தலைசொல் | பொருள் |
---|---|
நொ | நொ1 no, நகர மெய்யும் ஒகர உயிரும் சேர்ந்து பிறந்த உயிர் மெய் எழுத்து; the compound of ‘n’ and ‘o’ [ந் + ஒ – நொ] நொ2 no, பெ. (n.) 1. துன்பம் (தொல். எழுத்து. 72);; pain, distress, suffering. “நொவ்வுற லெய்தி” (கந்பு. திருவவ.39.);. 2. நோய் (வின்.);; disease, sickness. ம. க. நோ [நோ → நொ. ஒரெழுத்து ஒருமொழி.] நொ3 no, பெ. (n.) மெத்தெனப் பறக்கும் பறவையினம்; a kind of flying bird softly, gently. “தாஅ வஞ்சிறை நொப்பறை வாவல்” (குறுந். 172:1);. நொ4 no, பெ. (n.) நொய்மை (திவா.);; lightness, slenderness. “நொப்புணை வலியா” (பெருங். உஞ்சைக்.53:3);. ம. நொச்சு; க., தெ., து. நுசி; [நோ → நொ.] நொ5 nodal, 17 செ.கு.வி.(v.i.) & 16 செகுன்றாவி. (v.t.) துன்புறுதல்; to suffer. “நொக்கொற்றா” (தொல். எழுத்து. 72. உரை);. “நொப்போவெள வுரிஞ்” (நன்.137);. [நோ → நொ → நொ – தல்] |
நொக்கட்டா | நொக்கட்டா nokkaṭṭā, பெ. (n.) நொக்கொட்டா பார்க்க;see nokkoţţā (சா.அக.);. மறுவ. இலக்கோட்டிப் பழம் |
நொக்கல் | நொக்கல் nokkal, பெ. (n.) தின்பண்டவகை; a kind of sweetmeat. “நொக்கல் பால் கோவா” (பஞ்ச திருமுக.1837);. |
நொக்காங்குலை | நொக்காங்குலை nokkāṅgulai, பெ. (n.) நுங்குக்குலை; bunch of young palmyra fruits. (சா.அக.);. [நுங்குக்குலை → நொக்காங்குலை (உ.வ.);] |
நொக்கு | நொக்கு1 nokkudal, 5 செகுன்றாவி. (v.t.) 1. உண்ணுவதால் குறையச் செய்தல்; to reduce by eating, as the quantity of grain. “பன்றி தினைப் புனத்தை நொக்குகை யினாலே” (மலைபடு. 103. உரை);. 2. அடித்தல்; to beat. “சுக்குமாந்தடி கொண்டு நொக்கி விடுவான்” (நந்த. கீர்த்);. 3. மிகுதியாகத் திட்டுதல் (இ.வ.);; to abuse violently. [நுல் (துளை); → நுள் → நுழு → நுகு → நொகு → நொக்கு → நொக்கு-தல். (வே.க.);] நொக்கு2 nokku, பெ. (n.) வெடிப்பு (யாழ்.அக.);; fissure, cleft. [நுல் (துளை); → நுள் → நுழு → நுகு → நொகு → நொக்கு] |
நொக்கென | நொக்கென nokkeṉa, வி.எ. (adv.) உடனே; instantly, immediately. “நொக்கெனக் கண்ணன் கழல்க ணினை மினோ” (திவ். திருவாய். 4.1:3);. [நொக்கு + என.] |
நொக்கொட்டா | நொக்கொட்டா nokkoṭṭā, பெ. (n.) மரவகை (L.);; Chinese medlar, Eriobotrya japonica. |
நொங்கு | நொங்கு1 noṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) விழுங்குதல்; to swallow. “திங்களிரு நொங்க” (தேவா.1157, 3);. ம. நொங்ஙு [நுல் (துளை); → நுள் → நுழு → நுகு → நுங்கு → நொங்கு → நொங்கு-தல்] நொங்கு2 noṅgudal, 5 செ.கு.வி. (v.i.) மெலிதல்; to become weak and emaciated. “அங்கமு நொங்குதே” (கணம் கிருஷ்ணையர்.1:2);. [நுல் = மென்மை, சிறுமை, நுண்மை. நுல் → நுள் → நுளு → நுழு → நுகு → நுங்கு → நொங்கு → நொங்கு-தல் (வே.க.);] நொங்கு3 noṅgu, பெ. (n.) பனை நுங்கு; pulpy kernel of a tender palmyra fruit. [நூங்கு → நொங்கு] |
நொசநொச-த்தல் | நொசநொச-த்தல் nosanosattal, 4 செ.கு.வி. (v.i.) சோறுங்கஞ்சியும் கட்டுவிட்டு நொந்து போதல்; to spoil, as of boiled rice etc. [நுள் (குலைதல்); → நொள் → நொள → நொச → நொசநொச-த்தல் (மு.தா.);] |
நொசநொசவெனல் | நொசநொசவெனல் nosanosaveṉal, தொ.பெ. (vbl.n.) சோறு நொந்துபோன நிலையடைகை; mashed rice. [நொச + நொச + எனல்.] |
நொசி | நொசி1 nosidal, 2 செ.கு.வி. (v.i.) 1. நுண்மையாதல்; to be thin, slender, minute, as unable to bear a weight. ‘நொசி மருங்குதல்’ (தொல்,சொல். 368, இளம்பூ);. 2. செயற்கு அருமையாதல்; to be difficult of observance, as a vow. “நோற்றுணல் வாழ்க்கை நொசிதவத்தீர்” (சிலப். 19:223);. 3. வருந்துதல் (சங்.அக.);; to be in pain, to suffer. 4. வளைதல்; to bend; to be slanting. “நொசிந்த நோக்கினன்” (சீவக. 2010);. [நுல் (நோதல்); → நுள் → நொள் → நொய் → (நொயி); → நொசி → நொசி-தல். நுல் = நுண்மை, இளமை, மென்மை, நுல் → நுள் → நுளு → நுசு → நுசி → நொசி → நொசி-தல் (வே.க.);] நொசி2 nosidal, 2 செ.கு.வி. (v.i.) 1. நைதல்; to be frayed, worn out, as cloth. ‘நொசிந்த துகில்’ (தொல்.சொல். 330, உரை.);. 2. குறைவுறுதல். to be insufficient, deficient “நொசிவிலாத பூசனை” (விநாயகபு. 36.37); [நொய் → நொசு → நொசி → நொசி-தல் (வே.க.);] நொசி3 nosittal, 4 செ.குன்றாவி. (v.t.) வருந்துதல்; to distress, afflict. “நொசித்த வெம்முலை” (சீவக. 654);. [நுல் (நோதல்); → நுள் → நொள் → நொள்ளப்பு = வருத்தம். நொள் → நொய் → (நொயி); நொசி → நொசி-த்தல் (வே.க.);] நொசி4 nosi, பெ. (n.) நுண்மை (அக.நி.);; slenderness; fineness, [நுல் (நுண்மை,சிறுமை); → நுள் → நுளு → நுசு → நுசி → நொசி] |
நொசி குறங்கு | நொசி குறங்கு nosiguṟaṅgu, பெ.(n.) ஒரு வகையான ஆடலியக்கம்; a kind of dance movement. [நொசி+குறங்கு(தொடை);] |
நொசிகம் | நொசிகம் nosigam, பெ. (n.) வெண்சீந்தில்; moon creepper, Tinosphora Cordifolia. (சா.அக.);. |
நொசிப்பு | நொசிப்பு1 nosippu, பெ. (n.) கல்லறை; intense contemplation. “நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து” (பரிபா.5:37);. [நொசி2 → நொசிப்பு.] நொசிப்பு2 nosippu, பெ. (n.) மனதை ஒருவழிப்படுத்துகை; concentration of mind. (சா.அக.);. [நொசி → நொசிப்பு] |
நொசிவு | நொசிவு1 nosivu, பெ. (n.) 1. நுண்மை (தொல். சொல். உரி. 76);; slenderness; fineness. 2. நொய்ம்மை; lightness, [நுல் = நுண்மை, மென்மை, இளமை, நுல் → நுள் → நுளு → நுசு → நுசி → நொசி → நொசிவு (வே.க.);] நொசிவு2 nosivu, பெ. (n.) 1. வருத்தம் (சூடா.);; suffering. 2. வளைந்த நிலை; state of being bent. “நொசிவுடை வில்லின்” (பதிற்றுப்.45:3);. [நுல்(நோதல்); → நுள் → நொள் → நொய் → (நொயி); – நொசி → நொசிவு (வே.க. நுல்4);] |
நொசுட்டு | நொசுட்டு nosuṭṭu, பெ.(n.) குறை கூறுகை; criticism, fault-finding. [Skt. {} → த. நொசுட்டு] |
நொச்சி | நொச்சி1 nocci, பெ. (n.) 1. வெண்ணொச்சி; five-leaved chaste tree. “நொச்சி மாமலர் நிறத்தன” (சீவக.2163);. 2. கருநொச்சி; three-leaved chaste tree. 3. நொச்சித்திணை பார்க்க;see mocci-t-timai. “நொச்சிப்படலம்” (பு.வெ. 5);. “உட்கா தெதிரூன்றல் காஞ்சி யெயில் காத்தல் நொச்சி அதுவளைத்த லாகும் உழிஞை” (பழம்பாடல்);. 4. எயில் காக்கும் வீரர் சூடிய நொச்சிப்பூவைப் புகழும் புறத்துறை (பு.வெ. 5:1, கொளு);; a minor theme eulogising the nocci garland worn by the warriors defending a fort. 5. எயில் காவல்; defence of a fort. “அகத்தோன் வீழ்ந்த நொச்சி” (தொல். பொருள். 68);. 6. மதில்; surrounding wall, fortress. “நொச்சிகாத் ததிகோர னோன்மையி னவணிருந்தான்” (தணிகைப்பு.சீபரி. 342);. “உறையூர் நொச்சி யொருபுடையொ துங்கி” (சிலப். 10:242);. 7.சிற்றூர் (சூடா.);; village, hamlet. நொச்சிக்காடு. ம.நொச்சி; க., து. நெக்கி;தெ. நொச்சிலி. நொச்சி2 nocci, பெ. (n.) மருத்துவக் குணங்கொண்ட ஒரு மருந்து மரம்; a kind of medicial plant. மறுவ: சிந்துவாரம், ஐந்திலை நொச்சி. நொச்சி ஒரு சிறிய மரம். இதன் இலைகள் 5 பிரிவாக நீண்ட காம்புகளுடன் இருக்கும். இதன் பூக்கள் சிறியவை, நீலநிற முடையவை. ஆண்டு முழுமையும் பூக்கும். இந்தியாவில் எங்கும் பரவியுள்ளது. நாட்டு மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. கட்டிகளைக் கரைக்க இதன் இலைகள் மிகவும் பயன்படுகின்றன. இதன் இலையைத் தண்ணில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவிபிடிக்க, நீர்க்கோவை நீங்கும். பல்வலி, இருமல், நீரேற்றம், இரைப்பு, காய்ச்சல் முதலியவற்றிற்கு இதன் இலைகள் மருந்தாகின்றன இதன் வேர்ப்பட்டையும் மருத்துவக் குண கொண்டது. பூவும், இலைக்காம்பும் அரத்த போக்கைக் கட்டுப் படுத்தும். சாம்பசிவம் மருத்து அகரமுதலி கூறும் நொச்சி வகைகள்: 1. ஆற்று நொச்சி 2. ஐந்திலை நொச்சி 3. கருநொச்சி 4. காட்டுநொச்சி 5. சிறுநொச்சி 6. நீர்நொச்சி 7. மயிலடி நொச்சி 8. மலை நொச்சி 9. மூவிலை நொச்சி 10. வயல் நொச்சி 11. வெண்ணொச்சி (சா.அக.);. நொச்சி3 nocci, பெ. (n.) 1. சதகுப்பை (மருந்துப் பூடு);; dill, Anethum row. 2. பதினெண் மூலிகைகளிலொன்று; one c the eighteen drugs (சா.அக.);. |
நொச்சி நியமங்கிழார் | நொச்சி நியமங்கிழார் nocciniyamaṅgiḻār, பெ.(n.) கடைக்கழகப் புலவர்; name of a sangam poet. [நொச்சி+நியமம்+கிழார்] இவர் காஞ்சித் திணையைப் பாடியுள்ளார். பூந்துறைக்கு அருகில் உள்ள நொச்சியூரை சேர்ந்தவர். |
நொச்சிக்கசங்கு | நொச்சிக்கசங்கு nossikkasaṅgu, பெ. (n.) கூடைகள் முடைய உதவும் நொச்சியின் சிறுகுச்சி (இ.வ.);; stalks of nocci used in making plaited baskets. [நொச்சி + கசங்கு. கசங்கு = கூடை முடையப் பயன்படும் சிறுகுச்சி] |
நொச்சிக்குச்சி | நொச்சிக்குச்சி noccikkucci, பெ.(n.) ஆணித் தட்டுப்பின்னப் பயன்படும் வளார்; a plant twine which is used to make chase of ‘anittattu’. [நொச்சி+குச்சி] |
நொச்சிக்குப்பம் | நொச்சிக்குப்பம் noccikkuppam, பெ. (n.) சென்னை மாவட்ட ஊர்; a village in Chennai district. [நொச்சி + குப்பம்.] நெய்தல் நிலமக்கள் வலையர் என்றும் செம்படவர் என்றும் பரதவர் என்றும் வழங்க பெறுவர். அன்னார் வாழுமிடம் குப்ப என்னும் பெயரால் குறிக்கப்படும். சென்னையை சேர்ந்த கடற்கரையில் பல குப்பங்கள் உண்டு காட்டுக்குப்பம், கருங்குடிக்குப்பம், நடுக்குப்ப சோலைக் குப்பம், குயில் குப்பம், நொச்சிக் குப்ப போன்றவை பரதவர் வாழுமிடங்களே. |
நொச்சித்திணை | நொச்சித்திணை noccittiṇai, பெ. (n.) நொச்சி மாலைசூடி வீரர்கள் எயில்காத்தலைக் கூறும் புறத்தினை (பு.வெ.5, கொளு);; major theme describing the defence of a fort by warriors wearing nocci garlands. [நொச்சி + திணை. திணை = ஒழுக்கம், புற ஒழுக்கம்] |
