செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
நே

நே1 nē, பெ. (n.)

   நகரமெய்யும் ஏகார உயிரும் சேர்ந்து பிறந்த உயிர்மெய்யெழுத்து; the compound of ‘n’ and ‘e’

     [ந் + ஏ-நே.]

 நே2 nē, பெ. (n.)

   1. அன்பு; love.

   2. ஈரம்; compassion, mercy, grace.

     “நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற் றவிரா விசைக் கவுரியர் மருக” (புறநா. 3);.

     [நுள் → நெள் → நெய் → நே = அன்பு. ஈரம் (வ. மொ. வ);. நுள் = இளமை, மென்மை, நட்பு]

மொழிமூலர் தேவநேயப்பாவாணர் தமிழர் அனைவர் பெயரும் தமிழாய் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துவார். அவர் பிறந்தநாள் வேண்டுகோளாக இதையே வைத்துள்ளார். ஆயின் தமிழர் பெயர்கள் சமற்கிருதமாகவும் முன்னெழுத்து Intial ஆங்கிலமாகவும் உள்ள வழு என்று நீங்குமோ. பாவாணரின் ‘தேவநேசன்’ என்னும் இயற்பெயர் வடசொல் என்று சிலர் கூறியபோது விளக்கிய கட்டுரையில் தீ → தே + நெய் → நே(யம்); என்று விளக்கியுள்ளார்.

நேக

நேக1 nēka, வி.எ. (adv.)

   மிகப்பொடியாக; very minutely.

     ‘மாவை நேகஅரைத்து வை’. (வின்.);

     [நெகு → நேக நெகுதல் = பொடியாதல்]

     [நொய் → நொய்வு → நேய்வு → நேவு → நேவாக → நே(வா);க – என்று இடைக்குறையாக வந்திருக்க வாய்ப்புண்டு]

 நேக2 nēka, வி.எ. (adv.)

   நுண்மையாக நேர்மையாக; fine state, as in grinding.

நேக வரைத்தல். (சா.அக.);.

     [நேக1 → நேக2]

நே(ரா);க என்பதன் இடைக்குறை

நேகல்

 நேகல் nēkal, பெ. (n.)

   ஒருவகைப் பொடிமணல்; fine, fiinty sand.

     [நெகு → நேக → நேகல் . நெகுதல் = பொடியாதல். நேக = பொடியாக நேக → நேகல் = பொடிமணல்]

     [நொய் → நெய் → நே(வா);கல்.]

நேகவரை-த்தல்

நேகவரை-த்தல் nēkavaraittal,    4.செ. கு. வி. (v.i.)

   நன்றாகத் தூளாகும்படி அரைத்தல்; reducing to dust or fine powder when grinding, pulverising, machined into a pulp.

     [நொய் → நோ → நே(ஆ);க + அரை-த்தல்.]

நேசகன்

 நேசகன் nēcagaṉ, பெ. (n.)

   வண்ணான் (யாழ்.அக.);; washerman.

     [நேயம் → நேசம் + அகன் = நேசகன். துணியை ஈரமாக்கிவெளுப்பவன்]

திருமணவிழாவிற்குச் செல்வார்க்கு உரிய நாளில் கொண்டு வந்து ஆடைகளைத்தந்தால் நேயம் உண்டாகும்.

நேசக்குழு

 நேசக்குழு nēcakkuḻu, பெ. (n.)

   ஒத்த கருத்துடைய கூட்டணி; confederacy.

     [நேயம் → நேசம் + குழு. ஒ.நோ. தோயை → தோசை]

நேசத்தி

 நேசத்தி nēcatti, பெ. (n.)

   பேய்க்கடலை; bengal gram. (சா.அக.);.

     [நேயம் → நேசம் + அத்து + இ]

பெருங்கடலையை வறுத்துண்ணும் போதும், அவித்து உண்ணும் போதும் சுவை வேறுபடுதலின் நேசத்துக்கு உரியதாகும்.

நேசநாடுகள்

 நேசநாடுகள் nēcanāṭugaḷ, பெ. (n.)

   உலகப் போரில் இணைந்து போராடிய இங்கிலாந்து, அமெரிக்கா, உருசியா முதலிய நாடுகள்; allied nations as opposed to axis countries.

     [நேயம் → நேசம் + நாடுகள். ஒ.நோ. நெயவு → நெசவு]

நேசநாயனார்

நேசநாயனார் nēcanāyaṉār, பெ. (n.)

   பாராட்டிக்கூறப்பெறும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்; one of 63Cononized Šaiva saints in Periyapuranam.

     [நேயன் → நேசன் + நாயனார். நாயகனார் → நாயனார்]

இவரின் ஊர் காம்பிலி சாலியர் குலத்தினர் சிவனடியார் சிவனடி யார்களை வழிபடும் இயல்பினர் சிவனடியார்களுக்கு உடை செய்து கொடுத்துத் தொண்டு புரிந்தவர்.

நேசனூர்

 நேசனூர் nēcaṉūr, பெ.(n.)

   திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Tiruttani Taluk.

     [நேயன்+ஊர்]

நேசன்

நேசன் nēcaṉ, பெ. (n.)

   1. நண்பன்; friend, ally.

     “நேச ரிதங்கூற” (நள. காப்பு);.

   2. கடவுளடியார் (பத்தன்);; Votary, devotee.

     “சிவநேசர்தாம் வைகறையி லெழுந்து” (சிவரக. நந்தி, நம. 15);.

     [நேயம் = அன்பு. நேயம் → நேசம் → நேசன்]

நேசமாக்கு-தல்

நேசமாக்கு-தல் nēcamākkudal,    5.செ.கு.வி. (v.i.)

   ஒன்று கூடுதல்; to ally.

     [நேயம் → நேயம் + ஆக்கு-தல்.]

நேசமில்லாத

நேசமில்லாத nēcamillāta, பெ.எ., (adj.)

   1. அன்பில்லாத; lacking in love.

சிலர் நட்பு நேசமில்லாத நட்பு.

   2. கனிவில்லாத; affectionless.

     [நேசம் + இல்லாத.]

     “உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண்

களைவதாம் நட்பு” (குறள்,788);. இன்பத்திலும் துன்பத்திலும் பங்கேற்காதார் நட்பு(நேய); நேசமற்றது.

நேசம்

நேசம் nēcam, பெ. (n.)

   1. அன்பு இணக்கம்; love, affection, piety.

     “நேசமுடைய வடியவர்கள்” (திருவாச.9:4);.

கணவன் மனைவியிடம் நேசமில்லாமல் வாழ்கிறார்.

   2. ஆர்வம்; desire, as for learning.

     “வரும் பொருளுணரு நேசமாசறு தயிலம் வாக்கி” (இராகு. இரகுவு.38);.

   3. தகுதி; suitability.

     “பூச்சியின் வாயினுல் பட்டென்று பூசைக்கு நேசமாகும்” (குமரே. சத.59);.

   4. விருப்பம்; appetite.

     “நேசமும் வைத்தனையோ” (திருவாச திருவெ.2);

ம. நேசம்

     [நேயம் → நேசம், நேயம் = அன்பு, ஒ.நோ.

வாயகம் → வாசகம்]

நேசயம்

 நேசயம் nēcayam, பெ. (n.)

   நிலப்பனை; ground palm, Curculigo orchioides.

நேசர்

நேசர் nēcar, பெ. (n.)

நேசன் பார்க்க;see nasan.

     “செய்ய சிவநேசர்தாம் வைகறையிலெழுந்து (சிவரக.நந்திநமனு.15);

     [நேசம் → நேசர்]

நேசல்

 நேசல் nēcal, பெ. (n.)

   பொடிமணல்; fine sand. (சா.அக.);.

     [நேக → (நேகசல்); → நேசல். நேக = மிகப்பொடியாக]

நேசானுசாரி

நேசானுசாரி nēcāṉucāri, பெ. (n.)

   உண்மையாய் நடப்பவன்; faithful adherent.

     “துறவு மார்க்கத்தி னிச்சைபோல நேசானுசாரியாய் விவகரிப்பேன்” (தாயு. பரிபூரணா. 1);

     [நேசம் + அனுசாரி. நேயம் → நேசம். Skt. anu-särin → த. அனுசாரி = பின்பற்றுபவன், அடியான்]

நேசி

நேசி1 nēcittal,    4.செ. குன்றாவி. (v.t.)

   1. அன்புவைத்தல்; விரும்புதல்; to love.

     “நேசிக்குஞ் சிந்தை” (தாயு. உடல்பொய். 32);.

     “நேசித்தரு நூன் முறை” (சேதுபு.சங்கர.84);

அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும். அம்பிகாபதி அமராவதியை உயிருக்குயிராய் நேசித்தான்.

   2.காதலித்தல்; to love of the opposite sex.

   3. ஆர்வங் கொள்ளுதல்; to affect.

     “நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்” (தாயு. பரிபூர);.

     [நேசம் → நேசி → நேசி-த்தல்.]

 நேசி2 nēci, பெ. (n.)

   1. அன்புடையவள் (யாழ்.அக.);, காதலி; female friend.

   2. அன்பன்; friend,companion, husband, lover.

     [நேசம் + இ- நேசி. இல்லாளி-என்பதில் ஆண், பெண் குறிக்கும் ஈறாய் வந்த இகர ஈறு போன்றது. இது. நேசி2 – love – முன்னிலை ஏவல்]

நேசிப்பு

 நேசிப்பு nēcippu, பெ. (n.)

   அன்பு; love.

     [நேசம் + இ +பு.]

நேடன்

 நேடன் nēṭaṉ, பெ. (n.)

   நாவல் மரம்; jaumoon tree, Eugenia jambolina.

     [நேடு + அன். நேடுதல் = தேடுதல். பழங்களில் தேடி பறித்து உண்ணும் பழம். அன் = சொல்லாக்க ஈறு.]

நேடி

 நேடி nēṭi, பெ. (n.)

   மூங்கில் (மலை.);; bamboo.

     [நுல் = துளை. நுல் → நுள் → நள் → நாள் → நாளம் = உட்டுளை, உட்டுளைப் பொருள், தண்டு. நாளம் → நாளி = உட்டுளையுள்ள மூங்கில். நாளி → நாடி → தேடி = மூங்கில். (வே.க.);]

நேடு-தல்

நேடு-தல் nēṭudal,    5.செ. குன்றாவி. (v.t.)

   1. தேடுதல்; to seek, look out for.

     “கொண்டவனிருப்ப மற்றோர்… வேலினானை நேடிய நெடுங்கணாளும்” (சீவக. 252);.

     “நெறிமணனேடினர் செல்லச் சொல் லேற்று” (பரிபா 20:43);.

     “சினகரமொருவிப் போகுவான் வழிகனேடினேன்” (பிரமோத்.4:11);.

   2. பொருளீட்டுதல் (நாஞ்.);; to earn.

   3. விரும்புதல் (யாழ்.அக.);; to desire, wish.

   4. எண்ணுதல்; to consider, think, lay to heart.

     “சூரபன் மனிளவறன் முடிவுநேடி” (கந்தபு. அசுரேந். 65);.

   5. இலக்காகக் கொள்ளுதல் (வின்.);; to aim at pursue.

   ம.நேடுக;   க.நிட்டிசு;குட.நேட்.

     [நோண்டு → நேண்டு → நேடு → நேடு-தல், நோண்டுதல் = தோண்டித் தேடுதல் (வே. க);. ஒ. நோ. தோண்டு → தேண்டு → தேடு → தேடு-தல்]

நேட்டகாதுவரப்பி

 நேட்டகாதுவரப்பி nēṭṭakātuvarappi, பெ. (n.)

   இலவம்பிசின்; gum of silk cotton tree, Bombax malabarica. (சா.அக.);.

     [நேட்டகாது + வரப்பி = வரு + அப்பி-வரப்பி. வரப்பி = பிசின்மரத்திலிருந்து வந்து அப்பும் (ஒட்டும்); தன்மையுடையது]

நேட்டம்

 நேட்டம் nēṭṭam, பெ. (n.)

   ஈட்டியபொருள் (நாஞ்);; acquired properity.

     [நேடு → நேட்டம். நேடுதல் = தேடுதல், ஈட்டுதல் (சம்பாதித்தல்);]

நேட்டு

 நேட்டு nēṭṭu, பெ.(n.)

உறுதி, உறுதிப்பாடு:

 confirmation, firmness.

நேதா

நேதா nētā, பெ.(n.)

   தலைவன்; ruler, master, lord.

     “நினைந்தளித் துயிரளிக்கு நேதாவாகி” (வேதாரணியிரவா.6);.

     [Skt. {}.nom.sing. of {} → த. நேதா.]

நேதி

நேதி1 nēti, பெ.(n.)

   முறை; routine duty.

     “நேதிமதகலை யாரவார” (திருப்பு.394);.

     [Skt. niyati → த. நேதி1.]

 நேதி2 nēti, பெ.(n.)

     ‘இன்னபடியன்று’ எனப் பொருள்படும் வடமொழித்தொடர் (சங்.அக.);;

 a Sanskrit phrase meaning ‘not like this’.

     [Skt. {} → த. நேதி2.]

நேத்தி

நேத்தி1 nētti, பெ. (n.)

   நேர்த்தி; beauty.

நேத்தியான பொருள். (சா.அக.);.

     [நேர்த்தி → நேத்தி (பே. வ.); – இடைக்குறை]

 நேத்தி2 nētti, பெ. (n.)

   துத்தம்; vitriol. (சா.அக.);.

 நேத்தி3 nētti, பெ. (n.)

   நெற்றி; forehead.

     [நெற்றி → நெத்தி → நேத்தி. இருமடித்திரிபு.]

நேத்திரஅபிசியந்தம்

 நேத்திரஅபிசியந்தம் nēttiraabisiyandam, பெ.(n.)

   ஒரு கண்ணோய், இதற்கு கற்பூர சிலாசத்து, கடுக்காய், மரமஞ்சள், காவிக்கல், இந்துப்பு, சமனெடையாகத் தண்ணீரில் கண்களுக்குப் பற்றுப்போட அபிசியந்தம் குணப்படும்; an eye disease. It is cured by applying of a paste of the drugs mentioned above with water (சா.அக.);.

     [நேத்திரம் + அபிசியந்தம்]

நேத்திரஉபத்திரவாதம்

 நேத்திரஉபத்திரவாதம் nēttiraubattiravātam, பெ.(n.)

கண்மயக்கு வாதம் பார்க்க;see {} (சா.அக.);.

     [நேத்திரம் + உபத்திரவாதம்.]

நேத்திரகண்டு

 நேத்திரகண்டு nēttiragaṇṭu, பெ.(n.)

   கண்தினவு; itching of the eye (சா.அக.);.

     [நேத்திரம் + கண்டு.]

நேத்திரகமலி

நேத்திரகமலி nēttiragamali, பெ.(n.)

   1. நேத்திரஞ்சிமிட்டி; a kind of plant.

   2. கண்சிமிட்டிப்பூடு பார்க்க;see {} (சா.அக.);.

நேத்திரகாசம்

நேத்திரகாசம் nēttirakācam, பெ.(n.)

   1. கண் புரை (கண்காசம்);; cataract.

   2. கண்பூ; opacity of the cornea.

   3. கண்காசம் பார்க்க;see {} (சா.அக.);.

     [நேத்திரம் + காசம்.]

நேத்திரக்கடுப்பு

 நேத்திரக்கடுப்பு nēttirakkaḍuppu, பெ.(n.)

   கண்கடுப்பு; irritation of the eyes (சா.அக.);.

     [நேத்திரம் + கடுப்பு.]

     [Skt. {} → த. நேத்திரம்]

நேத்திரக்கழுநீர்

 நேத்திரக்கழுநீர் nēttirakkaḻunīr, பெ.(n.)

   கண்ணோயில் கண்ணைக் கழுவ பயன் படுத்தும் ஒரு மருந்து நீர்; lotion for cleaning the diseased eyes (சா.அக.);.

நேத்திரக்காப்பு

 நேத்திரக்காப்பு nēttirakkāppu, பெ.(n.)

   கோயில் மூர்த்திக்கு ஒப்பனை செய்கை; adoring an idol in the temple.

     [Skt. {} → த. நேத்திரம் + காப்பு.]

நேத்திரக்காப்புச்சாத்து

 நேத்திரக்காப்புச்சாத்து nēttirakkāppuccāttu, பெ.(n.)

   சிலைக்கு அழகு (மூர்த்திக்கு அலங்கார); செய்யும் பொருட்டுக் கோயிலினுட் கதவை அடைக்கை (இ.வ.);; closing the inner of a temple at certain times, as for adorning the deity (Loc.);.

     [நேத்திரம்+காப்பு+சாத்து.]

     [Skt. {} → த. நேத்திரம்.]

நேத்திரக்குத்தல்

 நேத்திரக்குத்தல் nēttirakkuttal, பெ.(n.)

   கண்குத்தல்; penetrating or pin prick pain in the eye (சா.அக.);.

     [நேத்திரம் + குத்தல்.]

நேத்திரக்குமுதம்

 நேத்திரக்குமுதம் nēddirakkumudam, பெ.(n.)

   கண்ணின் கருவிழியில் சதை வளர்ச்சி; morbid growth of flesh over the pupil or in the black of the eye (சா.அக.);

     [நேத்திரம் + குமுதம்.]

நேத்திரங்காட்டி

 நேத்திரங்காட்டி nēttiraṅgāṭṭi, பெ.(n.)

நேத்திரநாயகம் பார்க்க;see {} (சா.அக.);.

     [நேத்திரம் + காட்டி.]

நேத்திரசிராவம்

 நேத்திரசிராவம் nēttirasirāvam, பெ.(n.)

   கண்ணினின்று நீரும் பீளையும் வடிந்து கொண்டிருக்கும் ஒருவகைக் கண்நோய்; an eye disease marked by slimy secretion and mucopurulent discharge from the eyes (சா.அக.);.

     [நேத்திரம் + சிராவம்.]

நேத்திரசுக்கிலம்

 நேத்திரசுக்கிலம் nēttirasukkilam, பெ.(n.)

   கண்ணினின்று விந்துவைப்போல் வெண்மை யான பிசுபிசுப்புள்ள நீர் வடியும் கண்ணோய்; an eye disease attended with white slimy secretion from the eyes (சா.அக.);.

     [நேத்திரம் + சுக்கிலம்.]

நேத்திரசூலை

 நேத்திரசூலை nēttiracūlai, பெ.(n.)

   கண்ணி லுண்டாகும் குத்தல் வலி; acute pain in the eyes (சா.அக.);.

     [நேத்திரம் + சூலை.]

நேத்திரச்சதம்

 நேத்திரச்சதம் nēddiraccadam, பெ. (n.)

   கண்மடல் (யாழ்.அக.);; eye-lid.

     [Skt. {}+cata → த. நேத்திரச்சதம்.]

நேத்திரச்சுடர்

 நேத்திரச்சுடர் nēttiraccuḍar, பெ.(n.)

   கற்பூரம்; camphor (சா.அக.);.

     [நேத்திரம் + சுடர்.]

நேத்திரதாரகா

 நேத்திரதாரகா nēttiratārakā, பெ.(n.)

   மண்டலம்;   கருவிழி; black of the eye (சா.அக.);.

     [நேத்திரம் + தாரகா.]

நேத்திரதோசம்

நேத்திரதோசம்2 nēttiratōcam, பெ.(n.)

   பார்வை மங்கல்; dimness of vision, defective sight.

     [நேத்திரம் + தோஷம்.]

     [Skt. {} → த. நேத்திரதோசம்.]

நேத்திரத்தம்பம்

 நேத்திரத்தம்பம் nēttirattambam, பெ.(n.)

   வாதத்தினால் கண்விழி உணர்ச்சியறல்; paralysis of the eye (சா.அக.);.

     [நேத்திரம் + தம்பம்.]

நேத்திரத்தம்பவாதம்

நேத்திரத்தம்பவாதம்1 nēttirattambavātam, பெ.(n.)

   கண்களைக் கையால் தடவிப் பார்க்கில் ஒட்டாங் கிளிஞ்சலைப் போல் தோற்றும்படி தம்பிக்கும் ஒருவகைக் கண்ணோய்; a disease in which the eye ball is so hardered that when touched, it makes one feel as if it is a brivalve shell. It is said to be due to windly humour of the system (சா.அக.);.

     [நேத்திரம் + தம்பம் + வாதம்.]

 நேத்திரத்தம்பவாதம்2 nēttirattambavātam, பெ.(n.)

   வடமொழியில் திர்க்குத்தம்ப வாதம் எனக் குறிப்பிடும் உணவு நடைமுதலிய குற்றங்களினால் விழிகளின் மூலத்தில் வாயு மிகுந்து, கண், புருவம், இமையாகிய இடங் களில் உணர்ச்சியற்று, கண்களைத் தம்பிக்கச் செய்யும் ஒரு வகை ஊதை (வாத); நோய்; an eye disease marked by loss of sensation in the eye brows, eye lids and pupil. It is a kind of paralysis of the muscles of the eyes said to be due derangement of windy humour of the system arising from the errors in diet and defects of physical functions (சா.அக.);.

     [நேத்திரம் + தம்பம் + வாதம்.]

நேத்திரத்தர்ப்பணம்

 நேத்திரத்தர்ப்பணம் nēttirattarppaṇam, பெ.(n.)

   காற்றோட்டம், தும்பு, தூசு இவை களில்லாவிடத்தில் நோயாளியை படுக்க வைத்து உளுத்த மாவை தண்ணீரில் பிசைந்து இரண்டு கண்களைச் சுற்றிலும் பற்றுப்போட்டு, கண்களை மூடிக்கொண்டு இளஞ்சூடுள்ள நெய்யை இரப்பை அமிழும்வரை ஊற்றியபின் கண்களை மெள்ள மெள்ளத் திறந்துவிடச் செய்யுமோர் ஆயுர்வேத பண்டுவமுறை; a treatment given in general to the diseases of the eye according to the process of Ayurveda. It is as follows. The patient is made to be down in a dustless room where there is no breeze. The flour of black gram mixed water is applied around the eyes and a lukeworm cow’s ghee is poured on the eyes till the eye lids get completely immersed or covered with ghee. Then, the eyes are opened frequently so as to allow the ghee enter into the eyes (சா.அக.);.

     [நேத்திரம் + தர்ப்பணம்.]

நேத்திரத்திமிர்

 நேத்திரத்திமிர் nēttirattimir, பெ.(n.)

   கண் திமிரம்; loss of vision or blindness due to the affection or loss of sensation in the optic nerve (சா.அக.);.

     [நேத்திரம் + திமிர்.]

நேத்திரத்துலக்கம்

 நேத்திரத்துலக்கம் nēttirattulakkam, பெ.(n.)

   கண்விளக்கம்; clearness of vision (சா.அக.);.

     [நேத்திரம் + துலக்கம்.]

நேத்திரத்தோசம்

நேத்திரத்தோசம்1 nēttirattōcam, பெ.(n.)

