செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
நோ

நோ1 nō,    நகரமெய்யும் ஓகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய் எழுத்து; the compound of ‘n’ and ‘o’

     [ந் + ஒ – நோ. இஃது ஒரெழுத்து ஒரு சொல்லாகவும் (ஒருமொழியாகவும்); வரும்.]

 நோ2 nōtal,    17 செ.கு.வி. (v.i.)

   1. நோவுண்டாதல்; to feel pain ache, suffer. smart.

கால் நொந்தது.

   2. வருந்துதல்; to be grieved, distressed in mind, to feal.

     “ஊரன்மீ தீப்பறக்க நொந்தேனும் யானே.” (நாலடி,389);.

     “நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி” (குறள்,1308);.

   3. துன்பத்தைச் சொல்லுதல்; to complain.

     “நோவற்க நொந்த தறியார்க்கு” (குறள்,877);.

   4. சமைத்த வுண்டி பதனழிதல்; to be injured, bruished, as a plant, fruit;

 to be spoiled, as boiled rice.

     “நொந்தன்னம்” (பதார்த்த.1459);.

சோறு நொந்துபோய் விட்டது. (உ.வ.);.

   5. வறுமைப்படுதல்; to be impoverished, to grow poor.

நொந்த குடி.

   6. துன்பப்படுதல்; to suffer.

   7. மெலிதல்; to lean.

   8. நொய்ய தாகுதல்; to light.

   9. தளர்தல்; to loose.

   ம.நோ(க);. க.நோ;   தெ.நொச்சு, நொகுலு;   கோத. நொவு;   துட. நு;   து. நோபுனி;   கொலா. ஒய் (wound);;   நா(ச);. ஒய் (to be painfufu);;   பர். நொவ்;   கட. நொய் (to be painful);;   கோண். நொய்யாநா;   கூ. நோவ;   குவி. நோகி;   குரு. நுஞ்ச்நா;மா. நுந்சே.

     [நுள் → நொள் → நொய் → நோய் → நோ → நோ-தல்(சு.வி.40);. நுள் = சிறுமை, மென்மைதுன்பம்]

வறுமையும் நோய் போன்ற துன்பமாகக் கருதப்படுவதால், நோய் நொடி யென்றும், நோவு நொடி என்றும் இணைத்துச் சொல்வது மரபு.

 நோ3 nōtal,    15 செ.குன்றாவி. (v.t)

   வெறுத்தல்; to hate.

     “ஏதிலரை நோவதெவன்” (நீதிநெறி.25);.

     [நோய்1 → நோ → நோ-தல்.]

 நோ4 nō, பெ. (n.)

   1. வலி; aching, pain, smart.

   2. துன்பம்; distress, grief.

     “திறன் அல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று” (குறள்,157);.

   3. நோய் (வின்.);; Illness.

   4. சிதைவு (வின்.);; injury, bruise, as in the body, a tree, a fruit.

   5. நலிவு, வலிமைகுறைவு; weakness, infirmity.

     [நோய்1 → நோ.]

நோகரிகம்

 நோகரிகம் nōgarigam, பெ. (n.)

   நித்தக்கத்தரி; long brinjal, Solaman melongena. (சா.அக.);.

நோகாது

 நோகாது nōkātu, வி.எ. (adv.)

நோகாமல் பார்க்க;see nokamal.

     “நோகாது உணர்வோர் கல்வியை நோற்பார்” (பழ.);.

     [நோ → நோகாது.]

நோகாமல்

 நோகாமல் nōkāmal, வி.எ. (adv.)

   வலிக்காமல்; without painful.

கை, கால் நோகாமல் பொருளீட்ட முடியுமா?. உடம்பு நோகாமல் உட்கார்ந்து சாப்பிடமுடியுமா? நோகாமல் அடிக்கிறேன் ஓயாமல் அழு. (பழ.);

நோகாமல் நோன்புகும்பிட முடியுமா?

     [நோ → நோகாமல்.]

நோகு-தல்

நோகு-தல் nōkudal,    5.செ.கு.வி. (v.i.)

   வருந்துதல்; மனம் புண்படுதல்; get hurt of feelings, distressed in mind.

அவன் மனம் நோகும்படி நடந்து கொள்ளாதே. உன் பண்பற்ற பேச்சும் செயலும் அவரை நோகச்செய்து விட்டது.

     [நோ → நோகு-தல்.]

நோக்க

நோக்க nōkka, இடை. (part.)

   ஒர் உவம உருபு (தொல்,பொருள்.286, உரை);; a particle denoting comparison.

     “அன்ன ஆங்க மான இறப்ப என்ன உறழத் தகைய நோக்கொடு கண்ணிய எட்டும் வினைப்பால் உவமம்” (தொல். பொருள். உவம.12);.

     [நோக்கு → நோக்க.]

நோக்கட்டாமரம்

 நோக்கட்டாமரம் nōkkaṭṭāmaram, பெ. (n.)

   இலகோட்டா (L.); மரவகை; loquat.

     [நோக்கு + எட்டா + மரம். மிக உயர்ந்த மரம்.]

நோக்கனோக்கம்

நோக்கனோக்கம் nōkkaṉōkkam, பெ. (n.)

   மனத்தால் நோக்கும் நோக்கம்; discernment, as seeing through the mind’s eye.

     “நோக்க னோக்க மவ்விரண்டன் மருங்கி னேதுவு மாகும்” (தொல்.சொல்.93);.

     [நோக்கு + அல் + நோக்கம். நோக்கு = பார்வை. கண்ணால் அன்றி மனத்தால் நோக்கும் பார்வை என்று பொருள்படும்.]

நோக்கன்

நோக்கன் nōkkaṉ, பெ. (n.)

   1. இன (சாதி); வகை (ET.V. 416);; a caste.

   2. கழைக்கூத்தன் (வின்.);; pole-dancer, mountebank.

நோக்கப்பண்ணல்

நோக்கப்பண்ணல் nōkkappaṇṇal, பெ. (n.)

   1. வலியுண்டாகச்செய்கை; causing pain.

   2. துன்பப்படுத்துகை; causing distress. (சா.அக.);.

     [நோவப்பண்ணல் → நோகப்பண்ணல் → நோக்கப்பண்ணல் (உ.வ.);]

நோக்கப்பண்ணல் என்றே வழக்கில் இருப்பின் அது பார்ப்பித்தல் என்னும் பொருளும் தரும் குழப்பம் உளது.

நோக்கம்

நோக்கம்1 nōkkam, பெ. (n.)

   1. கண்(திவா.);; eye.

   2. பார்வை; eyesight, look, gaze, glance, view.

     “கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம்” (குறள்,1092);.

     “நோக்கத் தொதுங்கு” (பழ);.

நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன்” (பழ.);.

   3. கோள் (கிரக); நோக்கு; aspects of a planet.

   4. தோற்றம்; appearance, expression, cast of countenance.

     [நோக்கு → நோக்கம்.]

 நோக்கம்2 nōkkam, பெ. (n.)

   1. உயர்ச்சி (வின்.);; height, elevation.

   2. அழகு; beauty, attractiveness.

     “மருணோக்க மடிந்தாங்கே மயல்கூர் கிற்பான் மன்னோ” (கலித்.10);.

     “யாவர்க்கு நோக்கலாப் பெண்ணினோக்கு டையாள்” (கம்பரா. கர.6);.

   3. காவல் (யாழ்.அக.);; watch.

   4. இலக்கு, கருத்து; design, object, intention, aim, motive.

நீ அப்படிச் செய்வதற்கு நோக்க மென்ன? ஆதரவற்றவர்க்கு உதவுவதே எங்கள் நோக்கம்.

   5. அறிவு; sense, intelligence.

     “மருளிகொண்ட மடநோக்கம்” (கலித்.14);.

     “நுண்ணி தினுணர் தனுமைந்த நோக்கில்” (மதுரைக்.517);.

   6. கவனம்; attention, observation.

படிப்பில் நோக்கமாயிரு.

   7. விருப்பம் (யாழ்.அக.);; desire.

   8. குறிப்பு; indication sign.

வானம் மழை நோக்கமாயி ருக்கிறது.

ம. நோக்கம்

     [நோக்கு → நோக்கம். = ஒருபொருளின் மேல் உள்ள நாட்டம்]

நோக்கர்

 நோக்கர் nōkkar, பெ. (n.)

நோக்கன் பார்க்க;see nõkkan.

     [நோக்கன் → நோக்கர்.]

நோக்கர்கள்

 நோக்கர்கள் nōkkarkaḷ, பெ. (n.)

   வருங்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னரே கூறக்கூடிய அளவுக்கு ஒரு துறையில் நிகழ்வதை ஆழ்ந்து கவனிப்பவர்கள்; observers.

வரும் ஒலிம்பிக்கில் இந்தியா பல தங்கப்பதக்கங்களைப் பெறும் என்று விளையாட்டு நோக்கர்கள் கூறுகின்றனர். வரும் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றிவாய்ப்புக் குறைவு என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

     [நோக்கு → நோக்கர் + கள்.]

நோக்கலங்காரம்

நோக்கலங்காரம் nōkkalaṅgāram, பெ. (n.)

   தற்குறிப்பேற்றம் (வீரசோ.,அலங்.25);; a figure of speech.

     [நோக்கு + அலங்காரம். நோக்கு = பார்வை. Skt, அலம்கார → த. அலங்காரம் = அணிவகை..]

நோக்காடு

நோக்காடு nōkkāṭu, பெ. (n.)

   1. நோவு, வலி; pain, pang, agony,

   2. அரச (இராச); நோக்காடு (வின்.);; pangs of child-birth.

   3.நோய்; sickness, disease.

     ‘கண்ணோக்

காடாம்” (பணவிடு.300);.

கொள்ளையா நோக்காடா? (உ.வ.);.

   4. மனநோய் (வின்.);; mental worry.

   5. வறுமை (யாழ்ப்.);; reduced circumstances, poverty.

     [நோ + காடு → நோக்காடு. கடு → காடு. கடுகுதல் = மிகுதல்.]

