செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
பெ

 பெ pe, பெ. (n.)

   தமிழ் நெடுங்கணக்கில் ‘ப்’ என்ற மெய்யும் ‘எ’ என்ற உயிர்க்குறிலும் சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the compound of. p’ and ‘a’

     [ ப்+ எ= பெ ]

பெகுலம்

பெகுலம் pegulam, பெ. (n.)

   மிகுதி; a large number or quantity.

     “அம்பு பெகுலந் தொடுத்து” (பாரத.பதினேழாம்.73);.

     [Skt. bahula → த. பெகுலம்]

பெங்கு

 பெங்கு peṅgu, பெ. (n.)

   ஒருவகைக் கள் (மூ.அ.);; a kind of toddy.

பெடம்

 பெடம் peḍam, பெ. (n.)

மிகுதி (அக நி);,

 much.

தெ. பெத்த,

     [பெள்→பெடம்]

பெடாகம்

 பெடாகம் peṭākam, பெ. (n.)

   விழுப்புரட வட்டத்திலுள்ள சிற்றுார்; a village i Vilupuram Taluk.

     [படாகை-படாகம்]

பெடை

பெடை peḍai, பெ. (n.)

   புட்களின் பெண் பால்; female of birds

பேடையும் பெடையும் நாடின் ஒன்றும் (தொ. மரபு 55);

     “செந்தயைலன்றில் இறவினன்ன கொடுவாய்ப் பெடையொடு (குறுந் 160);.

ம.பெட, க. ஹேட்டே

     [பெள் + பெட்டை + பெடை]

பெடைமாறி

 பெடைமாறி peḍaimāṟi, பெ. (n.)

பெட்டை மாறி (வின்.); பார்க்க;see pettaimāri.

     [பெடை+மாறி]

பெட்டகங்கொட்டு-தல்

 பெட்டகங்கொட்டு-தல் peṭṭagaṅgoṭṭudal, பெ. (n).

   மணப்பெண்ணுக்கு வரிசை யெடுத்துச் செல்லும் போது கைதட்டி மங்கலவொலி எழுப்புதல்; to clap the hands in applause when presents are carried in procession to a bride.

     [பெட்டகம் + கொட்டு-தல்]

பெட்டகத்துத்தி

 பெட்டகத்துத்தி peṭṭagattutti, பெ. (n.)

   வெண்டைவகை (மலை);; musk-mallow.

     [(பெட்டகம் +துத்தி]

பெட்டகநூல்

 பெட்டகநூல் peṭṭaganūl, பெ. (n.)

   வழிகாட்டுப்பொத்தகம்; source-book.

     [பெட்டகம் + நூல்]

பெட்டகப்பெட்டி

 பெட்டகப்பெட்டி peṭṭagappeṭṭi, பெ. (n.)

   மரம் அல்லது இரும்பாலாகிய பெரும் பேழை; sale or treasure-chest made either of wood or iron.

     [பெட்டகம் + பெட்டி ]

பெட்டகம்

பெட்டகம் peṭṭagam, பெ. (n.)

   1. பெட்டி; chest box

ஆங்கிலங்கு மளப்பரும் பெட்டகம்’ (திருவாலவா:27:22);,

   2. மணப்பெண்ணுக்கு வரிசைகள் கொண்டு செல்லும் பெட்டி ; a box in which presents to the beride are carried in procession.

     [பிள் → பெள் →பெட்டி→ பெட்டகம் ] (வே.க.110);

     [P]

பெட்டன்

பெட்டன் peṭṭaṉ, பெ.(n.)

   பொய்யன்; liar deceiful person.

     “பெட்டனாகிலுந் திருவடிப் பிழையேன் (தேவா. 1110, 2);.

     [பெட்டு→பெட்டன் ]

பெட்டல்

பெட்டல் peṭṭal, பெ. (n.)

   1. விருப்பம் (திவா);; desire, longin,

     ‘பிரித்தலும் பெட்டலும்’ (தொல்.கற்பு. 6);.

   2. காதலித்தல்; loving,

பிறன் பொருளாட் பெட்டொழுகும் பேதைமை’ (குறள்.141);.

   3. செய்ய விரும்புதல்; desire to do.

     ‘பெட்டவை செய்யார்’ (இனி, நாற். 23);.

     [பிள்→பெள்=பெள்+தல்=பெட்டல்]

பெட்டார்

பெட்டார் peṭṭār, பெ. (n.)

   1. நண்பர்; friends

   2. விரும்பியவர்; lovers.

     ‘பேணாது பெட்டார்’ குறள் 1178).

     [பெள்→ பெட்டார்]

பெட்டி

பெட்டி1 peṭṭi, பெ.(n.)

   1.பண்டங்களைவைத்துக்காக்கவுதவும்மூடியுள்ளகலம்; chesttrunk,coffer,

   2.கூடை(வின்);; basketflower-basket.

   3.தொடர்வண்டிமுதலியவற்றின்அறை; compartment, as in a railway carriage.

   4. வாண்டியோட்டுபவ்ன் உட்காரும் இடம்; driver’s seat in a carriage

   5. வண்டியில் உட்காருமிடத்திற்கு அடியில் சிறுபொருள்கள் வைப்பதற்கான இடம்; fixed box under the seat in a carriage

   6. சான்றாளி; witness box.

   7. கண்ணாம்பு முதலியன அளக்கும் முகத் தலளவை; a measure of capacity, as in measuring lime.

     [பிள்→பெள்→பெட்டி]

 பெட்டி2 peṭṭi, பெ. (n.)

   நெல்வகை; a kind o paddy.

பெட்டிகரிபிலை

 பெட்டிகரிபிலை beṭṭigaribilai, பெ.(n.)

   நெல்வகை; a kind of paddy

பெட்டிக் கோரை

 பெட்டிக் கோரை peṭṭikārai, பெ.(n.)

   கோரை வகை; a glabrous rush-like sedge.

     [பெட்டி+ கோரை]

பெட்டிபோடு-தல்

பெட்டிபோடு-தல் peṭṭipōṭudal, செ.கு.வி.(v.i.)

   ஒத்திசை, இசைத்தல் (இக்.வு.);; to play on the harmoniam.

     “பெட்டி போடுகிற பையன் இன்னும் வரவில்லையா?” (உ.வ.);

     [பெட்டி + போடுதல்]

 பெட்டிபோடு-தல்2 peṭṭipōṭudal, செ.கு.வி.(v.i)

சூடேறியமாழைப்பெட்டியால்துணியின்சுருக்கம்நீங்கத்தேய்த்துமடித்துவைத்தல்.

 inoning

     [பெட்டி+ போடு- 1]

பெட்டிப்பலகை

 பெட்டிப்பலகை peṭṭippalagai, பெ.(n.)

   கைத்தறி நெசவில் நாடா தங்கும்பலகை; an implement in handloom weaving.

     [பெட்டி+பலகை]

பெட்டிப்பல்லக்கு

 பெட்டிப்பல்லக்கு peṭṭippallakku, பெ.(n.)

   பெட்டியின் உருவில் அமைந்த பல்லக்கு வகை; box-like-palanguin

     [பெட்டி + பல்லக்கு]

     [P]

பெட்டிமோதிரம்

 பெட்டிமோதிரம் peṭṭimōtiram, பெ.(n.)

   மோதிர வகை (புதுவை.);; a kind of ring.

     [பெட்டி+மோதிரம்]

பெட்டியடி

 பெட்டியடி peḍḍiyaḍi, பெ. (n.)

   பண வரவு செலவு செய்யுங் கணக்கப் பிள்ளை; cashkeeper.

     [பெள்→பெட்டி→பெட்டியடி]

பெட்டியிழைப்புளி

பெட்டியிழைப்புளி peṭṭiyiḻaippuḷi, பெ. (n.)

   இழைப்புளி வகை (கட்டட. நாமா. 39);; panel plane.

     [பெட்டி + இழைப்புளி ]

     [P]

பெட்டிலிக்குழல்

 பெட்டிலிக்குழல் peṭṭilikkuḻl, பெ. (n.)

சுங்குத்தான் குழல் பார்க்க;see sunguttan kulal.

     [பெட்டிலி + குழல்]

பெட்டில்

 பெட்டில் peṭṭil, பெ.(n.)

   நரம்புக் கருவி வகை; fiddle.

     [E. fiddle → த. பெட்டில்]

பெட்டிவண்டி

 பெட்டிவண்டி peṭṭivaṇṭi, பெ. (n.)

   வண்டி வகை; bullock-coach

     [பெட்டி + வண்டி]

பெட்டிவரிசை

 பெட்டிவரிசை peṭṭivarisai, பெ. (n.)

   மணப்பெண் புகுந்தவீடு செல்லும்போது கொண்டு செல்லும் வரிசை; presents taken by a bride when she goes to her bridegroom’s house.

     [பெட்டி + வரிசை]

பெட்டிவாணம்

 பெட்டிவாணம் peṭṭivāṇam, பெ.(n.)

   பெட்டியினின்று பல உருவங்களில் வெளிப் படும் வாணவகை; fire works in the shap of a case from which various figures are liberated, one after another.

     [பெட்டி + வாணம்]

பெட்டு

பெட்டு peṭṭu, பெ. (n.)

   1. பொய் (பிங்);; lie false-hood,

     ‘மானுடம் போன்று பெட்டினை யுரைப்போர்’ (பதினொ. கோபப்பிர);.

   2. மயக்குச்சொல்; delusive word.

     ‘கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும்’ (திவ். இராமாநுச நூற். 93);.

     [பெள்→ பெட்டல்→பெட்டு]

பெட்டெனல்

பெட்டெனல் peṭṭeṉal, பெ. (n.)

   விரைவுக்குறிப்பு; expr signi fying quickness.

     ‘ஏகுதிர் பெட்டென்று (காஞ்சிப்பு. நாடு. 21);

ம. பெட்டெந்து

     [பெட்டு + எனல்]

பெட்டை

பெட்டை1 peṭṭai, பெ. (n.)

   1. விலங்கு புட்கள் இவற்றின் பெண்பால் (தொல், பொ. 607/18);; female of animals and birds,

   2. பெண்; woman girl.

     “ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் பெயர்க் கொடைக் குரிய (தொல். மரபு. 53);.

     “புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ய” (தொல், மரபு. 54);.

ம, தெ. பெட்ட

     [பெள்→பெட்டை]

 பெட்டை2 peṭṭai, பெ. (n.)

   1. குருடு; blindness.

   2. குறைவு (யாழ்ப்);; imperfection

     [பெள்→ பெட்டை ]

பெட்டை முடிச்சு

 பெட்டை முடிச்சு peḍḍaimuḍiccu, பெ. (n.)

பெட்டைக் கட்டு பார்க்க; see pettai-k-kattu.

     [பெள்→பெட்டை + முடிச்சு]

பெட்டைக் கோழி

 பெட்டைக் கோழி peṭṭaikāḻi, பெ.(n.)

   இளம் பெண்கோழி; Pullet moorhen

     [பெட்டை + கோழி]

     [P]

பெட்டைக்கடல்

 பெட்டைக்கடல் peḍḍaikkaḍal, பெ, (n.)

   ஆழமற்ற கடல்; shallow sea.

     [பெள்→ பெட்டை+ கடல்]

பெட்டைக்கட்டு

 பெட்டைக்கட்டு peṭṭaikkaṭṭu, பெ. (n.)

   தளர்ந்த முடிச்சு (யாழ்ப்);; loose knot not badly tide.

     [பெள்→பெட்டை + கட்டு]

பெட்டைக்கண்

பெட்டைக்கண் peṭṭaikkaṇ, பெ.(n.)

   1. குறையுடய கண் (வின்);; defective eye.

   2. மாறு கண்; squint eye.

   3. சிறுகண்; smalleye._

   4. தேங்காயின் மட்டையிலுள்ள துளையில்லாக் கண்கள்; the two false eyes of a coconut.

     [பெள்→பெட்டை + கண்]

பெட்டைக்காடு

 பெட்டைக்காடு peṭṭaikkāṭu, பெ. (n.)

   விளைவற்ற நிலம்; barren tract of land

     [பெள்→பெட்டை = காடு ]

பெட்டைக்குஞ்சு

 பெட்டைக்குஞ்சு peṭṭaikkuñju, பெ. (n.)

பெட்டைக் கோழி பார்க்க;see pettar-k-kðhzhi.

     [பெட்டை + குஞ்சு]

பெட்டைமாறி

பெட்டைமாறி1 peṭṭaimāṟi, பெ. (n.)

   1. கெட்ட வொழுக்க முடையவளின் கணவன்; Cuckold.

   2. ஆண் தன்மையுள்ள பெண்; masculine woman, Nirago.

     [பெள்→ பெட்டை→மாறி]

 பெட்டைமாறி2 peṭṭaimāṟi, பெ, (n.)

   மனைவி தீயவொழுக்கத்தைக் கண்டும் காணாதவன் போலிருப்பவன்; man who winks at wife’s in fidelity.

     [பெள்→பெட்டை +மாறி]

பெட்டையன்

பெட்டையன் peṭṭaiyaṉ, பெ. (n.)

   1. அலி; hermaphrodite eunuch.

   2. ஆண்மையற்றவன்; effeminate man.

     [பெள்→பெட்டை + அன்]

பெட்ப

பெட்ப1 peṭpa, பெ. (n.)

   மிக; much exceedingy.

     ‘பெட்ப நகுகின்றது (சீவக. 1662);,

     [பெள்→பெட்ப]

பெட்பு

பெட்பு1 peṭpu, பெ, (n.)

   1. விருப்பம்; desire.

     ‘குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் (தொல். களவு 11);.

     “பெட்புறும் (கம்பரா. மூலபல, 135);.

   2. பேணுகை; cherishing, regard.

     ‘பெட்ட வாயில் பெற் றிரவு வலியுறுப்பினும்’ (தொல், களவு 11);.

   3. அன்பு (சூடா);; love.

   4. பெருமை (சூடா);; greatness.

   5. தன்மை; nature.

     [பிள்→ பெள். பெள்+பு→பெட்பு]

 பெட்பு2 peṭpu, பெ. (n.)

பாதுகாப்பு (தொல். சொல்);, 338);,

 protection.

     [பிள் + பெள். பெள் + பு= பெட்பு]

பெட்ரோல்

 பெட்ரோல் peṭrōl, பெ. (n.)

   கன்னெய்; petrol.

     [E. petrol → த. பெட்ரோல்.]

பெண்

பெண் peṇ, பெ. (n.)

   1. பெண் பாலினம்; womankind.

     “பெண்ணே பெருமையுடைத்து (குறள். 907);.

     “பெண்ணும் பிணாவும் மக்கட்குரிய” (தொல், மரபு. 90);.

   2. மகள்; daughter.

     “இந்திரன் பெண்ணை’ (கந்தபு. திருப்ப35);.

   3. சிறுமி; girl.

   4. மணமகள்; bride.

     ‘பெண்கோ ளொழுக்கம் கண்கொள நோக்கி (அகநா. 112.);

   5. மனைவி; wife.

     “பெண்ணிற் றுற்றென (புறநா.82);.

   6. விலங்கு நிலைத் திணைகளின் பெடை திவா); female of animals and plants

   7. பெண்டன்மை; womanish ness.

ம. பெண். க. பெண், ஹெண்ணு.

     [பெள்+ பெண்](1 வே.க.90);

     [P]

பெண்கட்டு-தல்

 பெண்கட்டு-தல் peṇkaṭṭudal, செ.குவி.(vi)

பெண்கொள்பார்க்க:seepenkol.

     [பெள் + பெண் + கட்டு-தல்]

பெண்கரு

பெண்கரு peṇkaru, பெ.(n.)

   சினைமுட்டை; ovum

     [பெள் + பெண் + கரு→ பெண்கரு] (வே. க. 90);

பெண்கலை

 பெண்கலை peṇkalai, பெ. (n.)

   வண்ணப் பாவின் பிற்பகுதி (வின்.);; latter half of a vannam verse.

     [பெள்→ பெண்→ பெண்கலை]

பெண்கல்விக்கும்மிப்பாட்டு

 பெண்கல்விக்கும்மிப்பாட்டு peṇkalvikkummippāṭṭu, பெ. (n.)

   பெண் கல்வியின் சிறப்புகளை இயம்பும் கும்மிப்பாடல்; a kumm play pressing the need for women’s education.

     [பெண்+கல்வி+கும்மி+பாட்டு]

பெண்கிரகம்

 பெண்கிரகம் peṇgiragam, பெ. (n.)

   கதிரவனைச் சுற்றிச் செல்லும் திங்கள், வெள்ளியாகிய பெண்பாற் கோள்கள்; female. planet, as moom and venus.

     [பெள்→ பெண் + .Skt graha.த. கிரகம்]

பெண்குணம்

 பெண்குணம் peṇkuṇam, பெ. (n.)

மகடூஉக் குணம் பார்க்க; see magadduu-k. kunam.

     [பெண் + குனம்]

பெண்குமைஞ்சான்

 பெண்குமைஞ்சான் peṇkumaiñjāṉ, பெ.(n.)

   சுராலைத் தூள் (சாம்பிராணி); (சங்.அக);; benzin.

     [பெள்→ பெண்→ பெண்குமைஞ்சான்]

பெண்குறி

 பெண்குறி peṇkuṟi, பெ. (n.)

   அல்குல்; pedendum muliebre.

     [பெள்→ பெண் + குறி]

பெண்கேள்-தல்

 பெண்கேள்-தல் peṇāḷtal, செ.குன்றாவி.(v.t).

   திருமணஞ்செய்துகொடுக்கும்படிபெற்றோரிடம்மகட்கேட்டல்; to ask the parents of a girl to give her in marriage.

     ‘தஞ்சாவூரிலிருந்து பெண் கேட்டு வந்திருக்கிறார்கள்.”

     [பெள்→ பெண் + கேள்_]

பெண்கை

பெண்கை peṇkai, பெ. (n.)

   பெண்பாற் செயல் குறிக்கும் நளிநயக்கை (சிலப். 3, 18. உரை);; gesture of hands representing the action of women.

     [பெள்→ பெண்→ பெண்கை]

பெண்கொடி

பெண்கொடி peṇkoḍi, பெ. (n.)

   மெல்லியலான பெண்; woman tender as a vine.

     ‘ஓர் பெண் கொடியை வதை செய்தான்’ (திவ். நாய்ச் 8:9);.

     [பெள்→பெண் + கொடி]

பெண்கொடு-த்தல்

 பெண்கொடு-த்தல் peṇkoḍuttal, பெ.(n.)

   பெண்ணைத் திருமணஞ் செய்து கொடுத்தல்; to give a girl in marriage.

     “என் மாமன் எனக்ககுப் பெண்கொடுக்கமறுக்கிறான்.”

     [பெள்→ பெண் கொடு-த்தல்]

பெண்கொடுத்தமாமன்

 பெண்கொடுத்தமாமன் peṇkoḍuttamāmaṉ, பெ. (n.)

   ஒருவனுடைய மனைவியின் தந்தை; a man’s father-in-law, dist fr. tāy-māmaŋ

     [பெண் + கொடுத்த + மாமன்]

மாமன் என்னுஞ் சொல் அம்மானையுங் குறிக்கலானமையின் அதனின்று வேறுபடுத்தும் பொருட்டுப் பெண் கொடுத்த என்னும் அடைமொழி சேர்ந்தது.

பெண்கொலை

 பெண்கொலை peṇkolai, பெ. (n.)

   பெண்ணைக் கொலை செய்தல்; murder of a women.

பெண் கொலை புரிந்த நன்னன் போல

     [பெள்→பெண் + கொலை]

பெண்கொள்(ளு)-தல்

பெண்கொள்(ளு)-தல் peṇkoḷḷudal, செ.கு.வி.(vi)

   பெண்ணைத்திருமணஞ்செய்தல்; to marry or take a wife.

     ‘பேய் கொண்டாலுங் கொள்ளலாம் பெண் கொள்ளலாகாதே (சிவப். பிர, வரலாறு. பக். 19);.

     [பெள்→ பெண் + கொள்(ளு);-தல் ]

பெண்கோலம்

பெண்கோலம் peṇālam, பெ. (n.)

   1. மகளிர் பூணுங் கோலம்; female attire or costume.

   2. பெண் புனைவு (வேடம்); (வின்);,

 female part or disguise.

     [பெண் + கோலம் ]

பெண்கோள்

பெண்கோள் peṇāḷ, பெ. (n.)

   பெண்ணை மணம்புரிந்து உறவுசெய்து கொள்கை; entering into alliance with another family by marrying a girl.

     “பெண் கோளொழுக்கத்தி னொத்து மறுத்தல் பற்றி (தொல், பொ. 79, உரை);.

   2. பெண் கிரகம் (நாமதீப்.101); பார்க்க; see pen-kiragam.

     [பெண் + கோள்]

பெண்சகோதரம்

 பெண்சகோதரம் peṇcaātaram, பெ. (n.)

   உடன்பிறந்தாள்; sister

     [பெண் + skt.sahodara த.சகோதரம்]

பெண்சக்கரவர்த்தி

பெண்சக்கரவர்த்தி peṇcakkaravartti, பெ. (n.)

   1.பேரரசி; empress.

     ‘பெண் சக்கரவர்த்தி யுடனெய்திய பள்ளியினி தெழுந்து’ (விக்கிரம. உலா. 80);.

   2. பெண்ணாயகம் பார்க்க;see pen-nayagam.

     [பெண் + skt.cakravarti த.சக்ரவர்த்தி]

பெண்சந்ததி

பெண்சந்ததி peṇcandadi, பெ, (n.)

   1. பெண் குழந்தை; female issue.

   2. பெண் பிறங்கடை; female heir.

     [பெண் + skt.santati த.சந்ததி]

பெண்சனம்

பெண்சனம் peṇcaṉam, பெ. (n.)

   மகளிர் கூட்டம்; womanfolk.

தண்கோசம்பிப் பெண்சன நோக்கி (பெருங்,நரவாண.9, 34);.

     [பெண் + skt jana.த.சனம்]

பெண்சரக்கு

 பெண்சரக்கு peṇcarakku, பெ. (n.)

   படிக்காரம், பழப்புளி, காடி முதலிய புளிப்புள்ள சரக்குகள் (மூ.அ);; any acid which a readily combines with an alkali or base, as padikkāram, pala-p-puli, kādi dist fr āņšarakku.

     [பெண் + சரக்கு ]

பெண்சாதி

பெண்சாதி peṇcāti, பெ.(n.)

   1. பெண்பாலர்; woman kind.

குணச் சிறப்பால் உலகத்துப் பெண்சாதி விருப்பமுற்றமகளிர் (மதுரைக். 555, உரை);.

   2. மனைவி; wife.

     ‘உன்தன் விட்டுப் பெண் சாதிக்காக’ (இராமநா. அயோத்.8);.

     [ பெள்→ பெண் + சாதி ]

பெண்சாவி

 பெண்சாவி peṇcāvi, பெ. (n.)

   துளையுள்ள தாழ்க்கோல்; tubular key bored key.

     [பெள்→ பெண்.Port cavi த.சாவி]

     [P]

பெண்சினை

 பெண்சினை peṇciṉai, பெ. (n.)

பெண்கரு பார்க்க; see penkaru.

     [ பெண் + சினை.]

பெண்சிரட்டை

 பெண்சிரட்டை peṇciraṭṭai, பெ.(n.)

   கண்ணுள்ள கொட்டாங்கச்சி (நெல்லை.);; the outer shell of that half of a broken cocount containing its eye.

     [பெள்→ பெண்→ பெண்சிரட்டை]

     [P]

பெண்சீக்கு

 பெண்சீக்கு peṇcīkku, பெ. (n.)

   தகாப்புணர்ச்சி யால் வரும் பாலியல் நோய்; venereal disease.

     [பெண் + Esick: த. சீக்கு]

பெண்சோடினை

பெண்சோடினை peṇcōṭiṉai, பெ, (n.)

   1. நாடகத்திற் கொள்ளும் பெண் கோலம்; female attire for the stage.

   2. மணப் பெண்ணை ஒப்பனை செய்தல்; decoration of a women, as a bride.

     [பெள்→ பெண் + சோடினை]

சோடனை

சுவடி→ சோடி → சோடினை = ஒப்பனை.

பெண்டகன்

 பெண்டகன் peṇṭagaṉ, பெ. (n.)

   அலி (பிங்);; hermaphrodite, eunuch,

க. ஹெண்ணுக.

     [பெள்→ பெண்→ பெண்டு→ பெண்டகம்]

பெண்டகம்

 பெண்டகம் peṇṭagam, பெ. (n.)

பெண்டகன் பார்க்க; see pendagan.

     [பெள்→ பெண்→ பெண்டு→ பெண்டகம்]

பெண்டகை

 பெண்டகை peṇṭagai, பெ. (n.)

பெண்டகைமை பார்க்க;see peņợagaimai.

     [பெண் + தகை → பெண்டகை]

பெண்டன்

 பெண்டன் peṇṭaṉ, பெ. (n.)

பெண்டகன் பார்க்க; see pendagan.

ம. பெண்டி, க. பெண்ட், கெண்ட தெ. பெண்ட்டி.

     [பெண்டு→ பெண்டன்→ பேடி (திவா.]);

பெண்டாட்டி

பெண்டாட்டி peṇṭāṭṭi, பெ. (n.)

   1. பெண்; woman.

     “செல்லப் பெண்டாட்டி நீ திவ். திருப்பா. 11).

     “ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து இறை. (கள.1 உரை);.

   2. மனைவி; wife.

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி (திடுகடு, 96);,

   3. வேலைக் காரி; woman servant (sii. 11. 483);.

க. ஹெண்டத்தி

     [பெண்டு + ஆள்- பெண்டாட்டி]

பெண்டாளு-தல்

 பெண்டாளு-தல் peṇṭāḷudal, செ.குன்றாவி.(vt.)

   மனைவியாக நுகர்தல்; to have as wife.

தெ. பெண்ட்லாடு.

     [பெண்டு + ஆள்]

பெண்டிழந்தான் சுழி

பெண்டிழந்தான் சுழி peṇṭiḻndāṉcuḻi, பெ. (n.)

   தன்னை உடையவனது மனைவியை இழக்கச் செய்வதாகக் கருதப்படும் மாட்டுச் சுழிவகை, (மாட்டுவா. 22);.; unlucky mark in cattle in the form of a line across the back. indicating that the owner will lose his wife.

     [பெண்டு + இழந்தான் + சுழி ]

பெண்டு

பெண்டு peṇṭu, பெ.(n.)

   1. பெண்; woman.

     “ஒரு பெண்டா லிதய முருகினை யாயின்” (வெங்கைக்கோ, 47);.

   2. மனைவி; wife.

     “வனை நல முடையளோ மகிழ்நின் பெண்டே” (ஐங்குறு. 57);. ம. பெண்டி, க. பெண்ட, ஹெண்ட, தெ. பெண்ட்டி

     [பெண்→ பெண்டு] (வே.க.92);

பெண்டு பிள்ளை

 பெண்டு பிள்ளை beṇṭubiḷḷai, பெ.(n.)

   மனைவிகுழந்தைகள்அடங்கியகுடும்பம்; family,asconsistingofwifeandchildren.

     [பெண்டு + பிள்ளை]

பெண்டுகட்டு-தல்

 பெண்டுகட்டு-தல் peṇṭugaṭṭudal, செ.குன்றாவி, (v.t)

   தகாத சேர்க்கை குறித்துப் பழிகூறுதல் (வின்);; to attribrute criminal intimacy with a person of the opposite Sex.

     [பெண்டு + கட்டு-தல்.]

பெண்டுகம்

 பெண்டுகம் peṇṭugam, பெ. (n.)

கழற்சி பார்க்க (மலை);; see kalarct.

     [பெண்→ பெண்டு→ பெண்டுகம் ]

பெண்டுகள்சட்டி

பெண்டுகள்சட்டி peṇṭugaḷcaṭṭi, பெ, (n.)

   1. பெண்கொண்ட வீட்டைச் சேர்ந்து தன் மனைவியின் ஆடுகளை மேய்க்கும் இடையர்; a division of itdaiyar who tend the sheep of their wives and observe matriarchal customs.

   2. மனைவிக்குக் கீழடங்கி நடப்பவன்; henpecked husband.

     [பெண்→ பெண்டு – பெண்டுகள் + சட்டி]

பெண்டு = பேடி

பெண்டுக்கஞ்சி

 பெண்டுக்கஞ்சி peṇṭukkañji, பெ..(n.)

   ஆண்மையற்றவன்; effeminate-man

     [பெண்டுக்கு + அஞ்சி]

பெண்டுக்குமேய்க்கி

பெண்டுக்குமேய்க்கி peṇṭukkumēykki, பெ. (n.)

   1. பெண் கொண்ட விட்டைச் சேர்ந்து தன் மனைவியின். ஆடுகளை மேய்க்கும் இடையர் இனத்தவன்; a division of a itaiyar who tend the sheep of their wives and observe matriarchal customs.

   2. மனைவிக்குக் கீழடங்கி நடப்பவன்; henpecked husband.

     [பெண்டு + மேய்க்கி]

பெண்டுருவன்

பெண்டுருவன் peṇṭuruvaṉ, பெ, (n.)

   திருமால் (நாம.தீப. 50);; thirumāl, as having assumed the form of mogini.

     [பெண்→ பெண்டு + வரு → பெண்டுருவன்]

பெண்டுவசட்டி

 பெண்டுவசட்டி peṇṭuvasaṭṭi, பெ. (n.)

பெண்டுகள் சட்டி பார்க்க; see pendugal catti.

     [பெண்டுகள் + சட்டி→ பெண்டுவசட்டி ]

பெண்டுவை-த்தல்

பெண்டுவை-த்தல் peṇṭuvaittal, செ.குன்றா.வி. (vt.)

   வைப்பாட்டியாகக் கொள்ளுதல்); to keep as concubine.

நீரிவளைப் பெண்டுவைத்துக் கொள்ளும் (தெய்வச், விறலிவிடு. 292);.

     [பெண்டு + வை-த்தல்]

பெண்டை மரக்கால்

 பெண்டை மரக்கால் peṇṭaimarakkāl, பெ. (n.)

   இரண்டரைப்படி கொள்ளும் தவச வளவை; containing two and a half padi.

     [இரண்டரை→ ரெண்டரை→ பெண்டரை → பெண்டை மரக்கால்]

பெண்டைக்காய்

 பெண்டைக்காய் peṇṭaikkāy, பெ.(n.)

   வெண்டைக் காய்; lady’s finger.

     [பெண்டை + காய்]

பெண்டைபிடி-த்தல்

 பெண்டைபிடி-த்தல் beṇḍaibiḍittal, செ.கு.வி. (v.i.)

   வீட்டில் கூரை அமைக்கும்போது மூங்கிலை இணைத்துக் கயிற்றால் கட்டிச் செல்லுதல்; to tie the bamboos in series while constructing a thatched roof of the house.

     [இண்டு-பிண்டு-பெண்டை+பிடி]

பெண்ட்கைமை

 பெண்ட்கைமை peṇṭkaimai, பெ. (n.)

   பெண்மைக் குணம்; womanliness,

     [பெண் +தகைமை ]

பெண்ணடி

பெண்ணடி peṇṇaḍi, பெ. (n.)

   பெண்பிறங்கடை; female child for heir.

     “ஒரு பெண்ணடி தன் காணிக்குத் தேடக் கருத்தாகி (விறலிவிடு. 152.);

     [பெண் + அடி ]

பெண்ணன்

 பெண்ணன் peṇṇaṉ, பெ.(n.)

   ஆண்மையற்ற (வீரமற்றவன்);; effeminate man.

     [பெள் + பெண் + பெண்ணன் ]

பெண்ணரசி

பெண்ணரசி peṇṇarasi, பெ. (n.)

   1. ஆட்சிபுரியும் பெண்; queen consort.

     ‘தன்னரசளித்த பெண்ணரசி (திருவிளை. பாயி. 11);.

   2. அழகிற் சிறந்தவள்; queenly woman.

     [ பெண் + அரிசி பெண்ணரசி ]

பெண்ணரசு

பெண்ணரசு peṇṇarasu, பெ.(n.)

   1. பெண்ணரசி பார்க்க; see pen-n-arasi

   2. குடும்பத்தில் பெண் ஆளுமை; petticoal government.

     [பெண் + அரசு→ பெண்ணரசு]

பெண்ணருங்கலம்

பெண்ணருங்கலம் peṇṇaruṅgalam, பெ.(n.)

   பெண்களிற்சிறந்தவள்; agen among woman as anornament.

     “பெண்ணருங்கலத்தொடுபிணைந்தபொருள்(சீவக.198);

     [பெண் + அருங்கலம் ]

பெண்ணலம்

பெண்ணலம் peṇṇalam, பெ. (n.)

   1. பெண்மைக்குணம்; womanliness.

   2. பெண்ணின் அழகு, முதலியன; womanly grace.

   3. பெண்ணின்பம்; enjoyment with a woman.

     “பெண்ணலங் காதலிற் பேயுமாயினான்” (சீவக. 2010);.

     [ பெண் + நலம் ]

பெண்ணலி

பெண்ணலி peṇṇali, பெ. (n.)

   பெண் தன்மை மிக்க அலி; hermaphrodite with feminine characteristies predominating (தொல், பொருள். 6.05. உரை);

     [பெண் + அலி]

-பெண் ஆண் அல்லாதவன்-ன் அலி. அல்→அலி

பெண்ணளி

 பெண்ணளி peṇṇaḷi, பெ. (n.)

   திருமணம்; marriage.

தெ. பெண்லி

     [பெண்+அளி]

பெண்ணைப் பெற்றோர் மணமகனுக்கு அளிப் பதால் பெற்ற பெயர்.

பெண்ணழைத்தல்

பெண்ணழைத்தல் peṇṇaḻaittal, பெ. (n.)

   திருமணத்திற்கு முன் மணமகளை மணமகன் வீட்டுக்கு அழைத்தல்; welcoming a bride at the bride groom’s house just before wedding.

   2. திருமணம் செய்து கொள்ளுதல் (யாழ்.அக);; marriage.

     [பெண் + அழைத்தல் ]

பெண்ணாசி

 பெண்ணாசி peṇṇāci, பெ. (n.)

இல்லிமூக்கு (நாஞ்);,

 bleeding nose.

     [பெள் + நாசி]

பெண்ணாசை

 பெண்ணாசை peṇṇācai, பெ. (n.)

   பெண் மீது பற்று; love of woman

     [பெண் + ஆசை ]

 skt nåsika. த.நாசி

பெண்ணாடை

 பெண்ணாடை peṇṇāṭai, பெ. (n.)

பெண்ணுடை பார்க்க; see pen-n-udai.

     [ பெண் + ஆடை ]

பெண்ணாட்சி

 பெண்ணாட்சி peṇṇāṭci, பெ. (n.)

   பெண்ணாளுமை; woman personality.

     [பெண் + ஆட்சி ]

பெண்ணாண்

பெண்ணாண் peṇṇāṇ, பெ. (n.)

   கணவன் மனைவியர் (தம்பதிகள்); (நாமதீப. 176);; husband and wife.

     [பெள்→ பெண் + ஆண்](வே.க.91);

பெண்ணாயகம்

 பெண்ணாயகம் peṇṇāyagam, பெ. (n.)

   பெண்களுக்குள் அரசி; queen among woman.

     [பெண் +நாயகம் ]

பெண்ணாய்ப்பிறந்தவள்

 பெண்ணாய்ப்பிறந்தவள் peṇṇāyppiṟandavaḷ, பெ. (n).

   பெண்(நெல்லை);; Woman.

     [பெண் + ஆய் + பிறந்தவள்]

பெண்ணாறு

பெண்ணாறு peṇṇāṟu, பெ. (n.)

   கிழக்கு நோக்கியோடும் ஆறு; eastward flowing river. opp, to ān-āru,

ஆணாறு பெண்ணாறு ஒன்றின்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர);.

     [பெண் + ஆறு]

பெண்ணாளுமை

 பெண்ணாளுமை peṇṇāḷumai, பெ.(n.)

பெண்ணாட்சி பார்க்க; see pen-n-alci.

     [பெண் + ஆளுமை ]

பெண்ணாள்

பெண்ணாள்1 peṇṇāḷ, பெ. (n.)

   நடவு முதலிய பயிர் வேலை செய்யும் உழத்தி; female farm-labourer.

மறுவ நடவான்

     [பெண் + ஆள்]

 பெண்ணாள்2 peṇṇāḷ, பெ. (n.)

   பெண்கோள்(வின்.);; female naksatra, as kārttigal, Tiruvadira etc

     [பெண் + நாள்→ பெண்ணாள் ]

பெண்ணினம்

 பெண்ணினம் peṇṇiṉam, பெ. (n.)

   மகளிர்; womankind.

     [பெண் + இனம்]

பெண்ணியல்பு

 பெண்ணியல்பு peṇṇiyalpu, பெ. (n. )

   பெண்மை; womanish.

     [பெண் + இயல்பு]

பெண்ணிராசி

பெண்ணிராசி peṇṇirāci, பெ. (n.)

   எழுவகை இராசிகள் (மங்களே. 2, 15. உரை);; female or even signs of the zodioc.

     [பெண் + இராசி]

பெண்ணீர்மை

பெண்ணீர்மை peṇṇīrmai, பெ. (n.)

   பெண்மைக் குணம்; womanliness.

     ‘பெண்ணீமை கற்பழியா வாற்றால் நல்வழி. 16).

     [பெண் + நீர்மை]

பெண்ணுடம்பு

 பெண்ணுடம்பு peṇṇuḍambu, பெ. (n.)

   பெண் குறி (வின்);; redendum muliebre.

     [பெண் + உடம்பு]

பெண்ணுடை

 பெண்ணுடை peṇṇuḍai, பெ. (n.)

   பெண்டிர்க்குரிய ஆடை (இ.வ.);; female attire.

     [பெண் + உடை ]

பெண்ணுரிமை

 பெண்ணுரிமை peṇṇurimai, பெ. (n.)

   ஆணுக்கு நிகராகக் குமுகாயத்தில் சொத்துரிமை முதற்கொண்டு அனைத்து நிலையிலும் சம உரிமை அளித்தல்; woman’s right

     [பெண் + உரிமை ]

பெண்ணுறுப்பு

பெண்ணுறுப்பு peṇṇuṟuppu, பெ. (n.)

   1. பெண்ணுக்குரிய உறுப்புகள்; imb or part of a body, peculiar to women.

   2. பெண்ணுடம்பு பார்க்க; see pennudambu.

   3. பெண்குறி பார்க்க; see pen-kuri.

     [பெண் + உறுப்பு]

பெண்ணுலகு

பெண்ணுலகு peṇṇulagu, பெ. (n.)

   பெண்கள் மாத்திரமே வாழுவதாக் கருதப்படும் தீவு; an island said to be solely in habited by women.

     ‘பெண்ணுல கேய்ப்ப (பெருங், உஞ்சைக், 42, 181);

     [ பெண் + உலகு ]

பெண்ணுழைப்பு

 பெண்ணுழைப்பு peṇṇuḻaippu, பெ, (n.)

பெண்பாடு பார்க்க; see penpatu.

     [பெண் + உழைப்பு ]

பெண்ணெடு-த்தல்

 பெண்ணெடு-த்தல் peṇīeḍuttal, செ.குன்றாவி. (vt.)

   திருமணஞ் செய்தல்; to marry, chosse as a bride.

     ‘நீ எங்கே பெண்னெடுத்தாய்?

     [பெண் + எடு – த்தல் ]

பெண்ணெழுத்து

பெண்ணெழுத்து peṇīeḻuttu, பெ. (n.)

   1.உயிர்மெய் (பிங்);; compound letter or vowelconsonant in Tamil orthography.

   2. நெட்டெழுத்து (வெண்பாப், முதன்மொ.6);; long vowel.

     [பெண் + எழுத்து]

பெண்ணை

பெண்ணை peṇṇai, பெ. (n.)

   1. பனை; palmyra-paim.

மன்றப் பெண்ணைவாங்கு மடற் குடம்பை (நற். 303);

   2. பெண் மரம் (மூ.அ); பார்க்க;see penmaram.

   3. நீர்முள்ளி: (மலை);; water-thorn.

   4. வடபெண்ணை தென்பெண்ணையாறுகள்; rivers, north pennaiyaru, south penniyaru

     ‘பெண்ணையம் படப்பை நாடுகிழவோயே (புறநா.126); பெண்ணையெனுநதியாறுகடந்து (கலிங்.354);

     [பெள்→ பெண்→ பெண்ணை]

பெண்ணை வாயன்

பெண்ணை வாயன் peṇṇaivāyaṉ, பெ. (n.)

   1. பெண்வாயன் பார்க்க; see pen-vāyan.

   2. அலி; hermaphrodite.

பெண்தண்டு

 பெண்தண்டு peṇtaṇṭu, பெ. (n.)

   இடக்காது (வின்);; small gristly protuberance of the left ear, dist fråntandu.

