செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
பா

பா pā, பெ. (n.)

   பகரமெய்யும் (ப்); ஆகார உயிரும் (ஆ); சேர்ந்து பிறந்த உயிர்மெய் யெழுத்து; the compound of ‘ப’ and ‘ஆ’

 பா2 pāttal,    4. செ.குன்றாவி. (v.t.)

   பகுத்தல்; to divide, distribute.

     “பாத்துண்பதுமிலா” (திருநூற்.89);

     “பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது” (திருக்குறள். 227.);

     “தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு” (திருக்குறள்.1107);

     “பழியஞ்சிப்பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழி யெஞ் சல் எஞ் ஞான்றும் இல்’ (திருக்குறள்.44.);

     [பகுத்தல் → பாத்தல்]

 பா3 pātal,    4. செ.குன்றாவி. (v.t.)

   பகுத்தல்; to divide, distribute.

     [பகுத்தல் → பாத்தல் → பா-,]

 பா4 pā, பெ. (n.)

   பாட்டு,செய்யுள்; poem, verse (written according to the roles of metre.

     “வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்கள்”.

     “பாவேந்தர் என்னும் பட்டம்.”

சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாட மோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற் கேதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஒசை. (பேரா.தொல். பொருள்.313);.

பாவென்றது சேட்புலத்திருந்து சொல்லும் பொருளும் தெரியாமல் ஒருவன் கூறியவழியும் இஃது இன்ன செய்யுளென்று அறிவதற்கு ஏதுவாகிப் பரந்து படச் செய்வதோர் ஓசை (நச்.தொல். செய்.1);.

 பா5 pā, செ.கு.வி. (v.i.)

   1. பரப்பு; expanse.

     “பாவடி யானை” (புறநா.233);

   2. தேர்த்தட்டு (அரு.நி.);; the central platform of a chariot.

   3. பாட்டு; verse, stanza, poem.

     ” அத்தொட பாவி நடத்தலிற் பாவே” (இலக்.வி.711);

   4. கைமரம்; rafter.

     “பழுவெலும்பினி பாவடுக்கியே” (கலிங்.87);

   5. நெசவுப்பா; warp.

     “பாவிடையாடு குழல்” (திருவாச.24,8);

   6. பஞ்சி நூல் (சூடா.);,

 cotton thread.

   7. நிழல் (யாழ்.அக.);; shadow.

   8. கடிகாரவூசி (யாழ்.அக.);; gnomon or needle of a sun-dial.

     [பாவு → பா.]

 பா6 pā, பெ. (n.)

   1. காப்பு; protection.

     “பன்ன பாவென்ற தூய்மை பருகுதல் காப்புங் கூறும்” (காஞ்சிப்பு.திருவேகம்.48);

   2. பருகுகை (காஞ்சிப்பு. திருவேகம்.48);; drinking.

 பா7 pā, பெ. (n.)

   1. தூய்மை; purity, holiness.

     “பன்னு பாவென்ற தூய்மை” (காஞ்சிப்பு. திருவேகம்.48.);

   2. அழகு (யாழ்.அக.);; beauty.

 பா8 pā, பெ. (n.)

   1. பாம்பு; snake.

   2. பூனைக்காலி; cowhage.

பாககம்

 பாககம் pāgagam, பெ. (n.)

   பிரிக்குந் தொகை; dividing amount.

     [பாகம் → பாககம்]

பாகசம்

 பாகசம் pākasam, பெ. (n.)

   ஒரு வகையுப்பு (வைத்தியநூ.);; a kind of salt.

பாகசாத்திரம்

 பாகசாத்திரம் pākacāttiram, பெ. (n.)

   உணவு பக்குவம் பண்ணுதலை உணர்த்தும் நூல்; science of cooking.

மடைநூல் பார்க்க;see {madai-nool}

     [பாக + skt. {såstram→} த. சாத்திரம்]

பாகசாலை

பாகசாலை1 pākacālai, பெ. (n.)

   1. மருந்து கலக்கும் இடம்; a place for mixing medicine-pharmacy.

   2. மருந்து முடிக்கும் இடம்; place where medicines are prepared pharmacuetical works (சா.அக.);

     [பாகம் + சாலை]

 பாகசாலை2 pākacālai, பெ. (n.)

   மடைப்பள்ளி; kitchen.

     “இன்னமுத பாகசாலை” (பிரபோத.11,29);

     [பாகம் + சாலை]

 பாகசாலை pākacālai, பெ. (n.)

   திருத்தணி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruttani Taluk.

     [பாகம் (சமையல்);+சாலை]

பாகசிலைக்கல்

பாகசிலைக்கல் pākasilaikkal, பெ. (n.)

   1. சிலநாகம்; zinc spar.

   2. சூடாலைக்கல்; zinc stone. (சா.அக.);

பாகஞ்செய்-தல்

பாகஞ்செய்-தல் pākañjeytal,    13. செ.கு.வி. (v.i.)

   1. உணவு செய்தல்; to cook.

   2. மருந்தினைப் பக்குவமாகச் செய்துகொடுத்தல்; to prepare the medicine with extra carefull.

     [பாகம் + செய்-,]

மருத்துவத்தில் பலவகையான பாகங்கள் உள.

   1. கைப்பாகம்

   2. ஆயபாகம்

   3. அரைப்புப் பாகம்

   4. கலப்புப் பாகம்

   5. புடயாகம்

   6. கொள்பாகம்

   7. தைலபாகம்

   8. இளகிய பாகம்

   9. மதுபாகம்

   10. இருத பாகம்

   11. வேதிப்பாகம்

   12. கியாழபாகம்

   13. வடகபாகம்

   14. சரணபாகம்

   15. சாசனபாகம்

   16. சுவைப்பாகம் (சா.அக.);

பாகஞ்செய்வோன்

பாகஞ்செய்வோன் pākañjeyvōṉ, பெ. (n.)

   நோயாளிக்கு அணுக்கமாயிருந்து மருந்து கொடுத்துக் கவனித்துக் கொள்பவன்; one attending on the patient to compound and administer medicine and also to give all comforts to him. (சா.அக.);

     “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென் றப்பானாற் கூற்றே மருந்து.” (குறள்.950);

பாகடை

பாகடை pākaḍai, பெ. (n.)

பாக்கு வெற்றிலை பார்க்க;see {pakkuverrillai,}

     “குருக்கொள் சுண்ணமார் பாகடை” (காஞ்சிப்பு.வலம்புரி.37);

     [பாக்கு → பாகு + அடை]

பாகண்டன்

 பாகண்டன் pākaṇṭaṉ, பெ. (n.)

   வெளிப்புனைவுக்காரன்; pompus, showy person, one who puts on appearances.

பாகண்டை

 பாகண்டை pākaṇṭai, பெ. (n.)

   சிவதை; turbith root, Indian jalap. (சா.அக.);

பாகதச்சிதைவு

பாகதச்சிதைவு pākadaccidaivu, பெ.(n.)

பிராகிருத மொழியிலிருந்து தமிழிற் சிதைந்து வழங்கிய சொல். (திருக்கோ.53,உரை);;{}

 words used in Tamil in a modified form.

     [பாகதம்+சிதைவு]

பாகதம்

 பாகதம் pākadam, பெ.(n.)

பிராகிருதம் பார்க்க;see {}.

     [Skt. {} → Pkt. {} → த. பாகவதம்]

பாகதானம்

 பாகதானம் pākatāṉam, பெ. (n.)

பாகசாலை (யாழ்.அக.); பார்க்க;see {pāgaśālai.}

     [பாகம் + skt. {ståram→} த. தானம்]

பாகதாரி

 பாகதாரி pākatāri, பெ. (n.)

   சமையற்காரன் (யாழ்.அக.);; cook.

     [பாகம்+ skt. {diri)} த. தாரி]

பாகனம்

 பாகனம் pākaṉam, பெ. (n.)

   ஆண்டு (யாழ்.அக.);; year.

     [பாசனம் → பாகனம்]

பாகன்

பாகன்3 pākaṉ, பெ. (n.)

   1. யானைப் பாகன்; elephant driver, mahout.

     “யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” (நாலடி.213);

     “கைவல் பாகன் பையென இயக்க” (அகநா.);

   2. தேர் முதலியவற்றை நடத்துவோன்; charicteer muleteer, horseman, rider.

     “தேரிற் பாகனா யூர்ந்த தேவதேவன்” (திவ்.பெரியதி.7.5.2);.

   3. அறிவன் (புதன்); (சூடா.);; the planet mercury.

மராத். பாகா. ம. பாவான்.

     [பாங்கன் → பாகன்]

     [பாகம் → பாகன்] செல்வி, திசம்.79 பக்.582.

 பாகன்4 pākaṉ, பெ. (n.)

   பக்குவம் பெற்றவன்; one who has attained moral or spiritual Ripeness.

     “பவத்திடை மூழ்கும் பாக ரல்லவர்” (கந்தபு.அடிமுடி..98);

 பாகன்3 pākaṉ, பெ. (n.)

   1. ஒரு பக்கத்திற் கொண்டவன்; person who has anything at his side, partner.

     “நாரிபாகன்” (தேவா.1172,9);

   2. செயற்றுணை செய்வோன்; agent.

ஒ.நோ. பாங்கன்

     “இவன் விளையாட்டுக் கெல்லாம் பாகன்”

   3. வரிவாங்கி (யாழ்ப்.);; pimp.

பாகபடை

 பாகபடை bākabaḍai, பெ. (n.)

   விளைச் சலுக்குத் தக்கவாறு, தீர்வையைத் தவசமாகத் தண்டல் செய்யும் முறை (இ.வ.);; a system of land revenue in which a fixed share of the produce is collected.

     [பாகம் + படு + படை → பாகபடை]

பாகபாண்டம்

 பாகபாண்டம் pākapāṇṭam, பெ. (n.)

   சமையலுக்குரிய சட்டி பானை முதலிய மட்பாண்டங்கள் (யாழ்.அக.);; mud-pot used for cooking.

     [பாகம் + பாண்டம்]

     [P]

பாகபேதம்

 பாகபேதம் pākapētam, பெ. (n.)

   சமையல் வேறுபாடு; difference in cooking, by different cooks.

     [பாகம் + skt. Beda→ த பேதம்]

பாகப்படவுருக்கல்

 பாகப்படவுருக்கல் pākappaḍavurukkal, பெ. (n.)

   பக்குவப்படும்ப்படி உருக்குதல்; meting to the required standard. (சா.அக.);

     [பாகம்பட + உருக்கல்]

பாகப்படுத்-தல்

பாகப்படுத்-தல் pākappaḍuttal,    20. செ.கு.வி. (v.i.)

   1. சமைத்தல்; to cook.

   2. பங்கு செய்தல்; to divide shares.

     [பாகம் + படு-,]

பாகப்படுத்து-தல்

பாகப்படுத்து-தல் pākappaḍuddudal,    5. செ.கு.வி. (v.i.)

   1. பயன்படும்படித் தகுதியாக்கல்; making anything fit for use.

   2. பதப்படுத்துதல்; to prepare anything fit for adaptation, seasoning as pickles. (சா.அக.);

     [பாகம் + படுத்து-,]

பாகப்பத்திரம்

 பாகப்பத்திரம் pākappattiram, பெ. (n.)

   சொத்துப் பிரிவினையைத் குறிக்கும் ஆவணம்; partition deed.

     [பாகம் + skt. batra த. பத்திரம்]

பாகப்புடி

 பாகப்புடி pākappuḍi, பெ. (n.)

   குயவன் சூளை; potter’s kiln.

மறுவ: பாகபுடி

     [பாகம் → புடம் → புடி]

பாகமா

பாகமா1 pākamātal, பெ. (n.)

   1. முழுமை யடைதல்; to come to perfection.

   2. பக்குவமடைதல்; reaching a matured state as in preparation of medicine medicated oil electuaries etc. (சா.அக.);

     [பாகம் + ஆ-,]

 பாகமா2 pākamātal,    6. செ.கு.வி. (v.i.)

   1. உணவு முதலியன அணியமாதல்; to be fit for use, as food.

   2. மருந்து முதலியன பதமாதல்; to reach a fitting condition, as medicine.

     [பாகம் + ஆ-.]

 பாகமா3 pākamātal,    6. செ.கு.வி. (v.i.)

   பங்கு பிரிக்கப் படுதல்; to be divided, partitioned.

     [பாகம் + ஆ-.]

பாகம்

பாகம்1 pākam, பெ. (n.)

   1. சமையல்; cooking, dressing food.

   2. வெப்பத்தால் வாடுதல்; heating.

     “பாகமொடு விரகம்” (வேதா.சூ.77);

   3. பக்குவம்; maturity, ripeness.

     “இப்பழம் நல்ல பாகத்தி லிருக்கிறது”

   4. மூவகைச் செய்யுள் நடையாகிய கொடி முந்திரி பாகம், கதலி பாகம், தேங்காய்ப் பாகம்; poet style of poetry, three in number. viz., {kodimundiripāgam, kadali-pâgam, thenkaipagam,}

     “பாகத்தினாற் கவிதை பாடிப் படிக்கவோ” (தாயு.சச்சிதா.3);.

   5. மனநிலை; state of mind.

     “குறிப்பின்றியும் பாகமுணர்வாள் குறிப்புப் பெற்றுழி மிகவுணரும்” (தொல்.பொ.127,உரை);.

     [பகு → பாகம்]

 பாகம்2 pākam, பெ. (n.)

   1. பகுக்கை (சூடா.);; sharing. dividing.

   2. கூறு; part, portion.

     “தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பன்று” (திருவாச.5,37);

   3. பாதி (சூடா.);; half, moiety.

   4. பாகை;   5. பக்கம்; side, place.

     “பாகம் பெண்ணோடாயின பரிசும்” (திருவாச.2,78);.

   6. காயம்; injury.

     “பாகத்தைப் படாத நெஞ்சின்” (சீவக.2278,உரை);

   7. பிச்சை (பிங்.);; alms, charity.

   8. பறைவகை (சிலப்.3,27,உரை);; a kind of drum.

     [பகு → பாகம்]

 பாகம்3 pākam, பெ. (n.)

   1. கை; arm.

   2. நான்கு முழங்கொண்ட கைந்நீட்டளவு (அக.நி.);; measure of the arms extended=4 cubits

   3. ஒரு வகையுப்பு; a kind of salt. (சா.அக.);

 பாகம்4 pākam, பெ. (n.)

   1. பகுதி உறுப்பு; part (of a machine, etc.);

     “வெடித்துச் சிதறிய வானூர்தியின் பாகங்களைத் தேடும் பணி நடைபெறுகிறது.”

     “அச்செய்பொறியின் ஒரு பாகம் பழுதாகியிருக்கிறது.”

   2. (சொத்தில்);உரிமைப் பங்கு; share (in a property);.

     “இந்த வீட்டில் எனக்கும் ஒரு பாகம் உள்ளது”

   3. (நூலின்); தொகுதி; volume (of a novel. etc.);

     “இந்தப் புதினம் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது.”

   4. (நாடகம் போன்றவற்றில்); நடிப்புப் பகுதி, புனைவு; role, part (in a drama, etc.);

     “நாடகத்தில் வள்ளி பாகத்தை ஏற்று நடித்துப் புகழ் பெற்றவர்.”

     [பாகு + பாகம்] (செல்வி’75. ஆனி பக்.533);

 பாகம்5 pākam, பெ. (n.)

   கடலெல்லை மற்றும் ஆழத்தைக் குறிக்குமொரு சொல். (மீனவ.பொ.வ.);; a word indicating nautica limit and depth.

 பாகம்6 pākam, பெ. (n.)

இடம்:

 plcace spot region.

     “கன்னபாகமும்” (பாரத. பச்ப. 33);

 பாகம் pākam, பெ. (n.)

   தோலாற் செய்யப்பட்ட ஓர் இசைக்கருவி; a musical instrument.

     [பாகு-பாகம்]

 பாகம் pākam, பெ.(n.)

   ஆறடி ஆழம் அல்லது நீளத்தைக் குறிக்கும் நீட்டல் அளவு; a linear measure of six feet length or depth.

மறுவ, மார்.

     [பாகு-பாகம்]

பாகம் பகிர்-தல்

 பாகம் பகிர்-தல் pāgambagirtal, செ.கு.வி. (v.i.)

   உறவினர்களுக்கிடையில் சொத்துக்களைப் பிரித்து எடுத்துக் கொள்ளுதல்; to divide an estate, as a kinsmen.

     [பாகம் + பகிர்-,]

பாகம்போடு-தல்

பாகம்போடு-தல் pākambōṭudal,    19.செ.குன்றாவி. (v.t.)

   கைப் பாகத்தால் அளவிடுதல்; to measure by the arm.

     [பாகம் + போடு-,]

பாகர்

பாகர்1 pākar, பெ. (n.)

   1. தேரின் மேற்றட்டைச் கற்றியுள்ள மரக் கைப்பிடிச் சுவர் (சிறுபாண்.258.உரை);; wooden balustrade in car.

   2. தேர்; car.

     “எழில் நடைப் பாகரொடு” (சிறுபாண்.258.);

     [பாகு → பாகர்]

வ.மொ.வ.193

 பாகர்2 pākar, பெ. (n.)

யானை, குதிரை முதலியவற்றை பாங்காயிருந்து நடத்துவோர்.

 elephant or horse driver.

     “பாகன யரசன் குறிப்பினாலேவ” (பாரத.குருகுல.கா.நா.);;

     “யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்” (நாலடி..213);.

     [பாங்கர் → பாகர்]

பாகற்காய்

 பாகற்காய் pākaṟkāy, பெ. (n.)

   பாகல் கொடியில் காய்க்கும் காய்; bitter-guard.

     “பாகற்காயின் சாறு எடுத்து அருந்தி வந்தால் உடம்புக்கு மிகவும் நல்லது.”

     [பாகல் + காய்]

பாகற்பலா

 பாகற்பலா pākaṟpalā, பெ. (n.)

   பெருங்குமிழ்; large goomiz. (சா.அக.);

பாகற்பழம்

 பாகற்பழம் pākaṟpaḻm, பெ. (n.)

   காய்ச்சல், நீரிழிவு, இரைப்பு, மூலம், குட்டம், மலப்புழு இவற்றைப் பாகற்பழம் போக்கும்; riped balsam pear. It is useful in cases of fever urinary disease bronchitis, piles leprosy and worms in the intestines (சா.அக.);

     [பாகல் + பழம்]

பாகலன்

 பாகலன் pākalaṉ, பெ. (n.)

 or lunatic.

பாகலம்

 பாகலம் pākalam, பெ. (n.)

   யானைக்கு வரும் காய்ச்சல் நோய் வகை (சூடா.);; fever affecting elephants.

பாகல்

பாகல்1 pākal, பெ. (n.)

   கொடி வகை; balsampear climber.

     “ஒருநாட் பாகற் கொடியே பலவறுப்பான்’ (திருவாரூ.421);.

க. ஹாகல்

     [பாகு + அல்]

பாகல்வகை

   1. கொம்புப்பாகல் (அல்); கொம்பன்பாகல்

   2. மிதிபாகல்

   3. சின்னப்பாகல்

   4. நிலப்பாகல்

   5. காட்டுப்பாகல்

   6. நாய்ப்பாகல்

   7. பேய்ப்பாகல்

   8. முட்பாகல்

   9. எருமைப்பாகல்

   10. காட்டுப்பாகல்

   11. நரிப்பாகல்(சா.அக.);

     [P]

 பாகல்2 pākal, பெ. (n.)

   1. பலாமரம்; jack tree.

     “பரிமளப் பாகலிற் கனிகளைப் வீறி. நற்படியி னிட்டேகுரக்கின மாடும்” நற்.180.

   2. வெண்பாவட்டை; white pavettai, pavettai.

பாகவத நடனம்

 பாகவத நடனம் pākavadanaḍaṉam, பெ.(n.)

   மாலிய மத அடியார்கள் ஆடும் நடனம் (வின்.);; a religious dance performed by {}.

த.வ.ஆழ்வார் ஆட்டம்

     [Skt. {} → த. பாகவதம் + த. நடனம்]

பாகவதபுராணம்

பாகவதபுராணம் bākavadaburāṇam, பெ.(n.)

   1. வடமொழியிலுள்ள பதினெட்டு தொன்மங்களுள் தலையாயது; a chief {} in Sanskrit. one of {}.

   2. செவ்வைச் சூடுவாரால் தமிழ்ச் செய்யுளில் இயற்றப்பட்ட மொழி பெயர்ப்பு நூல்; a metrical translation of sanskrit {} in Tamil by Sevvai – c – {}.

   3. கி.பி.1543ல் நெல்லிநகர் வரதராச ஐயங்கார் வடமொழி யினின்று தமிழ்மொழியிற் செய்யுளாக இயற்றிய நூல்; a Tamil-version of the Sanskrit {} by Varadaraja {} of Nelinagar, 1543

 A.D.

     [Skt. {} → த. பாகவதபுராணம்]

பாகவதர்

பாகவதர் pākavadar, பெ.(n.)

   1. திருமாலை முதற்கடவுளாகக் கொண்டு வழிபடுஞ் சமயத்தோர் (பிங்.);;{}, worshippers of {}.

     “பாகவதப் பிரமசாரி” (திருவாலவா. 31,2);.

   2. இசைப்பாட்டுடன் சமயச் சார்பான பழங்கால வரலாறுகளை எடுத்துரைப்போர்; those who expound religious stories to the accompaniment of music.

   3. பாடகர் (இ.வ.);; masters of music, music teachers.

த.வ.மாலியர்

     [Skt. {} → த. பாகவதர்]

பாகா

 பாகா pākā, பெ. (n.)

   பனைச் சர்க்கரை; sugar obtained from palmyra juice. (சா.அக.);

     [பாகு → பாகா]

பாகாசயம்

 பாகாசயம் pākācayam, பெ. (n.)

   உண்ட உணவைப் பக்குவப்படுத்தும் சிறுகுடல்; small intestines capable of digesting the food taken into the system. (சா.அக.);

பாகாடி

 பாகாடி pākāṭi, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvadanai Taluk.

     [பாகாளம் –பாகாடி]

பாகாரம்

 பாகாரம் pākāram, பெ. (n.)

   எண்வகைக் கணிதத்தில் ஒன்றாகிய வகுத்தல் (பிங்.);;     [பகு → பாகு → பாகாரம்]

பாகார்

பாகார் pākār, பெ. (n.)

   1. கோட்டை மதில் (அக.நி.);; fortwall.

   2. இடம்; place.

க. பாகல். ஒ.நோ. பாகர்.

     [பாகர் → பாகார்]

பாகாளி

 பாகாளி pākāḷi, பெ. (n.)

   வெண்பொன்; impure gold of a white colour. (சா.அக.);

பாகி

பாகி1 pākittal,    11. செ.குன்றாவி பங்கிடுதல்; to divide, apportion.

     [பாகு → பாகி.பாகித்தல்] (செல்வி. திசம்.79. பக்.182);

 பாகி2 pāki, பெ. (n.)

   தகுதியானவன்; competent, eligible peson apportion.

     [பாகு → பாகி]

 பாகி pāki, பெ. (n.)

   கட்டுரையில் பொருள் நிரலுக்கு ஏற்ப அமைக்கப்படும் பத்தி; paragraph.

பாகியமைப்பு (Paragraph Structure);

எப்பொருளைப்பற்றி யெழுதினாலும் அப்பொருளைப் பற்றிய கருத்துகளையெல்லாம் கோவைபட அமைத்துக்கொண்டு ஒவ்வொன்றையும்பற்றி இயன்ற அளவு அல்லது வேண்டுமளவு தனித்தனிப் பகுதியாக ஒவ்வொரு வாக்கியத்தொகுதி வரைவது பாகியமைப்பு அல்லது பாகிவரைவு ஆகும்.

கடிதம் கட்டுரை ஆவணம் (பத்திரம்); முதலியன பாகியமைப்பையே பாகுபாடாக் கொண்டிருக்கும். நூலாயின், அதிகாரம் இயல் முதலிய பிரிவுகளாக வகுக்கப்பட்டு அவற்றுள் ஒவ்வொரு சிறு பிரிவும் பாகியமைப்புடையதாக விருக்கும்.

பாகியமைப்புடன் எழுதப்பட்ட எவ்வகை எழுத்திடும், படிப்பதற்கு வசதியாகவும் பொருள் எளிதாய் விளங்குவதற்கு ஏதுவாகவும் பார்வைக்கு நன்றாகவும் இருப்பதால், உரைநடையில் எழுதும் எல்லாவற்றையும் பாகியமைப்புடனே எழுதுதல் வேண்டும்.

ஒரு பாகியின் இறுதி முழுவரியாகவும் இருக்கக்கூடுமாதலால், ஒரு பாகிக்கும் இன்னொரு பாகிக்கும் இடையீடு பார்த்தவுடன் தெளிவாய்த் தெரியுமாறு, ஒவ்வொரு பாகியின் முதல் வரியும் சற்று வலமாகத் தள்ளித் தொடங்கப்பெறும்.

பாகியமைப்பு நெறிமுறைகள் (Principles of Paragraph Structure);

   பாகியமைப்பானது கருத்தடைவுபற்றிய ஏரண முறைப்பட்டதேயன்றி, அவரவர் விருப்பம் போலச் செயற்கை முறையாய்ப் பகுத்துக் கொள்வதன்று;ஆகையால், பாகியமைப்புப் பற்றிய சில திட்டமான நெறிமுறைகள் தெரிந்துகொள்ளல் வேண்டும் அவையாவன.

   1. ஒருமைப்பாடு (Unity);

ஒரு வாக்கியம் ஒரே உண்மையை அல்லது விதியைப்பற்றியிருத்தல் போல ஒரு பாகியும் ஒரே பொருளை அல்லது பொருட் கூறாகிய கருத்தைப்பற்றி யிருத்தல் வேண்டும். இது பாகியொருமைப்பாடு எனப்படும்.

   எப்பொருளாயினும் பல கருத்துகளைத் தழுவினதாக அல்லது உள்ளடக்கினதாகவே யிருக்கும். அவற்றுள் ஒவ்வொன்றையும் பற்றி ஒவ்வொரு பாகி வரைதல் வேண்டும்;ஒரு கருத்துப் பல உட்கருத்துகளைக் கொண்டதாயின், அவற்றுள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பாகியமைத்தல் வேண்டும்.

   2. ஒழுங்கு (Order);

பாகியமைப்புப் பற்றிய இரண்டாவது நெறிமுறை கருத்தொழுங்காகும். இது பாகியொழுங்கு எனப்படும். இஃது அகவொழுங்கு புறவொழுங்கு என இரு திறத்தது. ஒரு பாகிக்குள்ளே யமைந்திருக்கும் கருத்தொழுங்கு அகவொழுங்கும், அதற்குப் புறமாக, முன்னும் பின்னும் அமைந்திருக்கும் கருத்தொழுங்கு புறவொழுங்கும் ஆகும்.

முதலாவது, ஒரு கட்டுரையின் பல பாகிக் கருத்துகளும், முன் பின் முறை பிறழாது ஏரணத் தொடர்ச்சியாயிருத்தல் வேண்டும் இரண்டாவது, ஒவ்வொரு பாகியினுள்ளும் அமைந்திருக்கும் வாக்கியங்கள், அவ்வப்பாகிக் கருத்துப்பற்றி ஏரணத் தொடர்பு பூண்டிருத்தல்

வேண்டும்.

   பொதுவாக, ஒரு பாகியின் முதல் வாக்கியம் பாகிக் கருத்தைத் தொடங்கல் வேண்டும்;அதன் இறுதிவாக்கியம் அதை முடித்தல் வேண்டும். இடையிலுள்ள வாங்கியங்களெல்லாம், பொருள் தொடர்ச்சி குலையாது பாகிக்கருத்தை வளர்க்கவோ விளக்கவோ வற்புறுத்தவோ வேண்டும். பாகிக் கருத்து அமைந்திருக்கும் வாக்கியம் கருத்து வாக்கியம் (Topical Sentence); அல்லது திறவு வாக்கியம் (Key Sentence); எனப்படும். இது பாகியின் முதலாவது இடையி லிருப்பது இடையாயது. இறுதியிலிருப்பது கடையாயது.

   முதல் வாக்கியம் படிப்பவர் உள்ளத்தைக் கவர்ந்து அவவது ஆர்வத்தை யெழுப்புவதாயும் இடை வாக்கியங்கள் அவ்வார்வத்தை மேலும் மேலும் வளர்ப்பனவாயும், இறுதி வாக்கியம் அதை சால்வு (திருப்திப்); படுத்துவதாயும், இருத்தல் வேண்டும்;பிஞ்சு தோன்றிக் காயாய்ப் பருத்துக் கனியாய்ப் பழுத்தாற்போல், பாகிக் கருத்தும் முன்பு தோன்றி முறையே வளர்ந்து முடிவில் முதிரவேண்டும். பாகிப்பொருள் ஒரு வரலாறாயின் பாகி வாக்கியங்கள் அவ் வரலாற்று நிகழ்ச்சிகளை முறை பிறழாது தொடர்ந்து கூறுதல் வேண்டும்

   3. வகைப்பாடு (Variety);

   பாகியமைப்பின் மூன்றாம் நெறிமுறை வகைப்பாடு அஃதாவது, பாகிகளெல்லாம் ஒரு கோவையின் அல்லது மாலையின் செய்யுள் களைப்போல் ஒரே யளவாயிராது. குறிதும் நெடிதுமாக வெவ்வேறளவாயிருத்தல். இது பாகி வகைப்பாடு எனப்படும் ஒரு பாகியின் அளவு அதன் கருத்தைப் பொறுத்திருத்தலால் பாகிகளெல்லாம் தாம் கூறும் கருத்தின் ஒடுக்க விரிவிற் கேற்றவாறு குறுகியும் நீண்டுமிருக்கும். ஒரு பாகி வாக்கியத்தினாலும் அமையலாம்;   பல வாக்கியங்களினாலும் அமையலாம்;அதன் சிற்றெல்லையே யன்றிப் பேரெல்லை திட்டமாக வகுத்தற்குரிய தன்றாயினும் அஃது ஒரு பக்கத்திற்கு மிகாதிருத்தல் நல்லதாம். மிக விரிவுபட்ட பாகிப்பொருள் பல கருத்துகளாகப் பிரித்துக்கொள்ளுற்கு இடந்தருமாதலின். ஒரு பக்கத்திற்கு மேற்படும் கழிநெடும் பாகியைப் பல சிறு பாகிகளாகப் பிரித்துக்கொள்வது நன்று. பாகியமைப்பின் பயன் படிக்கை வசதியும் பொருள் தெளிவுமாதலின், அப் பயன் கெடுமாறு பாகிகளை வரை கடந்து நீட்டுதல் தகாது.

ஒரு பாகியின் இடையில் மேற்கோட் செய்யுள் வருமாயின் அதைத் தனித்து வரைதல் வேண்டும். அஃதாவது, செய்யுள் வடிவு கெடாமல் புதுவரியில் தொடங்கி ஒவ்வோர் அடியையும் அல்லது அடிப்பகுதியையும் தனி வரியாய் வரைதல் வேண்டும் ஒரே அடி அல்லது அடிப்பகுதியாயின் பாகியொடு சேர்த்தும் வரையலாம்

இதுகாறும் கூறியவற்றின் தொகுப்பு:

பாகியமைப்புப்பற்றிய நெறிமுறைகள். 1. வலந்தள்ளித் தொடங்கல். 2. கருத்தொருமை

   3. கருத்தொழுங்கு.

   4. அளவு வேறுபாடு.

   5. மேற்கோட் செய்யுளின் தனிவரைவு என ஐந்து. (பாவாணர்- உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் பக்.43-45);

 பாகி4 pāki, பெ. (n.)

   ஊர்தியோட்டும் பெண்; a female rider.

     “கலைப்பாகி கொண்டுவளாய் நின்றாள்” (திவ்.பெரியாழ்.1,3,9);

     [பாகன் → பாகி]

 பாகி5 pāki, பெ. (n.)

   நாய்; dog (சா.அக.);

பாகிடு

பாகிடு1 pākiḍudal,    12. செ.குன்றாவி. (v.t.)

   பங்கிடுதல்; to divide, apportion.

 பாகிடு2 pākiḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   இரப்போர்க்கு ஈதல்; to give alms.

     “பாகிடுவான் சென்றேனை” (தேவா.54,4);

     [பாகு +இடு-,]

பாகினேயன்

பாகினேயன் pākiṉēyaṉ, பெ. (n.)

   உடன்பிறந்தாள் மகன்; sister’s son.

     “பாகினேயரான கீழையகத் தாழ்வார்” (கோயிலொ.95);

பாகியம்

பாகியம் pākiyam, பெ.(n.)

   1. புறம்பானது; that which is external.

     “பூசை பாகிய மாப்பியந் தரமென விரண்டாகும்” (சூதசங்.சிவமா.5,2);.

   2. மலங்கழிக்கை (இ.வ.);; evacuation.

த.வ.வெளிப்புறம்

     [Skt. {} → த. பாகியம்]

பாகியாங்கம்

பாகியாங்கம் pākiyāṅgam, பெ.(n.)

   புறவழி; the outer path.

     “பிரமத்தை யடைகிறதற்கு பாகியாங்க மென்றும் அந்தராங்கமென்று மிரண்டங்கங்களுண்டு” (வேதாந்தசா.26);.

த.வ.வெளிப்பாதை

     [Skt. {} → த. பாகியாங்கம்]

பாகீடு

 பாகீடு pāāṭu, பெ. (n.)

   பங்கிடுகை; share, portion, allotment.

     [பாகிடு → பாகீடு]

பாகீரதி

பாகீரதி pāāradi, பெ.(n.)

   கங்கை; the Ganges, the daughter of Bhagiratha.

     “பாகீரதி கிருபா சமுத்திர” (திருப்பு.மூன்றாம் பாகம்,996);.

     [Skt. {} → த. பாகீரதி]

பாகு

பாகு1 pāku, பெ. (n.)

   1. குழம்பான உணவு (திவா.);; any liquid food.

     “பொரிக்கறி பளிதம்பாகு புளிங்கறி” (பிரபுலிங். ஆரோகண.34);

   2. இளகக் காய்ச்சிய வெல்லம்; treale, molasses, sugar syrup.

     “ஞானக்

கரும்பின் தெளிவைப் பாகை” (திருவாச. 9,15);

   3. சருக்கரை (பிங்.);; coarse sugar, palm sugar.

   4. பால் (சூடா.);; milk.

   5. பாக்க; arecanut.

     “குற்றபாகு கொழிப்பவர்” (கம்பரா. நாட்டுப்.29);

   6. அடுப்பு (பரணி); என்னும் விண்மீன் (அக.நி.);; the second {nakSatrā.}

தெ. பாகு.

     [பகு → பாகு]

 பாகு2 pāku, பெ. (n.)

   1. பகுதி; share, portion, lot, division.

   2. இரப்பு; alms.

     “பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி” (தேவா.54,4);

   3. கரை; bank.

   4. சிலை (சத்தி); (அக.நி.);; Siva’s consort.

     [பகு → பாகு]

 பாகு3 pāku, பெ. (n.)

   1. பாகன் 1,2, பார்க்க;see pagan.

     “பாகு கழிந்தி யாங்கணும் பறைபட வரும் வேகயானை” (சிலப், 15,46);

   2. ஆள்வினை (நிருவாக);த் திறன்; art, ability.

     “போர்ப்பாகு தான்செய்து” (திவ்.திருவாய்.4,6,3);.

     [பாகன்1 → பாகு]

 பாகு4 pāku, பெ. (n.)

   கை; arm.

 பாகு5 pāku, பெ. (n.)

   அழகு; beauty, charm.

     “பாகாரிஞ்சிப் பொன்மதில்” (கம்பரா.ஊர்தே.82);.

தெ. பாகு.

     [பகு → பாகு]

 பாகு pāku, பெ.(n.)

   தலைப்பாகை; turban.

     “பத்துவராகன் பெறவோர் பாகீந்தான்” (விறலிவிடு.1008);.

     [U. {} → த. பாகு]

பாகுடக்கவி

பாகுடக்கவி pākuḍakkavi, பெ.(n.)

   காணிக்கையாகக் கொடுக்கும் பாட்டு (செந்.vi,335);; dedicatory poem.

     [Skt.{} → Pkt. {} → த. பாகுடக்கவி]

பாகுடம்

பாகுடம் pākuḍam, பெ. (n.)

   1. கையுறை; gift, present.

     “நரிப்படைக் கொரு பாகுடம் போலே” (திவ்.பெரியாழ்.4,5,8);

   2. அரசிறை (சங்.);; royal revenue, impost, tripute.

பிரா. {paada} க. பாவுட.

     [பாகு → பாகுடம்]

பாகுடி

பாகுடி pākuḍi, பெ. (n.)

   தொலைதூரம்; long distance.

     “பாகுடிப் பார்வற் கொக்கின்” (பதிற்றுப்.16);

     [பா → பாகுடி]

 பாகுடி pākuḍi, பெ.(n.)

   1. சேரநாட்டு உம்பாற் காட்டு மலைகளின் இடையிலிருந்த குறு நாட்டுப் பகுதி; a region in ancient Kerala mountain.

   2. அகப்பாகுடி பார்க்க;see agappakudi.

மறுவ அகப்பாகுடி.

க. பாகுடி

     [அகப்பாகுடி(மதில்குழ்ந்த குடியிருப்பு);-பாகுடி]

பாகுதம்

 பாகுதம் pākudam, பெ. (n.)

   கருஞ்சீரகம்; black cumin. (சா.அக.);

     [P]

பாகுபடு-தல்

பாகுபடு-தல் bākubaḍudal,    20. செ.கு.வி. பிரிவுபடுதல்; to be classified.

     “அவை இனைத்துப் பாகுபடுமென்றும்” (தொல். சொல்.427, சேனா);

     [பாகு + படு-,]

பாகுபடுத்து-தல்

பாகுபடுத்து-தல் bākubaḍuddudal, பெ. (n.)

   10. செ.கு.வி. வேறுபாடு தெரியும் வகையில் பிரித்தல்; classify, sort out, differntiate.

     “எதற்காக ஏழை பணக்காரன் என்று பாகுபடுத்திப் பேசுகிறாய்.”

     “மூளை, செய்திகளைப் பாகுபடுத்தி நம்மை உணரச் செய்கிறது.”

பாகுபதம்

 பாகுபதம் bākubadam, பெ.(n.)

   பாகுபக்குவம் (சா.அக.);; gummy states;a stage of thick consistence.

பாகுபந்து

 பாகுபந்து bākubandu, பெ. (n.)

   ஒரு சிற்றூர் நிலத்திலுள்ள கூட்டுரிமை; joint interest in the property of a village or persons associated family.

     [பாகம் + பந்து → பாகுபந்து]

பாகுபந்துமிராசு

 பாகுபந்துமிராசு bākubandumirācu, பெ. (n.)

   ஒரு குடும்பத்திலுள்ள உறுப்பினர்களுக்குண்டான நிலக் கூட்டுரிமை ; occupance of land in coparcenery especially by members of the same family.

     [பாகுபந்து. U. {miras} த. மிராசு]

பாகுபாடு

பாகுபாடு pākupāṭu, பெ. (n.)

   பிரிவுபடுகை; division/ {sub-division.} class/ (உம்.);

     “முன்னூற் பாற்பாடு பொருளுந்சைவப் பாகுபாடுணர்ந்து” (சிவரக.பாயிர.21.);

     [பாகுபடு → பாகுபாடு]

பாகுபிடித்தல்

பாகுபிடித்தல் bākubiḍittal, பெ. (n.)

   1. பாகு செய்து உருண்டை பிடித்தல்; to make a lump of jellied matter.

   2. தேன் ஊற்றி இளகியமாகச் செய்தல்; making into an electuary by adding honey-aconserve. (சா.அக.);

பாகுமுறிதல்

 பாகுமுறிதல் pākumuṟidal, பெ. (n.)

   பாகு பதம் தவறுதல்; failing in the preparation of a syrup by exceeding the stage. (சா.அக.);

     [பாகு + முறி]

பாகுளி

பாகுளி pākuḷi, பெ. (n.)

   கன்னி (புரட்டசி); மாதத்து நிறைநிலா நாள்; full moon in the month of {purattāši.}

     “அதைப் பாகுளி யென்று” (விநாயகபு.37,81);

பாகுவன்

 பாகுவன் pākuvaṉ, பெ. (n.)

   சமையற்காரன் (யாழ்.அக.);; cook.

     [பாகம் → பாகுவன்]

பாகுவலயம்

பாகுவலயம் pākuvalayam, பெ. (n.)

   தோள்வளை(S.I.I.ii, 163);; armlet.

     [வாகுவலயம் → பாகுவலயம்]

     [P]

பாகை

பாகை pākai, பெ. (n.)

   ஊர்; village, town.

     [பாகு → பாகம் → பாகை] மு.தா.104.

 பாகை2 pākai, பெ. (n.)

   1. பகுதி (சூடா.);; part. division, section.

   2. வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி (யாழ்.அக.);;   3. காலவளவு வகை; a division of time.

     [பாகு → பாகம் → பாகை] மு.தா.104.

 பாகை pākai, பெ. (n.)

   களிற்றின் உடலில் மதநீர் ஊறுமிடம்; the spot from which ichor flows in an elephant.

     “முகபாகை குதிபாய் கடாம்” (தக்கயாகப்.3);

     [பாகு → பாகை]

 பாகை4 pākai, பெ. (n.)

   கோணத்தை அளக்கப் பயன்படும் அலகு, வட்டத்தின் 360 சமபாகத்தில் ஒரு பாகம்; degree (to measure angles.);

     [பாகு → பாகை]

பாகைமானி

 பாகைமானி pākaimāṉi, பெ. (n.)

 protractor.

     [பாகை + மானி]

பாகையிடல்

 பாகையிடல் pākaiyiḍal, பெ. (n.)

   அளவிடல்; to graduate. (சா.அக.);

     [பாகை + இடல்]

பாகையிட்ட பாத்திரம்

 பாகையிட்ட பாத்திரம் pākaiyiṭṭapāttiram, பெ. (n.)

   அளவு குறித்த ஏனம்; graduated vessel. (சா.அக.);

     [பாகை + இட்ட + skt. {para)} த. பாத்திரம்]

பாகையெலும்பு

 பாகையெலும்பு pākaiyelumbu, பெ. (n.)

   ஒரு மூக்கெலும்பு; a nasal bone. (சா.அக.);

     [பாகை + எலும்பு]

பாக்கடிக்கும்நேரம்

 பாக்கடிக்கும்நேரம் pākkaḍikkumnēram, பெ. (n.)

பாக்குக்கடிக்கும் நேரம் பார்க்க;see {päkku-k-kadikkum-nēram} (சா.அக.);

     [பாக்குக்கடிக்கும் நேரம் → பாக்கடிக்கும் நேரம்]

பாக்கட்டிக்கப்பல்

 பாக்கட்டிக்கப்பல் pākkaṭṭikkappal, பெ. (n.)

   சிறு கப்பல் (தஞ்சை.மீனவ.);; small fishing boat.

     [பாய்கட்டிக்கப்பல் → பாக்கட்டிக்கப்பல்]

பாக்கட்டு-தல்

 பாக்கட்டு-தல் pākkaṭṭudal, செ.கு.வி.(v.i.)

   நெசவுப்பாவில் அற்ற இழையை இணைத்தல்; to join the broken threads of the warp (weav.);.

     [பா + கட்டு-,]

பாக்கன்

பாக்கன்1 pākkaṉ, பெ. (n.)

   செம்படவன்; fisherman.

 பாக்கன்2 pākkaṉ, பெ. (n.)

   1. பூனை (திவா.);; cat.

   2. காட்டுப்பூனை (பிங்.);; wild cat.

     [பா → பாக்கம்]

     [P]

பாக்கம்

பாக்கம்1 pākkam, பெ. (n.)

   1. நெய்தல் நிலத்தூர்; sea-side village.

     “கொழும்பல் குடிச் செழும் பாக்கத்து” (பட்டினப்.27);

   2. ஊர்; town village.

     “கட்கொண்டிக் குடிப் பாக்கத்து” (மதுரைக்.137);

   3. அரசனிருப்பு (பதிற்றுப்.13, 12,உரை.);; royal residence.

     [பகு-பக்கம் → பாக்கம்]

 பாக்கம்2 pākkam, பெ. (n.)

   சிறுமூட்டை; small bandle.

     “ஆமணக்கங்கொட்டை வண்டி ஒன்றுக்குக் காசு பத்தும் பொதி ஒன்றுக்குக் காசு அரையும் பாக்கம் ஒன்றுக்குக் காசு காலும்” (S.I.I.viii.232);

     [பொக்கம் → பாக்கம்]

பாக்கல்

பாக்கல் pākkal, பெ. (n.)

   பாவுகல் (யாழ்.அக.);; paving stones, slabs for flooring.

மறுவ. பரவுகல், பாக்கல்லு.

     [பா4 → பாக்கல்]

     [பாவுகல் → பாக்கல்]

பாக்களவு

 பாக்களவு pākkaḷavu, பெ. (n.)

   சிற்றளவு; an insignificant quantity.

     [பாக்கு + அளவு]

பாக்கழி

பாக்கழி1 pākkaḻi, பெ. (n.)

   மருத யாழ்த் திறன்களுள் ஒன்று (பிங்.);; a secondary melody type of marudam class.

     [ஒருகா:பாக்கம் → பாக்கழி]

 பாக்கழி2 pākkaḻi, பெ. (n.)

   நெசவு நூல்(இ.வ.);; yarn.

     [பா4 → பாக்கழி]

பாக்கானூல்

பாக்கானூல் pākkāṉūl, பெ. (n.)

   நெசவுப்பாவில் நெய்த பிறகு அச்சில் எஞ்சிய நூல்; surplus thread in weaver’s chain while putting it into the loom.

     [பா4 + கால்1 + நூல்]

பாக்கால்

 பாக்கால் pākkāl, பெ. (n.)

பாக்கானூல் பார்க்க;see {pāk-k-käntil}

ம. பாக்கால்.

பாக்கி

பாக்கி pākki, பெ.(n.)

   1. நிலுவை; balance, outstandings, arrears.

   2. மிச்சம்; remainder.

வங்கி, பாக்கிப் பணத்தைச் செலுத்துவோருக்கு மூன்று மாதம் காலக்கெடு விதித்துள்ளது. (உ.வ.);.

     [U. {} → த. பாக்கி]

பாக்கிகைபீது

 பாக்கிகைபீது pāggigaipītu, பெ.(n.)

   நிலுவைக் கணக்கு; statement or account of outstanding balances (R.F.);.

     [U. {} → த. பாக்கிகைபீது]

பாக்கிசாக்கி

பாக்கிசாக்கி pākkicākki, பெ.(n.)

   1. பாக்கி பார்க்க;see {}.

   2. குறைவு (கொசுறு); (இ.வ.);; extra quantity obtained into the bargain.

த.வ.மிச்சமீதி

     [U. {} → த. பாக்கிசாக்கி]

பாக்கிதார்

 பாக்கிதார் pākkitār, பெ.(n.)

   வரி முதலியன செலுத்தாதிருப்பவன்; revenue defaulter;one who is in arrears.

     [U. {} → த. பாக்கி → பக்திதார்]

பாக்கியசாலி

 பாக்கியசாலி pākkiyacāli, பெ. (n.)

   நல்வினையாளன்; fortunate, blessed person.

     [பாக்கியம் + சாலி]

 பாக்கியசாலி pākkiyacāli, பெ. (n.)

   நல்வினையாளன்; a lucky person.

த.வ. பேற்றாளன்

பாக்கியச்சீட்

 பாக்கியச்சீட் pākkiyaccīṭ, பெ. (n.)

   ஆகூழ்ச்சீட்டு; lottery.

     [பாக்கியம் + சீட்டு]

பாக்கியத்தானம்

பாக்கியத்தானம் pākkiyattāṉam, பெ. (n.)

   பிறப்போர இடத்திற்கு ஒன்பதாவதும் பாக்கியத்தைக் குறிப்பதுமான இடம்;     “குருத்தான பாகக்யித் தானவாதி” (வீமே.உள்.263);

     [பாக்கியம் + skt. ஸ்தானம் → த. தானம்]

பாக்கியம்

பாக்கியம் pākkiyam, பெ. (n.)

   1. நல்லூழ்; lot, destiny.

   2. நல்வினை; happy destiny, good fortune, acespicious fate.

     “அதனைப் பலரறியார்” (குறள்,1141);

   3. செல்வம்; prosperity, riches.

     “ஞாலமுடையார் பெறுகுவர் பாக்கியமே” (சிவப். பிர. சிவஞான. கலம்.51);

   4. பகல் 15 முழுத்தங்களுள் பதினைந்தாவது (விதான. குணாகுண-73, உரை.);; the 15th of the 15 divisions of day.

   5. பாக்கியத்தானம் (வீமே.உள்.263.); பார்க்க;see {pakkiya-ttānam.}

     [பாகு → பாக்கு=பகுதி.பாக்கு → பாக்கியம்] மு.தா.104.

     [பாக்கு என்னும் சொல்லை “bhag” என எடுத்தொலிப்பதனாலேயே அது வடசொற்போல் தோன்றுகிறது. இயம் என்பது ஒர் ஈறு ஒ.நோ. கண் → கண்ணியம் (மு.தா.); பண் → பண்ணியம்]

 பாக்கியம்2 pākkiyam, பெ. (n.)

   வடிநீர் (சங்.அக.);; decoction infusion.

     [பகு → (பாக்கு); → பாக்கியம்]

பாக்கியலட்சுமி

 பாக்கியலட்சுமி pākkiyalaṭcumi, பெ. (n.)

   திருமகள்; the Goddess of wealth of fortune.

     [பாக்கியம் + skt. lakshmi→ த. இலக்குமி. லட்சுமி]

பாக்கியவதி

 பாக்கியவதி pākkiyavadi, பெ. (n.)

   நிறைந்த செல்வமுடையவள்; fortunate, blessed woman;wealthy woman.

     [பாக்கியம் + skt. {Vati»} வதி]

பாக்கியவந்தன்

 பாக்கியவந்தன் pākkiyavandaṉ, பெ.. (n.)

பாக்கியவாளன் பார்க்க;see {päkkiyavälan}

     [பாக்கியம் + skt. vandar → த. வந்தன்]

பாக்கியவான்

 பாக்கியவான் pākkiyavāṉ, பெ. (n.)

பாக்கியவாளன் பார்க்க;see {pâkkiyavãlan.}

பாக்கியவாளன்

பாக்கியவாளன் pākkiyavāḷaṉ, பெ. (n.)

   நிறைந்த செல்வமுடையவன்; fortunate, blessed woman;wealthy man.

     “இப்பாடல் வல்லவர் பாக்கியவாளரே” (தேவா.866,11.);

     [பாக்கியம் + ஆளன்]

பாக்கியவீனம்

 பாக்கியவீனம் pākkiyavīṉam, பெ. (n.)

   போகூழ்; misfortune ill-luck, unhappiness.

     [பாக்கியம் + skt. hiam → த. ஈனம்]

பாக்கியாதிபதி

பாக்கியாதிபதி bākkiyādibadi, பெ. (n.)

பாக்கியத்துக்குரிய ஒன்பதாம் வீட்டுக்குடயவன் (வீமே.உள்.264.உரை); (Astrol);

 the lord of the ninth house from the ascendant.

     [பாக்கியம் + skt. atpathi → த. அதிபதி]

பாக்கியாநுகூலம்

 பாக்கியாநுகூலம் pākkiyānuālam, பெ. (n.)

   செல்வப் பேற்றுக்குப் பயன்தருவது (யாழ்.அக.);; that which conducive to prosprity.

     [பாக்கியம் + skt. {aanukú/am} → த.

அநுகூலம்]

பாக்கிலும்

 பாக்கிலும் pākkilum, இடை (part) பார்க்க, பார்க்க. (கொ.வ.) see {pārkka}

     [பார் → பார்கிலும்]

பாக்கிலை

 பாக்கிலை pākkilai, பெ. (n.)

   பாக்கு வெற்றிலை; areca-nut and betel leaf.

     “ஓயாது பாக்கிலை கொடுத்திடுவர் உற்றநாள் நான்காகிலோ” (குமரேச. சத.);

     [பாக்கு + இலை]

பாக்கு

பாக்கு1 pākku, பெ. (n.)

   1. அடைக்காய்; areca-nut.

     “பாக்கும் புணரார் பெரியாரகத்து” (ஆசாரக்.71);

   2. கமுகு; areca-palm.

     “பாக்குத்தோப்பு’

   3. பாக்குக்குப் மாற்றாகப் பயன்படும் பட்டையையுடைய ஒருவகைச் செடி; a hill shrub with yellow flowers having a bark that is used as a sucstitute for areca-nut.

     “பாக்காக இருந்த வரைக்கும் பையிலே இருந்தது- இப்போது தோப்பாகி விட்டது – நமக்கு அடங்குமா?”

     “பாக்குக் கொடுத்தால் பந்தலிலே என்ன அலுவல் (பழ.);

 பாக்கு2 pākku, பெ. (n.)

   1. எதிர்கால வினையெச்ச ஈறு; suffix of a verbal derivative, signifying purpose.

     “உண்பாக்குச் சென்றான்” (நன்.343);

   2. தொழிற்பெயரீறு; ending of a verbal noun.

     “கரப்பாக்கு;”வேபாக்க”. (குறள்.1127,1128);.

     [பாகு → பாக்கு] (செல்வி. 75 ஆனி. பக்.523.);

பாக்குக்கக்கல்

 பாக்குக்கக்கல் pākkukkakkal, பெ. (n.)

   துப்பிய வெற்றிலை பாக்கு எச்சில்; chewed betel spit out.

     [பாக்கு + கக்கல்]

பாக்குக்கடிக்கும்நேரம்

 பாக்குக்கடிக்கும்நேரம் pākkukkaḍikkumnēram, பெ. (n.)

   மிகக்குறுகிய காலம்; short scace of time.

     [பாக்கு + கடிக்கும் + நேரம்]

பாக்குக்கட்டு-தல்

 பாக்குக்கட்டு-தல் pākkukkaṭṭudal, செ.கு.வி. (v.i.)

   பாக்கை வைத்து விளையாடுதல்; to play with areca-nuts.

     [பாக்கு + கட்டு-,]

பாக்குக்கண்

 பாக்குக்கண் pākkukkaṇ, பெ. (n.)

   பாக்கின் கண்; eye of an areca-nut.

     [பாக்கு + கண்]

பாக்குக்கன்று

 பாக்குக்கன்று pākkukkaṉṟu, பெ. (n.)

   கழுகுப் பதியம்; young plant of areca-palm.

     [பாக்கு + கன்று]

பாக்குக்கல்

 பாக்குக்கல் pākkukkal, பெ. (n.)

   ஒரு வகை பாறைக்கல்; a kind of rock (சா.அக.);

     [பாக்கு + கண்]

பாக்குக்கொடு-த்தல்

பாக்குக்கொடு-த்தல் pākkukkoḍuttal,    4. செ.கு.வி (v.i.)

பாக்கு வைத்-தல் பார்க்க;see {pākku-Val-..}

     [பாக்கு + கொடு-,]

பாக்குச்சத்து

 பாக்குச்சத்து pākkuccattu, பெ. (n.)

   பாக்கினின்று உருவாக்கும் ஒரு சிவந்த பொருள்; a brown red colouring matter obtained from areca nuts, known as are cared.

மறுவ: காசுக்கட்டி.

     [பாக்கு+ skt. {Sattu} த. சத்து]

பாக்குச்சாரம்

பாக்குச்சாரம் pākkuccāram, பெ. (n.)

   1. வெற்றிலை பாக்கு மென்றதனால் உண்டாம் சாறு; juice of areca-nut, betel etc.,

   2. பாக்குத் தம்பலம் பார்க்க (யாழ்.அக.);;see {pākku-t-tambalam.}

   3. கழிச்சலையும், வாய்நீரையும் வடிக்கும் தன்மையானதும், நாடி நடையை மெதுவாக்கும் தன்மையதுமாகிய எண்ணெய்ப் பொருள்; an oily and volatilebasic substance obtainable from arecanut-lt is said to be a purgative and a sialogogue and to slow the pulse

   4. பாக்கை வேக வத்து அதனின்று வடிக்கும் சாரம்; essence of area nut derived by boiling it.

     [பாக்கு + சாரம்]

பாக்குச்சீவல்

 பாக்குச்சீவல் pākkuccīval, பெ. (n.)

   பாக்கு வெட்டியாற் சிவப்பட்ட பாக்குத் துகள்; arecanut parings.

     [பாக்கு + சீவல்]

பாக்குச்செதில்

 பாக்குச்செதில் pākkuccedil, பெ. (n.)

பாக்குச் சீவல் பார்க்க;see {pakku-c-cial}

     [பாக்கு + செதில்]

பாக்குச்செதிள்

 பாக்குச்செதிள் pākkuccediḷ, பெ. (n.)

பாக்குச் சீவல் பார்க்க;see {påkku-c-cival}

     [பாக்கு + செதிள்]

பாக்குச்செருகல்

 பாக்குச்செருகல் pāgguccerugal, பெ. (n.)

பாக்குச்செருக்கல் பார்க்க;see {pakku-CCerukkal}

     [பாக்கு + செருகல்]

பாக்குச்செருக்கல்

 பாக்குச்செருக்கல் pākkuccerukkal, பெ. (n.)

   தூய்மையற்ற பாக்கை உட்கொள்வதனால் உண்டாகும் மயக்கம்; dizziness caused by chewing rotten arecanuts.

     [பாக்கு + செருக்கல்]

பாக்குட்டிக் கப்பல்

 பாக்குட்டிக் கப்பல் pākkuṭṭikkappal, பெ. (n.)

   சிறு கப்பல்; small fishing ship.

     [பாய்கட்டிக்கப்பல் → பாக்குட்டிக் கப்பல்.]

     [P]

பாக்குணன்

 பாக்குணன் pākkuṇaṉ, பெ. (n.)

   ஆற்றும் மருந்து; healing medicine. (சா.அக.);

பாக்குத் தம்பலம்

 பாக்குத் தம்பலம் pākkuttambalam, பெ. (n.)

   மென்று வெளியில் துப்பப்பட்ட வெற்றிலை பாக்கு; chewed betel spit out.

     [பாக்கு + தம்பலம்]

பாக்குத்துவை-த்தல்

பாக்குத்துவை-த்தல் pākkuttuvaittal,    4. செ.கு.வி. (v.i.)

   மெல்லுதற்குத் தகுதியாகப் பாக்குரலில் வெற்றிலைப் பாக்கை இடித்தல்; to pound together areca-nut, betel, etc. in a small mortar.

     [பாக்கு + துவை-,]

பாக்குப்பட்டை

பாக்குப்பட்டை pākkuppaṭṭai, பெ. (n.)

   1.கமுகமட்டையின் விரிந்த அடிப்பாகம்; lower part of the leaf stalk of the arca-palm.

   2. செடிவகை; johnswort {kodaikkânal} shrub.

     [பாக்கு + பட்டை]

பாக்குப்பனை

 பாக்குப்பனை pākkuppaṉai, பெ. (n.)

   பாக்குமரம்; arecapalm. (சா.அக.);

     [பாக்கு + பனை]

     [P]

பாக்குப்பறித்தல்

 பாக்குப்பறித்தல் pākkuppaṟittal, பெ. (n.)

   மணமகளைக் காதலித்த மற்றொருவன் மணமகன் முதலியோரை அவமதிக்க, திருமண வீட்டில் மணமகனைச் சேர்ந்தவர் வைத்திருக்கும் தம்பலத்தை வலியப் பிடுங்குகை; snatching of the betel-nut from the bridegroom’s party by his rival at the bride’s house, deemed an insult.

     [பாக்கு + பறித்தல்]

பாக்குப்பாளை

 பாக்குப்பாளை pākkuppāḷai, பெ. (n.)

   பாக்கு மரத்தில் பூவைக் கொண்டிருக்கும் மடல்; flower sheath or spathe of the areca-palm.

     [பாக்கு + பாளை]

பாக்குப்பிடி-த்தல்

பாக்குப்பிடி-த்தல் pākkuppiḍittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   1. பிறனுக்குத்தீங் குண்டாம்படிச் சூழ்ச்சி செய்தல்; to contrive to entangle another in some danger.

     “அவனைப் பாக்குப் பிடிக்கிறான்”

   2. குறைத்து விடுதல்; to diminish, encroach upon.

     “கூலியைப் பாக்குப் பிடிக்கக் கூடும்”(பாக்கை வெட்டுவதற்குப் பாக்கு வெட்டியின் வாயில் வைத்துப் பிடி);.

     [பாக்கு + பிடி-,]

பாக்குப்பிளவு

பாக்குப்பிளவு pākkuppiḷavu, பெ. (n.)

   1. பாக்குத் துண்டு; slice of areca-nut.

   2. பாதியாக வெட்டப்பட்ட பாக்கு; sized areca-nut.

     [பாக்கு + பிளவு]

பாக்குப்பை

 பாக்குப்பை pākkuppai, பெ. (n.)

   வெற்றிலைபாக்கு இடும் பை; betel pouch.

     [பாக்கு + பை]

பாக்குப்போல்சீவல்

 பாக்குப்போல்சீவல் pākkuppōlcīval, பெ. (n.)

   பாக்கைச் சீவுமாறு போலச் சீவுதல்; to slice the arecanut.

     [பாக்குப்போல் + சீவுதல்]

பாக்குமட்டை

பாக்குமட்டை pākkumaṭṭai, பெ. (n.)

   1. பாக்கு மரத்தில் உண்டாகும் மட்டை; the leaf-stalk of the areca-palm.

   2. பாக்குப் பட்டை;see {pākku-p-pattai.}

     ‘பாக்கு மட்டையினால் பயன்கொளும்பொருட்கள் செய்து பயன்படுத்துதல் சுற்றுப்புறச் சூழலுக்கு நல்லது’.

     [பாக்கு + மட்டை]

பாக்குமரம்

 பாக்குமரம் pākkumaram, பெ. (n.)

   கமுகமரம்; area nut tree.

     [பாக்கு + மரம்]

     [P]

பாக்குரற்கல்

 பாக்குரற்கல் pākkuraṟkal, பெ. (n.)

பாக்குரல் பார்க்க;see {pākkura}

     [பாக்கு + உரல் + கல்]

     [P]

பாக்குரல்

 பாக்குரல் pākkural, பெ. (n.)

   தம்பலமிடிக்கும் கையுரல்; small mortar in which betel and areca-nut are mashed.

     [பாக்கு + உரல்]

பாக்குறடு

 பாக்குறடு pākkuṟaḍu, பெ. (n.)

   பாதக்குறடு என்னும் சொல்லின் மறு வடிவம்; corr. of பாதக்குறடு.

     [பாதக்குறடு → பாக்குறடு]

பாக்குறண்டி

 பாக்குறண்டி pākkuṟaṇṭi, பெ. (n.)

   பால்குறண்டி என்னும் மூலிகை வகை; milk kurandi. (சா.அக.);

மறுவ. காய்க்குறண்டி, பாற்குறண்டி.

பாக்குவெட்டல்

 பாக்குவெட்டல் pākkuveṭṭal, பெ. (n.)

   பாக்குத் துண்டு; slice of areca-nut.

     [பாக்கு + வெட்டல்]

பாக்குவெட்டி

பாக்குவெட்டி pākkuveṭṭi, பெ. (n.)

   பாக்குச் சீவுங்கருவி; nut-crackers for slicing areca-nuts.

     “பதமாயிருந்த பாக்குவெட்டி” (தனிப்பா.1,273,14);

     [பாக்கு வெட்டி]

     ‘ஆலங்குடி பாக்குவெட்டி பெயர் பெற்றது.

     [P]

பாக்குவெட்டிக் கீரை

 பாக்குவெட்டிக் கீரை pākkuveṭṭikārai, பெ. (n.)

   பாக்கு வெட்டியைப் போல் இலை பிரிந்த கீரை; a kind of greans the leaves of which is split into {two} parts just like the pince rs. (சா.அக.);

     [பாக்குவெட்டி + கீரை]

பாக்குவெட்டியைக்காணோமே

பாக்குவெட்டியைக்காணோமே pākkuveṭṭiyaikkāṇōmē, பெ. (n.)

   பெண்கள் விளையாட்டு வகை; a kind of game for girls.

பாக்குவெட்டியைக் காணோமே என்று சொல்லித் தொடங்கும் விளையாட்டு. அச்சொல்லையே பெயராகக் கொண்டது, இது வடகொங்கு நாட்டில்

     “பருப்புச் சட்டி” எனப்படும்.

ஆடுவார்தொகை :

பொதுவாக அறுவர்க்குக் குறையாத பலர் இதை ஆடுவர்.

ஆடிடம் :

ஊர்ப் பொட்டல்.

ஆடுமுறை :

தலைமையான இது பெதும்பையார் (எட்டு அகவை முதல் 11 அகவை வரையுள்ள பெண் பெதும்பை);. அண்ணாவியார் போல் எதிரெதிர் நின்று கொள்வர். அவருள் ஒருத்தியின் பின்னால் ஏனைச் சிறுமியரெல்லாரும் ஒருத்தி அரையாடையை இன்னொருத்தி பற்றிக் கொண்டு வரிசையாய் நிற்பர். இன்னொருத்தி அவ்வரிசைக்கு எதிர்நின்று மறுக்காட்டி வலமும் இடமும் சுற்றிச் சென்று, வரிசையாய் நிற்கும் சிறுமியருள் அண்ணாவியொழிந்த பிறருள் ஒருத்தியை அல்லது பலரைத் தொடமுயல்வாள். அவள் வலஞ் செல்லும் போது இடமும் இடஞ் செல்லும்போது வலமுமாக வரிசையாக நிற்குஞ் சிறுமியர் வளைந்து வளைந்து இயங்குவர். தொடப்பட்ட பெண் நீங்கிவிட வேண்டும். இங்ஙனம் அண்ணாவியொழிந்த எல்லாப் பெண்களும் தொடப்படும் வரை ஆட்டுத் தொடரலாம்.

ஓர் ஆட்டை முடிந்த பின், மறுமுறையும் முன்போன்றே ஆடப்பெறும்.

ஆட்டு (ஆட்டம்); நிகழும் போது, தனித்து நிற்பவளும் வரிசை முதல்வியுமான அண்ணாவியர் இருவரும், பின்வருமாறு பாட்டுப் பாடி நெடுகலும் உறழ்ந்துரைப்பர். பாட்டு முடிந்தவுடன் திருப்பப்படும்.

பாண்டி நாட்டுப் பாட்டு.

   1. த. பாக்கு வெட்டியைக் காணோமே

வ. தேடி ஒடிப் பிடித்துக்கொள்

   2. த. வெற்றிலைப் பெட்டியைக் காணோமே

வ. தேடி ஒடிப் பிடித்துக்கொள்.

   3. த. ஆடு கிடக்கிற கிடையைப் பார்

வ. ஆட்டுப் பிழுக்கையைத் துர்த்துப்பார்.

   4. த. குட்டி கிடக்கிற கிடையைப் பார்

குட்டிப் பிழுக்கையைத் துர்த்துப்பார்.

   5. த. பல்லே வலிக்குதே

வ. நெல்லைக் கொறித்துக் கொள்.

கொங்குநாட்டுப் பாட்டு

   1. த. பருப்புச்சட்டி

. வ. திருப்பி நக்கு

   2. வாழை யிலை

வ.ழித்து நக்கு

   3. ஊசியால குத்துவேன்

வ. வீட்டுமேல ஏறுவேன்

   4. கிணற்றிலே குதிப்பேன்

வ. கல்லெடுத்துப் போடுவேன்

   5. தலையே நோகுதே

வ, தலையணை போட்டுக் கொள்.

பாக்குவெட்டு

 பாக்குவெட்டு pākkuveṭṭu, பெ. (n.)

   பாக்கு; areca nut.

     “ஒரு பாக்குவெட்டு கொடு” (உ.வ.);

     [பாக்கு + வெட்டு]

பாக்குவெற்றிலக் கூட்டு

 பாக்குவெற்றிலக் கூட்டு pākkuveṟṟilakāṭṭu, பெ. (n.)

   நறுமணச் சரக்குக் கலந்த பாக்குத்தூள்; spices mixed with chopped areca-nuts, used in chewing betel.

     [பாக்கு + வெற்றிலை + கூட்டு]

பாக்குவெற்றிலை

 பாக்குவெற்றிலை pākkuveṟṟilai, பெ. (n.)

   தாம்பலம்; areca-nut and betel.

     [பாக்கு + வெற்றிலை]

பாக்குவை

பாக்குவை1 pākkuvaittal,    4. செ.கு.வி. (v.i.)

   வெற்றிலைபாக்கு வைத்துத் திருமணத்திற்கு அழைத்தல்; to invite persons to a wedding, presenting areca-nut and betel.

     [பாக்கு + வை-,]

 பாக்குவை2 pākkuvaittal,    4. செ.கு.வி.

   இசை நிகழ்ச்சி, நாடகநிகழ்ச்சி முதலியன நடத்துவோர்க்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வோர் முன்னதாக வெற்றிலைப்பாக்கு வைத்துக்கொடுத்து நிகழ்ச்சியை உறுதி செய்தல்; conformation between artists and programmers by the betel nut.

     [பாக்கு + வை-,]

 பாக்குவை3 pākkuvaittal,    18. செ.குன்றாவி. (v.t.)

பாக்குப் பிடி-, பார்க்க;see {päkku-p-pid-.}

     [பாக்கு + வை-,]

பாக்கை

பாக்கை pākkai, பெ. (n.)

பாக்கம், 1,2 பார்க்க;see {pākkam} 1,2.

     “நென்னலிப் பாக்கை வந்து” (பதினொ.திருவே.திருவந்.74);

     [பாக்கு → பாக்கை] (வ.மொ.வ.192);

பாங்க

பாங்க pāṅga, பெ. (n.)

   பலண்டுறுகச் செய்ந்நஞ்சு; one of the 32 kinds of native arsenices, as contemplated in Tamil Siddha medicine. (சா.அக.);

பாங்கனகம்

 பாங்கனகம் pāṅgaṉagam, பெ. (n.)

   பனைச் சருக்கரை; palmyra sugar. (சா.அக.);

பாங்கன்

பாங்கன் pāṅgaṉ, பெ. (n.)

   1. தோழன்; friend,associate, companion.

     “பாங்க னிமித்தம் பன்னிரண் டென்ப” (தொல்.பொ.104);

   2. கணவன்; husband.

     “பொருள்வயிற் பாங்கனார் சென்ற நெறி” (நாலடி,400);

ம. பாங்ங்ன்

     [பாக்கு → பாங்கு → பாங்கர். பாங்கு → பாங்கன்] மு.தா.104.

ஒ.நோ. ME. OF. St. Paggis & page.

பாங்கயம்

பாங்கயம் pāṅgayam, பெ. (n.)

   1. ஆகாய கருடன்; sky root, snake caper.

   2. வெற்றிலைப்பாக்கு; betel leaf and nut. (சா.அக.);

பாங்கர்

பாங்கர்1 pāṅgar, பெ. (n.)

   1. இடம்; place, location.

     “பல்லியும் பட்ட பாங்கர்” (சீவக.1909);

   2. பக்கம்; side, neighbourhood.

     “அதற்குப் பாங்கர் மன்னுபூங் கோயிலாக்கி” (தணிகைப்பு. அகத்.166);

     “ஈசன் பாங்கரந்தரியங்கில்லாமல்” (சிவரக. நந்திகண.5.);

   3. பாங்க்ர்க்கொடி; a climber.

     “பாங்கரும் முல்லையும்” (கலித்.111);

     “குல்லையும் குருந்துங் கோடலும் பாங்கரும்” (கலித்103-3);

     [பாக்கு → பாங்கு1 → பாங்கர்] மு.தா.104.

 பாங்கர்2 pāṅgar, பெ. (n.)

   உகாமரம்; tooth brush tree.

     “பாங்கர் மராஆம்பல் பூந்தணக்கம்” (குறிஞ்சிப்.85);

     [பாங்கு → பாங்கர்]

பாங்கற்கூட்டம்

பாங்கற்கூட்டம்2 pāṅgaṟāṭṭam, பெ. (n.)

   தோழனது உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை (திருக்கோ.);;     “இடந்தலைப்பாடு –பாங்கற்கூட்டம்” (அகப்.கள..5.);

     [பாங்கன் + கூட்டம்]

பாங்கல்

 பாங்கல் pāṅgal, பெ. (n.)

   வேங்கைமரம்; kino tree. (சா.அக.);

பாங்கா

 பாங்கா pāṅgā, பெ.(n.)

   வாங்கா என்ற ஊதுகொம்பு (அபி.சிந்.);; a kind of bugle-horn.

     [U. {} → த. பாங்கா]

பாங்காக்கெண்டை

 பாங்காக்கெண்டை pāṅgākkeṇṭai, பெ. (n.)

   ஒரு வகைக்கெண்டை மீன்; bangkok strain.

பாங்கானவன்

 பாங்கானவன் pāṅgāṉavaṉ, பெ. (n.)

   மதிப்புரவுள்ளவன்; man of polite address and пnammers.

     [பாங்கு → பாங்கானவன்]

பாங்காலி

 பாங்காலி pāṅgāli, பெ. (n.)

   ஒரு வகை மரம்; burma iron wood tree. (சா.அக.);

பாங்கி

பாங்கி pāṅgi, பெ. (n.)

   தலைவியின் தோழி; female companion of a heroine, lady’s maid.

     “பாங்கற்கூட்டம் பாங்கியிற் கூட்டம்” (நம்பியகப்.அகத்.27.);

     “பாங்கியர் மருங்குகுழ” (பொரியபு. தடுத்தாட்.); fem. of பாங்கன்.

     [பாங்கன் → பாங்கி]

செல்வி. ’75 ஆனி. பக். 534.

பாங்கிச் சிலைநிறம்

 பாங்கிச் சிலைநிறம் pāṅgiccilainiṟam, பெ. (n.)

   மாங்கிடச்சிலை; a kind of mineral stone mentioned in the Tamil Siddha medicine. (சா.அக.);

பாங்கினம்

பாங்கினம் pāṅgiṉam, பெ. (n.)

   ஆயம்; suite, company.

     “யாங்கணுந் திரிவோள் பாங்கினங் காணாள்” (மணிமே.8,35);.

     [பாங்கு1 → பாங்கினம்]

பாங்கிமதிவுடம்பாடு

பாங்கிமதிவுடம்பாடு pāṅgimadivuḍambāḍu, பெ. (n.)

   பாங்கி தலைவி வேறுபாட்டைக் கண்டு புணர்ச்சியினுண்மையறிந்து ஆராய்ந்து தன்மதியுடம்படுதல்;   என்னும் துறை; a theme in love poetry.