நொச்சிநியமங்கிழார் | நொச்சிநியமங்கிழார் nocciniyamaṅgiḻār, பெ. (n.) கழகக்காலத் தமிழ்ப்புலவர்; Sahgam poet. மறுவ. நொச்சி நீயக்கிழார். [நொச்சிநியமம் + கிழார்] நொச்சிநியமம் ஊர்ப்பெயர். இன்று நொச்சியம் என்று வழங்குகிறது. வேளாண் மரபிரனர் வாழும் ஊர். புறநானூறு (293);, அகநானூறு (52);, நற்றிணை (17, 208, 209); ஆகியவற்றில் இவரது பாடல்கள் காணப்படுகின்றது. நகர்ப்புறத்தே போர் நிகழும் காலத்தே அரண் சூழ்ந்த நகரிலிருந்த நெடுமனை யொன்றிற்கு இவர் சென்று அங்கே இருந்து மறக்குடி மகளிரின் செயல் நலங்களைக் காணும் பேறு பெற்றார். தானை விரும் தானைத் தலைவரும் வாழும் வழியே வருகையில் பூ விற்கும் மகளிர் அத்தெருவில் வராது வேறு தெருக்களை நோக்கிச் செல்வது கண்டார். ஒரு வீரனது மனைக்குச் சென்று அவன்மனையாளைக் கண்டு சொல்லாடுங்கால் தாம் கண்ட இக்காட்சியைத் தெரிவித் தார். மறக்குடிமகளாகிய அவள், சான்றோரே! வள்ளுவன் யானை மேலிருந்து தனது தண்ணுமையை ஒலித்து, அரணுக்குப் புறத்தே முற்றி நிற்கும் பகைவரை யெறிதற்குச் செல்லும் வீரர்க்குக் காஞ்சிப்பூ உரியதாதலால், அதனைச் சென்று பெறுமாறு பணிப்பன். அவ்வொலி ஈண்டு மனையிடத்துள்ளார் செவியிற் கேட்குமாறு ஒலிக்கின்றது. போர்ப்பறை கேட்ட அளவிலே புறப்பட்டுச் செல்லற் பாலராகிய வீரருள் நாணமி ல்லாதார் சிலர் இப்பூக்கோள் குறித்த தண்ணுமையொலி கேட்கு மளவும் மனையில் இருப்பர். அவரை விரைய வருமாறு அழைப்பதும் அதன் கருத்தாகும். இத் தண்ணுமை யொலி கேட்டபின் பூவிலைப் பெண்டு, போர்தொடங்கி விட்டது. இனி ஆடவர் மனைக்கண் இரார் அதனால் இம்மகளிர் நம்பால் பூக்கள் வாங்க மாட்டார் என்று கருதி பிறர் மனைக்கண் செல்கின்றனர் அளியள் என்று பூவிலைப் பெண்டின் பொருட்டு இரங்குவான்போல எடுத்துரைத்தாள். இது கேட்ட நொச்சி நியமங்கிழார் வியப்புமிகக் கொண்டு அவள் கூற்றுப் பொருளாகப் பாடிய பாட்டு: “நிறப்படைக் கொல்கா யானை மேலோன் குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை நாணுடை மாக்கட் கிரங்கு மாயின் எம்மினும் பேரெழி லிழந்து வினையெனப் பிறர்மனை புகுவள் கொல்லோ அளிய டானே பூவிலைப் பெண்டே” (புறநா.293.); அகநானூற்றில் இவர் பாடிய பாடல் சிறப்புடையது. காட்டில் குறமகளிர் வேங்கைப் பூவைப் பறிக்கமுடியாமல் புலிபுலியென இரைச்சலிடுவதும், அதைக் கேட்ட குறவர் வில்லேந்தி ஓடிவருவதும், அவர்களைக் கொண்டு இம் மகளிர் தாம் வேண்டும் பூவைப் பெறுவதும் இவர்பாட்டில் அழகுறக்குறிக்கப் படுகின்றன. அப்பாடல்: “வலந்த வள்ளி மானோங்கு சாரற் கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள் இன்னா விசைய பூசல் பயிற்றலின் ஏகல் அடுக்கத் திருளளைச் சிலம்பின் ஆகொள் வயப்புலி யாகுமஃ தெனத்தம் மலைகெழு சீறுர் புலம்பக் கல்லெனச் சிலையுடை யிடத்தர் போதரு நாடன் நெஞ்சமர் வியன்மார் புடைத்தென அன்னைக்கு அறிவிப் பேங்கொல் அறிவியேங் கொல்லென இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற் சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள் ஆய்மலர் உண்கண் பசலை காம நோயெனச் செப்பா தீமே” (அகநா. 52.); மனை வாழ்வில் தலைவன் பிரிந்த விடத்து வேறு பட்டாற்றாத தலைமகட்குத் தோழி, தலைவன் அன்புநிலையை எடுத்தோதி ஆற்றுவிக்கும் திறம் இவரால் மிக்க நயமுறப் பாடப் பெறுகின்றது. களவின்கண் தலைவி அறத்தொடு நிற்கும் விரகும், வேண்டு மிடத்து வழங்கும் முன்னிலைப் புறமொழியும் இலக்கிய இன்ப ஊற்றாக உள்ளன. “விறல் சாய் விளங்கிழை நெகிழ விம்மி அறல்போல் தெள்மணி இடைமுலை நனைப்ப விளிவிலா கலுழுங் கண்ணொடு பெரிதழிந்து எவனினைபு வாடுதி சுடர்நுதற் குறுமகள் செல்வர் அல்லர்நங் காதலர் செலினும் நோன்மார் அல்லர் நோயே மற்றவர் கொன்னு நம்பும் குரையர் தாமே சிறந்த அன்பினர் சாயலும் உரியர் பிரிந்த நம்மினும் இரங்கி அரும்பொருள் முடியா தாயினும் வருவர் அதன்றலை இன்றுனைப் பிரிந்தோர் நாடித் தருவது போலுமிப் பெருமழைக் குரலே” (நற். 208); |
நொச்சிநியமம் | நொச்சிநியமம் nocciniyamam, பெ. (n.) ஊர்ப்பெயர்; a village name. நொச்சிநியமம், தெய்வநலம் பெற்ற ஊர்களில் ஒன்று. நொச்சிநியமங் கிழார் என்ற புலவர் வாழ்ந்த ஊர். நியமம் என்பது கோவிலைக் குறிக்கும். இப்போது இவ்வூர் நொச்சியம் என்று வழங்குகிறது. இப்பெயருடைய ஊர்கள் பல இருந்ததால், நொச்சிவேலி சூழ்ந்து பிறவற்றின் வேறுபடுதலின், இந்நியமம் நொச்சி நியமம்’ எனப்பட்டது. இவ்வூர் திருச்சிராப் பள்ளியிலிருந்து முசிறிக்குச் செல்லும் வழியில் உத்தமர் கோயிலுக்கு அண்மையில் உள்ளது. |
நொச்சிமாலை | நொச்சிமாலை noccimālai, பெ. (n.) வீரர்கள் மதில் காத்தலைச் சிறப்பித்துக் கூறும் இலக்கிய வகை (யாழ்.அக.);; a poem describing the defence of a fort. [நொச்சி + மாலை, நொச்சி மலர் மாலையைச் சூடிய வீரர்கள் எயிலைக் காத்தலைக் கூறும் இலக்கியவகை] ‘புறத்துன்றிய மாற்றார்க் கோடலின்றி நொச்சிப் பூமாலை சூடித்தன் மதில்காக்குந் திறங் கூறுமொரு இலக்கிய வகை’ (தொன்னூல்.283.உரை); |
நொச்சியம் | நொச்சியம் nocciyam, பெ.(n.) கருவூர்க்குக் கிழக்கில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in east Karuvur. [நொச்சி+ஆம்] நொச்சியம் nocciyam, பெ. (n.) நொச்சிநியமம் பார்க்க;see nocci-niyamam. [நொச்சிநியமம் → நொச்சியம்] |
நொச்சியூர் | நொச்சியூர் nocciyūr, பெ.(n.) பூந்துறை நாட்டுச் சிற்றோடைக்கு மேற்கில் உள்ள ஒரு சிற்றூர்; name of the village on the western side of p[indurai cirrödai. [நொச்சி+ஊர்] இப்பொழுது நொச்சிப் பாளையம் என்று வழங்கப்படுகிறது. |
நொச்சில் | நொச்சில் noccil, பெ. (n.) கருநொச்சி (பதார்த்த.507);; willow-leaved genderussa. [நொச்சு → நொச்சில்] |
நொச்சுலம் | நொச்சுலம் nocculam, பெ. (n.) முல்லை; cared jasmine, Jasminum angustifloium. (சா.அக.);. |
நொச்சுளி | நொச்சுளி noccuḷi, பெ. (n.) ஆவிற்புங்கு; a variety of pungu, Dalbergia genus. (சா.அக.);. ஒருவகைப் புங்கன்மரம். |
நொடி | நொடி1 noḍittal, 4 செ.கு.வி. (v.i.) 1. நொடிசொல்(லு);-தல் பார்க்க;see nodi-50. ‘பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு” (கலித். 89);. 2. உறுப்பை ஆட்டுதல், சைகைக் காட்டுதல்; to gesticulate, use action, in speaking. இறால் நொடிக்கிறது போல நொடிக்கிறான் (வின்.);. 3. பால் முதலியன சுரத்தல்; to collect, as milk in the udder of a cow. பால் இன்னும் நொடிக்க வில்லை (யாழ்ப்.);. 4. வணிகத்தில் இழிப்படைதல் (நட்டமடைதல்);; to break down completely, as a concern. வணிகம் நொடித்துப் போயிற்று. 5. சக்கரம் முதலியன கட்டுக் குலைதல்; to break, snap, as a wheel. விழிப்பாயிரு! சக்கரம் நொடிக்கும் (வின்.);. 6. நடக்கும் போது கால்சிறிது வளைதல்; to bend slightly, as the legs in walking. கால் நொடித்துக் கொண்டது. 7. ஒடித்தல்; to break. குச்சியை நொடிக்கிற மாதிரி விரலை நொடித்துவிடுவேன். 8. சாய்த்தல்; to tilt. வலக்கைப்பக்கம் கொஞ்சம் நொடி. 9. ஒப்புதல் இல்லை என்பதைத் தெரிவிக்க தலையை ஒரு பக்கமாகத் திருப்பித் தோள்பட்டையில் இடித்தல்; to turn one’s head and hit the chin on the shoulder as a gesture of disapproval. கேட்டதற்குப்பதில் சொல்லாமல் கழுத்தை நொடித்து விட்டுப் போய்விட்டான். 10. செல்வ நிலை தாழ்ந்து வறுமையடைதல்; to impoverish. 11. பொடியாகுதல்; to broken to pieces. 12. நிலை கெடுதல்; to destroy, to ravish. ம. நொடிக்க; க., து. நுடி;தெ. நொடி. [நுள் (வளைவு); → (நொள்); → நொடி → நொடி-த்தல் (மு.தா.);] நொடி2 noḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. சொல்லுதல் (திவா.);; to say, tell, speak, declare. சும்மா நொடிக்காதே! கொஞ்சம் வாயை மூடு. [க. நுடி;தெ. நொடுகு ]. 2. சைகையால் அழைத்தல்; to call by signs. “நெஞ்சைத் தன்பக்கலிலே நொடித்துக் கொண்டு” (ஈடு, 5.3:7);. 3. மனத்தாங்கல் உண்டாம்படிக் கோள் சொல்லுதல் (வின்.);; to insinuate so as to stir up ill-will. [தெ. நொடுச்சு]. 4. பழித்தல்; to make unfavorable allusions: to use Sarcasm. “தாயுந்தமரு நொடிக்கின்றார்” (அருட்பா, 3, ஆற்றாக்காத.11);. 5. கட்டை விரலையும் நடு விரலையும் சேர்த்துச் சொடக்குதல்; to snap, as with the thumb and the middle finger, “நொடிப்பதோ ரளவில்” (திவ். திருமாலை, 43);. 6, அழித்தல் (பிங்.);; to destroy, annihilate, reduce to primitive elements or atoms. “நோக்காது நோக்கி நொடித்தன்றே” (சி. போ. 1:4); ம. நொடிக்க; க., து. நுடி;தெ. நொடி. [நொடி1 → நொடி-, → நொடி2-த்தல். இது பிறவினை.] நொடி3 noḍidal, 2 செ.குன்றாவி. (v.t.) சொல்லுதல்; to say, tell, speak, declare. “சென்றது நொடியவும் விடாஅன்” (மலைபடு. 545);. ம. நொடிக்க; க., து. நுடி;தெ. நொடி. [நொடி1 → நொடி3 → நொடி-தல் இது தன்வினை.] நொடி4 noḍidal, 2 செ.கு.வி. (v.i.) 1. ஒடிதல் (நெல்லை);; to break. பந்தல் கால் நொடிந்து கீழே விழுந்து விட்டது. 2. மனம்தளர்தல்; to be broken. அப்பாவை இழந்தபின் அவன் மிகவும் நொடிந்துவிட்டான். 3. பொடியாகுதல்; to broken to pieces. [நொடி1 → நொடி4 -தல்.] நொடி5 noḍi, பெ. (n.) 1. நோய் என்பதோடு இணைந்துவரும் சொல்; word, phrase, language, speech. “புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும்” (பெருங். உஞ்சைக். 33:72);. 2. முதுமொழி; wise saying. “பிசியு நொடியும்” (பெருங். உஞ்சைக். 33:175);. 3. புதிர் (சூடா.);; riddle, enigma. 4. கதை; story. 5. செய்யுள்; stanza. “சடகோப னொடியாயிரத் திப்பத்தும்” (திவ். திருவாய். 10. 5:11); ம., தெ. நொடி. [நொடி1 → நொடி5] நொடி6 noḍi, பெ. (n.) 1. ஓசை; noise. “அமைக்கண் விடுநொடி” (அகநா. 47);. 2. கையின் கட்டை விரலையும் நடுவிரலையும் தெறித்து உண்டாகும் ஒலி; crack or snap, as of the thumb and the middle finger. 3. கண்ணை இமைப்பதற்கு அல்லது விரலை நொடிப்பதற்கு ஆகும் நேரம் போன்ற மிகக் குறைவான நேரம்; instant, as the time-measure of the snap of the finger. “கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை”(தொல். எழுத்து. 7);. நொடிப் பொழுதில் வந்துவிடு. “நொடிப்போதும் விணிடேல்” (பழ);. 4. நோய்த் துன்பம்; ailment. நோய் நொடியின்றி வாழ வேண்டும். 5. வினாடி; Second. அறுபது நொடி ஒரு நிமயம் (நிமிடம்);. ம., தெ. நொடி. [நுள் → (நொள்); → நொடி. (மு.தா.);] நொடி7 noḍi, பெ. (n.) வண்டிப் பாதையிலேற்பட்ட குழிப்பள்ளம்; ruggedness, of road, rut. பாதை நொடியாயிருக்கிறது. (உ.வ.); [நுல் (துளை); → நுள் → நொள் → நொடு → நொடி. (வே.க.);] நொடி8 noḍi, பெ. (n.) 1. பொடி; powder. 2. புழுதி; dust. [நுள் → நொள் → நொடி. (சு.வி.);] |
நொடி பயிற்று-தல் | நொடி பயிற்று-தல் noḍibayiṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) பேச்சுக் கற்பித்தல்; to teach to speak, as to a baby. ‘நொடிபயிற்றுவாள்’ (சீவக. 363, உரை);. [நொடி6 + பயிற்று-தல்.] |
