செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
நை

நை1 nai,    நகரமெய்யும் ஐகார உயிரும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து; the compound of ‘n’ and ‘ai.’

     [ந் + ஐ – நை]

உயிர் மெய் எழுத்து வடிவம் தமிழிலிருந்து வடமொழி பெற்றது. ஆங்கிலம் அரைவளர்ச்சி நிலையிலேயே அசை (sylable); மொழியாக உள்ளது. அதனால்தான் தமிழ்க்குழந்தைகள் எழுத்துக்கூட்டலுக்கு இடர்ப்படுகிறார்கள். நைனா என்ற பெயரை Nai Na என்ற உயிர் மெய்க்கட்டமிட்டுக் கற்பித்தால் எளிதாய்ப் பயில்வர்.

 நை2 naidal,    1. நசுங்குதல்; to be crushed, bruised.

   2. தளர்தல்; to droop, languish, faint.

     “இடைநைவது கண்டு” (திருக்கோ.134);.

   3. வாடுதல் (வின்.);; to fade.

   4. மனம் வருந்துதல்; to be wounded in one’s feelings, to be distressed.

     “நைந்து சாமவர்க்கே” (திருநூற்.43);.

   5. இரங்குதல்; to feel pity.

     “நீ நல்காமையி னைவரச் சாஅய்” (புறநா.146);.

   6.சுருங்குதல்; to a dwindle, decrease.

     “நையாத வாயுளுஞ் செல்வமும்” (அருட்பா.5பொது. 2);.

நண்பன் குடும்பம் வறுமையில் மிகவும் நைந்துவிட்டது.

   7. தனக்கே உரிய மாத்திரை அளவில் குறைதல்; to be shortened in quantity, as a vowel.

     “வன்மைமே லுகர முறுவது நையும்” (வீரசோ. சந்தி.2);.

   8. நிலைகெடுதல்; to be injured, spoiled, over-ripe, as fruits;

 to be frayed worn out, as cloth.

மாம்பழம் பழுத்து நைந்து போச்சு.

   9. கெடுதல் (வின்.);; to waste away, perish.

   10. இற்றுப்போய் நூல்நூலாகப் பிரிதல்; to frayed; became threadbare.

அவர் உடல் நைந்த பழைய துணிபோல் கிடந்தது.

   11. துன்பம்:

 sadness.

   12. தன்வயப்படாமை (அவசமாதல்);; to forget oneself;

 to lose command of oneself.

     “அரிவை நைய” (சீவக.492);.

     [நொய் → நை. ஒ.நோ. பொய் (உட்டுளை); → பை.நை → நைதல்.(வே.க); இது தன்வினை வடிவம்.]

 நை3 naittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. நசுக்குதல்; to crush,

   2. அழித்தல்; to destroy.

     “வேலேகுறும்படைந்த வரண்கடந்தவர் நறுங்கள்ளி னாடுநைத்தலின்” (புறநா.97);.

   3. எரித்தல்; to burn.

     “ஒள்ளெரி நைப்ப வுடம்பு மாய்ந்தது” (புறநா.240);.

     [நொய் → நை. இது பிறவினை வடிவம்]

 நை4 nai, இடை (int.)

   இகழ்ச்சிக்குறிப்பு (வின்.);; expr.signifying disdain or mockery.

நைகமேசக்கிரகம்

 நைகமேசக்கிரகம் naigamēcaggiragam, பெ.(n.)

   குழந்தைகளைத் தாக்கும் ஒரு கிரக நோய், இதனால் வாந்தியில் நுரை தள்ளல், முதுகு வளைதல், மிரண்ட பார்வை, இளைப்பு, மூர்ச்சை முதலிய குணங்களுண்டாகும்; a disease in children due to the evil influence of a star. It is characterised by frothy vomits, bending the middle of the trunk, anxious look, constant eructations and unconciousness (சா.அக.);.

நைகரம்

நைகரம் naigaram, பெ. (n.)

   1. துன்பம்; anxiety, care, distress.

     “நைகர மொழிந்து” (விநாயகபு.57:18);.

   2. குறைவு; Deficiency.

     “நைகர மிலாவன்பி னங்கையார்” (பெரியபு. அரிவாட்.12);.

     [நை2 → நைகரம்.]

நைகொதி

நைகொதி naigodi, பெ. (n.)

   அரைகுறையான கொதிப்புள்ளது (யாழ்ப்.);; being half-boiled. being insufficiently or badly boiled.

     [நை2 + கொதி.]

நைக்காட்டு-தல்

நைக்காட்டு-தல் naikkāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கேலி காட்டுதல் (யாழ்ப்.);; to ridicule make one a laughing stock.

     [நை4 + காட்டு-தல்.]

நைசர்க்கிகம்

நைசர்க்கிகம் naisarggigam, பெ.(n.)

   1. இயற்கையாகத் தோன்றியது; that which is

 natural or inherent.

     “நைசர்க்கிக பலன்கள்” (மங்களே.பக்.40);.

   2. இயல்பு; nature (சா.அக.);.

     [Skt. naisargika → த. நைசர்க்கிகம்.]

நைசல்

நைசல்1 naisal, பெ. (n.)