     [பாங்கி + மதி + உடன்பாடு]

     “முன்னுறவுணர்தல் குறையுற வுணர்த லிருவருமுன் வழியவன் வரவுணர்தலென் – றொரு மூன்று வகைத்தே பாங்கி மதி யுடம்பாடு” (அகப். கள.22);

பாங்கியிற்கூட்டம்

பாங்கியிற்கூட்டம் pāṅgiyiṟāṭṭam, பெ. (n.)

   தோழியின் உதவியால் தலைவியைத் தலைவன் குறியிடத்துக் கூடுகை;     [பாங்கி1 + இன் + கூட்டம்]

பாங்கிற்கூட்டல்

பாங்கிற்கூட்டல் pāṅgiṟāṭṭal, பெ. (n.)

   தலைவன் தலைவியை ஆயத்துச் செலுத்தல்;(வாண.42.முகம்);; to send the heroine with her companions.

     [பாங்கு → பாங்கில் + கூட்டல்]

     ‘இன்’ உருபு கருவிப்பொருள் உணர்த் திற்று

பாங்கீலி

 பாங்கீலி pāṅāli, பெ. (n.)

   கீலி மீன் வகையுள் ஒன்று (முகவை.மீனவ.);; a kind of sea-fish.

     [P]

பாங்கு

பாங்கு1 pāṅgu, பெ. (n.)

   1. பக்கம்; side, neighbourhood.

     “காடுகொண்டலர்ந்த பாங்கெலாம்” (சூயா.நாட்.2);

   2. இடம்; place, location.

     “பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்” (மணிமே.1,61);

   3. ஒப்பு; equality, likeness.

     “பாங்கருஞ் சிறப்பின்” (தொல்.பொ.78);

   4. நன்மை; goodness.

     “பாங்கலா நெறி” (வாயுசங்.இருடி.பிரம.11);

   5. அழகு; beauty, fairness, neatness.

     “பாங்குறக்கூடும் பதி” (பு.வெ.9,51.கொளு);

   6. தகுதி; agreeableness.

     “பாங்குற வுணர்தல்” (தொல்.சொல்.396);

   7. உடல்நலம்; health.

     “திருமேனி பாங்கா?”

   8. இயல்பு; nature, propriety.

   9. ஒழுக்கம்; gentility, politeness.

பாங்குடையீர்” (திருவாச.7,3);

   10. தோழமை; companionship.

     “நீயும் பாங்கல்லை” (திவ்.திருவாய்.5,4,2);

   11. துணையானவ-ன்-ள்; companion.

     “வேல் விடலை பாங்கா” (திணைமாலை.89);

   12. இணக்கம்; accommodation, conciliation.

     “நின்னொடு பாங்கலா மன்னர்” (இலக்.வி. 611,உதா);

   13. துணையாதல்; partisanship, interest, favour.

     “வேந்தன் ஒருவர்க்குப் பாங்குபடினும் தாந்தாமொருவர்கட்பாங்கு படாதோர்” (யாப்.வி.96, பக்.515);

   14. விதி; means.

     “கடன் தீர்ப்பதற்கு என் கையில் பாங்கில்லை” (நாஞ்.);

க. பாங்கு. ம. பாங்ஙு

     [பாக்கு → பாங்கு] ஒ.நோ: போக்கு → போங்கு

 பாங்கு2 pāṅgu, பெ. (n.)

தொழுகை நடத்து மிடம்;(இசுலா.);

 cell for prayer.

 பாங்கு3 pāṅgu, செ.கு.வி. (v.i.)

   1. (செயலைச் செய்யும்); முறை, வகை; way, manner (of doing 5th);

     “அவர் விருந்தோம்பும் பாங்கே தனி”,

     “கழக காலப் பாடல்களில் இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாங்கு சிறப்பானது”

   2. பக்குவம், நயம்; grace, tact.

     “பாங்காகப் பேசிச் செயலை முடித்துவிடு”. பாட்டரங்கம் பாங்காக இருந்தது.

   3. உரிய தன்ம நிறைந்தது; characteristic features, features (appropriate to Sth);

     “மணல் பாங்கான நிலம்”

     “குடும்பப் பாங்கான கதையுள்ள திரைப்படம்”.

     “கட்டுரை இன்னும் சிறிது திறனாய்வுப் பாங்குடன் இருந்திருக்கலாம்.”

     [பங்கு → பாங்கு] வ.மொ.வ.193.

 பாங்கு4 pāṅgu, பெ. (n.)

   1. உரிமை;  rights (சூ.நிக.);

   2. உறவு (சிந்தாமணி. 651.);; relationship.

   3. நற்குணம்; good habit.

     “பாங்கினானிங் கலாகாப் பதஞ்சலி யென்னு நாமந்தாங்கி”. (கோயிற்பு.பதஞ்சலி.பிரு);.

   4. பக்கம்; side, neighbourhood.

     “பாங்கோடிச் சிலை வளைத்து”. (பெரியபு.தடுத்.140);.

   5. வாங்கு பார்க்க;see {wigய}

     “நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கின் தேற்றும்” (நற்.246-2);

     “பனித்துறைப் பகன்றைப் பங்குடைத் தெரியல்” (பதிற்று.76-12);

     “பல்லியும் பாங்கெனத் திசைத்தன” (கலி.11-21);

     “பற்றினின் பாங்கினியது இல்” (இனி.நா.26-4);

     “பாங்கத்துப் பல்லி படும்” (ஐந்.எழு.41-4);

     “பாங்கினிற் பாடியோர் பண்ணுப் பெயர்த்தாள்” (சிலப்.7-47-4);

     ‘பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும்” (மணி.பரி.40);

     [பங்கு → பாங்கு] வ.மொ.வ.193

பாங்கு தூக்கிவை-த்தல்

 பாங்கு தூக்கிவை-த்தல் pāṅgutūkkivaittal, செ.கு.வி. (v.i.)

   வயலில் ஆட்டுக்கிடை வைப்பதற்கு முன் விரியோலை முதலியவற்றை வயலில் அமைத்தல்(நாஞ்.);; to put up hut, etc, as a preliminary to the penning of sheep for manuring of field.

பாங்கு பண்ணு-தல்

பாங்கு பண்ணு-தல் bāṅgubaṇṇudal,    5. செ.கு.வி. (v.i.)

   நேர்த்தியாக அணிதல்; to dress neatly.

     [பாங்கு1 + பண்ணு-,]

பாங்கு பரிசனை

 பாங்கு பரிசனை bāṅgubarisaṉai, பெ. (n.)

   நன்னடை; good manners, gentle dress and behaviour.

     [பாங்கு + பரிசு → பரிசனை]

பாங்கு பாவனை

 பாங்கு பாவனை pāṅgupāvaṉai, பெ. (n.)

பாங்கு பரிசன பார்க்க;see {paigயparišanai}

     [பாங்கு + skt.{ bhāvanā»} த. பாவனை]

பாங்கு பிரி-த்தல்

பாங்கு பிரி-த்தல் bāṅgubirittal,    4. செ. குன்றாவி. (v.t.)

   கிடை வைத்தபின் ஒவ்வொருவருக்குரிய ஆடுகளைத் தனித்தனியாய்ப் பிரித்தல்; to divide the respective sheep of shepherds who have jointly penned them up for manuring a field.

     [பங்குபிரி → பாங்குபரி]

பாங்குதிரி-த்தல்

 பாங்குதிரி-த்தல் pāṅgudiriddal, செ.குன்றாவி. (v.t.)

பாங்குயிரி (நாஞ்.);. பார்க்க;see {paigupiri,}

பாங்கு + பிரி → பாங்குபிரி-,

பாங்குநெல்

பாங்குநெல் pāṅgunel, பெ. (n.)

   நெல்வகை (விவசா.2);; a kind of paddy.

பாங்குமம்

 பாங்குமம் pāṅgumam, பெ. (n.)

   கருஞ்சீரகம்; black cumin. (சா.அக.);.

மறுவ: பாங்குதம்

     [பாங்கு → பாங்குமம்]

     [P]

பாங்கெடுத்துவை-த்தல்

பாங்கெடுத்துவை-த்தல் pāṅgeḍuttuvaittal,    4. செ.கு.வி. (v.i.)

பாங்குதூக்கி வை (நாஞ்); பார்க்க;see {pāriguttikkiwai}

     [பங்கெடுத்துவை → பாங்கெடுத்துவை]

பாங்கோர்

பாங்கோர் pāṅār, பெ. (n.)

   நட்பினர்; friends.

     “பாங்கோர் பாங்கினும்” (தொல்.பொ.41);

     [பாங்கு + பாங்கோர்]

பாசகன்

பாசகன் pācagaṉ, பெ. (n.)

   சமையற்காரன் (பதிற்றுப்.67, 16, அரும்.);; cook.

பாசகம்

பாசகம்1 pācagam, பெ. (n.)

   இரைப்பைக்கும் சிறுகுடற்கும் நடுவில் இருப்பதும், செரிமானத்திற்குச் கரணியமாக இருப்பதும், உடலுக்கு வெப்பத்தை தந்து உணவுச் சாரத்தை மற்ற கழிந்த உணவினின்றும் பிரித்து உடம்பிற்கு ஊட்டத்தைக் கொடுப்பதாகவும் உள்ள மூலநெருப்பு (மூலாக்கினி);; gastric fire which is situated between the stomach and the small intestines which are the seats of fire of digestion. It assists digestion and imparts heat to the whole body and separates the nourishing juice (chyle); from other excrementitious substances (dejecta); (சா.அக.);

 பாசகம்2 pācagam, பெ. (n.)

   1. சீரகம்; seed.

   2. பெருங்கொம்மட்டி; cucumis colocynthis. (சா.அக.);

 பாசகம்3 pācagam, பெ. (n.)

   வகுக்குமெண்; divisor.

     [பாகசம் → பாசகம்.]

பாசகரன்

 பாசகரன் pācagaraṉ, பெ. (n.)

   பாசத்தைக் கையிலுடைய கூற்றுவன் (யாழ்.அக.);; yama, as holding the noose of death in his hand.

     [பாசம் + skt. kara→ த. கரன்]

பாசகி

 பாசகி pācagi, பெ. (n.)

   வெற்றிலை; betel leaf. (சா.அக.);

பாசகுசுமம்

பாசகுசுமம் pāsagusumam, பெ. (n.)

   இலவங்கம்(தைலவ. தைல64);; clove tree.

மறுவ. கிராம்பு

பாசக்கட்டு

 பாசக்கட்டு pācakkaṭṭu, பெ. (n.)

   பிறப்பிற்குக் காரணமான உயிர்த்தொடர்பு; the bondage of the soul resulting in births.

     [பாசம் + கட்டு]

பாசக்கயிறு

 பாசக்கயிறு pācakkayiṟu, பெ. (n.)

   சுருக்குக் கயிறு; rope with a noose, a weapon of yama.

     [பாசம் + கயிறு]

     [P]

பாசசாலம்

 பாசசாலம் pācacālam, பெ. (n.)

   உயிர்களின் பாசத்தொகுதி; the innumerable entangements of the soul.

     [பாசம் + skt. {Alam)} த. சாலம்]

பாசஞானம்

பாசஞானம் pācañāṉam, பெ. (n.)

   1. சொல்லாலும் மனத்தாலும் கலைகளின் அறிவாலும் அறியும் அறிவு;   2. அறியாமை; spiritual ignorance.

     [பாசம் + skt {gnanam} த.ஞானம்]

பாசடகு

பாசடகு pācaḍagu, பெ. (n.)

   பசியகீரைவகை; a kind of edible green.

     “பாசடகு மிசையார் பனிநீர் மூழ்காரீ (புறநா.62-14);

பாசடம்

 பாசடம் pācaḍam, பெ. (n.)

   வெற்றிலை; betel leaf.

     [பாசடை → பாசடம்]

     [P]

பாசடும்பு

பாசடும்பு pācaḍumbu, பெ. (n.)

   பசிய அடம்பு என்னும் படர்கொடி; hare leaf.

     “ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு” (ஐங்குறு.101-2);

     “ஆய்கொடிப் பாசடும்பு அரிய ஊர்பிழிபு” (அகநா.330-14);

     [பசுமை + அடம்பு → அடும்பு]

பாசடை

பாசடை pācaḍai, பெ. (n.)

   பசியஇலை; green leaf.

     “பாசடை நிவந்த கணைக்கா னெய்தல்” (குறுந்.9);

     “வள்ளுகிர் கிழிந்த வடுவாழ் பாசடை” (சிறுபாண்.182);

     “நெய்தற் பாசடை புரையும் அஞ்செலி” (நற். 47-3);

     “களிற்றுச் செவி யன்ன பாசடை மயக்கி” (குறுந்.246-2);

     “பாசடை நிவந்த பனிமலர்க் குவளை” (ஐங்குறு.225-2);

பாசண்டச்சாத்தன்

பாசண்டச்சாத்தன் pācaṇṭaccāttaṉ, பெ.(n.)

சமய நூல்களில் வல்லவரான ஐயனார். (சிலப்.9,15.);;{},

 a deity versed in treatises on heretical religions.

த.வ. ஐயனார்

     [Skf. {} → த. பாசண்டம்+சாத்தன்]

பாசண்டன்

பாசண்டன் pācaṇṭaṉ, பெ.(n.)

   1. புறச்சமயி; heretic.

     “பாசண்டர் நவிற்று வாக்கியத்தில்”(விநாயகபு.83,77);.

   2. சமய ஒழுக்கங்களைக் கெடுப்பவன் (இ.வ.);; person of heterodox conduct.

     [Skt. {} → த. பாசண்டம்]

பாசண்டமூடம்

 பாசண்டமூடம் pācaṇṭamūṭam, பெ.(n.)

பாசண்டிமூடம் (வின்.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. பாசண்டம்]

பாசண்டம்

பாசண்டம் pācaṇṭam, பெ.(n.)

   1. புறச்சமயக் கொள்கை; heresy, non-conformity to the orthodox doctrines of religion.

   2. தொண்ணூற்றாறு வகைச் சமய நூற் கோவை. (சிலப்.9,15.);; doctrines relating to 96 heretic sects.

     [Skt. {} → த. பாசண்டம்]

பாசண்டி

பாசண்டி pācaṇṭi, பெ.(n.)

   பாசண்டன் பார்க்க;{}.

     “பழுதாகும் பாசண்டியார்க்கு” (அறநெறி.17);.

     [Skt. {} → த. பாசண்டம்]

பாசண்டிமூடம்

பாசண்டிமூடம் pācaṇṭimūṭam, பெ.(n.)

   புறச்சமயத்தினரைப் போற்றும் மடமை;     “பாசண்டி மூடமாய்… நாட்டப்படும்” (அறநெறி.16);.

     [Skt. {} → த. பாசண்டி]

பாசதரன்

பாசதரன் pācadaraṉ, பெ. (n.)

   1. பாசக்கயிற்றைக் கையிலுடைய காலன்; one holding the noose. yama.

   2. வருணன் varuna.

     [பாசம் + skt. dharan→ த. தரன்]

பாசத்தன்

 பாசத்தன் pācattaṉ, பெ. (n.)

பாசதரன் பார்க்க;see, {pāsataran}

     [பாசம் + அத்து + அன்]

பாசத்தளை

பாசத்தளை pācattaḷai, பெ. (n.)

பாசக்கட்டு பார்க்க;see {pāša-k-kattu.}

     “பற்றென்னும் பாசத்தளையும்” (திரிகடு. 22.);

     [பாசம் + தளை]

பாசந்தி

 பாசந்தி pācandi, பெ.(n.)

   சுண்டக் காய்ச்சிய பாலில் படியும் பாலாடையுடன், சருக்கரை சேர்த்துக் குளிரவைத்து உண்ணும் இனிப்பு வகை; thick cream of milk with sugar (served cold);.

த.வ.பாலாடை இனிகம்

பாசன பேதி

 பாசன பேதி pācaṉapēti, பெ. (n.)

   செப்பு நெரிஞ்சில்; a thistle with a red flower. (சா.அக.);

     [பாசநவேதி → பாசனபேதி]

பாசனக்கால்

 பாசனக்கால் pācaṉakkāl, பெ. (n.)

   நிலங் களுக்குப் பாயும் நீர்க்கால் (இ.வ.);; irrigation channet.

     [பாசனம் + கால்]

பாசனம்

பாசனம்1 pācaṉam, பெ. (n.)

   1. வெள்ளம்; food.

     “இடும்பை யென்னும் பாசனத்தழுந்து கின்றேன்” (தேவா. 955, 9.);;

   2. நீர்ப் பாய்ச்சல்; irrigation.

   3. வயிற்றுப்போக்கு; diarrhoea.

     [பாய் → பாயனம் → பாசனம்]

 பாசனம்2 pācaṉam, பெ. (n.)

   1. ஏனம்; vessel.

     “மணிப்பாசனத் தேந்தி” (பெரியபு. ஏயர்கோ. 35.);;

   2. உண்கலம்;(பிங்.);; dish or plate for eating.

   3. மட்பாண்டம்; mud vessel.

   4. மரக்கலம்; boat.

     “பத்தியான பாகனம்” (திவ். திருச்சந். 100.);

   5. அடிப்படை; support, basis.

     “பொய்க் கெல்லாம் பாசனமாய்”

   6. தங்குமிடம்; receptacle.

     “பிரேமபாசனம்”

   7. சுற்றம்; relations, kindred.

     “பாசனம் மன்னவர் பாங்கர் சுற்றிட” (கந்தபு. சிங்கமு. 8.);

   8. மீட்பு (யாழ்.அக.);; deliverance.

     [பாசம் → பாசனம்]

 பாசனம்3 pācaṉam, பெ. (n.)

   1. பங்கு (யாழ்.அக.);; share.

   2. பிரிவுக்கணக்கு (யாழ்.அக.;
 பாசனம்4 pācaṉam, பெ. (n.)

   1. நெருப்பு; fire.

   2. மருந்த வகை (யாழ்.அக.);; a medicine.

   3. புளிப்பு; sourness.

 பாசனம் pācaṉam, பெ. (n.)

   ஏனம்; vessel.

     “தந்திவர்ம மகாராசர் கொடுத்த பொன் பாசனம் ஒன்றினால் (S.S. l. IV,8);.

த.வ.கலம்

     [Skt. {} → த. பாசனம்]

பாசனாங்கம்

பாசனாங்கம் pācaṉāṅgam, பெ. (n.)

   கற்பகமரவகை (தக்காயகப்.757,உரை.);; a celestial tree, one of {karpaga-taru.}

பாசனி

பாசனி pācaṉi, பெ. (n.)

   1. கடுக்காய்; gallnut.

   2. செரிக்கச் செய்யும் மருந்து; any medicine which aids or stimulates digestion. (சா.அக.);

பாசன்

பாசன் pācaṉ, பெ. (n.)

   1. சீவான்மா (சது.);; the soul, as subject to births and mundance attachments.

   2. இயமன்;(நாமதீப. 86.);

 yama.

   3. வருணன்;(நாமதீப. 82.);

 varvna.

   4. சிவபெருமான்;(யாழ்.அக.);

 siva.

     [பாசம் → பாசன்]

பாசபெத்தர்

 பாசபெத்தர் bācabettar, பெ. (n.)

பார்க்க;see {pāšapandar}

     [பாசம் + பெற்றார்-பெத்தர்]

பாசமறுக்கும் பருமலை

 பாசமறுக்கும் பருமலை pācamaṟukkumbarumalai, பெ. (n.)

   நாகமலை; mountain containing zinc ore. (சா.அக.);

பாசமாலை

பாசமாலை pācamālai, பெ. (n.)

   கழுத்தணி வகை; a kind of neck-ornament.

     “பாசமாலை… யொன்றிற் கோத்த தாலி பதினேழு”.(s.I.I.iii. 225);

     [பாசம் + மாலை]

பாசமீதல்

பாசமீதல் pācamītal, பெ. (n.)

   1. இதளியக் குளிகைக்கு உயிர் கொடுத்தல்; to animate or give life to consolidated mercury ball.

   2. அன்பு காட்டல்; to show affection or kindness. (சா.அக.);

     [பாசம் + ஈதல்]

பாசமுடத்தாசன்

 பாசமுடத்தாசன் pācamuḍattācaṉ, பெ. (n.)

   முயல்; rabbit (சா.அக.);

பாசமோசனம்

பாசமோசனம் pācamōcaṉam, பெ. (n.)

பாச நீக்கம் பார்க்க;see pasavimõsanam.

     “பலவித மாசான் பாசமோசனந் தான் பண்ணும் படி” (சி. சி. 8, 3.);

     [பாசம் + மோகனம் → மோசம்]

பாசம்

பாசம்1 pācam, பெ. (n.)

   1. கயிறு; cord.

   2. கயிறு வடிவான படைக்கல வகை.

 noose, snare, as a weapon.

     “கட்டாதுன்னையென் கடுந்தொழிற் பாசம்” (மணிமே. 22, 71.);

     “கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரென” (சிலப். 5-132);

     “தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரை” (மணிமே. 1-23);

   3. படையணிவகுப்பு வகை; a kind of battlearray.

     “பாச நாமமணியினின்ற வீரரோடு பற்றினான்” (பாரத. பதினான். 18.);;

   4. தளை; tie, bondage.

     “பாசத்தூளிட்டு விளக்கினும்” (நான்மணி. 99.);

   5. மும்மலம்;     “பதிபசு பாசமென” (திருமந். 115.);

   6. அன்பு; love.

     “பாசமாகிய பந்து கொண்டாடுநர்” (சீவக. 1320.);

   7. பற்று; attachment.

     “மனைப்பாசங் கைவிடாய்” (நாலடி. 130.);

   8. பத்தி; devotion.

     “பாசம் பரஞ்சோதிக் கென்பாய்” (திருவாச. 7, 2);

   9. தையல் (பிங்.);; sewing, stitching.

   10. கவசம்;(பிங்.);; mail coat or mail.

   11. ஊசித்தொளை (பிங்.);; eye of a needle.

   12. நூல் (சூடா.);; thread.

   13. சுற்றம்; friends and relations.

     “பாசம் பசிப்படியைக் கொளலும்” (திரிகடு.20.);

   14. சீரகம்(மலை);.; cumin.

     [பசை → பாசம்] (வ.மெ.வ.42.);

 பாசம்2 pācam, பெ. (n.)

   பேய்; demon, vampire

     “பலிகொண்டு பெயரும் பாசம் போல” (பதிற்றுப் 71, 23.);.

பசை → பாசம் பாசு = பச்சூன்

பாசம் சொல்மூலம்: பய் → பாய் → பாய் + அம் → பாயம் → பாசம். சொற்பொருள்கள். 1. அன்பு. 2. பற்று. 3. தளை.

   4. கயிறு.

   5. தையல்.

   6. சுற்றம். பய்: பசுமைக் கருத்து மூலவேர். பசுமைக் கருத்தின் கிளை வளர்ச்சியாக ஒட்டுதல் கருத்து நிரம்பி, அதனின்றும் பலபடியான சொல்லாக்கங்கள் செழிப்பெய்தின. பசுமையும் ஈரத்தன்மையும் உடைய ஒன்றே ஒட்டுறவுக்கு இயல்வதாயும், வறட்சியும் உலர்ச்சியும் உடைய ஒன்று, இயைவுக்கு இயலாததாகவும் உள்ளதை ஈண்டுக் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மைகளாம். பாயம் = விருப்பம், விழைவு, அன்பு, புணர்ச்சி விருப்பம். பாயம் = விருப்பம்

     “பளிங்கு சொரிவு அன்ன பாய்சுனை குடைவுழி நளிபடு சிலம்பில் பாயம் பாடி” (குறிஞ்.57-58); (நச்.உரை: பாயம்பாடி = மனத்துக்கு விருப்பமானவற்றைப்பாடி..);

பாயம் = புணர்ச்சிவிருப்பம்

     “ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல்குட்டிப் பன்மயிர்ப் பினவொடு பாயம் போகாது” (பெரும்.341-342.); (நச். உரை: ஈரத்தையுடைய, சேற்றை அளைந்த கரிய பலவாகிய குட்டிகளையுடைய, பலவாகிய மயிர்களையுடைய பெண்பன்றிகளுடனே, புணர்ச்சியைக் கருதும் கருத்தாற் போகாமல்__); பாயம் → பாசம் = அன்பு, வேட்கை. ஒ.நோ: தேயம் → தேசம். நேயம் → நேசம் ஈயல் → ஈசல் நெயவு → நெசவு. பாசம் = அன்பு.

     “பாசமாகிய பந்து கொண்டாடுநர்” (சீவக.1320.);

பாசம் = பற்று

     “மனைப்பாசம் கைவிடாய்” (நாலடி.130.); பாசம் : பத்திமை.

     “பாசம்

பரஞ்சோதிக்கென்பாய்” (திருவாச.7:2); தன்னைப் பொருந்திய அன்புடைய சுற்றத்தினர்

     ‘பாசம்’ என்ற சொல்லாலேயே குறிக்கப்பெற்றனர். (பாசம்=சுற்றம்.);

     “ஆசை பிறகண் படுதலும், பாசம் பசிப்ப மடியைக் கொளலும்” (திரிகடு:20); அன்பையும் விழைவையும் வேட்கையையும் குறித்தவாறு வளர்த்து பயிலப் பெற்றதாகிய,

     ‘பாசம்’ என்னும் சொல் தமிழ்மொழியில் மட்டுமே தோன்றிய ஒன்றாகும். தொடர்ந்த பரவலான வழக்காற்றிலும் உள்ளதாகும். இம்மேற்கண்ட

பொருள்களையுடைய

     “பாசம்” என்னும் தூய செந்தமிழ்ச்சொல், வடமொழியில் அறவேயில்லை. தமிழ்மொழிப் புலவர்களுக்கும் பொதுமக்களும் உற்ற வடமொழி மயக்கமும், தன்னுணர்வின்மையும் அச்சொல்லை வடமொழியென்றே பிழைபட எண்ணிப் பயிலச் செய்துவிட்டன.

     ‘பய்’ என்னும், ஒட்டுதல், ஒன்றுதல் கருத்து மூலவழியாகப் பிணித்தல் கருத்தும், கட்டுதல் கருத்தும் வளர்ந்தன.

     “பாசம்” என்பது ஒன்றைப் பற்றிப் பிணிப்பதாகிய கயிற்றுக்கும் ஆகி வந்தது. பாசம் = கயிறு.

     “விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப் பாசம் தின்ற தேய்கால் மத்தம்” (நற்.12:1-2); (கருத்து: கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த தண்டினை உடைய பெருமத்து…); பாசத்தளை: பற்றிப் பிணிக்கும் தளைக்கயிறு.

     “பற்று என்னும் பாசத்தளையும், பலவழியும் பற்று அறாது ஓடும் அவாத்தேரும்” (திரிகடு:22:1-2.); நமனின் கையகத்திருப்பதாகக் கருதப்பெற்ற கயிறு,

     ‘பாசம்’ என்னும் கிளைப் பொருண்மைச் சொல்லோடு பிணிக்கப் பெற்று ஓர் இருபெயரொட்டுச் சொல்லாகப்

     ‘பாசக்கயிறு’ என்றும் பயிலப் பெற்றது. அச்சவுணர்ச்சியால் பேதையர் உள்ளத்தில் தோன்றிய

     ‘பேய்’ என்னும் உருவம் உயிரைக்கயிற்றில் பிணித்துக் கவர்வது என்ற அடிப்படையில்

     ‘பாசம்’ என்ற சொல்லாலேயே அப்பேயும் குறிக்கப் பெற்றது.

பாசம் = பேய் ஒ.நோ.

     “பலிகொண்டு பெயரும்

     ‘பாசம்’ போல” (பதிற்.71:23); பாசம் = பாசக்கயிறு. 1.

     “கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர்” (சிலம்பு.5:132);

   2. கறைகெழு பாசத்துக்கையகப் படுதலும் பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு கட்டிய பாசத்துக் கடிது சென்றெய்தி” (சிலம்பு.15:79); 3.

     “கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம்” (மணிமே.22:71); பிணிக்கும் கயிற்றைக் குறித்த

     “பாசம்” என்ற சொல், வடமொழியில் {“pasa”} எனத் திரிந்து.

     “பாசம்” என்ற செம்மையான வடிவம் அம்மொழிக்கண் இல்லை. வடமொழி அகராதிகளில்

     “pasa” என்ற சொல்லுக்கு – வலை, கண்ணி, சுருக்கு, கயிறு, தொடரி,

அதனைக் கட்டுவிப்பது என்பதான பொருள்களையே சுட்டிச் செல்கின்றனர். அச்சொல்லுக்கு நேரே, -அன்பு, விழைவு, விருப்பம், அன்புறஹவ என்ற தமிழ்ப்பொருள் எதுவும் குறிக்கப் பெறவேயில்லை. பிணித்துத் தளைக்கும் கயிறாகிய

     “பாசம்” என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபுகளை, அதன்வழி வடபாலியர் வளர்த்துக் கொண்ட கிளைக் கருத்துக்களுடன் கீழ்வரும் பட்டியலில் காணலாம்.

பாசம் → (sanskrit); {pāsa} = noose, {pāsaka} (Lex,); {pási} = rope (கயிறு); {pāsika} = leather strap on plough Pali: {pāsa} = tie {Pāsiya} = little do katei: {Pðs} = trap. (கண்ணி); {Khohistāni:} Pas = noose (சுருக்கு, முடிச்சு); Nepali: {Pāso} = net Oriya: {Pāsa} = net {Bengāli: Pās} = noose Mythili: {Pās} = net (வலை); {Kes-Pās} = lock of hair Hindi:{ Pās, Pāsā} = noose. Old {Gujarāti: Pāsu} =noose. {Konkani: Pāsu} Sinhalese: {Pāsa} = net.

 பாசம்2 pācam, பெ. (n.)

   கொங்கணவர் நூலிற் சொல்லியபடி செய்யப் பெறும் ஒரு வகைக் குருமருந்து; a universal medicine of high potency used for the preparation of several kinds of medicines. (சா.அக.);

     [பசை → பாசம்]

 பாசம் pācam, பெ. (n.)

   சிற்பங்களில் உள்ள ஒரு பொதுப்பாங்கு; a feature in sculpture.

     [பாசு-பாசம்]

பாசரிவாள் கத்தி

 பாசரிவாள் கத்தி pācarivāḷkatti, பெ. (n.)

   ஆக்கரிவாள்; a kind of sickle.

மறுவ: பாசுகராகத்தி

     [பாசம் + அரிவாள்கத்தி]

     [P]

பாசருகம்

 பாசருகம் pācarugam, பெ. (n.)

   அகில்(மலை.);; egle-wood.

பாசறவு

பாசறவு1 pācaṟavu, பெ. (n.)

   பற்றறுகை (ஈடு. 5, 3, 1.);; absence of worldly attachment.

     [பாசம் + அறு → அறவு]

 பாசறவு2 pācaṟavu, பெ. (n.)

   1. நிறத்தினழிவு; loss of colour or complexion.

பாசற வெய்தி” (திவ். திருவாய். 5, 3. 1.);.

   2. துன்பம் (துக்கம்);;(ஈடு. 6, 8, 7.);

 sorrow.

     [பாசம் + அறு → அறவு]

பாசறை

பாசறை1 pācaṟai, பெ. (n.)

   1. பகைமேற் சென்ற படை தங்குமிடம்; encampment or tent of of an invading army;

     “மாறு கொள்வேந்தர்;பாசறை யார்க்கே” (பதிற்றுப். 83, 9.);;

 warcamp.

   2. பசிய இலையாற் செறிந்தமுழை; bushy cave, cavern.

     “மரகதப் பாசறை … பணிமாமணி திகழும்” (தஞ்சைவா. 130);

   3. மர வகை (யாழ்.அக.);; a kind of tree.

   4. மணியாசப் பலகை(வின்.);; a piece of board for smoothing plaster.

     [பசு(மை);→பாசு + அறை]

 பாசறை2 pācaṟai, பெ. (n.)

துன்பம்;(திவா.);

 suffering, distress, affliction.

 பாசறை pācaṟai, பெ. (n.)

   1. பசிய இலை களால் வேயப்பட்ட சிறுவீடு;  hut made from green leaves.

     “பாசறை முழுது மொரு பெருங் கடவுட் பரிமள மொல் லெனப்பரப்பி” (பாரத. குருகுல. சாக);

   2. பாடிவிடு; camp.

     “பாசறை யல்லது நீ யொல்லாயே” (புறநா-நக);

   மேல் கூரை, சுற்றிலும் மறைப்பு முதலியன உள்ள பாசறைகளும் மறைப்பு இல்லாத பாசறைகளும் உண்டு. பாசறை ஓர் ஊர் போலவே அமைக்கப் பெறும்;   பாடிவீட்டினின் றும் மாறுபட்டது. பாடிவிடு படைகள் தங்கும் நிரந்தரமான கட்டடம்;பாசறை தற்காலிகத் தங்குமிடம். படைவீடெனவும் தமிழில் வழங்கும்.

     “மாறு கொள்வேந்தர் பாசறையோர்க்கே” (பதிற்றுப். பத்து. 83, 9.);

     “அரசிருந்து பணிக்கு முரசுமுழங்கு பாசறை” (முல். 79.);

     “பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறை” (மது. 231);

     “பலரொடு முரணிய பாசறைத் தொழிலே” (நெடு. 1880

     “தெறலருந் தானைப் பொறையன் பாசறை” (நற். 18–5);

     “போருடை வேந்தன் பாசறை” (ஐங். 427-3);

     “மரங்கொன் மழகளிறு முழங்கும் பாசறை” (பதிற்று. 16-8);

     “ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை” (அகம். 1008);

     “கேட்டியோ பூட்கை வேந்தன் பாசறை” (புறம். 289–8);

     “பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த” (சிலப். 26-180);

     “பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே (பரி, 19–35);

பாசறை நிலை

பாசறை நிலை pācaṟainilai, பெ. (n.)

   பகை வேந்தர் பணிந்தொடுங்கவும் வெற்றி வேந்தன் அவரிடத்தை விட்டு நீங்கானாய்ப் பாசறையில் தங்குதலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 3. 21.);; theme of a victorious king continuing in war-camp even after the surrender of his enemies.

     [பாசறை + நிலை]

மன்னரெலாம் மறந்துரப்பவும்

பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை

யிருந்தன்று (பு.வெ.கொளு.3:21.);

பாசறை முல்லை

பாசறை முல்லை pācaṟaimullai, பெ. (n.)

   பாசறையில் தலைமகன் தன் தலைவியை நினைக்கும் புறத்துறை(தொல். பொ. 76உரை.);; a theme in which a hero thinks of his beloved when absent from her in war-camp.

     [பாசறை + முல்லை]

பாசலம்

பாசலம் pācalam, பெ. (n.)

   1. நெருப்பு; fire.

   2. காற்று; air, wind.

பாசல்

 பாசல் pācal, பெ. (n.)

பாச்சி (செங்கை.மீனவ.); பார்க்க;seе {рӑссі}

பாசளை

 பாசளை pācaḷai, பெ. (n.)

   குன்றி; wild licorice. (சா.அக.);

     [P]

பாசவர்

பாசவர் pācavar, பெ. (n.)

   இலையமுதிடுவார்; one who give vegetarian food.

 பாசவர்2 pācavar, பெ. (n.)

   வெற்றிலையிடு வோர்; dealers in betel leaves.

     “பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு” (சிலப். 5, 26.);

 பாசவர் pācavar, பெ. (n.)

   1. ஆட்டிறைச்சி விற்கும் வணிகர்; dealers in mutton.

     “பாசவ ரூனத் தழித்த வானினக் கொழுங்குறை” (பதிற்றுப். 21, 9);

   2. இறைச்சி விற்போர் (சிலப். 5, 26, உரை; dealers in meat.

     [பாசு → பாசவன்] மு.தா.210

 பாசவர்4 pācavar, பெ. (n.)

   கயிறுதிரித்து விற்போர் (சிலப். 526, உரை);; those who make and sell ropes.

     “பாசவர்வாசவர்” (சிலப். இந்திர. 26.); (கயிறு திரித்துவிற்பாரும் பச்சிறைச்சி சூட்டிறைச்சி விற்பாருமாம் என்பர் சிலப்பதிகார உரை யாசிரியர். (த.சொ.அக.);

பாசவல்

பாசவல் pācaval, பெ. (n.)

   1. செவ்வியவல்; rice obtained from fried paddy.

     “பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை” (குருந். 238-1);

     “(பாசவ லிடிக்கு மிருங்கா ழுலங்கை” (அகநா. 141–18.);

 a preparation of rice obtained by pesting fried paddy.

     “பாசவல் முக்கி”

   2. பசிய விளை நிலம்; green field.

     “பாசவற் படப்பையாரெயில் பலதந்து” (புறநா. 6);

பாசவினை

பாசவினை pācaviṉai, பெ. (n.)

   பந்தத்திற்கேது வாகிய வினை;     “பாசவினையை பறித்து நின்று” (திருவாச. 9, 4.);

 karma, causing bondage of souls.

     [பாசம் + வினை]

பாசவிமோசனம்

 பாசவிமோசனம் pācavimōcaṉam, பெ. (n.)

   மலபந்தம் நீங்குகை; realease of the soul from worldly bonds.

பாசமோசனம் பார்க்க;see {pasamdsanam.}

     [பாசம் + {skt.vi-mocapa,} த. விமோசனம்]

பாசவீடு

பாசவீடு pācavīṭu, பெ. (n.)

பாசநீக்கம்,

 detachment of affection.

     “பாச வீடும் சிவப்பேறு மென” (சி. போ. பா. 10, பக். 399);

     [பாசம் + வீடு]

பாசவேடம்

 பாசவேடம் pācavēṭam, பெ. (n.)

   கருந்தகரை; black species of foetidcassia. (சா.அக.);

பாசவைராக்கியம்

 பாசவைராக்கியம் pācavairākkiyam, பெ. (n.)

   புவிவெறுப்பு, உலகவெறுப்பு (யாழ்.அக.);; determined hatred of worldly attachment.

     [பாசம் + வயிரம் → {vairச்gya} த. வயிராக்கியம்]

பாசாங்கடி-த்தல்

பாசாங்கடி-த்தல் pācāṅgaḍittal,    4. செ.கு.வி. (v.i.)

   போலியாக நடித்தல்; to dissemble, feign innocence.

     [பாசாங்கு + அடி-,]

பாசாங்கு

பாசாங்கு pācāṅgu, பெ. (n.)

   1. போலிநடிப்பு; dissimulation, hypocrisy, pretence, humbug.

   2. வஞ்சகம்; trickery, deception.

     “பாக்குக் கொடுக்கு மந்தப் பாசாங்கோ” (பணவிடு.315);.

     [பாய் → பாய்ச்சல் → பாச்சல் → பாச்சம் (ஒ.நோ.);

நீச்சல் → நீச்சம்.பாச்சல் காட்டுதல்→பாச்சங்காட்டுதல் = பாய்வது போல் மெய்ப்பாடு செய்து பாயாமல் ஏமாற்றுதல். பாச்சாங்காட்டுதல் → பாச்சாங்கு → பாசாங்கு = ஒன்றைச் செய்யாமலே செய்வதுபோல் ஏமாற்றுதல்]

பாசாங்குக்கள்ளி

 பாசாங்குக்கள்ளி pācāṅgukkaḷḷi, பெ. (n.)

பாசாங்குக்காரி பார்க்க;see {pāšāngu-k-kāri}

     [பாசாங்கு + கள்ளி]

பாசாங்குக்காரன்

 பாசாங்குக்காரன் pācāṅgukkāraṉ, பெ. (n.)

   பாசாங்கு செய்வோன்; hypocrite, dissembler.

     [பாசாங்கு + காரன்]

பாசாங்குக்காரி

 பாசாங்குக்காரி pācāṅgukkāri, பெ. (n.)

   பாசாங்கு செய்பவள்; a hypocritical woman.

     [பாசாங்கு + காரி]

பாசாங்குசதரன்

 பாசாங்குசதரன் pāsāṅgusadaraṉ, பெ. (n.)

   கணபதி (பிங்.); (பாசத்தையும் அங்குசத்தைஹயம் தாங்கியிருப்பவன்);;{Genèsa,} armed with a noose and an elephant – goad.

     [பாசம் + அங்குசம் + skt. Dhara→ த. தரன்]

பாசாடினபேதி

பாசாடினபேதி pācāṭiṉapēti, பெ. (n.)

   1. நெருஞ்சி; cow’s thorn.

   2. சிறு நெருஞ்சி; red cow thorn.

பாசாணக்கல்

பாசாணக்கல் pācāṇakkal, பெ.(n.)

   1. பாம்புக் கல்; snake stone.

   2. நஞ்சை முறிக்கும் கல் வகை; a kind of stone applied to poison – bites as antidote.

     [Skt. {} → த. பாசணம்+கல்]

பாசாந்தரப்படுத்து-தல்

பாசாந்தரப்படுத்து-தல் pācāndarappaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மொழி பெயர்த்தல்; to translate.

     [Skt. {} → த. பாசாந்தரம்+படுத்து-தல்]

பாசாந்தரம்

 பாசாந்தரம் pācāndaram, பெ.(n.)

   அயல்மொழி; foreign language.

த.வ.வேற்றுமொழி

     [Skt. {} → த. பாசாந்தரம்]

பாசாந்தி

 பாசாந்தி pācāndi, பெ. (n.)

   கிருட்டிணகிரி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in KrishnagiriTaluk.

     [பாயச்சல்-பாசல்+அந்தி]

பாசாளைத்திருக்கை

 பாசாளைத்திருக்கை pācāḷaittirukkai, பெ. (n.)

   திருக்கை மீன்வகையுள் ஒன்று; a kind of tirukkal fish.

     [பாசாளை + திருக்கை]

பாசி

பாசி pāci, பெ. (n.)

   1. பசுமையுடையது; that which is green.

     “பாசிப் பாசத்து” (சீவக.1649);.

   2. நீர்ப்பாசி; moss, lichen, duckweed.

     “பாசியற்றே பசலை” (குறுந். 399);

   3. கடற்பாசி (வின்.);; seaweed.

   4. நெட்டி, 5 (மலை); பார்க்க;see, netti.

 sola pith.

   5. பூஞ்சாளம் (வின்.);; saprophyte, mouldiness due to dampness.

   6. சிறு பயறு (பிங்.); பார்க்க;see ciru payaru green gram.

   7. குழந்தைகளின் கழுத் தணிக்கு உதவும்மணிவகை; variegated glass beads or green earthen beads for children’s necklaces.

     “புனையும் வெண்பாசி பூண்டு” (திருவாலவா.52,3);

   8. மேகம், (அக.நி.);; cloud.

   9. பாசிநிலை பார்க்க;see {pasimilai}.

     “நீர்ச்செரு வீழ்ந்த பாசியும்” (தொல்.பொ.68);.

க. பாசி

     [பாசு → பாசி] மு.தா.46.

பாசி தமிழ் மருத்துவத்தில் பல்வேறு வகையாகக்

கீழே குறிப்பிட்டபடிக் கொள்ளப்படும்.

   1. குளத்துப்பாசி – tank moss.

   2. ஆற்றுப்பாசி – river weed.

   3. கடற்பாசி – seaweed.

   4. ஈழத்துப்பாசி – cylon moss

   5. மலாய்ப்பாசி – malay agar agar.

   6. கொடிப்பாசி – Creeper moss.

   7. கூந்தற்பாசி – trailing moss.

   8. குறத்திப்பாசி – Cuckoos eye.

   9. கற்பாசி – stone moss.

   10. மரப்பாசி – tree moss.

   11. மஞ்சட்பாசி – yellow dyelichen

   12. இலைப்பாசி – large leafed moss.

   13. முட்டைப்பாசி – moss with inflated appendages.

   14. நீர்ப்பாசி – duck weed.

   15. பழம்பாசி – fruit moss.

   16. கொட்டைப்பாசி – seed moss.

   17. கோரைப்பாசி – reed moss.

   18. தாட்பாசி – palm leaf moss.

   19. வேலம்பாசி – acacia mossa.

   20. வேப்பம்பாசி – margosa moss.

   21. வழுக்குப் பாசி – slimy moss.

 பாசி2 pāci, பெ. (n.)

   1. வருணன் (யாழ்.அக.);; Varuna.

   2. கூற்றுவன்(யாழ்.அக.);; yama, god of death.

   3. ஆதன்(நிகண்டு);; soul.

   4. நாய் (பிங்.);; dog.

     [பாசம் → பாசி]

 பாசி3 pāci, பெ. (n.)

   கிழக்கு; east.

     “பாசிச் செல்லாது” (புறநா.226);

     [கிழக்கு எனப் பொருள்படும் ‘பாசி’ பிராசி என்னும் வடசொல்லின் திரிபே-பாவாணர். தமி. வர.259]

 பாசி4 pāci, பெ. (n.)

   சமைக்கை (யாழ்.அக.);; cooking.

     [பாசு → பாசி]

 பாசி pāci, பெ. (n.)

   1. மீன் பிடிப்பு; fishery.

   2. மீன்; fish.

     ‘பாசிக்குத்தகை.’

     [பாசு → பாசி ]

பாசி இறால்

 பாசி இறால் pāciiṟāl, பெ. (n.)

   ஒரு மீன்;(மீன்து.அக.);; peracus semisulcatus.

     [பாசி + இறால்]

     [P]

பாசி உளுவை

 பாசி உளுவை pāciuḷuvai, பெ. (n.)

   உளுவை மீன் வகை; a Sea fish and fresh water fish.

மறுவ: உழுவை.

     [பாசி + உளுவை]

     [P]

பாசி-த்தல்

பாசி-த்தல் pācittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பேசுதல்; to speak

     “பாசிக்கத்தகாது” (திருப்பு.1088);.

     [Skt. {} → த. பாசி]

பாசிகட்டி

பாசிகட்டி pācigaṭṭi, பெ. (n.)

   வலைச்சாதியாரில் ஒரு வகுப்பினர் (E.T.vii.274);; a sub-division of the valaiyar caste.

     [பாசி + கட்டி]

பாசிகம்

 பாசிகம் pācigam, பெ. (n.)

   கருமருது; black or Negroe’s olive. (சா.அக.);

பாசிகி

 பாசிகி pācigi, பெ. (n.)

   மூங்கில்; bamboo. (சா.அக.);

பாசிக்கல்

 பாசிக்கல் pācikkal, பெ. (n.)

   கடலடியிற் கிடைக்கும் பாசி படர்ந்த கல் (நெல்லை. மீனவ.);; sea bed stone which is spreading with moss.

     [பாசி + கல்]

பாசிக்குத்தகை

 பாசிக்குத்தகை pācigguttagai, பெ. (n.)

   மீன் குத்தகை; fishing lease.

     [பாசி + குத்தகை]

பாசிசம்

 பாசிசம் pāsisam, பெ.(n.)

   அனைத்து முதன்மைத் தொழில்களையும் தன் முழுமை யான கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அரசியல் எதிர்ப்பே எழாத வகையில் அடக்கு முறையைப் பயன்படுத்தி நடத்தும் ஆட்சி முறை; fascism.

பாசிதம்

பாசிதம் pācidam, பெ. (n.)

   1. பிரக்கப்பட்ட பங்கு; that which is divided, a portion, a share.

   2. வகுத்த ஈவு;

பாசிதுர்த்துக்கிட-த்தல்

பாசிதுர்த்துக்கிட-த்தல் pācidurddukkiḍaddal,    3. செ.கு.வி. (v.i.)

   அழுக்குப் பிடித்துக் கிடத்தல்; to be overspread with dirt.

     “பாசி துர்த்துக் கிடந்த பார்மகட்கு” (திவ்.நாய்ச்.11,8);.

     [பாசி + துர்த்துக்கிட-,]

பாசித்தீர்வை

 பாசித்தீர்வை pācittīrvai, பெ. (n.)

பாசிவரி பார்க்க;see {pāši-vari}

     [பாசி + தீர்வை ]

பாசித்தேளி

 பாசித்தேளி pācittēḷi, பெ. (n.)

   பாசி படர்ந்த தோற்றமுடைய தேளிமீன் (தஞ்சை.மீனவ.);; a kind of {telífish.}

     [பாசி + தேளி]

     [P]

பாசிநிலை

பாசிநிலை pācinilai, பெ. (n.)

   பகைவருடைய வலிகெட அவருடைய அகழியிடத்துப் பொருதலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 6,17,கொளு);;{(pusap);} a theme describing the crusing defeat of an enemy in an action at the moat of his fortress, inflicted by an invading army.

     [பாசி + நிலை]

     “அடங்காதார் மிடல்சாயக் கிடங்கிடைப் போர்மலைந்தன்று”

உழிஞையார் நொச்சியாருடன் அகழியிடத்தே போர் செய்தது பாசிநிலை என்னும் துறையாம். நீரின்கண் பாசிபோல் இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின் பாசிநிலை எனக் குறியீடு பெற்றது என்க. இதனை,

     “நீர்ச்செரு வீழ்ந்த பாசி” என்பர் தொல்காப்பியனார்.

     “நாவாயும் தோணியும் மேல்கொண்டு நள்ளாதார் ஒவார் விலங்கி உடலவும்-பூவார் அகழி பரந்தொழுகும் அங்குருதிச் சேற்றுப் பகழிவாய் வீழ்ந்தார் பலர்” (பு.வெ.111); );

பாசிநீக்கம்

பாசிநீக்கம் pācinīkkam, பெ. (n.)

   சொற்றோறும் அ டி தோறும் பொருளே ற் று வரும் பொருள்கோள் (இறை.56, உரை);; a mode of construction of stanza by which a number of independent sentencess are held together by a central idea running through the whole.

     [பாசி + நீக்கம்]

பாசிநீக்கு

பாசிநீக்கு pācinīkku, பெ. (n.)

பாசி நீக்கம் (இறை.56, உரை); பார்க்க;see {pāši-nikkam}

     [பாசி + நீக்கு]

பாசிநீர்

 பாசிநீர் pācinīr, பெ. (n.)

   பாசிபடர்ந்த நீர்; water covered by moss.

     [பாசி + நீர்]

பாசினம்

பாசினம் pāciṉam, பெ. (n.)

   கிளிக்கூட்டம்; flock of parrots.

     “பாசினங் கடீஇயர்” (நற்.134);.

     [பசுமை + இனம்]

பாசிபடர்-தல்

பாசிபடர்-தல் bācibaḍartal,    3. செ.கு.வி. (v.i.)

   1. பாசி வளர்தல்; moss growing.

   2. பல்லில் ஊத்தை பிடித்தல்; dirt collected on the teeth.

   3. கண்ணில் பீளை சாறுதல்; muco purulence in the eye.

     [பாசி + படர்-,]

பாசிபந்து

பாசிபந்து bācibandu, பெ. (n.)

   தோளணி வகை; an armlet.

     “கட்டழகன் பாசிபந்து கட்டினான்” (விறலிவிடு.1117);.

     [பாசி + பந்து]

பாசிபற்றினபல்

 பாசிபற்றினபல் bācibaṟṟiṉabal, பெ. (n.)

   உத்தையும் பசுமை நிறமும் பிடித்த பல்; foul tooth.

     [பாசிபற்றின + பல்]

பாசிபற்று-தல்

பாசிபற்று-தல் bācibaṟṟudal,    5.செ.கு.வி. (v.i.)

   பாசியுண்டாதல்; to become mossy or mouldy.

     [பாசி + பற்று-,]

பாசிபாப்பு

பாசிபாப்பு pācipāppu, பெ.(n.)

   சில்லறை வரி வகை (G.N.A.D.II,278);; miscellaneous items of revenue derivedd from small farms, license, etc.

     [U. {} → த. பாசிபாப்பு]

பாசிபிடி-த்தல்

பாசிபிடி-த்தல் bācibiḍittal,    4.செ.கு.வி. (v.i.)

பாசிபற்று பார்க்க;see {pāŠiparru-,}

     [பாசி + பிடி-,]

பாசிபிடித்தபல்

 பாசிபிடித்தபல் bācibiḍittabal, பெ. (n.)

பாசிபற்றினபல் பார்க்க;see {pāšipartina-pal}

     [பாசி + பிடித்த + பல்]

பாசிபூ-த்தல்

பாசிபூ-த்தல் pācipūttal, செ.கு.வி. (v.i)

   1. பாசிபற்று பார்க்க;see {pāši-parru.}

   2. பழமையாதல்; to be ancient, to be antiquated.

     “பாசிபூத்த வேதம் பேசவேண்டாவோ” (ஈடு,1,6,2);.

     [பாசி + பூ-,]

பாசிப் பயறு

 பாசிப் பயறு pācippayaṟu, பெ. (n.)

   பச்சைப் பயறு; green gram.

   தவச வகைகளில் பச்சென்றிருப்பதாலிப்பெயர். இது தென்னிந்தியவில் அதிகமாகப் பயிரிடப்படும், நெல் வயல்களில் நெல் அறுத்த பின்பு இதைத் தெளித்துப் பயிராக்குவதுண்டு. தமிழர்கள் இதைச் சிறப்புக் குழம்பு, பொங்கல், கஞ்சிஇவ்வினங்களில் சேர்ப்ப துண்டு. துவரம் பருப்பிற்கு அடுத்தபடி இது உணவிற்குப் பயன்படுவதால். சிறப்பானது. பத்திய மானதும், ஊட்டமும், குளிர்ச்சியும், தரக் கூடியது;   சிறு துவர்ப்புமுண்டு, இதை நோயாளிக்குப் பலவகையாக செய்து கொடுக்கலாம். இதை நோய் வாய்ப்பட்டு எழுந்தவர்களுக்குக் கஞ்சியாகவும், தண்ணீராகவும், செய்து கொடுக்கலாம். இதன் தூளை எரிச்சலுக் காகவும், சூட்டைத் தணிக் கவும் கண்ணிற்கிடுவதுண்டு, இது பித்தத்தைக் நீக்கும், இது சீதளத்தைத் தருவதாகுமாதலால் மழைக் காலத்திலும் பனிக் காலத்திலும் அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. இதை அளவுக்கதிகமாக உண்டால் கழிச்சல் ஏறற்படும். இதன் மாவைக் களிபோல் கிளறிப் பால் கட்டுண்டான பெண்களுக்கு மார்பில் வைத்துக் கட்ட நோய் நீங்கிப் பால் சுரப்புண்டாகும்; green gram-phaseolus mungo. it is so called because of its green colour. It is very commonly grown in south india. but cultivated all over india generally the seeds are scattered in rice fleds after the harvest in the month of january or february the tamilians use this in food along with rice as pongal, or conjee or as both. It is neat in importance to dholl. (red gram); popularly used in food. It is dietery and nutritious. It is whole some and suited to sick person. The soup made of it is often the first article of diet prescribed recovery from actute illness. It is said to be useful in relieving the heat and burning of the eyes when applied in the form of powder. it removes the biliouness but adds vayo (wind humour); to

 the system as it is of a cooling nature, it is

 not Sound advisable to make much use of it in the rainy and dew seasons, excessive use of it causes diarrhoea, the flour of the pulse is boiled and applied as poultice to woman’s breast for promoting the secretion of milk in cases where the natural flow is arrested. The whole pulse is a good diet for breakfast. (சா.அக.);

     [பாசி + பயறு]

     [P]

பாசிப்படை

பாசிப்படை1 pācippaḍai, பெ. (n.)

   1. திடீரென்று தாக்கும் போர்ப்படை; storming army.

   2. வலிமையுள்ள படை (யாழ்.அக.); ; strong army.

     [பாய் → பாய்சி → பாசி + படை]

 பாசிப்படை2 pācippaḍai, பெ. (n.)

   கைவிடப்பட்ட நம்பிக்கை (வின்);; forlorn hope.

     [பாசி + படை]

பாசிப்பயற்றம்மை

 பாசிப்பயற்றம்மை pācippayaṟṟammai, பெ. (n.)

   அம்மைநோய்வகை (M.L.);; chickenbox.

     [பாசிப்பயறு + அம்மை]

பாசிப்பருப்பு

 பாசிப்பருப்பு pācipparuppu, பெ. (n.)

   உடைத்த பாசிப் பயறு; broken green gram.

     “பாசிப்பருப்பு குழம்பு நன்றாக இருக்கும்.”

     [பாசி + பருப்பு]

பாசிப்பருவம்

பாசிப்பருவம் pācipparuvam, பெ. (n.)

   மீசையினிளம்பருவம்; initial stage in the growth of moustache.

     “பாசிப்பருவமுள்ள

மீசையுந் திருத்தி (சீதக்.30);.

     [பாசி + பருவம்]

பாசிப்பல்

 பாசிப்பல் pācippal, பெ. (n.)

   பாசி பற்றிய பல்; foul tooth. (சா. அக.);

     [பாசி + பல்]

பாசிப்பாட்டம்

பாசிப்பாட்டம் pācippāṭṭam, பெ. (n.)

   மீன் பிடிப்பதற்கு இடும் வரி (I.M.P.Mr.327);.; tax on fishing.

     [பாசி + பாட்டம்]

பாசிமட்டி

 பாசிமட்டி pācimaṭṭi, பெ. (n.)

   பாசி படர்ந்த கல் (தஞ்சை. மீனவ.);; stone which spreading moss.

     [பாசி + மட்டி]

பாசிமணி

பாசிமணி pācimaṇi, பெ. (n.)

   1. கரிய மணிவடம்; a string of smath black beads.

   2. பச்சை மணிவடம்; green, earthen beads.

   3. ஒரு வகை மண்ணால் செய்யப்பட்ட, வெண்களிமண் (பீங்கான்); போன்ற பளபளப்பான மணி; beads made of clay (for making necklace);.

     “அவள் கழுத்தில் பாசிமணி மாலை!”.

     [பாசி + மணி]

பாசிமறன்

பாசிமறன் pācimaṟaṉ, பெ. (n.)

   போர்மேற் சென்ற படை பாசிநிலை வெற்றிக்குப்பின், பகைவர் ஊரகத்துப் போர் விரும்புதலைக் கூறும் புறத்துறை (தொல்.பொ.68, உரை);;{(purap);} a theme describing the desire of an invading army to carry the battle into the city of an enemy, after inflicting a crushing defeat on him at the moat of his fortress..

     [பாசி + மறம் → மறன்.]

பாசிமாவேலை

 பாசிமாவேலை pācimāvēlai, பெ. (n.)

   சிறுதும்பை; small leucus. (சா.அக.);

மறுவ. பாசியா.

பாசிமீன்

 பாசிமீன் pācimīṉ, பெ. (n.)

   ஒரு கடல் மீன் (நெல்லை.மீனவ.);; a kind of sea fish.

     [பாசி + மீன்]

     [P]

பாசிமுரல்

பாசிமுரல் pācimural, பெ. (n.)

   ஆறுவிரலம் (ஆறங்குலம்); வளரும் கடல்மீன் வகை; halfleak, sea-fish, attaining 6 in in length, hemirhamphus xanthopterus.

     [பாசி + முரல்]

     [P]

பாசியகாரர்

 பாசியகாரர் pāciyakārar, பெ.(n.)

பிரம்ம சூத்திரத்திற்கு விரிவுரை (பாஷ்யம்); இயற்றிய இராமானுசாசாரியர்;{},

 a commen-tator on Brahma {}.

     [Skt. {} → த. பாசிய+காரர்]

பாசியம்

 பாசியம் pāciyam, பெ.(n.)

   ஒரு வகை விரிவுரை; an elaborate commentary.

த.வ.விளக்கவுரை

     [Skt. {} → த. பாசியம்]

பாசிலை

பாசிலை pācilai, பெ. (n.)

   1. பச்சையிலை (திவா.);; green leaf.

     “பாசிலை நாணற் படுத்துப் பரிதிவைத்து” (திவ்.நாய்ச்.6,7);.

     “பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி” (பெரும்.4);

     “நீலத்து அன்ன பாசிலை அகந்தொறும்” (நற்,249-2);

     “பாசிலை முல்லை ஆசில் வான்பூ”(குறுந்.108-3);

     “அம்ம வாழி தோழி பாசிலை” (ஐங்,112-1);

     “வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி” (அகம்,138-5);

     “இமிழ்ப்புற நீண்ட பாசிலை” (புறநா.283-12);

     “பணையைந் தோங்கிய பாசிலைப் போதி” (சிலப், 10-11);

     “பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு’ (மணிமே.19-75);

   2. வெற்றிலை; betel leaf.

     “பாசிலை சுருட்டி” (சீவக.1987);.

     [பசுமை → பாசு பாசு + இலை]

பாசிழை

பாசிழை pāciḻai, பெ. (n.)

   ஒப்பனை செய்யப்பட்ட பெண்; well-adorned woman.

     “பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய” (புறம்,367,6);

     “பாசிழைப் பகட்டல்” (பட்டினப்.147);.

     “நறுதல் அரிவை பாசிழை விலையே” (அகநா.19-11.);

     [பசு(மை); → பாசு பாசு+ இழை]

பாசிழை மகளிர்

பாசிழை மகளிர் pāciḻaimagaḷir, பெ. (n.)

   பசிய இலைகளால் புனைவு செய்யப்பெற்ற மகளில்; well adorned women, with festive green leaves.

     “ஆய்பொன் னவிர்தொடிப் பாசிழை மகளிர்” (மது,519);

பாசிவரமாசு

 பாசிவரமாசு pācivaramācu, பெ. (n.)

   கொட்டைப் பாசி; seed moss. (சா.அக.);

பாசிவரால்

 பாசிவரால் pācivarāl, பெ. (n.)

பாசி படர்ந்த இடங்களில் மேயும் வரால்மீன் (தஞ்சை. மீனவ.);,

 a kind of fresh water fish.

     [பாசி + வரால்]

பாசிவரி

பாசிவரி pācivari, பெ. (n.)

   மீன்பிடித்துக் கொள்வதற்குக் கொடுக்கும் வரி; tax paid for the privilege of fishing.

     “பாசிவரிக் காரனோ” (விறலிவிடு.458);.

     [பாசி + வரி]

பாசிவிலை

 பாசிவிலை pācivilai, பெ. (n.)

   மீன் விலை; price of fish.

     [பாசி + விலை]

பாசு

பாசு1 pācu, பெ. (n.)

   1. பசுமை (திவா.);; greenness, verdure.

   2. மூங்கில் (சூடா.);; bamboo.

   3. வீரம் (யாழ்.அக.);; bravery, courage.

 பாசு2 pācu, பெ. (n.)

பாசம்2, 6 பார்க்க;see {pāśam}

 tie wordly attachment.

     “பாசற்றவர்

பாடி நின்றாடும் பழம்பதி (தேவா,889,7);.

 பாசு pācu, பெ.(n.)

   1. தேர்வு முதலியவற்றில் தேர்ச்சி (பிரதாப.விலா.13);; success, as in examinations pass.

   2. வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ பொருட்களைக் கொண்டு போவதற்கோ கொடுக்கும் நுழைவுச் சீட்டு (இ.வ.);; gate-pass, permit. destroying.

த.வ. இசைவுச்சீட்டு

     [Skt. pass → த. பாசு]

பாசுகுத்திருநாள்

 பாசுகுத்திருநாள் pācuguttirunāḷ, பெ.(n.)

   ஒரு கிறித்துவப் பண்டிகை; Easter festival.

     [F. paque த. பாசுகு+திருநாள்]

பாசுக்கோல்

 பாசுக்கோல் pācukāl, பெ. (n.)

   சாயம் போடுதலில் நூலைத் திருப்பி விடப் பயன்படுத்தும் ஒரு பக்கக் கூர்மையான மரக்கோல்; a stick used in the dying process.

     [பாய்ச்சு → பாசு + கோல்]

பாசுணம்

பாசுணம் pācuṇam, பெ. (n.)

   பக்கம்; side.

     “பாப்பமை பலகையொடு பாகனங் கோலி” (பெருங்.உஞ்சை,38,148,உரை);.

பாசுதிகருமம்

பாசுதிகருமம் pācudigarumam, பெ.(n.)

   சிறுநீர் விடுமுன் மலங்கழிக்கை (யோகஞானா.33);; passing stools before passing urine.

பாசுபதன்

பாசுபதன் bācubadaṉ, பெ.(n.)

   1. சிவபெருமான்;{}.

     “பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுபதன்” (தேவா.389,6);.

   2. பாசுபத முறையை மேற்கொள்ளும் சிவனியர்;(திவா.);; follower of the system of pasupadam among the {}.

   3. சிவனை வழிபடுவோன் (சூடா.);; worshipper of {}.

     [Skt. {} → த. பாசுபதன்]

பாசுபதம்

பாசுபதம் bācubadam, பெ.(n.)

   ஆணவ மலம் இல்லையென்றும் இறைவன் (ஈசன்); பக்குவ மடைந்த ஆதன்களிடம் தன் பண்புகளைப் பற்றுவித்துத் தான் அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்று கூறும் அகப்புறச் சமய வகை (சி.போ.பா.அவை.);; a Saiva sect which does not recognise the existence of {} and holds that {} entrusts the perfected soul with His function, one ofaka-p-{}-c-camayam.

   2. நூற்றெட்டு மறைநூல்களில் ஒன்று; an Upanisad, one of 108.

   3. பாசுபதாத்திரம் பார்க்க;see {}.

     “பாசுபதம் பார்த்தர்க் களித்தார் போலும்” (தேவா.720,2);.

   4. சிவமல்லி (நாநார்த்த.152);; taper – pointed mountain ebony.

     [Skt. {} → த. பாசுபதம்]

பாசுபதாத்திரம்

 பாசுபதாத்திரம் bācubatāttiram, பெ.(n.)

   சிவபெருமானையே தெய்வமாகக் கொண்ட அம்பு; arrow which has Siva as its presiding deity.

     [Skt. {}+astra → த. பாசுபதாத்திரம்]

பாசுபதிரம்

 பாசுபதிரம் bācubadiram, பெ.(n.)

   செரிமானத்திற்காகத் தன்வந்திரி முறைப்படி அணியம் செய்த ஓர் ஆயுள்வேத மருந்து (சா.அக.);; a {} medicine prepared for indigestion according to the process laid by Danvantari.

த.வ.செரிமருந்து

பாசுவசுறோணி

 பாசுவசுறோணி pāsuvasuṟōṇi, பெ. (n.)

   காட்டாமணக்கு; physicnut.

பாசூசெங்கி

 பாசூசெங்கி pācūceṅgi, பெ. (n.)

பாஞ்சேங்கி பார்க்க;see {pāñjēngi}

மறுவ: அரிவாள் முனைப்பூண்டு,

பாசூர்

பாசூர் pācūr, பெ. (n.)

   திருப்பாச்சூர் என செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்; a village in chengalpet Dt.

     ” பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூர்” -196-1

     ” பைவாய் நாக கோடலீனும் பாசூர்” -196-3

     ” பாட குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூர்” 196-5 என இதன் இயற்கை வளத்தையும் செழுமையையும் ஒவ்வொரு பாடலிலும் கூறி செல்லும் நிலையில்,

     ” பசுமையான ஊர் என்ற எண்ணத்திலேயே இவ்வூர் ‘பாசூர் எனச் சுட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது பொருத்தமாக அமைகிறது.)

பாசை

பாசை1 pācai, பெ. (n.)

   சமைக்கை (யாழ்.அக.);;  a cooking.

 பாசை2 pācai, பெ. (n.)

 moss.

 பாசை pācai, பெ.(n.)

   1. மொழி; language, speech.

   2. குழூஉக்குறி (உ.வ.);; secret language, expressive signs or signals, serving as a mode of communicating ideas.

   3. சூளுறவு (இ.வ.);; a vow in which a person binds himself by oath to wreak vengeance on his foe.

     [Skt. {} → த. பாசை]

பாசைக்கருத்து

பாசைக்கருத்து pācaikkaruttu, பெ.(n.)

   சொல்லின் உட்பொருள் (தாதுமாலை,பக்.132);; implied meaning of a word.

     [Skt. {} → த. பாசை+கருத்து]

பாசைபங்கம்

 பாசைபங்கம் bācaibaṅgam, பெ.(n.)

   பழிவாங்குவதாகச் சூளுரைத்து அச்சுறுத்துகை (வின்.);; threat of vengeance by oath.

த.வ.சூளுறவு, வெகுண்டுரை

     [Skt. {} → த. பாசை+பங்கம்]

பாச்சகி

 பாச்சகி pāccagi, பெ. (n.)

   தண்டுக்கீரை; amaranthus gangesticus. (சா.அக.);.

     [P]

பாச்சல்

பாச்சல் pāccal, பெ. (n.)

பாய்ச்சல், பார்க்க;see {payccal}

     “பாச்சன் மாத்திரம்” (ஞானவா.சதவு.6);

     [பாய் → பாய்ச்சல் → பாச்சல்]

 பாச்சல் pāccal, பெ. (n.)

   1 திருப்பத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Thirup patturTaluk.

   2. நாமக்கல் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Namakkal Taluk.

     [பாய்ச்சல் – பாச்சல்]

பாச்சா

பாச்சா1 pāccā, பெ. (n.)

   வல்லமை; show of power.

     “உன் பாச்சா என்னிடம் பலிக்காது”

     [பாய்ச்சல் → பாச்ச + பாச்சா]

 பாச்சா pāccā, பெ. (n.)

பாச்சை(நாமதீப்.266);. பார்க்க;see {paccal}

பாச்சாங்குள்ளி

 பாச்சாங்குள்ளி pāccāṅguḷḷi, பெ. (n.)

   விளையாட்டில் முறையின்றி, தருக்கஞ் செய்பவன்-ள்; one who makes unjust claims in a game.

மறுவ. வாச்சாங்குளி.

     [பாசாங்கு + கொள்ளி → பாச்சாங்குள்ளி]

பாச்சாங்குள்ளியடி-த்தல்

பாச்சாங்குள்ளியடி-த்தல் pāccāṅguḷḷiyaḍittal,    4. செ.கு.வி. (v.i.)

   விளையாட்டில் முறையின்றி தருக்கஞ் செய்தல்; to make unjust clam’s in a game.

     [பாச்சாங்குள்ளி + அடி-,]

பாச்சான்

பாச்சான் pāccāṉ, பெ. (n.)

   1. திருகுக்கள்ளி; twist spurge.

   2. கொடிக் கள்ளி; creeping milk hedge.

   3. தும்பை இலை; leaf of leucus. (சா.அக.);

     [P]

பாச்சாவுருண்டை

 பாச்சாவுருண்டை pāccāvuruṇṭai, பெ. (n.)

   நச்சுக் கருப்பூர உருண்டை; naphthaline balls.

     [பாக்சை + உருண்டை → பாச்சளவுருண்டை]

பாச்சி

பாச்சி1 pācci, பெ. (n.)

   தாய்ப்பால்; milk, mother’s milk.

     “பாச்சி சோச்சி”

தெ.க. பாசி, ம. பாச்சி

     [பால் → பாச்சி]

     [பாலை மழலையர் ‘பாச்சி’ என வழங்குப. (வைத்திய பரிபாடை);;]

 பாச்சி2 pācci, பெ. (n.)

பாசி: fishery in tanks or pools.

     [பாசி → பாச்சி]

 பாச்சி pācci, பெ. (n.)

பாச்சிகை பார்க்க;see {paccigai}

     [பாய்ச்சிகை → பாச்சி]

 பாச்சி4 pācci, பெ. (n.)

   அலைவாய்க்கரை நோக்கி வரும் இருவேறலைகட்கிடையேயுள்ள நீர்பரப்பு (செங்கை.மீன.);; water surface between two sea tides.

பாச்சிகா

 பாச்சிகா pāccikā, பெ. (n.)

   பாலாட்டங்கொடி; soma plant of ancient fame. (சா.அக.);.

மறுவ. சோமலதை

பாச்சிகை

 பாச்சிகை pāccigai, பெ. (n.)

   சூதாடு கருவி; dice.

தெ. பாசிக, ம. பாச்சிக, க. பாசிகெ

     [பாய்ச்சிகை → பாச்சிகை]

     [P]

பாச்சிக்கட்டை

 பாச்சிக்கட்டை pāccikkaṭṭai, பெ. (n.)

பாச்சிகை பார்க்க;see {pāccigai}

     [பாச்சி + கட்டை]

பாச்சிக்குத்தகை

 பாச்சிக்குத்தகை pāccigguttagai, பெ. (n.)

பாசிக்குத்தகை பார்க்க;see {pāŠikkuttagai}

     [பாசி → பாச்சி + குத்தகை]

பாச்சிக்கை

 பாச்சிக்கை pāccikkai, பெ. (n.)

பாச்சிகை பார்க்க;see {pāccigai}

     [பாச்சிகை → பாய்ச்சிகை → பாச்சிக்கை]

பாச்சியமந்திரி

 பாச்சியமந்திரி pācciyamandiri, பெ. (n.)

   பிடாலவணம்; a kind of mineral salt with which bangles are made. (சா.அக.);.

பாச்சியம்

பாச்சியம் pācciyam, பெ. (n.)

   1. பகுதி; part share, portion, allotment.

   2. வகுக்கப் படுந்தொகை; dividend arith.

     [பாத்தியம் → பாச்சியம்]

பாச்சிலாச் சிரமம்

பாச்சிலாச் சிரமம் pāccilācciramam, பெ. (n.)

   திருவாசி எனப்படும், பாடல் பெற்ற ஊர்; a place name in Tanjore Dt.

இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.

     ‘பாச்சில் கூற்றத்து ஆச்சிராமமாதலின் பாச்சில் ஆச்சிரமம்’ என்று வழங்கப்படுகிறது என்ற கருத்து அமைகிறது. ஆச்சிரமம் முனிவர்களின் இருப்பிடத்தைக் குறிப்பிடும் நிலையில் இப்பெயர் அமைந்ததோ எனத் தோன்றுகிறது. சம்பந்தர், சுந்தரர் பாடிய கோயில் இங்கு உள்ளது.

     “அன்னமாம் பொய்கை சூழ் தரு பாச்சிலாச் சிராமத் துறை” (சுந்:14-2);

     “பொன் விளை கழனிப்

புள்ளினஞ் சிலம்புமாம் பொய்கைப்

பாச்சிலாச் சிராமத்து” (சுந்,14-4);

     “மஞ்சடை மாளிகைசூழ் தருபாச்சிலாச் சிராமத்துறைகின்றவன்” (44-3); என்கின்றார் சம்பந்தர்.);

பாச்சில் வேள் நம்பன்

பாச்சில் வேள் நம்பன் pāccilvēḷnambaṉ, பெ. (n.)

   எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த புலவர்; a poet, in 8th c.

     [பாச்சில் + வேள் + நம்பன்]

இவருடைய இயற்பெயர் நம்பன். கல்வெட்டின் உதவியால் அறியப் பெறுபவர்களில் இவரும் ஒருவர். சோழ மண்டலத்தைச் சார்ந்த மழநாட்டின்கண் விளங்கும் திருப்பாச்சிலாச் சிரமமே இவரது ஊர். சுவரன் மாறன் என்னும் இரண்டாம் பெரும் பிடுகு முத்தரையனை இவர் பாடியிருக்கின்றார். இந்த முத்தரையன் திருக்காட்டுப் பள்ளியின் பக்கத்திலுள்ள நியமம் என்ற ஊரில் பிடாரியார் கோயிலொன் றேற்படுத்தி, அக்கோயிலில் உள்ள தூண்களில், தன் மீது பாடிய பாடல்களைக் குறித்திருப் பதோடு பாடிய புலவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருக்கின்றான். அக்கோயில் சிதைந்து போனபடியால் அதிலுள்ள தூண்களையும், கற்களையும் திருக்காட்டுப் பள்ளிக்கருகிலுள்ள செந்தலை என்னும் ஊரில் கொண்டு சென்று ஒரு சிவன் கோவில் கட்டினார்கள். அத் தூண்களுள் ஒன்றில் நம்பன் பாடிய பாடல்கள் உள்ளன. பாடல்கள் யாவும் கட்டளைக் கலித்துறைகளாகவும் வெண்பாக்களாகவும் காணப்படுகின்றன.)