நொடிக்கதை | நொடிக்கதை noḍikkadai, பெ. (n.) விடுகதை (வின்.);; riddle in the form of a story. [நொடி = புதிர். விடுகதை. நொடி6 + கதை] |
நொடிசிரங்கு | நொடிசிரங்கு noḍisiraṅgu, பெ. (n.) சொறி சிரங்கு (M.L.);; itch, scabies. [நொடி6 + சிரங்கு. சிரங்கு = புண்] |
நொடிசொல்(லு)-தல் | நொடிசொல்(லு)-தல் noḍisolludal, 13 செ.கு.வி. (v.i.) 1. புதுச்செய்தி கூறுதல்; to speak of strange things. ‘பேய் நொடி சொன்னாற் போல’ (கலித். 89, உரை);. 2. விடுகதை சொல்லுதல் (வின்.);; to propose riddles, set conundrums. 3. பகடி செய்தல் (வின்.);; to crack jokes. [நொடி5 + சொல்லு)-தல்] |
நொடித்தான்மலை | நொடித்தான்மலை noḍittāṉmalai, பெ. (n.) அழித்தல் தொழிலைச் செய்யும் சிவனின் பனிமலை (பிங்.);; Mount Kailāsa, as belonging to Śiva the Destroyer. “நொடித் தான்மலை யுத்தமனே” (தேவா.1166,1); [நொடி2 → நொடித்தான் + மலை. நொடி = அழித்தல். அழித்தல் தொழில் செய்யும் சிவன் இருக்கும் பனிமலை.] இராவணன் இசையில் சிவன் மயங்கி இருந்தபோது பனி (கயிலாய); மலையை இராவணன் அடியோடு கையால் பெயர்த்ததாகவும், சிவன் கால்விரலால் மலையை அழுத்தி கைகளை நசுக்கியதாகவும் ஒரு தொன்மைக் கதையுண்டு. |
நொடித்துப்போ-தல் | நொடித்துப்போ-தல் noḍittuppōtal, 8 செ.கு.வி. (v.i.) நிலை குலைதல்; to become straitened in circumstances; to become a bankrupt. அந்தச் செல்வந்தர் நொடித்துப் போனார். தொழில் நொடித்துப் போனதற்கு அவரே காரணம். நல்லாவாழ்ந்தார். இப்போது நொடித்துப் போனார். [நொடி2 → நொடித்து போ-தல்.நொடித்துப்போதல் = வருமானம் அல்லது பொருள் இல்லாமல் ஒருவரின் குடும்பம், வாழ்க்கை, தொழில் சீர்குலைதல்] |
நொடிபயிற்றுவாள் | நொடிபயிற்றுவாள் noḍibayiṟṟuvāḷ, பெ. (n.) தாயர் ஐவரில் ஒருவர் (சிலப். 16:85 அரும்);; a kind of mother. [நொடி + பயிற்றுவாள்.] ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் எனத்தாயர் ஐவர் ஆவர். (சிலப். அரும். பக்-429); |
நொடிபாராட்டு-தல் | நொடிபாராட்டு-தல் noḍipārāḍḍudal, 5 செ.கு.வி. (v.i.) விடுகதை சொல்லுதல் (யாழ்.அக.);; to propose riddle, set conundrums. [நொடி5 + பாராட்டு-தல். நொடி = விடுகதை] |
நொடிபோக்கு-தல் | நொடிபோக்கு-தல் noḍipōkkudal, 5 செ.கு.வி. (v.i.) தாளத்திற்கேற்பக் கையை நொடித்தல்; to snap the fingers in marking time. “அசை யுஞ்சீரு மளந்து நொடி போக்கி” (பெருங். வத்தவ 5:5); [நொடி6 + போக்கு-தல்.] |
நொடிப்பவித்திரம் | நொடிப்பவித்திரம் noḍippavittiram, பெ. (n.) ஆசனத்தில் புரைவைத்துப் புண்ணுண் டாக்கும் நோய்வகை; fistula in ano, piles. [நொடி6 + பவித்திரம். Skt பகந்தர → த. பவித்திரம் = புண்நோய்] |
நொடிப்பவுந்திரம் | நொடிப்பவுந்திரம் noḍippavundiram, பெ. (n.) ஆண்குறிக்கு அருகில் உண்டாம் கட்டிவகை (M.L.);; urinary fistula. [நொடி6 + பவுந்திரம். Skt பகந்தரத → த.பவுந்திரம்] |
நொடிப்பிசைப்பெட்டி | நொடிப்பிசைப்பெட்டி noḍippisaippeḍḍi, பெ. (n.) இசைக்கருவிவகை (இக்வ);: harmonium. [நொடிப்பு+இசை+பெட்டி] [P] |
நொடிப்பு | நொடிப்பு noḍippu, பெ. (n.) கணப்பொழுது; instant momemt. “நொடிப்பின் மாத்திரை நூற்றுவில் லேகுவ” (சீவக. 1773);. [நொடி6 + நொடிப்பு] |
நொடியவிழ்-த்தல் | நொடியவிழ்-த்தல் noḍiyaviḻttal, 4 செ.கு.வி.(v.i.) பிதிர் (புதிர்); விடுத்தல்; to solve a riddle or conundrum. [நொடி + அவிழ்-த்தல். நொடி = புதிர். அவிழ்த்தல் = விடுவித்தல், புதிரை விடுவித்தல்] |
நொடியாதிப்பூடு | நொடியாதிப்பூடு noḍiyātippūḍu, பெ. (n.) கொத்தான்; air creeper. (சா.அக.);. |
நொடிவரை | நொடிவரை noḍivarai, வி.எ. (adv.) விரைவில்; in a moment; in a shorttime. “செந்நெறி போய்ப் புகுமி னொடிவரையே” (திருநூற்.33); [நொடி6 + வரை. நொடிப் பொழுதிற்குள்] |
நொடிவிடு-தல் | நொடிவிடு-தல் noḍiviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) சொடுக்குதல்; to snap, as with the thumb and the middle finger. “நொடிவிடுவன்ன காய் விடு கள்ளி” (நற்.314); [நொடி2 + விடு-தல்.] |
நொடிவிழு-தல் | நொடிவிழு-தல் noḍiviḻudal, 4 செ.கு.வி. (v.i.) 1. வண்டிப்பாதையில் குழிப்பள்ளம் விழுதல்; to be full of cross-ruts, as a road. நொடியிருக்கும், வண்டியைப் பார்த்து ஒட்டு. 2. கோணலாதல். (வின்.);; to become crooked. [நொடி + விழு-தல்] |
நொடிவேதை | நொடிவேதை noḍivētai, பெ. (n.) நொடிப் பொழுதில் அதாவது சிறிய கால அளவில் செய்யும் மாயக் கலை (வாத வித்தை);; transonuling metals into gold in a minute time with in a short time. (சா.அக.);. [நொடி + வேதை. வ.வித்தை → த. வேதை] |
நொடு-த்தல் | நொடு-த்தல் noḍuttal, 4 செகுன்றாவி. (v.t.) 1. விலை சொல்லி விற்றல்; to sell. “மீனொடுத்து நெற்குவைஇ” (புறநா. 343);. “பசுமீன் நொடுத்த வெண்ணெல் மாத்தயிர்மிதி” (அகநா.340:15);. 2. சொல்லுதல்; to tell. [நுள் → நொள் → நொடு → நொடு-த்தல். (சு.வி. 45);] |
நொடுக்குநொடுக்கெனல் | நொடுக்குநொடுக்கெனல் noḍukkunoḍukkeṉal, பெ. (n.) 1. தட்டுதலால் உண்டாம் ஒலிக்குறிப்பு; onom expr. signifying, slight tapping or knocking noise. 2. நடக்கும் போது பாதக்குறட்டில் உண்டாகும் ஒலிக்குறிப்பு; clacking, as of wooden sandals in walking. 3. அலப்பற்குறிப்பு; talking fast, chattering. 4. படபடத்தற்குறிப்பு; being fidgety, restless, rude. [நொடுக்கு + நொடுக்கெனல்.] |
நொடுநொடு-த்தல் | நொடுநொடு-த்தல் noḍunoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. துடித்தல்; to be fidgety, restless, 2. துடுக்காயிருத்தல்; to be rude, mischievous roguish. நொடுநொடுத்த பிள்ளை. [(நுள்); → நொடு → நொடுநொடு → நொடுநொடு-த்தல் மு.தா.);] |
நொடுநொடெனல் | நொடுநொடெனல் noḍunoḍeṉal, பெ. (n.) 1. படபடப்புக்குறிப்பு; expr. signifying restlessness. 2. துடுக்காயிருத்தற் குறிப்பு; rudeness. [நொடுநொடு → நொடுநொடெனல்] |
நொடை | நொடை noḍai, பெ. (n.) 1. விலை; price. “பிழிநொடை கொடுக்கும்” (பதிற்றுப்.30:12);. “பறிப்புறத்து இட்ட பால் நொடை இடையன்” (நற். 142:4);. “உமணர் தந்த உப்புநொடை நெல்லின்” (நற். 254:6);. “புறவாயாற் புனல் பாயிற்…..நொடை நறவின்” (புறநா. 352:8);. “நறவு நொடை தொலைச்சி” (பெரும்பா. 140.);. 2. விற்பனை; selling, sale. “கண்ணொடையாட்டியர்”(சிலப்.5:24);. 3. விற்பனைப் பொருள், பல பண்டம்; merchandise. “நொடை நவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்” (சிலப். 6:139);. [நொடு → நொடை] |
நொடைநவில் மகடூஉ | நொடைநவில் மகடூஉ noḍainavilmagaḍūu, பெ. (n.) பல பண்டமும் விற்கும் மகளிர்; merchandise girl, sales girl. “நொடை நவில் மகடுஉக் கடைகெழு விளக்கமும்” (சிலப். 6:139);. [நொடை + நவில் + மகடுஉ. மகள் + து-மகடுஉ-அளபெடுத்தது.] |
நொடைமை | நொடைமை noḍaimai, பெ. (n.) விலை; price. “அருங்க ணொடைமை தீர்ந்தபின்” (பதிற்றுப். 68:11);. [நொடை → நொடைமை = விலைகூவும் பண்பு.] |
நொடையாட்டியர் | நொடையாட்டியர் noḍaiyāḍḍiyar, பெ. (n.) விலைகூறிவிற்கும் மகளிர்; sales girl. “காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர்” (சிலப். 5:24);. [நொடை + ஆட்டியர். ஆளன் (ஆ.பா.); x ஆட்டியர் (பெ.பா.);] |
நொட்டக்கை | நொட்டக்கை noṭṭakkai, பெ. (n.) நொட்டாங்கை (நெல்லை); பார்க்க;see noțângai. மறுவ. ஒரட்டுக்கை. |
நொட்டங்கை | நொட்டங்கை noṭṭaṅgai, பெ. (n.) நொட்டாங்கை பார்க்க;see noțārigai. |
நொட்டாங்கை | நொட்டாங்கை noṭṭāṅgai, பெ. (n.) இடது கை; left hand. நொட்டாங் கையால் செய்யும் வேலை சிறக்காது. மறுவ. ஒரட்டாங்கை. இடது கையைப் பீச்சாங்கை என்றும், நொட்டாங்கை என்றும் கூறுவது வழக்கம். நொட்டை என்றால் குறைவானது. இடதுகை பெரும்பாலோருக்குப் பலமான செய்கை களுக்குப் பயன்படாது. நல்ல செயல்களை அக்கையால் செய்ய விடமாட்டார்கள். பலவீனமான கை என்பதால் நொட்டாங்கை என்றும், மலங்கழுவப்பயன் படுவதால் பீச்சாங்கை என்றும் பெயர் பெற்றது. [ஒரட்டுக்கை = இடதுகை. ஒரட்டுக்கை → ஒரட்டாங்கை → நொரட்டாங்கை → நொட்டாங்கை] |
நொட்டு | நொட்டு1 noṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. ஏமாற்றுதல்; to cheat. 2. புணர்தல்; to cohabit with. [நுள் (துளை); → நொள் → நொட்டு → நொட்டு-தல் இஃது ஒர் இழிவழக்கு. துளைத்தல் பொருள் குற்றப் பொருளில் வந்துள்ளது] நொட்டு2 noṭṭu, பெ. (n.) புணர்ச்சி; Cohabitation. [நுள்(துளை); → நொள் → நொட்டு. இழிவழக்கு.);] |
நொட்டு-தல் | நொட்டு-தல் noṭṭudal, செ.குன்றாவி (v.t.) 1. செய்து முடித்தல்; to finish a work. 2.நெடுங்காலக் கடனை அடைத்தல்; to repay a loan of long due stolsmissyth Upoluosmeu இவன் நொட்டுவானா (கொங்கு.பழ.);. [தொள்→நொடு→நொட்டு] |
நொட்டுக்கை | நொட்டுக்கை noṭṭukkai, பெ.(n.) இடை விடாமல் எதையாவது செய்து கொண்டே இருப்பவர்; one who is working continuously. [நொடு-நொட்டுக்கை] |
நொட்டுச்சொல் | நொட்டுச்சொல் noṭṭuccol, பெ. (n.) நொட்டைச்சொல் பார்க்க;see notai-c-col. [நொட்டைச் சொல் → நொட்டுச் சொல்] |
நொட்டை | நொட்டை1 noṭṭai, பெ. (n.) சுவை மிகுதியால் அண்ணத்தில் நாவைச் சேர்த்துக் கொட்டுகை; smack, as a sign of keen relish or anticipation. என்ன அந்தப் பழத்தைக் கண்டு நொட்டை யிடுகிறாய்? க. லொட்டெ, ஒலிக்குறிப்புச் சொல். நொட்டை2 noṭṭai, பெ. (n.) குற்றம்; fault. [நுள் (துளை); → நொள் → நொட்டை (மு.தா.);. துளையுள்ள சில பொருள்கள் குற்றமுள்ளனவாகக் கருதப்படுவதால் துளைப் பெயர் குற்றத்தைக் குறிக்கும். உள் → ஒள் → (ஒட்டை); → ஒட்டை = குற்றம். சுள் → (சொள்); → சொட்டு → சொட்டை = குற்றம்] |
நொட்டைச்சொல் | நொட்டைச்சொல் noṭṭaiccol, பெ. (n.) குறைச்சொல்; fault-finding words. நொட்டைச் சொல் சொல்லாதே (உ.வ.); மறுவ. நொண்டச்சொல். [நொட்டை2 + சொல்] |
நொட்டைவிடு-தல் | நொட்டைவிடு-தல் noḍḍaiviḍudal, 20 செ.கு.வி. (v.i.) உண்டு முடித்த பின் பொந்திகை (திருப்தி); யைக் காட்டும் முறையாக நாக்கால் கொட்டி ஒலி எழுப்புதல்; utter a sound expressive of relish after a good meal; smack one’s lips. வயிறு முட்டச்சாப்பிட்டு நொட்டை விட்டாயிற்று. [நொட்டை + விடு-தல்.] |
நொணநாட்டியம் | நொணநாட்டியம் noṇanāṭṭiyam, பெ. (n.) நொறு நாட்டியம் பார்க்க;see moru-maiyam. |