   நோய் (யாழ்.அக.);; disease

     [நைதல் → நைசல். த-ச திரிபு. தசை → சதை.]

 நைசல்2 naisal, பெ. (n.)

   காக்கை; crow.

     [நசை → நைசல்.]

ஒரு காக்கைக்கு உணவு வைத்தால் பத்துக் காக்கைகளை அழைப்பதும் இறந்துவிட்டால் நூறு காக்கைகளை அழைப்பதும் ஆன நசை கொண்டது காக்கை இனம்.

     “காக்கை காவாக் கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள” (குறள், 527);.

நைசிகம்

நைசிகம்1 naisigam, பெ. (n.)

நைசியம்1 (வின்.); பார்க்க;see naišiyam.

     [நைசியம் → நைசிகம்]

 நைசிகம்2 naisigam, பெ. (n.)

நைசியம்2 (வின்.); பார்க்க;see naišiyamo.

     [நைசியம் → நைசிகம்]

 நைசிகம் naisigam, பெ.(n.)

   1. நாசியிற் புகட்டும் மருந்து; any medicinal powder taken by nose.

   2. காக்கை; crow.

   3. காக்கைக் கொல்லி; crow killer (சா.அக.);.

நைசிகரவேம்பு

 நைசிகரவேம்பு naisigaravēmbu, பெ. (n.)

   சூரத்து நிலவேம்பு; Surat chiretta (சா.அக.);.

 நைசிகரவேம்பு naisigaravēmbu, பெ.(n.)

   சூரத்து நிலவேம்பு; surat chiretta (சா.அக.);.

நைசியம்

நைசியம்1 naisiyam, பெ. (n.)

   மூக்கில் விடும் சொட்டு மருந்து (சங்.அக.);; medicine inhaled by the nose.

     [நை → நைசியம். நைவாக = துளித்துளியாக விடும் சொட்டுமருந்து]

 நைசியம்2 naisiyam, பெ. (n.)

   காக்கை (சது.);; crow.

     [நைசல் → நைசியம்]

 நைசியம்1 naisiyam, பெ.(n.)

   நாசியிற் புகுத்தும் மருந்து (சங்.அக.);; medicine inhaled by the nose.

     [Skt. nasya → த. நைசியம்1.]

 நைசியம்2 naisiyam, பெ.(n.)

   1. நைசியம் பார்க்க;see naiciyam.

   2. களைக்கொட்டு; a kind of water lily root as கொட்டிக் கிழங்கு.

நைசிரவம்

 நைசிரவம் naisiravam, பெ. (n.)

   துவரை; red gram, Cajanus indicus. (சா.அக.);.

 நைசிரவம் naisiravam, பெ.(n.)

   துவரை; red gram.

நைசுபண்ணு-தல்

நைசுபண்ணு-தல் naisubaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   புகழ்ச்சியாகப் பேசி இணங்கச் செய்தல்; cajole.

     ‘நீ என்னதான் நைஸ்பண்ணினாலும் நான் பணம் தரப்போவதில்லை’?

த.வ. சரிக்கட்டல், இனிப்பு காட்டல்

     [E. nice → த. நைசு+பண்ணு]

நைச்சாந்து

நைச்சாந்து naiccāndu, பெ. (n.)

   கைக்கு மெதுவாம்படி நன்றாயரைக்கப்பட்ட சுண்ணாம்பு (சுன்னக்கரை);; well-ground mortar, fine plaster.

     [நை2 + சாந்து]

நைச்சி

நைச்சி naicci, பெ. (n.)

   1. காக்கை (அக.நி.);; Crow.

   2. பாம்பு வகை (யாழ்.அக.);; a kind of snake.

     [நைசியம்2 → நைச்சி. நைசியம் = காக்கை]

நைச்சிகம்

 நைச்சிகம் naiccigam, பெ. (n.)

நைச்சியம் (இ.வ.); பார்க்க;see naicciyam.

     [நைச்சியம் → நைச்சிகம்]

 நைச்சிகம் naiccigam, பெ.(n.)

நைச்சியம் (இ.வ.); பார்க்க;see naicciyam.

நைச்சியம்

நைச்சியம் naicciyam, பெ. (n.)

   1. தாழ்மை; humility.

     “செய்கின்ற நைச்சியத்தைச்

சிந்தித்து” (திருவாய்.நூற்.16);.

   2. தாழ்வு, கயமை, இழிவு; lowness, meanness, baseness.

   3. தன்வயப்படுத்துகை (உ.வ.);:

 winning over to one’s side.

     [நை2 → நைச்சியம் = எதிரியைத் தன்வழியில் திருப்ப எதிரியின் மனத்தில் மகிழ்ச்சியூட்டும் படிப் பேசுதல்]

 நைச்சியம் naicciyam, பெ.(n.)

   1. தாழ்மை; humility.

     “செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து” (திருவாய். நூற். 16);.

   2. இழிவு (நீச);த் தன்மை; lowness, meanness, baseness.

   3. தன்வயப்படுத்துகை (கொ.வ.);; winning over to one’s side.

     [Skt. naicya → த. நைச்சியம்.]

நைச்சியம்பண்ணு-தல்

நைச்சியம்பண்ணு-தல் naicciyambaṇṇudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   தன்வயப்படுத்துதல் (உ.வ.);; to win over to one’s side.

