தலைசொல் | பொருள் |
---|---|
ந் | ந் n, மெய்களுள் எட்டாவதானதும், பல்லின் மூக்கொலியுடையதுமான மெல்லெழுத்து; the eighth consonant. Dental nasal. [ந் = தகரம் பிறக்கின்ற இடத்தில் நாவும், பல்லும் நிற்க, வாய்வழியாக மட்டுமன்றி. மூக்கின் வழியாகவும், உயிர்வளி வெளிவர, மேலண்ணம் கீழிறங்க ஒலிக்கும். மூக்கொலியாதலின் மெல்லெழுத்து எனப் பெயர் பெறும். பந்து, கந்து, சந்து, என்பது போல, தகரத்தின் முன்வரும் இடங்களில் மட்டும், தகரத்திற்கு ஒத்த மெல்லெழுத்தாகவே, இது ஒலிக்கும்.] |