தலைசொல் | பொருள் |
---|---|
பே | பே1 pē, தமிழ் நெடுங்கணக்கில் ‘ப்’ என்ற மெய்யெழுத்தும், ‘ஏ’ என்ற உயிர்நெடிலும் சேர்ந்து வருவது உயிர்மெய் எழுத்து; the compound of p and é. [ ப் + ஏ = பே ] பே2 pē, பெ. (n.) அச்சம்; fear. பே முதிர் கடவுள்” (குறுந்.87); அச்சத்தை உணர்த்தும் பேம் – ஒலிக்குறிப்புச் சொல் [ பேம் → பே ] பே3 pē, பெ. (n.) 1, நுரை(பிங்);; foam seum, froth. ‘பேனநாறுந் தாழ்நீர்ப் பணிச்சுனை” (இறை.7, உரை); 2. மஞ்சு (வின்);; cloud. பே4 pē, இடை;இல்லை என்னும் பொருள்தரும் சொல்;(வின்.) a prefix meaning no. |
பேஎம் | பேஎம் pēem, பெ. (n.) பே2(திவா); பார்க்க;see pē. [பேம் → பேஎம்] |
பேகடை | பேகடை pēkaḍai, பெ. (n.) ஒருவகையான பண்; a musical note. [பியகடை-பேகடை] |
பேகணி – த்தல் | பேகணி – த்தல் pēkaṇittal, செ.கு.வி. (vi) 1. குழப்பமுறுதல்; to be distressed. இழக்கப்புகா நின்றா யென்று பேகணியா நின்றேன்” (ஈடு,943); 2. நிறம் வேறுபடுதல்; to change colour, to become pallid. பேகணித்துப்பிற்காலித்துப் போகக்கவ்வ அக்கினி (திவ்.பெரியதி.2.42. வ்யா); [ பேழ்கணி – பேகணி] |
பேகணிப்பு | பேகணிப்பு pēkaṇippu, பெ. (n.) 1. துன்பம் (துக்கம்); (ஈடு, 9, 6, 6);; sorrow, distress. 2. நிறம் வேறுபடுகை (திவ். பெரியதி. 2, 4, 2.வ்ய.அரும்..);; becoming pallid. [பேழ்கணி – பேகணி – பேகணிப்பு..] பு. சொஆ.ஈறு. |
பேகன் | பேகன்1 pēkaṉ, பெ. (n.) ஆண் தவளை. (யாழ்.அக.);; male of the frog. [பேஎம் – பேகம் – பேகன்] பேகன்1 pēkaṉ, பெ. (n.) கடைவள்ளல்கள் எழுவருள் ஒருவன்; a liberal chief, one of seven kadai-vallalgal. ‘பெருங்கன் னாடன் பேகனும் (சிறுபாண். 87); [பாகன் → பேகன்] பேகன் pēkaṉ, பெ.(n.) கடையெழு வள்ளல்களுள் ஒருவர்; one of the beneficient Tamil king. [பெரு – பே – பேகு-பேகன்(பெருமைக் குரியவன்);] |
பேகம் | பேகம்1 pēkam, பெ. (n.) தவளை (பிங்);; frog. Skt. bhéka. [பேஎம் – பேகம்] பே’ ஒலிக்குறிப்பு [P] |
பேகி | பேகி pēki, பெ.(n.) பெண்தவளை (யாழ்.அக);; [பேஎம் – பேகன்] (ஆ.பா); – பேகி (பெ.பா); |
பேகுல் | பேகுல் pēkul, பெ.(n.) பெருங்குடல்; large intestine. தெ. பேகுல் [பெரு-பே-பேகு-பேகுல்] |
பேக்கலாண்டி | பேக்கலாண்டி pēkkalāṇṭi, பெ.(n.) மூடன்:(இ.வ.);; simpleton, foolishfellow. u.bevakif [பே → பேக்கு → பேக்கலாண்டி] பேக்கு – பேக்கலாண்டி பே – அச்சம், வெறுமை பே – பேக்கு அறிவிலி. |
பேசகம் | பேசகம்1 pēcagam, பெ. (n.) 1. ஆந்தை; owl. 2. மஞ்சு; clould. 3. யானை வாலினடி; the roof of elephants tai. 4. யானை வாலின் நுனி; tip of elephant’s tail. [P] பேசகம்2 pēcagam, பெ. (n.) வாயில் (யாழ்.அக);; gate. [பேழகம் → பேசகம்] |
பேசகி | பேசகி pēcagi, பெ. (n.) யானை (சங்.அக);; elephant. [பேழ் → பேழகி → பேசகி] [P] |
பேசங்கை | பேசங்கை pēcaṅgai, பெ. (n.) மலங்கழிக்கை; going to stool dist fr.arpa-carikai. (இ.வ); |
பேசன்லாடு | பேசன்லாடு pēcaṉlāṭu, பெ.(n.) 1. பிசிறுலாடு; a kind of confection-ball of green pulse. 2. கடலைமாவாற் செய்த பணியார வுருண்டை (இந்துபாக.308);; a kind of confection-ball of bengalgram. [Mhr. {} + த. லாடு.] |
பேசரா | பேசரா pēcarā, பெ.(n.) குடியற்ற சிற்றூர்; uninhabited village. [U.{}-ciradh → த. பேசரா] |
பேசரி | பேசரி pēcari, பெ.(n.) வைரக்கற்கள் பதித்த பகுதியும் அதனுள் இணைந்த சிறு வளையமும் கொண்ட ஒரு வகை மூக்குத்தி; a kind of nose jewel studded with (eight); diamonds and a ring attached to it. [U. {} → த. பேசரி] |
பேசலாத்தி | பேசலாத்தி pēcalātti, பெ. (n.) இராப்பாலை (A);; a garden tree with smooth grey bark |
பேசல் | பேசல் pēcal, பெ.(n.) 1. பேசுகை; talking, speaking. பேசிற்றே பேசலல்லால்’ (திவ்.திருமாலை.25); 2. வஞ்சின் முடிக்கை; fulfilling one’s vow. வாளினாற் பேசலல்லால் (சீவக.257); [பேசு + அல்] (தொ.பொ.ஈறு); |
பேசா | பேசா pēcā, பெ.(n.) மட்டமான தரமுடையது; low quality. [U. {} → த. பேசா] |
பேசா எழுத்து | பேசா எழுத்து pēcāeḻuttu, பெ.(n.) மந்திர ஒலியாகிய ‘ஓம்’ எனும் ஓசை sacred Tamil syllable OM’. [பேசாத-பேசா+எழுத்து] எழுத்து எழுந்து புறத்து இசைக்காமல் அ+உ+ம் எனப் பெரிய எழுத்தும் பிஞ்செழுத்தும் மகர மெய்யும் கூட்டி உள்ளிருந்து எழும் மெல்லிய ஓசை யாதலின் மந்திர எழுத்து எனப்பட்டது. இதன் வடிவம் சிந்து வெளி தமிழிலும் தமிழகப் பாறை ஓவியங்களிலும் எனக் காணப்படுகிறது. |
பேசாத பேச்சு | பேசாத பேச்சு pēcātapēccu, பெ. (n.) 1. தகுதியற்ற சொல்; improper talk. 2. வெறுப்பூட்டும் சொல்; indecent or obscene talk. [பேசாத + (எ.ம.பெ.எ); + பேச்சு] |
பேசாதிரு-த்தல் | பேசாதிரு-த்தல் pēcātiruttal, செ.கு.வி செயலற்றிருத்தல்; to keep quiet. வாத்யங்கள் வாய்த்தால் கூத்தாடுவாருடம்பு பேசாதிராதிறே” (திவ். பெரியதி. 121 வ்யா. பக். 59);; [பேசு → பேசாது + இரு] ‘ஆ எ. ம. இ. |
பேசாமடந்தை | பேசாமடந்தை pēcāmaḍandai, பெ. (n.) வாய் வாளாமை பூண்ட பெண் (கொ.வ);; reticent, silent Women. [பேசு → பேசா + மடந்தை] (ஆ’ எம.இ.நி); |
பேசாமை | பேசாமை pēcāmai, பெ. (n.) வாய்வாளாமை (மெளனம்);; silence, as observed by ascetics. ‘அருட்பெற்றோர்கள் பெற்ற பெருமை……. பேசாமை யாகுமெனவே (தாயு.பரிபூரண.2.); [பேசு → பேசாமை] ‘ஆ’ எ. ம. இ. மை’ப.பெ.ஈறு. |
பேசார் | பேசார் pēcār, பெ (n.) ஊமைகள் ; the dumb பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் மணி மே.28.223) [பேசு → பேசார்] ‘ஆ’ (எ.ம.இடநில); ர் (ப.பா.ஈறு); பேசார் pēcār, பெ.(n.) 1. சோர்வு; fatigue, weakness. 2. தொந்தரவு; annoyance, disgust. [U. {} → த. பேசார்] |
பேசாறு-தல் | பேசாறு-தல் pēcāṟudal, 5 செ.கு.வி.(v.i.) இளைப்புறுதல் (இ.வ.);; to become wearied. [Skt. {} → த. பேசாறு-,] |
பேசாவழக்கு | பேசாவழக்கு pēcāvaḻkku, பெ. (n.) பயனற்ற வழக்கு(C.G);; a naseless or vexatious suit [பேசு + ஆ (எம.இ.நி); + வழக்கு] |
பேசாவியாச்சியம் | பேசாவியாச்சியம் pēcāviyācciyam, பெ. (n.) அடிப்படையில்லாத வழக்கு; groundless or vexatious suit. [Skt. {} → த. பேசாவியாச்சியம்] |
பேசாவெழுத்து, | பேசாவெழுத்து, pēcāveḻuttu, பெ. (n.) நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து (ஐந்க்கா); மந்திரத்திற் சிவபெருமானைக் குறிக்கும் சி’ என்ற எழுத்து. பேசுமெழுத்துடனே பேசாவெழுத்தினையும்; [பேசு + ஆ எம.இ.நி); + எழுத்து] |
பேசி | பேசி pēci, பெ. (n.) 1. சதை; muscle. 2.நரம்பு; tendon. 3. பூமொட்டு; bud. 4. இடுயேறு; thunderbolt. 5. முட்டை; egg. பேசுவது போல் உள் நிலையை வெளிப்படுத்துவனவும் பேசி எனப்பட்டன. |
பேசிராக்கிராமம் | பேசிராக்கிராமம் pēcirākkirāmam, பெ.(n.) குடியிருப்பில்லாத ஊர் (C.G.);; uninhabited village. [U. {} → த. பேசிராக்கிராமம்] |
பேசு | பேசு1 pēcudal, செ.கு.வி (v.i) 1. சொல் லாடுதல்; to talk, speak. 2. வஞ்சினமுடித்தல்; to fulfil a vow. வாளினாற் பேசலல்லால்’ (சீவக.259); 3. வீணை நரம்பு முதலியன இசைத்தல்; to sound, as a lute string. கையாழ் (பிடில்); நரம்பு (தந்தி); நன்றாகப் பேசவில்லை ; 4. நாடி முதலியன துடித்தல்; to feat, as the pulse. ‘கையில் பித்தநாடி பேசவில்லை; 5. உரக்கப்பேசுதல்; to make noise, to roar. தரங்கநீர் பேசிலும் (திவ்.பெரியதி.8.27); [P] பேசு2 pēcudal, செ.குன்றாவி. (v.t) 1.சொல்லுதல்; to tell, say. ‘வாயினாற் பேசறேற்றேன்’ (சீவக.257); 2.பலமுறை சொல்லுதல்; to repeat manytimes. ஈன்றுழாய் மாயனையே பேசியே (திவ்.இயற். பெரியதி.38); 3. போற்றுதல்; to praise. பேசாத நாளெல்லாம் பிறவாநாளே (தேவா.12.1); செயலைப்பேசிமுடிவு செய்தல்; to deal. bargain negotiate verbally as a business. 4. வைதல்; to abuse, Vilify. பேசு1 pēcu, செ.கு.வி.(v.i.) மிக நன்று என்னும் பொருள் குறிக்கும் சொல்; exclamation meaning very good, excellent. த.வ. வலே [U. {} → த. பேசு] பேசு2 pēcu, பெ. (n.) முதல்; foremost front. [U. {}. → த. பேசு] பேசு3 pēcu, பெ.(n.) கட்டடத்தின் தரைமட்டம் (இ.வ.);; basement. [E. base → த. பேசு.] |
பேசுகிசுதி | பேசுகிசுதி pēsugisudi, பெ.(n.) 1. வரி; tax, tribute. 2. பெருநிலக்கிழார் கட்டும் வரி; rent payable to government by the owners of permanently settled estates. [U. {}-kist → த. பேசுகிசுதி.] |
பேசுமெழுத்து | பேசுமெழுத்து pēcumeḻuttu, பெ. (n.) நமசிவாய என்னும் ஐந்தெழுத்தில் ஆற்றலை உணர்த்தும் வ’ என்றவெழுத்து; the letter wal In the incantation “namaśīvāya: indicating siva- sakti. வைகரிவாக்கு; ‘பேசுமெழுத்துடனே (கொடிக்4); articulate utterance ஊமையெழுத்தொடுபேசு மெழுத்துறின் (திருமந்.2158); [பேசு + எழுத்து] |
பேசுலம் | பேசுலம் pēculam, பெ. (n.) செடிவகை (இ.வ.); a plant – Arum colocasia. |
பேசுலி | பேசுலி pēculi, பெ. (n.) பேசுலம் (இ.வ.); பார்க்க;see pēšulan. |
பேசுவாயன் | பேசுவாயன் pēcuvāyaṉ, பெ. (n.) 1. பரிந்து பேசுவோன்; intercessor. வாயாடி; talkative person. [பேசு + வாயன்] |
பேசுவாய் | பேசுவாய் pēcuvāy, பெ. (n.) வாயடிப்பவன்; talkative person. [பேசு + வாய்] |
பேச்சடைப்பு | பேச்சடைப்பு pēccaḍaippu, பெ. (n.) பேச முடியாமற் செய்யும் நோய் (ML);; loss of voice, aphonia. [பேச்சு + அடைப்பு ] |
பேச்சற்றவன் | பேச்சற்றவன் pēccaṟṟavaṉ, பெ. (n.) 1. பேசமாட்டாதவன் (யாழ்.அக);; one who is speechless or dumb. 2. பேசா நோன்பு (மெளன விரதம்); பூண்டவன்; one who has taken a vow of silence. 3. உறுதிமொழி தவறுபவன்(வின்);; one who fails in his word. [பேச்சு + அற்றவன்] |
பேச்சல் | பேச்சல் pēccal, பெ. (n.) பேசுகை (யாழ்.அக.);; speaking. [பேசு → பேசல் → பேச்சல்] ‘அல் தொ.பெ.ஈறு. |
பேச்சழி – தல் | பேச்சழி – தல் pēccaḻidal, செ.கு.வி. (vi) சொன்ன சொல் தவறுதல் (யாழ்.அக);; to tail to keep one’s word. [ பேச்சு + அழி – ] |
பேச்சாடுதுணை | பேச்சாடுதுணை pēccāṭuduṇai, பெ. (n.) பேச்சாட்டுத் துணை (இ.வ.);; பார்க்க. See peccattu-t-tunai. [பேச்சாடு + துணை] ‘ஆடு (து.வி.); |
பேச்சாட்டுத்துணை | பேச்சாட்டுத்துணை pēccāṭṭuttuṇai, பெ. (n.) பேச்சுக்குத் துணையானவன் (யாழ்.அக.);; companion, as one to talk with. [பேச்சு + பேச்சாடு → பேச்சாட்டு பேச்சாட்டு + துணை] ஆடு → ஆட்டு |
பேச்சாற்றல் | பேச்சாற்றல் pēccāṟṟal, பெ. (n.) மேடைப் பேச்சுத்திறம்; skilful oration. திரு.வி.க. பேச்சாற்றல் வாய்ந்தவர்; [பேச்சு + ஆற்றல்] |
பேச்சாளர் | பேச்சாளர் pēccāḷar, பெ. (n.) சொற் பொழிவாளர்; skilful orator. [பேச்சு + ஆளர்] |
பேச்சாளி | பேச்சாளி pēccāḷi, பெ. (n.) 1. சொல் வன்மையுள்ளவன்; good speaker. 2. சொல்லுறு தியுள்ளவன்; a man.who keeps his word. [பேச்சு + ஆள் → ஆளி] ஆளி → ‘இ’ வினைமுதலீறு |
பேச்சி | பேச்சி pēcci, பெ. (n.) பேய்ச்சி பார்க்க; see peycci. [பேய்ச்சி – பேச்சி] பேச்சி pēcci, பெ. (n.) பேயத்தி பார்க்க;see pêyatti. [பேயத்தி – பேச்சி] |
பேச்சு | பேச்சு pēccu, பெ. (n.) 1. பேசுகை; speaking. பேரமளிப் பேச்செலாம்’ (பாரத. அருச்சுனன்றவ. 63); 2. மொழி; speech, language. 3. புகழ்(வின்);; praise. (w.); 4. உரையாடல்(கொ.வ.);; conversation, talk. 5. செய்தி; errand, message, verbal communication, report. 6. பொய்ச்செய்தி; rumour, 7. சொல்; word utterence. “பேயர்தாம் பேசுமப் பேச்சை’ 8. கட்டுரை; discourse, harangue. ‘பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினை (தேவா. 83,10); [பேசு – பேச்சு] |
பேச்சு வல்லபம் | பேச்சு வல்லபம் bēccuvallabam, பெ. (n.) பேச்சுத்திராணி (வின்); பார்க்க; see peccu-t-tirani. [பேச்சு + வல்லபம். வல்லவம் → வல்லபம்] |
பேச்சுக் குற்றம் | பேச்சுக் குற்றம் pēccukkuṟṟam, பெ. (n.) சொற்குற்றம்; defect in speech. [பேச்சு + குற்றம்] |
பேச்சுக்காரன் | பேச்சுக்காரன் pēccukkāraṉ, பெ. (n.) 1. சொல்வன்மையுடையவன் (வின்);; good speaker. 2. வாயாடி; talkative man. [பேச்சு + காரன்] |
பேச்சுக்கிடம் | பேச்சுக்கிடம் pēccukkiḍam, பெ. (n.) 1. பேசுமுரிமை; liberty of speech. 2. பழிக்குக் கரணியம்; occasion or room for slander. முறைப்படி அவருக்குச் செய்தி தெரிவிக்காதது பேச்சுக்கு இடமாகி விட்டது. [பேச்சுக்கு – இடம்] |