     [நைச்சியம் + பண்ணு-தல்.]

 நைச்சியம்பண்ணு-தல் naicciyambaṇṇudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   தன் வயப் படுத்துதல் (கொ.வ.);; to win over to one’s side.

     [Skt. naicya → த. நைச்சியம்+பண்ணு-,]

நைச்சியானுசந்தானம்

 நைச்சியானுசந்தானம் naissiyāṉusandāṉam, பெ.(n.)

   தன்னைத் தாழ்த்திக் கூறுகை (வின்.);; profession of humility.

     [Skt. naicya+anu-{} → த. நைச்சியானுசந்தானம்.]

நைடதம்

நைடதம்1 naiḍadam, பெ. (n.)

   வடமொழி நூலை (நைஷதம்); மூலமாகக் கொண்டு அதிவீரராமபாண்டியன் இயற்றிய தமிழ்க் காப்பியம்; a poem in Tamil by Adiviraramapândiyan, adapted from Sri Harsha’s Naisadha.

     [நிடதம் → நைடதம்.]

நைடதம் ஒரு தமிழ்க் காப்பியம். நிடதநாட்டு மன்னன் நளனுடைய கதையைக் கூறுவதால் நைடதம் எனப் பெயர் பெற்றது. நளனைப் பற்றியக் குறிப்பு, சிலப்பதிகாரத்தில் காணப்படுவதால் நளன்கதை தமிழ்நாட்டில் நீண்டநாட்களாக வழங்கி வந்தமை புலனாகும்.

நைடதம், வடமொழியில் கர்ச புலவர் இயற்றிய ‘நைசவு);தம் என்னும் வனப்பின் (காப்பியத்தின்); மொழி பெயர்ப்பு. வடமொழி நூலின் சுவை குன்றாமல் அதிவீரராம பாண்டியர் மொழி பெயர்த்துள்ளார் என்று இருமொழியிலும் இந்த நூல்களைக் கற்றோர் கூறுகின்றனர். இந்நூலின் முதலில் நிடத நாட்டின் வளமும் மாவிந்த நகரத்தின் சிறப்பும் நாட்டுப்படலம், நகரப்படலம் என்ற படலங்களிற் கூறப் பெற்றுப் பின்னர் அன்னத்தைக் கண்ணுற்ற படலம் முதலாக அரசாட்சிப் படலம் ஈறாக இருப்பதாறு படலங்களால்

   1173 செய்யுட்களில் நளன்கதை கூறப்பெறுகிறது. ‘நைடதம் புலவர்க்கவுடதம் என்று வழங்கும் சிறப்புரைக் கேற்ப, இந்நூல் புலவர்களின் அறிவுக்கு விருந்தாய்க் கற்பனைக் கருவூலமாக விளங்குகிறது. இந்நூலில் சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் மணிமேகலை முதலிய பழைய தமிழ் நூல்களின் கருத்துக்களும் சொற்றொடர்களும் விரவியுள்ளன.

இந்நூலின் தனிச்சிறப்பு, அன்னம் தமயந்தியிடம் நளனுக்காகத் துது சென்ற பகுதியைக் கூறுவது. இதை அன்னத்தைத் தூதுவிட்ட படலத்திற் காணலாம். தூதரின் இலக்கணத்திற்கு இலக்சியமாக அன்னம் விளங்கும்படி இந்நூலாசிரியர் அமைத்திருப்பது பாராட்டத் தக்கது. இந்நூலில் தமி ழ்ப் பண்பாட்டுக்கு மாறாகப் பெண்பாற் கைக்கிளை வந்துள்ளது.

     “அமிழ்தினை முனிந்து சாரல் அருவிதழ் மலயமின்ற தமிழினம் இனிய தீஞ்சொற் றையல் (சுயம்வரப்படலம்.140); எனக் கலைமகள் தமயந்தியை விளக்குங் கூற்றாக கூறியிருப்பதைக் கொண்டு இந்நூலாசிரியர் தமிழின் சுவையிலே ஊறியவ ரென்பதை அறியலாம்.

இந்நூல் காதலின் சிறப்பையும் சூதின் கெடுதியையும் நன்கு விளக்குகிறது. இந்நூலிலுள்ள செய்யுட்கள் மிக்க கடுமையும், மிக்க எளிமையுமி ன்றிச் செம்பாகமான நடையையுடையன.

இந்நூலை இயற்றியவர், பாண்டிய மன்னர்களில் ஒருவரான அதிவீரராம பாண்டியர். இவர் சிவனிடம் மிகுந்த அன்பு கொண்டவர். காசிக்காண்டம், திருக் கருவையந்தாதி முதலிய நூல்களையும் இவர் இயற்றியுள்ளார்.

நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை என்னும் குழந்தை இலக்கியமும் படைத்துள்ளார்.

     “கற்கை நன்றே, கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.”

என்பது அந்நூலில் வரும் பொன்வரி.

 நைடதம் naiḍadam, பெ.(n.)

   வடமொழி நைடதத்தை மூலமாகக் கொண்டு அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் காப்பியம்; a poem in Tamil by {}, adopted from Sri harsha’s naisadha.

     [Skt. naisadha → த. நைடதம்.]

