தலைசொல் | பொருள் |
---|---|
ந | ந1 na, பெ. (n.) நகர மெய்யும், அகர வுயிரும் புணர்ந்து பிறக்கும், உயிர்மெய்யெழுத்து; a syllabic letter which consists of (n+ a); n (ந்); and the vowel a (அ);. [ந் + அ → ந.] “ந”கர உயிர்மெய்யின் பிறப்பிடத்தைத் தொல்காப்பியர் பின்வருமாறு வரையறுத்துள்ளார். “அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் தாமினிது பிறக்கும் தகார நகாரம்” தமிழ், மலையாளம் முதலிய சில மொழிகளில்யின்றிப் பிற திரவிட மொழிகளில் ன-ந வேற்றுமை இல்லை. அஞ்ஞை (அன்னை); செய்குந முதலான வழக்குகள் கழகக்காலச் செய்யுட்களில் மட்டும் சிறப்பாகக் காணப்படுபவை எனலாம். நகரவுயிர்மெய் வரிவடிவ வளர்ச்சி: படுக்கைக் கோட்டில் அமைந்த செங்குத்துக் கோடே நகரவுயிர்மெய்யின் முந்துதமிழ் வரிவடிவாகும். இவ்வரிவடித்தின் காலம் கி.மு.6. கொற்கைப் பானையோட்டில் காணப்படுவதும், இக்குறியே ஆகும். இக்குறியே தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் பரவலாகக் காணப்படுகிறது. தமிழில் அல்லது தாமிழியெழுத்தென்று கல்வெட்டறிஞர்களால் குறிக்கப்படுவதும், இஃதேயாகும். இந்தியமொழிகளில் தமிழ் பிராமி அல்லது அசோகன் பிராமி என்று அழைக்கப்படுகிறது. பிராமி என்பதைப் புரோமி என்றும் வழங்குவர். அசோகன் புரோமிக்கு முந்தியது தமிழி, கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்திலும், வடஇந்தியாவில் சிறு மாற்றத்துடன் மோரியர் குசானர், குப்தர் கல்வெட்டுகளிலும் தமிழில் காணப்படுகிறது. திருநாதற்குன்று குகைக் கல்வெட்டில் காணப்படும். தமிழியெழுத்து, கி.பி. 7ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி.பி. 9 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி.பி. 10 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி. பி. 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி. பி. 12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி. பி. 13 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில், கி. பி. 14 ஆம் நூற் றாண் டு கல்வெட்டுகளில் ந2 na, பெ. (n.) 1. சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல் நன். 420. மயிலை); a particle denoting excellence as, நட்டபின்னை, நக்கீரன் நக்கடகம். 2. மிகுதிப் பொருளுணர்த்தும் இடைச்சொல்; expressing abundance, excess. ‘நக்கரைந்து போம் இத்தனை” (திவ். திருநெடுந் 7, வ்யா. 59);. [ந் +அ=ந.] ‘ந’ என்பது- ந் அ-ந. ந’ என்பது, நக்கீரன் என்பதிற் போலச் சிறப்பினையும், நக்கரைந்து (மி கக்கரைந்து); என்பதிற் போல, மிகுதிப் பொருண்மை குறித்த தமிழ் முன்னீடாக (Prefix); வழங்கும். இம் முன்னொட்டினை, வடமொழியாளர் எதிர்மறைப் பொருண்மையில் பயன் கொண்டனர். நமித்திரர் (மித்திரர் அல்லார்);. (எ.டு.); ‘நல்’ என்பதன் திரிபுமாகலாம். (எ.டு); நல்லந்துவனார். மொழிக்கு முதலில் நகரம் எல்லா உயிர் எழுத்துக்களோடும் பயிலுந் தன்மைத்து. வெரிந், பொருந் போன்ற கழகக் காலச் சொல்லாட்சிகளில், மொழிக்கு ஈறாகி வந்தது. காலப் போக்கில் நகரவீறு, உ கரச்சாரியை பெறுவது இயல்பாயிற்று. |
நகக்கணுக்கட்டி | நகக்கணுக்கட்டி nagaggaṇuggaṭṭi, பெ. (n.) விரல் நுனியிற் காணும் கட்டி (சா.அக);; an abscess occuring at the end of the finger. மறுவ. நகச்சுற்றி, விரற்சுற்றி. [நகக்கணு + கட்டி.] |
நகக்கணுநோய் | நகக்கணுநோய் nagaggaṇunōy, பெ. (n.) நகத்தினடியிற் காணும் ஒருவகைத் தோல் நோய் (சா. அக.);; a kind of skin disease occuring an one side of the root of the nail. [நகக்கண்ணு நோய் → நகக்கணு நோய்.] |
நகக்கணுவிரணம் | நகக்கணுவிரணம் nagaggaṇuviraṇam, பெ. (n.) கொப்புளம் எழும்பாமலே விரற் சதையிற் காணும் நோய் (அல்லது); விரற்சுற்றி (சா.அக.);; a form of whitlow occuring in the bulbous end of the finger. [நகக்கணு + Skt விரணம்.] |
நகக்கண் | நகக்கண் nagaggaṇ, பெ.(n.) விரல் நுனிக்கும், நகத்துக்கும் இடைப்பட்ட பகுதி; he part between the tip of the finger and the nail. நகக் கண்ணில் அழுக்குச் சேரவிடக்கூடாது (இக். வ.);. [நகம் + கண்.] |
நகக்கண்நோய் | நகக்கண்நோய் nagaggaṇnōy, பெ. (n.) உடம்பில் வளி, பித்தம் முதலியவற்றால், கொப்புளம் எழும்புகை (சா.அக);; a disease of the finger in which the flesh of the finger nail is vitiated by deranged wind and bile in the system. மறுவ. நகச்சுற்றி. [நகக்கண் + நோய்.] |
நகக்கால் | நகக்கால் nagaggāl, பெ. (n.) நகக்கண் (யாழ்.அக.); பார்க்க; see naga-k-kan. [நகம் + கால்.] |
நகக்காளான் | நகக்காளான் nagaggāḷāṉ, பெ. (n.) களைந்தெறிந்த நகத்தினின்று முளைப்பதாகக் கருதப்படும் காளான் வகை (வின்);; a kind of fungus believed to spiring from nail parings. மறுவ. சிப்பிக்காளான். [நகம் + காளான்.] |
நகக்கீறல் | நகக்கீறல் nagagāṟal, பெ. (n.) நகக்குறி பார்க்க;see naga-k-kuri. |
நகக்குத்தன் | நகக்குத்தன் nagagguttaṉ, பெ. (n.) முடிதிருத்துவோன் (யாழ்.அக);; barber. [நகம் + குத்தன்.] முன்னாளில் , சிற்றுார்களில் , முடிதிருத்துவோர் முடிவெட்டுங்கால், விரல்களைத் தூய்மைப்படுத்தி, நகக் கண்ணிலுள்ள அழுக்குகளையெடுப்பர். இக் காலத்தேயும், சிற்றூர்ப்புறத்தே இந் நிகழ்வினைக் காணலாம். |
நகக்குறி | நகக்குறி nagagguṟi, பெ. (n.) நகத்தினாலேற் பட்ட தழும்பு; a scar or impression left by nail. [நகம் + குறி] |
நகக்குறி’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நகக்கொடி | நகக்கொடி nagaggoḍi, பெ. (n.) விரல்களின் நகங்களைக் கொடியைப் போல் வளரவிட்ட சுருட்டை; nails allowed to grow long and tortuously. [நகம் + கொடி-] |
நகங்கறு-த்தல் | நகங்கறு-த்தல் nagaṅgaṟuttal, 4. செ. குன்றா. வி. (v.t) 1. இறப்பினுக்கு அறிகுறியாக, விரல்களிலுள்ள நகங்கள் கறுத்துக் காணப்படல்; nail’s turning dark which is considered as a symptom of death. 2. ஓர் சாக்குறி; a symbol of death. [நகம் + கறு.] |
நகங்கிருதி | நகங்கிருதி nagaṅgirudi, பெ. (n.) எழுவகை புண்ணியங்களுள் ஒன்றான, ஆணவமற்ற நிலை(வின்.);; humility, absence of pride and self importance, one of seven punniyam [நகம் + Skt கிருதி] [நகு → நகம்.] எழுவகைப் புண்ணியமாவன; 1. நகங்கிருதி, 2. தானம் 3. நோன்பு விரதம்);; 4. நட்பு (சினேகம்);, 5. நயம் பாராட்டல்: (நயபோசனம்);, 6. கனம்; 7. ஊக்கம் (உற்சாகம்); விளங்குகை, ஒளிர்கை, மிளிர்கை. மனிதன், ஆணவமற்று. சுடச்சுட ஒளிரும் பொன்போல், உயர் குணத்துடன் மிளிர்தல். இவ் வுயர்குணம் எழுவகை அறத்துள் ஒன்று. |
நகசிரிதம் | நகசிரிதம் nagasiridam, பெ. (n.) குன்றிச் குன்றிச் செடியின் சிவப்புவிதை; the red seed of crab’s eye. [நகம் + skt. சிரிதம்.] |
நகச்சதை | நகச்சதை nagaccadai, பெ. (n.) நகத்தைச் சுற்றிலுள்ள சதைப்பகுதி; the portion of tissue around the nail. [நகம் + சதை.] [தடி → தசை → சதை=திரிபு.] |
நகச்சிராய் | நகச்சிராய் nagaccirāy, பெ. (n.) நகத்தருகு கிழிந்த சிம்பு (யாழ்ப்.);; splintery fragment of a nail. [நகம் + சிராய்.] |
நகச்சிலந்தி | நகச்சிலந்தி nagaccilandi, பெ. (n.) கொப்புளம் இன்றி விரலிலேற்படும் கட்டி (சா.அக);; a form of whitlow occuring in the bulbous and of the finger. மறுவ. நகச்சுற்று. [நகம் + சிலந்தி.] |
நகச்சுற்றி | நகச்சுற்றி nagaccuṟṟi, பெ. (n.) பொதுவாக நகக்கண் அல்லது நுனி விரலிற்காணும் புண்; a common name for several forms of Whitlow. ம. நகச்சுற்று. [நகம் + சுற்றி.] நகத்தைச் சுற்றிவரும் புண் அல்லது கட்டி; |
நகச்சுவர் | நகச்சுவர் nagaccuvar, பெ. (n.) நகத்தைச் சுற்றிய கதை; tissues around the nail. [நகம் + சுவர்] [சுவல் → சுவர் = திரிபு.] |
நகச்சூடு | நகச்சூடு nagaccūṭu, பெ. (n.) 1. இளஞ்சூடு (வின்.);; luke warm. 2. சிறுசூடு; moderati Warm. [நகம் + சூடு] |
நகச்சூரம் | நகச்சூரம் nagaccūram, பெ. (n.) பூனைப் புல் (சா. அக.);; a kind of grass. [நகம் + சூரம்.] |
நகச்சொத்தை | நகச்சொத்தை nagaccottai, . பெ. (n.) சிதைவுற்ற நகம்; decayed and deformed nail. [நகம் + சொத்தை.] [சொள்ளை → சொற்றை → சொத்தை] |
நகச்சொற்றை | நகச்சொற்றை nagaccoṟṟai, பெ. (n.) சிரைவுற்ற நகம்; worm eaten nail or decayed nail. மறுவ. நகச் சொத்தை. [நகம் + சொத்தை. சொள்ளை → சொற்றை.] |
நகச்சொல்லு)-தல் | நகச்சொல்லு)-தல் nagaccolludal, 8 செ. குன்றாவி. (v.t.) கூடிமகிழுமாறு இனிய சொற்களைக் கூறுதல்; to utter pleasant words. “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்” (குறள்,187);; [நகு → நக + சொல்(லு);-தல்.] |
நகடு | நகடு nagaḍu, பெ. (n.) உடல் வெளுக்கை; pale complexion. ‘மண்டின்றுவந்தநகடுபோலன்றிறே’ (ஈடு 6.2.ப்ர);. [நகு → நக-நகடு] [நகுதல் = மிளிர்தல், விளங்குதல், வெண்மையாதல், அரத்த மின்மையால் உடல் வெண்மையாய்த் திகழ்தல்.] |
நகட்டல் | நகட்டல் nagaṭṭal, பெ. (n.) நகட்டுகை பார்க்க; See nagattugal. [நகட்டு → நகட்டல்.] |
நகட்டு-தல் | நகட்டு-தல் nagaṭṭudal, 5. செகுன்றா.வி. (v.t) 1. இடம்விட்டுப் பெயரச்செய்தல்; to push away, shove. 2. காலந்தாழ்த்துதல்; to delay, procrastinate. அவன் கருமத்தைச் செய்யாமல் நகட்டுகிறான் (உ.வ);. 3. நன்றாய் புடைத்தல்; to thrash. 4. அரைத்தல்; to pound, grind. 5. ஆவலுடன் உண்டுவிடுதல்; to eat up with avidity. [நகர்த்து → நகட்டு-தல்] |
நகட்டுகை | நகட்டுகை nagaṭṭugai, பெ. (n.) 1. இடம் பெயர்க்கை; to push away. 2. அரைக்கை; grinding. அம்மியில் மிளகாய் வற்றலை வைத்து நகட்டு. (பே.வ);. 3. நசுக்குகை; crushing. [நகர்த்து →நகட்டு.] [நகட்டு → நகட்டுகை] |
நகணம் | நகணம் nagaṇam, பெ. (n.) முடக்கொற்றான்; palsycurer. |
நகதா | நகதா nagatā, பெ. (n.) காக்காய்ச்சரிகை நூல் (இ.வ.);; imitation lace-thread. |
நகதி | நகதி nagadi, பெ. (n.) 1. பணக்காரன்; person having ready money. 2. பொற்கட்டி முதலியன; bullion, gold or silver in the mass. 3. பணமாகச் செலுத்தும் நிலத்தீர்வை (R.T);; land revenue in money. 4. நக்தி (C.G); பார்க்க;see nakti. [Ս. ոaqdi → த. நகதி] |
நகதிபீசம் | நகதிபீசம் nagadipīcam, பெ. (n.) புலிதொடக்கி (மூ. அ.);; a prickly shrub said to be capable of stopping the tiger – Tiger stopper. |
நகத் | நகத் nagat, பெ. (n.) கைப்பணம் (ரொக்கம்);; ready money, cash. [Aг. naqad → த. நகத்] |
நகத்தடம் | நகத்தடம் nagattaḍam, பெ. (n.) நகக்குறி பார்க்க;see naga-k-kuri [நகம் + தடம்] |
நகத்தயிர் | நகத்தயிர் nagattayir, பெ. (n.) பூச்சருக்கரைக் கிழங்கு (தைலவ. தைல.125);; panicled bindweed. மறுவ, நிலச்சருக்கரைக்கிழங்கு. |
நகத்தழும்பு | நகத்தழும்பு nagattaḻumbu, பெ. (n.) நகக்குறி பார்க்க;see naga-k-kuri, [நகம் + தழும்பு] |
நகத்திருகாணி | நகத்திருகாணி nagattirugāṇi, பெ. (n.) கட்டை விரல் நகத்தைப் பயன்படுத்தித் திருகிவிடக் கூடிய திருகாணி, thumb screw. [நகம் + திருகு + ஆணி.] |
நகத்துசாமீன் | நகத்துசாமீன் nagattucāmīṉ, பெ. (n.) பிணையத் தொகை; cash security. [Ar.naqad+{} → த. நகத்துசாமீன்] |
நகத்துரோணம் | நகத்துரோணம் nagatturōṇam, பெ. (n.) தும்பை (சா.அக.);; leucas flower. Leucas Linifolia. |
நகத்பாபு | நகத்பாபு nagatpāpu, பெ. (n.) மீன் பிடித்தல், வேளாளர்களல்லாதார் குடியிருப்பு, தென்னை மாபுளி முதலியவுள்ள தோட்டம் இவற்றுக்கு வாங்கப்படும் வரி (R.T);; a tax on tank fishery, on the houses of those not engaged in agriculture and on coconut, mango and tamarind topes. [Ar.naqad+{} → த.நகத்பாபு] |
நகநந்தினி | நகநந்தினி naganandiṉi, பெ. (n.) மலைமகள் (யாழ்.அக.);; Malaimagal as the daughter of the Himalaya mountain. [நகம் + ‘நந்தினி] |
நகநாகு | நகநாகு naganāgu, பெ. (n.) புளிக்கவைத்துச் சாராயம் இறக்குவதற்காகப் பயன்படுத்துமொரு மூலிகை; a drug used for fermenting spirituous liquor. [நகம் +நாகு.] |
நகநாதிகம் | நகநாதிகம் naganātigam, பெ. (n.) சிவப்பு அடுக்கலரி (சா.அக.);; oleander rosebayNerium Odorum. |
நகநோகரம் | நகநோகரம் naganōgaram, பெ. (n.) மஞ்சிட்டி (சா.அக);; munject indian madder. மறுவ, நீர்ப்பூடு. |
நகநோக்கி | நகநோக்கி naganōggi, பெ. (n.) வேலிப்பருத்தி (சங்.அக்);; hedge-twiner. [நகம் + நோக்கி] |
நகபதம் | நகபதம் nagabadam, பெ. (n.) நகக்குறி பார்க்க; see naga-k-kuri. [நகம் +skt பதம்] |
நகபர்ணி | நகபர்ணி nagabarṇi, பெ. (n.) ஒருசெடி (சா. அக);; a plant. [நகம் skt பர்ணி] |
நகபிச-த்தல் | நகபிச-த்தல் nagabisattal, 4 செ.கு.வி. (v.i.) நசுபிசு – (வின்.); பார்க்க;see našu.pisu-. [நச + பிச-.] |
நகப்புண் | நகப்புண் nagappuṇ, பெ. (n.) 1. நகத்திற் காணும் புண்; boil on the edge of the nail. 2. நகங்கீறுவதாலுண்டான புண்; scratch of a nail. மறுவ. நகச்சுற்றி. [நகம் புண்.] |
நகப்புள்ளி | நகப்புள்ளி nagappuḷḷi, பெ. (n.) நகத்திற் காணும் புள்ளி; dot on the nail. [நகம் + புள்ளி.] |
நகப்பூ | நகப்பூ nagappū, பெ. (n.) நகத்தில் உண்டாகும் வெண்புள்ளி; white spots occuring on the Surface of nails. [நகம் +பூ] |
நகப்பூச்சு | நகப்பூச்சு nagappūccu, பெ. (n.) நகத்தில் பூசும் வண்ணப்பொருள்; nail polish. தற்போது நகப்பூச்சுகள் பல வண்ணங்களில் வருகின்றன. (உ.வ.);; [நகம் + பூச்சு] |
நகமுசம் | நகமுசம் nagamusam, பெ. (n.) வில் (யாழ்.அக);; bow [நகம் + முசம்] |
நகமுண்ணி | நகமுண்ணி nagamuṇṇi, பெ. (n.) 1. நகம் குறைந்து அல்லது விழுந்து போகும் ஒருவகை நகச்சுற்று; a form of whitlow in which the nail is destroyed. 2. விரற்குறையும் குட்டம்; a form of leprosy in which the fingers with nails are mutilated. [நகம் + உண்ணி] உடலுறுப்புகளைக் குறைத்து முடமாக்கிப் பயனற்று விழச்செய்யும் தொழுநோய்; |
நகமூடி | நகமூடி nagamūṭi, பெ. (n.) ஐவண்ணவணியுள் ஒன்றாய்ப் பரவமகளிர் வலக்காற் பெருவிரலில் அணியும் அணிகலன்; ring worn on the right toe by Parava women, one of al-vannam, q.v. [நகம் + மூடி.] |
நகம் | நகம்1 nagam, பெ. (n.) 1. மலை (பிங்);, mountain. ‘நகராசன் மடந்தை” (பதினொ. திருக்கைலா,12);. 2. நிலம் (பிங்);; earth. 3. மரம் (சூடா);; tree. 4. நாகணமென்னும் மணப் பொருள்; an article of incense. “கடிநகந் தேவதூப முதலிய விரைகளிட்டு” (தைலவ. தைல, 43);. [நகு+அம்.]. ‘நகு’ என்னும் தோன்றுதற் கருத்தினின்று தோன்றிய சொல் விளங்கித் தோன்றுதல் என்னும் பொருண்மையில், மல்கும் வளமி க்க மலையைக் குறித்து நின்றது. மல்லல்மா ஞாலமாம் மாநில மடந்தையின் மடியினில் விளங்கித் தோன்றுவதே மலை, மலையிடைத் தோன்றி விளங்குபவையே. மணங்கமழ் நாகணமும், நறுஞ்சாந்தம் தரும் மரமும் என்றறிக. நகம்2 nagam, பெ. (n.) 1. உகிர் (பிங்.);; nail. 2. பறவையுகிர்; talon daw. “மூக்காற கொத்தா நகத்தாற் குடையா” (கம்பரா. சடாயுவு.13);. 3. அடிக்குளம்பு (வின்);; extremity or lower part of a hoot. 4. வெற்றிலை கிள்ளும்போது அணியும் விரலுறை(இ.வ.);; thimble used in plucking betel-leaf. 5. பங்கு, (யாழ். அக.);; portion [ஒருகா. நகு → நகல் → நகன்) → நகம்] நெகு → நகு. நகு → நகல் = ஒளி, நகு → நாகார் = விளங்கித் தோன்றும் பல் (வே.க.321); த → நகம் → வ. nakha, மோனியர் வில்லியம் வடமொழி அகரமுதலி, வளைவு, கூர்மை முதலான பொருள்களையே கூறுகிறது. தமிழில் அமைந்துள்ள வேர்ப்பொருள், இயல்பாகத் தோன்றி வெளிப்படுதல் என்னும் அடிப்படைப் பொருண்மையில் ஆளப்படுகிறது. மாந்தன், பறவை, விலங்கு முதலியவற்றின் உடலோடு, இயல்பாகத் தோன்றி வெளிப்படுவது என்னும், இயற்கைப் பொருண்மையில், இயன்மொழியாம் தமிழ்மொழியில் யாவரும் மறுக்கவியலா வண்ணம் அமைந்துள்ளமை கண்கூடு. வடமொழியாளர், தோன்றுதற் பொருண்மையல்லாது, வளைவு, கூர்மை மட்டுமே கூறியுள்ளனர். 1. கை அல்லது கால்விரல்களில் விளங்கித் தோன்றுவது. 2. கொம்பைப் போன்ற தகட்டுப் பாகத் தினையுடையது. 3. இதன். மீத்தோல் சதைப்பகுதியினின்று திரண்டு எழும்பித் தோன்றுவது. 4. விரல்நுனியின் மேற்பகுதியில் கவிழ்ந்திருப்பது. |
நகம்பிடுங்கி | நகம்பிடுங்கி nagambiḍuṅgi, பெ. (n.) உண்மையை வரவழைக்கும் பொருட்டு குற்றவாளிகளின் நகத்தைப் பிடுங்க காவல்துறையினர் பயன்படுத்தும் கருவி; an instrument used to pluck nails of culprit at jail. [நகம் + பிடுங்கி] |
நகம்வாங்கி | நகம்வாங்கி nagamvāṅgi, பெ. (n,) நகமெடுக்குங்கருவி; mall-parer. [நகம் + வாங்கி] |
நகம்வெட்டி | நகம்வெட்டி nagamveṭṭi, பெ. (n.) நகம் வாங்கி (வின்.); பார்க்க;see nagam-vángi. [நகம் + வெட்டி.] [P] |
நகயுட்பி | நகயுட்பி nagayuṭpi, பெ. (n.) ஒருவகை வெந்தயம்; hourse shoe fenugreek-Trigonella Corniculata. |
நகர அரசு | நகர அரசு nagaraarasu, பெ. (n.) கிமு. 5000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம், ஏதென்சு ஆகிய நாடுகளில் இருந்து முதன்முதல் உருவான சிறிய அரசியல் கூட்டமைப்பு; polis or city state-is a small independent-self Contained political Society it existed in Athens and Greek, before 5000 years, polis-old greek. [நகர் + அரசு] “மக்களாட்சியின் தாயகம்” “ஏதென்சு” என்று வரலாற்று வல்லுநர் கூறுவர். தன்னாட்சியுடனும் தன்னிறைவுடனும் திகழ்ந்த சிறிய அரசியல் சமுதாயம் பழங்கிரேக்கத்தில் , “polis or city state” என்று அழைக்கப்பட்டது. |
நகரகாதம் | நகரகாதம் nagaragātam, பெ. (n.) யானை (யாழ்.அக.);; elephant. த. நகரகாதம் skt. nagara-ghāda. [நகர் + அ + காது+ அம்.] அசைந்தவண்ணம் இருக்கும், காதுகளையுடையது. கேரளத்தில் அரச குடும்பத்தினர் யானையை வீட்டில் வைத்து வளர்க்கும் பழக்கம், இன்றும் காணப்படுகிறது. |
நகரக்கரணத்தான் | நகரக்கரணத்தான் nagaraggaraṇattāṉ, பெ. (n.) வணிகக் கணக்கு மேற்பார்வையாளன்; commercial account’s supervisor. “திருநெய்த்தானம் ஸ்ரீகார்யம் ஆராயப்பெற்ற அரயன் நாமக் கோடனார். இவ்வூர் நகரக் காணத்தான பனையூருடையானைக் குற்றத்தண்டம் கொண்ட பொன்”. (S.I.V.592); |நகரம் + கரணத்தான்.] |
நகரக்கல் | நகரக்கல் nagaraggal, பெ. (n.) வணிகர்கள் வைத்திருக்கும் எடைகற்களுக்குச் சான்றாக. அரசு தணிக்கை செய்து, முத்திரையிட்டு வழங்கச் செய்து எடுத்தலளவைக்கல்; weighing Stone duly Sealed by government authorities. ‘திருவாலந்துறை மகாதேவற்கு வைத்த வெள்ளியிற் கலசம் நகரக்கல்லால் நூற்று தொண்ணூற்று முக்கழஞ்சரை” (S.I.I.V67);. [நகரம் + கல்.] |
நகரக்கோயில் | நகரக்கோயில் nagaragāyil, பெ. (n.) 1. நாட்டுக்கோட்டைச்செட்டிவகுப்பினர் தலைமுறைதோறும் வணங்கும் ஒன்பது சிவன் கோயில்கள் (இ.வ.);; the nine Švan shrines of Chetnādu, each of which is worshipped by particular sections of chetty families. 2. நாட்டுக் கோட்டைச் செட்டிகளுள் ஒரு வகுப்பு; exogamous section of Náttu-köttai chetties, [நகரம் + கோயில்.] |
நகரங்கம் | நகரங்கம்1 nagaraṅgam, பெ. (n.) மணப் பொருள் (யாழ்.அக.);; fragrant substance. [நகரம்+கம்.] மணப்பொருள் காற்றில் கலந்து மணம் பரப்பும். இக் காற்றினை நுகருங்கால் மூக்கடைத்துக் காற்று “கம்” மென்று, மணம் வீசுவதாகக் கூறும் இயல்பு, இன்றும் மக்களிடையே பெருவழக்கூன்றியுள்ளது. நகரங்கம்2 nagaraṅgam, பெ. (n.) நகக்குறி பார்க்க; see naga-k-kuri. |
நகரங்களிலார் | நகரங்களிலார் nagaraṅgaḷilār, பெ. (n.) வணிகர்களின் அவைக்குரிய உறுப்பினர்கள்; member’s of the merchant’s council. [நகரங்கள் + இல் + ஆர்.] நகரத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வணிகர். ஏனைய ஊர்களில் உள்ள வணிகர்களை, வணிகப் பேரவைக்கு உறுப்பினராகச் சேர்த்தல்; |
நகரசனி | நகரசனி nagarasaṉi, பெ. (n.) செடியும் அதன் காயும்; a plant and its fruit. [நகர் + அசனி.] |
நகரசபை | நகரசபை nagarasabai, பெ. (n.) நகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவை; municipal Council. மறுவ. நகரமன்றம். [நகரம் + சபை] நகர்மன்ற உறுப்பினர் ஒன்றுகூடி. மக்களது இன்றியமையாத தேவைகளை நிறைவேற்றும் அவை. த. சபை → skt. சபா. அமைதல் = பொருந்துதல். கூடுதல், நிறைதல். அமை → கூட்டம். அமை → அவை. அவை → சவை → சபை. வ → ப=திரிபு. ஒ.நோ. உருவு → உருபு. செய்வவர் செய்பவர் சபையென்னும் தென்சொல்லே, வடமொழியில் சபா என்று திரிந்துள்ளது. |
நகரசம் | நகரசம் nagarasam, பெ. (n.) யானை, (சங்.அக);; elephant. |நகர்+அசம்.] |
நகரசுவாமி | நகரசுவாமி nagarasuvāmi, பெ, (n.) வணிகர்கள் தலைவன், வணிகர் பேரவைத் தலைவன்; leader of merchants, leader of the merchant’s council. [நகரம் + skt சுவாமி.] ஸ்வம்+ஆ+மி என்று வட சொல்லைப் பிரித்து, செல்வன் என்று பொருள் கூறுவர். ஆயின், சொம்+து= சொத்து என்னும் தமிழ் வேர்ப்பகுதி. அப் பொருள் தருதல் காண்க. |
நகரத்தந்தை | நகரத்தந்தை nagarattandai, பெ. (n.) மாநகராட்சி உறுப்பினர்களால் ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகரின் முதல் குடிமகனாக மதிக்கப்படுபவர்; mayor of a city Council (கிரி. அக.);. [நகரம் +தந்தை.] கிரியா அகரமுதலியில், நகரத்தந்தை, ஆண்டிற்கொருமுறை நகர்மன்ற உறுப்பினர்கள் வாயிலாகத் தேர்வு செய்யப்படுவதாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐந்தாண்டுகட்கு ஒருமுறை மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுபவரே, நகரத்தந்தை. |
நகரத்தார். | நகரத்தார். nagarattār, . பெ. (n.) 1. நகர வாசிகள்; townsmen, inhabitants of city. 2. நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் (இ.வ.);; nāțțu-k-köțţai-chețțies. 3, வணிகர்கள் (வியாபாரிகள்);; merchants. அங்காடிகள் = தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டில், கோயில் கணபதிக்குரிய நிவேதன);ப் படையல் வாழைப்பழத்திற்குரிய முதற்பொருளை, வட்டிக்குக் கொண்டவர்கள். அங்காடிகள் என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளபடி, அவ்வாறு வட்டிக்குக் கொண்டவர்கள் (கல்.அக);. 1. தஞ்சாவூர் புறம்படி நித்த வினோதப் பெருந்தெருவில் நகரத்தார். 2. தஞ்சாவூர் கூற்றுத்துத் தஞ்சாவூர் புறம்படி மும்முடிச்சோழப் பெருந்தெருவில் நகரத்தார். 3. தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர்ப் புறம்படி திரிபுவந மாதேவிப் பேரங்காடி நகரத்தார் என்றெல்லாம். விளக்கமாகக் குறிப்பிடப் படுவதால், நகரத்தார் என்பது வாணிகர் களையே பெரும்பாலும் குறிப்பிடுபவையே. அவர்கள் வணிகம் செய்து வாழ்ந்து வரும் ஊரும், “நகரம் என்று பெயர் பெற்றுள்ளது என்பதும், புலனாகும். பூந்த மலியான உய்யக் கொண்டான் சோழபுரத்து வாணிகர் நகரத்தோம்” (S.I.vol 7. ins.537); தஞ்சாவூர் புறம்படி திரிபுவநமாதேவிப் பேரங்காடி நகரத்தார்” (S.IIvol, 22 Ins37);, போன்றவை நகரத்தார் பற்றிய கல்வெட்டுச் சான்றுகளாகும். [நகரம் + அத்து + ஆர்.] நகரம் என்ற சொல், ஒளி மிகுந்த விளக்குகளுடன் விளங்கித் தோன்றும் கோவில், அரண்மனை, கோட்டை. தலைநகர் முதலியவற்றைக் குறிக்கலாயின. சிப்பிச் சுண்ணாம்பு பூசப்பெற்று பளபளப்புடன் விளங்கித் தோன்றும் மாளிகைகள் நிறைந்தது நகரம். நாட்டுக்கோட்டைச்செட்டியார் பேரூர் நகரம் என்றே அழைக்கப்பட்டது. நகரத்தார் எனும் சிறப்புப்பெயர், நாட்டுக்கோட்டாச் செட்டி வணிகர்களுக்கு வழங்கிவந்ததை கல்வெட்டுகள் தெளிவுறுத்துகின்றன. முதற்கண், நகரத்தில் வதிந்தவர், நகரத்தார் என்னும் பொதுப் பொருண்மையில் அழைக்கப்பட்டனர். நாட்டுக்கோட்டைச்சொட்டியார். வணிகம் புரிந்தமையாலும், பளபளப்பாக விளங்கித் தோன்றும் ஒளிமிக்கமாளிகையில் வதிந்த மையாலும், நகரத்தார் எனும் சிறப்புப்பெயர் பெற்றனர். |
நகரத்தார்ஊர் | நகரத்தார்ஊர் nagarattārūr, பெ. (n.) நாட்டுக்கோட்டைச்செட்டிமார் வாழும் ஊர்; dwelling place (village); of nåttu-k-köttai-ccettiyar’s. நகரத்தார் = வணிகர். வட்டித்தொழில் செய்தவர்; [நகரத்தார் + ஊர்] |
நகரத்தார்கடை | நகரத்தார்கடை nagarattārgaḍai, பெ. (n.) நாட்டுக்கோட்டைச் செட்டிமார் நடத்தும் வட்டிக்கடை; nattu-k-köttai-c-cettiyar’s shop for money lending business. [நகரத்தார் + கடை] |
நகரத்தார்கலை | நகரத்தார்கலை nagarattārgalai, பெ. (n.) நாட்டுக்கோட்டை வணிகத்தார் கட்டிய கோவில்களில் காணப்படும் கலைப்பாங்கு; the specific features found in nättu-k-köttai-ccettiyar’s art and architecture. [நகரத்தார் + கலை.] கண்ணாத்தாள் கோவில், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி போன்ற இடங்களில், மிகப் பிற்காலத்தே கட்டப்படட்ட, முக மண்டபங்களில் காணப்படும் கொடுங்கைகள், நாட்டுக்கோட்டைச் செட்டிமார் தம் கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். |
நகரத்தார்பாணி | நகரத்தார்பாணி nagarattārpāṇi, பெ. (n.) நாட்டுக்கோட்டைச்செட்டிமார் கட்டிய கோவில்களில் காணப்படும் ஒருமித்த கலையமைப்பு; the common architecture found in temples built by nattu-k-köttai-ccettiyar’s. [நகரத்தார் + பாணி.] |
நகரத்துச்செட்டி | நகரத்துச்செட்டி nagarattucceṭṭi, பெ. (n.) செட்டிச் இனத்தாருள் ஒருவகையினர் (ETV 92);; a sub caste of chetties. |நகரம் + அத்து + செட்டி.] |செட்டு + இ → செட்டி.] |
நகரத்துவெள்ளாளர் | நகரத்துவெள்ளாளர் nagarattuveḷḷāḷar, பெ. (n.) வேளாளர் வகையினர்; a sub sect of véâlâs. [நகரத்து + வேளாளர் → வெள்ளாளர்.] |
நகரத்தோர். | நகரத்தோர். nagarattōr, பெ. (n.) முற் காலத்திலிருந்த நகரமாந்தர் அவை (கல்வெட்டு);; council of the citizens. In ancient times. [நகரம்+அத்து+ஆர்→ஒர் .நகரத்தார் → நகரத்தோர்.] |
நகரப்பட்டினி | நகரப்பட்டினி nagarappaṭṭiṉi, பெ. (n.) நகரதேவதையைக் குறித்து மேற்கொள்ளும் நோன்பு; a fasting vow in honour of the guardian deity of a city. “தூநீராடி மேவருடங்குயர் நகரப்பட்டினியும் பாரணமும் விதியினாற்றி” (சேதுபு. அகத்திய, 19);. |நகரம் + பட்டினி.] நகு → நகர் + அம் + பட்டினி. பட்டு + இன் + இ = பசித்துயரால் துன்பம் பட்டுக்கிடக்கும் நிலை. ‘இன்’ ஈண்டு சாரியையாகி வந்தது. இன் சாரியை இன்றிவரும் பட்டு+இ= பட்டி என்பது ஒர் எல்லைக்குள் உட்பட்டு நிற்கும் ஊரைக் குறிக்கும். |
நகரப்பதி | நகரப்பதி nagarappadi, பெ. (n.) தலைநகர் (திவா.);; capital. [நகரம் + பதி.] நகரம் என்பது ஒளிமிக்க இடத்தையும், அங்கு பலர் வதிந்திருக்கும் பொருண்மையில், தலைநகரையும் குறிக்கும். அரசன் இருக்கும் அல்லது சென்று தங்கும் இடம் தலைநகர். மாடமாளிகைகள் விளங்கித்திகழும் பேரூரைப் பதி என்னுஞ்சொல் குறிக்கின்றது. மாளிகை முதலில் அரசனுக்கே உரியதாயிருந்தது. அரசன் வாழுமூரே தலைநகர். வளமனை, மாளிகை அரண்மனை. கோயில், மண்டபம் போன்ற இடங்கள், சிறந்த ஒவிய வேலைபாட்டுடன் சிப்பிச்சுண்ணாம்புச் சாந்து தீற்றப் பெற்று விளங்கித் தோன்றும் பதியே, நகரப்பதி என்றறிக. |
நகரப்பதிவாழ்நர் | நகரப்பதிவாழ்நர் nagarappadivāḻnar, பெ. (n.) 1. தலைநகரில் வாழ்வோர்; inhabitants of a capital. 2. நாகரிகமுள்ளோர். (திவா.);; civilised persons. [நகரப்பதி + வாழ்நர்.] ஈண்டு நகரப்பதி வாழ்நர் என்பது, சிறப்பாகத் தலைநகரில் வாழ்பவரையே குறித்தது. அரசனுக்கு அருந்தொண்டாற்றும் அமைச்சர்களும், அமைச்சர்க்கு உற்ற நேரத்தில் உறுதுணை புரியும் அதிகாரிகள் உறையுமிடமே நகரப்பதி. இந் நகரப்பதியே தலைநகர். இத் தலைநகரின் வானளாவிய வளமனைகள் விளங்கித் தோன்றும். இத் தலைநகரில் வதியும் அமைச்சர்களும், அதிகாரிகளும், ஐம்பெருங்குழு எண்பேராயத்தில் பணியாற்று பவேரே. இவர்களே, நகரப்பதி வாழ்நர். |
நகரமன்றம் | நகரமன்றம் nagaramaṉṟam, பெ. (n.) நகரத்துக்கான உள்ளாட்சி அமைப்பு; municipality. [நகரம் + மன்றம்.] |
நகரமாகஇசைந்தநகரத்தோம் | நகரமாகஇசைந்தநகரத்தோம் nagaramāgaisaindanagarattōm, பெ. (n.) வணிகர் குடியுருப்புப் பகுதியாக அரசின் வாயிலாக உரிமம் பெற்று வாழும் நகரத்தார்; commercial residence approved by government. “நகரமாக, இசைந்த நகரத்தோம். சுந்தரசோழபுரமான தேசியுகந்து பட்டனம்” (புதுக்கோட்டை கல்வெட்டு எண்.422);. |
நகரமாக்கள் | நகரமாக்கள் nagaramāggaḷ, பெ. (n.) நகரமாந்தர்2 (பிங்); பார்க்க;see nagara māndar. [நகரம் + மாக்கள்.] |
நகரமாந்தர் | நகரமாந்தர் nagaramāndar, பெ. (n.) 1. நகர்வாழ்நர்; city people. 2. அரசருக்குரிய எண்பெருந்துணைவருள் தலைமைபெற்ற நகர்வாழ்நர் (திவா.);; chief citizen, one of enperun-tunavar. |
நகரமீன் | நகரமீன் nagaramīṉ, பெ. (n.) பரவமகளிர்தம் ஐந்து வண்ண அணிகளுள் காலின் சுண்டுவிரலிற் பூணும் அணிவகை; ring worn on the little toe by parava women, one of al-vannam மறுவ. நவரை. [நகரை → நகரமீன்.] [P] |
நகரமூக்கத்தி | நகரமூக்கத்தி nagaramūggatti, பெ. (n.) நாகமூக்கொற்றிச் செடி; moon – flower. |
நகரம் | நகரம் nakaram, பெ. (n.) வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; name of the village in Vellore. [நகர்+அம்] நகரம்1 nagaram, பெ. (n.) 1. பேரூர் (சூடா);; city, town, capital metropolis. 2. அரண்மனை (யாழ்.அக.);; palace. 3. கோயில்; temple. “மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்” (சிலப். 14, 9);. 4. வாழிடம்; residence, place. “நகர மரருள்புரிந்து நான் முகற்குப் பூமேல்” (திவ். இயற்.முதற் 33); 5. வளமனை, மாடமாளிகை, அனைத்தும் நிறைந்து விளங்கித் தோன்றுவது; fabulous palace, elaborate wealhty houses and the unique historical temples are found In a prosperous city as town. த. நகரம் → skt nagara [நகு → நகல் → நகர் → நகரம்.) “அம்” → பெருமைப்பொருள் பின்னொட்டு. நகர் என்னும் சொல் ‘அம்’ என்னும் பெருமைப்பொருட் பின்னொட்டுப் பெற்று நகரம் என்றாகும். விளங்கித் தோன்றும் வெண்மை என்பதே இதன் வேர்ப் பொருள். “ஒய்மா நாட்டு நகரம் உலோக மாதேவி புரத்து வியாபாரி ஆர்வலங்கிழான்” (S.I.IVol V1000);. இன்று ‘நகரம்’ என்னும் சொல், பெருநகர் என்னும் பொருண்மையில் வழக்கூன்றியுள்ளது. முதற்கண், அரசன் வாழும் தலைநகரையும். பின்பு அவன் சென்று தங்குமிடத்தையுஞ் சுட்டிற்று. நகரம் என்னுந் தென்சொல்லை வடமொழியாளர், வேருந்தூரும் மொழிப் பொருட்கரணியமுமின்றி நகர, நகரீ எனத் திரித்தமைத்துக் கொண்டனர். (ப.த.நா.ப.பப்.4); நகரம் nagaram, பெ.(n.) வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; name of the village ir Vellore. [நகர்+அம்] |
நகரம்பழம் | நகரம்பழம் nagarambaḻm, பெ. (n.) நவரம்பழம் வாழைப்பழ வகைய ளொன்று; a kind of plantain. மறுவ, நவரை [நவரம் → நகரம் +பழம்.] |
நகரவனுச்சை | நகரவனுச்சை nagaravaṉuccai, பெ. (n.) நகரத்தார் அமைத்துக்கொள்ளும் ஒழுங்குமுறை, ஊர்க்கட்டுபாடு; Self control order between nagarattar. “நகரவனுச்சையால் வைத்துக் கொடுத்தோம்” (SLI vol. 2–ll|: 223);. |
நகரவரை | நகரவரை nagaravarai, பெ. (n.) அவரைவகை (வின்);; a kind of bean, Dolichos – rugosus. மறுவ, மொச்சை. [நகர் + அவரை.] புரதம் செறிந்த இம் மொச்சை, அவரைவகையுளொன்று. உண்ணுவதற்கு பெரிதும் உகந்தது. |
நகரவாயிற்பழம் | நகரவாயிற்பழம் nagaravāyiṟpaḻm, பெ. (n.) புளிப்புச்சுவையுள்ள பழம்; grewia, asiatica a small and fruit. மறுவ. பலசம். [நகரம் + வாயிற்பழம்.] இயல்பாகவே புளிப்புச் சுவையுள்ள இப் பழச்சாற்றினின்று, கோடை வெப்பத்தைத் தணிக்கும். இனிய கலவையினை உருவாக்குவர். இவ் வின் பருகத்தினை மென்மேலும் புளிக்கவைத்து, தேட்கடுப்பன்ன புளிக்குந் தேறலாக மாற்றுவர். இத் தேறலுக்குத் துவர்ப்பு, புளிப்பு, குளிர்ச்சி முதலான குணங்களுண்டு. நகரவாயிற் பழப்பட்டையினின்று. கடைச் சரக்குகளைச் சேர்த்து, கருக்குநீராகக் காய்ச்சிக் குடிப்பதனால், மிகுபித்தம், வெப்பு நோய் முதலானவை அகலும். (சா. அக.);. |
நகரவாரியம் | நகரவாரியம் nagaravāriyam, பெ. (n.) நகரமாகக் கொள்ளப்பட்ட ஊர்களில், வணிகத் தொடர்பான செயல்களைக் கண்காணிக்கும் குழு. இத்தகைய வாரியம் சிறந்த வாணிகர் வாழும் ஊர்களிலேயே, அமைக்கப்பெறும்; supervising authority of merchant’s Council. “இவ்வூர் அங்காடியில் ஊராள்வார்கள் பெறும் அங்காடிக்கூலி கொண்ட இவ்வூர் நகரவாரியம் செய்வோமாக” (S.I.l. vol. 5. 597.); [நகரம் + வாரியம்.] |
நகரவிடுதி | நகரவிடுதி nagaraviḍudi, பெ. (n.) நாட்டுக்கோட்டை நகரத்தார் வந்து தங்குவதற்காக, அமைக்கப்பட்ட கட்டடம்; a lodging-place specially intended for Náttukkötta chetties. [நகரம் + விடுதி.] |
நகரவியக்கி | நகரவியக்கி nagaraviyaggi, பெ. (n.) புலித் தொடக்கி (சங். அக);; a thorny sensitive plant. மறுவ: நகவியாக்கிரம். |
நகரவிரம் | நகரவிரம் nagaraviram, பெ. (n.) மயில் (சங். அக);; peacock. |
நகரா | நகரா nagarā, பெ. (n.) பெருமுரசுவகை; a large kettle-drum. “நகரா முழுங்கு” (கொண்டல்விடு. 508);. |
நகராசிடமண் | நகராசிடமண் nagarāciḍamaṇ, பெ. (n.) சவட்டு மண்; Saline material in earth. நகரப்பகுதிகளில் சுவர் எடுக்கப் பயன்படுத்தும், பற்றுக்கோடான உவர்ப்புக் கலந்த மண்; |
நகராட்சி | நகராட்சி nagarāṭci, பெ. (n.) நகரத்துக்கான உள்ளாட்சி அமைப்பு; municipality. நகராட்சித்தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. [நகர் + ஆட்சி.] |
நகராட்சிமன்றம் | நகராட்சிமன்றம் nagarāṭcimaṉṟam, பெ. (n.) நகரசபை பார்க்க;see nagara-Sabai. [நகராட்சி + மன்றம்.] |
நகராணம் | நகராணம் nagarāṇam, பெ. (n.) ஒளிநீர் (விந்து); (சங். அக.);; semen. 2. விதை; seed. |
நகராபார் | நகராபார் nagarāpār, பெ. (n.) மீன்வகையுளொன்று; yellow goat fish. மஞ்சள் வண்ணமுள்ள இறுகிய சதைப்பற்றுள்ள மீன்;மறுவ நகரை. |
நகராமண்டபம் | நகராமண்டபம் nagarāmaṇṭabam, பெ. (n.) வழிபாடு செய்வன், திருவில்லிப்புத்தூர் நாய்ச்சியாருக்கு வழிபாடு முடிந்தபின்பே, உண்பது என்ற நோன்புமுடைமையால், அதனை அறிவித்தற் பொருட்டு, அவ்வூரிலிருந்து, மதுரைவரை, நகரா என்னும் முரசு மூலம், செய்தி அறிவிக்குமாறு வழிநெடுகத் திருமலை நாயக்கரால் அமைக்கப்பட்டுள்ள, மண்டபங்கள்; kettledrum stations established by Tirumalai naikar along the road from srivilliputtur to his palace at Madurai for announcing the Goddess at Srivilliputtur, after which he would take his food. [நகர் + ஆ = நகரா + மண்பம்.] மண்டபம் = சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மாளிகை போன்றமைந்த இடம். திருத்தக்க தேவர் நகர் என்னும் சொல்லை மண்டபம் என்னும் பொருளில் ஆண்டார்;நகரா + மண்பம் = முரசுக்கட்டில்கள் அமைப்பதற்காக மன்னர்களால் அமைக்கப் பெறும் பெருமாளிகை. |
நகராமுசி | நகராமுசி nagarāmusi, பெ. (n.) 1. ஈரல் (சங். அக.);; liver. 2. நுரையீரல்; the lungs. [நகர் + ஆம் + உசி.] உயிர்ப்புக்காற்று உள்வாங்கி வெளிவிடும் போது, நகர்வதுபோல் தோன்றலாகும் தன்மை உடையது. |
நகராவம் | நகராவம் nagarāvam, பெ. (n.) அலரி; oleader. nerum odorum. |
நகரி | நகரி2 nagari, பெ. (n.) வறட்சுண்டி (மலை);; a sensitive plant. Indian worm killer. |
நகரி. | நகரி. nagari, பெ. (n.) 1. நகரம்(சூடா);; city, capital. 2. அரசுக்குரிய புறம்போக்கு நிலம்; land belonging to government (RT);. த. நகரி → skt. nagari [நகு → நகல் → நகர் → நகரி]. நகர மாளிகையையும் செல்வச்செழிப்பு நிறைந்து திகழும் வளமனைகளும் விளங்கித் தோன்றும் ஊர். [நகர் + இ.] ‘இ’உடைமையை உணர்த்தும் ஒன்றன் பாலீறு. ஒ.நோ. காடைக்கண்ணி, நாற்காலி. ஆழ்வார் திருநகர் + இ. நகர் என்னும் சொல் தனி மாளிகையையும், அதனையுடைய பேரூரையுங் குறித்ததனால், இம் மயக்கத்தை நீக்கும் பொருட்டு, பேரூரை மட்டும் குறித்தற்கு ‘இ’ கரவீறு கொண்ட நகரி என்னுஞ்சொல் எழுந்தது. நகரை (மாளிகையை); யுடையது நகரி. ‘நகரி’ என்னுமிச்சொல் வடமொழியில் ‘நகரீ’ என்று ஈறு நீண்டு வழங்கினும், அதன் ஈற்றிற்கு அங்கு தனிப்பொருள் இல்லை. (ப.த.நா.ப.பக்4);. வீட்டைக்குறிக்கும் ‘குடி’ என்னுஞ்சொல், காலப்போக்கில் குடிமிக்க ஊரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. நகுதல்= விளங்குதல்;விளங்கித் தோன்றுதல். வெண்சாந்து பூசிய காரைவீடு, கூரைவேய்ந்த மண்வீட்டோடு ஒப்பு நோக்கியபோது விளங்கித் தோன்றியதனால், ‘நகர்’ என்றுபெயர் பெற்றது. [நகு → நகல் → நகர் → நகரி.] நகர்களை (காரைவீடுகளை); உடையது நகரி. விளங்கும் மாளிகைகள் மிகுதியாக வுள்ள பேரூரே நகரி. |
நகரிகவுளி, | நகரிகவுளி, nagarigavuḷi, பெ (n.) தேட்கொடுக்கி; scorpion sting plant. Heliotropium indicum. [நகரி + கவுளி.] [P] |
நகரிகாவலர் | நகரிகாவலர் nagarigāvalar, பெ. (n.) நகரக் காவலாளிகள் (வின்);; city watchmen. [நகரி + காவலர்.] |
நகரிசோதனை | நகரிசோதனை nagaricōtaṉai, பெ. (n.) அரசன் இரவில் வேற்றுருக்கொண்டு, தன் நகரத்தைச் சுற்றி ஆய்வு பார்க்கை (இ. வ);; nightly inspection of a city by its king incognito. [நகர் → நகரி + skt சோதனை.] |
நகரிநிலம் | நகரிநிலம் nagarinilam, பெ. (n.) தீர்வையில்லாத சாகுபடிநிலம்; unassessed cultivable land. (R.T.);. [நகரி + நிலம்.] |
நகரிபகம் | நகரிபகம் nagaribagam, பெ. (n.) காகம் (மூ.அ.);; Crow. |
நகரிபதம் | நகரிபதம் nagaribadam, பெ. (n.) நகரியகம் பார்க்க;see nagari-pagam. |
நகரிப்பழக்கம் | நகரிப்பழக்கம் nagarippaḻggam, பெ. (n.) நகர்வாழ்நர் நல்லொழுக்கம். (வின்);; urban manners, urbanity. [நகர் → நகரி + பழக்கம் = நகரமாந்தர்களின் திருந்திய ஒழுக்கம்.] மக்களின் பழக்கவழக்கங்கள் முதன்முதல் நகர் அல்லது நகரத்திலேயே திருந்தின. அக் காலத்தே. பண்பட்ட பழக்க வழக்கத்தின் உறைவிடமாகவும். நகர் வாழ்நர் விளங்கினர். அகத்தே நல்லொழுக்கம் பூண்டு உணவு உடை உறையுள் முதலான அனைத்து நிலையிலும், நாகரிகத்துடன் மிளிர்ந்த, நகரமாந்தாதம் நல்வாழ்வுப் பழக்கமே, நகரிப்பழக்கம் எனப்பட்டது. |
நகரிமாக்கள் | நகரிமாக்கள் nagarimāggaḷ, பெ. (n.) நகர மாக்கள் (சூடா.); பார்க்க;see nagara-mäkkal [நகர் → நகரி + மாக்கள்.] ஒ.நோ. ஆழ்வார்திருநகர் → ஆழ்வார் திருநகரி. மா + கள் என்று. விலங்குகளைக் குறிப்பினும், மக்கள் பொருளிலும் வரும். |
நகரியம் | நகரியம் nagariyam, பெ. (n.) குறிப்பிட்ட தொழிலை ஒட்டி உருவாக்கிய நகரின் நிருவாகத்திற்காகத் தேர்தல்மூலம் அல்லாமல், அமைக்கப்படும் உள்ளாட்சி ஆளுகை; township. [நகர் + இயம்.] |
நகரிவகம் | நகரிவகம் nagarivagam, பெ. (n.) நகரிபகம் (யாழ். அக); பார்க்க;see nagaribagam [நகரிபகம் → நகரிவகம்.] |
நகரு-தல் | நகரு-தல் nagarudal, 2.செ. கு. வி. (v.i,) நகர்-தல், பார்க்க: see nagar. [நகர் → நகரு.] |
நகரூடம் | நகரூடம் nagarūṭam, பெ. (n.) மூக்கு (சங். அக.);; nose. |
நகரெளடதி | நகரெளடதி nagareḷaḍadi, பெ. (n.) வாழை (சங்.அக.);; plantain tree. |
நகரேகை | நகரேகை nagarēgai, பெ. (n.) நகக்குறி (யாழ். அக); பார்க்க;see naga-k-kuri. மறுவ, நகத்தழும்பு. [நகம் + skt. ரேகை.] |
நகரை | நகரை1 nagarai, பெ. (n.) 1. நறுள்மரம்; small lance leaved, olive linden. 2. மீன் வகையுளொன்று; a kind of fish. நகரை2 nagarai, பெ. (n.) 1. நவரை பார்க்க; see navarai 2. பேய் நவரை பார்க்க;see pèynavarai 3. ஒர் அரிசி வகை; a kind of rice. |
நகரோபாந்தம் | நகரோபாந்தம் nagarōpāndam, பெ. (n.) நகரெல்லை (யாழ். அக.);; outskirts of a city. [Skt. {} → த. நகரோபாந்தம்] |
நகரௌடதி | நகரௌடதி nagarauḍadi, பெ. (n.) வாழை; plantain tree. |
நகர் | நகர்1 nagartal, 2 செ.கு.வி. (v.i.) 1. ஊர்தல்; to creep, as a reptile. 2. தவழ்தல்; to crawl or move along in a lying or sitting posture, as an infant. 3. மறைவாய்ப் போதல்; to steal away. Skulk. [நக → நகர்-தல்.] நகர்2 nagarttal, 8செ.குன்றாவி. (v.t.) நகர்த்து-தல் பார்க்க;see nagarttu. நகர்3 nagar, பெ, (n.) 1. நகரம்; town, city. “நெடுநகர் வினைபுனை நல்லில்” (புறநா.23);. 2. மாளிகை; house, abode, mansion. “பாழியன்ன கடியுடை வியனகர்” (அகநா.15);. 3. கோவில்; temple, sacred shrine. “முக்கட்செல்வர் நகர்” (புறநா. 6.);. 4. அரண்மனை palace “நிதிதுஞ்சு வியனகர்” (சிலப். 27,200);. 5. சடங்கு) நிகழ்வு செய்யு மிடம்; dais for performing ceremonies “தூநக ரிழைத்து” (சீவக. 2633);. 6. சிறப்பு நிகழ்வுகள் நிகழும் மண்டம்; a furnished hall or place, decorated for ceremonial functions. “அணிநகர் முன்னினானே” (சீவக.701);. 7. மனைவி; wife. “வருவிருந்தோம்பித் தன்னகர் விழையக்கூடி” (கலித்..8);. தெ. து. நகரு. ம. நகர். த.நகர்>skt.nagara. [நகு → நகல் → நகர்.] ஒளிர்தற் கருத்தினின்று கிளைத்த சொல்லாகும். விளங்கித் தோன்றும் மாளிகை வளமனை; அரண்மனை அரண்மனையையொத்த கோவில். மாளிகையும் அரண்மனையும், மண்டபமும் கோயிலும் போன்ற கட்டடங்களாற் சிறந்து விளங்கும் ஊர் (வே.க.3.25);. நகா என்னும் சொல் முதன்முதலில், ஒரு வளமனையை அல்லது மாளிகையையே குறித்தது. காலப்போக்கில், மாளிகை அரசனுக்கே சிறப்பாக வுரியதாதலால் அரண்மனையைக் குறிக்கலாயிற்று. அடுத்த நிலையில், அரசனது அரண்மனை போன்று திகழும், இறைவன் கோயிலையும் குறித்தது. கோயிலின் கண்ணே, சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபம், மாளிகை போன்றிருத் தலால், இச் சொல்லை, மண்டபம் என்னும் பொருளில் திருத்தக்கதேவர் ஆளுகின்றார். நகர் என்னுஞ்சொல், செந்தமிழுக்குரிய தலைமைப் பண்பை நிலைநிறுத்தும் சொற்களுள் தலையாயது. இச் சொல்லினின்றே நகரி,நகரம், நாகரிகம் போன்ற சொற்கள் கிளைக்கின்றன. நகர், நகரி, நகரம், நாகரிகம் போன்ற சொற்களுக்குரிய வேரடி வடிமொழியில் இல்லை. இச் சொற்களுக்குரிய நகு என்னும் வேர்ச்சொல் நந்தமிழுக்கே உரியது. நகு’ என்னும் மூலம் வடமொழியில் இல்லை. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலியில், இவ் வடிப்படை உண்மையை உணராது. நகர், நகரி, நகரம் ஆகிய மூன்று சொல்லையும், வடசொல்லென்று குறித்துள்ளனர். சிப்பிச் சுண்ணாம்புச் சாந்தினால் தீற்றப்பெற்று, வெள்ளையடிக்கப்பட்ட காரைச்சுவர்க் கட்டடம், மண்சுவர்க் கூரைவிட்டோடு ஒப்பு நோக்கும்போது, மிக விளங்கித் தோன்றலால், மாளிகை நகர் என்னப்பட்டது. நகுதல்=விளங்குதல். [நகு → நகல் → நகர்.] நகர் என்னுஞ்சொல், தனி மாளிகையையும், அதனை உடைய பேரூரையும், குறித்ததினால், இம் மயக்கை நீக்கும் பொருட்டு ‘இ’கர வீறு கொண்ட நகரி என்னுஞ் சொல் எழுந்தது. (ப.த.நா.பண்.பக்.3);. நகர் என்பது சிறந்து விளங்கும் கட்டங்களை உடையது. வித்தகர் இயற்றிய வெண்சுதை விளக்கத்துடன் கூடிய கூடகோபுரங்களையும், ஒளி விளங்கும் மாடமாளிகைகளையும் தன்னகத்தே கொண்டது. இத் தகு சிறப்புகள் செறிந்த வேர்ச்சொல்லே நகு’ என்பது. இப் பொருண்மை பொதிந்த வேரடி வடமொழியில் இல்லை. [த. → நகர் + அம் →_நகரம் → வ. → நகர.] நகரம் என்னும் இச் சொல்,ஒளிர்தற்கருத்து எனும் பொருண்மையும், “அம்” என்னும் பெருமைப் பொருட் பின்னொட்டும், செந்தமிழின் இலக்கியச் செழுமையையும். மரபார்ந்த இலக்கண வளத்தையும் எடுத்துக்காட்டுவது. பெருநகரை, நகரம் என்று சொல்லினும் போதும். ஆயின், அவ்விலக்கணம் இன்று அறியப் படாமையால், மாநகர் என்று சொல்ல வேண்டியதாகின்றது. (ப.த.நா.பண்.பக்4);. நாம் “யாதும் ஊரே யாவருங் கேளிர்” என்னும், உயர்ந்த பண்பாட்டை யுடையவரேனும், நாட்டு வரலாறொத்த மொழிவரலாற்றைச் சிதைப்பதும், உலகில் முதன்முதல் நாகரிக விளக்கேற்றிய, நம் முன்னோரைத் தகவிலாரெனக் காட்டுவதும், அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அரும்பாடுபட்டுத் தேடிவைத்த அருஞ் செல்வத்தைப் போற்றாது வாரி, வாரியில் எறிவதும், அறியாமையையோ, படுகோழைத் தனத்தையோ, தமிழைப் பகைவர்க்கு வெளிப்படையாகக் காட்டிக் கொடுக்கும் நாண மில்லாச் செயலையோதான் காட்டும். பண்பாடுவேறு காட்டிக் கொடுப்பு வேறு. மக்களின் பழக்க வழக்கங்கள், முதன்முதல் நகர் அல்லது நகரத்திலேயே திருந்தின. அதனால், சிற்றூர்வாணனையோ, நாகரிகமில்லாதவனையோ, நாட்டுப்புறத்தான் என்று அழைப்பது இன்றும் வழக்கமாயிருக்கின்றது. முதற்கண், நகர்வாழ்விற்கு அடிப்படையானதும், விளங்கித் தோன்றுவதுமான வாழ்க்கைத் திருத்தம் அல்லது பண்பாடு, நகரத்தில் தோன்றியதானாலேயே, நாகரிகம் என்னும் பெயர் பெற்றது. நகர மாந்தரே புறநாகரிகத்தின் பாதுகாவலராயினர். நேர்த்தியாக உடுத்தத் தலைப்பட்டனர். வளமனைகளில் வதிந்தனர். நகரப்பதிவாழ்நர்தான், நாகரிகத்தையும், பண்பாட்டையும் நாட்டுப்புறத்தார்க்குக் கற்றுத் தந்தனர். நகரி, நகரம், நாகரிகம் முதலான சொற்கள், மிக்கு ஒளியுடன் விளங்கித் தோன்றுதல் என்னும் பொருண்மையில், ‘நகு’ என்னும் ஒளிர்தற்கருத்து, வேரினை மூலமாகக் கொண்டு முகிழ்த்தவை. நகு → நகர்= விளங்கித்தோன்றும் மாளிகை நகு → நகர் → நகரி = வெண்கதை பூசிச் சிறந்து விளங்கும் உயர்ந்த கட்டடங்களை யுடைய ஊர். த. நகரி → வ. நகரீ. ‘இ’. சினைமுதலீறு. நகர் + அம் → நகரம். ‘அம்’=பெருமைப்பொருட் பின்னொட்டு. இப் பின்னொட்டு தமிழ்மொழிக்கே உரியது. வடமொழியில் இல்லை. அவை + அம் → அவையம். இற்றைத்தமிழர் இப் பின்னொட்டின் பெருமையை அறியாது. பொதுப்பொருளில் வழங்குகின்றனர். த. நகரம் → வ. நகர. நகர் என்னும் மூலச்சொல்லும், ‘நகு’ என்னும் மூலமும், வடமொழியில் இல்லை நகர் என்னும் மூலச்சொல்லே, நாகரிகம் என்னும் சொல்லிற்கும் அடிப்படை. நகர் → நகரகம் → நகரிகம்→நாகரிகம். நகரிப்பழக்கம்=நகர்வாணரின் திருந்திய ஒழுக்கம். நகர்ப்புறத்தான் = நாகரிகன். நாட்டுப்புறத்தான் அல்லது பட்டிக்காட்டான் = திருந்தாத பழக்க வழக்கத்தான். E. urban = living in a city or town urbanity = polished manners L. civis = citizen. Civil = polite. Civilization = advanced stage in social development (வே.க.3);. இச் சொல் கழக இலக்கியங்களிலும், பாவிய(காப்பியப் பனுவல்களிலும், மக்கள் வழக்கிலும், உலகவழக்கிலும், பழமொழி வழக்கிலும் பரவலாகக் காணப்படுகின்றது. நகர், நகரி, திருநகர், ஆழ்வார் திருநகர், ஆழ்வார் திருநகரி என்னும் இடப்பெயர்கள், தென்னக மாவட்டங்களில் பெருவாரியாகக் காணப்படுகிறது. 2. நகர் சென்று வந்தால் நாலும் தெரிஞ்சுக்கலாம். (இ.வ.);. 3. நகர்தேடிப் போனால்தான் நாலுகாசு சேரும் (உ.வ.);. 4. நாய்போல் திரிந்து நகரில் பிழைத்தாலும், நாட்டுப்புறம் வந்தவுடன் நாட்டாமை செய்திடுவர் (இ.வ.);. 5. நகரத்தில் இரண்டாந்தர ஊழியனாய் உழைப்பதைவிட நாட்டுப்புறத்தில் தலைவனாக வாழ்வதே மேல். (பழ);. மேற் குறித்த பொருண்மை பொதிந்த பொருட்பொருத்தப்பாட்டில் பயின்று வருவதாலும், கழக இலக்கியம் முதலாக, பழமொழியிலக்கியம் ஈறாக, வழக்கூன்றியிருப்பதால், ‘நகர்’ எனுஞ்சொல் தூயதென்சொல்லென்று துணியவாம். |
நகர்துரோணம் | நகர்துரோணம் nagarturōṇam, பெ. (n.) தும்பை (சா.அக);; leucas flower. [நகர் + Skt துரோணம்.] |
நகர்த்து-தல் | நகர்த்து-தல் nagarddudal, 5. செகுன்றாவி, (v.t.) 1. விரும்பியேற்றுச் சிறிது தள்ளுதல்; to push with difficulty, shove a long. 2. சிறுகச் சிறுகக் களவாடுதல்; to pilfer steal little by little. 3. காலம் கடத்துதல்; to dellay. வேலையை நகர்த்துகிறான் (உ.வ.);; 4. நன்றாகப் புடைத்தல்; to thrash, give a good drubbing. 5. செவ்வையாகச் செய்தல்; to do well, [நகர் → நகர்த்து.] [நகர் (த.வி); → நகர்த்து (பி.வி);] |
நகர்படுதிரவியம் | நகர்படுதிரவியம் nagarpaḍudiraviyam, பெ. (n.) நகரத்துக்கு உரியனவாகிய கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, வேந்தன் என்ற ஐவகைப் பொருள்கள் (பிங்);; things peculiar to a city, as kaņņādi, pittaņ, karunkurangu, kāţţāņai, vēndan [நகர் + படு + திரவியம்.] |
நகர்ப்படுகை | நகர்ப்படுகை nakarppaṭukai, பெ. (n.) மன்னார்குடி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Mannarkudi Taluk. [நகர்+படுகை] நகர்ப்படுகை nagarppaḍugai, பெ.(n.) மன்னார்குடி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Mannarkudi Taluk. [நகர்+படுகை] |
நகர்ப்புறத்திட்டம் | நகர்ப்புறத்திட்டம் nagarppuṟattiṭṭam, பெ. (n.) மக்கள் நெருக்கம் மிகுதியாக உள்ள நகரினைப் பற்றிய திட்டம்; urban planning. “சாலை பேணுதல் நகர்ப்புறத் திட்டத்துள் ஒன்று” (உ.வ.);. [நகர்ப்புறம் + திட்டம்.] |
நகர்ப்புறம் | நகர்ப்புறம் nagarppuṟam, பெ. (n.) நகரமும், நகரத்தைச் சார்ந்த பகுதியும்; City and its sub-urban area. நகர்ப்புறத்திலேயே வளர்ந்த பையன். (உ.வ.);. நகர்ப்புறத்தின் வளர்ச்சி, அதைச் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. (இ.வ.);. மேலைநாட்டு நாகரிகம் நகர்ப்புறத்தில்தான் முதலில் பரவுகிறது. [நகர் + புறம்] நகரமாகிய (உள்);புறம் என்றும், நகரத்துக்குக் (சுற்றுப்புறம் என்றும் பொருள்படல் காண்க. |
நகர்ப்புறவளர்ச்சி | நகர்ப்புறவளர்ச்சி nagarppuṟavaḷarcci, பெ. (n.) நகர் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சி; urban development. ‘சில ஆண்டுகளாக நகர்ப்புற வளர்ச்சி சிறப்பாக அமையவில்லை’ (உ.வ.);. நகர்ப்புறவளர்ச்சியினால் நாட்டுப்புற மக்களுக்கு வேலை கிடைக்கிறது (இ.வ.);. [நகர்ப்புறம் + வளர்ச்சி] |
நகர்மை | நகர்மை nagarmai, பெ. (n.) அசையும் தன்மை; mobility. ‘உயவு நெய்யின் கண்டு பிடிப்பால் ஊர்திகளின் நகர்மைத்திறன் அதிகரித்துள்ளது.’ [நகர் = அசைவு, நகர் → நகர்மை.] |
நகர்வாற்றல் | நகர்வாற்றல் nagarvāṟṟal, பெ. (n.) பொருள்களை இடமாற்றத் தேவைப்படும் ஆற்றல்; drift energy. [நகர்வு +ஆற்றல்.] |
நகர்வியக்கம் | நகர்வியக்கம் nagarviyaggam, பெ. (n.) இடம் மாற்ற முயலும் இயக்கம்; drift mobility [நகர்வு +இயக்கம்.] |
நகர்வு | நகர்வு nagarvu, பெ. (n.) புலம் பெயர்வு, இருப்பிட மாற்றம்; migration. “தற்போது நகரங்களை நோக்கியே மக்கள் நகர்வு அதிகமாக நிகழ்கிறது”. உ.வ.). [நகர் → நகர்வு.] |
நகர்வுச்சான்றிதழ் | நகர்வுச்சான்றிதழ் nagarvuccāṉṟidaḻ, பெ. (n.) புலம் பெயர்வு உறுதிச் சீட்டு; migration -certificate. ‘நகர்வுச் சான்றிதழ் இல்லாத வெளி நாட்டினர் ஆறு மாதங்களுக்கு மேல் இங்கு தங்கமுடியாது. இக்.வ.). [நகர்வு + சான்றிதழ்.] |
