க; படல், 1. பார்க்க; see {padai}. 1.

     “படலை முன்றில்” (புறநா. 319);

ம. படல.

     [படல் → படலை] (மு.தா.124.);

படலைக் கண்ணி

படலைக் கண்ணி paṭalaikkaṇṇi, பெ. (n.)

   படலை மாலை;பார்க்க; see {padalai-mālai.}

     “பல்பூ மிடைந்த படலைக் கண்ணி” (பெரும் பாண். 174.);

     “படலைக் கண்ணிப் பரேறெறுழ்த் திணிதோள்’ (பெரும்.60);

     “படலைக் கண்ணிப் பரேறெறுழ்த் திணிதோள்” (நெடு.31);

     [படலை + கண்ணி]

படலைப்பந்தர்

படலைப்பந்தர் paṭalaippantar, பெ. (n.)

   தழை யாலாகிய பந்தர்; arbour with grean leaves

     “படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை” (அகம். 87-3);

படலைமாலை

படலைமாலை paṭalaimālai, பெ. (n.)

   பச்சிலையோடு மலர்கள் விரவித் தொடுத்த மாலை; garland of green leaves and flowers.

     “முறிமிடை படலைமாலைப் பொன்னிழை மகளிர்” (சீவக. 483);

     [படலை + மாலை]

     [P]

படல்

படல் paṭal, பெ. (n.)

   1. பனையோலை யாலேனும் முள்ளாலேனும் செய்யப்பட்ட அடைப்பு; small shutter of braided palm leaves or thorns.

     “படலடைத்த சிறுகுரம்பை நுழைந்து புக்கு” (திவ்.பெரியதி,4,4,3.);

   2. மறைப்புத்தட்டி; (வின்.);; a kind of hurdle or wattled frame for sheltering cattle, sun-shade, a kind of tatty against sun. rain or v.ind, used in a shed bazaar or novel, or before a shop.

   3. தேர் முதலியவற்றில் இடும் பூந்தடுக்கு; frames of various designs adorned v.ith flowers and fastened on to a temple-car, etc.

   4. ஒலைக்குடைவகை (நாஞ்.);; a kind of ola umbrella.

   5. பாய்மரத்தில் இணைக்கப்பட்ட குறுக்குக் கட்டையிலுள்ள குழி (வின்.);; hole of a yard-arm or sailyard.

   6. உறக்கம்; sleep.

     “படலின் பாயல்” (ஐங்குறு. 195);

     “மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்குஎன் கண்” (குறள்,1136);

     “படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண்” (குறள்.1175);

ம. படல். க. படி, குட படி து படி

     [படம் → படல்] (வ.மொ.வ.197);

படவன்

படவன் paṭavaṉ, பெ. (n.)

   படகோட்டி; boat man.

     “படவர் மடமகளிர்” (திருப்போ. சந். பிள்ளைத், முத். 4);

     [படகு → படவு → படவன்] (தமி.வ.93);

படவம்

படவம் paṭavam, பெ. (n.)

பார்க்க; see {padagam}

     “இடியுறழ் முரசுஞ் சங்க படவமும்” (பெருங், உஞ்சைக் 57, 58);

     [படகம் → படவம்]

 படவம்1 paḍavam, பெ.(n.)

   பண்டைய இசைக்கருவி; an ancient musical instrument.

மறுவ, படகம்

     [படகம்-படவம்]

 படவம்2 paḍavam, பெ.(n.)

புகைப்படக் கருவி, Camera,

     [படம்-படவம்]

     [P]

படவா

படவா paḍavā, பெ.(n.)

   1. போக்கிரி; rascal, base scoundrel

   2. கூட்டிக் கொடுப்போன் (இ.வ.);; pimp. ower of creating, acting and destroying

   3. விலை மகள் (கூத்தி); (இ.வ.);; prostitute.

   4. ஒருவரைத் திட்டவும், பாசத் துடன் அழைக்கவும் பயன்படுத்தும் சொல்;   பயல்; a term of abuse as well as endearment;chap.

     ‘திருட்டுப் படவாக்கள்’, ‘படவா! நீ தான் என் பேனாவை எடுத்து ஒளித்து வைத்தாயா?” (இ.வ.);

     [U. {} → த. படவா]

படவாள்

 படவாள் paṭavāḷ, பெ. (n.)

படைவாள் (வின்.);

 sword.

     [படைவாள் → படவாள்]

     [P]

படவிகம்

 படவிகம் paṭavikam, பெ. (n.)

   நுணாமரம்; noona tree. (சா.அக.);

படவீடு

 படவீடு paṭavīṭu, பெ. (n.)

படமாடம் பார்க்க; see {pada-mădam.}

     [படம் + விடு]

 படவீடு paḍavīḍu, பெ.(n.)

   திருச்செங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruchengode Taluk.

     [படை+வீடு]

படவு

படவு paṭavu, பெ. (n.)

   சிற்றோடம்; small boat.

     “படவதேறி” (திருவாச. 43, 3);

தெ. படவ க, படஹு

ம. படவு. து. படவு

     [படம் → படவு] (தமி.வ.93.);

படவுத்தொழில்

படவுத்தொழில் paṭavuttoḻil, பெ. (n.)

   படகு கட்டுந் தொழில்; occupation of boat making.

     [படவு + தொழில்] (ஒ.மொ.224);

படவை

படவை paṭavai, பெ. (n.)

   1. செருப்படை 2(மலை.); பார்க்க;   2. செடிவகை (L.);; asarabacca, acrid herbaceous plant.

     [படவு → படவை]

படா

படா paṭā, பெ. (n.)

மிடா பார்க்க; see {midā} bedaly emetic nut.

     “கார்க்கொள் படாக்கள் நின்று” (திவ். நாய்ச் 9, 2);.

 படா paṭā, பெ.எ. (adj.)

   பெரிய; large, great.

     [U. {} → த. படா]

படாகா

 படாகா paṭākā, பெ. (n.)

   பட்டாசு; fire cracker, squib, gun-cap. (இ.வ.);

     [பட் → படா → படாகா] ஒலிக்குறிப்பு

படாகை

படாகை paṭākai, பெ. (n.)

   1. கொடி; flag.

     “பாவை விளக்குப் பசும்பொற் படாகை” (சிலப், 5, 154);;

     “தடாக மேற்ற தண்சுனைப் பாங்கர்ப் படாகை நின்றன்று” (பரி.9-78);

     “பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல்” (சிலப்.14-216);

 banner.

   2. நாட்டின் உட்பிரிவு; division of a country; district.