பாச்சிவரி

 பாச்சிவரி pāccivari, பெ. (n.)

பாசிவரி பார்க்க;see {pāši-war.}

     [பாசி → பாச்சி + வரி]

பாச்சுத்தி

பாச்சுத்தி1 pāccutti, பெ. (n.)

பாற்சொற்றி பார்க்க;see {pār-corri}

     [பாற்சொற்றி → பாச்சுத்தி]

 பாச்சுத்தி pāccutti, பெ. (n.)

   எருக்கு முதலான செடிகளிலிருந்து பாலெடுத்து இறுக வைத்த ஒரு பொருள்; the viscid juice of madar and other plants collected and evaporated in shallow dish in the sum or in the shade.(சா.அக.);.

மறுவ. பாச்சொற்றி, பாற்சோற்றி, பாச்சோந்தி.

பாச்சுருட்டி

 பாச்சுருட்டி pāccuruṭṭi, பெ. (n.)

   நெய்த ஆடையைச் சுருட்டும் நெசவுத் தறிமரம் (யாழ்.அக.);; weaver’s beam, a revolving bar of wood round which the woven cloth is wound.

     [பாய்ச்சுருட்டி → பாக்கருட்டி]

பா + சுருட்டி

பாச்சுற்றி

 பாச்சுற்றி pāccuṟṟi, பெ. (n.)

பாச்சுருட்டி பார்க்க;see {pӑ-с-сuruffi}

பாச்சை

பாச்சை pāccai, பெ. (n.)

   1. புத்தகப் பூச்சி; silver fish.

   2. தத்துப்பூச்சி வகை; a house hold pest.

   3. சுவர்க்கோழி; cricket.

   4. கரப்பு; cockroach.

     [பாய்ச்சல் → பாச்சை]

பாச்சையுருண்டை

 பாச்சையுருண்டை pāccaiyuruṇṭai, பெ. (n.)

   பாச்சை முதலிய பூச்சிகள் துணி, தாள் முதலியவற்றை அரித்து விடாமல், தடுக்கப் பயன்படுவதும் வெள்ளை நிறமுடையதும் ஒருவகை நெடி உடையதாக இருப்பதும் வேதிப் பொருளால் செய்யப்பட்டதுமான சிறிய உருண்டை; naphthaline ball.

     [பாச்சை + உருண்டை]

பாச்சொறி

 பாச்சொறி pāccoṟi, பெ. (n.)

பாற்சொற்றி பார்க்க;see {pārcorri}

     [பாற்சொற்றி → பாற்சொறி]

பாச்சொற்றி

 பாச்சொற்றி pāccoṟṟi, பெ. (n.)

   பாற்சொற்றி பார்க்க;(சா.அக.);; a plant, see {pâccord}

ம: பாச்சொற்றி

     [பாற்சொற்றி → பாச்சொற்றி]

பாச்சொற்றிப்பாலை

 பாச்சொற்றிப்பாலை pāccoṟṟippālai, பெ. (n.)

பாற்சொற்றி பார்க்க;see {pārcorri}

     [பாற்சொற்றி + பாலை]

பாஞ்சசன்னியம்

பாஞ்சசன்னியம் pāñsasaṉṉiyam, பெ.(n.)

   1. திருமாலின் சங்கு; conch of {}.

     “மதுசூதன் வாயமுதம் பன்னாளு முண்கின்றாய் பாஞ்ச சன்னியமே” (திவ்.நாயச்.7,5);.

   2. தீ (நாநார்த்த.179);; fire.

   3. நாணல் (நாநார்த்த. 179);; reed.

     [Skt. {} → த. பாஞ்சசன்னியம்]

பாஞ்சத்திகம்

 பாஞ்சத்திகம் pāñjattigam, பெ.(n.)

   இசைக் கருவி பொது. (யாழ்.அக.);; musical instrument.

     [Skt. {}-sabdika → த. பாஞ்சசத்திகம்]

பாஞ்சராத்திரம்

 பாஞ்சராத்திரம் pāñjarāttiram, பெ.(n.)

   மாலியத் தோன்றியங்களுள் ஒன்று (சி.போ.பா.);; a {}.

     [Skt. {} → த. பாஞ்சராத்திரம்]

பாஞ்சராத்திரி

பாஞ்சராத்திரி pāñjarāttiri, பெ.(n.)

   மாலிய சமயத்திற் பாஞ்சராத்திரத்தை பின்பற்றுபவன்(சி.போ.பா.அவை.4,சாமிநா.);; a follower of {}.

     [Skt. {} → த. பாஞ்சராத்திரி]

பாஞ்சராத்திரிகன்

 பாஞ்சராத்திரிகன் pāñjarāttirigaṉ, பெ.(n.)

பாஞ்சராத்திரி (வின்.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. பாஞ்சராத்திரிகன்]

பாஞ்சரை

 பாஞ்சரை pāñjarai, பெ. (n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vandivasi Taluk.

     [பைஞ்சாய்+தரை]

பாஞ்சலம்

பாஞ்சலம் pāñjalam, பெ.(n.)

   1. காற்று; wind.

   2. கனல்; fire.

   3. மிகு(இலாபம்); ஆதாயம்; gain.

     [Skt. {} → த. பாஞ்சலம்]

பாஞ்சாங்கயிறு

 பாஞ்சாங்கயிறு pāñjāṅgayiṟu, பெ. (n.)

   மணிவலையில் மணியுடன் சேர்ந்திருக்கம் கயிறு (தஞ்சை.மீனவ.);; a kind of fishing n: rope which have iron or brass beads in th end.

பாஞ்சார்

 பாஞ்சார் pāñjār, பெ. (n.)

   அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Arupukkottai Taluk.

     [பைஞ்சாய்→பாஞ்சார்]

பாஞ்சாலங்குறிச்சி

 பாஞ்சாலங்குறிச்சி pāñjālaṅguṟicci, பெ. (n.)

   வெள்ளையரை எதிர்த்துப் போராடி வீரபாண்டியகட்டபொம்மனின் தலைநகரமா விளங்கிய கோட்டை நகரம்; a tort town which was the capital of veera {pāndiy kattapommaŋ,}

பாஞ்சாலன்

பாஞ்சாலன் pāñjālaṉ, பெ.(n.)

   1. பாஞ்சால நாட்டினன் (யாழ்.அக.);; inhabitant of {}.

   2. பாஞ்சால நாட்டரசன்; King of {}.

   3. அழகிய தோற்றமுள்ளவன்; a person of noble appearance.

     [Skt. {} → த. பாஞ்சாலன்]

பாஞ்சாலமட்டியம்

 பாஞ்சாலமட்டியம் pāñjālamaṭṭiyam, பெ.(n.)

   தாள வகை (யாழ்.அக.);; a special mode of marking time.

     [Skt. {}+madhya → த. பாஞ்சாலம்+ அட்டியம்]

பாஞ்சாலம்

பாஞ்சாலம்1 pāñjālam, பெ.(n.)

   1. நாடுகள் ஐம்பத்தாறனுள் ஒன்று; an ancient country, one of 56 {}.

     “துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டம்” (திருவிளை. நரிபரி.104);.

   2. எழில் (யாழ்.அக.);; beauty, noble appearance.

     [Skt. {} → த. பாஞ்சாலம்]

 பாஞ்சாலம்2 pāñjālam, பெ.(n.)

இலக்கிய நடை மூன்றனுள்ள கெளடத்திற்கும் வைதருப்பத திற்கும் இடைப்பட்ட நடை.

 one of the three literary styles, midway between kautam and vaitaruppam.

     [Skt. {} → த. பாஞ்சாலம்]

பாஞ்சாலி

பாஞ்சாலி pāñjāli, பெ.(n.)

   1. பாஞ்சால இளவரசி பாஞ்சாலி (துரோபதை);; Draupadi, the princess of {}.

     “பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க” (திவ்.பெரியதி. 6,7,8);

   2. மரப்பாவை, மரப்பொம்மை (உ.வ.);; wooden doll.

     [Skt. {} → த. பாஞ்சாலி]

பாஞ்சாலிகம்

பாஞ்சாலிகம் pāñjāligam, பெ.(n.)

   மரப்பாவை விளையாட்டு; play with wooden doll.

     “பாஞ்சாலிக முன்னான நல்ல விளையாட்டின்” (திருவாலவா.62,26);.

த.வ.பொம்மை விளையாட்டு

     [Skt. {} → த. பாஞ்சாலிகம்]

பாஞ்சாலிகை

 பாஞ்சாலிகை pāñjāligai, பெ. (n.)

   சித்திரப்பாவை என்னும் மூலிகை; a kind shrub. (சா.அக.);

பாஞ்சேங்கி

 பாஞ்சேங்கி pāñjēṅgi, பெ. (n.)

   மிளிறை; sickle leaf plant used in eye diseases (சா.அக);

மறுவ: அரிவாள் மூக்கி

பாடகஞ்சொல்(லு)-தல்

பாடகஞ்சொல்(லு)-தல் pāṭagañjolludal,    8. செ.கு.வி. (v.i.)

   தொன்மக்கதைகளை மனத்திற் படும்படி நடித்து, இன்புறச் சொல்லுதல் (நாஞ்);; to expound {purānic} stories in an impressive manner with gestures and poses.

     [பாடகம் + சொல்லு-,]

பாடகன்

பாடகன்1 pāṭagaṉ, பெ. (n.)

பாடுவோன்

 songster, musician;

     ” விறலியர் பாடகர் பாணர் புகழக்கண்டு (திருவாலவா.55,3);

     [பாடு → பாடகன்]

 பாடகன்2 pāṭagaṉ, பெ. (n.)

   சொல் வன்மையுள்ளவன்; able speaker.

     “நல்ல வார்த்தைகள் சொல்லவல்ல… பாடகன்” (திருவாலவா.32,5.);

     [பாடு → பாடகன்]

பாடகம்

பாடகம்1 pāṭagam, பெ. (n.)

   1. தெரு (பிங்);; street, section of a village.

   2. காஞ்சியிலுள்ள ஒரு பெருமாள் கோயில்; vishu shrine in conjeevaram.

     ” பூம் பாடகத்துளிருந்தானை” (திவ்.இயற்.2.94);

   3. செய்த்தளை; portion of field.

     “மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந்திருத்தி” (S.I.I.i.iii,.203);

   4. நிழல் (அக.நி.);; shade.

   5. பறைவகை (நாநார்த்த.261);; a drum.

   6. கரை (நாநார்த்த. 261.);; bank, shore.

   7. சூதுகருவியை யுருட்டுக (நாநார்த்த. 261.);; dice throw.

   8. இழப்பு (நாநார்த்த 261.);; loss

 பாடகம்2 pāṭagam, பெ. (n.)

   மகளிர் காலணி; anklet, worn by women.

     “பாடகத் தாமரைச் சீறடி பணிந்து” (மணிமே.25,85);.

     “பரியக நூபுரம் பாடகம் சதங்கை” (சிலப்.6-84);

     “பாடகச்சீறடி பரற்பகை யுழவர்” (சிலப்.10-52);

     ” பாடகக்காரியிடம் பாரதம் சொன்னால் பாடகத்தைப் பார்ப்பாளா, பாரதத்தைக் கேட்பாளா?”. (பழ);

மறுவ: பாதகடகம்

க. பாடக

     [பாதகடகம் → பாடகம்]

 பாடகம்3 pāṭagam, பெ. (n.)

   ஒருவகைத்துகில் (சிலப்.14,108 உரை);; d kind of garment

     [படம் → பாடம் → பாடகம்]

 பாடகம்4 pāṭagam, பெ. (n.)

   சிவப்பு (அக.நி);; red.

     [பாடலம் → பாடகம்]

 பாடகம்5 pāṭagam, பெ. (n.)

   கூலி (நாநார்த்த.261.);; wages.

     [பாடு → அகம்]

 பாடகம்6 pāṭagam, பெ. (n.)

   பாடும் இடம்; a place where music is performed.

     “பாடகந் சாராமை பாத்திலார்” (ஏலாதி.25);

     [பாடு + அகம்]

 பாடகம் pāṭagam, பெ. (n.)

   போளுர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Polur Taluk.

     [படம் (வயல்); – பாடகம்]

பாடகவித்துவான்

 பாடகவித்துவான் pāṭagavittuvāṉ,    தொன்மக்கதைகள மனத்திற்படும்படி இன்புற்றுச் சொல்லுவோன் (நாஞ்); one who expounds {purānic} stories in an impressive manner with gestures and poses.

     [பாடகம் + skt. {vidvån»} த. வித்துவான்]

பாடகி

பாடகி pāṭagi, பெ. (n.)

   1. இறுமாப்பு, செருக்கு; pride, boasting (வின்.);

   2. பொய் சொல்வோன் (சங்.அக);; liar.

   மறுவ. பெரும் பொய்யன்;     [ஒருகா,படா → படாகி]

 பாடகி pāṭagi, பெ. (n.)

   பாடுபவள்; songstress.

     [பாடகன் → பாடகி]

பாடக்கள்

 பாடக்கள் pāṭakkaḷ, பெ. (n.)

   பல மரத்துக்கள்; taddy which is obtained from, various palmyra trees.

பாடக்கிடம்

 பாடக்கிடம் pāḍakkiḍam, பெ. (n.)

   ஆடுதின்னாப்பாளை; worm killer (சா.அக.);

பாடக்குறிப்பு

 பாடக்குறிப்பு pāṭakkuṟippu, பெ. (n.)

   ஆசிரியர், வகுப்பில் மாணாக்கர்க்குப் பாடங்கற்பிக்க முறைப்படுத்தி எழுதி அமைத்துக் கொள்ளும் குறிப்புகள்; notes of lesson.

     [பாடம் + குறிப்பு]

பாடங்கேள்-தல் (பாடங்கேட்டல்)

பாடங்கேள்-தல் (பாடங்கேட்டல்) pāṭaṅāḷtalpāṭaṅāṭṭal,    11. செ.குன்றாவி. (v.t.)

   1. ஆசிரியனிடம் கற்றல்; to learn under master.

   2. படித்த பாடத்தை உசாவுதல்; to hear the lessons studied.

     [பாடம் + கேள்]

பாடங்கொடு-த்தல்

பாடங்கொடு-த்தல் pāḍaṅgoḍuttal,    4. செ.கு.வி. (v.i.)

   1. படித்த பாடத்தை ஒப்பித்தல்; to recite a lesson.

   2. படிப்பதற்குப் பாடம் அமைத்தல்; to prescribe a lesson for study.

   3. படிப்பதற்குரிய பாடச்சுவடியைக் கையிற் கொடுத்தல்; to give the study metyerial.

     ‘பவளக்கொடி நாடகத்திற்குப் பாடம் கொடுக்கப்பட்டுவிட்டது’

     [பாடம் + கொடு-,]

பாடசாலை

 பாடசாலை pāṭacālai, பெ. (n.)

   கல்விக்கூடம்; School or college for learning.

     ” இரவுப் பாடசாலை”

மறுவ: பள்ளிக்கூடம்.

     [பாடம் + சாலை]

பாடஞ்செய்

பாடஞ்செய்2 pāṭañjeytal,    1.செ.குன்றாவி. (v.t.)

   பாடமாக்குதல், பதப்படுத்துதல்; making anything fit for use;curing, embalming.

     [பாடம் + செய்-,]

பாடஞ்செய்-தல்

பாடஞ்செய்-தல் pāṭañjeytal,    3. செ.கு.வி. (v.i.)

   ஒளி விடுதல்; to shine, emit tustre.

     ‘நினது பாடஞ்செய்கின்ற… வேல்’ (புறநா.57,உரை);

     [பாடம் + செய்-,]

பாடஞ்சேர்-தல்

பாடஞ்சேர்-தல் pāṭañjērtal,    9. செ.கு.வி. (v.i.)

   பாரத்தால் அழுத்தப்படுதல்; to be pressed down, compressed by a weight.

     [பாடம் + சேர்-,]

பாடஞ்சொல்(லு)

பாடஞ்சொல்(லு)1 pāṭañjolludal,    8. செ.குன்றா.வி. (v.t.)

கற்பித்தல்

 to explain lessons;

 to teach.

     [பாடம் + சொல்-,]

 பாடஞ்சொல்(லு)2 pāṭañjolludal, செ.கு.வி. (v.i.)

   பாடம் ஒப்பித்தல்; to recite lessons.

     [பாடம் + சொல்-,]

பாடணத்தாபனம்

 பாடணத்தாபனம் pāṭaṇattāpaṉam, பெ.(n.)

   இறந்தவர்களுக்கு நினைவுக்கல் (நடுகல்); நடும் விழா (உ.வ.);; the rite of setting up a stone to represent the deceased in a funeral ceremony.

த.வ.நடுகல்விழா

     [Skt. {} → த. பாடாணத் தாபனம்]

பாடத்திட்டக்குழு

 பாடத்திட்டக்குழு pāṭattiṭṭakkuḻu, பெ. (n.)

   பள்ளி கல்லூரி ஆகியவற்றில் பாடத்திட்டத்தை உருவாக்கும் அறிஞர் குழு; expert committee for syllabus.

     [பாடத்திட்டம் + குழு]

பாடத்திட்டம்

 பாடத்திட்டம் pāṭattiṭṭam, பெ. (n.)

கல்வி

   நிறுவனங்களில் குறிப்பிட்ட படிப்பைப் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் கற்பிக்கப்பட வேண்டியவை, அதற்கு உரிய நூல்கள் முதலியவற்றை உரியவர்கள் முடிவுசெய்து வகுக்கும் திட்டம்; syllabus or curriculam for a course.

     ” அரசு இந்த ஆண்டுமுதல் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது”

     [பாடம் + திட்டம்]

பாடநூல்

 பாடநூல் pāṭanūl, பெ. (n.)

   மாணவர் களுக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்றுக் கொடுப்பதற்கு உதவும் என்று தேர்ந் தெடுக்கப்பட்ட புத்தகம்; text book.

     ” தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்”. நன்கு செயல்படுகிறது.

     [பாடம் + நூல்]

பாடனம்

பாடனம்1 pāṭaṉam, பெ. (n.)

   செய்ந்நஞ்சு;{seyn-nafiju.}

 பாடனம்2 pāṭaṉam, பெ. (n.)

   1. சொல்லிக் கொடுத்தல்; teaching.

   2. பாடுகை; singing.

     [பாடம் → பாடனம்]

 பாடனம்3 pāṭaṉam, பெ. (n.)

   பிளக்கை (யாழ்.அக.);; breaking, splitting.

     [பாளம் → பாடம் → பாடனம்]

பாடனுபவி-த்தல்

பாடனுபவி-த்தல் bāṭaṉubavittal, பெ. (n.)

   4.செ.கு.வி. (v.i.);

   வருந்துதல்; to suffer, experience suffering, undergo trials.

     [பாடு + skt.anu-bhavin→. த. அனுபவி-.]

பாடன்

பாடன் pāṭaṉ, பெ. (n.)

பாடம்1 பார்க்க; 3 (S.I.I.ii,78); see {pādam}

     [பாடு → பாடன்]

பாடன் மகடூஉ

 பாடன் மகடூஉ pāṭaṉmagaṭūu, பெ. (n.)

   விறலி (திவா.);; songstress.

     [பாடன் + மகடூஉ]

பாடன்மகள்

 பாடன்மகள் pāṭaṉmagaḷ, பாடன் மகடூஉ(யாழ்.அக.) பார்க்க;See {padammagaợUu}

     [பாடன் + மகள்]

பாடபேதம்

 பாடபேதம் pāṭapētam, பெ. (n.)

   ஒரு நூலின் எழுத்து, சொல், தொடர் முதலியவை அதன் பல படிகளில் வெவ்வேறாகக் காணப்படும் நிலை; variant reading of a text.

மறுவ: பாடவேறுபாடு

     [பாடம் + skt. {bhãda} த. பேதம்]

பாடம்

பாடம்1 pāṭam, பெ. (n.)

   1. சுமைவைத்து அழுத்துகை; compression, as of a heap of tobacco, olas or skins by a weight placed on it.

   2. பதப்படுத்துகை; tanning.

   3. ஒன்பான்மணி முதலியவற்றின் ஒளி; as leather;

 curing;

 as tobacco lustre of precious stones and metals..

     ” பல்லாயிரமாமணி பாடமுறும்” (கம்பரா. சராப.11);

   4. முடிமாலை;(பிங்);

 a garland for the head, chaplet.

   5. வெற்றிலை (மலை);; betel.

   6. (மனித உடல் விலங்கின் தோல், புகையிலை முதலியவை); கெட்டுப் போகாமல் நீண்ட நாள் நிலைக்கும்படி மேற்கொள்ளப்படும் முறை; embalming;

     “பல வகை விலங்குகள் பாடம் செய்யப்பட்டு அருங் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.”

   மறுவ: பாடஞ்செய்தல்;   7. மனப்பாடம்; text committed to memory.

     [படி → பாடம்]

 பாடம்2 pāṭam, பெ. (n.)

   1. படிக்கும் நூற்பகுதி; lesson.

     “பாடம் போற்றல்” (நன்.41);

   2. படிப்பு; reading,perusal, study in general.

     “நாப்பாடஞ் சொல்லி நயமுணர்வார் போற்செரிக்கும்” (நாலடி.312,1);

     “கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்” (நாலடி.314-1);

   3.மூலபாடம்; text of a poem or a treatise.

     “பாடமே யோதிப் பயன்றெரிதல் தேற்றாத மூடர்” (நாலடி.316);

   4. வேதபாடம்; study of the {věda.}

   5. பாராமலொப்பிக்கும்படி கைவந்தது; that which is learnt by rote or well read.

     “அவனுக்கு நன்னூல் முழுவதும் பாடம்”

     “பாடை ஏறினும் ஏடது கைவிடேல்” (பழ);

     [படி → பாடம்]

 பாடம்3 pāṭam, பெ. (n.)

   1. தெரு (பிங்.);; street.

   2. இடையர் வீதி; street of herdsmen.

     [பாடி → பாடம்]

மறுவ: ஆயர்பாடி.

 பாடம்4 pāṭam, பெ. (n.)

   1. இணங்கு; consent.

   2. கடுமை; firmness.

   3. மிகுதி; excess.

     [படு → பாடம்]

 பாடம்5 pāṭam, பெ. (n.)

   கிளவியம்; uitterance, word.

     “படுக்கலுற்ற பதகநின் பாடமே” (நீலகேசி.537);

     [படி → பாடம்]

பாடம் பண்ணல்

 பாடம் பண்ணல் pāṭambaṇṇal, பெ. (n.)

   பதப்படுத்தல்; to preserve;

 to cure (சா.அக.);

     [பாடம் + பண்ணல்]

பாடம் பண்ணு

பாடம் பண்ணு1 pāṭambaṇṇudal,    12. செ.குன்றாவி (v.t.)

   1. ஒலை முதலியவற்றை அடுக்கி வைத்தல்; to ple up, as ola tobacco.

   2. புகையிலை முதலியவற்றைப் பக்குவப்படுத்துதல்; to cure tobacco leaves, etc.

     [பாடம் + பண்ணு-,]

 பாடம் பண்ணு2 pāṭambaṇṇudal,    12. செ.குன்றாவி (v.t.)

   மனப்பாடம் பண்ணுதல்; to learn by heart, commit to memory.

     [பாடம் + பண்ணு-,]

 பாடம் பண்ணு3 pāṭambaṇṇudal,    12. செ.குன்றாவி (v.i.)

   கடல்வளப் பொருட்களைப் பதப்படுத்துதல் (தஞ்சை.மீ னவ);; to cure.

     [பாடம் + பண்ணு-,]

பாடம் புகட்டு-தல்

பாடம் புகட்டு-தல் pāṭambugaṭṭudal,    10. செ.கு.வி. (v.i.)

   பாடம் கற்பித்தல்; to give a lesson.

     ‘என்னை பழித்தவனுக்கு ஒருபாடம் புகட்டவேண்டும்’ (உ.வ.);

பாடம் போற்று-தல்

பாடம் போற்று-தல் pāṭambōṟṟudal,    10. செ.கு.வி (v.i.)

   படித்தபாடத்தைச் சிந்தித்தல் (நன்.41);; to reflect upon what is learnt study.

     [பாடம் + பண்ணு-,]

பாடரி

பாடரி1 pāṭari, பெ. (n.)

பாடலி,5 (அக.நி); பார்க்க;See {pādali}

 பாடரி2 pāṭari, பெ. (n.)

   1. மதுக்குடி; any sweet and introicating drink.

   2. சாராயம் (சா.அக.);

 arrack.

பாடறிந்தொழுகு-தல்

பாடறிந்தொழுகு-தல் pāṭaṟindoḻugudal, செ.கு.வி. (v.i.)

   இயல்பறிந்து நடத்தல்; behave in habitude.

     “பண்பெனப் படுவது பாடறிந்தொழுகுதல்” (கலித்.133,8);

     [பாடு + அறிந்து + ஒழுகு-,]

பாடறிவர்

 பாடறிவர் pāṭaṟivar, பெ. (n.)

   கடற்றொழில் அறிவுடையவர்; one who expert in oceamfishing.

பாடறியுந் திறனுடையார். இவ்விடத்தேவலை வைத்தால் இத்தன்மையான மீன் கிடைக்குமெனுங் கடலறிவுடைய மீனவர் (முகவை.மீனவ.);

     [பாடு + அறிவர்]

பாடற்பயன்

பாடற்பயன் pāṭaṟpayaṉ, பெ. (n.)

   இன்பம், தெளிவு, நிறை, ஒளி, வன்சொல், இறுதி, மந்தம், உச்சம் என்னும் எண்வகையான இசைப்பயன் (சிலப்.3,16,உரை.);; effect of a song, of eight kinds, viz., {inbam, tellvu, nirai, oļi, vaņšol, irudi, mandam, uccam.}

     [பாடல் + பயன்]

பாடற்பயம்

 பாடற்பயம் pāṭaṟpayam, பெ. (n.)

   பாடலின்பம் (பரிபா);; the pleasure of reciting poems.

     [பாடல் + பய்ம்]

பாடற்றொழில்கள்

 பாடற்றொழில்கள் pāṭaṟṟoḻilkaḷ, பெ. (n.)

   இசைப்பாடல் பாடுமுன் யாழ் முதலியவற்றில் செய்யும் முன் ஏற்பாடுகள்; preliminary work in musical instruments.

     [பாடல் + தொழில்கள்]

பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்னுங்கலைத் தொழில்களெட்டும், மி டற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், நடுக்கம் கம்பிதம்); குடிலம் என்னுமைந்தும் பெருவண்ணம், இடைவண்ணம், வனப்பு வண்ண முதலிய வண்ணங்கள் எழுபத் தாறுமாம். (த.சொ.அக.);

பாடலத்துருமம்

 பாடலத்துருமம் pāṭalatturumam, பெ. (n.)

   புன்னாக மரம்; alexandrian laurel.

பாடலனார்

 பாடலனார் pāṭalaṉār, பெ. (n.)

   பாடலம் என்ற இலக்கண நூலாசிரியர்; a grammarian.

     [பாடலம் → பாடலனார்]

பாடலம்

பாடலம்1 pāṭalam, பெ. (n.)

   1. சிவப்பு (திவா.);; red.

   2. வெண்சிவப்பு (நாநார்த்த.26);; pale red.

   3. குங்குமம் (நாநார்த்த.261.);; saffron.

   4. குதிரை (திவா.);; horse.

     “பாடலங்கரி வைகிய பந்தியும்” (அரிச்.பு.நகரப்.2);

   5. சேரன் குதிரை (திவா.);; horse of the {céra} king.

   6. பாதிரி பார்க்க ‘பாடலம் வறுமை கூர (கம்பரா.கார்கால.26.);

   7. மழைக்காலத்து விளையும் நெல் (நாநார்த்த.261.);; a kind of paddy sown and harvested during the rainy season.

     “பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து” (சிலப்.13-,154);

     [படு → பாடு → பாடலம்]

படுதல்= விழ்தல், சாய்தல். படு ஞாயிறு= ஏற்பாடு மாலை நேரம். செவ்வானம்= சிவப்பு.

 பாடலம்2 pāṭalam, பெ. (n.)

   சூளுரை; vow.

மறுவ: வஞ்சினம்.

பாடலார்

 பாடலார் pāṭalār, பெ. (n.)

   கழற்கொடி; bonduc creeper (சா.அக.);

மறுவ: கழற்சி

பாடலி

பாடலி pāṭali, பெ. (n.)

   1. பாதிரி (மலை); பார்க்க;See {padiri}

   2. வெண்பாதிரை பார்க்க;See {veŋpātirai}

   3. பேற்ப்பாதிரை;See {pēy-p}{pâtirai}

   4.பாடலிபுரம்; the capital of Magadha.

     “பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந்.75); see5. கள் (திவா);;

 toddy.

   6. நெல்வகை (யாழ்.அக);; a kind of paddy.

   7. கொடிவகை (யாழ்.அக);;а сreeper.

     [பாதிரி → பாடலி]

பாடலிபுத்திரம்

பாடலிபுத்திரம் bāṭalibuttiram, பெ. (n.)

   1.பாடலிபுரம்பார்க்க;See {padaipuram}

   2. தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூர் என்னும் சிவத்தலம்;{Tiruppädirippuliyur,} a siva shrine in south arcot district.

     “பாடலிபுத்திரமென்னும் பதியணைந்து” (பெரியபு .திருநாவுக்.38);;

     [பாடலி + புத்திரம்]

பாடலிபுரம்

 பாடலிபுரம் bāṭaliburam, பெ. (n.)

   கங்கை சோணை ஆறுகளின் கூடுதுறையிலுள்ளதும் மகத நாட்டுத் தலைநகருமான ஒரு பழைமையான நகரம்; the capital of Magatha near the confluence of the {son} and the Ganges, identified with the modern patna.

பாடலை

பாடலை pāṭalai, பெ. (n.)

   1. மரவகை; a tree.

   2. பாடலிபுரம் பார்க்க;See {pāgalpuram}

   3. கொற்றவை;{Durga,}

பாடல்

பாடல்1 pāṭal, பெ. (n.)

   1. பாடுகை; singing;versitying.

     ” பாடல் சான்ற புலனெறி வழக்கமும்” (தொல்,பொ.53);;

     “மறைகலந்த வொலிபாடலொடாடராகி” (தேவா. பிரமயுற்6. சம்பந்த);

   2. இசைப்பா; song, lyric.

   3. செய்யுள்;  poem,poetry.

     “மங்கலவாழ்த்துப் பாடலும்” (சிலப்.பதிகம்.63);;

     “நம்புபாடலாடலை நயந்து நண்ணினாள் கொலோ” (சிவரக.கணபதிமறு. 6.);

   4. புகழ்; fame renown.

     “பாடல் சான்ற—பாட்டினம்” (சிறுபாண்.151);

     “பாடல் பற்றிய பயனுடைய யெழாஅற்” (பொருந.56);

     “பாடல் சான்ற நன்னாட்டு நடுவண்” (மது.331.);

     “நீயே பாடல் சான்ற பழிதபு சீறடி” (நற்.2561);

     “கிளிகடி பாடலும் ஒழிந்தனள்” (அகநா.118-13);

     “படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின்” (அகநா.222-11);

     “பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்;

கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்?” (குறள்.573-1);

   5. படிக்கை. (திவா.);; reading.

     [பாடு → பாடல்]

 பாடல்2 pāṭal, பெ. (n.)

   1. பாகல்; bitter.gourd.

 பாடல்3 pāṭal, பெ. (n.)

   பாடலிபுரம்; the capital of Magadha near the confluence of {son} and Ganges identified with the ,modern patna.

     “பாடலிற் பிறந்த பசும்பொன் வினைஞரும்” (பெருங்.உஞ்சைக்.58,42);

பாடல் பெறு-தல்

பாடல் பெறு-தல் pāṭalpeṟudal,    2. செ.கு.வி. (v.i.)

   1. புலவர்களால் அரசன் முதலியோர் பாடல் பெறுதல்; having the distinction of being sung by poets.

     “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக புலவர் பாடாது வரைக என்நிலவரை” (புறநா.);

   2. நாயன்மார்கள் ஆழ்வார்கள் முதலியோரால் குறிப்பிட்ட திருக்கோயில்களில் உள்ள இறைவனைப் பற்றிப் பாடியிருத்தல்; shrine sanctified by the hymns of {Nāyanmärs} or {Álvars}

     [பாடல் + பெறு-,]

பாடல்பயிலிடம்

 பாடல்பயிலிடம் pāḍalpayiliḍam, பெ. (n.)

   பட்டிமண்டபம் (பிங்.);; a forum of opposing teams debating a given subject.

     [பாடல் → பயிலிடம்]

பாடல்பெற்றதலம்

 பாடல்பெற்றதலம் pāṭalpeṟṟadalam, பெ. (n.)

   நாயன்மார்களாலேனும் ஆழ்வார் களாலேனும் பாடப்பெற்ற திருத்தலம்; shrine sanctified by the hymns of {Näyanmärs} or {Älvārs.}

     [பாடல்பெற்ற + தலம்]

பாடவன்

பாடவன் pāṭavaṉ, பெ. (n.)

   1. பாடுபவன் (யாழ்.அக.);; songster.

   2. பாடவை பார்க்க;See {pāgawai}

     [பாடு + அவன் → பாடவன்]

பாடவம்

பாடவம்1 pāṭavam, பெ. (n.)

   வடவைத்தீ; the submarine fire.

     [வடவம் → படவம் → பாடவம்]

 பாடவம்2 pāṭavam, பெ. (n.)

   1. வல்லமை; cleverness,ability, prowess.

     ” பாடவத்தொழின் மன்மதன் பாய்கணை” (கம்பரா.சூர்ப்.73);;

   2. களிப்பு (திவா.);; exultation,joy

   3. நலம் (யாழ்.அக);; health.

   4. பெருமை (யாழ்.அக);; greatness.

 பாடவம்3 pāṭavam, பெ. (n.)

பாடகம்3 பார்க்க;See {padagam,}

     “காற்பாடவம் கழன்றுபோமோ? (கொ.வ.);

பாடவரி

 பாடவரி pāṭavari, பெ. (n.)

   ஊர்வரிவகை; a village cess.

பாடவரை

பாடவரை pāṭavarai, பெ. (n.)

   வாளவரை (நாமதீப.337.);; sword-bean.

     [வாளவரை → பாடவரை]

பாடவள்

பாடவள் pāṭavaḷ, பெ. (n.)

   1. பாடவை பார்க்க;See {pādawai}

   2. பாடும்பெண்; songstress.

     [பாட்டு → பாடு + அவள்]

பாடவிதானம்

 பாடவிதானம் pāṭavitāṉam, பெ. (n.)

 curriculum.

     [பாடம் + {skt.vi-tāņa»} த. விதானம்]

பாடவியம்

பாடவியம் pāṭaviyam, பெ. (n.)

   வாச்சியவகை (S.I.I.ii275);; a musical instruments.

     [பாடு → பாடவியம்]

பாடவுரை

 பாடவுரை pāṭavurai, பெ. (n.)

   பாடவேறுபாடு காட்டியெழுதும் உரை; commentary which denotes the variation of text.

     [பாடம் +உரை]

பாடவேளை

பாடவேளை1 pāṭavēḷai, பெ. (n.)

   ஒன்பான் மணிகளை மதிப்பிடுதற்கேற்ற ஒளியமைந்த வேளை; time when the lustre of a gem is clearly {percêived.}

     [பாடம் + வேளை]

 பாடவேளை2 pāṭavēḷai, பெ. (n.)

   பள்ளிகளில் பாடப்பிரிவினை செய்து நடத்தும் காலக்கூறு; period.

     “இன்று, முதல்பாடவேளை தமிழ்” (உ.வ.);

     [பாடம் + வேளை]

பாடவை

 பாடவை pāṭavai, பெ. (n.)

   ஆடவை (திவா.);; gemini of the zodiac.

     [ஆடவை → பாடவை]

பாடா

பாடா pāṭā, பெ. (n.)

   1. ஆடுதின்னாப்பாலை (மலை.); பார்க்க;See {adutionä-p-pālai.} worm-killer.

   2. கொடிவகை; shining moonseed.

மறுவ: பங்கம்பாளை, பாடக்கிடம்.

பாடாகு-தல்

பாடாகு-தல் pāṭākudal,    7. செ.கு.வி. (v.i.)

   1. கெடுதியடைதல்; to suffer injury.

   2. அழிதல்; to perish;

 to be ruined.

     [படு → பாடு + ஆகு-,]

பாடாசிதம்

 பாடாசிதம் pāṭācidam, பெ. (n.)

   கல்வாழை; stone plantain. (சா.அக.);

     [P]

பாடாணக்கட்டு

 பாடாணக்கட்டு pāṭāṇakkaṭṭu, பெ.(n.)

   வெள்ளை நஞ்சு (வின்.);; white arsenic.

     [Skt. {} → த. பாடாணம்+ கட்டு]

பாடாணக்கல்

பாடாணக்கல் pāṭāṇakkal, பெ.(n.)

   1. பாம்புக் கல்; snake-stone.

   2 நஞ்சை மாற்றுங் கல் வகை; a kind of stone applied to poison- bites as antidote.

த.வ.நஞ்சுமுறிக்கல்

     [Skt. {} → த. பாடாணம்+கல்]

பாடாணச்செடி

 பாடாணச்செடி pāḍāṇacceḍi, பெ.(n.)

   திருநீற்றுப் பச்சை; sweet basil.

     [Skt. {} →த. பாடாணம்+செடி]

பாடாணமாரி

 பாடாணமாரி pāṭāṇamāri, பெ.(n.)

   கல்மழை (சா.அக.);; hail stone rain.

த.வ.ஆலங்கட்டி மழை

பாடாணமுத்தி

பாடாணமுத்தி1 pāṭāṇamutti, பெ.(n.)

   ஆதன் கற்போலக் கிடப்பதாகக் கருதப்படும் முத்தி நிலை; the state of salvation in which the soul is supposed to lie still like a piece of stone.

     [Skt. {}+Pkt. mukti → பாஷாணமுத்தி → த. பாடாணமுத்தி]

 பாடாணமுத்தி2 pāṭāṇamutti, பெ.(n.)

   உடலும், ஆதனும் அழியும் பெளத்தர்களின் வீடுபேறு (சா.அக.);; annihilation of the body and soul by Buddhists.

     [Skt. {} + Pkt. mukti → பாஷாணமுத்தி → த. பாடாணமுத்தி]

பாடாணம்

பாடாணம்1 pāṭāṇam, பெ. (n.)

   1. கல்;  stone.

     “ஊன்றுமெழிற்பாடாமை” (ஆ.செள.கருச.);

   2. நச்சுச்சரக்கு;அது பிறவிப்பாடாணம், வைப்புப்பாடாணம் என விருவகை. (வைத்தியபரி.);

 பாடாணம்2 pāṭāṇam, பெ. (n.)

செய்ந்நஞ்சு பார்க்க;See {Śey-n-narju}

 பாடாணம் pāṭāṇam, பெ.(n.)

   1. கல்; stone.

   2. பிறவி நஞ்சு, வைப்பு நஞ்சு என்ற மருந்து சரக்குகள்; mineral poison, especially arsenic, of which there are two kinds, viz., {}.

   3. எண் வகைத் துய்ப்புகளுள் பாறை நிலமும் அவற்றிலுண்டாகும் பொருள்களும் (C.G.);; rocky soil and its products, one of {}.

த.வ. நச்சுக்கல்

     [Skt. {} → த. பாடாணம்]

பாடாணோத்துவாசனம்

 பாடாணோத்துவாசனம் pāṭāṇōttuvācaṉam, பெ.(n.)

   சாச்சடங்கில் இறந்தவர் பொருட்டு நாட்டிய கல்லை நீரிலிடுஞ் செய்கை (உ.வ.);; the rite of removing the stone representing the deceased and casting it into water at the close of a funeral ceremony.

த.வ.கல் நீராட்டு

     [Skt. {} → த. பாடாணோத்து – வாசனம்]

பாடாண்

பாடாண் pāṭāṇ, பெ. (n.)

பாடாண்டினை (தொ.பொ..80); பார்க்க;See {pādāntinal}

     [பாடு +ஆண்]

பாடாண்டினை

பாடாண்டினை pāṭāṇṭiṉai, பெ. (n.)

   பாட்டுடைத் தலைவனது;   புகழ், வலி, கொடை, அளி முதலியவற்றைப் புகழ்ந்து கூறும் புறத்துறை (தொல்.பொ.80,உரை);;{(purap);} theme praising a hero’s fame, power, mUnificence, etc.

     [பாடாண் + திணை]

     “பாடப்படுகின்ற ஆண்மகனுடைய ஒழுகலாறு என்பது பொருள் என்றும், இது வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை” என்றும் கூறுவர் ஆசிரியர் (நச்சினார்க்கினியர்.);

பாடாண்பாட்டு

 பாடாண்பாட்டு pāṭāṇpāṭṭu, பெ. (n.)

பாடாண்டினை பார்க்க;See {padantimai,}

பாடாந்தரம்

 பாடாந்தரம் pāṭāndaram, பெ. (n.)

   பாடவேறுபாடு; variant reading.

     [பாடம் +{ skt.antara»} த. அந்தரம்]

பாடாயடி-த்தல்

பாடாயடி-த்தல் pāḍāyaḍittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   கடுமையாகப் புடைத்தல்; to beat severely.

     [பாடாய் + அடி-,]

பாடாயழி-தல்

 பாடாயழி-தல் pāṭāyaḻidal, செ.கு.வி. (v.i.)

   மிகக் கேடுறுதல்; to be seriously damaged;

 to be ruined.

     [பாடாய் + அழி-,]

பாடாற்று-தல்

பாடாற்று-தல் pāṭāṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   துன்பம் பொறுத்துக்கொள்ளுதல்; to endure affliction or sorrow.

     “சிலநாளாற்றாமை யோடே பாடாற்றிக்கிடந்தார்” (ஈடு 5,3,1);

     [பாடு + ஆற்று-,]

பாடாலம்

பாடாலம் pāṭālam, பெ. (n.)

   பாதிரி; trumpet flower.

     “பாடாஅலப் புட்பத்தனவாகிய பண்புநாற்றம்” (நீலகேசி.422);

     [பாடலம் → பாடாலம்]

பாடாழி

 பாடாழி pāṭāḻi, பெ. (n.)

   இரட்டையோட்டுக் கிளிஞ்சில், கிடைக்குமிடம்-கழிமுகப்பரப்பு; backwater area.

     [பாடு+ஆழி]

பாடாவதி

பாடாவதி pāṭāvadi, பெ. (n.)

   1. துன்பம்; trouble, distress.

   2. பயனற்றது; useless thing.

     [பாடு + {skt.ava-dhb} த.அவதி]

பாடாவதிநட்சத்திரம்

பாடாவதிநட்சத்திரம் pāṭāvadinaṭcaddiram,    மங்கலமற்ற சில விண்மீன்கள் (சோதிட. சிந். 56); a group of inuspicious {vinmin.}

     [பாடு + வதி + {skt.nakŞatra»} த. நட்சத்திரம்]

பாடாவனசம்

 பாடாவனசம் pāṭāvaṉasam, பெ. (n.)

   பெருங்குமட்டி; bitter apple, cuccmus genus. (சா.அக.);

பாடாவவரை

 பாடாவவரை pāṭāvavarai, பெ. (n.)

   தம்பட்டை அவரை; jamaica horse bean.(சா.அக.);

பாடாவாரி

 பாடாவாரி pāṭāvāri, பெ. (n.)

பாடாவறுதி பார்க்க;See {pādāvarud.}

பாடாவிதி

 பாடாவிதி pāṭāvidi, பெ. (n.)

பாடாவதி பார்க்க;See {pāgāvadi}

பாடாவிரி

பாடாவிரி pāṭāviri, பாடாவதி பார்க்க;See {padavati}

     “அதுவொருபாடாவிரி” (இராமநா. பால.11);

     [பாபாவதி → பாடாவிரி]

பாடி

பாடி1 pāṭi, பெ. (n.)

   1. பாடி; விழாக்கோள் பன்முறையெடுப்ப” (சிலப். உரைபெறு.3);

   2. சேரி (திவா.);; hamlet;quarters.

   3. நாடு (யாழ்.அக.);; district.

   4. முல்லை நிலத்தூர் (திவா.);; pastoral village.

   5. பாடிவீடு பார்க்க;See {padi-widய}

     “பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான்” (பு.வெ.3,10);

   6. படை (திவா.);; army, troop.

   7. –கவசம் (அக.நி.);; armour. coat of mail.

   8. உளவாளி (வின்);; Spy.

தெ.பாடு. க.ம. பாடி.

     [படு → பாடி]

 பாடி pāṭi, பெ. (n.)

   1. பாடு-பவன்-பவள், வது; singer, warbler.

     “கூழுக்குப்பாடி;

வானம்பாடி”

   2. பாட்டுப்பாடிப் பிச்சையெடுப்பவன்; a professional, singing beggar.

     “பாடிபரதேசி

   3. ஒருவகைப்பண் (யாழ்.அக.);; a tune.

     “பாடிப்பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி இல்லை” (பழ.);

     [பாடு → பாடி]

பாடி-த்தல்

பாடி-த்தல் pāṭittal,    4 செ.குன்றாவி (v.t.)

   1. பேசுதல்; to speak.

     “காழிவேந்தர்… சமணரோடும் பாடித்த தோடந் தீர” (திருவாலவா.38,67);.

   2. பலுக்குதல்; to pronounce, utter, as mantra.

     “சிவனுக்கு மூலத்தைப் பாடித்தே” (சைவச.பொது.295);.

     [Skt. {} → த. பாடித்தல்]

பாடிகா

 பாடிகா pāṭikā, பெ. (n.)

   சந்தனக் குழம்பு; sandal solution or paste mixed with other perfumes. (சா.அக.);

பாடிகாப்பார்

பாடிகாப்பார் pāṭikāppār, பெ. (n.)

   ஊர்க்காவலாளர்; village watchmen; those responsible for the safety of property in a village.

     “ஒன்றுகெட்டவாறே பாடிகாப்பாரைப் பிடிக்குமா போலே” (ஈடு10,1,4);

     [பாடி + காப்பார்]

பாடிகாவல்

பாடிகாவல் pāṭikāval, பெ. (n.)

   1. ஊர்க்காவல்; system of watch in a village.

   2. தலையாரி; village watchmen.

   3. ஊர்க் காவற்கு வாங்கும் வரி (S.I.I.89);; contribution for village watching.

   4. வழக்கு உசாவி ஒப்பநாடிச் செய்யுந் தண்டம்(சி.போ.2,2,வார்த்.);; punishment enforced by a tribunal.

     “பாடி காவலிற்பட்டுக்கழிதிரே” (தேவா.232,2);

   5. பாதுகாவல்; safe custody or detention.

     “பாடிகாவலிடுமின்” (திவ்.பெரியாழ், 3,7,5);

     [பாடி + காவல்]

பாடிக்காவல்

 பாடிக்காவல் pāṭikkāval, பெ. (n.)

பாடிகாவல் பார்க்க;See {paikaval}

     [பாடி + காவல்]

பாடிக்கொடு-த்தல்

பாடிக்கொடு-த்தல் pāḍikkoḍuttal,    4. செ.குன்றாவி. (v.t.)

   1. பிறனுக்காகச் செய்யுள் இயற்றித் தருதல்; to compose a poem and give it to another.

   2. பாடலியற்றுதல்; to compose a poem.

     “பாடிக்கொடுத்தாணற் பாமாலை” (திவ். திருப்பா.தனியன்);

     [பாடி + கொடு-,]

பாடிசம்

 பாடிசம் pāṭisam, பெ. (n.)

   பெருங்கோரை; large sedge grass. (சா.அக.);

பாடிசொல்(லு)-தல்

பாடிசொல்(லு)-தல் pāṭisolludal,    8.செ.குன்றாவி.(v.t.)

 A உளவைவெளிப்படுத்துதல்;

 to expose secrets.

     [பாடி + சொல்-,]

பாடிதம்

பாடிதம் pāṭidam, பெ.(n.)

   பலுக்கப்படுவது; speech, anything pronounced.

     “பாடித வசன மென்றா” (சிவதரு.சிவஞானயோ.81);.

     [Skt. {} → த. பாடிதம்]

பாடிநம்

பாடிநம்1 pāṭinam, பெ. (n.)

   1. குங்குலியம் பார்க்க;See {kunguliyam.}

   2. வாளைமீன் பார்க்க;See {vå/aimin}

 scabbard fish.

மறுவ: கொடுவேலி

பாடினம்

 பாடினம் pāṭiṉam, பெ. (n.)

   சித்திமூலம்; ceylon leadwort. (சா.அக.);

மறுவ: கொடுவேலி.

பாடினி

பாடினி1 pāṭiṉi, பெ. (n.)

   பாடுவாள்; singer. caste.

     “பாடினியணியாள்” (புறநா.242.);

   2. பாண்குலமகள்; songstress woman of the {pânar} caste.

     “வயவேந்தன் மறம்பாடிய பாடினி யும்மே’ (புறநா.11); ‘இ’ பெண்பாலீறு

     [பாடு → பாடினி]

     “பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி” (பொருந.47);

     “வாலொளி முத்தமொடு பாடினி யணிய” (பொருந.162);

     “படையே ருழவ பாடினி வேந்தே” (பதிற்று.1417);

     “பகம்யூன் மார்ய பாடினி வேந்தே” (பதிற்று-17-14);

     “ஒருதிறம் பாடினி பாலையங் குரலின்” (பர்.17-17);

     “பாடினி பாடும் வஞ்சிக்கு” (புறம்.15-24);

     “பாணன் சூடான் பாடினி யணியாள்’ (புறம்.242-3);

     [பாணன் → பாடினி (பெண்பால்);]

 பாடினி2 pāṭiṉi, பெ. (n.)

   மட்பாண்டம்; earthern vessel, or pot. (சா.அக.);

பாடிபரதேசி

பாடிபரதேசி bāṭibaratēci, பெ. (n.)

   1. பாடிக்கொண்டு அலைந்து திரிபவன்; wandering ballad-singer.

   2. ஊருராய்த் திரியும் இரவலன்; wandering beggar.

     [பாடி + பரதேசி]

பாடிப்பேச்சு

 பாடிப்பேச்சு pāṭippēccu, பெ. (n.)

பாடிக்கத பார்க்க;See {pād-k-kadai}

     [பாடி + பேச்சு]

பாடிமாற்றம்

பாடிமாற்றம் pāṭimāṟṟam, பெ. (n.)

   வழக்குச் சொற்கள் (தொல்.பொ.553,உரை.);; colloquialisms, local idioms.

     [பாடி + மாற்றம்]

பாடிமிழ் பனிநீர்

பாடிமிழ் பனிநீர் pāṭimiḻpaṉinīr, பெ. (n.)

   ஒலிக்கும் கடலலைகளால் உண்டாகும் குளிர்ந்த நீர்த் திவலை; globale of water.

     “பாடிமிழ் பனிநீர்ச் சேர்ப்பனொடு” (நற்.378-11);

     [பாடு + இமிழ் + பனிநீர்]

பாடிமிழ்-தல்

பாடிமிழ்-தல் pāṭimiḻtal,    13. செ.கு.வி. (v.i.)

   ஒலித்தல்; to roar, make a loud noise.

     “பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன்” (புறநா.49);

     [பாடு + இமிழ் -,]

பாடிமிழ்கடல்

பாடிமிழ்கடல் pāḍimiḻkaḍal, பெ. (n.)

   அலைபாடுங்கடல்; sea waves which are personificated as singing.

     ‘பாடிமிழ் கடலின் எழுந்த சும்மையொடு” (அகநா.334-4);

     [பாடு + இமிழ் + கடல்]

பாடிமிழ்பனிக்கடல்

பாடிமிழ்பனிக்கடல் pāḍimiḻpaṉikkaḍal, பெ. (n.)

பாடிமிழ்கடல் பார்க்க;See {padimilkadal}

     “பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு” (முல்லை-4);

     “பாடிமிழ் பனிக்கடல் துழைஇப் பெடையோடு” (நற்.91-3);

     “பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ” (புறம்.49-2);

     [பாடு + இமிழ் + பனி + கடல்]

பாடிமிழ்விடர்முகை

பாடிமிழ்விடர்முகை pāḍimiḻviḍarmugai, பெ. (n.)

   ஒலிக்கின்ற அலைகடல் மோதும் பாறையிடுக்கு; rock cave that which located in seashore.

     “பாடிமிழ் விடர்முகை முழங்க” (நற்.156-9);

     [பாடு + இமிழ் + விடர்முகை]

பாடியகாரர்

பாடியகாரர் pāṭiyakārar, பெ.(n.)

   1. பேருரை காரர்; author of an elaborate commentary.

   2. பாணினீயத்தின் பேருரையாளரான பதஞ்சலி (பி.வி.1, உரை.);;{},

 the commentator on the Grammar of {}.

   3. நான்முகனின் நூற்பாவிற்கு விரிவுரை (பாஷ்யம்); இயற்றிய இராமானுசாச்சாரியர்;{},

 a commentator on Brahma {}.

த.வ.உரையாசிரியர்

     [Skt. {} → த. பாடியகாரர்]

பாடியம்

 பாடியம் pāṭiyam, பெ.(n.)

   பேருரை (வின்.);; an elaborate commentary on {}.

த.வ.விளக்கவுரை

     [Skt. {} → த. பாடிய]

பாடியோடு-தல்

பாடியோடு-தல் pāṭiyōṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   பாடியோட்டத்திற் பாடிகொண்டு ஓடுதல் (வின்.);; to sing running, in the game of {pādiy-Ottam.}

     [பாடி + ஓடு-,]

பாடியோட்டம்

 பாடியோட்டம் pāṭiyōṭṭam, பெ. (n.)

   சிற்றூர் விளையாட்டு வகை (யாழ்ப்.);; game of prisoners’bars.

     [பாடி + ஒட்டம்]

பாடிரம்

பாடிரம்1 pāṭiram, பெ. (n.)

பாடீரம் பார்க்க;See {pågiram}

பாடிலம்

 பாடிலம் pāṭilam, பெ. (n.)

   நாடு(R.);; country

     [பாடு – பாடிலம்]

பாடிலா

பாடிலா pāṭilā, பெ. (n.)

   1. வட்டத் திருப்பி(பொன் முசுட்டையின் வேர்);; root of sida acvta.

   2. பங்கம்பாளை; worm killer. (சா.அக.);

பாடில்

 பாடில் pāṭil, பெ. (n.)

   வாகைமரம்; common srissa. (சா.அக.);

பாடிவிடு

பாடிவிடு pāḍiviḍu, பெ. (n.)

   பாசறை; military camp, war-camp.

     “பாடிவீட்டினைவலஞ் செய்கென்றான்” (கம்பரா.விபீடண.151);

     [பாடி + வீடு]

     [போர் அமைதிக் காலத்தில் ஒரு நாட்டின் போர் வீரர்களுள் மணமாகாதவர்கள் குடியிருக்கப் பயன்படுவதும் பாடிவீடெனவே அழைக்கப்பெறும். பாடிவீடு நிலையான கட்டடம். பாடிவீட்டில் போர்வீரர்களுக்கு வேண்டிய உணவு விடுதிகளும், பொழுது போக்குக்கான ஏந்துகளும் இருக்கும். பயிற்சியின் போது தங்கியிருக்கும் பாடிவீடுகள் இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லத்தக்கன.] கலைக்களஞ்சியம்

பாடிவீரர்

 பாடிவீரர் pāṭivīrar, பெ. (n.)

   படைவீரர் (நிகண்டு.);; troops.

     [பாடி + வீரர்]

பாடிவேட்டை

பாடிவேட்டை pāṭivēṭṭai, பெ. (n.)

   பாரிவேட்டை (S.I.I.iv,115);; hunting.

     [பாரிவேட்டை → பாடிவேட்டை]

பாடீரம்

பாடீரம்2 pāṭīram, பெ. (n.)

   1. சந்தனம் (தைலவ.தைல.);; sandalwood.

   2. முகில்; cloud.

   3. மூட்டுப்பிடிப்பு; rheumatism

   4. மூங்கிலரிசி; granular seeds of the bamboo.

   5. கிழங்கு வகை; a root.

   6. துத்தநாகம் (நாநார்த்த.220.);; zinc.

   7. வயல் (நாநார்த்த);; field.

பாடு

பாடு1 pāṭudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. பண்ணிசைத்தல்; to sing, to chant.

     “மறம்பாடிய பாடினியும்மே” (புறநா.11);

   2. வண்டு முதலியன இசைத்தல்; to warble, as birds;

 to hum, as bees or beetles.

     “வண்டுபல விசைபாட” (திவ்.பெரியதி.3,9,3);

   3. பாப்புனைதல்; to make verses, compose poems.

     “பாடினார் பல்புகழைப் பல்புலவர்” (பு.வெ.8,1);.

   4. பாட்டு ஒப்பித்தல்; to recite verses from a book.

   5. பாராட்டுதல்; to speak endearingly.

     “தங்கள் காதலினாற் றகைபாடினார்” (சீவக.1337.);

   6. போற்றுதல்; to praise.

     “பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்” (புறநா.32);

   7. கூறுதல்; to declare, proclaim.

     “அறம் பாடிற்றே” (புறநா.34);

   8. வைதல்; to abuse.

   9. பாடியோட்டத்திற் பாடுதல் (யாழ்ப்);; to sing in the game of {pādi-y-Öttam.}

க. ஹாடு.

     [பா → பாடு]

 பாடு2 pāṭu, பெ. (n.)

   1. கதிரவன் தோற்றத்திற்கு ஏழாமிடம்; seventh place of the birth.

     “கொடியோடு தயத்தும் பாட்டினுநிற்கிற்சேய் கூற்றுவன் பாற்கடிதேயணை வுறும்” (வி.தா.ந.சாதகநா.);

   2. தகுதி; qualification.

     “பகையாகும்பாடறியாதனையிரவு” (நான்மணி.56.);

 பாடு3 pāṭu, பெ. (n.)

   1. உண்டாகை; coming into being.

     “சூழ்வினையா லடைபட் டூறுபாடனைத்தையும்” (அரிச்.பு.மீட்சி.2);

   2. நிகழ்ச்சி (வின்);; occurrence, happening.

   3. நுகர்ச்சி; experience, endurance, feeling, bearing.

   4. முறைமை; proper method, propriety.

     “எம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பினாரே” (புறநா.197);

   5. நிலைமை; condition, situtation.

     ” அவன் செத்த பாடில்லை”

   6. செல்வி; fit condition.

     “பெரும்பாட் டீரத்து” (புறநா.120);

   7. கடமை; duty, obligation, accountablity.

   8. கூறு; division.

     “பாடுபல வமைத்துக் கொள்ளை சாற்றி” (அகநா.30);

   9. பயன்; benefit.

     “நெறிநூல்கள் பாடிறப்பப் பன்னுமிடத்து” (ஏலாதி,41);

   10. உலகவொழுக்கம்; etiquette; conventional rules of social behaviour.

     “பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்” (கலித்.133);

 etiquette; conventional rules of social behaviour

   11. (குணம்;(அக.நி.);; nature, quality, attribute, disposition.

   12. பெருமை; honour, greatness, dignity eminence.

     “கற்றாரனைத்திலர் பாடு”(குறள்,409);

   13. அகலம் (திவா.);; width breadth.

   14. ஓசை; sound, noise.

     “பாடினருவிப் பயங்கெழு மீமிசை” (மலைபடு.278);

   15. உடல்; body.

     “அரக்கர் பாடுகிடந் தொத்த” (கல்லா.27,11);

   16. உழைப்பு; industry, labour.

     “பாடுபட்டுத் தேடிப் பணத்தை” (நல்வழி:22);

   17. அலுவல்; business, concern or affair.

     “தன்பாடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”

   18. வருத்தம்; affliction, suffering, hardship.

     “தம்பாடு ரைப்பரோ தம்முடையார்” (நாலடி,292);

   19. படுக்கைநிலை; recumbency, lying prostrate.

     “பன்னாளாயினும் பாடுகிடப்பேன்” (மணிமே.18,158);

   20. விழுகை; fall.

     “நொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு” (கலித்.46);

   21. தூக்கம்; sleep.

     “பாடின்றிப் பசந்தகண்” (கலித்.16);

   22. சாவு; death.

     “அபிமன்னு வின்பாடு” (பாரதவெண்.813,குறிப்பு);

   23. கேடு; ruin, waste, loss, injury damage, disaster, detriment.

     “ஆடுறு குழிசி பாடின்று தூக்கி” (புறநா. 371);

   24. குறைவு; shortage.

     “அளவுபாடு”

   25. பூசுகை; smearing.

     “பாடு புலர்ந்த நறுஞ்சாந்தின்” (மதுரை.226);

   26. சாயுங்காலம்; setting, as of a planet, sun or star.

     “செங்கதிர்ச் செல்வனெழுச்சியும் பாடும்” (பெருங்.வத்தவ.2,87);

   27. ஆற்றல் குன்றிய நிலையில் உள்ள ஓரை (நிசராசி);;     “பார்க்கவனார்பாடுச்சி சேருங்கால்” (சினேந்.207);

   28. இடம் (பிங்.);; place, location, situation.

   29. பக்கம்; side.

     “உம்பி யோர்ந்தொரு பாடுற நடந்தனன்” (கம்பரா. கும்பகருண.282);

   30. அருகு (பிங்.);; nearness.

     “பாடுசாரா வினை” (திவ். திருவாய்.9,10,11);

   31. ஏழாம் வேற்றுமயுருபு (நன்.302);; case-sign of the locative.

   32. மீன்பிடிக்கை; capture; take of fish at one drawing, draught.

   33. பாடுபழக்கம் பார்க்க;See {pādu-pasakkam}

     ‘பாடுபடாமற் போனால் பலன் இல்லாமற் போகும்’ (பழ.);

பாடுஎடு-த்தல்

பாடுஎடு-த்தல் pāḍueḍuttal,    3. செ.கு.வி (v.i.)

பாடுபடு-தல் பார்க்க see {padu-papur,}

     [பாடு + எடு-,]

பாடுகட்டு-தல்

பாடுகட்டு-தல் pāṭugaṭṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   முன்னம் பாய்ச்சிய கடற்பரப்பிலேயே மறுமுறையும் வலை பாய்ச்சுதல் (முகவை. மீனவ.);; repeated sea fishing wiht net in the same place.

பாடுகாட்டிவிழு-தல்

பாடுகாட்டிவிழு-தல் pāṭukāṭṭiviḻudal,    2. செ.கு.வி. (v.i.)

   சாய்ந்து விழுதல்; total on one eide through weakness.

     [பாடு காட்டு + விழு-,]

பாடுகாட்டு-தல்

பாடுகாட்டு-தல் pāṭukāṭṭudal,    10. செ.கு.வி. (v.i.)

   1. பக்கஞ்சரிந்து கிடத்தல்; to lie leaning on oneside.

   2. நீட்டமாகக் குப்புற விழுதல்; to lie prostrate or flat.

     [பாடு + காட்டு-,]

பாடுகாயம்

 பாடுகாயம் pāṭukāyam, பெ. (n.)

   படுகாயம்; mortal wound.

     [படுகாயம் → பாடுகாயம்]

பாடுகாவல்

பாடுகாவல் pāṭukāval, பெ. (n.)

   தன்னருகிலே வைக்குங்காவல் (திவ்.); பெரியாழ். 3,7,5, வ்யா.பக்.713.);; keeping another in restraint, near oneself.

     [பாடு + காவல்]

     [பாடிகாவல் → பாடுகாவல்]

பாடுகிட-த்தல்

பாடுகிட-த்தல் pāḍugiḍattal,    3. செ.கு.வி. (v.i.)

   நோன்பு கடைப்பிடித்தல்; to prostrate before deity awaiting its grace.

     “பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு” (சிலப். 9,15);

     “பன்னாளாயினும் பாடு கிடப்பேன்” (மணிமே.18158);

     [பாடு + கிட-,]

பாடுசாய்தல்

 பாடுசாய்தல் pāṭucāytal, பெ. (n.)

   சூரிய சந்திரன் மறைதல்; setting of the sun or moon.

பாடுசேதம்

 பாடுசேதம் pāṭucētam, பெ. (n.)

பாடுவாசி (இ.வ.); பார்க்க;See {padu-vல்}

     [பாடு + சேதம்]

பாடுதாங்கு-தல்

பாடுதாங்கு-தல் pāṭudāṅgudal,    9. செ.கு.வி. (v.i.)

   துணைநிற்றல்; to support another’s action or deed.

     “அவற்குப் பாடுதாங்குமவனும் இப்பரிசே தண்டப்படுவது” (T.A.S. iv10);

     [பாடு + தாங்கு]

பாடுதுறை

பாடுதுறை pāṭuduṟai, பெ. (n.)

   1. புலவர்கள் பாடுதற்குரிய போர்த்துறை; war-like exploits, worthy of being song by poets.

     “பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே” (புறம்.21.);

   2. தத்துவராயர் இயற்றியதொரு சமயநூல்; a religious poem by {Tattuvarayar.}

     [பாடு + துறை]

பாடுநர்

பாடுநர் pāṭunar, பெ.(n.)

   1. இசைபாடுவோர்; singers.

   2. புலவர்; poets.

     “பாணர் பாடுநர் பரிசிலர்” (புறம்.135);

     “பாடுநர் கொளக்கொளக் குறையாத் தானைச் சான்றோர்” (பதிற்று.82-12);

     “பாடுநர் புரவல னாடுநடை யண்ணல்” (பதிற்று.86-8);

     “பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான்” (அகம்.100-11);

     “உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே” (அகம்.349-5);

     “செருமிகு சேஎய்திற் பாடுநர் கையே” (புறம்.14-19);

     “பாடுநர் வஞ்சி பாடப் படையோர்” (புறம்.33-10);

பாடுபடல்

 பாடுபடல் bāḍubaḍal, பெ. (n.)

   வேலை செய்தல்; to work hard.

பாடுபடு-தல்

பாடுபடு-தல் bāḍubaḍudal,    20. செ.கு.வி. (v.i.)

   1. மிக உழைத்தல்; to take pains, labour hard.

   2. வருத்தப்படுதல்; to suffer or endure hardship.

     [பாடு + படு-,]

பாடுபடுத்து-தல்

பாடுபடுத்து-தல் bāḍubaḍuddudal,    5 செ.குன்றாவி.

   1. துன்பப்படுத்துதல் (உ.வ.);;  to torture, cause pain.

   2. கடினவேலை வாங்குதல்; to set to hard abourkeep at hard work.

     [பாடுபடு → பாடுபடுத்து-,]

பாடுபறப்பு

 பாடுபறப்பு bāṭubaṟabbu, பெ. (n.)

   கவலை (வின்.);; one’s cares or anxieties.

     [பாடு + பறப்பு]

பாடுபழக்கம்

 பாடுபழக்கம் bāṭubaḻkkam, பெ. (n.)

   வீண்பேச்சு (இ.வ.);; idle talk, gossip.

     [பாடு + பழக்கம்]

பாடுபார்-த்தல்

பாடுபார்-த்தல் pāṭupārttal, செ.கு.வி. (v.i.)

   1. மீன் மேயுங் (கடல்); இடவரம்பறிதல்; to found the fishing limit in the sea.

   2. வலை வைத்து மீன்பிடித்தல்.

 fishing with nets.

   3. தன் அலுவல் கவனித்தல்; to attend to One’s business.

     [பாடு + பார்-,]

பாடுபிடி-த்தல்

பாடுபிடி-த்தல் bāḍubiḍittal,    4. செ.கு.வி.(v.i.)

   நீரில்லாமையாற் பயிர் முதலியன பட்டுப்போதல் (நாஞ்);; to become damaged, as standing crops, an account of drought.

     [பாடு + பிடி -,]

பாடுபெயல்

பாடுபெயல் bāṭubeyal,    பெ.(n) விடாமழை; incessant rain.

     “பாடுபெய னின்ற பானா ளிரவில்” (கலித்.90);

     [பாடு + பெயல்]

பாடுபொருள்

 பாடுபொருள் bāṭuboruḷ, பெ. (n.)

   பாடலின் கருவாக அமையும் பொருள்; subject matter (of a poem, etc.);

     “குமுகாய அவலங்களே இவர் பாக்களின் பாடுபொருள்”

பாடுவன்

 பாடுவன் pāṭuvaṉ, பெ. (n.)

பாடுவான் (வின்.);;See {pāduvân}

பாடுவாசி

 பாடுவாசி pāṭuvāci, பெ. (n.)

   நெல்லை அளத்தல் பொன்னை உருக்குதல் முதலியவற்றால் உண்டாகும் இழப்பு (உ.வ.);; wastage, as in strong or measuring grain, in filing or melting gold.

     [பாடு + வாசி]

பாடுவான்

பாடுவான் pāṭuvāṉ, பெ.(n)

   1. பாடகன்; singer.

பாடுவார்

     “பாக்கங் கொண்டென” (பரிபா.7,31.);

   2. பாணன்;{pânar}

 caste.

நம்பாடுவான்.

     [பாடு → பாடுவான்]

பாடுவி

பாடுவி pāṭuvi, பெ. (n.)

   புகழ்பவள்; she who praises.

     “தந்நலம் பாடுவி தந்தாளாம்” (கலித்.84);

     [பாடு → பாடுவி]

பாடுவான் ஆண்பால் பாடுவி பெண்பால்

பாடுவிச்சி

 பாடுவிச்சி pāṭuvicci, பெ. (n.)

   பாண்மகள் (சூடா.);; woman of the {pânar} caste.

     [பாடு → பாடுவிச்சி]

பாடுவான் ஆண்பால் பாடுவிச்சி பெண்பால்

பாடுவை-த்தல்

பாடுவை-த்தல் pāṭuvaittal,    4.செ.கு.வி. கடல்மேற் சென்று பெரிய வலையைக் கடலில் இறக்குதல் (தஞ்சை.மீனவ.); to erect fishnet for fishing.

     [பாடு + வை-,]

பாடேடு

 பாடேடு pāṭēṭu, பெ. (n.)

   தாயேடு (யாழ்.அக.);; original manuscript.

     [பாடு + ஏடு]

பாடேதகி

 பாடேதகி pāṭētagi, பெ. (n.)

   கலப்புகுவள்ளி என்னும் செய்ந்நஞ்சைப் பேதிக்கும் ஒர் மூலிகை; an unknown drug said to act mineral poisons. (சா.அக.);

பாடை

பாடை pāṭai, பெ. (n.)

   1. பருத்தி; cotton.

   2. வட்டத்திருப்பி;See {vatta-t-tiruppi}

   3. பிணத்தைத் தூக்கும் பாடை மரம், அதாவது பிணக்கட்டில்,

 bier.

     ” உயர் பாடைமேற் காவுநாள்” (தேவா.927,3);

   4. ஆணை; an assertion confiromed by oaths.

மறுவ. வஞ்சினம்.

     [P]

 பாடை pāṭai, பெ.(n.)

   1. மொழி; language.

     “பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும்” (மணிமே.1,16);.

     [Skt. {} → த. பாடை]

பாடைகுலைத்தான்

 பாடைகுலைத்தான் pāṭaigulaittāṉ, பெ. (n.)

   பாகல்; bitter guard. (சா. அக.);

     [பாடை + குலைத்தான்]

பாடைபேசு-தல்

பாடைபேசு-தல் pāṭaipēcudal,    5 செ.கு.வி. (v.i.)

   வேற்றுமொழி பேசுதல்; to speak a foreign language.

   2. ஆங்கிலம் பேசுதல்; to speak English.

   3. வெகுண்டுரைத்தல்; to bind oneself with oath.

பாட்கா

 பாட்கா pāṭkā, பெ.(n.)

   கூட்டிக் கொடுப்போன்; pimp, go-between.

     [U. {} → த. பாட்கா]

பாட்சா

 பாட்சா pāṭcā, பெ.(n.)

   முகம்மதிய அரசன் (வின்.);; Muhammadan king or governor.

     [U. {} → த. பாட்சா]

பாட்சிகன்

 பாட்சிகன் pāṭcigaṉ, பெ.(n.)

   பறவை பிடிப்பவன் (வின்.);; bird catcher, fowler.

த.வ.குருவிக்காரன், குறவன்

     [Skt. {} → த. பாட்சிகன்]

பாட்டகன்

 பாட்டகன் pāṭṭagaṉ, பெ. (n.)

பாடகன் பார்க்க;see {pādagan.}

     [பாட்டு → பாட்டகன்]

பாட்டகம்

 பாட்டகம் pāṭṭagam, பெ. (n.)

   சிச்சிலுப்பையம்மை (வின்.);; chicken-pox.

பாட்டக்காரன்

பாட்டக்காரன் pāṭṭakkāraṉ, பெ. (n.)

   1. குத்தகைக்காரன்; lessee.

   2. குடியானவன்

 tenant. Opp. to {canmi.}

     [பாட்டம் + காரன்]

பாட்டங்கால்

பாட்டங்கால் pāṭṭaṅgāl, பெ. (n.)

   தோட்டமாகிய இடம்; place of a garden.

     “முல்லையுந் தாய பாட்டங்கால் தோழிநம்” (கலித்.111,40);

     [பாட்டம் + கால்]

பாட்டச்சீட்டு

 பாட்டச்சீட்டு pāṭṭaccīṭṭu, பெ. (n.)

   குத்தகைக்காரன் எழுதிக்கொடுக்கும் எழுதிக்கொடுக்கும் குத்தகைச்சீட்டு; lease-deed.

     [பாட்டம் + சீட்டு]

பாட்டத்தோயம்

 பாட்டத்தோயம் pāṭṭattōyam, பெ. (n.)

   தண்ணீர் மேலிருந்து படும்படிகுளித்தல்; a bath in which water is showered upon the person from above shower bath. (சா.அக.);

     [பாட்டம் + தோயம்]

பாட்டநிலம்

பாட்டநிலம் pāṭṭanilam, பெ. (n.)

   1. குறைந்த தவசவரியுடைய நன்செய் நிலம்;(GTn.D.I.311.);; wet lands on which was fixed a low assessment in grain.

   2. குத்தகைக்கு வாங்கிய நிலம்; the land obtained on lease.

     [பாட்டம் + நிலம்]

பாட்டநெல்

பாட்டநெல் pāṭṭanel, பெ. (n.)