   1. கண்ணுக்குரிய அல்லது வேறு காரணங் களினால் ஏற்படும் குற்றங்கள்; natural or langenital predisposition to diseases of the eye.

   2. பார்வை தோஷம்; evil effects of malignant eyes (சா.அக.);.

     [நேத்திரம் + தோஷம்.]

நேத்திரநாயகம்

 நேத்திரநாயகம் nēttiranāyagam, பெ.(n.)

   கண்கட்டிப்பூடு; a plant used in the abscess of the eye lids (சா.அக.);.

நேத்திரநிருமாலி

 நேத்திரநிருமாலி nēttiranirumāli, பெ.(n.)

   சிறு சண்பகம்; cananga flower tree (சா.அக.);.

நேத்திரநோக்கம்

 நேத்திரநோக்கம் nēttiranōkkam, பெ.(n.)

   கண் பார்வை; eye sight, vision (சா.அக.);.

     [நேத்திரம் + நோக்கம்.]

நேத்திரநோய்

நேத்திரநோய் nēttiranōy, பெ.(n.)

   1. கண்ணோய்; disease of the eye in general.

   2. கண்வலி; pain in the eye (சா.அக.);.

     [நேத்திரம் + நோய்.]

நேத்திரபடலரோகம்

 நேத்திரபடலரோகம் nēttirabaḍalarōkam, பெ.(n.)

   கண்ணோய் வகை (M.L.);; cataract.

     [நேத்திரம் + படலம் + ரோகம்.]

     [Skt. {} → த. நேத்திரம்.]

     [Skt. roha → த. ரோகம்.]

நேத்திரபாடவம்

 நேத்திரபாடவம் nēttirapāṭavam, பெ.(n.)

   கண்ணின் பார்வைத் திறன்; keen eyesight, strong power of vision.

     [Skt. {} → த. நேத்திரபாடவம்.]

நேத்திரபிண்டம்

நேத்திரபிண்டம் nēttirabiṇṭam, பெ.(n.)

   1. கண்விழி (யாழ்.அக.);; eye-ball.

   2. பூனை; cat.

     [Skt. {} → த. நேத்திர+பிண்டம்.]

நேத்திரபிந்து

நேத்திரபிந்து1 nēttirabindu, பெ.(n.)

   கண்ணுக்கு விடும் மருந்து (இக்.வ.);; medicinal solution for the eye.

     [Skt. {} → த. நேத்திரபிந்து.]

 நேத்திரபிந்து2 nēttirabindu, பெ.(n.)

   கண் சிவப்பு; inflammation of the eye (சா.அக.);

     [நேத்திரம் + பிந்து.]

நேத்திரபிரியந்தம்

 நேத்திரபிரியந்தம் nēttirabiriyandam, பெ.(n.)

   கடைக்கண்; corner of the eye (சா.அக.);.

நேத்திரபுட்டி

 நேத்திரபுட்டி nēttirabuṭṭi, பெ.(n.)

   செங்கத்தாரி; false peacock’s foot tree (சா.அக.);.

நேத்திரபூளை

 நேத்திரபூளை nēttirapūḷai, பெ.(n.)

   கண் பீளைச் செடி; long leaved trumpet plant (சா.அக.);.

     [நேத்திரம் + பூளை.]

நேத்திரபேதி

 நேத்திரபேதி nēttirapēti, பெ.(n.)

   கண்களில் நிற்கும் மாசுநீர் கழலும்படி கண்ணுக்குத் தடவுமருந்து; a collyrium to the eyes for purpose of bring out the collection of morbid fluid (சா.அக.);.

நேத்திரப்பச்சை

 நேத்திரப்பச்சை nēttirappaccai, பெ.(n.)

   கதிர்ப்பச்சை; a fragrant plant used in perfumes (சா.அக.);.

     [நேத்திரம் + பச்சை.]

நேத்திரப்படலம்

 நேத்திரப்படலம் nēttirappaḍalam, பெ.(n.)

   வெள்விழியில் மாசுபடரும் ஒரு வகைக் கண்ணோய்; coats or films over the sclerotic of the eye (சா.அக.);.

     [நேத்திரம் + படலம்.]

நேத்திரப்பால்

 நேத்திரப்பால் nēttirappāl, பெ.(n.)

   பனங்கள்; palmyra toddy (சா.அக.);.

     [நேத்திரம் + பால்.]

நேத்திரப்பிடி

 நேத்திரப்பிடி nēttirappiḍi, பெ.(n.)

   கோயில் மூர்த்தியின் கண்மடல்களிற்சாத்தும் உயர்ந்த வாசனைச் சந்தனத்தாலாகிய காப்பு; the well ground perfumed sandal paste used in adorning the eyes of an idol (Loc.);.

     [நேத்திரம் + பிடி.]

     [Skt. {} → த. நேத்திரம்.]

நேத்திரப்பிண்டம்

 நேத்திரப்பிண்டம் nēttirappiṇṭam, பெ.(n.)

   கண்விழி; eye ball (சா.அக.);

     [நேத்திரம் + பிண்டம்.]

நேத்திரப்புகை

 நேத்திரப்புகை nēttirappugai, பெ.(n.)

   கண் புகைச்சல்; smoky affection of the eye (சா.அக.);.

     [நேத்திரம் + புகை.]

நேத்திரமங்களம்

 நேத்திரமங்களம் nēttiramaṅgaḷam, பெ.(n.)

   சிலை முதலியவற்றிற்குக் கண் திறந்து விடுகை (நயனமோட்சம்);; forming the eyes of an image or picture.

     [நேத்திரம் + மங்கலம்.]

     [Skt. {} → த. நேத்திரம்.]

நேத்திரமஞ்சம்

 நேத்திரமஞ்சம் nēttiramañjam, பெ.(n.)

   மிளிறை; an unknown plant (சா.அக.);.

நேத்திரமருத்துவம்

 நேத்திரமருத்துவம் nēttiramaruttuvam, பெ.(n.)

   கண் மருத்துவம் (வைத்தியம்);; ophthalmic treatment (சா.அக.);.

நேத்திரமலம்

 நேத்திரமலம் nēttiramalam, பெ.(n.)

   கண் பீளை; gummy secretions from the eye- muco parulence (சா.அக.);.

நேத்திரமாலி

 நேத்திரமாலி nēttiramāli, பெ.(n.)

   சிறு சண்பகம்; cananga flower tree (சா.அக.);.

நேத்திரமுத்திரை

நேத்திரமுத்திரை nēttiramuttirai, பெ.(n.)

   சுண்டு விரலையும் பெருவிரலையுங் கூட்டி நடுவணுள்ள மூன்று விரலையும் உயர நிமிர்த்திக் கண்ணுக்கு எதிரிற்காட்டும் முத்திரை வகை (செந்.x, 424);;     [Skt. {} → த. நேத்திர+முத்திரை.]

நேத்திரம்

நேத்திரம்1 nēttiram, பெ.(n.)

   1. கண் (திவா.);; eye.

   2. மயிர்பீலிக்கண்; peacock-eye.

     “சுருள்பங்கி நேத்திரத்தா லணிந்து” (திவ். பெரியாழ்.3, 4, 5);.

   3. பட்டாடை (திவா.);; silk cloth.

     “காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்” (தேவா.676, 2);.

   4. நேத்திரமுத்திரை (சதாசிவ.130, உரை); பார்க்க;see {}-muttirai ({});.

     [Skt. {} → த. நேத்திரம்.]

 நேத்திரம்2 nēttiram, பெ.(n.)

   1. கண்வேர்; nerves and blood vessels of the eye.

   2. மருந்துகளை ஆசன வழியாய் உள்ளே புகட்டுவதற்காக அமைத்த ஓர் கருவி; an apparatus for introducing or throwing liquid into the rectum (சா.அக.);.

நேத்திரரசம்

 நேத்திரரசம் nēttirarasam, பெ.(n.)

   கண்ணீர்; tears (சா.அக.);.

     [நேத்திரம் + ரசம்.]

நேத்திரராசி

 நேத்திரராசி nēttirarāci, பெ.(n.)

   இருவாட்சி; a kind of jasmine (சா.அக.);.

நேத்திரராம்பு

 நேத்திரராம்பு nēttirarāmbu, பெ.(n.)

   கண்ணீர்; tears (சா.அக.);.

நேத்திரரோகம்

 நேத்திரரோகம் nēttirarōkam, பெ.(n.)

   கண்ணோய்; disease around the eye (colloq.);.

     [Skt. {}+ → த. நேத்திரரோகம்.]

நேத்திரவர்த்தமம்

நேத்திரவர்த்தமம் nēttiravarttamam, பெ.(n.)

   1. கண்ணிமை; eye laid.

   2. கண்ணிமை நோய் (ரோகம்);; diseases of the eye lid.

   3. கண்ணின் துளை (துவாரம்); அல்லது புரை; the course of a sinus or cavity occuring in the region of the eyes (சா.அக);.

நேத்திரவலி

நேத்திரவலி nēttiravali, பெ.(n.)

   1. கண்வலி; eye pain.

   2. கண்வலிப்பூஞ்செடி; a flowering plant used in eye disease.

   3. கண் சிவத்தல்; inflammation of the eye (சா.அக.);.

நேத்திரவாயு

நேத்திரவாயு1 nēttiravāyu, பெ.(n.)

   1. கண்ணரம்புவலி; neuralgia around the eyes.

   2. கண்ணோய் வகை (வின்.);; ophthalmia.

     [Skt. {} → த. நேத்திரவாயு.]

 நேத்திரவாயு2 nēttiravāyu, பெ.(n.)

   வாயுக் கோளாறினாலேற்படும் கண்ணோய்; a disease of the eye due to the derangement of vayu in the system inflammation of the eyes (சா.அக.);.

நேத்திரவாழை

 நேத்திரவாழை nēttiravāḻai, பெ.(n.)

   மேற்றிசைக் கடற்கரைத் தேசங்களில் (மலையாளத்தில்); விளைவதும், நோயணு காதிருக்க வேண்டி சுட்டுக் கறிசமைப்பதுமான வாழையிற் கடைப்பட்ட வகை (சாதி);; an inferior special of plantain tree grown in the western coast (Malabar);. It is baked and used in curries as a preventive for diseases. Chips prepared out of it are very tasty, ripe fruits are also eaten

நேத்திரவிதி

 நேத்திரவிதி nēddiravidi, பெ.(n.)

   கண்ணோய் களைப் பற்றிய நூல் (யாழ்.அக);; a treatise on diseases of the eye.

     [Skt. {}+vidhi → த. நேத்திரவிதி.]

நேத்திரவிரணம்

 நேத்திரவிரணம் nēttiraviraṇam, பெ.(n.)

   கண்ணின் விரணம்; ulceration of the eye (சா.அக.);.

நேத்திரவிரணம்போக்கி

 நேத்திரவிரணம்போக்கி nēttiraviraṇambōkki, பெ.(n.)

   சதகுப்பை சக்களத்தி எனப்படும் காட்டுச் சதகுப்பை; a plantakin to common dill (சா.அக.);.

நேத்திரவுபத்திரவாதம்

 நேத்திரவுபத்திரவாதம் nēttiravubattiravātam, பெ.(n.)

கண்மயக்குவாதம் பார்க்க;see {} (சா.அக.);.

நேத்திரவைத்தியன்

 நேத்திரவைத்தியன் nēttiravaittiyaṉ, பெ. (n.)

   கண் மருத்துவன் (வின்.);; eye-doctor.

த.வ. கண் மருத்துவன்

     [Skt. {]+vaidya → த. நேத்திரவைத்தியன்.]

நேத்திரவைத்தியம்

 நேத்திரவைத்தியம் nēttiravaittiyam, பெ. (n.)

   கண் மருத்துவம்; ophthalmic treatment (சா.அக.);.

நேத்திராஞ்சனம்

நேத்திராஞ்சனம்1 nēttirāñjaṉam, பெ. (n.)

   கண்மருந்து வகை (யாழ்.அக.);; a medicine for the eye.

     [Skt. {} → த. நேத்திராஞ்சனம்.]

 நேத்திராஞ்சனம்2 nēttirāñjaṉam, பெ.(n.)

   1. கண்மருந்து; collyrium for the eye salve.

   2. இமையைப் பற்றிய ஒருவகைக் கண்ணோய்; a disease of the eye lid.

   3. கண்ணிலிடும் ஒரு மந்திரீக மை; a magic paint used for finding hidden treasured by applying it to the eye (சா.அக.);.

 நேத்திராஞ்சனம்3 nēttirāñjaṉam, பெ.(n.)

   கருடப் பார்வைக்கு (திருட்டிக்க);ச் சமானமான பார்வை கிடைப்பதாகக் கருதப்படும் நாக சிந்தூரம், இரசகற்பூரம், வெண்காரம், சவ்வீராஞ்சனம், படிகாரம், தாம்பூர பற்பம், அய சிந்தூரம், பச்சைக் கற்பூரம், கடுகுரோகிணி, தேத்தாங்கொட்டை, இந்துப்பு, பால்துத்தம், திரிகடுகு, திரிபலம், அதிமதுரம் சமயிடை கொண்டு புங்கம் பட்டைச் சாற்றிலரைத்து மாத்திரை செய்து கண்ணிற்கிடும் கலிங்கம்; a pill rubbed with water and applied to the eyes to improve its vision. It is prepared with various drugs as mentioned in the text above (சா.அக.);.

நேத்திராதி

 நேத்திராதி nēttirāti, பெ.(n.)

   நோக்கு நோக்கிச் செடி; an unknown plant probably used to improve the vision (சா.அக.);.

     [நேத்திர +ஆதி.]

நேத்திரானந்தம்

 நேத்திரானந்தம் nēttirāṉandam, பெ.(n.)

நேத்திரோற்சவம் பார்க்க;see {}.

     [Skt. {}-nanda → த. நேத்திரானந்தம்.]

நேத்திராமயம்

 நேத்திராமயம் nēttirāmayam, பெ.(n.)

   கண் முழுவதும் பற்றிய நோய்; a disease affecting the whole eye (சா.அக.);.

     [Skt. {} → த. நேத்திராமயம்.]

நேத்திராமியம்

 நேத்திராமியம் nēttirāmiyam, பெ.(n.)

   நேத்திராமயம்; which see (சா.அக.);.

     [நேத்திரம் + ஆமியம்.]

நேத்திராரி

நேத்திராரி1 nēttirāri, பெ.(n.)

   கள்ளி (L.);; spurge.

     [Skt. {} → த. நேத்திராரி.]

 நேத்திராரி2 nēttirāri, பெ.(n.)

   கள்ளி மரம்; any spurge tree (சா.அக.);.

நேத்திராவுடதம்

 நேத்திராவுடதம் nēddirāvuḍadam, பெ.(n.)

   கண் மருந்து (நேத்திராவுடதம்);; medicines (சா.அக.);

     [நேத்திரம் + அவுடதம்.]

     [Skt. {}+ausadha → த. நேத்திராவிடதம்.]

நேத்திரெளசதம்

 நேத்திரெளசதம் nēddireḷasadam, பெ.(n.)

   நேத்திராவுடதம்; medicines applicable to the diseases of the eye (சா.அக.);.

     [நேத்திரம் + அவுஷதம்.]

நேத்திரோற்சவம்

 நேத்திரோற்சவம் nēttirōṟcavam, பெ.(n.)

   கண்ணுக்கு விருப்பமான காட்சி (யாழ்.அக.);; sight pleasing to the eyes.

     [Skt. {}+ut-sava → த. நேத்திரம் + உற்சவம்.]

நேந்தாடுபாவை

 நேந்தாடுபாவை nēndāṭupāvai, பெ. (n.)

   சேந்தாடுபாவை; an unknown plant šēndāợupāvai (சா.அக.);.

     [நேர்ந்து + ஆடு + பாவை]

 நேந்தாடுபாவை nēndāṭupāvai, பெ.(n.)

   சேந்தாடுபாவை; an unknown plant (சா.அக.);.

     [நேந்தாடு + பாவை).]

நேந்திரப்பள்ளி

நேந்திரப்பள்ளி nēndirappaḷḷi, பெ. (n.)

   நெல்லின் வகை (நாமதீப. 351);; a kind of paddy.

     [நேந்திரப்பள்ளி என்னும் இடத்தில் சிறப்பாக விளையும் நெல்லாகலாம்]

நேந்திரம்

 நேந்திரம் nēndiram, பெ. (n.)

   ஒருவகை வாழை;   இது மேற்குக் கடற்கரைப்பகுதிகளில் விளையும்; a kind of plantain tree grown in the Western coast. Chips prepared out of it are very tasty, ripe fruits are also eaten. (சா.அக.);.

ம. நேந்த்ரவாழ, து. நேந்த்ரபாரே

 நேந்திரம் nēndiram, பெ.(n.)

கண்பார்வை

 eye sight.

     “அவருக்கு நேந்திரம் குறைந்து விட்டது”(கொங்.வ.);.

     [நோள்(நோடு);- நோந்திரம்- நேந்திரம்]

நேந்திரம் எனும் தமிழ்ச்சொல் வடமொழியில் நேத்திரம் எனத்திரிந்தது.

 நேந்திரம் nēndiram, பெ.(n.)

   ஒரு வகை வாழை; a kind of banana (சா.அக.);.

நேந்துநிரவிப்போ-தல்

நேந்துநிரவிப்போ-தல் nēnduniravippōtal,    8 செ. கு. வி. (v.i.)

   சற்று ஏறக்குறைய இருந்தாலும் சரிக் கட்டிக் கொண்டு போதல்; to rectify, correct, redress, to adjust, indemnify, reimburse.

     [நே(ர்);ந்து + நிரவி + போ-தல்]

மனமொத்துக் கூட இருப்பதைக் குறைவாக இருப்பதில் இட்டு சரி செய்துபோவது நேந்து நிரவிப் போதலாகும். நேந்து போதல் = குறைதல், மெலிதல். நிரவுதல் = இருப்பதிலிருந்து குறைவதற்குப் போடுதல்.

நேபத்தியம்

நேபத்தியம் nēpattiyam, பெ.(n.)

   1. அலங் காரம் (இலக்.அக.);; decoration.

   2. வேடம் (இலக்.அக.);; guise, dress.

   3. நாடகவரங்கில் வேடம்பூணும் மறைவிடம் (இலக்.அக.);; place behind the stage, tiring-house.

   4. நாடக மேடை (இக்.வ.);; stage.

     [Skt. {} → த. நேபத்தியம்.]

நேபம்

நேபம் nēpam, பெ. (n.)

   1. கண்ணீர்; tears.

   2. தண்ணீர்; ordinary water. (சா.அக.);.

 நேபம் nēpam, பெ.(n.)

   1. கண்ணீர்; tears.

   2. தண்ணீர்; ordinary water (சா.அக.);.

நேபாலிகை

நேபாலிகை nēpāligai, பெ. (n.)

   ஒருவகை நஞ்சு (பாடாணம்); (மூ. அ.);; a kind of poison.

 நேபாலிகை1 nēpāligai, பெ.(n.)

   செய்ந்நஞ்சு வகை (மூ.அ.);; a kind of poison.

     [cf. {} → த. நேபாலிகை]

 நேபாலிகை2 nēpāligai, பெ.(n.)

   ஒரு வகைச் செய்ந்நஞ்சு; a kind of poison perhaps arsenic found in Nepal (சா.அக.);.

நேபாளக்கரும்பு

 நேபாளக்கரும்பு nēpāḷakkarumbu, பெ. (n.)

   நேபாள நாட்டில் விளையும் கரும்பு; sugar-cane grown in Nepal.

     [நேபாளம் + கரும்பு]

புறநானூற்றில் ஒளவையார் அதியமானைப் பற்றிப்பாடிய பாடலில் கரும்பிவண் தந்தும் என்று குறிக்கின்றார். கரும்பு சீனத்திலிருந்து கொணர்ந்ததாக வரலாற்றாய்வாளர் கூறுவர்.

அதுநேபாளம் வழியே வந்ததால் அமைந்த பெயராகலாம்.

நேபாளங்கரும்பு

 நேபாளங்கரும்பு nēpāḷaṅgarumbu, பெ.(n.)

   நேப்பாள தேசத்தில் விளையும் கரும்பு; sugarcane grown in Nepal (சா.அக.);.

     [நேபாளம்+கரும்பு.]

நேபாளங்கொட்டை

 நேபாளங்கொட்டை nēpāḷaṅgoṭṭai, பெ. (n.)

   நேர்வாளங்கொட்டை; croton seed or nut. (சா.அக.);.

     [நேர்வாளம் → நேபாளம் + கொட்டை.]

 நேபாளங்கொட்டை nēpāḷaṅgoṭṭai, பெ.(n.)

   நேர்வாளங்கொட்டை; croton seed or nut. (சா.அக.);.

     [நேபாளம் + கொட்டை.]

நேபாளசம்

 நேபாளசம் nēpāḷasam, பெ. (n.)

   நேபாளத்தில் கிடைக்கும் ஒரு வகைக்களிம்பேறிய செம்பு; a kind of impure copper probably found in Napal. (சா.அக.);.

     [நேபாளம் + (செம்பு); → சம்]

 நேபாளசம் nēpāḷasam, பெ.(n.)

   நேப்பாளத்தில் கிடைக்கும் ஒருவகைக் களிம்பேறிய செம்பு; a kind of impure copper probably found in Nepal (சா.அக.);..

நேபாளம்

நேபாளம்1 nēpāḷam, பெ. (n.)

   ஐம்பத்தாறு நாட்டுளொன்று; the kingdom of Nepal one of 56 teşam.

 நேபாளம்2 nēpāḷam, பெ. (n.)

நேர்வாளம் (மலை.); பார்க்க;see nērvālam.

 நேபாளம் nēpāḷam, பெ. (n.)

   சீமையாமணக்கு; Nepal castrol plant, Balios permum montana alias croton polyandrum. (சா.அக.);.

சீமை ஆமணக்கு நேபாளப் பயிர்போலும்

 நேபாளம்3 nēpāḷam, பெ. (n.)

   நேபாளத்தில் விளையும் வேப்பமரம்; margosa tree of Nepal. (சா.அக.);.

     [நேபாளம் + வேம்பு]

 நேபாளம்1 nēpāḷam, பெ.(n.)

   தேசம் ஐம்பத் தாறனுள் ஒன்று (வின்.);; the kingdom of Nepal, one of 56 {}.

     [Skt. {} → த. நேபாளம்1.]

 நேபாளம்2 nēpāḷam, பெ.(n.)

   1. நேர்வாளம்; purgative plant.

   2. சீமையாமணக்கு; Nepal castrol plant (சா.அக.);.

நேபாளவேம்பு

 நேபாளவேம்பு nēpāḷavēmbu, பெ.(n.)

   நேப்பாளத்தில் விளையும் வேப்பமரம்; margosa tree of Nepal (சா.அக.);. [நேபாளம் + வேம்பு.]

நேபாளி

நேபாளி nēpāḷi, பெ. (n.)

   1. நோயாள நாட்டு மக்கள்; people in Nepal.

   2. இருவாட்சி; a kind of Jasmine, Jasminum sambae. (சா.அக.);.