     “படாகை வலஞ்செய்து” (s.i.i.ii, 352);

   3. நிலச் சாகுபடிக்கு வசதியாயிருக்கும்படி குடிகள் நிலத்திற் கருகாக ஊர்ப்புறத்தில் அமைத்துக் கொள்ளும் குடிசைகள்;   4. கூட்டம்; multitude, collection.

     “கவரிப் படாகை” (பெருங். உஞ்சைக். 38, 128);

     [படம் → படாம் → படாகை]

படாக் கொட்டில்

படாக் கொட்டில் paṭākkoṭṭil, பெ. (n.)

படமாடம் பார்க்க; see {pada-mâdam.}

     “படாக் கொட்டிலும் பண்டி பண்டாரமும்” (பெருங். மகத். 23, 36);.

     [படாம் + கொட்டில்]

படாங்கழி

 படாங்கழி paṭāṅkaḻi, பெ. (n.)

   வரிவகை;     [படாம் → கழி]

படாங்கு

படாங்கு1 paṭāṅku, பெ. (n.)

   பாசாங்கு; jest. (வின்.);

     [பட்டாங்கு → படாங்கு]

 படாங்கு2 paṭāṅku, பெ. (n.)

   சிவப்பு நிறமுள்ள ஆடை (இ.வ.);; red cloth.

     [படாம் → படாங்கு]

படாசு

 படாசு paṭācu, பெ. (n.)

   தாட்சுருட்டு வெடி; fire-cracker.

     [பட் → படா → படாசு]

படாச் சாரம்

 படாச் சாரம் paṭāccāram, பெ. (n.)

   சத்திச் சாரம் (சங்.அக.);; an acid salt.

படாதுபடு-தல்

படாதுபடு-தல் paṭātupaṭutal,    20. செ.கு. வி. (v.i.)

   மிகத் துன்புறுதல்; to suffer extreme misery.

     “அடாதது செய்தவன் படாது படுவான்”

     [படாது + படு-,]

படாது என்பது படாதது என்பதன் சிதைவு.

     ‘படாதது’ வினையாலணையும் பெயர்.

படாநிந்தை

 படாநிந்தை paṭānintai, பெ. (n.)

   அடாப்பழி; baseless or unjust accusaion.

     [படு + ஆ(எதிர்மறை); + skt நிந்தை]

படாந்தரக்காரன்

 படாந்தரக்காரன் paṭāntarakkāraṉ, பெ. (n.)

   முழுப்பொய்யன்; a gross liar (w.);

மறுவ. புளுகன்

     [படாந்தரம் + காரன்]

படாந்தரமடி-த்தல்

படாந்தரமடி-த்தல் paṭāntaramaṭittal,    4. செ.கு.வி. (v.i.)

படாந்தரம்போடு-, (வின்.); பார்க்க; see {pāợāndaram põdu-,}

     [படு + அந்தரம் + அடி]

படாந்தரம்

படாந்தரம் paṭāntaram, பெ. (n.)

   1. முழுப்பொய் (சங்.அக.);; gross lie: false story. fabrication,

   2. கற்பணையால் மிகுத்துக் கூறுகை (வின்.);; colouring exaggeration

   3. காரணமின்மை; absence of cause or reason.

     ‘படாந்தரமாய் வந்து சேர்ந்தது’ (வின்.);

     [படு + skt.antara த. அந்தரம் → படாந்தரம்]

படாந்தரம் போடு-தல்

படாந்தரம் போடு-தல் paṭāntarampōṭutal,    20. செ.கு.வி. (v.i.)

   முழுப்பொய் கூறுதல் (வின்.);; to speak gross lies.

     [படு + skt.antara → த. அந்தரம் + போடு-,]

படாபஞ்சனம்

 படாபஞ்சனம் paṭāpañcaṉam, பெ. (n.)

   முழுஅழிவு (வின்.);; destruction, extirpation

     [படு → பட + பஞ்சனம்]

பஞ்சனம் = skt.

படாப் பஞ்சம்

 படாப் பஞ்சம் paṭāppañcam, பெ. (n.)

   கிடைத்ததற் அருமையானது; that which is scarce or rare.

     ‘அந்தப் பண்டம் படாப்பஞ்சமா யிருக்கிறது’ (கொ.வ.);

     [படு + ஆ. (எதிர்மறை); → படா + பஞ்சம்]

படாப்பழி

 படாப்பழி paṭāppaḻi, பெ. (n.)

   இல்லாதபழி; baseless or unjust accusation.

ஒ.நோ. படு + ஆ (எதிர்மனற); + பழி

படாமுரசு

படாமுரசு paṭāmuracu, பெ. (n.)

   ஓயாது ஒலிக்கும் பேரிகை; drum beaten incessantly.

     “படாமுர சார்ப்ப” (சீவக. 1687);

     [படு + ஆ = படா + முரசு]

     ‘ஆ’ எதிர்மறை இடைநிலை

படாமை

படாமை paṭāmai, பெ. (n.)

   எதிர் மறையைக்குறிக்கும் மையீற்றுப் பண்புப்பெயர்; a negative word.

     “இருநிழல் படாமை மூவே ழுலகமும்” (பரி3-75);

     “ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை” (சிலப்-3-53);

     “மீத்திறம் படாமை வக்காணம் வகுத்து” (சிலப்-3-148);

     [படு + ஆ + மை]

படாம்

படாம்1 paṭām, பெ. (n.)

   1. சிலை; cloth.

     “படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ” (புறநா.141);

     “மடத்தகை மாமயில் பனிக்குமென்றருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நாலிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” (புறநா.145.);

   2. திரைச்சீலை (பிங்.);; curtain, screen.

   3. பெருங்கொடி (சூடா);; large flag.

   4. படமாடம் பார்க்க; see {pagamāgam. }

     “சித்திரப் படாத்துப் புக்கான்” (அரிச், பு. வேட்டஞ். 87);

   5. முகபடாம்; cloth adorning the face of an elephant.

     “படாமுக முகிலிற் றோன்றும்” (கம்பரா. எதிர்கோள்.1);

     [படம் → படாம்]

 படாம்2 paṭām, பெ. (n.)

   பரிவட்டம்; a piece of cloth, used as headdress.

     “படாம் பீடம் படுத்தே” (ஞான தீட்சை. 3);

     [படம் → படாம் மு.தா.122]

படாம் வீடு

 படாம் வீடு paṭāmvīṭu, பெ. (n.)