நகர்வுதிசைவேகம் | நகர்வுதிசைவேகம் nagarvudisaivēgam, பெ. (n.) இடமாற்றத்திற்குத் தேவைப்படும் தூண்டல் இயக்கம்; drift velocity. [நகர்வுதிசை + வேகம்.] |
நகர்வுயிரி | நகர்வுயிரி nagarvuyiri, பெ. (n.) புழு, பாம்பு முதலான தரையில் ஊர்ந்து செல்லும் உயிரிகள்; crawling worms, reptiles, and Snakes. [நகர்வு + உயிரி.] நகர்ந்து அல்லது ஊர்ந்து செல்லும் உயிரிகள். 1, புழுவகைகள்- மண்புழு, ஒளிப்புழு, துணிப்புழு, அரக்குப்புழு. 2. பூச்சி வகைகள். 3. பாம்பு வகைகள். 4. பூரான் வகைகள். 5. பல்லி வகைகள். 6. ஓணான் வகைகள். |
நகர்வுவெளி | நகர்வுவெளி nagarvuveḷi, பெ, (n.) இடமாற்றப் பகுதி; drift space. |
நகலேகம் | நகலேகம் nagalēgam, பெ. (n.) நகத்தாற் பீறிய காயம்; a scratch with the nail. |
நகலேகை | நகலேகை nagalēgai, பெ. (n.) நகரேகை (யாழ். அக.);. பார்க்க;see nag-rẽgai. |
நகல் | நகல்1 nagal, பெ. (n.) 1. சிரிக்கை; smiling, laughing. 2. மகிழ்ச்சி; rejoicing, gladness. ‘தம்முட் குழீஇ நகலி னினிதாயின் (நாலடி.137);. 3. நட்பு; friendship. “நகலானா நன்னயமென்னுஞ்செருக்கு” (குறள், 860);. 4. ஏளனம் (பிங்);; ridicule, derision. 5. மினுமினுக்கம் (அரு.நி);; brilliance. க. து. நகலி, [நகு- நகல்.] நகல் nagal, பெ. (n.) படி (உ.வ);; duplicate, copy. த.வ. நிகரி [U. naql → த. நகல்] |
நகள் | நகள்1 nagaḷḷudal, 2.செ. கு. வி. (v.i.) நகர்ந்து செல்லுதல்; to creep crow along. [நகர் → நகள்.] நகள்2 nagaḷḷudal, 2.செ. கு. வி. (v.i), 1. நகழ் பார்க்க; see naga. 2. நசுக் குண்ணுதல்; to be crushed. |
நகழ் | நகழ்2 nagaḻtal, 4. செ.கு.வி. (v.i.) நகர்ந்து செல்லுதல்; to creep, crawl along. “நகழ்வனசில” (கம்பரா. அதிகா. 136);. [நகர் → நகழ்-.] ஒ.நோ. உமிர் → உமிழ், |
நகழ்’-தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நகழ்வாதனம் | நகழ்வாதனம் nagaḻvātaṉam, பெ. (n.) இருக்கை வகைகளுளொன்று தத்துவப். 107. உரை); a kind of posture. கால்கைகளைத் தரையில் ஊன்றி, மோவாய் தரையிற்படத் தலையைக் குனிந்தும், பிறகு நிமிர்ந்தும் இருக்கும் ஒகவிருக்கை வகை. [நகர் → நகழ் → நகழ்வு + sk! (ஆதனம் = இருக்கை);.] |
நகழ்வு | நகழ்வு nagaḻvu, பெ. (n.) 1. துன்பம்; pain. “நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி” (திருமந். 2669);. 2. நகழ்வாதனம் பார்க்க; see nagal-v-ādanam. [நெகு → நெகிழ்வு → நகழ்வு.] |
நகவாதம் | நகவாதம் nagavātam, பெ. (n.) மூலிகை மருந்து வகையுளொன்று); a kind of herbal medicine. [நகம் + Skt வாதம்.] மிகுவளி (வாயு);, ஊதை(வாதம்); போன்ற நோய்களுக்கு ஏற்ற மூலிகை. |
நகவியாக்கிரம் | நகவியாக்கிரம் nagaviyāggiram, பெ. (n.) புலிதொடக்கி (மூ.அ.); பார்க்க; see pull-todakki. |
நகவிராணம் | நகவிராணம் nagavirāṇam, பெ. (n.) நகக்கணுவிரணம் பார்க்க; see naga-k-kanuwiranam. |
நகவுறை | நகவுறை nagavuṟai, பெ. (n.) தைக்கும் பொழுது சுட்டுவிரல் நுனியில் அணியும், மாழையினால் ஆகிய மூடி; a cap wear at the time of stiching by needle. [நகம் + உறை.] செங்கோட்டு யாழில் அமைந்துள்ள நரம்புகளை மீட்டுங்கால், விரல் அறுபடாமல் இருப்பதன்பொருட்டு அணியும், விரல்மேலுறை. |
நகவுளி | நகவுளி nagavuḷi, பெ. (n.) 1. நகம்வாங்கி; barber’s instrument for paring nails. 2. தச்சுக்கருவி வகை (யாழ். அக.);; carpenter’s gouge. மறுவ, நகவெட்டி. [நகம் + உளி.] |
நகவெதும்பல் | நகவெதும்பல் nakavetumpal, பெ. (n.) இளஞ் சூடு; gentle heat, luke warmness. [நகம்+வெதும்பல்] நகவெதும்பல் nagavedumbal, பெ.(n.) இளஞ் சூடு; gentle heat, lukewarmness. [நகம்+வெதும்பல்] |
நகாஅர் | நகாஅர் nakāar, பெ. (n.) சிரிக்கும்போது தோன்றும் பல்; tooth as appearing in laughter. “மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம் (சிறுபாண் 57);. [நகு → நகாஅர்] நகைக்குங்கால், மிளிரும் நிலையிலும், ஒளிருந்தன்மையிலும் விளங்கித் தோன்றும் பல். |
நகாஅல் | நகாஅல் nakāal, பெ. (n.) சிரிப்பு; laughter. “நல்ல நகாஅலிர் மற்கொலோ” (கலித்.142. 16);. [நகு → நகா → அர் → நகாஅல்.] ஒளிரும் இயல்பால் விளங்கச் சிரிக்கும் சிரிப்பு. |
நகாகவேலை | நகாகவேலை nakākavēlai, பெ. (n.) நகை முதலியவற்றிற் செய்யப்படும் அழகிய நுணுக்க வேலை; delicate ornamental work done by goldsmiths. [நகை + காசு + வேலை.] |
நகாசு | நகாசு1 nakācu, பெ. (n.) நெற்றி (யாழ். அக.);; forehead. [நகு → நகாஅ + க – ஒளிரும் நெற்றி] கருமைநிறத்தவருக்கும். வெண்மை நிறத்தவருக்கும். வெயில்படும் பகுதியாக நெற்றி, ஒளிரும் தன்மையில் அமைந்த பாகமாகும். நெற்றிக்கு உள் இருக்கும் மூளையின் இயக்கமே, மாந்தர் தம் செயல்பாடு. ஆதலால் ‘நுதல்’ நெற்றி, எண்ணுதல் என்னும் பொருளில், பயின்று வருகின்றதெனலாம். நகாசு2 nakācu, பெ. (n.) நகை முதலியவற்றிற் செய்யப்படும் அழகிய நுணுக்க வேலை; delicate ornamental work. த. நகாசு. U. Nagasi [நகு → நகா → நகாசு.] [பொலிவுடன் மிளிர்ந்து, அழகுடன் விளங்கித் தோன்றும் நுணுக்க வேலை.] |
நகாசுமணி | நகாசுமணி nakācumaṇi, பெ. (n.) 1. நகாசு2 பார்க்க;see nagasu2. 2. பரதவமகளிர் கழுத்தணி; necklace worn by paratava wornen. |நகாசு → நகு ஆசு. மணி = அழகுடன் ஒளிரும்மணி.] கடற்படு பொருள்களில், கோர்த்தணியும் கழுத்தணி ஒளிமிக்கிருத்தலின், ஐந்து நிலங்களில், நெய்தல் நிலத்துக் கழுத்தணி, குறிக்கப்படுதல் காண்க. |
நகாயுதம் | நகாயுதம்1 nakāyudam, பெ. (n.) 1. நகத்தைப் படைக் கருவியாகக் கொள்ளுவது; that which uses its claws as weapon. 2. புலி (யாழ்.அக);; tiger. 3. பூனை(யாழ். அக.);; cat. [நகு → நகம் + skt ஆயுதம்.] புலி, பூனைகளைக் குறிப்பது சினையாகு பெயர். நகாயுதம்2 nakāyudam, பெ. (n.) 1. (சேவல்); கோழி; cock fowl. 2. நகமுள்ள விலங்கு அல்லது பறவை; any bird or beast possessing talons. ஈண்டு பறவைக்குச் சினையாகு பெயராயிற்று. முட்டைகளை அடைகாத்துக் குஞ்சு பொறித்திருக்கும் சில நாட்களில், கழுகு போன்றவை கவ்வ வருங்கால், கோழி உகிர்க்கருவியைப் போர்க்கருவியாகக் கொண்டு பாயும். [நகம் + skt. ஆயுதம்.] |
நகார் | நகார் nakār, பெ. (n.) பண்டைய நாட்டுப்புற இசைக்கருவியினுள் ஒன்று; an ancient musical instrument. நகையாண்டி __, பெ. (n.); நகைச் சுவையூட்டுபவன்; jester. [நகை+ஆண்டி நகைச்சுவையை ஆள்பவன்] [P] நகார் nakār, பெ. (n.) 1. முத்தையொத்த வெண்பல்; tooth like pearls. “மகாஅர் அன்ன மந்தி நகாஅர் அன்ன நளிநீர் முத்தம் மடவோ” (சிறுபாண். 57);. [நகு → நகார்.] முத்துப்பற்கள். ஒளிரு தற் கருத்துவேர். நகையென்னுஞ் சொல், முதற்கண் ஒளிருதலைக் குறித்து. அடுத்த நிலையில் ஒளிரும் பற்களையும், சிரிப்பினையும் குறிக்கலாயிற்று. நகார் nakār, பெ.(n.) பண்டைய நாட்டுப்புற இசைக்கருவியினுள் ஒன்று; an ancien musical instrument. |
நகிர் | நகிர் nagir, பெ. (n.) தேள் கொடுக்கி (மூ.அ);; indian turnsole. |
நகிலம் | நகிலம் nagilam, பெ. (n.) முலை; female breast. [நகில் + அம்.] |
நகிலெலும்பு | நகிலெலும்பு nagilelumbu, பெ. (n.) முலைக்காம்புருவாய்க் காதின் முன்புறம் இருக்கும் ஒர் எலும்பின் பாகம்; the bone resembling the nipple or breast behind the Ear. [நகில் + எலும்பு.] |
நகில் | நகில் nagil, பெ., (n.) முலை; woman’s breast. “நகின்முகத்தி னேவுண்டு” (கம்பரா.மிதிலை45);. |நகு → நகில் – அழகுடன் விளங்கித் தோன்றும் கொங்கை.] கொங்கை குழந்தையர்க்குப் பாலூட்டும் . உறுப்பாயினும், ஆண்மையைக் கவரும் இயற்கைப் பண்பில், ஒளிமிக்க இடமாகும். |
நகு | நகு1 nagudal, 4.செ. கு. வி. (v.i). 1. சிரித்தல்; to laugh, smile. “நகுதற் பொருட்டன்று நட்டல்” (குறள், 784);. 2. மகிழ்தல்; to reloice. “மெய்வேல் பறியா நகும்” குறள், 774). 3. மலர்தல்; to bloom, as a flower. “நக்க கண்போ னெய்தல்” (ஐங்குறு. 151);. 4. கட்டவிழ்தல்; to open or expand. “நக்கலர் துழாய நாறிணர்க் கண்ணியை” (பரிபா, 4 58);. 5. ஒளிர்தல்; to shine glitter. ‘பொன்னக்கன்ன சடை (தேவா. 644:1);. 6. புள்ளிசைத்தல்; to hoot, as an owl, to sing as a bird “நற்பகலுங் கூகை நகும்” (பு. வெ. 3.4);. க. நகு(g); தெ. நவ்வு. நகவு. [நெகு → நகு – (வே. க. 3.24);] இஃது, ஒளிருதற் கருத்து வேரினின்று முகிழ்த்த சொல்லாகும். விளங்குதல், திகழ்தல், முகம் விளங்குமாறு சிரித்தலென்னும் பொருண்மை பொதிந்தது. முகம் விளங்குதற்கேற்ப, அகம் மகிழ்தலும் இயல்பே யென்றறிக. நகு2 nagudal, 4.செ. குன்றாவி, (v.t). 1. இழிவாகக் கருதுதல்; to despise. “ஈகென்பவனை நகுவானும் திரிகடு. 74). 2. தாழ்த்துதல்; to surpass, overcome. defeat, “மானக்க நோக்கின் மடவா (சீவக. 1866);. [நெகு → நகு- → வே. க. 324)] நகுதல், ஈண்டு எள்ளல் பற்றியது. |
நகுசன் | நகுசன் nagusaṉ, பெ. (n.) 100 குதிரைவேள்வி செய்ததற்குப் பயனாக இந்திரப்பட்டம் பெற்றுச் சிவிகையேறிச் செல்லுகையில் அச்சிவிகை காவுவோருள் ஒருவரான அகத்தியரால் சாவிக் கப்பட்டுப் பாம்புருவமடைந்த (நிலவு); சந்திர குலத்தரசன்; a king of the lunar race who obtained possession of Indra’s throne as a reward for having performed 100 horse-sacrifices, offended Agastya, one of his palanguin – bearers, and was cursed by him and turned into a serpent. [Skt. {} → த. நகுசன்] |
நகுடன் | நகுடன் naguḍaṉ, பெ. (n.) நகுலன் பார்க்க; see nagular. “நகுட னாமவேல் நராதி பனாகருக் கரசாய்” (பாரத. குருகுல. 14);. [நகுலன் → நகுடன்.] |
நகுடம் | நகுடம்1 naguḍam, பெ. (n.) மூக்கு (யாழ். அக.);; nose. நகுடம்2 naguḍam, பெ. (n.) அமுக்கிரா (நாமதீப.);; Indian winter cherry. |
நகுதலிலை | நகுதலிலை nagudalilai, பெ. (n.) நெட்டைநாரத்தை; common cherry nutmeg. |
நகுதாக்கட்டை | நகுதாக்கட்டை nagutāggaṭṭai, பெ. (n.) காக்காய்ச் சரிகைக்கண்டு; reel of imitation lace thread. [நகுதா + கட்டை] ஒளியற்ற கருமைநூல் கண்டு. |
நகுதாளிலை | நகுதாளிலை nagutāḷilai, பெ. (n.) நூலிலை; common cherry nutmeg. [நகு + தாள் + இலை.] ஒளிமிக்க காம்போடுகூடிய இலை. |
நகுத்தம் | நகுத்தம் naguttam, பெ. (n.) 1. புன்கு; Indian beech tree. 2. காட்டுப் பச்சிலை வகை; a kind of rosewood, caps, albergia larborea |
நகுநயமறைத்தல் | நகுநயமறைத்தல் nagunayamaṟaittal, பெ. (n.) களவுக்கூட்டத்தின் முன் தலைவி, நாணத்தால் உள்ளடங்கிய தன்மகிழ்ச்சியைத் தலைவர்க்குப் புலனாகாதவாறு மறைக்கை (தொல்);. பொருள். 261);; a theme in which a mistress coyly hides from her lover the inward delight she feels at the prospect of a clandestine union. [நகு + நயம் + மறைத்தல்.] |
நகுனகி | நகுனகி naguṉagi, பெ. (n.) 1. மையல் கொண்ட பெண்; a lustful woman. 2. பருவமடையாப் பெண்; a girl before menstruation. [நகுவில் + நகு + இல் = நகி(ல்);.] |
நகுலன் | நகுலன் nagulaṉ, பெ. (n.) 1. ஐவருள் (பஞ்ச பாண்டவருள்); ஒருவன்; one of pāndavar prince. “சசிகுல நகுலனென்றும்” (பாரத. சம்பவ. 87); 2. பரிமா உகைப்போன்; skiiful horseman. 3. அறிஞன்; intelligent person. 4. சிவன்; sivan. 5. புதல்வன் (யாழ்.அக);; son. [நல் + குலன்.] |
நகுலமலைக்குறவஞ்சி | நகுலமலைக்குறவஞ்சி nagulamalaigguṟavañji, பெ. (n.) ஒரு நூல்; a book. இந்நூல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விசுவநாத சாத்திரியாரால் எழுதப்பட்டது. இந் நூலில் இரட்டுறமொழிவுச் செய்யுள்களைப் பாடியுள்ளார். [நகுல மலை + குறவஞ்சி.] |
நகுலம் _ | நகுலம் _ nagulam, பெ. (n.) விலங்குவகை கீரி; mungoose, herpestes mungo. “பிள்ளை நகுலம் பெரும்பிறிதாக” (சிலப். 15,54);. [நகு(த);ல் + அம்:] குதிரை போன்ற விலங்குகள் கனைக்கும்பொழுது, சிரிப்பது போலிருக்கும். |
நகுலாந்தியம் | நகுலாந்தியம் nagulāndiyam, பெ. (n.) 1. கண்குருடு; blindness. ஒரு வகை கண்நோய்; a kind of eye disease. |
நகுலார்த்தமம் _ | நகுலார்த்தமம் _ nagulārttamam, பெ. (n.) கீரிப்பிள்ளை கண்கள் போலாகி, இரவில் கண் தெரியாதிருத்தல்; the eyes become like those of mungoose, and loose vision during night. |
நகுலி | நகுலி naguli, பெ. (n.) 1. பட்டுப்பருத்தி; red silk – cotton. 2. மணமுள்ள பொருள்; a scent. |
நகுலேட்டை | நகுலேட்டை nagulēṭṭai, பெ. (n.) பூடுவகை (யாழ். அக.);; a kind of shrub |
நகுவல் | நகுவல் naguval, பெ. (n.) எளனம்; pleasantry. “நானெனதென்று நகுவறீர’ (பாடு.105, பாம்பாட்டு);. [நகு+அல்.] |
நகேசனங்கை | நகேசனங்கை naācaṉaṅgai, பெ.(n.) மலைமகள் (யாழ்.அக);; Malaimagal. [நாக + ஈசன் + நங்கை.] |
நகேசன் | நகேசன் naācaṉ, பெ. (n.) மலைகட்குத் தலைமையாய்த் திகழும் இமயமலை (யாழ். அக.);; the Himalayas as lord of the mountains. [ஒருகா. நாக → நக + ஈசன்.] |
நகேசிகம் | நகேசிகம் naācigam, பெ. (n.) புல்லூரி, parasitic plant. |
நகேசிறு | நகேசிறு naāciṟu, பெ. (n.) புல்லுருவி (மூ. அ.);; honey-suckle mistletoe. |
நகை | நகை1 nagai, பெ. (n.) 1. சிரிப்பு; smile aughter, “நகைமுகங்கோட்டி நின்றாள்” (சீவக 1568);. 2. மகிழ்ச்சி; cheerfulness, “இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி” (சிறுபாண். 220);. 3. இன்பம்; delight gratification, pleasure joy. “இன்னகை மேய” (பதிற்றுப் 68, 14);. 4. இகழ்ச்சிச் சிரிப்பு. இகழ்ச்சிப் பேச்சு, அவமதிப்பு; contemptuous laughter, sneer, dersion scorn. “பெறுபவே ………….பலரா னகை” (நாலடி, 377);. 5. இளிப்பு; grinning 6. ஏளனம்; pleasantry. “நகையினும் பொய்யா வாய்மை” (பதிற்றுப்’. 70,12);. 7. நட்பு; friendship. “பகைநகை நொதும லின்றி” (விநாயகபு. நைமி . 25);. 8. நயச்சொல் (திவா);; pleasant word. 9. விளையாட்டு; play. “நகையேயும் வேண்டற்பாற் றன்று” (குறள், 871);. 10. மலர்; flower. “எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார்” (பரிபா. 13.59);. 11. பூவின் மலர்ச்சி; blossoming of flowers. “நகைத்தாரான் தான் விரும்பு நாடு” (பு. வெ. 9, 17);. 12. ஒளி; brightness, splendour. “நகைதாழ்பு துயல் வரூஉம்” (திருமுரு. 86);. 13. பல்; teeth. “நிரைமுத் தனைய நகையுங் காணாய்” (மணிமே. 20, 49);. 14. பல்லீறு(வின்);; the gums 15. முத்து; pearl. “அங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் கொங்கணி குழலவள்’ (சீவக. 603);; 16. முத்துமாலை; garland of pears. “செயலமை கோதை நகையொருத்தி” (கலித். 92.33);; 17. அணிகலன்; jewels. ‘நகைக்கு மகிழ்ச்சி நட்புக்கு நஞ்சு’ (பழ.);; 18. ஒப்பு; resemblance, comparison. “நகை……. பிறவும். உவமச்சொல்லே” (தண்டி. 33);. க. நகெ(g); நக(g);, தெ. ம, து, நக. [நகு → நகை (வே. க. 324] தகத்தகவெனச் சொலித்து மின்னும் அணிகலன் நகையென்று பெயர் பெறும். விளங்கித்தோன்றி, ஒளிரும் பற்களின் சிரிப்பும் நகையெனப்படும். நகை2 nagaittal, 4.செ. குன்றாவி. (v.t.) சிரித்தல்; to laugh. “ஊர்நகைத்துட்க” கல்லா. 88, 1). ம. நகெக்க. [நகு → நகை-] |
நகைக்கடை | நகைக்கடை nagaiggaḍai, பெ. (n.) அணிகலன் விற்பனைக்கடை; Jewels shop. [நகை + கடை] |
நகைக்கடைத்தெரு | நகைக்கடைத்தெரு nagaiggaḍaitteru, பெ. (n.) அணிகலன்கள் விற்பனை செய்யும் கடைகள் நிரம்பிய தெரு; the street of jewellery shops. மறுவ, காசுக்கடைத் தெரு. [நகைக்கடை + தெரு.] |
நகைக்கும் பறவை | நகைக்கும் பறவை nagaiggumbaṟavai, பெ. (n.) நகைப்பறவை பார்க்க; see nagai-p-paravai. |
நகைச்சுவை | நகைச்சுவை nagaiccuvai, 1. சிரிப்பும் மகிழ்ச்சியும் மிளிரும் வண்ணம் உள்ள பேச்சு-செயல்; humour comic. அவருடைய பேச்சிலும், எழுத்திலும் நகைச்சுவை மிளிரும்(உ.வ.);. பெண் பார்க்கப்போனதைப் பற்றி, நண்பர் மிகவும் நகைச்சுவையுடன் எழுதியிருந்தார்: கலைவாணர் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் (இக்.வ);. 2. சிரிப்பு உண்டாகும்படிப் பேசுதல்; humourous talk, joke. [நகை + சுவை.] |
நகைச்சுவைக்கலை | நகைச்சுவைக்கலை nagaiccuvaiggalai, பெ .(n.) நகையாட்டுக்கலை பார்க்க; see nagai-y-yattu-k-kalai. [நகைச்சுவை + கலை.] |
நகைச்சுவைத்திறன் | நகைச்சுவைத்திறன் nagaiccuvaittiṟaṉ, பெ. (n.) பிறரை மகிழ்விக்கும் அல்லது சிரிக்கவைக்கும் ஆற்றல்; the skill of humour. [நகைச்சுவை + திறன்.] |
நகைச்செல்லம் | நகைச்செல்லம் nagaiccellam, பெ. (n.) சிறிய அணிகலப்பெட்டி, அணிகல இருப்பு (இ.வ.);; jewel-case. [நகு → நகை+ செல்வம் → செல்லம்.] வைப்பகம் இல்லாத காலத்தில், இருப்புக் கணக்காக, நகை கருதப்பட்டது. |
நகைச்சேதாரம் | நகைச்சேதாரம் nagaiccētāram, பெ. (n.) அணிகலன் செய்யும் போது பொன்னை அறுத்து அராவுங்கால் ஏற்படும் இழப்பு; wastage of gold in making jewels due to filing etc. ஆடித்திருவிழாவில் அணிகலன் வாங்குபவர்க்கு நகைச்சேதாரம், செய்கூலி இல்லை (இ.வ.);; [நகை + சிதை + அம் → சிதயம் → சேதம் + ஆரம்] சேதம்= இழப்பு அழிவு. பொன்னாலேனும், வெள்ளியாலேனும் நகை முதலியன செய்யும் போது ஏற்படும் தேய்மான இழப்பே’ நகைச்சேதாரம். இச்சொல். இன்று நகர்ப்புறத்தும், நாட்டுப்புறத்தும் பரவலாக வழக்கில் உள்ளது. நகையின் எடையைப் பொறுத்து இச் சேதாரத்தின் மதிப்பு அமையும். |
நகைச்சொல் | நகைச்சொல் nagaiccol, பெ. (n.) 1. இகழ்ச்சிமொழி; ridicule derisive words. நகைச்சொல் தருதல் பகைக்கு ஏதுவாகும் (பழ.);. 2. வேடிக்கைப்பேச்சு; pleasantry, joking. மறுவ. நக்கல்பேச்சு. [நகை + சொல்.] பிறரை எள்ளி நகையாடி ஏளனப் படுத்தும். சிறுபிள்ளைத்தனமான பேச்சு. |
நகைச்சோதி | நகைச்சோதி nagaiccōti, பெ. (n.) மின்மினிப்பூச்சி; fire fly. [நகு + ஐ = நகை, Skt சோதி.] நகைபோன்று மின்னுந்தன்மையுள்ள பூச்சி. |
நகைத்திறச்சுவை | நகைத்திறச்சுவை nagaittiṟaccuvai, பெ. (n.) கோமாளிக்கூத்து (சிலப்.312.உரை);; comic dancing. மறுவ. எள்ளற்கூத்து, நகையாட்டு;சிரிப்புக்கூத்து. கேளிக்கூத்து. [நகுதிறம் → நகைத்திறம் + சுவை.] பிறரை மகிழ்விக்குந்திறம். அறிவுறுத் திறத்தால், அனைவருக்கும் இன்பமூட்டி, அக மகிழ்விப்பவரே. நகைத்திறமிக்கவர். இந் நகைத்திறம், எந் நிலையிலும், எவர்தம்மையும், எள்ளிநகையாடாதிருத்தலே, விழுமியது என்றறிக. |
நகைநட்டு | நகைநட்டு nagainaṭṭu, பெ. (n.) நகை முதலான பொருள்கள்; jewel and other valuables. நகை நட்டையெல்லாம் விற்றுவிட்டாள் (இ.வ.);. [நகு → நகை + நள் + து → நட்டு – நகை நட்டு.] நகையும் திருகும் என்று பொருள்படும் வழுக்கு. இஃது ஒளிருதற் கருத்தினின்று தோன்றிய மரபினை மொழி வழக்கு. இன்று நாட்டுப்புறத்தே நன்கு வழக்கூன்றியுள்ளது. எ.டு. 1. நகைநட்டு போட்டு வந்ததால், அவளைப் பிடிக்க முடியவில்லை (இ.வ.);. 2.நகைநட்டு போடாமலே, நாட்டாமை செலுத்துகிறாள் (உ.வ.);. |
நகைநாணயம் | நகைநாணயம்1 nagaināṇayam, பெ. (n.) நகை முதலிய பொருள்கள்; lewels and other valuables. [நகை + நாணயம்=காசு] நகைநாணயம்2 nagaināṇayam, பெ. (n.) நகையை இரவல் வாங்கிப் பயன்படுத்திய பின்பு, மீண்டும் திருப்பித்தரும் ஒழுங்கு; prompt and punctual borrowed return of the jewels. [நகை + நாணயம் = நம்பிக்கை.] |
நகைநோக்கம் | நகைநோக்கம் nagainōggam, பெ. (n.) 1. மஞ்சள் (மலை);; turmeric. 2. பட்டுப் பருத்தி; Silk-coton tree-Bombox malabaricum. |
நகைப்பறவை | நகைப்பறவை nagaippaṟavai, பெ. (n.) மக்களை மகிழ்விக்கும் இன்முகப்பறவை; charming and cheerful bird. [நகை + பறவை.] ஆத்திரேலியாவில் மருத்துவமனை நோயாளிகளை, மகிழ்விக்கும் பறவை. நாவலந்தேயத்து (இந்தியநாட்டு); மீன்குத்திப் பறவையினைப் போன்றது. இதன் தலையும் வயிறும் கருமை கலந்த செந்நிறத்தது. பின்புறம் நீலங்கலந்த பசுமையானது. இதன் உணவு இறைச்சியாகும். மிகக் கடுமையான நோயினால் தாக்குண்ட மருத்துவமனை நோயாளிகளின் நோயினை, மறக்கச் செய்வதற்கு, இப் பறவையின் இன்னியங் கலந்த ‘ஆ’ ‘ஆ’ என்னும் நகைப்பொலி பேருதவி புரிகின்றது. ஆத்திரேலியாவில் உள்ள மருத்துவ மனைகளில், இப் பறவை வளர்க்கப்படுகின்றது. இப் பறவைகளின், ஈடில்லா இன்னிசையால், நோயின் கடுமை குறைகின்றது. நோயாளிகள், கண்ணுறங்கச் செல்லும் போதும், இன்னிசையினை எழுப்பி மகிழ்விக்கின்றது. [P] |
நகைப்பு | நகைப்பு nagaippu, பெ. (n.) 1. சிரிப்பு இவ); smiling. கிண்டல் செய்து நகைப்பூட்டுவதில் இந்த நண்பர் கைதேர்ந்தவர் (இக்.வ.);. 2. பகடி, எள்ளப்படும் பொருள்; derision. நகைப்பிற்கு இடமான செய்கை (உ.வ.);;தெ நகவு. மறுவ, எள்ளல் கேளி, [நகு → நகை → நகைப்பு.] |
நகைப்புலவாணர் | நகைப்புலவாணர் nagaippulavāṇar, பெ. (n.) நட்புக்குரியரானவர்; favourites friends. “நகைப்புலவாணர் நல்குரவகற்றி” [நகைப்புலம் + வாழ்நர் → வாணர்] ஒ.நோ. சோழநாடு → சோணாடு நகைப்புலவாணர் என்பவர். அறிவுத் திறத்தால், அனைவரையும் அகமகிழ்விக்கும், ஆற்றல் மிக்கவர். |
நகைப்பெட்டி | நகைப்பெட்டி nagaippeṭṭi, பெ. (n.) அணிகலன்களைப் பாதுகாப்பாக வைக்கும் பெட்டி; jewel – box. [நகை + பெட்டி.] [P] |
நகைப்பொலி | நகைப்பொலி nagaippoli, பெ. (n.) சிரிப்பொலி; laughter sound. நகைப்பொலி அடங்கச் சிறிது நேரமாயிற்று. (உ.வ.);. [நகைப்பு + ஒலி.] |
நகைமதிப்பீட்டாளர் | நகைமதிப்பீட்டாளர் nagaimadippīṭṭāḷar, பெ. (n.) பணவைப்பகங்களிலும் (வங்கி);, பிறவற்றிலும் அணிகலன்களை, மதிப்பீடு செய்பவர்; appraiser, [நகை + மதிப்பீடு +ஆளர்] |
நகைமுகம் | நகைமுகம் nagaimugam, பெ. (n.) 1. சிரித்த முகம்; cheerful countenance. “நகைமுகத்த நன்கு மதிப்பு” (நீதிநெறி.39.);; 2. உடன்பட்டமை தோற்றும் முகப்பொலிவு; smile of acquiescence. “நகைமுக மழிந்து நின்றேன்” (சீவக.478);. [நகை +முகம்.] |
நகையரல் | நகையரல் nagaiyaral, பெ. (n.) கிலுகிலுப்பை (மூ.அ.);; a species of rattleWort. [நகை + அரல்.] உரத்த குரலில் நகைப்பது போன்ற ஒலி எழுப்புதல் பற்றியோ, குழந்தைகளுக்குச் சிரிப்பொலி எழுப்புதல் பற்றியோ, அமைந்த பெயர். |
நகையா | நகையா nagaiyā, பெ. (n.) 1. குறுப்பாலை; grey barked nageia-Putranjiva roxburgh. 2. வெள்ளை ஒழுக்கைப் போக்கும் ஒரு மூலிகை; drug for curing gonorrhoea. [நகை → நகையா.] நோய்த்துயர் மகிழ முடியாமையை ஏற்படுத்தலால், அமைந்த பெயர். |
நகையாடு-தல் | நகையாடு-தல் nagaiyāṭudal, 5. செ. குன்றாவி. (v.t.) 1. சிரித்தல்; to smile, laugh. 2. எள்ளல், நக்கல்; to jeer, rail at to joke. “நகையாடிக் கூறிக் கைப்பற்றியவழி’ (ஐங்குறு.79உரை);. [நகு → நகை + ஆடு-] |
நகையாட்டாளர் | நகையாட்டாளர் nagaiyāṭṭāḷar, பெ. (n.) நாடகத்திலும், திரைப்படத்திலும், பிறரை நகைப்பில் ஆழ்த்தும்வண்ணம். சொல்லாடுபவர்; humorous actor. இருபதாம் நூற்றாண்டில் கலைவாணர் கருத்தாழமிக்க நகையாட்டாளர் என்று, மக்களால் போற்றப் படுகின்றார். (சென்னை);; [நகை +ஆடு+ஆளர்] |
நகையாட்டு | நகையாட்டு nagaiyāṭṭu, பெ. (n.) பிறரை மகிழ வைக்கை; the art of humour. [நகை + ஆடு (த.வி); → ஆட்டு (பி.வி);.] |
நகையாட்டுக்கலை | நகையாட்டுக்கலை nagaiyāṭṭuggalai, பெ. (n.) பிறரை மகிழ்விக்கும் அல்லது அவர்தம் துன்பத்தை மறக்கச் செய்து, இன்பத்துள் ஆழ்த்தும் கலை; the skill and the art of humour. [நகையாட்டு + கலை.] |
நகையாண்டி | நகையாண்டி nagaiyāṇṭi, பெ.(n.) நகைச் சுவையூட்டுபவன்; jester. [நகை+ஆண்டி நகைச்சுவையை ஆள்பவன்] [P] |
நகையால் | நகையால் nagaiyāl, பெ. (n.) 1. பகன்றைச் செடி; rattle nail dye-Crotolaria verrucosa. 2. நீர்முள்ளி; water thistle. 3. கல்லால்; stone fig tree. 4. கிலுகிலுப்பை; rattle wortCorotolaria laburnifolia. |
நகைவகையராக்குவார் | நகைவகையராக்குவார் nagaivagaiyarāgguvār, பெ. (n.) அறிவுரை கூறாது சிரித்துப்பேசிப், பொருள் கவர்தலைக் குறிக்கோளாகக் கொண்ட கூடா நட்பினர்; false good friends. மறுவ. கரிமுகர் நகைவேழம்பர். [நகைவகையர் + ஆக்குவார்.] நகைவகையர்=எஞ்ஞான்றும், சிரிக்கப்பேசி பொருள் பறிப்பவர். நல்லுரை நவின்று அறிவூட்டாது, வீண் சிரிப்பையும், பகட்டாரவாரத்தையும், தொழிலாகக் கொண்டு, பொருள் பெறும் குறும்பர். உண்மை நண்பர் என்பவர், குணத்தை மட்டும் கூறுபவராக இராது, நண்பர்தம் குற்றத்தையும், இடித்துரைத்துத் திருத்துபவராகச் செயல்பட வேண்டும். “நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்” |
நகைவர் | நகைவர் nagaivar, பெ. (n.) நட்பினர்i; friends. “நகைவர்க் கரணமாகிப் பகைவர்க்குச் சூர்நிகழ்ந் தற்றுநின் றானை” (பதிற்று.31.34);. [நகைவர் + பகைவர்] எதுகையொத்த சொல்லாட்சி. |
நகைவேழம்பர் | நகைவேழம்பர் nagaivēḻmbar, பெ. (n.) கோமாளி; professional buffoons, clowns. “நகைவேழம்பரொடு வகைதெரி யிருக்கையும் (சிலப்.5:53);. மறுவ. நகையாட்டாளர். [நகை + வேழம் + அம்பர்) மூங்கில் கம்பில், வயிற்றை வைத்துச் சுழன்று காட்டும், கோமாளித்தனத்தவர். |
நக்கசாரணர் | நக்கசாரணர் nakkacāraṇar, பெ. (n.) நாகரினத்தவர்; a tribe of nagas. “நக்க , சாரணர் நாகர் வாழ்மலை” (மணிமே. 16:15);. [நாகர் → நக்கர்,அரணம் → சரணம் → சாரணம் → சாரணர்.] |
நக்கச்சூது | நக்கச்சூது nakkaccūtu, பெ. (n.) நரியின்குணமொத்த நயவஞ்சகம்; mean trick sly device, as of a fox க. நக்கே -நரி. தெ. நக்கு. [நக்கை → நக்கு → நக்க + சூது. நக்கன் =நரி.] |
நக்கணி | நக்கணி1 nakkaṇi, பெ. (n.) கருங்காரை வகை; (L.);; black honey thorn. நக்கணி2 nakkaṇi, பெ. (n.) நக்கேணி2 பார்க்க;see nakkéni2 நக்கத்தனம் பெ. (n.); இவறன்மை (இ.வ.);; miserliness stinginess வீட்டில் உள்ள நக்கத்தனமே வெளியிலும் வளரும் (உ.வ.);. ஈரக்கையால் காக்காய் ஒட்டாத நக்கத்தனம் நாட்டில் பெருகி வருகிறது (உவ);. நக்கத்தனத்திற்கு நாட்டில் பஞ்சமில்லை (இ.வ.);. [நக்கு→நக்க+தனம்.] |
நக்கண்ணையார் | நக்கண்ணையார் nakkaṇṇaiyār, பெ. (n.) பெருங்கோழி நாய்கன் மகளாகிய புலமைப் பெருமாட்டி; poetess of sangam age and daughter of Perunkölinăygan, [நல்+(கண்);கண்ணை+ஆர்] நக்கண்ணையார் nakkaṇṇaiyār, பெ. (n.) புகழ்பெற்ற சங்கப்புலவர்; an eminent Sangam poetess [நல் + கண்ணையார்] ஒரு கா. நற் + கண்ணையார் → நக்கண்ணையார், நக்கண்ணையார் – அழகிய கண்கள் வாய்க்கப் பெற்ற கழகக்காலப் பெண்பாற் புலவர்; இவரைப் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை, என்பர். இவர் பாடல்கள் அகநானூற்றிலும் (அகம்:252);, புறநானூற்றிலும், (புறம், 83, 84, 85); நற்றிணையிலும். (நற். 19, 87); காணப்படுகின்றன. புறநூனுற்றில் இவர் பாடிய பாடல்களில், சோழமன்னன் தத்தன் மகனான, போர்வைக் கோப்பெருநற்கிள்ளியைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கோப்பெருநற்கிள்ளிபால், காதற்காமம் கொண்டு தொடி நெகிழ்ந்து, பசப்பெய்திய பான்மையினைப் புறநானூறு 83-வது பாடலில் பாடுகிறார். இவர்தம் பாடல்கள், பெருநற்கிள்ளி தன் தந்தையொடு மாறுபட்டு, நாடிழந்து. புல்லரிசிக் கூழுண்டு வருந்திய நிலையினையும், ஆமூர்மல்லனைப் போரில் வென்ற திறத்தினையும் வியந்து கூறும், காமுற்ற காரிகையின் கூற்றுப்போல். அமைந்துள்ளன. இவர் பாடிய புறநானூற்றுப் பாடல்களில் (புறம்.83.84,85);, சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளிபால், இவர் கொண்ட கைக்கிளைக் காமக்காதல், திறம்படச் சித்தரிக்கப்படுகின்றன எனில், மிகையன்று. ”அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் பாயஞ் சுவலே அடுதோண் முயங்க லவைநா ணுவலே என்போற் பெருவிதுப் புறுக என்றும் ஒருபாற் படாஅ தாகி இருபாற் பட்டவிம் மையலூரே.” (புறம்-83);. காதலொழுக்கம் மேற்கொண்ட மகளிர் தம் காதலரைப் பிரிந்த ஞான்றும் தலைக்கூடப் பெறாத போழ்தும், உடம்பு பசந்து, நனி சுருங்கித் தொடியும் வளையும் கழல. வருந்துவாராதலின், இங்கே பெருநற்கிள்ளியைத் தலைக்கூடப் பெறாத நக்கண்ணையார், “மையணற் காளைக்குத் தொடிகழித்திடுதல் அஞ்சுவல்” என்றும், தன்னொழுக்கத்திற்குத் தாய் இடையூறாதலின், “யா யஞ்சுவல்” என்றும் கூறினார். சான்றோர் கூடிய அவையினர் ஒருத்தியை ஒருவற்குத் திருமணத்தால் கூட்டி வைப்பாராதலின், அவர் தாம் விரும்பியவாறு தாமே சென்று கூடற்கு, அவ்வவையினர் இகழ்வர் என்பது பற்றி “அவை நானுவல் என்றார். தமது மையலை ஊர்மேலேற்றி “மையலூர்” என்றார். (புறம்.83. ஒளவை. சு. துரைசாமியார் உரை); நக்கண்ணையார் nakkaṇṇaiyār, பெ.(n.) பெருங்கோழி நாய்கன் மகளாகிய புலமைப் பெருமாட்டி; poetess of sangam age and daughter of Perunkölinaygan. [நல்+(கண்);கண்ணை+ஆர்] |
நக்கனத்துவம் | நக்கனத்துவம் nakkaṉattuvam, பெ. (n.) நக்கனம் (வின்.); பார்க்க;see nakkaņam. |
நக்கனம் | நக்கனம் nakkaṉam, பெ. (n.) ஆடையற்றநிலை; nakedness, nudity. “நக்கனத்தோடு நடஞ் செய்வான்” (உபதேசிகா. சிவத்துரோ. 420); த. நக்கனம் → Skt nagna [நக்கன் + அம் + நக்கனம்.] |
நக்கன் | நக்கன்1 nakkaṉ, பெ. (n.) 1. ஆடையற்றவன்; naked person. “அம்மணமாயுள்ளவன் திகம்பரனாகையாலே நக்கனென்று பேராய்’ (திவ். திருவாய் 10:8. பன்னீ);; 2. அருகன் சூடா); Arhat. “வெல்வினை யறியா நக்கன்” (திருவிளை. பாண்டி. 10);; 3. சிவன்; sivan. “நக்கன்காண்” (தேவா. 619:2);. த.நக்கன் → skt nagna, [நகு → நக்கல் → நக்கன்.] முதற்கண் ஆடையற்ற மாந்தனைக் குறித்த இச் சொல், அடுத்த நிலையில், ஆடையின்மை யால் வெளிப்படும் கொள்கைச் சிறப்பினைக் குறித்ததென்க. ஆடையைத் துறப்பதுபோல், உலகப் பற்று அனைத்தையும் துறந்து, கடவுள் இல்லை, வேள்வி தவறு, கொலையும் புலையும் பிழை என்று உணர்த்திய அருக தேவனைக் குறித்து வழங்கிய பொருண்மை வளர்ச்சியினையும், “நக்கன்1” என்னும் சொல் உள்ளடக்கியது எனலாம். நக்கன்3 nakkaṉ, பெ. (n.) நரி; fox. க. நக்கெ, தெ. நக்க. [நக்க → நக்கன், நக்க + அன்.] அன் – ஆ. பா. ஈறு. |
நக்கன்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நக்கபாரம் | நக்கபாரம் nakkapāram, பெ. (n.) நக்கவாரம் பார்க்க யாழ்.அக.) see nakka-varam. [நக்கவாரம் → நக்கபாரம்.] |
நக்கபாரி | நக்கபாரி nakkapāri, பெ. (n.) நக்கவாரி பார்க்க (யாழ். அக.);. see nakka-vari. [நக்கவாரி → நக்கபாரி] |
நக்கபூசவெண்ணெய் | நக்கபூசவெண்ணெய் nakkapūcaveṇīey, பெ. (n.) உள்ளுக்குச் சாப்பிடவும், வெளிக்கு மேல் மருந்தாகத் தடவவும். பயன்படும்படிக் காய்ச்சி வடித்த எண்ணெய்; a medicated oil prepared so as to be useful for taking internally and also as an external application. [நக்கல் + பூசுதல் + எண்ணெய்.] ஒரே சமயத்தில் இரு வழிகளில் பயன்தரும் பொருட்டுக் காய்ச்சிவடித்த எண்ணெய். சித்தமருத்துவத்தில்தான் எண்ணெயின் பயன்பாடு இருவழிகளில் அமையும். சித்தமருத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த ஆயுள்வேதத்திலும், எண்ணெய்ப் பூச்சு மருத்துவம், காணப்படுகிறது. |
நக்கப்பறையன் | நக்கப்பறையன் nakkappaṟaiyaṉ, பெ. (n.) பறையன் தலைவன்; headman of the paralyas (G. Тр. D. І, 131);. [நக்க + பறையன்.] |
நக்கப்பிட்டிஇலை | நக்கப்பிட்டிஇலை nakkappiṭṭiilai, பெ. (n.) மருந்திலை வகை; a kind of medicinal herb. |
நக்கம் | நக்கம் nakkam, பெ. (n.) 1. ஆடையின்மை: nakedness “நக்கம்வந்து பலியிடென்றார்க்கு” (தேவா. 91:2);. 2. வறுமை; poverty த.நக்கம் → skt. nagna, pkt nakka, [நக்கு + அம் → நக்கம்.] மறைந்த வளமை. ஆடையற்ற வெறுமை நிலை. நக்கர் என்னும் சொல், தமிழகத்தின் வடக்கே. ஆடை அற்றவர் எனும் பொருண்மையில், இன்றும் வழங்குவதறிக. ஒன்றுமற்ற நிலையை, நக்கநிலை என்பர். வெறுமை நிலையை விளக்கும், வறுமை குறித்த சொல். ஆடையற்ற உடம்பு வெறுமையாய்த் தோன்றுதல் போல், பொருளற்ற வாழ்வும் வறுமையாயிருத்தல் இயல்பே. இலக்கிய வழக்கிலும், வாழ்வியல் பொருண்மையிலும், நக்கம் என்னும் இச் சொல், இன்மை குறித்த வழக்காக, வழங்கி வந்துள்ளது. |
நக்கம்பாடி | நக்கம்பாடி nakkampāṭi, பெ. (n.) மயிலாடு துறையிலிருந்து 10 அயிரமாத்திரி (கி.மீ.); தொலைவில் உள்ள ஓர் ஊர்; name of a village 10 k.m. from Mayiladudurai. [நக்கன்+பாடி] நக்கம்பாடி nakkambāṭi, பெ.(n.) மயிலாடு துறையிலிருந்து 10 அயிரமாத்திரி (கி.மீ. தொலைவில் உள்ள ஓர் ஊர்; name of : village 10 k.m. from Mayiladudurai. [நக்கன்+பாடி] |
நக்கரம் | நக்கரம்1 nakkaram, பெ. (n.) முதலை; crocodile “நக்கரக் கடற்புறத்து” (கம்பரா. நட்புக் கோட். 68);. த. நக்கரம் → skt nakra. [நக்கு + அரம்.] நக்க : மறைந்த பொருள், மறைந்திருக்கும் பொருள், மறைந்திருந்து, அரவம் போன்ற தனது நாவினால், உணவினைப் பிடிப்பதாலும், பிடித்த உணவினைக் கற்பொந்துகளில் மறைத்து வைத்து உண்பதாலும், இப் பெயர் வழங்கிற்று. நக்கரம்2 nakkaram, பெ. (n.) தேள்; scorpion [நாக்கு → நக்கு + அரம்.] அரம் போன்று கூர்மையான கொடுக்கினையுடைய தேள்; [P] |
நக்கரா | நக்கரா nakkarā, பெ. (n.) நகரா (இ.வ.); பார்க்க;see nagarā. [நற்கரா → நக்கரா (இ. வ);] நக்கரி1-த்தல் 4.செ. கு. வி. V.i), 1. நகர்ந்து செல்லுதல்; to move along in a sitting posture, as a same or sick person 2. தவழ்தல்; to creepwith difficulty, as a weak child, a wounded reptile 3. படுகிடையாதல்; to be bedridden. 4. படுக்கையிலற் புரண்டு கிடத்தல்; to roll in bed [நகர் → நக்கர் → நக்கரி-] |
நக்கரி | நக்கரி2 nakkari, பெ. (n.) நகரிகவுளி பார்க்க; See nagari kavuli. [நகர் → நக்கரி] |
நக்கரை-தல் | நக்கரை-தல் nakkaraidal, 2 செ.கு.வி. (v. i), மிகக்கரைதல்; to stout loudly, [ந + கரை-] ந – அளவிற்கு அதிகமாகக் கத்துதல் எனும் பொருண்மையில் பயின்றுவரும் மிகுதிப் பொருள் முன்னொட்டு. |
நக்கர் | நக்கர் nakkar, பெ. (n.) நாகரிகத்தில், பிந்தியவர்களாக இயல்பாகவே, ஆடையின்றி வாழும் பழங்குடியினர்; uncivilized and unclothed snaked) tribals [நக்கு + அர் → நக்கர்.] |
நக்கலம் | நக்கலம் nakkalam, பெ. (n.) ஊர்வன; crawling insects. இச் சொல்லடியில் பிறந்த சொற்கள் நாகம், நகுலம் (ஊர்ந்து செல்வது நண்டு, நந்துமுதலானவை, ஊர்தல் கருத்தினடிப்படையில் தோன்றின எனலாம். |
நக்கலாதகம் | நக்கலாதகம் naggalātagam, பெ. (n.) தகரை; ring worm plant – Cassia tora. |
நக்கலெண்ணெய் | நக்கலெண்ணெய் nakkaleṇīey, பெ. (n.) நாவால் நக்கியுண்ணு மெண்ணெய்; a medicated oil just taken internally by licking. [நக்கல் + எண்ணெய்.] நக்கல் = நாவால் நக்கி உண்ணுதல். எள் + நெய் → எண்ணெய். |
நக்கல் | நக்கல்1 nakkal, பெ. (n.) 1. உணவு உட்கொள்ளும் ஐந்து முறைகளுள் ஒன்று: ! ஐந்து முறைகளாவன: கடித்தல், மெல்லல், விழுங்கல், பருகல், நக்கல்; food taken by licking, 2. நக்கியுண்ணும் இளகியம் (வின்);: electuary taken by licking with the tongue. 3. நாவால் பருகல்; electuary which is taken by the tongue. 4. எச்சில் (வின்);; leaving, scrapings. 5.உண்ணுகை (அரு. நி.);; eating. 6. தீண்டுகை (அக. நி.);; touching. நீர்நக்கல் (கல்);. 7. இவறன்; miser. “இந்நக்கலின் துர்க்குணத் தால்” (ஆதியூரவதானி-27);. [நா → நாக்கு → நக்கு → நக்கல்.] நக்கல் = நக்கி உண்ணல்; . 1. சோறு (அரு. நி);; boiled rice. 2. நக்கியுண்ணு உணவு; food taken by licking. அரிசி சோறாக்கப்பட்டதும் ஒளி மிகுந்திருத்தல் பற்றி வந்த பெயரென்க. சோற்றை மோர் ஊற்றிப் பிசைந்து நக்கியுண்ணுங்கால் வந்த பெயராகலாம். நக்கல்3 nakkal, பெ. (n.) 1. சிரிப்பு (சூடா);; laughing. நக்கலாய்ப் பேசுவதில் அவன் கெட்டிக்காரன் (உ.வ.);.; 2. ஏளனம், பகடி (பரிகாசம்);: mockery ஏன் சும்மா அவனையே எல்லோரும் சேர்ந்து நக்கல் செய்கிறீர்கள். சிரிப்பு, நையாண்டித்தனம் ‘அவன் நக்கலாய்ப் பேசுகிறான்’. (உ.வ.); 3. ஒளி: brightness, Splendour மறுவ. குத்தல்பேச்சு [நகு → நகல் → நக்கல் = இகழ்ச்சி.] நக்கல்4 nakkal, பெ. (n.) வடுச்சொல், குத்தல் பேச்சு; sarcasm ‘குறைகளைச் சொன்னால் அவற்றைத் தீர்த்து விடவா போகிறீர்கள்’ என்று நக்கலாகக் கேட்டார் (உ.வ);; [நகு →நகல் → நக்கல்] நக்கல்5 nakkal, பெ. (n.) நகல் பார்க்க; see nagal [நகு → நக்கு → நக்கல்] நக்கல் nakkal, பெ. (n.) பகடி, ஏகடியம்; redicule. [Arb. {} → த. நக்கல்.] |
நக்கல்செய்-தல் | நக்கல்செய்-தல் nakkalceytal, 1 செ.குன்றாவி. (V. t), நங்கு-தல் பார்க்க; see nangu. [நக்கு → நக்கல் + செய்-] நக்கல் செய்தல் இன்று. பொதுவாக மக்களிடையே வழக்கூன்றிவிட்டது. சிற்றூர்களிலும், பேரூர்களிலும், ஒருவரை ஒருவர் நக்கல் செய்து பேசுதல் இன்று இயல்பாய்க் காணப்படுகிறது. |
நக்கவரி | நக்கவரி nakkavari, பெ. (n.) வறட்சுண்டி; floating sensitive plant. மறுவ. நகரி, தொட்டால்சிணுங்கி. [நக்க + வரி] [ஒருகா. நமக்காரி → நக்கவரி.] |
நக்கவாரக்கச்சவடம் | நக்கவாரக்கச்சவடம் nakkavārakkaccavaḍam, பெ. (n.) கைமேற் பணம் பெற்று நம்பிக்கையற்ற நக்கவாரத்தீவினர் செய்யும் வணிகம், நம்பிக்கையற்ற வணிகம்; a trade with ready cash alone is his vogue, traffic in which trust and good faith do not find a place. [நக்கவாரம் + கச்சவடம்.] நக்கவார மக்களிடையே நடந்த வணிகத்தில், கைமேற்பணம் பெறுவது நம்பிக்கையற்று இருந்தமையால், இப் பெயர் வழங்கியிருக்கக்கூடும். |
நக்கவாரத்தாழை | நக்கவாரத்தாழை nakkavārattāḻai, பெ. (n.) நக்கவாரத்தீவில் விளையும் தாழை; Nicobar bread fruit plant, screw pine growing in Nicobar island. [நக்கவாரம் + தாழை,] [நக்கவாரம் = வங்காளக் குடாக்கடலில் உள்ள தீவு] |
நக்கவாரத்தென்னை | நக்கவாரத்தென்னை nakkavāratteṉṉai, பெ. (n.) நக்கவாரப்பிள்ளை பார்க்க;see nakkavārap-pillai. [நக்கவாரம் + தென்னை.] |
நக்கவாரப்படு-தல் | நக்கவாரப்படு-தல் nakkavārappaḍudal, 20 செ. கு. வி. (v.i), மிக்கவறுமையடைதல்; to be in pinching poverty, in straitened circumstances [நக்கவாரம் = வறுமை, ஏதுமற்ற நிலை, நக்கவாரம் + படு-.] |
நக்கவாரப்பேச்சு | நக்கவாரப்பேச்சு nakkavārappēccu, பெ. (n.) நம்பிக்கையற்ற பேச்சு (வின்.);; talk betraying want of faith. [நக்கவாரம் +. பேச்சு.] நம்பியவரைக் காட்டிக்கொடுக்கும் பேச்சு; இரண்டகத் தன்மையுள்ள பேச்சு; உண்மைக்கு ஊறுவிளைவிக்கும் தவறான பேச்சு; |
நக்கவாரமாய்ப்போ-தல் | நக்கவாரமாய்ப்போ-தல் nakkavāramāyppōtal, 8. செ. கு. வி. (v.i), நக்கவாரப்படு – வின்.) பார்க்க;see nakkavāra-p-padu. [நக்கவாரம் + ஆய் + போ-] |
நக்கவாரம் | நக்கவாரம்1 nakkavāram, பெ. (n.) வங்கக் கடலில் அந்தமான் தீவிற்குத் தெற்கே உள்ள தீவு “தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும்” (முதல் இராசேந்திரன் மெய்க்கீர்த்தி);; an Island in bay of bengal which is situated southward of Andamān islands. [நக்க + வாரம்.] நக்கவாரம்2 nakkavāram, பெ. (n.) வறுமை; indigence. [நக்க + வாரம்.] ஆடையற்ற மக்கள் வாழும் இடம். வறுமையின் உச்சகட்டம் ஆடையின்மையாதாலின், இது வறுமையைக் குறிப்பதாயிருக்கலாம். |
நக்கவாரம்பிடி-த்தல் | நக்கவாரம்பிடி-த்தல் nakkavārambiḍittal, 4. செ. கு. வி. (v.i), வறுமையாதல் (வின்);; to become poor. [நக்கவாரம் + பிடி-] |
நக்கவாரம்பிள்ளை | நக்கவாரம்பிள்ளை nakkavārambiḷḷai, பெ. (n.) நக்கவாரத் தீவிலுள்ள தென்னை; a coconut tree found in Nicóbar island. [நக்கவாரம் + பிள்ளை.] மிகுதியான இளநீருடன், மஞ்சள் வண்ண தேங்காய்களை அதிகமாகத் தரும் தென்னம்பிள்ளை. |
நக்கவாரி | நக்கவாரி1 nakkavāri, பெ. (n.) 1. நக்கவாரத் தீவினர் (வின்);; native of the Nicobars. 2. கைமேற்பணம் பெற்றுச் செய்யும் வணிகர் (வின்);; one who trades for ready money. 3. நம்பிக்கையற்ற வணிகர் (யாழ். அக);; a merchant who has no confidence on his customers. [நக்கவாரம் → நக்கவாரி.] நக்கவாரி2 nakkavāri, ,பெ. (n), 1. நக்கவாரத்திலுள்ளதும், மூன்றாண்டுகளில் காய்ப்பதுமான, குறுகிய காலத்தென்னை வகை (சங்.அக.);; dwarf coconut of the Nicobars that bears fruit in its third year. 2. குள்ளமானது; that which is dwarfed or Sounted [நக்கவாரம் → நக்கவாரி.] |
நக்கவாரிமூலி | நக்கவாரிமூலி nakkavārimūli, பெ. (n.) விடத்தாரி; sore eye plant-Mimosa cineria alias – Acacia Cineria. [நக்கவாரி + மூலி] மூலிகை = இறுதி எழுத்து கெட்டது. |
நக்காரி _ | நக்காரி _ nakkāri, பெ. (n.) . வறட்சுண்டி; a kind of sensitive plant. |
நக்கி | நக்கி1 nakki, பெ. (n.) 1. ஏழை; poor 2. இவறன்; miser. ம. நக்கி. . [நக்கு + இ. ‘இ’ = சொல்லாக்க விகுதி] நக்கி2 nakki, பெ. (n.) ஆடை திரை போன்றவற்றின் ஒரங்களில் அழகுமிளிர அமைக்கப்படும் பின்னல் (GTp.D.I.161);; a kind of braid ornamentally Stitched on to the borders of garments and curtains. த. நக்கி → U nakki [நகு → நக்கு → நக்கி.] ஆடைகள் விளங்கித் தோன்றுவதற்கு ஏதுவாக, அழகு மிளிர அமைக்கப்படும் கரை அல்லது ஆடைமுந்தி. திரைச் சீலையின் ஒரத்தில் மின்னும் தன்மையில் அமைந்த, பின்னல் வேலைப்பாடு. நக்கி3 nakki, பெ. (n.) ,உணவினை நக்கியுண்ணும் தன்மையன்; destitute person, as one who licks scrapings ம. நக்கி. [நகு → நக்கு → நக்கி.] |
நக்கிடல் _ | நக்கிடல் _ nakkiḍal, பெ. (n.) நக்குதல்; licking taking in by the tongue. [நக்கு + இடு + அவ். இடு= துணைவினை. அவ்விற்றுத் தொழிற்பெயர்.] |
நக்கிதம் | நக்கிதம் nakkidam, பெ. (n.) 1. இரண்டு சங். அக); two. 2. இண்டு, புலித் தொடக்கி (சா.அக.);; tiger stopper. [நக்கு+ இதம்.] |
நக்கினகம் | நக்கினகம் naggiṉagam, பெ. (n.) பருத்தி; Cotton. |
நக்கினம் | நக்கினம் nakkiṉam, பெ. (n.) 1. ஆடையின்மை; nudity. 2. இறந்தபின் உடல் எரிப்பி (தகனத்தி);ற்குப் பிறகு செய்யப்படும். முதல் சடங்கு; the first ceremony performed in honour of a deceased person. 3. பெண் குறி; pudendum muliebre. த. நக்கினம் → skt nagna |
நக்கினிகை | நக்கினிகை naggiṉigai, பெ. (n.) 1. ஆடையற்றவள் (யாழ். அக.);; a naked woman. 2. பெதும்பை; adolescent girl, a girl who is ten years old. த. நக்கினகை → skt nagnigå நக்கு = ஆடையற்ற நிலை. [நக்கணிகை → நக்கினிகை. நக்கு + இனி கை.] |
நக்கினிக்கரணம் | நக்கினிக்கரணம் nakkiṉikkaraṇam, பெ. (n.) 1. ஆடை பெயர்த்தல்; Stripping naked. 2. இன்ப விளையாட்டு; a love play in which the woman is stripped naked. |
நக்கிப்பூ | நக்கிப்பூ nakkippū, பெ. (n.) தேட்கொடுக்கி (சா.அக.);; Scorpion sting plant. Indian turnsole. [நக்கு + இ+ பூ] |
நக்கிரப்பலகை | நக்கிரப்பலகை naggirappalagai, பெ. (n.) முதலை வடிவுள்ள காலால், தாங்கப்பட்ட பலகை; a plank supported by the image of a crocodile. “நக்கிரப் பலகையும் நறுஞ்சாந் தம்மியும்” (பெருங். உஞ்சைக் 38.171);. [நக்கிரம் பலகை.] கால்கள் நான்கும் முதலைக்கால் போல் அமைந்த பலகையையோ, மரப்பலகை மேல் முதலை பொறிக்கப்பட்டதாலோ வந்த பெயராக இருக்கலாம். |
நக்கிரம் | நக்கிரம்1 nakkiram, பெ. (n.) முதலை(சிவதரு. சுவர்க்கநரக.117);; alligator. [நா → நக்கு → நக்கிரம்.] நாக்கினால் வளைத்து உணவினை வாயகப்படுத்தும் தன்மையினால், இப் பெயர் பெற்றதாக இருக்கலாம். [P] நக்கிரம்2 nakkiram, பெ. (n.) . மேல்வாயிற்படி (யாழ். அக.);; top beam of a door-frame |
நக்கிரா | நக்கிரா nakkirā, பெ. (n.) நக்கிப்பூ; Indian turnsole. |
நக்கிராக்கியம் | நக்கிராக்கியம் nakkirākkiyam, பெ (n.) நிரைய வகை (சிவ+தரு. சுவர்க்கநரக. 117);; a he||. முறை திறம்புபவர்களை நிரையத்துள், முதலைவாழ் அகழியில் தள்ளித் துன்புறுத்துவதாக மக்களால் கருதப்படும் பகுதி. |
நக்கிரை | நக்கிரை nakkirai, பெ. (n.) தேட்கொடுக்கி; Indian turnsole [நக்கிரா → நக்கிரை.] |
நக்கீரதேவநாயனார் | நக்கீரதேவநாயனார் nakāratēvanāyaṉār, பெ. (n.) பதினோராந்திருமுறையிலுள்ள நூல்கள் சிலவற்றை இயற்றியவர்; a canonized Šaivam saint the author of certain works in patinórán-tirumurai. [நக்கீரதேவர்+நாயனார்.] நக்கீரதேவ நாயனார். பதினோராந்திரு முறையில் ஒன்பது நூல்களை இயற்றியுள்ளார்; 1. திருவீங்கோய்மலை எழுபது. 70 -செய்யுட்களடங்கிய இந் நூலுள், 48 முதல் 61 வரையுள்ள பாக்கள் மறைந்து விட்டன; 2. கைலைபாதி காளத்திபாதி அந்தாதி; 3. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை; 4. திருஎழுகூற்றிருக்கை; 5. பெருந்தேவபாணி; 6. கோபப்பிரசாதம்; 7. காரெட்டு; 8. போற்றித்திருக்கலிவெண்பா; 9. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்; |
நக்கீரத்தனம் | நக்கீரத்தனம் nakārattaṉam, பெ. (n.) யாருக்கும் அஞ்சாமல், தவற்றைத் தவறு என்று சுட்டிக் காட்டும் குணம்; the quality of not fearing to criticize the authority. [நக்கீரர் + தனம்.] தன்மை + அம். ‘அம்’ சொல்லாக்க ஈறு. பாண்டிய மன்னன், தன், மனைவியோடு தனித்திருந்தபோது வந்த மணம், கூந்தலின் இயற்கைமணமா? வேறா? என்று எண்ணி, ஐயமுற்றதனை, அவைக்களத்தில் மொழிந்து, தீர்வு செய்யும் பாப்புனைவாருக்குப் பரிசில் 1000 பொற்காககள் என்று அறிவித்தான். இக் கூற்றினைச் செவிமடுத்த தருமி, இறையனார் எழுதிய பாவினைக் கொணர்ந்து பாடுங்கால், மனமகிழ்ந்த மன்னன் பரிசு வழங்க முற்பட்ட ஞான்று, நக்கீரன் தடுத்து கூந்தல் மயிர்க் கற்றைக்கு இயற்கைமணம் எப்போதுமில்லை என்று மொழிந்து, இறையனார் முன்பும் எதிர்ச்சொல்லாடி, நிலைநிறுத்திய பண்பே, நக்கீரத்தனம் என்றறிக. |
நக்கீரர் | நக்கீரர்1 nakārar, பெ. (n.) திருமுருகாற்றுப் படை முதலியவை இயற்றியவரும். கடைச் சங்கத்தில் சிறந்து விளங்கியவருமான புலவர்; a celebrated poet of the last Sangam, author of Tirumurugarru-p-padai and other poems. “கணக்காயனார் மகனார் நக்கீரருமென” (இறை. 1. உரை);. காலம் கி.மு.200-கி.பி.200 என்பர்; மறுவ, நக்கீரனார். [நல் + கீரர் → நற்கீரர் → நக்கீரர்] கீரர் = இயற்பெயர். நக்கீரரைச் சிறப்பித்துக் கூறுமுகத்தான், ‘நல்’ என்னும் சிறப்புப்பொருளுணர்த்தும் ‘ந’ என்னும் எழுத்தை முன்வைத்துக் கூறினர். கழகக்காலப் புலவர் நிரலில் தலைமை பெற்ற இவர், மதுரைக் கணக்காயனார்க்கு மகனாராவார். இவர்தம் பாடல்கள் வாயிலாகத் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர் தம் அரசியல் நிகழ்வு, சிற்றரசர்கள் பற்றிய செய்திகளையும் தெரிந்துகொள்கிறோம். பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது, ஆலங்கானப் போரைப் பற்றிய குறிப்பினை அறியலாம். பொலம் பூண்கிள்ளி யென்பவன், கோயரென்பாரை வென்று, நிலங்கொண்ட திறத்தினையும், சேரமான்கோதை மார்பனுக்குப் பகையாய் இருந்த கிள்ளிவளவனைப் பழையன் மாறன் என்பான் வென்று, சேரனுக்கு உவகையெய்து வித்த திறமும், பிறவும் நக்கீரரால் நவிலப்படுவனவாகும். மதுரைமாநகரின் மாண்பினைப் பலபடப் பாராட்டும் பாடல் வரிகள் வருமாறு : 1. “அரண் பலகடந்த முரண்கொள்தானை, வாடாவேம்பின் வழுதிகூடல்” 2. “மாடமலி மறுகிற்கூடல்’. 3. “பொன்மலி நெடுநகர்க் கூடல்”. மதுரையை மட்டுமன்றி, அன்றைய தமிழகத்து அனைத்து ஊர்களும் இவரால் சிறப்பிக்கப்படுகின்றன. மருங்கூர்ப்பட்டினம், காவிரிபூம்பட்டினம் முசிறி, கருவூர், உறையூர் முதலான வரலாற்றுப் புகழ் மிக்க இடங்களும், இவரால் சிறப்பிக்கப்படுகின்றன. வேள் பாரியைத் தமிழ் வேந்தர் மூவரும், நெடுங்காலம் முற்றுகையிட்டிருந்த காலத்துக் கபிலர், கிளிகளைப் பயிற்றி, வெளியே விளைபுலங்களிலிருந்து, நெற்கதிர் கொணர்வித்து, உணவுக்குறைவு உண்டாகா வண்ணம் உறுதுணை புரிந்து, பேணிக்காத்த பெருமையினை, நக்கீரர் குறித்துள்ளார். கபிலரை இவர், “உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக்கபிலன்” எனச் சிறப்பித்துள்ளார். தூங்கலோரியார் என்னும் புலவர். இவர் காலத்தே சிறப்புற்றிருந்த செய்தி, இவர் பாட்டால் விளங்குகிறது. இவர் பாடியுள்ள பொருண் மொழிக்காஞ்சி, ஒவ்வொரு செல்வமகனும் படித்து இன்புறுதற்குரியது. இவரைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் பல. நக்கீரர், பொதுவாகத் தமிழ்மூவேந்தரையும் வேண்டுமிடங்களிற் சிறப்பித்துப் பாடியிருப்பினும், சிறப்பாகப் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் பாடிப் பெரும்பரிசில் பெற்றவர். திருமுருகாற்றுப்படை பாடி முருகன் திருவருள் சிறப்பிக்கப்பெற்றவர். தமிழகம் முழுவதையும் நன்கறிந்தவர். இவர் அந்தணரல்லர். பாராளும் வேந்தனுக்கும், காட்டில் வேட்டையாடும் வேடனுக்கும் இன்றியமையாது வேண்டற்பாலது. உண்பதற்கு நாழித்தவசமும், உடுப்பதற்கு இரண்டு உடையுமே. தமக்கென்று ஒருவர் எவ்வளவுதான் பொருள் சேர்த்து வைத்தாலும், அனைத்தையும் பயன்கொள்ளல் அரிதேயாகும். படைப்புப் பல படைத்து, பலரோடு கூடியுண்பதே செல்வத்துப் பயனாகும். ஒருவர் தாம் பெற்ற செல்வத்துப் பயன், பிறர்க்கு ஈந்து மகிழ்தலேயாகும். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகையும், ஈத்துவக்கும் இன்பமே ஈடில்லாப்பெரும் பேரின்பமென்றார். இவ்வாழ்வியல் அறத்தினைப் பின் வருமாறு பேசுகிறார். “தெண்கடல்வளாகம் பொதுமையின்றி வெண்குடை நிழற்றிய வொருமையோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந்துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவுமெல்லாமோரொக்கும்மே செல்வத்துப் பயன் யீதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே” இப் பாடலின் வாழ்வியல் அறம் யாதெனின், செல்வர் ஈதலைக் கடனாகக் கோடலே அறம். அவ்வாறன்றி, அனைத்தையும் தாமே துய்ப்போம் என்றால், நம்மை விட்டு நீங்குவதே மிகுதியாகும் அதனாற்றான். “துய்ப்பே மெனினே தப்புந பலவே” என்றார். இன்றைய செல்வர் ஈதலைக் கடனாகக் கொள்ளாததால்தான். குமுகாயத்தில் கிளர்ச்சியும், பொருள் முட்டுப்பாடும் ஏற்படுகிறது. கீரன் என்பது இவர்தம் இயற்பெயர். இப்பெயர் கொண்டோர் பலர், அக் காலத்தில் இருந்தனர். அதனால், இவரை, “கணக்காயனார் மகனார் நக்கீரனாரென” இறையனார் களவியலுரை சிறப்பிக்கிறது. தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர், செய்யுளியல் 197ஆவது நூற்பாவுரையில் காணப்படும் நக்கீரன் பற்றிய குறிப்பு வருமாறு:- “இவை தெற்கண்வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு, நக்கீரர் ஒருவன் வாழவும், ஒருவன் சாவவும் பாடிய” என்னும் இக் குறிப்பு ஒர்ந்துணரத்தக்கது. இவர்தம் திருமுருகாற்றுப் படை, ஆற்றுப்படை இலக்கியங்களுள் தலைசிறந்தது. இவர் பாடிய நெடுநல்வாடைப் பாட்டு, சொற்கவை, பொருட்கவை செறிந்தது. நக்கீரர் பாடியனவாகப் பத்துப்பாட்டில் இரண்டும், நற்றிணையில் எழும், குறுந்தொகையில் எட்டும், அகத்தில் பதினேழும், புறநானூற்றில் மூன்றும், திருவள்ளுவமாலையில் ஒன்றுமாக, 38 பாடல்கள் கிடைத்திருக்கின்றன. நக்கீரர்2 nakārar, பெ. (n.) இறையனார் களவியல் நூலின் உரையாசிரியர்; the commentator of iraiyanâr kalaviyal a grammar on Agapporul by Iraiyanár. மறுவ. நக்கீரனார். [நல் + கீரர் → நற்கீரர் → நக்கீரர்] இறையனார் களவியல் என்னும் அகப்பொருள் இலக்கணத்திற்கு, உரையெழுதியவர். பாண்டிக்கோவையைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பாண்டிய மன்னன் காலம் கி.பி. 640-670, இறையனார் களவியலுரையில், பாண்டிக்கோவைப் பாடல்கள், மேற்கோள் பாடல்களாக எடுத்தாளப்பட்டுள்ளன. அகப்பொருள் இலக்கணங் கூறும், இக் களவியலுரையை இயற்றிய, இந் நக்கீரரின் காலம் கி.பி. 640-670-க்குப் பிற்பட்டது எனலாம். களவியற்கு அமைந்த உரைகளுள் சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்காக, இறைவனால் அருளப்பட்ட உருத்திரசன்மன், கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த இடத்துப் பதந்தொறும் கண்ணீர் வார்ந்து, மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தான் இருப்ப ஆர்த்தெடுத்து, “மெய்யுரை பெற்றாம் இந்நூற்கு’ என்றார். என வருவதும் மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு, நக்கீரனாரால் உரைகண்டு குமார சுவாமியால் கேட்கப்பட்டது என்க”, என வருவதும், “தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது என்று சான்றோர் சொல்லியது என்பது”, எனவரும் எடுத்துக்காட்டுகளால், இந் நக்கீரர்? சங்ககாலத்திற்குப் பிற்பட்டவர் என்பதை, வெள்ளிடைமலையென விளக்கும் ஏதுக்களாகத் திகழ்கின்றன. நக்கீரர்3 nakārar, பெ. (n.) பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கண நூலாசிரியர்; treatises on grammar, by Nakkirar, 10th Centurary. மறுவ, நக்கீரனார். [நல் + கீரர் → நற்கீரர் → நக்கீரர்] இலக்கண நூலாசிரியராகிய இந் நக்கீரர்3. நக்கீரர் நாலடி நானுறு. நக்கீரர் அடிநூல் என்னும் இலக்கண நூல்களை இயற்றிதாக, யாப்பருங்கல விருத்தியுரை உரைக்கின்றது. 1. நக்கீரர் அடிநூல்:- வெண்பாவில் ஐஞ்சீரடி வாராதென்பதே இந்நூலின் சிறப்புச் செய்தியாகும். “ஐஞ்சீர் வெள்ளையுட் புகாமை எவற்றாற் பெறுதும் எனின், “ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும் வெண்பா யாப்பிற்குரியவல்ல” என்று நக்கீரனார் அடிநூலுள் எடுத்தோதப்பட்டமை யாற் பெறுதும், என்கிறார். “ஐஞ்சீரடி வெண்பாவிற் புகாது என்று கூறினமையால், அகவற் பாவிலும் கலிப்பாவிலும் வரும்” என்பதறிக. 2. நக்கீரர் நாலடி நானுறு:- பாவினுள் பயின்று வரும் வண்ணங்களுள் தூங்கல் வண்ணமும் ஒன்று. “தூங்கல் வண்ணம்வஞ்சி பயிலும்” (தொல்.செய்யுள்.228.); என்பது தொல்காப்பிய நூற்பாவாகும். யாப்பருங்கல விருத்தியில் வரும் நக்கீரர் நாலடி நானூறு பற்றிய குறிப்பு வருமாறு: “இன்னவை பிறவும், நக்கீரர் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை” எனுங் குறிப்பினின்று. நக்கீரர் நாலடி நானூறு தூங்கிசைச் செப்பலோசையால் அமைந்த 400 வெண்பாக்களையுடையது என்ற உண்மை வெளிப்படுகின்றது. இவ்விரண்டு நூல்களும் யாப்பிலக்கணம் கூறுவன. யாப்பருங்கல விருத்தியார் காலம் கி.பி. 10 – ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கலவிருத்தியார் இந் நூலை மேற்கோள் .காட்டியுள்ளமையால், இந்த நக்கீரர்3 கி.பி.10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர் எனலாம். |