நோக்காமை

நோக்காமை nōkkāmai, எ.ம.வி. (n.v.)

   பார்க்காமை;பார்க்காத தன்மை, நோக்குதல் என்பதன் எதிர்மறைவினை.

 have not seen have not look.

     “குறிக்கொண்டு நோக் காமை அல்லாமல் ஒருகண் சிறக் கணித்தாள் போல நகும்” (குறள்,1095);.

     [நோக்கு + ஆ + மை. ‘ஆ’-எதிர்மறை. ‘மை’-பண்பு ஈறு (விகுதி.);]

நோக்காலுரை-த்தல்

நோக்காலுரை-த்தல் nōkkāluraittal,    4 செ.கு.வி. (v.i)

   பார்வையால் உணர்த்துதல்; to communicate by mere look, as a guru.

     “குறுமுனிக்குத் தமிழ் நோக்கா லுரைத்த வாறும்” (திருவாலவா. பதிகம்.3);.

     [நோக்கு → நோக்கால் + உரை-த்தல்.]

நோக்கால்

 நோக்கால் nōkkāl, பெ. (n.)

   நுகக்கால் (நெல்லை);; yoke.

     [நுகக்கால் → நோக்கால்]

நோக்கி

நோக்கி nōkki, வி.எ. (adv.)

   1. குறிப்பிட்ட ஒன்றை அல்லது ஒருவரை இலக்காகக் கொண்டு; towards;

 in the direction of

ஏவுகணை விண்னை நோக்கிப் பாய்ந்தது. ஒசை வந்த திசையை நோக்கி ஒடினாள். அவன் காட்டை நோக்கி நடந்தான்.

   2. பார்த்து;to see.

     “நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர்” (குறள்,1093);.

எபிரேயம். நோக்கக்.

     [நோக்கு → நோக்கி.]

நோக்கிமாடை

நோக்கிமாடை nōkkimāṭai, பெ. (n.)

   காசு (நாணய);வகை; a coin.

     “பண்டாரத்தில் ஒடுக்கின நோக்கி மாடை ஒன்றும்” (தெ.க.தொ.4.293);.

     [நோக்கு + மாடை. மாடு + ஐ-மாடை = காசுவகை.]

நோக்கர்களால், ஆய்ந்து நோக்கப்பட்ட செல்வம். மாடு = செல்வம்

     “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை”. (குறள்,400);.

நோக்கியநோக்கம்

நோக்கியநோக்கம் nōkkiyanōkkam, பெ. (n.)

   கண்களால் நோக்குகை (தொல்.சொல்.89, இளம்பூ.);; seeing through the eyes.

     [நோக்கு + இ + அ – நோக்கிய + நோக்கம். ‘இ’ -சாரியை. ‘அ’ பெயரெச்ச ஈறு.]

நோக்கு

நோக்கு1 nōkkudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. கூர்ந்து பார்த்தல்; to see, look at, behold, view.

     “நோக்கினாள் நோக்கெதிர்நோக்குதல்” (குறள்,1082);.

     “நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா” (தொல்,சொல்.வேற்று.11);.

எத்திசையில் நோக்கினும் பச்சைப் பசேலென்ற வயலைக்காணமுடிகிறது. அவள்தலை நிமிர்ந்து என்னை நோக்கினாள்.

     “யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்” (குறள்,1094);.

   2. சிறப்பாய்க் கருதுதல்; to consider, reflect.

     “அறனோக்கி யாற்றுங்கொல் வையம்” (குறள்,189);.

     “ஒன்று நோக்கலருன் வலியோங்கறனின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்” (கம்பரா. கரன்.5);.

   3. கவனத்தில்; to regard, pay attention to.

     “நச்சாமை நோக்காமை நன்று” (ஏலாதி.12);.

கட்டுரை ஆசிரியரின் மொழிநடையை நோக்கும்போது என்னதோன்றுகிறது?

   4. கவனித்துத் திருத்துதல்; to arrange, put in order.

     “புனையிழை நோக்கியும்” (கலித்.76);.

   5. காத்தல்; to keep product, save.

     “நோக்காது நோக்கி” (சி.போ. 1:4, வெண்.பக்.79);,

   6. கவனித்துச் செய்தல்; to do, perform.

     “இவற்றை மும்மைசேர் யாண்டு நோக்கு” (திருவாலவா.34:15);.

   7. ஒத்தல்; to resemble.

     “இந்துநோக்கிய நுதலியை” (கம்பரா.சூர்ப்ப96);.

   8. ஒப்பிட்டுப் பார்த்தல்; to compare.

அவனை நோக்க இவன் நல்லவன்.

   9. படித்தல்; to read.

     “இறைவன் கொண்டாங்கது நோக்குமே” (சீவக.2586);.

   10. விரும்புதல் (யாழ்.அக.);; to desire.

   11. அணுகுதல்; approach.

எந்தச் செய்தியையும் பொறுமையாக நோக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். அறிவியல் அடிப்படையில் இப்பாடலை நோக்குவோம்.

   ம. நோக்குக;க. நோடு, இ. தேக்.

     [நுல் (=கூர்மை); → நுள் → நொள் → நோள் → நோட்கு → நோக்கு → நோக்கு-தல் (வே.க.);]

     [நொள் → நொழு → (நொழுகு); → நோக்கு → நோக்கு-தல் (க.வி.45);]

 நோக்கு2 nōkkudal,    5 செகுன்றாவி. (v.t)

   1. கண்காணித்தல்; to supervise.

     “இம்மடம் நோக்கும் திருமேனிக்கு” (தெ.க.தொ4.17);.

   2. நுழைந்து பார்த்தல்; to peep in or into to put the head in and look.

   3. நுட்பமாய்ப் பார்த்தல்; to see minute.

   4. அகக்கண்ணால் பார்த்தல்; to see inner eyes.

     [நோக்கு1-தல் → நோக்கு2-தல்.]

 நோக்கு3 nōkku, பெ. (n.)

   1. நோக்குங் கண்; looking eye.

     “மலர்ந்த நோக்கின்” (பதிற்றுப்.657);.

   2. கருத்தோடு கூடிய பார்வை;   கண்ணோட்டம்; look, sight;

 point of view.

     “செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்” (நாலடி,298);.

உலகநோக்கு அவர்கவிதையில் இல்லை.

     “கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது” (குறள்,1092);.

     “யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும்” (குறள்,1094);.

   3. சிறப்பாகப் பார்த்தற்கேற்ற அழகு; beauty.

     “நோயிகந்து நோக்கு விளங்க” (மதுரைக்.13);.

   4. சிறந்த கருத்து; meaning, intention.

     “நூலவர்நோக்கு” (திரிகடு,29);.

   5. கூரிய அறிவு; knowledge.

     “நுழைந்த நோக்கிற்கண்ணுள் வினைஞர்” (மதுரைக். 517);.

   6. சிறப்பாகக் கருதற்கேற்ற பெருமை; greatness.

     “நோக்கிழந்தனர் வானவ ரெங்களால்” (கம்பரா. கும் பக.328);.

   7. சிறந்தநடை; mode, style.

     “சொன்னோக்கும் பொருணோக்கும்” (அட்டப். திருவரங்கக். தனியன்,2);.

   8. வேடிக்கை கூத்துகளுள் ஒன்று; a kind of dance.

நோக்கத்தொதுங்கு (பழ.);.

நோக்க நோக்குவ நோக்காமுன் நோக்குவன் (பழ.);.

   9. நோக்கம்; objective, goal.

ஆய்வின் நோக்கைப் பொறுத்தே அதன் போக்கும் அமையும்

   ம. நோக்கு;இ. தேக்.

     [நுல் (=கூர்மை,நுண்மை, இளமை); → நுள் → நொள் → நோள் → நோட்கு → நோக்கு. ஒ.நோ. கொள் → கொள்கு → கொட்கு → கொக்கு = வளைந்த கழுத்துள்ள பறவை (வே.க.);]

     [முள் → மொள் → நொள் → (நொழு);(நொழுகு); → நோக்கு = நுழைந்துபார்த்தல், நுட்பமாய்ப்பார்த்தல், அகக்கண்ணால் பார்த்தல் (க.வி.45);]

 நோக்கு4 nōkku, பெ. (n.)

   ஒசை முதலியவற்றால் கேட்பாரை மீட்டுத் தன்னை நோக்கச் செய்யும் செய்யுளுறுப்பு (தொல்.பொருள்.செய்.103);; attractive grace, an element of poetic art.

     [நோக்கு3 → நோக்கு4 = கூர்ந்து நோக்கிச் சிறப்புப் பொருள் காணுமாறு

அமைக்கும் எழுத்துஞ்சொல்லுமான செய்யுளுறுப்பு.

     “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப்படுமே” (தொல்,பொருள். செய்.103);.]

நோக்கு என்பது, மாத்திரை முதலாகிய உறுப்புகளைக்கேட்போர்க்கு நோக்குப்படச் செய்தல்.

யாதானும் ஒன்றைத் தொடுக்குங் காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிதுநோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை… ஒரடிக்கண்ணும் பலவடிக் கண்ணும் நோக்குதல் கொள்க. இஃது ஒரு நோக்காக ஓடுதலும் பல நோக்காக ஒடுதலும் இடையிட்டு நோக்குதலும் கொள்க. (தொல்.செய்.100 இளம்);. மாத்திரை முதலிய உறுப்புக்களைக் கேட்போர்க்கு நோக்குப்படச் செய்தல் (தொல்,பொருள்.313 பேரா.);. மாத்திரை முதலிய உறுப்புகளை யுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குப்படச் செய்தல் (தொல்,பொருள். செய்.1.நச்);. மாத்திரை முதலாக நிரம்பும் அடிகளாலாய தொடையுடையவாஞ் செய்யுள் நடந்த அடி எத்துணையவாயினும் அவை முடி யுங்காறும் வெள்ளைமையும் பிள்ளை மையுமின்றி வந்த சொற்றொடர் கேட்டோர் மறித்து நோக்கிப் பயன் கொள்வதோர் கருவியாகிய யாப்புக்கூறு (மாறனலங்காரம்);.