படவீடு (வின்.); பார்க்க; see {padavidu}

     [படாம் + விடு]

படாயி

படாயி paṭāyi, பெ. (n.)

   1. மேல்வாரக்காரர் குடி வாரக்காரரிடமிருந்து விளைச்சலில் ஆறி லொன்று முதல் பாதிவரை பங்கு பெறுகை; sharing of crops between a landlord and his tenant, the landlord’s share varying from 1 6 to 1 2 3.

   தவசமாகச் செலுத்தும் வரிவகை;

படாய்

 படாய் paṭāy, பெ. (n.)

   தடபுடல் (இ.வி.);; vain pomp; bragging.

க. படாய்

படார மூக்கி

படார மூக்கி paṭāramūkki, பெ.(n.)

   நாயுருவி; indian burr.

   2. வெண்ணாயுருவி; white species of indian burr.

மறுவ: பிடார முக்கி. (சா.அக.);

படாரன்

 படாரன் paṭāraṉ, பெ.(n.)

   பாம்பாட்டி(வின்.);; snake-charmer.

     [பிடாரன் → படாரன்]

படாரர்

படாரர்1 paṭārar, பெ.(n.)

 deity.

   2. பூச்சியர்; venerable persons, as priests.

 படாரர்2 paṭārar, பெ.(n.)

   சமண முனிவர்; jain saint

     “ஸ்ரீ புட்பணந்தி படாரர் மாணாக்கர் பேருணந்தி படாரர்” (தெ.கல்.தொ.5.கல்.391);

படாரி

படாரி paṭāri, பெ. (n.)

   சிற்றூர்க் காவல் தெய்வம்; a goddess to protect the welfare of the village.

     “ஒக்கொண்ட நாதன் ஒக்கதித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று படாரிக்கு நவகண்டம் கடுத்து, குன்றகத் தலையறுத்துப் பிடலினாக மேல்வைத்தானுக்கு” (தெ.கல்.தொ.12.கல்.106);

     [பிடாரி → படாரி]

படாரிடு-தல்

படாரிடு-தல் paṭāriṭutal,    1. செ.கு.வி. (v.i.)

   படாரென வெடித்தல் (வின்.);; to burst, crack v.ith a sudden noise, report or explosion.

     [படார் + இடு-,]

படாரூபம்

 படாரூபம் paṭārūpam, பெ. (n.)

படாப்பழி (வின்.);; பார்க்க; see {padā-p-ai}

     [படு + ஆ(எதிர்மறை); + ரூபம்]

த.

உருவம் skt. ரூபம்

படாரெனல்

 படாரெனல் paṭāreṉal, பெ. (n.)

படார் படாரெனல் (வின்.); பார்க்க; see {padar paợāreņa}

படாரெனல்-ஒலிக்குறிப்பு

     [படார் + எனல்]

படார்

படார் paṭār, பெ. (n.)

   சிறுகாது; low bush, low thicket of creepers.

     “அதிரல் பூத்த வாடு கொடிப் படாஅர்” (முல்லைப். 51.);

     [படர் → படார்]

படார் படாரெனல்

 படார் படாரெனல் paṭārpaṭāreṉal, பெ.(n.)

   வெடித்த லோளக் குறிப்பு; onom expr. signifying cracking, bursting v.ith a sudden noise, report or explosion.

     [படார் + படார் + எனல்]

படாவஞ்சனம்

 படாவஞ்சனம் paṭāvañcaṉam, பெ. (n.)

படாவஞ்சனை பார்க்க; see {padāvañjanai}

     [படாவஞ்சனை → படாவஞ்சனம்]

படாவஞ்சனை

படாவஞ்சனை paṭāvañcaṉai, பெ. (n.)

   1. முழுக்கற்பனை; gross fabrication.

   2. கொடுஞ்சூழ்ச்சி; deep-laid plot.

   3. முற்றும் அழிக்கை; complete destruction.

     [படு → படா + வஞ்சனை]

படி

படி1 paṭital,    4 செ.கு.வி. (v.i.)

   1. அடியிற்றங்குதல்; to settle, as dust or sediment.

     ‘தூசி படிந்திருக்கிறது.’

   2. பாலேடு முதலியன உண்டாய்ப் பரவுதல்; to gather, as cream.

     ‘பாலில் ஏடு படிந்திருக்கிறது.’

   3. தங்குதல்; to rest, as clouds upon a mountain, to alight to roost, as birds.

     “பறவை படிவன விழி” (நெடுநல்.10);

   4. வயமாதல்; to be subjugated; to be trained, disciplined or tamed.

     ‘அடியாத மாடு படியாது’ (பழ.);

   5. கையெழுத்துத் திருந்தி யமைதல்; to become orderly, settled, as handwriting.

   6. கீழ்ப்படிதல்; to obey.

     ‘பெரியோருக்குப் படிந்து நட’

   7. குளித்தல்; to bathe, to sink in water, to be immersed.

   8. கண்மூடுதல்; to close, as eyes.

     “படிகிலாவிழி” (அரிச்.பு.விவா.88);

     “தடங்கடலிற் படிவாம்” (திருவாசக.38.9);

   9. அமுங்குதல்; to become compressed, flattened, as olas, leaves, leather.

     ‘பாரம் வைத்தால் தைத்த இலை படியும்’

   10. தணிதல்; to subside, as water.

     ‘வெள்ளம் படிந்தது’

   11. கலத்தல் (வின்.);; to be joined, united.

   12. வணக்கக் குறியாகக் கீழேவிழுதல்; to fall prostrate.

     “சிரந்தலத்துறப் படிந்து” (உபதேசகா. சிவத்து. 344.);

ம.படியுக து. படிபுனி

     [படு → படி → படி-,]

 படி2 paṭital,    3. செ.குன்றா.வி. (v.t.)

   நுகர்தல்; to enjoy, experience.

     “பலர்படி செல்வம் படியேம்” (பு.வெ. 9,47);

     [படு → படி → படி-,]

 படி3 paṭital,    2 செ.கு.வி.(v.i.)

   1. அமைதல்; be agreeable or suitable.

   2. இறங்குதல்; came down.

   3. கலத்தல் (பிங்.);; get united.

   4. குழித்தல்; make a hollow.

   5. திருந்துதல்; be reformed.

     “இசை படியும்படி பாடிலர்” (கோயிற்பு. பதஞ்சலி. 46);

   6. பழகுதல்; get accuinted with

     “பாழியங்குடுமிப் பொலங்கிரி குழைத்துப் படிந்த பின்” (கூர்மபு. கடவுள் வாழ்.9); (த.சொ.அக.);

     [படு → படி → படி-,]

 படி4 paṭital,    4 செ.கு.வி.(v.i)

   பொருந்துதல்; to be fit or suited.

