செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
போ

போ pō, தமிழ் நெடுங்கணக்கில் ‘ப்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஒ’என்றநெட்டுயிரெழுத்தும் சேர்ந்து உண்டான உயிர்மெய்யெழுத்து,

 the compound of ப் and ஒ.

     [ப் + ஓ = போர்]

 போ pō, இடை. part

   ஓர் அசைநிலை (தொல்.சொல்.281);; an expletive.

போ-தல்

போ-தல் pōtal, செ.கு.வி. (v.i.)

   1. செல்லுதல்; to go, proceed to go away, depart.

மாமலர் கொய்ய. யானும் போவல்’ (மணிமே. 3.83);

   2. அடைதல்(வின்);; to reach a destination (w);.

   3. உரியதாதல்(வின்);; to belong.

   4. பிறத்தல்; to be born.

வணிகர் மரபிற் போந்தோன் (உபதேசகா. சிவபுண்.153);

   5, நீண்டு செல்லுதல்; to lie, pass through, as a path.

தென்கரைக்கு நடுவாகப் போயின. இடை கழி’ (T.A.S. 1.189,);

   6. தகுதியாதல்; to be proper, admissible passable.

அப்படிச் செய்யப் போகாது(வின்);

   7. நெடுமையாதல் (தொல்.சொல்.317);; to become long to be stretched out.

   8. நேர்மையாதல்; to become straight.

   வார்தல் போகல்…. நேர்பு நெடுமையும் செய்யும் பொருள’ (தொல். சொல்.317);;   9. பரத்தல்; to extend, spread.

     ‘விசும்பினு ஞாலத்தகத்தும் வளியே யெதிர்போம் பல்கதிர் ஞாயிற்றொளி’ (கலித்.144, 40);

   10 நிரம்புதல்; to be ful.

நலந்துறை போய நங்கை’ (சீவக. 2132);

   11. மேற்படுதல்; to exceed transcend.

     ‘ஆயிர மல்ல போன’ (கம்பரா. மாயாசனக.14,);

   12. ஒங்குதல்; to shoot up;

 to be tall.

கள்ளிபோகிய களரியம் பறந்தலை (புறநா. 237);

   13. நன்கு பயிலுதல்; to become expert in.

முத்தமிழ்த் துறையின் முறை போகிய வுத்தமக் கவி (கம்பரா. சிறப்புப். 9.);

   14, கூடியதாதல்; to undergo, experience, to go through the process of.

மூச்சுவிடப் போகவில்லை’

   15. பிரிதல்; to separate .

புலம்பப் போகாது (பரிபா. 11, 118);

   16. ஒழிதல்; to cease.

மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப” (புறநா.10);

   17. நீங்குதல்

 to leave, abandon.

நூல்போன சங்கிலி (பதினொ. திருத் திருவந். 69);

   18. கழிதல்; to go by, pass over, to lapse.

     ‘போய காலங்கள்’ (திவ். திருவாய். 2, 6,10);

   19, மறைதல்; to wanish, disappear.

     ‘ஒளியவன்….தேரும் போயிற்று (திவ்.பெரியதி 8.66);.

   20. காணாமற் போதல்; to be missing to be lost.

போன பொருள் திரும்பாது

   21 மாறுதல்(வின்);; to change, as from one state to another (w.);

   22, 5glöö, L(o; to be subtracted,

ஆறிலே இரண்டு போக

   23 வகுக்கப் படுதல்; to be diveded.

நூறில் பன்னிரண்டு எட்டுத்தரம் போகும்

   24 சாதல்; to perish, due.

தந்தையார் போயினா தாயரும் போயினர் தாமும் போவார் (தேவா 692, 2);

   25. முடிவாதல்; to be conclusive.

இன்பமாவதே போந்த நெறி என்றிருந்தேன் (தாயு. சின்மயானந்த.5);

   26. ஒலியடங்குதல்; to be hushed.

முரசெலாம் போன (கம்பரா முதற்போ.232);

   27. புணர்தல்; to cohabit.

அவளோடு போனான்.

     [ஊ → ஒ → போ → போ]

 போ-தல் pōtal, பெ. (n.)

   தொடங்குவதைக் குறிக்கும் துணைவினை; expressing what is about to happen.

     ‘அதைச் செய்யப் போகிறான்’

பொருளையே வற்புறுத்தும் துணைவினை துங்கிப் போனான்’

க. ஒரி. போகு ம. போ

     [போ → போ – தல்]

போக

போக pōka, கு.வி.எ. (adv)

   1.தவிர; besides, excepting.

போரிலிற்றவர்கள் போக மற்றவர் புறத்தி லோடியதும் (பிரபோத. 30, 59);

   2. பகுதிப் பொருளில் வரும் ஒரு துணைச் சொல்; an expletive of emphasis.

நான் வரப்போக வேலை நடக்கவில்லை. (கொ.வ);

     [போ → போக]

போக காரிகை

 போக காரிகை pōgagārigai, பெ. (n.)

   ஒரு (சிவனியக் கொண்முடிவு); நூல்; a treatise or siva siddhānda philosophy.

     [போ + காரிகை]

போககாண்டம்

போககாண்டம் pōkakāṇṭam, பெ.(n.)

சுத்தாசுத்தத்துவம் (சி.சி.2,70); பார்க்க;see {}.

     [Skt. {} → த. போககாண்டம்.]

போககாமி

போககாமி pōkakāmi, பெ.(n.)

   உலக வின்பத்தை விரும்புபவன்-ள் (ஞானபூசா.10, உரை);; worldly person.

     [Skt. {} → த. போககாமி.]

போககாரகன்

 போககாரகன் pōgagāragaṉ, பெ.(n.)

   பிறப்பியக்காரனின் மகிழ்நுகர்ச்சிகளைக் குறிக்கும் வெள்ளிக்கோள் (சுக்கிரன்);; the planet venus, as indicative of marital happiness, enjoyment of pleasures.

த.வ. வெள்ளிக்கோள்

     [Skt. {} → த. போககாரகன்.]

போககாரிகை

 போககாரிகை pōgagārigai, பெ.(n.)

   சிவனியக் கொண்முடிபு நூல்; treatise on saiva {} philosophy.

     [Skt. {} → த. போககாரிகை.]

போகக்கலப்பை

போகக்கலப்பை pōkakkalappai, பெ.(n.)

   நுகர்ச்சிக்குரிய பல்வகைப் பண்டம்; object of enjoyment.

     “அரும்பெறன் மரபிற்போகக் கலப்பையும் பொறுத்தனர் மயக்கி” (பெருங்.உஞ்சைக்.38, 177);.

த.வ. நுகர்வுப் பண்டங்கள்

     [Skt. {} → த. போகம்+கலப்பை.]

போகக்கலவை

போகக்கலவை pōkakkalavai, பெ.(n.)

   உயர்ந்த கலவைச் சாந்து; perfumed paste.

     “போகக்கலவை யாகத்தப்பி” (பெருங். இலாவாண.18, 108);.

த.வ. சந்தனக்களபம்

     [Skt. {} → த. போகம்+கலவை.]

போகக்களஞ்சி

போகக்களஞ்சி pōkakkaḷañji, பெ.(n.)

   1. பாவை; lady.

   2. பெண்; girl (சா.அக.);

     [போகம் + களஞ்சி.]

போகக்குளிகை

 போகக்குளிகை pōgagguḷigai, பெ.(n.)

   கலவி மாத்திரை; a pill to increase the virility or power of sexual intercourse (சா.அக.);.

     [போகம் + குளிகை.]

போகசக்தி

போகசக்தி1 pōkasakti, பெ.(n.)

   கலவிக்குரிய ஆண்மை; power of sexual intercourse;

 vital power (சா.அக.);.

த.வ. பேராண்மை

     [போகம் + சக்தி.]

போகசத்தி

போகசத்தி2 pōkasatti, பெ.(n.)

   போகசிவனது ஆற்றல்; the Sakti of Siva in his {} aspect (சி.சி.2, 75, மறைஞா.);.

     [Skt. {} → த. போகசத்தி]

போகடி’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போகடி’-த்தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போகடிப் போக்கு

 போகடிப் போக்கு pōkaḍippōkku, பெ. (n.)

   தற்செயல்; accident, casualness.

     [போகடி + போக்கு]

போகடு-தல்

போகடு-தல் pōkaḍudal, செ.குன்றா.வி. (v.t.)

   1. கழித்துவிடுதல்; to set aside, cast away.

போகட்ட உடம்மையும்’ (சீவக.951, உரை);

   2. போகவிடுதல்; to let go.

போகெனட் போகடாய்’ (சீவக. 1365);

     [போகவிடு → போகடு]

 போகடு-தல் pōkaḍudal, செ.கு.வி. (v.i.)

   1. விலகுதல்; to leave, escape.

பொல்லாதது போகடும்’ (தேவா. 376.4);

     [போகவிடு → போகடு ]

போகணம்

 போகணம் pōkaṇam, பெ.(n.)

   பெருமருந்து எனும் செடி; a turning plant, Indian birth wort (சா.அக.);.

போகண்டன்

 போகண்டன் pōkaṇṭaṉ, பெ. (n.)

   ஐந்து அகவைக்கு மேல் பதினைந்து அகவைக்குட் பட்ட ஆண் மகவு(யாழ்.அக);; a male child between five and fifteen years.

 போகண்டன் pōkaṇṭaṉ, பெ.(n.)

   ஐந்து அகவை (வயது);க்குமேல் பதினைந்து அகவை (வயது);க்குட்பட்ட ஆண்மகவு (யாழ்.அக.);; a male child between five and fifteen years.

     [Skt. {} → த. போகண்டன்.]

போகதத்துவம்

போகதத்துவம் pōkadadduvam, பெ.(n.)

   சாதாக்கிய தத்துவம் (சி.போ.பா.பக்40);; the stage in which both knowledge and action are balanced.

     [Skt. {} → த. போகம்+தத்துவம்.]

போகத்தானம்

போகத்தானம் pōkattāṉam, பெ.(n.)

   1 உடல் (சங்.அக.);; body.

   2. நுகர்ச்சிக் குறிய இடம் (ஆனந்தமய கோசம்); (யாழ்.அக.);; the sheath of bliss.

   3. கணியத்தில் செல்வம், மகிழ்ச்சி போன்றவற்றைக் (போகங்களைக்); குறிக்கும் ஏழாமிடம்; the seventh house from the ascendant as indicating marital ppiness.

     [Skt. {} → த. போகம்+தானம்.]

போகநட்டி

 போகநட்டி pōkanaṭṭi, பெ.(n.)

   இரு விளைச்சல் (போக); நிலங்களுக்கு இரண்டாம் விளைச்சலில் (போகத்தில்); நீரின்மை பற்றிச் செய்யும் வரிவிலக்கு (இ.வ.);; remission on double-crop land when there is no water for a second crop.

த.வ. தீர்வைவிலக்கு

     [Skt. {} → த. போகநட்டி.]

போகநாதர்

 போகநாதர் pōkanātar, பெ. (n.)

   மருத்துவ நூல்கள் பலவற்றின் ஆசிரியரும் பதினெண் சித்தரி லொருவருமான முனிவர்; a mystic, author of Several works on medicine, one of padinen-Šiddar.

 போகநாதர் pōkanātar, பெ.(n.)

   மருத்துவ நூல்கள் பலவற்றின் ஆசிரியரும் பதினெண் சித்தர்களுள் ஒருவருமான முனிவர்; a mystic, author of several works on medicine, one of {}-cittar.

     [Skt. {} → த. போகநாதர்.]

போகநிதானம்

 போகநிதானம் pōkanitāṉam, பெ.(n.)

   புணர்ச்சிக்குரிய காலம்; time suitable for copulation (சா.அக.);.

     [போகம் + நிதானம்.]

போகநீர்

போகநீர் pōkanīr, பெ.(n.)

   கருநீர் (விந்து);; seminal fluid, sperm.

     “போகநீர் பன்னீராற் போக்கியே” (விறலிவிடு.576);.

     [Skt. {} → த. போகம்+நீர்.]

போகன்

போகன் pōkaṉ, பெ.(n.)

   சிவத்திரு மேனிகளுள் ஒன்று; an aspect of Siva.

     “சதாசிவ னென்றும் போகனென்றும்… பன்னிரண்டு பெயரும் பெற்று நிற்பன்” (சி.சி. 1, 65, ஞானப்.);.

     [Skt. {} → த. போகன்.]

போகபத்திரம்

போகபத்திரம் bōkabattiram, பெ.(n.)

   ஒரு பொருளைப் பயன்கொள்ள எழுதிக் கொடுக்கும் ஆவணம் (சுக்கிரநீதி, 93);; document granting the use of specific property.

     [Skt. {} → த. பத்திரம்.]

போகபந்தம்

 போகபந்தம் bōkabandam, பெ.(n.)

   ஆதனைக் (ஆன்மாவைக்); கட்டுப்படுத்தும் உலகவின்பம் (வின்.);; worldly pleasures, as ensnaring the soul.

த.வ. உலகப்பற்று

     [Skt. {} → த. போகபந்தம்.]

போகபிசாசிகை

 போகபிசாசிகை bōgabicācigai, பெ.(n.)

   பசி; hunger (சா.அக.);.

     [போகம் + பிசாசிகை.]

போகபுவனம்

போகபுவனம் bōkabuvaṉam, பெ.(n.)

   வினைப்பயனை நுகருமிடமாகிய துறக்க நிரயங்கள்; heavens and hells, as the regions where the fruits of one’s actions in this world are experienced.

     “போகபுவன முண்டென” (மணிமே.27:44);.

     [போகம் + புவனம்.]

     [Skt. {} → த. போகபுவனம்.]

போகபூமி

போகபூமி1 pōkapūmi, பெ.(n.)

   1. துறக்கம் (சொர்க்கம்);; svarga, as a place of enjoyment.

   2. விளைநிலம் (சது.);; fruitful field.

   3. ஆதியரிவஞ்சம், நல்லரி வஞ்சம், ஏமதவஞ்சம், ஏமவஞ்சம், தேவகுருவம், உத்தரகுருவம் என அறுவகைப்பட்ட போக நுகர்ச்சியிடங்கள்; blissful regions where the fruits of good karma are enjoyed, six in number, viz., {}, uddara-kuruvam, dist, fr. {}

   4. மாக்கள் புசித்தற்கு இடமாக வுள்ள முப்பத்தாறு தத்துவங்கள் (சதாசிவ.85);; categories, 36 in number, as the regions for enjoyment of karma by souls.

த.வ. நுகர்புலம்

     [Skt. {} → த. போகபூமி.]

 போகபூமி2 pōkapūmi, பெ.(n.)

   கரும பலத்தை நுகர்தற்குரிய இடப்பகுதி; place for enjoyment of the fruits of karma, dist. karuma-{}.

     “இதுதான் நவகண்டமாய் அதில் எட்டுக்கண்டமும் போகபூமியாய் ஒன்பதாம் கண்டமான பரதகண்டம் கருமபூமியா யிருக்குமென்றபடி” (திவ். திருச்சந்.8, வ்யா, பக்.27);.

த.வ. நுகர்வு நிலம்

     [Skt. {} → த. போகபூமி2.]

போகபூமியர்

 போகபூமியர் pōkapūmiyar, பெ.(n.)

   பதினெண்கணத்துள் ஒருசாரார் (பிங்.);; a class of demigods, one of {} (பிங்.);.

     [Skt. {} → த. போகபூமியர்.]

போகபோக்கியம்

போகபோக்கியம் pōkapōkkiyam, பெ.(n.)

   1. நுகர்ச்சிப் பொருள் (சங்.அக.);; object of enjoyment.

   2. செல்வநுகர்வு (வின்.);; prosperity, enjoyment of wealth.

     [Skt. {} → த. போகபோக்கியம்.]

போகப்பவிந்திரி

போகப்பவிந்திரி pōkappavindiri, பெ.(n.)

   1. ஏகம்பச்சாரம்; a kind of salt mineral.

   2. (போகம்); புணர்ச்சி; intercourse, enjoyment (in philosophy); it is the perception of objects upon which enjoyment (சா.அக.);.

போகப்பெண்

போகப்பெண் pōkappeṇ, பெ.(n.)

   1. வைப்பாட்டி; concubine.

   2. வானுலகக் கணிகை (வின்.);; courtezan of svarga (w.);.

   3. கணிகை; courtezan (யாழ்.அக.);.

     [Skt. {}.]

போகப்போக

 போகப்போக pōkappōka, கு.வி.எ. (adv.)

   காலம் செல்லச் செல்ல; as time goes on.

     [போக + போக]

போகமகள்

போகமகள் pōgamagaḷ, பெ.(n.)

   1. இன்ப நுகர்ச்சிக்குரியவளாகக் கருதப்படும் பெண்; woman, considered an object of enjoyment.

     “போகமகள் புகழ்த் தந்தை” (திவ்.திருவாய். 4, 8, 9);.

   2. மனைவி; wife.

     “போகமகளிர் வலக்கண் குடித்த” (சீவக. 2173);.

   3. போகத்திரீ பார்க்க (இ.வ.);;see {}.

     [Skt. {}+ → த. போகம்+மகள்.]

போகமிகவாசி

 போகமிகவாசி pōgamigavāci, பெ.(n.)

   முட்பலாசு என்னும் மரம்; tree {}. (சா.அக.);.

போகமுண்டாக்கி

 போகமுண்டாக்கி pōkamuṇṭākki, பெ.(n.)

   காமத்தை மூட்டுப் பொருள்; drug that increases the sexual power; following are a few such drugs.

நறுந்தாளி, நன் முருங்கை, தூதுளம், பசளை, அறுகீரை. இதிலொன்றைப் புளிநீக்கி நெய்யிட்டு உண்ண நிருவாகம் உண்டாம். (சா.அக.);.

     [போகம் + உண்டாக்கி.]

போகம்

போகம்1 pōkam, பெ.(n.)

   1. எண்வகைப் போகம் பார்க்க;see {}.

   2. இன்பம்; pleasure, happiness.

     “போகம் வைத்த பொழில்” (தேவா.639, 9);.

   3. புணர்ச்சி; sexual enjoyment.

     “புணர்முலையார் போகத்தே மையலுற” (திருவாச.51, 3);.

   4. உண்ணுகை; eating.

     “உயிரின் போகம் வெறுத்தனமைனும்” (கம்பரா.முதற்போ.148);.

   5. பழவினைப்பட்டறிவு (அனுபவம்);; experience, as a result of past karma, whether painful or pleasant.

   6. செல்வம்; perity, wealth.

   7. விளைவு; crop, produce of a season.

     “போகந்தரு சீர்வயல்” (தேவா.70);.

   8. கூலி (யாழ்.அக.);; wages.

   9. பாம்பினுடல் (சூடா.);; body of a snake.

     “அனந்தன் மோகத்தில்” (உத்தரரா.தோத்திர.17);.

   10. பாம்பின் படம் (யாழ்.அக);; hood of cobra.

   11. பாம்பு (யாழ்.அக.);; snake.

   12. சதுரங்கச் சேனையை ஒன்றுக்குப்பின் ஒன்றாக நிறுத்தும் போர்முறை (குறள், 767, கீழ்க்குறிப்பு);; a kind of array of the four sections of an army one behind the other.

   13. நில நுகர்வு (நிலவனுபவம்);; use possession, as of land.

   14. கடவுளின் அருளாற்றல் (அவத்தை); மூன்றனுள் அறிவும் செயலும் (ஞானமும் கிரியையும்); சமமாகவுள்ள நிலை (சி.போ.பா.2, 2, பக்.134, புதுப்.);; aspect of god in which knowledge and action are well balanced, one of three avattai.

   15. கீழ்வாயிலக்கத்தின் மேலெண்; numerator of a fraction.

     [Skt. {} → த. போகம்.]

 போகம்2 pōkam, பெ.(n.)

   1. கண்பூ; cataract of the eye.

   2. இதளியம்; mercury.

   3. செய்நஞ்சு வகை (சாலாங்க பாடாணம்);; a kind of arsenic (சா.அக.);.

போகரோகணி

 போகரோகணி pōkarōkaṇi, பெ.(n.)

   புல்லூரி; a parasitic plant (சா.அக.);.

     [போகம் + ரோகணி.]

போகல்

போகல் pōkal, பெ. (n.)

   1. உயர்வு(பிங்);; rising.

   2. நீளம்(சூடா);; length.

     [போகு → போகல்]

போகவதி

போகவதி pōkavadi, பெ.(n.)

   1. நாக லோகத்துத் தலைநகரம் (பிங்.);; the city of the serpent race in the other world.