   குத்தகை யொப்பந்தப்படி குத்தகைக்காரனால் நிலச் சொந்தக்காரருக்கு அளக்கப்பட வேண்டிய நெல் (s.i.i.v,92.);; the quantum of paddy fixed to be paid as rent to a landlord in a contract of lease.

     [பாட்டம் + நெல்]

பாட்டன்

பாட்டன்1 pāṭṭaṉ, பெ. (n.)

   1. பெற்றோரின் தந்தை; grandfather.

     “தந்தை தாயே பாட்டன் காணி’;

   2. முன்னோன்; ancestor, grandsire.

     ‘பாட்டன் காணி’

மறுவ:தாதைதன்றாதை, மூதாதை,

     [படு → பாடு → பாட்டன்]

 பாட்டன்2 pāṭṭaṉ, பெ. (n.)

   பாட்டமதத்தான் (சி.சி.1.1.மறைஞா);; follower of the system of {kumārila bhattar.}

     [பட்டன் → பாட்டன்]

 பாட்டன் pāṭṭaṉ, பெ. (n.)

   பழுங்காகளி ஆட்டத்தில் நடுவில் நிற்பவன்; a person standing in middle of the folk play.

     [பாட்டு-பாட்டன்]

 பாட்டன் pāṭṭaṉ, பெ.(v)

பாய் மரக் கலனை கரை சேர்ப்பதற்கு உதவும் காற்று.

 favourable wind which enables fishermen to reach seashore.

பாட்டன் வந்துவிட்டான்.பாயைவிரி (மீனவ);

     [பாட்டன்-பாசமுள்ள உறவுக்காரனின் பெயர் தனக்குச் சார்பாக உதவும் காற்றுக்கு ஆயிற்று. (உறவு குறித்த ஆகுபெயர்);]

பாட்டப்பிடிப்பு

 பாட்டப்பிடிப்பு pāḍḍappiḍippu, பெ. (n.)

   பாட்டக்காரன் பாட்டநெல் தவறாமல் அளப்பதற்கு உறுதியாக அவனிடமிருந்து நிலத்துக்குரியவன் வாங்கும் முன்பணம் (நாஞ்.);; the amount of premium paid by a lessee to his landlord.

     [பாட்டம் + பிடிப்பு]

பாட்டமானன்

பாட்டமானன் pāṭṭamāṉaṉ, பெ. (n.)

   1. அரசிறை யலுவலர் (M.E.R.101 of1926-6);; officer in charge of revenue collections.

   2. உழவுப்பாத்தியமுடையவன் (T.A.S.iii:167);; cultivator lessee.

     [பாட்டம் + ஆளன்]

பாட்டம்

பாட்டம்1 pāṭṭam, பெ. (n.)

   1. தோட்டம்; garden.

     “பாங்கரும் பாட்டங்காற் கன்றொடு செல்வேம்” (கலித்.116);

   2. முகில்; cloud.

     “வலைவளஞ் சிறப்பப் பாட்டம் பொய்யாது” (நற்.38);

   3. அச்சலச்சலாய்ப் பெய்யும் மழை; shower of rain.

     ‘ஒரு பாட்டம் மழை விழுந்தாற் போலே’ (ஈடு,1,5,6);.

   4. வரி; tax,rent.

     “ஆட்டுப்பாட்டம், மீன் பாட்டம்”

   5. கிட்டிப்புள்ளு விளையாட்டில் ஒரு பகுதி; part of the play of tip-cat.

   6. கிட்டிப்புள்ளின் விளையாட்டு முறை; turn in the play of tip-cat.

   7. குத்தகை முறை; contract of lease.

     ‘கோயில் நிலத்தைப் பாட்டம் ஏற்றுப் பயிரிடுகிறேன்’

   8. குத்தகைப்படி தரவேண்டிய நெல்;(land);

 lease;the grain to be given by the tenant as per agreement.

     “வறட்சி காரணமாகக் குத்தகைக்காரர்கள் பாட்டம் அளக்கவில்லை”

   9. குறுக்காக விருக்கும் நிலை; crosswise position.

     “செங்கல்லை நாட்டமும் பாட்டமுமாக வைத்துக் கட்டவேணும்”

   10. பறவைகளின் கூட்டம், தொகுதி; throng.

     “குருவிகள் பாட்டம் பாட்டமாக வந்தன.”

     [பாடு → பாட்டம்]

 பாட்டம்2 pāṭṭam, பெ. (n.)

   பாட்டு; a word denoting song which occurs in combination with.

     “அன்று சிறியவர் முதல் பெரியவர் வரை ஆட்டம் பாட்டமாக இருந்தார்கள்”

     [பாட்டு → பாட்டம்]

 பாட்டம் pāṭṭam, பெ. (n.)

   மூக்கினை அடக்கி விளையாடும் ஆட்டத்தில் பாடல் பாடுவோர் மூச்சுவிட்டுத் தோற்றுப்போவதைக் குறிக்கும் சொல்; a word to mean defeatin the game.

     [படு-பாடு-பாட்டம்]

பாட்டரங்கம்

 பாட்டரங்கம் pāṭṭaraṅgam, பெ. (n.)

   ஏதேனும் ஒரு தலைப்பில் பாவலர்கள் பலர் மேடையேறிப் பாடும் நிகழ்ச்சி; parts meet or forum.

     [பாட்டு + அரங்கம்]

பாட்டரம்

 பாட்டரம் pāṭṭaram, பெ. (n.)

   தட்டையான அரவகை (நாஞ்);; a kind of flat file.

     [பாடு + அரம்]

பாட்டலாக்குக்கம்மல்

 பாட்டலாக்குக்கம்மல் pāṭṭalākkukkammal, பெ.(n.)

   மாட்டியணிதற்குரிய கம்மல் வகை; women’s ear – ornament, resembling a padlock, fastened behind the ear-lobe with a screw.

த.வ. திருகுக்கம்மல்

     [E.padlock → த. பாட்டலாக்கு+கம்மல்]

பாட்டா

பாட்டா1 pāṭṭā, பெ. (n.)

பாட்டன்1 (யாழ்.அக.); பார்க்க;see {pāttan}

     [பாட்டன் → பாட்டா]

 பாட்டா2 pāṭṭā, பெ. (n.)

   1. புளிப்பு; sourness,fermentation.

     “கள்ளுப் பாட்டாவாயிருக்கிறது”.

   2. புளித்த கள்; sour toddy.

     [படு → பாட்டா]

பாட்டாசாரியர்

 பாட்டாசாரியர் pāṭṭācāriyar, பெ. (n.)

   மீமாஞ்சையின் பாட்டமதப்பிரிவுக்கு ஆசிரியரான குமாரிலபட்டர்;{kumārila bhaţţa,}

 the author of a system of {Mimāmsā} philosophy

     [பட்டன் → பட்டன் → பாட்டம் + ஆசாரியம்]

பாட்டாளி

பாட்டாளி pāṭṭāḷi, பெ. (n.)

   உடல் உழப்பையே அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்; worker industrious person.

     “பாட்டாளி மக்கள்’ வறுமையில் வாடுவதோ”

   2. பாட்டாள்(யாழ்.அக.); பார்க்க;see {pāttā/}

     [பாடு + ஆளி]

பாட்டாள்

பாட்டாள் pāṭṭāḷ, பெ. (n.)

   1. உழைப்பாளி; industrious person.

   2. சோம்பேறி; idler.

     [பாடு + ஆள்]

 பாட்டாள்2 pāṭṭāḷ, பெ. (n.)

   பாடுபவன்ள் (வின்);; songster.

     [ பாடு → பாட்டு + ஆள்]

பாட்டி

பாட்டி1 pāṭṭi, பெ. (n.)

   1. பெற்றோரின் தாய்; randmother.

     “தந்தை தாயே பாட்டன் பாட்டி”. (பன்னிருபா.179);.

   2. கிழவி; aged women.

     ” மடநடைப் பாட்டியர்த்தப்பி” (பரிபா.10,37);.

     [பாட்டன் → பாட்டி]

 பாட்டி2 pāṭṭi, பெ. (n.)

   பன்றிநாய், நரியாகிய விலங்கின் பெண்பாற் பெயர் (தொல், பொ.620.621);; female of hog, dog-and fox.

     “வேட்டம் மறந்து துஞ்சுங்கொழுநர்க்குப்பாட்டி” (அகநா.196,4);

     [பட்டி → பாட்டி]

 பாட்டி3 pāṭṭi, பெ. (n.)

   பாடன் மகளிர்; woman of the class of strolling singers.

     “பாணர் வருக பாட்டியர் வருக” (மதுரைக்.749);

     [பாட்டு → பாட்டி]

 பாட்டி4 pāṭṭi, பெ. (n.)

   சிப்பியொன்றின் பெயர்; a kind of oyster.

பாட்டினர்

பாட்டினர் pāṭṭiṉar, பெ. (n.)

பாடினி2 பார்க்க;see {padini,}

 songsters.

     “உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்” (சிலப்.1-55);

     [பாட்டு → பாட்டினர்]

பாட்டிப்பாறை

 பாட்டிப்பாறை pāṭṭippāṟai, பெ. (n.)

   ஒரு பாறை மீன் (நெல்லை.மீனவ.);; a kind of rock fish.

     [பாட்டி + பாறை]

     [P]

பாட்டிமருத்துவம்

 பாட்டிமருத்துவம் pāṭṭimaruttuvam, பெ. (n.)

   சிற்றூர்ப்பகுதிகளில் நோய்களுக்குப் பட்டறிவின் வாயிலாகத் தெரிந்து கைப்பக்குவமாகச் செய்யும் மருத்தும்; house-hold remedy.

     “ஆங்கில மருந்து வருவதற்கு முன்பு பாட்டி மருத்துவம் மிகவும் பயனுடையதாக இருந்தது;இன்றும் இருக்கிறது”

     [பாட்டி + மருத்துவம்]

பாட்டியன் மரபுடையார்

 பாட்டியன் மரபுடையார் bāḍḍiyaṉmarabuḍaiyār, பெ. (n.)

   ஓர் இலக்கண நூலாசிரியர்; a grammarian.

இவர் இயற்பெயர் யாதெனத் தெரியவில்லை.

     ” ஆரிடர் செய்யுள் பாடுதற்குரியோர்

கற்றோரறியா வறிவுமிக்குடையோர்

மூவகைக் காலப் பண்பு முறை யுணரு,

மாற்றல் சான்ற வருந்தவத்தோரே”

என்று சொன்னார் பாட்டியன் மரபுடை யாராகலின் என

     ‘யாப்பருங்கல விருத்தி’ யில் குறிப்பிடப் படுகின்றார். நூல்;

பாட்டியன் மரபு.

     [பாட்டியல் + மரபுடையார்]

பாட்டியமி

 பாட்டியமி pāṭṭiyami, பெ.(n.)

   வெள்ளுவா, காருவாவிற்கு அடுத்து வரும் நாள் (பிரதமை திதி);; the day after the full or new moon.

மறுவ. முதலுவா

     [Skt. prathama → Te. {} → த. பாட்டியமி]

பாட்டியர்

பாட்டியர் pāṭṭiyar, பெ. (n.)

பாட்டி5பார்க்க;see {pātți.}

     ” பாணர் வருக பாட்டியர் வருக” (மதுரைக்.);

     ” மடநடைப் பாட்டியர்த் தப்பித் தடையிறந்து” (பரிபா.10.37);

     [பாட்டு → பாட்டியர்]

பாட்டியல்

 பாட்டியல் pāṭṭiyal, பெ. (n.)

   இலக்கணம் கூறும் நூல்; on poetbric composition.

     ” உரைப்பல் பாட்டியன் மரபே” (பன்னிருபா.பாயிரம்);;

பாட்டிராசி

 பாட்டிராசி pāṭṭirāci, பெ. (n.)

   ஞாயிறு மறையும் நேரம் (இலக்கினம்);; the sign of The zodiac occupied by the Sun at sunset.

     [படு → பாடு → பாட்டு + skt {rasi} த.இராசி.)

பாட்டிற்போ-தல்

பாட்டிற்போ-தல் pāṭṭiṟpōtal, பெ. (n.)

   8. செ.கு.வி.(v.i.);

   1. தன் அலுவலாய்ச் செல்லுதல்; to go about on one’s business.

   2. மறைதல்;     [பாட்டில் + போ-,]

பாட்டிலே போடு-தல்

பாட்டிலே போடு-தல் pāṭṭilēpōṭudal,    19. செ.குன்றாவி. (v.t.)

   நிலத்துடன் ஒட்டி நேராகச் சார்த்துதல் (இ.வ.);; to place or laydown horizontally.

     [பாடு → பாட்டிலே + போடு-,]

பாட்டில்

பாட்டில்1 pāṭṭil, பெ.(n.)

   ஒரு வகைக் கையணி (வின்.);; a kind of flat bracelet, worn by women or children.

த.வ. தட்டை வளையல்

     [Mhr. {} → த. பாட்டில்]

 பாட்டில்2 pāṭṭil, பெ.(n.)

   குப்பி (இக்.வ.);; bottle.

     [E. bottle → த. பாட்டில்]

பாட்டில் விழு-தல்

பாட்டில் விழு-தல் pāṭṭilviḻudal, செ.கு.வி. (v.i.)

   1. நெடுங்குத்தாகவன்றிப் பரப்பிவிழுதல்; to lie fat.

   2. காலஞ்செல்லவிடுதல்; to procrastinate.

   3. பொந்திகையாதல்; to be one’s ease.

     [பாடு → பாட்டில் + விழுதல்]

பாட்டு

பாட்டு1 pāṭṭu, பெ. (n.)

   1. பாட்டுகை; singing chanting.

   2. இசைப்பாடல்; song,hymn, that which is sung or adapted to music.

   3. இசை; music.

     “கூத்தும் பாட்டும்” (மணிமே.2,19);

   4. செய்யுள்; verse or stanza, poem word.

     “பாட்டுரை நூலே” (தொல்.பொ.391);

     “உரையும் பாட்டு மாட்டு விரைஇ” (மது.616); இன்புறு முரற்கநும் பாட்டுவிருப்பாக” (மலை.390);

     ” கடும்பாட்டு வருடையொரு தாவன உகளும்” (நற்.119-1);

     ” அகவன் மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர்” (குறுந். 23-3,4); (தொ.சி);

     ‘பாணா தரித்துப் வப்பாட்டு” (பரி.7-66);’

     ‘ பாட்டு முதலுமாம் பண்” (தி.மா.143-4);

   5. சொல்(நாநார்த்த.2361);

 word.

   6. வசைமொழி; abuse.

     ‘நேரம் கழித்துச் சென்றால் அம்மாவிடம் பாட்டு வாங்க வேண்டியிருக்கும்’

     [பா → பாடு → பாட்டு]

 பாட்டு2 pāṭṭu, பெ. (n.)

   கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு; layer.pleat.

பாட்டுக்கச்சேரி

 பாட்டுக்கச்சேரி pāṭṭukkaccēri, பெ. (n.)

   இசையரங்கு; music concert.

     [பாட்டு + கச்சேரி] கச்சேரி = உருது

பாட்டுக்காணி

 பாட்டுக்காணி pāṭṭukkāṇi, பெ. (n.)

   வெற்றுநிலம்; waste land, sterile or stony ground.

மறுவ: வெறும்பாடானகாணி

     [படு → பாடு + காணி]

பாட்டுக்காரன்

பாட்டுக்காரன் pāṭṭukkāraṉ, பெ. (n.)

   1. பாடகன்; sungstar.

   2. இசைவல்லான்; one skilled in music.

     [பாட்டு + காரன்]

பாட்டுக்கு

 பாட்டுக்கு pāṭṭukku, வி.எ. (adv)

   பிறரால் அல்லது பிறவற்றால் ஊறுபடாது தன்போக்கில்; unmindful (of external circumstances.etc.);

     “யார் பேசுவதையும் கவனிக்காமல் அவன் பாட்டுக்குப் போய் விட்டான்” பேசவேண்டாம் என்று சொல்லியும் நீ பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறாயே!

     “யார் வந்தால் என்ன வராவிட்டால் என்ன ? வேலை

பாட்டுக்கு நடக்கும்”

பாட்டுக்குடையான்

 பாட்டுக்குடையான் pāḍḍukkuḍaiyāṉ, பெ.(n.)

   வாலுளுவையரிசி; seeds of intellect Tree.

பாட்டுக்கேள்-தல்

பாட்டுக்கேள்-தல் pāṭṭukāḷtal, செ.கு.வி. (v.i.)

   1. இசைகேட்டல் ; to hear or attend a musical performance.

   2. வசைகேட்டல்; to be abused.

     [பாட்டு + கேள்-,]

பாட்டுடைச்செய்யுள்

பாட்டுடைச்செய்யுள் pāḍḍuḍaicceyyuḷ, பெ. (n.)

   பலபாக்களோடு உரைப்பாட்டையும், இசைப்பாட்டையுமுடைய இயலிசை நாடகப் பொருட்டொடர் நிலைச் செய்யுள்; an epic by verses.

     ” நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென” (சிலப்பதி.60);

     “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” (சிலப்.பதி.87);

     [பாட்டு + உடைய + செய்யுள்]

பாட்டுடைத்தலைமகன்

பாட்டுடைத்தலைமகன் pāḍḍuḍaittalaimagaṉ, பெ. (n.)

   இலக்கியத்தலைவன்; hero of a poem.

     “எம்பெருமான் பாட்டுடைத் தலைமகனாகவும் (திருவிருத்,6. அப்பிள்ளையுரை);

     [பாட்டுடை + தலைமகன்]

பாட்டுடைத்தலைவன்

பாட்டுடைத்தலைவன் pāḍḍuḍaittalaivaṉ, பெ. (n.)

பாட்டுடைத்தலைமகன் பார்க்க;see {päffugai-t-talaimagan}

     “உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவனாகும்” (நம்பியகப்.246);

     [பாட்டுடை + தலைவன்]

பாட்டுத்தரை

 பாட்டுத்தரை pāṭṭuttarai, பெ. (n.)

   வெற்றுநிலம்; waste land, sterile or stony ground.

மறுவ: பாட்டுக்காணி பாட்டுக்காணி

     [படு → பாடு → பாட்டு + தரை]

பாட்டுநாயகன்

 பாட்டுநாயகன் pāṭṭunāyagaṉ, பெ. (n.)

   பாட்டுடைத்தலைமகன் (யாழ்.அக.);; hero of a poem.

     [பாட்டு + நாயகன்]

பாட்டுநிலம்

 பாட்டுநிலம் pāṭṭunilam, பெ. (n.)

பாட்டுக்காணி பார்க்க;see {pâttu-k-kâni}

மறுவ: பாட்டுத்தரை

     [பாடு → பாட்டு + நிலம்]

பாட்டுப்படி-த்தல்

பாட்டுப்படி-த்தல் pāḍḍuppaḍittal, செ.கு.வி.(v.i.)

   1. இசைப்பாட்டுப்பாடுதல்; to sing.

   2. செய்யுளியற்றதல்; to compose verses.

     [பாட்டு + படி-,]

பாட்டுப்பாடு-தல்

 பாட்டுப்பாடு-தல் pāṭṭuppāṭudal, செ.கு.வி. (v.i.)

பாட்டுப்படி-, பார்க்க;see {pãítu-p-pad,}

     [பாட்டு + பாடு-,]

பாட்டுமடை

பாட்டுமடை pāḍḍumaḍai, பெ. (n.)

   குரவைக்கூத்து முதலியவற்றின் இடையே பாடும் பாட்டு (சிலப்.24, தலைப்பு);; a series of songs sung at intervals in dances.

     [பாட்டு + மடை]

பாட்டுவாங்கு-தல்

 பாட்டுவாங்கு-தல் pāṭṭuvāṅgudal, செ.கு.வி. (v.i.)

   வசவுபெறுதல்; to be severely abused.

     [பாட்டு + வாங்கு-,]

பாட்டுவாளி

 பாட்டுவாளி pāṭṭuvāḷi,    உடுக்கையடித்துப் பாடுவோன்; one who sings to the accompaniment of a hand-drum; strolling singer.

     [பாட்டாளி → பாட்டுவாளி]

பாட்டுவிருத்தி

 பாட்டுவிருத்தி pāṭṭuvirutti, பெ. (n.)

   பகவதி கோயில்களில் அம்மன் வடிவெழுதித் பூசிக்குந் தொழிலுக்கு விடப்படும் நிலம் (நாஞ்);; lands given for drawing the image of the goddess and uttering praises, in pagavadi temples.

     [பாட்டு +skt.{ vrtti»} த. விருத்தி]

பாட்டை

பாட்டை pāṭṭai, பெ. (n.)

   1. பாதை; road, way.

     “அரசபாட்டை”

   2. இசை முதலியவற்றின் நடை; style, as of music.

     ” கானவித்தைப் பாட்டையெல்லாங் கற்ற பனிமொழியே” (விறலிவிடு.18.);

   3. ஒழுக்கம்; conduct, behaviour.

தெ.பாட க. பாடெ

     [பதி → பாதம் → பாதை → பாட்டை]

 பாட்டை2 pāṭṭai, பெ. (n.)

   சிவப்பு நிறமுள்ள கடல்மீன் வகை; sea fish, reddish, electris muralis.

     [P]

பாட்டைசாரி

 பாட்டைசாரி pāṭṭaicāri, பெ. (n.)

   வழிப்போக்கன்; traveller, way farer.

     [பாதை → பாட்டை + சாரி]

பாட்லாக்கு

 பாட்லாக்கு pāṭlākku, பெ.(n.)

   பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவின் நிலையுறுப்பு; hasp of a lock, staple, clincher of a chain.

த.வ.கொண்டி

     [E. padlock → த. பாட்லாக்கு]

பாணகப்பாடி

 பாணகப்பாடி pāṇagappāṭi, பெ. (n.)

   வாணகப்பாடி (கல்);, பார்க்க; the country of the {banās}

     [வானகம் + பாடி → பானகப்பாடி]

பாணக்கல்

 பாணக்கல் pāṇakkal, பெ.(n.)

   ஒன்பான் மணிகளுள் ஒன்றான விடரியம் (வைடூரியம்);. (சா.அக.);; one of the nine gems-Cat’s eye.

பாணச்சி

 பாணச்சி pāṇacci, பெ. (n.)

   பாணத்தி (வழக்.);;{Pânar} caste woman.

பாணந்தொடு-த்தல்

பாணந்தொடு-த்தல் pāṇandoḍuttal, செ.கு.வி. (v.i.)

   1. அம்பெய்தல் (வின்.);;  to discharge arrows.

   2. கெடுக்கவழிதேடுதல்(கொ.வ.);; to seek to run one.

   3. வசவு பொழிதல்; to pour out abusire language to revile.

பாணன்

பாணன் pāṇaṉ, பெ. (n.)

   காட்டாமணக்கு; physic nut (சா.அக.);

     [P]

 பாணன் pāṇaṉ, பெ. (n.)

   1. பாடல்வல்ல ஒருசாதி; an ancient class of Tamil bards and Minstrels.

     “கூத்தரும் பாணரும்” (தொல்.பொ.91);

   2. பாணான் (வின்.); பார்க்க

ம. பாண.

     [பண் → பாண் → பாணன்]

 பாணன்2 pāṇaṉ, பெ. (n.)

   1. வீணன்:

 worthless man.

     “இங்கோர் பார்ப்பெனப் பாணனேன் படிற்றாக்கைகைய விட்டு” (திருவாச.5,44.);

   2. காட்டாமணக்கு(மலை.); பார்க்க;See {kāttāmanakku.}

 common physic nut.

     [ஒருகா. பாழ் → பாண் → பாணன்]

 பாணன்3 pāṇaṉ, பெ. (n.)

   சிவபத்தனான ஓரகரன்; an asura devotee of siva.

 பாணன் pāṇaṉ, பெ. (n.)

   இவன் கழகக் காலத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன்; an ancient petty king in sangam period.

பாணபத்திரன்

பாணபத்திரன் bāṇabattiraṉ, பெ. (n.)

   பாண்டியனாலும் சேரனாலும் பாராட்டி ஆதரிக்கப் பெற்றவரும் இசைவல்ல பாண்மரபினருமாகிய ஒரு பெரியார்; a minstrel who was patronised by the {pāndya} and {cera} kings.

“பண்டரு விபஞ்சி பாணபத்திர னடிமை யென்றான்” (திருவிளை விறகு 24) (சிவனடியார்களுள் ஒருவர் பாண்டிய மன்னர்களில் ஒருவராகிய வரகுணன் என்பவருடைய அவைக்களப் பாணராக இருந்தவர் இவர் பொருட்டுச் சிவபெருமான் விறகு விற்பவராக வந்து ஏமநாதன் என்னும் வடதிசைப்பாணன் ஒருவனைச் சாதாரிப் பண்ணால்வென்றார் இது திருவிளையாடற் புராணத்தில் “விறகுவிற்ற திருவிளையாடல்” என்று அமைந்துள்ளது)

பாணம்

பாணம்1 pāṇam, பெ. (n.)

   1. மழைவண்ணக் குறிஞ்சி; a species of mindie that yields sky coloured flowers.

மறுவ. மேகவண்ணக் குறிஞ்சி,

   2. திப்பிலிக்கொடி; long pepper creeper.

   3. திப்பிலி; long pepper.

   4. கை; hand.

   5. வெடியுப்பு; nitre.

   6. நருமதை ஆற்றில் ஓங்காரக் குண்டத்தில் கிடைக்கும் இலிங்கக்கல்; a kind of phallic stone said to be found in the river narmada. (சா.அக.);;

 பாணம்3 pāṇam, பெ. (n.)

   1. அம்பு (பிங்.);; arrow.

   2. ஆகாசவாணம்; rocket, fireworks.

   3. திப்பிலி (தைலவ.தைல.);; long pepper.

   4. செடிவகை (பிங்.);; a species of conehead, 1 sh., strobilanthes sessilis.

   5. இராமபாணம் என்னும் ஒருவகைப்பூச்சி; an insect called as irama panam.

 பாணம்4 pāṇam, பெ. (n.)

   உருவகம் (ரூபகம்); பத்தனுள் ஒருறுப்பையுடையதும் கதையைக் கூறுவதுமான நாடகவகை (சிலப் 3, பக்.84. அடிக்குறிப்பு);; a drama in one act, one of ten {rūbagam,} q.v.,

     [பண் → பாண் → பாணம்]

 பாணம்5 pāṇam, பெ. (n.)

பூம்பட்டு (சூடா.);:

 silk cloth.

     [பண் → பானம்]

பாணம்பழை

 பாணம்பழை pāṇambaḻai,    பெ. மேகவண்ணக்குறிஞ்சி; a species of mindie that yields sky coloured flowers (a shrub) (சா.அக.)

பாணர்

பாணர் pāṇar, பெ. (n.)

   பாடல் வல்ல ஒரு சாதியர்; an ancient class of tami bands and ministrals.

     [பண் → பாண் → பாணர்]

     “பாணன், பறையன் துடியன், கடம்பனென்றிந்நான்கல்லது குடியுமில்லை” என்று(புறநா.335.);(புறநா.335.); பழஞ் செய்யுள் கூறுகின்றது. பாணர்களில் ஆண்பாலாரைச் ‘சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இன்னிசைகாரர் பாணரென்ப’ என்று பிங்கல நிகண்டும், பெண்பாலரைப் பாடினி,விறலி, பாட்டி, மதங்கி, பாடல் மகடூஉ பாண்மகளாகும்’ எனத் திவாகரமும் கூறும்.

பண்ணிசைப்போர் பாணர். இவர்கள் இசைப்பாணரும், யாழ்ப் பாணரும், மண்டைப் பாணரும் என மூவகையினர் எனத் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் நச்சினார்க்கினியர் கூறுகின்றனர். (தொல்,பொருள்.91.);

தமிழ் நாட்டில் உள்ள தமிழ் அல்லது திராவிடக் குலங்களுள் பாணர் குலமும் ஒன்று. இது மிகப் பழைமையான தென்பது தொல்காப்பியத்தாலறியப்படும்.

பாணர் பாணைத் தொழிலாகக் கொண்டவர். பாண் என்பது பாட்டு,பண், பாண், பாடு. பா என்பவை ஓரினச் சொற்கள். சீவகசிந்தாமணியில் பாணியாழ் (1500);, பாண்வலை(2040); பாணுவண்டு(2447); என்னும் தொடர் மொழிகளில் பாண் என்னும் சொல் பாட்டு என்னும் பொருளில் வந்துள்ளது. சிலப்பதிகாரத்தும் (ப.349); பாண்-பாட்டு என்று அடியார்க்குநல்லார் கூறியுள்ளார்.

     “பாணருளும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணருமெனப் பலராம்” என்று (தொல்.புறம்.36,உரை); நச்சினார்க்கினியர் கூறுவர். இசைக்கருவிகள்: தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என ஐவகையாகக் கூறப்படும். இவற்றுள், மிடறு(தொண்டை); என்பது இயல்பான வாய்ப்பாட்டாதலின் இதனை நீக்கி ஏனைய நான்கையுமே கருவியெனக் கூறுவர் சிலர். இந்நான்கனுள் கஞ்சம் (வெண்கலம்); தாளக்கருவி. இது முதலிற் கருவிபற்றி வெண்கலத்தாற் செய்யப்பட்டதையும், பின்பு இனவிலக்கணத்தாற் பிறவற்றினால் செய்யப்பட்டவற்றையும் குறிக்கும். தாளக் கருவியும் தனித்து இன்பம் தாராமையானம் அது முக்கியமானதன்று. மேற்கூறிய பிரிவாருள் இசைப்பாணர் வாய்ப்பாடகரும், யாழ்ப்பாணர் நரப்புக்கருவியினரும், மண்டைப்பாணர் தோற்கருவியினருமாவர். துளைக்கருவி இயக்கும் குழற்பாணர் மண்டைப் பாணருள் அடங்குவர். மண்டை-பறை. குழலொடுகூடிப் பறையடிப்பதே பெருவழக்கு. இனி, நச்சினார்க்கினியர் பாணரை மூவகையர் என்னாது பலர் என்றதால், அதனுட் குழற்பாணரை அடக்கினும் அமையும் சிலப்பதிகாரத்தில்,

     “குழலினும் யாழினுங் குரல்முத லேழும்

வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்

அரும்பெறன் மரபிற் பெரும்பா னிருக்கையும்”

என்று இளங்கோவடிகளும்,

     ‘பெரும் பாண்-குழலர் முதலோர்’ (ப.139);

என அரும்பதவுரைகாரரும் கூறியிருப்பதால் குழற்பாணர் பிரித்துக் கூறப்பட்டிலர்.

ஆகவே, இசைத்தொழில் முழுமையுங் கொண்டு இக்காலத்து மேளக் காரர்போல இருந்தவர் பாணர் என்பது பெறப்படும்.

     “பாண்சேரிப் பற்கிளக்குமாறு” என்னும் பண்டைப் பழமொழியும் இதனை வற்புறுத்தும். திருவிளையாடற் புராணத்திற் பாண்டியன் இசைப்புலவராகக் கூறப்படும் பாணபத்திரரும், திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்கட்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும், பன்னீராழ்வாருள் ஒருவரும் யாழறிஞருமான திருப்பாணாழ்வாரும் பாணர் குலத்தவரே. பாணருள், ஆடவன் பாணன் என்றும், பெண்டு பாடினி, பாணிச்சி, பாட்டி, விறலி என்றுங் கூறப்படுவர்.

வேளாளர் குலம் வேளாண் என்றும், சமணர் நெறி சமண் என்றும் கூறப்படுதல் போல, பாணர் குலமும் பாண் என்று கூறப்படுவதுண்டு. புறப்பொருள் வெண்பா மாலையில்,

     “கிளை பாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப் பாணும்”(சூ.144);

     “அங்கட் கிணையன் துடியன் விறலிபாண்”(சூ.16);

     “பாண்பாட்டு” (சூ.137);

     “பாண்கட னிறுக்கும்” (புறம்.203);

என வந்திருத்தல் காண்க.

பாணருக்குக் சென்னியர், வயிரியர், செயிரியர், மதங்கர், இசைகாரர், பண்ணவர்,

பண்டவர்(பண்டர்);, ஓவர், அம்பணவர் முதலிய பிற பெயர்களுமுண்டு. இவற்றுள் பண்டர், ஓவர் என்பன பாணருட் கீழ்மக்களைக் குறிக்குமென்று பிங்கல நிகண்டு கூறும். மதங்கன், அம்பணவன் என்னும் ஆண்பாற் பெயர்கட்கு மதங்கி, அம்பணத்தி என்பன முறையே பெண்பாற் பெயர்களாகும். அம்பணம்=யாழ், அம்பணவன் = யாழ் வாசிப்போன்.

     “அரும் பெறன் மரபிற் பெரும் பாணிருக்கையும்” என்று சிலப்பதிகாரத்தும்

     ” பெரும்பாணிருக்கையும்” என்று மதுரைக் காஞ்சியிலும் (942);

     “அருட் பெரும் பாணனாரை” என்று திருநீலகண்ட யாழ்ப்பாணர் புராணத்தும்(3); சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை எனப் பத்துப் பாட்டினும் வந்திருப்பது கொண்டு, சிறுபாணர், பெரும்பாணர் எனப்பாணர் இருபெரும் பிரிவினரோ என்று ஐயுறவும் இடமுண்டு.

பத்துப்பாட்டு முகவுரையில்,

     “மேலைப் பாட்டும் (சிறுபாணாற்றுப் படையும்); இதுவும் (பெரும்பாணாற்றுப்படையும்); பாணராற்றுப் படையாயிருப்பினும், அடிவரையறையிற் சிறிதும் பெரிதுமாயிருத்தல் பற்றி அது சிறுபாணாற்றுப் படையெனவும் இது பெரும்பாணாற்றுப் படையெனவும் பெயர் பெற்றன” என டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், எழுதியிருப்பது தெளிவானதேயாயினும், பெரும்பாண், பெரும்பாணர் என்று நூல்களில் வழங்குவதானும், சிறுபாணாற்றுப்படையில்.

     “பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்

இன்குரற் சீறியாழ் இடவயின் தழிஇ”

எனச் சுருக்கமாகவும் சீறியாழ். (சிறு + யாழ்); என்னும் பெயருடனும், பெரும் பாணாற்றுப் படையில் பச்சை, துளை, போர்வை, வாய், கவைக்கடை, திவவு, மருப்பு, நரம்பு முதலிய உறுப்புகளையுடையதாக விரிவாகப் பதினாறடிகளினும் யாழ் கூறப்படுதலானும், சிறுபாண் பெரும்பாண் என்பவை கருவிபற்றிய குலப்பிரிவோ என்னும் ஐயம் முற்றும் அகன்றபாடில்லை. சென்னைப் பல்கலைக்கழக அகராதியினும் பெரும்பாணர் பாணருள் ஒரு பிரிவினர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

பாணர் வாய்ப்பாட்டும் கருவியுமாகிய இருவகை இசையினும் வல்லவராயிருந்தனர். சிலப்பதிகாரத்திலுள்ள ‘பாடற் பாணர்’ (அந்தி.186);, ‘குரல்வாய்ப் பாணர்’ (200); என்னுந் தொடர்கள் வாய்ப் பாடகரைக் குறிக்கும்.

கருவிகளில் தோற்கருவிகளெல்லாம் பறை என்னும் பொதுப் பெயராற் குறிக்கப்படும் தொல்காப்பியத்தில்.

     “தெய்வம் உணவே மாமரம் புட் பறை” (தொல் .);

என்னும் கருப்பொருட் சூத்திரத்துள்ளும்,

     “அனிச்சப்பூக் கால்களையாள் செய்தாள்

நுகப்பிற்கு நல்ல படாஅ பறை” (குறள்.115);

என்னும் திருக்குறளினும் பறை என்பது தோற்கருவிப் பொதுப் பெயராயுள்ளமை காண்க. ‘மணப்பறை’,

     “பிணப்பறை’, ‘பறைசாற்றினான்’ முதலிய வழக்குகளில் பறை என்பது பல்வேறு தோற்கருவிகளைக் குறித்தது. பறைகளை அடிப்பவர் பறையர் எனப்பட்டனர். இப்பெயர் இக்காலத்துப் பிணப்பறை யறைபவரை மட்டுங் குறிக்கின்றது. பண்டைக் காலத்தில் மண்டை என்னும் பெயர் பறைக்கு வழங்கிவந்த மறுபெயராகும். பறைகளடிக்கும் பாணர் மண்டைப்பாணர் எனப்பட்டனர். மண்டையோடு போன்று மண். மரம், பித்தளை முதலியவற்றறாற் செய்து தோற்கட்டிய பறைகளை மண்டையென்றது ஒருவகை உவமையாகு பெயர். மண்டையென்பது இக்காலத்தில் மொந்தையென்று திரிந்து அவ்வடிவாயுள்ள மட்கலயத்தைக் குறிக்கின்றது. தவலை என்பதன் மறுவடிவாகிய தபேலா என்னும் இந்துத்தானிச் சொல் ஒரு நீர்ப்பாத்திரத்தையும் ஒரு பறையையும் குறித்தல் காண்க. கோவில் மேளத்தைக் குறிக்கும் தகல்(தவுல்); என்னும் பெயரும் இதன் திரிபுபோலும்.

பல்வகைப் பறைகளையும் அடித்துக்கொண்டு ஒரே குலமாயிருந்த மண்டைப்பாணர் பிற்காலத்துத் தொழில், கருவி, ஒழுக்கம் முதலியவற்றின் வேறுபாட்டால் பல்வேறு பிரிவாய் பிரிந்து போயினர்.

     “துடியன் பாணன் பறையன் கடம்பன்என்

றிந்நான் கல்லது குடியுமில்லை” (புறம்.335);

என, மாங்குடிகிழார் தொழிற் குடிமக்களை நால்வகைப்படுத்துக் கூறியுள்ளனர். துடி உடுக்கு.

பாட்டிற்குக் கூத்து துணைத்தொழிலாதலின், பாணர் கூத்தும் ஆடிவந்தனர். வயிரியர் செயிரியர், மதங்கர் என்னும் பெயர்களும், விறலி என்னும் பெண்பாற்பெயரும் கூத்துப் பற்றியனவே. கூத்தரைக் குறிக்கும் கண்ணுளர், கண்ணுளாளர் என்னும் பெயர்களும் பாணர்க்குரியன. கண்ணுள் என்பது கண்ணை உள்ளே வைத்தாற்போல் நுணுகி நோக்கும் நுண்வினைக்கூத்து. சிலப்பதிகாரத்தில்(ப.169);

     “கண்ணுளாளர்-மதங்கர், ஆவார் பெரும்பாணர்” என்று அடியார்க்குநல்லார் கூறியிருப்பதை நோக்குக. விறலி என்பவள் விறல்பட ஆடுபவள். விறலாவது மனத்தின் இயல்பு புறத்தே தோன்றச் செய்யும் திறம். இது வடமொழியிற் சத்துவம் எனப்படும். கணவன் பாணனும் மனைவி விறலியுமாயிருந்து இருவரும் இசைந்து அரசரிடம் சென்று பாடியாடுவது பெருவழக்கு.

பாணர்க்குச் சிறுபான்மை தையல் தொழிலுமுண்டு. சிலப்பதிகாரத்தில் (இந்திர விழா.32); ‘துன்னகாரர்’ என்னும் பெயர்க்குப் பாணர் என்று பொருள் கூறியுள்ளார் அரும்பதவுரைகாரர். துன்னம்-தையல்.

     “பாணர்க்குச் சொல்லுவதும்………….தை……”

என்று காளமேகரும் பாடியுள்ளார்.

பாணர்க்குரியது பெரும்பாலும் இசைத் தொழிலாதலின், பல்வகைப் பறைகட்கும் (அல்லது மேளங்கட்கும்); தோற்கட்டுதல் அவர் வினையே என்பது சொல்லாமே விளங்கும்.

இசைத்தொழில் பாணரெல்லார்க்கும் எக்காலத்தும் இசையாமையின், அவருள் ஒரு சாரார் மீன்பிடிப்பதைத் தொழிலாகக் கொண்டனர்.

     “பச்சூன் பெய்த சுவல்பிணி பைந்தோல் கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்தநெடுங்கழைத் தூண்டில் நடுங்க நாண்கொளீ இக் கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப் பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை” (283-7);

என்று பெரும்பாணாற்றுப்படையிலும்.

     “மீன்சீவும் பாண்சேரி”

என்று மதுரைக்காஞ்சியிலும் கூறியிருத்தல் காண்க.

பாணரென்பார் குலமுறைப்படி (இன்று ஆதிதிராவிடர் என்று அழைக்கப்படுவாருள் ஒரு சாராராகிய); பறையரேயாவர். இஃது மேற் சினந்திருக்கும்போது அது தணிக்கவந்த யாழ்ப்பாணனை நோக்கிப்

     “புலை ஆத்தின்னி போந்ததுவே” (திருக்கோ.386); என்று வெகுண்டுரைப்பதில் பாணர் ஆவின் (பசுவின்); இறைச்சியை உண்பதாகக் குறித்திருத்தலாலும், அதற்கப் பாணன் புலந்துரைப்பதில் (387);

     “வில்லாண் டிலங்கு புருவம் நெறியச்செவ் வாய்துடிப்பக் கல்லாண் டெடேல்கருங் கண்சிவப்

பாறறு கருப்பதன்று பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே”

என்று தன்னை மிகவும் தாழ்த்திருப்பதாலும் அறியப்படும்.

காலஞ்சென்ற எம். சீனிவாச ஐயங்கார் அவர்களும் தமது ஆராய்ச்சி நூலில் பாணர் பறையருள் ஒரு பிரிவினர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாணர் இங்ங்னம் தாழ்ந்த வகுப்பினராயிருந்தும், முத்தமிழுள் இசை, நாடகம் என்னும் இரண்டையும் வளர்ப்பவர் அவராதலாலும், இசையில் (சங்கீதத்தில்); தமிழர்க்கும் தமிழரசர்க்கும் இருந்த பேரார்வத்தினாலும், ஆரிய வொழுக்கம் ஆழ வேரூன்றாத பண்டைக்காலத்தில் குலப் பிரிவினைப் பிற்காலத்திற்போல் அவ்வளவு முறுகாமையானும் அவர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பும் அரசர்

அவைக்களங்களிலும் அரசியர் அந்தப் புரங்களிலும் தடையில்லா நுழைவும் இருந்தன. அறிவாற் சிறப்பேயன்றிப் பிறப்பாற் சிறப்பு அக்காலத்தில் இருந்திலது.

அரசரைப்

     “பாணர் ஒக்கல்” என்று திருக்கோவை (400);கூறும்;

ஒக்கல்=இனம்.

     “குரல்வாய்ப் பாணரொடு திரிதருமரபின் கோவலன் போல”,

     “பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து”

என்று, பெருஞ்செல்வனும் பெருங்குடி வணிகனுமான கோவலன் பாணரொடு கூடித்திரிந்தமை சிலப்பதிகாரங் கூறும்.

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் பாடிய புறப்பாட்டில்.

     “பாண்சுற்றம் சூழ்வதாக நினது நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் ஒலக்கம்” (Dubar); (29. உரை);

என்று கூறியுள்ளார்.

பாணர் அரசரிடம் சென்று பாடி யாழ் வாசித்து அவர்க்கு இன்ப மூட்டுவதும், அவர்மீ து அரசியர்க்குள்ள ஊடலை(கோபத்தை);த் தணிப்பதும், அரசருடன் போர்க்களத்திற்குச் சென்று வெற்றி நேர்ந்தவிடத்து வெற்றிக் கூத்தாடுவதும் இறந்துபட்ட அரசர்க்கும் வீரர்க்கும் இரங்கிப் பாடுவதும், அவரை நினைவுகூர்தற்கும் வழிபடுதற்கும் நாட்டிய நடுகற்களை வணங்கிச் செல்வதும் வழக்கம்.

அரசரும் விடிந்தெழுந்தபின் பாணரை வருவித்து, அவர்க்குச் சிறந்த பரிசிலளிப்பதும், அவரை இனத்தாருடன் உண்பிப்பதும், போர்க்களத்து வருவாய்களைப் போர் செய்து வெற்றிபெற்ற பின்பும், பகைவர் செல்வங்களை (வெற்றியுறுதிபற்றி);ப் போர் செய்யப் போகு முன்பும் அவற்றிற்கு உரிமையாக்குவதும் வழக்கம்.

     “வரையா வாயிற் செறாஅ திருந்து

பாணர் வருக பாட்டியர் வருக

—————- வயிரியர்

வருகென இருங்கிளை புரக்கும் இரவலர்க் கெல்லாம்

கொடிஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் விசி” (அ.748-52);

என்றுமதுரைக்காஞ்சியில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியற்காலத்துப் பாணரை வருவித்துப் பரிசளித்தமை கூறப்பட்டது.

     “பொறிமயிர் வாரணம் பொழுதறிந் தியம்பப்

பொய்கைப் பூமுகை மலரப் பாணர்

கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க

இரவுப் புறம்பெற்ற ஏம வைகறை

………………………………………………………………………………………………

வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்” (புறம்.398);

என்று புறப்பாட்டில் சேரமான் வஞ்சன் அரண்மனையில் வைகறை (விடியல்); தோறும் பாணர் யாழ்வாசித்தல் கூறப்பட்டது. வாரணம் = கோழி.

     “பாணன் கூத்தன் விறலி……………………………….

………………………

தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்”

என்று தொல்காப்பியத்தில் பாணர் அரசியரிடம் அவர்க்கு அவர்தம் கணவர் மீதுள்ள ஊடலை புலவியைப் போக்குதல் கூறப்பட்டது. ஊடல்

முதிர்ந்தது புலவி.

புறப்பொருள் வெண்பாமாலையில்,144ஆம் சூத்திரத்தில். பாணர் போர்க்களத்தில் வீரருடன் தேரின் பின் நின்று ஆடுவதும், 207ஆம் சூத்திரத்தில் அவர் போர்க்களத்திற் பெற்ற பரிசிலைப் புகழ்ந்து கூறுவதும், 137ஆம் சூத்திரத்தில் அவர் போரில் இறந்த வீரர்க்கு இரங்கி விளரிப்பண் பாடுவதும், 252ஆம் சூத்திரத்தில், அவர். இறந்த வீரர்க்கு எடுத்த நடுகல்லைத் தொழுவதும் கூறப்பட்டன.

அரசர் பாணர்க்குப் புலவுச்சோறு, இனிய மது, பொன்னரி மாலை, வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப்பூ. களிறு, குதிரை பூட்டிய தேர் முதலியவற்றை நிரம்பக் கொடுத்தாகப் புறநானூற்றில் பல பாடல்களுள. இவற்றுள், பொன்னரி மாலையை விறலி என்னும் பாணிச்சிக்கும் பொற்றாமரைப் பூவைப் பாணனுக்கும் சூட்டுவது வழக்கம்.

     “முட்டில் பாணரும் ஆடியன் மகளிரும்

எட்டொடு புணர்ந்த் ஆயிரம் பொன்பெறுப” (சிலப்.ப.121);

என்பதால், மாதவி பெற்றதுபோலப் பாணரும் தம் திறமைக்கு 1008 கழஞ்சு பொன் பெறும் வழக்கமிருந்ததாகத் தெரிகின்றது.

   11ஆம் புறப்பாட்டில், பாடினிக்குச் சிறந்த பொன்னணி கலத்தையும் பாணனுக்கு வெள்ளிநாராற் றொடுத்த பொற்றாமரைப் பூவையும் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ அளித்தாகக் கூறப்பட்டுள்ளது.

   126 ஆம் புறப்பாட்டில், மலையமான் திருமுடிக்காரி பகைவருடைய யானையினது (நெற்றிப்); பட்டத்திற் பொன்னைக் கொண்டு செய்த வாடாத பொற்றாமரைப் பூவைப் பாணரது தலைபொலியச் சூட்டியதும், 203ஆம் புறப்பாட்டில், சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளங்சேட்சென்னி பாணர்க்குப் பகைவர் அரண்களைப் போர்செய்து அழிக்கு முன்பே கொடுத்ததும் கூறப்பட்டன.

பாணர் இங்ங்ணம் பல அரசரிடம் சிறப்புப் பெற்றனரேனும், பொதுவாக வறுமையால் வருந்தினரென்றும், வள்ளல்களைத் தேடி மலையுங் காடும் அலைந்து திரிந்தனரென்றும் கி.மு. 1000 ஆண்டிற்குக் குறையாத தொல்காப்பியமே கூறுகின்றது.

     “கூத்தரும் பாணரும் பொருநரும்

விறலியும்ஆற்றிடைக் காட்சி உறழத்

தோன்றிப்பெற்ற பெருவளம் பெறா அர்க் கறிவுறீஇச்சென்று பயன்எதிரச்

சொன்ன பக்கமும்”

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் பாணர் வறுமையும், அவருள் ஒருவர் தாம் பரிசுபெற்ற வள்ளலிடம் அது பெறாத பிறரை ஏவி ஆற்றுப் படுப்பதும் கூறப்பட்டன. சங்க நூல்களிலும் தனிப்பாடல்களிலும் பாணராற்றுப்படைக்கு உதாரணங்கள் நிரம்பவுள.

இங்ங்ணம் பண்டைக்காலத்தே பாணர்க்கு வறுமை தோன்றியதற்கும், அது பின்பு முற்றிப் பிணப்பறை தவிரப் பிறவழிகளிற் பாண்டொழில் நடத்தவிடாது கெடுத்தமைக்கும் காரணம் ஆரியவர்ணாசிரமத்தால் பாணர்

தாழ்த்தப்பட்டதும் ஆரியர் தமிழ் இசையைப் பயின்றதுமே.

பாணர் தீண்டாதார் அல்லது தாழ்ந்தோராகவே அரசரிடத்தும் பெருமக்களிடத்தும் அண்டமுடியாது போயிற்று. இவ்விழிவு திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் போன்ற அடியார்களைக்கூட அடுத்தமை அவர்கள் சரித்திரங்களிற் காணலாம். பாணர் வாய்ப்பாட்டையும் யாழையும் ஊக்குவாரின்றிக் கைவிட்டனர். அதனால் இசைத்தமிழ் அழிந்தபின் எஞ்சியுள்ள ஒருசில இசைத்தமிழ்ச் சூத்திரங்கட்கும் குறியீடுகட்கும் உண்மைப் பொருள் காண்டல் அரிதாய்விட்டது. இப்போது பானரெனப் படுவார். மாடு தின்னாமையும் பிணப்பறை யடியாமையும்பற்றிப் பறையரினும் சற்று உயர்வாயிருப்பினும், தம் பண்டைத் தொழிலையும் பெருமையும் இழந்தவராயே உள்ளனர்.

பண்டைக் காலத்தில் பட்டத்தியானைமேல் ஏறி அரசருடைய விளம்பரங்களைப் பறையறைந்து நகரத்தார்க்கு அறிவித்த வள்ளுவரும் பாணர் அல்லது பறையரே. சாதாணப் பறையர் பொதுமக்கட்கும். வள்ளுவர் அரசர்க்கும் பறையறைகிறவராயிருந்தனர். இதுவே வள்ளுவரின் ஏற்றத்திற்குக் காரணம்.

இன்றும் தென்னாட்டிற் சில சிற்றூர்களில் பறையர் கோயில் மேளம் என்னும் மணப்பறை பயில்வதையும் அதை மேல்வகுப்பாரில்லங்களில் இருவகை வினைகட்கும் வாசிப்பதையும் காணலாம். இசைத்தொழில் நடத்த முடியாத பாணரெல்லாம் கூடைமுடைதல், மீன்பிடித்தல் முதலிய பிற தொழில்களை மேற்கொண்டுள்ளனர்.

ஆரியர்(பிராமணர்); முதன் முதலாய் வாய்ப்பாட்டும் நரப்புக் கருவியும் பயின்று இதுபோது தோற்கருவியும் பயில்கின்றனர். ஆயினும் ‘நாகசுரம்’ என்னும் துளைக்கருவியையும், ‘தவல்’ போன்ற தோற்கருவிகளையும் பயில்வதில்லை. அவை தாழ்ந்தவை என்று எண்ணப்படுதலான். 11ஆம் நூற்றாண்டு வரை பாணரே தமிழ்நாட்டில்

இசைத்தலைமை வகித்தமை, நம்பியாண்டார் நம்பியாலும் முதலாம் இராசராச சோழனாலும் தில்லையம்பலத்திற் கண்டெடுக்கப்பட்ட தேவாரத் திருப்பதிகங்கட்கு இசை வகுக்குமாறு, திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபினளான ஒரு பெண் நியமிக்கப்பட்டமையாலும் விளங்கும்.

ஆரியப் பிராமணர் இசை பயிலக் கூடாதென்று ஆதியில் ஒர் விலக்கு இருந்தது. மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தியாயம் 15ஆம் விதியில் பிராமணர்

     “பாட்டுப் பாடுவது. கூத்தாடுவது………. இப்படிக்கொத்த சாத்திர விருத்தமான கர்மத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

வேதத்தை ஒதாது வரிப்பாட்டைப் பாடி வேத ஒழுக்கத்தினின்றும் தவறியதால் சில பார்ப்பனர் விலக்கப்பட்டு ஒர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி, சிலப்பதிகாரத்தில்,

     “வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்

புரிநூன் மார்பர் உறைபதி” (புறஞ்சேரி.38-9);

என்னும் அடிகளிற் குறிக்கப்படுகின்றது.

ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னமே தமிழர்க்கு இசைத்தமிழ் இருந்தது._மொழிப் பகுதியாக்கினது தமிழிலன்றி வேறு எம்மொழியினுமில்லை. ஆரிய வேதங்களில் ஒன்றான சாமவேதம் இசையோடு கூடியதேனும், அவ்விசை பிறநாடுகளிற் போல் மந்திரத்திற்கரிய அளவு சாமானியமான தேயன்றித் தமிழிசைபோல விரிவாய் ஆலாபித்துப் பாடப்படுவதன்று. தென்னாட்டுத் தமிழிசையைப் பின்பற்றியே சமற்கிருதத்தில் இசைநூல்கள் பிற்காலத் தெழுதப்பட்ன. கி.பி. 5ஆம் நூற்றாண்டிலேயே முதன்முதலாய் வடமொழியில் இசைநூலெழுந்த தென்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தமது கருனாமிர்த சாகரத்திற் கூறியுள்ளார். ஆகவே ஆரிய வேதத்தினின்றும் இந்திய இசை எழுந்ததென்பது அறியாதார் கூற்றே. வேத வொழுக்கத்திற்கு மாறான மேனாட்டு அறுவைமுறை மருத்துவத்தை எங்ங்னம்

   ஆரியர் பிற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனரோ, அங்ஙனமே தமிழர் இசையையும் முற்காலத்துப் புதிதாய்க் கற்றுத் தேர்ந்தனர். வடநூல்களிற் கூறப்படாத பல தோற்கருவிகள் தமிழ்நாட்டிலிருந்தன. பல உயிர்களின் தோலையும் சவ்வையும் ஊறவைத்துக் கிழித்துப் பல்வகைப் பறைகட்குக் கட்டுவது பாணர்க்கே ஏற்கும்;இசைவல்ல ஒர் வகுப்பார் இசைக்கருவிகள் செய்பவராயு மிருத்தல் வேண்டும். இசைநூற்கு இன்றியமையாத குறியீடுகளெல்லாம் இன்றும் தமிழிலுள்ளன.

இனி இக்காலப் பாணரைப்பற்றி தர்ஸ்டன் (Thurston); என்பார் தமது ‘தென்னாட்டுக் குலமரபுகள்’ (Castes and Tribes of Southern India); என்னும் நூலில் தொகுத்திருப்பதைச் சுருக்கிக் கூறுவாம்:

தமிழ்ப் பாணர் மேஸ்திரியெனவும் படுவர். இவர் திருநெல்வேலி, மதுரைக் கோட்டங்களில் தையற்காரராயுள்ளனர். இவர் வேளாளரையும் பார்ப்பாரையும் புரோகிதராகக் கொள்வர். இவர் வீட்டில் அம்பட்டரும் வண்ணாரும் உண்ணார். ஆயினும். கோயில் நுழையம் உரிமை இவர்க்குண்டு.

   மலையாளப் பாணர் மந்திரவாதிகளும் பேயாடிகளுமா யிருக்கின்றனர். இவர் மந்திர வினைகள் பல்வேறு வகைப்பட்டவை. இவருள் ஆடவர் தாழங்குடை முடைவர்;பெண்டிர் மருத்துவம் பார்ப்பர். சிலவிடத்து மலையன் என்னும் பட்டம் இவர்க்குண்டு. அறப்புக்காலத்தில் பாணச் சிறுவர் சிறுமியர் வீடுதோறும் சென்று குடையுடன் ஆடி இரப்பர். பயிர்பச்சை மீது அதிகாரமுள்ள பேய்கள் இவர் வயப்பட்டன என்று கருதப்படுகிறது. சில சடங்குகளில் பாணர் துடியியக்குவர். பறைக்குத் தோல் கட்டுவதும் இவர் தொழிலாம்.

   பாணனான குருப்பு என்னும் மேல்வகுப் பம்பட்டன். தீயருக்கும், இறந்தோர் ஆவியை அவர் இறந்த அறையினின்றும் ஒரு சடங்கால் வெளிப்படுத்துவான். இவன் செறுமாற்கு மேற்பட்ட தீண்டாதான்;   தாழங்குடைக்கு மூங்கில் வேலை மட்டும் செய்வான். தாழை வேய்வது இவன் மனைவி;தன்

மனைவியில்லாவிட்டால் அயல்வீட்டுப் பெண்டிரிடம் தாழை வேயக் கொடுப்பான்.

தீயர் பிணஞ் சுடும்போது பாணர் 5நாள் இரவு பறையறைந்து தீயாவிகளை விரட்டுவர்.

பாணர்க்கு மக்கள் தாயமே. பெண்டிர் பல சகோதரரை மணப்பதுண்டு. தென் மலபாரில், பாணர்க்குள் திருரெங்கன், கொடகெட்டி (குடைகட்டி);, மீன்பிடி, புள்ளுவன் என நாற் பிரிவுண்டு. இவருள் புள்ளுவன் ஏனையரிலும் தாழ்ந்தவன், பாணர் கலப்பு மணமுள்ள பல இல்லங்கள் அல்லது கிரியங்களாகக் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். காளி, பரகுட்டி, கரிங்கட்டி, குளிகன், குட்டிச்சாத்தான் என்பன இவர் தெய்வங்கள். இவர் உச்சவேலி என்னும் வகுப்புப் பேய்களை ஒட்டுவர்.

ஒரு பாணன் தன் ஆடையில் ஒர் இழையெடுத்துத் தன் மைத்துனனிடம் கொடுத்து உன் பரிசம் முடிந்தது என்று கூறினால் தன் மனைவியை முற்றும் தள்ளியதாகும்.

   மலையாளப் பாணருள். அஞ்ளுற்றான், முந்நூற்றான் என இரு உட்பிரிவுகளுண்டு. திருவாங்கூர்ப் பாணர்க்குப் பணிக்கப்பட்டமுண்டு. இவர் தமிழப் பாணரினுந் தாழ்ந்தவர். இவர் மேற்குலத்தார்க்கு 36 அடித் தூரம் விலகுவர்;   மன்னாரையும் வேடரையும் 8அடித் தூரத்தும் புலையரையும் பறையரையும் 32 அடித் தூரத்தும் தம்மின்றும் விலக்குவர். இவர் மயிர்வினையும் சலவையும் தாமே செய்து கொள்வார்: கம்மாளரிடத் துண்பர்: இளமை மணஞ் செய்வர்: இறந்தோரைப் புதைப்பர். இவர்க்குச் சாவுத்தீட்டு 16 நாள்;   இயல்பாய் இறந்தவர்க்கு ஆவணி மாதத்திலும் ஊனுங்கள்ளும் படைப்பர்;இது வெள்ளங்குளி யெனப்படும். இறந்தவரை நினைவு கூரப் பந்தல், மடம் முதலியன அமைப்பதுண்டு.

ஈழவர் தமது கொண்டாட்டங்களில், பாணர்க்கு ஈராள் உண்டியளித்துத் தம் முன்னோர்க்கு அவர் முன்னோர் செய்த ஒர் நன்றியை நினைவு கூர்வர்.

   பாலக்காட்டில் பாணர் தலைவனுக்குச் கப்ரதன் என்று பெயர். அவன் இறந்தால் அரசனுக்கு அறிவிக்கப்படும். அரசன் வாள், கேடகம், ஈட்டி, துப்பாக்கி, வெடிமருந்து, வெள்ளிக் காப்பு, அட்டிகை என்னுமிவற்றை அவன் மகனுக்காவது இழவு கொண்டாடுபவருக்காவது அனுப்ப, அணிந்துகொள்வர். பிணத்தை எடுக்கும்போது ஒன்றும், கிடத்தும்போது ஒன்றும், எரித்தபின் ஒன்றுமாக 3வெடி சுடுவர். மறுநாள் மகன் தன் கையாற் செய்த ஒர் தாழங்குடையை அரசனுக்களிப்பன்;அரசன் அவனுக்குச் சுப்ரதன் என்னும் பட்டமளிப்பன்.

சங்கிலிக்கருப்பன், பேச்சி, ஊதா கருப்பன், காளி, சோதல கருப்பன், சோதல பத்ரகாளி, யட்சி, கந்தர்வன், அனுமான் என்று ஆவிகளைப் பாணர் வயப்படுத்துவர்.

பாணர் மதம் பேய் வணக்கம். மூக்கன், சாத்தன், கப்பிரி, மலங்கொறத்தி (குறத்தி); என்னுந் தெய்வங்களையும் இவர் வணங்குவர். இத்தெய்வங்களுக்கு மரத்தடியில் கல் நட்டு. முழுக்காட்டி, ஆடு கோழியறுத்துக் காய்கறி சோறு படைப்பர். இறந்தோரையும் வணங்குவர். அமாவாசையன்றாவது முழுநிலாவின் பின் 11ஆம் நாளாவது நோன்பிருப்பர்.

பாணர் எல்லாரும் பார்ப்பார், நாயர், கம்மாளர், ஈழவரிடம் உண்பர். பாணரும் கணியரும் தொட்டுக்கொண்டால் ஒருவரை யொருவர் தீட்டுப்படுத்தியவராவர்: பின்பு குளித்துத் தீட்டைப் போக்குவர். பாணர் ஈழவர் அருகில் குடியிருக்கலாம். ஆனால் நாயர் தரையில் கூடியிருக்க முடியாது. கம்மாளர் கிணற்றில் தண்ணீரெடுக்கவும், பார்ப்பனர் கோயிலின் புறமதிலையண்டவும், பாலக்காட்டில் பார்ப்பனர் தெருவழிச் செல்லவும் இவர்க்கு உரிமையில்லை. 1891ஆம் ஆண்டுக் குடிமதிப்பில் பாணர் பறையருள் ஒரு பிரிவார் என்று குறிக்கப்பட்டுள்ளது.

பாவாணர்- “செந்தமிழ்ச் செல்வி” மேழம் 1939

பாணர் மாலையர்

பாணர் மாலையர் pāṇarmālaiyar, பெ. (n.)

   பாண்குல மகளிர்; women of the {pânar} caste.

     “மாலையங் குழல்சேர் பாணர்மாலையர்’ (திருவாலவா.54,26.);

     [பாணர் + மாலையர்]

பாணலி

 பாணலி pāṇali, பெ. (n.)

பொரிக்குஞ் சட்டி:

 frying pan.

தெ. பாணலி

க. பாணலெ

பாணலிங்கம்

 பாணலிங்கம் pāṇaliṅgam, பெ. (n.)

வாணலிங்கம் (சங். அக.); பார்க்க;See {vāpalingam}

 a kind of siva lingam.

பாணல்

 பாணல் pāṇal, பெ. (n.)

   வெற்றிலை; betal leaf. (சா.அக.);

பாணவி

 பாணவி pāṇavi, பெ. (n.)

   தட்டைப் பயறு; flat pulse. (சா.அக.);

மறுவ காராமணி.

பாணவுப்பு

 பாணவுப்பு pāṇavuppu, பெ. (n.)

   வெடியுப்பு; nitre. (சா.அக.);

பாணா

பாணா pāṇā, பெ. (n.)

   1. வயிறு பருத்த பானை (சால்); (வின்.);; large, rounded pot.

   2. மண்சட்டி; earthen pan.

   3. பருத்த விதை

 large testicles.

க. பாநெ

ம.பாந

 பாணா pāṇā, பெ. (n.)

பாணாத்தடி(C.G.); பார்க்க;See {pana-t-tad/}

தெ. பாணா

பாணாச்செடி

 பாணாச்செடி pāṇācceḍi, பெ. (n.)

காட்டுக் கொஞ்சி(L.); பார்க்க;See {kâffu-k-koń} opal orange.

பாணாத்தடி

 பாணாத்தடி pāṇāttaḍi, பெ. (n.)

   சிலம்பக்கழி(C.G.);; cudgel used by indian gymnasts in fencing.

     [பாணா + தடி]

பாணாத்தி

 பாணாத்தி pāṇātti, பெ. (n.)

   பாணாரச்சாதிப் பெண் (இ.வ.);; a woman of the tailor caste.

     [பாணன் → பானத்தி]

பாணான்

 பாணான் pāṇāṉ, பெ. (n.)

   தையற்காரச் சாதியான்; man of the tailor caste.

     [பாணன் → பானான்]

பாணாறு

பாணாறு pāṇāṟu, பெ. (n.)

பாணாற்றுப்படை (தக்கயாகப்.662, உரை.); பார்க்க;See {panӑrruppag/}

     [பாண் + ஆறு]

பாணாற்றுப்படை

பாணாற்றுப்படை pāṇāṟṟuppaḍai, பெ. (n.)

   தலைவனொருவனிடம் பரிசுபெற்றுவரும் பாணனொருவன் மற்றொரு பாணனை அத்தலைவனிடம் பரிசுபெறுதற்கு ஆற்றுப் படுத்துவதைக் கூறும் புறத்துறை (பு.வெ. 9, 28.);;     [பாண் + ஆற்றுப்படை]

பாணாலு

 பாணாலு pāṇālu, பெ. (n.)

   தொடர்ந்து ஆட்டம் ஆடமுடியாதபடி சோணாலுக் காயுள்பட நாலுகாய்கள் மல்லாந்து நிற்பதான தாயம்; a throw of four cowries upside down, including {conálu-k-kāy,} the player being then disqualified from further play in that turn, opp. to {cõņālu.}

     [பாழ் + நாலு → பாணாலு]

பாணி

பாணி1 pāṇittal,    11. செ.கு.வி. (v.i.)

   1. சுணக்கப்படுதல்; to wait.

     “பாணியே மென்றார்” (கலித்.102.);

   2. பின்வாங்குதல்; to withdraw, back slide.

     “சமரிற் பரணியான்” (கந்தபு. மூவாயிரர்.59.);

 பாணி2 pāṇiddadal,    3. செ.குன்றாவி. (v.t.)

   1. பாவித்தல்; to consider, think, imagine conceive.

     ‘மனத்திலே பாணிக்கிறான்’ (வின்.);

   2. தாமதித்தல்; to delay.

     “பாணிநீ நின்சூள்” (பரிபா.8,56.);

   3. மதிப்பிடுதல்; to conjecture, estimate, form an opinion, value.

     “கையாலே பாணித்துச் சொன்னான்’ (வின்.);

   4. நிறைவேற்றுதல்; to achieve, manage to complete.

     ‘காரியத்தை யெப்படியோ பாணித்து விட்டான்’

 பாணி3 pāṇi, பெ. (n.)

   1. காய்ச்சிய பதநீர்; boiled state toddy.

     “பனம்பாணி”

   2. பாகு; treacle;molasses.

     “சீனிப்பாணி”.

ஒருகா: பாளைநீர் → பாணி

 பாணி4 pāṇi, பெ. (n.)

   1. ஓசை; sound.

     “ஈர்ந்தண்முழவின் பாணிததுப” (புறநா.114.);

   2. கை; hansd arm.

     “பாலலோசனவால போசன பாலிமானுறுபாணியாய்” (ஏகாதசி.உருக்கு.சகா.);

   3. தாளம்; time or measure in music.

     “மண்ணமை முழவின் பண்ணமை சீறியா-ழொண்ணுதல்விறலியர் பாணிதுங்க’ (பொருந.11);

   4. நீர்; water.

     “வழுது ணங்காய்நனை பாணியிலிங்கமீதுவார்ந்து”(சிவரக. அபுத்திபூ.25.);

   5. பாட்டு; prosody.

     “மாயோன் பாணியும்” (சிலப்.கடலாடு.45.);

 பாணி5 pāṇi, பெ. (n.)

   பாடினி; woman of the {panar} caste.

     “என்கொணர்ந்தாய் பாணா நீயென்றாள் பாணி” (பெருந்தொ.1684.);

     [பாணன் → பாணி]

 பாணி6 pāṇi, பெ. (n.)

   1. காலம்; time, occasion.

     ‘எஞ்சொல்லற் பாணி நின்றன னாக’ (குறிஞ்சிப்.152.);

   2. தாமதம்; delay.

     “பணிப்பதே பாணியென்றான்” (சீவக.1929.);

   3. நீண்டகாலம் (திவா.);; long period of time.

 பாணி7 pāṇi, பெ. (n.)

   1. இசைப்பாட்டு;(திவா.);

 song, melody.

     “புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி” (சிலப்.844.); 2. (சங்கீதம்.); இசை;

 music.

     “பாணியாழ்” (சீவக.1500.);

   3. ஒலி; sound.

     “கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்” (சிலப்.13.148.);

   4. இசையுறுப்பாகிய தாளம்;     “தண்ணுமைப் பாணி தளரா

தெழுஉக” (கலித்.102.);

   5. அழகு; beauty.

     “காமம்…..பாணியுமுடைத்து” (குறுந்.136.); (பிங்.);

   6. அன்பு(பிங்.);; love.

   7. முல்லை யாழ்த்திறத்தொன்று;   8. பறைப்பொது (பிங்.);; drum.

   9. கூத்து (பிங்.);; dramatic entertainment with dancing.

     [பண் → பாணி]

 பாணி8 pāṇi, பெ. (n.)

   1. சருக்கரைக் குழம்பு(வின்.);; molasses, treacle.

   2. கள் (மூ.அ.);; toddy.

   3. பழரசம்(வின்.);; sweet juice of fruits.

   4. இலைச்சாறு(யாழ்.அக.);; juice of leaves.

   5. மிளகும் பனை வெல்லமும் சேர்ந்த ஒருவகை மருந்து(யாழ்.அக.);; medicinal preparation of pepper and jaggery.

   6. சரகாண்டகச் செய்ந்நஞ்சு பார்க்க. see {sarakāndaga pasānam,}

 a kind of mineral poison.

 பாணி9 pāṇi, பெ. (n.)

   1. ஊர் (பிங்.);; town, village.

   2. நாடு (பிங்.);; district. country.

   3. ஊர்சூழ்சோலை (பிங்.);; grove encircling a village.

   4. காடு (சூடா.);; jungle.

   5. பூம்பந்தர்;  arbour.

   6. பலபண்டம் (பிங்.);; stores, provisions.

   7. கடைத்தெரு (யாழ்.அக.);; bazaar.

 பாணி10 pāṇi, பெ. (n.)

   பாங்கு; Style manner peculiarity.

பாணிகம்

பாணிகம் pāṇigam, பெ. (n.)

   1. தாமரை; lotus flower.

   2. கைநகம்; finger nail. (சா.அக.);

     [P]

பாணிகை

 பாணிகை pāṇigai, பெ. (n.)

   அகப்பை (யாழ்.அக.);; a large spoon. (woodend spoon);

     [P]

பாணிக்கன்னி

 பாணிக்கன்னி pāṇikkaṉṉi, பெ. (n.)

   பாற்பட்டை; a tree. (சா.அக.);

பாணிச்சாய்

பாணிச்சாய் pāṇiccāy, பெ. (n.)

   கள்போன்ற முத்துநிறம் (S.l.l.ii,141.171.);; colour of a class of pearls, resembling that of toddy.

     [பாணி + சாய்]

பாணிச்சி

பாணிச்சி pāṇicci, பெ. (n.)

   பாணர்சாதிப்பெண் (மதுரைக்.749,உரை.);; woman of {pânar} caste.

     [பாணன் → பாணிச்சி]

பாணிச்சீர்

பாணிச்சீர் pāṇiccīr, பெ. (n.)

   கைத்தாளம்;     “பாடுவார் பாணிச்சீரும்” (பரிபா.8,109.);

     [பாணி + சீர்]

பாணிதம்

பாணிதம் pāṇidam, பெ. (n.)

   1. கருப்பஞ்சாறு; sugar can juice.

   2. வெல்லப்பாகு; molasses obtained from jaggery.

   3. கற்கண்டு; sugar candy.

   4. தண்ணீர்; water.

   5. ஊக்குநீர்; tonic.

   6. கியாழம்; a weak form of decoction derived by boiling the medicinal substance in water. (சா.அக.);

 பாணிதம்1 pāṇidam, பெ. (n.)

   சருக்கரை; sugar. (சா.அக.);

பாணித்தல்

 பாணித்தல் pāṇittal, பெ. (n.)

   தடுத்தல்; obstruct (சா.அக.);

பாணினி

பாணினி1 pāṇiṉi, பெ. (n.)

   பாடினி; songstress woman of the {pânar} caste.

     “பாணினியு மின்னிசையாற் பாடுவாள்” (கடம்ப.உலா,295.);

     [பாணன் → பாணினி]

பாணினீயம்

 பாணினீயம் pāṇiṉīyam, பெ.(n.)

   பாணினி இயற்றிய வடமொழி இலக்கணம்(வியாகரணம்);;{} grammar.

     [Skt. {} → த. பாணினீயம்]

பாணிப்பல்லி

 பாணிப்பல்லி pāṇippalli, பெ. (n.)

   வலம்புரிக்கொடி; isora creeper. (சா.அக.);

பாணிப்பூ

 பாணிப்பூ pāṇippū, பெ. (n.)

   இலுப்பைப்பூ; bassia flower. (சா. அக.);

பாணியம்

பாணியம் pāṇiyam, பெ. (n.)

   மருந்து ஒரு பங்கும், தண்ணீர் 32 பங்கும் எடுத்துக் கொண்டு காய்ச்சி அரை அல்லது கால் பங்கு ஆகும் வரை கொதிக்கவைத்து இறக்கித் தேனில் கொள்ளும் கியாழம்; a weak form of decoction prepared by boiling one part of medicinal substances or drugs in 32 parts of water till the whole is reduced to 1/2 or 1/

   4. it should be taken in honey. (சா.அக.);

பாணியிழு-த்தல்

பாணியிழு-த்தல் pāṇiyiḻuttal,    4. செ.கு.வி.(v.i.)

   மண்வெட்டியால் கரை மடித்தல்; to support the ridge by a hoe.

     [பாணி + இழு-,]

பாணிரம்

 பாணிரம் pāṇiram, பெ. (n.)

