தலைசொல் | பொருள் |
---|---|
நெகிழிக்குழல் | நெகிழிக்குழல் negiḻigguḻl, பெ.(n.) பண்டைய இசைக்கருவி; anancient musical instrument. [நெகிழி+குழல்] |
நெக்கணாமலை | நெக்கணாமலை nekkaṇāmalai, பெ.(n.) திருப்பத்துர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Thiruppattur Taluk. [நெக்கணன்+மலை] |
நெக்குண்டி | நெக்குண்டி nekkuṇṭi, பெ.(n.) தருமபுரிவட்டத் திலுள்ள ஒரு சிற்றுார்; a village in DharmapuriTaluk. [நெல்+குன்றம்-நெற்குன்றம்-நெக்குண்டி] நெக்குண்டி nekkuṇṭi, பெ. (n.) வெண்ணோச்சி; white nochy, Vitex negundo (சா.அக.);. |
நெக்குந்தி | நெக்குந்தி nekkundi, பெ.(n.) திருப்பத்துர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Thiruppattur Taluk. [நெல்+குன்றம்-நெக்குந்தி] |
நெசல் | நெசல்1 nesal, பெ.(n.) அரக்கோணம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Arakonam Taluk. [நெய்தல்-நெசல்] நெசல் nesal, பெ.(n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tindivanam Taluk. [நெய்தல்-நெசல்] |
நெசவுத் திண்ணை | நெசவுத் திண்ணை nesavuttiṇṇai, பெ.(n.) நெசவு நெய்பவர் அமர்ந்து இருக்கும் மேடை peal where the weavers sit while wearing. [நெசவு+திண்ணை] |
நெஞ்சுவில்லை | நெஞ்சுவில்லை neñjuvillai, பெ.(n.) சேவையாட்டக் கலைஞர்களின் ஒப்பனைப் பொருள்; a makeup object which is used in ‘sēvaiyattam’. [நெஞ்சு+வில்லை] |
நெடம்பரம் | நெடம்பரம் neḍambaram, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tīruttani Taluk. [நெடு+அம்பலம்] |
நெடிதுயிர்-த்தல் | நெடிதுயிர்-த்தல் neḍiduyirddal, 4.செ.கு.வி. (v.i.) நெட்டுயிர்-த்தல் பார்க்க;see metயyir. “உரோகிணி நினைவனணோக்கி நெடிதுயிரா” (நெடுநல்.163);. [நெடு → நெடி → நெடிது + உயிர்-த்தல்.] |
நெடினி | நெடினி neḍiṉi, பெ. (n.) பனை; palmyra – tree. Borassus filiformis. (சா.அக.);. [நெடு → நெடி → நெடினி = நீண்ட பனைமரம்.] |
நெடின்மோனை | நெடின்மோனை neḍiṉmōṉai, பெ. (n.) அடிதோறும் நெடில் முதலெழுத்து ஒத்து வருவது; a kind of alliteration. [நெடில் + மோனை] எட்டு : “தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு” (குறள்.201); “தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” (குறள்,236); “காணும்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை” (குறள்,1286);. “மாவும் புள்ளும் வதிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப மாலை தொடுத்த கோதையுங் கமழ மாலை வந்த வாடை மாயோன் இன்னுயிர்ப் புறத்திறுத் தன்றே” (யா.கா.16 மேற்கோள்); “மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ் மால்வரைத்தோளதரித்த மாலையார்-மாலிருள் சூழ் மாலையின் மால்கட லார்ப்ப மதன்றொடுக்கு மாலையின் வாளி மலர்” (தண்டி.-42. மேற்கோள்); “கேட கங்கண வங்கையொ டுங்கிளர் கேட கங்கள துணிந்து கிடந்தன கேட கங்கி ளர்கின்ற களத்தநன் கேட கங்கள் மறிந்து கிடந்தவே” (கம்பரா.உத்த.3380); “வாழிய சீரி ராமன் வாழிய சீதை கோமான் வாழிய கெளச லேசை மணிவயி றுதித்த வள்ளல் வாழிய வாலிமார்பு மராமர மேழுஞ் சாய வழிய கணையொன் றேவுந் தசரதன்மதலைவாழி” (கம்பரா.உத்த 4357); “சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே சூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியிற் சுடுமாறு போல சூரியன் தோற்றமுன் அற்றமலங்களே” (திருமந்திரம்); “சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர் கண்டார்ச் சுருதிக்கண் தூக்கமே” (திருமந்திரம்); “துங்கிக் கண்டார் சிவலோகம் தம்உள்ளே துங்கிக் கண்டார் சிவயோகம் தம்உள்ளே துங்கிக் கண்டார் சிவபோகம் தம்உள்ளே துங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே.” (திருமந்திரம்); “தானே புலன் ஐந்தும் தன்வசம் ஆயிடும் தானே புலன் ஐந்தும் தன்வசம் போயிடும் தானே புலன் ஐந்தும் தன்னில் மடைமாறும் தானே தனித்து எம்பிரான் தன்னைச் சந்தித்தே” “எழுவாய் எழுத்தொன்றின் மோனை யாகா.16);. அடிதோறும் சீர்தோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை. அடிதோறும முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது அடிமோனைத் தொடை எனப்படும். ஒரு அடியில் வரும் நான்குச் சீர்க்கண் வரும் மோனை வேறுபாடுகள் (விகற்பங்கள்); 1. இணைமோனை = முதலிரு சீர்க்கண் மோனை வரத் தொடுப்பது. 2. பொழிப்பு மோனை = முதலும் மூன்றாம் சீர்க்கண்ணும் மோனை வருவது. 3. ஒருஉமோனை = முதல்சீர், நான்காம் சீரில் மோனை வருவது. 4. கூழைமோனை = முதல் மூன்று சீர்க்கண் மோனை வருவது. 5. மேற்கதுவாய் = முதல், மூன்று, நான்காம் சீரில் மோனை வரத் தொடுப்பது. 6. கீழ்க்கதுவாய் = முதல், இரண்டு, நான்காம் சீரில் மோனை வரத் தொடுப்பது. 7. முற்றுமோனை = நான்கு சீரிலும் மோனை வரத் தொடுப்பது. “இருசீர் மிசையினை யாகும் பொழிப்பிடை யிட்டொரூஉவாம் இருசீ ரிடையிட்ட திறிலி கூழை முதலிறுவாய் வருசி ரயலில மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசி முழுவதும் ஒன்றின்முற் றாமென்ப மற்றவையே” (யா.கா.19); மோனை வேறுபாடுகளுக்கு (விகற்பம்); எடுத்துக்காட்டு: அணிமலர் அசோகின் தளிர்நலங் கவற்றி (இணைமோனை); அரிகுரற் கிண்கிணி அரற்றுஞ் சீறடி (பொழிப்பு மோனை); அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி (ஒரூஉ மோனை); அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் (கூழைமோனை); அரும்பிய கொங்கை அவ்வளை அமைந்தோள் (மேற்கதுவாய்); அவிர்மதி அனைய திருநுதல் அரிவை (கீழ்க்கதுவாய்); அயில்வேல் அனுக்கி அம்பலைத்து அமர்ந்த முற்றுமோனை) கருங்கயல் நெடுங்க னோக்கமென் திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே. |
நெடிப்பினை | நெடிப்பினை neḍippiṉai, பெ. (n.) வங்க மணல்; leadore. (சா.அக.);. |
நெடிப்பு | நெடிப்பு neḍippu, பெ. (n.) 1. நெடுநேரம்; long time. “நெடிப்புறச் சானமுற்றிருந்து” (சேதுபு. பராவக.37);. 2. கால நீட்சி; lengthening o! time. [நெடு → நெடி → நெடிப்பு] |
நெடிய | நெடிய neḍiya, பெ.எ. (adj.) 1. நீளமான; Long. நெடிய தெரு;நெடிய விரல்கள். 2. உயரமான; tall, high. நெட்ட நெடியமரம்;நெடிய வாயில்கள். 3. காலத்தால் நீண்ட; long in time. நெடிய துயில். [நெடு → நெடிய] |
நெடியன் | நெடியன் neḍiyaṉ, பெ.(n.) நெட்டையன்; a tall man. க. நிடியன் [நெடு → நெடி → நெடியன்] |
நெடியம் | நெடியம் neḍiyam, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Tiruttani Taluk. [நெடு-நெடியம்] |
நெடியவட்டம் | நெடியவட்டம் neḍiyavaḍḍam, பெ.(n.) பெரிய கேடகம். (சூடா.);; large shield. போரில் நெடிய வட்டம் உடைந்து விட்டது. [நெடு → நெடிய வட்டம். நெடு – அகலப் பொருளில் வந்தது.] |
நெடியவன் | நெடியவன் neḍiyavaṉ, பெ. (n.) 1. நெட்டையன்; tall man. 2. திருமால்; Lord Vishnu. “நெடியவன் கேழலாகி” (திருவாத.);. [நெடு → நெடி → நெடியவன்] குறுவடிவில் (வாமனம்); மாவலி என்னும் மலைஞால மன்னனிடம் இரந்து நின்று. மூவடி மண் கேட்க, அவனிசைந்ததும் நெடுவடிவம் கொண்டு ஒரடியால் மண் அளந்து, இரண்டாம் அடியால் விண் அளந்து மூன்றாம் அடிக்கு இடம் கேட்டபோது தலை தாழ்த்தினான் என்பது தொன்மக்குறிப்பு (நெடியோன் பார்க்க.); |
நெடியவாயன் | நெடியவாயன் neḍiyavāyaṉ, பெ.(n.) மீன் வகை; a kind of fish. “ஓவினெடிய வாயன்” (பறாளை.பள்ளு.16);. [நெடு → நெடிய + வாயன்] |
நெடியா | நெடியா neḍiyā, பெ. (n.) குறட்டைச் செடி; round snake gourd – Trichosanthus palmata (சா.அக.);. |
நெடியான் | நெடியான் neḍiyāṉ, பெ. (n.) நெட்டையன்; tall man. “நெடியார் குறியாரை ஆற்றிலே தெரியலாம்” (பழ.);. [நெடியவன் → நெடியான்] |
நெடியாமி | நெடியாமி neḍiyāmi, பெ. (n.) தென்னை; cocoanut tree – Cocos nucifera. (சா.அக.);. [நெடு → நெடி → நெடியாமி, நீண்டு உயர்ந்த தென்னை.] |
நெடியோன் | நெடியோன் neḍiyōṉ, பெ.(n.) பாண்டிய மன்னர் மரபில் முதல் மன்னன்; the firstking in Pandya dynasty நிலந்தந்த பேருதலி பொலந்தார் மார்பின் நெடியோன் (மதுரைக்.);. [நெடு+நெடியோன்] நெடியோன்1 neḍiyōṉ, பெ. (n.) 1. நெட்டை யானவன்: tall person. இவனுக்கு அவன் நெடியோன். 2. உலகை மூன்றடியால் அளந்த திருமால்; Vishnu, as in His Trivikrama incarnation. செங்க ணெடியோ னின்ற வண்ணமும்” (சிலப்.11:51);. 3. பெரியவன்; great person. “முந்நீர் விழவி னெடியோன்” (புறநா.9);. இந்த வீட்டுக்கு அவர்தான் நெடியோன். 4. துளசி (மலை.);; sacred basil. 5. மூக்கிரட்டைப்புல் (மலை.);; the pungent smell of medicinal spreading hogweed. [நெடு → நெடி → நெடியோன்.] திருமாலின் பத்துத் தோற்றரவுகளில் ஒன்று. மன்னர் மன்னன் மாவலியிடம் இரப்பதற்காக திருமால் குறுவடிவம் கொண்டு மூன்றடி மண் கேட்டு, மன்னன் தா பின் பேருருவம் கொண்டு விண்ணையும் மண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றவது அடிக்கு இடம் கேட்க மன்னன் தலையைக் காட்ட தலைமீது மூன்றாவது அடியை வைத்தார். திருமால் உலகை அளக்க கொண்ட நீண்ட வடிவே அவருக்கு நெடியோன் எனப் பெயர் ஏற்பட கரணியமாயிற்று. அனுமனும், சிவனும் கூட நீண்ட வடிவம் எடுத்ததாகத் தொன்மக் கதைகள் வழங்குகின்றன. “நெடியோன் குன்றம்” என்று வடவேங்கட மலையைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. “நெடியோன் குன்றமுந் தொடியோள் பெளவமும் தமிழ்வரம்புறுத்த தண்புனல் நன்னாட்டு” (சிலப்.8:12);. நெடியோன்2 neḍiyōṉ, பெ. (n.) கழகக் கால பாண்டிய மன்னன்; Pandiya king. இவன் கி.மு.3000 ஆம் ஆண்டில் குமரிநாடு, பெருவள நாடு, ஒளி நாடு முதலிய பகுதிகளைக் கைப்பற்றிப் பஃறுளி என்னும் ஆற்றை வெட்டி நாட்டை விரிவாக்கி வளப்படுத்தினான். (சி.பெ.அ.); |
நெடியோன் குன்றம் | நெடியோன் குன்றம் neḍiyōṉkuṉṟam, பெ. (n.) திருவேங்கடமலை; Tirupadi, as Visnu’s hill. “நெடியோன்குன்றமுந் தொடியோள் பெளவமுந் தமிழ் வரம் மறுத்த தண்புனல் நன்னாட்டு” (சிலப்.8:12); [P] [நெடியோன் + குன்றம்] |
நெடிற்றொடர் | நெடிற்றொடர் neḍiṟṟoḍar, பெ. (n.) நெட்டெழுத்தை யீற்றுக் கயலெழுத்தாகத் தொடர்ந்து வருங்குற்றுகரவீற்று மொழி (நன்.94);; the letter which comes after the long vowel. [நெடில் + தொடர்] |
நெடிற்றொடர்க்குற்றியலுகரம் | நெடிற்றொடர்க்குற்றியலுகரம் neḍiṟṟoḍargguṟṟiyalugaram, பெ. (n.) குற்றியலுகரம் வகைகளில் ஒன்று; a kind of kurriyalukaram. [நெடில் + தொடர் குற்றியலுகரம்] நெடிற் கீழும், நெடிலொற்றின் கீழும், குறிலினைக் கீழும், குறிலிணை யொற்றின் கீழும், குறினெடிற் கீழும், குறினெடி லொற்றின் கீழும் குற்றொற்றின் கீழும் என்றிவ் வேழிடத்தும் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து உகரம் வந்தால் அது குற்றியலுகர மென்று வழங்கப்படும். “நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென் ‘றேழ்குற் றுகரக் கிடனென மொழிப” “எழுவகை இடத்துங் குற்றிய லுகரம் வழுவின்றி வரூஉம் வல்லா றுர்ந்தே” என்கிறது பல்காயம். எ-டு : நாகு-காசு-காடு-காது-காபு-காறு என நெடிற்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வரும். நெடிலொற்றின் கீழ் : நாக்கு-காச்சு-காட்டு-காத்துகாப்பு- காற்று. குறிலிணைக்கீழ் : வரகு-முரசு-முருடு-மருது-துரபுகவறு. குறிலிணை ஒற்றின் கீழ் : அரக்கு-பொரிச்சுதெருட்டு-குருத்து-பொருப்பு-சிரற்று. குறில்நெடிற்கீழ் : அசோகு-பலாசு-மலாடு-கெடாதுபுதாபு-விராது. குறில்நெடில்ஒற்றின்கீழ் : தமாக்கு-தடாச்சு-பனாட்டுகடாத்து-புதாப்பு-விராற்று. குற்றொற்றின் கீழ் : அக்கு-கக்சு-கட்டு-கத்து-கப்புகற்று. இது செய்யுளுக்குரிய யாப்புப் பற்றிய வரம்பாகும். குற்றியலுகரம் அறுவகைப்படும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார். அவை, ஈரெழுத்தொரு மொழி, உயிர்த் தொடர்மொழி, இடைத்தொடர் மொழி, ஆய்தத்தொடர் மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி. “ஈரெழுத் தொருமொழி உயிர்த் தொடர் இடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்” (தொல்.எழுத்து.குற்றியலு:1); எ-டு : ஈரெழுத்தொருமொழி : நாகு, காசு-காடு, காவு, காபு, சோறு. உயிர்த்தொடர்மொழி : வரகு, பலாசு, முருடு, எருது, மரபு. கயிறு. இடைத்தொடர்மொழி : செய்கு கொய்சு, மார்பு, சால்பு செய்து, செய்பு. ஆய்தத்தொடர்மொழி : எஃகு, கஃசு, கஃடு, அஃது, கஃபு. கஃறு. வன்றொடர் மொழி : சுக்கு, கச்சு, பட்டு, பத்து, உப்பு பற்று. மென்றொடர் மொழி : கங்கு, பஞ்சு, வண்டு, பந்து வம்பு, கன்று. பல்காயம் கூறும் எழுவகைக் குற்று கரங்களில் தொல்காப்பியர் கூறும் ஆய்தத் தொடர் இடம் பெறவில்லை. நன்னூலார் தொல்காப்பியரைத் தொடர்ந்து குற்றியலு கரத்தை அறுவகைப் படுத்தினும், தொல்காப்பியர் ஈரெழுத் தொருமொழி என்று கூறுவதை நெடிற்றெடெர் குற்றியலுகரம் என வேறு பெயர் தருகின்றார். “நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடைத் தொடர் மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே” (நன்.96);. நன்னூலார் பகுப்பு : 1. நெடிற் றொடர்க் குற்றியலுகரம், 2. ஆய்தத்தொடர், 3. உயிர்த் தொடர், 4. வன்றொடர், 5. மென்றொடர், 6. இடைத்தொடர். எனவே ஈற்றலெழுத்தை நோக்கிக் குற்றியலுகரம் முப்பத்தாறாகும். எனவே குறுகி யொலிக்கும் உகரம் குற்றியலுகரம். அது {} என்னும் வடமொழி யெழுத்துகளில் உள்ள உகரம்போல இகரத் திற்கும் உகரத்திற்கும் நடுவன தாயொலிக்கும். ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம். குற்றியலுகரம் வருஞ்சொல் ஈரெழுத்திற்குக் குறையாது. ஈரெழுத்தாயின் முதலெழுத்து நெடிலாயிருக்கும்: மூவெழுத்தும் அதற்கு மேலுமாயின் முதலில் எந்த எழுத்து இருப்பினும் சரியே. குற்றியலுகரச்சொல் ஈற்றயல் (கடைசிக்கு முந்தின); எழுத்துப் பற்றி ஆறு தொடராக வகுக்கப்படும். எழுத்துக்கள் தொடர்ந்து நிற்றலின், சொற் தொடர் எனப்பட்டது. உ-ம் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் – ஆறு. காசு. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் – எஃது.அஃது. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் – வரகு, தராக. வன்றொடர்க் குற்றியலுகரம் – பட்டு, சுக்கு. மென்றொடர்க் குற்றியலுகரம் – சங்கு, வண்டு. இடைத்தொடர்க் குற்றியலுகரம் – மார்பு தெள்கு. ஆறு தொடர்களிலும் நெடிற்றொடரொன்றே ஈரெழுத்துள்ளது;ஏனையவைந்தும் மூவெழுத்தும் அதற்கு மேலுமுள்ளன. நெடிற்றொடர்க்கும் உயிர்த்தொடர்க்கும் உயிரும் உயிர்மெய்யும் ஈற்றயலாக வரும்;ஆய்தத் தொடர்க்கு ஆய்தம் ஈற்றயலாக வரும். ஏனைத் தொடர்கட்கு மெய் ஈற்றயலாக வரும். உயிர்த்தொடரில் ஈற்றயலாய் வருவது உயிர்மெய்யேனும், அஃது உயிரும் மெய்யுமாகப் பகுக்கப்படும்போது, உயிரே ஈற்றயலாய் நிற்றலின் உயிர்தொட ரெனப்பட்டது. நெடிற்றொடர்க்கும் உயிர்த்தொடர்க்கும் வேறுபாடு. நெடிற்தொடர் உயிர்தொடர் 1. ஈரெழுத்தாலாயது மூவெழுத்திற்குக் குறையாதது. 2. நெடிலே ஈற்றயலாக குறிலும் நெடிலும் வருவது ஈற்றயலாக வருவது. 3. உயிரும் உயிர்மெய்யும் உயிர்மெய்யே ஈற்றயலாக வருவது. ஈற்றயலாக வருவது. குற்றியலுகரம் ஈற்றயலெழுத்துப் பற்றி முப்பத்தாறாகக் கூறப்படும். ஆறு தொடர்களிலும் முறையே நெடிலேழும், ஆய்தமொன்றும், ஒளகார மொழிந்த உயிர்பதினொன்றும், வல்லின மெய்யாறும் மெல்லினமெய்யாறும், வகரமொழிந்த இடையினமெய் ஐந்துமாக மொத்தம் முப்பத்தாறெழுத்துகள் ஈற்றயலாக வரும. குற்றியலுகர முற்றியலுகரங்கள் குற்றுகரம் முற்றுகரமெனவுங் கூறப்படும். (இயற்றமிழ் இலக்கணம் – பாவணர்.); குற்றியலுகரம் உயிரீறு கொண்டே வரும் என்று பாவாணர் நிறுவுகின்றார். குற்றியலுகரம் உயிரீறே “எழுத்தெனப் படுப, அகரமுதல் னகர இறுவாய் முப்பஃ தென்ப;சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே”(தொல்.1); “அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (தொல்2); என்றார் தொல்காப்பியர். இரண்டாம் நூற்பாவில், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எனப் பிரித்துக் கூறாது “குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்” என்று முப்பாற் புள்ளி’ என்பது மூவெழுத்தையும் பொதுப்படத் தழுவுமாறு உம்மைத் தொகையாய்ச் சேர்த்துக் கூறியிருத்தலின், குற்றியலிகர குற்றிய லுகரங்களும் ஆய்தம் போலப் பண்டைக் காலத்திற் புள்ளி பெற்றன என்பதுணரப்படும். நூற்பாவில் முப்பாற்புள்ளி என்பது, புள்ளி பெற்ற மூவெழுத்துகளையும் முப்புள்ளி வடிவான ஆய்தத்தையும் ஒருங்கே குறிப்பது “ஆமா கோனவ் வணையவும் பெறுமே” என்னும் நன்னூல் நூற்பாவின் ஆமா என்பது போன்ற இரட்டுறலாகும். தொல்காப்பிய மரபியல் நூற்பா 110-ல் வாரா ததனான் வந்தது முடித்தல் என்னும் உத்தியுரையில், “குற்றியலிகரத்தைப் புள்ளியென்றலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தன வாகலின் அவையும் இனி வாராமையான் வந்துழி வந்துழி அவ்வாறு ஆண்டானென்பது, இனிப் புள்ளியென மேல் ஆள வாராததனைப் புள்ளியென்று ஆள்வனவற்றோடு மயங்கக் கூறுதலென்பது, அவைதாங் குற்றிய லிகரங் குற்றிய லுகர – மாய்த மென்ற – முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன (தொல்-எழுத்து-நூன் 2 என்புழிக் குற்றியலிகரம், புள்ளியென்று யாண்டும் ஆள வாராமையானும் அதுதான் அவ்வழி வரவேண்டு தலானும் அங்ங்ணம் புள்ளியென்று ஆள வருங் குற்றுகரத்தோடும் ஆய்தத்தோடும் உடன் கூறுதலாயிற்று. இங்ங்ணம் உடன் கூறாக்காற் புள்ளியுங் குற்றிகரமுமெனச் நூற்பா (சூத்திரம்); பெறுதல் வேண்டுவ தாவான் செல்லுமென்பது” என்றுரைத்தார் பேராசிரியர். சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதல் நூற்பாவின் (சூத்திர விருத்தியில். “ஒரு மொழியைச் சார்ந்து வருமியல்பின்றித் தனித்தியங்கு மியல்பு தமக்கிலவென்றலின், அவை தம்மையே யெடுத்தோதிக் காட்டலாகாமையின் வரும் நூற்பாவான் குத்திரதான்) அவற்றிற்கு வேறுவேறு பெயரிட்டு “அவைதாங் குற்றியலிகரங் குற்றியலுகர மாய்தம் என்றும், அம் மூன்றும் புள்ளி பெறுதல் பற்றிப் பொதுப் பெயராக முப்பாற் புள்ளியும் என்றும், அவை தனித் தெழுதப்படா வாயினும் மொழியொடு சார்த்தி யெழுதப்படுதலின் எழுத்தென்னுங் குறியீட்டிற் குரியவென்பார். எழுத்தோ ரன்ன என்றும் ஒதினார் என்றார். நச்சினார்க்கினியரும், “அவைதாம். எழுத்தோ ரன்ன” என்னும் சார்பெழுத்து நூற்பாவுரையின் இடையில், “ஆய்தமென்ற ஒசைதான் அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியுமென்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட் டெழுதுபவென்று இதற்கு வடிவு கூறினார். ஏனை யொற்றுகள்போல உயிரேறாது ஒசை விகாரமாய் நிற்பதொன்றாகலின், எழுத்தியல் தழா ஒசைகள் போலக் கொள்ளினுங் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயா மென்றார். இதனைப் புள்ளி வடிவிற்றெனவே ஏனை யெழுத்துகளெல்லாம் வரிவடிவின வாதல் பெற்றாம்” என்று கூறினாரேனும், தொடக்கத்தில், “அவைதாம்-மேற்சார்ந்து வருமெனப் பட்ட வைதாம் குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தமுமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவுமாம் எழுத்தோரன்ன – அவையும் முற்கூறிய முப்பதெழுத் தோடு ஒரு தன்மையாய் வழங்கும் என்றவாறு’ என்று மூவெழுத்தும் புள்ளிபெறுமென ஒரு தன்மைப்படவே உரைத்தார். மயிலைநாதர், “தொல்லை வடிவின’ என்னும் நன்னூல் நூற்பா வரைவில், “ஆண்டு என்ற மிகையானே தாது ஏது என்றற் றொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு கொட்டு என்றற் றொடக்கத்துப் பொது மொழிகளும், குன்றியாது. நாடியாது எட்டியாண்டுளது என்றற் றொடக்கத்துப் புணர் மொழிப் பொருள் வேறுபாடுகளும், அறிதற் பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க’ என்று உரைத்தனர். “குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் புள்ளி பெற்று நிற்கும்: என்னை? “குற்றிய லிகரமும் குற்றிய லுகரமு மற்றவை தாமே புள்ளி பெறுமே” என்பது கழக சங்க யாப்பாகலின் என்பது யாப்பருங்கல விருத்தி (ப.27);. மேற்கூறியவற்றால், குற்றியலிகர குற்றிய லுகரங்கள் பண்டைக் காலத்தில் புள்ளியிட் டெழுதப்பட்டனவென்றும் அங்ங்ணம் எழுதினது அவற்றின் ஒலிக்குறுக்கத்தையும் நாடியாது’, ‘எட்டியாண்டு முதலிய புணர்மொழிப் பொருள் வேறுபாட்டையும் காட்டற்கு என்றும் அறியப்படும். ‘நாடியாது’. ‘எட்டியாண்டு’ என்பன, நாடி யாது. எட்டி யாண்டு என்றும் பொருள் படுமாதலின், அவை நாடு + யாது. எட்டு + யாண்டு என்னும் புணர்மொழிகள் என்று காட்டற்குக் குற்றியலிகரத்தின்மேற் புள்ளியிடப் பட்டதென்க. குற்றுகரத்தை மேற்கன்னமிட்டுக் காட்டு வது இன்றும் மலையாள (சேர); நாட்டு வழக்கம். குற்றிகர குற்றுகரங்கள் புள்ளி பெறுமென்று நன்னூலிற் கூறப்படாமையால், 12ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இவ்வழக்கு, சோழ பாண்டிய நாடுகளில் ஒழிந்தது என்பதை அறியலாம். எகர ஏகாரங்கட்கும் ஒகர ஒகாரங்கட்கும் அவை சேர்ந்துள்ள உயிர் மெய்கட்கும் வரி வேறுபாடு தொல் காப்பியத்திலே கூறப்பட்டிருப்பினும் 17ஆம் நூற்றாண்டில் அவ்வெழுத்துகள் குறில் நெடில் வேறுபாடின்றி எழுதப் பட்டாற்போல, குற்றியலுகரமும் வேறுபாடின்றி யெழுதப்பட்ட தென்க. ஒரு பொருள் குறுகின் அப்பொருளே யன்றி வேறுபொரு ளாகாது. அதன் குறுக்கம் அளவு வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடன்று. அதுபோல், குற்றியலுகரமும், முற்றியலுகரம்போல உயிரேயன்றி மெய்யாகாது, இதனாலேயே, “இகரஉரகங்குறுகிநின்றன, விகார வகையாற் புணர்ச்சி வேறு படுதலின், இவற்றை இங்ங்னங் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங் கோலாகாது; அது போல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார்’ நச்சினார்க்கினியரும். பொருள் வேற்றுமை யென்றது பண்டைக் காலத்தில் கட்டு கொட்டு முதலிய சொற்கள் எவல் வினையாம் போது முற்றகர வீறாயும் முதனிலைத் தொழிற்பெயராம் போது குற்றுகர வீறாயும், ஒலிக்கப்பட்டவை நோக்கி, “தருக்கு அணுக்கு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம்” (தொல்.36, உரை);. “காது கட்டு கத்து முறுக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற் போல தொல்.68, உரை) என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. தொல்காப்பியர் தம் காலத்தில் குற்றுகாமும் மெய்போலப் புள்ளி பெற்றதனாலேயே, புணரியலில். “மெய்யி றெல்லாம் புள்ளியொடு நிலையல்” (தொல்.104); “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (தொல்.105); என்று மாட்டேற்றிக் கூறினார். இம் மாட்டேற்றைக் கவனியாது. “குற்றிய. மொழிப’ என்னும் நூற்பாவிற்கு ஈற்றிற் குற்றிய லுகரமும் (புள்ளியிறு போல உயிரேற இடம் கொடுக்கும்); அத்தன்மைத்து என்று சொல்லுவர்’ என்று இளம்பூரணரும். “ஈற்றுக் குற்றியலுகரமும், புள்ளியிறு போல உயிரேற இடம் கொடுக்கு மென்று கூறுவர் புலவர் என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவது பொருந்தாது. “அற்றென மொழி என்னும் மாட்டேறு “புள்ளியொடு நிலையல்” என்பதையே தழுவுமாதலின் இவ் விருவரும் இங்ங்ணம் உரைத்தற்கு இவர் காலத்திற்கு முன்பே குற்றியலுகரம் புள்ளி பெறும் வழக்கம் வீழ்ந்தமையே கரணியமாகும். இவர் கூறிய உரை இங்குப் பொருந்துமாயின் தொல்காப்பியர் நூன்மரபில். “மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையில்” (தொல்.15); “எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (தொல்.16); என்று கூறியவிடத்தும் பொருந்தல் வேண்டும். எகர ஒகரம் புள்ளியிறு போல உயிரேற இடங்கொடுத்த லின்மை யானும், “எகர. அற்றே” என்னும் நூற்பாவிற்கு “எகர ஒகரங்களது இயல்பும் அவ்வாறு புள்ளி பெறும் இயல்பிற்று” என்று இளம்பூரணரும், “எகர ஒகரங்களின் நிலையும் மெய்போலப் புள்ளி பெறும் இயல்பிற்று’ என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவதானும். “குற்றிய. மொழிய” என்னும் நூற்பாவிற்கும் குற்றுகரமும் மெய்போலப் புள்ளிபெறும் என்பதே உரையாகக் கோடல் பொருத்தமாம். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுக்கு மென்று உரைத்தவிடத்தும், மாத்திரைக் குறுக்கத்தால் அங்ங்ணம் இடங்கொடுக்கும் என்னும் கருத்தினரே அன்றி மெய்யீறாய் இருத்தலால் இடங்கொடுக்கும் என்னும் கருத்தினரல்லர். “குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடிய அரை மாத்திரையாய் நிற்றலும். முற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடியாமையும் தம்முள் வேற்றுமை” (தொல். 36, உரை); என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. இனி, தொல்காப்பியர் கருத்தை நோக்கின், அவர் குற்றியலுகரத்தை மெய்யிறென்று கொண்டார் என்று கொள்ளுதற் எள்ளளவும் இடமில்லை. அவர், “குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும்” (தொல். 67); எனக் குற்றியலுகரம் மொழி முதல் வருமென்றும் கூறினார். நுந்தை என்னும் சொல்லின் முதலில் (தொல்காப்பியர் கருத்தின்படி); உள்ள குற்றியலுகரம் மெய்யீறாயின், அச்சொல் ந்ந்தை என்று எழுதப்படல் வேண்டும். அங்ங்ன மெழுதப்படாமையும், குற்றியலுகரத்தைத் தொல்காப்பியர் மெய்யென்று கொண்டிருப்பா ராயின், அது. “பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்.” (தொல், 59); “உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா” (தொல். 60); என்று அவர் கூறியவற்றோடு முரணுதலும் நோக்குக. மேலும், ஒரே யுகரம் ஓரிடத்துக் குற்றுகரமாகவும் ஓரிடத்து முற்றுகரமாகவும் ஒலிக்கப்படும். அங்ஙணம் ஒலிக்கப்படு பவற்றுள் சிலவற்றிற்குக் குற்றுகர முற்றுகரப் பொருள் வேறுபாடுண்டு. சிலவற்றிற்கில்லை. “முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கின் நிலையிய லான” (தொல்.68); என்னும் நூற்பாவையும், அதன் உரையில், “காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகர முமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல, நுந்தை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நூந்தாயென்பதோ வெனின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான் இடமும் பற்றுக் கோடும் இரண்டடிற்கும் வேறுபாடின் றென்று கொள்க’ என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பதையும் நோக்குக. இதனால், குற்றியலுகரம் மெய்யீறாயின் முற்றியலுகரமும் மெய்யிற்றாய் உகரம் என்னும் உயிரே தமிழுக்கில்லை யென்று பெறப்படுதலும் அங்ங்ணமின்மையும் அறிக. செய்யுளியலில், இருவகை யுகரமு மொன்றாகக் கொண்டே, “இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபு மாகு மென்ப” (தொல்.செய்.4); என்றார் தொல்காப்பியர். இதன் உரையில், “இருவகை யுகரமென்பன, குற்றுகர முற்றுகரங்கள், அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒருசொல் விழுக்காடுபட இயைந்து வரின் நிறுத்த முறையானே நேரசையோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும் நிரைபசையோ டொன்றி வந்த குற்றுகரமும் அதனோடொன்றி வந்த முற்றுகரமும் நிரையசை எனப்படும் என்றவாறு.” “முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண்வகையான் அசைகூறி அவற்றுப்பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு எடுத்துக்காட்டுப் (உதாரணப்); பகுதியவாய்ச் சென்றதேனும், அவற்றுட் குற்றெழுத்துப் பின்வரும் உகரம் நேர்பசை யாகா தென்பது “குறிலினை யுகர மல்வழி யான (தொல்.செய்:4); என்புழிச் சொல்லுதும், ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிாைபசை நான்குமாயின. எ-டு: வண்டு, நாகு, காம்பு வாகு. குரங்கு, மலாடு, மலாட்டு : இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரையும் வந்தவாறு” என்று உரைத்தார் பேராசிரியர். இதனால், குற்றுகரமும் முற்றுகரம் போல அலகு பெறுமென்றும் அசைக் குறுப்பாமென்றும் அறியப்படும். சொற்கள் இலக்கண முறையிலும் இலக்கிய முறையிலும் பல வகையாகத் திரிந்து முன்பு முற்றுகா வீறாயிருந்தவை அல்லது உகரமல்லாத ஈறாயிருந்தவை பின்பு குற்றுகர வீறாகின்றன. அவ்வகைகளாவன: 1. தொழிற்பெயர் : முதனிலை திரிந்த தொழில் பெயர் : எ-டு: படு → பாடு, சுடு → சூடு, ஈறுபெற்ற தொழிற்பெயர் : எ-டு : படி + பு-படிப்பு. முடி + சு – முடிச்சு. 2. வேற்றுமைப் பெயர் : எ-டு : யான் + கு – எனக்கு, அவர் + கு – அவர்க்கு. 3. குறிப்பு வினைமுற்று : எ-டு : தாள் + து – தாட்டு, கண் + து – கட்டு, பால் + து – பாற்று. அன் + து – அற்று. 4. பிறவினை : எ-டு : படு + து – படுத்து. நட + து – நடத்து, வாழ் + து – வாழ்த்து, பாய் + சு – பாய்ச்சு. 5. போலி : எ-டு : அடைவு → அடவு → அடகு. 