   2. நல்ல பெண் (சங்.அக.);; prosperous, happy woman.

     [Skt. {} → த. போகவதி.]

போகவதிக்கிறை

 போகவதிக்கிறை pōkavadikkiṟai, பெ.(n.)

   போகவதிநகர்க்கு அரசனான அனந்தன் (பிங்.);;{}, the serpent lord of {}.

     [Skt. {}-vathi → த. போகவதிக்கிறை.]

போகவரிசி

 போகவரிசி pōkavarisi, பெ.(n.)

கார்போக வரிசி, போகி பார்க்க;see {} (சா.அக.);.

     [போகம்+அரிசி.]

போகவலிமை

 போகவலிமை pōkavalimai, பெ.(n.)

   பெண்ணிடம் புணர்ச்சி செய்யும் திறன்; the power of sexual intercourse (சா.அக.);.

     [போகம் + வலிமை.]

போகவிச்சை

 போகவிச்சை pōkaviccai, பெ.(n.)

   புணர்ச்சியில் ஆசை; liking to have intercourse (சா.அக.);.

த.வ. புணர்விருப்பு

     [போகம் + இச்சை.]

போகவிடயம்

போகவிடயம் pōkaviḍayam, பெ.(n.)

   இன்பத்தைத் துய்த்தல்; enjoyment.

     “போகவிடயங்களுண் மையால்” (வேதா. சூ.165);.

த.வ. பெண்ணின்பம் பெறல்

     [Skt. {} → த. போகவிடயம்.]

போகவிடு-தல்

போகவிடு-தல் pōkaviḍudal, செ.குன்றா.வி. (v.t.)

   நழுவ விடுதல்; to let go, allow to pass or slip away, to abandon.

     ‘போதித்த உண்மை யெங்கே போகவிட்டாய் (தாயு. உடல்பொய்.5);

     [போ → போக + விடு- ]

போகவிருத்திக்கீரைகள்

 போகவிருத்திக்கீரைகள் pōgaviruttigāraigaḷ, பெ.(n.)

   நறுந்தாளி, நன்முருங்கை, தூதுவளை, பசளை, அறுகீரை; the greens that increase the power of virility; they are given above (சா.அக.);.

     [போகம்+விருத்தி+கீரைகள்.]

     [p]

போகவிருப்பம்

 போகவிருப்பம் pōkaviruppam, பெ.(n.)

போகவிச்சை பார்க்க;see {} (சா.அக.);.

த.வ. புணர்விருப்பு

     [போகம் + விருப்பம்.]

போகவிர்த்தி

 போகவிர்த்தி pōkavirtti, பெ.(n.)

   நல்லரிசி; increase of harvest (சா.அக.);.

போகாங்கம்

 போகாங்கம் pōkāṅgam, பெ.(n.)

   சிவகணாதிபர் (வின்.);;{} and other chief attendants of Siva, as subserving his enjoyment (w.);.

     [Skt. {} → த. போகாங்கம்.]

போகாநிழலி

 போகாநிழலி pōkāniḻli, பெ.(n.)

   சாயாமரம் (சாயாவிருட்சம்);; a kind of tree which does not cast its shadow (சா.அக.);.

போகாந்தராயம்

போகாந்தராயம் pōkāndarāyam, பெ.(n.)

   துய்த்தற்குரிய போகங்களை விலக்குகை (சீவக. 3081, உரை);; renunciation of worldly enjoyments.

     [Skt. {} → த. போகாந்த ராயம்.]

போகாப்புல்

போகாப்புல் pōkāppul, பெ. (n.)

   செங்கழுநீர் போன்ற களைய முடியாத கொடிவகை; creeper that can not be rooted out.as cengalunir.

போகாப் புல்லாகிய கழுநீர் முதலைப் பறித்து’ (சிலப்.10,127 உரை);

     [போ → போகு + ஆ + புல்]

போகாறு

போகாறு pōkāṟu, பெ. (n.)

   பொருளைச் செலவிடும் வழி; expenditure of money.

கேடில்லை போகா றகலாக் கடை’ (குறள், 478);

     [போ → போகு + ஆறு ன

போகாவத்தை

போகாவத்தை pōkāvattai, பெ.(n.)

   உலகத்தைப் படைத்துக் காக்கும் சிவனது நிலை (சி.போ.பா. அருந்தொடர், பக்.21, சுவாமிநா.);; the state of Siva, as the creator and protector of the world.

     [Skt. {}+ava-stha → த. போகாவத்தை.]

போகாவாசம்

 போகாவாசம் pōkāvācam, பெ.(n.)

   அந்தப் புரம் (யாழ்.அக.);; woman’s apartments in Palace.

த.வ. உவளகம்

     [Skt. {} → த. போகா+வாசம்.]

போகி

போகி1 pōkittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. கலவி இன்பம் நுகர்தல்; to enjoy sexual pleasure.

   2. வினையின் பயனுகர்தல்; to experience pleasure or pain, as a result of karma.

   3. புணர்தல்; to copulate.

த.வ. உடலுறவு கொள்ளல்

     [Skt. {} → த. போகி1-த்தல்.]

 போகி2 pōki, பெ.(n.)

   1. இந்திரன் (பிங்.);;{}.

     “போகிதரு காளி” (கந்தபு.அமரர்சிறை. 31);,

   2. வெள்ளிக் கோள் (நாமதீப.101);; venus.

   3. பாம்பு (பிங்.);; snake.

   4. செல்வந்தன்; wealthy man, man of good forture and prosperity, epicure.

     “இருபோது போகியே” (நீதிவெண்.9);.

   5. தலைமைக்காரன் (யாழ்.அக.);; headman.

     [Skt. {} → த. போகி.]

 போகி3 pōki, பெ.(n.)

   பல்லக்குச் சுமப்போன்; palanquin-bearer.

த.வ. பல்லக்குத் தூக்கி

     [Mhr. bhoi → த. போகி.]

     [p]

 போகி4 pōki, பெ.(n.)

   1. வணிகன் (நாநார்த்த.);; trader.

   2. பரிகாரி (நாவிதன்);; barber.

     [Skt. {} → த. போகி.]

 போகி5 pōki, பெ.(n.)

   1. கார்போகி விதை; seeds of a plant.

   2. பாம்பு; snake.

   3. பூவரும்பு; flower.

   4. இரண்டு தரம் தீர்த்த கவுனக் குளிகை; a mercurial pill animated by a special process of calcination described in the Tamil medical science.

   5. பெண் இன்பத்தில் அமிழ்ந்தவன்; one immersed in sexual intercourse.

   6. புணர்ந்தின்புறுதல்; enjoying sexual pleasure;

 copulating.

   7. கோரக்கர் கையிலுள்ள கவுன குளிகை; a ball processed by Korakar a siddhar which enables him to travel in air (சா.அக.);.

போகி கொளுத்தல்

 போகி கொளுத்தல் pōgigoḷuttal, பெ. (n.)

   போகிப்பண்டிகை நாளில் முந்திய இரவில் பழைய பண்டங்களையும், பழந்துணிகளையும் நெருப்பி லிடுகை; burning of old clothes and leumber on the night of poki-pantikai.

     [போகி + கொளுத்தல்]

போகி’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போகிகாந்தம்

 போகிகாந்தம் pōkikāndam, பெ.(n.)

   காற்று; wind (சா.அக.);.

     [போகி+காந்தம்.]

போகிதேரம்

 போகிதேரம் pōkitēram, பெ.(n.)

   புளி நறளைக் கிழங்கு; the root of a creeper (சா.அக.);.

த.வ. புளியம்பிரண்டைக் கிழங்கு

     [போகி + தேரம்.]

போகித்தூரிதம்

 போகித்தூரிதம் pōkiddūridam, பெ.(n.)

   மணித்தக்காளி; a plant (சா.அக.);.

த.வ. சிறுமணித்தக்காளி

     [போகிச+தூரிதம்.]

போகின்ற காலம்

போகின்ற காலம் pōkiṉṟakālam, பெ.(n.)

   நிகழ் காலம்; present time.

     ‘போகின்ற காலங்கள்’ (திவ். திருவாய். 2.6.10);

     [போ → போகின்ற + காலம்]

போகிப் பண்டிகை

 போகிப் பண்டிகை pōgippaṇṭigai, பெ. (n.)

   பொங்கற் பண்டிகைக்கு முந்திய நாளிற் பழையன கழித்தும் இல்லம் புதுக்கியும் செய்யும் விழாத் தொடக்கம்; festival on the day before pånkal.

     [ போகு → போகி + பண்டிகை]

போகில்

போகில் pōkil, பெ. (n.)

   1. பூவரும்பு(பிங்);.

 ower bud.

   2. கொப்பூழ்(பிங்);; navel.

   3. பறவை; bird.

ஆலம் போகிறனைத்தடுக்கும் வேனில் (ஐங்குறு.303);

     [புகு → (போகு); → போகில் → போகில்]

போகிவல்லபம்

 போகிவல்லபம் bōkivallabam, பெ. (n.)

   சந்தனம்(மலை);; sandal wood.

     [போகில் + வல்லபம்]

நறுமணம் பற்றிப் போகில் என்பது சந்தனத்தைக் குறித்ததாகலாம்.

 போகிவல்லபம் bōkivallabam, பெ.(n.)

   சந்தனம் (மலை.);; sandal wood.

     [Skt. {}-vallabha → த. போகி வல்லபம்.]

போகு-தல்

 போகு-தல் pōkudal, செ.கு.வி. (v.i.)

போ பார்க்க;see põ.

     [போ → போகு]

போகுகாலம்

போகுகாலம் pōkukālam, பெ. (n.)

   எதிர்காலம்; future tense.

போய காலங்கள் போகு காலங்கள் (திவ். திருவாய், 2, 6,10);

     [போகு + காலம்]

போகுடி

போகுடி pōkuḍi, பெ. (n.)

   1, ஊரைவிட்டு போய் விட்ட குடும்பம்; family that has le its native village.

   2. பிறங்கடை இல்லாமல் மறைந்து போனவனுடைய சொத்து

 propert left by a person who has disappeared with out leaving any heirs or claimants.

     [போகு + குடி ]

போகுயர்-தல்

போகுயர்-தல் pōkuyartal, செ.கு.வி. (v.i.)

   1. வளர்தல்; to grow, increase.

     ‘போகுய நீள்கழை'(சீவக.1422,);

   2. உயர்தல்; to be higr to rise upward.

போகுயர் மதிய மேறீ (சீவக.705);

     [போகு + உயர்]

போகூழ்

போகூழ் pōāḻ, பெ. (n.)

   தீவினைப்பயல் (தீயூம்);; fate that ordains loss.

கைப்பொரு போகூழாற் றோன்று மடி’ (குறள்,371);

     [போகு + ஊழ்]

போகை

போகை pōkai, பெ.(n.)

   செலவு; departure going.

போகைசேர் விடைகொண்டு (கந்தபு. சூரன்றண்.31);

தெ. போக, க. போகு

     [போ → போகை ]

போகொட்டு-தல்

போகொட்டு-தல் pōkoṭṭudal, செ.குன்றா.வி (v.t.)

   போகவிடுதல்; to permit to go, allo

 to depart,

யாமு தும்மைப் போகொட்டோ (சீவக. 2045);

     [போ → போக + ஒட்டு- ]

போக்கடா

 போக்கடா pōkkaṭā, பெ. (n.)

   வம்பன் (இ.வ);; rowdy.

     [போக்கு + கடா]

போக்கடி

போக்கடி pōkkaḍi, பெ. (n.)

   1. இழக்கை(வின்);

 losing, loss.

   2, பொருளாதரவு(வின்);; pecuniary means.

   3. தற்போக்கு; liberty of action, (w);.

   4. கழுவாய்; remedy.

     ‘போக்கடி யற்ற தசை’ (ஈடு,9,1,2);

   5. காலக்கெடு; opportunity, scope.

மேல் வார்த்தை சொல்கைக்கு ஒரு போக்கடியுமில்லை’ (ஈடு. 6, 2,5);

     [போ → அபோக்கு + அடி → போக்கடி]

போக்கடி-த்தல்

போக்கடி-த்தல் pōkkaḍittal, செ.குன்றாவி. (v.t.)

   1. இழத்தல்; to lose.

     ‘கான் மாரீசன் என்றவரையும் போக்கடித்தேன்’ (இராமநா. உயுத். 44);

   2. வீணாக்குதல்(வின்);; to waste (w);.

   3. விலக்குதல்(வின்);; to dispel, disperse, banish, chase away.

   4. போகச் செய்தல்(வின்);; to cause to go.

     [போ → அபோக்கு + அடி → போக்கடி]

போக்கடிப்பான்

 போக்கடிப்பான் pōkkaḍippāṉ, பெ. (n.)

   ஒரு வசைச் சொல்; a curse, meaning loser’

     [போக்கடி → போக்கடிப்பான்]

போக்கடியறு-தல்

போக்கடியறு-தல் pōkkaḍiyaṟudal, செ.கு.வி. (v.i.)

   1. புகலிடமில்லையாதல்; to lose one’s means of livelihood.

   2. செயலறுதல்(குருபரம், 342);; to be helpless, to be said prostrate.

     [போக்கடி + அறு- ]

போக்கணங்கெட்டவன்

 போக்கணங்கெட்டவன் pōkkaṇaṅgeṭṭavaṉ, பெ. (n.)

போக்கறுவான் (கொ.வ.); பார்க்க;see põkkaruwān.

     [போக்கு → போக்கணம் + கெட்டவன்]

போக்கணம்

 போக்கணம் pōkkaṇam, பெ. (n.)

   நாணம்(வின்);; shame, sense of shame.

     [போக்கு + அனம்]

 போக்கணம் pōkkaṇam, பெ. (n.)

   கட்டுச்சோறு; viaticem, food for journey.

     [பொக்கணம் → போக்கனம்]

போக்கணம்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போக்கன்

போக்கன் pōkkaṉ, பெ. (n.)

   1. வழிப்போக்கன்; wayfarer, traveller.

   2. வெளிநாட்டுக்காரன்; foreigner.

   3. பயனற்றவன்; worthless person.

   4. கயவன்(வின்);; mean fellow.

க. போக ம. போக்கந

     [போக்கு → போக்கன்]

போக்கம்

 போக்கம் pōkkam, பெ. (n.)

   பொலிவு(சூடா);; beauty, splendour.

     [பொக்கம் → போக்கம்]

போக்கறு-தல்

போக்கறு-தல் pōkkaṟudal, செ.கு.வி. (v.i.)

   1. குற்றம் நீங்குதல்; to be faultless.

     ‘போக்கறுபனுவல்” (தொல். பாயி);.

   2. கதியறுதல்; to lose one’s means of velihood.

போக்கற்றுச் செயல்மாண்டு நின்ற நிலை (ஈடு, 6,10, 10);

     [போக்கு + அறு- ]

 போக்கறு-தல் pōkkaṟudal, செகுன்றாவி(v.t.)

   முட்டின்றிச் செய்தல்; to make no depault.

கோயில் தேவைசாரம் சந்திராதித்தவரை போக் கறுப் பல னாக ச் சி லா லே சை பன்னிக்கொடுத்தோம் (S.I.I.iv102);

கடமை தட்டுப் போக் கறுக் க போனு மென்று மகாசபையோம் சம்மதித்து(S.I.l.viii.165);

     [போக்கு + அறு – த்தல்]

போக்கறுதி

போக்கறுதி pōkkaṟudi, பெ.(n.)

   புகலின்மை; want of an alternative.

முன்பு பலபடியுஞ் சொன்னதனையேபோக்கறுதிலாற் பின்புஞ் சொல்லுகின்றேன் (நிலகேசி. 392 உரை);

     [போக்கு + அறு → அறுதி]

போக்கறுவான்

போக்கறுவான் pōkkaṟuvāṉ, பெ. (n.)

   1. போக்கிடமில்லாதவன்; one who has nothing to fall back upon;

 one who has no means of living; a destitute person.

     ‘போக்கறுவான் விட்டிற் புகுந்தான் (விறலிவிடு. 845);

     [போக்கறு → போக்கறுவான்]

போக்கற்றான்

 போக்கற்றான் pōkkaṟṟāṉ, பெ.(n.)

வாழ வழி தெரியாத ஏமாளி,

 Sunsoft, easily deceivable humble person who knows no means of livelihood.

     [போக்கு+[அற்றவன்] அற்றான்]

போக்கற்றவனைப்போக்கட்டான் எனத் திரித்து வழங்குவது கடுங் கொச்சை, விலக்கத்தக்கது.

போக்காடு

 போக்காடு pōkkāṭu, பெ. (n.)

   தீவினைகளைப் போக்கும் பொருட்டு காட்டெல்லையில் போகவிடப்படும் ஆட்டுக்கடா; scape goat.

     [போக்கு → ஆடு]

 போக்காடு pōkkāṭu, பெ. (n.)

   இறப்பு; death (யாழ்.அக.);.

     [போ → போக்காடு]

போக்காட்டு-தல்

போக்காட்டு-தல் pōkkāṭṭudal, செ.குன்றாவி. (v.t.)

   1. அனுப்பிவிடுதல்; to send away.

   2. வேற்றிடம் போகுமாறு சாக்குச் சொல்லி விடுத்தல்; to send to another place or to a third person, excusing oneself.

     [போக்கு → காட்டு- ]

போக்காளன்

போக்காளன் pōkkāḷaṉ, பெ. (n.)

   1. இளமையில் இறந்தோன்; man who died a premature death.

   2. பயனற்றவன்; worthless man.

     [போக்கு + ஆள் + அன் → போக்காளன்]

போக்காளி

போக்காளி pōkkāḷi, பெ. (n.)

   1. இளமையில் இறந்தவ – ன் – ள்; man or women who died a premature death.

   2. ஒன்றுக்கும் உதவாதவ – ன் – ள்; workless person.

     [போக்கு + ஆள் + இ → போக்காளி]

     “இ” உடைமைப் பொருள் பெயரீறு

போக்கி

போக்கி pōkki, வி.எ. (adv)

   1. போக்கன்,2 (யாழ்.அக); பார்க்க; see pökkan.

   2. பின்பு; afterwards.

இவை போக்கிச் சொல்லுதும்’ (தொல். பொ. 444, உரை);

   3. தவிர; besides.

     ‘கல்யாணகுண விசயமான இத்தனைப் போக்கிப் புறம் போயிற்றில்லை (ஈடு, 3,1, 6);

     [போக்கு → போக்கி]

போக்கிச் சொல்(லு)-தல்

போக்கிச் சொல்(லு)-தல் pōkkiccolludal, செ.கு.வி. (v.i.)

   பின்னர்க் கூறுதல்; to deal with, in a latter place.

அவை இரண்டு திணைக்கும் விரவுவினை ஆதலாற் போக்கிச் சொல்லுதும் (நேமி நா. 41 உரை);

     [போக்கு + சொல்–, ]

போக்கிடம்

போக்கிடம் pōkkiḍam, பெ. (n.)

   1. ஒதுக்கிடம்; way of escape.

   2. புகலிடம்; place of refuge.

போக்கிடங் காணேன் (திருவாச.23, 6);

     [போக்கு → இடம்]

போக்கியதாரன்

 போக்கியதாரன் pōkkiyatāraṉ, பெ.(n.)

போக்கியதார் பார்க்க;see {}.

     [Skt. {} + U.dar → த. போக்கியதாரன்.]

போக்கியதார்

 போக்கியதார் pōkkiyatār, பெ.(n.)

   பயனீட்டு (அனுபோக); ஒற்றிக்காரன்; usufructuary mortgage.

     [Skt. {}+U. {} → த. போக்கியதார்.]

போக்கியபத்திரம்

 போக்கியபத்திரம் bōkkiyabattiram, பெ.(n.)

   பயனீட்டு (அனுபோக); ஒற்றிச்சீட்டு; usufructuary mortgage deed.

த.வ. ஒற்றியாவணம்

     [போக்கியம் + பத்திரம்.]

     [Skt. {}+ → த. போக்கியம்+பத்திரம்.]

போக்கியப்பொருள்

 போக்கியப்பொருள் pōkkiyapporuḷ, பெ.(n.)

   நுகர்ச்சிக்குரிய பண்டம் (சங்.அக.);; object of enjoyment.

த.வ. நுகர்பொருள்

     [Skt. {} → த. போக்கியம்+பொருள்.]

போக்கியம்

போக்கியம்1 pōkkiyam, பெ.(n.)

   1. நுகர் பொருள்; object of enjoyment.

     “தாரகபோசக போக்கியங்கள் எல்லாம்” (ஈடு, 6, 7, 1);.

   2. கருமாவின் நுகர்ச்சி (வின்.);; experience of good or evil karma.