நைட்டிகதீட்சை

நைட்டிகதீட்சை naiṭṭigatīṭcai, பெ.(n.)

   சிவதருமணி (சைவச.ஆசாரி.62.உரை);;     [Skt. {} → த. நைட்டிகதீட்சை.]

நைட்டிகன்

நைட்டிகன் naiṭṭigaṉ, பெ.(n.)

நைட்டிகப் பிரமசாரி (கூர்மபு.வருணா.36); பார்க்க;see {}.

     [Skt. naisthika → த. நைட்டிகன்.]

நைட்டிகப்பிரமசாரி

நைட்டிகப்பிரமசாரி naiṭṭigappiramacāri, பெ.(n.)

   குரவர் (ஆசாரியர்);க்கும் பெற்றோ ருக்கும் பணிவிடை செய்து கொண்டு வாழ்நாள் இறுதி வரை மாணியம் (பிரமசரியம்); பூண்டிருப்பவன் (சிவதரு.பரிகா.2,உரை);; religious audent who serves his preceptor and parents in life-long celibacy.

     [Skt. nai-sdhika+brahma+{} → த. நைட்டிகப்பிரமசாரி.]

நைட்டிகம்

நைட்டிகம்1 naiṭṭigam, பெ.(n.)

   வாழ்நாள் முழுவதும் மாணியம் (பிரமசரியம்); பூண் டொழுகும் நிலை (சி.சி. 8, 32 சிவாக்.);; state of being a life-long celibate religious student.

     [Skt. naisthika → த. நைட்டிகம்.]

 நைட்டிகம்2 naiṭṭigam, பெ.(n.)

   நிட்டை அதாவது மனம் அசைவற்றிருத்தல்; fixedness of mind (சா.அக.);.

நைட்டிகாசிரியன்

நைட்டிகாசிரியன் naiṭṭikāciriyaṉ, பெ.(n.)

   வேள்வித்தீ போன்ற செயற்பாடுகள் எதுவு மின்றி (அக்கினிகாரியாதி கருமங்களாலின்றி); யாவையும் ஞானத்தாலே பண்ணும் ஆசிரியன் (சி.சி.8, 5, சிவாக்.);; priest who performs initiatory rites mentally.

     [Skt. naisthika → த. நைட்டிகாசிரியன்.]

நைட்டூரியம்

 நைட்டூரியம் naiṭṭūriyam, பெ.(n.)

   கொடுமை (யாழ்.அக.);; cruelty, inhumanity.

     [Skt. {} → த. நைட்டூரியம்.]

நைதிகை

நைதிகை naidigai, பெ. (n.)

   1. ஊசிமல்லிகை (பிங்.);; eared jasmine.

   2. முல்லைக் கொடி; smooth jasmine, Jasminum trichotomum.

 நைதிகை naidigai, பெ.(n.)

   1. ஊசிமல்லிகை (பிங்.);; eared jasmine.

   2. முல்லைக்கொடி; smooth jasmine (சா.அக.);.

     [cf. {} → த. நைதிகை.]

நைதெனல்

நைதெனல் naideṉal, பெ. (n.)

   1. இரக்கக் குறிப்பு (யாழ்.அக.);; expr.signifying pity, sympathy.

   2. மெலிதற் குறிப்பு (சது.);; expr signifying thiness.

   3. மனநோதற் குறிப்பு (வின்.);; expr.signifying grief.

     [நை → நைது + எனல்]

நைத்திகம்

 நைத்திகம் naittigam, பெ.(n.)

நைத்தியம் (யாழ்.அக.); பார்க்க;see naittiyam.

நைத்தியம்

 நைத்தியம் naittiyam, பெ.(n.)

   நீடுநிலை (நித்தியத்துவம்); (யாழ்.அக.);; perpetuity eternity.

     [Skt. naitya → த. நைத்தியம்.]

நைநையெனல்

நைநையெனல் nainaiyeṉal, பெ. (n.)

   1. இகழ்ச்சிக்குறிப்பு; expr signifying contempt.

நைநையென்று அவனைத் திட்டிக்கொண்டேஇருக்கின்றான்.

   2. குழந்தை விடாது அழுது தொந்தரவு செய்தல் குறிப்பு; expr signifying fretting cry, puling as of children.

வயிற்றுவலியால் குழந்தை நைநையென அழுதுகொண்டே இருக்கிறது.

     [நை2 + நை – நைநை + எனல், நய் → நை]

நைந்தசோறு

 நைந்தசோறு naindacōṟu, பெ. (n.)

   பதனழிந்த சோறு; stale cooked rice, rotton cooked rice. (சா.அக.);.

     [நை → நைந்த + சோறு, நை → நைதல் =

குழைதல், வாடல்]

நைந்தபழம்

 நைந்தபழம் naindabaḻm, பெ. (n.)

   கனிந்து இளகிய பழம்; over riped fruit. (சா.அக.);.

     [நை → நைந்த + பழம். நை → நைதல் = இளகுதல், பதனழிதல்]

நைந்தான்

நைந்தான் naindāṉ, பெ. (n.)

   மெலிந்தான்; weak person.

     [நை2 → நைந்தான்]

நைந்திகை

 நைந்திகை naindigai, பெ. (n.)