6. சொல் திரிபு : எ-டு : திரும் → திரும்பு, பொருந் → பொருந்து, உரிஞ் → உரிஞ்சு, உடன் (உடல்); → உடம் → உடம்பு , பண் → பாண் → பாடு, குள் → கொள் → கோள் → கோண் → கோடு, ஒளி → ஒளிர் → ஒளிறு, போ → போது. மேற்காட்டிய பாடு, படிப்பு, எனக்கு, தாட்டு, படுத்து முதலிய சொற்கள், குற்றுகர வீற்றை மெய்யிறாகக் கொள்ளின் பாட்ட், படிப்ப், எனக்க், தாட்ட், படுத்த் என்ற முதல் வடிவங்களினின்று தோன்றினவாக வன்றோ கொள்ளல் வேண்டும்! இஃது எத்துணைப் பேதமையாகும்! மேலும், ஆட்டு, பாட்டு, கலக்கு, விலக்கு முதலிய பிறவினைகளும் தொழிற்பெயர்களும் முதனிலை யீற்று வலியிரட்டியும் முதனிலை யிடைமெலி வலித்தும் முறையே ஆடு, பாடு, கலங்கு விளங்கு என்னுஞ் சொற்களினின்று திரிந்திருக்கவும், அவற்றை ஆட்ட், பாட்ட், கலக்க், விளக்க் என்னும் வடிவங் களினின்று பிறந்தனவாகக் கொள்ளல் இளஞ்சிறாரும் எள்ளி நகையாடத் தக்க தொன்றன்றோ? ஒரு சில ஒலியடிச் சொற்களொழிந்த எல்லாச் சொற்களும் ஒரசையான வேர்ச் சொற்களினின்றே பிறந்தவை யாதலின், குற்றியலுகரத்தைமெய்யிறாகக் கொள் வாரெல்லாம் சொற்பிறப்பியலை எட்டுனையும் தாமறியாதிருத்தலைமுற்றுறக் காட்டுப வரேயாவர். குற்றுகாவீறு மெய்யீறாயின், அறுவகைக் குற்றியலுகரத் தொடர்களும் வல்லின மெய்யீற்றின வாதல் வேண்டும். “ஞணநம னயால வழள என்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி’ (தொல்.78); என்று தொல்காப்பியர் பிரிநிலை யேகாரங் கொடுத்துக் கூறினமையானும், குற்றுகரவீறு தமிழ்ச் சொல்லில் ஒரிடத்தும் மெய்யீறாக எழுதப்படாமை யானும், அஃதுண்மையன்மை வெள்ளிடைமலை. கண் + யாது – கண்ணியாது என்பது போன்றே சுக்கு + யாது – கக்கியாது என்று குற்றுகரமும் புணர்வதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொள்ளலாமே யெனின், கதவு+யாது – கதவியாது என்று முற்றுகரமும் அங்ங்ணம் புணர்வதால் அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு உகரவுயிரே தமி ழுக்கில்லை யென்றாகும் என்று கூறி விடுக்க. தொல்காப்பியர் மொழி மரபியலில், “உச்ச காரம் இருமொழிக் குரித்தே” (தொல்.75); “உப்ப காரம் ஒன்றென மொழிப் (தொல்.76); என்று வரையறுத்தது உக முக தபு என்னும் மூன்று முற்றுகர வீற்றுச் சொற்களையே யன்றிக் குற்றுகரவீற்றுச் சொற்களை யன்று. சு, பு என்னும் இரு முற்றுகர ஈறுகளைக் கொண்ட சொற்கள் எத்தனை என்று வரையறுப்பதே மேற்கூறிய நூற்பாக்களின் நோக்கம். கு, டு, து, று என்னும் நான்கு முற்றுகரவீற்றுச் சொற்களும் அறுவகைக் குற்றுகர விற்றுச் சொற்களும் அளவிறந்தன வாதலின், அவற்றை வரையறுத்திலர் தொல்காப்பியர். இகு உகு செகு தகு, தொகு, நகு. நெகு பகு. புகு மிகு வகு விகு எனக் குகாவீறும். அடு, இடு, உடு, எடு, ஒடு, கடு, கெடு, கொடு, சுடு தடு தொடு நடு நெடு நொடு படு பிடு மடு வடு விடு என டுகரவீறும் கொண்ட முற்றுகரவீற்றுச் சொற்கள் பெருந் தொகையினவாயும் எண் வரம்பு படாதனவாயு மிருத்தல் காண்க. பிற முற்றுகாவிற்றுச் சொற்களும் இங்ங்னமே, குற்றுகரவீற்றுச் சொற்களோ வெனின், அகராதிகளாலும் வரையறுக்கப்படாத பல்லாயிரக் கணக்கின. மேற்கூறிய நூற்பாக்களின் உரையில், “உகரத்தோடு கூடிய சகாரம் இரண்டு மொழிக்கே ஈறாம் என்றவாறு’ எ-டு : உசு. இஃது உளுவின் பெயர். முக, இது குரங்கினுள் ஒரு இனம், பசு என்பதோவெனின், அஃது ஆரியச் சிதைவு, கச்சு குச்சு என்றாற் போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய சகரம் இரு மொழிக்கு ஈறாமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம் பன்மொழிக்கு ஈறாமாயிற்று.” (தொல்.75. உரை); என்றும், “உகரத்தோடு கூடிய பகரம் ஒரு மொழிக்கல்லது பன்மொழிக்கு ஈறாகாதென்று கூறுவர் புலவர். “எ-டு : தபு என வரும். உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம், உகரத்தோடு கூடிய பகரம் ஒன்றெனவே ஏனையுயிர்களோடு கூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் ബ பொருள் தருமென்றாராயிற்று” (தொல்.76, உரை); என்றும் நச்சினார்க்கினியர் கூறியிருத்தலை நோக்குக. இதுகாறுங் கூறியவாற்றால், குற்றியலுகரம் உயிரீறே யென்றும், தொல்காப்பியர் ஒரிடத்தும் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டிலரென்றும் இயற்கையும் எளிமையும் தனிமையும் தாய்மையும் சான்ற தமிழியல்பை யறியாத ஆரியவழி யியலாரே தம் மொழியைப் போன்றே தமிழும் ஆரிய வழித்தென்று மயங்கி, தமிழை வடமொழி வழித்தாகக் காட்டக் கருதி அதற்கு முதற்படியாகக் குற்றுகர வீற்றை மெய்யிறாகக் கூறி யிடர்ப்பட்டுப் பின்பு அவ் விடர்ப்பாட்டினின்று நீங்கப் பண்டைத் தமிழ்ச் சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றனவென்றும், வலியிரட்டல் என ஒரு திரிவு முறையும் அரவு என ஒரு தொழிற்பெயர் ஈறு (விகுதி); இல்லையென்றும் சொல்லியல் நூலுக்கும் மொழிநூலுக்கும் முற்றும் மாறாகத் தத்தம் உளந் திரிந்தவாறே உரைப்பரென்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க. குற்றியலுகரம் மெய்யிரே என்று பெரும்புலவர் வேங்கடராசுலு எழுதியதற்குப் பாவாணர், அஃது உயிரீறுதான் என்று மெய்ப்பிக்கும் கூறுகள்: 1.”தொல்காப்பியர் கூறும் குற்றியலுகரத்துக்கும், நன்னூலார் கூறும் குற்றியலுகரத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. குற்றியலுகரத்தின் தன்மைபற்றித் தொல்காப்பியர் கூறும் கருத்துகள் இயற்கையோடு இயைந்தனவாக இருக்க நன்னூலார் கூறும் கருத்துக்களோ இயற்கையோடு பொருந்தாதனவாய் இருக்கின்றன.” தொல்காப்பியர் கூறும் குற்றியலுகரத்திற்கும் நன்னூலார் கூறும் குற்றியலுகரத்திற்கும், பெரிதும் வேறுபாடில்லை. “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்.” (164); என்று நன்னூலார் கூறியதே வேறுபட்டதும் வழுவுற்றதுமாகும். உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடாது அதற்கு (உயிருக்கு); இடந்தந்து உள்ளேயே அல்லது உடனேயே நிற்கும். பேய் கோட்பாட்டான் அல்லது தெய்வமேறினான் உயிர், முன்போல் உடனேயே நிற்கும். தொல்காப்பியர் குற்றியலுகரம் சொன் முதலிலும் வரும் என்று கூறிய கூற்றுதான் இயற்கைக்கும் உண்மைக்கும் முற்றும் மாறாகும். நன்னூலார் அங்ங்னம் கூறியிலர். “குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் ஒற்றி நகரமிசை நகரமொடு முதலும்” (எழுத்து.67); என்பது தொல்காப்பியம். சொன் முதலில் வரும் உகரத்தைக் குறுக்கியோ இதழ் குவியாதோ ஒலிக்கும் வழக்கம் தமிழருக்கு ஒரு காலத்தும் இல்லை. குற்றியலுகரத்தின் இயல்புகள் ஒலித்திரிபு ஒலிக்குறுக்கம் என இரண்டாகும். இவற்றுள் ஒலித்திரிபே மிக்கதாம். இதுபற்றிக் குற்றியலுகரத்திற்குச் “சாயும் உகரம்” (நன்.107);. என்று நன்னூலார் பெயரிட்டது மிகப் பாராட்டத் தக்கதாகும். இகரத்திற்கும் உகரத்திற்கும் இடைப்பட்டதே குற்றியலுகரம் அல்லது சாயுமுகரம். அதன் அளபு துல்லியமாய் அரையென்பது பொருந்தாது. ஆயினும், குறுக்கங்களையெல்லாம் செம்பாகமாய்க் கொள்ளும் மரபுபற்றி, முற்றுகரத்திற் சரிபாதி குற்றுகரம் எனக் கொள்ளப் பெறும். உண்மையில் அஃது அரையளபினும் சற்றுக் கூடியதாகும். நுந்தை யென்பதின் மறுவடிவான உந்தை யென்னுஞ் சொல்லோ உகப்பு, உங்கு, உச்சி, உஞ்சல், உணவு, உதவி, உப்பு, உம்பர், உயரம், உலக்கை, உவமை, உழவு, உள்ளம், உறவு, உன்னு முதலிய பிற உகர முதற் சொற்களோ நுகர், நுங்கு, நுகப்பு. நுடங்கு நுணா, நுதல், நும்பி, நுரை, நுவல், நுழை, நுள்ளான், நுறுங்கு, நுனி முதலிய பிற நுகர முதற்சொற்களோ எல்லாம் முதலெழுத்து முற்றுகரமாயொலிக்கும் பொழுது, நுந்தை யென்னும் சொல் முதல் மட்டும் எங்ங்னம் குற்றுகாமா யொலிக்கும்? அங்ங்ணம் ஒலிப்பார் இன்றொருவரும் இல்லையே! ஒரு கால் அவர் காலத்து ஆசிரியர் சிலர் அங்ங்னம் திரித்தொலித்தார் போலும்! தமிழர் அங்ங்ணம் ஒலியாமை கண்டே அவரும். “முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கின் நிலையிய லான” (எழுத்து. 68); என்று அதற்கு விலக்குங் கூறியுள்ளார். இந்நூற்பாவுக்கு, “காது, கட்டு, கத்து, முருக்கு, தெருட்டு என்பன முற்றுகரமுங் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற் போல, நுந்தையென்று, இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறிய விடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தா யென்பதோவெனின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான், இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொண்க இதனானே மொழிக்கு முதலா மெழுத்துத் தொண்ணுற்று நான்கென்று உணர்க.” என்பது நச்சினார்க்கினியர் விளக்கவுரை. இளம்பூரணர் கருத்தும் இதே. காது. கட்டு, கத்து முதலியன ஏவல் வினையும் தொழிற்பெயருமாய்ப் பொருள் வேறுபடுவது முற்றுகா குற்றுகர வேறுபாட்டினாலன்று ஒலியழுத்த (Accent); இடவேறுபாட்டினாலேயே, ஏவல் வினையாய் நிற்கும் பொழுது ஈற்றசையிலும், தொழிற்பெயராய் நிற்கும்பொழுது முதலசையிலும், ஒலியழுத்தம் விழும். இதைக் கட்டு என்று எவல் வினையாய் ஆளும் பொழுது டுகரத்தின் மேலும், கட்டுக் கட்டாய்க் கட்டினான் என்று வினைப் பெயராய் ஆளும்பொழுது ககரத்தின் மேலும், ஒலியழுத்தம் விழும். ஒலியழுத்தத்தினால் குற்றியலுகரம் இதழ் குவிந்தொலிக்கும் முற்றுகரமாகி விடாது. இதை ஒலித்துக் காண்க. “நுந்தாய் என்பதோவெனின், அஃது இதழ் குவித்தே கூற வேண்டுதலிற் குற்றுகரமன்று என்பது, நுந்தை என்பதும் அத்தகையதே யென்னும் கொள்கைக்கு ஒருவாறு துணைபுரிதல் காண்க. நன்னூலார் குற்றியலுகர வியல்பைத் தொல்காப்பியரினும் நன்குணர்ந்தவராதலின், அதை மொழிமுதலெழுத்துகளுள் ஒன்றாகக் கொண்டிலர். நன்னூ லுரையாசிரியர் மயிலைநாதர், “குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகர மிசை நகரமொடு முதலும்” என ஆசிரியர் தொல்காப்பியனார் இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாமென்றாரோ வெனின், “நுந்தை யுகரங் குறுகி மொழிமுதற்கண் வந்த தெனினுயிர்மெய் யாமனைத்தும் – சந்திக் குயிர்முதலா வந்தனையும் மெய்ப்புணர்ச்சி யின்றி மயலனையும் என்றதனை மாற்று” இவற்றை விரித்துரைத்து விதியும் விலக்கும் அறிந்து கொள்க. என்று உரைத்திருத்தலை நன்கு ஆய்ந்து தெளிக. 2.”நன்னூலார் மட்டுமல்லர். குற்றியலுகரம் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரைகண்ட இளம்பூரணர் நச்சினார்க்கினியர் ஆகியோரும் ஒரளவுக்குத் தொல்காப்பியர் கருத்தை நன்கு விளக்கினும், பெருமளவுக்கு உண்மைக்குப் பொருந்தா உரைகளே கூறினர்.” நன்னூலார் கூற்றுகள் ஒன்று தவிர ஏனைய வெல்லாம் உண்மைக்குப் பொருந்தியவை யென்பது மேற்கூறப் பெற்றது. இனியும் கூறப்பெறும். பெரு என்னும் குறிப்புப் பெயரெச்சம் வல்லின மெய்ம்முதலொடு புணரும் பொழுதே, பெருங்கதை, பெருஞ்சோறு, பெருந்தலை, பெரும்பானை என மகரவொற்று மிகும் உயிரொடு புணரின், பேரளவு, பேராவல், பேரிந்து, பேரூர் என அடி நீண்டே புணரும். பெருமை அளவு எனப் பண்புப் பெயரை நிலைச் சொல்லாக நிறுத்திப் புணர்ப்பதும் தவறு. 3.”குற்றியலுகரம் தனிமொழி இறுதியில் நிற்கும்போது அரை மாத்திரை பெறும் என்பதும், அது மெய்யிறு போலப் புள்ளி பெற்றும் வருமொழி உயிரேற இடங் கொடுத்தும் நிற்கும் என்பதும், அரைமாத்திரை அளவுள்ள குற்றுகரம் இயல்பானதே என்பதும் இடமும் பற்றுக்கோடும் காரணமாக ஒரு மாத்திரை அளவுள்ள முற்றுகரம் குறுகி அரைமாத்திரையாக விகாரப்பட்டு நின்றது அன்று என்பதும், அஃது உயிரிறுமன்று: மெய்யிறுமன்று அவ்விரண்டின் வேறுபட்டதான சார்பிறு என்பதும், தனிமொழி இறுதியில் அரை மாத்திரை பெற்று நிற்கும் குற்றுகரம் தொடர் மொழி இடைப்படும்போது ஒரு மாத்திரை பெறுகின்ற முற்றியலுகரமாக மாறிவிடும் என்பதும், ஆனால் நெறிவிலக்காக வருமொழி முதலில் உயிர் வரும்போது நிலைமொழி இறுதியில் நின்ற ஆறு தொடர்க் குற்றியலுகரமும், வருமொழி முதலில் வன்கணம் வருகின்றபோது நிலைமொழி இறுதியில் நின்ற வன்றொடர்க் குற்றியலுகரம் மட்டும் அரை மாத்திரை பெறும் முற்றுகரமாகவே நிற்கும்’ என்பதும் தொல்காப்பியர் கருத்துகளாகும். இவற்றுட் பல தொல்காப்பியர் கருத்துகளல்ல;புலவர் முதுகுன்றனா ருடையனவே. குற்றியலுகரமும், குற்றியலிகரமும் குறுகியொலிப்பவை யென்று காட்டுதற்கு அவற்றின்மேற் புள்ளியிடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றது. இதைத் தொல்காப்பியர், “அவற்றுள் மெய்யீ றெல்லாம் புள்ளியோடு நிலையல்” (எழுத்து.104); என்று நெறியிட்டபின், “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (எழுத்து.105); என்று மாட்டெறிந்ததினாலும், நூற்றொடக்கத்திலேயே, “அவைதாம் குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன” (எழுத்து.2); என்று சார்பெழுத்து மூன்றையும் “முப்பாற் புள்ளி யெனத் தொகுத்துப் பொதுப்படக் கூறியதனாலும், அறியப்படும். “முற்கூறிய இரண்டும் உம்மை தொக்கு நின்றன’ என்று நச்சினார்க்கினியரும். “குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எண்ணும்மை விகாரத்தால் தொக்கன என்று இளம்பூரணரும் உரைத்திருப்பது பொருந்தாது. உம்மை விரிந்து நிற்பினும் ஆசிரிய யாப்பு வழுவாமை யானும், விரிந்து நிற்பதே இன்னோசை பயத்தலானும், அவை உரையல்ல வென அறிக. உரையாயின், தொல்காப்பியம் முன்னொடு பின் முரண்படுதல் காண்க. “தொல்லை வடிவின எல்லா வெழுத்துமாண் டெய்தும் எகர ஒகரமெய்ப் புள்ளி நன்.43) என்னும் நூற்பாவுரையில், “ஆண்டு என்ற மிகையானே தாது ஏது என்றற் றொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு கொட்டு என்றற் றொடக்கத்துப் பொதுமொழிகளும், குன்றியாது நாடியாது, எட்டியாண்டுளது என்றற் றொடக்கத்துப் புணர்மொழிப் பொருள் வேறுபாடுகளும் அறிதற் பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற்புள்ளி கொடுப்பாரும் உளரெனக் கொள்க’ என்று மயிலைநாதர் அவர் காலத்தும் ஒரு சாராரிடை அவ் வழக்கமிருந்தாகக் கூறியிருப்பதும் காண்க. இனி, பழஞ்சேரநாடான மலையாள நாட்டின் தென்பாகத்தார், குற்றியலுகரத்தின் மேற்புள்ளியிட்டு எழுதி வருவதும் இங்குக் கவனிக்கத் தக்கது. இதனால், குற்றியலுகரம் புள்ளி பெறு மென்பதல்லது மெய்யிறென்பது பெறப்படாது. பெறப்படின், எகர ஒகர உயிர்களும் மெய்யெழுத் தென்றாகும். “மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்” (தொல்.எழுத்து.15); “எகர ஒகரத் தியற்கையும் அற்றே” (தொல்.எழுத்து.16); என்று தொல்காப்பியர் கூறுதல் காண்க. குற்றியலுகரம் குறுகியும் சாய்ந்தும் ஒலித்தலினாலேயே, வருஞ் சொன் முதலுயிரேற இடங்கொடுக்கும்;அதன் மெய்த்தன்மையினாலன்று. குற்றியலுகரம் இருக்கும் எழுத்து உயிர் மெய்யாதலின், அது உயிரி றென்பதை உணர்த்தற்கே. “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” (எழுத்து.105); என மாட்டெறிந்த பின், “உயிர்மெய் யிறும் உயிரீற் றியற்றே” (எழுத்து.106); என அதையடுத்தே கூறினார் தொல்காப்பியர். குற்றிய லுகரமெல்லாம் திரிபெழுத்தே அதனாலேயே அதனைச் சார்பெழுத்தென்றார் தொல்காப்பியர். சார்பென்பது பற்றுக்கோடே அது நிகழ்வது சொல்லிறுதியிலேயே, ஆதலால், இடமும் பற்றுக்கோடும் துணைக் கொண்டே குற்றியலுகரம் தோன்றும். அது தோன்றுமிடத்து முற்றியலுகரம் தோன்றாது. நெடுங்கணக்கில் உகரமே யன்றிச் குற்றியலுகரமில்லை. உகரஞ் சேர்ந்து கு,சு,டு,து,பு,று எனத் தனி யுயிர்மெய்கள் தோன்றுவது போல், குற்றியலுகரஞ் சேர்ந்து ஒரு தனி யுயிர்மெய்யுந் தோன்றாது. சொன் முதலிடையிலும், மெல்லின இடையின மெய்யூர்ந்தும் குற்றியலுகரம் தோன்றாது. ஆதலால், குற்றியலுகரம் இயல்பென்பது, நேர்நின்று காக்கை வெளிதென்பார் கூற்றே. அதற்குக் கட்கோளாறு அல்லது உட்கோளாறே கரணியமாகும். குற்றியலுகரத்தை நெடுங்கணக்கிற் சேர்த்துள்ள வடமொழியும், அதனை ரகர லகர மெய்களோடு சேர்த்தே ரு, லு என வழங்குகின்றது. குற்றியலுகரம் வடமொழியிலில்லை யென்று. பெரும்புலவர் வேங்கடராசுலு அவர்கள் தம் ‘இலக்கணக் கட்டுரைகள்’ என்னும் நூலிற் கூறியிருப்பது பொருந்தாது. வடமொழி பிற்காலத் திரிமொழியாதலின், சொல்லிடை நிகழும் அசையினைச் செயற்கை முறையிற் பிரித்தெடுத்து, தனி யெழுத்துகள் போற் காட்டி வருகின்றனர். அம். அ: என்பனவற்றிற்கு ஈதொக்கும். ரூ என்னும் நெடிலைக் குற்றுகர நீட்டமெனக் கொள்ளாது, சாயுமுகர நீட்டமெனக் கொள்ளல் வேண்டும். குற்றுகரம் தனிமொழி யிறுதியிற் போன்றே புணர்மொழியிடையும், குற்றுகரமாகவே நிற்கும். அதாவது, அரையளபாய்க் குறுகியும் இதழ் குவியாதும் ஒலிக்கும். அது புணர்மொழியிடை முற்றுகரமாய் மாறிவிடு மென்பது. குறளன் இருவரிடை நிற்பின் அளவனாய் விடுவான் என்பது போன்றதே. குற்றியலுகர இயல்பிற்கு எவ்வகையிலும் நெறியீட்டு விலக்கேயில்லை. வருஞ்சொன் முதலில் எவ்வெழுத்து வரினும், அதன் குற்றியலுகரத் தன்மை மாறாது. வலிமுதற் சொல் வருஞ்சொல்லாய் வரினோ. குற்றியலுகரம் மேலும் குன்றிக் கால் அளபாய் ஒலித்து நிற்கும். இது புலவர் முதுகுன்றனார் கொள்கைக்கு நேர்மாறாம். 4. குற்றியலுகரம் அரை மாத்திரை பெறுமென்பதும், ஒரு மாத்திரை உள்ள உகரமே இடமும் பற்றுக்கோடும் காரணமாக அாை மாத்திரையாகக் குறுகி ஒலிக்கும் என்பதும், அவ்வாறு அரைமாத்திரையாகக் குறுகி யொலிப்பினும் அஃது உயிரீறே என்பதும், வருமொழி முதலில் உயிர் வரும்போது நிலைமொழி இறுதியில் உள்ள குற்றியலுகரம் மெய்யைவிட்டு ஒடும் என்பதுமே நன்னூலார் கருத்துகளாகும்.” இங்குக் கூறப்பட்டுள்ள நன்னூலார் கருத்துகளுள் குற்றியலுகரம் உயிர் முதல் வருமொழி முன் மெய்விட்டோடும் என்னும் ஒன்றே தவறான தாகும். “குற்றிய லுகரமும் அற்றென மொழிப’ (புணரியல்.3); என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில், “இம் மாட்டேறு ஒரு புடைச்சேறல், புள்ளி பெறாமையின் அங்ஙனம் உயிரேறுங்காற் குற்றுகரங் கெட்டுப்போக நின்ற ஒற்றின்மேல் உயிரேறிற் றென்று கொள்ளற்க. நாகரிது’ என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடி நின்றல்லது அப்பொரு ஞணர்த்த லாகாமையின், இஃது உயிரோடுங் கூடிநிற்கு மென்றார்” என்று நச்சினார்க்கினியர் கூறியது. அந் நூற்பாவிற்குப் பொருந்தாதேனும், குற்றியலுகரம் கெடாது நின்றே உயிரொடு புணரும் என்னும் உண்மையை உணர்த்துவது கவனிக் கத்தக்கது. ஊணில்லை என்னும் புணர்மொழியில் நிலைமொழியீற்று ணகர மெய் எங்ங்ணம் கெடாது நிற்கின்றதோ, அங்ங்னமே உறவில்லை, உலகில்லை என்பவற்றுள்ளும் முறையே முற்றுகரமும் குற்றுகாமும் கெடாதே நிற்கும். இதை ஒலித்துக் காணலாம். ஆயின், சற்று எஃகுச் செவிவேண்டும். உறவ், உலக் என்னும் சொல்லின்மை, உறவு இல்லை, உலகு இல்லை என்னும் பொருளுண்மையும் அத் தொடரிடை உகாங் கெடாமைக்குச் சான்றாம். “குற்றிய லுகரமும் அற்றென மொழிப” என்னும் நூற்பாவிற்குக் குற்றியலுகரமும் மெய்யெழுத்துப் போற் புள்ளியிட்டெழுதப்படும் என்பதே போந்தவுரையாம். நச்சினார்க்கினியரது வேண்டாது கூறலும் வேறொன்று கூறலுமாகும். ‘புள்ளியோடு நிலையல்’ என்பதற்கு உயிரேற இடங்கொடுத்தல் என்று அவர் பொருள் கொண்டதே அதற்குக் கரணியாகும். குற்றியலுகரத்தின் சாயுந்தன்மையும் குறுக்கமுமே எனையுயிரோ இடந்தருமென வுணர்க. 5. தனிமொழி இறுதியில் அரை மாத்திரை பெறும் குற்றுகரத் தொடர் மொழி இடைப்படினும் அரை மாத்திரையே பெறும் என்பது நன்னூலார் கருத்து. ஆனால், “அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகரம் நிலையும்’ (தொல்.குற்றி.3); என்பது தொல்காப்பியம். அல்வழியைச் சொல்லு மிடத்தும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆறு ஒற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே முற்றுகரமாகி நிற்கும்” என்று இளம்பூரணர் இந் நூற்பாவிற்கு உரை யெழுதியுள்ளார். பேராசிரியரும் செய்யுளியல் 43 ஆம் நூற்பாவுரையில் இளம்பூரணர் கருத்தையே சார்ந்துரைத்துள்ளார். மேற்கூறிய நூற்பாவில் உகரம் நிறையும் என்பதற்கு வேறாக “உகரம் நிலையும் என்று பாடங் கொண்டு வேறுபட்ட பொருள் கூறினும், இதற்கு அடுத்த நூற்பாவுரையில் (குற்றியலுகரப் புணரியல்,4); இளம்பூரணர் கொண்ட நிறையும் என்ற பாடத்தையும், அவர் எழுதிய உரையினையும் எடுத்துக்காட்டி மறுக்காது போனமையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. செவி கருவியாக 3, ந்து பார்ச் ம்ெ ழுது நாகு என் ன் இறுதியில் வரும் குற்றுகரவோசை நாகுகடிது என்பதனுள் வாராது. ஒசை மிக்க ஒலிப்பது வெள்ளிடை மலையென விளங்கவும். நன்னூலார் முன்னுலாசிரியராகிய தொல்காப்பியரோடும், உரைகாரர்களோடும் தக்க காரணமின்றி மாறுபட்டுரைப்பது நமக்கு வியப்பாகவே உள்ளது.” சில செய்யுள்கட்கும் நூற்பாக்கட்குமுள்ள பாட வேறுபாடுகளுட் சிறந்ததைக் கண்டுபிடிப்பதே ஒரு சிறந்த புலமைத் திறனாகின்றது. பாட வேறுபாட்டினால் ஏற்படும் பொருள் வேறுபாடு ஆசிரியர் கருத்துக்கு நேர்மாறாகவும் நேர்ந்து விடுகின்றது. மன்னார்குடி நகராட்சிக் குடிதண்ணிர் குழாயொன்றின் மீது குடிதண்ணிக்கு மட்டும் என்று எழுதப்பட்டிருக்க வேண்டிய தொடர் எழுதினான் தவற்றால் ககரவொற்று விடப்பட்டு, தகையாற்ற வந்தாரெல்லாம் தவறாகப் பொருள் கொண்டு தண்ணி குடியாதுபோக நேர்ந்தது. “அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகரம் நிறையும்” என்னும் நூற்பா ஈற்றிலுள்ள நிறையும்” என்னும் பாடத்தினும், “நிலையும் என்னும் பாடமே சிறந்ததாகத் தெரிகின்றது. குற்றியலுகரம் மெய்யெழுத்துப் போல் அரையள பொலிக்குமென்றும் புள்ளி பெறுமென்றும் முன்னர்க் கூறப்பட்டதினால், புணர்ச்சியில் ஒரேவிடத்து மெய் கெடுதல் அல்லது திரிதல்போல் குற்றியலுகரமும் மெய்கெடுதலும் திரிதலுமுண்டோ வென்னும் ஐயம் நீக்குதற்கே எல்லா இறுதியும் உகரம் நிலையும்” எனக் கூற வேண்டியதாயிற்று. இளம்பூரணர் இன்று எழுதப் பெற்றுள்ள தொல்காப்பிய வுரையாசிரியருள் முதல்வர். எத்துறையிலும் முதன்முதல் எழுதப் பெற்றது குறைபாடுள்ளதாகவே யிருக்கும். இளம்பூரணர் புலமை அவர் பெயருக்கேற்ப இளநிறைவு பெற்றதே யென்பது “கொடிநிலை கந்தழி வள்ளி’ என்ற புறத்திணை நூற்பாவிற்கும் (33); “பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென் என்னும் களவியல் நூற்பாவிற்கும் (13);. அவர் கூறிய வுரையான் அறியப்படும். இளமையிலேயே நிறைவு பெற்றவர் என்பது அவர்க்கு ஏற்காது. பேராசிரியரும் “உகரம் நிறையும் என்று பாடங் கொள்ளத் தேவையில்லை. சிறுவர் சிலவகையிற் கணக்கிற் சேர்க்கப் பெற்றும் சிலவகையிற் சேர்க்கப் பெறாதும் போவதுபோல், குற்றியலுகரமும் சீர்நிலைக்கும் தளை வகைக்கும் எழுத்தெண்ணப் பெற்றும், ஐவகையடிகளின் பதினேழ் நிலைவகைக்கும் எழுத்தெண்ணப் பெறாதும், தொன்றுதொட்டு இயங்கி வந்திருக்கின்றது. தளைவகைக்கு எழுத்தெண்ணப் பெறாக்கால்.
|
நெடிலடி | நெடிலடி neḍilaḍi, பெ. (n.) ஐந்சீரான் வரும் அடி; line of five metrical feet. “ஐயொருசீர் நிறைதரு பாத நெடிலடியாம்” (யா.கா.12);. மறுவ. கட்டளை நெடிலடி [நெடில் + அடி] எ-டு : “மேக நாட்டிற்கும் விஞ்சையர் நாட்டிற்கும் விண்ணோர், மாக நாட்டிற்கும் மலரய னாட்டிற்கும் மற்றை, நாக நாட்டிற்கும் பாதல நாட்டிற்கும் நணுகிப்போக நாட்டிய பொன்மதில் ஆனதப் புரிசை”. (கந்தபுராணம்.); “மூவைந்தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப” (தொல், பொருள். என மூன்று நிலம் பெறும். (தொல்.பொருள். செய்.38.இளம்);. எ-டு : “கெஞ்சுவ தில்லை பிறர்பால் அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவ தில்லை;மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவ தில்லை;எனவே தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவ தில்லை;புவியில் எவரும் எதிர்நின்றே” (பெருஞ்சித்திரனார்); இது பதினைந்து எழுத்தாலாய நெடிலடி. “தேன்வந்த வாயிதழ்ச் சேயிழையாயிளஞ் செவ்விநவ்வி மான்வந்த வாள்விழி வஞ்சிக்கு நீதஞ்சை வாணன்வெற்பில் யான்வந்த வாசென் றியம்புதி யேலவர் யாவரென்னாள் தான்வந்த வாவுட னேநின்னை யாரத் தழிஇக்கொளுமே” (தஞ்சைவா.111); இது பதினாறு எழுத்தாலாய நெடிலடி. “புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின் அயலே பகம்பொற் கொடிநின்ற தால் வெள்ளை அன்னஞ் செந்நெல் வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே” (தஞ்சைவா.1); இது 17 எழுத்தாலான நெடிலடி. தொல்காப்பியர், குறளடி என்பது 4 எழுத்து முதல் ஆறு எழுத்து வரை இடங்கொண்டு வரும் என்றும், சிந்தடி ஏழு முதல் ஒன்பது எழுத்துவரையும். அளவடி பத்துமுதல் 14 எழுத்து வரையும், நெடிலடி 15 முதல் 17 எழுத்து வரையும், கழிநெடிலடி 18-20 எழுத்து வரையும் இடங்கொண்டு வரும் என்றார். ஒவ்வொரு சீரும் ஐந்தெழுத்தை மிகாது என்றும் கூறினர். இவ்வாறு எழுத்துகளை அளவாகத் தொல்காப்பியர் கூற யாப்பெருங்கலக் காரிகையோ இரண்டு சீர் குறளடி, மூன்று சிந்தடி, நான்கு அளவடி,ஐந்து நெடிலடி, ஆறுக்கு மேல் கழிநெடிலடி என்று சீர்கள் கணக்கில் அடியை வரையரை செய்கிறது. “குறளிரு சீரடி சிந்துமுச் சீரடி நாலொருசீர், அறைதரு காலை அளவொடு நேரடி ஐயொருசீர், நிறைதரு பாத நெடிலடி யாநெடு மென்பனைத்தோள், கறைகெழு வேற்கணல் லாய்மிக்க பாதங் கழிநெடிலே” (யா.கா.12); |
நெடிலா | நெடிலா neḍilā, பெ. (n.) சம்பங்கோரைப்புல்; small sedge grass – cyperus, rotundus (சா.அக.);. |
நெடிலி | நெடிலி neḍili, பெ. (n.) 1. கடற்பருந்து வகை (வின்.);; a large sea-heron. 2. புல்வகை (சங்.அக.);; a kind of grass. [நெடில் → நெடிலி. உருவத்தால் நீண்ட பருந்தையும் புல்லையும் குறித்தது.] |
நெடிலெதுகை | நெடிலெதுகை neḍiledugai, பெ. (n.) அடிதோறும் நெடிலெழுத்து எதுகையாய் வருவது; a kind of rhyme. [நெடில் + எதுகை] எ-டு : “போமாறு தலையசைப்பீர்” என்று சொன்னான் புதுமாறு தலைவேண்டும் ஒருவன் மீண்டும் ஏமாறு தலையடைந்தால் இந்த நாட்டின், எழில்மாறும்;புகழ்மாறும் என்றான்” “ஏடா லலங்கல் இலங்கிலை வேல்வெற்ப எழுலகும் வாடாமல் வந்தருள் வாணன்தென் மாறையில் வல்லியன்னான் சூடாள் குவளையு முல்லையஞ் சூட்டுஞ் சுனையும்பந்தும் ஆடாள் தனக்கென்கொ லோஅடி யேன்சென் றறிவிப்பதே” (தஞ்சைவா.110); “கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில்” (குறள்,1087);. “ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை” (குறள்,1059);. “யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” (குறள்,127);. “தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற் காமாங் கடைகாய் அடையின்வெண் பாவிற்கந் தங்கனியா வாமாண் கலையல்குல் மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர் நாமாண் புரைத்த அசைச்சீர்க் குதாரணம் நாள்மலரே” (யா.கா.7);. “மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக் காணாக்கா லாயிரமுஞ் சொல்லுவேன்-கண்டக்காற் பூணாகந் தாவென்று புல்லப் பெறுவேனோ நானோ டுடன்பிறந்த நான்” (முத்தொள்.44);. “பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஒராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே” (திருவாச.சிவபு:66-69);. “தாயாய் முலையைத் தருவானே தாரா தொழிந்தாற் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பி இனித்தான் நல்குதியே தாயே யென்றுன் தாளடைந்தேன் தயாநீ யென்பா லில்லையே நாயேன் அடிமை உடனாக ஆண்டாய் நான்தான் வேண்டாவோ.” (திருவாசஆனந்தமாலை.5);. “பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஒரா வினையேன் உழலத் தகுமோ? விரோ! முதுசூர் பட வேல் எறியும் சூரா கர்லோக துரந்தானே” (கந்தரனுபூதி);. “மாலோன் மருகனை மன்றாடிமைந்தனை வானவர்க்கு மேலான தேவனை, மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயல்பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ நாலாயிரம் கண்படைத்திலனே அந்த நான்முகனே” (கந்தாலங்காரம்);. “பூவே மணமே சரணஞ் சரணம் பொருளே யருளே சரணஞ் சரணம் கோவே குகனே சரணஞ் சரணம் குருவே திருவே சரணஞ் சரணம் தேவே தெளிவே சரணஞ் சரணம் சிவசண் முகனே சரணஞ் சரணம் காவே தருவே சரணஞ் சரணம் கந்தா சரணஞ் சரணஞ் சரணம்” (திருவருட்பா); “இரண்டாம் வழுவா எழுத்தொன்றின் எதுகை” என யாப்பெருங்கலக் காளிகை கூறும். இரண்டாமெழுத் தொன்றி வரத் தொடுப்பது எதுகை அடிதோறும் முதற் கண் இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுப்பது அடியெதுகை எனப்படும். எ-டு : “நாணாக் கால் பெண்மை நலனழியும் முன்னின்று காணாக்கால் கைவளையுஞ் சோருமால்” முத்தொள்.28). இரண்டாமெழுத்து ஒன்றிவரினும் முதலெழுத் தெல்லாம் தம்முள் ஒத்த அளவினவாய் வந்து நாணாக்கால் என்பதற்குக் காணாக்கால் என்பதல்லது கணாக்கால் என்பது எதுகையாகாது நாணாக்கால் என்பதற்குக் காணாக்கால் என்பதே எதுகையாம். இது அடிஎதுகை. ஒரடியில் உள்ள நான்கு சீர்க்கண் ஏற்படும் எதுகை வேறுபாடு (விகற்பம்);: 1. இணை எதுகை முதலிரு சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 2. பொழிப்பெதுகை : முதற்சீர்க் கண்ணும் மூன்றாஞ் சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 3. ஒரூஉ எதுகை : முதற்சீர்க்கண்ணும், இறுதிச் சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 4. கூழை எதுகை : முதல் மூன்று சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 5. மேற்கதுவாய்எதுகை : முதலயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. 6. கீழ்க்கதுவாய் எதுகை : ஈற்றயற்சீர்ககண் இன்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் எதுகை வரத் தொடுப்பது. 7. முற்று எதுகை : எல்லாச் சீர்க் கண்ணும் எதுகை வரத்தொடுப்பது. எ-டு : “பொன்னி னன்ன பொறிகணங்கேந்திப் (இணை எதுகை); பன்னருங் கோங்கின் நன்னலங் கவற்றி (பொழிப்பு); மின்னவி ரொளிவடந் தாங்கி மன்னிய (ஒருஉ); நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி (கூழை); என்னையு மிடுக்கண் துன்னுவித் தின்னடை (மேற்கதுவாய்); அன்ன மென்பெடை போலப் பன்மலர்க் (கீழ்க்கதுவாய்); கன்னியம் புன்னை யின்னிழல் துன்னிய (முற்று); மயிலேய் சாய லவ் வாணுதல் அயில்வேல் உண்கணெம் அறிவு தொலைத் தனவே” (யா.கா.); இப்பாடல் இணை எதுகை முதலிய ஏழு வேறுபாடும் (விகற்பமும்); வரத் தொடுக்கப்பட்டது. |
நெடில் | நெடில் neḍil, பெ. (n.) 1. நீளம் (திவா.);; length. 2. நெட்டெழுத்து; long vowel, opp to kuri. “குறிலே நெடிலே குறிலிணை” (தொல். பொருள்.315);. 3. மூங்கில் (பிங்.);; bamboo. “நெடில் படுத்த வெங்கானம்” (பாரத.வேத்.10);. 4. மிக்கது; that which is great or excessive. “நெடிற் கொடுங்கொலை” (இரகு.தேனு.104);. 5. நீளமானது; long. 6. பதினைந்து முதல் பதினேழெழுத்து வரை கொண்ட கட்டளை நெடிலடி; a kind of metrics. “மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப” (தொல். பொருள்.செய்.36);. 7. ஐஞ்சீரடி; line of five metrical feet. “அளவடி நெடிலடி நாற்சீ ரைஞ்சீர்” (யா.கா.24);. [நெடு → நெடில். குறிலை விட ஒரு மாத்திரை அளவு நீண்டு ஒலிக்கும் உயிரெழுத்து குறிலினது வேறுபாடே (விகாரமே); நெடில் (உ.சொ.க.);] |
நெடில்தொடர் | நெடில்தொடர் neḍiltoḍar, பெ. (n.) நெடிற்றொடர் பார்க்க;see negitrogar. [நெடில் + தொடர்] |
நெடில்தொடர்குற்றியலுகரம் | நெடில்தொடர்குற்றியலுகரம் neḍiltoḍarguṟṟiyalugaram, பெ. (n.) நெடிற்றொடர் குற்றியலுகரம் பார்க்க;see nedirrogarkurriyal-ugaram. [நெடில் + தொடர் + குற்றியலுகரம்.] |
நெடு | நெடு1 neḍuttal, 4.செ.கு.வி. (v.i.) 1. காலம், பொழுது முதலியன நீளுதல்; to be long, as time. 2. மழை முதலியன விடாது தொடர்தல்; to continue, as rain. மழை நெடுநேரம் பெய்தது. 3. நெட்டையாதல்; to become tall. நெடுக்க வளர்ந்து விட்டான். [நீள் → நீடு → நெடு → நெடு-த்தல்.] நெடு2 neḍu, பெ. எ. (adj.) 1. நீண்ட; long. “வேனெடுங் கண்கள்” (சீவக.1951);. 2. பெரிய; big. “புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை” (பு.வெ.9:2, கொளு);. 3. பெருமை பெற்ற; great. “நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்” (மணிமே.10:93);. 4. ஆழமான; deep. “நெடும்புனலுள் வெல்லும் முதலை, அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற” (குறள்,495);. 5. உயரமான; high. “நெற் கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே” (கம்பர் தனிப்பாடல்);, 6.மிகுந்த; much, excessive. ” நெடுமிடல்சாய” (பதிற்றுப்.32:10);. 7. நீண்ட கால நெடும்பகை (உ.வ.);; long cherished enmity. 8. காலந் தாழ்க்கும்; delay. “நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்” (குறள் 605);. 9. புகழ்ச்சியான; praise. “மாராயம் பெற்ற நெடுமொழி யானும்” (தொல்பொருள். புறத்.8);. கோத. நெற்னெற்ண்; துட. நோற், நோறி; க. நிடு நிட்டு; து. நிடி, நிடு, நிடுப்ப;தெ. நிடு, நிடுட நிடிவி, நிடுபு. [நூல்(நீட்சி); → நெல் → நெள் → நெடு (வே.க.);] |