பேச்சுக்கொடு-த்தல் | பேச்சுக்கொடு-த்தல் pēccukkoḍuttal, செ.கு.வி. (v.i) 1. மந்தணமறியச் சொல்லாடு தல் (வின்);; to speak with one in order to obtain secrets to sound (w); 2. பேச்சு நீடித்தல் (யாழ்.அக);; to prolong one’s talk. 3. பொழுது போக்காகச் சொல்லாடுதல் (இ.வ.);; to keep oneself engaged by talking with. [பேச்சு + கொடு] கொடு (து.வி); |
பேச்சுத்தடித்தல் | பேச்சுத்தடித்தல் pēccuttaḍittal, பெ. (n.) சொல் கடுமையாகை (கொ.வ.);; growing hot in speech. [பேச்சு + தடித்தல்] தடி → தடித்தல். ‘அல் தொ.பெ.ஈறு |
பேச்சுத்தடுமாறு – தல் | பேச்சுத்தடுமாறு – தல் pēccuddaḍumāṟudal, செ.கு.வி. (v.i). 1. சொல் குழறுதல்; to be confused, puzzeled or disconcerted in speaking (w.); 2. உறுதிமொழி தவறுதல் (இ.வ.);; to break one’s word. [பேச்சு + தடுமாறு] |
பேச்சுத்தட்டு – தல் | பேச்சுத்தட்டு – தல் pēccuddaṭṭudal, செ.கு.வி. (v.i). 1. சொல் தடுமாறுதல்; to Stammer, Stutter; to hesitate. 2. சொன்னசொல் தவறுதல்; to break one’s word. 3. பிறர் கூற்றை மறுத்தல்; to go against the expressed wishes of a person. [பேச்சு + தட்டு] |
பேச்சுத்தப்பு-தல் | பேச்சுத்தப்பு-தல் pēccuddappudal, செ.கு.வி (vi) பேச்சழி பார்க்க;see pēccali. [பேச்சு + தப்பு -] |
பேச்சுத்தாராளம் | பேச்சுத்தாராளம் pēccuttārāḷam, பெ. (n.) 1. வெறும் வாய்ச்சொல் (இ.வ.);; empty speech, speech not followed by action. 2. சொல்வன்மை (வின்); ; fluency of speech, eloquence. 3. உரையாடற் றிறம் (வின்);; ability in conversation, politeness in address. [பேச்சு + தாராளம்] |
பேச்சுத்திராணி | பேச்சுத்திராணி pēccuttirāṇi, பெ. (n.) பேச்சுத்தாராளம் (வின்.); 2. பார்க்க;see pêccu-t-tārālam. [பேச்சு + திறன் → திறனி → திராணி] |
பேச்சுத்துணை | பேச்சுத்துணை pēccuttuṇai, பெ. (n.) பேசிப் பொழுது போக்குதற்குத் துணையாக இருக்கும் ஆள் (கொ.வ.);; companion, as one to speak with. [பேச்சு + துணை] |
பேச்சுநிதானம் | பேச்சுநிதானம் pēccunitāṉam, பெ. (n.) பேச்சுறுதி (இ.வ.) பார்க்க;see pēccurudi. [ பேச்சு + Skt nådäna த.நிதானம் ] |
பேச்சுப்பிடுங்கு – தல் | பேச்சுப்பிடுங்கு – தல் pēccuppiḍuṅgudal, செ.கு.வி. (v.i) சொல்லாடி மந்தணத்தையறிதல் (வின்);; to fish out secrets from another’s talk, to pump cleverly. [பேச்சு + பிடுங்கு] |
பேச்சுமூச்சில்லாமை | பேச்சுமூச்சில்லாமை pēccumūccillāmai, பெ .(n.) 1. அமைதி; absence of activity, quietness. பேச்சு மூச்சில்லாத பேரின்ம வெள்ளமுற்று’ (தாயு. எந்நாட். ஆனந்த.1); 2. அடங்கி யிருக்கை (இ.வ.);; guiet submission. [பேச்சு + மூச்சு + இல்லாமை] பேச்சு + மூச்சு. எதுகை நோக்கி இரட்டித்து வந்த மரபினை மொழி] |
பேச்சுமூச்சு | பேச்சுமூச்சு pēccumūccu, உயிருள்ள தென்பதைக் காட்டும் பேச்சும் மூச்சும் (வின்) ; signs of life, as speech and breath. [பேச்சு + மூச்சு] மரபு இணைமொழி. |
பேச்சுறுதி | பேச்சுறுதி pēccuṟudi, பெ. (n.) ஒப்பந்தத்தில் முடிவான பேச்சு (யாழ்.அக);; decision in bargaining. [ பேச்சு + உறுதி ] பேச்சுறுதி pēccuṟudi, பெ. (n.) உறுதிமொழிை நிறைவேற்றுந்தன்மை; faithfulness to one word. [பேச்சு + உறுதி] |
பேச்சுவளர் – த்தல் | பேச்சுவளர் – த்தல் pēccuvaḷarttal, செ.கு.வி. (v.i). பேச்சுக்கொடு (யாழ்.அக); பார்க்க; see pēccuvalar. [பேச்சு + வளர்] |
பேச்சுவளர்தல் | பேச்சுவளர்தல் pēccuvaḷartal, பெ. (n.) 1நீண்டஉரையாடல் ; prolonged speech or conversation. 2. வாய்ச்சண்டையில் வசவு மிகுகை; growing abusive in quarrel. [பேச்சு + வளர்தல்] தல்’ [தொ.பெ.ஈறு] |
பேச்சுவாயன் | பேச்சுவாயன் pēccuvāyaṉ, பெ. (n.) வாயாடி (யாழ்.அக);; talkative person. [பேச்சு + வாயன்] |
பேச்சுவார்த்தை | பேச்சுவார்த்தை pēccuvārttai, பெ. (n.) 1, உரையாடல்; talk. 2. நட்பு; amicable speaking terms. 3. மறுத்துரைத்தல் (யாழ்.அக);; dispute. [பேச்சு: + SKt varta. த. வார்த்தை] |
பேச்சைமடி-த்தல் | பேச்சைமடி-த்தல் pēccaimaḍittal, செ.கு. (v.i.) 1. சொன்ன சொல் மாறுதல் (வின்);; to eduivocate. 2. வீண் தருக்கம் பேசுத (கொ.வ.);; to argue perversely. [பேச்சு → பேச்சை + மடி] மடி மறுத்தல்,தவறுதல்.மாறுதல் |
பேச்சோடுதுணை | பேச்சோடுதுணை pēccōṭuduṇai, பெ. (n.) பேச்சாட்டுத்துணை பார்க்க; see peccattu-t-tunai. “திருவாருக்குப் போகிறேன் பேச்சோடு துணையாய் நீயும் வருகிறாயா?” [பேச்சாடு → பேச்சோடு + துணை] |
பேடகம் | பேடகம்2 pēṭagam, பெ. (n.) பண்டைக்காலத்து வழங்கிய ஒருவகைத்துகில் (சிலப்.14,108,உரை);; a garment of ancient times. பேடகம் pēṭagam, பெ.(n.) 1. பெட்டி; box. “பேடகத்திடை யொழுகிய தினபதி பெருங் குமரனை” (பாரத. சம்பவ. 41);. 2. கூடை (யாழ்.அக.);; basket. 3. திரள் (யாழ்.அக.);; mass, heap. [Skt. {} → த. பேடகம்] |
பேடணம் | பேடணம் pēṭaṇam, பெ (n.) 1. பொடி செய்கை; grinding pulverising. 2.திரிகைக்கல்; grinding -stone. [P] |
பேடன் | பேடன் pēṭaṉ, பெ. (n.) ஆண்தன்மை மிகுந்த அலி; hermaphrodite with male characteristics predominating. பேடன் வந்தான் (நன்.263,உரை);; [பேடு → பேடன்] பெண்மைவிட்டு ஆண்மை அவாவுப்பேடு ஆண்பால். |
பேடம் | பேடம் pēṭam, பெ.(n.) 1. வெள்ளாடு (யாழ்.அக.);; goat. [Skt. {} → த. பேடம்] |
பேடா | பேடா pēṭā, தெப்பம் ; raft float. [பேடு → பேடா] |
பேடாடல் | பேடாடல் pēṭāṭal, பெ. (n.) பேடு2: (சிலப்.3,14, உரை, பக்.90);. பார்க்க;see pedu. [பேடு + ஆடல்] |
பேடாப்போ – தல் | பேடாப்போ – தல் pēṭāppōtal, செ.கு.வி. (v.i) உலாவப்போதல்; to walk for recreation. [பேடு + ஆ + போ] பேடி1 பெ. (n);. 1. பெண்தன்மை மிகுந்த அலி; hermphrodite with female chraractristics predominating. பெண்ணவா யாணிழந்த பேடி (நாலடி.251); 2. ஆண்மை யின்மை; impotence. 3. நடுவிரல்; middle finger. சுட்டுப்பேடி (சிலப்.3.18 உரை, மேற்கோள்,பக்.95);, 4. அச்சம்; fear. [பேடு → பேடி ] |
பேடி | பேடி2 pēṭittal, செ.கு.வி. v.i) அஞ்சுதல்; to be afraid. [பே → பேடு → பேடி] பேடி3 pēṭi, பெ. (n.) விலங்கு (CG);; fetters [பேடு + பேடி ] பேடி pēṭi, பெ. (n.) சிற்றுர் ஆண்கள். மணிக்கட்டில் அணியும் ஒரு நகை; an ornament worned by men on wrist. [பிடி-பேடி] |
பேடிகை | பேடிகை pēṭigai, பெ. (n.) கூடை (யாழ்.அக); ; basket. 2 உறை; (அக.நி.); cover. [பேடு → பேடிகை] |
பேடிசங்காட்டு – தல் | பேடிசங்காட்டு – தல் pēṭisaṅgāṭṭudal, செ.கு.வி. (v.i.) 1. மாய்மாலஞ்செய்தல்; to play the hypocrite. 2. போலிவேலை செய்தல்; to counterfeit a work. [பேடிசம் → காட்டு – தல்] |
பேடிசம் | பேடிசம் pēṭisam, பெ. (n.) மாய்மாலம் (யாழ்.அக);; imposition, deception. [பேடு → பேடியம் → பேடிசம்] |
பேடிசெய் – தல் | பேடிசெய் – தல் pēṭiseytal, செ.குன்றாவி (v.t.) விலங்கிடுதல்; to handcuff. [பேடி + செய் – தல்] |
பேடியாடல் | பேடியாடல் pēṭiyāṭal, பெ. (n.) பேடு2: பார்க்க;see pedu. காமனாடிய பேடியாடலும் சிலப்.6,57) [பேடி + ஆடல்] |
பேடியெழுத்து | பேடியெழுத்து pēṭiyeḻuttu, பெ. (n.) ஆய்த வெழுத்து (வின்.);; the letter ‘ஃ’ as neither hale nor female [பேடி + எழுத்து] |
பேடு | பேடு pēṭu, பெ. (n.) 1. பெண்பால்; femalesex. ‘படலியாணர் போலும் (தேவா.249,1); . 2.பெண் பறவை; female of birds. பேடுஞ் சேவலும் (மலைபடு.141,உரை); 3. சிறுமை; mallness. 4. ஒருசார் விலங்குகளின் பெண்; female of certain quadrupeds. தெய்வமாக வைத்த எருமையாகிய பேட்டின் கொம்போடே. (கலித்.114. உரை); 5. சிற்றுார்; mall town, village. 6. நடுவிரல்; the middle finger. கட்டும் பேடும்’ (சிலப்.3:18,உரை); உள்ளீடின்றிப் பயனற்றது; what is |nproductive, useless or kernelless. இந்தந் தேங்காய் பேடு (உ.வ); 8. பேடி 1.பார்க்க . கூத்துப் பதினொன்றனுள் ஒன்றானதும் வாணனால் சிறையிடப்பெற்ற தன்மகன் அநிருத்தனைச்சிறைமீட்டுப்பிரத்தியுமானன் ஆடியதுமான கூத்து; dance of piratiyumnan when he released his son Aniruttan from the Irison of vanas, one of 11 kuttu.g.r [பெள் → பேடு] பேடு pēṭu, பெ.(n.) 1 காடுவெட்டி உண்டாக்கிய விளை நிலம்; deferested agricultural land. 2. உழப்படாத கரம்பு நிலம்; land left uncultivated. 3. சிற்றூர்; small village. “மப்பேடு, அன்னம்பேடு, கோயம்பேடு, கல்பேடு. மறுவ போடு, வோடு [போடு-பேடு] |
பேடை | பேடை pēṭai, பெ. (n.) பறவையின் பெண்பால்(பிங்);; female of birds, hen. ‘மிழற்றேன்மின் குயிற்பேடைகாள்’ (திவ்.திருவாய்.9,5,1);; ம. பேட. க. ஹேடே [பெள் → பேடு → பேடை] பேடை pēṭai, பெ. (n.) கூடை (யாழ்.அக);; basket. [பெள் + பேடை] |
பேட்டா | பேட்டா pēṭṭā, பெ.(n.) 1. தலைப்பாகை; turban. 2. பட்டும் பருத்தியும் கலந்து நெய்த தலைக் குட்டைத் துணி (G.Sm.D.I.i:266);; turban cloth woven of silk and cotton. [H. {} → த. பேட்டா] |
பேட்டி | பேட்டி pēṭṭi, பெ.(n.) நேர்காணல்; interview, audience. [U. {} → த. பேட்டி] |
பேட்டிவயல் | பேட்டிவயல் pēṭṭivayal, பெ. (n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantang Taluk. [பேடு-பேட்டி+வயல்] |
பேட்டு | பேட்டு1 pēṭṭu, பெ.(n.) 1. பட்டைக்கரை; stripe, broad border. 2. சரடு( இ.வ.);; string, as of a necklace. waist- cord containing more than one strand. [Te. {} → த. பேட்டு] பேட்டு2 pēṭṭu, பெ.(n.) கூடுதல் இழைகளைக் கொண்டு நெய்யப்படும் வடிவமைப்பு; pattern or design woven with extra warp threads. |
பேட்டை | பேட்டை1 pēṭṭai, பெ.(n.) 1. நகர்ப்புறங்களில் ஏழை மக்கள் வசிக்கும் வசதி குறைந்த பகுதி; area or locality (of a town);. ‘எங்கள் பேட்டைக்கே வந்து தகராறு செய்கிறாயா 2. நகரத்திற்கருகே கூடும் சந்தை (யாழ்.அக);; market-place near a town. 3. பயண (பிரயாண); வண்டி தங்குமிடம்; caravanserai. [Skt. {} → Mhr.{} → த. பேட்டை] பேட்டை2 pēṭṭai, பெ.(n.) 1. குறிப்பிட்ட ஊர்தி அல்லது தொழில் நிறைந்து காணப்படும் பகுதி; locality where a particular kind of vehicle or work is found in large numbers. ‘வண்டிப் பேட்டை’. [பேட்டை1 → பேட்டை] |
பேணகம் | பேணகம் pēṇagam, பெ. (n.) பணிகாரவகை (வின்.);; a kind of pastry. [பேண் + அகம் → பேணகம்] |
பேணம் | பேணம் pēṇam, பெ, (n.) 1. மதிப்பு; tenderness recard, esteem. 2. பதனம்; care, caution. 3. பேணுகை; nurture, fostering. [பேண் → பேணம்] |
பேணரவு | பேணரவு pēṇaravu, பெ. (n.) பேணல் பார்க்க: See pénal. [பேண் → பேணரவு] |
பேணலர் | பேணலர் pēṇalar, பெ. (n.) பகைவர்; foes. [ பேண் + அல் + அர் ] |
பேணல் | பேணல் pēṇal, பெ. (n.) 1. பேணுகை; nurturing, fostering. 2. மிகுவிருப்பம்; intense desire. 3. கருதுகை (அரு.நி);; thinking. 4. மிகுகை (அரு.நி);; increasing. [பேண் → பேனல்] |
பேணாமாக்கள் | பேணாமாக்கள் pēṇāmākkaḷ, பெ. (n.) எதிரிகள்; helpless, friendless persons. ‘பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் (மணிமே.28,223 ); [பேண் + ஆ + சிமாக்கள்] அல்’எ. ம. இ. நி. |
பேணாமை | பேணாமை pēṇāmai, பெ (n.) பகைமை; enmity. பேணாமை பேணப் படும் (குறள்,866); [பேண் + ஆ + மை] |
பேணார் | பேணார் pēṇār, பெ. (n.) பகைவர்; foes. பேணா ரகநாட்டு (பு.வெ.3,4.); [பேணு + ஆ + அர்] |
பேணி | பேணி pēṇi, பெ. (n.) பணியாரம் (இந்துபாக);; a kind of Sweet meat. [பண் → பணி → பேணி ] |
பேணியார் | பேணியார் pēṇiyār, பெ. (n.) விரும்பப் பட்டோர்; lowers. பேணியார் பெட்ப செயின்’ (குறள்.1257 ); [பேண் + பேணி + ஆர்] |
பேணிவளர்த்தல் | பேணிவளர்த்தல் pēṇivaḷarttal, பெ. (n.) பாதுகாத்து வளர்த்தல்; help to grow. [ பேணி + வளர்த்தல்] |
பேணு-தல் | பேணு-தல் pēṇudal, செ.குன்றாவி (v.i.) 1.போற்றுதல்; to treat tenderly, to cherish. “தந்தை தாய்ப்பேண்” (ஆத்தி சூ); 2. போற்றி காத்தல்; to protect. “பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்” (புறநா.9); 3. மதித்தல்; to regardesteem value. குன்று… தெய்வம் பேணித்திசை தொழுதனிர் சென்மி ன்”(பரிபா.15:48); திவா); 4. விரும்புதல்; disire. பேணான்வெகுளி (குறள்:526); 5. ஒப்புரவு; to treat courteously. பிறர் தன்னைப் பேணுங்கா, னாணலும் (திரிகடு.6); 6. வழிபடுதல்; to worship. அமரர் பேணியும் (பட்டினப்.200); 7. பொருட் படுத்துதல்; to care formind. ‘துவலைத் தண்டுளி பேணார்” (நெடுநல்34); 8. கழுவாய் செய்தல்; to attend carefully, talk particular car of. பாணியுந்தூக்கு நடையும் பெயராமை பேணி (பு.வெ.12,ஒழிபு.19); 9. ஒப்பனை செய்தல்; to adorn. பேணி நிறுத் தாரணி (கலித்.104); 10. கருதுதல் (திவா);; to purpose, intend. 11. குறித்தல் (சூடா);; to mark out. 12. உட்கொள்ளுதல்; totake in, swallow. “விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி” (சிறுபாண். 244); 13. அறிதல்; to know. பேணாதொருத்தி பேதுற’ (பரிபா.7,67);. 14. ஒத்தல்; to resemble. பெருநறாப் பேணியவே கூர்நறா வார்ந்தவள் கண்’ (பரிபா.7,63);. [பேண் → பேணு] |