   முல்லை மலர் (மலை.);; trichotomus-flowering smooth jasmine.

     [நைதிகை = ஊசிமல்லிகை . நைதிகை → நைந்திகை.]

நைந்து

நைந்து naindu, வி.எ. (adv.)

   மனமிரங்கி; pity.

     “நைந்துள்ளி யுகுவது போலுமென் னெஞ்சு” (கலித்.33:16);.

     [நை → நைந்து. நை + து]

நைந்தோ

 நைந்தோ naindō, பெ. (n.)

   பள்ளர் இனமக்கள் தம் தலைவரை அழைக்குஞ் சொல் (இ.வ.);; an expression used by Pallars in villages in addressing masters.

     [நைந்தை = தலைவன், நைந்தை – நைதோ.]

தன்வாழ்வுக்கும், பின் தலைமுறைக்கும் பாடுபட்டவனைப் பாட்டன் என்று கூறுவதுபோல், உழைத்து நைந்து போன தந்தையை நைந்தை என அழைக்கும் மரபு இருந்தது.

நைனாக்குடி

 நைனாக்குடி naiṉākkuḍi, பெ.(n.)

   ஆசாரி எனும் கம்மியக்குடியினர் வாழும் பகுதி; a settlement of artisens.

     [நாயன்-நைனா+குடி]

நைபடு-தல்

நைபடு-தல் naibaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   நசுக்கப்படுதல்; to be crushed.

     [நய் → நை + படு-தல்.]

நைபத்தியம்

 நைபத்தியம் naibattiyam, பெ. (n.)

   நடிப்பவன் கொள்ளும் வேடம் (இலக். அக.);; costume of an actor.

     [நை(ப்);பு + அத்து + இயம். ஈரங் கலந்த மாவைப்பூசி (அரிதாரம்); நடிப்பவன் கொள்ளும் வேடம்]

 நைபத்தியம் naibattiyam, பெ.(n.)

   நடிப்பவன் கொள்ளும் புனைவு (வேடம்); (இலக்.அக.);; costume of an actor.

     [Skt. naipathya → த. நைபத்தியம்]

நைபவர்

நைபவர் naibavar, பெ. (n.)

   1. வறியவர்; Pauper.

   2. நிலைமை தாழ்ந்தவர்; cheap person.

     “நைபவ ரெனினும் நொய்ய வுரை யேல்”(கொன்றை.56);.

     [நய்பு + அவர்- நய்பவர் → நைபவர்]

நைபானி

நைபானி naipāṉi, பெ. (n.)

நைபாலி1 (சங்.அக.); பார்க்க;see naipāh’

     [நைபாலி → நைபானி ]

 நைபானி1 naipāṉi, பெ.(n.)

நைபாலி (சங்.அக.); பார்க்க;see {}.

 நைபானி2 naipāṉi, பெ.(n.)

   அடுக்கு மல்லிகை; double jasmine (சா.அக.);.

நைபாரிசம்

 நைபாரிசம் naipārisam, பெ. (n.)

   செங்கரும்பு; red sugar-cane. (சா.அக.);.

     [நைபார் + இசம். ஈரப்பசையுடைய கரும்பு]

 நைபாரிசம் naipārisam, பெ.(n.)

   செங்கரும்பு; red sugarcane (சா.அக.);.

நைபாலி

நைபாலி1 naipāli, பெ. (n.)

   அடுக்குமல்லிகை (மலை.);; double jasmine.

 நைபாலி2 naipāli, பெ. (n.)

   1. சிவந்த செய் நஞ்சு (பாடாணம்);; red arsenic.

   2. சீர்பந்த செய் நஞ்சு (பாடாணம்);; a prepared poison.

   3. நீலம்; blue. (சா.அக.);.

 நைபாலி1 naipāli, பெ.(n.)

   அடுக்குமல்லிகை (மலை.);; double jasmine.

     [Skt. {} → த. நைபாலி.]

 நைபாலி2 naipāli, பெ.(n.)

   1. சிவந்த பாடாணம்; a prepared poison.

   2. நீலம்; blue (சா.அக.);.

நைபாலிகம்

நைபாலிகம் naipāligam, பெ. (n.)

   1. செம்பு; copper.

   2. பித்தளை (யாழ்.அக.);; brass.

 நைபாலிகம்1 naipāligam, பெ.(n.)

   1. செம்பு; copper.

   2. பித்தளை (யாழ்.அக.);; brass.

     [Skt. {} → த. நைபாலிகம்.]

 நைபாலிகம்2 naipāligam, பெ.(n.)

   1. நைபாலி பார்க்க;see {}.

   2. தாமிரம்; copper (சா.அக.);.

நைப்பாசை

 நைப்பாசை naippācai, பெ. (n.)

   நிறைவேறாது எனத்தெரிந்தும் அது எப்படியாவது நிறைவேறிடாதா என்ற எதிர்பார்ப்பு; fond hope.

     [நம்பு + ஆசை-நம்பாசை → நப்பாசை → நய்ப்பாசை → நைப்பாசை.]

நைப்பாளை

 நைப்பாளை naippāḷai, பெ. (n.)

   ஆடு தின்னாப் பாளை; ulcer plant, Aristolochia bracteata (சா.அக.);.