     [நேபாளம் + இ. ‘இ’ சொல்லாக்க ஈறு]

 நேபாளி nēpāḷi, பெ.(n.)

நேத்திரராசி பார்க்க;see {} (சா.அக.);.

நேமகம்

நேமகம்1 nēmagam, பெ.(n.)

   1. அமர்த்தம்; appointment.

   2. தீர்மானம் (வின்.);; deter- mination.

   3. திருமண உறுதி (வின்.);; betrothal.

   4. காணிக்கை நேர்ந்துவைக்கை (இ.வ.);; dedication to a deity.

   5. ஒழுங்கு; orderliness.

     “நேமகஞ் சேர் முத்துப்பவளம்” (கொண்டல்விடு.406);.

     [Skt. {} → த. நேமகம்1.]

 நேமகம்2 nēmagam, பெ.(n.)

   இருப்பிடம்; hall, residence.

     “நீதானெழுந்தருளு நேமகத்தின்” (கொண்டல்விடு.58);.

     [Skt. nigama → த. நேமகம்2.]

நேமத்தான் பட்டி

 நேமத்தான் பட்டி nēmattāṉpaṭṭi, பெ.(n.)

   புதுக்கோட்டை மாவட்டத்தில் காரைக்குடி வட்டத்தில் அமைந்துள்ளது; name of the village from Pudukkottai (dist.);.

     [நியமத்தான்(நேமத்தான்);+பட்டி]

நேமநாற்சுகம்

 நேமநாற்சுகம் nēmanāṟcugam, பெ. (n.)

   கரும்பு அகரம் என்னும் மருந்துவகை; a bazaar drug. (சா.அக.);.

 நேமநாற்சுகம் nēmanāṟcugam, பெ.(n.)

   கருப்பு அகரம்; a bazaar drug (சா.அக.);.

நேமநிட்டை

 நேமநிட்டை nēmaniṭṭai, பெ.(n.)

   நோன்புகளை (விரதங்களை); உறுதியோடு செய்கை; rigid observance of prescribed rites.

     [Skt. niyama – {} → த. நேமநிட்டை.]

நேமனம்

 நேமனம் nēmaṉam, பெ.(n.)

நியமனம் (இ.வ.); பார்க்க;see {}.

த.வ. அமர்த்தம்

     [Skt. ni-yamana → த. நேமனம்.]

நேமன்

நேமன் nēmaṉ, பெ.(n.)

   சீரிய ஒழுக்க முள்ளவன்; person of exemplary conduct.

     “செயமொடு கோசலம் வாழு நேமன்” (இராமநா.பாலகா.1);.

     [Skt. {} → த. நேமன்.]

நேமம்

நேமம்1 nēmam, பெ.(n.)

   1. பணியமர்த்தம்; appointment.

   2. நாட்கருமங்களும் கடைப்பிடி (நியமங்);களும்; daily rites and obser- vances.

   3. விதிமுறைமை; regulation.

     “நேமக்கலை மகளும்” (கொண்டல்விடு.8);.

   4. ஊழ் (வின்.);; destiny, fate.

     [Skt. niyama → த. நேமம்1.]

 நேமம்2 nēmam, பெ.(n.)

   1. நேரம் (யாழ்.அக.);; time.

   2. சாயுங்காலம்; evening.

   3. பங்கு; share.

   4. பிளப்பு; fissure.

   5. வேர்; root.

   6. மேலிடம்; upper part.

   7. வேலி; hedge, fence.

   8. ஏமாற்றுகை; cheating.

     [Skt. {} → த. நேமம்2.]

 நேமம்3 nēmam, பெ.(n.)

   1. காலம்; period.

   2. பாதி; half (சா.அக.);.

நேமி

நேமி1 nēmi, பெ. (n.)

   1. வட்டம் (திவா.);; circle.

   2. தேருருளை; wheel of a chariot.

     “குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக இளம்பிறையன்ன விளங்குசுடர் நேமி” (குறுந். 189);.

     “ஆரஞ் சூழ்ந்த வாயில் வாய் நேமி யொடு” (சிறுபாண். 253);.

     “வன்பால் முரம்பின் நேமி அதிர” (நற்.394:5);.

   3. சக்கர ஆய்தம்; Discuss.

     “திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்” (திவ். இயற். திருவிருத். 9);.

     “நனந்தலையுலகம் வளைஇ நேமியொடு” (முல்லை.1);.

   4. செங்கோலாழி (ஆணைச் சக்கரம்);; wheel of sovereignty.

     “ஏம முரசம் இழுமென முழங்க நேமி உய்த்த நேஎ நெஞ்சின்” (புறநா. 3);.

   5. சக்கரவாள மலைத்தொடர்; mythical range of mountains.

     “நேமிமுதல் தொல்லிசையமையும் புலவராய், புரைத்த புனைநெடுங்குன்றம்” (பரிபா. 15:3,4);.

     “நேர்கொ ணெடுவரை நேமியிற்றொடுத்த” (மலைபாடு. 238);.

   6. சக்கரம் போன்ற நிலவுலகம் (திவா.);; earth.

   7. உலகைச் சூழ்ந்தகடல் (திவா.);; sea, ocean.

     “நேமியிற் செல்லு நெய்க்கணிறாஅல்” (மலைபடு. 525.);

   8. விரற்செறி (பிங்.);; ring.

   9. சக்கரவாகப் பறவை; cakra bird.

     “பொலஞ்சூட்டு நேமி வாண்முகஞ் துமிப்ப” (குறுந். 227);.

   10. சக்கரப் படையுடைய திருமால்; Tirumai, as wielding the discus.

     “நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ” (கம்பரா. பிணிவிட் 70);.

   11. சமணத் தலைவர் இருபத்து நால்வருள் ஒருவர்; an Arhat, one of 24 Tirttañkarar.

     “நிகரி னேமிதனீணகா” (சீவக. 912);.

 நேமி2 nēmi, பெ. (n.)

   தேர்செய்யப் பயன்படும் மரவகை. இதிலிருந்து சிவப்புத் துவர்ப்புப் பிசின் எடுக்கப்படும்; chariot tree gives astringent red gum. (சா.அக.);.

 நேமி2 nēmi, பெ.(n.)

   1. வட்டம் (திவா.);; circle.

   2. தேருருளை; wheel of a chariot.

     “தேர்முடுக…. விளங்கு சுடர்நேமி” (குறுந்.189);.

   3. சக்கராயுதம்; discus.

     “திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர்” (திவ். இயற். திருவிருத்.9);.

   4. ஆளுமைச்சக்கரம்; wheel of sovereignty.

     “நேமியுய்த்த நேள நெஞ்சின்” (புறநா.3);.

   5. சக்கரவாளம் பார்க்க;see sakkara-{}.

     “நேமி முதல்… நெடுங்குன்றம்” (பரிபா.15,4);.

   6. பூமி (திவா.);; earth.

   7. மோதிரம் (பிங்.);; ring.

   8. சக்கரவாகம், 1 பார்க்க;see {}.

     “பொலஞ்சூட்டு நேமி வாண்முகந் துமிப்ப” (குறுந்.227);.

   9. சக்கரப்படையையுடைய திருமால்; Visnu, as wielding the discus.

     “நேமியோ குலிசியோ நெடுங் கணிச்சியோ” (கம்பரா. பிணிவீட். 70);.

   10. தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர்; an Arhat, one of 24 {}.

     “நிகரி னேமிதன்ணகர்” (சீவக. 912);.

 நேமி3 nēmi, பெ.(n.)

   1. கடல்; ocean.

   2. உணவுக் கட்டுப்பாடு பத்தியம்; diet.

   3. நிலவுக்கு; earth.

   4. மூங்கில்; bamboo.

   5. சக்கரவாகப்புள்; the ruddy goose.

   6. எலிச்செவிப்பூடு; rat’s ear plant.

   7. சந்தனம்; sandal wood.

   8. வேங்கை; East lndian kino.

   9. பழமுண்ணிப் பாலை; edible palay (சா.அக.);.

 நேமி4 nēmi, பெ.(n.)

   தேர்மரம், தேர்கட்ட பயன்படுவதால் இப்பெயர், இதினின்று சிவப்பு துவர்ப்புப் பிசின் எடுக்கப்படும். இதன் பட்டை குடல் நோய் தீர்க்கும். மரத்திலிருந்து ஒரு வகை அயச்சத்து எடுக்கப்படும்; chariot tree – Dalbergia oojeinesis so called from its usefulness for making chariots. Gives astringent red gum, bark is useful in bowel complaints. A crystalline substance like magnesia is sometimes found in the wood. (சா.அக.);.

நேமி-த்தல்

நேமி-த்தல் nēmittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. அமர்த்துதல் (நியமி);; to appoint.

     “நேமியாத பாங்கியர்” (தணிப்பா. i, 327, 26);.

   2. சிந்தித்தல்; to conceive.

     “நற்கணி நேமித்தெழுதாச் சித்திர வடிவார்தோள்” (திருப்பு.598);.

த.வ. அமர்த்தல்

     [Skt. niyama → த. நியமி1-த்தல். நியமித்தம் -→ நியமித்தல்]

நேமிகாதகம்

நேமிகாதகம் nēmigātagam, பெ.(n.)

   நிரய வகை (சிவதரு.சுவர்க்கநரக.114);; a hell.

நேமிசந்தனா

 நேமிசந்தனா nēmisandaṉā, பெ. (n.)

   வேங்கை மரம் (மலை.);; Indian kino tree.

     [நேமி + சந்தனம். சந்தனம் → சந்தனா]

 நேமிசந்தனா nēmisandaṉā, பெ.(n.)

   வேங்கை (மலை.);; indian Kino.

     [நேமி + சந்தனா.]

நேமிசாரம்

 நேமிசாரம் nēmicāram, பெ. (n.)

   காந்தாரியுப்பு (சத்திசாரம்);; an acrid salt (சா.அக.);.

     [நேமி + சாரம். சாரம் = உப்பு]

 நேமிசாரம் nēmicāram, பெ.(n.)

   சக்திசாரம்; which see (சா.அக.);.

     [நேமி + சாரம்.]

நேமிச்சந்திரன்

நேமிச்சந்திரன் nēmiccandiraṉ, பெ. (n.)

   சமணத்தலைவர் இருபத்து நால்வரில் ஒருவர்; an Arhat. one of 24 Tirttankarar.

     [நேமி + சந்திரன்.]

 நேமிச்சந்திரன் nēmiccandiraṉ, பெ.(n.)

நேமி, 11 (த.நி.போ.13); பார்க்க;see {}.

     [Skt. {} → த. நேமி+சந்திரன்.]

நேமிநாதன்

நேமிநாதன் nēminātaṉ, பெ. (n.)

   அருகதேவன் (சூடா.);; Arhat.

சமணத் தலைவர்கள் (தீர்த்தங்கரர்); 24-ல் இருபத்திரண்டாமவராவர். இவரைத் துவாரகையை ஆண்ட கண்ணபிரானுக்குத் (தாயாதி மகனாரான); தமையன் முறையினர் என்பர், சமணர்கள். இவர் பெயரால் குணவீரபண்டிதர் நேமிநாதம்’ என்னும் தமிழிலக்கணநூல் செய்தார்.

இவருக்குத் தமிழ் நாட்டிற்பல இடங்களிற் கோயில்களிருந்தன. அவற்றுள் மயிலார்);ப் பூரில் இருந்த கோயில், கடலோரத்தில் இருந்ததனாற் கடலில் மூழ்கிவிடும் என்றெண்ணி அப்புறப்படுத்தப் பெற்றது. தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள மேல்சித்தாமூரில் சமணக் கோயில் இருக்கிறது என்று தென்னார்க்காடு மாவட்ட அரசிதழில் 367 ஆம்பக்கத்தில் குறிக்கப் பட்டுள்ளது. மயிலா(ர்);ப்பூரில் நேமிநாதருக்குக் கோயிலிருந்த தென்பதைத் திருநூற்றந்தாதி, நேமி நாதர் பதிகம் என்னும் இரண்டு நூல்களும், நேமி நாதப் பாயிரவுரையும் வலியுறுத்துகின்றன.

மயிலா(ர்);ப்பூரிற் கோயில் கொண்ட நேமிநாதருக்கு மயிலைநாத ரென்னும் பெயரும் உண்டு. இப்பெயரையே நன்னூலுக்கு உரையெழுதிய மயிலைநாதரும் கொண்டிருந்தார். திருநூற்றந்தாதி பாடிய அவிரோதியாழ்வாரென்பவர் மயிலை நேமிநாதர் மேல் திருவெம்பாவை ஒன்றும் எழுதியிருக்கிறார். இந்நூல் இப்போதும் மார்கழித்திங்களிற் படிக்கப் பெறுகிறது.

 நேமிநாதன் nēminātaṉ, பெ.(n.)

   அருகக் கடவுள் (சூடா.);; arhat.

     [Skt. {} → த. நேமிநாதன்.]

நேமிநாதம்

நேமிநாதம் nēminātam, பெ. (n.)

   குணவீரபண்டிதர் இயற்றிய ஒரு தமிழ்நூல்; a treatise on Tamil grammar by Kuna-Virapaņḍidar.

     “தொல்காப்பியக் கடலிற் சொற்றி பச்சுற்றளக்கப் பல்காற் கொண்டோடும் பட வென்ப-பல்கோட்டுக் கோமி காமற்புலனை வெல்லுங்குணவீர நேமிநாதத்தினெறி” (நேமிநாதம்);

தமிழ் இலக்கணநூல்களில் ஒன்று. குணவீர பண்டிதர் என்னும் சமண ஆசிரியரால் நேமிநாதர் என்னும் தீர்த்தங்கரர் பெயரால் செய்யப்பெற்றது. இந்நூல் திரிபுவன தேவன் என்னும் குலோத்துங்கன் காலத்தில் செய்யப்பெற்ற தென இந்நூற் பாயிரவுரையால் அறியலாம்.

இந்நூல், தொல்காப்பியர் கூறிய எழுத்துக்கும் சொல்லுக்குமான இலக் கணத்தைச் சுருக்கிக் கூறுகிறது. இதன் முதல்நூல் தொலகாப்பியம். முதல்நூலை நோக்க இது மிகச்சிறுநூலாதலின் சின்னூல் என்றும் வழங்கப்பெறுகிறது. இது வெண்பாவால் ஆனநூல்.

நூல் அமைப்பு: முதலில் அருகக் கடவுளை வாழ்த்தி, அவையடக்கங் கூறிய இரண்டு செய்யுட்களாற் பாயிரம் அமைந்துள்ளது. எழுத்ததிகாரம் 24 செய்யுட்களாலும், சொல்லதிகாரம் 71 செய்யுட்களாலும் அமைந்துள்ளது. எழுத்ததி காரத்தில் இயல் வரையில்லை. சொல்லதிகாரம் தொல் காப்பியத்தைப் போலவே ஒன்பதியல்களைக் கொண் டுள்ளது. தொல்காப்பிய இயல்களின் பெயர்களே சிறிய மாற்றங்களுடன் அமைந்துள்ளன.

தொல்காப்பியம் படிக்கும் முன், சின்னூலாகிய இதனைப் படிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலுக்குப் பின்பே நன்னூல் தோன்றியது. பெயர் தெரியாத ஒருவரின் சிறந்த உரை ஒன்று இந்நூலுக்கு உள்ளது. இவ்வுரை

கருத்துரை, பொழிப்புரை, எடுத்துக்காட்டு, வினாவிடை, விளக்கம் ஆகியயாவுங் கொண்ட விருத்தியுரையாகக் கிடைக்கின்றது. இவ்வுரையில் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சீவகசிந்தாமணி, மணிமேகலை, பதினெண் கீழ்க்கணக்கு முதலிய நூல்களினின்றும் மேற்கோள்கள் வந்துள்ளன.

 நேமிநாதம் nēminātam, பெ.(n.)

   குணவீர பண்டிதர் இயற்றிய ஒரு தமிழிலக்கண நூல்; a treatise on Tamil grammar by {}.

     [நேமி + நாதம்.]

நேமிப்புள்

நேமிப்புள் nēmippuḷ, பெ. (n.)

   சக்கரவாகப்பறவை (சூடா.);; cakara bird.

     [நேமி + புள், நேமி = சக்கரம்]

 நேமிப்புள்1 nēmippuḷ, பெ.(n.)

நேமி, 9 (திவா.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. நேமி+புள்.]

 நேமிப்புள்2 nēmippuḷ, பெ.(n.)

   சக்கிர வாகப்புல்; the ruddy grass (சா.அக.);.

நேமியங்கனி

 நேமியங்கனி nēmiyaṅgaṉi, பெ. (n.)

   திராட்சை; grapes, Vities vinifera. (சா.அக.);.

     [நேமி + அம் + கனி. திராட்சை என்னும் கொடிமுந்திரிப் பழங்கள் கோளவடிவில் இருப்பதால் நேமியங்கனி எனப்பட்டது. கருஞ்சாற்றுப்பருகலைக் ‘கோளா’ என்பதும் தமிழாதல் இதன் வழிக் காண்க.]

 நேமியங்கனி nēmiyaṅgaṉi, பெ.(n.)

   கொடி முந்திரி (திராட்சை);; grapes (சா.அக.);.

     [நேமியம் + கனி.]

நேமியஞ்செல்வன்

நேமியஞ்செல்வன் nēmiyañjelvaṉ, பெ. (n.)

   மன்னர்மன்னன் (சக்கரவர்த்தி);; Emperor.

     “வையநின்னடி நிழலின் வைகி நேமியஞ் செல்வனாகி” (சீவக. 24.17);.

     [நேமி = வட்டம், சக்கரப்படை, உலகம், கடல், நேமி + அம் + செல்வன் = உலகை யாளும், மன்னர்களுக்கெல்லாம் மன்னன்.]

 நேமியஞ்செல்வன் nēmiyañjelvaṉ, பெ.(n.)

   பேரரசன் சக்கரவர்த்தி; emperor.

     “வைய நின்னடி நிழலின் வைகி நேமியந் செல்வனாகி” (சீவக.2417);.

     [Skt. {} → த. நேமியஞ்செல்வன்.]

நேமியம்

 நேமியம் nēmiyam, பெ. (n.)

   நிலப்பனை; ground palm, Curculigo orchioides. (சா.அக);.

     [நேமி + அம். நேமி = நிலம், வட்டமான நிலவுலகம்]

 நேமியம் nēmiyam, பெ.(n.)

   நிலப்பனை; ground palm (சா.அக.);.

நேமியான்

நேமியான் nēmiyāṉ, பெ. (n.)

   சக்கரப் படையையுடைய திருமால்; Visnu, as wielding the discus.

     “வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல” (கலித். 105);.

     [நேமி → நேமியான்]

 நேமியான் nēmiyāṉ, பெ.(n.)

{}, as wielding the discus.

     “வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோல” (கலித்.105);.

     [Skt. {} → த. நேமியான்.]

நேமியோன்

நேமியோன் nēmiyōṉ, பெ. (n.)

நேமியான் பார்க்க;see nēmiyān.

     “நீனிறவுருவி னேமி யோனுமென்” (புறநா. 5815);.

     [நேமியான் → நேமியோன்]

நேமியோர்

நேமியோர் nēmiyōr, பெ. (n.)

   செங்கோலாழி (ஆணைச் சக்கரம்); யையுடைய அரசர்; king.

     “நிலந்தவவுருட்டிய நேமியோரும்” (புறநா. 2703);,

     [நேமி → நேமியோர். நேமி = ஆணைச் சக்கரம்.]

நேமிவலவன்

நேமிவலவன் nēmivalavaṉ, பெ.(n.)

   1. கடவுள் (வின்.);; god.

   2. திருமால்;{}.

     “திருநேமிவலவா” (திவ்.திருவாய்.6 10, 2);.

   3. அரசன் (வின்.);; king.

     [Skt. {}+ → த. நேமிவலவன்.]

நேமுகன்

நேமுகன் nēmugaṉ, பெ.(n.)

   அலுவலன்; officer.

     “நிசக்கட்டாகக் கொடுக்கும் நேமுகர்போல்” (சரவண. பணவிடு. 139);.

நேமுகம்

 நேமுகம் nēmugam, பெ.(n.)

   பணியமர்த்தம் (நியமனம்);(இ.வ.);; appointment.

     [Skt. {} → த. நேமுகம்.]

நேமூர்

 நேமூர் nēmūr, பெ.(n.)

   விழுப்புரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Villupuram Taluk. –

     [நியமம்(நேமம்);+ஊர்]

நேம்

 நேம் nēm, பெ. (n.)

   அன்பு; love.

     [நேயம் → நேம். ஒ.நோ. தேயம் → தேஅம் → தேம்.]

நேம்பு-தல்

நேம்பு-தல் nēmbudal,    செ.கு.வி.(vi.) புடைத்தல்; to winnow.

     [நூம்பு-நேம்பு]

 நேம்பு-தல் nēmbudal,    5.செ. குன்றாவி. (v.t.)

   கொழித்தல்(வின்.);; to winnow.

   தெ. நேமு;   ம. நேம்புக;   கோண். ஏமாநா;   கூய். ஏம்ப;குரு. நாபநா.

     [நோம்பு → நேம்புக;

நேம்பு – தல், தவசங்களைக் கற்களில் இருந்து கொழித்துப் பிரித்தல்]

நேயம்

நேயம்1 nēyam, பெ. (n.)

   1. அன்பு; love. affection.

     “நேயத்தாய் நென்ன லென்னைப் புணர்ந்து” (திருக்கோ. 39);.

     “நன்னேயமுடன் பூசிப்போர்” (சிவரக.நந்திநமனு.14);.

   2. இறைப்பற்று; piety, devotion.

     “நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி” (திருவாச. 1:13);.

   3. நெய் (பிங்.);; ghee.

   4. எண்ணெய் (பிங்.);.

 oil.

   5. நன்மை (யாழ்.அக.);; good, benefit.

பிரா.நே.அம், வ. ஸ்நேஹ.

     [நுள் → (நெள்); → நெய் → நேய் → நேயம். (வே.க.); = நெய்போல் ஒட்டும் குணமாகிய அன்பு, ஒ. நோ பசை → பாசம் = அன்பு. நீரம் → ஈரம் = அன்பு. நெள் → நெய் → நே → நேயம்(வ.மொ.வ);. நேயம் → நேசம் → நேசன் (மு. தா.);. நுல் = இளமை, மென்மை. நுல் → நுள் → நண்பு → நட்பு. (நுள்); → நள் → (நய்); நய → நயத்தல் = அன்பு செய்தல்]

வடவர்காட்டும் ஸ்நிஹ் (ஒட்டு); என்னும் மூலம், நெய் என்னும் தென்சொற்றிரியே. snow என்னும் ஆங்கிலச் சொல் ஸ்நேஹ என்பதனோடு தொடர்புள்ள தாயின், அதற்கும் தென்சொல்லே அடிமூலமாக இருத்தல் வேண்டும். (த.ம.);

 நேயம்2 nēyam, பெ. (n.)

   நிலப்பனை (மலை.);; a plant common in sandy situations.