நக்கீரர்கோயில் | நக்கீரர்கோயில் nakārarāyil, பெ. (n.) மதுரை, மேலாமாசி வீதியிலுள்ள நக்கீரர் திருக்கோயில்; Nakkirar’s temple, located in Madurai west masi street. மறுவ, சங்கத்தார் கோயில், [நக்கீரர் + கோயில்] திருவிளையாடல் தொன்மத்தில், (புராணம்); நக்கீரர் கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. |
நக்கு | நக்கு1 nakkudal, 5 செ. குன்றாவி, (v.t) 1. நாவினாற் தடவுதல், அல்லது துழாவுதல்; to lick lap. “ஆமாபோ னக்கி” (நாலடி, 377.);. பரிவுடன் ஆ (பசு); தன் கன்றை நக்கியது (இக். வ);. நாய் நீரை நக்கிக் குடிக்கும் (இக். வ);. நக்குகிற போது நாவு எழும்புமா (பழ.);. நக்குகிற நாய்க்குச் செக்கும் தெரியாது. சிவலிங்கமும் தெரியாது (பழ);. 2. தீண்டுதல்; to touch. “நகைமணி மார்பநக்கி. சுடுகரம் பரந்தவன்றே” (சீவக.799);, 3. அழித்தல்; to consume. “உலகை நக்குங் கேடறு நிலைமைக் காலன்” (ஞானவா. சுக்கிரன். 33);. 4. சுடுதல்; to burn. “நனந்தலைப் பேரூ ரெரியு நக்க” (புறநா. 57);. தெ. நகு. க. நக்கு. து., நக்குனி. கோண். நாகானா. குவி. நாகலி கூய், நாக. நாகி. கொண்டா. நாக், கோட நாகானா. [நாக்கு → நக்கு + தல் + ‘தல்’ தல்லீற்றுத் தொழிற்பெயர்.] நக்கு2 nakkudal, 5 செ. கு. வி. (v.i) வறுமைப்படுதல்; to be destitute. அவன் கஞ்சிக்கு இல்லாமல் நக்குகிறான் (இ.வ.);. நக்கத் தவிடுமில்லை, குடிக்க நீருமில்லை (பழ);. நாய்நக்கத் தண்ணியில்லை. நடந்து போகப் பாதையுமில்லை (பழ);. க. நக்கு நெக்கு தெ. நாகு. ம. நக்குக. து. நக்குனி, கோத நக்கி, நக் துட. நொக் கோத நக்கி (nakki);, து. நக்குனி, கொலா. நக். நாய்கி. நாக், (nak); பாலி.நேக் (nek); கத்யா. நாக் (nak); கோண். நாகானா. குவி. நாகலி கூய். நாக, நாகி. கொண்டா. நாக். கோட. நாகானா. [நக்கு + ஈதல்.] ‘தல்’ = தல்லீற்றுத் தொழிற்பெயர். நக்கு3 nakku, பெ. (n.) ஆடையற்ற நிலை (தேவா. 215. 6);; nakedness. த. நக்கு → Skt nagna |
நக்குடகம் | நக்குடகம் nagguḍagam, பெ. (n.) மூக்கு; nose. |நக்கு + ஊடு → உடு + அகம்.] |
நக்குணி | நக்குணி nakkuṇi, பெ. (n.) 1. உணவிற்குத் திண்டாடுவோன்; mean cadger of food. 2. சிறுபையன்(வின்);; little boy. 3. பாம்புவகை (வின்..);; a small snake. [நக்கு + உண்ணி → நக்குண்ணி → நக்குணி] |
நக்குநிற்றல் | நக்குநிற்றல் nakkuniṟṟal, பெ. (n.) 1. ஆடையற்று அருத்தல்; without dress, to be naked. “பொக்கம் மிக்கவர் பூவும் நீருங் கொண்டு நக்குநிற்பர் அவர்தம்மை நாணியே” (நாவுக்கரசர் தேவாரம்.);. 2. வறுமையில் வாடுதல்; to wall in poverty. [நக்கு + நிற்றல்.] உண்ணும் உணவிற்கும், உடுக்கும் உடைக்கும் வாய்ப்பற்று இருத்தல். |
நக்குப்பொறுக்கி | நக்குப்பொறுக்கி nakkuppoṟukki, பெ. (n.) 1. எச்சிற்பொறுக்கி யுண்போன்; beggar, as one who lives on refuse food. “நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்” (தனிப்பா. i290.7);. 2. இவறன் (வின்);; miser. [நக்கு + பொறுக்கி] |
நக்குமருந்து | நக்குமருந்து nakkumarundu, பெ. (n.) நாவாற் பருகும் மருந்து; a thick syrupy medicament to be taken by licking-Lincture. [நக்கு + மருந்து.] தேன் முதலியனவற்றுடன் நாவினால் நக்கியுண்ணும் மருந்து. |
நக்கேணி | நக்கேணி1 nakāṇi, பெ. (n.) காரை வகை; a kind of honey thorn, m, tr., Canthium Didymum. தெ. நக்கேரு. நக்கேணி2 nakāṇi, பெ. (n.) கருப்புமரம் (சா.அக);; a black jujube. |
நக்சா | நக்சா nakcā, பெ. (n.) படம் (C.G.57);; picture, plan, map. [Ar. naqsha → த. நக்சா] |
நக்தி | நக்தி nakti, பெ.(n.) கருவூலம் (C.G.145);; treasury. [Ar. naqdi → த. நக்தி] |
நக்திகுமாசுதா | நக்திகுமாசுதா nagtigumācutā, பெ.(n.) கருவூலக்கணக்கர் (C.G.145);; treasury clerk, cash-keeper. |
நக்திசிட்டா | நக்திசிட்டா naktisiṭṭā, பெ.(n.) கருவூலத்தில் வருமானத்தைப் பதிவு செய்யும் பதிவேடு (C.G. 145);; account showing cash receipts in a treasury. [Ar. {} → த. நக்திசிட்டா] |
நக்துருணி | நக்துருணி nakturuṇi, பெ. (n.) 1. umrāi an-gi($sum sir (súlshr.);; talebearer, backbiter. 2. offloilo (Sólsâr.);; fool,silly person. 3. &gunssör (G);.su);; insignificant person, பிறரைக் குறைத்துப் பேசும் தாழ்வுப்பொருளில் வந்தது. |
நக்த்சமாகர்சு | நக்த்சமாகர்சு naktcamākarcu, பெ.(n.) கருவூலக் குறிப்பேடு (C.G);; account of cash receipts and disbursements. [Ar. naqdi-{} + {} → த. நக்த்சமாகர்சு] |
நங்கணவாய் | நங்கணவாய் naṅgaṇavāy, பெ. (n.) நாகணவாய்ப்புள் பார்க்க;see nagana vay-p-pul. [நாகணம் → நங்கணம் + வாய்.] |
நங்கணவாய்ச்சி | நங்கணவாய்ச்சி naṅgaṇavāycci, பெ. (n.) பறவை வகை (வின்.);; a kind of bird. [நாகண → நங்கண + வாய்ச்சி.] இது நாகண வாய்ப்புள் என்றும் பூவை என்றும் மக்களிடையே வழங்குகிறது. |
நங்கனை | நங்கனை naṅgaṉai, பெ. (n.) அரைப் பட்டிகையின் உறுப்பு; part of a girdle. “திருப்பட்டிகைக் கதலிகை நங்கனை ஒன்று”. (S.I.IVol. II:144);. [ஒருகா. நங்கன் → நங்கனை.] |
நங்கள் | நங்கள் naṅgaḷ, பெ. (n.) நாங்கள் என்பது வேற்றுமையுருபை ஏற்கும்போது அடையும் எழுத்துருத் திரிபு; the basic form which nāńgal assumes before case-suffixes. “நங்கள் வரிவளை யாயங்களோ” (திவ்.திருவாய்.8:2:1);. “நங்கள் இருவினை மாமரம் வேர்பறித்து” (திருவாச3.86);. [நாம் → நம் + கள்.] |
நங்கவள்ளி | நங்கவள்ளி naṅkavaḷḷi, பெ.(n.) ஓமலூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Omalur Taluk. [நங்கன்+வள்ளி(பள்ளி);] நங்கவள்ளி naṅgavaḷḷi, பெ.(n.) ஓமலூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Omalur Taluk. [நங்கன்+வள்ளி(பள்ளி);] |
நங்காமணத்தி | நங்காமணத்தி naṅgāmaṇatti, பெ. (n.) செம்மணத்தி; red wood, decanny deodar. [நன்கு → நங்கை + ஆமணத்தி] |
நங்கினம் | நங்கினம் naṅgiṉam, பெ. (n.) நாகண வாய்ப்புகள்; mynah (bird);. [நன்கு → நங்கு + இனம்.] [P] |
நங்கிலி | நங்கிலி1 naṅgili, பெ. (n.) பயிரி. (யாழ்.அக);, கோழிக்கீரை வகை; purslane. [நன்கு + இலி.] நங்கிலி2 naṅgili, பெ. (n.) கோலார் மாவட்டத்திலுள்ள செல்வ வளமுள்ள நாடு; a rich and wealthly place in kölär (D.t.);. மலைப்பங்கான சூழ்நிலையுடன், துங்க பத்திரை ஆற்றை, வடக்கு எல்லையாகக் கொண்டது. இதை முதற் குலோத்துங்கன் கைப்பற்றியுள்ளான். “கல்லதர், நங்கிலி, துடங்கி மணலூர் நாடுவென்று துங்கபத்திரையளவும்” (முதற் குலோத்துங்கன் – மெய்கீர்த்தி);. |
நங்கு | நங்கு1 naṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நக்கல் செய்தல்; to deride. நங்குதல் செய்வதையே அவன் வேலையாகக் கொண்டுள்ளான் (உ.வ.);. 2. நையாண்டி செய்தல்; to mock at. “நங்கவொழியினும்” (பழமலை,50);, இலக்.அக);. தெ. நங்கு. [நகு → நங்கு – =நையாண்டி செய்தல். ஒருவரை எள்ளி நகையாடி, ஏளனஞ் செய்தல்.] நங்கு2 naṅgu, பெ. (n.) நக்கல்; derision. mockery. “நங்கு தெறுப்பதற்கு நாடெங்கும் போதாது” ஆதியூரவதானி). [நகு → நங்கு.] நங்கு3 naṅgu, பெ. (n.) மீன்வகையுளொன்று; a kind of fish. ம, நங்கு. துளு, நங்கு. |
நங்குகாட்டு-தல் | நங்குகாட்டு-தல் naṅgukāṭṭudal, 5 செ.கு.வி, (v.i.) நக்கல் செய்தல்; to mimic deride. [நக்க → நங்கு +காட்டு-] பிறர் போல் நடித்து நையாண்டி செய்தல், பிறர் பேசுவது போலவும், சிரிப்பது போலவும் பேசித் திறமையாக நடித்துக்காட்டுதல். விலங்குகள் போலவும், பறவைகள் போலவும் ஒலியெழுப்பி, ஏளனஞ்செய்தல். |
நங்குடி | நங்குடி naṅkuṭi, சிதம்பரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chidambaram Taluk. [நன்+குடி] நங்குடி naṅguḍi, பெ.(n.) சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chidambaram Taluk. [நன்+குடி] |
நங்குடிவேளாளர் | நங்குடிவேளாளர் naṅguḍivēḷāḷar, பெ. (n.) திருநெல்வேலி வேளாளரில் ஒரு வகையினர் (ETV 246);; a division of vélàlar caste in Tirunelveli district. [நம் + குடி+ வேளாளர்] |
நங்குரம் | நங்குரம் naṅguram, பெ. (n.) நங்கூரம் பார்க்க; see nanguram. “நங்குரத்திற்கட்டிய கயிறு காற்றாலற்று’ (சீவக.2231உரை);. பார. லங்கர். [நாங்குலம் → நாங்கூரம் → நங்கூரம் → நங்குரம்] கப்பலை நிறுத்தும் கலப்பை வடிவான இருப்புக்கருவி. |
நங்குவலி-த்தல் | நங்குவலி-த்தல் naṅguvalittal, 5 செ.கு.வி. (v.i.) நங்குகாட்டு- (இ.வ.); பார்க்க see nangu-kattu-, [நங்கு + வலி-] |
நங்குவழி-த்தல் | நங்குவழி-த்தல் naṅguvaḻittal, 5 செ.கு.வி. (v.i.) நங்குகாட்டு-, (இ.வ.); பார்க்க see anangu-kattu-. [நங்கு + வழி-] |
நங்கூரக்கல் | நங்கூரக்கல் naṅārakkal, பெ. (n.) இரும்பால் செய்யப்படாத கல்கட்டிய நங்கூரம்; killick. [நங்கூரம் + கல்.] |
நங்கூரங்கொத்விடு-தல்- | நங்கூரங்கொத்விடு-தல்- naṅāraṅgodviḍudal, 5 செ.கு.வி. (v.i.). கப்பலைக் கட்டியிருக்கும் நங்கூரக் கயிற்றை அறுத்து விடுதல் (வின்.);; to cut or slip the cable. [நங்கூரம் + கொத்தி + விடு-] |
நங்கூரத்தண்டு | நங்கூரத்தண்டு naṅārattaṇṭu, பெ. (n.) நங்கூரத்தைத் தாங்கியுள்ள இரும்புச்சங்கிலி; Shank. [நங்கூரம் + தண்டு.] நங்கூரந்தூக்கு-தல் 5 செ.கு.வி (v.i.); 1. நங்கூரத்தைக் கடலிலிருந்து மேலேயெடுத்தல்; to weigh anchor. 2. கப்பல் புறப்படுதல் (பே.வ.);. (இ.வ.);; to set Sail. [நங்கூரம் + தூக்கு-.] |
நங்கூரப்பல் | நங்கூரப்பல் naṅārappal, பெ. (n.) நங்கூரத்தின் கொளுவி (வின்);; fluke of an anchor. [நங்கூரம்+ பல்.] |
நங்கூரமதிப்பு | நங்கூரமதிப்பு naṅāramadippu, பெ. (n.) கப்பலின் நங்கூரத் தொடரியில் பிணைக்கப்பட்டுள்ள மிதப்பு; moorings. [நங்கூரம் + மிதப்பு.] கப்பலின் நங்கூரச்சங்கிலியும் மிதவையும் பிக்குமிடம். |
நங்கூரமரையாணி | நங்கூரமரையாணி naṅāramaraiyāṇi, பெ. (n.) கூர்மையான பல்வெட்டும், கூம்பான வாலும் உடைய மரையாணி; lewis bolt. [நங்கூரம் + மரை + ஆணி.] இது கட்டுமானப் பணிகளில் பயன்படுகின்றது. |
நங்கூரமிடு-தல் | நங்கூரமிடு-தல் naṅāramiṭutal, 18 செ. குன்றாவி (v.i) மரக்கலம் (அ); கப்பல் நகராமல் ஓரிடத்தில் நிற்பதற்காக நீருக்குள் நங் கூரத்தை இறக்குதல்; to cast anchor. [நங்கூரம்+இடு-,] நங்கூரமிடு-தல் naṅāramiḍudal, 18 செ. குன்றாவி (vi) மரக்கலம் (அ) கப்பல் நகராமல் ஓரிடத்தில் நிற்பதற்காக நீருக்குள் நங்கூரத்தை இறக்குதல்; to cast anchor. [நங்கூரம்+இடு-] |
நங்கூரம் | நங்கூரம் naṅāram, பெ. (n.) மரக்கலம் வேற்றிடஞ்செல்லாது நிறுத்தற்கு நீருள் இடும் இருப்புக்கருவி; anchor. “மரக்கலத்துக்கு நங்கூரம் விழவிட்டாற்போலே” (திவ். திருமாலை,38.வ்யா.பக்.128);. தெ. நாகலே. த. நங்கூரம் → Skt. långala E anchor. OE ancor. Lancora GK ankura OHG anChar LG MHG. anker On akkeri sw ankari Da. anker CF, ancre. It ancora L anchora பார. லங்கர். (Langar); [நாங்கூலம் → நாங்கூரம் → நங்கூரம்.] நாங்கூழ் மண்ணைத் துளைப்பது போல், நிலத்தைத் துளைத்து உழும் கலப்பை. கப்பலை நிறுத்தும் கலப்பை வடிவான, இருப்புக்கருவி. வளைவைக் குறிக்கும் ‘omk’ என்னும் வினை முதனிலையினின்று, ‘anchor’ என்னும் சொல் திரிந்துள்ளதாக ஆங்கில அகரமுதலிகள் கூறும். அஃதுண்மையாயின், அதுவுந் தமிழ் வழியே. [(ஒநோ); வணங்கு → வாங்கு → வங்கு → அங்கு.] அங்குதல் = வளைதல், சாய்தல். அங்கணம் = வாட்டஞ்சாய்வான சாய்கடை (தமி.இலக்.வரபக்.55);. வளைதற் கருத்துச் சொல்லான நங்கூரம், நிலத்தைத் துளைத்து, கப்பலை நிலைநிறுத்தும், பொருண்மையில் வந்துள்ளது. |
நங்கூரம்பாய்ச்சு-தல் | நங்கூரம்பாய்ச்சு-தல் naṅārambāyccudal, 5 செ. குன்றாவி. (v.t), கப்பல் நகராமல் ஓர் இடத்தில் நிற்பதற்காக நீருக்குள், நங்கூரத்தை இறக்குதல்; to cast anchor. [நங்கூரம் + பாய்ச்சு-] |
நங்கூரம்வலி-த்தல் | நங்கூரம்வலி-த்தல் naṅāramvalittal, 4. செ. குன்றாவி. (v.t). நங்கூரந்தூக்கு-. பார்க்க;see nangūran-tūkku. [நங்கூரம் + வலி-] |
நங்கூரவடம் | நங்கூரவடம் naṅāravaḍam, பெ. (n.) நங்கூரத்தையும், கலத்தையும் இணைக்கும் வடம்; bridle. [நங்கூரம் + வடம்.] |
நங்கூரவாடகை | நங்கூரவாடகை naṅāravāṭagai, பெ. (n.) நங்கூரக்கூலி; fees for anchoring. [நங்கூரம் + வாடகை.] [வாழ் + தகை – வாடகை.] |
நங்கூரவாடை | நங்கூரவாடை naṅāravāṭai, பெ. (n.) நங்கூரம் இடத்தக்க இடம் (வின்.);; anchorage. |
நங்கெந்தம் | நங்கெந்தம் naṅgendam, பெ. (n.) அரிதாரம்; Orpiment. மறுவ. தாளகம். |
நங்கெந்தாகம் | நங்கெந்தாகம் naṅgendākam, பெ. (n.) |
நங்கை | நங்கை1 naṅgai, பெ. (n.) 1. பெண்ணிற் சிறந்தாள் (சூடா);; lady, woman of quality or distinction. “நங்கா யெழுந்திராய்” (திவ்.திருப்பா.14);. 2. மகன் மனைவி; son’s wite. “என்னுட னங்கையீங் கிருக்கெனத் தொழுது” (சிலப்.16:14);. 3. அண்ணன் மனைவி; elder brother’s wife. 4. பெண் பாலைக்குறிக்க அஃறிணைப் பெயரோடு சேர்க்கப்படுஞ் சொல்; a word added to akina nouns to denote feminine gender ‘பசு; நங்கை வந்தது’ (நன்.392மயிலை);. ம. நங்ங. [நம் + கை.] ஒ.நோ. தம் + கை = தங்கை. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுபருவமகளிர் வரிசையில் வாராவிடினும், திருமணப் பருவப் பெண்ணைக்குறிக்கும் சொல்லாட்சியாக, இது வழங்கி வருகிறது. நங்கை2 naṅgai, பெ. (n.) பெண்களுக்குப் பால்கரக்கச் செய்வதாகக் கருதப்படும் செடிவகை; species of milk-wort. ம. நங்ங. நங்கை நான்கு வகைப்படும் என்று. சா.அக. கூறும். 1,பெரியாணங்கை = பெரியாள்+நங்கை. 2. சிறியாணங்கை = சிறியாள்+நங்கை. 3. வனநங்கை = வனம் +நங்கை. 4.வேப்பிலை நங்கை = வேம்பு → வேப்பு + இலை + நங்கை. |
நங்கைநாச்சி | நங்கைநாச்சி naṅgainācci, பெ. (n.) தலைவி (வின்.);; lady of distinction. [நங்கை + நாய்ச்சி → நாச்சி.] |
நங்கைநீர் | நங்கைநீர் naṅgainīr, பெ. (n.) 1. மாதவிடாய் நீர்; menstrual blood. 2. பெண் கழிவுநீர்;= female urine. 3. சுரப்பு நீர்; ovarian secretion woman. [நங்கை + நீர்] |
நங்கைமரம் | நங்கைமரம் naṅgaimaram, பெ. (n.) புங்கமரம்; poonga oil tree, Indian beech tree. [நங்கை + மரம்.] |
நங்கையர் | நங்கையர் naṅgaiyar, பெ. (n.) நடை உடை, தோற்றம் போன்றவற்றில், நேர்த்தியாகத் திகழும் மங்கையர் அழகு நிலையங்களுக்குச் செல்லும் நகர நங்கையர் (இ.வ.);; charming young lady. [நங்கை + அர்.] |
நங்கையார் | நங்கையார்1 naṅgaiyār, பெ. (n.) அம்மையார்; madam. மறுவ, அம்மணி. [நங்கை + அர் → ஆர். பெண்ணிற் சிறந்தாளைக் குறிக்கும் சொல். “ஆர்” மதிப்புரவு விளி.] நங்கையார்2 naṅgaiyār, பெ. (n.) அண்ணியார்; elder brother’s wife. [நங்கை + ஆர்.] |
நசணை | நசணை nasaṇai, பெ. (n.) தொல்லை பிடித்தவன் (இ.வ.);; a troublesome person. [நச்சல் → நசல் → நசண் + ஐ.] நச்சன் = தொல்லை. தொல்லை தந்து அலைக்கழிப்புச் செய்பவன். |
நசநக-த்தல்- | நசநக-த்தல்-4 nasanagattal, செ.கு.வி.(v.i) நசுநசு-பார்க்க; see nasu-nasu. [நொசி → நசி → நச+நச → நசநச-.] உறுதிப்பாடு அல்லது கட்டு நெகிழ்ந்து போகுந் தன்மையைக் குறிக்கும், நெகிழ்ச்சிக் கருத்தினின்று தோன்றிய சொல். |
நசநசவெனல் | நசநசவெனல் nasanasaveṉal, பெ. (n.) நசுபிசெனல் பார்க்க;see nasu-pišenal. [நச + நச + எனல்.] |
நசனை | நசனை nasaṉai, . பெ. (n.) மாணிக்கக் குற்றத்தொன்று (வின்);; white speck, a flaw in a ruby. |
நசபிசெனல் | நசபிசெனல் nasabiseṉal, பெ. (n.) நசுபிசெனல் பார்க்க;see našupišenal. [நச + பிச + எனல்.] |
நசர் | நசர் nasar, பெ. (n.) உயர் அலுவலர்க்குச் செலுத்துங் காணிக்கை; present to an official, customary gift to a superior. [நையல் → நயல் → நசல் → நசர்] மையல் → மயல் → மசல் → மசர் |
நசறாண்டி | நசறாண்டி nasaṟāṇṭi, பெ. (n.) நசிறாண்டி பார்க்க;see naširāndi. [நசல் + ஆண்டி.] நசலாண்டி → நசறாண்டி=தொல்லை கொடுப்பவன். |
நசற்காரன் | நசற்காரன் nasaṟkāraṉ, பெ. (n.) நோயாளி (வின்);; patient, person in ill – health. [நசல் + காரன்.] ‘காரன் உடைமைப் பெயரீறு. |
நசலாளி | நசலாளி nasalāḷi, பெ. (n.) நோயாளி (வின்.);; sick person, patient. [நசல் + ஆள் + இ.] “இ” சொல்லாக்க ஈறு. |
நசல் | நசல் nasal, பெ. (n.) 1. நோய்; illness. 2. தீராநோய்; a chronic disease. [நை → நையல் → நைசல் → நசல்] |
நசாரி | நசாரி nacāri, பெ. (n.) எட்டி (மூ.அ.);; indian poison nut. மறுவ, காஞ்சிரை. [நச + அரி.] |
நசி | நசி1 nasidal, 2 செ.கு.வி. (v.i). 1. அழிதல்; to be destroyed. 2. நசுங்குதல்; to be crushed, bruised, mashed, crumpled 3. திரைதல்; to be frayed, as a worn cloth ‘நசிந்த புடைவை’ (வின்);. 4. குறைவு காணுதல் (வின்.);; to be palliated, extenuated 5. அடக்கிப் பேசப்படுதல் (வின்);; to be kept back, spoken indistinctly or with hesitation 6. நிலைமை சுருங்குதல்; to be reduced in circumstances த. நசி → வ. நச் (nas);. [நை → நயி → நசி -] (வேக3-31); நெகிழ்ச்சிக் கருத்தினின்று கிளைத்த வேர். நெகிழ்ந்த பொருள் நைந்து நசுங்குவது இயல்பு. நைந்த பொருள் தளரும். தளர்ந்த பொருள் கருங்குந்தன்மைத்து. நெகிழ்வின் இறுதிநிலை, நிலைமைக் கெட்டு அழிதலாகும். நசிதல் என்னுமிச்சொல், ஈங்கு நகங்குதல், சுருங்குதல், கெடுதல், அழிதல் என்னும் பொருண்மையில் வந்துள்ளது. நசி2 nasidal, 2 செ.கு.வி. (v.i.) ஓர் இனம் அல்லது குடும்பம், கலை முதலியவை எண்ணிக்கையில் குறைந்து, வளர்ச்சியில் பின்தங்கி, செல்வாக்கு அல்லது மதிப்பை இழந்து நலிவடைதல்; to become extinct, to decline “திமிங்கல இனம் எண்ணெய்க்காகப் பெருமளவில் கொல்லப்படுவதால், நசிந்து வருகிறது” (உ.வ.); “கண்ணெதிரில் நண்பரின் குடும்பம் நசிந்து போவதைப் பார்க்க மிகவும் துன்பமாக இருக்கிறது”. நசிந்து வரும் ஒயிலாட்டம், கரகாட்டம் முதலான நாட்டுப்புறக் கலைகளை அரசும், மக்களும் ஊக்குவிக்க வேண்டும் (உ.வ.);. த. நசி-. வ. நச். (nas);. [நை → நயி → நசி. ] நசி3 nasittal, 4 செ.கு.வி. (v.i.). 1. அழித்தல்; to be destroyed, annihilated, consumed. “நசியாஉலகிற் பாவமு நசிக்கும்” (காஞ்சிப்பு மணிக.61);. 2. குறைதல்; to become reduced, diwindle, decline, as a family. ‘அந்தக் குடும்பம் நசித்துக்கொண்டு வருகிறது. அரிதாகக் காணப்படும் இந்தப் பறவையினம் நசித்துவருகிறது (இக்.வ.);. சில கலைஞர்களேனும் இல்லாவிட்டால், பொம்மலாட்டக்கலை என்றோ நசித்திருக்கும் (உ.வ.); 3. சாதல்; to become extinct, die, “நசித்தவரை எழும்பியருள்” (அருட்பா, (v.i,); அருள்விளக்க. 4);. [நயி → நசி+த் + தல். த் = சந்தி, ‘தல்’ தொ.பெயர்.ஈறு.] நசி4 nasittal, 4 செ.குன்றா.வி. (v.t.) 1. அரைத்தல்; to crush, bruise, mash, crumple, 2.அழித்தல்; to demolish, destroy, consume 3. கசக்குதல் (யாழ்ப்.);; to Squeeze, press. 4. அடக்கிப்பேசுதல்; to suppress, conceal, keep back, speak with hesitation 5. எளிதாக்குதல் (யாழ்ப்);; to make light of treat as of Small account. ம. நசிக்க. [நயி → நசி-த்+தல். ‘தல்’ தொ. பெ. விகுதி.] |
நசிகோதி | நசிகோதி nasiāti, பெ. (n.) சமையல் பாகக் குற்றம்; defect in cooking |
நசிதவாரகம் | நசிதவாரகம் nasidavāragam, பெ., (n.) பெருஞ்செருப்படை; large forceful army. [நசிதம் + வார் + அகம்]. |
நசிதோடணம் | நசிதோடணம் nasitōṭaṇam, பெ.(n.) மிகவுஞ்சூடு, மிகவும் குளிர்ச்சியில்லாமை; neither too warm, nor too Cold. |
நசிந்தா | நசிந்தா nasindā, பெ. (n.) கணக்கர் (C.G.);; accountant, clerk. [U. {}-sindah → த. நசிந்தா] |
நசிந்துகொடு-த்தல் | நசிந்துகொடு-த்தல் nasindugoḍuttal, 4 செ. கு.வி. (v.i). 1. பழுத்து மெதுவாயிருத்தல்; to yield, as a boil or fruit to the touch 2. இணங்குதல்; to yield to one, concede. [நசிந்து + கொடு-.] |
நசிந்துபோ-தல் | நசிந்துபோ-தல் nasindupōtal, 4 செ.கு.வி (v.i.) நசி1-தல் பார்க்க;see naši-, [நை → நயி → நசி → நசிந்து போ-] |
நசினை | நசினை nasiṉai, பெ. (n.) நசனை (வின்.); பார்க்க;see nasanai. |
நசியஞ்செய்தல் | நசியஞ்செய்தல் nasiyañseytal, பெ. (n.) மூக்கின் வழி மருந்தை உட்செலுத்துதல் அல்லது உள்ளுக்கிழுத்தல்; inhaling medicinal fumes or powders through the nose. [நசியம் + செய்தல்.] |
நசியனுர் | நசியனுர் naciyaṉur, பெ.(n.) ஈரோடு வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Erode Taluk. [நசையன்-நசியன்+உரைஊர்] |
நசியனூர் | நசியனூர் nasiyaṉūr, பெ.(n.) ஈரோடு வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Erode Taluk. [தசையன்-நசியன்+உரைஊர்] |
நசியமிடல் | நசியமிடல் nasiyamiḍal, பெ. (n.) மருந்தைப் புகை வடிவில் உட்செலுத்தல்; administering medicine internally in the form of fumes or vapour, exposing to smoke or vapour as of sulphur to purify from infection inhaling disinfectant fumes. – Fumigation. [நசியம் + இடல்.] |
நசியம் | நசியம் nasiyam, பெ. (n.) 1. மூக்குப்பொடி (வின்.);; sternutatory, snuff. 2.மூக்கிலிடும் மருந்து (தைலவ. தைல:2);; a medicine applied to the nose. |
நசியம் செய்-தல் | நசியம் செய்-தல் nasiyamseytal, 1. செ. குன்றாவி, (v.t) மூக்கினால் இழுத்தல், to make the patient lie down, and pass the medicine into his nostril through a tube and funnel. [நசியம் + செய்-] |
நசியம்பிழிதல் | நசியம்பிழிதல் nasiyambiḻidal, பெ. (n.) மூலிகை மருந்தை நீர் வடிவில் உட்செலுத்துதல்; to pass the juice of herbs in to the nostril. [நசியம் + பிழிதல்.] |
நசியரி | நசியரி nasiyari, பெ. (n.) 1. குப்பை மேனி; indian acalypha. 2. செடிக்குப்பை; rubbish plant. [நசி + அரி.] நசி = சிறிய, |
நசியலன் | நசியலன் nasiyalaṉ, பெ. (n.) கழப்புணி, சாக்குப் போக்குக் காட்டி ஏய்த்து மழுப்புவன்; (வின்.);; a person who practises evasion. who does not answer directly. [நசி → நசியல் + அன்.] ‘அன்’ – ஆ. பா.ஈறு. கடமையைத் தட்டிக்கழித்துச் சூழ்ச்சி செய்து, பிடிகொடாது தப்புந்தன்மையன். ஆற்ற வேண்டிய பணியை நசித்து அழிக்குந் தன்மையன். |
நசியல் | நசியல் nasiyal, பெ. (n.) 1. நெரிந்தது (வின்);; anything crushed or mashed, as overripe or decayed fruit. 2. தட்டையானது; anything pressed or bent, as a jewel. 3. வளைந்து கொடுப்பது; anything tough and yielding. [நசி → நசியல்.] |
நசிறாணி | நசிறாணி1 nasiṟāṇi, பெ. (n.) 1. தொல்லைச் செய்வோன்; vexatious, teasing person, 2. ,இறைவன்; stingy person. மறுவ, பிசிறாணி. [நசிறு + ஆண்டி → ஆணி.] நசிறாணி2 nasiṟāṇi, பெ. (n.) கிறித்தவர்; a class of Christians. கிறித்துவ மதத்திலுள்ள பிரிவுகளுள் ஒன்று. |
நசிறாண்டி | நசிறாண்டி nasiṟāṇṭi, பெ. (n.) நசிறாணி (யாழ்ப்.); பார்க்க;see nasirani. [நசல் → நசில் → நசிறு + ஆண்டி.] |
நசிவாந்தம் | நசிவாந்தம் nasivāndam, பெ. (n.) பறங்கி வைப்பு நஞ்சு; a kind of mineral poison, Sublimate of mercury [நசிவு + அந்தம்.] |
நசிவானவெழுத்து | நசிவானவெழுத்து nasivāṉaveḻuttu, பெ. (n.) 1. திருத்தமில்லாததும், அரைகுறையானதுமான எழுத்து (வின்);; indistinct or ill-formed writing. 2. கவர்பொருள் கொண்ட தொடர்மொழி; a writing in equivocal terms. [நசிவு + ஆன + எழுத்து.] |
நசிவு | நசிவு nasivu, பெ. (n.) 1. நலிவு அழிவு, கேடு; destruction, decadence, loss, injury, 2. நெரிவு; bruise, Contusion, 3. வசைபாடுகை, பழிகூறுகை, இடித்துரைக்கை; reproach. 4. இகழ்கை; disparagement. [நயி → நசி → நசிவு.] நைந்து அழிகை, நைந்து சேதப்படுகை போன்ற பொருண்மையில், இச் சொல் இக் காலத்தே வழக்கூன்றியுள்ளது. (எ.டு); தரந்தாழ்ந்த தாளிகைகளினால் மொழிக்கும். பண்பாட்டிற்கும் ஏற்படும் பயனைவிட, நசிவுதான் மிகுதி (இக்.வ);. அறிவியல் வளர வளர மூடநம்பிக்கைக் கோட்பாடுகள் நாளாக நாளாக நசிவுற்று வருகின்றன.” போன்ற வழக்குகளில் நசிவு என்னுஞ்சொல் அழிவு, கேடு என்னும் பொருண்மையில், பயின்று வருகிறது. |
நசிவுகாண்(ணு)-தல் | நசிவுகாண்(ணு)-தல் nasivukāṇṇudal, 12 செ. கு.வி. (v.i.) 1. நைந்து சேதப்படுதல்; to become injured or bruised, as ripe fruit. 2. மனம் வேறுபடுதல்; turn shy ordiscordant as friends. 3. நிலையற்றிருத்தல்; to be insecure, as in one’s office. [நசிவு → காண்(ணு);-] |
நசிவுகாயம் | நசிவுகாயம் nasivukāyam, பெ. (n.) ஊமைக்காயம் (இ.வ.); contusion. [நசிவு + காயம்.] |
நசீப் | நசீப் nacīp, பெ. (n.) 1. ஊழ்; fate, destiny 2. ஆகூழ்; good luck, fortune. [U. {} → த. நசீப்] |
நசுகுணி | நசுகுணி nasuguṇi, பெ. (n.) நசுக்குணி 1. 2. பார்க்க;see našukkuni 1. 2. |
நசுக்கண்டல் | நசுக்கண்டல் nasukkaṇṭal, பெ. (n.) நெறிவுறல்; being jammed, being beaten into a pulp or flat mass, squashing “நிலநடுக்கத்தினால் பலவீடுகள் நசுக்குண்டன”. [நகங்கு → நசுக்கு + உண்டல்.] |
நசுக்கல் | நசுக்கல் nasukkal, பெ. (n.) 1. நெருக்குதல், நசுக்குதல்; crushing. 2. நொறுங்குதல்; pounding, mashing, beating into a confused mass. [நை → நசி → நசுங்கு → நசுக்கு + அல்.] |
நசுக்கான் | நசுக்கான் nasukkāṉ, பெ. (n.) சிறியது; that which is smal, நசுக்கான் பையன் (வின்);. தெ. நலுசுணி. [நசுக்கு =சிறியது நசுக்கு → நசுக்கான், ஒருகா. நசுங்கான் → நசுக்கான்.] |
நசுக்கிப்பிழி-தல் | நசுக்கிப்பிழி-தல் nasukkippiḻidal, 2செ. கு. வி. (v.i.), பசுமையான மூலிகைகளை இடித்துச் சாறுபிழிதல்; to Squeeze out juice by bruise the green herbaceous leaves “நாயுருவி இலையை நசுக்கிப் பிழிந்து கருக்கு நீரிட்டுக்(கசாயம்); குடித்தால் மலக்கட்டு அகலும்” [நசுங்கு → நசுக்கு → நசுக்கி + பிழி-] சித்தமருத்துவத்தில் தமிழகத்தில் கிடைக்கும் பசுமையான மூலிகையும், மூலிகைக் கருக்குநீருமே, (கசாயம்); தீராத நோய்களைத் தீர்த்து, உலகமருத்துவ அரங்கில், தமிழகத்திற்கு உயர்ந்த இடத்தை உருவாக்கித் தந்துள்ளன. |
நசுக்கு | நசுக்கு1 nasukkudal, 5.செ.கு (v.i.), 1. அழுத்தித் தேய்த்தல், நசுங்கச் செய்தல் (இ, வ.);; to squeeze, press with the hand, crush, squash, crumple, as paper. ‘கதவைச் சாத்தும் போது என்விரலை நசுக்கிவிட்டான். ‘சுருட்டுத் துண்டைக் கீழே போட்டுக் காலால் நசுக்கினான்’ (இக்.வ.);. “ஏன் இப்படி என்னை நசுக்கிறீர்கள்? சிறிது தள்ளி நிற்கக்கூடாதா?” (உ.வ.);. 2. கழப்பிப் பேசுதல்; to keep back as a matter, to tell indistinctly to evade. ‘அவன் நசுக்கிச் சொல்கிறான்’; 3. தடுத்தல் (வின்.);; to object, rebut, try to defeat. 4. வலிமையால் கீழேதள்ளுதல்; to knock down. ‘சண்டையில் அவனை நசுக்கி விட்டான்’ (இ. வ);. 5. அடித்தல் (இ. வ);; to beat, thrash, “எனக்குச் சினம் வந்தால் உன்னை நசுக்கிவிடுவேன்’ (இக். வ.);: 6. கீழ்ப்படுத்துதல்; to reduce, as haughtiness of a person, to subdue, to ruin, as a family. 7. போராட்டம் உரிமை போன்றவற்றை ஒடுக்குதல்; to squash revolt, freedom etc., ‘தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை நசுக்க, மேலாளர் வன்முறையைக் கையாண்டார் (இ.வ.);. ‘கொடுங்கோலரசு மக்களின் விடுதலை வேட்கையை நசுக்குகிறது’. (இக்.வ.);. க. நசிகு. [நசி → நசுங்கு → நசுக்கு-] நெகிழ்ச்சிக் கருத்தினை விளக்கும் வினையடி. நசுங்கச் செய்தல் என்னும் பொருண்மையுடையது. சிரங்குக் கொப்புளத்தைத் தேய்த்துப் பிதுக்குதலும், மூட்டைப்பூச்சி, பேன் முதலியவற்றை, அழுத்தி அல்லது குத்திக் கொல்லுதலும், யானை உயிரிகளை மிதித்துக் கொல்லுதலும், எதிரிகளை அடக்கி யொடுக்குதலும், பெருங்குடற் காற்றை அடக்கி வெளிவிடுதலும், ‘நசுக்குதல்’ எனும் பொருண்மைப் பற்றியதே. வாழ்வியலில் நிகழும், பலதிறப்பட்ட நெகிழ்வுப் பொருண்மைகளை உள்ளடக்கிய “நசி”. இவ்வாறு, நசுக்குதல் என்னும் நெகிழ்ச்சிக் கருத்து, குமுகாய வாழ்வியலில் மாந்தனுடன் பல்வகையானும், பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. நசுக்கு2 nasukku, பெ. (n.) 1. நெரிவு; bruise. 2. சிறியது (வின்.);; that which is small, little. தெ. நலுசு. [நசி → நசு → நசுக்கு.] |
நசுக்குணி | நசுக்குணி nasukkuṇi, பெ. (n.) 1. சிறியது (யாழ்ப்.);; that which is small. 2. கூழையன் (யாழ். அக);; stunted person. 3. கணங்கி; delaying person. 4. பின்னிடுவோன்; loitering person. 5. தொல்லை செய்வோன்; troubleSome person. [நசுக்கு → நசுக்குணி.] |
நசுக்குத்திரிசமன் | நசுக்குத்திரிசமன் nasukkuttirisamaṉ, பெ. (n.) மறைந்து செய்யும் தீச்செயல் (சென்னை);; secret mischief underhand injury. சமனிலைக் கருத்தினைத் திரித்துச் சொல்லுதல் பற்றியும், மறைத்துச் செய்யும் பொருண்மை குறித்தும், இச்சொல் வழங்கிற்று எனவாம். |
நசுக்குத்துர்ச்சனம் பண்ணு-தல் | நசுக்குத்துர்ச்சனம் பண்ணு-தல் nasukkuddurssaṉambaṇṇudal, 5.செ.கு.வி. (v.i.), 1. மறைவாய்க் குறும்பு செய்தல்; to do secret mischlef 2. தொல்லை செய்தல் (வின்);; to be meddlesome. [நசுக்கு + skt துர்ச்சனம் + பண்ணு-] |
நசுக்குநசுக்கெனல் | நசுக்குநசுக்கெனல் nasukkunasukkeṉal, பெ. (n.) 1. ஒட்டுதற்குறிப்பு: stickiness. 2. தொல்லை செய்தற்குறிப்பு; constant worry. [நசுக்கு + நசுக்கு + எனல்.] |
நசுங்கச்சப்பி | நசுங்கச்சப்பி nasuṅgassappi, பெ. (n.) இவறன்; stingy person, niggard. [நசுங்கல் + சப்பி.] |
நசுங்கலன் | நசுங்கலன் nasuṅgalaṉ, பெ. (n.) நசுங்கலான் பார்க்க;see našurigalāņ. [நகங்கல் → நசுங்கலான்] ‘அன்’சாரியை ஈண்டு உடன்பாட்டுப் பொருளில் வந்துள்ளது. |
நசுங்கலாண்டி | நசுங்கலாண்டி nasuṅgalāṇṭi, பெ. (n.) நசுங்கலான் (யாழ். அக.); பார்க்க;see našungalan [நசுங்கலன் → நசுங்கலான்.] |
நசுங்கலான் | நசுங்கலான் nasuṅgalāṉ, பெ. (n.), 1. உறுதியற்றவன்; one who speaks or acts with indecision, misgiving or hesitation. 2. நசுக்குணி பார்க்க;see našukkuni. [நசுங்கல் + ஆன்.] |
நசுங்கல் | நசுங்கல் nasuṅgal, பெ. (n.) 1. மெலிந்தது; that which is lean, 2. இவறன்; stingy person. 3. நைந்தகாயம் (இ. வ.);; contusion. 4. நசுங்கலான்;see našuñgalàn [நகங்கு → நசுங்கல்] அல்லீற்றுத் தொழிற்பெயர் ஈறு. |
நசுங்கு-தல் | நசுங்கு-தல் nasuṅgudal, 5.செ. கு. வி. (v.i.) 1. நசுக்கப்படுதல். உருக்குலைதல்; to be mashed, to get crushed, bruised. ஓடும் பேருந்திலிருந்து விழுந்தவர், சக்கரத்தில் சிக்கி, நசுங்கிச் செத்தார் (இ.வ);. கீழே விழுந்த அரத்திப்பழம் ஒரு பக்கத்தில் நசுங்கிவிட்டது. விரல் நகங்கிவிடப் போகிறது. கதவைப் பார்த்துச் சார்த்து (இக்.வ.);. 2. கசங்குதல்; to be crumpled, folded, bent as a cloth. 3. பிதுங்குதல்; to be squeezed. pressed, crowded. 4. கருமம் கெடுதல்; to be suppressed, dropped, as an affair 5. நழுவி விடுதல். To fall through, become thushed, die away, as a rumour 6. நிலைகுலைதல்; to be reduced as in circumstances. [நை → நயி → நசி →நசுங்கு-.] நெகிழ்ச்சிக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டது. அழிந்து போதல், நசுங்கி உருக்குலைதல், நைந்துநிலைகெடுதல் என்னும் பொருண்மையில், இச் சொல் மக்களிடத்தே வழக்கூன்றியுள்ளது. நசுக்கப்பட்ட பொருள் உருக்குலையும். உருக்குலைந்து, உருவமழிந்த மாந்தன் சின்னாபின்னமாகிச் சிதைந்து மடிவான். முடிவில், நிலைகுலைவு ஏற்பட்டு வினை அல்லது தொழில் அழிந்துபடும். நை → நயி → நசி → நசு, என்னும் வேரடி, இது போன்ற நெகிழ்ச்சிப் பொருண்மைகளை, உள்ளடக்கியதாகும். |
நசுநசு-த்தல் | நசுநசு-த்தல் nasunasuttal, 4.செ.கு.வி.(v.i.), 1. தடுமாறுதல்; to waver to be undecided in speech or action. 2. தூறிக்கொண்டிருத்தல்; to be continually drizzling ‘நசுநசுத்த மழை” (வின்.);. 3. ஈரமாயிருத்தல்; to be damp, as a floor, 4. தொடக்குழைதல். to be yielding to the touch 5. கையிறுக்கமாயிருத்தல்; to be illiberal. “நசுநசுத்தகுணம்” (வின்.);. 6.தொல்லை (தொந்தரவு); செய்தல் (இ.வ.);; to tease, trouble, க. நசெநசெ. [நொய் → நொசு → நசு → நசுநசு-.] |
நசுநசுப்பு | நசுநசுப்பு nasunasuppu, பெ. (n.) ஈரம், dampness. [நகநசு → நசுநசுப்பு.] |
நசுநசெனல் | நசுநசெனல் nasunaseṉal, பெ. (n.) 1. ஈரக்குறிப்பு: dampness. 2. வளைந்து கொடுத்தற்குறிப்பு; toughness, tenacity. 3. தொல்லை செய்தற்குறிப்பு; troubling. teasing. 4.மழைதூறற்குறிப்பு; drizzling 5. மனம் அலைபாய்தற் குறிப்பு (யாழ்ப்.);, wavering, 6. காலந்தாழ்த்துதற் குறிப்பு: delay 7. மெதுவாயிருத்தற் குறிப்பு softness to the touch, 8. கட்டுநெகிழ்தற் குறிப்பு: looseness [நை → நசு → நசுநசு + எனல்.] நெகிழ்ச்சிக்கருத்தினை வேரடியாகக்கொண்டது. இடைவிடாத நசுநசுத்த மழையால் மண் அல்லது நிலம், கட்டுநெகிழ்வதும், இடையரவுபடாத தொல்லையால், உள்ளம் கட்டுக்குலைந்து நெகிழ்ச்சியுறுதலும், இயல்பே ஆகும். |
நசுநாறி | நசுநாறி nasunāṟi, பெ. (n.) இவறன்; stingy mean person, haggler for a trifling gain in bargains. மறுவ. பிசுநாறி. தெ. பிசிநாறி. [நக + நாறு + இ.] மட்டமான மனத்தினன். மதிப்பில் குறைந்தவன். இழிதகையாளன். குறுகிய நோக்கமுள்ளவன், பெருந்தன்மையற்றவன். அற்பப்பொருட்களையெல்லாம், பேரம்பேசி வாங்குவதில், கைதேர்ந்தவனே இவறன். தன்னலத்தையே குறிக்கோளாகக் கொண்டு, வாழ்க்கை நடத்துபவன். |
நசுபிசு-த்தல் | நசுபிசு-த்தல் nasubisuttal, 4.செ. கு. வி. (v.i.), நசுநசு -(யாழ்.அக.); பார்க்க;see našu-našu. [நசு + பிசு-.] |
நசுபிசெனல் | நசுபிசெனல் nasubiseṉal, பெ. (n.) நசுநசெனல் பார்க்க;see našu-nasenal. [நசு + பிசு +எனல்.] |
நசும்பு | நசும்பு nakampu, பெ.(n.) மீன் வகைகளுள் மிகச்சிறிய வகை; a kind of tiny fish. [அசும்பு-நசும்பு] நசும்பு nasumbu, பெ.(n.) மீன் வகைகளுள் மிகச் சிறிய வகை; a kind of tiny fish. [அகம்பு-நகம்] |
நசுவக்கிரந்தி | நசுவக்கிரந்தி nasuvakkirandi, பெ. (n.) நகங்கிய காயத்தைப் போல் காணப்படும் ஒருவகை கிரந்திப்புண்; a syphlitic sore resembling a bruised wound. [நசு → நசுவம் + Skt கிரந்தி.] நசுவம்= சிறியது. அடிபட்ட சிறியபுண் வடிவில் காணப்படும், சிலந்தி, |
நசுவல் | நசுவல்1 nasuval, பெ. (n.) 1. மெலிந்த-வன்-வள்-து; stunted or emaciated person or beast 2. ஊக்கமற்றவன்-வள் (யாழ்ப்.);: spiritless person. 3. குழப்பமானது (யாழ்ப்.); intricate affair, complication. 4, மலம் (இ.வ.);; excrement 5. நசுக்குணி, (இ. வ.); பார்க்க;see nasukkun. [நசு → நசுவு + அல்.] நசுவல்2 nasuval, பெ. (n.) 1. தொல்லை செய்வோன் ; one who is always teasing. 2. இவறன்; stingy person, miser |
நசை | நசை1 nasaidal, செ. குன்றாவி. (v.t.), 1. அன்பு செய்தல்; to love. “நசைஇயார் நல்கா ரெனினும்” (குறள், 1199);. 2. விரும்புதல்; to desire. “எஞ்சா மண்ணசைஇ” (மணிமே. 19,119);. [நய → நச → நசை.] நசை2 nasai, பெ. (n.) தசைநார்; a bund of fibres by which muscle is attached to the bone. நசை3 nasai, பெ. (n.) 1. விருப்பம் ஆசை; desire, eagerness, avarice. “நசைதர வந்தோர் நசை பிறக் கொழிய” (புறநா. 15);. “நம்பும் மேவும் நசையா கும்மே.” (தொல், சொல். 812);. 2. அன்பு; love, affection. “நசையிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்” (திரிகடு. 94);. 3. நம்பிக்கை; hope, expectation, “அரிதவர் நல்குவ ரென்னு நசை” (குறள், 1156);. 4. ஈரம்: dampness, moisture க. நசெ. [நய → நச → நசை.] நசை4 nasai, பெ. (n.) எள்ளுகை, ஏளனம்; derision. [நகு → நகை → நசை.] நசை5 nasai, பெ. (n.) குற்றம் (யாழ். அக.);; fault, defect. [நசி → நசை.] |
நசைகுநர் | நசைகுநர் nasaigunar, பெ. (n.) நசைநர் (யாழ், அக.); பார்க்க;see nasainar. |
நசைத்துடி | நசைத்துடி nasaittuḍi, பெ.(n.) குளிர் காய்ச்சலின் விளைவால் ஏற்படும் தசைமுறுக்கு; movement of the muscles and tendens in typhoid condition, |
நசைநர் | நசைநர் nasainar, பெ. (n.) நண்பர் (பிங்); friends, lovers, well-wishers. [நசை + நேர்] நய → நச → நசை + கு +நர்] கு=எழுத்துப்பேறு.அர் என்னும் வினைக்குரிய ஆண்பால் இறுதிநிலை, பிற்காலத்தே பெயர்கருதிய நர் இறுதி நிலையாக அமைந்தது. எ.கா. இயக்குநர், நடத்துநர், ஒட்டுநர். |
நசையுநர் | நசையுநர் nasaiyunar, பெ. (n.) நசைநர் பார்க்க; see nasanar. “நசையுநர்க் கார்த்து மிசைபேராள” (திருமுரு. 270);. [நசை +உ + நர்] உகரச்சாரியை, தோன்றி நிற்கிறது. |
நசையுரை | நசையுரை nasaiyurai, பெ. (n.) காதற் பேச்சு (வின்.);; amorous talk. [நசை+உரை.] கருத்தொருமித்த காதலர், தம்முள், ஆராஅன்பினால், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பேசிமகிழும், நயவுரை. |
நசைவினை | நசைவினை nasaiviṉai, பெ. (n.) நற்செயல் (வின்.);; good act [நயம் → நயை → நசை + வினை.] |
நசைவு | நசைவு nasaivu, பெ. (n.) தரையிலுண்டாகும் ஈரம்;(வின்.); moisture of the earth [நச → நசைவு..] |
நச்ச | நச்ச6 nacca, பெ.எ. (adj) சிறிய (வின்.);; little Small. தெ. நட்ச்சு நசுகு. [நசி → நச்சு] |
நச்சம்பச்சை | நச்சம்பச்சை naccambaccai, பெ. (n.) பச்சை நாவி; aconite root. [நச்சம் + பச்சை.] |
நச்சம்பு | நச்சம்பு naccambu, பெ. (n.) நுனியில் நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பு (சங். அக.);; poisoned arrow. [நஞ்சு + அம்பு→நச்சம்பு.] |
நச்சரவு | நச்சரவு naccaravu, பெ. (n.) நஞ்சுள்ள பாம்பு; Poisonous Snake. [நஞ்சு → நச்சு அரவு.] |
நச்சரி | நச்சரி naccari, பெ. (n.) நச்சுப்பொருள் சார்ந்த கரணியங்களினால், உடம்பிலுண்டாகும் ஒரு நமைச்சல்; itching through poisionous effects. [நச்சு + அரி] நாம் உண்ணும் உணவிலும், பருகும் நீரிலும், சுற்றுப்புறச்சூழலில் கலந்துள்ள நச்சுயிரி (நோய் நுண்மங்கள்); களால் உண்டாகும் நமைச்சல். |
நச்சரி-த்தல் | நச்சரி-த்தல் naccarittal, 4. செ.கு.வி. (v.i) ஒருவரிடம் ஒன்றை வேண்டி, எரிச்சலைத் தரும் வகையில் தொடர்ந்து கேட்டல் அல்லது வற்புறுத்துதல்; pester. பணம் கேட்டு நச்சரிக்கின்றான் (உ.வ);. [நச்சு → நச்சரி-] நச்சுதல்=விரும்புதல். |
நச்சரிப்பு _ | நச்சரிப்பு _ naccarippu, பெ. (n.) வெறுப்புண்டாகும் வண்ணம் அலப்பி அல்லது பிதற்றிப் பேசுகை; chattering babbling. மறுவ. தொணதொணப்பு. |
நச்சர் | நச்சர் naccar, பெ. (n.) திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர்; a commentator on Tirukkural. “தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் (தொண்டைசத.40:மேற்);. [நசை → நச்சு + அர்.] நச்சினார்க்கினியரின் குறுக்கம் என்று. சிலர் கூறுவர். ஆனால், இவர் நச்சினார்க்கினியர் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை. நச்சினார்க்கினியர் சிறப்புப் பாயிரத்தில், திருக்குறளுக்கு உரை இயற்றியதாய்க் குறிப்பேதும் இல்லை. ஆதலின் இந் நச்சர், நச்சினார்க்கினியரின் வேறானவர். |
நச்சறுப்பான் | நச்சறுப்பான் naccaṟuppāṉ, பெ. (n.) கழுதைப்பாலை (சா.அக);; common Indian ipecacuanha. [நஞ்சுக்கொடி → நச்சு + அறுப்பான்.] ஒருகா. [நஞ்சறுப்பான் → நச்சறுப்பான்.] கழுதைப்பாலைக் கொடி என்றழைக்கப்படும் நஞ்சறுப்பான் சாறு, அனைத்து வகையான தோல்நோய்கட்கும், கைகண்ட மருந்து என்று. (சா.அக. );கூறும். |
நச்சறுப்பாய்ஞ்சான் | நச்சறுப்பாய்ஞ்சான் naccaṟuppāyñjāṉ, பெ. (n.) நஞ்சறுப்பான் (வின்);பார்க்க;see nanjaruppan. [நச்சு + அறுப்பு + அன், நஞ்சு+ அறு : பாய்ந்தான் → நச்சறுப்பாய்ஞ்சான்.] [நச்சு+அறுப்பு+ஆய்ந்தான் → ஆய்ஞ்சான] என்றும், பிரித்துப் பொருள் கொள்ளலாம். |
நச்சறை | நச்சறை naccaṟai, பெ. (n.) நஞ்சுக்கிருப்பிடம்; a store house of poison. “காமநாளினு நஞ்சுதுய்த்தே னச்சறையாக” (சீவக.2882);. [நஞ்சு + அறை =நஞ்சறை → நச்சறை.] |
நச்சலைக்கூரிகம் | நச்சலைக்கூரிகம் naccalaigārigam, பெ. (n.) எருக்கிலை; madar leaf-calotropis gigantia. |
நச்சாம்பல் | நச்சாம்பல் naccāmbal, பெ. (n.) நச்சுத்தன்மையுடைய ஒருவகை ஆம்பல்; a poisonous species of Indian water lily. [நச்சு + ஆம்பல், நஞ்சு → நச்சு + ஆம்பல்.] |
நச்சி | நச்சி nacci, பெ. (n.) வீணாகப் பேசித் துன்புறுத்துபவள் (வின்.);; gossiping woman. நச்சியாய் இருந்து நாசமாய்ப் போகாதே(இ.வ.);. [நசு → நச்சு .இ.] ‘இ’ சொல்லாக்க ஈறு. |
நச்சினார்க்கினியம் | நச்சினார்க்கினியம் nacciṉārkkiṉiyam, பெ. (n.) தொல்காப்பியத்திற்கு நச்சினார்க்கினியர் இயற்றியவுரை; a commentary on Tolkáppiyam by Naccinärkkiniyar. “விருத்தி நச்சினார்க்கினியமே தனிப்பாடல். பத்துப் பாட்டு பக். 30). [நச்சினார்க்கினியர் → நச்சினார்க்கினியம் நச்சினார்க்கு + இனியம் = விரும் பினோர்க்கு இனியது என்பது பொருள்] |
நச்சினார்க்கினியர் | நச்சினார்க்கினியர் nacciṉārkkiṉiyar, பெ. (n.) தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவகசிந்தமாணி போன்ற நூல்களுக்கு உரையெழுதியவர்; author of commentaries on Tolkáppiyam, kalittogai, pattu-pâttu, Sivaga Šintâmani and other ancient classics. [நச்சினார்க்கு + இனியர் = விரும்பி னோர்க்கு இனியர்] உச்சிமேற்புலவர்கொள் நச்சினார்க்கினியர் என்று. உரையாசிரியர்களால் சிறப்பிக்கப்பட்ட இவர்தம் உரைப்பாங்கு பற்பலவிடங்களில் சிவனியக்கோட்பாடு மிளிரும் தன்மையில் அமைந்துள்ளது. இவர். குறுந்தொகையில் 20 பாடல்களுக்கும். பத்துப்பாட்டில் அமைந்துள்ள பத்துநூல்களுக்கும், கலித் தொகைக்கும், சீவகசிந்தாமணிக்கும். தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் ஆகிய இரு அதிகாரங்களுக்கும், கொண்டு கூட்டுப் பொருள்கோள் உத்தியினைக் கையாண்டு, உரை வரைந்துள்ளார். இவ் வுரை, பற்பலவிடத்தில் சிறப்புரையாகத் திகழ்ந்தாலும், சிற்சிலவிடத்தில் வடமொழி மரபில் அமைந்துள்ளது. அந்தத்தை அணவுவோரே, அந்தணர் என்று உரை வரைந்துள்ளமை, பொருட் பொருத்தப்பாடாகத் தோன்றவில்லை. அந்தணர் என்போர் அறவோர்;அனைவர்மாட்டும் செந்தண்மை பூண்டொழுகும். செம்மாந்த பண்பினரே அந்தணர். எந்தவொரு இனத்தாருக்கும், அந்தணர் பட்டம் உரியதன்று. “குமுகாயத்தில் செந்தண்மை பூண்டொழுகும் சீரிய பண்பினர் அனைவரும் அந்தணரே எனும் வள்ளுவர் வாக்கினுக்கு முரண்பட்டபாங்கினில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நச்சினார்க்கினியர், ஆடவல்லான் திரு நடம்பயிலும் திருச்சிற்றம்பலம் (சிதம்பரம்); என்றழைக்கப்படும், ‘பெரும்பற்றப்புலியூர்’ என்பவற்றை முறையே, “ஆறெழுத்தொரு மொழிக்கும்” “ஏழெழுத்தொரு மொழிக்கும்” எடுத்துக்காட்டாகத் தொல்காப்பியம் எழுத்திகாரத்துமொழிமரபில், “ஒரெழுத்தொருமொழி” என்னும் நூற்பாவின் சிறப்புரையில் எடுத்துக் காட்டி, விளக்கியுள்ள பான்மை, யாவரும் வியக்கத்தக்க வண்ணம் அமைந்துள்ளது. வன்னெஞ்சைத் துளிர்ப்பிக்கும் மணிவாசகனாரின் திருவாசகம், திருச்சிற்றம் பலக்கோவை என்பவற்றினின்று, தமது உரைகளில், பலவிடங்களில் இலக்கிய, இலக்கணப் பொருள்களுக்கன்றித் தத்துவப்பொருளுக்கும், மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ள பாங்கு குறிப்பிடத்தக்கது. திருத்தக்கத் தேவரின் சீவகசிந்தாமணியில், பற்பலபாடல்களுக்குச் சிறப்புரை செய்துள்ளார். “மேகம்மீன்ற” என்று தொடங்கும் 333-ஆம் பாடலில் பயின்று வரும், “போகமீன்ற புண்ணியன்” என்னும் சொற்களுக்குக் கூறியுள்ள சிறப்புரை, சீர்த்திமிக்கது. தொல்காப்பியவுரை முதலியவற்றில், வேதம், வேதாங்கம் முதலிய பலநூல்களிலிருந்தும், பல உரைகளிலிருந்தும், பற்பல அரிய கருத்துக்களை, தமக்கேயுரித்தான கொண்டு கூட்டுப் பொருள்கோள் அமைப்பில், உரைவரைந்துள்ளார். உரையாசிரியர், சேனாவரையர், பேராசிரியர் ஆளவந்தபிள்ளையாசிரியர் முதலானோர் பற்றிய குறிப்பு இவர்தம் உரையில் காணப்படுவதால், ஏனைய உரையாசிரியர்களைவிட காலத்தால் பிற்பட்டவர் என்பது வெள்ளிடைமலை. பரிமேலழகரும், இவரும் சமகாலத்தவர் என்பர். (எ.டு); “குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு” என்னுங்குறளில், குடம்பை என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘கூண்டு’ எனவும், ஆசிரியர் பரிமேலழகர் முட்டையெனவும் கூறியதாகவும், பரிமேலழகரது உரைகேட்ட நச்சினார்க்கினியர், பரிமேலழகர் உரையைப் பலவாறு பாராட்டிப் புகழ்ந்ததாகவும் கூறுவர். |
நச்சினி | நச்சினி nacciṉi, பெ. (n.) கேழ்வரகு (மலை); பார்க்க: see Kelvaragu. 2. நான்காம் திங்கள் எனப் பொருள் கொண்ட மருத்துவக் குழூஉக்குறி (சங்.அக.);; fourth month, a sang of physicians. |
நச்சினியட்டிக்கை | நச்சினியட்டிக்கை nacciṉiyaṭṭikkai, பெ. (n.) 1. புல்வகை; a kind of grass, as Synodon gracilicus, Synodon virgalus, (A);; a species of millet, Cynosurus retroflex. [நச்சினி + அட்டிகை.] |
நச்சிருமல் | நச்சிருமல் naccirumal, பெ. (n.) 1. சிணுக்கிருமல்; slight cough. 2. அடிக்கடி ஏற்படும் மெல்லிய இருமல்; a short feeble and frequent cough-Hacking cough. [நச்சு + இருமல், நச்சு = சிறிய] |
நச்சிலக்கியம் | நச்சிலக்கியம் naccilakkiyam, பெ. (n.) பணம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் உணர்வுகளைக் கீழ்த்தரமாகத் தூண்டும் வகையில், எழுதப்படும் நூல்; pulp literature. [நச்சு + இலக்கியம்.] |
நச்சிலை | நச்சிலை naccilai, பெ. (n.) 1. நாய்ப்பாலை; dog paulay. 2. நாய்ப்பாலை பார்க்க;see maccaruppan, 3. நஞ்சுத்தன்மையுடைய இலை; poisonous leaf. [நச்சு + இலை.] |
நச்சிலைக்கூமா | நச்சிலைக்கூமா naccilaikāmā, பெ. (n.) பச்சிலை மருந்து வகையு ளொன்று; a kind of herbal medicine. |
நச்சிலைவேல் | நச்சிலைவேல் naccilaivēl, பெ. (n.) நஞ்சூட்டியவேல்; poisonous spear. “நச்சிலை வேற் கோக்கோதை நாடு” முத்தொள்.110). [நஞ்சு → நச்சு + இலை + வேல்.] |
நச்சிளி | நச்சிளி nacciḷi, பெ. (n.) நச்சினி.1 (சங்..அக.); பார்க்க;see naccinit. [நச்சினி → நச்சிளி] |
நச்சீடு | நச்சீடு naccīṭu, ,பெ.(n.) தொந்தரவு trouble, hindrance. மறுவ. நச்சரவு [நச்சு+ஈடு] நச்சீடு naccīṭu, பெ.(n.) தொந்தரவு trouble, hindrance. மறுவ, நச்சரவு [நச்சு+ஈடு] |