நெடுக | நெடுக neḍuga, வி.எ. (adv.) 1. நீளமாக; lengthwise, longitudinally. நெடுக வளர்ந்த மரம். ஊர்வலம் செல்லும் பாதை நெடுக மக்கள் நின்றிருந்தனர். காணாமல் போன குடையை வழி நெடுகத் தேடினான். 2. நேராகத் தொடர்ந்து; straight on. நெடுகப்போ. 3. முழுத் தொலைவும்; whole distance. [நெடு → நெடுகு → நெடுக] |
நெடுகதல் | நெடுகதல் neḍugadal, பெ. (n.) 1. இறப்பு; dying. 2. உயருகை; heightening. 3. நீளுகை; lengthening. 4. காணாமற் போகை; disappearing. (சா.அக.);. [நெடு → நெடுகதல்] |
நெடுகப்பிடி | நெடுகப்பிடி1 neḍugappiḍittal, 4.செ.கு.வி. (v.i.) 1. மழை முதலியன விடாது தொடர்தல் (உ.வ.);; to continue, as rain. மழைவிடாது நெடுகப் பிடித்துக் கொண்டது. 2. தங்காமற் செல்லுதல் (வின்.);; to pass on without stopping. இந்த வண்டியை நெடுப் பிடித்துக் கொண்டு சென்று கொண்டே இரு. 3. மிகுகாலம் இல்லாதிருத்தல் (வின்.);; to be long delayed, as rain. 4. காலம் பிடித்தல் (வின்.);; to occupy or take up time. [நெடுக + பிடி-த்தல்.] நெடுகப்பிடி2 neḍugappiḍittal, 4.செ.குன்றாவி. (v.t.) 1. நீளமாகப் பிடித்தல் (வின்.);; to stretch or hold a thing at full length. 2. பொருளை அழித்தல் (யாழ்ப்.);; to waste away, as property. 3. பேச்சு முதலியவற்றை விரித்தல் (வின்.);; to protract, as speech, action. மாநாட்டில் நெடுகப் பிடித்துத் தலைவர் உரை செய்தார். [நெடுக + பிடி-த்தல்.] |
நெடுகலும் | நெடுகலும் neḍugalum, கு.வி.எ. (adv.) 1. எப்பொழுதும் (உ.வ.);; continually, constantly, all day long. 2. நீளத்திலே; lengthwise. வயலை நெடுகலும் அளந்தான். 3. காலம் முழுவதும்; whole time. நெடுகலும் களவாடியே வந்திருக்கின்றான் (உ.வ.);. [நெடுக → நெடுகல் → நெடுகலும் (வே.க.);] |
நெடுகல் | நெடுகல் neḍugal, பெ. (n.) 1. நீளுகை; growing long, lengthening. 2. உயர்கை; souring in height. (சா.அக.);. [நெடுக → நெடுகல்] |
நெடுகவிடு-தல் | நெடுகவிடு-தல் neḍugaviḍudal, 18 செ. குன்றாவி. (v.t.) 1. நீளமாக விடுதல்; to let out, as a cord; to veer. அந்தக் கயிற்றை நெடுகவிடு. 2. தள்ளி வைத்தல்(வின்.);; to put off. [நெடு → நெடுக + விடு-தல்.] |
நெடுகினகாரியம் | நெடுகினகாரியம் neḍugiṉagāriyam, பெ. (n.) 1. விடாவேலை; protracted, tedious, wearisome business. 2. கடுமையான செயல்; desperate matter. [நெடு → நெடுகின + காரியம். கரு → கார் → காரியம். கருத்தல் = செய்தல். காரியம் → வ. கார்ய.] |
நெடுகிலும் | நெடுகிலும் neḍugilum, கு.வி.எ. (adv.) நெடுகலும் (உ.வ.); பார்க்க;see medபgalum. பாதை நெடுகிலும் படை குவிக்கப் பட்டிருந்தது. [நெடு → நெடுகிலும்] |
நெடுகு-தல் | நெடுகு-தல் neḍugudal, 5.செ.கு.வி. (v.i.) 1. நீளுதல்; to extend, to be lengthened to grow tall, high or long. “உம்பர் பொதிர்த்திட நெடுகு மூக்க மானும்” (தணிகைப்பு.நாட்116);. 2. காலத் தாழ்வாதல்; to be protracted delayed. 3. காணாமற் போதல் (யாழ்ப்);; to run away, to disappear, as things lent or lost. 4. சாதல் (யாழ்ப்.);; to die. 5. ஓங்கி வளர்தல்; grow in high. 6. நீடித்தல்; lengthen time, distance, etc. [நெடு → நெடுகு → நெடுகு-தல்(வே.க.);] |
நெடுக்கம் | நெடுக்கம் neḍukkam, பெ. (n.) நெடுமை; extension. ம. நெடுக்கம். [நெடுகு → நெடுக்கு + அம்] |
நெடுக்கு | நெடுக்கு neḍukku, பெ. (n.) 1. நீட்சி (இ.வ.);; extension. 2. நீளவாட்டு; length, as of a wall. நெடுக்குச் சுவர். [நெடு → நெடுக்கு] |
நெடுக்குச் சால் | நெடுக்குச் சால் neḍukkuccāl, பெ.(n.) நீள வாக்கில் செய்யும் உழவு (வவவேக31);:tiling the land lengthwise. மறுவ நெடுஞ்சால் [நெடுக்கு+சால்] |
நெடுக்குச்சுவர் | நெடுக்குச்சுவர் neḍukkuccuvar, பெ. (n.) நீளவாட்டுச்சுவர் (வின்.);; lengthwise wall, opp. to kurukku-c-cuvar. வீட்டின் குறுக்கே நெடுக்குச் சுவர் கட்டவேண்டும். [நெடுக்கு + சுவர்] |
நெடுக்குமரம் | நெடுக்குமரம் neḍukkumaram, பெ. (n.) வாசற்கால் கதவுச்சட்டம் முதலியவற்றின் பக்கவடம் (இ.வ.);; longitudinal frame, as of a door. வாசக்காலுக்கு நெடுக்கு மரம் சார்த்த வேண்டும். [நெடுக்கு + மரம்] |
நெடுங்கடலோடு-தல் | நெடுங்கடலோடு-தல் neḍuṅgaḍalōḍudal, 5.செ.கு.வி. (v.i.) கரையோரமாய்க் கப்பல் செல்லுதல் (வின்.);; to coast, sail along the coast. [நெடுங்கடல் + ஓடு-. ஓடுதல் = நீர் முதலியன ஒடுதல், பிளத்தல், நீங்குதல், கலம் செல்லுதல்.] |
நெடுங்கடல் | நெடுங்கடல் neḍuṅgaḍal, பெ. (n.) 1. கரையடுத்த கடல் (யாழ்.அக.);; the sea adjoining a shore. 2. பெரிய கடல்; big sea. “நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்” (குறள்,17);. நெடுங்கடல் ஒடியும் நிலையே கல்வி (பழ.);. [நெடு → நெடும் + கடல்] |
நெடுங்கடை | நெடுங்கடை neḍuṅgaḍai, பெ. (n.) 1. பெரிய வாயில்; lofty gateway. “புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை” (பு.வெ.9:2. கொளு);. “நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு”. (சிலப்.10:8);. “நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல்” (புறநா.69:17);. “யாமஇரவின் நெடுங்கடை நின்று” (அகநா.208:1);. “நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி” (கலித்.79:21);. 2. பால்கணி; portico. [நெடும் + கடை. கடை = இடம், வாயில்] |
நெடுங்கடை | நெடுங்கடை neḍuṅgaḍai, பெ. (n.) 1. பெரிய வாயில்; lofty gateway. “புரவல னெடுங்கடை குறுகிய வென்னிலை” (பு.வெ.9:2. கொளு);. “நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு”. (சிலப்.10:8);. “நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல்” (புறநா.69:17);. “யாமஇரவின் நெடுங்கடை நின்று” (அகநா.208:1);. “நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி” (கலித்.79:21);. 2. பால்கணி; portico. [நெடும் + கடை. கடை = இடம், வாயில்] |
நெடுங்கணக்கு | நெடுங்கணக்கு neḍuṅgaṇakku, பெ. (n.) 1. அரிச்சுவடி (தொல்.எழுத்து.94, உரை);; alphabet. ஒவறு நெடுங்கணக் கோதிடுஞ்சிறார் (சேதுபு.கந்தமா.75);. நெடுங்கணக்குப் பொத்தகம் ஒன்று வாங்கி வா. 2. நெடுநாட்கணக்கு (வின்.);; a long account or reckoning. அவன் கணக்கு நெடுங்கணக்கு. 3. வாராக் கடன் (வின்.);; bad debt. அவன் கடனை நெடுங்கணக்கில் வை. [நெடும் + கணக்கு. கணக்கு = எழுத்து.] |
நெடுங்கணக்கு | நெடுங்கணக்கு neḍuṅgaṇakku, பெ. (n.) 1. அரிச்சுவடி (தொல்.எழுத்து.94, உரை);; alphabet. “ஒவறு நெடுங்கணக் கோதிடுஞ்சிறார்” (சேதுபு.கந்தமா.75);. நெடுங்கணக்குப் பொத்தகம் ஒன்று வாங்கி வா. 2. நெடுநாட்கணக்கு (வின்.);; a long account or reckoning. அவன் கணக்கு நெடுங்கணக்கு. 3. வாராக் கடன் (வின்.);; bad debt. அவன் கடனை நெடுங்கணக்கில் வை. [நெடும் + கணக்கு. கணக்கு = எழுத்து.] நெடுங்கணக்கு : கணக்கு என்னும் பலபொருளொரு சொல்லுக்கு இங்கு எழுத்தென்று பொருளாகும். நெடுங்கணக்கு என்பது தமி ழெழுத்துகளுக்கு வழங்கும் பெயர். தமிழெத்துகள் முதல், சார்பென இரு வகைப்படும். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆக முப்பதும் முதலெழுத்துகள். சார்பெழுத்துகள் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என மூன்றெனத் தொல்காப்பியம் கூறும். நன்னூல் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபடை, குற்றியலிகாம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என சார்பு எழுத்துப் பத்து வகையென்றும் இவற்றின் தொகை 369 என்றும் கூறும். உயிரெழுத்துத் தனித்தியங்கக்கூடியது. மெய்யெழுத்து உயிரின் துணை கொண்டே இயங்கும். “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்” என்பர் தொல்காப்பியர். (தொல் எழுத்து.46);. உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய அ.இ.உ,எ,ஒ என்னும் ஐந்தும் குறில் எனப்பெறும். நீண்ட ஒசையை யுடைய ஆ.ஈ.ஊ.எ.ஐ.ஒ.ஒள என்னும் எழும் நெடில் எனப்பெறும். மெய்யெழுத்துகளில் வல்லோசையுடைய க, ச,ட,த,ப, ற என்பவை வல்லெழுத்துகள். மெல்லோசையுடைய ங்,ளு,ன.ந.ம,ன என்பவை மெல்லெழுத்துகள். ய, ர, ல, வ, ழ, ள என்பவை இரண்டுமல்லா இடைநிகரன. ஆகையால், இடையெழுத்துகள் எனப்பெறும். முதலெழுத்துக் களாகிய இம்முப்பதும் ஒன்றையும் சாராமல் தாமே வழங்குவன. குற்றியலிகரம், குற்றியலுகரம் என்பவை உயிரெழுத்தின் குறுக்கங்களே ஆகையால் சார் பெழுத்தெனப் பெற்றன. ஆய்தம் குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே வரும் எழுத்தாகையால் சார்பெழுத்தெனப் பெற்றது. தொல்காப்பியர் கொள்ளாத மற்றைய சார்பெழுத்து களும் பயின்று வருதல் நோக்கி நன்னூலாசிரியராற் கொள்ளப் பெற்றன எனினும் அவை அத்துணைச் சிறப்படைய அல்ல. உயிரெழுத்துச் சிறப்புக் கருதி முன் வைக்கப் பெற்றது. அவற்றுள்ளுங் குறிலது வேறுபாடே நெடிலாதலால் முதலிற் குறிலும் பிறகு நெடிலுமாக வைக்கப்பெற்றன. மெய் உயிரின் துணையால் இயங்குவதால், உயிருக்குப்பின் வைக்கப் பெற்றது. அவற்றுள், வலியார் மெலியார்க்கு முன் நிற்பது போல, வல்லெழுத்துக்கள் அவற்றிறிற்கினமான மெலலெழுத்துகளுக்கு முதலில் நின்றன. இவற்றைச் சார்ந்து வருவன ஆதலாற் சார்பெழுத்துகள் பின் வைக்கப்பெற்றன. (கலைக்களஞ்சியம்); க் + அ = க-உயிர்மெய் உருவாதல் தமிழில் தொன்மையில் இருந்தமையும், கிரேக்க-இலத்தீன் இனமொழியான புரோகிருதம், சமற்கிருதம் தமிழைப் பார்த்து பெற்றமையும் பாவாணர் குறிக்கிறார். இன்னும் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் உயிர்மெய் இன்மையால் குழந்தையர் கற்கக்கடிதாதல் காண்க. ஒரு மொழியிலுள்ள அரிவளி நிறைவுள்ள தில்லதென் றறிதற்கு, அம்மொழியிலுள்ள ஒலிகளையெல்லாம் குறித்தற்கு வரிகளுண்டா என்று காண்டல் வேண்டும். தமிழில் அதன் ஒலிகளையெல்லாம் குறித்தற்குப் போதிய வரிகளுண்டென்றே சொல்ல வேண்டும். மெய்யெழுத்துகளில் சிலவற்றிற்கு ஈரொலியும் சிலவற்றிற்கு மூவொலியு முள. எ-டு: க_1. க், க்கா K (வலிய ககரம்);. 2. உலகு, அகம் என்னும் சொற்களில் மெல்லிய ககரம். ககரத்திற்கும் ஆய்தத்திற்கும் இடைத்தா ஒலி. 3. தங்கம் என்னும் சொல்லில் போன்ற தொனிப்போலி (voiced letter); ஙகரத்தை யடுத்த ககரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும். ச_1. ச், ச்ச ch (வலிய சகரம்);. 2. சட்டி, சட்டை என்னும் சொற்களில் s போன்ற மெல்லிய ஒலி. 3. பசி, கசி என்னும் சொற்களில் s அல்லது ஸ் போன்ற மெல்லிய ஒலி. 4. பஞ்சம் என்னும் சொல்லில் J போன்ற தொனிப்பொலி. ஞகரத்தை யடுத்த சகரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும். ஞ – 1. ஞ், ஏறத்தாழ ய்ங் போன்ற ஒலி 2. மஞ்சள் என்னும் சொல்லில் n போன்ற ஒலி. ட-1, ட், ட்ட போன்ற வல்லொலி ட், போன்ற தொனிப்பொலி. டகரம் உயிர்மெய்யாய்த் தனித்து வரும்போதெல்லாம் தொனித்தே ஒலிக்கும். த_1. த், த்த, போன்ற வல்லொலி. தட்டை, தண்ணிர் முதலிய சொற்களிலுள்ள தகரமும் வலித்தே ஒலிக்கும். 2. விந்தை, மதி முதலிய சொற்களில் d போன்ற தொனிப்பொலி. நகர மெய்யை அடுத்துவரும் தகரமெல்லாம் தொனித்தே ஒலிக்கும். ப_1. பப், ப்ப வல்லொலி. 2. கம்பம், பண்பு. அன்பு, மரபு முதலிய சொற்களில் போன்ற தொனிப்பொலி, ம், ண், ன் என்ற மெய்களை யடுத்துவரும் பகரம் தொனித்தே யொலிக்கும். ற – 1. ற, ற், வலிய றகரம் (Hard or trilled r); 2. ற்ற, t போன்ற வல்லொலி. 3. கன்று என்னும் சொல்லில் (candle என்னும் சொல்லிலுள்ள); d போன்ற மெல்லிய டகரம். னகரமெய்யை அடுத்து வரும் போதெல்லாம் றகரம் இங்ங்னமே ஒலிக்கும். றகரம் இரட்டிக்கும்போது இரண்டு மிசைந்து போல ஒரே யொலியா யொலிக்கும் னகர மெய்யை அடுத்துவரும்போது இரண்டு மிசைந்து. nd போல ஒலிக்கும். இதையறியாத ஆங்கிலரும், ஆங்கில வழித் தமிழறிஞரும், வெற்றி என்பதை வென்றி என்றும் வென்றி என்பதை வெற்றி என்றும் பிழைபட உச்சரிப்பர். எழுத்துகள் இடமும் சார்பும் பற்றிப் பற்பல வகைய ஒலிப்பதைக் குறித்தே. “எடுத்தல் படுத்தல் நலித லுழப்பின் திரிபும் தத்தமிற் சிறிதுள வாகும்” (நன்.); என்றார் பவணந்தியார். இங்ங்ணம் ஒரெழுத்தே பற்பல வகையாக ஒலிக்கினும், எவ்விடத்தில் எவ்வொலியென் றறிய ஏதும் இடர்ப்பாடில்லை. எனென்றால் ஒவ்வோ ரொலியும் இயல்பாகவே இடமும் சார்பும்பற்றி வெவ்வேறொலியாய் ஒலிக்கின்றது. தமி ழருள் எவர் பேசினும் இவ்வியல்பு மாறுவதின்று. பேசும்போது மட்டுமன்றி ஒரு நூலை வாசிக்கும்போதும் இவ்வியல்பு மாறுவதின்று. இதைக் கால்டுவெல் கண்காணியாரும் தமது ஒப்பியல் நூலிற் குறித்துள்ளார். இயல்பாகவும் எளிதாகவும் இருக்கிற தமிழ் மொழியைப் போன்றே. அதன் எழுத்து முறையும் இயல்பாகவும் எளிதாகவு மிருக்கவேண்டி நம் நுண்மாண் நுழைபுல முன்னை யாசிரியர் ஒரு வரியானேயே பல ஒலிகளைக் குறிப்பித்தனர். என்னே! அவர் அறிவின் மாண்பு! இனி, தமிழிலுள்ள இசையும் குறிப்பும்பற்றிய பல்வகை யொலிகளையுங் குறிக்க வரியில்லை யென்னலாம். எ-டு : கும் கும் (gum gum); மதங்கத் (மிருதங்கத் தொனி. உஸ் – நாயை உஸ் காட்டல் அல்லது வேட்டை மேல் எவல். ஜல்ஜல் – தொடரி (சலங்கை); யொலி. ஜம் – பெருமிதத் (கம்பீரத் தோற்றக் குறிப்பு. இஸ்லஸ் – ezzz பாம்பு, வண்டு முதலியவற்றின் இரைச்சல். உஷ (ush-hush அமைத்தற் குறிப்பு. இவையெல்லாம் எழுத்து முறைக் கேலாத புறவொலிகளாகக் கொண்டனரேயன்றி, பொருண் மொழிக்கு வேண்டும் எழுத்தொலி களாகக் கொண்டில ரென்க. அற்றேல் பிற மொழிகளில் இவ்வொலிகளைக் கொண்டதென்னை யெனின், அவையெல்லாம் செயற்கை மொழிகளாதலின் அவற்றுக்குக் கொள்ளப்பட்டன வென்றும், அவற்றுள்ளும் முற்கு, விளை, கனைப்பு. கத்து, அழுகை, தும்மல் முதலிய ஒலிகளையெல்லாம் குறிக்க வரியில்லை யென்றும், எல்லா ஒலிகளையும் குறிக்க வரியுள்ள மொழி உலகத்தில் ஒன்றுமேயில்லை யென்றும் கூறி விடுக்க. எ, ஒ, ழ, ற என்ற ஒலிகள் வடமொழிக்கில்லை. ஆகையால் ஒட்டெலும்பு என்பதை ஒட்டேலும்பு என்றும், வாழைப்பழ வற்றல் என்பதை வாலபல வர்ரல் என்று மல்லவோ எழுத வேண்டும்? ஞ, ண, ழ, ள என்ற ஒலிகள் ஆங்கிலத்திற் கில்லை. இவ்வொலிகள் வருகின்ற சொற்களை எங்ங்னம் ஆங்கிலத்தில் எழுத முடியும்? கண்ணியைக் கன்னியென்றும் மூளையை மூலையென்று மல்லவோ எழுத வேண்டும்? ஆங்கிலத்தில் உள்ள 2 முதலிய ஒலிகள் எத்துணையோ ஒலிகளையுடைய வடமொழிக்கும் இல்லையே! இங்ங்ணம் ஒவ்வொரு மொழிக்கும் சில சிறப்பெழுத்துகளிருப்பதால், ஒரு மொழிச் சிறப்பெழுத்துச் சொற்களைப் பிறமொழியி லெழுத வொண்ணாதாகும். இதை யறியாத வடமொழி வாணன் ஒருவன். ஒரு தமிழனை நோக்கிச் சகஸ்திரதளாம்புஜம் என்பதைத் தமிழில் எழுதுக என்று பழித்தானாம். பின்பு வாழைப்பழ வற்றல் என்பதை வடமொழியில் எழுதுக என்று தமிழன் சொன்னதும் விழித்தானாம். ஆகையால் ஒரு மொழிச் சிறப்பெழுத்துச் சொற்களை இன்னொரு மொழியில் வேறுபாடின்றி (விகாரமின்றி); யெழுத வொண்ணா தென்றும், எல்லா மொழிச் சொற்களையும் தற்சமமாக எழுதும் மொழி உலகத்தே ஒன்று மில்லையென்றும் தெரிந்துகொள்க. இதை யறியாதார் F தமிழில் இல்லையென்றும், ஜ தமிழிலில்லை யென்றும், இன்னோரன்ன எழுத்துக் களைப் புதிதாய்ச் சேர்த்தல் வேண்டுமென்றும் ஒல மிட்டுத் திரிவர். உலக முழுமைக்கும் பொதுமொழியாய் வந்து கொண்டிருக்கின்ற ஆங்கிலத்தில் எனைமொழிச் சிறப்பெழுத்துகளைச் சேர்க்கக் காரணமிருப்பினும். எவரேனும் ஞ, ண, ழ, ள எழுத்துகளை ஆங்கிலத்தில் சேர்க்க வேண்டு மென்று கூறின துண்டா? அன்றி. மிக நிறைவுள்ள தாகக் கருதப்படும் வடமொழி யரிவரியை இன்னும் நிறைவாக்க வேண்டி எ, ஒ, ழ, ற என்ற எழுத்துகளைச் சேர்க்க வேண்டுமென்று. எவரேனும் கூறினதுண்டா? இவரெல்லாம் அமைந்திருக்கவும் தமிழ்ர்மட்டும் முனைந்து நிற்பதேன்? இதனானேயே பிறர்க்குத் தாய்மொழிப் பற்றுள தென்றும் தமிழர்க்கில தென்றும் விளங்குகின்றதே! ஒரு மொழியின் அரிவரி அம் மொழி யொலிகட்கு மட்டும் அமைந்ததா? பிறமொழி யொலிகட்கும் அமைந்ததா? ஒருமொழி யளிவரியால் அம்மொழிச் சொற்களை மட்டும் எழுதாது, பிறமொழிச் சொற்களை எழுதி நகைப்பது பெரும் பேதைமை யாகும். ஒரு மொழிக்கு அதிலுள்ள ஒலிகளை யெல்லாம் குறிக்க வரியின்றெனின் அதுவே உண்மையான குறையாகும். தமிழில் ஒவ்வோரொலிக்கும் ஒவ்வொரு வரியுண்டு. உலகமொழிக ளெல்லாவற்றின் அரிவரிகளையும் ஒவ்வொன்றாய் உற்று நோக்கின், தமிழரிவளியே பிற மொழிகள் அழுக்கறுமாறு அத்தனை நிரம்பினதும் வரம்பினதுமா யிருக்கின்றது. உயிரெழுத்துக்கள் பன்னிரண்டிற்கும் தனித்தனி வரியுள்ளது. குறில் குறிலாகவும் நெடில் நெடிலாகவும் உச்சரிக்கப் படும். மெய்யெழுத்துகள் எல்லா மொழிகட்கும் பொதுவாக இயற்கையான எளிய வொலிகள் பத்தொன்பதே. g ககரத்தின் பேதமும், s சகரத்தின் பேதமுமின்றித் தனியொலிக ளாகா. ஆங்கிலத்தில் 5வரிகளால் 18 20 Nesfield); உயிர்ஒலிகளைக் குறிப்பிடுகின்றனர். ஒரொலிக்குப் பல வரியும், ஒரு வரிக்குப் பல வொலியுமுள்ளன. Cg x (ks w என்பன மிகை வரிகள். ங்ing);, ஷ(sh);, தth);, 2h என்னும் ஒலிகளைக் குறிக்கத் தனி வரியில்லை, இணைவரி(digraphகளே. அரபி மொழியில் எ. ய என்னும் ஈரொலிகட்கு ஒரே வரியும் ஒ, வ என்னும் ஈரொலிகட்கு ஒரே வரியும் உள்ளன. தமிழில் ஒரு வரி பலவொலிப் பேதங்களைக் குறிப்பினும் அப்பேதங்கள் இடமும் சார்பும் பற்றி இயற்கையாலேயே தோன்றுவதால் வேண்டாத வரிகளைப் பெருக்கி நம்மை வருத்தியிலர் நம் முன்னோர். இனி, இசை விளி புலம்பல் ஆதியில், எழுத்துகள் எத்துணையும் நீண்டொலிப்பதைக் குறிக்கத் தமிழில் இருவகை யளபெடைகளுள. பிற மொழி கட்கிவையில்லை. வடமொழியில் உயிரளபெடையே யுண்டு. ஒற்றளபெடையில்லை. தமிழில் வரிகள் எளிதாய் விளங்குமாறு வெவ்வேறு வடிவாயுள்ளன. ஒள என்பதிலுள்ள ள வடிவைச் சிறிதாயெழுதாதது அச்சுவார்ப்பார் குற்றமேயன்றி எழுத்தாசிரியர் குற்றமன்று. தெலுங்கு அரபி, சமற்கிருதம் முதலிய மொழிகளில் மாணவர் மயங்குமாறு பல வரிகள் ஏறத்தாழ ஒரே வடிவா யுள்ளன. தமிழ் வரிகள் ஆங்கில வரிகள்போல மிக நுண்ணிய ‘Diamond, Briant); வடிவிலு மெழுதப்படும். சமற்கிருதம், அரபி, தெலுங்கு முதலியவற்றின் வரிகள் அத்துணை நுணுக்கியெழுத இடந்தரா. இதனாலேயே சமற்கிருத வெழுத்துகளைக் கூட்டெழுத்து (சம்யுக்தாகூடிரம்); களாக எழுதுவர். இனி, உயிரொலியும் மெய்யொலியும் உயிரும் மெய்யும் (life and body); கூடிய உயிர்மெய் (பிராணி); போல ஒன்றி ஒலிப்பது உயிர்மெய் வரிகளாற் குறிக்கப்பட்டது. உயிர், மெய், உயிர்மெய் முதலிய குறியீடுகள் தமிழரின் தத்துவவறிவை யுணர்த்தும். உயிர்மெய் வரிகளால் ஒலி நூலறிவும் வரிச்சுருக்கமும் பயனாம். தமிழ் அரிவளியில் உயிர் முன்னும் மெய் பின்னும் ஆய்தம் இடையும், உயிருள் குறில் முன்னும் நெடில் பின்னும், மெய்யுள் வலி முன்னும் மெலி பின்னும் இடை இடையும் வைக்கப்பட்டன. உயிர்மெய் வரியும் எழுத்து முறையும் தமிழுக்கே சிறப்பாகும். இந்திய மொழிகட்கெல்லாம் இவை பிற்காலத்தே தமிழைப் பின்பற்றியேற்பட்டன. அரபி, கிப்ரு முதலிய சேமியக் (semic); கவைமொழிகள் எல்லாவற்றிற்கும், சமற்கிருத மொழிந்த ஆரியக் கவைமொழிகள் எல்லா வற்றிற்கும் இவையில்லை. எழுத்துகள் ஆங்கிலத்தில் போல உயிரும் மெய்யும் வேறு வேறு அடுத்தடுத் தெழுதப்படுவதுடன், அரிவரியில் உயிரும் மெய்யும் முறையின்றி மயங்கிக் கிடக்கும். ஆரியமும் சேமி யமுமாகிய மேலை மொழிகட்கெல்லாம் உயிர்மெய் வடிவும், எழுத்து முறையும் இல்லாதிருக்கவும். சமற்கிருதத்திற்குமட்டும் அவை எங்ங்னம் மிருந்திருத்தல் கூடும். சமற்கிருதத்திற்கு அவை இருந்தனவெனின், அதன் இனமாகிய செருமன், டச்சு, கிரேக்கு, இலத்தீன் முதலிய மொழிகட்கும். அவற்றை அடுத்து வழங்கும் சேமிய மொழிகட்கும் என் அவையில்லை? வடமொழி ஆரியர் இந்தியாவிற்கு வந்தது கி.மு.3000. அவர் வருகைக்கு முன்னரே தமி ழில் எழுத்திருந்தது. அவ்வெழுத்துகள் உயிர்மெய் நீங்கலாக 31. ஒலிமுறையினும் சொன்முறையினும் தமிழுக்கு அடுத்துள்ள கிரேக்க, இலத்தீன் மொழிகளில் முறையே எழுத்துகள் 24, 25 வடமொழியில் 48, இலத்தீன் எழுத்துகள் 24 என்றும், 23 என்றும் கணக்கிடுவதுமுண்டு. தமிழிலில்லாத சில செயற்கை யொலிகள் இலத்தீன், கிரேக்கு மொழிகளிலுள. ஆனால், அவற்றிற் பலவற்றிற்குத் தனி வரிகள் இல்லை. BG முதலிய தொனிப்பொலிகட்குத் தனி வரியுள. bh, gh முதலிய மூச்சொலி சேர்ந்த தொனிப்பொலிகட்குத் தனிவரியில்லை. சமற் கிருதத்தில் அவற்றிற்கெல்லாம் தனிவரி யுண்டு. அதோடு ஞ, ண முதலிய தமிழ் எழுத்து களும் சேர்க்கப்பட்டுள. மேலை மொழிகட்கும் தமிழுக்குமுள்ள எழுத்துகளிற் பெரும்பாலன வற்றிற்குத் தனிவரி யமைத்து வடமொழி யெழுத்துகளைப் பெருக்கிக் காட்டினார் வடமொழிவாணர். க, ச, ட, த, ப என்று தமிழ் முறையில் வல்லின மெய்யெழுத்து தொனிப்பதும், k, kh, g gh என ஒவ்வொரு வல்லின மெய்யும் தொனிப்பதும், தொனியாததும், மூச்சொலி சேர்ந்ததும் சேராததுமாக நந்நான்காக உறழப்பட்டிருப்பதும், சமற்கிருதத்தின் செயற்கை யான எழுத்துப் பெருக்கைக் காட்டும். சமற்கிருதம், கிரேக்க இலத்தீன் மொழிகளின் திரிபு அல்லது வளர்ச்சி யென்பதற்குப் பல ஆதாரங் களுள. கிரேக்க இலத்தீன் மொழிகள் ஆரிய மொழிகளில் மிகப் பழைமையானவை. கிரேக்க இலத்தீன் எழுத்துகளினும் சமற்கிருத எழுத்துகள் மிகுதி. கிரேக்க இலத்தீனிலுள்ள பல சொற்கள் சமற்கிருதத்தில் மிகத் திரிந்துள்ளன. சமற்கிருதம் என்னும் பெயருக்கே நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். உலகத்திலுள்ள மொழிகள் எல்லா வற்றினும் எழுத்துப் பெருக்கமும் செயற்கையொலிப் பெருக்கமுள்ளது சமற்கிருமொன்றே. அதனானேயே அது வழக்கற் றொழிந்தது. வடமொழி யெழுத்துகளை 48 ஆகப் பெருக்கி யிருப்பினும், ஒலி முறைப்படி பார்ப்பின், அவற்றில் புனரொலிகள் அல்லது கூட்டெழுத்துகள் பலவாகும். ‘ரு’, ‘லு என்பவை குற்றியலுகரம் சேர்ந்த ரகர லகரங்களாகும். ‘ரு’ என்பது ரு என்பதன் நீட்டம். ‘அம் என்பது அம் என்னும் அசை. அகர உயிரும் மகாமெய்யும் சேர்ந்தது. இவை உயிர்மெய்களும் அசையுமாக இருந்தும் உயிரெழுத்துகளிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எ, ஒ என்ற உயிர்கள் வடமொழிக்கில்லாதது ஒரு பெருங் குறையாகும். மெய்யெழுத்துகளில் ஐ வருக்கத்தில் h சேர்ந்த எழுத்து களெல்லாம் இரட்டை யெழுத்துகளாகும். சந்தியக்கரங்கள் சில தனியெழுத்துகள் போற் காட்டப்படும். இதனால் வடமொழி யெழுத்துப் பெருக்கினால் ஒரு சிறப்புமில்லை யென்க. வடமொழி ஆரியர் இந்தியாவிற்கு வந்த பின்னரே உயிர்மெய் வரியும் எழுத்துமுறையும் வடமொழிக்கு ஏற்பட்டன. வடமொழி வரிகள் தென்மொழி வரிகளின் திரிபே என்பது இருமொழி வரிகளையும் ஒப்பு நோக்குவார்க்கு இனிது புலனாம் வடமொழி யளிவளி யேற்பட்ட பின் அதையொட்டி அதன் கிளைமொழிகட்கும் பின்பு தமிழ்க் கிளைமொழி கட்கும் அரிவரிகள் ஏற்பட்டன. இதனால் பார்சி அரபி வரிகளைக் கொண்ட இந்துத்தானி யொழிந்த ஏனை யிந்திய மொழிகட்கெல்லாம் உயிர்மெய் வரியும் எழுத்துமுறையும் ஏற்பட்டுள. ஆதியில் எனைய மொழிகட்கெல்லா மில்லாது உயிர்மெய் வரிகள் தமிழுக் கிருந்ததினாலேயே, அதன் அரிவரி நீண்டு நெடுங்கணக்கெனப்பட்டது ஏற்கெனவே நெடுங்கணக்கா யிருக்கும் அரிவரியை (செந்தமிழ்ப் புரவலர் உமாமகேசுவரம் பிள்ளைய வர்கள் கூறியபடி); இன்னும் நெடுங்கணக்காக்க நினைப்பது என்னே பேதைமை! இனி, ஒரு மொழிக்கு நிரம்பின அரிவரி யிருப்பினும், பிறமொழிச் சொற்களை அதில் மொழி பெயர்க்கப் போதிய சொற்களுளவா என்று பார்த்தல் வேண்டும். இலவெனின் பிறமொழிச் சொற்களையும் பிறமொழி யெழுத்துகளையும் அதிற் புதிதாய்ச் சேர்க்க இடமுண்டு. தமிழில் எல்லாப் பொருள் களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள. ஆதலின் பிறமொழிச் சொற்களை யேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று. பொருள்களின் சிறப்புப் பெயர் (Proper Name); களே எழுத்துப் பெயர்ப்பிற்கும் Transliteration); தற்பவத்திற்கும் இடமாகும். இதற்குப் பிறமொழி யெழுத்துகள் வேண்டுவவல்ல. தமிழில் இயன்றதுணை எழுதுதல் தகும். ஏதேனுங் குறையிருப்பின் அது எல்லா மொழிகட்கும் பொது வாகும். இதற்கென்றே தமிழிற் புத்தெழுத்துகளைச் சேர்ப்பின் தமிழின் தூய்மையும் இயல்பும் எளிமையும் இனிமையும் கெடும். அங்ங்ணம் தமிழைக் கெடுத்து வழங்குவதினும். அதை விட்டுவிட்டு அயன் மொழியை வழங்குவதே சாலச் சிறந்ததாம். அதனாற் புத்தெழுத்துகளைத் தமிழிற் புகுத்த வேண்டும் என்னும் பொருந்தாக் கூற்றைப் புறத்தே விடுக்க. -“செந்தமிழ்ச் செல்வி நளி-பாவாணர் 1934 தமிழ் உலக முதல் உயர்தனிச் செம்மொழி. இவ் வுண்மையை முன்னமே ஒரு பழம்பெரும் புலவர் கண்டு, “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்” என்று தெள்ளத் தெளிவாகப் பாடிவைத்திருக் கின்றார். இது உண்மை நவிற்சியே யன்றி உயர்வு நவிற்சியன்று. குமரிமுனைக்குத் தெற்கே மடகாசுக்கர்த் தீவுவரை பரவியிருந்த பழம்பாண்டி நாடான குமரிக்கண்டம் முழுதும் மூவேறு கடல்கோள்காளால் முழுகிப் போனமையாலும், முதலிரு கழகப் பல்துறையிலக்கிய விலக்கணப் புலவியமனைத்தும் இயற்கையாலுஞ் செயற்கையாலும் அழியுண்ட மையாலும், தமிழின் தொன்மையை ஆழ்ந்த மொழியாராய்ச்சியின்றி அறியவியலாவாறு, மொழியொழிந்த பிற சான்றுகளெல்லாம் முற்றும் இறந்து பட்டன என்பதை இற்றைத் தமிழ்ப் புலவர் முதற்கண் அறிதல் வேண்டும். ஆகவே, தொல்பொருட் கலை Archaeology) ஆரியர் வருகைக்கு முற்பட்ட பழந்தமி ழக வரலாற்றிற்குப் பயன்படா தென்பதைத் தமிழ்நாட்டு வரலாற்றுத் துறைத் தலைவரும் கல்வெட்டுத் துறைத் தலைவரும் தொல் பொருளாராய்ச்சித் துறைத் தலைவரும் அறிதல் வேண்டும். தமிழ் தென்னாட்டு மொழியா நண்ணிலக் கடற்கரை மொழியா என்றும், குமரிநில மொழியா இற்றைநில மொழியா என்றும், திரவிட மொழிகட்குத் தாயா உடன்பிறப்பா என்றும், ஆரிய மொழிக் குடும்பத்திற்கு மூலமாக வுள்ளதா இல்லதா என்றும், தமிழன் பிறந்தகமும் மாந்தன் பிறந்தகமும் ஒன்றா வேறா என்றும், மொழி நூல் வரலாறு மாந்தனுல் ஆகிய முத்துறையிலும், நடுநிலை யுடனும், பொறுமையுடனும் நீண்டகால ஆராய்ச்சி செய்தாலன்றி தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமை முதலிய தன்மைகளை முற்றும் அறியமுடியாது. தொல்காப்பியம், முதலிரு கழகமும் இருந்த பழம் பாண்டிநாடு முழுதும் முழுகிய பின்பும், ஆரியப் பூசாரியர் தென்னாடு வந்து ஆரியச் சொற்களும் கருத்துகளும் தமிழிலக்கியத்திற் புகத் தொடங்கிய பின்பும், வைகை மதுரையும் கடைக்கழகமும் தோன்றுமுன் கி.மு.7 ஆம் நூற்றாண்டில், பாண்டியன் வயப்பட்ட தென் சேர நாட்டில் தோன்றிய பன்மாண் சார்பிற் சார்பான தொகுப்பு நூலாதலின், அதனையே முதனூலாகக் கொண்டு அது தோன்றிய காலமே தமிழிலக்கியப் பொற்காலமென்று கூறுவது, ஒரு பெருங்கோவிலின் திருவுண்ணாழிகையையும் இடை மண்டபத்தையும் முகமண்டபத்தையும் பாராது. கொடிக்கம்பத்தடியிலுள்ள சிற்றுருவத்தையே கோயிற் படிமையாகக் கருதித் தொழுவது போன்றதே. “செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்” என்று பனம்பாரனார் கூறியதும்: “எழுத்தெனப் படுப………. முப்பஃ தென்ப” என்று எழுத்ததிகாரத் தொடக்கத்திலும், “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்று சொல்லதிகாரத் தொடக்கத்திலும், “கைக்கிளை முதலா.எழுதிணை யென்ப” “அகத்தினை மருங்கின் அரில்தபவுணர்ந்தோர் ………………… திறம்படக் கிளப்பின்’ “நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென. வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே” “மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்’ என்று முறையே பொருளதிகார அகத்திணையியல் புறத்திணையியல் செய்யுளியல் மரபியல் தொடக்கத்திலும், கூறியதோடு, நூல் நெடுகிலும் செய்யுளியல் மரபியல் தொடக்கத்திலும், கூறியதோடு, நூல் நெடுகலும் “என்மனார் புலவர்”, “என மொழிப” , “வரையார்”, “என்ப உணருமோரே”, “என்ப சிறந்திசி னோரே” , “என்மனார் புலமை யோரே”, “எனமொழிப உணர்ந்திசி னோரே”, “கிளப்ப” , “என்றிசி னோரே” என்றும் பிறவாறும் அடிக்கடி இடையிடை தொல்காப்பியர் கூறிச் செல்வதும் தொல்காப்பியம் தொகுப்பு நூலேயன்றிப் புதிய வகுப்பு நூலன்று என்பதைத் தெளிவாகக் காட்டும். மேலும், தொல்காப்பியம் நன்னூலும் அட்டாத்யாயி என்னும் பாணினியமும் போல எழுத்துஞ் சொல்லும் மட்டுங் கூறாது. தமிழுக்கே சிறப்பாகவுள்ள யாப்பணி யுட்கொண்ட தொல்வரவுப் பொருளி லக்கணமுங் கூறுதலின், அதனாலும் அது தொல்காப்பியர் புதுப்படைப் பன்றென்பது வெள்ளிடை மலையாம். வடசொற் கலப்பும் சில ஆரியக் கொள்கைகளும் பற்றிய கூற்றுகளே தொல் காப்பியரின் புதுச் சேர்க்கையாகும். இதை யறியாத சில தமிழாசிரியர். தொல்காப்பியர் தாமே தமிழ் எழுத்திலக்கணத்தைத் திறம்பட வகுத்துக் கூறியதாக அவரைப் போற்றியுரைத்துத் தம் ஆராய்ச்சி யின்மையைப் புலப்படுத்துவர். பொருளிலக்கண மரபு குமரிநிலைத் தமிழரின் தினைநிலை வாழ்க்கைச் செய்திகளைப் போற்றிக் காத்துவருவதால், அவ்வகையிலேயே தொல்காப்பியம் பழந்தமிழ் வரலாற்றாராய்ச்சிக்குப் பயன் படுவதாகின்றது. இங்ங்னமே, புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை. புறப்பொருள் வெண்பாமாலை முதலிய சில பாத்தொகை களிலும் வனப்புகளிலும் இலக்கண நூல்களிலும் உள்ள குறிப்புகளும் பயன்படுகின்றன. ஆராய்ச்சி யென்பது எல்லாருஞ் செய்யக்கூடிய எளியசெயலன்று. மதிநுட்பம், பரந்தகல்வி, நடுநிலை, அஞ்சாமை, தன்னலமின்மை, மெய்யறி யவா என்னும் ஆறும் ஆராய்ச்சியாளர்க்கு இன்றியமையாத பண்புகளாகும். உலகத்திலுள்ள மூவாயிரம் மொழிகளுள், தமிழைப் போன்று அடிமுதல் முடிவரை தருக்கப் பொருளாக விருப்பது வேறொன்றுமில்லை. பண்டை ஆரியர் பூசாரியர், தம் போன்றே தம் வழியினரும் காலமெல்லாம் தமிழரை அடிப்படுத்தி மேனத்தாக வாழ்தற் பொருட்டு, தம்மை நிலத் தேவரென்றும் தமிழ் வழிப்பட்ட தம் இலக்கிய மொழியைத் தேவமொழியென்றும் கூறி மூவேந்தரையும் ஏமாற்றித் தமிழரே தம் இனத்தைப் பகைக்கவும் தம் மொழியைப் புறக்கணிக்கவும் குமுகாயத் துறையிலும் இலக்கியத் துறையிலும் வழிவகுத்து வைத்திருக்கின்றனர். பிறமொழி யெழுத்துகள் எகிபதிய கமேரிய நாகரிகத் தோற்றம் கி.மு.3000 ஆண்டுகட்கு முற்பட்டது. எகிபதிய எழுத்து முதற்கண் படவெழுத்து (Pictograph);;பின்னர்க் கருத்தெழுத்து (Ideograph or logograph); கமேரிய நாகரிக வழிப்பட்ட சேமிய வெழுத்து முதற்கண் அசையெழுத்து (Syllabary கி.மு.2000);;பின்னர் ஒலியெழுத்து (Alphabet கி.