     [நேமியம் → நேயம். நேமி + அம் → நேமியம். மி-இடைக்குறை, நே+(ய்); அம்-நேயம்]

நேயர்

நேயர் nēyar, பெ. (n.)

   1. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்புபவர்; radio listeners; television viewer.

நேயர்விருப்பம் கேட்டால் மனத்துக்கு ஆறுதல் கிடைக்கும்.

     “வணக்கம் நேயர்களே” என்று கூறிவிட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினார் அறிவிப்பாளர்.

   2. தாளிகை (பத்திரிகை); களை விரும் பிப்படிப்பவர்; reader of magazine.

     [நேயம்1 → நேயர்]

நேயவை

 நேயவை nēyavai, பெ. (n.)

   இடுதிரை (அக.நி.);; curtain.

     [நெய் → நேயவை. நெய் = நெய்தல்]

நேயா

நேயா nēyā, பெ. (n.)

   1. நேயமரம்; a kind of tree.

   2. பெருமருந்து கொடிவகை; Indian birth wort, Aristolochia indica (சா.அக.);

நேர

நேர nēra, இடை. (part.)

   ஒர் உவமவுருபு; a particle of comparison.

     “போல மறுப்ப ஒப்பக் காய்த்த நேர வியர்ப்ப நளிய நந்த என்று” (தொல்,பொருள். உவம.16);.

     [நிகர → நேர. நேர்1 → நேர.]

நேரகாலம்

நேரகாலம் nērakālam, பெ, (n.)

   1. ஏற்றகாலம்; right time, suitable time.

   2. பிறப்பியத்தன் (சாதகத்தின்); படி கெடுதியான காலம் (யாழ்ப்.);; dangerous or critical time, as determined from one’s horoscope.

   3. ஊழ் (விதி); காலம் (வின்.);; special time when fate exercises its influence, commonly evil.

   4. தற்காலம் (யாழ்.அக.);; present time.

     [நேரம்1 + காலம்]

நேரக்களி

 நேரக்களி nērakkaḷi, பெ. (n.)

நெளரக்களி பார்க்க;see naurakkah (சா.அக.);.

நேரக்குலம்

நேரக்குலம் nērakkulam, பெ. (n.)

நேர காலம், 2,3 (நெல்லை); பார்க்க;see nerakālam 2,3.

     [நேரம் + குலம். காலம் → கலம் → குலம்]

நேரங்கடத்து-தல்

நேரங்கடத்து-தல் nēraṅgaḍaddudal,    5செ.கு.வி. (v.i.)

   1. காலம் போக்குதல் (வின்.);; to while away one’s time.

தூங்குவது போல் நடித்து நேரங்கடத்திக் கொண்டிருக்கிறான்.

   2. வேலையில் மந்தமாயிருத்தல் (உ.வ.);; to be slow in work.

மதுரை வந்தியின் கூலியாளாக வந்த சொக்கேசர் வேலை செய்யாமல் நேரங்கடத்திக்கொண்டிருந்தார்.

     [நேரம் + கடத்து-தல். கடத்துதல் = போக்குதல், செலுத்துதல், குழப்புதல்]

நேரங்காட்டி

 நேரங்காட்டி nēraṅgāṭṭi, பெ. (n.)

   சூரியகாந்திச் செடி; sunflower plantHelianthus indicus. (சா.அக.);.

     [நேரம் + காட்டி, கதிரவன் செல்லும் திசை நோக்கித் திரும்பி நேரத்தைக் காட்டும் செடி.]

மணிப்பொறி இல்லாத பழங்காலத்தே மன்னர் மாளிகையில் மேற்குவளையினின்று கிழக்குவளைக்கு நீர் சொட்டவிட்டு அறியும் நாழிகை காட்டிகள் இருப்பினும், மக்கள் கதிரவனைக் கண்டுணரக் கண்கூசும்போது நேரம் அறியச் சூரிய காந்திப்பூ பயன்பட்டது அறிக.

நேரங்கெட்டநேரத்தில்

 நேரங்கெட்டநேரத்தில் nēraṅgeṭṭanērattil, வி.எ. (adv.)

   நேரம் கழித்து; at an ungodly hour.

நேரங்கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வராதே. நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடாதே.

     [நேரம் + கெட்டநேரத்தில்]

நேரம் கெட்ட நேரத்தில் வீட்டிற்கு வருபவர் கதவைத்தட்டுவதனால், உழைத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்போர்க்குத் துக்கங் கலையும், தொல்லைவரும். சூடு ஆறிய உணவு சுவை குன்றியிருக்கும் என்பதனால் இத்தொடர்

அமைந்ததென்க.

நேரங்கெட்டநேரம்

நேரங்கெட்டநேரம் nēraṅgeṭṭanēram, பெ. (n.)

   1. தகுதியற்ற காலம்; unseasonable hour, as for visiting or eating.

நேரங்கெட்ட நேரத்தில் சொந்தக்காரர்கள் வந்து விட்டனர்.

   2. பேய்கள் உலவுவதாகக் கருதப்படும் காலமல்லாக்காலம்; unpropitious time, as midday or dusk, when demons are supposed to be abroad.

நேரங் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வராமல் நேரத்தோடு வந்துவிடு.

     [நேரம் + கெட்ட நேரம்]

உறவினர் வந்தால் உணவு ஏற்பாட்டுத் துயர் உண்டாகும். தனிமையும், இருண்மையும் பேய் அச்சம் உண்டாகும்.

நேரசை

நேரசை nērasai, பெ. (n.)

   குறிலும் நெடிலும் தனித்தேனும் ஒற்றடுத்தேனும் வரும் அசைவகை (யாப்.வி. 6);; a metrical syllable consisting of a short or long letter, singly or followed by a consonant.

     “நெடில்குறிறனியே நின்றுமொற்றடுத்தும் நடைபெறுநேரசை நால்வகையானே” (யாப்.வி.6);.

     [நேர் + அசை.]

எ.டு: ஆழி, வெள், வேல்,

ஆ-ழி- வெள் – வேல்

     “குறிலே நெடிலே….

நெறியே வரினும் நிரைந்தொற் றடுப் பினும் நேர்….” (யா.கா.5);

     “குறிலே நெடிலே….. ஒற்றொடு

வருதலொடு மெய்ப்பட நாடி நேரும்” (தொல்,பொருள்.செய்.3);

நேரசை, நிரையசை பிரிப்பு தமிழில் யாப்போசைக்கு அடிப்படை தனி நேர்க்கு நாள் என்றும், நேர்நேர்க்குத் தேமா என்றும், நேர்நேர், நேர்-க்கு தேமாங்காய் என்றும், நேர்நேர்நேர்நேர் நான்கிற்குத் தேமாந்தண்யூ என்றும் வாய்பாடு கூறுவது வழக்கம். நேர்க்கு இணையாக வடமொழியில் லகு என்றும் நிரைக்குக் குருவென்றும் வழங்குவர்.

நேரஞ்சாய்-தல்

நேரஞ்சாய்-தல் nērañjāytal,    1செ.கு.வி. (v.i.)

   பொழுதிறங்குதல் (இ.வ.);; to draw towards evening, decline, as the day.

நேரஞ் சாயும் பொழுது வீட்டுக்குவா.

     [நேரம்1 + சாய்-தல்.]

நேரஞ்செல்லு-தல்

நேரஞ்செல்லு-தல் nērañjelludal,    13செகுவி. (v.i.)

   1. நீண்ட காலம் பிடித்தல்; to take a long time, as a work.

   2. காலத் தாழ்வாதல் (வின்.);; to be protracted or delayed;

 to become late.

     [நேரம்1 + செல்(லு);-தல்.]

நேரடம்

 நேரடம் nēraḍam, பெ. (n.)

   நாவல்; jaumoon, Eugenia jambolina. (சா.அக.);.

நேரடி

நேரடி1 nēraḍi, பெ. (n.)

   ஐந்துவகை செய்யுளடிகளில் நாற்சீரால் வருவது; a line of four metrical feet, one of five kinds of adi.

     “பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத்து ஒற்றலங் கடையே” (தொல்.1295);.

     “நாலொருசிர்அறை தருகாலையளவொடு நேரடி” (யா.கா.12);.

     [நேர் + அடி.]

ஐந்துவகை அடிகள்: குறளடி சிந்தடி,நேரடி, நெடிலடி, கழிநெடிலடி.

குறளடி: இரண்டு சீரால் ஆகியது.

எ.டு.

     “திரைத்த சாலிகை

நிரைத்த போனிரந்

திரைப்ப தேன்களே

விரைக்கொள் மாலையாய்” (யா.கா.13 மேற்கோள்);

     “வான்பொய்ப்பினுந் தான்பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி

புனல்பரந்து பொன்கொழிக்கும்

விளைவறா வியன்கழனிக்

கார்க்கரும்பின் கமழாலைத்

தீத்தெறுவிற் கவின்வாடி

நீர்ச்செறுவி னினெய்தல்

பூச்சாம்பும் புலத்தாங்கண்

காய்ச்செந்நெற் கதிரருந்தும்

மோட்டெருமை முழுக்குழவி

கூட்டுநிழற் றுயில்வதியும்” (பட்டினப். 5-15);

சிந்தடி: மூன்று சீரான் ஆகியது.

எ.டு. இருது வேற்றமை யின்மையாற்

கருதி மேற்றுறக் கத்தினோ

டரிது வேற்றுமை யாகவே

கருது வேற்றடங் கையினாய்”

     “சோலை யார்ந்த கரத்திடைக்

காலை யார்கழ லார்ப்பவும்

மாலை மார்பன் வருமாயின்

நீல வுண்கண் இவள்வாழுமே”

     “கயலெழுதிய விமய நெற்றியின்

அயலெழுதிய புலியும் வில்லும்

நாவலந் தண்பொழின் மன்னர்

ஏவல் கேட்பப் பாரர சாண்ட” (சிலப்.17:1);

நேரடி: நேரடி எனினும் அளவடி எனினும் ஒக்கும். நாற்சீரால் அமையும் அடி

எ.டு:

     “வேரல் வேலி வேர்க்கோட் பலவின்

சாரல் நாட செவ்வியை யாகுமதி

யாரஃ தறிந்திசி னோரே சாரற்

சிறுகோட்டுப் பெரும்பழந் துங்கி யாங்கிவள்

உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே” (குறுந்.18);

     “சூரல் பம்பிய சிறுகால் யாறே

சூரர மகளிர் ஆரணங் கினரே

வாரலை யெனினே யானஞ் சுவலே

சாரல் நாட நீவர லாறே”(யா.கா.34, மேற்கொள்);

     “கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்

இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் மானுள் வருமே லவன்வயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி’

     “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்

காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்

குடமலைப் பிறந்த வாரமு மகிலும்

தென்கடன் முத்துங் குணகடற் றுகிரும்

கங்கை வாரியுங் காவிரிப் பயனும்

ஈழத் துணவுங் காழகத் தாக்கமும்

அரியவும் பெரியவு நெரிய வீண்டி

வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்”

     “முன்னை யிட்டதீ முப்பு ரத்திலே

பின்னை யிட்டதி தென்னி லங்கையில்

அன்னை யிட்டதி அடிவயிற்றிலே யானு மிட்டதீ மூள்க மூள்கவே.”

நெடிலடி: ஐந்து சீரான் அமையும் அடி.

     “வேதத்தி னுட்பொருள் மண்ணாசை மங்கையை விட்டுவிடப்

போதித்த வன்மொழி கேட்டிலை யோசெய்த புண்ணியத்தால்

ஆதித்தன் சந்திரன் போலே வெளிச்சம் தாம்பொழுது

காதற்ற ஆசியும் வாராது காணுங் கடைவழிக்கே”

     “கடையவ னேனைக் கருணையி னால்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே

சடையவ னேதளர்ந் தேனெம்பி ரான்என்னைத் தாங்கிக் கொள்ளே” (திருவாச. நீத்தல்.1);

     “நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடி வந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் ச ண் மு. க மு. ம் தோளும் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே.” (கந்தரலங்காரம்);

     “சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சார்ந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒருதாழ்வு இல்லையே”. (கந்தரலங்காரம்);

     “மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வான வர் க் கு மேலான தேவனே மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயல்பொழில் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண்படைத் திலனே அந்த நான்முகனே”.

கழிநெடிலடி: ஐந்துசீரின் மிக்குவருவது.

அறுசீர்:

     “தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்க

கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளை

கண்விழித்து நோக்க

தெண்திரை எழினி காட்ட தேம்பிழி மகர யாழின்

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ” (கம்பரா.பால.36);

     “முத்து வடஞ்சேர் முகிழ்முலை மேல்

முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய்

வைத்த பவள வடம்புனைவீர்

மணிப்பொற் கபாடம் திறமினோ” (கலிங்,கடை.30);

     “கலவிக் களியின் மயக்கத்தாற்

கலைபோய் அகலக் கலைமதியின்

நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்

நீள்பொற் கபாடந் திறமினோ.”

எழுசீர் கழிநெடிலடி:

     “வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

வாடினேன் பசியினா லிளைத்தே

விடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோரென்

நேருறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின்மா னிகளா யேழைக ளாய்நெஞ்

சிளைத்தவர் தமைக்கண்டே யிளைத்தேன்.” (அருட்பா.);

எண்சீர் கழிநெடிலடி:

     “கூவின பூங்குயில் கூவின கோழி

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்

ஒவின தாரகை ஒளிஒளி உயத்து

ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு

தேவநற் செறிகழல் தாளினை காட்டாய்

திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே

யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்

எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே”

 நேரடி2 nēraḍi, பெ. (n.)

   1. மற்றொன்றின் மூலம் அல்லாத பங்கேற்பு, இடையில் எதுவும் குறுக்கிடாத பங்கேற்பு,

 direct (without any intervention of or mediation of someone or something.

கலவரத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டவருக்குத் தண்டனை உண்டு.

   2. நேருக்கு நேர்; நேர்முகம்; face to face.

இந்தத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் நேரடிப் போட்டி இருக்கும். கேட்ட கேள்விக்கு நேரடியாகப் பதிலைச் சொல்லுங்கள்.

   3. கோயில் விழா, விளையாட்டுகள் முதலியவை ஒலிபரப்பாகும் போது அல்லது நடைபெறும் இடத்திலிருந்து உடனடியாக அனுப்பப்படுவது; live broadcasting.

மின் தடைகாரணமாக நேரடி ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

   4. போக்குவரத்துப்பற்றிக் கூறும்போது இடையில் நிறுத்தங்கள் இல்லாமல் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மட்டும் என்று அமைவது; with reference to public transport through.

விழாவுக்கு என்று ஐந்து பேருந்துகள் நேரடிப்போக்குவரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் நேரடிப்போக்குவரத்து உண்டு.

     [நேர் → நேரடி]

நேரந்தப்பு-தல்

நேரந்தப்பு-தல் nērandappudal,    5செ.கு.வி. (v.i.)

   காலந்தவறுதல்; to be untimely or out of time.

நேரந்தப்பி விதைத்ததால் பயிர் சரியாக விளையவில்லை.

     [நேரம் + தப்பு-தல்,தப்புதல் = தவறுதல்.]

நேரபாரமறி-தல்

நேரபாரமறி-தல் nērapāramaṟidal,    2செ.கு.வி. (v.i.)

   அடக்க வொழுக்கமறிதல் (இ.வ.);; to pay regard to modesty or propriety.

     [நேரம் + பாரம் + அறி-தல்.]

நேரப்பட

நேரப்பட nērappaḍa, கு.வி.எ. (adv.)

   காலத்தாழ்வாய் (தாமதமாய்); (வின்.);; late.

     [நேரம்1 + பட.]

நேரப்பலன்

 நேரப்பலன் nērappalaṉ, பெ. (n.)

   செயல் தொடங்கப்பட்ட வேளையின் பயன் (நாஞ்.);; astrological effect of the time when a work is commenced.

     [நேரம் + பலன்.]

நேரப்போக்கு

நேரப்போக்கு nērappōkku, பெ. (n.)

   பொழுது போக்குகை; pastime.

     “வெற்றுநேரப் போக்காய்ப் புகல் வினோதமுமன்று” (இரட்சணிய,பக்.2);.

     [நேரம் + போக்கு.]

நேரம்

நேரம்1 nēram, பெ. (n.)

   1. வினை நேருங்காலப் பகுதி; Time.

     “நேரம் பார்த்து நெடுந்தகைக் குரிசிலை மீட்டிடம் பெற்று’ (பெருங். உஞ்சைக்.57:74);.

நேரங் காலம் பார்த்து வேலையைத்துவங்க வேண்டும்.

   2. தக்க சமையம்;வேளை (தருணம்);,பொழுது (திருக்கோ.290, துறைவிளக்கம்);,

 opportunity, season.

     “ஆண்டொருபத்துடனாறு நிரம்பிய தந் நேரம்” (சேது பு. துத் தம் 14.);.

கொடுப்பினைக்கும் நேரம் வாய்க்க வேண்டும்.

   3. இருசாமங்கொண்ட அரைநாள்;   பகலிற் பாதியாகிய காலவளவு (திவா.);; a measure of the day = 2 Šāmam = 1/2 pagal = about six hours.

   4. மணி; hour.

குறித்த நேரத்தில் வந்து விடுவேன்.

   5. இத்தனை மணியெனக் கணக்கிடும் காலவளவு; length of time.

ஒருவர்குறைந்தது எட்டு மணிநேரமாவது துங்கவேண்டும்.

   ம.நேரம்;இ. தேர்.

குட. நெர து. நேர்டே

     [நேர் → நேரம்]

 நேரம்2 nēram, பெ. (n.)

   1. குற்றம்; guilt, fault

   2. தண்டம் (அபராதம்);; fine.

தெநேரமு.

     [நேர்வு → நேர் + அம்]

நேரம்தவறாத

 நேரம்தவறாத nēramtavaṟāta, பெ. எ. (adj.)

   காலம் தவறிடாத; punctual.

     [நேரம் + தவறாத.]

நேரம்பெற

நேரம்பெற nērambeṟa, வி.எ. (adv.)

   விரைவாக (நெல்லை);; early.

     [நேரம்1 + பெற.]

நேரலகிரி

 நேரலகிரி nēralagiri, பெ.(n.)

   கிருட்டிணகிரி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in KrishnagiriTaluk.

     [நேரல்(நாவல்மரம்);+கிரி]

நேரலன்

நேரலன்1 nēralaṉ, பெ. (n.)

   பகைவன் (திவா.);; enemy.

     [நேர் + அல் + அன். அல் – எதிர்மறை இடைநிலை. அன் – ஆண்பால் ஒருமை ஈறு.]

 நேரலன்2 nēralaṉ, பெ. (n.)

   1. நேர்மை யானவன்; impartial, just person.

   2. வளையாதது, நேரானது, நிறுதிட்டமானது (யாழ்ப்.);; that which is straight or erect.

     [நேரல் → நேரலன். நேர்1 → நேரல்]

நேரலை

 நேரலை nēralai, பெ. (n,)

   நேரடி ஒலிபரப்பு, ஒளி பரப்பு; direct broadcasting or direct telecasting.

உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிகளை நேரலையில் எல்லாத் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின.

     [நேர்+அலை]

நேரல்

 நேரல் nēral, பெ. (n.)

நேர்வு (திவா.); பார்க்க;see nérvu.

     [நேர் → நேரல்.]

நேரல்கூற்று

 நேரல்கூற்று nēralāṟṟu, பெ. (n.)

   கூறப்பட்ட சொற்களை அவ்வாறே பயன்படுத்தாமல் அவற்றை மற்றவர் எடுத்துரைக்கும் வகை; indirect speech.

மறுவ அயற்கூற்று

     [நேர்+ அல்+கூற்று]

நேரல்லார்

நேரல்லார் nērallār, பெ. (n.)

   கீழோர்; inferiors, vulgar people.

     “நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால்” (நாலடி,72);.

     [நேர் + அல்லார், நேர்மையாக நடக்காத கீழோர்]

நேராக

நேராக nērāka, கு.வி.எ. (adv.)

   1. பிறர் மூலமாகவன்றித் தானே; directly in person.

தானே நேராக ஈடுபட்டான்.

   2. தெளிவாக (பிரத்தியட்சமாக);; before ones eyes, in sight.

   3. உண்மையாய்; honestly, straight forwardly.

   4. முழுமையும்; completely.

     ‘அகவாயிலுள்ளது நேராகப் போனவாறே’ (ஈடு, 4.4:10);.

   5. புறப்பட்ட விடத்திலிருந்து வேறு எங்கும் செல்லாமல்; straight from.

நேராகப் பள்ளிக்குச் செல்லுதல் வேண்டும். பள்ளிக்கூடம் விட்டதும் நேராக வீட்டுக்கு வா.

   5.வளையாமல், திரும்பாமல் காட்டிய வழியிலேயே; straight a head.

வலப்புறம் சென்று நேராகப்போனால் ஊர்வரும். இந்த வழியே நேராகச் சென்றால் குளத்தை யடையலாம்.

     [நேர் → நேராக]

நேராதார்

நேராதார் nērātār, பெ. (n.)

பகைவர்

 enemies.

     “நேராதார் வளநாட்டை” (பு.வெ.3:14, கொளு);.

     “நீர் முற்றி மதில் பொரூஉம் பகையல்லால் நேராதா” (கலித்.67:4);.

     [நேர்1 + ஆ + த் + ஆர்- நேராதார். ஆ-எ.ம.இ.நி. த்- சந்தி. ஆர்-பலர் பால் ஈறு.]

நேரான்

 நேரான் nērāṉ, பெ.(n.)

   சோழ மன்னன் செங்கணானை எதிர்த்தவன்; one who opposed the Chola king Senganān [நேர்+ஆ+அன்]

நேரார்

நேரார் nērār, பெ. (n.)

நேராதார் பார்க்க;see neradr.

     “நிதியந் திறையளந்தார் நேராரும்” (பு.வெ.310);.

     “நேரார் நேரு நீணிதி துஞ்சுந் நிறைகோயில்” (சீவக.1635);.

     ‘நேரார் தம்மைக் கொலைகண்டு மகிழாமல்” (பாரத. கிருட்டினன்.து.11);.

     [நேர் → நேரார். எதிர்மறை இடைநிலை குன்றியது.]

நேராளி

 நேராளி nērāḷi, பெ. (n.)

   நேர்மையுள்ளவன் (யாழ்.அக.);; upright, honest person.

     [நேர் + ஆளி. ஆள் → ஆளி ஒ.நோ. போர் + ஆளி = போராளி.]

நேரி

நேரி1 nēri, பெ. (n.)

   தமிழ்நாட்டிலுள்ளதும் சோழர்க்குரியதுமான ஒருமலை (பதிற்றுப்.40);; a hill in the Tamil country belonging to the Cholas.

     “நேரி வெற்பன்” (சூடா.2:16);

     [நேர் + இ. இ.சொல்லாக்க ஈறு

செங்குத்தாக நிற்கும் மலை.]