மாந்தர்தம் உடலில் வலப்புறம் ஆண்டன்மையும் இடப்புறம் பெண்டன்மையும் உள்ளது என்னுங் கருத்துப்பற்றி இடக்காது பெண் தொண்டு எனப்பட்டது போலும். தொண்டு- தொளை.

     [பெண் + தொண்டு → தண்டு]

பெண்தன்மை

 பெண்தன்மை peṇtaṉmai, பெ. (n.)

பெண்மயம் பார்க்க; see permayam.

     [பெண் + தன்மை]

பெண்தானையான்

பெண்தானையான் peṇtāṉaiyāṉ, பெ, (n.)

   காமன் அல்லது பெண் படையான் (நாமதீப,58);; kama, as having women for hisarmy.

     [பெண் + தானையான்]

பெண்பனை

பெண்பனை peṇpaṉai, பெ. (n.)

   காய்க்கும் பனை (தொல்.பொ. 558, உரை);; palmyra, as bearing fruit.

     [பெண் + பனை]

பெண்பருவம்

 பெண்பருவம் peṇparuvam, பெ. (n.)

மகளிர் பருவம் பார்க்க; see maglir paruvam stages in the life of a woman, (பிங்.);

     [பெண் + பருவம்]

பெண்பள்ளி

பெண்பள்ளி peṇpaḷḷi, பெ. (n.)

   பெண் துறவிகள்தங்குமிடம்; nunnery.

இம்மனையும் இக்கிணறும் பெண்பள்ளி யாவதாகவும்’ (s.i.i.vii, 24.);

     [ பெண் + பள்ளி ]

பெண்பழி

பெண்பழி peṇpaḻi, பெ. (n.)

   1. பெண் கொலைப் பழி; crime of killing a woman.

     ‘இணையதோர்பெண்பழியை’ யாரேற்றார். (திருவிளை.பழியஞ்:12,

   2.பெண்ணைவருத்தல் அல்லது கட்டாயப்படுத்துவதால் உண்டாகும் பழி(வின்);; guilt of harassing or forcing a Woman.

     [பெண் + பழி]

பெண்பாடு

 பெண்பாடு peṇpāṭu, பெ.(n.)

   பெண்பிள்ளையினுழைப்பு; efforts or industry of the female members of a family.

   ஆண்பாடு பெண்பாடு பட்டு அந்த வேலை முடிந்தது;     [பெண் + பாடு]

பெண்பாத்தி

 பெண்பாத்தி peṇpātti, பெ. (n.)

   உப்பளத்தில் உப்பு நீரைச் சுண்டவிடும் பாத்திவகை; condenser in salt-pans dist från-pâtti.

     [ வெண்→ பெண் + பாத்தி ]

பெண்பார்-த்தல்

 பெண்பார்-த்தல் peṇpārttal, செ.கு.வி. (vi.)

   திருமணத்திற்கு மணமகளைத் தேர்ந் தெடுத்தல்; to choose a bride.

     [ பெண் + பார் ]

பெண்பாற் பருவம்

 பெண்பாற் பருவம் peṇpāṟparuvam, பெ. (n.)

   மகளிர் பருவம்; stages in the life of a woman.

     [ பெண்பால் + பருவம் ]

பெண்பாற் பிள்ளைக்கவி

பெண்பாற் பிள்ளைக்கவி peṇpāṟpiḷḷaikkavi, பெ. (n.)

   பெண்பாற் பிள்ளைத் தமிழ் பார்க்க (இலக்.வி.807, உரை);;     [ பெண்பால் + பிள்ளை + skt-kavi, த.க.வி ]

பெண்பாற் பிள்ளைத்தமிழ்

 பெண்பாற் பிள்ளைத்தமிழ் peṇpāṟpiḷḷaittamiḻ, பெ. (n.)

   ஆண்பால், பெண்பால்ஆகிய இரண்டிற்கும்பொதுவாயுள்ளபருவங்களோடு, பெண்பாற்கே சிறப்பாக உரிய கழங்குப் பருவம், அல்லது நீராடற் பருவம், அம்மானைப் பருவம், ஊசற் பருவங்களைச் சேர்த்துப் பெண் தெய்வத்தை அல்லது சிறப்புடைய பெண்பாலைப் புனைந்து பாடும் பிள்ளைத்தமிழ் வகை; a poem descrbing the different stages in the child hood of a goddess or heroine an consisting of sever Sections common.

     [பெண்பால் + பிள்ளை + தமிழ்]

பெண்பாற்பிள்ளைப்பாட்டு

 பெண்பாற்பிள்ளைப்பாட்டு peṇpāṟpiḷḷaippāṭṭu, பெ. (n.)

பெண்பாற் பிள்ளைத் தமிழ் பார்க்க (பிங்);.

     [பெண்பால் + பிள்ளை + பாட்டு ]

பெண்பாலெழுத்து

பெண்பாலெழுத்து peṇpāleḻuttu, பெ. (n.)

   பெண்ணெழுத்து பார்க்க; see pen-n-e ittu (இலக்.வி.773. உரை);.

     [பெண்பால் + எழுத்து ]

பெண்பால்

பெண்பால் peṇpāl, பெ. (n.)

   1. ஜம்பால்களுள் ஒன்று; (நன்,262);; feminine gender one of ai-m-bāl, q.v.

   2. பெண்ணினம்; female sex.

     ‘ஒரு பெண்பாலேன் (சீவக. 1662);;

     [ பெண் + பால் ]

பெண்பாவம்

 பெண்பாவம் peṇpāvam, பெ. (n.)

பெண்பழி (வின்); பார்க்க: see penpali.

     [ பெண் + பாவம் ]

பெண்பிடி-த்தல்

 பெண்பிடி-த்தல் peṇpiḍittal, செ.குன்றாவி.(v.i.)

   கூத்தியாகக்கொள்ளுதல்(யாழ்.அக);; to keepaconcubine.

     [பெண் + பிடி]

பெண்பிற-த்தல்

பெண்பிற-த்தல் peṇpiṟattal, செ.கு.வி. (v.i)

   பெண்பிறவியெடுத்தல்; to be born a woman.

     ‘வல்வினையேன்பெண்பிறந்தே (திவ்.திருவாய், 5.4.3);.

     [பெண் பிற-]

பெண்பிறந்தார்

பெண்பிறந்தார் peṇpiṟandār, பெ, (n.)

   பெண்டிர்; woman.

     “பெண் பிறந்தா ரெய்தும் பெருந்துயர்” (திவ்.திருவாய்:5,4,4);

     [பெண் + பிறந்தார்]

பெண்பிறப்பு

பெண்பிறப்பு peṇpiṟappu, பெ.(n.)

   பெண்ணாகப் பிறத்தல்; being born a woman.

     “பெண்பிறப்புந்தோழியினிதென (சீவக.1297);

     [பெண் + பிறப்பு]

பெண்பிள்ளை

பெண்பிள்ளை peṇpiḷḷai, பெ(n.)

   1.பெண்குழந்தை; female infant, girl.

   2. மகளிர்; woman.

நாயகப் பெண் பிள்ளாய் (திவ்.திருப்பா.7);

   3. மனைவி; wife.

     [பெண் + பிள்ளை]

பெண்பிள்ளை வியாதி

 பெண்பிள்ளை வியாதி peṇpiḷḷaiviyāti, பெ. (n.)

பெண்சீக்கு (M.L.); பார்க்க; see penckku.

     [பெண்பிள்ளை + skt. vyadhi. த.வியாதி]

பெண்பிள்ளைசீக்கு

 பெண்பிள்ளைசீக்கு peṇpiḷḷaicīkku, பெ. (n.)

பெண்சீக்கு (M.L.); பார்க்க; see pencikku.

     [பெண்பிள்ளை + E. Sick → தசீக்கு]

பெண்புத்தி

 பெண்புத்தி peṇputti, பெ(n.)

   பெண்டிர்க்குரியஅறிவு; woman’swit,used in contempt.

     ‘பெண்புத்திபின்புத்தி.

     [பெண் + skt-buddhi த.புத்தி]

பெண்பூக்கதிர்

 பெண்பூக்கதிர் peṇpūkkadir, பெ. (n.)

   செடி மரம் முதலியவற்றிற் காயாக மாறும் பூங்கொத்து (இ.வ);; pistillate cluster.

     [பெண் + பூக்கதிர்]

பெண்பெண்டாட்டி

பெண்பெண்டாட்டி peṇpeṇṭāṭṭi, பெ. (n.)

   பெண்; woman.

ஒரு பெண் பெண்டாட்டி ஆணுடை யுடுத்து (ஈடு.6.2.ப்ர);

     [பெண் + பெண்டாட்டி]

பெண்பெருமாள்

பெண்பெருமாள் peṇperumāḷ, பெ. (n.)

   பெண்ணரசி; queen, queenly woman.

     ‘பெண் பெருமாளந்தப்புரப் பெருமாள்மூவருலா (இராசராச. 80);

     [பெண் + பெருமாள்]

பெண்போகம்

பெண்போகம் peṇpōkam, பெ. (n.)

   1. எட்டுத் துய்ப்புகளில் (அட்ட போகங்களில் ஒன்றான சிற்றின்பந் துய்க்கை; sexual onfoyment with a woman, one of aștā-pókam, q.v. (w.);

   2. முப்பத்திரண்டறங்களுள் பெண்ணின் பந்துய்க்கப் பிறனுக்கு உதவும் அறம் (பிங்);; aiding a man to obtain sexual enjoyment one of muppattirandadrim.

     [பெண் + skt. bhöga. த.போகம்]

பெண்மகன்

பெண்மகன் peṇmagaṉ, பெ. (n.)

   புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் மெண்மகள் (தொல்,சொல். 164. சேனா);; girl child which has attained the stage of playing in the neighbourhood.

     [பெண் + மகன்]

பெண்மகன்’ என்னும் மாறோக்கத்தார் (சொற்கை); வழக்கு, பெட்டைப்பசன் என்னும் ஆம்பூர் வட்டத்தார் வழக்குப்போன்றது.

பெண்மகள்

பெண்மகள் peṇmagaḷ, பெ. (n.)

   1. பெண்; woman.

   2. பெண் மகவு; girl-child.

     [ பெண் + மகள் ]

பெண்மகவு

 பெண்மகவு peṇmagavu, பெ. (n.)

   பெண்குழந்தை; woman-child.

     [பெண் + மகவு]

பெண்மயக்கம்

 பெண்மயக்கம் peṇmayakkam, பெ.(n.)

   பெண்மேற் கொள்ளும் காதல் (வின்);; falling in lowe with a Woman.

     [பெண் + மயக்கம்]

பெண்மயம்

பெண்மயம் peṇmayam, பெ.(n.)

   1பெண்தன்மை; womaniiness, feminine nature.

     ‘பெண்மயமோ பெரிதே’ (சீவக. 228.);;

   2. பெண்டிர்திரள்; crowd of women.

     ‘அங்கே பெண்மயமாயிருக்கிறது, போகமுடிய வில்லை.’

     [பெரும் + சமயம்]

பெண்மயல்

 பெண்மயல் peṇmayal, பெ.(n.)

   பெண்மயக்கம்.(வின்);பார்க்க; per-mayakkkam

     [பெண் + மயல்]

பெண்மயிர்

 பெண்மயிர் peṇmayir, பெ. (n.)

   பெண்ணின் கூந்தல் (பிங்);; tresses, woman’s lock of hair.

     [பெண் + மயிர்]

     [P]

பெண்மரம்

பெண்மரம் peṇmaram, பெ. (n.)

   1. புறக்காழுள்ள மரம் (பிங்);; endogenous tree.

   2. காய்க்கும் மரம் அல்லது செடி (வின்);; female tree or plant.

     [பெண் + மரம்]

பெண்மாயம்

 பெண்மாயம் peṇmāyam, பெ. (n.)

   பெண்வலை (வின்); பார்க்க; pen-wala.

     [பெண் + மாயம்]

பெண்மாறி

 பெண்மாறி peṇmāṟi, பெ. (n.)

   பெண்டிர் பலரிடம் மாறிமாறிக் காதல் கொள்பவர் (வின்);; a man who if fickle in his love.

     [பெண் + மாறி]

பெண்மூச்சு

 பெண்மூச்சு peṇmūccu, பெ. (n.)

விடாப்பிடி; ஒட்டாரம் (யாழ்.அக);,

 obstinacy, as a feminine trait.

     [பெண் + மூச்சு]

பெண்மை

பெண்மை1 peṇmai, பெ. (n.)

   தாய்மை; woman hood.

     [பெண் + மை]

 பெண்மை2 peṇmai, பெ. (n.)

   1. பெண் பிறப்பு பார்க்க;see pempirappu.

     ‘பெண்மைக்கு இரதியென (பாரத.திரெளபதிமாலை.39);

   2. பெண்ணுக்குரிய நலம்; feminine grace.

     ‘காணியைப் பெண்மைக் கெல்லாம் (கம்பரா. மீட்சி.46);

   3. பெண்ணின் தன்மை; womanliness, gentleness, womanishness.

     ‘பெண்மையு மிலளாகி யழுதலு மழுஉம் (கலித், 147.);.

   4. பெண்ணின்பம்; sexual enjoyment with a woman;

     ‘பிறனியலாள் பெண்மை நயவாதவன் (குறள். 147.);

   5. அமைதித்தன்மை; modesty.

பெண்மை நாண்வனப்புச் சாயல் (சீவக. 356);,

   6. நிறை; self-restraint, natural to a woman.

     ‘பிறையெனு நுதலவள் பெண்மை யென்படும் (கம்பரா. மிதிலைப், 40);

     [பெண் + மை]

மை பண்புப் பெயரீ ஈறு.

பெண்வசம்பு

 பெண்வசம்பு peṇvasambu, பெ. (n.)

   பிசிறில்லாத வசம்பு; sweet flag without bristles.

     [பெண் + வசம்பு]

பெண்வலை

பெண்வலை peṇvalai, பெ. (n.)

   பெண்டிர் செய்யும் ஈர்ப்புச் செயல்; toils of a woman.

     ‘பெண்வலைப் படாதவர் (சீவக. 78);

     [பெண் + வலை]

பெண்வழி

பெண்வழி peṇvaḻi, பெ. (n.)

   1. பெண்ணின மாக உரிமையிறங்குதற்குரிய பிறங்கடை வரிசை; female line, as in inheritance matriarchy.

   2. பெண்வழிச் சுற்றம் (யாழ்.அக.); பார்க்க; see pen-Vali-c-curram.

     [பெண் + வழி]

வழி = குடிவழி,

மக்களுக்குத் தலைமுறைதலைமுறையாய் உரிமைதொடர்ந்துவரும்வழி, தந்தைவழி தாய்வழி அல்லது மகன்வழி மகள்வழி என இரண்டாம். இவற்றுள் தாய் வழியே பழந்தமிழ் நாட்டில் வழங்கி வந்த தென்பதற்கு, தாயம் என்னும் வழக்கே சான்றாம். தாய்வழிப்பெறுவது தாயம். தந்தைவழி அல்லது மகன்வழி ஆண்வழியும்தாய்வழி அல்லது மகள்வழி பெண்வழியும் ஆகும். ஆத்திரேலியோ என்னுந்தென்கண்டத்தில் பெண் வழியுரிமை இருந்து வருவதாகச் சொல்லப் படுகின்றது.

பெண்வழிச் சுற்றம்

 பெண்வழிச் சுற்றம் peṇvaḻiccuṟṟam, பெ. (n.)

   பெண்ணினமாக வரும் உறவு (யாழ்.அக);; relation in the female line.

     [பெண்வழி + சுற்றம்]

பெண்வழிச் சேறல்

பெண்வழிச் சேறல் peṇvaḻiccēṟal, பெ. (n.)

   காமப் பேராசையில் மனைவி விருப்பப்படியே ஒழுகுகை (குறள். அதி, 91);; being led by wife, being under wife’s influence.

     [பெண்வழி + சேறல்]

செல்தல்→சேறல்

பெண்வாயன்

 பெண்வாயன் peṇvāyaṉ, பெ. (n.)

   பெண்டிர் போற் சளசளவென்று பேசுவோன் (இவ);; man who talks lika a WOman

     [பெண் + வாயன்]

பெண்வாரிசு

 பெண்வாரிசு peṇvārisu, பெ. (n.)

பெண்வழி பார்க்க;see perval,

     [பெண் + u waris. த.வாரிசு]

பெண்விடுதலை

 பெண்விடுதலை peṇviḍudalai, பெ, (n.)

பெண்ணுரிமை பார்க்க; see pen-n-urimai.

     [ பெண் + விடுதலை ]

பெண்வியாதி

 பெண்வியாதி peṇviyāti, பெ.(n.)

பெண்சீக்கு (ML); பார்க்க;see pen-cikku.

     [ பெண் + skt vyådhi. த.வியாதி ]

பெண்விளக்கு

பெண்விளக்கு peṇviḷakku, பெ.(n.)

   1.பெண்களிற்சிறந்தவள்; woman conspicuous for virtue and other excellences.

     ‘பெண் விளக்காகிய பெறலரும் பேதாய் (பெருங். இலாவாண, 18, 79);

   2. பாவை விளக்கு (இ.வ.);; damsel shaped standard of a lamp.

     [பெண் + விளக்கு]

     [P]

பெண்வீட்டார்

 பெண்வீட்டார் peṇvīṭṭār, பெ.(n.)

   மணமகளைச் சேர்ந்த உறவாடிகள்; parents and other relatives of a bride, bride’s party.

     [பெண் + வீட்டார்]

பெண்வெற்றிலை

 பெண்வெற்றிலை peṇveṟṟilai, பெ.(n.)

   வெற்றிலைவகை; a kind of betel.

     [பெண்+வெற்றிலை]

பெண் வெற்றிலையின் பின்புற நரம்புகள் தெரியாது எனவும் ஆண் வெற்றிலையின் நரம்புகள் தெரியும் எனவும் கூறுவர்.

பெண்வை-த்ததல்

 பெண்வை-த்ததல் peṇvaiddadal, செ.குன்றாவி.(v.t)

   வைப்பாட்டியாகக் கொள்ளுதல் (நெல்லை);; to keep as conbine.

     [பெண் + வை-]

பெதரிக்களம்

 பெதரிக்களம் pedarikkaḷam, பெ, (n.)

   எட்டி பார்க்க; (சங்.அக);; strychinóe tree.

     [பெதரி + களம்]

பெதிகாரம்

 பெதிகாரம் pedikāram, பெ. (n.)

   படிக்காரம் (சங்.அக);; alum.

     [படிகாரம்→ பெடிகாரம்→ பெதிகாரம்]

பெதும்பை

பெதும்பை pedumbai, பெ. (n.)

   1. எட்டு முதல் பதினொரு அகவை வரையுள்ள பெண் இலக். வி. 860.); girl between the ages of 8 and, 11.

   2. பெண் (திவா.);; woman.

     [பேது – பெது – பெதும்மை]

பெத்தகாலம்

பெத்தகாலம் pettakālam, பெ. (n.)

ஆதன் (ஆன்மா); பாசத்திற்கு உட்பட்ட காலம்:

 period during which a soul is in bondage of mummalam.

மலத்தினால்மறைப்புண்டு கிடக்கும் அப் பெத்த காலத்து’ (சி.போ. பா. 2, 2. பக். 63. சுவாமிநா);

     [பற்று→பத்து→பெத்து→பெத்தம்+காலம்]

பெத்ததசை

 பெத்ததசை peddadasai, பெ. (n.)

   ஆதனின் பாசபந்தத்திற்கு உட்பட்ட நிலை (யாழ்.அக.);; condition of the soul subject to the bondage of mummalam.

     [பற்று→பத்து→ பெத்து + தசை]

பெத்தமுத்தி

பெத்தமுத்தி pettamutti, பெ. (n.)

   1. பந்தமும் வீடும்; bondage and liberation of souls.

   2. ஒன்றுகை இலய); (யாழ்.அக);; Salvation by absorption in to God-head.

     [பெத்தம் + முத்தி]

பெத்தமூலம்

பெத்தமூலம் pettamūlam, பெ, (n.)

சிறு வழு துணை 1. (சங். அக.); பார்க்க: širuvaludunai nightshade Indian.

     [பெத்தம் + மூலம்]

பெத்தம்

பெத்தம் pettam, பெ.(n.)

   1. கட்டு; bond, tie. ligature

   2. ஆதனின் பாசபந்தம்; bondage of the soul, connection of & the Soul with mummalan

     “பெத்தமொடு முத்தியும் (தாயு. ஆனந்த 5);

   3. சேர்மானம் (யழ்.அக);; thing added.

     [ பற்று→ பத்து→ பெத்து→ பெத்தம்]

பெத்தர்

பெத்தர் pettar, பெ. (n.)

   பாசபந்தமுள்ள 2 உயிர்கள்; souls bondage.

     [பெத்து→ பெத்தர்]

பெத்தல்

 பெத்தல் pettal, பெ. (n.)

   பெருங்குரும்பை (மலை); பார்க்க; bow-String hemp.

     [பெத்து→ பெத்தல்]

பெத்தான்மா

பெத்தான்மா pettāṉmā, பெ. (n.)

   பாசபந்தமுள்ள உயிர்; soul in bondage.

     ‘முத்தியின்கட். பெத்தான்மாவை’ (சி.சி. 116);

     [பெத்து + ஆன்மா]

 skt ātmā த.ஆன்மா

பெத்தி

பெத்தி petti, பெ. (n.)

சிறுவழுதுணை 1. (மலை);,பார்க்க, see Siru Vâludunai indian nightshade.

     [பெத்து→ பெத்தி]

பெத்து

பெத்து pettu, பெ. (n.)

பெத்தம் பார்க்க; seepettam.

     ‘பெத்தின்றியைந்து தொழிலானும் (விநாயகபு. 82.47);

     [பற்று→பத்து→பெத்து]

பெத்துார்

 பெத்துார் petr, பெ. (n.)

   திருப்பத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Thiruppattu Taluk.

     [புத்துர்-பெத்தூர்]

பெந்தகம்

பெந்தகம் pendagam, பெ. (n.)

   1. கட்டு; tie.

   2. அடைமானம்; simple mortage.

     [ பற்று→ பத்து→ பந்து→ பெந்து→ பெந்தகம் ]

பெந்தனம்

 பெந்தனம் pendaṉam, பெ, (n.)

பெந்தம். (யாழ். அக);, பார்க்க; see pendam.

     [பெந்தம்- பெந்தனம்]

பெந்தம்

பெந்தம் pendam, பெ. (n.)

   1. கட்டு (வின்);; bond-age

   2. தொடர்பு (மாறனலங் 281, உரை.பக்.477);; relation, conection.

     [பெந்தகம்→ பெந்தம்]

பெந்தர்

 பெந்தர் pendar, பெ. (n.)

பெத்தர் பார்க்க; see pettar.

     [பெத்தர் – பெந்தர்]

பெந்தி-த்தல்

பெந்தி-த்தல் pendittal, செகுன்றாவி,(v.t)

   1.பந்திபார்க்க;see pand.

   2.சித்திரப்பாக்களில்எழுத்துகளைஅடைத்தல்; to confine, as letters of a stanza with in the figure of a particular shape.

     ‘சக்கரத்தினுள் அக்கரந் தடுமாறப் பெந்திப்பது (மாறனலங் 281. உரை. பக்477);

     [பந்து→ பெந்தி]

பெந்து

 பெந்து pendu, பெ. (n.)

பந்து பார்க்க; end pandu.

     [ பந்து→ பெந்து ]

பெந்தை

பெந்தை pendai, பெ. (n.)

   1. அருவருப்பாய்ப் பருத்தது; monstrosity.

   2. கலப்பையின் ஒருறுப்பு; a part of a ploughshare.

     [பெத்தை→ பெந்தை பெரிது→ பெர்த்து→ பெத்து→ பெத்தை]

பெந்தைக்கயிறு

பெந்தைக்கயிறு pendaikkayiṟu, பெ, (n.)

   1. நன்றாய்த் திரிக்காத கயிறு; rope not neatly twisted.

   2. கொழுவுள்ள கட்டையைக் கலப்பையோடிணைக்குங் கயிறு; rope that binds the parts of a phoughshare.

     [பெந்தை + கயிறு]

     [P]

பெந்தைவிழி

பெந்தைவிழி pendaiviḻi, பெ, (n.)

   1. உருண்டை விழி; goggle-eyes.

   2. அச்சத்தால் கண் மருண்டு பார்க்கை; staring or rolling of the eyes, as in bewilderment.

     [பேம் → பேந்தை → பெந்தை + விழி]

பெனாயில்

 பெனாயில் peṉāyil, பெ. (n.)

   அழுக்கு நீக்கியாகப் பயன்படும் ஒருவகை நெய்மி; an oil substance.

     [E. phenol → த. பெனாயில்.]

பென்-தல் (பெட்டல்)

பென்-தல் (பெட்டல்) peṉtalpeṭṭal, செ.குன்றாவி.(v.t)

   காப்பாற்றுதல்; to protect.

பெட்டல் என்பது புறந்தருதல் (தொல். சொல்.332. இளம்பூ);.

     [பிள் → பெள் + தல் → பெட்டல்]

பென்னம்பெரிய

 பென்னம்பெரிய peṉṉamberiya, பெ.எ. (adf.)

   மிகப்பெரிய; Very large.

     [ சின்னஞ்சிறிய xபென்னம்பெரிய ]

பென்னம்பெருத்த

 பென்னம்பெருத்த peṉṉamberutta, பெ. (adf).

பென்னம்பெரிய பார்க்க: see peņņam periya.

     [ சின்னஞ்சிறுத்த xபென்னம்பெருத்த ]

பென்னாங்கொட்டை

 பென்னாங்கொட்டை peṉṉāṅgoṭṭai, பெ. (n.)

பேன்கொட்டை பார்க்க;see pen-Kottai.

 cocculus indicus

     [ பென் + ஆம் + கொட்டை ]

பென்னை

 பென்னை peṉṉai, பெ. (n.)

   யானை (சங்.அக.);; elephant.

பெம்மான்

பெம்மான் pemmāṉ, பெ. (n.)

   1. இறைவன்; god.

பிரமாபுர மேவிய பெம்மானிவனன்றே (தேவா.61,1);

   2. பெரியோன்(வின்);; great man.

     [பெருமகன்→ பெருமான்→ பெம்மான்]

பெயரகராதி

 பெயரகராதி peyaragarāti, பெ.(n.)

   சதுரகராதியில் சொற்பொருளை விளக்கும் பகுதி; first section of Beschi’s caduragarādi, containing homonyms.

     [பெயர் – அகராதி]

பெயரடி

பெயரடி1 peyaraḍittal, செகுன்றாவி.(v.t)

   ஒருவன்பெயரைப்பதிவுப்புத்தகத்தினின்றுநீக்குதல்; to score out a name, as from a roll or register.

     [பெயர் – அடி]

 பெயரடி2 peyaraḍi, பெ. (n.)

பெயர்ப்பகுதி. பார்க்க; seе реyar-р-раgudi.

     [பெயர் + அடி]

அடி = முதலானது, பகுசொல்லிற் பெயராகிய பகுதி.

பெயரட்டவணை

 பெயரட்டவணை peyaraṭṭavaṇai, பெ. (n.)

   பெயர்ப்பட்டியல்(இ.வ);; index of names.

     [பெயர் + அட்டவணை]

பெயரன்

பெயரன் peyaraṉ, பெ.(n.)

   பெயரையுடைவன்; onewhobeavisaname.

     ‘எந்தை பெயரனை'(கலித்..81);.

   2.மகன்அல்லதுமகளிடம்பிறந்தபெயரன்; grandson, as bearing the grandfather’s name.

     “தனிக் காதலைப் பெயரனை (கம்பரா. அதிகாய.117);

   3. பாட்டன் (யாழ்ப்);; grandfather.

ஒருவனுக்கு மகனின் மகன் போன் எனப்படுவான். பெயரன் என்பது போன் என மருவிற்று. பாட்டன் பெயரைப் போனுக்கிடுவது பண்டை வழக்கமாதலால், பேரனுக்கு அப்பெயராயிற்று. சிலர் பாட்டனையும் போன் அல்லது போனார் என்பர், அரசகேசரி. பரகேசரி, எனற பட்டங்கள், பிற்காலச் சோழர்க்கு ஒன்றுவிட்டு வழங்கியதும் இம்முறை பற்றியே. (வே.கட்26);

     [பேரன் → பெயரன்]

பெயர்→ பெயரன் = (முதற்காலத்திற் பாட்டன் பெயரைப் பெற்றுவந்த); மகன்மகன் (வே.க.127);

பெயரப்பெயர

பெயரப்பெயர peyarappeyara, வி.எ. (adv).

   மீண்டும் மீண்டும்; again, and again.

     ‘பெயாப் பெயரப் பார்த்தான் (யாழ்ப்);

     [பெயர்2 – அ + பெயர்+அ]

     ‘அ’ வினையெச்ச ஈறு

பெயராயிரு-த்தல்

பெயராயிரு-த்தல் peyarāyiruttal, செ.கு.வி.(vi.)

   1.புகழுண்டாதல்; to be famous celebrated.

   2. வெளிப்பாடு; to be rumoured to be noised abroad.

     [பெயர் + ஆய் + இரு]

பெயராளி

 பெயராளி peyarāḷi, பெ. (n.)

   புகழ்மிக்கவன் (யாழ்.அக);; person of great celebrity.

     [பெயர் + ஆள் + இ]

பெயரிடுதல்

 பெயரிடுதல் peyariḍudal, செ.கு.வி (v.i).

   பெயர் சூட்டுதல்; to give a name, to perfrom the rite of naming a child.

     “பெயரிடுதல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டியதில்லை.”

     [ பெயர் + இடு ]

பெயரிடை நிலை

பெயரிடை நிலை peyariḍainilai, பெ.(n.)

   பெயரின்முதனிலைஇறுதிநிலைகட்குஇடைநிற்கும்எழுத்து(நன்.141,உரை.);;     [பெயர் + இடைநிலை]

பெயரின்னிசை

பெயரின்னிசை peyariṉṉisai, பெ.(n.)

   சிற்றிலக்கியவகை.தொண்ணுற்றாறனுள்பாட்டுடைத்தலைவன்பெயர்சார்ந்துவர50,70அல்லது90இன்னிசைவெண்பாக்களால்இயற்றப்படும்சிற்றிலக்கியவகை.(இலக்.வி.825);(சது.);; a poem of 50, 70 to 90 stangas of innišsi-venbā each mentioning the name of a patron or hero, one of 96 Širrilakkiyam.

     [பெயர் + இன்னிசை]

பெயரின்மை

 பெயரின்மை peyariṉmai, பெ.( n.)

   இறைவனெண்குணத்தொன்றான சொல்லமுடியாத தன்மை(பிங்);; namelessness, one of iraivaŋen-gunam, q.v.

     [பெயர் + இன்மை]

பெயரிய

பெயரிய peyariya, பெ.எ.(adv)

   1.பெயர்பெற்ற; havinganame.

     ‘இருபாற்பெயரிய.மூதூர்(புறநா.202.);

   2.பெயரால்அழைத்த; of calling by name.

     ‘கோவெனப் பெயரிய காலை (புறநா.152);

     [பெயர் – பெயரிய]

பெயரியற்சொல்

பெயரியற்சொல் peyariyaṟcol, பெ. (n.)

   தன் பொருளை இயல்பில் விளக்கும் பெயர்ச்சொல் (நன்.269);; noun that naturally suggests its meaning.

     [பெயர் + இயல் + சொல்]

பெயரியல்

 பெயரியல் peyariyal, பெ. (n.)

   சொல்லதி காரத்திற் பெயர்ச்சொல்லிலக்கணங் கூறும் பகுதி (தொல்.);;     [பெயர் + இயல்]

பெயரிரவல்

 பெயரிரவல் peyariraval, பெ.(n.)

   உடைமைக்கு உரியவர் பெயரை மறைத்து உரியரல்லாதார் பேரால் நடத்தும் நடவடிக்கை; benami transaction.

     [பெயர் + இரவல்]

பெயருரிச்சொல்

 பெயருரிச்சொல் peyaruriccol, பெ. (n.)

   பெயர்ச்சொல்லைத் தழுவிவரும் சொல்(இ.வ.);; adjective, as qualifying a noun.

     [பெயர் + உரிச்சொல்]

பெயரூர்

 பெயரூர் peyarūr, பெ. (n.)

   பெயரும் பிறந்தவிடமும்(வின்);; name and native place.

     [பெயர் + ஊர்]

பெயரெச்சம்

பெயரெச்சம் peyareccam, பெ.(n.)

   பெயர்கொண்டுமுடியும்வினைக்குறை(நன்.340);;பெயரை எச்சமாக உடையது.

 relative participle, as requiring a noun to complete the sense.

     [பெயர்.+ எச்சம்]

பெயரெஞ்சுகிளவி

பெயரெஞ்சுகிளவி peyareñjugiḷavi, பெ. (n.)

பெயரெச்சம் (தொல். சொல். 238); பார்க்க;see peyar-ессаm.

     [பெயர் + எஞ்சு + கிளவி]

பெயரெடு-த்தல்

பெயரெடு-த்தல் peyareḍuttal, செ.கு.வி. (v.i.)

   1. பெயர் பெறுதல்; to get a name.

   2. பெயரடி பார்க்க; seе реyar-adi.

     [பெயர் + எடு]

பெயரெழுத்து

 பெயரெழுத்து peyareḻuttu, பெ. (n.)

   எழுத்து வகை(பிங்.);; a kind of letter.

     [ பெயர் + எழுத்து ]

பெயரேடு

 பெயரேடு peyarēṭu, பெ. (n.)

   பேரேடு(நாஞ்);; ledger.

     [பெயர் + ஏடு]

பெயர்

பெயர் peyar, பெ.(n)

   1. பெயர்; name, appellation, designation, epithet.

     ‘மறவர் பெயரும் பீடுமெழுதி’ (அக.நா. 67);.

   2. புகழ்; reputation, renown, celebrity, fame.

     ‘பெரும் பெயர் மீளி (கலித் 17);,

   3. பெருமை சூடா); greatness.

   4. ஆள்; person.

எத்தனை பெயர்; வந்தார்கள்?

   5. வடிவு; shape, form.

     ‘கூந்த லென்னும் பெயரொடு (பரிபா. 3.31.);

   6. பொருள்; property, substance.

     ‘பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய’ (பதிற்றுப்.90.23);;

   7. பொருளிலக்கணங் கூறு நூல்; treatise dealing with porul.

     ‘சொற்பெயர் நாட்டங் கேள்வி (பதிற்றுப். 21.1);,

   8. இதன் பொருட்டு; alleged cause pretext.

     ‘திருவிழா வென்பதோர் பெயரால்’ (காஞ்சிப்பு. நகர.70);,

   9. சூளுரை; vow.

     ‘பொருவேமெனப் பெயர் கொடுத்து (பட்டினப். 289.);

   10. பெயர்ச்சொல் (தொல்.எழுத்.180.); பார்க்க;   11. முதல் வேற்றுமை;     ‘அவைதாம் பெயர் ஐ யொடுகு’ (தொல். சொல். 64);.

தெ. பேரு க. பேசர் ம. பேயர் து. புதேரு பட ஹெசரு.

     [பெய் – பெயர்]

பெயர் நூற்பா

பெயர் நூற்பா peyarnūṟpā, பெ. (n.)

   குறி நூற்பா (குறிச்சூத்திரம்); (யாப்.வி.பாயி.பக்.11); (இலக்);; nurpa dealing with technical terms.

     [பெயர் + நூற்பா]

பெயர் படை-த்தல்

 பெயர் படை-த்தல் peyarpaḍaittal, செ.கு.வி. (v.i)

   பேர்படைத்தல்; to become famous.

     [பெயர் + படை]

பெயர் வேற்றுமை

பெயர் வேற்றுமை peyarvēṟṟumai, பெ.(n.)

முதல் வேற்றுமை,

     ‘அவ்வாறும் பெயர் வேற்றுமைப் பயனிலையாம் (தொல். சொல். 66, சேனா);

மறுவ. எழுவாய் வேற்றுமை

     [பெயர் – வேற்றுமை]

வேற்றுமை = பொருள் வேற்றுமை செய்வன. (நன். 261); பெயர் வேற்றுமை என்பது ஒரு சொற்றொடறின் எழுவாய் இது என்று உணர்த்துவதாகும். எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை. உருபேற்றல் பெயர்க்கு இலக்கணமாகும். பெயர் வேற்றுமை பயனிலை கொள்ளாத வழியும் பெயர் வேற்றுமையேயாகும்.

பெயர்-தல்

பெயர்-தல் peyartal, செ.கு.வி.(v.i)

   1.போதல்(திவா);; to move, leave, stir, rise, depart.

     ‘திசை யெங்கணும் பெயர்ந்தான் (கம்பரா. நிகும்பலை. 101);.

   2. பிறழ்தல்; to turn about shift, veer.

     ‘நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (புறநா.3);.

   3. மீளுதல்; to return, come back.

குழ்ந்த நிரை பெயரல் (பு.வெ.1.10);

   4.மாறுதல்; to vary, change.

     ‘ஆணெனத் தோன்றியலியெனப் பெயர்ந்து திருவாச.3.134)

   5. சிதைவுறுதல்; to fall Into ruins

     ‘கட்டடம் பெயர்ந்து போயிற்று

   6. இணைப்பு நெகிழ்தல்; to grow loose to be detached.

     ‘தளம் பெயர்ந்து விட்டது.

   7. கூத்தாடுதல் (பிங்);; to dance.

   8.சலித்தல்; to shake.

     ‘பெயரும்…. பிதற்றும் (கம்பராசூர்ப்ப.98);;

   9. அசையிடுதல்; to chew the cud.

     ‘விளையா விளங்கணாற, மெல்குபு பெயரா (சிறுபாண்.45);,

   10. இடம் விட்டு மாறுதல் (வின்);; to be displaced dislocated.

   11. பிரிதல்; to be separated, to stand aside.

நிலம் பெயர்ந்துறைதல் (தொல், தோ பொ. 169);.

   12. கிளர்தல்; to be agitated

     ‘ஒதநீரிற் பெயர்பு பொங்க’ (புறநா. 22);.

   13. தேய்தல்; to be rupped (w.);

   14. பணம் நடமாடுதல்; to pass from hand to hand, as currency.

   அந்த ஊர் எப்பொழும் பணம் பெயரக்கூடியது;   15. தண்டப்படுதல் (வசூலாதல்);; to be collected, as money or debt;

ஆயிர உருபா பெயர்ந்தது

     [பெய் – பெயர்]

பெயர்’-த்தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பெயர்க்கணக்கு

பெயர்க்கணக்கு peyarkkaṇakku, பெ. (n.)

   1. பங்கீடு(வின்);,

 distribution of shares.

   2. பேரேடு(இ.வ);,

 ledger

     [பெயர் + கணக்கு]

பெயர்க்கு

 பெயர்க்கு peyarkku, வி.அ. (adv)

   மாத்திரையாய்; nominally for form’s sake.

     ‘பெயர்க்கு மாத்திரம் அவன் அரசன்;

     [பெயர் – பெயர்க்கு.]

பெயர்ச்சி

பெயர்ச்சி peyarcci, பெ. (n.)

   இடமாறுகை; shifting, moving.

காரி(சனி);ப் பெயர்ச்சி அடுத்த திங்கள் நிகழும் (உ.வ);

     [பெயர்2 – பெயர்த்தி – பெயர்ச்சி.]

 பெயர்ச்சி peyarcci, பெ.(n.)

   இடமாற்றுகை; removal, displacement, dislocation.

     [பெயர்3 – பெயர்ச்சி.]

பெயர்ச்சூத்திரம்

 பெயர்ச்சூத்திரம் peyarccūttiram, பெ. (n.)

பெயர் நூற்பா பார்க்க; see peyar nurpa.

     [பெயர் + சூத்திரம்.]

 skt. sutra » த சூத்திரம்

பெயர்ச்செவ்வெண்

பெயர்ச்செவ்வெண் peyarccevveṇ, பெ. (n.)

பெயர்களில் எண்ணிடைச் சொல் தொக்கு விட்டிசைத்து வருந்தொடர் (நன். 428); (gram.);

 a series of nowris with the connecting conjunction understood there being a pause between the nowns in utterance, dist fr u mmal-t-tokai.

     [பெயர் + செவ்வெண்.]

பெயர்ச்சொல்

 பெயர்ச்சொல் peyarccol, பெ. (n.)

   நால்வகைச் சொற்களுள் பொருளைக் குறிக்க வழங்குச்சொல்;     [ பெயர் + சொல்.]

பெயர்திறம்

 பெயர்திறம் peyartiṟam, பெ. (n.)

   முல்லை யாழ்த்திறவகை (பிங்);;     [பெயர் – திறம்]

பெயர்த்தி

பெயர்த்தி2 peyartti, பெ. (n.)

   1. மக்கள் வயிற்றுப் பெண்; grand-daughter, as bearing the same name as her grandmother.