 நோக்கு5 nōkku, இடை. (part.)

   ஓர்உவமவுருபு (தொல்.பொருள்.287);; a particle of comparison.

நோக்குடைப்பொருள்

நோக்குடைப்பொருள் nōkkuḍaipporuḷ, பெ. (n.)

   1. குறிப்புப் பொருள்; suggested meaning.

   2. கருதற் சொற்களாலமைந்த சுவையுடைப் பொருள் (வின்.);; interesting matter expressed in obscure language.

     [நோக்கு + உடைப்பொருள். உடைப்பொருள் = உடைமைப்பொருள்.]

நோக்குநோக்கி

 நோக்குநோக்கி nōkkunōkki, பெ. (n.)

   ஆள்வாடைத்தட்டிச்செடி; an unknown plant. (சா.அக.);.

நோக்குரு

நோக்குரு nōkkuru, பெ.(n.)

   1 பார்வைக்காகத் தரப்படும் ஒரு பொருளின் மிகைப் பொருள்; sample of a thing or article. 2. ஒரு பொருளை முற்றிலும் ஒத்திருக்கும் செயற்கை வடிவம்;

 a model.

மறுவ மாதிரி

     [நோக்கு+உரு]

 நோக்குரு nōkkuru, பெ. (n.)

   மூலப்பொருளுக்கு எடுத்துக்காட்டான பொருள் (மாதிரி);; model, sample.

     [நோக்கு+உரு]

நோக்கெதிர்நோக்கு-தல்

நோக்கெதிர்நோக்கு-தல் nōkkedirnōkkudal,    5 செ.கு.வி. (v.i.)

   தலைவன் நோக்கியவிடத்து தலைவி எதிர் நோக்குதல்; to gaze into another’s eye, as lovers.

     “நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக் கொண்டன்ன துடைத்து” (குறள்,1082);

     [நோக்கு + எதிர் + நோக்கு-தல்.]

நோங்கு-தல்

நோங்கு-தல் nōṅgudal,    5.செ.கு.வி. (v.i.)

   வீட்டுத்திசை நோக்கி விருப்பொடு பார்த்தல்; to desire look.

     [நோக்கு-தல்(= பார்த்தல்); → நோங்குதல்.]

நோசல்

 நோசல் nōcal, பெ. (n.)

   நோவு (வின்.);; sickness, pain.

     [நோதல் → நோசல்]

நோசிதம்

 நோசிதம் nōcidam, பெ. (n.)

   கொடிக்குறிஞ்சா; small Indian ipecacunha, Gymnema Sylvestris. (சா.அக.);.

நோச்சோளம்

 நோச்சோளம் nōccōḷam, பெ. (n.)

   வெண்சோளம்; white maize (சா.அக.);.

நோஞ்சல்

 நோஞ்சல் nōñjal, பெ. (n.)

   மெலிவு; emaciation.

     [நோய் → நோய்ஞ்சல் → நோஞ்சல்.]

நோஞ்சான்

 நோஞ்சான் nōñjāṉ, பெ. (n.)

   நோய் முதலியவற்றால் மெலிந்தவன் (நெல்லை);; feeble, invalid person.

சத்துணவு இல்லாத நோஞ்சான் குழந்தைகள். நேஞ்சான் மாடு.

     [நோய் → நோய்ஞ்சான் → நோஞ்சான் = உடல்வலிமையற்று மெலிந்து காணப்படு பவன்.]

நோடாலம்

நோடாலம் nōṭālam, பெ. (n.)

   1. களிப்பு,உவப்பு (உல்லாசம்);; jocularity, pleasantry.

   2. ஏளனம்; mockery.

   3. நனிநாகரிகம்; fastidiousness.

   4. புதுமை (யாழ்.அக.);; newness.

     [நட லம் → நாடலம் → நோட லம். நடலம் = மிகு நாகரிகம், ஏளனம், இகழ்ச்சி.]

நோடு-தல்

நோடு-தல் nōṭudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. ஆராய்ந்து பார்த்தல்; to research.

   2. கவனித்தல்; to take care of.

க. நோடு, F.L. notum, to know: E.note

     [நுல் (=நுண்மை); → நுள் → நொள் → நோள் → நோடு → நோடு-தல் (இவ்வினை இன்று வழக்கற்றது); = தேடுதல், ஆய்தல் ஆராய்தல், பார்த்தல் (மு.தா.);]

நோட்டகன்

 நோட்டகன் nōṭṭagaṉ, பெ. (n.)

ஆய்வு செய்பவன் (சோதனைக்காரன்);,

 one who .BSחווחexa

     [நோடு-நோட்டம்-நோட்டகன்]

நோட்டக்காரன்

நோட்டக்காரன் nōṭṭakkāraṉ, பெ. (n.)

   1. காசாயும் வண்ணக்கன்; shroft.

     “நோட்டக்காரர் நெஞ்சடையக் கூப்பிடுவது” (பணவிடு.182);.

   2. காசு, மணிகள் (நாணயம், இரத்தினம்); முதலியவற்றின் குணங்களையறிந்தவன் (இ.வ.);; expert in appraising coins, gems etc.

   ம.நோட்டக்காரன்;க. நோட்டகார (g);

     [நோட்டம் → நோட்டக்காரன் = காசு, பொன்மணி ஆய்வோன். வண்ணக்கன்.]

நோட்டன்

 நோட்டன் nōṭṭaṉ, பெ. (n.)

நோட்டக்காரன் பார்க்க;see nostakkāran.

     [நோட்டம் → நோட்டன்]

நோட்டம்

நோட்டம்1 nōṭṭam, பெ. (n.)

   1. தட்டிப்பார்த்தல் முதலிய முறைகளைக் கொண்டு புரியும் பொன் வெள்ளிக்காசு பண ஆய்வு; examination of coins; assaying.

   2. பொன்மணி முதலியவற்றின் ஆய்வு; scrutiny of gems, precious metals, etc.

   3. விலைமதிப்பு; value.

அதன் நோட்ட மறியான் (வின்.);.

   4. மதிப்பு (வின்.);; criticism, as by a rival artist or workman.

   5. போட்டி; competition.

நோட்டத்திலே விலை வைத்துவிட்டார்கள் (வின்.);.

   6. வெல்ல முயல்கை; attempt at wit; endeavour to excel, hinder or baffle another in speech.

     ‘வார்த்தை நோட்டத்தில் என்னபலன்’ (வின்);.

   7. மதிப்பிடும் அல்லது தெரிந்து கொள்ளும் நோக்கம் கொண்ட பார்வை; searching glance.

தலைவர் மேடை ஏறியவுடன் கூட்டத்தை ஒரு நோட்டம் விட்டார்.

பொருள் விற்கும் சாக்கில்வந்து திருடப்போகிற வீட்டை ஒரு நோட்டம் விட்டான்.

   ம. நோட்டம்;   கு. நோட்ட;   கோத நொட் (examine);;   க. நோடு;து. நோட.

     [நுல் → நுள் → நொள் → நோள் → நோடு நோட்டம் (வே.க.); = ஆய்வு ஆராய்ச்சி]

 நோட்டம்2 nōṭṭam, பெ. (n.)

   கணக்கு; account.

     “நோட்டத்திற் செல்லெழுதி” (சரவண. பணவிடு.84);.

     [நோட்டம்1 → நோட்டம்2]

நோட்டம்பார்

நோட்டம்பார்1 nōṭṭambārttal,    4.செ.குன்றாவி. (v.t.)

   1. தகுதியறிதல் (யாழ்.அக.);; to consider the fitness of.

   2. விலை மதிப்பறிதல் (வின்.);; to appraise

   3. நிலைமையாய்தல்; to consider one’s condition, state.

   4. வேவு பார்த்தல்; to spy.

     [நோட்டம் + பார்-த்தல்.]

 நோட்டம்பார்2 nōṭṭambārttal,    4 செ.கு.வி. (v.i)

   மிகக் கண்டிப்பாயிருத்தல் (வின்.);; to be too strict in dealings.

     [நோட்டம் + பார்-த்தல்.]

நோட்டம்பார்த்தல் : எடுத்துக் கொண்ட மாழைக் கலவையிலே உள்ள மாழைகளின் (உலோகங்களின்); அளவை மதிப்பிடுவது நோட்டம் பார்த்தல் எனப்படும். சுரங்கங்களில் கிடைக்கும் மூலப்பொருள்களில் எந்த வகை மாழை எந்த அளவில் உள்ளது என மதிப்பிட்டு, அம் மூலங்களை (தாதுக்களை); வெட்டி யெடுப்பது நன்மைபயக்குமா என ஆராய்ந்து முடிவு செய்ய நோட்டம் பார்த்தல் மிகவும் பயன்படுகிறது. காசுகள், நகைகள் முதலியன செய்யப்பயன்படும் விலையுயர்ந்த தங்கம் போன்ற மாழைகளின் கட்டிகள் தூய்மையானவையா என ஆராயவும் இது பயன் படுகிறது. மாழைக் (உலோகக்); கலவைகளின் குறைகளைக் கண்டு ஆராயவும் பயன்படுகிறது. ஆராயவேண்டிய மாழை (உலோகம்); எதுவோ அதைப்பொறுத்து, நோட்டம் பார்க்கப் பலமுறைகள் வழக்கத்தில் இருக்கின்றன. ஆனால், பொதுவாக இருமுறைகள் உண்டு. அவை:

   1. உலர்முறை (dry process);.

   2. ஈரமுறை (wet process); மூலங்களில் உள்ள மாழை வகைகளை உருக்கிப்பின் பிரிப்பது உலர்முறை. மூலங்களில் உள்ள மாழைகளை வேதியியல் (இரசாயன); முறையில் பிரித்தல் ஈரமுறை.

நோட்டம்பேசு-தல்

நோட்டம்பேசு-தல் nōṭṭambēcudal,    5.செ.கு.வி. (v.i.)

   பிறர் தன் சொல்லுக்கு உட்படும்படிப் பேசுதல் (யாழ். அக.);; to overcome by skilful speech.