     ‘வளை கைக்குப் படிந்திருக்கிறது’

     [படு → ப → படி-,]

 படி2 paṭi, பெ. (n.)

   1. ஏணிப்படி;   மாடிப்படி (பிங்.);; step, stair; rung of a ladder.

   2. நிலை; grade, rank, class, order. sphere.

   3. தன்மை; nature.

     “கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படியவே” (சீவக. 167);

   4. குதிரைக் கலனை (பிங்.);; stirrup.

   5. துலையின் படிக்கல் (பிங்.);; weight for scales.

   6. நூறுபலங் கொண்ட நிறையளவு; a weight = 100 palam.

   7. நாழி (பிங்.);; the ordinary measure of capacity = 8 ollocks, kottu of jaffna.

   8. அன்றாடு கட்டளை; fixed daily allowance for food.

     “படியுண்பார் நுகர்ச்சிபோல்” (கலித் 35.);

   9. அன்றாடச் செலவுக்காகக் கொடுக்கும் பொருள்;   10. வழி; device, means,

     “பவக்கடல் கடக்கும் படியறியாது” (உத்தரரா. தோத்திர, 23.);

   11. நிலைமை; state, condition.

     ‘ஒருபடியாக இருக்கிறான்.’

   12. தன்மை; manner, mode.

பாசத்தாலன கன்றம்பி பிணிப்புண்ட படியே” (கம்பரா. நாகபாச, 209);

   13. வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக் கட்டை அல்லது மேற்குறுக்குக் கட்டை; sill or lintel.

   14. உடம்பு; body.

     “நினையார வன்மைப் படியே” (திவ். இயற். திருவிருத் 93.);

   15. வழிமரபு; family, lineage.

     “படிமன்னு பல்கலன்” (திவ். திருவாய் 4, 1,9.);

   16. தகுதி (சூடா.);; fitness.

     “சரணமாம் படியார் பிறர் யாவரோ” (தேவா.1214, 17);

   17. முறைமை; order.

அழுந்தை மறையோர் படியாற்றொழ” (தேவா. 493, 10);

   18. வேதிகை; low platform for conducting ceremonies.

   19. தாழ்வாரம். (யாழ்.அக.);; verandah.

   20. நீர்நிலை (யாழ்.அக.);; reservoir of water.

தெ.க. து. படி ம. படி (t); கோட.பரிகட்

     [புள் → பள் → படு → படி] மு.தா.221.

 படி4 paṭi, பெ. (n.)

   1. பகை; hatred.

     “படிமதஞ்சாம்ப வொதுக்கி” (பரிபா.4:18,

   2. ஒத்த படி; true copy, as of a manuscript.

     “கிழித்த ஓலை படியோலை” (பெரியபு. தடுத்தாட். 56);

   3. உவமை; resemblance, comparison.

     “படியொருவ ரில்லாப் படியார் போலும்” (தேவா.44, 7);

க. படி

     [புள் → பள் → படு → படி] மு.தா.221.

 படி5 paṭi, பெ. (n.)

   ஒர் உவம உருபு. (சங்.அக);; a particle of comparison.

     [புள் → பள் → படு + படி]

 படி5 paṭi, பெ. (n.)

   இருதிணைப் பொருள்களும் படியும் அல்லது தங்கும் இடமாகிய நிலவுலகம்; earth.

     “வருடையைப் படிமகன் வாய்ப்ப”(பரிபா.11, 5);

     [பள் → பண் → பணி → படி]

செல்வி.75. சித்.பக்.433

 படி paṭi, பெ. (n.)

   34 பலங்கொண்ட ஒரு நிறை (G.Tn.Di 238);

 a measure of 34 palam.

படி-த்தல்

படி-த்தல் paṭittal,    11. செ.குன்றாவி. (v.t.)

   1. எழுதப்பட்டிருப்பதைச் சொற்களாக்கிப் பலுக்குதல்; chant.

   2. கற்றல்; to learn, study, repeat in order, commit to memory.

   3. சொல்லுதல்; to say, tell.

     “படித்தனன் வாலி மைந்தன்” (கம்பரா. திருவடி.25);

   4. வணங்கிப் போற்றுதல்; to praise.

     “நின் பாதம் படித்தோர்க்கும்” (தனிப்பா.1.47, 91);

   5. பழகுதல் (வின்.);; to practice, habituate oneself to.

ம. படிக்க து. படிபுனி

     [படு → படி-,]

படி-பழமை

படி-பழமை paṭipaḻmaipaṭikāranīr, பெ. (n.)

   1. படிகாரத் தண்ணீர்; solution of alum.

   2. படிக்காரக் கலப்பு நீர்; a compound of alum liquor.(சா.அக.);

     [படிகாரம் + நீர்]

படிகட்டு-தல்

படிகட்டு-தல் paṭikaṭṭutal,    4. செ.கு.வி. (v.i.)

   1. உணவுக்கு வேண்டிய பணத்தைச் செலுத்துதல்; to pay batta or daily allowance.

   2. நிறைத் தடை கட்டுதல்; to put allowance weight in the scale of a balance.

   3. மாடிப்படி கட்டுதல்; to construct steps or stairs.

     [படி + கட்டு-,]

படிகப்பச்சை

 படிகப்பச்சை paṭikappaccai, பெ. (n.)

   கடல் நிறம் போன்ற பச்சைக்கல்; beryl.

     [படிகம் + பச்சை]

படிகமணி

 படிகமணி paṭikamaṇi, பெ. (n.)

   கடைந்த படிகக் கற்களால் அமைந்த கழுத்தணி (சங்.அக.);; a necklace made of crystals.

     [படிகம் + மணி]

படிகமிடு-தல்

படிகமிடு-தல் paṭikamiṭutal,    17. செ.குன்றாவி. (v.t.)

பழுக்கச் சுடுதல்; (வின்.);

 to brighten gold ornaments.

     [படிகம் + இடு-,]

படிகம்

படிகம்1 paṭikam, பெ. (n.)

   1. கூத்து (அக.நி.);; dance.

   2. இரப்பு (பிங்.);; alms.

   3. விளாம் பட்டை (சூடா);; bark of the wood-apple tree.

     [ஒருகா, படிதம் → படிகம்]

படிதம் = கூத்து.

 படிகம்2 paṭikam, பெ. (n.)

   பளிங்கு; crystal, prism.