பேணுகை | பேணுகை pēṇugai, பெ. (n.) பேணி வளர்த்தல் பார்க்க; [பேண் → பேணுகை] |
பேணுநர் | பேணுநர் pēṇunar, பெ. (n.) போற்றிக்காப்போர்; guardians. ‘பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ (மணிமே.14:47); [பேணு → பேணுநர்] |
பேண் | பேண் pēṇ, பெ. (n.) 1. புறந்தரல் (தொல்.சொல்.338);; protection. 2. விருப்பம் (தொல்,சொல்.338);; desire. 3. பேண்மரம் (வின்); பார்க்க;see pén-maram. [பெல் → பெண் → பேண்] |
பேண்மரம் | பேண்மரம் pēṇmaram, பெ. (n.) துலாத்தாங்கு மரம் (வின்);; the stand of a picottah. [பேண் + மரம்] |
பேதகன் | பேதகன் pētagaṉ, பெ.(n.) 1. கருத்து வேறுபட்டவன்; one who is disaffected. “பேதகனான பிதாமரு ளெய்தா” (பாரத. வாரணா. 103);. 2. மூன்று வகைக் கலப்பு இனத்தைச் சார்ந்தவன்; one belonging to any of the three mixed castes. “பின்னாகிய மும்மை கொள்தேகரை” (கந்தபு. காமதக. 18);. [Skt. {} → த. பேதகன்] |
பேதகம் | பேதகம் pētagam, பெ.(n.) 1. மனவேறுபாடு; difference, disagreement, variance, discord. 2. தன்மை வேறுபாடு; change; tranformation. “உயிரை மாய்த்தோ பேதகம் புரிவீர்” (குற்றா. தல. தருமசா. 118);. 3. கபடம் (வஞ்சனை); (இ.வ.);; deceit. [Skt. {} → த. பேதகம்] |
பேதசித்தாந்தம் | பேதசித்தாந்தம் pētasittāndam, பெ.(n.) இருளும் ஒளியும் போல ஆதனும் சிவமும் இரண்டாயிருக்குமென்ற கொண்முடிபு (சங்.அக.);; the doctrine that the Supreme Being and the individual Soul exist as two different entities, as light and darkness. [Skt. {} → த. பேதசித்தாந்தம்] |
பேதசைவம் | பேதசைவம் pētasaivam, பெ.(n.) சிவனியம் (சைவம்); பதினாறனுள் குருலிங்க சங்கமபத்தி பூண்டு சிவனை உருவமாகவும் அருவமாகவும் அருவுருவமாகவும் ஊழ்கித்தால் வீடுபேறு கிட்டுமெனக் கூறும் சமயம்; a {} sect which holds that the path of salvation lies through worship of {}, guru and devoties, and meditation and {} in His triple aspect of uruvam, aruvam and aru-v-uruvam one of 16 {}. [Skt. {} → த. பேதசைவம்] |
பேதனம் | பேதனம் pētaṉam, பெ.(n.) 1. எட்டு கருமத் தொன்றும் மக்களுள் வேற்றுமை விளைப்பது மான கலை; magic art of causing discord between persons, one of {}-karumam. 2. மாழையை பிறிதொன்றாக மாற்றும் கலை; the art of transmutation. 3. பன்றி (சங்.அக.);; hog. [Skt. {} → த. பேதனம்] |
பேதப்படு-தல் | பேதப்படு-தல் pēdappaḍudal, 2௦ செ.கு.வி.(v.i.) 1. வேற்றுமைப்படுதல்; to disagree, to be discordant. 2. மயங்குதல்; to be bewildered. “பேதப் படுகின்ற பேதைமீர்காள்” (தேவா. 30,7);. [பேதம்+படு-தல்] |
பேதமை | பேதமை pētamai, பெ. (n.) உய்த்துணராமை (தொல். பொ. 248, இளம்பூ);; lack of diSCernment. [பேதை → பேதமை] |
பேதம் | பேதம் pētam, பெ.(n.) 1. வேறுபாடு (திவா.);; difference, dissimilarity. 2. மனமாறுகை; disagreement, variance, disaffection. 3. முரண்பாடு; diversity, variety. “கீத நின்ற பேதங்கள்” (கம்பரா. கடறாவு. 74);. 4. திரிபு (வின்.);; modification, alteration. 5. இணக்கமின்மை (வின்.);; incongruity, inconsistency. 6. பிறிதொன்றற்கு இல்லாத ஏற்றம்; distinctive merit. ‘சமயிகள் பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்’ (திவ். திருவாய். 4.2:4);. 7. பகுப்பு; subdivision, sect. division. 8. நால்வகை வழிகளுள் ஒருவர்க் கொருவர் பகையுண்டாக்கும் நெறி (சீவக. 747, உரை);; policy of division or sowing discord among confederates, one of four kinds of {}. 9. (சுகதபேதம், சுசாதிபேதம், லிசாதிபேதம் என்ற); மூன்று வகை வேறுபாடு (வேதா. சூ. 27, உரை);; difference, of three kinds, viz. {}. |
பேதறு-த்தல் | பேதறு-த்தல் pētaṟuttal, செகுன்றாவி (vi.) கலக்கமொழித்தல்; to clear doubt. மாருதி வந்துன்னைப்பேதறுத்து (கம்பராமீட்சி.166); [பேது + அறு → பேதறு] |
பேதலி-த்தல் | பேதலி-த்தல் pētalittal, 4 செ.கு.வி. (v.i.) 1. மாறுதல்; to vary, alter, change in form, appearance or nature; to be estranged. 2. வேற்றுமைப்படுதல் (வின்.);; to be different; to differ. நிறம் பேதலிக்கிறது. 3. மனம் குழம்புதல்; to be discouraged, agitated or dismayed. பிணியினி லுடைந்து வாடிப் பேதலித் திரங்கு வார்கள் (சங்.அக.);. [Skt. {} → த. பேதலி-த்தல்] |
பேதவாதசைவம் | பேதவாதசைவம் pētavātasaivam, பெ.(n.) அகச் சமயமாறனுள் இறைவனருளால் மலம் நீங்குமென்றும் முத்த நிலையில் இறைவனும் ஆதனும் (ஆதன்); தலைவன் தலைவி போல் வரென்றுங் கூறும் சமயம் (சி.சி.11, 5, சிவஞா.);; a Saiva sect which holds that the soul gets rid of corruption by the grace of God and that even in the state of emancipation it bears to God the relation of the beloved to the lover, one of six aka-c-camayam. [Skt. {} → த. பேதவாதசைவம்] |
பேதவாதம் | பேதவாதம் pētavātam, பெ.(n.) ஆதனின் தலைவனுக்கு (ஜீவேசுரர்க்கு); வேற்றுமை கூறுங் கொள்கை; doctrine of the quality of the universe and the Supreme Soul opp. to {}. [Skt. {} → த. பேதவாதம்] |
பேதானா | பேதானா pētāṉā, பெ.(n.) 1. சீமை மாதுளை; quince. 2. சீமை மாதுளை விதை; quince seed. [U. {} → த. பேதானா] |
பேதாபேதம் | பேதாபேதம் pētāpētam, பெ.(n.) 1. வேற்றுமையும் ஒற்றுமையும்; similarity and dissimilarity, agreement and disagreement. [Skt. {} → த. பேதாபேதம்] |
பேதாபேதி | பேதாபேதி pētāpēti, பெ.(n.) பேதாபேத சித்தாந்தமுடையோன் (திவ்.திருச்சந்.1,வ்யா. பக். 9);; follower of the {} school of philosophy. [Skt. {} → த. பேதாபேதி] |
பேதி | பேதி1 pēti, பெ. (n.) 1. பிரிப்பது; that which divides, detaches or separates. 2. பிரிந்தவன் (பேதமானவன்); (யாழ்.அக.);; one who is estranged. 3. இதளியம் (அக.நி);; mercury, quicksilver. 4. கழிச்சல்; diarrhoea, purging. 5. கக்கல் கழிச்சல்; cholera. 6. குடலைத் துப்புரவு செய்யும் கழிச்சல் மருந்து (பேதிமருந்து); (வின்.);; purgative, cathartic. [Skt. {} → த. பேதி] பேதி2 pētittal, 4 செ.கு.வி.(v.i.) 1. மாறுபடுதல்; to change, vary, differ. “பேதியா வின்ப வெள்ளத்தை” (திவ். பெரியதி. 4,3:2);. 2. கெடுதல் (யாழ்.அக.);; to degenerate, deteriorate. 3. உடைதல்; to be broken, interrupted, frustrated. 4. கழிச்சலாகுதல் (வின்.);; to purge. 5. குழம்புதல் (சங்.அக.);; to become confused. 6. மனம் மாறுபாடுதல் (யாழ்.அக.);; to become changed in mind. [Skt. {} → த. பேதி-த்தல்] பேதி3 pētittal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. பிரித்தல்; to divide, separate. 2. மனமலையச் செய்தல் (வின்.);; to excite, disgust, alienate. 3. மாற்றுதல்; to change, diversity. 4. வெட்டுதல் (உரி.நி.);; to cut, split. [Skt. {} → த. பேதி-த்தல்] |
பேதிகட்டல் | பேதிகட்டல் pētigaṭṭal, பெ.(n.) பேதியாதலை நிறுத்தல்; to stop motion. (சா.அக.); |
பேதிக்கிழங்கு | பேதிக்கிழங்கு pētikkiḻṅgu, பெ. (n.) 1. கொடிவகை; jalap, mle Impomaea Purga (சா.அக.); |
பேதிக்குக்கொடு-த்தல் | பேதிக்குக்கொடு-த்தல் pētikkukkoḍuttal, 4 செ.குன்றாவி.(v.t.) 1. கழிச்சல் மருந்து கொடுத்தல் (வின்.);; to administer a cathartic. 2. அச்சமுண்டாக்குதல்; to terrify, cause fear. [Skt. {} → த. பேதி → பேதிக்கு+கொடு-த்தல்] |
பேதித்துநட-த்தல் | பேதித்துநட-த்தல் pētittunaḍattal, 3 செ. குன்றாவி.(v.t.) நாடி மாறுபட்டு ஓடுதல்; variation or deviation in the beating of pulse. (சா.அக.); [பேதி+அத்துநட-த்தல்] |
பேதிபண்ணு-தல் | பேதிபண்ணு-தல் bēdibaṇṇudal, 5 செ.கு.வி. (v.i.) துப்புரவு செய்தல்; to cause purging. (சா.அக.); [பேதி+பண்ணு-தல்] |
பேதிமருந்து | பேதிமருந்து pētimarundu, பெ.(n.) கழிச்ச லுக்குக் கொடுக்கும் மருந்து; a medicine given for cleansing the bowels cathartic purgative. (சா.அக.); [பேதி+மருந்து] |
பேதிமாத்திரை | பேதிமாத்திரை pētimāttirai, பெ.(n.) கழிச்சல் மாத்திரை; pills causing motions. (சா.அக.); [பேதி+மாத்திரை] |
பேதியாகுமூலி | பேதியாகுமூலி pētiyākumūli, பெ.(n.) கழிச்சலையுண்டாகும் சரக்கு; anything that causes motions such as. சிவதை,நேர்வாளம், நிலாவரை போன்றவை. (சா.அக.); |
பேது | பேது pētu, பெ. (n.) 1. மயக்கம்; bewilderment confusion, consternation. நல்லவை பேதுறார் கேட்டல்’ ( இனி, நாற். 9);, 2. பித்துப் பிடித்தல்; delirium, mental derangement. சாயலாடான் பேது கண்டு’ (சீவக. 1744); 4. அறிவின்மை; ignorane. பிழை யென்னாய் பேதுறீஇ (பு.வெ. 11, கைக்கிளை. பெண். 8); skt. bhëda. க.பேது [பித்து →பேத்து → பேது] |
பேதுரு | பேதுரு pēturu, பெ.(n.) இராயப்பர் என்ற கிறித்தவப் பெரியார்; St. Peter. |
பேதுறவு | பேதுறவு pētuṟavu, பெ. (n.) 1. மயக்கம்; bewilderment, mental derargement, mental பேணிலா தவர் பேதுற வோட்டினோம் (தேவா. 497, 10,);; 2. துன்பம் (சங்.அக);. distress. [ பேதுறு → பேதுறவு ] |
பேதுறு – தல் | பேதுறு – தல் pēduṟudal, செ.கு.வி. (v.i.) 1. மயங்குதல்; to be bewilered. ‘பேதுறுகின்ற போன்ற பெருமழைக் கண்கள்’ (சீவக.2544); 2. பித்துப் பிடித்தல் (வின்);; to become insane. 3. வருந்துதல்; to be distressed. ‘பேதுற்ற விதனைக் கண்டு (பரிபா. 18, 12.); 4. அறியா திருத்தல் (பு. வெ. 11, கைக்கிளை. பெண். 8.);; to be ignorant. [பேது + உறு → பேதுறு – தல்] |
பேதுறு – த்தல் | பேதுறு – த்தல் pētuṟuttal, செ.குன்றாவி. (v.t) வருத்துதல்; to cause distress. ‘உயிரைப் பேதுறுத்து’ (சீவக. 2766); பேதுறு → பேதுறுத்தல். (கா.விளை); [பேது + உறு] |
பேதை | பேதை pētai, பெ. (n.) 1. அறிவிலி (பிங்.);: simpleton, ignorant person, dolt. பிள்ளைமை விளம்பினாய் பேதை நீயெனா’ (கம்பரா, யுத். மந்திரப். 72.); மடிமடிக் கொண்டொழுகும் பேதை (குறள்.603); ; 2. பெண்; woman, as simple minded. பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்’ (குறள். 1238.); 3. பாலை நிலப் பெண்; (இறை. 1, 18.); woman of desort tract. 4. மகளிர் பருவம் ஏழனுள் ஐந்து வயது முதல் ஏழு அகவை வரையுள்ள பருவத்துப் பெண் (பிங்.);; girl between the ages of five and seven. 5. வறியவன் (பிங்);; poor person, 6. கள் (சது);; toddy, winous liquor. 7. அலி (பிங்.);: hermaphrodite. தெ. அம்பேத [பேது – பேதை] |
பேதைபாதம் | பேதைபாதம் pētaipātam, பெ. (n.) பெண் தெய்வத் திருவுருவின் காலில் அணியும் அணிவகை; an ornament for the log of an Idol. “திருக்கழற் கீழிடும் பேதைபாதமும்” (SII.viii.39); [பேதை + பாதம்] |
பேதைப்படு-த்தல் | பேதைப்படு-த்தல் pētaippaḍuttal, செ.குன்றாவி. வி. (v.t) மடமையாக்குதல்; to make toolish. ‘பேதைப் படுக்கு மிழவூழ்’ (குறள், 372.); [பேதை + படு] |
பேதைப்பருவம் | பேதைப்பருவம் pētaipparuvam, பெ. (n.) அறியாப் பருவம்; age of innocence. [பேதை + பருவம்] |
பேதைப்புத்தி | பேதைப்புத்தி pētaipputti, பெ. (n.) ஏமாளி; weak intellect, folly, credulity, indiscretion (w.); [ பேதை + SKț nuddhi த.புத்தி ] |
பேதைப்பெண் | பேதைப்பெண் pētaippeṇ, பெ. (n.) இளம்பெண்; young lady. [ பேதை + பெண் ] |
பேதைமை | பேதைமை pētaimai, பெ. (n.) மடமை; folly, ignorance, credulouse ness. பேதைமை யன்ற தறிவு’ (நாலடி 249); [பேதை – பேதைமை] மை. ப. பெ. ஈறு |
பேத்தல் | பேத்தல் pēttal, பெ. (n.) பிதற்றுமொழி; incoherent talk meaningless speech. [பிதற்று → பேத்து → பேத்தல்] |
பேத்தி | பேத்தி1 pētti, பெ. (n.) பேர்த்தி; grand – daughter. ‘பேத்திமாருண்டு பண்ணும்’ (பணவிடு.255); [பேர் → பேத்தி] பேத்தி2 pēddidal, பெ. (n.) பேயத்தி; corr of. [பேயத்தி → பேத்தி] |
