தலைசொல் | பொருள் |
---|---|
பிக்கலம் | பிக்கலம் pikkalam, பெ.(n.) இன்னாரால் எழுதப்பட்டது என்று பொருள்படுவதும் ஆவணம் எழுதினோன் கையெழுத்துக்கு முன் வரையப்படுவதுமான சொல்; term signifying ‘written by’ and prefixed to the signature of the writer of a document. [U. baqalami → த. பிக்கலம்] |
பிக்காசு | பிக்காசு pikkācu, பெ.(n.) குந்தாலி; pick-axe. த.வ.கொத்துகுறடு [E. pick-axe → த. பிக்காசு] [p] |
பிக்காடு | பிக்காடு pikkāṭu, பெ.(n.) மலம் கழிக்கக்கூடிய இடம்; a place of open lavatory. (நெல்லை); [பீ+காடு] |
பிக்காரி | பிக்காரி pikkāri, பெ.(n.) வறியவன்; poor, miserable, wretched fellow. “பெரிய குடி பெயர்ந்து பிக்காரி யானேனே” (ஆதியூரவதானி,9);. த.வ.ஏழை, ஏதிலி [U. {} → த. பிக்காரி] |
பிக்கிலி | பிக்கிலி pikkili, பெ. (n.) தருமபுரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Dharmapuri Taluk. [பெருங்கல்-பெக்கல்-பிக்கிலி] |
பிங்கலிகை | பிங்கலிகை piṅgaligai, பெ.(n.) ஒண்பான் செல்வங்களுள் ஒன்று (சீவசம். Ms);; one of the nine treasures. [Skt. {} → த. பிங்கலிகை] |
பிங்கலை | பிங்கலை piṅgalai, பெ.(n.) 1. பத்து வகை நாடித் துடிப்புகளுள் ஒன்று (சிலப்.3,26.உரை);; a principal tubular vessel of the human body. 2. வலது மூக்கு வழியாக வரும் மூச்சு (யாழ்.அக.);; breath through the right nostril. 3. ஆந்தை வகை (சூடா.);; a kind of owl. 4. எண் திசைகளுள் தென்றிசையிலுள்ள பெண் யானை; the female elephant mate of {} guarding the Southern directions. 5. மலைமகள்; Parvathi. [Skt.{} → த. பிங்கலை] |
பிங்கான் | பிங்கான் piṅgāṉ, பெ.(n.) உணவு உண்பதற்கு உரிய தட்டு; plate. அலுமினியப் பிங்கான்/ பிங்கானில் சாப்பாடு வை!. [Persin. {} → த. பீங்கான் → பிங்கான்] |
பிங்கி | பிங்கி piṅgi, பெ.(n.) ஒரு முனிவன்; a sage. “தண்டி குண்டோதரன் பிங்கிருடி” (தேவா. 1225,7.);. [Skt. {} → த. பிங்கி] |
பிசாகம் | பிசாகம் picākam, பெ. (n.) ஒற்றை முத்திரை நிலை வகைகளில் ஒன்று; a dance pose. [பிசை-பிசாகம்] |
பிசாகாரம் | பிசாகாரம் picākāram, பெ.(n.) பிச்சையுணவு (வின்.);; alms. [Skt. {} → த. பிசாகாரம்] |
பிசாசு | பிசாசு picācu, பெ. (n.) பேய்; devil, gost. [Skt. {} → த. பிசாசு.] |
பிசாத்து | பிசாத்து picāttu, பெ.(n.) சிறுமை, இழிவு, நொய்மம்; trifle. அதென்ன பிசாத்து (C.G.);. [U. {} → த. பிசாத்து] |
பிசி | பிசி pisi, பெ.(n.) புதிர்; riddle. “பிசியும் நொடியும் பிறர்வாய் கேட்டு’ (மணிமே2262.2பொய்; lie. 3.சோறு; boiled rice. து பிசிகு (கிழித்தல்); [பிப்-பிசி] |
பிசிண்டி | பிசிண்டி pisiṇṭi, பெ. (n.) அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [பிசிர்+(ஊற்று);பிசி-பிசிண்டி] |
பிசிப்பாண்டி | பிசிப்பாண்டி pisippāṇṭi, பெ. (n.) இயல்பான பல்லாங்குழி; an indoor game. [பிரிப்பு+பாண்டி] |
பிசிராந்தையார் | பிசிராந்தையார் pisirāndaiyār, பெ.(n.) கடைக்கழகப் புலவர்; a poet of sangam age. [பிசிர்+ஆந்தை+ஆர்மிசிர்-குமரிமாவட்டத்துச் சிற்றுர்] |
பிசிர் | பிசிர் pisir, பெ..(n.) 1. நீர்த்துளி; water drop. 2. நீருற்று; fountain. வான் பிசிர்க் கருவியுள் (ஐங்குறு.401);. 3. ஒரூரின் பெயர்; name of a village in Kanyakumari district. [பில் (பிள்); பிய் – பிசி-பிசிiநீருற்று உள்ள ஊர்] |
பிசுக்கோத்து | பிசுக்கோத்து pisukāttu, பெ.(n.) கோதுமை முதலியவற்றின் மாவிற் செய்த ஈரட்டி (இக்.வ.);; a kind of biscuit. த.வ. ஈரட்டி [E. biscuit → த. பிசுக்கோத்து] |
பிச்சடம் | பிச்சடம் piccaḍam, பெ.(n.) 1. ஈயம்; lead. 2. துத்தநாகம்; zinc. 3. ஒரு வகைக் கண்ணோய்; an eye disease. (சா.அக.); |
பிச்சன்வயல் | பிச்சன்வயல் piccaṉvayal, பெ. (n.) திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur.Taluk, [மிச்சன்+வயல்] |
பிச்சல் | பிச்சல் piccal, பெ.(n.) கப்பலின் பின்னணியம் (M.Navi);; back-part of a ship. [Skt.piccha → த. பிச்சல்] |
பிச்சாணா | பிச்சாணா piccāṇā, பெ.(n.) படுக்கை (உ.வ.);; bed. [U. {} → த. பிச்சாணா] |
பிச்சாளி | பிச்சாளி piccāḷi, பெ. (n.) கோரையைக் குத்தி இழுப்பதற்குப்பயன்படும் ஒரு துளை கொண்ட குச்சி; one holed pole. [பிய்த்தல்-பிச்சாளி] |
பிச்சுவா | பிச்சுவா piccuvā, பெ.(n.) 1. கையீட்டி (வின்.);; dagger. 2. நுனியிற் கூருடைய கத்தி(உ.வ.);; a kind of knife. த.வ. குத்தீட்டி [U. {} → த. பிச்சுவா] [p] |
பிச்சுவாக்கத்தி | பிச்சுவாக்கத்தி piccuvākkatti, பெ. (n.) உறைக்குள் வைத்திருக்கும் ஆயுதம் scimitar (கொங்கு);. [பொத்துகாய்-பிச்சுவா+கத்தி] |
பிச்சுவாங்கு | பிச்சுவாங்கு piccuvāṅgu, பெ.(n.) நல்ல முறையில் செய்தல் (கொங்கு);; performing perfectly. |
பிச்சை | பிச்சை piccai, பெ. (n.) பாவைக் கூத்து கலைஞர்கள் வழிபடுகின்ற சிறு தெய்வம்; a deity worshipped by the folklorists. [பேய்ச்சி-பிச்சை] பிச்சை piccai, பெ. (n.) இரப்புணவு; taking alms. [Skt. {} → த. பிசாசு.] |
பிஞ்சரம் | பிஞ்சரம்1 piñjaram, பெ.(n.) பூச்சுப் பொன்துகள் (அரிதாரம்);; yellow orpiment. (சா.அக.); [Skt. {} → த. பிஞ்சரம்] பிஞ்சரம்2 piñjaram, பெ.(n.) தருப்பை; sacrificial grass. [Skt. {} → த. பிஞ்சலம் → பிஞ்சரம்] பிஞ்சரம்3 piñjaram, பெ.(n.) நெஞ்சறை; thorax (சா.அக.);. |
பிஞ்சானம் | பிஞ்சானம் piñjāṉam, பெ.(n.) பொன்; gold. (சா.அக.); [Skt. {} → த. பிஞ்சரம் → பிஞ்சானம்] |
பிஞ்சி | பிஞ்சி piñji, பெ. (n.) வாலாசா வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Walajah Taluk. A [புன்செய்-புஞ்சி-பிஞ்சி] |
பிஞ்சு எழுத்து | பிஞ்சு எழுத்து piñjueḻuttu, பெ.(n.) உகர உயிரெழுத்து; the vowel ‘U’ in Tamil. [பிஞ்சு [சிறியது]+ எழுத்து]பிஞ்செழுத்து [கொடிக்கவி]] |
பிடவூர் | பிடவூர் piḍavūr, பெ.(n.) ஓர் ஊரின் பெயர்: name of a village. [பிடவு [பிடவ[மலர்]+ஊர்] |
பிடாகம் | பிடாகம் piṭākam, பெ. (n.) திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in. Tirukkoyilur Taluk, [பிடாகை-பிடாகம்] |
பிடி | பிடி piḍi, பெ. (n.) சிற்பக்கலையோடு தொடர்புடைய கலைச்சொல்; a term used in sculpture. [பிடு-பிடி.] |
பிடிசூழ் | பிடிசூழ் piḍicūḻ, செ.கு.வி.(v.t.) பிடிசூழ்தல் பெண்யானையின் மீதேறி நிலத்தின் நான்கு எல்லைகளைக் காட்டுதல்: to show the boundary of land mounting on elephant. [பிடி+சூழ்] |
பிடிச்சேணி | பிடிச்சேணி piḍiccēṇi, பெ.(n.) ஏற்றத்தில் ஏறும் போது ஊன்றிச்செல்ல உதவும் மூங்கிற்கழி a bamboo pole used by the piccotah driver while ascending and descending the piccotah. [பிடி – பிடித்து+ஏணி.இதனை புளிச் சேணி என்பது கொச்சை] |
பிடிமண் | பிடிமண் piḍimaṇ, பெ. (n.) நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு மரபினுள் ஒன்று a rural custom of workship. [பிடி+மண்] |
பிடிமண் கோவில்கள் | பிடிமண் கோவில்கள் piḍimaṇāvilkaḷ, பெ.(n.) பழைய வழிபாட்டிடங்களில் இருந்து, ஒரு பிடி மண் எடுத்துப்போய் கட்டப்படும் கோவில்கள் a handful of earth taken from the site of old temple and placed before the construction osa new temple. [பிடி+மண்+கோயில்கள்] |
பிடிமானம் | பிடிமானம் piḍimāṉam, பெ. (n.) ஆதாரம், சொத்து; a hold;a document. [பிடி+மானம்] |
பிட்டங்கொற்றன் | பிட்டங்கொற்றன் piṭṭaṅgoṟṟaṉ, பெ.(.n )கடைக்கழகக் குறுநிலத் தலைவன்; a chieftain of sangam age. [பிட்டன்+கொத்தன்] |
பிட்டன் | பிட்டன் piṭṭaṉ, பெ.(n.) 1. மதத்துக்குப் புறம்பானவன்; excommunicated person, heretic. “பிட்டர்தம் மறவுரை” (தேவா.266,10);. 2. புழுக்கொல்லிப்பூடு (மலை.);; worm-killer. த.வ.நம்பாமதத்தோன் [Skt. {} → த. பிட்டன்] |
பிணக்கானம் | பிணக்கானம் piṇakkāṉam, பெ (n.) ஒப்பாரி பாடலைக் குறிக்குஞ்சொல்; a song of lamentation. [மினம்+கானம்] |
பிணைக்கை | பிணைக்கை piṇaikkai, பெ. (n.) இரண்டு கை களைச் சேர்த்து அவிநயம் செய்வது; double hand pose in dance. [பிணை+கை] |
பிணைத்து | பிணைத்து piṇaittu, பெ. (n.) திண்டுக்கல் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Dindugal.Taluk. [புல்லாற்றுர்-புல்லாத்து-பிலாத்து] |
பிணையல் | பிணையல் piṇaiyal, பெ. (n.) இரட்டைக் கையினைச் சுட்டும் வேறுபெயர் double hand pose. [பிணை+அல்] |
பிண்டன் | பிண்டன் piṇṭaṉ, பெ.(n.) 1. ஆண்பாற்பெயர்: name of a person. 2 குழுத்தலைவன்; chief of a group. த பிண்டு (கூட்டம்); மந்தை, தொகுதி, பிண்டா (யானைக் கூட்டம்);. [இரண்டு-பிண்டுகுழுத்தொகுதி-பிண்டன்] |
பிண்டி | பிண்டி1 piṇṭi, பெ.(n.) ஒருவகையான ஒற்றை முத்திரை நிலை; to a handpose in dance. [கிண்டு-கண்டி] பிண்டி2 piṇṭi, பெ.(n.) குழலின் வடிவத்தைக் குறிக்கும் சொல்; a shape of flute. [கிண்டு_பிண்டி] |
பிண்டிதங்கள் | பிண்டிதங்கள் piṇṭidaṅgaḷ, பெ. (n.) வாலாசா வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Walajah Taluk. [பூண்டு+தங்கள்] |
பிண்டியிலக்கணம் | பிண்டியிலக்கணம் piṇṭiyilakkaṇam, பெ. (n.) வங்கியம் எனும் குதுக்குரிய இலக்கணம்; structure of a fute. [பிண்டி+இலக்கணம்] |
பிண்டு-தல் | பிண்டு-தல் piṇṭudal, செ.குன்றாவி(v.t.) பிழிதல், to squeeze, 2.பிசைதல்; to knead, தெ-பிண்டு. [பிள்-பிண்டு] |
பிதா | பிதா pitā, பெ. (n.) 1. தந்தை; father. 2. கடவுள்; god. |
பிதிருபந்து | பிதிருபந்து bidirubandu, பெ.(n.) தந்தை வழி நெருங்கிய உறவு; close relative of the father. [Skt. {}+bandhu → த. பிதிருபந்து] |
பிதிர் | பிதிர் pidir, பெ. (n.) இறந்த ஈன்றோர் ஆதன்; souls of the deceased ancestors. |
பிதிவி | பிதிவி pidivi, பெ.(n.) ஊழியன் (C.G.);; slave, servant, used in official correspondence. த.வ. பணியாள் [U. {} → த. பிதிவி] |
பிதூரி | பிதூரி pitūri, பெ.(n.) சூழ்ச்சி (C.G.);; intrigue, plot, conspiracy. த.வ. ஏய்ப்பு [U. {} → த. பிதூரி] |
பித்தர் நடம் | பித்தர் நடம் pittarnaḍam, பெ. (n.) ஒரு வகையான ஆடல் இயக்கம்; a type of dance. [பித்தர்+நடம்] |
பித்தளைச்சரிகை | பித்தளைச்சரிகை pittaḷaiccarigai, பெ. (n.) பித்தளையால் ஆன ஒள்ளிழை ; a glittering lining made up of metal. [பித்தளை+சரிகை] |
பித்தளைப் பண்ணை | பித்தளைப் பண்ணை pittaḷaippaṇṇai, பெ. (n.) அச்சில் பிணைத்த நூல் மூங்கிலால் ஆன பண்ணையில் சிறு துளைகள் வழியாக வரும் குறுக்கே போகும் ஊடை நூலை அடித்து நெருக்கமாக்கச்செய்யும் பண்ணை; adevice in handloom. [பித்தளை+பண்ணை] |
பிந்து | பிந்து pindu, பெ.(n.) 1. துளி; drop of water. 2. விந்து; semen. 3. ஆற்றல் மெய்ம்மை (சி.சி.2,50,சிவாக்.);; sakti the embodiment of energy. 4. புள்ளி (வின்.);; dot over a letter, speck, spot, mark. த.வ. உயிரணு [Skt. bindu → த. பிந்து] |
பிந்துசாரம் | பிந்துசாரம் pinducāram, பெ.(n.) நஞ்சு மருத்துவத் தொடர்பான வடமொழி நூல்; a Sanskrit treatise regarding poisons (சா.அக.); |
பினாகினி | பினாகினி piṉākiṉi, பெ.(n.) தென் பெண்ணையாறு (யாழ்.அக.);; the river {}. [Skt. {} → த. பினாகினி] |
பினாமி | பினாமி piṉāmi, பெ.(n.) ஆள் மாற்று சொத்துரிமை; transaction entered into by one person in the name of another. த.வ. ஆள்மாற்று [U. {} → த. பினாமி] |
பினாயூர் | பினாயூர் piṉāyūr, பெ. (n.) காஞ்சீபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kanchipuram Taluk. [பினை-பனா+ஊர்] |
பின்குத்து | பின்குத்து piṉkuttu, பெ. (n.) குத்து என்ற இயக்கத் தொகுதியின் ஒரு வகை; a term used in wrestling. [மின்+குத்து] |
பின்சன்னம் | பின்சன்னம் piṉcaṉṉam, பெ. (n.) தேர் சக்கரத்திற்குப்போடும் நீண்ட சன்னக் கட்டை, a hand piece of wooden log used in temple carfestival. [பின்+சன்னம்] |
பின்னப்பூ போடு-தல் | பின்னப்பூ போடு-தல் piṉṉappūpōṭudal, செ.கு.வி. (v.i.) இறந்தவர்களின் மகள் வயிற்றுப் சீர்பேரனால் நடத்துதல்: to perform a death ceremony by daughters son. (கொங்கு); [மின்னை-பூ+போடு] |
பின்னல் கோலாட்டம் | பின்னல் கோலாட்டம் piṉṉalālāṭṭam, பெ. (n.) கோலாட்ட வகைகளில் ஒன்று; a type in ‘kolattam’ play. [மின்னல்+கோலாட்டம்] |
பின்னிறக்கம் | பின்னிறக்கம் piṉṉiṟakkam, பெ. (n.) ஒயிலாட்டத்தில், மூன்று குதிகள் பின்னோக்கி அமைவதைக் கொண்ட ஒர் இயக்கத் தொகுதி: backward movement in ‘oyilattam’ play. [பின்-இறக்கம்] |
பின்னோக்குத் தொடர் ஒட்டம் | பின்னோக்குத் தொடர் ஒட்டம் piṉṉōkkuttoḍaroḍḍam, பெ. (n.) பின்னோக்கி ஓடுதல்; backward running relay. [மின்+நோக்கு+தொடர்+ஓட்டம்] |
பின்பகுத்தி | பின்பகுத்தி piṉpagutti, பெ. (n.) அரூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arür Taluk. [புல்-பருத்தம்] |
பின்பாட்டு | பின்பாட்டு piṉpāṭṭu, பெ. (n.) சிற்றுார் கலைகளில் இசைக்கருவியாளர், பின்பாட்டுக் குழுவினர் பாடும் பாட்டு. play back in folk lore. [மின்+பாட்டு] |
பிபாசை | பிபாசை pipācai, பெ.(n.) வேட்கை; thirst. “௯த்பிபாசைகளாலே நலிவுபட்டவன்” (அட்டதச.அர்த்தபஞ்.பக்.26);. த.வ.வேட்கை [Skt. {} → த. பிபாசை] |
பிபீலிகாசந்தானம் | பிபீலிகாசந்தானம் pipīlikācandāṉam, பெ.(n.) எறும்புகள் தொடர்ந்தூர்வது போன்ற தொடர்ச்சி (மணிமே.30,38,கீழ்க்குறிப்பு);; continuity, as of a line of ants. [Skt. {} → த. பிபீலிகாசந்தானம்] |
பிபீலிகை | பிபீலிகை pipīligai, பெ.(n.) எறும்பு(சூடா.);; ant, emmet, pismire. [Skt. {} → த. பிபீலிகை] |
பிப்பு | பிப்பு pippu, பெ. (n.) உடலில் அரிப்பு ஏற்படுத்தும் தோல் நோய்; itching. (கொங்கு); [பிய்ப்பு→ பிப்பு] |
பிம்பப்பிரதிபிம்பபாவம் | பிம்பப்பிரதிபிம்பபாவம் bimbabbiradibimbabāvam, பெ.(n.) உருவமும் நிழலுருவ முமாய் அமைந்திருக்குந் தன்மை; the condition of original and its counterfeit. [Skt. bimba-prati-bimba-bhava → த. பிம்பப் பிரதிபிம்பபாவம்] |
பிம்பமுத்திரை | பிம்பமுத்திரை pimbamuttirai, பெ.(n.) வழிபாட்டு முத்திரை வகை (சைவா.வி.19);; a hand-pose in worship. த.வ. வணக்க மெய்ப்பாடு [Skt. bimba → த. பிம்பம்+முத்திரை] |
பிம்பம் | பிம்பம் pimbam, பெ.(n.) 1. உருவம்; form, shape, image. 2. நிழலுருவிற்கு(பிரதிபிம்பம்); மூலப்பொருள்; original. 3. படிமை (பிரதிமை);; statue. 4. கொடிவகை; common creeper of the hedges. த.வ. வடிவம் [Skt. bimba → த. பிம்பம்] |
பியந்தைக் காந்தாரம் | பியந்தைக் காந்தாரம் piyandaikkāndāram, பெ. (n.) பகற்பொழுதுக்குரிய ஒரு Listor susms;a day time melody song. [பியந்தை+காந்தாரம்] |
பியாகடம் | பியாகடம் piyākaḍam, பெ.(n.) பண் வகை (பரத.ராக.பக்.102);; a specific melody-type. [U. {} → த. பியாகடம்] |
பியாக்கு | பியாக்கு piyākku, பெ.(n.) பண் வகை (Mus);; a musical mode. [U. {} → த. பியாக்கு] |
பியானா | பியானா piyāṉā, பெ.(n.) ஐரோப்பிய இசைக்கருவி; a musical instrument, piano. [E. piano → த. பியானா] |
பிரகசனன் | பிரகசனன் piragasaṉaṉ, பெ.(n.) 1. சிரிப்பு (யாழ்.அக.);; laughter. 2. நையாண்டி (யாழ்.அக.);; satire. 3. உருவகங்கள் (ரூபகங்கள்); பத்தனுள் ஒன்று; fance, one of ten {}. [Skt. pra-hasana → த. பிரகசனம்] |
பிரகசுபதி | பிரகசுபதி biragasubadi, பெ.(n.) 1. வியாழன்; the planet Jupiter. 2. தேவகுரு; priest of the Gods. 3. நடப்புக் (சடங்கு); காரியங்கள் செய்யும் சமய ஆசிரியன்.(புரோகிதன்);(இ.வ.);; priest. [Skt. {}-s-pati → த. பிரகசுபதி] |