   2.பாட்டி(யாழ்ப்.);; grandmother.

     [ பெயர் → பெயர்த்தி]

பெயரன் (ஆ.பா.); → பெயர்த்தி (பெ.பா); ‘தி (பெ.பா.ஈறு);

 பெயர்த்தி2 peyartti, பெ. (n.)

   கோள் முதலிய வற்றின் பெயர்ச்சி; movement, as of a planet from one Iraši to another

சனிப் பெயர்ச்சி.

     [பெயர் – பெயர்த்தி]

பெயர்த்திரிசொல்

பெயர்த்திரிசொல் peyarttirisol, பெ.(n.)

   1. திரிந்து வழங்கும் பெயர்ச் சொல்.(சீவக. 1774, உரை.);; altered or changed form of a noun.

   2. தம்பொருளை அரிதில் விளக்கும் பெயர்ச் சொல் (நன்.272.உரை.);; archaic or classical noun.

     [பெயர் + திரிசொல்.]

பெயர்த்து

பெயர்த்து peyarttu, வி.எ (adv)

பெயர்த்தும் பார்க்க; see peyarttum.

     ‘பெயர்த் தொற்றும் (கலித்.103);

     [பெயர் – பெயர்த்து.]

பெயர்த்துக் கொடுக்கும்வலி

 பெயர்த்துக் கொடுக்கும்வலி peyarttukkoḍukkumvali, பெ.(n.)

   பேறுகால வலிக்குமுன் சிறிது சிறிதாக வலிக்கும் நோவு(இ.வ);; preliminary labour pains due to movements of the foetus.

     [பெயர்த்து + கொடுக்கும் + வலி]

பெயர்த்துநடு-தல்

 பெயர்த்துநடு-தல் peyarddunaḍudal, செ.குன்றாவி. (v.t.)

   நாற்றுப்பிடுங்கி நடுதல்; to transplant.

     [பெயர்த்து + நடு]

பெயர்த்தும்

பெயர்த்தும் peyarttum, வி.எ. (adv),

   பின்னும்; again, in return.

     ‘ஞாயிறு பெயர்த்து நின்….. குடகடற் குளிக்கும் (புறநா.2);

     [பெயர்→பெயர்த்தும்]

பெயர்த்துரை

 பெயர்த்துரை peyartturai, பெ.(n).

   திரும்பக் கூறுதல்; repetition.

     [பெயர்த்து + உரை]

பெயர்த்தெழுது–தல்

பெயர்த்தெழுது–தல் peyarddeḻududal, செ.குன்றாவி, (v.t)

   1. படியெடுத்தல்(வின்);; to copy transcribe.

   2.மொழிபெயர்த்தல்(இ.வ.);; to translate from one language to another.

     [பெயர்→ பெயர்த்து + எழுது]

பெயர்நேரிசை

பெயர்நேரிசை peyarnērisai, பெ. (n.)

சிற்றிலக்கியவகை தொண்றூற்றாறனுள் பாட்டுடைத் தலைவன் பெயர் சார்ந்து வர50, 70 அல்லது 90 நேரிசை வெண்பாக்களால் இயற்றப்படும் சிற்றிலக்கிய வகை (இலக்வி.830);,

 a poem of 50, 70 or 90 stanzas of nérša venba, each mentioning the name of a patron or hero, one of 96 Širrilakkiyam, q.v.

     [பெயர் + நேரிசை]

பெயர்ந்து

பெயர்ந்து peyarndu, வி.எ.(adv)

   1.மறுபடியும்; again.

     ‘பெயர்ந்தொரு சிகரந்தேடின்’ (கம்பரா. கும்பகருண.184);

   2. பிற்பாடு; presently, afterwards.

     ‘பெயர்ந்துவர்.

     [பெயர் → பெயர்ந்து]

பெயர்பாதி

 பெயர்பாதி peyarpāti, பெ. (n.)

   சரிபாதி: (கொ.வ.);; exact half.

     [பெயர் + பாதி]

பகுதி-பாதி

பெயர்புறம்

பெயர்புறம் peyarpuṟam, பெ. (n.)

   புறங் கொடுக்கை; retreating.

     ‘பெயர்புறத் தார்த்து (புறநா.35.);

     [பெயர். + புறம]

பெயர்பொறி-த்தல்

பெயர்பொறி-த்தல் peyarpoṟittal, செ.குன்றாவி.(v.t.)

   புகழைநிலைநிறுத்துதல்; tobedistinguished.

     ‘பெய்ர்பொறிக்கும்பேராண்மையில்லாக்கடை'(நாலடி.199);

     [பெயர் + பொறி]

பெயர்போ-தல்

 பெயர்போ-தல் peyarpōtal, பெ. (n.)

செ.கு.வி. (v.i);

   புகழ்பெறுதல்; to be renowned celebrated famous.

     [பெயர் + போ]

பெயர்ப்பகுதி

 பெயர்ப்பகுதி peyarppagudi, பெ. (n.)

   பகுசொல்லில் பெயராகிய பகுதி;     [பெயர் + பகுதி]

பெயர்ப்படு-த்தல்

பெயர்ப்படு-த்தல் peyarppaḍuttal, செ.குன்றாவி.(v.t)

   பேரிடுதல்; to name after.

மூதூர் நின் பெயர்ப்படுத்தேன்’ (மணிமே.பதி. 31);.

     [பெயர் + படு-]

பெயர்ப்பு

பெயர்ப்பு peyarppu,    1.பெயரச்செய்கை; shifting, eradication.

   2. மொழிபெயர்ப்பு (இ.வ);; translation.

     [பெயர் – பெயர்ப்பு ]

     ‘பு’ (சொல்லாக்க ஈறு);

பெயர்ப்போலி

பெயர்ப்போலி peyarppōli, பெ.(n.)

   உரிச்சொல்வகை(தொல்.சொல்.297.சேனா);; word partaking of the nature of a noun.

     [பெயர் + போலி]

பெயர்வழி

பெயர்வழி1 peyarvaḻi, பெ. (n.)

   1. ஆள்; individual.

   2. தலைமுறை; genealogy (w.);.

     [பெயர் + வழி]

 பெயர்வழி2 peyarvaḻi, பெ.(n.)

   பொருளட்டவணை; list,Catalogue.

     [பெயர் + வழி]

பெயலை

 பெயலை peyalai, பெ.(n.)

மழை(சது.);

 rain.

     “பெயலைபொய்த்தால்பெருந்தீங்கு”(இ.வ.);

     [பெய் → பெயல் → பெயலை]

பெயல்,

பெயல், peyal, பெ.(n.)

   1.பொழிகை; showering.

ஒல்லாதுவானம்பெயல்(குறள்.559);

   2.மறை; rain.

மன்னவனாட்டபெயலும்விளையுளுந்தொக்கு(குறள்,545);

   3.மழைத்துளி(திவா.);.

 raindrop.

   4.முகில்; cloud.

     “பெயறுளி முகிழென” (கலித். 56.);

     [பெய் – பெயல்]

பெயாதனம்

 பெயாதனம் peyātaṉam, பெ. (n.)

வேங்கை (மலை.); பார்க்க; see East India Kino.

பெய்

பெய்2 peytal, செ.குன்றாவி. (v.t.)

   2. பொழிதல்; to pour down, pour into.

பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்’ (புறநா.115.);

   3. கலமுதலியவற்றில் இடுதல்; to put place, lay, put into serve up, as food in a dish.

உலைப்பெய் தடுவது போலுந்துயர் (நாலடி.14…);.

   4. எறிந்து போகவிடுதல்; to throw out, throw aside.

பார்த்துழிப் பெய்யிலென் (நாலடி.26.);.

   5. இடைச் செருகுதல்; to insert, interpolate as in a text.

   6. கொடுத்தல்; to give, confer.

   உயிர்க்கு….வீடுபேறாக்கம் பெய்தானை’ (தேவா.975,7);;   7. அமைத்தல்; to make to settle, appoint.

     ‘பிரான் பெய்த காவு கண்டீர். மூவுலகே திவ். திருவாய்.6.35.)

   8.பரப்புதல்; to spread.

     ‘தருமணல், தாழப்பெய்து (கலித்.114);

   9. புகவிடுதல்; to discharge.

     ‘கருந்தலை யடுக்கலி னணைகள். பெருங்கடலிடைப் பெய்து’ (கம்பரா. கும்ப. 248);;

   10. எழுதுதல்; to writedraw,

பெய்கரும் பீர்க்கவும் வல்லன்’ (கலித்.143.);.

   11. அணிதல்; to put on, as harness, to wear, as jewells, cloths, flowers.

மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்” (பரிபா.20:21);.

   12. பயன்படுத்தல்; to bring into play, to use.

     ‘பெய்திறனெல்லாம் பெய்து பேசினேன்’ (கம்பரா. கும்ப.169);

   13. கட்டுதல்; to tie, faster.

   புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும்.பாண். 218);.;   14. சிறுநீர் முதலியன ஒழுகவிடுதல் (கொ.வ.);; to discharge, as urine, to shed, as tears.

   15, தூவுதல்; to strew, scatter, as flowers.

   16, பங்கிடுதல் (தி.வா.);; to distribute

   16, செறித்தல் (பி.ங்);; to crowd, being close together.

   பெய்ம்மணி யேயதேர்’ (கம்பரா. நாக பாச,128);;ம. பெய்யுக

     [ பொய் → பெய் ]

பெய்-தல்

பெய்-தல் peytal, செ.கு.வி.(v.i.)

   1.மேனின்றுபொழிதல்; to rain, fall, as dew or hail.

பெய்யெனப் பெய்யு மழை (குறள்.55);

பொய் → பெய். பெய்தல் = துளைவழி நீர் ஒழுகுதல் போல முகிலினின்று மழை ஒழுகுதல். (வேக3;126);

பெய்கலம்

 பெய்கலம் peykalam, பெ.(n.)

   ஏனம்; pot or vessel.

     [ பெய் + கலம்.]

பெய்தளத்தல்

பெய்தளத்தல் peytaḷattal, பெ. (n.)

   படியால் அளக்கும் அளவை வகை (தொல், எழுத்.7, உரை.);; measuring by a vessel of standard capacity.

     [பெய் – பெய்து + அளத்தல் – ‘தல் தொ.பெ.ஈறு]

பெய்துரை

பெய்துரை peyturai, பெ. (n.)

   1. இடைப்பெய்து உரைப்பது; insertion, interpolation.

   2. பாயிரம் (பிங்);; preface, introduction.

     [பெய் – பெய்து + உரை]

பெய்வளை

பெய்வளை peyvaḷai, பெ.(n.)

   பெண்பால்; ladyaswearingbracelets.

     “பேதைபெருந்தோளிபெய்வளாயென்னும்(நாலடி.47);.

     [பெய் + வளை]

பெரட்டு

பெரட்டு peraṭṭu, பெ, (n.)

புரட்டு,

 deception.

     ‘பெரட்டும் உருட்டும் வேதனை செய்வதும் (கனம் கிருஷ்ணையர், கீர்த்21);.

     [புரட்டு → பெரட்டு]

பெரண்டவயல்

 பெரண்டவயல் peraṇṭavayal, பெ. (n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுர்; avillage in Arantangi Taluk.

     [பிரண்டை+வயல்]

பெரந்தை

 பெரந்தை perandai, பெ.(n.)

   பெரியப்பா, தந்தையின் அண்ணன்; father’s elder brother.

கொலா.பெரந்தை.

     [பெரு+அந்தை [தந்தை] – பெரந்தை]

பெரப்பஞ்சோலை

 பெரப்பஞ்சோலை perappañjōlai, பெ. (n.)

   இராசிபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Rasipuram Taluk

     [பிரம்பு-பிரப்பம்+சோலை]

பெரப்படி

 பெரப்படி perappaḍi, பெ. (n.)

   கும்பகோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kumbakonam Taluk.

     [புறம்பு+அடி]

பெரம்பை

 பெரம்பை perambai, பெ. (n.)

   விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village ir Vilupuram Taluk.

     [புறம்பு-புறம்பை]

பெரி

 பெரி peri, பெ, (n.)

   சிறுநாகப்பூ; iron-wood of cevlon.

பெரிசு

 பெரிசு perisu, பெ. (n.)

பெரியது (யாழ்.அக.); பார்க்க;see periyadu.

     [பெரியது – பெரிது – பெரிசு] (கொ.வ,);

பெரிதாகச் செய்தல்

 பெரிதாகச் செய்தல் peritākacceytal,      ‘நீ விட்டில் வெட்டி முறித்தது போதும் கடைக்குப் போய் இந்தச்சாமான்களை வாங்கி வா’.

     [வெட்டி + முறி-,]

பெரிது

பெரிது peridu, வி.அ(adv).

   மிகவும்; greaty.

     ‘கலங்குவன்பெரிதென(கலித்.27);

     [ பெரியது – பெரிது ]

பெரிது’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பெரிப்ளுசு ஆப் எரித்ரியன் சி என்ற நூலிலும் தாலமியின் பயண நூலிலும் குறிப்பிடப்படும் பழைய துறைமுகம். ஏழாம் நூற்றாண்டுத் திருமங்கையாழ்வாரின் பாடல்களில் ‘கடல்மல்லை என்று குறிக்கப்படுகிறது. பல்லவர்களின் குடைவரைக் கோயில்களாலும் ஒற்றைக் கற்றளிகளாலும் உலகப் புகழ் பெற்றது. ஒன்றிய நாடுகள் பேரவை உலகவரலாற்றுச் சின்னங்கள் பட்டியலில்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பெரிய

பெரிய periya, பெ.அ.(adt)

   1.பெரிதான; largegreat.

     “பெரியமேருவரையேசிலையாமலைவுற்றார்(தேவா.1114.9);

   2.மூத்த; elder.

பெரியதாயார்

   3.இன்றியமையாத; importangreat

   பெரியசெயல்;   4.நல்ல; noble.

பெரிய நடை.

     [பெரு(மை); பெரி-ய]

பெரிய சேரான்

 பெரிய சேரான் periyacērāṉ, பெ. (n.)

   தேன் சேரான்(யாழ்ப்);; glabrous marting-nut.

     [பெரிய + சேரான்]

பெரிய சேர்வை

 பெரிய சேர்வை periyacērvai, பெ.(n.)

   பெரிய கட்டு மரங்கள்; big and large catamaran. (மீனவ);

     [பெரிய+சேர்வை [சேர்த்துக் கட்டிய கட்டுமரம்]

பெரிய தகப்பன்

பெரிய தகப்பன் periyadagappaṉ, பெ.(n.)

   1. தந்தையின் மூத்தஉடன்பிறந்தான்; father’s elder brother.

   2.தாயின் மூத்த உடன் பிற்ந்தாளின் கணவன்; husband of mother’s elder sister.

மறுவ, பெரியப்பன்

     [பெரிய + தகப்பன்]

பெரிய தக்காளி

பெரிய தக்காளி periyadakkāḷi, பெ.(n.)

   தக்காளி வகை(M.M.365);; Indian wintercherry, physalus peruuiana.

     [பெரிய + தக்காளி]

பெரிய பணம்

பெரிய பணம் beriyabaṇam, பெ.(n.)

   1.கால்உருவாமதிப்புக்கொண்டகாசு(G.Sm.Dli.293);; a coin of the value of querter rupee.

   2. இரண்டரை ‘அணா’ மதிப்புக் கொண்ட காசுவகை (C. G 154);; big fanam = 2 1/2 annas.

     [பெரிய + பணம்]

பெரிய பிராட்டி

பெரிய பிராட்டி beriyabirāṭṭi, பெ. (n.)

   திருமகள்; lakshmi, as chief consort of višnu.

பெரிய பிராட்டியார் பக்கல் போலே (ஈடு.10.10.6);

     [பெரிய + பிராட்டி]

பெரிய பிள்ளை

 பெரிய பிள்ளை beriyabiḷḷai, பெ.(n.)

   ஊர்அல்லதுகுடும்பத்திற்குத்தலைமையாகமதிக்கப்பட்டவன்(இட.வ.);; agedmanofavillageorafamily,heldinrespect.

     [பெரிய + பிள்ளை]

பெரிய புராணம்

 பெரிய புராணம் beriyaburāṇam, பெ.(n.)

   நாயன்மார்அறுபத்துமூவர்வரலாறுகுறித்துச்சேக்கிழாரால்பாடப்பட்டநூல்; a hagiologic poem containing the lives of the sixty three Nāyaņmār, by cēkkiļār.

     [பெரிய + skt, puräna த.புராணம்]

பெரிய பூளை

பெரிய பூளை periyapūḷai, பெ.(n.)

   செடிவகை(mm.702);; large poolay, m. sh.aerna javanica.

     [பெரிய + பூளை]

பெரிய பெண்

பெரிய பெண் beriyabeṇ, பெ.(n.)

   1.அகவைமுதிர்ந்தவள்; aged woman.

   2. தகுந்த நிலையிலுள்ளவள்; Influential wornаг. w Oman of position.

   3. பருவமடைதவள்; a girl who attainded puberty.

     [பெரிய + பெண்]

பெரிய பெயர்

 பெரிய பெயர் beriyabeyar, பெ.(n.)

   பெரும்புகழ்(வின்);; greatfame,celebrity.

     [பெரிய + பெயர்]

பெரிய பெருமாள்

பெரிய பெருமாள் beriyaberumāḷ, பெ. (n.)

   1. திருவரங்கத்துத் திருமால்; god at srire Tiru-v-arangam.

பெரிய பெருமாளரங்க, ராடிரூசல் (அஷ்டப் ஊசல்);,

   2. பேரரசன் (sll ii. 155);; paramount soverign, emperor.

பெரியபெருமாள் படிமை ஒன்று.

     [பெரிய + பெருமாள்]

பெரிய பேச்சு

பெரிய பேச்சு periyapēccu, பெ. (n.)

   நல்ல பேச்சு; agreat. noble nord.

   2. நீண்ட உரையாடல்; long discussion.

க. பெர்மாது.

     [பெரிய + பேச்சு]

பெரிய பொருள்

பெரிய பொருள் beriyaboruḷ, பெ.(n.)

   பரம்பொருள்(பரப்பிரமம்);; Brahma,asthesupremebeing.

   ஞானவானந்தமாம்பெரியபொருளைப்பணிகுவாம்”(தாயு.திருவருள்.பாசிவ.2);;     [பெரிய + பொருள்]

பெரிய மனசு

 பெரிய மனசு periyamaṉasu, பெ.(n.)

பெரியமனம்பார்க்க; see periya-manam.

     [பெரிய + மனம் → மனசு]

பெரிய மனிதன்

பெரிய மனிதன் periyamaṉidaṉ, பெ.(n.)

   1. மேன்மையாளன்; great man.

   2. செல்வமும் சாய்காலு முள்ளவன்; wealthy influential man.

   3. உயர்ந்த நிலையிலுள்ளவன்; man of position, official or otherwise.

   4. அகவை முதிர்ந்தோன்; aged man.

   5. வண்ணாரினத் தலைவன்(ETV|| 317);; head man of a caste, as of washerman.

     [பெரிய + skt – Manu – ša → மனுஷ்யா → த. மனிதன்]

பெரிய முப்பழம்

பெரிய முப்பழம் periyamuppaḻm, பெ. (n.)

   பாட்டின் மரபு கூறும் ஒரு பழைய நூல் (யாப்.வி.பக்.516);; an ancient treatise on poetics, not now extant.

     [ பெரிய + முப்பழம் ]

பெரிய மூக்கிரட்டை

 பெரிய மூக்கிரட்டை periyamūkkiraṭṭai, பெ.(n.)

   மூக்குத்திக்கொடிவகை(ட.);; pointed-leave dhog weed.

     [பெரிய + மூக்கிரட்டை]

பெரிய வரகு

 பெரிய வரகு periyavaragu, பெ. (n.)

   வரகு வகை(Rd.M.);; a large species of common millet.

     [பெரிய + வரகு]

பெரிய வராடி

 பெரிய வராடி periyavarāṭi, பெ.(n.)

   பாலையாழ்த்திறவகை(பிங்);; a secondary medody – type of the palai class.

     [பெரிய + வராடி]

பெரிய வவசரம்

 பெரிய வவசரம் periyavavasaram, பெ.(n.)

   உச்சிக்காலத்தில் கோயில் திருமேனிக்குப் படைக்கும் படையல்; noon meal offered before the chief deity in a temple.

     [ பெரிய + skt avasara. த.அவசரம் ]

பெரிய வெள்ளிக்கிழமை

 பெரிய வெள்ளிக்கிழமை periyaveḷḷikkiḻmai, பெ.(n.)

   ஏகபெருமான்குறுக்கில்(சிலுவையில்);அறைந்துகொல்லப்பட்டநாளின்ஆண்டுக் கொண்டாட்டம் (கிறித்);; goodfriday,theanniversaryofthedayonwhichjesuschristwascrucified.

     [பெரிய + வெள்ளிக்கிழமை]

பெரியஎழுத்து

 பெரியஎழுத்து periyaeḻuttu, பெ.(n.)

   அகர உயிரெழுத்து; the first vowel ‘a’ in Tamil.

     [பெரிய+எழுத்து]

பெரியகம்பு

 பெரியகம்பு periyagambu, பெ. (n.)

   கம்புப் பயிர்வகை; large bulrush millet, pennisetum typhoideum.

     [பெரிய + கம்பு]

     [P]

பெரியகரடி

 பெரியகரடி periyagaraḍi, பெ. (n.)

   எழுமுனிமண்டலம்; the great bear, (pond.);

     [பெரிய + கரடி]

பெரியகரம்

 பெரியகரம் periyagaram, பெ. (n.)

   போளூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Polul Taluk.

     [பெரிய+அகரம்]

பெரியகருப்பன்

 பெரியகருப்பன் periyagaruppaṉ, பெ, (n.)

   ஒரு சிற்றூர்த் தெய்வம்(இ.வ.);; a village deity.

     [பெரிய + கருப்பன்]

பெரியகளந்தை

 பெரியகளந்தை periyagaḷandai, பெ. (n.)

   பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Pollachi Taluk

     [பெரிய+களந்தை]

பெரியகாடை

பெரியகாடை periyakāṭai, பெ. (n.)

   காடை வகை(M.M_75);; common quail, Coturnix communis.

     [பெரிய + காடை]

     [P]

பெரியகாட்டுச்சாதி

பெரியகாட்டுச்சாதி periyakāṭṭuccāti, பெ. (n.)

   காட்டுச் சாதி(M.M.887);; malabar nutmeg.

     [பெரிய + காட்டுச்சாதி. skt, jati த.சாதி]

பெரியகிளி

 பெரியகிளி periyagiḷi, பெ. (n.)

   கிளிவகை; large Indian parakeet, palacornis nepalensis.

     [பெரிய + கிளி]

பெரியகுடி

 பெரியகுடி periyaguḍi, பெ.(n.)

பெரிய குடியானவன் பார்க்க;see periya kudiyanavan.

     [பெரிய + குடி]

பெரியகுடியானவன்

பெரியகுடியானவன் periyaguḍiyāṉavaṉ, பெ.(n.)

   1. தலைமை வேளாளன்; biggest tenant or cultivator in a village.

   2. சிற்றூரின் பெருஞ்செல்வர்; mirasdar.

     [பெரிய + குடியானவன்]

பெரியகுணம்

பெரியகுணம் periyaguṇam, பெ.(n.)

   1.உயந்தபண்பு; nobility, liberal disposition, magnamimity.

   2. உலகப் பற்றின்மை(வின்);; superiority or indifference to worldly greatness, honours or pleasure.

     [பெரிய + குணம்]

பெரியகை

பெரியகை periyagai, பெ. (n.)

   1. தாராளமான கை(யாழ்.அக.);; liberal or bountiful hand.

   2. பணக்காரன்(இ.வ.);; wealthy person.

   3. சாய்கால் மிக்க ஆட்சி(வின்);; influential party.

     [பெரிய + கை]

     [P]

பெரியகோயில்

பெரியகோயில் periyaāyil, பெ. (n.)

   திருவரங்கம்; Thiruvarangam.

நஞ்சேவகனார். மருவிய பெரியகோயில் (திவ். திருமாலை.11);

   2. தஞ்சைப் பெரியகோயில்; Tanjore bigtemple.

     [பெரிய + கோயில்]

 பெரியகோயில் periyaāyil, பெ.(n.)

   தஞ்சாவூரில் சோழப்பேரரசன் இராசராசனால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய சிவன் கோயில்; a big siva temple constructed at Thanjavur by Chola Emperor Rajaraja1.during 10th century A.D.

மறுவ மிருகதீசுவரர் கோயில்

     [பெரிய+கோயில்]

பெரியசம்பா

பெரியசம்பா periyasambā, பெ.(n.)

   ஆறுமாதத்திற் பயிராகும் சம்பா நெல்வகை (விவசாய.1);; a kind of Šambá paddy, maturing in six months.

பெரியசீயர்

 பெரியசீயர் periyacīyar, பெ. (n).

   மணவாள மாமுனிகள்; an ācārya of the tenkali sri vaisŋavar.

     [பெரிய + சீயர்]

 Skt.jiyar-த.சீயர்

பெரியதகரை

பெரியதகரை periyadagarai, பெ. (n.)

   மரவகை (mm. 155);; West Indian bead tree.

     [பெரிய+தகரை]

பெரியதட்டு

 பெரியதட்டு periyadaṭṭu, பெ. (n).

   கப்பலின் மேற்பகுதியான தளம்;     [பெரிய + தட்டு]

பெரியதனக்காரன்

பெரியதனக்காரன் periyadaṉakkāraṉ,    1.சிற்றூர்மணியக்காரன்(RT)

 villageheadman

   2.சாதித்தலைவன்(இ.வ.);; hereditary headman of a caste.

   3. சிற்றுரில் நில உடைமையாளர்; mirasdar, chief landholder in a village.

     [பெரியதனம்→ பெரியதனக்காரன்]

பெரியதனம்

பெரியதனம் periyadaṉam, பெ. (n.)

   1.பெருமை (வின்.);; dignity, honour.

   2. மேட்டிமை (வின்.);; pride, arrogance, haughtness.

   3. மேற்பார்வை (வின்);; superintendence.

   4.பார்க்க, பெரியதனக்காரன் (கொ.வ.);; See periyatanakkaran.

     [ பெரிய + தனம்]

தனம் = தன்மை

பெரியதம்பிரான்

பெரியதம்பிரான் periyadambirāṉ, பெ, (n.)

   1. தம்பிரானுள் தலைவர்(வின்);; chief among the non-brahmin saiva ascetics of a mutt.

   2. வண்ணார் முதலியோர் வணங்கும் சிவ திருமேனி; a form of siva, worshipped by washerman and others

   3. அங்காளம்மை(தஞ்.);; a form of goddess Durgā.

     [பெரிய + தம்பிரான்]

பெரியதலை

 பெரியதலை periyadalai, பெ.(n.)

   பெரியவன்(கொ.வ.);; a prominent person.

     [பெரிய + தலை]

பெரியதாக்கு-தல்

பெரியதாக்கு-தல் periyadākkudal, செ.குன்றாவி.(v.t.).

   1.வளர்த்தல்; to cause to grow.

   இளங்கன்றைப் பெரியதாக்கும் பொறுப்பு இவருடையதானது(உ.வ.);;   2. பலவாக்கு; mulfity.

   3. பருமனாக்கு; to cause to in create big.

க. பெர்சிசு, பெச்சிசு

     [பெரியது+ஆக்கு]

ஆகு. (தவி);-ஆக்கு(பி.வி);

பெரியதாயி

பெரியதாயி periyatāyi, பெ. (n.)

   ஒரு சிற்றுர்த் தேவதை (G.SM. D. i. i. 120);; a village goddess.

     [பெரியதாய் → பெரியதாயி]

பெரியதாய்

பெரியதாய் periyatāy, பெ. (n.)

   1. தாயின் மூத்த உடன் பிறந்தாள்; mother’s elder sister.

   2. தந்தையின் மூத்த உடன் பிறந்தான் மனைவி; wife of father’s elder brother.

மறுவ. பெரியம்மா

     [பெரிய + தாய்]

பெரியதிருநாள்

 பெரியதிருநாள் periyadirunāḷ, பெ. (n.)

   ஆண்டுதோறும் நடக்கும் பெரிய திருவிழா; the important annual festival in a temple.

     [பெரிய + திருநாள்]

பெரியதிருமடல்

 பெரியதிருமடல் periyadirumaḍal, பெ. (n).

   நாலாயிரத்தெய்வப்பனுவலில் திருமங்கையாழ்வார் இயற்றிய சிற்றிலக்கிய வகை; a poem in divviya-p-pirabandam by Tirumarnigai-y-alvar.

     [பெரிய + திருமடல்]

பெரியதிருமொழி

 பெரியதிருமொழி periyadirumoḻi, பெ. (n.)

   நாலாயிரத்தெய்வப்பனுவில் திருமங்கை யாழ்வார் இயற்றிய சிற்றிலக்கிய (பிரபந்த);வகை; a poem in Tivya-p-pirabandam, by tirumangai-y-alvar.

     [பெரிய + திருமொழி]

பெரியதிருவடி

பெரியதிருவடி periyadiruvaḍi, பெ. (n.)

   கருடாழ்வார்(ஈடு,1,4,6);; Garuda, dist. fr. ciriya-tiru-v-adi.

     [பெரிய + திருவடி]

பெரியதிருவந்தாதி

 பெரியதிருவந்தாதி periyadiruvandādi, பெ. (n.)

   நாலாயிரத் தெய்வப் பனுவில் வெண்பாக்காளால் ஈறுதொடங்கியாக நம்மாழ்வார் இயற்றிய சிற்றிலக்கியவகை; a poem in wenbå in Tivviya-p-pirabandam by Nammālvār.

     [பெரிய+திரு +sktanta + adi. த.அந்தாதி]

பெரியதிருவோலக்கம்

 பெரியதிருவோலக்கம் periyadiruvōlakkam, பெ. (n.)

   அடியாரது பெருங்குழு (வைண);; a large assemble of devotees, as in front of a deity.

     [பெரிய + திரு +ஒலக்கம்]

பெரியதெள்ளுக்காய்

பெரியதெள்ளுக்காய் periyadeḷḷukkāy, பெ.(n.)

   அவரைக்கொடி வகை(mm 238);; hegro bean COwitch.

     [பெரிய + தெள்ளுக்காய்]

பெரியதேவர்

பெரியதேவர் periyatēvar, பெ.(n.)

   1.ஆளும்அரசனுக்குமுன்ஆண்டஅரசன்(கல்);; thepredecessorofarulingking.

   2.நந்திதேவர்; thesacredbullNandi.

     [பெரிய + தேவர்]

பெரியநங்கை

 பெரியநங்கை periyanaṅgai, பெ. (n.)

பெரியா நங்கை (மூ.அ); பார்க்க; see periya nangai.

     [பெரிய + நங்கை]

பெரியநடை

 பெரியநடை periyanaḍai, பெ. (n.)

நல்லொழுக்கம்; noble course of conduct.

     [பெரிய + நடை]

பெரியநம்பி

பெரியநம்பி periyanambi, பெ. (n.)

   இராமாநு சரின் ஆசிரியர்களுள் ஒருவர் (அஷ்டப் ஊச 18);; vaiSnava acãrya. precepor of Rãmãnuja.

     [பெரிய + நம்பி]

பெரியநறுவிலி

பெரியநறுவிலி periyanaṟuvili, பெ.(n.)

   மரவகை(M.M.802);; large sebesten, m.tr., cordia Obliqua.

     [பெரிய + நறுவிலி]

பெரியநாள்

 பெரியநாள் periyanāḷ, பெ.(n.)

   திருநாள்; festivalday.

     [பெரிய + நாள்.]

பெரியநெகமம்

 பெரியநெகமம் periyanegamam, பெ.(n.)

   பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Pollachi Taluk.

     [பெரிய+(நியமம்);நிகமம்]

பெரியநோவு

பெரியநோவு periyanōvu, பெ.(n.)

   கால் நடைகட்கு வரும் வெக்கை நோய் (கால். வி.53);; rinderpest, cattleplague.

     [பெரிய + நோவு]

பெரியபடி

 பெரியபடி beriyabaḍi, பெ. (n.)

   நிலைத்த கொள்ளளவுள்ள படி; a standand measure of capaciy.

     [பெரிய + படி]

பெரியபுனுகுப் பூனை

 பெரியபுனுகுப் பூனை beriyabuṉugubbūṉai, பெ. (n.)

   புனுகுப் பூனை வகை; large civet cat, viverra zebettia.

     [பெரிய + புனுகுப் பூனை]

பெரியபுலு

 பெரியபுலு beriyabulu, பெ.(n.)

   நூறு(யாழ்ப்.);; cant for hundred, as a large ten.

     [பெரிய + பல்து (பத்து); → பலு → புலு]

பெரியபோது

 பெரியபோது periyapōtu, பெ. (n.)

   பொள்ளாச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Pollachi Taluk.

     [பெரிய+போது]

பெரியப்பச்சி

 பெரியப்பச்சி periyappacci, பெ. (n.)

பெரியப்பன் பார்க்க: see periyappan.

     [பெரிய + அப்பச்சி]

பெரியப்பன் → பெரியப்பச்சி

பெரியப்பன்

பெரியப்பன் periyappaṉ, பெ. (n.)

   தகப்பனுடன் பிறந்த மூத்தவன்; senio paternal uncle.

   2. தாயின் தமக்கை கணவன்; mother’s elder sister’s hustand.

     [பெரிய + அப்பன்]

பெரியப்பா

 பெரியப்பா periyappā, பெ. (n.)

பெரியப்பன் பார்க்க; see periyappan.

     [பெரியப்பன் – பெரியப்பா, (வி);]

பெரியமனம்

பெரியமனம் periyamaṉam, பெ.(n.)

   1. நன்மனம்; noble mind, magnanimity.

   2. தொடர்பு பற்றாதும் கைம்மாறு கருதாதும் எல்லா உயிர்கள் மேலும் இயல்பாகச் செல்லும் இரக்க உணர்வு_அருள் (இ.வ.);; favour.

     [பெரிய + மனம்]

பெரியமனுசி

 பெரியமனுசி periyamaṉusi, பெ.(n.)

பெரிய பெண் பார்க்க; see periya pen.

     [ பெரிய + skt. Manusi- மனுஷி → த. மனுசி]

பெரியமனுசியா-தல்

 பெரியமனுசியா-தல் periyamaṉusiyātal, செ.கு.வி.(n.)

பார்க்க,see periyalavalatal.

     [ பெரிய + skt – Manusi – மனுஷி → த.மனுசி+ஆ]

பெரியமரம்

 பெரியமரம் periyamaram, பெ. (n.)

   கடலோடிகளின் பெரிய கட்டுமரம்; a large Catamaran.

க. பேர்மா

     [பெரிய + மரம்]

பெரியமாவிலிங்கம்

 பெரியமாவிலிங்கம் periyamāviliṅgam, பெ. (n).

   மாவிலிங்க வகை; a species of garlic pear.

     [ பெரிய + மாவிலிங்கம் ]

பெரியமூளை

பெரியமூளை periyamūḷai, பெ.(n.)

   மூளையின்மேற்பாகம்(இங்.வை.27);; cerebrum,fore.brain.

   2.அறிவாற்றல்மிக்கவன்; a person of great intellect.

     [பெரிய + மூளை]

பெரியமேளம்

பெரியமேளம் periyamēḷam, பெ. (n.)

   1. நாகசுரம் முதலிய பெரிய இசைக் கருவிகள் கொண்டு வாசிக்கப்டும் மேளம்; music of big instruments, like clarionet, pipe drum and cymbals, dist cinna-mêlam

   2. பெரும் படியாய்ச் செய்வது; anything done on a large Scale.

   அவர் வேலைகளெல்லாம் பெரிய மேளம்;     [பெரிய + மேளம்]

பெரியம்மா

 பெரியம்மா periyammā, பெ. (n.)

பெரியம்மாள் பார்க்க; see periyammal.

     [பெரிய + அம்மா]

பெரியம்மான்

பெரியம்மான் periyammāṉ, பெ.(n.)

   1.தாயுடனர் பிறந்த மூத்தவன்; eldestofmother’sbrother’s.

   2.தந்தையினுடையதமக்கையின்கணவன்; father’s elder sister’s husband.

     [பெரிய + அம்மான்]

பெரியம்மான் பச்சரிசி

பெரியம்மான் பச்சரிசி periyammāṉpassarisi, பெ.(n.)

   செடிவகை(MM.27);; pillbearing shrge, small herb.

     [பெரியம்மான் + பச்சரிசி]

நிலத்தை யொட்டிப் படரும் அம்மான் பச்சரிசிச் செடிவகையுளொன்று.

பெரியம்மாள்

பெரியம்மாள் periyammāḷ, பெ.(n.)

   1.தகப்பனுடன் பிறந்த மூத்தோனின் மனைவி; seniorpaternaluncle’swife.

   2.தாயின்தமக்கை; mothers elder sister.

   3. வீட்டுத்தலைவி (இ.வ.);; the elder 4. lady or mistress of a house.

     [பெரிய + அம்மாள்]

பெரியம்மை

பெரியம்மை periyammai, பெ.(n.)

   1.பெரியம்மாள்(சொ.வ.);பார்க்க;seeperiyammal!

   2.அம்மைநோய்வகை(சொ.வ.);; small-pox, personifed as a deity.

   3. மூதேவி; goddens of misfortuse.

மட்டில் பெரியம்மை வாகனமே (தனிப்பா, ,i. 96, 17);.

     [பெரிய + அம்மை]

பெரியர்

பெரியர் periyar, பெ.(n.)

பெரியார்பார்க்க; see periyar.

     “சான்றோர்பெரியராக்கொள்வதுகோள்”(நாலடி.165);

     [ பெரியார் – பெரியர் ]

பெரியலவங்கப்பட்டை

 பெரியலவங்கப்பட்டை periyalavaṅgappaṭṭai, பெ.(n.)

   மரவகை; cassiacinnamon.

     [ பெரிய + இலவங்கப்பட்டை ]

பெரியவசூரி

பெரியவசூரி periyavacūri, பெ.(n.)

   1. பெரியம்மை பார்க்க: see periyammai.

     [ பெரிய + வைசூலி → வைசூரி → வசூரி ]

பெரியவடி

 பெரியவடி periyavaḍi, பெ.(n.)

   நீண்டவடி; a long foot.

க. பேரடி

     [ பெரிய + அடி ]

பெரியவன்

பெரியவன் periyavaṉ, பெ.(n.)

   1.உரிய அகவை அடைந்தவன்; grown-up man.

   2. மூத்தோன்; senior, elder,

     ‘தம்பியை நோக்கிப்பெரியவன்…. என்றான்’ (கம்பரா.சித்திர.57);

   3. பெரிய நிலையிலுள்ள வன்; bigwig.

     [பெரிய + (அ);வன்]

க. பெர்மக

பெரியவர்

பெரியவர் periyavar, பெ.(n.)

   1.உயர்ந்தோர்; thegreat.

பெரியவர்கேண்மைபிறைபோல.நந்தும்(நாலடி.125);

   2.முதியவர்; theaged.

   3.முன்னோர்; ancestors.

   எங்கள் பெரியவர் தேடிவைத்த சொத்து;     [ பெருமை → பெரியோர் → பெரியவர் ]

பெரியவளா-தல்

 பெரியவளா-தல் periyavaḷātal, செ.கு.வி.(vi)

   பூப்பெய்துதல்; toattainpubery,asagirl.

     [பெரியவள் + ஆ- பெரியவளாதல்]

பெரியவள்

பெரியவள் periyavaḷ, பெ.(n.)

   1.அகவைமுதிர்ந்தவள்; elderywoman

   2,பூப்பெய்தியவள்; a girl who has attained puberty.

     [பெரிய + (அ);வள்]

பெரியவாகை

 பெரியவாகை periyavākai, பெ. (n.)

காட்டுவாகை பார்க்க; see kattu-Vagai.

     [பெரிய + வாகை]

பெரியவாச்சான்பிள்ளை

பெரியவாச்சான்பிள்ளை periyavāccāṉpiḷḷai, பெ.(n.)

   கி.பி.13ஆம் நூற்றாண்டினரும் நாலாயிரத்தெய்வப்பனுவலுக்கு உரையும் மற்றும் பல நூல்களும் இயற்றியவருமான ஒருமாலிய ஆசிரியர்(உபதேசரத்.46);; a vaisnava ăcărya, author of many works, and commentator of Tivya-p-pirpandam.

     [பெரிய + ஆசான் + பிள்ளை]

பெரியவாத்தி

 பெரியவாத்தி periyavātti, பெ.(n.)

   சிவப்புமந்தாரை; purple variegated mountail ebony.

பெரியவாய்

பெரியவாய்1 periyavāy, பெ.(n.)

   அலப்வாயன்; one who talks loudly an boisterously.

மறுவ, அகலவாய்

     [பெரிய + வாய்]

 பெரியவாய்2 periyavāy, பெ.(n.)