   3. செல்வம் (வின்.);; felicity, wealth.

   4. ஒற்றியுரிமையின் வருவாய் (உ.வ.);; use, usefruct.

   5. ஒற்றியுரிமை (இ.வ.);; mortgage with possession.

   6. பொருளுக்காகவும் நால்வகைச் சேனைக்காகவும், சிற்பம் நாட்டியம் முதலியவற்றிற்காகவும் செலவு செய்யும் பொருள் (சுக்கிரநீதி, 98);; royal revenue spent on coinage, jewels, army, artisans.

     [Skt. {} → த. போக்கியம்.]

 போக்கியம்2 pōkkiyam, பெ.(n.)

   சித்திரக் கவி வகை (யாப். வி.497);; a kind of metrical composition.

த.வ. ஓவியச் செய்யுள்

     [Skt. {} → த. போக்கியம்.]

போக்கியல்

போக்கியல் pōkkiyal, பெ. (n.)

   கரிதகம்(வீரசோ.யாப். 11, உரை); ; last member of some kinds of kali-p-pā verse.

     [போக்கு + இயல்]

போக்கிரி

 போக்கிரி pōkkiri, பெ. (n.)

போக்கிலி பார்க்க; see põkkili.

     [போக்கு → போக்கிலி → போக்கிரி]

போக்கிரிசாக்கிரி

 போக்கிரிசாக்கிரி pōkkiricākkiri, பெ . (n.)

போக்கிலி (வின்); பார்க்க;see pokkili.

     [போக்கிரி + சாக்கிரி]

எதுகை நோக்கி வந்த மரபு இணைச்சொல்

போக்கிரித்தனம்

 போக்கிரித்தனம் pōkkirittaṉam, பெ. (n.)

   பொல்லாச்செயல்; rascality.

     [போக்கிரி + தனம்]

போக்கிலி

போக்கிலி pōkkili, பெ. (n.)

   1. கதியற்றவன்; one who has no refuge. (யாழ்.அக.);

   2. கயவன்;(சங்.அக);

 villain.

     [போக்கு + இலி]

இல் + இ – இலி

     ‘இ’ உடைமைப் பொருள் பெயரீறு.

போக்கு

போக்கு pōkku, பெ. (n.)

   1. போகச்செய்கை; causing to go, letting out.

   2. வழி; way, passage, exit,

   3. சுரங்கவழி(வின்);; subterranean passage.

   4. நடை(பிங்);; walk, step, gait,

   5. மீட்சி; recovery.

நாகம் போக்கறக் கொண்ட தேனும்’ (சீவக. 1285);

   6. புகல்; refuge.

இலங்கை போக்கறவும்’ (கம்பரா. மாயாசனக.83);

   7. இடம்; place.

இது இந் த ப் போக் கி லே கி டை க் குமா ?

   8. நிலத்தியல்பு; character of land, as hilly sandy.

மலைப்போக்கு ஆற்றுப்போக்கு,

   9. மனச் சாய்வு; tendency, turn of mind.

அவனைப் போக்குப் போல் விட்டுப் பிடிக்க வேண்டும்.

   10. சாக்கு; excuse.

   11. பழக்கம் (யாழ்.அக);; habit.

   12. நடைமுறை; manner.

   13. விருப்பம்; desire.

   14. பொலிவு; style.

   15. நீர்முதலியவற்றின் ஒட்டம்; flowing, as of water or wind.

     “புணரியைப் போக்கற வடைத்தவாறும்” (கம்பரா. ஒற்றுக் 46);

   16. மலமுதலியன வெளிப்படுகை; euacuation.

   17. பறவை நூலில் ஆந்தையின் தொழிலால் குறிக்கப்படும் விளைவு(சூடா);; prediction by the action of owl among pancapaksi.

   18. கேடு; loss, run.

போக்கு மதுவிளிந் தற்று (குறள்,332,);

   19. செலவு; expense.

   20, இறப்பு; death.

     ‘போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே” (திருவாச.1,77);

   21. குற்றம்; fault defect.

போக்கறு பனுவல் (தொல். பாயி);

   22. கழிப்புக் கழிக்கை; ceremony of averting evil.

   23. மரக்கன்று;(பிங்);

 sapling.

க. போக

     [போ → போக்கு]

 போக்கு pōkku, பெ. (n.)

   செல்லுகை; going,passing.

குறும்பி னுழையும் வாயிலும் போக்கறவளைஇ (பு. வெ. 1, 7, கொளு);

     [போ → போக்கு]

 போக்கு pōkku, பெ.(n.)

   நடத்தை; conduct.

அழகிதாயிருந்தது எம்முடைய போக்கு’ (ஈடு,1,4,7);

     [போ → போக்கு ]

போக்கு-தல்

போக்கு-தல் pōkkudal, செ.குன்றாவி, (v.t.)

   1. போகச் செய்தல்; to sent, to cause to go.

     “பிள்ளையைப் போக்கினேன்” (திவ்.பெரியாழ். 3.2.1);

   2. செய்தல்; to discharge, pay, render.

     ‘வனத்துழாய்க் கணவர்க்கும் வணக்கம் போக்கினாள்” (கம்பரா. மீட்சிப்,84);

   3. செய்து முடித்தல், to complete, finish.

புரிய வேண்டுவ யாவையும் விதிமுறை போக்கி (உபதேசகா. சிவவிரத. 319);

   4. கொடுத்தல்; to give.

     ‘கலன்களும் தூசும் போக்கினான்’ (கம்பரா. எழுச். 6);

   5. உணர்த்துதல்; inform, make known.

கரிபோக்கினாள்’ (சீவக.889);

   6. உட்புகுத்துதல்(வின்);; to insert.

   7. கட்டுதல்; to bind.

     ”எக்கழுத்து நாணாற் கரும்பினனை மென்றோள் போக்கிச் சிறைபிடித்தாள்’. (பரிபா. 7,56);

   8. மெலிவுறச் செய்தல்; to make lean.

ஆக்கையைப் போக்கப் பெற்று (திருவாச. 6,10);

   9. இல்லாமற் செய்தல்; to clear remove.

அழுக்கைப் போக்கினான்’

   10. கழித்தல்; to pass or spend, as time.

அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் (நாலடி. 327);

   11. அழித்தல்; to ruin, destroy, kill.

ஆக்குதலளித்தல் போக்குதல். (சிவப் பிர. இஷ்ட நெடுங்கழி.7);

     [போ → போக்கு ]

 போக்கு-தல் pōkkudal, செ.குன்றாவி, (v.t.)

   கற்பித்தல்; to teach.

ஆசார்யன் போக்கின வையேயாகிலும் சத்யந்நிதியிலே சொல்லக் கடவதல்ல (திவ்.திருநெடுந் 13 வ்யா);

     [போ → போக்கு]

போக்குக்கழி-த்தல்

 போக்குக்கழி-த்தல் pōkkukkaḻittal, செ.கு.வி, (v.i.)

   கண்ணேறு கழித்தல்; to dispel the effects of the evil eye.

     [போக்கு + கழி-]

போக்குக்காட்டு-தல்

போக்குக்காட்டு-தல் pōkkukkāṭṭudal, செ.கு.வி. (v.i.)

   1. வழிகாட்டுதல்; to point ou a way.

   2. சாக்குச் சொல்லுதல்; to give excuse.

   3. குறிப்புக் காட்டுதல்(வின்);; to give an outline or clue, to Suggest.

     [போக்கு → காட்டு- ]

போக்குச்சாக்கு

 போக்குச்சாக்கு pōkkuccākku, பெ. (n.)

   நொண்டிச்சாக்கு(வின்);; lame excuse, pretence.

     [போக்கு + சாக்கு ]

போக்குச்சுற்றிப் போடு-தல்

 போக்குச்சுற்றிப் போடு-தல் pōkkuccuṟṟippōṭudal, செ.கு.வி. (v.i.)

போக்குப் போடு(வின்); பார்க்க;see pdkku-p-pôdu.

     [போக்கு + போக்கு + போடு]

போக்குச்செய்தல்

 போக்குச்செய்தல் pōkkucceytal, செ.குன்றாவி, (v.t.)

   விற்றல்; to sell.

     “போக்குச் செய்து பொன்வரக்காட்டுக”(கல்.);

     [போக்கு + செய்- ]

போக்குச்சொல்(லு)-தல்

 போக்குச்சொல்(லு)-தல் pōkkuccolludal, செ.கு.வி. (v.i.)

   சாக்குக் காட்டுதல்; to make ՅXCԱՏՅ.

     [போக்கு + சொல்]

போக்குத்தெளிவு

 போக்குத்தெளிவு pōkkutteḷivu, பெ. (n.)

   இறக்குந் தறுவாயில் உண்டாகும் நோய்த்தெளிவு; apparent abatement of disease just before death.

     [போக்கு + தெளிவு]

போக்குநீக்கு

போக்குநீக்கு pōkkunīkku, பெ. (n.)

   1. போக்குவரத்து; going and coming.

   2. பாட்டை(வின்);; thorough fare.

   3. புகலிடம்; refuge.

   4. இடைவெளி(வின்);; escape, opening.

   5. வழிமுறை(வின்);,

 methed way.

   6. பழக்கம், (யாழ்.அக.);; habit, practice.

     [போக்கு + நீக்கு ]

 போக்குநீக்கு pōkkunīkku, பெ. (n.)

   1. அன்பு கெழு நிலைமை(இ.வ.);; amiability.

   2. ஈவிரக்கம்(கொ.வ.);; kind heartedness.

     [போக்கு + நீக்கு ]

போக்குப்போடு-தல்

 போக்குப்போடு-தல் pōkkuppōṭudal, செ.கு.வி. (v.i.)

   கண்ணேறு கழிக்க அல்லது பேய் விரட்ட உயிர்க்காவு கொடுத்தல்; to offer pali in an open or exposed place for dispelling demons or averting evil.

     [போக்கு + போடு- ]

போக்குவண்டி

போக்குவண்டி pōkkuvaṇṭi, பெ. (n.)

   1. வெறுமையாகத் திரும்பிச் செல்வதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி; return bandy, cart retuning empty after discharging its load and therefore available for a cheap fare.

   2. விரும்பிய இடத்திற்குச் சென்று கொண்டிருப்பதால் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வண்டி; carriage or cart going in the desired direction of its own accord and therefore available for a cheap fare.

     [போக்கு + வண்டி]

போக்குவரத்து

போக்குவரத்து pōkkuvarattu, பெ. (n.)

   1. போதலும் வருதலும்; going and returning.

புகுந்தே னென்கிற இது ஒரு போக்குவரத்து உண்டா யான்று (ஈடு, 6, 10, 10);.

   2. ஊடாடுகை(வின்);; familiar intercourse, *requent visiting, intercommunication.

   3. விருந்தினர்(வின்);; guests.

   4. வரவு செலவு; noome and expenditure.

     [போக்கு + வரத்து]

போக்குவரத்து மணியம்

 போக்குவரத்து மணியம் pōkkuvarattumaṇiyam, பெ. (n.)

   விருந்தினரை வரவேற்று நலம் பாராட்டும் ஊழியர்; clerk deputed to attend on guests.

     [போக்குவரத்து + மணியம்]

போக்குவரத்துக்கழகம்

 போக்குவரத்துக்கழகம் pōkkuvarattukkaḻkam, பெ. (n.)

   செல்கையர் போக்குவரத்து நிறுவனம்; Public transport Department.

     [போக்குவரத்து + கழகம்]

போக்குவரத்துத் திறை

 போக்குவரத்துத் திறை pōkkuvarattuttiṟai, பெ. (n.)

   ஆட்களையும் சரக்குகளையும் இடம் விட்டு இடம் கொண்டு செல்லும் ஊர்தி நிறுவனம்; Transport Department.

     [போக்குவரத்து + துறை]

போக்குவரத்துநெரிசல்

 போக்குவரத்துநெரிசல் pōkkuvarattunerisal, பெ. (n.)

   போக்குவரத்துத்தடை; hold up of traffic.

     [போக்குவரத்து + நெரிசல் ]

போக்குவரவு

போக்குவரவு pōkkuvaravu, பெ. (n.)

   1. போக்குவரத்து பார்க்க

   2. பிறப்பிறப்பு; death and birth.

போக்குவரவு புகிய (சி. போ. 2,);

   3. நிலவுரிமையை உறுதிப்படுத்தும் துறை அல்லது அலுவலகம்; settlement, a revenue term.

போக்குவரவு கச்சேரி.

   4, உரிமைப்பதிவு ஆவணம் மாறுகை; transfer of patta.

நான் விலைக்கு வாங்கின நிலம் என்பேர்க்கு இன்னும் போக்கு வரவு ஆகவில்லை (நாஞ்);

     [போக்கு + வரவு]

போக்குவாக்கு

போக்குவாக்கு pōkkuvākku, பெ. (n.)

   1. பொலிவான தோற்றம்; good personal appearance.

   2. உடற்கட்டு; good build of body, said of a person.

     [போக்கு + வாக்கு]

போக்குவிடு-தல்

போக்குவிடு-தல் pōkkuviḍudal, செ.கு.வி. (vi.)

   1. நீர் போகவிடுதல்; to make a drain, on outlet.

   2. போக்குவை 1- பார்க்க (w);

   3. வழிவிடுதல்; to provide a way or means of outlet.

 போக்குவிடு-தல் pōkkuviḍudal, செ.குன்றா.வி. (vt.)

   1. செலவழித்தல்; to spend.

     [போக்கு + விடு]

போக்குவீடு

போக்குவீடு pōkkuvīṭu, பெ. (n.)

   1. செல்லவிடுகை; sending away.

   2. சொற் செயல்களால் உணர்ச்சிக்கு வழிவிடுகை; outlet, as for one’s feelings, giving went.

     “பிராட்டியைக் கண்ட பிரீதிக்குப் போக்கு வீடாக” (திவ். திருமாலை 1, வ்யா. பக். 11);

     [போக்குவிடு → போக்குவிடு]

போக்குவை-த்தல்

போக்குவை-த்தல் pōkkuvaittal, செ.கு.வி. (v.i.)

   1. கீழ்ச்சுரங்கம் அமைத்தல்; to make underground cellar for hiding treasure.

   2. செலவுக்கு வழிதேடுதல்; to find out ways of expenditure.

     [போக்கு + வை]

போங்கம்

போங்கம் pōṅgam, பெ. (n.)

   மஞ்சாடி மரவகை (குறீஞ்சிப்.74);; a veriety of redwood.

     [போ → போக்கு → போங்கு → போங்க]

போங்காலம்

போங்காலம் pōṅgālam, பெ. (n.)

   1.தீவினைப் பயன் விளைந்து துன்புறும் வேளை(வின்);:

 time of adverse influences, when former evil deeds bear fruit, opp. to āñkālam.

   2. இறப்புக் காலம் (வின்);; time of death.

     [போம் + காலம்]

போங்கு

 போங்கு pōṅgu, பெ. (n.)

போக்கு (யாழ்.அக.); பார்க்க;see põkkus.

     [போக்கு → போங்கு ]

போசகன்

போசகன் pōcagaṉ, பெ.(n.)

   1. வளர்ப்பவன்; one who cherishes or nourishes.

   2. ஆதரிப்பவன்; patron.

   3. ஒருவனை இளமையிற் காப்பாற்றுபவன் (இக்.வ.);; guardian.

     [Skt. {} → த. போசகன்.]

போசகம்

போசகம்1 pōcagam, பெ.(n.)

   எட்டி மரம்; a tree nuxvomica (சா.அக.);.

 போசகம்2 pōcagam, பெ.(n.)

   ஊட்டமாய் வளர்க்கை; that which nourishes.

     “தாரக போஷக போக்கியங்களும்” (ஈடு, 6, 7, 1);.

     [Skt. {} → த. போசகம்.]

போசகி

 போசகி pōcagi, பெ.(n.)

   அகத்திக் கீரைமரம்; a tree-sesbania grandiflora alias coronilla grandiflora (சா.அக.);.

போசக்கை

போசக்கை pōcakkai, பெ. (n.)

   1. போலித் தோற்றம்; deceptiveness of appearance.

   2. மேற் பூச்சு; superficialit of character.

   3. மாயம்; counterfeit, sham, pretence or cover to save credit or hide poverty.

     [பூசு → பூசுகை → போசகை → பேசக்கை]

போசக்கை வேலை

 போசக்கை வேலை pōcakkaivēlai, பெ. (n.)

   போலி வலை(வின்);; COUnterfeit unsubstantial work.

     [போசக்கை + வேலை ]

போசணக்கோளாறு

 போசணக்கோளாறு pōcaṇakāḷāṟu, பெ.(n.)

   உணவு வகையிலேற்பட்ட குழப்பம்; derangement of the nutrition (சா.அக.);.

     [போசணம்+கோளாறு.]

போசணசாலை

 போசணசாலை pōcaṇacālai, பெ.(n.)

   குழந்தைகளைப் பால் கொடுத்து வளர்க்கு மிடம்; nursing home (சா.அக.);.

     [Skt. poshana → த. போசணம்+சாலை.]

போசணத்தந்துகி

 போசணத்தந்துகி pōcaṇattandugi, பெ.(n.)

   ஊட்டச் சத்தை எடுத்துச் செல்லும் தந்துகி; lacteal, the primary lymphatic vessel that remains in the centre of intestina villies is known as lacteal (சா.அக.);.

     [போசணம்+தந்துகி.]

போசணநாடி

 போசணநாடி pōcaṇanāṭi, பெ.(n.)

   உயிர் நாடி என்னும் குருதிக்குழாய்; arteries contributing to the assimilation of food nutrient (சா.அக);.

     [போசணம்+நாடி.]

போசணம்

போசணம் pōcaṇam, பெ.(n.)

   1. உடம்பை வளர்த்து வலுவைக் கொடுக்குந் தொழில்; nutriment.

   2. கொழுப்பிக்குமுணவு:

 nourishing food (சா.அக.);.

த.வ. நல்லுணா, வல்சி

போசணரோகம்

 போசணரோகம் pōcaṇarōkam, பெ.(n.)

   ஊட்டச்சத்துக் குறைவினால் உண்டாகும் நோய் அல்லது உடற்குறைபாடு; any disease or disorder to nutritional cause (சா.அக.);.

     [போசணம்+ரோகம்.]

போசணை

 போசணை pōcaṇai, பெ.(n.)

   நன்கு வளர்க்கை; fastering, nourishing, cherishing.

     [Skt. {} → த. போசணை.]

போசனகத்தூரி

 போசனகத்தூரி pōcaṉagattūri, பெ.(n.)

   நாரத்தங்காய் அல்லது கச்சல்; fruit of a variety of citrus tree (சா.அக.);.

     [போசனம் + கத்தூரி]

போசனகுடாரி

 போசனகுடாரி pōcaṉaguṭāri, பெ.(n.)

   சீரகம்; cumin seeds of the plant (சா.அக.);.

     [போசனம் + குடாரி.]

போசனக்குறடா

போசனக்குறடா pōcaṉakkuṟaṭā, பெ.(n.)

   1. மிளகாய்; chilly;

 fruit of a plant.

   2. ஊறுகாய்; fruit such as limes, mango, etc. preserved in salt (சா.அக.);.

     [போசனம் + குறடா.]

போசனக்குழல்

 போசனக்குழல் pōcaṉakkuḻl, பெ.(n.)

   உணவுக் குழாய்; alimentary canal (சா.அக.);.

த.வ. உணவுக் குழல்

     [போசனம் + குழல்.]

போசனசஞ்சீவி

 போசனசஞ்சீவி pōsaṉasañsīvi, பெ.(n.)

   எட்டுவகைக் குன்மத்திற்குக் கொடுக்கப்படும் மருந்து; a medicine given for the eight kind of gunmum (சா.அக.);.

போசனசாலை

போசனசாலை pōcaṉacālai, பெ.(n.)

   1. அன்னம் படைக்குமிடம் (மணிமே.20, 7, அடிக்குறிப்பு);; dining hall.

   2. விலைக்கு உணவு பெறுமிடம்; hotel.

     [Skt. {}+saukhya → த. போசனசாலை.]

போசனசெளக்கியம்

போசனசெளக்கியம் pōsaṉaseḷakkiyam, பெ.(n.)

   1. நல்லுணவு; wholesomeness or pleasantness of food.

   2. நல்வாழ்க்கை; good living.

     [Skt. {}+ → த. போசனசௌக்கியம்.]

போசனப்பதார்த்தம்

 போசனப்பதார்த்தம் pōcaṉappatārttam, பெ.(n.)

   தின்பண்டம்; eatables (சா.அக.);.