இம்மலையால் சோழனை நேரியன் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.

     “நீரிமிழ் சிலம்பின் நேரியோன் (பதிற்றுப்.40);.

     “பாடுசால் நெடுவரைக் கல்லுயர் நேரிப்பொருநன்’ (பதிற்றுப்.67);.

உறையூரின் தெற்கு வாயிலில் உள்ள ஒர் ஊரை நேரிவாயில் என்று சிலப்பதிகாரம் (28:117); கூறுகிறது.

இங்குச் சேரன் செங்குட்டுவன் தன் மைத்துனனான சோழனுக்குப் பரிந்து ஒன்பது மன்னரை வென்றான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

     “ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரிவாயில் நிலைச்செரு வென்று” (சிலப்.28:16,117);.

 நேரி2 nēri, பெ. (n.)

   மக்களாட்சி முறையில் தங்களின் அரசைத் தாங்களே தேர்ந்தெடுக்க மக்களில் குறிப்பிட்ட அகவைக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை;மேற்குறிப்பிட்ட உரிமையைக் காட்டும் முத்திரைக் குத்தப்படும் சீட்டு,

 Vote(s);.

எங்கள் தொகுதியில் ஐம்பது விழுக்காடு நேரிகள் பதிவாகியது. தேர்தல் முடிந்து இரண்டுநாள்கள் கழித்து நேரிகள் எண்ணப்படும்.

     [நேர் + இ. (படைத்.பாவாணர்.);]

நேரிசம்

நேரிசம் nērisam, பெ. (n.)

   எறிபடை; javelin.

     “மாகடைக்க னேரிசத்தான் மறைக்களிற்றை மதமடக்கி” (குற்றா.தல. தருமசாமி.74);.

   2. அம்புவகை (யாழ்.அக.);; a kind of arrow.

     [நேர் + இசம். இயம் → இசம் =

நேராகச் செல்லும் படைக்கருவி]

நேரிசை

நேரிசை nērisai, பெ. (n.)

   1. நேரிசைவெண்பா (இலக்.வி.729); பார்க்க;see nēršai-venbā.

   2. பண்வகை (இராகவகை);; a melody.

     “நேரிசையாக வறுபதமுரன்று (தேவா.85,3.);

     [நேர் → நேரிசை.]

இரண்டாம் அடியில் மூன்றாம் சீருக்கு அடுத்துத் தனிச் சொல்லாகவரும் முறையில் சிறுகோடு இட்டு இரண்டடி எதுகையோடு ஒத்துவருவதைக் குறிக்கும். எதுகை ஒவ்வாமல் வரின் இன்னிசை என்று கூறப்படும்.

     “கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்

முடியிடறித் தேய்த்த நகமும் -பிடிமுன்பு

பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே

கல்லார்தோள் கிள்ளி களிறு.” (முத்தொள்.72);

நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா nērisaiveṇpā, பெ. (n.)

   செய்யுளின் இரண்டாமடி யிற்றில் தனிச்சொற் பெற்றுவரும் வெண்பா வகை; a kind of venba having a detached foot at the end of the second line.

     [நேரிசை + வெண்பா.]

இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக் கேற்ற தனிச்சொல்லால் அடி நிரம்பிச், செப்பலோசை வழுவாது முதலிரண்டடியும் ஒரு விகற்பமாய்க் கடையிரண்டடியும் மற்றொரு விகற்பமாய் வரினும், நான்கடியும் ஒரு விகற்பமாய் வரினும் இருகுறள் நேரிசை வெண்பா அல்லது நேரிசை வெண்பா எனப்படும்.

எ-டு:

     “தடமண்டு தாமரையின் றாதா டலவன்

இடமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைஞெண்டு

பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந் தூழி நடாயினா னூர்” (யா.கா.24 மேற்கோள்);

இது இரண்டு குறள் வெண்பாவாய், நடுவுமுதற் றொடைக்கேற்ற தனிச்சொல்லான் அடிநிரம்பிச் செப்பலோசை வழுவாது இரண்டு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பா.

     “அரிய வரைகிண்டு காட்டுவார் யாரே

பெரிய வரைவயிரங் கொண்டு-தெரியிற்

கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார்

பெரிய வரைவயிரங் கொண்டு”

இது இரண்டு குறள் வெண்பாவாய், நடுவு முதற்றொடைக்கேற்ற தனிச்சொல்லான் அடிநிரம்பிச், செப்பலோசை வழுவாது ஒருவிகற்பத்தான் வந்த நேரிசைவெண்பா.

முதற் குறட்பாவினோடு தனிச்சொல் இடைவேறுபட்டு விட்டிசைப்பின், ஒற்றுமைப் படாத மாழைகளை (உலோகங்களை); ஒற்றுமைப்படப் பற்றாசிட்டு விளக்கினாற்போல முதற் குறட்பாவினிறுதிக்கண் ஒன்றும் இரண்டும் அசைகூட்டி உச்சரிக்கப்பட்டு இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவுமுள அவை ஆசிடை நேரிசை வெண்பா வெனப்படும்.

     “தாமரையின் றாதாடித் தண்டுவலைச் சேறளைந்து

தாமரையின் நாற்றமே தானாறுந்-தாமரைபோற்

கண்ணான் முகத்தான் கரதலத்தான் சேவடியென்

கண்ணார்வஞ் செய்யுங் கருத்து” (யா.கா.24.மேற்);

இது முதற் குறட்பாவின் இறுதிக் கண் ஈரசையான், ஆசிட்டு இரண்டு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.

     “கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத்

தருமமுந் தக்கார்க்கே செய்யா-ஒருநிலையே

முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப

பட்டினம் பெற்ற காலம்” (நாலடி,அறிவு.10);.

இது முதற் குறட்பாவின் இறுதிக்கண் ஒரசையான் ஆசிட்டு இரண்டு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.

     “ஆர்த்த வறிவின ராண்டிளைய ராயினுங்

காத்தோம்பித் தம்மை யடக்குப-மூத்தொறுஉந்

தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற்

போத்தறார் புல்லறிவி னார்” (நாலடி, கயமை1);.

இது முதற்குறட்பாவின் இறுதிக்கண் ஒரசையான் ஆசிட்டு ஒருவிகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.

     “வஞ்சியே னென்றவன்ற னுருரைத்தான் யானுமவன் வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன் வஞ்சியான் வஞ்சியேன் வஞ்சியே னென்றுரைத்தும் வஞ்சித்தான் வஞ்சியாய் வஞ்சியார் கோ (யா.கா.24 மேற்.);

இது முதற்குறட்பாவின் இறுதிக் கண் ஈரசையான் ஆசிட்டு ஒருவிற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.

நேரிசைவெண்பாவிற்கு மேலும் சில எடுத்துக் காட்டுகள்:

     “பிறர்மனை கள்களவு சூது கொலையோடு

அறனறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்-திறனிலர் என்(று);

என்னப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்

செல்வழி உய்த்திடுத லால்” (ஆச்சார37);

     “நாணாக்கால் பெண்மை நலனழியும் முன்னின்று

காணாக்கால் கைவளையுஞ் சோருமால் – காணேனர்ன் வண்டெவ்வந் தீர்தார் வயமான் வழுதியைக் கண்டெவ்வந் தீர்வதோர் ஆறு” (முத்தொள்.28);.

     “தோற்ற மழிவுமருள் சூர்நோய் வரைப்பிலதா யாற்ற லறிவுண்மை யாய்த்துய்தாய்ப் – போற்று மளவ ருளத்தளவா யான்றவறங் கோடா துளது விடாப் பொருளா கும்.” (சேந். செ.2);

     “இறையே தமையா ளடிகளென வெண்ணார் கறையே யொழியார் களிகொன் – மிறையேசெய் தின்ன றருமளறே யெய்துபுபன் னாளுழல்வ ரென்னு மறைபொய் யிலை.” (சேந். செ.4);

     “நோக்கி விழிகளிப்ப நுண்செவிகேட் டுக்களிப்ப நாக்கிழமை சொற்று நனிகளிப்ப – நீக்க நினைந்தெனெஞ் சங்களிப்ப நீமஞ்ஞை வந்துட் களிந்தழைதெள் ளின்பக் கடால்” (சேந்.செ.16);

     “கண்ணாளர் போற்றுமெண் கண்ணாற்கு மாலுக்கு மண்ணா மலைப்பெயரா ளற்கந்தா – டண்ணார் பெருக்கி யருள்புரிந்த பெய்கழற்சே யிந்நாள் வெருக்கொ ளெனக்குமருள் வீடு.” (சேந்.செ.30);

நேரிசைச்சிந்தியல்வெண்பா

நேரிசைச்சிந்தியல்வெண்பா nērisaissindiyalveṇpā, பெ. (n.)

   இரண்டாம் அடியில் தனிச்சொல்பெற்று வரும் சிந்தியல்வெண்பா வகை; a species of Šindiyal-veņbā with a detached foot at the end of the second line.

     “நேரிசை இன்னிசைபோல நடந்தடிமூன்றின் வந்தால் நேரிசை இன்னிசை சிந்திய லாகும்” (யா.கா.28);.

     [நேரிசை + சிந்தியல்வெண்பா. சிந்தியல் வெண்பா. = இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று மூன்றடியாய் இருவி கற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் அமையும் வெண்பா வகை.]

எ.டு.

     “நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு

கற்றும்வண் டார்ப்பப்புடைத்தாளே பொற்றேரான்

மாலைநல் வாயில் மகள்” (யா.கா.28.மேற்);

     “அறிந்தானை ஏத்தி யறிவாங் கறிந்து

சிறந்தார்க்குச் செல்வ னுரைப்ப-சிறந்தார்

சிறந்தமை யாராய்ந்து கொண்டு.” (யா.கா.28.மேற்.);

நேரிசையாசிரியப்பா

நேரிசையாசிரியப்பா nērisaiyāsiriyappā, பெ. (n.)

   ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரியப்பா வகைகளில் ஒன்று; a kind of aşīriya-p-pā in which the penultimate line has three feet.

     “ஈற்றதன் அயலடி ஒருசீர் குறைய நிற்பது நேரிசை ஆசிரியம்மே.” (அவிநயம்);.

     [நேரிசை + ஆசிரியப்பா. ஆசிரியப்பா;

நான்குபாவகைகளில் ஒன்று. நான்கு பாவகைகள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா]

எ.டு:

     “நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரற்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கு நாடனொடு நட்பே” (குறுந்.3);

     “வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்

மனையுறை மகளிர்க் காடவர் உயிரென

நமக்குரைத் தோருந் தாமே

அழாஅல் தோழி அழுங்குவர் செல்வே” (குறுந்:135);

     “நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்

என்றும் என்றோள் பிரிபறி யலரே

தாமரைத் தண்டா துதி மீமிசைச்

சாந்தின் தொடுத்த திந்தேன் போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை

நீரின் றமையா வுலகம் போலத்

தம்மின் றமையா நந்நயந் தருளி

நறுநுதல் பசத்த லஞ்சிச்

சிறுமை உறுபவோ செய்யறி யலரே” (நற்.1);

நேரிசையொத்தாழிசைக்கலிப்பா

நேரிசையொத்தாழிசைக்கலிப்பா nērisaiyottāḻisaikkalippā, பெ. (n.)

   தரவொன்றும் தாழிசை மூன்றும் தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்றுவருங் கலிப்பா; a kind of Kasppä, having one taravu, three tā sišai, one detached foot and Šursdagam.

     “தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொற் சுரிதகமாய் நிரலொன்றி னேரிசை யொத்தாழிசைக்கலி” (யா.கா.38);.

     [நேரிசை + ஒத்தாழிசை + கலிப்பா.]

   ஒத்தாழிசைக்கலிப்பா மூன்று வகைப்படும். அவையாவன: நேரிசையொத்தாழிசைக்கலிப்பா, அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிப்பா. வண்ணக ஒத்தாழிசைக்கலிப்பா, நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா, தரவு, தாழிசை தனிச்சொல், கரிதகம் என்ற நான்கு உறுப்போடும்;அம்போதாங்கயொத் தாழிசைக் கலிப்பா, தரவு, தாழிசை. அம்போதரங்கம். தனிச்சொல், கரிதகம் என்ற ஐந்து உறுப்போடும்: வண்ணகவொத் தாழிசைக்கலிப்பா தரவு தாழிசை, வண்ணகம் (அராகம்);, அம்போதாங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்போடும் வரும்.

முன் ஒரு தரவு வந்து, அதன் பின்பு மூன்று தாழிசைவந்து, அதன் பின் ஒரு தனிச்சொல் வந்து, அதன்பின் ஆசிரியத்தானாவது, வெண்பாவானாவது ஒரு சுரிதக உறுப்புப் பெற்று வருவது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா. யா.கா.38).

   தரவு எனினும், எருத்தம் எனினும் ஒக்கும்: தாழிசை எனினும், இடைநிலைப்பாட்டு எனினும் ஒக்கும்;தனிச்சொல் எனினும், விட்டிசை எனினும், கூன் எனினும், தனிநிலை எனினும் ஒக்கும் சுரிதகம் எனினும், அடக்கியல் எனினும், வாரம் எனினும், வைப்பு எனினும் , போக்கியல் எனினும் ஒக்கும்.

ஆசிரியச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை யொத்தாழிசைக் கலிப்பாவிற்கு எடுத்துக்காட்டு

     “வானெடுங்கண் பனிகடர. வண்ணம்வே

ருய்த்திரிந்து

தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்

பூனொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ, இது தரவு.

சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய வென்பவாற்

பீருடைய நலந்தொலையப் பிரிவாரரோ பெரியவரே,

சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால்

நாணுடைய நலந்தொலைய நடப்பாரோ நலமிலரே

சிலம்படைந்த வெங்கானஞ் சீரிலவே யென்பவாற்

புலம்படைந்து நலந்தொலையப் போவாரோ பொருளிலரே.

இவை மூன்றுந் தாழிசை, எனவாங்கு.

இது தனிச்சொல்.

அருளெனு மிலராய்ப் பொருள் வயிற் பிரிவோர்பன்னெடுங் காலமும் வாழியர் பொன்னெடுந் தேரொடு தானையிற் பொலிந்தே”

இது சுரிதகம்.

இது தரவு மூன்றடியாய்த் தாழிசை மூன்றும் இரண்டிரண்டடியாய்த், தனிச்சொற்பெற்று, மூன்றடி ஆசிரியச் சுரிதகத்தாலிற்ற நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா.

இதனை மயேச்கரர்.

     “தரவொன் றாகித் தாழிசை மூன்றாய்த்

தனிச்சொற் கிடந்து கரிதகந் தழுவ

வைத்த மரபின தொத்தா ழிசைக்கலி” எனவும், காக்கைபாடினியார்

     “தரவு தாழிசை தனிச்சொற் கரிதகம் எனுநான் குறுப்பின தொத்தா ழிசைக்கலி” எனவும் கூறுகின்றார். (யா.கா.38 உரை); எடுத்துக்காட்டு (2);

     “எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல்

உறித்தாழ்ந்த காகமு முரைசான்ற முக்கோலும்

நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக்

குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை என்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனுந்

தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய

ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும

காணே மல்லேங் கண்டனங் கடத்திடை

யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய

   மாணிழை மடவர றாயிர்நீர் போறிர்;பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

   மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யும் நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை

நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்

தேருங்கால் நும்மகள் நுமக்குமாங்

   கணையளே;ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை

   யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;எனவாங்கு,

இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடிஇச் சென்றனள் அறந்தலை பிரியா வாறுமற் றதுவே”(கலித்.9);

இது தரவு பதினோறடியாய் தாழிசை மூன்றும் மூன்றடியாய், தனிச்சொல் பெற்று ஆசிரியச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை ஒத்தாழிசைக்கலிப்பா.

வெள்ளைச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவிற்கு எடுத்துக்காட்டு.

     “முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனே

எத்திசையும் பல்லுயிர்க ளின்புற வினிதிருந்து

பத்துறு திசையனைத்தும் பகைபசி பிணிநீங்க

உத்தமர்க டொழுதேத்த வொளிர்வரைபோற்

செலவினாய்

இது தரவு.

எள்ளனைத்து மிடரின்றி யெழின்மாண்ட பொன்னெயில் உள்ளிருந்த வுன்னையே வுறுதுணையென் றடைந்தோரை வெள்ளில்சேர் வியன்காட்டு ளுறைகென்றல் விழுமிதோ. குணங்களின் வரம்பிகந்து கூடிய பன்னிரண்டு

கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரைப் பிணம்பிறங்கு பெருங்காட்டு ளுறைகென் றல்பெருமையோ விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய்

மடத்தகைய மயிலனையார் வணங்கநின் னடைந்தோரைத்

தடத்தகைய காடுறைக வென்பதுநின் றகுதியோ.

இவை மூன்றுந் தாழிசை,

எனவாங்கு

எனைத் துணையை யாயினு மாகமற் றுன்கட் டினைத்துணையுந் தீயவை யின்மையிற் சேர்தும் வினைத்தொகையை விட்டுக வென்று.”

இது கரிதகம்.

இது தரவு நான்கடியாய், தாழிசை மூன்றும் மும்மூன்றடியாய், தனிச்சொல் பெற்று மூன்றடி வெள்ளைச் சுரிதகத்தால் அமைந்த நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா. (யா.கா.38 உரை);

நேரிடு-தல்

நேரிடு-தல் nēriḍudal,    20 செ.கு.வி (v.i.)

   1. பொருந்துதல்; to be fit or appropriate.

   2. எதிர்ப்படுதல்; to appear, come to view.

     “நீண்ட மதகரிமு ன் னேரிட்டு” (கொண்டல்விடு.374);.

   3. கைகூடுதல் (வின்.);; to succeed, prove successful, come to hand.

     [நேர் → நேரிடு-தல்.]

நேரிடை

 நேரிடை nēriḍai, பெ. (n.)

நேரடி பார்க்க;see nēraɖi.

நேரிய

 நேரிய nēriya, பெ. எ (adj.)

   சீரிய; சிறந்த; excellent of high order or quality.

நேரிய ஆராய்ச்சி.

     [நேர் → நேரியது.]

நேரியது

நேரியது1 nēriyadu, பெ. (n.)

   ஒருவகை நல்லாடை (நாஞ்.);; a kind of fine cloth.

     [நேரியல் → நேரியது.]

 நேரியது2 nēriyadu, பெ. (n.)

   நேரானது; anything straight, true, exact.

நெல்லுக்கு நேரியது புல் (உ.வ.);

     [நேர் → நேரியது.]

நேரியன்

நேரியன்1 nēriyaṉ, பெ. (n.)

   நேரி வெற்புக்குரிய (நேரி குன்றுக்குரிய); சோழமன்னம் (திவா.);; the Chölä king, as lord of the Néri hill.

     [நேரி → நேரியன்.]

 நேரியன்2 nēriyaṉ, பெ. (n.)

   1. நுண்ணறி வுள்ளவன் (வின்.);; a man of subtle intellect.

   2. அணுவுக்கு அணுவாயிருப்பவன்; the most subtle Being.

     “நேரியனுமாய்ப் பரியனுமாய்” (சி.சி.8:28);.

     [நேர்1 → நேரியன்]

நேரியர்

நேரியர் nēriyar, பெ. (n.)

   1. வாக்காளர்; voter.

   2. நேர்மையானவர்; honesty person.

   3. நேரியன் பார்க்க;see nēriyaŋ.

     [நேரி → நேரியர்.]

நேரியல்

நேரியல்1 nēriyal, பெ. (n.)

   ஒருவகை நேர்த்தியான மேலாடை (நெல்லை);; a kind of fine cloth worn over the shoulders.

ம. நேரியல்.

     [நேர் → நேரியல் = தோளில் போட்டுக் கொள்ளும் துணி ஆடை.]

 நேரியல்2 nēriyal, பெ. (n.)

   மிளகு; black papper, Pipernigrum. (சா.அக.);.

நேரிறை

நேரிறை1 nēriṟai, பெ. (n.)

நேர்விடை,1 பார்க்க;see nér-vidai1.

     [நேர் + இறை. இறை = விடை.]

 நேரிறை2 nēriṟai, பெ. (n.)

நேரியன்1 (திவா.); பார்க்க;see nériyan.

     [நேரி + இறை. நேரி = மலை. இறை = அரசன். நேரிமலை அரசன், சோழன்.]

நேரில்

நேரில் nēril, வி.எ (adv.)

   1. மற்றொருவரின் மூலமாகவோ கடிதத்தின் மூலமாகவோ இல்லாமல் குறிப்பிட்டவரிடம் அல்லது குறிப்பிட்ட இடத்தில் தானே; in person.

தலைவரை நேரில் பார்த்துத் தன் குறைகளைக் கூறினான். இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர்அலுவலகத்துக்கு நேரில் வரவும்

   2. பார்த்தல், கேட்டல், குறித்து வருகையில் தன் கண்களால் அல்லது காதால்;   தானே சான்றாக; with one’s own eyes or ears; personally.

அண்ணாவை நான் நேரில் பார்க்கவில்லை. அவர் நடித்ததை நான் நேரில் பார்த்தேன்.

     [நேர் → நேரில்.]

நேரிளமிகுதி

 நேரிளமிகுதி nēriḷamigudi, பெ. (n.)

   வெறுமை (சூனியம்);; non entity, nothingness. (சா.அக.);.

     [நேர் + இள + மிகுதி. இளநீர்க்கு முன்பு குறும்பை எனக்கூறுதல்போல் நேரிளமைக்கு முந்தைய மிக்குநிலை வெறுமையாகிறது.]

நேரிழை

நேரிழை nēriḻai, பெ. (n.)

   1. அழகிய, நேர்த்தியான அணிகலன் அணிந்த பெண்; lady, as adorned with fine jewels.

     “நேரிழையாய் நேரிழையீர்” (திருவாச.7:2.);

     “யாரா குவர்கொ றாமே நேரிழை” (புறநா. 337:20);.

     “தேர்தர வந்த நேரிழை மகளிர்” (அகநா.336:11);.

     “நெடிய நீடினம் நேரிழை மறந்தே” (ஐங்குறு. 484:4);.

     “வாராய் பாண நகுகம் நேரிழை” (நற்.3701);.

     [நேர்1 + இழை. பொருத்தமான அணிகலன் அணிந்த பெண்.]

நேரிவெற்பன்

நேரிவெற்பன் nēriveṟpaṉ, பெ. (n.)

நேரியன்1 (திவா.); பார்க்க;see nēriyag”

     [நேரி + வெற்பன், நேரிமலைக்குரியவன்.]

நேரீனம்

 நேரீனம் nērīṉam, பெ. (n.)

   உண்மை தவறுகை (யாழ்ப்);; dis-honesty, unfairness; unfaithfulness.

     [நேர் + ஈனம். நேர்மையில் இருந்து மாறுபடுதல்;

நேர்மையில் குறைபடுதல், நம்பிக்கையின்மை.]