   மரவகை; halfspur,flowerednutmeg.

     [பெரிய + வாய்]

பெரியவாள்

 பெரியவாள் periyavāḷ, பெ.(n.)

   ஈர்வாள்; pit Saw.

     [பெரிய + வாள்]

பெரியவீட்டுக்காரன்

பெரியவீட்டுக்காரன் periyavīṭṭukkāraṉ, பெ. (n.)

   1. செல்வமுடையவன் ; big or wealth man.

   2. பறையன்; a man of pariya caste.

     [பெரிய + வீட்டுக்காரன்]

பெரியவுடையநாயனார்

 பெரியவுடையநாயனார் periyavuḍaiyanāyaṉār, பெ. (n.)

   தஞ்சைக் கோயில் இறைவன்; god brhadisvara of the Tanjore.

     [பெரிய + உடைய நாயனார்]

பெரியவுடையார்

பெரியவுடையார் periyavuḍaiyār, பெ. (n.)

   சடாயு (திவ். இயற். திருவிருத். 18 வயா);; jadayu..

     [பெரிய + உடையார்]

பெரியவெண்ணம்

பெரியவெண்ணம் periyaveṇṇam, பெ. (n.)

   1. உயர்ந்த சிந்தை; nobleaspiration, great conception.

   2. வீண் பெருமை; high conceit, assumption.

     [பெரிய + எண்ணம்]

பெரியாணங்கை கொண்டாட்டம்

 பெரியாணங்கை கொண்டாட்டம் periyāṇaṅgaigoṇṭāṭṭam, பெ.(n.)

பெரியாநங்கைபார்க்க: see periya nangai.

     [பெரியாள் + நங்கை]

பெரியாத்தாள்

கொண்டாட்டம்

பெ. (n.);

பெரியம்மாள் பார்க்க;see periyammal.

     [பெரிய + ஆத்தாள்]

ஆத்தாள் = தாய்

பெரியாண்டவர் கொண்டாட்டம்

 பெரியாண்டவர் கொண்டாட்டம் periyāṇṭavarkoṇṭāṭṭam, பெ.(n.)

   ஒருதெய்வம்; adeity.

     [பெரிய+ஆண்டவர்]

பெரியாத்தை கொண்டாட்டம்

 பெரியாத்தை கொண்டாட்டம் periyāttaigoṇṭāṭṭam, பெ. (n.)

பெரியம்மாள் பார்க்க;see periyammal.

     [பெரியாத்தாள் – பெரியாத்தை]

பெரியாநங்கை

பெரியாநங்கை periyānaṅgai, பெ.(n.)

   செடிவகை(பதார்த்த.544);; largemilkwort.

     [பெரிய + நங்கை]

பெரியாம்பல்

 பெரியாம்பல் periyāmbal, பெ.(n.)

   அல்லி; Water lilly.

     [பெரிய + ஆம்பல்]

பெரியாயி

 பெரியாயி periyāyi, பெ.(n.)

பெரியம்மாள்பார்க்க;see periyaie.

     [பெரிய + ஆய் → ஆயி]

பெரியாய்ச்சி

 பெரியாய்ச்சி periyāycci, பெ.(n.)

பெரியம்மாள் பார்க்க;seeperiyammāl.

     [பெரிய + ஆய் → ஆய் = தாய் ஆய்ச்சி]

பெரியார்

பெரியார்1 periyār, பெ.(n.)

   1.மூத்தோர்; the aged.

   2. சிறுந்தோர்; the great.

     “பெரியார் பெருமை சிறுதகைமை” (நாலடி. 170);

   3. அறிவர்; Saints. sags.

பெரியாரும் பணித்தார் (குறள், 381 பரி. அவ);

   4. அரசர்; kings.

     “பெரியார் மனையகத்தும்.வணங்கார் குரவரையுங் கண்டால்” (ஆசாரக். 73);.

க. பிரியர் : பட கிரிய

     [பெருமை → பெரியார்]

 பெரியார்2 periyār, பெ. (n.)

   திராவிட கழகத்தின் தனிப்பெருந்தலைவர். தன்மான இயக்க நிறுவனர் சமய மூடநம்பிக்கைகளைச் சாடிய பகுத்தறிவுச் சிந்தனையாளர்; the great leader of Dravidar kazhagam and founder of self-respect one who regects common ideas about religion.

     [பெருமை→ பெரியார்]

     [P]

பெரியாழ்வார்

பெரியாழ்வார் periyāḻvār, பெ. (n.).

   ஆழ்வார் பதின்மருள் ஒருவர்; a vairdava saint and hymnist, one of ten älvār.

பட்டடர்பிரான் பெற்றான் பெரியாழ்வா ரென்னும் பெயர் உப தேசரத், 18)

     [பெரிய + ஆழ்வார்]

பெரியோன்

பெரியோன் periyōṉ, பெ. (n.)

   உயர்ந்தோன்; great man.

கருணையினாற் பெரியோ னொருவன் (திருவாச. 44, 2);

   2. கடவுள்; go. as the great.

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” (சிலப். 5, 169);

     [பெரியன் – பெரியோன்]

பெரியோர்

பெரியோர் periyōr, பெ.(n.)

பெரியார் பார்க்க; see periya.

     “பெரியோர்கண்டுகைவிட்டமயல்(நாலடி.43);திவா.);

     [பெரியார்→ பெரியோர்]

பெரியோர்பெருமான்

பெரியோர்பெருமான் periyōrperumāṉ, பெ.(n.)

   நான்முகன்; brahmā, as lord of sages.

   மேலைப் பெரியோர் பெருமான் படைத்தான்” (சீவக. 2066);;     [பெரியோர் + பெருமான்]

பெரு-த்தல்

பெரு-த்தல் peruttal, செ.குவி (v.i)

   1. பருத்தல்; to grow thick, large, stout.

   2. மிகுதல்; to become numerous.

     “கரடியாதி பெருத்த ” (விநாயகபு.);

ம. பெருகுக தெ. பெருகு.

     [பல் → பரு → பெரு]

பெருக

 பெருக peruga, வி.எ.(adv)

   நிரம்ப; abundantly, prosperously.

     ‘பெருக வாழ்’,

     [பெருகு – பெருக]

     ‘அ’ வி. எ. ஈறு

பெருகல்

 பெருகல் perugal, பெ.(n.)

   மிகுதி: (பிங்.); ; abundance.

     [பெருகு + அல்]

பெருகளர்வா

 பெருகளர்வா perugaḷarvā, பெ.(n.)

   மரவகை; large tooth brushtree.

     [பெருகு + அளர்வா ]

பெருகளற்று வட்டம்

 பெருகளற்று வட்டம் perugaḷaṟṟuvaṭṭam, பெ. (n.)

பெருங்களிற்று வட்டம் (பிங்.ms); பார்க்க;see perungalrru-vattam.

     [பெரு + களிற்று + வட்டம்]

பெருகியன் மருதம்

பெருகியன் மருதம் perugiyaṉmarudam, பெ. (n.)

   பண் வகை (சிலப், 8,39); ; a primary melody-type.

     [பெருகியல் + மருதம்]

பெருகியல்

பெருகியல் perugiyal, பெ. (n.)

   சாதிப்பெரும் பண் நான்கனுள் ஒன்று(கந்தபு. சூரனர. 23);; a class of primary melody, types, one of four §âdi-p-perum-pan. (mus.);

     [பெருகு + இயல்.]

பெருகிலை

 பெருகிலை perugilai, பெரு.(h)

   வெள்ளைக் கண்ணி(L);; Pink, tinted heart leaved glory tree.

பெருகு-தல்

பெருகு-தல் perugudal, செ. கு. வி. (v.i)

   1. அளவு மிகுதல்; to increase in numbers, multiply spread to abound.

   2. நிறைதல்; (சூடா.);; to become full to be perfected.

   3. நீர் மிகுந்தெழுதல்,

 to rise, swell, to over flow as water.

பெருகு மதவேழம் (திவ். இயற். 2,75);

   4. மேம்படுதல்; to be increased, augmented or enlarged, to grow great, prosper.

     “பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்ற லினிது குறள். 811)

   5. முதிர்தல்; to come to maturity, as embryo.

     “பெருகுசூலிளம்பிடிக்கு” (கம்பரா. சித்திர, 10);

   6. வளர்தல்; to grow.

தளிபெருகுந் தண்சினைய (பரிபா. 3.91);.

   7. ஆக்கந்தருதல் (வின்.);; to bring prosperity.

   8. தாலி அற்று வீழ்தல்(கொ.வ.);; to snap, as the thread of the marriage badge, used euphemistically.

   9. கேடுறுதல், (தொல், சொல். 17 உரை); (திருக்கோ. 218. உரை);:

 to be injured, ruined, used euphemistically.

   10. விளக்கணைதல்;(நேமி.சொல்..10. உரை);; to be put out or extinguished, used euphemistically.

க. பெர்சு

     [பல் – பரு – பெரு – பெருகு.]

பெருகு’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பெருகுசாதி

பெருகுசாதி perugucāti, பெ. (n.)

   பண்ணியற்றிற வகைகளுள் ஒன்று:(mus); (சிலப். 13, 110-12, உரை);; a sub-variety of paņņiyarriram.

     [ பெருகு + சாதி ]

பெருக்க

 பெருக்க perukka, வி.எ.(adv).

   மிகுதியாய்; greaty, intensely.

ஏன் நீ பேராசை கொண்டு பெருக்கத் தவிக்கிறாய் (இட.வ);.

பெரு – பெருக்க

     ‘அ’ வி. எ. ஈறு.

பெருக்கன்

 பெருக்கன் perukkaṉ, பெ. (n.)

   பரும்படியானது (வின்);; that which is coarse.

     [பெருக்கு → பெருக்கன்]

பெருக்கமரம்

 பெருக்கமரம் perukkamaram, பெ. (n.)

பப்பபரப்புளி (L.);பார்க்க;see papparappu,

     [பெருக்கம் + மரம்]

பெருக்கம்

பெருக்கம் perukkam, பெ. (n.)

   1. வளர்ச்சி; increase, augmentation.

   2. மிகுதி; multipliciy, plentiulness, abundancea.

     “உண்மைப் பெருக்கமாந் திறமை.” (திருவாச. 42, 7);;

   3.செல்வம்; prosperty opulenec, wealth.

பெருக்கம் பெருமித “நீர்த்து” (குறள், 431);.

   4. வெள்ளம்; food, deluge.

     “புதுப்பெருக்கம் போல” (நாலடி. 354);

   5. நிறைவு; fulness, perfection.

     “பெருக்கத்து மதிதழுவி” (விநாயகபு);

   6. நீடிப்பு; long continuance, as of the tāls’ worn by a married woman.

அவள் தாலிப் பெருக்கமா யிருக்கிறாள்.

     [பெரு → பெருகு → பெருக்கம்]

பெருக்கம் பண்ணுதல்

 பெருக்கம் பண்ணுதல் perukkambaṇṇudal, செ. குன்றா.வி. (v.t)

   களத்துப் பாவிய நெல்லைக் கையாற் கூட்டுதல்(யாழ்ப்);; to glean grains scattered on the threshing – floor.

     [பெருக்கம் + பண்ணு]

பெருக்கற்கணக்கு

 பெருக்கற்கணக்கு perukkaṟkaṇakku, பெ. (n.)

பெருக்கல் பார்க்க; see parukkal (arith.);

     [பெருக்கல் + கணக்கு]

பெருக்கலங்காரம்

 பெருக்கலங்காரம் perukkalaṅgāram, பெ. (n.)

வியப்பணி (அதிசய வணி);

 hyperbole

     [பெருக்கல் + அலங்காரம்]

பெருக்கல்

பெருக்கல் perukkal, பெ. (n).

   1. குப்பை கூட்டுகை; sweeping,

   2. ஒர் எண்ணை மற்றோர் எண்ணாற் சுட்டிய மடங்கு அதிகப்படுத்துகை; multiplication.

   3. மேம் படுத்துகை; improving, making prosperous

     “பின்யானிவனைப் பெருக்கலு முற்றனென்”

     [பெருக்கு + அல்]

     ‘அல் தொ. பெ. ஈறு)

பெருக்கல் வாய்பாடு

 பெருக்கல் வாய்பாடு perukkalvāypāṭu, பெ. (n.)

   எண்கனைப் பெருக்குவதாலுண்டாம் தொகையைக் காட்டும் வாய்பாடு (கணக்);; multiplication table.

இரண்டாம் வகுப்பில் பெருக்கல் வாய்பாடு கற்பிக்கப்படுகிறது.

     [பெருக்கல் + வாய்பாடு]

பெருக்காச்சவட்டு

பெருக்காச்சவட்டு perukkāccavaṭṭu, பெ.(n.)

   கவனமின்மை; indifference

   2. வெறுப்பு; dislike.

     [பெருக்கு + ஆ + சவட்டு]

பெருக்காறு

பெருக்காறு perukkāṟu, பெ.(n.)

   பெருகியோடும் ஆறு; river in floods.

செல்வமோ பெருக்காறு போலாம். (குமரே. ச. 67);

     [பெருக்கு + ஆறு]

பெருக்காலட்டை

 பெருக்காலட்டை perukkālaṭṭai, பெ.(n.)

   அட்டைவகை(இ.வ.);; a kind of leech.

     [பெரு(மை); + கால் + அட்டை]

பெருக்காளர்

பெருக்காளர் perukkāḷar, பெ.(n.)

   1.சிறப்புடையோர்; grandees, noblemen.

   2. கடை நிலையர் (சூத்திரர்);;     [பெருக்கு + ஆள் + அர்]

பெருக்கி

 பெருக்கி perukki, பெ.(n.)

   வித்தமிழ்து(விந்து);; semen virile.

     [பெருக்கு → பெருக்கி]

     ‘இ வினைமுதல்குறித்த ஈறு.

பெருக்கிவிடு-தல்”,
பெருக்கு

பெருக்கு2 perukku, பெ. (n.)

   1. வெள்ளம்; flood, inundation.

     “ஆற்றுப்பெருக்கற்று” (நல்வழி. 9);

   2. கடல் நீரேற்றம்; ebb of the tide.

   3. குருதியோட்டத்தின் மிகுதி; height of the circulation of the blood which is supposed to ebb and flodaily like the tide.

   4. மிகுதி (வின்);; influx, like the wealth.

   5. பெருக்கற்கணக்கு (யாழ். அக.); பார்க்க; see perukkarkepakku.

   6. பெருக்குத் தொகை பார்க்க;see perukku-t-fogai.

   7. பப்பரப்புளி (மலை); பார்க்க;see papparapufi, baobab.

     [பெருகு + பெருக்கு]

பெருக்கு வேளை

பெருக்கு வேளை perukkuvēḷai, பெ.(n.)

   1. கடலின் நீரேற்றக் காலம்; time of the flow of tide.

   2. உடலில் குருதியோட்டம் மிகுந்த காலம்; time of the day when the circulatior of the blood is at its height.

   3. உச்சிப்போது (யாழ். அக.);; midday.

     [பெருக்கு + வேளை]

பெருகு = விரைவு, பெருகிய நிலை, உயர்

நிலை.

பெருக்கு-தல்

பெருக்கு-தல் perukkudal, செ.குன்றாவி.(Vt.)

   1.விரியச்செய்தல்; to cause to increase or abound to make greater.

     “வாரி பெருக்கி” (குறள். 512);,

   2. நீர் நிரப்புதல்; to fill, to cause to swell and overflow.

   வாய்க்காலால் எரியைப் பெருக்க வேண்டும். (உ. வ);;   3. மோர் முதலியற்றை நீர் கலந்து பெருகச் செய்தல்; to dilute with water, as buttermilk.

     “நீர் சுருக்கி மோர் பெருக்கி” (பதார்த்த 1498);

   4. குப்பை கூட்டுதல்; to sweep.

   5. ஓர் எண்ணை மற்றோர் எண்ணாற் கூட்டிய மடங்கு அதிகப்படுத்துதல் (கணக்);; to mulitply.

தெ. பெருக; க. பெர்சிசு; ம. பெருக்குக.

     [பல் → பரு – பெரு → பெருகு → பெருக்கு]

பெருக்கு (பி. வி);.

பெருக்குக் கணக்கு

 பெருக்குக் கணக்கு perukkukkaṇakku, பெ. (n.)

பெருக்கற்கணக்கு (யாழ். அக.); பார்க்க;see perukkar-kankku.

     [பெருக்கு + கணக்கு]

பெருக்குத் தொகை

 பெருக்குத் தொகை perugguttogai, பெ. (n.)

   இரண்டு எண்களைப் பெருக்கியதாற் கூடிய தொகை(கணக்);; product.

     [பெருக்கு + தொகை]

பெருக்குமாறு

 பெருக்குமாறு perukkumāṟu, பெ.(n.)

   விளக்குமாறு(இ.வ.);; broom.

     [பெருக்கு + மிலாறு → மாறு]

பெருக்குமெண்

 பெருக்குமெண் perukkumeṇ, பெ.(n.)

   மற்றொன்றைப் பெருக்கு தற்கு உரிய எண் (கணக்);; multiplier.

     [பெருக்கு(ம்); + எண்]

பெருக்குரல்

 பெருக்குரல் perukkural, பெ. (n.)

   பாடுகையில் தோன்றும் வெடித்த குரல்; cracked voice (mus.);.

     [பெரு(மை); + குரல்]

பெருக்கெடு-த்தல்

 பெருக்கெடு-த்தல் perukkeḍuttal, செ. கு. வி. (v.i).

   வெள்ளம் அதிகமாதல்; to flood, as a river, to ebb, a tide.

     [பெருக்கு + எடு.]

பெருக்கை

 பெருக்கை perukkai, பெ.(n.)

   துடைப்பம்; broom.

மறுவவாரியல், விளக்குமாறு, துடைப்பம், துடைப்பக் கட்டை. க.பொரக்கெ. தெ.பொரக்க

     [பெருக்கு – பெருக்கை]

     [P]

பெருங்கடப்பு

 பெருங்கடப்பு peruṅgaḍappu, பெ.(n.)

   கடப்பநெல்வகை(A);; akindofpaddy.

     [பெரும் + கடப்பு]

பெருங்கடமை

 பெருங்கடமை peruṅgaḍamai, பெ. (n.)

   பெரும்பொறுப்பு; duty.

     [பெரும் + கடமை]

பெருங்கடி

 பெருங்கடி peruṅgaḍi, பெ.(n.)

   படைநோய்வகை(யாழ்.அக.);; Singworm.

     [பெரும் + கடி]

பெருங்கடிந்துரை

 பெருங்கடிந்துரை peruṅgaḍindurai, பெ. (n.)

   பெருங்கண்டனம்; reproachful language.

     [பெரும் + கடிந்துரை]

பெருங்கடுகு

 பெருங்கடுகு peruṅgaḍugu, பெ.(n.)

   கடுகுவகை(இ.வ.);; a kind of mustard.

     [பெரும் + கடுகு]

பெருங்கடை

 பெருங்கடை peruṅgaḍai, பெ.(n.)

   பெரியகடைவீதி; big bazaar street.

     [பெரும் + கடை]

பெருங்கட்டி

 பெருங்கட்டி peruṅgaṭṭi, பெ.(n.)

   பிளவை; abscess.

     [ பெரும் + கட்டி ]

பெருங்கட்டு

 பெருங்கட்டு peruṅgaṭṭu, பெ.(n.)

   பெருங்சரக்குமூட்டை; largebundle.

     [ பெரும் + கட்டு ]

பெருங்கட்டுக்கொடி

பெருங்கட்டுக்கொடி peruṅgaḍḍukkoḍi, பெ. (n.)

   பாலுள்ள கொடிவகை (பதார்த்த 325);; a milcy Creeper.

     [பெரும் + காட்டுக்கொடி]

பெருங்கணக்கு

பெருங்கணக்கு peruṅgaṇakku, பெ.(n.)

   1.பெருந்தொகை; large amount.

   2. பெரும் படியானது; that which is on a large scale.

   3. இறுமாப்பு; arrogance.

   அவர் பெருங் கணக்கிலே பேசுகிறார்;     [பெரும் + கணக்கு]

பெருங்கணி

பெருங்கணி peruṅgaṇi, பெ.(n.)

   தலைமைக் கணியன்; chief astrologer.

     “ஆசான் பெருங் கணி யறக்களத் தந்தணர்” (சிலப். 22, 8);

     [பெரிய + கணி]

பெருங்கண்டனம்

 பெருங்கண்டனம் peruṅgaṇṭaṉam, பெ. (n.)

பெருங்கடிந்துரை பார்க்க; see Perunkatinturai.

     [பெரும் + கண்டனம்]

பெருங்கண்ணாடி விரியன்

 பெருங்கண்ணாடி விரியன் peruṅgaṇṇāṭiviriyaṉ, பெ. (n.)

   பாம்புவகை;(MM);; large glass viper.

     [ பெரும் + கண்ணாடி + விரியன்]

     [P]

பெருங்கண்ணி

 பெருங்கண்ணி peruṅgaṇṇi, பெ. (n.)

   பொறிவலை; toils.

     [பெரும் + கண்ணி]

பெருங்கதவனார்

 பெருங்கதவனார் peruṅgadavaṉār, பெ.(n.)

   கடைக்கழகப் புலவர்; poet of sangam age.

     [பெரும்+கதவன்+ஆர்]

பெருங்கதை

பெருங்கதை peruṅgadai, பெ (n.)

   1. நீண்டகதை; Very long story.

   2. மிகவும் அறிந்த செய்தி(வின்);; general report thing well known.

   3. பிள்ளையார் கதைப்படலத்தில் இறுதிப்படிப்பு (யாழ்ப். );; last reading of Pillaiyārkadai, in a temple.

   4. உதயணன் வரலாறு பற்றியதும் பிருகத்து கதையைத் தழுவிய மைந்ததும் கொங்கு வேளிராற் பாடப் பெற்றதுமான தமிழிலக்கியம்; a Tamil poem by Kongu-Vél containing the story of Udayanan being an adoption of Brhatkata

     [ பெரும் + கதை ]

பெருங்கத்தரிசால்

 பெருங்கத்தரிசால் peruṅgattaricāl, பெ. (n.)

   கிளை விளக்குத்தண்டு (புதுவை);; candelanra.

பெருங்கமுக்கம்

 பெருங்கமுக்கம் peruṅgamukkam, பெ.(n.)

பெருமந்தணம்பார்க்க;seepurumandanam.

     [ பெரும் + கமுக்கம் ]

பெருங்கம்பு

பெருங்கம்பு peruṅgambu, பெ.(n.)

   1. கம்புப்பயிர்வகை; large bulrush millet, pennistam.

     [ பெரும் + கம்பு ]

பெருங்கரனை

 பெருங்கரனை peruṅgaraṉai, பெ.(n.)

பெருங்கழலைப்பார்க்க;see peru-n-kalalai.

     [ பெரும் + கரணை ]

பெருங்கரப்பான்

பெருங்கரப்பான் peruṅgarappāṉ, பெ (n.)

   1. கரப்பான் வகை (தஞ்.சர.iii92);; a kind of eruption.

பெருங்கரம்

பெருங்கரம் peruṅgaram, பெ.(n.)

கோவேறுகழுதை

 mule

     “பெருங்கரத்துருவுபெற்றனன்”(சேதுபு.பாவநா.24);.

     [பெரும் + கரம் ]

பெருங்கறி

 பெருங்கறி peruṅgaṟi, பெ. (n.)

   பெருங், கூட்டத்திற்குப் படைக்கச் செய்யப்படும் கறிவகை: (இ.வ.);; curry specially prepared for supplying a large number of people.

     [ பெரும் + கறி ]

பெருங்கறையான்

 பெருங்கறையான் peruṅgaṟaiyāṉ, பெ. (n.)

தாய்க்கறையான் பார்க்க; see tay-kkaraiyān queen-ant found in every nest of termites.

மறுவ. சிதல்

     [ பெரும் + கறையான் கறை + ஆன் ]

பெருங்கற்றாழை

 பெருங்கற்றாழை peruṅgaṟṟāḻai, பெ. (n.)

   கற்றாழை வகை; a kind of aloe (நாஞ்);.

     [ பெரும் + கற்றாழை ]

     [P]

பெருங்கலகம்

 பெருங்கலகம் peruṅgalagam, பெ. (n.)

   பெரும்பூசல்; disorder dispute.

     [பெரும் + கலகம் ]

பெருங்கலக்கம்

 பெருங்கலக்கம் peruṅgalakkam, பெ.(n.)

   ഥனஉலைவு; lack Of peace.

     [ பெரும் + கலக்கம் ]

பெருங்கலக்குறுத்து-தல்

பெருங்கலக்குறுத்து-தல் peruṅgalakkuṟuddudal, செ.குன்றாவி(v.t.)

   பெரியகுழப்பமுண்டுபண்ணுதல்; to create a big commotion or uproar.

     ‘கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக்குறுத்தாங்கு (மணிமே.4.38);.

     [ பெரும் + கலக்குறுத்து ]

பெருங்கலம்

பெருங்கலம் peruṅgalam, பெ. (n.)

   ஆயிரம் நரம்புடைய பேரியாழ்; a large lute having, 1,000 strips.

ஓங்கிய பெருங்கலந் தருக்கிய வுதயணன் (பெருங். இலாவாண.1.74);.

     [ பெரும் + கலம் ]

     [P]

பெருங்கலித்தொகை

பெருங்கலித்தொகை peruṅgalittogai, பெ. (n.)

   இறந்துபட்ட இடைக்கழகத்து நூல்களுள் ஒன்று; a Tamil treatise of idalic-sangan not extant.

     “இருங்கலி கடிந்த பெருங் கலித் தொகையொடு” (சிலப். உரைப்பா. பக்.7அடிக்குறிப்பு);.

     [ பெரும் + கலித்தொகை ]

பெருங்கலையன்

 பெருங்கலையன் peruṅgalaiyaṉ, பெ. (n.)

   நெல்வகை (யாழ்.அக);; a kind paddy.

     [பெரும் + கலையன்]

பெருங்கல்வம்

 பெருங்கல்வம் peruṅgalvam, பெ. (n.)

   பெரிய உரல்: (குழியம்மி);; big mortar.

     [ பெரும் + கல்வம் ]

பெருங்களன்செய்-தல்

பெருங்களன்செய்-தல் peruṅgaḷaṉceytal, செ.குன்றாவி. (v.t.)

   தெய்வத்தன்மைக்குரிய இடமாக அணியம் செய்தல்; to cleanse ground and consecrate it.

     ‘உளம் பெருங்களன் செய்ததுமிலை’ (திருவாச.5.35);

     [ பெரும் + களன் + செய்]

பெருங்களா

 பெருங்களா peruṅgaḷā, பெ. (n.)

   மரவகை; large Bengal currant, str, carissa carandas.

     [ பெரும் + களா ]

பெருங்களிப்பு

 பெருங்களிப்பு peruṅgaḷippu, பெ. (n.)

   பெருமகிழ்ச்சி; great pleasure.

     [பெரும் + களிப்பு]

பெருங்களிற்றுவட்டம்

 பெருங்களிற்றுவட்டம் peruṅgaḷiṟṟuvaṭṭam, பெ. (n.)

   எழுநிரயத்தொன்று (பிங்);; a hell, one of elu-nirayam.

     [ பெருகளற்றுவட்டம்→ பெருங்களிற்று வட்டம். பெருகு + அளறு + வட்டம் = பெருகளற்றுவட்டம் ]

பெருங்கள்ளி

பெருங்கள்ளி peruṅgaḷḷi, பெ.(n.)

   1. சிறுமரவகை; white frangipani, s.tr plumeria alba.

   2. ஈழத்தலரி; pagoda tree.

     [பெரும் + கள்ளி]

பெருங்கழலை

 பெருங்கழலை peruṅgaḻlai, பெ.(n.)

   பெருங்கழலைக்கட்டி; bigwart.

     [பெரும் + கழலை]

பெருங்கவி

பெருங்கவி peruṅgavi, பெ. (n.)

   1. பாவல ; a kind of poetical comr

   அகலப் பாடவல்லவன் (யாப்.வி.பக்513);; a poet skill in composing Agalappa.

     [பெரும் + Skt kav. த. கவி]

பெருங்காக்கை பாடினியம்

 பெருங்காக்கை பாடினியம் peruṅgākkaipāṭiṉiyam, பெ. (n.)

   பெருங்காக்கை பாடினியார் இயற்றிய யாப்பிலக்கண நூல் (வின்.);; a treatise on prosody by peru-nkäkkai-p-pi-niyār, not extant.

     [ பெரும் + காக்கைபாடினியம் ]

பெருங்காசிக்கம்பு

பெருங்காசிக்கம்பு peruṅgācikkambu, பெ. (n.)

காசிக்கம்பு (GSm.D.I.1219); பார்க்க; See kāśi-k-kambu.

 a variety of kambu (g sm dii.219);.

     [ பெரும் + காசிக்கம்பு ]

பெருங்காஞ்சி

பெருங்காஞ்சி peruṅgāñji, பெ. (n.)

   1. ஒவ்வொருவரையும் கூற்றம் அணுகு மென்று சான்றோர் கூறுதலைப் பற்றிச் சொல்லும் புறத்துறைவகை (தொல்.பொ. 79, உரை.);;   2. வீர்ர் படைமுகத்துத் தம் ஆற்றல் தோற்று வித்தலைக்கூறும் புறத்துறைவகை (பு.வெ.4.6);;     [ பெரும் + காஞ்சி ]

பெருங்காஞ்சொறி

பெ. (n.);

காஞ்சொறி (பாதார்த்த:486); பார்க்க; See kânjori climbing nettle.

     [ பெரும் + காஞ்சொறி ]

பெருங்காடு

பெருங்காடு peruṅgāṭu, பெ. (n.)

   பெரிய புதர்க்காடு; extensive Jungle

   2.சுடுகாடு; burning-ground.

     ‘பெருங்காட்டுப் பண்ணிய……..ஈமம்’ (புறநா.246);

     [பெரும் + காடு]

பெருங்காடுதரிசு

 பெருங்காடுதரிசு peruṅgāṭudarisu, பெ. (n.)

பெருங்காற்றரிசு பார்க்க; see peru-n-karrarisu.

     [பெருங்காடு + தரிசு]

பெருங்காந்தாரி

 பெருங்காந்தாரி peruṅgāndāri, பெ. (n.)

   மிளகுவகை; a kind of pepper.

     [பெரும் + காந்தாரி]

பெருங்காப்பியம்

பெருங்காப்பியம் peruṅgāppiyam, பெ. (n.)

   96 சிற்றிலக்கியங்களுள், தன்னி கரில்லாத தலைவனைப் பற்றியதாய் நாற்பொருள் பயப்ப நாடுநகர் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடப்பெறும் தொடர்நிலைச் செய்யுள் வகை. (தண்டி.பொது,7); ; epic poem dealing with the story of a peerless hero, explaining the four purusārttam and describing the excellencess of the country, city, etc.,

     [பெரும் + skt kavya: காவ்யம்→ த. காவியம் ]

பெருங்காமணிவலை

 பெருங்காமணிவலை peruṅgāmaṇivalai, பெ.(n.)

   வலையின் அடிப்பகுதியில் பெரிய மணிகள் கட்டப்பட்ட வலை; bells fixed net.

     [பெரும்+காய்+மணி+வலை]

பெருங்காயம்

பெருங்காயம் peruṅgāyam, பெ. (n.)

   1. மரவகை; asatoelida.

   2. ஒருவகை மரப்பிசின் (பிங்); ; commercial resinous product of ferula.

பெருங்காயத்தினது குழம்பைப் பூசி (சீவக.788உரை);

   3. பெருஞ்சீரகம் பார்க்க; see peru-n-giragam.

     [பெரும் + காயம் ]

பெருங்காயா

பெருங்காயா peruṅgāyā, பெ. (n.)

   1. காயாவகை; common ovate-leaved tree bilberry, s.tr, Edeule memeeylon

   2. சிறுமரவகை; oblong cordate-leaved tree bilberry, str, memecylon malabaricum.

     [பெரும் + காயா ]

பெருங்காராமணி

 பெருங்காராமணி peruṅgārāmaṇi, பெ. (n.)

   காராமணிவகை (வின்);; a kind o gram.

     [ பெரும் + காராமணி ]

பெருங்காரை

பெருங்காரை peruṅgārai, பெ. (n.)

   1. ஒருவகைச் சிறுமரம்; grey emeticnus str, randia ulignosa.

   2. காரைமீன்வகை; large species of kārai fish.

     [பெரும் + காரை]

பெருங்கார்

 பெருங்கார் peruṅgār, பெ. (n.)

   நெல்வகை (A);; a kind of paddy.

     [பெரும் + கார் ]

பெருங்காற்பிடி-த்தல்

 பெருங்காற்பிடி-த்தல் peruṅgāṟpiḍittal, செ.குன்றாவி. (v.t)

   கால் திமிர்ப்பட்டுப் போதல்(நாஞ்.);; to have one’s feet benumbed.

     [பெருங்கால் + பிடி]

பெருங்காற்றரிசு

 பெருங்காற்றரிசு peruṅgāṟṟarisu, பெ. (n.)

   பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பயிரிடப்படாத நிலம் (w.G.);; land left waste for more than fifteen years.

     [பெரும் + கால் + u.tar. த. தரிசு]

பெருங்காற்று

 பெருங்காற்று peruṅgāṟṟu, பெ. (n.)

   புயற்காற்று; Storm, gale.

     [பெரும் + காற்று கால் – காற்று ]

பெருங்கால்

பெருங்கால் peruṅgāl, பெ.(n.)

   1. யானைக்கால்(வின்);; elephantiasis.

   2. பெரிய வாய்க்கால்; major channel.

     [பெரும் + கால்]

 பெருங்கால்2 peruṅgāl, பெ. (n.)

பெருங்காற்று பார்க்க; see peru-ñ-kārrt.

     ‘பெருங்காலெறிய (திருக்கருவை.பதிற்றுப். (வின்);

     [பெரும் + கால்]

பெருங்கால்மேடு

 பெருங்கால்மேடு peruṅgālmēṭu, பெ. (n.)

   வாலாசா வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Walajah Taluk.

     [பெரும்+கால்+மேடு]

பெருங்கிடை

பெருங்கிடை peruṅgiḍai, பெ, (n.)

   நெட்டிவகை; a large species of sola pith.

     [ பெரும் + கிடை ]

 பெருங்கிடை2 peruṅgiḍai, பெ. (n.)

   நோயால் நெடுங்காலம் படுக்கையிற் கிடக்கை; continued illness.

     [ பெரும் + கிட-கிடை ]

பெருங்கிரந்தி

பெருங்கிரந்தி peruṅgirandi, பெ. (n.)

   1. வயிற்றுநோய் வகை (வின்);; affection of the mesenteric gland mesenterit glands.

   2. பெருங்கிருமி (இ.வ.); பார்க்க; see peru-n-kirumi.

     [ பெரும் + skt granthi த. கிரந்தி ]

பெருங்கிராமம்

பெருங்கிராமம் peruṅgirāmam, பெ.(n.)

   ஐந்நூறு குடியுள்ள ஊர் (சூடா);; major village, having 500 families.

     [பெரும் + skt grāma கிராமம்]

பெருங்கிருமி

 பெருங்கிருமி peruṅgirumi, பெ. (n.)

   வயிற்றுப்புழுப்போன்றதோ ருயிரி ; a parastic mematoid-worm Ascaris lumbricoides.

     [பெரும் + skikm த. கிருமி]

பெருங்கில்லி

 பெருங்கில்லி peruṅgilli, பெ.(n.)

   பெருங்கிட்டிப்புள்; bigtipcat.

     [பெரும் + கில்லி]

கில்லி = கிட்டிப்புள்

பெருங்கிளர்ச்சி

 பெருங்கிளர்ச்சி peruṅgiḷarcci, பெ. (n.)

   பெருங்கொந்தளிப்பு; tumult.

     [பெரும் + கிளர்ச்சி]

பெருங்கிளிச்சல்

 பெருங்கிளிச்சல் peruṅgiḷiccal, பெ. (n.)

   நீலநிறமுள்ள கடல்மீன் வகை; a sea-fish, bluish, caesio chrysozona.

     [பெரும் + கிளிச்சல்]

பெருங்கிளுவை

 பெருங்கிளுவை peruṅgiḷuvai, பெ. (n.)

கிளுவை (வின்.); பார்க்க; see kiluvai hill |alsam tree.

     [பெரும் + கிளுவை]

பெருங்கிளை

 பெருங்கிளை peruṅgiḷai, பெ. (n.)

   பரந்த சுற்றத்தாருடைய குடும்பம்; wide circle of relations.

     [பெரும் + கிளை]

பெருங்கிளையார்

 பெருங்கிளையார் peruṅgiḷaiyār, பெ.(n.)

   பள்ளர் வகையினர் (திருச்சி.வழ.);; a subdivision of the pallar caste.

பெருங்கிழங்கு

 பெருங்கிழங்கு peruṅgiḻṅgu, பெ. (n.)

   பெருமருந்து(மலை); ; Indian birthwort.

     [பெரும் + கிழங்கு]

பெருங்கிழமை

பெருங்கிழமை peruṅgiḻmai, பெ. (n.)

   1. முழுவுரிமை (அக.நி);; entire or sole right. absolute title.

   2. மிகுநேயம் (அக.நி);; close friendship or intimacy.

     [பெரும் + கிழமை]

பெருங்கீரை

 பெருங்கீரை peruṅārai, பெ. (n.)

   கீரைவகை (வின்); ; a species of greens.

     [பெரும் + கீரை]

பெருங்கீற்று ரூபாய்

பெருங்கீற்று ரூபாய் peruṅāṟṟurūpāy, பெ. (n.)

பழைய காசுவகை (சரவண. பணவிடு.63);:

 an ancient coin.

     [பெரும் + கீற்று ரூபாய். E. Rupee த. ரூபாய்]

பெருங்கீழ்வட்டம்

 பெருங்கீழ்வட்டம் peruṅāḻvaṭṭam, பெ. (n.)

   ஏழுநிரயங் களுளொன்று; hell

 one of elu-naragam, q.v.

     [பெரும் + கீழ் + வட்டம்]

பெருங்குடல்

 பெருங்குடல் peruṅguḍal, பெ. (n.)

   குடற் பிரிவு. (M.L.);; large intestine, colon.

     [பெரும் + குடல்]

     [P]

பெருங்குடி

பெருங்குடி1 peruṅguḍi, பெ. (n.)

   நிலவுடைமையான்; land lord (colas, ii.389.);.

     [பெரும் + குடி]

 பெருங்குடி2 peruṅguḍi, பெ. (n.)

   1. உயர்குடி; noble tamily.

   2. பெருங்குடிவாணிகர் பார்க்க; see perungudivāņigar.

     “விளங்கு பெருங் மாசாத்துவாணிகன்’ (சிலப்.2057-8);

     [பெரும் + குடி]

பெருங்குடியர்

பெருங்குடியர் peruṅguḍiyar, பெ. (n.)

பெருங்குடி வாணிகர் (சீவக.1756.உரை.); பார்க்க;see peru-n-kudi vânigar.

     [பெருங்குடி→ பெருங்குடியார்]

பெருங்குடியாட்டம்

பெருங்குடியாட்டம் peruṅguḍiyāḍḍam, பெ. (n.)

   நாட்டாண்மை; village headsh.

     “நடுவில் பெருங்குடியாட்டமும் என்னென்பது தான்” (ஈடு,3,5,6);

     [பெருங்குடி + ஆட்டம்]

ஆட்டம் = ஒரு சொல்லாக்க ஈறு.

பெருங்குடிவாணிகர்

பெருங்குடிவாணிகர் peruṅguḍivāṇigar, பெ. (n.)

   வணிகருள் ஒரு பிரிவினர்; an ancient caste of merchants.

பெருங்குடி வாணிகன் பெருமடமகளே (சிலப்.276);

     [பெருங்குடி + வாணிகர்]

பெருங்குட்டம்

 பெருங்குட்டம் peruṅguṭṭam, பெ. (n.)

குட்டநோய் வகை; (இராசவைத்);

 leptosy.

     [பெரும் + குட்டம்]

பெருங்குன்றூர் கிழார்

 பெருங்குன்றூர் கிழார் peruṅguṉṟūrkiḻār, பெ. (n.)

   பதிற்றுப் பத்தில் ஒன்பதாம் பத்தைப் பாடிய புலவர்; the author of the ninth decade of patirru-p-pattu.

     [பெருங்குன்றூர் + கிழார்]

பெருங்குப்பை

 பெருங்குப்பை peruṅguppai, பெ. (n.)

பெரும்புழுதி பார்க்க; see perum puludi.

     [பெரும் + குப்பை]

பெருங்குமிழ்

பெருங்குமிழ் peruṅgumiḻ, பெ. (n.)

   மரவகை(பதார்த்த.215);; coomb teak.

     [பெரும் + குமிழ்]

பெருங்குயம்

பெருங்குயம் peruṅguyam, பெ. (n.)