பிரகசுபதிசக்கரம் | பிரகசுபதிசக்கரம் biragasubadisaggaram, பெ.(n.) சக ஆண்டின் (கி.பி.78);போது தோன்றிய வியாழவட்டமான அறுபது ஆண்டுகள் (வின்.);; the Jupiter cycle of 60 years. [Skt. Brha-s-pati → த. பிரகசுபதி+சக்கரம்] |
பிரகசுபதிசம்பாவனை | பிரகசுபதிசம்பாவனை biragasubadisambāvaṉai, பெ.(n.) நடப்புக் காரியங்கள் (சடங்கு); செய்யும் சமய மறையோது வோனுக்குக் கொடுக்கும் பரிசில் (சம்மானம்);; gift made at the end of a ceremony to the priest who conducts the rites. [Skt. Brha-s-pati+sam-{} → த. பிரகசுபதி சம்பாவனை] |
பிரகசுபதிமதம் | பிரகசுபதிமதம் biragasubadimadam, பெ.(n.) உலகிய மதம் (சார்வாகமதம்); (தக்கயாகப்.183,உரை.);;{} school of philosophy. [Skt. Brha-s-pati → த. பிரகசுபதி+மதம்] |
பிரகச்சாதகம் | பிரகச்சாதகம் piragaccātagam, பெ.(n.) வராகமிகிரர் வடமொழியில் இயற்றிய ஒரு கணிய (சோதிடம்); நூல்; an astrological work in Sanskrit by {}. [Skt. {} → த. பிரகச்சாதகம்] |
பிரகண்டம் | பிரகண்டம் piragaṇṭam, பெ.(n.) தோட்பட்டை எலும்பின் (புயம்); முற்பகுதி(யாழ்.அக.);; upper arm. 2. தோள் பட்டை எலும்பு (வின்.);; bone of the upper arm. [Skt. praganda → த. பிரகண்டம்] |
பிரகதாரணியம் | பிரகதாரணியம் piragatāraṇiyam, பெ.(n.) பத்து மெய்ம்மறை நூல்களுள் (உபநிடதம்); ஒன்று; an Upanisad, one of {}. [Skt. {} → த. பிரகதாரணியம்] |
பிரகதி | பிரகதி piragadi, பெ.(n.) தும்புருவினுடைய வீணை (பரத.ஒழிபி.15);; a stringed musical instrument of Tumpuru. [Skt. brhati → த. பிரகதி] |
பிரகத்தம் | பிரகத்தம் piragattam, பெ.(n.) விரிந்த கை (யாழ்.அக.);; the open hand with the fingers extended. [Skt. pra-hasta → த. பிரகத்தம்] |
பிரகத்வாதம் | பிரகத்வாதம் piragatvātam, பெ.(n.) வயிற்றுப் பொருமலால் உண்டாகும் நோய் (வின்.);; a disease caused by flatulence. த.வ.வயிற்றுப்புசம் [Skt. {} → த. பிரகத்வாதம்] |
பிரகன்னளை | பிரகன்னளை piragaṉṉaḷai, பெ.(n.) அருச்சுனன் கரந்துறைவு (அஞ்ஞாதவாசம்); காலத்தில் பேடியுருக்கொண்டு விராட நகரத்தில் வாழ்ந்து வந்தபோது புனைந்து கொண்ட பெயர் (பாரத.நாடுக.19.);; name assumed by Arjuna while he lived incognito as a hermaphrodite in {} city. [Skt. {} → த. பிரகன்னளை] |
பிரகம்பனம் | பிரகம்பனம் piragambaṉam, பெ.(n.) 1. காற்று; air. 2. நிரய (நரகம்); வகை; a hell. [Skt. pra-kampana → த. பிரகம்பனம்] |
பிரகரணம் | பிரகரணம் piragaraṇam, பெ.(n.) 1. சமயம்; opportunity, occasion. 2. நூற்பிரிவு (அத்தியாயம்);; chapter, section. 3. வாய்ப்பு (இ.வ.);; context. 4. பத்துவகை நாடகங்களுள் (ரூபகம்); ஒன்று (சிலப்.3,13,உரை,பக்,84, கீழ்க்குறிப்பு.);; a species of love-drama, one of ten {}. 5. அறம், பொருள் இவற்றைப் பொருளாகக் கொண்ட நாடக வகை. (சிலப்.3,13, உரை.);; a drama dealing with {} and porul. [Skt. pra-karana → த. பிரகரணம்] |
பிரகரம் | பிரகரம் piragaram, பெ.(n.) 1. அடி; blow; beating. “பிரகரத் துயர்தீர” (திருப்பு.310);. 2. மாணிக்கக் குற்றத்துள் ஒன்று (S.I.I.ii/78);; a flaw in gem. [Skt. pra-hara → த. பிரகரம்] |
பிரகலாதன் | பிரகலாதன் piragalātaṉ, பெ.(n.) இரணிய கசிபுவின் மகன்; a Daitya of great piety, son of {}. “பிரகலாதனாஞ் சீர் தழைந்தவன்” (பாகவத.7,இரணிய.29);. [Skt. {} → த. பிரகலாதன்] |
பிரகலை | பிரகலை piragalai, பெ.(n.) இசைவுறுப்புகள் நான்கனுள் ஒன்று (சிலப்.3,150,உரை.);; a component of a musical piece, one of four {}. [Skt. pra-kala → த. பிரகலை] |
பிரகாசனம் | பிரகாசனம் pirakācaṉam, பெ.(n.) 1. பிரகாசம், பார்க்க;see {}, 2. விரித்து விளக்குகை; exposition. சைவப் பிரகாசனம். 3. வெளிப்படுத்துகை (சங்.அக.);; publishing. [Skt. {} → த. பிரகாசனம்] |
பிரகாசன் | பிரகாசன் pirakācaṉ, பெ.(n.) 1. ஒளி (காந்தி); யுடையோன்; one full of light, mental or spiritual, illustrious person. 2. கடவுளோடு கலந்த முத்தாதன்; soul, liberated from births, illumined by and identified with the Supreme Being. [Skt. {} → த. பிரகாசன்] |
பிரகாசம் | பிரகாசம் pirakācam, பெ.(n.) 1. ஒளி; brightness, splendour, radiance, reflected light, lustre. “எங்கும் பிரகாசமாய்” (தாயு.திருவருள்விலா.1.);. 2. வெயில் (வின்.);; sunshine. 3. புகழ் (வின்.);; illustriousness, conspicuousness. 4. பண்பு (வின்.);; nature, characteristic. த.வ.வெளிச்சம் [Skt. pra-{} → த. பிரகாசம்] |
பிரகாரணம் | பிரகாரணம் pirakāraṇam, பெ. (n.) நன்கொடை(யாழ்.அக.);; gift. [Skt. {} → த. பிரகாரணம்] |
பிரகாரம் | பிரகாரம் pirakāram, பெ.(n.) 1. வழிவகை; manner, mode, way, means. 2. ஒப்பு; like- ness, similarity. 3. வகுப்பு (வின்.);; kind, species, sort. 4. தன்மை (வின்.);; quality, property, nature, essence. [Skt. pra-{} → த. பிரகாரம்] |
பிரகிருதம் | பிரகிருதம் piragirudam, பெ.(n.) 1. தற்காலம்; present time. 2. வாய்ப்பு (சந்தர்ப்பம்);; occasion. த.வ.நிகழ்காலம் [Skt. pra-{} → த. பிரகிருதம்] |
பிரகிருதி | பிரகிருதி piragirudi, பெ.(n.) 1. மூலம்; cause, original source. 2. மூலப்பகுதி; original producer or passive creative power of the material world. “பிரகிருதிக்குக் குணத்தை நல்கியதார்” (தாயு.பராபர.166);. 3. பண்பு (சுபாவம்);; nature, character. “உங்கள் பிரகிருதிக்குச் சேர்ந்தோ” (ஈடு,5,9,2);. 4. பகுதி (நன். 133,விருத்.);; root or uninflected part of a word. 5. குடி (யாழ்.அக.);; subject. [Skt. pra-{} → த. பிரகிருதி] |
பிரகிருதிகள் | பிரகிருதிகள் piragirudigaḷ, பெ.(n.) அரசனிடத்து ஊதியம் (வேதனம்); பெற்று அரசியல்தொழில் செய்வோருள் தலைவர் (சுக்கிரநீதி, 64.);; chief officials of a king; ministers. [Skt. pra-{} → த. பிரகிருதிகள்] |
பிரகிருதிதத்துவசாத்திரம் | பிரகிருதிதத்துவசாத்திரம் piragirudidadduvacāddiram, பெ.(n.) இயற்கைப் பொருணூல், இயற்பியல். (இக்.வ.);; physics. [Skt. pra-{} +tattva + {} → த. பிரகிருதிதத்துவசாத்திரம்] |
பிரகிருதிநியாயப்பிரமாணம் | பிரகிருதிநியாயப்பிரமாணம் piragirudiniyāyappiramāṇam, பெ.(n.) இயற்கையா யமைந்த நெறி (வின்.);; the law of nature. [Skt. pra-{} → த. பிரகிருதி நியாயப்பிரமாணம்] |
பிரகீரணம் | பிரகீரணம் piraāraṇam, பெ.(n.) கரிசு (பாவம்); வகை (வேதாரணி.சேதுசி.10.);; a sin. த.வ. கரிசு, பாழ்வினை [Skt. pra-{} → த. பிரகீரணம்] |
பிரகுஞ்சம் | பிரகுஞ்சம் piraguñjam, பெ.(n.) ஒரு பலங்கொண்ட நிறுத்தலளவை வகை (நாமதீப. 805);; a measure of weight = 1 palam. [Skt. pra-{} → த. பிரகுஞ்சம்] |
பிரகுத்தம் | பிரகுத்தம் piraguttam, பெ.(n.) மான் கொம்பு (சங்.அக.);; stag’s horn. |
பிரகேலிகை | பிரகேலிகை piraāligai, பெ.(n.) பிதிர்ச் செய்யுள் (இலக்.அக.);; stanza in the form of a riddle. த.வ.பிசி [Skt. pra-{} → த. பிரகேலிகை] |
பிரகோவம் | பிரகோவம் piraāvam, பெ.(n.) கடுமை; vehemence, severity. அம்மை பிர கோவமாயிருக்கிறது. (இ.வ.);. த.வ.தீவிரம் [Skt. pra-{} → த. பிரகோவம்] |
பிரக்கினை | பிரக்கினை pirakkiṉai, பெ.(n.) உணர்ச்சி (உ.வ.);; consciousness. த.வ.நினைவோட்டம் [Skt. {} → த. பிரக்கினை] |
பிரக்கியாதன் | பிரக்கியாதன் pirakkiyātaṉ, பெ.(n.) பேர் பெற்றவன், புகழ் பெற்றவன் (சர்வசமய.பக்.39);; one who is well-known or famous. [Skt. {} → த. பிரக்கியாதன்] |
பிரக்கியாதி | பிரக்கியாதி pirakkiyāti, பெ.(n.) 1. பரப்புரை (பிரசித்தம்.); (வின்.);; publicity. 2. புகழ்; fame, celebrity. [Skt. pra-{} → த. பிரக்கியாதி] |
பிரசக்தி | பிரசக்தி pirasakti, பெ.(n.) உரிய நேரம்; occasion, opportunity. த.வ.நல்வாய்ப்பு [Skt. pra-sakti → த. பிரசக்தி] |
பிரசங்கமேடை | பிரசங்கமேடை pirasaṅgamēṭai, பெ.(n.) சொற்பொழிவு (உபநியாசம்); செய்தற்கு அமைந்த உயர்ந்த இடம் (இக்.வ.);; platform for speakers. [Skt. pra-{} → த. பிரசங்கம்+மேடை] |
பிரசங்கம் | பிரசங்கம் pirasaṅgam, பெ.(n.) 1. சொற் பொழிவு (உபநியாசம்);; discourse, lecture, speech, oration, sermon. 2. வெளிப் படுத்துகை (பகிரங்கம்); (வின்.);; proclamation, public declaration. த.வ. 1. விளக்கவுரை, 2. அறிவுறுத்துகை, 3. பரப்புரை |
பிரசங்கயானம் | பிரசங்கயானம் pirasaṅgayāṉam, பெ.(n.) செல்லுமிடம் பிறர்க்குத் தெரியாதபடி இடம் மாறுதலாகக் குறிப்பிட்டு அரசன் செய்யும் செலவு (யாத்திரை); (சுக்கிரநீதி, 337);; the march of a king who misleads others about his destination. த.வ. மறை செலவு, தெரியாப் பயணம் [Skt. pra-{} → த. பிரசங்க] |
பிரசங்கி | பிரசங்கி1 pirasaṅgittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. சமய அறிவுரை; to discourse, expound, preach. 2. விளம்பரப்படுத்துதல் (வின்.);; to publish, proclaim. [Skt. pra- {} → த. பிரசங்கம்→பிரசங்கி1-த்தல்] பிரசங்கி2 pirasaṅgittal, 4 செ.குன்றாவி. (v.t.) குறிப்பிட்டுச் சொல்லுதல் (சிவநெறிப். நூல்வர.பக்.2.);; to refer to. [Skt. pra-{} → த.பிரசங்கம் → பிரசங்கி-த்தல்] பிரசங்கி3 pirasaṅgi, பெ.(n.) சொற்பொழி வாற்றுபவன் (உபநியாசகன்);; preacher, lecture. த.வ. சொற்பொழிவாளர் [Skt. pra-{} → த. பிரசங்கம் → பிரசங்கி2] |
பிரசண்டன் | பிரசண்டன் pirasaṇṭaṉ, பெ.(n.) கடுமை யானவன்; powerful, formidable man. த.வ. முரடன் [Skt. pra-{} → த. பிரசண்டம்] |
பிரசண்டமாருதம் | பிரசண்டமாருதம் pirasaṇṭamārudam, பெ.(n.) வலுத்த காற்று; a dreadful tempest. (சா.அக.); த.வ.சூறைக்காற்று, புயற்காற்று [Skt. pra-{} → த. பிரசண்டமாருதம்] |
பிரசண்டம் | பிரசண்டம் pirasaṇṭam, பெ.(n.) கடுமை, வலிமை; violence, force, strength. “பிரசண்டகோதண்டமும்” (இராமநா.உயுத்.8);. [Skt. pra-{} → த. பிரசண்டம்] |
பிரசத்தி | பிரசத்தி1 pirasatti, பெ. (n.) தக்க சமயம்; suitable opportunity. த.வ.நல்வாய்ப்பு, தக்க வேளை [Skt. pra- {} → த. பிரசத்தி1] பிரசத்தி2 pirasatti, பெ.(n.) ஆவணம் (சாசனம்); (T.A.S. iv,46.);; publication. [Skt. prasiddhi → த. பிரசித்தி] |
பிரசன்னன் | பிரசன்னன் pirasaṉṉaṉ, பெ.(n.) காட்சி யருளுபவன் (வின்.);; one manifesting himself as an act of grace or kindness. [Skt. pra-sanna → த. பிரசன்னன்] |
பிரசன்னமா-தல் | பிரசன்னமா-தல் pirasaṉṉamātal, 6 செ.கு.வி.(v.i.) காட்சி தருதல்; to appear graciously, to become visible, as a deity or sacred person. [Skt. pra-sanna → த. பிரசன்னம்+ஆ-தல்] |
பிரசன்னமுகம் | பிரசன்னமுகம் pirasaṉṉamugam, பெ.(n.) மலர்ந்த முகம்(வின்.);; smiling countenance, benign or gracious look. த.வ.சிரித்த முகம் [Skt. pra-sanna → த. பிரசன்னம்+முகம்] |
பிரசன்னமுத்திரை | பிரசன்னமுத்திரை pirasaṉṉamuttirai, பெ.(n.) முத்திரை வகை (சைவாநு.வி.17.);; a hand-pose in worship. த.வ.வணக்க மெய்ப்பாடு [Skt. prasanna → த. பிரசன்னம்+முத்திரை] |
பிரசன்னம் | பிரசன்னம் pirasaṉṉam, பெ.(n.) 1. தெளிவு; clearness, brightness. “முகம் பிரசன்னமாக இருக்கின்றது” (வின்.);. 2. கடவுள் பெரியோர் முதலியோரின் காட்சி; gracious appearance or presence of a deity or sacred person. த.வ.அருட்காட்சி, கலக்கமின்மை [Skt. pra-sanna → த. பிரசன்னம்] |
பிரசம்சை | பிரசம்சை pirasamsai, பெ.(n.) புகழ்ச்சி; fame, praise. த.வ.பாராட்டு, புகழுரை [Skt. pra-{} → த. பிரசம்சை] |
பிரசயம் | பிரசயம் pirasayam, பெ.(n.) நலிவொலியை (சுவரிதம்); அடுத்து எடுத்தலோசையைச் (அநுத்தாத்தம்); சேர்த்துக் கூறும்போது உள்ள இசை (ஸ்வரம்.); (பி.வி.40,உரை.);; the one occurring in a series of unaccented syllables following a svarita. [Skt. pra-caya → த. பிரசயம்] |
பிரசரணம் | பிரசரணம் pirasaraṇam, பெ.(n.) 1. கொள்ளை யிடுகை; dacoity. 2. பகைவரைச் சூழ்ந்து கொள்ளுகை; surrounding the enemy. த.வ.முற்றுகை [Skt. pra-{} → த. பிரசரணம்] |
பிரசலை | பிரசலை pirasalai, பெ.(n.) மனக்கலக்கம் (சீவக.3076,உரை.);; agitation, excitement, mental disturbance. த.வ.அறிவுப்பிறழ்வு [Skt. pra-{} → த. பிரசலை] |
பிரசவகாரி | பிரசவகாரி pirasavakāri, பெ.(n.) ஈற்றுளையைப் (பிரசவவேதனை); பெருக்கிக் குழந்தையை (சிசு); விரைவில் வெளிப்படுத்தும் மருந்து (பைஷஜ.13.);; parturifacient. [பிரசவம்+காரி] |
பிரசவசன்னி | பிரசவசன்னி pirasavasaṉṉi, பெ.(n.) மகப்பேற்றிற்குப் (பிரசவம்); பின் வரும் நளிர்நோய் (சன்னி.); (பைஷஜ.);; puerperal convulsions, eclampsia. 2. ஈன்றபிறகு ஆவுக்கு உண்டாகும் நோய் வகை (இ.வ.);; dropping after calving. த.வ. இழுப்பு நோய் [Skt. pra-sava+san-ni → த. பிரசவசன்னி] |
பிரசவசுரம் | பிரசவசுரம் pirasavasuram, பெ.(n.) மகப்பேற்றுக்குப்(பிரசவம்); பின்னர் உண்டாகும் காய்ச்சல் (இங்.வை.);; puerperal fever. [Skt. pra-sava+juara → த. பிரசவசுரம்] |
பிரசவப்பெரும்பாடு | பிரசவப்பெரும்பாடு pirasavapperumbāṭu, பெ.(n.) மகப்பேற்றிற்குப் (பிரசவம்); பின்னர் குருதிப்பெருக்கு (சூதகம்.); மிகுதியாய் வெளிப்படுகை (இங்.வை.);; uterine haemorrhage after parturition. [பிரசவம்+பெரும்பாடு] |
பிரசவப்பைத்தியம் | பிரசவப்பைத்தியம் pirasavappaittiyam, பெ.(n.) மகப்பேற்றிற்குப் (பிரசவம்); பின்னர் உண்டாகும் மனத்தடுமாற்றம் (இங்.வை.);; puerperal mania. த.வ.பேறுகால வருத்தம் [Skt. pra-sava+paittiya → த. பிரசவபைத்தியம்] |
பிரசவம் | பிரசவம் pirasavam, பெ.(n.) மகப்பேறு; child birth, parturition. த.வ. பாயம், பயப்பு, ஈனல் [Skt. pra-sava → த. பிரசவம்] |
பிரசவவிடுதி | பிரசவவிடுதி pirasavaviḍudi, பெ.(n.) தாய்சேய் நலவிடுதி; maternity hospital. த.வ.மகப்பேற்று இல்லம், குழந்தை நலக் காப்பகம் |
பிரசவவேதனை | பிரசவவேதனை pirasavavētaṉai, பெ.(n.) மகப்பேறு (பிரசவம்); நிகழ்வதற்காக உண்டாகும் நோவு (உ.வ.);; pains of childbirth, labour, labour pain. த.வ. பேறுகாலத்துன்பம் [Skt. pra-sava+{} → த. பிரசவவேதனை] |
பிரசவவைராக்கியம் | பிரசவவைராக்கியம் pirasavavairākkiyam, பெ.(n.) வெறுப்பு (வைராக்கியம்); மூன்றனுள் மகப்பேற்றுத் துன்பப் (பிரசவவேதனை); படுபவள் அத்துன்பத்தால் பின்னர்க் காம நுகர்ச்சியை வெறுத்துவிடுவதாக அப்போது கருதும் எண்ணம்; determination of a woman at the time of confinement to abstain in future from intercourse, one of the three kinds of vairakkiyam. த.வ.பேறுகால உறுதி [Skt. pra-sava + {} → த. பிரசவ வைராக்கியம்] |
பிரசவி-த்தல் | பிரசவி-த்தல் pirasavittal, 4 செ.குன்றாவி. (v.t.) ஈனுதல்; to bring forth, as a child. த.வ. பிள்ளைபெறுதல், பயத்தல், ஈனுதல் [Skt. pra-sava → த. பிரசவி-த்தல்] |
பிரசவீகம் | பிரசவீகம் pirasavīkam, பெ.(n.) மகப்பேறு மருத்துவம்; midwifery. (சா.அக.); |
பிரசாதஞ்செய்-தல் | பிரசாதஞ்செய்-தல் piracātañjeytal, 1 செ.குன்றாவி. (v.t.) அருள் செய்தல்; to bestow, grant, as a favour. “ஸ்ரீமுகம் பிரசாதஞ்செய் தருளி (S.I.I.iii,157,7);. த.வ.இரக்கங்காட்டல் [Skt. pra-{} → த. பிரசாதம்+செய்-தல்] |
பிரசாதனம் | பிரசாதனம் piracātaṉam, பெ.(n.) 1. வெள்ளி (யாழ்.அக.);; silver. 2. கொக்கு (சங்.அக.);; crane. [Skt. {} → த. பிரசாதனம்] |
பிரசாதபத்திரம் | பிரசாதபத்திரம் biracātabattiram, பெ.(n.) வீரச்செயல் முதலியவற்றிற்கு மகிழ்ந்து அரசன் கொடுக்கும் நிலம் முதலியவற்றைக் குறிக்கும் ஆவணம். (சுக்கிரநீதி,93);; royal grant of land, etc., in appreciation of one’s bravery. த.வ.வீரக்கொடை ஆவணம் [Skt. {}+patra → த. பிரசாதபத்திரம்] |