மு.1500);. கிரேக்கர் சேமிய ஒலியெழுத்தைப் பினிசிய (Phoenician); வணிகர் வாயிலாகக் கற்றுத் தமக்கேற்றவாறு திருத்திக்கொண்டதாகச் சொல்லப் படுகின்றது. கிரேக்க எழுத்தினின்று இலத்தீன் எழுத்தும். இலத்தீன் எழுத்தினின்று ஆங்கிலம் முதலிய பிற ஐரோப்பிய மொழி யெழுத்துகளும் அமைந்துள்ளன. கிரேக்க எழுத்துகள் அல்பா (Alpha);, பேற்றா (Beta என்று தொடங்குவதால், அவ் வண்ணமலை அல்பாபேற்று (Alphabet); எனப் பெயர் பெற்றது. இது தமிழில் உலக வழக்கில் அஅன்ன ஆவன்னா (அ. ஆ. அவ்வா); என்று வழங்குவது போன்றது. கிரேக்க வண்ணமாலை முதற்கண் A (short and long); B. G. D. E (short);, W, Z E (song);, TH 1 (short and long);, KLMNXO (short);, PRS, TU (short and long);, PH, KH, PS. O (long); என்னும் 25 எழுத்துகளைக் கொண்டிருந்தது. பின்னர்த் திகம்மா (Digamma); என்னும் W நீக்கப்பட்டது. இலத்தீன் வண்ணமாலை, முதற்கண் a, b, c, d, e, f, g, h, i, k, l, m, n, o, p, q, r, s, t, u, x என்னும் 21 எழுத்துகளைக் கொண்டிருந்தது. பின்னர் j, v, y, z என்னும் 4 எழுத்துகள் சேர்க்கப்பட்டன. கிரேக்க எழுத்துகளுட் பலவற்றின் வடிவம் வேறு. அவற்றை இங்குக் காட்டலாகாமையால் ஆங்கில வடிவிற் குறிக்கப்பட்டுள்ளன. சீன எழுத்து கி.மு.1000 ஆண்டுகட்கு முற்பட்டது. அது 4000 கருத்தெழுத்துகளைக் கொண்டது. சப்பானியர் கி.பி.5ஆம் 6ஆம் நூற்றாண்டுகளில் சீனக் கருத்தெழுத்துகளைக் கடன் கொண்டனர். அவை ஐயாயிரமாகப் பெருகி ஈராயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளன. சொற்களின் முதனிலை களைக் குறிக்கக் கருத்தெழுத்துகளும், ஈறுகளைக் குறிக்க ‘இரகன’ (Hiragana);, ‘கற்றகன’ (Katakana); என்னும் இருவகை அசையெழுத்துகளும் கையாளப்படுகின்றன வென்றும், இதனால் சப்பானிய மாணவன் 1500 சீனக் கருத்தெழுத்துகளையும் (ஏறத்தாழ 100); இருவகை அசையெழுத்துகளையும் கற்க வேண்டியுள்ள தென்றும், பாடுமேர் (Bodmer); கூறுகின்றார். (The Loom of Languages, p.438);. அரபி யிலக்கியம் கி.பி.6 ஆம் நூற்றாண்டில் தொடங்கிற்று. அதன் எழுத்தும் அக்காலத்ததே. அது 28 எழுத்துகளைக் கொண்டது. அவற்றுள் ஒன்று அ (Fatha);, இ (Kasra);, உ (Damma); என்னும் முக்குறிற்கும் பொதுவான குறி. வகரவெழுத்து உகரத்தையும் யகரவெழுத்து இகரத்தையும் இடத்திற்கேற்ப உணர்த்தும். இருவேறு குறிகள் சேர்ந்து ஆ, ஈ, ஊ என்னும் நெடில்களைக் குறிக்கும். சில இணைப்பெழுத்துகளும் (Ligatures); உண்டு. அரபிக்கு இனமான எபிரேய இலக்கியம் கி.மு.12 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. அது 22 எழுத்துகளைக் கொண்டது. உயிரொலிகளை யுணர்த்தும் முறையில் அது அரபியொத்ததே. அவ்விரு மொழிகளின் வண்ணமாலைகளும் வெவ்வேறு வடிவுகொண்டனவேனும், கிரேக்கத்தைப் போன்று கானானிய மூலப் பினிசிய வண்ணமாலையினின்று திரிந்தவையே. தமிழின் தொன்மை கி.மு.2000 ஆண்டுகட்கு முற்பட்ட ஊர் எனும் பாபிலோனிய நகரகழ்வில், கி.மு.3000 ஆண்டுகட்குமுன் சேரநாட்டினின்று எற்றுமதி செய்யப்பட்ட தேக்குமர உத்தரம் கண்டெடுக்கப் பட்டுளளது. ஊர் என்பது நகர் என்று பொருள்படும் அக்கேடியச் (Akkadian); சொல். அதுவே பண்டைத் தமி ழகத்தில் மருதநில நகரைக் குறித்த பொதுச்சொல். அப் பாபிலோனிய நகரிற் பிறந்து வளர்ந்த ஆபிரகாமின் பெயர், அப்பன் என்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவான ஆப் என்பதை நிலைச் சொல்லாகக் கொண்டது. அவனே அரபியர்க்கும் இசரவேலர்க்கும் பொதுவான முன்னோன். அவன் காலத்தில் அவ் விரினத்தாரும் தோன்றவே யில்லை. ஆகவே, அரபியும் எபிரேயமுமான அவர் மொழிகளுந் தோன்றவில்லை. ஆபிரகாம் பேசின மொழி அக்கேடியன். தமிழர் தோற்றமும் பரவலும் குமரிநாட்டு மக்கள் தமிழின் வெவ்வேறு நிலையில் வெவ்வேறு திசை சென்று பரவியுள்ளனர். தமிழின் முச்சுட்டுகளினின்று தோன்றிய மூவிடப் பெயர்கள் ஒரு காலத்தில் குமரிநாட்டு மக்களொடு ஆத்திரேலியர்க்கும் சீனருக்கும் இருந்த உறவைக் காட்டுகின்றன. (கால்டுவெல் திரவிட ஒப்பியல் இலக்கணம், சென்னைப் பதிப்பு 361 ஆம் பக்கம்.); எ-டு தமிழ் ஆத்திரேலியம் ஏன், யான், நான் nga, ngali, ngatsa, nganya நீன். நீ ninna, nginne, ngintoa, ningte நீம், நீயிர், நீவிர், நீர் nimedoo, nura, niwā, ngurle தமிழ் சீனம் நான், நாம் ngowo, woměn நீன், நீ, நீம் ni, nimėn தான், தாம் ta, tamén நகரம் ஞகர மகரமாகவும், மகரம் வகரமாகவும், திரிதல் இயல்பே. தன்மைப் பன்மைப் பெயர் ஆங்கிலத்தில் we என்றும் வடமொழியில் வயம் என்றும் திரிந்திருத்தல் காண்க. ‘மேன்’ (men); என்பது சீனத்தில் வகுப்பைக் குறிக்கும் தொகுதிப் பெயர். அது மன் என்னும் தென்சொல்லோடு தொடர்புடையதாயிருக்கலாம். மன் – மன்று – மந்து – மந்தை. மன்னுதல் = கூடுதல், மிகுதல், பெருத்தல். ஐம்பாற் படர்க்கைச் சுட்டுப் பெயர்கள் தோன்றுமுன் தான் தாம் என்பன படர்க்கைச் சுட்டுப் பெயர்களாகவே யிருந்தன. பர் (Dr (N. இலாகோவாரி (Lahovary); தம் ‘திரவிடத் தோற்றமும் மேற்கும்” (Dravidian Origins and the West); என்னும் ஒப்பியன் மொழி நூலில், தமிழொடு தொடர்புள்ள மேலையாசிய மேலையைரோப்பிய இடப் பெயர்கள், பூதப் பெயர்கள், மக்கட் பெயர்கள், உறவுப் பெயர்கள் பல்வகை உயிரினப் பெயர்கள், நிலைமைப் பெயர்கள், பல்வேறு வினைச்சொற்கள், பெயரெச்சங்கள் முதலிய நூற்றுக்கணக்கான சொற்களின் மூலத்தை அறியாது, அவற்றைத் தம் கொள்கைக்குச் சான்றுபோல் எடுத்துக் காட்டி, உண்மையில் தம் கொள்கையைத் தாமே மறுத்திருக்கின்றார். எ-டு : மல்=வளம், மல்=மல்லல்=வளம். “மல்லல் வளனே” (தொல்.உரி.7);. மல்-மலை=இயற்கை வளம் மிக்கது. “வறப்பினும் வளந்தரும் வண்மையும் மலைக்கே” (நன்.பாயி:28);. இப்பொருளை மேலை மொழிகளிற் காண முடியாது. இங்ஙனமே ஏனையவும். Compare Cymri (Wales);. “It is stated that the original home of the Cymry, Cumri or Cymry was in Southern Hindustan the Southern extremity of which Cape Comorin, takes the name from the same root” – From a Historical Souvenir issued on the occasion of the meeting of the British Medical Association at Swanesa. – 1903-Editors. A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Langauges. Third Edition, Introduction p. foot-note பேரா. V.R. இராமச்சந்திர தீட்சிதரின், origin and Spread of the Tamils. Pre-Historic South India என்னும் வரலாற்று நூல்களைப் பார்க்க. தமிழன் பிறந்தகமே மாந்தன் பிறந்தகம் “ஏதேன் தோட்டத்தை மாந்தன் பிறந்தகத்தை மடகாசுக்கர்த் தீவின் பாங்கர்க் காணவேண்டும்” என்பது எக்கேல் (Ernest Haeckel); on fog);. History of Creation. கென்யாவிற் (Kenya); கண்டெடுக்கப்பட்ட மாந்தன் மண்டையோடு இதுவரை கண்டவற்றுள் மிகப் பழைமையானதாயிருக்கலாம் என்பது, இலிக்கி (Richard Leakey); என்னும் ஆங்கில மாந்தனுலா ராய்ச்சியாளர் கருத்து. மடகாசுக்கர் மட்டத்திற் சற்றுக் கிழக்கே தள்ளியிருந்ததே தமிழன் பிறந்தகம். “பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி’ (சிலப்.11:19-22); தமிழ் எழுத்துத் தோற்றக் காலம் தலைக்கழகத் தோற்றம் கி.மு.10,000 ஆண்டுகட்கு முந்தியது. அதற்குமுன் மூவதிகார இலக்கணமும் வகுக்கக் கால்நூற்றாண்டேனுஞ் சென்றிருத்தல் வேண்டும். இலக்கணத்திற்கு முன் பல்துறை இலக்கியம் தோன்ற அரை நூற்றாண்டு சென்றிருக்கும். அதற்குரிய எழுத்துத் தொகுதி அல்லது வண்ணமாலை, படவெழுத்து கருத்தெழுத்து, அசையெழுத்து, ஒலியெழுத்து என்னும் நால்நிலை கடந்து திருந்திய நிலைபெறக் கால் நூற்றாண்டாயிருக்கும். இலக்கிய விலக்கணப் புலவியல் பனையேட்டில் எழுத்தாணி கொண்டு கழித்துக் கீச்சி எழுதப்பட்டது. ஏட்டின் இடப்பக்கம் (அடிப்பக்கம்); அகன்றும் வலப்பக்கம் நுனிப்பக்கம்); சிறுத்தும் இருப்பதனால், இடம் வலமாக எழுதப்பட்டது. பட்டவன் பீடு கல்லிலும், வேந்தன் பட்டயம் கல்லிலும் செமி பிலும், பொறிக்கப்பட்டன, ஏட்டெழுத்து வளைகோடும் வெட்டெழுத்து நேர்கோடும் மிக்கிருப்பதே இயற்கை. உயிரும் மெய்யும் மட்டும் உள்ள வண்ணமாலை குறுங்கணக்கு என்றும், உயிர்மெய்யொடுங் கூடியது நெடுங்கணக்கு என்றும், பெயர் பெற்றன. பிறநாட்டு வண்ணமாலைகளெல்லாம் குறுங்கணக்கே. அதோடு உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், வலி, மெலி, இடை என்னும் வரிசையொழுங்கும் பிறப்பியல் முறையும் இல்லாது ஒன்றோடொன்று கலந்திருப்பன. உலகில் முதன்முதல் உயிர்மெய்யோடு கூடியதும். “எண்பெயர் முறைபிறப் புருவம் மாத்திரை முதலீ றிடைநிலை போலியென் னகமும் கிளவி புணர்ச்சி யெனுமிரு புறமும்.” (நன்.); ஆகப் பன்னிருவகையில் இலக்கணங் கொண்டதுமாகத் தோன்றியது தமிழ் நெடுங்கணக்கே. இனி, ‘அலெக், பேத்’ என்றோ ‘அல்பா, பேற்றா’ என்றோ, ‘ஏ. பீ’ என்றே சொல்லாது. குறிலுக்கு அன்ன என்னுஞ் சாரியையும் நெடிலுக்கு அன்னா என்னுஞ் சாரியையும் கொடுத்து ‘அ அன்ன, ஆ அன்னா’ என்று ஒலியியல் முறையிலேயே தமிழர் தம் சிறுவர்க்குத் தொன்றுதொட்டுப் பயிற்றி வந்ததும் சிறப்பாகக் கவனிக்கத்தக்கது. வடமொழி திரவிட வண்ணமாலைகள் கிரேக்கத்திற்கும் பழம் பாரசீகத்திற்கும் நெருங்கிய ஒரு மொழியைப் பேசிய வகுப்பார். எழுத்தும் எழுதப்பட்ட இலக்கியமுமின்றி, கன்றுகாலி மேய்க்கும் முல்லை நாகரிக நிலையில் கி.மு.2000 ஆண்டுகட்குப் பின் சிறுசிறு கூட்டமாக வட இந்தியா புகுந்து, சிந்துவெளியில் தங்கித் தம் சிறு தெய்வ வழுத்துகளை எழுதாக் கிளவியாகக் கொண்டிருந்து, தமிழரின் தலைமையான நாகரிகத்தைக் கண்டபின், அவர் மதங்களாகிய சிவனியத்தையும் மாலியத்தையும் தழுவி, தமிழ் நெடுங்கணக்கைப் பின்பற்றி வடமொழி வண்ணமாலையை அமைத்துத் தமிழிலக்கியத்தைத் தொடர்ந்து மொழி பெயர்க்கவும் தம் மேம்பாட்டை நாட்டுதற் கேற்றவாறு தொன்மங் (புராணங்);களைப் புனையவும் தலைப்பட்டனர். பிற்காலத்தில், வடமொழி வண்ணமாலையைப் பின்பற்றிப் பல திரவிட இனத்தாரும் தத்தமக் கேற்றவாறு வண்ணமாலை வகுத்துக் கொண்டனர். வடமொழி வண்ணமாலையின் பின்மை 1. வடமொழி காலத்தால் தமிழுக்குப் பல்லாயிரம் ஆண்டு பிந்தியது. தமிழ் திரிந்து திரவிடமாகித் திாவிடம் ஆரியமாக மாறியபின், அதன் ஒரு பகுதி வட இந்தியப் பிராகிருதத்துடன் கலந்து வேதமொழியாயிற்று. அவ் வேதமொழி தமிழுடன் கலந்து சமற்கிருதந் தோன்றிற்று. 2. கிரேக்கத்தில் Th Ph Kh என்ற மூவெழுத்துகளே மூச்சொலியுடன் கூடியவை. சமற் கிருதத்தில் க ச ட த ப ஆகிய ஐந்து வல்லெழுத்து களும் மூச்சொலியுடனும் எடுப்பொலியுடனும் சேர்த்து. வலிப்பொலி, உரப்பொலி, எடுப்பொலி, கனைப்பொலி என நந்நான்காக வகுக்கப்பட்டுள்ளன. 3. ஆ, ஈ, ஊ (அ.இ.உ); ஆகிய மூன்றும் தமிழில் முதன்முதல் தோன்றிய கட்டெழுத்துகள். ஆரியச் சுட்டுச் சொற்கட்கெல்லாம் மூலம் தமிழ்ச் சுட்டெழுத்துகளே. (கால்டுவெல் திரவிட ஒப்பியலிலக்கணம், சென்னைப் பதிப்பு, 421 மற்றும் 422ஆம் பக்கம்); 4. ‘ரு’, ‘லு என்பவை உயிரெழுத்துகளல்ல. குற்றியலுகரத்தொடு கூடிய ரகர லகர மெய்கள். 5. கிரேக்கத்தில் க்ஸ் (ks x); என்றுள்ள இணைமெய் வடமொழியில் க் ஷ் (கூடி, ksh); என்று வளர்ச்சியடைந்துள்ளது. 6. தமிழ் ஆய்தமே வடமொழி விஸர்க்கம். 7. வண்ணமாலை வரிசையமைப்பிலும் உயிர்மெய் யமைப்பிலும், வடமொழி முற்றும் தமிழைப் பின்பற்றியதே. 8. அம், அ என்று இறுதியிற் சேர்த்திருக்கும் இரண்டும் தனிக்குறிலை யடுத்த மெய்யான அசைகளே யன்றித் தனி யெழுத்துகளாகா ஒரு போதும் தனி உயிர்களாகா. எழுத்துகளை முத்திரைகளாகச் செய்து பதித்த காலத்தில் எழுது என்னும் சொல்லுக்கு அழுந்துதல், அழுத்துதல் பொருள்கள் தோன்றின. அழுந்ததுதல் – “இருவர் நெற்றியு மெழுதின சிலகணை” (பாரத.1389); அழுத்துதல் – “தொழுது தாளினைச் செய்யபஞ் செழுதினும்” (பாரத சம்பவ.8);. முந்து தமிழின் தொடக்கக் காலத்தில் படவெழுத்தும் (pictographic); அதனினின்றும் தலைக்கழகக் காலத்திய அசையெழுத்தும் (syllabic); அதனினின்றும் இரண்டாம் தமிழ்க்கழக இறுதிக்காலத்தில் முப்பது முதலெழுத்துகளாகிய மூலத்தமிழ் அகரநிரற்குறியீட்டு எழுத்துகளும் தோன்றியனவாகக் கொள்ளலாம். எழுத்துக்குள் உருவங்கள்: உலகில் பேசப்படும் சற்றொப்ப 3000 மொழிகளுள் 198 மொழிகளே வரிவடிவங்கள் கொண்டுள்ளன. வரிவடிவங்கள் அனைத்தும் படவெழுத்துகளிலிருந்து உருவானவை. தமிழில் படவெழுத்துகள் இருந்தன என்பதற்கும், அவையே கருத்தெழுத்தாகவும் அசையெழுத்தாகவும் இன்றைய வரியெழுத்தாகவும் வளர்ந்தன என்பதற்கும், இலக்கணச் சான்றுகளும் கல்வெட்டுச் சான்றுகளும் கிடைத்துள்ளன. எழுத்துக்களையும் உருவங்களையும் புடைப்புச் சிற்ப வடிவில் செதுக்கி (பள்ளமும் மேடுமாக); எழுதுவதற்குப் பயன்பட்ட மாவுக்கல்லுக்கு ‘எழுதுகல்’ என்றே பழங்காலத்தில் பெயரிருந்தது. சிந்துவெளி முத்திரைகள் பெரும்பாலும் மாவுக்கல்லால் செய்யப்பட்டவை. தமிழ், தொடக்க காலத்தில் சீனம் எகுபது மொழிகளைப் போல் படவெழுத்துகளில் எழுதப்பட்டது என்பதற்கு எழுத்து என்னும் சொல்லே சான்றாகின்றது. எழுதுதல் பழங்காலத்தில் ஒவியம் வரைதலையே குறித்தது. கடவுள் எழுதவோர் கல்தாரானெனின் என்னும் சிலப்பதிகார வரியில் எழுதுதல் ஒவியம் வரைதலையே குறித்தது. ஒவியந் தீட்டிய மண்டபம் எழுத்துநிலை மண்டபம்’ எனப்பட்டது. பாறை, கவர், துணி ஆகியவற்றின் மீது ஒவியம் வரைந்த கோலெழுத்துக் காலம் முந்தியது. உருவங்களைச் செதுக்கியும் கீறியும் வரைந்த கண்ணெழுத்துக் காலம் பிந்தியது. சிந்து வெளி நாகரிக அழிபாடுகளில் கண்ணெழுத்துகள் கிடைக்கின்றன. ஒவிய உருவெழுத்துகள் கிடைக்கவில்லை. பன்னிரண்டு உருவங்கள் மட்டும் படவெழுத்து முறையின் எச்சங்களாகச் சிந்துவெளி எழுத்துகளில் நிலைத்துள்ளன. இதிலிருந்து சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கு முன்பே தமிழில் படவெழுத்து முறை தோன்றி நிலவியது என அறியலாம். படங்களாக வரையப்பட்ட உருவ வடிவங்களே பிற்காலத்தில் எழுத்து வடிவங்களாக மாறியுள்ளன. இதன் வண்ணம், உலகில் எம்மொழி எழுத்தாயினும் ஒவ்வோர் எழுத்தும் ஒர் உருவத்தின் படத்தை உள்ளடக்கியிருக்கிறது. அந்த உருவம் கண்ணுக்குப் புலப்படும் நிலைத்திணை, இயங்குதினைப் பொருள்களில் ஒன்றாயிருக்கும். செமித்திய மொழியில் எழுத்துகளின் பெயர்கள், உயிரிகள் அல்லது பொருள்களின் பெயர்களாகவே அமைந்திருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. அம்மொழியில் ‘B’ என்னும் வடிவம் வீட்டைக் குறிக்கும். விட்டின் வடிவமாக அமைந்திருக்கும் எழுத்தும், வீடு (Bethbeta); என்றே பெயரிடப்பட்டுள்ளது. கிரேக்கரும் செமித்தியரிடமிருந்து இதனைக் கடனாகப் பெற்றனர். இது மேலையாரிய மொழிகளில் ‘பி’ (B); எனக் குறுகியது. A என்னும் ஆங்கிலவெழுத்து மாட்டின் தலையையும் கொம்பையும் குறிப்பது ‘L’ என்னும் ஒலிப்புக்குரிய எகுபதியே எழுத்து முன்னாளில் ‘படுத்திருக்கும் அரிமா’ (Lion); வடிவமாக எழுதப்பட்டதும். எகுபதிய மொழியில் இதற்கு ‘லியோ’ என்று பெயர். பழந்தமிழிலும் எகுபதிய மொழியிலும் வல்லூறு (Flacon); வடிவமே அகர ஒலிப்பினைக் குறிப்பதாக இருந்தது. எகுபதிய மொழியில் இதற்கு ஆசோம்’ என்று பெயர். எகுபதியர் நான் எனப் பொருள்படும் சொல்லுக்கு மாந்தரின் இருகால் வடிவத்தைக் குறியீடாகக் குறித்தனர். சிந்துவெளி எழுத்து முறையில் இருகால் (Il); வடிவம் ‘நான்’ என்னும் பொருளிலிருந்து பிறகு ‘ந’ என்னும் ஒசைக்குரிய அசையெழுத்துக் குறியீடாகி விட்டது. பின்னாளில் அது ஐரோப்பிய மொழிகளில் I என்ற எழுத்தாக மாறிவிட்டது. எகுபதியர், பொனீயிர், கிரேக்கர் ஆகிய மூவரும் ‘D’ என்ற எழுத்தை வீட்டின் கதவு வடிவமாக எழுதினர். தேனைக்குறிக்கும் ‘Honey’ என்னும் சொல்லின் முன்னெழுத்தான ‘H’ முதலில் தேன் கூட்டின் வடிவமாகவும், பின்னர் ‘H’ என்றும் எழுதப்பட்டது. ‘M’ என்னும் எழுத்து தொடக்கக் காலத்தில் ஆந்தையின் தலைவடிவமாக எழுதப்பட்டது. செமித்தியர், நீரின் அலை வடிவில் ‘M’ எழுத்தையும் மீன் வடிவத்தில் N எழுத்தையும் எழுதினர். எனெனில் அம்மொழியில் மேம்’ தண்ணிரையும், நூன் மீனையும் குறித்தன. செமித்திய மொழியில் பே வாய் எனப் பொருள்பட்டதால் ‘P’ எழுத்து வடிவம் வாயின் படமாக வரையப்பட்டது. பொனிசியர், எகுபதியர், கிரேக்கர் ஆகிய மூவரும் ஊசியின் துளை வடிவில் ‘ என்னும் எழுத்தை எழுதினர் “U” என்பது இலத்தின் மொழியின் ‘V’ சேர்ந்து W. ஆயிற்று. இது எகுபதிய மொழியில் பறவைக் குஞ்சின் வடிவமாக எழுதப்பட்டது. ஐரோப்பிய மொழிகள் கிரேக்கச் சொற்களைக் கடன் வாங்கிய பொழுது கிரேக்கத்தின் வாயிலாகச் செமித்திய எகுபதிய படவெழு |
நெடுங்கணவாய் | நெடுங்கணவாய் neḍuṅgaṇavāy, பெ. (n.) நீண்ட கணவாய் மீன்வகை (வின்.);; a long cuttle fish. [நெடு → நெடும் + கணவாய்] |
நெடுங்கணவாய் | நெடுங்கணவாய் neḍuṅgaṇavāy, பெ. (n.) நீண்ட கணவாய் மீன்வகை (வின்.);; a long cuttle fish. [நெடு → நெடும் + கணவாய்] |
நெடுங்கண் | நெடுங்கண் neḍuṅgaṇ, பெ. (n.) 1. தொலை (தூர); பார்வையுள்ள கண்; farsighted eye. அவனுக்கு நெடுங்கண் வந்துவிட்டது. 2. பின்னிய ஓலையின் நீண்ட கண்; long squares in braiding olas. நெடுங்கண் ஓலை. 3. நீண்ட மட்டையினி றுதியில் விரியும் பனையோலைப் பிரிவு; separation in the sections of the palmyra leaf far from the stem. 4. தேங்காயின் தாய்க்கண்; top most of the three eyes of a cocoanut. 5. நீண்ட விழி; long eye. “விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி” (ஐங்குறு.200:3);. “அனிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே” (ஐங்குறு.208:5);. “வேம்பு நனையன்ன நெடுங்கணி ஞெண்டு” (அகநா.1768);. [நெடு + கண்] |
நெடுங்கண் | நெடுங்கண் neḍuṅgaṇ, பெ. (n.) 1. தொலை (தூர); பார்வையுள்ள கண்; farsighted eye. அவனுக்கு நெடுங்கண் வந்துவிட்டது. 2. பின்னிய ஓலையின் நீண்ட கண்; long squares in braiding olas. நெடுங்கண் ஓலை. 3. நீண்ட மட்டையினி றுதியில் விரியும் பனையோலைப் பிரிவு; separation in the sections of the palmyra leaf far from the stem. 4. தேங்காயின் தாய்க்கண்; top most of the three eyes of a cocoanut. 5. நீண்ட விழி; long eye. “விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி” (ஐங்குறு.200:3);. “அனிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே” (ஐங்குறு.208:5);. “வேம்பு நனையன்ன நெடுங்கணி ஞெண்டு” (அகநா.1768);. [நெடு + கண்] |
நெடுங்கண்ணோலை | நெடுங்கண்ணோலை neḍuṅgaṇṇōlai, பெ. (n.) மட்டையினின்றும் விரிதற்கு முன்னமே பிரிந்து செல்லும் பனையோலை (வின்.);; palmyra leaf with the divisions extended before separation. [நெடுங்கண் + ஓலை] |
நெடுங்கண்ணோலை | நெடுங்கண்ணோலை neḍuṅgaṇṇōlai, பெ. (n.) மட்டையினின்றும் விரிதற்கு முன்னமே பிரிந்து செல்லும் பனையோலை (வின்.);; palmyra leaf with the divisions extended before separation. [நெடுங்கண் + ஓலை] |
நெடுங்கண்பார்வை | நெடுங்கண்பார்வை neḍuṅgaṇpārvai, பெ. (n.) நெடும்பார்வை (வின்.); பார்க்க;see nedum-pârvai. [நெடுங்கண் + பார்வை] |
நெடுங்கண்பார்வை | நெடுங்கண்பார்வை neḍuṅgaṇpārvai, பெ. (n.) நெடும்பார்வை (வின்.); பார்க்க;see nedum-pârvai. [நெடுங்கண் + பார்வை] |
நெடுங்கண்விழு-தல் | நெடுங்கண்விழு-தல் neḍuṅgaṇviḻudal, 2செ.கு.வி (v.i.) ஓலை முடைதலில் பெருங்கண் உடையதாதல்; to form big eyes, in braiding olas. கீற்று நெடுங்கண் விழுந்திருக்கிறது. (யாழ்.அக.);. [நெடுங்கண் + விழு-தல்.] |
நெடுங்கண்விழு-தல் | நெடுங்கண்விழு-தல் neḍuṅgaṇviḻudal, 2செ.கு.வி (v.i.) ஓலை முடைதலில் பெருங்கண் உடையதாதல்; to form big eyes, in braiding olas. கீற்று நெடுங்கண் விழுந்திருக்கிறது. (யாழ்.அக.);. [நெடுங்கண் + விழு-தல்.] |
நெடுங்கண்விழுதல் | நெடுங்கண்விழுதல் neḍuṅgaṇviḻudal, பெ. (n.) கன்னமொரு பக்கம் நெடுகி மறுபக்கந் தளர்ந்திருக்கை; one side cheek to be extend and other side to grow slack. [நெடுங்கண் + விழுதல்] |
நெடுங்கண்விழுதல் | நெடுங்கண்விழுதல் neḍuṅgaṇviḻudal, பெ. (n.) கன்னமொரு பக்கம் நெடுகி மறுபக்கந் தளர்ந்திருக்கை; one side cheek to be extend and other side to grow slack. [நெடுங்கண் + விழுதல்] |
நெடுங்கதை | நெடுங்கதை neḍuṅgadai, பெ. (n.) 1. பழங்கதை (யாழ்.அக.);; ancient story. அவனுடைய நெடுங்கதையைக் கேட்கவா வந்தேன். 2. புதினம்(நாவல்);; novel. 3. நீண்டகதை; long story or short novel. [நெடு → நெடும் + கதை] |
நெடுங்கதை | நெடுங்கதை neḍuṅgadai, பெ. (n.) 1. பழங்கதை (யாழ்.அக.);; ancient story. அவனுடைய நெடுங்கதையைக் கேட்கவா வந்தேன். 2. புதினம்(நாவல்);; novel. 3. நீண்டகதை; long story or short novel. [நெடு → நெடும் + கதை] பழங்காலத்தில் செய்யுளில் சொல்லப்பட்ட கதை இலக்கியம் பல. மறவனப்பு (இதிகாசம்);;வரலாறு 3/4 பங்கு கற்பனை 1/4 பங்கு. பாவியம் காப்பியம்);வரலாறு 1/2 பங்கு கற்பனை 1/2 பங்கு. தொன்மம் (புராணம்);;இயற்கை நிகழ்ச்சி 1/4 பங்கு இயற்கையை மீறிய நிகழ்ச்சி 3/4 பங்கு. சமற்கிருதத்தில் இராமாயணம், மகா பாரதம் இரண்டும் மறவனப்பாக உள்ளன. தமிழில் சிலப்பதிகாரம் மணிமேகலை மறவனப்புத் தன்மை கொண்டன. சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அயல்நாட்டுக்காரர் இமயத்தில் ஏறி நின்று நும் மொழியின் முதல் இலக்கியத்தைக் கொண்டு வாருங்கள் என்று கூறினால் இந்திய தேசிய 15 மொழியாளரும் இராமாயணம் அல்லது மகாபாரதம் மொழி பெயர்ப்பைத்தான் கொண்டு செல்வர். தமிழர் மட்டுமே சிலப்பதிகாரத்தைத் தனித்தன்மையோடு எடுத்துச் செல்ல இயலும் என்றார். தமிழில் ஐம்பெருங்காப்பியம், ஐஞ்சிறு காப்பியம் என்று சமணமதப்பாகுபாடு கூறினாலும் சீவக சிந்தாமணி, பெருங்கதை இரண்டு மட்டுமே சிறந்தவை. பெரியபுராணம் திருத்தெண்டர் வரலாறு) தொண்டர்பற்றிய 64 உண்மைக்கதைகளும் திருவிளையாடற் புராணம் கடவுள் பற்றிய 64 கற்பனைக் கதைகளும் கொண்டவை. வரலாற்றுப்புதினம் – 3/4 உண்மை 14 கற்பனை உளவறி புதினம் – 1/4 உண்மை 3/4 கற்பனை வாழ்வியல் புதினம் -1/2 உண்மை 1/2 கற்பனை இப்பாகுபாட்டை- இளம்பூரணர் தம் உரையில்- உள்ளோன் தலைவனாக இல்லது கூறல் (வரலாற்று நெடுங்கதை); உள்ளோன் தலைவனாக உள்ளது கூறல் (செய்தித்தாள் நிகழ்ச்சி); இல்லோன் தலைவனாக உள்ளது கூறல் (வாழ்வியல் நிகழ்ச்சி); இல்லோன் தலைவனாக இல்லது கூறல் உளவறி நெடுங்கதை) சிறுகதை.நெடுங்கதைகளின் அடிப் படையாக, பலர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை ஒருவர் வாழ்வில் நடந்ததாகக் கூறுவது என்ற உரையாசிரியர் குறிப்பு மூலக்குறிப்பு. நெடுங்கதை = சிறுகதை அல்லாத நீண்ட கதை. புதினம் (நாவல்); Fiction); என்னும் புனைகதை இதழ்களில் வரும்போது தொடர்கதையாகும். தென்னை, பனைபோல் கிளைகள் இல்லாதது சிறுகதை என்றும், மா. பலா போலக் கிளைகள் உள்ளது. நெடுங்கதை என்றும் கூறுவர் திறனாய்வாளர். தொடர்வண்டியிலோ, பேருந்திலோ ஒரு நிறுத்தத்திலிருந்து அடுத்த நிறுத்த நிகழ்வு சிறுகதை என்றும், தொடக்கம் முதல் இறுதி வரை காண்பது நெடுங்கதை என்றும் கூறுவார். முதல் புதினங்கள் (நாவல்கள்); சென்ற நூற்றாண்டில் 1876-இல் வேதநாயகம் பிள்ளை என்ற அறிஞர் முதல்முதலாகத் தமிழுக்குப் புதின (நாவல்); இலக்கியத்தை அளித்தார். அவர் மாவட்ட முறைமன்றத்தலைவராக (நீதிபதியாக); இருந்தவர்; ஆங்கிலம் அறிந்தவர் ஆங்கிலேயருடன் தொடர்பு உடையவர். ஆங்கிலத்தில் புதின நாவல்); இலக்கியம் வளர்ந்திருப்பதையும், அதைப் பொழுதுபோக்காகப் பலர் படித்துப் பயன்பெறுவதையும் உணர்ந்து, தமிழர்களும் அவ்வாறு படிக்க வாய்ப்புப் பெறவேண்டும் என்று கருதினார். அந்தக் காலத்தில் செய்யுள் நூல்கள் பல எழுதிப் புகழ் பெற்ற மீனாட்சி கந்தரம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் தாமும் பாடல் பல இயற்றியவர். ஆனாலும், செய்யுள் நூல்களை எல்லாரும் படிக்க முடியாது என்பதை உணர்ந்து, உரைநடை வாயிலாக நல்ல கருத்துகளை உணர்த்த வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். கதை கேட்கும் ஆர்வம் மக்களுக்கு இயல்பாக இருப்பதால், புதினங்கள் (நாவல்கள்); வாயிலாகத் தாம் உணர்த்த விரும்பியவற்றை உணர்த்த முன் வந்தார். பிரதாப முதலியார் சரித்திரம் (1876);, சுகுணகந்தரி (1887); என்னும் புதினங்களை (நாவல்களை); இயற்றினார். அவற்றில் பலவகை மாந்தர்களைப் படைத்தார் பலவகை உணர்ச்சிகளை அமைத்தார்;பல அறகருத்துக்களைப் (நீதிகளைப்); புகட்டினார். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், கிராமங்களிலும், நகரங்களிலும் தாம் பெற்ற நுகர்வுகளைக் (அனுபவங்களைக்); கொண்டு, குடும்பக் குமுதாய வாழ்க்கை நிலைகளைச் சொல்லோவியமாக்கிக் காட்டினார். பின்னர் எழுதிய புதினத்தை(நாவலை);விட, முதலில் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரமே இலக்கியத்தரம் உடையது. கதைத் தலைவன். தலைவி ஆகிய இருவரின் பெற்றோர்க்கு இடையே பூசலும் போராட்டமும் நடக்கின்றன. தலைவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். ஒரு வேட்டைக் காட்சியைக் காண்பதற்கு முயல்கிறான். பல இன்னல்களை அடைகிறான். பணக்கார உழவர் குடும்பத்துப் போராட்டங்களைக் கதை சுவையாக வளர்த்துச் செல்கிறது. இரண்டாம் புதினத்தில் (நாவலில்);, கதைத் தலைவியை ஓர் அரசன் கவர்ந்து செல்கிறான். வழியில் கன்னி மாடத்தில் புகுந்து கொள்கிறாள் அவள். அரசன் தேடிக் கண்டுபிடிக்கிறான். அதற்குள் அந்த அரசனுடைய ஆட்சியை அமைச்சன் கைப்பற்ற முயல்கிறான். போராட்டங்கள் வளர்கின்றன. முதல் புதின கதை மாந்தர் (பாத்திரம்); ஒருவர் கதை கூறுவதாக அமைந்துள்ளது. இரண்டாவதில் ஆசிரியரே கதை சொல்கிறார். நகைச்சுவை நிரம்பியுள்ளது. அறக்கருத்துகள் நிரம்பியுள்ளன. வேதநாயகம் பிள்ளை போலவே வேறு துறைகளில் தொழில் செய்து கொண்டே தமிழ் இலக்கியத்தை வளர்க்கப் பாடுபட்டோர் பலர். அவர்களுள் நடேச சாத்திரி (1859-1906); என்பவர் ஒருவர். திராவிட பழங் பூர்வகாலக் கதைகள், இடைக் (மத்திய காலக் கதைகள் எனப் பழைய கதைகளைத் திரட்டி எழுத்தில் தந்தார். முத்திராராட்சம் என்பதை வடமொழியி லிருந்து மொழிபெயர்த்து எழுதினார். ஆங்கிலத்தில் செகப்பிரியர் எழுதிய சில நாடகங்களை (Measure for Measure. Twelfth Night); தமிழில் கதையாக்கித் தந்தார். மாமி கொலுவிருக்கை, கோமளம் குமரியானது, திக்கற்ற இரு குழந்தைகள், மதிகெட்ட மனைவி என்பவை அவர் இயற்றிய கதை நூல்கள். வாழ்க்கையை உள்ளவாறு காட்டும் பாங்கு, நடப்பியல் (Realism எனப்படுவதை முதல் முதலில் தமிழில் ராச(ஜ);ம் அய்யர் (1872-1898); எழுதிய கமலாம்பாள் சரித்திரம்’ என்னும் புதினத்தில் காண்கிறோம். அதை அடுத்து, அதே பாங்கில் எழுதப்பட்டது மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்’ வேதநாயகம் பிள்ளையின் நாவல்களுக்கும் இந்த இரண்டு நாவல்களுக்கும் இடையே இருபதாண்டுக் கால இடைவெளி இருக்கிறது. அப்போது புதினங்கள் தோன்றாமல் இல்லை;குருசாமி சர்மா எழுதிய பிரேம கலாவதியம் முதலியன சில இருந்தன. ஆனால் அவை இலக்கியத் தரம் பெறவில்லை. கமலாம்பாள் சரித்திரம் விவேகசிந்தாமணி என்னும் இதழில் 189395-இல் தொடர்கதையாக வந்து. 1896-இல் புத்தகமாக வெளியிடப்பட்டது. கிராம வாழ்க்கையும் சல்லிக்கட்டு என்னும் எருதாட்டத் திருவிழாவும் மற்றப் பழக்கவழக்கங்களும் அக்காலத்தில் இருந்தவாறே விளக்கப்பட்டுள்ளன. இளைஞரின் காதல் ஒருபுறமும், நடுவயதினரின் அன்பான குடும்ப வாழ்வு ஒருபுறமும் இருந்து முரண்படுவதைத் தீட்டிக் காட்டியுள்ளார். அவர்க்கு அடுத்தாற்போல் புதினம் எழுதிய மாதவையாவின் பத்மாவதி சரித்திரம்’ (1898); தெளிவான பாத்திரப் படைப்பு உடையது. அவருடைய சீர்திருத்த ஆர்வம் அதில் நன்கு புலப்படுகிறது. விசய மார்த்தாண்டன், முத்து மீனாட்சி (1903); என்னும் புதினங்களையும் அவர் இயற்றினார். பத்மாவதி சரித்திரத்தில் பல நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. ஒன்று மற்றொன்றினுக்குத் தொடக்கமாய் வளர்ந்து செல்லக் காண்கிறோம். பத்மாவதியின்மேல் அவளுடைய கணவனுக்கு ஏற்படும் ஐயமே நீண்ட சிக்கலாய் வளர்ந்து முடிகிறது. ‘விசயமார்த்தாண்டம்’ என்னும் கதையில் மறவர் சமுதாயமும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் வழக்கறிஞர்களும் முறைமன்ற அதிகாரிகளும் நீதிபதி பல கோணங்களில் காட்டப்படுகிறார்கள். ‘முத்து மீனாட்சி என்னும் புதினம் அவற்றைவிடப் புதுமை மிகுந்தது;புரட்சியானது. இளமையில் கணவனை இழந்த கைம்பெண் (விதவையானவள்); ஒருத்தி படும் துன்பங்களை அவளே எடுத்துரைக்கும் முறையில் (தன் வரலாறு என்ற போக்கில்); புதினம் அமைந்துள்ளது. இவற்றின் வாயிலாக மாதவையா தமிழ்ப் புதினத் துறையில் உள்ளீடு (content);, வடிவ (form); ஆகிய இருவகையிலும் புதுமை வளர்த்தவர் எனலாம். மாதவையா (1872-1925); அரசாங்க வேலையிலிருந்து ஒய்வு பெற்றபின் பஞ்சாமிர்தம் என்னும் இதழை நடத்தி அதில் பாடல் (கவிதை); சிறுகதை, இலக்கியத் திறனாய்வு, அரசியல் கட்டுரைகள் முதலியன வெளிவரச் செய்தார் கோணக் கோபாலன் என்ற புனைபெயரில் தாமே பாடல் (கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தார் அவர்க்கு விருப்பமான குமுகாயச் (சமூகச் சீர்திருத்தத் தொண்டுக்கு அந்த இதழ் ஒரு நல்ல கருவியாக இருந்தது. பழைய கண்மூடி வழக்கங்களை எதிர்த்துப் போராடினார். சிறுவர்கள் படிக்கக்கூடிய நடையில் பால ராமாயணம், பால விநோதக் கதைகள் தட்சிண சரித்திர வீரர் என்பன இயற்றினார். திருமலை சேதுபதி பாரிசு(ஸ்);டர், பஞ்சநதம் என்பவை நாடகங்கள் செகப்பிரியரின் ஒதெல்லோ நாடகத்தைத் தமிழில் தந்தார். பொதுதர்ம சத்கீத மஞ்சரி, புதுமாதிரி கல்யாணப்பாடல் என்பன அவர் இயற்றிய பாடல் தொகுதிகள். ஆசாரச் சீர்திருத்தம் என்னும் நூல் அவருடைய சீர்திருத்த ஆர்வத்தைப் புலப்படுத்தும் அவர் இயற்றிய சிறுகதைகள் பல. அவை சிறுகதை வளர்ச்சிக்குத் துண்டுகோலாக அமைந்தவை;மூன்று தொகுதிகளாக, ‘குசிகர் குட்டிக் கதைகள்’ என்னு பெயரால் வெளியாயின. மாதவையாவுக்குப் பிறகு புதினத்(நாவல்); துறையில் மீண்டும் இடைவெளி ஏற்பட்டது. கல்வி பெருகி இலக்கியத் தரம் உள்ள கதைகளைப் பிறர் படைப்பதற்கு முன் ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி ஐயங்கார், பொன்னுசாமிப் பிள்ளை, கோதை நாயகி அம்மையார், ரங்கராக முதலியோரின் பொழுதுபோக்குப் புதினங்களும் துப்பறியும் புதினங்களும் படிப்போர்க்கு விருந்தாக இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை, மேற்கு நாட்டாரின் துப்பறியும் புதினங்(நாவல்களின் தழுவல்களாகவே இருந்தன. தமிழ்க் குமுதாயத்தின் படப்பிடிப்புக்களாக கண்ணாடிகளாக, ஒரு சில மட்டுமே அமைந்தன. காந்தியடிகளின் நெறியிலும் வாழ்விலும் தம் நெஞ்சைப் பறிகொடுத்து. இந்த நாட்டுக் கிராமங்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்ட கே.