தலைசொல் | பொருள் |
---|---|
புகடி | புகடி pugaḍi, பெ. (n.) சிற்ப நூல்கள் கூறும் ஒரு காதணி; an ear ornament of women. [புகு-புகடி] |
புகல்பண் | புகல்பண் pugalpaṇ, பெ. (n.) பண் வகையினுள் ஒன்று; a melody type. [புகல்-பண்] |
புகார் | புகார் pukār, பெ. (n.) 1. பெருங்கூச்சல்; loud noise. 2. குறையீடு; report. |
புகையர்சுடுநீறு | புகையர்சுடுநீறு pugaiyarcuḍunīṟu, பெ. (n.) சுடுகாட்டுச் சாம்பல்; ash of the burning pure. [புலையர் + சுடு + நீறு.] |
புக்கிளி | புக்கிளி pukkiḷi, பெ.(n.) கோரையை இரண்டாகக் கிழிக்கும் கருவி; a cleaver. [பிய்த்தல்-பிக்கல்-புக்கிரி] |
புங்கத்துறை | புங்கத்துறை puṅgattuṟai, பெ. (n.) தாராபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Dharapuram Taluk. [புங்கன்+துறை] |
புங்கமடுவு | புங்கமடுவு puṅgamaḍuvu, பெ. (n.) சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk. [புங்கன்+மடுவு] |
புங்கவாடி | புங்கவாடி puṅgavāṭi, பெ.(n.) ஆத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Attur Taluk. [புங்கன்+வாடி] |
புசபலம் | புசபலம் busabalam, பெ.(n.) தோள்வலிமை; strength of arm. “உன்னையரியாதே தன் வரபல புசபலங்களை விசுவசித்திருக்கும் மதிகேடன்” (திவ். திருச்சந். 25, வியா.);. [புசம்+பலம்] |
புசம் | புசம் pusam, பெ.(n.) 1. தோள்பட்டை; arm, shoulder. 2. கோணத்தின் புறக்கோடு; side of a geometrical figure. [Skt. bhuja → த. புசம்] |
புசிகரணம் | புசிகரணம் pusigaraṇam, பெ. (n.) தின்பண்டம்; eatables. [புசி+கரணம்] |
புசிகரம் | புசிகரம் pusigaram, பெ. (n.) 1. பேணுதல்; nourishing. 2. ஊண்; Food. [புசி-புசிகரம்] |
புசிக்கத்தக்க | புசிக்கத்தக்க pusikkattakka, பெ. எ. (adj.) உண்பதற்கு ஏதுவான; to be eaten. [புசிக்க +தக்க] |
புசிதம் | புசிதம் pusidam, பெ. (n.) உண்பதற்குகந்த மணித்தக்காளி; a plant – used both as an vegetable and medicine. [புசி → புசிதம்] |
புசிப்பன | புசிப்பன pusippaṉa, பெ. (n.) உண்ணும் பொருள்கள் (வின்.);; eatables. [புசி → புசிப்பன] |
புசிப்பாளி | புசிப்பாளி pusippāḷi, பெ. (n.) கொடுத்து வைத்தவன், ஆகூழ்க்காரன் (அதிட்டசாலி); (வின்);; lucky person,one who enjoys happiness by virtue of past actions. [புசி → புசிப்பு + ஆளி] |
புசிப்பு | புசிப்பு pusippu, பெ. (n.) 1. உண்ணுகை; eating, feeding, taking food. 2. உண்பன, தின்பன, நக்குவன, பருகுவன ஆகிய நால்வகை யணவு (பிங்);; food, of four kinds Viz, uŋbaŋa, tiŋbaŋa, nakkuvana, paruguVana. 3. வினைப்பயனுகர்ச்சி; experiencing the fruits of past actions. “வினையளவாக ஆன்மாக்களுக்குப் புசிப்புண்டாம்” (பிரபஞ்சவி.117);. 4. நல்லூழ், ஆகூழ் (அதிட்டம்); (வின்.);; good fortune or destiny. [புசி → புசிப்பு] |
புசிப்புத்துறவு | புசிப்புத்துறவு pusipputtuṟavu, பெ, (n.) ஒருபோது உணவு கிடைக்காதபோதும் உடல் நில்லாதென்றும் எத்தனை நாள் எத்தனை வகையிலே உண்டாலும் பொந்திகை (திருப்தி); யுண்டாகாது என்றும் கருதுவதனால் தோன்றும் துறவு; the idea of renunciation occurring on a consideration of the necessity of food and the constant carrying of the body for food. [புசி → புசிப்பு + துறவு, துற → துறவு] |
புசிப்புவைராக்கியம் | புசிப்புவைராக்கியம் pusippuvairākkiyam, பெ. (n.) புசிப்புத் துறவு பார்க்க; (சி.சி.8, 2 சிவாக்.);; see pušippu-t-turavu. [புசிப்பு + வைராக்கியம்] Skt. Vairägya. → த. வைராக்கியம் |
புசுபுசுவெனல் | புசுபுசுவெனல் busubusuveṉal, பெ. (n.) மயிர், நூல் போன்றவற்றைத் தொடும்போது உணரும் மென்மைத் தன்மையை உணர்த்தும் ஒலிக்குறிப்பு; onom. expr: signifying fluff, fur. [புசுபுசு + எனல்] |
புஞ்சமுத்து | புஞ்சமுத்து puñjamuttu, பெ. (n.) புஞ்சைமுத்து பார்க்க; see puñjal muttu (S.I.I.ii.34);. [புஞ்சைமுத்து → புஞ்சமுத்து] |
புஞ்சம் | புஞ்சம் puñjam, பெ. (n.) 1. திரட்சி, குவியல்; collection, heap, quantity, lump. “சலஞ்சலப்புஞ்சமும்” (கல்லா.59,18);. 2. கூட்டம், கும்பல்; flock, crowd, swarm. ” புட்குல புஞ்சம்” (இரகு.திக்குவி.266); 3. நெசவில் 240 இழை கொண்ட நூற்கொத்து; 4. நெய்த ஆடையின் அளவு வகை; cloth of the length of 36 cubits and 38 to 44 inch in width and 14 lbs in weight.(M.M.707);. க. புஞ்சி, து. புஞ்ச புஞ்சொ [புல் → புள் → பிள் → பிழம் = திரட்சி, வடிவு. புல் → (பிள்); → (பிண்டு); → பிண்டம் = தொகுதி, முழுமை, உடம்பு. புல் → பல் → பலா = பரும் பழமரம். புல் → புன் → (புன்சு); → புஞ்சம்] த. புஞ்சம்→ Skt. Puñija. |
புஞ்சம்கொள்(ளு)-தல் | புஞ்சம்கொள்(ளு)-தல் puñjamkoḷḷudal, செ.கு.வி. (v.i.) ஒன்றாக இணைதல், ஒன்றாகச் சேர்தல் (கருநா.);; to get together. க. புஞ்சகொள் [புஞ்சம் + கொள்-, ] |
புஞ்சவனம் | புஞ்சவனம் puñjavaṉam, பெ. (n.) மூன்றாம் மாதக் கருப்பம்; foetus three months old. [புல் → புன் → (புன்சு); → புஞ்சம் = திரட்சி. புஞ்சம் → புஞ்சவனம் = திரண்ட கருப்பம்] |
புஞ்சி-த்தல் | புஞ்சி-த்தல் puñjittal, 4 செ.குன்றாவி, (v.t.) ஒன்றாக்குதல், குவியலாக்குதல் (கருநா.);; together, to make heap. க. புஞ்சிசு [புல் → புன் → புன்சி → புஞ்சி -, ] |
புஞ்சிகை | புஞ்சிகை puñjigai, பெ. (n.) ஆலங்கட்டி (சங்.அக.);; hail-stone. க. புஞ்சிகை (திரண்டது, குவியல்); [புல் → புன் → (புன்சு); → புன்சிகை = திரண்ட நீர்க்கட்டி..] |
புஞ்சித்துவம் | புஞ்சித்துவம் puñjittuvam, பெ. (n.) வெள்ளை (சுக்கிலம்); (யாழ்.அக);; semen. [புஞ்சு +துவம், புல் → புன் → புன்சு → புஞ்சு, புஞ்சுதல் = ஒன்று சேர்தல், புஞ்சித்துவம்=புணர்ச்சியின் போது வெளிப்படுவது] |
புஞ்சின்னம் | புஞ்சின்னம் puñjiṉṉam, பெ. (n.) ஆண்குறி (யாழ்.அக.);; membrum virile. [புஞ்சு + சின்னம் புல் → புன் → புன்சு → புஞ்சு. புஞ்சுதல் = ஒன்றுசேர்தல். கல் → சில் → சின் → சின்னம். புஞ்சின்னம் = புணர்ச்சிக்கு உரியது] |
புஞ்சு-தல் | புஞ்சு-தல் puñjudal, செ.கு.வி. (v.i.) ஒன்றுசேர்தல்; to gather. Unite. ‘புஞ்சிய பந்த சந்தம்’ (மேருமந்.104);. க. புஞ்சிசு [புல் → புன் → புன்சு → புஞ்சு.] |
புஞ்சுகம் | புஞ்சுகம் puñjugam, பெ. (n.) முருக்கமரம்; bastard teak. |
புஞ்சை | புஞ்சை puñjai, பெ. (n.) புன்செய்; dry land. ம. புஞ்ச; க. புஞ்சை, பிஞ்ச, புஞ்சி, புணச, புணகி, புணுகி; தெ. புஞ்ச (மேட்டுநிலம்);; து. புஞ்ச, புஞ்சொ [புல் → புன் + செய் – புன்செய் → புஞ்சை] ‘புன்செய்’ பார்க்க |
புஞ்சைக்கண்டம் | புஞ்சைக்கண்டம் puñjaikkaṇṭam, பெ. (n.) பாசனத்தில் இருக்கும் நிலம் (சேரநா.);; field under irrigation, yielding even three harvests. ம. புஞ்சக்கண்டம்; து. புஞ்சகண்ட (ஒராண்டுக்கு ஒரு விளைச்சல் தரும் மேட்டு நிலம்); [புஞ்சை+ கண்டம்] |
புஞ்சைநிலம் | புஞ்சைநிலம் puñjainilam, பெ. (n.) புன்செய் பார்க்க; see punšey. [புஞ்சை + நிலம். புன்செய் → புஞ்சை] |
புஞ்சைப்பற்றுக்கட்டு | புஞ்சைப்பற்றுக்கட்டு puñjaippaṟṟukkaṭṭu, பெ. (n.) இறைவை நீராற்பயிராகும் புன்செய் நிலங்களுக்கு விதிக்கும் பணத்தீர்வை; money rent levied on lands in which crops, other than paddy are raised under well-irrigation. (R.T.);. [புஞ்சை + பற்று + கட்டு] |
புஞ்சைமுத்து | புஞ்சைமுத்து puñjaimuttu, பெ. (n.) பருமுத்து; big-sized pearl. (S.l.l.ii,176);. [புஞ்சை + முத்து. புல் → புன் → (புன்சு); → புஞ்சை. முள் → முட்டு → முத்து] |
புஞ்சைமேல்நஞ்சை | புஞ்சைமேல்நஞ்சை puñjaimēlnañjai, பெ. (n.) புன்செய் நிலங்களில் சாகுபடி செய்த நன்செய் பயிர்i; wet crops raised in fields classed as dry. [புஞ்சை + மேல் + நஞ்சை] |
புஞ்சையாகாயாத்து | புஞ்சையாகாயாத்து puñjaiyākāyāttu, பெ. (n.) தோட்டத்தரப்பிலுள்ள புன்செய் நிலம்; dry land rated as garden land. (R.T.);. [புஞ்சை + பாகாயாத்து] U. bāgāyat → த. பாகாயாத்து |
புஞ்சைவரவுநஞ்சை | புஞ்சைவரவுநஞ்சை puñjaivaravunañjai, பெ. (n.) நன்செய்நிலமாய் மதிக்கப்படும் புன்செய்; dry land classed as wet. (R.T.);. [புஞ்சை + வரவு + நஞ்சை. புன்செய் → புஞ்சை. நன்செய் → நஞ்சை] |
புஞ்சைவர்த்தனை | புஞ்சைவர்த்தனை puñjaivarttaṉai, பெ. (n.) புன்செய்த் தீர்வையொடு செலுத்தும் மிகுதியானவரி; acesss in addition to the puñjai tax (R.T.);. [புஞ்சை வர்த்தனை] Skt. vartana → த. வர்த்தனை |
புஞ்சைவான்பயிர் | புஞ்சைவான்பயிர் puñjaivāṉpayir, பெ. (n.) புன்செயிற் பயிராகும் மிளகாய், கத்தரி, புகையிலை, மஞ்சள் முதலியன; particular dry crop, such as chillies, brinjals, tobacco, turmeric, etc., (R.T.);. [புஞ்சை + வான் + பயிர்] |
புடகடம் | புடகடம் puḍagaḍam, பெ. (n.) புடமிடுதற்குப் பயன்படுத்தப்படும் துளையிட்ட மண்குடம்; an earthen pot, which has holes at the bottom. used for extracting medicine oil by the process of Calcination. [புட+ கடம்] |
புடகநாறி | புடகநாறி puḍaganāṟi, பெ. (n.) பீநாறி; woolly-leaved firebrand teak. |
புடகம் | புடகம் puḍagam, பெ. (n.) 1. இலைத் தொன்னை; cup or vessel formed by stitching leaves. பலாசுறு பத்தரத்திற் புடகம் பரிவற (சிவ. தரு. கோபுர.184);. 2. தாமரை (யாழ்.அக.);; lotus. [புல் → புள் → புழல் = உட்டுளை, புழல் → புடல் = உட்டுளையுள்ள புடலங்காய். புழு → புழை → புடை =துளை, எலிவளை, குகை.புடை → புடம் = பொன்னைக் காய்ச்சித் துய்மைப்படுத்தும் சிறுகலம், தொன்னை. (வே.க. 3. 101-108); புடம் → புடகம் = தொன்னை, தொன்னை போன்று உள்ளீடற்றுக் காணப்படும் தாமரை] puta, putaka, puti, a Cup made of leaf folded (and stitched);; a basket or vessel or dish made of leaves. Its so-called D. Tbh. is pöda. It is somewhat difficult to determine from which root the words have arisen, but there is the Sk, verb put with the meanings of ‘to unite, to connect, to bind together, to interwine (samsleshana, Slësha);, and there are the D. verbs pudu, pun, hudu, which mean ‘to unite, to connect, etc. and also D. puri, piri, which mean to twist, to twine (see s, puri cf pósé);. On these verbs puta, etc., rest. Sk, verbs, pun, pun, pul, pul, used in the meanings of samhati and sanghata, pit in that of samhati and hud, hund in those of sangha and sanghata are evidently cognate. For all the above-mentioned Sk, verbs and their meanings there are no authoriative references, and they may be confidently declared to have been borrowed from the adduced Dverbs which are firmly rooted in the D. language. Puța. etc., are therefore ultimately connected either with D. pudu etc. or with puri etc. (KKED. xxxv); புடகம் puḍagam, பெ. (n.) காளிகாபுராணத்தில் கூறப்பெறும் ஒரு சிற்ப முத்திரை; a pose in dance. [புட்டகம்-புடகம்] |
புடகாமிகம் | புடகாமிகம் puḍagāmigam, பெ. (n.) செந்நாயுருவி; a plant Indian burred variety. |
புடசயம் | புடசயம் puḍasayam, பெ. (n.) மருந்தைப் புடமிடுவதனால் ஏற்படும் நன்மை; benefit obtained by calcinating the medicine. [புடம் + சயம்] |
புடசாலி | புடசாலி puḍacāli, பெ. (n.) நாகை; stork. |
புடசெந்தூரம் | புடசெந்தூரம் puḍasendūram, பெ. (n.) புடம்போட்ட எரிப்புச் செந்தூரம்; red oxide obtained by calcination as opposed to one obtained by burning in oven. [புடம் + செந்துரம்] |
புடஞ்சம் | புடஞ்சம் puḍañjam, பெ. (n.) பெருமுத்தக் காசு; large Sedge. |
புடஞ்சயம் | புடஞ்சயம் puḍañjayam, பெ. (n.) மருந்தைப் புடமிடுவதினா லுண்டாகும் நன்மை; benefit obtained by calcinating the medicine. [புடம்+சயம்] |
புடஞ்செய்-தல் | புடஞ்செய்-தல் puḍañjeytal, 1 செ.குன்றாவி. (v.t.) புடமிடு-தல் பார்க்க; see pudam-du-. [புடம் + செய்-,] |
புடதலை | புடதலை puḍadalai, பெ. (n.) பொடுதலை; wild long pepper. [பொடுதலை → புடதலை] |
புடதிட்டம் | புடதிட்டம் puḍadiḍḍam, பெ. (n.) புடம் போடுவதற்காக எருவிடுங் குழியின் அளவு; the dimension of the pit, to pile up cowdung cakes for purpose of calcinating. [புடம் + திட்டம்] “காடியே புடத்திட்ட மாமா கேளாய் காட்டெருவி லொன்றுபுடம் காடையாகும் பாடியே மூன்றெருகவு தரிபுடமாம் பத்தெருத் தான் குக்குடமாம் புரிந்து கேளாய் நாடியே ஐம்பதெருவே ஏனமாகும் நல்லநூறு எருகசத்தின் புடமதாமே” (சா.அக.); புடம் போடப் பயன்படும் எருக்குழியின் அளவு, அதில் பயன்படுத்தும் மருந்தின் அளவைப் பொறுத்தும், அதனுள் அடுக்கப்படும் வறட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் நீள, அகல உயரங்கள் வேறுபடுகின்றது 1. மாப்புடம் 1000 வறட்டிகள் போட்டுப் புடம் போடப் பயன்படும் எருக்குழியின் அளவு, இரண்டுமுழ அகலமும், இரண்டு முழ ஆழமும் கொண்டதாய் இருக்கும். 2. கசபுடம் 500 வறட்டிகள் போட்டுப் புடம் போட பயன்படும் எருக்குழியின் அளவு ஒரு முழ அகலமும் ஒரு முழ ஆழமும் கொண்டதாய் இருக்கும். 3. வராக புடம் 150லிருந்து 200 வறட்டிகள் போட்டுப் புடம் போடப் பயன்படும் சதுரக்குழி. ஒரு அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்டிருக்கும். 4. குக்குட புடம் அல்லது கோழிப்புடம் எட்டு வறட்டிகள் மட்டுமே போட்டுப் புடம் போடும் அளவில் வெட்டப்படும் எருக்குழி. 5. கோவுர புடம் வறட்டியின் சிறு துண்டுகளும், தூள்களும் போட்டுப் புடம் போட பயன்படுத்தப்படும் மண்பானை. 6. பாண்ட புடம் மண் கலத்தில் சுடுவதற்காக, அதை வாய்கட்டப்பட்ட உமி நிறைந்த மட்கலத்தில் திணிப்பர். |
புடத்தங்கம் | புடத்தங்கம் puḍattaṅgam, பெ. (n.) புடமிட்ட உயர்ந்த பொன்; refined gold. [புடம்+தங்கம்] |
புடத்திற்காதி | புடத்திற்காதி puḍattiṟkāti, பெ. (n.) வளையலுப்பு; glass gall-fel vitri. |
புடத்தைலம் | புடத்தைலம்1 puḍattailam, பெ. (n.) புடமெண்ணெய் (பைஷஜ.3); பார்க்க; see pudam-enney. [புடம் + தைலம்] Skt. taila → த. தைலம். புடத்தைலம்2 puḍattailam, பெ. (n.) சிவனார் வேம்பு எண்ணெய்; a kind of medicinal oil extracted by the process of calcination. மறுவ. குழித்தைலம். [புடம் + தைலம்] Skt. taila → த. தைலம். |
புடந்தசம் | புடந்தசம் puḍandasam, பெ. (n.) பத்துபுடம்; calcinating ten times. [புடம் + தசம்] |
புடனண்டம் | புடனண்டம் puḍaṉaṇḍam, பெ. (n.) பெருமுத்தக் காசு; large sedge. |
புடனம் | புடனம் puḍaṉam, பெ. (n.) முறையற்ற பேச்சு; raving. |
புடபாகம் | புடபாகம் puḍapākam, பெ. (n.) 1. புடமிடுகை; a particular method of preparing drugs in which various substances are placed in clay cups covered over with clay and heated over the fire. புட பாகத்திற் சார்தரு முலோகமாக தள்ளல் போல் (திருக்காளத்.பு. ஞபானயோ. (18.); 2. செரிமானம்; digestion. 3. சமைக்கை (யாழ்.அக.);; cooking. [புடம் + பாகம்] |
புடபாவதி | புடபாவதி puḍapāvadi, பெ. (n.) புடம்போடுவதற்குரிய முறைகளைக் கூறும் நூல்; book on calcination and its rules. [புடம் + பாதவிதி] |
புடப்பூடு | புடப்பூடு puḍappūḍu, பெ. (n.) பொன்னூமத்தை; a yellow coloured dhatura plant. [புடம் + பூடு] |
புடமண் | புடமண் puḍamaṇ, பெ. (n.) தூய்மையான அழுக்கற்ற மண்; pure mud. [புடம் மண்] |
புடமாறிப்போடல் | புடமாறிப்போடல் puḍamāṟippōḍal, தொ. பெ. (vbl.n.) புடமிடும் போது, தேவையான மருந்துகளில் குறைவுபடில் சரிசெய்து மீண்டும் புடமிடல்; resubmitting the medicine to calcination if it is not properly done or finished. [புடம் + மாறி + போடல்] |
புடமாறியெடுத்தல் | புடமாறியெடுத்தல் puḍamāṟiyeḍuttal, தொ. பெ. (vbl.n.) புடத்தின் நெருப்பவிந்த பின்பு, பிரித்து மருந்தை எடுத்துக் கொள்ளுதல்; taking out the medicine after the fire completely cooled in calcination. |
புடமிடு-தல் | புடமிடு-தல் puḍamiḍudal, 19 செ. குன்றாவி. (v.t.) 1. பொன் முதலியவற்றைத் தூய்மை படுத்துதல் (சுத்தி செய்தல்);; to refine metals. ‘அதிகமாகப் புடமிட்டு’ (காசிக.ஓங்காரலி,சி.6);. 2. வெய்யிலில் வைத்தல் முதலிய வழிவகை களாற் பக்குவப் படுத்துதல்; to calcinate to preserve by burying under the earth, etc; 3. எரித்தல் (கொ.வ.);; to cremate. [புடம் +இடு-, புடமிடப்பட்டது மாற்றுயர்ந்த பொன் எனப்படும்.] |
புடமெண்ணெய் | புடமெண்ணெய் puḍameṇīey, பெ. (n.) புடம் போட்டு எடுக்கும் எண்ணெய்; medicinal oil extracted by pudam process. [புடம் + எண்ணெய்] |
புடம் | புடம்1 puḍam, பெ. (n.) 1. புடமிடுங்கலம்; the refining or sublimating vessel or cup. 2. மூடி; cover. ‘தொகு புடஞ் சற்றே யோங்கி’ (விநாயகபு.15, 40);. 3. வெயிலில் வைத்தல் முதலிய வழிகளாற் பக்குவப் படுத்துகை; calcination in fire or in the sun preservation by being buried under the earth or in a heap of grain. ‘புடஞ்சே ரெழிற்பொன்’ (உத்தாரா. திருவோலக். 10);. 4. புடபாகம் 1 பார்க்க; see puda-bāgam. 1. 5. இடம்; place. spot. ‘போதிகைப் புடங்க டோறும்’ (சூளா.கல்யா);. 6. பக்கம்; side. ‘புடங்கழையும் வேயும்’ (சூளா.சீய.162); 7. உள்வளைவு (யாழ்.அக.);; concavity. bend. 8. இலைக்கலம், தொன்னை (யாழ்.அக.);; leaf-cup. 9. கண்ணிமை(யாழ்.அக.);; eye-lid. 10. கோவணம்(யாழ்.அக.);; loin – cloth. 11. மூடுகை (யாழ்.அக.);; closing. [புல் → புள் → புழல் = உட்டுளை, சாய்கடை. புழல் → புடல் = உட்டுளையுள்ள புடலங்காய். புழு → புழை = துளை, குழாய், வாயில். புழை → புடை = துளை, எலிவளை. புடை → புடம். ஒ. நோ. நடை → நடம்ச்ச். புடம் = பொன்னைக்காய்சித் தூய்மைப் படுத்தும் சிறுகலம், தொன்னை (வே.க. 3. 106-108);] த. புடம். → Skt. puta. புடம் puḍam, பெ.(n.) 1. கோள்களின் உண்மை யான நிலை; true daily motion of a heavenly body 2. ஒரு வகை வானவளவை; celestial longitude. 3. தூய்மை; purity. “புடமாக விளங்குதலால்” (ஞானவா.கற்க.30);. [Skt. {} → த. புடம்] |
புடம்பாசியம் | புடம்பாசியம் puḍambāciyam, பெ. (n.) அலரி; a flower. |
புடம்பு | புடம்பு puḍambu, பெ. (n.) குகை; cave. ‘காணாமலைப் புடம்புந்தேடி யொளிவார் சிலபேர்கள்’ (பஞ்ச. திருமுக.1895);. மறுவ. அளை, முழை, முழைஞ்சு. [புழ → புழை → புடை = துளை, எலிவளை, குகை, குகை போன்ற கிணற்றடிப் புழை, புழல் → புடை = சிறுகலம், இலைக்கலம். (வே.க.3.108);, புடம் → புடம்பு.] |
புடம்போடு-தல் | புடம்போடு-தல் puḍambōḍudal, 19. செ. குன்றாவி. (v.t.) 1. தங்கம் போன்ற மாழை (உலோகம்);களை நெருப்பில் உருக்கி தூய்மைப்படுத்துதல்; to purify by melting (esp. gold); to refine metal. பழைய பொன்னைப் புடம்போட்ட பின்னர் நகை செய்வார்கள் (உ.வ.);. 2. மூலிகை போன்றவற்றை நெருப்பிலிட்டு எரித்து நீறா(பஸ்பம்);க்குதல்; to calcine. 3. மிக வருத்துதல் (கொ.வ.);; to subject to extreme torture. [புடம் + போடு-. ] |
புடம்வை-த்தல் | புடம்வை-த்தல் puḍamvaittal, 4 செ. குன்றாவி. (v.t.) புடமிடு-தல் பார்க்க; see pudam-idu-. [புடம் + வை-.] |
புடலகம் | புடலகம் puḍalagam, பெ. (n.) பன்றி மோத்தை எனும் நிலைத்திணை; a kind of plant. |
புடலங்காய் | புடலங்காய் puḍalaṅgāy, பெ. (n.) வெளிர் பச்சை நிறம்கொண்ட பாம்பு போல நீளமாக இருக்கும் ஒருவகைக் காய்; snake-gourd. [புடல்+அம்+காய். ‘அம்’ சாரியை] |
புடலி | புடலி1 puḍali, பெ. (n.) பிடர் (இ.வ.);; nape. [பின் → பினம் → பிறம்பு. பிறம் → பிடம் → பிடர் → பிடரி = தலை யின் பின்புறம் (மு.தா.293); பிடரி → புடரி. ஒ.நோ. பிட்டம் → பிட்டி → புட்டி. = பறவையின் பின்புறம். புடரி → புடலி (கொ.வ.);] |
புடலி-த்தல் | புடலி-த்தல் puḍalittal, 4 செ.கு.வி. (v.i.) புடவி2-த்தல் (யாழ்.அக.); பார்க்க; seepudavi2-; [புடவி → புடலி] |
புடலை | புடலை puḍalai, பெ. (n.) புடல் 1. (கொ.வ.); பார்க்க; see pudal-1. [புழல் → புடல் → புடலை] |
புடல் | புடல் puḍal, பெ. (n.) 1. புடலங்காய் காய்க்கும் கொடி; the snake-gourd plant. 2. பேய்ப் படல்; wild Snake-gourd. ம. புட்டல், பிட்டல்; க. பொட்ல, படல, பட்ல; தெ. பொட்ல, து. பட்ல; கட. புட்ருகி; கூ. புட்ர த. புடல் -→ skt.patola, patu, patuka. [புல் → புள் → புழு =துளைத்தரிக்கும் சிற்றுயிரி. புழு → புழை =துளை, குழாய், வாயில், பலகணி. புழை → பூழை = துளை, சிறுவாயில்புழு → புழல் = உட்டுளை, சாய்கடை, புழல் → போல் = உள்ளீடல்லாதது, உட்டுளையுள்ள மூங்கில், புழல் → புடல், ஒ.நோ. குழல் → குடல். புடல் = உட்டுளையுள்ள புடலங்காய் (வே.க.3, 106);.] |
புடல்வெள்ளி | புடல்வெள்ளி puḍalveḷḷi, பெ. (n.) புடலங்காய் போன்ற தோற்றமுள்ள வெள்ளரி வகை; a kind of melon. [புடல் + வெள்ளரி] |
புடவி | புடவி1 puḍavi, பெ. (n.) 1. உலக உருண்டை (திவா.);; Earth. 2. உலகம் (திவா.);; world. ‘அதிர்வன புடவிகளடையவே’ (தக்கயாகப் 723);. க. பொடவி; தெ. புட [புல் → புது → புதை. புடை → புடை = பருத்தபாகம், பகுதி, பக்கம், சார்பு, இடம். புடை → புடைவி → புடவி = பருத்த ஞாலம், உலகம் (வே.க.3.76, 77);] புடவி2 puḍavittal, 4 செ.கு.வி. (v.i.) வீங்குதல்; to be swollen, as from a blow. [புடை → புடைவி → புடவி = பருத்த ஞாலம், உலகம், (வே.க. 3 77);. புடவி → புடவி(த்தல்); -, பின்னாக்கம் (back formation);. அதாவது பெயரினின்று வினையாக்கப்பட்டது. புடவித்தல்=பருக்க வீங்குதல்] |
புடவிமூலம் | புடவிமூலம் puḍavimūlam, பெ. (n.) சிறுகுறட்டை (மலை);; a species of snakegourd. |
புடவை | புடவை puḍavai, பெ. (n.) 1. துணி; cloth. (S.l.l.iv., 31.); 2. புடவை 2. பார்க்க; see pugaivai2. ம. புடவ; தெ. புட்டமு [புல் → புது → புதை → புடை. புடைத்தல் = பருத்தல், வீங்குதல். புடை → புடைவை = சுற்றிக்கட்டிவிடும் ஆடை, மகளிர் சேலை. புடைவை → புடவை = துணி, சேலை |
புடவைகளை-தல் | புடவைகளை-தல் puḍavaigaḷaidal, 3 செ.கு.வி. (v.i.) 1. தூய்மையில்லாத (அசுத்தச்);சீலையை நீக்குதல்; to cast off dirty or impure clothes. 2. மாதவிடாய் நிகழ்தல்; to be subject to catamenia. [புடைவை → புடவை + களை-, கள் → களை] |
புடவைக்காரர், | புடவைக்காரர், puḍavaikkārar, பெ. (n.) அருமைக்காரர்க்கு வழங்கும் மற்றொரு பெயர்; a name for Arumai-karan. [புடைவை+காரர்] |
புடவைக்குஞ்சம் | புடவைக்குஞ்சம் puḍavaikkuñjam, பெ. (n.) சீலையின் முன்றானைக் குஞ்சம் (வின்.);; bunch of flounce of cloth, tassel of a cloth. [புடவை + குஞ்சம். புடை → புடைவை → புடவை] |
புடவைக்கொடை | புடவைக்கொடை puḍavaikkoḍai, பெ. (n.) மணமகன் மணமகளுக்குப் புடைவை கொடுப்பதாகிய திருமண வகை; a form of marriage among Malayalis which consists in the presentation of the cloth by the bridegroom to the bride. [புடைவை → புடவை + கொடை. கொடு → கொடை] |
புடவைபோடு-தல் | புடவைபோடு-தல் puḍavaipōḍudal, 20 செ.கு.வி. (v.i.) கோடிபோடுதல் (இ.வ.);; to offer ceremonially a new cloth to widow in mourning. [புடைவை → புடவை + போடு-,] |
புடவையெழுது-தல் | புடவையெழுது-தல் puḍavaiyeḻududal, 8 செ.கு.வி. (v.i.) சீலையில் அச்சடித்தல்; to print Chintz. [புடவை + எழுது-,] |
புடாயம் | புடாயம் puṭāyam, பெ. (n.) மாணிக்கக் குற்றவகை; flaw in a ruby. ‘இகலுறு புடாயம்’ (திருவாலவா.25, 14);. [புள் → புளு → புடு (வே.க.3,107); புளு → புடு → புடாயம்] |
புடாரமுளை | புடாரமுளை puṭāramuḷai, பெ. (n.) செந்நாயுருவி (மலை.);; a kind of dog-prick. |
புடி-த்தல் | புடி-த்தல் puḍittal, 4 செ.கு.வி. (v.i.) பொய் சொல்லுதல்; to lie. பொய்புடிக்கிறான் (சேலம் வழக்கு);. [புள் → புளு → புடு → புடி. பொய் புடிக்கிறான் என்பது பொய் புளுகுகிறான் என்பது போன்ற மிகைபடக் கூறல், (வே.க. 3, 107);] |
புடிதம் | புடிதம் puḍidam, பெ. (n.) கைமுட்டி (யாழ்.அக.);; fist. [பிண்டி → பிடி → (பிடிதம்); → புடிதம்] த. புடிதம். → Skt. putita. |
புடியாப்பு | புடியாப்பு puḍiyāppu, பெ. (n.) மேழியிலுள்ள கைப்பிடி; handle of the hoe. [பிடியாப்பு → புடியாப்பு] பிடியாப்பு பார்க்க |
புடுக்கஞ்சுறா | புடுக்கஞ்சுறா puḍukkañjuṟā, பெ. (n.) புடுக்கன்சுறா பார்க்க; see pudukkan-sura. [புடுக்கன்சுறா → புடுக்கஞ்சுறா] |
புடுக்கன்சுறா | புடுக்கன்சுறா puḍukkaṉcuṟā, பெ. (n.) அடுக்குப் பற்சுறா; grey shark. |
புடுக்கு | புடுக்கு puḍukku, பெ. (n.) விதை (அண்டம்);; testicle. [புடை → புடம் → புட்டம் = புடைத்த குண்டி. புட்டம் → புட்டா → புட்டை = பெருத்த விதை (அண்டம்);. (வே.க.3.77); புடம் → புட → புடுக்கு. ‘கு’ சொ.ஆ.ஈறு.] |
புடை | புடை1 puḍai, பெ. (n.) 1. அடி; blow. 2. அடித்துண்டாக்கும் ஒலி; sound, noise, as from a stroke. ‘கொலைவல் யானை செவிப்புடையும்’ (சீவக. 2355); 3. பகை (இலக். அக.);; enmity. 4. போர் (இலக்.அக.);; war. battle. க. பொடெ; தெ. போடு [புல் → புது → புதை → புடை] புடை2 puḍaittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல்; to winnow, sift; அரிசி புடைக்க ஆள் வேண்டும் (உ.வ.);. 2. அடித்தல்; to beat, strike, to thresh, as grain. ‘களப்படப் புடைத்தான்’ (கம்பரா.சம்புமா.24);. 3. குத்துதல் (சூடா.);; to pierce, to thrash. 4. கொட்டுதல்; to beat, as a drum; to tap, as on a tambourine. ‘கணைவிடு புடையூஉ’ (குறிஞ்சிப். 160);. 5. சிறகடித்தல் (வின்.);; to flap, as the wings. 6. நூல் முதலியன எற்றுதல்; to snap, as a carpenter’s string. ‘நூல் புடைத்தாற் போற் கடந்த’ (சீவக.1044);. 7. துவைத்தல்; to wash. as by beating. ‘கந்தை புடைத்திட வெற்றுங் கற்பாறை’ (பெரியபு.திருக்குறிப்பு.125);. 8. குட்டுதல்; to cuff with the knuckle. ‘சென்னியுறப் புடைத்தவர் பால்’ (பிரமோத்.2,59);. 9. உடைத்தல்; to break. புங்கவனிடுவளை புடைத்து (திருவிளை.வளையர்.27);. 10. நீந்துதல் (யாழ்.அக.);; to swim. [புது → புதை → புடை] புடை3 puḍaittal, 4 செ.கு.வி. (v.i.) 1. வீங்குதல்; to swell, dilate, rise, puff up, as from a blow. ‘உடல் புடைப்ப வடித்து’ (திருவாலவா.34, 4);. 2. பருத்தல்; to be enlarged. ‘மெச்சவே பருத்தல் முத்தமார் தனத்தி’ (திருப்பு. 1176);. 3. முன்பிதுக்கியிருத்தல், துருத்திக் கொண்டிருத்தல்; to protrude. புடைப்புச் சிற்பம் வேலைப்பாடுடையது(உ.வ.);. 4. வெளிப்படுதல் (வின்.);; to come to light; to be expossed, divulged, talked of. 5. ஆரவாரித்தல்; to utter a loud noise; to roar. rattle. ‘திண்டேர் புடைத்த மறுகெல்லாம்’ (கலித்.98);. 6. அலைத்துப் பெருகுதல்; to flow in profusion, as blood. ‘குருதி தோள் புடைப்ப’ (பு.வெ.4,16);. 7. தட்டுதல்; to pat oneself, as on the shoulder. து. புட்கெ, பொட்டெ; குட. புடீ; கோண். போரானா; நா. பொர். [புல் → புது → புதை → புடை (வே.க 3 76-77);] புடை4 puḍai, பெ. (n.) 1. பக்கம்; side ‘ஒருபுடை பாம்பு கொளினும்’ (நாலடி,148);. 2. இடம் (பிங்.);; place, room, location; site. 3. பகுதி; portion, section. ‘மற்றப் புடையெல்லாம் ஒவ்வாது’ (இறை. கள.1, பக்.23);. 4. முறை; method. ‘நிர்வகிப்பதும் சில புடைகளுண்டு’ (ஈடு,10,10,11);. 5. கிணற்றுப் புடைப்பு (வின்.);; side of a wall. 6. எலிவளை (வின்.);; rat-hole. 7. துளை (துவாரம்); முதலியன; hole. cave. 8. திரட்சி (யாழ்.அக.);; bulkiness. 9. பழமுதலியவற்றின் பருத்த பாகம் (வின்.);; protuberance, as in a fruit. 10. ஏழனுருபு (நன். 302);; [புல் → புது → புதல் = செறிந்த தூறு, புல்லினம், மருந்துப்பூடு. புது → புதை=அம்புக் கூடு, மரச்செறிவு, செடியடர்த்தி. புதை → புடை. புடைத்தல் = பருத்தல், விங்குதல், புடை2-,→ புடை (வே.க. 3, 76. 77);] புடை5 puḍai, பெ. (n.) கட்டி; carbuncle. [புல் → புது → புதை → புடை] |
புடைகவற்றி | புடைகவற்றி puḍaigavaṟṟi, பெ. (n.) வேறுசிந்தை; absent-mindedness, distraction. ‘புடை கவற்றியில்லா நிலைமைக்கண் வந்தால்’ (இறை. கள.12, பக்.87);. [புடை+ கவற்றி. கவல் → கவறு → கவற்றி] |
புடைகவல்(லு)-தல் | புடைகவல்(லு)-தல் puḍaigavalludal, 13 செ.கு.வி. (v.i.) 1. வேறு சிந்தையுடைத்தாதல்; to be worried over a collateral issue; to be distracted. ‘இவள் பிறிதொன்றிற்குப் புடைகவன்று நின்ற நிலைமைக்கண் வந்தேன்'(இறை. கள.12 பக். 86);. [புடை+கவல்-. கவை → கவல்] |
புடைகொள்(ளு) | புடைகொள்(ளு)1 puḍaigoḷḷudal, 7 செ.கு.வி. (v.i.) புடைக்கொள்-, பார்க்க; see pudai-k-kol. ‘முலை புடைகொள்ளும்படி தழுவி’ (சீவக.584, உரை);. [புடை+ கொள்-,] புடைகொள்(ளு)2 puḍaigoḷḷudal, 7 செ.கு.வி. (v.i.) புரையோடுதல்; to form a running sore. ‘கட்டி புடைகொண்டிருக்கின்றது’ (இ.வ.);. [புடை + கொள்-,] |
புடைக்கரப்பன் | புடைக்கரப்பன் puḍaikkarappaṉ, பெ. (n.) சிறுவர்கட்குப் பித்தத்தின் விளைவாலுண்டாகும் தோல் நோய்; a skin disease in children caused by biliousness. [புடை+ கரப்பான்] |
புடைக்கருத்து | புடைக்கருத்து puḍaikkaruttu, பெ. (n.) இனம் பற்றிச் சார்ந்துவரும் கருத்து (யாழ்.அக.);; collateral or correlative meaning, as of a word of a passage. [புடை=திரட்சி. புடை+கருத்து.] |
புடைக்காலம் | புடைக்காலம் puḍaikkālam, பெ. (n.) இடைப்பட்ட காலம்; intervel. ‘புடைக் கால மற்றொத்து’ (தக்கயாகப்.542);. [புடை+ காலம்] |
புடைக்கொள்(ளு) | புடைக்கொள்(ளு)1 puḍaikkoḷḷudal, 7 செ.குன்றாவி. (v.t.) தட்டுதல்; to pat, as one’s shoulders in defiance. ‘தோட்புடைக் கொள்ளா’ (நாலடி, 312);. [புடை + கொள்-,] புடைக்கொள்(ளு)2 puḍaikkoḷḷudal, 7 செ.கு.வி. (v.i.) அருகு பருத்தல்; to swell, increase in size. ‘பால் புடைக் கொண்டு’ (சிலப்.13, 162);. [புடை+ கொள்-,] |
புடைசூழ | புடைசூழ puḍaicūḻ, வி.அ..(adv.) (ஒருவருடன் அவரைச் சேர்ந்தவர்கள் பலர்); பின் தொடர. சுற்றிவர; followed by (people or one’s retinue);, surrounded by. மாணவர்கள் புடைசூழ முதல்வர் அரங்கத்திற்கு வந்தார். [புடை → சூழ-, புடை = பக்கம். சூழ் → சூழ] |
புடைநகர் | புடைநகர் puḍainagar, பெ. (n.) புறநகர்; suburb. ‘புடைநகர்த் தொழிலிடங் கடந்து புக்கபின்’ (சீவக.85);. [புதை → புடை = இடம், பக்கம், புடை + நகர். புடைநகர் =நகருக்குப் பக்கத்தில் அமைந்த ஊர்] |
புடைநூல் | புடைநூல் puḍainūl, பெ. (n.) சார்பு நூல்; a class of work or treatise. ‘திரிபு வேறுள்ளது புடை நூலாகும்’ (நன்.8);. [புதை → புடை = இடம், பங்கு, சார்பு. புடை + நூல்] |
புடைபர-த்தல் | புடைபர-த்தல் buḍaibarattal, 4 செ.கு.வி. (v,i.) சுற்று விரிதல்; to expand, swell. ‘எய்த்திடை வருந்த வெழுந்து புடைபரந்து’ (திருவாச. 4,33);. [புடை + பர-,] |
புடைபெயர் | புடைபெயர்1 buḍaibeyartal, 3 செ.கு.வி. (v.i.) 1. நிலைமாறுதல்; to change in condition or position, to become topsy-turvy or overturned. ‘நிலம்புடைப் பெயர்வதாயினும்’ (புறநா.34);. 2. வெளியேறுதல்; to go beyond; to trangress limits. ‘புடைபெயர் கடலென’ (கம்பரா.எழுச்சி.10);. 3. அசைதல்; to move, change place. ‘நாப்புடை பெயராது’ (மணிமே.23,16);. 4. தொழிற்படுதல்; to do an action. 5. எழுந்திருத்தல்; to rise up. get up. ‘கனவொடும் புடைபெயர்ந்து’ (தக்கயாகப்.240);. [புடை + பெயர்-,] புடைபெயர்2 buḍaibeyartal, 3 செ.கு.வி (v.i.) வினைச்சொல் மாற்றுவடிவம் அடைதல்; to conjugate. வினைச்சொல் முக்காலத்திற்கும் புடை பெயரும். [புடை + பெயர்-,] வினைச்சொல் புடைபெயரும் போது கால இடைநிலைகளைக் கொண்டு, காலத்தை உணர்த்தும். |
புடைபெயர்ச்சி | புடைபெயர்ச்சி buḍaibeyarcci, பெ. (n.) 1. நிலைமாறுகை; change in condition or position. 2. வெளியேறுகை; movement; journey as from a place. 3. கருத்தாவின் தொழிற்பாடு; [புடை + பெயர்ச்சி. பெயர் → பெயர்ச்சி. ‘சி’ தொழிற்பெயரீறு.] |
புடைப்படு | புடைப்படு1 puḍaippaḍudal, 19 செ.குன்றாவி. (v.t.). அணுகுதல்; to approach to be near. ‘என்னாரமுதைப் புடைபட்டிருப்ப தென்று கொல்லோ’ (திருவாச.27.1); [புடை + படு-,] புடைப்படு2 puḍaippaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. இடம்படுதல்; to be roomy spacious. ‘மலைகளைப் புடைபடத் துளைத்து’ (ஈடு, 10, 6, 6);. 2. மிகுதியாதல்; to be excessive. ‘அரசனும் புடை படக் கவன்று’ (இறை.1. பக்.7);. 3. திரண்டு பருத்தல்; to swell in size. to become round. ‘முதிர்ச்சியாற் புடைபடுதல்’ (குறள். 1274, உரை);. [புடை + படு-.] |
புடைப்பு | புடைப்பு1 puḍaippu, பெ. (n.) 1. அடிக்கை; stroke. ‘துடைப் பேனொரு புடைப் பால்’ (கம்பரா. முதற்போர்.164);. 2. கொழிக்கை; sfting. 3. வீங்குகை; swelling, protuberance from a blow. 4. மந்தணம் (இரகசியம்); முதலியன வெளியாகை (வின்.);; becoming public or well-known. தெ. போடு (போர்);; கட. போடு (சண்டை); [புடை → புடைப்பு. ‘பு’ தொ.பெ.ஈறு] புடைப்பு2 puḍaippu, பெ. (n.) 1. வீங்கியிருக்கும் அல்லது தடித்திருக்கும் நிலை; swelling. தலையில் என்ன புடைப்பு, எங்காவது இடித்துக்கொண்டாயா? (உ.வ.);. 2. துருத்திக் கொண்டிருக்கும் நிலை; protrusion. தெ. புட்ட (எறும்புப்புற்று); [புடை → புடைப்பு ‘பு’ தொ.பெ.ஈறு] |
புடைப்புச்சித்திரம், | புடைப்புச்சித்திரம், puḍaippuccittiram, பெ. (n.) புடைப்புச்சிற்பம் பார்க்க; see pudaippս-C-cirpam. [புடைப்பு + சித்திரம்] |
புடைப்புச்சிற்பம் | புடைப்புச்சிற்பம் puḍaippucciṟpam, பெ. (n.) (கல், மரம் போன்றவற்றைச் செதுக்கி அல்லது மாழை (உலோகம்);யை உருக்கி); பின்புலத்திலிருந்து தனித்து முன் தள்ளித் தெரியுமாறு உருவாக்கப்படும் உருவம்; relief. பிள்ளையார்ப்பட்டி பிள்ளையார் சிலை புடைப்பு சிற்பம். [புடைப்பு + சிற்பம்] புடைப்புச்சிற்பம் puḍaippucciṟpam, பெ. (n.) பாறையில் பதித்ததுபோல் ஒரு பக்கத் தோற்றத்தை மட்டும் காட்டும் சிற்பம்; embossed sculptured. [புடைப்பு+சிற்பம்] |
புடைப்பெண்டிர் | புடைப்பெண்டிர் puḍaippeṇḍir, பெ. (n.) வைப்பாட்டிகள்; concubines. ‘புடைப்பெண்டிர் மக்களுங் கீழும் பெருகி’ (நாலடி, 368);. [புடை + பெண்டிர்] |
புடைப்பொன்னாளி | புடைப்பொன்னாளி puḍaippoṉṉāḷi, பெ. (n.) உடும்பு; guana. |
புடைமண் | புடைமண் puḍaimaṇ, பெ. (n.) சுதை (யாழ்.அக.);; plaster. [புடை3 + மண்] |
புடைமூக்கன் | புடைமூக்கன் puḍaimūkkaṉ, பெ. (n.) மூக்கிலுண்டாகும் புண் வகையுளொன்று; a kind of ulcer in the nose. [புடை + மூக்கன். முகு → மூக்கு → மூக்கு = முகரும் உறுப்பு. மூக்கு → மூக்கன் = மூக்கி லுண்டாகும் புண்] |
புடையடுப்பு | புடையடுப்பு puḍaiyaḍuppu, பெ. (n.) கொடியடுப்பு (இ.வ.);; side-oven. [புடை = பக்கம். புடை + அடுப்பு. அடு → அடுப்பு] |
புடையன் | புடையன் puḍaiyaṉ, பெ. (n.) பாம்புவகை (நாமதீப.257);; wart snake. [புடை → புடையன்] |
புடையல் | புடையல் puḍaiyal, பெ. (n.) மாலை; garland. ‘இரும்பனம் புடையல்¬'(புறநா.99);. [புடை → புடையல். ‘அல்’ தொ.பெ.ஈறு] |
புடையான்குத்து | புடையான்குத்து puḍaiyāṉkuttu, பெ. (n.) நச்சுக்கடிப் புண்ணோய்; an ulcer formed by poisonous prick by beaver snake with its tail. [புடையன் → புடையான் + குத்து] |
புடையுண்(ணு)-தல் | புடையுண்(ணு)-தல் puḍaiyuṇṇudal, 16 செ.கு.வி. (v.i.) அடிபடுதல்; to be beaten. Thrashed. ‘பேயினாற் புடையுண்டாரோ’ (பாரத.சூது-267);. [புடை + உண்-,] |
புடைவை | புடைவை puḍaivai, பெ. (n.) 1. ஆடை; garment. ‘வெண்புடைவை மெய்சூழ்ந்து’ (பெரியபு.திருநாவுக்.1.);. 2. பெண்கள் இடுப்பில் சுற்றி கைச்சட்டை (ரவிக்கை);க்கு மேல் வரும் வகையில் கட்டிக்கொள்ளும் மேலாடை, மகளிர் சீலை; saree. ம.புட,புடவ; தெ.புட்டமு(துணி);; கோத.பொர்வ; குட. பொடெய; Skt. phuţţika (ஒருவகைத்துணி); [புடை → புடைவை = சுற்றிக்கட்டும் ஆடை, மகளிர் சேலை (வே.க.377);] |
புடோலங்காய் | புடோலங்காய் puṭōlaṅgāy, பெ. (n.) புடலங்காய். (தொல்.எழுத்து. 405, உரை.);; fruit of Snake gourd. [புடலங்காய் → புடோலங்காய்] |
புடோல் | புடோல் puṭōl, பெ. (n.) புடல் பார்க்க; see pudal. [புழு → புழல் → புடல் = உட்டுளையுள்ள புடலங்காய். புடல் → புடோல்] த. புடோல் → Skt. patóli |
புட்கரணி | புட்கரணி puṭkaraṇi, பெ.(n.) கோவிலைச் சேர்ந்த திருக்குளம்; sacred tank belonging to a temple. [Skt. {} → புட்கரணி] |
புட்கரம் | புட்கரம் puṭkaram, பெ.(n.) 1. வடநாட்டில் பொகார் என இக்காலத்தார் வழங்கும் ஒரு தலம்; a celebrated place of pilgrimage, now called Pokhar in Ajmir. 2. வானம் (பிங்.);; sky, heaven. |
புட்களம் | புட்களம் puṭkaḷam, பெ. (n.) நிறைவு; fulfilment. |
புட்கால் | புட்கால் puṭkāl, பெ. (n.) புள்ளடி; caret. [புள் + கால். கோல் = திரண்ட கம்பு. கோல் → கால் = மரத்தூண், கற்றூண், தூண்போல் உடம்பைத் தாங்கும் உறுப்பு] |
புட்குத்திருப்பி | புட்குத்திருப்பி puṭkuttiruppi, பெ. (n.) வட்டத்திருப்பி என்ற ஒரு கொடிவகை (மலை);; velvet leaf. |
புட்குரல் | புட்குரல் puṭkural, பெ. (n.) நற்குறி, தீக்குறியாகக் கருதப்படும் பறவையொலி; cry of birds. especially omen-birds. ‘ஒருவன் புட்குரன் முன்னங் கூறினான்’ (சீவக.415);. [புள் + குரல்] |
புட்கோ | புட்கோ puṭā, பெ. (n.) கலுழன் (கருடன்); (நாமதீப.236);; white headed kite. மறுவ. கழுகு, பருந்து [புள் + கோ. பறவைகளுக்கு அரசன் போன்றவன், பெரிய பறவை.] |
புட்டகப்புடைவை | புட்டகப்புடைவை puḍḍagappuḍaivai, பெ. (n.) சீலைவகை (நேமிநா.61,உரை);; a kind of cloth. [புட்டகம் + புடைவை] |
புட்டகமண்டபம் | புட்டகமண்டபம் buṭṭagamaṇṭabam, பெ. (n.) கூடாரம்; tent. ‘புட்டக மண்ட பத்திறைவன் சென்றான்’ (சேதுபு.அகத்.36);. [புட்டகம் + மண்டபம். துணியால் அமைக்கப்பட்டது] |
புட்டகம் | புட்டகம் puṭṭagam, பெ. (n.) புடைவை; cloth. “புட்டகம் பொருந்துவ புனைகுவோரும்” (பரிபா.12,17.);. [புட்டம் → புட்டகம்] “புட்டம்1” பார்க்க |
புட்டகவிலை | புட்டகவிலை puṭṭagavilai, பெ. (n.) சீலை விற்போருக்கிடும் வரிவகை; fees leveied on sellers of cloths. (S.I.I.ii.352);. [புட்டகம் + விலை] |
புட்டதண்ணி | புட்டதண்ணி puṭṭadaṇṇi, பெ. (n.) பூதத்தான்றி (இ.வ.);: carey’s myrtle bloom. |
புட்டந்தருவேர் | புட்டந்தருவேர் puṭṭandaruvēr, பெ. (n.) சிறுபாம்புக்கடி நஞ்சினைப் போக்கும் மருந்து; a root given for the poison of siru-pâmbu. |
புட்டம் | புட்டம்1 puṭṭam, பெ. (n.) புடைவை (பிங்.);: cloth. மறுவ. கோடி, கோடிகம், படாம்,கோசிகம், கூறை, பஞ்சி, நீவியம், சீரை, கலை, கலிங்கம், சூடி, காடிகம், தூசு, கழகம், வட்டம், ஆடை, தானை, அறுவை தெ. புட்டமு [புடை → புடம் → புட்டம் = புடைத்த பின்புறம். புடைவை (வே.க.3.77);] புட்டம்2 puṭṭam, பெ. (n.) 1. உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ள பகுதி. (ஆசனப்பக்கம்);; buttocks; 2. பெண்குறி; pudendum muliebre. க., தெ, புட்டி. [புள் → புட்டி = உட்டுளையுள்ளது ஒருவகைக் கலம், சிறுபடி, குடுவை, குப்பி, புட்டி → புட்டில் = அம்பராத் தூணி. தெ. புட்டிக. புட்டி = குடுவை போன்ற பறவையுடம்பின் பிற்பகுதி புட்டி → பிட்டி கொழுத்த கோழிப் புட்டியை நெய்க்குடம் என்று கூறும் வழக்கை நோக்குக. புட்டி புட்டம் = குடுவை போற் புடைத்த மாந்தன் உடம்பின் பக்கம். ஒ.நோ. குண்டு → குண்டி.புட்டம் → பிட்டம் மா.வி.அ.ப்ர-ஸ்த எடுப்பாய் முன் நிற்பது என்பது மூலமாயிருக்கலாம் என்று கருதுகின்றது. (வ.வ.2.3738);] puta,pūta,a buttock cf.D pūļa etc. the original idea is the hind part the change of 1 in to t is found in D. (KKED.xWiii); |
புட்டரிசி | புட்டரிசி puṭṭarisi, பெ. (n.) இனிப்புச்சுவை மிக்க அவியரிசி; a kind of rice. which is heated in Steam and taken with Sugar and coconut. [புட்டு + அரிசி. அரி → அரிசி] |
புட்டரிசியுருண்டை | புட்டரிசியுருண்டை puṭṭarisiyuruṇṭai, பெ. (n.) பணிகார வகை (மதி.க.ii,143);; a kind of cake. [புட்டு + அரிசி + உருண்டை. உல் → உரு → உருண்டை] |
புட்டல் | புட்டல் puṭṭal, பெ. (n.) தலைச்சுமை (யாழ்.அக.);; head-load. [புட்டு → புடம் → புட்டம் = புடைத்துக் காணப்படுவது. புட்டம் → புட்டல் = புடைத்துத் திரளாகக் காணப்படும் கட்டு, தலைச்சுமை] |
புட்டவரப்பு | புட்டவரப்பு puṭṭavarappu, பெ. (n.) பெரிய வரப்பு; hedge. [புட்டம் → புட்டை = பெருத்த விதை. புட்டம் → புட்டா → புட்ட. புட்ட + வரப்பு] |
புட்டவி-த்தல் | புட்டவி-த்தல் puṭṭavittal, 4 செ.குன்றாவி. (v.t.) ஆவியல் வேகவைத்தல்; to cook in steam. [புட்டு +அவி-,] |
புட்டவியல் | புட்டவியல் puṭṭaviyal, பெ. (n.) 1. சீலையில் ஏடு கட்டி வேக வைத்தல்; heating in steam using a special apparatus. 2. புழுக்கம்: Sultriness heat. [புட்டு + அவியல்] |
புட்டா | புட்டா1 puṭṭā, பெ. (n.) வீங்கின விதை (அண்டம்); (இ.வ.);; swelled testicle. க. புட்டெ, தெ. புட்ட [புடம் → புட்டம் = புடைத்த பின்புறம் புட்டம் → புட்டா] “புட்டை” பார்க்க புட்டா2 puṭṭā, பெ. (n.) பாவின் உடற்பகுதியில் செய்யப்படும் பூவேலைப்பாடு; flower design done in the chintz. புட்டா puṭṭā, பெ. (n.) சேலையில் உள்ள புள்ளிகள்; dots in saree design, (கொங்கு); [பொட்டு-புட்டா] |
புட்டாஏணி | புட்டாஏணி puṭṭāēṇi, பெ. (n.) சேலையில் புட்டா போடுவதற்குப் பயன்படும் ஏணி; a weapon used by weavers, to do flower design in Saree. |
புட்டாபலகை | புட்டாபலகை puṭṭāpalagai, பெ. (n.) புட்டா வாங்கப் பயன்படும் பலகை; board used to design flower in the saree. |
புட்டாலம்மை | புட்டாலம்மை puṭṭālammai, பெ. (n.) அம்மைக்கட்டு (பைஷஜ);; mumps. [புட்டம் → புட்டல் அம்மை. புட்டலம்மை → புட்டாலம்மை] |
புட்டாளம்மை | புட்டாளம்மை puṭṭāḷammai, பெ. (n.) பொன்னுக்கு வீங்கி; mumps. [புட்டாளம் + அம்மை] |
புட்டி | புட்டி1 puṭṭi, பெ. (n.) இடை; waist. ‘புட்டியிற் சேறும் புழுதியும்’ (திவ். பெரியாழ்.1,7, 6.); [புட்டம் → புட்டி ] த. புட்டி → SKt. prStha புட்டி2 puṭṭi, பெ. (n.) 1. பருமை; stoutness, robustness. “புட்டிபடத் தசநாடியும் பூரித்து” (திருமந்.574); 2. கொழுப்பு (கொ.வ.);; tatness. plumpness. [புல் → புது. புது → புதல் = செறிந்ததூறு, புல்லிளம், மருந்துப்பூடு. புது → புதை → புடை. புடைத்தல் = பருத்தல், வீங்குதல். புடை → புடம் → புட்டம் = புடைத்த பின்புறம், புடைவை. புட்டம் → புட்டி = பருமை, பருத்துக் காணப்படும் கொழுப்பு (வே.க.3. 76, 77);] த. புட்டி → SKt. pusti புட்டி3 puṭṭi, பெ. (n.) குப்பி; bottle, flask. அவள் குழந்தைக்குப் புட்டியில் பால் கொடுத்தாள் (உ.வ.);. க. புட்டி; தெ. புட்டி, புட்டிக; பட. புட்டி; கோத பொடி; து. புடி [புள் → புட்டி = உட்டுளையுள்ளது, ஒரு வகைக்கலம், சிறுபடி, குடுவை, குப்பி (வ.வ.2.37);] புட்டி4 puṭṭi, பெ. (n.) 1. ஒருவகை முகத்தலளவை; measure of capacity 750 Madras padi. 2. நிலவளவை வகை; land measure 8 to 11 1/2 acres. 3. சிறுபடி; measure of capacity = about 1/2 Madras measure. 4. ஒருவகை நிறுத்தலளவை; bazaar weight = 20 manu = 500 lbs. தெ. புட்டி, [புள் → புட்டி = உட்டுளையுள்ளது, ஒரு வகைக்கலம், சிறுபடி (வ.வ.2.371);] |
புட்டிகரம் | புட்டிகரம் puṭṭigaram, பெ. (n.) 1. அழுக்கு; dirty. 2. புட்டி பார்க்க; see puṭṭi. |
புட்டிடு-தல் | புட்டிடு-தல் puḍḍiḍudal, 17 செ.குன்றாவி. (v.t.) புட்டவி-த்தல் பார்க்க; see puṭṭavi-. [புட்டு + இடு-,] |
புட்டிப்பால் | புட்டிப்பால் puṭṭippāl, பெ. (n.) தாய்ப்பாலுக்குப்பகரமாகக் குழந்தைகளுக்கு ஆவின்பாலை அல்லது இதற்கென்றே பதப்படுத்தப்பட்ட மாவுப்பொருளை நீரில் கலந்து புட்டியின் மூலம் கொடுக்கப்படும் பால்; cow milk or milk prepared from milk powder (used for bottle-feeding);. தேவையான சூழ்நிலைகளில் மட்டும் குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுக்க வேண்டும். (உ.வ.); [புட்டி பால்] |
புட்டிற்கூடை | புட்டிற்கூடை puṭṭiṟāṭai, பெ. (n.) சிறுகூடை (வின்.);; small basket. [புட்டில் + கூடை] |
புட்டிலவம் | புட்டிலவம் puṭṭilavam, பெ. (n.) சிறுதும்பை; small lucus plant. |
புட்டில் | புட்டில்1 puṭṭil, பெ. (n.) 1. அம்பறாத் துணி; quiver. ‘வாளிபெய் புட்டில்’ (கம்பரா. கரன். 18);. 2. விரலுறை; cover for fingers; gloves. ‘விரற்றலைப் புட்டில் வீக்கி’ (சீவக. 2202);. 3. உறை (யாழ்.அக.);; sheath, scabbard, cover. 4. கூடை; basket, flower basket. ‘போழிற் புனைந்த வரிப்புட்டில்’ (வின்.); (கலித்,117);. 5. இறைகூடை; baling basket. 6. முறம் (யாழ்.அக.);; winnow. 7. குதிரையுணவு கட்டும் பை; food bag for horses. ‘புழுக்கும் காணமும் புட்டில் வாய்ச் செறித்தனர்’ (சீவக.1938);. 8. கெச்சையென்னும் அணி ; tinkling anklet of a horses. ‘அரிபுனை புட்டின்’ (கலித்.80);. 9. தக்கோலத்தின் காய்; cubeb. ‘அம்பொதிப் புட்டில்’ (திருமுரு.191);. ம. புட்டில்; க. புட்டி, புட்டி, புட்டெ; தெ. புடி (பூக்கூடை);, புடிக, புட்டிக, புடிகெ, புட்டி; து. புட்டி, புடயி, புடாயி. புட்டி; கூ. புடி, (பெரிய கூடை); [புள் → புட்டி = உட்டுளையுள்ளது, ஒரு வகைக் கலம், சிறுபடி, குடுவை, குப்பு. புட்டி → புட்டில் = அம்பறாத்தூணி (வ.வ.2.37);, உட்டுளையுள்ள உறை, ‘இல்’ குறுமையீறு. புட்டி + இல் -புட்டில். ஓ. நோ. தொட்டி + இல் – தொட்டில், (சு.வி.14); பாண்டி – பாண்டில், விட்டி – விட்டில்] புட்டில்2 puṭṭil, பெ. (n.) புட்டி3 (இ.வ.); பார்க்க; see puṭṭi3. [புள் → புட்டி → புட்டில்] |
புட்டிவெல்லம் | புட்டிவெல்லம் puṭṭivellam, பெ. (n.) பணங்கட்டி (யாழ்.அக.);; jaggery, coarse sugar kept in cases of palmyra leaves. [புட்டி வெல்லம்] |
புட்டு | புட்டு puṭṭu, பெ. (n.) 1. சிற்றுண்டிவகை; a kind of confectionery. 2. தினைமா; millet flour. [புள் → புட்டு] |
புட்டுக்கூடை | புட்டுக்கூடை puṭṭukāṭai, பெ. (n.) மிகச் சிறிய கூடை; a small size basket. மறுவ. புல்லாங் கூடை பட. பொட்டுகூடெ. [புட்டு + கூடை] புட்டுக்கூடை puṭṭukāṭai, பெ.(n.) மூங்கிலால் செய்யப்பட்ட சிறிய கூடை a little basket made of bamboo. [பிள்-பிட்டு-புட்டு+கூடை] |
புட்டுத்திருப்பி | புட்டுத்திருப்பி puṭṭuttiruppi, பெ. (n.) பொன்முசுட்டை வேர்; gravel root. |
புட்டுப்பழம் | புட்டுப்பழம் puṭṭuppaḻm, பெ. (n.) தின் பழவகையுளொன்று; an edible fruit. [புட்டு + பழம்] |
புட்டுவாழை | புட்டுவாழை puṭṭuvāḻai, பெ. (n.) வாழை வகை; a kind of plaintain. (G.Sm.D.l.i, 215);. [புட்டு + வாழை] |
புட்டுவை-த்தல் | புட்டுவை-த்தல் puṭṭuvaittal, 4 செ.குன்றாவி. (v.t.) புட்டவி-த்தல் பார்க்க; see puṭṭavi-. [புட்டு + வை-,] |
புட்டை | புட்டை puṭṭai, பெ. (n.) 1. பெருத்த விதை (அண்டம்);; elephantoid scrotum. 2. விதை வீக்கம் (அண்டவாதம்);; rupture. hernia. க., கொலா. புட்டெ; தெ., பர். புட்ட [புடை → புடம் → புட்டம் = புடைத்த பின்புறம், புடைவை (பிங்.);. புட்டம் → புட்டா = வீங்கின விதை (அண்டம்);. புட்டா → புட்டை. (வே.க. 3, 77);] |
புட்பகத்தாவு | புட்பகத்தாவு puṭpagattāvu, பெ. (n.) கறுப்பரிசி; black rice. |
புட்பகம் | புட்பகம் puṭpagam, பெ. (n.) 1. கண்ணோய் வகை; an eye disease. 2. மூக்கிரட்டை; a spreading plant. 3. கஞ்சாங்கோரை; white basil. |
புட்பகரிகம் | புட்பகரிகம் puṭpagarigam, பெ. (n.) மூங்கில்; bamboo. |
புட்பகவிமானம் | புட்பகவிமானம் puṭpagavimāṉam, பெ.(n.) குபேரனூர்தி; aerial car of {}. புட்பக விமானம்வந் தவனியை யணுக (கம்பரா. மீட்சி.146);. |
புட்பகை | புட்பகை puṭpagai, பெ. (n.) சோழன் நலங்கிள்ளியின் புனைபெயர்; title of a CÕl¬¬an king NalaÑ-killi. ‘புட்பகைக் கேவானாகலின்’ (புறநா.68);. [புள்+பகை] |
புட்பகொரித்தாரு | புட்பகொரித்தாரு puṭpagorittāru, பெ. (n.) கொட்டைக் கரந்தை; Indian globe thistle. |
புட்பசங்குணத்தி | புட்பசங்குணத்தி puṭpasaṅguṇatti, பெ. (n.) நத்தைச் சூரி; a plant when snails approach it their shells brake. |
புட்படு-த்தல் | புட்படு-த்தல் puḍpaḍuttal, 15 செ.கு.வி. (v.i.) புட்களை வலையில் அகப்படுத்துதல்; to enSnare birds. [புள்+படு-,] |
புட்பம் | புட்பம் puṭpam, பெ.(n.) 1. மலர்; flower. புட்பவிதி மாலைப்படியே (புட்ப.54);. நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா (சிவ.வா.494);. 2. வாழை (மலை);; plantain. 3. கண்ணோய் வகை (யாழ்.அக.);; an eye disease. 4. மகளிர் சூதகம் (யாழ்.அக.);; menstruation. [Skt. {} → த. புட்பம்] |
புட்பறை | புட்பறை puṭpaṟai, பெ. (n.) பறை வகை (சிலப். 10,139, உரை);; a kind of drum. [புள்+பறை] |
புட்பவதி | புட்பவதி puṭpavadi, பெ.(n.) பூப்பெய்தியவள்; girl who has attained puberty. “புட்பவதியாம் வாரகால பலன்” (அறப்.சத.69);. [Skt. {} → த. புட்பவதி] |
புட்பாகன் | புட்பாகன் puṭpākaṉ, பெ. (n.) திருமால்; Tirumal. போரானைக் கொம்பொசித்த புட்பாகன் (திவ். பெரியதி.3, 6, 6);. [புள்+பாகன்] |
புட்பாகம் | புட்பாகம் puṭpākam, பெ. (n.) மூக்கிரட்டை (சங்.அக.);; spreading hogweed. |
புட்பாஞ்சலி | புட்பாஞ்சலி puṭpāñjali, பெ.(n.) 1. கை நிறையக் கொண்ட பூ; a handful of flowers. “சாரத்தொடு புட்பாஞ்சலி தாண் மீது சொரிந்தார்” (சிவரக.நைமிச.50);. 2. கைக் கொண்ட பூவையிட்டு வழிபடுகை; offering of handful of flowers in worship. 3. இரண்டு கையுங் தடங்கையாக வந்து ஒன்றும் இணைக்கை வகை (சிலப்.3,18,உரை.); ({}); a gesture with both hands inwhich they are joined in {} pose. த.வ. பூப்படையல் [Skt.{} → த. புட்பம்+அஞ்சலி] [p] |