     “படிகத் தின்றலமென் றெண்ணி” (கம்பரா. வரைக்காட்சி. 49.);

படிகர்

 படிகர் paṭikar, பெ. (n.)

   வாயிற்காவலர்; (யாழ்.அக.);; gate keepers.

     [படி → படிகர்]

படிகலிங்கம்

 படிகலிங்கம் paṭikaliṅkam, பெ. (n.)

   வல்லத்தில் கிடைக்கும் கண்ணாடிப் பளிங்கு; crystal glass found in vallam near Tanjore, South India. (சா.அக.);

     [படிகம் + இலங்கம் → இலங்கம் → லிங்கம்]

படிகளை-தல்

படிகளை-தல் paṭikaḷaital,    2. செ.குன்றா.வி. (v.t.)

   தெய்வச் சிலைகளின் ஒப்பனையை நீக்குதல்; to undress, as an idol.

     [படி + களை-,]

படிகாரன்

படிகாரன் paṭikāraṉ, பெ. (n.)

   வாயில் காப்பாளன்; gate-keeper.

     “படிகாரிரெம் வரவு சொல்லுதிர்” (கம்பரா. பள்ளி.1);

     [படி + காரன்]

படிகாரம்

 படிகாரம் paṭikāram, பெ. (n.)

படிக்காரம் (சங்.அக.); பார்க்க; see {}

     [படு + படி + காரம்]

படிகாலி

 படிகாலி paṭikāli, பெ. (n.)

   தட்டையாய்ப் படிந்திருக்கும் பாதமுடைய-வன்-வள் (நாஞ்.);; a flat footed person.

     [படி + காலி]

ஒ.நோ. நட்டுவாய்க்காலி

படிகால்

படிகால் paṭikāl, பெ. (n.)

   தலைமுறை; generation.

     “ஏழேழ் படிகா லெமையாண்ட பெம்மான்” (தேவா.1086, 9);

     [படி + கால்]

படிகை

படிகை paṭikai, பெ. (n.)

   1. யானை மேலிடும் தவிசு; howdah and trappings of an elephant.

     “பரும முதுகிடு படிகையும்” (கம்பரா. அதிகா. 132);

   2. நந்தியா வட்டம் (சங்.அக.);; பார்க்க;see nandiya vattam east indian rosebay

     [படி → படிகை]

படிகொடு-த்தல்

படிகொடு-த்தல் paṭikoṭuttal,    4. செ.கு.வி. (v.i.)

   படியளித்தல்; giving stated allowances.

     [படி + கொடு-,]

படிக்கட்டளை

 படிக்கட்டளை paṭikkaṭṭaḷai, பெ. (n.)

   அன்றாடு கட்டளை (வின்.);; daily allowance to a temple for conducting worship.

மறுவ: நித்தியக்கட்டளை, நித்தியபடி.

     [பது + கட்டனை]

படிக்கட்டி

 படிக்கட்டி paṭikkaṭṭi, பெ. (n.)

   தடைகட்டுங் கல்(R);; counterpoise, equipoise.

     [படி + கட்டி]

படிக்கட்டு

படிக்கட்டு paṭikkaṭṭu, பெ. (n.)

   1. மாடிப் படிக்கட்டு (கொ.வ.);; steps, stairs, flight of steps, stairs of masonry.

   2. நிறைகல்; weights. weighing stones or stamped weights.

மறுவ: படிக்கூடு

தெ. படிகட்டு கபடி. கோடா.பரிகட்

     [படி + கட்டு]

படிக்கணக்கு

படிக்கணக்கு paṭikkaṇakku, பெ. (n.)

   1. உணவின் வேளை, அளவு இவற்றைக் கொண்ட குறிப்பு (வின்.);; quantity and time of meal. statement containing.

   2.படிசெலவுக் கணக்கு (இ.வ.);; batta bill.

   3. பொத்தகங்கள் தாளிகைகள் முதலிய வற்றின் உருவாக்கம், இருப்பு ஆகியவற்றைப் பற்றிய எண்ணிக் கைக் கணக்கு; account of books and journal.

     [படி + கணக்கு]

படிக்கன்

படிக்கன் paṭikkaṉ, பெ. (n.)

படிக்கம்,1 பார்க்க; see {}

     [படிக்கம் → படிக்கன்]

படிக்கம்

படிக்கம் paṭikkam, பெ. (n.)

   1. எச்சிலுமிழுங் கலம்; spittoon.

     “எண் சதுரமாகச் செய்வித்துக் கொடுத்த படிக்கம் ஒன்று” (s.i.i.ii. 149);

   2. திருமுழுக்காட்டு நீர் முதலியவற்றைச் சேர்க்கும் ஏனம் (I.M.P. ii. 1404, 1332);; pot for receiving water used for an idol.

தெ.க. படிக. ம. படிக்கம்

     [படி → படிக்கம்]

படிக்கல்

 படிக்கல் paṭikkal, பெ. (n.)

   நிறைகல்; weighing stone, stamped weight.

க. படிக்கல்லு.

     [படி + கல்]

படிக்காசு

படிக்காசு paṭikkācu, பெ. (n.)

   1. நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம்; subsistence allowance for a day.

     “படிக்காசொன்று நீ வள்ளைக் குழையுமை பங்காளர் கையிலென் வாங்கினையே” (சிவப்.பிரபந். நால்வர் 10);

   2. படிக்காசுப் புலவர் பார்க்க; see (adj.);

     “சந்தம் படிக்காசலா தொருவா பகரொணாதே” (தனிப்பா.);

     [படி + காசு]

படிக்காசுப் புலவர்

படிக்காசுப் புலவர் paṭikkācup, __,

பெ. (n.);

   தொண்டை மண்டல சதகம் இயற்றியவரும் 1686-1723 இல் வாழ்ந்தவருமான ஒரு புலவர்; a poet, author of {Ton-daimandalašadagam,} 1686 – 1723.

     [படிக்காக + புலவர்]

படிக்காரன்

படிக்காரன் paṭikkāraṉ, பெ. (n.)

   1. நாளுணவுக்காக வேலை செய்வோன் (வின்.);; one who works for his daily food.

   2. படிகொடுப் போன் (யாழ்.அக.);; one who grants batta.

     [படி + காரன்]

படிக்காரம்

 படிக்காரம் paṭikkāram, பெ. (n.)

   சீனக்காரம் (கொ.வ.);; alum, alumen.

தெ. படிகாரமு க. படிகார து. படிகார

     [படு → படி + காரம்]

படிக்கால்

படிக்கால் paṭikkāl, பெ. (n.)