எசு. வெங்கடரமணி புதினத்துறையில் ஈடுபட்டார். முதலில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுப் பிறகு தமிழில் தாமே எழுதிவெளியிட்டார். அவற்றில் தேசநலம் மேலோங்கி நிற்கக் காண்கிறோம். தமிழ்நாட்டுக் கிராம வாழ்க்கையை உள்ளவாறு உணர்ந்து கிராம மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் முறையில் பல மாந்தர்களையும் நிகழ்ச்சிகளையும் அவற்றில் படைத்திருக்கிறார். கல்கி தமிழ் இலக்கியத்தில் வரலாற்றுப் புதினங்களுக்கு ஒரு சிறப்பைத் தேடித் தந்தவர் ‘கல்கி’ என்ற புனைபெயர் கொண்ட இரா. கிருட்டிணமூர்த்தி (1899-1954);. அவர் முதலில் ‘ஆனந்தவிகடன்’ என்னும் வார இதழுக்கும், பிறகு ‘கல்கி’ என்ற வார இதழுக்கும் ஆசிரியராக விளங்கியவர். அந்த இதழ்களில் அவர் எழுதிய தலையங்கங்களும் கட்டுரைகளும் அவருடைய எழுத்துத் திறமையில் மக்கள் ஈடுபாடுகொள்ளச் செய்தன. இசை, நாடகம், நாட்டியம், ஒவியம், சிற்பம் ஆகிய கலைகளைச் சுவைத்து மகிழும் உள்ளம் உடையவர் அவர். எதை எழுதினாலும் சுவை இல்லாமல் எழுத அறியாதவர். மக்கள் பேகம் தமிழின் நடையில் உள்ள உயிர்த்துடிப்பையும் வேகத்தையும் கண்டறிந்து, அவற்றைத் தம் எழுத்திற்கு நன்றாகப் பயன்படுத்தினார். தியாகபூமி, மகுடபதி அலையோசை முதலான சமுதாய வாழ்வுபற்றிய புதினங்களும் எழுதினார். ஆயினும் வரலாற்றுப்புதின ஆசிரியர் என்ற வகையிலேயே அவர் பெரும் புகழ் பெற்றார். தமிழ்நாட்டின் வரலாற்றில் பல்லவ அரசர்களின் வரலாற்றையும் பிற்காலச் சோழர் வரலாற்றையும் நன்கு ஆராய்ந்து, அக்கால நாகரிகம், மக்கள் பழக்க க்கங்கள், மனநிலைகள் லியவற்றைத் தெளிவாக மனத்தில் இருத்திக்கொண்டு புதினங்களை போற்றுகிறார்கள். வரலாற்றுப் புதினங்களைப் படிப்பவர்கள் ஏதோ பழங்காலத்து நிகழ்ச்சிகளைப் படிக்கிறோம் என்ற அளவில் மட்டும் உணர்வதில்லை;அந்தக் காலத்து நிகழ்ச்சிகளையே மனக்கண்ணில் கண்டு அவற்றில் ஒன்றி விடுகிறார்கள். கல்கி முதல் முதலில் எழுதிய வரலாற்றுப் புதினத்திலும் அந்தக் கற்பனையாற்றலும் கதை கூறம் திறனும் அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளன. அந்த நூல் பார்த்திபன் கனவு என்பது மகேந்திர பல்லவன் (கி.பி.ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவன்); வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது அது. அடுத்த வரலாற்று நூல் ‘சிவகாமியின் சபதம் அதைவிட இருமடங்கானது. அதுவும் அந்தப் பல்லவர் வரலாற்றை ஒட்டியே உருவானது. அதுவே அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்தது என்பது பலருடைய கருத்து, அது ஒரு காப்பியத்தின் அளவுக்குத் தமிழிலக்கிய வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த பிற்காலச் சோழர்களில் இராசராசனின் வரலாற்றைக் கொண்டு அமைந்த புதினமாகிய ‘பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதத்தைவிட இருமடங்கு வளர்ந்தது. அதன் கதையோட்டம் விறுவிறுப்பானது. திறமை மிகுந்த மாந்தர் பலர் அதில் படைக்கப் பட்டுள்ளார்கள். கற்பனைச் சுவையிலும் அது இணையற்றதாக உள்ளது. கதை நெடுகச் சோழப் பேரரசின் பெருமையும் வாழ்க்கையின் பெருஞ் சிக்கல்களும் விளக்கப்படுகின்றன. சிவகாமியின் சபதத்தில் அவ்வளவு சிக்கல்கள் இல்லை. ஆயினும், சிவகாமி என்ற கலையரசி – சிற்பியின் மகள் – ஒருத்தியின் வளர்ச்சியும் போராட்டமும் இன்னலும் குறிக்கோளும் புதினத்தின் தரத்தை உயர்த்தப் போதுமானவைகளாக உள்ளன. நாட்டியக் கலையில் நிகரற்று விளங்கிய அவளுடைய கலைத் திறமை அரசியல் போராட்டங்களில் சிக்கி அல்லல் உறும்போது, கதையைப் படிப்பவர்களின் நெஞ்சம் துன்புற்றுத் துடிக்கிறது. ஆயினும் உயர்ந்தனவே எண்ணி உயர்ந்தனவே செய்து முடிக்கும் இவளுடைய வாழ்வு படிப்பவர்களின் உள்ளத்தையும் உயர்த்தி விடுகிறது. இக்கால புதின ஆசிரியர்கள் 1942-இல் நடைபெற்ற விடுதலைப் (சுதந்திரப்); போராட்டத்திற்கு வடிவு தந்து தியாகத் தழும்பு என்ற புதினம் ஆக்கியவர் நாரணதுரைக் கண்ணன். ‘பிரசண்ட விகடன்’ ஆசிரியராக இருந்து அவர் புதிய படைப்புகளுக்கு வரவேற்பு அளித்தார். தரங்கிணி, கோகிலா, நடுத்தெரு நாராயணன் ஆகியவை அவருடைய கதைகள். விடுதலை இயக்கத்தைப் பின்னணியாக வைத்துப் புதினங்கள் எழுதிய மற்றோர் ஆசிரியர் ‘அகிலன். நேதாசியின் விடுதலைப் படையை அமைத்து எழுதப்பட்ட அவருடைய புதினம் ‘நெஞ்சின் அலைகள். மனிதப் பண்புகளையும் எழுத்தாளர்களின் போராட்டங்களையும் உணர்ச்சி கலந்த நடையில் விளக்கும் புதினம் பாவை விளக்கு. பொருந்தாத திருமணத்திற்கு ஆட்பட்டு வருந்தும் ஒருத்தியை, சிநேகிதியில் சொல்லோவியமாக்கிக் காட்டுகிறார். அவளை விருப்பம்போல் வாழவிடுவதற்கு முடிவு எடுக்கிறார் அவளுடைய கணவர். ‘சித்திரப்பாவை’ என்னும் நாவலில், நாகரிகத்தின் குழப்பத்தையும் பணத்தின் ஆதிக்கத்தையும் அவை கலைஞனைத் தாக்கும் தன்மைகளையும் அகிலன் விளக்குகிறார். கட்டுப்பாடுகளைத் தகர்க்கும் ஒரு விர நங்கையை அதில் படைத்திருக்கிறார். வேங்கையின் மைந்தன்’ என்னும் அவருடைய வரலாற்றுப்புதினம், பதினொன்றாம் நூற்றாண்டில் விளங்கிய சோழப் பேரரசைப் பின்னணியாகக் கொண்டது. கயல்விழி பாண்டியரின் ஆட்சியை விளக்குவது. வெற்றித் திருநகர் விசயநகர ஆட்சியைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்றுப்புதினம். இவை எல்லாவற்றிலும் ஆற்றொழுக்கான நடையையும் கலைமெருகு பெற்ற வடிவத்தையும் காணலாம். அவர் பல நல்ல சிறுகதைகளையும் படைத்துள்ளார். அவற்றில் அவரது இயல்பான இனிய நடையையும் வடிவச் சிறப்பையும் காணலாம். அவர் படைத்துள்ள கதை மாந்தர்கள் பல திறப்பட்டவர்கள். கதை நிகழ்ச்சிகள் ஆசிரியரின் முதிர்ந்த உலகப் பட்டறிவைக் (அனுபவத்தைக்); காட்டுவன. பல்வேறு வகையான சூழ்நிலைகளையும் மாந்தர்களையும் படைத்து, மிகப் பல புதினங் (நாவல்களை எழுதியவர் கோவி. மணிசேகரன். அவர் பல்வேறு சிறுகதைகளையும் படைத்துள்ளார். ‘தவமோ தத்துவமோ’ என்னும் நூலில் திரைப்பட உலகத்தில் புகழ் பெறுவோரைப் போற்றி மயங்கும் மயக்கத்தை ஒரு பேராசிரியரின் மனைவியின் வாழ்வின் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். அவருடைய வரலாற்றுப் புதினங்கள் சுவையாகக் கதை சொல்வதுடன், வரலாற்றுப் பின்னணியை நன்கு விளக்குவன. ‘அக்கினிக் கோபம்’, ‘பீலிவளை’, ‘செம்பியன் செல்வி’ என்ற வரலாற்றுப் புதினங்கள் இலக்கியத் தரம் உடையவை. அவருடைய நடையில் ஒருவகை மிடுக்கு உள்ளது. ‘தேவன்’ என்னும் புனைபெயருடைய மகாதேவன் எட்டுச் சமுதாயப் புதினங்களை எழுதினார். எல்லாம் ஆனந்தவிகடனில் தொடர்கதைகளாக வந்தவை. ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதைகளாக வந்தவை. ‘துப்பறியும் சாம்பு’ படிப்பவர் பலர்க்கும் சுவை விருந்து அளித்தது. மிகடர் வேதாந்தம் என்பதே அவருடைய படைப்புகளில் முதன்மையானது. பத்திரிகை யுலகில் ஆசிரியர் பெற்ற பட்டறிவுகளை ஒரு கதைமாந்தன் வாயிலாகத் தருகிறார். நகைச்சுவையை நிரம்பத் தருபவர் அவர் நடுத்தரக் குடும்பத்தார் வீடு கட்டும் முயற்சியைச் சித்திரிப்பது ராசத்தின் மனோரதம். அவருடைய கதை மாந்தரில் பெரும்பான்மை யானவர்கள் நடுத்தர வகுப்பாரே. அவர்களின் கனவுகளையும் குறைகளையும் நன்றாக எடுத்துக்காட்டுவன அவருடைய புதினங்கள். வ.ரா. புதுமையிலும் சீர்திருத்தத்திலும் ஆர்வம் நிரம்பியவர்;பழைய கண்மூடித் தன்மைகளை எள்ளி நகையாடுபவர். அவருடைய கோதைத் தீவு என்னும் புதினம் குறிப்பிடத்தக்கது. மு. வரதராசன், கு. ராசவேலு ஆகியோர் எழுதும் புதினங்களின் நடை பலருடைய உள்ளங்களைக் கவர்ந்தது. நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டே கதை பின்னி, படிப்பவர் உள்ளத்தில் புதிய உணர்ச்சிகளை ஊட்டும் புதினங்கள் அவர்களுடையவை. கள்ளோ காவியமோ, ‘அகல்விளக்கு’, ‘கரித்துண்டு’, ‘கயமை, மு.வரதராசனின் நாவல்களில் குறிக்கத்தக்கவை. அழகு ஆடுகிறது, காதல் தூங்குகிறது. காந்தள் முள்’, ‘இளவேனில்’, “மகிழம் பூ முதலியன கு.ராசவேலுவின் கற்பனைப் படைப்புகள். சிதம்பர கப்பிரமணியம் எழுதிய ‘இதயநாதம்’ என்ற புதினத்தில் இசைக் கலைஞர் ஒருவன் நல்ல கதைமாந்தனாகப் (பாத்திரமாகப்); புதுவகையாகப் படைக்கப்படுகிறார். அவர் தம் உரிமையையும் மதிப்பையும் பலவகை இடையூறுகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகப் படும்பாடு அழகாக விளக்கப்படுகிறது. க.நா.சுப்பிரமணியம் எழுதியுள்ள புதினங் களுக்குள்ளே ஒரு நாள் என்பது குறிப்பிடத் தக்கது. உலகம் சுற்றி பட்டறிவு நிரம்பிய ஒருவன் தன் கிராமத்துக்குப் போய் அதுவரையில் பெற்றிராத விழிப்பைப் பெறுகிறான். அங்கே உலகம் அறியாமல் தன் மாமி நடத்தும் வாழ்க்கையே பொருளுடைய வாழ்க்கையாக அவனுக்குத் தோன்றுகிறது. பொய்த் தீவு என்பதும் நல்ல படைப்பு ஆகும். எம்.வி.வெங்கடராமன் பல கற்பனைப் படைப்புகளைத் தந்துள்ளார். தேனி என்ற ஒரு மாத இதழும் சிலகாலம் நடத்தி, தம் படைப்புகளை வெளியிட்டார். அவருடைய நித்ய கன்னி ஒரு நீண்ட கதை. மகாபாரதத்துள் வரும் யயாதியின் மகள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்ற பிறகு மறுபடியும் கன்னித்தன்மை பெறுமாறு வரம் பெற்றவள். அதனால் ஒருவரை விட்டு மற்றொருவரைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அவளுக்கு ஏற்படுகிறது. ஆனாலும் மனம் ஒன்று உள்ளதே அது பழைய அன்பின் தொடர்பு முதலியவற்றை அப்படி எளிதில் மறந்துவிடல் இயலாது. அதனால் உருவாகும் சிக்கல்கள் இந்தக் கதையில் தீட்டப்படுகின்றன. மகாபாரத்தில் மிகச் சுருங்கிய அளவில் குறிப்பிடப்படும் ஒரு படைப்பு (பாத்திரம்); இவருடைய கற்பனையில் பெரிய அளவில் வளர்ந்து சிந்தனையைக் கவர்ந்து நிற்கக் காண்கிறோம். நந்திபுரத்து நாயகி என்பது விக்கிரமன் தந்த வரலாற்றுப்புதினம். மகரயாழ் மங்கை’, ‘ஆலவாய் அழகன், நாயகி நற்சோணை, நந்திவர்மன் காதலி, ‘அருள்மொழி நங்கை’, ‘திருச்சிற்றம்பலம் முதலியன செகசிற்பியன் படைத்த வரலாற்றுப் புதினங்கள். சில குமுதாய புதினங்களையும் பல சிறுகதைத் தொகுப்பு களையும் அளித்துள்ளவர் அவர். சிறுகதைகளில் இன்றைய ஏழை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களுக்கு நன்கு வடிவு தந்துள்ளார். அவருடைய நேரிய நடையும் கலை மெருகும் புதினங்களுக்கு இலக்கியச் சிறப்புத் தருகின்றன. ‘யவனராணி’, ‘கடல்புறா, மன்னன் மகள்’ மலைவாசல், சிவபூமி, கன்னிமாடம், பல்லவ திலகம் முதலிய பல வரலாற்றுப் புதினங்களின் ஆசிரியர் ‘சாண்டில்யன். இவைதாளிகைகளில் (பத்திரிகைகளில்); தொடர்கதையாக வந்தவை. படிப்பவர்கள் ஆர்வத்துடன் நாடும் வகையில் சுவையை மேன்மேலும் வளர்த்துக் கதை சொல்லும் திறன் உடையவர் அவர். பார்த்தசாரதி, பி.சி.கணேசன் முதலியோரும் வரலாற்றுப் புதினங்கள் எழுதித் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர்கள். அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ என்பது குறிப்பிடத்தகுந்த வரலாற்றுக் கற்பனை. இராதாமணாளனுடைய ‘பொற்சிலை’ சுவையுள்ள இலக்கியப் படைப்பாகும். டி.கே.சீனிவாசன் படைத்த ஆடும் மாடும் கற்பனைச் சிறப்புடையது. இளமைக்குப் பின் பெறும் காதலுணர்வுகளை எடுத்துக் காட்டுவது சாவியின் ‘விசிறி வாழை’. பி.எம்.கண்ணன் நடப்பியல் முறையில் சில புதினங்களைப் படைத்துள்ளார். சோமு, இந்திரா பார்த்தசாரதி, நல்லபெருமாள், உமாசந்திரன், மாயாவி, செயகாந்தன் ஆகியோரின் படைப்புகள் இங்குப் பாராட்டுடன் குறிப்பிடத்தக்கவை. தென் திருவாங்கூரில் தமிழர்கள் பேசும் பேச்சு மொழியில் கதை எழுதுபவர் கெப்சிபா சேசுதாசன். புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா என்பவை அவர்க்குப் புகழ் தேடித் தந்தன. கொங்குநாட்டுப் பேச்சுமொழியைக் கையாண்டு ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய கதைகள் ‘பூவும் பிஞ்சும், நாகம்மாள்’, ‘அழியாக் கோலம்’ ஆகியவை. பூவை ஆறுமுகத்தின் தங்கச் சம்பா’ என்ற நாவலும் வட்டார வாழ்வையும் பேச்சையும் அடிப்படையாகக் கொண்டது. மதுரையில் நடைபெறும் சல்லிக்கட்டு என்னும் எருதாட்டத்தை வைத்து, சி.சு.செல்லப்பா வாடிவாசல்’ என்னும் புதினத்தை திறம்பட எழுதியுள்ளார். இரகுநாதன் விறுவிறுப்பான நடையில் பொதுவுடைமைக் கருத்துகளை அமைத்து எழுதிய “பஞ்சும் பசியும் என்ற நூல் ஒரு புதுமையான படைப்பு. நீல. பத்மநாபன் மூன்ற தலைமுறைகளின் வாழ்வை ஒவியமாக்கிக் காட்டும் தலைமுறைகள் என்ற புதினம் அமைப்பிலும் நடையிலும் புதுமை உடையது. வாழ்க்கை நிலைகள் எவ்வளவு வேகமாக மாறிவந்துள்ளன என்பதை அந்த நூல் காட்டுகிறது. நா.பார்த்தசாரதி சுவையும் கருத்தும் சிறந்து விளங்கும் புதினங்களும் சிறுகதைகளும் கட்டுரைகளும் ஆகப் பலவகை இலக்கியம் அளித்தவர். குறிஞ்சி மலர்’, ‘பொன்விலங்கு ஆகியப் புதினங்கள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. தமக்கென்று ஒரு கவர்ச்சியான நடையும் கட்டுக்கோப்பும் அமைத்துக் கொண்டு கற்பனைப் பரபரப்புடன் இலக்கியத் தொண்டு ஆற்றுபவர் அவர். அதை அடிப்படையாகக் கொண்டு அவர் புதுமைகள் பல படைத்துள்ளார். கிராம மக்கள் தம் நிலத்தின்மேல் எவ்வளவு பற்றும் பாசமும் வைத்துள்ளனர் என்பதைச் சங்கரராம் எழுதிய மண்ணாசை எடுத்துரைக்கிறது. ஆர்வி சுவையாகக் கற்பனைகளை அளிப்பவர். ‘அணையா விளக்கு’ என்னும் அவருடையப் புதினத்தில் குமூகச் சீர்திருத்தப் போக்கு உள்ளது. “செங்கமலவல்லி என்னும் அவருடைய சிறுகதைத் தொகுப்பைப் போலவே, இதுவும் எளிய நடையில் அமைந்தது. புதினங்களும் இதழ் ஆசிரியர்களும் முன்பெல்லாம் படித்தவர் சிலராகவே இருந்தனர். அந்தச் சிலர் எதையும் ஆழ்ந்து படிப்பவராக இருந்தனர். இப்போது படித்தவர் தொகை பல மடங்கு பெருகி வருகிறது. அந்தப் பலர்க்குள் பெரும்பாலோர் ஆழம் இல்லாமல் மேற்போக்காகப் படிப்பவர்களே. முன்பு ஒரு நூல் எழுதப்பட்டால் படித்தவர்கள் அதைப் பாராட்ட வேண்டும் என்ற கவலை நூலாசிரியர்களுக்கு இருந்தது. அவர்களின் பாராட்டை எதிர்பார்த்த கவலை இருந்த படியால், அந்தக் கவலையோடு பொறுப்பு உணர்ந்து எழுதினார்கள். இப்போதும் அவ்வாறு பொறுப்பு உணர்ந்து எழுதுகிறவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் பலர் அவ்வாறு எழுதுவதில்லை; அவ்வாறு உணர்ந்து எழுதவேண்டிய கவலையும் அவர்களுக்கு இல்லை. படித்தவர் தொகை பெருகிவிட்ட இக்காலத்தில், ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மேற்போக்காகப் படிக்கும் வெள்ளம் போன்ற கூட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியாரின் ஆதரவு தமக்குக் கிடைத்தால் போதும் என்று அந்த எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள். அந்த ஒரு பகுதியாரின் பாராட்டும் பணமும் தமக்குக் கிடைப்பதைக் கொண்டே அவர்கள் முன்னேற முடிகிறது;மேலும் மேலும் அவர்களின் ஆழம் இல்லாத-பண்படாத-கவைக்கு ஏற்ற உணர்வை நூல்களில் தந்து எழுத்துலகத்தில் வளர்ச்சி பெற முடிகிறது. பலர் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் யார் என்று ஆராய்ந்து இதழ்களின் ஆசிரியர்கள் தேடுகிறார்களே அல்லாமல், நடுநிலையாகவும் தரமாகவும் எழுதுகிற எழுத்தாளர் யார் என்று தேடுவதில்லை. ஆகவே, பத்திரிகையுலகத்திலும் முன்கூறிய எழுத்தாளர்கள் செல்வாக்குப் பெற முடிகிறது. அவர்களின் வெற்றிக்கு உரிய காரணம் இதுதான் என்று மற்றவர்கள் உணர்ந்து பின்பற்றுகிறார்கள். வாழ்க்கையில் எழுத்தாளர்களுக்கு ஏமாற்றம் மிகுதி, நிலையான வருவாய் இல்லாத காரணத்தால் வறுமையின் தாக்குதலும் மிகுதி. ஏமாற்றத்தாலும் வறுமையாலும் வாடிய எழுத்தாளர்கள், எப்படியாவது பணம் வந்தால் போதும் என்ற துணிச்சலான மனநிலை வந்தபோது, கவலை இல்லாமல் ஏமாந்த மக்களை எய்த்து மயங்கும் போக்கை நேரே நாடுகிறார்கள். எதையாவது எப்படியாவது எழுதுவது என்ற பான்மையில் கதை நூல்கள் சில வெளிவருவதற்கு இதுதான் காரணம். பதைப்பில் (அவசரத்தில்); படைக்கப்பட்ட அவர்களின் எழுத்துகளில் சில, கலைவடிவம் பெற்றுவிடுதல் உண்டு. முதலில் எப்படியாவது தாளி (பத்திரி); கையுலகில் இடம் பெறவேண்டும் என்று முயன்று எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர் சிலர், புகழ் வளர்ந்தபின் பழைய தவறான முறையைக் கைவிட்டுப் பண்பட்ட-சிந்தனை வளம் உள்ள-படைப்புகளைத் தந்து நல்ல எழுத்தாளர்களாய் விளங்குவதும் உண்டு. அவர்கள் பிறகு கவர்ச்சியைப் பொருட்டுபடுத்தாமல் கலைத் தரத்தையே பெரிதாகக் கொண்டு தம் போக்கை மாற்றிக் கொள்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். – தமிழிலக்கிய வரலாறு – மு.வ.); புதினத்தின் தன்மையும், இலக்கணமும் உரைநடைப் பழமை தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பு தி ன ங் க ள் இன்று வரையுங் கூடத் தக்க இடம் பெற்றன என்று கூற இயலாது. பல காரணங்களால் பழங்காலத்தில் உரைநடை நன்கு வளர்ச்சியடையவில்லை. சிலப்பதிகாாம். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று கூறப் பெறுவதற்கேற்பச் சில பக்கங்களை உரைநடையில் கொண்டு விளங்குகிறது, என்றாலும் அவை ஆசிரியப்பாவை நீட்டி எழுதியன போல காணப்படுகின்றனவே அன்றி உரைநடையாக இல்லை. அக்காலத்தில் உரைச்செய்யுள் என்று இலக்கணம் பேசுகிறதாகலின் ஏதேனும் உரைநூல்கள் இருந்திருத்தல் வேண்டும். ஆனால், அவை மறைந்தொழிந்தன. முதன்முதலாக நாம் காணும் உரைநடைப் பகுதி இறையனார் களவியல் உரையேயாகும். அதனையடுத்தும் உரையாசிரியர்களுடைய உரைநடையையே காண்கிறோம். ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே முத்தமிழ் வழக்கொழிந்து இயல் தமிழ் மட்டும் வளர்ச்சியடையலாயிற்று, என்றாலும் அதனுள் ஒரு பகுதியாகிய உரைநடை வளரவில்லை. ஆகவே உரைநடையால் அமையும் சிறு கதைகளும், புதினங்களும் இம்மொழியில் இல்லா தொழிந்தன. இடைக்காலத்தில் வழக்கொழிந்த இவ்வுரைநடை இலக்கியம் தொல்காப்பியனார் காலத்தில் பெருவழக்கினதாய் இருந்திருக்கும் போலும், இல்லாவிடில். பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணாரப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று உரைவகை நடையே நான்கென மொழிப என்று இதற்கெனத் தனியே அவர் இலக்கணம் வகுத்திரார். அவரது இலக்கணத்தையும் அதற்கு உரை கண்டவர்கள் கூறியதையம் உற்றுநோக்கின் சில அரிய உண்மைகள் தெற்றெனப் புலனாகும். பாவின்று எழுந்த கிளவி என்று ஆசிரியர் குறிப்பதே, உரைநடைநூல் என்றும், பொருளொடு புணராப் பொய்ம் மொழி என்பதே பொய்ப்புதினம் என்றும் பொருளொடு புணர்ந்த நகைமொழி என்பதே புதினம் என்றும் இன்று நம்மால் வழங்கப் பெறுகின்றன. தொல்காப்பியனார் இங்ங்ணம் நால்வகையாகப் பிரித்து இலக்கணங்கண்ட இப்பெரும் பிரிவினுள் ஒன்றுகூட பெருவழக்காக இருந்திருப்பின் அன்றித் தொல்காப்பியனார் இலக்கணம் கூறி இரார். எனவே, பிற்காலத்தார் தம் அரிய செல்வங்களைப் போற்றிப் பாதுகாவாமல் விட்டதாலும், இருந்தவற்றையும் ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் விட்டதாலும், இத்தகைய நூல்கள் அழிந்தன என்றே கொள்ளல் வேண்டும். இத்துணை வளம் நிறைந்த ஒரு மொழியில், இத்துணைக் கவிதை இலக்கியம் நிறைந்த ஒரு மொழியில், உரைநடை இல்லாதிருக்க முடியாது. புதினந்தோன்றக் காரணம் உரைநடையுள் ஒன்றாகிய புதினம் என்பது தோன்ற ஒரு சீரிய காரணம் உண்டு. உலகிடை வாழும் மனிதன் மனத்தைக் கவர்ந்த பலவற்றுள் முக்கியமானது எதுவெனில் அவனைப்போன்ற மற்றைய மனிதர்களின் வாழ்க்கையேதான். மக்களின் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகள், போராட்டங்கள் முதலியவையே இப்புதினங்கள் முகிழ்க்கத் தக்க நிலைக்களங்களாயின. பிறமனிதர்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தில் ஒருவன் ஈடுபாடுகொள்ளும் இயல்பே சிறந்த இலக்கியங்கள் தோன்றக் காரணமாயின. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகை இலக்கியம் சிறப்புடன் தோன்றக் காரணமாயிருந்தது, மேற்கூறிய இயல்பயோகும். கோவலன் கண்ணகி வாழ்க்கைப் போராட்டத்தில் இளங்கோ கொண்ட பற்றுத்தான் சிலப்பதிகாரமாக உருக் கொண்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாடுந் தமிழரும் எவ்வாறு இருந்தார்கள் என்று தெரிய வேண்டுமாயின் கம்பநாடனுடைய பாவியத்தில் (காப்பியத்தில்); உள்ள வரைக்காட்சிப் படலம். ‘பூக்கொய்படலம் முதலியவற்றில் பரக்கக் காணலாம். இங்ங்னம் மக்கள் வாழ்க்கையைப் எடுத்துக் காட்டும் பிரதி பலிக்கும்) இலக்கியங்களுள் புதினமும் ஒன்று இதே போலப் பணி செய்ய நாடகம் என்ற ஒன்றும் உளதாயினும் ஆடு களம், உடைகள், நடிப்புத்திறம் முதலிய பலவற்றின் உதவி கொண்டே நாடகஞ் சிறக்கிறது. புதினம் அவ்வாறன்று, அது சிறக்க வேண்டிய அனைத்து உறுப்புக்களும் அதனிடமே உள்ளன. எனவே நாடகத்தைப் பார்க்கிலும் புதினம் சிறப்படையக் காரணம் இருக்கிறது. புதின உறுப்புக்கள் சிறந்த புதினத்திற்கு இன்றியமையாத உறுப்புக்களாக சூழ்ச்சி, மிக்க கதைமாந்தர்கள் (பாத்திரங்கள்); உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ காட்டப் பெற்றுள்ள வாழ்க்கைத் தத்துவம் என்பனவற்றைக் கூறலாம். இவை அனைத்தும் ஒரே அளவாகவோ அனைத்துமோ இருந்து தீரல்வேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. ஒவ்வொன்று மிக்கும் குறைந்தும் இருப்பினும் தவறு இல்லை. பிண்டம் புதினத்தில் பிண்டம் என்பதே அதன் உட்பொருளாகும். இப்பிண்டம் என்பது எத்தகைய கதை மேற்கொள்ளப் பெறுகிறதோ அதற்கேற்றபடி தோன்றுவதாகும். வாழ்க்கையில் காணப் பெறும் ஆழமான உணர்ச்சிகள், போராட்டங்கள் இவைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றும் புதினங்களே மிக்க சிறப்புடையன. தமிழ் மொழியளவில் தோன்றியனவும் தோன்றுகின்றனவும் ஆகிய புதினங்கள் பெரும்பாலும் இக்குறைபாடு உடையன. சென்ற பத்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான புதினங்கள் தமிழ்மொழியில் தோன்றியுள்ளன. ஆனால், சிலவே நம் நினைவில் அழியாத இடம் பெற்றுள்ளன. வடுவூர் துரைசாமி அவர்கள் எழுதிய எத்தனையோ புதினங்கள் உண்டு. இவை அனைத்தும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை ஆனது போல வேறு சிறந்த புதினங்கள் தோன்றாமையின் அப்பெயர் தாங்கி நிலவின. ஒன்றாவது பெயருக்குப் பொருத்தமுடையதன்று. வங்க எழுத்தாளர்களான சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், மராட்டிய எழுத்தாளர் காண்டேகர் போன்றவர்கள் புதினங்கள் மொழி பெயர்ப்பிலுங் கூடத் துடிப்புடன் நிலவுவதற்கும் தமிழர்களால் தமிழ்மொழியில் எழுதப் பெற்ற புதினங்கள் உயிரின்றி உலவுவதற்கும் காரணம் இப்பிண்டம் நன்கு அமைக்கப்படாமையேயாகும். வாழ்க்கையில் மேலாகக் காணப்பெறும் உணர்ச்சிகளைக் கொண்டு திட்டப்பெறும் புதினங்கள் நீண்ட நாட்கள் நிலைபெறா, இவ்வாறு கூறுவதால் பொது நிலை (சாதாரண மக்கள் பற்றிப் புதினங்கள் தோன்றலாகாதுபோலும் என்று நினைந்துவிட வேண்டா. பொதுநிலை (சாதாரண);மனிதனின் எளிமையான வாழ்க்கையை அடித்தளமாகக் கொண்டு தோன்றும் புதினமும் சிறந்ததாக இருக்கலாம். பேரரசர்களைப் பற்றியும் ஒரு குமுதாயத்தைப் பற்றியும் எழும் புதினங்கள் சிறப்பற்றும் போகலாம். இவை சிறப்படைவது அவற்றைக் கையாள்வோன் வன்மையைப் பொறுத்ததேயாம். சுருங்கக் கூறுமிடத்து ஒரு புதினம் சிறப்படைவது. கீழ்க்கண்ட பகுதிகள் அதில் அமையும் பொழுதேயாம். அதன் அடிப்படை ஆழமாகவும், அகலமாகவும் நம்முடைய ஆழ்ந்த எண்ணங்களைத் துண்டுவதாகவும் மனித குமுதாயத்தின் பொதுக் கருத்தைக் கவருவதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு அமையாதன வெல்லாம் புதினங்கள் அல்ல என்று கடுமையான முடிபுகூறத் தேவை இல்லை. ஆனால், அவை சிறந்தவை அல்ல என்று கூறலாம். புதினம் தோன்றுவதன் கருத்து, படிப்போர்க்கு மகிழ்ச்சி உண்டாக்குவதே யாகலின் இத்தகைய அடிப்படையில் அமையாமலும் ஒரு நூல் மகிழ்ச்சி தரக்கூடுமாயின் அதுவும் ஏற்றுக் கொள்ளற்பாலதே யாகும். இத்தயை நூலில் முன்னர்க் கூறி பல பண்புகளில் யாதானும் ஒன்று மிக்கிருந்து மற்றைய குறைபாடுகளைப் போக்கு மாயின் நன்று. புதினமும் வாழ்க்கையும் புதினம் சிறக்கும் பல பண்புகளில் சிறந்த மற்றொன்று;அது வாழ்க்கையை உள்ளவாறு கூறுவதாய் அமைதல் வேண்டும். புதினம் கட்டுக் கதைதானே என்ற எண்ணத்தால் இன்றைய எழுத்தாளர்கள் எதனையும் நுழைக்கத்தக்க இடமாக அதனைக் கருதுகின்றனர். இதைவிடப் பெருந் தவறு ஒன்றுமில்லை. வாழ்க்கையின் எந்தப் பகுதியைப் புதினம் கூற எடுத்துக்கொண்டாலும் அப்பகுதியைப் பற்றிய மெய்ம்மையைக் கூறவேண்டும். அதாவது அப்பகுதியை ஆசிரியன் நன்கு அறிந்து அதில் நன்கு பழகி இருத்தல் வேண்டும். ஆசிரியனுக்குப் பழக்கமும் பட்டறிவும் இல்லாத வாழ்க்கைப்பகுதியை எழுதத் தொடங்கினால் விளைவது மயக்கமேயாகும். இங்ங்னம் அவன் கூறும் பகுதி அவன் நேரடி பட்டறிவில் பெறுகிறதாயிருப்பின் அவன் கூற்று கற்போர் மனத்தைக் கவரும். இரண்டு விரல உயர அகலமுள்ள யானைகொம்பில் (தந்தத்தில்); தன் கைவேலையைக் காட்டும் ஒருவனும் கலைஞன்தான். நூறடி உயரம் உள்ள கோபுரத்தைச் சமைப்பவனும் கலைஞன் தான். இரண்டுவிரல அளவில் (பரிமாணத்தில்); வேலை செய்தமையின் ஒருவனைக் கலைஞன் அல்லன் என்று கூறிவிட முடியுமா? அதேபோலச் சில ஆசிரியர்கள் தமது குறைவான பட்டறிவை அடிப்படையாகக் கொண்டு குறைந்த மாந்தர்களைப் பாத்திரங்களைப் படைத்துக் கொண்டு எழுதுவர். ஆனால், அவற்றில் ஆழம் நிறைந்திருக்கு மாகலின் ஒதுக்கி விடுதலாகாது. இதனினும் மாறுபட்டுத் தமது பரந்த உலகியலறிவின் துணை கொண்டு பல மாந்தர்களைப் (பாத்திரங்களை); அமைத்து எழுதுவம் உண்டு. நகரிலேயே பிறந்து வளர்ந்து கிராமக் காட்சியையே கண்டிராத ஒருவர் கிராமத்தை நிலைக்களமாகக் கொண்டு கதை எழுதுவதும் கப்பலில் ஏறி அறியாத ஒருவர் கப்பல் செலவு இலண்டன் காட்சி முதலியனபற்றிக் கதை கதைப்பதும் இன்று நாம் காண்கின்ற ஒன்றாகும். தன் வாழ்க்கையையும் பட்டறிவையும் (அநுபவத்தையும்); கூர்ந்து நோக்குவதாயின் ஒவ்வொரு மனிதனும் குறைந்த அளவு ஒரு புதினமாவது எழுதித் தீரலாம் என்று மேலைநாட்டிலக்கியத் திறனாய்வர் கூறுகிறார்கள். ஆனால், பெரும்பாலோர் இவ்வாறு செய்யாமல் தமக்கு மிகவும் விருப்பமான ஒர் ஆசிரியரைப் பார்த்து நகல் செய்யத் தொடங்கி இறுதியில் தமக்கென ஒன்றும் இல்லாதவர் களாகிறார்கள். எல்லையற்ற கற்பனையின் துணையுடைய ஒரு சிலருக்கு இச்சட்டம் தேவை இல்லை. தாங்கள் காணாத காட்சியைக்கூடப் பிற அறிஞர் எழுதியவற்றைப் படித்த மாத்திரத்தில் தம் கற்பனையின் துணைகொண்டு இவர்கள் தம்முடைய சொந்த பட்டறிவாக்கிக் (அநுபவமாக்கிக்); கொள்கின்றனர். வேதநாயகம் பிள்ளை, மாதவையா போன்றவர்கள் இத்தொகுப்பில் சேர்ந்தவர்கள். இத்தகையவர்கள் தாம் கேட்ட அல்லது ஒருமுறை கண்ட ஒன்றை நமக்கு வர்ணிக்கத் தொடங்கினால், நாம் அதனுடன் அவர்கள் பலகாலம் பழகியவர்கள் போலும் என்று நினைக்க வேண்டியிருக்கும். புதினத்தில் சூழ்ச்சி சூழ்ச்சி என்பது அடுத்தபடி நோக்கற்குரியது. சாதாரணமான ஒரு கதையைக் கூறுவதே ஒருவகை ஆற்றல் என்று கருதப்படும். வேறு எவ்வகையான ஆற்றலும் இல்லாதவரிடத்தும் கூடக் கதை சொல்லும் ஆற்றல் நிறைந்திருத்தல் உண்டு. சிலருடைய புதினங்களைப் படிக்கும்பொழுது கதை தங்கு தடையின்றிச் செல்வதைக் காண்கிறோம். ஏனைய அழகுகள் ஒன்றும் அங்கு இல்லாவிடினும் கதைப் போக்கு நன்கு அமைந்துவிடுகிறது. ஆனால், பிற அழகுகள் அனைத்தும் நிறைந்துள்ள சில புதினங்களில் கதைப் போக்குத் தடைப்பட்டும், வலிந்தும் செல்வதைக் காண்கிறோம். இத்தகையோர் புதினங்களில் இக்குறைபாட்டைப் போக்குவது அதன் கண் உள்ள ஏனைய அழகுகளேயாகும். இருவகையாற்றலும் நிறைந்துள்ள புதினங்களில் காணவேண்டிய பகுதியாகும். சூழ்ச்சி என்பது கூறவந்த கதையைக் கலைத்திறமையுடன் கூறியிருக்கிறாரா என்று பார்த்தல் வேண்டும். அதாவது கதையின் பல பகுதிகளை நன்கு ஆராய்ந்தால் குற்றங் குறைகள் காணப்படுகிறனவா? கதையின் பல பகுதிகளும் தம்முள் நன்கு பொருந்தி உள்ளனவா? என்பதேயாகும்: கதையின் கட்டுக்கோப்பில் இடையில் துண்டு விழாமல் இருத்தல்வேண்டும். முன்னுக்குப் பின் முரண் இல்லாது இருத்தல் வேண்டும். கதையின் பல பகுதிகளும் தம்முள் ஒவ்வோரளவு கொண்டு இறுதியில் ஒரு முழுத்தன்மை பெற்று விளங்கவேண்டும். கதையில் வரும் பல நிகழ்ச்சிகள் திடீரென்று குதிப்பது போல் இல்லாமல் நிகழவேண்டும். ஒரு நிகழ்ச்சியின் முடிவில் மற்றொரு நிகழ்ச்சியின் தோற்றம் கருக்கொண்டிருக்க வேண்டும். நிகழ்ச்சிகளின் போக்கு எவ்வளவு புதுமையுடை யதாகவும் இயற்கையின் இறந்ததாகவும் இருப்பினும் அதன் முடிவு நிகழ்ச்சிக்குப் பொருத்தமுடையதா யிருத்தல் வேண்டும். இந்நிகழ்ச்சிகளின் முடிவு இவ்வாறு இருத்தலே தகுதி என்று கூறும்படியாக அமைதல் வேண்டும். புதின முழுவதிலும் ஊடுருவி நிற்கும் இறுதி நிகழ்ச்சி அவல நிகழ்ச்சியோ அன்றி மகிழ்ச்சியோ தோன்றும்பொழுது இதுதான் நிகழவேண்டியது என்ற எண்ணத்தை உண்டாக்கல் வேண்டும். முன்னர் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளின் முடிவும் இதுவாகவேதான் இருக்கும் என்று கூறத் தக்க முறையில் இறுதி நிகழ்ச்சி அமைவதே சூழ்ச்சி நன்கு அமைக்கப்பட்டிருத்தலின் அடையாளம். இருவகைச் சூழ்ச்சிகள் இச்சூழ்ச்சி ஒரு புதினத்தில் கையாளும் முறையை வைத்துப் புதினங்களையே இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று உதிரிச் சூழ்ச்சி என்று கூறப் பெறும் இங்கு நிகழும் எல்லா நிகழ்ச்சிகளும் தம்முள் தொடர்புடையனவல்ல. தொடர்பற்ற இச் சம்பவங்கள் புதினத்தின் தலைவன் அல்லது தலைவி என்ற ஒருவருக்கு நிகழ்வதாலேயே அவை இங்கு இடம் பெறுகின்றன. இதன்கண் தலைவனுக்கு நிகழும் இறுதி நிகழ்ச்சி முன்னர் நடைபெற்ற சிறு நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பு அன்று. தருக்க முறைப்படி அவை இம்முடி பைத் தந்தன என்று கூறல் இயலாது. இத்தகைய நூலில் தனி நிகழ்ச்சிகள் எவ்வளவு அழகுடன் விளங்கினும் இவை அனைத்தும் சேர்த்துத் தருகிற முழுத் தன்மை ஒன்றும் இல்லை. இதற்கு மறுதலையாய் அமைந்தது ஒட்டுச் சூழ்ச்சிப் புதினம் என்பதாகும். இத்தகைய புதினத்தின் நிகழ்ச்சிகள் ஒன்றையொன்று ஒட்டி வருவதுடன் ஒன்றின் முடிபு மற்றொன்றாய்த் திகழும். இத்தகைய புதினம் இயற்றுபவர்கள் தம் நூலை முற்றிலும் மனத்தில் வாங்கிக் கொண்டு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தக்க இடந்தந்து அமைப்பைச் செய்யவேண்டும். இதில் வருகிற மாந்தர் (பாத்திரங்);கட்குக்கூடத் தக்க இடமும், தோன்றும் காலமும் அமைத்தல் வேண்டும். ஆனால், இத்தகைய ஒட்டுச் சூழ்ச்சிப் புதினத்தில் ஒரு இடைஞ்சல் உண்டு. எதிர்பாரா நிகழ்ச்சிகள் மிகுதியான இடத்தை இதிற் பெற்றுவிடும். எதிர்பாரா மனிதர்கள் எதிர்பாராத இடங்களில் வந்து புதிரைத் தீர்த்துவிட முனைவார்கள். எங்கோ ஒரிரு இடங்களில் இது நிகழின் சரி. கதையைக் கொண்டு செலுத்தவேண்டிய கடப்பாட்டிற்காக இதனை அதிகம் கையாண்டால் வெறுப்புத் தட்டிவிடும். இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துப் புதினங்களை இங்குக் குறிப்பிட்டாலும் நல்ல புதினங்கள் அனைத்தும் இவ் இரண்டு முறையையும் மேற்கொண்டுதான் நடைபெறும். இக்கொள்கை கட்கெல்லாம் எடுத்துக்காட்டுகள் தர முடியுமாயினும் அவரவர் விருப்பு வெறுப்புக் காரணமாக அவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. ஆகலின், எடுத்துகாட்டுகள் தரப்படவில்லை. புதினங்களின் ஏனைய உறுப்புக்களை அடுத்துக் காண்போம். கதைமாந்தர்கள் புதினத்தின் உறுப்புக்களில் அடுத்து நோக்கவேண்டியது கதைமாந்தர்களாகும். புதினத்தில் வரும் கதைமாந்தர்கள், நடமாடித் திரியலாம். பேசலாம். ஆனால் அவை பல சமயங்களில் உயிருடன் நம்போல் இருப்பதாக நாம் நினைக்க முடிவதில்லை. காரணம் அம்மாந்தர்கள் நம் கற்பனையில் சென்று பொருத்துவதில்லை. சிறந்த புதினத்தில் படைக்கப் பெறும் மாந்தர்கள் நாம் வாழும் உலகில் நம்மைப் போல் தலைநிமிர்ந்து நடப்பவர்களாயிருத்தல் வேண்டும். அவர்கள் ஒரு கற்ப |