நைப்பு

 நைப்பு naippu, பெ. (n.)

   ஈரப்பசை; moisture.

   தரை நைப்பாய் இருக்கிறது;கீழே உட்காராதே

     [நசிப்பு → நைப்பு.]

நைப்பூதிகம்

 நைப்பூதிகம் naippūtigam, பெ. (n.)

   சூலி மரம்; toon tree. Cedu/a toona.

 நைப்பூதிகம் naippūtigam, பெ.(n.)

   சூலி மரம்; toon tree (சா.அக.);.

நைப்பூலிகம்

 நைப்பூலிகம் naippūligam, பெ. (n.)

   காரைச் செடி; thorny webera-can rhium parviflorum. (சா.அக.);

 நைப்பூலிகம் naippūligam, பெ.(n.)

   காரை; thorny webera (சா.அக.);.

நைமாமிசம்

 நைமாமிசம் naimāmisam, பெ. (n.)

   வெங்காயப் பூடு; onion plant. Allium cepa (சா.அக.);.

நைமிசம்

நைமிசம்1 naimisam, பெ.(n.)

நைமி சாரணியம், நைமிசப்படலம் பார்க்க;see {}.

     [Skt. {} → த. நைமிசம்.]

நைமிசாரணியம்

நைமிசாரணியம் naimicāraṇiyam, பெ.(n.)

   1. புகழ் பெற்ற ஒரு தவச்சாலை; a forest in

 India famous as the resort of ascetics.

     “நைமிசாரணியத்தருள்கூர் சூத முனியடைந்தான்” (கூர்மபு.இந்திர.2);.

   2. நைமிசாரணியத்துள்ள திருமால் திருப்பதி;a {}

 shrine in {}.

     “நைமி சாரணியத்து ளெந்தாய்” (திவ். பெரியதி.1,6,1);.

     [Skt. {} → த. நைமி சாரணியம்.]

நைமிசாரண்யம்

 நைமிசாரண்யம் naimicāraṇyam, பெ. (n.)

   பனிமலைக்கு அருகில் உள்ள காடு; a forest near Himalaya mountains.

     [நேமி → நைமி + சாரண்யம், நேமி =சக்கரம்]

இருடிகள் தாங்கள் தவமியற்றுதற்கு எதுவான நல்ல இடம் அருளுக என நான்முகனிடம் வேண்ட நான்முகன் ஆய்ந்து தருப்பையொன்றை எடுத்து நேமி சக்கரம்) போற்செய்து அதனை உருட்டி இதன்பின் செல்க, இது எவ்விடத்து நிற்குமோ அந்த இடமே தவமியற்றுதற்கு ஏதுவான இடம் எனச் சொல்ல. அதன்படியே நேமி நின்ற இடமாதலால் இதற்கு இப்பெயர் வந்தது என்பர்.

நைமித்தகருமம்

நைமித்தகருமம் naimittagarumam, பெ.(n.)

நைமித்திகம் (பிரபோத.39, 13); பார்க்க;see naimittigam.

     [Skt. {} → த. நைமித்தகருமம்.]

நைமித்திகசிராத்தம்

நைமித்திகசிராத்தம் naimittigasirāttam, பெ.(n.)

   நாள்தோறும் செய்தலன்றித் தென் புலத்தார்க்குச் செய்யும் சிறப்பு வழிபாடு (சேது. மங்கலதீர்த். 43);; offerings to the manes on special occassions.

     [Skt. naimittika+{} → த. நைமித்திக+ சிராத்தம்]

நைமித்திகப்பிரளயம்

 நைமித்திகப்பிரளயம் naimittigappiraḷayam, பெ.(n.)

   நான்முகனது (பிரமனது); பகற்காலம் நீங்கியதும் தோன்றும் ஊழி முடிவு (பிரளயம்); (சங்.அக.);; deluge said to occur at the close of a Brahma’s day.

     [Skt. naimittika+pra-laya → த. நைமித்திகப் பிரளயம்.]

நைமித்திகம்

நைமித்திகம் naimittigam, பெ.(n.)

   சிறப்பான காலங்களில் நிகழ்வது; that which is occassional or periodical, as rite, ceremoney, festival, etc.

     “நைமித்திகத் தொடு கூடிய நித்தியம்” (குறள், 18, உரை);.

     [Skt. naimittika → த. நைமித்திகம்.]

நைமித்தியம்

 நைமித்தியம் naimittiyam, பெ.(n.)

நைமித்திகம் (யாழ்.அக.); பார்க்க;see naimittigam.

நையத் தட்டு – தல்

நையத் தட்டு – தல் naiyaddaṭṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   தூளாகும்படி தட்டுதல்; striking to make into powder. (சா.அக.);

     [நை → நைய + தட்டு-தல்.]

நையநருக்கு-தல்

நையநருக்கு-தல் naiyanarukkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

நையநறுக்கு-தல் பார்க்க;see raya-marukku-

அவனை நைய நருக்கி விட்டார்கள்.

     [நொய் → நை → நைய + நருக்கு-தல். நறுக்கு → நருக்கு.]

நையநறுக்கு -தல்

நையநறுக்கு -தல் naiyanaṟukkudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. பொடியாக்குதல்; to pulverise, comminute.