   குயவர்க்கு அரசரளிக்கும் பட்டப்பெயர்; an ancient title, conferred on potters,

குலாலற்; கேற்பப் பெருங்குய மருளி (பெருங். வத்தவ.9,48);

     [பெரும் + குயம்]

பெருங்குரல்

 பெருங்குரல் peruṅgural, பெ. (n.)

   பேரொலி; great tone.

     [பெரும் + குரல்]

பெருங்குருகு

பெருங்குருகு peruṅgurugu, பெ. (n.)

   1. யானையுண்குரு (பிங்.);; a fabulous bird.

   2. தலைக்கழகத்து வழங்கிய ஓர் இசைத் தமிழ் நூல் (சிலப்.உரைப்பா);; a treatise on = I music of the talai-c-cangam, not now extant.

     [பெரும் + குருகு ]

பெருங்குருந்து

 பெருங்குருந்து peruṅgurundu, பெ. (n.)

காட்டெலுமிச்சை (ட); பார்க்க காட்டெலு மிச்சை; indian wild-line.

     [பெரும் + குருந்து]

பெருங்குரும்பை

பெருங்குரும்பை1 peruṅgurumbai, பெ. (n.)

   சிறுசெடிவகை; bowstring hemp, Seriess plant.

     [பெரும் + குரும்பை]

 பெருங்குரும்பை2 peruṅgurumbai, பெ. (n.)

   1. கோட்டம்; costum.

   2.பூலாங்கிழங்கு; long Zedoary.

பெருங்குறடு

 பெருங்குறடு peruṅguṟaḍu, பெ. (n.)

   விறுகு தலியன பிளப்பதற்காக அடியில் வைக்குந் தாருங்குகட்டை (பிங்); ; large block of wood, ed as a support in hewing wood etc.

     [பெரும் + குறடு]

பெருங்குறட்டை

பெருங்குறட்டை peruṅguṟaṭṭai, பெ.(n.)

   காக்கணங்கொவ்வை; mussel-shell :eper

   2. பெருமருந்து; indian thwort

     [பெரும் + குறட்டை]

 பெருங்குறட்டை2 peruṅguṟaṭṭai, பெ.(n.)

   தூக்கத்தில் விடும் உரத்த குறட்டை; noisy snoring.

     [பெரும் + குறட்டை]

பெருங்குறவை

பெருங்குறவை peruṅguṟavai, பெ. (n.)

   பசுமை நிறமுள்ளதும் 13 விரலம்வரை வளாவதும் நல்ல தண்ணீரில் வாழ்வதுமான மீன் வகை; murrerl a fresh-water fish qreenish, attaining 13 in. in length.

 ophiocepha lusgacha, 2. 8விரலம்வரை வளர்வதும் பசுமை நிறமுள்ளதும் நல்ல தண்ணீரில் வாழ்வதுமான மீன்வகை;

 a fresh water fish, greenish, attaining 8 in in lergth |iscognatlius lamta.

     [பெரும் + குறவை]

பெருங்குறி

பெருங்குறி peruṅguṟi, பெ. (n.)

பெரு குறிச்சபை பார்க்க; see peru-n-kuri-c-cavvai.(s.i.i.iv.32.);.

     [பெரும் + குறி]

பெருங்குறிச்சபை

 பெருங்குறிச்சபை beruṅguṟiccabai, பெ. (n.)

   ஊர்ப் பேரவை; the great assembly of a village (or); town.

     [பெருங்குறி + சபை]

பெருங்குறிஞ்சா

 பெருங்குறிஞ்சா peruṅguṟiñjā, பெ. (n.)

பெருங்குறிஞ்சி பார்க்க; see peru-n-kurinji.

     [பெரும் + குறிஞ்சா]

பெருங்குறிஞ்சி

பெருங்குறிஞ்சி peruṅguṟiñji, பெ. (n.)

   1. கொடிவகை; a species of scammony swallowwart.

   2. பூடுவகை (பிங்);; a specie of conehead. m.sh, strobilanthe. consangwineus typica.

   3. குறிஞ்சிப்பாட்டு; a poem.

     ‘கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியினும்’ (பரிபா.19.77.உரை.);

     [பெரும் + குறிஞ்சி]

பெருங்குறிமகாசபை

பெருங்குறிமகாசபை beruṅguṟimakācabai, பெ. (n.)

பெருங்குறியவை (i.m.p.ti.1123);பார்க்க; see peru-n-kuri-y-avai.

     [பெருங்குறி + மகாசபை]

த.மா→ skt.maha

பெருங்குறியவையே அதன் சிறப்புநோக்கி பெருங்குறி மகாசபை என வழங்கப் பெற்றுள்ளது. இதனைத் தமிழில் பெருங்குறிப் பேரவை என்று வழங்கலாம்.

பெருங்குறியவை

 பெருங்குறியவை peruṅguṟiyavai, பெ. (n.)

   ஊர்ப்பெருஞ்சபை; the great assembly of a village or town.

     [பெருங்குறி + அவை]

பெருங்குறைபாடு

 பெருங்குறைபாடு peruṅguṟaipāṭu, பெ. (n.)

   பெருந்தீங்கு; bigdraw back.

     [பெரும் + குறைபாடு]

பெருங்குற்றம்

 பெருங்குற்றம் peruṅguṟṟam, பெ. (n.)

   பெருந்தவறு; serious crime.

     [பெரும் + குற்றம்]

பெருங்குளவி

 பெருங்குளவி peruṅguḷavi, பெ. (n.)

   குளவிவகை யாழ்.அக); a kind of wasp.

     [பெருங்+ குளவி]

பெருங்குழப்பம்

 பெருங்குழப்பம் peruṅguḻppam, பெ. (n.)

   பெருங்குளறுபடி; great confusion.

     [பெரும் + குழப்பம்]

பெருங்குழுவைந்து

 பெருங்குழுவைந்து peruṅguḻuvaindu, பெ. (n.)

ஐம்பெருங்குழு திவா, பார்க்க; see m-perunkulu the five chef officers of king.

     [பெரும் + குழு+ஐந்து]

பெருங்குவியல்

 பெருங்குவியல் peruṅguviyal, பெ. (n.)

   குப்பைமேடு; large heap.

     [பெரும் + குவியல் → குவியல்]

பெருங்கூட்டணி

 பெருங்கூட்டணி peruṅāṭṭaṇi, பெ. (n.)

   பல அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கை; common all of some political party.

     [பெரும் + கூட்டணி]

பெருங்கூட்டம்

 பெருங்கூட்டம் peruṅāṭṭam, பெ. (n.)

   திரளான கூட்டம்; mass metting.

     [பெரும் + கூட்டம்]

பெருங்கூட்டாளி

 பெருங்கூட்டாளி peruṅāṭṭāḷi, பெ. (n.)

   சிறந்த நண்பன்; good friend.

     [பெரும் + கூட்டாளி]

பெருங்கெளசிகனார்.

 பெருங்கெளசிகனார். peruṅgeḷasigaṉār, பெ. (n.)

   பத்துப் பாட்டினுள் ஒன்றான மலை படுகடாமியற்றிய ஆசிரியர்; a poet, author of Malaipadu-kiadām, one of pattu-p-pâttu, q.v.

     [பெரும் + கெளசிகனார்]

பெருங்கை

பெருங்கை peruṅgai, பெ. (n.)

   1. பெரியகை பார்க்க;see periya-kai.

   2. யானை; elechant, as having a long trunk

     ‘பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்.76.6);

     [பெரும் + கை]

பெருங்கைக்காரன்

 பெருங்கைக்காரன் peruṅgaikkāraṉ, பெ.(n.)

   பெருஞ்செல்வம் படைத்தவன்; wealthily person

     [பெரும் + கைக்காரன்]

பெருங்கையால்

பெருங்கையால் peruṅgaiyāl, பெ. (n.)

   பகன்றை (சிலப்.13, 157.உரை);; a plant.

     [பெருங்கை + அல்]

பெருங்கொச்சை

 பெருங்கொச்சை peruṅgoccai, பெ. (n.)

   இழிஞன்; mean fellow

     [பெரும் + கொச்சை]

பெருங்கொடி

பெருங்கொடி peruṅgoḍi, பெ. (n.)

   1. பதாகை (பிங்);; large flag.

   2. பறக்கவிடும் பெரும்பட்டம்(பிங்.); ; large paper kite.

     [பெரும் + கொடி]

பெருங்கொடை

 பெருங்கொடை peruṅgoḍai, பெ. (n.)

   எல்லோர்க்கும் ஏராளமாகக் கொடுக்கை; endow with gift.

     [பெரும் + கொடை]

பெருங்கொண்டலாத்தி

 பெருங்கொண்டலாத்தி peruṅgoṇṭalātti, பெ. (n.)

   பறவைவகை,(F);; hoopoe, upupa epops.

     [பெரும் + கொண்டை, + உலாத்தி]

     [P]

பெருங்கொண்டையார்

 பெருங்கொண்டையார் peruṅgoṇṭaiyār, பெ. (n.)

   தென்னாட்டு மாலியப் (வைணவ); பார்ப்பனரில் ஒரு வகுப்பினர்; a sect of Vaisnava brahmins in the South, as from pēņukoņda.

     [பெரும் + கொண்டையார்]

பெருங்கொத்தரம்

 பெருங்கொத்தரம் peruṅgottaram, பெ. (n.)

   அரவகை; rough file, wood rasp.

     [பெரும் + கொத்து + அரம்]

பெருங்கொந்தளிப்பு

 பெருங்கொந்தளிப்பு peruṅgondaḷippu, பெ. (n.)

பெருங்கிளர்ச்சி பார்க்க; see peru-n-kilarcci.

     [பெரும் + கொந்தளிப்பு]

பெருங்கொன்றை

பெருங்கொன்றை peruṅgoṉṟai, பெ. (n.)

   கொன்றைவகை; a species of unarmed brasiletto.

   2. ஊதை(வாத); நாராயணம்; creamy peacock flower.

     [பெரும்+கொன்றை]

பெருங்கொம்மட்டி

 பெருங்கொம்மட்டி peruṅgommaṭṭi, பெ. (n.)

   கொம்மட்டிவகை (நாஞ்);; a kind of cucumber.

     [பெரும் + கொம்மட்டி]

பெருங்கொய்சகம்

 பெருங்கொய்சகம் peruṅgoycagam, பெ. (n.)

   பெருஞ்கொச்சகம் ; big pucker.

     [பெரும் + கொய்சகம்]

கொய்சகம் → கொச்சகம்

பெருங்கொள்ளை

 பெருங்கொள்ளை peruṅgoḷḷai, பெ.(n.)

பெருந்திருட்டு பார்க்க: see peruntittru.

     [பெரும் +கொள்ளை]

பெருங்கோடணை

 பெருங்கோடணை peruṅāṭaṇai, பெ. (n.)

   ஒருகட் பறைவகை; kettle-drum.

     [பெரும் + கோடணை]

த.கோடணை → skt ghõsaņā

பெருங்கோட்டான்

 பெருங்கோட்டான் peruṅāṭṭāṉ, பெ. (n.)

   ஆந்தைவகை (பிங்);; a kind of large owl.

     [பெரும் + கோட்டான் கோடு = மரக்கிளை கோடு – கோட்டான் = மரக்கொம்பில் இருப்பது]

     [P]

பெருங்கோநங்கை

பெருங்கோநங்கை peruṅānaṅgai, பெ. (n.)

பெருங்கோப் பெண்டு பார்க்க; see peru-n-ko-p-pendu.

பெருங்கோ நங்கை பெட்யவேறிய…..இளம்பிடி (பெருங். உஞ்சைக்.40.30);

     [பெருங்கோ + நங்கை]

பெருங்கோபம்

 பெருங்கோபம் peruṅāpam, பெ. (n.)

   கடுஞ்சினம்; violent anger.

     [பெரும் + கோபம்]

பெருங்கோப்பெண்டு

பெருங்கோப்பெண்டு peruṅāppeṇṭu, பெ. (n.)

   பட்டத்து அரசி; chief queen.

     ‘பெருங்கோப் பெண்டு மொருங்குடன் மாய்ந்தனள் (சிலப்.25,86);

     [பெருங்கோ + பெண்டு]

பெருங்கோரை

பெருங்கோரை peruṅārai, பெ. (n.)

   1. பூடுவகை (C.E.M.);; spikenard herb.

   2. பாய்க்கோரை வகை; a kind of Sedge used for matting.

     [பெரும் + கோரை.]

பெருங்கோள்

 பெருங்கோள் peruṅāḷ, பெ. (n.)

   பெரிய வான் கோள்; big planet.

     [பெரும் + கோள்]

பெருங்கோழியவரை

 பெருங்கோழியவரை peruṅāḻiyavarai, பெ. (n.)

   கொடிவகை (A);; a small climber along the banks of tidal creeks and rivers.

     [பெருங் + அவரை]

     [P]

பெருங்கோழை

 பெருங்கோழை peruṅāḻai, பெ. (n.)

   வீரமற்றவன் ; big – slobber.

     [பெரும் + கோழை]

பெருங்வர்ச்சி

 பெருங்வர்ச்சி peruṅvarcci, பெ.(n.)

   ஈர்ப்பாற்றல்; attraction.

     [பெரும் + கவர்ச்சி]

பெருச்சாளி

பெருச்சாளி peruccāḷi, பெ. (n.)

   பெருத்த எலி (பிங்.);; bandicoot bandicota mala barica, as a large rat.

இறைவன் பெருச்சாளியைக் கடவி (விநாயகபு:59,15);

ம. பெரிச்சாலி

     [பெருத்த + எலி ] பெருத்த எலி – பெருச்சாளி.]

     [P]

பெருஞ்சங்கு

 பெருஞ்சங்கு peruñjaṅgu, பெ. (n.)

   பெரியசங்கு; big conch.

     [பெரும் + சங்கு)

பெருஞ்சன்னல்

 பெருஞ்சன்னல் peruñjaṉṉal, பெ. (n.)

   பெரும்பலகணி; big-window.

     [பெரும் + சன்னல்]

பெருஞ்சரக்கு

பெருஞ்சரக்கு peruñjarakku, பெ.(n.)

   பேரளவாக விற்கப்படும் பருத்திவிதை பாக்குப்போன்ற பண்டம்(GTp.D.177.);; goods sold in large quantities, as cotton seeds. areCa-nutS. etC.

     [பெரும் + சரக்கு]

பெருஞ்சள்ளை

 பெருஞ்சள்ளை peruñjaḷḷai, பெ.(n.)

   பெருந்தொல்லை; nuisance.

     [பெரும் + சள்ளை]

பெருஞ்சவளம்

 பெருஞ்சவளம் peruñjavaḷam, பெ. (n.)

   குந்தப்படைவகை(பிங்.);; large-sized dart or lance, dist. fr. cirucavalam.

     [பெரும் + சவளம்]

பெருஞ்சாட்டை

 பெருஞ்சாட்டை peruñjāṭṭai, பெ. (n.)

   பெருங்கசை; big-whip.

     [பெரும் + சாட்டை]

பெருஞ்சாந்தி

பெருஞ்சாந்தி peruñjāndi, பெ. (n.)

   கோயிற் பெரிய திருவிழாவின் முடிவில் நடக்கும் பெரிய (அபிடேகம்); திருமுழுக்காட்டு; mahabhi sékam at the end of the chief festival in a temple.

கபாலிச்சரமமர்ந்தான் பெருஞ்சாந்தி காணாதே போதியோ?” (தேவா.1119.10);

     [பெரும் + சாந்தி]

 skt. Santi. த.சாந்தி

பெருஞ்சாமம்

 பெருஞ்சாமம் peruñjāmam, பெ. (n.)

   ஏழரை நாழிகை கொண்ட காலவளவை(வின்);; a period of three hours.

     [பெரும் + யாமம் → சாமம்]

பெருஞ்சாமரை

 பெருஞ்சாமரை peruñjāmarai, பெ.(n.)

   ஈயோட்டும் மயிர்க்குச்சம்; chowry.

     [பெரும் + சாமரை]

பெருஞ்சாய்

பெருஞ்சாய் peruñjāy, பெ. (n.)

   பேராற்றல்; great strength.

சாயாப் பெருஞ்சாய்கெட (கம்பரா.நாக21);

     [பெரும் + சாய்]

பெருஞ்சாலை

 பெருஞ்சாலை peruñjālai, பெ.(n.)

   பேரொழுங்கை (அகலச் சாலை);; broadway.

     [பெரும் + சாலை]

பெருஞ்சாவு

 பெருஞ்சாவு peruñjāvu, பெ. (n.)

   அகவையில் முதிர்ந்தோரது இறப்பு; death in old age.

     [பெரும் + சாவு சா-சாவு]

பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார் peruñjittiraṉār, பெ.(n.)

   1.கடைக்கழகப் புலவர்; poet of sangamage.

   2.தனித்தமிழ் வளர்த்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்; asavantandpuritan of chaste Tamil movement of 20th Century.

     [பெரும்+சித்திரன்+ஆர்]

     [P]

பெருஞ்சிந்தனை

 பெருஞ்சிந்தனை peruñjindaṉai, பெ. (n.)

   கடுஞ்சிந்தனை; exlogitation.

     [பெரும் + சிந்தனை ]

பெருஞ்சின்னி

பெருஞ்சின்னி peruñjiṉṉi, பெ. (n.)

   செடிவகை (பதார்த்த:535);; a species of birth-leaved acalypha.

     [பெரும் + சின்னி]

பெருஞ்சிரங்கு

 பெருஞ்சிரங்கு peruñjiraṅgu, பெ. (n.)

   சொறிவகை(ML);; scalries itch.

     [பெரும் + சிரங்கு ]

பெருஞ்சிறப்பு

பெருஞ்சிறப்பு peruñjiṟappu, பெ. (n.)

   1. பெரும் மதிப்புரவு; high honours.

   2. உயர்ந்த கொண்டாட்டநேரம்; grand festive occasion.

     [பெருமை + சிறப்பு ]

பெருஞ்சிவிங்கி

 பெருஞ்சிவிங்கி peruñjiviṅgi, பெ. (n.)

சிறுத்தை பார்க்க;see širuttai panthor.

     [பெரும் + சிவிங்கி ]

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம் peruñjīragam, பெ. (n.)

   1. சோம்பு; common anise.

   2. பெருஞ்சீரக செடிவகை(L);; chinese anise plant with aromatic Seeds.

     [பெரும் + சீரகம்]

உலகில் முதன்முதற் சிறந்த முறையிற் சமையல் தொடங்கியதும் அதற்குச் சீரகத்தைப் பயன்படுத்தியதும் தமிழகமே (வ.வர.155);

பெருஞ்சுவர்

பெருஞ்சுவர் peruñjuvar, பெ. (n.)

   நீளமான சுவர்; long wall.

   1. சீனநாட்டில் உள்ள பெருஞ்சுவர் உலகத்தின் நீளமான சுவராகும்.

     [பெரும் + சுவர்]

பெருஞ்சூட்டு

 பெருஞ்சூட்டு peruñjūṭṭu, பெ. (n.)

   தலையணிவகை(பிங்);; a kind of head ornament.

     [பெரும் + சூட்டு சூடு-சூட்டு]

பெருஞ்சூனியம்

 பெருஞ்சூனியம் peruñjūṉiyam, பெ. (n.)

   பெருவசியம்; pishogue.

     [பெரும் +SKt. Unya த. சூனியம் ]

பெருஞ்சூறாவளி

 பெருஞ்சூறாவளி peruñjūṟāvaḷi, பெ. (n.)

   பெருஞ்சுழல் காற்று; violent storm.

     [பெரும் + சூறாவளி]

பெருஞ்சூழ்ச்சி

 பெருஞ்சூழ்ச்சி peruñjūḻcci, பெ. (n.)

   பெரும் ஏமாற்றுவேலை; do fraud.

     [பெரும்+சூழ்ச்சி]

பெருஞ்செக்கு

பெருஞ்செக்கு peruñjekku, பெ. (n.)

   பெருஞ்செக்காலை; big oil-press.

     [பெரும் + செக்கு]

 பெருஞ்செக்கு peruñjekku, பெ. (n.)

   24வது விண்மீன்; the 24th nak-satra.

     [பெரும் + செக்கு]

பெருஞ்செங்கார்

 பெருஞ்செங்கார் peruñjeṅgār, பெ. (n.)

   நெல்வகை (A);; a kind of paddy.

     [பெரும் + செம்(மை); + கார்]

பெருஞ்செய்

பெருஞ்செய் peruñjey, பெ. (n.)

   மேம்பாடுள்ள செயல்; great dead.

     ‘பெருஞ்செய் யாடவர்’ (புறநா.199);

     [பெரும் + செய்]

பெருஞ்செய்யான்

பெருஞ்செய்யான் peruñjeyyāṉ, பெ. (n.)

   தேள்வகை (யாழ்.அக);; a kind of scorpion.

   2. பெரும்பூரான் (சங்.அக.); பார்க்க: see peru-m-purán.

     [பெரும் + செய்யான்]

பெருஞ்செய்யாளன்

பெருஞ்செய்யாளன் peruñjeyyāḷaṉ, பெ. (n.)

   பெரிய வீரச்செயலுள்ளவன்; a man of great deeds.

எஃகுளங்கிழிய. …… அருங்கட னிறுத்த பெருஞ்செய்யாளன்’ (புறநா.282);

     [பெருஞ்செய் + ஆளன்]

பெருஞ்செருப்படி

 பெருஞ்செருப்படி peruñjeruppaḍi, பெ. (n.)

   பூடுவகை (வின்);; a plant croton plicatum.

     [பெரும் + செருப்படை → செருப்படி]

பெருஞ்சேனை

 பெருஞ்சேனை peruñjēṉai, பெ. (n.)

   பெரும்படை; large army.

     [பெரும் + சொல்]

பெருஞ்சேரலிரும்பொறை

 பெருஞ்சேரலிரும்பொறை peruñjēralirumboṟai, பெ. (n.)

   பதிற்றுப் பத்தனுள் எட்டாம் பத்தினாற் புகழப்பட்ட சோன்; a céra king, the hero of the eighth decad of padisru-pattu.

     [பெருஞ்சேரல் + இரும்பொறை]

பெருஞ்சொறி

 பெருஞ்சொறி peruñjoṟi, பெ. (n.)

   தவளைச் சொறி; a kind of eruption.

     [பெரும் + சொறி]

பெருஞ்சொறிக்குட்டம்

 பெருஞ்சொறிக்குட்டம் peruñjoṟikkuṭṭam, பெ. (n.)

   கொடியகுட்டநோய்வகை ; a virulent form of leprosy.

     [பெருஞ்சொறி + குட்டம்]

பெருஞ்சொல்

 பெருஞ்சொல் peruñjol, பெ. (n.)

   பலரறிசொல் (திவா.);; word known to many.

     [பெரும் + சொல்]

பெருஞ்சோதனை

 பெருஞ்சோதனை peruñjōtaṉai, பெ. (n.)

   ஆராய்ந்து தேடுதல்; act of searching.

     [பெரும் + சோதனை]

பெருஞ்சோறு

பெருஞ்சோறு peruñjōṟu, பெ. (n.)

   1. அரசன்தன் படைத்தலைவர்க்கு அளிக்கும் பேருணவு; sumptuous feast given by a king to the generals of his army,

உதியஞ்; சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை (அகநா.233);

   2. 2ஆம் விண் மீன். (திவா);; the Second nakSatra.

     [பெரும் + சோறு]

பெருஞ்சோற்றுநிலை

பெருஞ்சோற்றுநிலை peruñjōṟṟunilai, பெ. (n.)

   போர்மேற்கொண்ட அரசன் படை யாளர்க்கு உண்டியளித்து முகமன் செய்தலைக்கூறும் புறத்துறை (purap);; theme of a king giving feast to his soldiers on the eve of battle.

பிண்டமேய பெருஞ்சோற்று நிலையும் (தொல்.பொ.63);

     [பெருஞ்சோற்று + நிலை]

பெருஞ்சோற்றுவஞ்சி

பெருஞ்சோற்றுவஞ்சி peruñjōṟṟuvañji, பெ. (n.)

பெருஞ்சோற்றுநிலை பார்க்க ;see peru-n-corru-nilai..

சோற்றுநிலை. பின்றாச் சிறப்பிற்பெருஞ்சோற்று வஞ்சியும் (சிலப். 25,144);

     [பெருஞ்சோற்று + வஞ்சி]

பெருஞ்சோழி

 பெருஞ்சோழி peruñjōḻi, பெ. (n.)

   வெள்ளைக்கடம்பு; bridal couch plant.

     [பெரும் + சோலி]

 பெருஞ்சோழி peruñjōḻi, பெ. (n.)

   பெரும்சிப்பி; bigcowry.

     [பெரும் + சோழி]

பெருநகரத்தார்

பெருநகரத்தார் perunagarattār, பெ. (n.)

   வணிகர் (I.M.P.Tj.142.);; merchants.

     [பெரு + நகரம் + ‘அத்து’சாரியை] ஆர்

பெருநகர்

 பெருநகர் perunagar, பெ. (n.)

   மக்கள் தொகை மிக்க தலைமை மாநகரம்; Metro politan city.

     [பெரும் + நகர்]

பெருநகை

பெருநகை perunagai, பெ. (n.)

   1. பெருஞ்சிரிப்பு (பிங்);; broad laugh laughter ridialous.

   2. பேரிகழ்ச்சி; being highly ridicuilous.

     ‘ஊரவர்க் கெல்லாம் பெருநகையாகி (கலித்.45);

     [பெரு + நகை]

பெருநடை

பெருநடை perunaḍai, பெ. (n.)

   1. விரைந்த செலவு; fast walk as of bullocks.

   2. புறக்கூத்துக்குரிய ஆடல்களுள் ஒன்று (சிலப்.316.உரை);; a mode of dancing.

   3.உயர்ந்தவொழுக்கும்(சங்.அக);; excellent conduct.

     [பெரு + நடை]

பெருநந்தியாவட்டம்

 பெருநந்தியாவட்டம் perunandiyāvaṭṭam, பெ. (n.)

பெரு நந்தியாவட்டை பார்க்க: see perunantiyāvattal.

     [பெரு(மை); + நந்தியாவட்டம்]

பெருநம்பி

பெருநம்பி perunambi, பெ. (n.)

   1. இளவரசற்க்குரிய பட்டப்பெயர்; title of a royal prince.

பெருநம்பியாக வென்றான்’ (சீவக.2913);

   2. அரசர்க்குரிய மதிப்புரவு (விபவமெல்லாம்); பெறும் அமைச்சர் பட்டம்; title of a minister to whom royal honours are shown.

பெருநம்பி குலச்சிறை (தேவா,737,4);

     [பெரு + நம்பி]

பெருநம்பிகள்

 பெருநம்பிகள் perunambigaḷ, பெ. (n.)

கடிகைமாக்கள் (பிங்); பார்க்க; Radigaimákkal. panegyrists.

     [பெரு + நம்பிகள்] ‘கள்’ (ப.பா.ஈறு);

பெருநரிவெங்காயம்

 பெருநரிவெங்காயம் perunariveṅgāyam, பெ. (n.)

   செடிவகை;(A);; poison lily, ssh crinum asiaticum. (a);.

     [பெரு + நரிவெங்காயம்]

பெருநறுவிலி

பெருநறுவிலி perunaṟuvili, பெ. (n.)

   1. மரவகை ; large Sebesten, m.tr, cordia oblifua pypica

   2. நறுவிலிவகை; a kind of felted leaved selerge sebesten, s.tr. cordia fulvasa

     [பெரு + நறுவிலி]

பெருநல்குரவு

 பெருநல்குரவு perunalkuravu, பெ. (n.)

பெருவறுமை பார்க்க;see peruvarumal.

     [பெரு + நல்குரவு]

நல்குரவு = வறுமை

பெருநாடி

 பெருநாடி perunāṭi, பெ. (n.)

மூல அடிப்படையான குருதிக்குழய், இரத்தக்குழாய் (ML);.

 aOrta.

     [பெரு + நாடி]

பெருநாட்டம்

 பெருநாட்டம் perunāṭṭam, பெ. (n.)

   பெருவிருப்பம்; aspiration.

     [பெரு + நாட்டம்]

பெருநாணல்

பெருநாணல் perunāṇal, பெ. (n.)

   நாணல் வகை (mm.509);; dog bamboo..i.sh.); phragmites rox burghi.

     [பெரு + நாணல்]

பெருநாத்திகர்

 பெருநாத்திகர் perunāttigar, பெ. (n.)

   பகுத்தறிவாளர் (இன்மைக்கொள்கையர்);; altheist.

     [பெரும் + நாத்திகர்]

பெருநான்கெல்லை

பெருநான்கெல்லை perunāṉkellai, பெ.(n.)

   1. சிற்றூர் அல்லது நிலத்தாக்கின் பேரெல்லை; bowndary, as of a village or block of land opp to ciru-nāṇgellai.

   2. எல்லை; boundary.

   இப்பெருநான் கெல்லைக்குட்பட்ட இவ்வரைமா நிலமும்’ (si.i.iii.45.);;     [பெரு + நான்கு + எல்லை]

பெருநாரை

பெருநாரை perunārai, பெ. (n.)

   1. நாரைவகை (பிங்);; cyrus crane, Grus antigone.

   2.தலைக்கழகத்து வழங்கிய இசைநூல்களுள் ஒன்று (சிலப்.உரைப்பா.); ஒன்று; a treatise on music, of the firs sangam, not now extant

     [பெரு + நாரை]

     [P]

பெருநாளிகம்

பெருநாளிகம் perunāḷigam, பெ. (n).

   நெருப்பை (அக்கினியை); வெளியிட்டழிக்கும் ஒருவகைத் தகரி (சுக்கிரநீதி,329);; destructive mechanisam, resembling a gun.

     [பெரு + நாளிகம்]

பெருநாளிருக்கை

பெருநாளிருக்கை perunāḷirukkai, பெ.(n.)

   அரசனது சிறப்பு நாளோலக்கம் (சிலப்.23:56);; great durbar of a king.

     ‘திருநிலை பெற்ற பெருநாளிருக்கை’

     [பெருநாள் + இருக்கை]

பெருநாள்

பெருநாள் perunāḷ, பெ.(n.)

   1. திருநாள்; festival, festive occasion.

ஒருபெரு நாளான்; மணவணி காண ( சிலப்.141,);

   2. 27ஆவது விண்மீன் (சூடா);; the 27° naksatra.

   3. ஒரு முகம்மதியப் பண்டிகை; day of breaking the fast and enjoyment of the feast of Idul Fitr.

   4. நெடுங்காலம்; long period of time.

   பெருநரை டெரிகின்றிலர். உனை (கம்பரா. இரணிய 106);;     [பெரு + நாள்]

பெருநாவல்

 பெருநாவல் perunāval, பெ. (n.)

நாவல்வகை;(மலை);

 East Indian rose-apple

     [பெரு + நாவல்]

பெருநிந்தை

 பெருநிந்தை perunindai, பெ. (n.)

   பெருமிழிவு; great insult.

     [பெரு + நிந்தை]

 skt nindú – நிந்தை)

பெருநிரவி

 பெருநிரவி peruniravi, பெ. (n.)

   கூட்டம் : (யாழ்.அக);; gatherng.

     [பெரு + நிரவி]

பெருநிலம்

பெருநிலம் perunilam, பெ.(n.)

   1. நிலவுலகம்; earth.

     ‘பெருநில முழுதாளும் பெருமகன்’ (சிலப்.1,31..);;

 highest heaven.

அருளொடு பெருநில மளிக்கும் (திவ்,பெரியதி.1.19);

     [பெரு + நிலம் நில் – நிலம்]

பெருநிலை

பெருநிலை perunilai, பெ.(n.)

   1. ஒருபக்கம் சார்தல் (பட்சபாதம்);; partiality.

   2 சான்று (சாட்சி);; testimony.

   3. விடாப்பிடி; perseverance.

     [பெரு + நிலை]

பெருநிலைநில் – தல் (பெருநிலைநிற்றல்)

பெருநிலைநில் – தல் (பெருநிலைநிற்றல்) perunilainiltalperunilainiṟṟal, செ.கு.வி(v.i.)

   உதவிசெய்தல்; to render assistance.

உன்கிருததிரிமத்துக்குப் பெருநிலை நிற்பார்க்கன்றோ தெரிவது’ (ஈடு.6.2.5.);

   2. சான்று சொல்லுதல்; to give testimony to accomplish,do.

     [பெரு + நிலை + நில்]

பெருநீர்

பெருநீர் perunīr, பெ. (n.)

   1. கடல்; ocean sea.

     ‘பெருநீர் போகுமிரியன் மாக்களொடு’ (சிலப்.6.112,);;

   2. பெருநீர் முறை பார்க்க;see peru-nir-mural.

     [பெருமை + நீர்]

பெருநீர்முறை

 பெருநீர்முறை perunīrmuṟai, பெ. (n.)

   மழைக்காலத்துப் பாய்ச்சல் முறையின்றித் தாராளமாக ஒடும் நீர்ப்பெருக்கு; water allowed to flow without any restraint or regulation during the rainy season (C.G);.

     [பெருநீர் + முறை]

பெருநூல்

 பெருநூல் perunūl, பெ.(n.)

   பெரிய நூல்; large book.

     [பெரும் + நூல்]

பெருநெஞ்சு

பெருநெஞ்சு peruneñju, பெ.(n.)

   1. செருக்கு (அகம்பாவம்);(வின்.);

 pride.

   2.மனவுறுதி (தைரியம்);; Courage.

     ‘அஞ்சாப் பெருநெஞ்சுள்ளவன்’

     [பெரு – மை + நெஞ்சு]

பெருநெருஞ்சி

 பெருநெருஞ்சி peruneruñji, பெ. (n.)

   ஒருவகைச்செடி; a stout-stemmed herb with spiny fruits and slimy leaves.

     [பெரு + நெருஞ்சி]

பெருநெறி

பெருநெறி peruneṟi, பெ.(n.)

   1. பெருவழி; royal road, trunk road.

   2. வீடுபேறு; the path of Salvation.

பேயனாகிலும் பெருநெறி காட்டாய் (திருவாச. 23,7.);

     [ பெருமை + நெறி ]

பெருநெல்

பெருநெல் perunel, பெ. (n.)

   1. மட்டநெல்; carse paddy.

   2. நெல்வகை(வின்);; a kind of paddy, longer in growing than other kinds.

     [பெரு + நெல் ]

பெருநையல்

பெருநையல் perunaiyal, பெ. (n.)

   1. பெருவியாதி நோய் பார்க்க; see peru-ncy.

   2. அம்மை (வைசூரி); (வின்); ; small pox.

     [பெரு + நையல்]

பெருநோக்காடு

 பெருநோக்காடு perunōkkāṭu, பெ. (n.)

பெரு நோய்'(வியாதி);(M.C);.பார்க்க; see peru-noy.

     [பெரு + நோக்காடு]

பெருநோன்பு

 பெருநோன்பு perunōṉpu, பெ. (n.)

   உண்ணாநிலை; abstinence from good.

     [பெரு + நோன்பு]

பெருநோய்

 பெருநோய் perunōy, பெ. (n.)

   குட்டநோய்; leprosy.

மறுவ, தொழுநோய்

     [பெரு + நோய்]

 பெருநோய் perunōy, பெ. (n.)

   மாட்டுநோய் வகை; rinder – pest.

     [பெரு + நோய்]

பெருந்தகரை

 பெருந்தகரை perundagarai, பெ. (n.)

   ஒருவகைச் சிறுமரம்(L);; west Indian bead tree Str., leUCaena glauCa.

     [பெரும் + தகரை]

பெருந்தகளி

 பெருந்தகளி perundagaḷi, பெ. (n.)

   பலமுகங்களையுடையவிளக்கு; multifaced oil-lamp.

     [பெரும் + தகழி→தகளி]

பெருந்தகை

பெருந்தகை perundagai, பெ. (n.)

   1. பெருமையுள்ளவ-ன் – ள்; noble-minded person.

பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை’ (நெடுநல்.106);

   2. பெருந்தன்மை பார்க்க,

   3. மிக்க அழகு; great beauty

     “பெயர்ந்தான் பெருந்தகையினான் (பு.வெ.630);

     [பெருமை + தகை]

பெருந்தக்காளி

 பெருந்தக்காளி perundakkāḷi, பெ. (n.)

   தக்காளி வகை(L);; Indian wInter-cherry, psysalis perulana.

     [பெரும் + தக்காளி]

பெருந்தடிமல்

 பெருந்தடிமல் perundaḍimal, பெ. (n.)

   ஒருவகைச் சுரநோய்(M.L.);; influenza.

     [பெரும் + தடிமல் தடிமன் – தடிமல்]

பெருந்தண்வாழ்க்கை

பெருந்தண்வாழ்க்கை perundaṇvāḻkkai, பெ. (n.)

நல்லறப்பெருமை கொண்ட இல்லற; வாழ்க்கை:

 high dignity noble life.

     “விருந்து பறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் (சிலம்பு. மனை.86);

     [பெருமை + தண் + வாழ்க்கை]

பெருந்தனம்

பெருந்தனம் perundaṉam, பெ. (n.)

   1. சோழரது அரசாங்க பணிகளிலொன்று; an office of the state under cola government.

   ஸ்ரீராஜராஜதேவர் பெருந்தனம் மும்மடி சோழ போசன் (s.i.i.ii.222);sl.li222);;   2. கணிகையரில் ஒரு பிரிவினர்(சிலப்.,14,167. உரை.);:

 a class of dancing-girls.

     [பெரும் + தனம்]

பெருந்தன்மை

பெருந்தன்மை perundaṉmai, பெ. (n.)

   1. மேம்பாடு; high dignity, noble character.

   2. செருக்கு (அகந்தை (யாழ்.அக);; selfconcet.

   3. இறைமை; god-hood.

   4. வள்ளன்மை; generosity.

     [பெரும் + தன்மை]

பெருந்தன்மையாளர்

 பெருந்தன்மையாளர் perundaṉmaiyāḷar, பெ. (n.)

   நற்பண்பாளர்; gentleman.

     [பெரும்தன்மை + ஆளர்]

பெருந்தரம்

பெருந்தரம் perundaram, பெ. (n.)

   1. பேரலுவல்பணிவகை; a high office.

ஸ்ரீஇராஜராஜதேவர் பெருந்தரம்…..சேனாபதி மும்மடி சோழப் ரம்மாராயன்” (s.i.i.-ii,161.3);

   2. தாராளமனம்(கொ.வ.); ; liberal mindednes:

     [பெரும் + தரம்]

பெருந்தரா

 பெருந்தரா perundarā, பெ.(n.)

பெருந்தரம், : பார்க்க இ.வ. கொ.வ. see peru-n-taran.

     [பெரும் + தரம்→தரா]

பெருந்தலை

 பெருந்தலை perundalai, பெ. (n.)

தலைமைக்காரன்,

 head man.

     [பெரும் + தலை]

பெருந்தலைக்கறையான்

 பெருந்தலைக்கறையான் perundalaikkaṟaiyāṉ, பெ. (n.)

   கறையான் வகை(வின்);; large-headed white ant.

     [பெருந்தலை + கறையான்]

பெருந்தலைத்திமிங்கிலம்

 பெருந்தலைத்திமிங்கிலம் perundalaittimiṅgilam, பெ. (n.)

   திமிங்கிலவகை ;     [பெருந் + தலை + திமிங்கிலம்]

பெருந்தவறு

 பெருந்தவறு perundavaṟu, பெ. (n.)

   பெருங்குற்றம்; gross-offence.

     [பெரும் + தவறு]

பெருந்தாதை

பெருந்தாதை perundātai, பெ. (n.)

பெரியப்பன் பார்க்க;see periyappan.

     ‘பெருந்தாதை சொல்லால்……அவனிகாப்ப (பாகவத.1. தன்மபுத்திர.41);

     [பெரும் + தாதை]

பெருந்தானம்

பெருந்தானம் perundāṉam, பெ. (n.)

   நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு அண்ணாக்கு, உதடு, பல் தலையாகிய ஒலியெழும் எட்டு உறுப்புகள் (சிலப்.3:26,உரை);; parts of the body, from which speech proceds, eight in humber, viz., neñju, midaru, nākku, mūkku aņņākku, udadu-pal, talai.

     [பெரும் + ski. tana. த.தானம்]

பெருந்தாய்

பெருந்தாய் perundāy, பெ. (n.)

பெரிய தாயார் பார்க்க: see periyatayar.

     ‘பெருந்தாயுழைப்புகுந்தான் (உபதேசகா.சிவவிரத.259);

     [பெரும் + தாய்]

பெருந்தாரா

 பெருந்தாரா perundārā, பெ. (n.)

   வாத்து வகை(வின்);; goose, auser ausEr.

     [பெரும் + தாரா]

     [P]

பெருந்தாளி

பெருந்தாளி2 perundāḷi, பெ. (n.)

   தாளி. செடிவகை(வின்);; a large climber.