த.வ. உண்பண்டம்

     [போசனம்+பதார்த்தம்.]

போசனப்பரிகாரம்

 போசனப்பரிகாரம் pōcaṉapparikāram, பெ.(n.)

   பேருண்டிவிழைவு (போசனப்பிரியம்);; gastronome (சா.அக.);.

த.வ. சாப்பாட்டுக்காரன்

     [போசனம்+பரிகாரம்.]

போசனப்பிரியன்

போசனப்பிரியன்1 pōcaṉappiriyaṉ, பெ.(n.)

   பேருணவு கொள்வோன்;   வயிறுதாரி; a glutton (சா.அக.);.

   த.வ. பேருண்டியாளன்;பெருவயிற்றன்

 போசனப்பிரியன்2 pōcaṉappiriyaṉ, பெ.(n.)

   பிள்ளையார் (வின்.); (நாமதீப.28);; God {}.

     [Skt. {}+priya → த. போசனப்பிரியன்.]

     [p]

போசனப்பெருக்கம்

 போசனப்பெருக்கம் pōcaṉapperukkam, பெ.(n.)

   வயிற்றுத்தீ மிகுவதால் அதிகமாகச் சாப்பிடுகை; eating more due to excessive hunger (சா.அக.);.

த.வ. ஆனைத்தீ

     [போசனம்+பெருக்கம்.]

போசனம்

போசனம் pōcaṉam, பெ.(n.)

   1. உணவு; food.

   2. உண்ணுகை (சூடா.);; eating, feeding.

     [Skt. {} → த. போசனம்.]

போசனவிதி

போசனவிதி pōcaṉavidi, பெ.(n.)

   உணவு கொள்ளும்போது கவனித்தற்குரிய நெறிகள் (வேதா. சூ.184, உரை);; rules about taking food.

     [Skt. {} → த. போசனம்+விதி.]

போசனாங்கம்

போசனாங்கம் pōcaṉāṅgam, பெ.(n.)

   நால்வகை யுண்டிகளையும் உதவும் கற்பகம் (தக்கயாகப்.757, உரை, அடிக்குறிப்பு);; a celestial tree, a besto wing all kinds of food.

     [Skt. {} → த. போசனாங்கம்.]

போசனாசயம்

 போசனாசயம் pōcaṉācayam, பெ.(n.)

   இரைப்பை; stomach (சா.அக.);.

     [போசனம்+ஆசயம்.]

போசனாந்தம்

 போசனாந்தம் pōcaṉāndam, பெ.(n.)

   சாப்பிட்ட பிறகு, உண்ட பிறகு; at the end of meals (சா.அக.);.

போசன்

போசன் pōcaṉ, பெ.(n.)

   1. வடமொழிக் கவிஞரைப் போற்றிய அரசன்; a king, famous as a patron of Sanskrit poets.

     “போசன் கவிஞருக்கே மோதப் பரிந்தளித்து” (சோ-மே. முதுமொழி.24);.

   2. கள்ளத்தொடர்பில் அரசி பெற்ற பிள்ளை (சங்.அக.);; son born of a lady of royal family in liaison.

     [Skt. {} → த. போசன்.]

போசம்

 போசம் pōcam, பெ.(n.)

போசகி பார்க்க;see {} (சா.அக.);.

போசரோகணி

 போசரோகணி pōcarōkaṇi, பெ.(n.)

   கடுகுரோகிணி; root of a plant (சா.அக.);.

போசலம்

 போசலம் pōcalam, பெ.(n.)

தஞ்சாவூர் மராட்டிய அரசரின் குலப்பெயர் (சரபேந்திர

   பூபாலக் குறவஞ்சி); the family name of the Tanjore Maharatta rulers.

     [Mhr. {} → த. போசலம்.]

போசாக்கு

போசாக்கு pōcākku, பெ.(n.)

   1. போசணை பார்க்க;see {}.

   2. விழிப்புணர்வு (ஜாக்கிரதை);; care.

     ‘உனக்கு போசாக்குப் போராது’.

போசி-த்தல்

போசி-த்தல் pōcittal,    4 செ.கு.வி.(v.i.)

   போற்றிக் காத்தல், ஆதரித்தல்; to foster, nourish, cherish, feed.

     [Skt. pus → த. போசி-த்தல்.]

போசிக்கத்தக்கன

 போசிக்கத்தக்கன pōcikkattakkaṉa, பெ.(n.)

   உடலிற்கு ஊட்டத்தைக் கொடுப்பன; nutritions (சா.அக.);.

     [போசிக்க+தக்க.]

போசிக்குமுணவு

 போசிக்குமுணவு pōcikkumuṇavu, பெ.(n.)

   உடம்பிற்கு வலுவைக் கொடுக்கும் உணவு; nourishing food (சா.அக.);.

     [போசிக்கும் + உணவு.]

போசிப்பு

 போசிப்பு pōcippu, பெ.(n.)

போசணை பார்க்க (இ.வ.);;see {}.

     [Skt. pus → த. போசிப்பு.]

போசியன்

போசியன் pōciyaṉ, பெ.(n.)

   1. பிறரால் வளர்க்கப்படுபவள்-ன் (வின்.);; one who is brought up by a stranger.

   2. வளர்ப்புப் பிள்ளை (யாழ்.அக.);; foster-son.

போசியபுத்திரன்

 போசியபுத்திரன் bōciyabuttiraṉ, பெ.(n.)

   வளர்ப்புப் பிள்ளை; adopted child.

த.வ. ஏற்புப்பிள்ளை

     [Skt. {}+put-tra → த. போசியபுத்திரன்.]

போசிவல்லபம்

 போசிவல்லபம் bōcivallabam, பெ. (n.)

போகிவல்லபம்(சங்,அக); பார்க்க;see pdgiVallabam.

 போசிவல்லபம் bōcivallabam, பெ.(n.)

போகிவல்லபம் (சங்.அக.); பார்க்க;see {} –vallapam.

     [Skt. {}+→ த. போசிவல்லபம்.]

போசுகதாது

 போசுகதாது pōcugatātu, பெ.(n.)

   மூவகைத் தாதுக்கள்; three dhathus (சா.அக.);.

     [Skt. poshaka + தாது.]

போசுதக்காய்

 போசுதக்காய் pōcudakkāy, பெ.(n.)

   கசகசா நெற்று (வின்.);; dried poppy heads.

     [U. post → த. போசுதக்காய்.]

போசுதக்காய்ச்செடி

 போசுதக்காய்ச்செடி pōcudakkāycceḍi, பெ.(n.)

   கசகசாச் செடி; poppy plant-garden poppy (சா.அக.);.

த.வ. கசகசாச்செடி

     [Skt. postukkai → த. போசுதக்காய்.]

போஞ்சான்

 போஞ்சான் pōñjāṉ, பெ. (n.)

   நெல்வகை; a kind of paddy.

போஞ்சி

போஞ்சி pōñji, பெ. (n.)

   1. கையணிவகை; a kind of wristlet.

   2. எலுமிச்சை பழச்சாறு; lime-juice and Sugar.

க. போஞ்செ

போஞ்சிக்காய்

 போஞ்சிக்காய் pōñjikkāy, பெ. (n.)

   அவரைக்காய்; field-bean.

போடகசுரம்

 போடகசுரம் pōṭagasuram, பெ.(n.)

   பயற்றளவு சிறு கொப்புளங்கள் உடம்பு முழுவதிலும் காணும் ஒருவகைக் காய்ச்சல்; fever due to the rising of blebs on the body (சா.அக.);.

மறுவ. அம்மைச்சுரம்.

     [போடகம்+சுரம்.]

போடகநாறி

 போடகநாறி pōṭaganāṟi, பெ.(n.)

போதக நாறி பார்க்க;see {} (சா.அக.);.

     [போடகம்+நாறி.]

போடகம்

போடகம் pōṭagam, பெ. (n.)

   1. புண்(வின்);; boil tumour.

   2. அம்மைக் கொப்புளம் (சங்,அக);; pock in small pox.

   3, கொப்புளிப்பான்;(சங்.அக);

 measles.

   4. அம்மை; small pox.

     [போடு → போடகம்]

 போடகம் pōṭagam, பெ.(n.)

   1. புண் (வின்.);; boil, tumour.

   2. அம்மைக் கொப்புளம் (சங்.அக.);; pock in small pox.

   3. கொப்புளிப்பான் (சங்.அக.);; measles.

   4. அம்மை (இ.வ.);; small pox.

     [Skt. {} → த. போடகம்.]

போடசெமிக்கி

 போடசெமிக்கி pōṭasemikki, பெ.(n.)

   வயிறு; stomach (சா.அக.);.

போடம்

போடம் pōṭam, பெ. (n.)

   1. தகர்க்கை(சேதுபு. வேதா. 34. கீழ்க்குறிப்பு);; slapping.

   2. சொல்லுக்கு அடிப்படையாய் வரும் பொருளை உணர்த்தவல்ல இசை(பி.வி.18);; eternal and imperceptible element of Sounds and words and the real Vehicle of the idea which flashes on the mind when a Sound is uttered.

     [போடு → போடம்]

 போடம்1 pōṭam, பெ.(n.)

   1. தகர்க்கை (சேதுபு. வேதா.34, கீழ்க்குறிப்பு);; slapping.

   2. சொல்லுக்கு அடிப்படையாய் முதற் காலந்தொட்டு உள்ள பொருளை உணர்த்த வல்ல நாதம் (பி.வி.181);; eternal and imperceptible element of sounds and words and the real vehicle of the idea which flashes on the mind when a sound is uttered.

த.வ. ஒசை

     [Skt. {} → த. போடம்.]

 போடம்2 pōṭam, பெ.(n.)

   தேசம் ஐம்பத் தாறனுள் ஒன்று (திருவேங்.சத.97);; a country one of 56 {}.

     [Skt. {} → த. போடம்.]

போடி

 போடி pōṭi, பெ. (n.)

போட்டி (CG); பார்க்க;see pdff.

     [போட்டி → போடி ]

 போடி pōṭi, பெ. (n.)

போடியார்யாழ்ப் பார்க்க; See põgiyar.

     [போடு → போடி ]

     ‘இ’ வினைமுதல் ஈறு.

போடி’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போடியார்

 போடியார் pōṭiyār, பெ. (n.)

   நிலக்கிழார்; landed proprietor.

     [பாடி → போடி → போடியார்]

போடு

போடு pōṭu, பெ. (n.)

   1. எடுப்பாயுள்ளது; anything striking or impressive as a speech.

அவன் ஒரு போடு போட்டான், எல்லாரும் ஒடுங்கினார்கள்

   2. நற்பேறு; luck.

     [போ → போடு]

 போடு pōṭu, பெ. (n.)

   மொட்டை; taldness Shaven Condition.

     [மொட்டையோடு → போடு]

 போடு pōṭu, பெ. (n.)

   1. பொந்து; hole opening, cleft.

     ‘வயல் வரப்பில் போடு பாய்ந்திருப்பதால் பாய்ச்சின நீர் நிற்பதில்லை’

   2. கோட்டையடுப்பு பார்க்க.

     [புல் பொல் → பொள் → பொத்து பொட்டு → போடு]

 போடு pōṭu, பெ.(n.)

   1. காடுவெட்டி உண்டாக்கிய விளை நிலம்; deforested agriculture land.

   2. உழப்படாத கரம்பு நிலம்; land left uncultivated.

மறுவ பேடு, வேடு.

தெ போடு

     [போடு-வெட்டு தாக்கு போடு-மரம் வெட்டிய வெறு நிலம்]

போடு காடு

 போடு காடு pōṭukāṭu, பெ. (n.)

   மலைச் சார்வில் புன்செய் வேளாண்மை செய்யக் கூடிய நிலம்; land fit for raising dry crops on the hills (w);

     [போடு + காடு]

போடு பாய்-தல்

 போடு பாய்-தல் pōṭupāytal, செ.கு.வி. (v.i.)

   வயல் வரப்பில் வெடிப்புண்டாதல்; to have defts in ridges.

     [போடு + பாய்]

போடு-தல்

போடு-தல் pōṭudal, செ.குன்றா.வி. (v.t.)

   1. எறிதல்; to cast down, throw a short distance, to cast away.

பூத்த கடுக்கையைச் சிறிதும் போடா (இரகு. ஆற்று.19);

   2 இடுதல்; to put, set in a position, lay.

புல்லாயினு மொருபச்சிலை யாயினும் போட்டிறைஞ்சி’ (தாயு. பாயப்புலி. 31);

   3. தாழ்முதலியன இடுதல்; to fasten, as a bott.

கதவு போட்டாயிற்றா?’

   4. பூணுதல்; to put on, as ornaments.

     ‘வயிரமாலை பொலியப் போட்டு’ (இரகு. இலவண.40);

   5. ஈனுதல்; to bring forth, as animals, to put forth, yield, as fruittree.

வாழை குலை போட்டது.

   6. அச்சிட்டு வெளிப் படுத்துதல்; to bring out, to publish.

புத்தகம் போட்டான்

   7. கணக்குச் செய்தல்; to work, as a sum.

   8. வரைதல்; to draw, as a figure.

   9. பரிமாறுதல்,

 to serve, to Stamp, to teat, as a drum.

செருப்பா லொருவன் போடானோ (தனிப்பா.1,41,80);

   10. அடித்தல்; to strike, to stamp.

   11. விதைத்தல்; to sow,plant.

   12. பயன்படுத்தல்; to use, as totacco.

புகையிலை போடுகிறவன்’

   13. கள்முதலியன குடித்தல்; to drink, as toddy.

     “.அந்தத் தடியன் போட்டுக்கொண்டு வந்து வம்பு வளர்க்கிறான்.”

   14. விடுத்தல்; to lose, to drop of.

வீரமுங் களத்தே போட்டு (கம்பரா. கும்பக. 1);

   15. பணமுதலியன கட்டுதல்; to pay, invest.

பணம் போட்டு வாங்கினான்

   16. பிரித்து இடுதல்; to cast, as lots, to allot.

போடுகால்

 போடுகால் pōṭukāl, பெ. (n.)

   தரிசுநிலத்தை முதல் முறையாக உழுது பயிரிடுகை; first cultivation in waste land.

     [போடு + கால்]

போடுகால் நிலம்

 போடுகால் நிலம் pōṭukālnilam, பெ. (n.)

   சிலகாலங்களில் மட்டும் பயிர் செய்யப்படும் நிலம்; and cultivated off and on and not annually.

     [போடுகால் +நிலம்]

போடுகால் பாத்தியம்

 போடுகால் பாத்தியம் pōṭukālpāttiyam, பெ. (n.)

   வெற்று நிலத்தை உழுது பயிர் செய்வதால் குடியானவனுக்கு நிலத்திலுண்டாம் உரிமை; customary right accruing to a farmer in an uncultivated waste brought by him under cultivation.

     [போடுகால் + பாத்தியம்]

போடுகை

 போடுகை pōṭugai, பெ. (n.)

   கப்பலோரத்துள்ள கைப்பிடி; bulwark.

     [போடு → போடுகை]

போடுதடி

 போடுதடி pōḍudaḍi, பெ. (n.)

   பயனற்றவன் (எறிந்த தடி);; lit, a stick thrown away, useless person (w);.

     [போடு +தடி ]

போடுதை

 போடுதை pōṭudai, பெ. (n.)

   சுவரைக் காக்கும் மேற்கட்டு; coping on a wall.

     [போடு → போடுகை → போடுதை ]

போடுமண்

 போடுமண் pōṭumaṇ, பெ. (n.)

   புதிதாகக் கொணர்ந்து கொட்டிய மண்; loose earth freshly thrown.

     [போடு + மண்]

போடுர்

 போடுர் pōṭur, பெ.(n.)

   தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்; a village in Dharmapuri Dt.

போடுவான்

 போடுவான் pōṭuvāṉ, பெ. (n.)

   தோசை முதலிய பணியாரத்தில் சேர்க்கும் உளுத்தமா; mashed black gram used in preparing ricecajes.

     [போடு → போடுவான்]

போடோபில்லி

 போடோபில்லி pōṭōpilli, பெ.(n.)

   சீன நாட்டுச் செடி; a chinese plant (சா.அக.);.

போட்கன்

போட்கன் pōṭkaṉ, பெ. (n.)

   1. பொய்யன்; lar.

ஆராய்ந்தால் அதுதானும் போட்கன்’ (ஈடு 8, 10, 1);

   2, சுணைகேடன்; person deviod of shame or modesty.

   போட்கன் மிதித்த;வடிப் பாட்டிற் பொடித்தான் கொணர்ந்து பூசிர்கள் (திவ். நாய்ச் 13, 6);

     [ புல் → பொல் → பொள் → போள் → போட்கன்]

போட்டடுப்பு

 போட்டடுப்பு pōḍḍaḍuppu, பெ. (n.)

போடு;(இ.வ.); பார்க்க;see pogu.

 a kind of oven.

     [போடு + அடுப்பு]

போட்டடை-த்தல்

 போட்டடை-த்தல் pōḍḍaḍaittal, செ.குன்றா.வி. (v.t.)

   திணித்தல்; to stuff, cram, as food.

     [போடு → போட்டு + அடை ]

போட்டி

போட்டி pōṭṭi, பெ. (n.)

   1. எதிரிடை; rivalry emulation.

தாட்டிகமுடன் வெகுபோட்டி போட்டிகளாக (இராமநா. உயுத், 15);

   2. கேலி(யாழ்.அக);; ridicule.

தெ. க. போடி

     [புல் → பொல் → பொள் → (பொட்டி); → போட்டி ]

   போட்டி-சமன்மை;இகலுதல்.

 போட்டி pōṭṭi, பெ. (n.)

   பந்தயம்; contest.

போட்டிக்காரன்

போட்டிக்காரன் pōṭṭikkāraṉ, பெ. (n.)

   1.எதிரி; rival. (w);.

   2. கேலிக்காரன்; one who ridicules or sneers. (யாழ்.அக);

     [போட்டி + காரன்]

போட்டிக்கை

 போட்டிக்கை pōṭṭikkai, பெ. (n.)

போட்டி(வின்); பார்க்க;see pdfs.

     [போட்டி → போட்டிகை → போட்டிக்கை]

     ‘கை’ தொ. பெ. ஈறு.

போட்டிவழக்கு

 போட்டிவழக்கு pōṭṭivaḻkku, பெ. (n.)

   இடையறா எதிர்வழக்கு(வின்);; continual rivalry or dispute.

     [போட்டி + வழக்கு ]

போட்டுக் கொடு-த்தல்

போட்டுக் கொடு-த்தல் pōḍḍukkoḍuttal, செ.குன்றாவி. (v.t.)

   1. கூடச் சேர்த்தளித்தல் (இ.வ.);; to add, supplement.

   2. பிறனுக்காகச் செய்தல்; to be for another, as a sum.

   3. அடித்தல்(வின்);; to slap, cuff.

   4. கோள்மூட்டுதல்; to tel tales.

     ‘எழுத்தரை ஏவலன் தலைமையாசிரியரிடம் போட்டுக் கொடுத்தான்’

     [போட்டு + கொடு- ]

போட்டுக்கொள்(ளு)-தல்

போட்டுக்கொள்(ளு)-தல் pōṭṭukkoḷḷudal, செ.குன்றாவி, (v.t.)

   1. பூணுதல்(வின்);; to wear.

   2. ஏற்றுக் கொள்ளுதல்(கொ.வ);; to take upon oneself.

     [ போட்டு + கொள்- ]

போட்டுப்பாண்டி

 போட்டுப்பாண்டி pōṭṭuppāṇṭi, பெ. (n.)

   ஒரு பாண்டி ஆட்ட வகை (மதுரை);; a children’s play.

     [போட்டு+பாண்டி]

போட்டுப்பொல்லாங்கு

போட்டுப்பொல்லாங்கு pōṭṭuppollāṅgu, பெ. (n.)

   1. குற்றம்(யாழ்.அக);; fault.

   2. வசை; abuse.

     [போட்டு + பொல்லாங்கு ]

போட்டுமாறு-தல்

போட்டுமாறு-தல் pōṭṭumāṟudal, செ.குன்றா.வி. (v.t.)

   1. குழப்புதல்; to confuse, to mix up.

   2. உழப்பிப் பேசுதல்; to equivocate.

     [போட்டு + மாறு-]

போட்டுவிடு-தல்

போட்டுவிடு-தல் pōḍḍuviḍudal, செ.குன்றா.வி. (v.t.)

   1. நழுவவிடுதல்; to drop.

   2. எறிதல்; to cast away.

   3. இழத்தல்; to lose.

   4. கொன்று கைவிடுதல்; to leave, abandon, as an elephant, after killing its enemy.