புணராக்கரு | புணராக்கரு puṇarākkaru, பெ. (n.) உறவின்றி யுருவாகுஞ் சூல்; impregnation by external contact without intromission, adosculation. [புணரா+கரு] |
புணராவிரக்கம் | புணராவிரக்கம் puṇarāvirakkam, பெ. (n.) தான் காதலித்தவளைக் கூட நேராமையால் உண்டான வருத்ததோடு தலைவன் தனித்து உறைந்து வருந்துதலைக் கூறும் புறத்துறை;(பு.வெ.11, கைக்.8.);. [(புல் → புள் → புண் → புணர் + ஆ + இரக்கம். ‘ஆ’ எ.ம.இ.] |
புணரி | புணரி puṇari, பெ. (n.) 1. அலை, கடற்றிவலை; wave. ‘வரைமருள் புணரிவான் பிசிருடைய’ (பதிற்றுப்.11);. 2. கடல் (பிங்.);; sea. ‘உலகுசூழ்ந்த நெடும் புணரி’ (திவ்.பெரியதி.8,6,5);. 3. கரை (சூடா);; shore. 4. ஒலிக்கை (அரு.நி.);; sounding. 5. தனிமை (அரு.நி.);; loneliness. [புனர் → புணரி= கலந்தெழும் பேரலை (வே.க.3,64); அவ்வலையையுடைய கடல், அலை மோதும் கரை, அலையால் எழும் ஒலி] |
புணரிசூழ்வேலி | புணரிசூழ்வேலி puṇaricūḻvēli, பெ. (n.) உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங் கொண்டு நிலவுலகத்தைச்சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலைத்தொடர்; a mythical range of mountains encircling the orb of the earth and forming the limit of light and darkness. ‘வெண்டிரைப் புணரிசூழ் வேலிவேந்தனே’ (சீவக.3052);. [புனரி+சூழ் + வேலி] |
புணரியல் | புணரியல் puṇariyal, பெ. (n.) உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல்கள் அமைந்த இலக்கணப்பகுதி; [புணர் + இயல்] |
புணரியிற்றுயின்றோன் | புணரியிற்றுயின்றோன் puṇariyiṟṟuyiṉṟōṉ, பெ. (n.) திருமால் (பிங்.);; Tirumāl, as sleeping on the ocean. [புனரி+இல் +துயின்றோன்.] |
புணரியோர் | புணரியோர் puṇariyōr, பெ. (n.) ஒன்று கூட்டியவர்; those who bring things together. ‘நீருநிலனும்புணரியோர்’ (புறநா.18);. [புனர் → புணரியோர்] |
புணரொலி | புணரொலி puṇaroli, பெ. (n.) ஈருயிர்க் கூட்டொலி; dipthongs. [புணர்+ஒலி] தமிழ் உயிரெழுத்துகளுள் ஐ, ஒள இரண்டும் புணரொலியன்கள், “அகர இகரம் ஐகாரமாகும்” (தொல்.54);. “அகர உகரம்ஒளகாரமாகும்” (தொல்.55); என்று தொல்காப்பியங்கூறுவதால், அகரஇகரம் சேர்ந்து ஐகாரமும் அகரவுகரம் சேர்ந்து ஒளகாரமும் புணரொலிகளாய்த் தோன்றின வென அறியலாம். இகரம் உகரத்தினும் முந்தியதாதலின் இகரக்கூறுள்ள ஐகாரம் உகரக்கூறுள்ள ஒளகாரத்தினும் முந்தித் தோன்றியிருத்தல் வேண்டும். ஒரிரு சொல்முதலில் வரும் அகரஇகரம் ஐகாரமாகவும் எழுதப்பெறும். எ-டு: வய் → வய → வயிர் → வயிரம் → வைரம் ஒரிருசொன்முதலில் வரும் அகரஉகரம் ஒளகாரமாகவும் எழுதப்பெறும். எ-டு: கதுவாலி (குறுகிய வாலையுடைய பறவைஇனம்); → கவுதாரி (இலக்கணப்போலி → கெளதாரி); (த.வ.134,135);. |
புணர் | புணர்1 puṇartal, 4.செ.குன்றாவி, (v.t.) 1. பொருந்துதல் (திவா.);; to join, unite. 2. கலவி செய்தல்; to cohabit, copulate. “மன்னியவளைப் புணரப் புக்கு” (திவ். பெருமாள்.6,9);. 3. அளவளாவுதல் (பிங்.);; to associate with, keep company with. “ஊதியமில்லார்ப் புணர்தல்” (நாலடி,233);. 4. மேற் கொள்ளுதல்; to undertake. “பொருவகை புரிந்தவர் புணர்ந்த நீதியும்” (பெருங்.வத்தவ.6,9);. மறுவ. துவள்தல், நொட்டுதல், பொலிதல், பிணைதல், புல்லுதல். ம. புணருக [புல் → புள் → புண் → புணர்(வே.க.3,64);] புணர்2 puṇartal, 4 செ.கு.வி. (v.i.) 1. ஏற்புடையதாதல்; to suit, fit. “குரல் புணர்சீர்” (புறநா.11);. 2. விளங்குதல்; to appeal to the mind; to be understood. 3. எழுத்து முதலியன சந்தித்தல்; coalesce, as letters or Words in Sandi. “மொழி புணரியலயே” (தொல்.எழுத்து.108);. 4. உடலிற்படுதல்; to touch. “மென்முலை மேற்பனிமாருதம் புணர” (கம்பரா.சூர்ப்பண.47);. 5. கூடியதாதல்; to be possible. “புணரின் வெகுளாமை நன்று” (குறள்,308);. [புல் → புள் → புண் → புணர், (வே.க.364);] புணர்3 puṇarttal, 11 செ.குன்றாவி. (v.t.) 1. சேர்த்தல்; to combine, connect, unite. “நின்கழற்கணே புணர்ப்பதாக” (திருவாச.5,71);. 2. எழுத்து முதலியன சந்திக்கும்படி செய்தல்; “பெயரொடு பெயரைப் புணர்க் குங்காலும்” (தொல்.எழுத்து.108);. 3. நிகழ்த்துதல்; to do, make bring about. “தூமென் குழலியர் புணர்த்த சூழ்ச்சியால்” (கம்பரா.திருவவ.48);. 4. பாகுபடுத்தல்; to analyse, choose, resolve. “நாவினாற் பூவை புணர்த்துப் பேசும்” (பு.வெ.12, வென்றிப்.12); 5. கூட்டிச் சொல்லுதல்; to speak connectedly. “தருக்கிய புணர்த்து” (தொல்.பொருள்.50);. 6. கட்டுதல்; to fasten, tie. “புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி” (பெரும்பாண்.218);. 7. படைத்தல் (சிருட்டித்தல்);; to create. “புணர்க்கு மயனாம்” (திவ்.திருவாய் 2,8,3);. 8. சிற்றிலக்கிய (பிரபந்த);மாகச் செய்தல்; to compose. as a pirapandam. “நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்பு” (ஈடு.5,9,3);. [புல் → புள் → புண் – புணர், புணர்தல்(த.வி.); _ புணர்த்தல்(பி.வி.);] புணர்4 puṇar, பெ. (n.) 1. சேர்க்கை; mating, uniting. “புணர்பிரியா வன்றிலும் போல்” (நாலடி, 376); 2. புதுமை (பிங்.);; newness, novelty. க. பொணர் [புல் → புள் → புண் → புணர், (வே.க.3,64);] |
புணர்குறி | புணர்குறி puṇarkuṟi, பெ. (n.) தலைவன் தலைவியர் சந்திக்கும் குறியிடம்; “புணர்குறி செய்த புலர்குர லேனல்” (அகநா.118);. [புணர்+ குறி] |
புணர்க்கை | புணர்க்கை puṇarkkai, பெ. (n.) 1. சேர்க்கை; mating, uniting. 2. புணர்ப்பு2 1,4 பார்க்க; See punarpрu2 1,4. [புல் → புள் → புண் → புணர்+கை ‘கை’ தொ.பெ.ஈறு] |
புணர்ச்சனனம் | புணர்ச்சனனம் puṇarccaṉaṉam, பெ. (n.) புனர்வாழ்வு பார்க்க; see pupar-Wப. [புணர் + சனனம்] Skt. janana → த.சனனம் |
புணர்ச்சி | புணர்ச்சி1 puṇarcci, பெ. (n.) 1. சேர்க்கை (பிங்.);; combination, association, union. 2. ஒரு நாட்டவராயிருத்தல்; co-residence. “புணர்ச்சி பழகுதல் வேண்டா” (குறள்,785);. 3. கலவி (பிங்..);; coition. “தகைமிக்க புணர்ச்சியா” (கலித்.118); 4. முன்பின் தொடர்பு (வின்.);; connection of the different parts of a subject. [புல் → புள் → புண் → புணர் → புணர்ச்சி. ‘சி’ தொழிற்பெயரீறு] புணர்ச்சி2 puṇarcci, பெ. (n.) எழுத்து முதலியவற்றின் சேர்க்கை(சந்தி சொற்கூட்டு; “புணர்ச்சிவாயின்” (தொல்.எழுத்து.142); [புனர் → புணர்ச்சி.’சி’ தொ.பெ.ஈறு] இருசொற் புணர்வது புணர்ச்சி. மொழி பொதுமக்களால் ஆக்கம் பெற்றதாகலின், அதன் புணர்ச்சியும் அவரது அமைப்பே. கவனித்தறியப் பெறாது ஏற்கெனவேயிருந்த சொற்கூட்டு நெறிமுறைகளையே, புணர்ச்சி நெறிமொழிகள் (விதிகள்); என எடுத்துக் கூறினர் இலக்கணியர். இயல்புப்புணர்ச்சி, திரிபுப்புணர்ச்சி எனப் புணர்ச்சி இரு வகைப்படும். ஒரு வகை வேறுபாடுமின்றி இயல்பாயிருப்பது இயல்புப்புணர்ச்சி; ஏதேனுமொரு வகையில் திரிவது திரிபுப் புணர்ச்சி. திரிதல்-வேறுபடுதல். அது தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும். முன்னில்லாத எழுத்தோ அசையோ தோன்றுவது தோன்றல், ஒரெழுத்து மற்றோரெழுத்தாக மாறுவது திரிதல்; முன்னுள்ள எழுத்தோ அசையோ மறைவது கெடுதல். புணர்ச்சியிற் புதிதாய்த் தோன்றும் அசை, இரு சொற்களை அல்லது ஒரு சொல்லையும் ஒரு சொல்லுறுப்பைச் சார்ந்து நின்று இயைப்பதால் (இசைப்பதால்); சாரியை எனப்படும். திரிபு புணர்ச்சி-தோன்றல் (insertion); வாழை+காய் – வாழைக்காய் அவரை+ பந்தல் – அவரைப்பந்தல் களா+பழம் – களாப்பழம், களாம்பழம் பூ + செடி – பூச்செடி (பூக்கும்செடி); பூ + செடி – பூஞ்செடி (அழகியசெடி); பணத்தை + கொடு – பணத்தைக் கொடு ஊருக்கு + போ – ஊருக்குப்போ வர + சொல் – வரச்சொல் இ + நாள் – இந்நாள் வெள் + ஆடு – வெள்ளாடு நாடு + ஆண்மை – நாட்டாண்மை இவை எழுத்துத்தோன்றல் செக்கார் + குடி – செக்காரக்குடி புளி + பழம் – புளியம்பழம் கண் + பொத்தி – கண்ணாம் பொத்தி இவை சாரியைதோன்றல், திரிதல்(mutation); நல் + செய் – நன்செய் வெள் + கலம் – வெண்கலம் செம் + தாமரை – செந்தாமரை வெம் + நீர் – வெந்நீர் வேம்பு + இலை – வேப்பிலை தண் + நீர் – தண்ணிர் உள் + நாக்கு – உண்ணாக்கு கல் + தாழை – கற்றாழை நல் + நிலம் – நன்னிலம் உள் + து – உண்டு ஈன் + து – ஈற்று இவை திரிதல் கெடுதல் (omission); மரம்+வேர் – மரவேர் தொல்காப்பியம் +நூல் – தொல்காப்பிய நூல் இவை கெடுதல். அன்று + கூலி – அற்றைக்கூலி மண் + கட்டி – மண்ணாங்கட்டி இவை தோன்றலும் திரிதலும். பட்டினம் + பிள்ளையார் – பட்டினத்துப் பிள்ளையார் நகரம் + ஆன் – நகரத்தான். இவை தோன்றதலும் கெடுதலும். வேம்பு+காய் – வேப்பங்காய் பனை + தோப்பு – பனந்தோப்பு இவை தோன்றலும் திரிதலும், கெடுதலும். மரூஉப்புணர்ச்சி சில சொற்கள் ஒலி நெறிப்படி ஒழுங்காய்ப் புணராது மருவிப் புணரும். இப்புணர்ச்சி மரூஉப் புணர்ச்சியாம். மருவுதல் நெறி திறம்புதல். எ-டு : ஆதன் + தா-(ஆந்தா); ஆந்தை அகம் +கை – அங்கை நாழி+உரி – நாழுரி – நாடுரி மக +கள் – மக்கள். உள்ளங்கை (உள்+அங்கை); என்பது அங்கையின் நடுப்பகுதி. இதில் அம் என்பது சாரியை யன்று. எந்தை தந்தை என்பன மரூஉப் புணர்ச்சியில் எம்+தா, தம்+தா எனப் பிரியும் தா என்பது தந்தையைக் குறிக்கும் பெயர்ச்சொல். தாதை என்பதிற் போன்றே. எந்தை, தந்தை, ஆந்தை, பூந்தை என்பவற்றிலும் தை என்பது தா என்பதன் திரிபாகும். ஒ.நோ. எம்பி(ன்);, எங்கை, எவ்வை, எம்முன், எந்தை, நும்பி(ன்);, நுங்கை, நுவ்வை, நும்முன், நுந்தை, தம்பி(ன்);, தங்கை, தவ்வை தம்முன், தந்தை எம்பின் = எமக்குப் பின் பிறந்தான். கை = தங்கை (பிங்);. எங்கை = எமக்குச் சிறியவள். எம்+அவ்வை-எவ்வை. இதில் அவ்வை என்னும் அன்னையின் பெயர் அன்னை போலும் அக்கையைக் குறித்தது. இச்சொல் சில பழஞ்செய்யுள்களில் தங்கையைக் குறிப்பது, காதல் பற்றிய மரபு வழுவமைதியென அறிக. என் தந்தை என் தம்பி, என் தங்கை என்பனவெல்லாம் வழக்குப் பற்றிய இடவழுவமைதியே. கார்காலம், வடகோடு, கோவூர்கிழார், நாடு கிழவோன் எனச் செய்யுள் வழக்கிலும், கேடு காலம், பேறுகாலம், விறகுதலையன், விறகு காடு, வடகரை, மழைகாலம் என உலக வழக்கிலும் வலிமிகாது வழங்குவதாலும், நான்கு வெட்கு என்னும் திரிபு வடிவுகளுடன் நால்கு, வெள்கு என்னும் இயல்பு வடிவுகளும் வழங்கி வருவதாலும், பல்கு, பல்பொருள், சில்கால், வல்சி, வள்பு எனச் சில சொற்கள் என்றும் இயல்பாகவேயிருப்பதனாலும் முதற்காலத்தில் திரிதற் புணர்ச்சி அத்துணைக் கண்டிப்பா யிருந்ததில்லை யென உய்த்துணரலாம். மூவகைப் புணர்ச்சியும் ஒலியிசைவை மட்டுமன்றி, இரு பொருட் கிடைப்பட்ட நெருங்கிய தொடர்பையும் உணர்த்துதல் காண்க. (த.வ.1,95-98); புணர்ச்சி3 puṇarcci, பெ. (n.) அணிகலன்கள்; dress. “புணர்ச்சிகள் பலவு மெல்லையில் பொருள்… இட” (பெரியபு:அமர்நீ.38);. [புணர் → புணர்ச்சி] |
புணர்ச்சிநிருவாகம் | புணர்ச்சிநிருவாகம் puṇarcciniruvākam, பெ. (n.) பாலியற் பொறுமை; sexual tolerance. [புணர்ச்சி+நிருவாகம்] Skt. nirvāka → த.நிருவாகம் |
புணர்ச்சிமாலை | புணர்ச்சிமாலை puṇarccimālai, பெ. (n.) தண்டக மாலை (சங்.அக.);; a kind of poem. [புணர்ச்சி + மாலை. மயல் → மால் → மாலை] |
புணர்ச்சியாயரை-த்தல் | புணர்ச்சியாயரை-த்தல் puṇarcciyāyaraittal, 4 செ.குன்றாவி. (v.t.) கலக்கும்படி அரைத்தல்; to grind well in such a way that ingredients mix well. [புணர்ச்சி + ஆய் + அரை-,] |
புணர்ச்சியிலிச்சை | புணர்ச்சியிலிச்சை puṇarcciyiliccai, பெ. (n.) பாலியல் விருப்பம்; liking for coitus. [புணர்ச்சியில் +இச்சை] |
புணர்ச்சிவிகாரம் | புணர்ச்சிவிகாரம் puṇarccivikāram, பெ. (n.) புணர்ச்சி வேறுபாடு பார்க்க; see punarccivērupāgu. [புணர்ச்சி + விகாரம்] Skt. vikära த. விகாரம் |
புணர்ச்சிவிழையாமை | புணர்ச்சிவிழையாமை puṇarcciviḻaiyāmai, பெ. (n.) பெண்ணுலன் சேருதலை விரும்பாமை; dislike to have female companian for intercourse. புணர்ச்சி விழையாமையாவது மாணிய நிலை (பிரமசரியம்); காத்தல் (தொல்.பொருள்.74 இளம்.); [புணர்ச்சி + விழையாமை. ‘ஆ’ எ.ம. இடைநிலை] |
புணர்ச்சிவேறுபாடு | புணர்ச்சிவேறுபாடு puṇarccivēṟupāṭu, பெ. (n.) தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் புணர்ச்சி வேறுபாடுகள்; [புணர்ச்சி + வேறுபாடு] புணர்ச்சி2 பார்க்க |
புணர்தம் | புணர்தம் puṇartam, பெ. (n.) புனர்கொடிறு (பிங்.);; the seventh naksatra. |
புணர்தல் | புணர்தல் puṇartal, பெ. (n.) தலைவனும் தலைவியும் கூடுதலாகிய குறிஞ்சியுரிப் பொருள் (தொல்.பொருள்.14);; [புணர் → புணர்தல். ‘தல்’ தொ.பெ.ஈறு] |
புணர்த்து-தல் | புணர்த்து-தல் puṇarddudal, 5 செ. குன்றாவி. (v.t.) புணர்2-தல் பார்க்க; see punar-2, [புணர்தல்(த.வி.); – புணர்த்தல்(பி.வி.); புணர்த்துதல் (கா.வி.);] |
புணர்நலம் | புணர்நலம் puṇarnalam, பெ. (n.) சாரணை; purslane – leaved traintheme. |
புணர்நிலை | புணர்நிலை puṇarnilai, பெ. (n.) சொற்கள் திரியாது புணர்ந்து ஒருசொற்றன்மைப்பட்டு நிற்றல்; compound. [புணர்+ நிலை] பாய்மா, மாசெல்கரம் என்றாற் போலச் சொற்கள் திரியாது புணர்ந்து ஒரு சொற்றன்மைப்பட்டு நிற்றலே புணர் நிலையாகும். |
புணர்நிலையணி | புணர்நிலையணி puṇarnilaiyaṇi, பெ. (n.) வினை பண்பு இவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்குஞ் சொல்லொன்றாகப் புணர்ந்து நிற்கச் சொல்லும் அணி. (தண்டி.84);; [புணர்+நிலை + அணி] |
புணர்ப்பாவை | புணர்ப்பாவை puṇarppāvai, பெ. (n.) சக்கரப் பா முதலியவற்றின் இலக்கணங் கூறுவதும் வழக்கற்றதுமான ஒரு பழைய நூல் (யாப்.வி.பக்.497);; an ancient treatise dealing with cakkara-k-kavi, etc. not extant. [புணர்+பாவை] |
புணர்ப்பு | புணர்ப்பு1 puṇarppu, பெ. (n.) 1. தொடர்பு; connection. “என்தனி நாயகன் புணர்ப்பே” (திவ்.திருவாய்.2,8,2);. 2. புணர்ச்சி,1,3 பார்க்க; see punarcci, 1 3. 3. எழுத்து முதலியவற்றின் சந்தி; “இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே” (நன்.152);. 4. நட்பு; friendship, intimacy. 5. துணை; associate, comrade. “புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள்” (பு.வெ.10, சிறப்பிற்.10); 6. உடல் (சூடா.);; body, as a combination of parts. 7. கடல் (ஈடு,2,8,3. அரும்);; ocean. [புல் → புள் → புண் → புணர். புணர்தல்=பொருந்துதல், நட்பாடல், கலவி செய்தல், சொற்கூடுதல், கூடியதாதல். புணர் → புணர்ப்பு (வே.க.3.64);. ‘பு’ தொ.பெ.ஈறு] புணர்ப்பு2 puṇarppu, பெ. (n.) 1. சூழ்ச்சி; contrivance, scheme, plan, artifice, craft, plot. “முதியவன் புணர்ப்பினால்” (கலித்.28);. 2. ஏவல்; command. “கஞ்சன் புணர்ப்பினில் வந்த” (திவ்.பெரியாழ்.2,4,4);. 3. சிற்றிலக்கியம், பனுவல்; poem. “நாயகன் பேர் வைத்துப் புணர்த்த புணர்ப்புக் கேட்டாற் போலே காணும்” (ஈடு.5,9,3); 4. மாயம்; illusion. “ஏழைதன் னீர்மையிந் நீர்மை யென்றாற் புணர்ப்போ கனவோ” (திருக்கோ.17);. 5. செயல்; action.deed. “புணர்ப்பன் பெரும்புணர்ப்பெங்கும் புலனே” (திவ். திருவாய்.2,8,3);. [புல் → புள் → புண் → புணர் → புணர்ப்பு. ‘பு’ தொ.பெ.ஈறு] |
புணர்ப்புவழு | புணர்ப்புவழு puṇarppuvaḻu, பெ. (n.) செய்யுட்குற்றங்களு ளொன்று (யாப்.வி.525);; [புணர் → புணர்ப்பு + வழு] |
புணர்மீன் | புணர்மீன் puṇarmīṉ, பெ. (n.) இணைக்கயல் (சூடா.);; one of atta-mangalam. [புணர்+மீன்] |
புணர்விருத்தி | புணர்விருத்தி puṇarvirutti, பெ. (n.) பாலியல் நிறைவு; Sexual satisfaction. [புணர் + விருத்தி] Skt. vrtti → த. விருத்தி |
புணர்வு | புணர்வு puṇarvu, பெ. (n.) 1. சேர்க்கை; combination. 2. கலவி; coition. “புணர்வின்னினிய புலவிப்பொழுதும்” (சீவக.1378);. 3. இணைப்பு(சூடா.);; connection, joining. 4. உடல்(பிங்.);; body. [புல் → புள் → புண் → புணர் → புணர்வு. (வே.க.3.64); ‘பு’ தொ. பெ. ஈறு] |
புணாநவி | புணாநவி puṇānavi, பெ.(n.) புனர்நவம் பார்க்க;see {}. |
புணி | புணி1 puṇittal, 4 செ.குன்றாவி. (v.t.) சேர்த்துக்கட்டுதல்; to make bundle, to tie. [புண் → புணி-,(வே.க.3.64);] புணி2 puṇi, பெ. (n.) மயிர்முடி (அக.நி.);; tuft of hair. [புல் → புள் → புண் → புணி. புணித்தல் = சேர்த்துக்கட்டுதல் (வே.க.3.64); புணி → புணி = சேர்த்துக் கட்டிய மயிர்முடி ] புணி3 puṇi, பெ. (n.) பிணி3,6 பார்க்க; see pini3.6. [பிணி→புணி] |
புணிகயிறு | புணிகயிறு puṇigayiṟu, பெ. (n.) புணி தெரிவதற்காகப் பயன்படுத்தும் கயிறு; thread used to project the row of threads in a weaver’s loom. [புணி+கயிறு] |
புணிசுழற்று-தல் | புணிசுழற்று-தல் puṇisuḻṟṟudal, 15 செ.குவி (v.i.) ஆலையில் பாவு ஓடிய பிறகு புணிகளிலிருந்து இழைகளைச் சுழற்றுதல்; to wind the threads used to project the row of threads after spinning the warp in weaver’s loom. [புணி + சுழற்று-,. சுழல் → சுழற்று] |
புணிச்சட்டம் | புணிச்சட்டம் puṇiccaṭṭam, பெ. (n.) புணி ஆணியுடைய பதினெட்டுச் சட்டங்கள்; an instrument in weaving. [புணி+ சட்டம்] |
புணிமாறு-தல் | புணிமாறு-தல் puṇimāṟudal, 20 செகுவி. (v.i.) புணைமாறு-தல் பார்க்க; see pural-maru. [புணைமாறு → புணிமாறு] |
புணை | புணை1 puṇaittal, 11 செ.குன்றாவி (v.t.) கட்டுதல்; to unite, tie. [புல் → புள் → புண் → புணை – , (வே.க.3.65 );] புணை2 puṇai, பெ. (n.) 1. நீரில்மிதக்கும் கட்டை, தெப்பம்; கட்டுமரம்; float, raft. ‘நல்லாண்மை யென்னும் புணை’ (குறள்.1134);. 2. மரக்கலம் (சூடா.);; boat, vessel, ship. 3. உதவி; support, help. 4. விலங்கு (சூடா.);; fetters. 5. ஈடு; pledge, security. 6. பிணைமுறி; surety. ‘இவனுக்குப் புணை’ (S.I.I.v,173);. 7. ஒப்பு; comparison. ‘புணையில்லா வெவ்வ நோய்’ (கலித்.124);. [புள் → புண் → புணை → புணைத்தல்= கட்டுதல், புண்1 – புணை (வே.க.3.65);] |
புணைகயிறு | புணைகயிறு puṇaigayiṟu, பெ. (n.) பூட்டாங்கயிறு, நுகத்தடியில் எருதைப் பிணைக்கும் நுகக்கயிறு(அருங்கலம்,94,உரை);; rope with which a bullock is fastered to the yoke. மறுவ. பூட்டாங்கயிறு [புண் → புணை + கயிறு] |
புணைக்கட்டை | புணைக்கட்டை puṇaikkaṭṭai, பெ. (n.) கட்டுமரம் (இ.வ.);; catamaran. [புள் → புண் → புணை + கட்டை] |
புணைசல் | புணைசல் puṇaisal, பெ. (n.) see punayal, [புணையல் → புணைசல்] |
புணைசல்விடு-தல் | புணைசல்விடு-தல் puṇaisalviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) களத்திற் கதிரைக் காவிட்டு உழக்குதல்; to tread out grain on the threshing-floor with the help of cattle fastened together. மறுவ. பிணையோட்டுதல், படைவிடுதல். [புனையல் → புனைசல் + விடு -, ‘விடு’.து.வினை] |
புணைபுணை | புணைபுணை buṇaibuṇai, பெ. (n.) கட்டுமரம்; catamaran. ‘புணைபுணை யேறத் தாழ்த்ததை தளிரிவை நீரிற் றுவண்ட சேஎய்குன்றம்’ (பரிபா.6;68);. [புணை + புணை.] ‘புணை’ பார்க்க. |
புணைப்படு-தல் | புணைப்படு-தல் puṇaippaḍudal, 4 செ.கு.வி. (v.i.) 1. பிணையாதல்; to become security, to go bail. 2. உறுதியாதல்; to be responsible. ‘திருவிளக்கெரிக்க நெய்யட்டுவதாகப் புணைப்பட்டோம்’ (S.I.I.iii.28);. [புனை + படு-,] |
புணைமாறூ-தல் | புணைமாறூ-தல் puṇaimāṟūtal, 20 செ.கு.வி. (v.i.) இணைப்பு மாறுதல்; to change the pair. [புணை + மாறு-,] |
புணையலடி-த்தல் | புணையலடி-த்தல் puṇaiyalaḍittal, 4 செ.குன்றாவி, (v.t.) புணைசல் விடு-தல பார்க்க; see punaišal-vidu-. மறுவ. பிணையோட்டுதல், பிணையடித்தல். [புனை → புணையல் + அடி-,] |
புணையல் | புணையல் puṇaiyal, பெ. (n.) பிணைப்பு; joining together. [புல் → புள் → புண் → புணை → புணையல். ‘அல்’ தொ.பெ.ஈறு] |
புண் | புண் puṇ, பெ. (n.) 1. உடற்றோலில் உண்டாம் ஊறு; raw sore, ulcer, wound. ‘தீயினாற் சுட்டபுண்’ (குறள்,129);. 2. தசை; flesh. ‘பிறவற்றின் புண்ணுமாந்தி’ (சீவக.2822);. 3. வடு; scar, scratch. “கொடிற்றுப்புண்’ (கலித்.95);. 4. மனநோவு; Soreness of heart. ‘புண்டரு நெஞ்சினள்’ (சேதுபு.கத்துரு.15.); ம. புண், புண்ணு, க. புண், குண், குண்ணு;கோத. புண் தெ. புண்டு; பட. குண்ணு; து. புடி; குட. புண்ணீ; நா; கொலா, புன்; மா.புனு. [புல் → புள் → பிள் → பிழம்பு = திரட்சி. புல் → புள் → புண் = தோலில் திரண்டு காணப்படும் ஊறு, திரண்டது போல் தெரியும் வடு, திரண்டதசை, புண்வலிப்பது போன்று உணரும் மனநோவு.] |
புண்கரப்பன் | புண்கரப்பன் puṇkarappaṉ, பெ. (n.) குழந்தை களுக்கு வரும் கரப்பன் புண்வகை; a kind of eczema in children. [புண் + கரப்பன்] |
புண்களுபகாரி | புண்களுபகாரி buṇkaḷubakāri, பெ. (n.) கறுப்பரிசி; black rice. |
புண்கழுநீர் | புண்கழுநீர் puṇkaḻunīr, பெ. (n.) புண்கள் அல்லது காயத்தைக் கழுவுவதற்குப் பயன் படுத்துங் காய்ச்சிய மருந்து நீர்; liquid used for cleaning the ulcers and wounds. [புண் + கழுநீர்] |
புண்சுரம் | புண்சுரம் puṇcuram, பெ. (n.) ஆறாத காயத்தினாலேற்படுங் காய்ச்சல்; fever arising from wound. [புண் + சுரம். சுள் → கர் → சுரம்] |
புண்டரம் | புண்டரம் puṇṭaram, பெ. (n.) சந்தனம் நீறு முதலியவற்றால் நெற்றி முதலியவற்றில் தரிக்கும் குறி; marks on the forehead and other parts of the body, made with Sandal, sacred ashes or earth. ‘புண்டரவிசால நெற்றிப் புரவல'(பாரத.சூது.28);. [புடம் → புண்டம் → புண்டரம். புடம்போடுதல் = எரித்து நீறாக்குதல். மா.வி.அகரமுதலி புண்டர என்னும் சொற்குப் பத்திமை (பக்தியுடன் இருத்தல் என்னும் பொருளுடைய ‘புண்’ என்பதை வேராகக் காட்டுகிறது. திருநீறு பூசிவழிபடுதல் பழந்தமிழர் வழக்க மாயிருப்பதையும் வேள்வி வழிப் பாட்டாளர்க்கு இது உரியதன்று என்பதையும் பார்க்கும் போது இச்சொல் தென்சொல்லென்பது பெறப்படும். மேலும் திருநீறுபூசுதல் முதன்மையாயிருந்து அதனின்றுபத்திமைத்தன்மை வளர்ந்தது என்று குறித்திருப்பதன் பொருத்தப் பாட்டின்மையும் நோக்கத் தக்கது] |
புண்டவம் | புண்டவம் puṇṭavam, பெ. (n.) சாரணை (சங்.அக.);; purslane leaved trianthema. |
புண்டு | புண்டு puṇṭu, பெ. (n.) நரம்புச் சிலந்தியின் புண்; guinea worm ulcer. [புண் → புண்டு] |
புண்டுவிரிஞ்சான் | புண்டுவிரிஞ்சான் puṇṭuviriñjāṉ, பெ. (n.) மீன்வகை; a kind of fish. [புண்டு + விரிஞ்சான்] |
புண்டை | புண்டை puṇṭai, பெ. (n.) பெண்குறி; pudendum muliebre. கோத. பிட்; துட. பீடி [புல் → புர் → புரை = உட்டுளை,உட்டுளைப் பொருள். புல் → புள் → புண் → புண்டை = துளையுள்ளது] |
புண்ணடிப் பறிச்சல் | புண்ணடிப் பறிச்சல் puṇṇaḍippaṟiccal, பெ. (n.) புரைப்புண்; elongated abscess with only a small orifice, sinus. (M.L.);. [புண் + அடி + பறிச்சல்.] |
புண்ணளை | புண்ணளை puṇṇaḷai, பெ. (n.) 1. புண்ணின் குழி (யாழ்ப்.);; cavity or orifice in an ulcer. 2. மூலம்; fistula. [புண் + அளை. உள் → அள் → அளை = துளை] |
புண்ணழற்சி | புண்ணழற்சி puṇṇaḻṟci, பெ. (n.) புண்ணால் உண்டாம் எரிவு (யாழ்ப்.);; smart of a Sore. [புண் + அழற்சி. அழல் → அழற்சி. ”சி’ தொழிற்பெயரீறு.] |
புண்ணழற்றி | புண்ணழற்றி puṇṇaḻṟṟi, பெ. (n.) புண்ணில் வைக்கும் காரமருந்து; caustic or antiseptic applied to ulcers or abscess. (M.M.);. [புண் + அழற்றி. அழல் (த.வி.); – அழற்று (பி.வி.); → அழற்றி. ‘இ’வி.மு.ஈறு] |
புண்ணழற்றுதல் | புண்ணழற்றுதல் puṇṇaḻṟṟudal, பெ. (n.) புண்ணழற்சி (யாழ்ப்.); பார்க்க; see pumalarc¬i. [புண் + அழற்றுதல். ‘தல்’ தொ.பெ. ஈறு. அழல்(அழலுதல்);(த.வி.); → அழற்று (பி.வி.);, அழற்றுதல் = அழலச் செய்தல்] |
புண்ணழுக்கு | புண்ணழுக்கு puṇṇaḻukku, பெ. (n.) புண்ணினின்று தோன்றும் அழுக்கு; dirt of a sore. க. புண்பொலசு. [புண் + அழுக்கு] |
புண்ணாக்கர்மூலி | புண்ணாக்கர்மூலி puṇṇākkarmūli, பெ. (n.) மூலிகை வகையு ளொன்று; a herb. |
புண்ணாக்கீசர் | புண்ணாக்கீசர் puṇṇākācar, பெ. (n.) பதினெண் சித்தருளொருவர்; one of eighteen Siddhar. |
புண்ணாக்கு | புண்ணாக்கு puṇṇākku, பெ. (n.) பிண்ணாக்கு (கொ.வ.); பார்க்க; see piṇṇakku. [பிண்ணாக்கு (பிளவுபட்ட நாக்குப் போலிருப்பது → புண்ணாக்கு] |
புண்ணாக்கு-தல் | புண்ணாக்கு-தல் puṇṇākkudal, 15 செ.குன்றாவி. (v.t.) 1. புண் உண்டாக்குதல்; to do or cause to ulcer, make wound. 2. பிறர் மனத்தை நோகச் செய்தல்; to hurt. wound. one’s feelings. உணர்வுகளைப் புண்ணாக்குமாறு பேசக் கூடாது (உ.வ.);. க. புண் படி; தெ. புண்டுசேயு [புண் + ஆக்கு-, ஆகு(த.வி.); – ஆக்கு (பி.வி.);] |
புண்ணாக்குகை | புண்ணாக்குகை puṇṇāggugai, பெ. (n.) சீழ்ப்பிடிக்கை; becoming ulcerated. [புண் + ஆக்குகை] |
புண்ணாக்குக்கீரை | புண்ணாக்குக்கீரை puṇṇākkukārai, பெ. (n.) பிண்ணாக்குப் பூண்டு (இ.வ.);; a herb. [புண்ணாக்கு + கீரை. பிண்ணாக்கு → புண்ணாக்கு] |
புண்ணாக்குப்பூண்டு | புண்ணாக்குப்பூண்டு puṇṇākkuppūṇṭu, பிண்ணாக்குப் பூண்டு பார்க்க; see piṇṇakku-p-pմṇdս. [பிண்ணாக்குப் பூண்டு – புண்ணாக்குப் பூண்டு. புள் → பூண்டு] |
புண்ணாங்குழி | புண்ணாங்குழி puṇṇāṅguḻi, பெ. (n.) குழிப்புண் (இ.வ.);; internal ulcer. [புண்+ஆம் + குழி] |
புண்ணாணி | புண்ணாணி puṇṇāṇi, பெ. (n.) புண்ணின் அடிமுளை; core of an ulcer. [புண் + ஆணி] |
புண்ணானவுடம்பு | புண்ணானவுடம்பு puṇṇāṉavuḍambu, பெ. (n.) புண் போல் நோகுந்தன்மை யுள்ளவுடம்பு; pain in the body with tenderness as there is ulcer. [புண் + ஆன + உடம்பு] |
புண்ணாற்றி | புண்ணாற்றி puṇṇāṟṟi, பெ. (n.) புண்ணைக் குணப்படுத்தும் மருந்து; medicine that heals the sores. [புண் + ஆற்றி. ஆறு → ஆற்று → ஆற்றி.] |
புண்ணாளி | புண்ணாளி puṇṇāḷi, பெ. (n.) புண்ணுடை யோன்; one having Sores. [புண்+ஆளி] |
புண்ணிய குமரன் | புண்ணிய குமரன் puṇṇiyagumaraṉ, பெ.(n.) காவிரிக்குக்கரை கட்டிய சோழன் கரிகாலன் வழிவந்ததெலுங்குச் சோழ மன்னன்; a Tamil king in Andhra Pradesh who claimed as a decendent of the great Sangam age Chola King Karikalan. [புண்ணியன்+குமரன்] |
புண்ணியகதை | புண்ணியகதை puṇṇiyagadai, பெ. (n.) மறவனப்பு தொன்மங்கள் (இதிகாச புராணங்கள்);; sacred story, as the puränäs. [புண்ணியம் + கதை] |
புண்ணியகந்தம் | புண்ணியகந்தம் puṇṇiyagandam, பெ. (n.) சண்பகம் (சங்.அக);; champak. [புண்ணியம் + கந்தம்] |
புண்ணியகருமம் | புண்ணியகருமம் puṇṇiyagarumam, பெ. (n.) நற்செயல் (வின்.);; meritorious act. [புண்ணியம் + கருமம். கரு → கரும் → கருமு → கருமம்] |
புண்ணியகாரம் | புண்ணியகாரம் puṇṇiyakāram, பெ. (n.) குங்கிலியம் (சங்.அக.);; końkani resin. [புண்ணியம்+காரம்] |
புண்ணியகாரியம் | புண்ணியகாரியம் puṇṇiyakāriyam, பெ. (n.) புண்ணியகருமம் பார்க்க; see pumiya karumam. [புண்ணியம் + காரியம்] Skt. Kārya → த. காரியம். |
புண்ணியகாலம் | புண்ணியகாலம் puṇṇiyakālam, பெ. (n.) சமயச் சடங்குகளைக் கடைப்பிடிக்க ஏற்ற வெள்ளுவா (பெளர்ணமி);, கோள்மறைப்பு (கிரணம்); ஆகியன நிகழும் காலம் (சேதுபு.சேதுபல.23);; auspicious time for the performance of religious rites, as the time of a new moon or an eclipse. க. புண்யகால [புண்ணியம்+காலம்] |
புண்ணியகீர்த்தி | புண்ணியகீர்த்தி puṇṇiyaārtti, பெ. (n.) தூய்மையான புகழ்; holy praise. “புண்ணிய கீர்த்திநுஞ் செவிமடுத்து” (திவ்.திருச்சந்.67);. [புண்ணியம் + கீர்த்தி. சீர் = சிறப்பு, புகழ். சீர் → சீர்த்தி = பெரும்புகழ். சீர்த்தி → கீர்த்தி. ச-க ஒ.நோ. செய்-கை, செம்பு-கெம்பு. சேரலம்-கேரலம்.] |
புண்ணியகேத்திரம் | புண்ணியகேத்திரம் puṇṇiyaāttiram, பெ. (n.) புண்ணிய பூமி (வின்.); பார்க்க; see puṇṇiyabմmi. [புண்ணியம் + கேத்திரம்] Skt. ksētra → த. கேத்திரம். |
புண்ணியக்கருத்து | புண்ணியக்கருத்து puṇṇiyakkaruttu, பெ. (n.) வள்ளல் மனம் (தரும சிந்தை); (யாழ்.அக.);; charitable mind. [புண்ணியம் + கருத்து] |
புண்ணியக்காலம் | புண்ணியக்காலம் puṇṇiyakkālam, பெ. (n.) நல்ல நேரம்; an auspecious time. ம., க. புண்யகால; தெ. புண்யகாலமு [புண்ணியம் + காலம்] |
புண்ணியக்குழம்பு | புண்ணியக்குழம்பு puṇṇiyakkuḻmbu, பெ. (n.) புண்ணிய சாந்தம் பார்க்க; See punniya-Śāndam. ‘வெண்ணெயொன்பாப் புண்ணியக் குழம்பு’ (ஞானா.34,10);. [புண்ணியம் + குழம்பு] |
புண்ணியசடம் | புண்ணியசடம் puṇṇiyasaḍam, பெ. (n.) தூயவன் (பரிசுத்தமானவன்); (யாழ்.அக.);; holy person. [புண்ணியம் + சடம்] |
புண்ணியசனம் | புண்ணியசனம் puṇṇiyasaṉam, பெ. (n.) 1. தூய்மையர்; holy person. 2. அசுரர் அல்லது அரக்கர் (இராக்கதர்); வகை (பரிபா.5;5, உரை.);; a class of Asuras or Rāksasas. க. புண்யசன [புண்ணியம் + சனம்] Skt. jana → த. சனம் |
புண்ணியசனேசுவரன் | புண்ணியசனேசுவரன் puṇṇiyasaṉēsuvaraṉ, பெ. (n.) குபேரன் (யாழ்.அக.);; Kubēra. [புண்ணியம் + சனேசுவரன்] Skt. janëSvara → த. சனேசுவரன் |
புண்ணியசன்மம் | புண்ணியசன்மம் puṇṇiyasaṉmam, பெ. (n.) 1. முற்பிறவிகளிற் செய்துள்ள புண்ணியங்களால் நற்பிறவி யெடுத்தவன் (வின்.);; one born with a virtuous disposition as a result of good deeds in former births. 2. புண்ணிய சடம் (யாழ்.அக.);; see punniya-šadam. [புண்ணியம் + சன்மம்] Skt. janmam → த. சன்மம். |
புண்ணியசரவணம் | புண்ணியசரவணம் puṇṇiyasaravaṇam, பெ. (n.) அழகர் மலையிலுள்ள ஒரு பழைய பொய்கை (சிலப்.11,94);; an ancient sacred pool in the Alagar hills near Madurai. மறுவ. சரவணப் பொய்கை. [புண்ணியம் + சரவணம்] |
புண்ணியசரித்திரம் | புண்ணியசரித்திரம் puṇṇiyasarittiram, பெ. (n.) புண்ணியகதை (வின்.); பார்க்க; see punniyakadai. க. புண்யசரிதெ [புண்ணியம் + சரித்திரம்] Skt. caritra → த. சரித்திரம் |
புண்ணியசரீரம் | புண்ணியசரீரம் puṇṇiyasarīram, பெ. (n.) புண்ணிய சடம் (வின்.); பார்க்க; see puniya Sadam. [புண்ணியம் + சரீரம்] Skt. Sarira → த. சரீரம். |
புண்ணியசாந்தம் | புண்ணியசாந்தம் puṇṇiyacāndam, பெ. (n.) 1. சாணி (திவா.);; cowdung. 2. திருநீறு (பிங்.);; Sacred ashes. [புண்ணியம் + சாந்தம்] |
புண்ணியசாந்து | புண்ணியசாந்து puṇṇiyacāndu, பெ. (n.) புண்ணிய சாந்தம் (சாந்.அக.); பார்க்க; see рилniyašӑndаm. [புண்ணியம் + சாந்து] |
புண்ணியசாலி | புண்ணியசாலி puṇṇiyacāli, பெ. (n.) ஆகூழ்க்காரன் (பாக்கியவான்);(கொ.வ.);; fortunate person. [புண்ணியம் + சாலி] |
புண்ணியசுரூபி | புண்ணியசுரூபி puṇṇiyasurūpi, பெ. (n.) புண்ணிய வடிவினன் (வின்.); பார்க்க; see pսṇṇiya-Vadivi ṇa ṇ. [புண்ணிய + சுரூபி] Skt. svarüpin → த. சுரூபி |
புண்ணியசேடம் | புண்ணியசேடம் puṇṇiyacēṭam, பெ. (n.) எடுத்த பிறவியில் நுகர்ந்தது போகப் பிற் பிறவியில் நுகர எஞ்சிநிற்கும் நல்வினை; unexhausted merit attaching to the soul of a person, left over to be exhausted in subsequent births. [புண்ணியம் + சேடம்] Skt. Sëasa → த. சேடம் |
புண்ணியசொரூபி | புண்ணியசொரூபி puṇṇiyasorūpi, பெ. (n.) புண்ணிய வடிவினன் பார்க்க; see puniyavadiViņaŋ. [புண்ணியம் + சொரூபி] Skt. Suarüpin → த. சொரூபி. |
புண்ணியச்செயல் | புண்ணியச்செயல் puṇṇiyacceyal, பெ. (n.) நற்செயல்; meritorious act. [புண்ணியம் + செயல்] |
புண்ணியதலம் | புண்ணியதலம் puṇṇiyadalam, பெ. (n.) தூய்மையான திருவிடம்; sacred place. [புண்ணியம் + தலம்] |
புண்ணியதானம் | புண்ணியதானம்1 puṇṇiyatāṉam, பெ. (n.) புண்ணியந் தருங் கொடை; gifts made on special occasions considered meritorious. “புண்ணிய தானம் புரிந்தோனாதலின்” (சிலிப்.15,30);. [புண்ணியம்+தானம்] புண்ணியதானம்2 puṇṇiyatāṉam, பெ. (n.) புண்ணியவேள்வி (இ.வ.); பார்க்க; see puṇṇiya-vélvi. [புண்ணியாகவாசனம் → புண்ணியதானம்] |
புண்ணியதிசை | புண்ணியதிசை puṇṇiyadisai, பெ. (n.) வடதிசை; the north, as the sacred direction. “புண்ணிய திசைமுகம் போகிய வந்நாள்” (சிலப்.5,94);. [புண்ணியம்+திசை] |
புண்ணியதினம் | புண்ணியதினம் puṇṇiyadiṉam, பெ. (n.) புண்ணிய நாள் பார்க்க; see puṇṇiya – nal. க. புண்யதின [புண்ணியம் + தினம்] Skt. dina → த. தினம் |
புண்ணியதிருணம் | புண்ணியதிருணம் puṇṇiyadiruṇam, பெ. (n.) வெண்டருப்பை (மலை.);; white darbha-grass. [புண்ணியம்+திருணம்] |
புண்ணியதீர்த்தம் | புண்ணியதீர்த்தம் puṇṇiyatīrttam, பெ. (n.) 1. புண்ணியத் துறை பார்க்க; see puṇṇiya-t-turai. 2. புண்ணிய நீர் பார்க்க; see puṇṇiya nir. [புண்ணியம்+திர்த்தம்] |
புண்ணியதேகம் | புண்ணியதேகம் puṇṇiyatēkam, பெ. (n.) புண்ணியவுடம்பு பார்க்க; see puṇṇiya-v-udambu. [புண்ணியம் + தேகம்] Skt. déha → த. தேகம். |
புண்ணியத்தலம் | புண்ணியத்தலம் puṇṇiyattalam, பெ. (n.) புண்ணிய தலம் பார்க்க; see puniya-talam. [புண்ணியம் + தலம். தலை → தலம்] |
புண்ணியத்தானம் | புண்ணியத்தானம் puṇṇiyattāṉam, பெ. (n.) 1. (சாதகனுடைய); புண்ணியத்தைக் குறிப்பதாகிய ஒன்பதாமிடம் (யாழ்.அக.);; 2. புண்ணியத் திருவிடம்; sacred place. [புண்ணியம் + தானம்] |
புண்ணியத்துறை | புண்ணியத்துறை puṇṇiyattuṟai, பெ. (n.) 1. புண்ணியத்தைப் பயக்கும் நீர்த் துறை. sacred bathing ghat. “புண்ணியத்துறை களாடி” (கம்பரா.கைகேசி.107);. 2. புண்ணியத் துறையின் நீர்; sacred water. “புண்ணிய நீரில்… மண்ணிய வாளின்” (பு.வெ.6,27);. [புண்ணியம் + துறை] |
புண்ணியத்தோற்றம் | புண்ணியத்தோற்றம் puṇṇiyattōṟṟam, பெ. (n.) நன்மக்களிடம் தோன்றுதற்குரிய தவம், ஒழுக்கம், கொடை, கல்வி என்ற நால்வகைச் சிறந்த குணங்கள் (சூடா.);; characteristics of a good person of four kinds, viz., tavam, Olukkam, Kodai, kalvi. [புண்ணியம் + தோற்றம். தோன்று → தோற்று → தோற்றம்] |
புண்ணியநதி | புண்ணியநதி puṇṇiyanadi, பெ. (n.) புண்ணியம் பயக்கும் ஆறு; sacred river. “புண்ணிய நதிகளின் நீரை” (சிலப்.3.122,உரை.);. க. புண்யநதி [புண்ணியம் + நதி] Skt. nadin → த. நதி |
புண்ணியநல்லுரை | புண்ணியநல்லுரை puṇṇiyanallurai, பெ. (n.) நல்லுரை (உபதேச); மொழி; sacred teaching. “புண்ணிய நல்லுறை யறிவீர் பொருந்துமின்” (மணிமே.1,59.); [புண்ணியம் + நல்லுரை] |
புண்ணியநாள் | புண்ணியநாள் puṇṇiyanāḷ, பெ. (n.) சிறப்பு (விசேட); நாள்; holy day day fit for performance of religious rites. [புண்ணியம்+நாள்] |
புண்ணியநிலம் | புண்ணியநிலம் puṇṇiyanilam, பெ. (n.) 1. புண்ணியத் திருவிடம்; sacred place. 2. இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையிலுள்ள தேசம்; the tract of country in India lying between the Himalayas and the vindhya mountains. [புண்ணியம் + நிலம்] |
புண்ணியநீர் | புண்ணியநீர் puṇṇiyanīr, பெ. (n.) புண்ணியத் துறையின் நீர்; sacred water. “புண்ணிய நீரில்… மண்ணிய வாளின்” (பு.வெ.6.27);. க. புண்யசல [புண்ணியம் + நீர்] |
புண்ணியன் | புண்ணியன் puṇṇiyaṉ, பெ. (n.) 1. புண்ணியவான் பார்க்க; see puņņiyavāņ. “புண்ணியர் கூடி” (சீவக.301);. 2.அறவோன்; virtuous man. ‘புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்’ (மணிமே.5,98);. 3. கடவுள்; god, as the holy being. “அனந்தன் மேற்கிடந்த வெம்புண்ணியா” (திவ்.திருச்சந்.45);. 4.சிவபெருமான் (பிங்.);; Sivaņ. “பெருந்துறை யெம்புண்ணியன்” (திருவாசக.43,1);. 5. அருகன்(பிங்.);; Arhat. 6. புத்தன் (யாழ்.அக.);; Buddha. தெ. புண்யடு, புண்யவந்துடு [புண்ணியம் → புண்ணியன்] |
புண்ணியபலம் | புண்ணியபலம் buṇṇiyabalam, பெ. (n.) நல்வினைப் பயன் (வின்.);; fruit of past meritorious deeds. க. புண்யபல [புண்ணியம் + பலம்] Skt. phala → த. பலம் |
புண்ணியபுத்திரன் | புண்ணியபுத்திரன் buṇṇiyabuttiraṉ, பெ. (n.) நன்மகன் (சற்புத்திரன்); (யாழ்.அக);; good, Virtuous son. [புண்ணியம் + புத்திரன்] |
புண்ணியபுருடன் | புண்ணியபுருடன் buṇṇiyaburuḍaṉ, பெ. (n.) நல்லோன் (சற்புருடன்); (வின்.);; venerable man. [புண்ணியம் + புருடன்] Skt. purusa → த. புருடன் |
புண்ணியபூ | புண்ணியபூ puṇṇiyapū, பெ. (n.) புண்ணிய நிலம் (வின்.); பார்க்க; see puṇṇiya nilam. [புண்ணியம் + பூ] |
புண்ணியபூமி | புண்ணியபூமி puṇṇiyapūmi, பெ. (n.) புண்ணிய நிலம் பார்க்க; see puṇṇiyanilam. ம., தெ. புண்யபூமி [புண்ணியம் + பூமி] |
புண்ணியமுதல்வன் | புண்ணியமுதல்வன் puṇṇiyamudalvaṉ, பெ. (n.) 1. கடவுள்; god, as the most holy. 2. புத்தன் (திவா.);; Buddha. மறுவ. அண்ணல், முக்குற்றமில்லோன், எண்ணால் கண்ணுடையோன், பூமிசை நடந்தோன். [புண்ணியம் +முதல்வன்] |
புண்ணியமுதல்வி | புண்ணியமுதல்வி puṇṇiyamudalvi, பெ. (n.) 1. மலைமகள் (பார்வதி); (பிங்.);; Parvadi. 2. தவத்திற் சிறந்தவள்; a woman of austere. penance. “புண்ணிய முதல்வி திருத்தடி பொருந்தி” (சிலப்.13,2);. [புண்ணியம் +முதல்வி] |
புண்ணியமூர்த்தி | புண்ணியமூர்த்தி puṇṇiyamūrtti, பெ. (n.) 1. புண்ணியமே உருவெடுத்தாற் போன்றவன்; a holy person, considered an embodiment of virtue. “புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் என்னும் ஆசை” (கம்பரா.மாயாசன.22);. 2. கடவுள்; god. 3. புத்தன் (திவா.);; Buddha. 4. அருகன் (பிங்.);; Arhat. க. புண்யமூர்த்தி [புண்ணியம் + மூர்த்தி] Skt. mūrtti → த. மூர்த்தி |
புண்ணியம் | புண்ணியம்1 puṇṇiyam, பெ. (n.) 1. அறம் (தருமம்); (உரி.நி.);; virtue, moral or religious merit. 2. நல்வினை; charity, good deeds. “புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய்” (திவ்.திருவாய்.6,3,4);. 3. நல்வினைப் பயன்; merit of virtuous deeds done in previous births. “வையத் துப் புண்ணியமோ வேறே” (நாலடி,264);. 4. தூய்மை; purity, holiness. 5. ஒன்பான் செயல்களுள் ஒன்றான மனவமைதியைத் தரும் நற்கருமம் (சீவக.2814.உரை);; தெய்வத் தன்மை (யாழ்.அக.);; divine nature. 7. ஒன்பான்(நவ);புண்ணியம்; acts of hospitality shown to an honoured guest. 8. பணிவு (நகங்கிருதி);, கொடை(தானம்);, நோன்பு(விரதம்);,நட்பு(சினேகம்);,உணவளிக்கை(நயபோசனம்);,பொறுமை(கமை);,ஊக்கம்(உற்சாகம்); என எழுவகைப்பட்ட நற்செய்கை(யாழ்.அக..);; meritorious acts, of seven kinds viz., nagańkirudi, tāņam, viradam, sinēgam, nayapôsanam, kamai, urcágam. 9. புண்ணியசாந்தம் (அரு.நி.); பார்க்க; see punniya – Sandam 10. நீர்த்தொட்டி (யாழ்.அக..);; trough. க. புண்ய; தெ. புண்யமு [புல்லுதல் = பொருந்துதல். புல் → புர் → புரை. புரைதல் = பொருந்துதல். புல் → புள் → புண் → புணர். புணர்தல் = பொருந்துதல். புண் → பூண் = (பொருந்து);அணிதல், (விலங்கு); மாட்டுதல், சூழ்ந்து கொள்ளுதல். புள் → புண் → புண்ணியம் = ஏற்றுக்கொள்ளும் (பூணும்);அறம். மேற்கொள்ளும் நல்வினை] புண்ணியம் என்னும் சொல் மேலை யாரிய மொழிகளில் இன்மையால் அது வடநாட்டுச்சொல்லே.சமற்கிருதமன்று (த.ம.150); puṇya, (puṇya, huṇya, huṇya); good, right, just, beautiful etc. Could the original meaning be that is to be assented to (of D.pūṇ); – puṇya, a habitation. This has been formed of D.puṇ, to put together; to construct. (KKED.XL); புண்ணியம்2 puṇṇiyam, பெ. (n.) புளிநறளை; a spreading plant. புண்ணியம் puṇṇiyam, பெ. (n.) 1. அறம்; virtue. 2. நல்வினைப் பயன்; effect of virtue. [Skt. {} → த. புண்ணியம்.] |
புண்ணியம்செய்-தல் | புண்ணியம்செய்-தல் puṇṇiyamceytal, 1 செ.கு.வி. (v.i.) நற்செயல் புரிதல்; to do good. க. புண்ணியங்கெய். [புண்ணியம் + செய்] |
புண்ணியராத்திரம் | புண்ணியராத்திரம் puṇṇiyarāttiram, பெ. (n.) புண்ணிய விரவு (வின்.); பார்க்க; see puṇṇiya -V-iravu. [புண்ணியம்+ராத்திரம்] Skt. rätra → த. ராத்திரம் |
புண்ணியலோகம் | புண்ணியலோகம் puṇṇiyalōkam, பெ. (n.) புண்ணியவுலகம் பார்க்க; see puṇṇiya-v-Ulagam. க. புண்யலோக [புண்ணியம் + லோகம். உலகம் → லோகம்] |
புண்ணியவடிவினன் | புண்ணியவடிவினன் puṇṇiyavaḍiviṉaṉ, பெ. (n.) 1. புண்ணிய வடிவான கடவுள்; god, as the embodiment of goodness. 2. தெய்வவுருவினன் (திவ்வியரூபி);; divine form or personality. [புண்ணிய + வடிவினன்] |
புண்ணியவதி | புண்ணியவதி puṇṇiyavadi, பெ. (n.) புண்ணிய வாட்டி பார்க்க; see puṇṇiya-vaṭṭi. க. புண்யவதி [புண்ணியவான் (ஆ.பா.); → புண்ணியவதி (பெ.பா.);] |
புண்ணியவந்திரி | புண்ணியவந்திரி puṇṇiyavandiri, பெ. (n.) மரவகை; a tree. |
புண்ணியவரசு | புண்ணியவரசு puṇṇiyavarasu, பெ. (n.) அரசமரவகையு ளொன்று; ficus reli. |
புண்ணியவாட்டி | புண்ணியவாட்டி puṇṇiyavāṭṭi, பெ. (n.) 1. நற்பண்புகளையுடையவள்; woman of religious merit. 2. நற்பேறு பெற்றவள்; lucky woman. 3. வள்ளன்மை கொண்டவள் (தருமஞ்செய்பவள்);; a benevolent woman. [புண்ணியவாளன் (ஆ.பா.); – புண்ணிய வாட்டி (பெ.பா.);] |
புண்ணியவான் | புண்ணியவான் puṇṇiyavāṉ, பெ. (n.) 1. புண்ணியமிக்கவன்; person of great religious merit. “சிவபூசைபுரி புண்ணியவானன்” (சிவரக.தேவர்முறை.15);. 2. நற்பேறு பெற்றவன்; lucky person. 3 அறம் (தருமஞ்); செய்பவன் (இ.வ.);; a benevolent person. ம. புண்யவான் தெ. புண்யடு. [புண்ணியம் → புண்ணியவான்] |
புண்ணியவாளன் | புண்ணியவாளன் puṇṇiyavāḷaṉ, பெ. (n.) புண்ணியவான் பார்க்க; see puṇṇiyavan. தெ. புண்யுடு [புண்ணியம்+ஆளன்] |
புண்ணியவிரவு | புண்ணியவிரவு puṇṇiyaviravu, பெ. (n.) சடங்கு செய்வதற்கு ஏற்ற நல்லிரவு; auspicious night for performance of ceremonies. [புண்ணியம்+இரவு] |
புண்ணியவுடம்பு | புண்ணியவுடம்பு puṇṇiyavuḍambu, பெ. (n.) தூய்மையானவ-ன்-ள்; holy person. [புண்ணியம் + உடம்பு] |
புண்ணியவுலகம் | புண்ணியவுலகம் puṇṇiyavulagam, பெ. (n.) தேவருலகம்; the world of the gods. தெ. புண்யலோகமு. [புண்ணியம் + உலகம்] |
புண்ணியவேள்வி | புண்ணியவேள்வி puṇṇiyavēḷvi, பெ. (n.) தூய்மை யாக்கச் செய்யும் சிறப்புச் சடங்கு; purificatory ceremony. [புண்ணியம் + வேள்வி] |
புண்ணியாகம் | புண்ணியாகம் puṇṇiyākam, பெ. (n.) புண்ணிய வேள்வி பார்க்க; see puņņiyavelvi. [புண்ணியம் + யாகம] Skt. yäga → த. யாகம் |
புண்ணியாகவாசனம் | புண்ணியாகவாசனம் puṇṇiyākavācaṉam, பெ. (n.) புண்ணிய வேள்வி பார்க்க; see puṇṇiyavelvi. “விதிவழியே புண்ணியாக வாசனஞ் செய்து” (நாகைக் காரோ.புண்டரீக முனி.11);. [புண்ணியம் + யாகவாசனம்] Skt. yäga → த. யாகம் Skt. väcana → த. வாசனம் |
புண்ணியாக்கம் | புண்ணியாக்கம் puṇṇiyākkam, பெ. (n.) குந்துருக்கம் (சங்.அக..);; konkany resin. |
புண்ணியாத்துமா | புண்ணியாத்துமா puṇṇiyāttumā, பெ. (n.) புண்ணியவான் பார்க்க; see pummiyavaṇ. தெ. புண்யாத்முடு [புண்ணியம் + ஆத்துமா] Skt. åtmå → த. ஆத்துமா |
புண்ணியானம் | புண்ணியானம் puṇṇiyāṉam, பெ. (n.) புண்ணிய வேள்வி பார்க்க; see puṇṇiyavelvi. [புண்ணியாகவாசனம் → புண்ணியானம்] Skt. yāna → த. யானம் புண்ணியை __, பெ. (n.); 1. புண்ணியவதி பார்க்க; see puṇṇiyavadi. 2. துளசி; sacred basil. [புண்ணியன் (ஆ.பா.); – புண்ணியை (பெ.பா.);] |
புண்ணியாவாசனம் | புண்ணியாவாசனம் puṇṇiyāvācaṉam, பெ. (n.) புண்ணிய வேள்வி பார்க்க; see puṇṇiyavelvi. “பொருந்து புண்ணியா வாசனமும்” (திருவானைக்.கோச்.செங்.31);. [புண்ணியம் + வாசனம்] Skt. väcana → த. வாசனம் |
புண்ணியோதயம் | புண்ணியோதயம் puṇṇiyōtayam, பெ. (n.) ஆகூழ் (அதிட்டம்); (யாழ்.அக.);; luck. [புண்ணியம் + உதயம்] |
புண்ணிற்புரை | புண்ணிற்புரை puṇṇiṟpurai, பெ. (n.) புண்ணிலோடும் புரை; sinus. [புண் + இன் + புரை. புல் → புர் → புரை = உட்டுளைப் புண். புண்ணிற்புரை=புண்ணுக்குள்ளோடும் புரை.] |
புண்ணிற்பூ | புண்ணிற்பூ puṇṇiṟpū, பெ. (n.) புண்ணிலுண்டாகும் பூச்சி; maggot formed in an ulcer. (M.L.);. [புண்+இன்+பூ] |
புண்ணிலளை | புண்ணிலளை puṇṇilaḷai, பெ. (n.) புண்ணளை (யாழ்ப்.); பார்க்க; see puṇṇalai. [புண் + இன் + அளை-புண்ணினளை → புண்ணிலளை] |
புண்ணீர் | புண்ணீர் puṇṇīr, பெ. (n.) அரத்தம்; blood. serum. “புண்ணீர் மாந்தி” (பிரமோத்.2, 17);. [புண் + நீர்] |
புண்ணீர்வடிகை | புண்ணீர்வடிகை puṇṇīrvaḍigai, பெ. (n.) புரையோடிய புண்ணினின்று அரத்தம் வடிகை; a thinichor running from a sore. [புண்ணிர் + வடிகை. வடி வடிகை. புண் + நீர்-புண்ணீர்] |
புண்ணுடம்பு | புண்ணுடம்பு puṇṇuḍambu, பெ. (n.) 1. ஈன்றணிமையினால் அமைந்த பச்சையு டம்பு; body of a mother on account of recent child birth. delicate body of woman after delivery. 2. அறங்கடை (பாவ); உடம்பு (வின்.);; sinful body. 3. புண்கள் நிறைந்தவுடம்பு; body full of sores. [புண் + உடம்பு] |
புண்ணுறுத்து-தல் | புண்ணுறுத்து-தல் puṇṇuṟuddudal, 8 செ.குன்றாவி. (v.t.) வருத்துதல்; to give pain. “நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ” (தொல்.பொருள்.147);. [புண் + உறுத்து-,] |
புண்ணூறுகை | புண்ணூறுகை puṇṇūṟugai, பெ. (n.) ஆறாப் புண்ணிலேற்படும் அரிப்பு; itching in an ulcer. [புண் + ஊறுகை. ஊறு → ஊறுகை] |
புண்ணெஞ்சு | புண்ணெஞ்சு puṇīeñju, பெ. (n.) துன்பம்; grief. [புண் + நெஞ்சு] |
புண்ணோவு | புண்ணோவு puṇṇōvu, பெ. (n.) புண்ணால் ஏற்படும் வலி; the pain of a sore. க. புண்ணோவு [புண் + நோவு] |
புண்படு-தல் | புண்படு-தல் puṇpaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. காயமடைதல்; to become wounded. 2. வருந்துதல்; to be sorely grieved. பெரியோர் மனம் புண்படும்படி பேசக் கூடாது (உ.வ.);. க. புண்படெ [புண்+படு- பள் → படு] |
புண்படுத்து-தல் | புண்படுத்து-தல் puṇpaḍuddudal, 2.பி.வி. (c.v.) 1. புண்ணுண்டாக்குதல்; to inflict a wound. “யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றா ளரிமா” (நாலடி,198);. 2. வருந்துதல்; to persecute. 3. மனம் நோவச் செய்தல்; to wound one’s feelings. பிறர் மனம் புண்படுத்துமாறு பேசுதல் நல்லதன்று (உ.வ.);. க. புண்படிசு [புண் + படுத்து, படு-தல்(த.வி.); – படு-த்து-தல் (பி.வி.);] |
புண்புரை | புண்புரை puṇpurai, பெ. (n.) 1. புண்ணின் உட்டுளை; sinus. 2. குறுகிய வாயையுடைய புரையோடிய புண் (பெளத்திரம்);; fistulla. [புண் + புரை.] |
புண்புரைப்புகை | புண்புரைப்புகை puṇpuraippugai, பெ. (n.) ஆறாப்புண்ணைக் குணமாக்கும் மருந்துப் புகை; fistulla over an ulcer, to heal quickly. [புண்புரை + புகை] |
புண்மதி | புண்மதி puṇmadi, பெ. (n.) திருமணமாகாதவன் (காட்டுநாயக்கர் பே.வழ.);; bachelor. |
புண்மாசறு-த்தல் | புண்மாசறு-த்தல் puṇmācaṟuttal, 4 செ.கு.வி. (v.i.) புண்ணினழுக்கற்றுதல்; to clear a sore. [புண் + மாசு + அறு-] |
புண்வகைகள்: | புண்வகைகள்: puṇvagaigaḷ, 1. நெருப்புப் புண்; burns. 2. இணைவிழைச்சு (மேக);ப்புண்; venereal ulcer. 3. வெள்ளைப் புண்; gonorr heal ulcer. 4. ஆறாப்புண்; chronic ulcer. 5. வேனற்கட்டி(கிரந்திப்புண்);; Syphilitic secondary rashes. 6.ஓட்டுப்புண்; contagious sore. 7. குழிப்புண்; deep sore or perforating ulcer. 8. நீரிழிவுப்பரு(இராசப்புண்);; diabetic-carbuncle. 9. கரப்பான்புன்; eczema. 10. பரங்கிப்புன்; syphilitic primary sore. 11. வெட்டுப்புண்; incised wound. 12. காயப்புண்; traumatic sore. 13. அழிப்புண்; slonghing sore. 14. கொறுக்குப்புண்; chancre. 15 வெடித்தப்புண்; fissured ulcer. 16. அழற்புண்; inflamed ulcer. 17. இதளிய நஞ்சு(இரச வேக்காட்டு);ப்புண்; ulcer caused by mercurial poisoning. 18. புற்றுப்புண்; fungus ulcer. 19. வயிற்றுப்புண்; gastric ulcer. 20. துளைப்புண், புரைப்புண்; sinus. 21.அரிப்புண்; rodent ulcer eating away the tissues. |
புண்வழலை | புண்வழலை puṇvaḻlai, பெ. (n.) புண்ணிலிருந்து வடியும் சீழ்; pus from sores. “புண் வழலை வடியும் பெரிய தலையை யுடைய … இளங்களிறு” (புறநா.22, உரை);. [புண் + வழலை] |
புண்வாய் | புண்வாய் puṇvāy, பெ. (n.) புண்ணின் புழை; opening of a boil, etc. [புண் + வாய்] |
புண்வாய்கணக்கை | புண்வாய்கணக்கை puṇvāykaṇakkai, பெ. (n.) புண்துளை தடிக்கை; ridge of the sore getting thicker. [புண்வாய் + கனக்கை. கல் → கன்கனம், கனம் – கனக்கை] |
புண்வாய்ச்சன்னி | புண்வாய்ச்சன்னி puṇvāyccaṉṉi, பெ. (n.) காயத்தினால் உண்டாகும் இசிவு (சன்னி); நோய் (வின்.);; convulsive tetanus, lockjaw from a wound. [புண் + வாய் + சன்னி] |
புண்வெட்டை | புண்வெட்டை puṇveṭṭai, பெ. (n.) புண்வகை; Soft Sore. (M.L.);. [புண் + வெட்டை] |
புத | புத puda, பெ. (n.) வாயில்; gate. “மழை போழ்ந்து புதத்தொறும்”(சீவக. 2398);. [புல் → புது → புதா → புத] |
புதசனன் | புதசனன் pudasaṉaṉ, பெ. (n.) அறிஞன் (அக.நி.);; wise or learned man. |
புதஞ்செய்-தல் | புதஞ்செய்-தல் pudañjeydal, 1 செ.கு.வி.(v.i.) புதமெழு-தல் பார்க்க;See. pudamelu-, “வெண்டிரை புரவியென்னப் புதன்க்செய்து”(திவ்.பெரியதி. 9, 3,7);. [புதம் + செய்-,] |
புதன் | புதன் pudaṉ, பெ.(n.) 1. கோள் ஒன்பதனுள் ஒன்று (சாதகா. பொது.17);; the planet Mercury. one of nine kiragam. 2. அறிவன்கிழமை; wednesday. 3. புலவன் (அக.நி.);; wise or learned man, poet. 4. வானவன்; Celestial Being. “புதர்க்கடு வேள்விச்சாலை” (திருவிளை. மாணிக்.31);. [Skt. Budha → த. புதன்] |
புதப்பிரியம் | புதப்பிரியம் pudappiriyam, பெ. (n.) மரகதம் (சங்l.அக.);; emerald. |
புதமெழு-தல் | புதமெழு-தல் pudameḻudal, 6 செ. கு. வி. (v.i.) தாவியெழுதல்; to leap up, jump up, rise with a bound. “புதமெழு புரவிகள் புடைபரந்திட”(சூளா. துற. 42);. க. புடவேள் [புதம் + எழு -,] |
புதம் | புதம் pudam, பெ. (n.) மஞ்சு (மேகம்);; cloud. “புதமிகு விசும்பில்”(திவ். பெரியதி. 9,8,8);. [புல் → புளி = (புளித்துப்); பொங்குவது, மேலெழுவது. புல் → புது → புதம் = மேலெழுந்து காணப்படுவது, முகில்] |
புதரவண்ணான் | புதரவண்ணான் pudaravaṇṇāṉ, பெ. (n.) இராப்பாடி; washerman for Adidravidas. மறுவ, பொறதவண்ணான் |