பேத்து-தல் | பேத்து-தல் pēddudal, செ.குன்றா.வி (v.i) பிதற்று(கொ.வ.); பார்க்க;see pétattu. [பிதற்று → பேத்து] |
பேத்துவம் | பேத்துவம் pēttuvam, பெ. (n.) 1. அமுதம்; nectar. 2. நெய்; chee. (சங்.அக); [பேத்து → பேத்துவம்] |
பேத்தை | பேத்தை pēttai, பெ. (n.) 1. மீன்வகை; globefish, genus, tetrodon 2, 9 விரலம் வளர்வதும் பழுப்புநிறம் உள்ளதுமான மீன்வகை; globefish, brown, attaining 9 in in length, Tetrodon nigro punctatus. 3. பற்பேத்தை (யாழ்.அக);; பார்க்க ;gum boil. 4. வயிற்றுவீக்கம் (யாழ்.அக);; bloated belly. [பேத்து → பேத்தை] [P] |
பேத்வரி | பேத்வரி pētvari, பெ.(n.) நகரையடுத்த ஊருக்கு வாங்கும் வரி (R.T.);; a tax on a suburban village. [Mar. {} → த. பேத்+வரி] |
பேந்தவலை | பேந்தவலை pēndavalai, பெ. (n.) கண்கள் சிறியவாகப் பின்னிய வலை (இ.வ.);; smaleyed net (loc.); |
பேந்தவிழி – த்தல் | பேந்தவிழி – த்தல் pēndaviḻittal, செ.கு.வி. (v.i) மருண்டு விழித்தல் (கொ.வ); ; to stare rol the eyes in bewilder ment. [பே → பேந்து → பேந்த + விழி] |
பேந்தா | பேந்தா pēndā, பெ. (n.) குண்டு ஆட்டசெவ்வக வடிவ அரங்கின் பெயர்; name of the stadium. [பறந்தலை-பரந்தா-பேந்தா] |
பேந்தாவலை | பேந்தாவலை pēndāvalai, பெ.(n.) மிகப் பெரிய மீனைப்பிடிப்பதற்காகப் பின்னப்பட்ட பெரிய வலை; a big net. [பெரிய – பெந்து-பேந்து- பேந்தா+வலை] |
பேந்து – தல் | பேந்து – தல் pēndudal, செ.கு.வி.(v.i) மருளுதல்; to be bewildered. ‘பேந்திப் பேந்தி விழிக்கிறான்’ [பே – பேந்து] |
பேனன் | பேனன் pēṉaṉ, பெ. (n.) 1. கதிரவன், sun. 2. திங்கள்; moon (யாழ்.அக.);. |
பேனம் | பேனம் pēṉam, பெ. (n.) நுரை; froth, foam. ‘பேன வெண்குடையவாய’ (கம்பரா. பிரமாத்.145); பேனம்1 pēṉam, பெ.(n.) அனுவல்லிப் பூடு;(நாமதீப.393);; opium. பேனம்2 pēṉam, பெ.(n.) நுரை; froth, foam. “பேன வெண்குடையவாய” (கம்பரா. பிரமாத்.145);. [Skt. {} → த. பேனம்.] |
பேனவாகி | பேனவாகி pēṉavāki, பெ. (n.) இடி; thunder (யாழ்.அக.); |
பேனா | பேனா pēṉā, பெ.(n.) மைதோய்த்து எழுதுங் கருவி; pen, quill. த.வ. தூவல் [E. pen → த. பேனா.] |
பேனாகத்தி | பேனாகத்தி pēṉākatti, பெ.(n.) சிறுகத்தி வகை; pen knife (pond.);. [E. pen → த. பேனாகத்தி.] |
பேன் | பேன் pēṉ, பெ. (n.) தலை முடியிலுண்டாகும் சிற்றுயிரி; louse;pediculi. “ஈரும் பேனுமி ருந்திறை கூடி” (பொருந79); |
பேன்குத்து-தல் | பேன்குத்து-தல் pēṉkuddudal, செ.கு.வி. (v.i.) பேனை நசுக்குதல்(வின்);; to crackor crush lice. [பேன் + குத்து-தல்] |
பேன்கொட்டை | பேன்கொட்டை pēṉkoṭṭai, பெ. (n.) காக்காய் கொல்லி பார்க்க;see kakkay-kolli. cocculus – indicus. |
பேபந்து | பேபந்து pēpandu, பெ.(n.) 1. ஒழுங்கின்மை; being without order confusion, irregular. 2. கட்டுக் காவலின்மை; insecurity. [U. {} → த. பேபந்து] |
பேபர்வா | பேபர்வா pēparvā, கு.பெ.எ.(adj.) கவனக் குறைவான (C.G.);; careless, headless, negligent. [U. {} → த. பேபர்வா] |
பேபாக்கி | பேபாக்கி pēpākki, பெ.(n.) மீதியின்மை (C.G.);; out right settlement, payment in full. [U. {} → த. பேபாக்கி] |
பேப்பர் | பேப்பர் pēppar, பெ.(n.) 1. தாள்; paper. 2. செய்தித்தாள் (இக்.வ.);; news paper. [E. paper → த. பேப்பர்] |
பேமாலம் | பேமாலம் pēmālam, பெ.(n.) மூடன்; simpleton, foolish, fellow. [U. {} → த. பேமாலம்] |
பேம் | பேம் pēm, பெ. (n.) அச்சம்; fear, dread, terror. பேந்தரு பேய்வனம்’ (சீவக. 1181); [பே2 → பேம்] |
பேயகத்தி | பேயகத்தி pēyagatti, பெ. (n.) சீமையகத்தி(L); பார்க்க;see cimal-y-agaths large feat letted aglandular Senna. [பேய் + அகத்தி] |
பேயத்தி | பேயத்தி pēyatti, பெ. (n.) அத்திவகை (L);; devil fig, str., ficus hispida. [பேய் + அத்தி] |
பேயனார் | பேயனார் pēyaṉār, பெ. (n.) ஐங்குறுநூற்றின் ஐந்தாம் நூறாகிய முல்லைத்திணையைப் பாடிய பழைய புலவர்; an ancient poet, author of the fifth hundred in Inguru-nuru. [பேய + அன் + ‘ஆர்’ ‘ஆர்’ உயர்வுப் பன்மை ஈறு] |
பேயன் | பேயன் pēyaṉ, பெ. (n.) 1. பேய்பிடித்தவன்; demomac. 2. பித்தன் (பைத்தியக் காரன்);, madman. “பேயனாகிலும் பெருநெறிகாட்டாய் (திருவாச. 237); [பேய் + அன் ‘அன்’ ஆ.பா.ஈறு] பேயன் pēyaṉ, பெ. (n.) பேயன்வாழை (பதார்த்த.727); பார்க்க;see péyanvāja. [பாயம்→ பேயம்→ பேயன்] |
பேயன்வாழை | பேயன்வாழை pēyaṉvāḻai, பெ. n வாழை வகை; a kind of banana. [பாயம்→ பேயம்→ பேயன் + வாழை] |
பேயமன்று | பேயமன்று pēyamaṉṟu, பெ. (n.) மதுக்குடிக்குமிடம்; li quo r-Saloon. ‘பேயமன்றினினின்று பிறங்கெரி (கம்பரா இலங்கையெரி 14); [ பேயம் + மன்று] |
பேயம் | பேயம் pēyam, பெ. (n.) நீர் முதலியன போன்ற பருகலுணவு (சங்.அக..);; food taken in by drinking or sipping, as water, milk, etc. [பெய் → பேய் → பேயம்] |
பேயம்பழம் | பேயம்பழம் pēyambaḻm, பெ. (n.) பேயன் வாழையின் பழம் (இ.வ.);; fruit of péyan-valai. [பாயம்→ பேய் → பேயன் + பழம்] |
பேயம்மையார் | பேயம்மையார் pēyammaiyār, பெ. (n.) பேயா (யாப்.வி); பார்க்க;see peyar. [பேய் + அம்மையார்] |
பேயருளாந்தை | பேயருளாந்தை pēyaruḷāndai, பெ. (n.) பாலையுடைச்சி (L); பார்க்க;see pai-y-ulco. indian Calosanthes. |
பேயவரை | பேயவரை pēyavarai, பெ. (n.) கோழியவரை, பார்க்க;see köll-y-awari, sword-bean. 2. பொன்னாவிரை; fetid cassia. [பேய் + அவரை] |
பேயாடி | பேயாடி pēyāṭi, பெ. (n.) 1. வெறியாடுபவன் (இ.வ.);, a person under demoniac possession. 2. பேயாட்டி (வின்); பார்க்க;see peyal. 3. பேயாட்டி (வின்); பார்க்க;see peydf. [பேய் + ஆடி] |
பேயாடு-தல் | பேயாடு-தல் pēyāṭudal, செ.குவி. (v.i.) பேய்பிடித்தாடுதல்(வின்);; to whirl the head through demoniac possession. [பேய் + ஆடு] |
பேயாட்டம் | பேயாட்டம் pēyāṭṭam, பெ. (n.) பேய்க்கூத்து; devil dance. 2. பேய்த்தன்மை; fiendishness ferociousness. 3. கலக்கம்; confusion, disorder. [ பேய் + ஆட்டம்] ஆடு – ஆட்டம் |
பேயாட்டி | பேயாட்டி pēyāṭṭi, பெ. (n.) 1. மருளேறு வருவித்துக் குறிசொல்லச் செய்வோன்(வின்);, one who makes a person possessed and causes him to utter oracles. 2. பேயோட்டி, (சங்,அக); 1. பார்க்க;see peydl. [பேயாடி→ பேயாட்டி] |
பேயாட்டு-தல் | பேயாட்டு-தல் pēyāṭṭudal, செ.குன்றாவி, (v.t.) 1. குறிசொல்லுதற்குப் மருளோறச் செய்தல் (வின்);; to cause a person to be possessed for making him utter oracles. 2. பேயோட்டு (இ.வ.);. பார்க்க;see peyottu. [பேய் + ஆட்டு] |
பேயாமணக்கு | பேயாமணக்கு pēyāmaṇakku, பெ. (n.) ஆமணக்குவகை (L.);; red physic nut. [பேய் + ஆமணக்கு] |
பேயாரால் | பேயாரால் pēyārāl, பெ.(n.) இரண்டடி நீளத்துக்கு மேல் வளர்வதும் மங்கல் (கபில); நிறமுடையதுமான நன்னீர் மீன்வகை; eel, rich brown, attaining more than 2ft in length. [பேய் + ஆரால் → ஆரால்] |
பேயார் | பேயார் pēyār, பெ. (n.) பேயாழ்வார் பார்க்க;see peyawar. ‘பொய்கையார்பூதத்தார் பேயார் (உப தேசாத்.4); 2. காரைக்காலம்மையார் பார்க்க;Rārairrāl-ammaiyār a canonized saiva saint. ‘பேயார்க்கு மடியேன் (தேவா,737,4); [பேய்→ பேயார் ‘ஆர்’ உயர்வுப்பன்மை ஈறு.] |
பேயாழ்வார் | பேயாழ்வார் pēyāḻvār, பெ. (n.) நாலாயிரத் தெய்வப்பனுவில் இயற்பாவைச் சார்ந்த மூன்றாந்திருவந்தாதி இயற்றியவரும் ஆழ்வார் பதின்மருள் ஒருவருமான பெரியார்(உபதேசாத்.6);; a vaisnava saint, author of the third Tiruv-andādi of lyarpäin Nālāyirap.pirapandam. |
பேயாவாரை | பேயாவாரை pēyāvārai, பெ. (n.) பேயாவிரை (இங்.வை); பார்க்க;see peywial. [பேய் + ஆவாரை ஆவிரை-ஆவாரை] |
பேயாவிரை | பேயாவிரை pēyāvirai, பெ. (n.) செடிவகை; negro coffee. [பேய் + ஆவிரை] |
பேயிரதம் | பேயிரதம் pēyiradam, பெ. (n.) பேய்த்தேர் (இலக்.அக.); பார்க்க;see pey-i-ter. [பேய் + skt rasa, த. இரதம்] |
பேயீடு | பேயீடு pēyīṭu, பெ. (n.) பேயின் தொந்தரவா உண்டாவதாகக் கருதப்படும் பிள்ளைநோ; a disease of children, attributed to th influence of evil spirtis. புள்ளீட்டுக்கு பேயிட்டுக்கும் பிழைக்கப்பெற்றதென்கிறா (திவ்.பெரியாழ். 25,9,வ்யா,பக்.343); |
பேயுடுப்பை | பேயுடுப்பை pēyuḍuppai, பெ. (n.) செடிவை (விவசா.6);; a plant. |
பேயுமிதல் | பேயுமிதல் pēyumidal, பெ. (n.) பேய் முதலிய ஒரு வன் அரத்தத்தை உறிஞ்சியுண் கொல்லுகை (j.); sucking the blood of person either killing or greatly injuring his as a denil or vampire. [பேய் + உமிழ்தல் → உமிதல்.] |
பேயுள்ளி | பேயுள்ளி pēyuḷḷi, பெ.(n.) நரிவெங்காயம்(வின்);; indian squill. [ பேப் + உள்ளி ] |
பேயூடம் | பேயூடம் pēyūṭam, பெ. (n.) அமிழ்தம்; nect. 2. சீம்பால்; beestings. 3. வெண்ணெ (யாழ்.அக.); butter. Skt. pëyusa. பேயூடம் pēyūṭam, பெ.(n.) 1. அமிர்தம்; nectar. 2. சீம்பால்; beestings. 3. வெண்ணெய்; butter. [Skt. {} → த. பேயூடம்.] |
பேயூமத்தை | பேயூமத்தை pēyūmattai, பெ.(n.) மருளுமத்தை (மலை); பார்க்க;see mar Umathai cocklebur. [பேய் + ஊமத்தை] |
பேயெரி-த்தல் | பேயெரி-த்தல் pēyerittal, பெ. (n.) மந்திரத்த பேயை எரித்துப் போக்குதல்; to burn ou devil by magic. [பேய் + எரி] |
பேயெள் | பேயெள் pēyeḷ, பெ. (n.) காட்டெள், 2. (A); பார்க்க;see kättel wild sesame. [பேய் + எள்] |
பேயேற்று-தல் | பேயேற்று-தல் pēyēṟṟudal, செ.கு.வி (v.i.) பேயையுருவேற்று (வின்); பார்க்க;see peyay Uru-V-árru (w.);. [பேய் + ஏற்று] |
பேயையுருவேற்று-தல் | பேயையுருவேற்று-தல் pēyaiyuruvēṟṟudal, செ.கு.வி. (v.i.) ஒருவனைப் பேய்பிடிக்கச் செய்தல் (வின்);, to cause a dene to possess a perSon. [பேய் +ஐ உரு+ ஏற்று] |
பேயொலி | பேயொலி pēyoli, பெ. (n.) பெருங்கூப்பாடு; hideous noise, as of a devil. [பேய் + ஒலி] |
பேயோடாடி | பேயோடாடி pēyōṭāṭi, பெ. (n.) பேயுடன் ஆடுபவன், சிவன் (பிங்.);; siva, as dancing with devils. [பேய் + ஒடு + ஆடு + இ] ‘இ’ வினைமுதலீறு |
பேயோட்டி | பேயோட்டி pēyōṭṭi, பெ. (n.) 1. பேயை ஒட்டுவோன்; exorcist (loc.);. 2. மரவகை (யாழ்.அக);; a tree. [பேய் + ஒட்டி] |
பேயோட்டு-தல் | பேயோட்டு-தல் pēyōṭṭudal, செ.குன்றாவி, (v.t.) பேயை மந்திரத்தால் வெளியேற்றுதல்; to exorcise. [பேய் + ஒட்டு] |
பேயோனான் | பேயோனான் pēyōṉāṉ, பெ. (n.) ஓந்தி வகை (வின்);; large bloodsucker. [பேய் + ஒனான்] |
பேய் | பேய்1 pēy, பெ. (n.) 1. அச்சுறுத்தும் ஆவி; devi, goblin, fiend. ‘சுழலு மழல்விழிக் கொள்ளிவாய்ப் பேய் (பதினொ. மூத்த 1); 2 காட்டுத்தன்மை(வின்);; wildness, as of vegetation 3. தீமை (வின்);; evil (w.); 4. வெறி; madness, as of a dog, frenzy. [பே – பேய்] பேய்2 pēy, பெ. (n.) இல்லை யென்னும் பொருன் கொண்ட சொல் (அக.நி.);; a term meaning ‘no.’ [பே4_ பேய்] |
பேய்க்கஞ்சான் | பேய்க்கஞ்சான் pēykkañjāṉ, பெ. (n.) சாணாக்கியப் பூண்டிலுள்ள பூச்சிவகை (சங்.அக.);; a worm infesting canakki-p-pundu. |
பேய்க்கடம்பை | பேய்க்கடம்பை pēykkaḍambai, பெ. (n.) மரவகை (L.);; a tree [பேய் + கடம்பை] |
பேய்க்கடுக்காய் | பேய்க்கடுக்காய் pēykkaḍukkāy, பெ. (n.) 1. பெரிய மரவகை; crape myrtle. 2.பூமருது; 1. பார்க்க;see pümarudu. [பேய் + கடுக்காய்] |
பேய்க்கண் | பேய்க்கண் pēykkaṇ, பெ. (n.) 1. சுழல்விழி; rolling eyes, as of a demoniac. 2. அஞ்சத்தக்க விழி; frightful eyes, as of a devil. [பேய் + கண்] |
பேய்க்கண்டல் | பேய்க்கண்டல் pēykkaṇṭal, பெ. (n.) சிறுமர வகை (வின்);; simple cymed mangrove [பேய் + கண்டல்] |
பேய்க்கனவு | பேய்க்கனவு pēykkaṉavu, பெ. (n.) தீக்கனவு; night mare. [பேய் + கனவு] |
பேய்க்கனி | பேய்க்கனி pēykkaṉi, பெ. (n.) பேயன் வாழை (தைலவ, தைல. 113);, பார்க்க; See peyanvalai. [பேய் + கனி] [P] |
பேய்க்கருங்காலி | பேய்க்கருங்காலி pēykkaruṅgāli, பெ. (n.) கருங்காலிவகை, (L);; tamarind like cutch, m.tr. [பேய் + கருங்காலி] [கருங்கால் – கருங்காலி] |
பேய்க்கரும்பு | பேய்க்கரும்பு pēykkarumbu, பெ. (n.) நாணல் வகை (A.);; Kaus, a large and Coarse grass. [பேய் + கரும்பு] பேய்க்கரும்பு pēykkarumbu, பெ. (n.) வேருடன் கூடிய கரும்பு; a full length sugarcane with root. [பேய்+கரும்பு] |