நெடுங்கதைவிடு-தல் | நெடுங்கதைவிடு-தல் neḍuṅgadaiviḍudal, 18செ.குன்றாவி (v.t.) காலத்தாழ்வு செய்தல் (வின்.);; to put off from day to day. [நெடுங்கதை + விடு-தல்.] |
நெடுங்கதைவிடு-தல் | நெடுங்கதைவிடு-தல் neḍuṅgadaiviḍudal, 18செ.குன்றாவி (v.t.) காலத்தாழ்வு செய்தல் (வின்.);; to put off from day to day. [நெடுங்கதை + விடு-தல்.] |
நெடுங்கப்பற்று-தல் | நெடுங்கப்பற்று-தல் neḍuṅgappaṟṟudal, 5.செ.குன்றாவி. (v.t.) இறுகப் பிடித்தல்; to grasp firmly. ‘கண்ட இரை நெடுங்கப் பற்றி விழுங்கிய பாம்புபோல்’ (நீலகேசி, 308, உரை);. [நெருங்கு → நெடுங்கு + பற்று-தல்.] |
நெடுங்கப்பற்று-தல் | நெடுங்கப்பற்று-தல் neḍuṅgappaṟṟudal, 5.செ.குன்றாவி. (v.t.) இறுகப் பிடித்தல்; to grasp firmly. ‘கண்ட இரை நெடுங்கப் பற்றி விழுங்கிய பாம்புபோல்’ (நீலகேசி, 308, உரை);. [நெருங்கு → நெடுங்கு + பற்று-தல்.] |
நெடுங்கம்பு | நெடுங்கம்பு neḍuṅgambu, பெ. (n.) கம்புப் பயிர் வகை (விவசா. 4);; a kind of bulrush millet. [நெடு → நெடும் + கம்பு. நீண்டகம்புப் பயிர் வகை] |
நெடுங்கம்பு | நெடுங்கம்பு neḍuṅgambu, பெ. (n.) கம்புப் பயிர் வகை (விவசா. 4);; a kind of bulrush millet. [நெடு → நெடும் + கம்பு. நீண்டகம்புப் பயிர் வகை] |
நெடுங்கயிர் | நெடுங்கயிர் neḍuṅgayir, பெ. (n.) 1. நீளமான கயிறு; long rope. கிணற்றுக்கு நெடுங்கயிறு ஒன்று வாங்கிவா. 2. நீண்ட வலை; large net. “கமலக் கண்ணென்னு நெடுங்கயிறு படுத்தி” (திவ்.நாய்ச்.14:4);. “நெடுங்கயிறு வலந்த குறுங்க ணவ்வலை” (அகநா.30:1);. 3. பெருந்தாழ்வு (தாமதம்); (வின்.);; long delay. [நெடு → நெடும் + கயிறு. கள் → கய் → கயில் → கயிறு, கள் = கட்டுதல், பிணைத்தல்.] |
நெடுங்கயிர் | நெடுங்கயிர் neḍuṅgayir, பெ. (n.) 1. நீளமான கயிறு; long rope. கிணற்றுக்கு நெடுங்கயிறு ஒன்று வாங்கிவா. 2. நீண்ட வலை; large net. “கமலக் கண்ணென்னு நெடுங்கயிறு படுத்தி” (திவ்.நாய்ச்.14:4);. “நெடுங்கயிறு வலந்த குறுங்க ணவ்வலை” (அகநா.30:1);. 3. பெருந்தாழ்வு (தாமதம்); (வின்.);; long delay. [நெடு → நெடும் + கயிறு. கள் → கய் → கயில் → கயிறு, கள் = கட்டுதல், பிணைத்தல்.] |
நெடுங்கயிற்றில்விடு-தல் | நெடுங்கயிற்றில்விடு-தல் neḍuṅgayiṟṟilviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. நாட்கடத்துதல் (யாழ்.அக.);; to delay procrastinate. 2. நீண்ட கயிற்றில் குழந்தையைர் உருளைகளை விட்டு விளையாடுதல்; a kind of children game. [நெடுங்கயிறு + விடு-தல்.] |
நெடுங்கயிற்றில்விடு-தல் | நெடுங்கயிற்றில்விடு-தல் neḍuṅgayiṟṟilviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. நாட்கடத்துதல் (யாழ்.அக.);; to delay procrastinate. 2. நீண்ட கயிற்றில் குழந்தையைர் உருளைகளை விட்டு விளையாடுதல்; a kind of children game. [நெடுங்கயிறு + விடு-தல்.] |
நெடுங்கரை | நெடுங்கரை neḍuṅgarai, பெ. (n.) நீண்ட கரை; long bank. நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து (குறுந் 304:5);. [நெடு → நெடும் + கரை. கரு → கரை. → கரு = மேடு, உயரம்.] |
நெடுங்கரை | நெடுங்கரை neḍuṅgarai, பெ. (n.) நீண்ட கரை; long bank. “நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து” (குறுந் 304:5);. [நெடு → நெடும் + கரை. கரு → கரை. → கரு = மேடு, உயரம்.] |
நெடுங்கல்நின்றமன்றம் | நெடுங்கல்நின்றமன்றம் neḍuṅgalniṉṟamaṉṟam, பெ. (n.) காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஐந்து மன்றங்களில் ஒன்று; one among the five halls at Kaviripöm-pattinamin Tamilnadu. “நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்” (சிலப்.51.27);. [நெடுங்கல் + நின்ற + மன்றம்] ஐந்து மன்றங்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் |
நெடுங்கல்நின்றமன்றம் | நெடுங்கல்நின்றமன்றம் neḍuṅgalniṉṟamaṉṟam, பெ. (n.) காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஐந்து மன்றங்களில் ஒன்று; one among the five halls at Kaviripöm-pattinamin Tamilnadu. “நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்” (சிலப்.51.27);. [நெடுங்கல் + நின்ற + மன்றம்] ஐந்து மன்றங்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மன்றம், பூதசதுக்கம், பாவை மன்றம் சிலப்பதிகாரம் கூறும் 5 மன்றங்கள் பற்றிய செய்தி: அயல் நாட்டிலிருந்து வந்த புதியோர், தம் பெயர் எழுதிய அடையாள எழுத்தினை இலச்சினையாக அமைத்த, பல எண்களையுடைய பொதிகள் பண்டசாலை வாயிலில் குவிந்திருந்தன. வலிய தாழ் இட்ட கதவுகளையுடைய அரணாகிய காவலையும், அவற்றிற்கு உரிமையுடையோர் காத்திருக்கும் காவலையும் அவை நீங்கியிருந்தன. ஆயினும் அவற்றைக் களவாடுவோர் உளராயின், அவர் கழுத்து வலிக்கப் பொதியைத் தலையில் ஏற்றி வைத்துச் சுமக்கச் செய்து ஊரைச் சுற்றி வரச் செய்யும், அங்குள்ள பூதம். அவர்க்கு அதைவிட வேறு தண்டனை தருவதில்லை. எனவே இக்கடும் துன்பத்தை யெண்ணிக் களவை மனத்தால் நினைக்கவும் யாரும் அஞ்சுவர். வெளியான இடத்தில் இத்தகைய பூதம் தங்கியுள்ள வெள்ளிடை மன்றம் ஒன்று புகாரில் இருந்தது. கூனர், குறளர் (குள்ளர்);, ஊமையர், செவிடர், உடல் அழுகும் தொழு நோயாளர் ஆகியோர் முழுகி நீராடிய அளவிலே பழுதில்லாத நல்ல தோற்றத்தைப் பெற்று வலம் செய்து தொழுது நீங்குதற்குரிய பொய்கையினையுடைய இலஞ்சி மன்றம் ஒன்றும் அப்புகாரில் இருந்தது. வஞ்சனையாகச் சிலர் மருந்து தர உண்டு பித்தேறினாரும், நஞ்சை உண்டு நடுங்குதுயர் உற்றாரும், அழலும் விடத்தையுடைய பாம்பின் கூரிய பற்கள் அழுந்தக் கடியுண்டாரும், பிதுங்கிய கண்ணையுடைய பேயால் கடுந் துன்ப முற்றாரும், சுற்றி வந்து தொழுத உடனே அவர்தம் துன்பமெலாம் நீக்குகின்ற, ஒளி சொரியும் நெடிய கல் நாட்டி நிற்கும் ‘நெடுங்கல் மன்றம் ஒன்றும் அப்புகாரில் இருந்தது. அரசனது செங்கோலாட்சி சிறிது மாறுபடினும், அறங்கூறும் அவையில் அறமு(நீதிரைப்போர், அறநீதி); நூலுக்கு மாறுபட ஒருபால் சார்ந்து அறம்(நீதி); உரைக்கினும், நாவால் ஒன்றும் கூறாது துன்பக் கண்ணிர் சொரிந்து அழும் பாவை நிற்கும் பாவை மன்றம் ஒன்றும் அப்புகாரில் இருந்தது. வாழ்க்கையின் உண்மைத் தன்மையை உணர்ந்த மேலோரால் போற்றிப் புகழப்படும் அந்த ஐவகைப்பட்ட மன்றங்களிலும் மக்கள் அரிய பலியிட்டு வழிபட்டனர். வம்ப மாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயிலும் கருந்தாழ்க் காவலும் உடையோர் காவலும் ஒரீஇய வாகிக் கட்போ ருளரெனிற் கடுப்பத் தலையேற்றிக் கொட்பி னல்லது கொடுத்தல் ஈயாது உள்ளுநர்ப் பணிக்கும் வெள்ளிடை மன்றமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப் பழுதில் காட்சி நன்னிறம் பெற்று வலஞ்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும் வஞ்சம் உண்டு மயற்பகை யுற்றோர் நஞ்சம் உணர்டு நடுங்குதுயர் உற்றோர் அழல்வாய் நாகத் தாரெயி றழுந்தினர் கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர் கழல வந்து தொழுத்துயர் நீங்கும் நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும் தவமறைந் தொழுகும் தன்மை யிலாளர் அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் அறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காதம் நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும் அரைககோல் கோடினும் அறங்கூறு அவையத்து உரைநூல் கோடி ஒரு திறம் பற்றினும் நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப் பாவைநின் றழுஉம் பாவை மன்றமும் மெய்வகை யுணர்ந்த விழுமியோர் ஏத்தும் ஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ (சிலப்.5:111-140); |
நெடுங்கல்மன்றம் | நெடுங்கல்மன்றம் neḍuṅgalmaṉṟam, பெ. (n.) நெடுங்கல் நின்ற மன்றம் பார்க்க;see nedungal-ninra-manram [நெடுங்கல் + மன்றம்] |
நெடுங்கல்மன்றம் | நெடுங்கல்மன்றம் neḍuṅgalmaṉṟam, பெ. (n.) நெடுங்கல் நின்ற மன்றம் பார்க்க;see nedungal-ninra-manram [நெடுங்கல் + மன்றம்] |
நெடுங்களத்துப்பரணர் | நெடுங்களத்துப்பரணர் neḍuṅgaḷattupparaṇar, பெ. (n.) கழகக் காலப் புறநானுற்றுப் புலவர்; a Šangam poet. [நெடு → நெடும் + களத்து + பரணர்] திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே காவிரியின் தென்கரையில் உள்ள நெடுங்களம் என்னும் ஊரினர். பரணறென்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இருத்தலால் அவரின் வேறுபடுத்தி அறிதற்குப் பண்டையோர் இவரது ஊராகிய நெடுங்களத்தைச் சேர்த்து நெடுங்களத்துப்பரணர் என்று வழங்கினர். எடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து எனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்தெனத் திரித்ததன் மேலும் திரிபடைவதாயிற்று. இவர் நெடிய கழுத்தையுடையராதல் பற்றி நெடுங்கழுத்துப் பரணர் என்று உறுப்புப் பற்றி பெயர் பெற்றனர் எனக் கூறினர். போருக்குச் செல்பவர் வெள்ளுடையுடுத்திச் செல்வது அக்கால வழக்கம் என்பது இவரது பாடலால் (புறநா.291); அறிய முடிகிறது. “சிறாஅஅர் துடியர் பாடுவன் மகா அஅர் தூவெள் ளறுவை மாயோற் குறுகி இரும்புட் பூசல் ஒம்புமின் யானும் விளிக் கொட்பின் வெண்னரி கடிகுவென் என்போற் பெருவிதுப் புறுக வேந்தே கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை மணிமருண் மாலை குட்டி அவன்றலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே’ (புறநா.291); இவ்வொரு பாடல் மட்டுமே இவர் பாடியதாகக் காணப்படுகிறது. |
நெடுங்களத்துப்பரணர் | நெடுங்களத்துப்பரணர் neḍuṅgaḷattupparaṇar, பெ. (n.) கழகக் காலப் புறநானுற்றுப் புலவர்; a Šangam poet. [நெடு → நெடும் + களத்து + பரணர்] திருச்சிராப்பள்ளிக்குக் கிழக்கே காவிரியின் தென்கரையில் உள்ள நெடுங்களம் என்னும் ஊரினர். பரணறென்ற பெயருடைய சான்றோர் ஒருவர் இருத்தலால் அவரின் வேறுபடுத்தி அறிதற்குப் பண்டையோர் இவரது ஊராகிய நெடுங்களத்தைச் சேர்த்து நெடுங்களத்துப்பரணர் என்று வழங்கினர். எடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து எனப் பிழைபட்டுப் பின்னர் நெடுங்கழுத்தெனத் திரித்ததன் மேலும் திரிபடைவதாயிற்று. இவர் நெடிய கழுத்தையுடையராதல் பற்றி நெடுங்கழுத்துப் பரணர் என்று உறுப்புப் பற்றி பெயர் பெற்றனர் எனக் கூறினர். போருக்குச் செல்பவர் வெள்ளுடையுடுத்திச் செல்வது அக்கால வழக்கம் என்பது இவரது பாடலால் (புறநா.291); அறிய முடிகிறது. “சிறாஅஅர் துடியர் பாடுவன் மகா அஅர் தூவெள் ளறுவை மாயோற் குறுகி இரும்புட் பூசல் ஒம்புமின் யானும் விளிக் கொட்பின் வெண்னரி கடிகுவென் என்போற் பெருவிதுப் புறுக வேந்தே கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை மணிமருண் மாலை குட்டி அவன்றலை ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே’ (புறநா.291); இவ்வொரு பாடல் மட்டுமே இவர் பாடியதாகக் காணப்படுகிறது. |
நெடுங்களம் | நெடுங்களம் neḍuṅgaḷam, பெ. (n.) திருச்சி மாவட்டத்து ஊர்; a village in Trichy district. “நிழலார் சோலை நெடுங்களத்து நிலாயநித்த மணாளன்” – (அப்பர்); [நெடும் + களம். நெடும் = பரந்த. களம் = செழிப்பு. சோலைகள் நிறைந்து செழிப்புற்ற ஊர். இன்று திருநாட்டாங்குளம், திருநாட்டான்குளம் என வழங்குகிறது.] “தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது பெட்டப்பினமென்று பேரிட்டுக் – காட்டி எடுங்கள் அத்தா என்னா முன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தார் பாதம் நினை” – (சேத்திரக் கோவை வெண்பா); |
நெடுங்களம் | நெடுங்களம் neḍuṅgaḷam, பெ. (n.) திருச்சி மாவட்டத்து ஊர்; a village in Trichy district. “நிழலார் சோலை நெடுங்களத்து நிலாயநித்த மணாளன்” – (அப்பர்); [நெடும் + களம். நெடும் = பரந்த. களம் = செழிப்பு. சோலைகள் நிறைந்து செழிப்புற்ற ஊர். இன்று திருநாட்டாங்குளம், திருநாட்டான்குளம் என வழங்குகிறது.] “தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது பெட்டப்பினமென்று பேரிட்டுக் – காட்டி எடுங்கள் அத்தா என்னா முன் ஏழைமட நெஞ்சே நெடுங்களத்தார் பாதம் நினை” – (சேத்திரக் கோவை வெண்பா); |
நெடுங்கழுத்தன் | நெடுங்கழுத்தன் neḍuṅgaḻuttaṉ, பெ. (n.) 1. நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் (பிங்.);; camel. 2. நீண்ட கழுத்துள்ள கோவேறு கழுதை (சூடா.);; mule. [நெடு → நெடும் + கழுத்தன்] |
நெடுங்கழுத்தன் | நெடுங்கழுத்தன் neḍuṅgaḻuttaṉ, பெ. (n.) 1. நீண்ட கழுத்துள்ள ஒட்டகம் (பிங்.);; camel. 2. நீண்ட கழுத்துள்ள கோவேறு கழுதை (சூடா.);; mule. [நெடு → நெடும் + கழுத்தன்] |
நெடுங்கழுத்துப் பரணர் | நெடுங்கழுத்துப் பரணர் neḍuṅgaḻuttupparaṇar, பெ. (n.) நெடுங்களத்துப்பரணர் பார்க்க;see nedu-n-galattu-p-paranar. |
நெடுங்கழுத்துப் பரணர் | நெடுங்கழுத்துப் பரணர் neḍuṅgaḻuttupparaṇar, பெ. (n.) நெடுங்களத்துப்பரணர் பார்க்க;see nedu-n-galattu-p-paranar. |
நெடுங்காலம் | நெடுங்காலம் neḍuṅgālam, பெ. (n.) நீண்ட காலம்; long time. [நெடும் + காலம்] |
நெடுங்காலம் | நெடுங்காலம் neḍuṅgālam, பெ. (n.) நீண்ட காலம்; long time. [நெடும் + காலம்] |
நெடுங்காலி | நெடுங்காலி neḍuṅgāli, பெ. (n.) கால் நீண்ட ஆன் (பசு); (யாழ்ப்.);; long legged cow. [நெடும் + காலி] |
நெடுங்காலி | நெடுங்காலி neḍuṅgāli, பெ. (n.) கால் நீண்ட ஆன் (பசு); (யாழ்ப்.);; long legged cow. [நெடும் + காலி] |
நெடுங்கிடை | நெடுங்கிடை neḍuṅgiḍai, பெ. (n.) 1. நோயால் நீண்ட நாட்கள் படுக்கையிற் கிடக்கை (உ.வ.);; being bed-ridden for a long time, as from a disease. கால்கை வராமல் நெடுங்கிடையாய்க் கிடக்கின்றான். 2. நெடுஞ் சாண்கிடை பார்க்க;see negu-n-jāngidai. நெடுங்கிடையாய் வணங்கினான். [நெடும் + கிடை] |
நெடுங்கிடை | நெடுங்கிடை neḍuṅgiḍai, பெ. (n.) 1. நோயால் நீண்ட நாட்கள் படுக்கையிற் கிடக்கை (உ.வ.);; being bed-ridden for a long time, as from a disease. கால்கை வராமல் நெடுங்கிடையாய்க் கிடக்கின்றான். 2. நெடுஞ் சாண்கிடை பார்க்க;see negu-n-jāngidai. நெடுங்கிடையாய் வணங்கினான். [நெடும் + கிடை] |
நெடுங்கின்ளி | நெடுங்கின்ளி neḍuṅgiṉḷi, பெ.(n.) கடைக்கழகக் காலத்திய சோழ மன்னன்; name of Chola king. |
நெடுங்கிள்ளி | நெடுங்கிள்ளி neḍuṅgiḷḷi, பெ. (n.) கழகச் காலச் சோழ மன்னன்; a Chola king ir Šangam age. கோவூர்க்கிழாரால் பாடப்பட்டவன் (புறநா 44,45,47);. இவன் தம்பி (எதிரி); உரையூரிலிருந்த நலங்கிள்ளி என்னும் சோழன். நெடுங் கிள்ளிக்கு ஆவூரும் உறையூரும் சொந்தமாக இருந்தன நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட போது நெடுங்கிள்ளி அவனுடன் போரிடவியலா தென்று மதிலை அடைத்துப் பதுங்கிக் கிடந்தான். இந்நிலை நெடுங்கிள்ளிக்கு இழிவெனக் கூறிக்கோவூர் கிழா இவனை இடித்துரைத்தார் (புறநா.44);. இவனுக்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும் பெயரிருப்பதால் இவன் காரியாறு என்னும் இடத்தில் இறந்திருக்கவேண்டும். “இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளுங் கைய வெய்து உயிர்த்து அலமரல் யானை உரும்என முழங்கவும் பாலில் குழவி அலறவும் மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில் வினைபுனை நல்லில் இணைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல் துன்னருந் துப்பின் வயமான் தோன்றல் அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல் மறவை ஆயின் போரொடு திறத்தல் அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நானுத்தக உடைத்து இது காணுங்காலே” (புறநா.44); |
நெடுங்கிள்ளி | நெடுங்கிள்ளி neḍuṅgiḷḷi, பெ. (n.) கழகச் காலச் சோழ மன்னன்; a Chola king ir Šangam age. கோவூர்க்கிழாரால் பாடப்பட்டவன் (புறநா 44,45,47);. இவன் தம்பி (எதிரி); உரையூரிலிருந்த நலங்கிள்ளி என்னும் சோழன். நெடுங் கிள்ளிக்கு ஆவூரும் உறையூரும் சொந்தமாக இருந்தன நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்ட போது நெடுங்கிள்ளி அவனுடன் போரிடவியலா தென்று மதிலை அடைத்துப் பதுங்கிக் கிடந்தான். இந்நிலை நெடுங்கிள்ளிக்கு இழிவெனக் கூறிக்கோவூர் கிழா இவனை இடித்துரைத்தார் (புறநா.44);. இவனுக்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியெனவும் பெயரிருப்பதால் இவன் காரியாறு என்னும் இடத்தில் இறந்திருக்கவேண்டும். “இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளுங் கைய வெய்து உயிர்த்து அலமரல் யானை உரும்என முழங்கவும் பாலில் குழவி அலறவும் மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில் வினைபுனை நல்லில் இணைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல் துன்னருந் துப்பின் வயமான் தோன்றல் அறவை ஆயின் நினதுஎனத் திறத்தல் மறவை ஆயின் போரொடு திறத்தல் அறவையும் மறவையும் அல்லையாகத் திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நானுத்தக உடைத்து இது காணுங்காலே” (புறநா.44); |
நெடுங்கு | நெடுங்கு neḍuṅgu, பெ. (n.) நெடுக்கு பார்க்க;see medukku. சந்து நெடுங்கிலே போகிறது. [நெடுக்கு → நெடுங்கு] |
நெடுங்கு | நெடுங்கு neḍuṅgu, பெ. (n.) நெடுக்கு பார்க்க;see medukku. சந்து நெடுங்கிலே போகிறது. [நெடுக்கு → நெடுங்கு] |
நெடுங்குடர் | நெடுங்குடர் neḍuṅguḍar, பெ. (n.) மணிக்குடல் (யாழ்.அக.);; the small intestine. [நெடு → நெடும் + குடர். குடல் → குட ஒ. நோ. பந்தல் → பந்தர்] |
நெடுங்குடர் | நெடுங்குடர் neḍuṅguḍar, பெ. (n.) மணிக்குடல் (யாழ்.அக.);; the small intestine. [நெடு → நெடும் + குடர். குடல் → குட ஒ. நோ. பந்தல் → பந்தர்] |
நெடுங்குயில் | நெடுங்குயில் neḍuṅguyil, பெ. (n.) சாவு; death. (சா.அக.);. [நெடுந்துயில் → நெடுங்குயில்] |
நெடுங்குயில் | நெடுங்குயில் neḍuṅguyil, பெ. (n.) சாவு; death. (சா.அக.);. [நெடுந்துயில் → நெடுங்குயில்] |
நெடுங்குரலன் | நெடுங்குரலன் neḍuṅguralaṉ, பெ. (n.) பெருங் குரலுடைய கழுதை (பஞ்சதந்.);; ass. as braying loudly. [நெடு → நெடும் + குரலன்.] |
நெடுங்குரலன் | நெடுங்குரலன் neḍuṅguralaṉ, பெ. (n.) பெருங் குரலுடைய கழுதை (பஞ்சதந்.);; ass. as braying loudly. [நெடு → நெடும் + குரலன்.] |
நெடுங்குரல் | நெடுங்குரல் neḍuṅgural, பெ. (n.) விடாத பெருங்குரல் (வின்.);; long protracted cry, as in wailing, loud continued call. “குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு” (சிலப்.10:23);. “நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும்” (மணிமே.7:85);. [நெடு → நெடும் + குரல்] |
நெடுங்குரல் | நெடுங்குரல் neḍuṅgural, பெ. (n.) விடாத பெருங்குரல் (வின்.);; long protracted cry, as in wailing, loud continued call. “குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு” (சிலப்.10:23);. “நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும்” (மணிமே.7:85);. [நெடு → நெடும் + குரல்] |
நெடுங்குரல்பாய்ச்சு-தல் | நெடுங்குரல்பாய்ச்சு-தல் neḍuṅguralpāyccudal, 5 செ.கு.வி. (v.i.) நீண்ட ஓசையிடுதல்; to make a long protracted noise, as in bemoaning. நெடுங் குரல் பாய்ச்சி அழுதாள். [நெடுங்குரல் + பாய்ச்சு-தல்.] |
நெடுங்குரல்பாய்ச்சு-தல் | நெடுங்குரல்பாய்ச்சு-தல் neḍuṅguralpāyccudal, 5 செ.கு.வி. (v.i.) நீண்ட ஓசையிடுதல்; to make a long protracted noise, as in bemoaning. நெடுங் குரல் பாய்ச்சி அழுதாள். [நெடுங்குரல் + பாய்ச்சு-தல்.] |
நெடுங்குல்லா | நெடுங்குல்லா neḍuṅgullā, பெ. (n.) நீண்டகுல்லா (வின்.);; high cap. [நெடு → நெடும் + குல்லா] |
நெடுங்குல்லா | நெடுங்குல்லா neḍuṅgullā, பெ. (n.) நீண்டகுல்லா (வின்.);; high cap. [நெடு → நெடும் + குல்லா] |
நெடுங்குளம் | நெடுங்குளம் neḍuṅguḷam, பெ. (n.) பாண்டி நாட்டிலுள்ள ஊர்; a village in Pāndi Nâdu. நெடியகுளம் உள்ள ஊர் ஆகலாம். [நெடு → நெடும் + குளம்] |
நெடுங்குளம் | நெடுங்குளம் neḍuṅguḷam, பெ. (n.) பாண்டி நாட்டிலுள்ள ஊர்; a village in Pāndi Nâdu. நெடியகுளம் உள்ள ஊர் ஆகலாம். [நெடு → நெடும் + குளம்] |
நெடுங்குளிசம் | நெடுங்குளிசம் neḍuṅguḷisam, பெ. (n.) கற்பரிபாடாணம்; a kind of native arsenic. (சா.அக.);. |
நெடுங்குளிசம் | நெடுங்குளிசம் neḍuṅguḷisam, பெ. (n.) கற்பரிபாடாணம்; a kind of native arsenic. (சா.அக.);. |
நெடுங்கூவிளி | நெடுங்கூவிளி neḍuṅāviḷi, பெ. (n.) யானை முழங்குவது போன்ற பெருமுழக்கம்; loud noise, as of an elephant. “நிறையழியானை நெடுங் கூவிளியும்” (மணிமே.7:67);. [நெடு → நெடும் + கூ + விளி.] யானை நெடிதாகக் கூவி விளிப்பது போன்ற பேரோசை. |
நெடுங்கூவிளி | நெடுங்கூவிளி neḍuṅāviḷi, பெ. (n.) யானை முழங்குவது போன்ற பெருமுழக்கம்; loud noise, as of an elephant. “நிறையழியானை நெடுங் கூவிளியும்” (மணிமே.7:67);. [நெடு → நெடும் + கூ + விளி.] யானை நெடிதாகக் கூவி விளிப்பது போன்ற பேரோசை. |
நெடுங்கேடு | நெடுங்கேடு neḍuṅāḍu, பெ. (n.) தீராக்கேடு (யாழ்.அக.);; endless ruin. அவனுக்கு அந்தச் செயலால் நெடுங்கேடு விளைந்தது. [நெடு → நெடும் + கேடு.] |
நெடுங்கேடு | நெடுங்கேடு neḍuṅāḍu, பெ. (n.) தீராக்கேடு (யாழ்.அக.);; endless ruin. அவனுக்கு அந்தச் செயலால் நெடுங்கேடு விளைந்தது. [நெடு → நெடும் + கேடு.] |
நெடுங்கை | நெடுங்கை1 neḍuṅgai, பெ. (n.) 1. நீண்ட கையையுடைய யானை; elephant, as having a long trunk. “நெடுங்கைப் பிணத்திடை நின்றான்” (பு.வெ.7:13);. “கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி” (அகநா.63:14);. “ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை” (அகநா.111.8);. 2. முழந்தாள் தொடும் தடக்கை கொண்டவன்; a man having a long hand. [நெடு → நெடும் + கை.] |
நெடுங்கை | நெடுங்கை1 neḍuṅgai, பெ. (n.) 1. நீண்ட கையையுடைய யானை; elephant, as having a long trunk. “நெடுங்கைப் பிணத்திடை நின்றான்” (பு.வெ.7:13);. “கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி” (அகநா.63:14);. “ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை” (அகநா.111.8);. 2. முழந்தாள் தொடும் தடக்கை கொண்டவன்; a man having a long hand. [நெடு → நெடும் + கை.] |
நெடுங்கைநீட்டு | நெடுங்கைநீட்டு neḍuṅgainīḍḍu, பெ. (n.) மிகு தொலைவு (அதிதூரம்);; long distance. “நித்ய விபூதியிலே நெடுங்கைநீட்டாக இருந்தாயாகில்” (ஈடு, 5. 7:1);. [நெடுங்கை + நீட்டு] |
நெடுங்கைநீட்டு | நெடுங்கைநீட்டு neḍuṅgainīḍḍu, பெ. (n.) மிகு தொலைவு (அதிதூரம்);; long distance. “நித்ய விபூதியிலே நெடுங்கைநீட்டாக இருந்தாயாகில்” (ஈடு, 5. 7:1);. [நெடுங்கை + நீட்டு] |
நெடுங்கையன் | நெடுங்கையன் neḍuṅgaiyaṉ, பெ. (n.) யானை; elephant from its long trunk. “ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை” (அகநா. 111.8);. “கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி” (அகநா. 63:4);. [நெடு-மை + கையன்] |
நெடுங்கையன் | நெடுங்கையன் neḍuṅgaiyaṉ, பெ. (n.) யானை; elephant from its long trunk. “ஒய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை” (அகநா. 111.8);. “கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி” (அகநா. 63:4);. [நெடு-மை + கையன்] |
நெடுங்கைவன்மான் | நெடுங்கைவன்மான் neḍuṅgaivaṉmāṉ, பெ. (n.) யானை; an elephant. “நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த” (குறுந். 141:4);. [நெடுங்கை + வன் + மான்] |
நெடுங்கைவன்மான் | நெடுங்கைவன்மான் neḍuṅgaivaṉmāṉ, பெ. (n.) யானை; an elephant. “நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த” (குறுந். 141:4);. [நெடுங்கை + வன் + மான்] |
நெடுங்கைவேண்மான் | நெடுங்கைவேண்மான் neḍuṅgaivēṇmāṉ, பெ. (n.) சோழ நாட்டு மன்னன் பெருஞ்சாத்தன் என்பானின் பட்டப்பெயர்; title, honorific name to Chola king perujñ-såttan. “நெடுங்கை வேண்மானருங்கடிப் பிடவூர்” (புறநா. 395:20);. [நெடுங்கை + வேண்மான்] |
நெடுங்கைவேண்மான் | நெடுங்கைவேண்மான் neḍuṅgaivēṇmāṉ, பெ. (n.) சோழ நாட்டு மன்னன் பெருஞ்சாத்தன் என்பானின் பட்டப்பெயர்; title, honorific name to Chola king perujñ-såttan. “நெடுங்கை வேண்மானருங்கடிப் பிடவூர்” (புறநா. 395:20);. [நெடுங்கை + வேண்மான்] பிடவூர் எனப் பெயரியதோரூர் இதனைச் சோழநாட்டுப் பிடவூர் என்று பண்டையோர் குறித்துள்ளனர். தொண்டைநாட்டுப் பிடவூர், “மணவிற் கோட்டத்துப் புரிசைநாட்டுப் பிடவூர்” (AR No. 68 of 1923); என்றும், சோழநாட்டுப் பிடவூர். “பிடவூர் நாட்டுப் பிடவூர்” (AR No 139 of 1930-31); என்றும் கல்வெட்டுகளிற் காணப் படுகின்றன. இப்பிடவூர்க்குரியராய் வாழ்ந்த வேளாண் மக்களின் குடி முதல்வன் பிடவூர் கிழானாவன். இவனும் இவனைச் சேர்ந்தோரும் அந்நாளில் வேந்தர்க்கு மண்டிலமாக்களும் தண்டத் தலைவருமாய்த் துணைபுரிந்தனர். மூவேந்தர்க்கு மகட்கொடை நேரும் சிறப்பும் இவர்கட்கு உண்டு. இவர்கள் வேளிரெனப்படு தலுமுண்டு. பிடவூர் வேளிர்குடி வழிவழியாக வந்து இடைக் காலத்தும் சிறந்திருந்தது. கல் வெட்டுகளுள் “பிடவூர் நாட்டுப் பிடவூர் வேள்” என்பானொருவன் (AR, No 139 of 1930-31); காணப்படுவதே இதற்குச் சான்று பகருகின்றது. இது நிற்க. இப்பிடவூர் உறையூர்க்குக் கிழக்கில் உளது. பெருஞ் சாத்தன் இப்பிடவூர் கிழான் மகனாவான். இவன் நெடுங்கைவேண்மான் எனவும் வழங்கப் படுவன். (புறநா.395.உரை);. |
நெடுங்கொடி | நெடுங்கொடி neḍuṅgoḍi, பெ. (n.) நீண்ட கொடி; a long flag. நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர் (சீவக. 54);. நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் (நற். 45:4);. மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து (சிலப். 5:146);. [நெடும் + கொடி] |
நெடுங்கொடி | நெடுங்கொடி neḍuṅgoḍi, பெ. (n.) நீண்ட கொடி; a long flag. “நெடுங்கொடி நிழன்மதி நெற்றி தைவர்” (சீவக. 54);. “நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்” (நற். 45:4);. “மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து” (சிலப். 5:146);. [நெடும் + கொடி] |
நெடுங்கொடி காசு | நெடுங்கொடி காசு neḍuṅgoḍikācu, பெ. (n.) நெடிய கொடியின் குறி (இலச்சினை); பொறிக்கப்பட்ட காசு; a coin. இம்மண்ட பத்துக்கு நெடுங்கொடி காசு சிகை இருபத்து நாலு கோடி காசு சிகை இழிந்தருளி (தெ.க.தொ.12:129);. [நெடுங்கொடி + காசு] கி.பி.12ஆம் நூற்றாண்டில் சோழ மண்டலத்தில் மக்கள் வாழ்க்கைக்குரிய பொருளியல் உதவித் தொகையாக இக்காக வழங்கப்பட்டது. (கல்.அக.); |
நெடுங்கொடி காசு | நெடுங்கொடி காசு neḍuṅgoḍikācu, பெ. (n.) நெடிய கொடியின் குறி (இலச்சினை); பொறிக்கப்பட்ட காசு; a coin. “இம்மண்ட பத்துக்கு நெடுங்கொடி காசு சிகை இருபத்து நாலு கோடி காசு சிகை இழிந்தருளி” (தெ.க.தொ.12:129);. [நெடுங்கொடி + காசு] கி.பி.12ஆம் நூற்றாண்டில் சோழ மண்டலத்தில் மக்கள் வாழ்க்கைக்குரிய பொருளியல் உதவித் தொகையாக இக்காக வழங்கப்பட்டது. (கல்.அக.); |
நெடுங்கொடி முல்லை | நெடுங்கொடி முல்லை neḍuṅgoḍimullai, பெ. (n.) நீண்ட கொடி முல்லை; a long running jasmine. “நெடுங்கொடி முல்லை யொடு தளவமலர் உதிர” (ஐங்குறு 422:1);. [நெடுங்கொடி + முல்லை.] |
நெடுங்கொடி முல்லை | நெடுங்கொடி முல்லை neḍuṅgoḍimullai, பெ. (n.) நீண்ட கொடி முல்லை; a long running jasmine. “நெடுங்கொடி முல்லை யொடு தளவமலர் உதிர” (ஐங்குறு 422:1);. [நெடுங்கொடி + முல்லை.] |
நெடுங்கோடிச்சுவர் | நெடுங்கோடிச்சுவர் neḍuṅāḍiccuvar, பெ. (n.) நெடுக்குச்சுவர் (C.G.); பார்க்க;see nedukku-c-cuvar. [நெடும் + கோடு + இ + சுவர். நீள வாட்டில் கட்டப்பட்ட சுவர்.] |
நெடுங்கோடிச்சுவர் | நெடுங்கோடிச்சுவர் neḍuṅāḍiccuvar, பெ. (n.) நெடுக்குச்சுவர் (C.G.); பார்க்க;see nedukku-c-cuvar. [நெடும் + கோடு + இ + சுவர். நீள வாட்டில் கட்டப்பட்ட சுவர்.] |
நெடுங்கோடு | நெடுங்கோடு neḍuṅāḍu, பெ. (n.) நீண்ட கோடு, வரி; a long dividing or describing line. “நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி” (நற். 59:2);. [நெடும் + கோடு] |
நெடுங்கோடு | நெடுங்கோடு neḍuṅāḍu, பெ. (n.) நீண்ட கோடு, வரி; a long dividing or describing line. “நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி” (நற். 59:2);. [நெடும் + கோடு] |
நெடுங்கோணி | நெடுங்கோணி neḍuṅāṇi, பெ. (n.) ஒட்டகம் (சங்.அக.);; camel. [நெடும் + கோணி. கொள் → கோண் → கோணி.] நீண்ட வளைவான உடலமைப்பையுடைய விலங்கு ஒட்டகம். |
நெடுங்கோணி | நெடுங்கோணி neḍuṅāṇi, பெ. (n.) ஒட்டகம் (சங்.அக.);; camel. [நெடும் + கோணி. கொள் → கோண் → கோணி.] நீண்ட வளைவான உடலமைப்பையுடைய விலங்கு ஒட்டகம். |
நெடுஞ்சடையன் பராந்தகன் | நெடுஞ்சடையன் பராந்தகன் neḍuñjaḍaiyaṉparāndagaṉ, பெ. (n.) புகழ்பெற்ற சோழ மன்னன்; a famous Chola king. இவன் அரிகேசரி பாங்குசனுடைய மகன். சடையவர்மன் என்பது இவனுக்கு ஒன்றுவிட்டு வரும் மரபுப் பட்டம். தென்னவானவன். சீவான். புனப்பூழியன், மருதபாலன் முதலிய சிறப்புப் பெயர்களைக் கொண்டவன். இவன் பெண்ணாகடத்தில் பல்லவர்களை வென்றான். வேணாட்டரசன் ஆய்வேளைப் போரில் புறங்கண்டான் எனத் தெரிகிறது. இவன் காஞ்சியில் திருமாலுக்குக் கோயில் கட்டினான் என்றும், மாலியக் குரவர் பெரியாழ்வார் இவன் காலத்தவர் என்றும் அறிய முடிகிறது. [நெடும் + சடையன் + பராந்தகன். மாறுகொள்வதும் சடைதலும் போர்ப்பயிற்சி பற்றிய சொற்கள்] |