   ஏணி; ladder.

     ‘குறுந் தொடை நெடும்படிக்கால்” (பட்டினப்.142);

     [படி + கால்]

படிக்குப்படி

 படிக்குப்படி paṭikkuppaṭi, பெ. (n.)

   ஒவ்வொரு படியாக முன்னேறுதல்; step by step;in an ascending series.

     ‘படிக்குப்படித் தாவியேறினான்’ (உ.வ);

     ‘அவன் வாழ்வில் படிக்குப்படி முன்னேறியவன்’ (உ.வ);

     [படிக்கு + படி]

படிக்குப்பாதி

 படிக்குப்பாதி paṭikkuppāti, பெ. (n.)

   சரிபாதி; exactly half.

மறுவ: சரிபாதி, செம்பாதி, படுபாதி, படிபாதி.

     [படிக்கு + பாதி]

படிக்கூண்டு

 படிக்கூண்டு paṭikāṇṭu, பெ. (n.)

   மெத்தைப் படிக்கட்டுக்கு மேன்முகடாகக் கட்டப்படும் கட்டடம்; stairhead, masonry hood covering the top of a flight of stairs seading to a flat roof.

     [படி + கூண்டு]

படிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடுங்குறி (பாலபா பக்.

படிக்கையில் ஒரு மாத்திரைக்காலம் நிறுத்துவதற்கு அடையாளமாக இடுங்குறி (பாலபா பக். 170     [உறுப்பு + இசை + குறி. இசைத்தல் = ஒலித்தல்.] உறுப்பில்பிண்டம்  paḍiggaiyilorumāddiraiggālamniṟudduvadaṟguaḍaiyāḷamāgaiḍuṅguṟipālapāpagseagauṟuppuisaiguṟiisaiddaloliddaluṟuppilpiṇḍam,

பெ. (n.);

   கருவில் வடிவுறுமுன் சிதைந்த தசைப்பிண்டம்; aboried embryo

     “சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்” (புறநா. 28);. (செ.அக.);.

     [உறுப்பு + இல் + பிண்டம்.]

படிசம்

படிசம் paṭicam, பெ. (n.)

   1. தூண்டில் (வின்.);; fish-hook, angling instrument.

   2. தொண்டைப் புண்களை அறுக்குங் கத்தி; a surgical knife used for throat operations.

     [படி → படி → படிசம்]

படிசியேற்றம்

 படிசியேற்றம் paṭiciyēṟṟam, பெ. (n.)

   சிற்றேற்றம் (CG);; small picotta which can be worked by a single person treading on it.

     [படி + ஏற்றம்]

படிசு

படிசு paṭicu, பெ. (n.)

   1. நிலைமை; state, condition.

     ‘ஒருபடிசாயிருக்கிறது.’

   2. ஒத்த அமைப்பு; due proportion.

     [படி3 → படிசு]

படிசொல்

 படிசொல் paṭicol, பெ. (n.)

   கற்புநெறி; chastity.

     “படிசொல் தவறாத பாவாய்” (தனிப்.);

படிச்சட்டம்

படிச்சட்டம் paṭiccaṭṭam, பெ. (n.)

   கோயிற் றிருமேனிகளை எடுத்துச் செல்லுங் கோயிற் சிவிகை வகை (சிவக். பிரபந்த பக். 237);; palanquin of an idol.

     [படி + சட்டம்]

படிச்சந்தம்

படிச்சந்தம் paṭiccantam, பெ. (n.)

   ஒன்றைப் போன்ற வடிவு; image, figure.

     “படிச்சந்த மாக்கும் படமுள வோதும் பரிசகத்தே” (திருக்கோ.78);

     [படி + சந்தம்]

படிச்சுருக்கு

 படிச்சுருக்கு paṭiccurukku, பெ. (n.)

   தட்டார் படிக்கற்களை யிட்டுவைக்குஞ் சுருக்குப்பை (நாஞ்.);; a stringed bag containing weights, used by gold-smiths.

     [படி + சுருக்கு]

படிச்செலவு

 படிச்செலவு paṭiccelavu, பெ. (n.)

   நாட் செலவு (கொ.வ.);; daily expense.

     ‘படிச்செலவுக்கு முதலாளி பணந்தந்தாரா?’

     [படி + செலவு]

படிதம்

படிதம்1 paṭitam, பெ. (n.)

   கூத்து (பிங்);; dancing.

     “கடுவ னிருங்கழைப் படிதம் பயிற்றுமென்ப” (யாப்.வி.பக். 190);

   2. போற்றிப்பாடல்; eulogy, songs of praise, hymns.

     “படிதம் பலபாட” (தேவா.559,4.);

     [படி → படிதம்]

 படிதம்2 paṭitam, பெ. (n.)

   உயரிய மாணிக்க வகை; a kind of ruby.

     “விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்” (சிலப்.14,186);

படித்தனம்

படித்தனம் paṭittaṉam, பெ. (n.)

படித்தரம் பார்க்க; see (adj.);

     “ஒரு நாளையிலே படித்தனத்துக்கு அமுதுபடி” (கோயிலொ. 62);

     [படி + தனம்]

படித்தரம்

படித்தரம் paṭittaram, பெ. (n.)

   1. கோயில் முதலியவற்றுக்கு உதவும் நாட்கட்டளை; daily allowance, as to a temple.

   2. நடுத்தரம்; middling quality.

     ‘அவர்கள் படித்தரமானவர்கள்’

   3. ஒழுங்கு; rule, regulation.

க. படிதர. ம. படித்தரம்.

படி + தரம்

படித்தளம்

படித்தளம் paṭittaḷam, பெ. (n.)

   படிக்கட்டு; step of a staircase.

     “ஓராம்படித்தளமாம்” (கட்டபொம்மு.பக் 58);

     [படி + தளம்]

படித்திரம்

 படித்திரம் paṭittiram, பெ. (n.)

   சூட்டிறைச்சி (பிங்);; roast meat.

     [படி → படித்திரம்]

படித்துறை

படித்துறை paṭittuṟai, பெ. (n.)

   படிக்கட்டுக் களமைந்த நீர்த்துறை; bathing ghat provided with steps.

     “அச்சிவாலய மாறுபடித்துறை” (குற்ற.தல.கவற்சன 63);.

     [படி + துறை]

மறுவ: தண்ணீர்த்துறை.

     [P]

படினம்

படினம்1 paṭiṉam, பெ. (n.)

   1. மேன்மை

 excellence, pre-eminence.

   2. பக்குவம்

 fitness, propriety.