   தாமரை; lotus flower. (சா.அக.);

பாணிவாதன்

 பாணிவாதன் pāṇivātaṉ, பெ.(n.)

   வாணிகன் (யாழ்.அக.);; merchant.

     [Skt. {}-vat →த. பாணிவாதன்]

பாண்

பாண் pāṇ, பெ. (n.)

   பாழாக்குவது; that which ruins.

     “பாதியிலே நீங்குமோ பாண்சனியன்” (தெய்வச். விறலிவிடு.377);

     [பாழ் → பாண்]

பாண்சேரி

பாண்சேரி pāṇcēri, பெ. (n.)

   பாணர் இனத்தார் வாழும் சேரி; a village occupied by the {pân} caste.

     “மீன்சீவும் பாண்சேரியொடு” (மதுரைக்.269);

     “மீன்சீவும் பாண்சேரி” (புறநா.348-4);

     [பாண் + சேரி]

பாண்ட ஓவியம்

 பாண்ட ஓவியம் pāṇṭaōviyam, பெ. (n.)

   கலயங்களில் வரையும் கைவினைக் கலைகளில் ஒன்று; pottery design.

     [பாண்டம்+ஒவியம்]

பாண்டகச்சம்

 பாண்டகச்சம் pāṇṭagaccam, பெ. (n.)

   வாகை; common sirisa. (சா.அக.);

பாண்டகையமரம்

 பாண்டகையமரம் pāṇṭagaiyamaram, பெ. (n.)

   காட்டுக்குமிழ்; a kind of mediacal herb.

பாண்டங்குழி

 பாண்டங்குழி pāṇṭaṅguḻi, பெ. (n.)

   பழங்காலத்தில் கூலங்களைச் சேர்த்து வைக்க நிலத்தில் வெட்டப்பட்டு கல்லால் மூடப் பட்டிருக்கும் குழி; underground storage cell to preserve food grains.

     [பாண்டம்+குழி]

பாண்டச்சம்

 பாண்டச்சம் pāṇṭaccam, பெ. (n.)

   காயசித்திக்குதவும் கொடிநெல்லி என்னும் கிடைத்தற்கரிய மூலிகை; goose berry, creeper, a very rare plant useful for rejuvenation. (சா.அக.);

பாண்டத்தமைந்தவுப்பு

 பாண்டத்தமைந்தவுப்பு pāṇṭattamaindavuppu, பெ. (n.)

   இந்துப்பு; rock salt, epsom salt, sindh salt, (சா.அக.);

பாண்டத்திற்சமைந்தகன்னி

 பாண்டத்திற்சமைந்தகன்னி pāṇṭattiṟcamaindagaṉṉi, பெ. (n.)

   கருப்பூரம்; camphor, (சா.அக.);

பாண்டனி

 பாண்டனி pāṇṭaṉi, பெ. (n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [பாண்டம்+அணி]

பாண்டப்புடம்

 பாண்டப்புடம் pāṇḍappuḍam, பெ. (n.)

   மருந்தை மூசையிலிட்டு, அதை நிறைய நெல் உமியைப் பரப்பிய மண் சட்டியில் வைத்து எரிக்கும் புடம்; a process of calcination in which the medicine is enclosed in a crucible and then placed in the middle of an earthern vessel or pot which is filled to the brim with paddy husk and then heated or roasted by blowing. (சா.அக.);

பாண்டம்

 பாண்டம் pāṇṭam, பெ. (n.)

   பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்ட கலம்; mostly earthen pot.

     “புளி வைத்திருக்கும் பாண்டம்”

     [பண் → பாண்டம்]

பாண்டரங்கக்கூத்து

பாண்டரங்கக்கூத்து pāṇṭaraṅgakāttu, பெ. (n.)

   கூத்துப் பதினொன்றனுள் முப்புரத்தை அழித்தபோது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது (சிலப்.6,45);; dance of sivan when he destroyed the tiripuram, one of eleven {kuttu} பாண்டரங்கம் பார்க்க see {pāņdarangam}

     [பாண்டரங்கம் + கூத்து]

பாண்டரங்கண்ணனார்

பாண்டரங்கண்ணனார் pāṇṭaraṅgaṇṇaṉār, பெ. (n.)

   புறநானூற்றுப் பதினாறாம் பாடலையியற்றிய கடைக்கழகப் புலவர்; a sangam poet author of puram 16thpoem.

பாண்டரங்கம்

பாண்டரங்கம் pāṇṭaraṅgam, பெ. (n.)

   கூத்துப் பதினொன்றனுள் முப்புரத்தை அழித்தபோது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது (சிலப்.6,45.);; dance of sivan when he destroyed the tiripuram, one of eleven {kuttu.}

     “வானோராகிய தேரில் நான் மறைக் கடும்பரி பூட்டி நெடும்புறம் மறைத்து, வார்துகில் முடித்து, கூர்முள் பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி, சுடுகாட்டிலாடும் பாரதி வடிவாகிய இ றை வ ன் வெ ண் ணீ ற ணி ந் தாடியபாண்டரங்கக் கூத்து” என்பர் அடியார்க்கு நல்லார்;(சிலப்,6:44-5 உரை);

அரும்பத உரையாசிரியர் பைரவி ஆடியது என்பர்.

     “ஏறமர்கடவுண் மூவெயிலெய்வுழிக்…படி நிலை திரியாப் பாண்டரங்கம்மே” (கலி.1.உரை.);

     “பாண்டரங்கம்-வெள்ளைநிறமான திடர். அத்திடரில் நின்று ஆடினமையாலே இக்கூத்துப் பாண்டரங்கக் கூத்தாயிற்று” என்பர் பெருமழைப் புலவர்.)

     [பாண்டு + அரங்கம்]

பாண்டரம்

பாண்டரம்1 pāṇṭaram, பெ. (n.)

   1. சிவப்புச் சுண்ணாம்பு; red quick lime.

   2. மல்லிகை; jasmine flower.

   3. வெண்மை; whiteness. (சா.அக.);

 பாண்டரம்2 pāṇṭaram, பெ. (n.)

பாண்டல் பார்க்க;seе {рӑndal}

பாண்டரம்பிடித்-தல்

பாண்டரம்பிடித்-தல் pāṇḍarambiḍittal,    4. செ.கு.வி. (v.i.)

   அழுக்குப் பிடித்தல்; to be soiled or stained with dirt.

     [பாண்டரம் + பிடி-,]

பாண்டலடி-த்தல்

பாண்டலடி-த்தல் pāṇḍalaḍittal,    4. செ.கு.வி.

   தீநாற்றம் வீசுதல்; to stink, have a musty or rancid smell.

     [பாண்டல் + அடி-,]

பாண்டலரிசி

 பாண்டலரிசி pāṇṭalarisi, பெ. (n.)

   மடிசலரிசி; stale, musty rice.

     [பாண்டல் + அரிசி]

பாண்டல்

பாண்டல் pāṇṭal, பெ. (n.)

   1. ஊசிப்போதல்; the quality of being rancid.

   2. பாசிபிடித்து நாறுதல்; Stinking smell.

   3. பழமையானது; that which is stale.

   4. கருவாடு; dried fish.

பாண்டல் கருவாடு

 பாண்டல் கருவாடு pāṇṭalkaruvāṭu, பெ.(n.)

   பதனழிந்த கருவாடு (முகவை.மீனவ.);; stale and dried fish.

     [பாண்டல் + கருவாடு]

பாண்டல் நாற்றம்

 பாண்டல் நாற்றம் pāṇṭalnāṟṟam, பெ. (n.)

   தீ நாற்றம்; rancid smell, an offensive smell.

     [பாண்டல் + நாற்றம்]

பாண்டல்நெய்

 பாண்டல்நெய் pāṇṭalney, பெ. (n.)

   நாற்றநெய்; rancid ghee.

     [பாண்டல் + நெய்]

பாண்டவக்கு

பாண்டவக்கு pāṇṭavakku, பெ. (n.)

பாண்டவக்குழி(GSm.D.l,ii 144.); பார்க்க;See {pāņgavakku/}

     [பாண்டவர் + குடி]

பாண்டவக்குழி

 பாண்டவக்குழி pāṇṭavakkuḻi, பெ. (n.)

   பாண்டவர் கட்டியதாகக் கருதப்படுவதும், மலைப்பகுதிகளில் காணப்படுவதுமான பழங்காலப்புதைகுழி; dolmens or cromleobs, supposed to be built by the {pāndavás}

 during their exile.

     [பாண்டவர் + குழி]

பாண்டவக்கோயில்

பாண்டவக்கோயில் pāṇṭavakāyil, பெ. (n.)

பாண்டவக்குழி(G.Sm.D.l,I,44.); பார்க்க;See {pāņgavakkus}

     [பாண்டவர் + கோயில்]

பாண்டவர்கள்

 பாண்டவர்கள் pāṇṭavarkaḷ, பெ. (n.)

   மன்னனுடைய மக்கள்; sons of king {påndu.}

பாண்டவிகை

பாண்டவிகை pāṇṭavigai, பெ. (n.)

   1. ஊர்க்குருவி; a kind of sparrow.

   2. பெண்; woman. (சா.அக.);

பாண்டாகாரம்

பாண்டாகாரம் pāṇṭākāram, பெ.(n.)

   1. பண்ட சாலை (யாழ்.அக.);; storehouse.

   2. கருவூலச் சாலை (மேருமந்.56, உரை.);; treasury.

த.வ.இருப்புக் கிடங்கு

     [Skt. {} → த. பாண்டாகாரம்]

பாண்டாகாரி

 பாண்டாகாரி pāṇṭākāri, பெ.(n.)

   கருவூலக் காரன்; treasurer.

     [Skt. {} → த. பாண்டாகாரி]

பாண்டி

பாண்டி pāṇṭi, பெ. (n.)

   1. ஒருதேயம்; a kingdom.

     “பாண்டி நாடென்றபின்னர்” (திருவாத. திருவம்பல.சா.);

   2. பன்னான்கு குழிப்பலகை; a thick plank with 14 hollows, used in a particular kind of game.

   4. மூங்கில்;   பலகை; bamboo.

 பாண்டி pāṇṭi, பெ. (n.)

சிறுமியர், தரையில் கட்டம் போட்டுக் கல் எறிந்து காலால் எற்றி ஆடும் விளையாட்டு,

 a kind of hopscotch game played mostly by girls.

     “சிற்றூர்களில் சிறுமியர் விளையாடுவது பாண்டி ஆட்டம்தான்”

பாண்டிக் கொடுமுடி

பாண்டிக் கொடுமுடி pāṇḍikkoḍumuḍi, பெ. (n.)

   கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களிலொன்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ளதுமான கொடுமுடி என்னும் சித்தலம். (தேவா.);; a sivan shrine in {kodumudi} in Erode District.

காவிரியாற்றின் கரையில் உள்ள தலம் இதன் பழம் பெயர் கறைசை, கறையூர் கொடுமுடி என்று கழகக்காலத்தில் வாழ்ந்த மன்னன் பெயர் எனவும், அவன் ஆண்ட இடமே கொடுமுடி என்பதும், திருப்பாண்டிக் கொடுமுடி நூல் கூறும் செய்திகள் ஆகும். (பக்.4,6); );

அப்பர், சுந்தரர்,சம்பந்தர் மூவரும் இத்தலத்து இறையைப் புகழ்கின்றனர். இதனைச் சம்பந்தர்,

     “ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக்கென்று உழல் வாரும் தேனமரும் மொழிமாது சேர் திரு மேனியினாரும் கானமர் மஞ்ஞைகளாலும் காவிரிக் கோலக் கரைமேல் பாலை நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடியாரே” (205-7); என்று பாடுகின்றார்.

பாண்டிக்குழி

பாண்டிக்குழி pāṇṭikkuḻi, பெ. (n.)

   1. இறந்தவர்களைப் புதைக்கும் குழி;   2. அடக்கமேடை; sepulchral monument. (சா.அக.);

பாண்டிக்கோவை

பாண்டிக்கோவை pāṇṭikāvai, பெ. (n.)

நெடுமாறன் என்ற பாண்டியனைப் பற்றியதும் இறையனார் களவியல் முதலியவற்றில் மேற்கோள் காட்டப்பட்டதுமான கோவை நூல் (வச்சணந்.செய்.45,உரை);. (இலக்.வி.876.உரை.); a {kövaipoem} on {Nedumaran} a {pāndya king,}

 cited in {Iraiyanâr-kalaviyal} etc. (தனிநூலாகக் கிடைக்கவில்லை. ஆசிரியரும் இன்னாரென்று அறியக்கூடவில்லை.

களவியற் காரிகை என்னும் நூலில் 75 பாடல்களும் இறையனார் அகப் பொருளில் சுமார் 250 பாடல்களும், கோவைக் கொத்து முதலிய நூல்களிலிருந்து சில செய்யுள்களும் கிடைத்தன வென்று வே. துரைசாமி அவர்களால் ஒரு நூல் தொகுத்து வெளியிடப் பட்டுள்ளது.)

பாண்டிய அரசன் நெடுமாறனைப் புகழ்ந்து எழுதப்பட்ட நூல். கி.பி. ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. நூல் முழுவதும் இப்போது கிடைக்கவில்லை. முந்நூறு பாட்டுகள் அந்நூலுக்கு உரியவை என்று தொகுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் இன்னார் என்பதும் தெரியவில்லை.

காண்பதுமுதல் திருமணத்திற்குப்பின் நடத்தும் வாழ்க்கை நிலைகள்வரையில் ஊடல், குழந்தை பெற்று வளர்த்தல், முதலியன உட்பட நானூறு துறைகளையும் ஒரு வாழ்க்கை வரலாறுபோல் தொடர்ந்து காட்டுவது கோவை. அந்தக் காதலர் சங்க இலக்கியத்தில் உள்ளவாறு கற்பனைக் காதலர்களே. காதலர் கண்ட இடம், பழகிய சோலை முதலியவற்றைச் சொல்லும்போதும், உவமைகளை அமைக்கும்போது, ஒர் அரசனையோ வள்ளலையோ தெய்வத்தையோ புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த நானூறு பாட்டுகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம்பற்றி அந்தத் தலைவனுடைய மலை. நாடு, ஆறு, பண்பு, செயல்கள் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று புகழப்படும். அவ்வாறு அமையும் நூல்வகையே கோவை.

பாண்டிக்கோவையில் பாண்டியன் நெடுமாறனின் வீரம், கொடை. போர்க்களங்கள், வெற்றிகள் முதலியவை புகழப்படுகின்றன. மாணிக்கவாசகரின் திருக்கோவையாரில் சிவபெருமான் போற்றிப் பாடப்படுகிறார். பிற்காலத்தில் இவ்வாறு வெவ்வேறு அரசர்களையும் வள்ளல்களையும் தெய்வங்களையும் புகழ்ந்து கோவைகள் பாடப்பட்டன. ஒரே வகை இலக்கணத்திற்குக் கட்டுப்பட்ட காரணத்தால், பெரும்பாலான கோவைகளில் புதுமையான படைப்புகள் குறைந்துவிட்டன. ஆகவே ஒரு சில கோவை நூல்களே காலத்தால் அழியாமல் காப்பாற்றப்பட்டன. அவைகள் காக்கப்பட்ட காரணம் அவற்றின் இலக்கியச் சிறப்பே ஆகும். புகழப்பட்ட தலைவர்களின் புகழ் மறைந்தவுடன் மற்றக்கோவை நூல்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு மறைந்தன.

கோவை நூல்களுள் திருக் கோவையார்க்கு அடுத்த நிலையில் இலக்கிய உலகில் வாழ்வுபெற்றது தஞ்சைவாணன் கோவை. பொய்யாமொழிப் புலவர் (கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு); இயற்றிய அந்நூல், அதற்கு முற்பட்ட கோவை நூல்களைவிட எளிமையும் தெளிவும் பெற்றுள்ளமை அதன் வாழ்வுக்கு ஒரு

   காரணம் எனலாம். மற்றொரு காரணமும் உள்ளது. அகப்பொருள் (காதல் துறைகளின்); இலக்கண நூலாகிய நம்பியகப்பொருளுக்கு ஒவ்வொரு துறைக்கும் பொருத்தமான எடுத்துக்காட்டாகத் தஞ்சை வாணன் கோவையின் பாட்டுகள் அமைந்துள்ளது அந்தக் காரணம். அந்த இலக்கண நூலுக்கு உரிய எடுத்துக்காட்டுக்காகவே இயற்றப்பட்டது போல் அவ்வளவு பொருத்தமாகவும் முறையாகவும் தஞ்சைவாணன் கோவையின் பாட்டுகள் உள்ளன. மற்றக்கோவை நூல்கள் போலவே, கற்பனையான காதலன் காதலி ஆகியோரின் காதல் வாழ்வை ஒரு வரலாறுபோல் கோவைப்படுத்திக் கூறுவது இது. நூலின் பாராட்டுக்கு உரிய வரலாற்றுத் தலைவனும் ஒவ்வொரு பாட்டிலும் புகழப் படுகிறான். அவனுடைய பெயரே நூலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. தஞ்சைவாணன் என்னும் அந்தத் தலைவன் ஒரு பாண்டிய அரசனுடைய அமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் விளங்கியவன்;அவனுடைய வீரச் செயல்களையும் கொடைப்பண்பையும் இந்நூல் பல இடங்களில் பாராட்டுகிறது.);

பாண்டித்தியம்

 பாண்டித்தியம் pāṇṭittiyam, பெ. (n.)

   கல்வித்திறம்; erudite scholarship.

பாண்டித்துரைத்தேவர்

பாண்டித்துரைத்தேவர் pāṇṭitturaittēvar, பெ. (n.)

   பொன்னுசாமித் தேவரென்னும் இயற்பெயருடைய தமிழ்ப்புரவலர்; a popular philanthropist.

நிகழ்த்தினார். எவரும் பிழைபட எழுதுதலோ பேசுதலோ கூடாது என்று கருதுபவர்; இவர் மதுரையில் வழக்கறிஞராகத் தொழில் புரிந்த ஆங்கிலேயேராருவர் திருக்குறளைத் தம் மனம் போனபடி திருத்திவெளியிட்டமை கண்டு வருந்தி, அவர் வெளியிட்ட படிகள் அத்தனையும் வாங்கித் தீயிட்டுக் கொளுத்தினார். இத்தகைய தமிழ்த் தொண்டாற்றிய இவர் தமது 44ஆம் அகவையில் 2-12-1911 இல் காலமானார். இவரியற்றிய நூல்கள்: முருகன் மீது காவடிச் சிந்து, சிவஞான சுவாமிகள் தோத்திரம்.

பாண்டிநாயகம்

 பாண்டிநாயகம் pāṇṭināyagam, பெ. (n.)

   தில்லைத்திருக்கோயிலில் உள்ள முருகன் பெயர்; name of lord murugan in thillai-kkoil.

     [பாண்டி + நாயகம்]

பாண்டிமண்டலம்

பாண்டிமண்டலம் pāṇṭimaṇṭalam, பெ. (n.)

   பாண்டியனாடு; the {pandya} country of south india.

     “வளம்படியும் வயற்பாண்டிமண்டலத் துண்டு” (சேதுபு.நாட்டுச்.4.);

     [பாண்டி + மண்டலம்]

பாண்டியதாசன்

பாண்டியதாசன் pāṇṭiyatācaṉ, பெ.(n.)

   பாண்டியதாசன் எனப்பெயரிட்டுக் கொண்டு கிரேக்க நாடாண்ட ஏதென்சு மன்னர் இருவரின் பெயர்; two kings of Athens termed as pandiyadasan. Caldwell – History of Tinnevellip.119)

     [பாண்டியன்+தாசன்]

கி.மு. 1400 அளவில் அத்தீனிய அரசுகள் கொற்கைப் பாண்டியனுக்கு நன்றிசெலுத்தும் பாங்கில் பண்டாக (pandas); எனப்பெயர் ஒட்டிக் கொண்டனர் எனப்படுகிறது.

பாண்டியன்

பாண்டியன் pāṇṭiyaṉ, பெ. (n.)

   பாண்டியநாட்டு வேந்தன் (சிலப்.17.5.);; king of the ancient {pāņdiya} country.

     “பசும்பூண் பாண்டியன் வினைவ லதிகன்” (குறுந்.393-4);

     “வில்கெழு தானைப் பசும்பூம் பாண்டியன்” (அகம்.162-21);

     “வினைநவில் யானை விறல்போர்ப் பாண்டியன்” (அகம்:201-3);

     “திருவீழ் நுண்பூம் பாண்டியன் மறவன்” (புறம்.179-5);

மறுவ: செழியன், வேம்பின் கண்ணிக்கோ,

தமிழ்நாடன், கைதவன்,

கூடற்கோ, பொதியப் பொருப்பன்,

தென்னவன், புனல் வையைத்துறைவன்,

வழுதி, குமரிச் சேர்ப்பன்,

மீனவன். கோ.

பஞ்சவன், பாண்டியன்,

மாறன், கூடற் கோமான்,

வேம்பின் கண்டியன்,

வைகைக்குமரன்,

பழுதில் புகழ் மாறன்,

பூழியன்,

நிம்பத்தார்ப் பாண்டியன்,

மலையப் பொருப்பன்,

வைகைத் துறைவன்,

வேம்பின்றாரோன்,

வைகையந்துறைவன்

பொதிய வெற்பன்

கூடற்பொருகோன்

கொற்கை தவன்

மலையன்

குமரித்துறையவன்

     [பாண்டி → பாண்டியன்]

     “பஃறுளி யாற்றுடன் பன்மலைஅடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி”

என்று இளங்கோவடிகள் பாடுவதாலும் தமிழன் பிறந்தகம் குமரிநாடாதலாலும் குமரிக்கண்டத் தமிழ்நிலம் முழுவதும் பழம் பாண்டி நாடாதலாலும் மூவேந்தருள்ளும் முதலில் தோன்றியவன் பாண்டியனே என்று அறியப்படும். பிற்காலத்தில் நாவலந்தேயத்தின் கீழ்ப்பாகத்தையும் மேற்பாகத்தையும் துணையரசராக அல்லது மண்டிலத் தலைவராக ஆளுமாறு அமர்த்தப் பெற்ற பாண்டியன் குடியினர் இருவரே, சேர சோழராக மாறியிருத்தல் வேண்டும்…………………….

   காளை மறம் விஞ்சியதாதலின், போர்மறவன் காளையெனப்பட்டான். காளை மறம் விஞ்சியது மட்டுமன்று;கற்பாறையிலும் ஆற்றுமணலிலும் சேற்று நிலத்திலும் மேட்டிலும் பள்ளத்திலும் பொறை வண்டியை

     “மருங்கொற்றி மூக்கூன்றித் தாள் தவிழ்ந்து” இழுத்துச் செல்லும் கடைப்பிடியுமுள்ளது அதனால்

     “மடுத்தவா யெல்லாம் பகடன்னான் வுற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து” (திருக்குறள்.624.);

     “அச்சொடி தாக்கிய பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொல்லிய வரிமணன் நெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ” என்றார் ஒளவையார் (புறம்90.);

அரசன் போர்மறமும் ஆட்சித்திறனும் ஒருங்கே யுடையவன் என்பதையுணர்த்தற்குக் குமரி நில முதல் தமிழ வேந்தன் பாண்டியன் எனக்குடிப் பெயர் பெற்றான், செழியன்,வழுதி, மாறன் முதலிய குடிப்பட்டங்களும் பின்னர்த் தோன்றின.

     “சோழ பாண்டியர் பாண்டவர்க்குத் துணையாகவும் சேரன் நடுநிலையாகவும் பாரதப் போரிற் கலந்து கொண்டதனாலும், மூவேந்தர் குடிகளும் பாண்டவ கெளரவர்க்கு முன்பே வரலாற்றிற் கெட்டாத் தொன்முது பழங்காலத்தில் தோன்றியமையாலும், பாண்டியன் என்னும் சொல்லைப் பாண்டவன் என்னும் சொல்லினின்று திரிப்பது வரலாற்றறிவும் ஆராய்ச்சித் திறனும் இல்லாதவர் செயலெனக் கூறி விடுக்க. -பாவாணர், தமிழர்வரலாறு, பக்.73-75.

 பாண்டியன் pāṇṭiyaṉ, பெ.(n.)

   1. பாண்டிய மன்னன்; Pandiyan king.

   2பாண்டிய மரபைச் சேர்ந்தவன்; one who belongs to the Pandiya dynasty.

தெ. பண்டு (விளைதல்); பண்ட்ட (தவசம்);.

     [பண் – பண்டு[விளைதல்]-பாண்டி [எருது, வண்டி]-[வேளாண்மை]+ அன்]

வேளாண் தொழிலை முதன்முதல் உண்டாக் கியவன் என்பதால் பெற்ற பெயர் எருது, வண்டி, விளை பொருள்கள் என்பவை காலத்தால் பிற்பட்ட பொருட்பாட்டுத் திரிபுகள்.

பாண்டியன் அறிவுடைநம்பி

 பாண்டியன் அறிவுடைநம்பி pāṇḍiyaṉaṟivuḍainambi, பெ. (n.)

   பாண்டிய அரசப்புலவர்களுள் ஒருவன்; a pandiya king and wiseman.

பாண்டியன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன்

 பாண்டியன் ஆரியப்படைக் கடந்த நெடுஞ்செழியன் pāṇḍiyaṉāriyappaḍaikkaḍandaneḍuñjeḻiyaṉ, பெ. (n.)

   சிலப்பதிகாரக் காலத்து அரசாட்சி செய்த பாண்டியன்; a pandiya king who was ruled in the {silappathikāram} period.

இவனது ஆட்சிச் சிறப்பை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் பாராட்டியுள்ளார்.)

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

 பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் pāṇḍiyaṉēṉātineḍuṅgaṇṇaṉār,    கடைக்கழகப் புலவர்; a sangam poet.

பாண்டியன் கடுங்கோன்

பாண்டியன் கடுங்கோன் pāṇḍiyaṉkaḍuṅāṉ, பெ. (n.)

   தலைக்கழகத்தின் இறுதியிலிருந்த பாண்டிய வேந்தன்; a pandya king who patronized the {talai-kkalagam} at its close.

     “காய்சின வழுதி முதல் கடுங்கோன் ஈறாக” (இறை.1. உரை.);

     [பாண்டியன் + கடுங்கோன்]

பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும் பெயர் வழுதி

பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும் பெயர் வழுதி pāṇṭiyaṉkaruṅgaiyoḷvāṭperumbeyarvaḻudi, பெ. (n.)

   கழகக் காலப் பாண்டிய மன்னன் மிக்க வீரமும் கொடையுமுடையோன். இவனைப் பாடிய புலவர் இரும்பிடர்த்தலையார் (புறநா.3);;  a {oandiya} kind in sangam age.

பாண்டியன் கீரஞ்சாத்தன்

 பாண்டியன் கீரஞ்சாத்தன் pāṇṭiyaṉārañjāttaṉ, பெ. (n.)

பாண்டிய மன்னர்களின் கீழிருந்த குறுநிலத் தலைவன்.

கீரன் என்பவனுடைய மகன் ஆதலின் கீரஞ்சாத்தன் எனப்பட்டான். இவன் கொடை நலத்தில் சிறந்து விளங்கினான். ஆவூர்மூலங்கிழார் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவனது மறுபெயர் பாண்டியக்குதிரைச் சாக்கையன்.

பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி

பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன் வழுதி1 pāṇṭiyaṉāṭakāraddudduñjiyamāṟaṉvaḻudi, பெ. (n.)

   கழகக் காலத்தில் வாழ்ந்த ஒரு பாண்டியவரசன்; a {pandiya} king in sangam age.

   கூடகாரமென்பது பாண்டிய நாட்டிலிருந்த ஓர் ஊர்;   இப்பாண்டியன் தன் நாட்டிற்கு வடக்கிலிருந்த அரசர்களோடு பெரும்போர் செய்து வெற்றி அடைந்தான்;இவனுடைய பேராற்றலை வியந்து ஐயூர் முடவானார், மதுரைமருதனிள நாகனார் என்னும் இரு புலவர்களும் பாடியிருக்கின்றனர். இவன் காலத்தில் சோழ நாட்டைக் குளமுற்றத்துத் துஞ்சிய வளவன் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான். (புறநா. 51);

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய pāṇṭiyaṉcittiramāṭattuttuñjiya, பெ. (n.)

   புறநானூற்றால் அறியலாகும் ஒரு பாண்டிய மன்னன்; a {pandiya} king in Sangam age known from paran.

   சான்றோரைப் போற்றும் சால்புடையவன்;பெருவண்மையும் கொண்டிருந்தான். இவனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

பாடியுள்ளார். (புறநா.89.);

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் pāṇḍiyaṉtalaiyālaṅgāṉattucceruveṉṟaneḍuñjeḻiyaṉ, பெ. (n.)

   சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த ஒரு பாண்டிய மன்னன்; an ancient king known from {purananuru.}

பாண்டியன் பன்னாடு தந்தான்

பாண்டியன் பன்னாடு தந்தான் pāṇṭiyaṉpaṉṉāṭudandāṉ, பெ. (n.)

   சங்ககாலப் பாண்டிய மன்னருள் ஒருவன்; a {pandiya} king authorofku2ntokai.270.

பாண்டியன் பல்யாகசால முதுகுடுமிப் பெருவழுதி

பாண்டியன் பல்யாகசால முதுகுடுமிப் பெருவழுதி pāṇḍiyaṉpalyāgacālamuduguḍumipperuvaḻudi, பெ. (n.)

   புறநானூற்றால் அறியலாகும் சங்ககால அரசன்; a ancient king known from {puram.}

கழகக்காலத்து மன்னன், பெருந்தோள் என்னும் அடைமொழி சேர்த்துஞ் சொல்லப் பெறுவான். ‘நின்னால் வசைபட வாழ்ந்தவர் பலர்கொல், நீ வேள்வி முற்றியூபம் நட்ட வியன்களம் பலகொல்’ (புறநா.15.); என்று நெட்டிமையார் கூறுவதால் இவன் பல மன்னரையும் வென்றவன் என்றும், பல வேள்விகளைச் செய்தவள் என்றும் கொள்ளலாம்.

     “நின்குடை முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே பணிக என்று காரி கிழார் கூறுவதால்” (புறநா.6.);

இவன் சிவபெருமானை வழிபடுபவன் என்பது தெரிகிறது. இவன் பெரிய வள்ளல். இவனைப் பாடிய மற்றொரு புலவர்நெடும்பல்லியத்தனார். (புறநா. 6,9,12,15,64);

பாண்டியன் மதிவாணன்

பாண்டியன் மதிவாணன் pāṇṭiyaṉmadivāṇaṉ, பெ. (n.)

நாடகத்தமிழ்நூல் செய்த ஒரு பாண்டிய அரசன் (சிலப்.உரைச்சிறப்.பக்.10.);

 a {pandya} king, author of a dramatic treatise in tamil.

   உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார், இவன் கடைக்கழகத்தைப் புரந்த பாண்டியருள் ‘கவி அரங்கேறியவன்’ என்று தம்முடைய உரைப்பாயிரத்தில் கூறியுள்ளார். எனவே இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கிய வேந்தனாவான். இவன் நாடகத் தமிழ் நூல் ஒன்றை இயற்றினான். அது மதிவாணன் நாடகத் தமிழ் நூல் என்னும் பெயர் உடையது. நூற்பாவாலும், வெண்பாவாலும் இயற்றப் பெற்றது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதுவதற்கு மேற்கோளாகக் கொண்ட இசை, நாடக நூல்களுள் இதுவும் ஒன்றாகும். இந்நூல் இக்காலத்தில் இல்லை;மறைந் தொழிந்த நூல்களுள் ஒன்றாகி விட்டது.)

பாண்டியன் மாறன்வழுதி

பாண்டியன் மாறன்வழுதி pāṇṭiyaṉmāṟaṉvaḻudi, பெ. (n.)

   கழகக்காலத்தவன்;இவன் புலமையாளனு மாவான் என்பது நற்றிணையிலுள்ள இவன் பாடல்கள் (97:301); அறிவிக்கும்.

 a sangam poet who is author of {Nassina}

பாண்டியன் முடத்திருமாறன்

 பாண்டியன் முடத்திருமாறன் pāṇḍiyaṉmuḍattirumāṟaṉ, பெ. (n.)

   முற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒரவன்; an ancient pandiya king known from sangam lit.

பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி

 பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி bāṇṭiyaṉveḷḷiyambaladdudduñjiyaberuvaḻudi, பெ. (n.)

   சங்ககாலத்தில் இருந்த ஒரு பாண்டிய மன்னன்; a {pandiya} king, known from sangam literature.

சங்ககால மன்னருள் ஒருவன். இவன் தன் கால மன்னர்களுடன் நட்புப் பூண்டிருக்க விழைந்தவனென்று தெரிகிறது. இவனும் குராப்பள்ளி துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழனும் அளவளாவி ஒருங்கிருந்த போது காரிக் கண்ணனார் என்னும் புலவர் கண்டு மகிழ்ந்து ‘அயலார் கூறும் பொதுமொழி கொள்ளாமல் இன்றே போல்க நும் நட்பு’ என்றும் இவ்வாறு நட்புப் பூண்டால் உலகம்

நுமக்குரிமையாகும் என்றும் கூறிப்பாட்டுகின்றார்.

பாண்டியம்

பாண்டியம்1 pāṇṭiyam, பெ. (n.)

   அறிவுடைமை;     [பண்டு → பண்டம் → பாண்டியம்]

 பாண்டியம்2 pāṇṭiyam, பெ. (n.)

   பாண்டியன்றேயம்;     [பாண்டில் → பாண்டியன் → பாண்டியம்]

 பாண்டியம்2 pāṇṭiyam, பெ. (n.)

 cf.

   1. எருது; bull.

     “செஞ்சுவற் பாண்டியம்” (பெருங். உஞ்சைக்.38,32.);

   2. எருது கொண்டு உழும் உழவு; agriculture; ploughting.

     “பாண்டியஞ் செய்வான் பொருளினும்” (கலித்.136.);

     [பாண்டில் → பாண்டியம்]

பாண்டியவீடு

 பாண்டியவீடு pāṇṭiyavīṭu, பெ. (n.)

பாண்டவர் வீடு பார்க்க;See {pandavar vidu}

     [பாண்டவர் → பாண்டிய + வீடு]

பாண்டிரம்

 பாண்டிரம் pāṇṭiram, பெ. (n.)

   பெருங்கிளை மரம்; saraswati leaf tree. (சா.அக.);

பாண்டிற் பொலங்கலம்

 பாண்டிற் பொலங்கலம் pāṇṭiṟpolaṅgalam, பெ. (n.)

வட்டமாகச் செய்த பொன்னணி;(ஐங்குறு);

 round shaped gold ornament.

     [பாண்டில் + பொலங்கலம்]

பாண்டிற்காசு

பாண்டிற்காசு pāṇṭiṟkācu, பெ. (n.)

   வட்டக்காசு என்ற பொன்னணி (ஐங்குறு.310.);; a piece of jewelry know as {volta-k-kāšu.}

     [பாண்டில் + காசு]

பாண்டில்

பாண்டில்1 pāṇṭil, பெ. (n.)

   1. வட்டம் (திவா.);; circle.

     “பொலம்பசும் பாண்டிற்காசு” (ஐங்குறு.310.);

   2. விளக்குத் தகழி (பிங்.);; bowl of a lamp.

   3. கிண்ணி; small bowl or cup.

     “கழற் பாண்டிற் கணை பொருத துளைத்தோ லன்னே” (புறநா.97.);

   4. கஞ்சதாளம்; a pair of cymbals.

     “இடிக்குரன் முரசமிழுமென் பாண்டில்” (சிலப்.26,194.);

   5. குதிரை பூட்டிய தேர் (திவா.);; horse-drawn chariot.

     “பருந்துபடப் பாண்டிலொடு பொருத பல்பினர்த் தடக்கை” (நற்.141.);

   6. இரண்டு ருளுடைய வண்டி; two wheeled cart.

     “வையமும் பாண்டிலும்” (சிலப்.14.168.);

   7. தேர்வட்டை (சிலப்.14,168);; tely of the wheel of a chariot.

   8. வட்டக்கட்டில்; circular bedstead or cot.

     “பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில்” (நெடுநல். 123.);

   9. கண்ணாடி; qlass. mirror.

     “ஒளிரும்….. பாண்டினிரை தோல்” (பு.வெ.6.12.);

   10. வட்டத்தோல்; circular piece of hide used in makeing a shield.

     “புள்ளியிரலைத் தோலூனுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டில்” (பதிற்றுப்.74.);

   11. நாடு;(வின்.);

 country, territory.

   12. குதிரைச் சேணம்; saddle.

     “பாண்டி லாய்மயிர்க் கவரிப் பாய்மா” (பதிற்றுப்,90,35.);

   13. எருது; bull.

     “மன்னிய பாண்டில் பண்ணி” (சீவக.2054.);

   14. விடையோரை. (திவா.);; taurus of the zodiac.

   15. விளக்கின் கால்; stand of a lamp; standard.

     “நற்பல பாண்டில் விளக்கு” (நெடுநல்.175);

     “வாண்முகப் பாண்டில் வலவனொடு தரீஇ” (சிறு.260);

     “பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்” (நற்.86-3);

     “பொன்செய் பாண்டில் பொலங்கலம் நந்த” (ஐங்.316-1);

     “தோலெறி பாண்டிலின் வாலிய மலர” (அகம்.217-8);

     “இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப” (அகம்.376-9);

 பாண்டில்2 pāṇṭil, பெ. (n.)

   1. வாகை (மலை.); பார்க்க;See {vagai siris}

   2. சாத்துக்குடி (பிங்.);; batavian orange.

   3. மூங்கில் (சூடா.);; bamboo.

 பாண்டில் pāṇṭil, பெ. (n.)

   பண்டைய இசைக்கருவி; a musical instrument.

     [பாண்டு-பாண்டில்]

பாண்டில் விளக்கு

பாண்டில் விளக்கு pāṇṭilviḷakku, பெ. (n.)

   கால்விளக்கு; standard-lamp.

     “பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர்” (பதிற்றுப்.47,6.);

     “பாண்டில் விளக்குப் பரூஉச்சுடருழல (நெடு.175.);

     [பாண்டில் + விளக்கு]

பாண்டிவடம்

பாண்டிவடம் pāṇḍivaḍam, பெ. (n.)

   கண்ணபிரான் கன்றுகள் மேய்த்த நிலப்பகுதி; a place where {krsna} grazed his cattle.

     “பலதேவன் வென்ற பாண்டிவடத் தென்னையுய்த்திடுமின்” (திவ்.நாய்ச்.12,7.);

     [பாண்டியம் + வட்டம்]

பாண்டிவரி

பாண்டிவரி pāṇṭivari, பெ. (n.)

   முற்காலத்துள்ள வரிவகை (S.I.I.IV,79);; an ancient tax.

பாண்டிவேளாளன்

பாண்டிவேளாளன் pāṇṭivēḷāḷaṉ, பெ. (n.)

   1. மதுரை மாவட்டத்திலுள்ள வேளாளரில் ஒருவகை உட்பிரிவினர்; a sub-sect of the {velala} caste in Madura district. (மது.வழக்கு

   2. திருவாங்கூரில் வாழும் தென்பாண்டி நாட்டு வேளாளர்;{velālas} of the {pāndya} country, settled in Travancore.

     [பாண்டி + வேளாளன்]

பாண்டீரம்

பாண்டீரம் pāṇṭīram, பெ. (n.)

   1. ஆலமரம்; banyan tree.

   2. வெண்மை; whiteness.

பாண்டு

பாண்டு1 pāṇṭu, பெ. (n.)

   1. வெண்மை (வின்.);; whiteness paleness.

   2. காமாலை (வின்.);; jaundice.

   3. நோய்வகை (வின்.);; anaemia.

   4. நீர்க்கோவை; dropsy, ascites.

   5. பாரதக் கதையில் இடம் பெற்றுள்ளவனும் ‘பாண்டு’ என்னும் நோய் பற்றியமையால் அப்பெயர் பெற்றவனும் பாண்டவர் ஐவரின் தந்தையுமா ஓர் அரசன்; a king and father of {pāndava} princes.

   6. சிறுபூளை (மலை.);; a common way-side weed.

 பாண்டு2 pāṇṭu, பெ. (n.)

   அரத்தக் குறைவு காரணமாக வயிற்றில் வீக்கத்தை உண்டாக்கும் நோய்; chronic dropsy causing bloating of the stomach.

பாண்டுகம்

 பாண்டுகம் pāṇṭugam, பெ. (n.)

பாண்டுரம் (யாழ்.அக.); பார்க்க;See {panduram}

     [பாண்டு → பாண்டுகம்]

பாண்டுகம்பளம்

பாண்டுகம்பளம் pāṇṭugambaḷam, பெ. (n.)

   இந்திரன் இருக்கை;     “இந்திரன் பாண்டு கம்பளந் துளக்கிய தாதலின்” (மணிமே.14, 29.);

     “பான்மையிற் றனாது பாண்டு கம்பளம்” (மணிமே.29-21);

     [பாண்டு + கம்பளம்]

பாண்டுக்கல்

பாண்டுக்கல் pāṇṭukkal, பெ. (n.)

பாண்டவன் குறி(.M.M.667.); பார்க்க;See {pațavan-kuri mennir}

     [பாண்டு + கல்]

பாண்டுச்சிலந்தி

பாண்டுச்சிலந்தி pāṇṭuccilandi, பெ. (n.)

   சிலந்திவகை(சீவரட்.353.);; a spider.

     [பாண்டு + சிலந்தி]

பாண்டுநாசனி

 பாண்டுநாசனி pāṇṭunācaṉi, பெ. (n.)

   சிறுவாலுளுவை (சா.அக.);; spindle tree.

பாண்டுமைந்தர்

 பாண்டுமைந்தர் pāṇṭumaindar, பெ. (n.)

   பாண்டவர் (திவா.);; the {pāndavas.}

     [பாண்டு + மைந்தர்]

பாண்டுயாவனம்

 பாண்டுயாவனம் pāṇṭuyāvaṉam, பெ. (n.)

   ஈஞ்சு; date palm.

பாண்டுரம்

பாண்டுரம் pāṇṭuram, பெ. (n.)

   1. வெண்மை; whiteness.

   2. நோய்வகை; Jaundice.

பாண்டுராகம்

 பாண்டுராகம் pāṇṭurākam, பெ. (n.)

   வெண்மை (யாழ்.அக.);; whiteness.

பாண்டுருவன்

 பாண்டுருவன் pāṇṭuruvaṉ, பெ. (n.)

   பெரியவுருவுள்ள-வன்-வள்-து. (யாழ்ப்.);; huge person or thing.

     [பாண்டு + உருவன்]

பாண்டுரேட்சு

 பாண்டுரேட்சு pāṇṭurēṭcu, பெ. (n.)

   வெண்கரும்பு (மூ.அ.);; a kind of white sugarcane.

பாண்டுரை

 பாண்டுரை pāṇṭurai, பெ. (n.)

பாதிரி (மூ.அ.); பார்க்க;See {pātiri}

 trumpet-flower tree.

     [பாண்டு → பாண்டுரை]

பாண்டுரோகம்

 பாண்டுரோகம் pāṇṭurōkam, பெ. (n.)

   நோய்வகை; a group of diseases, including jaundice, anaemia, dropsy.

     [பாண்டு + skt. {Fögha»} த. ரோகம்]

பாண்டுலா

 பாண்டுலா pāṇṭulā, பெ. (n.)

   புடல் (மலை.);; snake gourd.

பாண்டுவியாதி

 பாண்டுவியாதி pāṇṭuviyāti, பெ. (n.)

பாண்டுரோகம் (கொ. வ.); பார்க்க;See {pandய rõgam}

     [பாண்டு +skt. {vyådhi,} த. வியாதி]

பாண்டூர்

பாண்டூர் pāṇṭūr, பெ. (n.)

   ஓர் இடப்பெயர்; a place name.

     “பாண்டுர்தன்னிலீண்டவிருந்தும்” (திருவாச.கீர்த்தித்.070.);

பாண்டை

 பாண்டை pāṇṭai, பெ. (n.)

   தீநாற்றம் (வின்.);; bad smell, as of rotten fish.

     [பாண்டல் → பாண்டை]

பாண்டைநாறி

பாண்டைநாறி pāṇṭaināṟi, பெ. (n.)

   1. கெட்ட நாற்றம் வீசுகின்ற பெண் (வின்.);; a woman with offfensive smell.

   2. சிடுசிடுப்பு மிக்கவள் (யாழ்.அக.);; an angry or peevish person.

பாண்டை + நாறி] ‘இ’ பெண்பாலீறு.

பாண்பாட்டு

பாண்பாட்டு pāṇpāṭṭu, பெ. (n.)

   யானையை யெறிந்து போரிற்பட்ட வீரர்க்கு யாழ்வல்ல பாணர் சாப்பண் பாடித் தம்முரிமை செய்தலைக்கூறும் புறத்துறை (பு.வெ.7.11.);;{(purap.);} a theme in which bards skilled in lute sing funeral songs in honour of the warriors that fell fighting in a battle-field after slaying the elephants of the enemy.

     [பாண் + பாட்டு]

பாண்மகன்

பாண்மகன் pāṇmagaṉ, பெ. (n.)

   பாணன்; man of the {pânar} caste.

     ‘பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையின் யாழினம்” (மணிமே.18,17.);

     “நைவளம் பழுநிய நயந்தெரிபாலை-கைவல் பாண்மகன் கடனறிந்தியக்க” (சிறுபாணா.37.);

     “வலைவல் பாண்மகன் வாலெயிற்று மடமகள்” (ஐங்.48-1);

     “யாணர் ஊரநின் பாண்மகன்” (ஐங்.49-3);

     “தூதாய்த் திரிதரும் பாண்மகனே-நீ தான்” (ஐந்.ஐம்.22-2);

     “செவ்வழியாழ்ப் பாண்மகனே! சீரார்தேர் கையினால்” (தி.மா.124-1);

     [பாண் + மகன்]

பாண்மகள்

பாண்மகள் pāṇmagaḷ, பெ. (n.)

   பாணற்குடியில் பிறந்த பெண்; a singing woman of the {pânar} tribe.

     “நான் கொள்நுன் கோலின் மீன்கொள்பாண்மகள்” (அகநா.216.);

     “முள்ளெயிற்றுப் பாண்மகள் இன்கெடிறு சொரிந்த” (ஐங்.47-1);

     “அஞ்சில் ஒதி அசைநடைப் பாண்மகள்” (ஐங்.49-1);

     “செல்லா மோதில் பாண்மகள் காணியர்” (பதிற்று-60-30);

     “கவ்வாங் குந்தி யஞ்சொற் பாண்மகள்” (அகம்126-9);

     [பாண் + மகள்]

பாண்மை

பாண்மை pāṇmai, பெ. (n.)

   1. பாணன் தன்மை (சீவக.2515.உரை.);; characteristics of a {pānan,}

   2. தாழ்ச்சி; submissiveness.

     [பாண் → பாண்மை]

பாண்யாழ்

பாண்யாழ் pāṇyāḻ, பெ. (n.)

   பாணர் கையில் உள்ள யாழ்; an ancient stringed musical arstrumant with {pānas}

     “பாண்யாழ் கடைய வாங்கிப் பாங்கர்” (நற்.186);

     [பாண் + யாழ்]

பாதகத்துரவம்

பாதகத்துரவம் pātagatturavam, பெ. (n.)

   அரசமரம்; peepul tree.

   2. ஆடு; sheep.

   3. ஆலங்கட்டி; hail stone. (சா.அக.);

பாதகன்

பாதகன் pātagaṉ, பெ.(n.)

   பெருங்குற்றஞ் செய்தோன்; man guilty of a heinous crime.

     “ஐம்பெரும் பாதகர்காள்” (திவ்.நாய்ச்.9,4);.

த.வ.கயவன்

     [Skt. {} → த. பாதகன்]

பாதகம்

பாதகம்1 pātagam, பெ.(n.)

   பெருந்தீமை, பெருங்கரிசு; grievous sin, heinous crime

     “நாரினிற் பாலன் செய்த பாதக நன்மை யாய்த்தே” (சி.சி.2,29);.

த.வ.வங்கொடுமை, பெருங்கொடுமை

     [Skt. {} → த. பாதகம்]

 பாதகம்2 pātagam, பெ.(n.)

   தடை; hindrance, objection.

     “அதனாற் பாதகமில்லை” (உ.வ.);.

த.வ.முட்டுக்கட்டை, இடையூறு

     [Skt. {} → த. பாதகம்]

பாதகாணிக்கை

 பாதகாணிக்கை pātakāṇikkai, பெ. (n.)

   ஆசிரியர் போன்றோரின் பாதத்தில் வைத்து அளிக்கும் காணிக்கை;(குருதட்சிணை);; offering (to one’s teacher etc.); places at his feet.

     [பாதம் + காணிக்கை]

பாதகி

பாதகி1 pātagi, பெ.(n.)

   பெருங்கொடுமை செய்தவள்; woman guilty of a heinous crime.

     “பாரியா யிருந்து கொன்ற பாதகி பெற்ற பேற்றால்” (உபதேசகா.சிவபுண்.202);.

த.வ.கொடுமைக்காரி

     [பாதகன் → பாதகி]

 பாதகி2 pātagi, பெ.(n.)

   பெருங்கேடன் (பாதகன்);; criminal.

     “பக்திமான்களும் பாதகிகளும் ஒக்கவாழ்ந்து போய்த்து” (திவ்.அமலனாதி.2, வியா.பக்.33);.

த.வ.கொலைகாரன், கயவன்

     [Skt. patakin → த. பாதகி]

பாதக்காப்பு

பாதக்காப்பு pātakkāppu, பெ. (n.)

   காலணி; chappals.

     “பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு” (சிலப்.23-78);

     [பாதம் + காப்பு]

பாதக்குறடு

 பாதக்குறடு pātakkuṟaḍu, பெ. (n.)

   துறவியரால் (அணியப்படுவதும்); முதல் இரு கால் விரல்களின் இடைவெளியில் நுழைத்துக் கொள்வதற்கு ஏற்றவாறு கட்டையால் செய்த குமிழுடையதுமான காலணி; wooden sandals with a toe-grip.

     [பாதம் + குறடு]

பாதங்கம்

பாதங்கம் pātaṅgam, பெ.(n.)

   பொடி; ash.

     “பாதங்க நீறேற்றார்” (தேவா. 225, 1);.

த.வ.தூள், துகள், சாம்பல்

     [படி → பதி → பதிகம் → பதகம் → பதங்கம் → Skt. {} → த. பாதங்கம்]

பாதசத்துரவம்

பாதசத்துரவம் pātasatturavam, பெ. (n.)

   1. அரசமரம்; peepul tree.

   2. ஆலங்கட்டி; hall stone (1,2 வைத்தியபரி);

   3. ஆடு; sheep.

பாதசரம்

 பாதசரம் pātasaram, பெ. (n.)

 ankle chain with tiny bells.

     “வெள்ளிப் பாதசரம்”.

     [பாதம் + சரம்]

     [P]

பாதசாரி

 பாதசாரி pātacāri, பெ. (n.)

 pedestrian.

     [பாதம் + சாரி]

பாதச்சிப்பி

 பாதச்சிப்பி pātaccippi, பெ. (n.)

   இப்பியுளொரு வகை (நெல்லை, மீனவ.);; a kind of conch-shell.

     [பாதம் + சிப்பி]

பாதச்சிலை

பாதச்சிலை pātaccilai, பெ. (n.)

தூணைத் தாங்கும் அடிக்கல்;(இராமா.மயேந்திர24);

 base stone of a pillar.

     [Pபாதம் + சிலை]

பாதனம்

பாதனம்1 pātaṉam, பெ.(n.)

   1. வணக்கம்; homage, reverence, prostration in worship.

     “பாதனஞ் செய்தார்” (பாரத. சூது.139);.

   2. கீழ்முகமாகச் செய்கை; causing to turn downwards.

     “பாதனமாகப் பரிந்தது பார்த்தே” (திருமந்.1041);.

     [Skt. {} → த. பாதனம்]

 பாதனம்2 pātaṉam, பெ.(n.)

   குத்தியெடுக்கை அல்லது கத்தியால் பிளக்கை (சா.அக.);; opening by, lancet or incison.

பாதன்

பாதன் pātaṉ, பெ.(n.)

   1. கதிரவன் (சா.அக.);; the sun.

   2. நெருப்பு; fire.

த.வ. எரிகதிர், ஞாயிறு

பாதபங்கயமலை

 பாதபங்கயமலை bātabaṅgayamalai, பெ. (n.)

 a mountain named {pādapangayamalai} which is located at magadha and having foot fossils of Buddha.

     [ பாதம் + பங்கயம் + மலை ]

பாதபீடிகை

 பாதபீடிகை pātapīṭigai, பெ. (n.)

   பாதம் பதிந்த மேட்டிடம்; a footstool.

     [பாதம் + பீடிகை]

     [P]

பாதபூசை

 பாதபூசை pātapūcai, பெ. (n.)

   பெரியோர், பெற்றோர் முதலியோரின் பாதங்களைத் தூய்மை செய்து மலர் வைத்து வணங்கும் சடங்கு; the ritual of washing the feet (of the teacher, Saint or of one’s parents out of respect.

     [பாதம் + பூசை]

பாதமயக்கு

பாதமயக்கு pātamayakku, பெ. (n.)

   1. அடுமயக்கு (வின்.);; stanza whose ines are capable of transposition.

   2. வேறுபுலவர்கள் பாடிய அடிகள் மூன்றனோடு தாம் ஓரடி பாடிமுடிக்கும் மிறைக்கவி வகை (யாப். வி. 96, பக்.504);; a kind of artificial stanza of four lines, the first three of which are taken from works of other poeto while the last is composed by the author.

     [பாதம் + மயக்கு]

பாதமானம்

 பாதமானம் pātamāṉam, பெ. (n.)

   படிமங்களின் உயரத்தினை அமைக்கும்போது கையாளப்படும் மரபு; a measure to decide the height of statue.

     [பாதம்+மானம்]

பாதமூலம்

பாதமூலம் pātamūlam, பெ. (n.)

   1. குதிகால் (யாழ். அக.);;  heel.

   2. முத்திக்குக் காரணமானதும் அடைக்கலமாகக் கருத படுவதுமான திருவடி; feet of a deity or saint considered as the source of bliss and as a refuge.

     “நினையுமின் பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம்” (சீவக.511);

     [பாதம் + மூலம்]

பாதம்

பாதம்1 pātam, பெ. (n.)

 one fourth of the duration of the influence of a star.

     “மூலம் கடைசிப் பாதம் என்றால் அவ்வளவு தீய விளைவுகள் இரா.”

 பாதம்2 pātam, பெ. (n.)

   1. நிழற்கோள் இராகு;  an ascending node.

   2. ஐந்தாம் ஆறாம்மாதத்திற் கருவழிதல்; foetus aborted in the fifth or sixth month of pregnancy.

   3. கால்; leg.

     ‘முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்” (சிறுபஞ்ச.க.வா-1);

     “பாற்பாடு மாதவன் பாதம் பொருந்தி” (சிலப்.15-168);

     “மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும்” (மணிமே.பதி.92);

   4. காற்பங்கு; quarter part.

     “பழுதறு மாதவன் பாதம் படர்கேம்… இளங்கொடிகானெனை” (மணிமே.145);

     “செய்க செபமாலை நூற்றெட்டினதற் பாதியுறச் செய்யலுமாம்

பாதத்துஞ்செய்” (சைவச.பொது.கசச.);

   5. சரியை முதலிய நாலு நிலைக்கும் பொதுப்பெயர்;(சிவஞானபோ.சிறப்பு.);

 a course of actions.

   6. செய்யுட்களினடி

 line of the poetry 9யாப். காரிகை.செய்-8.)

   7. தடை; abstruct.

   8. நீர்; water.

     “உறுபோரஞ்சிப் பாதத்தில் வீழ் வரோ” (பாரத.பதினெ.கநச.);

   9. பாகம்;பங்கு;  part, portion.

   10. முதற்கொழுங்கால்; a nakshatra.

     “பாதம் புனல் பதத்தின்” (விதாந.குணா.உசா.);

   11. வட்டத்தின் நான்கனொன்று; quarter part of the circle.

   12. அன்றன்று ஆகும் நல்லுழ்; auspicious day by day.

     “சூலமதிபரி விட்கம்பம் பாத மரவுகண்டம்” (விதா ந.பஞ்சா.28.);

   13. விழுதல்; to tell (சிவஞாநசி.8.29.21.);

     [பதி → பாதம்]

பாதம்

பள் → படு. படுதல் = தாழ்தல், விழுதல், பொருகளத்தில் விழுந்திறத்தல், இறத்தல்.

பட்டவன் குறி = நடுகல்

பட்டவன் காணி = களத்திறந்தவனுக்கு விடப்பட்ட மானியம்.

படு = குளம், மடு.

படு →படி. படிதல் = தாழ்தல், பணிதல், பணிவிடை செய்தல்.

படி →பதி. பதிதல் = தாழ்தல், இறங்கதுல், ஏன்றுதல், அகழ்தல், அழுந்துதல், உரமாகப் பதிதல், மணி பதித்தல், கற்பாவுதல், எழுதுதல்.

பதி = பதிகை, பதிக்கும் நாற்று, பதிந்திருக்கும் உறைவிடம், வீடு, கோயில், நகர்.

பதி→பதிவு. பதி→பதியம்.

பதி→பதம் = நிலத்திற் பதியும் பாதம், கால்

     “எறிபதத்தானிடங்காட்ட” (புறம்.4);.

உடம்பில் முழங்காலளவு போன்ற காற்பகுதி,

பதிந்திருக்கும் இடம், பதவி, பாதச் சுவட்டால் ஏற்படும் பாதைவழி.

பதம்→பாதம் = நிலத்திற் பதியுங்காலடி. பாதத்தைக் கொண்ட கால்

     “பாதக் காப்பினள் பைந்தொடி” (சிலப்.14:23);,

விளக்குத் தண்டின் பரந்த அடிப்பகுதி, இருக்கை தாங்குங்கால், காற்பங்கு, செய்யுளடி.

     “வாங்கரும் பாத நான்கும் வகுத்த வான்மீகி” (கம்பரா.நாட்டுப்.1);.

பாதக்காப்பு, பாதக்குறடு, பாதகடகம், காதகாணிக்கை, பாதச்சாயை, பாதசக்கரம், காதசரம், பாதசாயலம், பாத தாமரை, பாததூளி, பாதப்படி, பாதபூசை முதலியன பாதத் தொடர்பான கூட்டுச் சொற்கள். இவை புணர்ச்சியில் வலி மிக்கும் மிகாதும் வழங்கும்.

பாதம்.→பாதை = பாதம் படுவதனால் ஏற்படும் வழி. வடசொற்கள்(வேதமொழியும் சமற்கிருதமும்);

 pat, to fall down, fall or sink.

 patha, Way, path, road, course.

 Daksina patha, sothern way, deccan

 pathaka, knowing the way, a guide

 pathat, going, travelling, a road.

 pathika, knowing the way, going ona road.

 a traveller, way farer. a guide.

{pathikāya} to act as a traveller.

 pathila…a traveller.

 pathya belonging to the way, suitable, fit, proper, wholesome, salutary, esp. said of diet in a medical sense.

 Pad2, to fall rv.

 Pad3, foot.

 pada, foot, step, pace, stride, trace, vestingc, mark, rv.

{padaji,} foot-soldier.

 padatika, a foot man.

 padika, going on foot, pedestrian.

{pād,} a strong base of pad2.

{pāda,} foot, rv.

{pādaka,} a small foot rv.

{pādapa,} drinking at foot, tree.

{pādaka,} a foot stoodl or cushion for the feet.

{pādaya,} to stretch out at the feet

{pādavika,} a traveller.

{padāt,} a foot soldier. padata, infantry.

{pädika,} lasting for a quarter of the time.

{pādin,} lasting for a quarter of the time.

{pādin,} footed, having feet, having padas, as a stanza.

{pāduka,} a shoe, slipper, padutin, having shoes, shoed.

{pādu,} a shoe or slipper

{pādya} relating to or belonging to the feet.

ஆங்கில இலத்தின் கிரேக்கச் சொற்கள்

 e. antipodes. n.pl. places diametrically opposite to each other esp. region opposite to our owm. F.ll. f.gk.antipodes. having the fee opposite, anti, againts podos, foot.

ஞாலவுருட்சியினால், நாமும் அமெரிக்கரும் ஒருவகுப்பாரை நோக்கி ஒரு வகுப்பார் கால் நீட்டிக்கொண்டிருத்தல்போல் தோன்றுவதை நோக்குக.

 e. biped, two-footed animal f.l. bipedis, bi two. pedis, foot.

 e. cephalopod mollusc with distinct tentacle: head f.l. cephalo f. gk. kephalikos f. kephale head. Podos. foot.

 e. decapad, ten-footed crustacean, f.f decapode, f, gk. deca, ten, podos, foot.

 e foot, termination of leg beginning at ankle, f. oe., os. {föt,} ohg, fuoz, on.fotr, goth. {fõtus.}

பாதை என்னும் சொல் ஆங்கிலத்தில் path என்பது பகரமுதற் சொல்லாகவே யிருத்தலால், பாதையை யுண்டு பண்ணும் பாதத்தின் பெயரும், கிரேக்கத்திலும்

இலத்தீனிலும் போல் முதற்கண் பகரமுதற்சொல்லாகவே யிருந்து, பின்னர்

வல்வகர (f.); முதற் சொல்லாக வலித்துத் திரிந்திருத்தல் வேண்டும்.

 e. milleped, millipede, kinds of myriapods, with numerous legs usu. on each segment in double pairs., f.l.millepeda, mille, thousand. pedis, foot. ஆயிரங்காற் பூச்சி.

 e. myriapod, animal with many legs, of the class comprising centipedis and millepedes, f. gk. murias, f.murioi, 10,000. podos, foot.

 e, pad1 v.t.&i.to tramp along road On foot, f.lg. padden, pidden, to tread.

 e. pad2 road, f.di., lg. pad, path.

 e. pedal, each of the wooden keys played upon by the feet, lever for drawing out stips in organ, foot lever in various machines, esp. bicycle, f.f. pedale, f. it pedale, f.l. pedalis, f. pedis, foot.

 e. pedate, a footed, fl.pedalus.

 e. pedestal, base supporting column or pillar. base of statue etc., f .f. piedestal fit. piedestallo (pie, foot.f.l.pes. pedis +di. If+stakki, stall);.

 e. pedestrian, going on foot, one who walks., f.f.pedestre, of.l.pedester

 e. pedicure, n chiropody;

 v.t. to cure of treat feet by renivubg corns etc., f.f.pedicure f.l.pedis, foot + cura, care.

 e. pedigree, genealogial table., f.af=of. pie degrue, crane’s foot, mark denoting succession in pedigrees.

 e. pedometer, instrument for estimating distance travelled on foot by recording number of steips taken. f.f. pedometre f.l. pedis, foot+ o+meter.

 e, pedrail, device for facilitating progress of heavy vehicles over rough ground by attachment of broad foot-like supporting surfaces to whell-rims, f.l.pedis, foot+rail.

 e. peduncle, stalk of flower, fruit or cluster, stalklike process in animal body, f. mod. . pedunculus, f.l.pedis. foot+uncle.

 e podium, continuous projecting base or pedestal, raised platform around arena of amphitheatre, continous bench round room., f.l.f. gk, podion (podos, goot);.

 e. podophyllin, yellow bitter resin of cathartic properties got from root of wild mandrake, f.l. podophyllum f.gk.podos.foot.phullon.leaf.

 gk. podos-pous, foot;

 l.pedis-pes, foot., af.,of. Pie.foot.

 e. path, foot way esp. one merely beaten by feet, not specially constructed, track laid for foot or cycle racing;

 line along which person or thing moves. oe.paeth, olg.pad, ohg.pfad,wg.patha.

இச்சொல் பாதை என்னும் தமிழ்ச் சொல்லை வடிவிலும் பொருளிலும் பொருட் காரணத்திலும் ஒத்திருப்பதும் இச்சொல் வடமொழியி லின்மையும் கவனிக்கத்தக்கன.

 e. quadruped, four-footed animal., f.f. quadrapede f.l. quadrupedis, quadri, four pedis, foot.

 e.tripod, stool, table, utensil, resting on three feet or legs, I. and gk. Tri.three. podos, foot

 e. tripos, n. (camb.univ.); (list of successful candidates in); honours examination. (as tripod. with ref., to steel on which b.a. sat to deliver satirical speech at commencement f. gk. tri, three podos, foot.

கடைக்கழகச் செய்யுள்களில் பாதம் என்னும் சொல் வரவேண்டிய இடத்தில் அடி (அல்லதுதாள்); என்னுஞ் சொல்லே வந்திருத்தலால், சிலர் பாதம் என்னுஞ் சொல் வடசொல்லோ என ஐயுறக் கூடும். தொல்காப்பியமும் பதினெண் மேற்கணக்கும் திருக்குறளும் நூலும் பனுவலும் தனிப்பாடற்றிரட்டுமேயன்றி அகர முதலிகளல்ல. ஆரியர் வருகைக்கு முற்பட்ட எழுநிலச் செய்யுள் இலக்கியமனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. சில பொருள்கட்கு. உலக வழக்குச் சொல்லும் இலக்கிய வழக்குச் சொல்லும் தொன்றுதொட்டு வேறுபட்டே வந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, காடை என்னும் உலகவழக்குச் சொல்லிற்குத் தலைமாறாக குறும்பூழ் என்னுஞ் சொல்லே கழகச் செய்யுள்களில் வழங்கியிருத்தல் காண்க.

பாதம் என்பது, நிலத்திற் பதிதற் கேற்றவாறு அகன்று தட்டையாயிருத்தல் வேண்டும். பாதம் வைத்த விளக்கு என்னும் வழக்கை நோக்குக. அடி என்பது, அடிப்பகுதி, அடியுறுப்பு, அடிப்பக்கம் என்னும் மூவகைப் பொருளை, எல்லாப் பொருளொடும் பொருந்தப் பொதுப்படக் குறிப்பதால், பாதம் என்னுஞ் சொல்லை ஒத்ததன்று. பெட்டிக்கு அடியில் என்பதைப் பெட்டியின் அல்லது பெட்டிக்குப் பாதத்தில் என்று சொல்லும் வழக்கின்மை காண்க.

பாதம் என்னும் சொல்லிற்கு மூலமான பதி என்னும் வேர்ச் சொல்லையும் அதன் தோற்ற வரலாற்றையும் வேறெம்மொழியிலும் காணமுடியாது. மக்கள் குமரிநாட்டினின்று வடக்கும் கிழக்கும் மேற்கும் சென்றவராதலால்,

தமிழின் தொன்மை, முன்மை, தாய்மை, தலைமையை உணர்தல் வேண்டும்.

வரலாறும் மொழிநூலும், இவ் வுண்மையைப் கோபுரவுச்சியினின்று குமுறிச் சாற்றுகின்றன. – பாவாணர்

பாதயாத்திரை

 பாதயாத்திரை pātayāttirai, பெ. (n.)

   வேண்டுதலை முன்னிட்டுக் கோயில்களுக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் ஓர் இடத்திற்கு நடந்தே மேற்கொள்ளும் செல்கை; pilgrimage on foot (undertaken in fulfilment of a vow;march.);

     “பழநிக்குப் பாதயாத்திரைப் புறப்பட்டனர்”

     “உப்புப் போராட்டத்திற்காகத் தண்டிநோக்கி மேற்கொண்ட காந்தியின் பாதயாத்திரை வெற்றி பெற்றது”.

     [பாதம் + யாத்திரை]

     [ இய → யா → யாத்திரை → ஒ.நோ. மா → மாத்திரை ]

பாதரசம்

பாதரசம் pātarasam, பெ.(n.)

   இதளியம்; mercury, quicksilver.

     “பாதரசமாய் மனது சஞ்சலப்படுமலால்” (தாயு.பரிபூரண.6);.

     [Skt. {}-rasa → த. பாதரசம்]

பாதரவதம்

 பாதரவதம் pādaravadam, பெ. (n.)

   கருங்காலி; black wood.

பாதராயணன்

 பாதராயணன் pātarāyaṇaṉ, பெ.(n.)

   பிரம்ம நூல், மகாபாரதம் முதலியவற்றின் ஆசிரியராகிய வியாசமுனிவர் (வின்.);; the sage {}, author of Brhama {}, Mahabharata, etc.

     [Skt. {] → த. பாதராயணன்]

பாதர்

பாதர் pātar, பெ.(n.)

   பகதூர்; Bahadur.

     “பாதர் வெள்ளை யென்று கூப்பிடுவேன்” (கட்ட பொம்மு.பக்.26);.

     [Persn. {} → த. பாதர்]

பாதவம்

பாதவம்1 pātavam, பெ. (n.)

   மரம்; tree.

     “பாதவக் கண்ணிழல்” (ஞானா.18,11);.

   2. தோப்பு (பிங்.);; garden, grove.

த.வ. பூங்கா

     [Skt. {}-pa → த. பாதவம்]

 பாதவம் pātavam, பெ.(n.)

   மலை (பிங்.);; hill, mountain.

     [Skt. parvata → த. பாதவம்]

பாதாங்கொட்டை

 பாதாங்கொட்டை pātāṅgoṭṭai, பெ.(n.)

   வாதாங்கொட்டை (இ.வ.);; almond.

த.வ. முற்பழக் கொட்டை

     [U. {} → த. பாதாம்+கொட்டை]

பாதானி

 பாதானி pātāṉi, பெ. (n.)

   பழமையுடையது (நெல்லை.);; that which is old.

தெ – பாத

பாதாமல்வா

 பாதாமல்வா pātāmalvā, பெ.(n.)

பாதுமல்வா (இ.வ.); பார்க்க;see {}.

பாதாலத்தாம்பி

 பாதாலத்தாம்பி pātālattāmbi, பெ.(n.)

   நிலக்காளான் (தைலவ.தைல.);; mushroom, fungi.

பாதாலம்

பாதாலம் pātālam, பெ.(n.)

   1. பாதாளம் பார்க்க;see {}.

   2. வடவைத் தீ; submarine fire.

     “மொய்கொள் பாதால முத்தீ” (சீவக. 2462);.

த.வ. கீழுலகம்

     [Skt. {} → த. பாதாலம்]

பாதாள வாகை

 பாதாள வாகை pātāḷavākai, பெ. (n.)

   நிலவாகை; east indian senna. (சா.அக.);

     [பாதாளம் + வாகை]

பாதாளகங்கை

 பாதாளகங்கை pātāḷagaṅgai, பெ.(n.)

   நிலத்தின் கீழ் ஒடும் நீரோட்டம் (வின்.);; subterranean stream. த.வ.நிலத்தடி நீர்

     [Skt. {} → த. பாதாளம்+கங்கை]

பாதாளகருடன்

 பாதாளகருடன் pātāḷagaruḍaṉ,    கீரிப்பூண்டு; the mongoose plant. (சா.அக.)

பாதாளகிரகணம்

பாதாளகிரகணம் pātāḷagiragaṇam, பெ.(n.)

   1. கண்ணுக்குப் புலப்படாத கோள்பற்று (கிரகணம்); (C.G.);; eclipse below the horizon.

   2. அரைகுறையாய்ப் புலப்படும் கோள் பற்றுகை; eclipse which is only partly visible.

     [Skt. {} → த. பாதாளகிரகணம்]

பாதாளகொலுசு

 பாதாளகொலுசு pātāḷagolusu, பெ.(n.)

பாதாளக்கரண்டி பார்க்க;see {}.

     [Skt. {} → Te. golusu → த. பாதாளகொலுசு]

பாதாளக்கரண்டி

 பாதாளக்கரண்டி pātāḷakkaraṇṭi, பெ.(n.)

   கிணற்றில் விழுந்த பொருளை எடுக்குங் கருவி (உ.வ.);; grapnel, hook to lift things fallen into a well.

த.வ. முள்குறடு

     [Skt. {} → த. பாதாளக் கரண்டி]

பாதாளத்தார்

பாதாளத்தார் pātāḷattār, பெ.(n.)

பாதாள வாசிகள் பார்க்க;see {}.

     “பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார்” (திருவாச.8,2);.

     [Skt. {} → த. பாதாளத்தார்]

பாதாளமூலம்

பாதாளமூலம் pātāḷamūlam, பெ. (n.)

   1. சீந்தில்கொடி; moon creeper.

   2. ஆடுதின்னாப்பாளை; worm killer.

   3. கரையான்; white ant.

   4. கோரைக்கிழங்கு; nut grass, korai grass root.

   5. சிறுநெஞ்சில்; small castrops, ground burnut. (சா.அக.);

பாதாளம்

பாதாளம் pātāḷam, பெ.(n.)

   1. கீழுலகம் ஏழனுள் அடியில் உள்ளது; the lowest subterranean region, one of {}.

   2. கீழுலகம்; any of the nether worlds.

     “பாதாள மேழினுங் கீழ் சொற்கழிவு பாதமலர்” (திருவாச. 7,10);.

   3. குகை, பள்ளம் (வின்.);; deep cavern, pit, chasm, gulf, abyss, cleft.

   4. அளறு (நரகம்.); (சூடா.);; hell.

   5. கணியத்தில் கதிரவனுக்கு நான்காமிடம் (வின்.);;   6. மறைவிடம் (வின்.);; secret place.

     [Skt. {} → த. பாதாளம்]

பாதாளயோகம்

 பாதாளயோகம் pātāḷayōkam, பெ.(n.)

   கணிய நூல் வகையுளொன்று (சங்.அக.);;     [Skt. {} → த. பாதாளயோகம்]

பாதாளலிங்கம்

 பாதாளலிங்கம் pātāḷaliṅgam, பெ.(n.)

   நிலத்தில் ஆழப்பதிந்த சிவலிங்கம் (உ.வ.);; Siva-lingam, which is deeply rooted in the earth.

     [Skt. {}+linga → த. பாதாளலிங்கம்]

பாதாளலோகம்

பாதாளலோகம் pātāḷalōkam, பெ.(n.)

பாதாளம், 1, 2 (வின்.); பார்க்க;see {}, 1, 2.

     [Skt. {} → த. பாதாளலோகம்]

பாதாளவட்டி

 பாதாளவட்டி pātāḷavaṭṭi, பெ. (n.)

   பூனைப்புல்; a kind of tender grass. (சா.அக.);

     [பாதாளம் + வட்டி]

பாதாளவயிரவன்

பாதாளவயிரவன் pātāḷavayiravaṉ, பெ.(n.)

   1. கிணறு வெட்டவும் புதைபொருளை வெளி யிடவும் காணிக்கை கொள்ளும் வைரவக் கடவுள் (வின்.);; Bhairava of the nether world, to whom sacrifice is offered When digging wells or discovering treasure hidden under ground.

     [Skt. {}+bhairava → த. பாதாளவயிரவன்]

பாதாளாஞ்சனம்

 பாதாளாஞ்சனம் pātāḷāñjaṉam, பெ.(n.)