நச்சு | நச்சு1 naccudal, 5 செ.குன்றா.வி. (v.t) விரும்புதல்; to desire, long for, like, love. “ஒருவரா னச்சப்படாஅ தவன்” (குறள்,1004);. “ஞாலமே கரியாக நானுனை நச்சி நச்சிட வந்திடும்” (திருவாச.30:19);. தெ.. க., நச்சு, நர்சு. கோத. நச். [(நூல்); → நல் → நள் → நய் → நய- → நச. நச → நசு → நச்சு-.] ‘நுல்’ எனும் பொருந்துதற்கருத்து வேரினின்று கிளைத்த சொல். நச்சுதல் என்பது யாதெனின், ஒத்த கருத்துடையோர் நட்புச் செலுத்துதல், விரும்புதல் எனும் பொருண்மையில் பொருந்திவரும். பொருந்துதற் கருத்தினின்று. விருப்பக்கருத்து தோன்றும். ஒருவரையொருவர். உள்ளநிலையிலும், உணர்வு நிலையிலும், நெடுங்காலம் பொருந்தி, நட்புச் செய்து, ஆராஅன்பில் திளைத்து மாறாக் காதலராக மாறுவர். நச்சு2 naccudal, 5 செ.கு.வி. (v.i.) அலப்புதல்; to babble, prate. எப்போதும் நச்சிக் கொண்டிருக்கிறான் (உ.வ);. தெ. நசுகு. க. நக்த. [நசு → நச்சு.] வீணாகப் பிதற்றுதல். பயனற்ற சொற்களையே, பலகாலும் பேசுதல்; பொருத்தமற்ற சொற்களை, பொருத்தமற்ற இடத்திற் போசி, உளறுதல். முன்னுக்குப்பின் தொடர்பற்ற முறையில் பேசுதலும், நச்சுதலே. இந் நிலையில் பிறரைப் புண்படுத்தும் நோதற்கருத்துச் சொற்களுள் ஒன்றாகத் தேநேயர் வகைப்படுத்துகிறார். நச்சு3 naccudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. துன்பம் செய்தல்; தொல்லைப் படுத்துதல்; to tease. 2. எரிச்சலூட்டுதல்; to vex. 3. கவலையூட்டுதல்; to trouble. எப்போதும் என்னை நச்சாதே (உ.வ.);. தெ. நட்ச்சு. [நசு + நச்சு-] இஃதும், நோதற்கருத்துச்சொல்லாகும். பிறர்தம் உள்ளத்தை அலைக்கழித்தல்;மாற்றார்தம் மனத்தைக் கலக்கிக் கவலைப்படுத்துதல், எனும் கருத்தில், இச்சொல் வழக்கூன்றியுள்ளது. நச்சு4 naccu, பெ. (n.) 1. ஆசை (சூடா);; desire, hankering, liking. 2. விரும்பப்படும் பொருள்; desired object. “பொருளுரையாளர் நச்சுக் கொன்றேற்கு” (சிலப். 16:66);. தெ. க, நச்சு. [நசை → நச்சு] நீண்டநாள் விருப்பத்தின் விளைவாக ஏற்படும் ஆசை. ஆராக்காதலால் ஏற்படும் நசையும், நயப்பும், பொருந்துதற் கருத்தின் வெளிப்பாடே என்றறிக. நச்சு5 naccu, பெ. (n.) 1. துன்பம், தொல்லை (இ.வ);; trouble, worry. 2. அலப்பல்i; babble. “நச்சுப்பிடித்தவன்” (வின்);. 3. காலக்கழிவு; delay, procrastination. வேலையில் நச்சாயிருக்கக் கூடாது (உ.வ);. மறுவ, நெடுநீர்மை. [நக → நச்சு] |
நச்சுகை | நச்சுகை naccugai, பெ. (n.) எப்பொழுதும் மடந்தையர்பால், இணைவிழைச்சில், நாட்டங்கொள்ளுகை; growing lust. [நச்சு → நச்சுகை] |
நச்சுக்கண் | நச்சுக்கண் naccukkaṇ, பெ.(n.) கொடும்பார்வை (வின்.);; the evil eye. மறுவ. தீக்கண். தெ. நட்ச்சு. [நஞ்சு → நச்சு + கண்.] |
நச்சுக்கத்தி | நச்சுக்கத்தி naccukkatti, பெ. (n.) நஞ்சூட்டிய கத்தி (வின்.);; poisoned knife. 2. மிகக் கெட்டவன்-ள்; wicked person. [நஞ்சு → நச்சு + கத்தி] |
நச்சுக்காய்ச்சல் | நச்சுக்காய்ச்சல் naccukkāyccal, பெ. (n.) நஞ்சுச் சுரம்; severe fever. ‘முறைக்காய்ச்சல் என்பது நச்சுகாய்ச்சல் வகையினது’ (உ.வ);. [நஞ்சு → நச்சு + காய்ச்சல்.] |
நச்சுக்காற்று | நச்சுக்காற்று naccukkāṟṟu, பெ. (n.) 1. நச்சுக்காற்று; unhealthy wind. 2. மாசுள்ள காற்று); noxious air. [நச்சுக் + காற்று.] 1 நச்சுத்தன்மையுள்ள காற்று. புகை நமக்குப்பகை என்னும் தொடர்ப்பொருளை, இச் சொல் உணர்த்தும். |
நச்சுக்காளான் | நச்சுக்காளான் naccukkāḷāṉ, பெ. (n.) நஞ்சுக்காளான் பார்க்க see nanju-k-kalan. [நஞ்சு → நச்சு + காளான்.] இக் காளானை உண்டவர் உயிரிழப்பர் என்பதைப் பெயரினாலேயே அறியலாம். [P] |
நச்சுக்குருவி | நச்சுக்குருவி naccukkuruvi, பெ. (n.) தீயோன் (இ.வ.);; bad fellow. [நச்சு + குருவி.) உவமையாகுபெயர். |
நச்சுக்குழல் | நச்சுக்குழல்1 naccukkuḻl, பெ. (n.) பெரியகுழல்; long -tube. [நச்சு + குழல்.] நச்சுக்குழல்2 naccukkuḻl, பெ. (n.) 1. சுங்குத்தான் குழல் பார்க்க: see Sunguttan kulal. 2. தொலைநோக்கிக் கண்ணாடி பார்க்க;see tolai-nõkki-k-kannādi. [நஞ்சு → நச்சு + குழல்.] |
நச்சுக்கெளளி | நச்சுக்கெளளி naccukkeḷaḷi, பெ. (n.) நஞ்சுப் பல்லி 2. (நாஞ்); பார்க்க; see nanju-p-palli. [நஞ்சு + கெளளி → நச்சுக் கெளளி. கெளளி=கவ்வு உளி.] |
நச்சுக்கொடி | நச்சுக்கொடி naccukkoḍi, பெ. (n.) நஞ்சுக் கொடி. வின்) பார்க்க; see nanju-k-kodi. [நஞ்சு → நச்சு + கொடி.] |
நச்சுக்கொடிச்சுண்ணம் | நச்சுக்கொடிச்சுண்ணம் naccukkoḍiccuṇṇam, பெ. (n.) நஞ்சுக் கொடியால் செய்யப்பட்டதும், நச்சு வயிற்றுப் போக்கு நீங்கக் கொடுப்பதுமாகிய சூரணம் (வின்);; a medicinal powder prepared from the afterbirth, used in cholera. [நஞ்சுக் கொடி + சுண்ணம்: நஞ்சுக் கொடிச் சுண்ணம் → நச்சுக் கொடிச் சுண்ணம்.] |
நச்சுக்கொடுக்கு | நச்சுக்கொடுக்கு naccukkoḍukku, பெ. (n.) தேளின் கொட்டும் உறுப்பு முனை; sting of Scorpion. [நஞ்சு → நச்சு + கொடுக்கு.] [P] |
நச்சுக்கொட்டை | நச்சுக்கொட்டை naccukkoṭṭai, பெ. (n.) 1. இலச்சை கெட்டமரம்; lettuce tree. 2. எட்டிக்கொட்டை; nuxvomica nut [நஞ்சு → நச்சு + கொட்டை] |
நச்சுக்கொட்டையிலை | நச்சுக்கொட்டையிலை naccukkoṭṭaiyilai, பெ. (n.) உடம்பிலுண்டாகும் வளித் தொல்லையைப் போக்கும் கீரை; a kind of edible leaf eaten for curing the morbid wind. in the system. [நச்சுக்கொட்டை + இலை.] |
நச்சுச்சொல் | நச்சுச்சொல் naccuccol, பெ. (n.) 1. செய்யுளில் வழங்கக்கூடாத தீச்சொல்; inauspicious words to be avoided in a poetic composition. 2. கொடுஞ்சொல்; malicious language. [நஞ்சு + சொல் = நஞ்சுச்சொல் → நச்சுச்சொல்] |
நச்சுத்தடைமலக்குழி | நச்சுத்தடைமலக்குழி naccuttaḍaimalakkuḻi, பெ. (n.) திடக்கழிவுப் பொருட்களை மட்கும்படி செய்வதற்கான ஒர் அமைப்பு; septic tank. மறுவ : அழுகுதொட்டி. [நஞ்சு + தடை + மலம் + குழி.] |
நச்சுத்தலை | நச்சுத்தலை naccuttalai, பெ. (n.) 1. பாம்பின் தலை; head of a serpent containing poison. 2. நச்சுத்தலைவலி பார்க்க: see naccu-t-talai-vali. [நஞ்சு → நச்சு + தலை.] |
நச்சுத்தலைவலி | நச்சுத்தலைவலி naccuttalaivali, பெ. (n.) 1. அடிக்கடி உண்டாகும் மெல்லிய தலைவலி; slight head-ache, coming frequently. 2. நச்சுத்தன்மையினால் உண்டாகும் தலைவலி; head-ache due to systemic poisoning, Toxic head – ache. [நஞ்சு → நச்சு + தலைவலி] |
நச்சுத்தானம் | நச்சுத்தானம்1 naccuttāṉam, பெ. (n.) சிற்சில காலங்களில் ஆடவர் தொட மகளிர்க்கு வெறுப்புண்டாக்கும் உடலுறுப்பு (கொக்கோ); (சங்.அக.);; parts of a women’s body which, if touched by men on certain days are supposed to excite a feeling of disgust. [நஞ்சு + தானம்.] நச்சுத்தானம்2 naccuttāṉam, பெ. (n.) கொக்கோக நூலின்படி பெண்களுடம்பில் அமைந்திருக்கும் அமுத நிலைக் கேழாமிடம்; certain parts of the female body, which if touched by men as per rules laid down in the erotic science of kokkugha muni arem supposed to produce disgust. |
நச்சுத்திரல் | நச்சுத்திரல் naccuttiral, பெ. (n.) நச்சுத்தன்மை 2. உண்டாக்கல்; a general intoxication due to the presence of poison is the system. [நச்சு + திரல்.] |
நச்சுத்தீனி | நச்சுத்தீனி naccuttīṉi, பெ.(n.) அடிக்கடி தின்னும் தின்பண்டம். (கொ.வ.வ.சொ.95);; snacks taken frequently. மறுவ. நொறுக்குத்தீனி, மேல்தினி [நை-நச்சு+தீனி] நச்சுத்தீனி naccuttīṉi, பெ.(n.) அடிக்கடி தின்னும் தின்பண்டம். (கொ.வ.வ.சொ.95);; snacks taken frequently. மறுவ, நொறுக்குத்தீனி, மேல்தினி [நை-நச்சு+தீனி] |
நச்சுநச்செனல் | நச்சுநச்செனல் naccunacceṉal, பெ. (n.) 1. தொந்தரவு செய்தற் குறிப்பு; importuning, teasing, troubling. 2. ஒசையிடுதற் குறிப்பு; Smacking, as the lips, tapping, as with the fingers. 3. அடுத்தடுத்துப் பல்லி சொல்லுதற் குறிப்பு (பே.வ.);; chirping of the lizard. [நச்சு +நச்சு + எனல.] |
நச்சுநா | நச்சுநா naccunā, பெ. (n.) கொடிய சொற்களைப் பேசும் நாக்கு; dangerous tongue. [நஞ்சு → நச்சு + .நா.] |
நச்சுநீர் | நச்சுநீர் naccunīr, பெ. (n.) 1. நஞ்சுத் நஞ்சுத் தன்மையுள்ள நீர்; poisonous liquid. 2. கெட்ட நீர்; unpure or morbid liquid. மறுவ. தீயநீர். [நச்சு + நீர்] |
நச்சுப்படைக்கலம் | நச்சுப்படைக்கலம் naccuppaḍaikkalam, பெ. (n.) நஞ்சு தோய்க்கப்பட்ட படைக்கலம் (வின்.);; poisoned weapon. [நஞ்சு → நச்சு + படைக்கலம்.] |
நச்சுப்பண்டம் | நச்சுப்பண்டம் naccuppaṇṭam, பெ.(n.) கேடு விளைவிக்கக் கூடிய நுண்ணுயிரியால் (பாக்டீரியாவால்); கெட்டுப்போன உணவுப் பொருள்கள்; poisonous eatable items. ‘நச்சுப்பண்டம் உடல் நலத்தைக் கெடுக்கும். (உ.வ.);. [நஞ்சு → நச்சு + பண்டம்.] |
நச்சுப்பதார்த்தம் | நச்சுப்பதார்த்தம் naccuppatārttam, பெ. (n.) ஈயம், சாறு, நஞ்சு போன்ற தீய தன்மையுடைய பொருள்கள்; poisonous Substances such as lead, mercury arsenic etc. [நச்சு + Skt. பதார்த்தம்.] |
நச்சுப்பல் | நச்சுப்பல் naccuppal, பெ. (n.) 1. காளி, காளாத்திரி, யமன். யமதூதி என்னும் பாம்பின் நச்சுப்பற்கள் (சீவக. 1288, உரை);, poisonous fangs of a serpent four in number, viz., kāļi, kālāttiri, yamaŋ, yamatudi. 2. தீப்பயன் விளைக்கும் பல் (உ.வ.);; Venomous tooth, as of one whose imprecations are believed to take effect. [நஞ்சு → நச்சு + பல்.] |
நச்சுப்பல்லன் | நச்சுப்பல்லன் naccuppallaṉ, பெ. (n.) கொடிய சொல்லுடையோன்; one whose words are illomened or venomous. அவன் நச்சுப்பல்லில் விழாதே (உ.வ.);: நாத்தப் பல்லனை நாடினாலும் நச்சுப்பல்லனை நாடாதே (பழ);. மறுவ, கொடும்பல்லன், தீவாயன். [நச்சு + பல்லன்.] பிறரைப் புண்படுத்தும் தீயசொற்களைப் பலுக்கும் இயல்பினன். கொடுஞ் சொற்களாலேயே, இன்னல்தரும் தன்மையன். “அவன் நச்சுப்பல்லில் விழுந்து வீணாகக் கெட்டழியதே”, நச்சுப்பல்லன் வீட்டிற்கு நல்லவன் போக மாட்டான் (உ.வ.);. போன்ற உலகவழக்குகள், இன்றும் நாட்டுப்புறத்தே வழங்குகின்றன. நஞ்சு உடலுக்குத் தீங்கு பயத்தல் போல், கொடுமையாளர்தம் நச்சுப்பற்களினின்று வெளிப்படுஞ் சொற்கள். மனவுணர்வை மாசுபடுத்துவன. |
நச்சுப்பல்லி | நச்சுப்பல்லி1 naccuppalli, பெ. (n.) செய்வினையில் (பில்லி சூனியத்தில்); பயன்படுத்துதற்குரிய எச்சத்தை யிடுவதும், புள்ளி கொண்டதுமான பல்லி வகை (வின்.);: a spotted wall-sizard whose excrement is used in witchcraft. 2. தீப்பயனைக் குறிப்பதாகக் கருதப்படும் பல்லிச்சத்தம்; the chrip of a lizard which is supposed to prognosticate evil. 3. தீப்பயனை விளைப்பதாகக் கருதப்படும் சொல்லுள்ளவள்; a woman’s having an evil tongue. [நச்சு + பல்லி. புல்லி → பல்லி] நச்சுப்பல்லி2 naccuppalli, பெ. (n.) நச்செலி2 பார்க்க; see nacceli2. [நஞ்சு + பல் + இ.] பல்லில் நஞ்சுத் தன்மையுள்ள எலி, “இ” சொல்லாக்க ஈறு. |
நச்சுப்பாம்பு | நச்சுப்பாம்பு naccuppāmbu, பெ. (n.) நஞ்சு மிகுதியாகக் கொண்ட பாம்பு; poisonous Snakes. [நஞ்சு → நச்சு + பாம்பு.] நஞ்சினை மிகுதியாகக் கொண்டதும். தீண்டியவுடன் உயிரைப் போக்குவதுமான, நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் போன்ற நச்சுப்பாம்புகள். சாம்பசிவ மருத்துவ அகரமுதலியில், 64-வகை நச்சுப்பாம்புகள் குறிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு. 1._ஆடுபாம்பு = 8 வகை. 2. நச்சுப்பல்பாம்பு = 6 வகை. 3. கண்ணாடிவிரியன் = 4 வகை. 4. புடையன்பாம்பு = 6 வகை. 5. சாரைப்பாம்பு = 3 வகை. 6. சுருட்டைப்பாம்பு = 4 வகை. 7. கூழைப்பாம்பு = 2 வகை. 8. கொம்பேறிமூக்கன் = 2 வகை. 9. சாணாகமூக்கன் = 2 வகை. 10. வழலைப்பாம்பு = 6 வகை. 11. தண்ணீர்ப்பாம்பு = 6 வகை. 12. பச்சைப்பாம்பு (அல்லது கண்குத்திப்பாம்பு = 2 வகை. 13. இருதலைமணியன் = 1. 14. மலைப்பாம்பு = 5 வகை. 15. பூநாகம் = 1. 16. மண்ணுளிப்பாம்பு = 6 வகை |
நச்சுப்பார்வை | நச்சுப்பார்வை naccuppārvai, பெ. (n.) 1. காமப் பார்வை (யாழ்ப்.);: amorous looks. 2. கண்ணூறு (வின்.);: evil look 3. சினப்பார்வை (வின்.);: angry –look 4. கொடிய பார்வை; harsh look [நச்சு + பார்வை.] |
நச்சுப்பால் | நச்சுப்பால் naccuppāl, பெ. (n.) 1. சீழ்ப்பால் (சா. அசக);; the first milk drawn from a cow after calving. 2. கள்ளிப்பால்; the milky juice of Indian spurge. 3. நஞ்சு கலந்தபால்; milk mixed with poison. 4. குழந்தைகட்கு இணங்காத பால்; milk not suited to children. 5. சீம்பால்; beestings (செ.அக.);, [நஞ்சு → நச்சு + பால்.] நஞ்சுத் தன்மை கலந்த சீழ்ப்பால், கள்ளிப்பால் முதலானவை. குழந்தைகட்கு ஒவ்வாத பால்வகைகள். |
நச்சுப்பிச்சு | நச்சுப்பிச்சு naccuppiccu, பெ. (n.) 1. ஒயாத் தொல்லை (இ.வ.);; ceaseless trouble. 2. அலப்புகை; incessant chattering. [நச்சு + பிச்சு.] |
நச்சுப்புகை | நச்சுப்புகை naccuppugai, பெ. (n.) சில பொருள்களை எரிப்பதாலுண்டாகும் நச்சுப்புகை; poisonous smoke. [நஞ்சு → நச்சு + புகை] |
நச்சுப்புல் | நச்சுப்புல் naccuppul, பெ. (n.) உண்டவர்க்கு நோய் விளைவிக்கும் புல்; a kind of poisonous grass, causing sickness when eaten, “பிறர்க்குப் பிணியை வருவிக்கும் நச்சுப்புல்லோடு ஒப்பர்’ (நான்மணி. 13. உரை);. 2. சிவப்புநிறமுள்ள நச்சுப்புல்; a red variety of poisonous grass. [நஞ்சு → நச்சு + புல்.] |
நச்சுப்பூடு | நச்சுப்பூடு naccuppūṭu, பெ. (n.) நஞ்சுத்தன்மையுள்ள மூலிகை; a poisonous variety of plant. [நஞ்சு → நச்சு + பூண்டு → பூடு = கொடும் நச்சுத் தன்மையுள்ள செடி.1] |
நச்சுப்பெண் | நச்சுப்பெண் naccuppeṇ, பெ. (n.) 1. ஆண்களைக் கட்டித் தழுவி, தன் உடம்பில் ஏறியுள்ள நஞ்சு, அவனுக்கும் பரவும்படி செய்யும் பெண்; a woman who is trained by feeding her with poisonous food, until her embrace is rendered sufficient to poison the system of any ordinary man 2. கொடுஞ் சொல்லுடையோள்; a woman with harsh words. [|நஞ்சு → நச்சு + பெண் → நச்சுப்பெண். = கொடிய நஞ்சினையுமிழும் தீநாக்குடைய பாம்பு போல், நச்சுத் தன்மையை நெஞ்சில் கொண்டவள்.] |
நச்சுப்பொடி | நச்சுப்பொடி1 naccuppoḍi, பெ. (n.) நஞ்சு கலந்த தூள்i; a powder containing the essence of poison. 2. சொக்குப்பொடி; a narcotic powder inducing giddiness of sleep. [நஞ்சு → நச்சு + பொடி.] மயக்கத்தையும், உறக்கத்தையும் உருவாக்கும், நஞ்சுப்பொடி. நச்சுப்பொடி2 naccuppoḍi, பெ. (n.) சிறுமீன் (வின்.);; small fish. [நஞ்சு → நச்சு + பொடி, பொடி = மிகச்சிறிய.] |
நச்சுப்பொய்கை | நச்சுப்பொய்கை naccuppoykai, பெ. (n.) நஞ்சுநீர் நிறைந்த நீர்நிலை; a tank of poisonous water. “நச்சுப்பொய்கைச், சுருக்கம்” (பாரத);. [நஞ்சு → நச்சு + பொய்கை.] [பெய்கை → பொய்கை.] |
நச்சுமண் | நச்சுமண் naccumaṇ, பெ. (n.) வேதிமப் பொருள்களால் நஞ்சேறியமண்; soil spoled with excess chemicals. [நஞ்சு → நச்சு மண்.] |
நச்சுமனார் | நச்சுமனார் naccumaṉār, பெ. (n.) கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (வள்ளுவமா, 45);; a poet of the last Šangam இவர் மிகச்சிறந்த இலக்கணப்புலவர் திருக்குறளில் அமைந்துள்ள இலக்கணக் கூறுகளான எழுத்து, சொல், பொருள், யாப்பு அணி முதலான ஐவகைப் பொருண்மையும் நிறைவாகத் திகழும் வண்ணம் திருவள்ளுவமாலையுள் பாடியுள்ள பாடல் வருமாறு: “எழுத்து அசை சீர்அடி சொற்பொருள் யாப்பு வழுக்கில் வனப்(பு); அணிவண்ணம்-இழுக்(கு); இன்றி என்(று); எவர் செய்தன எல்லாம் இயம்பின இன்(று); இவர் இன் குறள்வெண்பா.” |
நச்சுமரம் | நச்சுமரம் naccumaram, பெ. (n.) எட்டி முதலிய நச்சு மரங்கள்; poisonous tree. “நடுவூரு ணச்சு மரம் பழுத்தற்று” (குறள், 1008);. [நஞ்சு → நச்சு + மரம்.] |
நச்சுமருந்து | நச்சுமருந்து naccumarundu, பெ. (n.) நஞ்சு கலந்த மருந்து; medicine prepared with poisonous drugs. [நஞ்சு → நச்சு + மருந்து.] |
நச்சுமழை | நச்சுமழை naccumaḻai, பெ. (n.) 1. காலந்தப்பிப் பெய்து கேடு விளைக்கும் மழை; unhealthy or injurious rain, being untimely. 2. தொடர்ந்து பெய்யும் சிறுதூறல்; Continuous drizzle. [நஞ்சு → நச்சு + மழை.] |
நச்சுமிழ்நீர் | நச்சுமிழ்நீர் naccumiḻnīr, பெ. (n.) நஞ்சுத்தன்மையுடைய வாய் நீர்; saliva containing certain toxius, poisonous saliva Venomos saliva. [நஞ்சு → நச்சு + உமிழ்நீர்] |
நச்சுமீன் | நச்சுமீன் naccumīṉ, பெ. (n.) கேடு விளைவிக்கும் மீன்; poisonous and dangerous fish. [நஞ்சு → நச்சு + மீன்.] [P] |
நச்சுமுறிவு | நச்சுமுறிவு naccumuṟivu, பெ. (n.) உடலிலும், உணவிலுமுள்ள நஞ்சுத்தன்மையைப் போக்கும் மருந்து; anti-Oxidants. [நச்சு + முறிவு.] உடம்பிலுள்ள உயிரணுக்கள் சிதைவுறாமலும், நோய் உயிரிகள் நுழையாமலும், காக்கும் மருந்து. |
நச்சுமுறிவுமருந்து | நச்சுமுறிவுமருந்து naccumuṟivumarundu, பெ. (n.) 1. இஞ்சி; ginger 2. வெங்காயம்; onion. 3. வெள்ளைப்பூண்டு; garlic. 4. மஞ்சள்; turmeric. 5. மிளகு; pepper. 6. மிளகாய்i; chilli. 7. ஏலக்காய்; cardamom. [நச்சுமுறிவு + மருந்து.] |
நச்சுமுள் | நச்சுமுள் naccumuḷ, பெ. (n.) கேடு விளைவிக்கும் முள்; poisonous thorn. சீமைக் கருவேலமரம் நச்சுமுள்ளைக் கொண்டது (உ.வ.);. [நஞ்சு → நச்சு + முள்.] |
நச்சும்பிச்சும் | நச்சும்பிச்சும் naccumbiccum, பெ. (n.) அற்பச்செயல் (வின்.);; insignificant things, trifles. மறுவ. அற்ப சொற்பம். [நச்சுப்பிச்சு → நச்சும்பிச்சும் = மரபிணைமொழி.] |
நச்சுயிரி | நச்சுயிரி naccuyiri, பெ. (n.) கேடு விளைவிக்கும் நஞ்சினைக் கொண்ட உயிரி; poisonous beings. நல்லபாம்பு கொடிய நச்சுயிரி (உ.வ.);; [நஞ்சு → நச்சு + உயிரி] |
நச்சுறுத்தல் | நச்சுறுத்தல் naccuṟuttal, தொ.பெ. (vbl.n) ஆசை உண்டாக்கல்; to make wish. பேராசை கொள்ளல், துன்பத்திற்குக் கரணியமானது. நச்சுப்போன்றது. |
நச்சுறுப்பான் | நச்சுறுப்பான் naccuṟuppāṉ, பெ. (n.) நஞ்சறுப்பான் பார்க்க; see nanjaruppan. [நச்சு + உறுப்பான்.] |
நச்சுளி | நச்சுளி naccuḷi, பெ. (n.) சிறு கடல்மீன் வகை; a small sea -fish. Opisthognathus rosenberg. |
நச்சுழி | நச்சுழி naccuḻi, பெ.(n.) நற்சுழி பார்க்க; see narculi [(நல்); →நற்சுழி →நச்சுழி] நச்சுழி naccuḻi, பெ.(n.) நற்சுழி பார்க்க see narculi [நல்)→ நற்சுழி →நச்சுழி] |
நச்சுவலி | நச்சுவலி naccuvali, பெ. (n.) மெல்லுவது போல், உடம்பிற்காணும் குத்தல்; gnawing pain in the body. [நச்சு + வலி] உடம்பில் அடிக்கடி அல்லது விட்டுவிட்டு உண்டாகும் வலி, |
நச்சுவலை | நச்சுவலை naccuvalai, பெ. (n.) ஒருவகை மீன்வலை (பரதவர்);; a fishing net. [நஞ்சு + வலை → நச்சுவலை.] நஞ்சானும் குஞ்சானுமாகவுள்ள மிகச்சிறிய மீன்களைப் பிடிக்க உதவும், சிறுகண் வலை; [நஞ்சு → நச்சு → நசு.] நசுக்கு = சிறியது [நச்சு + வலை.] |
நச்சுவளி | நச்சுவளி naccuvaḷi, பெ. (n.) நச்சுப்புகை; poisonous gas. த.வ. நச்சுப்புகை [நச்சு+புகை] |
நச்சுவாக்கு | நச்சுவாக்கு naccuvākku, பெ. (n.) 1. தீ வாக்கு (வின்.);; evil words. அவன் நச்சுவாக்கில் விழாதே (உ.வ.);; 2. கேடு விளைவிக்கும் சொல்; malignant words. மறுவ. தீச்சொல். [நஞ்சு வாக்கு.] நஞ்சு உடலுக்கு ஊறு விளைவிப்பது போல், பிறருக்குக் கேடு அல்லது பொல்லாங்கு தரும், தீச்சொல். |
நச்சுவாயன் | நச்சுவாயன் naccuvāyaṉ, பெ. (n.) ஓயாமற் பிதற்றுபவன்; babbler, talkative man. ‘நச்சுவாயன் வீட்டிலே நாறுவாயன் பெண் கொண்டது போல (பழ);. மறுவ, அலப்புவாயன். [நசு → நச்சு + வாய் + அன் → நச்சுவாயன் இடைவிடாது பெய்யும் சிறுதுறல்போல், ஒயாது பேசும் இயல்பினன்.] ஒளிவுமறைவான செய்திகளை வெளிப்படையாகப் பேசிப் பிதற்றுபவன்; என்று, (சா.அக); கூறும். |
நச்சுவாயு | நச்சுவாயு naccuvāyu, பெ. (n.) உப்புக்காற்று; nitrogen gas. மறுவ. சவட்டுவெடியம். [நச்சு → Skt வாயு.] வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம். |
நச்சுவாய் | நச்சுவாய்1 naccuvāy, பெ. (n.) கேடு விளைவிக்கும் வாய் (வின்.);; mouth of one whose imprecations are believed to take effect. [நஞ்சு → நச்சு + வாய்.] தீய சொற்களைக் கூறிப் பிறருக்குக் கேடு பயக்கும் நஞ்சுத்தன்மையுள்ள வாய். பிறர்தம் உள்ளத்தில் எஞ் ஞான்றும் நிலைத்திருக்கும் வண்ணம், நீங்காத வடுப்போல், பிறரைச்சவிக்குந் தன்மையுள்ள வாய். பிறரை நாவினால் சுடுந்தன்மையுள்ள வாய். நச்சுவாய்2 naccuvāy, பெ. (n.) நச்சுவாயன் பார்க்க; seе пассu-vӑyan. [நச்சு + வாய்.] எப்போதும், எந் நிலையிலும் தீச் சொற்களையே பேசும் வாய். |
நச்சுவார்த்தை | நச்சுவார்த்தை naccuvārttai, பெ. (n.) கடுஞ்சொல்; harsh words. [நச்சு + skt வார்த்தை.] உயிரைக் கொல்லும் நஞ்சுபோல் மனத்தைப் புண்படுத்தும் பழிச்சொல் பிறர்தம் உள்ளத்தில் அழியாது நிலைத்த வடுவினை யேற்படுத்தும், சொல். பிறரைச்சவித்து, இறப்பினை ஏற்படுத்தும் இழிவுச்சொல். இக் கருத்தினையே, வள்ளுவப் பெருந்தகையும், “தீயினாற்கட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்டவடு” (குறள்,129); என்று, குறித்துள்ளார். |
நச்சுவால் | நச்சுவால் naccuvāl, பெ. (n.) சாரைப்பாம்பின் நஞ்சுள்ள வால்; a tail of rat-snake. [நஞ்சு → நச்சு + வால்.] |
நச்சுவாள் | நச்சுவாள் naccuvāḷ, பெ. (n.) நஞ்சு பூசப்பட்ட வாள்; poisonous sword. [நஞ்சு → நச்சு + வாள்.] பகைவரைக் கொல்லுதற்பொருட்டு, வாளின் நுனியில், நஞ்சு பூசிய நச்சுவாள். |
நச்சுவி | நச்சுவி naccuvi, பெ. (n.) பேய்க்கரும்பு; devil Sugarcane. மறுவ. நச்சுக்கரும்பு. [நச்சு + இ.] தோற்றத்தில் கரும்பினைப்போன்றிருந்தாலும், கடித்துச் சுவைக்கும் போது உவர்ப்புச் கவைத் தருந்தன்மைத்து. |
நச்சுவிறகு | நச்சுவிறகு naccuviṟagu, பெ. (n.) கெட்ட செயல்களுக்குப் பயன்படும் நச்சுவிறகு (யாழ். அக.);; poisonous fuel, used in Witchcraft. [நச்சு + விறகு] நச்சுத்தன்மையுள்ள விறகு, பிறருக்குத் தீச் செயல் செய்தற்பொருட்டும். செய்வினை வைத்தல் போன்ற தீயநிகழ்வுகளின் பொருட்டும் பயன்படுத்தும் விறகு. நஞ்சுத்தன்மையுள்ள எட்டி, கள்ளி, நாபி போன்றவற்றின் விறகு. |
நச்சுவேர் | நச்சுவேர் naccuvēr, பெ. (n.) நச்சுத் தன்மையுள்ள வேர்; poisonous root. [நஞ்சு → நச்சு + வேர்] |
நச்சுவேலை | நச்சுவேலை naccuvēlai, பெ. (n.) தொல்லை உண்டாக்கும் வேலை (இ.வ.);; work causing worry, troublesome piece of work. [நச்சு + வேலை.] பிறர்க்குப் பொருட்சிதைவை உண்டாக்கும் வேலை, தீயவேலை என்றும், உடற்சிதைவை உருவாக்கும்வேலை, நச்சுவேலை என்றும் கருதப்படும். |
நச்சுவேல் | நச்சுவேல் naccuvēl, பெ. (n.) நஞ்சு பூசப்பட்ட வேல்; poisonous spear. [நஞ்சு → நச்சு + வேல்] எதிரிகளையும், கொடிய விலங்குகளையும், எறியுந்தூரத்தினின்று கொல்லப் பயன்படுத்தும் வேல். |
நச்செண்ணெய் | நச்செண்ணெய் nacceṇīey, பெ. (n.) புண்ணுக்கிடும் நச்சு நெய்மம்; a poisonous oil for curing sores and itches. [நச்சு + எண்ணெய்.] இயல்பான உடலுக்கு நஞ்சு போல் தீமையைத் தந்தாலும், புண்ணுக்கு மருந்தாகப் பூசப்படும் நெய்மம். |
நச்செலி | நச்செலி nacceli, பெ.(n.) மூஞ்சுறு a muskrat. (நெவ.வ.சொ.194);. [நச்சு+எலி] நச்செலி1 nacceli, பெ. (n.) 1. சுண்டெலி (யாழ்.அக.);; mouse. 2. மூஞ்சூறு; shrew-mouse. [நசு → நச்சு + எலி.] நச்செலி2 nacceli, பெ. (n.) பல்லில் நஞ்சுள்ளதும், சிலசமயங்களில் சாவு விளைவிக்கக்கூடியதுமான எலிவகை. (வின்);; a kind of rat whose bite is poisonous and Sometimes fatal. மறுவ. மொரசன் எலி. [நச்சு + எலி.] நஞ்சுத்தன்மையைக் கொண்ட எலிவகை. நச்செலி nacceli, பெ.(n.) மூஞ்சுறு; a muskrat.(நெ.வ.வ.சொ.194);. [நச்சு+எலி] |
நச்செள்ளை | நச்செள்ளை nacceḷḷai, பெ. (n.) நச் செள்ளையார் பார்க்க; see na-c-cellaiyar. [நல் + செள்ளை.] நச்செள்ளை = கழகக்காலத்தில் வழங்கிய இயற்பெயர். “செள்ளை” என்பது, பெண்பாலர்க்கு இயற்பெயராகப் பண்டைக்காலத்தில் வழக்கூன்றி இருந்தமைக்கு, இவர்பெயர் நற்சான்றுப் படைக்கின்றதெனலாம். |
நச்செள்ளையார் | நச்செள்ளையார் nacceḷḷaiyār, பெ.(n.) காக்கைப்பாடினியார் நற்செள்ளையார் எனப் பெயர் பெற்ற கடைக்கழகக் காலப் பெண்பாற் புலவர்; a sangam poetess known as a {“kākkaipāçiŋinaccellaiyar”}. [நல்+செள்ளை+ஆர்] நச்செள்ளையார் nacceḷḷaiyār, பெ. (n.) பதிற்றுப்பத்தினுள், ஆறாம்பத்துப் பாடிய பெண்பாற் புலவர்; இவரது முழுப்பெயர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்; an ancient Tamil poetess, author of the 6th decad of Patirru-p-pattu. [நற்செள்ளை → நச்செள்ளை + ஆர்] ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்னும் ஆறாம் பத்தைப் பாடியுள்ள இவர், பிற கழக இலக்கியச் செய்யுட்களையும் இயற்றியுள்ளார். குறுந்தொகை 210 – ஆம் பாட்டில், காக்கை கரைந்தமையைச் சிறப்பாகப் பாடியதால், காக்கைப்பாடினியார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றார். சிறப்புப்பெயர் பெறுதற்குக் கரணியமாய் அமைந்த குறுந்தொகைப் பாடல் வருமாறு: “திண்தேர் நள்ள கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்தவெண்ணெல் வெண்சோறு எழுகலத் தேந்தினுஞ் சிறிதென்தோழி பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.” நச்செள்ளையார் பதிற்றுப்பத்தில் 51-முதல் 60-வரை-10-பாடல்களைப் பாடியுள்ளார். இப் பாடல்கள், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின், வரையாது வழங்கும் வள்ளன்மை, செல்வம், புகழ், வென்றிச்சிறப்பு, பாடினியர் நிலை போன்றவற்றைப் புகலும் பான்மையில் அமைந்துள்ளன. சேரனின் வென்றியை வியந்து கூறுங்கால், “பாடல்சான்ற பயங்கெழுவைப்பின் நாடுகவி னழிய நாமந் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்” கூற்றுவனால் அடப்பட்டு நின்ற உடலைப் (பிணத்தைப் போல, பகைவர் நாடு அழிந்த பான்மையைப் பாடிய பாங்கு போற்றத்தக்கது. நச்செள்ளையார் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிடம் பாடிப்பெற்ற பரிசில்:- ஒன்பது காப்பொன்னும், நூறாயிரங்காணமும் (பொற்காகம்); கொடுத்துக் கலன் அணிக என்றுகூறித் தன் பக்கத்துக் கொண்டான், அக்கோ. குடநாட்டுத்தலைவனான இவன் 38 ஆண்டுகள் ஆட்சிசெய்த வரலாற்றுண்மையை, ஆறாம்பத்தில் உள்ள பத்தாவது பதிகப்பாட்டு பகர்கின்றது. இவர் புறநானூற்றில் 278-ஆம் பாடலையும் பாடியுள்ளார். இப் பாடலின் வாயிலாக, மறக்குடி மங்கையின் மாண்பினை அறியலாம். எட்டுத்தொகையில் 12-செய்யுட்களையும் இயற்றி, மிகச்சிறந்த பெண்பாற்புலவராக திகழ்ந்தபாங்குப் போற்றத்தக்கது. நச்செள்ளையார் nacceḷḷaiyār, பெ.(n.) காக்கைப் பாடினியார் நற்செள்ளையார் எனப் பெயர் பெற்ற கடைக்கழகக் காலப் பெண்பாற் புலவர்; a sangam poetess known as a “kākkai pāçininaccellaiyar”. [நல்+செள்ளை+ஆர்] |
நச்செழுத்து | நச்செழுத்து nacceḻuttu, பெ. (n.) சிற்றிலக்கியத்தில் முதற்சொல் மங்கல மொழியல்லாதவிடத்து. ஆதிமொழிக்கண் வருதற்கு ஆகாதனவென்று விலக்கப்படும். ய், ர், ல், ள், யா, ரா, லா, ளா, யோ, ரோ, லோ, ளோ, ஃ. மகரக் குறுக்கம், அளபெடை ஆகிய எழுத்துக்கள் (இலக். வி.); 780);; inauspicious letters like y, r. 1, , yā, rā, lā, ļā, yõ rõ, lö, lõ, k, magara-k-kurukkam and alapedal which should not be found in the initial word other than mangalamol of a poem. [நச்சு + எழுத்து.] இக்காலத்தே சில எண் சிறப்பற்றவை எனச் சொல்வது போல், அக் காலத்தே இருந்த மூடநம்பிக்கை; |
நச்சேத்திரதிச்சி | நச்சேத்திரதிச்சி naccēddiradicci, பெ. (n.) நாணல்; reed. [நச்சேத்திரம் + இச்சி.] |
நச்சோலம் | நச்சோலம் naccōlam, பெ. (n.) நஞ்சுத் தன்மையுள்ள செடி (சா.அக);; aconite. விடாச்சுரம், ஆறாப்புண், தீராத ஊதைநோய், கொடியபல்வலி, தலைநோய், வயிற்றுநோய்கள், பாம்புகடி, தேள்கடி முதலான அனைத்துவகை நச்சுயிரிகளின் நச்சுத் தன்மையைப் போக்கும் அரியமூலியாகும். மூளைநோய் அனைத்திற்கும், நச்சோலவேர் நனிசிறந்தது. |
நஞ்சணிகண்டன் | நஞ்சணிகண்டன் nañjaṇigaṇṭaṉ, பெ. (n.) கொடிய நஞ்சினைக் கழுத்திலணிந்த சிவன்;Śivan, adorned with poisonous coloured neck. “நஞ்சணிகண்டன் எந்தை மடவா ளதனோடும் விடையேறும் எங்கள் பரமன்” (திருஞானசம்பந்தர் தேவாரம்); [நஞ்சனி + கண்டம் → கண்டன்.] இம்மையில் அனைவருக்கும் நன்மையே நல்குந் தன்மையன். ஞாலத்தின் கண்ணேயுள்ள, எல்லாத்தீமையாகிய நஞ்சினையெல்லாம், தான் (அணிந்துகொண்டு); பெற்றுக்கொண்டு, மன்பதைவாழ் மாந்தர்க்கெல்லாம், வளத்தையும், நலத்தையும் வாரிவழங்கும் இயல்பினன் என்னும், வாழ்வியல் பொருண்மையினை, “நஞ்சணிகண்டன்” என்னும் சொல் உணர்த்துகின்றது. |
நஞ்சன் | நஞ்சன் nañjaṉ, பெ (.n). தீயவன் (வின்);: venomous person. [நஞ்சு + அன், ] |
நஞ்சபாதம் | நஞ்சபாதம் nañjapātam, பெ. (n.) குதிரைக் குற்றங்களுளொன்று; a defect in horses. [நைந்த → நஞ்ச + பாதம்.] முதன் முதலில் அரேபியாவிலிருந்து வருவித்த குதிரைகளுக்கு, (இலாடம்); இரும்புச்செருப்பு இயைக்கும் இயல்பை, வணிகச் சூழ்ச்சிக் கரணியமாகச் சொல்லாமையால், நிறைய குதிரைகள் இறந்தன என்பது, வரலாற்றுக் குறிப்பு. |
நஞ்சம் | நஞ்சம் nañjam, பெ. (n.) நஞ்சு; poison venom. “நஞ்ச மோவினி நானுயிர் வாழ்வனோ” (கம்பரா. நகர்நீங்கு. 10);. [நஞ்சு + அம்.] |
நஞ்சரி | நஞ்சரி nañjari, பெ. (n.) நச்சரி பார்க்க; see naccari. [நஞ்சு + அரி.] |
நஞ்சரிவாளி | நஞ்சரிவாளி nañjarivāḷi, பெ. (n.) தக்கை; pith. [நைந்து → நஞ்சு + அரிவாளி அரிவு + ஆளி.] நைந்ததாய் இருப்பினும், பார்ப்பதற்கு விறைப்பான அரிவாள் போல் தோன்றலால், வந்தபெயர். |
நஞ்சறப்பாய்ஞ்சான் | நஞ்சறப்பாய்ஞ்சான் nañjaṟappāyñjāṉ, பெ. (n.) நஞ்சறப்பாய்ந்தான் பார்க்க;see nanjara-p-;payndan. [நஞ்சு + அற + பாய்ந்தான் பாய்ந்தான் → பாய்ஞ்சான்.] |
நஞ்சறப்பாய்ந்தான் | நஞ்சறப்பாய்ந்தான் nañjaṟappāyndāṉ, பெ. (n.) 1. கழுதைப் பாலை பார்க்க;see kaludai-p-pālai Indian ipecacuanha 2. கொடிப்பாலை (சங். அக.);: green wax flower. 3. படுவங்கீரை: (யாழ் அக);; a kind of herb. [நஞ்சு + அற + பாய்ந்தான்.] |
நஞ்சறுப்பான் | நஞ்சறுப்பான்1 nañjaṟuppāṉ, பெ. (n.) 1. நஞ்சறப்பாய்ந்தான் பார்க்க;see nanjara-p-payndan. 2. கொடிப்பாலை; green waxflower. 3. நாய்ப்பாலைஅல்லது கழுதைப்பாலை; dog paulay a dankey paulay 4. நஞ்சு முறிச்சான் poison-killer மறுவ, நச்சுக்கொல்லி. கொண்டைச் சாணிக்கிழங்கு. [நஞ்சு + அறுப்பான்.] எல்லாவகைத் தோல் நோய்களையும் அகற்றும்; இதன் இலைகளையும், வேரினையும், சுண்டக்காய்ச்சிக் (கருக்கிக்); குடித்தால், நாட்பட்ட கோழை அகலும். அளவுக்கு அதிகமான வேர்வையால், நச்சு நுண்மங்கள் நைந்து நலியும். பச்சை வேரினைத் தண்ணீல் இழைத்துக் கொடுத்தால், மலச்சிக்கல் அகலும். உடம்பிலுள்ள அனைத்து நச்சுத் தன்மைகளும் நீங்கும் (சா.அக);. நஞ்சறுப்பான்2 nañjaṟuppāṉ, பெ. (n.) நஞ்சு முறிச்சான் பார்க்க;see nanju-muriccan. மறுவ, நாய்ப்பாலை, பேய்ப்பாலை. |
நஞ்சறுப்பான்வேர் | நஞ்சறுப்பான்வேர் nañjaṟuppāṉvēr, பெ. (n.) ஒருவகைக்கள்ளி; a kind of spurge [நஞ்சு + அறுப்பான் + வேர்.] |
நஞ்சாதவெலும்பு | நஞ்சாதவெலும்பு nañjātavelumbu, பெ. (n.) முழங்கால் எலும்பு; knee – bone. |
நஞ்சானுங்குஞ்சும் | நஞ்சானுங்குஞ்சும் nañjāṉuṅguñjum, பெ.(n.) மெலிந்த குழந்தையும் குட்டியும்; a group of weak infants and babes மறுவ: நஞ்சானும் குஞ்சானும். [ஒருகா, நோய்ந்தான் → நோஞ்சான் → நஞ்சான்.] [நைந்தான் → நஞ்சான்.] குஞ்சு =பறவைக்குழவிப்பருவம். கட்டுப்பாடின்றி, அளவிற்கு அதிகமாகக் குழந்தைகளைப் பெறுவதாலும், சரியான உணவு இன்மையாலும், மெலிந்து காணப்படும் குழந்தைகளை, “நஞ்சானும் குஞ்சானும்” என்று கூறும் வழக்கு. சிற்றுார்களில் இன்றும் காணப்படுவது கண்கூடு. |
நஞ்சி | நஞ்சி nañji, பெ. (n.) 1. குன்றிமணி, crabs – eye 2. கொண்டைச்சாணிக்கிழங்கு; dog paulay |
நஞ்சிச்சி | நஞ்சிச்சி nañjicci, பெ. (n.) நஞ்சி பார்க்க;see nanji. [நஞ்சி+நஞ்சிச்சி.] |
நஞ்சிடல் | நஞ்சிடல் nañjiḍal, பெ. (n.) நஞ்சு கலந்த அமுதிடல்; mixing up poison is food or drink. [நஞ்சு + இடல்.] |
நஞ்சினி | நஞ்சினி nañjiṉi, பெ. (n.) கேழ்வரகு; ragi |
நஞ்சிலுறுக்கிப்பாய்ஞ்சான் | நஞ்சிலுறுக்கிப்பாய்ஞ்சான் nañjiluṟukkippāyñjāṉ, பெ. (n.) 1. நல்லபாம்பின் நஞ்சினை முறிக்கும் ஓர் இலை; a leaf used in cases of cobra bites. 2. நஞ்சறுப்பான் பார்க்க;see nanjaruppan. |
நஞ்சீடு | நஞ்சீடு nañjīṭu, பெ. (n.) நஞ்சிடப்படுகை; the state of being poisoned. “அவன் நஞ்சீட்டால் துன்பப் படுகிறான்”. (உ. வ);. [நஞ்சிடு → நஞ்சீடு.] |
நஞ்சீயர் | நஞ்சீயர் nañjīyar, பெ. (n.) 12ஆம் நூற்றாண்டினரும், திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி, அகலவுரை முதலிய இயற்றியவருமான, ஒரு திருமாலிய வாச்சாரியர் (உபதேசரத் 47);: Thirumaliya accāryar, of 12 century, author of a commentary on tiruváy-moli called onpadinâyirappadi and other works. [நம் + சீயர்] |
நஞ்சு | நஞ்சு nañju, பெ. (n.) 1. உயிர்க்கொல்லி, poison, venom. “பெயக்கண்டு நஞ்சுண்ட மைவர் (குறள், 580);. 2. தீயது; that which is malignant, baneful, pernicious, fatal. 3. நஞ்சுக் கொடி; umbilical cord. ‘குழந்தை, பிறந்து ஒரு நாழிகையாகியும், இன்னும் நஞ்சு விழவில்லை (உ. வ.); 4. பாம்பின்நஞ்சு; snake poison 5. விலங்குகளின் நச்சநீர்; the poisonous fluid secreted bycertainanimals 6. மூன்றுவகை உப்புகள் முப்புகள்); (மாற்று வேதியல் முறையில் மாழையைப் பொன்னாக்கு பவை);; in alchemy three kind of salts. 7. மூவகை நஞ்சு; so the three kinds of poisons 8. மரவகை; Spurge laurel tree. மறுவ, கருப்பு தீது, க. து. நஞ்சு. [நை → நைஞ்சு → நஞ்சு.] |
நஞ்சுகத்தல் | நஞ்சுகத்தல் nañjugattal, பெ. (n.) நஞ்சு கலத்தல்; mixing poison. [நஞ்சு + உகத்தல்.] |
நஞ்சுகரையல் | நஞ்சுகரையல் nañjugaraiyal, பெ. (n.) கருப்பங் கரைகை; abortion, miscarriage; [நஞ்சு + கரையல்.] கருப்பம் கரையுமாறு உருவாக்கிய நஞ்சு கலந்த உணவு. |
நஞ்சுக்கல் | நஞ்சுக்கல் nañjukkal, பெ. (n.) ஈயக்கல் (சிலாவங்கம்);; lead stone lead – ore [நஞ்சு + கல்.] |
நஞ்சுக்காளான் | நஞ்சுக்காளான் nañjukkāḷāṉ, பெ. (n.) நச்சுத்தன்மையுள்ள ஒருவகைக் காளான்; poisonous mushroom. மறுவ. நாய்க்குடைக் காளான். [நஞ்சு + காளான்.] |
நஞ்சுக்குறி | நஞ்சுக்குறி nañjukkuṟi, பெ. (.n.) நச்சுத்தன்மையைக்காட்டுங்குறி; Poisonous symtoms. பாம்பு கடித்தால், நஞ்சுக்குறி உடலில் மெல்லிய நீலவண்ணமாகப் பாவும் (இ.வ.);. [நஞ்சு + குறி] |
நஞ்சுக்கொடி | நஞ்சுக்கொடி nañjukkoḍi, பெ. (n.) கொப்பூழ்க்கொடி; umbílical cord plecenta. [நஞ்சு + கொடி.] குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து வெளியாவதும், கருப்பைக்குள் இருப்பதும், கடல்பஞ்சு போன்றதுமான, சவ்வுப்படலம். |
நஞ்சுக்கொட்டை | நஞ்சுக்கொட்டை nañjukkoṭṭai, பெ. (n.) காக்கைக் கொல்லி விதை; moon seed plant Crow killer. [நஞ்சு + கொட்டை] |
நஞ்சுசுரம் | நஞ்சுசுரம் nañsusuram, பெ. (n.) மகப் பேற்றிலுண்டாகுங் காய்ச்சல்; puerperal fever. மறுவ, பேறுகாலக் காய்ச்சல். [நஞ்சு + சுரம்.] |
நஞ்சுண்டனெண்ணெய் | நஞ்சுண்டனெண்ணெய் nañjuṇṭaṉeṇīey, பெ. (n.) நஞ்சுண்டான் மரத்தின் விதையினின்று பிழியும் எண்ணெய்; a fixed fatty oil prepared from the seed of the treeBalanites acgyptiaca [நஞ்சுஉண்டன் + எண்ணெய்.] |
நஞ்சுண்டபாலை | நஞ்சுண்டபாலை nañjuṇṭapālai, பெ. (n.) நச்சுப்பாலை பார்க்க;see baccy-p-palai. |
நஞ்சுண்டமரம் | நஞ்சுண்டமரம் nañjuṇṭamaram, பெ. (n.) ஒரு முள்மரம்; a variety of montana. [நஞ்சு + உண்ட + மரம்.] நஞ்சுண்ட மாந்தன் மயிர்கள் சிலிர்த்துக் கிடத்தல் போல், முள் முளைத்தமரம் காணப்படுதலின் வந்த பெயர். |
நஞ்சுண்டம் | நஞ்சுண்டம் nañjuṇṭam, பெ. (n.) முள் மரவகை; Small leathery-obovate-obtuse or acute leaved Spinous Cape jasmine. [நஞ்சு + உண்ட +(மரம்.] நஞ்சு உண்டார்க்கு நலம் செய்யும் மருந்திலை தரும் மரம். |
நஞ்சுண்டல் | நஞ்சுண்டல் nañjuṇṭal, பெ. (n.) நஞ்சை உட் கொள்ளுகை; taking or swallowing poison மறுவ: நஞ்சுண்ணல், [நஞ்சு + உண்டல்.] |
நஞ்சுண்டான் | நஞ்சுண்டான் nañjuṇṭāṉ, பெ. (n.) 1. நஞ்சினையுண்ட சிவன்;$ivan, as having swallowed. க., நஞ்சுண்ட து. நஞ்சுண்டெ. [நஞ்சு + உண்டான்] கருநாடக மாநிலத்தில் உள்ள வீரசிவனியமரபினர். இப் பெயரைப் பெரிதும் சூடிக்கொள்வர். |
நஞ்சுண்டை | நஞ்சுண்டை nañjuṇṭai, பெ. (n.) முள்மா வகை; [நஞ்சு + உண்டை.] |
நஞ்சுண்டோன் | நஞ்சுண்டோன் nañjuṇṭōṉ, பெ. (n.) 1. சிவன்: Sivan, “நாதப்பறையன் பெருங்குயத்தி பங்கன்றுங்க நஞ்சுண்டோன்” (திருவாலவா. 30:9);. 2. கள்ளரில் ஒரு பிரிவினர் (திருவாலவா. 30:3 விசேடவுரை);. a division of kallars. [நஞ்சு + உண்டோன்.] |
நஞ்சுண்ணி | நஞ்சுண்ணி nañjuṇṇi, பெ. (n.) நஞ்சுண்பவன்; one who has rendered his body immune to poison. [நஞ்சு + உண்ணி.] |
நஞ்சுத்தடை | நஞ்சுத்தடை nañjuttaḍai, பெ. (n.) 1. நஞ்சுக் கொடி வீழாதிருத்தல்; detention of placenta. 2. கருப்பை வலிவு குறைந்து, அதனால், நஞ்சைப்பிரித்து வெளியில் தள்ளப் போதுமான ஆற்றலில்லாமல், கருப்பையில் ஒட்டிக் கொண்டிருத்தல்; retention of after birth in the womb by adhering to its walls in consequence of insufficient power to separate and expel it especially when the womb is weakened. [நஞ்சு + தடை.] |
நஞ்சுத்தன்மை | நஞ்சுத்தன்மை nañjuttaṉmai, பெ. (n.) நச்சுத்தன்மை; having the nature of a poison. [நஞ்சு + தன்மை.] |
நஞ்சுநூல் | நஞ்சுநூல் nañjunūl, பெ. (n.) நஞ்சுத்தன்மையையும், அதை முறித்து பண்டுவம் செய்யும் முறையையும், கூறும் நூல்; a book an toxicology. [நஞ்சு + நூல்.] இந் நூல், நஞ்சுமுறிவின் வழிவகைகளைச் சித்தர்பாடலுடன் விளக்கும் தன்மைத்து. உடம்பிற்குரிய பயறு, பழம், கிழங்கு வகைகளைக் கூறும் நூல். அளவுக்கு மீறிய உணவினால், உடம்பில் உருவாகும் நச்சுத்தன்மைகளையும், அவற்றை அகற்றும்வழி வகைகளையும் விளக்கும் நூல். |
நஞ்சுபாய்ச்சு-தல் | நஞ்சுபாய்ச்சு-தல் nañjupāyccudal, 5.செ. குன்றாவி. (v.t.), 1. நஞ்சூட்டு (யாழ். அக.); பார்க்க;see nanjuttu 2. இரண்டகம் செய்தல் ஏமாற்றுதல்; to defraud [நஞ்சு + பாய்ச்சு-.] |
நஞ்சுபிடித்தம் | நஞ்சுபிடித்தம் nañjubiḍittam, பெ. (n.) நஞ்சுக்கொடி தங்குதலால் உண்டாகும் நோய் (இங். வை.418);, retention of the placenta. [நஞ்சு + பிடித்தம்] |
நஞ்சுப்பாலை. | நஞ்சுப்பாலை. nañjuppālai, பெ. (n.) 1. கழுதைப்பாலை அல்லது நாய்ப்பாலை, an antidote for poison. 2. நச்சறுப்பான் பார்க்க;see naccaruppān. [நஞ்சு + பாலை.] |
நஞ்சுமாற்றுமருந்து | நஞ்சுமாற்றுமருந்து nañjumāṟṟumarundu, பெ. (n.) நச்சுத்தன்மையை முறிக்கும் மருந்து; an antidote especially as a cure of poison. [நஞ்சு + மாற்று + மருந்து.] |
நஞ்சுமுறி | நஞ்சுமுறி nañjumuṟi, பெ. (n.) மணிக்குடல், the fold of peritonium which attaches the intestines to the posterior wall of abdomen. [நஞ்சு + முறி] |
நஞ்சுமுறிச்சான் | நஞ்சுமுறிச்சான்1 nañjumuṟiccāṉ, பெ. (n.) 1.நஞ்சறுப்பான் செடி; country ipecacuanha. 2. அவரி; dog bite shurb dyer’s indigo. [நஞ்சு + முறித்தான் → முறிச்சான்.] நஞ்சுமுறிச்சான்2 nañjumuṟiccāṉ, பெ. (n.) நஞ்சறப்பாய்ந்தான் பார்க்க;see nanjara-p-payndan. |
நஞ்சுறு-தல் | நஞ்சுறு-தல் nañjuṟudal, 20 செ. கு. வி. (v.i.) மனமுருகுதல்; to melt as heart through love “நஞ்சுற்ற காம நன்நாகரிகந் துய்த்தவாறும்” (சீவக. 11);. மறுவ, நெஞ்சுருகல். [நைந்து → நைஞ்சு → நஞ்சு + உறு-.] மனம், அன்பு மிகுதியால் நைந்து, உருகுந் தன்மைய்க் குறிக்கும். |
நஞ்சுறை | நஞ்சுறை nañjuṟai, பெ. (n.) 1. நஞ்சு கலந்த மருந்து; a medicine prepared with poison, as one of the ingredients. 2. நஞ்சையே மருந்தாகப் பயன்படுத்தல்; using a poison as a remedy. 3. நச்சுக்கனிமம்; mineral poison [நஞ்சு + உறை.] நீர்மநஞ்சு உறைந்த நிலையைக் குறிக்கும். |
நஞ்சுவிழாமை | நஞ்சுவிழாமை nañjuviḻāmai, பெ. (n.) நஞ்சுக்கொடி விழாதிருக்கை; retention of placenta. [நஞ்சு + விழாமை.] |
நஞ்சுவிழியரவு | நஞ்சுவிழியரவு nañjuviḻiyaravu, பெ.(n.) பார்வையாலேயே நஞ்சு செலுத்திக் கொல்வதாகக் கருதப்படும் பாம்பு வகை; திட்டிவிடம்; a kind of poisonous serpent. “நஞ்சுவிழி யரவி னல்லுயிர் வாங்க” (மணிமே. 23, 84);. [நஞ்சு + விழி அரவு.] |
நஞ்சுவெளிப்படு-த்தல் | நஞ்சுவெளிப்படு-த்தல் nañjuveḷippaḍuttal, 5.செ. குன்றாவி. (v.t), கருப்பையிலிருந்து நஞ்சை வெளிவாங்கல்; to expel the placenta (afterbirth); with the aid of medicine or manipulation [நஞ்சு + வெளிப்படு-] |
நஞ்சூட்டு-தல் | நஞ்சூட்டு-தல் nañjūṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. படைக்கருவி முதலியவற்றுக்கு நச்சுத்தன்மை ஏற்றதல்; to imbue with poison, as a weapon, 2. நஞ்சு கலந்து. கொடுத்தல்; to administer poison. “தஞ்சூட்டு மெனவுரைப்ப” (பெரியபு. திருநாவுக். 103);. [நஞ்சு + ஊட்டு-.] |
நஞ்செடு-த்தல் | நஞ்செடு-த்தல் nañjeḍuttal, 5.செ. கு. வி. (v.i.) நஞ்சுமுறித்தல்; to neutralize the effects of poison [நஞ்சு + எடு-.] திண்மம் ஆக இருந்த நஞ்சை எடுத்து நலப்படுத்தல் அல்லது பக்குவமாக்குதல். |
நஞ்சை | நஞ்சை nañjai, பெ. (n.) நன்செய் பார்க்க;See nanšey [நன்செய் → நஞ்சை] ஒ.நோ. புன்செய் → புஞ்சை |
நஞ்சையன்வெட்டு | நஞ்சையன்வெட்டு nañjaiyaṉveṭṭu, பெ. (n.) நாணயவகை (பணவீடு (.144);; an ancient coin. |
நஞ்சொட்டி | நஞ்சொட்டி nañjoṭṭi, பெ. (n.) மூலிகைச் செடிவகையுளொன்று(குருகூர்ப்.45);; a kind of shrub. [நஞ்சு + ஒட்டி.] |
நஞ்சொளி-த்தல் | நஞ்சொளி-த்தல் nañjoḷittal, 4.செ. குன்றாவி. (v.t), நஞ்சுக்கொடி வெளிப்படாதிருத்தல்: the non appearance of the after birth subsequent to child birth concealment of after birth in the womb [நஞ்சு + ஒளி-.] |
நஞ்சொழி-த்தல் | நஞ்சொழி-த்தல் nañjoḻittal, 4.செ. கு. வி. (v,i), நஞ்சை நீக்குதல்; removing poison from the body. [நஞ்சு + ஒழி-.] |
நஞ்சோடை | நஞ்சோடை nañjōṭai, பெ. (n.) உப்பை வாறிய பின் நீர் வெளியேறும் இடம்: outlet. [நஞ்சு+ஒடை] |
நட-த்தல் | நட-த்தல் naḍattal, 3. செ. கு. வி. (v.i.) 1. நிற்கும் இடத்தைவிட்டு நீளுதல் போற் காலடிவைத்துச் செல்லுதல்; to walk. go, pass, proceed. “காளையன்னாளை நடக்கவும் வல்லையோ” (நாலடி. 398);. தவழ்ந்து விளையாடிய குழந்தை இப்போதுதான் நடக்கத் தொடங்கயிருக்கிறது (உ.வ.); 2. ஒழுகுதல்; to behave. பையன் ஆசிரியரிடம் எப்படி நடக்கிறான்’ (உ. வ);. ‘வேலைக்காரன் வீட்டுத்தலைவனிடம் பணிவாய் நடந்து கொள்ள வேண்டும். 3. பரவுதல்; to spread ‘குரையழனடப்ப’ (பு. வெ. 1:8);. 4. காலத்தில் நிகழ்தல்: ஏற்படுதல், to happen, occur, ensue, take place as performance, occurrence or event நடந்து நடந்துவிட்டது வருந்திப் பயன்இல்லை (உ.வ.); 5. நிகழ்ந்து வருதல்; to rage, as war, to be rife, as disease, to prevail as influence. to be in progress, as a performance “தாளிகை எழுத்தாளர் அதிகாரம்தான் இன்று மிகுதியாக நடக்கிறது. (உ.வ.);. 6. fisopougou; to be fulfilled, to be effective ‘உன் சூளுரை (சபதம்); நடக்க வில்லை (உ.வ);. போன காரியம் நடந்ததா? (உ.வ.); 7. நிகராதல்;(உ. வ.); to be reckoned as equal, to go along with “மனை வாழ்க்கை போற்றுடைத்தே னல்லறத்தாரோடு நடக்கலாம் (சிறுபஞ். 100);. 8. குடும்பம், ஆட்சி, அலுவலகம் முதலியவை இயங்குதல்; to function run, மூத்தமகனின் சம்பளத்தில் தான் குடும்பம் நடக்கிறது (உ.வ);. வணிகம் நன்றாக நடக்கிறது. (உ.வ.); 9. நாடகம் நிகழ்த்தப் படுதல் திரைப்படம் காட்டப்படுதல், to run of film. இந்தத் திரைஅரங்கில் என்னபடம் நடக்கிறது (உ.வ.);. 10. குறிப்பிட்ட வயது உடையதாக இருத்தல்; to run of age என் பேரனுக்கு ஒன்று முடிந்து இரண்டு நடக்கிறது (உ.வ.);. – க. நாட. தெ. நடுச்சு. ம. நடக்கு து. நட்புணி [நெடு → நெட→ நட, நடு → நட…. நடத்தல்= நிற்கும் இடத்தைவிட்டு நீளுதல் போற் காலடி வைத்துச் செல்லுதல். |
நட-நாடகசாலை | நட-நாடகசாலை naḍanāḍagacālai, பெ. (n.) somolous Gusii (olsås);: dancing woman [நடம் + நாடகசாலை.] நாடகம், கதையோடு சாராமல், நாட்டியக்கலையாக மட்டும் இருந்த காலத்தில், பெண்கள் ஆடுதல் பார்வை யாளரான ஆண்கள் பலருக்கும் ஆர்வத்தைக் கூட்டி இருத்தலால், சாலை என்பது, அன்மொழித்தொகையாய்ப் பெண்ணைக் குறித்ததாக இருக்கலாம். |
நடகாயஇளகியம் | நடகாயஇளகியம் naḍagāyaiḷagiyam, பெ. (n.) மகவீன்ற பெண்களுக்குத் தரும் மருந்து; electuary given to woman after delivery. மறுவ. நடைகாயம், நாட்கண்டி. [நடகாயம் + இளகியம்.] மகவீன்ற பெண்கள், இவ் விளகியத்தை உண்பதால், பேறுகாலத்தே இழந்த வலிமையினை, மீண்டும் பெறுவர். உடம்பிலுள்ள கசடுகள் நீங்குவதற்கும். இவ் விளகியம் கைகண்ட மருந்து. தாய்மார்தம் அயற்சி அகன்று, நல்ல முறையில் உடல் உரம்பெறுவதற்கு இவ் விளகியம் உறுதுணை புரியும். |
நடகாயம் | நடகாயம் naḍakāyam, பெ. (n.) 1. மகப்பேறு மருந்து; an electuary given to woman after delivery. 2. நடகாய இளகியம் பார்க்க;See пара-kaya-ilagoуm. [நட+ காயம். காயம் = இளக்கிய மருந்து.] |
நடக்கதவு | நடக்கதவு naṭakkatavu, பெ. (n.) எதி ரெதிராக அமைந்த வீடுகளுக்குப் பொதுவாக அமைந்து இருக்கும் வழி; a common path of the two opposite side houses. [நடை+கடவு);-நடைக்கதவு-நடக்கதவு (கொ.வ); – கடவு-பாதை] நடக்கதவு naḍakkadavu, பெ.(n.) எதி ரெதிராக அமைந்த வீடுகளுக்குப் பொதுவாக அமைந்து இருக்கும் வழி; a common path of the two opposite side houses. [(நடை கடவு-நடைக்கதவு-நடக்கதவு (கொ.வ); – கடவு-பாதை] |
நடக்கீதம் | நடக்கீதம் naḍakātam, பெ. (n.) கெளரி வைப்பு நஞ்சு (மூ.அ);; prepared arsenic. [நடம் + கீதம்.] |
நடக்குமிடல் | நடக்குமிடல் naḍakkumiḍal, பெ. (n.) செல்வாக்குள்ள இடம் (சீவக. 1637, உரை);. the sphere of one’s influence. [நடக்கும் +இடம்.] |
நடக்கை | நடக்கை naḍakkai, பெ. (n.) 1. செல்கை; walking proceeding. 2. வழக்கு; custom usage. “ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பின” (தொல், பொருள். 91);. 3. ஒழுக்கம்; conduct behaviour character. “அவன் நல்ல நடத்தையுள்ளவன்” (உ. வ.);. ‘நன்னடத்தைச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு வா’ (உ. வ.);. 4. அளவியல் கூறுகளில் ஒன்று; traverse survey. ம. நட. [நட → நடக்கை. (வே.க. 3.49.);] நடக்கை2 naḍakkai, பெ. (n.) நிகழ்கை; occurrence, incident, event ம. நட. [நட+ கை.] நடக்கை3 naḍakkai, பெ. (n.) நினைவு சொல், செயல், ஆகிய முக்கரணவொழுக்கம்; to behave oneself. அவன் நடக்கையில் உயர்ந்தவன். (உ.வ);. மறுவ நடத்தை. L. con, together, duct to lead [நட → நடக்கை.] வாழ்க்கையில் ஒருவன் நினைவு, சொல், செயல், ஆகிய முக்கரணத் தொழிலால் நடக்கிறான். இதனால் முக்கரண வொழுக்கத்திற்கு நடத்தை அல்லது நடக்கை என்று பெயர். ஒழுக்கம் என்ற சொல்லும் இக் கரணியம் பற்றியதே. ஒழுகுதல் = நடத்தல் இன்று இப்பொருள் வழக்கற்ற தென்றறிக. (சொ.ஆ.க,பக்.70);. |
நடக்கையறிவாள் | நடக்கையறிவாள் naḍakkaiyaṟivāḷ, பெ. (n.) கொடி வேலி; lead-wort plumbago zeylanlCa |
நடச்சி | நடச்சி naḍacci, பெ. (n.) வைப்பரிதாரம்; a prepared yellow orpiment. |
நடத்க்காரன் | நடத்க்காரன் naḍatkkāraṉ, பெ. (n.) செல்வாக்குள்ளவன் (வின்.);; a man of influence;one in prosperous circumstances. [நடத்தை + காரன்.] |
நடத்தல் | நடத்தல் naḍattal, தொ.பெ. (vbl n). 1. குறிப்பிட்ட செயல் முழுமை பெறுதல்: completing a task. செய்த பணி இனிதே நடந்தது. (உ.வ);. 2. பிறர் சொல்லும்முறையில் செயல்படுதல்; act according to direction. நான் சொல்வதைக் கேட்டு நடப்பதாக இருந்தால் இங்கு இரு (உ.வ.);. [நட → நடத்தல்.] |
நடத்து-தல் | நடத்து-தல் naḍaddudal, 5.செ. குன்றாவி. (v.t.) 1. நடக்கச் செய்தல்; to cause to go or walk as a child. இறைவன் நம்மை , மகிழ்ச்சியான பாதையில் நடத்துவார் (உ.வ);. 2. அழைத்துப் போதல்; to take a person in one’s company to lead 3. கடமை யாற்றுதல்; to carry on, transact manage perform execute, administer, treat. 4. செலுத்துதல்; to drive, as an animal a vehicle. 5. கற்பித்தல்; to teach as a lesson. “ஆசிரியர் பாடம் நடத்துகிறார் (உ. வ. 6. அரைத்தல்; to grind ‘அம்மியில் நடத்திப் பொடியாக்கு’ (உ.வ.);. 7. தாக்குதல் to make a baton charge. Bissousuf 51, ully நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். (உ.வ.); 8. விழாநடத்துதல்; to organise a function இலக்கியமன்ற விழாவினைக்கல்லூரியில் மாணவர் முன்னின்று நடத்திமுடித்தனர் (இக்.வ.); 9. ஒருவரை உரியமுறையில் நடத்துதல் (கவனித்தல்.);; to treat well- நீ அவரை நடத்தியமுறை சரியில்லை (உ.வ.); க. நடக. ம. நடத்துக. [நட → நடத்து-. (வே.க. 3, 49);.] |
நடத்துநர் | நடத்துநர் naḍattunar, பெ. (n.) பேருந்தில் பயணச்சீட்டு வழங்கி வண்டியை உரியவிடத்தில் நிறுத்தி, பயணிகளுக்கு உறுதுணை புரியும் பணியினைச் செய்யும் ஊழியர்: conductor. நடத்துநர் நன்றாகப் பேருந்தில் பணிசெய்தால்தான், பொதுமக்கள் காலந்தவறாது கடமை செய்ய முடியும். (இ.வ.);. மறுவ. ஊர்திவழித்துணைவர். [நடத்து → நடத்துநர்] ஒ.நோ. ஒட்டு → ஒட்டுநர் இயக்கு → இயக்குநர். |
நடத்தை | நடத்தை1 naḍattai, பெ. (n.) 1. நடக்கை (வின்); பார்க்க;See radakkai. 2. செல்வாக்கு prosperity, influence. 3. ஒழுகலாறு: deportmènt க. நடத்தை ம. நடத்த தெ. நடத்த. [நட + அத்து + ஐ.] நடத்தை naḍattai, பெ. (n.) 1. இயல்பு; nature. அவன் நடத்தை சரியில்லை. (உ.வ.);. 2. நற்குணம்; goodness. 3. ஒழுக்கம்; behaviour. [நட → நடத்தை.] |