   5. மேற்போதல்; to surpass, to ovewrcome.

     [போட்டு + விடு- ]

போட்டுவை-த்தல்

போட்டுவை-த்தல் pōṭṭuvaittal, செ.குன்றா.வி. (v.t.)

   1. சேமித்துவைத்தல்; to lay up.

   2. காலந் தாழ்த்துதல்; to delay.

கடிதத்திற்கு மறுமொழி எழுதாமல் போட்டு வைத்திருக்கிறான்.

     [போட்டு + வை]

போண்டி

 போண்டி pōṇṭi, பெ. (n.)

   தோற்றவர்; defeated person.

     [போ-போண்டி]

போத

போத pōta, கு.வி.எ. (adv)

   1. போதுமானபடி; sufficiently.

போதக்கொடுத்தான்

   2. செவ்வை யாக; well rightly.

     ‘போதத் தன்செவித் தொளையிரு கைகளாற் பொத்தி (கம்பரா. இரணி:22);.

   3. விரைவாக; speediy.

உய்ய வேண்டிலெழுபோத நெஞ்சே (தேவா.640,8);

     [ போது → போத]

போதககுரு

போதககுரு pōtagaguru, பெ.(n.)

   சாத்திரப் பொருளை அறிவிக்கும் குரு (விவேகசிந்.பக். 28);; preceptor who explains the purport of the {}.

     [Skt. {} → த. போதககுரு.]

போதகசிலேட்டுமம்

போதகசிலேட்டுமம் pōtagasilēṭṭumam, பெ.(n.)

   1. நாவிலிருக்கும் ஒரு வகை நீர்ப்பசை; a variety of kapham named போதகம், which is said to be at the tongue (சா.அக.);.

போதகநாறி

 போதகநாறி pōtaganāṟi, பெ.(n.)

   கொள்ளிக் கட்டைத் தேக்கு; a kind of tree (சா.அக.);.

த.வ. கருந்தேக்கு

போதகன்

போதகன் pōtagaṉ, பெ.(n.)

   1. போதகா சிரியன் பார்க்க;see {}.

     “நியதிபுரிந் தருளுவான் போதகன்” (சைவச. ஆசார.30);.

   2. நாட்டையர்; pastor, ordained minister.

   3. ஒற்றன் (யாழ்.அக.);; spy.

     [Skt. {} → த. போதகன்.]

போதகப்புல்

 போதகப்புல் pōtagappul, பெ.(n.)

   ஒரு வகைப் புல்; a kind of grass (சா.அக.);.

போதகம்

போதகம் pōtagam, பெ. (n.)

   1. இளமை, (பிங்.);; youthfulness, infancy.

   2, யானைக், கன்று.(பிங்);; elephant calf.

     “வேழப்போதக மன்னவன் தாலோ’ (திவ்.பெருமாள்,7,1);

   3. யானை; elephant.

போதகமொன்று கன்றி (கம்பரா. விபீடண.113);.

   4. விலங்கின் பிள்ளை (சூடா);; youth of animals.

   5. போத்து 1,4. (பிங்);. பார்க்க

 போதகம் pōtagam, பெ. (n.)

பகளை(மலை); பார்க்க;see paşaaf.

 போதகம் pōtagam, பெ. (n.)

   அப்பவகை;(பிங்);; a kind of sweetmeat.

     [பொருத்து → பொத்து → போதகம்]

 போதகம் pōtagam, பெ. (n.)

   எட்டிமரம்(மலை.);; strychnine tree.

 போதகம்1 pōtagam, பெ.(n.)

   1. இளமை (பிங்.);; youthfulness, infancy, furenility.

   2. யானைக்கன்று (பிங்.);; elephant calf.

     “வேழப் போதகமன்னவன் தாலோ” (திவ். பெருமாள்.7,1);.

   3. யானை; elephant.

     “போதகமொன்று கன்றி” (கம்பரா.விபீடண. 113);.

   4. விலங்கின் பிள்ளை (சூடா.);; young of animals.

   5. ஓரறிவுயிரின் இளமை; sapling.

     [Skt. {} → த. போதகம்1.]

 போதகம்2 pōtagam, பெ.(n.)

   பசளை என்னும் கீரை வகை; malabar night shade.

     [Skt. {} → த. போதகம்2.]

 போதகம்3 pōtagam, பெ.(n.)

   1. அறிவுரை; spiritual teaching, as by a guru to his disciple.

   2. சொல்லிக் கொடுத்த அறிவு; instruction, tutoring.

அவனுக்கு அப்படிப் போதகம்.

     [Skt. {} → த. போதகம்.]

 போதகம்4 pōtagam, பெ.(n.)

   1. காஞ்சிரை; nuxvomica tree.

   2. குழந்தைப் பருவம்; infancy.

   3. புலி, சிங்கம் இவைகளின் குட்டி; the young of tiger, lion etc.

   4. திப்பிலி; long pepper.

   5. நாக்கிலுள்ள ஒரு வகை நீர்ப்பசை; a variety of kapham.

   6. வாலைப்பூநீர்; dew. (சா.அக.);.

 போதகம்5 pōtagam, பெ.(n.)

   போதகா, பேரண்டம், தலையோடு; cranium (சா.அக.);.

போதகாசிகம்

 போதகாசிகம் pōtagācigam, பெ.(n.)

   மட்டிச் சாம்பிராணி; benzoin (சா.அக.);.

போதகாசிரியன்

போதகாசிரியன் pōtakāciriyaṉ, பெ.(n.)

   1. கல்வி கற்றுக்கொடுப்போன்; teacher.

     “நாலுரை போதகாசிரியர்” (இலக்.கொத். பாயி.6);.

   2. குருவம் (சைவச.ஆசார.28, உரை);; a religious preceptor, one who initiates into religious mysteries.

     [Skt. {} → த. போதகா சிரியன்.]

போதகி

போதகி pōtagi, பெ.(n.)

   1. சளியின் மேலீட்டினாலேற்படும் கண்களில் கடுகள வுள்ள கட்டிகள்; small mustard size blabs in the eye due to excess of phlegm humour.

   2. பெண் ஊர்க்குருவி; a female species of sparrow.

   3. பசளைக் கொடி; spinach climber.

   4. வேங்கை மரம்; a tree pterocarpus marsupium.

   5. சீரகம்; cumin seed.

   6. ஒரு வகைக் கண்நோய்; a kind of eye disease.

   7. போதகிவர்த்தமம் பார்க்க;see {} (சா.அக.);.

போதகிவர்த்தமம்

 போதகிவர்த்தமம் pōtagivarttamam, பெ.(n.)

   கண் இமைகளினுட் பாகத்தில் செந்நிறமான கட்டிகளுண்டாகி அரத்தம் வடிந்து கொண்டு நமைச்சலுடன் கூடிய மிக்க வலியை யுண்டாக்குமோர் கண்ணோய்; a number of red boils or postules resembling red mustard seeds attended with pain, itching and exudation of blood (சா.அக.);.

போதக்கட்டை

 போதக்கட்டை pōtakkaṭṭai, பெ. (n.)

போதிக்கட்டை பார்க்க;see podikkatal.

     [ போதி + கட்டை → போதக்கட்டை]

போதக்காடு

 போதக்காடு pōtakkāṭu, பெ.(n.)

   அரூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Harur Taluk.

     [புதர்+காடு]

போதக்கிரியை

 போதக்கிரியை pōtakkiriyai, பெ.(n.)

   குளிர்க் காய்ச்சலால் தானே புலம்பிக் கொண்டே உடுத்திருக்கும் துணியைக் கிழித்தும், உண்ணாமல் மயக்கத்தோடு கிடக்கும் ஒரு செய்கை; a delirious condition marked by crying, fainting, tearing of the cloth worn by him, etc. (சா.அக.);.

போதசு

 போதசு pōtasu, பெ.(n.)

   ஒரு வகைப்பூடு; an herb (சா.அக.);.

போதச்சயம்

 போதச்சயம் pōtaccayam, பெ.(n.)

   ஒரு வகை மயக்கம், அதிகழுத்தி; a long or prolonged sleep (சா.அக.);.

த.வ. நீள்துயில்

போதத்தம்

 போதத்தம் pōtattam, பெ.(n.)

   சிவப்பு மந்தாரை; a tree (சா.அக.);.

போதநாசினி

 போதநாசினி pōtanāciṉi, பெ.(n.)

   கோவைக்கொடி; a creeper-Bryonia grandis (சா.அக.);.

போதந்து

போதந்து pōtandu, வி.எ. (part)

   ஒரு சொல் விழுக்காடு; an expletive.

அது விலக்குப் பட்டது. ஈண்டுப் போதந்து (தொல்சொல், 422, இளம்பூ);

     [ போதா → போதந்து]

போதனமரம்

 போதனமரம் pōtaṉamaram, பெ.(n.)

   காசுக்கட்டி உண்டாகும் மரம்; catchu nigrum (சா.அக.);.

போதனம்

போதனம்1 pōtaṉam, பெ.(n.)

   1. போதனை (யாழ்.அக.); பார்க்க;see {}.

   2. தூபங்காட்டுகை; waving incense.

     [Skt. {} → த. போதனம்.]

 போதனம்2 pōtaṉam, பெ.(n.)

   1. புகை காட்டல்; funigating, exposing.

   2. அறிவு; knowledge.

   3. பாதாளமூலி; a creeper.

போதனாசக்தி

 போதனாசக்தி pōtaṉācakti, பெ.(n.)

   கற்பிக்குந் திறமை (வின்.);; ability to teacher.

     [Skt. {} → த. போதனாசக்தி.]

போதனாமுறை

 போதனாமுறை pōtaṉāmuṟai, பெ.(n.)

   கல்வி கற்பிக்கும் நெறி; mod. method in teaching.

     [Skt. {} → த. போதனா+முறை.]

போதனாவாக்கி

 போதனாவாக்கி pōtaṉāvākki, பெ.(n.)

   செம்முள்ளி; a red species of the Indian shade (சா.அக.);.

போதனை

போதனை1 pōtaṉai, பெ.(n.)

   1. கற்பிக்கை; teaching, instruction, advice, inculcation.

     “போதனை செய்ய வல்லார்” (தாயு.கற்புறு.3);.

   2. அறிவு; knowledge, wisdom.

   3. தூண்டுகை; instigation, counsel, tutoring, used ironically.

     “துன்மார்க்க போதனை செய்தனன்றோ” (தாயு.கற்புறு.4);.

த.வ. அறிவுறுத்தம்

     [Skt. {} → த. போதனை.]

 போதனை2 pōtaṉai, பெ.(n.)

போதனமரம் பார்க்க;see {}-maram (சா.அக.);.

போதப்பிரகாரம்

 போதப்பிரகாரம் pōtappirakāram, பெ.(n.)

   இலக்கணம், பரீக்கை எண்ணம் என்ற தருக்கவாதப் பிரிவு (வின்.);; terms, in three divisions, viz..,{}.

     [Skt. {} → த. போதப்பிரகாரம்.]

போதப்புறா

 போதப்புறா pōtappuṟā, பெ. (n.)

   புறாவகை(MM);; imperial pigeon.

போதம்

போதம் pōtam, பெ. (n.)

   1. மரக்கலம்(திவா);; ship boat.

     ‘போதங்கொ னெடுந்தனிப் பொருவில் கூம்பொடு (கம்பரா.பள்ளிபடை.68);

   2. 2ஆம் விண்மீன் (பிங்.);; the second naksatra.

   3. போதகம்1, 2 (அக.நி); பார்க்க. ‘

   4. மனைக்கட்டு (யாழ்.அக);; house-site.

 போதம்1 pōtam, பெ.(n.)

   1. மெய்யறிவு (ஞானம்); (சூடா.);; wisdom.

     “போத மொத்தனன் மாருதி” (கம்பரா.முதற்போர்.222);.

   2. அறிவு; knowledge, understanding, intelligent.

     “போதத்தி னகன்று” (பெருங். உஞ்சைக்.43, 61);.

     [Skt. {} → த. போதம்1.]

 போதம்2 pōtam, பெ.(n.)

   1. மரக்கலம் (திவா.);; vessel, ship, boat.

     “போதங்கொ ணெடுந் தனிப் பொருவில் கூம்பொடு” (கம்பரா. பள்ளிபடை.68);.

   2. தாழி (பரணி); விண்மீன் நாள் (பிங்.);; the second naksatra.

   3. மனைக்கட்டு (யாழ்.அக.);; house site

     [Skt. {} → த. போதம்2.]

 போதம்3 pōtam, பெ.(n.)

   யானைக்கன்று; young of an elephant (சா.அக.);.

போதயத்தம்

 போதயத்தம் pōtayattam, பெ.(n.)

   பட்டாணி; pea pulse (சா.அக.);.

போதயந்தரத்தான்

 போதயந்தரத்தான் pōtayandarattāṉ, பெ.(n.)

   சிறுகாடை; a bird;

 quail (சா.அக.);.

போதர

போதர pōtara, கு.வி.எ (adv.)

   அதிகமாக; abundantly, plentiful.

போதாக் கனவிற் கண்டு (திவ்.திருக்குறுந்4);

போதரவு

போதரவு pōtaravu, பெ. m.

   1. போகை; passing, going.

புகுவதாவதும் போதர வில்லதும் (திருவாச.5.36);

   2. செலுத்துகை; sending despatching.

   3. கொண்டு வருகை(வின்.);; bringing.

     [போது → போதரவு]

 போதரவு pōtaravu, பெ. (n.)

   1. நயச்சொல்; respectfulness of language, blandishment.

     ‘போதரவான சொல்

   2. நல்லுதவி; civility, urbanity.

   3. பொய்ப்புகழ்ச்சி; adulation, flattery.

   4. பேணுகை; using anything with Case.

     [போது → போதரவு]

போதலிப்பு

 போதலிப்பு pōtalippu, பெ. (n.)

போதரவு;(யாழ்ப்.); பார்க்க;see podaravư.

     [போது → போதலிப்பு]

போதலிமை

 போதலிமை pōtalimai, பெ. (n.)

போதரவு;(யாழ்.அக.); பார்க்க;see podaravư.

     [போது → போதலிமை]

போதலை

 போதலை pōtalai, பெ. (n.)

   மேல் முந்தி; upper part of the cloth or saree.

     [பூ+தலை]

போதவாகன்

 போதவாகன் pōtavākaṉ, பெ. (n.)

   தோணியோட்டுபவன்(சங்.அக);; boatman.

 போதவாகன் pōtavākaṉ, பெ.(n.)

   தோணி யோட்டுபவன் (சங்.அக.);; boatman.

த.வ. ஓடக்காரன்

     [Skt. {} → த. போதவாகன்.]

போதா

போதா pōtā, பெ. (n.)

   பெருநாரை (சிலப்.10.117.உரை);; cyrus crane.

போதா-தல்

போதா-தல் pōtātal, செ.குன்றா.வி. (v.t.)

   1. கொண்டுபோதல்(பிங்.);; to carry away.

   2. கொண்டுவருதல்(வின்);; to bring (w.);

   3. எதிர்கொண்டு போதல்(சூடா);; to welcome, receive with Courtesy.

     [போ + தா]

போதா-தல்(போதருதல்)

போதா-தல்(போதருதல்) pōdādalpōdarudal, செ.கு.வி. (v.i.)

   1. செல்லுதல்; to go, pass.

புறங்கடை போதரவிட்ட நுமரும் (கலித்.56);.

   2. திரும்புதல்; to return.

போதரும்போ தச்சம் (நாலடி,83);

   3. வருதல்; to come.

போதர் கண்டாயிங்கே போதர்கண்டாய் (திவ். பெரியாழ்.2.9,6);

   4. பெறப்படுதல்; to be interred.

     ‘ஆண்டிருந்து துய்ப்பரென்பது போதரும். திருக்கோ.1உரை)

     [போ + தா]

போதாக்காலம்

 போதாக்காலம் pōtākkālam, பெ.(n.)

   தீக்காலம்(வின்.);; time of misfortune, evil days.

     [போது + ஆ + காலம்]

     ‘ஆ’ – எம.இ.நி.

போதாக்குறை

 போதாக்குறை pōtākkuṟai, பெ. (n.)

போதாக்குறைச்சல் பார்க்க;see peda-kKuraiCCal.

     [போது + ஆ + குறை]

     ‘ஆ’ – எம.இ.

போதாக்குறைக்கு

 போதாக்குறைக்கு pōtākkuṟaikku, வி.எ. (adv)

   உள்ளவை போதாதென்று; as though not sufficient.

போதாக்குறைக்குப் பிள்ளையும் பிறந்தது.

     [போது + ஆ + குறை + கு]

     ‘ஆ’ – எ.ம.இ.

போதாக்குறைச்சல்

 போதாக்குறைச்சல் pōtākkuṟaiccal, பெ.(n.)

   அதிகப்படி(வின்.);; supplement, addition to make up any deficiency.

     [போது + ஆ + குறைச்சல்]

     ‘ஆ’ – எம.இ.நி.

போதாதகாலம்

 போதாதகாலம் pōtātakālam, பெ. (n.)

போதாக்காலம் பார்க்க;see podā-k-kalam.

     [போதாத + காலம்]

போதாமை

போதாமை pōtāmai, பெ. (n.)

   1. மனவொப் பின்மை; estrangement between persons.

   2. குறைவு; insufficiency, unfitness.

   3. பற்றாக்குறை; Scarcitx.

     [போது + ஆ + மை → போதாமை]

     ‘ஆ எம.இ.நி’மை’ பண்புப்பெயரீறு.

போதாயனர்

போதாயனர் pōtāyaṉar, பெ.(n.)

   1. அற (தரும); நூலும் கற்ப நூலுமியற்றிய ஒரு முனிவர்; a writer of {} and Kalpa.

   2. போதாயனீயத்தில் கூறப்பட்ட முறை (விதி);களைப் பின்பற்றுபவர்; follower of the kalpa or the manual of rites of {}.

     [Skt. {} → த. போதாயனார்.]

போதாயனீயம்

போதாயனீயம் pōtāyaṉīyam, பெ.(n.)

   வைதிகச் சடங்குகளைச் செய்யுமுறை கூறும் (கற்ப); நூல்வகை (தொல்.பொ.75, உரை);; a kalpa or ceremonial guide containing short aphoristic rules for the performance of {}sacrifices.

     [Skt. {} → த. போதாயனீயம்.]

போதாலயம்

போதாலயம் pōtālayam, பெ.(n.)

   அறிவுக் கிருப்பிடம்; temple of wisdom.

     “போதா லயத்துட்புலன்” (திருமந்.1707);.

த.வ. அறிவாலயம்

     [Skt. {} → த. போதாலயம்.]

போதி

போதி pōti, பெ. (n.)

மலை (பிங்);.

 hill, mountain.

 போதி pōti, பெ. (n.)

போதிகைக்கட்டை பார்க்க;see põdigai-k-kattai.

     “இந்திர நீலக்கல்லுருத்தலை போதியது (திருவிளை,திருமண.64);

     [போது → போதி]

 போதி1 pōtittal,    4 செ.கு.வி.(v.i.)

   விருப்ப முண்டாதல்; to have inclination.

     “போதித்த போது வருவேன்” (நாஞ்.);.

     [Skt. {} → த. போதி-த்தல்.]

 போதி2 pōti, பெ.(n.)

   1. அறிவு; wisdom, knowledge.

     “போதிச் செல்வம் பூண்டவர்” (சீவக. 366);.

   2. அரசமரம்; pipal, as the tree of wisdom.

     “போதிமன்றத்து” (சிலப்.23, 76);.

     [Skt. {} → த. போதி2.]

போதிகை

போதிகை pōtigai, பெ. (n.)

போதிகைக் கட்டை பார்க்க.’போதிகைத் தலத்து” (கம்பரா. நகரப்.25);

     [ போதி → போதிகை]

 போதிகை pōtigai, பெ. (n.)

   பல்லவர் காலச் சிற்பப் பாணியிலமைந்த சிற்ப வடிவம்; a feature in sculpture.

     [போது+போதிகள்+கள்]

போதிகைக்கட்டை

போதிகைக்கட்டை pōtigaiggaṭṭai, பெ. (n.)

   1. தூண்மேல் வைக்கும் தாங்குகட்டை; capital of a pillar.

   2. குறுந்தறி:(பிங்);.

 stake.

     [ போதிகை + கட்டை]

போதிகைத்துண்

 போதிகைத்துண் pōtigaittuṇ, பெ. (n.)

   குறுந்தூண் (யாழ்.அக.);; stout pillar.

