தலைசொல் | பொருள் |
---|---|
ப் | ப் p, பெ. (n.) மெய்யெழுத்துகளில் ஒன்பதாவதும் இதழியைந்து பிறப்பதுமான வல்லெழுத்து; the 9th consonant, being the labial voiceless stop. பொருள் : ஓரெழுத்தாக இஃது இசைமரபில் பஞ்சமம் எனப்படும் இளி என்ற சுர நிலையினைக் குறிக்கப் பயன்படும். வட்டெழுத்திலும் இதே நிலை;அடி தட்டையாக இல்லாமல் வளைவாகவே நின்றது. ஒரு சிறுகொக்கி கி. பி. 11 ஆம் நூற்றாண்டில் முதலில் சேர்க்கப்பட்டது. அதுவே நிலைத்தது. உருவம் : ஒரு நேர்க்கோட்டில் (மேலிருந்து கீழ்நோக்கி); ஒரு வளைவான மேல்நோக்கிய கோடு இணைக்கப்படும் அமைப்பு கி. மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து காணப்படும் மிகப் பழைய உருவமாக உள்ளது. அவ்வுருவமே இந்தியா முழுவதும் தமிழ்நாட்டுக் குகைகளில் உள்ளதமிழ்க் கல்வெட்டுகள் உட்பட எல்லாக் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றது. இவ்வுருவம் கி. பி. 3 ஆம் நூற்றாண்டின் இடைவரை மாறவில்லை. முதன் முதலில் ஏறக்குறைய கி. பி. 3ஆம் நூற்றாண்டின் இடையில் எழுதப்பட்டதாகக் கருதக் கூடிய அரச்சலூர்க் கல்வெட்டில் இப் ‘ ப’கரத்தின் கீழ் வளைவு மேல் நோக்கிச் சென்று இருகோடுகளும் குறுகிச் சமநிலை அடைந்தன. பிற்காலத்தில் அடிப்பாகம் வளைவில்லாமல் தட்டையாகவும் ஒருகால் வளைவுடனும் எழுதப்பட்டு இன்றைய நிலையை அடைந்து விட்டது) |