   3. வெற்றி; victory achievement.

     [பது → படினம்]

 படினம்2 paṭiṉam, பெ. (n.)

கல்வி (நாஞ்.);

 Learning.

     [படி → படினம்]

படிபாதி

 படிபாதி paṭipāti, பெ. (n.)

   படிக்குப் பாதி (வின்.);;பார்க்க; see {paợikku-p-pādi}

     [படி + பாதி]

படிபோடுதல்

படிபோடுதல் paṭipōṭutal,    20. செ.கு.வி. (v.i)

   1. நாட்படி கொடுத்தல்; giving a daily allowance, or batta.

   2. படியமைத்தல்; placing a step or block for a step.

     [படி + போடு-,]

படிப்படி

படிப்படி paṭippaṭi, வி.எ (adv.)

படிப்படியாய் பார்க்க; see {}

     “நான்மறை முற்றும் படிப்படி சொன்னதாம்” (உபதேசகா, சிவபுண்ணி 19);

     [படி + படி]

படிப்படியாய்

 படிப்படியாய் paṭippaṭiyāy,      (வி.எ.) adv.

   சிறுகச்சிறுக (கொ.வ.);; step by step gradually.

     ‘படிப்படியாயேறுதல்’

     [படி + படி + ஆய்]

படிப்படை

படிப்படை paṭippaṭai, பெ. (n.)

   கூலிப்படை; mercenary force.

     “கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇ” (பெருங் மகத.24.39);

மறுவ. கூலிப்படை

     [படி + படை]

படிப்பணம்

 படிப்பணம் paṭippaṇam, பெ. (n.)

   நாள் செலவுக்குக் கொடுக்கும் பணம்; batta.

     [படி + பணம்]

படிப்பனவு

படிப்பனவு paṭippaṉavu, பெ. (n.)

   1. படிப்பு (யாழ்ப்);; learning study.

   2. கற்பித்தல் (யாழ்.அக.);; teaching.

     [படி → படிப்பனவு]

படிப்பனை

படிப்பனை paṭippaṉai, பெ. (n.)

   1. படிப்பு, 1,2, 4 பார்க்க; 1,2,4 see {}

   2. திறமை; proficiency competency.

     [படி → படிப்பனை]

படிப்பாளி

 படிப்பாளி paṭippāḷi, பெ. (n.)

   கற்றோன்;   கல்வி வல்லவன் (கொ.வ.);; a man of learning.

     [படிப்பு + ஆள் + இ + படிப்பாளி]

ஒ.நோ செலவாளி. ‘இ’ வினைமுதல் ஈறு.

படிப்பி-த்தல்

படிப்பி-த்தல் paṭippittal,    11. செ.குன்றா.வி (v.t.)

   1. கற்பித்தல்; to teach.

   2. பழக்குதல்; to train.

     [படிப்பு → படிப்பி-,]

படிப்பினை

படிப்பினை1 paṭippiṉai, பெ. (n.)

   வங்கமணல்; lead ore.

 படிப்பினை2 paṭippiṉai, பெ. (n.)

   1. வரலாறு, நிகழ்ச்சி, நுகர்ச்சி போன்றவை கற்றுக் கொடுக்கும் பாடம்; உண்மை; lesson (that one learns); truth.

     “தேர்தல் தோல்வி அந்தக் கன்னை (கட்சி);க்கு ஒரு நல்ல படிப்பினையைத் தந்திருக்கும்”

     ‘வல்லாட்சி அதிகாரம் நிலைத்ததே இல்லை என்பது வரலாறு காட்டும் படிப்பினை’

     [படிப்பு → படிப்பினை]

 படிப்பினை3 paṭippiṉai, பெ. (n.)

   1. பாடம் (அறிவுரை);; lesson.

   2. நீதி; moral.

     [படிப்பு → படிப்பினை]

படிப்பு

படிப்பு paṭippu, பெ. (n.)

   1. கல்வி; learning, study.

     ‘இளம்பருவத்தில் படிப்பில் கவனம் செல்லவில்லை என்றால் என்ன செய்வது?

   2. படித்தல்; reading recitation.

செய்திகள் படிப்பவர் நல்லினி.

   3. பாடுகை (வின்.);; chanting, singing.

   4. கற்பித்தல் (வின்.);; instruction, teaching.

   5. தந்திரம்; scheme, subtlety contrivance.

   6. ஒரு துறைத்தேர்ச்சி; a course of study, discipline.

     ‘பொறியியல் படிப்பு, மருத்துவப்படிப்பு’

     [படி + பு (பு-தொழிற் பெயர் ஈறு-,]

படிப்புக்காரன்

படிப்புக்காரன் paṭippukkāraṉ,    1. ஒரு துறையில் நிறையப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்; well read person, scholar

   2. கோயிலில் தொன்மம் (புராணம்); கேட்போன்; person who attends a temple to hear the {purāna chanted.}

   3. தந்திரசாலி; cunning, scheming, subtle person.

     [படிப்பு → காரன்]

படிப்புரை

 படிப்புரை paṭippurai, பெ. (n.)

   ஒட்டுத் திண்ணை (நாஞ்);; pial.

     [படி → படிப்புரை]

படிப்புறம்

படிப்புறம் paṭippuṟam, பெ. (n.)

   கோயிற் குருக்களுக்கு வழங்கப்படும் இறையிலி நிலம்; land on free tenure, bestowed on temple priests.

     “பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து” (சிலப்.30.15);

     [படி + புறம்]

படிமகன்

படிமகன் paṭimakaṉ, பெ. (n.)

   1. செவ்வாய்; mars, as the son of earth.

     “வருடையைப் படிமகன் வாய்ப்ப” (பரிபா.11,5);

     [படி + மகன்]

படிமக்கலம்

படிமக்கலம் paṭimakkalam, பெ. (n.)

   1. முகம் பார்க்க; கண்ணாடி(திவா.);; mirror.

     “தாய் சிறுகாலை படிமக்கலத்தொடும் புக்காள்” (இறை.14,95);

   2. பெரியோரிடம் காணிக்கை யாக்கும் கருவி; articles of offering to the elders.

     “படிமக்கலம் காண்டற்கேற்பனவாயின கொண்டு” (திவ்.திருப்பள்ளி.8.);

     [படிமம் + கலம்]

படிமடங்கு-தல்

படிமடங்கு-தல் paṭimaṭaṅkutal,    10. செ.கு.வி. (v.i.)

   வேலைமுடிகை; closing of the work.