பிரசாதப்படு-தல் | பிரசாதப்படு-தல் piracādappaḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. உண்ணுதல்; to eat. “ஊரடங்கலும் பிரசாதப்பட்டு மகிழலாயிற்று” (குருபரம்.513);. 2. திருவாணையேற்றல்; to receive the favour or order, as of a king. “முகம்… தலைமேற்கொண்டு பிரசாதப்பட்டு” (S.I.I.iii.,157,7);. த.வ. 1. சாப்பிடுதல், 2. அரசாணை ஏற்றல் [Skt. pra-{} → த. பிரசாதம்+படு-தல்] |
பிரசாதம் | பிரசாதம்1 piracātam, பெ.(n.) 1. தெளிவு; clearness. “தெளிவு பிரசாதமென்ன” (வாயுசங்.ஞானயோ.57);. 2. அருள், இரக்கச் செயல்; favour, kindness, grace. 3. கடவுளுக்கு ஒப்புவிக்கும் சோறு முதலிய படையல் (S.I.l. iii,248,4.);; boiled rice, etc., offered to an idol. 4. சோறு; boiled rice. [Skt. pra-{} → த. பிரசாதம்] பிரசாதம்2 piracātam, பெ.(n.) 1. கருப்ப முண்டாக்கு மருந்து; medicine for conception. 2. பிள்ளைப் பேறு; delivery of the child. (சா.அக.); த.வ. 2. மகப்பேறு, குழந்தைப்பேறு |
பிரசாதருமம் | பிரசாதருமம் piracātarumam, பெ.(n.) 1. குடிக்கடமைகள் (இ.வ.);; rules regulating the conduct of citizens. 2. மகவின் கடமை (யாழ்.அக.);; duty of a son or daughter. [Skt. praja+dharma → த. பிரசாதருமம்] |
பிரசாதலிங்கம் | பிரசாதலிங்கம் piracātaliṅgam, பெ.(n.) ஆறு வகை இலங்கங்களுளொன்று (சித்.சிகா.201.);; a {}, one of {}. 2. சிவ பெருமானுக்குப் படையிலிடப்பட்ட பண்டம் (வின்.);; offerings that which is dedicated to {}. த.வ.சிவபடையலமுது [Skt. {} → த. பிரசாதலிங்கம்] |
பிரசாதிபத்தியம் | பிரசாதிபத்தியம் biracātibattiyam, பெ.(n.) மக்கள் ஆட்சி (இக்.வ.);; democracy. த.வ.குடியாட்சி [Skt. {} → த. பிரசாதிபத்தியம்] |
பிரசாந்தி | பிரசாந்தி piracāndi, பெ.(n.) உள்ளும் புறமுமுள்ள அறியாமையை ஒழிக்கை (வாயுசங். ஞானயோ.57);; removing ignorance, both internal and external. [Skt. {} → த. பிரசாந்தி] |
பிரசாபதி | பிரசாபதி1 piracāpadi, பெ.(n.) 1. நான்முகன் (பிங்.);; Brahma. 2. துணை நான்முகன்; upa- Brahma as Daksa. etc., 3. அரசன்; king. 4. ஆண்டு அறுபதனுள் ஐந்தாவது; the fifth year of the Jupiter cycle. 6. மக்கட் பெருக்கம்; increase of population. த.வ. படைப்புக் கடவுள் [Skt. {}-pati → த. பிரசாபதி] பிரசாபதி2 piracāpadi, பெ.(n.) 1. ஆண் குறி; penis. 2. நெருப்பு; fire. 3. தந்தை (பிதா);; father. (சா.அ.);. |
பிரசாபத்தியம் | பிரசாபத்தியம் piracāpattiyam, பெ.(n.) 1. மணப்பெண்ணிற்குப் பணம் பெறாது மகட்கொடை நேரும் மணவகை; a form of marriage which consists in the gift of a girl by her father to the bridegroom without receiving bride price from him. 2. பகல் 15 முழுத்தத்துள் ஒன்பதாவதும், இரவு 15 முழுத்தத்துள் எட்டாவதும் ஆன காலம். (விதான.குணாகுண.73,உரை.);; the ninth of the 15 divisions of day, and eighth of those of night. [Skt. {} → த. பிரசாதபத்தியம்] |
பிரசாமம் | பிரசாமம் piracāmam, பெ.(n.) மனவமைதி (சங்.அக.);; tranquility of mind. த.வ.உள்ளத்தெளிவு [Skt. pra-{} → த. பிரசாமம்] |
பிரசாரம் | பிரசாரம் piracāram, பெ.(n.) 1. பரவுகை; extension. 2. பரவச் செய்கை; promulgation, propaganda. த.வ. பரப்புரை [Skt. pra-{} → த. பிரசாரம்] |
பிரசாவிருத்தி | பிரசாவிருத்தி piracāvirutti, பெ.(n.) 1. மக்கட் பெருக்கம்; increase of population. 2. கால்வழி பெருக்கம்; increase of progeny. [Skt. {} → த. பிரசாவிருத்தி] |
பிரசிசியன் | பிரசிசியன் pirasisiyaṉ, பெ.(n.) மாணாக் கனுக்கு மாணாக்கன்; pupil’s pupil. “இவ்வுடையார் சிஷ்யரும் பிரசிஷ்யருமாய்” (S.I.I. ii, 107);. [Skt. {} → த. பிரசிசியன்] |
பிரசித்த கடுதாசி | பிரசித்த கடுதாசி pirasittagaḍutāsi, பெ.(n.) அறிக்கை ஆவணம்; advertisement, notice, notification proclamation. [Skt. pra-siddha → த. பிரசித்தம்+கடுதாசி] |
பிரசித்தபத்திரம் | பிரசித்தபத்திரம் birasittabattiram, பெ.(n.) பிரசித்தகடுதாசி பார்க்க (வின்.);;see {}. [Skt. pra-siddha+patra → த. பிரசித்தபத்திரம்] |
பிரசித்தபத்திரிகை | பிரசித்தபத்திரிகை birasittabattirigai, பெ.(n.) பிரசித்த கடுதாசி பார்க்க;see {}. த.வ.விளம்பரம், வெளிப்படுத்துகை [Skt. pra-siddha+{} → த. பிரசித்தபத்திரிகை] |
பிரசித்தப்படுத்து-தல் | பிரசித்தப்படுத்து-தல் pirasiddappaḍuddudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. வெளியாக்குதல்; to publish, divulge. 2. விளம்பரஞ் செய்தல்; to promulgate, advertise, proclaim. 3. புகழ் முதலியவற்றை பரப்புதல்; to spread, as one’s fame. [Skt. pra-siddha → த. பிரசித்தம்+படுத்து- தல்] |
பிரசித்தம் | பிரசித்தம் pirasittam, பெ.(n.) 1. வெளிப்படை; publicity. 2. அறிவிப்பு; promulgation, proclamation, publication, announcement, advertisement. 3. புகழ் (வின்.);; fame, celebrity. 4. நன்கு அறியப்பட்ட நிலை; state of being well known. “சிலபதம் பிரசித்த மாகியும்” (பி.வி.18,உரை.);. த.வ.பெயர் பெற்றது, பெயர் போனது, புகழ் பெற்றது, பெருமையுடையது [Skt. pra-siddha → த. பிரசித்தம்] |
பிரசித்தி | பிரசித்தி pirasitti, பெ.(n.) புகழ் (கொ.வ.);; fame. [Skt. pra-siddhi → த. பிரசித்தி] |
பிரசினம் | பிரசினம் pirasiṉam, பெ.(n.) 1. வினா; question, enquiry. 2. பத்து வகையயான மெய்ம்மறை நூல்களுள் ஒன்று; an upanisad, one of {}. [Skt. {} → த. பிரசினம்] |
பிரசுரன் | பிரசுரன்1 pirasuraṉ, பெ.(n.) வெள்ளிக்கோள் (சாதகசிந்.7.);; the planet Venus. த.வ.விடிவெள்ளி, விடி மீன் பிரசுரன்2 pirasuraṉ, பெ.(n.) மிக்கவன்; one who excels. “திணிசுடர்ப் பிரசுர னிராசி சேர்வுற (அரிசமய.குலசே.32);. [Skt. pra-cura → த. பிரசுரம்] |
பிரசுரம் | பிரசுரம்1 pirasuram, பெ.(n.) 1. அறிவிப்பு; publishing, notification. 2. நூல் வெளியீடு; publication, edition. [Skt. pra-cara → த. பிரசுரம்] பிரசுரம்2 pirasuram, பெ.(n.) மிகுதி (இலக்.அக.);; immonseness; plenty. [Skt. pra-cura → த. பிரசுரம்] |
பிரசுராலயம் | பிரசுராலயம் pirasurālayam, பெ.(n.) புத்தக வெளியீட்டு நிறுவனம்; publishing house. த.வ. பதிப்பகம், வெளியீட்டகம் [Skt. pra-cara → த. பிரசுர+ஆலயம்] |
பிரசுரி | பிரசுரி pirasuri, பெ.(n.) செய்தித்தாள் போன்ற வற்றில் கட்டுரை, கதை முதலியவற்றை வெளி யிடுகை, புத்தகம் போன்றவை வெளியிடுகை, பதிப்பிக்கை; publish (an article, a book, etc.,);. “பிரசுரிக்கத் தகுதி இல்லை எனக் கதையைத் திருப்பி அனுப்பிவிட்டார்” (உ.வ.);. [Skt. pra-{} → த. பிரசுரி] |
பிரசூதி வைராக்கியம் | பிரசூதி வைராக்கியம் piracūtivairākkiyam, மகப்பேற்று வேதனையால் பின்னர் இச்சையை வெறுத்து விடுவதாக அப்போது கருதும் எண்ணம், உறுதி; determination of a woman at the time of confinement to attain in future from intercourse, one of the three kinds of vairakkiyam. [Skt. pra-sava+vairagya → த. பிரசவ வைராக்கியம்] |
பிரசூதிகா வாயு | பிரசூதிகா வாயு piracūtikāvāyu, பெ.(n.) கருவளி (கர்ப்பவாயு);; a vital air which assists in parturition. [Skt. pra- {} → த. பிரசூதிகாவாயு] |
பிரசூதிகை | பிரசூதிகை piracūtigai, பெ.(n.) மகப்பேற்று அறையிலிருப்பவள் (வின்.);; woman recently confined. [Skt. {} → த. பிரசூதிகை] |
பிரசூனம் | பிரசூனம் piracūṉam, பெ.(n.) பூ(நாமதீப.367.);; flower. த.வ.மலர் [Skt. pra-{} → த. பிரசூனம்] |
பிரசை | பிரசை pirasai, பெ.(n.) 1. குடி; citizen, subject. 2. வழித்தோன்றல்; child, progeny. “உத்தரப் பிரசைப் பலத்தோடு” (சிவதரு.கோபு.162);. த.வ. 1. மக்கள், 2. கால்வழி, மரபு வழி [Skt. pra-{} → த. பிரசை1] |
பிரச்சாரகர் | பிரச்சாரகர் piraccāragar, பெ.(n.) பரப்புரை (பிரச்சாரம்); செய்பவர்; propagandist. மதப் பிரச்சாரகர் / குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரகர். (உ.வ.);. த.வ. பரப்புரையாளர் [Skt. pra-{} → த. பிரச்சாரகர்] |
பிரச்சாரம் | பிரச்சாரம் piraccāram, பெ.(n.) ஆதரவு தேடி அல்லது மனமாற்றம் ஏற்படுத்த ஒரு கருத்தை அல்லது கொள்கையைப் பரப்புகை; propaganda, campaign, (religious); preaching. “குடும்பக் கட்டுப்பாட்டுப் பிரச்சாரம்/தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டவுடன் கட்சிகள் முழுமூச்சாகப் பிரச்சாரத்தில் இறங்கின/மதப் பிரச்சாரம்”. த.வ. பரப்புரை [Skt. pra-{} → த. பிரச்சாரம்] |
பிரஞ்சாணி | பிரஞ்சாணி pirañjāṇi, பெ.(n.) ஆணி வகை; french nail, wire nail. [E. French → த. பிரஞ்சு+ஆணி] |
பிரஞ்சிலாகா | பிரஞ்சிலாகா pirañjilākā, பெ.(n.) பிரஞ்சுக்காரர் ஆட்சிக்குட்பட்ட இந்திய நாட்டுப் பகுதி; French territory. [Skt. French+Arab.ilaga → த. பிரஞ்சிலாகா] |
பிரஞ்ஞன் | பிரஞ்ஞன் piraññaṉ, பெ.(n.) அறிஞன்; intelligent, wiseman. த.வ.புலமையாளன் [Skt. {} → த. பிரஞ்ஞன்] |
பிரஞ்ஞாபங்கம் | பிரஞ்ஞாபங்கம் piraññāpaṅgam, பெ.(n.) அறிவுகேடு; unconsciousness. த.வ.நினைவு தவறல், நினைவிழப்பு [Skt. {} → த. பிரஞ்ஞாபங்கம்] |
பிரஞ்ஞாபனபத்திரம் | பிரஞ்ஞாபனபத்திரம் biraññābaṉabattiram, பெ.(n.) ஆசிரியர் முதலான பெரியோர்க்கு வணக்கத்தோடு வரையப்படும் மடல் (சுக்கிரநீதி,93);; letter submitted respect – fully to a greatman, such as one’s guru. த.வ.திருமடல் [Skt. {} → த. பிரஞ்ஞாபனபத்திரம்] |
பிரஞ்ஞாபாரமிதை | பிரஞ்ஞாபாரமிதை piraññāpāramidai, பெ.(n.) பிரஞ்ஞை,2 பார்க்க;see {},2. [Skt. {} → த. பிரஞ்ஞாபாரமிதை] |
பிரஞ்ஞை | பிரஞ்ஞை piraññai, பெ.(n.) 1. அறிவு: consciousness, knowledge, intelligence. 2. முழு மெய் அறிவு; 3. முன்னிகழ்ந்ததை யறிவுமறிவு (சி.சி.4,28, மறைஞா.);; knowledge of past events. த.வ. உள்ளுணர்வு [Skt. {} → த. பிரஞ்ஞை] |
பிரட்சாளனம் | பிரட்சாளனம் piraṭcāḷaṉam, பெ.(n.) நீராற் கழுவுகை; washing, cleaning or ceremonially purifying with water, ablution. த.வ.தூயநீராட்டு [Skt. {} → த. பிரட்சாளனம்] |
பிரணயம் | பிரணயம் piraṇayam, பெ.(n.) அன்பு (ஈடு);; love. த.வ.காதல் [Skt. pra-{} → த. பிரணயம்] |
பிரணயரோசம் | பிரணயரோசம் piraṇayarōcam, பெ.(n.) ஊடல்; sulks, bouderie. [Skt. pra-{} → த. பிரணயசோரம்] |
பிரணவம் | பிரணவம் piraṇavam, பெ.(n.) ஓங்கார மந்திரம்;{}, the principal mantra of Hindus. த.வ. ஓம், ஓங்காரம் [Skt. pra-nava → த. பிரணவம்] [p] |
பிரணவரூபி | பிரணவரூபி piraṇavarūpi, பெ.(n.) ஓங்கார வடிவாயுள்ள இறைவன்; the supreme being, the embodiment of {}. [Skt. pra-{} → த. பிரணவரூபி] |
பிரணாமம் | பிரணாமம் piraṇāmam, பெ.(n.) கடவுள் அல்லது பெரியோர் முன்பு செய்யும் வணக்கம்; prostration or respedtful salutation before a deity or superior. த.வ.கும்பிடல், வணக்கம் [Skt. {} → த. பிரணாமம்] |
பிரணீதபாத்திரம் | பிரணீதபாத்திரம் piraṇītapāttiram, பெ.(n.) வேள்வி போன்ற நடப்புக் காரியத்திற்கு உரிய ஏனம் (சீவக.2463, உரை.);; a cup used in sacrifical ceremonies. [Skt. {} → த. பிரணீதபாத்திரம்] |
பிரதட்சிணம் | பிரதட்சிணம் piradaṭciṇam, பெ.(n.) வலம் வருகை; circumambulation from left to right. த.வ. வலச்சுற்று, வலனேர்பு [Skt. pradaksina → த. பிரதட்சிணம்] |
பிரதனை | பிரதனை piradaṉai, பெ.(n.) 243 தேரும், 243 யானையும், 729 குதிரையும், 1215 காலாளுங் கொண்ட ஒரு படைவகுப்பு (வின்.);; division of an army, consisting of 243 chariots, 243 elephants, 729 horses and 1215 foot. [Skt. {} → த. பிரதனை] |
பிரதன் | பிரதன் piradaṉ, பெ.(n.) கொடையாளன்; bestower, giver, used at the end of compounds, munificent. “வரப்பிரதன்”. த.வ.வள்ளல் [Skt. pra-da → த. பிரதன்] |
பிரதமகாலம் | பிரதமகாலம் piradamakālam, பெ.(n.) விடியற்காலம் (யாழ்.அக.);; morning. த.வ. புலர்காலை [Skt.prathama → த. பிரதமம்+காலம்] |
பிரதமசாகர் | பிரதமசாகர் piradamacākar, பெ.(n.) முதலில் சுக்கில யசூர் (யஜூர்); மறையைப் படித்து மனனம் செய்ய உரிமைப் பெற்ற பார்ப்பன வகையினர்; a class of Brahmins who are enjoined to study the Sukla-yajur – {} first. [Skt. prathama → த. பிரதமம்+சாகர்] |
பிரதமசிருட்டி | பிரதமசிருட்டி piradamasiruṭṭi, பெ.(n.) 1. முதலில் நிகழ்ந்த படைப்பு; first creation. 2. தொடக்கத்திற் படைக்கப்பட்ட பொருள் (வின்.);; that which is first created. [Skt. Prathama+{} → த. பிரதமசிருட்டி] |
பிரதமன் | பிரதமன்1 piradamaṉ, பெ.(n.) பாற்கன்னல் வகை; a kind of sweet milk-porridge. [M. Prathaman → த. பிரதமன்] பிரதமன்2 piradamaṉ, பெ.(n.) தலைவன்; head, chief. “மூடர்க்கெலாம் பிரதமன்” (பாடு.92,8);. [Skt. prathama → த. பிரதமன்] |
பிரதமபுருடன் | பிரதமபுருடன் biradamaburuḍaṉ, பெ.(n.) படர்க்கை (பி.வி.44,உரை.);; third person. த.வ.அயலிடம், வேறிடம் [Skt. pirathama + purusa → த. பிரதமபுருடன்] |
பிரதமமந்திரி | பிரதமமந்திரி piradamamandiri, பெ.(n.) ஒரு நாட்டை ஆளும் அமைச்சரவையில் முதன்மைப் பொறுப்பு வகிப்பவர்; Prime Minister, premier. த.வ. முதன்மை அமைச்சர் [Skt. prathama+mantrin → த. பிரதமமந்திரி] |
பிரதமம் | பிரதமம் piradamam, பெ.(n.) 1. முதன்மை; priority. 2. தொடக்கம்; beginning, commencement. த.வ. முன்னுரிமை [Skt. prathama → த. பிரதமம்] |
பிரதமர் | பிரதமர் piradamar, பெ.(n.) பிரதம மந்திரி பார்க்க;see piratama-mandiri. த.வ. முதன்மை அமைச்சர் [Skt. prathama+mantrin → த. பிரதமமந்திரி] |
பிரதமவாக்கியம் | பிரதமவாக்கியம் piradamavākkiyam, பெ.(n.) கருதலளவை உறுப்புகளுளொன்று; major premise. [Skt. prathama+{} → த. பிரதமவாக்கியம்] |
பிரதமவிசாரணை | பிரதமவிசாரணை piradamavicāraṇai, பெ.(n.) தொடக்கத்திற் செய்யும் உசாவுகை; preliminary investigation or enquiry. த.வ. முதல் உசாவல் [Skt. prathama+vi- {} → த. பிரதம விசாரணை] |
பிரதமானுயோகம் | பிரதமானுயோகம் piradamāṉuyōkam, பெ.(n.) சமணர்களுக்குரிய நான்கு மறைகளில் முதலாவது (நீலகேசி,1,உரை,பக்.9);; the first of the four {} of the Jains. [Skt. prathama+ {} → த. பிரதமானுயோகம்] |
பிரதமிகர் | பிரதமிகர் piradamigar, பெ.(n.) தேவதூதர் வகை (R.C.);; archangels. த.வ.இறைத்தூதர் [Skt. {} → த. பிரதமிகர்] |
பிரதமை | பிரதமை piradamai, பெ.(n.) 1. காருவாவிற்குப் பின்னும், வெள்ளுவாவிற்குப் பின்னும் வரும் முதல் நாள் (நிலாமான நாள்); (முதல்திதி);; first titi after new moon or full moon in a lunar fortnight. 2. கடுக்காய் (வின்.);; chebulic myrobalan, being the first of tiripalai. த.வ.ஓரி [Skt. {} → த. பிரதமை] |
பிரதம் | பிரதம் piradam, பெ.(n.) கொடுப்பது; that which gives, used at the end of compounds. ஞானப் பிரதமான நூல். (உ.வ.);. த.வ.தருவது, அளிக்கும் [Skt. pra-da → த. பிரதம்] |
பிரதரம் | பிரதரம் piradaram, பெ.(n.) பெரும்பாடு (பைஷஜ.);; menorrhagia. [Skt. pra-dara → த. பிரதரம்] |
பிரதரிசிப்பி-த்தல் | பிரதரிசிப்பி-த்தல் piradarisippiddal, 4 செ.குன்றாவி. (v.t.) விளக்குதல் (சங்.அக.);; to explain, illuminate. [Skt. pra-{} → த. பிரதரிசிப்பி-த்தல்] |
பிரதான நீதிக்காரன் | பிரதான நீதிக்காரன் piratāṉanītikkāraṉ, பெ.(n.) தலைமை நடுவர்; chief judge. [Skt. {} → த. பிரதான + நீதிக்காரன்] |