   2. நையப்புடை-பார்க்க;see nasya-p-pugal. (சா.அக.);.

     [நொய் → நை → நைய + நறுக்கு-தல்.]

நையநறுங்கத்தட்டு-தல்

நையநறுங்கத்தட்டு-தல் naiyanaṟuṅgaddaṭṭudal,    1. lagu-

   5 செ.குன்றாவி, (v.t.);

   மிக நொறுங்கச் சதைத்தல்; to pulverise.

     [நை → நைய + நறுங்க + தட்டு-தல்.]

நையப்பாடு-தல்

நையப்பாடு-தல் naiyappāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பல்லைக்காட்டிக் கெஞ்சுதல்(இ.வ.);; to cringe.

மறுவ, நையம் பாடுதல்

     [நை2 → நைய + பாடு-தல்.]

நையப்புடை-த்தல்

நையப்புடை-த்தல் naiyappuḍaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. உடம்பு தளர நன்றாக அடித்தல்; to belabour, thrash soundly.

திருடனை விரட்டிப்பிடித்து நையப்புடைத்துக் காவலில் வைத்தனர். ஆசிரியர் மாணவனைப் பிரம்பால் ஆறுமுறை நையப் புடைத்ததால் கை புடைத்துக் கொண்டது.

   2. மொத்தையாக்குதல்; to beat into a pulpy mass, Mashing.

     [நொய் → நை → நைய + புடை-த்தல்.]

நையமசிதல்

 நையமசிதல் naiyamasidal, பெ. (n.)

   நன்றாய் அரைபடுகை; grinding to fineness. (சா.அக.);.

     [நை → நைய + மசிதல்]

நையம்

நையம்1 naiyam, பெ. (n.)

நைசியம்1 (யாழ்.அக.); பார்க்க;see naišiyam’.

மறுவ, நச்சியம்.

     [நைசியம்2 → நையம்]

 நையம்2 naiyam, பெ. (n.)

நைசியம்2 (யாழ்.அக.); பார்க்க;see naissyamo2.

     [நைசியம்2 → நையம்.]

நையம்பாடு-தல்

நையம்பாடு-தல் naiyambāṭudal,    5. செ.கு.வி. (v.i.)

நையப்பாடு-தல் (இ.வ.); பார்க்க;see naiya-p-padu

     [நையப்பாடு-தல் → நையம்பாடு-தல்.]

நையல்

நையல் naiyal, பெ. (n.)

   1. மெலியச் செய்யும் நோய்; emaciating disease.

   2. அம்மை நோய்; small-pox.

     [நை2 → நையல்.]

நையவேகல்

 நையவேகல் naiyavēkal, பெ. (n.)

   சோறு முதலியன குழைகை; becoming soft by over boiling.

சோறு நையவெந்து போச்சு.

     [நை → நைய + வேகல்]

நையாடல்

நையாடல் naiyāṭal, பெ. (n.)

   எண்ணெய் விளையாட்டு (திவ். திருப்பா. 4 வியா.);; oil bath.

     [நெய் → நை + ஆடல்.]

நையாண்டி

நையாண்டி naiyāṇṭi, பெ.(n.)

நகையாட்டு வகையிலமைந்த நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சி, a folklore of comedy type, farce. [நைதல்-பிறரை எள்ளற் பொருளாக்கிச் சிரித்தல் நை -நையாடு-நையாளு-நையாண்டி]

 நையாண்டி naiyāṇṭi, பெ. (n.)

   1. நாடோடிப் பாட்டுவகை; a kind of papular song.

     “இரண்டு நையாண்டி பாடினான்” (திருவாலவா. 54:23);.

   2. கேலி; scoff, ridicule, mockery, sarcasm.

யாரையும் நையாண்டி செய்யாதே

   3. சிரிப்புச் சொல் (வின்.);; jest, drollery.

ம. நையாண்டு.

     [நை4 → நையாண்டி = குறையை அல்லது தவற்றைச்சிரிக்கத்தகுந்ததாக ஆக்கும் பேச்சு அல்லது செயல்.]

     [நகை + ஆண்டி -நகையாண்டி → நையாண்டி.]

நையாண்டிப்புலவர்

நையாண்டிப்புலவர் naiyāṇṭippulavar, பெ. (n.)

   19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்; Tamil poet lived in 19th century.

   இவர் இராமச்சந்திர கவிராயர் காலத்து வாழ்ந்தவர்;தொண்டை நாட்டினர். இவர் பள்ளிகொண்டான் என்னும் பரதவன்மீது

     “வள்ளி கொண்டான் மயிலேறிக் கொண்டான் மதிபோலு

வெள்ளி கொண்டான் விடையேறிக் கொண்டான் விண்ண வர்க்க முதம் துள்ளி கொண்டான் சுப.சோபனஞ் சேர் பள்ளி கொண்டான் புகழேறிக் கொண்டா னென்று பார்க்கவென்றே”

என்று புகழ்பாடிப் பரிசு பெற்றவர்.

நையாண்டிமேளம்

 நையாண்டிமேளம் naiyāṇṭimēḷam, பெ. (n.)

நாட்டுப்புறக் கலைகளான கரகம், காவடி

   முதலியவற்றுக்கு இசைக்கப் படும் ஒருவகை இசைக் கருவி; an ensemble of musical instruments.