     [பணி → படி + மடங்கு]

படிமதாளம்

 படிமதாளம் paṭimatāḷam, பெ. (n.)

   ஒன்பான் தாளத்தொன்று (திவா.);;     [படிமம் + தாளம்]

படிமத்தாள்

படிமத்தாள் paṭimattāḷ, பெ. (n.)

   தேவராட்டி (பிங்);; temple priestess divinely inspired and possessed of oracular powers.

     “குறக்கோலப் படிமத்தாளை நேர்நோக்கி” (பெரியபு. கண்ணப்ப.49);

     [படிமம் → படிமத்தாள்]

படிமத்தோன்

 படிமத்தோன் paṭimattōṉ, பெ. (n.)

   தேவராளன் (திவா.);; temple-priest divinely inspired and possessed of oracular powers.

     [படிமத்தான் → படிமத்தோன்]

படிமம்

படிமம் paṭimam, பெ. (n.)

   1. சிலை; image

     “படிமம் போன்றிருப்ப நோக்கி” (சீவக.2642);

   2. சான்று; example, model.

     “நன்றிய லுலகுக் கெல்லாம் படிமமா” (திருவாலவா.47, 3); 3

   . வடிவம்; form, shape.

     “பவளத்தின் பருவரைபோற் படிமத்தான் காண்” (தேவா. 886, 6);

   4. தவக்கோலம்; guise of an ascetic.

   5. நோன்பு; penance, austerities.

     “பல்படிம மாதவர்கள் கூடி” (தேவா.1060, 6);

   6. ஆவியாற் பற்ற படுதல்; temporary possession by a spirit.

படிமத்தாள், படிமத்தான்.

   7. படிமக்கலம் பார்க்க; see {}

     “தனது நிழல் பற்ற வுருகும் படிமத்தாள்” (திருவாரூ.342);

   8. தூய்மை; purity.

     “படிமப் பாதம் வைத்தப் பரிசும்” (திருவாச.2,76);

     [படி → படிமை → படிமம்]

     [P]

படிமரவை

 படிமரவை paṭimaravai, பெ. (n.)

   வணிகர்கள் படிக்கற்களையிட்டு வைக்கும் மரவை; a wooden vessel in which weights are kept by merchants.

     [படி + மரவை]

மரவை = மரத்தாலான ஏனம்

படிமவிரதம்

படிமவிரதம் paṭimaviratam, பெ. (n.)

   மாணி நோன்பு; the vow of a {brahmacărin}

விரதமொடு பயிற்றிய நல்லியாழ்” (பெருங். வத்தவ.3, 82);

     [படிமம் + விரதம்]

படிமவுண்டி

படிமவுண்டி paṭimavuṇṭi, பெ. (n.)

   நோற்றுப் பட்டினிவிட்டுண்ணும் உணவு; food taken after fasting.

     “பார்ப்பன முதுமகன் படிமவுண்டியன்” (மணிமே.5,33.);

     [படிமம் + உண்டி]

படிமா

படிமா1 paṭimā, பெ. (n.)

   ஒப்பு; similarity, likeness.

     “அது படிமாவா மலிவித்தார்” (கோயிற்பு. நட.43.);

     [படிமம் → படிமா]

 படிமா2 paṭimā, பெ. (n.)

   எடுத்துக்காட்டு; example, illustration.

     ‘நம்மோடு ஸஜாதீயர் பக்கல் பரிமாறினதன்றோ நமக்குப் படிமா’ (ஈடு.10,4,5);

     [படிமம் → படிமா]

படிமாத்தாள்

 படிமாத்தாள் paṭimāttāḷ, பெ. (n.)

படிமத்தாள் பார்க்க; (யாழ்.அக.);; see {paçimatā}

     [படிமத்தாள் → படிமாத்தாள்]

படிமானம்

படிமானம் paṭimāṉam, பெ. (n.)

   1. அமைவு; tractableness docility.

   2. தணிவு; alleviation.

நோயின் படிமானம்

   3. சட்டப் பலகைகளின் இணைப்புப் பொருத்தம்; close fitting of planks, in carpentry,

பலகைகள் படிமானமாயின.

     [படி → மானம்]

படிமுடிச்சு

 படிமுடிச்சு paṭimuṭiccu, பெ. (n.)

   மிகவும் இறுக்கமான முடிச்சு; a hard knot.

     [படு → படி + முடிச்சு]

படிமுறை

படிமுறை paṭimuṟai, பெ. (n.)

   1. படிமுறையால் வருவது; regular course.

     “படிமுறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்த தவந்தானே யமையாது” (சி.சி.8,1.);.

   2. மிகைப்படித்தொகை கிடைக்கக் கூடிய நாள்; the fixed day or term for which extra allowance is granted.

     [படி + முறை]

படிமுறைக் குறைப்பு

 படிமுறைக் குறைப்பு paḍimuṟaikkuṟaippu, பெ. (n.)

   நியமக்குறைப்பின் வேறு பெயர்; deficiency of formalities.

     [படி+முறை+குறைப்பு]

படிமுழுதிடந்தோன்

 படிமுழுதிடந்தோன் paṭimuḻutiṭantōṉ, பெ. (n.)

   திருமால் (பிங்);;{Thirumāl} as having lifted the whole earth.

     [படி + முழுதும் + இடந்தோன்]

படிமேடை

 படிமேடை paṭimēṭai, பெ. (n.)

   படிப்படியா யுயர்ந்தமைந்த இருக்கை வரிசை; gallery.

     [படி + மேடை]

     [P]

படிமை

படிமை paṭimai, பெ. (n.)

   1. படிமம் 3 பார்க்க; see {}3.

     “கட்டளைப் படிமையிற் படியாது” (சீவக. 2752. 2);

   2. படிவம், 1. (தொல். பொ.50, இளம்பூ); பார்க்க; see {paçlimam}

   3. படிமம், 5. பார்க்க; see {paiாam}

     “பல்புகழ் நிறுத்த படிமை யோனே”

     “ஏனோர் படிமைய” (தொல்.பொ.30, இளம்பூ);

     [படி → படிமை]

 paợima pkt.

படியகம்

படியகம் paṭiyakam, பெ. (n.)

படிக்கம், 1. பார்க்க; see (adj.);1

     “படியக மிரண்டு பக்கமும்” (சீவக.2472.);

     [படி + அகம்]

படியச்சு

படியச்சு paṭiyaccu, பெ. (n.)

   நேரொப்புடையது; model, prototype.

     “படியச்சனைய வுதாரண நோக்கினர்” (பி.வி.50.);

     [படி → அச்சு]

படிய