     [நோட்டம் + பேசு-தல்.]

நோட்டீசு

 நோட்டீசு nōṭṭīcu, பெ.(n.)

   அறிவிப்புச்சீட்டு; notice.

த.வ. அறிக்கை

     [E. notice → த. நோட்டீசு]

நோட்டு

நோட்டு nōṭṭu, பெ.(n.)

   1. உறுதிச்சீட்டு; promisory note.

   2. அரச அறிவிப்பு; king’s written announcement.

   3. அரசாங்கத்தால் வெளியிடும் பணத்தாள்; currency note.

     ‘ஐந்து உருவா நோட்டுக் கொடுத்தான்?’.

   4. எழுதுவதற்குரிய குறிப்பேடு; note book.

   5. ஆங்கிலப் பண்வகை; an English tune.

     [E. note → த. நோட்டு]

நோணாவட்டம்

 நோணாவட்டம் nōṇāvaṭṭam, பெ. (n.)

நொறுநாட்டியம் (இ.வ.); பார்க்க;see morய. Nättiyam.

நோணாவட்டியம்

 நோணாவட்டியம் nōṇāvaṭṭiyam, வி.எ. (adv.)

   நன்றாய் (தூத்துக்குடி வழக்கு);; well prudently, wisely.

நோண்டு-தல்

நோண்டு-தல் nōṇṭudal,    5 செகுன்றாவி, (v.t.)

   1. விரல்,குச்சிபோன்றவற்றால் கிளறுதல் (பிங்.);; to stir, dig up, grub up, root out.

புண்ணை நோண்டாதே? நிலத்தை நோண்டிக் கொண்டிருக்கிறான்.

   2. முகத்தல் (திவா.);; to bale out, scoop out.

   3. குடைந்தெடுத்தல்; to pick off, as a scab of an ulcer, to pick out, as wax from the ear.

காதை நோண்டாதே.

   4. துருவிவினவுதல் (வின்.);; to enquire minutely, endeavour to draw out by repeated questions, pump one.

     “நோண்டிநோண்டிக் கேட்கிறான்” (வின்.);;

   5. சிறுகத் திருடுதல் (வின்.);; to pilfer.

   6. பயிரைக் கிள்ளுதல் (யாழ்ப்.);; to pluck, as cars of grain.

   7, ஒரு தொழிலைச் சிறிது சிறிதாகச் செய்தல்; to do a thing little by little.

ஏன் நோண்டிக் கொண்டிருக்கிறாய் (வின்.);.

   8. தேவையற்ற ஒன்றைச் செய்தல்; to rummage about.

எதையாவது நோண்டிக் கொண்டிருப்பதே தொழிலாப்போச்சு.

   9. தோண்டுதல்; to dig.

கண்ணை நோண்டிவிடுவேன். கிழங்கை நோண்டி யெடுத்து விட்டான் (உ.வ);.

   ம. நோண்டுக;து. நோடட்ருநி.

     [நுல்(துளை); → நுள் → நொள் → நோள் → நோண்டு → நோண்டு-தல் (வே.க.);]

நோதக்க

நோதக்க nōtakka, கு.வி.எ. (adv.)

   வருந்தத்தக்கனவற்றை; grieved, distressed.

     “பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க நோதக்க நட்டார் செயின்” (குறள், 805);.

     [நோ → நோதக்க. நோ = துன்பம், வருத்தம்.]

நோதலை

நோதலை nōtalai, பெ. (n.)

நோதல், 1,4. (யாழ்ப்.); பார்க்க;see moda, 1,4.

     [நோதல் → நோதலை]

நோதல்

நோதல்1 nōtal, தொ.பெ. (vbl.n.)

   1. பூடு முதலியவற்றுக்கு வருங்கேடு; disease affecting trees or plants.

   2. எழுத்து முதலியவற்றின் மழுங்கல்; obliteration or other defect in a marked line, letter, figure or painting.

   3. சாயஞ்சிதறுகை; spreading of dye in a cloth beyond the intended line.

   4. ஏழைமை; poverty.

     [நோ → நோதல்]

 நோதல்2 nōtal, பெ. (n.)

   1. துன்புறல்; to suffer.

   2. நொந்து சொல்லுதல்; to be injured speech.

     [நோ → நோதல்]

நோதளை

 நோதளை nōtaḷai, பெ. (n.)

   பிராய்முட்டி; Ceylon pavonia, Poania zeylanica. (சா.அக.);.

நோதாங்குசம்

 நோதாங்குசம் nōtāṅgusam, பெ.(n.)

   தருப்பைப் புல்; sacrificila grass. (சா.அக.);

நோதிறம்

நோதிறம் nōtiṟam, பெ. (n.)

   முல்லை, பாலைக்குரிய துன்பப்பண் வகை (பிங்.);; a melody type of the mullai and the pālai classes, sung in distress.

     “பாண்வாய்வண்டு நோதிறம்பாட” (சிலப்.4:75);.

     [நோ → நோதிறம்.]

நோனாது

நோனாது nōṉātu, பெ. (n.)

   ஆற்றாது, பொறாது; inability to bear.

     “சிறுமை நோனாது” (குறிஞ்சிப்.157);

     [நோல் → நோன் → நோனாது.]

நோனாமை

நோனாமை nōṉāmai, பெ. (n.)

   1. தவஞ் செய்யாமை (அக.நி.);; non-performance of religious austerities.

   2. பொறுமையின்மை (பிங்.);; non-endurance.

   3. அழுக்காறு (திவா.);; envy, grudge.

     [நோன் + ஆ + மை. ‘ஆ’ எ.மறை இடைநிலை. ‘மை’ பண்புப்பெயர் ஈறு.]

நோனார்

நோனார் nōṉār, பெ. (n.)

   1. ஆற்றாதார்; incapable persons.

     “நோனா ருட்கு மூவகை நிலையும்” (தொல். பொருள்.72);.

   2. பகைவர் (பிங்.);; enemies.

   3. தவமில்லாதவர் (அக.நி.);; those who neglect religious duties.

     [நோன் + ஆ + ஆர். ஆ-எதிர்மறை இடைநிலை]

நோனாவட்டம்

 நோனாவட்டம் nōṉāvaṭṭam, பெ. (n.)

நொறு நாட்டியம் பார்க்க;see noru-nātsiyam.

நோனி

நோனி nōṉi, பெ. (n.)

   பெண்குறி; pudendum muliebre.

     [நுல்(துளை); → நொல் → நோல் → நோலி → நோனி.நோனி → வ. யோனி,வடவர் இச்சொற்கு ‘யு’ என்பதை வேராகக் காட்டுவது பொருந்தாது-வே.க.நுல்2]

நோன்

நோன்1 nōṉtalnōṉṟal,    7.செ.குன்றாவி. (v.t.)

   1. பொறுத்தல்; to endure, bear.

     “பழையன் பட்டெனக் கண்டது நோனானாகி” (அகநா.44);. அவன்மகன் சிறுதீமையைத் தாங்காத நோனாவாக இருக்கிறான்.

   2. தள்ளுதல் (திவா.);; to reject.

   3. நிலைநிறுத்துதல் (பிங்.);; to establish.

   4. துறத்தல்; to renounce, as secular things.

க. நோன்

     [நோல்1 → நோன்]

 நோன்2 nōṉtal,    13செ.கு.வி. (v.i.)

   தவஞ்செய்தல்; to practise austerities.

     [நோல்2 → நோன்]

நோன்பி

நோன்பி nōṉpi, பெ. (n.)

   உணவுட்கொள்ளா திருப்போன்; ascetic, strict observer of austerities.

     “வெந்திற னோன்பிகள் விழுமங் கொள்ளவும்” (மணிமே.3:75);

     [நோன்பு + இ]

நோன்பிரு-த்தல்

நோன்பிரு-த்தல் nōṉpiruttal,    3 செ.கு.வி. (v.i.)

   உணவு உட்கொள்ளாதிருத்தல்; to observe ceremonial fasting.

     [நோன்பு + இரு-த்தல்]

நோன்பு

நோன்பு nōṉpu, பெ. (n.)

   1. ஆன்மாவின் தூய்மைக்காக ஒரிருவேளை அல்லது நாள் முழுமையும் உண்ணாதிருக்கை; ceremonial fasting, abstinence from food.

     “பூவனந் தடம் வகுத்து நோன்புமுறை போற்றி” (சேதுபு. பாவநா.19);.

     “நோன்பு என்பது கொன்று தின்னாமை” (பழ.);.

   2. தவம்; penance, religious austerity.

     “மாயிரு நோன்பினை யியற்றி” (கந்தபு. தக்கன்மக.5); (சூடா.);

   ம. நோன்பு;க., து. நோம்பு.

     [நோன் → நோன்பு = உண்ணும் உணவு வேளையைக் குறைத்தோ சில எளிய உணவை மட்டும் உண்டோ இறைவனை நினைத்துச் செய்யும் வழிபாடு.]

நோன்புதுற-த்தல்

நோன்புதுற-த்தல் nōṉpuduṟaddal,    3 செ.கு.வி. (v.i.)

   உண்ணாநோன்பை நிறுத்துதல் (யாழ். அக.);; to end the ceremonial fasting.

     [நோன்பு + துற-த்தல்]

நோன்புநோல்-தல் (நோன்பு நோற்றல்)

நோன்புநோல்-தல் (நோன்பு நோற்றல்) nōṉpunōltalnōṉpunōṟṟal,    17 செ.கு.வி. (v.i.)

நோன்பு பிடி (இ.வ.); பார்க்க;see nopby-oid.

     [நோன்பு + நோல்-தல்]

நோன்புபிடி-த்தல்

நோன்புபிடி-த்தல் nōṉbubiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   உண்ணாதிருக்கையை மேற்கொள்ளல்; to observe a fast.

     [நோன்பு + பிடி-த்தல். நோன்பைக் கடைப்பிடித்து மேற்கொள்ளுதல்.]

நோன்புயர்-தல்

நோன்புயர்-தல் nōṉpuyartal,    2 செ.கு.வி. (v.i.)