பேய்க்கற்றாழை | பேய்க்கற்றாழை pēykkaṟṟāḻai, பெ. (n.) காட்டுக் கற்றாழை (பதார்த்த 369); பார்க்க: kattu-k-karralai, century-plant. [பேய் + கற்றாழை] |
பேய்க்களா | பேய்க்களா pēykkaḷā, பெ. (n.) களாவகை (மலை);; a species of whortleberry. [பேய் + களா] |
பேய்க்காஞ்சி | பேய்க்காஞ்சி pēykkāñji, பெ. (n.) புண்பட்ட வீரனைக் கங்குல் யாமத்துப் பேய் காத்தமை கூறும் புறத்துறை (தொல், பொ. 79);; [பேய் + காஞ்சி] |
பேய்க்காடு | பேய்க்காடு pēykkāṭu, பெ. (n.) பேய் வதியுங் கானகம் (வின்);; haunted jungle. [பேய் + காடு] |
பேய்க்காண்டு(ணு)-தல் | பேய்க்காண்டு(ணு)-தல் pēykkāṇṭuṇudal, செ.கு.வி. (v.i.) பேய் பிடித்தல்; to be possessed. பேய் கண்டாற் போல் ( திருக்கோ. 84, உரை); [பேய் + காண்.,] |
பேய்க்காற்று | பேய்க்காற்று pēykkāṟṟu, பெ. (n.) சுழல் காற்று; whirlwind. ம. பேய்க்காத்து [பேய் + காற்று] |
பேய்க்காலெறும்பு | பேய்க்காலெறும்பு pēykkāleṟumbu, பெ. (n.) எறும்புவகை (வின்.);; a kind of small black ant with long feet. [பேய்க்கால் + எறும்பு] |
பேய்க்காளான் | பேய்க்காளான் pēykkāḷāṉ, பெ. (n.) காளான் வகை (யாழ்.அக.);; toadstool, fungi. [பேய் + காளான்] |
பேய்க்குணம் | பேய்க்குணம் pēykkuṇam, பெ. (n.) அருவருக் கத்தக்க தீக்குணம்; bad, unsociable, peevish disposition. [பேய் + குனம்] |
பேய்க்குன்றி | பேய்க்குன்றி pēykkuṉṟi, பெ. (n.) குன்றி வகை (யாழ்.அக.);; a kind of crab’s-eye. [பேய் + குன்றி] |
பேய்க்கும்மல்டி | பேய்க்கும்மல்டி pēykkummalṭi, பெ. (n.) பேய்க் கொம்மட்டி (யாழ்.அக); பார்க்க;see pêy-k-kommatti. [பேய்க்கொம்மட்டி → பேய்க்கும்மட்டி] |
பேய்க்குரவை | பேய்க்குரவை pēykkuravai, பெ. (n.) போருக்குச் செல்லும் அரசன் செலுத்தும் தேர்க்கு முன்னும் பின்னும் பேய் ஆடுவதைக் கூறும் புறத்துறை (பு. வெ. 7, 19);; [பேய் + குரவை] |
பேய்க்குருந்து | பேய்க்குருந்து pēykkurundu, பெ. (n.) மர வகை; raceme-flowered wild lime. [பேய் + குருந்து] |
பேய்க்குறை | பேய்க்குறை pēykkuṟai, பெ. (n.) சினம் கொண்டு பேய் செய்யுங் கேடு; evil or disaster, resulting from the malice of an unpropitialed devil. [பேய் + குறை] |
பேய்க்கூண்டு | பேய்க்கூண்டு pēykāṇṭu, பெ. (n.) செய்வினை பயிற்றுமிடம் (வின்);; place where the black arts are taught. [பேய் + கூண்டு] |
பேய்க்கூத்து | பேய்க்கூத்து pēykāttu, பெ. (n.) 1.பேயாட்டம்; devil dance. 2. குழப்பம்; confusion. [பேய் + கூத்து] |
பேய்க்கொடை | பேய்க்கொடை pēykkoḍai, பெ. (n.) வாரியிறைக்கும் ஈகை; lavish and indiscriminate giving. [பேய் + கொடை] |
பேய்க்கொம்மட்டி | பேய்க்கொம்மட்டி pēykkommaṭṭi, பெ. (n.) கொடி வகை (யாழ்.அக);; colocynth. [பேய் + கொம்மட்டி] |
பேய்க்கோட்டாலை | பேய்க்கோட்டாலை pēykāṭṭālai, பெ. (n.) 1. பேய்க் கோளறு பார்க்க;see peyk-kolaru. 2. பேய்க்குறை(வின்.); பார்க்கsee pey-k-kurai. [பேய் + கொள்தல் → கோடல் → கோட்டாலை] |
பேய்க்கோட்டி | பேய்க்கோட்டி pēykāṭṭi, பெ. (n.) 1.பேய்க கோளாறு பார்க்க; 2.see pey-k-kolaru3. 2. பேய்த்தனம் பார்க்க; 4.see péy-t-tapam. [பேய் + கோட்டி] கொள் – கோள் – கோட்டி |
பேய்க்கோயில் | பேய்க்கோயில் pēykāyil, பெ. (n.) பேய் உறையும் சிறு கோயில் (M.M. 681);; devi temple. [பேய் + கோயில்] |
பேய்க்கோலம் | பேய்க்கோலம் pēykālam, பெ. (n.) 1.பேயின் வடிவம்; 2.devil-like appearance. 3.என் பணிந்த பேய்க் கோலம் (பதினொ. அற்புதத்திரு. 29); 2. அழகிழந்த (அவ); தோற்றம், 4. appearance of wretchedness. “ஒண்டொடியிப் பேய்க். கோலங் கொண்டு” (பிரபுலிங். அக்க துற. 55.); [பேய் + கோலம்] |
பேய்க்கோளாறு | பேய்க்கோளாறு pēykāḷāṟu, பெ. (n.) பேய் பிடித்தலாலுண்டான இயல்பல்லாச் செய்கை; violent actions of a demoniac, as whirling the head. [பேய் + கோளாறு] |
பேய்க்கோள் | பேய்க்கோள் pēykāḷ, பெ. (n.) பேய் பிடிக்கை; demoniac possession. [பேய் + கோள்] கொள்→கோள் |
பேய்ச்சக்காலெறும்பு | பேய்ச்சக்காலெறும்பு pēyccakkāleṟumbu, பெ. (n.) பேய்க்காலெறும்பு பார்க்க;see peyk-kālerumbu. [பேய்க்காலெறும்பு → பேய்ச்சக்காலெறும்பு] |
பேய்ச்சத்தம் | பேய்ச்சத்தம் pēyccattam, பெ. (n.) பேரொலி (வின்);; hideous noise, as of a devil. [பேய் + SKt.sabda. த. சத்தம்] |
பேய்ச்சாளை | பேய்ச்சாளை pēyccāḷai, பெ. (n.) கருநிறச் சாளைமீன்வகை, (வின்);; interior calai fish. [பேய் + சாளை] |
பேய்ச்சி | பேய்ச்சி pēycci, பெ. (n.) 1.பெண்பேய்; demoness. “பேய்ச்சி பாலுண்ட பிரான்” (திவ்.இயற்.3:28);. 2. பேய் பிடித்தவள்; woman under possession of a demon. [பேயன்→பேய்ச்சி(பெ.பா);] பேய்ச்சி pēycci, பெ.(n.) பேய்பிடித்தவள்; a woman haunted by spirit. [பேய்+பேய்ச்சி] |
பேய்ச்சீந்தில் | பேய்ச்சீந்தில் pēyccīndil, பெ. (n.) ஒருவகைச் செடி (ஆகாசகருடன்);;(சங்.அக); a climbing Chrub. [பேய் + சிந்தில்] |
பேய்ச்சீயக்காய் | பேய்ச்சீயக்காய் pēyccīyakkāy, பெ (n.) கொடிவகை; copius narrow-leaved soap-pod. [பேய் + சியக்காய் சிக்காய் → சியக்காய்] |
பேய்ச்சுண்டை | பேய்ச்சுண்டை pēyccuṇṭai, பெ. (n.) மலைச்சுண்டை ;(M.M. 829); prickly nightshade. [பேய் + கண்டை] |
பேய்ச்சுரை | பேய்ச்சுரை pēyccurai, பெ. (n.) கரை வகை; wild melon. ‘கைப்பறா பேய்ச்சுரையின் காய்’ (நாலடி.16); [பேய் + கரை] |
பேய்ச்செயல் | பேய்ச்செயல் pēycceyal, பெ. (n.) தீ நடத்தை; devilisim, black magic. [பேய் + செயல்] |
பேய்ச்சேட்டை | பேய்ச்சேட்டை pēyccēṭṭai, பெ. (n.) பேய்க் கோளறு பார்க்க;see peyk-kolaru. [பேய் + சேட்டை] |
பேய்ச்சொறி | பேய்ச்சொறி pēyccoṟi, பெ. (n.) 1. பெருஞ்சொறி வகை; itch, scabies. 2, சிரங்குவகை; nettle rash, urticaria. [பேய் + சொறி] |
பேய்த்தக்காளி | பேய்த்தக்காளி pēyttakkāḷi, பெ. (n.) சீமைத் தக்காளி (வின்.); பார்க்க šimai-t-takkāli; tomato (W); [பேய் + தக்காளி] |
பேய்த்தண்ணீர் | பேய்த்தண்ணீர் pēyttaṇṇīr, பெ. (n.) சாராயம் (வின்.);; ardent spirits (w); [பேய் + தண்ணி] |
பேய்த்தனம் | பேய்த்தனம் pēyttaṉam, பெ. (n.) 1. முட்டாள்தனம்; fiendishness, ferociousness, devilishness. ‘இந்தப் பேய்த்தனமேன்’ (தாயு. பாயப்புலி. 23); 2. பித்து madness. 3. புல்லறிவு (சங்,அக);; toolishness. [பேய் + தனம்] |
பேய்த்தாரை | பேய்த்தாரை pēyttārai, பெ. (n.) ஊதுகருவி வகை; a large trumpet. [பேய் + தாரை] |
பேய்த்தி | பேய்த்தி pēytti, பெ. (n.) பேய்ச்சி; demoness. ” சிறுபேய் பெரும்பேய்த்தியைச் சென்றுபற்றும் (நீலகேசி.8); |
பேய்த்திமிட்டி | பேய்த்திமிட்டி pēyttimiṭṭi, பெ. (n.) பேய்க் கொம்மட்டி (சங்.அக.); பார்க்க;see pey-kkommatti. [பேய்க்கொம்மட்டி → பேய்த்திமிட்டி] |
பேய்த்தும்பை | பேய்த்தும்பை pēyttumbai, பெ. (n.) 1. காசித்தும்பை;(MM. 911);; flower tumhai. 2. பேய் மருட்டி MM பார்க்க;see peymarutt. [பேய் + தும்மை] |
பேய்த்தும்மட்டி | பேய்த்தும்மட்டி pēyttummaṭṭi, பெ. (n.) 1. பேய்க் கொம்மட்டி (சங்.அக); பார்க்க;see peyk-kommatti. 2. பேய்ச்கரை பார்க்க;see рёy-c-сural. [பேய் + தும்மட்டி] |
பேய்த்தேர் | பேய்த்தேர் pēyttēr, பெ. (n.) கானனிர்; mirag. பேய்த் தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்கு செல்வார். (தேவா.1145.10); [பேய் + தேர்] |
பேய்நடம் | பேய்நடம் pēynaḍam, பெ. (n.) வெறியாட்( (திவா.);, dancing under the influence of demon. [பேய் + நடம்] |
பேய்நரி | பேய்நரி pēynari, பெ. (n.) வெறிபிடித் நரி; rabid fox. “பேய்நாய் பேய்ந முதலியவற்றின் கடிகளுக்கு” (தஞ்.சர.iii 10 [பேய் + நரி] |
பேய்நவரை | பேய்நவரை pēynavarai, பெ. (n.) நான் விரலம் வளர்வதும் பழுப்புப் புள்ளிய வெள்ளை நிறமுடையதுமான நவை மீன்வகை; red mullet, silvery, spotted wi brown, attaining 4 in, in length. [பேய் + நவரை] |
பேய்நாய் | பேய்நாய் pēynāy, பெ. (n.) வெறி பிடித்த நாய்; [பேய் + நாய்] |
பேய்நாய்க்கடி | பேய்நாய்க்கடி pēynāykkaḍi, பெ. (n.) பேய் நாய்க்கடிச் சன்னி (M.L.); பார்க்க;see pêynāy-k-kadic-canni. [பேய் + நாய்க் + கடி] |
பேய்நாய்க்கடி சன்னி | பேய்நாய்க்கடி சன்னி pēynāykkaḍisaṉṉi, பெ. (n.) வெறிநாய்க்கடியால் உண்டாகும் சன்னிவகை; [பேய் + நாய்க்கடி + சன்னி] |
பேய்நிலை | பேய்நிலை pēynilai, பெ. (n.) எண்வகை மணத்துள் (பைசாசம்); ஒன்று (இறை.122);; a form of marriage. [பேய் + நிலை] |
பேய்பிடித்தல் | பேய்பிடித்தல் pēypiḍittal, பெ. (n.) பேயால் பற்றப் படுதல்; being possessed by a devil, obsession. [ பேய் + பிடித்தல் ] |
பேய்ப்பசலை | பேய்ப்பசலை pēyppasalai, பெ. (n.) பேய்ப்பசளை (மு.அ); பார்க்க;see pey_ppašaļai. [பேய்ப்பசளை → பேய்ப்பசலை] |
பேய்ப்படை | பேய்ப்படை pēyppaḍai, பெ. (n.) வில்லுப் பாட்டில் இறப்புப் பற்றிய கதைப்பாடல்களுக்கு பாடுபவர்; a singer of elegies. [பேய்+படை] |
பேய்ப்பந்து | பேய்ப்பந்து pēyppandu, பெ. (n.) எறிபந்தின் வோறரு பெயர்; a devil ball in games. [பேய்+பந்து] |
பேய்ப்புகையிலை | பேய்ப்புகையிலை pēyppugaiyilai, பெ. (n.) காட்டுப்புகையிலை (சித். அக.);; a kind t tobacco. [பேய் + புகையிலை] |
பேய்ப்புடல் | பேய்ப்புடல் pēyppuḍal, பெ. (n.) பூடுவை (பதார்த்த.354);; wild snake gourd. [பேய் + புடல்] |
பேய்ப்புடோல் | பேய்ப்புடோல் pēyppuṭōl, பெ. (n.) பேய்ப்புட (இ.வ.); பார்க்க;see pèy-p-puda. |
பேய்ப்புத்தி | பேய்ப்புத்தி pēypputti, பெ. (n.) அறிவின்மை (வின்);, imprudence folly rashness. [பேய் + SKț. nuddhi. த. புத்தி] |
பேய்ப்புல் | பேய்ப்புல் pēyppul, பெ. (n.) ஒட்டுப்பு (பதார்த்த.378);; Sticking grass. [பேய் + புல்] |
பேய்ப்பெண் | பேய்ப்பெண் pēyppeṇ, பெ. (n.) அறிவில்லா பெண்; foolish girl. ‘பேச்சரவங் கேட்டிலைபே பேய்ப் பெண்ணே (திவ்.திருப்பா.7); [பேய் + பெண்] |
பேய்ப்போக்கு | பேய்ப்போக்கு pēyppōkku, பெ. (n.) ஒழுங்கற்ற ஒழுக்கம்; irregular, absui conduct. (w.); [பேய் + போக்கு] |
பேய்ப்யூலா | பேய்ப்யூலா pēypyūlā, பெ. (n.) செடிவகை buck-torn. [பேய் + பூலா] |
பேய்மகள் | பேய்மகள் pēymagaḷ, பெ.(n.) வடிவில் பெருத்த பெண்; a woman of large size. [பெரு-பே-பேய்+மகள்] |
பேய்மனம் | பேய்மனம் pēymaṉam, பெ. (n.) 1. அறிவற்ற மனம்; distracted, foolish mind. ‘என்பேய் மனமால் கொண்டதே’ (திருநூற்.1); 2. இழிந்த மனம்(வின்);; vile heart, carnal mind. [ பேய் + மனம் ] |
பேய்மருட்டி | பேய்மருட்டி pēymaruṭṭi, பெ. (n.) செடிவகை(பதார்த்த. 243);; malabar catamint, S.Sr, anisomeles malabarica. [ பேய் + மருட்டி ] |
பேய்மழை | பேய்மழை pēymaḻai, பெ. (n.) பெருமழை; Heavy fall of rain. [பேய் + மழை] |
பேய்மாடி | பேய்மாடி pēymāṭi, பெ. (n.) புளிநறளை (மலை.); பார்க்க;see pusinarasai. [ பேய் + மாடி ] |
பேய்மாரல் | பேய்மாரல் pēymāral, பெ. (n.) முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in MudukulatturTaluk. [பேய்+மரல்] |
பேய்மிரட்டி | பேய்மிரட்டி pēymiraṭṭi, பெ. (n.) 1. பேய்மருட்டி பார்க்க;see pey marut. 2. கிலுகிப்பை பார்க்க;see kilukhuppai species of rattle work. [ பேய்மருட்டி → பேய் மிரட்டி ] |
பேய்மிளகாய் | பேய்மிளகாய் pēymiḷakāy, பெ. (n.) சீமைப் ப்ச்சை மிள்காய் (A);, cayenne peper. [பேய் + மிளகாய்] |
பேய்முகட்டைக்கடி | பேய்முகட்டைக்கடி pēymugaḍḍaiggaḍi, பெ. (n.) உடம்பிற் செந்நிறப் புள்ளிவிழும் நோய்வகை (M.L.);; purpura, a disease marked by livid spots on the skin. [ பேய்முகட்டை + கடி ] |
பேய்முகம் | பேய்முகம் pēymugam, பெ. (n.) பேய்மூஞ்சி (வின்);; hideuns face. [பேய்சி + முகம்] |
பேய்முசுட்டை | பேய்முசுட்டை pēymusuṭṭai, பெ. (n.) 1. சமுத்திரப்பாலை (வின்); பார்க்க;see samustra-t-pâlas elephant creeper. 2. கொடிவகை. malabar creeper. 3. ஒருவகைச் சொறிசிரங்கு (இ.வ.); nettle rash, urticaria. [பேய் + முகட்டை ] |
பேய்முன்னை | பேய்முன்னை pēymuṉṉai, பெ. (n.) 1. மரவகை; charcoal tree. 2. சமுத்திரப்பாலை; elephant creeper, (L);. [பேய் + முன்னை] |
பேய்முல்லை | பேய்முல்லை pēymullai, பெ. (n.) பேய்முசுட்டை (சங்.அக.); பார்க்க;see Peymusuttai. |
பேய்முள்ளி | பேய்முள்ளி pēymuḷḷi, பெ. (n.) காட்டு முள்ளி (சித்.அக.);; Wild thorny plant. [பேய் + மூஞ்சி] |