     [பெரும் + தாளி]

பெருந்தாளி’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பெருந்தாழை

 பெருந்தாழை perundāḻai, பெ. (n.)

சீமைக்கற்றாழை(L);.பார்க்க; see simai-R-Rarralai, giant mexican lily.

     [பெரும் + தாழை]

பெருந்திகிரி

பெருந்திகிரி perundigiri, பெ. (n.)

   எல்லைச் சக்கரவாளத்துக்கும் அப்பாலுள்ள சக்கரவாளமலை; a mythical range of mountain cakkaravālam.

     ‘பெருந்திகிரி வெற்புடையவே (தக்கயாகப்.403.);

     [பெரும் + திகிரி]

பெருந்திசை

பெருந்திசை perundisai, பெ. (n.)

   1.வடக்கு, முதலிய முதன்மையான திசை; any of the four cardinal points.

   2. நீண்ட நிலப்பரப்புள்ளதிக்கு; a direction in which the land area is extensive.

வடதிசை பெருந்திசை யாகலின் (சிலப்5,94, உரை);

     [பெரும் + திசை]

பெருந்திட்டம்

 பெருந்திட்டம் perundiṭṭam, பெ. (n.)

   வரைவுத்திட்டம்; great plan.

     [பெரும் + திட்டம்]

பெருந்திணை

பெருந்திணை perundiṇai, பெ. (n.)

   அகத்திணையேழனுள் ஒன்றானதும் ஒத்த தன்மைல்லாதவளுடனாவது நெறிமுறை மாறாக வாவது, தன்னைவிட அகவையில் முதிர்ந்தவ ளோடாவது, மனம் ஒவ்வாதவளோடாவது கூடும் காதல் (akap);; improper love, as when it is in violation of customary rules or when the woman is older than the man or is of a different caste or does not consent, one of serven aga-ttinai. q.w.

     “கைக்கிளை முதலாப் பெருந்தினனு யிறவாய்” (தொல்.பொருள்.1);

     ‘பெரும்பகுதி மக்கள் மணமுறைகளுள் பெரும்பாலனவற்றைத் தன்னுள் அடக்கி நிற்பதால், பொருந்தாக்காமம் பெருந்திணை எனப்பட்டது. கவர்வு மணங்களும், இயற்கைக்கு மாறான எல்லாப் புணர்ச்சி வகைகளும் பெருந்திணையே காதலொடு பொருந்தாமையும் நெறியொடு பொருந்தாமையும் பற்றி, பெருந்திணை பொருந்தாக்காமம் எனப்பட்டது.” (ததி,பக்.16);

     [பெரும் + திணை]

பெருந்திரட்டு

 பெருந்திரட்டு perundiraṭṭu, பெ. (n.)

   தத்துவராயர் தொகுத்த மறைமுடிபு (வேதாந்த); நூல்; the larger religious anthology compiled by tattuvarāyar, dist.fr, kurru-n-tirllu.

     [பெரும் + திரட்டு]

பெருந்திராய்

 பெருந்திராய் perundirāy, பெ. (n.)

   பூடுவகை;(MM);; Indian chickweed, s.sh., mouugo spergula.

     [பெரும் + திராய்]

பெருந்திருக்கை

பெருந்திருக்கை perundirukkai, பெ. (n.)

   திருக்கைமீன் வகை; sting-ray, reddish brown, attaining 6 ft across and 3 ft. in length, pteroplatea micrura.

     [பெரும் + திருக்கை]

பெருந்திருட்டு

 பெருந்திருட்டு perundiruṭṭu, பெ. (n.)

   பெருங்கொள்ளை; great steal.

     [பெரும் + திருட்டு)]

பெருந்திருப்பாவாடை

 பெருந்திருப்பாவாடை perundiruppāvāṭai, பெ. (n.)

பெருந்திருவமிழ்து(ஈடு); பார்க்க; see peru-n-tiru-V-amirdu.

     [பெரும் + திரு+பாவாடை]

பெருந்திருவமிர்து

 பெருந்திருவமிர்து perundiruvamirtu, பெ. (n.)

பெருந்திருவமிழ்து பார்க்க; see peru-n-tiru -v-amildu.

     [பெரும் + திரு + அமிர்து. அமிழ்து → அமிர்து]

பெருந்திருவமிழ்து

பெருந்திருவமிழ்து perundiruvamiḻtu, பெ. (n.)

   இறைவனுக்குப் படைக்கும் பெரும்படையல் (நிவேதனம்);; food offered to God in a large scale.

திருவிழா எழுந்தருளுகைக்கும் பெருந்திருவமிழ்து செய்து அருளுகைக்கும் (siv365);

     [பெரும் + திரு + அமிழ்து]

பெருந்திருவி

பெருந்திருவி perundiruvi, பெ. (n.)

   பெருஞ்செல்வமுள்ளவள்; wealthy lady.

     ‘பெருந்திருவியார் மகள்கொல் (சீவக.1969);

திரு=செல்வம் ‘இ’-பெ.ஈறு)

பெருந்திரைப்பு

 பெருந்திரைப்பு perundiraippu, பெ. (n.)

   பெருங்கொய்சகம் (கொசவம்);; big pucker

     [பெரும் + திரைப்பு]

பெருந்திறனாளர்

 பெருந்திறனாளர் perundiṟaṉāḷar, பெ. (n.)

   பெருவல்லுநர்; great expert.

     [பெரும் + திறனாளர்]

பெருந்தில்லை

 பெருந்தில்லை perundillai, பெ. (n.)

   தில்லைமரவகை(யாழ்.அக);; a kind of tillai tree

     [பெரும் + தில்லை]

பெருந்திவசம்

 பெருந்திவசம் perundivasam, பெ. (n.)

   தலைத்திவசம்(இ.வ);; first annual ceremony of a decessed person.

     [பெரும் + திவசம்]

பெருந்தீக்குறி

 பெருந்தீக்குறி perundīkkuṟi, பெ. (n.)

   பெருந்தீநிமித்தம்; great knell.

     [பெரும் + தீக்குறி)]

பெருந்தீக்கோல்

 பெருந்தீக்கோல் perundīkāl, பெ. (n.)

   பெருஞ்சூட்டுக்கோல்; big pocker.

     [பெரும் + தீக்கோல்]

பெருந்தீங்கு

 பெருந்தீங்கு perundīṅgu, பெ. (n.)

   பேரிடர்; risk.

     [பெரும் + தீங்கு]

பெருந்தீனிக்காரன்

 பெருந்தீனிக்காரன் perundīṉikkāraṉ,    பேருண்டியாளன்; glutton.

     [பெரும் + தீனி + காரன்.]

   உடையவனைக் குறிக்கும் ஈறு காரன்;

பெருந்தீவட்டி

 பெருந்தீவட்டி perundīvaṭṭi, பெ. (n.)

   பெருந்தீப்பந்தவிளக்கு; Portable light.

     [பெரும் + தீவட்டி]

பெருந்தீவு

 பெருந்தீவு perundīvu, பெ. (n.)

   எழுதீவு; the seven continents.

     [பெரும் + தீவு]

பெருந்துக்கம்

 பெருந்துக்கம் perundukkam, பெ. (n.)

   மனச்சோர்வு; sadness.

     [பெரும் + துக்கம்]

பெருந்துத்தி

பெருந்துத்தி perundutti, பெ. (n.)

   1. செடிவகை; common evening mallow m.sh., abutilon Indicum.

   2. துத்திச்செடிவகை; wrinkled leaved evening mallow, mish, abutilon CesiatiCum

     [பெரும் + துத்தி]

பெருந்துன்பம்

 பெருந்துன்பம் perunduṉpam, பெ. (n.)

   பெருந்துன்பம்; deep distress.

     [பெரும் + துன்பம்]

பெருந்தும்பை

 பெருந்தும்பை perundumbai, பெ. (n.)

   தும்பைவகை; large species of white deadnettle, leucas aphalotes.

     [பெரும் + தும்பை]

பெருந்துரவு

 பெருந்துரவு perunduravu, பெ.(n.)

   மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Madurandagam Taluk.

     [பெரும்+துரவு]

பெருந்துருத்தி

 பெருந்துருத்தி perundurutti, பெ. (n.)

   நீர் வீகங்சுருவிவகை (சூடா);; a kind of syringe.

     [பெரும் + துருத்தி]

பெருந்துறை

பெருந்துறை perunduṟai, பெ. (n.)

   1. பெரியதுறைமுகம்; large seaport.

     ‘பெருந்துறை மருங்கிற் பெயராது (சிலப்.13:178);

   2. திருப்பெருந்துறை பார்க்க; Avudaiyarkoil.

     ‘சீரார் பெருந்துறை நந்தேவன் திருவாச1.15)

     [பெரும் + துறை]

பெருந்துளசி

 பெருந்துளசி perunduḷasi, பெ. (n.)

   துளசி வகை; arge basi, Sh, OCimum gratissimum.

     [பெரும் + துளசி]

பெருந்தூறு

 பெருந்தூறு perundūṟu, பெ. (n.)

   பெரும்புதர்(சூடா);; large bush, underwood.

     [பெரும் + தூறு]

பெருந்தெரு

பெருந்தெரு perunderu, பெ. (n.)

   நகரின் முதன்மைத் தெரு; main street.

   நகரியிற் பெருந்தெருவிலே விலைக்கு விற்பாரை (சிலப்.3165-9.உரை);;     [பெரும் + தெரு]

பெருந்தேக்கு

 பெருந்தேக்கு perundēkku, பெ. (n.)

   தேக்கு(சங்.அக.);; teak wood.

     [பெரும் + தேக்கு]

பெருந்தேட்கொடுக்கு

பெருந்தேட்கொடுக்கு perundēḍkoḍukku, பெ. (n.)

   தேட்கொடுக்கி வகை (பதார்த்த264);; a large species of Indian turnsole.

     [பெரும் + தேட் கொடுக்கு]

பெருந்தேட்டம்

 பெருந்தேட்டம் perundēṭṭam, பெ. (n.)

   நுணுக்கத்தேடுதல்; act of searching.

     [பெரும் + தேட்டம்]

பெருந்தேனீ

 பெருந்தேனீ perundēṉī, பெ. (n.)

பெரிய தேனீவகை;(வின்.);

 large sized honeybee.

     [ பெரும் + தேன் + a ]

பெருந்தேன்

பெருந்தேன் perundēṉ, பெ. (n.)

   1. தேனீக்கள் கட்டும் தேன்; honey secreted by bees.

குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந் தே னிழைக்கும் (குறுந்:2.);

   2. பெருந்தேனீ. பார்க்க; peru-n-ten.

பெருந்தேன் கண்படு வரையின் (குறுந்273);

     [ பெரும் + தேன் ]

பெருந்தேவனார்

பெருந்தேவனார் perundēvaṉār, பெ. (n.)

   1. பாரதம் பாடிய கழகக் காலப் புலவர் (தொல்.பொ.72. உரை..பக்.231);; a sangam poet, author of Tamil Bhāradam.

   2. ஒன்பதாம் நூற்றாண்டில் பாரதவெண்பா பாடிய புலவர்; the author of pārada-venbā. 9″ c.

   3. பதினோராம் நூற்றாண்டினரான வீரசோழியவுரைகார்; the author of the commentary on vira-sóliyam, 11″ c

     [ பெரும் + தேவன் + ஆர் + ஆ’ (உ.ப.ஈறு);

பெருந்தேவன்

பெருந்தேவன் perundēvaṉ, பெ. (n.)

   தலைமைத் தெய்வம்; the Supreme Deity.

     ‘உலகேழும் விழுங்கி யுமிழ்ந்திட்ட பெருந்தேவன் (திவ்.திருவாய்,464);;

     [ பெரும் + தேவன் ]

பெருந்தேவபாணி

பெருந்தேவபாணி perundēvapāṇi, பெ. (n.)

   1. கடவுளரை வாழ்த்தும் இசைப்பாவகை (சிலப்.6.35. உரை);; a kind of song in praise of gods, opp, to ciru-dēva- bāņi.

   2. பதினோராந் திருமுறையைச் சார்ந்ததும் நக்கீரதேவர் இயற்றியதுமான ஒரு சிற்றிலக்கியம்; a poem in praise of siva in padinorān-tirumurai by Nakkera-dvar

     [ பெரும் + தேவபாணி ]

பெருந்தேவி

பெருந்தேவி perundēvi, பெ. (n.)

   பட்டத்து அரசி; chie queen.

பாண்டியன் பெருந்தேவி வாழ்கென (சிலப்.20:21);,

     [ பெரும் + தேவி + தேவன் – (ஆ.பா.); – தேவி (பெயா); ]

பெருந்தையலிடு-தல்

 பெருந்தையலிடு-தல் perundaiyaliḍudal, செ.குன்றா.வி (v.i.)

   நன்றாகத் தைப்பதற்கு முன் பெரும்படியாக நூலையோட்டுதல்; to stich a running shtch to tack.

     [ பெரும் + தையல் + இடு] இடு (துவி); ]

பெருந்தொகை

 பெருந்தொகை perundogai, பெ. (n.)

பெருந்திரள் பார்க்க;see peruntiral.

     [ பெரும் + தொகை ]

பெருந்தொடர்

பெருந்தொடர் perundoḍar, பெ. (n).

   எழுவாய் பயனிலை முடிந்த கிளவியம் (வாக்கியம்); சிலவற்றைப் பிணைத்துந் நடக்குர் தொடர்ந்த கிளவிபம் (தொல். சொல்.42 சேனா);; compound or complex.

     [ பெரும் + தொடர் ]

பெருந்தொடை

பெருந்தொடை perundoḍai, பெ. (n).

   1. தொடையின் மேற்பகுதி; upper part of thi thigh.thick part of the thigh.

     ‘வெள்ளப பெருந்தொடை வரை வந்தது. 2. இடுப் (இ.வ.);, hip

     [ பெரும் + தொடை ]

பெருந்தொப்பி

 பெருந்தொப்பி perundoppi, பெ. (n.)

   பெரிய கவிப்பு; top-hat.

     [ பெரும் + U. topi. த. தொப்பி ]

பெருந்தொல்லை

 பெருந்தொல்லை perundollai, பெ.(n.)

   பெருந்துன்பம்; great nuisance.

     [ பெரும் + தொல்லை ]

பெருந்தொழுகை

 பெருந்தொழுகை perundoḻugai, பெ. (n.)

   பெருமிறைத்தொழுகை; mass prayer.

     [பெரும் + தொழுகை]

பெருந்தோல்வி

 பெருந்தோல்வி perundōlvi, பெ. (n.)

   படுதோல்வி; heavy fall.

     [பெரும் + தொழுகை]

பெருந்ந்தியாவட்டை

 பெருந்ந்தியாவட்டை perunndiyāvaṭṭai, பெ. (n.)

அடுக்கு நந்தியாவட்டம் பார்க்க;see adukku- nandiya vattam East Indian rosebay.

     [பெரு(மை); + நந்தியாவட்டம் நந்தியாவட்டம் –நந்தியாவட்டை]

பெருப்பம்

 பெருப்பம் peruppam, பெ. (n.)

   பருமன்; bigness, thickness.

     [ பல் – பரு – பெரு, பெரு – பெருப்பம் ]

பெருப்பி – த்தல்

பெருப்பி – த்தல் peruppittal, செ.குன்றாவி (v.t.)

   1. பெரிதாக்குதல்; to magnify, enlarge.

   2. புனைந்து கூறுதல்; to exaggerate.

     [ பெரு – பெருப்பி (காரணவினை); பி (கா.வி.ஈறு); ]

பெருப்பு

பெருப்பு peruppu, பெ. (n.)

   பெருக்கை; becomming large, being stout.

     ‘பணையே’ பிழைத்தல் பெருப்புமாகும்’ (தொல்சொல்.339);;

     [ பெரு – பெருப்பு ‘பு’ (சொ.ஆ.ஈறு); ]

பெருமகன்

 பெருமகன் perumagaṉ, பெ. (n.)

   நிலக்கிழார்; lord.

     [ பெரு + மகன் ]

பெருமகன்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பெருமகிழ்ச்சி

 பெருமகிழ்ச்சி perumagiḻcci, பெ. (n.)

   பெருவகை; great joy.

     [ பெரும் + மகிழ்ச்சி ]

பெருமகிழ்ச்சிமாலை

பெருமகிழ்ச்சிமாலை perumagiḻccimālai, பெ. (n.)

   96 வகைச் சிற்றிலக்கியங்களுள் கற்புடைப் பெண்டிர் பெருமையைக் கூறும் நூல்வகை(சது);.

 a panegyric in which the greatness of chaste women is described one of 96 Širrilakkiyams.q.V

     [ பெரு + மகிழ்ச்சி + மாலை, ]

பெருமக்கள்

பெருமக்கள் perumakkaḷ, பெ. (n.)

   1. பெரியோர்; the great

     ‘பெருமக்களுள்ள வர்தம் பெருமானை (திவ்.திருவாய்.37.5.);

   2. ஊரலுவல் (காரியங்களை); மேற்பார்வை செய்யும் சவைப் பெரியோர்; members of : a village assembly, as great men.

     ‘ஸம்வத்ஸர வாரியப் பெருமக்கள்’ (s.i.i.iii.9.);

     [ பெரு + மக்கள்]

பெருமங்கலம்

பெருமங்கலம் perumaṅgalam, பெ. (n.)

   1.நன்னிகழ்ச்சி; auspicious festival.

   2. வாழ்த்துப் பாடல்; benedictory song.

     ‘பெரு மங்கலம் பாடுவார் (சீவக.308 உரை,);

   3. அரசன் தன் பிறந்த நாளில் குடிகட்கு அருள் செய்வதைக் கூறும் புறத்துறை;     ‘பிறந்தநாள்வயிற் பெருமங்கலமும் (தொல். பொ.91,);

   4. 96 வகைப் சிற்றிலக்கியங்களுள் அரசனது பிறந்த நாண் மங்கலத்தைக் கூறும் நூல் (சது);; poem descrilling the celebration of a king’s birthday, one of 96 Širrilakkiyams q.v.

     [ பெரு + மங்கலம் ]

   மங்கு – மங்கல் – மஞ்சல் = மங்கலான நிறம், அந்நிறக்கிழங்கு (மஞ்சள்); மஞ்சல்-மஞ்சள் மங்கல-மங்கலம மஞ்சளால அலலது மஞசள நீரால் குறிக்கப்பெறும் நன்னிலைமை. திருமணம், திருமணத்தாலி, மங்கலநிகழ்ச்சி, மங்கலச் சின்னம், மங்கலவழக்கு நன்மை, (வடவர, 213);;

பெருமஞ்சாடி

பெருமஞ்சாடி perumañjāṭi, பெ. (n.)

   1. ஆனைத் தெல்லு(நாஞ்); பார்க்க: see anai-t-tellu a climber.

     [பெரு + மஞ்காடி ]

பெருமஞ்சிகன்

பெருமஞ்சிகன் perumañjigaṉ, பெ. (n.)

   மயிர்வினைஞன் (நாவிதன்);(தி.வா.);; barber.

     ‘பெருமஞ்சிகனுக்கு… கூந்தற் கருமம்’ (சீகாளத்.பு. விடசங்க.66);;

     [பெரு + மஞ்சிகன்]

பெருமடிப்பு

 பெருமடிப்பு perumaḍippu, பெ. (n.)

   கொய்சகம் (திரைப்பு);; pucker.

     [பெரும் + மடிப்பு ]

பெருமடை

பெருமடை perumaḍai, பெ. (n.)

   தெய்வங். களுக்கிடும் சோற்றுப்படையல்; food offering to a deity.

வளமிகு சிறப்பிற்றெய்வப் பெருமடை கொடுத்து (பெரியபு.கண்ணப்.19);.

     [பெரு + மடை ]

மடு-மடை

பெருமணம்

பெருமணம் perumaṇam, பெ.(n.)

   திருமணம்; marriage.

பெருமணம் பண்ணி யறத்தினிற் கொண்ட (கலித். 96.36);

     [பெரு + மணம்]

மணத்தல் = கலத்தல், இருவர் மனம் ஒன்று கூடுதல் மண → மணம் = திருமணம்

பெருமணல்வட்டம்

 பெருமணல்வட்டம் perumaṇalvaṭṭam, பெ. (n.)

   ஏழு நிரயத்தொன்று. (பிங்);; a hel of Sand, one of elu-naraam, q.v.

     [ பெரு + மணல்வட்டம் ]

பெருமதிப்பன்

 பெருமதிப்பன் perumadippaṉ, பெ, (n.)

   அதிக விலைபெற்ற பொருள்(ஈ.டு);; precious or valuable object.

     [ பெரு + மதிப்பன் ]

பெருமத்தளி

பெருமத்தளி perumattaḷi, பெ.(n.)

   முழவம்(திவ்.திருப்பள்ளி.9. வ்யா);; akind of drum.

     [பெரும் + மத்தளிமத்தளி = வாச்சியவகை]

பெருமந்தனம்

 பெருமந்தனம் perumandaṉam, பெ. (n.)

   இன்றியமையாத கமுக்கச் செய்தி; top-secreat.

     [பெரும் + மந்தனம்]

பெருமந்தாரை

 பெருமந்தாரை perumandārai, பெ. (n.)

செம்மந்தாரை பார்க்க: See-mandāraipurple variegated mountain ebony.

     [ பெரு + மந்தாரை ]

பெருமனமுரிவு

 பெருமனமுரிவு perumaṉamurivu, பெ, (n.)

   பெருமனக் கசப்பு; great disappoint.

     [பெரும் + மனம் + முரிவு]

பெருமரம்

பெருமரம் perumaram, பெ. (n.)

   1. மரவகை; toothed-leaved tree of heaven,

   1. tr., ailan thus excels.

   2. பீநாறி(மலை);; fetid tree

   3. பெருங்கள்ளி; white frangipani.

ம. பெருமரம்

     [பெரு + மரம்]

பெருமருந்து

பெருமருந்து perumarundu, பெ. (n.)

   கொடிவகை (பதார்த்த 269);; Indian birthwort, m. cl. aristolochía indica.

ம. பெருமருந்து

     [பெரு + மருந்து]

பெருமறைநூல்

 பெருமறைநூல் perumaṟainūl, பெ, (n.)

   அறநூல்; book of charity.

     “தமிழர்களின் பெருமறைநூல் திருக்குறளாகும்.”

     [பெரும் + மறை + நூல்]

பெருமலம்

 பெருமலம் perumalam, பெ. (n.)

   புன்கு (சங்.அக.);; Indian beech.

     [பெரு + மலம்]

பெருமலரி

 பெருமலரி perumalari, பெ. (n.)

   பெருங்கள்ளி; white frangipanl.

     [பெரும் + அலரி.]

     [P]

பெருமலை

 பெருமலை perumalai, பெ. (n.)

   மாமலை(மேரு);;(பிங்);; Mt Meru.

     [பெரு + மலை.]

பெருமலைகலக்கி

 பெருமலைகலக்கி perumalaigalaggi, பெ. (n.)

   பூடுவகை (வின்);; peacock-tailed Adiantum adiantum caudatum (W);.

     [பெரு + மலைகலக்கி.]

பெருமல்லிகை

 பெருமல்லிகை perumalligai, பெ. (n.)

   கொடிவகை, (மூ.அ.);; single-flowered Arabian jasmine, m.c. Jasmin Sambacheyneana,

     [பெரு + மல்லிகை]

பெருமழை

 பெருமழை perumaḻai, பெ. (n.)

   கனத்த மழை; heavy rain.

     [பெரு + மழை]

பெருமா

 பெருமா perumā, பெ, (n.)

   யானை; elephant.

     [பெரு + மா.]

பெருமாக்கோதையார்

பெருமாக்கோதையார் perumākātaiyār, பெ. (n.)

   சேரமான் பெருமாள் நாயனாரின் பிள்ளைப் பருவத்துப் பெயர்; name of Saint céramān perumāl-nāyanār given to him by his parents.

   அரனரு ளாற்பிறந்தார் பெருமாக் கோதையார் (பெரியபு:சேரமான்.5);;     [பெரு + மா + கோதையார்]

ஈண்டுப் பெரு மா எனு மீரடையும் ஒரே பொருளினவாய் அமைந்துள்ளமை காண்க. இவ்வடைகள் சிறப்புத்தன்மையை உணர்த்தும் ஒரு பொருட் பன்மொழிகள்.

பெருமாட்டி

 பெருமாட்டி perumāṭṭi, பெ. (n.)

   தலைவி; mistress, princess.

     [பெரு மான் (ஆ.பா.); – பெருமாட்டி (பெ.பா.);]

ஆளன் (ஆ); ஆட்டி (பெ); ஒ.நோ. திருவாளன் திருவாட்டி டெருமை + ஆட்டி=பெருமாட்டி

பெருமாண்டி

 பெருமாண்டி perumāṇṭi, பெ.(n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantangi Taluk.

     [பெரும்+ஆண்டி]

பெருமாந்தம்

 பெருமாந்தம் perumāndam, பெ, (n.)

   குழந்தைநோய்வகை; a disease of children.

     [பெரு + மாந்தம்]

மொத்து – மந்து – மந்து – மந்தம். மந்தம் – மாந்தம் செரியாமையாற் குழந்தைகட் குண்டாகும் நோய்.

பெருமானடிகள்

பெருமானடிகள் perumāṉaḍigaḷ, பெ. (n.)

   1. இறைவன்; divine being, a term of reverence.

     “பெரிய விடைமேல் வருவாரெம் பெருமானடிகளே (தேவா.5281); வல்லத்துத் திருத்தீக்காலிப் பெருமானடிகளுக்கு (s.i.i.iii. 95);.

   2. அரசர் தலைவர் பட்டப்பெயர்(கல்);; a title of kings and chieftains.

     [பெருமான் + அடிகள்.]

பெருமான்

பெருமான் perumāṉ, பெ. (n.)

   1. பெருமையிற் சிறந்தோன் (பிங்.);; nobleman, great person.

   2. அரசன் (திவா);; king.

   3. மூத்தோன் (திவா.);; elder, elder brother.

   4. கடவுள் (திவா);; god. as slva, wishu.

பெருமானுரை பிடித்தேம் (கம்பரா, நிகும்பலை. 143);

   5. பெருமாட்டி; lady.

     ‘தங்கா விருப்பிற் றம்பெருமான் (சீவக.2608);

     [பெருமகன் + பெருமான்.]

பெருமாப்பு

 பெருமாப்பு perumāppu, பெ. (n.)

ஆப்புத்தள்ளி (புதுவை); பார்க்க; see appu i-talli.

பெரும் + ஆப்பு

பெருமாமிசம்

 பெருமாமிசம் perumāmisam, பெ, (n.)

   மாட்டுக் கறி (இ.வ.);; beef.

     [பெரு + SKț māmsa த.மாமிசம்]

பெருமாள்

பெருமாள் perumāḷ, பெ. (n.)

   1. பெருமையிற் சிறந்தவ-ன்-ள்; person of eminence.

பாண்பெருமாள்’ (திவ். இராமானுச.11.);

   2. சேரர் பட்டப்பெயர்; title of céra king.

   3. திருமால்; Tiru-mai.

   4. கடவுள் திருப்பு); god.

ம. பெருமாள்

     [பெரும் + ஆள்.]

பெருமாள் வாய்ச்சியம்

 பெருமாள் வாய்ச்சியம் perumāḷvāycciyam, பெ. (n.)

   ஒரு பக்கம் அடித்தும் மறுபக்கம் தடவியும் இசைக்கப்படும் ஓர் இசைக்கருவி; a musical instrument.

     [பெருமாள்+வாச்சியம்]

பெருமாள்கோயில்

பெருமாள்கோயில் perumāḷāyil, பெ. (n.)

   1. திருமால் கோயில்; Tirumāl temple

   2.சின்ன காஞ்சிபுரம்; little conjeevaram (vaisn);.

     [பெருமாள் + கோயில்.]

பெருமாள்கோயில் மாடு

பெருமாள்கோயில் மாடு perumāḷāyilmāṭu, பெ.(n.)

   திருமால் கோயில் எருது; temple bull.

   2. உடம்பு கொழுத்தவன்(கொ.வ);.; fat man.

     [பெருமாள் கோவில் + மாடு.]

பெருமாள்திருமொழி

 பெருமாள்திருமொழி perumāḷtirumoḻi, பெ. (n.)

   நாலயிரத் தெய்வப் பனுவலில் குலசேகராழ்வார் இயற்றிய பாடற்றொகுதி; the poems of kulacéekarálvār, collected in divya-p-pirapandam.

     [பெருமாள் + திருமொழி]

பெருமாள்மாடு

பெருமாள்மாடு perumāḷmāṭu, பெ.(n.)

   ஊர் ஊராய்த் திரியும் இரப்பாளிகள் தெருவில் ஆட்டங் காட்டப் பழக்கியதும் புனைவு செய்யப் பெற்றதுமான எருது; Performing bull adowned With cowries etc., belonging to Wandering.

 medicants (E.T.vi.194);;

     [பெருமாள் + மாடு.]

பெருமாள்மாடு வாத்தியம்

 பெருமாள்மாடு வாத்தியம் perumāḷmāṭuvāttiyam, பெ. (n.)

   சேவையாட்டத்திற்குத் துணை செய்யும் தேவதுந்துமியின் வேறுபெயர்; name of a music instrument.

     [பெருமாள்+மாடு+வாத்தியம்]

பெருமிடறு செய்-தல்

பெருமிடறு செய்-தல் perumiḍaṟuseytal, செ.கு.வி. (v.i.)

   உரத்தழுதல்; to cry aloud.

     ‘விழுந்து பெருமிடறு செய்து ஆர்த்தராய்க் கூப்பிட்டு (குருபரம், 537);

     [பெருமி + டறு செய்..]

பெருமித வாழ்க்கை

 பெருமித வாழ்க்கை perumidavāḻkkai, பெ. (n.)

   துன்ப நிலையிலும் மேம்பட்ட வாழ்க்கை வாழ்தல்; dignity life.

     [பெருமிதம் + வாழ்க்கை]

பெருமிதச் செயல்

 பெருமிதச் செயல் perumidacceyal, பெ. (n.)

   நற்செயல்; good deed.

     [பெருமை + மிதம் + செயல்.]

பெருமிதச் செய்கை

 பெருமிதச் செய்கை perumidacceykai, பெ. (n.)

பெருமிதச் செயல் பார்க்க; see perumidaccaya.

     [பெருமை + மிதம் + செய்கை, ]

பெருமிதம்

பெருமிதம் perumidam, பெ, (n.)

   1. பேரெல்லை (தொல்.பொ.257. உரை);; maximum limit.

   2. மேம்பாடு; greatness.

     ‘பெருக்கம் பெருமித நீர்த்து (குறள்.431);

   3. தருக்கு; pride, arrogance.

     ‘பெருமை, பெருமித மின்மை’ (குறள்.979.);;

   5. எண்வகை மெய்ப்பாடுகளுள் கல்வி முதலிய பெருமைகளில் மேம்படுகை; consciousness of one’s greatness, one of eitht mey-p-pādu, q v.

     ‘கல்வி தறுக னிசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமித நான்கே’ (தொல்.பொ.57);

     [பெரு(மை); → பெருமிதம்]

பெருமித்தன்மை

 பெருமித்தன்மை perumittaṉmai, பெ. (n.)

   பெருந்தன்மை; dignity.

     [பெருமிதம் + தன்மை]

பெருமிளகி

 பெருமிளகி perumiḷagi, பெ. (n.)

   நெல்வகை(a);; a kind of paddy.

     [பெருமை + இளகி]

பெருமிழலைக்குறும்பநாயனார்

பெருமிழலைக்குறும்பநாயனார் perumiḻlaikkuṟumbanāyaṉār, பெ. (n.)

   நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர் (பெரியபு);; a cannized Šaiva saint, one of 63.

     [பெருமிழலை + குறும்ப நாயனார்]

பெருமீன்

 பெருமீன் perumīṉ, பெ. (n.)

   யானைமீன் (திவா);; a kind of large fish.

     [பெரு + மீன்]

     [P]

பெருமுகை

 பெருமுகை perumugai, பெ. (n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [பெரு+முகை(முக்கல்-முக்கு-முகை]

பெருமுசுட்டை

பெருமுசுட்டை perumusuṭṭai, பெ. (n.)

   1. கொடிவகை; many – flowered bindweed cio pornea staphylina.

   2. முசுட்டை வகை; malabar convolvulus. I.cl., i, pomaea malabārica.

     [பெரு + முசுட்டை]

பெருமுட்டை

 பெருமுட்டை perumuṭṭai, பெ. (n.)

பெருமரம் (மலை.);; See perumaram.

     [பெரு + முட்டை]

பெருமுதலி

பெருமுதலி perumudali, பெ. (n.)

   தலைவன்; Chief.

எங்கண் முன்பெருமுதலி யல்லையோ (பெரியபு. கண்ணப். 117);

     [பெரு + முதலி]

பெருமுதியன்

பெருமுதியன் perumudiyaṉ, பெ. (n.)

   கோயில் அதிகாரிகளு ளொருவன்(T.A.S.iii 106);; a temple official.

பெருமுத்தரையர்

பெருமுத்தரையர் perumuttaraiyar, பெ, (n.)

   கொடையாற்சிறந்த பண்டைச் சிற்றரசருள் ஒருவகையார்; a dynasty of chieftains of former days, renowed for their liberality.

     ‘பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும் கருணைச் சோறு (நாலடி,200);;

     [பெரு + முத்தரையர்]

பெருமுனைப்பு

 பெருமுனைப்பு perumuṉaippu, பெ. (n.)

பெருமுயற்சி பார்க்க;see perumuyarcci.

     [பெரும் + முனைப்பு]

பெருமுன்னறிவு

 பெருமுன்னறிவு perumuṉṉaṟivu, பெ, (n.)

   முன்னறிதிறம்; fore thought.

     [பெரும் + முன்னறிவு]

பெருமுயற்சி

 பெருமுயற்சி perumuyaṟci, பெ, (n.)

   பேருழைப்பு; hard work.

     [பெரும் + முயற்ச]

பெருமுருக்கு

 பெருமுருக்கு perumurukku, பெ. (n.)

   பாயின் ஓரம் கட்டும் முருக்கு; a tight knit on the sides of mat.

     [பெரும்+முருக்கு]

பெருமுளை

பெருமுளை perumuḷai, பெ. (n.)

   இசைப்பாட்டு வகை (சிலப்.10,131.உரை);; a song.

     [பெரு + முளை]

பெருமூங்கில்

பெருமூங்கில் perumūṅgil, பெ. (n.)

   மூங்கில் மரவகை. (குறிஞ்சிப்,65. உரை);; large bamboo. 1. tr. bambusa arundinaca.

     [பெரு + மூங்கில்]

 பெருமூங்கில் perumūṅgil, பெ. (n.)

   முற்றிய மூங்கில்; a fully grown bamboo,

     [பெரு+மூங்கில்]

பெருமூச்சு

பெருமூச்சு perumūccu, பெ. (n.)

   நெட்டுயிர்ப்பு; sigh, long breath.

     ‘பெருமூச்செழ விம்மின னிருந்தான் (பிரபோத. 37.6);

     [பெரு + முச்சு]

பெருமூச்சுவிடு – தல்

 பெருமூச்சுவிடு – தல் perumūccuviḍudal, செ.கு.வி. (v..i)

   பெரிதாக மூச்சுவிடுதல்(வின்);; to heave a sigh.

     [பெருமூச்சு + விடு.]

பெருமூச்செறி-தல்

 பெருமூச்செறி-தல் perumūcceṟidal,    செ.குன்றா.வி. (v.t);பெருமூச்சு விடு-தல் பார்க்க;see perumUccuvidu.

     [பெருமூச்சு + எறி.]

பெருமூத்திரம்

பெருமூத்திரம் perumūttiram, பெ. (n.)

   நீரிழிவு நோய் (இராசவைத்:54);; diabeter.

     [பெரு + மூத்திரம் மோள் + திரம் – மோத்திரம் – மூத்திரம்]

பெருமெண்ணிக்கை

 பெருமெண்ணிக்கை perumeṇṇikkai, பெ. (n.)

   பெருமளவு எண்ணிக்கை; large number.

     [பெரும் + எண்ணிக்கை]

பெருமை

பெருமை perumai, பெ. (n.)

   1 பருமை; bigness, largeness,

   2. மாட்சிமை; greatness, dignmity, excellence, eminernce, nobleness, grandeur,

     ‘பெருமையுந் தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு (குறள்.974);;

   3. மிகுதி; abundance, excess.

இன்றில்லை யென்னும் பெருமை யுடைத்து (குறள்,336); (திவா.);.

   4. வல்லமை; power might.

   5. சீர்த்தி; celebrity, renown.

   6.செருக்கு; pride, vanity, haughtness.

அவன் பெருமையடிக்கிறான்

   7, அருமை; dearness, difficulty.

க. பெர்மை

     [பல்-பரு-பெரு, பெரு-பெருமை. பெருமைக்கருத்து திரட்சிக் கருத்தின் வழிப்பட்ட பருமைக் கருத்தினின்றே தோன்றியுள்ளது. மதிப்பிற்கும் புகழிற்கும் ஏதுவான அறிவாற்றலதிகார செல் வங்களின் பருமையே பெருமை.]

பெருமைக்குணம்

 பெருமைக்குணம் perumaikkuṇam, பெ, (n.)

பெருமைப்பண்பு பார்க்க;see perumaippanou.

     [பெருமை + குணம்]

பெருமைப்பண்பு

 பெருமைப்பண்பு perumaippaṇpu, பெ. (n.)

   மாட்சிமைக்குணம்; noble character.

     [பெருமை + பண்பு]

பெருமைப்பாடு

பெருமைப்பாடு perumaippāṭu, பெ. (n.)

பெருமை,6. பார்க்க;see perumal.

     [பெருமை + பாடு படு – பாடு]

பெருமைப்பெண்

 பெருமைப்பெண் perumaippeṇ, பெ. (n.)

   உரிமைச் சுற்றத்திலன்றிப்புறம்பே செல்வநோக்கித் தெரிந்தெடுக்கப்பட்ட மணப்பெண் (இ.வ.);; bride chosen from a renowned or wealthy family, dist fr.urimai-p-pen.

     [பெருமை + பெண் பெருமை = மதிப்பு, செல்வம், வளமை,]

உறவுமுறை பற்றி மணத்தற்குரியவள் உரிமைப்பெண் என்றும் செல்வநிலை பற்றி மணத்தற்கு ஏற்றவள் பெருமைப் பெண் கூறுப.

பெரும் போட்டி

 பெரும் போட்டி perumbōṭṭi, பெ. (n.)

   கடும் போட்டி; sever contest.

     [ பெரும் + போட்டி ]

பெரும்பசலை

 பெரும்பசலை perumbasalai, பெ. (n.)

   கொடிவகை;(A);; large-flowered purslane, portulaca quadrifida.

     [ பெரு + பசலை பசளை – பசலை விழ – வழலை – வயலை –பசளை ]

     [P]

பெரும்பசளி

 பெரும்பசளி perumbasaḷi, பெ. (n.)

பெரும்பசலை பார்க்க (இ.வ.); ;see peru. m-pašalai.

     [ பெரும் + பசளி ]

வயலை – பசலை – பசள

பெரும்பசிரி

 பெரும்பசிரி perumbasiri, பெ. (n.)

   கீரைவகை (மூ.அ.); ; a kind of greens.

பெரும்பஞ்சமூலம்

 பெரும்பஞ்சமூலம் perumbañjamūlam, பெ. (n.)

   வில்வம்,வாகை,பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி என்ற ஐந்து மரங்களின் வேர்களைக் கொண்டு செய்த கூட்டுமருந்து (யாழ்.அக);; compound medicine of the roots of five trees, viz., vilvam, vāgai, peru-ñkumil, talutāļai, pādiri.

     [ பெரும் + பஞ்ச + மூலம் Skt.pancan- த.பஞ்ச மூலம் = வேர் ]

பெரும்பஞ்சை

 பெரும்பஞ்சை perumbañjai, பெ. (n.)

பெருவறுமை பார்க்க; see peruvarumai.

     [ பெரும் + பஞ்சை ]

பெரும்படி

பெரும்படி perumbaḍi, பெ. (n.)

   உயர்தரம்; grandeur.

     [ பெருமை + படி ]

 பெரும்படி perumbaḍi, பெ. (n.)

   முருடு; coarseness, roughness.

   2. தோராயம்; rough calculation.

   3. பருமன்; thickness, stoutness.

   4. பெரும்போக்கு; liberal scale.

   5. செருக்கு; arrongance.

     [ பெரும் + படி + படி = முரட்டு, தடிமன், செருக்கு ]

பெரும்படை

பெரும்படை perumbaḍai, பெ. (n.)

   1. பெரிய தானை; large army.

   2. இறந்த வீரன் புகழை நடுகல்லிற் பொறிப்பதைக் குறிக்கும் புறத்திறை (தொல்.பொ.60);;   3. தெய்வமாகிய நடுகற்குப் பெருஞ்சிறப்புப் படைத்தலைக்கூறும் புறத்துறை (தொல்.பொ.60,உரை.);,

     [ பெரும் + படை ]

பெரும்பண்

 பெரும்பண் perumbaṇ, பெ. (n.)