நேருக்குச்சீர்

 நேருக்குச்சீர் nērukkuccīr, பெ. (n.)

நேர்சீர் (யாழ்.அக.); பார்க்க;see mer-i:

நேருக்குநேராக

நேருக்குநேராக nērukkunērāka, வி.எ. (adv.)

நேராக1, பார்க்க;see néraga1.

நேருக்குநேராய்நில்-தல் (நேருக்கு நேராய் நிற்றல்)

நேருக்குநேராய்நில்-தல் (நேருக்கு நேராய் நிற்றல்) nērukkunērāyniltalnērukkunērāyniṟṟal,    14 செ.கு.வி. (v.i.)

   1. சரிநேராதல்; to be exactly straight or direct.

என்னுடன் உன்னால் நேருக்கு நேராய் நிற்க முடியுமா?

   2. நேரெதிராயி ருத்தல்; to be exactly opposite.

   3. பிறனொருவன் தன்னிடம் நடந்து கொள்வதுபோலத் தானும் நடந்து கொள்ளுதல்; to behave or conduct oneself towards a person exactly in conformity with his behavior.

     [நேர் → நேருக்கு + நேராய் + நில்-தல்.]

நேருக்குநேர்

 நேருக்குநேர் nērukkunēr, வி.எ. (adv.)

   நேராகச் சந்தித்து, நேரில் போய்ப் பார்த்து; personally, face to face.

என்னை நேருக்கு நேர்பார்த்துப் பேசு. பல மாணவர்களுடன் நேருக்கு நேர் பேசியே இந்த முடிவுக்கு வந்தேன்

     [நேர் → நேருக்கு + நேர்.]

நேருக்குநேர்வழி

 நேருக்குநேர்வழி nērukkunērvaḻi, பெ. (n.)

   குறுக்குவழி (உ.வ.);; shortcut.

     [நேர் → நேருக்கு + நேர்வழி.]

நேருக்கு நேரானது குறுக்காவது காண்க.

நேருக்குப்போ-தல்

நேருக்குப்போ-தல் nērukkuppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. நேராக முன்செல்லுதல்; to go straight.

   2. சேர்ந்து வரிசையாய்ப் போதல்; to go abreast.

     [நேர் → நேருக்கு + போ-தல்.]

நேருக்குவா-தல் (நேருக்கு வருதல்)

நேருக்குவா-தல் (நேருக்கு வருதல்) nērukkuvādalnērukkuvarudal,    18 செ.கு.வி. (v.i.)

   இணங்கி வருதல்; to come to terms, yield.

     [நேர் → நேருக்கு + வா-தல்.]

நேரே

 நேரே nērē, வி.எ. (adv.)

நேராக பார்க்க;see лёгада

     [நேர் + எ]

நேரேடம்

 நேரேடம் nērēṭam, பெ. (n.)

நேரேடு (பிங்.);;பார்க்க;see nér-édu.

நேரேடு

 நேரேடு nērēṭu, பெ. (n.)

   நாவல் (சூடா.);; jaumoon plum.

தெ. நேரேடு.

நேரொ-த்தல்

நேரொ-த்தல் nērottal,    4.செ.கு.வி. (v.i.)

   1. இணையாயிருத்தல்; to be a match, to be similar.

   2. மாறுபாடின்றி யிருத்தல்; to be unchanging.

     “நிழன்மரம்போ னேரொப்பத் தாங்கி” (நாலடி,202);.

   3. மிகப்பொருந்தியிருத்தல்; to be exactly suited, as a wife to her husband.

     ‘அவனுக்கு நேரொவ்வாதி ருக்கிறேனோ ஒத்திருக்கிறேனோ’ (குருபரம்,31,ஆறா.);.

     [நேர்1 + ஒ-த்தல்.]

நேரொத்தூமம்

 நேரொத்தூமம் nērottūmam, பெ. (n.)

   குருந்தக்கல்; a variety of corundum, Emery. (சா.அக.);.

நேரொன்றாசிரியத்தளை

நேரொன்றாசிரியத்தளை nēroṉṟāciriyattaḷai, பெ. (n.)

ஆசிரிய உரிச்சீர் நின்று தன் வருஞ்சீர் முதலசையொடு நேராய் ஒன்றுவது(யா.கா.10 உரை;);

 metrical connection between any two adjoining Šir where the last syllable of the preceding and the first syllable of the succeeding Šir of nér.

     “உள்ளார் கொல்லோ தோழி, முள்ளுடை

அலங்குகுலை ஈந்தின் சிலம்பிபொதி செங்காய்

துகில் பொதி பவளம் ஏய்க்கும்

அகில்படு கள்ளியங் காடிறந் தோரே” (யா.கா.11. மேற்.);.

     [நேர் + ஒன்று + ஆசிரியத்தளை]

ஆசிரியப்பாவில் ஒரு சின் ஈற்றுச்சி நேர்’ என்ற அசையில் நிற்க, வருஞ் சீரின் முதற்சீர் நேர் அசையாகவே இருந்தால் அது நேரொன்று ஆசிரியத் தளை என்று வழங்கப்படும்.

நேரோடம்

 நேரோடம் nērōṭam, பெ. (n.)

நேரேடு (மலை.);

பார்க்க;see nērēgu.

     [நேர் + (ஏடு→); ஒடு + அம்]

நேரோடல்

 நேரோடல் nērōṭal, பெ. (n.)

   குதிரையின் நேரோட்டம் (திவா.);; straight forward trotting of a horse.

     [நேர் + ஒடல்.]

நேர்

நேர்1 nērtal,    2.செ. கு. வி. (v.i.)

   1. பொருந்துதல்; to be fit or appropriate.

     “நேரத் தோன்று மெழுத்தின் சாரியை” (தொல். எழுத்து. 134);.

   2. நிரம்புதல்; to be complete.

     “நேரத் தோன்றும் பலரறி சொல்லே” (தொல். சொல். 7);.

   3. இவ்வாறு செய்யவேண்டும் என்ற நோக்கமில்லாமல் நிகழ்தல்; to happen, occur, transpire.

இது காலத்தால் நேர்ந்தது. கோவில் திருவிழாவில் கலவரம் ஏற்படாமல் இருக்க வலுத்தகாவல் போடப்பட்டுள்ளது. அழைப்பிதழ் அச்சிடுவதில் ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது.

   4. எதிர்ப்படுதல்; to appear, come to view.

     “பொழிலோவொன்று நேர்ந்ததுவே” (வெங்கைக்கோ. 321);.

   5. இளைத்துப்போதல்; to grow thin, lean, to be emaciated.

உடம்பு நேர்ந்துபோய் விட்டது.

   6. மென்மையாதல்; to be soft;

 to yield to the touch.

     “ஐந்து நேர்ந்தே” (காசிக. சிவ. அக். 18);.

குட. நேர் (to come to view.);.

     [நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நேர் → நேர்-தல்]

 நேர்2 nērtal,    2.செ. குன்றாவி, (v.t.)

   1. எதிர்தல்; to meet.

     “வேந்தன்றனை நேர்ந்து காண்பானா’ (இரகு. தசரதன். 21);.

   2. நெருங்குதல்; to approach, come near to.

     “வெங்கரி…. வீரவாகுத் தலைவனை நேர்ந்து சொல்லும்” (கந்தபு. தருமகோப. 71);.

   3. தீண்டுதல்; to seize, take hold of.

     “குழலித்திங்கட் கோணேர்ந்தாங்கு” (பெரும்பாண். 384);.

   4. பெறுதல்; to obtain.

     “நிலையிலா நீர்மை யாக்க நேர்ந்துழி” (சேதுபு.திருநாட்.21);.

   5. கொடுத்தல்; to grant, bestow.

     “கரவாளை நேர்ந்தானிடம் போலும்” (தேவா. 111, 8);.

   6. உடன்படுதல்; to agree, consent.

     “அழும்பில் வேளுரைப்ப நிறையருந்தானை வேந்தனு நேர்ந்து” (சிலப். 25:178);.

     “நெருப்பிலா விடத்துப்புகையிலை யெனனேர” (மணிமே29:102);

     “மகிழ்வுனாங்கவை நேரா” (கூர்ம.அரியய.8);

   7. ஒத்தல்; to resemble, equal.

     “கைவலிளையர் நேர்கை நிரப்ப” (பதிற்றுப் 48:8);.

     “நெல்லினேரே வெண்கலுப்பென” (அகநா 140:7);.

     “கனியைநேர் துவர்வாயா ரென்னுங் காலாற் கலக்குண்டு” (திருவாச. 5: 27);.

   8. உறுதிசெய்தல்; to resolve, vow, take vow.

     “நற்றார்கலவே மென நேர்ந்தும்” (பு. வெ. 12. பெண்பாற். 7);.

   9. அமர்த்துதல் (நியமித்தல்); (வின்);; to appoint, designate, appropriate, assign.

   10. தண்டனைக்குட்படுத்துதல் (வின்.);; to consign, doom.

   11. வேண்டுதல் (அக.நி.);; to entreat, pray.

   12. சொல்லுதல்; to say, to speak.

     “சீர்ச்சடகோபன் நேர்தலாயிரத்து” (திவ். திருவாய். 1.8:11);.

   13. கடவுளிடம் வேண்டுதலுக்காக (பிரார்த்தனைக்காக); வைத்தல்;   பொருத்தனை பண்ணுதல்; to appropriate, as an offering to God;

 to consecrate, dedicate.

     “தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்” (திவ். நாய்ச். 9:6);.

     “செவிமறை நேர்மின்னு நுண்பொறி வெள்ளை” (கலித்.101:27);. பழனிக்குத் காவடி எடுக்க நேர்ந்து கொண்டான் (உ. வ.);.

   14. எதிர்த்தல்; to oppose, resist, encounter, attack.

     “அமர்கோள் நேரிகந்து ஆர்எயில் கடக்கும் பெரும்பல் யானைக்குட்டுவன்” (பதிற்றுப். 29:13, 14);.

     “தானையை நேர்ந்து கொன்று’ (கம்பரா. மூலபல. 57);.

   15. அறுத்தல்; to cut off. sever.

     “ஓராதான் பொன்முடி யொன்பதோ டொன்றையும் நேரா” (திவ். பெரியாழ். 3.9:10);.

   க. நேர்;   ம. நேருக;   கோத. நெர் (opposite);. நேர் (to come to view);;   து. நெரியுநி, நெரெவுநி (to assemble);;தெ. நேர்சு (to learn);.

     [நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நேர் → நேர்-தல்]

 நேர்3 nērttal,    4.செ. குன்றாவி. (v.t.)

   1. ஒத்தல்; to resemble, equal.

     “திண்ணறி வாளரை நேர்ப்பார் யார்” (நாலடி, 27);.

     “கைவலிளையர் நேர்கை நிரப்ப” (பதிற்றுப். 48.8);.

     “நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த” (சிலப். 7:8);.

     “பொன்னே ரனையாய் புகுந்தது கேளாய்” (மணிமே. 2:16);

   2. எதிர்த்தல்; to oppose, attack.

     “நேர்த் தின்னா மற்றவர் செய்தக்கால்” (நாலடி. 67);.

     [நேர்2 → நேர்3-. இது பிறவினை வடிவம்.]

 நேர்4 nēr, பெ. (n.)

   செய்ய, செய்யும்படி ஆகிய வடிவங்களின்பின் ஒருசெயல் நிகழ்ந்தது தற்செயலாக அல்லது சூழ்நிலையின் கரணியமாக என்பதை உணர்த்தும் துணை வினை; after the infinitive or future relative participle (padi); used to express the sense of ‘happen to’ ‘be forced to’.

அஞ்சல் வந்ததால் உடனே புறப்பட்டு வரநேர்ந்தது. வழியில் அவரைப் பார்க்கும்படி நேர்ந்தது.

     [நேர்1 → நேர்4]

 நேர்5 nēr, பெ. (n.)

   1. வளைவு அல்லது விலகல் எதுவும் இல்லாதது, செவ்வை; straightness, directness.

   நேர்வகிடு;நேராக நில். நேரா நோன்பு சீர் ஆகாது (பழ.);.

     “முழங்குகட றந்த விளங்குகதிர் முத்தம் அரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை” (மதுரைக். 315,316);.

     “நேர்சீர் சுருக்கிக்காய கலப்பையிர்” (மலைபடு. 13);.

     “ஒண்ணுதல் மகளிர் ஒங்கு கழிக்குற்ற கண்நேர் ஒப்பின்

கமழ்நறு நெய்தல்” (நற். 283);.

   2. அறம் (நீதி);:

 rightness, justness, impartiality.

அவன் நேர்பட நடவாதவன். நேர்படஒழுகு (பழ.);.

     “புரையில் நுண்னேர் எல்வளை நெகிழ்த் தோன்குன்றத்து” (நற்.236);.

   3. நல்லொழுக்கம்; morality, virtue, honesty.

   4. திருந்திய தன்மை; refinement, nicety.

     “நேரிழையாய்” (திருவாச. 7:2);.

   5. மாறுபாடு (யாப். வி. 57:222);

 opposition.

   6. உடன்பாடு (திவா.);; agreement, consent, settlement.

   7. நேர்விடை பார்க்க;see nér-vigal.

     “சுட்டு மறைநேர்” (நன். 386);.

   8. நிலைப்பாடு (யாப். வி. 58, உரை);; firmness,

   9. முன்; front

   10. உயிர் அல்லது உயிர் மெய் தனித்த நேரசை (தொல். பொருள். 315);; a metrical syllable consisting of a short or long letter, singly or followed by a consonant.

     “குறிலே நெடிலே குறிவினை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசின் பெயரே” (தொல். பொருள். செய், 3);.

     “குறிலே நெடிலே குறவினை குறிலினையேனைக் குறினெடிலே நெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரை யென்றறிவே” (யா. கா. 5);

   ம. நேர்;   க. நேர்;   குட. நேரீ (truth fact);;து. நேரே.

     [நேர்1 → நேர்6]

 நேர்6 nēr, பெ. (n.)

   1. நீளம்(சூடா.);; length, extension.

   2. பொருந்திய வரிசை (வின்.);; row series, regularity.

   3. பாதி (திவா.);; half, moiety.

   4. நுண்மை; minuteness, smallness, fineness, slenderness,

     “துடிகொ ணேரிடையாள்” (திருவாச. 29:5);.

   5. செலவு (கதி); (வின்);; tendency, course, direction.

   6. ஊர்த்துவநிலை; verticality.

     “நேரவிரும் புண்டரர்க் கருள்வான்’ (அஷ்டப்.

திருவேங்கடத்தந், 6).

   7. தனிமை (திவா.);; solitariness, solitude.

   8. நிகர்; equal.

பாவேந்தர் தமிழை உயிருக்கு நேர் என்று கூறினார்.

     “நெல்லி னேரே வெண்கலுப்பென” (அகநா. 140:7);.

     ”நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதி” (நாலடி, 72.);

     “கொலையிற் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” (குறள், 550);.

   9. நேரடி; direct.

இஃது என் நேர் விருப்பம்.

   ம, க. நேர்;   தெ. நேரு;து. நேரெ.

     [நேர்1 → நேர்6]

 நேர்7 nēr, பெ. (n.)

   1. கொடை (சூடா.);; gift.

   2. மிகுதி (திவா.);; excess, excessiveness.

   3. வலிமை; strength.

     “நேர் மரப்பலகையும்” (சீவக. 2218);.

   4. உவமை; comparison, similarity.

     “தன்னே ரில்லோன்” (திருவாச. 3:30);.

     “தன்னேரில்லாத சிவன்றனை” (சிவரகநந்திகேசுரநமனுக்கு.14);.

   5. மென்மை; soft.

     “பிணங்கு நேர் ஐம்பாலோர் பெண்கொண்டதுவே” (சிலப். 7:13);.

     “நேரிமலர் நிறைகனை உறையுஞ்” (அகநா. 198:16);.

     [நேர்1 → நேர்2]

 நேர்6 nēr, பெ. (n.)

   திருச்சுற்று; manner.

     “இந்நேரிலே தந்தம் பிள்ளைகள் தாய்மார் பக்கலிலே அழுது சென்றால் தரிப்பார்களோ” (திவ். பெரியாழ். 2.2.3 வியா. பக். 253);

     [நேர்1 → நேர்6]

நேர்கடன்

நேர்கடன்1 nērkaḍaṉ, பெ. (n.)

நேர்த்திக் கடன் (யாழ். அக.); பார்க்க;see nerti-kkadan.

     [நேர் + கடன் – நேர்கடன் = இறை வனுக்கு நேர்ந்து கொள்ளும் வேண்டு தலை வினைத்தொகை வடிவம்]

 நேர்கடன்2 nērkaḍaṉ, பெ. (n.)

   நேரில் வட்டிகேட்டு வாங்கும் கடன்; a kind of debt.

     [நேர் + கடன்.]

சிலர்சிறுவட்டிக்குவாங்கிப் பெருவட்டிக்குக் கொடுப்பர். ஆதலால் அவ்வாறான சுற்றுக்கடன் அன்றி வட்டி குறைத்து வாங்கும் நேர்கடனை இது குறிக்கும். வேற்றுமைத் தொகை வடிவம்.

நேர்கட்டி

நேர்கட்டி nērkaṭṭi, பெ. (n.)

   ஒருவகை மணப்பொருள்; a kind of frankincense.

     ‘நேர்கட்டி செந்தே னிரியாசங் கற்பூரம், ஆர மகிலுறுப்போ ராறு’ (சீவக. 534. உரை);.

     [நேர்1 + கட்டி. கட்டி = இறுகிய மணப் பொருள்]

நேர்கட்டு-தல்

நேர்கட்டு-தல் nērkaṭṭudal,    5.செ. குன்றாவி. (v.t.)

   சரிகட்டுதல் (யாழ். அக.);; to settle amicably.

எடைகுறைந்ததற்கு வேறு பொருள்களைப் போட்டு நேர்கட்டினான்.

     [நேர் + கட்டு-தல்.]

நேர்கட்டை

 நேர்கட்டை nērkaṭṭai, பெ. (n.)

   நெட்டி; solah pith. (சா.அக.);.

நேர்காட்சி

 நேர்காட்சி nērkāṭci, பெ. (n.)

   ஒரு நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர் அல்லது நன்கு அறிந்தவர்; eye witness.

அந்தக் கொலையை நேரில் பார்த்தவர் என்பதால் இவரை முதல் நேர்காட்சியாக அழைத்தனர். (இ.வ.);.

     [நேர்+காட்சி]

நேர்காட்டு

நேர்காட்டு1 nērkāṭṭudal,    5.செ. குன்றாவி (v.t.)

   1. எதிர்த்தல்; to face, look forward.

   2. ஒரு திசையை நோக்கிச் செலுத்துதல்; to aim at, direct towards.

   3. வரிசையாக வைத்தல்; to put or lay down in a straight or direct posture.

   4. முன் காட்டுதல்; to expose, as to beasts of prey.

   5. நீர்க்கால் மாற்றுதல்; to lead the water in a channel for irrigation.

   6. ஏர் நடத்துதல்; to lead a team at ploughing.

     [நேர் + காட்டு-தல்.நேர் = வரிசை]

முகத்துக்கு எதிர்முகமாகப் பேசுவது எதிர்த்தலாகவும், ஒருதிசையில் வரிசையாகப் போவது ஏற்றலாகவும் அமைதல் காண்க.

 நேர்காட்டு2 nērkāṭṭudal,    5.செ. குன்றாவி. (v.t.)

   1. கொல்லுதல்; to kill, murder.

   2. மரம் முதலியவற்றைச் சரியாகப் பிளத்தற்கு வெட்டிக்காட்டுதல்; to make the first gash or cleft down a tree for splitting.

   3. இறக்குந் தறுவாயில் இருத்தல்; to lay out a person about to breathe his last.

   4. விழுங்குதல்; to swallow.

     [நேர் + காட்டு-தல்]

கொலைக்காகக் குத்துவாளைப் பகைவன் உடம்பில் செலுத்தும்போது மேல் நோக்கியோ கீழ்நோக்கியோ நேரே இழுத்தல் அறிக.

 நேர்காட்டு3 nērkāṭṭudal,    5.செ. கு. வி. (v.i.)

   நீட்டிநிமிர்ந்து படுத்தல் (வின்.);; to stretch oneself at length in lying down to sleep.

     [நேர் + காட்டு-தல்.]

நேர்காணல்

நேர்காணல் nērkāṇal, பெ. (n.)

   நேர்முகத்தேர்வு; interview.

     [நேர்1 + காணல்]

அஞ்சலில் வந்தவிண்ணப்பம் கண்டு ஆளைக்குறித்த நாளில் வருவித்து சான்றிதழ்களும் சொற்கள் ஊன்றிதழ் களும் கொண்டு மனத்திறம் காணும் தேர்வு.

நேர்காற்று

 நேர்காற்று nērkāṟṟu, பெ. (n.)

   பயனுள்ள (உதவியான); காற்று (வின்.);; favourable wind.

     [நேர் + காற்று]

நேர்கூட்டல்

 நேர்கூட்டல் nērāṭṭal, பெ. (n.)

   சமன் சேர்க்கை; adding equal quantity. (சா.அக.);

     [நேர் + கூட்டல், கூட்டல் = கூடுகை, இணைகை.]

நேர்க்கூட்டல் என ஒற்று மிகுந்தும், மிகாமலும் உறழ்ச்சி (விகற்பம்); ஆகவரும்.

நேர்கூறு

 நேர்கூறு nērāṟu, பெ. (n.)

   சரிபாகம்(வின்.);; equal shares.

     [நேர் + கூறு கூறு = பங்கு.]

நேர்கூற்று

 நேர்கூற்று nērāṟṟu, பெ. (n.)

   ஒருவர் கூறிய சரி நேர்வான சொற்கள்; direct speach.

மறுவ தற்கூற்று

     [நேர்+கூற்று கூறு→ கூற்று]

நேர்கொடுநேரே

நேர்கொடுநேரே nērkoḍunērē, கு. வி. எ. (adv.),

   வெளிப்படையாக; directly, openly.

     “அதுதான் நேர் கொடு நேரே கிடையாமையாலே நேர்கொடு நேரே சொல்லவும் மாட்டாரே” (ஈடு, 1.7:3);

     [நேர் + கொ(ண்);டுநேரே]

நேர்கொண்டகாத்து

 நேர்கொண்டகாத்து nērkoṇṭakāttu, பெ. (n.)

   நேர்கிழக்குத் திசையிலிருந்து மேற்குத்திசை நோக்கி வீசுங்காற்று (மீனவ.);; a kind of wind blowing east to west.

     [நேர் + கொண்டல் + காத்து. கொண்டல் = கிழக்கு. காற்று → காத்து]

குணக்கு என்னும் கிழக்குத்திசையில் இருந்து வீசும் காற்று கொண்டல் எனப்படும். ஒ.நோ.தென்திசைக்காற்று தென்றல்.

நேர்கோடு

 நேர்கோடு nērāṭu, பெ. (n.)

   வளையாத கோடு; straight line.