   கருநிற மை முதலிய மூன்றனுள் மறை பொருளைக் காண உதவுவதும் மை; magical black pigment or collyrium used in discovering treasures buried underground, one of the three {}.

     [Skt. {} → த. பாதாளாஞ்சணம்]

பாதாளி

பாதாளி pātāḷi, பெ.(n.)

   1. மிகச் சிக்கலானது; anything very difficult to unravel.

     ‘இழவும் பாதாளியுமாகவிருக்கிறது’ (தஞ்.);

   2. தொல்லை செய்பவள் (இ.வ.);; a worrying or trouble- some woman.

த.வ.நச்சரிப்பவள்

     [Skt. {} → த. பாதாளி]

பாதி

பாதி1 pāti, பெ. (n.)

   1. இரண்டு சமபாகமாகப் பகுக்கப்பட்ட பொருட்பகுதி; half. moiety.

     “பாதிப்பெண்ணொரு பாகத்தன்” (தேவா.479,3.);

   2. நடு; middle.

     “பாதிவழியின் மிண்டி” (காஞ்சிப்பு.சிவாத்.28.);

   3. பகுக்கை (சூடா.);; dividing, sharing.

   4. துண்டு; a piece.

     “முறிப்பாதி” (அரிச்.பு.11.);

மறுவ: பால் பாயல்

பயல் பங்கு

அருத்தம்

கூறு

பாகம்

பாதி

     “பாதிப் பாக்கைக் கப்பலிலே போட்டுப் பங்குக்கு நின்றானாம்” (பழ.);

     [பகுதி → பாதி]

பாதி-த்தல்

பாதி-த்தல் pātittal, செ.குன்றாவி. (v.t.)

இரண்டு சமபங்குகளாகப் பிரித்தல். (யாழ்.அக.);

 to halve, divide in halves.

     [பாதி → பாதித்தல்]

 பாதி-த்தல் pātittal,    4 செ.குன்றாவி. (v.t)

   1. வருந்துதல்; to trouble, disturb.

   2. தடை செய்தல்; to hinder, obstruct.

     [Skt. {} → த. பாதி → பாதி-த்தல்]

பாதிக்கரை

 பாதிக்கரை pātikkarai, பெ. (n.)

தன்னூரில் அல்லது பிறவூரில் பாதி வரி செலுத்தியேனும் குறிப்பிட்ட தொகை கொடுப்பதாக ஒப்புக்கொண்டேனும் பிறர் நிலத்தைப் பயிரிடுபவன் (R.T.);:

 one who. having no land of his own. undertakes the temporary cultivation of waste land either in his own or any other village. usually paying half the kist or some fixed portion of the crop.

     [பாதி + கரை]

பாதிசம்வாதம்

பாதிசம்வாதம் pātisamvātam, பெ. (n.)

   ஒரு பக்கத்தார் மட்டுஞ் சம்மதிக்கை (ஈடு,4,1,1.);; unilateral consent.

     [பாதி + {skt.samvådha} த. சம்வாதம்]

பாதிச்சமச் செய்யுள்

பாதிச்சமச் செய்யுள் pāticcamacceyyuḷ, பெ. (n.)

   அளவடிச் சந்தங்களில் முதலி ரண்டடியும் ஒத்துக் கடையிரண்டடியும் எழுத்து மிக்கு வருவதும், முதலிரண்டடியும் தம்முள் ஒத்து எழுத்து மிக்குக் கடையிரண்டடியும் ஒப்ப எழுத்துக் குறைந்து வருவதும், முதலிர ண்டடியும் தம்முள் ஒப்ப எழுத்துக் குறைந்து கடையிரண்டடியும் தம்முள் ஒப்ப எழுத்துக்குறந்து வருவதும், ஒன்றிடை யிட்டுக் குன்றி வருவதும், ஒன்றிடையிட்டு மிக்கும் குறைந்தும் வருவதும் பாதிச் சமச் செய்யுள் என்றும் வழங்கப்படும் (யாப்.95);; a kind of verse in peculier metre.

     [பாதி + சமம் + செய்யுள்]

பாதிச்சாமம்

 பாதிச்சாமம் pāticcāmam, பெ. (n.)

நள்ளிரவு (வின்.);

 midnight.

மறுவ. நடுச்சாமம்

     [பாதி + யாமம் → சாமம்]

பாதிடு

பாதிடு1 pādiḍudal,    18. செ.குன்றாவி. (v.t.)

   பங்கிடுதல்; to apportion, divide.

     “கைப்பொருள் கண்டோர் யார்க்கும் பாதிடு (முரவோர்போல்” (கோயிற்பு.பதஞ்.82.);

     [பாதீடு → பாதிடு-,]

 பாதிடு2 pādiḍudal,    18. செ.குன்றாவி. (v.t.)

   பாதுகாத்தல் (வின்.);; to protect, presserve.

     [பாதிடு → பாதிடு-,]

 பாதிடு3 pādiḍudal,    18. செ.குன்றாவி. (v.t.)

   நெருக்குதல் (வின்.);; to narrow, press.

 பாதிடு pātiḍu, பெ.(v.i.)

   அரசின்வரவு செலவுத்திட்டம்; budget.

     [பகுத்து+இடு-பகுத்திடு- பாதீடு]

பாதித்தியம்

 பாதித்தியம் pātittiyam, பெ.(n.)

   தரக்குறைவு (பதிதத்தன்மை); (யாழ்.அக.);; apostasy, degradation.

     [Skt. patitya → த. பாதித்தியம்]

பாதிபகடம்

 பாதிபகடம் bātibagaḍam, பெ. (n.)

   செம்பாசும் (இ.வ.);; exact half.

பாதிப்பேச்சு

பாதிப்பேச்சு pātippēccu, பெ. (n.)

   1. அரைகுறைப்பேச்சு; broken language.

   2. பேச்சினிடை; middle of a conversation.

     [பாதி + பேச்சு]

பாதிமதி

பாதிமதி pādimadi, பெ. (n.)

   வளர்மதி (திருப்பு.212.);; crescent moon.

     “பாதிமதி நதிபோது மணிசடை நாதரருளிய குமரேசா” (திருப்பு.சாமிமலை);

பாதிமதியணிந்தோன்

 பாதிமதியணிந்தோன் pādimadiyaṇindōṉ, பெ. (n.)

   துரிசு; blue vitriol. (சா.அக.);.

பாதிமம்

 பாதிமம் pātimam, பெ. (n.)

   நாலிலொன்று (யாழ்.அக.);; quarter.

பாதியம்

 பாதியம் pātiyam, பெ. (n.)

   கடுக்காய்; gall nut. (சா.அக.);

பாதியிரா

 பாதியிரா pātiyirā, பெ. (n.)

பாதியிராத்திரி பார்க்க;See {pātiyirāttiri.}

     [பாதி + இரா]

பாதியிராத்திரி

 பாதியிராத்திரி pātiyirāttiri, பெ. (n.)

   நடுயாமம் (வின்.); பார்க்க; minght.

     [பாதி + இராத்திரி]

பாதிரம்

பாதிரம் pātiram, பெ. (n.)

   1. மலையாத்தி; malabar mountain ebony.

   2. மூங்கில்; bamboo tree. (சா.அக.);

 பாதிரம்1 pātiram, பெ. (n.)

சந்தனம் பார்க்க;See {sandanam} sandalwood.

 பாதிரம்2 pātiram, பெ. (n.)

சந்தனம் பார்க்க;See {pātiyirattiri}

     [பதி + இரா → ரா]

பாதிராத்திரி

 பாதிராத்திரி pātirāttiri, பெ. (n.)

பாதியிராத்திரி பார்க்க;See {patuturatturu}

     [பாதி + இராத்திரி → ராத்திரி]

பாதிரி

பாதிரி1 pātiri, பெ. (n.)

   1. பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை; yellow-flowered fragrant trumpet-flower tree,

   1. tr., stereospermum chelonoeds

     ‘பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு’ (நாலடி,139.);

   2. சிவப்புப்பூ மரவகை;   3. வெள்ளப் பூவுடைய மரவகை(L.);; whiteflowered trumpet-flower tree, m.tr. stereospermum xylocorpum,

   4. மூங்கில் (பிங்.); பார்க்க;cf. see {mungil}

 patira bamboo.

மறுவ: பாடலம் பாதிரி புன்காலி

தெ. பாதிரி

க. பாதிரி

     [pபாதிலி → பாதிரி]

     “பாசிலை யொழிந்த பராஅரைப் பாதிரி” (பெரும்-4);

     “போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி” (குறி-74);

     “மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரி” (நற்-52-1);

     “துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி” (நற்.118-8);

     “அஞ்சினைப் பாதிரி அலர்ந்தென” (ஐங்-3462);

     “வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்” (ஐங்.361-2);

 பாதிரி pātiri, பெ. (n.)

   கிறித்துவக் குருமார்; christian missionary clergyman. (வின்.);

பாதிரிக்கூட்டம்

 பாதிரிக்கூட்டம் pātirikāṭṭam, பெ. (n.)

   பாதிரி, வில்வம், குமிழ், தழுதாழை ஆகிய நான்கின் வேர்கள் (சங்.அக.);; roots of four trees, viz., {pādiri,} vilvam, {kumiland talutālai}

     [பாதிரி + கூட்டம்]

பாதிரிப்புலியூர்

 பாதிரிப்புலியூர் pātirippuliyūr, பெ. (n.)

கடலூர் என்றழைக்கப்படும் தென்னாற்காடு

   மாவட்ட ஊரின் தொன்மைப்பெயர்; an ancient name of cuddalore.

பாதிரி மரத்தின் அடியில் தோன்றி, தவம் புரிந்த உமாதேவிக்கு வரம் கொடுத்தார் என்பதும், புலிக்கால் முனிவர் இங்கு இறைவனைப் பூசித்தலால் புலியூர் என்பதும் தோன்றி இரண்டன் சேர்க்கையால் பாதிரிப் புலியூர் என்னும் திருப்பெயர் இத்தலத்துக்கு அமைந்து விளங்குகிறது என்பர். இன்னும் இத் தலத்திற்குரிய தலமரமாக பாதிரியே விளங்குகிறது.)

பாதிரிமேலீந்தி

 பாதிரிமேலீந்தி pātirimēlīndi, பெ. (n.)

   வெண்பாதிரி; white flower trumpet tree. (சா.அக.);

     [பாதிரிமேல் + ஈந்தி]

பாதிரியம்

 பாதிரியம் pātiriyam, பெ. (n.)

   செவிடு (சங்.அக.);; deafness.

பாதிரியார்

 பாதிரியார் pātiriyār, பெ.(n.)

   கிறித்தவத் தேவாலயத்தில் வழிபாடு நடத்திவைப்பவர்;     [E. Father → த. பாதிரியார்]

பாதிரை

பாதிரை pātirai, பெ. (n.)

பாதிரி1 (நாநார்த்த 261.); பார்க்க;See {pādiri}

     [பாதிரி → பாதிரை]

பாதிலி

 பாதிலி pātili, பெ. (n.)

   வலை (யாழ்.அக.);; trap Or snare.

பாதிவாரம்

 பாதிவாரம் pātivāram, பெ. (n.)

   நிலக்கிழாரும் குத்தகைக்கு எடுத்தவரும் விளையும் விளைச்சலைப்பாதியாகப் பிரித்துக்கொள்ளும் முறை; a system of tenanay in which the landlord and the lessee divide the produce of the leased land in equal shares.

     [பாதி + வாரம்]

பாதிவிரத்தியம்

 பாதிவிரத்தியம் pātivirattiyam, பெ.(n.)

   கற்பொழுக்கம்; chastity, fidelity, conjugal virtues.

த.வ.இல்லற ஒழுக்கம்

     [Skt. {} → த. பாதிவிரத்தியம்]

பாதீடு

பாதீடு1 pātīṭu, பெ. (n.)

   1. பங்கிடுகை (யாழ். அக.);; dividing, sharing, apportioning.

   2. தலைவன் விருப்பப்படி போர்வீரர் பகைவரிடமி ருந்து கவர்ந்த நிரையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் புறத்துறை

     “தந்துநிறை பாதீடு உண்டாட்டுக் கொடையென” (தொல். பொ. 58);;

 theme describing the apportioning of cows captured from an enemy among the soldiers as directed by their chief.

     [பாது + இடு → பாதிடு → பாதீடு]

     “கவர்கணைச் சுற்றங் கவர்ந்த கணநிரை

அவரவர் வினைவயின் அறிந்தீந்தன்று” (புறப்.வெ.13,கொளு);

     “ஒள்வாள் மலைந்தார்க்கும் ஒற்றாய்ந்துரைத் தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்-விள்வாரை

மாறட்ட வென்றி மறவர்தம் சீறூரில்

கூறிட்டார் கொண்டநிரை” (வெண்பா.);

 பாதீடு2 pātīṭu, பெ. (n.)

   1.பாதுகாக்கை; protecting.

   2. செறிக்கை

 securing, confining.

     [பாது + இடு → பாதிடு → பாதீடு]

பாது

பாது1 pātu, பெ. (n.)

   பங்கு; portion, share.

     ‘யார்க்கும் பாதிடு முரவோர்போல’ (கோயிற்பு. பதஞ்.82.);

 பாது2 pātu, பெ. (n.)

   ஞாயிறு (யாழ்.அக.);; sun.

 பாது3 pātu, பெ. (n.)

   காவல் (யாழ்.அக.);; protection, watch, save, leip.

பாதுகம்

பாதுகம் pātugam, பெ. (n.)

பாதுகை, பார்க்க;See {palukai}

     “பரதனுக்குப் பாதுகமு மரசு மீ ந்து (திவ்.பெருமாள்.10,4.);

பாதுகா

பாதுகா1 pātukāttal, செ.கு.வி. (v.i.)

   1. தீங்கு, அழிவு, சேதம் முதலியவை நேராமல் காப்பாற்றுதல்;காத்தல்; protect.

     “எந்தச் சூழ்நிலையிலும் நாட்டைப் பாதுகாக்க இராணுவம் அணியமாக இருக்க வேண்டும்”

     “தலைமை அமைச்சரைப் பாதுகாக்க ஒரு தனிப்படையே உள்ளது”

     “இவை தாத்தா பாதுகாத்த பொருள்கள்”

   2. குடும்பம் முதலியவற்றை அல்லது கலைகளைப் பேணுதல்;பராமரித்தல்; provide for (a family.);;support: preserve (arts);

     “அப்பாவுக்குப் பிறகு மாமாதான் எங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து வருகிறார்”

     “நாட்டுப்புறக் கலைகள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன”

பாதுகாகாரன்

 பாதுகாகாரன் pātukākāraṉ, பெ.(n.)

   மிதியடி, செருப்பு செய்பவர் (யாழ்.அக.);; cobbler, shoe-maker.

த.வ.தோல்வினைஞன்

     [Skt. {} → த. பாதுகாகாரன்]

பாதுகாத்

பாதுகாத்2 pātukāttal,    15. செ.குன்றாவி. (v.t.)

   1. காப்பாற்றுதல்; to protect, defend, guard.

     ‘பைதலாவ தென்று பாதுகாத் திரங்கு, (திருவாச. 5,77.);

   2. வாராமற்றடுத்தல்; to ward off. avert.

     “அதனைப் பாதுகாத்துக் கடிதற்பொருட்டு” (குறள்,11,அதி.முக.);

   3. பராமரித்தல்(வின்.);; to take care of cherish, foster.

     [பாதுகாவல் = பாதுகாப்பு

பாது = காவல் (யாழ்.அக.); பாதுகாத்தல் என்பது நிலைச்சொல்லின் பொருள் மறைந்து நன்கு காவல் காத்தல் என்று பொருள் பட்டதனால் பாது என்னும் சொற்குக் காவல் என்னும் பொருள் கூறப்பட்டது. வே.க.141]

பாதுகாப்பாளர்

பாதுகாப்பாளர் pātukāppāḷar, பெ. (n.)

   1. பதினெட்டு வயது நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் பொருட்டுக் கவனித்துக் கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்;   பெற்றோருக்கப் பகரமாக மாணவர் போன்றோரைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ஏற்பவர்;   2. பாதுகாக்கும் பணி செய்பவர்; பாதுகாவலர்; guard (employed to protect a place. person);

     [பாதுகாப்பு → பாதுகாப்பாளர்]

பாதுகாப்பு

பாதுகாப்பு pātukāppu, பெ. (n.)

   1. காப்பாற்றுகை; protection, guard, watch.

   2. ஆதரிக்கை; support maintenance.

 பாதுகாப்பு pātukāppu, பெ. (n.)

   1. தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு; protection;

 defence;

 security.

     “திருட்டு நடந்த குடியிருப்புப் பகுதியில் இப்போது பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது”

     “நாட்டின் வருவாயில் முக்கால் பங்கு பாதுகாப்புக்காகச் செலவழிக்கப்படுகிறது”

     “நுகர்வோர் நலப் பாதுகாப்புச் சங்கம்” 2. (ஒருவர் உணரும்); பத்திரமான நிலை;

 Seeurity;safety.

     “பெற்றோர்களுடன் இருந்த போது உணர்ந்த பாதுகாப்பு இப்போது இல்லை”

     “நண்பர்கள் நிறைந்த சூழல் பாதுகாப்பாக இருந்தது”

   3. பொறுப்போடு மேற்கொள்ளப்படும் கவனிப்பு; custody (of s.o.);

     “குழந்தையை ஆயாவின் பாதுகாப்பில் விட்டு விட்டு வேலைக்குப் போகிறோம்”

பாதுகாப்புப் பெட்டகம்

 பாதுகாப்புப் பெட்டகம் pātugāppuppeṭṭagam, பெ. (n.)

   வங்கிபோன்றவற்றில் விலை உயர்ந்த பொருள்களை வைத்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பான முறையில் உள்ள பெட்டி போன்ற அமைப்பு; safety locker (in a bank. etc.);

     “இந்த வங்கியில் பாதுகாப்புப் பெட்டக வசதி உண்டு”

பாதுகாவலர்

 பாதுகாவலர் pātukāvalar, பெ. (n.)

பாதுகாப்பு (வின்.); பார்க்க;See {padukappalar}

பாதுகாவல்

 பாதுகாவல் pātukāval, பெ. (n.)

பாதுகாப்பு (வின்.); பார்க்க;See {padukapри.}

பாதுகை

 பாதுகை pātugai, பெ. (n.)

   சிறுசெருப்படை என்னும் மூலிகை; small leaved spreading creeper. (சா.அக.);

பாதுசா

பாதுசா1 pātucā, பெ.(n.)

   முகம்மதிய அரசன்; sultan, Muhammadan ruler.

     [U. {} → த. பாதுசா]

 பாதுசா2 pātucā, பெ.(n.)

   இனிப்புப் பணியார வகை (இ.வ.);; a kind of sweet cake.

பாதுமல்வா

பாதுமல்வா pātumalvā, பெ.(n.)

   கற்பழவிதை (வாதாம்);யாலான இன்களி(அல்வா);; a kind of confection prepared with almond.

     “பாதுமல்வா நெய்யுருண்டை” (பஞ்ச.திருமுக. 1837);

     [Persin. {} + Ar. {} → த. பாதுமல்வா]

பாதூனசந்திரன்

 பாதூனசந்திரன் pātūṉasandiraṉ, பெ.(n.)

   நிலவுக்கும் கருங்கோள் செங் கோளுக்கும் இடையே உள்ள தொலைவு (வின்);;     [Skt. {}+candra → த. பாதூனசந்திரன்]

பாதேயம்

 பாதேயம் pātēyam, பெ.(n.)

   கட்டுச்சோறு; food carried for use on a journey, viaticum.

     “பரலோக பாதேயம்” (வின்.);.

த.வ.கட்டுணவு

     [Skt. {} → த. பாதேயம்]

பாதை

பாதை pātai, பெ.(n.),

   செடி(C.G);; bush.

தெ. பொத. க. பொதெ.

     [பொது→ பொதை]

 பாதை1 pātai, பெ. (n.)

   1. வழி (பிங்.);; way, read.

   2. ஒற்றையடிவழி (வின்.);; beaten track, foot-path.

   3. முறை; method, manner. way, mode.

     ‘அவன் ஒழுங்கான பாதையில் போகவில்லை’ (வின்.);

   4. மிதவை (சூடா.);; flat. bottomed boat.

     “பாதைகள் சொரிவன பருமணி கனகம்” (கம்பரா. நாட்டு.31.);

 பாதை2 pātai, பெ. (n.)

   துன்பம்; affliction. trouble.

பாதைக்குலை

 பாதைக்குலை pātaikkulai, பெ. (n.)

   பாகல்; bitter guard. (சா.அக.);

     [P]

பாதோசம்

 பாதோசம் pātōcam, பெ.(n.)

   தாமரை (மலை.);; lotus, as water-born.

த.வ.கமலம்

     [Skt. {} → த. பாதோசம்]

பாத்தகம்

 பாத்தகம் pāttagam, பெ. (n.)

   பேராமுட்டி; ceylon sticky. (சா.அக.);

பாத்தம்

பாத்தம் pāttam, பெ. (n.)

   மருதுமரம்; murdah tree. (சா.அக.);

மறுவ: கருமருது.

 பாத்தம் pāttam, பெ.(n.)

   1. செய்தி (விஷயம்);; subject or matter dealt with.

     “ஒரு சொல்லுக்குப் பாத்தமில்லாத ஐசுவரியமுமாய்” (ஈடு,3,9,2);.

   2. தரம்; fitness.

     “சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமிக்காக” (ஈடு,1,9,2);.

     [Skt. {} → த. பாத்தம்]

பாத்தல்

பாத்தல் pāttal, பெ. (n.)

   1. கொடுத்தல்; to give.

   2. பங்கிடுதல்; to share.

     “பாத்தூண்” (வள்.உரை.);

பாத்தா-தல்(பாத்தருதல்)

பாத்தா-தல்(பாத்தருதல்) pāddādalpāddarudal, செ.கு.வி. (v.i.)

   1. பரவுதல்; to spread.

   2. உருகியோடுதல்; to melt and flow, as gold in the process of refinement.

     “பாத்தரும் பசும்பெற்றாலம்” (சீவக.398);

     [பா + பாத்தரல் → பாத்தா]

பாத்தி

பாத்தி pātti, பெ. (n.)

   1. பகுதி; division, section, classification.

     “மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே” (தொல். எழுத். 172);

   2. சிறுசெய்; parterre. pan, small field.

     “வளர்வதன் பாத்தியு ணீர்சொரிந் தற்று” (குறள்.718);

     “கரும்புநடு பாத்தி யன்ன” (குறுந்.262-7);

     “கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்” (ஐயங்.65-1);

     “பாத்திப்பன்மலர்ப் பூத்த தும்பின்று’ (புறம்.386-11);

     “வகையறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு” (குறள்.465-2);

   3. பங்கு (வின்.);; part, portion, share.

   4. வீடு (பிங்.);; house, dwelling abode.

     [பாத்து → பாத்தி]

பாத்திகட்டு-தல்

பாத்திகட்டு-தல் pāddigaṭṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   கீரைவிதைமுதலியன தெளிக்க வரம்புகட்டுதல் (வின்.);; to back up or make garden beds, salt-pans etc.

     [பாத்தி + கட்டு-,]

பாத்திகோலு-தல்

பாத்திகோலு-தல் pāddiāludal,    9. செ.கு.வி. (v.i.)

பாத்திகட்டு (உ.வ.); பார்க்க;See {pattikattu}

     [பாத்தி + கோலு-,]

பாத்திப்படு-தல்

பாத்திப்படு-தல் pāddippaḍudal,    10. செ.கு.வி. (v.i.)

   1. பொறுப்புடைமையாதல் (வின்.);; to beresponsible;

 to be under obligation .

   2. உரிமப்படுதல் (உ.வ.);; to belong to.

     [பாத்தியம் + படு]

பாத்திப்படு-த்தல்

பாத்திப்படு-த்தல் pāttippaḍuttal,    5. செ.கு.வி வளர்நிலத்திலே நிலை பெறச்செய்தல்; to establish, setup.

     “பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு” (குறள்.465.);

பாத்தியக்காரன்

 பாத்தியக்காரன் pāttiyakkāraṉ, பெ. (n.)

பாத்தியன் (இ.வ.); பார்க்க;See {pattiyan}

     [பாத்தியம் + காரன்]

பாத்தியத்திரவியம்

 பாத்தியத்திரவியம் pāttiyattiraviyam, பெ. (n.)

   வெண்கடுகு, இலாமிச்சைவேர், சந்தனம், அருகு முதலியன; group of substances conssling of while mustard, (fragrant grass); Khus Khus root sandal wood and conch grass or bare grass.

     [பாத்தியம் + திரவியம்] திரவியம் + Skt.

பாத்தியன்

பாத்தியன் pāttiyaṉ, பெ. (n.)

   1. சுற்றத்தான்; relative.

   2. உரிமையாளன்; one who has a right;

 claimant;

 sharer

   3. பிணைகொடுப் போன்; Surety, one who gives security.

     [பாத்தியம் → பாத்தியன்]

 பாத்தியன் pāttiyaṉ, பெ.(n.)

   கடவுளின் அடியான்; saint devoted to the feet of God.

     “பகையறு பாத்தியன் பாதம் பணிந்து” (மணிமே.10:35);.

     “திருவாதவூர்ச் சிவ பாத்தியன்” (பதினொ.கோயிற்றிருப்பண்.58);. த.வ.தொண்டன், இறையடியார்

     [Skt. {} → த. பாத்தியன்]

பாத்தியம்

பாத்தியம்1 pāttiyam, பெ. (n.)

   பாதம் அலம்பக் கொடுக்கு நீர்; water for ceremonial washing of the feet.

     “பாத்திய முதல் மூன்றும் பாங்குற வமைத்துக் கொண்டு” (தணிகைப்பு. வள்ளி.161);

     [பாதம் → பாத்தியம்]

 பாத்தியம்2 pāttiyam, பெ. (n.)

   உரிமை; right of possession,; claim.

     “கணவன் இறந்து விட்டால் அவனுக்குரிய குடும்பச் சொத்துகளில் மனைவிக்குப் பாத்தியம் உண்டு”

     [பாத்தி → பாத்தியம்]

 பாத்தியம் pāttiyam, பெ. (n.)

   புறாமுட்டி; a plant. (சா.அக.);

மறுவ: பிராய்முட்டி,சிற்றாமுட்டி.

 பாத்தியம்2 pāttiyam, பெ. (n.)

   பெருங்கோரைக் கிழங்கு; root of large sedge grass.

மறுவ. பெருமுத்தக்காக

பாத்தியல்

 பாத்தியல் pāttiyal, பெ. (n.)

   தண்ணீர்மிட்டான்; water root (சா.அக.);

பாத்தியா

 பாத்தியா pāttiyā, பெ.(n.)

   முகம்மதிய மதத்தார் திருமணம் அல்லது இறப்பு (மரண); காலத்தில் குரான் ஓதுகை. (உ.வ.);; the rite of reading the first chapter of the Quran, at a Muhammadan wedding or funeral.

பாத்தியா ஒதினான்.

     [U. fatiha → த. பாத்தியா]

பாத்திரன்

பாத்திரன் pāttiraṉ, பெ.(n.)

   தக்கோன்; competent, worthy person.

     “உயர்ந்த பாத்திரன்” (சேதுபு.சேதுபல.67);.

த.வ.தகுதியானவன், உயர்ந்தவன்

     [Skt. {} → த. பாத்திரன்]

பாத்திரபதம்

பாத்திரபதம் bāddirabadam, பெ.(n.)

   1. ஆறாவது நிலா மாதம் (வின்.);; sixth lunar month.

   2. முற்கொழுங்கால் (பூரட்டாதி); பிற்கொழுங்கால் (உத்திரட்டாதி); எனும் விண்மீன்கள்; the name common to 25th and 26th {}.

   3. தொழுபஃறி (இரேவதி);; the 27th {}.

     [Skt. {}-pada → த. பாத்திரபதம்]

பாத்திரபாகம்

 பாத்திரபாகம் pāttirapākam, பெ.(n.)

   ஏனத்தில் (பாத்திரம்); எண்ணெய் கெடாதபடி யிருக்க இடும் மணப்பொருள் (நாஞ்.);; preservative used to prevent oil from becoming rancid.

த.வ.கசடுநீக்கி

     [Skt. {} → த. பாத்திர+பாகம்]

பாத்திரப்பிரவேசம்

 பாத்திரப்பிரவேசம் pāttirappiravēcam, பெ.(n.)

   நடிகர் மேடையில் தோன்றும் முதற் காட்சி (இக்.வ.);; entrance of actors on the stage.

     [Skt. {} → த. பாத்திரப்பிரவேசம்]

பாத்திரம்

பாத்திரம் pāttiram, பெ. (n.)

   வரகுப்பாத்தி (இ.வ.);; field where raji is grown.

     [பாத்தி → பாத்திரம்]

 பாத்திரம் pāttiram, பெ.(n.)

   1. கொள்கலம் (பிங்.);; vessel, utensil.

   2. இரப்போர் கலம் (சூடா.);; mendicant’s bowl.

   3. பாத்திரன் பார்க்க;see {}.

     “பாத்திரஞ் சிவமென்று பணிதிரேல்” (தேவா.1070.3);.

   4. நாடகத்தில் அரிதாரம் பூசி நடிப்பவ-ன்-ள்;     “நட்டுவக்குறையோ… பாத்திரக் குறையோ” (மதுரைப்.பதிற்றுப்.25);.

   5. இலை (யாழ்.அக.);; leaf.

   6. உடல் (யாழ்.அக.);; body.

   7. எட்டுச் சேர் கொண்ட ஒர் அளவு (யாழ்.அக.);; a standard of measure equal to eight {}.

   8. கட்டளை (யாழ்.அக);; mould.

   9. அமைச்சர் (யாழ்.அக.);; counselor.

   10. வாய்க்கால் (யாழ்.அக.);; canal.

     [Skt. {} → த. பாத்திரம்]

பாத்திரவேதிகை

 பாத்திரவேதிகை pāttiravētigai, பெ.(n.)

   வழிபாட்டு ஏனங்கள் முதலியன வைக்கும் மேடை (பீடம்);(இ.வ.);; a platform or support for the utensils and cups used in divine worship.

     [Skt. {} → த. பாத்திரவேதிகை]

பாத்திலார்

பாத்திலார் pāttilār, பெ.(n.)

   விலைமகள்; prostitutes.

     “பாத்திலார் தாம்விழையும் நாடகஞ் சாராமை” (ஏலாதி,25);.

த.வ.பரத்தை, கணிகையர்

பாத்து

பாத்து pāttu, பெ. (n.)

   1. சோறு (திவா.);; boiled rice.

   2. கஞ்சி (சூடா.);; rice gruel.

   3. ஐம்புலவின்பம்; pleasures of the five senses.

     “பாத்துண்பா னேத்துண்பான் பாடு” (ஏலாதி.44);

     [பற்று → பத்து → பாத்து]

 பாத்து3 pāttu, பெ. (n.)

   1. விளைவுக் குறைச்சலுக்காகச் செய்யப்படும் வரிவிலக்கு; remission of revenue an account of failure of crops.

   2. ஊரின் மொத்த விளைச் சலிலிருந்து செலுத்தப்படும் குறிப்பிட்ட தவச வளவு; fixed payments of grain out of the grass produce of a village.

     [பாகு + பா → பாத்து]

 பாத்து4 pāttu, பெ. (n.)

   1. நான்கு என்ற பொருள் கொண்ட குழூஉக்குறி (வின்);; a cant term meaning four.

பாத்து-தல்

பாத்து-தல் pāddudal,    10. செ.கு.வி. (n.)

   பங்கிடுதல்; divide, to share appoction.

     “பாத்துண்ணுந்தன்மையிலாளரயலிப்பும்” (திரிகடு-க0);

     “நடுவ ணைந்திணை … படுதிரை வையம். பாத்திய பண்பே” (தொல். பொ.2);

     [பகு → பா → பாத்து]

பாத்தூண்

பாத்தூண் pāttūṇ, பெ. (n.)

   1. பகுத்துண்கை; sharing one’s food with others.

பாத்தூண் உடைத்தாயின்” (குறள்.44);

   2.இரப்போர்க்கு இடும் ஐயம் (பிச்சை);; alms.

     “பத்தினிப்பெண்டிர் பாத்தூ ணீத்ததும்” (மணிமே. பதி.64);

பாத்தோய்-த்தல்

பாத்தோய்-த்தல் pāttōyttal,    4. செ.கு.வி. (v.i.)

   நெசவுப் பாவுக்குக் கஞ்சியிடுதல் (வின்);; to size the warp.

     [பா + தோய்-,]

பாநியாமலகம்

 பாநியாமலகம் pāniyāmalagam, பெ.(n.)

   ஒரு வகை நெல்லி (நீர் வேட்கையைத் தடுப்பது);; a kind of gooseberry. which prevents and arrests thirst (சா.அக.);.

பாந்தட்படார்

 பாந்தட்படார் pāndaṭpaṭār, பெ. (n.)

பாம்புச்செடி பார்க்க;See {pémbய-c-ced}

     “அகல்வாய்ப் பாந்தட்படார்ப் பகலு மஞ்சும்”

     [பாந்தள் + படார்]

பாந்தன்

பாந்தன் pāndaṉ, பெ. (n.)

வழிச்செல்வோன்.

 passanger, traveller.

     “அபராந்தர் பாந்தராகி” (இரகு.திக்குவி.221.);

பாந்தம்

பாந்தம் pāndam, பெ. (n.)

   1.

பாந்தவம்(கொ.வ.); பார்க்க;See {pandavam}

   2. சாதிக்கட்டு; caste rules.

     ‘பாந்தத்துக்கு உட்பட்டான்’ (இ.வ.);

   3. இணக்கம்; agreeableness.

     ‘அவனோடு பாந்தமாய்ப் பேசினாள்’ (கொ.வ.);

   4. ஒழுங்கு; order. regularity: system, propriety.

     ‘நீ செய்தது பாந்த மாயிருக்கிறதா?’

   5. பொருத்தம்; something fitting or proper.

     [புற்று → பத்து → பந்து → பந்தம் → பந்தம்]

பாந்தல்

பாந்தல்1 pāndal, பெ. (n.)

   சிற்றூர்; hamlet of a village.

     ‘ஏந்தல் பாந்தலுட்பட’ (S.I. I.vii.67.);

     [பாந்து → பாந்தல்]

 பாந்தல்2 pāndal, பெ. (n.)

   1. பதுங்குகை (சூடா.);; skulking, hiding, burking.

   2. துன்பம்:

 pain, trouble.

     “பாந்தலுறு கரப்பான்” (பதார்த்த.729.);

     [பாந்து → பாந்தல்]

 பாந்தல்3 pāndal, பெ. (n.)

   கடலடியிற் காணும் பள்ளமான இடம் (செங்கை.மீனவ.);; hollow place in deep sea.

பாந்தள்

பாந்தள் pāndaḷ, பெ. (n.)

   1. பாம்பு; snake.

     “பாந்தளஞ் சடில முக்கட் பாவலன்” (திருவாலவா.16,32.);

   2. மலைப்பாம்பு; mountain snake.

     “கானிடைப் பாந்தள் கண்படுப்பன” (சீவக.1900.);

பாந்தவம்

பாந்தவம் pāndavam, பெ. (n.)

   உறவுமுறை; affinity, relationship.

     ‘எனக்குச் சினேக பாந்தவத்தால் யுத்தஞ்செய்ய வந்த’ (பாரதவெண். 797,உரைநடை.);

பாந்தவியம்

 பாந்தவியம் pāndaviyam, பெ. (n.)

பாந்தவம் (வின்.); பார்க்க;See {pāndavam}

பாந்து

பாந்து1 pāndudal,    9. செ.கு.வி. (v.i.)

   பதுங்குதல் (சூடா.);; to skulk hide.

     “ஆந்தை பாந்தியிருப்ப” (கலிங்.127;புதுப்.);

 பாந்து2 pāndudal,    5. செ.குன்றாவி. (v.i)

   பிறாண்டுதல்; to scratch, as with nails.

     “பூனை என்னைப் பாந்தி விட்டது. (நாஞ்.);

 பாந்து3 pāndu, பெ. (n.)

   1. பெந்து (வின்.);; cavity. hollow, deep hole.

   2. வளைவுக்கும் சுவருக்கும் இடையிலுள்ள பாகம்(c.g.);;(arch.);

 spandrel.

   3. சுவரிற் கற்களின் இடையிலுள்ள சந்து; interstices between bricks in a wall.

   4. மேற்கட்டடத்தில் அட்டைகளுக்கு மத்தியிலுள்ள இடம் (கட்டட.நாமா.20.);; celling.

 பாந்து4 pāndu, பெ. (n.)

   மணல் வெளியில் பாரவண்டியிழுக்கப் பயன்படுத்தும் அதிகப்படி மாடுகள் (இ.வ.);; extra pair of bulls used in dragging carts over sandy tracts.

 பாந்து pāndu, பெ. (n.)

   வீட்டுக் கூரைக்கும் சுவருக்கும் இடையில் இருக்கும் சந்து பொந்துகள்; open space in between the top of the wall and the ceiling roof. (கொங்கு);

     [பள்-பாள்-பாந்து]

பாந்துக்கிணறு

 பாந்துக்கிணறு pāndukkiṇaṟu, பெ. (n.)

   பக்கங்களிற் பொந்து விழுந்த கிணறு(வின்.);; well with cavities in the sides.

     [பந்து + கிணறு]

பாந்துச்சுண்ணாம்பு

 பாந்துச்சுண்ணாம்பு pānduccuṇṇāmbu, பெ. (n.)

   மேற்றளம் பூசுவதற்காக நன்றாயரைத்த சுண்ணாம்பு(C.E.M.);(C.E.M.);; ceiling plaster.

     [பாந்து + சுண்ணாம்பு]

பாந்தை

பாந்தை pāndai, பெ. (n.)

பாந்து3, 1.(யாழ்ப்.); பார்க்க, see {pānduo}

பானகம்

பானகம் pāṉagam, பெ.(n.)

   1. சர்க்கரை ஏலம் முதலியன கலந்த குடிநீர்; sweet drink, especially prepared with jaggery and spices.

     “முப்பழம் பானகம்” (சேதுபு.சேதுபல. 137);.

   2. நீர்மோர் (யாழ்.அக.);; a preparation

 of butter-milk.

   3. பருகும் குடிப்பு, அருந்துதல் (பிங்.);; drinking.

த.வ. பருகம்

     [Skt. panaka → த. பானகம்]

பானம்

பானம் pāṉam, பெ.(n.)

   1. குடிக்கை; drinking சலபானங்கூட இல்லை.

   2. அருளொடு செய்யும் செயல்கள் பதினான்கனுள் குடித்தற்கு நீரளிக்கை (நீர்க்கத் தண்டனம்);; giving drinking water, one of 14 {}-virutt.

   3. மது அல்லது புளித்த பிற நீரகங்கள்; toddy or other fermented liquor.

     “பானந்தனையொத்து” (அரிச். பு.நாட்.4);.

   4. பருகுமுணவு (பிங்.);; luquid food.

த.வ. பானம்

     [Skt. {} → த. பானம்]

பானல்

பானல் pāṉal, பெ. (n.)

   1. மருதநிலம் (பிங்.);; agricultural tract.

   2. வயல்(பிங்.);; ricefied

   3. கருங்குவளை(பிங்.);;{kāruņkuvalai} blue nelombo.

     “பானல் பூத்த வெள்ளத்துப் பெரிய

கண்ணார்” (இராமா.உலாவிய.4.);

   4. கடல்; ocean.

     “யானைபட்ட வழிபுனல் யாறெலாம் பானல் பட்ட’ (கம்பரா.முதற்போர்.50);

   5. கள்(அக.நி.);; toddy.

   6. குதிரை(அக.நி.);; horse.

   7. வெற்றிலை(அக.நி.);; betel pepper.

பானவட்டம்

 பானவட்டம் pāṉavaṭṭam, பெ. (n.)

   ஆவுடையார்; base or pedestal of a linga.

     [பானம் + வட்டம்]

பானவியம்

 பானவியம் pāṉaviyam, பெ. (n.)

காசினிக்கீரை பார்க்க;See {kāšinj-k-kirai}

பானாட்கங்குல்

பானாட்கங்குல் pāṉāṭkaṅgul, பெ. (n.)

   நள்ளிரவு; midnight.

     “வயவுப் பெடை யகவும் பானாட் கங்குல்” (குறுந் 301-4);

     “பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்” (குறந்:355-4);

     “பானாட் கங்குலும் பகலும்” (அகம்:57-18);

     “மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்” (அகம்.58-2);

     “படுமழை பொழிந்த பானாட் கங்குல்” (அகம்.92-2);

     [பானாள் + கங்குல்]

பானாள்

பானாள் pāṉāḷ, பெ. (n.)

   1. நள்ளிரவு; midnight.

     “குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்” (நெடுநல்.12.);

     “யானே அன்றியும் உளர்கொல் பானாள்” (நற்.104-8); (இரவு நடுயாமம்);

     “கழுதுகால் கொள்ளும் பொழுதுகொள் பானாள் (நற்.171-9);

     “தானறிந் தன்றோ இலளே பானாள்” (நற்.175-6);

     “யானே மருள்வேன் தோழி பானாள்” (குறுந்.94-3);

     “தானறிந் தனளோ இலளோ பானாள்” (குறுந்.142-3);

     “ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள்” (குறுந்.145-3);

     “முளரி கரியும் முன்பனிப் பானாள்” (அகம்.163-8);

     “ஏனலும் இறங்கப்பொறை உயிர்த்தன பால்நாள்’ (அகநா.192-8);

     “யாமே அன்றியும் உளர்கொல் பானாள்” (அகம்.202-9);

   2. பாதிநாள் (தைலவ.);; half a day.

     [பால் + நாள்]

பானிக்குருச்சி

பானிக்குருச்சி pāṉikkurucci, பெ. (n.)

   1. சீரகம்(சங்.அக.); பார்க்க;See ciragam.

 Cumin.

   2. சீனக்காரம்(யாழ்.அக.);; alum.

பானியவரை

 பானியவரை pāṉiyavarai, பெ. (n.)

   வலம்புரிக்கொடி; a kind of creeper.

மறுவ: பாணியவல்லி (சா.அக.);

பானியவல்லி

 பானியவல்லி pāṉiyavalli, பெ. (n.)

   வலம்புரிக்கொடி (மலை.);; a climber.

     [பானியம் + வல்லி]

பானிறவண்ணன்

பானிறவண்ணன் pāṉiṟavaṇṇaṉ, பெ. (n.)

   பலதேவன்; elder brother of Krishna.

     “நீனிற வண்ணனென்று நெடுந்துகில் கவர்ந்து தன்முன்-பானிற வண்ணனோக்கிற்பழியுடைத் தென்று கண்டாய்” (சீவக.நாமக.);

     “பானிற வண்ணன் போற் பழிதீர்ந்த வெள்ளையும்” (கலி.104-8);

பானீயம்

பானீயம் pāṉīyam, பெ.(n.)

   1. நீர் (பிங்.);; water.

     “பானீயத்துக் கைவரு மெய்பதையா நிற்பர்” (பாரத. நச்சுப். 21);.

   2. பருகுமுணவு; drink.

     “பானீய நிவேதனம்” (திருவிளை. இந்திரன் முடி.16);.

த.வ.அருந்துணவு

     [Skt. {} → த. பானீயம்]

பானு

பானு pāṉu, பெ.(n.)

   1. கதிரவன் (பிங்.);; Sun.

   2. ஒளி(பிங்.);; brightness

   3. அழகு (யாழ்.அக.);; beauty.

   4. சிற்ப நூல் வகை (இருசமய. சிற்பசாத்.2);; a treatise on architecture.

   5. தலைவன் (யாழ்.அக.);; master

   6. அரசன் (யாழ்.அக.);; king.

த.வ. எரியோன்

     [Skt. {} → த. பானு]

பானுகம்பன்

பானுகம்பன் pāṉugambaṉ, பெ.(n.)

   சிவனிய கூட்டத்தாருள் ஒருவன் (கோயிற்பு.நடராச.6.);; a member of Siva’s hosts.

     [Skt. {}-kampa → த. பானுகம்பன்]

பானுகோபன்

பானுகோபன் pāṉuāpaṉ, பெ.(n.)

   சூரபதுமன் மகன் (கந்தபு.புதல்வ.15.);; an Asura, son of {}.

     [Skt. {} → த. பானுகோபன்]

பானுவாரம்

 பானுவாரம் pāṉuvāram, பெ.(n.)

   ஞாயிற்றுக் கிழமை; Sunday.

     [Skt. {} → த. பானுவாரம்]

பானை

பானை1 pāṉai, பெ. (n.)

   1. மண்மிடா; large carthen pot or vessel.

     “பங்கமி விரசிதப் பானைமேல்வழி பொங்கலின்” (அரிச்,புவிவா.85);

     “செம்பு சொரி பானையின் மின்னிஎவ் வாயும்” (நற்.153-3);

     “பகுவாய்ப் பானைக் குவிமுனை சுரந்த” (கல்பானை); (அகம்.157-2);

     ‘மண்பானைத் தண்ணீர் குளிர்ச்சி தருவதாம்” (உ.வ.);

   2. ஓர் அளவு; a measure of capacity (தொல், எழுத்.170,உரை);

   3. நான்கு செம்பு கொண்ட எண்ணெயளவு oil measure=4 cembu.

தெ. பாந ம. பாந

     “உடைந்த பானை ஒட்டினாலும் ஒட்டும்;

மாமி யார் ஒட்டாள்’ (பழ.);

     “பானையில் இருந்தாலல்லவோ அகப்பையில் வரும்” (பழ.);

     “பானையிலே பதக்கு நெல் இருந்தால் மூலையிலே முக்குறுணி தெய்வம் கூத்தாடும்” (பழ.);

     [P]

பானை உடை-த்தல்

 பானை உடை-த்தல் pāṉaiuḍaittal, செ.குன் றாவி (v.t.)

   கண்ணினைத் துணியால் கட்டிக் கொண்டு கையிலுள்ள கம்பினால் பானை யினைக் குறிப்பாக அடித்து உடைத்தல்; to strike the potblindfolded.

மறுவ, உறியடித்தல்

     [பானை+உடைத்தல்]

பானை ஓவியம்

 பானை ஓவியம் pāṉaiōviyam, பெ. (n.)

   கைவினைக் கலைகளில் பானையில் ஓவியம் வரைதல்; art designs on pottery.

     [பானை+ஓவியம்]

பானைக்குடுவை

 பானைக்குடுவை pāṉaikkuḍuvai, பெ. (n.)

   சிறுபானை (யாழ்.அக.);; small pot.

     [பானை + குடுவை]

பானைத்தாளம்

 பானைத்தாளம் pāṉaittāḷam, பெ. (n.)

   ஒயிலாட்டத்தில் பயன்படுத்தப்படும் ஓர் இசைக் கருவி; a musical drum in ‘oyilattam’.

     [பானை+தாளம்]

பானைமூடி

 பானைமூடி pāṉaimūṭi, பெ. (n.)

   பானையை மூட உதவும் மட்கலன்; a lid used to cover an earthen pot.

மறுவ. மடக்கு.

     [பானை + மூடி]

பானையுடக்குமூலி

 பானையுடக்குமூலி pāṉaiyuḍakkumūli, பெ. (n.)

   பிளவைக்கொல்லி; a plant used in carbuncle. (சா.அக.);

மறுவ: பானைவெடிச்சாள்.

பானைவெடிச்சான்

 பானைவெடிச்சான் pāṉaiveḍiccāṉ, பெ. (n.)

   பிளவைகொல்லி(மலை.);; a species of the murdah plant.

     [பானை + வெடிச்சான்]

பான்னா

 பான்னா pāṉṉā, பெ. (n.)

   பச்சை மணி; emerald. (சா.அக.);

பான்மாறு-தல்

பான்மாறு-தல் pāṉmāṟudal,    9. செ.கு.வி (v.i.)

   1. பால்குடி மறத்தல்; to be weaned.

     “பிள்ளை பான்மாறுமோ வதிற்பல்லிடுமே” (அருட்பா,1, திருவருண்முறை.92);

   2. வருந்துதல் (இ.வ.);; to fret, worry oneself.

   3. சோம்பலாயிருத்தல் (வின்.);; to be lazy.

     [பால் + மாறு-,]

பான்முட்டான்

 பான்முட்டான் pāṉmuṭṭāṉ, பெ. (n.)

   குழூஉக்குறியாக வழங்கும் ஒருவகைமீன்; a kind of fish which is used as correctional term.

     [பால் + முட்டான்]

     [P]

பான்முல்லை

பான்முல்லை pāṉmullai, பெ. (n.)

   தலைவியினை மணந்த தலைவன் மனமகிழ்ந்து தம்மை ஒருங்கு கூட்டிய நல்வினையைப் புகழ்ந்து கூறும் புறத்துறை; theme of a lover who has married his ladylove praising the destiny that brought them together.

     “பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த” (சிலப்.3-169);

     “பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி” (சிலப்.4-25);

     [பால் → பான்மை]

பான்று

 பான்று pāṉṟu, பெ. (n.)

   சிறுபூளை; wolly creeper. (சா.அக.);

பாபக்கினம்

 பாபக்கினம் pāpakkiṉam, பெ.(n.)

   எள் (சங்.அக.);; sesame.

     [Skt. {}-ghna → த. பாபக்கினம்]

பாபக்கிரகம்

பாபக்கிரகம் pāpaggiragam, பெ.(n.)

   நன்மை செய்யாக்கோள் (விதான.மரபி.2,உரை.);; unfavourable or malevolent planet.

த.வ.தீயகோள்

     [Skt. {}+graha → த. பாபக்கிரகம்]

பாபசங்கீர்த்தனம்

 பாபசங்கீர்த்தனம் pāpasaṅārttaṉam, பெ.(n.)

   பாழ்வினை அல்லது கரிசு நீங்க அவற்றைச் சமயக் குருவிடம் தெரிவிக்கை (கிறித்து.);; confession of sin.

த.வ.குற்றம் ஏற்பு

     [Skt. {} → த. பாபசங்கீர்த்தனம்]

பாபசமனம்

 பாபசமனம் pāpasamaṉam, பெ.(n.)

   கரிசுக் கழுவாய்; removal or expiation of sin.

     [Skt. {} → த. பாபசமனம்]

பாபட்டான்

 பாபட்டான் pāpaṭṭāṉ, பெ. (n.)

குரா(இ.வ.);;See {kurā} bottle-flower.

பாபட்டை

 பாபட்டை pāpaṭṭai, பெ. (n.)

   தண்ணீர் விட்டான்;  water root. (சா.அக.);

பாபதண்டி

பாபதண்டி pāpadaṇṭi, பெ.(n.)

   கரிசுக்காகத் தண்டனைக்கு உரியவன் (தக்கயாகப், 505);; sinner who deserves punishment.

     [Skt. {} → த. பாபதண்டி]

பாபதத்தம்

பாபதத்தம் pāpadaddam, பெ.(n.)

   1. தீவினை களிற் செலவழிக்கப்படும் பொருள்; property or money lost in evil purseuts.

   2. கள்வர் முதலியோராற் கவரப்படும் பொருள்; property lost in theft.

     [Skt. {}+data → த. பாபதத்தம்]

பாபது

 பாபது pāpadu, பெ.(n.)

பாபத்து பார்க்க;see {}.

பாபத்தி

 பாபத்தி pāpatti, பெ.(n.)

   வேட்டை (சூடா.);; hunting, fishing.

     [Skt. {}-ddhi → த. பாபத்தி]

பாபத்து

பாபத்து pāpattu, பெ.(n.)

   1. செய்தி; item, article, matter, business, affair.

   2. கணக்கு; account, head in accounts.

     ‘அவன் பாபத்திலே செல்லும் ரூபாய் ஐந்து’. (இ.வ.);.

     [U. babat → த. பாபத்து]

பாபமூர்த்தி

 பாபமூர்த்தி pāpamūrtti, பெ.(n.)

   வேடன் (யாழ்.அக.);; hunter.

     [Skt. {}+murti → த. பாபமூர்த்தி]

பாபம்

 பாபம் pāpam, பெ.(n.)

   தீவினைப் பயன்; accumulated result of sinful action.

     [Skt. {} → த. பாபம்]

பாபரபழுத்தை

 பாபரபழுத்தை bābarabaḻuttai, பெ. (n.)

கண்டங்கத்திரி பார்க்க;See {kandari kattari}

பாபவிக்கியானம்

 பாபவிக்கியானம் pāpavikkiyāṉam, பெ.(n.)

பாபசங்கீர்த்தனம் பார்க்க;see {}.

     [Skt. {} → த. பாபவிக்கியானம்]

பாபவிமோசனம்

 பாபவிமோசனம் pāpavimōcaṉam, பெ.(n.)

   பாழ்வினை (குற்றம்); அல்லது கரிசு நீங்குகை; liberation from sins.

     ‘நீ செய்த இந்தக் கொடுஞ்செயலுக்கு பாபவிமோசனம் உண்டா?’ (இ.வ.);.

த.வ.தீவினைக்கழுவாய்

     [Skt. {} → த. பாபவிமோசனம்]

பாபாய்முடி-தல்

 பாபாய்முடி-தல் pāpāymuḍidal, செ.கு.வி. (v.i.)

   திடுமென நேரும் பேரிடர்; to end in disaster.

     “பாடாய் முடியும்” (கொன்றைவே.);

     [பாடு → பாடாய் + முடி-,]

பாபாய்விழு-தல்

பாபாய்விழு-தல் pāpāyviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. நேர்ச்சியுண்டாகும்படி விழுதல்; to have a dangerous fall.

   2. பேரிழப்பாகும்படி மரம் முதலியன சாய்தல்; to fall causing heavy loss, as valuable tree;

 to lie prostrate

 as the crops of a field.

     [பாடாய் + விழு-,]

பாபாவறுதி

பாபாவறுதி pāpāvaṟudi, பெ. (n.)

   1. பேரிழப்பு; very heavy or severe damage;great loss.

   2. அடிபட்டுப் படுக்கையாகக் கிடக்கை; bedridden condition after a severe injury.

மறுவ: பாடாவாரி.

     [பாடு → ஆ + அறுதி]

பாபிட்டன்

 பாபிட்டன் pāpiṭṭaṉ, பெ.(n.)

   தீச்செயல் புரிந்தவன்; sinful man.

     [Skt. {} → த. பாபிட்டன்]

பாபிட்டை

 பாபிட்டை pāpiṭṭai, பெ.(n.)

   கொடுந்தீமை செய்தவள்; sinful woman.

     [Skt. {} → த. பாபிட்டை]

பாபு

பாபு2 pāpu, பெ. (n.)

   1. கதவு; door.

   2. பகுதி.

 section.

   3. கணக்கின் தலைப்பு; title, head of accounts.

     [பகுப்பு → பாப்பு → பாபு]

 பாபு1 pāpu, பெ.(n.)

   முதலாளி; hord, master.

     [H. babu → த. பாபு]

 பாபு2 pāpu, பெ.(n.)

   1. கதவு; door;

   2. பகுதி; section.

   3. கணக்கின் தலைப்பு; title, head of accounts.

     [U. {} → த. பாபு]

பாபுவார்

 பாபுவார் pāpuvār, பெ. (n.)

   விளக்கங்காட்டிப் பிரித்தெழுதிய கணக்கு(C.G.);; head or items of account, arranged or classified.

     [பகுப்பு + வாரி]

 பாபுவார் pāpuvār, பெ.(n.)

   கரணியங் கூறி பிரித்தெழுதிய கணக்கு; head or items of account, arranged or classified.

     [U. {} → த. பாபுவார்]

பாப்படு-த்தல்

 பாப்படு-த்தல் pāppaḍuttal, செ.குன்றாவி. (v.t.)

   பரப்பி விரித்தல்; to spread.

     “மழைக் கண்ணார் ……. பாப்படுத்த பள்ளி”

     [பா + பாப்படு-,]

பாப்பட்டான்

 பாப்பட்டான் pāppaṭṭāṉ, பெ. (n.)

   திரணி; bottle flower. (சா.அக.);

மறுவ: பாப்பட்டை

பாப்பட்டை

 பாப்பட்டை pāppaṭṭai, பெ. (n.)

   குரா எனும் புதர்ச்செடி; a shrub, usually found in barren lauds.

பாப்பம்

 பாப்பம் pāppam, பெ. (n.)

   பருப்புச் சோறு; cooked rice (nurs.);

     [பருப்பு → பப்பு → பாப்பு → பாப்பம்]

பாப்பர மூஞ்சான்

 பாப்பர மூஞ்சான் pāpparamūñjāṉ, பெ. (n.)

   ஒரு மீன்; a kind of fish.

     [P]

பாப்பரி

பாப்பரி pāppari, பெ. (n.)

   1. செந்நாகம்; red cobra.

   2. நாகம்; cobra. (சா.அக.);

     [பாம்பு + அரி = பாப்பரி. அரி = சிவப்பு]

 பாப்பரி pāppari, பெ.(n.)

   1. செந்நாகம்; red cobra.

   2. நாகம்; cobra. (சா.அக.);

த.வ.நல்லபாம்பு, அரச நாகம்

பாப்பா

பாப்பா pāppā, பெ. (n.)

   1. பாவை; doll.

   2. சிறுகுழந்தை; little child (nurs.);

   3. கண்ணின் கருவிழி (இ.வ.);; iris of the eye.

     [பாவை → பாப்பா]

பாப்பா நொண்டி

 பாப்பா நொண்டி pāppānoṇṭi, பெ. (n.)

   குழந்தையின் நடையினைப்போல் குதித்து குதித்து நடக்கும் நொண்டி விளையாட்டு; a limping game like the child walk.

     [பாம்பா+நொண்டி]

பாப்பா பழுத்தை

 பாப்பா பழுத்தை pāppāpaḻuttai, பெ. (n.)

   கண்டங்கத்திரி விதை; brahmin mully, indian night shade.

மறுவ: பாபா பழுத்தை.

பாப்பாசு

பாப்பாசு pāppācu, பெ. (n.)

பாப்பாச்சி பார்க்க;See {pappacci}

     “தன்காலிலே பாப்பாசும் போட்டு” (விறலிவிடு 805.);

     [பாப்பாச்சி → பாப்பாக]

பாப்பாச்சி

பாப்பாச்சி1 pāppācci, பெ. (n.)

பாப்பா(இ.வ.);

   1. பார்க்க;See {pappa,}

     [பாவை → பாப்பா → பாப்பாச்சி]

 பாப்பாச்சி pāppācci, பெ.(n.)

   ஒரு வகை மிதியடி; slippers.

த.வ.செருப்பு, காலணி

     [U. {} → த. பாப்பாச்சி]

பாப்பாத்தி

பாப்பாத்தி1 pāppātti, பெ. (n.)

   1. வண்ணத்துப் பூச்சி; a kind of butterfly.

   2. ஒரு வகைக் கழுகு; a kind of superior kite.

ஒருகா: [பாப்பு → பாப்பாத்தி]

 பாப்பாத்தி pāppātti, பெ. (n.)

பார்ப்பணி பார்க்க;See {parppani}

     [பாப்பான் → பாப்பாத்தி ]

பாப்பாத்தி மூலை

 பாப்பாத்தி மூலை pāppāttimūlai, பெ. (n.)

   கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakkurichchi Taluk.

     [பாப்பான்+அத்தி+மூலை]

பாப்பாத்தி மைனா

 பாப்பாத்தி மைனா pāppāttimaiṉā, பெ. (n.)

   ஒரு வகை நாகணவாய்ப்புள் (இ.வ.);; pagoda thrush, temenuchus pagodarum.

     [பாப்பாத்தி + மைனா]

     [P]

பாப்பாத்திக் கழுகு

 பாப்பாத்திக் கழுகு pāppāttiggaḻugu, பெ. (n.)

   ஒரு வகைப் பெண் கழுகு; a brahmini female vulture, egyptian vulture.

     [பாப்பாத்தி + கழுகு]

     [P]

பாப்பாத்திப்பூச்சி

 பாப்பாத்திப்பூச்சி pāppāttippūcci, பெ. (n.)

   வண்ணத்துப் பூச்சி(வின்.);; butterfly.

     [பாப்பாத்தி + பூச்சி]

பாப்பான்

 பாப்பான் pāppāṉ, பெ. (n.)

பார்ப்பான் பார்க்க;See {pārppän}

     [பார்ப்பான் → பாப்பான்]

பாப்பான்பூண்டு

 பாப்பான்பூண்டு pāppāṉpūṇṭu, பெ. (n.)

   காட்டுச்சாயவேர்; wild chayroot.

     [பார்ப்பான் → பார்ப்பான் + பூண்டு]

பாப்பாயம்

 பாப்பாயம் pāppāyam, பெ. (n.)

   ஒருவகை நறுமணச்செடி; costus shrub.

மறுவ: கோட்டம்.

பாப்பார மைனா

 பாப்பார மைனா pāppāramaiṉā, பெ. (n.)

பாப்பாத்தி மைனா(இ.வ.); பார்க்க;See {pappathi mainā}

     [பார்ப்பார் → பாப்பார + மைனா]

பாப்பார வெள்ளை

 பாப்பார வெள்ளை pāppāraveḷḷai, பெ. (n.)

   தூய வெண்ணிறமுடைய மாடு; pure white coloured cow, which is believable as in auspicious.

மறுவ: பாப்பார வெள்ள

     [பார்ப்பார் → பாப்பார + வெள்ளை]

பாப்பாரக் கோலம்

பாப்பாரக் கோலம் pāppārakālam, பெ. (n.)

   மரக்காயரின் திருமணத்தில் மணமகள் பார்ப்பனிக் கோலம் பூண்டு ஒரு கையில் செம்பும், ஒருகையில் தடியும் கொண்டு மணமகனிடம் சென்று சொல்லாடி, அவன் தன் செம்பில் பலவகை நாணயங்களையிட அவற்றைப் பெற்றுத் தன் அறைக்குச் செல்லுஞ் சடங்கு(E.T.V. 5.);; a marriage ceremony amongst maskkayar, when the bride, dressed like a brahman woman and holding a brass vessel in one hand and a stick in the other parleys with the bride-groom until he puts a number of coins in the vessal, and retires in triumph to her chamber.

     [பார்ப்பார் → பாப்பார + கோலம்]

பாப்பாரக்கனி

 பாப்பாரக்கனி pāppārakkaṉi, பெ. (n.)

   கறிப் புடலை; snake guard used for curry. (சா.அக.);

பாப்பாரத்தென்னை

 பாப்பாரத்தென்னை pāppāratteṉṉai, பெ. (n.)

   கேளி என்னும் தென்னைவகை; brahman cocoanut (I.);

     [பார்ப்பார் → பாப்பார + தென்னை]

பாப்பாரநாகம்

 பாப்பாரநாகம் pāppāranākam, பெ. (n.)

   செந்நாகம் (வின்.);; red cobra.

     [பார்ப்பார் → பாப்பார + நாகம்]

     [P]

பாப்பாரப்புளி

 பாப்பாரப்புளி pāppārappuḷi, பெ. (n.)

   பெருக்கமரம்; brahmin tamarind.

மறுவ: பப்பரப்புளி, பொந்தம் புளி. (சா.அக.);

     [பார்ப்பார் → பாப்பார + புளி]

பாப்பாரமுள்ளி

 பாப்பாரமுள்ளி pāppāramuḷḷi, பெ. (n.)

முள்ளி பார்க்க; see indian nightshade.

     [பார்ப்பார் → பாப்பார + முள்ளி]

பாப்பினி

 பாப்பினி pāppiṉi, பெ. (n.)

   தாராபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Dharapuram Taluk.

     [பார்ப்பான்-பாப்பினி]

பாப்பு

பாப்பு1 pāppu, பெ. (n.)

பார்ப்பான் பார்க்க;See {pappai,}

     “பாப்புக் குரங்கைப் படையாகக் கூட்டிவந்தீர்” (தமிழ்நா. 200.);

     [பார்ப்பு → பாப்பு]

 பாப்பு pāppu, பெ.(n.)

   ரோமன் கத்தோலிக சமயத்தாருடைய தலைமைத் தலைவர் (கிறித்து.);; Pope, head of the Roman Catholic church.

     [L.{} → த. பாப்பு]

பாப்புப்பகை

பாப்புப்பகை pāppuppagai, பெ. (n.)

   கருடன்; garuda, the enemy of serpants. (பாம்பின் பகை.);

     “பாப்புப்பகையைக் கொடி யெனக் கொண்ட கோடாச் செல்வனை” (பரிபா. 13, 39.);

     [பாம்பு → பாப்பு + பகை]

     [P]

பாப்புரி

பாப்புரி1 pāppuri, பெ. (n.)

பாம்புரி (வின்.); பார்க்க;See {pāmburi}

     [பாம்பு + உரி → பாப்பு + உரி]

 பாப்புரி pāppuri, பெ. (n.)

   1. கொம்மட்டி மாதளை; melonlime.

   2. பாம்புச் சட்டை; snake skin. (சா.அக.);

     [பாம்பு + உரி → பாப்புரி]

பாப்புவார்

 பாப்புவார் pāppuvār, பெ. (adj.) (n.)

பாபுவார்(R.F.); பார்க்க;See {pābuār}

பாப்பூசு

 பாப்பூசு pāppūcu, பெ. (n.)

பாப்பாசு பார்க்க;See {pappasய} (யாழ்.அக.);

     [பாப்பாசு → பாப்பூசு]

பாப்பை

 பாப்பை pāppai, பெ. (n.)

   களியிட்டுக் கட்டல்; bandaging after applying poultice. (சா.அக.);

 பாப்பை pāppai, பெ.(n.)

   களியிட்டுக்கட்டல்; bandaging after applying poultice. (சா.அக.);

த.வ.மாவுகட்டு

பாமகள்

பாமகள் pāmagaḷ, பெ. (n.)

   கலைமகள்; sarasvati, goddess of poetry.

     “பாமகள் போலு நீயே” (ஞானவா. லீலை. 74.);

     [பா + மகள்]

பாமக்கினம்

 பாமக்கினம் pāmakkiṉam, பெ. (n.)

   கந்தகம் (வைத்தியபரி.);; sulphur.

பாமடந்தை

 பாமடந்தை pāmaḍandai, பெ. (n.)

பாமகள் (பிங்.);பார்க்க;See {pā-magal}

 goddess of poetry.

     [பா + மடந்தை]

பாமணி

 பாமணி pāmaṇi, பெ. (n.)

   மன்னார்குடி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Mannargudi Taluk.

     [பம்மல்+அணி]

பாமதம்

பாமதம் pāmadam, பெ. (n.)

   1. வாலுளுவை; spindle or intellect tree. (சா.அக.);

   2. உளுவை;   மீன் வகை; a fresh waterfish.

பாமதுவா

 பாமதுவா pāmaduvā, பெ. (n.)

   ஆடாதோடை; malabar winter cherry. (சா.அக.);

பாமன்

பாமன் pāmaṉ, பெ. (n.)

   1. கதிரவன்; sun.

   2. உடன்பிறந்தாள் கணவன்; sister’s husband.

 பாமன் pāmaṉ, பெ.(n.)

   1. ஞாயிறு; Sun.

   2. உடன் பிறந்தாள் கணவன்; sister’s husband.

     [Skt. {} → த. பாமன்]

பாமம்

பாமம்1 pāmam, பெ. (n.)

   பரப்பு(இலக்.அக.);; extension, expanse.

 பாமம்2 pāmam, பெ. (n.)

   1. சிரங்கு; itch, eczema.

   2. புண்; sore.

     “பாமாக்குருதிப் படிகின்ற —– சேடகம்” (கம்பரா. மூலபல. 203.);

     [பா → பாமம்]

 பாமம்3 pāmam, பெ. (n.)

   1. சினம்(யாழ்.அக.);; anger.

   2. ஒளி; brilliance.

     “பாமமா கடல் கிடங்காக” (கம்பரா. அரசி. 7);

     [பா → பாமம்]

 பாமம்1 pāmam, பெ.(n.)

   1. சிரங்கு; itch, eczema.

   2. புண்; sore.

     “பாமக்குருதிப் படிகின்ற… சேடகம்” (கம்பரா.மூலபல.203);.

     [Skt. {} → த. பாமம்]

 பாமம்2 pāmam, பெ.(n.)

   1. சினம் (யாழ்.அக.);; anger.

   2. ஒளி; brilliance.

     “பாமமா கடல் கிடங்களாக” (கம்பரா.அரசி.7);.

     [Skt. {} → த. பாமம்]

பாமரன்

பாமரன் pāmaraṉ, பெ.(n.)

   1. அறிவிலான்; ignorant, stupid person.

     “பாமரரெனக் காண்பிப்பார் பண்டிதத் திறமை காட்டார்”. (கை வல். தத்து.96);

   2. இழிந்தோன்; vile, low, base person.

   3. அரசற்குத் துணைவன் (யாழ்.அக.);; king’s companion.

     [Skt. {} → த. பாமரன்]

பாமரம்

பாமரம் pāmaram, பெ.(n.)

   1. முட்டாள்தனம்; ignorance, stupidity.

     “பாமரத் திமிரபானு” (பிரபோத.6,20);

   2. மூடன்; dullard.

     “பாமரமே யுனக்கென்ன” (இராமநா.அயோத்தி. 5);.

     [Skt. {} → த. பாமரம்]

பாமாடு

 பாமாடு pāmāṭu, பெ. (n.)

   பாய்மரத்தின் முகடு; peak of the mast.

     [பாய்முகடு → பாமூடு → பாமாடு]

பாய்முகடு = கடலில் தொலை தூரமாய்ச் சென்ற வேளை மரக்கலத்தின் பாய் மட்டுமே தெரியுந் தோற்றம். (நெல்லை.மீனவ.);

பாமாரி

 பாமாரி pāmāri, பெ. (n.)

   கந்தகம் (சங்.அக.);; sulphur.

 பாமாரி pāmāri, பெ.(n.)

   கந்தகம் (சங்.அக.);; sulphur.

     [Skt. {} → த. பாமாரி]

பாமாரோகம்

 பாமாரோகம் pāmārōkam, பெ. (n.)

   பேய்ச் சொறி (பைஷஜ.);; scabies, itch.

 பாமாரோகம் pāmārōkam, பெ.(n.)

   பேய்ச் சொறி (பைஷஜ.);; scabies, itch.

     [Skt. {} → த. பாமாரோகம்]

பாமார்சா

 பாமார்சா pāmārcā, பெ. (n.)

   பரவியெழுங் கடலலை (நெல்லை.மீனவ.);; spreading sea waves.

பாமாலை

 பாமாலை pāmālai, பெ. (n.)

   கவிமாலை(திவ்.நாய்ச். தனியன்);; garland of verses in praise of a person garland of hymns.

     [பா + மாலை]

பாமினி

பாமினி2 pāmiṉi, பெ. (n.)

   சிறுசண்பகம்; cananga flower plant. (சா.அக.);

 பாமினி pāmiṉi, பெ.(n.)

   பெண் (சங்.அக.);; woman.

     [Skt. {} → த. பாமினி]

பாமூலை

 பாமூலை pāmūlai, பெ. (n.)

   வளி மூலை; north western direction.

     [பாய் (காற்று பாய்கின்ற); – பா+மூலை]

பாமை

பாமை pāmai, பெ. (n.)

   சிரங்கு (தைலவ. தைல. 140.);; itch.

 பாமை1 pāmai, பெ.(n.)

   சிரங்கு (தைலவ.தைல. 140);; itch.

     [Skt. {} → த. பாமை]

 பாமை2 pāmai, பெ.(n.)

   கண்ணனுக்குகந்த தேவியருள் ஒருத்தி (பாகவத.10,25,1);; a favourite wife of {}.

     [Skt. {} → த. பாமை]

பாம்படம்

 பாம்படம் pāmbaḍam, பெ. (n.)

   பெண்கள் அணியும் ஒரு வகைக் காதணி; a heavy ornament for the ears (worn by rural women);.

 பாம்படம் pāmbaḍam, பெ. (n.)

   துளைக்காதில் அணியப்படும் பொன் அணிகலன்; a gold pendant worn by women in the ablongear

 lobe. (நெல்லை);

     [பாவு-பாம்+படம்]

பாம்பணி மாநகர்

பாம்பணி மாநகர் pāmbaṇimānagar, பெ. (n.)

   பாமணி என்னும் தஞ்சை மாவட்டத்து ஊர்; a place name in Tanjore Dt.

     “பருப்பத வார் சிலையார் தம் பாம்பணி மாநகர் தன்னில் பாதளீச்சரம் வணங்கி” (பெரிய-கழறிற்119, 120);

     [பாம்பணி + மாநகர்]

பாம்பணை

பாம்பணை pāmbaṇai, பெ. (n.)

திருமாலின் பாம்புப் படுக்கை: {Thirumāl} serpent-couch.

     “பாம்பணைப் பள்ளிகொண்ட மாயன்” (திவ். திருமாலை, 20.);

     [பாம்பு + அணை]

பாம்பணைப்பள்ளி

பாம்பணைப்பள்ளி pāmbaṇaippaḷḷi, பெ. (n.)

   பாற்கடலில் திருமால் பள்ளி கொண்டிருக்கும் ‘ஆதிசேடன்’ என்னும் பாம்புப் படுக்கை;{Thirumāl’sk} sopantcouch.

     “பாம்பணைப் பள்ளி யமர்ந்தோ னாங்கண்” (பெரும். 373.);

     [பாம்பணை + பள்ளி]

     [P]

பாம்பனடிகள்

பாம்பனடிகள் pāmbaṉaḍigaḷ, பெ. (n.)

   பாம்பன் என்னும் ஊர்க்கருகில் உள்ள பிரப்பன் வலக என்ற சிற்றூரில் பிறந்தவர். இவர் முருகனருள் பெற்றுத் தோத்திர சாத்திர வடிவமான பல செய்யுள் நூல்களும் உரைநடை வடிவான நூல்களும் இயற்றியவர். இவரியற்றிய பாடல்கள் ஆறு மண்டலமாகத் தொகுக்கப் பட்டுள்ளன; a well known poet bom in {pirappanwalasu,} near {pâmban} who was a devotee of lord marugan his poems are compiled by six {mangalams} total of 6666

     [பாம்பன் + அடிகள்]

பாம்பன்

பாம்பன் pāmbaṉ, பெ. (n.)

   இராம நாதபுரத்துச்சிற்றூர்; a place name of Ramanathpuram.

இராமநாதபுரம் மாவட்டத்தில் மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 90 கல் தொலைவிலுள்ள ஒரு சிற்றூர். இது பாம்பன் கால்வாயின் கரையிலுள்ளது. இங்கு சுமார் 100 அடி உயரமுள்ள கலங்கரை விளக்கம் உள்ளது. அதன் ஒளி 12-14 கல் துரம் தெரியும்.