பேய்மூஞ்சி | பேய்மூஞ்சி pēymūñji, பெ. (n.) ஒழுங்கற்ற முகம் (கோரமுகம்); (வின்);, hideous face. [பேய் + மூஞ்சி] |
பேய்மை | பேய்மை pēymai, பெ. (n.) பேயின் தன்மை: devilishness. “பேய்மையாக்குமிப் பேதை தமைக்கள்வனொடுடனாய் (வீரசோயாப்.5, உரை); [பேய் + மை ‘மை’ ப.பெ.ஈறு] |
பேய்வரகு | பேய்வரகு pēyvaragu, பெ. (n.) காட்டுவரகு (சித்.அக.);; Wild ragi. |
பேய்வழிபாடு | பேய்வழிபாடு pēyvaḻipāṭu, பெ. (n.) பேயை வழிபடுதல்; devil-worship. [பேய் + வழிபாடு] |
பேய்வாதுமை | பேய்வாதுமை pēyvātumai, பெ, (n.) வாதுமை வகை (இ.வ.);; Wild almond. |
பேய்விட்டாட்டு-தல் | பேய்விட்டாட்டு-தல் pēyviṭṭāṭṭudal, செ. குன்றாவி, (w.t) பேயாட்டு (வின்); பார்க்க;see рёyattu. [பேய் + விட்டு + ஆட்டு ] |
பேய்வித்தை | பேய்வித்தை pēyvittai, பெ. (n.) சல்லியம்; witchcraft (w);. [ பேய் + வித்தை ] |
பேய்வெருட்டி | பேய்வெருட்டி pēyveruṭṭi, பெ. (n.) பேய்மருட்டி (நாமதீப.344); பார்க்க;see péy-marutti. [பேய் + மருட்டி → பேய்வெருட்டி] |
பேரடி-த்தல் | பேரடி-த்தல் pēraḍittal, செ.குன்றாவி. (v.t.) பேரைப்பதிவுப் புத்தகத்தினின்று நீக்குதல்; to remove a name from a register. [பேர்+அடி-,] |
பேரடிபடு-தல் | பேரடிபடு-தல் bēraḍibaḍudal, செ.குன்றாவி.(v.t.) எங்கும் பேசப்படுதல்; to talk about, famous. கு”ஊழல் முறையீட்டில் அமைச்சர் பேர் அடிபடுகிறது” [பேர்+அடிபடு] |
பேரடிபடுதல் | பேரடிபடுதல் bēraḍibaḍudal, பெ.(n.) எங்கும் பேசப்படுகை; being talked about, being famous. [பேர்+அடிபடுதல்] |
பேரட்டவனை | பேரட்டவனை pēraṭṭavaṉai, பெ (n.) பெயர்ப்பட்டியல்; index of names. [பேர்+அட்டவணை] |
பேரணி | பேரணி pēraṇi, பெ. (n.) 1. படையின் பின்னணி (பிங்.);; the rear of an army. “பேரணியி னின்ற பெருங்களிறுகள் (சீவக.277, உரை); 2. நடுப்படை; maind body or centre of an army. 3. பேரணிகலம் (பிங்.);: பார்க்க, 4. கிம்புரி; ornamental ring put on the tusks of elephants and other animals. “பேரணி யிலங்கொளி மருப்பிற் களிறும் (பரிபா.13,35); [பல்→அபரு→பெரு பெரு→பேர்+அணி] பேரணி pēraṇi, பெ. (n.) ஒருங்கு திரளுதல்; assembly of an organisation. [பல்+பரு + பெரு + பேர் + அணி] |
பேரணிகலம் | பேரணிகலம் pēraṇigalam, பெ. (n.) பெரும்பதக்கம்; a big ornament worn on the chest. பேரணிகல மணிந்த முலையாரும் (சீவக.2340.உரை); [பெரு→பேர்+அணிகலம்] |
பேரணை | பேரணை pēraṇai, பெ. (n.) 1. பெரிய அணைக்கட்டு; big dam. 2. பெருந்தடை; great obstacle. “சீர்த்த பேரணை தன்னையும் சிந்தின (கம்பரா.முதற்போர்.13); [பெரு→ பேர்+அனை] |
பேரண்டம் | பேரண்டம் pēraṇṭam, பெ. (n.) 1.வி யனுலகு (சங் . அக.);; universe. 2. மண்டையோடு (சங்.அக);; skill. 3. மூளை (சங். அக.);; brain. [பெரு→பேர்+அண்டம்] பேரண்டம் pēraṇṭam, பெ. (n.) நரி (யாழ்.அக);; fox. |
பேரதிர்ச்சி | பேரதிர்ச்சி pēradircci, பெ. (n.) பெருந்திகில், great shock. [பெரு→பேர்+அதிர்ச்சி] |
பேரத்தி | பேரத்தி pēratti, பெ. (n.) நரிமுள்ளிச்செடி, indian night Shade. |
பேரநீதி | பேரநீதி pēranīti, பெ. (n.) பெருஅநீதி; Great injustice. [பெரு→பேர்+sk a→nt த.அநீதி] |
பேரப்பன் | பேரப்பன் pērappaṉ, பெ. (n.) தந்தையின் தமையன் (s.i.i.iii.94,20.);; father’s elder brother. [பேர் + அப்பன்] |
பேரப்பிள்ளை | பேரப்பிள்ளை pērappiḷḷai, பெ. (n.) பேரன், பார்க்க;see pêran. [பேரன்+பிள்ளை] |
பேரமட்டி | பேரமட்டி pēramaṭṭi, பெ. (n.) பேராமுட்டி. பார்க்க;see perimபl (யாழ்.அக); [பேராமுட்டி-பேரமட்டி] |
பேரமுட்டி | பேரமுட்டி pēramuṭṭi, பெ. (n.) பேராமுட்டி பார்க்க;see perimய! (யாழ்.அக.); [பேராமுட்டி → பேரமுட்டி] |
பேரம் | பேரம் pēram, பெ. (n.) 1. விற்பனை sale, trade. 2. ஒப்பந்தத்திற்கு முன்பேசும் விலைப்பேச்சு; bargaining higgling and haggling. பேரஞ் சொல்லாமற் சரியாக சொல்லு 3. அருவிலை, high value. skt béra. தெ. பேரமு;க.பேர [பெயரம்→பேரம்] பேரம் pēram, பெ. (n.) 1. வடிவம் (நன். 273,மயிலை.); form shape. 2. உடம்பு body. 3. (விக்கிரகம்); திருவுருவச்சிலை; idol. ‘உத்சவ பேரம் [பேர்- பேரம்] பேரம் pēram, பெ. (n.) முத்தாலான அணிகலவகை; a large necklace of pears. பவுவீசு பேரார நிபுடமாலை'(தக்கயாகப்.106.); [பெருபேர்+ஆரம்] |
பேரம்பேசுதல் | பேரம்பேசுதல் pērambēcudal, பெ. (n.) பேரம் பார்க்க;see pēram. [பேரம் + பேசுதல்] |
பேரயன் துள்ளல் | பேரயன் துள்ளல் pērayaṉtuḷḷal, பெ. (n.) ஒரு வகையான காணிப்பழங்குடியினரின் ஆடல்; a dance of Kani tribes. [பெரு+ஆயன்+துள்ளல்] |
பேரரசன் | பேரரசன் pērarasaṉ, பெ, (n.) பேரரசை ஆளும் மன்னன் மாமன்னன்; emperor. [பேர்+அரசன்] |
பேரரசு | பேரரசு pērarasu, பெ. (n.) பல நாடுகளைக் கொண்ட பரந்த நிலப்பரப்பைத் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு ஆட்சி நடத்தும் அரசு; empire. [பேர்+அரசு] |
பேரரத்தை | பேரரத்தை pērarattai, பெ. (n.) மருந்துச் செடிவகை(பதார்த்த.984.);; big galangal. [பெரு→ பேர்→அரத்தை] |
பேரருளுடைமை | பேரருளுடைமை pēraruḷuḍaimai, பெ. (n.) சிவனெண் குணத்துள் ஒன்றாகிய மிகுந்த அருளையுடைமை(குறள்,9.உரை.); being of boundless grace, one of Śivan-en-gunam. [பெரு→பேர்+அருளுடைமை] |
பேரருவி | பேரருவி pēraruvi, பெ. (n.) பெரிய அருவி;(சூடா.);; huge waterfall. [பெரு→ பேர்+அருவி] |
பேரறநூல் | பேரறநூல் pēraṟanūl, பெ. (n.) திருமறைநூல்; moral instruction look. திருக்குறள் இனம், மொழிபாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான பேரற நூலாகும். [பெரு→பேர்+அறநூல்] |
பேரறநெறி | பேரறநெறி pēraṟaneṟi, பெ. (n.) நயன்மைநெறி; moralethics. திருக்குறள் அனைத்து மொழியினர்க்கும் நயன்மை கூறும் அற நூலாகும். [பேரறம் + நெறி] |
பேரறம் | பேரறம் pēraṟam, பெ. (n.) பேய்க்கொடை பார்க்க;see peykkodai. [பெரு→பேர்+அறம] |
பேரறிவாளன் | பேரறிவாளன் pēraṟivāḷaṉ, பெ. (n.) உயர்ந்த அறிவிடையவன்; person of mature under standing, wise man. உலகவாம் பேரறி வாளன் திரு (குறள்.215); [பெரு→பேர்+அறிவாளன்] |
பேரறிவு | பேரறிவு pēraṟivu, பெ.(n.) தீமை செய்தார்க்கும் தீமை செய்யாதிருக்கும் நல்லறிவு, good-sense. 2. அறிவினுள் எல்லாந் தலை யெ ன் ப தீய செறு வார் க் கும் செய்யாவிடல்.(கு.203);. [பெரு→பேர்+அறிவு] பேரறிவு pēraṟivu, பெ. (n.) 1. பகுத்தறிவு: sense of discrimnation. 2. நூலறிவு; divine knowledge; spiritual knowledge. 3. மூதறிவு; uncommon mental powers, high mental attainments; great wisdom. ‘தம்பேரறிவு தோன்ற நல்லந்துவனார் செய்யுட்செய்தார் (கலித்.142,உரை.); [பெரு→பேர்+அறிவு] |
பேரறிவுத்திறம் | பேரறிவுத்திறம் pēraṟivuttiṟam, பெ. (n.) பகுத்தறிவுத்திறம்; knowledge of common sense. [பேரறிவு + திறம்] |
பேரறுகு | பேரறுகு pēraṟugu, பெ. (n.) அறுகுவகை(வின்);; elephant bermuda grass. [பெரு→பேர்+அறுகு] |
பேரலி | பேரலி pērali, பெ. (n.) விளவங்கோடு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vilavancode Taluk. [பெரு+அல்லி-பேரல்லி-பேரலி] |
பேரலை | பேரலை pēralai, பெ. (n.) கடலின் தோன்றும் பெரிய அலை; ground-swell. [பெரு- பேர்+அலை] |
பேரளவு | பேரளவு pēraḷavu, பெ, (n.) 1. பேரறிவு; great wisdom. “பேரளவுடைய அர்ஜூனன் (ஈடு,2,8,6); 2. பெருஞ்சிறப்பு; great respect. ‘ஆர்புனை வேந்தற்கப் பேரளவியற்றி” (மணிமே.5,116); 3. பெருமளவு; large quantity. [பெரு→பேர்+அளவு] |
பேரழகு | பேரழகு pēraḻku, பெ. (n.) பொலிவான அழகு; good looking. [பெரு→அ பேர்+அழகு] |
பேரழை-த்தல் | பேரழை-த்தல் pēraḻaittal, செ.கு.வி. (v.i.) வருகைக் கணக்கெடுத்தல்(புதுவை);; to take the roll-call or attendance. [பேர்+அழை-,] |
பேரவரை | பேரவரை pēravarai, பெ. (n.) அவரை வகை(வின்);; a large species of Egyption bean. [பெரு→ பேர் + அவரை] |
பேரவியல் | பேரவியல் pēraviyal, பெ.(n. ) பெரும்பொங்கல்(யாழ்ப்.) cooking rice on a large scale, as for a company of religious mendicants. [பெரு- பேர்+அவியல்] |
பேரவை | பேரவை pēravai, பெ. (n.) 1. சட்டமன்றம்; legislature assembly. 2. குறிப்பிட்ட ஒரு தரப்பிளர் தங்களுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு: forum, union. மாணவர் பேரவை, தொழிற்சங்கம் பேரவை. |
பேரவைத்தலைவர் | பேரவைத்தலைவர் pēravaittalaivar, பெ. (n.) மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்றம் ஆகியவற்றில் அவை நடவடிக்ககளை நடுவர் போல் இருந்து நடத்திடும் பொறுப்புவகிப்பவர்; speake of the parliament or the state legislative assembly. [பேரவை +தலைவர்] |
பேரவ்வை | பேரவ்வை pēravvai, பெ. (n.) பெரியதாய்(தல்); elder maternal aunt. [பெரு→ பேர்+அவ்வை] |
பேராங்குல மானம் | பேராங்குல மானம் pērāṅgulamāṉam, பெ. (n.) படிமங்களின் உயரமைப்பில் பின்பற்றப்படும் மரபு; a measurement in sculpture. [பெரு+அங்குல+மானம்] |
பேராசிரியர் | பேராசிரியர் pērāciriyar, பெ. (n.) தொல் காப்பியத்திற்கும் திருக்கோவையார்க்கும் உரையிட்ட ஆசிரியர்; a commentator of Tolkāppiyam and Tiru-k-kövaiyār [பெரு→பேர்+ஆசிரியர்] பேராசிரியர் pērāciriyar, பெ. (n.) பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும் உயர்நிலைப் பதிவுபெற்ற ஆசிரியர்; professor. தேவநேயப்பாவாணர் சேலம் நகராண்மைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். (உ.வ.); [பெரு(மை);→பேர்+ஆசிரியர்] |
பேராசிரியை | பேராசிரியை pērāciriyai, பெ.(n.) பெண் பேராசிரியர்; women professor. பேராசிரியன் ஆ.பா பேராசிரியை பெ.பா.. |
பேராசை | பேராசை pērācai, பெ. (n.) 1. பெருவிருப்பம்; intense desire. ‘பேராசை வாரியனை’ (திருவாச.8.2); 2. மிக்க பொருளாசை; avarice. “பேராசைக் காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான் [பெரு→பேர்+ஆசை] |
பேராசைக்காரன் | பேராசைக்காரன் pērācaikkāraṉ, பெ. (n.) பொருளாசை கொண்டவன்; avarice perspm. “பேராசைக் காரனடா பார்ப்பான்” [பேராசை + காரன்] ‘காரன்’ வினைமுதனத்தும் ஆண்பாலறு |
பேராட்டி | பேராட்டி pērāṭṭi, பெ. (n.) பெருமையுடையவள; lady of ominence. “பேராட்டி சீராட்டும் பிள்ளையார் (கோயிற்பு:பாயி:7); [பெரு→பேர்+ஆட்டி] ‘ஆட்டி’ பெ. பா. ஈறு. |
பேராண்டி | பேராண்டி pērāṇṭi, பெ. (n.) பேரன்; grandson. [பேர்→ பேரன்→ பேரான்→பேராண்டி ] |
பேராண்டு | பேராண்டு pērāṇṭu, பெ. (n.) அறுபது ஆண்டு (வருடங்); கொண்ட காலம் (வின்);; jupiter cycle of 60 years. [பெரு → பேர் பேர்+ஆண்டு] ‘யாண்டு → ஆண்டு |
பேராண்முல்லை | பேராண்முல்லை pērāṇmullai, பெ. (n.) சினமிக்க மன்னன் போர்க்களத்தைக் கைக் கொண்டதைக் கூறும் புறத்துறை:(பு.வெ.826);; [பெரு→பேர் + ஆண் + முல்லை] |
பேராண்மை | பேராண்மை pērāṇmai, பெ. (n.) வினைத்திறம்(வல்லமை);; manly strenth. [பெரு → பேர்+ஆண்மை] |
பேராண்மை’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
பேராண்வஞ்சி | பேராண்வஞ்சி pērāṇvañji, பெ. (n.) பகைவர் பொரும் செருவைத்தொலைத்த தலைமை யையுடைய வீரர்க்குப் பெரிதுங் கொடுத்தலைக் கூறும் புறத்துறை;(பு.வெ.3.9);; theme describing gifts made to soldiers who put the enemy’s army to rout. [பெரு→பேர்+ஆண் + வஞ்சி] |
பேராத்தி | பேராத்தி pērātti, பெ. (n.) தும்பை பர்க்க;(சங்.அக);see tumba. white dead nettlCe. [பேர்+ஆத்தி] |
பேராந்தை | பேராந்தை pērāndai, பெ. (n.) 1. நிலாமுகிப்புள் (பிங்);; greek partridge. 2, ஆந்தைவகை; rock-horned owl. மலையின்கட் பேராந்தை;யோடு கூடி யொலிக்கும்’ (புறநா.170.உரை); [பெரு→பேர்+ஆந்தை] |
பேரானந்தம் | பேரானந்தம் pērāṉandam, பெ. (n.) மேலான மகிழ்ச்சி (பரமானந்தம்);; supreme bliss. “பற்றிய பேரானந்தம் பாடுதுங் காணம்மானாய் (திருவாச.8.28); [பெருமை + skia-nanda. த.ஆனந்தம்] |
பேராபத்து | பேராபத்து pērāpattu, பெ. (n.) பெருமிடர்; great misfortune. [பெரும் + skt.a-pad. த.ஆபத்து] |
பேராப்பணம் | பேராப்பணம் pērāppaṇam, பெ. (n.) 1.கணக்கின் விடை; solution of a mathematical problem. 2. தீர்ந்த முடிவு; net result. 3. நிகர ஊதியம் (லாபம்);; net profit. [பெயர்→பேர்+ஆ+பணம்] ‘ஆ’ எதிர்மறை இடைநிலை |
பேராமட்டி | பேராமட்டி pērāmaṭṭi, பெ. (n.) பேராமுட்டி பார்க்க;(யாழ்.அக); see peramutti. [பேராமுட்டி→பேராமட்டி] |