     [நேர் + கோடு,கோடு = வரி(line);]

நேர்கோடைக்காத்து

 நேர்கோடைக்காத்து nērāṭaikkāttu, பெ. (n.)

   நேர்மேற்குத் திசையிலிருந்து கிழக்குத் திசை நோக்கி வீசுங்காற்று (மீனவ.);; a kind of wind blowing west to east.

     [நேர் + கோடை + காத்து. காற்று → காத்து]

குடகு திசை என்னும் மேற்குத் திசையிலிருந்து வீகம் காற்று கோடைக் காற்று எனப்படும். ஒ.நோ. வடக்குத் திசையிலிருந்துவீசும் காற்று வாடைக் காற்று என்று அழைக்கப்படும்.

நேர்கோணக்கருவி

 நேர்கோணக்கருவி nērāṇakkaruvi, பெ. (n.)

   மூலை மட்டப்பலகை (பாண்டி.);; mason’s rule.

     [நேர் + கோணம் + கருவி]

     [P]

நேர்கோணம்

 நேர்கோணம் nērāṇam, பெ. (n.)

   ஒன்றுக்கொன்று செங்குத்தான கோடுகளின் இடையேயுள்ள கோணம் (பாண்டி.);; right angle.

     [நேர் + கோணம், கோணம் = மூலை]

நேர்க்கச்சாங்காத்து

நேர்க்கச்சாங்காத்து nērkkaccāṅgāttu, பெ. (n.)

   நேர் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி வீகம் கடற்காற்று (மீனவ);; a kind of wind blowing south to north. (க. ப. அ.);

     [நேர்1 + கச்சான் + காத்து, காற்று → காத்து;

கச்சான் = கடற்கரை.]

நேர்சீர்

நேர்சீர் nērcīr, பெ. (n.)

   1. ஒழுங்கு (யாழ்ப்.);; due order, proper condition, propriety.

   2. மனவொற்றுமை (யாழ்ப்.);; amitableness.

   3. தகுதிக்கேற்ப நடக்கை; adaptability.

நேர்சீராகப் போக வேண்டும்.

     [நேர் + சீர். சீர் = அழகு, நன்மை, தலைமை, புகழ், மதிப்பு, இயல்பு. நேர்மை, ஒழுங்கு.]

நேர்சொல்(லு)-தல்

நேர்சொல்(லு)-தல் nērcolludal,    13 செ.கு.வி. (v.i.)

   ஆணை (சத்தியம்); கூறுதல்; to promise.

     [நேர் + சொல்லு-தல்.]

நேர்சோழகம்

 நேர்சோழகம் nērcōḻkam, பெ. (n.)

   நேராக வீசுநதென்றற்காற்று (வின்.);; wind direct from the South.

     [நேர் + சோழகம்.சோழகம் = தென்றிசையில் இருந்து வீசுங்காற்று.]

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களாகிய சோழநாட்டிலிருந்து தொண்டை நாட்டுக்கு வீசும் காற்று தெற்குக் காற்றென்னும் தென்றல்.

திசை கூறாமல் நாடு கூறும் வழக்கும் உண்டு. ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதேகுறி-மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே. (முக்கூடற்.);

நேர்ச்சி

நேர்ச்சி1 nērcci, பெ. (n.)

   1. போக்கு (வின்.);; tendency, direction.

   2. தகுதி (வின்.);; adaptation, fitness, appropriateness.

   3. உடன்பாடு (சம்மதம்); (வின்.);; consent, agreement, harmony.

   4, கடவுளுக்கு வேண்டிக்கொள்கை (பிரதிக்கினை); (வின்.);; vow,

   5. நட்பு; friendliness, amity, love.

     “கொடை பகை நேர்ச்சி” (நன்.298);,

   6. சிறப்பு; excellence, elegance.

   7. நிகழ்ச்சி; event, function.

     [நேர்2 + ச் + சி. ‘சி’ தொ.பெ.ஈறு.]

 நேர்ச்சி2 nērcci, பெ. (n.)

   கருதிச் செய்யப்படாத செயல்; accident.

 நேர்ச்சி nērcci, பெ. (n.)

   தற்செயல்; accident.

     [நேர்-நேர்ச்சி]

நேர்ச்சிக்கடன்

 நேர்ச்சிக்கடன் nērccikkaḍaṉ, பெ. (n.)

நேர்த்திக்கடன் (வின்.); பார்க்க;see __,

நேர்ச்சிக்கடன் ஒன்று மிச்சமிருக்கிறது: உடனே செய்து விட வேண்டும்.

     [நேர்த்தி → நேர்ச்சி + கடன். ஒ.நோ. பிய்த்து எடுத்தல் → பிச்சுயெடுத்தல்.]

நேர்ச்சிக்கடா

 நேர்ச்சிக்கடா nērccikkaṭā, பெ. (n.)

   வேண்டுதலுக்கென நேர்ந்து விட்ட ஆட்டுக்கடா. (நாஞ்.);; ram; intended as a vow-offering to a deity.

     [நேர்த்தி → நேர்ச்சி + கடா.கடு + ஆ-கடா, கடுத்தல் = விரைவாக ஒடுதல் கடா = விரைவாக ஒடும்கடா.]

     [P]

நேர்ச்சை

 நேர்ச்சை nērccai, பெ. (n.)

நேர்த்திக்கடன் (நாஞ்.); பார்க்க;see nērtti-k-kagan.

கோயிலுக்கு நேர்ச்சை செய்யப் போக வேண்டும்

     [நேர்ச்சி → நேர்ச்சை]

நேர்ஞ்சங்கிலி

நேர்ஞ்சங்கிலி nērñjaṅgili, பெ. (n.)

   கழுத்திலணியும், வேலைப்பாடுடன் கூடிய தொடரி (சங்கிலி); (சிலப். 6:99, உரை);; a necklace of exquisite workmanship.

     [நேர் + சங்கிலி = நேர்ஞ்சங்கிலி, ஒ.நோ. புளி + சோறு = புளிஞ்சோறு.]

நேர்தப்பு-தல்

நேர்தப்பு-தல் nērdappudal,    5 செ.கு.வி. (v.i.)

   நேர்மை தவறுதல்; to deviate from the path of justice or righteousness.

நடுவர் நேர்தப்பிப் பேசியதால் அவன் வாழ்வு அழிந்தது.

     [நேர் + தப்பு – தல் நேர் = நேர்மை, முறைமை]

நேர்தரவு

நேர்தரவு nērtaravu, பெ. (n.)

நேர்த்தரவு பார்க்க;see mer-t-taravu.

     “தம் பொறையாகிற நேர்தரவை” (ஈடு, 1.4:7);.

     [நேர்த்தரவு → நேர்தரவு]

நேர்தவம்

 நேர்தவம் nērtavam, பெ. (n.)

   வாய்க்காற் கடைச்சி; a kind of pith plant found near channels. (சா.அக.);.

     [நேர் + தவம். தவம் = காடு, வயற்காடு, வயற்காடுகளில் (வாய்க்கால்); காணப்படும் செடி.]

வளர்ச்சிக்கு நீண்டநாள் எடுத்துக் கொண்டு, ஒற்றைக்காலால் நிற்றல்போல் தோன்றுவதால் செடி, தவப்பெயர் பெறுகிறது.

நேர்திறம்

 நேர்திறம் nērtiṟam, பெ. (n.)

நோதிறம் (அக.நி.); பார்க்க;see nõdram.

     [நோதிறம் → நேர்திறம்]

நேர்த்தம்

நேர்த்தம் nērttam, பெ. (n.)

   1. நட்பு; friendship.

   2. உடன்பாடு; agreement.

     [நேர் → நேர்த்தம். (வே.க);.]

     [நேர்த்து + அம்.]

நேர்த்தரவு

நேர்த்தரவு nērttaravu, பெ. (n.)

   செய்த குற்றத்தைப் பொறுத்தோம் என்று நேரிற் கூறும் ஆணை; pardon granted by one’s master in person.

     “பொறுத்தோம் மென்று நேர்த்தரவு கொடுத்தபின்பு” (ஈடு, 5. 4:5);.

     “அபராதத்துக்கு நேர்த்தரவு கொடுக்கும் முறுவலிறே” (திவ். திருநெடுந். 18, வியா.142);

     [நேர் + தரவு தரவு = தருகை, ஆணை. தரவு என்னும் சொல் கலிப்பாவின் முதல் உறுப்புக்குப் பெயராக இருந்து இக்கால் முனைவர் ஆய்வேடுகளில் (new arraivals); தரவு என்னும் பொருளில் புதிய வரவுகள் குறிக்கப்படுகின்றன.]

நேர்த்தி

நேர்த்தி nērtti, பெ. (n.)

   1. சிறப்பு; excellence, elegance.

     ‘பாடின கவியின் நேர்த்தி இது’ (ஈடு, 3.9: 4);.

அவர் கதை சொல்லும் நேர்த்தி சிறந்தது.

   2. திருத்தமுள்ளது; that which is correct, equitable or just.

   3. நேர்த்திக்கடன் பார்க்க;see nért-k-kadan.

   4. முயற்சி; effort. labour.

     ‘பெறுகிறபேற்றின் கனத்தையும் இவனுடைய நேர்த்தியில் அல்பதையையும் பார்த்து’ (ஈடு, 3.3:6);.

   5. பொருத்தனை, கடனுக்கு நேர்ந்துகொள்கை; vow.

   6. நேரான நிலை; Straight.

   7. திருந்திய நிலை; correctness, perfectness.

     [நேர் → நேர்த்தி = ஒன்றின் தோற்றத்தில், அமைப்பில், செயலில் வெளிப்படும் சிர் ஒழுங்கு, அழகு முதலியவை வாய்ந்த சிறப்பான தன்மை.]

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன் nērttikkaḍaṉ, பெ. (n.)

   1. கடவுளிடம் நேர்ந்து கொள்ளும் வேண்டுகோள்; vow made to a deity.

நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதாக வேண்டிக் கொண்டார்.

   2. தெய்வத்திடம் வேண்டுகோளுக்காக வைத்த பொருள்; offering in fulfilment of a vow.

கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடனை முடிக்க வேண்டும். [நேர்த்தி + கடன். கடம் → கடன்.]

கடவுளுக்கு வேண்டிக் கொள்வதை நேர்ந்து கொள்ளுதல்” என்று சொல்வார்கள். அந்த வேண்டுகோளை முடிக்கும் வரை அதை ஒரு கடனாகவே நினைப்பார்கள். திடுதிப்பென்று. நோய்வாய் பட்டுச் சாகும் தறுவாயில் கூடத்தன் மக்களிடம்

     “இன்ன கோயிலுக்கு இன்னது செய்வதாக நேர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த நேர்த்திக்கடனைச் செய்து விடுங்கள்” என்று கூறுவார்கள். நேர்த்திக்குமுன் ஒட்டாக, செய்ந்நேர்த்தி என்றுவரும் போது கலைத்திறனையும், சீர்செய்ந் நேர்த்தி (சீர்செனத்தி); என்பது மணமான மகளுக்குத் தந்தைதரும் வேலைப்பாடு மிக்க பொருள்களையும் குறிக்கும்.

நேர்த்திக்குறிப்பு

 நேர்த்திக்குறிப்பு nērttikkuṟippu, பெ. (n.)

   செயல்தவறாமை; unfailing.

     [நேர்த்தி = சிறப்பு, நேருதல். நேர்த்தி + குறிப்பு]

நேர்நஞ்சு

 நேர்நஞ்சு nērnañju, பெ. (n.)

   கன்மத மென்னும் மருந்துச் சரக்கு (சங்.அக.);; rock alum.

நேர்நிர-த்தல்

நேர்நிர-த்தல் nērnirattal,    3 செ.கு.வி. (v.i.)

   சமமாய் நிற்றல்; to stand equal.

     “குன்றொடு நேர்நிரந்து” (பரிபா. 18:5);

     [நேர் + நிர-த்தல், நிரத்தல் = நிரலாக நிற்றல்.]

நேர்நிறை

நேர்நிறை nērniṟai, பெ. (n.)

   1. சமமான சுமை (சரிபாரம்);; equal weight.

   2. அறம், முறைமை; impartiality, justice.

   3. கற்பு; chastity.

     [நேர் + நிறை]

நேர்நிலைவஞ்சி

நேர்நிலைவஞ்சி nērnilaivañji, பெ. (n.)

   சமநிலை வஞ்சி (தொல். பொருள். செய்.41);; a kind of wañji stanza.

மறுவ. சமநிலை வஞ்சி

     [நேர் + நிலைவஞ்சி. இரண்டு சீர்களை உடையதாய், ஒவ்வொரு சீரும் ஆறு எழுத்துகள் கொண்டதாய் வருவது நேர்நிலை வஞ்சி,

     “நேர்நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும்” (தொல்பொருள்.செய்.41);]

எ-டு:

     “மலைப் பொதுத்தநீர் கடறி பம்பவுர்” (பட்டினம்.127);

நேர்நில்-தல் (நேர்நிற்றல்)

நேர்நில்-தல் (நேர்நிற்றல்) nērniltalnērniṟṟal,    14 செகுவி. (v.i.)

   1. எதிர்நிற்றல், முன்னால் நிற்றல்; to stand directly opposite or in front.

     ‘ஆறு கிண்ணக மெடுத்தால் நேர்நின்ற மரங்கள் பறியுண்டுபோய்க் கடலிலே புகும்’ (ஈடு, 1.1.1 அவ.);

   2. ஒழுங்காய் நிற்றல்; to stand in a line.

     [நேர் + நில்-தல், நில்-தல் = நிற்றல்]

 நேர்நில்-தல் (நேர்நிற்றல்) nērniltalnērniṟṟal, பெ. (n.)

நேர்த்தி பார்க்க;see nērtti.

     [நேர்1 → நேர்ப்பு]

நேர்நெட்டி

 நேர்நெட்டி nērneṭṭi, பெ. (n.)

   பூடுவகை (சங்.அக.);; a plant.

     [நேர் + நெட்டி. நேராக வளரும் பூடுவகை]

நேர்ந்தபடி

நேர்ந்தபடி nērndabaḍi, கு.வி.எ. (adv.)

   1. தொடர்பின்றி; at random.

   2. விரும்பியபடி; at pleasure.

   3. முன்னறிவின்றி; rashly, thoughtlessly, heedlessly.

     [நேர் → நேர்ந்த + படி. படி = தன்மை]

நேர்ந்தபடி நிகழ்வதில் தொடர்பின்றியும், விரும்பியபடியும், முன்னறிவின்றியும் நடத்தல் காணலாம்.

நேர்ந்தபாடு

நேர்ந்தபாடு nērndapāṭu, கு.வி.எ. (adv.)

நேர்ந்தபடி பார்க்க, (யாழ்ப்.); see menda-pad1.

     [நேர் → நேர்ந்த + பாடு. பாடு = நிலைமை, முறைமை, நுகர்ச்சி]

நேர்ந்தபார்

நேர்ந்தபார் nērndapār, கு.வி.எ. (adv.)

நேர்ந்தபடி,1 பார்க்க (யாழ்ப்.);, see mendapadi1.

     [நேர்ந்தபடி → நேர்ந்தார்.]

நேர்ந்தபோக்கு

 நேர்ந்தபோக்கு nērndapōkku, பெ. (n.)

   விடாப்பிடி (பிடிவாதம்); (வின்.);; rashness, precipitancy.

     [நேர் → நேர்ந்த + போக்கு. போக்கு = வழி நடை.]

நேர்ந்தவாக்கில்

நேர்ந்தவாக்கில் nērndavākkil, வி. எ. (adv.)

   தொடர்பின்றி; at random.

   2. விருப்பப்படி; at pleasure.

     [நேர் → நேர்ந்த + வாக்கில், வகு → வாகு → வாக்கில்]

நேர்ந்தவாக்கு

 நேர்ந்தவாக்கு nērndavākku, பெ. (n.)

   நேர்ந்த போக்கு (வின்.);; rashness.

     [நேர் → நேர்ந்த + வாக்கு. வகு → வாக்கு = ஒழுங்கு]

நேர்ந்தார்

 நேர்ந்தார் nērndār, பெ. (n.)

   நண்பர் (பிங்.);; friends.

     [நேர் → நேர்ந்தார்]

உறவினர் சார்ந்தாராகவும் நண்பர் நேர்ந்தாராகவும் அமைதல் காண்க.

நேர்ந்துகட்டு-தல்

நேர்ந்துகட்டு-தல் nērndugaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வேண்டுதலுக்காகக் காப்புக் கட்டுதல்; to make a vow and tie a thread in token of it on the thing vowed.

கையில் நூலைத் தெய்வத்துக்கு நேர்ந்து கட்டிக் கொண்டான்.

     [நேர் → நேர்ந்து + கட்டு-தல்.]

நேர்ந்துகொள்(ளு)-தல்

நேர்ந்துகொள்(ளு)-தல் nērndugoḷḷudal,    16 செ. குன்றாவி. (v.t.)

   கடவுளிடம் வேண்டுதல் செய்து கொள்ளுதல்; to take vow.

தலைவலி நின்றால் மொட்டை போடுவதாக நேர்ந்து கொண்டான். வயிற்று வலி குணமானால் கடவுளுக்கு ஆடு வெட்டுவதாக நேர்ந்து கொண்டான்.

     [நேர் → நேர்ந்து + கொள்(ளு);-தல்.]

நேர்ந்து கொள்ளுதல் = விரும்பிய செயல் நடந்தால் கடவுளுக்குக் காணிக்கையாக இன்னதைச் செய்வேன் என்று கூறி வேண்டிக் கொள்ளுதல்.

நேர்ந்துபோ-தல்

நேர்ந்துபோ-தல் nērndupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. நிகழ்தல் (சம்பவித்தல்);; to happen.

கல்லூரிக்கு அருகிலே வீடு நேர்ந்து போச்சு. அவன் மாட்டு வண்டியில் வருவதும் இவன் நடந்து வருவதும் ஒரே நேரத்தில் நேர்ந்து போயின.

   2. மெலிதல் (வின்.);; to grow thin, wither, as a limb.

     [நேர் → நேர்ந்து + போ-தல்.]

நேர்ந்துவிடு

நேர்ந்துவிடு1 nērnduviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   தெய்வத்துக்கு வேண்டுதல் செய்வதற்காக விலங்கு முதலியவற்றைக் கோயிலுக்கு விடுதல்; to offer or consecrate to a deity by a vow, as an animal.

கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கடா இது.

     [நேர் → நேர்ந்து + விடு-தல்.]

 நேர்ந்துவிடு2 nērnduviḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   மெலிதல்; to grow thin, wither, as a limb.

நோயால் உடல் நேர்ந்து போயிற்று.

     [நேர் → நேர்ந்து + விடு-தல்.]

நேர்ந்துவை-த்தல்

நேர்ந்துவை-த்தல் nērnduvaittal,    4 செ.குன்றாவி, (v.t.)

நேர்ந்து விடுதல் பார்க்க;see memdu-vidய.

கடவுளுக்குப் படையலிடத் தேங்காயை நேர்ந்து வைத்தான்.

     [நேர் → நேர்ந்து + வை-த்தல்.]

நேர்பசை

நேர்பசை nērpasai, பெ. (n.)

குற்றுகர முற்றுகரங்களோடு இயைந்து வரும் நேரசை (தொல். பொருள். செய்.4, உரை.);,

 ner-asal with ‘u’ or shortened ‘u’ added at its end.

     [நேர்1 → நேர்பு + அசை]

நேர்பு நிரைபு என்று தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டவை பிற்காலத்தில் காசு, பிறப்பு ஆயின.

எ.டு.

     “சிறப்பொடு பூசனை செல்லாது வானம் விறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு குறள்,18). ஈண்டு- நேர்+நேர். குற்றுகரத்தால் அமைந்த நேர்பசை.

     “இறந்த வெகுளியின் தீதே, சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு’ (குறள்,531);. சோர்வு- நேர் + நேர். முற்றுகரத்தால் அமைந்த நேர்பசை.

நேர்படல்

 நேர்படல் nērpaḍal, தொ.பெ. (vbl.n)

நேர்படுதல் பார்க்க;see nér-padu.

     [நேர் + படல்.]

அல்லிற்றுத்தொழிற்பெயர்

நேர்படு

நேர்படு1 nērpaḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. சந்தித்தல் (வின்.);; to meet to be in conjunction with, as planets.

   2. நன்கு கற்றல், பயிலுதல்; to learn well.

     “இவை பத்தும் நேர்பட்டார்” (திவ். திருவாய். 8.9:11);.

   3. உடன் படல்; to agree, assent.

   4. கிடைத்தல்; to be obtained.

     “இல்லார்க்குக் கிழியீடு நேர்பட்டாலென” (திருவிளை. விருத்த.14);

     [நேர் + படு-தல் படுதல் = தோன்றுதல், சந்தித்தல், தல்லீற்றுத்தொழிற்பெயர்.]

 நேர்படு2 nērpaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. நிகழ்தல் (சம்பவித்தல்);; to occur.

   2. ஏற்புடையதாதல்; to be appropriate, worthy.

   3. வாய்த்தல்; to fall in one’s way.

     “கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டு” (திருவாச. 40.9);.

   4. காணப்படுதல்; to appear.

     “நேர்பட்ட நிரை மூவுலகுக்கும்” (திவ். திருவாய். 8.9:11);.

   5. எதிர்ப்படுதல்; to come in front, meet.

     “வஞ்சி நேர்பட்ட காலையில்” (தனிப்பா. 1, 146:46);.

   6. நட்பாதல் (வின்.);; to be in harmony or on good terms.

   7. ஒழுங்குபடுதல்; to be in order.

     “ஒன்றொ டொன்று நேர்படாம லோடு நாய்கள்” (பெரியபு. கண்ணப். 69);.

     [நேர் + படு-தல். படுதல் = நிகழ்தல், தோன்றுதல். இது தன் வினைவடிவம்.]

நேர்படுத்து-தல்

நேர்படுத்து-தல் nērpaḍuddudal, பெ. (n.)

   1 நேர்பிடி-த்தல், (உ.வ.); பார்க்க;see meroid.

வீட்டுக்கு வந்ததும் பொருள்களை நேர்படுத்தவே நேரம் சரியாயிருந்தது.

   2. நலம் பெறச் செய்தல் (சுகப்படுத்துதல்);; to cure. remedy.

   3. நேர்பண்ணு-தல் பார்க்க;see nērpaրրս.

     [நேர் + படுத்து-தல். இச்சொல் பிற வினை வடிவம்.]

நேர்பண்ணு

நேர்பண்ணு1 nērpaṇṇudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. ஒழுங்குபடுத்துதல்; to make even.

வீட்டுப் பொருள்களை நேர்பண்ணி வைக்க வேண்டும்.

   2. ஒன்றுபடுத்துதல்; to reconcile, unite.

     [நேர்1 + பண்ணு-தல். பண்ணுதல் = செய்தல்.]

 நேர்பண்ணு2 nērpaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஆணையிடுதல்; to take oath, swear.