புதரெலி | புதரெலி pudareli, பெ. (n.) எலிவகை; field rat. [புதர் + எலி] |
புதர் | புதர்1 pudar, பெ. (n.) புதல்1 (அரு. நி.); பார்க்க;See. pudal. கொல்லைப் புறத்தில் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கிறது (உ.வ.);. க. பொதரு; தெ. பொத;து. பூண்டெல் [புல் → புது → புதல் → புதர் (வே. க. 3, 76); ல, ர போலி] புதர்2 pudar, பெ. (n.) புதர்2 (அக.நி.); பார்க்க;See. pudār2. [புது → புதா → புதர்] |
புதர்க்காடை | புதர்க்காடை pudarkkāṭai, பெ. (n.) புல்நிலங்களிலும் புதர்காடுகளிலும் திரியும் காடை வகை; jungle bush-quail. [புதர் → காடை] |
புதர்ச்சிட்டு | புதர்ச்சிட்டு pudarcciṭṭu, பெ. (n.) பீடபூமிப் பகுதிகளில் புல்வெளிகள், பள்ளத்தாக்குப் புதர்கள், விளைநிலங்கள், வேலிகள் ஆகியவற்றைச் சார்ந்து திரியும் ஒருவகைச்சிட்டு; pied bushchat. [புதர் + சிட்டு] |
புதர்ப்பூ | புதர்ப்பூ pudarppū, பெ. (n.) புல்லின் பூ; grass flower. [புதர் + பூ] |
புதர்வானம்பாடி | புதர்வானம்பாடி pudarvāṉambāṭi, பெ. (n.) புல்லும் புதருமான வெற்றிநிலங்களில் இருக்கும் வானம்பாடி; jerden’s bush lark. [புதர் + வானம்பாடி] |
புதற்புல் | புதற்புல் pudaṟpul, பெ. (n.) புல்வகை (அக. நி.);; a kind of grass. [புதர் + புல்] |
புதற்பூ | புதற்பூ pudaṟpū, பெ. (n.) நிலப்பூ; flowers of grasses and shrubs. [புதல் + பூ] |
புதல் | புதல்1 pudal, பெ. (n.) 1. குத்துச் செடிகளின் செறிவு, தூறு; bush, thicket, low jungle. “புதன் மறைந்து”(குறள், 274);. 2. புல்லினம் புறசாதி (திவா.);; grass 3. மருந்துப்பூடு (திவா.);; medicinal shrub. 4. அரும்பு; bud. “பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை”(பதிற்றுப். 66,16);. [புல் → புது → புதல் (வே. க. 3. 76);] புதல்2 pudal, பெ. (n.) புருவம் (பிங்.);; eyebrow. “கழைவிற்புதல்”(தனிப்பா. ii.193, 467.);. [புல் → புது → புதல் = செறிந்த தூறு, புல்லினம் (வே.க.3,76); செறிந்த மயிர்ப்பாகம்] புதல்3 pudal, பெ. (n.) நாணல்; reed. [புது → புதல் (புதராக வளர்வது);] |
புதல்வன் | புதல்வன் pudalvaṉ, பெ. (n.) 1. மகன்; son. “பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும்”(புறநா. 9.);. 2. மாணாக்கன்; disciple, student; “எண்ணில் பத்திகழ் புதல்வர்க்கு”(திருவாலவா. 35, 1);. 3. குடி; subject. “நின்புதல்வரைத் தழீஇ”(பெருங். இலாவாண. 1, 33);. [புள் → புரு = குழந்தை. புள் → பிள் = பிள்ளை. பிள் → பிள்ளை. (புது); → புதல்வு → புதல்வன் (மு. தா. 40,41);] |
புதல்வர்ப்பேறு | புதல்வர்ப்பேறு pudalvarppēṟu, பெ. (n.) ஆண்மக்களைப் பெறுகை; obtaining Sons.”புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது”.(குறள், 61, உரை);. [புதல்வர் + பேறு. பெறு → பேறு] |
புதல்வி | புதல்வி pudalvi, பெ. (n.) மகள் (பிங்.);; daughter. “பூவிலோன புதல்வன் மைந்தன் புதல்வி”(கம்பரா.சூர்ப்ப. 39);. [புதல்வன் (ஆ. பா.); – புதல்வி (பெ. பா.); ‘இ’ பெ.பா. ஈறு] |
புதளி | புதளி pudaḷi, பெ. (n.) புலால் (அக. நி.);; animal foOd. |
புதவம் | புதவம்1 pudavam, பெ. (n.) வாயில்; gate. “புதவம் பலவுள”(சிலப். 11,119);. க. புதி (கதவின் பக்கம்); [புதவு → புதவம்] புதவம்2 pudavam, பெ. (n.) அறுகு; bermuda grass. “பொய்கைக் கொழுங்காற் புதவமொடு”(பட்டினப். 243);. [புதர் → புதவம்] |
புதவாரம் | புதவாரம் pudavāram, பெ.(n.) அறிவன் கிழமை; wednesday. [Skt. budha+vara → த. புதவாரம்] |
புதவு | புதவு1 pudavu, பெ. (n.) 1. கதவு; door. “நல்லெழினெம்புதவு”(பதிற்றுப். 16, 5);. 2. வாயில்; entrance, gate. “கோழிகேக்குங்கூடுடைப் புதவின்”(பெரும்னாண். 52);. 3. மதகு; sluice. “புனல் பொரு புதவினுறந்தை”(அகநா. 237);. 4. திட்டிவாசல் (சூடா);; small door with in a larger one, wicket. 5. குகை (இ.வ.);; Cave. க. புதி (நுழைதல்);, புது (நுழைகை);, புதி (கதவின் பக்கம்); [புல் → (புல்லம்); → பொல்லம் = ஓட்டை, துளை. புள் → புழை → பூழை = துளை, கணவாய். (மு. தா. 277); புல் → (புது); → புதவு] புதவு2 pudavu, பெ. (n.) புதவம்2 பார்க்க;See. pudavam2. “புல்லரைக் காஞ்சிப்புனல் பொருபுதவின்”(மலைபடு. 449);. [புதல் → புதர் → புதவு] புதவு3 pudavu, பெ. (n.) புல்வகை; a kind of grass. மறுவ. புதவம் |
புதா | புதா1 putā, பெ. (n.) கதவு; door. “இன்பப் புதாத்திறக்குந் தாளுடைய மூர்த்தி”(சீவக. 1549);. [புல் → (புது); → புதா] புதா2 putā, பெ. (n.) 1. மரக்கானாரை; a crane.(சிலப். 10,117, அரும்);. 2. பெருநாரை; a large heron. “புள்ளும் புதாவும்”(சிலப், 10,117);. [புல் → புது → புதா (வே. க.3. 76] |
புதாநாழி | புதாநாழி putānāḻi, பெ. (n.) பழைய வரிவகை; an ancient tax. (S.I.I.ii.,521);. |
புதானன் | புதானன் putāṉaṉ, பெ. (n.) 1. புதசனன் (யாழ். அக.); பார்க்க;See. pபdasaran. 2. குரு; preceptor. |
புதாரு | புதாரு putāru, பெ. (n.) புதர்; bush. (Pond.);. [புதர் → புதார் → புதாரு] |
புதாழி | புதாழி putāḻi, பெ. (n.) புதா நாழி பார்க்க;See. pudānāli (S.I.I. ii.509);. [புதாநாழி → புதாழி] |
புதிசு | புதிசு pudisu, பெ. (n.) புதிது பார்க்க;See pսdidս. [புதிது → புதிசு] |
புதிது | புதிது pudidu, பெ. (n.) புதியது; that which is new, uncommon or wonderful. “அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ” (அருட்பா. vi. திருமு. பிள்ளைப்பெரு. 89);. 2. திருவிளக்கின் முன் வைக்கப்படும் முதல் விளைச்சற் காணிக்கை (வின்.);; first sheaves of a rice crop, offered to a lamp personifying Laksmi. க. பொதசு [புதியது → புதிது] |
புதிநகம் | புதிநகம் pudinagam, பெ. (n.) ஒரு வகை பழுப்பு வண்ணக்கூலம் (கோதுமை);; a kind of IUCaS. |
புதினக்கடுதாசி | புதினக்கடுதாசி pudiṉakkaḍudāci, பெ. (n.) செய்தித்தாள் (யாழ்ப்.);; newspaper. [புதினம் + கடுதாசி] Port. cartez → த. கடுதாசி |
புதினத்தாள் | புதினத்தாள் pudiṉaddāḷ, பெ. (n.) செய்தித்தாள்; newspaper, [புதினம் + தாள்] |
புதினம் | புதினம்1 pudiṉam, பெ. (n.) 1. புதுமை (வின்.);; newness. novelty. 2. செய்தி; news. 3. வியப்பு (வின்.);; wonderful or strange thing: extraordinary event: miracle. [புது → புதி → புதினம்] புதினம்2 pudiṉam, பெ. (n.) புதினத்தாள் பார்க்க (இக்.வ.);;See. pudinattal. [புது → புதி → புதினம்] |
புதினாகம் | புதினாகம் pudiṉākam, பெ. (n.) வீரம்; perchloride of mercury. |
புதிய | புதிய pudiya, கு. வி. எ. (adi.) புதியதான; new; புதியவிளைச்சலை அறுவடைக் காலத்தில் எதிர்ப்பார்ப்பர் (உ.வ.);. ம. புதிய;க. கொச, பொச [புது → புதிய] |
புதியஏற்பாடு | புதியஏற்பாடு pudiyaēṟpāṭu, பெ. (n.) ஏசுவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, அறிவுரை முதலியவற்றைப் பற்றிக் கூறும் நூல்; the new testament. [புதிய + ஏற்பாடு] |
புதியகோச்சினை | புதியகோச்சினை pudiyaācciṉai, பெ. (n.) ஆன்மணத்தி; fresh bezoar. “பொருவுறுங் குமப்பூ புதிய கோச்சினையோ ரென்றே”(பரராசசேகரம்);. [புதிய + கோச்சினை] |
புதியது | புதியது1 pudiyadu, பெ. (n.) இதற்கு முன் இருந்திருக்காதது. இப்பொழுது முதன்முதலாக வந்தது; that which is new. புதியது கவர்ச்சி மிக்கதாக இருக்கும் (உ.வ.);. க. பொசது;பட. கொசது [புது → புதிய → புதியது] புதியது2 pudiyadu, பெ. (n.) புதியதாகச் சமைத்த சோறு (இ.வ.);; freshly cooked rice. Opp. to palaiyadu. [புது → புதிய → புதியது] புதியது3 pudiyadu, பெ. (n.) அறுவடையானதும் கொண்டாடும் விழா; the festival on the completion of the harvest. ” கார்த்திகைப் புதியதுக்கு குளித்தார்களாகில்”(ஈடு, 1,5,1);. [புது → புதிய → புதியது] |
புதியதுண்(ணு) | புதியதுண்(ணு)1 pudiyaduṇṇudal, 6 செ.கு.வி. (v.i.) 1. ஒரேயடியாக நுகர்ச்சி கொள்ளுதல்; to enjoy in part; to have partial experience. “இதுக்குமுன் புதியதுண்டறியாத நான்”(ஈடு 3,2,4);. 2. முதல்விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணுதல்; to celebrate the ceremoney in which the first fruits of crops are Cooked and eaten at an auspicious hour. “புனத்தினிக் கிள்ளிப் புதுவலிக்காட்டி ….இனக்குறவர் புதியதுண்ணும்”(திவ். பெரியாழ். 5,3,3);. [புதியது + உண்-,] புதியதுண்(ணு)2 pudiyaduṇṇudal, 6 செ. கு. வி. (¬v.i.) முதன் முதல் சுவை(ருசி); பார்த்தல்; to have a first taste of. “தன் பிறவிக்குரிய போகங்களிலும் ஆசார ஸம்ஸ் காராதிகளிலும் புதியதுண்ணாதே”(ரஹஸ்ய. 87);. [புதியது + உண்-,] |
புதியதுண்ணல் | புதியதுண்ணல் pudiyaduṇṇal, பெ. (n.) புதியதாக விளைந்த விளைவை நல்வேளையிற் சமைத்துண்ணும் சடங்கு; a ceremony in which the rice of a new crop is cooked and eaten at an auspicious hour. [புதிது + உண்ணல். உண் → உண்ணல். ‘அல் ‘ தொ. பெ. ஈறு] |
புதியனபுகுதல் | புதியனபுகுதல் budiyaṉabugudal, பெ. (n.) சொல்வழக்கம் முதலியன புதியனவாக உண்டாகுகை;(gram.); coming into vogue of new forms of speech or expressionon. ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல'(நன். 462);. [புதியன + புகுதல். ‘தல்’ தொ.பெ.ஈறு] |
புதியன்புதினா | புதியன்புதினா pudiyaṉpudiṉā, பெ. (n.) புதினாக்கீரை: a plant. மறுவ. புதினா |
புதியமனிதன் | புதியமனிதன் pudiyamaṉidaṉ, பெ. (n.) 1. வெளியார், புதுவரவாளர் (அன்னியன்);; stranger. 2. புதிதாக வேலையில் அமர்ந்தவன் (வின்.);; novice, beginner one new in office. 3. ஆண்குழந்தை; stranger, new born male child. புதிய + மனிதன்] |
புதியமரிசம் | புதியமரிசம் pudiyamarisam, பெ. (n.) நிறுத்தலளவையுளொன்று; a height. ” புதிய மரிசங்காற்கழஞ்சு”(பரராசசேகரம்);. |
புதியர் | புதியர் pudiyar, பெ. (n.) புதியவர் பார்க்க;See. pudiyawar. [புதிய → புதியர். ‘அர் ‘ ப. பா. ஈறு ] |
புதியவர் | புதியவர் pudiyavar, பெ. (n.) 1. புதிதாக வந்தவர்; new-comers. 2. விருந்தினர் (சூடா);; guests, visitors. க. பொசம்ப, கொசப;து. பொசதாயெ, பொசப; கூ. பூனஞ்சு;பட. கொசம. [புது → புதியவர்] |
புதியவிலை | புதியவிலை pudiyavilai, பெ. (n.) பச்சிலை; fresh green leave. [புதிய + இலை] |
புதியவேற்பாடு | புதியவேற்பாடு pudiyavēṟpāṭu, பெ. (n.) புதியஏற்பாடு பார்க்க;See. pudiyarpadu. [புதிய + ஏற்பாடு] |
புதியிளநீர் | புதியிளநீர் pudiyiḷanīr, பெ. (n.) புதிதாகப் பறித்த இளநீர்க்காய் (பதார்த்த,63);; tender coconut just plucked. [புதுயிளநீர் → புதியிளநீர்] |
புதியோர் | புதியோர் pudiyōr, பெ. (n.) புதியவர் (வின்.); பார்க்க;See. pudiyavar. [புது → புதி → புதியோர்] |
புதிரி | புதிரி pudiri, பெ. (n.) புதுநெற்சோறு; rice (food); prepared with newly harvested paddy. [புது + கதிர் – புதுகதிர் → புதிர் → புதிரி] அறுவடையான பின், புதிரி என்னும் புது நெல்லைச் சமைத்து நன்றியறிவுடன் வழிபடுதெய்வத்திற்குப் படைத்துண்பதே பொங்கல் (த.க.140);. |
புதிரிவயல் | புதிரிவயல் pudirivayal, பெ. (n.) தஞ்சை மாவட்டத்திலுள்ள ஊர், a village in Tañjāvūr dt. [புல் + திரி + வயல் – புல்திரிவயல் → புதிரிவயல்] |
புதிர் | புதிர்1 pudir, பெ. (n.) புதிது 2 (வின்); பார்க்க;See. pudidu 2. [புது + கதிர் → புதுக்கதிர் → புதிர்] புதிர்2 pudir, பெ. (n.) விடுகதை; riddle. மறுவ. பிசி க. பது [புள் → பிள் → பிய் → (பியி); → பிசி = பிய்ப்பது போல் விடுக்கும் விடுகதை. பிள் – பிடு → பிது → பிதிர் = விடுகதை. பிதிர் → புதிர் (மு.தா.262);] |
புதிலி | புதிலி pudili, பெ. (n.) எண்ணெய்த்துருத்தி (யாழ்.அக);; leather bag for keeping oil. க. புத்தலி [புள் → புட்டி = உட்டுளையுள்ள கலம். புள் → (புல்); → புது → புதுலி → புதிலி] |
புதீனா | புதீனா putīṉā, பெ.(n.) கீரை வகை (மு.அ.);; mint. த.வ மணக்கீரை [U. {} → த. புதீனா] |
புது | புது pudu, பெ.அ. (adj.) 1. புதியதாக இருக்கிற; new. குழந்தைக்குப் புதுத்துணி என்றால் மிகவும் பிடிக்கும் (உ.வ.);. 2. மீண்டும் வருகிற அல்லது மீண்டும் ஏற்படுத்துகிற; fresh, afresh. புதுவெள்ளம், புதுக் கணக்கு. 3. (ஒருநிகழ்வின் தன்மை); இன்னும் விட்டு நீங்காத; still retaining the newness. புதுமாப்பிள்ளை. புதுமருமகள். ம. புது; க. ஒச, பொச, கொச; து. பொச; பட. கொச; பர்., கட. புன்; கோண். புனோ; கூ., குவி. புனி; குரு. புனா; மா. புனெ; பிரா. பூச்குன்;துட. புத். [புல் → புள் → புழு = துளைத்தரிக்கும் சிற்றுயிரி. புழு → புகு. புகுதல் = உட்செல்லுதல், புல் → புது. ஒ.நோ. மெல் → மெது] |
புதுகை | புதுகை pudugai, பெ. (n.) புதுக்கோட்டை ஊரின் மரூஉச்சொல்; contracted form of the Pudukköttai town. [புதுக்கோட்டை→ புதுகை] |
புதுக்கட்டு | புதுக்கட்டு pudukkaṭṭu, பெ. (n.) புதியமுறை (வின்.);; new institutions, orders, ordinances, establishments or regulations. [புது + கட்டு] |
புதுக்கணக்குநாள் | புதுக்கணக்குநாள் pudukkaṇakkunāḷ, பெ. (n.) நாட்டுக் கோட்டைச் செட்டிமார் மூன்றாண்டுக் கொருமுறை வணிக(வியாபார);த் தொடக்கத்திற்கு ஏற்படுத்தும் நல்ல நாள்; auspicious day for the commencement of business transactions for a fresh triennial period, (Nattu,Chetti); [புது + கணக்கு + நாள்] |
புதுக்கணி-த்தல் | புதுக்கணி-த்தல் pudukkaṇiddal, 4 செ.கு.வி. (v.i.) அழகுபெறுதல்; to receive new beauty.have new attraction. ‘ புதுக்கணித்த சிறகையுடைய சேவல் ‘ (ஈடு.);. [புது + கணி-,] |
புதுக்கணிப்பு | புதுக்கணிப்பு pudukkaṇippu, பெ. (n.) புதியவொளி; fresh lustre, enhanced beauty. ‘ஆடையுடையும் புதுக்கணிப்பும்'(திவ்.திருவாய் 8,9.5);. [புதுக்கணி → புதுக்கணிப்பு. ‘பு’ தொ.பெ.ஈறு] |
புதுக்கம் | புதுக்கம் pudukkam, பெ. (n.) புதியதன்மை; newness. ம. புதுக்கம். [புது → புதுக்கு → புதுக்கம். ‘அம்’ தொ.பெ.ஈறு] |
புதுக்கரகம் | புதுக்கரகம் puduggaragam, பெ. (n.) புதுப்பானை அல்லது புது மண்சட்டி; a new earthern pot. [புது + கரகம்] |
புதுக்கருக்கு | புதுக்கருக்கு pudukkarukku, பெ. (n.) 1. வேலைத் தொடக்கத்தில் புதிய ஆளுக்கு உண்டாஞ் சுறுசுறுப்பு; Smartness or briskness of fresh hand. 2. புதுமை; freshness. ‘நகையின்னும் புதுக்கருக்கு அழியவில்லை’. [புது + கருக்கு] |
புதுக்கலசசக்கரம் | புதுக்கலசசக்கரம் pudukkalasasakkaram, பெ. (n.) புதிய ஓடு ; a piece of new broken tile. [புது + கலசம் + சக்கரம்] |
புதுக்கலசம் | புதுக்கலசம் pudukkalasam, பெ. (n.) புதுக்கரகம் பார்க்க;See. pudu-k-karagam. [புது + கலசம்] |
புதுக்கலம் | புதுக்கலம் pudukkalam, பெ. (n.) புதியமட் பாண்டம்; new pot of clay. ‘புதுக்கலம் போலும்ம்'(சீவக.2108.);. ம. புதுக்கலம் [புது + கலம்] |
புதுக்கழுநீர் | புதுக்கழுநீர் pudukkaḻunīr, பெ. (n.) புதிதாக அரிசி கழுவின நீர்; water of washed rice which is fresh. மறுவ. அரிசிக்கழனி, கழனித்தண்ணிர் [புது + கழுநீர்] |
புதுக்காசு | புதுக்காசு pudukkācu, பெ. (n.) காசு (நாணய); வகை; a kind of coin. (Pd.M.);. [புது + காசு. காழ் → காசு] |
புதுக்கால் | புதுக்கால் pudukkāl, பெ. (n.) புதியதாக வெட்டப்படும் கால்வாய்; new water channel. பழங்காலைத் துர்க்காதே புதுக்காலை வெட்டாதே (பழ.);. [புது + கால். கால் = வாய்க்கால்] |
புதுக்கு-தல் | புதுக்கு-தல் pudukkudal, 8 செ.குன்றாவி. (v.t.) 1. புதுபித்தல்; to renovate, make new. ‘ஒளிபெறப்புதுக்கி.'(பெருங்.வத்தவ.4,2);. 2. அழகுபடுத்துதல் (அலங்கரித்தல்);; to adorn. ‘உலகமெல்லாம் புதுக்குவானமைந்தேம்'(உபதேசகா.சிவபுண்.365);. 3. மெருகேற்றுதல்; to polish, to make shines. விளக்கைப்புளி போட்டுப் புதுக்கு (உ.வ.);. ம. புதுக்குக. [புது → புதுக்கு-,] |
புதுக்குடி | புதுக்குடி pudukkuḍi, பெ. (n.) புதிதாய் வந்தேறிய குடி; ryots newly settled in a village or town (R.T.);. வாடகை வீடுகளிற் புதுக்குடி புகும்போது ஒட்டடை போக்கி வெள்ளையடிக்கப்பெறும் (உ.வ.);. [புது + குடி] |
புதுக்குப்புறம் | புதுக்குப்புறம் pudukkuppuṟam, பெ. (n.) கோயில் முதலியவற்றைப் புதுப்பித்தற்கு வைத்த அற(தரும);ச் சொத்து; provision made for the repair of charitable institutions. ‘ஶ்ரீராஜ ராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆட்டாண்டு தோறும் புதுக்குப் புறமாக வைச்ச நெல்லு'(S.l.l.iii, 7);. [புதுக்கு + புறம். ‘புறம்’ இறையிலி நிலத்தைக் குறிக்கும் பின்னொட்டு. ஒ.நோ. அடிசிற்புறம், அறப்புறம். (த.வ.1,95);] |
புதுக்குளிகை | புதுக்குளிகை pudugguḷigai, பெ. (n.) பழைய காசு (நாணய); வகை; an ancient coin (S.I.I.iv.108);. [புது + குளிகை. குள் → குளியம் → குளிகை] |
புதுக்கொல்லை | புதுக்கொல்லை pudukkollai, பெ. (n.) புதியதாகக் திருத்திய வேளாண்நிலம்; newly cultivated agricultural land. [புது + கொல்லை] காடுவெட்டிக் களப்புதல், கல்பொறுக்குதல், எருவிடுதல், ஆழவுழுதல், கட்டியடித்தல், பரம்படித்தல் (தாளியடித்தல், பல்லியாடுதல், ஊட்டித்தல்,படலிழுத்தல்); புழுதியுணக்கல், விதைத்தல், களையெடுத்தல், காவல்காத்தல், அறுவடைசெய்தல், களஞ்சேர்த்தல், சாணை யடைதல் (சூடுபோடுதல்,போரமைத்தல்);, சாணைபிரித்தல், காயப்போடுதல், பிணை யலடித்தல் (கடாவிடுதல்,அதரிதிரித்தல்);, வைக்கோல் அல்லது சக்கை, அல்லது கப்பி நீக்கல், பொலிதுாற்றல், பொலியளத்தல், விதைக்கெடுத்தல், களஞ்சியஞ் சேர்த்தல் என்பன வானாவாரிப் புதுக்கொல்லை வேளாண்மை வினைகளாம் (ப.த.நா.ப.89,90); |
புதுக்கோடி | புதுக்கோடி pudukāṭi, பெ. (n.) கைம்பெண்ணுக்கு (விதவைக்கு); அளிக்குங் கோடிப்புடவை (இ.வ.);; new cloth offered ceremonially to a woman on her widowhood. [புது + கோடி] |
புதுக்கோட்டை | புதுக்கோட்டை pudukāṭṭai, பெ. (n.) 1. புதியதாக அமைக்கப்பட்ட கோட்டை; new fort. 2. ஒரு நகரத்தின் பெயர்; name of a town. [புது + கோட்டை] |
புதுக்கோட்டைமாடு | புதுக்கோட்டைமாடு pudukāṭṭaimāṭu, பெ. (n.) முரட்டுத்தனமுள்ள மாடு (இ.வ.);; wild cattle, as of Pudukköttai, a small Indian state in South India. [புதுக்கோட்டை + மாடு] |
புதுக்கோள் | புதுக்கோள் pudukāḷ, பெ. (n.) புதிதாகப் பற்றிக் கொள்ளப்பட்டது; new acquisition, as of a wild elephant;seizure, as of a fort-wall. ‘புதுக்கோள் யானையும்'(மணிமே.28,60);. [புது + கோள். கொள் → கோள்] |
புதுசு | புதுசு pudusu, பெ. (n.) புதியது பார்க்க;See. pudiyadu. [புதியது → புதிது → புதுசு] |
புதுச்சமையல் | புதுச்சமையல் puduccamaiyal, பெ. (n.) புதியதாக சமைத்த உணவு, சுடுசமையல்; fresh food, hot food. நாட்டுப்புறத்தில் பொதுவாக இராவுணவே புதுச்சமையலாகும் (உ.வ.);. [புது + சமையல். சமை → சமையல்] |
புதுச்சரக்கு | புதுச்சரக்கு puduccarakku, பெ. (n.) 1. புதிய வணிகப் பண்டம் (வின்.);; new or fresh merchandise. 2. இனிவரும் ஊழ் (ஆகாமியம்);, karma, which is yet to come to fruition. ‘பழஞ்சரக்கும் புதுச்சரக்கும் பணியற்றேனே'(மதுரைப்,49);. [புது + சரக்கு] |
புதுச்செய்கை | புதுச்செய்கை puducceykai, பெ. (n.) புதிய ஆண்டில் முதற்சாகுபடி (வின்.);. first cultivation in a year. [புது + செய்கை. செய் → செய்கை] |
புதுச்செய்தி | புதுச்செய்தி puducceydi, பெ. (n.) புதுவதாக வரும் செய்தி; latest news. புதுச்செய்தி தருவதற்கு இதழ்களில் முன்னுரிமை (உ.வ);. [புது + செய்தி] |
புதுச்சேரி | புதுச்சேரி puduccēri, பெ. (n.) 1. இந்திய நாட்டின்நடுவண் அரசின் ஆளுகைக்குட்பட்ட ஒரு மாநிலம்; an union territory of India. 2. அம்மாநிலத்தின் தலைநகரம்; capital of Puduccëri union territory. மறுவ. பாண்டிச்சேரி ம. புதுச்சேரி [புது + சேரி. சேர் → சேரி] |
புதுச்சேரிக்கிழங்கு | புதுச்சேரிக்கிழங்கு puduccērikkiḻṅgu, பெ. (n.) புதுச்சேரிவள்ளி பார்க்க;See. puduccēri-Vassi. [புதுச்சேரி + கிழங்கு] |
புதுச்சேரிமாப்பிள்ளை | புதுச்சேரிமாப்பிள்ளை puduccērimāppiḷḷai, பெ. (n.) பகட்டாக ஆடம்பரமாய் இருப்பவன்; fop,dandy. [புதுச்சேரி + மாப்பிள்ளை] |
புதுச்சேரிவள்ளி | புதுச்சேரிவள்ளி puduccērivaḷḷi, பெ. (n.) புதுச்சேரி வள்ளிகிழங்கு பார்க்க;See. puduc-cérivas-k-kiangu. [புதுச்சேரி + வள்ளி] |
புதுச்சேரிவள்ளிக்கிழங்கு | புதுச்சேரிவள்ளிக்கிழங்கு puduccērivaḷḷikkiḻṅgu, பெ. (n.) 1. செவ்வள்ளி; purple yam. 2. மரவள்ளிகிழங்கு; root of tapioca. [புதுச்சேரி + வள்ளிக்கிழங்கு] |
புதுச்சேவகன் | புதுச்சேவகன் puduccēvagaṉ, பெ. (n.) புதிதாகப் படைத் துறையில் சேர்ந்த (இராணுவத்திலமர்ந்த); படையாள் (புதுவை.);; conscript. [புது + சேவகன்] |
புதுச்சொல்புனைவு | புதுச்சொல்புனைவு puduccolpuṉaivu, பெ. (n.) புதியதாகக் கலைச்சொல் படைப்பு; coining new technical terms. பாவாணரின் புதுச்சொல் புனைவு நிகரற்றது (உ.வ.);. [புதுச்சொல் + புனைவு] |
புதுச்சோறு | புதுச்சோறு puduccōṟu, பெ. (n.) சுடுசோறு hot Cooked rice. [புது + சோறு] |
புதுதிங்கள் | புதுதிங்கள் pududiṅgaḷ, பெ. (n.) பிறைநிலா; crescent moon. ‘புதுத் திங்கட்கண்ணியான்'(கலித்.150); [புது + திங்கள்] |
புதுதுப்பை | புதுதுப்பை pududuppai, பெ. (n.) தாராபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Dharapuram Tauk. [புது+பாயல்] |
புதுத்தண்ணிர் | புதுத்தண்ணிர் pududdaṇṇir, பெ. (n.) புதுநிறை (இ.வ.); பார்க்க;See. pudurai. [புது + தண்ணீர்] |
புதுத்தண்ணீர்விட்டலசு-தல் | புதுத்தண்ணீர்விட்டலசு-தல் pududdaṇṇīrviṭṭalasudal, 8 செ.குன்றாவி. (v.t.) 1. பாத்தியிலிருந்து உப்புவாரிய பின்னர் பழைய நீரைப் பாத்தியிலிருந்து கழித்துவிட்டுப் புது நீரால் நன்றாக அலசுதல்; to wash the salt pan with fresh water after sweeping the salt from It. 2. ஒருமுறை அலசிய துணிகளைச் சவர்க்காரம் போக மீண்டும் புது நீர் விட்டு நன்றாக அலசுதல்; to rince the washed clothes one again with fresh water to romove the soap cleanly. [புதுத்தண்ணீர் + விட்டு + அலசு -,] |
புதுத்தரை | புதுத்தரை pududdarai, பெ. (n.) 1. நீர்நிலையைத் தூர்த்து உண்டாக்கின நிலம் (பூமி); (வின்.);; reclaimed land, as by draining away water and raising the surface level. 2. புதிதாக இடப்ப்ட்ட தரை; floor newly laid. [புது + தரை] |
புதுத்துணி | புதுத்துணி pududduṇi, பெ. (n.) பயன்படுத்தப்படாத துணி; new cloth. க., பட. கொசபட்டெ [புது + துணி.] |
புதுத்தேன் | புதுத்தேன் pududdēṉ, பெ. (n.) நாட்படாத தேன்; fresh honey. [புது + தேன்] |
புதுத்தேவங்குடி | புதுத்தேவங்குடி pududdēvaṅguḍi, பெ. (n.) தஞ்சை மாவட்டத்திலுள்ள ஊர்; a village in Tañjavur dt. [புது + தேவன் + குடி] |
புதுநகர் | புதுநகர் pudunagar, பெ. (n.) புதியதாக உருவான நகரம்; new town. [புது + நகர்] |
புதுநடை | புதுநடை pudunaḍai, பெ. (n.) புது மாதிரியான முறை (அல்லது); ஒழுக்கம் (வின்.);; new style or fashion; strange or unusual manners. [புது + நடை] |
புதுநாணயம் | புதுநாணயம் pudunāṇayam, பெ. (n.) 1. புதிதாக முத்திரையடிக்கப்பட்ட காசு; new coin. 2. பழைய வழக்குக்கு மாறுபட்ட வழக்கு (வின்.);; an innovation. [புது + நாணயம்] Skt. nånaka → த. நாணயம் |
புதுநிறை | புதுநிறை puduniṟai, பெ. (n.) ஆறு முதலியவற்றின் புதுப்பெருக்கு; freshes in a river. ‘புதுநிறைவந்த புனலஞ்சாயல்’ மறுவ. ஆற்றுப்பெருக்கு க. கொசநீரு [புது + நிறை.] |
புதுநிலசலம் | புதுநிலசலம் pudunilasalam, பெ. (n.) கங்கைத் தண்ணீர்; water of Ganges. [புது + நிலசலம்.] |
புதுநீராட்டு | புதுநீராட்டு pudunīrāṭṭu, பெ. (n.) புதுப்புனல்விழவு பார்க்க;See. pudu-p-punalvilavu. ‘புதல்வராணை புதுநீராட்டென'(பெருங். உஞ்சைக்.38, 23);. [புதுநீர் + ஆட்டு.] |
புதுநீர் | புதுநீர்1 pudunīr, பெ. (n.) புதுநிறை பார்க்க;See. pudu-nirai. [புது + நீர்.] புதுநீர்2 pudunīr, பெ. (n.) ஊற்று நீர்; spring water. [புது + நீர்.] |
புதுநீர்விழவு | புதுநீர்விழவு pudunīrviḻvu, பெ. (n.) புதுப்புனல்விழவு பார்க்க;See. pudu-p-punal-vilavu. ‘புதுநீர் விழவின் ஆரவாரத்தை'(மதுரைக்.264, உரை);. [புதுநீர் + விழவு.] |
புதுபுது-த்தல் | புதுபுது-த்தல் budubududdal, 11 செ.குவி. (v.i.) புதுமு-தல் (இ.வ.); பார்க்க;See. pudumu-. [புது + புது-,] |
புதுப்பசளை | புதுப்பசளை puduppasaḷai, பெ. (n.) கொடிப்பசலை; heart leaved malabar nightshade. [புது + பசளை.] |
புதுப்பட்டி | புதுப்பட்டி puduppaṭṭi, பெ. (n.) தஞ்சை மாவட்டத்திலுள்ள ஊர்; a village in Tañjāvūr dt. [புது + பட்டி.] |
புதுப்பணம் | புதுப்பணம் puduppaṇam, பெ. (n.) 1. சிறு காசு (நாணய); வகை (வின்.);; a small coin. 2. புதுச்செல்வம்; newly acquired wealth. [புது + பணம். படம் → பணம்.] |
புதுப்பழக்கம் | புதுப்பழக்கம் puduppaḻkkam, பெ. (n.) 1. புதிய வழக்கம்; new usage, practice or fashion. புகைபிடித்தல் அவனுக்குப் புதுப்பழக்கம் (உ.வ.);. 2. பழக்கமில்லாதவன் செயல்; work of a beginner, un accustomed effort, as of a novice. 3. புதிய பழக்கம்; new or recent acquaintance. [புது + பழக்கம்.] |
புதுப்பானை | புதுப்பானை puduppāṉai, பெ. (n.) புதுக்கலசம் பார்க்க;See. pudu-k-kalasam. மறுவ. புதுப்பாண்டம். க., பட. கொச மடகெ. [புது + பானை.] |
புதுப்பி-த்தல் | புதுப்பி-த்தல் puduppiddal, 11 செ.குன்றாவி. (v.t.) 1. பழுதுபார்த்தல்; to renovate, repair. 2. காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல்; to make new, remodel, refit, modernize. வேலை வாய்ப்பு அட்டையைப் புதுப்பித்து விட்டாயா? (உ..வ.);. [புது → புதுப்பி-,] |
புதுப்புது | புதுப்புது puduppudu, பெ.அ. (adj.) அண்மையில் உருவாக்கப்பட்டது அல்லது தோன்றியது; very recently made or produced. க. கொசகொச. [புது + புது.] |
புதுப்புதுக்கு-தல் | புதுப்புதுக்கு-தல் puduppudukkudal, 8 செ.குன்றாவி. (v.t.) புதுப்பி-த்தல் (வின்.); பார்க்க;See. puduppi-. [புது + புதுக்கு-.] |
புதுப்புனலாட்டு | புதுப்புனலாட்டு puduppuṉalāṭṭu, பெ. (n.) புதுப்புனல் விழவு (சிலப்.10.22, அரும்); பார்க்க;See. pudu-p-punal-vilavu. [புது + புனல் + ஆட்டு.] |
புதுப்புனல்விழவு | புதுப்புனல்விழவு puduppuṉalviḻvu, பெ. (n.) ஆற்றின் புது நீர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம்; festival celebrating the on-coming of freshes in a river. கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுந் தலைநாட்போல (சிலப்.6, 160 உரை);. [புது + புனல் + விழவு. விள் → விளை → விழை → விழைவு = விருப்பம், விரும்பி நிகழ்த்தும் கொண்டாட்டம்.] |
புதுப்புனைவர் | புதுப்புனைவர் puduppuṉaivar, பெ. (n.) புதியதாக ஒன்றைக் கண்டு பிடிப்பவர்; inventer. [புது + புனைவர்.] |
புதுப்பெண் | புதுப்பெண் puduppeṇ, பெ. (n.) புதியதாகத் திருமணமான பெண் (கொ.வ.);; newly-married woman, bride. மறுவ. மணப்பெண் ம. புதியபெண்ணு [புது + பெண்.] |
புதுப்பெயல் | புதுப்பெயல் puduppeyal, பெ. (n.) முதன்முதலாகப் பெய்யும் மழை; first rains. “பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும்”(சிலப்.23, கட்டுரை.9);. [புது + பெயல். பெய் → பெயல். ‘அல்’ தொ.பெ.ஈறு ‘புது’ முன்மை குறித்த முன்னொட்டு. (த.வ.1, 93);.] |
புதுப்போக்கு | புதுப்போக்கு puduppōkku, பெ. (n.) புதுவகை; style, new fashion. திரைப் படங்களில் புதுப்போக்கைக் கடைப் பிடிப்பவர் நன்கு பொருளீட்டுவர் (உ.வ.);. [புது + போக்கு. போ → போக்கு.] |
புதுமங்கலக்குடியான் | புதுமங்கலக்குடியான் pudumaṅgalakkuḍiyāṉ, பெ. (n.) பழைய காசு நாணய வகை (பணவிடு. 139);; an ancient coin. [புதுமங்கலம் + குடியான்.] |
புதுமணம் | புதுமணம் pudumaṇam, பெ. (n.) திருமணம் (திவா.);; marriage, wedding. [புது + மணம். முள் → (மள்); → மண → மணம். மணத்தல் = கலத்தல், கூடுதல்.] |
புதுமணவாட்டி | புதுமணவாட்டி pudumaṇavāṭṭi, பெ. (n.) புதியதாகத் திருமணம் செய்து கொண்டவள்; woman, bride. மறுவ. மணப்பெண், புதுப்பெண் ம. புதியபெண்ணு. [புது + மணவாட்டி.] |
புதுமணவாளன் | புதுமணவாளன் pudumaṇavāḷaṉ, பெ. (n.) 1. புதிதாகத் திருமணம் செய்துகொண்டவன்; newly-married man, bridegroom. புதுமணவாளப் பிள்ளைகளும்…. காத்தற்கு ஏகினார் (சீவக.420,உரை);. 2. என்றும் மணமகனாக இருக்கும் தன்மையினன்; one who ever enjoys the pleasures of a bridegroom. “பூக்கம ழமளி சேக்கும் புதுமணவாளனார்”(சீவக.1880);. மறுவ. மணமகன், புதுமாப்பிள்ளை [புது + மணவாளன்.] |
புதுமனிதன் | புதுமனிதன் pudumaṉidaṉ, பெ. (n.) 1. புதிய மனிதன் பார்க்க;See. pudiya manidan. 2. தன் கரிசு (பாவம்);க்கு இரங்கிய கிறித்தவன் (கொ.வ.);; true Christian. [புது + மனிதன்.] Skt. manu-ja → த. மனிதன் |
புதுமனை | புதுமனை pudumaṉai, பெ. (n.) புதியதாகக் கட்டப்பட்ட இல்லம்; newly built house. மறுவ. புதுவீடு. [புது + மனை.] |
புதுமனைப்புகுவிழா | புதுமனைப்புகுவிழா pudumaṉaippuguviḻā, பெ. (n.) புதியதாகக் கட்டப்பட்ட இல்லத்திற்குக் குடியேறுவதைக் குறிக்க நடத்தும் விழா (கிரகப்பிரவேசம்);; house warming. நண்பர் புதுமனைப்புகுவிழாவினைச் சிறப்பாக நடத்தினார் (உ.வ.);. [புதுமனை + புகுவிழா.] |
புதுமருந்து | புதுமருந்து pudumarundu, பெ. (n.) 1. அன்று செய்த மருந்து; newly prepared medicine. 2. வழக்கமாகத் தரப்படும் மருந்து அல்லாமல் மாற்று மருந்து அல்லது கூடுதலான வேறுமருந்து; new medicine instead of old medicine or new medicine additional to it. [புது + மருந்து. முரு → மரு → மருந்து = நோய்தீர்க்கும் நறுமணத்தழை, நோய் நீக்கும்பொருள்.] |
புதுமலர் | புதுமலர் pudumalar, பெ. (n.) அன்றலர்ந்த மலர்; fresh flower. ம. புதுமலர் [புது + மலர்.] |
புதுமழை | புதுமழை pudumaḻai, பெ. (n.) முதல் மழை; the first rain. ம. புதுமழ [புது + மழை.] |
புதுமழைத்தண்ணீர் | புதுமழைத்தண்ணீர் pudumaḻaiddaṇṇīr, பெ. (n.) அன்று பெய்த மழைநீர்; water obtained by fresh rain. மறுவ. புதுப்பெயல் [புது + மழை + தண்ணீர்.] |
புதுமாடு | புதுமாடு pudumāṭu, பெ. (n.) பழக்கப்படாத மாடு; untamed bull. [புது + மாடு.] |
புதுமாடுகுளிப்பாட்டு-தல் | புதுமாடுகுளிப்பாட்டு-தல் pudumāṭuguḷippāṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) [புதுமாடு + குளிப்பாட்டு-,] |
புதுமானியம் | புதுமானியம் pudumāṉiyam, பெ. (n.) புதிதாகக் கொடுத்த இலவய (இனாம்); நிலம். (பணவிடு.171);; newly-granted inam land. [புது + மானியம்.] |
புதுமாப்பிள்ளை | புதுமாப்பிள்ளை pudumāppiḷḷai, பெ. (n.) புதுமணவாளன் (கொ.வ.); பார்க்க;See. pudumanavāsan. [புது + மாப்பிள்ளை. மணப்பிள்ளை → மாப்பிள்ளை.] |
புதுமின்னல் | புதுமின்னல் pudumiṉṉal, பெ. (n.) பழைய காசு (நாணய); வகை (பணவிடு.143);; an ancient coin. |
புதுமு-தல் | புதுமு-தல் pudumudal, 5 செ.கு.வி. (v.i.) ஒன்றும் அறியாததுபோல் பேசுதல் (நெல்லை);; to talk with feigned ignorance. [புது → புதுமு-.] |
புதுமுகனை | புதுமுகனை pudumugaṉai, பெ. (n.) தொடக்கம் (வின்.);; beginning, commencement, as of an event. [புது + முகனை.] |
புதுமுகம் | புதுமுகம் pudumugam, பெ. (n.) 1. நாடகம் திரைப்படம் போன்றவற்றில் முதன் முதலாக அறிமுகமாகுபவர்; person making his or her debut in stage, film etc. புதுமுகங்களுக்கு நல்லவரவேற்பு இருக்கிறது. (உ.வ.);. 2. புதியவர், முதன்முறையாகப் பார்க்கப்படுபவர்; Stranger. யார் அந்தப் புதுமுகம் (உ.வ.);. [புது + முகம்.] |
புதுமுதல் | புதுமுதல் pudumudal, பெ. (n.) அடுத்த ஆண்டு (இ.வ.);; succeeding year. [புது + முதல்.] |
புதுமுயற்கூடு | புதுமுயற்கூடு pudumuyaṟāṭu, பெ. (n.) திங்கள் (சந்திரன்); (சாதக. சிற்.6);; the moon. |
புதுமை | புதுமை1 pudumai, பெ. (n.) 1. புதிதாந்தன்மை; newness, freshness, novelty. “பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”(திருவாச. 7, 9);. 2. பழக்கமின்மை; want of training or practice. 3. அரியதாக நிகழ்வது (அபூர்வம்);; strangeness, extraordinariness uncommonness. 4. வியப்பு; miracle. அங்ஙனங்காண்பேனாயின் இஃது ஒரு புதுமையன்றோ (சிலப்.19.10. உரை);. 5. மிகுதி (திவா.);; plenty, abundance. 6. எழில்; fresh glow, brightness. புது மயிலூர் பரன் (கந்தபு.அவையடக்.13);. 7. நாட்டுக்கோட்டையார் பிள்ளைப்பேறு முதலியவற்றைக் கொண்டாடும் சடங்கு வகை (நாட்.செட்.);; ceremonial feast on the occasion of childbirth etc. ம.புதும; க.பொசது.கொசது; பட. கொசது;குட., புதுமெ [புது → புதுமை.] யாதொன்றும் எவ்விடத்தானும் எக்காலத்தினும் தோன்றாததோர் பொருள் தோன்றுதல் (தொல்.பொருள்.251); என்று இளம்பூரணர் புதுமைக்குத் தரும் வரையறை பருப்பொருளுக்கும் நுண்பொருளுக்கும் பொருந்துதல் காண்க. புதுமை2 pudumai, பெ. (n.) நான்முகப் புல்; a kind of grass. |
புதுமை செய்-தல் | புதுமை செய்-தல் pudumaiseydal, 1 செ.கு.வி. (v.i.) புதுமைகாட்டு-தல் (வின்.); பார்க்க;See. pudumai-kattu. [புதுமை + செய்.] |
புதுமைகாட்டு-தல் | புதுமைகாட்டு-தல் pudumaikāṭṭudal, 15 செ.கு.வி. (v.i.) 1. இயற்கை இறந்த செயல் (அற்புதம்); தோற்றுவித்தல் (வின்.);; to perform miracles, to show miraculous powers. 2. அறியாததுபோற் காட்டிக் கொள்ளுதல்; to pretend ignorance. [புதுமை + காட்டு-,] |
புதுமொழி | புதுமொழி1 pudumoḻidal, 3 செ.கு.வி. (v.i.) புதிய செய்தி கூறுதல்; to announce fresh news. “தூதர் புதுமொழிந்துறக் கேட்டனை”(உபதேசகா. சிவத்துரோ.171);. [புது + மொழி-.] புதுமொழி2 pudumoḻi, பெ. (n.) புதியதாகத் தோன்றிய மொழி, முதுமொழிக்கு எதிரானது; new language. [புது + மொழி. தமிழ் ஒரு முதுமொழி (ancient language);. இந்தி ஒரு புதுமொழி. (ஒ.மொ.1, 80);]. புதுமொழி3 pudumoḻi, பெ. (n.) புதியதாக அனைவராலும் பயன்படுத்தப் படும் தொடர் மொழி, பழமொழி போல் புதியதாக உருவாக்கப்பட்டது; newly constructed proverb. |
புதுவது | புதுவது puduvadu, பெ. (n.) புதிது; anything new. “அது புதுவதோவன்றே”(புறநா.42);. |
புதுவன் | புதுவன் puduvaṉ, பெ. (n.) புதியவன்; new man, stranger. “புலம்பெயர் புதுவன்”(சிலப்.16:129);. [புது → புதுவன்.] |
புதுவன்னம் | புதுவன்னம் puduvaṉṉam, பெ. (n.) புதுச்சோறு பார்க்க;See. pudu-c-coru. [புது + அன்னம்.] Skt. anna → த. அன்னம் |
புதுவயல் | புதுவயல் puduvayal, பெ. (n.) புதியதாக திருத்தியமைக்கப்பட்ட வயல்; land newly brought under cultivation. [புது + வயல்.] |
புதுவரவு | புதுவரவு puduvaravu, பெ. (n.) புதியதாக வந்தது; new arrival. [புது + வரவு.] |
புதுவல் | புதுவல் puduval, பெ. (n.) புதியதாகத் திருத்தியமைத்த வயல் (நாஞ்.);; and newly brought under cultivation. ம. புதுவல் [புதுவயல் → புதுவல்.] |
புதுவழி | புதுவழி puduvaḻi, பெ. (n.) புதியதாக உருவாக்கப்பட்ட வழி; new path. [புது + வழி.] |
புதுவீடு | புதுவீடு puduvīṭu, பெ. (n.) புதுமனை பார்க்க;See. pudumanai. க., பட. கொசமனெ. [புது + வீடு.] |
புதுவெட்டு | புதுவெட்டு puduveṭṭu, பெ. (n.) பழைய காசு (நாணய); வகை (பணவிடு.133);; an ancient coin. |
புதுவெள்ளம் | புதுவெள்ளம் puduveḷḷam, பெ. (n.) மழைக்குப்பின் ஆற்றில் வரும் திடீர் நீர்ப்பெருக்கு, புதியதாக வரும் வெள்ளம்; fresh flood, sudden rise of water in rivers after rain. ம. புதுவெள்ளம். [புது + வெள்ளம். வெள் → வெள்ளம் = வெளுப்பான புதுப்பெருக்கு நீர்.] |
புதுவெள்ளை | புதுவெள்ளை puduveḷḷai, பெ. (n.) நாட்படாத வெட்டைநோய்; fresh gonorrhoea opposed to chronic one. மறுவ. வெள்ளைநோய் [புது + வெள்ளை. முள் → வெள் → வெள்ளை = உடம்பிலுள்ள சூட்டுவகை.] |
புதுவை | புதுவை puduvai, பெ. (n.) திருவில்லிபுத்தூர் (ஶ்ரீவில்லிபுத்தூர்);, புதுச்சேரி, புதுக்கோட்டை முதலிய ஊர்ப் பெயர்களின் மரூஉச்சொல்; contracted form of the names of certain towns, as Tiruvilliputtur, Puduccēri, Pudukköttai etc. விட்டுசித்தன் (திவ்.பெரியாழ்.3,3,10); ‘தருவுயர்ந்திடு புதுவையம்பதி’ (தனிப்பாடல்); [புதுச்சேரி → புதுவை, புதுக்கோட்டை → புதுவை என வெவ்வேறு நிலையின் மரூஉச் சொற்கள் இவை.] |
புதுவைசுப்புராமசாமிமுதலியார் | புதுவைசுப்புராமசாமிமுதலியார் puduvaisuppurāmasāmimudaliyār, பெ. (n.) ஒரு புலவர்; a poet. இவர் கோகிலாம்பிகைமாலை, வில்வ வனத்தந்தாதி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். |
புதுவைபொன்னையாமுதலியார் | புதுவைபொன்னையாமுதலியார் buduvaiboṉṉaiyāmudaliyār, பெ. (n.) ஒரு புலவர்; a poet. இவர் மயிலாசல முருகர் மும்மணிக்கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். |
புதுவோர் | புதுவோர் puduvōr, பெ. (n.) 1. புதிய மாந்தர்; strangers. “புதுவோர் நோக்கினும் பணிக்கு நோய்கூ ரடுக்கத்து”(மலைபடு.288);. 2. பட்டறிவு (அனுபவம்); அற்றவர்; in experienced persons. [புது → புதுவோர்.] |
புதை | புதை1 pudaidal, 4 செ.கு.வி. (v.i.) 1. மண்ணுக்குள் மறைதல், ஏதாவது ஒரு பொருளாய் மறைக்கப்படுதல்; to be buried, as treasure, to be covered, concealed. அங்கண்மால் விசும்பு புதைய (மதுரைக்.384.);. 2. அமிழ்தல்; to sink in, as a wheel, to enter, penetrate, as in arrow. “நெடுஞ்சுனை புதையப் புகுந்தெடுத்தளித்தும்”(கல்லா.13);. 3. உள்ளடங்கியிருத்தல்; to lie hidden, as a meaning. இப்பாட்டு புதைபொருளுள்ளது. [புல் → புது → புதை-.] புதை2 pudaiddal, 11 செ.குன்றாவி. (v.t,) 1. அடக்கம் பண்ணுதல்; to bury, to inter. பிணத்தைப் புதைப்பதும் தமிழர் வழக்கம் (உ.வ.);. 2. ஒளித்துவைத்தல்; to hide, as treasure, to conceal. “தேமாங்கனியை… அறையிற் புதைத்து”(திருமந்.202);. 3. வாய் செவி முதலியவற்றைப் பொத்துதல்; to close, cover, as the mouth, ear. “சிந்துரப்பவளச் செவ்வாய் செங்கையிற் புதைத்து”(கம்பரா. கைகேசி. சூழ். 104);. 4. போர்த்துதல் (வின்.);; to clothe to cover. “புதையிரும்படாஅம்போக நீக்கி”(சிலப்.5, 4);. 5. மறைத்துப் பேசுதல் (வின்.);; to speak in parables, to write obscurely. 6. மணிக்கற்கள் (இரத்தினம்); பதித்தல்; to inlay, encase, as jewels. 7. வலிமையைக் குறைத்தல்; to weaken, reduce, diminish. புதைத்திலன் மிதத்திலன் (இரகு. முடிசூட்.117);. 8. அமிழ்த்துதல் (யாழ்.அக.);; to cause to sink. to lower. க. பொதிசு; தெ. பொதுகு;து. புதெக்க. [புல் → புது → புதை.] புதை3 pudai, பெ. (n.) 1. மறைவு (சூடா);; concealment. 2. காட்டில் மரம் அடர்ந்த இடம் (வின்.);; thick part of jungle, as a cover for beasts. 3. மறைபொருள் (வின்.);; that which is concealed, mystical. 4. புதைபொருள்; hidden treasure. புதைக்குணிதியென (தனிப்பா. 1, 353, 78);. 5. மறைவிடம்; place of concealment. புதையிருந்தன்ன கிளரொளி வனப்பினர் (பெருங்.உஞ் சைக்.34,133);. 6. உடல் (சூடா);; body. 7. அம்புக்கட்டு (திவா.);; bundle or sheaf of arrows. ‘புதையம்பிற்பட்டு'(குறள்.597);. 8. ஆயிரம்; thousand. [புல் → புது → புதை.] புதை4 pudai, பெ. (n.) புதுமை (சூடா);; novelty. [புது → புதை.] புதை5 pudai, பெ. (n.) புரை பார்க்க;See. purai. புண்புதை வைத்துப் பழுத்திருக்கிறது. (உ.வ.);. [புல் → புர் → புரை = உட்டுளை, உட்டுளைப் பொருள். புரை → புதை.] |
புதை பானை | புதை பானை pudaipāṉai, பெ.(n.) வீட்டின் உள்ளறை மூலைச் சுவரில் உள்ளாகப் பதியப்பட்ட வாய் குறுகிய மட்கலம்; a narrow mouthed earthen pot set in the corner wall of the inner chamber of the house inolden days.(வடார்க்.வ);. [புதை+பானை] |
புதைகுழி | புதைகுழி pudaiguḻi, பெ. (n.) 1. இறந்தவரைப் புதைப்பதற்கான குழி; pit for burial, grave. 2. புதைமணல் பார்க்க;See pudai-manal. [புதை + குழி.] |
புதைக்கரு | புதைக்கரு pudaikkaru, பெ. (n.) முதிராநிலையிற் பிறந்தவுடனிறந்து புதைக்கப்படும் குழந்தை; buried foetus or immatured child which born dead or died after delivery. [புதை + கரு. குரு → கரு = சூல், முட்டை, குழவி, குட்டி.] |
புதைசாலகம் | புதைசாலகம் pudaicālagam, பெ. (n.) சாய்க்கடை நீர் செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட நிலத்தடி வழி; underground drainage. மறுவ. கரந்துபடை. [புதை + சாலகம்.] பண்டைத்தமிழகத்தின் கோநகர்களில் அங்கண நீரைக்கண்ணிற்படாமல் செலுத்துதற்கு, கரந்துபடை என்னும் புதைசாலகம் இருந்தது. அது தெரு நடுவிற் கட்டப்பட்டு யானைக்கூட்டம் மேற்செல்லும்படி கருங்கல்லால் மூடப்பட்டிருந்தது. அதிற்சென்ற நீர் யானைத் துதிக்கை போன்ற தூம்பின் வாயிலாய் அகழியில் விழுந்தது. (ப.த.நா.ப.138); |
புதைபொருள் | புதைபொருள் budaiboruḷ, பெ. (n.) 1. நிலத்திற் புதைந்து கிடக்கும் செல்வம்; hidden treasure 2. நிலத்தின் கீழ் புதைந்திருக்கும் பண்டைக் காலச் சின்னங்கள்; burried remains (found in archaeological excavations);. 3. ஆழ்ந்த கருத்துடைய பேச்சு அல்லது எழுத்து (கொ.வ.);; speech or written of profound significance. 4. பாட்டில் மறைந்துள்ள பொருள்; hidden meaning in the verse. [புதை + பொருள்.] |
புதைமணல் | புதைமணல் pudaimaṇal, பெ. (n.) மேற்பரப்பில் அழுந்தும் எந்த ஒன்றும் உட்சென்றுவிடக் கூடிய மணற்பரப்பு; quick sand. மறுவ. சொரிமணல், உதிர்மணல். [புதை + மணல்.] |
புதையல் | புதையல் pudaiyal, பெ. (n.) 1. மறைகை; being hidden. 2. புதைபொருள் பார்க்க;See. pudai porul. புதையலைக் கல்லியெடுத்தவன் (இராமநா.ஆரணி.23);. 3. அம்புக்கட்டு (அக.நி.);; sheaf of arrows. 4. கேடயம் (அக.நி.);; shield. [புதை → புதையல், ‘அல்’ தொ.பெ.ஈறு.] புதையல் pudaiyal, பெ. (n.) 1. ஓர் ஆட்ட வகை. type ofagame (நெவ);. 2. இயல்பான பாண்டி விளையாட்டு; a pandy game (தஞ்சை); [புதை-புதையல்] வெற்றிக்காய் ஒரு குழியில் நிறைய கிடைத்தால் புதையல் கிடைத்தது என்பது வழககம்; |
புதையல் வேட்டை | புதையல் வேட்டை pudaiyalvēṭṭai, பெ. (n.) புதையல் இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்தல்; treasure hunt. [புதையல்+வேட்டை] |
புதையிருள் | புதையிருள் pudaiyiruḷ, பெ. (n.) காரிருள்; deep darkness. “புதையிருட் படாஅம்போக நீக்கி”(சிலப்.5,4);. [புதை + இருள்.] |
புதையூரல் | புதையூரல் pudaiyūral, பெ. (n.) கொல்லங்கோவை (மலை.);; a climbing shrub. |
புதைவாணம் | புதைவாணம் pudaivāṇam, பெ. (n.) பொறிவாணவகை; a kind of rocket. [புதை + வாணம்.] |
புத் | புத் put, இடை. (part) இதுவரை இல்லாமலிருந்து அப்பொழுது புதியதாகத் தோன்றியதை அல்லது உருவாக்கப்பட்டதைக் குறிக்கும் முன்னொட்டு; prefix indicating the meaning new. [புது → புத்] எ-டு: புத்தாடை, புத்தூர். |
புத்தகக்கல் | புத்தகக்கல் puttagaggal, பெ. (n.) 1. காகச் சிலை; a black load stone. 2. கனிமம்; mineral. |
புத்தகப்படுத்து-தல் | புத்தகப்படுத்து-தல் puddagappaḍuddudal, 18 செ.குன்றாவி. (v.t.) ஆவணம் பதிவு செய்தல் (யாழ்ப்.);; to record. register as a notary public. [புத்தகம் + படுத்து-,] |
புத்தகப்பை | புத்தகப்பை puttagappai, பெ. (n.) பள்ளிப் பாடநூல்களை வைக்கப் பயன்படுத்தும் பை; school bag. ஆண்டுக்கு ஒரு புத்தகப்பை வாங்க வேண்டியிருக்கிறது (உ.வ.);. [புத்தகம் + பை-,] |
புத்தகமெழுது-தல் | புத்தகமெழுது-தல் puddagameḻududal, 5 செ.கு.வி. (v.i.) நூலெழுதுதல்; to author a book. புத்தகமெழுதும் ஆசிரியர் பெருக வேண்டும். (உ.வ.); [புத்தகம் + எழுது-,] |
புத்தகம் | புத்தகம்1 puttagam, பெ. (n.) 1. நூல், நூற்பொருள் எழுதிய ஏட்டுத்தொகுதி; book,old manuscript. ‘புத்தகமே சாலத் தொகுத்தும்’ (நாலடி, 318);. 2. படிப்பதற்கு ஏற்ற வகையில் அட்டை போட்டு இணைத்த அச்சிட்ட தாள்களின் தொகுப்பு; book. பொழுது போகவில்லை. புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.(உ.வ.);. 3. எழுதுவதற்கு ஏற்ற வகையில் வெற்றுத் தாள்களை அட்டை போட்டு இணைத்த தொகுப்பு; notebook. ledger. பட்டாப் புத்தகம். 4. சித்திரப்படாம் (பிங்.);; printed cloth. 5. மயிலிறகு (சங்.அக.);; peacock-quill. [புல் → புள் → புண் → புணர் புணர்தல்= பொருந்துதல், நட்பாடல், சொற்கூடுதல். புண் → புணி. புணித்தல் = சேர்த்துக் கட்டுதல். புல் → பொல் → பொரு. பொருதல் = பொருந்துதல், தொடுதல், முட்டுதல். பொரு → பொருந் → பொருநுதல் = பொருந்துதல், உடன்படுதல். பொருந் → பொருந்து → பொருத்து = இணைப்பு, மூட்டு. பொருத்து → பொத்து. பொத்துதல் = பொருத்துதல், தைத்துமூட்டுதல், மாலை கட்டுதல். பொத்து → பொத்தகம் = சுவடி, நிலக்கணக்கு. ஏடுகளின் சேர்க்கை. ஏட்டுச் சுவடி, சுவடி சேர்த்தல் என்னும் வழக்குகளை நோக்குக. (வே.க.3.64-70); பொத்தகம் → புத்தகம்] த. புத்தகம் → Skt. pustaka. புத்தகம்2 puttagam, பெ. (n.) வரகு; kodu millet. |
புத்தகம்படி-த்தல் | புத்தகம்படி-த்தல் puttagambaḍittal, 4 செ.கு.வி. (v.i.) நூல் வாசித்தல்; to read a book. புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தூண்ட வேண்டும் (உ.வ.);. [புத்தகம் + படி-,] |
புத்தகம்பண்ணு-தல் | புத்தகம்பண்ணு-தல் puddagambaṇṇudal, 12 செ.குன்றாவி. (v.t.) புத்தகப் படுத்து-தல் பார்க்க; see puttaga-p-paduttu-. [புத்தகம் + பண்ணு-, பண் → பண்ணுதல்] |
புத்தகரம் | புத்தகரம் puttagaram, பெ. (n.) தஞ்சை மாவட்டத்திலுள்ள ஊர்; a village in Tanjavur. [புது + அகரம்] |
புத்தசேடம் | புத்தசேடம் puttacēṭam, பெ. (n.) உண்ட மிச்சில்(யாழ்.அக.);; leavings of food after a meal. |
புத்தன் | புத்தன்1 puttaṉ, பெ. (n.) 1. புதிய-வன்-வள்-து (சிவதரு.செனன.91);; new person or thing. 2. காசு; a coin. ‘பிரதானி புத்தனுக்கும்’ (பணவிடு.12);. ம. புத்தன் (புதியபொருள்); [புது → புத்து +அன்.] புத்தன்2 puttaṉ, பெ. (n.) எட்டிமரம்; a tree Strychnos. |
புத்தபலை | புத்தபலை buttabalai, பெ. (n.) ஏழிலைப் புன்னை; seven leaf milky plant. |
புத்தப்புதிய | புத்தப்புதிய puddappudiya, பெ.அ. (adj.) புத்தம் புதிய (கொ.வ); பார்க்க; see puttam pudiya. [புத்தம் + புதிய] |
புத்தப்புதுமை | புத்தப்புதுமை puddappudumai, பெ. (n.) மிக்க புதுமை (தக்கயாகப்.99);; brand-new or very recent thing. [புத்தம் + புதுமை. புது → புதுமை ‘மை’ப.பெ.ஈறு] |
புத்தமதம் | புத்தமதம் puddamadam, பெ.(n.) பெளத்த சமயம்; the Buddhist religion. [Skt. Buddha → த. புத்த+மதம்] |
புத்தமித்திரன் | புத்தமித்திரன் puttamittiraṉ, பெ.(n.) 11ஆம் நூற்றாண்டிலிருந்த வீரசோழிய நூலாசிரியர்;{}, the author of {}, 11th century. |
புத்தம் | புத்தம் puttam, பெ.(n.) புத்த மதம்; Buddhism. [Skt. Buddha → த. புத்தம்] |
புத்தம்புதிய | புத்தம்புதிய puddambudiya, பெ.அ. (adj.) மிகப்புதிய; brand-new,very recent. புத்தம் புதிய துணி(உ.வ.);. [புத் → புத்தம் + புதிய. புது → புதிய] |
புத்தம்புது | புத்தம்புது puddambudu, பெ.அ. (adj.) புத்தம் புதிய பார்க்க; see pullampudiya. புத்தரி __, பெ. (n.); விழாக்களில் பயன்படுத்தும் புது அரிசி; new rice used in ceremonies. ம.,க. புத்தரி; து. புதுபாரு (புதுநெல்);; துட.. புத்தேரி (அறுவடைத் திருநாள்);; குட. புத்தரி, புத்தேரி. [புது → புத் + அரி] |
புத்தரி நன்மை | புத்தரி நன்மை puttarinaṉmai, பெ.(n.) புதிய நெல்லறுவடைத் திருநாள்; new harvest festival. குட. புத்தரி நம்மெ. [புது+அரி [நெல்லரிதாள்] + [விழா]] |
புத்தர் | புத்தர் puttar, பெ.(n.) 1. புத்தப்பதவி பெற்ற பெரியோர்கள்; Buddhas, of whom there are several. “எண்ணில் புத்தர்களும்” (மணிமே. 30:14);. 3. புத்தமதத்தவர்; Buddhists. “புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள்” (திவ்.பெரியதி.9,8,9);. [Skt. Buddha → த. புத்தர்] |
புத்தல் | புத்தல் puttal, பெ. (n.) நீர்க்கோங்கு; ironwood of Malabar. |
புத்தளம் | புத்தளம் puttaḷam, பெ. (n.) அகத்தீச்சுவரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Agastheeswaram Taluk. [புற்று+தளம்] |
புத்தளி | புத்தளி puttaḷi, பெ. (n.) தருப்பையாற் செய்த உரு; effigy made of darbha grass. [புது → புத் + அளி] த. புத்தளி → Skt. puttalikā புத்தளி puttaḷi, பெ. (n.) காஞ்சீபுரம் வட்டத் திலுள்ள சிற்றூர்; a village in Kanchepuram Taluk. [புது+தளி] |
புத்தாக்கம் | புத்தாக்கம் puttākkam, பெ. (n.) புதியதாக ஆக்கல்; making new. [புது → புத் +ஆக்கம்] |
புத்தாஞ்சோறு | புத்தாஞ்சோறு puttāñjōṟu, பெ. (n.) கரையான் புற்று; ant hill. [புற்று → புற்றாம் + சோறு = புற்றாம்சோறு = புற்றிலுள்ள கரையான்திரள். புற்றாம் சோறு → புத்தாம் சோறு] |
புத்தாடை | புத்தாடை puttāṭai, பெ. (n.) புதுத்துணி, புதிய ஆடை; new clothes. பொங்கலுக்குப் புத்தாடை உடுப்பது வேளாளர் பழக்கம் (உ.வ.);. [புதிய → புத் + ஆடை. ஆடு → ஆடை = ஆடுவது, அசைவது] |
புத்தாண்டு | புத்தாண்டு puttāṇṭu, பெ. (n.) அண்மையில் தொடங்கிய அல்லது அடுத்துத் தொடங்கும் ஆண்டு; new year. புத்தாண்டு வாழ்த்துகள் (உ.வ.);. தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கம் சுறவ முதல்நாளே; மேழம் அன்று (உ.வ.); [புது → புத் + ஆண்டு] |
புத்தாத்திரி | புத்தாத்திரி puttāttiri, பெ. (n.) அரிநெல்லி (மலை.);; otaheite gooseberry. [புது → புத்து + தாத்திரி] |
புத்தான்பழம் | புத்தான்பழம் puttāṉpaḻm, பெ. (n.) புத்தான் பவளம் பார்க்க; see puttān-pavalam. மறுவ. புத்தான் பவளம் |