நோன்புதுற-த்தல் (கலித்.129:17,உரை); பார்க்க;see nonbu-dura.

     [நோன்பு + உயர்-தல். நோன்பை முடித்துக் கொள்ளுதல்.]

நோன்பென்றபெண்

 நோன்பென்றபெண் nōṉbeṉṟabeṇ, பெ. (n.)

   நோன்பு; vow, (சா.அக.);.

நோன்மார்

நோன்மார் nōṉmār, பெ. (n.)

   நோன்பு மேற்கொள்பவர்; to do penance.

     “ஆன்றடங்கறிஞர் செறிந்தனர் நோன்மார்” (மதுரைக்.481.);.

நோன்மை

நோன்மை nōṉmai, பெ. (n.)

   1. பொறுமை; bearing, endurance, as of affliction;tolerance.

     “மிகு சிறப்பின் வருத்தமு நோன்மையும்” (பு.வெ. 10, 6 கொளு);.

   2. வலிமை (பெரும் பாண். 68);; vigour, strength, force, might.

     “நுவன்றிலேன் மனிதனோன்மை” (கம்பரா. நாகபா.288);.

   3. பெருமை; greatness.

     “நுந்தமாமக ணோன்மை” (பிரபுலிங். வசவண். வந்த. 23);.

   4. தவம்; penance.

     [நோன் → நோன்மை.]

நோன்றல்

நோன்றல் nōṉṟal, பெ. (n.)

   பொறுத்தல்; patience, endurance,

     “பேதையார் சொன்னோன்றல்” (கலித்.133);.

     “உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறு கண் செய்யாமை” (குறள்.261);

     [நோன் → நோன்றல்.]

நோபித்திரினி

நோபித்திரினி nōpittiriṉi, பெ. (n.)

   1. நோய்; disease.

   2. நலக்கேடு; bad health. (சா.அக.);.

நோப்படு-தல்

நோப்படு-தல் nōppaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. காயப்படுதல்; sustaining injury, being injured.

   2. நோயினால் துன்பப்படுதல்; suffering from pain or disease. (சா.அக.);.

     [நோ + படு-தல். நோ = துன்பம்.]

நோப்பாளம்

நோப்பாளம் nōppāḷam, பெ. (n.)

   1. சினம்; irritation, anger, offence.

உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப் பாளம் (பழ.);.

   2. வருத்தம்; suffering.

     [நோ → நோப்பு → நோப்பாளம் (வே.க.);]

நோம்பி அழைப்பு

 நோம்பி அழைப்பு nōmbiaḻaippu, பெ.(n.)

   திருவிழாவிற்கு உறவுக்காரர்களை அழைத்தல்; to invite the relatives for villagefestival.

     [நோன்பு-நோம்பி+அழைப்பு]

நோம்பு

நோம்பு1 nōmbudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கொழித்துப் பிரித்தல்; to separate by winnowing, as stones from rice.

     [நேம்பு → நோம்பு-தல். நேம்புதல் = கொழித்துப்பிரித்தல்.]

 நோம்பு2 nōmbu, பெ. (n.)

நோன்பு (உ.வ.); பார்க்க;see ոծրbս.

     [நோன்பு → நோம்பு.]

நோம்புக்கடன்

 நோம்புக்கடன் nōmbukkaḍaṉ, பெ. (n.)

   நேர்ச்சிக் கடன்; vow.

     [நோன்பு → நோம்பு + கடன்.]

நோம்புக்கயிறு

 நோம்புக்கயிறு nōmbukkayiṟu, பெ. (n.)

   காப்புநாண்; a sacred string.

     [நோன்பு → நோம்பு + கயிறு. நோம்பன்று கட்டிக் கொள்ளும் காப்புக்கயிறு.]

நோம்புமுடி

நோம்புமுடி nōmbumuḍi, பெ. (n.)

நோம்புமுடிச்சு பார்க்க;see nombu-mudiccu.

     [நோன்பு2 + முடி. முடி = முடிந்து கொள்ளும் பொருள்.]

நோம்புமுடிச்சு

 நோம்புமுடிச்சு nōmbumuḍiccu, பெ. (n.)

   தாலிச்சரட்டில்கோக்கப்பட்ட குழாய்போன்ற பொன்னுருக்கள்; a pair of cylindrical pieces of gold worn on the string containing the marriage badge.

     [நோன்பு + முடிச்சு.]

நோம்புவலி

 நோம்புவலி nōmbuvali, பெ. (n.)

   குதிரை வாலிப்பூடு; a family of plants resembling horse tail, as horse tail, grass, Panicum brizoides, horse tail, millet, Panicumerticillatum. (சா.அக.);.

நோம்புவிரலி

 நோம்புவிரலி nōmbuvirali, பெ. (n.)

   மஞ்சள்கொத்து; turmeric plant;(சா.அக.);.

நோம்பூகயம்

 நோம்பூகயம் nōmbūkayam, பெ. (n.)

   நிலப்பூசினிச் செடி; giant potato;

 earth pumkin, Gpomaea digitata. (சா.அக.);.

நோம்பூரிகம்

 நோம்பூரிகம் nōmbūrigam, பெ. (n.)

   சருக்கரைப்பூசனி; yellowpumpkin, Cucurbita реро. (சா.அக.);.

நோயகலல்

 நோயகலல் nōyagalal, பெ. (n.)

   உடம்பினின்று நோய் நீங்கல்; getting cured or free from diseases, Disappearance of the disease from the body. (சா.அக.);.

     [நோய் + அகலல்.]

நோயணுகல்

 நோயணுகல் nōyaṇugal, பெ. (n.)

   நோயில் விழுகை; falling ill, getting struck by disease.

அவனுக்கு நோயனுகலால் வேலை செய்ய முடியவில்லை.

     [நோய் + அணுகல்.]

நோயனுகாவிதி

 நோயனுகாவிதி nōyaṉukāvidi, பெ. (n.)

   தேரையர் இயற்றிய ஒரு மருத்துவநூல்; a treatise an hygiene by Têraiyar.

     [நோய் + அணுகா + விதி.நோய்களுக்கு மருந்து கூறும் முறையையுரைக்கும் நூல்.]

நோயறு-தல்

நோயறு-தல் nōyaṟudal,    18 செ.குன்றாவி.(v.t.)

   நோய் நீங்குதல்; to cure a disease.

     “நோயற்ற வாழ்வே வாழ்வு;

குறையற்ற செல்வமே செல்வம்” (பழ.);.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் (பழ.);.

     [நோய் + அறு-தல்]

நோயறை

 நோயறை nōyaṟai, பெ. (n.)

நோயாளிகள்

   இருக்கும் அறை; patient’s room. (சா.அக.);.

நோயறைபக்கம் ஒலியை அதிகப்படுத்தாதே.

     [நோய் + அறை.]

நோயற்றவுடம்பு

 நோயற்றவுடம்பு nōyaṟṟavuḍambu, பெ. (n.)

   நலமுள்ள உடம்பு; healthy body. (சா.அக.);.

     [நோய் + அற்ற + உடம்பு.]

நோயாளி

 நோயாளி nōyāḷi, பெ. (n.)

   நோயால் தாக்கப்பட்டவன்; sick person, patient, invalid.

மருத்துவர் நோயாளியைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.

     “நோயாளிக்கு ஆசை காட்டிச் சொன்னாற் போல” (பழ.);.

     “நோயாளி விதியாளி ஆனால் பரிகாரி பேராளி ஆவான்” (பழ.);.

     “நோயாளிக்குத் தெரியும் நோயின் வருத்தம்” (பழ.);.

     [நோய் → நோயாளி.]

நோயாளிசாலை

 நோயாளிசாலை nōyāḷicālai, பெ. (n.)

நோவாளி மடம் (பாண்டி.); பார்க்க;see novalmagam.

     [நோய் + ஆளி + சாலை. சாலை = இடம் ஒநோ. பாடசாலை]

நோயின்சாரம்

 நோயின்சாரம் nōyiṉcāram, பெ. (n.)

   நோயைப்பற்றிய ஒரு நூல்; a treatise on diseases.

     [நோய் + இன் + சாரம் சாறு + அம் = சாறம் → சாரம்]

நோயியல்

 நோயியல் nōyiyal, பெ. (n.)

நோயின் கரணியங்களையம், அவை செய்யும் உடலியல், உடலமைப்பியல் பற்றிய மாறுதல்களையும் ஆராயும் மருத்துவஇயல்:

 pathology.

     [நோய் + இயல்]

நோயாளிக்கு மருத்துவம் செய்ய விரும்பும் மருத்துவர் முதலில் நோயை ஆராய்ந்து கண்டு பிடிக்கவேண்டும். என்னநோய் வந்துள்ளது என காண வேண்டுமாயின் மருத்துவர்க்கு, எல்லா

நோய்களுக்குமுரிய அறிகுறிகள் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவைப் பெறுவதற்கு உடல் எவ்வாறு அமைந்துளது என்று கூறும் உடலமைப்பியலையும், உடல் எவ்வாறு வேலை செய்கிறது என்று கூறும் உடலியலையும் அவர் நன்கு அறிந்திருக்க வேண்டும். அதன்பின் நோய் எவ்வாறு உடம்பில் மாறுதல்களை உண்டாக்குகிறது என்பதை நாடவேண்டும் என்பதே நோயியலாகும்.

நோயிரட்டித்தல்

நோயிரட்டித்தல் nōyiraṭṭittal, பெ. (n.)

   1. நோய் மறுபடியும் ஏற்படுகை; relapse of a disease.

   2. நோய்சிக்குண்டு அதிகமாகை; complication of a disease.

   3. நோய் கடுமையாகை; disease getting virulent (சா.அக.);.

     [நோய் + இரட்டித்தல்.]

நோயிருத்தி

 நோயிருத்தி nōyirutti, பெ. (n.)

   நோயை நிலைக்கச் செய்யும் மூலிகை; any plant or drug rendering a disease chronic or lingering (சா.அக.);.

     [நோய் + இருத்தி.]