   பதினாறு தலைமைப் பண்கள். பாலையாழ், செந்து, மண்டலியாழ், பெளரி, மருதயாழ், தேவதாளி, நிருபதுங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளார் கொல்லி, கின்னராகம், செவ்வழி,மெளசாளி, சீராகம், சந்தி (பிங்.); ; group of sixteen main melogy-types Viz pālaiyāl, sendu, mandaliyāl, panri, marudayā| dēvatālinirupaturiga rāgam, nagaragam, kurifijiyal, alari, sayavélar, kolli, kiŋŋarāgam, sewwali, manrāli širāgam, sandi.

     [ பெரும் + பண் ]

பெரும்பதி

பெரும்பதி perumbadi, பெ. (n.)

   மருங்கிலூர் சூழ்பதி (வின்);; town surrounded by villages (w);.

போயோ பெரும்பதியுட் பட்டேம்” (சிலப்9;46);

     [ பெரும் + பதி ]

பெரும்பத்து

 பெரும்பத்து perumbattu, பெ. (n.)

பெரும்பற்று பார்க்க; (W.G.);; see peru-m-parru.

     [ பெரும் + பத்து பற்று – பத்து பற்று = வயல்,நிலம் ]

பெரும்பனசை

 பெரும்பனசை perumbaṉasai, பெ. (n.)

பெரும்பனையன்(வின்); பார்க்க; see peru-m-panayan.

     [ பெரும் + பனசை ]

பெரும்பனையன்

 பெரும்பனையன் perumbaṉaiyaṉ, பெ. (n.)

   அம்மைநோய் (வைசூரி);வகை (வின்); ; a virulent kind of small-pox with large pustules.

     [ பெரும் + பனையன் பனை – பனையன் = கொடுவாரிநோய்]

பெரும்பயறு

பெரும்பயறு perumbayaṟu, பெ. (n.)

   காராமணி; chowlee-bean.

அரிகாற் பெரும்பயறு நிறைக்குமூர (ஐங்குறு.47);

     [ பெரும் + பயறு ]

பெரும்பராக்கு

 பெரும்பராக்கு perumbarākku, பெ. (n.)

   உன்னிப்பாயிராமை (வின்);; carelessness negligence, Supineness.

     [ பெரும் + பராக்கு skt.parak, க.பராக்கு= கவனமின்மை ]

பெரும்பருந்து

 பெரும்பருந்து perumbarundu, பெ.(n.)

பெரும்புள்(யாழ்.அக); பார்க்க; See peru-m-pul.

     [ பெரும் + பருந்து ]

     [P]

பெரும்பருவம்

 பெரும்பருவம் perumbaruvam, பெ. (n.)

   ஈரம் மிகுந்திருப்பதால் உழுவதற்குத் தகுதியற்ற நிலம் (நாஞ்.);; land unfit for ploughing owing to its being exceedingly moistinā.

     [ பெரும் + பருவம் ]

த.பருவம் → skt.parvan

பெரும்பறை

பெரும்பறை perumbaṟai, பெ. (n.)

   தோற்கருவிவகை (சிலப்.32உரை,பக்.106);; a kind of large drum.

     [ பெரும் + பறை ]

     [P]

பெரும்பறையன்

பெரும்பறையன் perumbaṟaiyaṉ, பெ. (n.)

   பறையர் இனத்துள் ஒரு பிரிவு (பஞ்சம சாதி வகை); (M.M654);; a sub sect of paraiyas.

     [ பெரும் + பறையன் ]

பெரும்பற்றப்புலியூர்

பெரும்பற்றப்புலியூர் perumbaṟṟappuliyūr, பெ. (n.)

   தில்லை (சிதம்பரம்);; chidambaram

     ‘பெரும்பற்றப் புலியூரானை’ (தேவா.12.1);

     [ பெரும் + பற்றப்புலியூர் ]

பெரும்பற்றப்புலியூர்நம்பி

 பெரும்பற்றப்புலியூர்நம்பி perumbaṟṟappuliyūrnambi, பெ. (n.)

   திருவால் வாயுடையார் திருவிளையாடல் தொன்ம (புராண); நூலாசிரியர்; the author of Tiruv- ālavāyu dalyar-Tiruvilai yadar toņmam.

     [ பெரும் பற்றப்புலியூர் + நம்பி ]

பெரும்பற்று

 பெரும்பற்று perumbaṟṟu, பெ. (n.)

   அரசுக்கு உரிமையானநிலம்;     [ பெரும் + பற்று ]

     [ பெரும் + பறவை ]

 பெரும்பற்று perumbaṟṟu, பெ. (n.)

   மிகுந்த ஆசை; thick attachment.

     [ பெரும் + பற்று ]

பெரும்பாடி காவல்

பெரும்பாடி காவல் perumbāṭikāval, பெ. (n.)

   தலைமைக்காவலன் (MER 407 of 1921);; chief watchman.

     [ பெரும் + பாடிகாவல் ]

பெரும்பாடு

பெரும்பாடு perumbāṭu, பெ. (n.)

   1. பேருழைப்பு; great effort great suffering strain.

   2. வீட்டுவிலக்குக் குருதியிறைப்பு நோய்; excessice menstruation menorrhagia.

   3. கருப்பக்குறைப்பு; profuse bleeding from the womb, metrorrhagia.

     [ பெரும் + பாடு ]

பெரும்பாணர்

பெரும்பாணர் perumbāṇar, பெ. (n.)

   யாழ். வாசிக்கும் பாணர்குல வகையார்; a division of pânar caste.

     ‘அருட்பெரும் பாணனாரை’ (பெரியபு:திருநீலகண்டயாழ்ப்.3);

     [ பெரும் + பாணர் ]

பெரும்பாணாற்றுப்படை

 பெரும்பாணாற்றுப்படை perumbāṇāṟṟuppaḍai, பெ. (n.)

   பத்துப்பாட்டினுள் ஒன்றானதும் தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியதுமான ஆற்றுப்படை வகை; a poem in praise of Tondaimān-ilantiraiyan, by kadiyalur uruttirangannanar, included in Pattu-p-pâttu.

     [ பெரும்பாண் + ஆற்றுப்படை ]

பெரும்பாண்

பெரும்பாண் perumbāṇ, பெ. (n.)

பெரும்பாணர் பார்க்க; see peru-m pånar.

பெரும்பாணிருக்கையும்'(மதுரைக்342);

     [ பெரும் + பாண் ]

பெரும்பாந்தள்

 பெரும்பாந்தள் perumbāndaḷ, பெ. (n.)

பெரும்பாம்பு (வின்); பார்க்க; see permpambu.

     [ பெரும் + பாந்தள் ]

பெரும்பானை மோர்

 பெரும்பானை மோர் perumbāṉaimōr, பெ. (n.)

   நீருணவு (நீராகாரம்);; rice. water.

     [ பெரும் + பானை + மோர் ]

பெரும்பான்மை

பெரும்பான்மை2 perumbāṉmai, பெ.எ. (adv.)

   பெரும்பாலும்; for the most part usually.

     ‘பெரும்பான்மையு மறிதற் கரிதாட் விதி’ (இறை, 3 பாட்டு, 50);

     [ பெரும் + பான்மை ]

பெரும்பான்மை’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பெரும்பாம்பு

பெரும்பாம்பு perumbāmbu, பெ. (n.)

   பெரிய பாம்பு ; large snake,

   பேழ்வாய்க் கிளர் பெரும் பாம்பினோடும் (சீவக.2298);. (திவா.);;     [ பெரும் + பாம்பு ]

பெரும்பாற்சொற்றி

 பெரும்பாற்சொற்றி perumbāṟcoṟṟi, பெ. (n.)

   பாற்சொற்றி வகை (வின்);; a plantaster acantha.

     [ பெரும் + பாற்சொற்றி ]

பெரும்பாலார்

 பெரும்பாலார் perumbālār, பெ. (n.)

   மிகுதியான எண்ணிக்கையினவர்; the majorty.

     [ பெரும் + பாலார் ]

பெரும்பாலும்

பெரும்பாலும் perumbālum, பெ. எ. (adv)

   பெரும்பகுதி அளவு; for the most part, mostly, generally, commonly, customarily.

   பயிலுறவுற்றபடி பெரும்பாலுமிப் பெருந்திருநகர் படைப்பான் (கம்பராநகர.4);;     [ பெரும்+ பால் உம்,]

பெரும்பாலும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இடம். கோடைவாசனி

 பெரும்பாலும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இடம். கோடைவாசனி perumpālummalaippakutiyilamaintirukkumiṭamāṭaivācaṉi, பெ.(n.)

   சிறு செருப்படை; a kind of plants.

அறுவடை செய்த வயலிலும், குளக் கரையிலும் படரும் பூண்டு. இதனால் சொறி, சிரங்கு, படை முதலிய நோய்கள் போகும் (சா.அக.);.

பெரும்பாலை

பெரும்பாலை perumbālai, பெ. (n.)

   பெரும் பண்வகை (சிலப். பக் 445.);;     [ பெரும் + பாலை ]

பெரும்பாழ்

பெரும்பாழ் perumbāḻ, பெ. (n.)

   1. மூல முதல் (பிரகிருதி);; primordial matter.

சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ (திவ். திருவாய். 10, 10, 10);

   2. பெருவெளி (திவா.); ; barrentract.

   3. முற்று மழிவு; complete ruin.

     [ பெரும் + பாழ் ]

பெரும்பாழ் செய் – தல்

பெரும்பாழ் செய் – தல் perumbāḻceytal, செ.குன்றாவி. (vt).

   முழுதும் அழித்தல்; to devastate entirely.

     ‘பெரும்பாழ் செய்து மமையான் (பட்டினப். 270);

     [ பெரும் + பாழ்செய் ]

பெரும்பாழ்வெளி

பெரும்பாழ்வெளி perumbāḻveḷi, பெ. (n.)

   1. பெரும்பாழ் 1, 2. பார்க்க; see peru-m-pal.

   2. உச்சிக்குமேற் பன்னிரண்டு விரலங்கட்கு மேலுள்ளதாகக் கருதப்படுமிடம் (யாழ்.அக);; a mystic centre in the human body,

     [ பெரும் + பாழ்வெளி ]

பெரும்பாவி

 பெரும்பாவி perumbāvi, பெ. (n.)

   கொடுந் தீவினையாளன்; great sinner, sad dog.

     [ பெரும் + பாவி ]

 skt pâpin → த. பாவி

பெரும்பிடி

பெரும்பிடி perumbiḍi, பெ. (n.)

   1. கட்டாயப் படுத்திப் பெறுகை (வசூல்);; exaction (w.); .

   2. ஒட்டாரம் (பிடிவாதம்);; obstinacy (இ.வ.);

     [ பெரும் + பிடி ]

பெரும்பிண்ணாக்குக் கீரை

 பெரும்பிண்ணாக்குக் கீரை perumbiṇṇākkukārai, பெ. (n.)

   கீரை வகை (M.M.);; jews- mallow m.sh., corchorus olitorious,

     [ பெரும் + சபிண்ணாக்குக் கீரை ]

பெரும்பிரண்டை

பெரும்பிரண்டை perumbiraṇṭai, பெ. (n.)

   1. பிரண்டை வகை; a large kind of Square stalked wine.

   2. கொடிவகை (L);; leafless Vanilla m.c. vanilla wightiana.

     [ பெரும் + பிரண்டை ]

     [P]

பெரும்பிறிது

பெரும்பிறிது perumbiṟidu, பெ. (n.)

   இறப்பு; death, as a great change.

     ‘பெரும்பிறி தின்மையி னிலேனு மல்லேன்’ (நற். 381);

     [ பெரும் + பிறிது ]

பெரும்பிலா

 பெரும்பிலா perumbilā, பெ. (n.)

   பொன்னா விரை (யாழ்.அக.);; fetid cassia.

பெரும்பிளவை

 பெரும்பிளவை perumbiḷavai, பெ, (n.)

   அரசபிளவை; carbuncle, anthrax.

     [ பெரும் + பிளவை ]

பெரும்பிழுக்கை

பெரும்பிழுக்கை perumbiḻukkai, பெ. (n.)

   வரிக் கூத்துவகை (சிலப். 3, 12 பக். 88);; a kind of masquerade dance.

     [ பெரும் + பிழுக்கை]

பெரும்பீர்க்கு

 பெரும்பீர்க்கு perumbīrkku, பெ.(n.)

   பீர்க்கு வகை; a kind of sponge-gourd.

     [ பெரும் + பீர்க்கு ]

பெரும்பீளை

பெரும்பீளை perumbīḷai, பெ. (n.)

பெரும் பூளை பார்க்க; see peru-m pulai. (பதார்த்த, 275);

     [ பெரும் + பீளை ]

பூளை- பீளை

பெரும்புகழ்

 பெரும்புகழ் perumbugaḻ, பெ. (n.)

   பெரும்-பாராட்டு; high praise.

     [ பெரும் + புகழ் ]

பெரும்புதர்

 பெரும்புதர் perumbudar, பெ. (n.)

   பெரும் புதர்; Shrub, big bushy plant.

     [ பெரும் + புதர் ]

பெரும்புயல்

பெரும்புயல்1 perumbuyal, பெ, (n.)

   1. பெருங்காற்று; violent storm.

     [ பெரும் + புயல்.]

 பெரும்புயல்2 perumbuyal, பெ. (n.)

பெரும் பெயல் (பிங்.); பார்க்க; see perum peyal.

     [ பெரும் + புயல் ]

பெரும்புறக்கடல்

பெரும்புறக்கடல் perumbuṟakkaḍal, பெ. (n.)

   சக்கர வாளமாலையைச் சூழ்ந்துள்ள கடல்; outermost circumambient ocean. beyond cakkaravâlam

   பெரும்புறக் கடலை யடலேற்றினை (திவ். பெரியதி. 7, 10, 1);;     [ பெரும் + புறக்கடல் ]

பெரும்புறம்

பெரும்புறம் perumbuṟam, பெ. (n.)

   பெருவெளி; outermost space.

     ‘வாயிலின் பெரும்புறத் துய்த்தனர்’ (கம்பரா. இரணிய 81);;

     [ பெரும் + புறம் ]

பெரும்புலர்காலை

பெரும்புலர்காலை perumbularkālai, பெ.(n.)

   பொழுது புலர்தற்கு முன்னுள்ள விடியற்காலம்; early hours of the morning.

   பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தராகி (தேவா. 523, 4);;     [ பெரும் + புலர்காலை ]

பெரும்புலர்விடியல்

பெரும்புலர்விடியல் perumbularviḍiyal, பெ. (n.)

பெரும்புலர் காலை பார்க்க; see peru-m-pular-kālai.

பெரும்புலர் விடியலு மாலை’ (குறுந் 234);

     [ பெரும் + புலர் + விடியல் ]

பெரும்புலால்

 பெரும்புலால் perumbulāl, பெ. (n.)

   பெருமீன்; large fish.

     (யாழ்.அக.); –

     [ பெரும் + புலால் ]

பெரும்புலி

 பெரும்புலி perumbuli, பெ. (n.)

   வேங்கைப் புலி; tiger, felis tigris.

     [ பெரும் + புலி ]

மறுவ: கடுவா

பெரும்புள்

பெரும்புள் perumbuḷ, பெ. (n.)

   1. பெருங் கோட்டான்(பிங்);; rock-horned owl. bubo bengaleusis.

   2. எட்டுக்காலுள்ள பெரிய பறவை (நிகண்டு);; fabulous eight-legged bird.

     [ பெரும் + புள் ]

பெரும்புள்ளி

 பெரும்புள்ளி perumbuḷḷi, பெ. (n.)

   பெரும்பணக்காரர் (நிலக்கிழார்);; feudal superior lord.

     [ பெரும் + புள்ளி. ]

பெரும்புழுதி

 பெரும்புழுதி perumbuḻudi, பெ. (n.)

   பெருங்குப்பை; loose soil.

     [ பெரும் + புழுதி ]

பெரும்பூ

பெரும்பூ perumbū, பெ. (n.)

   நிலத்தின் ஆண்டு (வருட); வருவாய்; the annual agricultural produce.

   ஒன்பதாவது பெரும்பூ முதலிட்டு (s.i.i.v, 107.);;     [ பெரும் + பூ ]

பெரும்பூசணி

 பெரும்பூசணி perumbūcaṇi, பெ. (n.)

   சாம்பற் பூசணி; ash-gourd.

     [ பெரும் + பூசணி.]

பூ + சுணை – பூசுணை – பூசணி

பெரும்பூண்

பெரும்பூண் perumbūṇ, பெ. (n.)

   மார்பிற் பூணும் பேரணி; a big jewel worn on th chest.

பெரும்பூண் மன்னவன் (பு.வெ. 10,

     [பெரும் + பூண்]

பெரும்பூம்பாதிரி

 பெரும்பூம்பாதிரி perumbūmbātiri, பெ. (n.)

     [ பெரும் + பூம்பாதிரி ]

பெரும்பூரான்

 பெரும்பூரான் perumbūrāṉ, பெ. (n.)

   பூரான் வகை (சங்.அக.);; a kind of centipede.

     [ பெரும் + பூரான் ]

பெரும்பூளை

 பெரும்பூளை perumbūḷai, பெ. (n.)

   செடி வகை; javanese wool plant m.sh., acrua javanica.

     [ பெரும் + பூளை ]

பெரும்பூழை

 பெரும்பூழை perumbūḻai, பெ. (n.)

   கதவிலிடும் வாயில் (யாழ்.அக);; wicket.

     [ பெரும் + புழை ]

     [ புழை – பூழை ]

பெரும்பெயருலகம்

பெரும்பெயருலகம் perumbeyarulagam, பெ. (n.)

   விண்ணுலகம்; heaven.

பெரும்பெயருலகம் பெறீஇயரோ வன்னை’ (குறுந் 83);

     [ பெரும் + பெயருலகம் ]

பெரும்பெயர்

பெரும்பெயர் perumbeyar, பெ. (n.)

   1. பெரும்புகழ்; renown.

பெரும்பெயர்ப் பெண்டிர்க்கு (சிலப். 28, 208.);

   2. வீடு (மோட்சம்);; final emancipation.

அரும்பெறன் மரபிற் பெருபெயர் முருக (திருமுரு. 269);

     [ பெரும் + பெயர் ]

பெரும்பெயர்ப்பொருள்

 பெரும்பெயர்ப்பொருள் perumbeyarpporuḷ, பெ. (n.)

பெரும்பொருள் பார்க்க; see perumporul.

     ‘பெரும் பெயர்ப் பொருளிற் காணப்படுவதாகிய சிறப்பியல்பு'(சி.போ.சிற்.பாயி.);,

     [ பெரும் + பெயர்ப்பொருள் ]

பெரும்பெயல்

பெரும்பெயல் perumbeyal, பெ. (n.)

   கனத்த மழை; heavy rain.

பெரும் பெயல் பொழிந்த சிறுபுன்மாலை முல்லைப். 6)

     [ பெரும் + பெயல் ]

பெய் – பெயல்

பெரும்பேச்சாளர்

 பெரும்பேச்சாளர் perumbēccāḷar, பெ, (n.)

   சிறந்த பேச்சாளர்; great oraterar.

     [ பெரும் + பேச்சாளர் ]

பெரும்பேச்சு

பெரும்பேச்சு perumbēccu, பெ. (n.)

   1. பெரிய வெறும்பேச்சு; wide tumour.

   2. அலப்பற் பேச்சு; incessant talk, loquacity,

   3. புகழ்; fame.

   – பெற்றுடையான் பெரும் பேச்சுடையான்'( தேவா. 1106, 5);;     [ பெரும் + பேச்சு ]

பெரும்பேது

பெரும்பேது perumbētu, பெ. (n.)

   1. பெரும் பித்து; excessive modness or distress, as in love.

பெரும் பேதுறுதல் களைமதி (கலித் 21);

   2. சாக்காடு; death, as the great distress.

   வெந்திறற் கூற்றம் பெரும்பேதுறுப்ப (புறநா. 238, 10.);;     [ பெரும் + பேது ]

பெரும்பொங்கல்

பெரும்பொங்கல் perumboṅgal, பெ. (n.)

   1. கறவதை);ப் பொங்கல்; a festival (w.);.

   2. சிற்றுார்த் தேவதைக்கு ஊராரிடும் பொங்கல்; offering of pangal to a village deity by the villagers in common

     [ பெரும் + பொங்கல் ]

     [P]

பெரும்பொன்படு – தல்

பெரும்பொன்படு – தல் perumboṉpaḍudal, செ.கு.வி. (v.i.)

   தோற்றப் பொலிவுண்டாதல்; to be charming in appearance.

     ‘தொய்யிலெழுதி யிறுத்த பெரும்பொன் படுகம் (கலித்.64);

     [ பெரும் + பொன்படு -,]

பெரும்பொய்

 பெரும்பொய் perumboy, பெ. (n.)

   கட்டுக்கதை; untruth.

     [ பெரும் + பொய் ]

பெரும்பொருள்

பெரும்பொருள் perumboruḷ, பெ. (n.)

   1.சிறப்புடைய பொருள்; a thing of great value.

     ‘பெரும்பொரு ணீதிச் செங்கோற் பெருமகன் (சீவக.2534);

   2. அறம்; Virtue .

   3. அறிவு; wisdom.

     ‘பெருந்தவர் தம்மாற் பெரும்பொரு ளெய்த (மணிமே-19,160. 4. பேரின்பவீடு (மோட்சம்);;

 salvation.

பெரும்பொருளையுடையமுருக (திருமுரு. 269,உரை.);

   5. அகப்பொருள் பற்றியதோர் நூல் (சீவக.187.உரை);; a treatise on aga-p-porul.

     [ பெரும் + பொருள் ]

பெரும்பொருள் விளக்கம்

 பெரும்பொருள் விளக்கம் perumboruḷviḷakkam, பெ. (n.)

   ஒரு அறநூல் (புறத்திரட்டு);; a poem on morals.

     [ பெரும் பொருள் + விளக்கம் ]

பெரும்பொழுது

பெரும்பொழுது perumboḻudu, பெ. (n.)

   கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள் (நம்பிய கப்.11);; seasons of the year, of which there are six, viz., kārkūdir, mun-paņi pin-pani ila-vēņil, muļuvēņil, dist. fr. ciru-podudu

     [ பெரும் + பொழுது ]

பெரும்போகம்

பெரும்போகம் perumbōkam, பெ. (n.)

   1. மிகுந்த விளைவு (கொ.வ);; bumper crop.

   2. பேரின்பம்; supreme bliss.

     ‘பெரும்போகப் பின்னும் புதிதாய் (திருக்கோ.9);

     [ பெரும் + போகம் → பூ → பூகம் → போகம் ]

பெரும்போக்கு

பெரும்போக்கு perumbōkku, பெ.(n.)

   1. பெருந்தன்மை; brood-mindedness liberality.

   2. சாக்காடு; death.

     [ பெரும் + போக்கு ]

போ – போகு – போக்கு. போக்கு = போதல், வழி, நடை, பழக்கம், முடிவு

பெருவங்கியம்

பெருவங்கியம் peruvaṅgiyam, பெ.(n.)

   யானைத் துதிக்கை போலும் வடிவுள்ள இசைக்குழல் (புறநா.152. உரை);; long wind instrument shaped like an elephant’s trunk.

     [பெரு + வங்கியம்]

பெருவசியம்

 பெருவசியம் peruvasiyam, பெ. (n.)

   பெருங்கவர்ச்சி; pishogue.

     [பெரும் + வசியம்]

பெருவஞ்சி

பெருவஞ்சி peruvañji, பெ. (n.)

பகைவர் நாட்டை எரிகொளுத்துவதைக் கூறும் புறத்துறை. (பு.வெ.322);

     [பெரு + வஞ்சி]

பெருவட்டம்

 பெருவட்டம் peruvaṭṭam, பெ. (n.)

   காட்டுமர வகை (வின்);; a kind of jungle tree.

     [பெரு + வட்டம்]

பெருவண்டு

 பெருவண்டு peruvaṇṭu, பெ. (n.)

   பறக்கும் தன்மை கொண்ட ஒருவகைக்குளவி; kind of flying insect of which the common kind has a narrow waist.

     [பெரும் + வண்டு]

     [P]

பெருவண்ணம்

பெருவண்ணம் peruvaṇṇam, பெ. (n.)

   இசைவகை. (பெரியபு .ஆனாய.28.);;     [பெரு + வண்ணம்]

பெருவண்ணான்

 பெருவண்ணான் peruvaṇṇāṉ, பெ. (n.)

   வண்ணாரச் சாதி வகை; an important :division of the vannān caste.

     [பெரு + வண்ணான்.]

பெருவண்மை

பெருவண்மை peruvaṇmai, பெ. (n.)

   1. பெருங்கொடை ; generosity or munticence

   2. அம்பெய்தற்குரிய நால்வகை இலக்குகளுள் பெரியதாகிய இலக்கு; a large of wide target for an arrow, one of four akku, q V.

     [பெரு + வண்மை.]

பெருவனம்

பெருவனம் peruvaṉam, பெ. (n.)

   கடல்; sea.

     ‘செறிந்த பன்மணிப்பெருவனம் (கம்பரா.முதற். 246.);

     [பெரு + வனம்]

     [பெ + SKt. vana. த. வனம்]

பெருவயிறு

பெருவயிறு peruvayiṟu, பெ. (n.)

   1. பருத்த வயிறு; pot-belly, paunch

   2. நீர்க்கோவை; dropsy, ascitis

     “பெருவயிறு வயிறுவலி படுவன்வர் (திருப்பு:790);

க. பெர் பசிறு. ம. பெருவயரு.

     [பெரு + வயிறு]

பெருவரகு

பெருவரகு peruvaragu, பெ. (n.)

வரகுவகை (விவசா.4);,

 a kind of common millet.

பெருவருத்தம்

 பெருவருத்தம் peruvaruttam, பெ. (n.)

   பெருந்துன்பம்; sadness.

     [பெரும் + வருத்தம்]

பெருவரை

பெருவரை peruvarai, பெ. (n.)

   பெருமலை; Mt. Meru.

   சிறந்த பெருவரையுடனும் (சிவதரு.கோபுர.30);;     [பெரு + வரை]

பெருவரைமீன்

 பெருவரைமீன் peruvaraimīṉ, பெ. (n.)

அறிசா (சங்.அக.); பார்க்க;see arisã a fish.

பெருவர்

பெருவர் peruvar, பெ. (n.)

பெருமையுடையவர்.

 great persons.

   பெருவரா யுறையு நீர்மையர் (தேவா.852.9);;     [பெரு – பெருவர்]

பெருவறுமை

 பெருவறுமை peruvaṟumai, பெ. (n.)

   பெருநல்குரவு; greatpoverty.

     [பெரும் + வறுமை]

பெருவலி

பெருவலி peruvali, பெ. (n.)

   1. மிகு வலிமை யுடையது; that which is very strong or powerful

     ‘ஊழிற் பெருவலி யாவுள’ (குறள்.380.);

   2. பெருநோவு (யாழ்.அக.);; excessive pain.

     [பெரு + வலி]

பெருவலிப்பு

 பெருவலிப்பு peruvalippu, பெ. (n.)

   இசிவு நோய்; convulsion.

     [பெரும் + வலிப்பு]

பெருவலிமை

 பெருவலிமை peruvalimai, பெ, (n.)

   மிகுந்த ஆற்றல்; greatstrength.

     [பெரும் + வலிமை]

பெருவலை

 பெருவலை peruvalai, பெ. (n.)

   கடலில் மீ ன் பிடிப்பவர் பயன்படுத்தும் பெரிய வலை வகை (இ.வ.); ; a large sized net used by fishermen in the Seas.

     [பெரு + வலை]

பெருவல்லுநர்

 பெருவல்லுநர் peruvallunar, பெ. (n.)

   பெருந்திறனாளர்; expert.

     [பெரும் + வல்லுநர்]

பெருவளநாடு

 பெருவளநாடு peruvaḷanāṭu, பெ.(n.)

   கடல்கொண்ட குமரிநாட்டு நிலப்பகுதி; an area in the submerged kumariland.

     [பெரு+வள+நாடு]

பெருவளவாய்

பெருவளவாய் peruvaḷavāy, பெ.(n.)

   பேராற்றுக்கால்; big channel.

     “நாட்டுக்குப் பாயும் பெருவளவாயும்” (s.I.I.II.54);;

பெருவளி

பெருவளி peruvaḷi, பெ. (n.)

   சூறாவளி (சண்டமாருதம்);; storm hurricane.

     ‘பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே’ (களவழி.24.);

     [பெரு + வளி]

பெருவளைப்பு

பெருவளைப்பு peruvaḷaippu, பெ. (n.)

   பெரிய காவல்; utmost vigilence, extreme care.

     ‘சிறுமுதுக்குறைவிதானே பெருவளைப்பிட்டுக்காத்த கற்பு’ (சீவக.2077);

     [பெரு + வளை → வளைப்பு]

பெருவள்ளி

பெருவள்ளி peruvaḷḷi, பெ. (n.)

   1. வள்ளி வகை. (பதார்த்த.437.); ; cultivated yam, mcl. diosCorea Sativa (பதார்த்த.437.); ;

   2. ஒருவகைக் கிழங்குக் கொடி; ping-stalked yam, m.cl.diosCorea alata.

     [பெரு + வள்ளி]

பெருவழக்கு

பெருவழக்கு1 peruvaḻkku, பெ. (n.)

   1. பலரும் கையாளும் முறை; largely prevalent custom or usage.

   2. எல்லா விடத்திலும் நிறைந்திருத்தல்; omnipresence.

   எங்கணும் பெருவழக்காய் (தாயு.திருவருள், விலாச.1.);;     [பெரு + வழக்கு]

 பெருவழக்கு2 peruvaḻkku, பெ. (n.)

   பொதுநெறி; common method.

     [பெரு + வழக்கு]

பெருவழி

பெருவழி peruvaḻi, பெ. (n.)

   1. பெரும்பாதை (திவா);; highroad, trunk road.

     “பெருவழி நாவற் கனியினு மெளியள்” (திவ். பெரியதி. 10.9.5); 2. வீடுபேறு;

 Path of salvation.

     “கருவழி யாக்குங் கணக்கையறுத்துப் பெருவழி யாக்கும்” (திருமந். 1374); ம. பெருவழி

     [பெரு + வழி]

பெருவழிக்கல்

பெருவழிக்கல் peruvaḻikkal, பெ.(n.)

   பழந்தமிழ் நாட்டில் வணிகப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையில் ஒரு காதத் தொலைவுக்கு (5 மைல்); ஒன்றாக நடப்பட்ட தொலைவுஎண் குறித்த கல்; mile stone (for fivemiles); erected on the high way of ancient Tamil land.

     “அதியமான் பெருவழி நாவல்தாவளத்துக்கு 29காதம்”(கல்);.

     [பெரு+வழிகள்]

பெருவாகை

பெருவாகை peruvākai, பெ. (n.)

   1. வாகை மரம்; siris, 1. tr., Albizzia lebbek.

   2. வேலிப் பருத்தி (மலை.);; Stinking swallow wort.

     [பெரு + வாகை]

பெருவாடை

பெருவாடை peruvāṭai, பெ. (n.)

பெருவளி பார்க்க;see peruvali.

யுற்ற மரங்களி னடுக்க மெய்தா (கம்பரா.மாயாசீ.59.);

     [பெரு + வாடை வட(க்கு); – வாடை]

பெருவாயன்

பெருவாயன்1 peruvāyaṉ, பெ. (n.)

   1. அலப்பு பவன்; chatterbox.

   2. கழுதை (பாலவா.); ; donkey.

     [பெரு + வாயன் வாய் – வாயன்]

 பெருவாயன்2 peruvāyaṉ, பெ. (n.)

   1. கடகப்பெட்டி (இ.வ.);; basket.

   2. பெருமத்தளி (திவ்.திருப்பள்ளி.9,வ்யா); பார்க்க;peru-mattali.

     [பெரு + வாயன்]

பெருவாயின்முள்ளியார்

 பெருவாயின்முள்ளியார் peruvāyiṉmuḷḷiyār, பெ. (n.)

   ஆசாரக்கோவை இயற்றிய புலவர்; a poet, the author of acara-k-köval.

     [பெருவாயின் + முள்ளியார் ]

பெருவாயில்

 பெருவாயில் peruvāyil, பெ. (n.)

   கோபுரம்; tower.

     [பெரு + வாயில் வாய் → வாயில்]

பெருவாய்மலர்

பெருவாய்மலர் peruvāymalar, பெ. (n.)

   இருவாட்சி ; scan jasmine.

     ‘பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து (பதிற்றுப்.81,25.);

     [பேரு + வாய்மலர்]

பெருவாரல்வலை

பெருவாரல்வலை peruvāralvalai, பெ. (n.)

   மீன் பிடிக்கும் பெரிய வலைவகை (சிலப்.14,173,அரும்);; a large fishing net

     [பெரு + வாரல் + வலை]

பெருவாரி

பெருவாரி1 peruvāri, பெ. (n.)

   1. பெரு வெள்ளம்; great food.

     ‘தாமறையிறை வீழ்த்த பெருவாரி’ (பரிபா.94); 2. மிகுதி:

 abundancee large numbers.

     [பெரு + வாரி]

 பெருவாரி2 peruvāri, பெ. (n.)

   1. பரவல் நோய்; cpidemie, pestilence.

   2. கொள்ளை நோய் வகை; bubonic plague.

     [பெரு + வாரி. வாரு – வாரி]

பெருவாரிக்காய்ச்சல்

பெருவாரிக்காய்ச்சல் peruvārikkāyccal, பெ. (n.)

பெருவாரி2 , 2 பார்க்க; see peru-vari.

     [பெருவாரி + காய்ச்சல்]

பெருவார்த்தை

பெருவார்த்தை peruvārttai, பெ. (n.)

   பெருமையுடைய உரை; great word, notable uterence.

மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர் (திவ்.நாய்ச்.11.10);

     [பெரு + வார்த்தை]

 skt vārttå → த. வார்த்தை

பெருவாழைப்பூ

 பெருவாழைப்பூ peruvāḻaippū, பெ. (n.)

   புடைவை வகை; a kind of saree.

     [பெரு + வாழைப்பூ]

பெருவாழ்வு

பெருவாழ்வு1 peruvāḻvu, பெ. (n.)

   1. நிரம்பிய பேறு; great prosperity.

     ‘சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வும் (திருப்பு.195.);

   2. பேரின்பம் (திருப்பு.751);

 heavenly bliss.

     [பெரு + வாழ்வு வாழ் – வு = வாழ்வு ‘வு’ — தொ. பெ. ஈறு.]

 பெருவாழ்வு2 peruvāḻvu, பெ. (n.)

   நல்வாழ்வு; well-being.

     [பெருமை + வாழ்வு]

பெருவிடை

பெருவிடை1 peruviḍai, பெ. (n.)

   பெருவிளக்கவிடை; large answer.

     [பெரும் + விடை]

 பெருவிடை2 peruviḍai, பெ. (n.)

   இறப்பு; death, as taking final leave.

     [பெரு + விடை]

பெருவினைத்திறம்

 பெருவினைத்திறம் peruviṉaittiṟam, பெ. (n.)

   வினையாண்மைத்திறம்; will-power.

     [பெரும் + வினைத்திறம்]

பெருவினையம்

 பெருவினையம் peruviṉaiyam, பெ. (n.)

   செய்வினை; witchcraft.

     [பெரும் + வினையம்]

பெருவியாதி

பெருவியாதி peruviyāti, பெ.(n.)

பெருநோய்2: பார்க்க: see perunoy2.

     ‘சயரோகம் பெருவியாதி (கடம்ப.4. இலீலா.115.);

     [ பெரு + SKt-Vyâdhi த.வியாதி.]

பெருவிரல்

பெருவிரல் peruviral, பெ. (n.)

   1. கட்டைவிரல்; thumb or big toe.

   2. நெல் எட்டுக்கொண்ட நீட்டலளவைவகை (சிலப்.3100 உரை);; a lineal measure of the length of a thumb = eight në|

     [பெரு + விரல்]

     [P]

பெருவிரியன்

 பெருவிரியன் peruviriyaṉ, பெ. (n.)

   விரியன் பாம்பு வகை; russell’s viper.

     [பெரு + விரியன்]

     [P]

பெருவிருந்து

பெருவிருந்து1 peruvirundu, பெ. (n.)

   சிறப்பு விருந்து; great feast.

     [பெரு + விருந்து]

 பெருவிருந்து peruvirundu, பெ. (n.)

   ஊர் விருந்து (இ.வ.);; caste-dinner, public feast.

     [பெரு + விருந்து]

பெருவிருப்பம்

 பெருவிருப்பம் peruviruppam, பெ. (n.)

   பேராவல்; earnestoesire.

     [பெரும் + விருப்பம்]

பெருவிறலாளி

பெருவிறலாளி peruviṟalāḷi, பெ. (n.)

   மிக்க வலிமையுடையவன்; very strong or powerful man.

பெருவிறலாளி யென்ன (பெரியபு. இயற்பகை.17);

     [பெரு + விறல் + ஆள் → ஆளி]

பெருவிறல்

பெருவிறல் peruviṟal, பெ. (n.)

   1. மிகுவலி; great power.

   பெருவிரல் வேந்தன் (பெருங்.. உஞ்சைக்39,40);;   2. பெருவிறலாளி (தொல். சொல்.57.உரை பார்க்க); ;   3. முருகக்கடவுள்; skanda.

ஆலமர் செல்வனணிசால் பெருவிறல் (கலித்.819);

     [பெரு + விறல்]

பெருவிறைச்சி

 பெருவிறைச்சி peruviṟaicci, பெ. (n.)

   மாட்டிறைச்சி; beef.

     [பெரு + இறைச்சி]

பெருவிலை

பெருவிலை peruvilai, பெ. (n.)

   மிக்கவிலை; great worth high price.

     “பெருவிலை யாரத்தோடு (கம்பரா. விடை 119);

     [பெரு + விலை]

பெருவிலையன்

பெருவிலையன் peruvilaiyaṉ, பெ. (n.)

   மிக்கவிலை பெறுவது; a thing of high value

     ‘பெருவிலையனான ரத்னத்தை (திவ். பெரியதி. 2. 7, 6. வ்யா);

     [பெருவிலை→ பெருவிலையன்]

பெருவிலையர்

 பெருவிலையர் peruvilaiyar, பெ. (n.)

   பெருந்தகையர்; eminent person.

     [பெருமை + விலையர்]

பெருவிள

 பெருவிள peruviḷa, பெ. (n.)

   மரவகை; tooth brush true.

     [பெரு + விளா]

பெருவிழா

பெருவிழா peruviḻā, பெ. (n.)

   பெரிய திருவிழா; great festival.

தேவர்கோற் கெடுத்த பெருவிழா’ (மணி மே 3, 34-5);

     [பெரு + விழா]

பெருவீடு

பெருவீடு peruvīṭu, பெ. (n.)

   பிற்பகலில் மாடுகளை மேய விடுகை; letting out cattle in the afternoon, for grazing.

     “சிறுவீடன்றியே பெருவீடும் விடும்படியாய்” (திவ். திருப்பள்ளி. 4. வ்யா);

     [பெரு + விடு]

பெருவு – தல்

 பெருவு – தல் peruvudal, செ.கு.வி. (v.i.)

   தூக்கத்தில் அச்சத்தாற் பிதற்றுதல்(வின்);; to talk in sleep.

     [வெருவு — பெருவு]

பெருவெக்கை

பெருவெக்கை peruvekkai, பெ. (n.)

   மாட்டு நோய்வகை (மாட்டுவா.108);; a kind of cattle disease.

பெருவெதுப்பு பார்க்க;see peruveduppu.

     [பெரு + வெக்கை]

பெருவெதுப்பு

பெருவெதுப்பு peruveduppu, பெ. (n.)

   மாட்டு நோய்வகை (மாட்டுவா.156);; a kind of cattle disease.

     [பெரு + வெதுப்பு]

வெதும்பு-வெதுப்பு

பெருவெளி

பெருவெளி peruveḷi, பெ. (n.)

   1. விரிந்த வெளியிடம்; open space.

துவாத சாந்தப் பெருவெளியில் (குமர. பிர. மீனாட் பிள்ளை 42.);

   2. திறந்தவெளி; the ethereal expanse.

   3. வாலறிவு;     [ பெரு + வெளி ]

பெருவெளிச்சம்

 பெருவெளிச்சம் peruveḷiccam, பெ. (n.)

   பொலிவுச்சுடரொளி; brightness.

     [ பெரும் + வெளிச்சம் ]

பெருவெள்ளம்

பெருவெள்ளம்2 peruveḷḷam, பெ. (n.)

   ஊழிப்பெருவெள்ளம்; the denge.