நடத்தைக்காரி | நடத்தைக்காரி naḍattaikkāri, பெ. (n.) நடத்தைக்கெட்டவள் பார்க்க;See radatalk-ketsava. [நடத்தை + காரி.] நடத்தை = ஒழுக்கம், பண்பு. |
நடத்தைக்கெட்டவள் | நடத்தைக்கெட்டவள் naḍattaikkeḍḍavaḷ, பெ. (n.) விலைமகள்; immoral woman நடத்தை கெட்டவளிடம் நன்றியை எதிர்பார்க்கலாமா? (உ.வ.);. [நடத்தை + கெட்டவள்.] நடத்தை = ஒழுக்கம். |
நடத்தைக்கொள்கை | நடத்தைக்கொள்கை naḍattaikkoḷkai, பெ. (n.) மாந்தனின் உளவியற்கூறுகளையும், அவற்றினடிப்படையில் அமைந்த செயற்பாடுகளையும் ஆராயும் கொள்கை; behaviourism. மறுவ, ஒழுக்கக்கொள்கை. [நடத்தை + கொள்கை.] அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே கரணியமென்னும் கோட்பாடு. புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தை (நடத்தையை); அடிப்படையாகக் கொண்டும். ஒருவரைப் பற்றி ஆராயும் முறை. |
நடத்தைக்கோட்பாடு | நடத்தைக்கோட்பாடு naḍattaikāḍpāḍu, பெ. (n.) மாந்தர்தம் உளப்பாங்கினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படும் கோட்பாடு; behaviour theory. [நடத்தை + கோட்பாடு.] |
நடத்தைத் தப்பிதம் | நடத்தைத் தப்பிதம் naḍaddaiddappidam, பெ. (n.) நடத்தைப்பிழை பார்க்க: see nadattai-p-pilal. [நடத்தை + தப்பு + இதம்.] |
நடத்தைப்பிசகு | நடத்தைப்பிசகு naḍattaippisagu, பெ. (n.) நடத்தைப்பிழை பார்க்க;See nadattai-p-pilal. [நடத்தை + பிசகு.] |
நடத்தைப்பிழை | நடத்தைப்பிழை naḍattaippiḻai, பெ. (n.) ஒழுக்கத்தவறு (யாழ்.அக.);; immoral conduct. [நடத்தை + பிழை.] நன்னடத்தையின் எதிர்மறை. |
நடத்தைமாற்றம் | நடத்தைமாற்றம் naḍattaimāṟṟam, பெ. (n.) செயல் மாறுபடுகை; behaviour change. ‘உனது நடத்தைமாற்றம் எனக்கு பிடிக்கவில்லை’ (இக்.வ.);. [நடத்தை + மாற்றம்.] |
நடத்தைமுறை | நடத்தைமுறை naḍattaimuṟai, பெ. ஒழுக்கவிதி: by aw. [நடத்தை +முறை.] |
நடத்தைவிதி | நடத்தைவிதி naḍaddaividi, பெ. (n.) நடத்தை முறை பார்க்க;See nagattai-murai. [நடத்தை + skt விதி] |
நடநாயகன் | நடநாயகன்1 naḍanāyagaṉ, பெ. (n.) கருடப்பச்சைக்கல் (மூ. அ.);; a kind of emerald. [நட + நாயகன்.] நடநாயகன்2 naḍanāyagaṉ, பெ. (n.) சிவபெருமான்;Śivan, as the lord of dancers. [நடம் + நாயகன்.] |
நடநாராயணம் | நடநாராயணம் naḍanārāyaṇam, பெ. (n.) பண்வகை; a specific melody-type. [நடம் +நரன் → நாரன் + அணயம்.] |
நடந்தசெய்தி | நடந்தசெய்தி naḍandaseyti, பெ. (n.) நிகழ்ந்த செய்தி ; event that was happened. மறுவ. உண்மைச்செய்தி. [நடந்த + செய்தி.] |
நடந்தாரைத்துடர்ந்தான் | நடந்தாரைத்துடர்ந்தான் naḍandāraittuḍarndāṉ, பெ. (n.) தெட்டங்காகச் செடி; an unknown kind of plant. நடநாடகசாலை மறுவ. ஒட்டுப்புல். நடந்தாரை தொடர்ந்தான்.); தொ-து=திரிபு. (ஒ.நோ. தொடை – துடை.ஒட்டுப்பில்லாக இருக்கலாம் என்று சா.அ.க. கூறும்.); |
நடந்துகொள்ளு-தல் | நடந்துகொள்ளு-தல் naḍandugoḷḷudal, 16. செ. கு. வி. (v.i.) மேலோரிடத்து ஒழுகுதல்; to behave, as towards a Superior. [நடந்து + கொள்-] |
நடந்துவரு-தல் | நடந்துவரு-தல் naḍanduvarudal, 2 செ.கு.வி. (v.i.) 1.f3 g5, to be in vogue 2. GrouTă @Lú Quusso; to move by walk [நடந்து + வரு-.] |
நடந்துவிடு-தல் | நடந்துவிடு-தல் naḍanduviḍudal, 20 செ. கு. வி. (v.i.) 1. செயல் முடிந்துபோதல்; to be accomplished or completed. 2. outgo; to run a way, ‘அன்னநடை மின்னுமறியாமல் முன்னே நடந்துவிட்டான்’ (தெய்வக், விறலிவிடு.102);. [நட-நடந்து + விடு-.] |
நடந்தேறு-தல் | நடந்தேறு-தல் naḍandēṟudal, 5.செ. கு. வி. (v.i.) fisopougou; to be completed. perfected. Successful [நடந்து + ஏறு-] |
நடந்தை | நடந்தை naṭantai, பெ. (n.) நாமக்கல் வட்டத் திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Namakkal Taluk. [நாள்+அந்தி-நாடந்தி-நடந்தை] நடந்தை naḍandai, பெ.(n.) நாமக்கல் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Namakkal Taluk. [நாள்+அந்தி-நாடந்தி-நடந்தை] |
நடனக்கருமூலி | நடனக்கருமூலி naḍaṉakkarumūli, பெ. (n.) தலைச்சுருளி; indian birth wort. |
நடனசாலை | நடனசாலை naḍaṉacālai, பெ. (n.) கூத்துப் பயிலிடம்; dancing hall [நடனம் + சாலை, ] |
நடனசிகாமணி | நடனசிகாமணி naḍaṉasikāmaṇi, பெ. (n.) நடனத்தில் சிறந்தவர்க்கு அளிக்கப்பெறும் பட்டம்; title confered for dancing ability. [நடனம் + skt.சிகைசிகா + மணி.] |
நடனச்சுழலான் | நடனச்சுழலான் naḍaṉaccuḻlāṉ, பெ. (n.) சுழல்வண்டு, a kind of whirling beetle. நடனமாடுவதுபோல் சுழன்று பறக்கும் வண்டாக இருக்கலாம். |
நடனத்தோற்றம் | நடனத்தோற்றம் naḍaṉattōṟṟam, பெ. (n.) 1. நடனமாடுபவரின் பல்வேறு நிலைகள்; dance postures. 2. நடனமுத்திரை பார்க்க;See nagana-muttiral. [நடனம் + தோற்றம்.] |
நடனநடை | நடனநடை naḍaṉanaḍai, பெ. (n.) அசைந்தாடி நடக்கும் நடை (பாண்டி);; a kind Of ambling gait. [நடனம் + நடை= நடனமாடுவதுபோல், அசைந்துஅசைந்து நடக்கும் நடை.] |
நடனன். | நடனன். naḍaṉaṉ, பெ. (n.) 1. நடனமாடுபவன்; dancer. 2, நடிகன் பார்க்க; See nagigan. ‘நடனன் பாங்குற நடிப்பது’ (இரகு. குசனயோத்தி.98);. [நடனம் → நடனன்.] |
நடனபரவி | நடனபரவி naḍaṉabaravi, பெ. (n.) மூலப்பண்களுள் ஒன்றுகளுளொன்று (சங்.சந்.,47);, a primary pansrāgām. [நடம் + பைரவி.] |
நடனபாணி | நடனபாணி naṭaṉapāṇi, பெ. (n.) பரதம் ஆடும் முறைகளில்; one of dancing methods, a way of dancing Bharatam. [நடனம்+பாணி] நடனபாணி naḍaṉapāṇi, பெ.(n.) பரதம் ஆடும் முறைகளில் ஒன்று; one of dancin: methods, a way of dancing Bharatam. [நடனம்+பாணி] |
நடனபுலன் | நடனபுலன் naḍaṉabulaṉ, பெ. (n.) அரிதாரம்; yellow orpiment. |
நடனப்புயல் | நடனப்புயல் naḍaṉappuyal, பெ. (n,), விரைவாக நடனம் ஆடுபவர்; dancer who dance very fast. [நடனம் + புயல்.] புயல்போல் சுழன்று வேகமாக ஆடுபவர். |
நடனமுத்திரை | நடனமுத்திரை naḍaṉamuttirai, பெ. (n.) நடன மெய்ப்பாடு பார்க்க;see radama-meyp-padu. [நடனம் +முத்திரை.] |
நடனமெய்ப்பாடு | நடனமெய்ப்பாடு naḍaṉameyppāḍu, பெ. (n.) அகவுணர்வுகளை அனைவரும்அறியும் வண்ணம். முகத்தின் மூலமும், கைகால் முதலான, உடலுறுப்புகள் வழியாகவும் நின்றும், இருந்தும், கிடந்தும். விறல்பட வெளிப்படுத்தும் திறன் அல்லது untig; the various kinds of dance postures மறுவ. நடனக்கை. நளிநயம். நடனமுத்திரை. [நடனம் + மெய்ப்பாடு.] நடனமெய்ப்பாடுகளை, நம்நாட்டுச்சிற்பியர், கவின்கலைகளின் அருங்காட்சியகங்களாகத் திகழும், திருக்கோவில்களில், திறம்படச் செதுக்கியுள்ளனர். நடனக்கலையின் இலக்கணத்தைத் தெள்ளிதிற் றெரிவிக்கும் கருவூலங்களாகச் நடனச்சிற்பங்கள் மிளிர்கின்றன. தில்லைத் திருக்கோயிற் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள். நடனமெய்ப் பாட்டு மரபிலக்கணத்தினின்று, சிறிதும் வழுவா வண்ணம் வடிக்கப்பட்டுள்ளன. இச் சிற்பங்கள், நடனமுத்திரை நளினங்களை நன்கு வெளிப்படுத்துகின்றன. இந் நடன முத்திரைகள் அனைத்தும், ஆடற்கலை இலக்கணத்தை நன்குணர்ந்து நடன மெய்ப்பாட்டினையும். அழகுணர்ச்சியையும், வேண்டிய அளவிற்கு இழைத்தும், குழைத்தும் எழுதப்பட்ட இலக்கியமாக, இலங்குகின்றன எனின் மிகையன்று. இந் நடனமெய்ப்பாட்டுச் சிற்பங்கள், எப்பொருளில் எவ் விடத்தில், எதற்காக அமைக்கப்பட்டுள்ளனவோ, அவ்வவற்றிற்கு ஏற்றவாறு, ஒடித்தும், வளைத்தும், நெளித்தும், கைகளையும், கால்களையும் பலஅமைதிகளில், காட்டியுள்ள பாங்கு, கண்ணுறுவோர்தம் உள்ளத்துணர்வுகளை, உரைக்கும் பான்மையிற் செதுக்கப்பட்டுள்ளன. இக் கவினுறு நடனமுத்திரை சிற்பங்களைச் சிற்பி கல்லில் வடிக்குங்கால் கண்டு களிப்போருக்கு அவர்தம் கலையழகை மட்டுமன்றிச் சிற்பத்தின் உட்கிடையை வாழ்வியலுடன் இணைத்துக் காணும் பெரும்பேற்றினை நல்குகின்றான் எனின் மிகையன்று இத்தகைய கலைவேள்வியில் தன்னை மறந்துசிற்பி ஈடுபடுங்கால், நடன மெய்ப்பாட்டு சிற்பங்களை, இயல்புக்கு மீறிச் சற்று மிகையா அமைக்கவேண்டிய சூழலுக்குத் தள்ள ப்படுகின்றான். இதனால் நடனக் கை காட்டும் நளினமுத்திரைகள், விளக்கமுறுகின்றன இருக்கைகள் (ஆசனங்கள்);, இயல்புடன் மிளிர்கின்றன. உடல்வளைவுகள், ஈடு இணையில்லா அழகினை வாரியிறைக்கின்றன மொத்தத்தில் ஏற்றமுறும் இத்தகைய நடன இலக்கியச்சிற்பங்களே, சிற்பக்கலை இலக்கணநூல்கட்கு நாற்றங்காலாய்: திகழ்கின்றன. நடனமுத்திரைச் சிற்பங்களில் காணப்படும் நடனமெய்ப்பாடு முத்திரைகள், 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இத்தகை. முத்திரைகளை நம்நாட்டுச்சிற்பிகள் ‘கைஅமைதி என்றும், ‘எழிற்கை’ என்றும் ‘சிற்பக்கை’ என்றும் ‘முத்திரை என்றும், தொழிற்கை என்று வகைப்படுத்தியுள்ளனர். 32 வகை நடனமெய்ப்பாட்டினை நவிலும் ஆடல்முத்திரைகள் வருமாறு: 1. காக்கும் (அபயக்);கை. 2. வழங்கும்கை (வரத);முத்திரை. 3.அரிமாக்காது (சிம்கர்ண);முத்திரை. 4. ഖങ്ങി (அஞ்சலிக்);கை. 5. விளக்கும் அல்லது கற்பிக்கு (வியாக்யானக்); கை 6. நிலத்தைத் தொடும் கை (பூ ஸ்பரி முத்திரை);. 7. மலர்ந்த ………………….. தாமரைக் கை. 8. தும்பிக் (கெஜக்);கை. 9. தொங்கும் கை (டோல அஸ்தம்);. 10. துடிக் (டமருகக்);கை. 11. அணைக்கும் (ஆலிங்கனக்);கை. 12. தொடைக் (ஊரு);கை. 13. சுழற்கை (விவர்த்தித அஸ்தம்);. 14. நண்டுப்பிடி (கடக);முத்திரை. 15. அச்சுறுத்தும் (தர்ஜனி);கை. 16. கத்தரிக்கோல் (கர்த்தரீ);முத்திரை. 17. வியப்பு (விஸ்மய);முத்திரை. 18. மெய்யறிவு (ஞான);முத்திரை. 19. சிந்தனைக் (தியான);கை. 20. பிறைக் (அர்த்தச்சந்திரக்);கை. 21. சுட்டும் (சூசி);முத்திரை. 22. அரைக்கொடி (அர்த்தபதாக);முத்திரை. 23. அழைத்து வழங்கும் கை (ஆகூய வரத(ம்); முத்திரை. 24. முட்டி (முஷ்டி);முத்திரை. 25. ஊன்றிய (நித்ரா);முத்திரை. 26. தளிர்க் (பல்லவக்);கை. 27. விற்பிடி (தனுர்);முத்திரை. 28. அடிக்கும் (தாடன);முத்திரை. 29. எழிற்கை (கந்தரஹஸ்த);. 30. நீட்டிய (தண்டஅஸ்தம்);கை. 31. இடைக்கை (கடி அஸ்தம்);. 32. அறவாழிக்கை =(தர்மசக்கர அஸ்தம்); |
நடனம் | நடனம் naḍaṉam, பெ. (n.) 1. கூத்து; dancing, acting. 2. குதிரைக்கதி; gaits of a horse; “பதினெட்டு நடனத்தொழில் பயிற்றி” (கொண்டல் விடு. 176.);. 3. பாசாங்கு; pretence, hypocritical act. 4. மாயவித்தை: jugglery, magic. “நன்று நன்று நீ நம்முனர்க்காட்டிய நடனம்” (கந்தபு. அவைபுகு. 87);. த. நடனம் → skt natana. நட்டன. [நடி+அனம் → நடனம்.] ஒ.நோ. படி + அனம் →படனம். நள் → நளி. நடித்தல் = ஒத்துச்செய்தல். நாடகக் கலையின் முத்திறப்பாடுகளுள், நடனம் என்பதும் ஒன்றாகும். ‘நடி’ என்னும் முதனிலை வடமொழியில் இல்லை. நிருத்த என்னும் சொல்லின் ‘ந்ருத்” என்னும் அடியையே முதனிலையாக, வடவர் ஆள்வர். இதுபற்றி மொழிஞாயிறு கூறுங்கால், ‘தமிழ்நடனமே இன்று பரதநாட்டியம் என்று வழங்குகின்றது. வடமொழியில், பரதசாத்திரம் கி.மு.4-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. ஆனால், அதற்கும் முந்தியது தமிழ்ப்பரதமேயாகும்” (தமி.நாகரி,பண்பாடு,பக்.117);. நடனம் என்பது அழகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற்கரணங்களோடும், கை, கால், கண், வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள், எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என முத்திறப்பட்டு, பிண்டி அல்லது இணையா வினைக்கையெனப்படும். ஒற்றைக்கைவண்ணம் முப்பத்து மூன்றும், பிணையல் அல்லது இணைக்கை யெனப்படும் பொருள்பொதிந்த இரட்டைக் கைவண்ணம் பதினைந்தும், கொண்டனவாகும். நடம், நடனம் என்னும் தென்சொற்கள், வடமொழியில் நட்ட, நட்டன என்று வலிக்கும். உள்ளத்தெழும் உணர்வுகளையும், வாழ்வியல் அசைவுகளையும், 108 மெய்ப்பாடுகள் வாயிலாக வெளிப்படுத்துவதே நடனம். இதுவே தமிழ்ப்பரதம் என்றழைக்கப்படும். பரதநாட்டியம் என்னும் பெயரில், அகமலர, முகமலா அனைவராலும் கண்டுகளிக்கப்பெரும் நடனமும், இஃதே. வடமொழியில் இயற்றப்பட்ட பரதநூலிற்கு முந்தியது. இத் தமிழ் நடனம், கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கும், அப்பாற்பட்டது. அடியார்க்கு நல்லார் இயற்றிய, சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் காணப்படும், தமிழ்ப்பரதம் பற்றிய குறிப்பு வருமாறு: “நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம், முதலாகவுள்ள தொன்னூல்களுமிறந்தன.” மேற்குறித்த ஏதுக்களால், நடி என்னும் முதனிலைத் தொழிற்பெயரினின்று தோன்றிய சொல்லே, நடனம் என்று அறியலாம். இந் நடனமே தமிழ்ப்பரதம். அடியார்க்கு நல்லார் உரைப்பதும், இத் தமிழ் நடனத்தையே என்றறிக. |
நடனியர் | நடனியர் naḍaṉiyar, பெ. (n.) கூத்தியர்; dancing girls. “நடித்தெதிர் நடந்த தன்றே, நடனியர் தம்மின் மன்னோ” (இரகு. ஆற்று. 20.);. |
நடன் | நடன் naḍaṉ, தொ. பெ. (vdn.) கூத்தாடுபவர் dancer, “வளிநடன் மெல்லினப் பூங்கொடி மேவர நுடங்க” (பரிபா. 22, 42);. 5. ELsär -→ skt naa. [நள் → நளி → நடி. நடித்தல் = ஒத்துச்செய்தல். நடி + அம் → நடம் → நடன்.] நடம் என்னும் தொழிற் பெயரினின்று, நடன் என்னும் ஆண்பாற்பெயர் தோன்றும். (செ.ப.அ.சீ.கே.பக்.34);. |
நடபடி | நடபடி naḍabaḍi, பெ. (n.) 1. நடவடிக்கை; action. 2. நிகழ்ச்சி; occurrence. 3. வழக்கம்; Custom, practice. ம. நடபடி. [நட → நடபடி.] |
நடபத்திரகம் | நடபத்திரகம் naḍabattiragam, பெ. (n.) கத்தரிச் செடி; bringal plant. |
நடபத்திரிகை | நடபத்திரிகை naḍabattirigai, பெ. (n.) சேம்பு (மலை);; Indian kales. |
நடபாவாடை | நடபாவாடை naḍapāvāḍai, பெ. (n.) நடைபாவாடை பார்க்க: see radai-pavidal. ம. நடைபாவாடை. [நட + பாவாடை.] நடை-நட- ஐகாரக்குறுக்கம். |
நடபாவி | நடபாவி naḍapāvi, பெ. (n.) நடைபாவி பார்க்க;See nagalpävl. தெ. க. நடபாவி, [நட+ பாவு → பாவி] |
நடபேதி | நடபேதி naḍapēti, பெ. (n.) அளவிற்கு அதிகமாக ஏற்படும் கழிச்சல்: discharge of the foeces from the anus. |
நடப்பன | நடப்பன naḍappaṉa, பெ. (n.) காலால் நடந்து செல்லும் உயிரிகள்; creatures that walk. “தெளிவாக ஊர்வன நடப்பன பறப்பன” (தாயு. பரிபூரண.2);. [நட → நடப்பன.] |
நடப்பித்தல் | நடப்பித்தல் naḍappittal, பி.வி. (caus.v.) ஒரு செயலை அல்லது நிகழ்வைப் பிறரைக் கொண்டு செய்வித்தல்; giving instructions for the work to be done. முதல்வர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டு நலப்பணித் திட்டங்களை நடப்பித்தார் (இ.வ.);. [நட → நடப்பி → நடப்பித்தல் (பி.வி);.] |
நடப்பினம் | நடப்பினம் naḍappiṉam, பெ. (n.) EL#Sith sŵsuräi©; moving animal-kingdom [நடப்பு + இனம்.] ஒ.நோ. கால்நடை-விலங்குகள். |
நடப்பிப்பு | நடப்பிப்பு naḍappippu, பெ. (n.) 1. சிக்கனம்; economy. 2. மேற்பார்வை; Superintendence. direction, management. நடப்பு’ நடப்புக்கு ஏற்பப் பொருளும் செயலும் அளவாகச் செய்வித்தற் பண்பைக் குறிக்கும் சொல்லாகும். இச் சொல், இக் கால வாழ்வியலுக்கும் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது. |
நடப்பு | நடப்பு1 naḍappu, பெ. (n.). 1. போக்குவரவு: going and coming. 2. (BLåsong; behaviour. conduct, demeanour. 3. stuus,mun# @HITLių: criminal intimacy as between a man and woman. 4. §5msuin; present time, current time, “நடப்புக்காலம் உங்களுக்கு நல்லதாக இருக்கிறது (உ. வ);. 5. செல்வாக்கு (யாழ்ப்);, influence, prosperity ம. நடப்பு. து. நடபு. [நட → நடப்பு.] போதல் வருதல் பற்றிய நடை ஈண்டுக் குறிக்கப்படுகிறது. நடப்பு2 naḍappu, பெ. (n.) 1. குறிக்கோள், unswt Glsum Gsmu0 (#lsum.);; single-minded devotion, concentration, 2. a luffshā, Qājā(5 (வின்);, ideal. 3. எண்ணத்தின் செயல்வடிவம்: action நினைப்பிற்கும் நடப்பிற்கும் தொடர்பே இல்லை (இ.வ.);. [நட → நடப்பு.] நடந்து சென்று அடையும் இலக்கிணைக் குறித்தல் உணர்க. நடப்பு3 naḍappu, பெ. (n.) 1. அவ்வப்போது flagsugi: ELùLJá,56öðrở, 5. current account 2. அடுத்த ஆண்டு; next year. ‘நடப்பிற் பார்த்துக் கொள்ளலாம்’. (உ. வ);. 3. அடுத்து வரும் சுறவ (தை); மாதம்; next (tai);. Surauam month நடப்பிற்குக் கலியாணம், கழுத்தே கம்மாவிரு (உ.வ.); நடப்பில் உள்ள நிகழ்வுகள் இங்கு பதியப்பட்டுள்ளன. (இ.வ.); 4. குறிப்பிடும் இடத்தில் நிகழ்வது; நிகழ்வது பற்றிய விளக்கம்; state of affairs. நாட்டு நடப்பைப் பற்றிய அக்கறை இல்லாமல் இருக்கிறாயே (இ.வ.);. ம, து. நடப்பு. [நட → நடப்பு.] நடப்பு4 naḍappu, பெ. (n.) 1. ஈமக்கடனுக்கு முதல் நாளில் நடத்தும் சடங்கு; funeral rite of planting a stone an the day previous to ima-k-k-kadan. 2. தாலி வாங்குகை (யாழ்ப்);; removing the marriage-badge from a widowed woman, 3 செல்லுதற்குரிய விடம்; objective, destination, ‘ஊதியமாகிய நடப்பின் மேல’ (சீவக. 770. உரை);. ம, து. நடப்பு. [நட → நடப்பு.] இறப்புக்குப்பின் நடக்கும் கரணங்கள். |
நடப்பு விலை | நடப்பு விலை naḍappuvilai, பெ. (n.) ஓரிடத்தில் அல்லது ஓரினமக்களை, ஒரு நேரத்தில் பொதுவாகத்தாக்கும் நோய் (இ. வ.);. epidemic disease. [நடப்பு +Skt வியாதி] |
நடப்பு: ஆண்டு | நடப்பு: ஆண்டு naḍappuāṇḍu, பெ. (n.) 1. நிகழ் ஆண்டு; current – year 2. நிகழ்காலம், present – time. நடப்பு:ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நலத்திட்டங்கள் மிகுதியாக உள்ளன. (இக்.வ.);. நடப்புநிதியாண்டு [நடப்பு + ஆண்டு.] |
நடப்பு. | நடப்பு. naḍappu, பெ.எ. (adj.) நிகழ்ந்து கொண்டிருக்கிற; current (year,etc.);. நடப்பு ஆண்டில் பணவீக்கம் குறைந்துள்ளது. (இக்.வ.); நடப்பு ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் (இக்.வ);. [நட → நடப்பு.] |
நடப்புக்கணக்கு | நடப்புக்கணக்கு naḍappukkaṇakku, பெ. (n.) நடப்புச் செலவுகளுக்காக வைப்பகத்தில் வைத்துள்ள இருப்புக்கணக்கு; current aCCOUnt. [நடப்பு + கணக்கு.] |
நடப்புக்காரன் | நடப்புக்காரன் naḍappukkāraṉ, பெ. (n.) 1. Q&isustó(55irst sust: a man of influence 2. வாடிக்கைக்காரன் customer 3. கள்ளத் தொடர்பாளர் (சோர நாயகன்);, paramour (இ. வ);. ம. நடப்புகாரன். [நடப்பு + காரன்.] |
நடப்புச்செய்தி | நடப்புச்செய்தி naḍappucceyti, பெ. (n.) @sirsmpu festgå fi: current permanence நடப்புச் செய்தி என்ன? (உ. வ);. [நடப்பு + செய்தி.] |
நடப்புச்செலவு | நடப்புச்செலவு naḍappuccelavu, பெ. (n.) நடைமுறைச்செலவு (அன்றாடச் செலவு);; Current expense. [நடப்பு + செலவு.] |
நடப்புநாணயம் | நடப்புநாணயம் naḍappunāṇayam, பெ. (n.) நடைமுறையில், புழக்கத்தில் உள்ள நாணயம்; current currency. [நடப்பு + நாணயம்.] தற்பொழுது மக்களிடையே, புழக்கத் திலிருக்கும் பணம். |
நடப்புநிதியாண்டு | நடப்புநிதியாண்டு naḍappunidiyāṇḍu, பெ. (n.) நடந்து கொண்டிருக்கிற வரவு செலவுக் கணக்கு ஆண்டு; current financial year. [நடப்பு +ski நிதி ஆண்டு.] |
நடப்புநிலவரம் | நடப்புநிலவரம் naḍappunilavaram, பெ. (n.) நிகழ்ந்து கொண்டிருக்கிற நிலை; current condition. [நடப்பு + நிலவரம்.] |
நடப்புமதிப்பு | நடப்புமதிப்பு naḍappumadippu, பெ. (n.) ஒரு பொருளுக்கு நடைமுறையில் உள்ள இப்போதைய மதிப்பு; relative value, present value: ‘தங்கத்தின் நடப்பு மதிப்பு நாள்தோறும் உயர்ந்து கொண்டிருக்கிறது. (இக்.வ.);. [நடப்பு + மதிப்பு.] |
நடப்புவட்டி | நடப்புவட்டி naḍappuvaḍḍi, பெ. (n.) இற்றை வட்டி; current or prevailing rate of interest. [நடப்பு + வட்டி.] |
நடப்புவருடம் | நடப்புவருடம் naḍappuvaruḍam, பெ. (n.) நடப்பு ஆண்டு பார்க்க;See magappu-dmpu. மறுவ, நிகழ்காலம். [நடப்பு + Skt வருஷம் → வருடம்.] |
நடப்புவிலை | நடப்புவிலை naḍappuvilai, பெ. (n.) இற்றை விலை; current price. மறுவ. இன்றைய விலை. ம. நடப்புவில. [நடப்பு + விலை.] |
நடமண்டனம் | நடமண்டனம் naḍamaṇḍaṉam, பெ. (n.) அரிதாரம் (யாழ்.அக.);; yellow orpiment. |
நடமாடநோய் | நடமாடநோய் naḍamāḍanōy, பெ. (n.) Glossos). GEmir infectious disease; மறுவ, கொள்ளைநோய். [நடமாடு + நோய்.] எளிதில் பற்றிக்கொள்ளும் நுண்மங்களை உடையநோய். இந் நோய் மழைக் காலத்தும், புயற்காலத்தும் மக்களை பெருவாரியாகத் தொற்றுந் தன்மைத்து. |
நடமாடல் | நடமாடல் naḍamāḍal, பெ. (n.) 1. மேல் ஓங்குதல்; prevailing. 2. உலாவுதல்; about after sickness. (சா. அக.);. |
நடமாடு | நடமாடு2 naḍamāḍudal, 5.செ. கு. வி. (v.i.) கூத்தாடுதல்; to dance: “வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர” (தேவா. 2781);. நடமாடும்ஆடைதேய்ப்பகம் “எல்லோரும் இன்புற்றிருக்க நடமாடுகின்றிரீ (திருவருட்பா); |
நடமாடு-தல் | நடமாடு-தல் naḍamāḍudal, 5.செ. கு. வி. (v,i.) 1. நோய் நீங்கி உலாவுதல்; to go about move about as after, sickness; ‘பக்கவாத, (ஊதை); நோய் வந்ததால் அவரால் நடமாடமுடியவில்லை’. (உ.வ.); ‘கொடிய விலங்குகள் நடமாடும் மலைப் பாதையில் மனிதர் நடமாட முடியாது. 2. மீளாத்துயர், வருத்தம், முதலியவற்றுள் அடைப்பட்டிருந்து வெளிவருதல்; to rise, come out, as from depressed circumstances. 3, தீய விலங்குகள், ஊர்வன நோய், தீய ஆவி முதலாவை உலவுதல்; to haunt or frequent, as evil Spirits; to infest as beasts or reptiles: “ஆவிகள் இரவில் நடமாடுகின்றன (உ. வ);. 4. தீயவர் திரிதல்; to walk about thieves to walk about evil person. ‘திருடர் இரவில் திரிகின்றனர் 5. புழங்குதல்; to circulate, as coin as a report, ‘இன்று கள்ளப்பணம் நடமாடுகிறது. 6. நோய் முதலியன பரவியிருத்தல்; to prevail, as epidemics. தெ. நடயாடு. [நடம் + ஆடு-] |
நடமாடும் | நடமாடும் naḍamāḍum, செ.குன்றாவி. (adj.) usu இடங்களுக்கும் செல்லக்கூடிய வகையில் ஊர்தியில் அமைந்த இயங்கும் அமைப்பு: mobile. நடமாடும் உணவகம் நடமாடும் நூலகம் இக்வ). [நடம் + ஆடும்.] |
நடமாடும் அரத்த வங்கி | நடமாடும் அரத்த வங்கி naḍamāḍumarattavaṅgi, பெ. (n.) நடமாடும் அரத்த வைப்பகம் பார்க்க;See nagamādum-aratta-vasopagam. நடமாடும் அரத்தம் + E வங்கி.] |
நடமாடும் உணவகம் | நடமாடும் உணவகம் naḍamāḍumuṇavagam, பெ. (n.) ஒரிடத்தில் நிலையாகத் தங்காது. பல இடங்களுக்கும் சென்று சிற்றுண்டிகளை விற்பனை செய்யம் வகையில், வண்டியில் அமைந்த உணவகம்: mobile – hotel [நடமாடும் + உணவகம்.] |
நடமாடும்அரத்தவைப்பகம் | நடமாடும்அரத்தவைப்பகம் naḍamāḍumarattavaippagam, பெ. (n.) f)6m suum &, ஒரிடத்தில் தங்காமல், பொதுமக்களிடம் வந்து குருதியைத் தொகை கொடுத்துப் பெற்றுக் கொண்டு, காப்பாக எடுத்துச் செல்லும் sustomy; mobile blood – bank. நடமாடும் + அரத்தம் வைப்பு + அகம்.) |
நடமாடும்ஆடைதேய்ப்பகம் | நடமாடும்ஆடைதேய்ப்பகம் naḍamāḍumāḍaitēyppagam, பெ. (n.) ஓரிடத்தில் தங்காமல், பொது மக்களை நாடிச் சென்று அவர்களின் ஆடைகளைமடித்துச் சமன்படுத்தித் தேய்த்துக் கொடுக்கும்; Susity mobile iron – cart. [நடமாடும் + ஆடை + தேய்ப்பு + அகம்.] |
நடமாடும்நீதிமன்றம் | நடமாடும்நீதிமன்றம் naḍamāḍumnītimaṉṟam, பெ. (n.) நடமாடும் முறைமன்றம் பார்க்க;See madamādum – murai-manram. [நடமாடும் + skt நீதி + மன்றம்.] |
நடமாடும்நூலகம் | நடமாடும்நூலகம் naḍamāḍumnūlagam, பெ. (n.) நிலையாக ஓரிடத்தில் தங்காமல், நூலகம் இல்லாத சிற்றூர்களுக்குக் குறிப்பிட்ட நாள்களில் சென்று, மக்களுக்கு நூல்களைத் தந்து உதவும், நகரும் வண்டியில் அமைந்த நூலகம்: mobile – library ‘எங்கள் ஊரில் முப்பது பேர் நடமாடும் நூலகத்தில் உறுப்பினராகியுள்ளனர்’. [நடமாடும் + நூலகம்.] |
நடமாடும்படிப்பகம் | நடமாடும்படிப்பகம் naḍamāḍumbaḍippagam, பெ. (n.) நடமாடும் நூலகம் பார்க்க;See nagam-ādum – nūjagam. “நேற்று நடமாடும் படிப்பகம் வந்ததா? [நடமாடும் + படிப்பகம்] |
நடமாடும்மருத்துவமனை | நடமாடும்மருத்துவமனை naḍamāḍummaruttuvamaṉai, பெ. (n.) ஒரிடத்தில் நிலையாகத் தங்காமல், மருத்துவமனை எந்து இல்லாதச் சிற்றூர்களுக்கும், உடனடி உதவி தேவைப்படும் நேரங்களிலும், இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் எதங்களுக்குப் (விபத்துகள்);. பண்டுவம் (சிகிச்சை); மேற்கொள்ளும் மருத்துவமனை mobile – hospital “குசராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நடமாடும் மருத்துவமனையின் பங்கு பெரிதாக இருந்தது.” [நடமாடும் +மருத்துவமனை.] |
நடமாடும்முறைமன்றம் | நடமாடும்முறைமன்றம் naḍamāḍummuṟaimaṉṟam, பெ. (n.) நிலையாக ஒரிடத்தில் தங்காமல் குற்றம் நிகழுமி டத்திற்கே, சென்று வழக்கின் தன்மையை ஆய்வுசெய்து தீர்ப்பு வழங்கும் மன்றம்: mobile – couா நண்பரின் ஊர்தி உரிமத்தைப் புதுப்பிக்காததால், காவல்துறையினரின் ஆய்வில் சிக்கி நடமாடும் முறைமன்றத்தில் தண்டத்தொகை கட்டினார். [நடமாடும் + முறைமன்றம்.] |
நடமாடும்வங்கி | நடமாடும்வங்கி naḍamāḍumvaṅgi, பெ. (n.) நடமாடும் வைப்பகம் பார்க்க: see паратаqum – varppagaт. [நடமாடும் + E வங்கி.] |
நடமாடும்வீடு | நடமாடும்வீடு naḍamāḍumvīḍu, பெ. (n.) தலைவர்கள் தேர்தல் வேலையின் போதும். நடிகர் நடிகையர் வெளிப்புறப்படப்பிடிப்புகளின் போதும் பயன்படுத்தும் வீட்டிலுள்ள இன்றியமையாத எந்துகள் உள்ள அறையைப் போன்ற அமைப்பைக் கொண்ட வண்டி: mobile house அமைச்சர் தேர்தல்சுற்று மேற்கொண்டபோது நடமாடும் வீட்டையே அதிகமாகப் பயன்படுத்தினார். [நடமாடும் + விடு.] |
நடமாடும்வைப்பகம் | நடமாடும்வைப்பகம் naḍamāḍumvaippagam, பெ. (n.) ஒரிடத்தில் நிலையாக இருக்காமல் இடம்மாறிச் செல்லும் பணம் (பொருள்); வைப்பிடம், mobile – bank. [நடமாடும் + வைப்பகம்.] |
நடமாட்டம் | நடமாட்டம்1 naḍamāḍḍam, பெ. (n.) 1. வலமை (வின்.);; activity, energy, as in old age. 2. செல்வாக்கு (வின்.);; influence. 3. பழக்கம் (வின்);; acquaintance in any affair. 4. கூடுமிடம் (வின்.);; resort, haunting. தெ. நடயாட [நடம் + ஆட்டம்.] நடமாட்டம்2 naḍamāḍḍam, பெ. (n.) 1. நடந்து செல்கை; walk, act of walking. ‘அவன் பாயும் படுக்கையுமாயிருக்கிறான். ஆதலால் ஒருமாதமாய் நடமாட்டமில்லை. (உ. வ.);. 2. STUgo Bl-āgā; ability to move around. “அவருக்குக் கண் மங்கி நடமாட்டம் குறைந்துவிட்டது (உவ);. தெ. நடையாட்ட. [நடை → நடம் + ஆட்டம்.] நடமாட்டம்3 naḍamāḍḍam, பெ. (n.) மக்கள், விலங்கு, ஊர்தி போன்றவை, ஒரிடத்தினின்று மற்றோர் இடத்திற்குச் செல்லுதல், வருதல் போன்ற செயல்பாடு அல்லது இயக்கம்; movement of people animals, vechile etc. ‘மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் வீடு கட்டினால் கள்வர்களுக்குக் கொண்டாட்டந்தான்’ (உ.வ.);. ‘மலையடி வாரத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது (இ.வ.); [நடம் + ஆட்டம்.] நடமாட்டம்4 naḍamāḍḍam, பெ. (n.) நடனம்; dannceing. “நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன்” (திவ். நாய்ச் 10:7);. [நடம் + ஆட்டம்.] இது ஆட்டத்திற்கு மட்டும் அழுத்தம் தரும்பான் மையில் , அமைந்த சொல்லாகும். |
நடமாதிரை | நடமாதிரை naḍamātirai, பெ. (n.) கொத்துமல்லி; Coriander sativum. |
நடமாளிகை | நடமாளிகை naḍamāḷigai, பெ. (n.) திருநடை மாளிகை (பெரியபு திருநாவு 387); பார்க்க;See tirunagal-malgal. [நடை + மாளிகை → நடமாளிகை, (ஒ.நோ); மடைப்பள்ளி → மடப்பள்ளி] |
நடமாளிகைமண்டபம், | நடமாளிகைமண்டபம், naḍamāḷigaimaṇḍabam, பெ. (n.) திருநடை மாளிகை (IMPRd81); பார்க்க;See tirunada-măliga. [நடமாளிகை + மண்டபம்.] |
நடமிடுமீசன் | நடமிடுமீசன் naḍamiḍumīcaṉ, பெ. (n.) சரக்கொன்றை; purging cassia. |
நடமுருடு | நடமுருடு naḍamuruḍu, பெ. (n.) நடனத்துக்குரிய முருடென்னும் இசைக் கருவி (சிவக்.பிரபந்.பக்.237);; a musical instrument. played on an accompaniment to dance. [நடம் + முருடு.] |
நடம் | நடம் naṭam, பெ. (n.) நாட்டியம்; another name for dance. [நள்-நடு-நட்டம்-நடம் (இடைக்குறை);] நடம் naḍam, பெ.(n.) நாட்டியம்; another name for dance. [நள்-நடு-நட்டம்-நடம் இடைக்குறை] நடம் naḍam, பெ. (n.) நடனம், கூத்து; dance. _இரத முடைய நடமாட்டுடையவர்’ திருக்கோ. 57). நள் → நளி → நளிதல் =ஒத்தல். நளி → நடி. ஒநோ. களிறு → கடிறு. நடித்தல் = ஒத்து நடத்தல். நடி → ஆட்டம். “நடிகொணன் மயில் சேர்திரு நாரையூர்” (தேவா.216:5);. த. நடம் → ski நட்ட. நடம் =அகத்தேயெழும் உணர்வுகளைப் புறத்தே உடலுறுப்புகள் வாயிலாகக் கூத்தாடி வெளிப்படுத்தி, நடம் இட்டு, நடித்தல். த. நடி → நடம் → நட்டம்- skt ந்ருத்த, நடம் என்பது அழுகுற ஆடுவது. அது நூற்றெட்டு உடற்கரணங்களோடும், கைகால், கண், வாய் முதலிய உறுப்புகளின் தொழில்களோடும் கூடியது. கைவினைகள் எழிற்கை, தொழிற்கை, பொருட்கை என முத்திறப்பட்டு, பிண்டி அல்லது இணையாவினைக்கை யெனப்படும், ஒற்றைக்கை வண்ணம் முப்பத்து மூன்றும், பிணையல் அல்லது இணைக் கையெனப்படும், இரட்டைக் கைவண்ணம் பதினைந்தும் கொண்டன வாகும். தமிழகத்தில் ஆடிய தமிழ் நடமே, இன்று பரதநாட்டியம் எனும் பெயரில் நிகழ்த்தப்படுகிறது. தமிழ்நடத்தின் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு. |
நடம்பயில்லு-தல் | நடம்பயில்லு-தல் naḍambayilludal, 3.செ. கு.வி.(v.i.) 1.கூத்தாடுதல்; to dance. 2. நடனம் கற்றுக்கொள்ளுதல்; to learn dancing. [நடம் + பயில்-] |
நடராசதங்கள் | நடராசதங்கள் naḍarācadaṅgaḷ, பெ. (n.) மாற்றுயர்ந்த தங்கம்; gold most superior is purity. [நடராசன் + தங்கம்.] நடராசன் தெய்வங்களில் உயர்வென்று சிவனியர் கருதல் போல், பொன்னில் உயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம் பற்றிய பெயர் என்க. |
நடராசன் | நடராசன் naḍarācaṉ, பெ. (n.) நடவரசன் பார்க்க ;See nagavarasan. மறுவ. ஆட(ல்);வல்லான். |
நடராசர் சடை | நடராசர் சடை naṭarācarcaṭai, பெ. (n.) சிற்ப வல்லுநர் செதுக்கும் மகுடம்; engraving as hair in Nataraja sculpture by sculpter. [நடராசர்+சடை] நடராசர் சடை naḍarācarcaḍai, பெ.(n.) சிற்பி வல்லுநர் செதுக்கும் மகுடம், engraving a hair in Nataraja sculpture by sculpter. [நடராசர்+சடை] |
நடலமடி-த்தல் | நடலமடி-த்தல் naḍalamaḍittal, 4.செ. கு. வி. (v.i.) பாசாங்கு செய்தல்(இ. வ.);; to pretend. மறுவ: கூத்தடித்தல். [நடலம் + அடி -.] பண்பற்றவர் தமது பகட்டாரவாரத் தோற்றத்தின் வாயிலாகப் பண்புற்றவர் போல், பொய்த்தோற்றங்காட்டிப் பிறரை நம்பச் செய்தல். |
நடலம் | நடலம் naḍalam, பெ. (n.) 1. ஊகம்: assumption. 2. ஆணவம்,செருக்கு; vanity, insolence. 3. வீண் செலவிடுகை (வின்.);: abuse of property, recklessness spuandering. 4. இகழ்ச்சி (வின்.);: irreverence, derision, scoffing. 5. நடிப்பு (பாசாங்கு);; pretence hypocrisy. 6. மித, மிஞ்சிய நாகரிகங் காட்டுகை; overnicety. 7. கூர்நனிச் சுவை; fastidious ness. [ஒருகா: நடனம் → நடலம்.] |
நடலம் பண்ணு-தல் | நடலம் பண்ணு-தல் naḍalambaṇṇudal, 5.செ.கு. வி. (v.i.) அளவுக்கு அதிகமாக நாகரிகம் காட்டுதல்; to be fastidious. மறுவ, நனிநயம் பண்ணுதல். [நடலம் + பண்ணு-.] |
நடலை | நடலை naḍalai, பெ. (n.) 1. சூழ்ச்சி;இரண்டகம்: guile. “நடலைப்பட் டெல்லா நின்பூழ்” (கலித். 95,33);. 2. பொய்ம்மை; deception, illusion. “நடலை வாழ்வு கொண்டென் செய்திரி” (தேவா. 1203:4);. 3. நடிப்பு, பாசாங்கு (உ.வ.);; pretence, affectation. 4. துன்பம் (பிங்.);; distress, suffering, affliction. “நடலையு ளடிகள் வைக” (சீவக.1914);. 5. அசைவு (சூடா);; trembling Shaking. 6. நடுக்கம் (சா.அக.);; trembling, shivering. [நடலம் → நடலை.] |
நடல் | நடல் naḍal, பெ. (n.) ஊன்றுகை : planting. [நடு + அல் → நடல்.] அல்லீற்றுத்தொழிற்பெயர். |
நடவடி | நடவடி naḍavaḍi, பெ. (n.) நடவடிக்கை பார்க்க;See nadavadikkai. ம.தெ. நடவடி. [நடைபடி → நடவடி.] |
நடவடிக்கை | நடவடிக்கை naḍavaḍikkai, பெ. (n.) 1. நடத்தை செயல்பாடு, நடந்துகொள்ளும் முறை, behaviour, conduct. பொதுவாழ்வியல், ஈடுபடுவோரின் நடவடிக்கை போற்றத் தகுந்ததாக இருக்கவேண்டும் (இக்.வ.);. சில நாட்களாகவே அவனுடைய நடவடிக்கையில் ஒரு மாறுதல் தெரிகிறது (இக்.வ.);. 2. குறிப்பிட்ட நோக்கத்திற்காக மேற் கொள்ளும் பணி அல்லது ஏற்பாடு; measures, proceedings. வறட்சியைப்போக்கும் நடவடிக்கைகள் முழுமையாக இல்லை (இக்.வ.);. 3. அலுவலகம் முதலியவற்றில் மேற்கொள்ளும் பணி அல்லது அலுவல் work activities. கலவரத்தின் காரணமாகப் பல தொழிற்சாலைகளின் அன்றாட நடவடிக் கைகள் தடைபட்டன. 4. ஒருவரின் நடத்தையின் மீது மேற்கொள்ளப்படும் செயற்பாடு; action. அவர் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது? (உ.வ);. மறுவ ஒழுக்கம், ஒழுகலாறு செயல். க, நடபடிகெ. து. நடபாட. [நடைபடி → நடவடி → நடவடிக்கை.] |
நடவரசன் | நடவரசன் naḍavarasaṉ, பெ. (n.) சிவபெருமானின் பல வடிவங்களுள் ஒன்றான, நடனமாடும் திருவடிவம், Śivan in dancing posture. [நடம் + அரசன்.] |
நடவல் | நடவல் naḍaval, பெ. (n.) நட்டபயிர்; transplanted crop. ‘நடவலிறைத்ததுக்கும் வரிசையில் மூன்றீலொன்று’ (புதுக்கல்.423);. [நடு → நடவு → நடவல்.] |
நடவாமுடம் | நடவாமுடம் naḍavāmuḍam, பெ. (n.) நடக்க முடியாத ஊனமுற்றோர், maimed or cripple person who can not walk. [நட + ஆ + முடம் ஆ. எதிர்மறைஇடைநிலை.] |
நடவாள் | நடவாள் naṭavāḷ, பெ. (n.) நடவுத்தொழில் செய்வோர்; workers for transplanting in the paddy field. [நடவு+(பயிரிடுதல்);ஆள்-நடவாள்] [P] நடவாள் naḍavāḷ, பெ.(n.) நடவுத்தொழில் செய்வோர் workers for transplanting in th paddy field. [நடவு+(பயிரிடுதல்);ஆள்-நடவாள்] [P] |
நடவாவி விழா | நடவாவி விழா naṭavāviviḻā, பெ. (n.) காஞ்சிபுரத்தில் மேழ வெள்ளூவா (சித்திரைப் பெளர்ணமி);யன்று நடைபெறும் விழா; a festival in Kanchipuram, on the full moon day of the month Chittirai. [நடை+வாவு+விழா] நடவாவி விழா naḍavāviviḻā, பெ.(n.) காஞ்சி புரத்தில் மேழ வெள்ளுவா (சித்திரைப் பெளர்ணமி);யன்று நடைபெறும் விழா; a festival in Kanchipuram, on the full moon day of the month Chittirai. [நடை+வாவு+விழா] |
நடவு | நடவு1 naḍavudal, 5.செ. குன்றாவி. (v.t.) 1. செலுத்துதல்; to cause to go, drive lead on conduct discharge. “கணையினை நடவி (விநாயகபு. 80. 704);. 2. கருமம், நடத்துதல் (வின்.);; to manage, administer, direct transact, perform. தெ. க. நடுபு. து. நடபாவுணி. [நட → நடவு-] நடவு2 naḍavu, பெ. (n.) 1. நாற்றைப் பிடுங்கி வயலில் நடுகை; transplantation of seedlings. “பேர்த்து நடவு செய்குநரும்” (திருவிளை நாட்டுப். 20);. உங்கள் வயலில் என்றைக்கு நடவு?(உ.வ.);. 2. நட்டபயிர்; growing crop. “தண்ணீரில்லாமல் நடவு காய்கிறது” (உ. வ);. புயல்மழையில் நடவுமுழுவதும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டது (இக்.வ);. 3. நடவுகணக்கு (R.T.);, an account containing particulars of transplanting. து. நட்டி [நள் → நடு → நடவு.] நடவு3 naḍavu, பெ. (n.) தணக்கு; catamaran wood tree (சா.அக.);. |
நடவுகம்பு | நடவுகம்பு naḍavugambu, பெ. (n.) தளிர்த்து வளர்தற் பொருட்டு நடும் கம்பு(நாஞ்);; scion, shoot of plant, cut for planting. நடவுகம்பாக, ஒடித்து முருங்கைக்கம்பை நட்டால் முழுமரம் உருவாகும். (இ.வ.);. [நடவு + கம்பு] |
நடவுகாரிகள் | நடவுகாரிகள் naḍavugārigaḷ, பெ. (n.) நாற்று நடவு வேலைசெய்யும் பெண்கள்; women labourers who transplant seedlings. [நடவு + காரிகள்.] |
நடவுகூறு | நடவுகூறு naḍavuāṟu, பெ. (n.) நிலத்திற்குரியவன் அதனில் மரங்கள் முதலியன வைத்து வளர்த்தவனுக்கு கொடுக்கும் பங்குக்கூறு (நாஞ்);; a share of the produce given by an owner of a garden land to a person for his labour and money spent in rearing new plants of taxable species, [நடவு + கூறு.] |
நடவுகூலி | நடவுகூலி naḍavuāli, பெ. (n.) நடுகூலி பார்க்க;See nadu-kuh. [நடவு + கூலி.] |
நடவுகொத்து | நடவுகொத்து naḍavugottu, பெ. (n.) 1. வயல் நடுகைக்காக கொடுக்கப்படும் கூலி, wage for transplantation of seedlings. 2. வயல் நடுகைக்காக ஒதுக்கப்படும் நடவு ஆட்கள்; labourers allocated for transplantation in a field. “நடவு கொத்துக்கு கூலியை கொடுத்து அனுப்புங்கள்” (உ.வ);. [நடு → நடவு + கொத்து.] கொற்று → கொத்து = கூலி. |
நடவுசெய் | நடவுசெய்1 naḍavuseytal, 1செ.குன்றாவி. (v.t.) அரசாளுதல் (நான்மணி. 95. உரை.);; to rule, govern. [நட= நடத்து. நட → நடவு.] மக்கள்தரும் வரிப்பணம்பெற்ற மன்னன், அவர்க்கு நன்மை நடக்குமாறு செய்து, ஆட்சி புரிதல். நடவுசெய்2 naḍavuseytal, 1.செ.கு.வி. (v.i.) நாற்று நடுதல்; to transplant seedlings. நடவு செய்தலில் இடைவெளி இருந்தால்தான், நடவுப்பயிர் செழிக்கும் (இ.வ.);. மறுவ நடவுபோடு. [நடவு + செய்-] முதற்கண் விதைக்கப்பட்ட நாற்றங்காலில் இருந்து நாற்றுகளைப் பிடுங்கி நடுதல். |
நடவுதொளி | நடவுதொளி naḍavudoḷi, பெ. (n.) நாற்று நடுவதற்குமுன் வயலைச் சேறாகக் கலக்குகை; to making fit by slash the field for transplantion. [நடவு + தொளி = நன்கு சேறாக்கிப் பதப்படுத்திய வயல்.] |
நடவுதொளியடித்-தல் | நடவுதொளியடித்-தல் naḍavudoḷiyaḍiddal, 4.செ. குன்றாவி. (v.t.) நாற்று நடுவதற்குமுன் வயலைச் சேறாகக் கலக்குதல்; to plough a flooded field before transplantion [நடவுதொளி+அடி-] |
நடவுபோடு-தல் | நடவுபோடு-தல் naḍavupōḍudal, 20.செ. கு.வி. (v.i.) நாற்று நடுதல்; to transplant seedlings, “அடியுரம் போட்டு நடவுபோடுதலே, நல்ல நடன் விளைச்சலுக்கு அறிகுறி (மதுவழ);. நடவு + போக);டு-); போகு + அடுதல் = போகடுதல். இடைக்குறையாக இச் சொல் தமிழில் வழங்கிவருகிறது. ஒ.நோ. ஆயினால் – ஆனால். |
நடவுப் பள்ளத்தி | நடவுப் பள்ளத்தி naṭavuppaḷḷatti, பெ. (n.) நடவு நடும் பள்ளரினப் பெண்கள்; women engaged in transplanting. [நடவு+பள்ளத்தி] நடவுப் பள்ளத்தி naḍavuppaḷḷatti, பெ.(n.) நடவு நடும் பள்ளரினப் பெண்கள்; wome engaged intransplanting. [நடவு+பள்ளத்தி] |
நடவுப்பயிர் | நடவுப்பயிர் naḍavuppayir, பெ. (n.) 1. நடுவதற்கு அணியமாக வைக்கப்பட்ட நாற்று; crop which is kept ready for transplantation நடவுப்பயிரின் வேரை அறுபடாமல் பிடுங்கு (உ.வ.);. 2. முதலில் நட்ட பயிர்; crop that has been transplanted once only. இயற்கை உரம் போட்டால்தான் நடவுப்பயிர் செழிக்கும் (உ.வ.);. [நடவு + பயிர்] |
நடவை | நடவை1 naḍavai, பெ. (n.) 1. suj; path, road way. “கான்யாற்று நடவை” (மலைபடு. 214.);. 2. கடவைமரம் (பிங்.);; turnstile 3. sugo (5.5Lú, extent of country, as where a language prevails, “govoldorf gusly, நடவை யெல்லை” (சேதுபு. திருநாட்.1.);. 4. வழிவகை; plan, scheme. “நல்வரங்கொள்ளு நடவையொன் றியம்புவன்” (சேதுபு. மங்கல. 69);. க. நடவெ தெ. நடவ. [நள் → நடு → நடவை.] நடவை2 naḍavai, பெ. (n.) 1. நடவு பார்க்க; see nadavu 2. Bloom (noms);; small dyeing mulberry, |
நடாதூரம்மான் | நடாதூரம்மான் naṭātūrammāṉ, பெ. (n.) இராமானுசாச்சாரியரின் சீடருள் ஒருவராகிய, ஒரு மாலிய ஆசிரியர்; a maliya accāryar the disciple of Rāmānujar. [நடாதுர்+அம்மான்.] |
நடாத்து-தல் | நடாத்து-தல் naṭāddudal, 5.செ.குன்றாவி.(v.t.) நடத்துதல்; to cause to walk. [நட →நடத்து → நடாத்து-.] ஒ.நோ. கடவுதல் <கடாவுதல். |
நடாந்திகை | நடாந்திகை naṭāndigai, பெ. (n.) நாணம் (இலச்சை);; sense of shame. நடி’ |
நடாவு-தல் | நடாவு-தல் naṭāvudal, 5 செ. குன்றாவி. (v.t.) நடவு பார்க்க: see nadavu. ‘இருளால் வினைகெடச் செங்கோல் நடாவுதி திவ். இயற்.திருவிருத். 33). [நடவு→ நடாவு-] |
நடி | நடி1 naḍittal, 4.செ. கு. வி. (v.i) 1. கூத்தாடுதல்; to dance, to act on the stage, நடிக்குமயி லென்னவரு நவ்விவிழியாரும் (கம்பரா. வரைக்காட்சி. 15);. 2. கோலங் கொள்ளுதல்; to assume manifestations or forms, as a deity, “நடித்தெதிர் நடந்ததன்றே” (இரகு. ஆற்று. 20.);. 3. பாசாங்கு செய்தல்; to make pretence, affect importance. “நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பலசெய்து திருவாச. 413). 5. நடி, → skt nata. [நள்→ நடி-] நடி2 naḍi, பெ. (n.) நடனப் பெண்; dancing girl. த.நடி→ Skt. நடி (nati); [நள்→ நளி → நடி.] நடி3 naḍi, முதனிலைத் தொ.பெ.(vbl.n);, ஆட்டம் dancing. “நடிகொள் நன்மயில்சேர் திருநாரையூர் (தேவா.216:5);. த. நடி → Skt நடீ (நட்டி); pkt ந்ருத். [நள்→ நளி→ நடி. ஒரே களிறு→கறு விருந்தாளி → விருந்தாடி] ‘நள்’ எனும் பொருந்துதற்கருத்தினின்று கிளைத்த முதனிலையாகும். அடி, கடி, பிடி என்னுஞ்சொற்களைப் போன்றே, நடி என்பதும், தமிழில் ஆட்டம் என்னும் பொருளில் முதனிலைத் தொழிற்பெயராய் வழங்கும். “நடிகொள் நன்மயில் சேர் திருநாரையூர்” (தேவா.216:5);. பொதுவாக, முதனிலையினின்றே தொழிற்பெயர் திரிக்கப்படும். ஆயின், செ.ப. கழகத் தமிழகரமுதலி, தொழிற்பெயரினின்று முதனிலையைத் திரிக்கின்றது. நள்ளுதல் = பொருந்துதல். நள் → நளிதல் = ஒத்தல். நள் → நடி. நடித்தல் = ஒத்துச்செய்தல். வடவர் ‘நட்ட’ என்னும் பிராகிருத வடிவினின்று. நாட்டியம் என்னும் சொல் தோன்றியதென்பர். இதற்கு ‘ந்ருத்’ என்னும் வேரினை மூலமாகக் காட்டுவர். “ந்ருத்” என்னும் முதனிலைக்கு வேர்ப்பொருளே இல்லை. மா.வி. அகரமுதலியிலும், ‘ந்ருத்’ என்னும் முதனிலைக்கு சரியான வேர்ப்பொருளில்லை. நடி’ என்னும் பகுதியினின்று தோன்றியுள்ள எல்லாச்சொற்களுக்கும் மூலமாக, ‘ந்ருத்’ என்பதையே வேரடியாகக் காட்டுகிறது. ந்ருத் → ந்ருத்த(வ); → நட்டணம்(த);. நட்டணம் → நட்டம் → நடம் → நடி. நடம் என்னும் தொழிற்பெயரினின்று, நடன் என்னும் ஆண்பாற் பெயரும், நடி(பிங்); என்னும் பெண்பாற்பெயரும் தோன்றும். நடிகன், நடிகை என்னும் இருபாற்பெயரும், முறையே, națika, națikā என்னும் வடசொல்லின் திரிபாகச் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. ஒருவன் தன்னிடம் இல்லாததை, இருப்பதாகக் காட்டிப் பாசாங்கு செய்யுங்கால், “கூத்தாடுகின்றான்” என்று கூறாமல், “நடிக்கின்றான்” என்றே, நாட்டுப்புறமக்கள் இன்றும் நவில்கின்றனர். கல்லாதார் நாவிலும் இன்றைய மக்கள் தம் வாழ்வியலிலும் வழக்கூன்றியுள்ள தொடர்கள் வருமாறு: 1. நடித்து மயக்குவதில் கைதேர்ந்தவன். 2. நடித்துப் பணம் பறிப்பதில் அவள் கெட்டிக்காரி. 3. நடிக்கிற வேலை நம்(ம);கிட்ட வேண்டாம் 4. ‘இந்த நடிப்பெல்லாம் இங்கு எடுபடாது. இயன்மொழியாம் தமிழில் ‘நடி’ எவ்வாறு மக்களிடையே வழக்கூன்றி யுள்ளதற்கான சான்றுகள் வருமாறு. [எ.டு] நள் → நளி → நடி+அம் → நடம். [ஒ.நோ.] குறி + அம் → குறம். நடி → நடம் → நட்டம் → நட்ட(பி); → ந்ருத்த(வ); →ந்ருத். த. → படி → வ. பிரதி. [ஒ.நோ.] வள் → வட்டு → வட்டம் → வட்ட[பி] → வ்ருத்த[வ] [நடு] நடி+அனம் → நடனம். படம் → பட்டம் = துணி, படி + அனம் → படனம் → நடனம் → நடலம்[கொச்சை]. [நடு] நடி + அகம் → நாடகம் ஒ.நோ. படி+அகம் → பாடகம் [செயல்.அக.சீ.கே.பக்33]. மேற்குறித்த சொற்பிறப்பு எடுத்துக் காட்டுகளும் ஒப்புநோக்கும், “நடி” எனும் தமிழ் மொழியின் முதனிலையினின்றே, “நீருத்” என்னும் வடமொழி வேரினை அமைத்துக் கொண்டதைக் காட்டும். 1. தமிழகத்தில் நடிப்பு, நடி என்னும் சொற்கள் வழக்கூன்றி இருந்தமைக்குக் கீழ்க்கண்ட வழக்குகள் நற்சான்று படைக்கின்றன. 1. உனக்கு ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கிறாயே 2 வருமானவரி அதிகாரிபோல் நடித்துக் கையூட்டு வாங்கியவர் பிடிபட்டார். 3. அந்த நடிகரின் நடிப்பு இந்தப்படத்தில் தரக்குறைவாக இருந்தது. 4. ஒன்றுந் தெரியாததுபோல் நடிக்காதே. 5. கவர்ச்சி நடிகையின் நடிப்பு எடுபடவில்லை. 6. அவளுடைய நடிப்பில் மயங்கிவிடாதே மேற்குறித்த வழக்குகள் ‘நடி’ என்னும் முதனிலை, மாந்தர்தம் வாழ்வியலில் முதன்மை பெற்று விளங்கியதைத் தெரிவிக்கின்றன. நடி என்னும் முதனிலைத் தொழிற்பெயரினின்றே நடம், நடிப்பு நடித்தல், நடிகன், நடிகை, நாடகம், நடனம், நடனன் போன்ற சொற்கள் தோன்றியுள்ளன. ‘ந்ருத்’ என்ற சொல்லிற்கு அடிப்படைப் பொருள், வடமொழியில் ஏதுமில்லை. தமிழ்மொழியில் தேவாரம், திருவாசகம், திருவருட்பா, கந்தரலங்காரம் போன்ற பத்திப் பனுவல்களில், இச் சொல் வழக்கூன்றியுள்ளது. (எ.டு); 1. நடிகொள் நன்மயில் சேர் திருநாரையூர் (தேவா.216:5);. 2. நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து (திருவாச.2:11.);. 3. நடித்து மண்ணிடைப் பொய்யினைப் பல செய்து (திருவாச.41:3:1);. 4. பொன்தரத்தை என் உரைக் கேன் பொற் பொதுவில் நடிக்கின்றோய்(திருவருட்பா);. 5. நடிக்கின்றிலை நெஞ்சே தஞ்சமது நமக்கினியே. கந்தரலங்காரம்) மக்கள் வழக்கிலும், பத்திப்பனுவலியற்றிய அருளாளர்தம் பாக்களிலும், இச் சொல் வழக்கூன்றியுள்ளதாலும், வடமொழியாளர் நடி என்னும் முதனிலைக்குக் காட்டும் ‘ந்ருத்’ என்னும் வேரடிக்கு வடமொழியில் அடிப்படைப் பொருள் ஏதுமில்லை என்பதாலும், இச்சொல் தமிழ்ச்சொல்லென்று தெளிக. |
நடிகன் | நடிகன் naḍigaṉ, பெ. (n.) நாடகமேடையிலும் திரைப்படத்திலும் நடிப்பவன்; actor, [நட→நடிகன்.] |
நடிகை | நடிகை naḍigai, பெ. (n.) நாடகமேடையிலும் திரைப்படத்திலும் நடிப்பவள்; actress. [நடி + கை → நடிகை.] |
நடு | நடு1 naḍudal, 18 செ. குன்றாவி. (v.t.) 1. ஊன்றுதல்; to set up, as a pillar. “நடவந்த வுழவரிது நட்வொணாவகை பரலாய்த் தென்று” (தேவா. 133.8);. 2. வைத்தல்; to place. “திருவடி யென்றலைமே னட்டமையால்” (திருவாச. 40.8);. 3. நிலைநிறுத்துதல்; to establish as fame. “மண்ணின்மேல்வான்புகழ் நட்டானும்” (திரிகடு.16);. க, நடு. தெ. நாடு. ம. நடுக. து. நடிபினி, [நெடு → நடு.] மேனோக்கிய நீளவாட்டில் ஊன்றுதல் நடு2 naḍuttal, 4 செ.கு.வி. (v.i.) நடுங்குதல்; to tremble. “நடுத்திருக்கும்” (சங்கர. அந்தாதி.20);. நடு3 naḍu, பெ. (n.) 1. இடை; middle “நடுவூருணச்சுமரம் பழுத்தற்று” (குறள் 1008);. 2. நடுவம் (அரு. நி.);. centre, 3. இடைப்பட்டது. that which is intermediate, as in place or time, that which intervenes. 4. வானத்தின் உச்சி; zenith, topmost part of the heavens. “காலைக் கதிரோனடுவுற்றதொர் வெம்மை காட்டி” (கம்பரா. நகர்நீங்கு. 123.1. 5. உள்ளமுறை கடவுள்; indwelling God. “கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும்” (பரிபா.2.25);. 6. இடுப்பு: waist. “நடுங்க நுடங்கு நடுவடைய விடங்கா லயிற்கண்ணி (திருக்கோ. 31);. 7. நடுநிலை; impartality uprightness, “நடுவாக நன்றிக்கட் டங்கியான் றாழ்வு” (குறள் 117);. 8. அறம் (”வின்);: equity justice. 9. மீதம், medium, moderation 10. வழக்கு(வின்);. lawsut. 11. நிலம்; earth, as the middle world. 12. பருவநடு; space between the eye brows. க. து. நடு. தெ. நடுமு. ம. நடு. [நள் → நட்டு → நடு.] நடு4 naḍu, பெ. (n.) 1. கல்லுப்பு; stone-sal. 2. பாறையுப்பு; rock-salt. |
நடு அண்டம் | நடு அண்டம் naḍuaṇḍam, பெ. (n.) நடுவண்டம் பார்க்க: see nadu-y-andam. [நடு + அண்டம்.] |
நடு-நட்டெலும்பு | நடு-நட்டெலும்பு naḍunaḍḍelumbu, பெ. (n.) முதுகெலும்பு (நெல்லை);; back-bone க. நட்டெலும்பு. [நடு-நட்டு + எலும்பு.] |
நடுகட்டி மணிவலை | நடுகட்டி மணிவலை naṭukaṭṭimaṇivalai, பெ. (n.) நடுத்தரமான மணி வலை; a medium Size net. [நடு+கட்டி+ மணி+வலை] நடுகட்டி மணிவலை naḍugaḍḍimaṇivalai, பெ.(n.) நடுத்தரமான மணிவலை; a medium size net. [நடு+கட்டி+மணி+வலை] |
நடுகலுழலை | நடுகலுழலை naḍugaluḻlai, பெ. (n.) நட்டகற்களின் துளைகளில் மூங்கிற் கழிகளையிட்டு ஆவினத்தை அடைத்து வைக்கும் இடம்; a pound provided with a Stile. [நடு + கல் உழலை.] |