நோயிலக்கணம்

நோயிலக்கணம் nōyilakkaṇam, பெ. (n.)

   1. நோயைப்பற்றிய குணபாடம்; that branch of medical science which treats of classification of disease, Nosology.

   2. நோயின் அறிகுறியைப் பற்றிச் சொல்லும் நூல்; that branch of science which treats of symptoms, Symptamatology

   3. நோய் குறி; the characteristic symptoms of a disease. (சா.அக.);.

     [நோய் + இலக்கணம்.]

நோயில்நாடி

 நோயில்நாடி nōyilnāṭi, பெ. (n.)

   மூன்று நாடியும் (இடைகலை, பிங்கலை, கழிமுனை); தன் மாத்திரையில் குறையாது உடம்பின் நோயின்மையைக் காட்டும் நாடி நடைகள்; the regular pulse beat in respect of the three humours without any deviation or varied changes a clear indication of healthy body. (சா.அக);.

     [நோய் + இல் + நாடி]

நோயுறு-தல்

நோயுறு-தல் nōyuṟudal,    18செகுன்றாவி. (v.t.)

நோய்வாய்ப்படு-தல் பார்க்க;see noy-wayр-padu.

     [நோய் + உறு-தல்]

நோயுள்ளதீட்டு

 நோயுள்ளதீட்டு nōyuḷḷatīṭṭu, பெ. (n.)

   நோவோடு கூடிய மாதவிலக்கு (M.L.);; painful menstruation, Dysmenorrhoea.

     [நோய் + உள்ள + தீட்டு.வலியுடன் கூடிய மாத விலக்கு. தீற்று → தீட்டு. தீற்றுதல் = கழுவுதல்]

நோயெச்சம்

 நோயெச்சம் nōyeccam, பெ. (n.)

   நோயின் எச்சம் (வின்.);; remnants of a disease.

     [நோய் + எச்சம்.]

நோய்

நோய்1 nōy, பெ. (n.)

   1. மனிதனின், விலங்கின், பயிரின் உடல் நல பாதிப்பு; பிணி; malady, distemper, ailment, sickness, disease.

     “நோயிகந்து நோக்குவிளங்க” (மதுரைக்.13);.

நோயைத் தக்க நேரத்தில் தடுக்காததால் விளைச்சல் பாதித்து விட்டது.

     “காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய் குறள்,1227).

நோய் கொண்டார் பேய் கொண்டார். (பழ.);

   2. துயரம் (பிங்.);; sorrow, grief.

   3. துன்பம்; affliction, trouble.

     “அதிரவருவதோர் நோய்” (குறள்,429);.

   4. குற்றம்; fault.

     “பகலென்னும் பண்பின்மை பாரிக்கும்நோய்” (குறள்,851);.

   5. அச்சம்; dread, fear.

     “நோயுடை நுடங்குசூர்

     ” (பரிபா.5:4);.

   6. நோவு (வின்.);; ache, pain. smart.

     “நோவு ஒரு பக்கம் இருக்கச் சூடு ஒரு பக்கம் போட்டாற் போல” (பழ.);.

     “நோய்க்கிடங் கொடேல்” (பழ.);.

ம. நோயி.

     [நுல்(நோதல்); → நுள் → நொள் → நோள் → நோய் (வே.க.);]

 நோய்2 nōyttal,    4.செ.கு.வி. (v.i.)

   1. பிணியால் வருந்துதல்; to be or become sickly or diseased.

   2. நோயால் மெலிதல்; to be broken in constitution, to be debilitated.

   3. மரம்,பயிர் வாடுதல்; to wither, as trees, crops.

   4. நிலம் சாரமற்றுப்போதல்; to become poor or worn out, as lands.

     [நோய்1 → நோய்2-த்தல்]

 நோய்3 nōytal,    2செ.கு.வி (v.i.)

நோய்2 பார்க்க;see ndy2,

பயிர் நோய்ந்து போய்விட்டது. (நெல்லை);

     [நோய் → நோய்3-தல்]

நோய்காடேறுதல்

நோய்காடேறுதல் nōykāṭēṟudal, பெ. (n.)

   சாக்காட்டி னிறுதியில் நோய் விட்டு அகலுகை; the disappearance of disease on the approach of death.

     [நோய்1 + காடேறுதல். காடேறுதல் = விட்டு நீங்குதல்.]

நோய்க்குணக்குறி

நோய்க்குணக்குறி nōykkuṇakkuṟi, பெ. (n.)

நோய்க்குறி (பாண்டி); பார்க்க;see ndyk-kusi.

     [நோய்1 + குனம் + குறி.]

நோய்க்குறி

நோய்க்குறி nōykkuṟi, பெ. (n.)

   நோயின் அடையாளம் (பாண்டி);; symptom of a disease.

     [நோய்1 + குறி.]

நோய்க்கூறுபாடு

நோய்க்கூறுபாடு nōykāṟupāṭu, பெ. (n.)

நோய்க்குறி (பாண்டி); பார்க்க;see moy-k-kuri.

     [நோய்1 + கூறுபாடு.]

நோய்ச்சல்

நோய்ச்சல் nōyccal, பெ. (n.)

   நோய்வாய்ப் படுகை; being sickly.

   2. நோய்ஞ்சல் (வின்.); பார்க்க;see ndyial.

     [நோய்1 → நோய்ச்சல்.]

நோய்ஞ்சலன்

 நோய்ஞ்சலன் nōyñjalaṉ, பெ. (n.)

நோயாளி (வின்.); பார்க்க;see ndyal.

     [நோய்ஞ்சு + அல் + அன். ஈண்டுவரும் அல் உடன்பாட்டுப் பொருளில் வரும் சாரியை;

அன்-ஆண்பால்விகுதி]

நோய்ஞ்சல்

நோய்ஞ்சல் nōyñjal, பெ. (n.)

   1. மெலிந்தவன்-ள்-து; sickly, emaciated person or animal.

     “நோய்ஞ்சற் பூனை மத்தை நக்குமாபோலே” (பழ.);.

     “நோய்த்த புலி ஆகிலும் மாட்டுக்கு வலிது.” (பழ.);.

   2. நோய் (யாழ்.அக.);; disease.

     [நோய்1 → நோய்ஞ்சல்.]

நோய்ஞ்சான்

 நோய்ஞ்சான் nōyñjāṉ, பெ. (n.)

   மெலிந்தவன்; person emaciated by disease.

     [நுல் (மெலிதல்); → நுள் → நொள் → நோள் → நோய் → நோய்ந்தான் → நோய்ஞ்சான். (மு.தா.);]

நோய்ஞ்சி

 நோய்ஞ்சி nōyñji, பெ. (n.)

நோயாளி (வின்.); பார்க்க;see nõyāļi.

     [நோய் → நோய்ஞ்சி]

நோய்ஞ்சியன்

 நோய்ஞ்சியன் nōyñjiyaṉ, பெ. (n.)

நோயாளி (வின்.); பார்க்க;see nðyāli.

     [நோய் → நோய்ஞ்சி + அன். ‘அன்’ ஆண்பால் ஈறு]

நோய்தடுக்கி

நோய்தடுக்கி nōytaḍukki, பெ. (n.)

   நோய் வராமல் தடுக்குமருந்து; preventie remedies as vaccine; medicines preveting diseaseProphylactics. (சா.அக.);.

     [நோய்1 + தடுக்கி.]

நோய்தெறி-த்தல்

நோய்தெறி-த்தல் nōyteṟittal,    4 செ.கு.வி. (v.i.)

   பிணி நீங்குதல்; getting rid of disease being free from disease. (சா.அக.);.

     [நோய்1 + தெறி-த்தல். தெறித்தல் = நீங்குதல்.]

நோய்த்த

 நோய்த்த nōytta, கு.பெ.எ. (adj.)

   நோய் கொண்ட; being affected with disease marked with sickness, sickly. (சா.அக.);.

     [நோய் + த் + த. ‘த்’ இடைநிலை;

     ‘த’- பெயரெச்ச ஈறு]

நோய்த்திடம்

நோய்த்திடம் nōyttiḍam, பெ. (n.)

   1. பிணியின் வலிமை; strength of a disease.

   2. நோயின் உண்மை; reality of disease. (சா.அக);.

     [நோய் + திடம். திடம் = வன்மை.]

நோய்த்தொற்று

 நோய்த்தொற்று nōyttoṟṟu, பெ. (n.)

   உடலில் நுண்ணுயிரிகளால் (பாக்ட்டீரியா); உண்டா வதும், நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நஞ்சுகளால் உண்டாவதுமான நோய்; infection.

     [நோய் + தொற்று]

நோய்நாடு-தல்

நோய்நாடு-தல் nōynāṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   நோய் இன்னது என்று கண்டுபிடித்தல்; diagnosis.

     “நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள்,948);

     [நோய்1 + நாடு-தல்]

நோயாளியைப் பார்த்தவுடன் அவருக்கு என்னென்ன தொந்தரவுகள் என்று அறிந்துகொண்டு, அதிலிருந்து ஒவ்வொரு நோயாக விலக்கிக் கொண்டே வந்து, எந்தநோயின் தன்மையும் அவர் சொல்லும் தொந்தரவும் ஒத்து வருகின்றனவோ அந்த நோயே அவருக்கு இருக்கலாம் என்ற உறுதி செய்வது நோய் நாடலாகும்.