புத்தான்பவளம் | புத்தான்பவளம் puttāṉpavaḷam, பெ. (n.) நூற்றிருபது சித்தர் மருந்து வகையுளொன்று; one of 120 kinds of natural Siddhar’s medical Science. மறுவ. புத்துக்குளச்சி |
புத்தாயிப்பழம் | புத்தாயிப்பழம் puttāyippaḻm, பெ. (n.) பம்பளிமாக; pomela |
புத்தாரி | புத்தாரி puttāri, பெ. (n.) புத்தாத்திரி (சங்.அக.); பார்க்க; see puttãttiri. |
புத்தாளி | புத்தாளி puttāḷi, பெ. (n.) கல்லுப்பனை; palmyra tree. |
புத்தி | புத்தி1 putti, பெ. (n.) அந்தக்கரணம் நான்கனுள் ஆராய்ந்து தெளியுங் கரணம் (சி.போ.சிற்.4,1,2.);; reason, power of species of andakkaranam, q.v. 2. அறிவு; intellect. understanding knowledge, wisdom. ‘புத்திபுகுத்தவர்’ (திருவாச.13.19);. 3. இயற்கையுணர்வு; instinct, instinctive knowledge as that of animals. 4. நல்வழி (நல்லுபாயம்); (வின்.);; nice plan, method. 5. அறிவுரை (போதனை);; instruction, admonition counsel, exhortation. 6. வழிவகை (பரிகாரம்); (வின்.);; remedy, antidote. 7. தாழ்ந்தோர் தலைவர்க்குத் தம் உடன்பாடுணர்த்துஞ் சொல்(கொ.வ.);; a term signifying acceptance of the word of a superior by an inferior used in response. ‘நம்பனே புத்தியென்று நலத்தரு சிற்பர் போந்து’ (விநாயகபு.3,10);. [புல் → புலம் = பொருளொடு பொருந்தும் அறிவு, அறிவுறுப்பு அறிவுநூல், புலம் → புலன் = பொருளொடு பொருந்தும் அறிவு, அறிவுறுப்பு அறிவுநூல் (சு.வி.36);. புல் → புன் → (புந்தி); → புத்தி = அறிவு; நல்வழி, வழிவகை] புத்தி2 putti, பெ. (n.) பார்க்க; see putti3 (Pond.);. [புட்ட → புத்தி(கொ.வ.);] புத்தி3 putti, பெ. (n.) புறவுருத்தோற்றம்; reflexion. புத்தி putti, பெ. (n.) கரணியம் காணும் அறிவு; rational thinking. [Skt. buddhi → த. புத்தி.] |
புத்திகம் | புத்திகம் puttigam, பெ. (n.) எட்டி; nuxvomica tree. |
புத்திச்சிரேணி | புத்திச்சிரேணி putticcirēṇi, பெ. (n.) எலிச்செவி; a creeper. |
புத்தின்சாரி | புத்தின்சாரி puttiṉcāri, பெ. (n.) காஞ்சிரை; nuxvomica tree. |
புத்திமி | புத்திமி puttimi, பெ. (n.) வெள்ளையீடு கொல்லி மரவகை; a tree. |
புத்தியல்பு | புத்தியல்பு puttiyalpu, பெ. (n.) புதியத்தன்மை; new nature. [புது → புத்து + இயல்பு.இயல் → இயல்பு] |
புத்திரகன் | புத்திரகன் puttiragaṉ, பெ. (n.) சிறப்புத் தீக்கை பெற்றவன் (சைவச.மாணா. 4);; 2. அன்பன்(யாழ்.அக.);; beloved man. 3. வஞ்சகன்(யாழ்.அக.);; Cheat. |
புத்திரகருமம் | புத்திரகருமம் puttiragarumam, பெ. (n.) பெற்றோர்க்கு மகன் செய்யும் ஈமச்சடங்கு; funeral ceremonies performed by a son for his deceased parent. [புத்திரன் + கருமம்] |
புத்திரகாமியம் | புத்திரகாமியம் puttirakāmiyam, பெ. (n.) புத்திரகாமேட்டி பார்க்க(யாழ்.அக.);; see puttina-kāméffi. [புத்திரன் + காமியம்] Skt. kämya → த. காமியம் |
புத்திரகாமேட்டி | புத்திரகாமேட்டி puttirakāmēṭṭi, பெ. (n.) ஆண்மகப்பேறுவிரும்பிச் செய்யும் வேள்வி (யாகம்); (இராமநா.பாலகா.7);; sacrifice performed to obtain sons. |
புத்திரசஞ்சீவி | புத்திரசஞ்சீவி puttirasañsīvi, பெ. (n.) மரவகை; a kind of tree. |
புத்திரசந்தானம் | புத்திரசந்தானம் puttirasandāṉam, பெ. (n.) ஆண் சரவடி (சந்ததி);; male offspring. [புத்திரன் + சந்தானம்] Skt. san-tåna → த. சந்தானம் |
புத்திரசம்பத்து | புத்திரசம்பத்து puttirasambattu, பெ. (n.) புத்திரச் செல்வம் பார்க்க; see putra-c-celvam. [புத்திர(ன்);+சம்பத்து] Skt. Sampad → த. சம்பத்து |
புத்திரசளி | புத்திரசளி puttirasaḷi, பெ. (n.) காஞ்சிரை மரம்; a kind of tree. மறுவ, புத்திரசாரி, புத்துருணி, புத்துவணி |
புத்திரசீவம் | புத்திரசீவம் puttiracīvam, பெ. (n.) புத்திர சீவி பார்க்க; see puttira šivi. [புத்திரன் + சிவம்] Skt. jivam → த. சீவம் |
புத்திரசீவி | புத்திரசீவி puttiracīvi, பெ. (n.) குழந்தைகள் நலமாயிருத்தற்குக் காப்பாகக்கட்டும் வித்துகளையுடை மரம் (பதார்த்த.1024);; child’s amulet tree. 2. வெள்ளால் (இ.வ.);; Java fig. [புத்திரன் + சீவி] Skt. jivi → த. சீவி |
புத்திரசீவிக்கொட்டை | புத்திரசீவிக்கொட்டை puttiracīvikkoṭṭai, பெ. (n.) மூலம், பித்தம். நாவறட்சி, வயிற்றுப் பொருமல் போன்றவற்றைப் போக்கும் மருந்துக் கொட்டை; a nut which is said to cure piles, gleet, thrist, bloating of abdomen etc. |
புத்திரசீவிவிதை | புத்திரசீவிவிதை puddiracīvividai, பெ. (n.) புத்திரசீவிக்கொட்டை பார்க்க; see puttira šivi-k-kottai. [புத்திரசீவி + விதை] |
புத்திரசுவீகாரம் | புத்திரசுவீகாரம் puttirasuvīkāram, பெ. (n.) வளர்ப்பு மகனாக எடுத்து (தத்தெடுத்து);க் கொள்ளுகை; adoption of a son. [புத்தின் + சுவீகாரம்] Skt. svíkåra → த. சுவீகாரம் |
புத்திரசெனனி | புத்திரசெனனி puttiraseṉaṉi, பெ. (n.) தாளி (மலை.);; hedge bind-weed. |
புத்திரசோகம் | புத்திரசோகம் puttiracōkam, பெ. (n.) புத்திரத்துயர் பார்க்க; see puttira-t-tuyar “புத்திரசோக முற்றுப் பொன்னனாணின்ற வாறும்” (பிரமோத். 6, 25);. [புத்திர+ சோகம்] Skt. Sðka → த. சோகம் |
புத்திரசோதி | புத்திரசோதி puttiracōti, பெ. (n.) புத்திரசீவி [புத்திரசீவி. → புத்திரசோதி] Skt. Jyðtis → த. சோதி |
புத்திரசோபம் | புத்திரசோபம் puttiracōpam, பெ. (n.) புத்திரத்துயர் (யாழ். அக.); பார்க்க; see puliat-tuyar. [புத்திரன் + சோபம்] Skt. kSðbha → த. சோபம் |
புத்திரச்செல்வம் | புத்திரச்செல்வம் puttiraccelvam, பெ. (n.) மக்கட்செல்வம்; sons. considered as wealth. மறுவ. மக்கட்பேறு, மக்கட்செல்வம் [புத்திரன் + செல்வம்] |
புத்திரணி | புத்திரணி puttiraṇi, பெ. (n.) முள்ளிச் செடி; a plant, Indian night shade. |
புத்திரதானம் | புத்திரதானம்1 puttiratāṉam, பெ. (n.) மக்கட் பேற்றைக் குறிக்கும் ஓரையின் (இலக்கினத்து); ஐந்தாமிடம்; [புத்தின் + தானம்] புத்திரதானம் puttiratāṉam, பெ. (n.) 1. புதல்வரைப் பிறப்பிக்கை; procreation of sons. 2. வளர்ப்புப் பிள்ளையாக (தத்தாக); மகனைக் கொடுக்கை; gift of a son in adoption. [புத்திரன்+தானம்] |
புத்திரதீபமணி | புத்திரதீபமணி puttiratīpamaṇi, பெ. (n.) காளாமுகர் மாலையாகக் கழுத்தில் அணியும் ஒரு வகை மணி; a kind of beads stringed into a necklet and worn by Kālāmugar. “காளாமுகர்க்குப்….. புத்திர தீபமணிகள்…….மூர்த்தியாய்” (சி. சி. பாயி. 1, ஞானப்.); [புத்திரதீபம் + மணி. மண்ணுதல் = கழுவுதல். மண்ணப்பட்டது மண்ணி. மண்ணி → மணி] Skt. dipa → த. தீபம் |
புத்திரதீபம் | புத்திரதீபம் puttiratīpam, பெ. (n.) புத்திர தீபமணி பார்க்க; see puttira-dibamani. காளாமுகத்தினர்க்குப் படிகம் புத்திரதீபந்தரித்த மூர்த்தியாயும் (சி.சி.பாயி.1.சிவாக்.); |
புத்திரத்துயர் | புத்திரத்துயர் puttirattuyar, பெ. (n.) மகனை இழந்த துயர்; grief or sorrow occasioned by the loss of son. [புத்திரன் + துயர்] |
புத்திரநாதன் | புத்திரநாதன் puttiranātaṉ, பெ. (n.) பிள்ளையினாற் காக்கப்படுவன் (யாழ்.அக.);; one who is maintained by his sons. [புத்திரன் + நாதன்] Skt. nadha → த. நாதன் |
புத்திரன் | புத்திரன் puttiraṉ, பெ. (n.) 1. மகன்; son. 2. மாணாக்கன்; disciple. pupil. “புத்திரரோடுங் கூடிப்போவதே கருமம்” (திருவாலவா. 54, 37);. தெ. புத்ருடு, புத்ரகுடு [புது → புத்து → புத்திரன். புதுவதாக (குடும்பத்திற்கு); வந்தவன்] த. புத்திரன். → Skt. puttra putra, a son Gt. (p. 526); compares a K. root pudu, to be born. This root is nowhere found in D, it occurs only in Mr. Reave’s Dictionary that was used by Dr. Gundert. Gt further, compares puytal (of T.puy, to become, to exist); a coming into existence, an existing and T. pudalva, a son, and then D. puttu. T. pudalva appears to be identical with K. podiva (of pādal);, which may become pëdarva, and means “one who comes forth or springs up”. See Te, podalu, to be born, s, putlu. When (L. p. 486 as 506); compares T.paydal, etc., a boy (see S.D. pasule, hay, etc.); with putra, he is decidedly wrong. (KKED, xxix);. putra, son; Draw root pud, new(CGDFL 577); புத்ர என்னும் சொல்லிற்கு ‘புத்’ என்னும் நிரய(நரக);த்திற்குச் செல்லாமல் காப்பவன் (மகன்); என்று மா.வி. அகரமுதலி குறித்திருப்பது இயல்பு நிலைக்கு மாறானது. மேலும் putra வுக்கு push என்று வேர்மூலம் காட்டிய பின் அது etym. doutful என்று அவ்வகர முதலி குறித்துள்ளது. |
புத்திரபகம் | புத்திரபகம் buttirabagam, பெ. (n.) ஆண்மக் (புத்திரர்);களுக்கு ஈவுப்படி கொடுக்கும் பங்கு; division of inheritance per capita among the sons, opp. to pattiņibāgam (R.I.);. [புத்திர(ன்); + பாகம்] |
புத்திரப்பிரதிநிதி | புத்திரப்பிரதிநிதி puddirappiradinidi, பெ. (n.) வளர்ப்புப்பிள்ளை (தத்துப்பிள்ளை);(யாழ்.அக.);; adopted son. [புத்திரன் + பிரதிநிதி] Skt. prati-nidhi → த. பிரதிநிதி |
புத்திரமஞ்சரி | புத்திரமஞ்சரி puttiramañjari, பெ. (n.) தணக்கு; small ach root. |
புத்திரமுகங்காணுதல் | புத்திரமுகங்காணுதல் puddiramugaṅgāṇudal, பெ. (n.) ஒருவன் புதிதாகப் பிற்ந்த தன் ஆண்குழந்தையின் முகத்தை முதன் முறை நோக்குதலாகிய சடங்கு; the ceremony in which one sees the face of his new-born Son for the first time. [புத்திரன் + முகம் + காணுதல்] |
புத்திரம் | புத்திரம் puttiram, பெ. (n.) காஞ்சிரை மரம்; Strychnine tree. |
புத்திரலாபம் | புத்திரலாபம் puttiralāpam, பெ. (n.) மகப்பேறு; children, considered an acquisition. [புத்திரன் + லாபம்] Skt. lābha → த.லாபம் |
புத்திரவஞ்சரி | புத்திரவஞ்சரி puttiravañjari, பெ. (n.) கடுக்காய் மரம்; gall nut tree. |
புத்திரவதி | புத்திரவதி puddiravadi, பெ. (n.) மக்கட் பேறுடையவள்; woman blessed with children. [புத்திர → புத்திரவதி] |
புத்திரவாஞ்சை | புத்திரவாஞ்சை puttiravāñjai, பெ. (n.) மக்களிடம் அன்பு; attachment to children. [புத்திரன் + வாஞ்சை] |
புத்திரவான் | புத்திரவான் puttiravāṉ, பெ. (n.) மக்கட் பேறுடையவன்; man blessed with children. [புத்திரன் → புத்திரவான்] |
புத்திராகட்டி | புத்திராகட்டி puttirākaṭṭi, பெ. (n.) புண்கட்டிவகையு ளொன்று; a kind of abscess. |
புத்திராசாரி | புத்திராசாரி puttirācāri, __, , எட்டி மரம்; nuxvomica tree. |
புத்திராதரபலா | புத்திராதரபலா buttirātarabalā, பெ. (n.) கீழ்க்காய் நெல்லி; a small plant with slender green main branches. |
புத்திரி | புத்திரி1 puttiri, பெ. (n.) மகள் (சூடா.);; daughter. [புது → புத்து → புத்திரன் (ஆ.பா.); – புத்திரி (பெ.பா);.] த. புத்திரி → Skt. putri. புத்திரி2 puttiri, பெ. (n.) 1. கீழாநெல்லி (மலை.);; small plant with slender green branches. 2. கரிமுள்ளி; Indian nightshade. மறுவ. புத்திராதரபலா |
புத்திரிகம் | புத்திரிகம் puttirigam, பெ. (n.) தக்காளிச் செடி; tomato plant. |
புத்திரிகை | புத்திரிகை puttirigai, பெ. (n.) 1. மகள் வின்.); daughter. 2. சித்திரப்பாவை (யாழ்.அக.);; doll. [புது → புத்து → புத்திரன் (ஆ.பா); – புத்திரி (பெ.பா.); → புத்திரிகை.] |
புத்திரிகைபுத்திரன் | புத்திரிகைபுத்திரன் buttirigaibuttiraṉ, பெ. (n.) 1. புத்திரி புத்திரன் பார்க்க; see puttiri putiran. 2. மகனாகக் கொள்ளும் (பாவிக்கும்); மகள்; the appointed daughter, regarded as a son. [புத்திரிகை + புத்திரன்.] |
புத்திரினி | புத்திரினி puttiriṉi, பெ. (n.) சிறுகொப்புள வகையுளொன்று; a kind of thin abscess. |
புத்திரிபுத்திரன் | புத்திரிபுத்திரன் buttiributtiraṉ, பெ. (n.) தன் மகள் வயிற்றுப் பிறந்தவனும் தனக்கே மகனாகக் கொள்ளப் பட்டவனுமாகிய பேரன் (ஏலாதி. 31);; son of an appointed daughter. [புத்திரி + புத்திரன்.] |
புத்திரைசுவரியம் | புத்திரைசுவரியம் puttiraisuvariyam, பெ. (n.) புத்திரச் செல்வம் பார்க்க; see puttria-c-celsvam. [புத்திர(ன்); + ஐசுவரியம்] Skt. aišvarya → த. ஐசுவரியம் |
புத்திறி | புத்திறி puttiṟi, பெ. (n.) கறிமுள்ளி; a thorny shrub. |
புத்திலக்கியம் | புத்திலக்கியம் puttilakkiyam, பெ. (n.) உள்ளடக்கத்திலும் அமைப்பு முறையிலும் இக்கால எண்ணங்களைக் காட்டும் இலக்கியம் (நவீன இலக்கியம்);; modern literature. [புது → புத் + இலக்கியம்] |
புத்தீசல் | புத்தீசல் puttīcal, பெ. (n.) புற்றீசல் பார்க்க; see purrisal. [புற்றீசல் → புத்தீசல்.] |
புத்தீமம் | புத்தீமம் puttīmam, பெ. (n.) வட்டசாரணைக் கொடி; a creeper. |
புத்து | புத்து1 puttu, பெ. (n.) புற்று பார்க்க; see purru. [புல் → புற்று → புத்து] புத்து2 puttu, பெ. (n.) பவளப்புற்று வைப்பு நஞ்சு; a kind of prepared arsenic. |
புத்துக்கடி | புத்துக்கடி puttukkaḍi, பெ. (n.) மேகப்படை; ringworm (M.L.);. [புத்து + கடி] |
புத்துக்கல் | புத்துக்கல் puttukkal, பெ. (n.) சவர்க்காரம்; essence of fuller’s earth. |
புத்துக்குளச்சி | புத்துக்குளச்சி puttukkuḷacci, பெ. (n.) புத்தான் பவளம் பார்க்க; see puttan-pavalam. மறுவ. புத்தான் பழம் |
புத்துணர்ச்சி | புத்துணர்ச்சி puttuṇarcci, பெ. (n.) 1. (சோர்வு); நீங்கும் வகையில் மகிழ்ச்சிஉணர்வு, மனவெழுச்சி; rejuvenation, invigorating, feeling. கடற்காற்று புத்துணர்ச்சியைத் தரும் (உ..வ.);. 2. புதிய உணர்வை அல்லது பட்டறிவை (அனுபவத்தை);த் தருவது; refreshing feeling. புத்துணர்ச்சி நீர் பருக வேண்டும். [புது → புத் + உணர்ச்சி] |
புத்துணர்ச்சியளி-த்தல் | புத்துணர்ச்சியளி-த்தல் puttuṇarcciyaḷittal, செ.கு.வி. (v.i.) புதிய உளப்பாங்கு தருதல், புதியதாகப் பரபரப்புக் காட்டுதல்; to give an new sensation. [புத்துணர்ச்சி + அளி-,] |
புத்துணர்வு | புத்துணர்வு puttuṇarvu, பெ. (n.) புத்துணர்ச்சி பார்க்க; see puttunarcci. [புது → புத் + உணர்வு] |
புத்துத்தேன் | புத்துத்தேன் puttuttēṉ, பெ. (n.) புதிய தேன்; fresh honey. [புது → புத் + தேன்] |
புத்துமண் | புத்துமண் puttumaṇ, பெ. (n.) புற்றுமண் பார்க்க; see purruman. [புற்றுமண் → புத்துமண்] |
புத்துமாங்காய் | புத்துமாங்காய் puttumāṅgāy, பெ. (n.) சூட்டைத் தணிப்பதற்கு உண்ணுங்கிழங்குவகை; a kind of tuber eaten for its cooling effect. [புற்று → புத்து + மாங்காய். மா + காய் – மாங்காய்] |
புத்துயிர் | புத்துயிர் puttuyir, பெ. (n.) rebirth, revival. பண்டைய கலைகளுக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும். (உ.வ.);. [புது → புத் + உயிர்] |
புத்துருக்கு | புத்துருக்கு putturukku, பெ. (n.) செங்கற் சூளையிற் காணப்படும் உருகிய கற்புற்று; melted mud on the brick kiln seen after baking the bricks. |
புத்துருக்குநெய் | புத்துருக்குநெய் putturukkuney, பெ. (n.) புதியதாக உருக்கின நெய்; fresh clarified butter. |புத்து + உருக்கு + நெய். புது → புத்து. உருகு → உருக்கு. நெள் → நெய்] |
புத்துருணி | புத்துருணி1 putturuṇi, பெ. (n.) எட்டி (சங்.அக.);; staychnine tree. புத்துருணி2 putturuṇi, பெ. (n.) புத்துவணி பார்க்க; see puttuvani. |
புத்துருத்தி | புத்துருத்தி putturutti, பெ. (n.) முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in MudukulatturTaluk. [புற்று+துருத்தி] |
புத்துவணி | புத்துவணி puttuvaṇi, பெ. (n.) காஞ்சிரை மரம்; trychnine tree. மறுவ. எட்டி, புத்துருணி, புத்திசாரி. |
புத்துவைத்தல் | புத்துவைத்தல் puttuvaittal, தொ.பெ. (vbl.n.) புற்று வைத்தல் பார்க்க; see puruvaitral. [புத்து + வைத்தல்] |
புத்தூர் | புத்தூர் puttūr, பெ. (n.) புதியவூர்; new village. |புதி(ய); → புத் + ஊர்.] புதியதாகத் தோன்றும் ஊர் புத்தூர். திருப்புத்தூர் என்றாற் போன்று அடை கொடுத்து வழங்கும் ஊர்களும் உண்டு. இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள புத்தூர் `செறிபொழில் சூழ் மணிமாடத் திருப்புத்தூர்’ என (290.7); திருஞானசம்பந்தரால் குறிக்கப்பட்டுள்ளது. தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுப் பதியொன்று திருப்புத்தூர். அரிசில் ஆற்றங்கரையில் அமைந்த ஊர் அரிசிற்கரைப் புத்தூர். கடுவாய் ஆற்றங் கரையில் அமைந்த ஊர் கடுவாய்க்கரைப் புத்தூர். பாண்டி நாட்டிலுள்ள திருவில்லிபுத்தூர் மாலியர் (வைணவர்); போற்றும் பெரும்பதி. சுந்தரர் திருமணம் செய்யப்போந்த புத்தூர் மணம் வந்த புத்தூர். கொங்குநாட்டில் பேரூருக்கு அருகே அமைந்த கோவன் என்னும் தலைவன் பெயரால் அமைந்தது கோயம்புத்தூர். |
புத்தேணாடு | புத்தேணாடு puttēṇāṭu, பெ. (n.) வானுலகு; celestial world. “புலத்தலிற் புத்தேணா குண்டோ” (குறள், 123);. [புத்தேள் + நாடு] |
புத்தேன் | புத்தேன் puttēṉ, பெ. (n.) எட்டி (மலை);; nuxvomica tree. |
புத்தேளிர் | புத்தேளிர் puttēḷir, பெ. (n.) தேவர்; celestial being. “புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து” (கலித்.82);. மறுவ. அமரர், பண்ணவர், கடவுளர், அண்டர், உம்பர், இமையவர், வானோர், புலவர், விண்ணோர், அமுதர், ஆதித்தர், மேலோர், ஐயர், சுரர், உயர்நிலத்தவர். [புத்தேள் → புத்தேளிர்] புத்தேளிர் puttēḷir, பெ.(n.) gods (of golden colour);. தமிழிலக்கியங்களில் புத்தேள், புத்தேளிர் என்னுஞ் சொல்லாட்சிகள் பயின்றுள்ளன. தொல் காப்பியர் இச்சொல்லைக் கையாளவில்லை. மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் வேர்ச் சொல்லாய் வின் வழி புது+எல்’ என இச்சொல்லைப் பிரித்து புதிய அல்லது மேலான ஒளி வடிவமான தெய்வம் எனப் பொருள்கொண்டார். கல்-கள்; கொல்-கொள்; ஒல்-ஒள்;வெல்-வெள் போன்றவை அவர் காட்டும் அடிப்படை வேர்ச் சொல் மூலவடிவில் ஒன்றுபோல் காட்டப்படினும் பொருட்பாட்டு விரிவில் முற்றிலும் வெவ்வேறான கோணத்தில் பிரிந்துவிடுகின்றன. ஒர் அடிப்படைச்சொல் பத்து வெவ்வேறு பொருட்பாடுகளில் பிரியும்பாங்குகொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட சொல்லாட்சி எந்த எல்லைப் பகுதிக்குள் எந்தப் பொருளில் புடைபெயர்ந் திருக்கிறது என்பதை உறுதி செய்த பின்னரே அச்சொற் பொருளைத் தெளிவாக வரையறுக்க முடியும் வழக்கூன்றாத சொற்பொருள்களை நாமாக இட்டுக்கட்டி வலிந்துரைக்க முடியாது. ‘புத்தேள் என்னும் சொல் பாவாணர் கருத்தின் வண்ணம் கூட்டுச்சொல் என்பதில் ஐயமில்லை. இச் சொல் தமிழிலக்கியங்களிலும் இந்திய மொழிகளிலும் ஆளப்பட்டுள்ள பொருட்பாட்டு நிலைகளைக் கூர்ந்து நோக்கினால் கூட்டுச் சொல் நிலையிலிருந்து தனிச் சொல் பொருளே நாளடைவில் நிலைபேறு பெற் றதைக் காண முடிகிறது. புலத்தலிற் புத்தேள் நாடுண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னி ரகத்து (குறள்.1323);. புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற (குறள்.213);. எனத் திருவள்ளுவரும், மாந்தரஞ் சேரல் ஓம்பிய நாடே புத்தேள் உலகத் தற்றெனக் கேட்டு இனிது கண்டிசின் (புறம்:22);. எனக் குறுங்கோழியூர் கிழாரும் புத்தேள் என்னும் சொல்லைத் தெய்வம்’ எனும் பொருளில் ஆண்டுள் ளனர். புலத்தகை புத்தேளில் புக்கான் (கலி.82);. எனும் கலித்தொகை பாடல்வரியில் இச்சொல் புதியவன் எனப் பொருள்படுகிறது. பாவாணர் கட்டும் ஒளி வடிவமான தெய்வம் என்னும் பொருள் இங்குப் பொருந்தவில்லை. திருவிளையாடற் புராணத்தில், புத்தேள் வண்டும் (தருமி32); என்னும் வரியில் புத்தேள் என்னும் சொல்லுக்குப் புதுமை என உரையாசிரியர்கள் பொருள் கொண் டுள்ளனர். இதற்குப் பொன் வண்டு எனப் பொருள் கொள்ள வேண்டும் என்கின்றனர். அப்படியாயின் இச்சொல்லுக்குப் ‘பொன்’ என்னும் பொருளும் இருப்பது தெரிகிறது. புத்தேளிர் என்னும் சொல் தேவர்கள் என்னும் பொருளில், பெற்றாற் பெறிந் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு புத்தேளிர் வாழு முலகு (குறள்.58); புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து கலி.82) என ஆளப்பட்டுள்ளது. தேவர்கள் ‘பொன்னுலகத் தவர்கள்’ என்பதும் தேவருலகம் பொன்னுலகம் என்பதும் சமய நூல்களில் காணப்படும் பொதுவான கருத்து. பொன்னிறப்பூ, காய், பழம் கொண்ட மரஞ்செடி கொடிகள் சிலவற்றுக்கும் பழந்தமிழ் மருத்துவர் முதலியோர் குழுஉக் குறிப் பெயராகப் புத்தேள் என்னும் சொல்லை ஆண்டுள்ளனர். கதிரை வேற் பிள்ளையின் தமிழ்ச்சொல் அகராதி புத்தேள் என்னும் சொல்லுக்குக் காஞ்சிரை எட்டி (எட்டிப்பழம்); என்னும் பொருள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. புத்தளம் (புத்தேள்); என்னும் சொல் புத்தளி – புத்தழி எனக் கன்னடத்திலும், புத்தளி-புத்தடி எனத் தெலுங்கிலும் திரிந்து பொன்னைக் குறிக்கும் சொல் லாயிற்று. நாளடைவில் சமற்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் பொன்னால் செய்த தெய்வப் படிமத்தை அல்லது பொற்சிலை (பொற் பாவை);யைக் குறித்த சொல்லாட்சியாகிவிட்டது. வடபுல மொழிகளில் இன்றும் புதலி- புத்தளி என்பவை (பொம்மை);யைக் குறித்த சொல்லாக வழங்கி வருகிறது. புதுமையும் பழமையும் வடிவழகைக் குறித்த சொற்கள். புத்தளி – நிறம் பொலிவைக் குறித்த சொல். புத்தேள் என்னும் பொன்னைக் குறித்த சொல் வடமொழியில் பீதம் எனத் திரிந்தது. பீதாம்பரம் என்பது வடமொழியில் திருமால் அணியும் பொன்னா டையைக் குறித்தது. ஒரு மருங்கு பொன் போன்று காட்சியளிக்கும் பித்தளையும் வடமொழியில் பீதம் என்னும் சொல்லி லிருந்தே தோன்றியுள்ளது. மஞ்சள் நிறத்தைக் குறிக்க வடபுல மொழிகள் அனைத்திலும் பீத்தல, பித்தல, பீலா என்னும் சொற்களே பயன்பட்டு வருகின்றன. இந்திய மொழிகள் அனைத்திலும் பொன்னிறம் அல்லது மஞ்சள் நிறத்தைக் குறிக்க இச்சொல் பெருமளவில் பயன்பட்டிருப்பது உறுதியாகிறது. வடமொழிகளுக்கு இது இயற்கைச் சொல்லாயிற்று. வணிகர் வழி இந்தியா முழுவதும் பரவிய தமிழ்ச் சொல்லாகிய’புத்தேள் என்பது புதுமஞ்சளைக் குறிக் கப் பழந்தமிழர் வழங்கிய சொல். மேனி அழகுக்குப் புதுமஞ்சளும் உடல் நலத் துக்கு புதிய இஞ்சியும் சிறந்தவை எனத் தமிழர் கண்ட றிந்தனர். இஞ்சி சுக்காகச் சுருங்கும் தன்மை நோக்கி அதனை அல்-அல்லம் என்றனர். அல்லம் என்னும் சொல் தெலுங்கிலும் வழங்கி வருகிறது. மென்மையும் பசுமையான பொலிவும் நோக்கி மஞ்சளை அள்-அள்ளம் என்றனர். அள்-அளகுஅழகு எனத் திரிந்த சொல்லாட்சிகளைக் காணலாம். மொய்-திரட்சி, மொய்-மைந்து-மைஞ்சு-மஞ்சு+ அள்-மஞ்சள் என வளர்ந்த சொல் வளர்ச்சியும் புலனாகிறது. அள்-அள்ளு [அள்ளுக்கொண்டை] எனும் சொல் திரட்சியைக் குறித்தது. திரண்ட மஞ்சள் கிழங்கு அள்’ எனப்பட்டது. அள்-மஞ்சள். இது வடமொழியில் அல’ எனத் திரிந்தது. மஞ்சள் பூசி அழகு கொள்வது அலங்கரித்தல் – அலங்காரம் எனப்பட்டது. இச்சொல் ஆரியர் தென்னாட்டில் குடியேறிய பின்னரே வடமொழியில் புகுந்துள்ளது. புதிய மஞ்சள் புது+அள்-புத்தள்-புத்தேள் எனத் திரிபுற்றுள்ளது.பசு மஞ்சளாகிய புது மஞ்சளின் மின்னும் பொலிவு பொன்னுக்கு ஆகு பெயராயிற்று. சங்க அகராதியில் அளமம் என்னும் சொல் லுக்குப் பொன்’ எனப் பொருள் தரப்பட்டுள்ளது. அளகை-குபேரனின் பொன் நகரமாகிய அளகாபுரி, வடமொழியில் அல என்னும் சொல் பொன்னி றத்தைக் குறிக்கிறது. வணிகர் வழி அளம் (மஞ்சள்); எனும் சொல் உலகம் முழுவதும் பரவியது. அளம் வடமொழியில் aurum (பொன்); எனவும் aurora(பொன்னிறமான விடியல் தெய்வம்); திரிந்து உள்ளது. அர்தரிக் என்னும் வடசொல் பாலி பிராகிருத மொழிகளில் அரி-அரிசன-அர்சன என்றெல்லாம் திரிந்துள்ளது. புது மஞ்சளைக் குறித்த புத்தளம் – புத்தள் – புத்தேள் எனத் திரிந்துவிட்டது. பொன்னிறம் கொண்ட தேவர்கள் புத்தேளிர் எனப்பட்டனர். புத்தேள் உலகம் பொன்னுலகம் ஆயிற்று. உருவ வழிபாட்டுக்குரிய தெய்வம் படிமங்கள் வடமொழியில் புத்தள-புத்தலக எனவும், தெய்வ வழிபாடு புத்தள பூசை எனவும் வழங்கி வருதலைக் காணலாம். தெய்வ வடிவத்தைக் குறித்த படிமம் என்னும் தமிழ்ச் சொல் படிமத்தோன் எனத் தேவேராளனையும், படிமத்தான் எனக் கடவுளையும் படிமம் எனத் தவக் கோலத்தையும் குறித்த சொல்லாகப் பொருளால் புடை பெயர்ந்தது போலப் புதுமஞ்சளைக் குறித்த புது+அள்-புத்தள்-புத்தேள் எனுஞ்சொல் பொன்-பொன்னிறம்-பொன்னிறத் தெய்வம் – பொன்னால் செய்த சிலை _தெய்வ உருவங்கள்_தெய்வத்தாய் எனப் பலவாறு தொடர்புடைய பொருள்களில் புடை பெயர்ந்துள்ளது. புத்தளம் எனும் மஞ்சள் வணிகப் பொருளா தலின் வணிகர் வழி பன்மடித் திரிவுகளைப் பல்வேறு மொழிகளில் பெற்றது. ஏற்கனவே மஞ்சள் எனும் சொல் தமிழ் மக் களின் அன்றாட வழக்கிலுள்ள அடிப்படைச் சொல் லாகி விட்டதால் புத்தேள் வணிகரின் குழுஉக்குறி சொல்லாகவும், பண்டைத் தமிழிலக்கியங்களிலும் ஆங்காங்கு இடம் பெற்ற அருகிய சொல்லாகவும் ஆளப்பட்டுள்ளது. தென்புலத்தாருள் தவ ஒழுக்கத்தில் சிறந்த மெய்யுணர்வாளர் பிறவியற்ற வீட்டுலகம் பெறுவர் எனும் கருத்து தமிழ் மக்களிடம் இருந்திருக்கிறது. வானோர்க்கு உணர்ந்த உலகம் எனவும் வாராச்சேட் புலம் படர்ந்தோர் (புத்தேளிர்); எனவும் ஆட்சி பெற்றுள்ள சொற்களால் இதனை அறியலாம். பழந்தமிழருள் கருநிறத்தவர் செந்நிறத்தவர் பொன்னிறத்தவர் எனும் மூவகைப் பிரிவினரும் இருந்திருக்கின்றனர். கரியன், மாயவன், பொன்னன் (இரணியன்);, பொன்னி, செங்கோன், செம்பியன், சேந்தன் என்னும் சொல்லாட்சிகளே தக்க சான்றா கின்றன. எனவே, புத்தேள் தமிழ்த் தெய்வங்களைக் குறித்த சொல்லாகவே உருப்பெற்றுள்ளது. பொன் னுலகம் செல்வோர் எந்நிறத்தவராகவும் இருக்கலாம். |
புத்தேளுகம் | புத்தேளுகம் puttēḷugam, பெ. (n.) மரவகை (மலை);; deodar cedar. |
புத்தேளுலகம் | புத்தேளுலகம் puttēḷulagam, பெ. (n.) புத்தேணாடு பார்க்க; see puttenadu. புத்தேளுலகத்து மீண்டும் பெறலரிதே (குறள், 213);. [புத்தேள்3 + உலகம்] |
புத்தேளுலகு | புத்தேளுலகு puttēḷulagu, பெ. (n.) புத்தேணாடு (பிங்.); பார்க்க; see puttenadu. [புத்தேள் + உலகு] |
புத்தேள் | புத்தேள்1 puttēḷ, பெ. (n.) 1. புதுமை (சூடா.);; novelty. 2. புதியவள்; strange woman, stranger. “புலத்தகைப் புத்தேளில் புக்கான்” (கலித்.82);. [புது → புத் → புத்தேள்] புத்தேள்2 puttēḷ, பெ. (n.) தெய்வம்; god, deity. “புத்தேளிர் கோட்டம் வலஞ் செய்து” (கலித். 82);; மறுவ. அணங்கு, தெய்வம். [புது + எல் – புத்தெல் → புத்தேள் = புதியதாக ஒளிவடிவில் தோன்றும் தெய்வம் அல்லது தேவன் (த.ம.21);] |
புத்தொட்டிவைப்புநஞ்சு | புத்தொட்டிவைப்புநஞ்சு puttoṭṭivaippunañju, பெ. (n.) வைப்பு நஞ்சுவகையுளொன்று; a prepared arsenic. |
புத்தோடு | புத்தோடு puttōṭu, பெ. (n.) புதுப்பானை; new pot. “புத்தோடு தண்ணிர்க்குத் தான் பயந்தாங்கு”(நாலடி. 1391);. [புது → புத் + ஒடு] |
புத்தோவம் | புத்தோவம் puttōvam, பெ. (n.) அத்திமரம்; fig tree. |
புனகம் | புனகம் puṉagam, பெ. (n.) உணவு; food. ‘திருமுடிகட் கன்பாற் புனகமிட்டு’ (அரிசமய. பரகால. 150.); [புன்கம் → புனகம்] |
புனக்கஞ்சி | புனக்கஞ்சி puṉakkañji, பெ. (n.) புனப்பாகம் பார்க்க; see punap-pāgam. [புனம் + கஞ்சி] |
புனக்கவுல் | புனக்கவுல் puṉakkavul, பெ. (n.) முக்கால் திட்டம் வரிசெலுத்தும் கட்டளையுள்ள குத்தகையுடன் படிக்கை; cowle granted on condition that three-fourths of the normal assessment should be paid (R.T.); [புனம் + கவுல்] |
புனக்காடு | புனக்காடு puṉakkāṭu, பெ. (n.) மலைசார்பிற் காட்டையழித்து இரண்டொரு ஆண்டு உழுது விதைத்துப் பின் செடி கொடிகளை முளைக்கவிட்டு மறுபடியும் முன்போற் செய்யும் சாகுபடி; shifting cultivation on the hill, cultivation on the wooded slopes, the jungle being cleared and burnt, and the process being repeated after allowing the land to lie fallow until a fresh growth has re-established itself dist fr. uravakādu. ம. புனக்கண்டம் [புனம் + காடு] |
புனக்காவல் | புனக்காவல் puṉakkāval, பெ. (n.) தினைப்புனங் காக்கை; watching crops in the hills. [புனம் + காவல்] |
புனக்குளம் | புனக்குளம் puṉakkuḷam, பெ. (n.) மழை நீர் தேங்கிநிற்கும் குட்டை; pool. ‘பெரிய குளமும் புனக் குளங்களும்’ (S.I.l.v.137.); [புனம் + குளம், குல் → குள் → குளம்] |
புனத்துளசி | புனத்துளசி puṉattuḷasi, பெ. (n.) காட்டுத் துளசி (பிங்.);; wild basil. [புனம் + துளசி, துளவு = துளசி, துளவு → (துளசு); → துளசி] |
புனனாடன் | புனனாடன் puṉaṉāṭaṉ, பெ. (n.) Cola king, as lord of Punanādu. ‘புன்னாடன் றப்பியாரட்ட களத்து’ (களவழி.1); [புனல் + நாடு → புனனாடு → புனநாடன்] |
புனனாடு | புனனாடு puṉaṉāṭu, பெ. (n.) 1. சோழநாடு. (பிங்.);; the Côa country. ‘பொன்னியெந்நாளும் பொய்யா தளிக்கும் புனனாட்டு’ (பெரியபு. சண்டேசு. 1);. 2. கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டனுள் ஒன்று (நன். 273, உரை.);; a region where kodun-Tamil was spoken, one of 12 kodum-Tamil-nadu. [புனல் + நாடு] |
புனப்பாகம் | புனப்பாகம் puṉappākam, பெ.(n.) இருமுறை சமைத்த நீர்த்தன்மையான கட்டுப் பாடான உணவு; liquid diet or food, boiled twice to facilitate digestion. [புனல் + பாகம்] |
புனமல்லி | புனமல்லி puṉamalli, பெ. (n.) காட்டு மல்லிகை (மூ.அக.);; wild jasmine. [புனம் + மல்லி] |
புனமுருக்கு | புனமுருக்கு puṉamurukku, பெ. (n.) புரசு2 (பிங்.); பார்க்க; see purašu 2. ம. புநமிந்ந [புனம் + முருக்கு] |
புனமுருங்கை | புனமுருங்கை puṉamuruṅgai, பெ. (n.) புரசு2 பார்க்க; see purasu2 (L.);. [புனம் + முருங்கை] |
புனம் | புனம் puṉam, பெ. (n.) மலைச் சார்பான கொல்லை; upland fit for dry cultivation. ‘கானவன் குடுறு வியன்புனம்’ (அகநா. 358.);. ம. புனம், புனக்கண்டம், து. புஞ்ச [புல்லுதல் = துளைத்தல், புல் = உட்டுளையுள்ள பயிர்வகை, சிறுமை, இழிவு. புல் → புலம் = தோண்டப்பட்ட நிலம். புலம் → புனம்.] குறிஞ்சியிலும் முல்லையுலுமுள்ள விளை நிலங்கள் கொல்லை அல்லது புனம் என்று பெயர் பெற்றன. (ப.த.நா.ப. 87.); |
புனரமை-த்தல் | புனரமை-த்தல் puṉaramaittal, 4 செ.கு.வி.(v.i.) 1. திருத்தி யமைத்தல், சீரமைத்தல்; renovate, rejuvenate. பாழடைந்த கோயில்களைப் புனரமைக்க அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 2. திரும்ப இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள உரிய பயிற்சி அளித்தல்; rehabilitate. [புனர்+அமை] |
புனரமைப்பு | புனரமைப்பு puṉaramaippu, பெ.(n.) 1. கோயில் புதுப்பிப்புப் பணி; renovation. 2. இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளப் பயிற்சி அல்லது உதவி; rehabilitation. [புனர்+அமைப்பு] |
புனராவர்த்தகசுரம் | புனராவர்த்தகசுரம் puṉarāvarttagasuram, பெ.(n.) புனர்சுரம் பார்க்க;see {}. |
புனராவர்த்தம் | புனராவர்த்தம் puṉarāvarttam, பெ.(n.) மறுதரம் (வின்.);; second time, that succeeding the first, as of an occurrence. [Skt. punar-{} → த. புனராவர்த்தம்] |
புனரி | புனரி puṉari, பெ. (n.) புனரித்தண்டு பார்க்க; see punari-t-tandu. [புனலி → புனரி] |
புனரித்தண்டு. | புனரித்தண்டு. puṉarittaṇṭu, பெ. (n.) பூடுவகை (யாழ். அக.);; a plant. [புனரி + தண்டு. துள் → தள் → தண்டு] |
புனருத்தம் | புனருத்தம் puṉaruttam, பெ.(n.) புனருத்தி பார்க்க;see {}. |
புனருத்தாரணம் | புனருத்தாரணம் puṉaruttāraṇam, பெ.(n.) மீண்டும் நிலை நிறுத்துகை; redemption. [Skt. punar-{} → த. புனருத்தாரணம்] |
புனருத்தி | புனருத்தி puṉarutti, பெ.(n.) கூறியது கூறல் (சூடா.);; repetition. [Skt. punar-ukti → த. புனருத்தி] |
புனர் | புனர் puṉar, வி.எ. (adv.) மீண்டும், மறுபடியும், திரும்பவும்; further, again, back, in return. [பின் + புன் → புனர்] punar, further, again, back, in return, etc., Gt. (p.526); is inclined to connect this word with D pin,etc. (KKEDxi); |
புனர்சுரம் | புனர்சுரம் puṉarcuram, பெ. (n.) இடைவிட்டு வரும் காய்ச்சல்; relapsing fever (M.L.); [புனர் + சுரம்] புனர்சுரம் puṉarcuram, பெ.(n.) இடைவிட்டு வருங் காய்ச்சல் நோய் (M.L.);; relapsing fever. [Skt. punarajvara → த. புனர்சுரம்] |
புனர்செனனம் | புனர்செனனம் puṉarceṉaṉam, பெ.(n.) புனர்ப்பவம் பார்க்க;see {}. |
புனர்ச்சனனம் | புனர்ச்சனனம் puṉarccaṉaṉam, பெ.(n.) 1. மறுபிறவி (வின்.);; transmigration of souls, rebirth. 2. கடுந்தொல்லை, கடுநோய் முதலிய நேர்ச்சியினின்று தப்பிப் பிழைக்கை; recovery from serious illness or accident, considered as a rebirth. அவன் பிழைத்தது புணர்ச்சனனம். [Skt. punar-janana → த. புனர்ச்சனனம்] |
புனர்ச்சன்மம் | புனர்ச்சன்மம் puṉarccaṉmam, பெ.(n.) புனர் வாழ்வு பார்க்க; see punarvalvu. [புனர் + சன்மம்] |
புனர்நவம் | புனர்நவம் puṉarnavam, பெ.(n.) 1. நகம்; finger or toe nail. 2. வெள்ளைச் சாட்டறணை; train-thema decandra. 3. மூக்கிரட்டை; spread- ing hog weed – Boerhaavia diffsusa. (சா.அக.); |
புனர்நவவாதி | புனர்நவவாதி puṉarnavavāti, பெ.(n.) the five drugs – castor root, pavonia zeylanica, black gram plant, dew gram plant; trianthema decandra. (சா.அக.); |
புனர்பூசம் | புனர்பூசம் puṉarpūcam, பெ.(n.) கழை, ஏழாவது நாண்மீன்; the seventh naksatra. புனர்பூசத்துக் கடையின் வெள்ளி எல்லையாக (புறநா.229,உரை);. த.வ. கழை [Skt. punarvasu → த. புனர்பூசம்] |
புனர்ப்பவம் | புனர்ப்பவம் puṉarppavam, பெ.(n.) மறுமுறை பிறத்தல்; second birth – regeneration. (சா.அக.); [Skt. punar → த. புனர்+பவம்] |
புனர்ப்பாகம் | புனர்ப்பாகம் puṉarppākam, பெ.(n.) குழைத்த கஞ்சி (உணவு);; rice cooked second time. [Skt. punar+{} → த. புனர்ப்பாகம்] |
புனர்வசு | புனர்வசு puṉarvasu, பெ.(n.) புனர்பூசம் பார்க்க;see {}. |
புனர்வாழ்வு | புனர்வாழ்வு puṉarvāḻvu, பெ. (n.) 1. மறுபிறவி (வின்.);; transmigration of souls. 2. கடுநோய் முதலிய இடரினின்று தப்பிப்பிழைக்கை; recovery from serious illness or accident, considered as a rebirth, 3. மறுவாழ்வு, இழந்தவற்றை அளிக்கை; rehabilitation. [புனர் + வாழ்வு] புனர்வாழ்வு puṉarvāḻvu, பெ.(n.) நலிந் தோருக்கு மீண்டும் தரப்படும் நல்வாழ்வு, மறுவாழ்வு; rehabilitation. [புனர்+வாழ்வு] |
புனர்விசாரணை | புனர்விசாரணை puṉarvicāraṇai, பெ. (n.) வழக்கின் மறு உசாவல் (விசாரணை);; (legal); re-trial [புனர் + விசாரணை] Skt. vicårana → த.விசாரணை புனர்விசாரணை puṉarvicāraṇai, பெ.(n.) மறுவுசாவல்; re-trial. [Skt. punar-{} → த. புனர்விசாரணை] |
புனர்விவாகம் | புனர்விவாகம் puṉarvivākam, பெ. (n.) மறுமணம்; remarriage as of widows, [புனர் + விவாகம்] Skt. punar → த.விவாகம் புனர்விவாகம் puṉarvivākam, பெ.(n.) மறுமணம்; re-marriage, as of widows. [Skt.punar-{} → த. புனர்விவாகம்] |
புனறருபுணர்ச்சி | புனறருபுணர்ச்சி buṉaṟarubuṇarcci, பெ. (n.) வெள்ள நீரிடையே வீழ்ந்த தலைவியைத் தலைவன் காத்தவிடத்து அவ்விருவர்க்கும் உண்டான கூட்டம் (தொல்.பொ. 114. உரை, பக். 548);; (agap.); union of a lover with his beloved on the occasion of his rescuing her from being drowned in a flood. [புனல் + தரு + புணர்ச்சி. புணர் → புணர்ச்சி] |
புனற்கடல் | புனற்கடல் puṉaṟkaḍal, பெ. (n.) நன்னீர்க்கடல் (திவா.);; ring-shaped ocean of fresh Water. [புனம் + கடல்] |
புனற்கரசன் | புனற்கரசன் puṉaṟkarasaṉ, பெ. (n.) புனல்வேந்தன்.(திவா.);பார்க்க; see pural vēndan. [புனல் + கு + அரசன்] |
புனற்செல்வன் | புனற்செல்வன் puṉaṟcelvaṉ, பெ. (n.) புனல் வேந்தன் (பிங்.); பார்க்க; see pupal-véndan. [புனல் + செல்வன்] |
புனற்படுநெருப்பு | புனற்படுநெருப்பு puṉaṟpaḍuneruppu, பெ. (n.) வடவைத்தீ; the submarine fire. ‘புனற்படு நெருப்பிற் பொம்மென வுரறி’ (பெருந், உஞ்சைக். 47, 129.);. [புனல் + படு + நெருப்பு] |
புனற்பாகம் | புனற்பாகம் puṉaṟpākam, பெ. (n.) புனப்பாகம் (பதார்த்த 1386); பார்க்க; seерира-р-радат. [புனம் + பாகம்] |
புனற்றுளசி | புனற்றுளசி puṉaṟṟuḷasi, பெ. (n.) புனத்துளசி (பிங்.); பார்க்க; see pupa-t-tulaš. [புனம் + துளசி, துளவு → (துளசு); → துளசி.] |
புனலன் | புனலன் puṉalaṉ, பெ. (n.) திருமால்; Tirumā. புனலன் மேனி (தக்கயாகப். 710);. [புனல் → புனலன் = புனல் (நீரின்); மேல் பள்ளி கொண்டவன்] |
புனலவன் | புனலவன் puṉalavaṉ, பெ. (n.) புனல்வேந்தன் பார்க்க; see pபral vendar. ‘புனலவன் புகழின் விந்ததால்’ (கம்பரா வருணனை, 39.);. [புனல் → புனலவன்] |
புனலாடையாள் | புனலாடையாள் puṉalāṭaiyāḷ, பெ. (n.) earth, as robed in the waters of the ocean. ‘பொங்கும் புனலாடையாளும்’ (பு.வெ.829.);. [புனல் + ஆடையாள்] |
புனலாட்டு | புனலாட்டு puṉalāṭṭu, பெ. (n.) புனல் விளையாட்டு பார்க்க; see pural, wilayatu. [புனல் + ஆட்டு] |
புனலிக்கொடி | புனலிக்கொடி puṉalikkoḍi, பெ. (n.) 1. கொடிவகை; bastard rose-wood-climber. 2. கொடிப்புன்கு; hog-creeper. [புனலி + கொடி] |
புனலை | புனலை puṉalai, பெ. (n.) பூவந்தி (சங்.அக);; soap-nut. மறுவ. பூந்திக்கொட்டை, புங்கங்காய். |
புனல் | புனல்1 puṉal, பெ. (n.) 1. நீர்; water. ‘தண்புனல் பரந்த’ (புறநா. 7);. 2. ஆறு; flood, torrent stream, river. ‘மழை கொளக் குறையாது புனல் புக மிகாது’ (மதுரைக், 424); (பிங்.);. 3. குளிர்ச்சி; cold, ‘மண்புன லிளவெயில்’ (பரிபா. 15.27);. 4. முற்குளம் (பூராடம்);; the 20th naksatra. ‘விட்டம் புனலுத்திராடம்’ (விதான, குணா குண. 29.);. 5. வாலுளுவை (சங்.அக.);; black-oil tree. மறுவ, வாரி, ஆலம், தீலாலம், மழையலர், நீரம், புட்கரம், சிந்து, பாணி, கார், ஆறல், மாரி, அம்பு, உதம், அப்பு, வருணம், வனம், வார். ம. புனல், புனல்; க.பொனல்; பொனலு, .கொனல் , கொனலு; து. புணல் ( மிதத்தல் ); ; பட .கொனல் [புல்லுதல் = துளைத்தல், புல் → புன் → புனல்.] புனல் puṉal, பெ.(n.) ஒடுக்கமான வாயுள்ள ஏனத்தில் நீர்மப் பொருளை ஊற்றுதற்கு உதவுங் கருவி; funnel. த.வ. வைத்தூற்றி [E. funnel → த. புனல்] [p] |
புனல் வைத்த கொம்பு | புனல் வைத்த கொம்பு puṉalvaittagombu, பெ. (n.) பண்டைய இசைக்கருவியினுள் ஒன்று: an ancient musical instrument. (12:2);. [புனல்+வைத்த+கொம்பு] |
புனல்நாடு | புனல்நாடு puṉalnāṭu, பெ. (n.) புனனாடு பார்க்க; see puramagப. க.புனல்நாடு(ஆறுபாயும்நாடு); [புனல் + நாடு] |
புனல்பண்ணை | புனல்பண்ணை puṉalpaṇṇai, பெ. (n.) கோழிக்கீரைவகை (புதுவை.);; a kind of greens. [புனல் + பண்ணை] |
புனல்பாய்-தல் | புனல்பாய்-தல் puṉalpāytal, 2 செ.கு.வி. (v.i.) நீரில் விளையாடுதல்; to play in the water. ‘புனல்பாய் மகளிநாட’ (பதிற்றுப். 86.10.);. [புனல் + பாய்-,] |
புனல்முருங்கை | புனல்முருங்கை puṉalmuruṅgai, பெ. (n.) செடிவகை (வின்.);; three leaved indigo. [புனல் + முருங்கை] |
புனல்யாற்றுப்பொருள்கோள் | புனல்யாற்றுப்பொருள்கோள் puṉalyāṟṟupporuḷāḷ, பெ. (n.) அடிதோறும் பொருள் அற்று மீளாது சேறல் (யாப்.95);; எண்வகைப் பொருள்களுள் ஒன்று; one of the eight modes of construing verses. மறுவ. ஆற்றுநீர் பொருள்கோள் [புனல் + ஆற்று + பொருள்கோள்] ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” (குறள்,34); இக்குறளின் பொருள் ஆற்றுநீர் இடைவிடாது செல்வது போல் அமைந்துள்ளமையைக் காண்க. |
புனல்வாயில் | புனல்வாயில் puṉalvāyil, பெ. (n.) மதகு; sluice of a channel. ‘புனல்வாயிற் பூம் பொய்கை’ (பதிற்றுப். 13, 8);. [புனல் + வாயில்] |
புனல்விளையாட்டு | புனல்விளையாட்டு puṉalviḷaiyāṭṭu, பெ. (n.) நீர்விளையாட்டு; sporting in water. மறுவ, நீர்விழா, நீராட்டு, நீராட்டணி. [புனல் + விளையாட்டு, விள் → விளை = விருப்பம். விளையாடுதல் = விரும்பி யாடுதல், விளையாடு → விளையாட்டு.] பண்டைக் காலத்தில், ஆற்றருகேயிருந்த நகர மாந்தரெல்லாரும் ஆண்டுதோறும் ஆற்றிற் புதுவெள்ளம் வந்தவுடன் ஒருங்கே சென்று, ஒரு பகலிற் பெரும்பகுதி அவ் வெள்ளத்தில் திளைத்தாடி இன்புற்ற விளையாட்டு விழா. நீராடு வாரெல்லாம், ஆற்றிடுவதற்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்த மீன்முதலிய காணிக்கைக் கருவிகளையும், புணை தெப்பம், பரிசில் முதலிய மிதவைக் கருவிகளையும், காதலர் மீது நறுமண நெய்யையும் வண்ணநீரையும் தெளித்தற்குத் துருத்தி கொம்பு சிவிறி முதலிய விளையாட்டுக் கருவிகளையும் நீராடிய பின் வேண்டும் ஊண் உடை அகில் முதலியவற்றையும் தத்தமக்கு இயன்றவாறு யானை, குதிரை, தேர் முதலியவற்றில் ஊர்ந்தும் கால்நடையாய் நடந்தும் கொண்டுசெல்வர். குடிவாரியாக ஆங்காங்கு அமைக்கப் பெற்ற குற்றில்களும் புதுக்கடைகளும் சேர்ந்து ஒரு விழவூர் போலக் காட்சியளிக்கும். நீந்தவல்லார் சற்று ஆழத்திலும் அல்லாதார் கரையையடுத்தும் நீராடுவதும், பூகஞ் சுண்ணம் சாந்து, குழம்பு முதலிய வற்றின் ஏற்றத்தாழ்வுபற்றிப் பெண்டிர் இகலாடுவதும், தம் கணவன்மார் பிற பெண்டிரொடு கூடிப்புனலாடினாரென்று மனைக்கிழத்தியர் ஊடுவதும், பூசுசாந்தம் புனைந்தமாலை உழக்கும் நீராட்டு முதலிய வற்றாற் கலங்கல் வெள்ளம் புதுமணம் பெறுவதும், புனலாட்டு நிகழ்ச்சிகளாம் நீராடியவர் மாலைக் காலத்தில் மகிழ்ந்தும் அயர்ந்தும் மனை திரும்புவர்.(த.வி.139.); |
புனல்வேந்தன் | புனல்வேந்தன் puṉalvēndaṉ, பெ. (n.) மழைக்கடவுள் (வருணன்); (சூடா.);; Varuna, as lord of the waters. [புனல் + வேந்தன், வேய் → வேய்ந்தோன் → வேந்தன்.] |
புனவர் | புனவர் puṉavar, பெ. (n.) குறிஞ்சிநிலமக்கள்; inhabitants of the hilly tracts. ‘புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல்’ (நற். 119.); (திவா.);. [புனம் → புனவர் = புனத்தில்(மலைச்சார்பானகொல்லையில்); வாழ்பவர்] |
புனவாசல் | புனவாசல் puṉavācal, பெ. (n.) தஞ்சை மாவட்டத்திலுள்ள ஊர்; a village in Tañjāvūr dt. [புனல் + வாசல்] புனவாசல் puṉavācal, பெ. (n.) மன்னார்குடி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Mannargudi Taluk. [புன்னை+(வயல்);வாசல்] புனவாசல் puṉavācal, பெ. (n.) ஆத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Attur Taluk. [புனம்+வாசல்] |
புனவாயில் | புனவாயில் puṉavāyil, பெ. (n.) இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர்; a village in Râmanādapuram dt. ‘கண்டலு ஞாழலும் நின்று பெருங்கடற் கானல்வாய்ப் புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயில்’ (சம்பந்தர் -269-2);. மறுவ. பழம்பதி [புன்னை + வாயி ல் – புன்னை வாயில் → புனவாயில், இனி புனல் வாயில் (கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஊர் புனவாயில் என்றுமாம்.] |
புனவெலுமிச்சை | புனவெலுமிச்சை puṉavelumiccai, பெ. (n.) குருத்து (பிங்.);; wild lime. [புனம் + எலுமிச்சை] |
புனவேடு | புனவேடு puṉavēṭu, பெ. (n.) வரிக்கூத்துவகை; (சிலப். 3, 13, உரை.);; a masquerade dance. [புனம் + வேடு] |
புனாதி | புனாதி puṉāti, பெ. (n.) கடைக்கல்; foundation. |
புனி | புனி puṉi, பெ.(n.) கைத்தறி நெசவில் நாடா செல்லும் வழி; a loop in handloom weaving. [புல்-புன்- புனி] |
புனிகம் | புனிகம் puṉigam, பெ. (n.) ஒருசெய்நஞ்சு (சங்கபாஷாணம்); (சங்.அக);; a mineral poison. |
புனிதன் | புனிதன் puṉidaṉ, பெ.(n.) 1. தூய்மையானவன்; pure, holy person. “வேதம் விரித்துரைத்த புனிதன்” (திவ். பெரியதி. 2.1:4);. 2. சிவன் (அரு.நி.);;{}. “புற்றில் வாளரவு மாமையும் பூண்ட புனிதனார்” (தேவா. 136, 6);. 3. இந்திரன் (திவா.);;{}. 4. அருகன் (திவா.);; Arhat. 5. புத்தன் (திவா.);; Buddha. [Skt. punida → த. புனிதன்] |
புனிதம் | புனிதம் puṉidam, பெ.(n.) தூய்மம், நனிதூய்மை, தூய்யம் (திவ். திருமாலை);; purity, holiness, sanctity. [Skt. punita → த. புனிதம்] |
புனிதவெள்ளி | புனிதவெள்ளி puṉidaveḷḷi, பெ.(n.) இயேசு குறுக்கையில் (சிலுவையில்); அறையப்பட்டு இறந்த நாளான வெள்ளிக் கிழமை; Good Friday. [புனிதம் + வெள்ளி] |
புனியாத்து | புனியாத்து puṉiyāttu, பெ.(n.) கடைகால் (C.G.);; foundation. [U. {} → த. புனியாத்து] |
புனிறு | புனிறு puṉiṟu, பெ. (n.) 1. ஈன்றணிமை; recency of delivery, as of a woman. ‘புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின்’ (தொல். பொ. 146.); 2. அணிமையில் ஈனப்பட்டது; that which is recently born. ‘புனிற்றிளங்குழவி’ (மணிமே. 29, 5);. ‘புன்றலை நாய்ப்புனிற்றும்’ (பெரியபு. திருநாளைப். 8); . 3. பிஞ்சுத்தன்மை; greenness, as of unripe fruit. ‘புனிறுதீர் பெரும்பழம்’ (ஞானா. 41, 5);. 4. மகப் பேற்றாலான தீட்டு (தைலவ. தைல);; ceremonial impurity due to child-birth. 5. புதுமை (சூடா.);; newness. 6. தோல் (சது.);; skin. [புல் → புன் → புன்மை = சிறுமை, தூய்மை யின்மை, குற்றம். புல் → புன் → புனிறு] |
புனிற்றா | புனிற்றா puṉiṟṟā, பெ. (n.) ஈன்றணிமையுள்ள மாடு அல்லது எருமை; cow or buffalo which has recently calved. ‘புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப்புண்ணினன்’ (மணிமே. 5, 47.); ‘எருமைச் செங்கட் புனிற்றா’ (ஐங்குறு. 92.);. [புனிறு + ஆ] |
புனிற்றுமதி | புனிற்றுமதி puṉiṟṟumadi, பெ. (n.) இளமதி; crescent moon. ‘புனிற்று மதிகண்டுருகிப் பொழிந்த நீரால்’ (பெரியபு. திருக்குறிப்பு. 92);. மறுவ. இளம்பிறை [புனிறு + மதி] |
புனுகு | புனுகு puṉugu, பெ. (n.) புழுகு; civet. க. புணுகு தெ.புநுகு [புழுகு → புனுகு] |
புனுகுசட்டம் | புனுகுசட்டம் puṉugusaṭṭam, பெ. (n.) புனுகுச்சட்டம் பார்க்க; see pபறபgu-ccatam. [புனுகுச்சட்டம் → புனுகுசட்டம்] தெ. புனுகுசட்டமு. |
புனுகுச் சட்டப்பூச்சு | புனுகுச் சட்டப்பூச்சு puṉuguccaṭṭappūccu, பெ. (n.) கதைச் சிற்பங்களுக்குச் செய்யப்படுகின்ற பூச்சு முறை: type of painting. [புனுகு+சட்டம்+பூச்சு] |
புனுகுச்சட்டம் | புனுகுச்சட்டம் puṉuguccaṭṭam, பெ. (n.) 1. புனுகு உண்டாகும் பூனையின் உறுப்பு; gland in the anal pouch of the civet-cat. 2. புனுகுப்பூனையின் சட்டத்தினின்றும் எடுத்துச் சேர்க்கப்படும் நறுமணப் பண்டம்; unctuous substance of the civet-cat. தெ. புனுகுசெட்டமு. [புனுகு + சட்டம்] |
புனுகுபூனை | புனுகுபூனை puṉugupūṉai, பெ. (n.) புனுகுப்பூனை பார்க்க; see oபறபgபp-pinal. [புனுகுப்பூனை → புனுகுபூனை] |
புனுகுப்பூனை | புனுகுப்பூனை puṉuguppūṉai, பெ. (ո.) புனுகைத் தரும் பூனைவகை; civet-catviverra ciVetta. க. புழுகுபிள்ள தெ.புனுகுபில்லி [புழுகு → புனுகு + பூனை] |
புனுச்சல் | புனுச்சல் puṉuccal, பெ. (n.) மாடுகளுக்குவரும் கோமாரி நோய்; a disease of cattle. [புன்-புனுச்சல்] |
புனை | புனை3 puṉai, பெ. (n.) மூங்கில் (அக.நி.);; bamboo. மறுவ. பணை பட கொணெ (பால்கறக்கப்பயன்படுத்தும் மூங்கிற்குழாய்);;கோத,பெண் துடயிண்; குட. புண்ட [புள் → புண் → புணை.] புனை1 puṉaidal, 3 செ.குன்றாவி. (v.t.) 1. சூடுதல்; to dress, put on, as clothes. garlands, jewels. ‘பூமாலை புனைந்தேத்தி’ (தேவா.727,3.);. 2. அழகுபடுத்துதுல் (அலங்கரித்தல்);; to adorn, decorate. ‘புனை தேர்பண்ணவும்’ (புறநா.12);. 3. அணியமாக்குதல் (சித்தஞ்ச்செய்தல்);; to make ready. 4. ஓவியமெழுதுதல்; to paint. ‘புனையா ஒவியங் கடுப்ப’ (நெடுநல்.147);. 5. முடைதல்; to plait, as an Öla basket. ‘போழிற் புனைந்த வரிப்புட்டில்’ (கலித்.117.);. 6. கட்டுதல்; to string, bird. ‘ஆய்பூ வடும்பின்அலர் கொண்டு. கோதை புனைந்த வழி’ (கலித்.144.);. 7. சூடுதல்; to wear. ‘அவன் கண்ணி நீ புனைந் தாயாயின்’ (கலித்.116.);. 8. ஒழுங்காக அமைத்தல்; to put in order. ‘படைபண்ணிப் புனையும்’ (கலித்.17.);. 9. சிறப்பித்துக் கூறுதல்; to use laudatory language, praise. ‘புனையினும் புல்லென்னு நட்பு’ (குறள்,790.);. 10. கற்பித்தல்; to exaggerate. ‘புனைந்துபேசி’ தேவா.1224.3.) 11. செய்யுளமைத்தல்; to compose, a poetry. ‘நாவிற் புனைந்த நன்கவிதை’ (பரிபா.6.8.); 12. செய்தல்; to make, form. ‘வரிமணற் புனைபாவைக்கு’ (புறநா.11.);. ம. புனயுக [புல் → (பூல்); → பூ = பொலிவு. அழகு.மலர். பூத்தல் = பொலிதல், அழகாதல், பூமலர்தல். புல் → பொல் → பொலி → பொலிவு (மு.தா.135); புல் → புன் → புனை] புனை2 puṉai, பெ. (n.) 1. அழகு (பிங்.);; beauty. 2. பொலிவு (பிங்.);; attractive. 3. அணி (அலங்காரம்);செய்தல் (பிங்.);; decoration. 4. அணிகலன்; ornament, jewel. ‘கைபுனை புனைந்தும்’ (கல்லா.84.3.);. 5. தளைக்கும் விலங்கு; fetters, shakles. ‘புனைபூணும்’ (குறள், 836);. 6. சீலை; cloth, vestment. 7. புதுமை; newness, recenty. [புல் → புன் → புனை] புனை3 puṉai, பெ. (n.) நீர்; water, flood. ‘அழுதளாவிய புனைவரவுயிர்வரு முலவை’ (கம்பரா.அகத்.4);. [புல் → புன் → புனல் → புனை] |
புனைகதை | புனைகதை puṉaigadai, பெ. (n.) கற்பனைக் கதை; fiction. [புனை + கதை] |
புனைகருட்டு | புனைகருட்டு puṉaigaruṭṭu, பெ. (n.) ஏய்ப்பு (மோசம்);; deceitful conduct, underhand dealing. [புனை + சுருட்டு. சுருள் (த.வி.); – சுருட்டு (பி.வி.);] |
புனைகுழல் | புனைகுழல் puṉaiguḻl, பெ. (n.) புனைகோதை (வின்.);; பார்க்க; see punai-kõdai. [புனை + குழல்] |
புனைகோதை | புனைகோதை puṉaiātai, பெ. (n.) கூந்தலழகுள்ள பெண் (வின்.);; lady, as having beautiful locks. [புனை + கோதை] |
புனைந்துரை | புனைந்துரை puṉaindurai, பெ. (n.) 1. அழகுநலத்துடன் சொல்லும் சொல்; rhetorical language or poetic embellishment. (நம்பியகப்.2); 2. பாயிரம் (நன்.2.);; preface, introduction. மறுவ. தந்துரை, முகவுரை, பதிகம், நூன்முகம், முன்னுரை [புனை → புனைந்து + உரை] சான்றுகள் ஏதும் இல்லாமல் தாமாகக் கருத்துகளை உருவாக்கிக் கூறும் புனைந்துரை பெரியதனைச் சுருக்கிச் சொல்லுதல், சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதல் என இருதிறத்தது. |
புனைந்தோர் | புனைந்தோர் puṉaindōr, பெ. (n.) கம்மாளர் (சூடா.);; artisans, mechanics. [புனை → புனைந்தோர்] |