நடுகல் | நடுகல் naḍugal, பெ. (n.) போரில் இறந்த வீரரின், உருவமும் பெயரும், பீடும் எழுதிப் பெரும்பாலும், அவ் வீரரைப் புதைத்த விடத்தில், நடுஞ்சிலை அல்லது கல்; memorial tablet set up over the grave of a deceased warrior and inscribed with his figure and achievements. “காட்சி, கால்கோணீப்படை நடுகல்” (தொல், பொருள். 60);. மறுவ, விரக்கல். [நடு + கல்.] போரில் விழுப்புண் எய்தி, வீரச்சாவு அடைந்த வீரனுக்கு, இறந்தவிடத்தில் நடப்படும் கல். நடுகல் பற்றி மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் கூறுவது: பழங்காலத்துத் தமிழர் வீரத்தைப் போற்றினார்கள். போர்க்களத்தில் புறங்காட்டி ஓடாமல், திறலோடு போர் செய்த வீரர்களைத் தமிழர் புகழ்ந்து போற்றிப் பாராட்டினார்கள். திறலோடு போர்செய்து, களத்தில் விழுந்து உயிர்விட்ட வீரர்களுக்கு நடுகல் நட்டு, நினைவுச்சின்னம் அமைத்தார்கள். விறல் வீரர்களின் நினைவுக்காக நடப்பட்ட நடுகற்களைப் பற்றிக் கழக நூல்களில் காணலாம். வெட்சிப் போர், கரந்தைப் போர், வஞ்சிப் போர், உழிஞைப் போர், நொச்சிப் போர், தும்பைப் போர், வாகைப் போர் என்று போரைத் தமிழர் ஏழு வகையாகப் பிரித்திருந்தார்கள். சங்க காலத்தில், அரசர்கள் போர் செய்வதைத் தங்கள் கடமைகளில் முகாமையானதாகக் கருதினார்கள். ஏழு வகையான போர்களிலே, எந்தப் போரிலானாலும், ஒரு வீரன் திறலாகப் போர் செய்து உயிர் விட்டால், அந்த வீரனுக்கு நடுகல் நட்டு, அவன் வீரத்தைப் பாராட்டினார்கள். வீரர்களின் நினைவுக்காகக் கல் நடுவதைத் திருக்குறளும் கூறுகிறது. “என் ஜமுன் நில்லன்மின் தெவ்விர், பலர்என்ஐ முன்நின்று கல்நின்றவர்” (குறள்,771);. வீரத்தைப் பாராட்டி நடப்படுவதனால், நடுகல்லுக்கு வீரக்கல் என்றும் பெயர் உண்டு. வீரக்கல் நடுவதற்கு ஐந்துதுறைகளைக் கூறுகிறார் தொல்காப்பியர். அவை, காட்சி, கால்கோள். நீர்ப்படை, நடுகல், வாழ்த்து என்று ஐந்து துறைகளாம். காட்சி என்பது நடவேண்டிய கல்லை மலையில் கண்டு தேர்ந்தெடுப்பது. கால்கோள் என்பது, கொண்டு வருவது. நீர்ப்படை என்பது கொண்டுவந்த கல்லில் இறந்த வீரனுடைய பெயரையும், அவனுடைய சிறப்பையும் பொறித்து நீராட்டுவது. நடுகல் என்பது, அந்த வீரக்கல்லை நடவேண்டிய இடத்தில் நட்டு, அதற்கு மயிற்பீலிகளையும். மாலைகளையும் சூட்டிச் சிறப்புச் செய்வது. வாழ்த்து என்பது, யாருக்காகக் கல் நடப்பட்டதோ அந்த வீரனுடைய திறனையும் புகழையும் வாழ்த்திப் பாடுவது. கல்நாட்டு விழாவுக்கு ஊரார் மட்டும் அல்லாமல் சிறப்பாக வீரர்களும் வந்து சிறப்புச் செய்வார்கள். போரில் இறந்த வீரர்களுக்கு, நடுகல் நடுகிறவழக்கம், பழந்தமிழகத்தில் மட்டுமல்லாமல், வேறு நாடுகளில் பழங்காலத்தில் இருந்து வந்தது. ஐரோப்பாக் கண்டத்திலும், சில நாடுகளில் நடுகல் நடுகிற வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. அந்த நடுகற்களுக்கு அவர்கள் மென்கிர் என்று பெயர் கூறினார்கள். மென்கிர் என்றால் நெடுங்கல் அல்லது உயரமான கல் என்பது பொருள். மென்கிர் (Menhir); என்பது பிரெடன் (Breton); மொழிச்சொல். (‘Men’-Stone: ‘Hiro-High இந்தோனேசியத் தீவுகள் எனப்படும், சாவா. சுமத்திரா போன்ற கிழக்கிந்தியத் தீவுகளிலும். நடுகல் நடுகிற வழக்கம், பழங்காலத்தில் இருந்தது. இதனால், பழந்தமிழரைப் போலவே, வேறு நாட்டாரும், நடுகல் நடுகிற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்பது தெரிகின்றது. வீரர்களுக்கு நடுகல் நட்டதைக் கழகச் செய்யுளில் காண்கிறோம். கரந்தைப் போரில் இறந்துபோன ஒரு வீரனுக்கு, நடுகல் நட்டதை ஆவூர் மூலங்கிழார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார் (புறம். 261 13-15);. இன்னொரு கரந்தைப் போரில் வீரச்சாவு அடைந்த ஒரு வீரனுக்கு வீரக்கல் நட்டபோது, அவன் மீது கையறுநிலை பாடினார் புலவர் உறையூர் இளம்பொன்வாணிகனார். அந்த நடுகல்லின் மேல் அவனுடைய பெயரைப் பொறித்து. மாலைகளாலும், மயிற்பீலிகளாலும் அழகு படுத்தியிருந்ததை, அச் செய்யுளில் அவர் கூறுகிறார் (புறம். 264);. சேலம் மாவட்டத்திலிருந்த, தகடூர் காட்டையின் தலைவன் அதிகமான் நெடுமான் அஞ்சி. பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சே அரசன் தகடூரின் மேல் படையெடுத்து வந்து அக் கோட்டையை முற்றுகையிட்டான். அதன் காரணமாகப் பல நாட்கள் போர் நிகழ்ந்தது. அப்போரில் அதிகமான் நெடுமான் அஞ்சி. புண்பட்டு இறந்து போனான். அவனுக்கு விக்கல் நட்டு, அவன் வீரத்தைப் போற்றினார்கள். அப்போது அவனுடையராக இருந்த ஒளவையார் கையறு நிலை பாடினார் (புறம். 232);. கோவலர் ஆயர் வளர்த்து வந்த ஆநிரை பந்தைகளைப் பகையரசனுடைய வீரர்கள் வந்து ஒட்டிக்கொண்டு போய் விட்டார்கள். இதனையறிந்த அவ்வூர் வீரன், அவர்களைத் தொடர்ந்து சென்று, வில்லை வளைத்து, அம்புமாரி பொழிந்து, பகைவரை ஒட்டித் தன்னூர் ஆக்களை மீட்டுக் கொண்டான். ஆனால், வெற்றிபெற்ற அவன், பகைவீரர்கள் எட்த அம்புகளினால் புண்பட்டு மாண்டு போனான். திறலுடன் போர்செய்து மாண்டு போனான். திறலுடன் போர்செய்து மாண்டுபோன அவ் வீரனுக்கு அவ்வூர்க் கோவலர்கள் நடுகல் நட்டார்கள். அந்த நடுகல்லுக்கு, வேங்கைமரத்துப் பூக்களினாலும், உணங்குருத்துகளாலும், மாலைகள் கட்டிச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள். இந்தச் செய்தியைச் சோணாட்டு முகையலூர் சிறுகருத்தும்பியார் தம்முடைய செய்யுளில் கூறியுள்ளார் (புறம்:265);. இன்னொரு ஊரில், பகைவர்கள் வந்து அவ்வூர் மாட்டுமந்தைகளைக் கவர்ந்து கொண்டு போனார்கள். அப்போது அவ்வூர் வீரன், அவர்களைத் தொடர்ந்து சென்று போராடி, மந்தைகளை மீட்டுக்கொண்டான். ஆனால், பகைவர் எய்தி அம்புகள் உடம்பில் பாய்ந்தபடியால், அவன் இறந்து போனான். அவனுக்காக நட்ட வீரக்கல்லில், அவனுடைய பெயரைப் பொறித்து மயிற்பீலிகளினால் அக் கல்லை அழகுசெய்து போற்றினார்கள் என்று மருதனிளநாகனார் என்னும் புலவர், பாடுகிறார் (அகம்.131:6-11);. 11 நடுகல் தன் ஊர்ப் ஆக்களைப் பகைவர் கவர்ந்து கொண்டு போனபோது அவ்வூர் வீரன் அப்பகைவரிடமிருந்து ஆக்களை மீட்டான். ஆனால், பகைவரின் அம்புகளினால் புண்பட்ட அவன் இறந்து போனான். அவ்வூரார் அவ் வீரனின் நினைவுக்காக, வீரக்கல் நட்டுப் போற்றினார்கள். அந்தக் கல்லின் மேல் அவ் வீரனுடைய பெயரை எழுதினார்கள். மாலைகளையும் பீலிகளையுஞ் சூட்டினார்கள். நடுகல்லின் மேலே சித்திரப் படத்தினால் (சித்திரம் எழுதப்பட்ட துணி);, பந்தல் அமைத்துச் சிறப்புச் செய்தார்கள். இந் நிகழ்ச்சியை வடமோதங்கிழார் கூறியுள்ளார் (புறம். 260);. ஒரு ஊரிலிருந்த ஆநிரைமந்தைகளைச் சில வீரர்கள் வந்து பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். அதையறிந்த அவ்வூர் வீரர் சிலர், அவர்களைத் தொடர்ந்துசென்று ஆக்களை மீட்பதற்காகப் போர் செய்தார்கள். பகைவரும் எதிர்நின்று அம்பு எய்தனர். பகைவரின் அம்புக்கு அஞ்சிச் சில வீரர்கள் ஒடிப்போனார்கள். ஒரு வீரன் மட்டும் புறங்கொடாமல் நின்று போர்செய்தான். பகைவீரர்களின், அம்புகள் அவனுடைய உடம்பில் தைத்து, அவன் அக் களத்திலே இறந்து போனான். அவ்விறல் வீரனுக்கு நடுகல் நட்டுப் போற்றினார்கள் அவ்வூரார் (புறம் 263);. ஆண்டுதோறும் வீரக்கல்லுக்கு அவ் வீரனுடைய உறவினர் பூசை செய்தார்கள். அந் நாளில், அந்நடுகல்லை, நீராட்டி எண்ணெய் பூசி மலர் மாலைகளைச் சூட்டி நறுமணப் புகையைப் உருவாக்கினார்கள். அந்தப்புகையின் மணம் ஊரெங்கும் கமழ்ந்தது. இந்தச் செய்தியை, மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் தம்முடைய செய்யுளில் கூறுகிறார் (புறம். 329);. கழகக் காலத்துத் தமிழகத்திலே, அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. போரில் இறந்த வீரர்களுக்கு நடுகற்கள் நடப்பட்டன. ஆகையினால், நாடெங்கும் நடுகற்கள் “நல்லமர்க் கடந்த நலனுடை மறவர் பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் பிலி குட்டிய புறங்குநிலை நடுகல்.” (அகம். 67.8-10); என்று புலவர் நோய்பாடியார் கூறியது போன்று ஊர்களிலும் வழிகளிலும் நடுகற்கள் இருந்தன. நடுகற்கள், பலகை போன்று அமைந்த கருங்கற்களினால் ஆனவை. அவை நீண்டதாக இருந்தன. ‘நெடுநிலை நடுகல்’ என்று ஒரு புலவர் கூறுகிறார். பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் இருந்தன. பழமையான நடுகற்களின் மேலே செடிகொடிகளும் படர்ந்திருந்தன. நடுகல்லின் இறந்த வீரனுடைய பெயரும் பீடும் எழுதப்பட்டிருந்த படியால் “எழுத்துடை நடுகல்’ என்று கூறப்பட்டது. வழிப்போக்கர், வழியில் உள்ள நடுகற்களண்டை நின்று, அக்கற்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படிப்பது வழக்கம். சில சமயங்களிலே அக் கற்களில் எழுதப்பட்ட எழுத்துகளில் சில எழுத்து மழுங்கி மறைந்துபோய் சில எழுத்துக்களே எஞ்சியிருக்கும். அவ்வெழுத்துகளைப் படிப்போருக்கு அதன் பொருள் விளங்காமலிருக்கும். சில வீரர்கள் தங்களுடைய அம்புகளை நடுகற்களின் மேல் தேய்த்துக் கூராக்குவர். எஃகினால் ஆன அம்பு முனையைத் தேய்க்கும்போது, நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைப் படிப்போர்க்கு அவ்வெழுத்தின் பொருள் விளங்காமற் போயிற்று. இச் செய்தியை மருதன் இளநாகனார் கூறுகிறார். “இருங்கவின் இல்லாப் பெரும்புல் தாடிக் கடுங்கண் மறவர் பகழி மாயத்தென மருங்கல் நுணுகிய பேஎமுதிர் நடுகல் பெயர்பயம் படரத் தோன்று குயிலெழுத்து இயைபுடன் நோக்கல். செல்லது அசைவுடன் ஆறுசெல்வம்பலர் விட்டனர் கழியும் சூர்முதல் இருந்த ஒமையம் புறவு.” – (அகம்.297:5-11);. உப்பு வணிகராகிய உமணர், உப்பு மூட்டைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, ஊர்ஊராகச் சென்று விற்பார்கள். செல்லும்போது, வழியில் உள்ள நடுகற்களின்மேல் வண்டிச்சக்கரம் உராய்ந்து நடுகல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளில் ஒன்றிரண்டு எழுத்துகளைத் தேய்த்து விடுவதும் 12 நடுகல்தெய்வம் உண்டு. அவ்வாறு மறைந்துபோன எழுத்து இல்லாமல் மற்ற எழுத்துக்களைப் படிக்கிறவர்களுக்கு அதன் வாசகம் வேறு பொருளைத் தந்தது என்று மருதன் இளநாகனாரே மீண்டுங்கூறுகிறார். “மரங்கோள் உமண்மகன் பேரும் பருதிப் புன்றலை சிதைத்த வன்றலை நடுகல் கண்ணி வாடிய மண்ணா மருங்குல் கூருளி குயின்ற கோடுமாய் எழுத்தால் ஆறுசெல் வம்பலர் வேறுபயம் படுக்குங் கண்பொரி கவலைய கானகம்.” நடுகற்கள் பலவித உயரங்களில் அமைக்கப்பட்டன. மூன்று அடி உயரமுள்ள நடுகற்களும், பன்னிரண்டடி உயரமுள்ள நடுகற்களும் உண்டு. கழகக்காலத்துக்குப் பிறகு, கி.பி. 14ஆம் நூற்றாண்டு வரையிலும், தமிழ்நாட்டிலும். கன்னடநாட்டிலும், வீரர்களுக்கு நடுகல் நடுகிற வழக்கம் இருந்துவந்தது. பிற்காலத்து வீரக்கற்களில் பல நமக்குக் கிடைத் திருக்கின்றன. இந்தப் பிற்காலத்து நடுகற்களில் பிற்காலத்து வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சங்ககாலத்து விரக்கற்கள் ஒன்றேனும் இதுகாறும் கிடைக்கவில்லை. |
நடுகல்தெய்வம் | நடுகல்தெய்வம் nadu-kal-deyam பெ. (n.) வீரச்செயல்புரிந்து ஊரைக்காக்கும் காவல்; the minor deity guarding the village. [நடுகல் + தெய்வம்.] |
நடுகல்வழிபாடு | நடுகல்வழிபாடு naḍugalvaḻipāḍu, பெ. (n.) நடுகல்லை வணங்குகை; worshipping herosome. நடுகல் வழிபாடுதான் காலப்போக்கில் ஊர்க்காவல் எல்லைத் தெய்வவழிபாடாக மாறியது (உ.வ.);. [நடுகல் + வழிபாடு.] பண்டைக்காலத்தே, கொடிய விலங்குகளிடமிருந்தும், பகைவரிடமிருந்தும், ஊரையோ அல்லது நாட்டையோ, பாதுகாத்தவர்தம் திருவுருவைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக வடித்துப் பீடும், பெயரும் பொறித்து நடுகல்லாக நட்டனர். காலப்போக்கில், ஊரகத்தேயும், நாட்டகத்தேயும், இவ்வாறு நாட்டப்பெற்ற நடுகற்களே. காலப்போக்கில் காவல் தெய்வமாக வழிபடப்பட்டன. |
நடுகுவாந்தரம் | நடுகுவாந்தரம் naguvāndaram, பெ. (n.) stáium stoulo; by chance, unexpectedly |
நடுகூலி | நடுகூலி naḍuāli, பெ. (n.) நாற்று, நடுவதற்குத் தரும் கூலி; wages for transplanting. [நடு + கூலி.] கூலம் → கூலி. இஃது உடைமைப்பொருள் குறித்த ஈறு. பழங்காலத்தில் பழனப் பணி செய்தவர்களுக்குக் கூலமே, ஊதியமாகத் தரப்பட்டதால், கூலி என்ற பெயர் வந்தது. வயற்பணியாளர்க்குச் சம்பாநெல்லும், கடற்பணியாளர்க்குஉப்பளப்பொருளும் ஊதியமாகத் தரப்பட்டதால். சம்பளம் அமைந்தது. |
நடுகை | நடுகை naḍugai, பெ. (n.) நாற்று நடவு; ransplanting of seedlings. [நடு → நடுகை] கை சொல்லாக்க ஈறு. |
நடுக்கக்கனவு | நடுக்கக்கனவு naḍukkakkaṉavu, பெ. (n.) அச்சத்தால் ஏற்படும் நடுக்கம், நடுநடுங்க வைப்பது (சிம்ம சொப்பனம்);; nightmare, devil incarnate. [நடுக்க+கனவு] |
நடுக்கட்டு | நடுக்கட்டு1 naḍukkaḍḍudal, 5. செ. குன்றாவி. (v.t.) உடைமையைப் பொதுக் கட்டுதல் (யாழ்ப்.);; to sequestrate property. [நடு + கட்டு-.] நடுக்கட்டு2 naḍukkaḍḍu, பெ. (n.) 1. மகப்பேற்றுக்குப்பின் பெண்களுக்குக்கட்டும் இடுப்புக்கட்டு; a bandage tide round the waist of a woman in labour. 2. இடுப்பிற்கு வலிவும் ஆண்மையுமுண்டாக்கும் அரைக் கச்சை; waist belt which not only gives strength to the hip, but also promotes manly power. [நடு = இடுப்பு. நடு + கட்டு.] நடுக்கட்டு3 naḍukkaḍḍu, பெ. (n.) 1. அரைக்கச்சை girdle, 2. பெரிய வீட்டின் நடுவிலுள்ள பகுதி; middle portion of a large house. [நடு + கட்டு.] க. நடுக்கட்டு. ம. நடுக்கெட்டு. அரண்மனை போன்ற பெரியமாளிகை அல்லது நாட்டுக்கோட்டைச் செட்டிமார் இல்லங்களில் அமைந்த இடைப்பகுதியே. நடுக்கட்டு. உடம்பின் நடுவிடமான இடையில் கட்டும் கச்சும் நடுக்கட்டே யாகும். |
நடுக்கண் | நடுக்கண் naḍukkaṇ, பெ. (n.) கண்ணின் நடுப்பகுதி; middle of the eye. [நடு + கண்.] |
நடுக்கண்டம் | நடுக்கண்டம்1 naḍukkaṇḍam, பெ. (n.) 1. நடுத்துண்டு; middle piece. 2. இடை மண்டலம்; central portion of a continent. [நடு + கண்டம்.] நடுக்கண்டம்2 naḍukkaṇḍam, பெ. (n.) தலைக்கும் இடுப்பிற்கும் இடையிலுள்ள பகுதி: that part of the body between the head and buttocks. [நடு + கண்டம். நடு =இடை.] |
நடுக்கம் | நடுக்கம் naḍukkam, பெ. (n.) 1. நடுங்குகை; trembling, sharing, quaking, shivering. “மின்னையுற்ற நடுக்கத்து மேனியாள் (கம்பரா. நகர்நீங்கு. 220);. 2. மிக்க அச்சம்; agitation trepidation, great fear. “நள்ளிர விடையுறும் நடுக்க நீங்கலாரீ” (கம்பரா. மாரீச. 120);. 3. துன்பம்; distress._ “நாட்பட்டலைந்த நடுக்க மெலாந் தீர” (தாயு. பராபர. 260.);. 4. கிறுகிறுப்பு (யாழ். அக.);; dizziness. 5. மயக்கம் (யாழ்.அக.);; giddiness. க. நடுக. ம. நடுக்கம். [நடுக்கு → நடுக்கம்.] |
நடுக்கற்காய்ச்சல் | நடுக்கற்காய்ச்சல் naḍukkaṟkāyccal, பெ. (n.) குளிர் கரம்; fever marked by a child followed by high fever and sweating. [நடுக்கல் + காய்ச்சல்.] |
நடுக்கற்சுரம் | நடுக்கற்சுரம் naḍukkaṟcuram, பெ. (n.) நடுக்கற் காய்ச்சல் பார்க்க;see radukkar-kауссаl. [நடுக்கல் + கரம்.] [கரம் பாலையின் பண்பாக அகப்பொருள் கூறுதல் காண்க. சுர் → சுரீர் → கரம். இக்காலத்தே இதனை ஜூரம் என்று தமிழர் மாற்றி வழங்குகின்றனர். ஒ.நோ. சவளி → ஜவுளி,] |
நடுக்கல் | நடுக்கல் naḍukkal, பெ. (n.) 1. நடுக்கம் பார்க்க;see radukkam, 2. நடுக்குவாதம்’ பார்க்க;see nadukku-vādam2 [நடுக்கு +நடுக்கல். ] |
நடுக்கல்முடக்குநோய், | நடுக்கல்முடக்குநோய், naḍukkalmuḍakkunōy, பெ. (n.) உடல் வெதும்பி, பிடரியிலும், தலையிலும் நடுக்கத்தை ஏற்படுத்திக் கை கால்களில் உதறலை உருவாக்கி, சொல் தடுமாறி, முகமும் விழியும் கருத்து, கண் கழித்து, நிலைகொட்டித் துன்புறுத்தும் நோய், a persistant tremor resenbling that of paralysis. |
நடுக்கல்வாந்தி | நடுக்கல்வாந்தி naḍukkalvāndi, பெ. (n.) நடுக்கல் முடக்கு நோய் பார்க்க;see madukkal-mudakku-ndy. மறுவ, உதறுவாதம். [நடுக்கல் + sktவதம்.] நடுக்கல்வாந்தி naḍukkalvāndi, பெ. (n.) நோய்வகை (பாலவா.167);; a disease [நடுக்கல் + வாந்தி] |
நடுக்காது | நடுக்காது naḍukkātu, பெ. (n.) காதின் நடு; middle ear. [நடு + காது.] |
நடுக்காத்தான் | நடுக்காத்தான் naṭukkāttāṉ, பெ. (n.) இயற்பெயர்; a proper noun. [ஒருகா நாடு+காத்தான்] நடுக்காத்தான் naḍukkāttāṉ, பெ.(n.) இயற்பெயர்;а proper noun. [ஒருகா நாடு+காத்தான்] |
நடுக்காரன் | நடுக்காரன் naḍukkāraṉ, பெ. (n.) நடுவன்(யாழ்ப்.);; umpire, arbitrator. மறுவ, நொதுமலாளன், காரணிகர். [நடு + காரன்.] விளையாட்டில் அல்லது முறை மன்றத்தில், இரு அணிகளின் ஆட்டத்தைக் கூர்ந்து நோக்கித் தீர்ப்புத் தருபவன். |
நடுக்கால் | நடுக்கால் naḍukkāl, பெ. (n.) சமக்காற்று: one of the ten vital airs of the body. [நடு + கால்.] கால் = காற்று. உடலுள் பத்துவகைக் காற்று உள்ளதாகப் பழைய பகுப்புண்டு. அவற்றுள் ஒன்றாகும். |
நடுக்கிளி | நடுக்கிளி naḍukkiḷi, பெ. (n.) 1. கிளித்தட்டில் கோட்டில் நின்று கிளியைத் தடுப்பவன்; player standing on the border lines of the square to defend it in the game of kili-t-tattu. 2. கிளியாட்டத் தலைவன்(வின்);. the captain in kill-t-tattu. [நடு + கிளி.] |
நடுக்கு | நடுக்கு1 naḍukkudal, பெ. (v.i.) 1. நடுங்குதல்; to shiver, tremble. ‘வயது முதிர்ச்சியினால் தாத்தாவின் உடல் நடுங்குகிறது’ (உ. வ);. [நடு → நடுக்கு-.] நடுக்கு2 naḍukkudal, பெ.5.செ.கு வி.(v.t.) 1. நடுங்கச் செய்தல்; to shake, cause to quiver. குளிர் உடலை நடுக்குகின்றது (உ.வ);. 2. மயக்கங் கொடுத்தல் (வின்.);; to cause dizziness or sickness, as betel, tobacco. [நடுங்கு (த.வி); → நடுக்கு (பி.வி);.] நடுக்கு3 naḍukku, பெ. (n.) 1. நடுக்கம் பார்க்க;see nadukkam, “முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ” (புறநா. 2);. 2 மனச் சோர்வு; mental agitation. “நடுக்கற்ற காட்சியார்” (ஆசாரக். 100);. க. நடுகு. [நடுக்கம் → நடுக்கு.] |
நடுக்குக்காய்ச்சல் | நடுக்குக்காய்ச்சல் naḍukkukkāyccal, பெ. (n.) நடுக்கற்காய்ச்சல் பார்க்க: see nadukkar-kayccal. [நடுங்கு → நடுக்கு + காய்ச்சல்.] |
நடுக்குசன்னி | நடுக்குசன்னி naḍukkusaṉṉi, பெ. (n.) அடிக்கடி தூக்கிப் போடும் இசிவுநோய் வகை; a disease of the Spinal Cord. Locomotor ataxia. மறுவ, நடுக்கு இசிவு. [நடுங்கு → நடுக்கு +sktசன்னி] |
நடுக்குடி | நடுக்குடி naḍukkuḍi, பெ. (n.) 1. நடு நிலைமையிலுள்ள குடும்பம்: a family of middling circumstances or rank. 2. ஒரு வகுப்பின் தலைமைக்குடி. (யாழ்ப்);, the leading family of a tribe or class. 3. நடுவூர்க்குடி, (யாழ். அக.);; house is the centre of a village. [நடு + குடி.] |
நடுக்குண்ணல் | நடுக்குண்ணல் naḍukkuṇṇal, பெ. (n.) நடுக்கடுண்டாதல்; being attended with shivering. [நடுக்கு + உண்ணல்.] உண்ணல் ஈண்டு, உள்ளதன் அல்லது இருப்பும் பொருளில் வருகிறது. ஒ.நோ. நெருக்குண்டேன்;அடியுண்டேன்;சோறுண்டேன். |
நடுக்குத்துக்கால் | நடுக்குத்துக்கால் naḍukkuttukkāl, பெ. (n.) மோட்டுவளையைத் தாங்க உத்தரத்தின் மேல்பதிக்கப்பட்ட நடுக்கால் (இ.வ.);, king-post vertical post set on a horizontal beam, connecting the two walls to support ridge pieces. [நடு + குத்து + கால்.] |
நடுக்குப்பக்கவாதம் | நடுக்குப்பக்கவாதம் naḍukkuppakkavātam, பெ. (n.) நடுக்குசன்னி பார்க்க;see madukku-šanni. [நடுக்கு + பக்க +Skt வாதம்.] skt வாதம் = தமுடக்கு நோய். வலிப்பு நோய். |
நடுக்குப்பித்தம் | நடுக்குப்பித்தம் naḍukkuppittam, பெ. (n.) பித்தக்கோளாறினால், உடம்பில் பலவுறுப்புக்களுக்குக் காணும் நடுக்கம்; a disease causing tremor in several organs of the body, due to derangement of bile. [நடுக்கு + பித்தம்.] |
நடுக்குறு –த்தல் | நடுக்குறு –த்தல் naḍukkuṟuttal, 4.செ. குன்றாவி, (v..t) நடுங்கச் செய்தல்; to cause to tremble. “நெஞ்சு நடுக்குறூஉ நெய்த லோசையும்”. (மணிமே. 6:71);. க. நடுகிசு, [நடுங்கு → நடுக்கு + உறு-] |
நடுக்குவாதம் | நடுக்குவாதம்1 naḍukkuvātam, பெ. (n.) உதறு வலிப்பு (வாதம்); (யாழ். அக.);; shaking palsy. நடுக்குவாதம்2 naḍukkuvātam, பெ. (n.) நடுக்கல் முடக்கு நோய் பார்க்க;see madukkal-mudakku-ndy. [நடுக்கு +Skt வாதம்.] |
நடுக்கெடு-த்தல் | நடுக்கெடு-த்தல் naḍukkeḍuttal, 4.செ.குன்றாவி.(v.t.) நடுக்கம் காணல்; to be attacked with shivering or trembling as from Cold. [நடுக்கு + எடு-] |
நடுக்கேடு | நடுக்கேடு naḍukāḍu, பெ. (n.) ஒருபுடைச்சார்பு; particlity. “நச்சுவாய்ப் பல்லர் நடுக்கேடு செய்தவர்கள்” (சித்.நாய.5);. [நடு + கேடு.] |
நடுக்கேள்-தல் | நடுக்கேள்-தல் naḍukāḷtal, 11. செ. குன்றாவி, (v.t.) 1. வழக்கு உசாவுதல்; to hear arguments of litigants in a suit. 2. நேர்மையான முடிவு சொல்ல வேண்டுதல்; to refer a Case: for decision. [நடு + கேள்-] |
நடுக்கொண்டவீடு | நடுக்கொண்டவீடு naḍukkoṇḍavīḍu, பெ. (n.) நடுவத்திலுள்ள வீடு: middle – house. |
நடுங்க | நடுங்க naḍuṅga, இடை. (part.) ஒர் உவமவுருபு (தொல். பொருள். 286);. a barticle of comparision. [நடு → நடுங்க.] |
நடுங்கநாட்டம் | நடுங்கநாட்டம் naḍuṅganāḍḍam, பெ. (n.) தலைவனுக்கு எதமுளதோ என்று தலைவி ஐயுற்று நடுங்குமாற்றால், தோழி அவளிடஞ் செய்தியொன்று கூறிக் களவொழுக்கத்தை அவள் வாயிலாகவே அறிய முயல்வதைக் கூறுந்துறை (திருக்கோ. 70 உரை);. theme in which the maid, narrating a fictitious accident to make the heroine tremble for her lover’s safety, seeks an open avowal of her clandestine marriage [நடுங்க + நாட்டம்.] |
நடுங்கலன் | நடுங்கலன் naḍuṅgalaṉ, பெ. (n.) நடுக்கல் வலிப்புக்காரன் (யாழ்ப்.);; one suffering from shaking palsy, [நடுங்கல் + அன்.] |
நடுங்கல் | நடுங்கல் naḍuṅgal, பெ. (n.) அச்சம்; dread fear. “அவனைக் கண்டால் இவனுக்கு நடுங்கல்தான்” (உ.வ.);. |
நடுங்கு-தல் | நடுங்கு-தல் naḍuṅgudal, 5.செ.கு.வி. (v.i.) 1. அசைதல்; to shake, shiver, quiver. “வாயிற் கடைமணி நடுநா நடுங்க” (சிலப். 20:53);. 2. அஞ்சுதல்; to tremble through fear, to be agitated. “ஒன்னாத் தெவ்வர் நடுங்க வோச்சி” (பெரும்பாண். 118.);. 3. நரத்தடுமாறுதல்; to stutter, falter Waver. “நடுங்கா நாவி னுறைமூ தாளன்” (மணிமே. 12:3);. 4. மனங்குலைதல்; to lose heart. “நகையமராயம் நடுங்க நடுங்கான்’ (பு. வெ. 4, 15.);. 5. அதிர்தல்; to quake, as the earth. 6. பதறுதல்: to be anxious, apprehensive. 7. கொண்டாடுதற்குறியாகத் தலையசைத்தல்; to nod one’s head as a sign of appreciation. “சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி” (புறநா. 145);. 8. ஒப்பாதல்; to be similar. “படங்கெழு நாக நடுங்குமல்குல்” (தொல். பொருள். 286. உரை);. க., நடுகு, தெ. நடுகு. ம. நடுங்ஙுக. து. நடுகுணி, [நடு → நடுங்கு-] |
நடுச்சாமசுரம் | நடுச்சாமசுரம் naḍussāmasuram, பெ. (n.) நள்ளிரவிற் காணும் சுரம்; fever that comes at midnight. [நடு + சாமம் + சுரம்.] |
நடுச்சாமம் | நடுச்சாமம் naḍuccāmam, பெ. (n.) 1. மூன்றாம் சாமம்; middle or third watch from midnight to 3.am. 2. நள்ளிரவு; midnight. [நடு + சாமம்.] யாமம் → சாமம். |
நடுச்சாலை | நடுச்சாலை naḍuccālai, பெ. (n.) ஒருவகை மாம்பழம்; a kind of mango fruit. [நடு + சாலை.] இடவாகுபெயர். |
நடுச்சுவர் | நடுச்சுவர் naḍuccuvar, பெ.(n.) இடைச்சுவர்; middle-wall. ம. நடுச்சுவர் [நடு + சுவர்.]] |
நடுச்செய்-தல் | நடுச்செய்-தல் naḍucceytal, 1.செ.கு.வி. (vi.), 1. நயன்மை வழங்குதல்; to render justice, to decide justify, “திரமதா நடுச்செய்யுஞ்; செங்கோலினான்” (குற்றா.தல..மந்தமா.96.);. 2. அமைதிப்படுத்தல்; to compromise. [நடு செய் – ] |
நடுச்செவி | நடுச்செவி naḍuccevi, பெ. (n.) செவிஇடை. middle of the ear. மறுவ. நடுக்காது. [நடு + செவி] |
நடுச்செவிநோய் | நடுச்செவிநோய் naḍuccevinōy, பெ. (n.) நடுக்காதிலிருந்து சீழ் வடிதல், pus oozing from the mid ear. [நடு + செவி + நோய்.] |
நடுச்சொல்லு)-தல் | நடுச்சொல்லு)-தல் naḍuccolludal, 8. செ. குன்றாவி. (v.t..) 1. முடிவு செய்தல் (இ. வ);: to decide a case. 2. சந்து செய்தல் (இ. வ.);: to mediate, 3. நயன்மை வழங்குதல் (யாழ். .அக.);; to render justice. 4. சான்று கூறுதல் (பழ.148, உரை);; to bear witness. [நடு + சொல்-லு-] |
நடுச்சொல்வார் | நடுச்சொல்வார் naḍuccolvār, பெ. (n.) சான்று கூறுவோர் (பழ. 48. உரை); (பிங்);. those who bear witness or testify. மறுவ. சான்றாளர். [நடு + சொல்வார்.] |
நடுதறி | நடுதறி naḍudaṟi, பெ. (n.) 1. நட்டகம்பம்; post planted in the ground, as for lethering a calf. 2. கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் ão Guðumsār;Śivan worshipped in Kamrappur_ அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே (தேவா. 811: 1.);. நடு தறி.) |
நடுத்தண்டெலும்பு | நடுத்தண்டெலும்பு naḍuttaṇḍelumbu, பெ. (n.) மார்பின் நடுவெலும்பு; sternum in recentre of the chest middle breast bone. [நடு + தண்டு + எலும்பு.] |
நடுத்தரம் | நடுத்தரம் naḍuttaram, பெ. (n.) 1. இடைப்பட்ட நிலை; intermediate stage middle grade. ‘அவன் நடுத்தர வயதுடையவன்’ (உ. வ.);. 2. நடுவண் நிலை; middle – stage. ம, நடுத்தரம் து. நடுத்தர. [நடு + தரம்.] நடுத்தரம் naḍuttaram, பெ. (n.) மட்டம் (சுமார்);; moderate. [நடு+தரம்] |
நடுத்தரயவம் | நடுத்தரயவம் naḍuttarayavam, பெ. (n.) வெண்கடுகு ஆறுகொண்டதொரு நிறையளவை (சங். அக.);; a measure of weight equivalent to the weight of 6 seeds of white mustard. |
நடுத்தரவுடம்பு | நடுத்தரவுடம்பு naḍuttaravuḍambu, பெ. (n.) வாகானவுடம்பு; medium structure. [நடுத்தரம் + உடம்பு] மிகப் பருமனுமின்றி, மிகமெலிவுமின்றி நடுவாட்டமாக அமைந்த உடல். |
நடுத்தலை | நடுத்தலை naḍuttalai, பெ. (n.) 1. உச்சந்தலை; crown of the head. 2. நடுவிடல் (இ.வ.);; central place. க. நடுதலெ. ம. நடுத்தல. [நடு +தலை.] |
நடுத்தி | நடுத்தி naṭutti, பெ. (n.) நடன அரங்கத்தில் நடுவேயுள்ள பகுதி; central part of the dance dias. [நடு-நடுத்தி] நடுத்தி naḍutti, பெ.(n.) நடன அரங்கத்தில் நடுவேயுள்ள பகுதி; central part of the dance dias. [நடு-நடுத்தி] |
நடுத்திட்டம் | நடுத்திட்டம் naḍuttiḍḍam, பெ. (n.) 1. நடுநிலைவழுவாத்தன்மை; jusiness impartiality. “உண்மை நடுத்திட்டமே யுரைக்கு நாவான்” (பணவிடு. 13);. [நடு + திட்டம்.] |
நடுத்தீர்ப்பு | நடுத்தீர்ப்பு naḍuttīrppu, பெ. (n.) 1. நடுநிலை மாறா முடிவு ; just decision. 2. தெய்வத்தீர்ப்பு (வின்.);; devine judgement as pestilence etc., 3. இறைவனின் இறுதித். தீர்ப்புநாள். கடைசித் தீர்ப்பு; final judgement as at the judgement day. [நடு + தீர்ப்பு.] |
நடுத்தீர்ப்புநாள் | நடுத்தீர்ப்புநாள் naḍuttīrppunāḷ, பெ. (n.) இறைவனுடைய கடைசித் தீர்ப்பு நாள்; judge-ment day. [நடு + தீர்ப்பு +நாள்.] நடுத்தீர்ப்பு நாளில் இறைவனாக வரும் ஏகவும், இறைத்தூதராக வரும் நபியும், முறையே கிறித்துவமத உறுப்பினர்க்கும், இசுலாம் மதஉறுப்பினர்க்கும், துறக்கம், நல்குவர் என்பது இருமதக் கருத்துக்கள் ஆகும். |
நடுத்தீர்வை | நடுத்தீர்வை naḍuttīrvai, பெ. (n.) நடுத்தீர்ப்பு பார்க்க;see nadu-t-tippu. [நடு + தீர்வை.] |
நடுத்துஞ்சல் | நடுத்துஞ்சல் nadu-t-tயர்ial. பெ. (n.) காலமல்லாத காலத்தில் ஏற்படும் இறப்பு: untimely death. கனறங்கி நடுத்துஞ்சுந் தொழிறஞ்சென’ (கோயிற்பு. வியாக். 25);. [மறுவ. எதிர்பாராத இறப்பு. நடு +துஞ்சல்.] |
நடுத்தெருவில்விடு-தல் | நடுத்தெருவில்விடு-தல் naḍudderuvilviḍudal, 18.செ. குன்றாவி. (wt), ஆதரவின்றிக் snê, solo Glü Gurăşū; to forsake, leave helpless, desert. |
நடுநடு-த்தல் | நடுநடு-த்தல் naḍunaḍuttal, 4. செ.கு.வி. (v.i.) நடுங்குதல்; to tremble. “நாமவற் கண்ணாண்டு நடுப்ப வாராளோ’ (திணைமாலை. 25);. [நடு +நடு- ] |
நடுநடுங்கு-தல் | நடுநடுங்கு-தல் naḍunaḍuṅgudal, 5.செ.கு.வி.(v.i.) 1. பயத்தால் உடல் மிகப்பதறுதல்; to tremble greatly through fear. “நடமுயலும் பொழுதஞ்சி நடுநடுங்கி நானயர” (கோயிற்பு. பாஞ் 38.);. 2. குரல் இசைக்கேடாக அதிர்தல்: to quiver as the voice in vocal music. “மிடறு நடுநடுங்கி” (சீவக. 735);. [நடு → நடுங்கு-] |
நடுநாடி | நடுநாடி1 naḍunāḍi, பெ. (n.) 1. சுழுமுனை; a principal tubular vessel of the human body_ “பக்கவளி தனையடக்கி நடுநாடி யுறப்பயிற்றி” (காஞ்சிப்பு. தழுவக் 57);. 2. உடம்பினுள்ளே ஊடுருவிச்செல்லும் புருவங்களின் நடுவிலமைந்துள்ள கழிமுனை நாடி (சா.அக.);; the nerve that passes through the six psychic regions in the centre of the body and finally terminates between the eye brows. (சா. அக.);. நடுநாடி2 naḍunāḍi, பெ. (n.) இடகலை, பிங்கலை, சுழிமுனை முதலான நாடி நரம்புகள்; the three chief nerve-currents of the human body that is known as idagalai, pingalai Šullmunai. 2. சுழுமுனை பார்க்க;see sulu mսnai. மறுவ மய்யப்புருவ நாடி. [|நடு + நாடி] உடம்பிலுள்ள ஆறாதாரத்தையும் ஊடுருவிச் சென்று, புருவமத்தியில் ஒடுங்கி நிற்பது, இந் நடுநாடி. |
நடுநாட்டம் | நடுநாட்டம் naḍunāḍḍam, பெ. (n.) கழிமுனைப்பார்வை; gazing look between the eye – brows. [நடு + நாட்டம்.] |
நடுநாயகம் | நடுநாயகம் naḍunāyagam, பெ. (n.) 1. அணிகலன்களின் இடையில் பதிக்கும் மணி; central gem of an ornament. 2. சிறந்தவன்; exalted, eminent person. “அந்த அவையில் நடுநாயகம் அவன்’. 3. இறைவன்: God. [நடு +நாயகம்.] அணிகலன்களின் இடையில் பதிக்கும் மணி, அணிக்குச்சிறப்புச்சேர்த்து, தலைமைப்பண்புடன் மிளிர்வது போல், கற்றுத்துறைபோகிய சான்றோர் அவையில், நுண்மாண்நுழைபுலத்துடன் சிறந்த கல்வியாளனாக, தலைமைப் பொறுப்பேற்று நடுநாயகமாக வீற்றிருத்தல், ஈங்கு குறிக்கத்தக்கது. நல்லார். பொல்லார் அனைவருக்கும் நடுநாயகமாக இருக்கும் இறைவன். |
நடுநாள் | நடுநாள் naḍunāḷ, பெ. (n.) 1. நண்பகல்; mid-day. 2. இடையாமம்; mid-night. “பழவிறன் மூதூர் பாயல்கொ னடுநாள்” (மணிமே. 7.63);. 3. சித்திரை விண்மீன்; 14th nakšatra. மறுவ, பானாள். [நடு+ நாள்.] |
நடுநிசி | நடுநிசி naḍunisi, பெ. (n.) நள்ளிரவு: mid-night. மறுவ. சாமப்பொழுது. [நடு +sktநிசி.] |
நடுநியாயம் | நடுநியாயம் naḍuniyāyam, பெ. (n.) 1. ஒருபாற் கோடாமை; fairness, uprightness. impartiality. 2. நயன்மை; equity, evenhanded justice. 3. வழக்கு; lawsuit [நடு+ sktநியாயம்.] |
நடுநிற்றல் | நடுநிற்றல்1 naḍuniṟṟal, பெ. (n.) பிணைபடுகை (வின்.);; standing ball. [நடு + நிற்றல்.] நடுநிற்றல்2 nadu-mirral. பெ. (n.) செம்மையில் நிற்றல்; middle path, “நடுநின்ற நடுவே அருட்பா நடு நிற்றல்.” உயிரையும் உடலையும் இணைக்கும் பேரன்புப் பிழம்பான இறையுடன் ஒன்றி நிற்றல். |
நடுநிலை | நடுநிலை1 naḍunilai, பெ. (n.) 1. இடை நிலைமை; intermediate state or degree middling position. 2. நயன்மை; strict justice. equity. 3. பிணக்குத்தீர்த்ல்); mediation arbitration_4. சிவனியத்திற்குரிய ஒகபூசை நிலைகளுளொன்று (வின்.);, one of the posttion in the mystic worship of the Salvam system. 5. நடுவுரைத்தல்; arbitration. [நடு + நிலை.] நடுநிலை2 naḍunilai, பெ. .(n.) 1. விருப்பு வெறுப்பு இல்லாத சமநிலைப் பண்பு; impartiality. 2. நடுத்தரப்போக்கு; neutrality. உண்மையான திறனாய்வு என்பது நடுநிலை தவறாது மதிப்பீடு செய்தலாகும் (உ.வ.);. நடுநிலையில் நின்று அந்த வழக்கை ஆராயும்போது, புதிய உண்மைகள் புலப்படும் (இ.வ.);. இது ஒரு நடுநிலை நாளேடு (இக்.வ.);. [நடு +நிலை.] |
நடுநிலைக்கொள்கை | நடுநிலைக்கொள்கை naḍunilaikkoḷkai, பெ. (n.) விருப்பு வெறுப்பற்ற சமனிலைக் கொள்கை; the principles of neutrality. நாவலந்தேயம் (இந்தியா); நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடிக்குந் திறன் கண்டு, உலகத்தார் பாராட்டுகின்றனர் (இ.வ.);. [நடுநிலை + கொள்கை.] உலகத்தைப் போர்மேகங்கள் சூழ்ந்துள்ள இக் காலத்தில், நடுநிலைக்கொள்கை உயிர்பெற்று விளங்குவதற்கு எடுத்துக் காட்டாக, பன்னாட்டு உறவுகள் திகழ்கின்றன. |
நடுநிலைஞாயம் | நடுநிலைஞாயம் naḍunilaiñāyam, பெ. (n.) நடுநிலை பார்க்க;see nadu-nilal. [நடுநிலை + ஞாயம்.] |
நடுநிலைநாடு | நடுநிலைநாடு naḍunilaināḍu, பெ. (n.) விருப்பு வெறுப்பற்ற சமனிலைக் கொள்கையை மேற்கொண்டு, ஒழுகும் நாடு, neutral states. [நடுநிலை + நாடு.] ஒருநாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் போர் நிகழும்பொழுது, அந்தப்போரில் ஈடுபடாமல், போரில் எத் தரப்பினருடனும் சேராமல், போர்த்தரப்பினர்க்கிடையே பாகுபாடு காட்டாமல், போரில் தன்னாட்டு மக்கள் ஈடுபடுவதைத் தவிர்த்தும், போர்க்காலத்தில் அமைதியைக் கையாண்டும், போர்த்தரப்பைச் சார்ந்தவர்கள். தன்னாட்டிலிருந்து போர் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்ளும் நாடே நடுநிலைநாடு. |
நடுநிலைப்பற்று-தல் | நடுநிலைப்பற்று-தல் naḍunilaippaṟṟudal, 5.செ.கு.வி. (v.i.) உலகியலுக்கும் ஆன்மவியலுக்கும் இடைப்பட்ட நிலை; to holding a middle position between material and spritual. |
நடுநிலைப்பள்ளி | நடுநிலைப்பள்ளி naḍunilaippaḷḷi, பெ. (n.) ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் சேர்ந்து கல்வி பயிலும் பள்ளி: middle School. [நடுநிலை + பள்ளி] 11 வயது முதல் 13 வயதுடைய மாணவர்கள் கற்கும் பள்ளி. இந்திய அரசியல் அமைப்பின் 45-ஆவது பிரிவு, 1500 மக்கள்தொகைக்கு ஒரு நடுநிலைப்பள்ளி தேவை என்று கூறுவது அறிக. |
நடுநிலைமந்திரம் | நடுநிலைமந்திரம் naḍunilaimandiram, பெ. (n.) ஒரு சிவனிய மந்திரம் (வின்.);: mandiram recited in nadu-nilai worship Šaivam. [நடுநிலை + மந்திரம்.] |
நடுநிலைமை | நடுநிலைமை naḍunilaimai, பெ. (n.) நடுநிலை பார்க்க;see nadu-mila 12. [நடு + நிலைமை.] |
நடுநிலைமையோன் | நடுநிலைமையோன் naḍunilaimaiyōṉ, பெ. (n.) நடுநிலைமை வாய்ந்தோன்; mediator. [நடு +நிலைமையோன்.] |
நடுநில்-தல் (நடுநிற்றல்) | நடுநில்-தல் (நடுநிற்றல்) naḍuniltalnaḍuniṟṟal, 14.செ.கு.வி. (v.i.) to act as umpire. [நடு + நில்-] |
நடுநீதி | நடுநீதி nadu-ma. பெ. (n.) நடுநிலை பார்க்க; See nadu-nila. நடு sktநீதி) |
நடுநெஞ்சு | நடுநெஞ்சு naḍuneñju, பெ. (n.) 1. நெஞ்சாங்குலையின் நடுப்பகுதி, centre of the heart. 2. &flursor ouplush; exact centre. ‘மந்தரத்தைப் பிடுங்கிக் கடலின் நடுநெஞ்சிலே நட்டு'(ஈடு. 1, 3, 1.);. pit of the stomach. [நடு நெஞ்சு.] |
நடுநெஞ்செலும்பு | நடுநெஞ்செலும்பு naḍuneñjelumbu, பெ. (n.) நடுத்தண்டெலும்பு பார்க்க: see ոadu-t-taրdelumbս. [நடு நெஞ்சு எலும்பு] |
நடுநெற்றி | நடுநெற்றி naḍuneṟṟi, பெ. (n.) ஆதனின் இடமாகக் கருதும்புருவ இடைப்பகுதி(சாக்கிர தானம்; center between the eye brow where the soul dwels in the waking state. [நடு+நெற்றி] |
நடுப்பகல் | நடுப்பகல் naḍuppagal, பெ. (n.) காலையுமல்லாது மாலையுமல்லாது சூரியன் உச்சியை அடைந்த பகல் வேளை, mid-day, ՈOOՈ மறுவ. நண்பகல், உச்சிப்பொழுது. [நடு + கல்.] |
நடுப்பச்சை | நடுப்பச்சை naḍuppaccai, பெ. (n.) பச்சைக்கல் (மரகதம்);; a precious green gem. மறுவ. அடர்பச்சை. [நடு + பச்சை.] |
நடுப்படுத்து-தல் | நடுப்படுத்து-தல் naḍuppaḍuddudal, 5.செ.குன்றாவி.(v.t.) நடுக்கட்டு (யாழ்ப்); பார்க்க;see nadu-k-kastu [நடு + படுத்து-.] |
நடுப்பட்டம் | நடுப்பட்டம் naṭuppaṭṭam, பெ. (n.) கன்னி (புரட்டாசி); மாத 10 முதல் 20 வரையிலான வேளாண் பட்டம்; in between season, from 10th to 20th Purattasi [நடு+பட்டம்] நடுப்பட்டம் naḍuppaḍḍam, பெ.(n.) கன்னி (புரட்டாசி); மாத 10 முதல் 20 வரையிலான வேளாண் பட்டம்; in between season, from 10th to 20th Purattási [நடு+பட்டம்] |
நடுப்பாட்டம் | நடுப்பாட்டம் naḍuppāḍḍam, பெ. (n.) அடிமாண்டுபோன இனத்திற்குரிய நிலத்திற்கு, அரசு தற்காலிகமாகக் கொடுக்கும் குத்தகை (நாஞ்);; temporary lease of properties in escheat enquiries. [நடு + பாட்டம்.] |
நடுப்பாதை | நடுப்பாதை naḍuppātai, பெ. (n.) நடைவழியின் நடுவிலுள்ள பகுதி: centre of a path way. றுவ. நடுவழி. [நடு + பாதை.] |
நடுப்பார் | நடுப்பார்1 naḍuppārttal, 4.செ.கு.வி. (v.i.) அறமன்ற ஆணைப்படி ஒரு வழக்கின் நடுவராகச் செயல்படுதல்; to act as a Commissioner or arbitrator by order of a court. [நடு + பார்-] |
நடுப்பார்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நடுப்பார்வை | நடுப்பார்வை naḍuppārvai, பெ. (n.) 1. கழிமுனைப் பார்வை; looking or gazing between the eye brow. 2. மையப்பார்வை; look with just. [நடு + பார்வை.] |
நடுப்பிலே | நடுப்பிலே naḍuppilē, வி.எ. (adv). நடுப்பெற (இ.வ.); பார்க்க;see nagu-p-pera. [நடுவில் → நடுவிலே → நடுப்பிலே.] |
நடுப்புரை | நடுப்புரை naḍuppurai, பெ. (n.) கருப்பை; womb. [நடு + புரை.] |
நடுப்புரைவிரணம் | நடுப்புரைவிரணம் naḍuppuraiviraṇam, பெ. (n.) கருப்பை நடுவிலேற்படும் அழற்சி; inflamanation of the middle layer of the worno. |
நடுப்புற | நடுப்புற naḍuppuṟa, வி. எ. (adv) நடுப்பெற பார்க்க;see nadu-p-pera. |
நடுப்பெற | நடுப்பெற naḍuppeṟa, வி. எ. (adv) நடுவில்; in the middle, in the Centre. [நடுப்புற → நடுப்பெற.] |
நடுப்பேசு-தல் | நடுப்பேசு-தல் naḍuppēcudal, 5.செ.கு.வி.(v.i.) ஒருவருடைய வழக்கை எடுத்துப் பேசுதல்; to plead for, to advocate a cause. [நடு + பேசு -] |
நடுப்போக்கு-தல் | நடுப்போக்கு-தல் naḍuppōkkudal, 5.செ.கு.வி. (v.i.) நயன்மைவழங்குதல் (யாழ். அக.);; to make a just decision. [நடு + போக்கு – ] நடுவாகத் தீர்ப்புச் சொல்லி, இருவரையும் அனுப்பிவைத்தல் என்னும் பொருளில் வருதல் காண்க. |
நடுப்போர் | நடுப்போர் naḍuppōr, பெ. (n.) பணியிடை செயலினிடை (யாழ்ப்.);; middle of a work of an operation, of an affair. [நடு + போர் → நடுப்போர்.] போர் என்பது செருவைக் குறிக்கும் போது பொரு(து);தல் பொருளில் வருதல் போல் ஈண்டு வைக்கோல் குவியல் பொருளில் வருங்கால், சேர்த்துக் கட்டியமாடுகளால் அடித்தது என்றும் பொருளாகும். ஈண்டு இரு பொருளிலும் வழங்கலாயிற்று. |
நடுமதியம் | நடுமதியம் naḍumadiyam, பெ. (n.) நண்பகல்; middle of the day. [நடு + ski மதியம். ] |
நடுமத்தி | நடுமத்தி naḍumatti, பெ. (n.) இடையே: centre, ‘பூசை அறையில் விளக்கை நடுமத்தியில் வை’ (பே.வ);. [நடு+skt:மத்தி, மீமிசைச் சொல்.] |
நடுமாதிரை | நடுமாதிரை naḍumātirai, பெ. (n.) முதுகெலும்பு வரிசை; spindle tree. |
நடுமுதுகு | நடுமுதுகு naḍumudugu, பெ. (n.) முதுகெலும்பு வரிசை; spinal column. [நடு + முதுகு.] |
நடுமூக்கு | நடுமூக்கு 1 nadu-mப்kku. பெ. (n.) புருவ நடு; space between the eyebrows, “shmi’lமிரண்டும் நடுமூக்கில் வைத்திடில் வாட்ட மில்லை மனைக்கு மழிவில்லை” திருமந்:584). நடு மூக்கு. |
நடுமூலம் | நடுமூலம் nadu-mப்iam, பெ. (n.) சிறுநீர்; urine. [நடு + மூலம்.] |
நடுமூளை | நடுமூளை nadu-mப்ia. பெ. (n.) மூளையின் @sml , the middle cerebral, vesicle of the embryonic brain, midbrain. [நடு-மூளை.] |
நடுமையம் | நடுமையம் nadu-maiyam, பெ. (n.) 1. @smLGu; centre, middle. 2. 2 #f; zenith, meridian, 3. L(Bollnium, middle of two eye brows. மறுவ. நடுமத்தி மீமிசைச்சொல். [நடு + sktமையம்.] |
நடுயாமம் | நடுயாமம் nadu-yamam, பெ. (n.) நள்ளிரவு; mid-night. நள்- நடு- யாமம் யாம் + அம்- யாமம். யாமம் = இருள் விளங்கித்தோன்றும் நள்ளிரவு நேரம். “நள்” என்னும் வேரடி இருட்செறிவினைக் குறித்தது. |
நடுராசி | நடுராசி nadu-ris. பெ. (n.) நடுத்தரம் (வின்); middling sort, that which is middling or moderate as in quality or size. [நடு +sktராசி.] |
நடுவகிரெடுத்தல் | நடுவகிரெடுத்தல் naḍuvagireḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) நெற்றியின் நடுப்பகுதியிலிருந்து மயிரை ஒழுங்குபடப் பிரித்து வாருதல்; to middle part of the hair from the crown to the forehead. [நடுவகிர்+ எடு-] |
நடுவண் | நடுவண் naḍuvaṇ, வி.எ. (adv), இடையில், in the centre. “நடுவ ணைந்தினை நடுவண தொழிய” (தொல், பொருள். 2);. க. நடுவன. [நடுவம் → நடுவண்.] |
நடுவண்ஐந்திணை | நடுவண்ஐந்திணை naḍuvaṇaindiṇai, பெ. (n.) பாலைத்திணை: arid, desert land. “நடுவண் ஜந்திணை நடுவண தொழிய” (தொல். பொருள். 948);. க. நடுவன. [நடுவண் + ஐந்திணை.] நடுவண் ஐந்திணை என்பது, தமிழ் இலக்கியப்பரப்பில் பாலைத்திணையைக் குறிக்கும். பாலைநிலமென்பது, தமிழகத்தில், எப்போதும் மிகுவறட்சியே, நிலைத்திருக்கும். தனிநிலமன்று. அஃதாவது மிகுவறட்சிக் காலத்தே குறிஞ்சியின் (மலையின்); ஒரு பகுதியும், முல்லையின் காட்டின்); ஒரு பகுதியும், வேனிற்கடுமையால், சிறிது காலம் பாலைத்தன்மை அடையும். இதுவே நடுவண் ஐந்திணை என்று பெயர் பெற்றது. |
நடுவண்டம் | நடுவண்டம் naḍuvaṇḍam, பெ. (n.) வழலையின் பெயர்; name of quint essence Salt. [நடு+வண்டம்.] |
நடுவண்பல்கலைக்கழகம் | நடுவண்பல்கலைக்கழகம் naḍuvaṇpalkalaikkaḻkam, பெ. (n.) நடுவணரசின் நேரடியாளுகைக்குட்பட்ட பல்கலைக்கழகம், university under the control of central government. மறுவ. மய்யப்பல்கலைக்கழகம். [நடுவண் + பல்கலைக்கழகம்.] |
நடுவனாள் | நடுவனாள் naduwara. பெ. (n.) உரு (பரணி, the second star. 3 னகையம்புலியின் வளர்பக்கம் (வேதாரணி. விசுவா. மேனகை 68);. [நடுவன்+நாள்.] |
நடுவன் | நடுவன் naḍuvaṉ, பெ. (n.) 1. கூற்றுவன் (இயமன்);, yaman, as the just awarder of rewards and punishments. “நடுவன் மேல்வர்” (பெருங். உஞ்சைக் 53, 70);. “நாடுநகர் வீடுமாடு நற்பொரு ளெல்லாம் நடுவன் வரும்பொழுது நாடி வருமோ” 2: முறை மன்றத்தில் தீர்ப்பெழுதும் அறமுதல்வன் நடுவனாள் தீர்ப்பெழுதுவதற்கு பல ஆண்டுகள் வழக்காளிகள் காத்துக் கிடக்கின்றனர் (இக்வ);. 3. நடுவர் பார்க்க; see radபwar. [நடு வு-நடுவு + அன்-நடுவன்.] செங்கோற் கடவுளாகிய யமன் நடுவுநிலைமையை உடையவன். உற்றார் அற்றார் எனும் வேறுபாடின்றி, உரியகாலத்தே தமது செங்கோலை நடுவுநிலைமையோடு பயன்படுத்து பவனாகிய நமன். |
நடுவயது | நடுவயது naḍuvayadu, பெ. (n.) இளமைக்கும் மூப்பிற்கும் இடையிலுள்ள பருவம்; middle – age. மறுவ, நடுஅகவை. [நடு + வயது [அகவை.] |
நடுவயிறு | நடுவயிறு naḍuvayiṟu, பெ. (n.) வயிற்றின் நடுப்பாகம்; mid-gut. [நடு + வயிறு.] |
நடுவர் | நடுவர் naḍuvar, பெ. (n.) 1. பேச்சுப்போட்டி போன்றவற்றில், வெற்றி பெற்றவரைத் தெரிவு Q&tilus.ji, judge in a competition. பேச்சுப்போட்டி நடுவராக வருபவர், நல்ல கல்வியாளராக இருக்க வேண்டும் (உ.வ.);. 2. விளையாட்டுப்போட்டிகளில், இரு அணிக்கும் பொதுவாக இருந்து போட்டியை நடத்துபவர்; umpire, referee. நடுவர் தன் நாட்டு அணிக்குச் சார்பாக நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. (இ.வ.);. நடுவராக வருபவர் பணத்திற்கு ஆசைப்படாதவராக இருக்க வேண்டும் (உ.வ.);. [நடு + நடுவர்.] |
நடுவர் மன்றம் | நடுவர் மன்றம் naguvar-manram. பெ. (n.) இருதரப்பினரும் பேசி முடிவு காண இயலாத சிக்கல்களுக்குத் தீர்வுகாண, இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஏற்படுத்தப்படும் குழு; tribunal. நடுவர்மன்ற உறுப்பினர் மனச்சான்றுடன் செயல்பட்டால்தான், முறையான தீர்ப்புக் கிடைக்கும் (இக்.வ);. |
நடுவர்தீர்ப்பு | நடுவர்தீர்ப்பு naḍuvartīrppu, பெ. (n.) நடுவர்குழு வழங்கும் தீர்ப்பு: arbitration tribunal judgement. GIrsúìfl #ifủurảl#t tạih(6ifhu நடுவர்தீர்ப்பினை கருநாடகம் ஏற்றுச்செயல் படவேண்டும் (இக்.வ.);. நடுவர்தீர்ப்பை மதிக்கும் மனவொருமைப்பாடு, அனைவர்க்கும் வேண்டும் (உ.வ);. மட்டைப்பந்து (கிரிக்கெட்); விளையாட்டில் நடுவர்தீர்ப்பே, இறுதியானது. (இக்.வ);. [நடுவர்+திர்ப்பு.] |
நடுவர்தீர்ப்பு உடன்பாடு | நடுவர்தீர்ப்பு உடன்பாடு naḍuvartīrppuuḍaṉpāḍu, பெ. (n.) நிகழ்காலம் அல்லது எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் பற்றித் தரப்படும், எழுத்துவகையிலான உடன்பாடு: arbitration agreement. [நடுவர்+திர்ப்பு + உடன்பாடு.] |
நடுவர்தீர்ப்புமுறை | நடுவர்தீர்ப்புமுறை maguvar-tippu-mural. பெ. (n.) இருவர்க்கிடையே ஏற்படும் பணம் சொத்து, ஒப்பந்தமுறிவு முதலான வாழ்வியல் சிக்கல்களை, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடுவர்குழுவின் தீர்ப்புப்படி, முறைமன்றம் (court); செல்லாமலேயே தீர்த்துக் Qārśirst5th Umtāgī; arbitrations. [நடுவர்தீர்ப்பு + முறை.] |
நடுவறு-த்தல் | நடுவறு-த்தல் naḍuvaṟuttal, 4.செ.குன்றாவி.(v.t.) 1. வழக்குத்தீர்த்தல் (வின்.);; to judge as an umpire, to decide. 2. வழக்கின் இருசாரார்களையும் கேட்டுத் தேர்தல்; to hear the contentions of both parties to a suit. |
நடுவறுத்தான் | நடுவறுத்தான் naḍuvaṟuttāṉ, பெ. (n.) மூக்கிரட்டை (யாழ். அக.);; spreading hogweed. மறுவ, மூக்கறுத்தான்கொடி. [நடு + அறுத்தான்.] |
நடுவலம் | நடுவலம் magபvalai. பெ. (n.) நரிமுருக்கு; a kind of coral tree. [நடு + வலம்.] |
நடுவளையம் | நடுவளையம் naḍuvaḷaiyam, பெ. (n.) எரு (ஆசன);வாயிலுள்ள வளையத்தின் மூன்று பாகங்களில் நடுவேயுள்ள வளையம், the central ring of the three splincter muscles round the anus. [நடு + வளையம்.] |
நடுவழி | நடுவழி nadu-Wal. பெ. (n.) 1. பயணத்தின் @sm ; middle of a journey, 2, suffuslim BG; middle of the path-way, [நடு + வழி.] |
நடுவழியில் | நடுவழியில் naḍuvaḻiyil, வி.எ. (adj.) இருஇடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில்: midway. நடுவழியில் வண்டி பழுதாகி விட்டதால், மிகவும் தொல்லை ஏற்பட்டது. (உ.வ.);. நடுவழியில் மழை பிடித்துக் கொண்டதால், நனைந்து கொண்டே சென்றேன். (இ.வ.);. [நடு + வழியில்.] |
நடுவாந்தரம் | நடுவாந்தரம் naguvāndaram, பெ. (n.) 1. மையதேசம்; mid-region, 2. உதவியற்ற fsmsosmın; helpless condition, “srairememr நடுவாந்தரத்தில் விட்டுவிட்டான் (உ. வ);. [நடு+sktஅந்தரம்.] |
நடுவான் | நடுவான் naḍuvāṉ, பெ. (n.) நடுவிலான் (இ. வ.); பார்க்க;see raduvian. [நடு + ஆன்.] |
நடுவார்த்தை | நடுவார்த்தை nagu-vārttai, பெ. (n.) GEfismunursar Qairsi; honesty-word. மறுவ, உண்மைச்சொல். [நடு +skt:வார்த்தை.] நன்மை, தீமை இரண்டிற்கும் நடுநின்று. நண்பர்-பகைவர் அல்லது உற்றார், அற்றார் இரண்டிற்கும் அப்பாற்பட்டு, ஒருபாற்கோடாது உரைக்கும் சான்றாண்மைச் சொல்லே, நடுச்சொல். |
நடுவிடு | நடுவிடு naḍuviḍu, பெ. (n.) 1. இறைவழி பாட்டிற்குரிய உள்வீடு (வின்.);; middle or interior of a house, where an idol is kept for worship. 2. சாப்பாட்டறை (இ.வ.);; dining room, 3. ஒரூரில் மதிப்புடையார் வாழிடத்திலுள்ள வீடு (இ.வ.);; a house in a respectable quarter in the heart of a village. [நடு + விடு.] |
நடுவிரல் | நடுவிரல் naḍuviral, பெ. (n.) ஐவிரல்களுள் இடையிலுள்ள விரல்; middle – finger, மறுவ. பாம்புவிரல். கைவிரலைந்தனுள் நடுநின்றதும், சற்றே நீளமானதுமான விரல். |
நடுவிலவன் | நடுவிலவன் naḍuvilavaṉ, பெ. (n.) நடுவிலான் பார்க்க;see naguvilān. ம. நடுவிலவன். [நடுவில் + அவன்.] |
நடுவிலான் | நடுவிலான் naḍuvilāṉ, பெ. (n.) மகன்களுள் நடுப்பிறந்தான், நடுவுள்ளவன்; middle son, [நடுவில் → நடுவிலன் → நடுவிலான்.] இடப்பொருள் பற்றியது. |
நடுவில் | நடுவில் naḍuvil, இடை (int.) இடையில், காலத்தில், இடத்தில்; in the middle, in between, பேச்சின் நடுவில் கையிலிருந்த குறிப்பைப் பார்த்துக்கொண்டார் (உ.வ.); [நடுவு+இல்.] |
நடுவீட்டுத்தாலி | நடுவீட்டுத்தாலி naḍuvīḍḍuttāli, பெ. (n.) அறுதாலிமறுமணத்துக்கு வன்னியர் வழங்கும் பெயர். மறுமணத்திற்கு வழங்கும் ஒரு பெயர் the name given to the remarriage of a widow among wanniyar, as taking place inside a house without much publicity, [நடு + வீட்டு +தாலி.] முதல் மணம் முற்றத்தில் செய்து கணவன் இறந்தால், மறுமணத்தை இருகுடும்பத்தார் மட்டும் காண, ஒரு வீட்டில் செய்யும் கரணம், என்றும் கருதலாம். |
நடுவீதி | நடுவீதி naḍuvīti, பெ. (n.) 1. தெருவின் நடுப்பகுதி; middle of the street. 2. வாய், செவி, மூக்கு, மத்தி, மய்யம் (சா.அக);. a mid Way communicating with esophagus below and above larynx, mouth, nasal, passages and eustachian tubes. |
நடுவீதியில்விடு-தல் | நடுவீதியில்விடு-தல் naḍuvīdiyilviḍudal, 18 செ. குன்றாவி, (v.t.) நடுத்தெருவில் விடுதல் (இ.வ.);; to leave some one in the middle of the Street. [நடுவிதியில் + விடு-] |
நடுவு | நடுவு1 naḍuvu, 1, இடை; middle, that which is intermediate. 2. நடுவு நிலைமை; impartiality, uprightness. “நன்பல்லூழி நடுவுநின்றொழுக” (பதிற்றுப். 89.8);. 3. நயன், முறை (நீதி); (வின்.);; justice. க. நடுவு. தெ. நடுமு. [நடு → நடுவு.] நடுவு2 naḍuvu, பெ. (n.) 1. பெண்கள் இடுப்பு;(சா. அக.);; hip of a woman. “நடுவு துய்யன” (கம்பரா.நகரப்.31);. 2. நடுவுநிலை பார்க்க: see maduvu-nila. [நடு → நடுவ.] நடுவு3 naḍuvu, வி.(v.) நாற்று நடுதல்; transplanting. ‘இன்று நடுவுக்கு யாரும் வரவில்லையா?’ (பே.வ);. [நடவு → நடுவு.] |
நடுவுக்கூலி | நடுவுக்கூலி naḍuvukāli, பெ. (n.) நாற்று நடுதலுக்குக் கொடுக்கப்படும் கூலி/சம்பளம்; pay of transplanting. [நடுவு + கூலி.] |
நடுவுச்சிப்பொழுது | நடுவுச்சிப்பொழுது naḍuvuccippoḻudu, பெ. (n.) நண்பகல் பார்க்க;see nampagal. [நடுவுச்சி + பொழுது.] |
நடுவுச்சிவாதம் | நடுவுச்சிவாதம் naḍuvuccivātam, பெ. (n.) உடல் நொந்து, உச்சித்தலை வலித்து, கண்சிவந்து, குளிரை உண்டாக்கும் வலிப்பு நோய் வகை; a kind of nervous disease, affecting chiefly the crown of the head and marked by pain in the affected part, inflamed eyes and chillness. [நடு + உச்சி ski.வாதம்.] |
நடுவுநிலை | நடுவுநிலை naḍuvunilai, பெ. (n.) 1. ஒரு தலைச் சாராமை (குறள். அதி.12);; equity, justice, strict neutrality, impartiality. 2. அமைதியைக் காட்டும் சுவை (சாந்தம்);; the sentiment of tranquillity. “இன்புற னடுவுநிலை” (தொல். பொருள்.260);. மறுவ. ஒருபாற்கோடாமை. [நடுவு +நிலை.] ஒரு நாடு அல்லது அரசு, வேறு இரு அரசுகளுக்கிடையே நிகழும் போரில், கலந்து கொள்ளாத நிலை, நடுவுநிலை ஆகும். |
நடுவுநிலைத்திணை | நடுவுநிலைத்திணை naḍuvunilaittiṇai, பெ. (n.) பாலைத்திணை பார்க்க: see palaitina. “நடுவு நிலைத்தினையே நண்பகல் வேனிலொடு” (தொல்பொருள்.9);. [நடுவு +நிலை +திணை.] |
நடுவுநிலைமை | நடுவுநிலைமை naḍuvunilaimai, பெ. (n.) 1. நடுநிலை பார்க்க;see nadu-nilai. “நல்லம்யா மென்னு நடுவுநிலைமையால்” (நாலடி.131.);. 2. உள்ளச்சமநிலை (வின்.);: steadfastness, equanimity, 3. செம்மை (யாழ்ப்.);; fairness, uprightness. [நடுவு +நிலைமை.] |
நடுவுநிலைமை நாடு | நடுவுநிலைமை நாடு naḍuvunilaimaināḍu, பெ. (n.) இருநாடுகளுக்கிடையே போர் நிகழுங்கால், எந்தவொரு நாட்டுடனும் போரில் கலந்து கொள்ளாது, தனித்திருக்கும் நாடு; neutrality nation. [நடுவுநிலைமை +நாடு.] |
நடுவுபாடு | நடுவுபாடு naḍuvupāḍu, பெ. (n.) இடைப்பகுதி; middle region, central place. “பொன்னி நடுவுபாட்டுத் திருவரங்கத் தரவணையிற் பள்ளிகொள்ளும்” (திவ். பெருமாள்.1:11);. [நடுவு + பாடு.] |
நடுவுப்பு | நடுவுப்பு naḍuvuppu, பெ. (n.) 1. கல்லுப்பு; stone salt. 2. பாறையுப்பு; rock-salt. [நடுவு+உப்பு.] |
நடுவுரை | நடுவுரை naḍuvurai, பெ. (n.) நன்மைதீமை, நட்பு-பகைமை எனும் இரண்டிற்கும் பொதுவான, நல்லுரை; neutral advice. “நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே” (தேவாரம்);. [நள் → நடு → உரை.] |
நடுவுள்ளவன் | நடுவுள்ளவன் naḍuvuḷḷavaṉ, பெ. (n.) நடுவிலான் பார்க்க;see naguvilān. [நடு + உள்ளவன்.] |
நடுவூர் | நடுவூர் naḍuvūr, பெ. (n.) ஊரின் நடுவிடம்; heart of a town, centre of a town. “நடுவூருணச்சுமரம் பழுத்தற்று” (குறள், 1008);. |