     “உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட கண்ணாளன்” (திவ் பெரியதி. 2.6.7);

     [பெரும் + வெள்ளம்]

 பெருவெள்ளம் peruveḷḷam, பெ. (n.)

   பெருமழையால் உண்டாகும் வெள்ளப் பெருக்கு; flood of a river caused by heavy rains.

     [பெரும் + வெள்ளம்]

பெருவெழுத்து

பெருவெழுத்து peruveḻuttu, பெ. (n.)

     ‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து (பஞ்சாக்கா); மந்திரத்திற் சிவபெருமானைக் குறிக்கும் ‘சி’ என்ற எழுத்து;

 letter ši in the incantation namaśīvāya indicating Siva.

பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் (கொடிக்4);

     [பெரு + எழுத்து]

பெருவேம்பு

 பெருவேம்பு peruvēmbu, பெ. (n.)

மலை வேம்பு (மூ.அ.); பார்க்க;see peru-vēmbu persian lilac.

     [ பெரு + வேம்பு ]

பெருவேளை

 பெருவேளை peruvēḷai, பெ. (n.)

   நாய்வேளை; a sticky plant that grows best in Sandly places.

     [ பெரு + வேளை ]

பெல்லம் pellam,

பெ. (n.);

வெல்லம் (இ.வ.); பார்க்க;see vellam.

க. பட பெல்ல

     [வெல்லம் – பெல்லம்]

பெறங்கவலை

 பெறங்கவலை peṟaṅgavalai, பெ. (n.)

பெருங்கண்வலை. பார்க்க: see peru-n-kanvalai.

     [பெருங்கண்வலை – பெறங்கவலை ]

பெறாப்பேறு

பெறாப்பேறு peṟāppēṟu, பெ. (n.)

   கிடைத்தற்கரிய பேறு; rare luck or fortune.

     ‘பெறாப்பேறு பெற்று வைத்து (பெரியபு. குங்கிலி.11);

     [ பெறு + ஆ பேறு ]

ஆ’ எ. ம. இ. நி.

பெறால்

 பெறால் peṟāl, பெ. (n.)

   மீன்முதுகிற் புள்ளி, (இ.வ.); ; spots on the back of a fish.

பெறு

பெறு2 peṟudal,    செ.கு.வி. (v.i);   விலைத்தகுதியுடையதாதல்; to be worth to be worthy of to fetch a price.

     “அப்பண்டம் அவ்வளவு பெறுமா?”

     [பெறு → பெறுதல்]

பெறு – தல்

பெறு – தல்1 peṟudal, செ.குன்றாவி. (v.t.)

   1. அடைதல்; to get, obtain, secure, possess.

     “கையுறப் பெற்றக்கால்” (நாலடி. 5);

   2. பேறுயிர்த்தல்; To bring forth, bear, as childran.

     ‘பெற்றாளொருபிள்ளையென் மனையாட்டி’ (தனிப்பா. 235, 1.);

   3. பிறப்பித்தல்; to be get generate.

     “தான் பெற்ற புதல்வன் (நாலடி, 197);.

   4. அறிதல்; to know.

எல்லா யாம் பெற்றேம் (பரிபா. 8, 83.);

பெறுக்கல்

பெறுக்கல் peṟukkal, பெ. (n.)

   அரிசி; rice.

     ‘முறியாப் பெறுக்கன் முப்பழம்’ (பதினொ. திருவிடை வை:16,

     [பெறு – பெறுக்கு – பெறுக்கல்]

பெறுக்கு-தல்

பெறுக்கு-தல் peṟukkudal, செ.குன்றா.வி. (v.t.)

   பொறுக்குதல்; to gather pickup, as stones.

பெறுக்கினர் சிலைகளைப் பெருஞ் சினத்தராய் (பிரபுலிங். சித்தரா, 21);

     [ பொறுக்கு – பெறுக்கு ]

பெறுதி

பெறுதி peṟudi, பெ. (n.)

   1. ஊதியம்; Gain, profit.

பெறுதி விரும்பினை யாகுவை (மணி.மே 25, 115);

   2. அடையத்தகும் பொருள்; that which is sought to be got or reached goal.

மறைகளினிநு தியிடவரிய பெறுதியை (திருப்பு. 928);.

   3. பெறுமதி பார்க்க,

     [ பெறு – பெறுதி ]

பெறுத்து – தல்

பெறுத்து – தல் peṟuddudal, செ.குன்றா.வி. (v.t.)

   அடைவித்தல்; to cause to obtain.

   நிலைபெறுத்தலும் நீக்கலும் (கம்பரா. பாயி.); 2. உண்ணுதல்; to eat.

     ‘அவற்றைப் பெறுத்திப் போந்தான் (திவ். பெரியாழ். 2.9.9);.

     [ பெறு – பெறுத்து ]

பெறுமதி

பெறுமதி peṟumadi, பெ. (n.)

   1. தகுதி; worth, value.

   2. திறமை; ability.

   3. உறுதி; Validity, security.

   4. பரிசு; prize, reward.

     [ பெறு – பெறுமதி மதி (சொ.ஆ.ஈறு.]

பெறுமாதம்

 பெறுமாதம் peṟumātam, பெ. (n.)

   பேறுகாலம் ; the month of parturition.

     [பெறு + மாதம்]

பெறுமானம்

பெறுமானம் peṟumāṉam, பெ. (n.)

   1. மதிப்பு; value.

     ‘அந்த ஆயிரம் பொன் பெறுமானமுள்ளது.

   2. கடன் தீர்க்கும் தகுதி; solvency.

அவன் பெறுமானமுள்ள புள்ளி

     [ பெறு + மானம் (சொ.ஆ.ஈறு ]

பெறுமுரி

பெறுமுரி peṟumuri, பெ.(n).

   சம்பளம்; wages.

     ‘பரிசுரத்தார் பெறுமுரியாகப் பெற்று” (S. 1. 1. iii, 30);

பெறுவது கொள்வார்

பெறுவது கொள்வார் peṟuvadugoḷvār, பெ. (n.)

   விலைமகளிர்; prostitutes.

     ‘பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் (குறள், 813);

     [ பெறுவது + கொள்வார்ன ]

பெற்றதகப்பன்

 பெற்றதகப்பன் peṟṟadagappaṉ, பெ. (n.)

   தந்தை; father

பெற்றதகப்பன் என்பது செஞ்ஞாயிறு என்பது போன்றது. பெற்ற என்பது இனமில்அடைமொழி.

     [பெற்ற + தகப்பன்]

பெற்றதாய்

பெற்றதாய் peṟṟatāy, பெ. (n.)

   பெற்றெடுத்த தாய்; own mother.

பெற்றதாய் நீயே (திவ்.இயற்.பெரியதிருவந்:5);

பேணிவளர்ப்பவளாகிய செவிலியும் தாய் எனப்படுதலின் ‘பெற்ற தாய்’ என்பதில் உள்ள பெற்ற என்பது இன அடையாம்.

     [பெற்ற + தாய்]

பெற்றபிள்ளை

பெற்றபிள்ளை beṟṟabiḷḷai, பெ. (n.)

   சொந்த மக-ன்-ள்; own child.

தாமரையோன் பெற்ற பிள்ளையை (திருக்கோ.129);

     [பெற்ற + பிள்ளை]

பிள்ளை = தாய் வயிற்றிலிருந்து பிரிந்தது

பெற்றம்

பெற்றம் peṟṟam, பெ. (n.)

   1. பெருமை; greatness.

பெற்றமாளிகை (திவ்.பெரிய.10,1.10);

   2. காற்று; wind air.

பெற்றம் பெற்றவன் (பாரத.வாரணா.11.);

   3. மாடு (தொல்.பொ.594);; bull or cow.

   4. எருமை (தொல். சொல்.408, உரை);; buffalo.

   5. விடையோரை; tauras of the zodiac.

     [பெறு (பேறு பெற்று – பெற்றம்]

பெற்றவன்

பெற்றவன் peṟṟavaṉ, பெ. (n.)

   தகப்பன்; father.

பெற்றவ னாளித்த மோலி யிளையவன் பெற’ (கம்பரா.விபீட.136);

     [பெற்ற + அவன்]

பெற்றவர்

பெற்றவர் peṟṟavar, பெ. (n.)

பெற்றோர் பார்க்க: see perror.

     ‘பித்தர் போற் பின்றொடர்ந்தனர் பெற்றவர் (பிரபுலிங். வசவண்.3);

     [பெற்ற + அவர்]

பெற்றான்

பெற்றான் peṟṟāṉ, பெ. (n.)

பெற்றவன் பார்க்க;see perravan

   2. கணவன்; husband.

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் (குறள்.58);

     [பெறு → பெற்றான்]

பெற்றார்

பெற்றார் peṟṟār, பெ. (n.)

பெற்றோர் பார்க்க; see perror.

     ‘பெற்றார் தளைகழல’ (திவ்.இயற்.1:20);

     [பெற்றோர் → பெற்றார்.]

பெற்றி

பெற்றி peṟṟi, பெ. (n.)

   1. இயல்பு; nature: natural property.

     “பெற்றி பிழையா தொருநடையாகுவர் சான்றோர் (நாலடி.343.);

   2. தன்மை; character, quality.

உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்’ (குறள்.442.);

   3. வகை; method, manner. order.

     ‘அப்பெயர் புணர்ந்த பெற்றியும் (காசிக.பஞ்சநத.1.);

   4. செயன்முறை; course of action.

   மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி;   5. பெருமை; greatness, esteem.

   6. நிகழ்ச்சி; event, occurrence.

     ‘உற்றபெற்றி யுணர்த்துவாம்’ (கம்பராகைகேசி.63.);

   7. பேறு; acquisition, boo.

     ‘யோகத்தின் பெற்றியாலே (கம்பரா சவரி.8.);

   8. நோன்பு (விரதம்);; fasting.

     ‘பெறுகதில் லம்மவிவ் வூருமோர் பெற்றி (சிலப்.குன்றக்.);

     [பெறு → பெற்றி ]

பெற்றிமை

பெற்றிமை peṟṟimai, பெ. (n.)

   1. பெற்றி 5. பார்க்க: see perri,

பெற்ற மேறுதல் பெற்றி மையோ (தேவா,488.10.

   2. செய்யவேண்டு முறை; conduct, behaviour.

பெற்றிமை யொன்றறியாத, தக்கனது (தேவா.622.6);

   3. சாதி; class division.

பேதாய் திதியாகும் பெற்றிமையின் (சி.போ.1,1,1);

     [பெற்றி – பெற்றிமை]

பெற்று

பெற்று peṟṟu, பெ. (n).

   1. பெருக்கம் (தொல்.சொல்.305); ; bigness, greatness.

   2. அடுக்கு; pile.

   3. சாய்கால்; influence.

     ‘அவன் பக்கற் பெற்றுடையரா யிருப்பர்களிறே (ஈடு,6,10,2.

   4. எருது; bill.

பெற்றொன் றேறி (தேவா,428,8…);

     [ பெறு – பெற்று ]

பெற்றேரை

பெற்றேரை peṟṟērai, பெ. (n.)

பொற்றோரை (சீவக. 2132, பி. ம்); பார்க்க;see porrora.

     [பொன் + தோரை → தேரை]

பெற்றோர்

 பெற்றோர் peṟṟōr, பெ. (n.)

   சிறந்த பேறுபெற்ற தாய் தந்தையர்; parents.

     [ பெறு – பெற்ற + அவர் பெற்றவர் – பெற்றோர். ]

பெலப்பாடி

 பெலப்பாடி pelappāṭi, பெ. (n.)

   சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk.

     [பூலாம்+பாடி]

பெலாந்துரை

 பெலாந்துரை pelāndurai, பெ.(n.)

   விருத்தாசலம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Vriddhachalam Taluk,

     [பூலான்+துறை]

பெல்ட்

பெல்ட் pelṭ, பெ. (n.)

   1. வார்; waist-band.

   2. அரைக்கச்சை; strap of leather.

     [E. belt → த. பெல்ட்.]

பெல்லி

பெல்லி1 pelli, பெ. (n.)

   துறட்டின் முனைக் கொக்கி(யாழ்ப்.);; hook tied to the end of a pole.

தெ. பெல்ல

பிளந்த வாயையுடைய கருவி

பில் → பிள் → புள் → புல் → பெல் → பெல்லி ‘இ’ வினைமுதலீறு

 பெல்லி2 pelli, பெ. (n.)

   சூனியவித்தை; witchcraft, magic.

அவளைப் பில்லி அடித்துவிட்டது.

     [பில்லி → பெல்லி]

பெள

 பெள peḷa,    தமிழ் நெடுங்கணக்கில் ‘ப்’ என்ற என்ற மெய்யெழுத்தும் ‘ஒள’ என்ற உயிரெழுத்தும் சேர்ந்து உண்டான உயிர் மெய்யெழுத்து; the compound of ப் and ஒள. (செ.அக).

     [ப் + ஒள → பெள]

பெளகண்டம்

பெளகண்டம் peḷagaṇṭam, பெ.(n.)

   ஆறு முதல் பத்து அகவை (வயது); வரையுள்ள குழந்தைப் பருவம் (விசாரசந். பக்.343);; period in the life of a child, between the ages of six and ten.

     [Skt. {} → த. பௌகண்டம்.]

பெளசம்

 பெளசம் peḷasam, பெ.(n.)

   சுறவ (தை); மாதம் (வின்.);; the lunar month of Tai.

     [Skt. pausa → த. பௌசம்.]

பெளசிகம்

பெளசிகம்1 peḷasigam, பெ.(n.)

பெளடியம்1 பார்க்க;see {}.

 பெளசிகம்2 peḷasigam, பெ.(n.)

பெளடியம்2 பார்க்க;see {}.

பெளசியம்

பெளசியம்1 peḷasiyam, பெ.(n.)

   பெளடியம் (வின்.);; a Purana.

 பெளசியம்2 peḷasiyam, பெ.(n.)

   வருங்காலம்; the future.

     “பெளசியப் பிரதிபந்தம்” (பஞ்சதசப்.பக்.84);.

     [Skt. bhavsyat → த. பௌசியம்.]

பெளசுதாரி

 பெளசுதாரி peḷasutāri, பெ.(n.)

   குற்ற நேர் கேட்புக்குரிய (விசாரணைக்குரிய);வன் (C.G.);; magisterial, criminal.

     [U. faujddri → த. பெளசுதாரி.]

பெளசுதாரிக்கட்டளை

 பெளசுதாரிக்கட்டளை peḷasutārikkaṭṭaḷai, பெ.(n.)

   குற்றச்சாட்டு நடவடிக்கை (C.G.);; criminal proceedings.

     [U. {} → த. பெளசுதாரி+கட்டளை.]

பெளஞ்சு

 பெளஞ்சு peḷañju, பெ.(n.)

பவுஞ்சு பார்க்க (வின்.);;see {}.

     [U. fauz → த. பெளஞ்சு.]

பெளடிகம்

பெளடிகம்1 peḷaḍigam, பெ.(n.)

பெளடியம்1 பார்க்க (திவா.);;see {}.

 பெளடிகம்2 peḷaḍigam, பெ.(n.)

பெளடியம்2 பார்க்க (திவா.);;see paudiyam.

பெளடியம்

பெளடியம்1 peḷaḍiyam, பெ.(n.)

   இருக்கு மறை (வேதம்); (கலித்.கடவுள்.உரை);; rig {}.

     [Skt. bahvrc → த. பௌடியம்.]

 பெளடியம்2 peḷaḍiyam, பெ.(n.)

பவிடிய புராணம் (திவா.); பார்க்க;see {}.

     [Skt. bhavisyat → த. பௌடியம்.]

பெளட்கரம்

பெளட்கரம் peḷaṭkaram, பெ.(n.)

   1. சிவனிய துணைத் தொன்மங்களுள் ஒன்று; a secondary Saiva Agama.

   2. பாஞ்சராத்திர சங்கிதைகளு ளொன்று; a {} Samhita.

     [Skt. pauskara → த. பௌட்கரம்.]

பெளட்டிகம்

பெளட்டிகம் peḷaṭṭigam, பெ.(n.)

   1. பவுட்டிகம் பார்க்க (சங்.அக.);;see {}, a ceremony.

   2. நிலத்தில் விழுமுன் தாமரை யிலையில் ஏந்திய பசுஞ்சாணம் (சைவச. பொது. 169, உரை);; cow dung gathered on a lotus-leaf before it falls to the ground.

     [Skt. {} → த. பௌட்டிகம்.]

பெளண்டரிகம்

 பெளண்டரிகம் peḷaṇṭarigam, பெ.(n.)

   ஈகம் (பவுண்டரிகம்);; a sacrifice.

     [Skt. {} → த. பௌண்டரிகம்.]

பெளண்டிரம்

பெளண்டிரம் peḷaṇṭiram, பெ.(n.)

   1. ஒரு நாடு (வின்.);; a country, said to include part of South Bihar and Bengal.

   2. பவுண்டம் பார்க்க;see {}.

     [Skt. {} → த. பௌண்டிரம்.]

பெளண்டிரவம்

 பெளண்டிரவம் peḷaṇṭiravam, பெ.(n.)

   பாஞ்சாலிக் கொடி எனும் ஒரு வகைக் கொடி; a kind of climber. (சா.அக.);.

பெளண்டு

பெளண்டு1 peḷaṇṭu, பெ.(n.)

   1. பவுண்டு1 பார்க்க;see {}.

   2. பவுன், 1 பார்க்க;see {}, 1.

     [E. pound → த. பெளண்டு.]

 பெளண்டு2 peḷaṇṭu, பெ.(n.)

பவுண்டு2 பார்க்க;see {}.

     [E. pound → த. பெளண்டு.]

பெளதிகக்கவர்ச்சி

 பெளதிகக்கவர்ச்சி peḷadigaggavarcci, பெ.(n.)

   வேதியியல் கவர்ச்சி; chemical attraction of atoms of the element of others resulting in chemical compound (சா.அக.);.

     [பெளதிகம்+கவர்ச்சி.]

பெளதிகக்கிரணம்

 பெளதிகக்கிரணம் peḷadigaggiraṇam, பெ.(n.)

   வேதியல் கதிர்; chemical ray (சா.அக.);.

     [பெளதிகம்+கிரணம்.]

பெளதிகக்கூட்டு

 பெளதிகக்கூட்டு peḷadigagāṭṭu, பெ.(n.)

   வேதியியற் கலவை; chemical composition (சா.அக.);.

     [பெளதிகம்+கூட்டு.]

பெளதிகக்கூட்டுப்பாடு

 பெளதிகக்கூட்டுப்பாடு peḷadigagāṭṭuppāṭu, பெ.(n.)

   வேதியியல் கலவை; chemical composition (சா.அக.);.

     [பெளதிகம்+கூட்டுப்பாடு.]

பெளதிகக்கூறுபாடு

 பெளதிகக்கூறுபாடு peḷadigagāṟupāṭu, பெ.(n.)

   வேதியியல் கூர்ந்தாய்வு; chemical analysis (சா.அக.);.

     [பெளதிகம்+கூறுபாடு.]

பெளதிகசந்தி

 பெளதிகசந்தி peḷadigasandi, பெ.(n.)

   வேதியியல் இணைவு; chemical union (சா.அக.);.

     [பெளதிகம்+சந்தி.]

பெளதிகசரக்கு

 பெளதிகசரக்கு peḷadigasaraggu, பெ.(n.)

   வேதியியல் மருந்துவகை; chemical drug as delirium. (சா.அக.);.

     [பெளதிகம்+சரக்கு.]

பெளதிகசரீரம்

பெளதிகசரீரம் peḷadigasarīram, பெ.(n.)

   1. பூதவுடம்பு; physical body.

   2. ஐம்பூதத்திற் குரிய வுடம்பு; body consisting of elements (சாஅக.);.

     [பெளதிகம்+சரீரம்.]

பெளதிகசாத்திரம்

 பெளதிகசாத்திரம் peḷadigacāddiram, பெ.(n.)

   இயற்கைத் தத்துவநூல்; physical science.

த.வ. இயற்பியல்

     [Skt. bhautika+{} → த. பெளதிகசாத்திரம்.]

பெளதிகஞானம்

பெளதிகஞானம் peḷadigañāṉam, பெ.(n.)

   1. ஐம்பூதத் தொடர்பான வுடம்பிற்குரிய அறிவு; wisdom of man in his physical body.

   2. புத்த மதத்திற் கூறிய அறிவு; the eminence of wisdom related to Buddhistic philosophy.

     [பெளதிகம்+ஞானம்.]

பெளதிகன்

 பெளதிகன் peḷadigaṉ, பெ.(n.)

சிவபிரான் (யாழ்.அக.);;{}.

     [Skt. bhautika → த. பௌதிகன்.]

பெளதிகபரீட்சைசாலை

 பெளதிகபரீட்சைசாலை beḷadigabarīṭcaicālai, பெ.(n.)

   வேதியியல் ஆராய்ச்சி செய்யுமிடம்; chemical laboratory (சா.அக.);.

     [பெளதிகம்+பரீட்சைசாலை.]

பெளதிகபாவனை

 பெளதிகபாவனை peḷadigapāvaṉai, பெ.(n.)

   கடவுளை உருவனாக ஊழ்கம் செய்கை (சங்.அக.);; meditation of God, as having form.

     [Skt. bhautika → த. பௌதிகபாவனை.]

பெளதிகபிரிவினை

 பெளதிகபிரிவினை beḷadigabiriviṉai, பெ.(n.)

   வேதியியல் விதிப்படி ஒரு பொருளி லிருந்து பிரிதல்; chemical decomosition (சா.அக.);.

பெளதிகபுலன்

 பெளதிகபுலன் beḷadigabulaṉ, பெ.(n.)

   ஐம்புலனிலொன்று; one of the five physical senses (சா.அக.);.

பெளதிகப்பிரமசாரி

பெளதிகப்பிரமசாரி peḷadigappiramacāri, பெ.(n.)

   மாணிய நோன்பு முடித்து மணம் புரிவோன் (சிவதரு.பரி.2, உரை);; Brahmin

 youth who marries upon the completion of his duties as a Brahmacarin.

     [பெளதிகம்+பிரமசாரி.]

பெளதிகமங்கை

 பெளதிகமங்கை peḷadigamaṅgai, பெ.(n.)

   பொன்னாங்கண்ணி என்னும் மூலிகை; sessile plant (சா.அக.);.

     [பெளதிகம்+மங்கை.]

பெளதிகம்

பெளதிகம் peḷadigam, பெ.(n.)

   1. ஐம்பூதத் தொடர்பானது; that which pertains to the five elements; that which is physical.

     “தேகங்களத்தனையு மோகங் கொள் பெளதிகம்” (தாயு.பரிபூ.2);.

   2. உலகம் (வின்.);; the world.

பெளதிகயோகசந்நியாசி

 பெளதிகயோகசந்நியாசி peḷadigayōgasanniyāsi, பெ.(n.)

   பெளதிக பாவனைச் செய்வோன் (சங்.அக.);; ascetic practising pautika-{}.

     [பெளதிகம்+ஒகம்+சந்நியாசி.]

பெளதிகவாதம்

பெளதிகவாதம்1 peḷadigavādam, பெ.(n.)

   உலோகாயதமதம் (பிரபஞ்சவி);; materialism.

     [Skt. bhautika+ {} → த. பௌதிகவாதம்.]

 பெளதிகவாதம்2 peḷadigavādam, பெ.(n.)

   வேதியியல் நூல்; chemistry (சா.அக.);.

     [பெளதிகம்+வாதம்.]

பெளதிகவாதி

 பெளதிகவாதி peḷadigavādi, பெ.(n.)

   வேதியியல் வல்லுநர்; chemist (சா.அக.);.

     [பெளதிகம்+வாதி.]

பெளதிகாசாரியன்

 பெளதிகாசாரியன் peḷadikācāriyaṉ, பெ.(n.)

   மூத்த குருக்களின் உதவியாளன்; assistant to the head priest.

     [பெளதிகம்+ஆசாரியன்.]

பெளத்தன்

பெளத்தன் peḷattaṉ, பெ.(n.)

   1. புத்த சமயத்தான் (திவா.);; Buddhist.

   2. பெளத் தாவதாரம் (பிங்.); பார்க்க;see {}.

     [Skt. Bauddha → த. பௌத்தன்.]

பெளத்தம்

 பெளத்தம் peḷattam, பெ.(n.)

   புத்தமதம் (சூடா.);; Buddhism.

     [Skt. Bauddha → த. பௌத்தம்.]

பெளத்தரதாமரை

 பெளத்தரதாமரை peḷattaratāmarai, பெ.(n.)

   குளிர்தாமரை; lotus (சா.அக.);.

பெளத்தரன்

பெளத்தரன் peḷattaraṉ, பெ.(n.)

பெளத்திரன்1 (யாழ்.அக.); பார்க்க;see {}.

பெளத்தாவதாரம்

 பெளத்தாவதாரம் peḷattāvatāram, பெ.(n.)

   திருமாலின் தோற்றரவுகளில் ஒன்று (பிங்.);; Buddha an incarnation of {}.

     [Skt. buddha+avatara → த. பௌத்தாவதாரம்.]

பெளத்தி

 பெளத்தி peḷatti, பெ.(n.)

   இறப்பு (வின்.);; death.

     [U. faut → த. பெளத்தி.]

பெளத்திரத்தினை

 பெளத்திரத்தினை peḷattirattiṉai, பெ.(n.)

   மஞ்சள் தினை; yellow Itallian millet (சா.அக.);.

பெளத்திரநெல்லி

 பெளத்திரநெல்லி peḷattiranelli, பெ.(n.)

   அரிநெல்லி; joose-berry. (சா.அக.);;

     [p]

பெளத்திரன்

பெளத்திரன்1 peḷattiraṉ, பெ.(n.)

   மகன் வழிப் பேரன்; grandson who is a son’s son.

     “உம்பத்திர பெளத்திரர் தங்களுக்கும்… அருந்துயரில்லையே” (உத்தாரா.திருவோலக். 20);.

     [Skt. pautra → த. பௌத்திரன்.]

 பெளத்திரன்2 peḷattiraṉ, பெ.(n.)

   தூய்மை யானவன் (யாழ்.அக.);; holly person.

     [Skt. பவித்ரம் → பவித்ரன் → பெளத்திரன்.]

பெளத்திரபோளம்

 பெளத்திரபோளம் peḷattirapōḷam, பெ.(n.)

கரியபோளம் பார்க்க;see kariya-{} (சா.அக.);.

பெளத்திரப்புல்

 பெளத்திரப்புல் peḷattirappul, பெ.(n.)

   தருப்பைப் புல்; sacrificial or sacred grass.

பெளத்திரமுருங்கை

 பெளத்திரமுருங்கை peḷattiramuruṅgai, பெ.(n.)

   புனல் முருங்கை; a kind of drumstick (சா.அக.);.

பெளத்திரம்

பெளத்திரம்1 peḷattiram, பெ.(n.)

   சிறுநீரக (பவுத்திர); நோய்; urinary fistula.

     [Skt. bhagandara → த. பெளத்திரம்.]

 பெளத்திரம்2 peḷattiram, பெ.(n.)

   பவித்திரம்1,1 (யாழ்.அக.);; sacredness;

 purity.

     [Skt. pavitra → த. பௌத்திரம்2.]

 பெளத்திரம்3 peḷattiram, பெ.(n.)

   1. பெளத்திர ரோகம் பார்க்க;see {}.

   2. மூலத்தில் (வாயு); கண்டு மேகநீர் உண்டாகிப் புரையோடிச் சீழ்ப் பாய்ச்சல் கண்டு முளைவிழும் ஒருவகை நோய்; fistula in anus due to other causes than venereal (சா.அக.);.

பெளத்திரரோகம்

 பெளத்திரரோகம் peḷattirarōkam, பெ.(n.)

   சிற்றின்பத்தினால் கனல் மிகுதியாகிப் படை யுண்டாகிப் புணர்உறுப்பிற்கும் எருவாய்க்கும் இடையில் கொடியில் அடிநரம்பின் மேலாவது அதன் இரு பக்கத்திலாவது, அண்டம், அபானவாயு ஆகிய இவைகளிலாவது நமைச்சலெடுத்து வீங்கி நொந்து கொப் புளித்து சீழும் சலமும் வடிந்து பிறகு புரையோடி நரம்பழுகி, கண்கள் உண்டாகி அதன் வழியே சிறுநீரும் மலமும் இறங்கி அதனால் உடம்பு மெலிந்து சாப்பாடு செல்லாது களைப்பை யுண்டாக்கும் ஒரு வகை மூலநோய்; a deep narrow sinuous ulcer extending between the surface of the body and internal an cavity near the anus said to have been caused by accumulation of venereal secreations due to excess of heat caused by sexual intercourse (சா.அக.);.

     [பெளத்திரம்+ரோகம்.]

பெளத்திரவிரல்

 பெளத்திரவிரல் peḷattiraviral, பெ.(n.)

   மோதிர விரல்; ring finger (சா.அக.);.

     [பெளத்திரம்+விரல்.]

பெளத்திராயம்

 பெளத்திராயம் peḷattirāyam, பெ.(n.)

செந்திராய் பார்க்க;see {} (சா.அக.);.

பெளத்திராவம்

 பெளத்திராவம் peḷattirāvam, பெ.(n.)

   ஊதளை; physic nut plant (சா.அக.);.

பெளத்திரி

 பெளத்திரி peḷattiri, பெ.(n.)

   மகன் வயிற்று மகள்; grand daughter who is a son’s daughter.

     [Skt. pautri → த. பெளத்திரி.]

பெளத்துவம்

 பெளத்துவம் peḷattuvam, பெ.(n.)

   பச்சை மணிக்கல் (மரகதம்);; a precious gem;

 emerald (சா.அக.);.

பெளந்திரம்

 பெளந்திரம் peḷandiram, பெ.(n.)

   மூலநோய்; piles.

     [Skt. bhagandara → த. பௌந்திரம்.]

பெளனர்ப்பவன்

பெளனர்ப்பவன் peḷaṉarppavaṉ, பெ.(n.)

   புத்திரர் பன்னிரு வகையினருள் ஒருத்தியிடம் முதற்கணவனுக்குப் பிறந்தவனும் கைம்பெண் ணானபின் அவளை மணந்த இரண்டாங் கணவனால் மகனாகக் கருதப்படுபவனுமான மகன் (ஏலாதி.31);; son born to a woman by her first husband considered as a son of the husband who marries her on her widowhood one of 12 {}.

     [Skt. paunarbhava → த. பெளனர்ப்பவன்.]

பெளன்

 பெளன் peḷaṉ, பெ.(n.)

   பொற்காசு, பவுன்; pound sterling.

     [E. pound → த. பெளன்.]

     [p]

பெளமசுநானம்

 பெளமசுநானம் peḷamasunāṉam, பெ.(n.)

   தூய்மையான அரசு துளசி முதலிய மரஞ் செடிகளின் அடிமண்ணை உடல்மீது தூவிக் கொள்ளுவதான குளியல் (வின்.);; purification by sprinkling with dust taken from the vicinity of sacred trees, shrubs, etc.

     [Skt. bhauma+{} → த. பௌமசுநானம்.]

பெளமன்

பெளமன் peḷamaṉ, பெ.(n.)

   1. செவ்வாய்; the planet Mars, as the son of Earth.

     “பெளமனுக்கான செழுமண்” (அறப்.சத.50);.

   2. நரகாசுரன் (யாழ்.அக.);; Narahasura.

     [Skt. bhauma → த. பெளமன்.]

பெளமம்

பெளமம்1 peḷamam, பெ.(n.)

   நிலம் தொடர் பானது (வின்.);; that which is produced in or related to the earth.

     [Skt. bhauma → த. பௌமம்.]

 பெளமம்2 peḷamam, பெ.(n.)

   நிலத்திற் பிறப்பன; physical bodies (சா.அக.);.

பெளமி

 பெளமி peḷami, பெ.(n.)

   நிலமகளின் புதல்வி யாகிய சீதை (சங்.அக.);; Sita, as daughter of the Earth.

     [Skt. bhaumi → த. பௌமி.]

பெளரகம்

பெளரகம்1 peḷaragam, பெ.(n.)

   நகரை யடுத்தப் புறச்சோலை (யாழ்.அக.);; grove adjoining a city.

     [Skt. pauraka → த. பௌரகம்.]

 பெளரகம்2 peḷaragam, பெ.(n.)

   நொச்சி; a garden plant, chastity plant (சா.அக.);.

பெளரன்

 பெளரன் peḷaraṉ, பெ.(n.)

   நகரத்தில் வாழ்பவன்; urban man.

     [Skt. paura → த. பௌரன்.]

பெளராணிகன்

பெளராணிகன் peḷarāṇigaṉ, பெ.(n.)

   1. தொன்மக் கொள்கையுடையவன் (சி.சி.1, 1 மறைஞா.7);; one who follows the {}.

   2. தொன்மக்கதைகளை எடுத்துரைப்பவன்; one who expounds the {} stories.

     [Skt. pauranika → த. பெளராணிகன்.]

பெளராணிகமதம்

 பெளராணிகமதம் peḷarāṇigamadam, பெ.(n.)

   தொன்மத்தைப் பின்பற்றும் சமயம்; a system of doctrines founded on the {}.

     [Skt. {} → த. பெளராணிகம்+மதம்.]

பெளராணிகமந்திரம்

 பெளராணிகமந்திரம் peḷarāṇigamandiram, பெ.(n.)

   ஓங்காரம் சேராத மந்திரம் (யாழ்.அக.);; mantra without pranava.

     [Skt. {} → த. பௌராணிகம்+மந்திரம்.]

பெளராணிகம்

 பெளராணிகம் peḷarāṇigam, பெ.(n.)

பெளராணிகச்சமயம் (வின்.); பார்க்க;see {}.

     [Skt. {}+ → த. பெளராணிகம்+சமயம்.]

பெளரி

 பெளரி peḷari, பெ. (n.)

   பெரும் பண் வகை; a musical mode, one of perum. pan, q.v

 பெளரி peḷari, பெ.(n.)

   பெரும்பண்வகை (பிங்.);; a musical, mode, one of perum-pan.

பெளரிகன்

 பெளரிகன் peḷarigaṉ, பெ.(n.)

   குபேரன் (யாழ்.அக.);; Kubera.

     [Skt. bhaurika → த. பௌரிகன்.]

பெளரிக்காய்

 பெளரிக்காய் peḷarikkāy, பெ.(n.)

   சவுரிக்காய்; fruit of climber (சா.அக.);.

பெளருசத்துவம்

 பெளருசத்துவம் peḷarusattuvam, பெ.(n.)

   ஆண் தன்மை; manly power.

பெளருசம்

 பெளருசம் peḷarusam, பெ.(n.)

   ஆண்டகைமை (வின்.);; manliness, nobleness.

     [Skt. paurusa → த. பெளருசம்.]

பெளருசேயம்

பெளருசேயம் peḷarucēyam, பெ.(n.)

   மாந்தனாற் செய்யப்பட்டது (சி.சி.அளவை.13, சிவாக்.);; that which is man made.

     [Skt. {} → த. பௌருசேயம்.]

பெளரைக்கல்

 பெளரைக்கல் peḷaraikkal, பெ.(n.)

   கற்சிட்டம்; over burnt brick (சா.அக.);.

பெளரோகித்தியம்

 பெளரோகித்தியம் peḷarōkittiyam, பெ.(n.)

   போற்றாளித்துவம் (வின்.);; priesthood.

     [Skt. {} → த. பௌரோகித்தியம்.]

பெளர்ணசந்திரன்

 பெளர்ணசந்திரன் peḷarṇasandiraṉ, பெ.(n.)

   நிறைமதி; full moon.

     [Skt. {} → த. பௌர்ணசந்திரன்.]

பெளர்ணமாசம்

 பெளர்ணமாசம் peḷarṇamācam, பெ.(n.)

   நிறை நிலா நாளில் (பெளர்ணமி); செய்யும் வேள்வி; sacrifice on a full moon day.

     [Skt. {} → த. பௌர்ணமாசம்.]

பெளர்ணமி

 பெளர்ணமி peḷarṇami, பெ.(n.)

   நிறைமதி நாள்; full moon day.

த.வ. முழு நிலவு

     [Skt. {} → த. பௌர்ணமி.]

பெளர்ணமிச்சந்துக்கட்டு

 பெளர்ணமிச்சந்துக்கட்டு peḷarṇamiccandukkaṭṭu, பெ.(n.)

   நோயாளிக்கு ஆகாததாகக் கருதப்படும் நிறைமதி நாளும் அதற்கு முன்னும் பின்னுமுள்ளனவுமான நாள்கள்; the full moon day and the days just before and after the full moon, as unfavourable to patients.

     [Skt. {} → த. பெளர்ணமி+சந்துக் கட்டு.]

பெளர்ணிமை

 பெளர்ணிமை peḷarṇimai, பெ.(n.)

பெளர்ணமி (சங்.அக.); பார்க்க;see {}.

பெளலசுதியன்

பெளலசுதியன் peḷalasudiyaṉ, பெ.(n.)

   1. இராவணன்;{}.

   2. குபேரன்;{}.

     [Skt. paulastya → த. பெளலசுதியன்.]

பெளலுருவி

பெளலுருவி peḷaluruvi, பெ. (n.)

   மரஞ் செடிகளில் ஒட்டி வளரும் பூடுவகை; honey suckle mistletoe.

     “கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் போல்” (இராமநா. அயோத், 20);

     [ புல்லுருவி → பெளலுருவி]

 பெளலுருவி peḷaluruvi, பெ.(n.)

   புல்லுருவி; honey suckle mistletoe.

பெளளி

பெளளி peḷaḷi, பெ. (n.)

   ஒரு வகையான பண்; a melody type.

     [புவானி-பெளணி-பெளளி]

 பெளளி peḷaḷi, பெ.(n.)

   பண் (இராக); வகை (பாத. இராக.56);; a specific melody-type.

பெளழியசரணத்தார்

 பெளழியசரணத்தார் peḷaḻiyasaraṇattār, பெ.(n.)

   இருக்குவேதிகள்; Rg {}.

     [Skt. bahurc → த. பௌழியசரணத்தார்.]

பெளழியசரணம்

பெளழியசரணம் peḷaḻiyasaraṇam, பெ.(n.)

பௌடியம்1 பார்க்க;see {}.

     [Skt. bahurc → த. பௌழியசரணம்.]

பெளழியன்

பெளழியன்1 peḷaḻiyaṉ, பெ.(n.)

சேர மன்னனான பூழியன்;{}

 king.

     [Skt. bahura → த. பௌழியன்.]

 பெளழியன்2 peḷaḻiyaṉ, பெ.(n.)

   இருக்கு மறையில் வேதத்தால் விவரிக்கப்படுபவனான கடவுள்; God as described in the Rig {}.

     “சந்தோகன் பௌழியன்” (திவ்.பெரியதி.5,5,9);.

     [Skt. bahurc → த. பௌழியன்.]

பெளழியம்

பெளழியம் peḷaḻiyam, பெ.(n.)

பெளடியம்1 பார்க்க;see {}.

     “சந்தோகா பெளழியா” (திவ்.பெரியதி.7,7,2);.

பெளவனிகை

பெளவனிகை peḷavaṉigai, பெ.(n.)

பதினாறுக்குமேல் ஐம்பதுக்கு உட்பட்ட பெண்;(சங்.அக.);

 women between the age of 16 and 50.

     [Skt. yauvanika → த. யௌவனிகை]

     [K. ragale → த. ரகளை]

பெளவம்

பெளவம்1 peḷavam, பெ.(n.)

பவ்வம்1 (சூடா.); பார்க்க;see pavvam.

     [Skt. parvan → த. பௌவம்1.]

 பெளவம்2 peḷavam, பெ.(n.)

   1. பவ்வம்2 பார்க்க;see pavvam.

     “திறை பிறழிய விரும்பெளவத்து” (பொருந.178);.

   2. ஆழம்; deep.

     “பெளமார் கடல்” (தேவா.556, 8);.

   3. உப்பு (யாழ்.அக.);; salt.

 பெளவம்3 peḷavam, பெ.(n.)

   1. கடல்; sea;

 ocean.

   2. உப்பு; salt.

   3. நுரை; forth.

   4. நீர்க்குமிழ்; water bubble (சா.அக.);.

பெள்

பெள்2 peḷtalpeṭṭal, செ.குன்றாவி. (v.t.)

   1. விரும்புதல்; to desire.

   பிரித்தலும் பெட்டலும் (தொல்.பொ.147); 2. காதலித்தல்; to lowe.

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை (குறள்.141);

   3. நினைத்தல்; to intend.

பெட்டவைசெய்யார் (இனி.நாற்.23);

     [பிள் → பெள் + தல் — பெட்டல்]

பெள்’-தல் (பெட்டல்)

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

பெள்ளாதி

 பெள்ளாதி peḷḷāti, பெ. (n.)

   அவினாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Avanashi Taluk.

     [வல்லாளி-பெல்லாளி-பெள்ளாதி]