புனைபெயர் | புனைபெயர் buṉaibeyar, பெ, (n.) கற்பித்துக்கொண்ட பெயர்; pen-name, pseudonym. புனைபெயரில் கதை எழுதுவோர் மிகப்பலர், (உ.வ.); [புனை + பெயர்.] |
புனைமொழி | புனைமொழி puṉaimoḻi, பெ. (n.) அழகு சொல் (இ.வ.);; hetorical expression. [புனை + மொழி] |
புனையல் | புனையல் puṉaiyal, பெ. (n.) மாலை; garland, necklace. ‘உருத்திரமாமணிப் புனையல்’ (உபதேசகா. சிவநாம.173);. [புனை → புனையல். இனி பிணையல் → புணையல்’ → புனையல் என்றுமாம்] |
புனையிறும்பு | புனையிறும்பு puṉaiyiṟumbu, பெ. (n.) செய்காடு; grove. ‘புதைந்திருடூங்கும் புனையிறும்பு’ (திருக்கோ.148.);. [புனை + இறும்பு] |
புனையிழை | புனையிழை puṉaiyiḻai, பெ. (n.) சிறந்த பெண் (சூடா.);; lady, as wearing beautiful ornaments. ‘புனையிழை யிழந்தபின்’ (பு.வெ.10, சிறப்பிற்பொது 3, கொளு);. [புனை + இழை] |
புனைவன் | புனைவன் puṉaivaṉ, பெ. (n.) கம்மியன் (திவா.);; mechanic, artisan, architect. ‘வானவர் புனைவற் கொண்டே…பாசறை புனைவித்து’ (கந்தபு:யுத்தகாண். வரவுகேள். 26.); [புனை → புனைவன் = அழகுபடுத்துபவன். கலைஞன், தொழில் வல்லவன்.] |
புனைவிலி | புனைவிலி puṉaivili, பெ.(n.) உவமைக்குப் பயன்படுத்தும் பொருள்(உபமானப்பொருள்); (வின்.);; the thing chosen for comparison. [புனைவு → புனைவிலி] |
புனைவிலிபுகழ்ச்சி | புனைவிலிபுகழ்ச்சி buṉaivilibugaḻcci, பெ. (n.) பிறிது மொழிதல் (அணியி:27, பக்.17);; (rhet.); a figure of speech. [புனைவிலி + புகழ்ச்சி] |
புனைவு | புனைவு puṉaivu, பெ. (n.) 1. அழகு; beauty. 2. அழகு (அலங்காரம்); படுத்துதல்; ornament decoration. 3. செழிப்பு; fertility, fruitfulness. 4. செய்கை (அக.நி.);; making, producing. [புனை → புனைவு] |
புனைவுப்பெயர் | புனைவுப்பெயர் puṉaivuppeyar, பெ. (n.) புனைபெயர் பார்க்க; see punai peyar. [புனைபெயர் → புனைவுப்பெயர்] |
புனைவுளி | புனைவுளி puṉaivuḷi, பெ. (n.) உவமித்துக்கூற பயன்படுத்தும் பொருள் (வின்.);; the object described by a simile. [புனை → புனைவுளி] |
புன்கண் | புன்கண் puṉkaṇ, பெ. (n.) 1. துன்பம் (பிங்.);; sorrow, distress, trouble, affliction, sadness. ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ (சிலப்.2052);. 2. நோய் (பிங்.);; disease. 3. மெலிவு (திவா.);; leannes, emaciation. 4. வறுமை; poverty, adversity. ‘இரவலர் புன்கணஞ்சும்’ (பதிற்றுப்.5714);. 5. பொலிவழிவு; loss of beauty or charm. ‘புன்கண்கொண் டினையவும் (கலித்..2);. 6. அச்சம்; fear. ‘பிரிவஞ்சம் புன்கணுடைத்தால் குறள்.1152). 7. இழிவு; meaness. “பொய்க்கரி புகலும் புன்கணார்” (கம்பரா. கிங்கர. 58);. [புல் → புன் → புன்கண்.] |
புன்கண்மை | புன்கண்மை puṉkaṇmai, பெ. (n.) புன்கண் பார்க்க; see purkar. ‘பொருள்வேண்டும் புன்கண்மை’ (கலித்.61);, [புன்கண் → புன்கண்மை] |
புன்கம் | புன்கம்1 puṉkam, பெ. (n.) சோறு; (திவா.); boiled rice. ‘பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி'(புறநா.34.);. [புழு → புகு → புகா = (உட்புகும்); உணவு. புகா → புகவு = உணவு (வே.க.3.104);. புகா → புங்கா → புங்கம் → புன்கம் = உணவு, சோறு] புன்கம்2 puṉkam, பெ. (n.) புன்கு; Indian beech. ‘புன்கம் பொரியணிந்தன’ (சீவக.1649.); [புன்கு → புன்கம்] |
புன்கம்பிண்ணாக்கு | புன்கம்பிண்ணாக்கு puṉkambiṇṇākku, பெ. (n.) புன்கவிதையில் எண்ணெய் எடுத்த பிறகு உள்ள பயனற்ற சக்கை; oil cake of pungu seeds, as entirely useless. ‘புன்கம் புண்ணாக்குக்குச் செக்கடித்தான்’ [புன்கம் + பிண்னாக்கு. பிள் + நாக்கு – பிண்ணாக்கு. புன்கம் விதைகளை எண்ணெயாட்டிய பின் எஞ்சிய சக்கை பிளவுபட்ட நாக்குபோல் இருப்பதால் பிண்னாக்கு எனப்பட்டது.] |
புன்காலி | புன்காலி puṉkāli, பெ. (n.) 1. காயா; iron-wood tree.trumpet flower tree. 2. பாதிரி; yellow-flowered fragrant trumpet flower tree. [பொல் → பொலிவு. பொல் → பொன் → புன் → புன்காலி] |
புன்கு | புன்கு puṉku, பெ. (n.) மரவகை Indian beech. ‘பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கு’ (சிலப்.12,பக்.318);. 2. காட்டுப் புன்னை; Malabar poon. 3, புரசு(திவா.);; palas-tree. 4. காட்டுப்பச்சிலை; rosewood. 5. மரவகை; a species of privet, (Kādar.); ம. புங்ங் க. கொங்கெ; து. புங்கு [பொல் → பொன் → புன் → புன்கு.] புன்னை பார்க்க |
புன்கூர் | புன்கூர்1 puṉārtal, 3 செ.கு.வி. (v.i.) வருந்துதல்; to be distresed. ‘வேட்கை, மிகுதியான் வெய்துண்டு புன்கூர்ந்தார் போலவும் (தொல்.பொ.102,உரை);. [புல் + கூர்-,] புன்கூர்2 puṉār, பெ. (n.) தஞ்சைமாவட்டத்தில் உள்ள ஊர்; a village in Tañjavur dt. ‘காரேறும் எயிற் புன்கூர்’ (பெரிய திருநாளை);. [பொல் → பொன் → புன் → புன்கு + ஊர். புன்கு = புங்கமரம், திருப்புன்கூர் என்று அடைசேர்த்து வழங்குதலும் உண்டு] |
புன்கெண்ணெய் | புன்கெண்ணெய் puṉkeṇīey, பெ. (n.) புன்கம் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்; oil extracted from Indian-beech seeds. [புன்கு + எண்ணெய், எள் + நெய் – எண்ணெய்] |
புன்சிரிப்பு | புன்சிரிப்பு puṉcirippu, பெ. (n.) இளமுறுவல்; gentle smile. ‘செம்பவள வாய்க்குள்ளே புன்சிரிப்பின் மார்க்கமோ’ (பணவிடு. 315);. மறுவ.இளநகை, புன்னகை, மென்னகை ம, புஞ்சிரி [புன் + சிரிப்பு. ‘புன்’ அழியாமையை உணர்த்தும் முன்னொட்டு (த.வ. 1, 91);] |
புன்செயல் | புன்செயல் puṉceyal, பெ. (n.) இழி செயல்; low work. [புன் + செயல். புல் = சிறுமை] |
புன்செய் | புன்செய் puṉcey, பெ. (n.) 1. புன்செய்ப் பயிர் செய்வதற்கு ஏற்றநிலம் (பு.வெ. 12, வென்றி.4.);; land fit for dry cultivation only. 2. புன்செய்ப் பயிர்; dry crop. ம. புஞ்ச தெ. புஞ்ச (மேட்டுநிலம்);. து. புஞ்சகண்ட(வயல்); [‘புல்’ தாழ்வுப் பொருள் முன்னொட்டு (த.வ. 1, 93); புல் → புன் + செய் = புன்செய்] மருதத்திலுள்ள விளைநிலங்கள் செய் எனப்பெயர் பெற்றன. செடி கொடி, புற்களைதல், கல்லெடுத்தல், உரமிடுதல், பன்முறையுழுதல், கட்டியடித்தல் பரம்படித்தல் (பல்லியாடுதல்);, புழுதியாக்குதல், காயவிடுதல் என்றும் பல வகையில் திருத்தப்பட்ட நிலம் செய் எனப்பட்டது. செய்தல் திருத்துதல் பேரளவாகத் திருத்தப்பட்டது நன்செய் என்றும் சிற்றளவாகத் திருத்தப்பட்டது புன்செய் என்னும் சொல்லப்பட்டன. (தமி.வ.1,37);. புனமாயினும் புன் செயாயினும் பண்டைத் தமிழர் மேட்டு நிலத்திற் பயிர் செய்ய விரும்பவில்லை. மேடு சுவல் என்றும் பள்ளம் அவல் என்றும் பெயர் பெறும். “மேட்டுப் புன்செயை உழுதவனும் கெட்டான் மேனி மினுக்கியை மணந்தவனும் கெட்டான்” என்பது பழமொழி. (ப.த.நா.ப. 86);. புன்செய் வேளான்மையாயின் புழுதியுணக்கற்குப் பின்னும் களையெடுத்தற்கு முன்னும் நாற்றுப்பாவல், பாத்தி பிடித்தல், நீர் பாய்ச்சி நடுதல் ஆகிய வினைகள் நிகழும். (ப.க.நா.ப.82); |
புன்செய்கை | புன்செய்கை puṉceykai, பெ. (n.) புன்செய்ப் பயிரிடுகை (வின்.);; raising dry crop. [புன் + செய் – புன்செய் → புன்செய்கை] |
புன்செய்க்காடு | புன்செய்க்காடு puṉceykkāṭu, பெ. (n.) பயிரிடத்தக்க புன்செய்; cultivable dry land (ΡΤ.Ι.);. [புன்செய் + காடு] |
புன்செய்ச்சாகுபடி | புன்செய்ச்சாகுபடி buṉceyccākubaḍi, பெ. (n.) புன்செய்விளைச்சல் பார்க்க; see puncey-Vilaiccal. [புன்செய் + சாகுபடி] |
புன்செய்த்தரநன்செய் | புன்செய்த்தரநன்செய் puṉceyttaranaṉcey, பெ.(n.) புன்செய்யாகக் கணக்கில் பதியப்பட்டு நன்செய் வேளாண்மை செய்யும் நிலம்; land on which wet crops are raised, though classed as dry. (C.G.); [புன்செய் + தரம் + நன்செய்] |
புன்செய்த்தானியம் | புன்செய்த்தானியம் puṉceyttāṉiyam, பெ. (n.) மேட்டுநிலத்தில் விளையுந்தவசம்; grains cultivated in the up land. [புன்செய் + தானியம்] Skt.dhanya → த. தானியம் |
புன்செய்த்தோட்டம் | புன்செய்த்தோட்டம் puṉceyttōṭṭam, பெ. (n.) நெல்லொழிந்த தவசங்கள் விளையுந் தோட்டம்; garden land in which cereals other that paddy are grown. (P.T.L); [புன்செய் + தோட்டம்] |
புன்செய்பாகாயாத்தீர்வை | புன்செய்பாகாயாத்தீர்வை puṉceypākāyāttīrvai, பெ. (n.) புன்செய்யில் தோட்டப்பயிரிடும் போது ஏற்படும் தீர்வை; assesment charged on garden-cultivation in lands classed as dry. (R.T.); [புன்செய் + பாகாயா + தீர்வை. தீர் → தீர்வை] புன்செய்பாகாயாத்தீர்வை puṉceypākāyāttīrvai, பெ. (n.) புன்செய்த்தர நன்செய் பார்க்க; see punsey-t-tara-namsey (C.G.) [புன்செய் + மேல் + நன்செய்] |
புன்செய்ப்பயிர் | புன்செய்ப்பயிர் puṉceyppayir, பெ. (n.) நெல்லொழிந்த மற்றைப்பயிர்கள், dry crops, cereals. [புன்செய் + பயிர்] |
புன்செய்ப்பருந்து | புன்செய்ப்பருந்து puṉceypparundu, பெ. (n.) கழுகுவகை; dwarf eagle (M.M, 218);. [புன்செய் + பருந்து] |
புன்செய்ப்புறம்போக்கு | புன்செய்ப்புறம்போக்கு puṉceyppuṟambōkku, பெ. (n.) அரசிற்குரிய பயிரிடப்படாத பொதுநிலம்; uncultivated goverment land. [புன்செய் + புறம் + போக்கு] |
புன்செய்வரவுநன்செய் | புன்செய்வரவுநன்செய் puṉceyvaravunaṉcey, பெ. (n.) முதலில் புன்செய்யாக விருந்து பின்பு நன்செய்யாகப் பதிவான நிலம் (இ.வ.);; land originally classed as dry and later reclassed as wet. [புன்செய் + வரவு + நன்செய்] |
புன்செய்விளைச்சல் | புன்செய்விளைச்சல் puṉceyviḷaiccal, பெ. (n.) நெல்லொழிந்த ஏனையப் பயிர் வேளாண்மை; cultivation of cereals, other than paddy. [புன்செய் + விளைச்சல். விளை → விளைச் சல், ‘சல்’ தொ.பொறு] |
புன்சொல் | புன்சொல் puṉcol, பெ. (n.) பழித்துரை; slander ‘புறனோக்கிப் புல்சொ லுரைப்பான் பொறை’ (குறள், 189);. [புன் + சொல். புல் → புன்] |
புன்னகை | புன்னகை puṉṉagai, பெ. (n.) புன்சிரிப்பு பார்க்க; see punsirippu. மறுவ. இளநகை, மென்னகை ம. புஞ்சரி. [புன் + நகை. புல் = சிறுமை . புன்னகை = சிறுநகை, சிறுமையைக் குறிக்கும் புல் நகையுடன் சேர்ந்து புன்னகை உருவாவது போல் தெலுங்கில் சிறுமையைக் குறிக்கும் சிறு நவ்வு (நகை);வுடன் சேர்ந்து சிறுநங்வு (புன்னகை); சொல்லாட்சி உருவாயிருப் பதைக் காண்க.] |
புன்னகைக்காட்டு-தல் | புன்னகைக்காட்டு-தல் puṉṉagaiggāṭṭudal, 5 செ.கு.வி.(v.i.) புன்முறுவல் செய்தல், நகை முகம் காட்டுதல்; to smile. [புன்னகை + காட்டு-,] |
புன்னமை | புன்னமை puṉṉamai, பெ. (n.) மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Madurandagam Taluk. [புன்னை+மொய்] |
புன்னம்புலரி | புன்னம்புலரி puṉṉambulari, பெ. (n.) வைகறை; early dawn. ‘புன்னம்புலரியி னிலப்பட’ (பரிபா. 6, 58.);, [புன் → புன்னம் + புலரி] |
புன்னறவம் | புன்னறவம் puṉṉaṟavam, பெ. (n.) இஞ்சி (யாழ்.அக.);; ginger. |
புன்னறுவம் | புன்னறுவம் puṉṉaṟuvam, பெ. (n.) சாரணை (மலை.);; purslane leaved trianthema. |
புன்னாகம் | புன்னாகம்1 puṉṉākam, பெ. (n.) 1. புன்னை (பிங்.); (பரிபா. 11, 16); பார்க்க; see punni. 2. குரங்குமஞ்சணாறி; kamela (L.);. 3. கோழிக்கீரை (மலை.);; common purslane. [பொல் → பொன் → புன் → புன்னை → புன்னாகம்] ‘புன்னை’ பார்க்க. punnāga, the tree rotleria tinctoria, from the blossoms of which a yellowish dye is prepared Gt (p. 518); is right in deriving the word from D pon etc., gold cf. D. punnike, ponne etc. (KKED.xxiv); punnaga, a tree from the flowers of which a yellow dye is prepared. Dravipon, gold. (CGDFL.577); புன்னாகம்2 puṉṉākam, பெ. (n.) பூநாகம்1 (இ.வ.); பார்க்க; see pūnāgam. [பூநாகம் → புன்னாகம்] |
புன்னாகவராளி | புன்னாகவராளி puṉṉākavarāḷi, பெ. (n.) பண் (இராக); வகை; (mus); a musical mode. |
புன்னாதர் | புன்னாதர் puṉṉātar, பெ. (n.) இழிந்த அறிவினர்; mean, stupid person. ‘அல்லனவே யறைகின்ற புன்னாதர்கள்’ (சீவக. 3096.);. [புன் + ஆதர்] |
புன்னிடா | புன்னிடா puṉṉiṭā, பெ. (n.) தகரை (மலை.);; fetid cassia. |
புன்னிர் | புன்னிர் puṉṉir, பெ. (n.) 1. கழிவு நீர்; drainage. ‘புன்னீர் விட்டு பாய்ச்சிக் கொள்வதாகவும்’ (S.I.I. i 46);. 2. குருதி; (சங்.அக.);; blood. [புல் → புன் + நீர்] |
புன்னிலம் | புன்னிலம் puṉṉilam, பெ. (n.) பயனற்ற நிலை; barren land. ‘புன்னிலத்திட்ட வித்து’ (சீவக. 2823);. [புல் → புன் + நிலம்] |
புன்னெறி | புன்னெறி puṉṉeṟi, பெ. (n.) 1. தீயவழி; bad ways. ‘புனனெறி யதனிற் செல்லும்’ (கந்தபு. வள்ளி. மண். 262);. 2. பொய்ச்சமயம்; false religion. ‘புன்னெறித் துன்னயத்தன்பிலாரொடு’ (திருநூற். 22);. [புல் → புன் + நெறி] |
புன்னை | புன்னை puṉṉai, பெ. (n.) மரவகை; mastwood. ‘புன்னை வாலினர்ப் படுசினை’ (பதிற்றுப். 30, 3);. ம. புன்ன; க. புன்னிகெ, பொன்னெ, கொன்னெ; தெ. பொன்ன; து. பொன்னெ;த.புன்னை → Skt punnåga [பொன் → பொலி → பொலிவு. பொல் பொற்பு. பொல்லுதல் = அழகாதல், பொலிதல். பொற்ற = அழகிய,சிறந்த பொன்னாலான பொல் → பொன். (தமி .வ.37);பொன் → புன் → புன்னை = பொலிவான பூக்களைத் தருவது] புன்னைவகைகள் 1. சிறுபுன்னை, 2. சுரபுன்னை, 3. சோரைப்புன்னை புன்னை puṉṉai, பெ. (n.) வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in vandiwasi Taluk. [புன்கு-புன்னை] |
புன்னைக்காயெண்ணெய் | புன்னைக்காயெண்ணெய் puṉṉaikkāyeṇīey, பெ. (n.) புன்னை யெண்ணெய் பார்க்க; see pսրրal-y-eրրey. [புன்னைக்காய் + எண்ணெய்] |
புன்னைக்கொட்டையெண்ணெய் | புன்னைக்கொட்டையெண்ணெய் puṉṉaikkoṭṭaiyeṇīey, பெ. (n.) புன்னை யெண்ணெய் பார்க்க; see pumpai-y-emmey [புன்னைக்கொட்டை + எண்ணெய்] |
புன்னையடி | புன்னையடி puṉṉaiyaḍi, பெ. (n.) அகத்திச் கவரம் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Agastheeswaram Taluk. [புன்னை-அடி] |
புன்னையெண்ணெய் | புன்னையெண்ணெய் puṉṉaiyeṇīey, பெ.(n.) புன்னை விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் (வின்.);; domba oil. as extracted from punnai seeds. [புன்னை + எண்ணெய்] |
புன்னைவனச்சம்பா | புன்னைவனச்சம்பா puṉṉaivaṉaccambā, பெ.(n.) சம்பா நெல் வகை; a kind of camba paddy. புன்னைவனச் சம்பாப் புழுகு சம்பா (நெல்விடு.183); [புன்னை + வனம் + சம்பா] Skt vana → த. வனம் |
புன்னைவனம் | புன்னைவனம் puṉṉaivaṉam, பெ. (n.) சங்கரநயினார் கோயில்; Sankara nayinar kóvil, a shrine scared to Sivan. தேமேவு புன்னைவனஞ் சென்று தொழ (சங்கரலிங்கவுலா.18); [புன்னை + வனம்] Skt. vana → த. வனம் |
புன்பயிர் | புன்பயிர் puṉpayir, பெ. (n.) 1. புன்செய்ப் பயிர் பார்க்க;(S II. ii, 247); see pun§ey-p-payir. 2. குறைந்த (அற்ப); விளைவு; poor crop. ‘ஆடுதேள் புன்பயிராம்’ (சினேந், 112.);. [புன் + பயிர்] |
புன்புலம் | புன்புலம் puṉpulam, பெ. (n.) 1. வெற்று நிலம்; waste land. ‘புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சி’ (குறுந். 202);. 2. புன்செய் நிலம்; dry land. ‘கானவைப்பிற் புன்புலத்தானே’ (குறுந். 183);. 3. புல்லிய இடம்; arid, barren place. ‘புன்புலக் களத்திடை’ (கம்பரா. முதற். 119.); 4. புல்லிய அறிவு; mean understanding, ‘புன்புலத் தரக்கன்’ (கம்பரா. மகுட. 28.);. [புன் + புலம்] |
புன்மக்கள் | புன்மக்கள் puṉmakkaḷ, பெ. (n.) இழிந்தவர்; low, vulgar persons. ‘வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ’ (நாலடி. 266.);. [புன் + மக்கள். மக + கள் – மக்கள்] |
புன்மரம் | புன்மரம் puṉmaram, பெ. (n.) 1. புறவயிரமுள்ள மரம் (பிங்.);; exogenous tree. 2. தென்னை (தைலவ. தைல.);; coconut tree. [புல் + மரம்] |
புன்மானம் | புன்மானம் puṉmāṉam, பெ. (n.) புன்வானம் பார்க்க; see pupwanaт. [புன் + வானம் – புன்வானம் → புன் மானம்] |
புன்மாலை | புன்மாலை puṉmālai, பெ. (n.) புற்கென்ற மாலைக் காலம்; dim evening twilight. ‘சிறுபுன் மாலை தலைவரின்’ (பு.வெ. 11, பெண்பாற். 3.);. [புன் + மாலை, மால் → மாலை = இரவும் பகலுங் கலக்கும் அந்திவேளை] |
புன்முருக்கு | புன்முருக்கு puṉmurukku, பெ. (n.) பூடுவகை (வின்.);; a plant. |
புன்முறுவல் | புன்முறுவல் puṉmuṟuval, பெ. (n.) புன்சிரிப்பு பார்க்க; see pup-sirippu. ‘நின்முகங் காட்டிப் புன்முறுவல் செய்து’ (திவ். நாய்ச் 2, 9.);. [புன் + முறுவல்] |
புன்முறுவல் செய்-தல் | புன்முறுவல் செய்-தல் puṉmuṟuvalceytal, 1செ.கு.வி. (v.i.) நகைமுகங் காட்டுதல்; to smile. [புன்முறுவல் + செய்] |
புன்மூரல் | புன்மூரல் puṉmūral, பெ. (n.) புன்சிரிப்பு பார்க்க; see pun-širippu. ‘புன்மூரல் தோன்றினாள்’ (சிவந்தெழுந்த பல்லவ. உலா. 276.);. [புன் + மூரல்] |
புன்மை | புன்மை puṉmai, பெ. (n.) 1. இழிவு; meanness, lowness, vileness. ‘பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்’ (கலித். 118);. 2. தூய்மையின்மை (அசுத்தம்);; uncleanness, ‘புன்மை நாளும் புனிதமாம்’ (திருவாலவா. 37, 10);. 3. சிறுமை (கோயிற்பு. நட. 29);; smallness. 4.துன்பம்; affliciton, suffering. சிறுபுன்மாலை (முல்லைப். 6); 5. வறுமை; poverty. ‘மாலை யன்னதோர் புன்மையும்’ (பொருந. 96);, 6. குற்றம் (பிங்.);; fault. ‘புன்மையில் காட்சி யவர்’ (குறள், 174.);. 7. புகர்நிறம் (உரி.நி.);; murkiness, tawny colour. 8. பார்வை முழுக்கம்; dimness of vision. ‘புன்மையின் மிக்கன புதுமைக் கண்களே’ (தணிகைப்பு. வள்ளி. 97.);. 9. மறதி (சூடா.);; forgetfulness, oblivion. [புல்லுதல் = துளைத்தல், புல் = உட்டுளை யுள்ள நிலைத்திணைவகை, சிறுமை. புல்+மை – புன்மை = சிறுமை, சிறுதன்மை (வே.க. 3, 101.);] |
புன்றலை | புன்றலை puṉṟalai, பெ. (n.) 1. சிறியதலை (கோயிற்பு.நட.29.);, small head. 2. இளந்தலை; tender head, as of a child. ‘புன்றலை மந்தி’ (ஐங்குறு. 273.);. 3. சிவந்த மயிருள்ள தலை; ruddy-haired head. ‘புன்றலை யிரும்பரதவர்’ (பட்டினப். 90.);, [புன் + தலை. புல் → புன் → புன்மை = சிறுமை] |
புன்றுமி | புன்றுமி puṉṟumi, பெ. (n.) தூறல் (யாழ்.அக.);; drizzle. [புன் + துமி] |
புன்றொழில் | புன்றொழில் puṉṟoḻil, பெ. (n.) தீச்செயல்; vicious deed, base or evil action. ‘புன்றொழிற் குரங்கொடு புணரு நட்பனோ’ (கம்பரா. வாலிவதை. 25); [புன் + தொழில்] |
புன்வானம் | புன்வானம் puṉvāṉam, பெ. (n.) விடியற் காலம் (வின்.);; the grey of the morning gleam of day-break. மறுவ, புலர்பொழுது. [புன் + வானம், புல் → புன் → புன்மை = ஒளிமழுக்கம்.] |
புப்புசக்கட்டி | புப்புசக்கட்டி puppusakkaṭṭi, பெ. (n.) நுரையீரலில் ஏற்படுங் கட்டி; pulmonary abscess. [புப்புசம் + கட்டி.] |
புப்புசச்சன்னறை | புப்புசச்சன்னறை puppusassaṉṉaṟai, பெ. (n.) நுரையீரலிலுள்ள காற்றறை; aircell of the lung. [புப்புசம் + சன்னறை.] |
புப்புசச்சுருக்கம் | புப்புசச்சுருக்கம் puppusassurukkam, பெ. (n.) நுரையீரலின் ஒடுக்கத்தினாலுண்டாகும் நோய்; pulmonary condensation. [புப்புசம் + சுருக்கம்.] |
புப்புசச்சுழற்றி | புப்புசச்சுழற்றி puppusassuḻṟṟi, பெ. (n.) நுரையீரல் வழியாய் அரத்தம் போதல்; pulmonary circulation of blood. [புப்புசம் + சுழற்றி.] |
புப்புசதாபிதம் | புப்புசதாபிதம் puppusadāpidam, பெ. (n.) புப்புசவழற்சி பார்க்க;See. puppusa-v-alarci. [புப்புசம் + தாபிதம்.] Skt. täpita → த. தாபிதம் |
புப்புசநரம்பு | புப்புசநரம்பு puppusanarambu, பெ. (n.) மூளை நரம்பு; pneumo gastric nerves. [புப்புசம் + நரம்பு.] |
புப்புசநாடி | புப்புசநாடி puppusanāṭi, பெ. (n.) தூய்மையான செவ்வியரத்தத்தை நுரையீரலினின்று நெஞ்சுப்பையினிடப் பக்கத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் குழல்; pulmonary vein. [புப்புசம் + நாடி.] |
புப்புசநாளம் | புப்புசநாளம் puppusanāḷam, பெ. (n.) மாசுபட்ட காரியரத்தத்தை நுரையீரற் பைகளுக்கு எடுத்துச் செல்லுங்குழல்; pulmonary artery. [புப்புசம் + நாளம், நுள் → (நூள்); → நாள் → நாளம் = உட்டுளையுள்ள தண்டு, அரத்தக் குழாய்.] |
புப்புசபதம் | புப்புசபதம் bubbusabadam, பெ. (n.) புப்புசவழற்சி பார்க்க;See. puppusa-y-alarci. மறுவ. புப்புசதாபம் [புப்புசம் + பதம்.] |
புப்புசம் | புப்புசம் puppusam, பெ. (n.) நுரையீரல் (இங்.வை.);; lung. [உ → உப்பு → உப்புசம் → புப்புசம் = உப்பி அதாவது விரிந்து சுருங்குவது.] த. உப்புசம் → Skt. phuppusa. |
புப்புசவழற்சி | புப்புசவழற்சி puppusavaḻṟsi, பெ. (n.) நுரையீரல் நோய்வகை; lung disease, pleuropneumonia (M.L.);. [புப்புசம் + அழற்சி.] |
புப்புசவழிப்புண் | புப்புசவழிப்புண் puppusavaḻippuṇ, பெ. (n.) நுரையீரலிலேற்படும் தசையழுகல் நோய்; pulmonary gangrene. [புப்புசவழி + புண்.] |
புப்புசவேர் | புப்புசவேர் puppusavēr, பெ. (n.) நுரையீரலின் அடிப்பகுதி; root for the lungs. [புப்புசம் + வேர்.] |
புப்புசோனதனம் | புப்புசோனதனம் puppucōṉadaṉam, பெ. (n.) முழு சுழற்சியற்ற நுரையீரல்; atelutasis pulmonium. |
புப்புலம் | புப்புலம் puppulam, பெ. (n.) நுரையீரலினின்று உச்சிநோக்கிச் செல்லும் பத்துவகை வளியுளொன்று; one of the ten vital airs situated in the chest or lungs. |
புப்புளம் | புப்புளம் puppuḷam, பெ. (n.) புடைப்பு, குமிழ்; film’ fl;bulb. [புடை → புடைப்பு → புப்பு → புப்புளம்.] |
புமுகம் | புமுகம் pumugam, பெ. (n.) புல்லாங்குழலில் இசைப்பவரின் வாயருகே இருக்கும் துளை; air hold at the end of flute. [புகு+முகம்] |
பும்மெனல் | பும்மெனல் pummeṉal, பெ. (n.) ஒலிக்குறிப்பு வகை (சங்.அக.);; onom expr. denoting buzzing sound. [பும் + எனல்.] |
பும்மைதுனம் | பும்மைதுனம் pummaiduṉam, பெ. (n.) எருவாய்ப்புணர்ச்சி; a kind of sodomy. |
பும்விருகம் | பும்விருகம் pumvirugam, பெ. (n.) 1. ஒருவகை (கத்தூரி); நஞ்சு; a variety of aconity. 2. ஒருவகை மான் (கத்தூரி); (சங்.அக.);; musk deer. |
புய | புய1 puyattal, 12 செ.குன்றாவி. (v.t.) 1. புய்-த்தல் 1 பார்க்க;puy2 1. மெய்வதி வேல்புயந்து மேல்வரும் (விநாயகபு. 37,60);. 2. வெளியேறுதல் (ஈடு. 9, 5, 10);; to depart, separate. [புய்த்தல் → புயத்தல்.] புய2 puyattal, 4 செ.குன்றாவி. (v.t.) பெயர்த்தல்; to pluck, pull out. ‘நவைகண்டு வாட்கண் புயக்கவொரு மைந்தனைப் போவித்தார் (கச்சி.வண்டுவிடு.293);. [புல் → புள் → புய். புய்த்தல் = பறிக்கப்படுதல் (வே.க.3.114);. புய்த்தல் → புயத்தல்.] |
புயகீர்த்தி | புயகீர்த்தி puyaārtti, பெ. (n.) தெருக் கூத்தாடும் ஆண்கள் அணியும்அணிகலன்; an ornament used by street dramatists. [புய்யம்+கிர்த்தி] |
புயக்கு | புயக்கு puyakku, பெ. (n.) 1. விட்டுநீங்குகை; departing, separation. 2. மனக்கவர்ச்சி (ஈடு. 9, 5, 10);; attractiveness. [புய → புயக்கு.] |
புயங்கமலை | புயங்கமலை puyaṅgamalai, பெ.(n.) ஆதி சேடனது வடிவாகக் கருதப்படும் திருவேங்கட மலை; Tirupati, considered a form of {}. “இடபமலைக்கும் புயங்கமலைக்கும்” (அட்டப். திருவரங்கத்தந்.35);. [p] |
புயங்கொட்டு-தல் | புயங்கொட்டு-தல் puyaṅgoṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) மறக்குறியாகத் தோள்கட்டுதல்; to strike or pat on one’s own shoulder in challege, as a warrior. தங்கச் சிமையப் புயங் கொட்டும் (தனிப்பா.1, 382, 29);. [புயம் + கொட்டு-.] |
புயத்துணை | புயத்துணை puyattuṇai, பெ. (n.) தகுந்த துணைவன் (வின்.);; helper, useful as the arm. [புயம் + துணை.] |
புயபராக்கிரமம் | புயபராக்கிரமம் buyabarākkiramam, பெ. (n.) புயவலி (வின்.); பார்க்க;See. puya-vali. Skt parākrama → த பராக்கிரமம் [புய + பராக்கிரமம்.] |
புயபலம் | புயபலம் buyabalam, பெ. (n.) புயவலி (வின்.);;பார்க்க;See puya-vali. [புயம் + பலம்.] |
புயமுட்டி | புயமுட்டி puyamuṭṭi, பெ. (n.) வில்லைத் தோண்மேற் பிடித்து மேனோக்கி அம்பெய்கை (சீவக.1680, உரை);; holding the bow above the shoulder and shooting upwards. [புயம் + முட்டி] |
புயம் | புயம் puyam, பெ. (n.) 1. தோள்; arm, shoulder. “புயம்பலவுடைய தென்னிலங்கையர் வேந்தன்”(தேவா.130, 8);. 2. புடை; side. 3. கோணத்தின் பக்கக்கோடு (இக்.);; [புல் → பொல்லு = தடி. புள் → (பிள்); → பிண்டு → பிண்டம் = திரட்சி (மு.தா.209); புள் → புய் → புயம் = திரண்ட தோள்.] த. புயம் → Skt. bhuja வளைதல் பொருள்படும் bhuj என்னும் அடியிலிருந்து வளைந்தது, வளைந்து தொங்குவது, தொங்கும் கை, கைபோன்ற தும்பிக்கை, போன்ற பொருள் வளர்ச்சியைக் கொண்ட bhuja என்னும் சொல் வளர்ந்துள்ளதை மா.வி.அகரமுதலி காட்டுகிறது. இப்பொருள் வளர்ச்சி கைக்கும் அதுபோன்று விளங்குவனவற்றிற்கும் பொருந்துமேயல்லாமல் தோளுக்குப் பொருந்தாமையைக் காணலாம். பணைத்தோள், திண்டோள், திணிதோள் என்பன போன்ற வழக்குகள் தமிழில் தோள் திரட்சிப் பொருளில் வழக்கூன்றியுள்ளதைக் காட்டுகின்றன. திரட்சிப்பொருள் அடிப்படையில் தோள், பின் அத்தோளுடன் பொருந்தியிருக்கும் மேற்கை, கை, கைபோன்ற தும்பிக்கை என்றாற்போன்ற ஆட்சிகள் இயல்பான பொருள் வளர்ச்சியைக் காட்டுக்கின்றன. தமிழில் தோள், இருதோள்களில் ஒன்றைப்போன்று இருக்கும் பக்கம், பக்கத்தைப்போன்ற கோணத்தின் பக்கக்கோடு ஆகிய பொருள்களுடன் நின்றுள்ளது. |
புயற்காற்று | புயற்காற்று puyaṟkāṟṟu, பெ. (n.) பெருங்காற்ற; storm-wind. (C.G.);. [புயல் + காற்று] |
புயலடி-த்தல் | புயலடி-த்தல் puyalaḍittal, 4 செ.கு.வி. (vi) சூறாவளி காற்றடித்தல்; to form cyclone. [புயல் + அடி-,] |
புயலாய் | புயலாய் puyalāy, வி.எ. (adv) ஆர்ப்பாட்டமாய்; Stormily. தேர்தல் நாள்களில் தலைவர் புயலாய் இயங்கினார் (உ.வ.);. [புயல் + ஆய்] |
புயலேறு | புயலேறு puyalēṟu, பெ. (n.) இடி; thunder. பெருஞ்சினப் புயலேறனையை (பதிற்றுப்.51,28);. [புயல் + ஏறு] |
புயல் | புயல்1 puyal, பெ. (n.) 1. மழைபெய்கை; raining. புயல்(மேகம்);போற்றிருமேனியம்மான் (திவ்.திருவாய்,8,10,2); 2. நீர்; water. ‘மாமேகம் பெய்த புயல்.'(சீவக.2476);. 3. முகில் (மேகம்);; Cloud.. ‘விண்டுமுன்னிய புயல்'(பதிற்றுப்.84,22);. மறுவ. மழை, எழிலி, மங்குல், மஞ்சு, கொண்டல், கொண்மூ, விண், விசும்பு, மால், செல், கார், மை, மாரி, [பொய் → பெய், பெய்தல் = துளைவழி நீர் ஒழுகுதல், (வே. க. 3, 126); பெய் → பெயல் = பொழிகை, மழை, மழைத்துளி. பெயல் → புயல் = முகிலினின்று விழும் மழை, மழையாலான நீர், மழைபெய்யும் முகில்] புயல்2 puyal, பெ. (n.) 1. கொடுங்காற்று (வின்.);; gale, Storm, tempest, gust, Squall. 2. சுழல் காற்று; Cyclone. மறுவ, சூறை, சூறாவளி, [புள் → புய் → புயல் (முதா.251);] |
புயல்காற்று | புயல்காற்று puyalkāṟṟu, பெ. (n.) புயற்காற்று பார்க்க;See. puyar-karu. புயல்காற்றின் வேகம் தணியவில்லை. [புயல் + காற்று] |
புயல்சின்னம் | புயல்சின்னம் puyalciṉṉam, பெ. (n.) புயல் தோற்றுதற்குரிய அறிகுறி; storm. [ புயல் + சின்னம்] |
புயல்மண்டலம் | புயல்மண்டலம் puyalmaṇṭalam, பெ. (n.) புயல் உருவாகியிருக்கும் பகுதி; storm-zone. [புயல் + மண்டலம்] |
புயல்முகில் | புயல்முகில் puyalmugil, பெ. (n.) புயலின்போது எழும் முகில்; Storm cloud. [புயல் + முகில்] |
புயல்மேகம் | புயல்மேகம் puyalmēkam, பெ. (n.) புயல் முகில் பார்க்க;See. puyal-mugil. [புயல் + மேகம்] |
புயல்மையம் | புயல்மையம் puyalmaiyam, பெ. (n.) புயல்காற்று நிலை கொண்டிருக்கும் இடம்; the centre place of storm, cyclone. [புயல் + மையம்.] Skt madya → த. மத்தியம் → மையம் |
புயல்வண்ணன் | புயல்வண்ணன் puyalvaṇṇaṉ, பெ. (n.) திருமால்; Tirumal. புயல் வண்ணன் புனல் வார்க்க (கலிங்.1);. [புயல் + வண்ணன். புயல்=முகில்] |
புயவகுப்பு | புயவகுப்பு puyavaguppu, பெ. (n.) பாட்டுடைத் தலைவனது தோள்வலியைக் கூறும் கலம்பக வுறுப்பு (குமர.பிர.மதுரைக்.11);; a section of kalampagam, describing the valourous deeds of its hero. [புயம் + வகுப்பு] |
புயவலி | புயவலி puyavali, பெ. (n.) தோள்வலிமை (வின்.);; strength of arm. [புயம் + வலி] |
புயாசலம் | புயாசலம் puyācalam, பெ. (n.) மலையொத்த தோள் (வின்.);; hill-like shoulder. [புயம் → புயா + அசலம்] Skt. acala → த. அசலம் |
புயாந்தரம் | புயாந்தரம் puyāndaram, பெ. (n.) மார்பு (யாழ்.அக.);; chest of a person. [புயம் → புயாந்தரம்] |
புய் | புய்1 puytal, 4 செ.கு.வி. (v.i.) 1. பறிக்கப்படுதல்; to be pulled out, torn off, wrested. புய்ந்து கால்போகில் புலான் முகந்த வெண்குடை (களவழி. 39);. 2. மறைதல்; to disappear, கோலப்பகற்களிகறான்றுகற் புய்ய (திவ்.இயற்.திருவிருத்.40);. [புல் → புள் → புய் (வே.க.3, 114);.] புய்2 puyttal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. பறித்தல்; to extract, pull out, uproot. புய்த்தெறி கரும்பின் விடுகழை (புறநா.28);. 2. பயத்தல்; to produce, yield. தெ.புச்சு; நா.புச்; பர்.புச்ச; கட.புச்கிர்; கோண்.புச்கானா; குரு. புதுக்னா;மா.புசெ. [புள் → புய். புய்தல் (த.வி.); → புய்த்தல் (பி.வி.);.] |
புர-த்தல் | புர-த்தல் purattal, 12 செ.குன்றாவி. (v.t.) 1. காத்தல், பேணிவளர்த்தல்; to keep, preserve, protect, cherish, tend, govern. வளங்கெழு சிறப்பி னுலகம் புரைஇ (பதிற்றுப்.50,4);- 2. மிகுதியாகக் கொடுத்தல் (பிங்.);; to give bountifully, bestow. 3. வணங்குதல்(பிங்.);; to reverence. 4. உதவுதல்; to bestow favour. மகோதராதிகள் புரக்க (தக்கயாகப்.138);. க.பொரெ, தெ.ப்ரோசு; கோண்.பொர்பனா; கொலா. புராய்;பர்,பொரிப் AS.beorgen; Ger bergew [புல் → புர் → புர-,] |
புரகரன் | புரகரன் puragaraṉ, பெ. (n.) முப்புர (திரிபுர); மழித்தோன், சிவபெருமான்;Śivan. as the destroyer of tiripuram. “புரகரனிச்சாஞானக் கிரியையாப்ப் போந்தவில்வ மரமுதல்”(திருவிளை, இந்திரன் முடி.17);. [புரம் + கரன்] Skthara » த. கரன் |
புரகால் | புரகால் purakāl, பெ. (n.) மதுராந்தகம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurantagam Taluk. [புறம்+கால்] |
புரக்காழ் | புரக்காழ் purakkāḻ, பெ. (n.) பெண்மரம்; the female species of tree. [புறம் → புரம் + காழ்] |
புரங்கணி | புரங்கணி puraṅgaṇi, பெ. (n.) கடலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Cuddalore Taluk. [புறம்-புறங்கு+அணி] |
புரசங்கொட்டை | புரசங்கொட்டை purasaṅgoṭṭai, பெ. (n.) மலப்புழு, வயிற்றிரைச்சல் போன்றவற்றைப் போக்கும் புரசம் விதை; See.d of buteafrondosa. மறுவ. முருக்கம் விதை, புரசம் விதை [புரசம் + கொட்டை] |
புரசம்பிசின் | புரசம்பிசின் purasambisiṉ, பெ. (n.) பிசின்வகையுளொன்று; gum of butea frondosa tree. [புரசம் + பிசின்] |
புரசம்விதை | புரசம்விதை purasamvidai, பெ. (n.) புரசங்கொட்டை பார்க்க;See. purašan-kottai. [புரசம் + விதை] |
புரசல் | புரசல் purasal, பெ. (n.) ஒழுக்கு (இ.வ.);; leak. [புல் → புர் → புரை = உட்டுளை. புரை → புரைசல் = துளை வே.க.3.101,102, புரைசல் → புரசல்] |
புரசு | புரசு2 purasu, பெ. (n.) மரவகை; East Indian Satin-wood. (L.);. புரசு3 purasu, பெ. (n.) மரவகை (பதார்த்த.212);; battle of plessey tree. புரசு4 purasu, பெ. (n.) சிறு பெண்குழந்தை; a little girl. [புள் → பிள் = பிள்ளை, பிள்ளமையழகு. புள் → புரு = குழந்தை (மு.தா.40,41); புரு → புருசு → புரசு] |
புரசு’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
புரசுமேற்புல்லுருவி | புரசுமேற்புல்லுருவி purasumēṟpulluruvi, பெ. (n.) மூலமுளையைப் போக்குஞ் சூரணம்; parasite of buteafrondosa powder which is useful in piles. [புரசுமேல் → புல்லுருவி] |
புரசை | புரசை purasai, பெ. (n.) யானைக் கழுத்திலிடும் கயிறு; halter or head-stall of an elephant. ஆய்மணிப் புரசை யானையின் (கம்பரா. சூளா.36); [புள் → புரு → புரள். புள் → புர → புரசை] |
புரச்சோதி | புரச்சோதி puraccōti, பெ. (n.) மலைபடு மூலிகை; an herb that grows on mountains. |
புரஞ்சரம் | புரஞ்சரம் purañjaram, பெ. (n.) தோள்; shoulder. [புரந்தரம் → புரஞ்சரம்] |
புரடம் | புரடம் puraḍam, பெ. (n.) பொன்; gold. |
புரடை | புரடை puraḍai, பெ.(n.) புன்செய் நிலம்; dryland. [புரை –புரடை] |
புரட்சி | புரட்சி1 puraṭci, பெ. (n.) 1. பிறழ்வு (கொ.வ.);; upsetting, overturning. 2. ஒழுங்கின்மை; disorder. 3. சட்டமில்லா நிலை; anarchy. [புள் → புரு → புரள். புரள்தல் = சொல் மாறுதல். புரள் → பிறள் → பிறழ்ச்சி, புரள் → புரட்சி (மு.தா:234);] புரட்சி2 puraṭci, பெ. (n.) குறுகிய காலத்தில் நிலைமை முற்றிலும் மாறும் தன்மை; revolution. தொழிலாளர்கள் புரட்சி செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. (உ.வ.); [புரள் → புரட்சி (மு.தா.234);] |
புரட்சிகரம் | புரட்சிகரம் puraṭcigaram, பெ. (n.) the quality of being revolutionary. புரட்சிகரமானதிட்டம் (உ.வ.); [புரட்சி + கரம்] Skt. ãkarsaka → த. கரம் |
புரட்சிசெய்-தல் | புரட்சிசெய்-தல் puraṭsiseytal, 4 செ.குவி, (v.i.) குறுகிய காலத்தில் இருக்கும் நிலையை மாற்றுவதற்குப் பணிபுரிதல்; to revolutionize. [புரட்சி + செய்-,] |
புரட்சியாளர் | புரட்சியாளர் puraṭciyāḷar, பெ. (n.) நிலைமையை முற்றும் மாற்ற பணிபுரிந்தவர்; revolutionary. [புரட்சி + ஆளர்] |
புரட்டன் | புரட்டன் puraṭṭaṉ, பெ. (n.) 1. மாறாட்டக்காரன்; deceiver, equivocator,(S.l.l.v.3);. 2. பொய்யன், உண்மையைத் திரித்தும் மாற்றியும் கூறுபவன்; liar, one who distorts facts, wheeler – dealer, twister. ம. பிரட்டன் [புள் → புரு → புரள். புரள்தல் = சொல் மாறுதல். புரள் → புரளி = மெய்ம்மாற்று, பொய். புரள் → புரட்டு → புரட்டன் (மு.தா.234);] |
புரட்டல் | புரட்டல்1 puraṭṭal, பெ. (n.) கறி; [புரள் → புரட்டு. புரட்டுதல் = ஒன்றைத் திருப்புதல். புரட்டு → புரட்டல் → புரட்டிச் சமைக்குங் கறி, (மு.தா.231);] புரட்டல்2 puraṭṭal, பெ. (n.) அமைதியின்மை; restlessness. [புரட்டு → புரட்டல். ‘அல்’ தொ.பெ.ஈறு] புரட்டல்3 puraṭṭal, பெ. (n.) ஏமாற்றுதல்; cheating. அவன் ஒரு புரட்டல் பேர்வழி (உ.வ); [புரட்டு → புரட்டல். ‘அல்’ தொ.பெ.ஈறு] |
புரட்டாசி | புரட்டாசி puraṭṭāci, பெ. (n.) கன்னிமாதம்; name of a month. [Skt. {} → த. புரட்டாசி.] |
புரட்டி | புரட்டி puraṭṭi, பெ. (n.) ஒன்றைப்புரட்ட பயன்படுத்தும் கருவி; an instrument used to turn. [புரள் → புரட்டு. புரட்டுதல் = ஒன்றைத் திருப்புதல். புரட்டு → புரட்டி. தோசை புரட்டி = தோசைத்திருப்பி (மு.தா.231.);] |
புரட்டிக்கீரை | புரட்டிக்கீரை puraṭṭikārai, பெ. (n.) காட்டுத்துத்தி; bristly-leaved jew’s mallow (L.); |
புரட்டியடி-த்தல் | புரட்டியடி-த்தல் puraḍḍiyaḍittal, 4 செ. குன்றாவி. (v.t.) 1. மாறாட்டமாய்ப் பேசுதல் (வின்.);; to prevaricate. 2. உண்மையை மறுத்தல்; to deny a fact, to lie boldly. [புரள் → புரட்டு → புரட்டி + அடி-,] |
புரட்டு | புரட்டு1 puraṭṭudal, 5 செகுன்றாவி, (v.t.) 1. உருட்டுதல்; to turn a thing over, to roll. முடையுடைக் கருந்தலை புரட்டு முன்றா ளுகிருடையடிய(பட்டினப்.230.); 2. செய்து முடித்தல்; to accomplish, used in contempt. 3. கீழ்மேலாகத் திருப்புதல்; to turn up, as the soil in ploughing. 4. கறி முதலியவற்றைக் கிண்டி வதக்குதல் (இ.வ.);; to fry, as wegetable curry. 5. குமட்டுதல்; to nauseate, retch. வயிற்றைப் புரட்டுகிறது 6. ஏய்த்தல் (வஞ்சித்தல்); (வின்.);; to deceive to falsify. 7. மாறுபடுத்துதல்(கொ.வ.);; to pervert, distort. 8. தேய்த்தல் (வின்.);; to smear, rub on the head, as oil. 9. அழுக்காக்குதல் (வின்.);; to stain, foul with dirt. 10. மறுத்துரைத்தல் (ஆட்சேபித்தல்); (வின்.);; to deny, refute. ம. புரட்டுக, பிரட்டுக;பட.பெரட்டு [புரள் → புரட்டு] புரட்டு2 puraṭṭu, பெ. (n.) 1. கீழ்மேலாகத் திருப்புகை; turning over, over turn, overthrow. 2. மாறுப்பட்ட பேச்ச; prevarication. ‘புறப்பட்டார் புரட்டுப் பேசி'(திருவாலவா.38,14); 3. ஏய்ப்பு (வஞ்சகம்);; deceit, treachery. 4. குமட்டும் உணர்வு (வாந்திக்குணம்);; sickness, nausea. 5. வயிற்றுவலி (யாழ்ப்);; pain in the bowels. 6. கறிவகை (இ.வ.);; a kind of vegtable curry. [புரள் → புரட்டு] புரட்டு3 puraṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) பொத்தகவிதழ்கள் முதலியவற்றைத் திருப்ப்புதல்(கொ.வ.);; to turn over, as the leaves of a book. [புல் → புர் → புரள் → புரளுதல் = கீழ்மேலாகத்திருப்புதல். (வே.க.3,94,95);, திருப்புதல்] புரட்டு puraṭṭu, பெ. (n.) கேரளாவின் நாட்டுப்புற நடன நாடகம்; a folk dance of Kerala. [புரள்-பாட்டு] |
புரட்டோடியம் | புரட்டோடியம் puraṭṭōṭiyam, பெ. (n.) இழிவழக்கு (வின்.);; obscene language. [புரட்டு → புரட்டோடியம்] |
புரட்ட்டுருட்டு | புரட்ட்டுருட்டு puraṭṭṭuruṭṭu, பெ. (n.) 1. மாறாட்டமாகப் பேசுகை; lying, prevarication. 2. தந்திர செயல்; subterfuge. [புரட்டு + உருட்டு. இதை உருட்டு புரட்டு என்று மாற்றிச்சொல்வதும் உண்டு.] |
புரணி | புரணி1 puraṇi, பெ. (n.) 1. ஊன் (பிங்);; flesh. ‘குணபாசி….நடித்து நின்றயின்றன புரணி'(அரிசமய, பரகா.37.); 2. தோல் (கொ.வ.);; skin. 3. சாரமற்றது; that which is useless. ‘சோலையின் போக்யதை புரணியென்னும்படியாய்த்து ஊரில் போக்யதை'(திவ்.திருமலை.18.வ்யா,பக்.,67); [புறம் → புறன் → புறணி = மேற்புறம், மரத்தின் மேற்புறமாயிருக்கும் பட்டை. புறணி → புரணி = விலங்குகளின் மேலாக இருக்கும் ஊன், ஊனைப் போர்த்தியிருக்கும் தோல், (மேலாக இருக்கும்); சாரமற்றது.] புரணி2 puraṇi, பெ. (n.) புளியம்புறணி பார்க்க;See. pusyam purani. [புறணி → புரணி] |
புரணிமண் | புரணிமண் puraṇimaṇ, பெ. (n.) கழுதை; ass. |
புரண்டை | புரண்டை puraṇṭai, பெ. (n.) திருகலான கொடிவகை, பிரண்டை; square stalked vine. [புரு → புரள் → புரண்டை = புரண்டிருக்கும் அல்லது முறுக்குண்டிருக்கும் கொடி (மு.தா.242);] புரண்டை puraṇṭai, பெ. (n.) திருப்பத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur.Taluk. [பிரண்டை-புரண்டை] |
புரதகனன் | புரதகனன் puradagaṉaṉ, பெ. (n.) புரமெரித்தோன் (வின்.); பார்க்க;See. puramerittõn. [புரம் + தகனன்] |
புரத்தாபனநோய் | புரத்தாபனநோய் purattāpaṉanōy, பெ. (n.) சிறுநீர்ப்பையிலேற்படும் அழலை நோய்; a disease of urinary bladder. |
புரத்திரயம் | புரத்திரயம் purattirayam, பெ. (n.) புரம் மூன்று பார்க்க;See. puram–munru. ‘திண்சிலையாற் புரத்திரயங்களையும் பொடியாக்கிலன்… எங்கள் பண்ணவனே'(திருநாற்.24); [புரம் + திரயம்.] Skt. traya → த. திரயம் |
புரத்துவாரம் | புரத்துவாரம் purattuvāram, பெ. (n.) புரவாயில் (வின்.); பார்க்க;See. puravaiyil. [புரம் + துவாரம்] Skt. dvåra → த. துவாரம் |
புரந்தரன் | புரந்தரன் purandaraṉ, பெ. (n.) Indra. “புரந்தரன் தன்னோடு வானோர்”(தேவா.926, 8);. ம. புரந்தரன் [புரம் + தரன்] Skt. dara → த. தரன் |
புரந்தரம் | புரந்தரம் purandaram, பெ. (n.) தோள் (சங்.அக.);; shoulder. [புயம் → புரம் → புரந்தரம்] |
புரந்தரலோகம் | புரந்தரலோகம் purandaralōkam, பெ. (n.) புரந்தரவுலகம் பார்க்க;See. purandara-v-ulagam. ‘செல்வப்புரந்தரலோகம் புழைக்கடை யாகுமெம் போலிகட் கே'(திருநூற்.32.);. [புரந்தர(ன்); + லோகம்.] த. உலகம் → Skt. lõga. Skt. dara → த. தரன் |
புரந்தரவுலகம் | புரந்தரவுலகம் purandaravulagam, பெ. (n.) இந்திரவுலகம்; Indra’s heaven. [புரந்தர(ன்); + உலகம்] |
புரந்தார் | புரந்தார் purandār, பெ. (n.) அரசர்; kings. ‘புரந்தார்கண் ணீர்மல்க'(குறள், 780); க.பொரெதர் [புரம் → புரந்தார்] |
புரப்பிரியை | புரப்பிரியை purappiriyai, பெ. (n.) செந்தாழை (அனாசி); (மூ.அ.);; pine-apple. |
புரப்பு | புரப்பு purappu, பெ. (n.) காப்பு (பாதுகாப்பு); (சங்.அக.);; keeping, protection. தெ. ப்ரோபு [புர → புரப்பு.] |
புரமெரித்தோன் | புரமெரித்தோன் puramerittōṉ, பெ. (n.) புரம்மூன்றெரித்தோன் பார்க்க;See. purammūnferittõn. [புரம் + எரித்தோன்.] |
புரம் | புரம்1 puram, பெ. (n.) 1. ஊர் (பிங்);; town. 2. நகரம் (பிங்.);; city. ‘மதுரை யந்தண் புரத்தின் கண்'(திருவாலவா.39,1);. 3. மதிலரண் ஆழ்ந்த தலைநகரம் (சூடா.);; metropolis, fortified town, royal city, capital. 4. புரம் மூன்று பார்க்க;See. puram munru. ‘புரமெரி செய்தவர்'(தேவா.97.11);. 5. கோயில்; temple. ‘மேருவு மூவர்க் கோதிய புரமும்'(கல்லா. 24, 23);. 6. மேன்மாடம் (யாழ்.அக.);. upper storey. 7. வீடு (யாழ்.அக.);; house. 8. உடல் (பிங்.);; body. ‘அயன்புரமெனப் பொலிந்தான்'(பாகவத.1, மாயவனமி. 16);. 9. புறணி, தோல் (யாழ்.அக.);; skin. OE. Burg, burh; OS. burg: OHG. burug; ON. Burg; Goth-baurge; E. borough Sc burgh. [புர் → புரை = உயர்வு. புரையோர் = உயர்ந்தோர். புர் → புரம் = உயர்ந்தமனை, அஃதுள்ள நகர். குடிநகர், பதி முதலிய பிற சொற்களும் தனியில்லையும் ஊரையுங் குறித்தல் காண்க. உயர்ந்த கட்டடங்களுள் தலைமையானது கோபுரம். ஒ.நோ. கோநாய், அரசமரம், நாயகத் தூக்கம். புரம் → பரம் = மேல். பரம் → பரன். பரை. (மு.தா. 67);.] வேந்தன் இருந்த உயர்ந்த எழுநிலைக் கட்டடம் முதலிற் கோபுரம் எனப்பட்டது. பின்பு அதைப் பொற்கோயிலில் அமைந்த எழுநிலை வானளாவி அப்பெயர் பெற்றது. அதன் அமைப்பு தேரை ஒத்ததாகும். வேந்தன் தன் தலைநகரை நாற்புறமும் நோக்கவும் தொலைவிற் பகை வரவைக் காணவும், பகைவர் முற்றுகையிட்டு உழிஞைப்போரை நடத்துங்கால் நொச்சிப்போரைக் கண்காணிக்கவும், அவன் அரண்மனையில் மேல் எழுநிலை கொண்ட ஒர் உயர்ந்த தேர் போன்ற கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அது புரம் எனப்பட்டது. புரம் = உயர்ந்த கட்டடமான மேன்மாடம். புரவி = உயர்ந்த சுவரைத் தாண்டும் குதிரை. புரம் என்பது பின்பு புரத்தைக் கொண்ட அரண்மனையையும் அதன் சூழலையும் (Acropolis); குறித்து, அதன் பின் நகர் என்னும் சொற்போல் தலைநகர் முழுவதையும் குறித்து, நாளடைவில் நகரப் பொதுப் பெயராயிற்று. அரண்மனையிலுள்ள புரம் அரசன் இருக்கையாதலால், கோபுரம் எனப்பட்டது. கோ அரசன். கோ இருந்த இல் கோயில் எனப்பட்டதை நோக்குக. பகைவர் வரவு காண்டற்குக் கோபுரம் சிறந்த அமைப்பென்று கண்டபின் நகரைச் சூழ்ந்த கோட்டை மதிலிலும், வாயிலிற் பெரிதாகவும் மற்ற இடங்களிற் சிறியனவாகவும் கோபுரங்கள் கட்டப் பட்டன. சிறியன கொத்தளம் எனப் பட்டன. (ப.த.நா.ப.123,124); புரம்2 puram, பெ. (n.) முன் (சூடா.);; before, in place or time. |
புரம்பாய்வை-த்தல் | புரம்பாய்வை-த்தல் purambāyvaittal, 4 செ.குன்றாவி. (v.t.) மறைவாக வைத்தல்; to keep aside. [புரம்பாய் + வை-, புறம் → புரம்.] |
புரம்புக்குப்போ-தல் | புரம்புக்குப்போ-தல் purambukkuppōtal, 8 செ.கு.வி. (v.i.) மலங்கழித்தல் (வின்.);; to go to stool. மறுவ, வெளிக்குப்போதல் [புறம் → புறம்பு = வெளிப்புறம். புறம்பு + போ-,] |
புரம்மூன்று | புரம்மூன்று purammūṉṟu, பெ. (n.) முப்புரம் (திரிபுரம்);; the three cities destroyed by Sivan. [புரம் + மூன்று.] |
புரம்மூன்றெரித்தோன் | புரம்மூன்றெரித்தோன் purammūṉṟerittōṉ, பெ. (n.) முப்புரத்தை (திரிபுரத்தை); எரித்தவன், சிவபெருமான்; Sivan, as the destroyer of tiripuram, மறுவ. புராரி, புராந்தகன், பித்தன், புலித்தோலான், அரவன், அண்ணல், பரமன், அரன். [புரம் + மூன்று + எரித்தோன்.] |
புரலாட்டு | புரலாட்டு puralāṭṭu, பெ. (n.) பாவில் சில இழைகளை விட்டுநாடா ஊடுருவிச் செல்லும் பகுதி; the intermediate unwoven part in weaving. [புரள்+ஆட்டு] |
புரளல் | புரளல் puraḷal, பெ. (n.) படுத்துப் புரளுவதைப் போல, நின்றுகொண்டே புரளும் உடலியக்கம், a rotating body movement in dance that too in standing pose. [புரள்+அல்] |
புரளவை-த்தல் | புரளவை-த்தல் puraḷavaittal, 4 செ.குன்றாவி. (v.t.) உண்ணாக்கில் தடவல்; to smear over ovula. [புரள் → புரள + வை-,] |
புரளி | புரளி1 puraḷi, பெ. (n.) 1. பொய் (வின்.);; lying, falsehood. 2. ஏய்ப்பு (வஞ்சனை);; deceit. 3. குறும்பு (வின்.);; mischief, waggishness. 4. சண்டை; quarrel. wrangle, broil. 5. கலகம் (வின்.);; insurrection. 6. முருட்டுத்தனம் (வின்.);; restiveness, as of a beast, unruliness, refractoriness. [புல் → புர் → புரள், புரளுதல் = உருளுதல், மாறுபாடடைதல் புரள் → புரளி = (வே.க.3, 94);.] புரளி2 puraḷi, பெ. (n.) அரத்தம், குருதி;(இறை.1, பக். 9);; blood. |
புரளிக்காரன் | புரளிக்காரன் puraḷikkāraṉ, பெ. (n.) 1. பொய்யன் (வின்.);; liar, prevaricator. 2. புரட்டுச் செய்வோன்; mischievous person, wag, knave. 3. சண்டையிடுபவன்; quarrelsome person. 4. ஆணைமீறிக் கலகஞ்செய்வோன்; rebel, insurgent. [புரளி + காரன்.] |
புரளிபண்ணு | புரளிபண்ணு1 buraḷibaṇṇudal, 15 செ.கு.வி. (v.i.) குறும்பு செய்தல் (வின்.);; to be waggish, mischievous. [புரளி + பண்ணு-,] புரளிபண்ணு2 buraḷibaṇṇudal, 12 செ.குன்றாவி. (v.t.) ஏளனம் செய்தல் (கொ.வ.);; to mock. [புரளி + பண்ணு-,] |
புரளிவித்தைக்காரன் | புரளிவித்தைக்காரன் puraḷivittaikkāraṉ, பெ. (n.) மாய்மாலக்காரன் (புதுவை.);; chariatan. [புரளி + வித்தை + காரன்.] Skt. vidyā → த. வித்தை |
புரள்(ளு)-தல் | புரள்(ளு)-தல் puraḷḷudal, 2 செ.கு.வி. (v.i.) 1. உருளுதல்; to roll over, to tumble over. to be upset. ‘அடித்துப் புரண்டுவிழுந்தான். கழுதை புரண்ட களமாய் போய் விட்டது’. 2. கழிதல்; to slip off. ‘புல்லார் புரவி விடல்'(குறள். 755);. 3. அலைமறிதல்; to roll, as waver. ‘புரணெடுந்திரைகளம்'(கம்பரா. விபீடண.27);. 4. நிரம்பி வழிதல், கரை கடந்தோடுதல்; to be full to the brim, to overflow. “ஆறுகரைபுரண்டு போகிறது”. 5. அழுக்காதல் (வின்.);; to become besmeared, soiled or dirty. 6. நீரிற்கலத்தல் (வின்.);; to be soaked, drenched. 7. மாறுபாடடைதல்; to deranged, to be changed, as times, seasons customs or laws; to be overturened, as a state. 8. சொற்பிறழ்தல்; to go back upon one’s word. 9. மறுப்புத் தெரிவிக்கப்படுதல் (வின்.);; to be refuted or confuted. 10. கற்றுதல் (வின்.);; to revolve. 11. பணம் விரைந்து தொகுதல் அல்லது கைமாறுதல்; to abound. அந்த ஊரில் பணம் புரள்கிறது. 12. மாறிமாறி வருதல்; to come alternately. ‘வெயில்களும் நிலாக்களும் புரள'(கம்பரா. பிரமா.99);. 13. சாதல்; to die. ‘கழுத்திலே புண்ணாகிப் புழுத்துப் புரண்டான்'(குருபரம்.105. ஆறா.);. ம.புரளுக, பிரளுக; க.பொரள், புருள்; தெ.பொரலு: து.புரெலுனி, புரெயுனி, பொஎரலுனி, பொரெடுனி; கோத. பொர்ண், பொண்;பட. பெரணு [புல் + புர் → புரள் (வே.க.31, 94);.] |
புரவரித்திணைக்களம் | புரவரித்திணைக்களம் puravarittiṇaikkaḷam, பெ. (n.) புரவுவரிதிணைக்களம் பார்க்க;See. puravuvari tinai-k-kalam (s.1.1 iii. 116, 17);. [புரவு + வரி + திணைக்களம்.] |
புரவரியார் | புரவரியார் puravariyār, பெ. (n.) அரசிறைக் கணக்கர்; revenue accountants. (I.M.P.Sm. 56);. [புரவு + வரியார்.] |
புரவலன் | புரவலன் puravalaṉ, பெ. (n.) காத்துதவுவோன்; protector, preserver, defender. ‘மெய்யது புரவல ரின்மையிற் பசியே'(புறநா. 69);. 2. அரசன்; king. ‘புரவல னெடுங்கடை'(பு.ரெ. 9, 2, கொளு);. 3. கொடையாளன் (பு.வெ.9, 25, கொளு);; liberal man. மறுவ. பெருமான், ஏந்தல், வேந்தன், மன்னன், பொருநன், கோ, கொற்றவன், இறைவன், அண்ணல், தலைவன், காவலன், குரிசில். [புர → புரவு → புரவலன்.] அரசனுக்குக் காவல் தொழிலே சிறப்பாதலால் புரவலன் காவலன் அல்லது அரசன் என்னும் பொருளைக் குறித்து நின்றது. அரசு என்பது அரண் என்னும் சொல்லிற்கு இணையாய் காவல் என்னும் கருத்தை அடிப்படையாய்க் கொண்டிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது. வேந்தன் அமைதிக் காலத்தில் ஒவ்வொரு நாளும் பகலில் முதற் பத்து நாழிகை கொடைக்குச் செலவிட்டான். இது போன்ற அரசின் அல்லது புரவலன் கொடைக் குணம் பற்றிப் புரவலன் கொடையாளனைக் குறித்தது. |
புரவாயில் | புரவாயில் puravāyil, பெ. (n.) நகரத்தின் வாயில் (சூடா.);; tower gate of a city or town. [புரம் + வாயில்.] |
புரவாய்தல் | புரவாய்தல் puravāytal, பெ. (n.) புரவாயில் (நாமதீப.493); பார்க்க;See. puravāyil. [புரவாயில் → புரவாய்தல்.] |
புரவாலி | புரவாலி puravāli, பெ. (n.) கழிப்பிடம் (கக்குசு);; latrine, privy (C.G.);. [புறவாலி → புரவாலி.] |
புரவி | புரவி1 puravi, பெ. (n.) குதிரை; horse. ‘கதழ்பரிய புரவி’ (பதிற்றுப். 80, 13);. மறுவ. பாடலம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை, பரி, கந்துகம், கனவட்டம், கோரம். [புரம் = உயர்ந்தமனை. புரம் → புரவி = மதில் தாண்டும் உயர்ந்த குதிரை. (மு.தா. 67);.] புரவி2 puravi, பெ. (n.) 1. முதலாம் விண்மீன் (அசுவதி); (பிங்.);; the first naksatra. 2. குதிரை அல்லது யானை கட்டுமிடம்; stable for horses or elephants. ‘பட்டத்தியானை பூண்ட புரவியிற் குறடும், குதிரை பூண்ட புரவியிற் குறடும்’.(கோயிலொ.17);. [புரம் → புரவி.] புரவி3 puravi, பெ. (n.) பிறப்பு; class, order. ‘கெட்டிக்காரப்புரவி'(யாழ்ப்.); [பிறவி → புரவி (கொ.வ.);.] |
புரவி நூல் | புரவி நூல் puravinūl, பெ.(n. ) குதிரைகளைப் பற்றி கூறும் நூல்; a treatise on horses. “நூல்நெறி நுணங்கிய கால்நவில் புரவி” (அகம்.314); [புரம்-உயரம் புரவி-உயரமான குதிரை] |
புரவிஎடுப்பு | புரவிஎடுப்பு puravieḍuppu, பெ. (n.) ஐயனார் கோயிலில் நிகழும் விழாச் சடங்கு; a ceremony in Ayyanar temple. |புரவி (குதிரை);+எடுப்பு] |