நடுவெலும்பு | நடுவெலும்பு naḍuvelumbu, பெ. (n.) முதுகெலும்பு (யாழ்.அக);; back-bone. மறுவ. முதுகந்தண்டு, வீணைத்தண்டு. [நடு + எலும்பு.] |
நடுவெளி | நடுவெளி naḍuveḷi, பெ. (n.) 1. இடைவெளி (யாழ்.அக.);; centre of an open plain. interspace. 2. பரவெளி (வின்.);; the immense space, as filled by the Supreme Being. [நடு + வெளி.] |
நடுவெழுது-தல் | நடுவெழுது-தல் naḍuveḻududal, 5 செ.கு.வி. (v,i) ஆவணமெழுதுதல்; to engross a document. [நடு + எழுது-.] தல்லிற்றுத் தொழிற்பெயர் |
நடுவெழுத்தலங்காரம் | நடுவெழுத்தலங்காரம் naḍuveḻuttalaṅgāram, பெ. (n.) சித்திரப்பாடல்; a variety of når-p-pādal. [நடு + எழுத்து +sktஅலங்காரம்.] |
நடுவெழுத்து | நடுவெழுத்து naḍuveḻuttu, பெ. (n.) 1. ஆவணமெழுதுபவன்; document-writer. 2. ஆவணங்களைப் பதிவு செய்யும் அதிகாரி; an official whose duty was to attest documents of Sales and mortgages. [நடு + எழுத்து.] |
நடுவே | நடுவே naḍuvē, இடை (part). இடையில்: in the middle of, in the midst of “உன்னடியவர் தொகை நடுவே” (திருவாச44:1);. “நல்லவன் ஒருவன் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்” (பழ.);. பெரியோர் பேச்சின் நடுவே இளையோர் குறுக்கிடக்கூடாது (உ.வ.);. கடலின் நடுவே கப்பல் போவது தெரிகிறது. (இ.வ.);. [நடு → நடு + ஏ.] |
நடுவைத்தல் | நடுவைத்தல் naḍuvaittal, பெ. (n.) நாற்று நடுதல்(சா.அக);; transplanting. [நடு + வைத்தல்.] |
நடுவோடி | நடுவோடி naḍuvōḍi, பெ. (n.) வீணைத்தண்டின் நடுவேயோடும் சுழிமுனை நாடி; the subtle passage supposed to run in the middle of the spinal coloumn through which Sushumuna runs. மறுவ சுழுமுனை, நடுநாடி. [நடு + ஒடு → நடுவோடு → நடுவோடி] |
நடேசன் | நடேசன் naṭēcaṉ, பெ. (n.) ஆட(ல்);வல்லான் பார்க்க;see ādatllvallān. |
நடை | நடை naḍai, பெ. (n.) 1. காலால் நடக்கை; walk, act of walking. “கோலூன்றிச் சோர்ந்த, நடையினராய்” (நாலடி.13);. 2. கோள்களினி யக்கம்; motion, course, as of a planet. 3. செலவு (பயணம்); (வின்.);; journey. 4. அடிவைக்கும் நிலை; gait, mode of walking or going, pace. “விடைபொரு நடையினான்” (கம்பரா. எழுச்சி.10);. 5. வழி (பிங்.);; route road. 6. வாசல்; gate. ‘இனி நீ என் நடையில் வந்து மிதிக்காதே’ (உ.வ);. 7. இடைகழி; corridor, vestibule. “அரக்கர் கிடைகளு நடைகளும்” (இராமநா.சுந்:3);. 8. கப்பலேறும் வழி; gangway, 9. ஒழுக்கம்; conduct, behaviour, career, “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” (புறநா.312);. 10. வழக்கம்; custom, usage, fashion. 11. மொழியின் போக்கு; style in language. ‘ஒன்றல்லவை பல தமிழ் நடை’ (காரிகை.செய்.4.உரை);. 12. வாசிப்பினோட்டம் (வின்.);; fluency reading. 13. இயல்பு; nature. “என்றுங் கங்குலா நடையதோரிடம்” (சேதுபு. கந்தமா.69);. 14. அடி; foot. “பகூட்டாலீன்ற கொடுநடைக்குழவி” (பெரும்பாண்.243);. 15. கூத்து (சூடா.);; dance, dancing. 16. தொழில்: occupation. “மாயோனிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்” (திவ்.திருவாய்.1,53);. 17. செல்வம் (சூடா);; wealth. 18. ஒழுக்கநூல்; religious or moral treatise. “நன்றாக நடைபலவு நவின்றார் போலும்” (தேவா. 722.11.);. 19. நாள் வழிபாடு (நித்யி பூசை);; daily worship in a temple. “நடையும் விழவொடு நாடொறு மல்குங் கழுமலத்துள்” (தேவா152.8);. 20.கோயில் (T.A.S.iv,8.);; temple, 21. தடவை; turn, time. ஒரு நடை போய் வா (உ.வ.);. 22. நீண்டநாள்; long-time. ‘நடைப்பிணியாயிருக்கின்றான்’ 23. செயல்: deed. “உலக ‘நடையறிந்து ஒழுகுவதே அறம்” (உ.வ.);. 24. ஒழுக்கம்; “நடையின் நின்றுயர் நாயகன்” (கம்பரா);. க, நடெ, தெ, நட. ம, நட. |
நடைஉத்திகள் | நடைஉத்திகள் naḍaiuttigaḷ, பெ. (n.) ஒலிநிலை, இலக்கணநிலை, சொல்நிலை எனப்பல்வேறு நிலைகளில் உருவாகும் மாற்றங்களே, நடைஉத்திகள் ஆகும்; the techniques style in change of style in which phonetics, grammatical and word etc., [நடை + உத்திகள்.] |
நடைகாயம் | நடைகாயம் naḍaikāyam, பெ. (n.) மகப் பேறு அடைந்த பெண் உட்கொள்ளும் மருந்துவகை; a medicinal compound taken in by women after child – birth. “குறித்தி பிள்ளை பெற்றால், குறவன் நடைகாயம் தின்பான்” (பழ);. [நடை + காயம்.] |
நடைகிணறு | நடைகிணறு naḍaigiṇaṟu, பெ. (n.) இறங்க ஏற உதவும் படிகள் கொண்ட கிணறு (வின்);: well with steps down to the water at its base. [நடை + கிணறு.] |
நடைகூலி | நடைகூலி naḍaiāli, பெ. (n.) செய்திபரப்புதற்கு, நடந்து சென்று செல்வதற்குரிய கூலி; wage for going on foot, as in Carring message. [நடை + கூலி.] |
நடைக்காற்று | நடைக்காற்று naḍaikkāṟṟu, பெ. (n.) பரவியடிக்குங் காற்று; free current of air. [நடை + காற்று.] |
நடைக்காவணம் | நடைக்காவணம் naḍaikkāvaṇam, பெ. (n.) நடைப்பந்தல் பார்க்க: see radai-p-bandal. “அவ்வளவு நடைக்காவணம் பாவாடையுடன்” (பெரியபு.ஏயர்கோன்.57);. [நடை + காவணம்.] |
நடைக்குநடை | நடைக்குநடை naḍaikkunaḍai, வி.எ. (adv.) ஒவ்வொருதடவையும், everytime, at each turn. [நடைக்கு + நடை.] |
நடைக்கூடம் | நடைக்கூடம் naḍaikāḍam, பெ. (n.) 1. வாயிலிடம் (இ.வ.);, entrance to a building. 2. மாளிகையின் முகப்புக்கூடம்; vestibule of a palace. 3. உடம்பு; the body, as a moving mansion. வீறிலி நடைக்கூடம். (திருவாச. 25:4);. [நடை + கூடம்.] |
நடைசாரி | நடைசாரி naḍaicāri, பெ. (n.) 1. குதிரையின் மந்தகதி (வின்.);; the gentle pace of a horse. 2. உலாவுகை (யாழ். அக.);; walk. Constitutional. 3. இடையறாத நடை (வின்);; ceaseless walking. [நடை + சாரி.] |
நடைசாரிமேளம் | நடைசாரிமேளம் naḍaicārimēḷam, பெ. (n.) 1. ஊர்வலமாகச் செல்லும் மேளம்; piper’s music accompanying a procession. 2. சாப்பறை (யாழ். அக.);; funeral drum. [நடை+ சாரி + மேளம்.] |
நடைச்சலங்கு | நடைச்சலங்கு naḍaiccalaṅgu, பெ. (n.) சிறுபடகு (யாழ். அக.);; small boat. [நடை + சலங்கு.] |
நடைச்சாவடி | நடைச்சாவடி naḍaiccāvaḍi, பெ. (n.) நடைக்கூடம் பார்க்க;see radai-k-kilam. [நடை + மா, சாவடி.] |
நடைச்சீக்கு | நடைச்சீக்கு naḍaiccīkku, பெ. (n.) நடைநோய் பார்க்க;see radai-ndy. [நடை +Eng சீக்கு.] |
நடைத்திண்ணை | நடைத்திண்ணை naḍaittiṇṇai, பெ. (n.) இடைகழித்திண்ணை, pial. [நடை +திண்ணை [நடை =இடைகழி.] |
நடைத்தேர் | நடைத்தேர் naḍaittēr, பெ. (n.) சிறுதேர்; child’s toy-car. “புதல்வர் நடைத்தே ரொலிகறங்கு நாடு” (பு.வெ.3.8);. [நடை+ தேர்.] |
நடைநீர் | நடைநீர் naḍainīr, பெ. (n.) ஒட்டமுள்ள நீர்; running or current water, as in a channal. [நடை + நீர் =நிலையாகத் தேக்கமின்றி ஒடும் ஒடைநீர்] |
நடைநோய் | நடைநோய் naḍainōy, பெ. (n.) 1. கிடையாடில்லாத நோய்; disease not so severe as to cause one to take to bad. 2. துயல் நடை; somnambulism. மறுவ துயில் இயக்கம். [நடை +நோய்.] இரவில் தன்னையறியாது நடக்கும் நோய், இந் நோய் கண்டவர்தம் தன்னினைவு இன்றி, செயற்பாடுகள் அனைத்தும் உறங்கிய நிலையிலேயே நிகழும். |
நடைபடம் | நடைபடம் naḍaibaḍam, பெ. (n.) நடைபாவாடை பார்க்க;see mapai-pavadai. “மாதர் நடைபடம் விரிப்ப.” (குற்றா. தல. திருமண. 82);. [நடை + படம்.] |
நடைபடி | நடைபடி naḍaibaḍi, பெ. (n.) 1. நடத்தை (வின்.);; action, behaviour, life, history. 2. வழக்கம்; manner, custom, practice, 3. அறமன்ற நடவடிக்கை; procedure, as in a court. [நடை + படி.] |
நடைபயம் | நடைபயம் naḍaibayam, பெ. (n.) நடைப்பற்கு அஞ்சுகை; morbid fear of walking. [நடை +skt:பயம்.] உருமநேரத்தில் காட்டிடையும், இரவில் தனிமையிலும் ஏற்படும் நடையச்சம். |
நடைபரி-தல் | நடைபரி-தல் naḍaibaridal, 2 செ.கு.வி. (v.i.) வேகமாக நடத்தல் (யாழ். அக.);; to walk fast. [நடை + பரி-.] |
நடைபழகு-தல் | நடைபழகு-தல் naḍaibaḻkudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நடக்கக்கற்றல்; to learn to walk as a child. குழந்தைகள் நடைபழகுதற்கு, நடைவண்டி ஏற்புடைத்தென்பது, எல்லாரும் அறிந்தது. (உ.வ.); 2. மிகமெதுவாக நடத்தல்: to walk too slowly, as just learning to walk used ironically. [நடை + பழகு-.] |
நடைபாதை | நடைபாதை naḍaipātai, பெ. (n.) நடக்கும் பாதை (நெல்லை);, path, footway, frequented path. மறுவ. நடைவழி. [நடை + பாதை.] |
நடைபாவாடை | நடைபாவாடை naḍaipāvāḍai, பெ. (n.) நடத்தற் பொருட்டு வழியில் விரிக்கும் ஆடை; cloth spread on the floor for walking upon as in a procession [நடை + பாவு + ஆடை.] மிதியடி அணியாத காலத்தில், தக்காரை வரவேற்க, கல்லும் முள்ளும் குத்தாமல் இருப்பதற்குத் துணி விரிக்கப்பட்டது. |
நடைபாவி | நடைபாவி naḍaipāvi, பெ. (n.) நடைபாவி (இ.வ.); பார்க்க; see nadai- vavi. 2. படிக்கட்டு (யாழ்.அக.);. steps, flight of steps. |
நடைபேசி | நடைபேசி naḍaipēci, பெ. (n.) நடக்கும்போதே பேகம் தொலைபேசி: walky talky. [நடை + பேசி.] |
நடைப்படம் | நடைப்படம் naḍaippaḍam, பெ. (n.) நடைப்படாம் பார்க்க;see nagai-p-padām. “நடைப்பட நாட்டி” (பெருங். இலாவாண, 3,68);. [நடை + படம்.] |
நடைப்படாம் | நடைப்படாம் naḍaippaḍām, பெ. (n.) நடைப்பாவாடை பார்க்க;see nada-p-pavaipal. “பையர வரியி னன்ன நடைப்படாம் பரப்பி (திருவிளை. திருமண. 147);. [நடை+ படாம்.] ஒ.நோ. முகபடாம் |
நடைப்பந்தல் | நடைப்பந்தல் naḍaippandal, பெ. (n.) 1. திருவிழாக் காலத்தில் நடந்து செல்வதற்கு அமைக்கும் பந்தல்; pandal erected throughout the entire route of a procession. 2. திருவிழாக்காலத்தில் புறப்பாட்டில், இறைத்திருவுருவுடன் செல்லுமாறு அமையும், பூப்பந்தல் (இ.வ,);, a kind of movable pandal carried to shade an idol during procession. [நடை + பந்தல்] |
நடைப்பயணம் | நடைப்பயணம் naḍaippayaṇam, பெ. (n.) நெடுந்தூரம் நடந்துசெல்லும் பயணம்; travel on foot. நடைபயணம் மேற்கொண்டு, பாடல்பெற்ற திருக்கோயில்களைக்காணப் போகிறோம். [நடை +skt பிரயாண → பயணம்.] |
நடைப்பயிற்சி | நடைப்பயிற்சி naḍaippayiṟci, பெ. (n.) உடல் நலத்தின் பொருட்டு, வேறுநோக்கமின்றி மேற்கொள்ளப்படும் நடை; walking. [நடை + பயிற்சி.] மருத்துவர் அறிவுரையின் படி மேற்கொள்ளும் பயிற்சி. அரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற நோய்களுக்கு நடைப்பயிற்சி சாலச்சிறந்தது. |
நடைப்பயில் -தல் | நடைப்பயில் -தல் naḍaippayiltal, 7.செ.குன்றாவி. (v.t.) மெதுவாக அல்லது நள்னமாக நடத்தல்; to walk gracefully or daintily, போல் அவள் நடைபயின்றாள் (உ.வ);. நடனமகளிர் அழகு மயில் போல அசைந்தாடி நடைபயில்வர் இவ). [நடை + பயில்- ] |
நடைப்பரிகாரம் | நடைப்பரிகாரம் naḍaipparikāram, பெ. (n.) நடைப்பரிகாரம் பார்க்க;see madai-pparigãram. [நடை + பரிகரம்.] நடைப்பரிகாரம்1 naḍaipparikāram, பெ. (n.) வாழ்விற்குரிய பொருள்கள்; means of lvelihood, “நட்டோ ருவப்ப நடைப் பரிகார முட்டாது கொடுத்த. நள்ளியும் (சிறுபாண். 104);. 2. பயணத்திற்கு வேண்டிய பொருள் (யாழ். அக.);; things or provisions necessary for a journey. [நடை + பரிகாரம்.] நடைப்பரிகாரம்2 naḍaipparikāram, பெ. (n.) விலக்குணவு இல்லாத மருந்து (யாழ். அக);; medicine for which no special diet is required. [நடை + பரிகாரம்.] |
நடைப்பாவாடை | நடைப்பாவாடை naḍaippāvāḍai, பெ. (n.) நடைபாவாடை;see nadai-pāvādai. “விரிப்புறு நடைப்பாவாடை மேனகை விரிப்ப”(குற்றா.தல. திருமண. 131);. “தகப்பனுக்குக் கட்டக் கோவணத்துக்கு வழி இல்லை. மகன் தஞ்சாவூர் மட்டும் நடைப்பாவடை போடச் சொன்னானாம்” (பழ);. [நடை + பாவாடை.] |
நடைப்பிணம் | நடைப்பிணம் naḍaippiṇam, பெ. (n.) 1. மக்கட்பதடி; worthless person or a useless fellow. “பிணத்தினையொத்து வாழ்வோர். பின்னடைப் பினங்கள் போலவுனக்கியே யுழல்வீர்” (சி.சி. 2,96);. 2. நடக்கும் உயிர்ப் பிணம்; a walking corpse. [நடை + பிணம்.] |
நடைப்பெருவாயில் | நடைப்பெருவாயில் naḍaipperuvāyil, பெ. (n.) கோயிலின் சிறப்பு வாசல்; main entrance to a palace or a temple. “நடைப்பெருவாயிலும்” (பெருங். மகத. 14:20);. [நடை + பெருவாயில்.] [நடை = வாயில்.] |
நடைப்பொன் | நடைப்பொன் naḍaippoṉ, பெ. (n.) நடப்புச் செலவுக்குத் தேவையான பணம்: an amount of money required for current expenses. “ஆக நடைப்பொன் பதினெட்டு லட்சமும்” (கோயிலொ. 16);. [நடை + பொன்.] |
நடைப்போடு-தல் | நடைப்போடு-தல் naḍaippōḍudal, 19 செ.குன்றாவி. (v.t.) வெற்றியுடன் சிறப்பாக முன்னேறுதல்; to take good strides to progress tirumphantly. நாடு நல்வாழ்வை நோக்கி நடைப் போடுகிறது. (உ.வ.);. [நடை + போடு-.] |
நடைமச்சம் | நடைமச்சம் naḍaimaccam, பெ. (n.) மீன்வகையுளொன்று; a kind of fish. |
நடைமனை | நடைமனை naḍaimaṉai, பெ. (n.) உடம்பு; body, as a walking house. “சாலேகமொன்பது குலாவு நடைமனையை” (தாயு.சச்சிதா.2);. [நடை + மனை.] |
நடைமருந்து | நடைமருந்து naḍaimarundu, பெ. (n.) நடைப் பரிகாரம்2 பார்க்க;see madai-pparigãram2 [நடை + மருந்து.] |
நடைமலை | நடைமலை naḍaimalai, பெ. (n.) யானை; elephant. “நடைமலையெயிற்றினிடை தலைவைத்தும்” (கல்லா. 12);. [நடை + மலை.] |
நடைமாடு | நடைமாடு naḍaimāḍu, பெ. (n.) கால்நடை (ஆடுமாடுகள்); (நாஞ்);. cattle live. stock. [நடை + மாடு = கால்நடைச்செல்வம்.] |
நடைமாற்று | நடைமாற்று naḍaimāṟṟu, பெ. (n.) நடைபாவாடை (நெல்லை); பார்க்க;see nadaipavadai. [நடை + மாற்று.] |
நடைமாளிகை | நடைமாளிகை naḍaimāḷigai, பெ. (n.) கருவறையைச் சூழ்ந்ததாகத் திருச்சுற்றில் அமைக்கப்படும், தொடர்நிலை மண்டபம் (கல்.அக.);; outer halls adjoining the sanctum of a temple. [நடை +மாளிகை [நடை = கோயில்].] |
நடைமுதல் | நடைமுதல் naḍaimudal, பெ. (n.) நடப்பிலுள்ள ஆண்டு (இ.வ.);; current year. [நடை +முதல்.] |
நடைமுறை | நடைமுறை naḍaimuṟai, பெ. (n.) 1. ஒரு திட்டம் கொள்கை முதலியவற்றைச் செயல்படுத்தும் முறை; practice. நாட்டில் நடைமுறைக்கு ஒத்துவரும் திட்டங்களை வகுக்கவேண்டும் (உ.வ.);. 2. பழக்கம்; that which is in practice. ஏற்கனவே நடைமுறையில் உள்ளது (உ.வ.);. 3. வழிமுறை: method. நாடகநடிகர்களுக்கு, மேடை நடைமுறை பற்றிய பயிற்சி தரப்படுகிறது. (இ.வ.);. |
நடைமுறைப்படுத்து-தல் | நடைமுறைப்படுத்து-தல் naḍaimuṟaippaḍuddudal, 5 செ.கு.வி. (v.t.) ஆட்சி. திட்டம். சட்டம் போன்றவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருதல் அல்லது செயல்படுத்துதல்; to put into practice, to bring into force, to implement. பல வளர்ச்சித்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படாமல் இருக்கின்றன. (உ.வ);. [நடைமுறை + படுத்து-.] |
நடைமுறைமூலதனம் | நடைமுறைமூலதனம் naḍaimuṟaimūladaṉam, பெ. (n.) ஒவ்வொரு தொழில் நிறுவனமும், அன்றாடச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட முதல்; working capital. [நடைமுறை + மூல. + Skt. தனம்.] நடைமுறை மூலதனத்தின் வகைகள்:- 1. வழக்கமாக அல்லது நிலையாக ஒதுக்கப்படும் நடைமுறைமூலதனம். 2. பருவகால நடைமுறைமூலதனம். 3. சிறப்பு நடைமுறைமூலதனம் |
நடைமேடை | நடைமேடை naḍaimēḍai, பெ. (n.) நடந்துசெல்லும் பொருட்டு, சாலையோரங்களில் அமைக்கப்பட்ட பகுதி; platform, [நடை + மேடை.] போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு மக்கள் நடந்து செல்லுவதற்கென்று அமைக்கப்பட்ட மேடைபோன்ற பகுதி. |
நடைமொழி | நடைமொழி naḍaimoḻi, பெ. (n.) கிளைமொழி; dialect language. ‘இலக்கிய நடைமொழி புலவர்க்கு உகந்தது’. (இக்.வ.);. [நடை + மொழி] நடைமொழி naḍaimoḻi, பெ. (n.) ஒரு நாட்டின் ஒரு பகுதியில் பேசப்படும் கிளை மொழியின் suysum, dialect. மறுவ. கிளைமொழி [நடை+மொழி] |
நடையன் | நடையன் naṭaiyaṉ, பெ. (n.) 1. கழுதை, donkey. 2. செருப்பு, மதியடி; shoe. [நடை +அன்] நடையன் naḍaiyaṉ, பெ.(n.) 1. கழுதை, donkey. 2. செருப்பு, மிதியடி; shoe. [நடை+அன்] நடையன் naḍaiyaṉ, பெ. (n.) 1. நடக்கிறவன் (வின்.);; walker, pedestrian. 2. உழவுமாடு, குதிரை முதலியவை; ploughing ox, riding horse, etc., 3. செருப்பு; shoes, slippers. ம. நடயன். [நடை→ நடையன்.] |
நடையறி-தல் | நடையறி-தல் naḍaiyaṟidal, 2செ.கு.வி. (v.i.) ஊர்வழக்கங்களையறிதல் (வின்.);; to understand the customs, as of a locality. [நடை[உலகியல்] + அறி-] |
நடையாடு-தல் | நடையாடு-தல் naḍaiyāḍudal, 5 செ.கு.வி. (v.i.) 1. திரிதல்; to roam, to travel to traverse. “நடையாடாத தேசமாகையாலே” (திவ். திருமாலை. 19.வ்யா);. 2. பரவுதல்; to spread, as fame. ‘ராமகுணங்கள் நடையாடு மிடத்திலே’ (ஈடு.752);. மறுவ. நடமாடு. [நடை + ஆடு-.] |
நடையாடுநோய் | நடையாடுநோய் naḍaiyāḍunōy, பெ. (n.) 1. மூச்சுத்திணறும் ஈளை நோய்; a disease in which the respiration is obstructed as asthma. 2. நடமாட்டத்தைத் தடுக்காத முடக்கு நோய்கள்; certain classes of rheumatism, which allow persons to move about freely without any difficulty மறுவ, ஈளைநோய். [நடையாடு + நோய்.] |
நடையாட்டம் | நடையாட்டம் naḍaiyāḍḍam, பெ. (n.) வழக்கிற் பயின்று வருகை; usage. “முடுகாவழி அத்துணை நடையாட்டம் இல.” (தொல்,பொருள்.377,உரை);. தெ. நடயாடு. [நடை + ஆட்டம்.] |
நடையாட்டி | நடையாட்டி naṭaiyāṭṭi, பெ. (n.) கோயில் வழிபாட்டிற்கு நீர் எடுக்கப்படும் குளம்; a pond used for temple purpose. மேதகு நடையாட்டி குளத்தில் சால நீர் கோளுக்கும். [நடை+(அட்டி);ஆட்டி நடை-படிக்கட்டு] நடையாட்டி naḍaiyāḍḍi, பெ.(n.) கோயில் வழிபாட்டிற்கு நீர் எடுக்கப்படும் குளம்: a pond used for temple purpose. மேதகு நடையாட்டி குளத்தில் சால நீர்கோளுக்கும். [நடை+(அட்டி);ஆட்டி நடை-படிக்கட்டு] |
நடையியல் | நடையியல் naḍaiyiyal, பெ. (n.) பேச்சு, மொழி, எழுத்து, மொழி ஆகியவற்றின் நடையைப்பற்றி ஆராயும், ஒரு மொழியியல் பிரிவு; style in language. [நடை +இயல்.] |
நடையில்விடு-தல் | நடையில்விடு-தல் naḍaiyilviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) மாடு முதலியவற்றைப் பெருநடையிற் செலுத்துதல்; to lead or drive at a brisk pace, as a bull-cart. மாட்டைத்துரத்தாதே நடையில் விடு (இ.வ.);. [நடையில் + விடு-.] நடை =நடக்கும் அகன்ற வாயில் |
நடையுடைபாவனை | நடையுடைபாவனை naḍaiyuḍaipāvaṉai, பெ. (n.) மக்களின் உடுப்பு வழக்கவொழுக்க முதலியன; manners and customs, as of a nation. [நடை, +உடை+Skt. பாவனை.] மாந்தர்தம் புறநாகரிகத்தைப் புலப்படுத்துவதே, நடையும், உடையும். |
நடையுடையோன் | நடையுடையோன் naḍaiyuḍaiyōṉ, பெ. (n.) காற்று; air, wind, as hair motion. “காலங்களு நடையுடை யோனும்” (திருப்பு.994);. [நடை + உடையோன்.] விரைந்து வீசும் நடையுடைமை பற்றிக் காற்றுக்குரித்தான் பெயரெனலாம். |
நடையைக்கட்டு-தல் | நடையைக்கட்டு-தல் naḍaiyaikkaḍḍudal, 15 செ.கு.வி. (v.i.) இருக்கும் இடத்தைவிட்டு நீங்குதல், அல்லது புறப்படுதல்; to buzz off, clear off. ‘வந்த வேலை முடிந்துவிட்டால், நடையைக் கட்டு (பழ);. [நடை + ஐ +கட்டு-.] |
நடையொத்து | நடையொத்து naḍaiyottu, பெ. (n.) ஒருவகைத்தாளம் (திவ்.திருவாய். பதிகத் தலைப்பு; a mode of marking time. [நடை + ஒத்து. ] |
நடைவகைகள் | நடைவகைகள் naḍaivagaigaḷ, பெ. (n.) ஓர் ஆசிரியரே தேவைக்கும், சூழலுக்கும், ஏற்றவாறு, பல்வேறு பாங்கினில் எழுதும் முறை; Various kinds of Writing. [நடை + வகைகள்.] பல்வேறு நடைவகைகள். 1. கட்டுரை நடை. 2. வண்ணனை நடை. 3. பாட்டு நடை. 4. விளக்க நடை. |
நடைவண்டி | நடைவண்டி naḍaivaṇḍi, பெ. (n.) சிறுபிள்ளைகள் நடைபழகுதற்குதவும் வண்டி; a go-Cart. [நடை + வண்டி.] |
நடைவரப்பு | நடைவரப்பு naḍaivarappu, பெ. (n.) வயல் களில் நடப்பதற்காகப் போடப்படும் வரப்பு: walkable broad parenent between paddy field. [நடை+வரப்பு] |
நடைவரம்பு | நடைவரம்பு naḍaivarambu, பெ. (n.) நடந்து செல்லுதற்குத் தக்கபடி அமைந்த வயல்வரப்பு: ridge of fields, used as a path-way. [நடை + வரப்பு → நடைவரம்பு.] |
நடைவழக்கு | நடைவழக்கு naḍaivaḻkku, பெ. (n.) நடைமொழி பார்க்க;see madai-moli. [நடை + வழக்கு.] |
நடைவழி | நடைவழி naḍaivaḻi, பெ. (n.) 1. மூன்று முழ அகலமுள்ள பாதை (சுக்கிரநீதி,37);; road, three Cubits wide. 2. நடக்கும் வழி; way, path. மறுவ, நடைபாதை. [நடை + வழி.] |
நடைவழு | நடைவழு naḍaivaḻu, பெ. (n.) செய்யுட் குற்றங்களுள் ஒன்று (யாப்.வி.525);, deviation from rule in style. |
நடைவாசல் | நடைவாசல் naṭaivācal, பெ. (n.) முன்வாசல்: gateway, portal, entrance. [நடை+வாசல், வாயில் →வாசல்] நடைவாசல் naḍaivācal, பெ.(n.) முன்வாசல், gateway, portal, entrance. [நடை+வாசல், வாயில்→வாசல்] |
நடைவாதம் | நடைவாதம் naḍaivātam, பெ. (n.) வளிக்கோளாறினால் நொண்டி நடத்தல்; limping due of spasmodic attacks. [நடை +Skt வாதம்] |
நடைவானம் | நடைவானம் naḍaivāṉam, பெ. (n.) நடைப்பந்தல் பார்க்க;see nadai-p-pandal. [நடை + வானம்.] |
நடைவாவி | நடைவாவி naḍaivāvi, பெ. (n.) படிகளமைந்த கிணறு, (வின்,);; well with steps down to the water as its base. மறுவ. நடைக்கிணறு. [நடை + வாவி.] பெருங்கிணற்றில் ஏறி இறங்க ஏதுவாகச் சுவரில் படிகள் அமைக்கப்படுதல் வழக்கம். |
நடைவியாதி | நடைவியாதி naḍaiviyāti, பெ. (n.) நெடுநாட்பட்டநோய்; longersistis sickness, chronic illness. [நடை +Skt. வியாதி.] |
நடைவிளக்கெரி-த்தல் | நடைவிளக்கெரி-த்தல் naḍaiviḷakkerittal, 4 செ.குன்றா.வி. (v.t.) குற்றஞ்செய்தோரைத் தண்டிப்பதற்கு அவர் தலையில் விளக்கை வைத்து, ஊரை வலம்வரச் செய்தல்; to punish a condemned culprit by compelling him to go around a town, with a burning lamp on his head. ‘இத் தன்மைத்தொன்று கூறின், நம்மை நடை விளக்கெரிக்கும்’ (சீவக.1162உரை);. [நடை + விளக்கெரி-.] |
நடைவெள்ளம் | நடைவெள்ளம் naḍaiveḷḷam, பெ. (n.) இறைக்கவேண்டாதபடி, தோட்டம் முதலியவற்றிற்குத் தானாகவே பாயும்நீர்; water flowing into a field or garden, from natural Sources, dist friraippu-Vellam. [நடை + வெள்ளம்.] |
நட்சத்திர ஆபீசு | நட்சத்திர ஆபீசு naṭcattiraāpīcu, பெ. (n.) வான்மண்டலத்தைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் தலம் (இக்.வ.);; observatory. த. வ. வானாய்வுக் கூடம் [Skt.{} + E. office → த. நட்சத்திர ஆபிசு] |
நட்சத்திரகன் | நட்சத்திரகன் naṭcattiragaṉ, பெ. (n.) நட்சத்திரையன் பார்க்க;see {}. |
நட்சத்திரக்குறி | நட்சத்திரக்குறி naṭcattirakkuṟi, பெ. (n.) அச்சுப்பதிப்பில் விண்மீன் வடிவமைந்த குறிப்படையாளம்; asterisk. த. வ. விண்மீன்குறி |
நட்சத்திரசக்கரம் | நட்சத்திரசக்கரம் naṭsattirasakkaram, பெ. (n.) 1. விண்மீன் மண்டலம்(யாழ். அக.);; stellar sphere. 2. நிலவு மண்டலத்திற்குரிய உடுக்குழு (நட்சத்திரங்கள்); (வின்);; 3. கலப்பைச் சக்கரம் முதலியன போலக் கணிய (சோதிட); கணனத்துக்குரிய சக்கர வகை; [Skt. {} → த. நட்சத்திரம்+சக்கரம்] |
நட்சத்திரசாலை | நட்சத்திரசாலை naṭcattiracālai, பெ. (n.) வானத்திற்செல்லும் கதிரவன் நாண்மீன்கள் முதலியவற்றைப் பார்த்துக் கணிக்குங்களம்; observatory. த. வ. உடுக்கணிப்புக் களம் [நட்சத்திரம் + சாலை] [Skt. {} → த. நட்சத்திரசாலை] |
நட்சத்திரசீரகம் | நட்சத்திரசீரகம் naṭcattiracīragam, பெ. (n.) பெருஞ்சீரகம் (மூ.அ.);; common anise. |
நட்சத்திரதீபம் | நட்சத்திரதீபம் naṭcattiratīpam, பெ. (n.) ஒரு வகை விளக்கு (வின்.);; a kind of lamp. த. வ. உடுவிளக்கு [Skt. {} + dipa → த. நட்சத்திரதீபம்] |
நட்சத்திரநேமி | நட்சத்திரநேமி naṭcattiranēmi, பெ. (n.) 1. நிலவு; moon. 2. திருமால்;{}. 3. துருவவிண்மீன்; the pole star. [Skt. {} → த. நட்சத்திரநேமி] |
நட்சத்திரபதம் | நட்சத்திரபதம் naṭcaddirabadam, பெ. (n.) விண்மீன் (நட்சத்திர); பதவி; the region of the stars. “சந்திரபதத்துக்கு மேலே நூறாயிரக் காதமாறு உண்டிறே நட்சத்திரபதம்” (திவ். திருநெடுந். 5. வியா.); த. வ. விண்மீன் பதவி [Skt. naksatra → த. நட்சத்திரம்] |
நட்சத்திரபதவி | நட்சத்திரபதவி naṭcaddirabadavi, பெ. (n.) 1. விண்மீன் வானம்; starry sky. 2. அறம் புரிந்தோரில் ஒரு வகையினர் தம் மரணத்தின் பின் அடையும் விண்மீன் மண்டலம்; region of stars, as the abode of those who have done certain deeds of religious merit. 3. அறத்தின் பயனாக மறுமையில் விண்மீனாய் விளங்குபவர்களின் நிலை; state of the soul becoming a star as a result of certain deeds of religious merit. த. வ. உடுமண்டலப்பதவி [Skt. naksatra → த. நட்சத்திரம்] |
நட்சத்திரப்பணி | நட்சத்திரப்பணி naṭcattirappaṇi, பெ. (n.) ஒருவகை மேற் (விதான);கட்டு; a kind of ornamentation in a canopy. |
நட்சத்திரப்பப்பளி | நட்சத்திரப்பப்பளி naṭcattirappappaḷi, பெ. (n.) புடைவை வகை; a kind of saree. [Skt. {} + pappali → த. நட்சத்திரப்பப்பளி] |
நட்சத்திரப்பிரமாணம் | நட்சத்திரப்பிரமாணம் naṭcattirappiramāṇam, பெ. (n.) விண்மீனின் (நட்சத் திரத்தின்); அளவு (வின்);; the dimension of a Star. [Skt. nak satra + {} → த. நட்சத்திரப்பிரமாணம் ] |
நட்சத்திரப்பொருத்தம் | நட்சத்திரப்பொருத்தம் naṭcattirapporuttam, பெ. (n.) பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் மணமக்களின் பிறப்பு ஒரைகளின் (வதூவரர்களின் சென்ம நட்சத் திரங்களின்); இசைவு (சோதிட. சிந். 195);;த. வ. நாள்மீன் பொருத்தம் [Skt. naksata → த. நட்சத்திரம்] |
நட்சத்திரமண்டலம் | நட்சத்திரமண்டலம் naṭcattiramaṇṭalam, பெ. (n.) விண்மீன் வட்டம் (வின்);; the starry heavens. த. வ. உடுமண்டலம் [Skt. {} → த. நட்சத்திரம்] |
நட்சத்திரமாதம் | நட்சத்திரமாதம் naṭcattiramātam, பெ. (n.) அசுவினி முதல் இருபத்தேழு நட்சத்திரங் களைக் கொண்டு கணிக்கப்படும் மாதம் (விதான. குணாகுண. 80 உரை);; sidereal month. [Skt. {} → த. நட்சத்திரம்] |
நட்சத்திரமாலை | நட்சத்திரமாலை naṭcattiramālai, பெ. (n.) 1. விண்மீன் கூட்டம்; constellation, star group. 2. நிலவுக்குரித்தான 27 விண் மீன்கள் (வின்);; lunar zodiac. 3. நட் சத்திர வீதி பார்க்க;see {}. 4. விண்மீன் களைப் பற்றிக் கூறும் ஒரு கணிய நூல் (வின்);; a treatise on the lunar constellations. 5. இருபத்தேழு பாடல் கொண்ட சிற்றிலக்கிய வகை; a poem of twenty seven stanzas. த. வ. உடுமாலை |
நட்சத்திரமீன் | நட்சத்திரமீன் naṭcattiramīṉ, பெ.(n.) ஒரு வகைக் கடல் மீன்; a kind of sea fish – star fist. த. வ. உடுமீன் |
நட்சத்திரம் | நட்சத்திரம் naṭcattiram, பெ. (n.) 1. விண்மீன் கூட்டம் வானமண்டலத்தில் தோன்றும் வானமீன்; star (in astronemy); a special form of constellation called aferism in the moon’s path; star in general. 2. (அசுவினி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூரம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதையம், பூரட்டாதி, உத்திரட்டாதி, இரேவதி என்னும், இருபத்தேழு நாண்மீன்; 3. திங்கள் , நாண்மீனில் தங்கிச்செல்லுங் காலம்; period during which the moon is passing through an asterism. த. வ. நாண்மீன், உடு. [Skt. {} → த. நட்சத்திரம்] |
நட்சத்திரவாணம் | நட்சத்திரவாணம் naṭcattiravāṇam, பெ. (n.) வானவெடிப்பு (ஆகாசவாண); வகை; a kind of rocket. த. வ. உடுவாணம் [Skt. {} → த. நட்சத்திரவாணம்] |
நட்சத்திரவீதி | நட்சத்திரவீதி naṭcattiravīti, பெ. (n.) 1. நிலவு உலாவும் வானவழி; moons’s path in the zodiac. 2. விண்மீன்கள் செறிந்து தோன்றும் பால்வீதி மண்டலம்; the milky way. |
நட்சத்திரையன் | நட்சத்திரையன் naṭcattiraiyaṉ, பெ. (n.) 1. விசுவாமித்திரர்கடனைக் கொடுக்கும்படி அரிச்சந்திரனை வருத்தியவனான பார்ப் பனன்; the Brahmin who harassed {} to pay his dues to {}. 2. கடன்மீட்டுவதிற் கொடியோன் (உ.வ.);;а cruel oppressor, dun. த. வ. கொடுங்கேடன் |
நட்சை | நட்சை naṭcai, பெ. (n.) தணக்கு மரம்; Catamaran tree. |
நட்டகண் | நட்டகண் naṭṭagaṇ, பெ. (n.) கண் இமைக்காதும், கருவிழி அசையாதும் இருக்கம் நிலை; eye that remains still without winking that has no reflex action. |
நட்டக்குத்தாக | நட்டக்குத்தாக naṭṭakkuttāka, வி.எ. (adv.) செங்குத்தாக(நெல்லை);; perpen diculary Steply. மறுவ, நெட்டுக்குத்தாக. |
நட்டசந்திரன் | நட்டசந்திரன் naṭṭasandiraṉ, பெ. (n.) தேய்பிறை; [Skt. {} → த. நட்ட(ன்);] |
நட்டச்சாரி மூலி | நட்டச்சாரி மூலி naṭṭaccārimūli, பெ. (n.) நாய்வேளை; dog-cleome. |
நட்டச்சாருதம் | நட்டச்சாருதம் naṭṭaccārudam, பெ.. (n.) கட்டுக்காடை; indian-roller. |
நட்டணம் | நட்டணம் naṭṭaṇam, பெ. (n.) நட்டனை பார்க்க;See nafsanal. [நடு + அணம்.] ‘அணம்’=சொல்லாக்கஈறு. ஒ.நோ. பட்டணம். |
நட்டணை | நட்டணை naṭṭaṇai, பெ. (n.) 1. கூத்து (திவா.);. dancing 2. கோமாளிக் கூத்து, mimic gestures in a dance buffoonery 3, கணவன், மனைவி இருவருள் ஒற்றுமையின்மை (வின்);; difference of opinion between husband and wife. 4. நடிப்பு: imitative action ‘நட்டணையதாக் கற்றகல்வியும் (தாயு. கருணாகர.4);. 5. கொடுமை (யாழ். அக.);; cruelty. க. நடணா. [நடி → நடம் → நட்டம் → நட்டணை.] ஒ.நோ. தண்டம் → தண்டனை. நட்டணை2 naṭṭaṇai, பெ. (n.) 1. சிந்தனையின்மை; recklessness, rashness. 2. பொறுக்குந் தன்மையின்மை; fastidiousness. squeamishness. [நட்டு + அனை.] அறியாமையை நட்டுவைத்துப் பிறரை அணைபோல் தடுத்து எண்ணுதல். |
நட்டணைக்காரன் | நட்டணைக்காரன் naṭṭaṇaikkāraṉ, பெ. (n.) ஆணவமிக்கவன்; insolent, Overbearing man. [நட்டு + அணை + காரன்.] தன்னை முன் நட்டு (முன்னிறுத்தி);. பிறரை அணைபோல் தடுத்துநிறுத்தி முனைப்போடு இயங்குபவன். பிறர் வளர்ச்சிக்கு தடையாயிருப்பவன். |
நட்டணைக்கால் | நட்டணைக்கால் naṭṭaṇaikkāl, பெ. (n.) ஒற்றைக்காலை நிலத்தில் ஊன்றி. மற்றைக்காலைக் குறுக்காக, அக்காலின்மேல் ஊன்றுகை; keeping one leg crossed on the other-cross legged. மறுவ. அட்டனைக்கால். [நட்டணை + கால்.] |
நட்டநடு | நட்டநடு naḍḍanaḍu, பெ. (n.) சரியான நடுவம்; the very centre, middle. “நட்ட நடுவேயிருந்த நாமென்பர்” (தாயு. பரிபூரண 6);. தெ. நட்டநடுவு. மறுவ. நடுவான நடு. [நட்டு → நட்ட +நடு.] இது மீமிசைச்சொல். |
நட்டநடுநாள் | நட்டநடுநாள் naḍḍanaḍunāḷ, பெ. (n.) உரியகாலம்; the due appointed time. “அவளுக்குத் தூரத்துக்கு நட்ட நடுநாள்” (இ. வ);. மறுவ. ஏற்றபொழுது. [நட்ட + நடு + நாள்.] |
நட்டநடுப்பெற | நட்டநடுப்பெற naḍḍanaḍuppeṟa, வி. எ. (adv.) 1. சரியான நடுவில்; in the exact middle. 2. ஒழுங்கற்ற மதிப்பின்றி: Improperty 3. பொதுமக்களின் எண்ணத்தைக் கருதாது; in open disregard of public opinion [நட்ட + நடு + பெற.] இதனை இலக்கண வழக்கில் ஒருபொருட்பன்மொழி என்பர். |
நட்டந்தி | நட்டந்தி naṭṭanti, பெ.(n.) சிவகங்கை வட்டத் திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Sivagangai Taluk. [நடு+அந்தி] நட்டந்தி naṭṭandi, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Sivagangai Taluk. [நடு-அந்தி] |
நட்டபாடை | நட்டபாடை naṭṭapāṭai, பெ.(n.) பகற்பொழுதில் இசைக்கப்படும் பண் வகை; a kind of melody tune sung in the day time. [நண்-நட்டு+(பாடு);பாடை] நட்டபாடை naṭṭapāṭai, பெ.(n.) பகற்பொழுதில் இசைக்கப்படும் பண் வகை; a kind of melody tune sung in the daytime. [நண்-நட்டு+(பாடு);பாடை] நட்டபாடை naṭṭapāṭai, பெ. (n.) குறிஞ்சிப் பண்வகை (பிங்.);; a melody-type of the kuriñji class. [நடம் → நட்டம் + ski பாஷை → பாடை] |
நட்டபீசம் | நட்டபீசம் naṭṭapīcam, பெ.. (n.) ஒளிநீர் (விந்து); ஊறாத நிலை; destitute of seminal Secretion-Impotent. |
நட்டப்படுத்து-தல் | நட்டப்படுத்து-தல் naḍḍappaḍuddudal, 5. செ.கு.வி. (v.i.) அழிவு உண்டாக்குதல் (வின்);; to cause damage, involve in loss. [Skt. {} → த. நட்டம்] |
நட்டமாடி | நட்டமாடி naṭṭamāṭi, பெ. (n.) நடவரசன் பார்க்க;See nagavarasan. மறுவ. ஆடவல்லான். [நட்டம் +ஆடி.] |
நட்டமாய்நில்-தல் | நட்டமாய்நில்-தல் naṭṭamāyniltal, 14. செ.கு.வி. (v.i.) 1. செங்குத்தாக நிற்றல்; stand perpendicularly. 2. அடங்கா திருத்தல் (இ.வ.);; to be haughty, headstrong. [நட்டம் + ஆய் + நிற்றல்.] |
நட்டமின் | நட்டமின் naṭṭamiṉ, பெ. (n.) கள்ளி; indian Spurge. |
நட்டமிறு-த்தல் | நட்டமிறு-த்தல் naṭṭamiṟuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. சேதத்திற்கு ஈடு கொடுத்தல்; to make good a loss, indemnify. த. வ. ஈடுதரல் [Skt. {} → த. நட்டம்] |
நட்டமுட்டிசிந்தனை | நட்டமுட்டிசிந்தனை naṭṭamuṭṭisindaṉai, பெ. (n.) ஒளித்து வைத்த பொருளையும் நினைத்த பொருளையும் பற்றிக் கணியர் கணித்துக் கூறுகை: divination by a soothsayer about things lost, hidden or thought of “பாரினில் நட்ட முட்டிசிந்தனை பகரவேண்டில் (சூடா. உள். 302);. |
நட்டம் | நட்டம் naṭṭam, பெ.(n.) பாடல் இன்றித் தாளத்திற்கு மட்டும் ஆடும் ஆட்டம் dance without song. [நள்-நளி-நடி-நட்டம்] நட்டம் naṭṭam, பெ.(n.) பாடல் இன்றித் தாளத்திற்கு மட்டும் ஆடும் ஆட்டம் dance without song. [நள்-நளி-நடி-நட்டம்] நட்டம்1 naṭṭam, பெ. (n.) 1. நேர்நிலை; erectness, uprightness, perpendicularity. “தூணை நட்டமாய் நிறுத்து” (வின்.);. 2. (கோவண); நீர்ச்சீலை மட்டும்கட்டிக் கொண்டு, ஆடையின்றி இருக்கை; seminakedness. 3. அம்மணம்; nakedness. 4. வெந்நீர்; hot-water. [நடு → நட்டு + அம்.] நட்டம்2 naṭṭam, பெ. (n.) நடனம்; dance Dancing. “நள்ளிருளில் நட்டம்பயின் றாடுநாதனே” திருவாச. 1:89). த. நட்டம் → வ. ந்ருத். PKI நட்ட ஒ.நோ. படம் → பட்டம் = துணி, அகத்தெழும் உணர்வுகளை மெய்ப் பாடுகள் மூலம்வெளிப்படுத்துவதே. நட்டம். [நடி → நடம் → நட்டம்.] நட்டம் naṭṭam, பெ. (n.) 1. இழப்பு; loss, damage 2. அழிவு (வின்);; ruin, destruction. [Skt. {} → த. நட்டம்] |
நட்டராகம் | நட்டராகம் naṭṭarākam, பெ. (n.) குறிஞ்சிப்பண்; melody-type of the kuriñs Class. [நட்டம் +skt ராகம்.] |
நட்டரிசியன்னம் | நட்டரிசியன்னம் naṭṭarisiyaṉṉam, பெ. (n.) பாதிவெந்த சோறு; haff-cooked rice மறுவ, நலுக்கரிசிக் சோறு. |
நட்டழிவு | நட்டழிவு naṭṭaḻivu, பெ. (n.) நாற்று நட்டபிறகு, பயிரிலுண்டாகும் சிதைவு; damage to the crop after transplantation. [நடு → நட்டு + அழிவு.] நட்டபின் அழிவுற்ற நாற்றுப் பயிரைக் குறித்ததால் தொகுத்தல் திரிபாகும். |
நட்டவக்காணி. | நட்டவக்காணி. naṭṭavakkāṇi, பெ. (n.) நாட்டியம் பயிற்றுவிக்கும் நட்டுவனார்க்கு அரசு அளிக்கும் இறையிலி நிலம்: (S.lI v.232);; grand of tax free land sanctioned by king to dance faculty. [நட்டுவம் → நட்டவம் + காணி.] |
நட்டவம் | நட்டவம் naṭṭavam, பெ. (n.) நட்டுவம் பார்க்க;See nalluvam. “நட்டவஞ் செய்ய நட்டவம் ஒன்றுக்கு……… பங்கு” (S.I.I. ii.274);. மறுவ. நடனம். [நட்டு + அம்=நட்டுவம் → நட்டவம்.] “அம் → பெருமைப்பொருட்பின்னொட்டு. |
நட்டவர் | நட்டவர் naṭṭavar, பெ. (n.) நண்பர்; friendship. “நட்டவரி கலின்றித் தம்மின் மல்லு வெஞ்சமரிழைப்பவும் (திருவிளை.எல்லாம்11);. [நள் → நள்+து → நட்டு → நட்டவர்.] |
நட்டவாளி | நட்டவாளி naṭṭavāḷi, பெ. (n.) 1. நட்டப் பட்டவன்; one who sustains loss, loser. த. வ. இழப்பாளி |
நட்டாத்திசூத்திரம் | நட்டாத்திசூத்திரம் naṭṭātticūttiram, பெ. (n.) கொள்ளைப் பொருள்: (யாழ்., அக.); booty [நட்டு + ஆற்றி + சூத்திரம்.] நிலையாக நட்டுவைத்திருக்கும் பொருளைப் போகிற போக்கில், கொள்ளையடித்துக் கட்டிச் செல்லுதல். |
நட்டாமட்டி | நட்டாமட்டி naṭṭāmaṭṭi, பெ. (n.) நட்டா முட்டி (யாழ்.அக.); பார்க்க;See nati-mutti. [நட்டாமுட்டி → நட்டாமட்டி.] |
நட்டாமுட்டி | நட்டாமுட்டி1 naṭṭāmuṭṭi, பெ. (n.) 1. நடுத்தரமானது (யாழ். அக.);: anything ordinary middling 2. கீழ்மை (வின்.);: vulgarity ம. நட்டாமுட்டி. [நட்டு + ஆம் + முட்டி.] நட்ட நடுவில் முட்டிநிற்கும் தன்மையைக் குறித்த சொல்லாக இருக்கலாம். நட்டாமுட்டி naṭṭāmuṭṭi, பெ. (n.) 1. ஏய்ப்பு; இரண்டகம்; fraud. பொருள்களை நட்டா முட்டியாய்க் கொண்டுபோய் விட்டான். (உ. வ);. 2. ஒரு நூல் (யாழ். அக.);; a treatise [நட்டாம் +முட்டி.] |
நட்டாமுட்டிகள் | நட்டாமுட்டிகள் naṭṭāmuṭṭigaḷ, பெ. (n.) அறியாப் பொதுமக்கள்: common vulgar people. [நட்டாம் +முட்டி+ கள்.] ‘கள்’ = பலர் பாலீறு. நடுவுநிலையின்றி ஒருகொள்கையில் குருட்டுப் பற்றோடு முட்டி மோதிக் கொள்ளும். பொதுநிலை மாந்தர். |
நட்டாமுட்டிமருந்து | நட்டாமுட்டிமருந்து naṭṭāmuṭṭimarundu, பெ. (n.) மருத்துவர் துணையின்றி பட்டறிவின் விளைவாகச் செய்யப்படும், கைமருந்து (இ.வ.);; medicine prepared not by physicians but by experienced old people. [நட்டாமுட்டி + மருந்து.] நடுதல் இன்றி, முட்டிப்படுமாறு இயங்கும் நிலைத்தன்மை இன்மையைக் குறிக்க முன்னொட்டாக வருமிச்சொல், ஈண்டு மருந்துக்கு ஆகி வந்தமை அறிக. |
நட்டாமுட்டியாக | நட்டாமுட்டியாக naṭṭāmuṭṭiyāka, வி. எ. (adv.) அந்த நேரத்திற்குரிய; for the time ceng, இஃது இப்பொழது நட்டாமுட்டியாக இருக்கட்டும். (இ. வ.);. [நட்டாமுட்டி + ஆக.] |
நட்டாமுட்டிவேலை | நட்டாமுட்டிவேலை naṭṭāmuṭṭivēlai, பெ. (n.) சில்லரை வேலை (நாஞ்);; minor-work. [நட்டாமுட்டி + வேலை.] |
நட்டார் | நட்டார் naṭṭār, பெ. (n.) 1. உற்றார் ; relations. 2. நண்பர்; friends “நட்டாருடையான்” (இனி. நாற். 39);. [நள் → நடு → நட்டார்.] |
நட்டாற்றில்விடு-தல் | நட்டாற்றில்விடு-தல் naḍḍāṟṟilviḍudal, 18.செ. குன்றாவி. (v.t.) 1. இடர்வரும்போது கைவிட்டுப் போதல்; to desert a person at a critical moment. 2. ஆற்றின் நடுவில் விட்டு விடுதல்; to leave in the middle of a river. [நடு → ஆற்றில் + விடு-] |
நட்டு | நட்டு1 naṭṭu, பெ. (n.) உப்புக் கொட்டி வைக்கும் மேடை ;தெ. நட்டு. [நள் → நட்டு = செங்குத்து.] நட்டு2 naṭṭu, பெ. (n.) 1. நாட்டியம் (யாழ். அக.);; dance. 2. நாட்டியக்காரன் (வின்.);; dancer. 3. நட்டுவன் பார்க்க;See nattuvan. 4. கீழ்மை (யாழ்ப்.);; owness baseness inferiority. [நள் → நடு → நாட்டு → நட்டு.] நட்டு3 naṭṭu, பெ. (n.) சரியான நடுவம்; exact middle. மறுவ நட்டநடு. [நடு → நட்டு.] |
நட்டுக்கதை | நட்டுக்கதை naṭṭukkadai, பெ. (n.) 1. கட்டுக்கதை (யாழ். அக.);; table. 2. நிந்தை மொழி (வின்.);; scoffing, sarcasm Scornful, remark. [நாட்டு → நட்டு + கதை.] |
நட்டுக்கால் | நட்டுக்கால் naṭṭukkāl, பெ.(n.) நடுவில் உள்ள கால்வாய்; channel in the middle part. [நடு+கால்-நட்டுக்கால்] நட்டுக்கால் naṭṭukkāl, பெ.(n.) நடுவில் உள்ள கால்வாய்; channel in the middle part. [நடு+கால்-நட்டுக்கால்] |
நட்டுக்குநடுவே | நட்டுக்குநடுவே naḍḍukkunaḍuvē, வி.எ. (adv.), மிக நடுவில்(யாழ். அக.);; exactly in the middle. [நடு → நட்டு.] |
நட்டுக்கொள்ளல் | நட்டுக்கொள்ளல் naṭṭukkoḷḷal, பெ. (n.) கயிற்றில் கழுத்தை கட்டித் தொங்கித் தற்கொலை செய்து கொள்ளுதல்; to commit Suicide by hanging. மறுவ. நான்று கொள்ளல். [நட்டு + கொள்ளல்.] நாணிட்டுக்கொள்ளுதல், ஞான்று கொள்ளுதல் என்று, மக்களிடையே தற்கொலை குறித்து வழக்கூன்றிய சொல். |
நட்டுச்சி | நட்டுச்சி naṭṭucci, பெ. (n.) உச்சிப்பொழுது (இ. வ.);; the time of the day when the sun is exactly at the zenith. மறுவ. நண்பகல். [நடு + உச்சி.] |
நட்டுச்சினை | நட்டுச்சினை naṭṭucciṉai, பெ. (n.) நண்டு முட்டை (யாழ். அக.);; Crab’s egg. [நண்டு → நட்டு.] |
நட்டுச்சினைக்கல் | நட்டுச்சினைக்கல் naṭṭucciṉaikkal, பெ. (n.) நீரூற்றின் மிகுதியைக் குறிப்பதும், நண்டு முட்டையின் நிறமுடையதுமான கிணற்றுக் கல்வகை (யாழ். அக.);; a kind of stone, at the bottom of Wells, of the colour of crab’s spawn, supposed to indicate a good Supply of water. [நண்டுச்சினை+கல் → நட்டுச்சினைக்கல்] நண்டு → நட்டு = வலித்தல் திரிபு. |
நட்டுத்துரவு | நட்டுத்துரவு naṭṭutturavu, பெ. (n.) நடனம் பயிலமிடம்; the practicing place of dance. மறுவ நட்டத்துரவு. [நட்டு +துரவு.] துரவு=பரந்த இடம். ஒ.நோ. தோட்டத் துரவு. நாட்டியம் பயிலும் பொருட்டு, அப்பயிற்சி நிகழுவதற்காக அமைக்கப்பட்ட தனியிடம். |
நட்டுநடு | நட்டுநடு naḍḍunaḍu, பெ. (n.) நட்டுக்கு நடுவே (இ.வ); பார்க்க;See mallukku naguvē. [நட்டநடு → நட்டுநடு.] |
நட்டுந்நினைமண் | நட்டுந்நினைமண் naṭṭunniṉaimaṇ, பெ. (n.) நண்டுமுட்டை நிறமுள்ள மண் (வின்.);; a kind of earth of the colour of Crab’s Spawn. [நண்டு + சினை + மண்.] |
நட்டுப்பாழ் | நட்டுப்பாழ் naṭṭuppāḻ, பெ. (n.) நாற்று நட்டு விளையாமற் போன பயிர் (Sll vii, 279);; crop which become withered after transplantation [நடு → நட்டு + யாழ்.] நாற்று நட்டபின்பு, நீர் இன்றியோ, மழைபொய்த்தோ, அல்லது பருவந்தவறிப் பெய்தோ, நோய்வாய்ப்பட்டோ, பாழான, நடவுப்பயிர். |
நட்டுமுட்டு | நட்டுமுட்டு naṭṭumuṭṭu, பெ. (n.) 1. ஆடல் பாடல் (வின்.);; music and dancing. 2. மத்தளக்காரனும், தாளக்காரனும் (இ. வ);; hand-drummer and cymbalist 3. நடனத்துக்குரிய தளவாடப் பொருள்கள் (யாழ். அக.);; accessories necessary to the art of dancing. [நடு + முட்டு.] நட்டு = நாட்டியம் பற்றிய சொல். முட்ட= தாளம், தாளக்கருவி பற்றியது. |
நட்டுமுட்டுக்காரர் | நட்டுமுட்டுக்காரர் naṭṭumuṭṭukkārar, பெ. (n.) நட்டுவ மேளக்காரர்; dancing masters and drummers. [நட்டு + முட்டு + காரர்.] முட்டு=இங்கு மேளம் என்ற பொருளில் வந்தது காண்க. கையால் முட்டி ஒலி எழுப்புதல் பற்றியது. “காரர்” உடைமைப் பெயரீறு. |
நட்டுவக்கலைக்கூடம் | நட்டுவக்கலைக்கூடம் naṭṭuvakkalaikāṭam, பெ. (n.) நடனம்பயிலும் மாணவர்க்குரிய பயிற்சிக்கூடம்; practising hall of learners of dance. [நட்டுவம் + கலைக்கூடம்.] |
நட்டுவக்காலி | நட்டுவக்காலி naṭṭuvakkāli, பெ. (n.) நட்டுவாய்க்காலி பார்க்க;See natu-way-kkāli [நட்டுவம் + கால் + .இ.] “இ”=சொல்லாக்க ஈறு. ஒ.நோ. நாற்காலி. நாட்டியம் ஆடுவது போலக் கால்களை நட்டு நடக்கும், இயல்புடைய உயிரி. |
நட்டுவதாளம் | நட்டுவதாளம் naṭṭuvatāḷam, பெ.(n.) நட்டுவனார் கையால் ஒலிக்கச் செய்கின்ற தாள வகை; cymbal. [நட்டுவம்+தாளம்] நட்டுவதாளம் naṭṭuvatāḷam, பெ.(n.) நட்டுவனார் கையால் ஒலிக்கச் செய்கின்ற தாள வகை; cymbal. [நட்டுவம்+தாளம்] |
நட்டுவத்துரவு | நட்டுவத்துரவு1 naṭṭuvatturavu, பெ. (n.) நட்டுவக் கலைக்கூடம் பார்க்க;See nalluvak-kasai-k-kudam. [நட்டுவம் +துரவு.] துரவு =பயிலுமிடம். ஒ.நோ. தோட்டந்துரவு. நட்டுவத்துரவு2 naṭṭuvatturavu, பெ. (n.) நட்டுவத்தொழில் (MER 390 of 1916);, the profession of training girls in dancing. [நட்டுவன்+துரவு] துரவு என்று, நாட்டியம் பயிலிடத்தைக் குறித்த இச்சொல், நாட்டியத் தொழிலுக்கும் ஆகிவந்தது. |
நட்டுவன் | நட்டுவன் naṭṭuvaṉ, பெ. (n.) நாட்டிய ஆசிரியன்; one who instructs dancing. “உயிரையெல்லா, மாட்டுமொரு நட்டுவனெம் மண்ணல்” திருவாத, பு. புத்தரை 75). க., நட்டுவ, தெ. நட்டுவுடு, ம.நட்டுவன். [நாள் → நடு → நாட்டு → நட்டு + அன்.] |
நட்டுவம் | நட்டுவம் naṭṭuvam, பெ. (n.) நாட்டியம் கற்பிக்கும் தொழில்; the profession of training dancing girls and directing their dancing. மறுவ. நட்டவம், நடனம். த. நட்டுவம் → skt. nata-tva தெ. நட்டுவ. [நடு → நட்டு + அம்.] ‘அம்’ = சொல்லாக்க ஈறு. நாட்டியம் பயிலும் மாணவர்கட்கு. அக் கலையினைப் பயிற்றுவிக்கும் கலைத்தொழில். |
நட்டுவழியாள் | நட்டுவழியாள் naṭṭuvaḻiyāḷ, பெ. (n.) நன்னாரி; Indian-sarasaparilla. |
நட்டுவாக்காலி | நட்டுவாக்காலி naṭṭuvākkāli, பெ. (n.) நாட்டுவாய்க்காலி பார்க்க;See natuway-kkālai |
நட்டுவாக்கிளி | நட்டுவாக்கிளி naṭṭuvākkiḷi, பெ. (n.) நட்டுவாய்க்காலி பார்க்க;See natuwa-k-kal |
நட்டுவாங்கம் | நட்டுவாங்கம் naṭṭuvāṅgam, பெ. (n.) நட்டுவம் பார்க்க;See nattuvam |
நட்டுவாய்க்காலி | நட்டுவாய்க்காலி naṭṭuvāykkāli, பெ. (n.) கவ்விக் கொட்டுந் தன்மையுள்ள நச்சுயிரி; Scorpion of a larger kind. ம. நட்யகாலி. நண்டு போன்ற வாயையும், காலையும் கொண்டது. |
நட்டுவாய்க்குடி | நட்டுவாய்க்குடி naṭṭuvāykkuṭi, பெ.(n.) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tanjavoor district. [நடு-நட்டு+வாய்+குடி] நட்டுவாய்க்குடி naḍḍuvāykkuḍi, பெ.(n.) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tanjavoor district. [நடு-நட்டு+வாய்+குடி] |
நட்டுவாற்காலி | நட்டுவாற்காலி naṭṭuvāṟkāli, பெ. (n.) நட்டுவாய்க்காலி பார்க்க;See nalluvay-k-kal |
நட்டுவிழல் | நட்டுவிழல் naṭṭuviḻl, பெ. (n.) 1. மெய்க்குற்றமைந்தனுள் தலைச் சாய்கை (பிங்);, slanting position of the head, one of five mey-k-kurram. 2. தலை கீழேயூன்றி விழுகை (யாழ். அக.);; standing on the head and tumbling, performing somersault. [நட்டு +விழல்.] பெருமிதமும், செம்மாப்பும் ஒருசேர இணைந்து நேர்மையின் சின்னமாய் நட்டுத் திகழ்ந்த தலை, மானக்கேட்டின் மிகுதியால், சாய்ந்து விழுகை, |
நட்டுவிழு-தல் | நட்டுவிழு-தல் naṭṭuviḻudal, 2.செ. கு. வி. (v.i.) செருக்குறுதல்; to be haughty. ersör வீணாக நட்டு விழுகிறாய் (உ. வ);. [நட்டு + விழு-] |
நட்டுவை-த்தல் | நட்டுவை-த்தல் naṭṭuvaittal, 4.செ.கு. குன்றாவி, (v.t.) 1. மரக்கன்று முதலியவற்றை நடுதல்; to plant, as saplings. 2. குடும்பம் முதலியவற்றை நிலைநிறுத்துதல்(வின்.);; to establish, as a family. [நட்டு +வை-.] |
நட்டுவைதெலும்பு | நட்டுவைதெலும்பு naṭṭuvaidelumbu, பெ. (n.) தொடைப்பக்கத்து எலும்பு; thigh bone, femur. [நட்டு + வைத்த எலும்பு.] |
நட்டை | நட்டை naṭṭai, பெ. (n.) 1. புலக்குறும்பு, குறும்பு; mischief. 2. கண்டனம்; criticism, censure. [Skt. {} → த. நட்டை] |
நட்டோடு | நட்டோடு naṭṭōṭu, பெ. (n.) 1. மரக்கன்று முதலியவற்றை நட்டு 506,1555uff; one who planted as Saphings 2. &m’Lifessor: protector, guardian [நட்டு + வைத்தவன்.] நட்டோடு naṭṭōṭu, பெ. (n.) நண்டின் மேலோடு (வின்.);, lobster shell. [நண்டு+ஒடு] |
நட்டோட்டுக்கிட்டம் | நட்டோட்டுக்கிட்டம் naṭṭōṭṭukkiṭṭam, பெ. (n.) சேற்றின்மேல் உலர்ந்திருக்கும் InstitGlump; #65 (olsâr);; crust or coat of dry mud formed over a brackish of moist soil. [நட்டோடு + கிட்டம்.] |
நட்டோட்டுப்பார் | நட்டோட்டுப்பார் naṭṭōṭṭuppār, பெ. (n.) எளிதில் பெயர்ந்துவரும் பாறைத் தகடு, thin coat or lamina of rock that easily splits off. [நட்டோடு + பார்] |
நட்டோர் | நட்டோர் naṭṭōr, பெ. (n.) 1. நண்பர்; friends “நட்டோர்க்கல்லது கண்ணஞ்சலையே” பதிற்றுப். 633). “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சு முண்பர் நனிநாகரிகர்” (நற்றிணை);. 2. உறவினர்;(திவா.); relation, [நள்- → நட்டு + ஒர்.] |
நட்பத்திரிகை | நட்பத்திரிகை naṭpattirigai, பெ. (n.) சேம்பு; Indian-kales. |
நட்பாடல் | நட்பாடல் naṭpāṭal, பெ. (n.) நட்பு பாராட்டுதல்; befriending: “நட்பாட றேற்றாதவர்” (குறள், 187);. [நட்பு + ஆளல் → ஆடல்.] |
நட்பாட்டம் | நட்பாட்டம் naṭpāṭṭam, பெ. (n.) அன்பு வளர்க்கும் பான்மையிலாடும் ஆட்டம்; friendly match. [நண்பு → நட்பு + ஆட்டம்.] |
நட்பாராய்தல் | நட்பாராய்தல் naṭpārāytal, பெ. (n.) நட்புக்குரியரைத் தெரிவுசெய்யும் திறம்: scrutiny in the choice of friends. (குறள், அதி.80);. [நட்பு + ஆராய்தல்.] நட்பாராய்தல் என்பது யாதெனின், நட்பிற்குத் தகுந்தவரை ஆராய்ந்தறி தலாகும். “மணவுறவு போன்று, நட்புறவும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதாகையாலும், மெய்ந்நட்பால் ஆக்கமும், தீ நட்பால் அழிவும், நேர்வதாலும், மலர்ந்த முகத்தையும், இனிய சொல்லையுமே சான்றாகக் கொண்டு, எவரையும் நம்பிவிடாமல், எல்லா வகையாலும் ஆராய்ந்து பார்த்து, உண்மையான அன்பரையே, நண்பராகக் கொள்ள வேண்டுமென்று கூறியவாறாம்” என்று, மொழிஞாயிறு, நட்பாராய்தல் பற்றி நவிலுகிறார். (திருக்.தமி.மர.பக்.92);. |
நட்பாளர் | நட்பாளர் naṭpāḷar, பெ. (n.) 1. உற்ற நண்பினர்; trustful friends. 2. அரசர்க்குறுதிச் சுற்றமைந்தனுள் நம்பிக்கைக்குரிய நட்பினராய் உள்ளவர் (திவா.);; confidant of a king, one of five arašarkkuruti-c-curram, [நண்பு → நட்பு +ஆள்+அர்.] |
நட்பிலூட்டல் | நட்பிலூட்டல் naṭpilūṭṭal, தொ.பெ. (vblin), நோய்தீர்க்கும் மருந்தை உடலுக்கு ஏற்றவாறு தக்க பக்குவத்தில் தருதல்; taking a medicine with its appropriate way. [நட்பில் + ஊட்டல்.] |