     [நேர் + பண்ணு-தல். பண்ணுதல் = செய்தல். ஆணையிடுதல்]

நேர்பாடு

நேர்பாடு nērpāṭu, பெ. (n.)

   1. தற்செயலான நிகழ்ச்சி; chance occurrence.

     “காட்டகத்து விழுப்பொருள் எடுத்துக் கொண்டாற் போன்ற தொரு நேர்பாடன்று” (புறநா. 70, உரை);.

   2. வழிவகை (உபாயம்);; means, method.

     “தங்கணிடந்தப்பிற் காணுநேர்பா டெண்ணு வார்” (பெரியபு. கண்ணப். 182);.

   3. உடன்பாடு, இயைபு (வின்.);; consent, compliance.

   4. முறைமை, அறம் (நீதி);; justice.

     “கோணே நேர்பாடாயிருந்தான்” (பாரத. குது. 227);.

   5. நீளம் (திவா.);; length.

   6. நேர்த்திக்கடன் (இ.வ.); பார்க்க; nërtii-k-kadan.

     [நேர் + பாடு, பாடு = நிகழ்ச்சி, முறைமை]

நேர்பாடுசீர்பாடு

 நேர்பாடுசீர்பாடு nērpāṭucīrpāṭu, பெ. (n.)

நேர்சீர் (இ.வ.); பார்க்க;see mer-i:

     [நேர்பாடு + சீர்பாடு. சீர்பாடு = மேம்பாடு]

நேர்பாடுசொற்பாடு

 நேர்பாடுசொற்பாடு nērpāṭusoṟpāṭu, பெ. (n.)

   வாய்ச்சொல் பலிக்கை(வின்.);; accidental fulfilment of words or predictions spoken at randon.

     [நேர்பாடு + சொற்பாடு, சொற்பாடு = உடன்படிக்கை]

சொற்பாடு நேர்பாடு-முன்பின்னாக நின்றுபொருள்தருகிறது.

நேர்பிடி

நேர்பிடி1 nērpiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. நேர்வழி செலுத்துதல்; to lead through a straight course.

   2. முடிவுக்குக் கொண்டுவருதல்; to bring to a successful issue, as an untoward business.

   3. சரிபடுத்துதல்; to mend, rectify, to adjust to accomplish properly.

   4. அமைதிப்படுத்துதல்; to reconcile;

 to bring to an agreement, as contending parties.

     [நேர் + பிடி-த்தல். பிடித்தல் = வயப் படுத்துதல், அகப்படுத்துதல், மேற்கொள் ளுதல்.]

 நேர்பிடி2 nērpiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நலமாதல் (சுகமாதல்);; to be cured, as a disease.

உடம்பு நோயிலிருந்து நேர்பிடிக்க நாளாகும்.

   2. சாதல்; to terminate by death.

     [நேர் + பிடி-த்தல். பிடித்தல் = அடங்குதல், செலவாதல், நலமாதல்]

நேர்பு

நேர்பு nērpu, பெ. (n.)

   1. நேர்பசை பார்க்க;see ாer-pasai.

     “நேர்புநிரைபு மாகுமென்ப” (தொல்.பொருள். செய்.4);.

   2. நீளம் (சூடா.);; length.

   3. எழுச்சி (சது.);; rising.

   4. சந்திப்பு (வின்.);; meeting.

   5. நிகழ்ச்சி (வின்.);; occurence, happening.

   6. போக்கு (வின்.);; tendency, course.

     [நேர்1 → நேர்பு.]

நேர்போ-தல்

நேர்போ-தல் nērpōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. இணங்குதல்; to yield, agree.

   2. குணமாதல்; to be cured.

   3. சரியாய்ப் போதல்; to become all right.

     [நேர் + போ-தல். போதல் = செல்லுதல், நீங்குதல்]

நேர்ப்பம்

நேர்ப்பம் nērppam, பெ. (n.)

   1. இயற்கை மூலம் (பிரகிருதி); (ஈடு, 8.1:6);; primordial matter.

   2. திறமை (சாமர்த்தியம்);; skill, ability.

     “சுழற்றிய நேர்ப்பம் இருந்தபடி” (திவ். இயற். திருவிருத். 51, வியா.);.

     [நேர்1 → நேர்ப்பு + அம்.]

நேர்ப்பிசின்

நேர்ப்பிசின் nērppisiṉ, பெ. (n.)

   ஒருவகை அரத்தைச் செடி (M.M. 94);; false, zedoary, Koempferia rotunda.

     [நேர் + பிசின்.]

நேர்ப்பிசின்: பூவின் மணம், அழகு இவைகளுக்காகத் தோட்டங்களில் பயிர் செய்யப்படும் செடி. இதன் இலைகள் பெரியன. வேர் உட்டுளையுள்ளது. பூக்கள் நெருக்கமாக இருக்கும்: வெண்மையும் ஊதாவும் கலந்த நிறம், மேழ (சித்திரை மாதத்தில் பூக்கும். இதன் வேர் இஞ்சியின் மனத்தையுடையது. இச்செடியை அரைத்துப் புண்ணுக்குத் தடவ விக்கங் குறையும், புண் ஆறும். (சா.அக.);.

நேர்ப்பு

நேர்ப்பு2 nērppu, பெ. (n.)

   ஒத்தது (பரிபா.);; similarity. (த.சொ.அக.);

     [(நிகர்); → நேர் → நேர்ப்பு.]

நேர்மாறு

 நேர்மாறு nērmāṟu, பெ. (n.)

   சொல்லுவதற்கு முற்றும் எதிரானது; just opposite.

குணத்தில் அவன் மனைவி அவனுக்கு நேர்மாறு. நான் சொல்லுவதற்கு நேர்மாறாக எதையாவது சொல்லாதே. எதிர்பார்த்தலுக்கு நேர்மாறாக உன் செயல் அமைகிறது.

     [நேர் + மாறு]

நேர்முகத்தேர்வு

 நேர்முகத்தேர்வு nērmugattērvu, பெ. (n.)

   வேலைக்கோ, படிப்புக்கோ விண்ணப்பம் செய்தவரின் தகுதியை வாய்மொழியாகக் கேள்விகள் கேட்டு அறியும் தேர்வு; interview.

முதல்வகுப்புச் சான்றிதழ்கள் கொண்டு சென்றாலும் நேர்முகத் தேர்வில் தோற்றுவிட்டான்.

     [நேர்முகம் + தேர்வு]

நேர்முகம்

நேர்முகம் nērmugam, பெ. (n.)

   1. எதிர்முகம் (யாழ்.அக.);; front.

   2. ஒருவரை நேரடியாகச் சந்தித்து நிகழ்த்தும் (பேட்டி); தேர்வு; interview.

பெயர்பெற்ற எழுத்தாளரின் நேர்முகப் பேட்டியை இன்று தொலைக்காட்சியில் ஒலி பரப்புகின்றனர்.

   3. நேருக்கு நேர் நிகழ்த்துவது;   நேரடி கண்காணிப்பில் இயங்குவது; direct face to face.

அவரை நேர்முகமாகப் பார்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். தீவிரவாதிகள் நேர்முகமாகப் போரிட மாட்டார்கள்.

   4. உடன்பாடு; agreement, assent.

     [நேர் + முகம். முகத்துக்கு நேர் பேசுவது]

நேர்முகவரி

 நேர்முகவரி nērmugavari, பெ. (n.)

   சொத்துவரி, வருமானவரி போன்றவற்றைத் தனியாள் அல்லது ஒரு அமைப்பு போன்றவை நேரிடையாகச் செலுத்திட வேண்டியவரி; direct tax.

     [நேர்முகம் + வரி.]

அரசு வணிகரிடம் பெறுவது நேர்முக வரி. வணிகர் மக்களிடம் பெறுவது மறைமுகவரி.

நேர்முகவர்ணனை

 நேர்முகவர்ணனை nērmugavarṇaṉai, பெ. (n.)

   விழா, விளையாட்டு போன்ற வற்றினை நேரிடையாகப் பார்த்து வானொலி, தொலைக்காட்சியில் உடனுக்குடன் தருகின்ற விளக்கம்; live, running commentary.

     [நேர்முகம் + வர்ணனை. வண்ணனை → வர்ணனை.]

பண்பின் கூறுகள் நான்கென்று இலக்கண நூல்கள் கூறும். வண்ணம், வடிவம், தன்மை, அளவு. இவற்றுள் வண்ணத்தின்’ என்றுதொல்காப்பியநூற்பா கையாண்ட பழஞ்சொல் இடைக்காலத்தில் வர்ண’ என்று வடமொழியாளரால் கையாளப் பட்டது. அண்ணா(மலை); → அர்னா. (அருணா – சலம் என்பது போல);.

நேர்முகவுதவியாளர்

 நேர்முகவுதவியாளர் nērmugavudaviyāḷar, பெ. (n.)

   அமைச்சர், மேலதிகாரி போன்றோருக்கு நிகழ்வுகளை வரிசைப் படுத்துதல், பார்வையாளர்கள் சந்திப்பை முறைப்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்திடும் உதவியாளர்; personel assistant to a minister, a higher officer, etc.

     [நேர்முகம் + உதவி + ஆளர்.]

நேர்முட்டுச்செடிச்சி

 நேர்முட்டுச்செடிச்சி nērmuḍḍucceḍicci, பெ. (n.)

   பேய்த்தும்மை; bitter laucas. (சா.அக.);.

     [நேர் + முட்டு + செடி + சி.]

நேர்மை

நேர்மை1 nērmai, பெ. (n.)

   1. செம்மை; straightness, directness.

     “முக்கணிறை நேர்மையாய்க் கைக்கொண்டு போதிப்பதாச்சு” (தாயு.சு.க.வா.9);.

   2. உண்மை (வின்.);; faith fulness, fidelity, honesty.

இந்தச் செயலில் அவன் நேர்மையாய் நடந்து கொண்டான்

   3. முறைமை (நீதி);; impartiality; justness propriety.

   4. அறம்; morality, virtue.

   5. நுண்மை (ஐங்குறு.அரும்.);; fineness, thinness, minuteness.

   6. திருத்தம் (வின்.);; accuracy, exactness,correctness.

   7. சமம் (சீவக.835);; equality; uniformity.

   8. இசைவு (யாழ். அக.);:

 harmony, agreement.

   9. நன்னிலை; good condition.

அந்தக் குடும்பம் நேர்மையோடு இருக்கிறது.

   10. இணக்கம்; friendship, familiarity.

அவனுக்குமிவனுக்கும் நேர்மையில்லை.

     [நேர்1 → நேர்மை, தன் நலத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாத உண்மை நிலை; உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்துகொள்ளும் தன்மை.]

 நேர்மை2 nērmai, பெ. (n.)

   நிகழ்வு, நிகழ்ச்சி (சம்பவம்);; occurence.

     “இதுகண் டிந்நேர்மை புதிதென்றதிசயித்தான்” (மகாராசாதுறவு,111);.

     [நேர் → நேர்வு → நேர்மை]

நேர்ம்புணை

நேர்ம்புணை nērmbuṇai, பெ. (n.)

   மெல்லிய தெப்பம்; light raft.

     “நீரணிமாட வாவி நேர்ம்புணை நிறைத்து” (சீவக. 2654);.

     [நேர் + ம் + புணை. புணை = தெப்பம், மரக்கலம், மூங்கில்]

நேர்வளந்தான்

 நேர்வளந்தான் nērvaḷandāṉ, பெ. (n.)

   சுக்கு; dried ginger (சா.அக.);.

நேர்வளம்

நேர்வளம் nērvaḷam, பெ. (n.)

   1. செவ்வழி யாழ்த்திறம்; a secondary melody-type of mulai class.

   2. பாலையாழ்த்திறம்; secondary melody-type of pājas class.

     [நேர் + வளம். வளம் = செழுமை, செல்வம், பயன்.]

நேர்வழி

நேர்வழி nērvaḻi, பெ. (n.)

   1. ஓரிடத்தைச் சென்றடையும் நேரான பாதை; straight road, direct course.

   2. நல்லொழுக்கம்; upright conduct.

     [நேர் + வழி.]

நேர்வா-தல்(நேர்வருதல்)

நேர்வா-தல்(நேர்வருதல்) nērvādalnērvarudal,    18 செ.கு.வி (v.i.) & 5 செ.குன்றாவி. (v.t.)

   ஒத்துவருதல்; to resemble.

     “கலிநீர் தில்லைவானவ னேர்வருமே” (திருக்கோ.85);.

     [நேர் + வா-தல். வா-தல் = வருதல்]

நேர்வாக்கில்

நேர்வாக்கில் nērvākkil, பெ. (n.)

   1. நேராக; straight.

நேர்வாக்கில் வகிடெடுத்து சீவு.

   2. நேராகப் பார்த்தபடி; frontal view.

நேர்வாக்கில் எடுத்தபடம். நேர்வாக்கில் படுத்துக்கொள்.

     [நேர் + வாகு + இல் – நேர்வாக்கில்.]

நேர்வாடைக்காத்து

 நேர்வாடைக்காத்து nērvāṭaikkāttu, பெ. (n.)

   நேர்வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி வீசும்காற்று(மீனவ.);; a kind of wind blowing North to South.

     [நேர் + வாடை + (காற்று→); காத்து.]

நேர்வாணிகம்

 நேர்வாணிகம் nērvāṇigam, பெ. (n.)

   புரசமரம்; battle of plassey tree, Butea frondosa. (சா.அக.);.

நேர்வான்

நேர்வான் nērvāṉ, பெ. (n.)

   பதினான்காம் விண்மீன், நெய்ம்மீன் (சித்திரை); (பிங்.252);; the 14th nakāStra.

நேர்வாய்க்கட்டளை

நேர்வாய்க்கட்டளை nērvāykkaṭṭaḷai, பெ. (n.)

   மாளிகையின் மேல் மாடத்திலுள்ள பலகணி; window in an upper storey,as of a palace.

     “தென்வளிதரூஉ நேர்வாய்க் கட்டளை திரியாது” (நெடுநல்.62);.

     [நேர் + வாய் + கட்டளை]

     [P]

நேர்வாளஎண்ணெய்

 நேர்வாளஎண்ணெய் nērvāḷaeṇīey, பெ. (n.)

   நேர்வாளப்பருப்பினின்று வடிக்கும் எண்ணெய்; croton oil extracted from croton Seeds.

     [நேர்வாளம் + எண்ணெய்.]

இவ்எண்ணெய் சிறுநீரை அதிகமாக உண்டாக்கப்பயன்படுகிறது. கழிச்சலை உண்டாக்கும். தோலைச்சிவப்பாக்கி எரிச்சலைத் தரும். இவ்எண்ணெய் குடற்சிக்கல், பாண்டு, தோல் நோய், கீல்மூட்டுவலி, நரம்பிழுப்பு நீர்க்கோவை, உடல்வலி இவைகளுக்கு மருந்தாகிறது. இவ்வெண்ணெய்யைத் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றுடன் கலந்தே பயன்படுத்த வேண்டும். தனியே தடவினால் எரிச்சல், கொப்புளம் உண்டாகும். (சா.அக.);.

நேர்வாளக்கொட்டை

 நேர்வாளக்கொட்டை nērvāḷakkoṭṭai, பெ. (n.)

   நேர்வாளப்பருப்பின் கொட்டை; croton seed or nut (சா.அக.);.

     [நேர் + வாளம் + கொட்டை]

நேர்வாளபூசுதைலம்

 நேர்வாளபூசுதைலம் nērvāḷapūcudailam, பெ. (n.)

   மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும் நேர்வாள எண்ணெய்; oil extracted from croton seed, it is used as liniment (சா.அக.);.

     [நேர்வாளம் + பூசு + Skt, தைலம். பூச்சு → பூசு]

நேர்வாளமரம்

 நேர்வாளமரம் nērvāḷamaram, பெ. (n.)

   நேர்வாளக் கொட்டை தரும் ஒரு சிறிய மரவகை; croton seed plant-Croton tiglium.

மறுவ. வாளம், நேபாளம்

     [நேர்வாளம் + மரம்.]

இதன்கிளைகள் பக்கவாட்டில் பரவியதாகக் காணப்படும். இலைகள் மாறிமாறி அண்டவடிவாயும், கோணங்கள் வாய்ந்தும், வழவழப்பாயுமிருக்கும். இதன் கொழுந்து மொகமொசுப்பாயிருக்கும். இம்மரத்தின் பூவில் ஆண்யூ மேலாகவும் பெண்பூ கீழாகவும் இருக்கும். விதையின் வெளிப்பக்கம்.ஒடு அமைந்திருக்கும். இதன் பூக்கள் மஞ்சளாகவும் சிறியதாகவும் இருக்கும். மேழ (சித்திரை மாதம், ஆடவை வைகாசி); மாதங்களில் பூக்கும். இதன் விதை, இலை முதலியவை மருந்தாகப் பயன்படுகின்றன. இது நேபாளத்தில் இருந்து மிகுதியாக வருவதால் நேபாளம் – நேர்வாளம் எனப்பெயர் பெற்றது. சா.அக);.

இரட்டைவிதையிலைப் பயிர். இலையுதிராச் சிறுமரம். இது வங்காளம், அசாம், தென்னிந்தியா, மியான்மர்(பர்மா);, இலங்கை மலேயா தீவுகள் ஆகிய

     [P]

இடங்களில் வளருகிறது. இதன் விதை ஆமணக்கு விதை போலிருக்கும். கொட்டைக்குள் இருக்கும் முளைசூழ் தசைச் செம்பழுப்பு நிறமானது. இதிலிருந்து எடுக்கும் எண்ணெய், மிகக் கொடிய கழிச்சல் மருந்து. இம்மருந்தை அதிகமாகக்கொடுத்தால் இறப்பு ஏற்படும். இந்த எண்ணெய் பழுப்பு அல்லது வெளுப்பான மஞ்சள் நிறமாக இருப்பதுடன் ஒருவகை நாற்றமுடனும் இருக்கும். பெரும்பாலும் இக்காலத்தில் இதனை மனிதர்களுக்குக் கழிச்சல் மருந்தாகப் பயன்படுத்துவதில்லை. கால் நடைகளுக்கே மிகுதியும் பயன் படுத்தப்படுகிறது.

நேர்வாளமுத்து

 நேர்வாளமுத்து nērvāḷamuttu, பெ. (n.)

   நேர்வாளவிதை; true croton seeds.

     [நேர்வாளம் + முத்து. முத்து = விதை. ஒ.நோ. ஆமணக்குக் கொட்டை முத்து எண்ணெய்.]

நேர்வாளம்

நேர்வாளம் nērvāḷam, பெ. (n.)

   1. சிறுமரவகை (பதார்த்த.1063);; true croton oil plant Croton tiglium.

   2. நேர்வாளமரம்; பார்க்க;see nérvája-maram.

ம.நேர்வாளம், க.நேபாள, தெ.நேபாளமு.

     [நேபாளம் → நேர்வாளம். நேபாளத்திலிருந்து வந்த மரம்]

நேர்விடை

நேர்விடை nērviḍai, பெ. (n.)

   1. உடன்பாட்டை நேரே குறிக்கும் விடை (நன். 386,உரை);; affirmative answer.

   2. நேராகச் சொல்லும் விடை; direct, straight answer.

     [நேர் + விடை.]

நேர்வு

நேர்வு nērvu, பெ. (n.)

   1. நிகழ்ச்சி (வின்.);; happening.

   2. உடன்பாடு (யாழ்.அக.);; consent.

   3. கொடுக்கை; giving.

     “நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கித்தன் பூணாகம் நேர்வளவும் போக்காது” (தி.மா.16);.

   4. வேண்டுகை (வின்.);; soliciting.

   5. எதிர்கை; opposing.

     “வஞ்ச னிராமனை நேர்வுறா”

   6. பொருகை (வின்.);; fighting.

   7. சரிந்து விழுகை (யாழ்.அக.);; dropping.

     [நேர்1 → நேர்வு.]

நேறிட்டதாகை

 நேறிட்டதாகை nēṟiṭṭatākai, பெ. (n.)

   கரிசலாங்கண்ணி; eclipse plant-Eclipta prostata. (சா.அக.);.

நேறுகுழை

 நேறுகுழை nēṟuguḻai, பெ. (n.)

   வச்சிரக்கல் (வைரம்);; diamond. (சா.அக.);.

நேற்றி

 நேற்றி nēṟṟi, பெ. (n.)

நேற்று பார்க்க;see nētru.

     [நேற்று → நேற்றி → நேத்து – உவ. ஒ.நோ.

எண்ணுற்றுமூன்று → எண்ணுற்றிமூன்று. என்பத்துநான்கு → எண்பத்திநான்கு.]

நேற்று

நேற்று nēṟṟu, வி.எ. (adv.)

   1. நிகழும் நாளுக்கு முதனாள்; yesterday.

     “என் செய்தாய் நேற்றிரா முற்றும்” (குலோத். கோ.298);. நேற்றைப் பொழுது (நன். உயிரீற்றுப. 35உரை);.

நேற்று என்ன செய்தாய்? நேற்று வந்த மொட்டைச்சி நெய்வார்த்து உண்ணச் சிணுங்குகிறாள் (பழ.);.

நேற்று வந்தானாம் குடி அவன் தலையில் விழுந்த தாம் இடி (பழ);.

   2. சற்று முன் காலத்தில்; lately, recently.

நேற்றுப்பிறந்த பையன்.

   ம. நேற்று;   க. நென்னெ;தெ. நின்னெ

     [நுல் (பொருந்தல்); → நுள் → நிள் → நெள் → நெரு → நெருநல், நெருநற்று → நேற்று. (வே.க.);]

நேற்றுமுந்தாநாள்

நேற்றுமுந்தாநாள் nēṟṟumundānāḷ, வி.எ. (adv.)

   அண்மைக் காலத்தில் (நெல்லை);; during the recent past.

நேற்று முந்தாநாள் செய்த வேலை

   2. நேற்றைக்கு முந்திய நாள்; day before yesterday.

     [நேற்று + முந்து + ஆம் + நாள்.]

நேற்றைக்கு

 நேற்றைக்கு nēṟṟaikku, வி.எ. (adv.)

நேற்று பார்க்க;see nērtu.

     [நேற்று → நேற்றைக்கு]

நேற்றைய

நேற்றைய nēṟṟaiya, பெ.எ. (adj.)

   1. நேற்று நடந்த; yesterday’s event, etc.

நேற்றைய கூத்து நன்றாயிருந்தது.

   2. கடந்த காலத்திலிருந்த; of the past.

நேற்றைய மனிதர்களைப் போல் நாமும் இருக்கக்கூடாது.

     [நேற்று → நேற்றைய]

நேற்றையதினம்

 நேற்றையதினம் nēṟṟaiyadiṉam, பெ. (n.)

& வி.எ. (adv.);

   நேருதல்; yesterday.

     [நேற்று → நேற்றைய + தினம். Skt dina → த.தினம்]

நேளி

 நேளி nēḷi, பெ. (n.)

   தாமரை (அக.நி.);; lotus

     [நளி → நேளி. நளி = அகலம்;

அகன்ற பெரிய மலர் பெருமை மிக்க மலர்]