பேராமணக்கு | பேராமணக்கு pērāmaṇakku, பெ, (n.) ஆமணக்கு;(மூ.அ); Castor plant பார்க்கsee āmanakku. [பெரு→பேர்+ஆமணக்கு] |
பேராமல்லி | பேராமல்லி pērāmalli, பெ. (n.) 1. பேராமல் லிகை(வின்); பார்க்க;see pērāmalligai. 2. கொத்த மல்லிவகை: [பெரு→பேர்+ஆமல்லி] |
பேராமல்லிகை | பேராமல்லிகை pērāmalligai, பெ, (n.) 1.பெருமல்லிகை; single flowered a rabian jasmine. [பெரு → பேர்+ஆ + மல்லிகை] |
பேராமுட்டி | பேராமுட்டி pērāmuṭṭi, பெ. (n.) 1. செடிவகை(பதார்த்த,469); ; pink-tinged white sticky mallow. [பெருமை + ஆ +முட்டி] |
பேராயம் | பேராயம் pērāyam, பெ. (n.) எண்பேராயம் (திவா);பார்க்க;see empérâyam. the eight groups of retinues. [பெரு→பேர்+ஆயம்] |
பேராயிரம் | பேராயிரம் pērāyiram, பெ (n.) இறைவனுக் ஆயிரம் பெயர்கள்(தேவா.896.5);, the usand names of any particular deity. [பேர்+ஆயிரம்] |
பேராறு | பேராறு pērāṟu, பெ. (n.) 1. மலையிற் பிறந்து கடலில் நேரே கலக்கும் நீரோட்டம்; river rising in a mountain and emptying into a sea. 2. மேல்கடலிற் கலக்கும் ஒர் ஆறு; a river flowing west-wards from the western ghats. ‘அரசன் பேராற்றங் கரையினின்று போந்து (சிலப்.25, 180, அரும்); 3. கிருட்டிணா நதி: the river krisha. “நிறைந்து வரும் பேராறு மி ழிந்து” (கலிங்,355); [பெரு→பேர் + ஆறு] |
பேராற்றல் | பேராற்றல் pērāṟṟal, பெ. (n.) போரிடும் ஆற்றல்; superior skill great power. [பெருமை + ஆற்றல்→ பேராற்றல்] |
பேராற்று நெடுந்துறையன் | பேராற்று நெடுந்துறையன் pērāṟṟuneḍunduṟaiyaṉ, பெ.(n.) கடல் கொண்ட குமரி நாட்டுத் தமிழ்ப் புலவர்; a Tamil poet of submerged Kumari land. [பேரு+ஆறு:நெடும்துறை+அன்] |
பேராலவட்டம் | பேராலவட்டம் pērālavaṭṭam, பெ.(n.) பேரியவிசிறிவகை; a large, ornamental, cular fan, (பிங்); (சீவக.1906, உரை); [பேர்+ஆலவட்டம்] |
பேரால் | பேரால் pērāl, பெ. (n.) இரண்டடிநீளம் பேர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான வகை (பதார்த்த,919);; thorny backed eel, brown, attaining more than 2ft in length. [பெரு பேர்+ ஆரல்→ஆரால்] பேரால் pērāl, பெ. (n.) கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village_in Kallakkurichi Taluk. [பெரு-பேர்+ஆல்] |
பேராளன் | பேராளன் pērāḷaṉ, பெ. (n.) 1. பெருமை யுடையவன்; renowned personage. உம்பராளும் பேராளன்’ (திவ்.பெரியதி,7,4,4.); 2. பல பெயர்களைப் பெற்றவன்; one who bears several names. “பேராளன் பேரோதும் பெரியோரை” (திவ். திருநெடுந்.20); 3. 5 ஆவது விண்மீன் (பிங்);; the fifth makşatra. 4. 4ஆவது விண்மீன்:(சூடா); naksatra. [பேர்+ஆளன்] |
பேராளி | பேராளி pērāḷi, பெ. (n.) 1. ஒருவன் பெயரைக் கொண்டவன்-வள்; namesake. 2. புகழ் வாய்ந்தவன் – வள்(யாழ்.அக);; famous person. [பேர்+ஆளி] ‘இ வினைமுதலீறு |
பேராவல் | பேராவல் pērāval, பெ. (n.) வேணவா; earnes desire. [பெரும்+ஆவல்] |
பேரி | பேரி pēri, பெ. (n.) 1.முரசு; kettledrum. ‘சங்குபேரி முழங்கிய தானையே’ (கம்பரா. எழுச்.28); 2. பறை'(வின்);; drum. [பெரு→பேர்→ பேரி] பேரி pēri, பெ.(n.) மரவகை; communis. [E. pear → த. பேரி.] |
பேரிகை | பேரிகை pērigai, பெ. (n.) பேரி (சிலப்.327.உரை); பார்க்க;see per skt bhërika. [பேரி+ பேரிகை] ‘இகை’ சொல்லாக்க ஈறு பேரிகை pērigai, பெ. (n.) ஓசூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Hosur Taluk. [ஒருகா பெருமுகை-பேரிகை] |
பேரிசாத்தனார் | பேரிசாத்தனார் pēricāttaṉār, பெ.(v.i.) கடைக்கழகப் புலவர்: poet of sangam age. [பேரி+சாத்தன்+ஆர்] |
பேரிசு | பேரிசு pērisu, பெ. (n.) 1. கணக்கின் மொத்தத்தொகை; sum or aggregate of an account. 2. ஊரார் கட்டும் மொத்தவரி: total amount of a revenue assessment. [பெரு→பேரி → பேரிசு] |
பேரிசை | பேரிசை pērisai, பெ. (n.) 1. பெரும்புகழ்; great renown. ‘பேரிசை நன்னன்'(மதுரைக்.618); 2. கடைச்சங்கத்து வழங்கிய ஒர் இசை நூல் (இறை.5 உரை);; a treatise on music, of the last sangam, not now extant. [பெரு → பேர்+இசை] பேரிசை pērisai, பெ. (n.) ஒரு வகையான இசைநூல்; an ancient treatise on Tamil music. [பெரு+இசை] |
பேரிடர் | பேரிடர் pēriḍar, பெ. (n.) பெருந்துன்பம்; great trouble. [பெரு → பேர் + இடர்] |
பேரிடு–தல் | பேரிடு–தல் pēriḍudal, செ.கு.வி (v.i.) பெயரிடு-தல் பார்க்க;see peyaridu. மானிட சாதியின் பேரிடு மாதர்காள்’ (திவ்.பெரியாழ்,4,6.2); [பெயிரிடு→தல்→ பேரிடு-தல்] |
பேரிந்து | பேரிந்து pērindu, பெ. (n.) ஈந்துவகை(சூடா); date palm. [பெரு→பேர் + ஈந்து] |
பேரின்ப வாழ்வு | பேரின்ப வாழ்வு pēriṉpavāḻvu, பெ. (n.) வீட்டுலக வாழ்வு: blissful lite. “நம்முடனாம் பேரின்ப வாழ்வு சேர்வார்” (கஞ்சிப்பு:தழுவ,65); [பேரின்பம் + வாழ்வு] |
பேரின்பம் | பேரின்பம் pēriṉpam, பெ. (n.) 1. மேலான இன்பம் (பிங்);; supreme bliess. “அளவில் பேரின்பத் தடியரோடிருந்தமை” (திவ். திருவாய். 10.3.1); 2. வீட்டின்பம்; heavenly bliss, salvation. ‘பேரின்பத் தோங்கும்….. நாதப்பறை” (திருவாச.198);. [பெரு→பேர்+இன்பம்] |
பேரியம் | பேரியம் pēriyam, பெ. (n.) பேரி பார்க்க;see peri. ‘பேரியங்கண் முருடாகுளி (கம்பரா. இராவ.தானை.12); [பெரு → பேர்+இயம்] |
பேரியற் காஞ்சி | பேரியற் காஞ்சி pēriyaṟkāñji, பெ. (n.) கட்டினியல்புகளைப் புலவர் எடுத்துக் கூறுந்துறைவகை (திவா);; theme in which a oet describes the nature of evil. [பெரு→பேர்+இ+காஞ்சி] |
பேரியல் | பேரியல் pēriyal, பெ. (n.) பெருந்தன்மை; noble character. ‘ தில்லைப் பேரியலூர்ர்’ (திருக்கோ.31); [பெரு → பேர்+இயல்] |
பேரியல்பு | பேரியல்பு pēriyalpu, பெ. (n.) கெழுதகைமை; good manner. [பெரு → பேர்+இயல்பு] |
பேரியாறு | பேரியாறு pēriyāṟu, பெ. (n.) 1. பேராறு1,2 பார்க்க;see pérwnaru!,2 2. கங்கைப் பேரியாற்று (சிலப்.28.121); பெருமலை விலங்கிய பேரியாற்றடைகரை (சிலப்.25,22);. [பெரு→பேர்+யாறு] |
பேரியாழ் | பேரியாழ் pēriyāḻ, பெ. (n.) 1. நால்வகை வாழ்களுள் இருபத்தொரு நரம்புள்ளது (சிலப்.3.26.உரை);; a lute of rā strings, one of ɔur yā|. [பெரு→பேர்+யாழ்] |
பேரிரக்கம் | பேரிரக்கம் pērirakkam, பெ. (n.) கழிவிரக்கம்; repentance. [பெரு → பேர்+இரக்கம்] |
பேரிரவல் | பேரிரவல் pēriraval, பெ. (n.) மாற்றுப் பெயரில் இலங்குதல்; benami transaction (loc);. [பெயர்→பேர்+இரவல்] |
பேரிருக்கை | பேரிருக்கை pērirukkai, பெ. (n.) தோணா முகம்(வின்); பார்க்க;see tõņāmugamtown. surrounded by a moat. [பெரு→பேர்+இருக்கை] |
பேரிரைச்சல் | பேரிரைச்சல் pēriraiccal, பெ. (n.) பெருங்கூச்சல், uproar. [பெரு→ பேர்+இரைச்சல்] |
பேரிரைப்பை | பேரிரைப்பை pēriraippai, பெ. (n.) அசை போடும் விலங்குகளின் மேல் வயிறு(கால்.வி);; irst stomach of ruminants, rumen. [பெரு → பேர்+இரைப்பை] |
பேரிரையான் | பேரிரையான் pēriraiyāṉ, பெ. (n.) மிகுதியாக உண்போன்; glutton. ‘நிற்குங் கழியே ரிரையான்க ணோய்’ (குறள்.946); [பெரு→பேர்+இரையான்] |
பேரிலக்கம் | பேரிலக்கம் pērilakkam, பெ. (n.) பின்ன மல்லாத முழுவெண்; integer whole number. [பெரு→பேர்+இலக்கம்] |
பேரில் | பேரில் pēril, இடை (prep.) 1. மீது; on, about. அவன் பேரில் குற்றமில்லை. 2. பிறகு after. அவன் சொன்னதன்பேரில் வந்தான் [பேர் → பேரில் ‘இல்’ (ஐந்தாம்வே.2. 62.2);] |
பேரிளமை | பேரிளமை pēriḷamai, பெ. (n.) 1. இளமை தொடக்கம்; early period of youthfulness. ‘அணைந்த பேரிளமையாலே தனைநனிமதித்து” (திருவாலவா.13.15. 2. இளமை – முதுமை இடைப்பட்ட அகவை; middle age. “நகரத்தோமும் பேரிளமையோமும்” (s.l.l.i.165); [பெரு→பேர்+இளமை] |
பேரிளம் பெண் | பேரிளம் பெண் pēriḷambeṇ, பெ. (n.) 1. எழுவகைப் பருவ மகளிருள் முப்பத்திரண்டு அ. க வை க்கு மேல் நாற்பது அக வை வரையுள்ள பெண் (பிங்);; women between the ages of 32 and 40. 2. முப்பதுக்கு மேல், ஐம்பத்தைந்து வரை அகவையுள்ள பெண் (கொக்கோ.);; women between the ages of 30 and 55. [பெரு → பேர்+இளம் + பெண்] |
பேரிழப்பு | பேரிழப்பு pēriḻppu, பெ. (n.) மிகுந்த இழப்பு; great loss better loose. [பெரும்→ பேர்+இழப்பு→ பேரிழப்பு] |
பேரிழவு | பேரிழவு pēriḻvu, பெ. (n.) 1. மிகுந்த இழப்பு; great calamity. 2. தொல்லை (கொ.வ.);; worry, bother [பெரு→பேர்+இழவு] |
பேரீகம் | பேரீகம் pērīkam, பெ. (n.) 1. வட்டத்திருப்பி; 2. பிரண்டை(சங்.அக.); square stalked wine. |
பேரீசு | பேரீசு pērīcu, பெ.(n.) 1. கணக்கின் மொத்தத் தொகை; total or aggregate of an account. 2. பட்டாதார் அல்லது ஊரார் கட்டும் மொத்தவரி; total amount of a revenue assessment. [U. {} → த. பேரீசு.] |
பேரீச்சு | பேரீச்சு pērīccu, பெ. (n.) பேரிந்து(பதார்த்த.525); பார்க்க;see perindu. [பேரிந்து→ பேரீச்சு] |
பேரீஞ்சு | பேரீஞ்சு pērīñju, பெ. (n.) பேரிந்து பார்க்க;see périndu. [பேரிந்து →பேரீஞ்சு] |
பேரு | பேரு pēru, பெ. (n.) சிற்றுரில் நீர்பாய்ச்சு வோனுக்குக் கொடுக்கும் வளி(RT);; a fee paid to apersonauthorised to distribute water for irrigation. [பெரு → பேரு] பேரு pēru, பெ, (n.) 1. கடல்; sea, ocean. 2. ஞாயிறு; sun. 3. தீ; fire. 4. பொன்மலை ( (யாழ்.அக.);; Mt Mēru skt përu [ பெரு → பேரு] |
பேருண்டி | பேருண்டி pēruṇṭi, பெ. (n.) 1. மிகுதியாயுட் கொள்ளும் உணவு (பிங்);; gluttony. 2. ஒரு நாளிற் கொள்ளும்இன்றியமையா உணவு; principal meal. [பெரு→ பேர்+உண்டி] |
பேருண்டிக்கலம் | பேருண்டிக்கலம் pēruṇṭikkalam, பெ. (n.) பெருஞ்சமையல் ஏனம்; a big cooking vessel. [பேருண்டி + கலம்] |
பேருண்டிக்காரன் | பேருண்டிக்காரன் pēruṇṭikkāraṉ, பெ. (n.) பேருண்டியாளன் பார்க்க;see peruntiyalan. [பேருண்டி + காரன்] |
பேருண்டியாளன் | பேருண்டியாளன் pēruṇṭiyāḷaṉ, பெ. (n.) மிகவுண்போன்; glutton. [பேருண்டி+ஆளன்] |
பேருண்டிவேட்கை | பேருண்டிவேட்கை pēruṇṭivēṭkai, பெ. (n.) பெருந்தீனி வேட்கை; voracity of appentite. [பேருண்டி + வேட்கை] |
பேருதவி | பேருதவி pērudavi, பெ. (n.) பெருநன்றி; help in dire distress, great farour. “பேருதவிக் கைமாறா” (திவ்.திருவாய்.8.1.10); [பெரு → பேர்+உதவி] |
பேருபகாரம் | பேருபகாரம் bērubakāram, பெ. (n.) பேருதவி பார்க்க;see per-udaw. [பெரு → பேர்+ skt. upa-kåra. த. உபகாரம்] |
பேருமரி | பேருமரி pērumari, பெ. (n.) வழலையும்(சோப்பும்); கண்ணாடியுஞ் செய்ய உதவும் உமரிவகை;(யாழ்.அக);; a plant that yiedls a coarse kind of barilla for soap and glass. [பெரு → பேர்+உமரி] |
பேருயிர் | பேருயிர் pēruyir, பெ. (n.) 1. கடவுள்; god, as Supreme Being. “உண்டுமிழ்ந்தளந்த, பேருயிரேயோ’ (திவ்.திருவாய்8.1.5); 2. பெருங்காற்று,(தைலவ.தைல);; boisterous wind. [பெரு → பேர்+உயிர்] |
பேருரியோன் | பேருரியோன் pēruriyōṉ, பெ. (n.) தோல்வினைஞன்; cobbeer (தைலவ.தைல); [பெரு→பேர்+உரி→உரியோன்] |
பேருறக்கம் | பேருறக்கம் pēruṟakkam, பெ (n.) 1. பெருந்துக்கம்; sound sleep. ஈதென்ன பேருறக்கம்’ (திவ்.திருப்பா.12); 2, இறப்பு; death. ‘உறங்கினார் பேருறக்கங் கொண்டார்” (அருட்யா.1.நெஞ்சறி. 477);. [பேர்+உறக்கம்] |
பேருள்ளம் | பேருள்ளம் pēruḷḷam, பெ. (n.) பெருந்தகைப்பண்பு; charity mind. [பெரு→பேர்+ஊக்கம்] |
பேருழைப்பு | பேருழைப்பு pēruḻaippu, பெ. (n.) பெரும்பாடு: great strain. [பெரு→ பேர்+உழைப்பு] |
பேருவகை | பேருவகை pēruvagai, பெ. (n.) பெருமகிழ்ச்சி, great joy. [பெரும்→ பேர் + உவகை] |
பேரூர் | பேரூர் pērūr, பெ. (n.) 1. நகரம்; city. ‘காவலன் பேரூர் கனையெரி யூட்டிய (மணிமே.2,54); 2. மருத நிலத்துர் (இறை.கள.1.19);; large town in an agricultural tract. 3. கோயம்புத்துர் மாவட்டத்து அமைந்த சிவன் கோயில்; a siva shrine in coimbatore District. கொகிற் காஞ்சிவாய்ப், பேரூர் (பெரியபு. ஏயர்கோன்.88); [பெரும் + ஊர்→ பேரூர்] |
பேரூர்ப்புராணம் | பேரூர்ப்புராணம் pērūrppurāṇam, பெ. (n.) கோயம்புத்துர் மாவட்டத்திள்ள பேரூர்ச் சிறப்பைப் பற்றிக் கச்சியப்ப முனிவரியற்றிய தொன்மம்; a puránam in verse on pèrur in Coimbatore district, by kacciyappa . muŋivar. [பேரூர்+புராணம்] |
பேரெடு-த்தல் | பேரெடு-த்தல் pēreḍuttal, செ.கு.வி (v.i.) புகழ்புறுதல்; to become famous. [பெரு→பேர்+எடு-] பேரெடு-த்தல் pēreḍuttal, செ.குன்றாவி (v.i.) பட்டியலிலிருந்து பெயரை நீக்கி விடுதல்; to strike off the roll. [பெயர் + எடு-,] |