   எடுத்துக்காட்டாக வயிற்றுவலி என்றால், வயிற்றில் புண்ணாக இருக்கலாம்;   குடலில் புண்ணாக இருக்கலாம்;   ஈரலைச் சேர்ந்த நோயாக இருக்கலாம்;இதய நோயாகவும் இருக்கலாம். சாப்பிட்ட உடனே அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது இரண்டுமணி நேரத்திற்குள்ளேயே வயிற்று வலி வந்தால் அது வயிற்றுப் புண்ணாகவோ, அல்லது குடற்புண்ணாகவோ தான் இருக்கவேண்டும். ஏனெனில் மற்ற உறுப்புக்களின் நோய், உணவால் அதிகப்படுவதில்லை. மற்றும் வாந்தி எடுத்தவுடன் வலி அடங்கிவிடுகிறது என்றால் குடல்நோய் என்றே கூறவேண்டும். அதிலும் காரப்பொடி சாப்பிட்டால் வலி எற்படவில்லை என்றால் இந்த ஊகம் உறுதிப்படுகிறது. ஆனால், நோய்க் கூற்றைக் கண்டுபிடிப்பதற்கு நோயாளியின் தொந்தரவுகள் என்னென்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். அதோடு நோய் எப்போது ஏற்பட்டது, நோய் எவ்வளவு நாட்களாக இருந்து வருகிறது. என்ன பண்டுவத்தால் குணம் ஏற்படுகிறது என்றும்,

எந்தெந்த மருந்துகளால் நோய் அதிகமாய்த் தோன்றுகிறது என்றும் அறிந்து கொள்ளவேண்டும். நோயாளி தன்னுடைய உடம்பின் நிலையைப் பற்றிச் சொல்லி நிறுத்திய பிறகு, ஆய்வு செய்யவேண்டும். நோயாளியின் தொல்லை என்னவாக இருந்தாலும் உடல் முழுமையும் ஆய்வு செய்வதே நல்லது.

நோய்நொடி

நோய்நொடி nōynoḍi, பெ. (n.)

   1. பிணியும் துன்பமும்; disease with its sufferings. (சா.அக.);.

நோய் நொடி இல்லா உடம்போடு வாழவேண்டும். குழந்தைக்கு நோய் நொடி வராமல் வளர்க்கவேண்டும். நோய் நொடி இல்லா வாழ்வு வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன்.

   2. நோயும் நோயின் பாதிப்பும்; illness and its effect.

வறுமையில் நோய் நொடிவந்தால் யார் உதவுவார்கள்.

     [நோய்1 + நொடி. மரபுத்தொடர்]

நோய்பாடியார்

 நோய்பாடியார் nōypāṭiyār, பெ. (n.)

   நோய்ப்பாடியார் பார்க்க; indy.p-paiyar.

நோய்புகலும்பாண்டம்

நோய்புகலும்பாண்டம் nōypugalumbāṇṭam, பெ. (n.)

   நோய், பிணிபுகும் உடம்பு; body liable to disease. (சா.அக.);.

     [நோய்1 + புகலும் + பாண்டம். பாண்டம் = உடம்பு.]

நோய்போக்கு-தல்

நோய்போக்கு-தல் nōypōkkudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   நோயைப் போக்கிக் குணமாக்குதல்; to cure the disease through medical treatment.

இந்த மருத்துவர் நோயைப் போக்குவதில் வல்லவர்.

     [நோய்1 + போக்கு-தல்]

நோய்ப்பாடியார்

நோய்ப்பாடியார் nōyppāṭiyār, பெ. (n.)

   கழகக் காலப்புலவர்; a poet in Sangam age.

மறுவ. நொய்ப்பாடியார்.

     [நோய்1 + பாடியார்]

இவர்தம் பாடலில் பிரிந்தோருறும் நோயை நன்கு

புலப்படுத்துவதால் இப்பெயர் பெற்றார் எனலாம். பாலை நிலவழியிலே பரற்கற்கள் நிலம்படும் மின்மினிபோலப் பரந்திமைக்கும் எனப் புனைந்துரைத்துள்ளார். இவர் செய்யுளில் நடுகற்குப் பீலிசூட்டும் வழக்கமும். நடுகல்லின் அருகிலே அவ்விரன் பிடித்திருந்த வேல் முதலியவற்றை வைக்கும் வழக்கமும் காணப்பெறுகின்றன. (அகநா.67);.

     “யானெவன் செய்கோ தோழி பொறிவரி

வானம் வாழ்த்திப் பாடவும் அருளாது

உறைதுறந் தெழிலி நீங்கலிற் பறையுடன் மரம்புல்

லென்ற முரம்புயர் நனந்தலை அரம்போழ் நுதிய

வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையம்

கொண்மார் நெல்லி நீளிடை எல்லி மண்டி

நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும்

பிடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய

பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை

வேற்றுமுனை கடுக்கும் மொழிபெயர் தேஎந்

தருமார் மன்னர் கழிப்பிணிக் கறைத்தோல்

நிரைகண் டன்ன உவலிடு பதுக்கை ஆளுகு

பறந்தலை உருவில் போய் ஊராத் தேரொடு

நிலம்படு மின்மினி போலப் பலவுடன் இலங்குபரல்

இமைக்கும் என்பநம் நலந்துறந்து உறைநர்

சென்ற ஆறே” (அக.67);

நோய்ப்பால

நோய்ப்பால nōyppāla, பெ. (n.)

   துன்புறுத்தும் திறத்தனவாகிய குற்றங்கள்; offence, cruel offence.

     “தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால தன்னை யடல்வேண்டா தான்” (குறள்,206);

நோய்ப்பூச்சி

 நோய்ப்பூச்சி nōyppūcci, பெ. (n.)

   நோயை உண்டாக்கும் புழு; organisms which cause disease-germ; bacillus. (சா.அக.);.

குழந்தைக்கு வயிற்றில் நோய்ப்பூச்சி இருக்கிறது; மருந்து கொடுக்கவேண்டும்.

     [நோய் + பூச்சி;

பூச்சி = நோயை உண்டாக்கும் புழு.]

நோய்மக்களித்தல்

 நோய்மக்களித்தல் nōymakkaḷittal, பெ. (n.)

   நோய் திரும்புதல்; relapse of disease. (சா.அக.);.

     [நோய் + மக்களித்தல்.]

நோய்மருந்தளவு

நோய்மருந்தளவு nōymarundaḷavu, பெ. (n.)

   சாப்பிடும் மருந்தளவைக் குறிக்கும் தேரையர் செய்த ஒரு தமிழ் மருத்துவ நூல்; a Tamil medical work by Theraiyar on prescriptions and administration of remedies.

   2. நோய்க்கு ஏற்றவாறு கொடுக்கும் மருந்தளவு; preportion of medicine determined according to the nature of and requirement for a particular disease, Prescription. (சா.அக.);.

     [நோய் + மருந்து + அளவு.]

நோய்முகன்

நோய்முகன் nōymugaṉ, பெ. (n.)

   காரி கோள் (சனி); (தைலவ.தைல.);; Saturn.

     [நோய் + முகன். நோய் தரும் காரி கோள் துன்பத்தையும் தருவது.]

காரிக்கோள் துன்பத்தைத் தருவது என்னும் கருத்தினால், அது நோய்முகன் எனப்பட்டது. ஆயின், இடைக்காலத்தில் தமிழ் பகைவர் காரி என்னும் தென்சொல்லை வழக்கு வீழ்த்தி ‘சனி’ என்னும் வடசொல்லைப் புகுத்தியதால் ‘சனியன்’ என்னும் சொல் வழங்கத் தலைப்பட்டது. தமிழர் அனைவரும் இனி நோய்முகன் என்னும் சொல்லையே ‘சனியன் என்பதற்குத் தலைமாறாக வழங்குக-பாவாணர் (வே.கநூல்4);.

நோய்மும்முரம்

 நோய்மும்முரம் nōymummuram, பெ. (n.)

   திடீரென ஏற்படும் நோயின் கடுமை; sudden recurrence or intensification of symptoms, Paroxysm. (சா.அக.);.

     [நோய் + மும்மரம். முன்பு + உரம்-மும்முரம்.]

நோய்முறி-தல்

நோய்முறி-தல் nōymuṟidal,    4செ.கு.வி. (v.i.)

   நோய் உடம்பிலிருந்து நீங்குதல்; the separation of a disease from the system after its being over powdered. (சா.அக.);.

     [நோய் + முறி-தல்]

நோய்யெதிர் ஆற்றல்

 நோய்யெதிர் ஆற்றல் nōyyedirāṟṟal, பெ. (n.)

   நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளால் நோய் உண்டாகாதவாறு உடலில் உள்ள எதிர்க்கும் ஆற்றல்; immunity.

     [நோய் + எதிர் + ஆற்றல்]

நோய்யெதிர் ஆற்றல் என்பது ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனி. நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் பலவகைப் படும். ஆதலால் ஒருவர் ஒரு நோய்க்கு எதிராற்றல் உடையவராகவும், வேறு ஒரு நோய்க்கு உட்படுபவராகவும் இருக்கலாம். அம்மை நோயை எதிர்க்கும் ஆற்றல் உடையவராக இருந்தாலும், ஈளைநோயை எதிர்க்கும் ஆற்றலில்லாதவராகவும் இருக்கலாம்.

நோய்யெதிர் ஆற்றல் இயற்கை, செயற்கை என இருவகைப்படும். இயற்கை யென்பது பிறக்கும் போதே உடலில் அமையும் எதிர்ஆற்றல்.

செயற்கையென்பது பிறந்தபின் உடலில் அமைவது. நோய் வருமுன்பே, செயற்கை முறைகளால், அதாவது கொல்லப்பட்ட அல்லது ஆற்றல் இழந்த நுண்ணுயிரிகளைக் கொண்டு உண்டாக்கப்பட்ட நோய்ப்பாலை உடலில் ஏற்றி அரத்தத்தில் எதிர்ப்பொருள்களைத் தோற்றுவித்தல். இந்த எதிர்ப்பொருள்களும் நோய் நீங்கிய பின்னரும் உடலில் தங்கியிருந்து எதிர்ஆற்றலைத் தருவதாக அமையும்.

நோய்வன்மை

 நோய்வன்மை nōyvaṉmai, பெ. (n.)

   நோயின் கொடுமை; severity of a disease. (சா.அக.);

     [நோய் + வன்மை, வன்மை = வலிமை, கொடுமை.]

நோய்வரப்பண்ணு-தல்

நோய்வரப்பண்ணு-தல் nōyvarappaṇṇudal,    5.செ.கு.வி. (v.i.)