புரவிசயன் | புரவிசயன் puravisayaṉ, பெ. (n.) முப்புரம் வென்றோன்;Śivan, as conqueror of tiripuram. ‘புரவிசயன் சூடந்தரு பாகீரதி'(பாரத. அருச்சுனன்றீர்.7);. [புரம் + விசயன்.] Skt. vijaya → த. விசய |
புரவிசிவுச்சன்னி | புரவிசிவுச்சன்னி puravisivussaṉṉi, பெ. (n.) புறவீச்சு(வின்.);பார்க்க; see puravicய [புறம் + இசிவு + சன்னி] Skt. san-ni-påta → த. சன்னி |
புரவித்தேவர் | புரவித்தேவர் puravittēvar, பெ. (n.) குதிரைமுகமுள்ள தேவர் (அசுவினி தேவதைகள்);; the Asvins, as gods with horse-faces. ‘ஆயுள் பெருகுமா றுதவிக்கப்பர் பிரிந்திடாப் புரவித் தேவர்'(யாகவத.2, மாயவனிலை.14);. [புரவி + தேவர்.] |
புரவியாட்டம் | புரவியாட்டம் puraviyāṭṭam, பெ. (n.) பொய்க்கால் குதிரை; a folk dance performed with a dummy horse. [புரவி + ஆட்டம்.] புரவியாட்டம் puraviyāṭṭam, பெ.. (n.) பொய்க்கால் குதிரையாட்டம்; a folk dance of dummy horse. [புரவி+ஆட்டம்] |
புரவியெடுப்பு | புரவியெடுப்பு puraviyeḍuppu, பெ. (n.) குதிரைஊர்தியில் (வாகனத்தில்); இறைவன் (சுவாமி); எழுந்தருளுந் திருவிழா (பஞ்ச. திருமுக.172);; festival of taking a deity on a horse in procession. [புரவி + எடுப்பு. எடு → எடுப்பு.] |
புரவிவட்டம் | புரவிவட்டம் puravivaṭṭam, பெ. (n.) குதிரையோடும் தெரு (வையாளி வீதி); (சூடா.);; riding ground. [புரவி + வட்டம்.] |
புரவிவேள்வி | புரவிவேள்வி puravivēḷvi, பெ. (n.) குதிரை வேள்வி; horse sacrifice. “அண்ணலம் புரவிவேள்வி யாற்றினன்”(பாகவத.1. பரிட்சித்துவின்.19);. [புரவி + வேள்வி.] |
புரவு | புரவு puravu, பெ. (n.) 1. காப்பு; care, protection. ‘பெயன்மழை புரவின்றாகி'(பதிற்றுப்.26.6); 2. கொடை; gift, grant, boon. ‘இடுகதிறையே புரவெதிர்ந் தோர்க்கென'(பதிற்றுப். 80, 10);. 3. ஆட்சியிடம்; place of jurisdiction. ‘புரவுடையார்களை வரும் புரவாசற வாண்டு'(தேவா.461.5);. 4. அரசிறை; tax. ‘குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் சிறியோன்'(புறநா.75.);. 5. அரசனால் அளிக்கப்படும் இறையிலி நிலம்; land given free of rent by a king. “புரவுத்தொடுத் துண்குவை யாயினும்”(புறநா.260);. ‘எட்டிப்புரவு, காவிதிப்புரவு'(நன்.158, மயிலை);. 6. ஆறுமுதலியவற்றிலிருந்து நீர்பாயும் வயனிலம்; paddy-field irrigated by a river or tank. ஆற்றுப்புரவு. 7. செழுமை; fertility, as of the soil. ‘புரவார் கழனிசூழ்'(திவ். திருவாய்.8, 9, 9);. [புல் → புர் → புர. புரத்தல் = காத்தல், பேணிவளர்த்தல். புர → புரவு.] |
புரவுநெல் | புரவுநெல் puravunel, பெ. (n.) நெல்லாகச் செலுத்தும் நிலவரி; land-tax paid in paddy. ‘அளக்கக் கடவ புரவுநெல் முந்நூற்றுக் காடியும்’ (S.I.I.V.499);. [புரவு + நெல்.] |
புரவுபொன் | புரவுபொன் buravuboṉ, பெ. (n.) வரிவகை; an ancient tax (S.I.I.ii.509, 52);. [புரவு + பொன்.] |
புரவுரிதிணைக்களம் | புரவுரிதிணைக்களம் puravuridiṇaikkaḷam, பெ. (n.) அரசிறைக் கணக்கு வைப்போர் கூடும் அலுவலகம்; office of revenue accountants. [புரவு + வரி + திணைக்களம்.] |
புரவுவரி | புரவுவரி puravuvari, பெ. (n.) அரசிறைக்கணக்கன்; revenue accountant. (S.I.I.ii.306);. [புரவு + வரி. |
புரவென்றியோன் | புரவென்றியோன் puraveṉṟiyōṉ, பெ. (n.) முப்புரம் (திரிபுரம்); வென்றோன், சிவபெருமான்; Sivan, as conqueror of tiripuram. [புரம் + வென்றியோன். வெற்றி → வென்றி.] |
புராணம் | புராணம் purāṇam, பெ. (n.) கடுக்காய்; gallnut. |
புராணி | புராணி1 purāṇi, பெ. (n.) புறணி (தைலவ.தைல.); பார்க்க;See. purani. [புரணி → புராணி.] புராணி2 purāṇi, பெ. (n.) பட்டைவகையுளொன்று; a kind of bark. [புரணி → புராணி.] |
புராணியை | புராணியை purāṇiyai, பெ. (n.) புராணி பார்க்க;See. purāni. [புராணி → புராணியை.] |
புராதன காண்டம் | புராதன காண்டம் purātaṉakāṇṭam, பெ.(n.) விவிலிய நூலின் பழைய ஏற்பாடு (வின்.);; the Old Testament. [Skt. {} → த. புராதனம்+காண்டம்] |
புராதனம் | புராதனம் purātaṉam, பெ.(n.) 1. பழமையானது; that which is ancient. “புராதன மறைக்கும்” (அஷ்டப்.திருவரங்கக். 32);. 2. பழமை; antiquity. 3. கிழத்தனம்; old age. “புராதனத் தாலல்லா திந்தப் புத்திர சோகத்தாலே புலம்பும்” (உத்தரரா.சம்புவ.22);. 4. பழையசோறு (உ.வ.);; boiled rice preserved in water. [Skt. {} → த. புராதனம்] |
புராதனர் | புராதனர் purātaṉar, பெ.(n.) முன்னோர் (வீரசோ.அலங்.4);; ancients. [Skt. {} → த. புராதனர்] |
புராரி | புராரி purāri, பெ. (n.) புரமூன்றெரித்தோன் பார்க்க (பிங்.);;See. pura-mūnrerittön. [புரம் + எளி-புரமெரி → புராரி] |
புரி | புரி2 puridal, 2 செ.கு.வி. (v.i.) 1. முறுக்குக் கொள்ளுதல்; to be twisted, to curl. ‘சுகிர்புரி நரம்பின்'(மலைபடு:23); 2. திரும்புதல்; to turn. ‘மற்றையருகே புரியல்'(திவ். இயற்.திருவிருத்.42,வ்யா.பக்.247);. 3. மிகுதல்; to abound. ‘வனப்புப் புரிந்த தகையினான்'(பரிபா.7,51); 4. அசைதல்; to shake. ‘தார்புரிந்தன்ன'(பதிற்றுப். 66,13); ம. புரியுக. Espire; L spira; Gksperia, [புல் → புர் → புரள். புரளுதல் = உருளுதல், மாறுபாடடைதல். புர் → புரி (வேக,3, 94.95);] புரி3 purittal, 11 செ.குன்றாவி. (v.t.) விரும்பச் செய்தல்; to cause to desire. ‘புரித்த தெங்கிளநீரும்'(சீவக.2402); [புல் → புர் → புரி. புரிதல்(த.வி); – புரித்தல் (பி.வி.); (வே.க.3.87);] புரி4 puri, பெ. (n.) 1. கயிறு; cord, twine, rope. ‘மாற்புரி நரம்பின்'(பெரும்பாண்.181.); 2. முறுக்கு; strand, twist as of straw. ‘புரியடங்கு நரம்பு'(சிறுபாண்.34); 3. சுருள்; curl, as of hair. ‘புரிக்குழன் மடந்தை'(சீவக. 2688); 4. சுரி(கொ.வ.);; spiral, screw. 5. சங்கு; conch. ‘புரியொருகை பற்றி'(திவ். இயற்.1,31); 6. யாழ் நரம்பு; string, as of a lute. ‘புரிவளர் குழலொடு'(சீவக.124);. 7. மாலை; garland, as of pearls. ‘புரிமணி சுமந்த பொற்பூண்'(சீவக.619); 8. கட்டு (சூடா.);; tie, fastening. ம., க., தெ., து. புரி [புல் → புர் → புரி (வே.க.3.94,95); = முறுக்கு, முறுக்கிய கயிறு, உள்திருகிய சங்கு. இடம்புரி = வலமிருந்து இடமாக வளைந்த சங்கு. கொடும்புளி = அறும் நிலையிலுள்ள கம்பியின் அல்லது முடிச்சுப்படும் நிலையிலுள்ள கயிற்றின் கொடு முறுக்கு. முப்புரி = வைக்கோற் பழுதை (த.க. 148.149);] த. புரி → Skt. Puri புரி5 puri, பெ. (n.) 1.செய்கை (சூடா.);; making, doing. 2. விருப்பம் (சீவக.124, உரை);; desire. [புல் → புர் → புரி (வே.க.3.87);] புரி6 purittal, 11 செ.குன்றாவி. (v.t.) நிறைத்தல்; to fil up. ‘நன்மணிபுரித்தன’.(சீவக.1203); 2. பதித்தல்; to enchase, inlay, ‘முத்தம்வாய் புரித்தன'(சீவக.150); [புல் → புர் →புரி] புரி7 puri, பெ. (n.) 1. நகரம் (பிங்.);; town, city. 2. தலைநகரம் (சூடா.);; capital city. 3. மருதநிலத்தூர் (சூடா.);; village of an agricultural tract. 4. உடல்; body. ‘புரிக்கிலேசத்தை யகற்றி யாட்கொள்ளும்'(அருட்யா, vi பிள்ளைப்பெரு.129); க. து. புரி [புல் → புர் → புரி = வளைவு, வளைந்த (சூழ்ந்த); கோட்டை. தமி.வ.15);] த. புரி → Skt. puri தமிழிற் புரம் என்பது கோபுரமுள்ள நகரையும், புரி என்பது கோட்டையுள்ள நகரையும் குறிக்கும். ஆயின், வடமொழியில் இவ்வேறுபாடின்மையால் புர, புரய என்னும் சொற்களும் கோட்டை அல்லது நகர் என்னும் பொதுப்பொருளே தரும். (த.க.149); புரி8 puridal, 4 செ.கு.வி. (v.i.) 1. விளங்குதல்; to shine; to be manifest. “சோதிபுரிந்திடுமதுவே”(சி.சி.2,82); 2.பொருள்விளங்குதல்; to be understood. நன்கு புரிகின்றது. [புல் → புலம் = ஐம்பொறிகள்பொருள்களோடு பொருந்தி அறியும்அறிவு.புல் → புலம் → புலர். புலர்தல் = தெளிதல், தெளிவாதல், விடிதல். (வே.க.3.62,63); புல் → புர் → புரி ] புரி9 purittal, 11 செ.கு.வி. (v.i.) புரி2-தல் பார்க்க;See. puri8-, ‘நின்மலவடிவாய்ப் புரிக்கும்'(ஞானவா.மாவலி.48.); [புல் → புர் → புரி |
புரி’-தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
புரிகன்மம் | புரிகன்மம் purigaṉmam, பெ. (n.) மாற்றிலக்கம் (புதுவை);;(math.); logarithm. [புரி + கன்மம்] |
புரிகயிறு | புரிகயிறு purigayiṟu, பெ. (n.) வைக்கோலால் முறுக்கிச் செய்த கயிறு; rope made of hay. [புரி + கயிறு] |
புரிகுழல் | புரிகுழல் puriguḻl, பெ. (n.) கடைகுழன்று சுருண்ட கூந்தல்; curly tresses. ‘புரிகுழன் மாதர்'(சிலப்.14,37); [புரி + குழல்] |
புரிகை | புரிகை purigai, பெ. (n.) முத்திரை (அங்கக்கிரியை); வகை (சிலப்.3,12,உரை,பக்.81.);;(natya); a hand-pose. [புரி → புரிகை. புல் → புர் → புரி. புரிதல் = செய்தல். புரிகை = கைகளால் முத்திரை செய்கை] |
புரிக்குழல் | புரிக்குழல் purikkuḻl, பெ. (n.) புரிகுழல் பார்க்க;See. puri-kuzal. ‘புரிக்குழன் மடந்தையர்'(சீவக.2688);. ம. புரிகுழல் [புரி + குழல்] |
புரிக்கூடு | புரிக்கூடு purikāṭu, பெ. (n.) நெற்சேர்; straw bin for paddy. ‘புரிக்க்கூட்டில் நின்ற…..பலவருக்கத்து நெல்லு'(சிலப்.10,123,உரை.); [புல் → புர் → புரி = முறுக்கு, சுரி,கயிறு. புரி + கூடு – புரிக்கூடு = வைக்கோற்புரி, நெற்கூடு (வே.க.3,95);] |
புரிசடை | புரிசடை purisaḍai, பெ. (n.) திரண்டு சுருண்ட சடை (வின்.);; tangled, matted locks. [புரி + சடை] |
புரிசம் | புரிசம்1 purisam, பெ. (n.) அருமை (இ.வ.);; Scarcity. புரிசம்2 purisam, பெ. (n.) நான்கு முழ நீளம் (வின்.);; length of four cubits. |
புரிசாலம் | புரிசாலம் puricālam, பெ. (n.) 1. கெஞ்சுகை; urgent entreaty. 2. வேண்டுகை (விண்ணப்பம்); (இ.வ.);; petition. [புரி + சாலம். சாரம் → சாலம்] |
புரிசாலம்பிடி-த்தல் | புரிசாலம்பிடி-த்தல் puricālambiḍittal, 4 செ.குன்றாவி, (v.t.) வருந்தி வேண்டுதல் (வின்.);; to beg earnestly. [புரிசாலம் + பிடி-,] |
புரிசை | புரிசை purisai, பெ. (n.) மதில்; fortification, wall. ‘ஏந்துகொடியிறைப் புரிசை'(புறநா.17); E.murus [புரி → புரிசை = நகரைச்சூழ்ந்த மதில் (வே.க.3.96);] பண்டைத்தமிழகத்தின் கோநகர்களில், ஊரைச்சுற்றிக் கோட்டைமதில் இருந்தது. அது புரிசை எனப்பட்டது. புரிதல் வளைதல். புரிசையுள்ள நகர்ப்பெயர்களே முதலில் புரி என்னும் ஈறு பெற்றன. கோட்டை என்பதும் வளைதற் பொருளதே. கோடுதல் வளைதல். பாம்புரி, கொத்தளம் (bastion);, வாயிற் கோபுரம், பதனம் (rampart);. ஞாயில் முதலிய பல வுறுப்புகளை யுடையது கோட்டைமதில். சில நகர்களில் ஏழெயில்கள் இருந்தன. புறமதிலைச் சுற்றி அகழி இருந்தது. (ப.த.நா.ப.138, 139); |
புரிதாள் | புரிதாள் puritāḷ, பெ. (n.) புரிகட்டை பார்க்க;See purikattai. [புரி+தாள்] |
புரிதிரி-த்தல் | புரிதிரி-த்தல் puridiriddal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கயிற்றுக்காகப் புரிமுறுக்குதல் (யாழ்.அக.);; to twist, as strands for rope-making. 2. கெடுக்க வாய்ப்புத் தேடுதல் (இ.வ.);; to plot one’s ruin. [புர் → புர் → புரி = முறுக்கு, கயிறு. புரி + திரி-,] |
புரிதெறித்தல் | புரிதெறித்தல் purideṟiddal, பெ. (n.) 1. கயிறு அறுகை; breaking of a rope. 2. வழி தவறுகை; failure of a stratagem. [புரி + தெறித்தல்.’தல்’ தொ.பெ.ஈறு] |
புரிநரம்பு | புரிநரம்பு purinarambu, பெ. (n.) யாழிலுள்ள நரம்பு; a string in harp. [புளிர்+நரம்பு] |
புரிநூல் | புரிநூல் purinūl, பெ. (n.) புரிமுந்நூல் பார்க்க;See. purimunnul. ‘திருமார்பினிற் புரிநூலும் பூண்டெழு பொற்பதே'(தேவா.385.3); க. புரிநேண்(திரித்தகயிறு); [புர் → புரி = முறுக்கு. கயிறு. புரி + நூல் ஒ.நோ.முப்புரி = முறுக்கிய முந்நூல் (பூணூல்);] |
புரிந்துகொள்ளுதல் | புரிந்துகொள்ளுதல் purindugoḷḷudal, 10 செ.குன்றாவி. (v.t.) 1. செய்தியைப் பொருள் தெளிவோடு உள்வாங்குதல்; to understand. அவர் சொன்னதை நான் புரிந்து கொண்டேன் (உ.வ.); 2. நிலைமையை யுணர்தல்; to realize, comprehend. அவர் என் நிலைமையைப் புரிந்துகொண்டார். [புரி → புரிந்து + கொள்-,] |
புரிந்துணர்வு | புரிந்துணர்வு purinduṇarvu, பெ.(n.) ஒரு குறிப்பிட்டபிரிவில் அல்லது துறையில் இரண்டு நிறுவனம் போன்றவற்றிற்கு இடையே செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம்; memorandam of understanding. |
புரிந்தோர் | புரிந்தோர் purindōr, பெ. (n.) நண்பர் (சூடா.);; friends. [புல் → புல்கு. புல்குதல் = நண்பராய் மருவுதல். புல் → புர் → புரி. புரிதல் = விரும்புதல் (வே.க.3.87); புரி – புரிந்தோர்] |
புரிபாய்ச்சு-தல் | புரிபாய்ச்சு-தல் puripāyccudal, 5 செகுன்றாவி, (v.t.) சிறு கயிற்றை முறுக்குதற்கு ஒழுங்குபடுத்துதல் (யாழ்ப்);; to arrange strands for making cord. [புரி + பாய்ச்சு. பாய் → பாய்ச்சு] |
புரிப்பி-த்தல் | புரிப்பி-த்தல் purippittal, 11 செகுன்றாவி, (v.t.) வளைந்து திரும்பச் செய்தல்; to cause to bend. “சந்ததம் திருத்தச் செம்பதம் புரிப்பித்து”(திருவாலவா.கடவுள் 2); [புல் → புர் → புரி. புரிதல் = வளைதல், திரும்புதல் புரி → புரிப்பி-, ‘பி’ பி.வி.ஈறு] |
புரிமணை | புரிமணை purimaṇai, பெ. (n.) பாண்டம் வைத்தற்கு வைக்கோலைச் சுற்றியமைத்த பீடம்; ring shaped pad of twisted straw, etc. [புல் → புர் → புரி = முறுக்கு. கயிறு. புரி + மணை – புரிமனை = வைக்கோற் புரியால் செய்யப்பட்ட மணை] |
புரிமாந்தம் | புரிமாந்தம் purimāndam, பெ. (n.) மாவிலங்க மரம்; a tree-crataeva. |
புரிமுகம் | புரிமுகம்1 purimugam, பெ. (n.) கோபுரம் (யாழ்.அக.);; tower at the front of a town. [புரி + முகம். புல் → புர் → புரி,வளைவு, மதில் சூழ்ந்த கோட்டை. புரிமுகம் = மதில் சூழ்ந்த கோபுரம்] புரிமுகம்2 purimugam, பெ. (n.) 1. சங்கு (யாழ்.அக.);; conch. 2. நத்தை; snail. [புரி → முகம். புல் → புர் → புரி = முறுக்கு, சங்கு. புரிமுகம் = வளைந்த சங்கு. ஒ.நோ. வலம்புரி = வலப்புறமாக வளைந்த சங்கு. இடம்புரி = இடப்புறமாக வளைந்த சங்கு] |
புரிமுந்நூல் | புரிமுந்நூல் purimunnūl, பெ. (n.) முறுக்கிய பூணூல்; sacred thread worn by the twice born, consisting of three stands. ‘புரிமுந்நூலணிமார்பர்'(பெரியபு:தடுத்தாட்.117.); [புல் → புரி = முறுக்கு, கயிறு. புரி + முந்நூல். புரிமுந்நூல் = மூன்று நூல்கள் முறுக்குண்ட பூணூல்] |
புரிமுறுக்கல் | புரிமுறுக்கல் purimuṟukkal, பெ. (n.) கோட்சொல்லுகை (யாழ்.அக);; tale bearing. [புரி + முறுக்கல். புல் → புர் → புரி = முறுக்கு, சுருள். முற → முறுக்கல். ‘அல்’ தொ.பெ..ஈறு. புரிமுறுக்கல் = பிணையச்செய்து திரித்தல், திரித்துப் பேசுதல்.] |
புரிமுறுக்கு | புரிமுறுக்கு1 purimuṟukkudal, 5 செகுன்றாவி. (v.t.) கோட்சொல்லுதல்; to carry tales, back-bite. [புரி + முறுக்கு-,] புரிமுறுக்கு2 purimuṟukku, பெ. (n.) புரிமுறுக்கல் பார்க்க;See. purimurukkal. 2. மலராத தாமரைப்பூ (வின்.);; unblown lotԱՏ. [புரி + முறுக்கு.] புரிமுறுக்கு3 purimuṟukku, பெ. (n.) முறுக்கு வளையல்; ring made of twisted hay etc. [புரி + முறுக்கு.] |
புரிமோகம் | புரிமோகம் purimōkam, பெ. (n.) 1. சம்புநாவல் (மலை.);; rose-apple. 2. விளா; w00d-apple. |
புரியட்டகம் | புரியட்டகம் puriyaṭṭagam, பெ. (n.) புரியட்டம் பார்க்க;See. puriyattam. ‘மனாதி தன்மாத்திரை புரியட்டகந்தான்'(சி.சி.2,64.); [புரியட்டம் → புரியட்டகம்] |
புரியட்டகாயம் | புரியட்டகாயம் puriyaṭṭakāyam, பெ. (n.) புரியட்டம் பார்க்க (வின்.);;See. puriyatțam. [புரியட்டம் + காயம்] |
புரியட்டசித்தினி | புரியட்டசித்தினி puriyaṭṭasittiṉi, பெ. (n.) தக்கோலம்; a fragrant drug chewed with betal. |
புரியட்டம் | புரியட்டம் puriyaṭṭam, பெ. (n.) நுண்ணுடம்பு; a kind of spiritual form of body, subtle body. [புல் → புரி = முறுக்கு. புரி → புரியட்டம். பருவுடம்பிற்குள் வெளிப்படையாக அறியவியலாத தன்மையில் முறுக்கு போல் இருப்பதாகக் கொள்ளப்படும் நுண்ணுடம்பு] |
புரியட்டரூபம் | புரியட்டரூபம் puriyaṭṭarūpam, பெ. (n.) புரியட்டம் பார்க்க;See. puriyattam. ‘புரியட்ட ரூபம்தானே பாகனா சரீரமாகி'(சி.சி.2,36.); [புரியட்டம் + ரூபம்] த. உருவம் → Skt rupa → த. ரூபம். |
புரியணை | புரியணை puriyaṇai, பெ. (n.) புரிமனை (தைலவ.தைல.); பார்க்க;See. purimanai. [புரி + அணை.புரிமணை → புரியணை என்றுமாம்] பானையின் அடித்துரைச் சுமக்கவும் அதை நிலத்தில் படாதவாறு தாங்கவும் பின்னப்பட்ட அணை புரியணை. இது வாழைநார், வைக்கோல், தெங்கின்நார், பச்சைக்கொடி முதலியவற்றால் பின்னப்படும். |
புரியம் | புரியம் puriyam, பெ. (n.) கூத்துவகை (பிங்.);; a kind of drama. [புரி → புரியம்] |
புரியிட்டீர்-த்தல் | புரியிட்டீர்-த்தல் puriyiṭṭīrttal, 4 செ.குன்றாவி. (v.t) புரியைக் கட்டியிழு-த்தல் பார்க்க;See. puriyai-k-kattlyllu-. இடந்தொறும் புரியிட்டீர்த்தாரிருநூறு காதம்'(குற்றா. தலகவுற்சன.31.); [புரி → புரியை + இட்டு + ஈர்-,] |
புரியைக்கட்டியிழு-த்தல் | புரியைக்கட்டியிழு-த்தல் puriyaikkaṭṭiyiḻuttal, 4 செ.குன்றாவி, (v.t.) 1. பழுதையினாற் கட்டியிழுத்தல்; to fasten with strands of straw and draw. 2. தொல்லைப் படுத்துதல்; to vex, harass. torment. “நான் உன்னைப் புரியைக்கட்டி யிழுக்கிறேன்”(உ.வ.); [புரியை + கட்டி + இழு-,] |
புரிவலி-த்தல் | புரிவலி-த்தல் purivalittal, செ.கு.வி. (v.i.) கட்டுதல்; to tie, fasten. ‘முத்தாற் புரிவலித்து'(திருவாலவா.32,20); [புரி + வலி-,] |
புரிவளை | புரிவளை purivaḷai, பெ. (n.) முறுக்கு வளையல்; twisted bracelet. ‘புகலாதொழுகும் புரிவளையார் மென்றோள்'(பு.வெ.10,காஞ்சிப்.1); [புரி+வளை, வள் → வளை = வளையல்] |
புரிவிடு-தல் | புரிவிடு-தல் puriviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) கயிறு திரிக்கப் புரியை முறுக்குதல் (வின்.);; to twist for making cord. [புரி + விடு-,] |
புரிவின்மைநயம் | புரிவின்மைநயம் puriviṉmainayam, பெ. (n.) புத்தசமயத்து நயம் நான்கனுள் ஒன்று (மணிமே.30,218);;(Buddh.); a casual relation one of four nayam.q.v. [புரிவு + இன்மை + நயம்] |
புரிவில்புகழ்ச்சியணி | புரிவில்புகழ்ச்சியணி purivilpugaḻcciyaṇi, பெ. (n.) பழிப்பது போலப் புகழும் அணிவகை (வீரசோ.அலங்.12);;(rhet.); indirect or veiled eulogy. [புரிவு + இல் + புகழ்ச்சி + அணி] |
புரிவு | புரிவு1 purivu, பெ. (n.) 1. அன்பு; love, attachment. ‘புரிவொடு நாவினாற் பூவை புணர்த்து'(பு.வெ.ஒழிபு,12); 2. விருப்பம்; desire. ‘வினை தீர்க்கும் புரிவுடையார்'(தேவா.905,1); 3. தொழில்; action. practice. ‘இருவிரளி மிர்த்துப் புரிவொரு சேர்த்து'(கல்லா.8); [புல் → புர் → புரி. புரிதல் = விரும்புதல். புல் → புர் → புரி → பரி = அன்பு (வே.க.3.87);, புரி → புரிவு] புரிவு2 purivu, பெ. (n.) 1. தவறு; error. ‘புரிவிலாமொழி விதுரம்'(பாரத.சூது.43); 2. தப்பி நீங்குகை, escape. ‘புரிவின்றி…. போற்றுவ போற்றி'(பு.வெ.8,20); 3. வேறுபடுகை (அக.நி.);; change. [புரி → புரிவு (வே.க.3.96);] புரிவு3 purivu, பெ. (n.) தெளிவு; clearness, lucidity. ‘புரிவில்புகழ்ச்சி கட்டே'(வீரசோ. அலங்.12); [புல்லுதல் = பொருந்துதல். புல் → புல்கு. புல்குதல் = அனைதல். நண்பராய் மருவுதல். புல் → புலம் → புலன் = பொறியறிவு, அறிவுடைமை, கண்கூடு, தெளிவு (வே.க.3,62,63); புல் → புர் → புரி] |
புரீடமம் | புரீடமம் purīṭamam, பெ. (n.) உளுந்து; black gram. |
புரீத்தி | புரீத்தி purītti, பெ. (n.) தூக்கத்திற்குரிய நாடி வகை; a nerve one that causes Sleep. |
புரு | புரு1 puru, பெ. (n.) 1. மிகுதி (சங்.அக.); abundance. 2. பருமை; greatness. புரு கண்டந் தாங்குந் தன்மையால் (விநாயகபு.46,44); 3. வீடு (மோட்சம்); (வின்.);; heaven. [புல் → பல் → பன்மை = ஒன்றிற்கு மேற்பட்ட தொகைப் பருமை, தொகுதி. புல் → புர் → புரு.] புரு2 puru, பெ. (n.) குழந்தை (வின்.);; child, infant. து. புரு (இளைய);, புருகஞ்சிட(சிறு கன்று); புருநிணெ (இளையகாய், பிஞ்சு); [புள் + புரு (மு.தா.40);] த. புரு → Skt.bhrúna புரு3 puru, பெ. (n.) காட்டுக்குமிழ் (கா.);; french mulberry of the wersern ghat. |
புருங்கி | புருங்கி puruṅgi, பெ. (n.) கரிசலாங்கண்ணி; a plant eclypta prostata. |
புருசு | புருசு purusu, பெ. (n.) வாணவகை (வின்.);: a kind of rocket. புருசு purusu, பெ.(n.) அழுக்கெடுக்குங் கருவி வகை (இ.வ.);; brush. த.வ. தூரி [E. brush → த. புருசு] |
புருடகி | புருடகி puruḍagi, பெ. (n.) புன்னை; poon tree. [புருடம் → புருடகி.] |
புருடன் | புருடன் puruḍaṉ, பெ.(n.) 1. ஆடவன்; man 2. பரமான்மா (வின்.);; God, as the Supreme Soul. 3. ஆதன்; soul. [Skt. {} → த. புருடன்] |
புருடமிரு | புருடமிரு puruḍamiru, பெ. (n.) புருபீரு (சங்.அக); பார்க்க;See. puru biru. |
புருடம் | புருடம் puruḍam, பெ. (n.) புன்னை (மலை.);; common poon. |
புருடா | புருடா1 puruṭā, பெ. (n.) அச்சமூட்டுகை (கொ.வ.);; frightening. [புல் → புர் → புரள். புரளுதல் = உருளுதல், மாறுபாடடைதல், சொற்பிறழ்தல். புரள் → புரட்டு. புரட்டுதல் = உருட்டுதல். கீழ்மேலாகத் திருப்புதல், வஞ்சித்தல். புரள் → புரட்டு = கீழ்மேலாகத் திருப்புகை. சொற்பொருள்திரிப்பு, வஞ்சகம் (வே.க.3.94,95); புரள் → புரடு → புரடா = மாற்றிச்சொல்லி அச்சுறுத்துகை.] புருடா2 puruṭā, பெ. (n.) பொய் (இ.வ.);; falsehood. தெ.புருடா. [புல் → புர் → புரள் → புரட்டு, கீழ்மேலாகத் திருப்புகை, வஞ்சகம். புரள் → புரடு → புரடா.] |
புருடாதிகம் | புருடாதிகம் puruṭātigam, பெ. (n.) பெருநரந்தம் (பம்பளிபாக);; a very big citrus fruit. |
புருடால் | புருடால் puruṭāl, பெ. (n.) புருடா2 பார்க்க;See. puruda2. [புருடா → புருடால்] |
புருடி | புருடி puruḍi, பெ. (n.) புருண்டி பார்க்க;See. pմrմndi. [புருண்டி → புருடி] |
புருடு | புருடு puruḍu, பெ. (n.) 1. பேறுகால தூய்மைக்கேடு (பிரசவத்தீட்டு); (இ.வ.);; ceremonial pollution on account of child birth. 2. மகப்பேறு கூடத்தில் குழந்தைக்கு வரும் புண்கட்டி; skin eruptions of a new born child. க.புருடு; புருடு, புருடி;துட.பிச்அச் (பேறுகாலத்திற்குப்பின்காருவாவரை பெண்கள் தங்கும்குடில்); [புள் → புரு = குழந்தை. புள் → புரு → புருடு] புருடு puruḍu, பெ. (n.) 1 புடைத்துத் தனியே வெளியில் தெரியும் கட்டி. a protrubed eruption 2. மாவு போன்ற அல்லது குழைவு உணவுப் பொருள்களில் கட்டிப்படும் திரள்; a ball like objects in foodstuff. [புரு-புருடு] |
புருடோத்தமநம்பி | புருடோத்தமநம்பி puruṭōttamanambi, பெ.(n.) திருவிசைப்பா பாடிய சிவனடியாருள் ஒருவர்; the author of a padigam in Tiru-v- {}. [Skt. {} → த. புருடோத்தமன்+ நம்பி] |
புருடோத்தமன் | புருடோத்தமன் puruṭōttamaṉ, பெ.(n.) 1. சிறந்தவன்; most excellent man. பிறர் பொருட்காசையில்லாத செய்கையோன் புருஷோத்தமன் (திருவேங்.சத.53);. 2. திருமால்;{}, as the Supreme Being புருடோத்தமன் தெய்வமென்பதும் (திருவேங். சத.1.); 2. புருடோத்தமநம்பி பார்க்க;see {}-nambi. [Skt. {} → த. புருடோத்தமன்] |
புருணமேகம் | புருணமேகம் puruṇamēkam, பெ. (n.) கடுக்காய்; gallnut. |
புருணம் | புருணம் puruṇam, பெ. (n.) கருப்பைக் குழவி (தைலவ.தைல);; foetus. [புள் → புரு = குழந்தை. புள் → பிள் → பிள்ளை. பிள் → பிள் = கரு, கருப்பைக் குழவி, இளமை (மு.தா.40,41.); புரு → புருணம்);] த. புருணம் → Skt, bhrúna |
புருண்டி | புருண்டி puruṇṭi, பெ. (n.) மல்லிகை (மலை.);; jasmine. [புல் → புர். புரு → புருண்டி] த. புருண்டி → Skt, bhürundi. |
புருன்றி | புருன்றி puruṉṟi, பெ. (n.) மல்லிகை; jasmine flower. |
புருபீரு | புருபீரு purupīru, பெ. (n.) தண்ணீர் விட்டான் (மலை);; water root. |
புருபீருகம் | புருபீருகம் purupīrugam, பெ. (n.) புருபீரு பார்க்க;See. purupiru. [புருபீரு → புருபிருகம்] |
புருமோகம் | புருமோகம் purumōkam, பெ. (n.) புரிமோகம் பார்க்க;See. purimogam. மறுவ. சம்பு நாவல் |
புருவத்துடிப்பு | புருவத்துடிப்பு puruvattuḍippu, பெ. (n.) புருவ நடுவிடத்தில் துடித்தலையுருவாக்கும் ஊதை நோய்; a disease which causes constant twitch of the eye-brows. [புருவம் + (அத்து); + துடிப்பு ‘அத்து’ சாரியை, துடி → துடிப்பு] |
புருவத்துமேல் | புருவத்துமேல் puruvattumēl, பெ. (n.) சிவபெருமானது நெற்றிக்கண் (தக்கயாகப்.334, உரை);; Sivan’s third eye, in the forehead. [புருவம் → புருவத்து + மேல்] |
புருவநடு | புருவநடு puruvanaḍu, பெ. (n.) 1. புருவங்களின் இடையிலுள்ள பகுதி; space between the eyebrows. 2. ஆறாதாரங்களுள் ஒன்றான ஆதன் இருப்பிடம் (ஆஞ்ஞை);;(yöga); middle of the forehead considered as the seat of the Soul. [புருவம் + நடு] |
புருவநெரி-த்தல் | புருவநெரி-த்தல் puruvanerittal, 4 செ.கு.வி. (v.i.) சினத்தால் புருவங்களை வளைத்தல் (கொ.வ.);; to knit one’s eyebrows in anger, to frown. [புருவம் + நெரி-] |
புருவப்புழுவெட்டு | புருவப்புழுவெட்டு puruvappuḻuveṭṭu, பெ. (n.) புருவத்திலேற்படுமுடியுதிர்வு நோய்; a disease marked by the falling of the hairs of eyebrow. [புருவம் + புழு + வெட்டு] |
புருவமத்தி | புருவமத்தி puruvamatti, பெ. (n.) புருவநடு பார்க்க;See. puruva-nadu. [புருவம் + மத்தி] Skt. madhya → த. மத்தி |
புருவமத்தியம் | புருவமத்தியம் puruvamattiyam, பெ. (n.) புருவநாடு பார்க்க;See. puruva-nadu. [புருவம் + மத்தியம்] Skt. madhya → த. மத்தியம் |
புருவமையம் | புருவமையம் puruvamaiyam, பெ. (n.) புருவநடு பார்க்க;See. puruva-nadu. [புருவம் + மையம்] Skt. madhya → த. மை. |
புருவம் | புருவம்1 puruvam, பெ. (n.) குதிரை (சது.);; horse. [புரவி → புருவி → புருவம்] புருவம்2 puruvam, பெ. (n.) 1. கண்களின் மேலுள்ள மயிர்வளைவு, வளைந்த கண்பட்டை; eybrow. ‘கொடும்புருவம்'(குறள்,1086); 2. புண்விளிம்பு (வின்.);; lip of a sore. 3. வரம்பு (வின்.);; ridge of flowerbed or plot of garden. [புல் → புரு → புரி, புரிதல் = வளைதல். வலம்புரி இடம்புரி என்னும் சங்குகளை நோக்குக. புரு → புருவம் = கண்மேல் மயிர் வளைவு (த.வ.1.68);] |
புருவம்சுழி-த்தல் | புருவம்சுழி-த்தல் puruvamcuḻittal, 4. செ.கு.வி. (v.i.) புருவ நெரி-த்தல் பார்க்க;See. puruva neri-, [புருவம் + சுழி-,] |
புருவை | புருவை1 puruvai, பெ. (n.) 1. ஆடு; goat. ‘செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை'(நற்.321); 2. செம்மறியாடு (பிங்.);; sheep. 3. பெண்ணாடு; female of goat or sheep. ‘குருமயிர் புருவை'(ஐங்குறு.238); [புல் → புரை → பிரை → பெருகு → பெருக்கு. புல் → புரு → புருவை] புருவை2 puruvai, பெ. (n.) இளமை (சூடா.);; youth, juvenility. [புள் → புரு = குழந்தை. புரு → புருவை = இளமைப்பருவம்] |
புரூஉ | புரூஉ purūu, பெ. (n.) புருவம்; eyebrow. ‘சிலபுரூஉப் பங்கத்தினும்'(தக்கயாகப்.430); [புரு → புருவம். புரு → புரூஉ] |
புரூண்ணம் | புரூண்ணம் purūṇṇam, பெ. (n.) கருப் பத்திலுள்ள முதிர்கரு; foetus. [புரு → புருண்ணம் → புரூண்ணம்] |
புரை | புரை1 puraidal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஒத்தல்; to resemble. ‘வேய்புரை பெழியி…பணைத்தோள்'(பதிற்றுப்.65,8); 2. தைத்தல்; to sew coarsely with a fibre or thread, to stitch. ‘தம்முடைய வஸ்திரத்தைப் புரையாநின்றாராய்'(ஈடு,4,10,7); 3. மறைத்தல் (வின்.);; to take means to hide, as a fault, to Conceal. [புல்லுதல் = பொருந்துதல், ஒத்தல். புல் → புரை (மு.தா.197); புரைதல் = ஒத்தல், பொருத்தித் தைத்தல்.] புரை2 puraidal, 2. செ.கு.வி. (v.i.) 1. பொருந்துதல்; to be becoming or proper. to be appropriate. “புறத்தோ ராங்கட் புரைவ தென்ப”(தொல். பொ.176);. 2. நேர்தல்; to happen, occur. “புணர்ந்தோரிடை முலையல்கல் புரைவது”(பரிபா.6,55);. 3.மூச்சுத் திணறுதல் (இ.வ.);; to be suffocated. க. புருள் [புல்லுதல் = பொருந்தல். புல் → புரை மு.தா.197)] புரை3 puraittal, 11 செ.குன்றாவி. (v.t.) பெருமையாதல்; to be great. ‘பொழிற்பூம் புகலி'(தேவா.73,11); [புல் → பல் → பரு → பெரு → பெருமை. (வே.க.3,72-75); புல் → புர் → புரை] புரை4 purai, பெ. (n.) ஒப்பு (பிங்.);; resemblance. தெ. புருடு [புல் → புரை (மு.தா.197);] புரை5 purai, பெ. (n.) 1. உயர்ச்சி; height, elevation, eminence. ‘முனிவன் புரைவரைக் கீறி'(பரிபா.11.11); 2. பெருமை; greatness. “புரையோய் புரையின்று”(பரிபா.20,73);. [புல் → பல் → பரு → பெரு → பெருமை. (வே.க.3,72-75); புல் → புர் → புரை] புரை6 purai, பெ. (n.) 1. உட்டுளை; tubular hollow. “புரைபுரை கனியப் புகுந்து”(திருவாச.22,3); 2. உட்டுளைப் பொருள் (பிங்.);; tube, pipe. 3. குரல்வளை; wind pipe (C.G.);, 4. விளக்கு மாடம்; small niche in a wall for a lamp. 5. குற்றம்; defect, fault, blemish. ‘புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்'(குறள்,292); 6. உள்ளோடும் புண், உட்டுளைப் புண்; deep ulcer, fistula, sinus. 7. கண்ணோய் வகை; cataract. 8. (உள்ளீடற்ற அல்லது உண்மையில்லாப்); பொய்; false-hood. ‘வடிவிற் பிறந்த புகரிலும் புரையின்றிக்கே'(ஈடு, 4,3,9); 9. களவு (யாழ்.அக.);; theft. 10. நொய்ம்மை (கனமின்மை);; lightness. ‘புரையாய்க் கனமாய்'(தேவா.174,7); 11. பைமடிப்பு அல்லது அறை;(வின்.);; division or pouch of a bag. 12. கூறுபாடு; division of a subject. ‘புரைவிடுத்துரைமோ'(சீவக.1732); ம. புர; க. பொரெ, பொரகெ;தெ. பொர [புல்லுதல் = துளைத்தல். புல் = உட்டுளை யுள்ள நிலைத்தினை வகை, உட்டுளையுள்ள பனை, உட்டுளையுள்ள தென்னை, உட்டுளையுள்ள மூங்கில், சிறுமை. புல் → புன் புன்மை = சிறுமை புல் → புர் → புரை (வே.க.3.101);] Skt.pura; Gk.poros (passage);; L.OF,ME,E.pore (minute opening); புரை7 purai, பெ. (n.) 1. வீடு; house, dwelling. “புரைபுரை பாலிலை செய்ய வல்ல”(திவ்.பெரியாழ்.2,9,1);, “மண்புரை பெருகிய மரமுள் கானம்”(ஐங்குறு.319);. 2. தவச்சாலை; hermitage.(கம்பரா.திருவவ.42); 3. கோயில்; temple. “புரைவயிற் புரைவயிற் பெரிய நல்கி”(பதிற்றுப்.15,37);. 4. அறை; small room. 5. பெட்டியின் அறை; compartment, as of a box. பெட்டிப்புரைக்குள் வை. 6. மாட்டுத் தொழுவம் (மாட்டுவா.23);; cowstall, 7. இடம்; place. “இருமற்றிரைவிரிபுரையை”ஞானா,43,21). 8. மூலை,பக்கம்; corner, side. “பொகுட்டதோர் புரையின் வைகுமால்”(கம்பரா.இரணிய.71);. 9. நிலம், பூமி (பிங்.);; earth. ம.புர; து. பொரெ, புரெ (கூரை);, புர. (வீடு);; துட.பர்ய் (கூரை);;குட.பொரெ (கூரை); [புல் → புர் → புரை (வே.க.3,100);] புரை8 purai, பெ. (n.) பழமை (யாழ்.அக.);; antiquity. புரை9 puraittal, 11 செ.கு.வி. (v.i.) 1. குற்றப்படுதல்; to be defective. 2. தப்புதல்; to escape. ‘உணரவல்லார்க்குப் புரைத்தெங்கும் போகான்'(திருமந்:1774); 3. ஒரு வாய்ப்பாட்டில் (தானத்தே); பாட ஒருவாய்ப்பாட்டிற்கு (தானத்தே); இசை நழுவுதல் (திவாலவா.57,26);;(mus.); to slip into one note when trying another. 4. மறைவு வெளிப்படுதல் (வின்.);; to COme Out, aS a SeCret. தெ.பொரபடு,பொரபோவு [புல் → புர் → புரை] |
புரை இழை | புரை இழை puraiiḻai, பெ. (n.) மாறி மாறி இருக்கும் இழை; alternate thread. [புரை+இழை] |
புரைகிளை-த்தல் | புரைகிளை-த்தல் puraigiḷaittal, 4 செ.கு.வி. (v.i) புரையோடு-தல் பார்க்க;See. purai-y-odu-. [புரை கிளை-,] |
புரைக்கட்டி | புரைக்கட்டி puraikkaṭṭi, பெ. (n.) உட்டுளையுடைய புண்கட்டி (இ.வ.);; tumour. க. பொரெ, புரெ [புரை + கட்டி] |
புரைக்கல் | புரைக்கல் puraikkal, பெ. (n.) மருந்தரைக்கும் குழியம்மி; small stone slab for grinding drugs. [புரை + கல்] |
புரைக்குத்தல் | புரைக்குத்தல் puraikkuttal, பெ. (n.) பிரைக்குத்தல் பார்க்க;See. piral-k-kuttal. [பிரைக்குத்தல் → புரைக்குத்தல்] |
புரைக்குழல் | புரைக்குழல் puraikkuḻl, பெ. (n.) 1. பிடரியில் அல்லது கழுத்தில் தோன்றும் தசைக்கட்டி; dewlap, goitre, morbid enlargement in the nape of neck. 2. புரைக்கட்டி பார்க்க;See. puras-k-katti. [புரை + குழல்] |
புரைக்குழி | புரைக்குழி puraikkuḻi, பெ. (n.) புரைக்கட்டி (பிங்.); பார்க்க;See. purai-k-katți (M.L.);. [புரை + குழி + குள் → குழி] |
புரைக்குழை | புரைக்குழை puraikkuḻai, பெ. (n.) புரைக்குழல் 1 பார்க்க;See. purai-k-kulai 1 (M.L.); [புரை + குழை. குள் → குழை] |
புரைக்கேறு-தல் | புரைக்கேறு-தல் puraikāṟudal, 7 செ.கு.வி. (v.i.) புரையேறுதல்(வின்.); பார்க்க;See. purai-y-eru-, [புரைக்கு + ஏறு-, மூச்சுக்குழலான புரைக்கு உணவுப்பொருள் சென்று விடுதல்] |
புரைசல் | புரைசல்1 puraisal, பெ. (n.) 1. பொத்துகை; mending, darning, braiding. 2.மந்தணம் (இரகசியம்);; secret, private affairs. [புல் → புள் → புண் → புனர். புல் → புர் → புரை → புரைசல்] புரைசல்2 puraisal, பெ. (n.) 1. குழப்பம் (யாழ்.அக.);; disorder, discord, variance. 2. வலுவின்மை; hollow, hole, interstice. 3. வலுவின்மை; weakness. ‘பிறனுடைய புரைசல்களை எப்படி யறியலாம்.'(பஞ்சதந்.64.); 4. குற்றம்; flaw, defect. 5. மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று (இ.வ.);; faw in a precious Stone. [புரை = துளை, சிறுதுளை. புரை → புரைசல் (வே.க.3.102);] |
புரைசு | புரைசு puraisu, பெ. (n.) பலாக (மூ.அ.);; palastree. |
புரைசை | புரைசை puraisai, பெ. (n.) புரசை பார்க்க;See. purasai. “புரைசை யானையிற் கொண்டு”(கம்பரா.பள்ளியடை.126); [புரசை → புரைசை] |
புரைச்சதை | புரைச்சதை puraiccadai, பெ. (n.) கழலை; Sarcoma. |
புரைச்சதைப்புண் | புரைச்சதைப்புண் puraiccadaippuṇ, பெ. (n.) சீழ்க்கழலை; ulcerated sarcoma. [புரைச்சதை + புண்] |
புரைச்சல் | புரைச்சல் puraiccal, பெ. (n.) திணறுமூச்சு (சங். அக.);; Suffocation, panting. [புரை → புரைச்சல்] |
புரைத்தலம் | புரைத்தலம் puraittalam, பெ. (n.) சீழ்ப்பிடித்து புரையோடிய புண்களுக்குப் பயன்படுத்தும் மருந்து; medicated oil for sinus sore, fistula etC. [புரை + தைலம்] Skt. taila → த. தைலம் |
புரைத்தல் | புரைத்தல் puraittal, பெ. (n.) இன்னாமுரல் (அபகர); வகை (திருவாலவா. 57,14, அரும்.இசைமரபு);;(mus.); a defective note in singIng. [புல் → (புல்லம்); → பொல்லம் = ஒட்டை, துளை. புல் → புரை = குற்றம். புரை → புரைத்தல் = பாடும்போது புரை (குற்றம்); விழுதல், புரைவிழுந்த பாடல்] |
புரைபடு-தல் | புரைபடு-தல் buraibaḍudal, 20 செ.கு.வி. (v.i.) வருந்துதல்; to be distressed. ‘புள்ளிநிலனும் புரைபடலரிதென'(பரிபா.2,34.);. [புரை + படு-,] |
புரைபோ-தல் | புரைபோ-தல் puraipōtal, 8 செ.கு.வி. (v.i.) புரையோடு-தல் பார்க்க;See. purai-y-odu-,(M.L.); [புரை + போ-,] |
புரைப்படு-தல் | புரைப்படு-தல் puraippaḍudal, 20 செ.கு.வி. (v.i.) பொந்துபடுதல்; to become hollow, as a tree. “மரம் புரைபட்டது”(தொல்,சொல்.390,உரை);. [புரை + படு-, புல் → புரை = ஒட்டை, துளை. ‘படு’ து.வி.] |
புரைப்பு | புரைப்பு1 puraippu, பெ. (n.) 1. குற்றம்; fault. Defect. “புரைப்பிலாத பரம்பானே”(திவ்.திருவாய். 4,3,9);. 2. ஐயுறவு; doubt. ‘புரைப்பறத் தெளிதல் காட்சி'(மேருமந் .107); [புல்லுதல் = துளைத்தல். புல் = உட்டுளையுள்ள நிலைத்திணைவகை, புல்லரிசி, சிறுமை, புல் → புர் → புரை = உட்டுளை, உட்டுளைப் பொருள், பொய், குற்றம். புரை → புரைப்பு (வே.க.3.101,102] புரைப்பு2 puraippu, பெ. (n.) ஒப்பு; resemblance, likeness. ‘புரைப்பின்று'(பு.வெ.2,6.); [புல் → புரை. புரைதல் = ஒத்தல். (மு.தா.197); புரை = ஒப்பு. புரை → புரைப்பு. ‘பு’. தொ.பெ.ஈறு] |
புரைப்புண் | புரைப்புண் puraippuṇ, பெ. (n.) உள்ளோடும் அல்லது உட்டுளைப் புண்; elongated abscess with only a small orifice, sinus. [புரை + புண்] |
புரைமாறல் | புரைமாறல் puraimāṟal, பெ. (n.) புண்புரை ஆறிக்குணமடைதல்; healing of the sinus. [புரை + மாறல். மாறு → மாறல்] |
புரைமை | புரைமை1 puraimai, பெ. (n.) புரை5 பார்க்க;See. purai.5 ‘மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது'(புறநா.210);. [புரை + புரைமை. ‘மை’ப.பெ.ஈறு] புரைமை2 puraimai, பெ. (n.) ஊடுருவ இடந்தரும் இயல்பு; permeability. [புரை → புரைமை] |
புரைமோர் | புரைமோர் puraimōr, பெ. (n.) பிரைமோர் பார்க்க;See. pirai mðr. மறுவ, உறைமோர் [பிரைமோர் → புரைமோர்] |
புரைய | புரைய puraiya, இடை. (part.) ஒர் உவமஉருபு (தொல்.பொ.290);; particle showing simalarity or resemblance. [புல் → புரை(வி.); = பொருந்து, ஒப்பாகு (பெ.); ஒப்பு.புரைய = போல(உவமஒருபு); (சு.வி.36);] |
புரையகடிக்கரைசல் | புரையகடிக்கரைசல் puraiyagaḍiggaraisal, பெ. (n.) மாங்கிசக்கரைசல்; water distilled from the flesh of birds. |
புரையன் | புரையன் puraiyaṉ, பெ. (n.) 1.வீடு; house. cottage. 2. இலைக்குடில் (பன்னசாலை);; dwelling made of leaves. [புரை → புரையன் = (உட்டுளையுள்ள); வீடு (வே.க.3,102);] |
புரையிசிவு | புரையிசிவு puraiyisivu, பெ. (n.) நீர்கோவை சளிநோய்வகை; neuralgia (M.L);. [பிரை + இசிவு] |
புரையிடம் | புரையிடம் puraiyiḍam, பெ. (n.) 1. தோப்பு; garden(T.A.S.ii,51.);; 2. வீட்டை யொட்டிய வெறுமையான (காலி); இடம்; vacant space at the backyard of a house. புரையிடத்தில் தான் வைக்கோற் போர் வைத்திருக்கிறோம். (உ.வ.); [புரை + இடம்.புல் = உட்டுளையுள்ள நிலைத்திணை வகை, உட்டுளையுள்ள பனை, உட்டுளையுள்ள தென்னை. புல் → புரை = உட்டுளைப்பொருள். புரையிடம் = உட்டுளையுள்ள நிலைத்தினை (தென்னை, பனைமுதலியன); வளருமிடம்] |
புரையுநர் | புரையுநர் puraiyunar, பெ. (n.) ஒப்பவர்; rivals, equals. “புரையுநரில்லாப் புரமையோய்”(திருமுரு.280.);. [புரை = ஒப்பு. புரையுநர் = ஈடானவர், நிகரானவர் சம நிலையாளர்.] |
புரையுள் | புரையுள் puraiyuḷ, பெ. (n.) வீடு(பிங்.);; house. [புல் → புர் → புரை = (உட்டுளையுள்ள); வீடு. புரை → புரையுள் (வே.க.3,102);] |
புரையெடு-த்தல் | புரையெடு-த்தல் puraiyeḍuttal, 4 செ.குன்றாவி (v.t.) பாவிலுள்ள குறைகளை நீக்குதல், ஒட்டியிருக்கும் இழைகளை நீக்குதல்; to remove the defects in loom. [புரை+எடுத்தல்] |
புரையேறு-தல் | புரையேறு-தல் puraiyēṟudal, செ.கு.வி (vi.) உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது மூச்சுக்குழலிற் சென்று அடைத்துக்கொள்ளுதல்; to be suffocated by food passing into the wind pipe. சாப்பிடும்போது பேசாதே, புரையேறிவிடும் (உ.வ.);. [புரை + ஏறு-, ] |
புரையேற்றம் | புரையேற்றம் puraiyēṟṟam, பெ. (v.i.) உணவுப்பொருள் தனக்குரிய வழியிற் செல்லாது உயிர்ப்பு (சுவாச);க் குழலிற் சென்று அடைத்துக் கொள்கை; suffocation due to food entering the wind pipe. [புரை + ஏற்றம். ஏறு → ஏற்றம்] |
புரையோடல் | புரையோடல் puraiyōṭal, பெ. (n.) புரையோடுதல்; becoming fistulous. [புரை + ஒடல். ஒடு → ஒடல்.] |
புரையோடிய | புரையோடிய puraiyōṭiya, பெ.எ. (adj.) பன்மடி வளைவுகளுடைய; sinuous. [புரை + ஒடிய. ஒடு → ஒடிய] |
புரையோடு-தல் | புரையோடு-தல் puraiyōṭudal, 5 செ.கு.வி (v.i.) புண்ணில் உட்டுளையுண்டாதல்; to become fistulous as an ulcer. [புரை + ஒடு-,] |
புரையோர் | புரையோர்1 puraiyōr, பெ. (n.) 1.பெரியோர்; eminent persons. “வேட்கைப்புரையோர்”(பதிற்றுப். 15,31.); 2. மெய்ப்பொருளுணர்ந்தோர்; men of real wisdom. “புரையோரைப் படர்ந்து நீ”(கலித்.15.); E. peer,an equal, a nobleman; L peer, equal. [புல் → புலம் → புலன்.புல் → புரை, புரைதல் = பொருந்துதல் ஒப்பாதல். புல் → புரை – புரைய போல. புரை → புரையோர் = ஒத்தோர். உவமை கூறத்தக்க பெரியோர். ‘ உயர்ந்ததன் மேற்றே உள்ளுங்காலை ‘ (தொல்,1222); என்றதனால் உயர்ந்த பொருளே உவமை கொள்ளப்படுவது மரபு எனவறிக ] புரையோர்2 puraiyōr, பெ. (n.) காதல் மகளிர்; sweet hearts. “புரையோருண்கட்டுயில்”(பதிற்றுப்.16,18);. [புரை → புரையோர்] புரையோர்3 puraiyōr, பெ. (v.i.) 1. கீழோர் (சூடா.);; base persons of low rank. 2. திருடர் (பிங்.);; robberS. மறுவ, புழுக்கை. [புல் → புன்மை = சிறுமை. புல் → புர் → புரை = உள்ளீடற்ற அல்லது உண்மை யில்லாப்பொய், நொய்ம்மை (கனமின்மை);, குற்றம் (வே.க.3.11.102); புரை → புரையோர்] |
புரைவளர்-தல் | புரைவளர்-தல் puraivaḷartal, 3 செ.கு.வி. (v.i.) கண்ணில் சதை வளர்தல் (இ.வ.);; to have cataract developed in the eye. [புரை + வளர்-, ] |
புரைவு | புரைவு puraivu, பெ. (n.) பொருத்துவாய் தையல்; stitching. [புரை → புரைவு. ‘வு’ தொ.பெ.ஈறு] |
புரைவை-த்தல் | புரைவை-த்தல் puraivaittal, 4 செகுன்றாவி. (v.t.) துழாயாக்கல்; to fistulate. [புரை + வை-, ] |
புரோகிதன் | புரோகிதன் purōkidaṉ, பெ.(n.) 1. சடங்கு செய்விக்குங் குரு; family priest. தூய புரோகிதனும் போந்து (பாரதவெண்.66.புதுப்);. 2. ஊர் கணியன்; prognosticator, village astrologer (R.F.);. 3. இந்திரன் (சூடா.);; Indran. த.வ. பூசகன் [Skt. {}-hita → த. புரோகிதன்] |
புரோசை | புரோசை purōcai, பெ.(n.) யானைக் கழுத்திலிடும் கயிறு; halter or head-stall of an elephant. “புரோசையிற் பயின்ற கழற்கொள் சேவடி” (சூளா.சீய.139);. |
புரோரவீளை | புரோரவீளை purōravīḷai, பெ. (n.) ஈளை நோய் வகையுளொன்று; thymic asthma. மறுவ. புரையிசிவு |
புற | புற puṟa, பெ. (n.) புறா பார்க்க;See pura. ‘புன்புறப்பேடை'(ஐங்குறு. 425);. [புறா → புற] |
புறகடம் | புறகடம் puṟagaḍam, பெ. (n.) ஏய்ப்பு (வஞ்சனை); (இ.வ.);; deceit. |
புறகிடு-தல் | புறகிடு-தல் puṟagiḍudal, 20 செ.கு.வி. (v.i.) புறக்கிடு-தல் பார்க்க:See pura-k-kidu -, ‘ஆயினும் புறகிட'(சிவதரு. சனன. 55);. [புறக்கிடு-தல் → புறகிடு-தல்] |
புறகு | புறகு puṟagu, வி.எ. (adv) புறம்பான-வன்-வள்-து; excluded person or thing. ‘சிவனடியார் தம்மைத் தொழுது வந்தணையா தொருவாறொ துங்கும் வன்றொண்டன் புறகு'(பெரியபு. விறன்மிண். 7.);. [பின் → பிற்கு, பிறம் → பிறவு → பிறகு = முதுகு, பிறகு → புறகு (மு.தா, 294.);] |
புறக்கடன் | புறக்கடன் puṟakkaḍaṉ, பெ. (n.) பின்னடமானம் (இ.வ.);; subsequent mortgage of a property. [புறம் + கடன்] |
புறக்கடமை | புறக்கடமை puṟakkaḍamai, பெ. (n.) பழைய வரிவகை; an ancient tax. புறக்கடமை மாத்தால் தரகுக்கும் ஒருபூ குடிப்பற்றுக்கும் ஒரு பணம் (S.l.l.viii, 139);. [புறம் + கடமை] |
புறக்கடல் | புறக்கடல் puṟakkaḍal, பெ. (n.) பெரும்புறக்கடல்; outermost circumambient Sea. [புறம் + கடல்] |
புறக்கடி-த்தல் | புறக்கடி-த்தல் puṟakkaḍittal, 4 செ.குன்றாவி, (v.t.) வெளியேற்றுதல்; to expel, பெண் டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புறக் கடித்தோம் (S.I.I.vii, 49);. [புறகு → புறக்கு → புறக்கடி-,] |
புறக்கடை | புறக்கடை puṟakkaḍai, பெ. (n.) விட்டின் பின்புறம்; backyard, as of a house. மறுவ. புழக்கடை, கொல்லைப்புறம் [புறம் + கடை. கடு → கடை = இடம்] |
புறக்கட்டு | புறக்கட்டு puṟakkaṭṭu, பெ. (n.) 1. வீட்டின் வெளிக்கட்டடம்; out-house. 2. கையை முதுகிலே வைத்துக் கட்டுகை (வின்.);; fastening of the hands behind the back. [புறம் + கட்டு] |
புறக்கணி-த்தல் | புறக்கணி-த்தல் puṟakkaṇittal, 4 செ. குன்றாவி. (v.t.) 1. மதியாதிருத்தல் (பராமுகமாதல்);; to disregard, slight, neglect. ‘உருகா மனத்தார்களைப் புறக்கணித் திடும்'(தேவா. 612, 2);. 2. ஏளனமாகக் கருதுதல் (அலட்சியம் செய்தல்);; to disdain, treat with contempt. ‘புறக் கணித்திடப் பட்டீர்க்கும்'(சீவக. 2376.);. [புறம் + கணி-,] |
புறக்கணிப்பு | புறக்கணிப்பு puṟakkaṇippu, பெ. (n.) கலந்து கொள்ள மறுத்து ஒதுங்குவது; boycott. ‘தேர்தல் புறக்கணிப்பு'(உ.வ.);. [புறம் + கணிப்பு. கணி → கணிப்பு.] |
புறக்கண் | புறக்கண் puṟakkaṇ, பெ. (n.) 1. கண்ணிமையின் வெளிப்புறம்; exterior of the eyelid. 2. புற(தூல);க்கண்; physical eye. opp. to aga-k-kan. [புறம் + கண்] புறக்கண் காண முடியாதவற்றையும் நெடுந் தொலைவிலுள்ள வற்றையும் கண்டறியும் ஓர் அறிவுக்கண் போன்ற உறுப்பு குமரிநாட்டு மக்கள் நெற்றியிலிருந்ததென்றும் அதனாலேயே அவர்தம் இறைவனுக்கும் (சிவனுக்கும்); ஒரு நெற்றிக் கண்ணைப் படைத்துக் கூறினரென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர் (ப.த.நா.ப. 83);. |
புறக்கந்து | புறக்கந்து1 puṟakkandu, பெ. (n.) வண்டியச்சின் முனை (யாழ்ப்);, extremity of an axle-tree. [புறம் + கந்து] புறக்கந்து2 puṟakkandu, பெ. (n.) களத்துத் துற்றி விழுந்த பதர்க்குப்பை; heap of chaff formed in Winnowing grain. [புறம் + கந்து] |
புறக்கரணம் | புறக்கரணம் puṟakkaraṇam, பெ. (n.) 1. கைகால் முதலிய உறுப்பு; limb of the body. 2. தொழிற்கு உதவியாகவுள்ள வெளிக்கருவி (பி.வி. 12);; objective instruments. [புறம் + கரணம்] |
புறக்கலனை | புறக்கலனை puṟakkalaṉai, பெ. (n.) பழைய வரிவகை; an ancient tax (S.I.I.vii, 79.);. [புறம் + கலனை] |
புறக்களம் | புறக்களம் puṟakkaḷam, பெ. (n.) களத்தில் விளைச்சலை அளந்த பின் சிதறிக்கிடப்பதும் தொழிலாளிகட்கு உரிமையானதுமான தவசப் பகுதி; scattered grain left after measuring the produce on the threshing-floor, treated as allowance to agricultural labourers.(C.G.); [புறம் + களம். குல் → குள் → கள். கள்ளுதல் = கூடுதல், பொருந்துதல். கள் → களம் = கூட்டம்,கூடுமிடம்,நெற்களம்] |
புறக்கழனியார் | புறக்கழனியார் puṟakkaḻṉiyār, பெ. (n.) ஊருக்கு வெளியே வாழுங் குடிகள்; people who live outside the village (I.M.P.Cg.689);. [புறம் + கழனியார். கழனி → கழனியார்] |
புறக்கழுத்து | புறக்கழுத்து puṟakkaḻuttu, பெ. (n.) பிடர்; nape of the neck. ‘மயிலினது புறக்கழுத்தை யொத்த திருமேனியை யுடைய மாயவன்'(சிலப். 17, பக். 458.);. [புறம் + கழுத்து] |
புறக்காதுபடல் | புறக்காதுபடல் buṟakkātubaḍal, பெ. (n.) குத்திய காதில் சோணைகோணி மடிந் திருக்கை (யாழ்ப்.);; turning forward of the lobe of the ear, caused by bad treatment after perforation. [புறம் + காது + படல்] |
புறக்காப்பு | புறக்காப்பு puṟakkāppu, பெ. (n.) புறத்தே யமைக்கப்படுங் காவல்; outer guard of sentry. ‘பாடி காவலர் …. புறக்காப்பமைத்து'(பெருங். மகத. 17, 215.);. [புறம் + காப்பு. கா → காப்பு] |
புறக்காழ் | புறக்காழ் puṟakkāḻ, பெ. (n.) 1. பனை முதலியவற்றில் உள்ள வெளிவயிரம் (தொல். பொ. 640.);; hard outer part of the stem of a tree, as of palmyra. 2. பெண்மரம் (திவா.);; female tree, as palmyra. [புறம் + காழ்] |
புறக்காவல் | புறக்காவல் puṟakkāval, பெ. (n.) மெய்க் காவல் (வின்.);; body-guard. [புறம் + காவல். கா → காவல்] |
புறக்கிடு-தல் | புறக்கிடு-தல் puṟakkiḍudal, செ.கு.வி. (vi) புறங்காட்டியோடுதல்; to flee, take to flight, showing one’s back to enemy. ‘வெருவொடு புறக்கிடுவது'(பாரத. அணி.28.);. [பின் → பிற்கு. பிறம் → பிறவு → பிறகு = முதுகு. பிறகு → பிறக்கு → முதுகு. பிறகு → புறகு, பிறக்கு → புறக்கு. புறக்கு + இடு. புறக்கிடுதல் = புறங்காட்டுதல் (மு.தா, 294);] |
புறக்கு | புறக்கு puṟakku, பெ. (n.) வெளிப்புறம்; outer side of face of anything. ‘வெண்புறக் குடைய திரிமருப் பிரலை'(அகநா. 139.);. [புறம் → புறவு → புறகு = வெளிப்புறம், புறம்பானவன். புறகு → புறக்கு (மு.தா, 295);] |
புறக்குடி | புறக்குடி puṟakkuḍi, பெ. (n.) 1. நிலச்சொந்தக்காரர்க்குக் கட்டுப்படாத குடியானவன்; farmer or field-labourer, not being a regular tenant under a landlord (Tj.);. 2. வெளியூரிற் சென்று வேளாண்மை செய்யும் குடியானவன்; ryot who farms in neighbouring villages, a class of farmers in Salem district. (G. Sm. D, ii, 62.); 3. புறஞ்சேரி பார்க்க;See puranceri. ‘புறக்குடி கடந்து'(மணிமே, 28, 4.);. [புறம் + குடி. குல் → குள் → குட → குடி] |
புறக்குடிப்பாயகாரி | புறக்குடிப்பாயகாரி puṟakkuḍippāyakāri, பெ. (n.) சிற்றுாரில் நிலவுரிமை பெறாத வந்தேறியான குடி; tenant without any occupancy right. (M.N.A.D.284.); [புறக்குடி + பாயகாரி] |
புறக்குடை | புறக்குடை puṟakkuḍai, பெ. (n.) புறக்கொடை பார்க்க;See pura-k-kodai. . ‘புறக்குடை நீவி'(பெருங். மகத. 14, 144.);. [புறக்கொடை → புறக்குடை] |
புறக்குழல் | புறக்குழல் puṟakkuḻl, பெ. (n.) கால் நடைகளுக்கு வருங் கழலை; tumour, round tumour, as on the neck of a bull, goitre. (M.L.); [புறம் + குழல்] |
புறக்கூத்து | புறக்கூத்து puṟakāttu, பெ. (n.) கூத்துவகை (சிலப். 3, 16, உரை.);; a kind of dance. [புறம் + கூத்து] குதித்தாடுவது கூத்து. அது வேத்தியல் பொதுவியல், அகக்கூத்து புறக்கூத்து என்றாற் போல் பல்வேறு வகையில் இவ்விருவகைப்படும். (ப.த.நா.ப. 128);. |
புறக்கூரை | புறக்கூரை puṟakārai, பெ. (n.) விட்டின் பின்புறம் தாழும் கூரை (வின்.);, part of the roof, sloping towards the back of a house. [புறம் + கூரை. புறம் = முதுகுபின் பக்கம்] |
புறக்கை | புறக்கை puṟakkai, பெ. (n.) 1. வெளிப்புறம்; outside. 2. வலப்புறம்; right side in turning. 3. புறங்கை பார்க்க;See puarangai. [புறம் + கை – புறங்கை → புறக்கை, மூடின கையின் உட்புறமாயிருப்பது உள்ளங்கை அல்லது அகங்கை. அதன் வெளிப் புறமாயிருப்பது புறங்கை. பிறம் → புறம் = வெளி, வெளிப்பக்கம் அல்லது வெளிப்புறம்] |