நொணநொணவெனல் | நொணநொணவெனல் noṇanoṇaveṉal, பெ. (n.) 1. மூக்காற் பேசுதற் குறிப்பு; expr. signifying the sound of speaking through the nose. 2. தொந்தரவு செய்தற் குறிப்பு; expr. signifying teasing. [நொண + நொண-நொண நொண + எனல்] |
நொணலாமணிவலை | நொணலாமணிவலை noṇalāmaṇivalai, பெ.(n.) கொழ கொழப்பான மணி வலை; a party net. [நொனல்-நொணலா+மணி+வலை] |
நொண்டங்காய் | நொண்டங்காய் noṇṭaṅgāy, பெ. (n.) 1. புளியங்காயின் பிஞ்சு; tender fruit of tamarind. 2. புளியின் செங்காய்; tamarind fruit almost ripe. [நொண்டு + அம் + காய்] பிஞ்சும், அரைக்காயும் பழம் ஆதற்கு நொண்டித்தாவும் பருவத்தனபற்றி வந்தபெயர் என்க. நொண்டித்தாவுதல் என்பது ஈண்டு செங்காயில் வளைந்திருந்து பழமாகும்போது நிமிரும் இயல்பைக் குறித்து. |
நொண்டபிடிச்சவேலை | நொண்டபிடிச்சவேலை noṇḍabiḍiccavēlai, பெ. (n.) பல வகை இடையூறுகளும், சிக்கலும் ஏற்பட்டு, வேலை மிகவும் சுணங்குதல்; work speed is so delayed due to hinderance and obstackle. மறுவ. நொண்டல்வேலை [நொண்டி பிடித்தல் → நொண்டிபிடிச்சல் + வேலை → நொண்ட பிடிச்ச வேலை = வேலை ஒழுங்காக விரைவாக நடக்காமல் நொண்டி (சுணங்கி); நடப்பது போன்ற தன்மை.] |
நொண்டல் | நொண்டல்1 noṇṭal, பெ. (n.) நொண்டுகை (உ.வ.);; limping. [நொள் → நொண்டு → நொண்டல். நொள் → நோள் → நோண்டு = உடலில் நோண்டப்பட்டமுடம் நடக்கும் போது மன்னை நோண்டுவது போல நடத்தல்.] நொண்டல்2 noṇṭal, பெ. (n.) நுகர்கை (திவா.);; experiencing, as pleasure or pain. [நுல் → நுள் → நொள் → நொண்டல்] |
நொண்டி | நொண்டி1 noṇṭi, பெ. (n.) 1. முடமான ஆள் அல்லது விலங்கு; lame person or creature. அவனும் நொண்டி, அவன் குதிரையும் நொண்டி. நொண்டி நொண்டி நடப்பானேன் கண்டதற்கு எல்லாம் பறப்பானேன். (பழ.); நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு (பழ.);. 2. முடம்; crippled condition, as of the leg or arm. நொண்டிக்கை. 3. பொய்க்காலால் நடிப்போன் (யாழ்ப்.);; person who dances on stilts. 4 நொண்டி நாடகம் பார்க்க;see momilnāgagam. [நொண்டு. → நொண்டி. கால் அல்லது கை செயற்படாத குறை ஊனம்;முடம்.] [P] நொண்டி2 noṇṭi, பெ. (n.) நொண்டியடித்துக் கொண்டு சென்று எதிர் அணியினரைத் தொடும் விளையாட்டு; the game of hopping with folded leg. [நொண்டு → நொண்டி] இது பகல், இரவு இரண்டு பொழுதுகளிலும் விளையாடும் விளையாட்டு. ஆடிடமும், பொழுதும், ஆடுவாரும் நொண்டி என்பது, பொட்டலிலும் திறந்த வெளி நிலத்திலும், பெரும்பாலும் சிறுவரும் சிறுபான்மை சிறுமியரும், பகலிலும் நிலவிரவிலும் விளையாடும் விளையாட்டு. ஆடு கருவி : ஆடுவார் தொகைக் கேற்ப நிலத்திற் கீறப்பட்ட ஒருபெருவட்டமே இவ்வாட்டத்தின் கருவியாம். ஆடுமுறை : இருவருக்குக் குறையாத சிலரும் பலரும் சமத் தொகையவான இரு கட்சிகளாய்ப் பிரித்துக் கொள்ளல் வேண்டும். இருவர்க்கு மேற்பட்டவராயின் உத்திகட்டிப் பிரிந்து கொள்வர். மரபான முறைகளுள் ஒன்றன்படி துணிந்து கொண்டு ஒரு கட்சியார் வட்டத்திற் குள்ளிறங்குவர். மறு கட்சியார் வெளி நின்று கொண்டு, ஒவ்வொரு வராய் ஒவ்வொருமுறை வட்டத்திற்குள் நொண்டி அடித்துச் சென்று, உள் நிற்பாருள் ஒருவரையோ பலரையோ எல்லாரையுமோ தொடமுயல்வர். தொடப்பட்டவர் உடனே வெளிவந்துவிடல் வேண்டும். உள்நிற்பார் அனைவரும், தம்மை நொண்டியடிப் பவர் தொடாதவாறு, வட்டத்திற்குள் அங்கு மிங்கும் ஒடித்திரிவர். அங்ங்னம் ஒடும் போது கோட்டை மிதிப்பினும், கோட்டிற்கு வெளியே கால் வைப்பினும், உடனே வெளிவந்துவிடல் வேண்டும். நொண்டியடிப்பார் களைத்துப் போயின் கோட்டிற்கு வெளியே சென்று காலூன்றல் வேண்டும். ஒருமுறை வெளியே சென்றபின், காலுன்றாக்காலும், மீண்டும் உள்ளே வரல் கூடாது. நொண்டியடிப்பவர் வட்டத்திற்குள்ளும் கோட்டின் மேலும் காலூன்றினும், கோட்டை மிதிக்கினும், அவர் தொலைவதோடு, அவராலும் (அவர் பிந்தினவராயின்); அவருக்கு முந்தினவராலும் தொடப்பட்டு வெளியேறியுள்ள அத்துணைப் பேரும் உடனே உள்ளே வந்துவிடுவர். மீண்டும் அவரைத் தொடுதல் வேண்டும். ஒருவர் நொண்டியடித்து முடிந்த பின், இன்னொருவர் நொண்டியடிப்பர். வெளி நிற்கும் கட்சியாருள், முதலிலோ இடையிலோ இறுதியிலோ நொண்டியடிப்பவர் ஒருவரே உள்நிற்பார் எல்லாரையும் தொட்டு விடுவதுமுண்டு; ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரைத் தொடுவதுமுண்டு இடையிட்டு ஒரோவொருவர் ஒருவரையோ பலரையோ தொடுவதுமுண்டு;ஒருவரும் ஒருவரையும் தொடாதிருப்பது முண்டு. இங்ங்ணம், உள் நிற்கும் கட்சியாருள் ஒருவரே வெளியேறியிருத்தலும், சிலரோ பலரோ வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறியிருத்தலும், அனைவரும் வெளியேறா திருத்தலும், ஆகிய நால்வகை நிலைமை ஏற்படக்கூடும். வெளி நிற்கும் கட்சியாரும் அனை வரும் நொண்டியடித்து முடிந்தபின், அல்லது உள்நிற்கும் கட்சியாருள் அனைவரும் தொடப்பட்டபின், ஒர் ஆட்டம் முடியும். ஆட்ட வெற்றி : உள்நிற்பார் அனை வரும் தொடப்பட்டு விடின் வெளிநிற்பார்க்கும், அங்ங்ணமி ன்றி ஒருவர் எஞ்சியிருப்பினும் உள் நிற்பார்க்கும், வெற்றியாம். ஆட்டத் தொடர்ச்சி : ஒருமுறையாடிய பின், மீண்டும் ஒருமுறையோ பல முறையோ ஆட நேரமும் விருப்பமுமிருப்பின், அங்ங்னஞ் செய்வர். முந்திய ஆட்டத்தில் வென்ற கட்சியாரே பிந்திய ஆட்டத்திலும் உள்நிற்பர். உள் நிற்பதே இனியதாகக் கருதப்படும். ஆட்டத் தோற்றம் : இவ் விளையாட்டுப் போர்வினையினின்று தோன்றியதாகும். போர்க் களத்தில் ஒரு கால் வெட்டுண்ட மறவன் மறுகாலால் நொண்டியடித்துச் சென்றே, தான் பட்டு விழுந்துணையும், பகைவரை வெட்டி வீழ்த்துவதுண்டு. இம் மற வினையை நடித்துக்காட்டும் முகமாகவே இவ் விளையாட்டுத் தோன்றிற்று. குறைத்தலைகள் கூத்தாடுவதும் தலையைக் கையிலேந்தி நிற்பதும் போன்ற மறவினைகளை நோக்கும் போது, ஒரு காற் குறைகள் நொண்டிச் சென்று நூழிலாட்டுவது வியப்பன்று. கள்வனொருவன் படையிலுள்ள குதிரை யொன்றைத் திருட முயன்று கால் தறியுண்டபின் நல்வழிப்பட்ட செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் நொண்டி நாடகம் என்னும் நாடக நூல்வகையும் உளது. சீதக்காதி நொண்டி நாடகம்’ இதற்கோர் எடுத்துக்காட்டாம். இந் நாடகச் செய்தி மேற்கூறிய போர் வினைச் செய்தியின் வேறாம். ஆட்டத்தின் பயன் : ஒரு கால் நோய்ப் பட்டும் வெட்டுண்டும் நடக்கவி யலாதபோது மறு காலால் நொண்டியடித்து வேண்டுமிடஞ் செல்வதற்கான பயிற்சியை, இவ் விளையாட்டு அளிக்கும். [P] |
நொண்டிகட்டு-தல் | நொண்டிகட்டு-தல் noṇṭigaṭṭudal, 5 செ.குன்றாவி.(v.t.) பொய்க்கால் கட்டுதல் (வின்.);; to tie on stilts. [நொண்டி + கட்டு-தல். நொண்டி கட்டுதல் = பொய்க்கால் கட்டி நடத்தல்.] |
நொண்டிக்கருப்பு | நொண்டிக்கருப்பு noṇṭikkaruppu, பெ.(n.) சிற்றுார்க் காவல் தெய்வம்; a village deity. |நொண்டி+கருப்பு] |
நொண்டிக்கால் | நொண்டிக்கால் noṇṭikkāl, பெ. (n.) 1. முடக்கால்; lame foot or leg. 2. பொய்க்கால்; stilts. [நொண்டி + கால்] |
நொண்டிச்சமாதானம் | நொண்டிச்சமாதானம் noṇṭiccamātāṉam, பெ.(n.) நடைபெற்று முடிந்த நிகழ்வு ஒன்றுக்குக் காட்டப்படும் வலுவில்லாத கரணியம்; a lame excuse. இந்த நொண்டிச் சமாதானம் (அமைதி); எல்லாம் வேண்டாம் உண்மை யைச் சொல்லு. மறுவ, நொண்டிச்சாக்கு [நொண்டி + சமாதானம்] |
நொண்டிச்சாக்கு | நொண்டிச்சாக்கு noṇṭiccākku, பெ. (n.) நொண்டிச்சமாதானம் பார்க்க;see mond-ccamadaram. வீட்டுப்பாடம் ஏன் எழுதவில்லை என்று கேட்டால் துரவல் (பேனா); இல்லை என்று நொண்டிச் சாக்குச் சொல்லுகிறான். நொண்டிக்குதிரைக்குச் சறுக்கினது சாக்கு (பழ.); [நொண்டி + சாக்கு – நொண்டிச் சாக்கு = தப்பித்துக் கொள்ள ஏதாவது கரணியம் காட்டுதல். சார்த்து → சாட்டு → சாக்கு. நொண்டிக்குச் சறுக்கினது தான் சாக்கு பிறவியிலே நொண்டி யானவன் என்றோ சறுக்கி விழுந்ததைச் சாக்காகச் சொல்லுவது போல.] |
நொண்டிச்சிந்து | நொண்டிச்சிந்து noṇṭiccindu, பெ. (n.) நொண்டி நாடகம் பார்க்க;see nonaināgagam. [நொண்டி + சிந்து. சிந்து = ஒருவகை யாப்பு ஒலி.] நொண்டிச்சிந்து: சந்தப்பாடல்களின் (கவியின்); வகைகளில் இதுவும் ஒன்று. இதன் முதலடியில் இரண்டு அல்லது மூன்று சீர்களும் ஒரு தனிச் சீரும் இரண்டாவது அடியில் நான்கு சீர்களுமாக மாறி மாறி வரும். நொண்டி நாடகம் பெரும்பாலும் இந்தச் சிந்து யாப்பு வகையில் இயற்றப் படுவதால் இதற்கு நொண்டிச் சிந்து என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். திருமலை நாயக்கர் மன்னனின் அவைக்களப்புலவராக வாழ்ந்த இராமப்பையன் என்பவரால் முதன்முதலில் நொண்டிச்சிந்து எனும் சந்தப்பாடல்(க்கவி); வகையை நொண்டியை கதை மாந்தராகக் கொண்டு படைத்தமையால் இப்பெயர் பெற்றது என்பது ஒரு சாரார் கருத்து. ‘சிந்து என்னும் யாப்பு வகைக்கு இன்னது தான் இலக்கணம் என்று தொல்காப்பியம், நன்னூல், காளிகை போன்றவற்றில் காணப் படவில்லை. சிந்தடி என்பது மூன்றடி என்று மட்டும் காணப்படுகிறது. சிந்தியல் வெண்பா மூன்றடியாய் வரும். சிந்து என்னும் யாப்பு வகைக்குப் புலவர் திரு. த.ச. தமி ழனார் அவர்கள் தம்முடைய யாப்பு நூலில் (பக். 108, 109); இலக்கணம் கூறுகின்றார். “முதலடிச் சீர்களும் தனிச்சொல் அன்றி மறியடிச் சீர்களும் எண்னொத் திருப்பின் சமனிலைச் சிந்தாம்; ஒன்றின்மற் ஹான்றுள் மிகுநிலை யாயின் வியனிலைச் சிந்தாம்” முதலடியில் உள்ள சீர்களும், தனிச்சொல் பெற்று மடங்கி வரும் மற்றைய அடிச்சீர்களும் ஒத்த எண்ணிக்கை உடையதாயின் சமனிலைச் சிந்து எனவும், ஒரடியை விட மற்றோர் அடியின் சீர் மிகுந்து இருந்தால் வியனிலைச் சிந்து எனவும் அமையும். சமனிலைச்சிந்து “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே”. “காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி – யென மேவிய யாறு பலவோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு”. வியனிலைச் சிந்து “தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை தின்னப் பழங்கொண்டு தருவான் – பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான். என்னப்பன் என்னையன் என்றால் -அதனை எச்சிற்படுத்திக் கடித்துக் கொடுப்பான்”. நொண்டிச்சிந்து போலவே கும்மிச் சிந்து, காவடிச்சிந்து, வண்டிக்காரன் சிந்து எனப்பலவும் உண்டு. |
நொண்டித்தனம் | நொண்டித்தனம் noṇṭittaṉam, பெ.(n.) 1. முடம்; lameness. 2. ஒரு காலைப் பின்புறம் தூக்கிக் கொண்டு மறு காலால் உந்தி உந்தி எதிர்க் கட்சியில் ஒருவனைப் பிடிக்குஞ் சிறுவர் விளையாட்டு வகை; a children’s game in which one member has to top on one leg and catch one of his opponents. 3. ஆட்டத்தில் புரட்டுச் சொல்லுகை (இ.வ.);; false statement in a game. [நொண்டி + தனம்] |