     [பாம்பு (வளைவு); → பாம்பன்]

   பாம்பன் கால்வாய் இராமநாதபுரத்தையடுத்த மண்டபத்திற்கும் இராமேசுவரம் தீவிற்கும் இடையேயுள்ள கால்வாய்; a channel betwen south india and Rameswaram.

பாம்பரணை

 பாம்பரணை pāmbaraṇai, பெ. (n.)

   பாம்பைப் போல் நச்சுள்ள அரணை வகை; a poisonous horse lizard with red tail. (சா.அக.);

க. ஹாவுராணி

     [பாம்பு + அரணை]

பாம்பாக்கம்

 பாம்பாக்கம் pāmbākkam, பெ. (n.)

   ஆரணி வட்டத்தில் உள்ள ஒரு ஊர்; a village in Arani.

     [மாயாக்கம்-மாம்பாக்கம்]

அழகு அல்லது பெரிய என்ற பொருளில் இவ்வூர் அழைக்கப்பட்டிருக்கலாம்.

பாம்பாடி

பாம்பாடி pāmbāṭi, பெ. (n.)

   திருமால் (நாமதீப. 51.);;{Visņu.}

     [பாம்பு + ஆடி]

பாம்பாட்டம்

 பாம்பாட்டம் pāmbāṭṭam, பெ. (n.)

   ஆறுமுதலியவற்றின் வளைந்து செல்லும் போக்கு (வின்.);; a zigzag, meandering course.J

பாம்பாட்டி

பாம்பாட்டி pāmbāṭṭi, பெ. (n.)

   1. பாம்பைப் பிடித்துப் பழக்கி ஆட்டுபவன்; snake – charmer.

   2. வரிக் கூத்து வகை (சிலப். 3, 13, உரை);; a kind of dance.

   3. பாம்பாட்டிச் சித்தர் பார்க்க;See {pâmbaff-c-cittar}

     ‘பாம்பாட்டி பாம்பிலே, கள்ளன் களவிலே’ (பழ.);

     ‘பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு;

கள்ளனுக்குக் களவிலே சாவு’ (பழ.);

தெ. ஆவாடிக

     [P]

பாம்பாட்டிச் சித்தர்

பாம்பாட்டிச் சித்தர் pāmbāṭṭiccittar, பெ. (n.)

   பதினெண் சித்தருள் ஒருவர்; sittar. one among the eighteen.

     [பாம்பாட்டி + சித்தர்]

     [இச்சித்தர் பாண்டிநாட்டில் பிறந்து சட்டை முனியிடம் தீக்கை பெற்றார் என்றும் திருக் கோகரணத்தில் பிறந்து மருதமலையில் வாழ்ந்து பல சித்துகள் நடத்தினார் என்றும், மருதமலையில் இவர் வாழ்க்கை பற்றிய சின்னங்கள் இன்றும் உள்ளன என்றும் கூறுவர். இவர் பாடிய ‘ஆடுபாம்பே’ என்ற தொடக்கமுடைய பாடல்கள் 129 இன்று வழக்கில் உள்ளன. இவை கடவுள் வணக்கம், குருவணக்கம், பாம்பின் சிறப்பு, சித்தர் வல்லபம், சம்வாதம். பொன்னாசை பெண்ணாசை விலக்கல், யாக்கை நிலையாமை, யாக்கை இயல்பு, பாச நீக்கம், சொரூபதரிசனம், குரு உபதேசம், ஞானதரிசனம் என்ற தலைப்புகளில் இறுதிப் பகுதி பத்துப் பாடல் மேனி அமைந்துள்ளன. இறுதிப் பகுதி மட்டும் எண்சீரடி ஆசிரிய மண்டிலங்கள் (விருத்தங்கள்);. மற்றவை இரண்டடி கொண்டவை. சித்தர் பாடல் என்ற மாத்திரத்திலே

     “நாதர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பே-நச்சுப் பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே’ என்ற இவருடைய பாடல் எல்லாருக்கும் நினைவு வரும். புன்னாகவராளி அராகத்தில் அமைந்த இவர் பாடல்களைத் தழுவி இன்று வரையில் பலர் பாடல் செய்திருக்கிறர்கள்.

இவர் பாடல்கள் சிவனியச் சார்பான மெய்ப்பொருள் கொண்டவை. பாம்பு வடிவாக மண்டலித்துள்ள குண்டலினி ஆற்றலை எழுப்பி அதன் மூலம் ஆதனியல் காட்சியும் தெய்வக்காட்சியும் காண்பதை இவை கூறும். பல பகுதிகள் வாலாயமான கருத்துகளாயினும், எளிய நடையாலும், சொல் நயத்தாலும். தெளிந்த உவமையாலும் இவை சிறந்த இலக்கியப் பண்புடையவை. நூலில் காணும் உவமைகள் மிக்க நயமானவை. இடைச் செருகல்களும் சேர்ந்துள்ளன. காலம் விளக்கமாகத் தெரியாதபோதிலும், சொற்களை ஆராயும் போது, 14ஆம் நூற்றாண்டு என்று கருதலாம்.

பாம்பாட்டி என்பது பல்வரிக் கூத்துள் ஒன்று என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறர். இது பாம்பை எடுத்து ஆட்டுகின்ற பிடாரைக் குறிப்பிடுவது ஆகும். இச்சித்தர் பெயரில் வரும்போது, இது குண்டலினி ஆற்றலாகிய பாம்பை ஆட்டுதல் என்று பொருள்படும். சித்தராரூடம் என்ற நூல் இவர் செய்ததென்று சிலர் கூறுவர். இதற்குச் சான்றில்லை இந்நூலை நச்சினார்க்கினியர் குறிப் பிடுகிறார். இது காலத்தால் இச்சித்தருக்கு முற்பட்டதெனக் கூறலாம்.]

பாம்பாட்டிப் பச்சிலை

 பாம்பாட்டிப் பச்சிலை pāmbāṭṭippaccilai, பெ. (n.)

   வெட்டுண்ட தசையைக் கூடச் செய்யும் தொழுகண்ணிப் பச்சிலை; talegraph plant which is capable of uniting or joining shivered muscles. (சா. அக.);

மறுவ: அரவாட்டிப் பச்சிலை

     [பாம்பாட்டி + பச்சிலை]

பாம்பாட்டு

பாம்பாட்டு1 pāmbāṭṭudal, செ.கு.வி. (v.i.)

   பாம்பைப் படமெடுத்தாடச் செய்தல்; to make a cobra dance with its hood outspread.

 பாம்பாட்டு2 pāmbāṭṭudal, செ.குன்றா.வி. (v.t.)

தொந்தரவு பண்ணுதல்(வின்);

 to trouble, give annoyance.

க. ஹாவாடிசு

     [பாம்பு + ஆட்டு]

பாம்பு

பாம்பு pāmbu, பெ. (n.)

   1. ஊர்ந்து செல்லும் உயிரிவகை; snake, serpent.

     “பாம்போ டுடனுறைந் தற்று” (குறள், 890.);

   2. நிழற்கோள் (இராகு அல்லது கேது);; ascending or descending node of the moon.

   3. ஆயிலியம் (பிங்.); (கவ்வை); பார்க்க;See the ninth naksatra.

   4. பகல் முழுத்தங்களிலொன்று (விதான குணாகுண. 73.);;   5. நாணலையும் வைக்கோலையும் பரப்பி மண்ணைக் கொட்டிச் சுருட்டப்பட்ட திரணை; ropes of twisted reeds and straw with earth inside.

     “பாம்புகளுருட்டுமென்பார்” (திருவாத.பு.மண்சு.21.);

   6. நீர்க்கரை (பிங்.);; bank of a river or tank.

   7. தாளக் கருவி வகை (பரத. தாள. 35.);; a kind of cymbals.

     ‘பாம்பு தின்கிற ஊரிலே போனால் நடு முறி

நமக்கு என்று இருக்க வேண்டும்’ (பழ.);

     ‘பாம்பை முட்டையிலே, புலியைக் குட்டியிலே கொல்ல வேண்டும்’ (பழ.);

     ‘பாம்பு பகையும் தோல் உறவுமா’ (பழ.);

     ‘பாம்போடு பழகேல்’ (பழ.);

     ‘பாம்புக்குப் பகை கருடன்’ (பழ.);

     ‘பாம்பும் நோவாமற் பாம்பு அடித்த கோலும்

நோவாமல் இருக்க வேண்டும்’ (பழ.);

     ‘பாம்பறியும் பாம்பின் கால்’ (பழ.);

     ‘பாம்பின் வாய்த் தேரை போல’ (பழ.);

     ‘பாம்புக்கு அரசன் மூங்கில் தடி’ (பழ.);

     ‘பாம்பிற்குப் பால்வார்த்தது போல’ (பழ.);

     ‘பாம்பு தன் பசியை நினைக்கும்;

தேரை தன் விதியை நினைக்கும்’ (பழ.);

     “பாம்பிலும் பாம்புக் குட்டி நஞ்சு அதிகம்,

வீரியமும் அதிகம்” (பழ.); ‘பாம்பின் குட்டி

பாம்பு, அதன் குட்டி நட்டுவாக்காலி’ (பழ.);

     ‘பாம்புக்கு மூப்பு இல்லை’ (பழ.);

     “பாம்பு என்றால் படையும் நடுங்கும்” (பழ.);

     ‘பாம்பு கடிக்கத்தேளுக்குப்பார்க்கிறதோ?’ (பழ.);

     ‘பாம்புக்குப் பகை பஞ்சமா?’ (பழ.);

     ‘பாம்புக்குப் பால் வார்த்து வளர்த்தாலும்

நஞ்சைக் கொடுக்கும்’ (பழ.);

     ‘பாம்பும் கீரியும் போல’ (பழ.);

     ‘பாம்பு பசிக்கில் தேரையைப் பிடிக்கும்

அது போல, சிறியோர் சிறிய காரியங்களையே செய்வார்’ (பழ.);

     ‘பாம்பும் கீரியும் போலப் பல காலம் வாழ்ந்தேன்’ (பழ.);

தெ. பாமு

க.து. பாவு

ம. பாம்பு.

     [பம்பு → பாம்பு]

பாம்பு என்பது நாகத்துக்கேயுரிய சிறப்புப் பெயர் பரவுதல்-விரிதல் எனப்பொருள்படும் பம்பு (பம்புதல்); என்னுஞ் சொல் பாம்பு எனத் தலைநீண்டு, படம் விரிக்கும் அரவின் பெயராயிற்று, ஆயினும் அப்பெயர் இனம் பற்றி விரியன், சாரை, வழலை, மண்ணுளி, இருதலை மணியன் முதலான எல்லாவற்றுக்கும் பொதுப்பெயராயிற்று ஆனைமையால், படம் விரிப்பதாகிய உண்மையான பாம்பு, நல்ல பாம்பு எனப்பட்டது.

ஒ.நோ. நற்றாய், நல்லெண்ணெய் –தமிழாரம்

பாம்பு தொடர் ஓட்டம்

 பாம்பு தொடர் ஓட்டம் pāmbudoḍarōḍḍam, பெ. (n.)

   நிலைக்கட்டைகளை வரிசையாக நிறுத்தி அவற்றினைச் சுற்றிச்சுற்றி வருதல்; snake relay race.

     [பாம்பு+தொடர்+ஒட்டம்]

பாம்புகண்டசித்தன்

 பாம்புகண்டசித்தன் pāmbugaṇṭasittaṉ, பெ. (n.)

   கரடி (வின்.);; bear. lit., {cittan} who finds snakes, while burrowing for white ant.

     [பாம்பு + கண் + சித்தன்]

பாம்புகொல்லி

பாம்புகொல்லி pāmbugolli, பெ. (n.)

   1. கீரிப்பூடு; indian snake root.

   2. அரவதன்; herb of repentance. (சா.அக.);

     [பாம்பு + கொல்லி]

பாம்புக்கடி

 பாம்புக்கடி pāmbukkaḍi, பெ. (n.)

   பாம்பு தீண்டுகை; snake bite.

     [பாம்பு + கடி]

பாம்புக்கண்ணி

 பாம்புக்கண்ணி pāmbukkaṇṇi, பெ. (n.)

   சங்கங்குப்பி; smooth volkameria. (சா.அக.);

மறுவ: பீநாறிச்சங்

     [பாம்பு + கண்ணி]

     [P]

பாம்புக்கல்

 பாம்புக்கல் pāmbukkal, பெ. (n.)

   பாம்பின் நஞ்சை நீக்கும் ஒருவகைக் கல்; snake stone, porous or absorbent substance regarded as efficacious in curing snake-bite.

     [பாம்பு + கல்]

பாம்புக்கள்ளி

 பாம்புக்கள்ளி pāmbukkaḷḷi, பெ. (n.)

கள்ளிவகை (நாஞ்.);

 a kind of spurge.

     [பாம்பு + கள்ளி]

பாம்புக்குத் தச்சன்

 பாம்புக்குத் தச்சன் pāmbukkuttaccaṉ, பெ. (n.)

   பாம்பின் வீடாகிய புற்றைக் கட்டும் கறையான்(வின்.);; lit.., housebulider for a serpant.

     [பாம்புக்கு + தச்சன்]

பாம்புக்கோலா

 பாம்புக்கோலா pāmbukālā, பெ. (n.)

   பாம்புருவுடைய கோலாமீன் (சா.அக.);; a kind of {kola} fish which have a resemblance of snake.

     [பாம்பு + கோலா]

     [P]

பாம்புக்கோவை

 பாம்புக்கோவை pāmbukāvai, பெ. (n.)

   ஐவிரலிச்செடி; bryonia. (சா.அக.);

     [பாம்பு + கோவை]

     [P]

பாம்புச்சட்டம்

 பாம்புச்சட்டம் pāmbuccaṭṭam, பெ. (n.)

   கட்டைச்சுவர் அல்லது தாழ்வாரத்தில் ஓடும் நெடுக்குமரம்; bressummer.

     [பாம்பு + சட்டம்]

பாம்புச்சட்டை

 பாம்புச்சட்டை pāmbuccaṭṭai, பெ. (n.)

   பாம்பு கழற்றும் தோல்; snake’s slough.

     [பாம்பு + சட்டை]

பாம்புச்சுழி

 பாம்புச்சுழி pāmbuccuḻi, பெ. (n.)

   மாட்டுச் கழிவகையுள் முகப்பில் ஒரு வலப்புறமாகவும் காதில் ஒரு வலப்புறமாகவும் ஆக இரண்டில் சேர்ந்திருக்கம் தீய சுழி; an inauspicious {suli.}

     [பாம்பு + சுழி]

பாம்புச்செடி

 பாம்புச்செடி pāmbucceḍi, பெ. (n.)

   ஒருவகைச் செடி; jack-in-the pulpit. indian turnip, {kõÇdai. -}

     [பாம்பு + செடி]

பாம்புச்செவி

 பாம்புச்செவி pāmbuccevi, பெ. (n.)

   கூர்மையான செவியுணர்வு; sharp ear, acute hearing.

     [பாம்பு + செவி]

பாம்புணிக்கருங்கல்

பாம்புணிக்கருங்கல் pāmbuṇikkaruṅgal, பெ. (n.)

   பாம்பின் நஞ்சை உண்ணும் ஒருவகைக் கல்; a kind of stone.

     “பாம்புணிக் கருங்கல்லும் பயறும் விற்பா னொருவன்’ (தொல். சொல். 35, சேனா.);

     [பாம்பு + உண் + இ + கருங்கல்]

பாம்புண் பறவை

பாம்புண் பறவை pāmbuṇpaṟavai, பெ. (n.)

   கருடன்; Iit, snake-eating bird garuda.

     “பூவைப் பூமேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல” (பு.வெ. 9, 39.);

     [பாம்பு + உண் + பறவை]

பாம்புதின்னி

 பாம்புதின்னி pāmbudiṉṉi, பெ. (n.)

   தைத்த முள்ளை வெளியே கொண்டு வரும் நச்சுமூலிகை; a kind of poisonous herb. the leaves of which are used with other ingredients to extact thorn from the body.

     [பாம்பு + தின்னி]

பாம்புத்தச்சன்

 பாம்புத்தச்சன் pāmbuttaccaṉ, பெ. (n.)

பாம்புக்குத் தச்சன், பார்க்க;See {pambukk-ttaccan.}

     [பாம்பு + தச்சன்]

பாம்புத்திசை

 பாம்புத்திசை pāmbuttisai, பெ. (n.)

 west.

     [பாம்பு + திசை]

பாம்புநடனம்

 பாம்புநடனம் pāmbunaḍaṉam, பெ. (n.)

   இசைக்கேற்றபடி, நடனமங்கை பாம்புபோல் வளைந்து நெளிந்து ஆடும் ஆட்டம்; snake dance.

     [பாம்பு + நடனம்]

பாம்புப் பிடாரன்

 பாம்புப் பிடாரன் pāmbuppiṭāraṉ, பெ. (n.)

   பாம்பு-பிடிப்போன்; snake-catcher.

     [பாம்பு + பிடாரன்]

பாம்புப்பருந்து

பாம்புப்பருந்து pāmbupparundu, பெ. (n.)

   பாம்புண்ணும் பருந்து வகை (M.M.219);; common serpent-eagle living on snakes circatus gallicus.

     [பாம்பு + பருந்து]

 பாம்புப்பருந்து pāmbupparundu, பெ. (n.)

   பருந்து வகைகளுள் ஒன்று; snake vulture.

பாம்புப்புற்று

 பாம்புப்புற்று pāmbuppuṟṟu, பெ. (n.)

   பாம்பின் வளை; snake’s hole.

     [பாம்பு + புற்று]

     [P]

பாம்புமொச்சை

 பாம்புமொச்சை pāmbumoccai, பெ. (n.)

   பூடுவகை (வின்.);; a plant, dolichos falctus.

     [பாம்பு + மொச்சை]

பாம்புமோதிரம்

பாம்புமோதிரம் pāmbumōtiram, பெ. (n.)

   1. நடுவிரலில் அணியும் மோதிரம்; ring for the middle finger.

   2. பாம்புருவமான மோதிர வகை; sing, shaped like a serphent.

     [பாம்பு + மோதிரம்]

     [P]

பாம்புரம்

பாம்புரம் pāmburam, பெ. (n.)

   திருப்பாம்புரம் என்னும் தஞ்சை மாவட்ட ஊர்; a plact name in Tanjore Dt.

     [பாம்பு புரம் → பாம்புரம்]

அரவரசன் வழிபட்ட தலம். ஆகையால் இப்பெயர் பெற்றிருக்கலாம்.

     “மஞ்சு தோய் சோலை மாமயிலாட மாட

மாளிகைத் தன்மே லேறிப்

பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்

பாம்புர நன்னக ராரே” – (தேவா.41-4);

     “மடக்கொடி யவர்கள் வருபுன லாட வந்திழியரிசிலின் கரைமேல்

படைப்பையிற் கொணர்ந்து பருமணி

சிதறும்- பாம்பு நன்னகராரே’ (தேவா.41-8);

என்ற பாடல்கள் அரிசிலாற்றின் கரையில்

பாம்புர நகர் செழிப்புற்றிருந்த நிலையை காட்டுகின்றன.

பாம்புராணி

 பாம்புராணி pāmburāṇi, பெ. (n.)

பாம்பரணை(நெல்லை வழக்.); பார்க்க, see{pānbaranai}

க. ஹாவுராணி

பாம்புரி

பாம்புரி pāmburi, பெ. (n.)

   1. பாம்புச் சட்டை (வின்.); பார்க்க;See {pambய-C-attai}

   2. அகழ் (சூடா.);; moat.

   3. ஒரு மதிலுறுப்பு; a girdlelike structure edged round a fort-wall.

     “கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரி” (சீவக. 250);

   4. அகழியில் இறங்க உதவும் படிக்கட்டு (தஞ்.);; flight of steps leading from a fort-wall into the moat surrounding it.

     [பாம்பு + உரி]

 பாம்புரி pāmburi, பெ.(n.)

   மதிலடி ஆளோடி, ஓர் ஆள்புகுந்துசெல்லும் உள்ளகத் துளை வாயில்; a manhole in a rampart.

     “பன்மலர்க் கிடங்குழ் பசும்பொற் பாம்புரி. (சீவக.1250);.

     [பாம்பு+ஊரி]

பாம்புரோசனை

 பாம்புரோசனை pāmburōcaṉai, பெ. (n.)

   பாம்பின் கோரோசனை; snake bazoar.

     [பாம்பு + {sktrosņā} த. ரோசனை]

பாம்புவடம்

 பாம்புவடம் pāmbuvaḍam, பெ. (n.)

பாம்படம் (இ.வ.); பார்க்க;See {pārmbadam}

     [பாம்பு + வடம்]

பாம்புவயிறு

 பாம்புவயிறு pāmbuvayiṟu, பெ. (n.)

   நீண்டு ஒட்டிய வயிறு (இ.வ.);; a long lean abdomen.

     [பாம்பு + வயிறு]

பாம்புவிரல்

 பாம்புவிரல் pāmbuviral, பெ. (n.)

   நடுவிரல் (இ.வ.);; middle finger.

     [பாம்பு + விரல்]

பாம்போடு படலி

 பாம்போடு படலி bāmbōḍubaḍali, பெ. (n.)

   நீண்ட மட்டையுள்ள இளம்பனை (யாழ்ப்.);; young palmyra with long stalks.

     [பாம்பு + ஒடு + வடலி]

பாயகாரி

 பாயகாரி pāyakāri, பெ.(n.)

   குறிப்பிட்ட காலம் வரை குடிவாரத்துக்கு உழுபவன்; temporary cultivator, one who cultivates the land of another for a stipulated term, obtaining a certain share of the crop.

     [U. {} → த. பாயகாரி]

பாயக்கட்டு

 பாயக்கட்டு pāyakkaṭṭu, பெ. (n.)

   சிற்றூர்த் தலைமை அலுவலர்; village headman.

     “பாயக்கட்டு பலபட்டடையிற் சோலையப்பப் பிள்ளையோ” (விறலிவிடு);

     [பாயம் + கட்டு]

பாயசம்

பாயசம் pāyasam, பெ. (n.)

   பாற்சொற்றி என்னும் மூலிகை (சூடா.);; a kind of herb.

 பாயசம்1 pāyasam, பெ.(n.)

   பால், அரிசி, சர்க்கரை அல்லது வெல்லம் முதலியவற்றோடு சேர்த்துச் செய்யும் நெகிழ்ச்சியான இன்னமுது; a semi-liquid food prepared out of milk, rice, sago, etc mixed with sugar or jaggery.

 பாயசம்2 pāyasam, பெ.(n.)

   பாற் சொற்றி, ஒரு செடி வகை; a plant, Ruellia secunda.

     [Skt. {} → த. பாயசம்]

பாயசா

 பாயசா pāyacā, பெ.(n.)

   இலைக்கள்ளி; a kind of Spurg, which have large leaves. (சா.அக.);

பாயடி-த்தல்

பாயடி-த்தல் pāyaḍittal,    4. செ.கு.வி. (v.i.)

   பாய்மரத்தில் பாயை மேலேற்றுதல் (முகவை.மீனவ.);; to hoist sail in the mast.

     [பாய் + அடி-,]

பாயதானம்

பாயதானம் pāyatāṉam, பெ. (n.)

   பாற்சோறு;  rice boiled in milk.

     “பொற்புறு பாய தானம் புளிப்புறு ததியின் போனம்” (சிவதரு.பரம.37);.

 பாயதானம் pāyatāṉam, பெ.(n.)

   பாற்சோறு; rice boiled in milk.

     “பொற்புறு பாயதானம் புளிப்புறு ததியின் போனம்” (சிவதரு.பரம.37);.

     [Skt. {} → த. பாதானம்]

பாயமாலி

 பாயமாலி pāyamāli, பெ.(n.)

   அழிவு(P.T.L.);; destruction ravage, ruin.

     [பாய்மாலி → பாயமாலி]

பாயம்

பாயம் pāyam, பெ. (n.)

   1. புணர்ச்சி விருப்பம்; sexual desire.

     “ஈர்ஞ்சேறு ஆடிய இரும்பல் கட்டிப் பன்மயிர்ப் பிணவொடு பாயம் போகாது” (பெரும்பாண்.342);

   2. மனத்துக்கு விருப்பமானது; that which is pleasing to the mind.

     “பளிங்கு சொரிவு அன்ன பாய்சுனை குடைவுழி நளிபடு சிலம்பிற் பாயம் பாடி” (குறிஞ்சிப்.58);

     [பய் → பாய் → பாய் + அம்]

ஒ. நோ. பாயம்=பாசம்

தேயம்=தேசம்

நேயம்=நேசம்

பாயல்

பாயல் pāyal, பெ. (n.)

   1. மக்கட் படுக்கை (பிங்.);; bedding.

   2. உறக்கம்; sleep.

     “அரிதுபெறு பாயற் சிறுமகி ழானும்” (பதிற்றுப். 19,12);.

     “பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார்” (குறுந். 254-5);

     “பழன ஊரன் பாயல்இன் துணையே” (ஐங்.96-4);

     “பண்பும் பாயலும் கொண்டனள் நொண்டி” (ஐங்.176-1);

     “பரந்துபடு பாய னவ்வி பட்டென” (அகம்.39-16);

     “கண்படு பாயல் கையொடுங்கு அசைநிலை” (அகம்.187-20);

     “பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமும்” (மணிமே.2-24);

     [பாய் → பாயல்]

 பாயல் pāyal, பெ. (n.)

   பாதி (பிங்.);; half.

தெ. பாய.

     [பா2 → பாயல்]

பாயா

 பாயா pāyā, பெ. (n.)

   உடுக்கையின் உறுப்புகளிற் ஒன்று; a part of ‘udukkai’ musical instrument.

     [பாய்+ஆ]

பாயிரம்

பாயிரம்1 pāyiram, பெ. (n.)

   1. முகவுரை (நன்.1);; preface, introduction, preamble, prologue.

     “செறுமனத்தார் பாயிரங் கூறி” (பழமொ.165);

   2. பொருளடக்கம்; synopsis, epitome.

     “அருந்தமி ழ்க்குப் பாயிரம்’ (சடகோபரந்.9); (வின்);

   3. வரலாறு; origin, history.

.ெயிரப் பெயர்கள் : பாயிரம் என்பது முகவுரை. அது ஒரு நூற்கு இன்றியமையாத தென்பது.

     “எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்க” என்பது இலக்கணம். என்னை?

ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்

யிர மில்லது பனுவ லன்றே” (நன்.54);

ன்றாராதலின்.

     “பாயிரமென்றது புறவுரையை, ல் கேட்கின்றான் புறவுரை கேட்கின் கொழுச் சென்ற வழித் துன்னூசி இனிது செல்லுமாறு பால அந்நூல் இனிது விளங்குதலிற் புறவுரை கட்டல் வேண்டும். என்னை?” பருவப் பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு ண்பொருட்டாகிய நூல் இனிது விளங்கும்”

ன்றாராகலின்.

     “அப்பாயிரந்தான் தலையமைந்த னைக்கு வினையமைந்த பாகன் போலவும், அளப்பரிய ஆகாயத்திற்கு விளக்க மாகிய ங்களும் ஞாயிறும் போலவும், நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்றா யிருத்தலின்;

அது களாக்காற் குன்று முட்டிய குரீஇப் போலவும் குறிச்சி புக்க மான் போலவும். மாணாக்கன் இடர்ப்படும் என்க” என்னும் நச்சினார்க் கினியர் ரையான் உணரப்படும். பவணந்தியார், மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும் ஆடமைத்தோள் நல்லார்க் கணியும்போல்-நாடிமுன் துரையா நின்ற வணிந்துரையை எந்நூற்கும் பய்துரையா வைத்தார் பெரிது.” (நன்.55);

னச் சில உவமை வாயிலாகவும் பாயிரத்தின் தவையை வற்புறுத்தினார்.

அப்பாயிரம், பொதுவும் சிறப்பும் என

இருவகைத்து என்றார் நச்சினார்க்கினியர். அதையே,

பாயிரம் பொது சிறப்பெனவிரு பாற்றே” (நன்.2);

ன நூற்பா யாத்தார் பவணந்தியார். அவற்றுட் பொதுப்பாயிரம் எல்லா நூன்முகத்தும் உரைக்கப்படும். அதுதான் நான்கு வகைத்து.

     “ஈவோன் தன்மை ஈத லியற்கை

கொள்வோன் தன்மை கோடன் மரபென

ஈரிரண் டென்ப பொதுவின் தொகையே.”

என்னும் இதனான் அறிக என்பது நச்சினார்க்கினியம்.

நன்னூலார் இவற்றோடு நூலையுங் காட்டி

     “நூலே, நுவல்வோன், நுவலுந் திறனே,

கொள்வோன் கோடற் கூற்றாம் ஐந்தும்

எல்லா நூற்கும் இவைபொதுப் பாயிரம்” (நன்.3);

என நூற்பா இயற்றினார். இதனால், கற்பிக்கப்படும் நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தின் இயல்பையும் விளக்குவது பொதுப்பாயிரம் என்றாயிற்று. இதன் ஐங்கூறும் எல்லா நூற்கும் பொதுவா யிருத்தலின் இனிச் சிறப்புப் பாயிரமாவது தன்னால் உரைக்கப்படும் நூற்கு இன்றிய மையாதது. அது பதினொரு

வகையாம்.

     “ஆக்கியோன் பெயரே, வழியே எல்லை

நூற்பெயர் யாப்பே, நுதலிய பொருளே

கேட்போர், பயனோ டாயெண் பொருளும்

வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே” (நன்.47);

     “காலம், களனே, காரணம் என்றிம்

மூவகை யேற்றி மொழிநரும் உளரே.” (நன்.48);

இப் பதினொன்றும் இப்பாயிரத்துள்ளே (பனம் பாரனார் தொல்காப்பியத்திற்குக் கூறிய சிறப்புப் பாயிரத்துள்ளே); பெறப்பட்டன. நூல் செய்தான் (சிறப்புப்); பாயிரஞ் செய்தானாயின் தன்னைட் புகழ்ந்தானாம்.

     “தோன்றா தோற்றித் துறையல முடிப்பினும்

தான்தற் புகழ்தல் தகுதி யன்றே’ (நன்.52);

என்பவாகலின் (சிறப்புப்); பாயிரஞ் செய்வார் தன்

ஆசிரியரும் தன்னொடு ஒருங்கு கற்ற ஒரு சாலை மாணாக்கரும் தன் மாணாக்கரும் என

இவர் என்பது, தொல்காப்பியச் சிறப்புப் பாயிர நச்சினார்க்கினியர் உரைப்பகுதி சிறப்புப் பாயிரம் என்பது, ஒரே நூற்குச் சிறப்பாயிருந்தது. அதன் ஆசிரியன் பெயர், அந்நூல் வந்தவழி, அது வழங்கும் எல்லை, அந் நூற்பெயர் முதலிய பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குன்ற வேனுங் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பது. (foreword, opinion, editor’s preface etc);, மதிப்புரை யெல்லாம் சிறப்புப் பாயிரமே.

ஒரு நூலாசிரியன் தானே தன் நூலைப் புகழ்தல் தக்கதன் றாதலின், சிறப்புப் பாயிரஞ் செய்வார் பிறராயிருத்தல் வேண்டுமென்பது தொன்று தொட்ட மரபு. அதனைச் செய்யத் தக்கார் மூவரென்று குறிப்பிட்டார் நச்சினார்க்கினியர். அவரொடு உரையாசிரியனையுஞ் சேர்த்து.

     “தன்னா சிரியன் தன்னொடு கற்றோன்

தன்மா னாக்கன், தகுமுரை காரனென்

றின்னோர் பாயிரம் இயம்புதல் கடனே” (நன்.51);

என்றார் பவணந்தியார். ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம், நூற்பொருள், நூல் வந்தவழி, நூற்பெயர் முதலியன நூலாசிரியன் கூறுவதே பொருத்த மாதலானும், அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந்தராமை யானும், அவற்றை நூலாசிரியன் கூறுவது தக்கதென்று கொள்ளப்பட்டுத் தற்சிறப்புப் பாயிரம் எனப் பெயர்பெறும்.

     “வணக்கம் அதிகாரம் என்றிரண்டுஞ் சொல்லச்

சிறப்பென்னும் பாயிர மாம்”

     “தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்

எய்த வுரைப்பது தற்சிறப் பாகும்.”

என்பது காரிகையுரை மேற்கோள். சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்திற்குச் செய்த பாயிரமும், கம்பர் தம் இராமாவதாரத்திற்குச் செய்த பாயிரமும், தற்சிறப்புப் பாயிரத்திற் கெடுத்துக்காட்டாம். இளங்கோவடிகள் மங்கல வாழ்த்துப் பாடலும் அது. மேற்கூறிய

இருவகைப் பாயிரத்திற்கும் பொதுவாகவும் சிறப்பாகவும் பல பெயர்கள் உள. அவை.

     “முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம்” (நன்னூல்.1);

என்னும் எட்டாம். இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:

   1. முகவுரை : இது நூல் முகத்து உரைக்கப் படுவது. இவற்றை வழக்கில் உரைநடையா யிருப்பது, பெரும்பாலும் நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.

   2. பதிகம் : இது நூலாசிரியன் பெயர். நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது. ஒரு பொருள் பற்றிய பத்து அல்லது பதினோரு பா அல்லது பாவினத் தொகுதி பதிகம் என்று பெயர் பெற்றிருத்தல் காண்க. எடுத்துக்காட்டு : தேவாரப் பதிகம். பதிகம் என்னும் பெயருக்கு ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களையும் தொகுத்துச் சொல்வது என்று பொருள் கூறி,

அடிக்குறிப்பாக,

     “பதிகக் கிளவி பலவகைப் பொருளைத்

தொகுதியாகச் சொல்லுதல் தானே”

என மேற்கோளுங் காட்டினர் நன்னூலுரை யாசிரியர் சடகோப இராமானுசாச்சாரியர். ஐம்பொருள் பொதுப்பாயிரத்திற்கும், பதினொரு பொருள் சிறப்புப் பாயிரத்திற்கும் உரியன. பதிகம் என்னும் பெயர் பத்து (பது); என்னும் சொல்லினின்று தோன்றியிருத்தலின், ‘ஆக்கியோன் பெயரே’ என்னும் நூற்பாவிற் குறிக்கப்பட்ட எண் பொருளும், ‘ காலங் களனே’ என்னும் நூற்பாவிற் குறிக்கப்பட்ட முப் பொருளும் ஆகிய பதினொரு பொருளைத் தருவதென்று உரையுரைப்பதே பொருத்த மானதாம். ஒன்று பத்தை நோக்கச் சிறிதாதலின் பதினொன்றும் பத்தாகவே கொள்ளப்பெறும் (ஆங்கிலத்தில் பதின்மூன்று – baker’s dozen எனப்படுதல் போல); இங்ஙனம் பதிகம் என்னும் சொல் சொல்லாலும் பொருளாலும் தூய தமிழாயிருக்கவும், அது

ப்ரதீக என்னும் வடசொல்லின் திரிபாக வட மொழியாளர் கூறுவதும். அதைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி பின் பற்றியிருப்பதும். குறும்புத்தனமும் பொறுப்பற்ற செயலுமாகும். உண்மையில் பதிகம் என்னும் தென் சொல்லே ப்ரதீக என்னும் வடசொல்லாகத் திரிந்துள்ளது. பதின் செய்யுட் பகுதியை குறிக்கும் பதிகம் என்னும் தென் சொல்லைப் பத்யம் (செய்யுள்); என்னும் வடசொல்லோடிணைக்க விரும்புவார். வேறு என்தான் சொல்லார். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் உள்ள சிறப்புப் பாயிரங்கள் பதிகம் எனப் பெயர் பெற்றுள்ளன.

   3. அணிந்துரை : இது மறைமலையடிகள் மதிப்புரையும் முன்னுரையும் போல் ஒரு நூலுக்கு அணி (அழகு); செய்து நிற்பது.

   4. நூன்முகம் : இது நூலுக்கு முகம் போல்வது. செய்யுள் ஆகிய இரு வடிவிற்கும் பொதுவானது.

   5. புறவுரை : இது நூலுக்குப் புறமாக உரைக்கப்படுவது. புறம் = பின்பு. இறுதி. தொல்காப்பிய இறுதியில் உரைக்கப்பட்டுள்ள நூலுரை மரபு புறவுரையாகும். சிலர் நூலுரை மரபு செய்யுளியலிலேயே கூறப்பட்டு விட்டதனால் (1421 – 1430); மரபியலில் உள்ளது பிற்செருகல் என்பர் (1590-1610); அகத் திணையியலிற் கூறிய உவமை யிலக்கணச் சுருக்கத்தையே (992-995);. பின்னர் உவமவியலில் தொல்காப்பியர் விரித்துரைப்ப தால் (1222-1258); மரபியலின் இறுதியில் விரித்துரைக்கப் பெறும் நூலுரை மரபு பிற்செருகலெனக் கொள்ளப்படா தென்க. (புறவுரை என்பது, மேலை நாடக நூற்களிற் கூறப்படும் epilogue என்பதை ஒருபுடை யொத்ததாகும்);. பதிற்றுப்பத்தின் உரைபெறு கட்டுரைகள் இட வகையால் புறவுரையாக அமைந்துள்ளன.

   6. தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர் முன்னுரை (introduction);. பெரும்பாலும் தந்துரையாக விருக்கும்.

   7. புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது, திருக்குறட் சிறப்பைப் போப்பையர் முன்னுரை (introduction); எடுத்துக் காட்டுவது போல. புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்.

   8. பாயிரம் : இது முதன் முதல், பொரு களத்துப் போர் முகவுரையாகப் பகைவரை

   விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது;பின்பு நூன் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது. நெடுமொழி, போர் மறவனின் தன் மேம்பாட்டுரை. பாயிரம் என்பது முதற்கண் நெடுமொழியைக் குறித்தமையை.

     “மறு மனத்தா னல்லாத மாநலத்த வேந்தன்

உறு மனத்தானாகி யொழுகின் – செறுமனத்தார்

பாயிரங் கூறிப் படைதொக்கால் என் செய்ப

ஆயிரங் காக்கைக் கோர்கல்.”

என்னும் பழமொழிச் செய்யுளான் உணர்க. பாயிரம் என்பதற்கு வீரத்துக்கு வேண்டும் முகவுரைகள், என்று பழையவுரை உரைத்தலையும் நோக்குக.

பயிர்தல்-அழைத்தல், போருக்கழைத்தல், பயிர் -(பயிரம்); – பாயிரம். சென்னைப் பல்கலைக் கழக அகராதி, பாசுரம் என்பது பாயிரம் என்ற திரிந்திருக்கலாம் என்று தன் அறியாமையைக் காட்டுகின்றது. இற்றை நூல் வழக்கை நோக்கின் பாயிரப் பெயர்களுள் புறவுரை, பாயிரம் என்னும் இரண்டும் பொதுவும் சிறப்புமாகிய இருவகைப் பாயிரத்திற்கும் பொதுவாம்: ஏனைய, சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாம். சிறப்புப் பாயிரத்திற் குரியவற்றுள் முகவுரை. நூன்முகம், பாயிரம் என்னும் மூன்றும் தற்சிறப்புப் பாயிரத்திற்குச் சிறப்பென்று கொள்ள இடமுண்டு. தருட் பெரும்பாலார் பகுத்தறி விழந்திருப்பது நோக்கி வடவரும் (அவர் அடிவருடியரும் அடியார்க் கடியாருமான); வையாபுரிகளும் தூய தென் சொற்களை வடசொல்லெனத் துணிந்து மருட்டுவது பற்றி, அவை அன்னவென்று மயங்கற்க.

மேற்காட்டியவாறு, முகவுரையைக் குறிக்கப் பல தூய தென் சொற்களிருப்பதும் இடைக்காலப் புலவர், சிறப்பாக, யாழ்ப்பாணத்தார், உபக்கிரக மணிகை, உபோத்காதம் என்னும் வடசொற்களை வேண்டாது வழங்கிச் சிறுமையிற் பெருமை கொண்டனர். இத்தகைய வடசொல்லாட்சி தமிழரின் மடமையாலும் அடிமைத்தனத்தாலும் நேர்ந்ததேயன்றி, தலைமைசால் தமிழ்ப்புலவர் தாமாக விரும்பித் தழுவி யன்று. ஆதலால், தமிழின் தூய்மையைக் குலைத்ததுமன்றி அதன் தொண்டையையும் நெரித்துக் கொல்லப் பார்க்கும் ஐந்தாம்படைச் சொற்களையெல்லாம், அறவே அகற்றிவிடுவது தமிழன் முதற் கடமையாம்.

தமிழன் விடுதலை, தமிழின் விடுதலையை அடிப்படையாகக் கொண்டது. தமிழுயரத் தமிழன் உயர்வான். – பாவாணர். தமிழியற்கட்டுரைகள்

 பாயிரம்2 pāyiram, பெ.(n.)

   புறம்பானது; that which is outside.

     ‘உள்ளமும் பாயிரமும் மொக்குமேல்’ (நீலகேசி. 261.);

பாயிரம் செய்வார்

 பாயிரம் செய்வார் pāyiramceyvār, பெ. (n.)

   முகவுரை எழுதுபவர்;  one who make preface. preamble.

     [பாயிரம் + செய்வார்]

தன்னாசிரியருந் தன்னோடொருங்குகற்ற ஒரு சாலை மாணாக்கருமாவர். (நச்.தொல்.எழுத்து.பாயி.);

பாயிருக்கை

பாயிருக்கை pāyirukkai, பெ. (n.)

   பரந்தவிருப்பு; extream desire.

     “இருந்துபுறஞ் சுற்றிய பெரும்பாயிருக்கையும்” (சிலப்.இந்திரவி.54.);

பாயிரும் பனிக்கடல்

பாயிரும் பனிக்கடல் pāyirumbaṉikkaḍal, பெ. (n.)

   பரந்து விரிந்த குளிர்கடல்; ocean.

     “பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா” (பட்..92);

     “பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு” (பரி.5-1);

பாயிறக்கு-தல்

 பாயிறக்கு-தல் pāyiṟakkudal, செ.கு.வி. (v.i.)

   கப்பற்பாயை மடக்குதல்; to let down sail.

     [பாய் + இறக்கு-,]

பாயிழு-த்தல்

 பாயிழு-த்தல் pāyiḻuttal, செ.கு.வி. (v.i.)

பாய்வலி-. (வின்.); பார்க்க;See {pay-wall,}

     [பாய் +இழு-,]

பாயுங்கெண்டை

 பாயுங்கெண்டை pāyuṅgeṇṭai, பெ. (n.)

   மீன் வலைவீசுங்கால் வலையினின்றுந் தாவிப் பாயுந் தன்மையுடைய ஒருவகைக் கெண்டை மீன் (மீனவ.பொ.வ.);; a kind of {kendai} fish.

     [பாயும் + கெண்டை]

பாயுடுக்கையர்

 பாயுடுக்கையர் pāyuḍukkaiyar, பெ. (n.)

   பாயை உடுத்துக் கொள்ளும் சமணத் துறவி வகையினர் (தேவா.);; a class jaina ascetics of clad in mats.

     [பாய் + உடுக்கையர்]

பாயுடை-த்தல்

பாயுடை-த்தல் pāyuḍaittal,    4. செ.கு.வி. (v.i.)

பாய்விரி-, 2 பார்க்க;See {pay-wri}

     [பாய் + உடை]

பாயுடையவர்

பாயுடையவர் pāyuḍaiyavar, பெ. (n.)

   சமணர்; Jainas.

     “பாயுடையவர்விட விடநாகப்படிவு கொணி சிசரன்” (திருவிளை.நாக.8.);

     [பாய் + உடையவர்]

பாயுரு

 பாயுரு pāyuru, பெ.(n.)

   எருவாய்(குதம்);; anus, fundament.

     [Skt. {} → த. பாயுரு]

பாயெடு-த்தல்

பாயெடு-த்தல் pāyeḍuttal,    4. செ.கு.வி. (v.i.)

பாய்வலி-,(வின்.); பார்க்க, see {paywal}

பாய்

பாய்2 pāytal,    3. செ.குன்றாவி (v.t.)

   1. சினத்தோடு தாக்கிப்பேசுதல்; to abuse to accost roughly.

     ‘ ஏன் அவனைப் பாய்கிறாய்? (வின்);

   2. குத்துதல்; to pierce, penetrate to plunge into.

வெல்களிறு பாயக் கலங்கி யுதிரா மதிலு முளகொல்’ (பு.வெ.6,4.);

   3.வெட்டுதல்:

 to cut:

     ‘வடிநவில் நவியம் பாய்தலின்’ (புறநா.23);

   4. முட்டுதல்; to rush against, butt. ‘

பாய்கிற மாடு’

     “நெடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புண்கூர்ந்து” (முல்லை.68);

     “கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து” (அகம்.24-11);

     ” விடர் முகையடுக்கம்பாய் தலினுடனி யைந்து” (அகம் 47-6);

     ‘நெடுங்கை நவியம் பாய் தலினிலை யழிந்து” (புறம் 36-7);

நான்சே அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து’ (புறம்.109-7);

 பாய்3 pāytal,    4. செ.கு.வி.

   1. குறிப்பிட்ட திசையில் வேகத்துடன் தாவுதல்;   தரையிலிருந்து கிளம்பி ஓர் இலக்கு நோக்கி விரைந்து விழுதல்; spring, leap. bounce (at. Sth.);

     ” புலி பதுங்கிப் பாய்ந்தது” என்பது பழமொழி,

     ” கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து செல்லக் கூடிய ஏவுகணை”

   2. (நீர் முதலிய திரவம் அல்லது மின்சாரம், ஒளி போன்றவை); ஒன்றின் ஊடாக வேகத்துடன் செல்லுதல்; rush.

     ” ஆற்றில் நீர் சலசலத்துப் பாய்ந்தது’

     “அணையில் வினாடிக்கு நாற்பது கன அடி தண்ணீர் பாய்கிறது;

     “சன்னலைத் திறந்தவுடன் அறையினுள் கதிரொளி பாய்ந்தது”

   3. (கத்தி,ஈட்டி போன்றவை); வேகத்துடன் ஒரு பரப்பில் படுதல் அல்லது பட்டு உட்செல்லுதல்;     “கூட்டத்தைக் கலைக்கக் காவலர் சுட்டத்தில் குண்டு பாய்ந்து இருவர் இறந்தனர்?

   4. ஊடுருவி இறங்குதல்;Seep into; percolate;

 go in ‘

ஈரம் பாயாதகளிமண் (உரு.வ.);

     “கருணை பாய்ந்த உள்ளம்”

   5. குற்றத்துக்குப் பொறுப்பாக்குதல்; bounce on (s.o);;

 jump down someone’s throat

     “பொறுமை இழந்த பயணிகள் பேருந்து நடத்துநர் மீது பாய்ந்தனர்.

     [பா → பாய்]

 பாய்4 pāy, பெ. (n.)

   1. தெரிநிலை வினைப்பகுதி; verbal root which is the state of clear indication.

     “பாயொளிப்பளிதியும்” (கூர்மபு. கன்வேள்.சஉ.);;

   2. முதனிலைத் தொழிற் பெயர்” (பிங்கல.22.);; verbal noun that which stands first.

 பாய்5 pāy, பெ. (n.)

   1. பரவுகை; spreading extending.

   2. பரப்பு (பிங்.);; extension, expanse.

   3. கோரை முதலியவற்றால்முடடைந்த விரிப்பு வகை; mat.

     ” பாயுடை யவர்விட” ( திருவிளை. நாக.8);

   4. கப்பற்பாய்; sali:

     ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ (புறநா.30);

     ‘பாயைச் சுருட்டடி, பிள்ளையை அமுக்கடி,

பரதேசம் போக’ (பழ.);

பாய் சரடு

 பாய் சரடு pāycaraḍu, பெ. (n.)

   கற்றாழை நாரைச் சரடு சரடாகப் பாய் பின்ன நூலாக்குதல்; aloe fibre used for making rope.

     [பாய்+சரடு]

பாய் நாட்டு-தல்

பாய் நாட்டு-தல் pāynāṭṭudal,    9. செ.கு.வி.(v.i.)

பாய்வலித்தல் பார்க்க;See {pay-wa/-,}

     [பாய் + நாட்டு-,]

பாய்-தல்

பாய்-தல் pāytal,    4. செ.கு.வி (v.i.)

   1. தாவுதல்; to spring, leap, bound, gallop, prance.

     ‘ தண்கடற் யுறிரைமிசைப் பாயுந்து’ (புறநா.24);

   2. நீர் முதலியன வேகமாய்ச் செல்லுதல்; to flow, issue or gush out, as waterfall.

   3. மேனின்று குதித்தல்; to jump dowm, as from a hill.

     ‘வரைபாய்த னன்று’ (நாலடி, 369.);.

   4. நீருண் மூழ்குதல்; to plunge, dive, as into water.

     “பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு” (திருவாச.7.13.);

   5. எதிர் செல்லுதல்; to move towards, as the needle attracted by a loadstone.

   6. பரவுதல் (தொல்.சொல்.361);; to spread, as water, darkness;

 to radiate, as light;

 to extend.

   7. விரைந்து படிதல்; to settle or faster on, as the light, the mind, the imagination.

     ‘மனம் அங்கே பாய்ந்தது’

   8. தாக்குதல்; to attack, spring at, pounce on.

பாய்கிற சேனை.

   9. விரைந்தோடுதல் (வின்);; to run, dart, fly, flit across;

   10. துரிதப்படுதல்;  to hurry.

   11. அகங்கரித்தல்;  to be proud, arrogant.

   12. மடிப்பு விரித்தல்:

 to unflod, as a cloth.

     ‘பாய்ந்தாய்ந்த தானை’ (கலித்.96);

   13. கூத்தாடுதல்; to dance.

     ‘பேய்த்தொகை பாய்தர’ (திருக்கோ. 389);

   14. ஓடிப்போதல் (வின்.);; to flee, abscond.

     [பா → பாய்]

பாய்கலத்தாமடை

 பாய்கலத்தாமடை pāykalattāmaḍai, பெ. (n.)

   கடற்பரப்பின் மீன்பிடிபாட்டிடங்களுள் ஒன்று (முகவை.மீனவ.);; fishing place.

     [பாய்கலம் + தாமடை]

பாய்கலைப்பாவை

பாய்கலைப்பாவை pāykalaippāvai, பெ. (n.)

   1. கொற்றவை; durga, riding on a leaping stag.

     [பாய்கலை + பாவை]

பாய்கொடு-த்தல்

பாய்கொடு-த்தல் pāykoḍuttal,    4. செ.கு.வி (v.i.)

   மணமக்கள் கூடும் தலைக் கூட்டக் கொண்டாட்டம் (இ.வ.);; to celebrate the nuptial ceremony.

பாய்க்கிடை

பாய்க்கிடை pāykkiḍai, பெ. (n.)

   நோயுடன் படுக்கையிற் கிடக்குநிலை; bedridden condition.

     “பாய்க்கிடை கண்டது” (திருப்பு:1111.);

     [பாய் + கிடை]

பாய்க்குப்பல்லி

 பாய்க்குப்பல்லி pāykkuppalli, பெ. (n.)

   பாயும் படுக்கையுமாய் இளைத்துக் கிடத்தல்; confining one self to bed from extreme exhausion owing to prolonged illness.

பாய்க்கோரை

 பாய்க்கோரை pāykārai, பெ. (n.)

   கோரை வகை (வின்.);; a kind of sedge.

     [பாய் + கோரை.]

பாய்க்கோல்

 பாய்க்கோல் pāykāl, பெ. (n.)

பாய்மரம் (செங்கை.மீனவ.); பார்க்க;See {pay-maram}

     [பாய் + கோல்]

பாய்ங்கம்

 பாய்ங்கம் pāyṅgam, பெ. (n.)

   இசைக்கருவி ஒன்றின் பெயர் (முகவை);; a kind of musical instrument.

பாய்சுற்றிவெல்லம்

 பாய்சுற்றிவெல்லம் pāycuṟṟivellam, பெ. (n.)

   இளகிய வெல்லம்; semisolid jaggery rolled up in mat (சா.அக.);

பாய்ச்சக்கால்

 பாய்ச்சக்கால் pāyccakkāl, பெ. (n.)

   புணி பிரித்துக் கொடுப்பதற்கு மிதி பலகையை மிதித்தல்; an operation in loom.

     [பாய்ச்சல்+கால்]

பாய்ச்சல்

பாய்ச்சல் pāyccal, பெ. (n. )

   1. தாவுகை

 bounding, galloping, rushing.

     ” குதிரைப் பாய்ச்சல்”

   2. குதிப்பு (வின்);; jump, prance.

   3. எழுச்சி (சூடா);; springing forth.

   4. நீரோட்டம்; current, stream, torrent (வின்);

   5. சொரிகை(வின்);; issue, discharge, gush, as of tears.

   6. பெருகை; overflowing.

   7. பாசனம்;(கொ.வ);

 irrigation.

   8. முட்டுகை (வின்);; butting.

   9. கீழ்ப்படியாமை(வின்);

 disobedience.

   10. குத்துகை; piercing.

   11. செருகுகை;(வின்);

 sheathing, as a sword (வின்);

   12. வெடுவெடுப்பு; rudeness(j);

   13. தெருக்குத்து (இ.வ.); பார்க்க;See terukkuttu.

 an inauspicious postion of a house see therukkuttu.

     [பாய் → பாய்ச்சல்]

பாய்ச்சல் காட்டு-தல்

பாய்ச்சல் காட்டு-தல் pāyccalkāṭṭudal,    9. செ.கு.வி (v.t.)

   1. எதிர்த்துப் பாயச்செய்தல்; to cause to spring, leap up;

 to set one against another, as a ram or a butting goat.

   2. ஏய்த்தல்(வின்.);; to tantalise.

     [பாய்ச்சல் + காட்டு-,]

பாய்ச்சல் விடு

பாய்ச்சல் விடு1 pāyccalviḍudal,    20. செ.கு.வி (v.i.)

   தாவிச்செல்லுதல் (வின்.);; to gallop, ride at a gallop.

     [பாய்ச்சல் + விடு-,]

 பாய்ச்சல் விடு2 pāyccalviḍudal,    18. செ.குன்றாவி. (v.t.)

   வேகமாய் வெருட்டுதல்; to ride or drive at a high speed.

     [பாய்ச்சல் + விடு-,]

பாய்ச்சல்மாடு

பாய்ச்சல்மாடு pāyccalmāṭu, பெ. (n.)

   1. பாயுங்காளை (கொ.வ.);; butting bull.

   2. காளைகளை நீண்ட கயிற்றாற்கட்டி வெருட்டி வீழ்த்தும் மறவர் கொண்டாட்ட வகை (E.T.iii, 90.);; a sport of bull-baiting amongst {kallars} where in bulls are tethered to long ropes and sought to be thrown down.

     [பாய்ச்சல் + மாடு]

     ‘பாய்கிற மாட்டுக்கு முன்னே திருக்குறள் சொன்னாற் போல’ (பழ.);

     [P]

பாய்ச்சி

பாய்ச்சி pāycci, பெ. (n.)

   1. பாய்ச்சிகை (வின்); பார்க்க, see {p5yccial}

   2. பாய்ச்சிவலை பார்க்க, (இ.வ.); seе {рӑуссиа/a/}

     [பாய்ச்சிகை → பாய்ச்சி]

பாய்ச்சிகை

 பாய்ச்சிகை pāyccigai, பெ. (n.)

   கவறு (வின்);; dice.

     [பாய் → பாய்ச்சிகை]

பாய்ச்சிவலை

பாய்ச்சிவலை pāyccivalai, பெ. (n.)

பாய்ச் கவலை (இ.வ); பார்க்க;See {p5yccu valai}

     [பாய்ச்சு + வலை]

பாய்ச்சு

பாய்ச்சு pāyccu, பெ. (n.)

   தெரிநிலை வினைப்பகுதி; (பிறவினைப்பகுதி);; verbal root which is the state of clear indication.

     [பாய் → பாய்ச்சு]

 பாய்ச்சு pāyccu, பெ. (n.)

   1. உருட்டுகை; throw, as of dice.

   2. கவறு (சீவக.983.உரை);; dice.

   3. குத்துகை; plunging, thrusting.

   4. வரிச்சல்(வின்);; thin, rough kind of lath, used in roofing huts or for hedging.

     [பாய் → பாய்ச்சு]

 பாய்ச்சு pāyccu, பெ. (n.)

   பாய்கை; spring,leap.

     ‘புலிப்பாய்ச்சுப் பாய்ந்தான்’

     [பாய் → பாய்ச்சு]

பாய்ச்சு உளுவை

 பாய்ச்சு உளுவை pāyccuuḷuvai, பெ. (n.)

   துள்ளும் அல்லது பாயும் தன்மையுள்ள உளுவை மீன் (தஞ்சை.மீனவ);; a kind of fresh waterfish.

     [பாய்ச்சு + உளுவை]

     [P]

பாய்ச்சு வலை

 பாய்ச்சு வலை pāyccuvalai, பெ.(n.)

   கடலில் தள்ளி மிகப் பரவலாக விரித்து மீன் பிடிக்கும் விலை; an extensive big net.

     [பாய்-பாய்ச்சு +வலை]

பாய்ச்சு-தல்

பாய்ச்சு-தல் pāyccudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. நீரை வெளிச்செலுத்துதல்; to lead or conduct water, to irrigate.

     “அன்புநீர் பாய்ச்சி யறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ்” (அறநெறி.5.);

   2. தள்ளுதல்; to push over, upset, throw down.

     “இலங்கையைக் கீழுறப் பாய்ச்சி” (கம்பரா.நிந்த.63.);

   3. குத்துதல்(வின்);; to thurst. plunge into:

   4. உட்செலுத்துதல்; to infuse, inject, introduce, as poison, to put in;

 to cause to enter .

     ‘தூணிலேபாய்ச்சினார்கள்’ (ஈடு.2.8.9.);

ம. பாய்க்குக.

     [பாய் → பாய்ச்சு]

பாய்ச்சுகண்டி

 பாய்ச்சுகண்டி pāyccugaṇṭi, பெ. (n.)

   சாதிப் பத்திரி; mace (சா.அக);

மறுவ: வசுவாசி

பாய்ச்சுக்காட்டு-தல்

பாய்ச்சுக்காட்டு-தல் pāyccukkāṭṭudal,    5. செ.கு.வி (v.i.)

   1. குழந்தைகளிடமிருந்து ஒளித்து வைப்பதில் கைத்திறங்காட்டுதல்; to show sleight of hand, as in concealing objects from the eyes of children.

   2. பாய்ச்சல் காட்டு-. 2, பார்க்க;See {pāycca/-kåttu}

     [பாய்ச்சு + காட்டு-.]

பாய்ச்சுத்தேள்

பாய்ச்சுத்தேள் pāyccuttēḷ, பெ. (n.)

   பொய்த்தேளி ட் டு ப் பி ற ரைக் கலங்கப்பண்ணுதல்போல உண்டாக்கும் அச்சவுணர்வு(சிலப்,9,48, உரை.);; false alarm caused by throwing an imitation scorpion at a person.

     [பாய் → பாய்ச்சு + தேள்]

பாய்ச்சுலக்கை

பாய்ச்சுலக்கை pāycculakkai, பெ. (n.)

   1. இருவர் மாறி மாறி இடைவிடாது இரண்டு உலக்கையாற் குத்துகை; alternate stroke of two pestles when two persons work jointly in husking grain.

   2. இருவர் எதிர் நின்று ஒற்றையுலக்கை கொண்டே தவசங் குத்துகையில் அவரவர் முறையில் உலக்கையை மாறிவாங்குகை; exchange of pestle at every stroke when two persons jointly husk grain.

     [பாய்ச்சு + உலக்கை]

பாய்ச்சுவலை

 பாய்ச்சுவலை pāyccuvalai, பெ. (n.)

   பலர் பிடித்துப் பாய்ச்சியிழுக்கும் மீன்வலை; fishing net, let down perpendiculary and then drawn ashore.

     [பாய்ச்சு + வலை]

பாய்ச்சை

 பாய்ச்சை pāyccai, பெ. (n.)

   சிள்வண்டு; cricket.

     [P]

     (இப்பூச்சியின் உணர்கொம்புகள் மெல்லி யனவாயும் மிகவும் நீண்டும் இருக்கும் வாயுறுப்புகள் கடித்துண்பதற்காக அமைந் திருக்கின்றன. பின்னங்கால்கள் தத்திக் குதிப்பதற்கானவை. பாதம் மூன்று பகுதிகளாலானது. பாய்ச்சையின் முன் இறக்கைகள் சிறப்பான அமைப்பைக் கொண்டவை. இவை நேர் நீளத்தில் மடிந்திருப்பதால் வேறு பூச்சிகளிலிருந்து இவற்றை எளிதில் கண்டறியலாம். இறக்கைகள் இல்லாத பாய்ச்சைகளும். மிகவும் வளர்ச்சி குன்றிய இறக்கை களையுடைய பாய்ச்சைகளும் உள.

   ஆண் பாய்ச்சைகளே ஒலி உண்டாக்கும்;அவற்றின் முன்னிணைச் சிறகுகளில் ஒலி உண்டாக்கும் உறுப்புகள் அமைந்துள்ளன.

இவை ஒன்றோடொன்று உரசுவதால் ஒலி உண்டாகிறது. ஒலியை உணரும் செவி இப்பூச்சியின் முன்னிணைக்கால்களின் முழங்காலில் (Tibia); வைக்கப் பட்டிருக்கின்றன.

பொதுவாகப் பாய்ச்சைகள் நிலைத்திணை உணவையே உட்கொள்ளும். சில பாய்ச்சைகள் விதையின் முனைகளைக் கடித்துத் தீங்குவிளைவிக்கும். வேறு சில, இறந்த புழு,பூச்சிகளை உண்ணும். வீட்டுப் பாய்ச்சைகள் துணி, புத்தகம், தோல் முதலியவற்றைத் தின்னும். பாய்ச்சைகள்

மண்ணிலும் செடிகளிலும்முட்டையிடுகின்றன. முட்டையிடும் உறுப்பு பெரும்பாலும் ஈட்டி போல் நீண்டிருக்கும். பாய்ச்சைகள் பலவகை: விட்டுப்பாய்ச்சை (House C); நமது வீட்டினுள் சுவர். துளைகளிலும் படங்களினடியிலும் வாழ்கின்றது மரப்பாய்ச்சை (Tree C.); செடிகளின் இலைகளைத்தின்று வாழ்கின்றது. வயல் பாய்ச்சையை (Field C.); வயல் வெளிகளிலும், கற்களினடியிலும், அழுகிய தாவரத்தண்டின் அடியிலும் காணலாம் பிள்ளைப்பூச்சி, மண்ணைத் துளைத்து அதனுள் வாழ்கிறது

இனிய ஒலியை எழுப்பும் மரப்பாய்ச்சைகளும் உண்டு சீனாவிலும் சப்பானிலும் இவ்வொலியை விரும்பி இவற்றை வீட்டில் கூடுகளிலிட்டு வளர்க்கிறார்கள்)

     ‘அடி உன் பல்லைப் பாச்சை அரிக்க’ (பழ.);

பாய்தலடைவு

 பாய்தலடைவு pāytalaḍaivu, பெ. (n.)

   அரைமண்டியிலிருந்து பக்கங்களிலும் முன்னு மாகவும் பாய்ந்தாடுவது; a speedy dance movement.

     [பாய்தல்+ அடைவு]

பாய்திரும்பு-தல்

பாய்திரும்பு-தல் pāydirumbudal,    5. செ.கு.வி. (v.i.)

   கடல் மேற்சென்ற மரக்கலம் கரைசேர்தல்; fishing ship: to return the shore.

பாய்தூக்கியோடு-தல்

பாய்தூக்கியோடு-தல்2 pāydūkkiyōṭudal,    5. செ.கு.வி.(v.i.)

பாய்வலி-த்தல் பார்க்க;See {рау-иa/F,}

     [பாய் + தூக்கி + ஓடு]

பாய்தூக்கியோடு—தல்

பாய்தூக்கியோடு—தல்1 pāydūkkiyōṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   பாய்ப்பருமலில் பாயை ஏற்றி அதன் துணையால் கலஞ்செலுத்துதல் (செங்கை. மீனவ.);; to sail the ship after veiling the mat.

     [பாய் + தூக்கி + ஒடு-]

பாய்தூக்கு–தல்

பாய்தூக்கு–தல் pāydūkkudal,    9. செ.கு.வி. பாய்வலி (வின்) பார்க்க;See {pay-wal}

பாய்த்து

பாய்த்து2 pāyttu, பெ.(n.)

பாய்ச்சல்3 பார்க்க;See {paycca}

     ‘தவளைப்பாய்த்து’ (நன்.19.);

     [பாய் → பாய்த்து-,]

     ‘ஒ’ தொழிற்பெயரீறு.

பாய்த்து-தல்

பாய்த்து-தல் pāyddudal,    5. செ.குன்றாவி (v.t.)

பாய்ச்சு-, பார்க்க;See {payccu-}

     “இன்றேன் பாய்த்தி நிரம்பிய வற்புதம்” (திருவாச.3,173);

     [பாய் → பாய்த்து-,]

பாய்த்துஅளத்-தல்

பாய்த்துஅளத்-தல் pāyttuaḷattal,    3. செ.கு.வி. (v.i.)

   தவசக் குவியல்களில் அளக்கும் கருவியைச்செருகி அளத்தல்; to make full measure.

     [பாய்த்து + அள-,]

பாய்த்துக்கு

 பாய்த்துக்கு pāyttukku, பெ. (n.)

   தலையணை, பாய் போன்றவற்றை வைப்பதற்கு உத்தரப் பலகையில் பொருத்தப்படும் சட்டங்களான தட்டி; barrack.

     [பாய்+துரக்கு]

பாய்த்துள்

 பாய்த்துள் pāyttuḷ, பெ. (n.)

   பாய்கை; spring, leар.

     [பாய் → பாய்த்துள்]

     ‘உள்’ தொழிற்பெயர்விகுதி.

ஒ.நோ.விக்குள்.

பாய்பூட்டு-தல்

பாய்பூட்டு-தல் pāypūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

பாய்வலி-த்தல்;பார்க்க. see {pay-wall,}

     [பாய் + பூட்டு-,]

ஒ.நோ. ஏர்யூட்டு-தல்

பாய்ப்பருமல்

 பாய்ப்பருமல் pāypparumal, பெ. (n.)

பாய்க்கோல் பார்க்க;See {pay-k-kal}

பாய்மடை

 பாய்மடை pāymaḍai, பெ. (n.)

   வாய்க் காலிலிருந்து தண்ணீர் பாயும் வழி; opening in the ridge of a field for the inflow of water.

பாய்மரக்கப்பல்

 பாய்மரக்கப்பல் pāymarakkappal, பெ. (n.)

   காற்றின் விசையால் செல்லுதற்கேற்ற வகையில் பாய்கள் கட்டப்பட்ட பழங்கால கப்பல்; sailing ship.

     [பாய்மரம் + கப்பல்]

பாய்மரக்கயிறு

 பாய்மரக்கயிறு pāymarakkayiṟu, பெ. (n.)

   ஆலாத்து(பாண்டிச்.);; cable.

     [பாய்மரம் + கயிறு]

பாய்மரக்கூம்பு

 பாய்மரக்கூம்பு pāymarakāmbu, பெ. (n.)

   பாய்மரத்தின் உச்சிa (naut);; knob or Conical top of a mast.

     [பாய்மரம் + கூம்பு]

பாய்மரம்

பாய்மரம் pāymaram, பெ. (n.)

   கப்பற் பாய் தூக்கும் நடுமரம்; mast.

     “பாய்மரக் கொடிபோல” (மதுரைப் பதிற்றுப்.16);

     [பாய் + மரம்]

     ‘பாய்மரமில்லாத கப்பலைப்போல’ (பழ);

     ‘பாய்மரம் சேர்ந்த காகம் போலானேன்’ (பழி);

பாய்மரவங்கு

 பாய்மரவங்கு pāymaravaṅgu, பெ. (n.)

   பாய்மரஞ்செருகும் குறுக்குக் கட்டைத் துளை;     [பாய்மரம் + வங்கு]

பாய்மரவிருட்சம்

 பாய்மரவிருட்சம் pāymaraviruṭcam, பெ. (n.)

   நெட்டிலிங்கம் பார்க்க;  indian mast tree (வின்); see {netțilingam}

     [பாய்மரம் + {sktwrksa,} த. விருட்சம்]

பாய்மா

பாய்மா pāymā, பெ. (n.)

   1. குதிரை; horse.

     “படைக்குட்டம் பாய்மா வுடையானுடைக்கிற்கும்’ (நான்மணி.18);

   2. புலி; tiger (பிங்);

     [பாய் + மா]

பாய்மாறு-தல்

பாய்மாறு-தல் pāymāṟudal,    5. செ.கு.வி.(v.i.)

   செலுத்து நெறிக்கேற்பக் கப்பற்பாயை மாற வைத்தல்;     [பாய் + மாறு-,]

பாய்மாலி

 பாய்மாலி pāymāli, பெ.(n.)

   வெள்ளச் சேதம்(வின்);; destruction of land by flood.

பாய்மிதி-த்தல்

பாய்மிதி-த்தல் pāymididdal,    4. செ.கு.வி. (v.i.)

   உடலுறவு; sexual intercourse.

     [பாய் + மிதி-,]

பாய்வரு-தல்

 பாய்வரு-தல் pāyvarudal, செ.கு.வி.(v.i.)

   கடல்மேற் சென்ற மரக்கலம் அலைவாய் நோக்கித் திரும்புதல் (மீனவ.பொ.);; to return after finishing the fishing in the sea.

பாய்வலி-த்தல்

பாய்வலி-த்தல் pāyvalittal,    4. செ.கு.வி.(v.i.)

   1. கப்பற்பாய் ஏற்றுதல்;(வின்.);

 to hoist sail.

   2. கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச் செய்தல்; to spread sail.

     [பாய் + வலி-,]

பாய்விரி

பாய்விரி1 pāyvirittal, செ.கு.வி.(v.i.)

   1. கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச் செய்தல்; to spread sail.

   2. வழிச்செலவு தொடங்குதல் (இ.வ.);; to start or embark on a journey.

   3. பரத்தமை; adultration.

     “அவள் பத்துப் பேருக்குப் பாய் விரித்தவள்”

     [பாய் + விரி]

 பாய்விரி pāyviri, பெ. (n.)

   பசலை வகை (மலை.);; purslane.

பாரகன்

பாரகன்1 pāragaṉ, பெ. (n.)

பாரங்கதன் பார்க்க;See {pārangatan.}

     “வேதபாரகன்” (கம்பரா.இரணி.27);

 பாரகன்2 pāragaṉ, பெ. (n.)

   1. சுமப்போன்; carrier, bearer.

     “பாரகர்பரிக்க” (சி.சி.2,95.);

   2. தாங்குபவன்; supporter, sustainer.

     “பாரகன் றனையும்” (சிவதரு.பாவ.8.);

     [பாரகம் → பாரகன்]

 பாரகன்1 pāragaṉ, பெ.(n.)

   சுமப்போன்; carrier, bearer.

     “பாரகர்பரிக்க (சி.சி.2,95);.

   2. தாங்குபவன்; supporter, sustainer.

     “பாரகன் றனையும் (சிவதரு.பாவ.8);.

     [Skt. {} → த. பாரகன்]

 பாரகன்2 pāragaṉ, பெ.(n.)

   கல்வித்துறையில் கரை கண்டவன்; a learned person, one who has reached the further shore or utmost limit of an art.

     [Skt. {} → த. பாரகன்]

பாரகம்

பாரகம்1 pāragam, பெ. (n.)

   நிலம்; earth.

     “கிளர் நீருடுத்த பாரகம்” (கம்பரா. மந்தரை.76.);

     “பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென” (மணிமே.16-134);

     “பாரக வீதியிற் பண்டையோ ரிழைத்த” (மணிமே.28-201);

     [பார் → பாரகம்]

 பாரகம்2 pāragam, பெ. (n.)

   திரைச்சீலை (பிங்.);; curtain.

 பாரகம் pāragam, பெ. (n.)

   தோணி. (சங்.அக.);; boat.

பாரகர்

பாரகர் pāragar, பெ. (n.)

   1. கரைகண்டவர்;(கோயிற்பு.நடராச.33.);

 one who learn verywell.

   2. சுமப்பவர்; career, bearer.

     “பாரகர் பரிக்கக்கொட்ட” (சி.சி.2:95.);

   3. நாயகர்; the supreme being.

     “ஒப்புடைய மனத்தினராய்ப் பாரகர் பாரியர் வாழு முறயுளெங்கும்” (அரணகிரிபு.நக.14.);

     [பார் → பாரகர்]

பாரகாவியம்

பாரகாவியம் pārakāviyam, பெ. (n.)

   பெருங்காப்பியம்; great epic.

     “பாரகாவியமெலா

மீரிரு தினத்தினிற் பகர” (தமிழ்நா.221.);

     [பார + காவியம்]

 பாரகாவியம் pārakāviyam, பெ.(n.)

   பெருங்காப்பியம்; great epic.

     “பார காவியமெலா மீரிரு தினத்தினிற் பகர” (தமிழ்நா.221);.

     [Skt. {} → த. பாரகாவியம்]

பாரகூலி

பாரகூலி pāraāli, பெ. (n.)

   சாமானை எடுத்துக் கொண்டு போவதற்குரிய கூலி (s.i.i.i140.);; cartage; freight, carrier’s charges.

     [பாரம் + கூலி]

பாரக்கண்டை

 பாரக்கண்டை pārakkaṇṭai, பெ. (n.)

   மட்டி மீன்வகை; a kind of fish.

     [பாரை+கெண்டை → பாரக்கெண்டை]

பாரக்கற்றலை

பாரக்கற்றலை pārakkaṟṟalai, பெ. (n.)

   கற்றலை மீன்வகை (பறாளை பள்ளு.15.);; a kind of fish.

     [பாரை + கற்றலை → பாரக்கற்றலை]

பாரங்கதன்

 பாரங்கதன் pāraṅgadaṉ, பெ.(n.)

   கல்வித் துறையிற் கரை கண்டவன்; a learned person, one who has reached the further shore or utmost limit of an art.

     [Skt. {}-gata → த. பாரங்கதன்]

பாரங்கம்

 பாரங்கம் pāraṅgam, பெ. (n.)

   இலவங்கப் பட்டை (சங்.அக.);; cinnamon bark.

பாரங்கி

பாரங்கி pāraṅgi, பெ. (n.)

பாரங்கு, 1. (சங். அக.); பார்க்க;See {pārarigui.}

பாரங்கு

பாரங்கு pāraṅgu, பெ. (n.)

   1. சிறுதேக்கு(சங்.அக.);;See {sirutēuku;}

 beetle killer.

   2. காட்டிலவு (சங். அக.);; false tragacanth.

   3. நரிவாழை. (மலை.);; tube flower.

மறுவ: கோங்கிலவு.

 பாரங்கு pāraṅgu, பெ.(n.)

   1. சிறுதேக்கு (சங்.அக.);; beetle killer.