புறக்கொடு | புறக்கொடு1 puṟakkoḍuttal, செ.கு.வி. (v.i.) தோற்றோடுதல், to turn back and flee after defeat. ‘புறக்கொடுத்திறத்தி'(புறநா. 8);. [புறம் + கொடு – புறங்கொடு → புறக்கொடு. பிறம் → புறம = முதுகு] புறக்கொடு2 puṟakkoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) போகவிடுதல்; to allow to depart, let lose. ‘திருப்புறக் கொடுத்த செம் பொற்றாமரை'(சீவக. 560);. [புறம் + கொடு – புறங்கொடு → புறக்கொடு, பிறம் → புறம் = முதுகு. போகவிடுதல் அதாவது திரும்பிப்போதல் முதுகைக் காட்டிச் செல்லும் தன்மையது இவ்வடிப்படையிலேயே புறக்கொடுத்தல் போகவிடுதலைக் குறித்தது] |
புறக்கொடை | புறக்கொடை puṟakkoḍai, பெ. (n.) 1. போரில் முதுகு காட்டுகை; turning the back in battle-field. ‘வினையை வென்று புறக்கொடை காணுமன்றே'(சீவக. 1430.);. 2. புறங்காப்பு பார்க்க;See puran-kāppu. ‘தம்பி புறக்கொடை காத்து நிற்ப'(கம்பரா. மாயாசன. 23);. 3. கோயிலின் வெளிப்புறம்; outside of a temple. ‘திருப்புறக் கொடையில் அருளாளதாசன் வன்னுந் திருநந்தவனம்'(S.I.I.iii. 141);. 4. உடலின் பின்புறம்; back of the body. 5. பிரிந்த நிலை; separation, absence. “மற்றவர் புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார்”(கலித்.25);. [புறம் + கொடை. பிறம் → புறம் = முதுகு, வெளிப்பக்கம். கொடு → கொடை] |
புறக்கோடி | புறக்கோடி puṟakāṭi, பெ. (n.) புறக்கடை பார்க்க;See pura-k-kadai. [புறம் + கோடி. கோடு → கோடி] |
புறக்கோட்டை | புறக்கோட்டை puṟakāṭṭai, பெ. (n.) முதன்மைக் கோட்டையைக் காக்கும் கட்டடம்; Outer defence to a castle; barbican. [புறம் + கோட்டை. புறம் = வெளி, வெளிப்பக்கம். குள் → கொள் → கோண் → கோடு, கோடுதல் = வளைதல். கோடு → கோட்டம் வளைவு. கோட்டம் → கோட்டை] |
புறக்கோயில் | புறக்கோயில் puṟakāyil, பெ. (n.) வெளியிலுள்ள கோயில்(S.I.I.v, 329);; the outer shrine . [புறம் + கோயில், கோ + இல் → கோயில்] |
புறங்கடை | புறங்கடை1 puṟaṅgaḍai, பெ. (n.) 1. வீட்டின் வெளிப்புறம்; outside of a house. ‘புறங்கடை வைத்தீவர் சோறும்'(நாலடி. 293.);. 2. வெளியிடம், பிறர்க்கு உரிமையான இடம் (பிரதேசம்);; locality other than one’s own. ‘புறங்கடை நல்லிசையு நாட்டும்'(நீதிநெறி. 2);. [புறம் + கடை. புறம் = வெளி, வெளிப்புறம்] புறங்கடை2 puṟaṅgaḍai, பெ. (n.) பின்பிறந்தோன்; younger brother. ‘முந்நீர் வண்ணன் புறங்கடை'(பெரும்பாண். 30);. [பின் → பிற → பிறவு → பிறகு → பிறக்கு. பிறக்கிடுதல் = பின்னுக்குச் செல்லுதல். பிறக்கு – பிறங்கு → பிறங்கடை = பின்னால் வரும் உரிமையாளன் (வாரிசு); (மு.தா. 293); பிறங்கடை → புறங்கடை] |
புறங்கழித்தல் | புறங்கழித்தல் puṟaṅgaḻittal, பெ. (n.) நாட்டுக் கோட்டைச் செட்டிகளின் திருமணத்திற்கு முன் பூசகன் (புரோகிதன்); மணமகளின் தலை, தோள், முழந்தாள்களில் வேப்பங்குழையால் தொட்டுப் பின் அதனை எறிந்துவிடுஞ் சடங்கு; a ceremoney preliminary to a marriage among Nattuköttal-c-chetties wherein the purohit touches the bride’s head. shoulders and knees with margosa twigs, and throws them away. (E.T.V. 266.);: [புறம் + கழித்தல். கழி → கழித்தல். ‘தல்’ தொ.பெ.ஈறு] |
புறங்கா-த்தல் | புறங்கா-த்தல் puṟaṅgāttal, 4 செ.குன்றாவி. (v.t.) காத்தல்; to guard, protect, save. ‘வழிபடு தெய்வ நிற்புறங் காப்ப'(தொல்.பொ. 422.);. [புறம் + கா-, ] |
புறங்காடு | புறங்காடு puṟaṅgāṭu, பெ. (n.) பிணத்தை எரிக்கும் அல்லது புதைக்கும் இடம் (பிங்.);; place of cremation or burial. ‘புறங்காட்டுதிர்ந்துக்க பல்லென்பு'(நாலடி,45.);. மறுவ. சுடுகாடு, காளவனம். பிணக்காடு இடுகாடு, ஈமம், படுகாடு, சுடுநிலம். [புறம் + காடு] ஊருக்குப் புறம்பாக அதாவது வெளியே அமைந்த இடம். |
புறங்காட்டு | புறங்காட்டு1 puṟaṅgāṭṭudal, 15 செ.கு.வி. (v.i.) 1. அவமதிப்புண்டாகப் பின்புறந் திரும்புதல்; to turn one’s back in contempt. 2. தோற்றோடுதல்; to show one’s back, in defeat. ‘தாட்புறக்குப் போந்த கமடம் புறங்காட்ட'(சிவப். பிர. வெங்கையு. 206);. 3. வெளிக்குக் காட்டுதல்; to have the outward appearance of, to pretend. ‘தாழ்ந்தவராய்ப் புறங்காட்டி யகத்திலே வஞ்சம் வைத்து’ (அருட்பா, vi, பிள்ளைப்பெரு. 106); ம. புறம்காட்டுக [புறம் + காட்டு-, ] புறங்காட்டு2 puṟaṅgāṭṭudal, 15 செ.குன்றாவி. (v.t.) புறங்காண்-தல் பார்க்க;See puran-kān-. [புறம் + காட்டு-, காண் (த.வி.); – காட்டு (பி.வி.); ] |
புறங்காண்(ணு)-தல் | புறங்காண்(ணு)-தல் puṟaṅgāṇṇudal, 16 செ.குன்றாவி (v.t.) முறியடித்தல்; to defeat put to flight. ‘புரிநாண் புடையிற் புறங்காண்ட லல்லால்'(கலித். 15.); [புறம் + காண்-,] |
புறங்கான் | புறங்கான் puṟaṅgāṉ, பெ. (n.) முல்லைநிலம்; jungle. pastoral tract. ‘புறங்கானில் வாழ் கோபாலரோழ்'(பாரத. இராச. 115.);. [புறம் + கான்.பிறம் → பிறம் = மருத நிலத் திற்குப் புறம்பான முல்லை (மு.தா. 295);] |
புறங்காப்பு | புறங்காப்பு puṟaṅgāppu, பெ. (n.) புறத்தில் நின்று பாதுகாக்கை; acting as body guard. ‘புறங்காப் பிளையர்'(பெருங், உஞ்சைக். 33.99.);. [புறம் + காப்பு. கா. → காப்பு] |
புறங்கால் | புறங்கால் puṟaṅgāl, பெ. (n.) 1. பாதத்தின் மேற்புறம்; upper part of the foot. instep. ‘புறங்காலிற் போக விறைப்பேன்'(கலித். 144.);. 2. குதிங்காலின் மேற்புறம் (இ.வ.);; heel. ம. புறங்கால். புறவடி [புறம் + கால். பாதத்தில் அடிப் புறமாயிருப்பது உள்ளங்கால் (உள் + அகம் + கால்);. அதன் வெளிப்புறமா இருப்பது புறங்கால் (பாதத்தின் மேற்புறம்);. முன்னங்காலுக்குப் பின்புறமாயிருப்பதும் புறங்கால் (குதிங்காலின் மேற்புறம்); புறம் = வெளி வெளிப்பக்கம், பக்கம். மேற்பக்கம்] |
புறங்காழ் | புறங்காழ் puṟaṅgāḻ, பெ. (n.) புறக்காழ், 2. (வின்.); பார்க்க;See pura-k-kāl-2 [புறம் + காழ் → புறங்காழ் → புறங்காழ்] |
புறங்காவல் | புறங்காவல் puṟaṅgāval, பெ. (n.) மெய்காப்பாளர்; body guard. “சுற்றி நின்றார் புறங்காவலமரர்”(தேவா. 271, 2); [புறம் + காவல். கா → காவல்] |
புறங்குடி | புறங்குடி puṟaṅguḍi, பெ. (n.) தஞ்சை மாவட்ட ஊர்; a village in Tañjāvūr dt. [புறம் + குடி] |
புறங்கூறு-தல் | புறங்கூறு-தல் puṟaṅāṟudal, 7 செ.கு.வி. (v.i.) 1. காணாவிடத்துப் பிறர்மேல் அலர்தூற்றுதல்; to backbite, slander. ‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்'(குறள், 183.);. 2. மந்தணத்தை வெளிப்படுத்தல் (வின்.);; to expose Secrets. மறுவ. கோள்சொல்லுதல் [புறம் + கூறு-, பின் → பின → பிறம் → பிறம்பு, பிறம் → புறம் = முதுகு, வெளி, வெளிப் பக்கம். புறங்கூறுதல் = பின்னால் பழித்தல் (மு.தா. 293, 294);] உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறுதலே புறங்கூறுதல் ஆகும். எனினும் உரையா சிரியர்கள் ‘யாவரையும் இகழ்ச்சி யானவற்றைப் புறத்துரையாமை’ (மணக்.குறள், அதி.முன்.); என்றும் ‘ஒருவரையொருவர் அவர் புறத் துரையாமை’ (இளம்.தொல்.பொருள்.74); என்றும் ‘காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை (பரிமே. குறள், அதி.19); என்றும் காணாத விடத்துக் கூறுவதையே புறங்கூறுதல் என்று குறித்துள்ளனர். ஒருவரைக்காணாத விடத்தில் அவரைப்பற்றி உண்மைக்குப் புறம்பானவற்றைப் பேசுவதில் தயக்கம் ஏதும் இருக்காத நிலை பற்றியே காணாதவழிப் பேசுவது முதன்மை எய்தியது. |
புறங்கூற்றாளன் | புறங்கூற்றாளன் puṟaṅāṟṟāḷaṉ, பெ. (n.) பிறரைக் காணாவிடத்துப் பழிப்போன்; backbiter, slanderer. ‘பொய்க்கரியாளர் புறங்கூற்றாளர்ர்'(சிலப். 5, 131.);. மறுவ. புறணிபேசுபவன் [புறங்கூற்று + ஆளன்.] |
புறங்கூற்று | புறங்கூற்று puṟaṅāṟṟu, பெ. (n.) காணாவிடத்துப் பிறர்மேல் பழிதூற்றுகை; slander, backbiting. ‘தீய புறங்கூற்றின் மூகையாய்'(நாலடி, 158.); [புறம் + கூற்று. கூறு → கூற்று] |
புறங்கை | புறங்கை puṟaṅgai, பெ. (n.) கையின் பின்புறம்; back of palm. ‘அகங்கை யொட்டியும் புறங்கையிற் புகுத்தியும்'(பெருங். வத்தவ. 12, 83.);. [புறம் + கை. மூடின கையின் உட் புறமாயிருப்பது உள்ளங்கை அல்லது அகங்கை. அதன் வெளிப் புறமாயிருப்பது புறங்கை. பிறம் → புறம் = வெளி, வெளிப் பக்கம் (மு.தா.294,295); செய் → கெய் → கை. அகப்பகையும் புறப்பகையும் போல் பிரிந்துநில்லாது அகங்கையும் புறங்கையும் ஒன்றி நிற்கும்] |
புறங்கைநாறி | புறங்கைநாறி puṟaṅgaināṟi, பெ. (n.) மரவகை; a tree. |
புறங்கைந்க்கு-தல் | புறங்கைந்க்கு-தல் puṟaṅgainkkudal, 15 செ.கு.வி. (v.i.) கையின் மேற்புறத்தை நக்குதல்) போகூழ் மிகுதல்; lit, to lick the back of one’s hand, to be poor. [புறம் + கை – புறங்கை + நக்கு-] பொருளைக் கையாள்பவன் கொள்ளும் சிறுநுகர்ச்சி அப்பொருளின் சிறு கூற்றைக் குறைக்கும். இது பொருள் உடையானுக்கு இழப்பாவது நோக்கிப் புறங்கை நக்குதல் போகூழைக் குறித்தது. |
புறங்கொடு-த்தல் | புறங்கொடு-த்தல் puṟaṅgoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. பின்புறங் காட்டுதல்; to turn one’s back. ‘நாணென்னு நல்லாள் புறங்கொடுக்கும்'(குறள், 924);. 2. புறங்காட்டு2-தல் பார்க்க;See purari-kāttu2-. [புறம் + கொடு-,] |
புறச்சபை | புறச்சபை buṟaccabai, பெ. (n.) நல்லருளைப் பொறாத (நற்கருணையனுபவியாத); கிறித்தவர் கூட்டம்; non-conformed Chiristian, catechumen (Chr.); [புறம் + சபை. அவை → சவை → சபை] |
புறச்சபையான் | புறச்சபையான் buṟaccabaiyāṉ, பெ. (n.) நல்லருளைப் பெறாத (நற்கருணை யனுபவியாத); கிறித்தவன்; non-conformed Christian; catechumen. [புறச்சபை → புறச்சபையான்] |
புறச்சமயம் | புறச்சமயம் puṟaccamayam, பெ. (n.) மாறுபட்ட கொள்கையுள்ள சமயம் (சி.சி. 8, 11); (பிங்);; heterodox religious system. [புறம் + சமயம்] ‘அகம்’ தன் கொள்கையைச் சேர்ந்தது. |
புறச்சாட்சி | புறச்சாட்சி puṟaccāṭci, பெ. (n.) புறச்சான்று(வின்.);பார்க்க;See pura-c-canru. [புறம் + சாட்சி] Skt. šāksin → த. சாட்சி |
புறச்சான்று | புறச்சான்று puṟaccāṉṟu, பெ. (n.) 1. சூழ்நிலைகளை உன்னி (ஊகி);த்தறிய விடும் சான்று; external evidence. 2. கையொப்பமிட்ட சான்றாளியல்லாத வேறு சான்றாளி; witness other than attesting witnesses. 3. முன் சொன்ன சான்றை உடன் பட்டு அல்லது மறுத்துக் கூறும் சான்றாளி; witness brought to support or disprove evidence previously let in. [புறம் + சான்று] |
புறச்சுட்டு | புறச்சுட்டு puṟaccuṭṭu, பெ. (n.) சொல்லிற்குப் புறத்துறுப்பால் வருஞ் சுட்டெழுத்து;(gram.); demonstrative prefix a, i, u, not forming an integral part of the word of which it is a component, opp. to aga-c Cսttս. [புறம் + சுட்டு.] எ-டு: அப் பையன், இப் பெண். |
புறச்சுற்று | புறச்சுற்று puṟaccuṟṟu, பெ. (n.) 1. சுற்றுப்புற இடம் (பிரதேசம்);; outlying parts of a town or a village. 2. சுற்றுப்புரவமைதி; environment, surroundings. க. கொரசுத்து [புறம் + சுற்று] |
புறச்சுவர்தீற்று-தல் | புறச்சுவர்தீற்று-தல் puṟaccuvardīṟṟudal, 15 செ.கு.வி. (v.i.) 1. உறவினரை மதிக்காமல் (அலட்சியம்); செய்து பிறருக்கு மதிப்பு (உபசாரம்); செய்தல் (வின்.);; to entertain strangers while neglecting one’s own kinsmen. 2. அகத் தூய்மையின்றிப் புறத்தில் ஒழுங்கானவர்போல் நடத்தல் (வின்.);; to be scrupulous in external conduct while being wicked at heart. [புறம் + சுவர் + திற்று-, ] |
புறச்சேரி | புறச்சேரி1 puṟaccēri, பெ. (n.) புறஞ்சேரி பார்க்க;See purañcēri. ‘பலகோழி யுறைகிணற்றுப் புறச்சேரி'(பட்டினப். 77.);. [புறம் + சேரி – புறஞ்சேரி. புறஞ்சேரி → புறச்சேரி. சேர் → சேரி] புறச்சேரி2 puṟaccēri, பெ. (n.) பறைச் சேரி (எங்களூர், 132.);; Pariah quarters. [புறம் + சேரி] |
புறச்சொல் | புறச்சொல் puṟaccol, பெ. (n.) நாடகத்தில் தனக்குட் பேசிக் கொள்ளாமல் எல்லோரும் கேட்கும்படியாக உரைக்கும் சொல் (சிலப். 3, 13, உரை.);;(dram.); what is spoken aloud. [புறம் + சொல்] |
புறஞ்சாய்-தல் | புறஞ்சாய்-தல் puṟañjāytal, 3 செ.கு.வி. (v.i.) தோற்றல்; to be defeated. routed. ‘புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே'(கலித். 89); [புறம் + சாய்-] |
புறஞ்சிறை | புறஞ்சிறை puṟañjiṟai, பெ. (n.) 1. மாளிகை முதலியவற்றிக்கு அருகிலுள்ள இடம்; premises in the neighbourhood of a palace or castle. ‘தாரருந் தகைப்பிற புறஞ்சிறை'(பதிற்றுப். 64, 8);. 2. வேலிக்குப் புறம்பானது; place outside the fence, as of a field. ‘புறஞ்சிறை மாக்கட்கு…… புய்த்தெறி கரும்பின்'(புறநா. 28.);. 3. புறஞ்சேரி பார்க்க;See puranceri, ‘புறஞ்சிறைப் பொழிலும்'(சிலப்.14,1);. 4. அருகிலுள்ள இடம்; neighbourhood, vicinity. ‘யாமே புறஞ்சிறை யிருந்தும் பொன்னன்னம்மே'(புறநா. 84.);. [புறம் + சிறை] |
புறஞ்சிறைப்பாடி | புறஞ்சிறைப்பாடி puṟañjiṟaippāṭi, பெ. (n.) நகர்க்கு வெளியில் அமைந்துள்ள சேரி; hamlet adjoining a city. ‘புறஞ்சிறைப் பாடியில் ஆநிரை காக்கும்'(தொல். பொ. 57. உரை);. [புறஞ்சிறை + பாடி. படு → பாடு → பாடி] |
புறஞ்சுவர்கோலஞ்செய்-தல் | புறஞ்சுவர்கோலஞ்செய்-தல் puṟañjuvarālañjeytal, 1 செ.கு.வி. (v.i) lit. to decorate the outside of a wall; to adorn the body without removing the inner defects. ‘புறஞ்சுவர் கோலஞ் செய்து புட்கங்வக் கிடக்கின்றிரே'(திவ். திருமாலை, 6.); [புறஞ்சுவம் + கோலம் + செய்-] ‘புறச்சுவர்தீற்று-தல்’ பார்க்க |
புறஞ்செய் | புறஞ்செய்1 puṟañjeytal, 1 செ.குன்றாவி. (v.t.) 1. உடம்பை அழகு செய்தல்; to adorn the body. ‘புறஞ்செயச் சிதைதல்'(தொல். பொ. 266.); 2. காப்பாற்றுதல்; to protect, cherish, maintain. ‘வைகலுமில்புறஞ் செய்தலின்'(திரிகடு. 64.);. [புறம் + செய்-,] புறஞ்செய்2 puṟañjeytal, 1 செ.குன்றாவி. (v.t.) வெளியேற்றுதல்; to extern, to expel. “இந்நாட்டு மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்”(பாரதி. தேசீய. 47); [புறம் + செய்-,] |
புறஞ்சேரி | புறஞ்சேரி puṟañjēri, பெ. (n.) நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் இடம்; outskirts of a city: suburb. ‘புறஞ்சேரி யிறுத்த காதை'(சிலப். 13, தலைப்பு); [புறம் + சேரி. சேர் → சேரி] |
புறஞ்சொல் | புறஞ்சொல்1 puṟañjolludal, 15 செ.கு.வி. (v.i.) கோட் சொல்லுதல்; to slander, backbite. ‘புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'(குறள், 185.); [புறம் + சொல். புறம் = முதுகு, வெளி, வெளிப் பக்கம். புறஞ்சொல்லுதல் = பின்னாற் பழித்தல்] புறஞ்சொல்2 puṟañjol, பெ. (n.) 1. வெளியிற் கூறும் அலர்மொழி;(akap.); gossip about the intrigues of lovers. ‘புறஞ் சொலென்னும் பெருஞிமி றாப்ப'(சீவக. 1665.); 2. பழிச்சொல்; slander. ‘புறஞ்சொ றுாற்றாது புகழுந் தன்மையள்'(பெருங். வத்தவ. 10, 31);. [புறம் + சொல்] |
புறடை | புறடை puṟaḍai, பெ. (n.) ஊரின் வெளிப் புறமைந்த நன்செய் நிலம்; irrigated land situated away from a village. [புறம் → புறன் → புறனடை → புறடை. அடு → அடை = அடுத்துள்ளது] |
புறணி | புறணி puṟaṇi, பெ. (n.) 1. புறங்கூறுகை; slander, backbiting. ‘காணாவிடந் தனிலே புறணி பலபேசி'(குமரே. சத. 28.);. 2. மரப்பட்டை (பிங்.);; Outer bark of a tree. 3. தோல் (பிங்.);; skin, rind, peel, coat. 4. அகணிக்கு எதிர்; opposite of inside or interior. . ‘கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கில் புறணி நஞ்சு’ 5. புலால் (பிங்.);, fesh mutton. 6. புறம்பானது (சூடா.);; anything that is outside. 7. குறிஞ்சி நிலம்; hilly tract. 8. முல்லை நிலம் (பிங்.);; pastoral tract, ‘பூக்குந் தாழை புறணியருகெலாம்'(தேவா. 842, 6);. 9. உழும்போது பொடியாகாத மண்கட்டி (தஞ்சை.);; sod of earth, turned in ploughing. [பின் → பிற்கு → பிறகு → பிறவு → பிறகு = முதுகு. பிறம் → புறம் = முதுகு. விலங்கு கட்டும் பறவைகட்கும் குப்புறப் படுத் திருக்கும் மாந்தனுக்கும் முதுகு மேற் புறமாயிருப்பதால், முதுகின் பெயர் மேற் புறத்தைக் குறித்தது. புறம் = மேற்பக்கம், பக்கம். புறம் → புறன். → (புறணி); → புறணி = மேற்புறம் (மு.தா. 294, 295); மரத்தின் மேற்புற மாயிருக்கும் பட்டை, தோல்] |
புறணிநாடு | புறணிநாடு puṟaṇināṭu, பெ. (n.) 1. எல்லைப் புறமாயுள்ள நாடு; border land; bordering country. ‘சோணாட்டுப் படும் புறணி நாடுகளிலும்'(S.¬I.l.iii, 14.);. 2. அயல்நாடு (இ.வ.);; foreign country. [புறணி + நாடு. புறம் → புறன் → (புறனி); → புறணி மேற் புறம், பக்கம்] |
புறணிபேசு-தல் | புறணிபேசு-தல் puṟaṇipēcudal, 5 செ.கு.வி. புறம்பேசு-தல் பார்க்க;See puram – pēšu-. [புறணி + பேசு-,] |
புறணிபோடு-தல் | புறணிபோடு-தல் puṟaṇipōṭudal, 20 செ.கு.வி. (v.i.) படைச்சாலிற் புரண்ட மண்கட்டிகளை நிரவுதல் (இ.வ.);; to level the sods of earth in a ploughed land. [புறணி + போடு-,] |
புறணிபோடு-தல் | புறணிபோடு-தல் puṟaṇipōṭudal, 20 செ.கு.வி. (v.i.) படைச்சாலிற் புரண்ட மண்கட்டிகளை நிரவுதல் (இ.வ.);; to level the sods of earth in a ploughed land. [புறணி + போடு-,] |
புறண்டு-தல் | புறண்டு-தல் puṟaṇṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) பிறாண்டு; to scratch. [பிறாண்டு → புறாண்டு → புறண்டு-,] |
புறத்தங்கம் | புறத்தங்கம் puṟattaṅgam, பெ. (n.) புறத்துறுப்பு பார்க்க; puratturuppu [புறம் → புறத்து + அங்கம்] Skt ariga » த. அங்கம். |
புறத்தங்கம் | புறத்தங்கம் puṟattaṅgam, பெ. (n.) புறத்துறுப்பு பார்க்க; puratturuppu [புறம் → புறத்து + அங்கம்] Skt ariga » த. அங்கம். |
புறத்தவன் | புறத்தவன் puṟattavaṉ, பெ. (n.) 1. அயல் நாட்டான் (அன்னியன்);; foreigner, stranger. 2. புறம்பணையாள் (சூடா.); பார்க்க;See purampanaiyal. க. பொறபிக; தெ. பெற. [புறம் → புறத்து + அவன்] |
புறத்தவன் | புறத்தவன் puṟattavaṉ, பெ. (n.) 1. அயல் நாட்டான் (அன்னியன்);; foreigner, stranger. 2. புறம்பணையாள் (சூடா.); பார்க்க;See purampanaiyal. க. பொறபிக; தெ. பெற. [புறம் → புறத்து + அவன்] |
புறத்தி | புறத்தி1 puṟatti, பெ. (n.) புறம்பானது (வின்.);; that which is outside, external, foreign or extrinsiC. ம. புறத்து. [புறம் → புறத்தி] புறத்தி2 puṟatti, பெ. (n.) சாயல் (புதுவை.);; looks, external appearance of a person. [புறம் → புறத்தி] |
புறத்தி | புறத்தி1 puṟatti, பெ. (n.) புறம்பானது (வின்.);; that which is outside, external, foreign or extrinsiC. ம. புறத்து. [புறம் → புறத்தி] புறத்தி2 puṟatti, பெ. (n.) சாயல் (புதுவை.);; looks, external appearance of a person. [புறம் → புறத்தி] |
புறத்திக்கிடம்பண்ணு-தல் | புறத்திக்கிடம்பண்ணு-தல் puṟaddikkiḍambaṇṇudal, 5 செ.கு.வி. (v.i.) தன்னைச் சேர்ந்தவனைப் பழிக்கு உள்ளாக்குதல் (வின்.);; to expose a friend to reproach. [புறம் → புறத்திக்கு + இடம் + பண்ணு-,] |
புறத்திக்கிடம்பண்ணு-தல் | புறத்திக்கிடம்பண்ணு-தல் puṟaddikkiḍambaṇṇudal, 5 செ.கு.வி. (v.i.) தன்னைச் சேர்ந்தவனைப் பழிக்கு உள்ளாக்குதல் (வின்.);; to expose a friend to reproach. [புறம் → புறத்திக்கு + இடம் + பண்ணு-,] |
புறத்திடு-தல் | புறத்திடு-தல் puṟaddiḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) வெளிவிடுதல் (குறள், 590, உரை);; to divulge. [புறம் → புறத்து + இடு-, ] |
புறத்திடு-தல் | புறத்திடு-தல் puṟaddiḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) வெளிவிடுதல் (குறள், 590, உரை);; to divulge. [புறம் → புறத்து + இடு-, ] |
புறத்திணை | புறத்திணை puṟattiṇai, பெ. (n.) வெட்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என ஏழுவகையாகவும் (தொல்.); இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிருபடலம்); இவ்வொன்பதுடன் பொதுவியல், கைக்கிளை பெருந்திணை மூன்றுஞ் சேரப் பன்னிரு வகையாகவும் (பு.வெ.); பிரித்துக் கூறப்படும் புறப்பொருள் பற்றிய ஒழுக்கங்கள்; theme describing, conduct as regards war, stateaffairs etc., opp, to aga-t-tiņai, of seven kinds, viz., vețci, vañci, kāñci, uliñai, tumbai, vāgai, pādān according to Tolkāppiyam, or of nine kinds adding karandai and nocci to the above according to Panniru-padalam or of 12 kinds, including in addition poduvial kaikkilai, and peruntinai according to Puraporul-veņpā mālai. [புறம் + திணை] அகம் புறம் என்னும் இருவகைப் பாகுபாட்டுள் எல்லாப் பொருள்களும் அடக்கப்பட்டுவிட்டன. புறப்பொருள்பற்றிய எழுதிணைகளுள், முதலைந்தும் அரசனுக்குச் சிறப்புக் கொடுத்தற் பொருட்டு அவனுக்குரிய போர்த் தொழிலையே பற்றிக் கூறினும், வாகை பாடாண் என்னும் இறுதியிரண்டும், மற்றெல்லா மக்கள் தொழில்களையும் சேர்த்துத் தழுவுவனவாகும்.இதை யறியாதார் தழ்ப் பொருளிலக்கணம் குறைபாடுள்ள தெனக் குறை கூறுவர் (செ.சி.13); |
புறத்திணை | புறத்திணை puṟattiṇai, பெ. (n.) வெட்சி, வஞ்சி, காஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என ஏழுவகையாகவும் (தொல்.); இவற்றுடன் கரந்தையும் நொச்சியும் சேர ஒன்பது வகையாகவும் (பன்னிருபடலம்); இவ்வொன்பதுடன் பொதுவியல், கைக்கிளை பெருந்திணை மூன்றுஞ் சேரப் பன்னிரு வகையாகவும் (பு.வெ.); பிரித்துக் கூறப்படும் புறப்பொருள் பற்றிய ஒழுக்கங்கள்; theme describing, conduct as regards war, stateaffairs etc., opp, to aga-t-tiņai, of seven kinds, viz., vețci, vañci, kāñci, uliñai, tumbai, vāgai, pādān according to Tolkāppiyam, or of nine kinds adding karandai and nocci to the above according to Panniru-padalam or of 12 kinds, including in addition poduvial kaikkilai, and peruntinai according to Puraporul-veņpā mālai. [புறம் + திணை] அகம் புறம் என்னும் இருவகைப் பாகுபாட்டுள் எல்லாப் பொருள்களும் அடக்கப்பட்டுவிட்டன. புறப்பொருள்பற்றிய எழுதிணைகளுள், முதலைந்தும் அரசனுக்குச் சிறப்புக் கொடுத்தற் பொருட்டு அவனுக்குரிய போர்த் தொழிலையே பற்றிக் கூறினும், வாகை பாடாண் என்னும் இறுதியிரண்டும், மற்றெல்லா மக்கள் தொழில்களையும் சேர்த்துத் தழுவுவனவாகும்.இதை யறியாதார் தழ்ப் பொருளிலக்கணம் குறைபாடுள்ள தெனக் குறை கூறுவர் (செ.சி.13); |
புறத்திணைநன்னாகனார் | புறத்திணைநன்னாகனார் puṟattiṇainaṉṉākaṉār, பெ. (n.) கழக(சங்க);க் காலப்புலவர்; poet of Sangam age. [புறத்திணை + நன்னாகனார்] ஒய்மான் நல்லியக் கோடன், ஒய்மான் நல்லியாதன், கரும்பனூர் கிழான் முதலியவரைப் பாடியவர். இவர்க்கு நன்னாகனார் எனவும் பெயர் (புறநா.); |
புறத்திணைநன்னாகனார் | புறத்திணைநன்னாகனார் puṟattiṇainaṉṉākaṉār, பெ. (n.) கழக(சங்க);க் காலப்புலவர்; poet of Sangam age. [புறத்திணை + நன்னாகனார்] ஒய்மான் நல்லியக் கோடன், ஒய்மான் நல்லியாதன், கரும்பனூர் கிழான் முதலியவரைப் பாடியவர். இவர்க்கு நன்னாகனார் எனவும் பெயர் (புறநா.); |
புறத்திண்ணை | புறத்திண்ணை puṟattiṇṇai, பெ. (n.) விட்டு வெளித்திண்ணை (இ.வ.);; pial. [புறம் + திண்ணை, துள் → (திள்); → திண் → திண்ணை = திரண்ட மேடு] |
புறத்திண்ணை | புறத்திண்ணை puṟattiṇṇai, பெ. (n.) விட்டு வெளித்திண்ணை (இ.வ.);; pial. [புறம் + திண்ணை, துள் → (திள்); → திண் → திண்ணை = திரண்ட மேடு] |
புறத்தியம் | புறத்தியம் puṟattiyam, பெ. (n.) புறத்தி (வின்.); பார்க்க;See puratti. [புறத்தி → புறத்தியம்] |
புறத்தியம் | புறத்தியம் puṟattiyam, பெ. (n.) புறத்தி (வின்.); பார்க்க;See puratti. [புறத்தி → புறத்தியம்] |
புறத்தியான் | புறத்தியான் puṟattiyāṉ, பெ. (n.) புறத்தவன் 1. பார்க்க;See purattavan.1. [புறம் → புறத்தி → புறத்தியான்] |
புறத்தியான் | புறத்தியான் puṟattiyāṉ, பெ. (n.) புறத்தவன் 1. பார்க்க;See purattavan.1. [புறம் → புறத்தி → புறத்தியான்] |
புறத்திரட்டு | புறத்திரட்டு puṟattiraṭṭu, பெ. (n.) புறப்பொருள் பற்றிய செய்யுட்களைப் பல நூல்களிலிருந்து திரட்டி அமைக்கப்பட்ட தொகை நூல்; an anthology on the themes of puram. [புறம் + திரட்டு. திரள் → திரடு → திரட்டு] |
புறத்திரட்டு | புறத்திரட்டு puṟattiraṭṭu, பெ. (n.) புறப்பொருள் பற்றிய செய்யுட்களைப் பல நூல்களிலிருந்து திரட்டி அமைக்கப்பட்ட தொகை நூல்; an anthology on the themes of puram. [புறம் + திரட்டு. திரள் → திரடு → திரட்டு] |
புறத்திரு-த்தல் | புறத்திரு-த்தல் puṟattiruttal, 3. செ.கு.வி (v.i.) வெளியே காத்திருத்தல்; to wait outside ‘புறத்திரு போகென்னு மின்னாச் சொல்'(நாலடி, 326);. [புறம் → புறத்து + இரு-, ] |
புறத்திரு-த்தல் | புறத்திரு-த்தல் puṟattiruttal, 3. செ.கு.வி (v.i.) வெளியே காத்திருத்தல்; to wait outside ‘புறத்திரு போகென்னு மின்னாச் சொல்'(நாலடி, 326);. [புறம் → புறத்து + இரு-, ] |
புறத்திறு-த்தல் | புறத்திறு-த்தல் puṟattiṟuttal, 3 செ.குன்றாவி. (v.t.) முற்றுகையிடுதல்; to besiege. ‘போக்கற வளைஇப் புறத்திறுத்தன்று'(பு.வெ.17);. [புறம் → புறத்து + இறு-,] |
புறத்திறு-த்தல் | புறத்திறு-த்தல் puṟattiṟuttal, 3 செ.குன்றாவி. (v.t.) முற்றுகையிடுதல்; to besiege. ‘போக்கற வளைஇப் புறத்திறுத்தன்று'(பு.வெ.17);. [புறம் → புறத்து + இறு-,] |
புறத்திறை | புறத்திறை puṟattiṟai, பெ. (n.) வேற்றரசனுடைய மதிலை மேற்சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை (பு.வெ.6, 10);;(purap.); theme of an invading chief besieging his adversary’s fort. [புறத்திறு → புறத்திறை. இறு → இறை.] |
புறத்திறை | புறத்திறை puṟattiṟai, பெ. (n.) வேற்றரசனுடைய மதிலை மேற்சென்ற வேந்தன் முற்றுகை செய்தலைக் கூறும் புறத்துறை (பு.வெ.6, 10);;(purap.); theme of an invading chief besieging his adversary’s fort. [புறத்திறு → புறத்திறை. இறு → இறை.] |
புறத்துடர் | புறத்துடர் puṟattuḍar, பெ. (n.) அணிவகை (S.I.I.ii. 16);; a kind of jewel. [புறம் + துடர். தொடர் → துடர்] |
புறத்துடர் | புறத்துடர் puṟattuḍar, பெ. (n.) அணிவகை (S.I.I.ii. 16);; a kind of jewel. [புறம் + துடர். தொடர் → துடர்] |
புறத்துப்பக்கம் | புறத்துப்பக்கம் puṟattuppakkam, பெ. (n.) புறப்பக்கம் (இ.வ.); பார்க்க;See pura-ppakkam. [புறம் → புறத்து + பக்கம்] |
புறத்துப்பக்கம் | புறத்துப்பக்கம் puṟattuppakkam, பெ. (n.) புறப்பக்கம் (இ.வ.); பார்க்க;See pura-ppakkam. [புறம் → புறத்து + பக்கம்] |
புறத்துறவு | புறத்துறவு puṟattuṟavu, பெ. (n.) அகப்பற்றுவிடாமல் துறவிபோல் புனைந்து (வேடங்);கொள்ளுகை; assuming an ascetics guise without real renunciation. [புறம் + துறவு. துற → துறவு. புறத்தளவில் மட்டும் கொள்ளும் துறவு நிலை.] |
புறத்துறவு | புறத்துறவு puṟattuṟavu, பெ. (n.) அகப்பற்றுவிடாமல் துறவிபோல் புனைந்து (வேடங்);கொள்ளுகை; assuming an ascetics guise without real renunciation. [புறம் + துறவு. துற → துறவு. புறத்தளவில் மட்டும் கொள்ளும் துறவு நிலை.] |
புறத்துறுப்பு | புறத்துறுப்பு puṟattuṟuppu, பெ. (n.) 1. இடம், பொருள், ஏவல் முதலிய பக்கத்துணை; external resources, as position, property, authority, influence, opp. to agatturuppu. ‘புறத்துறுப் பொல்லா மெவன் செய்யும்'(குறள்,79.);. 2. உடலின் புறத்துள்ள உறுப்பு (அங்கம்);; limb, external member of the body. [புறம் → புறத்து + உறுப்பு] |
புறத்துறுப்பு | புறத்துறுப்பு puṟattuṟuppu, பெ. (n.) 1. இடம், பொருள், ஏவல் முதலிய பக்கத்துணை; external resources, as position, property, authority, influence, opp. to agatturuppu. ‘புறத்துறுப் பொல்லா மெவன் செய்யும்'(குறள்,79.);. 2. உடலின் புறத்துள்ள உறுப்பு (அங்கம்);; limb, external member of the body. [புறம் → புறத்து + உறுப்பு] |
புறத்துறை | புறத்துறை puṟattuṟai, பெ. (n.) புறத்திணையின் பகுதி; minor theme grouped under a purattinai. ‘வீரரைப்பாடும் புறத்துறை யெல்லாம் முடித்து'(சிலப். 27, 46, அரும்); [புறம் + துறை] |
புறத்துழிஞை | புறத்துழிஞை puṟattuḻiñai, பெ. (n.) வேற்றரசனுடைய மதிலைச் சூழ்ந்த அகழின் கரையில் மேற்சென்ற வேந்தன் படை (சேனை);யுடன் தங்கி முற்றுகையிடுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 6, 16.);; [புறம் → புறத்து + உழிஞை] |
புறத்துழிஞை | புறத்துழிஞை puṟattuḻiñai, பெ. (n.) வேற்றரசனுடைய மதிலைச் சூழ்ந்த அகழின் கரையில் மேற்சென்ற வேந்தன் படை (சேனை);யுடன் தங்கி முற்றுகையிடுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 6, 16.);; [புறம் → புறத்து + உழிஞை] |
புறத்தூய்மை | புறத்தூய்மை puṟattūymai, பெ. (n.) வெளிப்புறத் தூய்மை; external cleanliness. புறத்தூய்மையைக் காட்டிலும் அகத்துய்மையே நாகரிகத்திற்குச் சிறந்ததாக எண்ணப்படும் (உ.வ);. [புறம் + துய்மை] அறி வாலும் (ஞானத்தாலும்); ஒழுக்கத்தாலும் இல்லறத்தினும் பன்மாண் சிறந்த துறவறத்தில் புறத்துய்மை ஒரு பொருளாகக் கொள்ளப்படுவதன்று. இலலறத்தினும் ஒருவன் எத்துணை எளியனா யிருப்பினும், தன்னையும் தன் பொருள்களையும் தூயவாய் வைத்துக் கொள்வதே புறத்துய்மை (ப.க. 100); |
புறத்தொழுக்கம் | புறத்தொழுக்கம் puṟattoḻukkam, பெ. (n.) பரத்தையவரோடு கூடியொழுகுகை, living with concubines. “புறத்தொழுக்கத்திலே நெடு நாள் ஒழுகி…… மீண்டு தலைவியொடு கூடி”(ஐங்குறு. 1. உரை);. [புறம் → புறத்து + ஒழுக்கம் ஒழுகு → ஒழுக்கு → ஒழுக்கம்] |
புறத்தோற்றம் | புறத்தோற்றம் puṟattōṟṟam, பெ. (n.) வெளிப்புறத்தோற்றம்; exterior. நகரமக்கள் புறத்தோற்றத்தில் தூய்மை கடைப் பிடிக்கின்றனர் (உ.வ.);. [புறம் + தோற்றம்] |
புறநகர் | புறநகர் puṟanagar, பெ. (n.) நகரின் புறப்பகுதி; outlying part of a city, suburb. [புற(ம்); + நகர்] |
புறநடம் | புறநடம் puṟanaḍam, பெ. (n.) புறநாடகம் (சிலப்.3,12, அரும்.); பார்க்க;See puranāgagam. [புற(ம்); + நடம்] |
புறநடை | புறநடை puṟanaḍai, பெ. (n.) புறனடை நூற்பா (நன். 19, மயிலை. அரும்.); பார்க்க;See puramadai-nurpá. [புற(ம்); + நடை] |
புறநாடகம் | புறநாடகம் puṟanāṭagam, பெ. (n.) இன்பம் (சிருங்காரந்);தவிர மற்றைச் சுவை பற்றி வரும் நாடகவகை (சிலப். 3, 13, உரை.);; a drama where the prevailing sentiment is one other than cirunkāram or love. [புற(ம்); + நாடகம்] |
புறநாட்டுப் பெருங்கொற்றனார் | புறநாட்டுப் பெருங்கொற்றனார் puṟanāṭṭupperuṅgoṟṟaṉār, பெ. (n.) கடைக்கழக (சங்கம்); மருவிய காலத்துப் புலவர்; poet of post-sangam age. [புறநாடு + பெருங்கொற்றனார்] இவர் இயற்பெயர் பெருங்கொற்றனார். இவர் நாடு புறநாடாயிருக்கலாம். ‘ஆர்’ உயர்வு பன்மை ஈறு. |
புறநானூறு | புறநானூறு puṟanāṉūṟu, பெ. (n.) எட்டுத் தொகையுள் ஒன்றானதும் புறப்பொருளைப் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டதுமான தொகை நூல்; an ancient poetic anthology on the topics of pura-p-porul. containing 400 verses, one of ettu-t-togai. [புறம் + நானூறு] புறநானுற்றில் ஒரு சில (2, 358, 362, 366); செய்யுள்களைத் தவிரப் பிறவற்றை யெல்லாம் பாடினாரும் அவராற் பாடப்பட்டாரும் கடைக்கழகக் காலத்தினராதலின் புறநானுற்றின் காலம் கடைக்கழகக் காலமாகும் (கி.பி. 2ஆம் நூற்றாண்டு); புறநானூறு ஒருதொகை நூல் அல்லது தனிப்பாடற்றிரட்டே. புறப்பொருளைப் பற்றிய நானூறு செய்யுள்களைக் கொண்டது புறநானூறு. இன்னாநாற்பது, இனியவைநாற்பது முதலிய நாற்பது பாக்களைக் கொண்ட பனுவல்களையும், நற்றிணை நானூறு, பழமொழி நானூறு, குறுந்தொகை நானூறு, நாலடி நானூறு, முதலிய நானுறு பாக்களைக் கொண்ட பனுவல்களையும் நாலாயிரக் கோவை, நாலாயிரத்திவ்யப்பிரபந்தம் (தெய்வப்பனுவல்); முதலிய நாலாயிரம் பாக்களைக் கொண்ட பனுவல்களையும் நோக்குமிடத்து நாலென்னும் எண் ஏதோவொரு காரணம் பற்றி நூற்செய்யுட் தொகைக்குச் சிறந்ததாகக் கொள்ளப்பட்ட தென்பது தெரிகின்றது. அது நால்வகைப் பாவோ நால்வகைக் குலமோ பற்றியிருக்கலாம். புறநானூற்றுச் செய்யுள்களிற் சில சிதைந்துங் குறைந்துமிருப்பதால், இந்நூல் செய்யுள்களின் அடிச்சிறுமை பெருமையும் சொற்றொகையும் அறிவதற்கில்லை. ஆயினும், இதுபோதுள்ளபடி அடியுஞ்சொல்லும் எண்ணிப் பார்ப்பின் ஒரு செய்யுளின் சராசரி அடித்தொகை பதினெட்டென்பதும் ஓர் அடியின் சராசரிச் சொற்றொகை ஆறென்பதும் தெரியவரும். ஆகவே, ஒரு செய்யுளிள் சராசரிச் சொற்றொகை ஏறத்தாழ நூறென்பது பெறப்படும். பண்டைத் தமிழ்நூல்களெல்லாம் தனித்தமிழ் என்னும் பொதுக்கொள்கைக்கேற்ப, புறநானூரும் தனித்தமிழே. ஆங்காங்கு இரண்டொரு வடசொற்கள் அருகி வந்திருப்பதானால், புறநானூற்றின் தனித்தமிழ்த் தன்மை குன்றிவிடாது. இந்நூலில் வந்திருக்கும் வடசொற்களெல்லாம் இருபது அல்லது இருபத்தைந்தே. இவற்றுள்ளும் ஒருசில தென்சொல்லோ வடசொல்லோ என ஐயுறற்குரியன. இரண்டொரு வடசொற்கள் இங்கு மங்குமாக அருகி வந்திருப்பது கொண்டு புறநானூறு முழுமையுங்கலப்புத் தமிழென்பராயின், பிறமொழிச்சொல் கலவாத மொழியே உலகத்திலில்லையென்னும், ஆரியத்திலும் கட்டும் வினாவும் மூவிடப்பெயரும் போன்ற அடிப்படைச் சொற்களெல்லாம் வேர்நிலையில் தமிழா யிருத்தலின் தமிழ் தனித்து வழங்கினும் ஆரியம் தனித்து வழங்கல் கூடாமையென்னும் கூறிவிடுக்க. (ப.க. 2, 3); |
புறநிறச்சாபு | புறநிறச்சாபு puṟaniṟaccāpu, பெ. (n.) மணிக் குற்றங்களுளொன்று; a defect in precious stones. “போழ்ந்திடு தராசம் புறநிறச் சார்பு”(பஞ்ச, திருமுக, 476);. [புறம் + நிறம் + சார்பு. சார் → சார்பு.] |
புறநிலை | புறநிலை puṟanilai, பெ. (n.) 1. வெளிப்புறம்; outside. ‘புறநிலைக் கோட்டம்'(சிலப், 5, 180); 2. வேறுபட்டநிலை; changed condition or state. ‘வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை'(புறநா. 211.);. 3. நீ வணங்குந் தெய்வம் நின்னைப் புறங்காப்ப நின் வழிவழி மிகுவதாக எனக் கூறுவதும் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றாவதுமான நூல் வகை (சது.);; poem invoking the tutelary deity of a chief to shower properity on his family and his decendants, one of 96 pirapandam, 4. உதவிநோக்கிப் பிறர் புறங்கடையில் நிற்கும் நிலை (புறநா. 211, உரை.);; Standing in the back-yard of one’s house, seeking one’s favour. 5. ஏவல் செய்து பின்னிற்கை (அக.நா. 32);; personal attendance, as of a pupil upon his guru. 6. சாதிப் பெரும்பண் நான்கனுள் ஒன்று. (சிலப். 8, 41, உரை);;(mus.); a class of primary melody-types one of four cadi-pperumpaŋ, q.V. [புறம் + நிலை] |
புறநிலைக்கருவி | புறநிலைக்கருவி puṟanilaikkaruvi, பெ. (n.) 5 நிலத்தின் (பிருதிவியின்); கூறு, 5 நீரின் (அப்புவின்); கூறு, 5 நெருப்பின் (தேயுவின்); கூறு, 5 காற்றின் (வாயுவின்); கூறு, 5 வானத்தின் (ஆகாயத்தின்); கூறு, பத்து (தச); காற்று (வாயு);, பத்து (தச); நாடி, 5 சொல்நடை முதலியன (வசனாதி); 4 வாக்கு, முக்குணம், நானுணர்வு மூன்று (அகங்காரத்திரயம் அல்லது ஏடணாத்திரயம்); என்ற 11 வகையும், 60 விரியுமுள்ள மெய்ப்பொருட்கள் (தத்துவங்கள்); (சிலப். கட்; திருவால. தட்.);(saiva.); external Categories, of 11 kinds 60 in number, viz., 5 pirutuviyiŋ kūru, 5 appuvin kūru, 5 tēyuviŋ kūru, 5 vāyuviŋ kūru, 5, ākāyattiņ kūru, taša vāyu, 5, tasa-nādi 5 vacaņādi, 4 vākku, mukkuņam agańkāra-t-tirayam or ēdanāttirayam. [புறநிலை + கருவி] |
புறநிலைமருதம் | புறநிலைமருதம் puṟanilaimarudam, பெ. (n.) பெரும்பண் வகை; (சிலப். 8, 39.);; [புறநிலை + மருதம்] |
புறநிலைவாழ்த்து | புறநிலைவாழ்த்து puṟanilaivāḻttu, பெ. (n.) 1. வழிபடு தெய்வம் நின்னைப் புறங்காப்ப வழிவழி செல்வத்தொடு சிறந்து பொலிக என்று தலைவனொருவனைக் கூறும் வாழ்த்து; (தொல், பொ. 422.);; benediction upon a chief, in which his tutelary deity is invoked to bless him and his descendents. 2. புறநிலை 3 (சங்.அக.); பார்க்க;See puranilai 3. [புறநிலை + வாழ்த்து. வாழ் → வாழ்த்து] |
புறநீங்கு-தல் | புறநீங்கு-தல் puṟanīṅgudal, 3 செ.கு.வி. (v.i.) 1. விடுதலையாய் விலகிப் போதல்; to be at liberty. 2. விலக்கப்படுதல்; to be separated from others. [புறம் + நீங்கு-, ] |
புறநீர்மை | புறநீர்மை puṟanīrmai, பெ. (n.) பண் வகை (பிங்.);; a melody type. [புறம் + நீர்மை] புறநீர்மை puṟanīrmai, பெ. (n.) 1, பகற் பொழுதுக்குரியபண் வகைகளிற்ஒன்று aday time melody song. 2. விடியற்காலத்தில் பாடும் பள்ளியெழுச்சிப்பாடல்; melody song sung at dawn. மறுவ. பூபாளம், துயிலெடைநிலை, திருப்பள்ளி எழுச்சி [புறம்+நீர்மை] |
புறநோயாளி | புறநோயாளி puṟanōyāḷi, பெ. (n.) மருத்துவ மனைக்கு வந்து மருத்துவம் (சிகிச்சை); பெற்றுச் செல்பவர்; out patient. ‘புறநோயாளிகள் பகுதியில் நாள்தோறும் கூட்டம் இருக்கும்'(உ.வ.);. [புறம் + நோயாளி] |
புறந்தருநர் | புறந்தருநர் puṟandarunar, பெ. (n.) பாதுகாப்பவர்; protector. “பகடு புறந்தருநர்”(புறநா.);. [புறந்தரு → புறந்தருநர்] |
புறந்தள்ளு-தல் | புறந்தள்ளு-தல் puṟandaḷḷudal, 12 செ.குன்றாவி. (v.t.) விலக்குதல், நீக்குதல், சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்தல்; to exclude. [புறம் + தள்ளு-, ] |
புறந்தா | புறந்தா1 puṟandādalpuṟandarudal, 15 செ.குன்றாவி. (v.t.) 1. காத்தல்; to protect, take care of. “குடி புறந்தருகுவை யாயின்”(புறநா. 35);. 2. கை விடுதல்; to forsake. “பிழைப்பிலா புறந் தந்தானும்”(சீவக. 252);. 3. போற்றுதல்; to extol, praise. “அடி புறந்தருவர் நின்னடங்கா தோரே”(புறநா. 35);. [ புறம் → தா(தரு-);-,] புறந்தா2 puṟandādalpuṟandarudal, 18 செ.கு.வி. (v.t.) 1. தோற்றுப் போதல்; to turn one’s back in retreat, to be defeated. 2. நிறம் உண்டாதல்; to become shiny. “பொடியழற் புறந்தந்த….. கிண்கிணி”(கலித். 85);. [புறம் + தா(தரு-);-] |
புறந்தாள் | புறந்தாள் puṟandāḷ, பெ. (n.) புறங்கால் (யாழ். அக.); பார்க்க;See purarikā. [புறம் + தாள்] |
புறந்துர-த்தல் | புறந்துர-த்தல் puṟandurattal, 3 செ.குன்றாவி. (v.t.) எருதுகளை முதுகிலே யடித்து ஒட்டுதல்; to drive cattle by striking them on the back. ‘மகவுடை மகடூஉப் பகடு புறந்துரப்ப'(பெரும்பாண். 58.); [புறம் + துர-] |
புறனடை | புறனடை puṟaṉaḍai, பெ. (n) புறனடை நூற்பா (நன்.20); பார்க்க, see puramapai ոմrpa. [புறன் +அடை. புறத்து அடையாய் வருவது புறநடை. வேறு விதமாகிய நடக்கையெனினும் பொருந்தும் என்பார் ஆறுமுகநாவலர் (நன்.20);] முன்பு கூறப்பட்ட நடைமுறைக்குப் புறனாகக் கூறுதல். நடைப்புறன் என்பதன் இலக்கணப் போலியே புறனடையாகும். |
புறனடைச்சூத்திரம் | புறனடைச்சூத்திரம் puṟaṉaḍaiccūttiram, பெ. (n.) புறனடை நூற்பா பார்க்க; see puranadai- nūrpā. [புறனடை + சூத்திரம்] Skt. sūtra → த.சூத்திரம். |
புறனடைநூற்பா | புறனடைநூற்பா puṟaṉaḍainūṟpā, பெ. (n.) வகுத்தவற்றுள் அடங்காதனவற்றை அமைத்துக் காட்டும் பொது நூற்பா (சீவக.39, உரை.);; general permissive rule, sanctioning grammatical forms, not specifically dealt with. [புறனடை + நூற்பா. நூல் + பா-நூற்பா] |
புறனண்டை | புறனண்டை puṟaṉaṇṭai, பெ. (n.) பின்புறம; hind part, rear, back. [பிறம் → புறம் → புறன் → புறனண்டை (மு.தா.294);] |
புறனழி-த்தல் | புறனழி-த்தல் puṟaṉaḻittal, 4 செ.குன்றாவி. (v.t.) புறங்கூறுதல்; to defame, slander. ‘புறனழீஇப் பொய்த்து நகை’ (குறள்,182); [புறன் + அழி-,] |
புறனிலை | புறனிலை puṟaṉilai, பெ. (n.) பின்னிலை (அக.நா.32);; hanging on a person in expectation of a favour. [புறன் + நிலை. பின் → பிற்கு, பிறம் → பிறவு → பிறகு, பிறம் → புறம் → புறன்] |
புறனுரை | புறனுரை puṟaṉurai, பெ. (n.) 1. பழிச்சொல்; slander. ‘பொல்லான் றிரைந்தானென்னும் புறனுரை திவ்.பெரியதி.647) 2. வெற்றுரை meaningless utterence. “புறனுரையே யாயினும்…..திறனுரையே சிந்தித் திரு’ (திவ்.இயற்.141); [புறன் + உரை.] |
புறனே | புறனே puṟaṉē, வி.அ. (adv.) பின்பு, பிந்தி, பிறகு; after, afterwards, subsequently. [பிறம் → புறம் → புறன் → புறக்கடை = விட்டின் பின்பக்கம். புறன் → புறனே (மு.தா,294);] |
புறனோக்கு-தல் | புறனோக்கு-தல் puṟaṉōkkudal, 5 செ.கு.வி. (v.i.) ஒருவன் நீங்கும் அற்றம் பார்த்தல்; to watch for one’s absence. ‘புறனோக்கிப் புன்சொலுரைப்பான் பொறை’ (குறள்,189.); [புறம் + நோக்கு-,] |
புறன் | புறன்1 puṟaṉ, பெ. (n.) 1 புறம் பார்க்க;see puram 2. பழிச்சொல்; sander ‘கேளாம் புறன்’ (சி.போ.அவையடக்.9);. [பின் → பிற்கு. பிறம் → பிறவு → பிறகு = முதுகு. பிறகு → பிறக்கு = முதுகு. புறம் → புறம் → புறன் (மு.தா.294); = (பின்னால்); பழிக்கும் சொல்] புறன்2 puṟaṉ, வி.எ. (adv.) காணாத போது; behind one’s back. ‘புறனழீஇப் பொய்த்து நகை’ (குறள்,182);. [பின் → பிற்கு. பிறம் → பிறவு → பிறகு = முதுகு. பிறகு → பிறக்கு = முதுகு. பிறம் → புறம் → புறன் (மு.தா,294); = முதுகுக்குப் பின்னால்] புறன்3 puṟaṉ, பெ. (n.) மறுதலையானது, எதிரானது; that which is opposite. வஞ்சிதானே முல்லையது புறனே (தொல். பொரு.6);. [புறம் → புறன். வெட்சி → குறிஞ்சி, வஞ்சி → முல்லை, உழிஞை → மருதம், தும்பை → நெய்தல், வாகை – பாலை, காஞ்சி → பெருந்தினை பாடாண் -கைக் கிளை என ஏழு அகத்திணைகளுக்கு ஏழு புறத்தினைகளைப் புறனாக (மறுதலைகளாக);க் கொள்வது மரபு.] |
புறப்பகுதி | புறப்பகுதி puṟappagudi, பெ. (n.) வெளிப்பக்கம்; exterior. [புறம் + பகுதி] |
புறப்பகை | புறப்பகை puṟappagai, பெ. (n.) 1. வெளிப் படையான பகை; open hostility. 2. பகைவன்; enemy. ‘புறப் பகைகளை அடக்கும் ஆண்மை யுடையார்க்கும்'(குறள், 148, உரை);. [புறம் + பகை, அகங்கையும் புறங்கையும் போல் ஒன்றி நிற்காமல் அகப்பகையும் புறப்பகையும் பிரிந்து நிற்கும்.] |
புறப்பக்கம் | புறப்பக்கம் puṟappakkam, பெ. (n.) உலக நடப்பை யொட்டிய கருதுகோள் (இலெளகிக விஷயங்களை யொட்டிய அனுமானம்); (வின்.);;(log.); inference regarding non-religious or Secular matters. [புறம் + பக்கம்] |
புறப்படு-தல் | புறப்படு-தல் puṟappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. செலவு மேற்கொள்ளுதல்; to set forth, proceed, start on a journey. ‘பாயிரப் பதிக மோதிப் புறப்பட்டார்'(திருவாலவா. 37, 11.);. 2. புறம்பே செல்லுதல்; to go out. ‘புறப்படாத பருவத்தே போனாய்'(அகநா. 7, உரை);. 3. புறத்தில் தோன்றுதல்; to start or jut out, protrude, as a stone in a wall. 4. புண் முதலியன உண்டாதல் (வின்.);; to break out, as eruptions. 5. பொசிதல் (வின்.);; to ooze out, issue, exude. ம. புறப்பெடுக; க. கொரவடு, கொரபடு [புறம் + படு-, புறம் = வெளி, வெளிப்பக்கம்] |
புறப்படுத்து-தல் | புறப்படுத்து-தல் puṟappaḍuddudal, 3 செ.குன்றாவி. (v.t.) வெளிப்படுத்துதல்; to di vulge, reveal, publish. ‘புறப்படுத்தா னாகு முறை’ (குறள், 590.);. [புறம் + படுத்து-, படு-தல் (த.வி.); – படுத்து-தல் (பி.வி.);] |
புறப்படைவீடு | புறப்படைவீடு puṟappaḍaivīḍu, பெ. (n.) புறஞ்சேரி (சீவக 85,); பார்க்க; see puraர்cer. [புறப்படை + வீடு] |
புறப்பட்டுக்கொள்(ளு)-தல் | புறப்பட்டுக்கொள்(ளு)-தல் puṟappaṭṭukkoḷḷudal, 12 செ.கு.வி. (v.i.) வெளியேறுதல்; to go out, go out. ‘நெருப்புப்பற்றிப் புறம்பே எரியாநின்றால் புறப்பட்டுக் கொள்கிடாய் என்று'(ஈடு, 1, 2, 1.);. [புறப்பட்டு + கொள்-,] |
புறப்பட்டுப்போ-தல் | புறப்பட்டுப்போ-தல் puṟappaṭṭuppōtal, 8 செ.கு.வி. (v.i.) புறப்பட்டுக்கொள்(ளு);-தல் பார்க்க;See pura-p-pattu-k-kol(lu);-. அவன் புறப்பட்டுப் போய்விட்டான் (உ.வ.);. [புறப்பட்டு + போ-,] |
புறப்பணை | புறப்பணை puṟappaṇai, பெ. (n.) முல்லைநிலம்(சங்.அக.);; pastoral tract. [புறம் = மருத நிலத்திற்குப் புறம்பான முல்லை. புறம் → புறவு = முல்லை. புறம் → புறம்பு → புறம்பணை = முல்லை (மு.தா. 295);] |
புறப்பத்தியம் | புறப்பத்தியம் puṟappattiyam, பெ. (n.) மருந்துண்ணும் காலத்தில் உணவில் கடைப் பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு (மறுபத்தியம்); (வின்.);; diet or regimen prescribed after a course of medicine. [புறம் + பத்தியம்] |
புறப்பற்று | புறப்பற்று puṟappaṟṟu, பெ. (n.) எனது என்னும் பற்று, நான் என்னும் அகப்பற்றுக்கு எதிரானது; external attachment, as attachment to property and family, opp. to ‘aga-p-parru’. ‘எனதென்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது’ (குறள், 344, உரை.); [புறம் + பற்று. நான் என்பது ஆதனுடன் (ஆத்மாவுடன்); இணைந்து செயல் படுவதால் அது அகத்ததாகக் கொள்ளப் பட்டது. எனது அவ்வாறில்லாமல் புறத்தே அமையும் பொருள்களாகவும் பிறவாகவும்இருப்பதால் புறத்தது எனப்பட்டது. பற்று அகம், புறம் இரண்டிடத்திற்கும் பொது] |
புறப்பாடு | புறப்பாடு puṟappāṭu, பெ. (n.) 1. வெளி யேறுகை; 1 coming forth, sallying out. 2. புறந்தோன்றுகை; appearing outside protruding, jutting out. ‘ஒரு பொருள் புறப்பாடின்றி’ (திவ். இயற். திருவாசிரியம், 7);. 3. செல்கை; setting out, departure, as of a traveller. ‘புறப்பாடும் வழிச் செலவும்’ (சிலப். 8, 45, உரை.); 4. கோயில் சிலை (மூர்த்தி); வெளியில் எழுந்தருளுகை; procession of an idol. 5. புண்கட்டி வகை (நெல்லை);; eruption, boil, abscess, carbuncle. ம, புறப்பாடு. [புறப்படு → புறப்பாடு. ‘படு’ என்னும் துனணவினை முதனிலை திரிந்து பாடு என்றாயிற்று ஒ.நோ. கடப்படு → கடப்பாடு] |
புறப்பாட்டு | புறப்பாட்டு puṟappāṭṭu, பெ. (n.) 1. புறப்பொருளைப் பற்றிய செய்யுள்; verses on a topic of pura-p-porul 2. புறநானூறு பார்க்க; see pura-nānūru. [புறம் + பாட்டு] |
புறப்பாட்டுவண்ணம் | புறப்பாட்டுவண்ணம் puṟappāṭṭuvaṇṇam, பெ. (n.) இறுதியடி முடியாதிருப்பவும் தான் முடிந்த அடிபோலக் காட்டும் சந்தம் (தொல், பொ. 537.);; (pros.); a rhythm effected by making the penultimate line read like the last line of a Stanza. [புறப்பாட்டு + வண்ணம்] |
புறப்பாட்டுவீக்கம் | புறப்பாட்டுவீக்கம் puṟappāṭṭuvīkkam, பெ. (n.) புண் வீக்க வகை; inflammation of the cellular tissue, Cellulitis. [புறப்பாட்டு + வீக்கம்] |
புறப்புண் | புறப்புண் puṟappuṇ, பெ. (n.) முதுகில் பட்டபுண்; wound on the back of a person. ‘முன்பு குறித்தெறிந்த புறப்புண் ணாணி’ (புறநா. 65.);. [புறம் + புண்] |
புறப்புறக்கருவி | புறப்புறக்கருவி puṟappuṟakkaruvi, பெ. (n.) புறப்புறமுழவு (சிலப். அரும்.); பார்க்க: See pura-p-pura-musavu. [புறப்புறம் + கருவி] |
புறப்புறமுழவு | புறப்புறமுழவு puṟappuṟamuḻvu, பெ. (n.) முழவுவகை (சிலப். 3, 27, உரை.);; a kind of drum, as ‘neytarparai’, etc. [புறப்புறம் + முழவு] |
புறப்புறம் | புறப்புறம் puṟappuṟam, பெ. (n.) முற்றும் வேறானது (அந்நியமானது);; that which is outermost. [புறம் + புறம். தமிழனுக்குத் தமிழ் அகம்: திராவிடம் அகப்புறம் ஆரியம் புறம் சேமி யம் புறப்புறம். இவ்வகைக் கூற்றினின்று அகம்புறம் என்னும் சொற்களின் பொருளை ஒருவாறுணரலாம் (தமி.வ.115); புறம்=வெளி வெளிப் பக்கம், வெளியான (வேறான); தன்மையை வலியுறுத்த புறம் அடுக்கி வந்துள்ளது] |
புறப்பூசை | புறப்பூசை puṟappūcai, பெ. (n.) கோயில் முதலிய இடங்களில் சிவபெருமானுக்குச் செய்யும் வழிபாடு (ஞானபூசா.15 உரை);; [புறம் + பூசை. பூசு → பூசை] |
புறப்பெண்டிர் | புறப்பெண்டிர் puṟappeṇṭir, பெ. (n.) பரத்தையர் (இறை.43,பக்.174);; courtesans, [புறம் + பெண்டிர், பெள் → பெண் → பெண்டு – பெண்டிர். புறப்பெண்டிர் புதல்வனைப்பெறுவதற்கு உரிமையுள்ள இல்வாழ்க்கைக்குப் புறம்பான பெண்டிர்] |
புறப்பொருள் | புறப்பொருள் puṟapporuḷ, பெ. (n.) 1. புறத்திணை (பு.வெ.சிறப்பு:1); பார்க்க; see pur-a-t-timai, 2. வீரம் (சீவக.1090,உரை);, martial spirit, heroism. 3. வெளிப்படையான பொருள் (கம்பரா.இரணிய.32);; apparent meaning. [புறம் + பொருள்] |
புறப்பொருள்வெண்பாமாலை | புறப்பொருள்வெண்பாமாலை puṟapporuḷveṇpāmālai, பெ. (n.) புறத்திணை வகைகளைப் பற்றி வெண்பாவினால் ஐயனாரிதனார் இயற்றிய ஒர் இலக்கண நூல்; a treatise on the topics of puram, in venpä metre, by Aiyanāridanär. [புறப்பொருள் + வெண்பா + மாலை] |
புறமடை | புறமடை puṟamaḍai, பெ. (n.) 1. வெளி வாய்க்கால்; outside channel. 2. மதகின் வெளிப்புறம்; outlet of a channel. ‘புறமடை யடைப்பதாற் பயனில்லை’ 3. வெளிமடை; the outside of a sluice. 4. கோயிற் புறத்துள்ள சிறு தெய்வங்கட்கு இடும் படைப்பு (வின்.);; offering of flesh and spirits, made to ferocious deities, outside a temple opp to uŋmaçlai. [புறம் + மடை மடு → மடை] |
புறமட்டைநார் | புறமட்டைநார் puṟamaṭṭainār, பெ. (n.) பனைமட்டையின் வெளிப்புறத்திலிருந்து எடுக்கும் மட்டமான நார்வகை; fibre on the outer side of the palmyra leaf stalk, considered inferior. [புறமட்டை + நார்] |
புறமதிற்சேரி | புறமதிற்சேரி puṟamadiṟcēri, பெ. (n.) புறஞ்சேரி பார்க்க; see puraர்ceri. ‘புறமதிற்சேரியுங் குறுகுதற் கரிதா’ (பெருங். உஞ்சைக்47.72);. [புறம் + மதில் + சேரி. சேர் → சேரி] |
புறமதில் | புறமதில் puṟamadil, பெ. (n.) கோட்டையின் வெளிமதில் (பதிற்றுப்16,உறை);; outer wall of a fortified town. ம. புறமதில் [புறம் + மதில்] |
புறமனை | புறமனை puṟamaṉai, பெ. (n.) மேலோர் வாழும் ஊர்க்குடியிருப்புக்கு வெளியிலுள்ள மனையிடம்; house-site outside the quarters of the higher castes, opp to uņmaņai. (CG); [புறம் + மனை] |
புறமயிர் | புறமயிர் puṟamayir, பெ. (n.) உடலின் மயிர் (வின்.);; hair on the body. [புறம் + மயிர்] |
புறமறி-தல் | புறமறி-தல் puṟamaṟidal, 2 செ. குன்றாவி. (v.t.) வெளியிலிருந்து உணர்தல்; to teel a thing from being outside. ‘மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்’ (மணிமே.4.121);. [புறம் + அறி-,] |
