தலைசொல் | பொருள் |
---|---|
பீங்கான் | பீங்கான் pīṅgāṉ, பெ.(n.) ஒரு வகை மண்ணாற் செய்து சுடப்பட்ட பாண்டம்; porcelain, China-ware. [Persn. {} → த. பீங்கான்] |
பீடா | பீடா pīṭā, பெ.(n.) பாக்குத் தூளுடன் பிற மணப் பொருள்களும் வைத்துச் சுருட்டப் பட்ட வெற்றிலை; roll of betel leaf with pieces of arecanut and aromatic stuff (in India); paan. த.வ. சுருள் |
பீடி | பீடி1 pīṭi, பெ.(n.) சரவளி, பிறங்கடை தலைமுறை (C.G.);; generation, lineage. [U. {} → த. பீடி] பீடி2 pīṭi, பெ.(n.) ஒருவகைப் புகைச்சுருட்டு (உ.வ.);; a kind of cigarette. த.வ. இலைச்சுருட்டு [Ս. {} → த. பீடி] |
பீடை | பீடை pīṭai, பெ. (n.) 1. துன்பம்; affliction, sorrow, distress, misery. “பீடை தீர வடியாருக் கருளும் பெருமான்” (தேவா.531,10);. 2. காலம், கோள் முதலியவற்றால் நிகழுந் தீமை; in auspiciousness, as of a season, evil influence, as of a planet. [Skt. {} → த. பீடை] |
பீட்டி | பீட்டி pīṭṭi, பெ.(n.) உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்புத்துணி(வின்.);; breast of a garment, stitched in two folds. [U. {} → த. பீட்டி] |
பீதன் | பீதன் pītaṉ, பெ.(n.) குடிகாரன்,குடிப்பவன்; one who drinks. “மதுவைப் பீதர்க் கிணையும் பேசுவமே” (சிவதரு.பாவ.28);. [Skt. {} → த. பீதன்] |
பீதலம் | பீதலம் pītalam, பெ.(n.) பித்தளை (மூ.அ.);; brass. [Skt. {} → த. பீதளம்] |
பீதாம்பரன் | பீதாம்பரன் pītāmbaraṉ, பெ.(n.) பொன் னாடை அணிந்த திருமால் (பிங்.);; Tirumal, as wearing a cloth of gold. [Skt. {} → த. பீதாம்பரன்] |
பீதாம்பரம் | பீதாம்பரம் pītāmbaram, பெ.(n.) 1. பொன்னாலான ஆடை; gold cloth. 2. பொற் கரையுள்ள ஆடை (வின்.);; gold bordered silk cloth. த.வ. பொன்னாடை [Skt. {} → த. பீதாம்பரம்] |
பீதி | பீதி pīti, பெ. (n.) அச்சம், விதிர் விதிப்பு; sudden fear. [Skt. bhiti → த. பீதி.] |
பீத்தக்கூடை | பீத்தக்கூடை pīttakāṭai, பெ. (n.) பயன்படுத்த முடியாத கூடை wornout basket. (கொங்கு); [பீத்தல்+கடை] |
பீத்தத்துணி | பீத்தத்துணி pīttattuṇi, பெ.(n.) நைந்துபோன பொருள்; worn out cloth. (கொங்கு);. [பிய்த்தல்-பீத்தல்+துணி] |
பீத்தை | பீத்தை pīttai, பெ. (n.) கெட்டுப்போன பொருள்: waste material. (கொங்கு);. [பிய்த்து-பீத்தை] |
பீத்தைக்குழி | பீத்தைக்குழி pīttaikkuḻi, பெ. (n.) காய் நிரப்ப இயலாத வெற்றுக்குழி; empty pit in ‘pallankuli’ board. மறுவ. பொய்த்தல் – பொத்தல் [பத்தை+குழி] |
பீபி | பீபி pīpi, பெ.(n.) முகம்மதிய பெண்ணின் மதிப்புரவுப் பெயர்; title of a Muhammadan lady. [U.{} → த. பீபி] |
பீப்பா | பீப்பா pīppā, பெ.(n.) எண்ணெய் முதலியன அடைக்கும் மரப்பெட்டி வகை (உ.வ.);; barrel, cask. [Port. pipa → த. பீப்பா] [p] |
பீமன் | பீமன் pīmaṉ, பெ.(n.) 1. பாண்டுவின் மகன் களுள் இரண்டாமவன்; Bhima, second of the son of {}, renowned for super human courage and strength. 2. தமயந்தியின் தந்தை; father of Damayandi. 3. உருத்திரன்; Rudra. [Skt. {} → த. பீமன்] |
பீமபாகம் | பீமபாகம் pīmapākam, பெ.(n.) சிறந்த சமையல்; excellent cooking, as that of {}. [Skt. {} → த. பீம+பாகம்] |
பீரங்கி | பீரங்கி pīraṅgi, பெ.(n.) பெருங்குழாயுள்ள வெடிகருவி; cannon, gun. த.வ.வேட்டெஃகம், தகரி [Port. firangi → த. பீரங்கி] [p] |
பீரோ | பீரோ pīrō, பெ.(n.) நிலைப்பேழை; book-case, shelf. [F. bureau → த. பீரோ] |
பீர் | பீர் pīr, பெ.(n.) 1. முகம்மதியப் பெரியார்; Muhammadan {}. 2. முகம்மதியர் ஊர் வலத்தில் எடுத்துச் செல்லும் அரைத்தேர்; shrine carried in procession by Muhammadans. [Ս. {} → த. பீர்] |
பீர்க்கடவு | பீர்க்கடவு pīrkkaḍavu, பெ. (n.) கோபிப் பாளையம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Gopipalayam Taluk. [பீர்க்கன்+கடவு] |
பீலி | பீலி pīli, பெ.(v.i.) 1. மயில் தோகை, peacock’s feathers 2. மலை; mountain. 3.பசுங்குருத்து, sprout. 4. கா்லிவரலிண; ring. [பீல்-பீலி] |
பீலிவளை | பீலிவளை pīlivaḷai, பெ.(n.) பெண்ணின் பெயர்; name of a woman. [பீலி+வளை] |
பீளமேடு | பீளமேடு pīḷamēṭu, பெ. (n.) கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakkurichi Taluk. [பூளை-பிளை+மேடு] |