நொண்டிநாடகம் | நொண்டிநாடகம் noṇṭināṭagam, பெ. (n.) கள்வனொருவன் படையிலுள்ள குதிரை யொன்றைத் திருட முயன்ற போது கால்தறியுண்டு பின் நல்வழிபெற்ற செய்தியைச் சிந்துச் செய்யுளாற் புனைந்து கூறும் நாடக நூல்; a comic poem in Šindu verse in which a thief is represented as having lost his leg in the act of stealing a horse from amidst an army and reforming himself after wards. ம. நொண்டி நாடகம் [நொண்டி + நாடகம்] கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் பாளையக்காரர்கள் ஆட்சி தென்னாட்டில் நடைபெற்றபோது அவர்களை அண்டிப் பிழைக்க வந்த புலவர்களாலே பாடப்பட்டு வந்த ஒருவகை நாடக இலக்கியம் நொண்டி நாடகம். பண்டைத் தமி ழ் இலக்கியத்தில் இது தோன்றியிராமற் போனாலும், நாடக மேடையில், ஒருவனே நடிகனாகவும், பாடகனாகவும் இருந்து நடித்து வந்த வரிக்கூத்து என்பது இதன் மூலமாக இருக்கலாம். வரிக்கூத்துக்கள் தொண்ணுற்று மூன்றனுள் ஒன்றாகச் சிந்து என்ற பாவினத்தில் இது வளர்ந்திருக்கலாம். இது நாடோடிப் பாடலைப் போலப் பாடப்பட்டு தாழ்ந்த மக்களும் எளிதில் சுவைக்குந் தன்மையுடையதாகப் பாடப்பட்டு இடையிடையே இதற்கு உதவி புரிந்த பாளையக்காரர்களின் புகழுரைகளைக் கொண்டதாக இயற்றப்பட்டது. நொண்டி நாடகத்தின் கதைத் தலைவன் கூத்தின் மேடையில் தோன்றி அவனுடைய வரலாற்றை அவனே கூறிப் பாடி நடித்துக் காட்சி தருவான். நொண்டி நாடகங்கள் தமிழ் நாட்டில் பல தோன்றியிருக்கின்றன. எல்லாவற்றிலும் அடிப்படையான கதை ஒன்றே தான். திருட்டுத் தொழிலில் பழகின ஒருவன் தன் தொழிலுக்காகப் பல ஊர்களுக்குச் செல் கின்றான். ஒரூரில் விலைமகள் மீது ஆசை கொண்டு அவளுடைய காமவலையிற் சிக்கிப் பொருள் முழுவதும் தந்து விடுகிறான். அவளுடைய தூண்டுதலின் பேரில் பொருளீட்ட மீண்டும் செல்கின்றான். பலமுறை திருடிப் பொருள் தந்தும் காமவலையிலிருந்து அவன் மீள முடியவில்லை. அப்போது பாளையம் இறங்கியிருந்த ஒரு படைத் தலைவனுடைய குதிரைச்சாலையிற் புகுந்து மாறுவேடத்தில் ஒரு குதிரையைத் திருடுகிறான். காவலர்கள் அவனைப்பிடித்துக் கொள்கிறார்கள். தப்பிப்போக முயன்ற போது பட்ட இடர்களுக்கு அளவே இல்லை. படைத்தலைவனிடம் கொண்டுப் போகப்பட்ட போது அவன் கேட்ட வசவுகளுக்கு அளவில்லை. தலைவன் முற்றும் ஆய்ந்து மாறுகை, மாறுகால் வாங்கி விடும்படி தண்டிக்கிறான். கொல்லனால் கை கால் வாங்கப்படுகையில் அளவற்ற துன்பம் அடைகிறான். இரக்கம் காட்டுவாரின்றி அரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது அருளாளர் ஒருவர் வந்து மருந்து தருகின்றார். அவர் கூறிய நன்மொழிகளால் நற்குணத்தனாகி, அவர் காட்டிய ஒரு தலத்திற்குச் சென்று கடவுளை நெஞ்சுருகப் பாடி வழிபாடு செய்கிறான். பிழையைப் பொறுத்து நல்வழி காட்ட வேண்டுகிறான். வியப்புறும் வகையில் காலும் கையும் வளர்கின்றன. சான்றோன் ஆகின்றான். இறைவழிபாட்டில் நின்று அன்பன் ஆகின்றான். இதுதான் நொண்டி நாடகத்தின் அடிப்படை வரலாறு. இந்நாடகம் பெரும்பாலும் நொண்டிச் சிந்து என்ற பாவினத்தின் இடையிடையே வெண்பா, விருத்தம் முதலிய செய்யுட்களைக் கொண்டதாக இயற்றப்படும். இது நாட்டு மக்கள் கேட்கையில் நெஞ்சு உருகும் வகையில் வழக்குச் சொற்கள், நாட்டுப் பழக்க வழக்க செய்திகள் சேர்க்கப்பட்டு இயற்றப்படுவது. மேடையில் ஆடுகிறவன் காலைக் கட்டிக் கொண்டு நொண்டி நொண்டி ஆடுவதால் இதனை “ஒற்றைக்கால் நாடகம்’ என்றும் கூறுவார்கள். சிறந்த நொண்டி நாடகங்கள் : இராமப் பையன் நொண்டி நாடகம் திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம், சாத்துர் நொண்டி நாடகம், குளத்தூர் ஐயன் நொண்டி நாடகம், திருமலை நொண்டி நாடகம், பழநி நொண்டி நாடகம், திருக்கச்சூர் நொண்டி நாடகம், போன்றன. |
நொண்டிப்பாரி | நொண்டிப்பாரி noṇṭippāri, பெ. (n.) நொண்டி2 பார்க்க;see noņợi2 [நொண்டி + பாரி. பாரி = பரவலாக விளையாடுதல்] |
நொண்டியடி-த்தல் | நொண்டியடி-த்தல் noṇḍiyaḍittal, 4 செ.கு.வி. (v.i.) 1. நொண்டி விளையாடுதல்; to play the game of nondi. நொண்டியடிக்கப் போறேன். 2. ஆட்டத்தில் புரட்டுச் சொல்லுதல்; to utter falsehood in a game. விளையாட்டில் அவன் நொண்டியடிக்கிறான். 3. சோறு முதலியன இன்மையால் வருந்துதல்; to suffer from want, as of food. வாழ்க்கையை நடத்த முடியாமல் நொண்டியடிக்கிறான். [நொண்டி + அடி-த்தல்.] |
நொண்டியடிக்கை | நொண்டியடிக்கை noṇḍiyaḍikkai, பெ. (n.) ஆட்டத்தில் புரட்டுச் சொல்லுகை; false statement in a game. [நொண்டி + அடிக்கை] |
நொண்டு | நொண்டு2 noṇṭudal, 5 செ.கு.வி. (v.i.) முகத்தல்; drawing water. “குடங்கை யினொண்டு கொள்ளவுங் கூடும்” (சிலப். 10:85);. “இரும்பினர்த் தடக்கை நீட்டி நீர்நொண்டு” (நற்.186:2);, [நுள் (துளைத்தல்); → நொள் → நொண்டு → நொண்டு-தல் = மொள்ளுதல், முகத்தல்] |
நொதல் | நொதல் nodal, தொ. பெ. (vbl. n.) சோறு நொந்து போதல்; to be spoiled as boiled rice. [நொய் → நொ → நொதல் (வே.க.);] |
நொதி | நொதி nodi, பெ.(n.) அருவருக்கத்தக்க சேறு: mud, “நொதி அருவருத்த சேறு” (நிக.க.5:28);. [நொது-நொதி] நொதி1 nodiddal, 4 செ.கு.வி. (v.i.) 1. புளித்த மாவு முதலியன பொங்குதல் (வின்.);; to ferment, effervesce, turn sour, as liquidfood; to bubble up slowly, as water over a gentle fire. 2. சீழ் பிடித்தல் (வின்.);; to fester, suppurate. 3. ஈரமாதல் (இ.வ.);; to be damp. 4. நீர் முதலியவற்றில் ஊறிப் போதல் (வின்.);; to be soaked; to be macerated. 5. நுரைத்தல் (வின்.);; to foam, froth, spume, sparkle as spirituous liquors. [நுல் → நுள் → நொள் → நொடு → நொது → நொதி → நொதி-த்தல்] நொதித்தல் கொடி முந்திரிச் சாறு மதுவாக மாறுவதும், தவசங்களின் சருக்கரைப் பொருள்கள் சாராயமாக மாறுவதும் இதையொத்த இன்னும் மாற்றங்களும் நொதித்தல் என்ற பெயரால் குறிக்கப்பட்டன; Diastase zymase போன்ற பொருள்களின் உதவியால் சில கரிமப் பொருள்கள் தம்மினும் எளிய அமைப்புள்ள வேறு பொருள்களாக மாறும் எல்லா விளைவுகளும் இவ்வாறு அழைக்கப் படுகின்றன. இவ்விளைவுகளுக்குக் கரணியமான பொருள்கள் நொதிவிப்பான்கள் (ferments); எனப்படும். இவ்விளைவிற்குக் கரணியமான பொருள்கள் இருவகைப்படும். இவை ஈஸ்)ட்டுகளும், நுண்ணுயிர் பாக்ட்டீரியாவும் ஆகும். கரிமப் பொருள்களான இவற்றில் நைட்ரஜனும் இருக்கும். மிகச் சிறு அளவில் இருந்தாலும் இவை இவ்விளைவைப் பேரளவில் நிகழ்த்தும் திறமை உள்ளவை. உயிருள்ள பொருள்களான இவை வளர்ச்சியும் இனப்பெருக்கமும் உடையவை. ஈ(ஸ்);ட்டில் பல (என்சைம்கள்); கரிமப்பொருள்கள் உள்ளன. உயிர்ப் பொருள்களில் பல்வேறு மாற்றங்களைத் துண்டும் இக் கரிமப் பொருள்களே நொதித்தல் விளைவை நிகழ்த்தும் கரணியாக உள்ளன. நொதி2 nodi, பெ. (n.) 1. புளித்த காடி போன்றவை; Ferment. 2. உயிரினங்களின் உடம்பில் வேதியியல் மாற்றங்களை உண்டாக்கிடும் (கிரியா); ஊக்கியாகச் செயல்படும் குறிப்பிட்ட உயிரணுக்களின் சுரப்பு; enzyme. [நுல் (நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொடு → நொது → நொதி] நொதி3 nodi, பெ. (n.) அருவருக்கத்தக்க சேறு (சூடா.);; mud, mire, slough. நொதியில்கால்வைக்காமல் பார்த்து நட. [நுல் (நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொளில் = சேறு. நொள் → நொடு → நொது → நொதி = சேறு (வே.க.);] |
நொதிவாயு | நொதிவாயு nodivāyu, பெ.(n.) சேற்றுக் குழம்பிலிருந்து எழும் காற்று; the carbon hydrogen gas rising in swamphy or boggy places – Marsh gas. (சா.அக.);. [நொதி + Skt. வாயு.] |
நொது-த்தல் | நொது-த்தல் noduddal, 4. செகுன்றாவி. (v.t.) 1. அழிதல் (திவா.);; to put out, quench, extinguish. 2. தளர்தல்; to relax, to be soft. “நொதிப்பில் வன்சிறை புகுத்துமின்” (தணிகைப்பு. வீராட்.44);. [நுல் (நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொடு → நொது → நொது-த்தல் (வே.க.);] |
நொதுக்கல் | நொதுக்கல் nodukkal, பெ. (n.) இளக்கமுள்ளது (யாழ்.அக.);; that which is soft. [நொதுத்தல் = தளர்தல். நொது → நொதுக்கல்] |
நொதுக்குநொதுக்கெனல் | நொதுக்குநொதுக்கெனல் nodukkunodukkeṉal, பெ. (n.) சூட்டினால் மலம் சிறிது சிறிதாக வெளியேறுதற் குறிப்பு; expr. signifying frequent passing of stools. வயிறு நொதுக்கு நொதுக்கென்று போகிறது. குழந்தை நொதுக்கு நொதுக்கென்று கழிகிறது. [நொது → நொதுக்கு + நொதுக்கு + எனல்] |
நொதுநொது-த்தல் | நொதுநொது-த்தல் nodunoduddal, 4 செ.கு.வி. (v.i.) 1. குழைதல்; to be soft, as rice overboiled. 2. சீழ்கட்டுதல் (வின்.);; to fester, suppurate. 3. ஈரமாதல்; to be damp. 4. நுரைத்தல் (வின்.);; to foam, froth, spume, sparkle, as spirituous liquors. [நொது + நொது-த்தல்] |
நொதுநொதெனல் | நொதுநொதெனல் nodunodeṉal, பெ. (n.) புளித்தமா முதலியன பொங்குதற் குறிப்பு; expr. signifying fermentation. 2. நெகிழ்தற் குறிப்பு; softness, slushy condition. இட்டளி மாவு நொது நொதெனவாகி விட்டது. [நொது + நொது + எனல்] |
நொதுமலர் | நொதுமலர் nodumalar, பெ. (n.) அயலார்; strangers. “நொதுமலர் வந்தவாறென்னோ வென்பர்” (திருக்கோ. 275);. “உள்ளி நொதும லேர்புரை தெள்ளி தின” (நற். 11:3);. “அழாஅ தீமோ நொதுமலர் தலையே” (நற். 13:2);. [நொதுமல் → நொதுமலர்] நட்பும் பகையும் இல்லாதவரை நொதுமலர் என்பது பழந்தமிழ் வழக்கு. |
நொதுமலாட்டி | நொதுமலாட்டி nodumalāṭṭi, பெ.(n.) ஏதிலாட்டியாகிய பூவிலை மடந்தை; பூவிற்கும் பெண்; flower selling woman. “புதுமலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோமென் நெஞ்சே” (நற். 118:11);. [நொதுமல் + ஆட்டி. ஆட்சி = பெண் (திவா);. ஆட்சி → ஆட்டி] |
நொதுமலாளன் | நொதுமலாளன் nodumalāḷaṉ, பெ. (n.) நொதுமலர் பார்க்க;see nodumalar. “நொதுமலாள னெஞ்சறப் பெற்றவென்” (அகநா. 17:8);. “நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்” (நற். 50:5); [நொதுமல் → நொதுமலாளன்] |
நொதுமலாளர் | நொதுமலாளர் nodumalāḷar, பெ. (n.) 1. நொதுமலர் பார்க்க;see modumalar. “நொதுமலாளர் கொள்ள ரிவையே” (ஐங்குறு. 187);. 2. குறளை கூறுவார்; backbiters, slanderers. “நொதுமலாளர் பொதுமொழி கொள்ளது” (புறநா. 35); [நொதுமல் → நொதுமலாளர்] |