   1. நோயை உண்டாக்குதல்; to cause a disease as is done in animals for observing the effect of medicine

   2. நோய்க்கிடங்கொடுத்தல்; accomodating disease by intemperate habits. (சா.அக.);.

     [நோய் + வரப்பண்ணு-தல்]

நோய்வாய்ப்படு-தல்

நோய்வாய்ப்படு-தல் nōyvāyppaḍudal,    18செ.குன்றாவி.(v.t.)

   நோயினால் தாக்கப் படுதல்; to fall ill.

நோய்வாய்ப்பட்ட உடம்பு. நண்பர் நோய்வாய் பட்டிருந்தபோது சென்று பார்த்தேன்.

     [நோய் + வாய் + படு-தல்]

நோய்விழலாய்ப்போ-தல்

நோய்விழலாய்ப்போ-தல் nōyviḻlāyppōtal,    8 செ.கு.வி.(v.i.)

   நோய் பயனற்றுப்போதல்; diseases being rendered inert of inactive. (சா.அக.);

     [நோய் + விழலாய்ப்போ-தல்]

நோய்விழுதல்

 நோய்விழுதல் nōyviḻudal, பெ. (n.)

   செடிகளில் நோய்பிடிக்கை; infection, as of plants.

     [நோய் + விழுதல்.நோய் உண்டாகுதல்.]

நோறு

 நோறு nōṟu, பெ. (n.)

   வாய் (இ.வ.);; mouth.

நோறைமூடிக்கொண்டிரு.

தெ. நோறு.

     [நோல் + து]

நோற்கிற்பவர்

நோற்கிற்பவர் nōṟkiṟpavar, பெ. (n.)

   1. பொறுப்பவர்; endured person.

     “துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வா யின்னாச்சொ னோற்கிற் பவர்” (குறள்,159);.

   2. தவஞ்செய்யவல்லார்; ascetics.

     “சுடச்சுடரும் பொன்போலொளி விடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்” (குறள்.267);

     [நோல் → நோற்கிற்பவர். நோல்தல் = பொறுத்தல்]

நோற்பார்

நோற்பார் nōṟpār, பெ. (n.)

   தவஞ்செய்வார்; ascetics, those who practise religious austerities.

     “நோற்பாரினோன்மை யுடைத்து” (குறள்,48);.

     [நோல்2 → நோற்பார். நோல் =.தவஞ்செய்தல்]

நோற்பாள்

நோற்பாள் nōṟpāḷ, பெ. (n.)

   சமணமதப் பெண்துறவி (சூடா.);; a female ascetic.

     [நோல்2 → நோற்பாள்.]

நோற்பு

நோற்பு nōṟpu, பெ. (n.)

   1. பொறுமை (வின்.);; bearing, endurance.

   2. தவஞ் செய்கை; performing penance.

     [நோல் → நோற்பு.]

நோலாகிதம்

 நோலாகிதம் nōlākidam, பெ. (n.)

   திருநீற்றுப்பச்சை; holy ashes leaf, Ocimum basilicum. (சா.அக.);.

நோலாதவர்

நோலாதவர் nōlātavar, பெ. (n.)

   தவஞ் செய்யாதவர்; one who does not having penance;

     “இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர்” (குறள்,270);.

     [நோல் → நோலாதவர் நோல் = தவம்செய்தல். ஆ-எதிர்மறை இடைநிலை.]

நோலாதார்

 நோலாதார் nōlātār, பெ. (n.)

   பொறாமைக் காரர்கள்; jealous persons.

     [நோலுதல் = பொறுத்தல். நோல் + ஆ + த் + ஆர்.]

நோலாமை

நோலாமை nōlāmai, பெ. (n.)

   1. செய்த தீவினைக்கு வருந்தாமை (R.C.);; unrepentance.

   2. பொறாமை; jealous.

     “நோலாமையினால் மேலானது போம்” (பழ.);.

     [நோல் + ஆ + மை]

நோலாவலை

நோலாவலை nōlāvalai, பெ. (n.)

   மீன்பிடிக்கும் வலைவகை (அபி.சந்.1017);; a kind of fishing net.

நோலிகம்

 நோலிகம் nōligam, பெ. (n.)

   நின்றிடந் தீயஞ்சான் என்னும் குருவிச்சை (புல்லுருவி);; honey Suckle mistletoe, Loranthuselasticus. (சா.அக.);.

நோலை

நோலை nōlai, பெ. (n.)

   1. எள்ளுருண்டை; sesame ball.

     “புழுக்கலு நோலையும்” (சிலப்.5:68, அரும்.);.

   2. எட்கசிவு; a preparation of sesame seed.

     “அணங்குடை நோலை” (பு.வெ.3:40);

     [நுல் → நூல் (எள்); → நோல் → நோலை (வே.க.);]

நோல்

நோல்1 nōltalnōṟṟal,    10செ.குன்றாவி. (v.t.)

   1. பொறுத்தல்; to endure, suffer patiently, as hunger.

     “உண்ணாது நோற்பார் பெரியர்” (குறள்,160);.

   2. மேற்கொள்ளல்; to practice.

மறவாமே நோற்பதொன் றுண்டு (குமர.பிர.நீதிநெறி.20);.

   3. வலிமை; strength.

     “நோக்கியெ திருறநின்ற நோலாரும்படை வியந்தே” (அருணகிரிபு. அருந்தவ.125);

 நோல்2 nōltal,    17 செ.கு.வி. (v.i.)

   1. தவஞ்செய்தல்; to do penance, practice, austerities.

     “நோற்றோ ருறைவது” (மணிமே.17:65);

   2. நோன்பை மேற்கொள்ளுதல்; to observe a religious fast.

பாவை நோன்பு நோற்றாள்.

   தெ.நேட்சு;   க.நோன்;ம.நோல்க.

 நோல்3 nōl, பெ. (n.)

   சடங்கு (கிரியை);; a means of attaining salvation.

     “நோக்கினைய நோலினையு முடைத்தாமால்” (சிவதரு. சிவஞானபோ.18);.

நோளை

 நோளை nōḷai, பெ. (n.)

   நோய்நிலை;   பிணியுண்டநிலை; sickly condition, used in compound words.

நோளை உடம்பு (வின்.);

     [நுல் (நோதல்); → நுள் → நொள் → நோள் → நோளை (வே.க.); ஒ.நோ. நோள் → நோய், மாள் → மாய்]

நோழிகை

 நோழிகை nōḻigai, பெ. (n.)

   நெசவுநூலின் தாறு (வின்.);; wearer’s clew of yarn.

     [நாழிகை → நோழிகை நாழிகை = நாடா]

நோவறை

 நோவறை nōvaṟai, பெ. (n.)

நோயறை பார்க்க;see noyarāj (சா.அக.);.

     [நோ + அறை]

நோவல்

 நோவல் nōval, பெ. (n.)

   அப்பம் (அக.நி.);; bread.

நோவாளி

நோவாளி nōvāḷi, பெ. (n.)

   1. நோயாளி (வின்.); பார்க்க;see noyal.

   2. ஏழை (யாழ்.அக.);; poor man.

     [நோவு + ஆளி. நோவு = வலி, துன்பம், வறுமை]

நோவாளிமடம்

 நோவாளிமடம் nōvāḷimaḍam, பெ. (n.)

   மருத்துவ மனை (பாண்டி);; hospital.

     [நோவாளி + மடம்.]

நோவு

நோவு nōvu, பெ. (n.)

   1. வலி; pain, hurt, anguish.

உடல் நோவு குறைய வெந்நீரில் குளிக்க வேண்டும்.

   2. துன்பம் (திவா.);; mental anguish.

   3. நோய்; disease.

உடம்புக்கு ஏதாவது நோவா? நோவு ஒருபக்கம் இருக்கச் குடு ஒருபக்கம் போட்டாற்போல (பழ.);

   4. மகப்பேற்று நோய்;   ஈன்வலி; labour pains.

     “ஈன்றக்கா னோவும்” (நாலடி, 201);.

நோவு எடுத்து வெகு நேரமாகியும் குழந்தைபிறக்க வில்லை.

   5. இரக்கம்; pity.

     ‘தாம் நோவுபடா நிற்பர்’ (ஈடு);.

   6. மஞ்சள் (வைத்தியபரிபா);; turmeric

ம., க., து. நோவு

     [நோ → நோவு.]

நோவுங்கால்

 நோவுங்கால் nōvuṅgāl, பெ. (n.)

   முடவாட்டுக் கால்; lame leg of a sheep. (சா.அக.);.

     [நோ + உம் + கால்]

நோவுசாத்து-தல்

நோவுசாத்து-தல் nōvucāddudal,    5 செ.கு.வி. (v.i.)

   பெரியோர் நோய்வாய்ப்படுதல்; to suffer from disease, as eminent religious persons.

     “யமுனைத் துறைவர் திருமேனியிலே நோவுசாத்திக் கொண்டிருக்க” (குருபரம்.241);.

     [நோவு + சாத்து-தல். சாத்துதல் = நோயால் தாக்கப்படுதல்.]

நோவுநொடி

 நோவுநொடி nōvunoḍi, பெ. (n.)

நோய் நொடி பார்க்க;see ndy-nod.

     [நோவு + நொடி-மரபுத்தொடர்.]

நோவுபோக்கி

 நோவுபோக்கி nōvupōkki, பெ. (n.)

   நேர்வாளம்; croton seed, purging nut so called of its eliminiating certain diseases from the system. (சா.அக.);.

     [நோ → நோவு + போக்கி, நோ = வலி, துன்பம்,நோய். நொ, து ஒரெழுத்து ஒருமொழி என்பது நன்னூல் கருத்தாகும்]

நோவுவாங்கல்

 நோவுவாங்கல் nōvuvāṅgal, பெ. (n.)

   வலிதீர்தல்; ceasing of pain. (சா.அக.);.

     [நோவு + வாங்கல்.நோவு = நோய்.]

நோவெடுத்தல்

 நோவெடுத்தல் nōveḍuttal, பெ. (n.)

   மகப்பேற்றுவலி உண்டாகை; commencement of labour pains.

     [நோவு + எடுத்தல், வலி எடுத்தல்]