பேரெண் | பேரெண் pēreṇ, பெ. (n.) 1. பெருந்தொகை; high number. 2. நாற்சீர் ஈரடியாய் வரும் அம்போதரங்கவுறுப்பு வகை (காரிகை, செய்.10 உரை);;(pros.); a variety of ambôdarangam consisting of double line of four feet each. [பெரு→ பேர் + எண்] |
பேரெலி | பேரெலி pēreli, பெ. (n.) பெரிய எலிவகை; a kind of large rat. பன்மயிர்ப்பேரெலி (சீவக. 1898); க.பேரிலி [பெரு→ பேர்+ எலி] |
பேரெலுமிச்சை | பேரெலுமிச்சை pērelumiccai, பெ. (n.) எலுமிச்சை வகை; citron lemon. [பெரு→ பேர்+எலுமிச்சை] |
பேரெல்லை | பேரெல்லை pērellai, பெ. (n.) செய்யுளின் அடிப் பெருமைக்கு அமைந்த வரையறை: maximum limit, as of the number of lines in a Verse, opp, to cirrellai. [பெரு→பேர் + எல்லை] |
பேரெல்லைவெண்பா | பேரெல்லைவெண்பா pērellaiveṇpā, பெ. (n.) எட்டடி வெண்பா(யாழ்.அக);; a venba having eight lines. [பேரெல்லை + வெண்பா] |
பேரெள் | பேரெள் pēreḷ, பெ. (n.) எள்வகை; aspecies of large Sesame. [பெரு→ பேர் + எள்] |
பேரேடு | பேரேடு pērēṭu, பெ. (n.) பேர்வழி இனக்கணக்கு; ledger. [பெரு → பேர்+ ஏடு] |
பேரேற்ற பண்டாரம் | பேரேற்ற பண்டாரம் bērēṟṟabaṇṭāram, பெ. (n.) தமிழ்ச் சிவனிய வேளாளருக்குத் திருவாங்கூர் அரசர் வழங்கும் பட்டப்பெயர்(நாஞ்);; a title conferred by the Travancore kinds on the Tamil šaiva vēlāļas. [பேர்+ ஏற்ற + பண்டாரம்] |
பேரேலம் | பேரேலம் pērēlam, பெ. (n.) எலவகை; great CardamOm. [பெரு → பேர்+ ஏலம்] |
பேரை | பேரை pērai, பெ.(n.) நீர்(அக.நி); water. |
பேரைப் பழம் | பேரைப் பழம் pēraippaḻm, பெ.(n.) கொய்யாப் பழம்; guava.(வடார்க்); [பிரை – பேரை+பழம்] |
பேரொலி | பேரொலி pēroli, பெ. (n.) பெருங்கூச்சல், loud noiCe. [பெரு→பேர்+ஒலி] |
பேரொளி | பேரொளி pēroḷi, பெ. (n.) 1. மிகுந்த ஒளி, great light, lustre. “பேரொளியேசேர்வன” (திருவிருத்.14); 2. ஞாயிறு: Sun. 3. திங்கள், moon. “பேரொளியைக் கூடி யாவங் கொள்ளுநாள்” (சைவச பொது.13); 4. கடவுள் god, as the supreme light. “சித்தாந்தப் பேரொளியை,” (தாயு,பொருள்.2); [பெரு → பேர்+ஒளி] |
பேர்-தல் | பேர்-தல் pērtal, செ.கு.வி. (v.i.). 1. சிதைதல் to become loose to be detached. கட்டடம் பேர்ந்து போயிற்று 2. பிரிதல்; to separate. “உமையோ டென்றும் பேரானை” (தேவா.8725); 3. போதல்; to depart, go away. “பேர்ந்தும் பெயர்ந்தும்” (திவ்.திருவாய்.5,3,3); 4. அழிதல், to be annihilated. “பேர்கின்ற தாகும் பிறப்பு” (அற்நெறி. 169); 5.பிறழ்தல்; to flop, as a fish. ‘கெண்டைக் குலம்….பேர்கின்றவே’ (திருவிருத்.11); 6. அசைதல்; to move. பேருங் கற்றைக் கவரி (கம்பரா.முதற்.98); 7. குறைதல்; to lesser, diminish. “பேராச் சிறப்பின்” (தொல்.பொ.102,); 8. பின் வாங்குதல், to draw back, retreat, as a warrior. “பொருதகர் தாக்கற்குப் பேருந்த கைத்து” (குறள்.486); 9. முறைபிறழ்தல்; to go out of order. “வினையைப் பேராம லூட்டும் பிரான்” (சி.போ.22); 10. நிலைமாறுதல்; to change. பேதிப்பன”நீயவை பேர்கிலையால்” (கம்பரா. இரணிய.110); [பெயர்-பேர்] |
பேர்’-த்தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
பேர்கேட்டவன் | பேர்கேட்டவன் pērāṭṭavaṉ, பெ. (n.) நாடறிந்தவன் (நெல்லை);; a well-known person. [பேர்+ கேட்டவன்] |
பேர்கொடு-த்தல் | பேர்கொடு-த்தல் pērkoḍuttal, செ.கு.வி. (v.i.) 1. புகழ்தருதல்(கொ.வ.);; to give a good name to bring credit. 2. குறிப்பு பெயரிடுதல்(கொ.வ.);; to nickname. (colleq);. 3. ஒருகுறிக்கோளுக்காகச் சூளேற்ற (ஞானஸ்நானம் செய்து); பெயரிடுதல்; t baptise, as giving a name to a child. [பேர்+கொடு] |
பேர்சொல்(லு-)-தல் | பேர்சொல்(லு-)-தல் pērcolludal, செ.குன்றாவி (v.t.) ஒருவரது புகழைத் தாங்கிநிறுத்துதல் t hold one’s fame. [பேர்+ சொல்(லு);] |
பேர்சொல்லாதது | பேர்சொல்லாதது pērcollādadu, பெ, (n.) இரவில் பேர் வழங்கத்தகாத வசம்பு, ஊக முதலிய பொருள்கள்; particular thing no named at night, as sweet flag, needle et: 2. அக்கி(இ.வ.); herpes. [பேர்+ சொல்லாதது.] |
பேர்சொல்லாதவன் | பேர்சொல்லாதவன் pērcollātavaṉ, பெ. (n.) முடிதிருத்துவோன்(இ.வ.);; barber, as not to b named at night. [பேர்+ சொல்லாதவன்] |
பேர்த்தி | பேர்த்தி pērtti, பெ. (n.) மகனது அல்லது; மகளது மகள்; grand-daughte. 2. பாட்டி(இ.வ.);; grandmother. [பெயர்த்தி→பேர்த்தி பேரன் (ஆ.ப.); பெயர்த்தி (பெ.யா.);] |
பேர்த்து | பேர்த்து pērttu, வி.எ. (adv.) 1. பேர்த்தும் பார்க்க;see perttum. “ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (குறள்,357); 2. மாற்றாக; in return. “பேர்த்து நாய் கெளவினா ரீங்கில்லை” (நாலடி.70); [பெயர்த்து→பேர்த்து] |
பேர்த்தும் | பேர்த்தும் pērttum, வி.எ. (adv.) மறுபடியும்; again. பின்னைப் பழம்பொருட்கும் பேர்த்துமப் பெற்றியனே (திருவாச. 7.9); [போத்து→ பேர்த்தும்] |
பேர்ந்தும் | பேர்ந்தும் pērndum, வி.எ. (adv.) பேர்த்தும் பார்க்க;see pértium. |
பேர்படை-த்தல் | பேர்படை-த்தல் pērpaḍaittal, செ.கு.வி. (v.i.) பேர்பெறுதல் பார்க்க;see pér-peru. “பேர்படைத்த விசையனுடன்” (பாரத. கிருட்டின.1); [பெயர்→பேர்+படை-] |
பேர்பாதி | பேர்பாதி pērpāti, பெ. (n.) சரிபாதி, exactly half just half. [பேர்+யாதி] ஒகோ. செம்பாதி |
பேர்பெறு-தல் | பேர்பெறு-தல் pērpeṟudal, செ.கு.வி. (v.i.) 1. பெயர் கொள்ளுதல்; to bear a name. “மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர் பெற்ற” (நாலடி,59); 2. புகழ்பெறுதல்; to be famous. [பேர்+பெறு→தல்] |
பேர்மகிழ் | பேர்மகிழ் pērmagiḻ, பெ. (n.) பெருமகிழ்ச்சி; great mirth. “பேர்மகிழ் செய்யும் பெருநறா” (பரிபா.7,63); [பெயர்→பேர்+ மகிழ்] |
பேர்மல்லி | பேர்மல்லி pērmalli, பெ. (n.) கஞ்சாங்கோரை பார்க்க;(சங்.அக.);;see kañjarī-kórai, white basil. |
பேர்ருளாளன் | பேர்ருளாளன் pērruḷāḷaṉ, பெ. (n.) 1. மிக்க இரக்கமுள்ளவன்; most gracious one, as god. பேரருளாளர் போலும்’ (தேவா.439,1.); 2. சின்ன காஞ்சீபுரத்திற் கோயில் கொண்டுள்ள திருமால் (குருபரம்.170.);; visnu, as worshipped at little conjeevaram. [பெரு→ பேர்+அருளாளன்] |
பேர்வம் | பேர்வம் pērvam, பெ. (n.) மிகுவிருப்பம்; ning desire. [பெரு → பேர்+ஆர்வம்] |
பேர்வரி | பேர்வரி pērvari, பெ. (n.) ஆள்வரி(தல்); பார்க்க;see al-vari. |
பேர்வழி | பேர்வழி pērvaḻi, பெ. (n.) 1. பெயர்ப்பட்டி (கொ.வ.); list of names, roll, register. 2, மரபுவழி, genealogy. 3. ஆள்; person, individual. அந்தப் பேர்வழி யார்? [பேர்+வழி] |
பேர்வழிப்பட்டோலை | பேர்வழிப்பட்டோலை pērvaḻippaṭṭōlai, பெ.(n.) 1. பேரேடு, ledger. 2. பேர் பெயர்ப்பட்டியலின் நிரல்; index of names. [பேர்வழி + பட்டோலை] |
பேர்வாசி | பேர்வாசி pērvāci, பெ. (n.) பேர்மட்டுமுள்ளது; being only nominal. ‘பேர்வாசியே யாம்படி நாம் புண்ணிமைத்த இருவகைப்பட்ட தர்மங்களையும் போக்குவார்(A.டு.1.6.9); 2. ஒருவன் பெயரைக் குழந்தைக்கிடுவதால் அதற்குண்டாவதாகக் கருதும் குணம்(கொ.வ.);; mcharacterintics believed to be aquired by a child being named of to a person. பேர்வாசி pērvāci, பெ. (n.) செம்பாதி; exaitly half. |
பேறக்காசி | பேறக்காசி pēṟakkāci, பெ. (n.) நாய்முள்ளி (சங்.அக.);; Indian nighshade. |
பேறங்கியம் | பேறங்கியம் pēṟaṅgiyam, பெ. (n.) விருத் தாசலம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vriddhachalam Taluk. [பெரு+ஆங்கியம்] |
பேறு | பேறு pēṟu, பெ. (n.) 1. பெறுகை, receiving. obtaining. ‘மக்கட் பேறு (குறள்.61); 2.அடையத்தக்கது; anything worth obtaining. விழுப்பேற்றி னஃதொப்ப தில்’ (குறள்,162); 3. ஊதியம் (பிங்.); : profit, gain. 4. அருட்கொடை (வின்.);; boon, blessing. 5. நன்கொடை; gift, prize, reward. 6. பயன்; advantage, benefit, result. 7. தகுதி (வின்.);; worth, merit, desert. 8.மகப்பெறுகை; childbirth. 9. முகத்தலளவையில் ஒன்றைக் குறிக்கும் சொல்; term meaning ‘one’ in measuring Out grains. (தைலவ.தைல.); 10. புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகிய பதினாறு வகைப்பட்ட செல்வம் (அபி.சிந்);; acquisition, of which there are 16, viz, pugal, kalvi, verri, nan-makkļ, poŋ, nel,nallūl, nugarcci, arrivu, alagu, perumai, iļamai, tuņivu, nõy-iņmai, vālmā 11. செல்வம் (யாழ். அக.);; wealth. 12. நல்லூழ் (யாழ்.அக.);; good fortune. 13. நிலப்பயன்வகை (G.Tn.D.L189);; a kind of land tenure. 14. இரை; prey, food. ‘பேற்றொடாழ் புனன் மூழ்கியெழுந்திடும்புள்” (இரகு.திக்குவி.62); [பெறு→ பேறு ] |
பேறுகாலம் | பேறுகாலம் pēṟukālam, பெ. (n.) மகப் பெறுங்காலம்; time of parturition or delivery. [பேறு + காலம்] |
பேலகம் | பேலகம் pēlagam, பெ. (n.) தெ ப் ப ம் ;(யாழ்.அக); boat. [பேல் → பேலகம் ] பேலகம் pēlagam, பெ. (n.) 1. விதை; testicle. 2. சிறுபங்கு; small portion or share. 3. போகை; going. பேலகம் pēlagam, பெ.(n.) தெப்பம் (யாழ்.அக.);; boat. த.வ. மிதவை [Skt. {} → த. பேலகம்.] |
பேலம் | பேலம் pēlam, பெ.(n.) 1. விதை; testicle. 2. சிறுபங்கு; small portion or share. 3. போகுதல்; going. [Skt. pela → த. பேலம்.] |
பேலவம் | பேலவம் pēlavam, பெ. (n.) மெல்லியது; softness. (யாழ்.அக.); பேலவம் pēlavam, பெ.(n.) மென்மைத் தன்மை; softness. [Skt. {} → த. பேலவம்.] |
பேலா | பேலா pēlā, பெ.(n.) கிண்ணவகை; a kind of cup. சந்தனப் பேலா. [U. {} → த. பேலா.] |
பேலி | பேலி pēli, பெ. (n.) குதிரை, horse (சங்,அக.); [பீல் → பேல்-பேலி] பேலி pēli, பெ.(n.) குதிரை (சங்.அக.);; horse. [Skt. {} → த. பேலி.] |
பேலிகை | பேலிகை pēligai, பெ. (n.) பே ளி கை (சங்.அக.); பார்க்க;see pèligai. [பேல் → பேலிகை ] |
பேல் | பேல் pēl, பெ. (n.) விரைவு; speed, swiftness. [பீர் → பீல் → பேல்.] பேல் pēl, பெ. (n.) கால் நரம்பில் உண்டை கட்டும் குதிரை நோய்வகை; a horse-desease characterised by tumour in the leg. (அசுவசா. 117); |
பேல்'(லு)-தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
பேளிகை | பேளிகை pēḷigai, பெ. (n.) உண்டெஞ்சிய எச்சில் (பிங்.);; food left on the plate ofter eating. [பேழ்→ பேள்→பேளிகை ] |
பேள்-தல் | பேள்-தல் pēḷtal, செ.கு.வி.(v.i.) மலம் கழித்தல் to excrete. [பிள்-பேள்] |
பேள்ளுதல் | பேள்ளுதல் pēḷḷudal, செ.கு.வி. (v.i.) மலங்கழித்தல்; to ease oneself. [பேல்→பேள்] |
பேழி | பேழி pēḻi, பெ. (n.) புடைவை; saree (அக.நி); [பிள் → பிளி → பேழி] |
பேழை | பேழை pēḻai, பெ. (n.) பெருமை; largeness. “பேழைவார் சடை (தேவா.8536); [பேழ் +ஐ] பேழை pēḻai, பெ.(n.) 1. பெட்டி; chest box coffer, ark. 2. கூடை(வின்);; basket. [பேழ் + பேழை ] |
பேழைமரம் | பேழைமரம் pēḻaimaram, பெ. (n.) பெரிய மரவகை; carey’s myrtle-bloom. [பேழை + மரம் ] |
பேழ் | பேழ் pēḻ, பெ(n.) பெருமை (பிங்);. largeness, raStneSS. [பிள் → (பெல்); → பேழ் ] மு.தா. (பக்.216); |
பேழ்-தல் | பேழ்-தல் pēḻtal, செ.கு.வி.(v.i.) பேசுதல்,சொல்லுதல், to speak, to say. த. பேழ் (பேசு); [பேழ்தல்-பிளத்தல், வாய் திறத்தல்-பேசுதல்] |
பேழ்கணி-த்தல் | பேழ்கணி-த்தல் pēḻkaṇittal, செ.கு.வி (v.i.) 1. அஞ்சுதல்; to be afraid. “உமையானவள் பேழ்கணிக்க….. விடமுண்டதென்னே’ (தேவா.444,1); 2. கண்மூடுதல்; to close one’s eyes, as in sleep. “பேழ்கணித்து…. துயில் கொண்டார்” (பெரியபு. திருநாவுக்.275); 3. மருண்டு விழித்தல்; to stare in fear. ‘பிற்பானின்று பேழ், கணித்தால் (திருவாச.45,7); 4. பேகணி பார்க்க;see pēlani. [பேழ் + கணி.] |
பேழ்வாய் | பேழ்வாய் pēḻvāy, பெ. (n.) பெரியவாய்; large mouth. பிறழ்பற் பேழ்வாய். பேய் மகள். (திருமுரு:47); [பெள்→ பேள்→ பேழ் வாய் ] பேழ்வாய் = அகன்றவாய். முதா. (பக்-26); |
பேவார்சு | பேவார்சு pēvārcu, பெ.(n.) 1. பிறங்கடை யற்றவன்; one who is without an heir or representative, one who has no one to claim as his relation or to inherit his property. 2. கேட்பாரற்ற பொருள்; unclaimed property. 3. பயனற்ற தன்மை; worthless- ness. “அவ்வேலை பேவார்சா யிருக்கிறது”. [U. {} → த. பேவார்சு.] |