நொதுமல் | நொதுமல் nodumal, பெ. (n.) 1. புறக்கணிப்பு (உதாசீனம்);; indifference, neutrality. ‘பகைநொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும்’ (குறள், 12, அதி. அவ.);. 2. அன்பிலார் கூற்று; world of an indifferent person. “நொதுமன் மொழியல்” (அகநா. 39);. 3. மென்மை; smoothness, as of a fine cloth. “நெதுமல் பெற்றிடு நுண்டுகில்” (கந்தபு. திருவி. 122);. [நொது → நொதுமல்] |
நொதுமெனல் | நொதுமெனல் nodumeṉal, பெ.(n.) விரைவுக்குறிப்பு (இ.வ.);; expr signifying speed on hastiness. |
நொத்தாரிசு | நொத்தாரிசு nottārisu, பெ.(n.) ஆவணம் எழுதிப் பதிவு செய்பவன்; notary public officer authorized to attest documents. |
நொத்து | நொத்து nottu, பெ. (n.) தடை செய்கை (வின்.);; hindering, preventing, frustrating. [நொப்பு → நொத்து] |
நொந்தகைமை | நொந்தகைமை nondagaimai, பெ.(n.) 1. நோய்; disease. 2. வலிவின்மை; weakness. 3. வறுமை (யாழ்ப்.);; poverty. [நோ + தகைமை, நோந்தகைமை → நொந்தகைமை, தகைமை = நிலைமை, தகுதி குணம்] |
நொந்தசோறு | நொந்தசோறு nondacōṟu, பெ. (n.) பதமிழந்த சோறு; rotten cooked rice, Stale rice. (சா.அக.);. [நொந்து → நொந்தல் + சோறு. நொந்துதல் = அழிதல்.] |
நொந்தன்னம் | நொந்தன்னம் nondaṉṉam, பெ. (n.) நீர்விடாமையால் பதனழிந்த சோறு (பதார்த்த, 1459);; cooked rice spoiled by being kept dry. [நொந்து → நொந்தல் + அன்னம் நொந்தன்னம். அன்னம் = உணவு, சோறு] |
நொந்தபுண் | நொந்தபுண் nondabuṇ, பெ. (n.) அழிந்தபுண்; rotten sore sloughing wound (சா.அக.);. [நொந்து → நொந்த + புண்] நொந்துதல் = அழிதல். |
நொந்தலை | நொந்தலை1 nondalai, பெ. (n.) 1. வலிமைக் குறைவு (பலவீனம்);; weakness. 2. வறுமை; straitened circustances, poverty. [நொய் → நொ → நொந்தலை] நொந்தலை2 nondalai, பெ. (n.) தீமுறிப்பூடு; An unknown plant suspending the action of fire. (சா.அக.);. |
நொந்தலைமை | நொந்தலைமை nondalaimai, பெ. (n.) நொந்தை (யாழ்ப்.); பார்க்க;see nondal. [நொந்தலை → நொந்தலைமை] |
நொந்தல் | நொந்தல் nondal, பெ. (n.) 1. வலிவிமின்மை; weakness. 2. வறுமை; poverty. [நொந்துதல் → நொந்தல்] |
நொந்தாகிரி | நொந்தாகிரி nondākiri, 1. சூரியகாந்தி; sunflower Helianthus indicus alias Hannuus. 2.பாதிரிமரம்; trumpet flower tree, Stereospermum chelonoides. (சா.அக.);. |
நொந்தார் | நொந்தார்1 nondār, பெ. (n.) பகைவர்; enemies. “நொந்தார்க் கடந்தான்” (சீவக. 2564);. [நோ → நொ → நொந்தார்.] நொந்தார்2 nondār, பெ. (n.) வருந்துபவர்; sorrower. “நொந்தார் செயக்கிடந்தது இல்” (திரிகடுகம். 67:4);. [நொந்து → நொந்தார்.] |
நொந்தாவிகம் | நொந்தாவிகம் nondāvigam, பெ.(n.) சினாசிகா (சூழ்ப்பிராய்);; demon tree. (சா.அக.); |
நொந்தாவிளக்கு | நொந்தாவிளக்கு nondāviḷakku, பெ. (n.) நூந்தா விளக்கு (தெ.க.தொ.1,114); பார்க்க;see nunda-Vilakku. [நொந்து + ஆ + விளக்கு. ஆ – எ.ம. இடைநிலை, நுந்து → நொந்து → நொந்துதல் = துண்டுதல்] |
நொந்திரா | நொந்திரா nondirā, பெ. (n.) கச்சந்திராய்; Indian Chickenced – Mollugo parviflora. (சா.அக);. |
நொந்தீவார் | நொந்தீவார் nondīvār, பெ. (n.) வெறுப்பார்; disliker. “நோதக்காயென நின்னை நொந்திவாரில் வழி” (கலித். 73);. [நொந்து → நொந்தீவார்] |
நொந்து | நொந்து1 nondudal, 5 செ.கு.வி. (v.i.) 1. அழிதல்; to perish. “நூறு கோடி பிரமர் கணொந்தினார்” (தேவா. 1218, 3);. 2. பதனழிதல்; to become spoilt. 3. வருந்துதல்; to suffer; to afflict. 4. வறுமை; penury. க. நொந்து. [நொது → நொந்து → நொந்து-தல். நொதுத்தல் = அழிதல்] நொந்த கண் இருக்க நோகாக் கண்ணுக்கு மருந்து (பழ. நொந்து அறியாதவர் செந்தமிழ் கற்றோர். (பழ); நொந்து2 nondudal, 5 செ.குன்றாவி, (v.t.) தூண்டுதல்; to trim. “நொந்தாத செந்தீ” (பதினோ. காரை. திருவிரட், 13);. [நுந்துதல் = தூண்டுதல். உந்து → நுந்து → நொந்து → நொந்து-தல்] |
நொந்துகொள்(ளு)-தல் | நொந்துகொள்(ளு)-தல் nondugoḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) 1. வருத்தப்படுதல்; regret one self. “தண்புனற் பூசலல்லது நொந்து” (புறநா. 42:7);. தெரியாமல் உன்னை நம்பினேனே! என்று நொந்து கொண்டான். 2. குறைபட்டுக் கொள்ளுதல்; curse one self. என்னபடித்து என்ன பயன் வேலை கிடைக்கவில்லையே என்று நொந்து கொண்டான். 3. குறை கூறுதல்; charge, blame. நீ சரியாகப் படிக்காததற்கு ஆசிரியரை ஏன் நொந்து கொள்கிறாய். [நொந்து + கொள்(ளு);-தல்] |
நொந்துபோ | நொந்துபோ1 nondupōtal, 8 செ.கு.வி. (v.i.) 1. நிலை கெடுதல் (வின்.);; to be impoverished to be reduced in circumstances. 2. பதனழிதல்; to become spoild. “காற்றில்லாமல் நொந்து போன பழவகைகளை’ (மதி.கள. 2, 49); [நோ → நொந்து + போ-தல்] |
நொன்னை | நொன்னை noṉṉai, பெ. (n.) 1. நையாண்டி; mimicking, mocking. 2. ஏளனம்; taunt, ridicule, sarcasm. [நொல் + நை. சொல்லில் மறைந்து வரும் நகைச் சுவையைக் குறிக்கும்.] அதியமானிடமிருந்து தொண்டைமானுக்குத் தூது சென்ற ஒளவை நெய் தோய்ந்த புதியபோர்க் கருவிகளைப் பார்த்து, அதியமானிடம் இருப்பது குருதி தோய்ந்த கருவிகள் என்று கூறுவதாகும். |
நொன்றி | நொன்றி noṉṟi, பெ. (n.) மான் (சங்.அக.);; deer. [நொல் (→); நொள்); → நொன் + றி நொள் → நொளுந்துதல் = மறைதல் பொருளில் வருவது. புலிபோன்றவல் விலங்குகளை காணுங்கால் புதரில் மறையும் பண்பு பற்றியதாகலாம்.] |
நொப்பம் | நொப்பம் noppam, பெ. (n.) திறமை (சாமர்த்தியம்);; skill ability. “அந்நொப்ப மேகொல் பிறிதே கொல்” (கம்பரா.நாகபா. 253); [நொய்ப்பம் → நொப்பம்] |
நொப்பு | நொப்பு1 noppudal, 5 செ.குன்றாவி. (v.t.) தடுத்தல் (MM);; to hinder. நொப்பு2 noppu, பெ. (n.) 1. தடைசெய்கை (வின்.);; hindering, preventing, frustrating. 2. குட்டி, பால் குடியாதவாறு ஆட்டின் முலைக்காம்பில் சுற்றும் ஒலை அல்லது துணி. (வின்.);; strip of ola or cloth wound round the dugs of a goat to prevent the kids from sucking. 3. வெள்ளப் பெருக்கில் வரும் செத்தை அழுக்கு முதலியன; debris of a flood. |
நொப்புநுரை | நொப்புநுரை noppunurai, பெ. (n.) காய்ச்சும் பொழுது ஏற்படும் நுரை; the impurities arising on the top surface when boiling a solution. (சா.அக.);. [நொப்பு + நுரை] காய்ச்கம் ஏனம் நிரம்பி வழியும் போது வரும் நுரை. |
நொம்பலம் | நொம்பலம் nombalam, பெ. (n.) துன்பம் (இ.வ.);; distress. உன்னோடு பெரிய நொம்பலமாப் போச்சு (பே.வ.); ம. நொம்பலம் [நொ → நொம்பு → நொம்பலம்] |
நொம்பு-தல் | நொம்பு-தல் nombudal, 5 செ.குன்றாவி. (v.t.) நோம்பு – பார்க்க;see nómbu-. [நோம்பு → நொம்பு → நொம்பு-தல்.] |
நொய் | நொய் noy, பெ. (n.) 1. குறுநொய் (திவா.);; grits, groats. 2. இலேசு (சூடா.);, brittleness, fragility, delicateness. 3. மென்மை (வின்.);; softness, lightness. 4. நுன்மை (வின்.);; smallness, minuteness. அரிசி நொய்மையாகிவிட்டது. 5. பன்னீர்; rose water. 6. தவிடு; bran. [நுல் → நுள் → நொள் → நொய் = நொறுங்கிய கூலம். நூல் = நுண்மை, மென்மை, சிறுமை, நொய்ம்மை] |
நொய்தல் | நொய்தல் noytal, பெ. (n.) நுண்மை (சது.);; minuteness, fineness. [நொய் + தல் – நொய்தல், தல் ஈற்றுத் தொழிற்பெயர்] |
நொய்தாக்கல் | நொய்தாக்கல் noytākkal, பெ. (n.) நுண்மையாக்குதல்; reducing to fine particles making subtle; subtilising. [நொய் → நொய்து + ஆக்கல்] |
நொய்து | நொய்து noytu, பெ. (n.) 1. கனமில்லாது இலேசானது; that which is light. “விண்ணினொய்தாய்” (ஞானவா. வீதக. 76);. “நொய்தாந் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்” (நீதிவெண்பா. 8);. 2. மெல்லியது; that which is soft. துணி மிகவும் நொய்து. 3. இழிவானது; that which is poor, mean. “நொய்தி னொய்ய சொல்” (கம்பரா. பாயி. 5);. 4. விரைவு; quickness. தலைவர் உரை மிகவும் நொய்தாயிருந்தது. “ஆயிழை நொய்தி துரைபொரு ளுண்டெனின்” (சீவக. 1767);. “கொடியவே தாளமெல்லா நொய் தினிற் செற்றான்”(சேதுபு. வேதாள.98); [நொய் → நொய்து] |
நொய்துகம் | நொய்துகம் noytugam, பெ. (n.) நரிவழுக்கைச் செடி; diabetis plant, Graliola monieri. (சா.அக.);. |
நொய்தெனல் | நொய்தெனல் noyteṉal, பெ. (n.) விரைவுக்குறிப்பு (திவா.);; expr signifying quickness, briskness, nimbleness. பறவை நொய்தெனப் பறந்தது. [நொய் → நொய்து + எனல் – நொய்தெனல். கனமற்றவை விரைவாகச் செல்லும்] |
நொய்ப்பம் | நொய்ப்பம் noyppam, பெ. (n.) 1. திறமை; skill, ability. “மரக்கலம் அலையாதபடி கடைந்த நொய்ப்பம்” (திவ். திருப்பா. 30, வியா 254);. 2. இலேசு (வின்.);; delicateness, tenderness. இந்த வேட்டி மிகவும் நொய்ப்பமாக இருக்கு. [நுள் (மென்மை, கூர்மை); → நொள் → நொய் → நொய்ப்பு → நொய்ப்பம்] |
நொய்ப்புக்கொட்டு-தல் | நொய்ப்புக்கொட்டு-தல் noyppukkoṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) ஆட்டு முலையினின்று பால் சுரந்து வடியும் படி விரலால் அழுத்துதல் (வின்.);; to thump the udder of a goat while milking to make the milk flow. [நொப்பு → நொய்ப்பு + கொட்டு-தல்] |
நொய்ம்மீன் | நொய்ம்மீன் noymmīṉ, பெ. (n.) மணல் நிறமுள்ள ஆற்றுமீன் வகை (பிங்.);; freshwater fish, Sandy in colour, Lepidocepha -lichthys thermalis. [நுல் = மென்மை. நுல் → நுள் → நொய் + மீன் – நொய்ம்மீன் = மென்மையான, பளபளப்புடன் கூடிய சிறிய மீன்.] |
நொய்ம்மை | நொய்ம்மை noymmai, பெ. (n.) 1. தளர்ச்சி (யாழ்.அக.);; looseness. 2. உறுதியின்மை; flimsiness, weakness, futility, as of arguments. 3. கனமின்மை; lightness. “மெய்ம்மை சீர்மை நொய்ம்மை வடிவம்” (மணிமே. 27.254);. நீரில் நீந்தும் போது உடல் நொய்ம்மையாக இருக்கும். 4. மென்மை; softness, slenderness. சிறு குழந்தையின் கை நொய்ம்மையாக இருக்கும். 5. மனத்திட மின்மை; weakness of mind, pusillanimity, effeminacy, cowardice. 6. மனவுருக்கம் (வின்.);; tender-heartedness, sensibility, delicacy of feeling, quick perception of an injury or affront. 7. வறுமை (யாழ்.அக.);; poverty, indigence. 8. நுண்மை, சிறுமை; minuteness, thinness, smallness. 9. இழிவு (நாலடி, 41);; triviality, insignificance. meanness. 10. நேர்த்தி; niceness, fineness in workman-ship. 11. குற்றம் (வின்.);; injuriousness, offensiveness, as of language. [நுல் = நெகிழ்ச்சி, சிறுமை, மென்மை. நுல் → நுள் → நொள் → நொய். ஒ.நோ. தொள் → தொய். நொய் → நொய்மை (வேக.);] |