நெடுஞ்சடையன் பராந்தகன் | நெடுஞ்சடையன் பராந்தகன் neḍuñjaḍaiyaṉparāndagaṉ, பெ. (n.) புகழ்பெற்ற சோழ மன்னன்; a famous Chola king. இவன் அரிகேசரி பாங்குசனுடைய மகன். சடையவர்மன் என்பது இவனுக்கு ஒன்றுவிட்டு வரும் மரபுப் பட்டம். தென்னவானவன். சீவான். புனப்பூழியன், மருதபாலன் முதலிய சிறப்புப் பெயர்களைக் கொண்டவன். இவன் பெண்ணாகடத்தில் பல்லவர்களை வென்றான். வேணாட்டரசன் ஆய்வேளைப் போரில் புறங்கண்டான் எனத் தெரிகிறது. இவன் காஞ்சியில் திருமாலுக்குக் கோயில் கட்டினான் என்றும், மாலியக் குரவர் பெரியாழ்வார் இவன் காலத்தவர் என்றும் அறிய முடிகிறது. [நெடும் + சடையன் + பராந்தகன். மாறுகொள்வதும் சடைதலும் போர்ப்பயிற்சி பற்றிய சொற்கள்] |
நெடுஞ்சட்டை | நெடுஞ்சட்டை neḍuñjaḍḍai, பெ. (n.) நீண்ட அங்கி (வின்.);; long coat gown, cloak. [நெடும் + சட்டை. உடல் முழுமையும் அணியும் ஒரே நீண்ட சட்டை] |
நெடுஞ்சட்டை | நெடுஞ்சட்டை neḍuñjaḍḍai, பெ. (n.) நீண்ட அங்கி (வின்.);; long coat gown, cloak. [நெடும் + சட்டை. உடல் முழுமையும் அணியும் ஒரே நீண்ட சட்டை] |
நெடுஞ்சம்பா | நெடுஞ்சம்பா neḍuñjambā, பெ. (n.) சம்பா நெல் வகை (நாமதீப352. உரை);; a kind of Cambá paddy. [நெடும் + சம்பா] |
நெடுஞ்சம்பா | நெடுஞ்சம்பா neḍuñjambā, பெ. (n.) சம்பா நெல் வகை (நாமதீப352. உரை);; a kind of Cambá paddy. [நெடும் + சம்பா] |
நெடுஞ்சாங்கிடை | நெடுஞ்சாங்கிடை neḍuñjāṅgiḍai, பெ. (n.) நெடுஞ்சாண்கிடை (உ.வ.); பார்க்க;see __, [நெடுஞ்சாண் + கிடை → நெடுஞ்சாங்கிடை] |
நெடுஞ்சாங்கிடை | நெடுஞ்சாங்கிடை neḍuñjāṅgiḍai, பெ. (n.) நெடுஞ்சாண்கிடை (உ.வ.); பார்க்க;see __, [நெடுஞ்சாண் + கிடை → நெடுஞ்சாங்கிடை] |
நெடுஞ்சாணை | நெடுஞ்சாணை neḍuñjāṇai, பெ.(n.) நெடுஞ்சாண்கிடை (யாழ்.அக.); பார்க்க;see nedu-n-jān-kidai. [நெடுஞ்சாண் → நெடுஞ்சாணை] |
நெடுஞ்சாண் | நெடுஞ்சாண் neḍuñjāṇ, பெ. (n.) நெடுஞ்சாண் கிடை (வின்.); பார்க்க;see meaபr-jan –kigai. |
நெடுஞ்சாண் | நெடுஞ்சாண் neḍuñjāṇ, பெ. (n.) நெடுஞ்சாண் கிடை (வின்.); பார்க்க;see meaபr-jan –kigai. |
நெடுஞ்சாண்கட்டை | நெடுஞ்சாண்கட்டை neḍuñjāṇkaḍḍai, பெ. (n.) நெடுஞ்சாண்கிடை (வின்.); பார்க்க;see nedu-n-jān-kida. [நெடுஞ்சாண் + கட்டை. கட்டைபோல் நிலத்தில் கிடத்தல்] |
நெடுஞ்சாண்கட்டை | நெடுஞ்சாண்கட்டை neḍuñjāṇkaḍḍai, பெ. (n.) நெடுஞ்சாண்கிடை (வின்.); பார்க்க;see nedu-n-jān-kida. [நெடுஞ்சாண் + கட்டை. கட்டைபோல் நிலத்தில் கிடத்தல்] |
நெடுஞ்சாண்கிடக்கை | நெடுஞ்சாண்கிடக்கை neḍuñjāṇkiḍakkai, பெ. (n.) உடலின் எட்டு இடங்கள் தரையில் படும்படியாக பெரியார்கள் முன் விழுகை (சாட்டங்கமாக);; prostration by touching ground with the eight limbs – two hands, two knees, two shoulders, chest and forehead. [நெடும்+சாண்+கிடக்கை] [P] |
நெடுஞ்சாண்கிடை | நெடுஞ்சாண்கிடை neḍuñjāṇkiḍai, பெ. (n.) உடல் முழுவதும் நிலத்தில் படும்படிக் கிடக்கை (வின்.);; lying on the ground at full length. [நெடுஞ்சாண் + கிடை] ‘எண்சாண் உடம்பு என்னும் வழக்கால் முழுவுடல் படியும் வணக்கத்திற்கு இப்பெயர் வந்தது. |
நெடுஞ்சாண்கிடை | நெடுஞ்சாண்கிடை neḍuñjāṇkiḍai, பெ. (n.) உடல் முழுவதும் நிலத்தில் படும்படிக் கிடக்கை (வின்.);; lying on the ground at full length. [நெடுஞ்சாண் + கிடை] ‘எண்சாண் உடம்பு என்னும் வழக்கால் முழுவுடல் படியும் வணக்கத்திற்கு இப்பெயர் வந்தது. [P] |
நெடுஞ்சாண்கிடையாக | நெடுஞ்சாண்கிடையாக neḍuñjāṇkiḍaiyāka, பெ. (n.) வணங்கும் போது உடல் முழுமையும் தரையில் படும்படியாக; prostrating at full length. நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தாய், தந்தையை வணங்குதல் வேண்டும். [நெடுஞ்சாண் + கிடையாக] |
நெடுஞ்சாண்கிடையாக | நெடுஞ்சாண்கிடையாக neḍuñjāṇkiḍaiyāka, பெ. (n.) வணங்கும் போது உடல் முழுமையும் தரையில் படும்படியாக; prostrating at full length. நெடுஞ்சாண் கிடையாக விழுந்து தாய், தந்தையை வணங்குதல் வேண்டும். [நெடுஞ்சாண் + கிடையாக] |
நெடுஞ்சாரை | நெடுஞ்சாரை neḍuñjārai, பெ. (n.) சாரைப் பாம்பு வகை; a king of rat-snake. [நெடும் + சாரை. சாரை = சரசர வென்று செல்வதால் பெற்ற பெயர்] [P] |
நெடுஞ்சாலுழவு | நெடுஞ்சாலுழவு neḍuñjāluḻvu, பெ. (n.) நீட்டுப் போக்குழவு (வின்.);; ploughing lengthwise. [நெடும் + சால் + உழவு. நீள வாட்டத்தில் உழும் உழவு.] |
நெடுஞ்சாலை | நெடுஞ்சாலை neḍuñjālai, பெ. (n.) அரசுத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் (பராமரிப்பில்); இருக்கும் முதன்மையான (பிரதான); பொதுச்சாலை; highway. இந்த வேலை அரசின் நெடுஞ்சாலைத்துறை செய்தது. [நெடும் + சாலை] |
நெடுஞ்சால் | நெடுஞ்சால் neḍuñjāl, பெ. (n.) நெடுஞ்சாலுழவு பார்க்க;see __, “ஊன்கிழித்தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்” (அகநா. 1944);. [நெடும் + சால்] |
நெடுஞ்சினை | நெடுஞ்சினை neḍuñjiṉai, பெ. (n.) நீண்ட அல்லது நெடிய (மரத்தின்); கிளை; a long branch of tree. “நெடுஞ்சினைப் புன்னைக் கடுஞ்சூல் வெண்குருகு” (நற். 31:10);. “பொரிதாள் ஒமை வளிபொரு நெடுஞ்சினை” (குறுந்- 79:2);. “கடுஞ்சூல் வயாவிற் கமர்ந்து நெடுஞ்சினை” (கலித். 40:27);. [நெடும் + சினை. சினை = கிளை, கோடு] |
நெடுஞ்சிமை | நெடுஞ்சிமை neḍuñjimai, பெ. (n.) நெடிய குவடு; நீண்ட மலையுச்சி; a long mound, hillock. summit of mountain. “முயலுநர் முற்றா ஏற்றரு நெடுஞ்சிமை” (அகநா. 322:13);. [நெடும் + சிமை. சிமை = மலையுச்சி.] |
நெடுஞ்சீர்வண்ணம் | நெடுஞ்சீர்வண்ணம் neḍuñjīrvaṇṇam, பெ. (n.) நெடிய ஓசையுடைய நெட்டெழுத் துக்கள் பயின்று வரும் ஒலி (சந்தம்);; a rhythm effected by having only long syllabes. “நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்” (தொல். பொருள். செய். 218);. [நெடும் + சீர் + வண்ணம்] எ.கா. ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே மாறுபடு சூரரைவ தைத்தமுகம் ஒன்றே வள்ளியைம ணம்புணர வந்தமுகம் ஒன்றே ஆறுமுக மானபொருள் நீயருள வேண்டும் ஆதியரு ணாசலம்.அ மர்ந்தபெரு மானே (திருப்புகழ்); |
நெடுஞ்சுடர் | நெடுஞ்சுடர் neḍuñjuḍar, பெ. (n.) நெடிய கொழுந் தினையுடைய நெருப்பு; a long fame fire. “பாயிருள் அறநீக்கும் நோய்தபு நெடுஞ்சுடர்” (கலித். 137:20);. “நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து நம்” (அகநா. 88:6);. “நிவந்தபள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து” (அகநா. 93:14);. [நெடும் + சுடர். நீண்ட தீச்சுவாலையை யுடைய நெருப்பு] |
நெடுஞ்சுனை | நெடுஞ்சுனை neḍuñjuṉai, பெ. (n.) நீண்ட ஆழமான நீர்ச் சுனை; a long reservoir of water on a mountain, a hill tank. “குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கிக் கவிழ்ந்து” (நற். 151:10);. “குன்றக நெடுஞ்சுனைக் குவளை போல” (ஐங்குறு. 500:2);. [நெடும் + சுனை. சுனை = மலைஊற்று] |
நெடுஞ்சுருட்டை | நெடுஞ்சுருட்டை neḍuñjuruḍḍai, பெ. (n.) சுருட்டைப் பாம்பு வகை (M.M.); ; a variety of Echis carninata, long carpet-snake. [நெடும் + சுருட்டை. சுருட்டை = சுருண்ட வடிவில் (இருக்கையில்); இருக்கும் பாம்பு. இஃது ஒடும் போது நீண்டு கொள்ளும் தன்மையது.] [P] |
நெடுஞ்சுரை | நெடுஞ்சுரை neḍuñjurai, பெ. (n.) சுரைக்கொடி; bottle gourd creeper – Calabash or calabash-cucumber- lagenaria vulgaris.(சா.அக.);. [நெடும் + சுரை. சுரை = உட்டுளை, உட்டுளையுள்ள காய்.] |
நெடுஞ்சுழி | நெடுஞ்சுழி neḍuñjuḻi, பெ. (n.) ஆற்றின்கண் ஏற்படும் நீர்ச்சுழி; whirling as water. “நெடுஞ்சுழி நித்தம் மண்ணுநள் போல” (அகநா. 62:10);. [நெடும் + சுழி. சுழி = சுழன்று காணப்படுவது] |
நெடுஞ்சுவர் | நெடுஞ்சுவர் neḍuñjuvar, பெ. (n.) நெடிய சுவர்; a long wall. “ஒவுறழ் நெடுஞ்சுவர் நாள் பல வெழுதி” (பதிற்று. 68:17);. “நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து” (அகநா. 16:4);. “நெடுஞ்சுவர் நல்லில் புலம்பக் கடைகழிந்து” (புறநா. 373:11);. “படுங்கொல் வாழி நெடுஞ் சுவர்ப்பல்லி”. (நற்.69:3); [நெடும் + சுவர்] |
நெடுஞ்சூடு | நெடுஞ்சூடு neḍuñjūḍu, பெ. (n.) அதிகமான வெப்பம்; a long heat, warmth burn or scald. “நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு” (புறநா. 397:13);. [கள் → கர் → கடு → சூடு. சூடு = அதிக வெப்பம்] |
நெடுஞ்செழியன் | நெடுஞ்செழியன் neḍuñjeḻiyaṉ, பெ. (n.) 1. சிலப்பதிகாரக் காலத்து அரசனும் கோவலனைக் கொல்வித்தவனுமான பாண்டிய அரசன் (சிலப்.23.கட்டுரை);; the Pandya king who caused the death of Kövalan, as related in Silappadikāram. 2. மதுரைக் காஞ்சி முதலியவற்றில் புகழப்பட்டவனும் தலையாலங் கானத்துச் செருவென்ற வனுமாகிய பாண்டியன்; the Panda king of Talai-yălañkān-am fame, celebrated in Maturai-k-kafici and other poems. [நெடும் + செழியன்] நெடுஞ்செழியன் இருவர் ஆவர். ஒருவன் சிலப்பதிகாரத்தில் வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மற்றவன் தலையாலங் கானத்துச் செரு வென்றவன். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். இவன் சேரன் செங்குட்டுவன் காலத்திருந்த பாண்டியமன்னன் வடநாட்டு ஆரிய மன்னர்களை வென்றவன். தான் ஆராயாமல் அளித்த தீர்ப்புக்கு அஞ்சி மனைவியுடன் உயிர்விட்டவன். இவனே அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டிய நெடுஞ்செழியன். இவன் வீரனும் புலவனுமாவான். இவன் பாடிய பாட்டு புறநானூற்றில் காணப்படுகிறது. “உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும் ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட்படுமே” (புறநா.183);. தலையாலங்கானத்துச் செருவென்றவன் : பாண்டிய மன்னன், கல்வி கேள்வியில் சிறந்தவன். சிறந்த வீரமுள்ளவன், செய்யுள் இயற்றும் திறமுடையவன், மாங்குடி மருதனாரால் புகழப்பட்டவன், இளமையிலேயே அரசுரிமையைக் கைக் கொண்டு ஆட்சி புரிந்தவன். சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளியும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும் இந்நெடுஞ்செழியனை இகழ்ந்து கூறிப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றக் கருதி மதுரையை முற்றுகையிட்டார்கள். நெடுஞ்செழியன் சினமிகுந்து “நகுதக்கனரே (புறநா.72); என்ற செய்யுளால் வஞ்சினங் கூறிப் போருக்கெழுந்து உழிஞைகுடிப் போர் செய்யத் தொடங்கினான். (புறநா.79);. எழுவரையும் வென்றான் (புறநா.76);. தோற்ற எழுவரும் ஒடிச் சென்று சோழ நாட்டிற் புகும்போதும் இவன் விடாதுபின் தொடர்ந்து சென்று தலையாலங்கானத்து மறித்து நின்று பெரும் போர் நடத்தி வெற்றி பெற்றான். இடைக்குன்றுர்க் கிழாரால் பாடல் பெற்றவன். இவன் பாடிய புறப்பாடல்: “நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரு மாவும் படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியனெம் மிறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக உலகமொடு நிலைஇய புலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா வின்மையா னுறவே” (புறநா.72);. |
நெடுஞ்சேரலாதன் | நெடுஞ்சேரலாதன் neḍuñjēralātaṉ, பெ. (n.) கழக (சங்க);க்கால இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தினுள் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன்: the Sera king, celebrated in the second section of Padisrup-pattu. [நெடுமை + சேரல் + ஆதன்] சாரல் என்பதன் திரிபு சேரல் → சேரன் எனச் சிலர் கூறுவர். ஆயின் சேர்ப்பன்’ என்று துறைமுகத்தலைவனைக் கருப்பொருள் பட்டியலில் நம்பியகப் பொருள் சேர்ப்பதால், சேர்ப்பு, சேரல் என்பன துறைமுகத்தைக் குறிக்கும். அதன்வழி சேரல் → சேரன். சேரல் + அம் = சேரலம் கேரளம் திரிபு பெற்றிருத்தல் அறியலாம். நெடுஞ்சேரலாதன் இவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குடவர்கோமான் நெடுஞ்சேரலாதன் என்பர். இவன் உதியஞ்சேரல் என்னும் வேந்தனுக்கு வெளியன் வேண்மான் மகள் நல்லினியிடம் பிறந்தவன். இவன் இமயம் வரையிற் படையெடுத்துச் சென்று. அம் மலையிலே தன் கொடியை நாட்டினான் (எழுதினான்); என்பதினால், இவனை இமயவரம்பன் என்பர். இவன் தமிழகம் முழுமையையும் ஆண்டான். யவன அரசரைப் போரிற் பிடித்து, அவர்கள் கையைப் பின்கட்டாகக் கட்டி, நெய்யை அவர்கள் தலையிற் பெய்து கொணர்ந்தான் என்றும், மாற்று அரசரிடம் விலையுயர்ந்த அணிகளையும் வயிரங்களையும் திறையாகப் பெற்று, அவற்றைத் தன் வஞ்சியிலுள்ளார்க்குக் கொடுத்தான் என்றும் பதிற்றுப்பத்துக் கூறுகிறது. இவனுக்கு நற்சோணையிடம் பிறந்த மக்கள் செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் ஆவர். இவனுடைய மற்றொரு மனைவியான பதுமன் மகளுக்குப் பிறந்த மக்கள் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனு மாவர். சேரலாதனைக் குமட்டுர் கண்ணனார் என்னும் புலவர் பாடிய பத்துச் செய்யுட்கள் பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தாக அமைந்துள்ளது. இவன் குமட்டுர்க் கண்ணனார்க்கு உம்பற்காடு என்னும் பகுதியில் 500 ஊர்கள் கொடுத்ததாகவும். தென்னாட்டு வருவாயில் ஒரு பகுதியும் அளித்த தாகவும் 58 ஆண்டுகள் அரசாண்டதாகவும் பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. “மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு வெளியன் வேண்மான் நல்லினி யின்றமகன் அமைவர லருவி யிமையம் விற்பொறித் திமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு பேரிசை மரபி னாரியர் வணக்கி நெய்தலைப் பெய்து கைபிற் கொளி.இ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு பெருவிறன் மூதூர்த் தந்துபிறர்க் குதவி அமையார்த் தேய்த்த அணங்குடை நோன்றாள் இமைய வரம்பன் நெடுஞ்சோ லாதன்” (பதிற்றுப். இரண்டாம். பதி);. |
நெடுஞ்சேவிகம் | நெடுஞ்சேவிகம் neḍuñjēvigam, பெ. (n.) பனைமரம்; palmyra tree-Borassus flabellifer. (சா.அக.); |
நெடுஞ்சொல் | நெடுஞ்சொல் neḍuñjol, பெ. (n.) புகழ், புகழ்ச்சொல் (கீர்த்தி); (வின்.);; fame, renown. [நெடும் + சொல்] |
நெடுத்தல் | நெடுத்தல் neḍuttal, பெ. (n.) நீண்டுவளர்கை; growing tall. (சா.அக.);. மறுவ. நெடுநெடுத்தல் [நெடு → நெடுத்தல்] |
நெடுநல்வாடை | நெடுநல்வாடை neḍunalvāḍai, பெ. (n.) தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மேல் நக்கீரனாராற் பாடப்பட்டதும் கழக (சங்க); இலக்கியமான பத்துப்பாட்டினுள் ஏழாவதுமான பாட்டு; the seventh ode of Pattu-p-pattu by Nakkiranâr, celebrating Nedu-fi-jeliyan of Talaiyālafi gånam fame. [நெடும் + நல்வாடை. நீண்ட நல்வாடை] நெடுநல்வாடை இது ‘கோல நெடுநல்வாடை என்று சிறப்பிக்கப் பெறும் எட்டுத்தொகை நூல்; 188 அடிகளைக் கொண்டது ஆசிரியப் பாவால் அமைந்தது. பகைமேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு அவ்வருத்தம் நீங்கும் பொருட்டு அவன் பகையை வென்று விரைவில் வருவானாக என்று கொற்றவையைப் பரவும் பெண் கூறுவதாக உள்ளது. நெடுநல்வாடை என்பது நெடிதாகிய வாடை என விரியும். தலைவனைப் பிரிந்து வருந்தி வாடும் தலைவிக்கு ஒரு பொழுது ஒரூழியைப்போல் நெடிதாகிய வாடையாகவும், அரசன் இன்பத்தில் மனமற்று வேற்றுப்புலத்துப் போந்திருந்த இருப்பு அவனுக்கு வெற்றியைத் தரும் ஆகலின் அவனுக்கு நல்லது ஆகிய வாடையாகவும் ஆனமையின் “நெடுநல்வாடை எனப் பெற்றது. நெடுநல்வாடை, சுட்டி ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகப்பொருளாமேனும், “வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்” என வேந்தனது அடையாளப் பூவாகிய வேம்பைக் கூறினமையின் அகம் ஆகாது புறனே யாயிற்று கூதிர்ப்பாசறை கூறுதலின் வாகைத்திணை யாயிற்று; கொற்றவை நிலை கூறுதலின் வஞ்சியின் தொடர்புண்டு. நெடுநல்வாடையின் 188 அடிகளில் முதல் எழுபத்திரண்டடிகளில் கூதிர்காலத்தியல்பும், அடுத்து நாற்பத்திரண்டடிகளில் கோயிலும், கோயிலுள் ஆடவர் குறுகா அருங்கடி வைப்புகளும், அவற்றுள் தலைவியிருக்கும் இல்லமும், அடுத்த இருபத்தோரடிகளில் தலைவி யமர்ந்திருக்கும் யானையின் கொம்பாலாகிய (தந்தக்); கட்டிலும் சேக்கையும், அடுத்த 31 அடிகளில் தலைவி வருத்தத்துடன் இருக்கும் இயல்பும், பின் இரண்டடிகளில் கொற்றவையை வேண்டிக் கோடலும், இறுதியிலுள்ள இருபதடிகளில் தலைவன் பாசறை யிருப்பும் கூறப்பெற்றுள்ளன. இப்பாடலில் தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் இயல்பு, பாசறையில் இருந்த மன்னனின் திறமும் சிறப்பாகக் கூறப்படுகிறது. மற்றும் கூதிர்க்காலத்தில் குளிர் மிகுதியால் ஆக்கள் கன்றுக்குப் பால் கொடாமல் உதைக்கும் இடையர்கள் குளிர்ச்சி மிகுதியால் கையை நெருப்பிலே காய்ச்சி அதிற் கொண்ட வெம்மையைக் கன்னத்தில் படுத்துவர். “ஆரந்தாங்கிய அலர் முலையாகத்து, பின்னமை நெடுவிழ் தாழ” என்ற அடிகளில் நெடுவிழ் என்பதற்கு நெடியதாலி என்று நச்சினார்க்கினியர் பொருள் தருவதால், தாலிகட்டும் மரபு இருந்தது அறியப்படும். வீழ் என்பதை மயில் என்பாரும் உளர். “தாம்வீழ்வர் மென்தோல் துயிலின் இனிது கொல்” குறள், 1103). இக்குறளில் வீழ்’ என்பது விரும்பற் பொருளில் வந்துள்ளது காண்க. விரும்பத்தக்கவை மயிலும், தாலியுமாகலாம். அரச மாளிகையைப்பற்றிய செய்திகள் கூறப் படுகின்றன. மாளிகையின் கதவுகளில் துருப்பிடிக் காதபடி சாதிலிங்கம் பூசப் பெற்ற இருப்புக் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும் நிலாமுற்றம் உண்டு. யவனர் இயற்றிய தொழில் மாட்சிமைப்பட்ட பாவை விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். தலைவி பள்ளி கொள்ளும் யானை மருப்பாலான கட்டில், வாயில் நிலை, கதவம், முதலியவற்றின் நுட்பமமைந்த தொழிற்றிறங்களால் அக்காலத்துத் தொழில் திறனை அறியலாம். அன்றியும் அக்காலத்து மக்களின் வானநூற் புலமையையும் மனை நூற் புலமையையும் இந்நூல் தெள்ளிதின் விளக்கும். விலங்குகள் மேயுந்தொழிலை மறந்தன; மரத்திலுள்ள பறவைகள் கீழே வீழ்ந்தன; ஆக்கள் கன்றை உதைத்துக் கடிந்தன; குன்றையுங் குளிர்விக்கும் நடுயாமத்தில் முகண்டைக்கொடியும் பீர்க்கும் தூறுகள் தோறும் மலர்ந்தன; கொக்குக்களும் நாரைகளும் ஈரமணலி லிருந்து கவரும்படி கயல் மீ ன்கள், அற்ற நீரில் எதிரே வந்தன; மேகங்கள் சிறிய துளிகளைத் தூற்றின; வயல்களில் நெற்கதிர்கள் வளைந்தன, கமுகமரங் களிற் பாக்குகள்முற்றின; பொழில்களில் மழைத்துளி கள் மாறமல் வீழ்ந்தன; மாடங்கள் உயர்ந்த ஊர் களிலுள்ள வீதிகளில் முறுக்குண்ட உடம்பினராகிய மாக்கள் கள்ளையுண்டு களித்து மழைத்துளிக்கு அஞ்சாமல் திரிந்தார்கள்; அழகிய கையையுடைய மகளிர் பூந்தட்டிலே இட்டு வைத்த பிச்சி மலர்கள் அலர்ந்தன; அவற்றின் அலர்ச்சியால் மாலைக் காலத்தின் வருகையை அம்மகளிர் அறிந்து விளக்கையேற்றி நெல்லையும் மலரையும் தூவித் தெய்வத்தைத் தொழுது மாலைக்காலத்தைக் கொண்டாடினார்கள்; வீட்டில் இருக்கும் புறாச்சேவல் பெடைகளோடு மன்றங்களிற்சென்று இரைதேடி உண்ணாமல் இரவும் பகலும் மயங்கிக் கொடுங்கையைத் தாங்கும் பலகைகளில் இருந்தன; சந்தனம் முதலியவற்றை அரைப்பதற்காக வடநாட்டிலுள்ளாரிடமிருந்து பெற்ற சந்தனக்கல்லும் தென்றிசையிற்பெற்ற சந்தனக் கட்டையும் பயனற்றுக் கிடந்தன; மகளிர் தம் கூந்தலில் மாலைகளை முடியாமல் சில மலர்களை மட்டும் வைத்து முடிக்க விரும்பிக் கூந்தலைப் புலர்த்துதற்கு அகிற்புகையை உண்டாக்கினர்; விசிறிகள் உறைகளிலே இடப்பெற்றுச் சிலந்தி கூடு கட்டும்படி முளையிலே துங்கின; உயர்ந்த மாடங்களின் மேல்நிலையில் வேனிற்காலத்தில் தென்றல் வரும் சாளரங்களின் கதவுகள் தாழிட்டுக்கிடந்தன. எங்கும் மழைத் துளி தூற்றப்படுவதனால் எல்லோரும் தண்ணீரை அருந்தாமல் தூபமுட்டியிலுள்ள நெருப்பின் வெம்மையை நுகர்ந்தனர் ஆடல் மகளிர் பாடுதற்காகக் குளிர்ச்சியால் நிலைகுலைந்த யாழ் நரம்பைத் தம் மார்பிற்றடவி அங்குள்ள வெப்பத் தினால் பண்ணை முறைப்பட நிறுத்தினர்;கணவரைப் பிரிந்த மகளிர் வருந்தினர் மழை நிறைந்தது. இவ்வாறு கூதிர்க்காலம் நிலை பெற்றது. தலைவியிருக்கும் இவ்வரண்மனை, நல்ல வேளையிற் சிற்பநூலறிந்தார் நூலைப்பிடித்துத் திசைகளைக் குறித்துக்கொண்டு அத்திசைகளிலுள்ள தெய்வங்களையும் ஆராய்ந்தறிந்து பெரிய அரசருக்குத் தக மனையை வகுத்து அமைத்த மதிலையுடையது. பருத்த இரும்பாலே கட்டிச் சாதிலிங்கத்தைப் பூசி இரட்டைக் கதவு களையமைத்து, உத்தரக் கற்கவியிலே குவளைப்பூக்களும் பெண்யானைகளுமாகிய சித்திரங் களையமைத்து. கைத்தொழில்வல்ல தச்சன் இயைத்தனாற் குற்றமற்று விளங்குவனவும், சிறுகடுகை யப்பிநெய்யையணிந்த நெடியநிலையினை யுடையனவும், கொடியோடுயானை புகத்தக்க உயர்ச்சியை யுடையனவுமாகிய வாயில்களையுடையது; திருமகள் நிலைபெற்ற சிறப்பினையுடையது மணல்பரந்த முற்றத்தையும் கவரிமான், அன்னம் என்பன திரியும் வாசல்முன் பினையும் உடையது. அங்கே, குதிைைரகள் புல்லுணவைக் குதட்டும் ஒசையோடே நிலாமுற்றத்திலிருந்து வந்துவிழும் மழைநீர்த்தாரையின் ஒசையும் கலந்து மலையின் ஆரவாரம்போல ஒலிக்கும். இதனுள்ளேயுள்ள அந்தப்புரத்தில் சிலமகளிர் யவனர் இயற்றிய பாவைவிளக்கில் நிறைய நெய்யைச் சொரிந்து விளக்கு ஒளிமழுங்கும்போதெல்லாம் நெய்யை வார்த்துத் தூண்டி இருள்நீங்கச் செய்வார்கள். அவ்விடம் பாண்டியனன்றிப் பிற ஆண்மக்கள் அணுகாத காவலையுடையது: மலைகளைப் போன்ற உயர்ச்சியையும் இந்திரவில்லைப்போன்ற கொடி களையும் நீலமணியைப்போன்ற கருமை யையுடைய திரண்ட தூண்களையும் கொண்டுள்ளது; செம்பினாற் பண்ணினாலொத்த கவர்களில் ஒரு கொடி எழுதப்பெற்றது. அதனுள் தலைவி ஒரு பெரிய வட்டக்கட்டிலிற் படுத்திருக் கின்றாள். அக்கட்டில், நாற்பது அகவை (பிராயத்தை);யுடையதும் போரிற் பொருதுபட்டதுமாகிய யானையின் கொம்பை வெட்டிக் கனமும் செம்மையும் ஒப்பத் தச்சன் உளியாலே இயற்றி இலைத்தொழிலை இடையே அமைத்த திரண்ட குடங்களையும் உள்ளிப்புட்டிலைப்போன்ற அடியினையும் உடையது. அதில் முத்தையுடைய சாளரங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. புலிவடிவம் பொறித்த பூத்தொழிலை யுடைய கச்சுக்கள் இடமறையும்படி கட்டப்பட்டிருக் கின்றன. நிறம் ஊட்டப்பெற்ற பலசேனங்களை விரவவைத்து மான்வேட்டம் எழுதி முல்லை முதலிய மலர்களை நிரைத்து மெல்லிதாக விரித்த படுக்கை இடப்பட்டிருக்கிறது;அதன்மேல் அன்னத்தின் தூவியைப் பரப்பி அணைகளையிட்டுவைத்துத் துகில்களில் தூயவற்றை விரித்த பாயலில் அவள் இருக்கின்றனள். முன்பு முத்துமாலையை அணிந்திருந்த அவளுடைய மார்பில் தாலி நானொன்றுமே தாழ்ந்திருக்கிறது;தன் கணவன் பிரிந்தமையினால் நெற்றியினிடத்து உலறிக்கிடந்த சிலவாகிய அளகத்தையும், குழைகளைக் களைந்து தாளுருவியை அழுத்தினகாதையும் உடையவளாய், பொன்னாலாகிய தொடியை அணிந்திருந்த கைகளிற் சங்குவளையை அணிந்து, காப்பு நாணைக்கட்டிக் கொண்டு, முடக்கென்னும் விரற்செறியை (மோதிரத்தை);யும் பூத்தொழிலையுடைய ஆடை உடுக்கப் பெற்றிருந்த இடையில் மாசேறி விளங்கிய நூற்புடைவையையும் உடையளாய் வண்ணங் கொண்டெழுதாத சித்திரத்தைப் போலத் தோன்று கின்றனள். அழகிய மகளிர் துயிலச் செய்தற்கு எண்ணித் தன் அடியை மெல்ல வருடவும், செவிலியர்கள் குறியவும் நெடியவுமாகிய பொய்யும் மெய்யுங்கலந்த மொழிகளைப் பலகாற் சொல்லி, “இப்பொழுதே நின்காதலர் வருவார்” எனக்கூறவும் அவள் மனம் பொருந்தாளாயினுள் மிக வருந்து கின்றாள் கட்டிலின் மேற்கட்டியில் எழுதியுள்ள பன்னிரண்டு ஒரைகளில் ராசிகளில்), சந்திரனோடு உள்ள உரோகிணியைப் பார்த்துத் தானும் அவ்வாறு தன் கணவனோடு இருக்கப் பெறாமையை நினைந்து நெட்டுயிர்ப்புக் கொண்டு கண்ணில் துளித்த நீர்த்துளிகளைத் தன்கைவிரலாற் கடைக்கண்களிற் சேர்த்தித் தெறித்துத் தனிமையாய் இருக்கின்றாள். இத்தகைய அன்புடைய தலைவிக்குத் தீதாயிருக்கின்றன ஆற்றுதற்கரிய துன்ப நினைவு தீரும்படி தலைவன் வருவானாக. பாசறையிலுள்ள தலைவன் போர்க்களத்தே துதிக்கைகள் நிலத்திற் புரளும்படி களிறுகளைக் கொன்ற வீரருடைய விழுப்புண்ணைக் காணக்கருதித் தானிருக்கும் இடத்திற்குப் புறம்பே வந்து வாடைக்காற்று அடிக்குந்தோறும் விளக்கிலெரிகின்ற சுடர்கள் தென்றிசை நோக்கிச் சாய்ந்த தலையினை யுடையன வாய் எரியா நிற்க வேப்பமாலையைத் தலையிற் கட்டிய வேலோடே முன்னேசெல்கின்ற சேனாபதிவீரர்களை முறையே தனக்குக்காட்டிக் கொண்டுவரத் தன் தோளினின்றும் நழுவி வீழ்கின்ற உடையை இடப்பக்கத்தே தழுவிக்கொண்டு வாளையுடைய வீரனது தோளில் வலக்கையை வைத்தவனாகி முகமலர்ச்சியோடு வந்து மாலையையுடைய கொற்றக்குடை மழைத்துளியை மறைக்க நடுயாமத்திலும் படுத்துறங்காமற் சில வீரர்களோடு புண்பட்ட வீரர்களைப் பார்த்துத் திரியா நிற்பான். அத்தகைய வேந்தன் பாசறையிடத்திலிருந்து பலரோடு செய்யும் போர்த்தொழில் அவனுக்கு வெற்றியைக் கொடுத்து இப்பொழுதே முடிவதாக. (உ.வே.சா.); “வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள்கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயன் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன விழக் கறவை கன்றுகோ ளொழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள்:” (நெடுநல்.1-12); |
நெடுநாக்கு | நெடுநாக்கு neḍunākku, பெ. (n.) மங்கல் நிறமுள்ள கடல்மீன் வகை; sea – fish, brownish. [நெடும் + நாக்கு. நீண்ட நாக்கும் மங்கலான நிறமும் உடைய கடல் மீன்வகை] [P] |
நெடுநாக்குப்பூச்சி | நெடுநாக்குப்பூச்சி neḍunākkuppūcci, பெ. (n.) நாக்குப்பூச்சி வகை (M.L.);; round nematoid intestinal worm. [நெடும் + நாக்குப்பூச்சி. நீண்ட நாக்குப்பூச்சி வகை] |
நெடுநாட்சுரம் | நெடுநாட்சுரம் neḍunāḍcuram, பெ. (n.) நீண்ட நாளாகத் தொடரும் காய்ச்சல்; long continued fever chronic fever. (சா.அக.);. [நெடுநாள் + சுரம்] |
நெடுநாட்டு | நெடுநாட்டு neḍunāḍḍu, பெ. (n.) ஒருவகைப் பெரு மரம். (L.); ; Tranvancore lance wood. மறுவ. கானக்கைதை |
நெடுநாட்பழக்கம் | நெடுநாட்பழக்கம் neḍunāḍpaḻkkam, பெ. (n.) நெடும்பழக்கம் (உ.வ.); பார்க்க;see nedu-m-palakkam. [நெடு + நாள் + பழக்கம்] |
நெடுநாரை | நெடுநாரை1 neḍunārai, பெ. (n.) செந்நாரை; a kind of red stork. [நெடும் + நாரை] நெடுநாரை2 neḍunārai, பெ. (n.) 1. பெரிய மர வகை (L.);; fragrant cherry-nutmeg, Polyalthia fragrans. 2. மரவகை; Wynaad coffee cherry-nutmeg, Polyalthia coffeeoides. மறுவ. கோடாஞ்சி [நெடும் + நாரை, நாரை = நாரை போல் வெண்மையான பெரிய மரவகை.] |
நெடுநார் | நெடுநார் neḍunār, பெ. (n.) ஒருவகைக் காப்பிச் செடி; a kind of dooduga, Polyalthia coffeeoides (சா.அக.);. [நெடு + நார்] |
நெடுநாள் | நெடுநாள் neḍunāḷ, பெ. (n.) நெடுங்காலம் (யாழ்.அக.);; long time. நண்பனைப் பார்த்து நெடுநாள் ஆகிவிட்டது. நெடுநாள் கழித்து ஊருக்கு வந்துள்ளான். மறுவ. நீண்டநாள். [நெடு + நாள்] |
நெடுநாவை | நெடுநாவை neḍunāvai, பெ. (n.) கலப்பையின் நீண்டகொழு(வின்.);; long ploughshare. கலப்பைக்கு நெடுநாவைப் போட வேண்டும். மறுவ. கலப்பைக்கொழு. [நெடு + நாவை. நா → நாவை = கலப்பையின் கொழு நுனி.] |
நெடுநிகழ்ச்சி | நெடுநிகழ்ச்சி neḍunigaḻcci, பெ. (n.) நீண்டகாலம்; long period, long duration of time, opp to kuru-nigalcci. “மேலுங் கற்பத் தின்னெடு நிகழ்ச்சியும்” (மணிமே.27.192.); மறுவ. நெடுங்காலம் [நெடும் + நிகழ்ச்சி] |
நெடுநிரை | நெடுநிரை neḍunirai, பெ. (n.) நீண்ட அணிவகுப்பு; a long battle array. “நிலனுற நிமிர்தானை நெடுநிரை நிவப்பன்ன” (பரிபா.7:7);. [நெடும் + நிரை. நிரை = வரிசை] |
நெடுநீட்டு | நெடுநீட்டு neḍunīḍḍu, பெ. (n.) 1. மிகு தொலைவு; long distance. நெடுநீட்டு நடந்து போக வேண்டும். 2. வெகுநீளம்; great length. நெடுநீட்டுப் பாதை. நெடுநீட்டுச் சுவர். [நெடும் + நீட்டு, நீட்டு = நீளம்] |
நெடுநீர் | நெடுநீர் neḍunīr, பெ. (n.) 1. அகலமான கடல் (வின்.);; sea, as wide. 2. நீட்டித்துச் செய்யும் இயல்பு; dilatoriness, disposition to procrastinate. “நெடுநீர் மறவி மடிதுயி னான்கும்” (குறள்,605);. [நெடும் + நீர், அகலமான கடலை குறித்த நெடுநீர் என்னும் சொல் காலம் நீட்டித்துச் செய்யும் இயல்பையும் குறித்தது.] |
நெடுநீலி | நெடுநீலி neḍunīli, பெ.(n.) 1. செந்தாழ; false kateerah – Sterenlia urens. 2. சிவப்புத் தாழை; fragrant screwpine – Pandanus odoratissinus. (சா.அக.);. |
நெடுநீளம் | நெடுநீளம் neḍunīḷam, பெ. (n.) நேர்நீளம்; straight length. [நெடும் + நீளம்.] |
நெடுநெடு-த்தல் | நெடுநெடு-த்தல் neḍuneḍuttal, 4.செ.கு.வி. (v.i.) நெடுநெடுகு-பார்க்க;see __, [நெடு + நெடு-நெடுநெடு → நெடுநெடு-த்தல்] |
நெடுநெடுகு-தல் | நெடுநெடுகு-தல் neḍuneḍugudal, 5செ.கு.வி. (v.i.) மிக நீண்டு அல்லது உயர்ந்து இருத்தல் (யாழ்ப்.);; to be very long, tall or high. மரம் நெடுநெடுகென வளர்ந்துள்ளது. [நெடு + நெடுகு → நெடுநெடுகு-தல்] |
நெடுநெடுவென்று | நெடுநெடுவென்று neḍuneḍuveṉṟu, வி.எ. (adv.) குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரமாக; very tall. ஒரு மாதத்திற்குள் செடி நெடு நெடுவென்று வளர்ந்து விட்டது. [நெடு + நெடு + என்று] |
நெடுநெடெனல் | நெடுநெடெனல்1 neḍuneḍeṉal, பெ. (n.) நெடநெடெனல் (திவா.); பார்க்க;see medianegenal. [நெடநெடெனல் → நெடுநெடெனல்.] நெடுநெடெனல்2 neḍuneḍeṉal, பெ.(n.) வளர்ச்சிக் குறிப்பு; expr. signifying tall growth. நெடுநெடென பையன் வளர்ந்து விட்டான். [நெடு + நெடு + எனல்] |
நெடுநேரம் | நெடுநேரம் neḍunēram, பெ. (n.) மிகுநேரம்; long time. [நெடும் + நேரம்] |
நெடுநோக்கு | நெடுநோக்கு neḍunōkku, பெ.(n.) வருங்காலத்தில் ஏற்படக்கூடிய நலனைக் கருத்தில் கொண்ட கணிப்பு; farsightedness. அரசியல் திட்டங்கள் நெடுநோக்குடன் திட்டப்பட வேண்டும். [நெடும் + நோக்கு-நெடுநோக்கு = தொலைநோக்கு] |
நெடுந்தகை | நெடுந்தகை neḍundagai, பெ. (n.) 1. பெரிய மேம்பாடுள்ளவன்; person of great worth. “நேராரம் பூண்ட நெடுந்தகை” (பு.வெ.3:11);. “நெடுந்தகை நின்று நோக்க நீள் கடற் பிறந்த கோல” (சீவக. 1290);. “நீறுபட்டேயொளி காட்டும் பொன் மேனி நெடுந்த கையே” (திருவாசக. நீத்தல். 11);. 2. பெரிய நிலையை யுடையவன்; person of great status. “மொய்யினiப் பூப்பெய் தெரியல் நெடுந்தகை” (பு.வெ. 4:19);. 3. அளத்தற்கரிய தன்மையை யுடையவன்; person of great quality. “வெய்ய அடுந்திறல் ஆழி அரவணை யாய் என்றும் நெடுந்தகை நின்னையே யாம்” (பு.வெ. 9:3);. [நெடு → நெடும் + தகை. தகை = தகைமையானவன், உயர்ந்தவன்] |