நட்பு | நட்பு naṭpu, பெ. (n.) ஏழிசைத் தொகுதியில் நான்காம் இசை; fourth sound of the seven sounds of the diatonic Scale. [நள்→நட்பு] நட்பு naṭpu, பெ.(n.) ஏழிசைத் தொகுதியில் நான்காம் இசை; fourth sound of the seven sounds of the diatonic scale. [நள்→நட்பு] நட்பு1 naṭpu, பெ. (n.) 1. தோழமை; friends family. “நட்பிடைக் குய்யம் வைத்தான்” (சீவக. 253);. 2. உயர்ந்த அரசருக்குரிய இன்றியமையாத ஆறு கூறுகளுள் ஒன்று: allies, one of six important aspects to king or Government. “படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும்” (குறள், 381);. 3. நண்பன்; friend. ‘எனக்கவன் நட்பு’ (உ.வ.);. 4. ஐவகைக் கோள் நிலையுள், நட்பைக்குறிக்குந் தன்மை: friendly aspect of a planet, one of five kölnilai 5. உறவு (பிங்.);: relationship, kinship 6. சுற்றம் (சூடா);; relation, kindred 7. யாழின் நான்கம் நரம்பு; the fourth string of a lute “இணைகிளை பகை நட்பென்றிந் நான்கின்” (சிலப். 8. 33);. 8. கைக்கூலி (பரிதானம்); (வின்.);; bribe 9. மாற்றரசரோடு நட்புச்செய்கை (பு. வெ. 9.37, உரை);. reconciliation with enemy kings, 10. காதல்; love. “நின்னொடு மேய மடந்தை நட்பே” ஐங்குறு. 297). மறுவ. கேண்மை. க. நண்பு. [நள் → நண் → நண்பு → நட்பு.] நட்பின் இலக்கணத்தை வள்ளுவப் பெருந்தகையார் நான்கு அதிகாரங்களில் விளக்கிப் போந்துள்ளார். ஏனெனில் அறிவுநிலையும், பண்பாட்டு அமைவுநிலையும். பெரும்பகுதி, சேர்க்கையாலேயே செம்மைப்பட்டு அமைகின்றது. சேர்ந்த இடமே ஒருவனைச் சீரியவனாக்கும் என்பது மாறா உண்மையாகும். நட்பு என்பது முகத்தான் நகுவது மட்டுமன்று;அகஉணர்ச்சி ஒன்றுசேர அமைவதேயாகும். வெறும் விளையாட்டும், நகைகூடப் பேசுவதும், நட்பின் சின்னங்கள் ஆகா. நண்பன் துன்பத்தில் இருக்கும்போதும், உதவிகள் தேவையற்றவனாக இருக்கும்போதும், உடுக்கை இழந்தவன் கைபோலச் சென்று, துன்பத்தைக் களைந்து உதவுபவனே, சிறந்த நண்பன் ஆவான். நட்பின் உயர்நிலை யாதென்றால், என்றும் மாறாது சென்று, நண்பனுக்கு உதவுதலே யாகும். ‘A friend in need is a friend indeed’, என்ற ஆங்கில முதுமொழியும், இதை வலியுறுத்தல் காண்க. நண்பன் தீயவழிகளில் செல்லுங்கால் அவ்வழி நீக்கி, நல்லாற்றில் போக்கி, அவனின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு செல்லுதல் வேண்டும். நட்புக் கைக்கோடல் முகநக நகுதற்கன்று. மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற்கேயாம். இக் கருத்துக்களை விளக்கும் குறட்பாக்கள்: “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் தகநக நட்பது நட்பு”. – (குறள், 786); “உடுக்கையிழந்தவன் கைபோல வாங்கே யிடுக்கண் களைவதாம் நட்பு.”-(குறள், 788);. “நட்பிற்கு விற்றிருக்கையாதெனிற் கொட்பின்றி’ யொல்லும்வா யூன்று நிலை”. -(குறள், 789);. “அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க ணல்ல லுழப்பதாம் நட்பு:-குறள் 787). “நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென் றிடித்தற் பொருட்டு -குறள், 784). “புணர்ச்சி பழகுதல் வேண்டாவுணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்.” –(குறள் 785);. எனவே நட்பின் உண்மை இலக்கணம் புணர்ந்து பழகுதல் அன்று;உணர்வு ஒன்றிய நிலையே என்பது போதரும். மேற்கூறிய அனைத்தையும் நோக்குங்கால், ‘உள்ளச்செறிவே’ நட்பின் இலக்கணம் என்பது வெள்ளிடைமலை என இலங்கும். நட்பின் இலக்கணத்தை வரையப்புகுந்த உலகப்புகழ் நாடகமேதை, ஆங்கிலப் பெரும்புலவர் செகப்பியரும் (Shakespeare);, தாம் எழுதிய ‘Frendship என்ற பாடலில், மேற்கூறிய கருத்தை உள்ளடக்கியே வரைந்துள்ளார். அவரும் உள்ளச்செறிவே நட்பின் இலக்கணம் என்பதை உய்த்துணர வைத்துள்ளார். அவர், Everyone that flatters thee ls no friend in missary ……………………………………. He that is thy friend indeed, He will help thee in thy need. If thou Sorow he will weep If thou wake he cannot sleep Thus of every grief in heart He with thee doth bear a part. எனக் கூறுகின்றார். இவ்விரு பெரும்புலவர்களின் கூற்றுகளால், நட்பின் இலக்கணம் உள்ளச் செறிவே என்பது பெறப்படும். ‘The union of two hearts is friendship என்று ஆங்கில வாணர்கள் மொழிதலையும் நோக்குக. எனவே நட்பின் உண்மை இலக்கணமாகிய உள்ளச் செறிவு என்பதை நட்பு என்ற சொல்லின் அடிச்சொல் எவ்வாறு உணர்த்துகின்றது என்பதை நோக்குவோம். நள்→நண்→நண்பு→நட்பு. இவ்வாறே நட்டல், நட்டார், நண்ணல், நணுகல், நணுகுதல், நண்ணுநர், நண்பன், தண்ணலர், நண்ணார், நணுகலர், நணுகார் என்ற இத்தனை சொற்களுக்கும். ‘நள்’ என்பதே அடிச்சொல்லாகும். இவை யாவும் ‘செறிவு’ என்ற பொருளை உணர்த்தி நிற்கும் வேர்ச்சொல்லாம். ‘நள்’ என்பதின் திரிபுற்றப் போருளை உணர்த்துவனவாகும். ‘நள்’ என்பதற்குச் ‘செறிவு’ என்பது பொருளாகும். அதுவே ‘நளி’ என உரிச்சொல்லாய், இகரம் பெற்று நின்றது. நளி என்ற உரிச்சொல்லும், ‘செறிவு’ என்ற பொருளை உணர்த்தும். “நளிஎன் கிளவி செறிவுமாகும்.”-(தொல். சொல். 323);. இலக்கியங்களிலும், பல இடங்களில் செறிவு என்ற பொருளிலேயே, ‘நள்’ என்பதும், ‘நளி’ என்பதும், பயன்படுத்தப்பட்டுள்ளன. “நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கள்………………” –(குறுந்-9);. “…உலகம் கயங்கள் அற்ற பைதறுகாலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழைபொழிந் தாங்கே” – நற்.22) “கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் வெள்ளியம் பலத்து நள்ளிருட் கிடந்தன.”-(சிலம்பு-பதிகம், 30-35);. ”நரன்றுயிர்த்த நித்தில நள்ளிருள்கால் சீக்கும் வர்ன் றுயிர்த்த பாக்கத்து வந்து”. – (திணைமா. நூ. 39);. “நளியிரு முந்நீர் நாவாயோட்டி வளிதொழி லாண்ட உரவோன் மருக” -(புறநா. 99);, “நளியிருஞ் சோலை நரந்தத் தாஅய்”. = (பரிபாட 7-11);. “நளியிரு முந்நீர்நலம்பல தருஉம்.” “சிலைப்புவல் ளேற்றின் றலைக்கை தந்துநீ நளிந்தனை வருத லுற்றனளாகி” – (பதிற்று.52);. பிறமொழிச்சொற்கள். இவ்வாறே பிறமொழிச் சொற்களைப் பிரித்து நோக்குவோம். English – Friendship Anglo-Saxon – (fri-freo); – freon – to love (freond – friendship); Gothic – (frieis); – frijou – to love (frijouds); Dutch – vry – vrien – to love (vriend Icelandic – (fri); – frSen -to love freendi); German – (frei – befreunden – to love (freund – friundschaft); Latin – Lamor-love – almere to love (Amstle – friendship); Sanskrit – (pril – priam – priam ஈங்குக் காட்டப்பட்ட மொழிகளின் நட்பு என்ற பொருளை உணர்த்தும் சொற்களைக் காணுங்கால் அவை. ‘Free’ என்ற பொருளைத் தரும் அடிச்சொல்லிலிருந்து தோன்றி வளர்ந்து ‘அன்பு செய்’ ‘to love’ என்ற பொருளில், செம்மையுற்றன என்பதும், விளக்கமுறும். எனவே இவை நட்பின் இலக்கணத்தை வரைந்துணர்ந்தும் அடிச்சொல்லிலிருந்து தோற்றமெடுத்தனவல்ல. மேற்கூறியவைகளால் பிறமொழிச் சொற்களை நோக்கத் தமிழ்ச் சொல்லான நட்பு என்பது. உண்மை நட்பின் இலக்கணத்தை வரைந்துணர்த்தும். ‘நள் என்பதை வேர்ச்சொல்லாகக் கொண்டுள்ளது என்பது. உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெளிவுற்று விளங்கும். இத்தகு உயர்நிலையை நோக்குங்கால், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, முன்தோன்றி மூத்த குடியினராகிய தமிழ்மக்கள், நட்பின் ஆழம், இலக்கணம் ஆகிய இவைகளை அறிந்து, ‘நட்பு’ என்று பெயரிட்டனர் என்பது விளக்கமுறுதலின், உள்ளத்தில் மகிழ்வுத்தேன் ஊற்றெடுக்கின்றது: தமிழ்த் தாயின் உயர்தனிச் செம்மைப்பாடு வீறுபெறச் செய்கின்றது. இவ்வாறு சொல்லின், உண்மைப் பொருளைச் செவ்வனே உணர்த்தவல்ல அடிச்சொற்களை உடைய சொற்கள் மிகப்பலவாம். இவற்றை எல்லாம் மற்ற மொழிகளோடு ஒப்பிட்டு ஆய்ந்து வெளிப்படுத்திடின், தமிழின் இனிமை, தனிமை, மேன்மை, செம்மை, தாய்மை ஆகிய இன்னோரன்ன பண்புகள் மிளிரும் என்பதில் ஐயப்பாடு சிறிதேனும் இன்றென்றறிக. நட்பு2 naṭpu, பெ. (n.) புணர்ச்சி; sexual union. “நாமமருடலு நட்புந் தணப்பும்” (பரிபா.20.108);. [நள் → நண்பு → நட்பு.] ஒரு பாலார் கொள்ளும் நட்பு, புறநட்பு என்றும், மறுபாலார் கொள்வது அகநட்பென்றும் உள்ளத்தால் செறிந்தவர், உடலால் பொருந்துவர். |
நட்புக்காட்டு-தல் | நட்புக்காட்டு-தல் naṭpukkāṭṭudal, 5.செ. கு. வி. (v.i.) 1. தோழமை காட்டுதல்; to show friendliness. 2. குழந்தைகட்குத் தின்பண்டம் 2 உதவுதல்: to give bon-bons to children. 3. கையூட்டுக் கொடுத்தல்; to be bribe. [நட்பு + காட்டு-] |
நட்புக்கை | நட்புக்கை naṭpukkai, பெ. (n.) ஒருவகையான இரட்டைக்கை; a kind of dance posture. (35:201);. [நட்பு+கை] [P] நட்புக்கை naṭpukkai, பெ.(n.) ஒருவகையான இரட்டைக்கை; a kind of dance posture. (35:201);. [நட்பு+கை] [P] |
நட்புக்கொள்ளு)-தல் | நட்புக்கொள்ளு)-தல் naṭpukkoḷḷudal, 10 செ.குன்றாவி. (v.i.) தோழமை கொள்ளுதல்; to have a friendship. [நட்பு + கொள்-] |
நட்புக்கோள் | நட்புக்கோள் naṭpukāḷ, பெ. (n.) இயைபான கோள் (யாழ். அக.);, friendly-planet. ‘உலகிற்கு மதிநட்புக்கோள் நாம் அறிந்த ஒன்றேயாம்’ (உ.வ.); [நட்பு + கோள்.] |
நட்புச்சரக்கு | நட்புச்சரக்கு naṭpuccarakku, பெ. (n.) நலம் நல்கும் சிறந்த மருந்து; friendly drugs. [நட்பு + சரக்கு.] |
நட்புத்தானம் | நட்புத்தானம் naṭputtāṉam, பெ. (n.) கோள்நிலைச் சிகரத்தில், (இராசியின்); ஒரையின் நட்பைக் குறிக்கும் வீடு (யாழ். அக,.);; the friendly house of a planet or Irāši. in a horoscopic diagram. [நட்பு + தானம்.] |
நட்புத்திட்பு | நட்புத்திட்பு naṭputtiṭpu, பெ. (n.) நிலத்தின் திணிந்தத் தன்மை (இ.வ.);, nature of soll, as good or bad. [நள் + பு → நட்பு: திள் = திண்மை. திள் + பு → திட்பு. நட்பு + திட்பு → நட்புத்திட்பு] நிலத்தின் திண்மைத்தன்மை. மண் செறிந்த அல்லது அடர்ந்த திண்மையான நிலம். “மண்திணிந்த நிலன்” என்று. புறநானூறு 2-ஆம் பாடல் புகல்வது காண்க. |
நட்புபாராட்டல் | நட்புபாராட்டல் naṭpupārāṭṭal, பெ. (n.) நட்புக்கொள்ளு);-தல் பார்க்க;See napu-kkol(u); [நட்பு + பாராட்டல்.] |
நட்புமருந்து | நட்புமருந்து naṭpumarundu, பெ.. (n.) நோயினை முழுமையாகப் போக்கும் மருந்து; principle medicine. [நட்பு + பாராட்டல்.] |
நட்புரு | நட்புரு naṭpuru, பெ. (n.) தோழமை உணர்வு மிக்கவன்; senstitive of friendship person. [நட்பு + உரு.] |
நட்புருவாக்கு-தல் | நட்புருவாக்கு-தல் naṭpuruvākkudal, 5.செ.குன்றாவி. (v.t.) தோழமையை உருவாக்கல்; to create friendship. [நட்பு +உருவாக்கு-] ஆழங்கால்பட்ட நட்புணர்வை வளர்த்தல். |
நட்புறவு | நட்புறவு naṭpuṟavu, பெ. (n.) இருவர் அல்லது இரு நாடுகளுக்கு இடையில் மலரும் நல்லுறவு; amity or friendship between persons or countries. நாம் நாட்டோடு நட்புறவுடனிருந்தால், எல்லைப்பகுதியில் மக்கள் தொல்லையின்றி வாழ்வர். (இக்.வ.);. மறுவ, நல்லுறவு. [நட்பு + உறவு.] நட்புறவு என்பது, வாழ்வியல் உறவு உண்மையானதாகவும், வலிமையுள்ளதாகவும், மாந்தர்தமை மாற்றும் உறவு. மன்பதையிலுள்ள எல்லா இத்தகைய நட்புறவு பற்றி மொழிஞாயிறு நவிலுவது: “நாகரிக நிலையிலேனும், அநாகரிக நிலையிலேனும், ஒருவன் பிறர் உதவியின்றி வாழ்தல் அரிது. அவ்வுறவு இயற்கை. செயற்கை என இருதிறப்படும். இயற்கையுறவு அரத்தக் கலப்பாலான இனவுறவு செயற்கையுறவு மணவுறவு, தொழிலுறவு, தத்துறவு (மகட் கொடையால் வந்த உறவு);; உதவிப்பேற்றுறவு, பழக்கவுறவு, நட்புறவு எனப்பலவகைப்படும்” இந் நட்புறவு பற்றி வள்ளுவர் வாய்மொழி வருமாறு: “செயற்கரிய யாவுள நட்பினதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு” (குறள்,781);. இந் நட்புறவு, உண்மையாக உலக மாந்தர்க்கு வாய்த்துவிட்டால், அதுவே. உயர்ந்த உறவாகும். இதுவே வலிமைசான்ற உறவு. இந் நட்புறவு உறுதிமிக்க உறவாக வாய்க்கப்பெற்றவரே. உலகில் கொடுத்து வைத்தவர். இனவுறவு உறுதியற்று வீழ்ந்தாலும், உண்மையான நட்புறவு திண்மையாக அமைந்துவிட்டாள், ஒருவர் செய்யவேண்டியது யாதுமில்லை என்று வள்ளுவர் மொழிகின்றார். இவ் வுண்மையான நட்புறவு, இனவுறவினும் மிகச்சிறந்தது. இத்தகைய மாபெரும் உறவைத் தேடிக்கண்டு பிடிப்பதும், பெறுவதும், பேணிக்கொள்வதும் அரிதாதலால், “செயற்கரிய யாவுள நட்பின்” என்றார் வள்ளுவப்பேராசான். உண்மையான நண்பர். துன்பக்காலத்தில் உயிரையும் உதவிக்காப்பாராதலின், அதுபோல் “வினைக்கரிய யாவுள காப்பு” என்றார். “A father is a treasure. a brother comfort but a friend is both ” என்னும் ஆங்கிலப் பழமொழி இங்கு நினைவுகூரத் தக்கது. இருவகையுறவும், தனிப்பட்ட மாந்தர்க்குப் போன்றே, அரசுகட்கும் இன்றியமையாதனவாம்” (திரு.தமி.மர.பக்.87.பகுதி-3);. |
நட்புறவுக்கொள்ளை | நட்புறவுக்கொள்ளை naṭpuṟavukkoḷḷai, பெ. (n.) இருநாடுகளுக்கு இடையிலான நல்லிணக்க ஒப்பந்தக் கொள்கை; foreign amily policy. “அண்டை நாடுகளுக்கிடையே அமைந்த, நிலையான நட்புறவுக் கொள்கையே, மக்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” (இக்.வ.);. [நட்புறவு+ கொள்கை.] |
நட்புறுகை | நட்புறுகை naṭpuṟugai, பெ. (n.) நட்புக்கொள்ளு-தல் பார்க்க: see napu-kКоllu [நட்பு+உறுகை] |
நட்புவை-த்தல் | நட்புவை-த்தல் naṭpuvaittal, 4செ.கு.வி. (v.i.) தோழமை கொள்ளுதல்; to cultivate friendship. [நட்பு +வை-] |
நணந்தம் | நணந்தம் naṇandam, பெ. (n.) 1. சணல் (மலை);; sunn hemp. 2. காட்டுப் பச்சிலை பார்க்க;see kāţţu-p-pacciļai. 3. புன்கு, (மலை);. பார்க்க: see pungu. [நண் + அந்தம்.] |
நணா | நணா naṇā, பெ. (n.) ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊர். இன்று பவானி என்ற பெயருடன் உள்ளது; a village in Eroduct. “குன்றோங்கி வன்றிரைக் கண் மோத மயிலாலும் சாரற் செவ்வி சென்றோங்கி வானவர்களேந்தி அடிபணியும் திரு நணாவே” (ஞானசம்பந்தர். 208-1);. பவானி என்பது பூவானி என்றதன் திரிபு (சேரர்.வர);. |
நணி | நணி naṇi, பெ. (n.) அணிமையான இடம்: nearness, proximity, “திரைபொரு முந்நீர்க் கரைநணரிச் செலினும்”. (புறநா. 154);. [நண் → நணி.] |
நணியான் | நணியான் naṇiyāṉ, பெ. (n.) அண்மையிலிருப்பவன்; one who is near. “சேயாய் நணியானே” (திருவாச. 1:44);. [நண் → நணி + ஆன்.] |
நணுகலர் | நணுகலர் naṇugalar, பெ. (n.) நண்ணார் பார்க்க;see naņņār. [நண் → நணு → நணுகு + அல் + அர்.] அல் = எதிர்மறை இடைநிலை |
நணுகார் | நணுகார் naṇukār, பெ. (n.) நண்ணார் பார்க்க;see nannár. [நணுகு + ஆ+ஆர்] “ஆ” எதிர்மறை இடைநிலை. |
நணுகு-தல் | நணுகு-தல் naṇugudal, 5. செ.குன்றாவி. (v.t.) 1. அண்மித்தல்; to approach, draw nigh arriweat. நானணுகு மம்பொன்குலாத் தில்லை” (திருவாக 40:6);. 2. ஒன்றிக்கலத்தல்: to become attached to or united with. “நம்புமென் சிந்தை நணுகும் வண்ணம்” (திருவாச. 40, 6);. [நள் → நண் → நணுகு-] நள் எனும் பொருந்துதற்கருத்து வேரினின்று கிளைத்த சொல். கிட்டுதல் பொருந்திக்கலத்தல் என்னும் பொருண்மையில், இலக்கியங்களில் வழக்கூன்றியுள்ளது. |
நணுங்கு-தல் | நணுங்கு-தல் naṇuṅgudal, 5 செ.குன்றாவி. (v.t) நணுகு பார்க்க;see nanugu- “சுரும்பினங்கள்.நரம்பென வெங்கு நணுங்க” (ஏகாம். உலா.276);. [நணுகு → நணுங்கு → ஒ.நோ.ஊசல் → ஊஞ்சல். சிணுகுதல் →சிணுங்குதல்.] |
நண்டன் | நண்டன் naṇṭaṉ, பெ. (n.) வளர்ச்சி குன்றியவன்; one who is of undergrowth. [நள்-நண்டு+அன்] நண்டன் naṇṭaṉ, பெ.(n.) வளர்ச்சி குன்றியவன்; one who is of undergrowth. [நள்-நண்டு+அன்] |
நண்டபிண்டல் | நண்டபிண்டல் naṇṭabiṇṭal, பெ. (n.) 1. கூழுங் கட்டியுமாய் உண்ணுதற்காகாதபடி ஆக்கப்பட்ட சோறு; rice over-boiled and made happy. நண்டல்பிண்டலாய் ஆக்கிய சோறை நாய்கூடத் தின்னாது (உ.வ.);: 2. நொறுங்கல்; that which is crushed. சோற்றை நண்டல்பிண்டலாக்கி விட்டாள் (உ.வ.);. மறுவ கூழ்பதம். நொண்டு → நண்டு + அல் → நண்டல் = நெடுநாள் நோய்வாய்ப்பட்டோர், நுகர்தற் பொருட்டுக் கிண்டிக் குழைத்த உணவு. பொங்கல் ஆக்குங்கால் கிண்டியும் நன்கு குழைத்தும் சமைப்பது மரபாகும். நண்டல் + பிண்டல் = உண்ணற்காகாவாறு கூழுங் கட்டியுமாகச் சமைத்தசோறு. [வே.க.3.17]. |
நண்டற்சோறு | நண்டற்சோறு naṇṭaṟcōṟu, பெ.(n.) தைப் பொங்கலில் சமைத்த சோறு (இ.வ.); food cooked on the pongal day [நண்டல் + சோறு = நன்கு கிண்டிச் சமைத்த பொங்கற் சோறு.[வே.க.3.17].] நொண்டு + நண்டு. நண்டுதல் = கிண்டுதல், கிளறுதல். நண்டல் = கிண்டிக் குழைத்த உண்டி. |
நண்டல் | நண்டல் naṇṭal, பெ. (n.) குழைவுபட்டது: macerated mass, rice boiled to a pap. நண்டல் கிண்டிப்படைக்கிறது (வின்);. [நொள் → நொண்டு → நண்டு → நண்டல்.] மாந்தர் நுகர்தற்பொருட்டுக் கிண்டிக் குழைத்த உண்டி. நண்டல் கிண்டிப் படைத்தல் என்பது உலகவழக்கு. (வே.க.3.17);. |
நண்டிறைச்சி | நண்டிறைச்சி naṇṭiṟaicci, பெ. (n.) சமைத்த நண்டின் தசை; cooked or boiled crab flesh. [நண்டு+இறைச்சி.] இறால் இறைச்சி போல, நண்டின் இறைச்சி சுவையுடையது. |
நண்டு | நண்டு naṇṭu, பெ. (n.) 1. நீரோரத்தில் வாழும் உயிர்வகை; crab, obster. 2. நண்டு வடிவான ஒசை (குடா);; cancer in the zodiac. 3.குளிர்மை; cold. 4. கள்ளி; milk, spurge. தெ. (எண்டிரி); ம. நண்டு. [நொண்டு – நண்டு.] நண்டுதல் = கிண்டுதல், கிளறுதல். நண்டு = வண்டலிலும், மணலிலும் கிண்டினாற். போல், கீறிச்செல்லும் நீருயிரி); (வே.க.3.17);. இடுக்கியின்.முன்பகுதி போன்ற இரு முன்னங்கால்களையும், ஒடு மூடிய உடலையும் கொண்டது. நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். மருந்துக் குணமுள்ள இவ்வுயிரி ஏரி, குளம், நன்செய் வரப்பு, ஆற்று நீர்ப்படுகை போன்ற இடங்களில் காணப்படும். கடலில் இவ்வினம் மிகுதியாகக் காணப்படும். கடலில் காணப்படும் இந் நண்டு ஏழைமக்களுக்கும். மீனவர்கட்கும். ஊட்டச் சத்தினையும் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வளர்க்கும். நண்டுச் சாறு, எல்லா நோய்கட்கும் கைகண்ட மருந்து. குளுமையைப் போக்கும். இசிவுநோய், மிகு குளுமை, உடம்புவலி முதலான நோய்களைத் தீர்க்கும் இதன் வகைகளாகச் சாம்பசிவ மருத்துவ அகரமுதலி கூறுவது வருமாறு: 1. குளநண்டு- small tank crab. 2. ஆற்று நண்டு – river crab. 3. கடல் நண்டு – Sea crab. 4. கடுக்காய் நண்டு- Small crab of the size of gall nut. 5. நீலக்காலி நண்டு; blue legged crab. 6. ஒருகால் நண்டு ; crab with one claw only . 7. செம்பாறை நண்டு; large and red crab. 8. தில்லை நண்டு; black crab. 9. வயல் நண்டு; field crab. 10. வெள்ளை நண்டு; white crab. 11. கருப்பு நண்டு; black crab. 12. வானம்பாடி நண்டு; another variety. 13. பார் நண்டு; milk crab. 14. பி. நண்டு; 15. பீ நண்டு; english black clawed crab. 16. சூக்காய் நண்டு: 17. பெரு நண்டு; big crab. |
நண்டு தறிக்கை | நண்டு தறிக்கை naṇṭudaṟikkai, பெ.(n.) நட்டுவாக்காளி என்னும் தேள் போன்ற நச்சுயிரி; a poisonous insect like scorpion. [நண்டு+தறிக்கை] |
நண்டுகண்ணுக்கினி | நண்டுகண்ணுக்கினி naṇṭugaṇṇuggiṉi, பெ. (n.) எலுமிச்சை (சங்.அக); பார்க்க;see elumiccai. Sour lime. |
நண்டுகாச்சி | நண்டுகாச்சி naṇṭukācci, பெ. (n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [ஒருகா. நண்டு+(கயம்-கயத்தி-காய்ச்சி); நண்டுகாச்சி naṇṭukācci, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [ஒருகா. நண்டு+(கயம்-கயத்தி-காய்ச்சி] |
நண்டுக்கண்ணுக்கினி | நண்டுக்கண்ணுக்கினி naṇṭukkaṇṇukkiṉi, பெ. (n.) எலுமிச்சம்பழம்: lime fruit. |
நண்டுக்கண்னுப்பூடு | நண்டுக்கண்னுப்பூடு naṇṭukkaṇṉuppūṭu, பெ. (n.) கடலுராய்ஞ்சி மரம்; climbing partridge. [நண்டு + கண்ணு + பூடு.] |
நண்டுக்கரம் | நண்டுக்கரம் naṇṭukkaram, பெ. (n.) கற்கடகம் பார்க்க;see kar-kadagam. “சமநிலையிலே நின்று நண்டுக்கரத்தைக் கோத்து” (சிலப்.17;பக்.455);. [நண்டு + கரம்.] நடனமுத்திரைவகையுளொன்று. |
நண்டுக்கறி | நண்டுக்கறி naṇṭukkaṟi, பெ. (n.) சமைத்த நண்டுக்கறி; dish, prepared out of crabsh. [நண்டு + கறி.] நண்டின் கால்கள், வயிறு போன்ற பகுதிகள், ஓடாக அமைந்திருக்கும். அதை உடைத்து உள்ளே கட்டைவிரலால் தோண்டி எடுக்கும் கறிப்பகுதி. இக்கறியினை உரிய பதத்தில் சமைத்து உண்பதால், இசிவுநோய், நாட்பட்ட கோழை, போன்றவை குணமாகும். |
நண்டுக்கல் | நண்டுக்கல்1 naṇṭukkal, பெ. (n.) இணைவிழைச்சு நோயினைத் தீர்க்கும் கல்: a kind of stone useful in Venereal diseases. abdominal dropsy, etc. (சா.அக.);. [நண்டு + கல்.] நண்டுக்கல்2 naṇṭukkal, பெ. (n.) நச்சுத்தன்மையை நீக்குவதும், நண்டு இறுகி மாறியதாகக் கருதப்படுவதுமான கல்வகை (வின்.);, a kind of petrified lobster, used as a charm. [நண்டு + கல்.] |
நண்டுக்கழை | நண்டுக்கழை naṇṭukkaḻai, பெ. (n.) ஒரு வாழையினம்; a variety of plantain tree. [நண்டு + கழை.] – |
நண்டுக்காற்கீரை | நண்டுக்காற்கீரை naṇṭukkāṟārai, பெ. (n.) கீரைவகை (மூ.அக);; a kind of eatable greens. [நண்டு + கால் கீரை.] நண்டுக்கால் போன்ற வடிவமைப்புக் கொண்ட கீரைக்கொத்து. |
நண்டுக்காற்புல் | நண்டுக்காற்புல் naṇṭukkāṟpul, பெ. (n.) புல்வகை, (யாழ்.அக.);; a kind of grass. ischaemum aristatum. (சா.அக);. [நண்டு + கால் + புல்,] நண்டுக்கால் போல், வண்ணமுடைய புல்வகை ஈளை நோய்கண்டவர்க்கு இக் கீரைச்சாறு கைகண்ட மருந்து. |
நண்டுக்கிண்ணி | நண்டுக்கிண்ணி naṇṭukkiṇṇi, பெ. (n.) நண்டின் சிறுகால்; small leg of a crab. [நண்டு + கிண்ணி ;கிண்ணம் → கிண்ணி.] ஒ.நோ. கிண்ணிக்கோழி. |
நண்டுக்குழி | நண்டுக்குழி naṇṭukkuḻi, பெ. (n.) நண்டின் வளை; the hole where the crab is living crab’s hole. [நண்டு + குழி.] |
நண்டுக்குழிநீர் | நண்டுக்குழிநீர் naṇṭukkuḻinīr, பெ. (n.) நண்டுவளைத் தண்ணீர்; the water lying stagnant is the crab’s hole near the ridges of the field. [நண்டு + குழி+நீர்] நோயாளியின் நாவறட்சியினைப் போக்கும் கைகண்ட மருந்து. மேலும் நீங்கா விக்கல், உடம்பெரிச்சல் போன்ற நோய்களுக்கும் நண்டுக்குழி நீர் உகந்தது (சா.அக);. |
நண்டுக்குழிமண் | நண்டுக்குழிமண் naṇṭukkuḻimaṇ, பெ. (n.) நண்டுக் குழியிலுள்ள மண்; the earth of crab’s hole. [நண்டு + குழி+மண்.] மந்திரச் செயல்களுக்கு நண்டுக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட மண் சாலச்சிறந்தது. (சா.அக);. சுமை இழுக்கும் எருதுகளுக்கும், நுகத்தடி ஏர்க்காலில் பிணைத்து உழுசால் ஒட்டும் காளைகட்கும். கழுத்தில் காய்ப்பு ஏற்படும். இக் கழுத்துக் காய்ப்பு, நாளா வட்டத்தில் புண்ணாக மாறும். இப் புண்களுக்கு நண்டுக்குழி மண், நனி சிறந்தது. |
நண்டுக்கை | நண்டுக்கை naṇṭukkai, பெ. (n.) ஆடற் கலையின் ஒரு வகையான இரட்டைக்கை; gesture with both the hands. [நண்டு+கை] [P] நண்டுக்கை naṇṭukkai, பெ.(n.) ஆடற் கலையின் ஒரு வகையான இரட்டைக்கை; gesture with both the hands. [நண்டு+கை] [P] |
நண்டுக்கொடுக்கு | நண்டுக்கொடுக்கு naṇḍukkoḍukku, பெ. (n.) நண்டின் முன்புறத்துள்ள உறுப்பு: forceps of a lobster. [நண்டு + கொடுக்கு.] |
நண்டுக்கொழுப்பு | நண்டுக்கொழுப்பு naṇṭukkoḻuppu, பெ. (n.) நண்டின் கொழுப்பு: crabs.fal. [நண்டு + கொழுப்பு.] தோல்நோய், இசிவுநோய், ஈளைநோய் முதலான நோய்கட்கும், உடம்பிலேற்படும் எரிச்சல் தன்மையைப் போக்குவதற்கும் நண்டுக்கொழுப்பு மிகவும் பயன்படும். (சா.அக);. |
நண்டுக்கோது | நண்டுக்கோது naṇṭukātu, பெ. (n.) நண்டின் ஒடு முதலியன (வின்);; remains of lobsters as the shell. [நண்டு + கோது.] |
நண்டுசிண்டுகள் | நண்டுசிண்டுகள் naṇṭusiṇṭugaḷ, பெ. (n.) நண்டுஞ்சுண்டும் பார்க்க;see nanduhsundum. வீட்டுக்கு வெளியே ஐந்து ஆறு நண்டு சிண்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். (உ.வ.); மறுவ : சின்னஞ்சிறுசுகள். |
நண்டுச்சாறு | நண்டுச்சாறு naṇṭuccāṟu, பெ. (n.) நண்டுச்சதையில் சமைத்த குழம்பு நீர்; crab’s Soup. [நண்டு + சாறு.] |
நண்டுச்சினை | நண்டுச்சினை naṇṭucciṉai, பெ. (n.) நண்டின் முட்டை; crab’s egg. [நண்டு + சினை.] |
நண்டுச்சிறுகால் | நண்டுச்சிறுகால் naṇṭucciṟukāl, பெ. (n.) நண்டின் பின்னங்கால்கள்; the two back legs of the crab. [நண்டு + சிறுகால்.] |
நண்டுச்செலவு | நண்டுச்செலவு naṇṭuccelavu, பெ. (n.) நண்டு இருக்கும் வளை: crab’s hole. மறுவ. நண்டுப் பொந்து நண்டுவலை. [நண்டு + செலவு.] நண்டு சென்று அடையும் வளை. |
நண்டுஞ்சிண்டும் | நண்டுஞ்சிண்டும் naṇṭuñjiṇṭum, பெ. (n.) நண்டுஞ்சுண்டும் (இ.வ.); பார்க்க;see nanduń-šundum. [நண்டும் + சிண்டும்.] |
நண்டுஞ்சுண்டும் | நண்டுஞ்சுண்டும் naṇṭuñjuṇṭum, பெ. (n.) சிறியவும் பெரியவுமான இளங்குழந்தைகள்; small children of different ages, நண்டுஞ் சுண்டுமாக விட்டுவிட்டுப் போய் விட்டார். (இ.வ.);. [நண்டும் + சுண்டும்.] கைகால் வளைந்தும், வயிறு பெருத்தும் காணும் குழந்தைகளைக் கூறும் வழக்கு. தஞ்சைமாவட்டத்தில் வீசம்படியைச் கண்டு என்பது வழக்கம். |
நண்டுதின்னிக்குரங்கு | நண்டுதின்னிக்குரங்கு naṇṭudiṉṉikkuraṅgu, பெ. (n.) நண்டைத்தின்று வாழும் குரங்கு; crab eating monkey. [நண்டும் +தின்னி + குரங்கு.] |
நண்டுதின்னிநாகம் | நண்டுதின்னிநாகம் naṇṭudiṉṉinākam, பெ. (n.) நண்டுகளைத் தின்றுவாழும் நாகப் பாம்பு வகை; a kind of cobra, living on crab’s hole. [நண்டு +தின்னி +நாகம்.] நண்டு வலையில் புகுந்து, நண்டைத் தின்று வாழும் நாகம் (சா.அக.);. |
நண்டுதெருக்கால் | நண்டுதெருக்கால் naṇṭuderukkāl, பெ. (n.) நண்டுவாய்க்காலி பார்க்க: see nandu-vây-k-kāli. |
நண்டுத்தெறுக்கால் | நண்டுத்தெறுக்கால் naṇṭutteṟukkāl, பெ. (n.) நண்டுவாய்க்காலி பார்க்க;see nanduvây-k-kāl. |
நண்டுநசுக்கு | நண்டுநசுக்கு naṇṭunasukku, பெ. (n.) சிறு குழந்தைகள்; little children. [நண்டு +நசுக்கு.] கால்கை வளைந்தும், வயிறு ஒடுங்கியும் காணப்படும் குழந்தைகள். |
நண்டுபெருங்கால் | நண்டுபெருங்கால் naṇṭuberuṅgāl, பெ. (n.) நண்ன் முன்னங்கால்; the two forelegs of the crab. [நண்டு+ பெருங்கால்.] |
நண்டுப்பிடி | நண்டுப்பிடி naṇḍuppiḍi, பெ. (n.) மற்போரில் அழுத்திப் பிடிக்கும்பிடி; to hold, tightly as of a crab unsi, Gustif on floor. வெற்றிக்கு நண்டுப்பிடி இன்றியமையாதது (உ.வ);. மறுவ கிடுக்கிப்பிடி. [நண்டு +பிடி.] மற்போர் விளையாட்டில், நண்டுபோல் பிடிதளராவண்ணம் இறுக்கிப் பிடிக்கும் கிடுக்கிப்பிடியே, நண்டுப்பிடியாகும். |
நண்டுவளைத்தண்ணீர் | நண்டுவளைத்தண்ணீர் naṇṭuvaḷaittaṇṇīr, பெ. (n.) நண்டின் வளைக்குள் நிற்கும் நீர்; stagnant water in the crabs hole. [நண்டு + வளை+தண்ணி.] |
நண்டுவாய்க்காலி | நண்டுவாய்க்காலி naṇṭuvāykkāli, பெ. (n.) நட்டுவாய்க்காலி (யாழ்.அக); பார்க்க: see nattuvay-k-kālī. [நண்டு + வாய் + காலி.] |
நண்டூருகால் | நண்டூருகால் naṇṭūrukāl, பெ. (n.) நண்டின் சிற்றடி (வின்.);; small legs of a crab. [நண்டு + ஊரு + கால்.] |
நண்டெடுத்தல் | நண்டெடுத்தல் naṇḍeḍuttal, பெ. (n.) நீரின் கீழ் மூழ்கியிருக்கும் இளம்பயிர் நண்டு வெட்டுதலால், அழிந்த நிற்கும் நிலை (நாஞ்);; Spolit condition of tender crops under water, due to the Scratches of Crabs. [நண்டு + எடுத்தல்.] |
நண்டோடு | நண்டோடு naṇṭōṭu, பெ. (n.) நண்டின் ஒடு: crabs shell. [நண்டு + ஒடு.] |
நண்ணம் | நண்ணம் naṇṇam, பெ. (n.) சிறிது; small thing. “நாடு பெற்ற நன்மை நண்ண” மில்லையேனும்” (திவ்.திருச்சந்:46);. |
நண்ணலர் | நண்ணலர் naṇṇalar, பெ. (n.) நண்ணார் (பிங்.); பார்க்க;see naņņār. [நண் + அல்+அர்.அல்-எதிர்மறை இடைநிலை.] |
நண்ணார் | நண்ணார் naṇṇār, பெ. (n.) பகைவர்; toes. “ஞாட்பினு னண்ணாரு முட்குமென் பீடு” (குறள், 1088);. ம. நண்ணார். [நள் → நண் + நண்ணார்] ஒருகா. நண்ணுநர் x நண்ணார் (வே.க. 3:53); |
நண்ணி | நண்ணி naṇṇi, பெ. (n.) நன்றி; goodness. [ஒருகாநன்றி → நன்னி → நண்ணி.] |
நண்ணிடல் | நண்ணிடல் naṇṇiḍal, பெ. (n.) சேர்தல். இணைதல்; copulate. [நள் → நண்+நண்ணிடு → நண்ணிடல்.] |
நண்ணிலக்கோடு | நண்ணிலக்கோடு naṇṇilakāṭu, பெ. (n.) நிலநடுக்கோடு, equator. [நண்ணிலம் + கோடு.] நண்ணிலக்கோடு naṇṇilakāṭu, பெ. (n.) வட, தென்முனைகளிலிருந்து சமதொலைவு களில் அமையுமாறு உலகவுருண்டையைச் சுற்றி வரையப்படும் உருவலிப்பு (கற்பனை);க்கோடு; equator. மறுவ. நிலநடுக்கோடு [நண்ணிலம்+கோடு] |
நண்ணிலம் | நண்ணிலம் naṇṇilam, பெ. (n.) நடுநிலம்: equator region. [நள் → நண்+நிலம் → நண்ணிலம்=நிலநடுப்பகுதி.] |
நண்ணு | நண்ணு2 naṇṇudal, 5 செ.கு.வி. (v.t.) இருத்தல் (யாழ்.அக.);; to reside, live. [நள் → நண் → நண்ணு-.] |
நண்ணு-தல் | நண்ணு-தல் naṇṇudal, 5 செகுன்றாவி. (v.t.) 1. கிட்டுதல்; to draw near, approach, reach. “நம்பனையுந் தேவனென்று நண்ணுமது” (திருவாச. 12:17);. 2. பொருந்துதல்; to be attached to, united with, to adhere. 3. செய்தல்; to do, make, “நண்ணுமின்க ணல்லறமே” (சிலப். 16, ஈற்று வெண்பா);. [நள் → நண் → நண்ணு-.] ‘நள்’ எனும் பொருந்துதற் கருத்தினின்று கிளைத்த சொல். அன்பின் செறிவால் சேருதல், கிட்டுதல் போன்ற கிளைக் கருத்துகள், இச் சொல்லினின்று தோன்றியுள்ளன. |
நண்ணுநர் | நண்ணுநர் naṇṇunar, பெ. (n.) நட்பினர் (பிங்);; friends, adherents. [நள் → நண் → நண்ணு → நண்ணுநர்] |
நண்ணுவழி | நண்ணுவழி naṇṇuvaḻi, பெ. (n.) அருகிலுள்ள இடம்; place near by. “கண்ணிற்கான நண்ணுவழி யிரீஇ” (பொருந.76);. [நண் → நண்ணு + வழி.] |
நண்ணைப்பாரை | நண்ணைப்பாரை naṇṇaippārai, பெ. (n.) ஒரடி வளரும் வெண்ணெய்ப்பாரை மீன்; horse makerel, grey, attaining 1 ft in length, caranxire. [நண்ணை + பாரை.] மறுவ நண்ணிப்பாரை. |
நண்பகல் | நண்பகல் naṇpagal, பெ. (n.) 1. நடுப்பகல்; midday. “நண்பகல் வேனிலொடு” (தொல். பொருள்.9.);. 2. ஆறுபொழுதுகளிலொன்று; one of the six division of the day. (சா.அக.);. 3. பத்து நாழிகை முதல் இருபது நாழிகை வரை; a period of four hours from 10 am to 2 p.m. [நள்+பகல் → நண்பகல்.] |
நண்பன் | நண்பன்1 naṇpaṉ, பெ. (n.) 1. தோழன் (பிங்);; friend, campanion, associate. 2. காதலன்; lover. “நின்றாடணி நண்பனை நினையா” (சீவக. 1324);. 3. குறிஞ்சிநிலத் தலைவன் (திவா.);; chief of a hilly tract. [நள் → நண் → நண்பு + நண்பன்.] நண்பன்2 naṇpaṉ, பெ. (n.) 1. சணல்; indian hemp crotalaria. 2. சணற்பயிர்; hemp crops. |
நண்பல் | நண்பல் naṇpal, பெ. (n.) இரண்டு பற்களினிடை; space between teeth, “தின்ற நண்ப லூஉன்றோண்டவும்” (புறநா. 384);. [நள் → நண்+ பல் → நண்பல்.] |
நண்பாலம் | நண்பாலம் naṇpālam, பெ. (n.) நண்பாலை பார்க்க;see manpälai. |
நண்பாலை | நண்பாலை naṇpālai, பெ. (n.) வெட்பாலை; blue dying rosebay. |
நண்பு | நண்பு naṇpu, பெ. (n.) 1. அன்பு; love, attachment, affection: “எம்மானே நண்பேயருளாய்” (திருவாச. 44:3);. 2. நட்பு நல்லுறவு; amity, friendship. Forumsipm stro sounslow. செய்வார்க்கும்” (குறள், 998);. 3. உறவு (பிங்.);; relationship. க, ம., நண்பு தெ. நணுபு. [நள் → நண் → நண்பு.] |
நண்மை | நண்மை naṇmai, பெ. (n.) அண்மை: proximity. “நட்யெதிர்ந் தோர்க்கே யங்கே நண்மையன்” (புறநா. 380,11);. [நள் → நண் → நண்மை.] |
நதி | நதி nadi, பெ.(n.) ஆறு (திவா.);; river. [Skt. nadi → த. நதி] |
நதிகேள்வன் | நதிகேள்வன் nadiāḷvaṉ, பெ. (n.) ஆறுகளின் நாயகனான வருணன் (பிங்.);;{}, as Lord of the Rivers. [நதி + கேள்வன்] |
நதிக்குதிரை | நதிக்குதிரை nadikkudirai, பெ.(n.) நீர்யானை; hippopotamus. [நதி + குதிரை] |
நதிசரம் | நதிசரம் nadisaram, பெ.(n.) ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை (திவா.);; elephant born and bred up on the banks of a river. [நதி + சரம்] |
நதிதீரம் | நதிதீரம் nadidīram, பெ.(n.) ஆற்றங்கரை; bank of a river. [நதி + தீரம்] |
நதிமூலம் | நதிமூலம் nadimūlam, பெ.(n.) ஆறு தோன்றும் இடம்; source of river. [நதி + மூலம்] |
நதீமாதுருகம் | நதீமாதுருகம் natīmāturugam, பெ.(n.) ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம்; land irrigated by a river. “நதிமாதுருகம் இரண்டு பூ விளைகையாலே” (ஈடு. 1: 1 : 1, ஜீ);. [Skt. nadi + {} → த. நதீமாதுருகம்] |
நதீவடம் | நதீவடம் natīvaḍam, பெ.(n.) கருப்பு ஆலமரம் (மூ.அ.);; black banyan tree. |
நது-த்தல் | நது-த்தல்1 naduddal, 4 செ.குன்றா.வி. (v.t.) 1. அவித்தல் (திவா.);; to extinguish, quench. நாற்கடலு மேவினு நதுப்பறிய வூழிக்காற் கனலினோதை” (கந்தபு. சதமுகன்வ.4);. 2. மறைத்தல் (வின்.);; to eclipse, as rays. 3. கெடுத்தல் (யாழ்.அக);; to destroy. [நொள் → நொது → நது-] நது-த்தல்2 naduddal, 4 செ.கு.வி. (v.i.) திகைத்தல் (யாழ். அக.);; to be in a perplexed state. [நுது → நது-] |
நத்தகம் | நத்தகம் nattagam, பெ. (n.) கந்தை (யாழ்.அக); tatters. [நொள் → நொய் → நய் → நை.→ நைந்து → நொய்ந்து → நொந்து.நொந்து → நந்து → நந்தகம்.நந்தகம் → நத்தகம்.] நந்துதல் = அழிதல், நத்தகம் =நைந்து அழிந்துபோன கந்தைத்துணி, |
நத்தகா | நத்தகா nattakā, பெ. (n.) புன்கு; indian beech. [நந்து → நத்தகா= வளர்தல்.] ஆக்கப்பொருளிள் ஈங்டு நன்மணம் பரவும் பொருளைக் குறித்தது. |
நத்தகாலம் | நத்தகாலம் nattakālam, பெ. (n.) 1. இரவு நேரம்; night-time. 2. ஒருவன் நிழல் கிழக்கே 16 அடி நீண்டிருக்கும் மாலைப்பொழுது (சைவச. பொது. 21. உரை);; the evening time when one’s shadow extends eastward to 16 ft. நீட்சிப்பொருளில் ஈங்டு வந்துள்ளது. |
நத்தங்கோயில் | நத்தங்கோயில் nattaṅāyil, பெ. (n.) சிற்றூரிலுள்ள கோயில்; village temple. “பரமபதம் கலவிருக்கை நத்தங்கோயில்” (திவ். திருமாலை, 15 வ்யா. 61);. 4 நத்தத்தனார்’ [நத்தம் + கோயில், நத்தம்=ஊர்.] |
நத்தச்சூரி | நத்தச்சூரி nattaccūri, பெ. (n.) நத்தைக்குரி LTso;see nattai-c-curi. |
நத்தத்தனார் | நத்தத்தனார்1 nattattaṉār, பெ. (n.) திருவள்ளுவமாலையில் ஒரு பாடலைப்Limousuff; a song was sung by Nattattanår,in Thiruvalluvamála ந+தத்தன் ஆர். திருக்குறளின் புகழ்பாடும் நத்தத்தனார் பாடிய, திருவள்ளுவமாலைப் பாடல் வருமாறு:”ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும் பாயிரத்தினோடு பகர்ந்த தன்பின் – போய் ஒருத்தர் வாய்க்கேட்க நூல் உளவோ? மன்னு தமிழ்ப்புலவராய்க்கேட்க விற்றிருக் கலாம்’. இவர் சிறுபாணாற்றுப்படை பாடியவரினின்று வேறானவர். நத்தத்தனார்3 nattattaṉār, பெ. (n.) புறநானூற்றில் 218-ஆம் பாடலைப் பாடியவர்; a Śangam poet only a song was sung by Nattattanār in Purananuru.(ந தத்தன் ஆர்.); நத்தத்தனாரைப் பற்றிய குறிப்பு: உ.வே.சா. அவர்கள் புறநானூற்றில் உள்ள, 218-ஆம் பாடலை நத்தத்தனார் பாடியதாகக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலைக் கண்ணகனார் பாடினார் என்றும் கூறுவர். “பொன்னுந் துகிரு முத்து மன்னிய மாமலை பயந்த காமரு மணியும்” என்று தொடங்கும் இப் பாடல், பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனோடு வடக்கிருந்த போது பாடப்பட்டது. |
நத்தத்தனார்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நத்தத்தனார்” | நத்தத்தனார்”4 nattattaṉār, பெ. (n.) சிறுபாணாற்றுப்படை என்ற சங்க நூலை எழுதிய புலவர்; a Sangam poet, author of ciru-pânărru-p-padai, one of pattu-p-pâttu. [ந + தத்தன் + ஆர்.] இவர் இடைக்கழி நாட்டிலுள்ள நல்லூரைச் சேர்ந்தவர். இவர் உவமையை உவமேயமாகவும் உவமேயத்தை உவமையாகவும் காட்டியுள்ளார். “… இரும்பிடித் தடக்கையிற் சேர்ந்துடன் செறிந்த குறங்கிற் குறங்கென மால்வரை ஒழுகிய வாழை வாழைப் பூவெனப் பொலிந்த ஒதி….” பாடினியின் கொங்கையைப் போன்றிருந்த தாமரை மொக்குகள், அவளின் முகத்தைப் போன்று மலர்ந்து திகழ்ந்த தன்மையை “வருமுலையன்ன வண்முகை யவிழ்ந்து திருமுகம் அவிழ்ந்த தெய்வத்தாமரை” என்று நத்தத்தனார் நவிலும்பான்மை நயமிக்கது. “முல்லை சான்ற கற்பின் மெல்லியல் மடமா நோக்கின் வாணுதல் விறலியர்” “மணிமயிற் கலாப மஞ்சிடைப் பரப்பித் துணி மழை தவழுந் துயல்கழை நெடுங்கோட்டெறிந்துர மிறந்த வேற்றருஞ் சென்னிக் குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக் கோடனை நயந்தனிர் செலினே!” தத்தன் என்ற பெயர் வழக்கு. கி.பி. 12- ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்ததைப் பிற்கால இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். “ந’ சிறப்பினை உணர்த்தும் இடைச்சொல். 5 நத்தத்தனார்’ [ஒ.நோ. ந.+பசலையார்-நப்பசலையார். ந+ பூதனார்-நப்பூதனார். “ஆர்”=மதிப்புறவு விகுதி. நத்தத்தனார் என்ற பெயரில், தமிழிலக்கியப் பரப்பில் நால்வர் காணப்படுகின்றனர். இந் நால்வருள் சிறுபாணாற்றுப்படை எழுதியவரே, நுண்மாண் நுழைபுல மிக்க புலவராவார். இவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் என்று சிறப்பிக்கப்படுவார். இவர் திண்டிவனத்தை அடுத்துள்ள நல்லூரைச் சார்ந்தவர். இவ்வூருக்கு 8 கல்தொலைவில் தெற்கே நல்லியக்கோடன் ஆண்ட ஒய்மாநாடு உள்ளது. இப் பகுதி இப்பொழுது, “இடைக்க நாடு” என்று அழைக்கப்படுகிறது. திருவள்ளுவ மாலையைப் பாடிய நத்தத்தனாரினின்று. இவர், தம் சிறுபாணாற்றுப்படைப் பாடல் அமைப்பால், முற்றிலும் வேறுபட்டவர் ஆகிறார். திருவள்ளுவமாலையில், நத்தத்தனாரின் பாடல் அமைப்பும், நடையும் மிகவும் நெகிழ்ச்சியாயுள்ளது. சிறுபாணாற்றுப் படையில் திருவள்ளுவமாலை நத்தத்தனாரின் சாயல் சிறிதும் இல்லை. ஆகையால் இருவரும் வேறுவேறு என்று துணியலாம். நத்தத்தம் என்ற இலக்கண நூலாசிரியர் பற்றிய குறிப்பு, நச்சினார்க்கினியர் உரையில் மட்டும் காணப்படுகிறது. யாப்பருங்கல விருத்தியுரையில், ஒரேயொரு எடுத்துக்காட்டு நூற்பா மட்டும் காணப்படுகிறது. எனவே இருவரும் நல்லூர் நத்தத்தனாரினின்று, வேறுபட்டவர் எனலாம். புறநானூற்றில் காணப்படும், 218-ஆம் பாடலைப் பாடிய புலவர் பெயர், பாட வேறுபாடாகவே, நத்தத்தனார் என்று வந்துள்ளது. இப் பெயருக்கு முன்பு ஆற்றுப்படை பாடிய நத்தத்தனார் போல எவ்வித அடைமொழியும் இல்லை. எனவே நத்தத்தனார் எனும் பெயரில் நால்வர் இருந்தனர் என்பதில், யாதொரு ஐயமுமில்லை. இந்நால்வருள் இலக்கியச் செழுமை செறிந்தவராகவும், பன்முகநோக்கில் நற்சிறப்புகள் பல பெற்றவராகவும், நத்தத்தனார் விளங்குகிறார். இவர் தம் ஊருக்கு அருகில் இருந்த ஓய்மா நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனையும், அந்நாட்டில் சிறப்புற்றுத் திகழ்ந்த எயிற்பட்டினம், வேலூர், ஆமூர், கிடங்கில், மாவிலங்கை ஆகிய ஊர்களைப் பற்றியும், தெளிவான செய்திகளையும் தெரிவித்துள்ளார். மேலும், இவர், தம் சிறுபாணாற்றுப் படையுள், சேரநாட்டு வஞ்சிமா நகரையும், பாண்டி நாட்டுக்கொற்கைத் துறைமுகத்தையும், மதுரையையும், சோழர்தம் உறையூரையும் குறிப்பிட்டுப்பாடி, மூவேந்தர் வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளார். |
நத்தபத்திரி | நத்தபத்திரி nattabattiri, பெ. (n.) நந்தியாவட்டை (மலை);; common wax-flowered dog-bane. [நத்திபத்திரி → நத்தபத்திரி.] |
நத்தபிரகி | நத்தபிரகி nattabiragi, பெ. (n.) நத்தப்பாலை பார்க்க;see natta-p-pālai. [நத்தம் + பிரகி.] |
நத்தபிலா | நத்தபிலா nattabilā, பெ. (n.) நத்தப்பாலை பார்க்க;see natta-p-pālai. |
நத்தபுரக்கி | நத்தபுரக்கி nattapurakki, பெ. (n.) மானாமதுரை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivaganga Taluk. [நத்தம்+(புறத்தி);-புறக்கு-புரக்கி(கொ.வ.);] நத்தபுரக்கி nattaburakki, பெ.(n.) மானாமதுரை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivaganga Taluk. [நத்தம்+(புறத்தி-புறக்கு-புரக்கி(கொ.வ.);] |
நத்தபோசனம் | நத்தபோசனம் nattapōcaṉam, பெ. (n.) இரவு உணவு; night meals. [நந்த → நத்த + skt போசனம்.] |
நத்தப்பலா | நத்தப்பலா nattappalā, பெ. (n.) எருக்கு பார்க்க (மூ. அ);;see erukku. |
நத்தப்பாம் | நத்தப்பாம் nattappām, பெ. (n.) 1. அழிந்துபோன ஊர்; deserted village. (RT);. 2. பகைவரால் அழிந்த ஊர்; devasted village die to invation, மறுவ, பாழுர், நத்தத்துமேடு. [நத்தம் + பாழ். – நத்தம் = ஊரின் மனை அல்லாத குடியிருப்பு நிலம்.] பகைவரால் அழிக்கப்பட்டுப் பாழடைந்த ஊர் இருந்த இடம். நத்தப்பாழ் என்று அழைக்கப்படுகின்றது. |
நத்தப்பாலை | நத்தப்பாலை nattappālai, பெ. (n.) எருக்கு; indian madar. |
நத்தப்பிலா | நத்தப்பிலா nattappilā, பெ. (n.) எருக்கு பார்க்க (மூ,அ.);;see erukku. reflexed-petalled giant Swallow-wort. [நத்தம் + பலா=நத்தப்பலா → நத்தப்பிலா.] |
நத்தமக்கள் | நத்தமக்கள் nattamakkaḷ, பெ. (n.) ஒருசார் வேளாளர் (யாழ்ப்.);: a sub-division of the vēlālar caste. [நத்தம் + மக்கள்.] நத்தம் = பார்ப்பனரல்லாதார். |
நத்தமலை | நத்தமலை nattamalai, பெ. (n.) சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chidambaram Taluk. [நத்தம்+மலை] நத்தமலை nattamalai, பெ.(n.) சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chidambaram Taluk. [நத்தம்+மலை] |
நத்தமாடி | நத்தமாடி nattamāṭi, பெ. (n.) 1. நத்தமக்கள் வகுப்பினைச் சார்ந்தவன் (யாழ்.அக);; person belonging to nattamakkal caste 2. உடையார் பிரிவு (ET Vii, 212);; a sub-division of udaiyār caste. [நத்தபாடி → நத்தமாடி=திரிபு.] |
நத்தமாதிதம் | நத்தமாதிதம் naddamādidam, பெ. (n.) சிறிய சிவப்பம்மன் பச்சரிசி; red false raw rice plant. மறுவ. சின்னம்மான் பச்சரிசி. |
நத்தமான் | நத்தமான் nattamāṉ, பெ. (n.) நத்தம்பாடி (ETVii, 212); பார்க்க;see nattam-pādi. |
நத்தமார் | நத்தமார் nattamār, பெ. (n.) நத்தமக்கள் (R.T.); பார்க்க;see natta – makkal. |
நத்தமாலகம் | நத்தமாலகம் nattamālagam, பெ. (n.) நத்தகா பார்க்க;see nattagā. |
நத்தமாலம் | நத்தமாலம் nattamālam, பெ. (n.) புன்குமரம், indian beech tree-Pongamia glabra. |
நத்தமுகை | நத்தமுகை nattamugai, பெ, (n.) இரவு; night. |
நத்தம் | நத்தம்1 nattam, பெ. (n.) 1. ஆக்கம்; growth. “நத்தம்போற் கேடும்” (குறள், 235);. 2. ஊர் (பிங்,);; town, village. “வடபுலத்தார் நத்தம்வளர” (குமர. பிர. மீனாட் பிள்ளைத்.45);. 3. ஊரின் ஆரிய ரல்லாதார்தம் வாழ்விடம்; residential portion of a village. 4. ஊரில் ஆரிய ரல்லாதார்தம் வாழ்விடம் (CG);, portion of a village inhabited by the non-Brahmins, (opp to akkirakāram); 5. ஊரின் மனையடி. (கல்வெ.);; land reserved as house-sites. 6. இடம் (பிங்.);; place, site. 7. வாழை (பிங்.); (மலை.);; plantain, 8. எருக்கு (மலை.); பார்க்க: see erukkப. 9. கடிகார முள் (வின்.);; gnomon of a dial. [நந்து+நத்து + அம்.] நந்துதல் = வளர்தல், பெருகுதல், தழைத்தல். இங்கு நந்து என்னும் வேரடி தழைத்தல் என்னும் பொருளில் வந்துள்ளது. நத்தம் = வளர்ச்சி. முதனிலை வலித்து ஈறு பெற்ற தொழிற்பெயர். அம்: முதனிலைப் பொருளிறு திருக்தமி.மர. பக். 151). நத்தம்2 nattam, பெ. (n.) 1. அழிந்துபோன ஊர்; devasted village. 2. பாலைநிலத்தார்; village of arid tract. [நொள் → நொது → நொந்து → நந்துநந்தம் → நத்தம்.]: நெகிழ்ச்சிப் பொருளை மூலமாகக் கொண்ட அழிதல் கருத்துச் சொல். பகைவரால் அழிக்கப்பட்டுப் பாழடைந்த ஊரிருந்த இடங்கள் இன்றும், நத்தப்பாழ் என்றும், நத்தத்துமேடு என்றும் சொல்லப்படும் (வே.க.3-34);. நத்தம் nattam, பெ. (n.) 1. சங்கு (சூடா.); (சீவக.547, உரை); conch, 2. நத்தை (அக.நி);: snail. [நத்தை + அம்.] நத்தம் nattam, பெ. (n.) 1. இரவு (பிங்);, night. “அமளிமேவி நத்தநடுவெழுந்து” (திருவாலவா. 38, 3);. 2. இருள் (திவா.); darkness. க. நத்தம் → Skt nakta [நந்து → நத்து + அம்.] நத்தம் nattam, பெ. (n.) புன்கு (உரி.நி.);, indian beech pongamia glabra. |
நத்தம்பாடி | நத்தம்பாடி nattambāṭi, பெ. (n.) உடையார் சாதிவகை (ET Vii, 212);, a sub-sect of the Udaiyār caste. [நத்தம் + பாடு = நத்தம்பாடு → நத்தம்பாடி] முதற்கண் வளர்நிலை உடையார்களின் ஊர் குறித்து ஆகுபெயராய்ப் பேர்குறித்து வந்த பெயர். |
நத்தம்புறம்போக்கு | நத்தம்புறம்போக்கு nattambuṟambōkku, ஊர்சார்ந்த ஆவணப்பதிவிலாத் தரிகநிலம்: unregistred land. மறுவ. புறம்போக்குநிலம், ஊர்ப் பொதுநிலம். [நத்தம் + புறம் + போக்கு.] அரசிற்கு இறைசெலுத்தும் வகைமை அற்றதும், ஊரார்க்குப் பயன்படுவதுமான மேட்டுநிலம். |
நத்தயிலி | நத்தயிலி nattayili, பெ. (r,,) எரிப்பு; pungency, acidity, store acid smell. |
நத்தராகி | நத்தராகி nattarāki, பெ. (n.) பூவாடங் கேழ்வரகென்று சொல்லப்பெறும் ஒருவகைத் தவசம் (G.Sm.D.L. 218);, a kind of rāgicalled pūvāợam kēlvaragu. |
நத்தலை | நத்தலை nattalai, பெ. (n.) பாவட்டை; pavatta indica. |
நத்தலைச்சூரி | நத்தலைச்சூரி nattalaiccūri, பெ. (n.) நத்தைச்சூரி பார்க்க;see mattai-c-curl. |
நத்தவரி | நத்தவரி nattavari, பெ.(n.) பழைய வரி வகை (SII voliv.122);; an ancient tax. [நத்தம் + வரி] |
நத்தவீரம் | நத்தவீரம் nattavīram, பெ. (n.) அரத்தவீரரிசி, (சா.அக.);; a kind of medicinal rice. |
நத்தாங்கூடு | நத்தாங்கூடு nattāṅāṭu, பெ. (n.) நத்தைக்கூடு; Snail shell. [நத்தை + கூடு.] |
நத்தாசை | நத்தாசை nattācai, பெ. (n.) 1. விருப்பம். (யாழ்ப்);; wish, desire. 2. பற்று (இ.வ.);; attachment. 3. பேராசை (யாழ்.அக.);; avarice. [நத்து+ஆசை.] |
நத்தாந்தநோய் | நத்தாந்தநோய் nattāndanōy, பெ. (n.) இராக்குருடு; மாலைக்கண்; night blindness, failure or imperfect vision at night. |
நத்தாமணி | நத்தாமணி nattāmaṇi, பெ. (n.) வேலிப்பருத்தி (மலை.); பார்க்க;see Vési-p-parutti. [உத்தாமணி → நத்தாமணி.] |
நத்தார்வை-த்தல் | நத்தார்வை-த்தல் nattārvaittal, 4. செ.குன்றாவி. (v.t.) கப்பலைக் கயிறுகட்டியிழுத்தல் (யாழ்ப்.);; to warp a vessel. [நத்தார் .+ வை-] |
நத்தி | நத்தி1 natti, பெ. (n.) மீனின் மிதவைப்பை (இ,வ.);; swimming bladder of a fish. நத்தி2 natti, பெ. (n.) இன்மை; negation. “நத்தியு முடைத்தன் றாகில்” (மேருமந்,706);. |
நத்திசின்னன் | நத்திசின்னன் nattisiṉṉaṉ, பெ. (n.) பரங்கிவைப்பு நஞ்சு அல்லது வீரம்; corrosive Sublimate. |
நத்திதம் | நத்திதம் naddidam, பெ. (n.) நாணயமிடப் பெற்றது (யாழ்.அக.);; that on which a person stakes his credit. |
நத்திநினை | நத்திநினை nattiniṉai, பெ. (n.) புன்கங்கொட்டை; nut of Indian beech tree. |
நத்திபத்திரி | நத்திபத்திரி nattibattiri, பெ. (n.) நந்தியாவட்டம்; common wax flowered dog-bane. |
நத்திரி | நத்திரி nattiri, பெ. (n.) கோழிமுட்டை; fow’s egg. |
நத்திவிருட்சம் | நத்திவிருட்சம் nattiviruṭcam, பெ. (n.) 1. தூணிமரம்; bastard cedar cedrelatoora. 2. சின்னி மரம்; indian shrubby copper leaf. [நந்தி + skt விருட்சம்.] |
நத்திவேர்சத்தெலும்பு | நத்திவேர்சத்தெலும்பு nattivērcattelumbu, பெ. (n.) முழங்காலெலும்பு; knee Cap-Patella. |
நத்து | நத்து nattu, பெ. (n.) 1. ஓரிசைக்குழல்; a kind of flute.(1:138);. 2. ஏக்கம் கொள்ளுதல்; disappointed aspiring, yearning. [நன்-நத்து] நத்து nattu, பெ.(n.) 1. ஓரிசைக்குழல; a kind of flute.(1:138);. 2. ஏக்கம் கொள்ளுதல்; disappointed aspiring, yearning. [நன்-நத்து] நத்து1 naddudal, 5. செ.குன்றாவி. (v.t.) விரும்புதல்; to desire, long for hanker after, love. “நாரியார் தாமறிவர் நாமவரை நத்தாமை” (தமிழ்நா.74);. தெ, ம,. நத்த, நத்து. [நச்சு → நத்து-.] நத்து2 nattu, பெ. (n.) 1. நத்தம்2 பார்க்க;see natam. “நத்தொடு நள்ளி” (பரிபா.10.85);. 2. மூக்கணிவகை; a nose ornament. “நத்தையணி நாசிவள்ளி” (தனிப்பா. ii.234,557);. 3. மூக்கு; nose. தெ., ம., நத்த. நத்து3 nattu, பெ. (n.) கூகை வகை (வின்.);; a kind of owl. நத்து4 nattu, பெ. (n.) 1. நத்தை; snail. “நத்தொடு நள்ளி நடையிறவு” (பரிபா.10.85);. 2. சங்கு ; conch. 3. உப்பு; salt. [நந்து → நத்து.] நத்து5 nattu, பெ. (n.) விருப்பம்: desire. “நன் நத்தாக” (திருப்புகழ்,84);. |
நத்துருவண்ண நாதம் | நத்துருவண்ண நாதம் natturuvaṇṇanātam, பெ. (n.) ஈயமணல் (யாழ்.20);; sand contalning lead. |
நத்துளி | நத்துளி nattuḷi, பெ. (n.) அத்திப்பால்; milk from fig tree. |
நத்தை | நத்தை1 nattai, பெ. (n.) கருநந்து (திவா.);. snail, Buccinum; 2. வழலையுப்பு; a kind of salt. 3. கூன்; hunch back. தெ., ம., நத்த துளு, நர்தெ. [நந்து = மெல்லிய சதையுள்ள நீருயிரி நந்து → நத்து → நத்தை. (வே.க. 28);. நத்தை nattai, பெ. (n.) 1. கொற்றான் ‘ட’ parasitic leafless plant. 2. கடுகு (மலை.);: mustard. 3. நாரத்தை; bitter organge. 4. பூச்சிக் கூடு; whelk buceinum. |
நத்தைகுத்தி | நத்தைகுத்தி nattaigutti, பெ. (n.) பெருநாரை (யாழ். அக.);; adjutant or gigantic crane. [நத்தை + குத்தி] மீன்குத்தி போல, நத்தையைக்குத்தி உண்ணும் நாரையாக இருக்கலாம். |
நத்தைகுத்திநாரை | நத்தைகுத்திநாரை nattaiguttinārai, பெ. (n.) 1. நாரை வகை (வின்.);, anastomus ascitans, as living on molluscs; 2. நாரைவகை; hair-crested stork, Leptoptilos javanica. [நத்தைகுத்தி + நாரை.] |
நத்தைகொத்தி | நத்தைகொத்தி nattaigotti, பெ. (n.) நத்தைகுத்தி (யாழ்.அக,); பார்க்க;see malaikutti. [நத்தை + கொத்தி.] |
நத்தைக்கட்டை | நத்தைக்கட்டை nattaikkaṭṭai, பெ. (n.) சாரணை; one slyed-Trianthema monogyna. [நத்தை + கட்டை] |
நத்தைக்கறி | நத்தைக்கறி nattaikkaṟi, பெ. (n.) நத்தையின் ஒட்டிலிருந்து எடுக்கப்படும் சதைப்பகுதி; the dish of snail flesh. [நத்தை + கறி.] |
நத்தைக்கிளிஞ்சல் | நத்தைக்கிளிஞ்சல் nattaikkiḷiñjal, பெ. (n.) நத்தாங்கூடு; snail shell, cockle shell. [நத்தை+ கிளிஞ்சல்.] |
நத்தைக்கூடு | நத்தைக்கூடு nattaikāṭu, பெ. (n.) நத்தையோடு பார்க்க;see mattai-y-oodu. [நத்தை +கூடு.] |
நத்தைச்சதை | நத்தைச்சதை naddaiccadai, பெ. (n.) நத்தைன்கறி; snail flesh. [நத்தை + சதை.] நீண்ட வாணாளுக்குப் பயன்படும். |
நத்தைச்சாதி | நத்தைச்சாதி nattaiccāti, பெ. (n.) நத்தைவகை ; lanthina. |
நத்தைச்சுண்டி | நத்தைச்சுண்டி nattaiccuṇṭi, பெ. (n.) நத்தைக்சூரி பார்க்க;see nata.c-curi. [நத்தை +கண்டி.] |
நத்தைச்சுண்ணாம்பு | நத்தைச்சுண்ணாம்பு nattaiccuṇṇāmbu, பெ. (n.) நத்தையோட்டை நீற்றிச் செய்த சுண்ணாம்பு; shell-lime. மறுவ: கிளிஞ்சில் கண்ணாம்பு. [நத்தை + சுண்ணாம்பு.] |
நத்தைச்சூரி | நத்தைச்சூரி nattaiccūri, பெ. (n.) செடிவகை (மலை);: bristly button weed, Spermacoce hispida, மறுவ, நத்தைச்சுண்டி, குழிமீட்டான். இதன் வேரை நத்தைக் கூட்டில் காண்பிக்க, ஒடு சூரியனைப் போல் இரண்டாக வாய் பிளந்துகாட்டும். |