பிரதானகோயில் | பிரதானகோயில் piratāṉaāyil, பெ.(n.) 1. மூல தெய்வம் உள்ள கோயில்; the shrine of the chief deity in a temple. 2. கிறித்தவர்களின் தலைமைக்கோயில் (கட்டட.நாமா.4.);; cathedral. த.வ. 1. கருவறைக்கோயில் 2. தேவாலயம் [Skt. pradhana → த. பிரதானம்+கோயில்] |
பிரதானன் | பிரதானன் piratāṉaṉ, பெ.(n.) 1. தலைமை யானவன்; chief man. 2. அரசியற்காரியங்கள் எல்லாவற்றையும் நடத்தும் அமைச்சன் (சுக்கிரநீதி,66.);; a minister who attends to all the functions of a state. த.வ. முதன்மையானவள் [Skt. {} → த. பிரதானன்] |
பிரதானபுருடச்சுரி | பிரதானபுருடச்சுரி biratāṉaburuḍaccuri, பெ.(n.) மலைமகள் (கூர்மபு.திருக்கலியாண, 23);; the Goddess {}. த.வ.உமையாள் [Skt. {} → த. பிரதான புருடேச்சுரி] |
பிரதானபுருடன் | பிரதானபுருடன் biratāṉaburuḍaṉ, பெ.(n.) முதன்மையானவன்; chief of prominent person. த.வ.தலைவன், சிறந்தவன் [Skt. {} → த. பிரதானபுருடன்] |
பிரதானபூதம் | பிரதானபூதம் piratāṉapūtam, பெ.(n.) முதன்மையானது; that which is chief or important. [Skt. pra-{} → த. பிரதானம்+பூதம்] |
பிரதானமடி-த்தல் | பிரதானமடி-த்தல் piratāṉamaḍittal, 4 செ.கு.வி. (v.i.) தற்பெருமை கொண்டாடுதல்; to boast, make much of oneself; blow one’s own triumph. த.வ.தம்பட்டம் அடித்தல் [Skt. {} → த. பிரதானம் + அடித்தல்] |
பிரதானம் | பிரதானம் piratāṉam, பெ.(n.) 1. இயற்கையின் உட்பொருள்; படைப்பின் மெய்ம்மை; material cause of creation, matter. “இரும்பிரதானத் தெழுமன தத்துவம்” (ஞான.64,1);. 2. மிகத் தேவையானது; importance, eminence, essence. 3. தலைமைப்பொருள்; that which is important. “பிரதானத்தோ டப்பிரதானம்” (பி.வி.16,உரை.);. த.வ.1.முதன்மைமெய்ப்பொருள் 2. இன்றி யமையாதது [Skt. {} → த. பிரதானம்] |
பிரதானி | பிரதானி piratāṉi, பெ.(n.) அமைச்சர்; minister. “திகழ்வடுக நாததுரை மெச்சும் பிரதானி” (தனிப்பா.i.260,1);. [Skt. {} → த. பிரதானி] |
பிரதானிக்கம் | பிரதானிக்கம் piratāṉikkam, பெ.(n.) 1. கருவூல அதிகாரியின் அலுவலகம் (வின்.);; office of a treasurer. 2. அமைச்சகம்; ministerial office. [Skt. {} → த. பிரதானிக்கம்] |
பிரதானிசோடி | பிரதானிசோடி piratāṉicōṭi, பெ.(n.) அமைச்சர் பயன்படுத்தும் இலவய நிலம் (S.I.I.);;{} held on a fixed quit-rent by a minister. த.வ.இலவய நிலம் [Skt. pradhana → த. பிரதானி+சோடி] |
பிரதானை | பிரதானை piratāṉai, பெ.(n.) மலைமகள் (கூர்மபு.திரு.20.);;{}. த.வ.இறையரசி, உமையவள் [Skt. {} → த. பிரதானை] |
பிரதாபம் | பிரதாபம் piratāpam, பெ.(n.) 1. வீரம்; bravery, heroism. “காமற்றெறு பிரதாபமும்” (சிவப்.பிர. சிவஞா.கலம்.39);. 2. பெருமை; greatness, magnificence. 3. புகழ்; fame, glory, celebrity. 4. ஒளி; splendour. த.வ. 1. மறம் 2. செருக்கு 3. பெயர் பெற்ற 4. மிகுவெளிச்சம் [Skt. pra- {} → த. பிரதாபம்] |
பிரதாபலங்கேச்சுரம் | பிரதாபலங்கேச்சுரம் piratāpalaṅāccuram, பெ.(n.) இதளியம், கந்தகம் முதலியவற்றாற் செய்த கூட்டு மருந்து வகை (பதார்த்த,1224.); (பைஷஜ. 153);; a medicine, compounded of mercury, sulphur and other ingredients. [Skt. pra-{}-vara → த. பிரதா பலங்கேச்சுரம்] |
பிரதாபி-த்தல் | பிரதாபி-த்தல் piratāpittal, 4 செ.கு.வி.(v.i.) பெருமைப்படுதல் (வின்.);; to become glorious, famous or exalted. த.வ.புகழடைதல், சிறப்படைதல் [Skt. pratapa → த. பிரதாபி-த்தல்] |
பிரதி | பிரதி1 piradi, பெ.(n.) 1. ஒத்த தன்மை; likeness. “பிரதிபிம்பம்”. 2. மாற்று, நிகரி, பதிலி; substitute. “வயிரத்துக்குப் பிரதி புட்பராகம் வைக்கப்பட்டது”. 3. விடை; answer, response. 4. படி; copy, transcript, duplicate. “இது கையெழுத்துப் பிரதியா? 5. நூல்படி; manuscript 6. மாறு, எதிர்ச்சொல்; opposition. நான் சொல்லுவதற் கெல்லாம் பிரதி சொல்லுகிறான். 7. போட்டி; competition. அவன் கடைக்கு இது பிரதியாக வைத்தது. 8. எதிர்வழக்காளி; defendant. அவன் இந்த வழக்கிலே பிரதி (இ.வ.); [Skt. prati → த. பிரதி] பிரதி2 piradi, பெ.எ. (adj.) ஒவ்வொரு; each, every. பிரதி நாளும் வர வேண்டும். [Skt. prati → த. பிரதி] |
பிரதிகருமம் | பிரதிகருமம் piradigarumam, பெ.(n.) 1. செய்ததற்கு மாறு செய்கை; retaliation, requital. 2. புனைகை(யாழ்.அக.);; adornment, decoration. த.வ. 1. பழிவாங்குகை, 2. அழகுபடுத்துகை, ஒப்பனை செய்கை [Skt. prati-karman → த. பிரதிகருமம்] |
பிரதிகுலம் | பிரதிகுலம் piradigulam, பெ.(n.) பிரதிகூலம் பார்க்க;see {}. “பிரதிகுலமேற் றீதாம்” (சினேந்.443);. [Skt. {} → த. பிரதிகூலம் → பிரதிகுலம்] |
பிரதிகை | பிரதிகை piradigai, பெ.(n.) தும்புருவுக்குரிய வீணை (பரத.ஒழிபு.15.);; a lute of Tumburu. [Skt.cf. {} → த. பிரதிகை] |
பிரதிக்கடமை | பிரதிக்கடமை piradikkaḍamai, பெ.(n.) செய்ந்நன்றி(கல்வி.வி.1,1,7.);; gratitude. த.வ.நன்றிக்கடன் [Skt. prati → த. பிரதி+கடமை] |
பிரதிக்கினை | பிரதிக்கினை piradikkiṉai, பெ.(n.) 1. கருதிய செய்தி (பி.வி.2,உரை.);; that which is proposed or resolved upon. 2. ஊக உறுப்புகளில் நிறைவேற்ற (சாதிக்க); வேண்டிய பொருள் (தருக்க.சங்.49);; major premise. 3. சூளுறவு; vow, solemn declaration. 4. தீர்மானம்; pledge, resolve. 5. உடன்பாடு (யாழ்.அக.);; assent. 6. பாபசங்கீர்த்தனம் (கிறித்து.); (வின்.); பார்க்க;see {}. த.வ. 1. கருத்தூகம், 3. வெகுண்டுரை, 4. எண்ண முடிவு, 5. ஒத்த முடிவு ஒப்பளிப்பு [Skt. {} → த. பிரதிக்கினை] |
பிரதிக்கிரகம் | பிரதிக்கிரகம் piradiggiragam, பெ.(n.) 1. கொடை பெறுகை; acceptance of gifts. 2. படையின் பின்புறம், பின்பக்கம் (குறள்,767, அடிக்குறிப்பு);; rear of an army. த.வ. ஈகை பெறல் [Skt. prati – graham → த. பிரதிக்கிரகம்] |
பிரதிக்கிரகி-த்தல் | பிரதிக்கிரகி-த்தல் piradiggiragiddal, 4 செ.குன்றாவி. (v.t.) கொடை கொள்ளுதல்; to accept a gift. த.வ. ஏற்றல், ஈகை கொள்ளல் [Skt. pratigraha → த. பிரதிக்கிரகி-த்தல்] |
பிரதிக்கிரமணம் | பிரதிக்கிரமணம் piradikkiramaṇam, பெ.(n.) மன்னிப்பு; pardon. “அப்பாவங்கெடப் பிரதிக்கிரமனஞ் சொல்லி” (நீலகேசி,315, உரை);. த.வ.குற்ற ஒப்புகை, குற்ற வருத்தம் [Skt. {} → த. பிரதிக்கிரமணம்] |
பிரதிக்கிரியை | பிரதிக்கிரியை piradikkiriyai, பெ.(n.) 1. பிரதி கருமம் பார்க்க;see piradikarumam. 2. கழுவாயாக செய்யுஞ் செய்கை; redress, remedy. த.வ. கழுவாய், குற்ற ஈடு செயல் [Skt. prati+kriya → த. பிரதிக்கிரியை] |
பிரதிசருக்கம் | பிரதிசருக்கம் piradisarukkam, பெ.(n.) தட்சன் முதலிய துணை படைப்புக் கடவுளரால் படைக்கப்படும் படைப்பு (மச்சபு.நைமிச.37);; secondary creation by the upa-p-piramar. [Skt. prati-sarga → த. பிரதிசருக்கம்] |
பிரதிச்சீட்டு | பிரதிச்சீட்டு piradiccīṭṭu, பெ.(n.) 1. எதிர் குறிப்புத்தாள்; bond given in return, counter-part. 2. நகல்; copy of a bond. [Skt. prati → த. பிரதி+சீட்டு] |
பிரதிட்டாகலை | பிரதிட்டாகலை piradiṭṭākalai, பெ.(n.) சிவஆற்றலின் ஐந்து கலைகளுள் உயிராதனை வீடுபேற்றில் உய்க்குங் கலை (சி.போ.பா.5,2, பக்.143, புதுப்.);; sphere of action of the energy of Siva, which lead the soul to the liberated state, one of {}-kalai. [Skt. prati-{} → த. பிரதிட்டா+கலை] |
பிரதிட்டி-த்தல் | பிரதிட்டி-த்தல் piradiṭṭiddal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கோயில் முதலியவற்றில் தெய்வத்தை நிறுவுதல்; to establish a deity, as in a temple. “அக்கினியைப் பிரதிட்டிப்பதற்கு முன்பே” (சீவக.2464,உரை);. 2. நிலை நாட்டுதல்; to settle, as a family. த.வ.நிலைக்கச் செய்தல், நிலைகோள் செய்தல் [Skt. {} → த. பிரதிட்டி-த்தல்] |
பிரதிட்டை | பிரதிட்டை1 piradiṭṭai, பெ.(n.) 1. தெய்வத்தைப் புதுக்கோயில் முதலியவற்றில் நிறுவுகை; establishing a deity, as in a newly built temple. 2. நிலை பெறுகை; founding as of a family establishing setting in security. “பிராண பிரதிட்டை (இராமநா.உயுத்.5);. 3. உயிராதனை வீடுபேற்றில் உய்க்குங் கலை (சி.போ.பா.5,2,பக்.143.புதுப்.);; sphere of action of the energy of {}, which lead the soul, to the liberated state, one of {}. [Skt. prati-{} → த. பிரதிட்டை] |
பிரதிட்டைப்பண்டிகை | பிரதிட்டைப்பண்டிகை piradiṭṭaippaṇṭigai, பெ.(n.) முதற்பேறுகளைக் கடவுட்குக் கொடுக்கும் காணிக்கைத் திருவிழா (கிறித்து.);; feast of dedication. த.வ.முதற்காணிக்கை, நேர்த்திக்கடன் விழா [Skt. {} → த. பிரதிட்டை+பண்டிகை] |
பிரதிதானம் | பிரதிதானம் piradidāṉam, பெ.(n.) 1. கைம்மாறு; remuneration, gift in return. 2. பிற்பயன் கருதி உதவுங் கொடை; gift made in expectation of a return. 3. சரக்குகளுக்கு விலையாகக் கொடுக்கப்பட்ட பொருள் (சுக்கிரநீதி,98);; price. த.வ. 1. சிறுகடன் 2. எதிர்நோக்கு உதவி 3.. மாறுகொள்ளல் 4. பண்டமாற்று [Skt. prati –{} → த. பிரதிதானம்] |
பிரதிதுரை | பிரதிதுரை piradidurai, பெ.(n.) உதவியதிகாரி (வின்.);; a deputy governor. த.வ.துணை ஆளுநர் [Skt. prati + dhurya → த. பிரதிதுரை] |
பிரதிதொனி | பிரதிதொனி piradidoṉi, பெ.(n.) எதிரொலி (யாழ்.அக.);; echo, reverberation. த.வ.எதிரொலி, மாறுஒலி [Skt. prati-dhvani → த. பிரதிதொனி] |
பிரதிநாதம் | பிரதிநாதம் piradinādam, பெ.(n.) பிரதிதொனி (யாழ்.அக.); பார்க்க;see {}. [Skt. prati + {} → த. பிரதிநாதம்] |
பிரதிநாயகன் | பிரதிநாயகன் piradināyagaṉ, பெ.(n.) பாட்டுடைத் தலைவனின் பகைவன்; the chief adversary of the hero of any poetic composition. த.வ. கொடும்பன் [Skt. prati + {} → த. பிரதிநாயகன்] |
பிரதிநிதி | பிரதிநிதி piradinidi, பெ.(n.) 1. மாற்று ஆள்; deputy, representative. 2. காலத்தின் தகுதி நோக்கி ஒரு செயலைச் செய்தற்கும் ஒழிதற்கும் உரிமையுள்ள அமைச்சன் (சுக்கிரநீதி,66.);; a minister who does or forbears from doing an act, good or evil, as occasion demands. த.வ.நிகராளி, நிகராளர், நிகரர் [Skt. prati-nidhi → த. பிரதிநிதி] |
பிரதிபடன் | பிரதிபடன் biradibaḍaṉ, பெ.(n.) எதிராளி; opponent, competitor. “ஹேயப்ரதி படனாய்” (திவ்.திருவாய்.4,1,10.பன்னீ.);. த.வ.போட்டியாளர் [Skt. prati-{} → த. பிரதிபடன்] |
பிரதிபதம் | பிரதிபதம் biradibadam, பெ.(n.) 1. ஒரு பொருட்பன்மொழி (பி.வி.42);; synonym. 2. சொற்பொருளுரை; explanation or interpretation, word by word. த.வ. பொழிப்புரை [Skt. prati +pada → த. பிரதிபதம்] |
பிரதிபத்தி | பிரதிபத்தி biradibaddi, பெ.(n.) 1. மதிப்பு; regard, respect. ஆசாரியனிடத்தில் பிரதிபத்தி யுள்ளவன். 2. நம்பிக்கை; confidence, faith. மந்திரத்தில் பிரதிபத்தியிருந்தால் பலன் கை கூடும். த.வ. மதிப்புரவு [Skt. prati-patti → த. பிரதிபத்தி] |
பிரதிபந்தகம் | பிரதிபந்தகம் biradibandagam, பெ.(n.) தடை (உ.வ.);; obstacle, impediment. த.வ.இடையூறு, தடங்கல், முட்டுக்கட்டை [Skt. prati-bandha-ka → த. பிரதிபந்தகம்] |
பிரதிபந்தம் | பிரதிபந்தம் biradibandam, பெ.(n.) பிரதிபந்தகம் (வேதா.சூ.141,உரை); பார்க்க;see piradipandagam. [Skt. prati bandha → த. பிரதிபந்தம்] |
பிரதிபலனம் | பிரதிபலனம் biradibalaṉam, பெ.(n.) 1. எதிருரு; reflection, shadow, mirrored image. “பிரதிபலனச் சாயையாகிய சீவேசுர சகத்திற்கு” (வேதா.சூ.56,உரை);. த.வ.எதிர்நிழல், எதிர்சாயை [Skt. pratiphalana → த. பிரதிபலனம்] |
பிரதிபலம் | பிரதிபலம் biradibalam, பெ.(n.) பிரதிப் பிரயோசனம் பார்க்க;see piradi-p- {}. [Skt. prati-phala → த. பிரதிபலம்] |
பிரதிபலி-த்தல் | பிரதிபலி-த்தல் biradibaliddal, 4 செ.கு.வி. (v.i.) கண்ணாடியில் எதிருரு தோன்றுதல் (கைவல். தத்துவ.32,உரை.);; to be reflected, as an Image In a mirror. த.வ.எதிரொலித்தல் [Skt. prati-phal → த. பிரதிபலி-த்தல்] |
பிரதிபாதகம் | பிரதிபாதகம் piradipādagam, பெ.(n.) எடுத்து விளக்குவது (வேதா.சூ.9,உரை.);; that which explains. த.வ.விரிவுரை [Skt. {} → த. பிரதிபாதகம்] |
பிரதிபாதி-த்தல் | பிரதிபாதி-த்தல் piradipādiddal, 4 செ.கு.வி. (v.t.) எடுத்து விளக்குதல்; to explain, illustrate. “இவ்வருத்தந்தனையே பிரதிபாதிக்கும்” (சூத.எக்.உத்.தைத்தரீக.16);. த.வ.விரிவுரையாற்றுதல் [Skt. prati-pad → த. பிரதிபாதி-த்தல்] |
பிரதிபாத்தியம் | பிரதிபாத்தியம் piradipāddiyam, பெ.(n.) எடுத்து விளக்கப்படுவது (வேதா.சூ.9,உரை.);; that which is explained or propounded. த.வ.விளக்கவுரை, விரிவுரை [Skt. {} → த. பிரதிபாத்தியம்] |
பிரதிபிம்பம் | பிரதிபிம்பம் biradibimbam, பெ.(n.) கண்ணாடி போன்ற பொருளில் தோன்றும் படிவுருவின் தோற்றம்; counterpart of an original, mirrored image. த.வ.எதிருரு, நிழலுரு [Skt. prati+bimba → த. பிரதிபிம்பம்] |
பிரதிபுண்ணியவராகன் | பிரதிபுண்ணியவராகன் biradibuṇṇiyavarākaṉ, பெ.(n.) பழைய காசு வகை (பணவிடு.116.);; an ancient coin. [Skt. prati+{} → த. பிரதி புண்ணியவராகன்] |
பிரதிப்பிரயோசனம் | பிரதிப்பிரயோசனம் piradippirayōcaṉam, பெ.(n.) கைம்மாறு (உ.வ.);; benefit in return, consideration, remuneration. த.வ.எதிர்நோக்கு உதவி [Skt.prati+pra- {} → த. பிரதிப்பிரயோசனம்] |
பிரதிமத்தியமம் | பிரதிமத்தியமம் piradimaddiyamam, பெ.(n.) எழுவகைப் பண்களுள் நான்காவதாகிய “ம” என்ற பண் (சிலப்.3,23,உரை);; [Skt. prati+madhyana → த. பிரதிமத்தியமம்] |
பிரதிமானம் | பிரதிமானம் piradimāṉam, பெ.(n.) யானைக் கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி (பிங்.);; the part of an elephant’s head between its tusks. த.வ. நுதல் [Skt. prati {} → த. பிரதிமானம்] |
பிரதிமாலை | பிரதிமாலை piradimālai, பெ.(n.) ஈற்றெழுத்து கவி (யாழ்.அக.);; a stanza which begins with the last word or syllable of another stanza a capping verse. [Skt. prati → த. பிரதி+மாலை] |
பிரதிமுகம் | பிரதிமுகம் piradimugam, பெ.(n.) ஐவகை நாடக சந்தியுள் முளைத்து இலை தோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது (சிலப்.3,13,உரை.);; that part of a drama which embraces the main action of the play and leads on to the catastrophe, epitasis, one of five kinds of {}-c-candi. [Skt. prati → த. பிரதி+முகம்] |
பிரதிமூர்த்தி | பிரதிமூர்த்தி piradimūrddi, பெ.(n.) 1. ஒத்த வடிவம்; likeness, image, representation. 2. பெயர்த்தெழுதுகை; transcript. த.வ.ஒத்தபடி, ஒத்த உரு [Skt. prati → த. பிரதி+மூர்த்தி] |
பிரதிமை | பிரதிமை piradimai, பெ.(n.) உருவம்; puppet, figure, effigy, statue, portrait. த.வ.உருவம், பொம்மை, கொடும்பாவி, சிலை, உருத்தோற்றம் [Skt. {} → த. பிரதிமை] |
பிரதியத்தனம் | பிரதியத்தனம் piradiyaddaṉam, பெ.(n.) 1. எதிரிடை; opposition. 2. சிறைப்படுத்துகை; imprisonment. 3. பழிவாங்குகை; avenging. 4. விருப்பம்; liking. த.வ. 1. நேர் எதிர், 4. ஆசை [Skt. prati-yatna → த. பிரதியத்தனம்] |
பிரதியாதனை | பிரதியாதனை piradiyādaṉai, பெ.(n.) ஒத்த வடிவம் (யாழ்.அக.);; representation, image. த.வ.சார்பு வடிவம் [Skt. prati-{} → த. பிரதியாதனை] |
பிரதியுத்தரம் | பிரதியுத்தரம் piradiyuddaram, பெ.(n.) மறுமொழி; answer. த.வ.விடை [Skt. pratyuttara → த. பிரதியுத்தரம்] |
பிரதியுபகாரம் | பிரதியுபகாரம் biradiyubakāram, பெ.(n.) கைம்மாறு; favour in return, recompense. த.வ.எதிர்நோக்கு உதவி [Skt. {} → த. பிரதியுபகாரம்] |