நொய்ய | நொய்ய1 noyya, பெ.எ. (adj.) 1. மென்மையான; soft, tender. “அனிச்சப் போதி னதிகமு நொய்ய” (கம்பரா. கோலங். 14);. 2. வலியற்ற; weak. நொய்ய புத்தி. நொய்ய உடம்பு. 3. சிறுமையான; small, mean, poor. “நொய்தி னொய்ய சொல்” (கம்பரா. பாயி. 5);. 4. வசையான (வின்.);; lampoon. நொய்ய சொற் பெறாதவன் 5. நுட்பமான; minute. “பல்கல நொய்ய மெய்யணிந்து” (சீவக. 991);. [நொய் → நொய்ய=சிறிய, அற்ப. சின்ன என்பதை நொய்ய என்பது குடந்தை வழக்கு.] நொய்ய2 noyya, வி.எ. (adv.) கடுமையாக; severely. ‘அவனை நொய்யப் புடைத்தான்’ [நை2 → நைய → நொய்ய] |
நொய்யசொல் | நொய்யசொல் noyyasol, பெ. (n.) வசைச்சொல்; reproach, contumely. ‘நொய்ய சொற் பொறாதவன்’ (வின்.); [நொய் → நொய்ய1 + சொல். நொய்ய = இழிவான வசையான] |
நொய்யது | நொய்யது noyyadu, பெ. (n.) சிறியது; Small. “நோக்கார் கொல் நொய்யதோர் புக்கிலை” (நாலடி,41:2); [நொய் → நொய்து → நொய்யது = இலேசானது, மென்மையானது, சிறியது, இழிவானது.] |
நொய்யம்மை | நொய்யம்மை noyyammai, பெ. (n.) அம்மை வகை; measles. [நொய் + அம்மை] பெரியம்மை அணுக்கள் இந்தியாவில் ஒழிக்கப்பட்டன. சின்னம்மை வகைகள் உள்ளவற்றுள் ஒன்று இஃது ஆகலாம் |
நொய்யரிசி | நொய்யரிசி noyyarisi, பெ. (n.) குறு நொய்; grits groats. நொய்யரிசி கொதி தாங்காது (பழ.);. நொய்யரிசி கொதி பொறுக்குமா (பழ.); [நொய் + அரிசி] |
நொய்யலாறு | நொய்யலாறு noyyalāṟu, பெ. (n.) கொங்கு நாட்டில் (கோவை பகுதி); உள்ள வெள்ளி மலையில் தோன்றி காவிரியில் கலக்கும் ஒரு சிற்றாறு; a river in Kovai district. [நொய்யல் + ஆறு] |
நொய்யவன் | நொய்யவன் noyyavaṉ, பெ. (n.) 1. வறியவன்; the pauper. 2. எளியவன்; humble man. 3. வலுவிழந்தவன்; weak person. 4. புல்லன்; ignorant person. “நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்” (கொன்றை.57); [நுள் (எளிமை, சிறுமை); → நொள் → நொய் → நொய்யவன் (மு.தா.);] |
நொய்யார் | நொய்யார் noyyār, பெ. (n.) விலைமகளிர்; prostitute, solewomen. “நொய்யார் நுவலும் பழி நிற்பத் தம்மொடு” (கலித்.25:16);. “குலந்தனில் நொய்யார் சைவ தீக்கை கொண்டிடினும்” (அருணகிரி. பு, வலம்புரி:72);. [நொய் + ஆர். நொய்யது – இழிவு, சிறியது. ஆர் = பன்மை விகுதி] |
நொய்யெனல் | நொய்யெனல் noyyeṉal, பெ. (n.) நுண்மைக் குறிப்பு; expr. signifying lightness, thinness, slenderness, insignificance, [நொய் + எனல்] |
நொய்வு | நொய்வு noyvu, பெ. (n.) 1. நொய்ம்மை (திவா.); பார்க்க;see noymmai. “சிறியரென்றிகழ்ந்து நொய்வு செய்வன செய்யல்” (கம்ப.கிட்கிந். அரசிய.32);. 2. மனவருத்தம்; distress of mind. “நொந்தவர் நொய்வு தீர்க்க” (கம்பரா. வேலேற்ற. 42);. [நுள் (நோதல்); → நொள் → நொய் → நொய்வு. (மு.தா.);] |
நொரண்டு-தல் | நொரண்டு-தல் noraṇṭudal, செ.கு.வி.(v.i.) குறும்பு; to behave; mischeviously playing pranks on others. (நெல்லை.வ.);. மறுவ சுழித்தனம், குறும்பு. [நுரண்டு-நொரண்டு] |
நொரநாட்டியம் | நொரநாட்டியம் noranāṭṭiyam, பெ. (n.) நொறு நாட்டியம் (நெல்லை);; fastidiousness. [நொறுநாட்டியம் → நொரநாட்டியம்] சிறு குழந்தைகள் ஒரு பொருளுக்காக அடம்பிடித்தலை நொண நாட்டியம் என்பர். நொறுக்குத்தீனி என்பதுபோல் சிறிதுசிறிதாக அழுது அடம்பிடித்தல் பற்றி நொறுநாட்டியம் நொணநாட்டியம் என்று வழங்கலாம். |
நொரு | நொரு noru, பெ. (n.) 1. முதிர்ந்த பயிரின் அடியில் அல்லது கணுவில் தோன்றும் இளங்கதிர்; after-shoot from the roots of rice, millet, etc., after the main stalk has come to maturity. 2. காய்ப்பு மாறினபின் அரும்பும் பிஞ்சு; small after-fruits, as of pumpkin plants. 3. சிறு பிஞ்சு; small fruit. [நுரு → நொரு. நுரு = இளம்பிஞ்சு, அறுத்த தாளில் விடும் தளிர்] |
நொருகை | நொருகை norugai, பெ. (n.) நொறுவை (வின்.); பார்க்க;see noruval. [நொறுவை → நொருகை, று → ரு – திரிபு] |
நொருக்காய் | நொருக்காய் norukkāy, பெ. (n.) காய்ப்பு மாறின பின் அரும்பும் பிஞ்சு (யாழ்ப்.);; small after – fruits, as of pumpkin plants. மறுவ. குருக்காய். [நொரு + காய். நொரு = சிறுபிஞ்சு. நொருக்காய், நொருப்பிஞ்சு என்பன யாழ்ப்பான வழக்கு] |
நொருக்கு-தல் | நொருக்கு-தல் norukkudal, 5 செ.குன்றாவி. (v.t.) நொறுக்கு – பார்க்க;see nosukku. [நொருங்கு → நொருக்கு] |
நொருங்கவிடி-த்தல் | நொருங்கவிடி-த்தல் noruṅgaviḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) பொடியாக்குதல்; pounding so as to become powder or small particles (சா.அக.);. [நொருங்கு → நொருங்க + இடி-த்தல்] |
நொருங்கு-தல் | நொருங்கு-தல் noruṅgudal, 5 செ.கு.வி. (v.i.) நொறுங்கு-தல் பார்க்க;see __, |
நொருச்சி | நொருச்சி norucci, பெ. (n.) காட்டுத் துளசி; wild basil, Ocimum adscendens. (சா.அக.);. |
நொருநொரு-த்தல் | நொருநொரு-த்தல் norunoruttal, 4 செ.கு.வி. (v.i.) நொறுநொறு – பார்க்க;see morபnoru. |
நொருநொரெனல் | நொருநொரெனல் norunoreṉal, பெ. (n.) நொறுநொறெனல் – பார்க்க;see __, [நொருநொரு + எனல்] |
நொருப்பிஞ்சு | நொருப்பிஞ்சு noruppiñju, பெ. (n.) நொரு 2 (யாழ்ப்.); பார்க்க;see morய 2. [நொரு + பிஞ்சு. நொரு = சிறுபிஞ்சு. நொருக்காய், நொருப்பிஞ்சு என்பன யாழ்ப்பான வழக்கு] |
நொருப்பிடி-த்தல் | நொருப்பிடி-த்தல் noruppiḍittal, 4 செ.கு.வி. (v.i.) காய்ப்பு மாறின. பின் மீண்டும் பிஞ்சு வைத்தல் (யாழ்ப்.);; to form an after-shoot. [நொரு = பிஞ்சு. நொரு + பிடி-த்தல்] |
நொருவல் | நொருவல் noruval, பெ. (n.) நொறுவல் பார்க்க;see noruwal. [நொறுவல் → நொருவல். று → ரு – திரிபு] |
நொறிதல் | நொறிதல் noṟidal, பெ. (n.) விரைவு; quickness. [நொறில் → நொறிதல்] |
நொறில் | நொறில் noṟil, பெ. (n.) 1. விரைவு (சூடா.);; quickness, speed. “நொறில்பரிர் தேர்” (நைடத.போர்புரி.3);. 2. நுடக்கம்; suppleness, pliability. “நொறிலியற் புரவி யதியர் கோமான்” (தொல்.சொல். 396,உரை);. 3. ஒடுக்கம் (பிங்.);; shutting, closing, contracting. 4. நொளில் பார்க்க;see no/ “செருநில நொறிற் செந்நீரினுள்” (சூளா.அரசி.274);. |
நொறுகை | நொறுகை noṟugai, பெ. (n.) நொறுவை (இ.வ.);. பார்க்க;see noruwai. [நொறுவை → நொறுகை.] |
நொறுக்கரிசி | நொறுக்கரிசி noṟukkarisi, பெ. (n.) 1. உரலிட்டு நெல்லைக்குத்தும்போது நொறுங்கிய அரிசி; rice broken in pounding. 2. அரைவேக்காட்டுச் சோறு (வின்.);; half boiled rice. மறுவ. நொய்யரிசி. [நொறுங்கு → நொறுக்கு + அரிசி.] |
நொறுக்கல்நெல் | நொறுக்கல்நெல் noṟukkalnel, பெ. (n.) அறுப்புக் காலத்து மழையாற் பதர்த்த நெல்; paddy wet and softened by rain during harvest. [நொறுங்கு → நொறுக்கு → நொறுக்கல் + நெல்.] |
நொறுக்கித்தள்ளு-தல் | நொறுக்கித்தள்ளு-தல் noṟukkiddaḷḷudal, 5.செ.குன்றாவி. (v.t.) 1. நன்றாயடித்தல்; to beat soundly. 2. மிகத்திட்டுதல்; to abuse roundly. 3. நற்றிறங்காட்டுதல்; to exhibit great ability, as in eloquence or music. 4. செய்வ தருமை என்ற செயலைச் சிறப்பாகச் செய்தல்; to well with apparent case smash. பேச்சுப் போட்டியில் கலந்துக்கொள்ளப் பயப்பட்டாயே. இப்போது எப்படி! நொறுக்கித் தள்ளிவிட்டாய். [நொறுக்கு + தள்ளு – தல்] |
நொறுக்கு | நொறுக்கு1 noṟukkudal, 5 செ.குன்றாவி, (v.t.) 1. சிறுசிறுபகுதிகள் ஆகுமாறு உடைத்தல்; பொடியாக்குதல்; to break, crack, crush, smash to pieces. செங்கல்லை நொறுக்கிக் கொடு. 2. அரத்தக்காயம் பண்ணுதல்; to bruise. 3. நையப்புடைத்தல்; to beat soundly. “வீரரை நொறுக்கி” (திருப்பு:574.);. சண்டையில் எதிரியை நொறுக்கிவிட்டான். 4. மிகுதியாய் உண்ணுதல்; to eat in large quantities. பந்தியில் ஒரு நொறுக்கு நொறுக்கிவிட்டான் (உ.வ.); க. நுர்கு (g);. [நொறுங்கு → நொறுக்கு → நொறுக்கு -தல். இது பிறவினை வடிவம்] நொறுக்கு2 noṟukku, பெ. (n.) 1. பொடி யாக்குகை; crushing. 2. நன்றாயடிக்கை; beating soundly, thrashing. சண்டையில் எதிரியை நொறுக்கு நொறுக்கு என்று நொறுக்கி விட்டான். க. நுர்கு [நொறுங்கு → நொறுக்கு.] |
நொறுக்குச்சக்கந்தம் | நொறுக்குச்சக்கந்தம் noṟukkuccakkandam, பெ. (n.) கேலிப்பேச்சு ஏளனம்; mockery, jeering. [நொறுக்கு + சக்கந்தம். சக்கந்தம் = பகடி,கேலி.] |
நொறுக்குவெள்ளி | நொறுக்குவெள்ளி noṟukkuveḷḷi, பெ. (n.) தங்கத்தோடு சேர்த்து உருக்கி மட்டப் பொன்னாகச் செய்விக்கும் ஒருவகை (இரசாயன); வெள்ளி; a chemical silver used for mixing with gold so as to get an inferior gold. (சா.அக.);. [நொறுக்கு + வெள்ளி.] |
நொறுங்கு | நொறுங்கு1 noṟuṅgudal, 5 செ.கு.வி. (v.i.) 1. உடைந்து சிறுசிறு பகுதியாதல்; பொடியாதல்; to be broken, crushed, smashed to pieces. கற்கள் பட்டதினால் கண்ணாடிகள் நொறுங்கின. நொறுங்கத் தின்றார்க்கு நூறு வயது (பழ.);. மனம் நொறுங்குண்டது. மனம் நொறுங்குதல் போல் வருந்துதல். (உ.வ.); 2. பின்னிரங்குதல்; to be broken down in spirit, to become contrite. நொறுங்குண்ட மனம் (வின்.);. [நுல் → நுள் → நுறு → நொறு → நொறுங்கு → நொறுங்கு-தல். இது தன்வினை வடிவம்.] நொறுங்கு2 noṟuṅgu, பெ. (n.) 1. நொய் (சூடா.);; broken grain, grits. 2. தூள்; powder. “நொறுங்காய்க் கூடியிட்டன கொடுமுடித் துறுகற்கள்” (சூளா.சீய. 145);. 3. நுண்மை (வின்.);; minuteness smallness. [நுல் → நுள் → நுறு → நொறு → நொறுங்கு. நுல் = நுண்மை, சிறுமை.] |
நொறுங்குண்டமனம் | நொறுங்குண்டமனம் noṟuṅguṇṭamaṉam, பெ. (n.) பின்னிரங்கும் மனம் (கிறித்.);; contrite spirit, wounded mind. [நொறுங்கு + உண்ட + மனம்.] உண்ட என்பது இங்கு உள்வாங்குதல் என்னும் பொருளில் வந்தது. ஒளவையார் மன்னன் வீட்டு மணவிழாவிற்குச் சென்ற போது “நெருக்குண்டேன்; அடியுண்டேன்; பிடியுண்டேன்;கோலுண்டிலேன்” என்று கூறியது காண்க. |