புறமறிப்பார்-த்தல் | புறமறிப்பார்-த்தல் puṟamaṟippārttal, 4 செ.குன்றாவி.(v.t.) to examine closely, as by turning inside out. ‘மக்கள் யாக்கையிதுவென வுணர்ந்து மிக்கோ யிதனைப் புறமறிப்பாராய்’ (மணிமே.4.121);. [புறம் + மறி + பார்-,] |
புறமறிவு | புறமறிவு puṟamaṟivu, பெ. (n.) பிறர்க்கு நன்மை நினைக்கை (வின்.);; regard for the welfare of other, benevolence. [புறம் + அறிவு. அறி → அறிவு] |
புறமறை-த்தல் | புறமறை-த்தல் puṟamaṟaittal, 4 செகுன்றாவி, (v.t.) வெளித்தோன்றாமல் மறைத்தல்; to canceal, hide ‘கையாற் றொழுக்கங் கொண்டு புறமறைத்து’ (மணிமே.23:22);. [புறம் + மறை-,] |
புறமலை | புறமலை puṟamalai, பெ. (n.) பக்கமலை; sistering hil. ‘மாலிருஞ் சோலைப் புறமலைசார’ (திவ்.திருவாய், 2,10,5.); ம. புறமல [புறம் + மலை] |
புறமாக | புறமாக puṟamāka, வி.எ. (adv.) 1. பக்கமாய்; in the direction of towards. தாமதமாக வந்தவர்கள் ஒரு புறமாக நின்றனர். (உ.வ.); 2. வெளிப்படையாய்; clearly. [புறம் → புறமாக] |
புறமானம் | புறமானம் puṟamāṉam, பெ. (n.) மேலெல்லை; upper |imit. இந்த அஸ்தைர்யத்திலும் உள்மானம் புறமான மொழிய நித்யராயிருப்ப ரொருவருமில்லை (திவ்.திருச்சந்.66.வ்யா,பக்.191);. [புறம் → புறமானம். மானம் = அளவு, எல்லை] |
புறமாறு | புறமாறு1 puṟamāṟudal, 11 செ.கு.வி. (v.i.) 1. இடம்மாறுதல்; to migrate, change place. ‘கொங்குண வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு.226.);. 2. வலிமையிழத்தல்; to lose vigour or strength. ‘இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி, (கலித்.120,5);. [புறம் + மாறு-,] புறமாறு2 puṟamāṟudal, 11 செ.குன்றாவி. (v.t.) கைவிடுதல்; to abandon, desert. ‘அருள் புறமாறிய’ (கலித்.15);. [புறம் + மாறு-,] |
புறமுதுகிடு-தல் | புறமுதுகிடு-தல் puṟamudugiḍudal, 20 செ.கு.வி. (v.i.) புறமுதுகுகாட்டு-தல் பார்க்க; see puramudugu kātsu-. [புறமுதுகு + இடு-, ‘இடு’ து.வி.] |
புறமுதுகுகாட்டு-தல் | புறமுதுகுகாட்டு-தல் puṟamudugugāṭṭudal, 15 செ.கு.வி. (v.i.) to back track (from battle);. போர்க்களத்தில் செத்துமடிவோம்;புற முதுகுகாட்ட மாட்டோம் என்பதுதான் மறவர்களின் சூளுரை (உ.வ);. [புறமுதுகு + காட்டு-,] |
புறமுழவு | புறமுழவு puṟamuḻvu, பெ. (n.) அதமத் தோற்கருவி (சிலப்.3,27.உரை);; a kind of inferior drum, as kana-p-parai, etc. [புறம் + முழவு. முள் → முழு → முழா = திட்சி. மத்தளம். முழா → முழவு] |
புறமூலம் | புறமூலம் puṟamūlam, பெ. (n.) முளை வெளித்தோன்றும் மூலநோய் வகை; external piles (M.L.);. [புறம் + மூலம்] |
புறமேழி | புறமேழி puṟamēḻi, பெ. (n.) பொத்தாறு இல்லாமல் பயன்படுத்தும் மேழி; plough share without shaft. [புறம் + மேழி] |
புறமொழி | புறமொழி puṟamoḻi, பெ. (n.) புறங்கூற்று; backbiting, slander. ‘நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி’ (தொல்.பொ.274);. [புறம் + மொழி] |
புறம் | புறம்1 puṟam, பெ. (n.) 1. வெளியிடம்; outside, exterior, opp, to agam. ‘புறங்குன்றி கண்டனையரேனும்’ (குறள்,277);. 2. அயன்மை (அன்னியம்);; that which is foreign, extraneous. 3. புறத்திணை பார்க்க; see pura-t-tinai. 4. புறநானூறு பார்க்க; see puramசிறப்ப. “அகம்புறமென் றித்திறத்த” (தனிப்பா.); 5. வீரம்(சூடா.);; heroism, bravery, valour. ‘தான்புறங் கட்டுப்பட்டு’ (சீவக.1090.); 6. பக்கம்; side, part, face, surface. ‘புனலாடப் புறஞ்சூழ்ந்து’ (கலித்.76);. 7. முதுகு; Back ‘புறம்புல்லின் (கலித்.94);. 8. புறக்கொடை பார்க்க; see pura-k-kodal. ‘துப்புறுவர் புறம் பெற்றிசினே’ (புறநா.11); 9. பின்புறம் (வின்.); backside, behind, background, rear. 10. புறங்கூற்று; backbiting, as person, calumny. ‘புறஞ்சொல்லும் புன்மையால்’ (குறள்,185.);. 11. அலர்மொழி; gossip about intrigue between lovers. ‘புறமாறப்பட்டவர்’ (கலித்.80); 12. ஒருதலைப்பக்கம் (பட்சபாதம்); (வின்.);; partiality. 13. இடம் (திவா.);; place. ‘கரிபுறவட்டில்’ (சிலப்.1632);. 14. இறையிலி நிலம்; land free from assesment. ‘ஐந்தூ ரதன்புற மாக்கினானே’ (சீவக.2574);. 15. ஏழனுருபுள் ஒன்று நன்.302);; (gram.); a locative case suffix. 16. திசை (வின்.);; region, point of compass quarter; tract or part of a country, district. 17. காலம்; time, season. ‘யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ’ (கலித். 111);. ம. புறம்; க.பொற, பொறகு, பொறகெ; து.பிட; கோத பொரன்ச் [பின் → பிற → பிறவு → பிறகு → பிறக்கு. பிறக்கிடுதல் = பின்னுக்குச்செல்லுதல். பிறக்கு → பிறங்கு → பிறங்கடை = பின்னால் வரும் உரிமையாளன் (வாரிசு);. பின் → பினம் → பிறம் → பிறம்பு → பிறம்பத்தங்கால் = பின்னங்கால். பிள் → பின் → பிறம் → புறம் = வெளி, வெளிப்பக்கம், புறப்பொருள். ‘உள்ளும் புறம்பும் ‘அகமும் புறமும் என்னுந் தொடர்களால் புறம் என்னும் சொல் உட்பக்கத்திற்கு எதிரான வெளிப் பக்கத்தைக் குறிப்பது தெளிவாகும். மூடின கையின் உட்புறமாயிருப்பது உள்ளங்கை அல்லது அகங்கை என்றும் அதன் வெளிப்புறமாயிருப்பது புறங்கை என்றும் கூறப்படுதல் காண்க (மு.தா.293-295);] புறமாவது நிரை கோடற்பகுதியும், பகை வயிற்சேறலும், எயில் வளைத்தலும் இருபெரு வேந்தரும் ஒரு களத்துப் பொருதலும், வென்றிவகையும், நிலையாமைவகையும் புகழ்ச்சிவகையும் என எழு வகைப்படும். (இளம், தொல். புறத்திணை. முன்.); பொருளிலக்கணத்தில் பொருள் களெல்லாம் அகம், புறம் என இரண்டாகவும், அவற்றுள் அகம் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என ஏழாகவும், புறம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என ஏழாகவும் வகுப்படும். (ஒ.மொ. 1,176); மக்களையெல்லாம் நடத்தும் குணம் இரண்டு அவை காதலும் மறமும். இவ்விரு குணங்களுள்ளும் அல்லது குண வாழ்க்கையுள்ளும் உள்ளத்திற்கு மிக நெருங்கியது காதலே. ஆதலால் அதை அகமென்றார். அகமல்லாதது புறமாதலின் மறத்தைப் புறம் என்றார். இங்ங்னம் இரண்டையும் வேறுபடுத்திக் கூறினும் அவை அகப்பகையும் புறப்பகையும் போலப் பிரிந்து நில்லாது அகங்கையும் புறங்கையும் போல ஒன்றியே நிற்கும் (தமி.வ.115);. puram, a side, especially the outside, the exterior, the back e.g., appuram, that side; ippuram, this side; adjectivally purattu, external; adverbially purambäga (puram-bâga);, externally; as a verbal theme purappaợu (pura-(p);-paợu);, to set out; Can pora-ge, outside, pora-du, to set forth. There is, doubtless, an ulterior Connection between pura-m, the outside, externally, and pira, other, after; yet they are not to be regarded as one and the same word, and puram has affinities of its own, as well as meanings of its own. Comp Greek para, beside, in which one of the meanings of the Dravidian word appears, whilst the meaning of ‘side’ is not conveyed by the relative Sanskrit para Comp. especially the Latin foris abroad; forum, a public place; fori, the decks of a ship, with the Canarese pora, outside, This seems a more natural derivation of foris than the Greek thura, Sans, dvara a door, a word which I have compared with the Dravidian tra to open, In the Dravidian languages f is unknown, and, p is always used instead. (CGDFL. 599,600); புறம்2 puṟam, பெ. (n.) 1. உடம்பு; body. ‘பைம்புறப் படுகிளி’ (ஐங்குறு.260);. 2. மதில் (பிங்.);; fortification. 3. மருதநிலத்துர் (சூடா.);; village or town in agricultural tract. [பின் → பிறம் → புறம் = மருத நிலத்திற்குப் புறம்பான முல்லை, முல்லையடுத்த குறிஞ்சி. (மு.தா.295);] உயிர் உள்ளிருப்பது உயிர் குடியிருக்கும் உடம்பு வெளியிருப்பது என்னும் பொருளைக் குறிக்கும் வகையிலேயே புறம் உடம்பைக் குறித்தது. பின் புறமாக அமைந்த கோட்டை, காப்புள்ள ஊர் என்னும் வகையில் மருத நிலத்தூரைக் குறித்தது. |
புறம்காட்டு-தல் | புறம்காட்டு-தல் puṟamkāṭṭudal, 15 செ.கு.வி (v.i.) புறங்காட்டு-தல் பார்க்க; see purarikāttu-. ம. புறம்காட்டுக. [புறம் + காட்டு-,] |
புறம்படி | புறம்படி puṟambaḍi, பெ. (n.) நகரின் புறப்பகுதி; outskirts of a town. ‘தஞ்சாவூர்ப் புறம்படி’ (S.I.lii.124);. மறுவ. ஊர் ஒதுக்குப்புறம் [புறம் → புறம்படி] |
புறம்பணை | புறம்பணை1 puṟambaṇai, பெ. (n.) 1.முல்லைநிலம்; pastoral tract. 2. குறிஞ்சிநிலம்; hilly tract. [பின் → பிறம் → புறம் = மருத நிலத்திற்குப் புறம்பான முல்லை, முல்லையடுத்த குறிஞ்சி. புறம் → புறம்பு → புறம்பணை = முல்லை, குறிஞ்சி. மு.தா:295)] புறம்பணை2 puṟambaṇai, பெ. (n.) நகர்ப்புறமாகிய மருத நிலம்; agricultural region outside a town. “புறம்பணை யிம்பு மோசை’ (சீவக.85);. [புறம் → புறம்பு → புறம்பணை (முதா.295);] |
புறம்பணையான் | புறம்பணையான் puṟambaṇaiyāṉ, பெ. (n.) ஊர்க்கு வெளியேயிருப்பவன், ஐயனார்; Aiyaņār, as having His abode outside the village. ‘புறம்பணையான் வாழ்கோட்டம்’ (சிலப்.9, 12.);. மறுவ, காளி, புறத்தவன், கடல்வண்ணன், சாத்தா, பூரணைகேள்வன், புல்கலை மணாளன், மாசாத்தன், செண்டாயுதன், வெள்ளையானையூர்தி, அறத்தைக் காப்போன் [புறம்பணை + ஆன்] |
புறம்பர் | புறம்பர் puṟambar, பெ. (n.) புறப்பக்கம்; outside. ‘புறம்பரெய்தி’ (பாரத.திரெளபதிமா.65.); [புறம்பு + அர்] |
புறம்பாக்கு-தல் | புறம்பாக்கு-தல் puṟambākkudal, 12 செ.குன்றாவி, (v.t.) 1. நீக்குதல்; to exclude. 2. குலத்தி (சாதியி);னின்றும் நீக்குதல் (வின்.);; to excommunicate. மறுவ தள்ளிவைத்தல் [புறம் → புறம்பு + ஆக்கு-,] |
புறம்பு | புறம்பு puṟambu, பெ. (n.) 1. வெளியிடம்; exterior, outside. ‘பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள்’ (பெரியபு.ஆனாய7);. 2. தனியானது (வின்.);; that which is separate, detached, distrinct or exclusive. 3. மற்றை; other 4. முதுகு; back of a person. ‘தன்னைப் புறம்பழித்து நீவ’ (கலித்.51);. க.கொரகு [புறம் = வெளி, வெளிப்பக்கம், புறப் பொருள். புறம் → புறம்பு = வெளிப்புறம். (மு.தா,295);] புறம்பு puṟambu, பெ. (n.) பழைய வரிவகை; an ancient tax (S.I.I.iv.99);. |
புறம்புபண்ணு-தல் | புறம்புபண்ணு-தல் buṟambubaṇṇudal, 12 செ.குன்றாவி, (v.t.) 1. தனியாக்குதல்; to set apart 2. புறம்பாக்கு-தல் பார்க்க; see purambākku-. [புறம் → புறம்பு + பண்ணு-,] |
புறம்புல்கு-தல் | புறம்புல்கு-தல் puṟambulkudal, 12 செ.குன்றாவி. (v.t.) பின்புறத்தைக் கட்டித்தழுவுதல்; to clasp or embrace a person from behind, as a child in play. ‘என் குட்டன் வந்தென்னைப் புறம்புல்குவான்’ (திவ்.பெரியாழ்.1,9,1);. [புறம் + புல்கு-,] |
புறம்பெறு-தல் | புறம்பெறு-தல் puṟambeṟudal, 9 செ.குன்றாவி. (v.t.) lit, to see the back to gain victory over one’s enemies. ‘கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே (புறநா.373.); [புறம் + பெறு-,] |
புறம்பேசு-தல் | புறம்பேசு-தல் puṟambēcudal, 7 செ.கு.வி. (v.i.) குற்றங்குறை சொல்லுதல், புறங்கூறுதல் (திவ்.பெரியாழ். 24.5, வ்யா. பக்.319);; to back bite. அவர் என்னைப் பற்றிப் புறம் பேசித்திரிகிறார். (உ.வ.); [புறம் + பேசு-,] |
புறம்பொசி-தல் | புறம்பொசி-தல் puṟambosidal, 3 செ.கு.வி. (v.i.) 1. வெளியிற் கசிதல்; to ooze. 2. வெளிப்படுதல்; to emerge. ‘உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே’ (குருபரம். தனிப்); [புறம் + பொசி-,] |
புறம்போ-தல் | புறம்போ-தல் puṟambōtal, 9 செ.கு.வி. (v.i.) விட்டு நீங்குதல்; to quit, leave off. ‘அறிவு புறம்போய’ (கல்லா.கண.துதி); [புறம் + போ-,] |
புறம்போக்கு | புறம்போக்கு1 puṟambōkkudal, 8 செ.குன்றாவி. (v.t.) அகற்றுதல்; to remove take away. ‘பலகை புறம்போக்க’ (பெரியபு. ஏனாதி.37.); [புறம் + போக்கு-, போகு- (த.வி.); போக்கு (பி.வி.);] புறம்போக்கு2 puṟambōkku, பெ. (n.) 1.குமுகாய(சமுதாய); நன்மை வேளாண்மைக்குத் தகுதியின்மை முதலிய காரணங்களினால் குடிகள்வசம் விடப் படாததும் தீர்வை வகுக்கப்படாததுமாகிய south; land exempt from assessment, either because it is set a side for communal purposes or because it is unclutivable (M.N.A.D.1,284.);. 2. பொதுமகள்; public woman. (C.G.); ம. புறம்போக்கு (வெளியூர் செல்லல், கூடுதல் செலவு); [புறம் + போக்கு போ → போக்கு] புறம்போக்கு3 puṟambōkku, பெ. (n.) தாய் தந்தை அற்றவர்; orphan. போடா புறம்போக்கு நாயே (உ.வ.);. [புறம் + போக்கு] |
புறம்போக்குநிலம் | புறம்போக்குநிலம் puṟambōkkunilam, பெ. (n.) பயிர்செய்யத் தகுதியற்றதும், தீர்வைக்குட்படுத்தப் பெறாததுமான அரசு flouth; not taxed barren land. [புறம் + போக்கு + நிலம்] |
புறம்விடு-தல் | புறம்விடு-தல் puṟamviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) விலக்கிவிடுதல்; to abandon. ‘என்னைப் புறம்விடுத லென்னே பராபரமே’ (தாயு.பராபர263); [புறம் + விடு-,] |
புறவடி | புறவடி puṟavaḍi, பெ. (n.) பாதத்தின் மேற்புறம்; upper surface of the foot, instep. ‘யாமயாழ் மழலை யாடன் புறவடிக் கிழுக்க மன்னோ’ (கம்பராநாடவி.34);. ம. புறவடி [புற(ம்); + அடி] |
புறவடை | புறவடை puṟavaḍai, பெ. (n.) 1. கிணற்றிறவையால் வேளாண்மை செய்யப்படும் நன்செய்த்தாக்கு; plot of wet land cultivated mainly by lift irrigation.(C.G.); 2. குடிவாரத்துக்கு அடைத்த நிலம்; field let to a tenant for cultivation. (R.T.); மறுவ ஈடுகாட்டி, அடைமானம் [புறவு + அடை] |
புறவணி | புறவணி puṟavaṇi, பெ. (n.) புறவு 34. (பிங்.); பார்க்க; see puravu, 3,4 [புறவு + அணி, அண் → அணி] |
புறவண்டை | புறவண்டை puṟavaṇṭai, பெ. (n.) பின்புறம்; back, behind. ‘புறவண்டை வந்து பிடித்தார்கள்’ மறுவ. புறத்தாலே [புற(ம்); + அண்டை] |
புறவம் | புறவம்1 puṟavam, பெ. (n.) 1. புறவு-1,3,4 (பிங்.); பார்க்க see puravப-1,3,4 “நறைவிரி புறவம்” (கம்பரா.நாட்டுப்.48.);. 2. சீர்காழி (தேவா.);; Shiyali. 3. தோல் (அக.நி.);; skin. [புறம் → புறவு → புறவம்] தமிழ்ச்சொற்கள் பல இன்னோசைபற்றி ‘அம்’ஈறு பெறுதல் பெரும்பான்மை எ-டு. தூண்-துணம், கால்-காலம்; குன்றுகுன்றம்; நெஞ்சு-நெஞ்சம்; கண்டுகண்டம் (இலக்.கட்31);. புறவம்2 puṟavam, பெ. (n.) புறா பார்க்க; see pபக் ‘கானுறை புறவ மெல்லாம்’ (சீவக.1430.);. [புறம் → புறவு = முல்லை, குறிஞ்சி. புறம் → புற → முல்லை நிலப்பறவை வகை. புற → புறா → புறவு → புறவம் (மு.தா.2951);] |
புறவயம் | புறவயம் puṟavayam, பெ. (n.) வெளி உலகைச் சார்ந்து அமையும் தன்மை; external. ‘புறவயமான தூண்டுதல்களும் அகவயமான தூண்டுதல்களும் ஒருங் கிணைந்து ஒர் எழுத்தாளனை எழுத வைக்கின்றன’ (உ.வ.);. [புறம் + வயம்] |
புறவயிரம் | புறவயிரம் puṟavayiram, பெ. (n.) மரத்தின் வெளிவயிரம் (வின்.);; the hard outer part of an exogenous tree. [புறம் + வயிரம்] |
புறவரி | புறவரி puṟavari, பெ. (n.) தலைவனுடன் அணையாது தலைவி புறத்தே நின்று நடிக்கும் நடிப்பு; dance of a woman coldly neglecting the company of her lover. “புறத்து நின்றாடிய புன்புற வரியும்” (சிலப்.893);. [புறம் + வரி] |
புறவளையம் | புறவளையம் puṟavaḷaiyam, பெ. (n.) கண்ணோவு முதலியவற்றுக்கு இடும் மருந்துவகை (வின்.);; a medicinal unguent for sore eyes, etc., க. கொர வளெய (சுற்று, சூழல்,வட்டவடிவமாதல்); [புறம் + வளையம், வள் → வளை → வளையம்] |
புறவழி | புறவழி puṟavaḻi, பெ. (n.) பின்பக்கம்; backside. ‘வீட்டின் புறவழிச் சுவர்’. மறுவ, புறவடை, புழக்கடை, கொல்லைப்புறம், பொறவடை [புறம் + வழி] |
புறவழிச்சாலை | புறவழிச்சாலை puṟavaḻiccālai, பெ. (n.) நகரம், ஊர் முதலியவற்றினுள் நுழையாமலே அவற்றைக் கடந்து செல்லும் வகையில் அவற்றின் வெளி எல்லையை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலை; by pass road. [புறவழி + சாலை] |
புறவாயம் | புறவாயம் puṟavāyam, பெ. (n.) பணமாகத் தண்டப்படும் செக்கிறை முதலாய சில்லறை வரிகள்; revenue from external sources, colected mainly in cash. ‘வடகண்டத்திலும் கமுகடியிலும் வந்த புறவாயங்களால்’ (S.I.I.ii.121); [புற(ம்); + ஆயம்] |
புறவாயில் | புறவாயில் puṟavāyil, பெ. (n.) வெளிவாசல் (வின்.);; outer door, gate or entrance. ம. புறவாயி, புறாயி (தாழ்வாரம்);; து. பொரப்படி [புறம் + வாயில்] |
புறவாய் | புறவாய் puṟavāy, பெ. (n.) வெளிப்புறம்; that which is outside, exterior. “அருகு நின்றவர்களின் முகத்திலே அப்பூச்சியென்று கண்ணினிமையை அகவாய் புறவாயாகப் புரட்டி விழித்து” (திவ்.பெரியாழ்.2,4,6, வ்யா,பக்.320);. [புறம் → புற + வாய், வாய் = இடம்.] |
புறவாரி | புறவாரி puṟavāri, பெ. (n.) தாய்ச்சுவரைக் கடந்து வெளியில் நீண்டுள்ள கூரை (கொ.வ);; eaves. மறுவ, இறப்பு, இறவாரம், இறவானம் சாக்கை. [புறம் → புறவாரி] |
புறவாலி | புறவாலி puṟavāli, பெ. (n.) மலங்கழிக்குமிடம்; latrine, privy. (C.G.); [புறம் → புறம்பாய் → புறவாய் → புறவாயி → புறவாலி. வெளிக்குச் செல்லுதல், வெளிக்குப் போதல், கொல்லைக்குப் போதல் போன்று அவையல் கிளவியாய் ஆளப்பட்டது புறவாலி. புறவிடை விட்டுக் கொல்லையைக் குறிப்பது ஒப்பு நோக்கத்தக்கது] |
புறவாழி | புறவாழி puṟavāḻi, பெ. (n.) பெரும்புறக்கடல்; the outermost ocean Surrounding the seventh annular continent. ‘பின்னப் படுத்திப் புறவாழி வரல்போல்’ (இரகுதிக்கு.38);. [பிற(ம்); + ஆழி] |
புறவிடுதி | புறவிடுதி puṟaviḍudi, பெ. (n.) பிறவிடுதி (யாழ்ப்.); பார்க்க; see pravigudi. [பிறவிடுதி → புறவிடுதி] |
புறவிடை | புறவிடை1 puṟaviḍai, பெ. (n.) பிரிதற்குப் பெறும் விடை; permission to leave. ‘கசிந்து தாழ்ந்தனன் புறவிடை கொண்டான்’ (காஞ்சிப்பு:பன்னிரு.142);. [புற(ம்); + விடை] புறவிடை2 puṟaviḍai, பெ. (n.) விட்டுக் கொல்லை; back-yard of a house. Cm. [புற(ம்); + இடை] |
புறவிதழ் | புறவிதழ் puṟavidaḻ, பெ. (n.) பூவின் வெளிப்புறத்துள்ள இதழ்; sepal of a calyx, external petal. மறுவ. புல்லி. க. கொரசொப்பு [புற(ம்); + இதழ்] |
புறவிரல் | புறவிரல் puṟaviral, பெ. (n.) விரலின் வெளிப்பக்கம்; out side of a finger. ‘வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரனஞ் செய்து’ (சீவக.657,உரை.); [புறம் + விரல், விரி → விரல்] |
புறவீச்சு | புறவீச்சு puṟavīccu, பெ. (n.) புறவீச்சுச் சன்னி (வின்.); பார்க்க; see pura-viccu-ccaրըi. [புறம் + வீச்சு] |
புறவீச்சுச்சன்னி | புறவீச்சுச்சன்னி puṟavīccuccaṉṉi, பெ. (n.) இசிவுநோய் வகை (வின்.);; lockjaw. tetanus. [புறவீச்சு + சன்னி] Skt. san-ni-påta → த. சன்னி |
புறவீடு | புறவீடு puṟavīṭu, பெ. (n.) 1.யாத்திரைக்குமுன் நன்முழுத்தத்தில் அரசுச் சின்னத்தைப் புறத்தே அனுப்புகை; sending the royal equipage in advance at an auspicious hour, before a king’s journey. ‘வாளைப் புறவீடு விட்டது’ (பு.வெ.3,4, கொளு, உரை.); 2. பிறவிடுதி பார்க்க; see piravidudi. ‘திருமாளிகையிலே புறவீடு விட்டிருக்கிற வளவிலே’ (திவ். பெரியாழ்,4.7.வ்யா.995.);. [புறம் + வீடு. விடு → வீடு.] |
புறவீதி | புறவீதி puṟavīti, பெ. (n.) 1. நகரின் வெளிவீதி; street outskirting a town. ‘இவர் புற வீதிமகளிராய் முற்கூறிய கடைகழி மகளிர்’ (சிலப்.,14,118, உரை);. 2. கோயில் முதலியவற்றின் வெளிவீதி (வின்.);; outer court of a temple, etc. [புறம் + வீதி] |
புறவு | புறவு1 puṟavu, 1. காடு; forest. ‘உதிர்த்த மலர்வீழ் புறவின்’ (பெரும்பாண்.496.); 2. சிறுகாடு; jungle. ‘புறவே……….மள்ளர் மேன’ (பதிற்றுப்.13,20);. 3. முல்லை நிலம்; forest tract. ‘தன்புறவணிந்த’ (குறுந்.404);. 4. குறிஞ்சிநிலம் (சூடா.);; hilly tract. 5. வேளாண்மை நிலம்; cultivable land. ‘கண்மாய்ப் புறவு’. 6. முல்லைக் கொடி; eared jasmine. ‘நின்னுத னாறு நறுந்தண் புறவின்’ (ஐங்குறு.413.);. ம. பிறாவு, ப்ராவு. [புறம் = மருதநிலத்திற்குப் புறம்பான முல்லை, முல்லையடுத்த குறிஞ்சி. புறம் → புறவு = முல்லை, குறிஞ்சி (மு.தா.295);] புறவு2 puṟavu, பெ. (n.) புறா; dove, pigeon. ‘புன்புறப் புறவின் கணநிரை’ (பதிற்றுப்.39,11.);. [புறம் = மருதநிலத்திற்குப் புறம்பான முல்லை. புறம் → புற → முல்லை நிலப்பறவை வகை. புற → புறா → புறவு (மு.தா,295);] |
புறவுரு | புறவுரு puṟavuru, பெ. (n.) உடம்பினுறுப்பு; limb of the body. ‘ஓரணு புற்கலம்புறவுரு வாகும்’.(மணிமே.27.197.);. [புறம் + உரு. புறம் = உடம்பு] |
புறவுரை | புறவுரை puṟavurai, பெ. (n.) பாயிரம் preface. [புறம் + உரை.] நூல்சொல்லிய பொருளில்லாதவற்றைச் சொல்வது புறவுரை. |
புறவெட்டி | புறவெட்டி puṟaveṭṭi, பெ. (n.) பழைய வரிவகை; an ancient tax (S.I.l.viii.139); [புறம் + வெட்டி.. வெட்டு → வெட்டி] |
புறவெட்டு | புறவெட்டு puṟaveṭṭu, பெ. (n.) 1.மரத்தில் வெட்டும் மேல்வெட்டு; cut on the surface of timber. 2.அறுத்த மரத்துண்டின் மேற்பற்றை (வின்.);; outside plank or piece of a sawn timber. 3.எதிர்பேச்சு (யாழ்ப்.);; contemptuous opposition or contradiction. [புற(ம்); + வெட்டு] |
புறா | புறா puṟā, பெ. (n.) வீட்டுப்பறவையாக வளர்ப்பதற்கு ஏற்றதான பல வகைகளில் காணப்படும் காட்டுப் பறவைவகை; dove, pigeon. ‘மாமணிப்புறா’ (சீவக.70.); ம. பிறாவு, ப்ராவு; க.கொரசு (ஒருவகைப் புறா);; து. புத; கோண்.புரர், புரார்; கொண். பொர்ரொக; குரு. புர்ரா; மால.புரெ; [புறம் → புற = முல்லைநிலப் பறவை வகை. புற → புறா] புறாவகைகள் 1. ஐநிற(பஞ்சவர்ண);ப் புறா (emerald dove); 2. கள்ளிப் புறா (eurasian coloured dove); 3. சாம்பல் நெற்றிப்புறா (pompadour green pigeon); 4. சிறிய தவிட்டுப்புறா (little brown dove); 5. தவிட்டுப் புறா (red coloured dove); 6. நீலகிரி காட்டுப்புறா (Nilgiri wood pigeon); 7. பச்சைப்புறா (yellow legged green pigeon); 8.புள்ளிப்புறா (spotted dove); 9. பெரிய பச்சைப்புறா (green imperial pigeon); 10. மந்திப்புறா (mountain imperial pigeon); 11. மாடப்புறா (blue rock pigeon); |
புறாக்காலி | புறாக்காலி puṟākkāli, பெ. (n.) பூடுவகை (வின்.);; a kind of plant. [புறா + காலி கால் → காலி] |
புறாக்குஞ்சு | புறாக்குஞ்சு puṟākkuñju, பெ. (n.) இளம்புறா; dove let. [புறா + குஞ்சு. குள் → குய் → குய்ஞ்சு → குஞ்சு] |
புறாக்கூடு | புறாக்கூடு puṟākāṭu, பெ. (n.) 1. புறாக்கள் வசிக்குமாறு கட்டப்பட்ட கூண்டுகள் dovecote, pigeon-house. 2. பேழை (அலமாரி); முதலியவற்றில் புறாக்கூடுபோற் செய்யப்பட்ட சிற்றறை (இக்.வ.);; pigeon hole, as in a desk or bureau. [புறா + கூடு, கூண்டு → கூடு.] |
புறாக்கூட்டுவண்டி | புறாக்கூட்டுவண்டி puṟākāṭṭuvaṇṭi, பெ. (n.) ஒருவகைப் பெட்டி வண்டி (இ.வ.);; box-bandy, bullock cart on spring as resembling a dovecote. [புறா + கூட்டு + வண்டி] |
புறாக்கூட்டுவேலை | புறாக்கூட்டுவேலை puṟākāṭṭuvēlai, பெ. (n.) கட்டடவேலைவகை (இ.வ.);; honeycomb work. [புறா + கூட்டு + வேலை] |
புறாக்கை | புறாக்கை puṟākkai, பெ. (n.) இரண்டு கை களையும் புறா வடிவில் இணைப்பது a dance pose of hands. [புறா+கை] |
புறாண்டு-தல் | புறாண்டு-தல் puṟāṇṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) பிறாண்டு; to scratch. [பிறண்டு → புறாண்டு] |
புறாத்தலை | புறாத்தலை puṟāttalai, பெ. (n.) சிறியதலை; small head, as of a dove. ‘புறாத்தலைவேடன்’ (சீவக.450); [புறா + தலை] |
புறாப்பொறுக்கி | புறாப்பொறுக்கி puṟāppoṟukki, பெ. (n.) பூடுவகை (சித்.அக.);; a plant. |
புறாமாடம் | புறாமாடம் puṟāmāṭam, பெ. (n.) புறாக்கூடு பார்க்க; see purá-k-kudu [புறா + மாடம்] |
புறாமுட்டி | புறாமுட்டி puṟāmuṭṭi, பெ. (n.) செடிவகை; parakeet-bur, a widespread weed. |
புறாமுட்டைச்சங்கு | புறாமுட்டைச்சங்கு puṟāmuṭṭaiccaṅgu, பெ. (n.) சங்கு வகை; kind of conch, resembles the egg of a dove. [புறாமுட்டை + சங்கு] |
புறாய் | புறாய் puṟāy, பெ. (n.) வேளாண்மைக்குரிய நிலவகை (செந்.xiii, 172.);; a kind of arable land. |
புறாவால் | புறாவால் puṟāvāl, பெ. (n.) பலகை முதலியவற்றை இணைக்கும் இணைப்பு வகை (இ.வ.);; dovetail joint, as of plank, etc. [புறா + வால்] |
புற்கசன் | புற்கசன் puṟkasaṉ, பெ. (n.) இழிந்தவன் (சண்டாளன்);; Iow, Vile, base man. [புல்லுதல் = துளைத்தல் புல் = உட்டுளை யுள்ள பொருள். சிறுமை, இழிவு. புல் → புல்லன் = இழிந்தோன். புல் → புல்கசன் → புற்கசன்] |
புற்கட்டி | புற்கட்டி puṟkaṭṭi, பெ. (n.) புல்லுடன் கூடிய மண்கட்டி (வின்.);; piece of turf or sod. மறுவ: புற்பத்தை, புறளி கரடு, தொம்பை [புல் + கட்டி] |
புற்கட்டை | புற்கட்டை puṟkaṭṭai, பெ. (n.) 1. அறுகம்புல்லின் அடிக்கட்டை (வின்.);; stem of harialli grass. 2. அறுத்த பயிர்த்தாள் (இ.வ.);; stubble. மறுவ. அரிகட்டு, அரிகெடை அரிதாள். [புல் + கட்டை] |
புற்கம் | புற்கம் puṟkam, பெ. (n.) 1. குறைவு; fault. 2. புல்லறிவு; wrong knowledge; prejudice bias. 3. மாயம் (வின்.);; delusion illusion; Worldiness. [புல் → புன் → புன்மை. புல் → புன் → புன்கம் → புற்கம்] |
புற்கரடு | புற்கரடு puṟkaraḍu, பெ. (n.) புற்பற்றை (இ.வ.); பார்க்க;See purparrai. [புல் + கரடு] |
புற்கற்றை | புற்கற்றை puṟkaṟṟai, பெ. (n.) புற்றிரள்; bundle of grass. “எழுந்த புற்கற்றை தீற்றி”(சீவக.3105.);. [புல் + கற்றை] |
புற்கலன் | புற்கலன் puṟkalaṉ, பெ. (n.) ஆதன் (ஆன்மா); (பிங்.);; soul, lite; “மனனைப் புற்கலனிடத்தி லொடுக்கி”(காசிக. யோக.13.);. [புல் + கலன்] |
புற்கலம் | புற்கலம் puṟkalam, பெ. (n.) 1. உடம்பு; body. “புற்கலம் புறவுருவாகும்'(மணிமே.27.197);. 2. கல்முதலியஉயிரற்றபொருள்கள் (பிரபோத:33, 22.);; matter, as the non-living part of the creation. 3. உயிரற்ற பொருள் (அசீவம்.); (மேருமந்..41.);;(jaina.); a category of fundamental entities. [புல் = உட்டுளையுள்ள பொருள், உடம்பு. புல் + கலம்.] |
புற்கவ்வு-தல் | புற்கவ்வு-தல் puṟkavvudal, 15 செ.கு.வி. (v.i.) தோல்வியை யொத்துக்கொள்ளுதல்; to accept defeat. “போக்யதைக்குத்தோற்றுப் புற்கவ்விச் சொல்லுகிறார்”(ஈடு.5,8,1); . [புல் + கவ்வு-, புற்கவ்வு = புல்லை உண்ணுதல். தோற்றபின் சிறிது புல்லைத் தி ன்னுதல் என்னும் பழக்கத்தின் அடிப்படையில் புல்லைக் கவ்வுதல் தோல்வியை ஒத்துக்கொள்ளுதலைக் குறித்தது.] |
புற்கு | புற்கு puṟku, பெ. (n.) பழுப்புநிறம் (திவா.);; tawny colour, dimness. [புல் → புன் → புற்கு] |
புற்குருவி | புற்குருவி puṟkuruvi, பெ. (n.) காடை வகை (வின்.);; a kind of quail. [புல் + குருவி] |
புற்கெனல் | புற்கெனல் puṟkeṉal, பெ. (n.) 1.ஒளிமழுங்கற் குறிப்பு: expr signifying being dim. “வாளற்றுப் புற்கென்றை கண்ணும்”(குறள்,1261.);. 2. பயனில்லாமைக் குறிப்பு; expr; signifying being useless. ‘புன்னிலத்திட்ட வித்திற் புற்கென விளைந்து'(சீவக.2823.); 3. புன்மைக் குறிப்பு; expr: signifying paling in comparison. ‘புகழ்வெல்லாம் பெரும்பாலும் பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால்'(திவ்.திருவாய்.3,1,2);. [புல் → புன் → புன்கு + எனல்] |
புற்கை | புற்கை puṟkai, பெ. (n.) 1. ஒருவகைக் கஞ்சி; a kind of porridge of rice or other grains. ‘தெண்ணீர் அடுபுற்கையாயினும்'(குறள் 1065.);. 2. சோறு(பிங்.);; boiled rice. [புல் → புற்கை] புற்கை2 puṟkai, பெ. (n.) பற்று (புதுவை.);; poultice. [புல் → புற்கை] |
புற்கொடி | புற்கொடி puṟkoḍi, பெ. (n.) 1. கரை (மலை.);; calabash, climber. 2. பேய்ச்சுரை (பிங்.);; wild melon. [புல் + கொடி] |
புற்கோரை | புற்கோரை puṟārai, பெ. (n.) கோரைவகை; a Coarse grass. [புல் + கோரை.] |
புற்சாமை | புற்சாமை puṟcāmai, பெ. (n.) சாமைவகை; a specious of little millet. [புல் + சாமை] |
புற்செதுக்கி | புற்செதுக்கி puṟcedukki, பெ. (n.) புல்லைச் செதுக்க வுதவுங்கருவி (இ.வ.);, grass hoe. மறுவ, புல்வெட்டி [புல் → செதுக்கி, செதுக்கு → செதுக்கி] |
புற்பண்ணை | புற்பண்ணை puṟpaṇṇai, பெ. (n.) கோழிக்கீரை (புதுவை);; a kind of greens. [புல் + பண்ணை] |
புற்பதி | புற்பதி puṟpadi, பெ. (n.) 1. பனை (பிங்.);: palmyra 2. வாழைக் கிழங்கு (தைலவ. தைல.);; plantain-root. [புல் + பதி] |
புற்பறி | புற்பறி puṟpaṟi, பெ. (n.) ஒருவகைக் கூடை (வின்.);; a kind of wicker-basket. [புல் + பறி] |
புற்பற்றை | புற்பற்றை puṟpaṟṟai, பெ. (n.) புல்லுடன் கூடிய மண்ணாங்கட்டி; turf, Sod. மறுவ. புற்காடு [புல் + பற்றை] |
புற்பாய் | புற்பாய் puṟpāy, பெ. (n.) பாய்வகை (திவ.); grass-mat. க. குல்லுசாபெ [புல் + பாய்] |
புற்புல்லெனல் | புற்புல்லெனல் puṟpulleṉal, பெ. (n.) விடிதற்குறிப்பு (வின்.);; expr. indicating break of day. [புற்புல் + எனல்] |
புற்பொழி | புற்பொழி puṟpoḻi, பெ. (n.) 1. புற்பற்றை பார்க்க;See putparrai. 2. புல்லடர்ந்த வரப்பு; ridge. [புல் + பொழி] |
புற்போதி | புற்போதி puṟpōti, பெ. (n.) பூவரசு (மலை.);; portia tree. |
புற்றஞ்சோறு | புற்றஞ்சோறு puṟṟañjōṟu, பெ. (n.) புற்றாஞ்சோறு (திவா.);பார்க்க;See purrancoru. [புற்றம் + சோறு. புல் → புற்று → புற்றம். சொல் → சொன்றி → சோறு] |
புற்றம் | புற்றம் puṟṟam, பெ. (n.) புற்று; ant-hil. ‘நெடுஞ் செம்புற்ற மீயல் பகர'(ஐங்குறு. 497.);. [புல் → புற்று = உட்டுளையுள்ள கறையான் மண்கூடு. புற்று → புற்றம் (வேக. 3, 107);] |
புற்றளை | புற்றளை puṟṟaḷai, பெ. (n.) புற்றின் துளை; hole in an ant-hill. ‘நாகம் கிடந்த …. புற்றளை'(மணிமே. 20, 99.);. [புல் → புற்று + அளை. புற்றளை = புற்று வளை (வே.க. 3, 107); ] |
புற்றாஞ்சோறு | புற்றாஞ்சோறு puṟṟāñjōṟu, பெ. (n.) 1. புற்றிலுள்ள கறையான் திரள் (பிங்.);; termites in an ant-hill. 2. பூஞ்சணம் (இ.வ.);; mould. [புல் → புற்று → புற்றாம் + சோறு. சொல் = நெல்.சொல் → சொன்றி → சோறு = நெற்சோறு, புற்றாஞ்சோறு = நெற் சோறு போல் காணப்படும் கறையான் திரள். ] |
புற்றானியபாணம் | புற்றானியபாணம் puṟṟāṉiyapāṇam, பெ. (n.) சாராய வகை (கிறித்.);; cervisia. [புல் + தானியம் + பானம்] Skt dharya → த. தானியம். Skt pana » பானம். |
புற்றாம்பழஞ்சோறு | புற்றாம்பழஞ்சோறு puṟṟāmbaḻñjōṟu, பெ. (n.) புற்றாஞ்சோறு பார்க்க;See purran-coru. ‘புற்றின்கட் கிடக்கும் புற்றாம் பழஞ் சோற்றை'(பெரும்பாண். 276, உரை.);. [புற்றாம் + பழம் + சோறு] |
புற்றாம்பழம் | புற்றாம்பழம் puṟṟāmbaḻm, பெ. (n.) புற்றாஞ்சோறு (யாழ்.அக.);பார்க்க;See purran-COru. [புற்று → புற்றாம் + பழம்] |
புற்றாளி | புற்றாளி puṟṟāḷi, பெ. (n.) 1. பனை; palmyra. 2. பனைநாள்; the 17th naksatra. [புல் + தாளி] |
புற்றீசல் | புற்றீசல் puṟṟīcal, பெ. (n.) ‘திரைப்படங்கள் புற்றீசல் போல் வெளி வரத் தொடங்கி விட்டன'(உ.வ.);. [புற்று + ஈசல்] |
புற்று | புற்று1 puṟṟu, பெ. (n.) 1. கறையான் கட்டிய மண் கூடு; ant-hill, mound thrown up by termites. ‘புற்றிடை வெகுளி நாகம்'(சீவக. 1285.);. கறையான் புற்றிற் பாம்பு குடிகொண்டது போல (உ.வ.);. 2. எறும்பு முதலியவற்றின் வளை; hole, as of ants. 3. புரை வைத்த புண்; anything scurvy, scrofulous or cancerous; rapilloma. ‘புழுச்செறி …. புற்றுறு நோய்'(கடம்ப. 4. இலீலா 116.);. ம. புற்று க. புத்து புத்த குத்த குத்து, உத்த; தெ. கொலா; நா. புட்ட; து. புஞ்ச; குட. புத்தீ; கோண். புட்டீ; கொண். புழ்கி;கூய். புசி; குவி. பூசி; குரு. புட்டா; மால. புதெ;த. புற்று » Skt. puța, puttikā [புல் → புற்று = உட்டுளையுள்ள கறையான் மண்கூடு, உட்டுளையுள்ள எறும்புவளை, துளையுள்ள புண் ஒ.நோ. கல் → சற்று. (வே.க 3, 107);] புற்று2 puṟṟu, பெ. (n.) 1. தலை (அக.நி);; head. 2. எழுத்து; letter. [புல் → புற்று] |
புற்றுக்காளான் | புற்றுக்காளான் puṟṟukkāḷāṉ, பெ. (n.) காளான் வகை (வின்.);; a kind of mushroom. [புற்று + காளான்] |
புற்றுத்தேன் | புற்றுத்தேன் puṟṟuttēṉ, பெ. (n.) மதிலிடுக்கு முதலியவற்றில் ஈக்களால் வைக்கப்படுந்தேன் (பதார்த்த.199);; honey secreted by bees in crevices of Walls, etc. [புற்று + தேன்] |
புற்றுநோய் | புற்றுநோய் puṟṟunōy, பெ. (n.) இயல்புக்கு மாறான உயிரணுப் பெருக்கத்தால் உள்ளுறுப்புகள் அல்லது அரத்தம் கெட்டு (உடல் இளைத்து); இறப்பு நேரக் கூடிய நோய்; cancer. ‘குமுகாயத்தைப் பிடித்திருக்கும் புற்று நோய் ஊழல்'(உ.வ.);. [புற்று + நோய்] |
புற்றுமண் | புற்றுமண் puṟṟumaṇ, பெ. (n.) கறையானால் வைக்கப்பட்டதும் குழைவுள்ளதும் மருந்து முதலியற்றில் பயன்படுத்தப் படுவதுமான மண்; soft earth thrown up by white ants, used as medicine. [புற்று + மண்] புற்றுமண் puṟṟumaṇ, பெ. (n.) செப்புப் படிமங்கள் செய்ய உதவும் கருவி-கரு: mould, crucible used to make icons. [புற்று+மண்] |
புற்றுவெடிப்பு | புற்றுவெடிப்பு puṟṟuveḍippu, பெ. (n.) பித்தவெடிப்பு; fissure-foot. [புற்று + வெடிப்பு. வெடி → வெடிப்பு] |
புற்றுவை-த்தல் | புற்றுவை-த்தல் puṟṟuvaittal, 4 செ.கு.வி. (v.t.) 1. கறையானால் புற்றுண்டாதல்; to form small mounds of earth, as by white ants. 2. புண் புரை வைத்தல்; to become cancerous. [புல் → புற்று + வை-, ] |
புல | புல1 pulattal, 4 செ.கு.வி. (v.i.) 1. மனம் வேறுபடுதல்; to pout, sulk, to be displeased. ‘புலத்தலு மூடலு மாகியவிடத்து’ (தொல். பொ. 157.);. 2. துன்புறுதல்; to suffer pain. ‘போகும் புழையுட் புலந்து’ (ஏலாதி, 11);. [புல் → புர் → புரள். புரளுதல் = உருளுதல், மாறுபாடடைதல். புல் → புல (மு.தா. 206.);.] புல2 pulattal, 4 செ.குன்றாவி. (v.t.) வெறுத்தல்; to dislike. “பலபுலந்து” (பொருந. 175.);. [புல் → புல-.] புல3 pulattal, 4 செ.குன்றாவி. (v.t.) அறிவுறுத்துதல்; to make known; to instruct. ‘புலக்க வேண்டுறுமக் காதை’ (உபதேசகா. சிவத்துரோ. 264.);. [புல்லுதல் = பொருந்துதல். புல் → புலம் = ஐம்பொறிகள் பொருள்களொடு பொருந்தி அறியும் அறிவு. புல் → புல.] புல4 pula, பெ. (n.) புலவு 2, 3, பார்க்க;see pulavu 2, 3, ‘புலவேல் வானவன்’ (பு. வெ. 10, 1 கொளு);. [புல் → புல.] |
புலக்கட்டுப்பாடு | புலக்கட்டுப்பாடு pulakkaṭṭuppāṭu, பெ. (n.) களக்கட்டுப்பாடு; field control. [புலம் + கட்டுப்பாடு. கட்டுப்படு → கட்டுப்பாடு.] |
புலக்கம் | புலக்கம் pulakkam, பெ. (n.) வழக்கம் (யாழ்.அக.);; habit. [புழக்கம் → புலக்கம் (கொ.வ);.] |
புலக்காசு | புலக்காசு pulakkācu, பெ. (n.) பழைய காசு வகை (பணவிடு.114);; an ancient coin. [புலம் + காசு. காய்ச்சு → காசு.] |
புலக்காணி | புலக்காணி pulakkāṇi, பெ. (n.) மேட்டு நிலம் (வின்.);; high elevated land. [புல் → புலம் = பொருந்தியிருக்கும் நிலம், விளைநிலம் (வே.க. 3. 62);. புலம் + காணி.] |
புலங்கொளி | புலங்கொளி pulaṅgoḷi, பெ. (n.) 1. உணர்வுறுப்பு (வின்.);; sense-organ. 2.செய்திப் பற்றுள்ளவன் (யாழ்.அக.);; epicure, sensual-man. [புலம் + கொளி, கொள் + இ – கொளி.] |
புலங்கொள்ளு)-தல் | புலங்கொள்ளு)-தல் pulaṅgoḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) 1. விளங்குதல் (வின்.);; to be clearly understood. 2. வெளிச்சமாதல்; to be visible, to be bright. [புல் → புலம் = ஐம்பொறிகள் பொருள்களொடு பொருந்தி அறியும் அறிவு, பொறியுணர்வு (வே.க. 3.62); புலம் + கொள்.] |
புலச்சாமை | புலச்சாமை pulaccāmai, பெ. (n.) சாமை வகை (வின்.);; a kind of poor-man’s millet. [புலம் + சாமை.] |
புலச்சாய்வு | புலச்சாய்வு pulaccāyvu, பெ. (n.) புலச்சார்வு (வின்.); பார்க்க;see pula-c-cărvu. [புலச்சார்வு → புலச்சாய்வு.] |
புலச்சார்வு | புலச்சார்வு pulaccārvu, பெ. (n.) வயற்புறம் (வின்.);; field and lands adjacent to fields. [புலம் + சாய்வு. புலத்தைச் சார்ந்திருப்பது. சார் → சார்வு,’வு’ பெ.ஆ. ஈறு.).] |
புலச்சி | புலச்சி1 pulacci, பெ. (n.) அறிவு நிறைந்தவள்; wise woman. ‘சிவனிற் புலச்சி தனக்கு’ (திருப்பு. 123);. [புல் → புலம் → புலவன் (ஆ.பா.); – புலத்தி (பெ.பா.); புலத்தி → புலச்சி. ஒ.நோ. வேட்டுவத்தி → வேட்டுவச்சி (வே.க.3. 63);.] புலச்சி2 pulacci, பெ. (n.) கும்பாதிரி; gum lac tree. (Nels.);. |
புலச்செய்கை | புலச்செய்கை pulacceykai, பெ. (n.) உழவு (வின்.);; agriculture, husbandry, tillage. [புல் → புலம் = பொருந்தியிருக்கும் நிலம், நிலம். புலம் + செய்கை. செய் → செய்கை.] |
புலச்சோதி | புலச்சோதி pulaccōti, பெ. (n.) மாமூலிகை இருபத்து மூன்றிலொன்று; one of the 23 drugs which are considered best. |
புலத்தகை | புலத்தகை pulattagai, பெ. (n.) ஊடல்; sulks. ‘இராகுலன் றன்னெடு புலத்தகை யெய்தினை’ (மணிமே. 10, 21);. [புல → புலத்தகை.] |
புலத்தமரம் | புலத்தமரம் pulattamaram, பெ. (n.) பெருமரம்; tooth-leaved tree. [புல் → பல் → பல. புல் → பல் → பர் → பரு. புல் → புலத்த மரம்.] |
புலத்தரை | புலத்தரை pulattarai, பெ. (n.) புலக்காணி (வின்.); பார்க்க;see pulakkāņi. [புலம் → புலத்தரை.] |
புலத்தவிருக்கம் | புலத்தவிருக்கம் pulattavirukkam, பெ. (n.) பெருமரம் (சங்.அக.);; tooth-leaved tree of heaven. [புல் → பல் → பல. புல் → பல் → பர் → பரு → பருமை. புல் → புலத்த + விருக்கம்.] Skt. vriksa → த. விருக்கம் ‘புலத்தமரம்’ பார்க்க |
புலத்தார் | புலத்தார் pulattār, பெ. (n.) குடிகள் (வின்.);; inhabitants. “தென்புலத்தார்”. [புல் → புலம் = நிலம். புலம் → புலத்தார் = (ஓரிடத்தில் நிலையாக வாழ்பவர். ‘ஆர்’ ப.பா.ஈறு.] |
புலத்தி | புலத்தி1 pulatti, பெ. (n.) பெண் புலவர்; poet-ess. [புலவன் (ஆ.பா.);-புலத்தி (பெ.பா.);.] கிழவன் என்னும் சொல் பெண்பாலிற் கிழத்தி என்றாவது போல் புலவன் என்னும் சொல் புலத்தி என்றாகும். இங்ஙனம் அமைக்காது பெண்பாற் புலவர் என்பது வழுவாம். (தவ.288);. புலத்தி2 pulatti, பெ. (n.) வண்ணாத்தி; washerwoman. ‘அறனில்புலத்தி’ (நற்.90);. ம. புலத்தி, புலச்சி (இழிகுலப்பெண்);;க. பொலத்தி (இழிகுலப்பெண்); [புலைத்தி → புலத்தி.] புலத்தி2 pulatti, பெ. (n.) வண்ணாத்தி; washerwoman ‘அறனில்புலத்தி’ (நற்.90);. ம. புலத்தி, புலச்சி (இழிகுலப்பெண்);;க. பொலத்தி (இழிகுலப்பெண்); [புலைத்தி → புலத்தி.] |
புலத்துறை | புலத்துறை pulattuṟai, பெ.(v.i.) அறிவுத் துறை; faculties of academic branches. புலத்துறைமுற்றிய கூடலூர்க் கிழார் (ஐங்குறு); [புலம்+துறை] |
புலத்துறைமுற்றியகூடலூர்கிழார் | புலத்துறைமுற்றியகூடலூர்கிழார் pulattuṟaimuṟṟiyaāṭalūrkiḻār, பெ. (n.) ஐங்குறு நூறு தொகுத்த சங்ககாலத்துப் புலவர்; an ancient poet, compiler of aifikurunuru. |
புலத்தோர் | புலத்தோர் pulattōr, பெ. (n.) அறிஞன், முனிவன்; wisemen, sages, savants. ‘போத நிலைகண்ட புலத்தோர்’ (தாயு.பராபர.194);. [புலம் + அத்து + ஒர். புல் → புலம். அத்து சாரியை.’ஒர்’ ப.பா.ஈறு.] புலத்தோர் pulattōr, பெ.(v.i.) 1. மூதறிவினர்; elite persons. 2.முனிவர்; sages. [புலம்+அத்து+[ஆர்] ஒர்] |
புலநரம்பு | புலநரம்பு pulanarambu, பெ. (n.) சிறப்புணர்வைத் தூண்டும் நரம்பு; nerve which induces feelings. [புலம் + நரம்பு. நாளம் → (நளம்); → நரம் → நரம்பு.] |
புலநெறிவழக்கம் | புலநெறிவழக்கம் pulaneṟivaḻkkam, பெ. (n.) புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு (தொல்.பொ.53);; literary usage or convention, dist. fr. ‘ulagiyal valakku’ and ‘nādāga valakku’. [புலம் + நெறி + வழக்கம்.] புலநெறிவழக்கம் pulaneṟivaḻkkam, பெ. (n.) புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு (தொல்.பொ.53);; literary usage or convention, dist. fr.’ulagiyal valakku’ and ‘nādāga valakku’. [புலம் + நெறி + வழக்கம்.] |
புலந்திரன்களவுமாலை | புலந்திரன்களவுமாலை pulandiraṉkaḷavumālai, பெ. (n.) புகழேந்திப் புலவர் இயற்றியதாகச் சொல்லப்படுவதும் எளிய செய்யுள் நடையில் அமைந்ததுமான கதை நூல்; a popular poem, attributed to Pugalèndi-p-pulawar. |
புலனடக்கம் | புலனடக்கம் pulaṉaḍakkam, பெ. (n.) 1. புலன்களை அடக்குகை; controlling of senses. 2. ஒகப் பயிற்சியின் எண்ணுறுப்புகளுள் ஒன்று (பிரத்தியாகாரம்);; one of the eight organs of ‘yõga’. [புலம் + அடக்கம். அடங்கு (த.வி.); – அடக்கு (பி.வி.); – அடக்கம் (தொ.பெ.);.] ஒழுக்கம் (இயமம்);, ஒழுங்கு (நியமம்);, இருக்கை (ஆசனம்);, வளிநிலை (பிராணாயாமம்);, புலனடக்கம் (பிரத்தியாகாரம்);, நிறை (தாரணை);, ஊழ்கம் (தியானம்);, ஒடுக்கம் (சமாதி); என்பன ஒகப்பயிற்சியின் எண்ணுறுப்புகள். இவற்றுள் இருக்கையும் வளிநிலையும் உடற்பயிற்சி;ஏனைய ஒகப்பயிற்சி (ப.த.நா.ப. 143);. |
புலனறி-தல் | புலனறி-தல் pulaṉaṟidal, 3 செ.குன்றாவி. (v.t.) துப்பறிதல் (சென்னை.);; to spy out. [புல் → புலம் = ஐம்பொறிகள் பொருள்களோடு பொருந்தி அறியும் அறிவு, கூர்மதி துப்பு (வே.க. 3, 62);. புலன் + அறி-.] |
புலனறிசிறப்பு | புலனறிசிறப்பு pulaṉaṟisiṟappu, பெ. (n.) வேற்றுப் புலத்தினது நிலையை அறிவித்தார்க்குத் தாம் முன் கூறியதினும் பெருகக் கொடுத்தலை யுணர்த்தும் ஒரு புறத்துறை (பு. வெ. 1, 17);; [புலனறி + சிறப்பு.] |
புலனாகு-தல் | புலனாகு-தல் pulaṉākudal, 7 செ.கு.வி. (v.i.) 1. பார்வையில் படுதல், தெரிதல்; to be visible. 2. தெளிவாதல்; to become clear, be evident. கொடுமை இழைக்கப்பட்டது என்பது உசாவலில் (விசாரணையில்); புலனாகியது. (உ.வ.);. [புலன் + ஆகு-.] |
புலனாய்வு | புலனாய்வு pulaṉāyvu, பெ. (n.) 1. ஒரு குற்றம் பற்றிய கரி (சாட்சி);களைத் தொகுக்கக் காவல்துறை அதிகாரி எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கை; investigation (of an offense); புலனாய்வு நடந்துவருகிறது. (உ.வ.);. 2. காவல்துறையல்லாத பிறதுறைகளில் ஒரு நிகழ்வுக்கான கரணியம், சூழ்நிலை, அதன் விளைவுகள் ஆகியவற்றைக் கண்டறிய எடுக்கப்படும் நடவடிக்கை;வருவாய்த்துறைப் புலனாய்வு அதிகாரிகள். (உ.வ.);. [புலன் + ஆய்வு.] புலனாய்வு pulaṉāyvu, பெ. (n.) 1. ஒரு குற்றம் பற்றிய கரி (சாட்சி);களைத் தொகுக்கக் காவல்துறை அதிகாரி எடுக்கும் சட்டப்படியான நடவடிக்கை; investigation (of an offense);. புலனாய்வு நடந்துவருகிறது. (உ.வ.);. 2. காவல்துறையல்லாத பிறதுறைகளில் ஒரு நிகழ்வுக்கான கரணியம், சூழ்நிலை, அதன் விளைவுகள் ஆகியவற்றைக் கண்டறிய எடுக்கப்படும் நடவடிக்கை;வருவாய்த்துறைப் புலனாய்வு அதிகாரிகள். (உ.வ.);. [புலன் + ஆய்வு.] |
புலனி | புலனி pulaṉi, பெ. (n.) நண்டு (சங்.அக.);; crab. |
புலனிடம் | புலனிடம் pulaṉiḍam, பெ. (n.) வாய் (பிங்.);; mouth. [புலம் → புலன் + இடம்.] |
புலனுக்கடுத்த | புலனுக்கடுத்த pulaṉukkaḍutta, பெ.எ. (adj.) சிற்றின்பந் தொடர்பான; sexual. |
புலனுணர்வாற்றல் | புலனுணர்வாற்றல் pulaṉuṇarvāṟṟal, பெ. (n.) புலன் பார்க்க;see pulan. [புலன் + உணர்வு + ஆற்றல். புலம் → புலன்.] |
புலனுணர்வு | புலனுணர்வு pulaṉuṇarvu, பெ. (n.) புலன் பார்க்க;see pulan. [புலன் + உணர்வு. புலம் → புலன்.] |
புலனுணர்வுத்திறம் | புலனுணர்வுத்திறம் pulaṉuṇarvuttiṟam, பெ. (n.) புலன் பார்க்க;see pulan. [புலன் + உணர்வு + திறம், புலம் → புலன்.] |
புலனுழுதுண்மார் | புலனுழுதுண்மார் pulaṉuḻuduṇmār, பெ. (n.) கற்றோர்; learned men, as cultivating knowledge. ‘புலனுழு துண்மார் புன்கணஞ்சி’ (புறநா. 46);. [புலன் + உழுது + உண்மார்.] |
புலனெறி-தல் | புலனெறி-தல் pulaṉeṟidal, 3 செ.குன்றாவி. (v.t.) ஐம்புலனை வெல்லுதல்; to subdue or overcome the senses. ‘புலனெறிந்த மெய்ப்போத மாதவன்’ (பாகவத. 1, பரிட்சித்துச். 16.);. [புலன் + நெறி-.] |
புலனொடுக்கம் | புலனொடுக்கம் pulaṉoḍukkam, பெ. (n.) ஐம்புலவாசையை யொடுக்குகை; suppression or subduing of the senses. [புலன் + ஒடுக்கம். ஒடு → ஒடுங்கு → ஒடுக்கு → ஒடுக்கம்.] |
புலன் | புலன் pulaṉ, பெ. (n.) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் புலன் உணர்வுகள்; sense of the body, of five kinds, viz., Šuvai, oļi, ūru, õšāi, nārram. ‘கண்டு கேட்டுண்டுயிர்த துற்றறியும் ஜம்புலனும்’ (குறள். 1101);. 2. பொறி; organ of sense. ‘புலனோடு புணரான்’ (ஞானா. 48, 9.);. 3. செயல்கருவி(கருமேந்திரியம்);; the organ of motor action. ‘இருபுலனும்…… இகழாரே’ (ஆசாரக். 33);. 4. அறிவுடைமை; wisdom, intelligence. ‘செல்வம் புலனே புணர்வு’ (தொல். பொ. 299);. 5. பகுத்தறிவு (நாலடி. 12);; intellect;discernment. 6. தெளிவு; that which is clear or obvious. ‘பெரும்புணர்ப் பெங்கும் புலனே’ (திவ். திருவாய். 2, 8);. 7. உறுப்பு; limb. ‘ஒன்பது வாய்ப் புலனும்’ (நாலடி. 47);. 8. வயல்; arable land. ‘புலனந்த’ (பரிபா. 7, 9);. 9. செவ்விதிற் கிளந்தோதல் வேண்டாது சேரிமொழியாற் குறித்தது தோன்றும் நூல் வனப்பு ளொன்று (தொல். பொ. 554);; 10. புலம்-, 2, 3, 4, 9, 10, 11. பார்க்க;see pulam-, 2, 3, 4, 9, 11. [புல் → புலம் = பொருளொடு பொருந்தும் அறிவு அறிவுறுப்பு, அறிவு நூல். புலம் → புலன் (சு.வி. 36); பொருந்தியறியும் அறிவு (மு.தா. 183); பொருந்தியிருக்கும் நிலம் (வே.க. 3, 62);.] |
புலன்செலுத்து-தல் | புலன்செலுத்து-தல் pulaṉceluddudal, 12 செ.குன்றாவி. (v.t.) கூர்ந்து (பத்தரமாகக்); கவனித்தல் (வின்.);; to attend carefully. [புலன் + செலுத்து-.] |
புலன்வென்றோர் | புலன்வென்றோர் pulaṉveṉṟōr, பெ. (n.) முனிவர் (ஜம்புலன்களை வென்றவர்); (யாழ்.அக.);; ascetics as having conquered the senses. [புலன் + வென்றோர்.] |
புலபுலப்பு | புலபுலப்பு bulabulabbu, பெ. (n.) காய்ச்சல் நிலத்தின் புழுதித் தன்மை; looseness, as of soil. [புலபுல → புலபுலப்பு.] |
புலபுலெனல் | புலபுலெனல் bulabuleṉal, பெ. (n.) விரைந்து தொடர்ந்து வருதற் குறிப்பு; expr. denoting quick succession. ‘புலபுலெனக் கலகலலென புதல்வர்களைப் பெறுவீர்’ (பட்டினத். திருப்பா.178);. மறுவ. பொலபொலவென [புலபுல + எனல்.] |
புலப்பங்காணல் | புலப்பங்காணல் pulappaṅgāṇal, பெ. (n.) இசிவுநோயினாலேற்படும் பிதற்றல்; raving. [புலப்பம் + காணல்.] |
புலப்படு-தல் | புலப்படு-தல் pulappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. தெரிதல்; to be perceived, understood. 2. வெளிப்படுதல்; to become clear or conspicuous. [புலம் = அறிவு, பொறியுணர்வு புலம் + படு-, புலப்படுதல் = புலனொடு பொருந்துதல், (மு.தா.183);.] |
புலப்படுத்து-தல் | புலப்படுத்து-தல் pulappaḍuddudal, 12 செ.குன்றாவி. (v.t.) தெரிவித்தல்; to make clear or intelligible; to cause to be under-stood. [புலப்படு-தல் (த.வி.); – புலப்படு-த்துதல் (பி.வி.);.] |
புலப்பம் | புலப்பம்1 pulappam, பெ. (n.) 1. நோய் மிகுதியால் வாய்குழறுகை; delirium. 2. பிதற்று; raving, as of a lunatic. 3. அலப்பு; chattering, babbling. ‘மந்திர மோதாவாய்க்கு மட்டறாப் புலப்பம் வைத்தார்’ (குற்றா.தல. கவற்சன.42);. 4. அழுகை (கொ.வ.);; crying, weeping, lamentation. [புலம்பு → புலப்பம்.] புலப்பம்2 pulappam, பெ. (n.) புலப்பாடு (யாழ்.அக.); பார்க்க;see pulappadu. [புலம் → புலப்பம்.] |
புலப்பாடு | புலப்பாடு pulappāṭu, பெ. (n.) 1. நன்றாய்த் தெரிகை (வின்.);; appearing clearly understood. 2. மட்டுக் கட்டுகை (யாழ்.அக.);; adjusting, keeping within bounds. [புலப்படு → புலப்பாடு.] |
புலமகன் | புலமகன் pulamagaṉ, பெ. (n.) புலமையுள்ளவன்; learned man, scholar. “வேறொடு புலமகன் விரும்பி வாங்கினான்” (கம்பரா.எழுச்.3);. [புலம் + மகன். புல் → புலம் = அறிவு. முகு → மக → மகன்.] |
புலமகள் | புலமகள் pulamagaḷ, பெ. (n.) கலைமகள்; Saraswadhi. ‘புலமகள் புகழ்’ (சீவக.2566);. [புலம் + மகள். புலம் = ஐம்பொறிகள் பொருள்களோடு பொருந்த அறியும் அறிவு. புலம் → புலவன் = அறிஞன், அறிவுள்ள பாவலன், புலமகள் பெண்பால் அறிவுக்கடவுள். மக → மகள்.] [P] புலமகள் pulamagaḷ, பெ. (n.) கலைமகள்; Saraswadhi. ‘புலமகள் புகழ்’ (சீவக.2566);. [புலம் + மகள். புலம் = ஐம்பொறிகள் பொருள்களோடு பொருந்த அறியும் அறிவு. புலம் → புலவன் = அறிஞன், அறிவுள்ள பாவலன், புலமகள் பெண்பால் அறிவுக்கடவுள். மக → மகள்.] [P] |
புலமக்கள் | புலமக்கள் pulamakkaḷ, பெ. (n.) படித்தோர்; learned men. புலமக்களாலும் பொது மக்களாலும் பாராட்டப் பெற்றவர் பாவாணர் (உ.வ.);. [புலம் + மக்கள்.] |
புலமங்கை | புலமங்கை pulamaṅgai, பெ. (n.) நிலப்பெருமாட்டி (பூமிப்பிராட்டி); (திவ்.பெரியதி. 3, 2, 5.); goddess of earth. [புல் → புலம் = நிலம், புலம் + மங்கை.] |
புலமறி-தல் | புலமறி-தல் pulamaṟidal, 3 செ.குன்றாவி. (v.t.) துப்பறிதல் (சென்னை.);; to spy out, detect. [புலம் + அறி-, புலம் → புலன் = துப்பு.] |
புலமாக்கு-தல் | புலமாக்கு-தல் pulamākkudal, 8 செ.குன்றாவி. (v.t.) 1. புலப்படுத்து-தல் பார்க்க;see pula-p-paduttu- ‘நெறியெலாம் புலமாக்கிய வெந்தையை’ (திருவாச.5,32);. 2. வெளியாக்குதல் (கொ.வ.);; to bring to light. [புலம் + ஆத்கு-, ஆகு-தல் (த.வி.); – ஆக்கு-தல் (பி.வி.);.] புலமாக்கு-தல் pulamākkudal, 8 செ.குன்றாவி. (v.t.) 1. புலப்படுத்து-தல் பார்க்க;see pula-p-paduttu-. ‘நெறியெலாம் புலமாக்கிய வெந்தையை’ (திருவாச.5,32);. 2. வெளியாக்குதல் (கொ.வ.);; to bring to light. [புலம் + ஆத்கு-, ஆகு-தல் (த.வி.); – ஆக்கு-தல் (பி.வி.);.] |