பிரதியோகம் | பிரதியோகம் piradiyōkam, பெ.(n.) 1. எதிரிடை; opposition, contrariety. 2. கூட்டம்; union. [Skt. prati-{} → த. பிரதியோகம்] |
பிரதியோகி | பிரதியோகி1 piradiyōki, பெ.(n.) 1. எதிர் மறைவினை; verb implying negation. “விதியனுயோகி மறைபிரதியோகி” (பி.வி. 16,உரை);. 2. எதற்கு இன்மை கூறப்படுகிறதோ அது;(Log.); a thing whose non-existence is predicated. த.வ. எதிர்வினை [Skt. prati-{} → த. பிரதியோகி] பிரதியோகி2 piradiyōki, பெ.(n.) எதிராளி (சி.சி.3,4,சிவாக்.);; opponent. [Skt. prati-{} → த. பிரதியோகி] |
பிரதிரூபம் | பிரதிரூபம் piradirūpam, பெ.(n.) பிரதிமூர்த்தி (யாழ்.அக.); பார்க்க;see {}. [Skt. prati-{} → த. பிரதிரூபம்] |
பிரதிலோமசன் | பிரதிலோமசன் piradilōmasaṉ, பெ.(n.) உயர்குலப் பெண்ணுக்கும் இழிகுல ஆணுக்கும் பிறந்த மகன் (பிங்.);; one born of a union between a man of inferior caste and a woman of a superior caste. [Skt. prati-{}-ja → த. பிரதிலோமசன்] |
பிரதிவசனம் | பிரதிவசனம் piradivasaṉam, பெ.(n.) 1. மறுமொழி; answer, reply. 2. எதிரொலி (யாழ்.அக.);; echo. த.வ. 1. விடை, 2. மறு ஒலி [Skt. prati-vacana → த. பிரதிவசனம்] |
பிரதிவத்தூபமை | பிரதிவத்தூபமை piradivaddūpamai, பெ.(n.) மறுபொருளுவமை (தண்டி.30,6.);; a kind of simile. [Skt. prati-{} → த. பிரதிவத்தூபமை] |
பிரதிவாதம் | பிரதிவாதம் piradivādam, பெ.(n.) எதிர்உரை (வாதம்.);; defence, replication, answer in law. [Skt. prati+{} → த. பிரதிவாதம்] |
பிரதிவாதி | பிரதிவாதி1 piradivādi, பெ.(n.) 1. எதிர் வழக்கன்; defendant, respondent, the accused. 2. எடுத்துரைப்பில் எதிராளி; opponent in a controversy. [Skt. prati+{} → த. பிரதிவாதி] பிரதிவாதி2 piradivādiddal, 4 செ.குன்றாவி. (v.t.) எதிராடல்; to reply, present a defence. த.வ.சொற்போர், சொல்லாடல் [Skt. prati+{} → த. பிரதிவாதி-த்தல்] |
பிரதிவாபம் | பிரதிவாபம் piradivāpam, பெ.(n.) மருந்து ஊர்தியில் மருந்தோடு எடுத்துச் செல்லப்படும் துணைப் பொருள் (யாழ்.அக.);; any substance taken along with a medicine vehicle. [Skt. prati- {} → த. பிரதிவாபம்] |
பிரதிவிம்பம் | பிரதிவிம்பம் piradivimbam, பெ.(n.) எதிர் நிழல்; reflection, image, counterpart of an original. “தோன்றிடும் பிரதிவிம்பம்” (இரகு. குசன.27);. த.வ.எதிருரு, நிழலுரு [Skt. pratibimba → த. பிரதிபிம்பம்] |
பிரதிவிம்பீகரி-த்தல் | பிரதிவிம்பீகரி-த்தல் piradivimbīkariddal, 4 செ.கு.வி. (v.i.) பிரதியுருவந் தோன்றுதல்; to take shape again. “நடராஜ மூர்த்தமே பிரதிவிம்பீகரித்துப் பெரியோனெனச் சொல்ல வந்ததால்” (சந்திரகலாமாலை,15);. [Skt. prati-bimba+{} → த. பிரதிவிம்பீகரி-த்தல்] |
பிரதீகாரம் | பிரதீகாரம்1 piratīkāram, பெ.(n.) 1. மருத்துவம்; remedy. 2. சினமாறுகை; conciliation. 3. சீர்திருந்துகை; reforming. 4. பழி வாங்குகை; avenging. த.வ. 1. தீர்வு, 2. அமைதிப்படுகை, 3. நல்வழிப்படுத்துகை, 4. எதிர்பழி தீர்க்கை [Skt. prati-{} → த. பிரதீகாரம்] பிரதீகாரம்2 piratīkāram, பெ.(n.) 1. கதவு; door. 2. ஏமாற்றுகை; deception. த.வ. 1. கபாடம் 2. கரவடம் [Skt. {} → த. பிரதீகாரம்] பிரதீகாரம்3 piratīkāram, பெ.(n.) எதிரிடை; opposition. “பெண்ணு மாணும் மன்மையிற் பிரதீகாரமில்லை” (நீலகேசி,96,உரை);. [Skt. {} → த. பிரதீகாரம்] |
பிரதீதி | பிரதீதி piratīti, பெ.(n.) 1. அறிவு (சி.சி.2, 54, சிவாக்.);; clear apprehension or insight. 2. புகழ் (யாழ்.அக.);; fame. 3. மகிழ்ச்சி; delight. 4. விருப்பம் (யாழ்.அக.);; desire. 5. தோன்றுகை; perception. த.வ. 1. மூளை 2. பெருமை 3. பெருங்களிப்பு, பேருவகை 4. ஆசை 5. உதிக்கை [Skt. {} → த. பிரதீதி] |
பிரதீபம் | பிரதீபம் piratīpam, பெ.(n.) 1. எதிர் நிலை; contrariness, opposition. 2. உவமேயங்களை மாற்றிச் சொல்லும் எதிர் நிலை அணி (அணியி.4.);; a figure of speech. த.வ. மாறுநிலை [Skt. {} → த. பிரதீபம்] |
பிரதீரம் | பிரதீரம் piratīram, பெ.(n.) கரை (யாழ்.அக.);; bank, shore. த.வ.ஒரம் [Skt. pra- {} → த. பிரதீரம்] |
பிரதேசம் | பிரதேசம் piratēcam, பெ.(n.) இடம்; place, locality. “ஆன்மா சரீரத்திலே ஒரு பிரதேசத்திலே இருப்பன்” (சி.சி.4,16,மறைஞா.);. த.வ.பகுதி [Skt. pra-{} → த. பிரதேசம்] |
பிரதை | பிரதை piradai, பெ.(n.) பாண்டுவின் மனைவியான குந்தி தேவி (பாரத.சம்பவ.25.);;{}, wife of {}. [Skt. {} → த. பிரதை] |
பிரதோடம் | பிரதோடம் piratōṭam, பெ.(n.) 1. ஞாயிறு மறைவிற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை; evening, 3 3/4 {} before and after sunset. 2. சிவபெருமானை வழிபடுதற்குரியதான கரும்பக்கத்தின் பதின் மூன்றாம் உவா நாள் (கிருஷ்ணத் திரயோதசி); கூடிய மாலைக்காலம்; evening of the 13th titi of dark fortnight, considered auspicious for worshipping Siva. த.வ.பதின்மும்மி [Skt. pra-{} → த. பிரதோடம்] |
பிரத்தாரம் | பிரத்தாரம் pirattāram, பெ.(n.) 1. கட்டளை யடியிற் பல்வேறு வகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக் கணக் கிடுகை. (யாப்.வி.பக்..471.);; enumeration of all the possible combinations of metrical syllables in a given versemode. 2. தாளக் கூறுகளுள் ஒன்று; [Skt. {} → த. பிரத்தாரம்] |
பிரத்தியகான்மா | பிரத்தியகான்மா pirattiyakāṉmā, பெ.(n.) உயிராதன்; individual soul. “பிரத்திய கான்மாவின் சோதியாம்” (வேதா.சூ.106);. [Skt. {} → த. பிரத்தியகான்மா] |
பிரத்தியக்கம் | பிரத்தியக்கம் pirattiyakkam, பெ.(n.) பிரத்தியட்சம் பார்க்க;see {}. “சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச்சொலி” (மணிமே.29:49);. |
பிரத்தியக்கவிருத்தம் | பிரத்தியக்கவிருத்தம் pirattiyakkaviruttam, பெ.(n.) காட்சிக்கு மாறுபட்டது; that which is contrary to direct perception. “பிரத்தியக்கவிருத்தங் கண்ணிய காட்சி மாறுகொளலாகும்” (மணிமே.29:148);. [Skt. {} → த. பிரத்தியக்கவிருத்தம்] |
பிரத்தியட்சக்கிரகணம் | பிரத்தியட்சக்கிரகணம் pirattiyaṭcaggiragaṇam, பெ.(n.) கண்ணுக்குப் புலப்படும் கோள் பற்றுகை; visible eclipse. [Skt. {} → த. பிரத்தியட்சக் கிரகணம்] |
பிரத்தியட்சதரிசனம் | பிரத்தியட்சதரிசனம் piraddiyaṭsadarisaṉam, பெ.(n.) கண்களாற்கண்ட காட்சி (வின்.);; ocular vision. [Skt. {} → த. பிரத்தியட்ச தரிசனம்] |
பிரத்தியட்சப்பிரமாணம் | பிரத்தியட்சப்பிரமாணம் pirattiyaṭcappiramāṇam, பெ.(n.) அளவை (பிரமாணம்); கள் ஆறனுள் காண்டலளவை. [Skt. {} → த. பிரத்தியட்சப் பிரமாணம்] |
பிரத்தியட்சம் | பிரத்தியட்சம் pirattiyaṭcam, பெ.(n.) 1. காட்சி; perception. 2. அளவை (பிரமாணம்); ஆறனுள் காண்டலளவை; [Skt. prat-{} → த. பிரத்தியட்சம்] |
பிரத்தியனீகவலங்காரம் | பிரத்தியனீகவலங்காரம் pirattiyaṉīkavalaṅgāram, பெ.(n.) வெல்லக்கூடாத உவமேயத்தையொத்த பிறிதொரு பொருள் மேல் உவமைப் பொருள் பகைமை சாதிப்ப தாகக் கூறும் அணி வகை (மாறன.135);; a figure of speech in which one is described as trying to injure a person or thing resembling one’s enemy when the enemy himself cann’t be injured. [Skt. {} → த. பிரத்தியனீகவலங்காரம்] |
பிரத்தியபகாரம் | பிரத்தியபகாரம் birattiyabakāram, பெ.(n.) தீமைக்கு மாறாக செய்யுந் தீமை (சங்.அக.);; retaliation. த.வ.பழிக்குப் பழி [Skt. {} → த. பிரத்தியபகாரம்] |
பிரத்தியபிஞ்ஞானம் | பிரத்தியபிஞ்ஞானம் birattiyabiññāṉam, பெ.(n.) வேற்றுமையின்மை ஒப்பு(சாதிருசியம்); முதலியவை பற்றிப் பிறக்கும் மீட்டுணர்ச்சி (நீலகேசி,119, உரை.);; recognition of identity or similarity. [Skt. {} → த. பிரத்தியபிஞ்ஞானம்] |
பிரத்தியம் | பிரத்தியம் pirattiyam, பெ.(n.) பிரத்தியட்சம் 2 பார்க்க;see {}. “மெய்ப்பிரத்திய மனுமானஞ் சாத்தம்” (மணிமே.27:83);. |
பிரத்தியயம் | பிரத்தியயம் pirattiyayam, பெ.(n.) ஈறு (விகுதி); முதலிய இடைச்சொல்; affix or suffix. “மன்னும் பிரத்தியயமே தத்திதாந்தம்” (பி.வி.29);. [Skt. pratyaya → த. பிரத்தியயம்] |
பிரத்தியருத்தம் | பிரத்தியருத்தம் pirattiyaruttam, பெ.(n.) 1. எதிருரை; rejoinder. 2. மறுமொழி; answer. த.வ. 1. எதிர்விளக்கம், 2. விடைமொழி [Skt. pratyantha → த. பிரத்தியருத்தம்] |
பிரத்தியவற்கந்தனம் | பிரத்தியவற்கந்தனம் pirattiyavaṟkandaṉam, பெ.(n.) எடுத்துரைப்போனால் எழுதிக் கொடுக் கப்பட்ட செய்திகளை முற்றும் ஒப்புக்கொண்டு வழக்கெதிராளி கூறும் உடன்பாடு (சுக்கிரநீதி, 270.);; statement by a defendant explaining his position after admitting the plaintiff’s allegations. [Skt. pratyava-skandana → த. பிரத்தியவற் கந்தனம்] |
பிரத்தியவாயம் | பிரத்தியவாயம் pirattiyavāyam, பெ.(n.) குற்றம் (யாழ்.அக.);; harm. [Skt. {} → த. பிரத்தியவாயம்] |
பிரத்தியாகதம் | பிரத்தியாகதம் piraddiyākadam, பெ.(n.) உள்ளாளம் (கமகம்); பத்தனுள் ஒன்று (பரத.இராக.24.);; [Skt. {}-hata → த. பிரத்தியாகதம்] |
பிரத்தியாகாரம் | பிரத்தியாகாரம் pirattiyākāram, பெ.(n.) எண் வகை ஒகத்துள் புலனுறுப்புகளை வெளி நிகழ்வுகளிலிருந்து திருப்புகை; withdrawal of the senses from external objects, one of {}. 2. வடமொழி நூல்களின் முதல் கடைகளில் நின்றவெழுத்துகளைக் கூட்டி இடை நின்றவெழுத்துகளை நீக்கி அனைத்தையுமுணர்த்துங் குறியீடாக வமைக்கை (பி.வி.4);; comprehension of a series of letters of a {} in one syllable by combining its first letter with the last and omitting the intermediate letters, as ac in sanskrit grammar. [Skt. {} → த. பிரத்தியாகாரம்] |
பிரத்தியாப்திகம் | பிரத்தியாப்திகம் pirattiyāptigam, பெ.(n.) இறந்தவர் பொருட்டு அவர் இறந்த இரண்டாம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நீர்பிண்டப் படையல்; annual ceremany other than the first, for the manes. த.வ.ஆண்டு ஈமக்கடன் [Skt. {} → த. பிரத்தியாப்திகம்] |
பிரத்தியாலீடம் | பிரத்தியாலீடம் pirattiyālīṭam, பெ.(n.) 1. வில்லோர் நிலை நான்கனுள் இடக்கால் முந்துற வலக்கால் பின்னுற வைக்கும் நிலை (பிங்.);; an attitude in shooting in which the left foot is advanced and the right is drawn back, one of villor-nilai. 2. பன்னிரண்டு விரலகத்துக்குள்ளே இரண்டு காலும் அடங்க நிற்கை (தத்துவப்.109,உரை.);; a standing posture in which the two legs are within 12 inches of each other. [Skt. pratya- {} → த. பிரத்தியாலீடம்] |
பிரத்தியும்னன் | பிரத்தியும்னன் pirattiyumṉaṉ, பெ.(n.) 1. கண்ணபெருமானுக்கும் உருக்குமினிக்கும் பிறந்த மகன்; son of {} and {}. 2. திருமாலின் நிலை ஐந்தனுள் சங்கருடணன், பிரத்தியும்னன், அதிருத்தன் என்ற மூவகை யாகவும், வாசுதேவனைச் சேர்த்து நால்வகை யாகவும் வகைப்படுத்தப்பட்டவருள் ஒருவர் (பரிபா.3,82,உரை.);; a manifestation of {}, one of four {}. [Skt. Pradyumna → த. பிரத்தியும்னன்] |
பிரத்தியேகம் | பிரத்தியேகம் pirattiyēkam, பெ.(n.) 1. தனிமை; separateness;singleness. 2. சிறப்பியல்பு; peculiarity, singularity. த.வ.தனித்தன்மை [Skt. {} → த. பிரத்தியேகம்] |
பிரத்துவஞ்சாபாவம் | பிரத்துவஞ்சாபாவம் pirattuvañjāpāvam, பெ.(n.) அழிந்ததனால் அஃதில்லை யென்னும் நிலை (அபாவம்); (சி.சி.அளவை,1.மறைஞா.);; non-existence caused by destruction. [Skt. {} → த. பிரத்துவஞ்சா பாவம்] |
பிரந்தனி | பிரந்தனி pirandaṉi, பெ. (n.) திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [பெருந்தளி-பிரந்தளி] |
பிரபஞ்சகாரியம் | பிரபஞ்சகாரியம் birabañjakāriyam, பெ.(n.) உலகியல் பற்று, தொடர்பு; secular matter, worldly affair. த.வ.இம்மைஆசை, உறவுத்தளை, உலகத்தொடர்பு [Skt. pra-{} → த. பிரபஞ்சகாரியம்] |
பிரபஞ்சக்கட்டு | பிரபஞ்சக்கட்டு birabañjakkaṭṭu, பெ.(n.) உலகப் பற்று; worldly attachment. த.வ.அன்புத்தளை, உறவுக்கட்டு [Skt. pra-{} → த. பிரபஞ்சம்+கட்டு] |
பிரபஞ்சசாகரம் | பிரபஞ்சசாகரம் birabañjacākaram, பெ.(n.) கடல்போல் பரந்துள்ள உலகியல் பற்று(வின்.);; the ocean of worldly attachment. த.வ.இம்மைப் பற்று, வாழ்க்கைப் பற்று, உலக ஆசை [Skt. pra-{} → த. பிரபஞ்சசாகரம்] |
பிரபஞ்சனன் | பிரபஞ்சனன் birabañjaṉaṉ, பெ.(n.) காற்று (பிங்.);; wind. த.வ.வளி [Skt. {} → த. பிரபஞ்சனன்] |
பிரபஞ்சமயக்கம் | பிரபஞ்சமயக்கம் birabañjamayakkam, பெ.(n.) உலக நிகழ்ச்சிகளிலுள்ள மனமயக்கம்; delusion caused by worldly attachment. த.வ.அண்டமயக்கம், உலகியல் தடுமாற்றம் [Skt. pra-{} → த. பிரபஞ்சம்+மயக்கம்] |
பிரபஞ்சமாயை | பிரபஞ்சமாயை birabañjamāyai, பெ.(n.) 1. உலகமாயை; illusion of the phenomenon of the world. 2. மூலம்; matter. 3. உலகப் பொருள்களின் போலித் தோற்றரவு; vanity of earthly things. த.வ. அடிப்படை [Skt. pra-{} → த. பிரபஞ்சம்] |
பிரபஞ்சம் | பிரபஞ்சம் birabañjam, பெ.(n.) 1. உலகம்; universe, phenomenal world. “பிரபஞ்ச வைராக்கியம்” (திருவாச.);. 2. உலக வாழ்வு; mundane existence. 3. உலகியல்; worldliness. த.வ. 1. அண்டம் 2. இம்மை வாழ்க்கை 3. வாழ்வியல் [Skt. pra-{} → த. பிரபஞ்சம்] |
பிரபஞ்சவாசனை | பிரபஞ்சவாசனை birabañjavācaṉai, பெ.(n.) உலகத்தின் இன்பதுன்ப நுகர்வு; experience of the joys and sorrows of the world. [Skt. pra-{} → த. பிரபஞ்சவாசனை] |
பிரபஞ்சவாழ்வு | பிரபஞ்சவாழ்வு birabañjavāḻvu, பெ.(n.) உலக வாழ்க்கை (வின்.);; worldly prosperity, temporal enjoyment. த.வ.இம்மை மகிழ்வு, உலகியல் நுகர்வு [Skt. pra-{} → த. பிரபஞ்சம்+வாழ்வு] |
பிரபஞ்சவியாபாரம் | பிரபஞ்சவியாபாரம் birabañjaviyābāram, பெ.(n.) உலகியல் செயல் (வின்.);; worldly dealings, earthly concern. த.வ.நடைமுறை வாழ்க்கை, உலக நடவடிக்கை [Skt. pra-{} → த. பிரபஞ்ச வியாபாரம்] |
பிரபஞ்சவிருத்தி | பிரபஞ்சவிருத்தி birabañjavirutti, பெ.(n.) 1. உலகச் செயல்கள்; worldly actions, work or trade. 2. போலித் தோற்றரவு (மாயா); செயல்; exhibition or development of {} in the production of the universe. த.வ. 1. அண்ட நிகழ்வுகள் 2. பொய்மைத் தோற்றம் [Skt.pra-{} → த. பிரபஞ்சவிருத்தி] |
பிரபஞ்சவிலாசம் | பிரபஞ்சவிலாசம் birabañjavilācam, பெ.(n.) இன்மைத் தோற்றத்தின் விந்தையூட்டும் பல வகையான அழகு வெளிப்பாடுகள் (வின்.);; exhibition of {} in creation, displaying variety, order and beauty. த.வ.பொய்மை வெளிப்பாடு [Skt. pra-{} → த. பிரபஞ்சவிலாசம்] |
பிரபஞ்சவைராக்கியம் | பிரபஞ்சவைராக்கியம் birabañjavairākkiyam, பெ.(n.) உலக வாழ்க்கையி லுண்டாகும் வெறுப்பு; disgust in worldly affairs. த.வ. பற்றுநீக்கம் [Skt. pra-{} → த. பிரபஞ்ச வைராக்கியம்] |
பிரபஞ்சானுக்கிரகம் | பிரபஞ்சானுக்கிரகம் birabañjāṉuggiragam, பெ.(n.) உயிர்களிடத்துக் கடவுள் காட்டும் திருவருள்; grace of deity towards souls of the world. த.வ.இறையருள், கடவுள் கருணை, தெய்வ இரக்கம் [Skt. pra-{}+anu-graha → த. பிரபஞ்சானுக்கிரகம்] |
பிரபஞ்சி | பிரபஞ்சி birabañji, பெ.(n.) உலகை உள்ளடக்கியது (சி.சி.2,50,ஞானப்,);; that which constitutes the universe. த.வ.விரிந்த அண்டம் [Skt. {} → த. பிரபஞ்சி] |
பிரபதனம் | பிரபதனம் birabadaṉam, பெ.(n.) இறப்பு (சா.அக.);; death. த.வ.சாவு, மாள்வு |
பிரபத்தி | பிரபத்தி birabatti, பெ.(n.) இறைவனிடம் அடைக்கலம் புகுகை; taking refuge, as in God. “பிரபத்தியென்னும் பேருடை நெறியால்” (பிரபோத.45,10);. த.வ.திருவடிப் பற்றுகை [Skt. pra-patti → த. பிரபத்தி] |