நொறுநாட்டியம் | நொறுநாட்டியம் noṟunāṭṭiyam, பெ.(n.) குற்றம் குறை; fault, accusation. [நொறு+(நொட்டு);-நொட்டியர்-நாட்டியம்] நொறுநாட்டியம் noṟunāṭṭiyam, பெ. (n.) 1. பொருட்படுத்தத்தகாத மிகச் சிறு குற்றங்களைக் கூறுந்தன்மை (இ.வ.);; meticulosity, over-scrupulousness. 2. விறலுஞ் சுவையுந் தோன்ற நடிக்கும் நுண்வினை நடனம்; a kind of dance. 3. துப்புரவு, சுவை, ஒழுக்கம் முதலியவற்றில் அளவிற்கு மிஞ்சிக் கவனஞ் செலுத்துகை; to take too much of purity flavor and behavier. [நொறு + நாட்டியம். நடி → நடம் → நட்டம். வ. நாட்ய (நாட்ய → நாட்டியம்);.] மிக நுட்பமான அவிநயங்களுடன் நடனஞ் செய்தல் நொறுநாட்டியம் எனப்படும். வேண்டாத நுண்ணிய வினைகளைச் செய்யும் ஒருவனை ‘நொறுநாட்டியம் பிடித்தவன் என்பர் சொஆக- 12. முதற்பொருளாய்ச்சிறுகுறையும் மூன்றாம் பொருளாய் மிகு சுவையும் தாழ்வாக்கி, இரண்டாம் பொருளாய நாட்டியத்திறம் நொறு-நடனம், இசைபற்றிய சிறிய எல்லைவரை ஆடப்படுதலின் சிறப்புடைத் தாகிறது. |
நொறுநொறு-த்தல் | நொறுநொறு-த்தல் noṟunoṟuttal, 4 செ.கு.வி. (v.i.) உடையுந் தன்மையாதல் (வின்.);; to be brittle, fragile, crisp, as biscuit. [நொறு + நொறு – நொறுநொறு → நொறுநொறு–த்தல்] |
நொறுநொறெனல் | நொறுநொறெனல் noṟunoṟeṉal, பெ. (n.) நொறுங்குதற்குறிப்பு; onom. expr. signifying brittleness or crispness. [நொறு + நொறு + எனல்.] |
நொறுவல் | நொறுவல் noṟuval, பெ. (n.) நொறுவை பார்க்க;see noruval. [நொறுவை → நொறுவல்] |
நொறுவை | நொறுவை noṟuvai, பெ. (n.) பல்லால் நொறுக்கித் தின்னும் சிற்றுண்டி (வின்.);; dainties, things of luxury. [நுல் → நுள் → நூறு → நொறு → நொறுவை. (வே.க.);] |
நொறுவைக்கள்ளன் | நொறுவைக்கள்ளன் noṟuvaikkaḷḷaṉ, பெ. (n.) வீண்செலவு செய்வோன் (வின்.);; extravagant man. [நொறுவை + கள்ளன்.] மறைவாக, கள்ளத்தனமாக நொறுவை உணவுண்ணச் செலவிடுபவனைக் குறிக்கும். |
நொறுவைக்கள்ளி | நொறுவைக்கள்ளி noṟuvaikkaḷḷi, பெ. (n.) வீண்செலவு செய்பவள் (வின்.);; extravagant woman. [நொறுவைக்கள்ளன் → நொறுவைக்கள்ளி.] மறைவாக, கள்ளத்தனமாக நொறுவை உணவுண்ணச் செலவிடும் பெண்ணைக் குறிக்கும். |
நொறுவைப்பண்டம் | நொறுவைப்பண்டம் noṟuvaippaṇṭam, பெ. (n.) சிற்றுண்டி (வின்.);; dainties. [நொறுவை + பண்டம்] |
நொற்பன் | நொற்பன் noṟpaṉ, பெ. (n.) 1. சிறியன்; mean person. 2. எளியன்; humble person. [நொற்பம் → நொற்பன், நொற்பம் = எளிமை, நுட்பம்] |
நொற்பம் | நொற்பம்1 noṟpam, 4 செ.கு.வி. (v.i.) நொளநொள பார்க்க;see mola-nola. [நுல்(நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொளு → நொளுநொளு-த்தல் = நெகிழ்தல், குழைதல்] நொற்பம்2 noṟpam, பெ. (n.) 1. நுட்பம்; minuteness. “நொற்பமான வேலை” (வின்.);. 2. எளிமை; insignificance. “நொற்பவுலகத்தவர் நோய் தீர்த்து” (பஞ்ச.திருமுக.611);. [நுல் = நுண்மை, எளிமை. நுல் → நொல் → நொற்பு → நொற்பம் (வே.க.);] |
நொலை | நொலை nolai, பெ. (n.) நொலையல் (பிங்.); பார்க்க;see nosayal. [நுல் (துளை); → நொல் → நொலை = உட்டுளையுள்ள அப்ப வகை. (வே.க.);] |
நொலையல் | நொலையல் nolaiyal, பெ. (n.) பூரிகையென்னும் அப்பவகை. (பிங்.);; a kind of unleavened cake. [நுல் (துளை); → நொல் → நொலை → நொலையல் (வே.க.);] |
நொளநொள-த்தல் | நொளநொள-த்தல் noḷanoḷattal, 4 செ.கு.வி. (v.i.) 1. குழைதல்; to become soft from overripeness, to be mashy. 2. வழுவழுப்பாதல்; to be sleek and smooth, as a Snake or a leech. [நுல் (நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொள → நொளநொளு-த்தல்.] துளைக்கப்பட்ட பொருள்கள் உளுத்த மரம் போற்கட்டு விட்டுப் போவதனாலும், கையினாலும் கோலினாலும் எளிதாய்த் துளைக்கப்படும் அல்லது ஊடுருவப்படும் பொருள்களெல்லாம், நீருங் கூழும் போல் நெகிழ்ச்சிப் பொருள்களாகவே யிருப்பதனாலும், துளைத்தற் கருத்தினின்று நெகிழ்ச்சி அல்லது தளர்ச்சிக் கருத்துத் தோன்றும். (வே.க. நுல்4);. |
நொளம்பபாடி | நொளம்பபாடி noḷambapāṭi, பெ. (n.) நொளம்பவாடி பார்க்க;see nolamba-vādi |
நொளம்பர் | நொளம்பர் noḷambar, பெ. (n.) பல்லவமன்னர் வகையினர் பார்க்க;(I.M.P.Ct. 167);; a division of Pallavas. |
நொளம்பவாடி | நொளம்பவாடி noḷambavāṭi, பெ. (n.) நொளம்பர் ஆண்ட நாடு (கல்.);; the country ruled by Nolamber. மறுவ. நுளம்பபாடி (மெய்க்கீர்த்தி); [நொளம்பர் + வாடி. வாடி = நாடு, பகுதி.] |
நொளில் | நொளில் noḷil, அருவருக்கத்தக்க சேறு (பிங்.); mire in a repulsive condition. [நுல் (நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொளில். ஒ.நோ. தொள் → தொள்ளி = சேறு. தொள்ளி → தொளி = சேறு. (வே.க.);] |
நொளுக்கல் | நொளுக்கல் noḷukkal, பெ. (n.) 1. முற்றாத நிலை; immature condition, as of areca-nuts. 2. இளம்பாக்கு; tender, immature areca-nuts. குடந்தை வெற்றிலைக்குக் கூட்டுச்சேரும் பாக்கு நொளுக்கலாக இருக்கலாமா? [நொள்கு2 → நொளுக்கல்] |
நொளுநொளெனல் | நொளுநொளெனல் noḷunoḷeṉal, பெ. (n.) குழைதற் குறிப்பு; onom. expr. signifying mashy state. [நொளு + நொளு + எனல்] |
நொளுப்பு | நொளுப்பு noḷuppu, பெ. (n.) வேலையில் குழப்புகை (வின்.);; shirking work; shinking from duty. [நுல்(நெகிழ்ச்சி); → நுள் → நொள் → நொளு → நொளுப்பு.(வே.க.);] |
நொளுவல் | நொளுவல் noḷuval, பெ. (n.) நொளுக்கல் (யாழ்ப்.); பார்க்க;see __, [நுல் = இளமை, மென்மை, சிறுமை. நுல் → நுள் → நுளு → நொளு → நொளுவல் (வே.க.);] |
நொளைதாளி | நொளைதாளி noḷaitāḷi, பெ. (n.) பெரிய மரவகை; heart stipuled larger Chinese laurel, Antidesma bunius. ம. நூலிதாலி |
நொள் | நொள்2 noḷḷudal, 10 செ.குன்றாவி. (v.t.) விழுங்குதல்;(திவா.);; to swallow, devour. ம. நுண; க.நொண; தெ.நொல்லு;குரு. நுல்க்நா. [நொள்1 – → நொள்2-] நொள்3 noḷ, பெ. (n.) துளைபோன்ற வாய்; mouth. [முள் → மொள் → நொள். ஒ.நோ. நோரு. (தெ.); = வாய். (சு.வி. 45);] |
நொள்(ளு) | நொள்(ளு)1 noḷḷudal, 10 செ.குன்றாவி. (v.t.) மொள்ளுதல், முகத்தல்; to bale out, as water, to measure out, as grain. “குடங்கையில் னொண்டு கொள்ளவுங் கூடும்”. (சிலப். 10:85); தெ. நொல்லு (to level, collect);; பர். ஒல்க்(olc); கூய். நெல்ப; குரு. நொல்ல்நா (nollnā);;மா. லொலெ. [நுல் (துளை); → நொள் → நொள்(ளு);-தல் (வே.க.);. மொள்ளுதல் நீர்ப்பொருளையும், முகத்தல் கூலம் போன்ற பொருளையும் குறிக்கும். மொள்ளுதல், முகத்தல், விழுங்குதல் அனைத்தும் துளைத்தலினின்றே விரியும். முள் → மொள் → நொள் = விழுங்குதல், (சு.வி. 45);] |
நொள்கு | நொள்கு1 noḷkudal, 5 செ. குன்றாவி. (v.t) நொள், 1 (யாழ்.அக.); பார்க்க;see nol-1. [நொள்1 → நொள்கு → நொள்கு-தல்] நொள்கு2 noḷkudal, 5 செ. கு.வி. (v.i.) 1. சுருங்குதல்; to contract, as thread. ‘நூல் நொள்கிற்று’ (நன். 454, மயிலை.);. 2. இளைத்தல் (யாழ்.அக.);; to languish, become tired. [நுல் (நெகிழ்வு); → நுள் → நொள் → நொள்கு → நொள்கு-தல்] |
நொள்கெனல் | நொள்கெனல் noḷkeṉal, பெ. (n.) அச்சக்குறிப்பு (வின்.);; expr. signifying terror. [நொள்கு + எனல்] |
நொள்ளல் | நொள்ளல்1 noḷḷal, பெ. (n.) 1. பார்வையற்றுக் கண்குழிந்த நிலை (வின்.);; the state of being blind and sunken-eyed. 2. குழிவு; hallowness. [நுல் (துளை); → நுள் → நொள் → நொள்ளல் (வே. க.);.] நொள்ளல்2 noḷḷal, பெ. (n.) நுளம்பு (திவா.); gnat [நுல் → நுள் → நுள்ளல் → நொள்ளல் = சிறியஉலங்கு (நுளம்பு);. நுல் = சிறுமை, கூர்மை.வே. க.);] |
நொள்ளாப்பு | நொள்ளாப்பு noḷḷāppu, பெ. (n.) வருத்தம் (நெல்லை);; pain, grievance. [நுல் (நோதல்); → நுள் → நொள் → நொள்ளப்பு. (வே. க.);] |
நொள்ளை | நொள்ளை1 noḷḷai, பெ. (n.) 1. குருடு; blindness. “நொள்ளை நாகில்” (திருவிளை. பரிநரி.14);. 2. நாகரவண்டு (சூடா.);; green beetle. 3. விலங்குவகை; a beast. “உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை” (அகநா. 53:2); க. நொள்ளை. [நுல் (துளை); → நுள் → நொள் → நொள்ளை = கண் குழிந்த குருடு (வே. க.);.] நொள்ளை2 noḷḷai, பெ. (n.) கைக்குழந்தை (நெல்லை);; infant, baby. [நுல் = சிறுமை.நுல் → நுள் → நொள் → நொள்ளை (வே. க.);] |
நொள்ளைக்கண் | நொள்ளைக்கண் noḷḷaikkaṇ, பெ. (n.) பார்வை மாறிய கண்; blind eyes. [நொள்ளை + கண்] |
நொள்ளைப்பயல் | நொள்ளைப்பயல் noḷḷaippayal, பெ. (n.) இழிந்தவன், எளியன்; insignificant person. “நொள்ளைப் பயலுக்கு நோப்பாளமேன்” (ஆதியூரவதானி); [நொள்ளை + பயல்] |
நொள்ளைமடையன் | நொள்ளைமடையன் noḷḷaimaḍaiyaṉ, பெ. (n.) பார்வையற்ற கொக்குவகை (M.M.);: blind heron. மறுவ. நொள்ளை மடையான். [நொள்ளை + மடையன். மடையன் = பறவைவகை கொக்குவகை] |
நொழுந்து-தல் | நொழுந்து-தல் noḻundudal, 5 செ.குன்றாவி. (v.t.) நுழைத்தல்; to insert, thrust. தலையை நொழுந்தி (ஈடு, 1:3 பிர.); [நுல் → நுள் → நொள் → நொழு → நொழுந்து → நொழுந்து-தல்.] |
நொவ்வல் | நொவ்வல் novval, பெ. (n.) 1. துன்பம், வருத்தம்; mental anguish, sadness. “மையற் பொண்டிர்க்கு நொவ்வலாக வாடிய பின்னும்” (அகநா. 96);. 2. நோவு; pain. [நொவ்வு2 → நொவ்வல். நொவ்வு = வருத்தம்] |
நொவ்வி | நொவ்வி novvi, பெ. (n.) 1. தளர்வு; droop. 2. நொய்மை; meanness. 3. நோய்; disease. 4. துன்பம்; distress. [நோ → நொ → நொவ்வி] |
நொவ்விதாக | நொவ்விதாக novvitāka, வி.எ. (adv.) விரைவாக; rapidly, quickly. “தேர் நொவ்விதாகச் சென்றீக” (ஐந். ஐம். 10); [நொவ்வு2 → நொவ்விதாக நொவ்வு = விரைவு. நொவ்விது + அக.] |
நொவ்வியார் | நொவ்வியார் novviyār, பெ. (n.) கீழ் மக்கள்; dishonest person, rogue. “நோக்குமின் என்றிகழ்ந்து நொவ்வியார் கைவிடுதல்” (பழமொழி, 208:2);. [நொவ்வு → நொவ்வியார் நொவ்வு = மெலிதல், நோதல், இழிவாதல்] |
நொவ்வு | நொவ்வு1 novvudal, 5 செ.கு.வி. (v.i.) 1. மெலிதல்; to become thin, slender,emaciated. “நொவ்விடை மடந்தை” (கம்பரா. காட்சி. 54);. 2. நோதல் (யாழ்ப்);; to ache, pain. 3. துன்புறுதல்; to afflict, to pester. 4. வருந்துதல்; to suffer. [நொ → நொவ்வு → நொவ்வு – தல்.] நொவ்வு2 novvu, பெ. (n.) 1. மெலிவு; thinness, 2. உடையுந் தன்மை; brittleness. 3. வாட்டம்; emaciation, drooping, fading. 4. வருத்தம் (வின்.);; pain, ailment. 5. விரைவு; rapidly, quickness. நொவ்வுப் பறைவாவல். 6. நோவு; disease. [நொ → நொய்வு → நொவ்வு] |
நொவ்வெனல் | நொவ்வெனல் novveṉal, பெ. (n.) விரைவுக் குறிப்பு; expr signifying haste or quickness. [நொவ்வு + எனல் – நொவ்வெனல். நொவ்வு = விரைவு] |