     [ போதிகை + துரண்]

போதிகைப்பலகை

 போதிகைப்பலகை pōtigaippalagai, பெ.(n.)

   தூணின் தலையில் வைக்கும் பலகை;த.வ. அரசாணிப் பலகை

     [Skt. bodhgai → த. போதிகை+பலகை.]

போதிசத்துவன்

போதிசத்துவன் pōtisattuvaṉ, பெ.(n.)

   1. அறிவு முதிர்ந்து அடுத்தபிறவியில் புத்தனாக ஆவதற்குரியான (மணிமே.பக். 506, அரும்.);; buddhist ascetic who has arrived at the stage when there is only one more birth before attaining buddhahood.

   2. புத்தன்; Gautama, the Buddha.

     [Skt. {}-sattva → த. போதிசத்துவன்.]

போதினன்

போதினன் pōtiṉaṉ, பெ. (n.)

   நான்முக (தாமரைப் பூவில் இருப்பவன்);; Brahama,seated on the lotus.

     “திருமாலும் போதினனு தேவரும்” (சிவதரு. பாயி..2);

     [போது → போதினன்]

போதிய

 போதிய pōtiya, பெ, எ, (adj).

   போதுமா போதிய அளவு; adeguate, competes Suitable.

     [போது → போதிய]

போதியகுடி

 போதியகுடி pōtiyaguḍi, பெ. (n.)

   மதிப்பிற்குறிய குடும்பம்(வின்.);; respectal family, (w);

     [போதிய + குடி ]

போதியல்

 போதியல் pōtiyal, பெ.(n.)

போதிகைப் பலன் (இ.வ.); பார்க்க;see põdigai-p-palagai.

 போதியல் pōtiyal, பெ.(n.)

போதிகைப் பலகை (இ.வ.);;see {}.

த.வ. அரசாணிப் பலகை

     [Skt. bodhgai → த. போதியல்.]

போதியவன்

 போதியவன் pōtiyavaṉ, பெ. (n.)

   கண்ணி வான்(யாழ்.அக);; gentlemen, nobleman.

     [போது → போதியவன்]

போது

போது pōtu, பெ. (n.)

   1. மலரும் பருவத்தரும்பு; flower bud ready to open.

     ‘காலை பகலெல்லாம் போதாகி’ (குறள். 1227);;

 flower bud ready to open.

   2. மலர் (திவா);; flower.

போதார் கூந்தல்” (பு.வெ.12.இருபாற்.5.கொளு.);

   3. செல்வி (திருவிருத்.76, அரும்.பக்.389);,

 freshness, beauty.

 போது pōtu, பெ. (n.)

   1. பொழுது 1,2,3, (சூடா); பார்க்க

     ‘போதுஞ் சென்றது குடபால்” (கம்பரா வனம்புகு. 14);

 போது pōtu, வி.எ. (adv).

   பொழுதில்; when, while, during the time that.

ஆட்கொண்ட போதே கொண்டிலையோ (திருவாச. 33,7);

ஒரி.க.போழ்து

     [போ → போது ]

போது செய்-தல்

போது செய்-தல் pōtuseytal, செ.கு.வி, (v.i.)

   1. பேரரும்பாதல்; to be ready to blossom, as a bud.

   2. மூடுதல்; to close.

     ‘கண் போது, செய்து'(திவ்.இயற்.திருவிருத்93);

   3.அலருதல்(வ்யா,);

 to blossom, (திவ்.இயற.திருவிருத். 93);

   4.உண்ணுதல்; to eat.

     “வெண்ணெய் போது செய்தமரிய புனிதர்” (திவ். பெரியதி. 87,4);

   5. குரல் மாறுதல் (ஈடு, 2, 3,7);; to change, as voice on account of phlegm.

     [போது + செய்- ]

போது போக்கு-தல்

போது போக்கு-தல் pōdupōkkudal, செ.கு.வி. (v.i.)

   காலங்கழித்தல்; to spend time.

     ‘புறனல ரவனுறப் போது போக்கி’ (கம்பரா.உருக்கா.14);

     [போது + போக்கு- ]

போது போதாதெனல்

 போது போதாதெனல் pōtupōtāteṉal, பெ. (n.)

   சிறிது குறைந்ததன் குறிப்பு; expr of slight deficiency or insufficiency.

     [போதும் + போதாது + எனல்]

போது வைகுதல்

போது வைகுதல் pōduvaigudal, பெ. (n.)

   காலம் நீட்டிக்கை; being late.

     “அழுது செய்கைக்குப் போதுவைகிற்று.” (ஈடு,7,10.4);

     [போது + வைகுதல்]

போது-தல்

போது-தல் pōdudal, செ.கு.வி. (v.i.)

   1. போதியதாதல்; to be adequate, to suffice.

     ‘உலகமெலா முரல் போதா தென்றே’ (திருவாக, 9, 6);

   2. மதிக்கப்படுதல்(வின்);; to be respectable.

   3, #5(5#lum ĝisb; to be competent, fit, suitable.

 போது-தல் pōdudal, செ.கு.வி. (v.i.)

   1. செல்லுதல்; to go, pass.

போது நான் வினைக்கேடன் (திருவாச, 5, 22);

   2. ஒழுகுதல்; to conduct oneself, behave.

அறனை அறிந்து போதுதல்… சான்ற வர்க்கெல்லாம் முறைமை’ (கலித், 139,2, உரை);

     [போ → போது-தல்]

போதுகட்டுதல்

போதுகட்டுதல் pōdugaṭṭudal, பெ. (n.)

   1. காலை, மாலைகளில் முகில் சில நாழிகை வரை கதிரவனை மறைத்துக் கொண்டி ருக்கை; hiding of the sun by clouds for some time in the morning and the evening.

   2. மழைபெய்வதற்கு அறிகுறியாய்க் காரிக் கிழமை (சனிக்கிழமை); மாலையும் அடுத்த நாட் காலை யும் முகில்கதிரவனை மறைத்திருக்கை; hiding of the sun by clouds on a saturday evening and the next morning as indicative of heavy rain during the week.

     [போது + கட்டுதல்]

போதுகாலம்

 போதுகாலம் pōtukālam, பெ. (n.)

   பேறுகாலம்; time of childbirth.

     [போது + காலம்]

போதுஞ்சாட்சி

 போதுஞ்சாட்சி pōtuñjāṭci, பெ. (n.)

   தகுதியான சாட்சி(வின்);; competent witness.

     [ போது + SKț sāksi. த.சாட்சி]

போதுபடுதல்

 போதுபடுதல் bōdubaḍudal, பெ. (n.)

   கதிரவன் மறைவு; sunsel.

     [போது + படுதல்]

போதுபோக்கு

போதுபோக்கு pōtupōkku, பெ. (n.)

   1. காலங்கழிக்கை; passing of time.

   2. விளையாடி இளைப்பாறுகை; recreation.

     ‘போதுபோக்காகச் சில பிரபந்தங்களைப் பண்ணுவிக்கப் பார்த்தோம்.” (ஈடு,7,9, ப்ர);

     [போது + போக்கு]

 போதுபோக்கு pōtupōkku, பெ. (n.)

விளையாட்டு

 play;past time.

     “தோளைக் கழித்துத் தலையைச் சரித்துப் போதுபோக்காக நின்று கொன்றபடி” (ஈடு.1.67);

     [போது + போக்கு]

போதைப்புல்

போதைப்புல் pōtaippul, பெ. (n.)

   1. கர்ப்பூரப்புல்(வின்.);; lemon-grass (w);

   2. காவட்டம்புல்(சங்.அக);;பார்க்க;see kāvasampus citronella grass.

     [போதை + புல்]

போத்தல்

 போத்தல் pōttal, பெ.(n.)

   கண்ணாடிக் குப்பி (இ.வ.);; bottle.

     [E. bottle → த. போத்தல்.]

போத்தா

போத்தா pōttā, பெ.(n.)

   1. போக்தா பார்க்க;see {}.

     “நானே போத்தா” (விநாயகபு.83, 85);.

   2. உண்போன்; one who eats.

     [Skt. {} → த. போத்தா.]

போத்தா-தல்

போத்தா-தல் pōttātal, செ.கு.வி.

   1. போதலைச் செய்தல்; to go, proceed.

நல்வாயிற் போத்தந்த பொழுதினான். கலித்.84,5.)

   2. வெளிவருதல்; to get out, come out.

     ‘போத்தந்து தாயர் தெருவிற் றவிர்ப்ப (கலித்.84,14);

     [போ + தா → போத்தா-தல்]

போத்தா’-தல்(போத்தருதல்)

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போத்தி

போத்தி pōtti, பெ. (n.)

   1. பாட்டன்; grand father.

   2. மலையாளக் கோயில் பூசாரி; brahman temple priest in Malabar.

     [போற்றி → போத்தி]

 போத்தி pōtti, பெ.(n.)

   இறந்துபோனவ-ன்-ள்; deceased person.

     “ஆஜரிருக்கும் குடிபோத்தி யென்னவும்” (தாசீல்தார்நா.69);.

     [Skt. Arab. {} → த. போத்தி.]

போத்திராயுதம்

 போத்திராயுதம் pōddirāyudam, பெ.(n.)

போத்திரி பார்க்க (சங்.அக.);;see {}.

     [Skt. {} → த. போத்திராயுதம்.]

போத்திரி

 போத்திரி pōttiri, பெ. (n.)

   பன்றி(சூடா);; hog, pig.

     [போத்தி → போத்திரி]

 போத்திரி pōttiri, பெ.(n.)

   பன்றி (சூடா.);; hog, pig.

     [Skt. {} → த. போத்திரி.]

போத்திருத்துவம்

போத்திருத்துவம் pōttiruttuvam, பெ.(n.)

   1. நுகர்ச்சிக்கு வினைமுதலாதற்றன்மை (சி.சி.2, 80, சிவஞா.);; condition of being the enjoyer.

   2. நுகரும் தன்மை (சி.சி.2, 80);; capacity or desire for enjoyment.

     [Skt. {}-tva → த. போத்திருத்துவம்.]

போத்து

போத்து pōttu, பெ. (n.)

   1. பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் முதலிய விலங்கேற்றின் பொது(தொல்.பொருள்.597);; male of animals, especialy, cattle, tigers, deer.

   2. மயில் எழால். என்பவற்றின் ஆண்;(தொல்.பொ.598);; male of peafowl, herons and some other birds.

   3. முதலை, சுறாப்போன்ற நீர் வாழினத்து ஆண்; male of aguatic animals, as crocodile, etc (தொல்.பொ.580);

   4. ஓரறிவுயிரினிளமை, (தொல்.பொ.580);; sapling.

   5. புதுக்கிளை; tender branch or shoot of a tree.

மரம் பொத்து விட்டிருக்கிறது.

   6. செம்போத்து(சங்,அக); பார்க்க;sem pottu.

 crow-pheasant.

     [ பொத்து → போத்து]

 போத்து pōttu, பெ. (n.)

   1. பொந்து; hole, hollow.

   2, விலங்கு துயிலிடம்; lair of a beast.

   3. மனக்குற்றம்; vice, fault, as hollowness of mind.

     ‘போத்தறா புல்லறிவினார் (நாலடி,35);

     [பொத்து → போத்து]

போத்துக்கால்

போத்துக்கால் pōttukkāl, பெ. (n.)

காம்பு(தொல்.பொ.579உரை);

 sugar-cane.

     [ போத்து + கால்]

போத்துராசா

 போத்துராசா pōtturācā, பெ. (n.)

   சோம்பேறி; indolent person.

     “தடிப்போத்துராசா

     [ போத்து + இராசா]

     [ த. அரசன் Skt raja த. இராசா]

போத்துவெடி-த்தல்

 போத்துவெடி-த்தல் pōttuveḍittal, செ.கு.வி

   மரக்கிளை தோன்றுதல்(வின்);; to sprout, as saplings.

     [ போத்து + வெடி- ]

போந்த

போந்த pōnda, பெ.எ. (adj.)

   1. தகுந்த; fit suitable, proper, competent.

     “போந்த மனிதன்”(w);

   2. பழகின(வின்);; practsed.

   3. தீர்மான மான; final, ultimate.

உண்டுடுத் தின்பமாவதே போந்தநெறி (தாயு, சின்மயா.5);

     [போ → போந்த]

போந்தி

போந்தி pōndi, பெ. (n.)

   1. வீக்கம்(யாழ்.அக);; swelling.

   2. போந்திக்கால் பார்க்க;see póndi-k-kāl.

தெ. போத

     [போ → போந்தி]

போந்திக்கால்

போந்திக்கால் pōndikkāl, பெ. (n.)

யானைக் கால்(வின்);,

 elephantiasis (w.);

தெபோதஹாலு

     [பொந்தி → போந்தி → போந்திக்கால்]

போந்தி= வீக்கம்.தெ.போதாக்காலு.வே.க. (பக்.79);

போந்தின் கண்ணிக்கோன்

 போந்தின் கண்ணிக்கோன் pōndiṉkaṇṇikāṉ, பெ. (n.)

போரந்தின்றாரோன்(பிங்);. பார்க்க:

     [போந்து → போந்தின் + கண்ணி + கோன்]

போந்தின்றாரோன்

 போந்தின்றாரோன் pōndiṉṟārōṉ, பெ. (n.)

   சேரன்(சூடா.);; céra king, as decked with a garland of palmyra flowers.

     [போந்து → போந்தின் + தாரோன்]

போந்து

போந்து pōndu, பெ. (n.)

   1. போந்தை பார்க்க; see pondal.

அவன் பொன் முடிமேற் போந்து கண்டான்’ (பெருந்தொகை 690);

   2. பல்லி; lizard.

     [பொந்து → போந்து ]

போந்தை

போந்தை pōndai, பெ. (n.)

   1. பனை; palmyra palm.

     “போந்தை வேம்பே யாரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” (தொல். பொ. 60);

   2. இளம்பனை(திவா.);; young palmyra.

   3. பனை(அனுட);நாள்; the 17th naksatra.

     [போந்து → போந்தை]

 போந்தை pōndai, பெ. (n.)

   செஞ்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Senji Taluk.

     [போந்து-போந்தை (பனை);]

போனகம்

போனகம் pōṉagam, பெ.(n.)

   1. உணவு; food.

     “நால்வகைப் போனகமேந்தி” (மணிமே.28, 242);.

   2. அன்னம் (சைவச. பொது.454);; boiled rice.

   3. அப்பவருக்கம் (பிங்.);; a kind of cake.

   4. உண்ணுகை (பிங்.);; eating.

த.வ. ஆகூழுணவு

போன்

போன் pōṉ, பெ. (n.)

   1. பொறி; trap (ஈடு,2, 8, 4 ஜி);

   2. மலைக் குகை; cave running into the side of a hill.

   3. உலைக்கும் துருத்திக்கும் இடையில் சாய்வாகச் செல்லும் அடுப்புப் பாகம்; sloping cavity between the bellows and the over in a pôn-atuupu.

     [புல் → போல் → போன்]

போபடி

 போபடி pōpaḍi, பெ. (n.)

   உருவொற்றுமை, (வின்.);; trace.

தெ.போபடி

     [போல் + படி]

போபடிவிசாரி-த்தல்

 போபடிவிசாரி-த்தல் pōpaḍivicārittal, செ.கு.வி. (v.i.)

   திருட்டைப் பற்றித் துப்பு உசாவுதல்(வின்.);; to trace stolen property, to investigate about theft.

     [போபடி + விசாரி]

     [Skt. Bicåri → த.விசாரி.]

போம்

 போம் pōm, இடை. (part)

   ஓர் அசைச் சொல்(சது);; an expletive.

     [போ → போம்]

போம்பல்

 போம்பல் pōmbal, பெ. (n.)

நீர்க்கடம்பு(மலை);

 Water cadamba.

     [போம் → போம்பல்]

போயகாலம்

போயகாலம் pōyakālam, பெ. (n.)

போன காலம் பார்க்க;see ponakalam.(திவ். திருவாய். 2, 6,10);

     [போ + காலம் → போயகாலம்]

போயி

 போயி pōyi, பெ. (n.)

போகி (வின்); பார்க்க; see põg.

     [போகி + போயி]

போயிற்று

போயிற்று pōyiṟṟu, இடை (part)

ஒர் அசைநிலை(தொல், சொல். 425);,

 an expletive (தொல், சொல். 425);

     [போ → போயிற்று]

போய்ப்பாடு

போய்ப்பாடு pōyppāṭu, பெ. (n.)

   1. புகழ்; prise.

     “போய்ப்பாடுடைய நின்தந்தையும்” (திவ். பெரியாழ். 2, 3,1);.

   2. பெரிதாயிருக்கை; largeness.

சங்கங்கள் போய்ப்பாடுடையனவே’ (திவ். திருப்பா.26);

     [ போ → போய் + பாடு]

பாடு – தொ.பெ.ஈறு.

போய்வ-தல்

 போய்வ-தல் pōyvadal, செ.கு.வி, (v.i.)

   போதல் (கொ.வ.);; to go.

போர

போர pōra, வி.எ. (adv)

   மிகவும் (ஈடு,47ப்ர);; entirely, exceedingly.

     [போரு → போர]

போரடி

போரடி pōraḍi, பெ.(n.)

   1. தலையடிக் கதிர்ப்போரைக் கடாவிட்டு அடித்து நெல்லைப் பிரிக்கை; threshing.

   2. நெற்களம்; threshingfoor.

   3. தேங்காய் விளையாட்டு (யாழ்ப்.);; playing with Cocoanuts.

     [போர் → போரடி]

போரடி’-த்தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போரன்

 போரன் pōraṉ, பெ.(n.)

   வைக்கோல் தட்டை (யாழ்ப்.);; paddy silk.

     [போர் → போரன்]

போரப்பொலிய

போரப்பொலிய pōrappoliya, கு.வி.எ.(adv)

   முழுவதும்; fully, completely.

இவன் இவனைப் போரப் பொலியச் சொல்லுங்காட்டில்'(ஈடு.47.ப்ர.);

     [போர + பொலிய]

போராக்காலம்

போராக்காலம் pōrākkālam, பெ.(n.)

போதாக்காலம் பார்க்க;see p5da-k-kalam.

     [போதா → போரா]

போராசை

 போராசை pōrācai, பெ.(n.)

போர்நாட்டம் பார்க்க;see pdf-nāttam.

     [போர் + ஆசை]

போராடு-தல்

போராடு-தல் pōrāṭudal, பெ.(n.)

   1. பொருதல்; to fight, carry on war.

     “பூமியைப், போராடியிரந்தோருந் தம்மதென்பார்” (தாயு. பாராபா. 228);.

   2. தொந்தரவு படுதல்; to struggle.

   3. போரம் பேசுதல்; bargain (w.);.

     [போர் + ஆடு – தல்]

போராட்டக்களம்

 போராட்டக்களம் pōrāṭṭakkaḷam, பெ.(n.)

   போரிடுமிடம்; armagedon (or); warfield.

     [போராட்டம் + களம்]

போராட்டம்

போராட்டம் pōrāṭṭam, பெ.(n.)

   1. சண்டையிடுகை; fighting.

     “மடந்தையர் சிற்றின்பமோ… பொன்னாட்டும் வந்ததென்றாற் போராட்டமல்லவோ” (தாயு. எங்குநிறை.10);.

   2. சண்டை; combat, struggle.

   3. போட்டி; competition, rivalry.

   4. விடாமுயற்சி; contention, striving earnestly.

     [போராடு → போராட்டம்]

போரான்

போரான் pōrāṉ, பெ.(n.)

   குதிரைவகை; a kind of horse.

     “உயர்கனவட்டம் போரான்” (திருவாலவா.28,69);.

போரார்வம்

 போரார்வம் pōrārvam, பெ.(n.)

   போரிடும் எண்ணம்; fighting spirit.

     [போர் + ஆர்வம்]

போராற்றல்

 போராற்றல் pōrāṟṟal, பெ.(n.)

   போரிடும் ஆற்றல்; fighting capacity.

     [போர் + ஆற்றல்]

போரி

போரி pōri, பெ. (n.)

   முருகன் வழிபாட்டு இடமான திருப்போரூர்; tiru-p-põrūr sccred to god subrahmanya.

போரிவா ழாறுமா முகனே (திருப்போ.சந்:9,1);

     [போளுர் → போரி]

போரி’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போரிகை

 போரிகை pōrigai, பெ. (n.)

போதிகைக் கட்டை பார்க்க;see porikai

     [ போதிகை → போளிகை]

போரிக்கட்டை

 போரிக்கட்டை pōrikkaṭṭai, பெ. n போதிகைக்கட்டை பார்க்க;see port kattal.