பிரபந்தகற்பனை | பிரபந்தகற்பனை birabandagaṟbaṉai, பெ.(n.) கட்டுக்கதை (வின்.);; fable, fiction, fictitious language, allegorical expression. த.வ.கற்பனைக் கதை, புனை கதை [Skt. pra-bandha → த. பிரபந்தம்+கற்பனை] |
பிரபந்தம் | பிரபந்தம் birabandam, பெ. (n.) சிற்றிலக்கியம்; fable, fiction. [Skt. pra-bandha → த. பிரபந்தம்] |
பிரபந்தீகரி-த்தல் | பிரபந்தீகரி-த்தல் birabandīkarittal, 4 செ.குன்றாவி. (v.t.) நூலாக இயற்றுதல் (ஈடு,அவ,ஜீ.);; to produce in a literary form. த.வ.இலக்கியமாக்குதல் [Skt. {} → த. பிரபந்தீகரி] |
பிரபன்னன் | பிரபன்னன் birabaṉṉaṉ, பெ.(n.) தன்னுடைய ஒரே அடைக்கலம் இறைவனே என்று சரணடைந்தவன்; he who accepts God as his sole refuge. [Skt. pra-panna → த. பிரபன்னன்] |
பிரபலன் | பிரபலன் birabalaṉ, பெ.(n.) புகழ் பெற்றவன் (யல்.அக.);; famous, renowned or powerful person. த.வ.பெயர் பெற்றவன், பெருமை பெற்றவன் [Skt. pra-bala → த. பிரபலன்] |
பிரபலம் | பிரபலம் birabalam, பெ.(n.) 1. புகழ்; fame, celebrity. 2. வல்லமை; strength, power. “பிரபலச்சூரர்” (திருப்பு.613);. 3. வலிமை யுள்ளது; that which is powerful or authoritative. “சுருதிகட்குத் தம்முட் பிரபல துர்ப்பலங்கள் அறிய மாட்டாது” (சித். மரபுகண்.பக்.7);. த.வ. 1. பெயர் பெற்றது 2. வலிமை 3. ஆற்றல் [Skt. pra-bala → த. பிரபலம்] |
பிரபவ | பிரபவ birabava, பெ.(n.) சக ஆண்டு (கி.பி.78); தொடக்கத்தில் வடமொழியாளரின் ஆண்டு கள் அறுபதனுள் முதலாம் ஆண்டு; the first year of the Jupiter cycle of 60 years. [Skt. Prabhava → த. பிரபவ] |
பிரபவாதிச்சுவடி | பிரபவாதிச்சுவடி birabavāticcuvaḍi, பெ.(n.) சிறுவர்களுக்கான இந்துக்களின் ஐந்திய (பஞ்சாங்க); நூல்; a primer explaining the Hindu calender. |
பிரபாகரன் | பிரபாகரன் pirapākaraṉ, பெ. (n.) 1. கதிரவன்; sun. 2. நெருப்பிறை; God of fire. [Skt. {} → த. பிரபாகரன்.] |
பிரபாகரம் | பிரபாகரம் pirapākaram, பெ.(n.) பிரபாகர னென்பவனாற் பரப்புரை செய்யப்பெற்ற (பிரச்சாரம்); மீமாஞ்சமதவகை; a system of {} Philosophy expounded by {}. [Skt. {} → த. பிரபாகரம்] |
பிரபாகீடம் | பிரபாகீடம் pirapāāṭam, பெ.(n.) மின்மினி (சங்.அக.);; fire-fly, glow-worm. த.வ.மின்னாம்பூச்சி [Skt. {} → த. பிரபாகீடம்] |
பிரபாணி | பிரபாணி pirapāṇi, பெ.(n.) உள்ளங்கை (யாழ்.அக.);; hollow of the hand, palm. த.வ.அங்கை [Skt. pra-{} → த. பிரபாணி] |
பிரபாதம் | பிரபாதம்1 pirapātam, பெ.(n.) 1. செங்குத்து; precipice. 2. மலைவீழருவி; cascade, waterfall. 3. கரை; bank, shore. த.வ. 1. நெட்டுவாக்கு 2. நீர் வீழ்ச்சி 3. ஒரம் [Skt. pra-{} → த. பிரபாதம்] பிரபாதம்2 pirapātam, பெ.(n.) விடியற்காலை (யாழ்.அக.);; break of day. த.வ.வைகறை, விடியற்பொழுது [Skt. pra-{} → த. பிரபாதம்] பிரபாதம்3 pirapātam, பெ.(n.) தெரு (யாழ்.அக.);; street. த.வ.வீதி, பொதுப்பாதை, பொதுவழி [Skt. pra-{} → த. பிரபாதம்3] |
பிரபாதிகம் | பிரபாதிகம் pirapātigam, பெ.(n.) மயில் (யாழ்.அக.);; peacock. [Skt. {} → த. பிரபாதிகம்] |
பிரபாலன் | பிரபாலன் pirapālaṉ, பெ.(n.) மாணாக்கன் (யாழ்.அக.);; disciple, pupil. த.வ.கற்பவன், பயில்பவன் [Skt. pra-{} → த. பிரபாலன்] |
பிரபாவனம் | பிரபாவனம் pirapāvaṉam, பெ.(n.) குளிர் சோலை (யாழ்.அக.);; cool grove. த.வ.பூங்காவனம் [Skt. {} → த. பிரபாவனம்] |
பிரபாவம் | பிரபாவம் pirapāvam, பெ.(n.) 1. மேன்மை; dignity, majesty, pre-eminence, grandeur. 2. புகழ்; glory, renown. 3. ஒளி; light, splendour, lustre. 4. வலிமை; strength, valour. த.வ. 1. உயர்வு, மதிப்பு 2. பெருமை, 3. வெளிச்சம், 4. ஆற்றல் [Skt. pra-{} → த. பிரபாவம்] |
பிரபாவளி | பிரபாவளி pirapāvaḷi, பெ.(n.) திருவாசி (M.E.R. 151 of 1924);; ornamental arch over the figure of a deity. த.வ.இறை ஒளிவட்டம் [Skt. {} → த. பிரபாவளி] |
பிரபிதாமகன் | பிரபிதாமகன் birabitāmagaṉ, பெ.(n.) கொட்பாட்டன்; great – grandfather. “பிதாபிதமகர்… பிரபிதாமகரா மருவு மூவர்” (சேதுபு.துராசா.55);. த.வ.பூட்டன் [Skt. {} → த. பிரபிதாமகன்] |
பிரபிதாமகி | பிரபிதாமகி birabitāmagi, பெ.(n.) கொட்பாட்டி; great-grandmother. த.வ.பூட்டி [Skt. pra-{} → த. பிரபிதாமகி] |
பிரபு | பிரபு birabu, பெ.(n.) 1. பெருமையிற் சிறந்தோன்; lord, noble. 2. செல்வன்; a man of wealth. 3. அதிகாரி; a man in power. 4. கொடையாளி (உ.வ.);; benefactor. 5. இதளியம் (பாதரசம்); (யாழ்.அக.);; quick silver, mercury. த.வ. 1. மேன்மையானவன், உயர்ந்தோன் 2. பணக்காரன் 3. மேல் அலுவலர் 4. வள்ளல் [Skt. pra-bhu → த. பிரபு] |
பிரபுசத்தி | பிரபுசத்தி birabusatti, பெ.(n.) மூன்று ஆற்றல்களுள் பொருள் படைகளால் அரசர்க்கு அமையும் ஆற்றல் (இரகு.திக்கு.25);; the power of a king derived from his resources in men and money, one of mu-c-catti. [Skt. pra-bhu+{} → த. பிரபுசத்தி] |
பிரபுத்தன் | பிரபுத்தன் birabuttaṉ, பெ.(n.) 1. விழிப் புள்ளவன்; wakeful person. 2. இளமைப் பருவமடைந்தவன்; one who has attained majority. “குமாரன் பிரபுத்தனானவாறே கொடுக்கச் சொல்லுமா போலே” (குருபரம். 319);. த.வ. 1. கவனமுள்ளவன், 2. விடலை, காளையன் [Skt. pra-buddha → த. பிரபுத்தன்] |
பிரபுத்துவம் | பிரபுத்துவம் birabuttuvam, பெ.(n.) 1. மீப்பெருமையாளன் தன்மை; rank or status of a nobleman. “பிரபுத்துவகுமார” (திருப்பு.870);. 2. ஆட்சி; power, sovereignty. த.வ.பெருந்தகைமை, பெரும்புகழுடைமை [Skt. pra-bhu-tva → த. பிரபுத்துவம்] |
பிரபுமோடி | பிரபுமோடி birabumōṭi, பெ.(n.) பெருமிதம்; lordly style. த.வ.செறுக்கு, உள்ளக்களிப்பு [Skt. pra-bhu → த. பிரபு+மோடி] |
பிரபுலிங்கலீலை | பிரபுலிங்கலீலை birabuliṅgalīlai, பெ.(n.) சிவப்பிரகாசரால் கி.பி.1652இல் இயற்றப்பட்ட சிவ எழிலுருவோனான அல்லமாப் பிரபுவின் வரலாறு; a poem on the exploits of {}-p-pirapu, a manifestation of {}, by {}, composed in A.D. 1652. [Skt. pra-bhu+{}+lila → த. பிரபுலிங்கலீலை] |
பிரபூதபலி | பிரபூதபலி birabūtabali, பெ.(n.) இறந்தவர் பொருட்டுப் பத்தாம் நாளில் அடை முதலிய வற்றோடு இடும் சோற்றுப்படையல்; boiled rice and cakes offered to the spirit of the deceased on the tenth day of his death. த.வ.பிண்டச்சோறு [Skt. {} → த. பிரபூதபலி] |
பிரபேதம் | பிரபேதம் pirapētam, பெ.(n.) வகை; kind, variety. த.வ.பகுப்பு, பிரிவு [Skt. pra-{} → த. பிரபேதம்] |
பிரபை | பிரபை1 birabai, பெ.(n.) 1. ஒளி; light, radiance, brightness, lustre. “தமனியப் பிரபை” (திருப்பு.319);. 2. திருவாசி (S.I.I.ii,136,96);; nimbus, halo, aureole over the head of a deity. 3. கொற்றவை (யாழ்.அக.);;{}. த.வ. 1. வெளிச்சம், 2. ஒளிவட்டம், 3. அம்மன், காடுகாள், காளி, மோடி [Skt. pra-{} → த. பிரபை] |
பிரபோதசந்திரோதயம் | பிரபோதசந்திரோதயம் pirapōtasandirōtayam, பெ.(n.) பிரபோத சந்த ரோதயமென்ற வடமொழி நாடகத்தைப் பின்பற்றித் தமிழ் மொழியில் மாதைத் திருவேங்கடநாதர் இயற்றிய வேதாந்தம் தொடர்பான பாவியம்; a metaphysical poem adapted by {} from a Sanskrit drama of the same name. [Skt. {} → த. பிரபோத சந்திரோதயம்] |
பிரபோதனம் | பிரபோதனம் pirapōtaṉam, பெ.(n.) 1. எழுப்புகை; waking. 2. கற்பிக்கை; teaching. த.வ. 1. விழிப்படைகை, 2. சொல்லிக் கொடுக்கை [Skt. {} → த. பிரபோதனம்] |
பிரபோதம் | பிரபோதம் pirapōtam, பெ.(n.) பேரறிவு; wisdom, knowledge. த.வ.முழு அறிவு, பெரும்புலமை [Skt. pra-{} → த. பிரபோதம்] |
பிரபோதிகை | பிரபோதிகை pirapōtigai, பெ.(n.) கற்பிப்பது; that which instructs or illuminates. “விதிநிஷேதப் பிரபோதிகையா யிருக்கின்ற” (சி.சி.2,1,ஞானப்.);. த.வ.விளக்குகை [Skt. {} → த. பிரபோதிகை] |
பிரமகத்தி | பிரமகத்தி piramagatti, பெ.(n.) 1. பார்ப்பனக் கொலை; murder of a Brahmin. 2. கொன்றானைத் தொடர்ந்து பற்றும் பார்ப்பனக் கொலைப் பாவம்; sin of Brahminicide, haunting and pursuing the murderer. “பிரமகத்தியி னீங்கிப் பிறங்குவான்” (சேதுபு.தனுக்.57);. 3. பார்ப்பனைக் கொலை செய்தோனைத் தொடர்ந்து வரும் இறந்தவனுருவம்; ghost of a murdered Brahmin, believed to haunt the murderer. த.வ. பார்ப்பனப் பேய் [Skt. brahma-{} → த. பிரமகத்தி] |
பிரமகன்னிகை | பிரமகன்னிகை piramagaṉṉigai, பெ.(n.) கலைமகள் (யாழ்.அக.);; Sarasvati, the Goddess of learning. த.வ.நான்முகன் தலைவி, புலமகள் [Skt. Brahma-{} → த. பிரமகன்னிகை] |
பிரமகபாலம் | பிரமகபாலம் piramagapālam, பெ.(n.) 1. நான்முகனின் ஐந்தாந்தலையைக் கிள்ளி இரப்பு ஓடாகச் சிவன் கைக்கொண்ட தலையோடு; skull of the fifth head of {}, plucked off by Siva and carried in his hand as a begging bowl. 2. இமய மலையிலுள்ள ஒரு தெய்வத்தன்மை வாய்ந்த இடம்; a sacred place of pilgrimage in Badarinath. த.வ. 1. இரப்பு மண்டையோடு, 2. நற்பேறு இடம், தூய இடம் [Skt. brahman+{} → த. பிரமகபாலம்] |
பிரமகற்பம் | பிரமகற்பம் piramagaṟpam, பெ. (n.) 1. நான்முகனது வாழ்நாள்; the age or cosmic period of {}. “முன்னமோர் பிரமகற்ப முடிவினில்” (திருவாலவா.47,1);. 2. ஒரு பேரெண் (திவா.);; a very large number. [Skt. brahman → த. பிரமன்] |
பிரமகலை | பிரமகலை piramagalai, பெ.(n.) வலது நாசியின் வழியாக வரும் மூச்சுக் காற்று (சா.அ.);; vital air passing through the right nostril. [Skt. bhrama+ {} → த. பிரமகலை] |
பிரமகாதகன் | பிரமகாதகன் piramagātagaṉ, பெ.(n.) பார்ப்பனனைக் கொலை செய்தோன் (சங்.அக.);; murderer of a Brahmin. [Skt. brahman + {} → த. பிரமகாதகன்] |
பிரமகாயத்திரி | பிரமகாயத்திரி piramakāyattiri, பெ.(n.) பார்ப்பனர் நாள்தோறும் வழிபடும் மந்திரவகை; a sacred mantra repeated by the Brahmins in their daily worship. [Skt. brahman + {} → த. பிரமகாயத்திரி] |
பிரமகீதை | பிரமகீதை piramaātai, பெ.(n.) தத்துவ ராயசுவாமிகள் இயற்றிய ஒரு வேதாந்த நூல்; a treatise on {} by Tattuva-{}. [Skt. brahman + gita → த. பிரமகீதை] |
பிரமகுலம் | பிரமகுலம் piramagulam, பெ.(n.) பார்ப்பனக்குலம்; the Brahmin caste. [Skt. brahman → த. பிரம்மன்] |
பிரமகூர்ச்சம் | பிரமகூர்ச்சம் piramaārccam, பெ.(n.) 1. தருப்பை முடிச்சு; a knot of darbha graff. “பிரமகூர்ச்சந் தோயுநீர்” (கூர்மபு.தான முரைத்.17);. 2. ஆனைந்தை மட்டும் உட்கொள்ளும் நோன்புச் சிறப்பு; a religious fast in which {}-kavviyam alone is taken. 3. ஆனைந்து; the five products of the cow. [Skt. brahman → த. பிரம்மன்] |
பிரமகைவர்த்தம் | பிரமகைவர்த்தம் piramagaivarttam, பெ.(n.) பதினெண் தொன்மத்து (புராணம்); ளொன்று; a chief {}, as of {}. [Skt. brahma-vaivartta → த. பிரமகைவர்த்தம்] |
பிரமக்கிரந்தி | பிரமக்கிரந்தி piramakkirandi, பெ.(n.) 1. பூணூல் முடிச்சு வகை; a kind of knot tied in the sacred thread. 2. சிவமும் சத்தியும் கூடுதற்கு அறிகுறியாக இடும் தருப்பை முடி வகை (வின்.);; tying together two bunches of sacrificial grass in representation of the union of {} and {}. [Skt. brahman + granthi → த. பிரமக்கிரந்தி] |
பிரமசடங்கம் | பிரமசடங்கம் piramasaḍaṅgam, பெ.(n.) உடலின் ஆறுறுப்புகளைத் தொட்டுப் பலுக்கும் ஆறு மந்திரங்கள் (வின்.1);; a group of six mantras recited while touching the six members of the body in consecration. [Skt. Brahman+{} → த. பிரமசடங்கம்] |
பிரமசமாசம் | பிரமசமாசம் piramasamāsam, பெ.(n.) புத்தாக்கம் பெற்ற இந்து சமயங்களுள் ஒன்று; the Brahma {}, a reformed sect of the Hinduism. [Skt. brahman+{} → த. பிரமசமாசம்] |
பிரமசரியம் | பிரமசரியம் piramasariyam, பெ.(n.) 1. தவமனை நான்கனுள் குருவிடமிருந்து, ஒதுதலும் நோன்பு காத்தலுமாகிய நிலை (சீவக.712);; student life, life of one devoted to the study of the {}, one of four{}. 2. திருமணம் இல்லாத வாழ்வு (இ.வ.);; celibate life. 3. தவம் (அக.நி.);; penance. 4. பார்ப்பனர் (அக.நி.);; Brahmins. [Skt. brahmacarya → த. பிரமசரியம்] |
பிரமசாத்தன் | பிரமசாத்தன் piramacāttaṉ, பெ.(n.) முருகக் கடவுளது பதினெண்ணுருவங்களுள் ஒன்று (தணிகைப்பு.அகத்தியன்.75);; a manifest-tation of lord Murugan. [Skt. brahma-{} → த. பிரமசாத்தன்] |
பிரமசாரி | பிரமசாரி piramacāri, பெ.(n.) 1. குழுவிடமிருந்து ஒதுதலும், நோன்பு காத்தலுமாகிய செய் கடன்களை மேற்கொண்டொழுகும் முதலாம் குருகுலத்திலுள்ளவன்; a religious student who prosecutes the study of the {} under a preceptor and leads a life of celibacy, one in the first {}. “குறட் பிரமசாரி” (திவ்.பெரியாழ்.4,9,7);. 2. திருமண மாகாதவன் (உ.வ.);; celibate. 3. வீடுமன் (பீஷ்மர்); (சூடா.);;{}. த.வ.மணமிலி [Skt. brahma-{} → த. பிரமசாரி] |
பிரமசூத்திரம் | பிரமசூத்திரம் piramacūttiram, பெ.(n.) 1. முப்புரிநூல் (யாழ்.அக.);; sacred thread consisting of three strands, worn by Brahmins. 2. வியாசர் செய்த உத்தரமீ மாஞ்சை நூல்; a treattise on {} philosophy, by the sage {}. [Skt. brahman + {} → த. பிரமசூத்திரம்] |
பிரமஞானம் | பிரமஞானம் piramañāṉam, பெ.(n.) 1. கடவுளைப் பற்றிய அறிவு; knowledge of the Supreme Being. 2. எல்லாவற்றையும் முழு முதற்பொருளாகக் காணும் அறிவு; pantheism, wisdom which regards everything as God. 3. சமய நல்லிணக்கம் அமைந்த ஒரு புத்தாக்க மதம் (இக்.வ.);; theosophy. த.வ.பேரறிவு [Skt. brahma-{} → த. பிரமஞானம்] |
பிரமதண்டம் | பிரமதண்டம் piramadaṇṭam, பெ.(n.) 1. மந்திராயுத வகை; a magical weapon. “வசிட்டனாங் கேந்துமோர் பிரமதண்டம்” (சேதுபு.கவிதீர்த்த.19);. 2. ஒகதண்டம் (வின்.);; a staff to support the chin, used by {} during meditation. 3. நற்செயல்களுக்கு உதவாததாகக் கருதப்படுவதும் கதிரவன் நின்ற விண்மீனுக்குப் பதினைந்தாவதுமான விண்மீன்; the fifteenth {} from that occupied by the sun, considered in auspicious. “பிரமதண்டங் கொடியென்று பொல்லா யோகங்கள்” (விதான. குணாகுண.34);. [Skt. brahman → த. பிரமன்+தண்டம்] |
பிரமதானம் | பிரமதானம் piramatāṉam, பெ.(n.) 1. பார்ப்பனர்க்குச் செய்யும் கொடை; gift to Brahmins. 2. வேதத்தைக் கற்பிக்கை; teaching the {}. [Skt. Brahman → த. பிரமன்+தானம்] |
பிரமதாயம் | பிரமதாயம் piramatāyam, பெ.(n.) பார்ப்பனர்க்கு விடப்படும் இறையிலி நிலம்; land granted to Brahmins free of assessment. “ஐஞ்ஞூறூர் பிரதமதாயங் கொடுத்து” (பதிற்றுப்.இரண்டாம்பத்து, பதிகம்);. த.வ.பார்ப்புத்தாயம் [Skt. brahman → த. பிரமன்+தாயம்] |
பிரமதேயம் | பிரமதேயம் piramatēyam, பெ.(n.) பார்ப் பனர்க்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட ஊர்; village granted to Brahmins and inhabited by them. [Skt. brahma → த. பிரமன்+தேயம்] |
பிரமனுர் | பிரமனுர் piramaṉur, பெ. (n.) சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivaganga Taluk. [பெருமன்-பிரமன்+ஊர்] |
பிரமனூர்தி | பிரமனூர்தி piramaṉūrti, பெ.(n.) ஒதிமம் (அன்னம்); (பிங்.);; swan, the vehicle of {}. த.வ.நான்முகனூர்தி [Skt:பிரமன் → த. பிரமன்+ஊர்தி] |