     [நையாண்டி + மேளம்]

உறுமிமேள வகை. பேரிசை (பாண்டு); இசைக்காரர் போன்று ஒன்றே போல உடை உடுத்தி, மேளம் இசைப்பார்கள். பாடல்கள் கருநாடக இசையாக மட்டும் இல்லாமல் பலவகைப் பாடல்களையும் பாடுவார்கள் ஆடுவார்கள்.

நைராசியம்

 நைராசியம் nairāciyam, பெ.(n.)

   நம்பிக்கை யின்மை; hopelessness.

     [Skt. {} → த. நைராசியம்.]

நைராத்மியதர்சனம்

நைராத்மியதர்சனம் nairādmiyadarcaṉam, பெ.(n.)

   ஆதன் (ஆன்மா); இல்லை என்ற வாதம் (நீலகேசி,528, உரை);; the doctrine of the non-existence of the soul.

     [Skt. nis+{} → த. நைராத்மிய தர்சனம்.]

நைருதம்

நைருதம் nairudam, பெ.(n.)

   பகலின் 12ஆம் முழுத்தம் (முகூர்த்தம்); (சங்.அக);; the 12th {} of the day-time.

     [Skt. nairrta → த. நைருதம்.]

நைருதி

 நைருதி nairudi, பெ.(n.)

   தென்மேற்கு (சங்.அக.);; the south west quarter.

     [Skt. nairrti → த. நைருதி.]

நைர்மல்லியம்

நைர்மல்லியம் nairmalliyam, பெ.(n.)

   1. தூய்மை (சுத்தம்);; cleanliness;

 purity.

   2. மாசின்மை; free from stain or flaw;

 free from all defects (சா.அக.);.

நைலம்

 நைலம் nailam, பெ. (n.)

   கடற்பாசி மருந்து (M.L.);; iodine.

     [நீலம் → நைலம்.]

நைவனம்

நைவனம் naivaṉam, பெ. (n.)

   1. நடனம்; dancing.

   2. வீரன்; warrior, hero.

நைவரு-தல்

நைவரு-தல் naivarudal,    18 செ.கு.வி.(v.i.)

நைவா-தல் பார்க்க;see naivthal.

     [நைவா-தல் → நைவரு-தல்]

நைவளம்

நைவளம் naivaḷam, பெ. (n.)

   1. பாலைப் பண்வகை; a secondary melody-type of the Pala class.

     “நைவளம் பழுநிய பாலை வல்லோன்” (குறிஞ்சிப். 146.);.

   2. குறிஞ்சி யாழ்த்திற வகை (பிங்.);; a secondary melodytype of the kuriñji class.

   3. தாளத்தையுடையபாட்டு; a kind of musical song.

     “நைவளம் பூத்த நரம்பியை சிப் பொய் வளம்” (பரிபா. 18:20);.

நைவா-தல் (நைவருதல்)

நைவா-தல் (நைவருதல்) naivādalnaivarudal,    18 செ.கு.வி. (v.i.)

   1. வருந்துதல்; to be distressed.

     “நைவாரா வாயமக டோள்” (கலித். 103:66);.

   2. இரங்குதல்; to pity, to be merciful.

     “நல்காமையினைவரச் சாஅய்” (புறநா.146);.

     [நை4 + வா-தல்.]

நைவார்

 நைவார் naivār, பெ.(n.)

   மனம் கணிபவர்; mellower. “நின்று நைவார் இடன்களையாய் நெடுங் களம் மேவியவனே”. [நையவர்+நைவார்]

நைவினை

 நைவினை naiviṉai, பெ.(n.)

   நலிவுதரும்செயல்; humiliating actions. “smoolsmoor solosso” (ஒள.);.

     [நை+வினை]

நைவு

நைவு naivu, பெ. (n.)

   1. வாடினது; anything injured or spoiled.

   2. மிகப் பழுத்தது; over-ripenness.

   3. வருந்துகை; suffering.

   4. நோய்; disease.

     “நாளு நைவகன்ற” (தைலவ. தைல. பாயி. 1.);.

     [நை4 → நைவு]

நைவேதனம்

நைவேதனம் naivētaṉam, பெ.(n.)

   1. ஒப்ப டைக்கை; dedication.

   2. நைவேத்தியம் பார்க்க;see {}.

     “மதுவர்க்கமொடே கனித்தொகை மன மிகுந்த நைவேதனம்” (சிவரக. சுகமுனி. 24);.

     [Skt. nai-{} → த. நைவேதனம்]

நைவேதி-த்தல்

நைவேதி-த்தல் naivētittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   கடவுளுக்கு உணவு முதலியன படைத்தல்; to offer to a deity, as food.

     “பொற்கிண்ணத் தூற்றளவி நைவேதித்து” (தைலவ. தைல. 137);.

நைவேத்தியம்

நைவேத்தியம் naivēttiyam, பெ.(n.)

   கடவு ளுக்குப் படைக்கும் உணவு; offering made to a deity.

     “என்னாவி நைவேத்தியம்” (தைலவ. தைல. பாயி. 1);.

     [Skt. nai-{} → த. நைவேத்தியம்]