     [போதி → போரி + கட்டை]

போரிடுதல்

 போரிடுதல் pōriḍudal, பெ. (n.)

   பொருதல்; one engaged in fight.

     [போர் + இடுதல்]

போரிலே போடு-தல்

 போரிலே போடு-தல் pōrilēpōṭudal, செ.குன்றா.வி. (v.t.)

   பயனற்றதாக்குதல்; to render useless.

     [போர் → போரிலே → போடு]

போரிழப்பு

 போரிழப்பு pōriḻppu, பெ. (n.)

   போரினால் உண்டாகும் இழப்பு; loss of war.

     [போர் + இழப்பு]

போரு-தல்

போரு-தல் pōrudal, செ.கு.வி. (v.i.)

   1. செல்லுதல்; to go on, proceed, to continue.

நீர் ஆதரித்துக்கொண்டு போரும் (குருபரம்.170);.

   2. மீண்டுவருதல்; to return.

   3. எட்டுதல்; to reach.

போரவிடாயெங்கள் பட்டை (திவ்.நாய்ச்,3,7);

   4. பொருள் பெறப்படுதல்; to be understood, as a meaning.

     ” பிரத்தியகர்த்த விசயமாயும் போருகையாலே (ஈடு,1,12);.

     [போது → போரு]

 போரு-தல் pōrudal, செ.கு.வி. (v.i.)

   1. போதி யதாதல்; to be enough, sufficient.

சிறு மானிடவரென்று எண்ணுகைக்குக் கூடப் பாற்றம் போராதபடியான நாம், (திவ். திருநெடுந் 21, வ்யா. பக்.198);

     [போது → போரு – தல்]

போருணர்ச்சி

 போருணர்ச்சி pōruṇarcci, பெ. (n.)

   போரிடும் மனப்பான்மை; fighting spirit.

     [போர் + உணர்ச்சி]

போருதவி

 போருதவி pōrudavi, பெ. (n.)

   போர்வீரனுக்கு உதவிசெய்கை; succour rendered to a warrior. (W);.

     [போர் + உதவி]

போரூக்கம்

 போரூக்கம் pōrūkkam, பெ. (n.)

   போரிடும் மனஎழுச்சி; fond of fighting.

     [போர் + ஊக்கம்]

போரெதிர்-தல்

போரெதிர்-தல் pōredirdal, செ.கு.வி. (v.i.)

   போர்செய்தலை மேற்கொள்ளுதல்; to set out to fight.

போரெதிந்தற்றர் (கலித்,89);

     [போர் + எதிர் – தல்]

போரேறு

போரேறு pōrēṟu, பெ. (n.)

   1. போர் செய்யவல்ல காளை; fighting bull.

போரேறொன் றுடையானு. மளகைக் கோனும் (திவ். பெரியதி. 2,10);

   2. போர்வீரன்; champion, hero.

புட்குழியெம்போரேற்றை (திவ்.இயற்.பெரிய, ம,117);

   3, செவ்வாய் கோள்; the planet mars. (சது.);

     [போர் + ஏறு]

போர்

போர் pōr, பெ.(n.)

   1. சண்டை; fight, battle war.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் (குறள்,758);

   2. மற்போர்; wrestling.

   3. இகல்; rivalry, competition.

     “வீணைவாட் போர்க்கலாம்” (சீவக. 620);

     [பொரு → போர்]

 போர் pōr, பெ. (n.)

   பகவின் சாணம் (யாழ்ப்);; Cow-dung.

போர் கல-த்தல்

 போர் கல-த்தல் pōrkalattal, செ.கு.வி. (v.i.)

   போர்புரிதல்(வின்.);; to engage in a battle.

     [போர் + கல-த்தல்]

போர்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போர்’-த்தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போர்க்கடம்

போர்க்கடம் pōrkkaḍam, பெ. (n.)

   சண்டை செய்வதாகிய வீரர் கடமை; the duty of a warrior to fight in battle.

     “போர்க்கடம் பூண்ட பொருவலித் தடக்கையின்’ (பெருங். உஞ்சைக் 53,91);

     [போர் + கடம்]

போர்க்கடா

 போர்க்கடா pōrkkaṭā, பெ. (n.)

   சண்டைக்காக வளர்க்கப்படும் ஆட்டுக்கடா (கொ.வ.);; fighting ram.

     [போர் + கடா]

போர்க்கட்டு-தல்

போர்க்கட்டு-தல் pōrkkaṭṭudal, செகுன்றா.வி. (v.t.)

   1. உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல்; to adjust settle.

   2. மறைத்து அடக்கிக் கொள்ளுதல்; to hide (யாழ்.அக.);

     [போர் + கட்டு – தல் ]

போர்க்கண்

போர்க்கண் pōrkkaṇ, பெ. (n.)

போர்க்களம், பார்க்க;see põr-k-kalam.

     “போர்க்கண் துணிபுனல்” (பரிபா. 6, 29);

     [போர்+ கண்]

போர்க்கதவு

போர்க்கதவு pōrkkadavu, பெ. (n.)

   1. பலகைகளை இணைத்த கதவு; batten door.

புலிப் பொறிப் போர்க்கதவின் (பட்டினப். 40);

   2. இரட்டைக் கதவு (சிலப். அரும். அகராதி);,

 folding doors, as joined.

     [போர் + கதவு]

போர்க்கப்பல்

 போர்க்கப்பல் pōrkkappal, பெ. (n.)

   போர்க்கலம்; war-ship.

     [போர் + கப்பல்]

போர்க்கருவி

 போர்க்கருவி pōrkkaruvi, பெ. (n.)

   படைக்கலம்; weapon of war.

     [போர் + கருவி]

போர்க்களத் தொழிதல்

போர்க்களத் தொழிதல் pōrkkaḷaddoḻidal, பெ. (n.)

   போரிற் புறங்கொடாது வீரன் பூசற்களரியிலே பட்டதைக்கூறும் புறத்துறை (பு.வெ. 2, 6, தலைப்பு);; theme describing a warrior fighting to the last on the battlefield without retreating.

     [போர்க்களம் + தொழிதல்]

போர்க்களப்படை

 போர்க்களப்படை pōrkkaḷappaḍai, பெ. (n.)

   போர்ப்படை; army.

     [போர் + களம் + படை]

போர்க்களம்

போர்க்களம் pōrkkaḷam, பெ. (n.)

   போரிடுமிடம் (பிங்);; field of battle.

போர்க்களம் பாடும் பொருநன்’ (பொருந. 57, உரை);

     [போர் + களம்]

போர்க்களரி

போர்க்களரி pōrkkaḷari, பெ. (n.)

போர்க்களம் பார்க்க;see por-k-kalam.

போர்க் களரியிலே விழுந்தான் (பு. வெ.2, 6, உரை);

     [போர் + களரி]

போர்க்களவீரன்

 போர்க்களவீரன் pōrkkaḷavīraṉ, பெ. (n.)

போர்வீரன் பார்க்க; see porveeran.

     [ போர் + களம் + விரன்]

போர்க்கவசம்

 போர்க்கவசம் pōrkkavasam, பெ.(n.)

   போர்த்தற்காப்புக் கருவிகள்; apparatus for defence.

     [போர் + கவசம்]

போர்க்காளை

 போர்க்காளை pōrkkāḷai, பெ. (n.)

   உடலிற் புள்ளியமைந்த எருது; bullock with sports on the body.

     [புகர் → போர் + காளை]

போர்க்குதிரை

 போர்க்குதிரை pōrkkudirai, பெ. (n.)

   போர்களக் குதிரை; war-horse.

     [போர் + குதிரை]

போர்க்குரல்

 போர்க்குரல் pōrkkural, பெ. (n.)

போர்முழக்கம் பார்க்க;see põrmulakkam.

     [போர் + குரல்]

போர்க்குறிப்பு

 போர்க்குறிப்பு pōrkkuṟippu, பெ. (n.)

   அரிக் கட்டுக்களின் கணக்கு; account of cornstalks Cut.

     [போர் + குறிப்பு]

போர்க்கெழுவஞ்சி

 போர்க்கெழுவஞ்சி pōrkkeḻuvañji, பெ. (n.)

   வஞ்சிமாலை சூடி போருக்குப் புறப்படும் வீரரைப் புகழும் சிற்றிலக்கியவகை(வின்);; panegyric on an army marching to battle, the warriors being decked with wreaths of wanji flowers.

     [போர்க்கு + எழு + வஞ்சி]

போர்க்கோலம்

போர்க்கோலம் pōrkālam, பெ. (n.)

   போரணி பூணுகை; military accoutrements, martial costume.

போர்க்கோல நீக்கி…. முலையார் மண்ணுறுப்ப வாடி’ (சீவக. 2352);

     [போர் + கோலம்]

போர்ச்சேணை

 போர்ச்சேணை pōrccēṇai, பெ. (n.)

போர்ப் படை பார்க்க;see pār-p-padai.

     [போர்+ சேனை]

போர்ச்சேவகன்

 போர்ச்சேவகன் pōrccēvagaṉ, பெ. (n.)

   படை வீரன்; soldier.

     [ போர் + S.K.ț sēvaka. த.சேவகன்]

போர்ச்சேவல்

 போர்ச்சேவல் pōrccēval, பெ. (n.)

   போர்ப் பந்தயத்துக்காக வளர்க்கப்படும் சேவல்; game-cock, fighting cock.

     [போர் + சேவல்]

போர்த் தேங்காய் அடி-த்தல்

 போர்த் தேங்காய் அடி-த்தல் pōrttēṅgāyaḍittal, செ.கு.வி. (v.t.)

   கொம்பு முறி விளையாட்டுக்கு முன் நிகழ்த்தப்பெறும் சிற்றுர் விளையாட்டு;     [போர்+தேங்காய்+அடி]

போர்த்தளவாடங்கள்

 போர்த்தளவாடங்கள் pōrttaḷavāṭaṅgaḷ, பெ. (n.)

   போர்க் கருவிகள்; military equipments.

     [போர் + தளவாடங்கள்]

போர்த்தினவு

 போர்த்தினவு pōrttiṉavu, பெ. (n.)

   போரிடும் திறமை; military skil.

     [போர் + சேனை]

போர்த்திறன்

 போர்த்திறன் pōrttiṟaṉ, பெ. (n.)

போர்ச்சுயப் பாவை பார்க்க; see por-caya-ppaиai.

     [போர் + திறன்]

போர்த்துக்கட்டு-தல்

போர்த்துக்கட்டு-தல் pōrddukkaṭṭudal, செ.குன்றாவி. (v.t.)

   1. உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல்; to adjust, settle.

   அடக்கிக் கொள்ளுதல்; to hide.

     [போர்த்து + கட்டு- ]

போர்த்துமூடு-தல்

போர்த்துமூடு-தல் pōrddumūṭudal, செ.குன்றா.வி. (v.t.)

போர்த்துக்கட்டு 2 (யாழ்.அக,); பார்க்க;see pÖrttư-k-ka!!ư.

     [போர்த்து + மூடு]

போர்த்தேங்காய்

 போர்த்தேங்காய் pōrttēṅgāy, பெ. (n.)

   பந்தயத்துக்குரிய வலிய தேங்காய்; heard cocount used in game or contest of physical strength.

     [போர் + தேங்காய் ]

போர்நடிவடிக்கை

 போர்நடிவடிக்கை pōrnaḍivaḍikkai, பெ. (n.)

   போர்நிலவரம்; state of warfare.

     [போர் + நடிவடிக்கை]

போர்நாட்டம்

 போர்நாட்டம் pōrnāṭṭam, பெ. (n.)

   போரிடும் ஆசை; war-disire.

     [போர் + நாட்டம்]

போர்நிறம்

போர்நிறம் pōrniṟam, பெ. (n.)

   போர்ப்பொலிவு; fighting vigour.

     ‘போர்நிறப் புத்தி சேன்ன் (சீவக.789,உரை);

     [புகர் → போர் + நிறம்]

போர்நிறுத்தம்

 போர்நிறுத்தம் pōrniṟuttam, பெ. (n.)

   இடைக்காலச் சண்டை நிறுத்தம்; armistice.

     [ போர் + நிறுத்தம்]

போர்பு

போர்பு pōrpu, பெ. (n.)

   தவசப்போர்; gran heap.

குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு (புறநா.353);

     [போர் → போர்பு]

போர்போடு-தல்

 போர்போடு-தல் pōrpōṭudal, செ.குன்றா.வி. (v.t.)

   தவச மணிகளைப் பிரித்தபின் வைக்கோலை மழையிற் கெடாத படி குவித்து மூடுதல் (யாழ்.அக);; to stack hay after threshing.

     [போர் + போடு – தல்]

போர்ப்படை

 போர்ப்படை pōrppaḍai, பெ. (n.)

   போரிடச் செல்லும் படை; force equipped for war.

     [போர் + படை]

போர்ப்படைபட்டியல்

 போர்ப்படைபட்டியல் bōrbbaḍaibaḍḍiyal, பெ. (n.)

   போர்ப்படை விளக்கக்குறிப்பு; army ist.

     [போர் + படை + பட்டியல்]

போர்ப்பறை

போர்ப்பறை pōrppaṟai, பெ. (n.)

   போர் முரசு; war-drum.

     “போர்ப்பறை முழங்கி யெங்கும்” (சீவக.758);

     [போர் + பறை]

போர்ப்பிச்சை

போர்ப்பிச்சை pōrppiccai, பெ. (n.)

   திருப்பணிக்காகக் களத்தில் தண்டப்படும் பழைய வரிவகை (G.Tn. D.I.313.);; a tax collected in ancient times at the time of the harvest from the ryots for repairs to temples.

     [போர் + பிச்சை]

 Skt. Lehiksä → த.பிச்சை

போர்ப்பு

போர்ப்பு pōrppu, பெ. (n.)

   1. போர்வை பார்க்க; see perva.

போர்ப்புறு முரசம் (பதிற்றுப்.84,2);

   2. நெற்போர்(பிங்.);; heap of threshed paddy.

     [போர் → போர்ப்பு]

போர்ப்பூ

போர்ப்பூ pōrppū, பெ. (n.)

   போரில் வீரர் அணிந்து கொள்ளும் அடையாளப்பூ; flower for garland used by warriors when going to battle.

     ‘போர்ப்பூவும் தார்ப்பூவும்’ (தொல்.பொ.626,உரை);

     [போர் + பூ ]

போர்ப்பை

போர்ப்பை pōrppai, பெ. (n.)

   1. உழவுசாலின் உட்குழிவு; gurrow.

   2. களை கொட்டின் அடி (யாழ்.அக.);,

 handle of a small hoe.

     [ போர் + யை]

போர்ப்பைக்காளை

போர்ப்பைக்காளை pōrppaikkāḷai, பெ. (n.)

   1. பொலியெருது; breeding bull.

   2. உழவுக்குரிய காளை (யாழ்.அக);; plough ox.

     [ புல் → பொல் → போல் → போர் → போர்ப்பை + காளை]

போர்ப்பையன்

 போர்ப்பையன் pōrppaiyaṉ, பெ. (n.)

போர்ப்பைக் காளை (யாழ்.அக); பார்க்க;see pórppas-k-kāsaf.

     [புல் → பொல் → போல் → போர் → போர்ப்பையன்]

போர்மகள்

போர்மகள் pōrmagaḷ, பெ. (n.)

   வெற்றித்திருமகள்; goddess of victory.

     “போர்மகளை …… தழுவியகை பொறாமை கூர.” (கம்பரா.இராவணன்வதை.226);

     [ போர் + மகள்]

போர்மடந்தை

போர்மடந்தை pōrmaḍandai, பெ. (n.)

   1. காளி; Durga, the goddess of war.

   2. வெற்றித் திருமகள்:(யாழ்.அக);

 the goddess of Valour.

     [ போர் + மடந்தை]

போர்மறவன்

 போர்மறவன் pōrmaṟavaṉ, பெ. (n.)

போர்வீரன் பார்க்க; see per-wiran.

     [போர் + மறவன்]

போர்மாந்தம்

 போர்மாந்தம் pōrmāndam, பெ. (n.)

   குழந்தை நோய் வகை(பாலவா.);; a child’s disease caused by visceral obstructions.

     [பொருமு + மாந்தம்]

போர்முகம்

போர்முகம் pōrmugam, பெ. (n.)

   1. போர்முனை; front, foremost line of battle.

     ‘போர் முகத்தை யறியானைப் புலியே றென்றேன். (தனிப்பா. 1, 275,16);.

   2. போர் முனைந்து நிகழுமிடம்; the place where battle rages the most.

     ‘போர் முகந் தன்னினீ புறந்தந் தேகினால் (பாரதநிரைமீட்70);

     [போர் + முகம்]

போர்முனை

 போர்முனை pōrmuṉai, பெ. (n.)

போர்முக (யாழ்.அக.); பார்க்க;see põrmugam.

     [போர் + முனை]

போர்முரசு

போர்முரசு pōrmurasu, பெ. (n.)

போர் பறை பார்க்க; see porp-parai.

     “போர் முரசெ வெழப்பொங்கி (பாரதநான்காம்.3);

     [போர் + முரசு]

போர்முள்

 போர்முள் pōrmuḷ, பெ. (n.)

   சேவலின் முன்னங்கால் முள் (யாழ்.அக);; cocks claw.

     [போர் + முள்]

போர்முழக்கம்

 போர்முழக்கம் pōrmuḻkkam, பெ. (n.)

   போர்க்குரல்; war-shout.

     [போர் + முழக்கம்]

போர்மூட்டு-தல்

போர்மூட்டு-தல் pōrmūṭṭudal, செ.குன்றா.வ (v.t.)

   1. சண்டை செய்யத்துண்டுதல்(யாழ்.அக);

 to spur on to guarrel.

   2. போள்சொல்லி பிரித்தல்(இ.வ.);; to creat mis-under, stanc ing between.

     [போர் + மூட்டு]

போர்மை

போர்மை pōrmai, பெ. (n.)

   இரக்க (நமதீப.608.);; mercy, pity.

     [ஒருமை → போர்மை]

போர்வாங்கிவிடு-தல்

 போர்வாங்கிவிடு-தல் pōrvāṅgiviḍudal, செ.குன்றா.வி. (v.t.)

   சூடடிக்கத் தொடங்குதல்; to begin threshing of the grain.

     [ போர் + வாங்கிவிடு-,]

போர்வீரன்

 போர்வீரன் pōrvīraṉ, பெ. (n.)

   போரிடு வீரன்; Soldier.

     [ போர் + வீரன்]

போர்வு

போர்வு pōrvu, பெ. (n.)

போர்பு பார்க்க; see porbu.

     “கயலார் ரை போர்விற் சேக்கும்.”(ஐங்குறு.9);

     [ போர் → போர்வு]

போர்வெறியர்

 போர்வெறியர் pōrveṟiyar, பெ. (n.)

   வெற்றுவீரம்பேசுபவர்; warmonger.

     [போர் + வெறியர்]

போர்வை

போர்வை pōrvai, பெ. (n.)

   1. மூடுகை (பிங்.);; covering, wrapping.

   2. மேன் மூடுந்துணி(பிங்.);; upper garment, cloak, blanket, rug, mantle.

     “யானையினுரிவைப் போர்வை” (கம்பரா.மிதிலை.150);

   3. தோல்;(பிங்.);

 skin.

   4. கவசம்; cocet of mail, corslet.

     ‘புலிப்பொறிப் போர்வை நீக்கி (சீவக.266);.

   5. வாள்முதலியவற்றின்உறை (சீவக.266.உரை);

 sheath, as of sword.

   6. தேர்த்தட்டின் வெளிமறையப் பாவின பலகை; wooden cover of a temple-car.

உள்ளரக் கெறிந்த வருக்குறு போர்வை. (சிறுபாண்256);

தெ.போர்வ

     [போர் → போர்வை]

 போர்வை pōrvai, பெ. (n.)

   யாழின் உறுப்புகளில் ஒன்று; a part of the harp.

     [போர்-போர்வை]

போர்வைச்சீலை

போர்வைச்சீலை pōrvaiccīlai, பெ. (n.)

போர்வை 2 பார்க்க;see põrvai.

     [போர்வை + சிலை]

போறை

போறை pōṟai, பெ. (n.)

   1. பொந்து; hole, hollow in a tree.

   2, கிணறு முதலியவற்றின் வங்கு; cavity in the side of a well (w.);

     [புரை → போரை → போறை]

போற்றன்

போற்றன் pōṟṟaṉ, பெ. (n.)

   பாட்டன்; grandfather (நாமதீப, 189);

     [போற்று + அன் → போற்றன்]

போற்றரவு

 போற்றரவு pōṟṟaravu, பெ. (n.)