பிரமன் | பிரமன் piramaṉ, பெ.(n.) 1. மும்மூர்த்திகளுள் ஒருவரும் படைப்பவனாகக் கருதப்படு பவனுமான நான்முகன்;{}, the creator, one of tiri-{}. 2. மூல (பிரகிருதி); மாயை; primordial Matter. 3. பார்ப்பனன்; Brahmin. “பிரமன் முதல் நால்வருணத்து” (திருவானைக். கோச்செங்.69.);. 4. வறட்சுண்டி (சங்.அக.);; a sensitive plant. [Skt. brahman → த. பிரமன்] |
பிரமன்படை | பிரமன்படை piramaṉpaḍai, பெ.(n.) 1. சுருக்குக் கயிறு (பாசம்);; noose, a Brahma’s weapon. 2. தண்டம்; club, a Brahma’s weapon. [Skt. {} → த. படை → பிரமன்படை] |
பிரமப்பொழுது | பிரமப்பொழுது piramappoḻudu, பெ.(n.) கதிரவன் எழுவதற்கு இரண்டு நாழிகைக்கு முன்னுள்ள (இரண்டு நாழிகை); நேரம்; the period of time between the fourth and the second {} before sunrise. “பிரமப் பொழுதத்திலெழுந்து” (சேதுபு. அமுததீர்த்.11);. த.வ.பிரமமுகூர்த்தம், பிரமமுழுத்தம், பிராமமுழுத்தம் [Skt. Brahman → த. பிரமன்+பொழுது] |
பிரமமாராயன் | பிரமமாராயன் piramamārāyaṉ, பெ. (n.) பார்ப்பனவமைச்சரின் பட்டப்பெயர்; title of Brahmin ministers in ancient times. “மும்மடிச்சோழ பிரமமாராயன்”. [Skt. brahman+{} → த. பிரமமாராயன்] |
பிரமரகசியம் | பிரமரகசியம் piramaragasiyam, பெ.(n.) கடுங்கமுக்கம்; profound secret. “பிரம ரகசியம் பேசி யென்னுள்ளத்தே” (அருட்பா, vi, அருட்பெருஞ்.1046);. [Skt. brahman+ragashya → த. பிரமரகசியம்] |
பிரமரி | பிரமரி piramari, பெ.(n.) 1. ஒரு வகைக் கூத்து; a kind of dance. 2. ஒரு அருக (சைன); மந்திரம் (மேருமந்.994.);; a Jaina mandram. [Skt. {} → த. பிரமரி] |
பிரமரிசி | பிரமரிசி piramarisi, பெ. (n.) பார்ப்பனமுனிவன்; a brahmin priest. [Skt. brahna-{} → த. பிரமரிசி.] |
பிரமலைக்கள்ளர் | பிரமலைக்கள்ளர் piramalaikkaḷḷar, பெ. (n.) “பச்சைக் கோலம்” எனும் கைவினைக்கலையின் உரிமையாளர்; people who are skilled infine art’pachaikolam’. [பெருமான்-பிரான்மலை+கள்ளர்] |
பிரமவாதி | பிரமவாதி piramavāti, பெ.(n.) உலகம் நான்முக (பிரம);னிட்ட முட்டை என்று சொற்போரிடுபவன்; one who holds the tenet that the universe is an egg of {}. “பிரமவாதியோர் தேவனிட்ட முட்டை யென்றனன்” (மணிமே.27:96);. [Skt.brahma-{} → த. பிரமவாதி] |
பிரமாஞ்சலி | பிரமாஞ்சலி piramāñjali, பெ.(n.) மறை சொல்லும்போது இரண்டு கைகளையுஞ் சேர்த்து அபிமுகமாக ஏந்துகை; joining the hollowed hands in respectful salutation, while reciting the {}. [Skt. {} → த. பிரமாஞ்சலி] |
பிரமாணன் | பிரமாணன் piramāṇaṉ, பெ.(n.) 1. மெய்யன்; truthful person. 2. திருமால்;{} [Skt. {} → {} → த. பிரமாணன்] |
பிரமாணம் | பிரமாணம் piramāṇam, பெ.(n.) 1. அளவு(பிங்.);; measure, degree, quantity. 2. சான்று; criterion, ground of inference or belief. 3. நெறி; rule, method, order, law. 4. (பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம், உவமானம், அருத்தாபத்தி, அபாவம் (குறள்.252.உரை.); என); அறுவகையாகவும் (பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம், உவமானம், அருத்தாபத்தி, அனுபலத்தி, சம்பவம், ஐதிகம் (வேதா.சூ.20.); என); எண் வகையாகவும்); உண்மை அறிவை அறிதற்கு உதவும் கருவி; means of acquiring certain knowledge according to {} or eight accordingto {}. 5. கரி, சான்று (சாட்சியம்);; proof, testimony, evidence. 6. ஆணை (பிங்.);; oath, solemn declaration. 7. ஆவணம்; document. “இந்நிலம் விலை கொண்ட பிரமாணங்கள் கோயிலிலே ஒடுக்கவும்” (S.i.i.iii,215);. 8. அரசனாணை (இராசாக் கினை);; royal authority, sovereign command. 9. மறை; the {}. த.வ. சான்று |
பிரமாணவாக்குமூலம் | பிரமாணவாக்குமூலம் piramāṇavākkumūlam, பெ.(n.) சூளுரை செய்து அறமன் றத்திற் சொல்லுஞ் செய்தி; deposition, sworn statement, affidavit. [Skt. {} + த. வாக்குமூலம்] |
பிரமாண்டம் | பிரமாண்டம் piramāṇṭam, பெ.(n.) 1. உலகம்; the Universe, considered as an egg of Brahma. 2. மிகப்பெரியது; that which is large, gigantic, huge or colossal. “பிரமாண்டமாகச் செய்யும்” (தாயு.தந்தை தாய்.6);. 3. பதினெண் தொன்மங்களுள் ஒன்று; a chief {} one of {}. 4. பதினெட்டுத் துணைத் தொன்மத் (துணைபுராணத்); தொன்று (பிங்.);; a secondary {}, one of 18 upa-{}. [Skt. {} → த. பிரமாண்டம்] |
பிரமாதி | பிரமாதி piramāti, பெ.(n.) சக (கி.பி.78); ஆண்டின்போது தொடங்கிய வடமொழி யாளரின் ஆண்டு அறுபதனுள் பதின் மூன்றாவது; the 13th year of the Jupiter cycle of sixty years. [Skt. {} → த. பிரமாதி] |
பிரமி | பிரமி1 piramittal, 4 செ.கு.வி. (v.i.) 1. மயங்குதல்; to be bewildered, confused, perplexed. “மனமே யேன்பிரமிக்கின்றாய்” (ஞானவா.உத்தா.24); 2. திகைத்தல் (உ.வ.);; to be astonished or surprised, to wonder, to be amazed. [Skt. bhrama → த. பிரமி1-த்தல்] |
பிரமிப்பு | பிரமிப்பு piramippu, பெ.(n.) 1. மயக்கம்; be wild erment, confusion, perplexity. 2. திகைப்பு; amazement, astonishment, surprise. [Skt. bhrami → த. பிரமிப்பு] |
பிரமிருதம் | பிரமிருதம் piramirudam, பெ.(n.) 1. உழவுத் தொழில்; tillage, cultivation. 2. உழவால் வரும் பொருள்; cultivated produce. “உழவின் வந்துறல் பிரமிருதம்” (காஞ்சிப்பு. ஒழுக்.36);. [Skt. pra-{} → த. பிரமிருதம்] |
பிரமுகன் | பிரமுகன் piramugaṉ, பெ.(n.) சிறந்தோன்; chief, prominent man. [Skt. pra-mukha → த. பிரமுகன்] |
பிரமுகர் | பிரமுகர் piramugar, பெ.(n.) பலராலும் அறியப்பட்டு மதிக்கப்படுபவர், குறிப்பிடத்தக்க பெருமகன்; eminent person, prominent citizen. த.வ. பெருமகன், பெரும்புள்ளி, பெருந்தகையர் |
பிரமை | பிரமை piramai, பெ.(n.) 1. மயக்கம்; wondering, bewilderment perplexity, confusion, stupor. “மனக்கவலைப் பிரமையுற்று” (திருப்பு.310);. 2. பித்தியம்(பயித்தியம்);; insanity, madness. 3. பெருமோகம்; infatuation. “நிமலமூர்த்தி பேரிலே பிரமை கொண்ட பெண்” (குற்றா.குற.38);. 4. அறியாமை (யாழ்.அக.);; Ignorance. [Skt. bhrama → த. பிரமை1] |
பிரமோதூத | பிரமோதூத piramōtūta, பெ.(n.) ஆண்டு அறுபதனுள் நான்காவது; the 4th year of the Jupiter cycle of sixty years. [Skt. {} → த. பிரமோதுத] |
பிரமோத்தரகாண்டம் | பிரமோத்தரகாண்டம் piramōttarakāṇṭam, பெ.(n.) பதினாறாம் நூற்றாண்டில் வரதுங்கராம பாண்டியனியற்றிய ஒரு சிவனியத்தொன்மம்; a Saiva {} by {}, 16th C.A.D. [Skt. Brahm {} → த. பிரமோத்தர காண்டம்] |
பிரமோற்சவம் | பிரமோற்சவம் piramōṟcavam, பெ.(n.) கோயிலில் ஆண்டுக்கொருமுறை நடக்கும் தலைமைத் திருவிழா; principal annual festival in a temple. த.வ.பெருவிழா, பெருந்திருவிழா [Skt. {} → த. பிரமோற்சவம்] |
பிரயத்தனம் | பிரயத்தனம் pirayattaṉam, பெ.(n.) முயற்சி; effort, exertion, endeavour. [Skt. prayatna → த. பிரயத்தனம்] |
பிரயாசப்படு-தல் | பிரயாசப்படு-தல் pirayācappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. முயற்சியெடுத்தல்; to try, exert oneself, endeavour. 2. வருந்தி யுழைத்தல்; to take pains. த.வ.பெருமுயற்சியெடுத்தல் [Skt. pra-{} → த. பிரயாசப்படுதல்] |
பிரயாசம் | பிரயாசம் pirayācam, பெ.(n.) 1. முயற்சி; endeavour, effort. 2. உழைப்பு; pains, labour, struggle. 3. தொல்லை, கடினம் (கஷ்டம்);; trouble, difficulty, hardship. [Skt. pra-{} → த. பிரயாசம்] |
பிரயாணம் | பிரயாணம் pirayāṇam, பெ.(n.) 1. செலவு (பயணம்);; travel, journey, tour. 2. இறப்பு (மரணம்);; death. [Skt. pra-{} → த. பிரயாணம்] |
பிரயோகம் | பிரயோகம் pirayōkam, பெ.(n.) 1. செலுத்துகை; discharge, as of weapons. 2. பயன் படுத்துகை; use, application to a purpose,use of means. 3. மந்திர ஏவல்; practice of magic. 4. மருந்து; medicine. 5. மேற்கோள்; authority, quotation. 6. உவமை, உவமானம் (யாழ்.அக.);; example, illustration. 7. குதிரை (யாழ்.அக.);; horse. [Skt. pra- {} → த. பிரயோகம்] |
பிரயோகவிவேகம் | பிரயோகவிவேகம் pirayōkavivēkam, பெ.(n.) வடமொழி இலக்கணவமைதியைத் தழுவிச் சுப்பிரமணிய தீட்சிதர் இயற்றிய தமிழ் இலக்கண நூல்; a treatise on Tamil grammar based on the principles of Sanskrit grammar by {}. [Skt. pra-{} → த. பிரயோகவிவேகம்] |
பிரயோசனம் | பிரயோசனம் pirayōcaṉam, பெ.(n.) 1. பயன்படுகை; usefulness. 2. வரவு (ஆதாயம்);; profit, advantage. 3. பயன் (நன்.விருத்.சிறப்புப்பாயி.);; result of actions, good or bad, reward. 4. சடங்கு; ceremonial rites, as in a wedding. [Skt. {} → த. பிரயோசனம்] |
பிரலைகள் | பிரலைகள் piralaigaḷ, பெ. (n.) மகாநாசிகள் சிற்பத்தின் வேறு பெயர்; a different name of maganasi Sculpture. [பரல்-பரலை-பிரலைகள்] |
பிரளகட்டை | பிரளகட்டை piraḷagaṭṭai, பெ. (n.) ஏற்றக் காலில் உள்ள சிறுகட்டை, apartofpiccotah. [புரள்+கட்டை] |
பிரளகழி | பிரளகழி piraḷagaḻi, பெ. (n.) புரள்கட்டை பார்க்க;see pural kattai. [புரள்+கழி] |
பிரளயகாலம் | பிரளயகாலம் piraḷayakālam, பெ.(n.) உலகத்தின் முடிவு காலம்: cosmic deluge or dissolution. த.வ.ஊழிப்பேரழிவு [Skt. pralaya → த. பிரளயம்] |
பிரளயம் | பிரளயம் piraḷayam, பெ.(n.) 1. கற்ப முடிவு (கூர்மபு.பிராகிருத.1);; end of a Kalpa when the destruction of the world occurs. 2. அழிவு; dissolution, destruction, annihilation. 3. வெள்ளம் (பிங்.);; flood, inundation. 4. ஒரு பேரெண்; a large number. “பிரளயத்தினிற் றிரளவே” (கலிங். 330, புதுப்.); 5. 243 யானைகளும், 243 தேர் களும், 729 குதிரைகளும், 1215 காலாட்களுங் கொண்ட படை (பிங்.);; division of an army consisting of 243 elephants, 243 chariots, 729 horses and 1215 foot – soldiers. த.வ.ஊழிக்காலம் [Skt. pra-laya → த. பிரளயம்] |
பிரவகி-த்தல் | பிரவகி-த்தல் piravagittal, 4 செ.கு.வி. (v.i.) நீர்ப்பெருக்கெடுத்தல்; to flood, to be in spate. [Skt. pravah → த. பிரவகி-த்தல்] |
பிரவஞ்சன் | பிரவஞ்சன் piravañjaṉ, பெ.(n.) வளி (வாயு); (சங்.அக.);; wind. [Skt. pra-{} → த. பிரவஞ்சன்] |
பிரவாகம் | பிரவாகம் piravākam, பெ.(n.) 1. வெள்ளம்; food, inundation. “நின்கருணைப் பிரவாக வருளை” (தாயு.எங்குநிறை.6);. 2. குளம் (யாழ்.அக.);; tank. 3. தொழில் (யாழ்.அக);; action. [Skt. pra-{} → த. பிரவாகம்] |
பிரவேசம் | பிரவேசம் piravēcam, பெ.(n.) 1. நடிகர் முதலியோர் உள்நுழைதல் (பிரவேசம்);; entry entrance, as of actors. 2. வேலை முதலியவற்றின் தொடக்கம்; entrance in a work or study, commencement, initiation. 3. வாயில்; place of entry, gateway. [Skt. pra-{} → த. பிரவேசம்] |
பிராகாரம் | பிராகாரம் pirākāram, பெ.(n.) 1. கோயிலைச் சுற்றியுள்ள வெளி; court or arcade surrounding a shrine in a temple. 2. மதில்(பிங்.);; fort wall. த.வ.சுற்றாலை, மதில் [Skt. {} → த. பிராகாரம்] |
பிராகிருதம் | பிராகிருதம் pirākirudam, பெ.(n.) 1. வடதமிழ் (பாகதம்); என்னும் வடமொழித் திரிபாயுள்ள மொழி;{}, applied to dialects derived from Sanskrit, which show more or less phonetic, decay. “எகர ஒகரம் பிராகிருதத் திற்கும் உரிய” (நன்.73. விருத்.);. 2. மூலம் தொடர்பானது; that which is of material world. “பிராகிருத லோகமே அநித்தியம்” (சி.சி.6.3, சிவாக்.);. 3. இயற்கை யானது; that which is natural. 4. அழியத் தக்கது (வின்.);; mortality, perishableness. [Skt. {} → த. பிராகிருதம்] |
பிராக்குடி | பிராக்குடி pirākkuḍi, பெ. (n.) மதுரை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurai Taluk. [பெயரா-பேரா+குடி-பிராக்குடி] |
பிராசாதம் | பிராசாதம் pirācātam, பெ.(n.) 1. கோயில்; temple. 2. மேன்மாடம்; top story of a lofty building. 3. கருவறை (கர்ப்பக்கிருகம்); (சுக்கிரநீதி,239);; the sanctum sanctorum of a temple. 4. ஒரு மந்திரம்; a mantra. “முலைப்பால் பிராசாதஞ் சொல்லி யருத்தி” (திருவானைக்.கோச்செங்.73);. [Skt. {} → த. பிராசாதம்] |
பிராணசேதம் | பிராணசேதம் pirāṇacētam, பெ.(n.) உயிர்ச்சிதைவு (சேதம்); (சா.அக.);; loss of life. [Skt. {} → த. பிராணசேதம்] |
பிராணன் | பிராணன் pirāṇaṉ, பெ.(n.) 1. உயிர் (திவா.);; life, vitality. 2. மூச்சு; breath, breathing. 3. பத்து வகை வளி(காற்று);களுள் மூச்சை நிகழ்விப்பது (பிங்.);; the vital air of the body which causes respiration, one of {}. 4. வலிமை (உ.வ.);; strength. 5. ஞாயிறு நடுவில் உள்ள சொற் (வாக்கியப்); பிழை தீர்க்கை (வின்.);; correction applied to the Sun’s mean position. [Skt. {} → த. பிராணன்] |
பிராணலிங்கம் | பிராணலிங்கம் pirāṇaliṅgam, பெ.(n.) வீரசைவர்கள் உடலில் அணிந்து வழிபடும் இலிங்கம் (வின்.);; the {} worshipped by a {} and worn on his person. [Skt. {} → த. பிராணன்+இலங்கம்] |
பிராணவாயு | பிராணவாயு pirāṇavāyu, பெ.(n.) 1. பிராணன், 3 பார்க்க;see {}. “அறிந்திடும் பிராணவாயு” (சி.சி.3,4);. 2. உயிர்வளி; oxygen. 3. நோய் வகை; angina pectoris. |
பிராணி | பிராணி1 pirāṇittal, 4 செ.கு.வி. (v.i.) மூச்சுவிடுதல் (திவ்.பெரியதி.1,2,8,வ்யா.);; to breathe, respire. [Skt. {} → த. பிராணி-,] பிராணி pirāṇi, பெ. (n.) உயிரி; animal. [Skt. {} → த. பிராணி.] |
பிராதானியம் | பிராதானியம் pirātāṉiyam, பெ.(n.) முதன்மை (இ.வ.);; importance. [Skt. {} → த. பிராதானியம்] |
பிராதிபதிகம் | பிராதிபதிகம் birādibadigam, பெ.(n.) பெயர்ப்பகாப்பதம்; base of a noun. “பன்னும் பகாப்பதப்பேரே பிராதிபதிகம்” (பி.வி.7.);. [Skt. {}-padika → த. பிராதிபதிகம்] |
பிராது | பிராது pirātu, பெ.(n.) முறையீட்டு விண்ணப்பம்; a complaint, suit. [U. {} → த. பிராது] |
பிராதுபண்ணு-தல் | பிராதுபண்ணு-தல் birādubaṇṇudal, 5 செ.கு.வி (v.i.) வழக்கிடுதல் (உ.வ.);; to lodge or file a plaint or complaint. |
பிராந்தகம் | பிராந்தகம் pirāndagam, பெ. (n.) நாமக்கல் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Namakkal Taluk. [பராந்தகன்-பிராந்தகன்-பிராந்தகம்] |
பிராந்தன் | பிராந்தன் pirāndaṉ, பெ. (n.) சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Sivaganga Taluk. [பிராந்தகர்-பிராந்தன்] |
பிராந்தி | பிராந்தி pirāndi, பெ.(n.) மது; brandy. [E. Brandy → த. பிராந்தி] |
பிரான் | பிரான் pirāṉ, பெ.(n.) 1. தலைவன்; lord, king, chief, master. “கோவணம் பூணுமேனும் பிரானென்பர்” (தேவா.640,7.);; 3. கடவுள்; god. “பிரான் பெருநிலங் கீண்டவன்” (திவ். திருவாய்.1,7,6);. 3. சிவன் (சது.);;{}. [Skt. {} → த. பிரான்] |
பிரான்மலை | பிரான்மலை pirāṉmalai, பெ.(n.) பாண்டி நாட்டிலுள்ள சிவன் கோயில்களுள் ஒன்று; an ancient {} shrine in {} country. [பிரான்+மலை] |