   2. காட்டிலவு (சங்.அக.);; false tragacanth.

   3. நரி வாழை (மலை.);; tube flower.

     [Skt. {} → த. பாரங்கு]

பாரசவம்

 பாரசவம் pārasavam, பெ. (n.)

   படைக்கலப் பொது (யாழ்.அக.);; weapon.

பாரசி

பாரசி pārasi, பெ.(n.)

   1. பன்னிரண்டாம் நாள் பிறைநிலா (துவாதசி);; the 12th day of the lunar fortnight.

     “வாட் கண்ணார் பாரசிநாள் பைம்பூந் தொடையலோடேந்திய தூபம் (திவ்.இயற்.1:82);.

     [Skt. {} → Pkt. {} → த. பாரசி]

பாரசிகை

 பாரசிகை pārasigai, பெ. (n.)

   பருந்து (பிங்.);; hawk, falcon kite.

மறுவ: காரத்தி

பாரசீகம்

பாரசீகம் pāracīkam, பெ.(n.)

   ஒருநாடு; Persia one of 56 tesam.

     “பாரசீகத்திற் புக்கான் (இரகு.திக்கு.226);.

     [Skt.{} → த. பாரசீகம்]

பாரசீகவோமம்

 பாரசீகவோமம் pāracīkavōmam, பெ. (n.)

   குராசானியோமம்; black hencane.

     [பாரசீகம் + ஒமம்]

பாரச்சாவு

பாரச்சாவு pāraccāvu, பெ. (n.)

   1. அகவை முதிர்ந்தோரின் இறப்பு(இ.வ.);; death of a very old person.

   2. காலமல்லாத காலத்தில் ஏற்படும் இறப்பு.

 untimely death of a person.

     [பாரம் + சாவு]

பாரச்சுமை

 பாரச்சுமை pāraccumai, பெ. (n.)

   கனத்த சுமை (யாழ்.அக.);; heavy burden.

     [பாரம் + சுமை]

பாரஞ்சாம்பி

 பாரஞ்சாம்பி pārañjāmbi, பெ, (n.)

சுமையை யேற்றியிறக்குவதற்குரிய கருவி(புதுவை.);:

 crane.

     [பாரம் + சாம்பி]

பாரடித்திருக்கை

 பாரடித்திருக்கை pāraḍittirukkai, பெ. (n.)

   கடலடிப் பாறைகளின் இடுக்கில் தங்குமொரு திருக்கை மீன் வகை; a kind of trukkaimin.

     [பாரடி + திருக்கை]

பாரணம்

பாரணம் pāraṇam, பெ. (n.)

   மனத்திற்கு இசைந்து ஓதுதல்; ceremonial recitation.

     “பாரணங்க ளெங்கும் பரந்தொலிப்ப”

     [பார்1 + அணம்]

 பாரணம்2 pāraṇam, பெ. (n.)

   மேகம் (யாழ்.அக.);; cloud.

     [பார்2 + .அணம்]

 பாரணம்1 pāraṇam, பெ.(n.)

   1. உண்ணுகை; eating, taking food.

     “தேவர் பாரணம் பண்ண விட்ட பைம்பொன் வேதிகையில் (பாரத. இராசசூ.90);.

   2. நோன்பு இருந்து உண்ணுகை; breaking a fast.

     “வந்தமாதவர்களோடும் பாரண மகிழ்ந்து செய்தான் (கந்தபு.கந்தவி. 14);.

   3. நிறைவு (யாழ்.அக.);; satistaction.

     [Skt. {} → த. பாரணம்]

பாரணை

பாரணை pāraṇai, பெ.(n.)

பாரணம்1 2 பார்க்க;see {} 2.

     “துவாதசிப் பாரணையருந்த (வரத.பாகவத.அம்பரீட.8);

     [Skt. {} → த. பாரணை]

பாரதகண்டம்

பாரதகண்டம் pāradagaṇṭam, பெ.(n.)

   இந்திய நாடு; India.

இமயகிரிக்கும் தென் கடற்குமிடைப் பாகம் பாரதமே (சிவதரு. கோபுர.51);.

     [Skt. {} → த. பாரதம்+கண்டம்]

பாரதப்போர்

பாரதப்போர் pāradappōr, பெ.(n.)

   பாண்டவ கெளரவப்போர் (திவ்.பெரியதி.4,6,6);; the Mahabarata war.

   2. பெருஞ்சச்சரவு; a big fight or quarrel.

     [Skt. {}+ த. போர்]

பாரதம்

பாரதம்2 pāradam, பெ. (n.)

   இதளியம். (நாமதீப.395.);; quick silver.

 பாரதம் pāradam, பெ.(n.)

   1. பாரதப்போர்; the great war of {}

     “நீயன்றி மாபாரதமகற்ற மற்றார் கொல் வல்லாரே (பாரத.கிருட்டிண.34);.

   2. மாபாரதம்; the Mahabharata.

     [Skt. {} → த. பாரதம்]

பாரதம்பாடிய பெருந்தேவனார்

பாரதம்பாடிய பெருந்தேவனார் bāradambāṭiyaberundēvaṉār, பெ. (n.)

   பாரத வெண்பாப் பாடிய புலவர்; a poet, the author of {pārada-Venbā.}

   பாரதத்தை வெண்பாவும் அகவலும் உரைநடையும் விரவிவரப் பாடி வெளியிட்டமையால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பெற்றார். இவர் பாடிய பாரதம் முழுவதும் கிடைக்கவில்லை;உத்தியோக பருவம், வீடும பருவம், துரோண பருவம் ஆகிய மூன்று பருவங்களிலும் 818 வெண்பாக்களும் 6 ஆசிரியப் பாக்களும் 6 ஆசிரிய மண்டிலப் பாக்களும் மட்டுமே கிடைத்திருக்கின்றன. இவர் பிறந்தது தொண்டை நாடு எனத் தொண்டைமண்டல சதகத்தால் அறிகிறோம். இப்பொழுது அச்சிட்டு வழங்கும் பாரத வெண்பாவில் முதலில் விநாயக வணக்கமும், அடுத்துத் தெள்ளாற்றில் போர்வென்ற அரசன் சிறப்புங் கூறுவது காரணமாகப் படிக்காகப் புலவர் இவரைத் தொண்டை மண்டலத்தார் என்று எழுதி வைத்தார். தெள்ளாற்றில் போர் வென்ற நிகழ்ச்சி கடைக்கழங்கம் அழிந்த பல்லாண்டுகளுக்குப் பின்னரேயாகும். ஆதலின் இப்பிற்காலப் பாரத நூலுக்கு வேறாகச் கழகக்காலத்தில் தோன்றிய பாரதநூல் ஒன்று இருத்தல் வேண்டும். நச்சினார்க் கினியராலும், தொல்காப்பியத்தின் பிற உரையாசிரியர்களாலும் மேற்கோள்களாக எடுத்தாளப்பட்ட பாரத நூற் செய்யுட்கள் முற்காலத்தனவாகலாம். பாண்டியர்களின் வேள்விக்குடிச் செப்பேடு, தமிழ்க் கழகம் நிறுவிய சில ஆண்டுகளுக்குப் பின் வந்த பாண்டிய மன்னன் ஒருவன் பெரு முயற்சியால் பாரதம் தமிழில் ஆக்கப்பட்டது என்று கூறுகின்றது. எனவே இந்நூல் கழகக்காலத்தின் முடிவில் தோன்றியிருக் கலாம் என்று கருதுகின்றனர்.

ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய ஐந்து தொகை நூல்களிலுமுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள். பாரதம் பாடிய பெருந்தேவனார் பெயரில் இடம்பெற்றுள்ளன.

இக்கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபிரான், திருமால், முருகன் ஆகிய கடவுள்களுக்குக் கூறப்பட்டவையாகும்.)

பாரதவெண்பா

 பாரதவெண்பா pāradaveṇpā, பெ. (n.)

   பெருந்தேவனாரால் பெரும் பான்மையும் வெண்பாவிற் பாடப்பட்ட பாரதம்; the {paradam,} composed chiefly in {Venbå} metre by {peruntēvanār.}

     [பாரத + வெண்பா]

பாரதாகம்

 பாரதாகம் pāratākam, பெ. (n.)

   பேராமுட்டி;  fragrant stickly mallow. (சா.அக.);

பாரதாயன்

பாரதாயன் pāratāyaṉ, பெ.(n.)

   பாரத்துவாச குலத்தைச் சேர்ந்தவன்; one belonging to {}.

     “பாரதாயன் கேசவன்” (S.I.I. iii, 150, 1);.

     [Skt. {} → த. பாரதாயன்]

பாரதாரிகம்

 பாரதாரிகம் pāratārigam, பெ.(n.)

   பிறர்மனை விழைகை (யாழ்.அக.);; sexual intercourse with the wife of another, adultery.

     [Skt. {} → த. பாரதாரிகம்]

பாரதி

பாரதி pāradi, பெ.(n.)

   1. கலைமகள் (பிங்.);; Sarasvati.

   2. பைரவி; goddess Bhairavi.

     “பாரதியாடிய பாரதி யரங்கத்து (சிலப்.6,39);.

   3. புலமையாளன்; learned person.

   4. சொல் (யாழ்.அக.);; word.

     [Skt. {} → த. பாரதி]

பாரதிகி

 பாரதிகி pāradigi, பெ. (n.)

   கடம்பு; cadamba tree. (சா.அக.);

பாரதிகொழுநன்

 பாரதிகொழுநன் pāradigoḻunaṉ, பெ.(n.)

   நான்முகன் (பிங்.);; Brahma, the consort of Sarasvati.

     [Skt. bharati → த. பாரதி+கொழுநன்]

பாரதிக்கை

பாரதிக்கை pāradikkai, பெ. (n.)

   {(nàtya);} இணக்கை வகை. (பரத. பாவ. 58.);; a pose with both hands.

     [பாரதி + கை]

பாரதியினாம்

 பாரதியினாம் pāradiyiṉām, பெ.(n.)

   கோயில்களில் பாரதம் படித்தற்கு ஏற்படுத்தப் பட்ட மானியம்; endowment for reading the {} in temples.

     [Skt. {} → த. பாரதியினாம்]

பாரதிரசம்

பாரதிரசம் pāradirasam, பெ. (n.)

   இதளியம் கந்தகம் முதலியன சேர்ந்த கூட்டுமருந்து வகை (பைஷஜ. 153.);; a medicine compounded of quicksilver, sulphur and other ingredients.

     [பாரதி + ரசம்]

பாரதூரம்

பாரதூரம் pāratūram, பெ. (n.)

   1. பெருந்தூரம் (வின்.);; great distance.

   2. இன்றியமையாதது

 that which is important or Momentous.

   3. ஆழ்ந்த எதிர்காலம் பற்றிய ஆராய்ச்சி (கொ.வ.);

 foresight.

     [பாரம் +தூரம்]

பாரத்தனம்

பாரத்தனம் pārattaṉam, பெ. (n.)

   பெருமிதம்; pride of achievement.

     “பாரத்தனம்பேசல் பண்போ” (தாயு.பராபர.271.);

     [பாரம் + தனம்]

பாரத்துவாசன்

பாரத்துவாசன் pārattuvācaṉ, பெ.(n.)

   1. துரோணாச்சாரியன் (பிங்.);;{}.

   2. அகத்திய முனிவர் (யாழ்.அக.);; sage Agastya.

   3. ஒரு துறவி; a {} believed to be nursed by a bird.

     [Skt. {} → த. பாரத்துவாசன்]

பாரத்துவாசம்

பாரத்துவாசம் pārattuvācam, பெ. (n.)

   1. வலியன் (திவா.); பார்க்க,

 kingcrow.

   2. காடை (வின்.); பார்க்க Quail.

   3.கற்பநூல ளொன்று (தொல்.பொ.75,உரை.);

 a treatise on kalpa.

   4. எலும்பு. (யாழ். அக.);; bone.

 பாரத்துவாசம் pārattuvācam, பெ.(n.)

   1. கரிக்குருவி (திவ.);; king crow

   2. காடை; quail.

   3. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் மருந்து பற்றிக் கூறும் ஒரு நூல் (தொல்.பொருள். 75. உரை);; a treatise on kalpa.

   4. எலும்பு; bone.

     [Skt. {} → த. பாரத்துவாசம்]

பாரத்தொந்தரை

 பாரத்தொந்தரை pārattondarai, பெ. (n.)

   தொந்தரவு மிக்க பெருஞ்செயல்(வின்.);; a weighty and troublesome business.

     [பாரம் + தொந்தரை]

பாரனை

 பாரனை pāraṉai, பெ. (n.)

   ஆளத்திவகையினுள் ஒன்று; a feature of alatti-a muscial note

     [பார் +அணை]

பாரபட்சம்

 பாரபட்சம் bārabaṭcam, பெ.(n.)

   ஒரு பாற்கோடல்; partiality bias.

     [Skt. {} → த. பாரபட்சம்]

பாரபத்தியக்காரன்

பாரபத்தியக்காரன் bārabattiyakkāraṉ, பெ.(n.)

   1. மேல் உசாவல் (விசாரணை); செய்யும் அதிகாரி; overseer.

   2. வரி ஈட்டும் (வசூல்); அதிகாரி முதலியோர் (யாழ்.அக.);; bailiff, collector of village revenue.

   3. அலுவலன் (உத்தியோகத்தன்); (யாழ்.அக.);; Officer.

   4. பொறுப்பான வேலையுள்ளவன் (நெல்லை.);; a person saddled with responsible duties.

     [பாரபத்தியம்+காரன் – பாரபத்தியக்காரன்]

பாரபத்தியம்

பாரபத்தியம் bārabattiyam, பெ.(n.)

   1. மேல் உசாவல் (விசாரணை); (வின்.);; inspection;stewardship.

   2. வாய்மையாளனின் (நியாயம்); ஆளுமை (வின்.);; judicial cognisance.

   3. பொறுப்புமிக்க வேலை (இ.வ.);; a work of great responsibiliy.

   4. கொடுக்கல் வாங்கல் (வின்.);; money – dealings.

த.வ.முறை உசாவல், நயன் உசாவல், நேர் கேட்பு

     [Te. {} → த. பாரபத்தியம்]

பாரப்படு-தல்

பாரப்படு-தல் pārappaḍudal, செ.கு.வி. (v.i.)(யாழ்ப்.)

   1. பொறுப்புமிகுதல்; to become burdensome or onerous.

   2. சுமைமிகுதல்; to be heavily laden.

   3. வழக்கு மன்றத்தில் உகவலுக்கு வைக்கப்படுதல்; to be committed for trial.

பாரப்பட்ட காரியம்

பாரப்பட்ட காரியம் pārappaṭṭakāriyam, பெ. (n.)

   1. பெரிய செய்தி; serious affair.

   2. பெரும்படியான தொழில்; business on a large scale.

     [பாரப்பட்ட + skt. {karya,} த. காரியம்]

பாரப்பழி

 பாரப்பழி pārappaḻi, பெ. (n.)

   பெருங்குற்றம் (யாழ்.அக.);; serious offence.

     [பாரம் + பழி]

பாரப்புரளி

பாரப்புரளி pārappuraḷi, பெ. (n.)

   1. பெரும்பொய்:

 downright lie.

   2. பெருங்குறும்பு; great mischief.

     [பாரம் + புரளி]

பாரமர்

 பாரமர் pāramar, பெ. (n.)

   மாமரம்; mango tree. (சா.அக.);

பாரமா

 பாரமா pāramā, பெ. (n.)

   மாமரம் (சங்.அக.);; mango tree.

பாரமார்த்திகம்

பாரமார்த்திகம் pāramārttigam, பெ.(n.)

   1. முடிவில் உண்மையானது; ultimate reality.

   2. மெய் அறிவிற் (ஞானத்து);குரியது; that which relates to highest truth or spiritual knowledge, opp. to {}.

   3. ஏய்க்கும் எண்ணம் இல்லா தன்மை (இ.வ.);; good faith;

 guilelessness.

   4. ஈடுபாடு (C.G.);; devotedness, loyalty.

     [Skt. {} → த. பாரமார்த்திகம்]

பாரமிதை

பாரமிதை pāramidai, பெ.(n.)

   புத்தப் பதவிக் குரிய பத்து நன்னடத்தைகள் (விசேடம்);;     “அளப்பரும் பாரமிதை யளவின்று நிறைத்து” (மணிமே.26, 45.);.

     [Skt. {} → த. பாரமிதை]

பாரமேச்சுவரம்

பாரமேச்சுவரம் pāramēccuvaram, பெ. (n.)

   சிவனியத்தோன்றியம் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச.பொது.334,உரை.);; an ancient {Šaiva} scripture in sanskrit, one of 28 {civákamam, qv.§.}

     [பரம → பாரம + skt. ஈச்சுரம்]

பாரமேட்டி

பாரமேட்டி pāramēṭṭi, பெ.(n.)

   ஒரு வகைத் துறவி (சந்நியாசி);; a superior order of ascetics,

     “சந்நியாசிரியரிற் பாரமேட்டி யோகியென விருவருளர்” (கூர்மபு.வரு.40);.

     [Skt. {} → த. பாரமேட்டி]

பாரம்

பாரம்1 pāram, பெ. (n.)

   1. உலகம் (பிங்.);; earth.

   2. பருத்தி; indian cotton plant.

     “பாரம் பீரம் பைங் குருக்கத்தி” (குறிஞ்சிப்.92.);

     [ பார் + பாரம் ]

 பாரம்2 pāram, பெ. (n.)

   1. பொறுக்கை (சூடா.);; bearing, sustaining.

   2. கனம் (சூடா.);; weight,heaviness.

     “பாரக்குடர் மிடைபாசடை” (இராம. கரன்.64.);

   3. சுமை; burden, load.

     “பாரேறு பெரும்பாரந்தீர (திவ்.பெரியதி. 2,10,8.);

   4. இடவேறுபாடு பற்றி 20 அல்லது 21 அல்லது 28 துலாங்கொண்ட நிறைவகை (பிங்.);; a standard weight= 20, 210r28 {tulām} in different localities.

   5. பொறுப்பு; accountability, responsibility, charge, trust.

     ‘அவன்மேல் பாரமேற்றினார்’ (வின்.);

   6. பெருங்குடும்பம்; big family, considered a burden.

     “பசித்தும் வாரேம் பாரமுமிலமே” (புறநா.145.);

   7. கொடுமை (வின்.);; oppressiveness. Heinousness.

   8. காய்ச்சல் முதலியவற்றால் உண்டாகும் தலைக்கணம் (வின்.);; heaviness of head, dullness or lethargy from cold or fever.

   9. பெருமை; respectability, nobility, greatness.

     “பாரமா மரபு” (பாரத.சம்பவ.39.);

   10. கடமை (யாழ்.அக.);; duty, obligation.

   11. ஒப்புவிக்கை (வின்.);; commitment, surrender to authority.

   12. குதிரைக்கலனை (சூடா.);; saddle.

   13. கவசம் (பிங்.);; coat of mail.

   14. தோணி.(சூடா.);; boat.

   15. காவுதடி. (யாழ்.அக.);; yoke for carrying a load.

 பாரம்3 pāram, பெ. (n.)

   1. கரை (பிங்.);; bank, shore.

     “காளிந்தி நதியின் பாரம்” (பாரத.குரு.90.);

   2. முடிவு (வின்.);; end, extremity.

 பாரம்4 pāram, பெ. (n.)

விளையாட்டு வகை;(யாழ்.அக.);

 a game.

பாரம் இறக்குதல்

 பாரம் இறக்குதல் pāramiṟakkudal, பெ. (n.)

முக்குவர் இனத்தாரிடமுள்ள ஒரு சடங்கு.

 a ceremony of Mukkuvar.

     [பாரம்+இறக்குதல்]

பாரம் தூக்கி

 பாரம் தூக்கி pāramtūkki, பெ. (n.)

பளுதூக்கி பார்க்க;See {palutükki}

     [பாரம் + தூக்கி]

பாரம்பரம்

பாரம்பரம் pārambaram, பெ.(n.)

பாரம்பரியம் (யாப்.வி.பாயி.பக்.5.); பார்க்க;see {}.

     [Skt. {} –para → த. பாரம்பரம்]

பாரம்பரிய நியாயம்

 பாரம்பரிய நியாயம் pārambariyaniyāyam, பெ.(n.)

   மரபாக (பரம்பரையாக); வரும் வழக்கம் (வின்.);; rights or usages handed down from generation to generation.

த.வ.குலவழக்கம், குடும்ப மரபு

     [Skt. {} → த. பாரம்பரிய நியாயம்]

பாரம்பரியம்

பாரம்பரியம் pārambariyam, பெ.(n.)

   1. மரபு (பரம்பரை.);; series, unbroken succession, hereditary line.

     “பாரம்பரிய மதிமந்திரி” (இராமநா.உயுத்.1.);.

   2. முறைமை (சூடா.);; regular order.

   3. உலக முறை (ஐதிகம்); (வின்.);; tradition.

த.வ.தலைமுறை, கால்மரபு, குலவழக்கம்

     [Skt. {} → த. பாரம்பரியம்]

பாரம்பரியரோகம்

 பாரம்பரியரோகம் pārambariyarōkam, பெ.(n.)

   குல (வம்சம்); வழியாய் வரும் நோய் (M.L.);; hereditary disease.

த.வ.குடும்பநோய், தலைமுறை நோய்

     [Skt. {} → த. பாரம்பரியரோகம்]

பாரற

பாரற pāraṟa, பெ. (n.)

   தடையற; without hinderance.

     “பாவீற்றிருந்த கலைபாரறச் சென்ற கேள்விக் கோவீற்றிருந்த குடி நாட்டணி கூறலுற்றேன்” (சிந்.நாமக.1.);

பாரவதம்

பாரவதம் pāravadam, பெ.(n.)

   பாராவதம்1;   1. (சூடா.); பார்க்க;see {}, 1.

     [Skt. {} → த. பாராவதம்]

பாரவம்

 பாரவம் pāravam, பெ.(n.)

   வில்லின் நாண் (யாழ்.அக.);; bow-string.

த.வ.வில்நரம்பு

     [Skt. {} → த. பாரவம்]

பாரவிருதம்

பாரவிருதம் pāravirudam, பெ.(n.)

   1. உதவி (உபகாரம்);; help, benefit.

   2. வேள்வி முதலிய வற்றில் தேவர், முன்னோர் முதலியோரை எண்ணி இடும் உணவுப்பொருள்; anything offered in sacrifice.

த.வ.கைம்மாறு, உயிர்க்காணிக்கை

பாரா

பாரா pārā, பெ. (n.)

   செவுளில்லாத கடல்மீன்;   பாரை மீனின் வேறானது (செங்கை.மீனவ.);; a kind of sea fish that which is different from {pārāi min.}

 பாரா1 pārā, பெ.(n.)

   இதளியம்(பாதரசம்); (இ.வ.);; mercury, quick-silver.

 பாரா2 pārā, பெ.(n.)

   1. காவல்; watch, custody.

   2. பாராக்காரன்;see {}.

     [U. pahra → த. பாரா2]

 பாரா3 pārā, பெ.(n.)

   கட்டானாட்டத்தில் எட்டினையும், பன்னிரண்டினையும் குறிக்குந் தாய வகை; count of 8 or 12 in the game of draught.

     [U. {} → த. பாரா3]

 பாரா4 pārā, பெ.(n.)

   பகுதி (இ.வ.);; bit, fragment.

த.வ.துண்டு

     [U. {} → த. பாரா4]

 பாரா5 pārā, பெ.(n.)

   புத்தகம் முதலியவற்றிற் பிரிவு பிரிவாகக் காட்டி எழுதப்படும், கட்டுரைப் பகுதி; paragraph.

த.வ.பத்தி

     [E. para → த. பாரா5]

பாராகலம்

பாராகலம் pārākalam, பெ. (n.)

   பன்னிரண்டு பெரிய மரக்கால் கொண்ட கலவளவு (இ.வ.);; a kalam measure of 12 big marakkal.

     [பருமை → பாரா + கலம்]

பாராக்காரன்

 பாராக்காரன் pārākkāraṉ, பெ.(n.)

   காவலாள் (உ.வ.);; guard, sentry.

     [U. {} → த. பாரா+காரன்]

பாராங்கல்

 பாராங்கல் pārāṅgal, பெ. (n.)

சுக்கான்கல்:

 limestone. (சா.அக.);

பாராசாரி

 பாராசாரி pārācāri, பெ.(n.)

   பெரும் உடல் கொண்ட குதிரை (வின்.);; big-sized horse.

     [U. {} → த. பாராசாரி]

பாராசாரியம்

பாராசாரியம் pārācāriyam, பெ. (n.)

   சிற்பநூல் வகை (இருசமய.);; a treatise on architecture, one of 32 {Šispanul.}

பாராட்டு-தல்

பாராட்டு-தல் pārāṭṭudal,    5. செ.குன்றாவி. (v.t.)

   1. புகழ்தல்; to applaud, commend, eulogise.

     “பண்பு பாராட்டு முலகு” (குறள்.994.);

     “பரமனுக்கன்பரான வடியர் பாராட்டு

வாரென்று” (சிவரக.பாயிர.20);

   2. அன்பு செய்தல்; to caress, fondle, to entertain.

     “புதுவது பன்னாளும் பாராட்ட” (கலித்.24.);

   3. பெருமித முரைத்தல்; to boast, make a parade of; to magnify, exaggerate.

     “பாசம்போய் நின்றவர்போற் பாராட்டி” (தாயு.பராபர.41.);

     “மைந்தரைத் தாங்கித்தாயார் மகிழ்ந்து பாராட்டு மோசை’ (அருணகிரிபு.திருநாட்10.);

   4. கொண்டாடுதல்; to celebrate.

     “பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்” (குறள். 524.);

   5. பலகாலுஞ் சொல்லுதல்; to repeat, say over and over.

     “பயனில்சொல் பாராட்டு வானை” (குறள்,196.);

   6. விரித்துரைத்தல் (வின்.);; to expatiate;

 to dwell on

   7. மனத்தில் வைத்தல்; to mind;

 to be affected by;

 to take

 to heart

     ‘துன்பத்தைப் பாராட்டாதே’

பாராட்டுக்காரன்

பாராட்டுக்காரன் pārāṭṭukkāraṉ, பெ. (n.)

   1. பகட்டானபோக்குள்ளவன்; top finical or showy person.

   2. புனைந்து கூறுவோன்; exaggerator.

பாராட்டுச்சரிப்பு

 பாராட்டுச்சரிப்பு pārāṭṭuccarippu, பெ. (n.)

   சொற்களை எடுத்துக் கூறுகை(புதுவை.);; emphasis on a word.

     [பாராட்டு + உச்சரிப்பு]

பாராட்டுந்தாய்

 பாராட்டுந்தாய் pārāṭṭundāy, பெ. (n.)

   ஈன்ற தாய் (திவா.);; mother.

     [பாராட்டும் + தாய்]

பாராட்டுப்பேசு-தல்

பாராட்டுப்பேசு-தல் pārāṭṭuppēcudal,    12. செ.குன்றாவி.(v.t.)

   புகழ்தல்; to applaud.

     [பாராட்டு + பேசு-,]

பாராட்டுவாக்கியம்

 பாராட்டுவாக்கியம் pārāṭṭuvākkiyam, பெ. (n.)

பகட்டுப் பேச்சு;(புதுவை.);

 magniloquence.

     [பாராட்டு + வாக்கியம் ]

 skt. {vakya} த. வாக்கியம்

பாராணி

 பாராணி pārāṇi, பெ. (n.)

   வண்டியின் அச்சு; axis of the cart.

     [பார் + ஆணி]

பாராதுரம்

 பாராதுரம் pārāturam, பெ. (n.)

   ஆழ்ந்த முன்ஆராய்வு(இ.வ.);; foresight.

     ‘பாரதூரமறியாதவன்’.

     [பாரதூரம் → பாராதூரம்]

பாராத்தியம்

 பாராத்தியம் pārāttiyam, பெ. (n.)

துன்பம் (இ.வ.);

 misery distress.

பாராபசலி

பாராபசலி pārāpasali, பெ.(n.)

   ஆங்கிலேயரிடம் கருநாடக மாநிலம் முடிவாக ஒப்புவிக்கப்பட்ட கி.பி.1801 ஆகிய 1212 ஆம் பசலியாண்டு (R.T.);; fasli 1212 or the year 1801 when the Carnatic country was finally ceded to the English.

     [U. {} → த. பரா+பசலி.]

பாராபாரி

பாராபாரி pārāpāri, பெ. (n.)

   பேரளவு; great dimension.

     ‘முழம் கட்டையென்றால் அகலம் பாராபாரி என்பார்கள்’ (மதி.கள.i.5.);

பாராமுகம்

பாராமுகம் pārāmugam, பெ. (n.)

   1. ஒருவரை பார்த்ததாகக் காட்டிக்கொள்ளாத போக்கு; deliberate mattention;ignoring.

     ‘உதவி கேட்டுவிடுவானோ என்று நினைத்துப் பாராமுகமாக உட்கார்ந்திருந்தார்

   2. வேண்டுமென்றே ஒதுக்கிப் புறக்கணிக்கும் போக்கு; indifference;neglect.

     “தொழிலாளர் சிக்கலில் அரசு பாராமுகமாக இருக்கவில்லை”

     “இந்தச் சிக்கிலில் நீங்களும் ஏன் பாராமுகமாக இருக்கிறீர்கள்?”

பாராயணன்

பாராயணன் pārāyaṇaṉ, பெ. (n.)

   1. முறையாக ஓதுபவன்; person who adheres to a course of reading.

   2. ஒன்றனைக் குறிக்கொள்வோன் (பிங்.);; person who concentrates his mind on one object.

பாராயணபத்திரம்

பாராயணபத்திரம்2 bārāyaṇabattiram, பெ. (n.)

   ஆசிரியர் மாணாக்கருக்குக் கொடுக்கும் உறுதிச் சீட்டு (யாழ்.அக.);; an undertaking given by a teacher to his students.

     [பாராயணம் + பத்திரம்]

 skt {Bathira} த. பத்திரம்

பாராயணம்

பாராயணம் pārāyaṇam, பெ. (n.)

   சமய நூல்களை முறைப்படி ஒதுதல் அல்லது படித்தல்; ceremonial recitation or reading.

     “பாராயண மறை நான்கையும்” (கம்பரா.நிகும்ப. 139.);

     “கோயிலில் வேத பாராயணம் நடந்து கொண்டிருந்தது”

     “வேதபாராயணப் பனுவன் மூவர் செய்பனுவலதுகபகரவோ” (தாயு.சச்சி.);

பாராயணி

பாராயணி1 pārāyaṇi, பெ. (n.)

   1. கலைமகள் (யாழ்.அக.);; the goddess of clearning.

   2. முறையாக ஒதுபவன்-ள்(சங்.அக.);; one who adheres to a course of reading.

 பாராயணி2 pārāyaṇittal,    4. செ.குன்றாவி. (v.t.)

   பாராயணமாகப் படித்தல்; to read ceremoniously, as in {pārāyanam.}

     “அதிகமாகப் பயின்றும் பாராயணித்தும்” (இராமநா.முகவுரை. பக்.17.);

பாராயணிகன்

 பாராயணிகன் pārāyaṇigaṉ, பெ. (n.)

   மாணாக்கன் (யாழ்.அக.);; one who studies, student.

     [பாராயணி → பாராயணிகன்]

பாரார்

பாரார் pārār, பெ. (n.)

   பகைவர் (நிகண்டு.);; enemies.

     [பார் + ஆ (எதிர்மறை); + அர்]

 பாரார் pārār, பெ. (n.)

   1. நிலவுலகத்தார்; people of the earth.

     “பாரார் வீசும்புள்ளார்”(திருவாச.8.2.);

     [பார் + ஆர்]

பாராளுமன்றம்

 பாராளுமன்றம் pārāḷumaṉṟam, பெ. (n.)

   காண்க;நாடாளுமன்றம்;See {nagaluாaram}_

     “பாராளுமன்ற அவையில் மேலவை, மக்களவ என் இருஅவைகள் இருக்கின்றன”

பாராவதம்

பாராவதம்1 pārāvadam, பெ.(n.)

   1. புறா (திவா.);; dove, pigeon.

   2. கரும்புறா (பிங்.);; blue rock pigeon, Columba intermedia.

   3. குரங்கு (யாழ்.அக.);; monkey

   4. மலை (யாழ்.அக.);; mountain.

     [Skt. {} → த. பாராவதம்]

 பாராவதம்2 pārāvadam, பெ.(n.)

   கருங்காலி மரம்(மூ.அ.);; ebony.

பாராவபாத்

 பாராவபாத் pārāvapāt, பெ.(n.)

   முகமது நபி இறந்த (மரண); நாளைக் (தினம்); கொண்டாடுந் திருவிழா (W.G.);; the day of Muhammad’s death, observed by the Muhammadans as a religious festival.

     [U. {}-wafat → த. பாராவபாத்]

பாராவயல்

 பாராவயல் pārāvayal, பெ. (n.)

   திருப்பத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruppattur.Taluk.

     [பார்+வயல்]

பாராவளையம்

பாராவளையம் pārāvaḷaiyam, பெ.(n.)

   வளைதடி (பிங்.);; a kind of boomerang.

சதங்கை மாலையைப் பாராவளையமாக எறிந்தும்(சீவக.2656, உரை);.

பாராவாரம்

பாராவாரம் pārāvāram, பெ. (n.)

   1. கடல்; sea ocean.

     “பாராவாரம் பல்வளம் பழுநிற காராளர் சண்பை” (மணிமே. 3, 58.);

     “பாராவாரந் தணைப்பணிவன்” (சேதுபு.சேதுவந்-24.);

   2. கடற்கரை (பிங்.);; sea-shore.

     [பாரா + வாரம்]

பாரி

பாரி1 pārittal,    11. செ.கு.வி. (v.i.)

   1.பரவுதல்; to spread, expand, to around.

     “இவணலம் பாரித்திட்ட விந்நகர்” (சீவக.706);

   2. பருத்தல் (கொ.வ.);; to be bulky, huge.

     “பாரிக்குமார முலை யுமையாட்கும்” (மறைசையந்.);

   3. மிகுதியாதல்; to increase.

     “தாரிப்பின்றிப் பசிதலைக் கொள்வது பாரித்து” (பெரியபு. இளையான்.9.);

   4. தோன்றுதல்; to arise, appear, come into being.

     “பகல் செய் மண்டிலம் பாரித்தாங்கு” (பெரும்பாண்.442.);

   5. ஆயத்தப்படுதல்; to prepare.

     “பாயிய வெழுந்த வேங்கை பாரிக்குமளவில்” (சூளா.துற.19.);.

 பாரி2 pārittal,    11. செ.குன்றாவி. (v.t.)

   1. வளர்த்தல்; to foster.

     ‘பண்பின்மை பாரிக்கும்நோய்” (குறள்.851);.

   2. தோன்றச் செய்தல்; to cause to appear.

   3. அமைத்துக் கொடுத்தல்; to cause to be obtained.

     “பரமபதம் பாகவத ரனைவருக்கும் பாரித்தானால்” (அரிசமயத்திசா.98.);

   4. உண்டாக்குதல்(வின்);; to make, form, Construct, Create, Constitute.

   5. நிறைத்தல்; to fillup, complete.

   6. அணிதல்; to wear as ornaments.

     “கைவளை பாரித்தார்” (இராமநா.பால.21);

   7. போற்றி வணங்குதல்; to worhsip with flowers.

     “தடமல ரெட்டினாற் பாரித்தேத்த” (தேவா.961,9.);

   8. வளைத்தல்; to bend. as a bow.

     “சிலை பாரித்தானே” (சீவக.2285);

   9. உறுதிமொழியெடுத்தல்; taking pledge.

     “பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான்” (திவ்.திருவாய்.); 4.

   10. விரும்புதல்; to deefire.

   11. காட்டுதல்; to show, manifest.

     “முழுநஞ்சு நுதல்விழியும் பாரித்தான்” (கோயிற்பு. பதஞ்ச.34.);

   12. பரப்புதல்; to diffuse.

     “பலகதிர்கள் பாரித்த பைம்பொன் முடியான்” (திவ்.இயற்.3, 44.);

   13. பரக்கக் கூறுதல்; to dwell at length.

     “பயனில பளித்துரைக்கு முரை” (குறள், 193.);

   14. வெளிப்படுத்தல்; to reveal ம express.

     “தம்பதியென்றுரை பாரித்தான்” (கோயிற்பு.திருவிழா.2.);

 பாரி3 pārittal,    11. செ.குன்றாவி. (v.i.)

   1. சுமையாதல்; to be heavy.

   2. நோயினாற் கனமாதல்; to ted heavy.

     “தலை பாரித்துக் கொண்டிருக்கிறது” 3.இன்றியமையாதது ஆதல்;

 to become momentous.

 பாரி4 pārittal, செ.குன்றாவி. (v.t.)

   1. சுமத்துதல்; to lay the burden on, ascribe, impute.

குற்றம் பாரிக்கின்றான்’.

   2. காத்தல்; to guard, protect.

     “இரவிகுலம் பாரிக்கத்தகுவன்” (கலிங்.224.);

     “பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே.” (திருவாச.சிவபு.64.);

 பாரி5 pārittal,    11. செ.குன்றாவி. (v.t.)

   ஒத்தல்; to resemble.

     ‘காந்தனாம் பாந்தளைப் பாரித்தலர்ந்தனவே’ (திருக்கோ.324,உரை.);

 பாரி pāri, பெ. (n.)

   கடையெழுவள்ளல்களுள் ஒருவன்; one among the seven philanthrophist’s in later period.

 பாரி pāri, பெ.(n.)

   கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் பறம்புமலையின் தலைவனும் ஆகிய குறுநில மன்னன்; a beneficient king of prambu hill.

மறுவபாரி வள்ளல்

ம.பார் (வாழ்தல்); – பாரி (வாழ்விப்பவன்);

     [பார்-பாரி]

     [பால். பாலித்தல் – பாரித்தல் (வளர்த்தல்); பால்-பா_பாரி (காப்பவன்); பாரிக்கும் நோய் (குறள்); பாரிடம்- வழுமிடம் பார்வாழுவிடம்]

 பாரி1 pāri, பெ.(n.)

   1. பூந்தாது; pollen.

   2. கட்பாத்திரம்; liquor jug.

   3. யானை கட்டுங் கயிறு; rope for tying an elephant.

   4. சிறங்கை நீர்; handful of water.

த.வ.

   1. மலர்த்துகள்

   2. மதுகலயம்

   3. கையளவு நீர்

     [Skt. {} → த. பாரி]

 பாரி2 pāri, பெ.(n.)

   கடல் (சூடா.);; sea, ocean.

த.வ.முந்நீர்

     [Skt. {} → த. பாரி]

 பாரி3 pāri, பெ.(n.)

   மனைவி; wife.

     “பொற்பூ மடந்தை நற்பாரி” (மாறனலங்.664);.

த.வ.இல்லாள், வாழ்க்கைத்துணை

     [Skt. {} → த. பாரி]

 பாரி4 pāri, பெ.(n.)

   அரிமா (சிங்கம்); (யாழ்.அக.);; lion.

     [Skt. {} → த. பாரி]

 பாரி5 pāri, பெ.(n.)

   கள் (பிங்.);; toddy.

த.வ.தேறல்

     [Skt. {} → த. பாரி]

 பாரி6 pāri, பெ.(n.)

   1. பருத்தது; that which is heavy or big.

   2. முதன்மையானது; that which is important

     “பாரிவிசயம்”.

   3. குமுகாய செல்வாக்கு உடையவன், மதிப்பிற்குரியவன்; man of consequence, weight or importance.

     [U. {} → த. பாரி]

பாரி கொம்பு

 பாரி கொம்பு pārigombu, பெ. (n.)

   அளவில் பெரிய கொம்பு; big horn used as muscial instrument.

     [பாரித்தல்-பாரி+கொம்பு]

பாரி வேட்டை

 பாரி வேட்டை pārivēṭṭai, பெ. (n.)

   கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லுதல்; going for hunting at night with drumming pomp.

 |பாரிசவேட்டை)

பாரிகத்து

 பாரிகத்து pārigattu, பெ.(n.)

   நுண்மை (இ.வ.);; minuteness.

     [U. {} → த. பாரிகத்து]

பாரிகன்

 பாரிகன் pārigaṉ, பெ.(n.)

   தோட்சுமைக்காரன். (யாழ்.அக.);; carrier, porter.

த.வ.சுமைதூக்கி

     [Skt. {} → த. பாரிகன்]

பாரிகாரர்

 பாரிகாரர் pārikārar, பெ. (n.)

   இராக்காவற் காரர்; night watchman.

     [பாரி + காரர்]

பாரிகாரிகன்

 பாரிகாரிகன் pārigārigaṉ, பெ.(n.)

   மாலை தொடுப்போன் (யாழ்.அக.);; one who makes garlands.

     [Skt. {} → த. பாரிகாரிகன்]

பாரிகாரியம்

 பாரிகாரியம் pārikāriyam, பெ.(n.)

   முதன்மை யான பணி (யல்.அக.);; important business.

     [U. {} → த. பாரி+காரியம்]

பாரிக்கைவாரி

 பாரிக்கைவாரி pārikkaivāri, பெ. (n.)

   பெருநாகதாளி; prickly pear. (சா.அக.);.

பாரிக்கோடு

பாரிக்கோடு pārikāṭu, பெ. (n.)

   சிறுவர் விளையாட்டு வகை; a kind of children’s game.

இதில் இருவகை

   1. நாலாளம் பாரி ஆடுகருவி: ஏறத்தாழ நாற்கசச்சதுரமான ஒர் அரங்கு கீறப்படும்.

ஆடுவார் தொகை: இதை ஆட எண்மர் வேண்டும்.

ஆடிடம்: இது பொட்டலிலும் ஆன்ற முற்றத்திலும் ஆடப்பெறும்.

ஆடுமுறை: நந்நான்கு பேருள்ள இருகட்சி அமைக்கப்படும். உடன்பாட்டின் படியோ, திருவுளச் சீட்டின்படியோ, பிறவகைத் தேர்தற்படியோ, ஒரு கட்சியார் அரங்கிற்குள் நிற்க, இன்னொரு கட்சியார் பக்கத்திற் கொருவராகக் கோட்டின் மேல் நின்று கொள்வர், உன்நிற்பார் கோட்டின்மேல் நிற்பாராகில் தொடப்படாமல் வெளியேற வேண்டும் அங்ஙனம் ஒருவன் வெளியேறி விடினும்

உள்நிற்பார்க்கு வெற்றியாய் ஆட்டை முடிந்துவிடும். முதலில் வெளியேறுபவன் கோட்டின் மேல் நிற்பாருள் ஒருவனால் தொடப்பட்டுவிடின், மறிப்பார்க்கு (அதாவது கோட்டின் மேல் நிற்பார்க்கு); வெற்றியாய் ஆட்டை முடியும். அதன்பின் மறிப்பார் உள்நிற்பாராகவும், உள்நிற்பார் மறிப்பாராகவும் மாறவேண்டும்.

   2. எட்டாளம் பாரி இது எண் கசச் சதுரங் கீறிப் பதினறுவரால் ஆடப்படும், எண்மர் உள்நிற்க, எண்மர் பக்கத்திற்கிருவராகக் கோட்டின் மேல் நின்று மறிப்பர். நாலாளம் பாரியும் எட்டாளம் பாரியும் ஆடுமுறையொன்றே. (தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.பக்.52.);

     [பாரி + கோடு]

பாரிசச்சூலை

பாரிசச்சூலை pārisassūlai, பெ.(n.)

   பக்க ஊதை (இராசவைத்.160.);; paralytic attack on one side of the body.

த.வ.கை கால் விழுதல்

     [Skt. {} → த. பாரிச்சூலை]

பாரிசஞ்செய்-தல்

பாரிசஞ்செய்-தல் pārisañseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   பொறுப்பாக்குதல்; to entrust.

     “திருவாவடுதுறை மடத்துப் பாரிசஞ் செய்திருப்பதால்” (T.A.S.i,150);.

     [Skt. {} → த. பாரிசம்+செய்-தல்]

பாரிசத்தான்

பாரிசத்தான் pārisattāṉ, பெ. (n.)

   1. நண்பன்;(புதுவை.); ; friend.

   2. ஒரு கட்சியைச் சேர்ந்தவன்(இ.வ.);; partisan.

பாரிசம்

பாரிசம் pārisam, பெ.(n.)

   1. பக்கம்; side.

     “காவிரிக்கு வடபாரிசத்தில்” (திருப்பு.183);.

   2. உடலின் ஒரு பக்கம்; side of a body.

     “இரு பாரிசத்திலும் பணிசெயுந் தொழிலாளர் போல்” (தாயு.சித்தர்கணம்.2);.

   3. வயம் (உ.வ.);; care, custody.

   4. திசை (வின்.);; quarter, region.

     [Skt. {} → த. பாரிசம்]

பாரிசம்விழு-தல்

பாரிசம்விழு-தல் pārisamviḻudal,    3 செ.கு.வி. (v.i.)

   1. பக்க வலிப்பு (பக்கவாதம்); அடைதல்; to become paralised.

   2. சாதல் (மரித்தல்);; to die, said of a benefactor.

     [Skt. {} → த. பாரிசம்+விழு-தல்]

பாரிசவாதம்

பாரிசவாதம் pārisavātam, பெ.(n.)

   1. உடலின் ஒரு பக்கத்தை உணர்ச்சியறச் செய்யும் நோய் வகை (பைஷஜ.302);; paralytic attack on one side of the body, Hemiplegia.

   2. குடலிறக்கம் (இ.வ.);; hernia.

த.வ. கை கால் விழுதல், பக்கவலிப்பு

     [Skt. {} → த. பாரிசவாதம்]

பாரிசவாயு

 பாரிசவாயு pārisavāyu, பெ.(n.)

பாரிசவாதம் பார்க்க (உ.வ.);;see {}.

     [Skt. {} → த. பாரிசவாயு]

பாரிசாதம்

பாரிசாதம் pāricātam, பெ.(n.)

   ஐவகை (பஞ்ச); மரங் (தரு);களுள் ஒன்று; a tree of svarga, one of {}-taru.

     “பாரிசாத நேர்பூக்கவி னிமிர்புயம்” (இரகு.திருவவ.9);.

   2. முண்முருக்கு (மலை.);; night-flowering jasmine.

   3. பவள மல்லிகை மர வகை (மலை.);; Indian coral tree.

     [Skt. {} → த. பாரிசாதம்]

பாரிசாதா

 பாரிசாதா pāricātā, பெ. (n.)

   அமுக்கிராங் கிழங்கு; horse root. (சா.அக.);

பாரிசாத்தி

 பாரிசாத்தி pāricātti, பெ. (n.)

   பலாமரம்; jack tree. (சா. அக.);

பாரிசு

 பாரிசு pārisu, பெ.(n.)

   மழை (R.T.);; rain.

     [U. {} → த. பாரிசு]

பாரிசுபட்டி

 பாரிசுபட்டி bārisubaṭṭi, பெ.(n.)

   மழை பெய்த அளவைக்குறிக்கும் கணக்கு; account of rainfall.

     [பாரிசு+பட்டி]

பாரிசேடப்பிரமாணம்

பாரிசேடப்பிரமாணம் pāricēṭappiramāṇam, பெ.(n.)

எஞ்சுவதைக் கொள்ளுகை ஆகிய ஆணை (பிரமாணம்); (சி. போ. பா. 110, புதுப்);;(Log.);

 law of elimination.

     [Skt. {} → த. பாரிசேடப் பிரமாணம்]

பாரிசேடம்

பாரிசேடம் pāricēṭam, பெ.(n.)

பாரிசேடப் பிரமாணம் பார்க்க;see {}.

     “பாரிசேட மதனிற் பரனுக்கு” (ஞானா.5.);.

     [Skt. {} → த. பாரிசேடம்]

பாரிடம்

பாரிடம் pāriḍam, பெ. (n.)

   நிலம் (சங்.அக.);; earth.

     [பார் + இடம்]

 பாரிடம்2 pāriḍam, பெ. (n.)

   பூதம்; demon;goblin.

     “குறுந்தாட் பாரிடங்குளிப்ப” (கல்லா.34.7.);

பாரிண்டி

 பாரிண்டி pāriṇṭi, பெ. (n.)

   சிவனார்வேம்பு; shiva’s neem. (சா.அக.);

பாரித்திரம்

 பாரித்திரம் pārittiram, பெ. (n.)

   முருங்கை(வைத்தியபரி.);; drumstick.

பாரித்துரை-த்தல்

பாரித்துரை-த்தல் pāritturaittal,    4. செ.கு.வி.(v.i.)

   விரித்துரைத்தல்; to lecture.

     “பயனில-பாரித் துரைக்கு முரை” (குறள்.193.);

     [பாரித்து + உரை-,]

பாரிபறம்பு

பாரிபறம்பு bāribaṟambu, பெ. (n.)

   பாரியின் மலைநாடு; a hill region belonging to the chief {pāri}

     “பாரி பறம்பிற் பணிச்சுனைத் தெண்ணீர்” (குறுந்.196-3);

     “உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்” (அகம்.303-10);

     “பாரி பறம்பிற் பணிச்சுனைத் தெண்ணீர்” (புறநா.176-9);

     [பாரி + பறம்பு]

பாரிபாசம்

 பாரிபாசம் pāripācam, பெ. (n.)

   குடைவேல்; umbrella thron babool.

பாரிபாவியம்

பாரிபாவியம் pāripāviyam, பெ. (n.)

   1. கோட்டம்; arabian costus.

   2. ஒருவகை மாத்திரை; a pill (சா.அக.);

பாரிப்பு

பாரிப்பு1 pārippu, பெ. (n.)

   1. பருமன்; bulkiness largeness, hugeness.

   2. பரப்பு; expanse extent.

     “ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு” (திவ்.இயற்.திருவிருத்.67);

   3. விருப்பம்; desire, pleasure.

     “கோரின காரியத்தனவல்ல இப்பளிப்பு” (ஈடு,3,7,2.); 4.

வீரச்செயல்:

 heroic deed. feat of strength.

     “மதுகைடவர் பாரிப்பு” (குமரேச.47.);.

 பாரிப்பு pārippu, பெ. (n.)

   1. கனம்; heaviness, weight, gravity.

     “கதிர்மலைப் பாரிப்புக் கண்டு” (இலக்.வி.523, உரை.);.

   2. அதிகப்படுகை (வின்.);; seriousness. (திருக்கோ.132, உரை);.

 பாரிப்பு pārippu, பெ. (n.)

   ஒருப்பாடு; aggregarim;undivided attention to an object.

     “கனித்தொண்டைவாய்ச்சி கதிர் முலைப்பாளிப்புக் கண்டு” (திருக்கோ.132.);

பாரிமகளிர் (சங்ககாலம்)

பாரிமகளிர் (சங்ககாலம்) pārimagaḷircaṅgagālam, பெ. (n.)

   வள்ளல் பாரியின் பெண்மக்கள்; daughters of {ari,} a philontharaphist.

சங்கவை என வழங்குகின்றன. பாரி இறந்த பின்னர் அவர் நண்பரான கபிலர் இவர்களை விச்சிக்கோ, இருங்கோவேள் என்ற குறுநில மன்னர்களிடம் அழைத்துச் சென்று மணக்க வேண்டியதாகவும், அவர்கள் மூவேந்தருக்கும் பகைவனான பாரியின் மகளிரை மணக்க அஞ்சினாரெனவும், பின்னர் வேறு வழியின்றிப் பார்ப்பாரிடம் இவர்களைத் அடைக்கலப் படுத்தி வடக்கிருந்து உயிர் துறந்தார் என்றும் புறநானூற்றுச் செய்யுட்கள் (200,201); கூறுகின்றன. பாரி மகளிர் மழையில் நனைந்து வருந்திய

ஒளவையாருக்கு தம் சீலைச் சிற்றாடையினையும், கீரை உணவினையும் கொடுக்க, ஒளவையார் அவர்கள்

அன்பினைப் பாராட்டிப், பாடிய செய்தி பாரி பறித்த பரியும்’ என்னும் தனிப்பாடலால் அறியப்படுகின்றது. ஒளவையார் மூவேந்தரையும் இணக்கப்படுத்திப் பாரிமகளிர் இருவரையும் திருக்கோயிலூர் மலையமான் புதல்வர் இருவர்க்கும் மணமுடித்துவைத்தார் என்று பிற்காலக் கதைகள் கூறுகின்றன.

     “கைவண் பாரி மகளி ரென்றவென் தேற்றாப் புன்சொ னோற்றிசிற் பெரும’ (புறம்.202-15);

பாரிய

பாரிய pāriya, பெ.அ (adj.)

   1. பெரும்;மிகுந்த(இலங்.);; great.

     “பாரிய முயற்சி”

     “பாரிய சாதனை”

   2. அரிய; அருமையான; rare.

     “பாரிய கண்டுபிடிப்பு”

     “பாரிய கலைஞர்”

     [ பரிய → பாரிய ]

பாரியன்

 பாரியன் pāriyaṉ, பெ. (n.)

   பசளை; spinach. (சா.அக.);

பாரியம்

பாரியம் pāriyam, பெ. (n.)

   1. கடுக்காய்; gall nut.

   2. முருக்கு; bastard teak (சா.அக.);

மறுவ: கலியாணமுருங்கை.

பாரியாத்திரம்

பாரியாத்திரம் pāriyāttiram, பெ.(n.)

   449 கோபுரங்களையும் (சிகரம்); 57 மேனிலைக் கட்டுகளையுமுடைய கோயில் (சுக்கிரநீதி, 230);; temple having 449 towers and 57 storeys.

     [Skt. {} → த. பாரியாத்திரம்]

பாரியாள்

பாரியாள்1 pāriyāḷ, பெ.(n.)

   பெருத்தவன் (வின்.);; stout, robust man.

த.வ.எருத்தன், கொழுத்தவன்

     [U. {} → த. பாரி+ஆள்]

 பாரியாள்2 pāriyāḷ, பெ.(n.)

பாரியை பார்க்க;see {}.

த.வ. அகமுடையாள், வாழ்வரசி

     [Skt. {} → த. பாரி+ஆள்]

பாரியை

 பாரியை pāriyai, பெ.(n.)

   மனைவி; wife.

த.வ. இல்லாள், வாழ்க்கைத்துணை, மனையாள், அகமுடையாள்

     [Skt. {} → த. பாரியை]

பாரிவேள்

பாரிவேள் pārivēḷ, பெ. (n.)

பாரி பார்க்க;See {parl}

     “பாரிவேள்பாற் பாடினை செலினே”(புறநா.105-8);

     [பாரி + வேள்]

பாரீகத்து

பாரீகத்து pārīkattu, பெ.(n.)

   1. விடுதலை ஆவணம் (பத்திரம்); (வின்.);; release deed.

   2. பிரிவினை; partition, division

   3. பிரிவினை ஆவணம் (பத்திரம்);; partition deed.

     [U. {} → த. பாரீகத்து]

பாருள்ளம்

 பாருள்ளம் pāruḷḷam, பெ. (n.)

பூனைக்கண்ணி(தஞ்ச.மீனவ.); பார்க்க;See {pմրal-k-kaրրi}

பாருவியம்

பாருவியம் pāruviyam, பெ. (n.)

   1. அகில்; eagle wood.

   2. ஈச்சம்; date tree.

   3. கைகால் திண்மை; hardness of limbs. (சா.அக.);.

பாரேரி

 பாரேரி pārēri, பெ. (n.)

   செங்கற்பட்டு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chengalpat Taluk.

     [பார்+ஏரி]

பாரை

பாரை pārai, பெ. (n.)

   1. கடப்பாரை; crowbar.

     “பாரைக்கு நெக்குவிடாப்பாறை” (நல்வழி,33.);

   2. புற்செதுக்குங்கருவி; small hoe for cutting grass.

   3. எறிபடைவகை; a kind of missile.

     “பாரையின் றலைய” (கம்பரா.நாக.பாச.110.);

   4. செடிவகை; a plant.

     “உரிந்த பாறை” (கலிங்.63.);

   5. மீன்வகை; horse mackerel.

     “பாரைச் சேல் மைப்பூகத் தேறி” (தனிப்பா. 1, 175, 33.);

கஹாஷ. ம.பா.ர. து.பேதரங்கி

 பாரை pārai, பெ. (n.)

   1. பாரைமீன்; horse mackeral of the caranx genus.

   2. இருப்புலக்கை;  iron pestle.

   3. கற்செய்ந் நஞ்சு; a mineral poison found at the bed of rocks. (சா.அக.);

பாரைக்கரு

 பாரைக்கரு pāraikkaru, பெ. (n.)

   பாறையுப்பிலிருந்து செய்யப்படும் கல்லுப்பு; a chemical salt prepared from rock salt as per process laid down in the said work. (சா.அக.);

     [பாரை + கரு]

பாரைக்கிளுவை

 பாரைக்கிளுவை pāraikkiḷuvai, பெ. (n.)

   ஒருவகக் கிளுவை மரம்; indian balsam tree. (சா.அக.);

     [பாரை + கிளுவை]

பாரைக்குச்சி

 பாரைக்குச்சி pāraikkucci, பெ. (n.)

   கடப்பாரை; crowbar.

மறுவ : பாறைக்கோல்

     [பாரை + குச்சி]

பாரைமீன்

பாரைமீன் pāraimīṉ, பெ. (n.)

   பாறையின் இடுக்கில் காணக்கூடும் கடல்மீன்; horse mackerel.

     “பாரைச்சேல் மைப்பூகத்தேறி” (தனிப்பா.i,175,53.); வகைகள்:

   1. அம்பட்டன் பாரை

   2. இராமப்பாரை(நாமப்பாரை

   3. ஆக்காம்பாரை

   4. இரும்பாரை

   5. இராப்பாரை

   6. ஒட்டாம்பாரை

   7. கருக்காம்பாரை

   8. கட்டாம் பாரை

   9. கட்டாஞ்சிப் பாரை

   10. கள்ளப் பாரை

   11. கருந்தலைப் பாரை

   1 2. கண்ணிப் பாரை

   13. கரிமூஞ்சிப் பாரை

   1 4.. காசாம் பாரை

   15. களம் பாரை

   16. கொடுந்தலைப் பாரை

   17. குளும் பாரை

   18. குமரப் பாரை

   19. கும்பாரை

   20. செம்பாரை

   21. செங்கண்ணிப் பாரை

   22. சேங்கட் பாரை

   23. சேங்கடாப் பாரை

   24. சித்திட்டிப்பாரை அல்லது சித்தி ரெட்டிப்பாரை

   25. கராம் பாரை

   26. தங்கப் பாரை

   27. தக்கான் பாரை

   28. தளம் பாரை

   29. தோல் பாரை

   30. தும்பைப் பாரை

   31. புள்ளிப் பாரை

   32. மெத்துப் பாரை

   33. மொகம் பாரை

   34. மட்டப் பாரை

   35. வரிப்பாரை

   36. வால் பாரை

   37. வாரம் பாரை

   38. வாளம் பாரை

   39. பெரும் பாரை

   40. தேனம் பாரை

   41. பாட்டிப் பாரை

   42. நீலகிரி அக்கம்பாரை

   43. தேளப் பாரை

   44. கரண்டிப் பாரை

   45. தேங்காய்ப் பாரை

   46. சூரப்பாரை

     [P]

பாரைமுட்டான்

 பாரைமுட்டான் pāraimuṭṭāṉ, பெ. (n.)

   ஒரு மீன் (முகவை.மீனவ.);; a kind of fish.

     [பாரை + முட்டான்]

     [P]

பாரையாளி

 பாரையாளி pāraiyāḷi, பெ. (n.)

   கீழ்க்கடற் கரையில் கிடைக்கும் ஒரு வகைச் சிப்பி; rock oyster in coramandal coast. (சா.அக.);

     [பாரை + ஆளி] ஆளி = சிப்பியுள் ஒரு வகை]

பாரையிப்புச் சுண்ணம்

 பாரையிப்புச் சுண்ணம் pāraiyippuccuṇṇam, பெ. (n.)

   பாரையுப்புடன் கடைச் சரக்குகளையும் சேர்த்துக் காய்ச்சி வேகமும் வலுவும் உண்டாகும்படி அணியம் செய்த ஒரு வகைச் சுண்ணம்; a universal medicine of high potency and repute prepared according to the siddha process. (சா.அக.);

     [பாரை + உப்பு + சுண்ணம்]

பாரையிரால்

 பாரையிரால் pāraiyirāl, பெ. (n.)

   கடலடிப்பாரையோரங்களில் வாழும் கடலிறால்; rock craw fish, sea prawn. (சா.அக.);

     [பாரை + இறால்]

     [P]

பாரையிலவு

 பாரையிலவு pāraiyilavu, பெ. (n.)

   காட்டிலவு; copsuled silk cotton. (சா.அக.);

     [பாரை + இலவு]

பாரையெலும்பு

 பாரையெலும்பு pāraiyelumbu, பெ. (n.)

   காதின் பின்புற எலும்பு; the petrous porton of the temporal bone. (சா.அக.);.

     [பாரை + எலும்பு]

பாரோலை

 பாரோலை pārōlai, பெ. (n.)

   பழம் வைக்கப்படும் பனையோலை; palmyra ea on which fruits are kept.

     [ஒருகா: வார் → பார் + ஒலை]

பார்

பார்1 pārttal,    11. செ.குன்றாவி. (v.t.)

   1. கண்ணால் நோக்குதல்; to see, look at, view, notice, observe.

     “பாராக்குறழா” (கலித்.65.);

   2. ஆராய்தல்; to examine, inspect, search into, scrutinise.

     “படுபயனும் பார்த்துச் செயல்” (குறள்,676);

   3. அறிதல்; to know.

     ‘காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளியவர்” (குறள்.487.);

   4. எதிர்பார்த்தல்; to look for, expect.

     “வருவிருந்து பார்த்திருப்பான்” (குறள்,86.);

   5. விரும்புதல்; to desire, long for.

     “புதுமைப் பார்ப்பார்”. (கம்பரா. பூக்கொய்.9.);

   6. தேடுதல்; to search for, seek.

     “ஆட்பார்த் துழலும் அருளில் கூற்று” (நாலடி,20.);

   7. வணங்குதல்(சூடா.);; to worship.

   8. மதித்தல்; to estimate, value.

     ‘அவன் வயிரம் பார்ப்பதில் கெட்டிக்காரன்’ (கொ.வ..);

   9. கவனித்தல்; to heed, pay attention to.

   10. மேற்பார்த்தல்; to look after, take care of. manage, superintend.

     ‘பண்ணை பார்க்கிறான்.

   11. பார்வையிடுதல்; to perusde, look through. revise.

     ‘இந்த ஆவணத்தை பாருங்கள்’

   12. மருந்து முதலியன கொடுத்தல்; to treat. administer medicine.

     ‘யார் மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார்’?

   13. மந்திரித்தல்; to charm a way by incantations exorcise.

     ‘இந்த நஞ்சுக்கடிக்கு மாந்திரிகன் பார்க்கவேணும்’

   14. கருதுதல்; to intend, design, attempt, purpose, aim at.

   15. கடைக்கணித்தல்; to look at with compassion.

     “பார்த்தொருகாலென்கவலை தீராயோ” (தாயு.பராபர.663.);

     ‘பார்த்த கண்ணும் பூத்துப் பகலும் இரவாச்சு’ (பழ.);

     ‘பார்த்த முகம் எல்லாம் வேற்று முகம்’ (பழ.);

     ‘பாராத உடைமை பாழ்’ (பழ.);

     ‘பார்க்கிற கண்ணுக்குக் கேட்கிற செவி பொல்லாது’ (பழ.);

க. பாரு

ம. பார்க்க

     [பா → பார்]

 பார்2 pār, பெ. (n.)

   1. பரப்பு; expanse தேர்ப்பார். (சூடா.);

   2. தேர்ப்பரப்பு. (பிங்.);

 central platform of a chariot.

   3. வண்டியினடிப்பாகத்துள்ள நெடுஞ்சட்டம்; long bar of the body of a cart.

     “கால்பார் கோத்து” (புறநா.185.);

   4. உலகம்;  earth.

     “பார்தோன்ற நின்ற பகையை’ (சீவக.1931);

   5. நிலம் என்னும் பூதம்;  earth, as an element.

     “பாரிடை யைந்தாய்ப் பரந்தாய்” (திருவாச.4,137.);

   6. நாடு; land, country.

     “தஞ்சென வொதுங்கினோர் தனது பாருளோர்” (கம்பரா. பள்ளி.108.);

   7. வன்னிலம்; hard ground.

     “பாருடைத்த குண்டசுழி” (புறநா.14.);

   8. பாறை; rock rocky stratum, shelf of rock.

     “பார்முதிர் பனிக்கடல்” (திருமுரு.45.);

   9. வரம்பு;(வின்.);

 bank, border, ridge.

   10. முத்து விளையுந்திட்டு. (இ..வ..);

 pear bank.

   11. பாத்தி பல கொண்ட பகுதி; group of parterrers.

     ‘இந்தப் பாரைச்சேர்ந்த கீரைப்பாத்தி’ (இ..வ..);

   12. அடுக்கு;(வின்.);

 stratum, layer, bed.

   13. தடை; obstruction obstacle.

     “கலை பாரறச் சென்ற கேள்விக்கோ (சீவ.30.);

   14. உருள் (உரோகிணி); பார்க்க (திவா.);;See {urokini} the fourth naksatra.

     ‘பார் ஆளலாம் என்று பால் குடிக்காதே’ (பழ.); [பா → பார்]

 பார்3 pār, பெ. (n.)

பருமை (சீவக.224. );

 bulk.size.

     [பல் → பர் → பார்]

 பார்4 pār, பெ. (n.)

   1. மறையோன்; brahman.

   2. புத்தன்; buddha.

தெ. பாருடு

     [பா → பார்]

பார்அணை-த்தல்

பார்அணை-த்தல் pāraṇaittal,    4. செ.கு.வி.(v.i.)

   மேட்டை அணைத்தல்; to support the ridge.

     [பார் + அணை-,]

பார்க்க

பார்க்க pārkka,      (இடை.) part,

   உறழ்ச்சிப் பொருளில் வரும் சொல்; a partciple of comparison meaning ‘than’

     “அவைகளிலும் பார்க்கப் பிரீதி மிகும்படி’ (கோயிற்பு. திருவிழா.22,உரை);

     “பார்க்கப் பதினாயிரம் கண் வேண்டும்” (பழ);

     [பார் → பார்க்க]

பார்க்கடம்

 பார்க்கடம் pārkkaḍam, பெ. (n.)

   சாம்பல்; ashes.

பார்க்கட்டு-தல்

பார்க்கட்டு-தல் pārkkaṭṭudal,    5. செ.கு.வி. (v.i.)

புன்செய்க்கு வரம்புவிடுதல்;(வின்.);

 to put up ridges enclosing fields for dry cultivation.

     [பார்+ கட்டு-,]

பார்க்கவசுபத்தியம்

பார்க்கவசுபத்தியம் bārkkavasubattiyam, பெ.(n.)

   இரவின் 15 முழுத்தங்களுள் பதினொன்றாவது (விதான்.குணாகுண.73, உரை);; the 11th of the 15 divisions of night.

     [Skt. {} → த. பார்க்கவசுபத்தியம்]

பார்க்கவம்

பார்க்கவம் pārkkavam, பெ.(n.)

   துணைத் தொன்மங்கள் பதினெட்டனுள் ஒன்று; a secondary {} one of 18 upa-{}.

     [Skt. {} → த. பார்க்கவம்]

பார்க்கவி

பார்க்கவி pārkkavi, பெ. (n.)

சிறுதேக்கு பார்க்க, 2. (மலை);

 beetle-kiler.

 பார்க்கவி1 pārkkavi, பெ.(n.)

   திருமகள்; Lakshmi.

     “பார்க்கவியும் யார்க்கிது போல் வாய்க்குமென்” (மனோன்.3,சிவகாமி.49);.

   2. மலைமகள் (யாழ்.அக.);; Parvati.

   3. வெள்ளறுகு; small chiretta.

     [Skt. {} → த. பார்க்கவி]

 பார்க்கவி2 pārkkavi, பெ.(n.)

   தேக்கு மரவகை (மலை.);; beetle killer.

     [Skt. {} → த. பார்க்கவி]

பார்க்கி

 பார்க்கி pārkki, பெ. (n.)

   குவளை மலர்; pipe flower (சா.அக.);

பார்க்குச்சு

 பார்க்குச்சு pārkkuccu, பெ. (n.)

   படை வீரர்கள் குடியிருக்கக் கட்டிய சிறுவிடு; barracks, a line of houses built for soldiers.

     [பார் + குச்சு]

 பார்க்குச்சு pārkkuccu, பெ.(n.)

   காவல் படையினர் குடியிருக்கக் கட்டிய சிறு வீட்டு வரிசை; barracks a line of houses built for soldiers.

     [E. barracks → த. பார்க்குச்சு]

பார்க்குருமாடு

 பார்க்குருமாடு pārkkurumāṭu, பெ. (n.)

   உழவுக்குப் பயன்படும் மாட்டுவகை; Bargur cattle, used for ploughing.

     [பருகூர் + மாடு → பார்க்குருமாடு]

பார்க்கொடி

 பார்க்கொடி pārkkoḍi, பெ. (n.)

   நன்னாரி; indian sarsaparilla. (சா.அக.);

பார்க்கோல்

பார்க்கோல் pārkāl, பெ. (n.)

கட்டியத்தடி (T.A.S.ii.67.);

 staff of honour.

     [பார் + கோல்]

பார்சவம்

பார்சவம்1 pārcavam, பெ. (n.)

பார்க்க, பார்சுவம், 2,4. (யாழ்.அக.);

 பார்சவம்2 pārcavam, பெ. (n.)

   பரிசு. (யாழ்.அக.);; reward.

பார்சானு

 பார்சானு pārcāṉu, பெ. (n.)

   கள்ளி; spurge.

பார்சி

பார்சி pārci, பெ.(n.)

   1. பாரசிக இனத்தான்; Parsee.

   2. பாரசீகப்பண்; a Persian tune.

   3. பாரசிக நாடு(வின்.);; Persia.

     [U. {} → த. பார்சி]

பார்சிக்கஞ்சாங்கோரை

 பார்சிக்கஞ்சாங்கோரை pārcikkañjāṅārai, பெ. (n.)

   செடிவகை;  persian tulsi.

     [பார்சி + கஞ்சாங்கோரை]

 பார்சிக்கஞ்சாங்கோரை pārcikkañjāṅārai, பெ. (n.)

   செடி வகை; Persian tulsi.

     [பார்சி+கஞ்சாங்கோரை]

பார்சுவகிரகணம்

 பார்சுவகிரகணம் pārcuvagiragaṇam, பெ.(n.)

   குறை கோள்பற்று (பஞ்.);; partial eclipse.

     [Skt.{} → த. பார்சுவ கிரகணம்]

பார்சுவம்

பார்சுவம் pārcuvam, பெ. (n.)

   1. விலாப்பக்கம், (யாழ்.அக.);

 side of the body.

   2. பக்கம்; side.

   3. உதவி; support.

   4. வட்டம்; circle.

 பார்சுவம் pārcuvam, பெ.(n.)

   1. விலாப்பக்கம்; side of the body.

   2. பக்கம்; side.

   3. உதவி; support

   4. வட்டம்; circle.

     [Skt. {} → த. பார்சுவம்]

பார்சுவர்

பார்சுவர் pārcuvar, பெ.(n.)

   1. சமணத்துறவியர் இருபத்து நால்வருள் ஒருவர் (திருக்கலம், காப்பு, உரை.);; a Jaina Arhat, one of 24 {}.

     [Skt. {} → த. பார்ச்சுவர்]

பார்சுவவாயு

 பார்சுவவாயு pārcuvavāyu, பெ.(n.)

   பக்க ஊதை நோய்; paralysis.

     [Skt. {} → த. பார்சுவவாயு]

பார்ச்சிகை

பார்ச்சிகை pārccigai, பெ. (n.)

   1. மருந்த; medicine.

   2. மயிர்ச்சிகைப்பூடு; peacock’s crest. (சா.அக.);

பார்தாங்கி

 பார்தாங்கி pārtāṅgi, பெ. (n.)

   மரச்சக்கை;  sappan wood.

     [பார் → தாங்கி]

பார்தீர்-தல்

பார்தீர்-தல் pārtīrtal,    5. செ.குன்றாவி. (n.)

படையை ஒரே வரிசையாக அணிவகுத்தல் (வின்.);

 to draw out in a line, as troops.

பார்த்த

 பார்த்த pārtta, பெ. எ. (adj.)

   ஒரு திசையை நோக்கிய; facing (a direction);.

     ‘கிழக்கு பார்த்த வீடு’.

     [பார் → பார்த்த]

பார்த்தசாரதி

 பார்த்தசாரதி pārddacāradi, பெ.(n.)

கண்ணபெருமான்;{},

 Arjuna’s charioteer.

     [Skt. {} → த. பார்த்தசாரதி]

பார்த்தன்

பார்த்தன் pārttaṉ, பெ. (n.)

   கந்தகச் செய்ந்நஞ்சு; a kind of native arsenic. (சா.அக.);

 பார்த்தன் pārttaṉ, பெ.(n.)

   அருச்சுனன் (பாரத. அருச்சுனன்றீர்.44);; Arjuna.

     [Skt. {} → த. பார்த்தன்]

பார்த்தவிருட்சம்

 பார்த்தவிருட்சம் pārttaviruṭcam, பெ. (n.)

   கருமருது; black marutu.

     [பார்த்த + skt. {vriksha»} த. விருட்சம்]

பார்த்திபன்

பார்த்திபன் bārttibaṉ, பெ.(n.)

அரசன், king.

     “பார்த்திபகுமரன் சேர்ந்தான் (சீவக.1683);.

     [Skt. {} → த. பார்த்திபன்]

பார்த்திவ

பார்த்திவ pārttiva, பெ.(n.)

   ஆண்டு அறுபதனுள் பத்தொன்பாவது; the 19th year of the jupiter cycle.

     [Skt. {} → த. பார்த்திவ]

பார்த்திவன்

பார்த்திவன் pārttivaṉ, பெ. (n.)

   அரசன்; king.

     “பாண்டவ னென்றொரு பார்த்திவன்’ (உபதேசகா,சிவத்துரோ 123.);

     [பார் → பார்த்திவன்]

பார்த்திவம்

பார்த்திவம் pārttivam, பெ. (n.)

   1. உலகத் தொடர்பானது; that which pertains to the earth.

   2. நிலங்களிலிருந்து பெறும் ஊதியம், (சுக்கிர நீதி,97.);,

 income derived from lands.

   3. உலகம் (சூடா.);; clay.

     [பார் → பார்த்திவம்]

 பார்த்திவம் pārttivam, பெ.(n.)

   1. நிலவுலகத் தொடர்பானது; that which pertains to the earth.

   2. நிலங்களிலிருந்து பெறும் ஊதியம் (சுக்கிரநீதி,97);; income derived from lands.

   3. ந