   பேணுகை; due regard, civility, (w.);

     [ போற்று → போற்றரவு]

போற்றலர்

 போற்றலர் pōṟṟalar, பெ. (n.)

போற்றார் பார்க்க;see porrãr.

     [போற்று + அல் + அர்]

அல்’ எ. ம. இ. நி.

போற்றார்

போற்றார் pōṟṟār, பெ, (n.)

   பகைவர்; foes, enemies.

போற்றாப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் புறநா. 2)

     [போற்று + ஆ +அர்]

அல்’ எ. ம. இ. நி.

போற்றி

போற்றி pōṟṟi, பெ. (n.)

   1. புகழ்மொழி; praisse, applause, commendation (w);.

   2. கோயிற் பூசை செய்யும் மலையாள நாட்டுப் பூசாரி; brahman temple-priest of malabar (w);.

   3. போத்தி பார்க்க. செ.கு.வி (v.i.);

   1. வழிபடு சொல் வகை; explamation of praise.

பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி (சிலப் 13,92);

     [போற்று → போற்றி]

போற்றி செய்-தல்

போற்றி செய்-தல் pōṟṟiseytal, செ.குன்றா.வி. (v.t.)

   வழிபடுதல்; to praise, worship, adore.

பரமனை ….போற்றி செய்வேனே. (திருமந். 3);

     [போற்றி + செய்தல்]

போற்றி சொல்(லு)-தல்

 போற்றி சொல்(லு)-தல் pōṟṟisolludal, செ.குன்றா.வி. (v.t.)

போற்றிசெய் பார்க்க;see porri-cey (w);.

     [போற்றி சொல்(லு); – தல்]

போற்றி பண்ணு-தல்

 போற்றி பண்ணு-தல் bōṟṟibaṇṇudal, செ.குன்றா.வி. (v.t.)

போற்றிசெய் பார்க்க;see porri-cey (W);.

     [ போற்றி + பண்ணு – தல்]

போற்றிசை-த்தல்

போற்றிசை-த்தல் pōṟṟisaittal, செ.குன்றா.வி. (v.t.)

போற்றிசெய் பார்க்க. புறந்தருவார் போற்றிசைப்ப’ (பெருயபு. மானக்கஞ்சாற, 12);

     [போற்று → போற்றிசை – த்தல்]

போற்றிப் பேணுதல்

 போற்றிப் பேணுதல் pōṟṟippēṇudal, பெ.(n.)

   சீராட்டி வளர்த்தல்; cherishment.

     [ போற்றி + பேணுதல்]

போற்றிப்பஃறொடை

போற்றிப்பஃறொடை pōṟṟippaḵṟoḍai, பெ. (n.)

   மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் ஒன்றும் உமாபதிசிவம் இயற்றியதுமான சிவனியக் கொண்முடிபு நூல்; a text-book of the siva siddhanta philosophy by umāpati-civyācāriyar, one of 14 mey-kanta-cattiram, q.v.

     [போற்றி + பஃறொடை]

போற்றிமை

 போற்றிமை pōṟṟimai, பெ. (n.)

   வணக்கம்; honour, reverence, (w);.

     [ போற்றி → போற்றிமை]

போற்றியாதல்

போற்றியாதல் pōṟṟiyātal, பெ. (n.)

   இடுக்குகை; grasping or securing closely (நாமதீப. 757);

     [பொத்து → பொற்று → பொற்றி போற்றி + ஆதல்]

போற்றீடு

போற்றீடு pōṟṟīṭu, பெ. (n.)

   பாதுகாவல் வகை; a system of watching.

     ‘போற்றீடு முதலியி பாதுகாவலும்’ (தொல். பொ. 171, உரை);

     [ போற்று + இடு → ஈடு]

போற்று

போற்று pōṟṟu, பெ. (n.)

   1. காப்பு; protection (சங்.அக);.

   2. பாராட்டி வழிபடு; praise, invocation.

   3. புகழ்தல்; very high commendation. (யாழ்.அக.);

     [ புகல் → புகற்று → போற்று]

போற்று-தல்

போற்று-தல் pōṟṟudal, செ.குன்றா.வி. (v.t.)

   1. வழிபடுதல்; to praise, applaud (பிங்.);

போற்று மடியா ருண்ணின்று நகுவேன் (திருவாச. 5, 60);

   2. வணங்குதல்; toworhsip(பிங்.);

   3. பாதுகாத்தல்; to protect, keep with great care.

போற்றினரியவை போற்றல். (குறள், 693);

   4. வளர்த்தல்; to noursih (w.);

   5. தீயவை தடுத்துக்காத்தல்; to guard against.

புறஞ்சொற் போற்றுமின் (சிலப். 30, 188);

   6. கடை பிடித்தல்; to adhere, hold fast to.

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்

   7. விருந்தோம்பல்; to entertain, to treat with regard.

எம்மைப் போற்றவே’ (கம்பரா. அரசியல், 40);

   8. விரும்புதல்; to desire.

போற்றிக் கேண்மதி (பொருந. 60);

   9. கருதுதல்; to conzider.

பொச்சாவாக், கருவியாற் போற்றிச் செயின் (குறள், 537);

   10. மனத்துக் கொள்ளுதல்; to under stand, to pay attention to.

கொண்டானர் நிரை போற்றெனக் கூறினான்'(சீவக. 430);.

   11. கூட்டுதல்; to gather to gether (பிங்.);.

     [புல் → புகல் → புகற்று → போற்று]

போற்றுநர்

போற்றுநர் pōṟṟunar, பெ. (n.)

   1. சுற்றத்தார்; relatives, kinsmen.

போற்றா ருயிரினும் போற்றுந ருயிரினும் (பரிபா. 4, 52);

   2. ஒன்றுணர்வார்; those who understand.

வேற்றுமை யின்றது போற்றுநர்ப் பெறினே (பரிபா. 4, 55);

     [போற்று + போற்றுநர்]

போல

போல pōla, இ.சொல். (Part)

போல்,1, 2 பார்க்க see pol12. (தொல்.பொ.291);

     [ போல் → போல]

போலி

போலி pōli, பெ. (n.)

   1. ஒப்புடையவன் வள் – து; a person orthing that is egual, egu valent.

தில்லை போலிதன் காதலனே(திருக்கோ.303);

தாமரை திருவடிகளுக்குப் போலியாயிருக்க. (ஈடு,1,4,ப்ர);

   2. ஒப்பு; similarity.

உவமப்போலி (தொல்.பொ.300,உரை);

   3. சாயல்; imitation, semblance. (w);.

   4. கள்ளப்பொருள்; anything spurious, bcounterfet.

போலிநாணயம்

   5. வஞ்சகம்; pretence, hypocrisy.

   6. கேலி; jest.

   7. போலியெழுத்து பார்க்க (நன்.122);

   8. இலக்கணப்போலி பார்க்க. (நன்.238);

   9. போலிப்பாசம்

 sophism.

பக்கப்போலியு மேதுப் போலியும் (மணி.29145);

     [ போல் → போலி]

போலிஇரக்கம்

 போலிஇரக்கம் pōliirakkam, பெ.(n.)

   பொய்இரக்கம்; lips sympathy.

     [போலி + இரக்கம்]

போலிக்குரல்

 போலிக்குரல் pōlikkural, பெ. (n.)

   மாற்றுக்குரல்; false roar.

     [போலி + குரல்]

போலிக்கையொப்பம்

 போலிக்கையொப்பம் pōlikkaiyoppam, பெ.(n.)

   பொய்க்கையொப்பம்; forgery signature.

     [போலி + கையொப்பம்]

போலிச்சமயம்

 போலிச்சமயம் pōliccamayam, பெ. (n.)

   பொய்யான மதம்; false religion.

     [போலி + சமயம்]

போலிச்சரக்கு

போலிச்சரக்கு pōliccarakku, பெ. (n.)

   1. உண்மைச் சரக்கைப் போலச் செய்த பண்டம்; imitation goods or commodity, as not genuine.

   2. வெளிப்பகட்டுள்ள பொருள்; showy goods, as appearing good.

     [போலி + சரக்கு]

போலிச்செய்தி

 போலிச்செய்தி pōlicceyti, பெ. (n.)

   பொய்ச்செய்தி; false news.

     [போலி + செய்தி]

போலித் தோற்றம்

 போலித் தோற்றம் pōlittōṟṟam, பெ. (n.)

   செயற்கைத் தோற்றம்; false appearance.

     [போலி + தோற்றம்]

போலித்தகவல்

 போலித்தகவல் pōlittagaval, பெ. (n.)

   பொய்த்தகவல்; general talk of doultful acCuracy.

     [போலி + Aral.dakhi, த.தகவல்]

போலித்தனம்

 போலித்தனம் pōlittaṉam, பெ. (n.)

   உண்மையல்லாத வெளித்தோற்றம்; imitation, disguise, show (யாழ்.அக);

     [போலி + தனம்]

போலித்திரை

 போலித்திரை pōlittirai, பெ. (n.)

   பொய்த்திரை; curtain.

     [போலி + திரை]

போலிநடிப்பு

 போலிநடிப்பு pōlinaḍippu, பெ. (n.)

   பாசாங்கு செய்தல்; hypocricy.

     [போலி + நடிப்பு]

போலிநடை

 போலிநடை pōlinaḍai, பெ. (n.)

   போலியான நட்த்தை; trick of syle.

     [போலி + நடை]

போலிநியாயம்

போலிநியாயம் pōliniyāyam, பெ.(n.)

   1. பொய்க்காரணம்; false reasoning.

   2. நியாயம் போல் காணப்படும் நியாயற்றது.

 that which seems just bet is really un.J.

     [போலி + skt nyåya. த.நியாயம்]

போலிப்பாசம்

 போலிப்பாசம் pōlippācam, பெ. (n.)

   பொய்ப் பாசம்; Sophism.

     [போலி + பாசம்]

போலிப்பேச்சு

 போலிப்பேச்சு pōlippēccu, பெ.( n.)

   கட்டட் பேச்சு; hypocritical speech.

     [போலி + பேச்சு]

போலிமனிதன்

 போலிமனிதன் pōlimaṉidaṉ, பெ.(n.)

   மக்கட்பண்பற்றவன்; brutish mar w.

     [ போலி + skt manu-ja த.மனிதன்]

போலிமை

போலிமை pōlimai, பெ. (n.)

போலி பார்க்க; see poli.

போலிமை கிரங்கி யுரைத்த பாகரத்தாலே (திவ். திருவாய். ஈடு.2.1.2.ப்ர. பண்ணி);

     [ போலி → போலிமை]

போலிமொழி

போலிமொழி pōlimoḻi, பெ. (n.)

இலக்கணப் போலி பார்க்க;see jakkana po/f (நன்.238. மயிலை);

     [போலி + மொழி]

போலியாள்

போலியாள் pōliyāḷ, பெ. (n.)

   1. வெளி வேடக்காரன்; dissembler, pretender.(யாழ்.அக);

   2. மேல் வாரியாக வேலை செய்பவன்; superficial person (w.);

     [போலி + ஆள்]

போலியிரக்கம்

 போலியிரக்கம் pōliyirakkam, பெ. (n.)

   பொய்யாக இரக்கம் காட்டுதல்; lip’s sympathy.

     [போலி + இரக்கம்]

போலியெழுத்து

போலியெழுத்து pōliyeḻuttu, பெ. (n.)

   1. ஒரெழுத்துக்குப் பகரமாக அவ்வொலியில் அமையும் எழுத்து; syllatle or letter resembling another in sound, as அய் for ஜ, அய் for ஒள.

   2. ஒரெழுத்துக்குப் பகரமாக வரும் எழுத்து; letter substituted for another different in Sound, as in சாம்பர் for சாம்பல். (நன்.);

     [போலி + எழுத்து]

போலிவாழ்க்கை

 போலிவாழ்க்கை pōlivāḻkkai, பெ. (n.)

   பொய் வாழ்க்கை; false life.

     [போலி + வாழ்க்கை]

போலிவிரம்

 போலிவிரம் pōliviram, பெ. (n.)

   பாசாங்கு வீரம்; lion’s Skin.

     [ போலி + வீரம்]

போலிவேடம்

 போலிவேடம் pōlivēṭam, பெ. (n.)

   போலி நடிப்பு; hypocricy.

     [ போலி + வேடம்]

 Skt. Vésa→ த.வேடம்

போலிவேலை

 போலிவேலை pōlivēlai, பெ. (n.)

   கள்ளத்தனமான வேலை; shoddy work (யாழ்.அக);

     [போலி + வேலை]

போலும்

போலும் pōlum, இ.சொல். (part)

   ஓர் அசைச் சொல்; an expletive. (நன்.441);

     [போல் → போலும்]

போல்

போல் pōl, இ.சொல். (Part)

   1. ஒர் உவமவுருபு; a particle of comparison.

சமன் செய்து சீர்தூக்குங் கோல்போலமைந்து (குறள்,118);

   2. ஓர்அசைச்சொல்; expletive (திருக்கோ,222);

     [போ → போல்]

 போல் pōl, பெ. (n.)

   1. உள்ளிடில்லாதது; hollow object.

     ‘போல்வளை’.

   2. பதர்; chaff.(w);.

   3. பொய்; falsehood (அரு.நி);

   4. மூங்கில்; bamboo (மலை);

     [புல் → பொல் → போல்]

தெ. போலு

 போல் pōl, பெ. (n.)

   1. வெற்றி; victory, valour.

பண்புணரார்மதின்மேல்போலனை(தேவா.381-1);

   2. படை; neapon (அரு.நி);

   3. வாள்; sword (அரு.நி);

     [போ → போல்]

போல்’லு)-தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

போல்கட்டை

 போல்கட்டை pōlkaṭṭai, பெ. (n.)

போல்மரம் பார்க்க;see polmaram.

     [ போல் + கட்டை]

போல்சாவி

 போல்சாவி pōlcāvi, பெ. (n.)

   உட்டுளையுள்ள திறவுகோல்; tubularkey.

     [போல் + சாவி]

 port chiavi → த.சாவி

 போல்சாவி pōlcāvi, பெ.(n.)

   உட்டுளையுள்ள திறவுகோல் (இ.வ.);; tubular key.

த.வ. பெண் சாவி

     [T. {} → த. போல்சாவி.]

போல்மரம்

 போல்மரம் pōlmaram, பெ. (n.)

   வண்டியின் முன்புறத்துள்ள நீண்ட மரக்கட்டை; wooden shaftfitted to the fore-part of a vehicle.

     [ போல் + மரம்]

 போல்மரம் pōlmaram, பெ.(n.)

   வண்டியின் முன்புறத்துள்ள நீண்ட மரக்கட்டை (இ.வ.);; wooden shaft fitted to the fore-part of a vehicle.

த.வ. மூக்கணைமரம்

     [E. pole → த. போல்+மரம்.]

போல்மூங்கில்

 போல்மூங்கில் pōlmūṅgil, பெ. (n.)

   மூங்கில் வகை; hollow bamboo.

     [போல் + மூங்கில்]

 போல்மூங்கில் pōlmūṅgil, பெ.(n.)

   மூங்கில் வகை; hollow bamboo bambusa arundinaca typica.

த.வ. துளைமூங்கில்

     [T. {} → த. போல்+மூங்கில்.]

     [p]

போளம்

 போளம் pōḷam, பெ. (n.)

நறுமணப் பண்டவகை myrrh, a|oes, gum-myrrh.

போளம்:

 போளம்: pōḷam, பெ. (n.)

   ஒருவகைத் நிலைத்திணை; a plant (மலை);.

போளி

 போளி pōḷi, பெ (n.)

   மூடன்; simpleton.

போழப்பெட்டி

போழப்பெட்டி pōḻppeṭṭi, பெ. (n.)

   1. வண்ணங் கொடுத்த பனையோலைகளைக் கொண்டு பலவடிவமாக முடையப்படும் கூடை; palmyra basket of fancy shapes, cloured attractively.

   2. திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் மணமகள் வீட்டிற்குத் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு முதலியன கொண்டு போகும் சாயவட்டி; lacguer plate containing cocoanuts, aarecanuts, betels and plantains carried to the bride’s house by the bride-groom’s party in a marriage.

     [பிழா → பெட்டி → போழப்பெட்டி]

போழம்

போழம் pōḻm, பெ. (n.)

   மாறுபடுஞ் சொல்; inconsistent word.

     ‘போழம் பலபேசி’ (தேவா.1080,11);

     [போல் → போழ் → போழம்]

போழ்

போழ் pōḻ, பெ. (n.)

   1. பிளவு; cleft.

போழ்படக் கிடந்த (கல்லா. முருக்க);

   2. துண்டம்; piece.

பகங்காய்ப் போழொடு (பெரும்பாண், 307);

   3. தோலால் அமைந்த வார்; leathe strap.

போழ்தூண்டுசி (புறநா. 82, 4);.

   4. தகடு; sheet.

வெள்ளிப் போழ் விலங்கவைத் தனைய (சீவக.70);

     [புல் → பொல் → போழ்’]

போழ்-தல்

போழ்-தல் pōḻtal, செ.கு.வி. (v.i.)

   1. பிளவுபடுதல்; to be cleft, split.

   2. பிரிவுபடுதல்; to be disunited. (w); செ.குன்றா.வி. (v.t.);

   1, பிளத்தல்,

 to split, cleave open.

கல்லுடை நெடுநெறி போழ்ந்து கரனறுப்ப (பதிற்றுப்.19, 2);.

   2. ஊடுருவிச் செல்லுதல்; to pass through, cross over.

கடற்குட்டம்போழ்வர்கலவர் ( நான்மணி.18);.

   3. அழித்தல்; to dispel, to destroy.

நீடிருள் போழு நிலைமைத்து’ (சீவக. 2118);.

     [புல் → பொல் → போழ்’]

போழ்காலா

 போழ்காலா pōḻkālā, பெ. (n.)

   பளபளத்த பச்சை நிறமுள்ளதும் ஆறடிநீளம் வளர்வதுமான கடல் மீன்வகை; resebal, seafish, silvery green, attaining six feet and more in length. polynemus tetradactylus.

     [போழ் → போழகாலா]

போழ்க்கன்

போழ்க்கன் pōḻkkaṉ, பெ. (n.)

   அடைவு கேடன்; ill-mannerer person.

பொய்யெல்லாம் பொதிந்து கொண்ட போழ்க்கனேன் (திவ். திருமாலை, 33);

     [போழ் → போழ்க்கன்]

போழ்க்கமை

போழ்க்கமை pōḻkkamai, பெ. (n.)

   அடைவு கேடு; irregularity, disorder, ill-manners. (திவ். திருமாலை, 33 வ்யா 110);

     [போழ்க்கன் → போழ்க்கமை]

போழ்து

போழ்து pōḻtu, பெ. (n.)

   1. பொழுது பார்க்க அழல் மண்டு போழ்தின் (நாலடி. 202);

   2. நன்முகூர்த்தம்; auspicious time.

இப்போழ்து போழ்தென் றதுவாய்ப்பக் கூறிய (கலித். 93);

     [போது → போழ்து]

போழ்முகம்

 போழ்முகம் pōḻmugam, பெ. (n.)

   பன்றி; hog. (பிங்);

     [போழ் + முகம்]

போழ்முகி

போழ்முகி pōḻmugi, பெ. (n.)

போழ்முகம் பார்க்க (நூமதீப, 220);

     [போழ் + முகம் → முகி]

போழ்வாய்

போழ்வாய் pōḻvāy, பெ. (n.)

   1. பிளந்த வாய்; open mouth.

போழ்வாய வன்றிலும் (திவ். இலற். திருவிருத், 87);.

   2. பொக்கை வாய்; tooth less mouth.

போழ் வாய்ச்சி கண்டுடம்பு பூரித்தாள் (விறலிவிடு. 195);

     [போழ் + வாய்]

போழ்வு

 போழ்வு pōḻvu, பெ.(n.)

   பிளவு; cleft, fissure.

     [போழ் → போழ்வு]

போவி – த்தல்

போவி – த்தல் pōvittal, செ.குன்றா.வி. (v.t.)

போவி பார்க்க;see pow (நன்.137, மயிலை);

     [போ → போவு → போவுவி – த்தல்]

போவி-த்தல்

போவி-த்தல் pōvittal, செ.குன்றா.வி. (v.t.)

   பொக்குதல்; to cause to go, to lead.

போலிப்பம் பாழினுடம்பை (நல்வழி,19);.

     [போ + போவி – த்தல்]

போவு

போவு pōvu, பெ. (n.)

   போகை; going.

போவுண்ட தென்னினைய’ (கம்பரா.நாகபாச. 231);

     [போ → போவு]