பிராமணன் | பிராமணன் pirāmaṇaṉ, பெ.(n.) 1. மந்திரம் ஓதும் முனிவன்; the sage who recite sacred formula of invocation, 2. படித்த முனிவர்; learned sage. 3, அந்தணன்; the gracious one 4.ஆரியரிடையில் பிறப்பால் உயர்ந்தவன் எனப்பட்டோர்; Brahmin பிராமணன் என்னும் சொல் சமற்கிருதத்திலும் பாலி மொழியிலும் வெவ்வேறு பொருள்களில் ஆளப்பட்டிருப்பது பரவலாகப் பலர்க்கும் தெரியாத செய்தியாகும். இந்தியா முழுவதும் தமிழ் பேசப்பட்ட சிந்துவெளி நாகரிகக் கால இறுதி முதல் வடநாட்டில் அரசாண்ட தமிழ் மன்னன் உதயணன் (கி.மு.700); வரை தமிழாகவே இருந்த வடநாட்டு மொழிகள் முற்றிலும் வடதமிழ் என்னும் பிராகிருதமாகவும் பாலி மொழியாகவும் திரிந்துவிட்டன. புத்தர் கற்ற மொழிகளில் தமிழும் ஒன்று என்பதால் புத்தர் காலத்திலும் தமிழை வட இந்தியர் கற்றனர் என்பதை அறியலாம். ஆரிய அரசன் பிருகதத்தனுக்காகக் கபிலர் குறிஞ்சிப்பாட்டு எழுதினார். இந்தப் பின்னணியை விளங்கிக் கொண்டால் வட இந்திய மொழிகளில் ஊடாடிய தமிழ்ச் சொற் களை எளிதில் கண்டறியலாம். பரம் எனும் சொல் உயர்வு, மேலான வீட்டுலகம், மெய்ப்பொருளாகிய இறையுணர்வு, மெய்யுணர்வு எனப்பொருள்படுகிறது. சிவனைப் பரன், பரம்பொருள் என்பர். இச்சொல் வடமொழியில் பரமம்-பிரம்மம் எனத் திரிந்தது. மெய்ப்பொருள் உணர்ந்த தவமுனிவனை பிரம்மண எனப் பாலி மொழியில் குறிப்பிட்டனர். புலால் தவிர்த்து கொல்லாமை இன்னா செய் யாமை அறங்களை மேற்கொண்டு, எலும்புந்தோலு மான தோற்றத்துடன் கடுந்தவம் செய்யும் முனிவனை மட்டும் குறித்த சொல்லாக பிரம்மண_ பிராம்மண சொல் பெருவழக்கூன்றி இருந்தது. ஆரியர் இந்தியாவில் குடியேறிய பின் கி.மு.1000அளவில் கங்கைக் கரையிலும் மகதநாட்டிலும் குடியேறி உயிர்க்கொலை வேள்விகள் செய்யத் தொடங்கினர். வேத மந்திரங்களை உரத்துச் சொல்லுதல் எனும் பொருள் கொண்ட புருஹ் (பேசு, பாடு, போற்று); எனும் சொல்லிலிருந்து பிரஹ்பிராஹ்மன (உரத்துப் போற்றிப்பாடுபவன்); எனும் சமற்கிருதச் சொல் தோன்றியது. பாலிமொழியிலுள்ள பிராமண எனும் சொல்லும் சமற்கிருதத்திலுள்ள அதே ஒலிப்புள்ள சொல்லும் சமயத்துறையில் உயர்ந்தோரைக் குறிக்கும் சொற் களாக மாறி மதிக்கத்தக்க பெரியவர் எனும் பொதுப் பொருள் பெற்றதால் சொல்லின் உட்பொருளாய்வில் யாரும் ஈடுபடவில்லை. புத்தமதம் இந்தியாவில் மறைந்து போனதால் தவம் செய்யும் துறவியைக் குறித்த பிராமண என்னும் பாலிச்சொல் வழக்கழிந்து போய்விட்டது. புத்தபெருமான் தன்னுடைய தம்மபதத்தில் 26ஆம் அதிகாரத்திற்குப் பிராமணவருக்கம் (பிராஹ் மணவக்கோ); எனப்பெயரிட்டு பிராமணன் யார் என்பதைப் பாடல்களில் தெளிவாக்கியிருக்கிறார். இறுதிப் பாடலில் பிராமணன் என்பவன் புத்த முனிவன் என்பதைக் குறிக்க முனி என்னும் சொல் லையே பிராமணன் என்பதற்குப் பொருளாகக் குறிப்பிட்டிருக்கிறார். எல்லா உயிர்களிடமும் அருளறம் பூண்டவனும் உயிர்க்கொலை தவிர்த்தவனுமாகிய அந்தணனைப் பிராமணன் என்பது பாலி மொழியில் வேரூன்றிய வழக்காம். இந்தியப் பார்ப்பனர் அனைவரும் தம்மைப் பிராமணர் என அடையாளப்படுத்திக் கொள்கின் றனர். இந்தியாவில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரே குறிப் பிட்ட பெயர் சாதிப் பெயராக நிலவுகிறது. ஆனால் பார்ப்பனர் மட்டும் ஒவ்வொரு மொழியிலும் அந்தந்தப் பகுதி தாய்மொழியில் உயர்குடியினரைக் குறிக்கும் உயர்வான பெயர்களைத் தெரிந்தெடுத்துத் தமக்குக் கூடுதல் சாதிப்பெயர்களாகச் சூட்டிக்கொள்கின்றனர். வடநாட்டில் சாத்திரி, சர்மா, ஆசார்யா போலவும் தென்னாட்டில், ஐயர், ஐயங்கார், அந்தணன் போலவும் சாதிப் பெயர் சூட்டிக் கொண்டனர். நெல்லையில் பிள்ளை (பெரியவாச்சான் பிள்ளை); எனவும் ஈழத்தில் முதலியார் எனவும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். ஆனால் இந்திய அளவில் தம்மைப் பிராமணன் எனும் பொதுப் பெயரால் அழைத்துக் கொள்கின்றனர். உள்நாட்டு மொழியில் வெவ்வேறு சாதிப் பெயர்களும் இந்திய அளவில் ஒரே பொதுப் பெயரும் பார்ப்பனருக்கு வழங்கி வருவது ஏன் என்று எவரும் வினாத்தொடுக்கவில்லை. எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள உயர்குடியினரைப் போன்றே தாமும் உயர்ந்த பிரி வினர் எனக் காட்டுவதற்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சியாகவே இது அமைந்துள்ளது. உயிர்க்கொலை யாகம் செய்வது ஆரியப் பண் பாடு. ஞானம் எனும் உயர்ந்த மெய்யுணர்வு பெறுவ தற்காகத் தவம் என்னும் ஒகம் செய்வது திராவிடப் பண்பாடு. இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. தவம் செய்தவனை இராமன் கொலை செய்தது இராமாயணத்தில் கூறப்படுகிறது. தவம் செய்யும் முனிவரைக் கொல்வது தீவினை (பாவம்); எனக் கருதப்பட்டது. பிராமணனைக் கொல்வது பிரம்மஹத்தி (முனிவனைக் கொல்வது); எனும் கொடுஞ்செயலாகக் கருதப்பட்டது. ஒகம் செய்யும் பிராமணனாகிய (அந் தணன்); முனிவனைக் குறித்த சொல்லை உயிர்க் கொலை யாகம் செய்யும் பார்ப்பனப் பிராமணனைக் குறித்த சொல்லாக்கித் தந்திரத்தால் பார்ப்பனனைக் கொல்வது கடுங்குற்றம் (பாவம்); எனத் தலைகீழாகச் சொல்லின் பொருளை மாற்றிவிட்டனர். புத்தரின் தம்மபதத்தில் பிராமணன் எனும் சொல் தவம் செய்யும் திராவிட முனிவனைக் குறித்த உண்மை புலப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரமன் என்னும் சொல் பிராகிருத மொழியில் ஆதிநாதரைக் குறித்த சொல்லாக வழங்கியுள்ளது. பிரம்மஞானி-ஆத்ம ஞானியைக் குறிக்கிறது. பிரம்ம வித்தை என்பது பரம்பொருளாகிய இறையியல்பை அறிவதைக் குறிக்கிறது. பாலிமொழியில் பிராமணன் என்னும் சொல் அந்தணன், தவம் செய்து பெற்ற மெய்யுணர்வால் முகத்திலும் அகத்திலும் ஒளிபெற்று ஒளிர்பவன், உயிர்க்கொலை தீவினையிலிருந்து விடுபட்டவன் srsrusmg, “Bhaahita paapothi Brahmano” størů புத்தர் குறிப்பிடுகிறார். மனம் மொழி மெய்களால் பிறர்க்குத் தீங்கு செய்யாத அந்தணனே பிராமணன். ஆரியர்கள் வேள்வித்தீயை உயர்வாக மதிப்பதுபோல் திராவிட முனிவர்களாகிய பிராமணரை உயர்வாக மதிக்க வேண்டும். சடை வளர்ப்பதாலும் கோத்திரத்தாலும் பார்ப் பனக் குடிப்பிறப்பாலும் பிராமணன் ஆகமுடியாது. அதாவது பார்ப்பனப் பெண் வயிற்றில் பிறந்ததால் ஒருவன் பிராமணன் ஆகமுடியாது. திராவிட முனிவனாகிய பிராமணன் (அந் தணன்); இல்லறத்தாரொடும், துறவறத்தாரொடும் சேராமல் தனித்திருந்து தவம் செய்யும் அருளாளன். எவன் பிற உயிர்களைக் கொல்வதில்லையோ கொல் விப்பதில்லையோ அவனே திராவிட அந்தணனாகிய பிராமணன் என்பதைப்பின்வருமாறுபுத்தர் கூறுகிறார். யோ நஹந்தி நகாதேதி தமஹம் ப்ரூமி பராமணம் (தம்மபதம் 405); தொல்காப்பியம் அருளாளராகிய முனிவரை அந்தணன் எனவும் அறிவன் எனவும் குறிப்பிடு கிறது. அறிவன் என்னும் தமிழ்ச்சொல் பாலி பிரா கிருத மொழிகளில் அர்ஹதன் (அருகன்); அர் ஹந்தன் எனத் திரிந்துள்ளது. மெய்யறிவு பெற்று வீடுபேற்றுத் தகுதி பெற்றவனே பரம்பொருள் உணர்ந்த (பரமணன்); பிராமணன் என்னும் திராவிட முனிவன் (அந்தணன்); எனப்புத்தர் வரையறைப்படுத் தியிருக்கிறார். மெய்ப்பொருள் (பரமஞானம்); அறிவு பெற்ற வனை வடநாட்டார் ப்ரம்மஞ்ளுதா என அழைத்தனர். இச்சொல்லின் தமிழ் வடிவமான அந்தணன் என் பதைத் திருவள்ளுவரும், முனைவன், அறிவன் என்ப வற்றைத் தொல்காப்பியரும் முனிவன், முனிசாமி என்பவற்றைப் பொதுமக்களும் ஆண்டு வந்துள்ளனர். பிராமணன் pirāmaṇaṉ, பெ.(n.) பார்ப்பனன்; Brahmin. [Skt. {} → த. பிராமணன்] |
பிராமணபோசனம் | பிராமணபோசனம் pirāmaṇapōcaṉam, பெ.(n.) பிராமணர்க்குச் செய்யும் விருந்து (சமாராதனை);; a feast for Brahmins. [Skt. {} → த. பிராமண போசனம்] |
பிராமணம் | பிராமணம் pirāmaṇam, பெ.(n.) 1. பிராமணர் தொடர்பானது (கூர்மபு.பிருகி.4.);; that which relates to or befits a Brahmin. 2. மந்திரப்பகுதியல்லாத மறையின் பகுதி; Brahmanas, a portion of the {} other than the mantras. [Skt. {} → த. பிராமணம்] |
பிராமணி | பிராமணி1 pirāmaṇi, பெ.(n.) ஏழு கன்னியருள் ஒருத்தி;{}, consort of {}, one of {}. [Skt. {} → த. பிராமணி] பிராமணி2 pirāmaṇi, பெ.(n.) 1. பார்ப்பனப் பெண்; Brahmin woman. 2. பர்ப்பனன் மனைவி; wife of a Brahmin. “பிராமணிக்குப் பிழைப்பரிது” (உத்தரரா.சம்யு.22);. 3. பாம் பரணை; a species of streaked lizard. [Skt. {} → த. பிராமணி] |
பிராமிசரிநோட்டு | பிராமிசரிநோட்டு pirāmisarinōṭṭu, பெ.(n.) வேண்டும்போது திரும்பப் பணங்கொடுப்பதாக எழுதித்தரும் கடன் ஆவணம்; promissory note, note of hand. த.வ. கடன்சீட்டு [E. promissary note → த. பிராமிசரி நோட்டு] |
பிராயச்சித்தம் | பிராயச்சித்தம் pirāyaccittam, பெ.(n.) 1. அறங்கடை தணிவிப்புச் சடங்கு (சீவக.910, உரை.);; expiatory ceremony for past sins. 2. மரணகாலத்தில் எல்லா அறங்கடைகளுக் கும் விலக்காகச் செய்யப்படும் தணிவிப்புச் சடங்கு; a ceremony performed on the eve of death, in expiation of all sins. 3. தணி விப்புச் சடங்கு; remedy, counteraction; redress. 4. அறநூல் பிரிவு மூன்றனுள் அறங்கடை போக்குந் தண்டனைகளைக் கூறும் பகுதி (குறள்,பரி.அவ.கீழ்க்குறிப்பு.);; a section of Dharma – {} dealing with punish- ments as atonement for sins, one of three tarma – {} – pirivu. 5. தண்டனை (சங்.அக.);; punishment. [Skt. praya-s-citta → த. பிராயச்சித்தம்] |
பிராயம் | பிராயம் pirāyam, பெ.(n.) 1. அகவை; age. “பிராய மிருவது” (திருமந்.863);. 2. நிலை; condition, stage. “வியூகம் முக்தப் பிராயர்க்கு” (ஈடு,7,3,3);. 3. சமானம்; like, used in compounds. அவனுக்குக் கள் சலப்பிராயம் (இக்.வ.);. [Skt. {} → த. பிராயம்] |
பிரார்த்தனை | பிரார்த்தனை pirārttaṉai, பெ.(n.) 1. வேண்டுகோள்; prayer, supplication. 2. நேர்த்திக் கடன்; vow. 3. வழிபாடு; worship, prayer, rite. 4. கிறித்தவர்கள் குருமார் மூலம் செய்யும் விண்ணப்ப வகை (R.C.);; litany. [Skt. {} → த. பிரார்த்தனை] |
பிரிக்குச்சி | பிரிக்குச்சி pirikkucci, பெ. (n.) மோட்டு வளையையும் பக்க வளையையும் கொண்டு இறுக்கும் குச்சி; a stick used by fisherman. [பிரி+குச்சி] |
பிரிதல் | பிரிதல் piridal, பெ. (n.) கொம்பு விளையாட்டில் நிகழ்த்தப்பெறும் ஒரு பிரிவு;рау.(பிங்-பிரிதல்); |
பிரிதி | பிரிதி piridi, பெ. (n.) திருச்செங்கோடு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruchengode Tauk. [பரிதி-பிரிதி] |
பிரித்தி | பிரித்தி piritti, பெ.(n.) அன்னாசிப்பழம்; pineapple. [பிரி-பிரித்தி] |
பிருகற்பதி | பிருகற்பதி pirugaṟpadi, பெ.(n.) 1. வியாழன் (திவா.);; the planet Jupiter, Guru of the gods. 2. சடங்காளன் (புரோகிதன்);; family priest. 3. அறநூலாசிரியருள் ஒருவர்; author of a {} (R.F.);. 4. அறநூல் பதினெட் டனுள் பிருகற்பதியால் இயற்றப்பட்ட நூல்; a Sanskrit text-book on Hindu law, ascribed to {} one of 18 taruma-{}. [Skt. {}-pati → த. பிருகற்பதி] |
பிருகா | பிருகா pirukā, பெ. (n.) ஒன்றியம்; division of a taluk or district. [U. firk {} → த. பிருகா] |
பிருதுர் | பிருதுர் pirudur, பெ. (n.) வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Wandiwasi Tau-, [பிருது+ஊர்] |
பிருந்தாவனம் | பிருந்தாவனம் pirundāvaṉam, பெ.(n.) 1. யமுனைக்கரையில் கோகுலத்துக்குப் பக்கத் திலுள்ளதும் கண்ணபிரான் இளமையில் விளையாடியதுமான காடு (ஈடு,அவ.ஜீ);; forest near the town of {} on the Jumna, where {} played in His child hood. 2. திருந்துழாய்க்காடு (துளசிவனம்);; basil garden. 3. கல்லறைக்கட்டடம் ({});; sepulchre of an ascetic. [Skt. {}-vana → த. பிருந்தாவனம்] |
பிரும்மமுத்திரை | பிரும்மமுத்திரை pirummamuttirai, பெ.(n.) கையை விரித்துப் பெருவிரலினை நடுப் பணித்திடப் பிடிப்பதாகிய முத்திரை வகை (செந்.x,425);;({}.); a kind of hand-pose. [Skt. brahma → த. பிரம்ம+முத்திரை] |
பிரேதகும்பம் | பிரேதகும்பம் pirētagumbam, பெ.(n.) பிணத்துக்கு உடைக்கும் மட்குடம் (வின்.);; earthen pot broken after a corpse is laid on the pyre. [பிரேதம்+கும்பம்] |
பிரேதக்குழி | பிரேதக்குழி pirētakkuḻi, பெ.(n.) கல்லறை; grave. [பிரேதம்+குழி] |
பிரேதபரிசோதனை | பிரேதபரிசோதனை birētabaricōtaṉai, பெ.(n.) இறப்பு (மரணம்); நேர்ந்த காரணத்தை அறியப் பிணத்தை அறுத்து ஆய்கை (C.G.);; post-mortem examination. த.வ. பிண அறுவை [Skt. {} → த. பிரேத பரிசோதனை] |
பிரேதம் | பிரேதம் pirētam, பெ.(n.) 1. பிணம்; dead body, corpse. நின்று பேதுறிற் பிரேதம் ( இரகு.இந்தும.84);. 2. பேய் (சூடா.);; ghose. 3. தெற்கு; south. 4. முன்னோர்; manes. 5. பின்; back. [Skt. {} → த. பிரேதம்] |
பிரேதவனம் | பிரேதவனம் pirētavaṉam, பெ.(n.) இடுகாடு; cremation ground. [Skt. {}+vana → த. பிரேதவனம்] |
பிரேதவிசாரணை | பிரேதவிசாரணை pirētavicāraṇai, பெ.(n.) ஐயப்பட்ட இறப்புக் காரணத்தைப் பற்றிய ஆராய்ச்சி (விசாரணை); (C.G.);; coroner’s inquest. [Skt. {} → த. பிதேவிசாரணை] |
பிரேமம் | பிரேமம் pirēmam, பெ.(n.) காதல், அன்பு, மோகம்; love; passion. அவள் மீது அவனுக்கு உள்ள பிரேமத்தின் வெளிப்பாடு இது (இ.வ.);. [Skt. {} → த. பிரேமம்] |
பிரேரணை | பிரேரணை pirēraṇai, பெ.(n.) 1. தூண்டுகை; direction, instigation, inducement. 2. அவையோர் முடிவறிய ஒரு செய்தியை (விடயம்); முதலில் எடுத்துக் கூறுகை; resolution, motion in a meeting. [Skt. {} → த. பிரேரணை] |
பிர்க்கா | பிர்க்கா1 pirkkā, பெ.(n.) வட்டாட்சியர் பகுதி; division, portion of a taluk, group of villages in charge of a revenue inspector. [U. {} → த. பிர்க்கா1] பிர்க்கா2 pirkkā, பெ.(n.) 1. உடம்பு முழுவதையும் மறைக்கும் நெட்டுடை (அங்கி.);; a kind of Veil covering the entire body. 2. வண்டி முதலிய ஊர்திகளின் உறை (இ.வ.);; cover for vehicles. த.வ.மூடாப்பு [U. {} → த. பிர்க்கா2] |
பிறந்த கதை | பிறந்த கதை piṟandagadai, பெ. (n.) கதை யாடலின் ஒருவகை; a story type. [பிறந்த+கதை] |
பிறழ்ச்சி இராகம் | பிறழ்ச்சி இராகம் piṟaḻcciirākam, பெ. (n.) நேர்வரிசையிற் செல்லாமல், புரண்டு செல்லும் பண்; a side tracking musical note. [பிற-பிறழ்ச்சி+இராகம்] |
பிறிதா(கு)-தல் | பிறிதா(கு)-தல் piṟidākudal, செ.கு.வி.(v.t.) வேறாகுதல்; changing. [பிறிது+ஆகு] |
பிலவகம் | பிலவகம் pilavagam, பெ.(n.) 1. குரங்கு; monkey. 2. தவளை; toad. [Skt. plavaka → த. பிலவகம்] |
பிலாவிளை | பிலாவிளை pilāviḷai, பெ. (n.) அகத்தீச்சுவரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Agestheeswaram Taluk. [பலா+விளை] |
பிலிகுத்தி | பிலிகுத்தி piligutti, பெ. (n.) திருப்பத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruppattur Taluk. [புலி+குத்தி] |
பிலிச்சி | பிலிச்சி pilicci, பெ. (n.) கோயமுத்துர் மாவட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Coimbatore Taluk. [புலி-புலித்தி] |
பில்லக்கட்டை | பில்லக்கட்டை pillakkaṭṭai, பெ. (n.) சுவரில் துளையிட்டு அடிக்கும் கட்டை; a wooden piece driven in a wall. [வில்லை+கட்டை] |
பில்லத்தி | பில்லத்தி pillatti, பெ. (n.) சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Sivaganga Taluk. [வில்வம்+அத்தி] |
பில்லி | பில்லி pilli, பெ. (n.) கொம்புமுறி விளையாட்டில் பயன்படுத்தப்படும் குறுந்தடி a short pole used in kombu muri game. (6:111);. [புல்லி-மில்லி] |
பில்லிந்தடி | பில்லிந்தடி pillindaḍi, பெ. (n.) சிறு குச்சியை வைத்து விளையாடும் விளையாட்டு; a children game. (கொங்கு); [புல்லி-பில்லி+தடி] |
பில்லு | பில்லு pillu, பெ.(n.) விலைச்சீட்டு; bill. [E. bill → த. பில்லு] |
பில்வைாளி | பில்வைாளி pilḷi, பெ. (n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantangi Takuk. [வல்லம்+வாரி] |
பிளந்த இடம் | பிளந்த இடம் piḷandaiḍam, பெ. (n.) தாய விளையாட்டில் துவையும் மலையிலிருந்து ஐந்து கட்டங்கள் தள்ளி இன்னொரு மலையிருக்கும் இடம்; the term usedinarural chessgame. [பிளந்த+இடம்] |
பிளார் | பிளார் piḷār, பெ. (n.) திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruppattur Taluk. [பிள்ளை+ஊர்] |
பிள்ளைக்குழு | பிள்ளைக்குழு piḷḷaikkuḻu, பெ. (n.) பல்லாங்குழியில் ஐந்து கற்களுக்கும் குறைவாகப் பூட்டிய குழியின் பெயர்; name of a dip hole in the pallankuli board [பிள்ளை+குழு] |
பிள்ளைப்பாண்டி | பிள்ளைப்பாண்டி piḷḷaippāṇṭi, பெ. (n.) ஒரு வகைப் பாண்டியாட்டம் குமரி; a type of pandi play. [பிள்ளை+பாண்டி] |