நெடுந்தகைமை | நெடுந்தகைமை neḍundagaimai, பெ. (n.) மேம்பாடு, பெருந்தகைமை; greatness, nobility. [நெடும் + தகைமை, தகைமை = தகுதி பெருமை, குணம், மதிப்பு, அழகு, ஒழுங்கு] |
நெடுந்தட்டு | நெடுந்தட்டு neḍundaḍḍu, பெ.(n.) 1. வானில் பறக்கவிடும் தாள்பட்டவகை (வின்.);; a kind of paper-kite. பையன்கள் மாடியில் நின்று நெடுந்தட்டு விடுகின்றனர். 2. பொறுக்க முடியாதது; that which is unendurable. “ருசியுடை யாரிழக்கை நெடுந்தட்டு திவ்.திருப்பா.5, வியா,பக்.88). [நெடும் + தட்டு, தட்டு = தட்டு போன்ற பட்டம்.] |
நெடுந்தாயகம் | நெடுந்தாயகம் neḍundāyagam, பெ. (n.) அடுத்து ஆடும்படி விழுந்தாயம் (வின்.);; a winning cast of dice, as giving the right to throw again. [நெடும் + தாயம். தாயம் = கவறுருட்ட விழும் ஒன்று என்னும் எண். ஒன்று விழுந்தால்தான் காயை இறக்கி விளையாட்டைத் தொடரமுடியும். ஐந்து, ஆறு, பன்னிரண்டு எண் விழுந்தால் மறுபடி ஆட்டம் உண்டு.] |
நெடுந்தாரை | நெடுந்தாரை neḍundārai, பெ.(n.) பண்டைய இசைக் கருவியினுள் ஒன்று; an ancient musical instrument. [நெடும்+தாரை] |
நெடுந்தாழ்ப்பாள் | நெடுந்தாழ்ப்பாள் neḍundāḻppāḷ, பெ. (n.) கதவுக்கிடும் கணையமரம் (வின்.);; long wooden bar for a door. [நெடும் + தாழ்ப்பாள். கதவுக்குத் தடையாக குறுக்கேயிடும் மரம்] |
நெடுந்துயில் | நெடுந்துயில் neḍunduyil, பெ. (n.) 1. நீண்ட தூக்கம்; long sleep. பையன் வேலை செய்த களைப்பால் நெடுந்துயில் கொண்டுவிட்டான். 2. இறப்பு (யாழ்.அக.);; death. தாத்தா நெடுந்துயில் கொண்டு நீண்ட நேரம் ஆயிற்று. [நெடும் + துயில், துயில் = தூக்கம், சாவு] |
நெடுந்துருத்தி | நெடுந்துருத்தி neḍundurutti, பெ. (n.) நீளமான நீர்வீசுங் கருவி வகை (சீவக.86, உரை);; a long squirt. தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும், ஒரு நெடுந்துருத்தி வாங்கி வா. [நெடும் + துருத்தி. துருத்தி = நீர்விசுங் கருவி, தோற்பை, தோல்] |
நெடுந்தூக்கு | நெடுந்தூக்கு neḍundūkku, பெ. (n.) தூக்கு ஏழனுள் எழுசீர் கொண்டது (சிலப்.3:16,அரும்);; a measure of time, composed of seven Šir, one of seven tukku. [நெடும் + துரக்கு. துக்கு = செய்யுள், பாக்களைத் துணித்து நிறுக்குஞ் செய்யுளுறுப்பு இசை, தாளம், இரண்டு மாத்திரைக் காலம்] செந்தூக்கு மதலைத்துக்கு துணிவுத்துக்கு கோயிற்றுக்கு, நிவப்புத் தூக்கு, கழாற்றுக்கு, நெடுந்துக்கு என்னும் எழுவகைத் தாளத்தில் (துக்கில்); ஒன்று இரண்டு மாத்திரைக்காலம் ஒசையுடையது. எ-டு. “வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினா லிளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோரென் நேருறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளா யேழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே யிளைத்தேன்” (அருட்பா. 203); “வானுறு மதியை யடைந்ததுன் தட்பம் மறிகடல் புகுந்ததுன் பெருமை கானுறு புலியை யடைந்ததுன் சீற்றங் கற்பக மடைந்ததுன் கொடைகள் தேனுறு மலரா ளரியிடம் புகுந்தாள் செந்தழ லடைந்ததுன் மேனி யானு மென்கலியு மெவ்விடம் புகுவோம் நந்தியே யெந்தை பிரானே!” (நந்தி. கலம்,22); “கடல்சுலவு நிலயமிசை மகளிரகல் குறியினொரு கடலைவழி வளுவளென வருமனிதரைக் கடவுள்சுத ரெனுமிழிவு புரைவொரு குறைவிழிவு கழறவழி யெவளவுமில் கடவுண்மகனாய் மிடன்மகிமை யொளிவடிவ மிளிரவெளி வருமுருகை விகிர்தமற வெனதுமன நினைநிலைமையால் நடலைகெட வவலநசை யுழலைகெட விதலைகெட நவிலரிய பரமசுக மதையடைவனே.” “பைந்துளவ மவுலியும யனுமிமைய வருநறிய பனிமலர்கள் கொடுபுசனை புரிபவளர்தே உய்ந்திடவுள் கிருடிகண லுபநிடத மவுனமுள ருயர் மகிமையுடையவர்க னினைவிலுளகோ ஐந்துமுக னுருவினிட மிளிரமலை முருகனெனு மருளிறையென் மனமதனி லுளளினியரோ நைந்தொழியு மறமுழுது முதியமல வலியழிவு நடுவுடைய நமனுருமும் வருவதிலையே” (குமரகுரு. பா. 564); “ஆறுதலை வைத்தமுடி நீணிலவெ றிப்பவெமை யாளுடைய பச்சை மயிலோ மறுமுத லற்றமது ராபுரியி லுற்றபர மேசரொரு சற்று முனரார் நீறுபடு துட்டமதன் வேறுருவெ டுத்தலரி னிள்சிலைகு னித்து வழிதே னுறுகணை தொட்டு வெளி யேசமர்விளைப்பதுமென் னூழ்வினைப லித்த துவுமே” (மதுரைக்கலம். 19); |
நெடுந்தூரம் | நெடுந்தூரம் neḍundūram, பெ. (n.) நீண்டதொலைவு; great distance, long way. நெடுந்தூரம் நடந்த களைப்பால் கண்ணயர்ந்து விட்டான். [நெடும் + தூரம். Skt. தூர → த – துரம் = தொலைவு] |
நெடுந்தெரு | நெடுந்தெரு neḍunderu, பெ. (n.) 1. அங்காடிகள் நிறைந்த தெரு; bazaar street. நெடுந்தெருவில்தான் ஒரு கடை வைக்க வேண்டும். 2. பெரியதெரு; main street, high road. நெடுந்தெருவில் தான் அவன் வீடு உள்ளது. “பொன்னெடுந்தெரு விடை” (கம்பரா. நகர்நீங்கு. 187);. [நெடும் + தெரு] |
நெடுந்தேய்வம் | நெடுந்தேய்வம் neḍundēyvam, பெ. (n.) பெருமையும் புகழும் வாய்ந்த தெய்வம்; great deity. “நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்” (மணிமே.10:93);. நெடுந்தெய்வக் கோயிலுக்குச் சென்று வந்தால் திராத துன்பம் எல்லாம் தீரும். [நெடும் + தெய்வம்] |
நெடுந்தொகை | நெடுந்தொகை neḍundogai, பெ. (n.) நெடுந்தொகை நானுாறு (பன்னிருபா.159); பார்க்க;see nedu-n-dogas-nānuru. [நெடும் + தொகை தொகை = தொகுத்த நூல்] |
நெடுந்தொகைநானூறு | நெடுந்தொகைநானூறு neḍundogaināṉūṟu, பெ. (n.) நானுறு, நீண்ட பாடல்களைக் கொண்ட அகநானூறு (இறை,1, பக்.5);; the poem Agananuru, as being a collection of 400 lengthy stanzas. மறுவ. அகநானூறு [நெடுந்தொகை + நானூறு] குறுந்தொகை 4 முதல் 8 அடிவரையும் நற்றிணை (நட்டினை); 9 முதல் 12 அடிவரையும் அமைந்த பாடல் கொண்டவை. அகநானூறு 13 முதல் 31 அடிவரை வருவதால் நெடுந்தொகை என்று பெயர் பெற்றது. அகநாறுற்றுக்கு மேல் குறிஞ்சிப்பாட்டு 103 அடி முதலாக மதுரைக்காஞ்சி 753 அடிவரை அமைந்தவைப் பத்துப்பாட்டு ஆயின. நெடுந்தொகை நானூறு என்னும் அகநானூறு: ‘அகம்’ என்ற பெயரமைந்த பழைய இலக்கிய நூல் இஃது ஒன்றேயாகும். இது பல்வேறு புலவர்களால் இயற்றப்பட்ட நானுறு பாடல்களைக் கொண்டது. மதுரை உப்பூரி குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மனார் இப்பாடல்களைத் தொகுத்தார். கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். சிவ பெருமானைப் பற்றிய பாடல் இது. அகநானூறு, அகம் பற்றிய எட்டுத்தொகை நூல்களில் நீட்சி உடையதாகையால் நெடுந்தொகை எனவும் வழங்குகிறது. அகநானூறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற் பகுதியான களிற்றி யானை நிரை, முதல் நூற்றிருபது பாடல்களைக் கொண்டது. அடுத்த பகுதியான மணிமி டைப் பவளம், அடுத்த நூற்றெண்பது பாடல்களைக் கொண்டது. இறுதிப் பகுதியான நித்திலக் கோவை, இறுதி நூறு பாடல்களைக் கொண்டது. பாடிய புலவர் நூற்று நாற்பத்தைவர். சிற்றெல்லையாக 13 அடிகளையும், பேரெல்லை யாக 31 அடிகளையும் இந்நூல் கொண்டுள்ளது. இந்நூலைத் தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. அகநானூற்றுப் பாடல்கள் ஒர் ஒழுங்கு முறையினை அடிப்படையாகக் கொண்டே கோக்கப்பட்டுள்ளன. 1, 3, 5, 7, 9 முதலான ஒற்றை எண்பெற்ற பாடல்கள் பாலைத் திணையாகவும், 2, 8, 12 முதலான இரண்டும் எட்டுமான) எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும், 14 என நான்கை ஒட்டிய எண் பெற்றவை முல்லைத் திணையாகவும், 6, 16 முதலான ஆறு எண் பெற்றவை மருதத் திணையாகவும், 10, 20 எனப் பத்துகளாலாய எண் பெற்றவை நெய்தல் திணையாகவும் கோக்கப்பட்டுள்ளன. பல அழகிய அகப்பாடல்களைக் கொண்டது அகநானூறு. குழந்தையின் அழகினை வருணனை முகத்தான் கழகக் காலப் புலவர் பின் வருமாறு இனிதுற வடித்திருக்கக் காணலாம். “நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதின் அல்லி அயலிதழ் புரையும் மாசில் அங்கை மணிமருள் அவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்” – (அகம் 9); “செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி இன்றுவால் உரைமோ சென்றிசினோர் திறத்து என இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன்சொல் பயிற்றும் நாணுடை அரிவை. – (அகநா. 34); போன்ற பகுதிகள் இலக்கிய வானில் இணையற்று எஞ்ஞான்றும் ஒளிவீசித் திகழ்கின்றன. இவை முதல் பகுதியான களிற்றி யானை நிரையில் உள்ளவை. தித்தன், நன்னன், பிட்டன், பண்ணன், கோசர், மோரியர், பாரி, காரி, கொடித்தேர்ச் செழியன், அத்தி கங்கன், கட்டி, புல்லி முதலியவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை நாம் அகநானூற்றில் காண்கிறோம். மக்கட் பேற்றின் சிறப்பினைச் சில பாடல்கள் எடுத்தியம்புகின்றன. ஐந்து நிலங்களின் வண்ணனை பொருத்தமுற, அழகுற, படிப்பவர் மனத்திரையில் காட்சிகளை விரிக்கின்ற அளவுக்குப் படம் தீட்டிக் காட்டப்படுகின்றன. நல்ல உவமைகளும், உள்ளுறைப் பொருள்களும் ஆங்காங்கே விரவி வரக் காண்கிறோம். புலவர்கள் ஒருவர்பால் மற்றொருவர் கொண்ட மதிப்பினைக் கண்டு வியக்கிறோம்! குடவோலை மூலம் நாட்டுக்கு வேண்டிய நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை ஒர் அகப்பாடல் விளக்குகிறது. ஆதிமந்தியர் என்னும் பெண்பாற்புலவர் பேதுற்று அலைந்த காட்சியை ஒரு புலவர் குறிப்பிடுகிறார். திருமணம் அக் காலத்தில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நாம் அறிய வேண்டுமானால், அகநானூற்றில் அமைந்துள்ள நல்லாவூர் கிழாரின் பாடலையே நாட வேண்டியுள்ளது. இவ்வாறு பல வகைச் சிறப்புகளையும் கொண்டு திகழ்கிறது அகநானூறு என்னும் நெடுந்தொகை நானுாறு. |
நெடுந்தோட்டி | நெடுந்தோட்டி neḍundōḍḍi, பெ. (n.) பெரிய துறட்டி (அங்குசம்); (சீவக.1835, உரை);; a large goad. [நெடும் + தோட்டி. தோட்டி = துறட்டி, கூரிய கருவி] [P] |
நெடுந்தோண்டி | நெடுந்தோண்டி neḍundōṇḍi, பெ.(n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tindivanam Taluk. [நெடும்+தோண்டி(பன்மை);] |
நெடுப்பம் | நெடுப்பம் neḍuppam, பெ. (n.) நீளம், நீட்சி(வின்.);; length, height. தெ. நிடுப்பு;ம. நெடுப்பு. [நெடு → நெடுப்பு → நெடுப்பம்] |
நெடுப்பிணை | நெடுப்பிணை neḍuppiṇai, பெ. (n.) வங்க மணல் (யாழ்.அக.);; oxide of lead. மறுவ. ஈயமணல் |
நெடுப்பு | நெடுப்பு neḍuppu, பெ. (n.) நீளிப்பு; long. [நெடு → நெடுப்பு] |
நெடுமடல் | நெடுமடல் neḍumaḍal, பெ. (n.) திருநீறு வைக்கும் ஏன (பாத்திர); வகை (தெ.க. தொ.2,419);; a (metallic); vessel for sacred ashes. [நெடும் + மடல். நீண்ட ஏன வகை] |
நெடுமடை | நெடுமடை neḍumaḍai, பெ. (n.) வெள்ளத் தடுப்பு அணை; flood-gate. [நெடும் + மடை] |
நெடுமணம் | நெடுமணம் neḍumaṇam, பெ. (n.) ஒருவகைச் செய்நஞ்சு (இரசித பாடாணம்);; a kind of prepared arsenic, a mineral poison of silver (சா.அக.);. [நெடும் + மணம்] |
நெடுமணி | நெடுமணி neḍumaṇi, பெ. (n.) நீண்டமணி; a long bell. “நெடுமணி யூபத் திட்ட தவழ் நடையாமை நீணீர்” (சீவக.2878);. [நெடும் + மணி.] |
நெடுமன் | நெடுமன் neḍumaṉ, பெ. (n.) 1. நீண்டது (இ.வ.);; long. 2. நீண்ட பாம்பு (யாழ்.அக.);; long snake. [நெடு → நெடுமன்] |
நெடுமழை | நெடுமழை neḍumaḻai, பெ. (n.) பெரு மழை; heavy rain. [நெடும் + மழை] |
நெடுமாடம் | நெடுமாடம் neḍumāḍam, பெ.(n.) நெடுங்கூட அங்காடி; emporium. |
நெடுமாந்தடி | நெடுமாந்தடி neḍumāndaḍi, பெ. (n.) 1. நீளமான கழி; a long stick or staff. 2. பயனற்றவன்; a good for nothing fellow. ஆள் தான் நெடுமாந்தடி போல் வளர்ந்திருக்கிறானே ஒழிய, எந்த வேலைக்கும் பயன்படமாட்டான். [நெடும் + மா + தடி] |
நெடுமானஞ்சி | நெடுமானஞ்சி neḍumāṉañji, பெ. (n.) கடையெழுவள்ளல்களுள் ஒருவனான (அதியமான்); அஞ்சி; Adiyamân Afiji, a munificant Chief of the Śangam age. மறுவ, அதியமான் நெடுமானஞ்சி [நெடுமான் + அஞ்சி, அச்சன் → அச்சி → அஞ்சி] இவன் தகடுரை ஆண்டவன். அதியர் மரபினனாதலின் அதியமான் எனவும் கூறப்பெறுவான். இயற்பெயர் அஞ்சி என்பது போலும். “ஆர்கலி நறவினதியர் கோமான், போரடு திருவிற் பொலந்தாரஞ்சி (புறநா.91); என்பதாலும் இவன் இயற்பெயரை அறியலாம். குதிரை மலைக்குத் தலைவன். வேற்று நாட்டிலிருந்து கரும்பைக் கொண்டு வந்து இந்நாட்டில் பரவச் செய்தவர்கள் இவ்வஞ்சியின் முன்னோர்களே (புறநா.99);. இவன் மாற்றாருக்கு அஞ்சித் தன்னினத்தோடு காட்டில் ஒளிந்திருந்தனன் என்பதை “சினமிகு முன்பின் வயமானஞ்சி யினங்கொண்டொளிக்கு மஞ்சுவரு கவலை” (அகநா.115); என்பதால் அறியலாம். அஞ்சி யொளிந்ததனால் அஞ்சியெனப்பட்டான் என்பாரும் உளர். ஒளவைக்குச் சாவாமருந்தாகிய நெல்லிக் கணிதந்து புகழடைந்தான். இவன் மகன் பொகுட் டெழினி யாவான். அஞ்சி புலவர்களுக்கு வரையாது வழங்கும் வள்ளலாக விளங்கியவன். இவன் கொடைத் தன்மையை ஒளவையார் பல பாடல்களில் பாடுகிறார். தருமபுரி என்னும் தகடுரை இவன் தலைநகராக் கொண்டு ஆண்டான். இவன் சேரர்க்குரியனாய் அவர்க்குரிய கண்ணியுந் தாரும் தனக்குரியவாகக் கொண்டான். மழவர் கூட்டத்துக்கும் இவனே தலைவன்;அதனால் இவன் மழவர் பெருமகன் எனப்பட்டான். |
நெடுமான்கெளிறு | நெடுமான்கெளிறு neḍumāṉkeḷiṟu, பெ.(n.) மீன் வகை; a kind of fish, Arius dussumieri. [நெடு + மான் + கெளிறு] கெளிற்று மீன் என்பது தஞ்சை மாவட்ட வழக்கு. |
நெடுமாயக் கள்வன் | நெடுமாயக் கள்வன் neḍumāyakkaḷvaṉ, பெ.(n.) திருமால்; Kannan, the god. “கண்டிலம் இவன் நெடுமாயக் கள்வனால்” (யுத்31:174);. [நெடு+மாயன்+கள்வன்] |
நெடுமாறனாயனார் | நெடுமாறனாயனார் neḍumāṟaṉāyaṉār, பெ. (n.) திருஞானசம்பந்தர் காலத்தவரும் பாண்டியவரசரும் நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவருமான சிவனடியார் (பெரிய.நின்றசீர்.1);; a conozied šaiva saint, Pāņɖiyan king and contemporary of Tiruñāna-Šambanda-mürtti-nayanār, one of 63. மறுவ. நின்றசீர் நெடுமாறன். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய மன்னர். 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் முதலில் சமணமதத்தில் இருந்தார். இவர் மனைவி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் செய்த முயற்சியால் திருஞானசம்பந்தரிடம் ஈடுபட்டுச் சிவசமயத்தைத் தழுவினார். இவர் கூன்முதுக ராயிருந்து சம்பந்தர் அளித்த திருநீறு பெற்றுக் கூன் நிமிர்ந்து நெடுமாறனானார். இறையனாரகப் பொருளுரையில் காட்டப்படும் கோவையில் காணப்பெறும் அரிகேசரி இவரே யென்பர் ஆய்வாளர்கள். சேரர்களையும், குறுநில மன்னர்களான பரவர் முதலானோரையும் பாழி, செந்நிலம், நெல்வேலி முதலிய இடங்களில் வெற்றிக் கொண்டாரென்றும், ஒரு பகலிலேயே சோழருடைய உறையூரைக் கைப்பற்றினாரென்றும் இறையனாரகப் பொருளுரை கூறும். “நிறைகொண்ட சிந்தையால், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் போற்றுகின்றது. இவர் ஆட்சிக்காலத்தில் தான் சீனப் பயணி கியூன்சாங் (யுவாங்கவாங்); என்பவர் பாண்டிய நாட்டிற்கு வந்தார் என்றும், இம்மன்னரின் தந்தையின் பெயர் செழியன்சேந்தன் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். |
நெடுமாறன் | நெடுமாறன் neḍumāṟaṉ, பெ. (n.) நெடுமாறனாயனார் பார்க்க;see medu-maranayanar மறுவ. நெல்வேலி வென்ற நெடுமாறன். |
நெடுமால் | நெடுமால் neḍumāl, பெ. (n.) உலகை மூவடியால் அளந்த திருமால்(பிங்.);; Visnu. “நெடுமாற் கடிமை செய்வேன்போல்” (திவ்.திருவாய்.8.10:1);. [நெடும் + மால். மால் = திருமால்] |
நெடுமி | நெடுமி neḍumi, பெ. (n.) 1. நெடியவள் (யாழ்ப்.);; tall-woman. நெடுமி வந்தாள். 2. ஓங்கி நீளமாக வளர்ந்த மரம் (யாழ்ப்.);; tall tree, as palm-tree. 3. மழை (யாழ்.அக.);; rain. [நெடு → நெடுமி] |
நெடுமிசை | நெடுமிசை neḍumisai, பெ. (n.) உச்சி; top, highest point. “மரா அத்து நெடுமிசை” (கலித்.36:2);. [நெடு + மிசை. மிசை = உயர்ச்சி, மேலிடம்] |
நெடுமிடல் | நெடுமிடல் neḍumiḍal, பெ. (n.) 1. வலிமை மிக்கவன்; very strong man. 2. அதியமான் நெடுமானஞ்சியின் இயற்பெயர்; proper name of Adiyamān-nedumānafiji. “அடுபோர்க் கொற்றவ நெடுமிடல் சாய” (பதிற்றுப்.32:10);. [நெடும் + மிடல். மிடல் = வலி, வலிமை] |
நெடுமுரல் | நெடுமுரல் neḍumural, பெ. (n.) நீண்ட குழல் போன்ற மீன் வகை; a kind of pipe-fish. [நெடு + முரல். முரல் = மீன் வகை] [P] |
நெடுமுழக்கச்சை | நெடுமுழக்கச்சை neḍumuḻkkaccai, பெ. (n.) 72 முழம் (36 கஜம்); அல்லது அதற்கு மேற்பட்ட கச்சைத் துணி (யாழ்ப்.);; a long cloth of thirty-six yards or more to a piece. [நெடு + முழம் + கச்சை. கச்சை = நீளமான புதுத்துணி] |
நெடுமுழம் | நெடுமுழம் neḍumuḻm, பெ. (n.) புடைவை வகை (யாழ்.அக.);; a kind of saree. [நெடும் + முழம்] |
நெடுமூக்கு | நெடுமூக்கு neḍumūkku, பெ.(n.) 1.யானையின் துதிக்கை; elephant’s trunk, as a long nose. “நெடு மூக்கிற் கரியினுரி மூடிக்கொண்டார்” (தேவா.123.2.8);. 2. நீண்டமூக்குடைய காக்கை; crow [நெடும் + மூக்கு. நீண்ட மூக்காகிய யானையின் துதிக்கை] |
நெடுமூச்சு | நெடுமூச்சு neḍumūccu, பெ. (n.) பெருமூச்சு; a long breath. [நெடும் + மூச்சு] |
நெடுமூச்செறி | நெடுமூச்செறி1 neḍumūcceṟidal, 2செ.கு.வி.(v.i.) மேல் மூச்சு வாங்குதல் (உ.வ);; to pant, gasp. [நெடும் + மூச்சு + எறி. நீண்ட மூச்சு விடுதல்] |
நெடுமூச்சேரி | நெடுமூச்சேரி2 neḍumūccēridal, 2செ.கு.வி.(v.i.) வலியால் நீண்ட மூச்சு விடல்; breathing with pain, heaving; panting. (சா.அக.);. [நெடும் + மூச்செறி-தல்.] |
நெடுமை | நெடுமை1 neḍumai, பெ.(n.) 1. நீளம்; length, extension. “குறுமையு நெடுமையும் அளவிற் கோடலின்” (தொல்.எழுத்து.50);. 2. உயரம்; tallness, height, as of a person or tree. “நெடுமையா லுலகேழு மளந்தாய்” (திவ்.பெரியாழ்.5.1:4);. 3. காலம் முதலியவற்றின் நீட்சி (இ.வ.);; continuation; protraction. 4. பெருமை (சீவக.1951. உரை);; greatness. “நெடுங்குவலய முங்கைக் கொண்டு” (கோயிற்பு.இரணிய.13);. 5. அளவின்மை (குறள்,17);; boundlessness, excessiveness. 6. ஆழம் (குறள்,495);; depth. 7. கொடுமை (கம்பரா.சம்பாதி.5);; cruelty. 8. பெண்டிர் தலைமயிர் (திவா.);; woman’s hair. ம. நெடு;தெ. நிடு [நெடு → நெடுமை] நெடுமை2 neḍumai, பெ.(n.) நெட்டெழுத்து; long vowel. “நெடுமையுந் தீர்க்கமு நெடிற் பெயர்” (பேரகத்.15);. [நெடு → நெடுமை] |
நெடுமொழி | நெடுமொழி neḍumoḻi, பெ. (n.) 1. புகழ்ந்து கூறும் சொல்; eulogy, encomium, praise. “மாராயம் பெற்ற நெடுமொழியானும்” (தொல்,பொருள்.63);. படைக்கு நெடுமொழி கூறி வாழ்த்தினான் மன்னன். 2. தன்மேம் பாட்டுரை (திவா.);; boast, as of a victorious hero. “நெடுமொழி மறந்த சிறுபேராள” (புறநா.178);. 3. வஞ்சினம்; vow. “தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும்” (தொல்பொருள்.60);. 4. நெடுமொழி யலங்காரம்(மாறனலங்.212); பார்க்க;see medu-moli-yalaigaram. 5. தொல்பழங்கதை (சிலப்.14:49, 9.உரை);; purānic story. 6, யாவரும் அறிந்த செய்தி (சிலப்.14:49, 9 அரும்);; well-known fact. [நெடும் + மொழி] |
நெடுமொழிகூறு-தல் | நெடுமொழிகூறு-தல் neḍumoḻiāṟudal, 5.செ.குன்றாவி.(v.t.) புகழ்ந்துபேசுதல்; to praise. “நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி” (சிலப்.23:115);. [நெடுமொழி + கூறு-தல்.] |
நெடுமொழியலங்காரம் | நெடுமொழியலங்காரம் neḍumoḻiyalaṅgāram, பெ. (n.) போரில் வீரனொருவன் தனக்கு இணையில்லை யென்று மேம்படுத் துரைக்கும் அணி (மாறனலங்.212);; a figure of speech in which a warrior boasts that he has no equal in war. [நெடுமொழி + அலங்காரம். Sktalamkara → த. அலங்காரம் = அணி.] |
நெடுமொழிவஞ்சி | நெடுமொழிவஞ்சி neḍumoḻivañji, பெ. (n.) வீரனொருவன் பகைவர் சேனையை நெருங்கித் தன் ஆண்மையைத் தானே உயர்த்திக் கூறும் புறத்துறை (பு.வெ.3:12);; theme of a warrior approaching his enemy and boasting about his prowess. [நெடுமொழி + வஞ்சி. வஞ்சி = வஞ்சினம் கூறும் புறத்துறை. “ஒன்னாதார் படை கெழுமித் தன்னாண்மை எடுத்துரைத் தன்று” (பு.வெ.3:12);.] |
நெடும் | நெடும் neḍum, பெ.எ.(adj.) காலம் அல்லது நீளத்தைக் குறித்து வரும் நீண்ட; long in time and length. நெடுந்தொலைவு நடக்க வேண்டி இருக்கும். நெடுங்காலத்துக்கு முந்திய கதை. நெடும் பகலுக்கும் சாயுங்காலம் உண்டு (பழ.); [நெடு → நெடும்] |
நெடும் பல்லியத்தை | நெடும் பல்லியத்தை neḍumballiyattai, பெ. (n.) கழகப் காலப் பெண்பாற் புலவர்; a woman poet in Sangam age. இவர் பெயரைக் கொண்டு, பல இசைக்கருவிகளிற் பயிற்சியுடையவர் எனத் தெரிகிறது. நெடும் பல்லியத்தனார் என்னும் ஆண்பாற் புலவரும் உண்டு. தலைவி தலைவனுக்கு அரியளா யிருத்தற்கு மூன்றாம் பிறை, கண்டு தொழுவோர்க்கு அரிய தாயிருத்தலை உவமை கூறியுள்ளார். இவர் பாடியது குறுந்தொகை.178. “அயிரை பரந்த அந்தண் பழனத்து ஏந்தெழில் மலர தும்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கல் ஆனிர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாம் நுமக்கு அரியமாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே” (குறுந்:178); |
நெடும்பகை | நெடும்பகை neḍumbagai, பெ. (n.) நீண்ட காலமாயுள்ள பகை (உ.வ.);; long-cherished enmity. அந்தக்குடும்பத்துக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நெடும்பகையுள்ளது. ம. நெடும்பக [நெடும் + பகை] |
நெடும்பயணம் | நெடும்பயணம் neḍumbayaṇam, பெ. (n.) 1. நீண்ட தொலைவு செல்லுகை; long journey or voyage. அமெரிக்காவுக்கு நெடும்பயணம் சென்று வந்தார். 2, இறப்பு; death. அவன் தாத்தா நேற்று நெடும்பயணம் சென்று விட்டார். [நெடும் + பயணம். பயணம் = செலவு] |
நெடும்பல்லியத்தனார் | நெடும்பல்லியத்தனார் neḍumballiyattaṉār, பெ.(n.) கடைக்கழகக் காலத்திய புலவர்; name of a sangam period. [நெடும்பல்+இயம்+அத்து+அன்+ஆர்] நெடும்பல்லியத்தனார் neḍumballiyattaṉār, பெ. (n.) கழகக் காலப்புலவர்; a Sahgam poet. [நெடும் + பல் + இயம் + அத்து + அன் + ஆர்] இயம் என்பது இசைக் கருவிகளைக் குறிக்கும். இவர் பல இசைக் கருவிகளை இசைப்பதில் உள்ள வல்லமைப் பற்றி இப்பெயர் பெற்றார் போலும். இவர் தம் செய்யுளில், “நல்யாழாகுளி பதலையொடு கருக்கிச் சொல்லாமோ” (புறநா.64); என்று கூறுவதும் இதனை வற்புறுத்தும். குறுந்தொகையில் (குறுந்:203); உள்ள இவர் பாடிய செய்யுளைப் பாடியவர் ‘நெடும் பல்லியத்தை எனவும் பாட வேறுபாடுள்ளது. இவர் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். “மலையிடை யிட்ட நாட்டரு மல்லர் மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் கண்ணிற் காண நண்ணுவழி இருந்தும் கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇ யொழுகும் என்னைக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே” (குறுந்:203); இப்பாடலில் தலைவியினது தூய தன்மையினால் பரத்தைமையுடைய தலைவன், அதிலிருந்து நீங்கி ஒழுகுவதற்கு முனிவரது தூய்மையைக் கண்டு தூய்மை யில்லாதார் அஞ்சி விலகி யொழுகுவதை இவர் உவமையாகக் கூறியுள்ளார். இவர் பாடிய புறநானூற்றுப் பாடல்: “நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிக் சொல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப் பகைப்புல் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்றை நீத்தனம் வரற்கே” (புறநா.64); நெடும் பல்லியத்தன் என்னும் பெயர் ஆண்பாற்கும் நெடும்பல்லியத்தை யென்பது பெண்பாற்கும் வழங்கும். இப்பாட்டின் முதலடியில் யாழ், ஆகுளி, பதலை, யெனப் பல்லியங்களைத் தொகுத்துக் கூறுதலின் இவர் நெடும்பல்லியத்தனார் ஆயினாரெனக் கருதுவோரும் உளர். |
நெடும்பழக்கம் | நெடும்பழக்கம் neḍumbaḻkkam, பெ. (n.) 1. நீண்ட வழக்கம் (அனுபவம்);; Extensive practice, wide experience. அறிவியல் துறையில் அவருக்கு நெடும் பழக்கம் உண்டு. 2. நீடித்த நட்பு; long acquaintance. அவர் குடும்பத்துக்கும் இவர் குடும்பத்துக்கும் நெடும் பழக்கம் உள்ளது. [நெடும் + பழக்கம். பழக்கம் = பயிற்சி, ஒழுக்கம்.] |
நெடும்பழி | நெடும்பழி neḍumbaḻi, பெ. (n.) அழியாத பழி (கம்பரா.அகலிகை.77);; lasting disgrace. அந்தச் செயலைச் செய்ததால் அவருக்கு நெடும்பழி வந்து சேர்ந்தது. வாலியைக் மறைந்து நின்று கொன்றதால் இராமனுக்கு நெடும்பழி வந்தது. [நெடும் + பழி. பழி = பழிச்சொல், வசவு, இகழ்ச்சி] |
நெடும்பா | நெடும்பா neḍumbā, பெ. (n.) ஆடாதோடை (மலை.);; Malabar nut. [P] |
நெடும்பாடு | நெடும்பாடு neḍumbāḍu, பெ. (n.) பெருங்குறைவு; serious defect . “ஏகாவலியிலே ஒரு ரத்னங் குறைந்தாலும் நெடும் பாடாயிருக்கும்” (திவ்.திருப்பா.30, வியா.);. சாப்பாட்டுக்கே நாளும் நெடும்பாடாயிருக்கு. (உ.வ.); [நெடும் + பாடு. பாடு = துன்பம், குறைவு] |
நெடும்பாதிரி | நெடும்பாதிரி neḍumbātiri, பெ. (n.) நீண்ட பாதிரி மரம்; a tall fragrant trempt tree-Stereopermum chelonoides. (சா.அக.);. [நெடு → நெடும் + பாதிரி] |
நெடும்பார்வை | நெடும்பார்வை neḍumbārvai, பெ. (n.) நீண்ட தொலைவு பார்க்கும் ஆற்றல் (வின்.);; capacity to see a long distance. அவனுக்கு நெடும்பார்வை உண்டு. [நெடு → நெடும் + பார்வை. பார்வை = பார்க்கும் ஆற்றல்] |
நெடும்புகழ் | நெடும்புகழ் neḍumbugaḻ, பெ. (n.) பெரும்புகழ்; great fame. [நெடு → நெடும் + புகழ்] |
நெடும்புடல் | நெடும்புடல் neḍumbuḍal, பெ. (n.) நீண்ட புடலங்காய்; snake gourd (சா.அக.); [நெடு → நெடும் + புடல், புழல் → புடல் ஒ.நோ. கீழ்த்திசை → கீட்டிசை] |
நெடும்புயம் | நெடும்புயம் neḍumbuyam, பெ.(n.) செந்நாவிக் கிழங்கு; red aconite root. (சா.அக.);. |
நெடும்புரிவிடு-தல் | நெடும்புரிவிடு-தல் neḍumburiviḍudal, 20 செ.கு.வி.(v.i.) 1. நாட்கடத்துதல்; to put off from day to day. கடனைக் கொடுக்காமல் நெடும்புரி விட்டுக் கொண்டே இருக்கிறான். 2. பொய் புனைந்து சொல்லுதல்; to tell a false story, to give a false excuse. நெடும்புரி விடுவதில் அவன் பெரிய ஆள். [நெடு → நெடும் + புரி + விடு. புரிவிடுதல் = கயிறு திரிக்கப் புரியை முறுக்குவது போல் பொய்யைப் புனைந்து கூறுதல்] |
நெடும்புலம் | நெடும்புலம் neḍumbulam, பெ.(n.) திருத்துறைப் பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்; name of the village in Thiruthuraippundi Taluk. [நெடும்+புலம்] |
நெடும்புலி | நெடும்புலி neḍumbuli, பெ.(n.) அரக்கோணம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Arakonam Taluk. [நெடும்+புலி] |
நெடும்புழு | நெடும்புழு neḍumbuḻu, பெ.(n.) புழுவால் பயிரில் விழும் (பூச்சி); நோய்வகை (நாஞ்.);; a disease of crops, due to worms. [நெடு → நெடும் + புழு] |
நெடும்பொழுது | நெடும்பொழுது neḍumboḻudu, பெ. (n.) நெடுநேரம்; long time. [நெடு → நெடும் + பொழுது.] |
நெடும்போக்கு | நெடும்போக்கு neḍumbōkku, பெ. (n.) திரும்பிவரும் நோக்கம் இல்லாத செலவு (இ.வ.);; going away for good, never to return. வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டு பையன் நெடும்போக்குப் போய்விட்டான். [நெடும் + போக்கு] |
நெடுவங்கியம் | நெடுவங்கியம் neḍuvaṅgiyam, பெ.(n.) ஏழு துளைகள் கொண்ட குழல்வகை; flute which has seven holes. [P] [நெடு+வங்கியம்] |
நெடுவசி | நெடுவசி neḍuvasi, பெ. (n.) போர் வீரனது புண்ணைத் தைத்தலால் உண்டாகும் ஊசித் தழும்பு; scar of stitches in sewing up a warriors wound. “நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்” (பதிற்று.42); [நெடு + வசி. வசி = ஊசி. ஊசித் தழும்பு] |
நெடுவட்டம் | நெடுவட்டம் neḍuvaḍḍam, பெ. (n.) நீளவாக்கில் அமைந்த வட்டம்(வின்.);; spheroid-, ellipse. நெடுவாட்டம் ஒன்று வரைந்து கொடு. ம. நெடுவட்டம். [நெடும் + வட்டம்] |
நெடுவட்டி | நெடுவட்டி neḍuvaḍḍi, பெ.(n.) நெட்டுவட்டி (நெல்லை); பார்க்க;see nettu-vați. [நெடும் + வட்டி] |
நெடுவரி | நெடுவரி neḍuvari, பெ.(n.) நீண்ட வரிசை அல்லது ஒழுங்கு; long row or line. “வான் பறைக் குருகி னெடுவரி பொற்ப” (பதிற்றுப்.83:2);. [நெடும் + வரி, வரி = வரிசை, ஒழுங்கு] |
நெடுவரை | நெடுவரை neḍuvarai, பெ.(n.) இலண்டனி லுள்ள கிரீன்விச்சுக்கு ஊடாகச்செல்லும் வடதென் துருவ நிரை கோட்டிலிருந்து மேற்கில் அல்லது கிழக்கில் நிரலாக உலக வரைபடத்தில் இடப்படும் நெடுங்கோடு; longitude. imaginary vertical lines drawn goes through greenwich from North to South. [நெடு+வரை] நெடுவரை neḍuvarai, பெ.(n.) உயர்ந்த மலை; a high mountain. “நெடுவரை யருவி யாடிச் சந்தன நிவந்த சோலை” (சீவக.2815);. [நெடு + வரை. வரை = மலை, கோடு, ஒழுங்கு, குன்று, பக்க மலை] |
நெடுவல் | நெடுவல் neḍuval, பெ.(n.) நெடிய ஆள் (யாழ்.அக.);; tall person. [நெடு → நெடுவல் = உயரமானவன்] |
நெடுவழி | நெடுவழி neḍuvaḻi, பெ.(n.) நெடுஞ்சாலை பார்க்க;see neguñjālai. [நெடும் + வழி] |
நெடுவாசி | நெடுவாசி neḍuvāci, பெ. (n.) பெரும் வேறுபாடு; vast difference. “த்ரவ்ய வைஷம்யத்தால் தோஷமும் நெடுவாசிப் பட்டிருக்கும்” (திவ்.திருமாலை.16:62);. தெ. நிடுவாசி. [நெடும் + வாசி. வாசி = வேறுபாடு] |
நெடுவாய் | நெடுவாய் neḍuvāy, பெ.(n.) உள்ளான்மீன்; a Sea – fish. [நெடும் + வாய். நீண்டவாயையுடைய மீன் வகை] |
நெடுவாய்க் கலப்பை | நெடுவாய்க் கலப்பை neḍuvāykkalappai, பெ.(n.) கலப்பையின் உழும் பகுதி; long plough share. [நெடு+வாய்+கலப்பை] [P] |
நெடுவாறி | நெடுவாறி neḍuvāṟi, பெ. (n.) நாய்ப்பாகல்; dog carolah-Mimordica hispida, alias Bryonia mysorensis. (சா.அக.);. |
நெடுவாற்கோங்கு | நெடுவாற்கோங்கு neḍuvāṟāṅgu, பெ. (n.) கோங்கு மரவகை; dipterocarp dammar, Hopea racophlaea. [நெடும் + வால்கோங்கு] |
நெடுவாற்றிரளி | நெடுவாற்றிரளி neḍuvāṟṟiraḷi, பெ.(n.) வெண்ணிறமுள்ள கடல்மீன் வகை (வின்.);; sea-fish, silvery, Gerres oyena. [நெடும் + வாற்றிரளி. வாற்றிரளி = வெண்மையான நீண்ட கடல்மீன்] |
நெடுவாலன் | நெடுவாலன் neḍuvālaṉ, பெ. (n.) 1. கயிறு (யாழ்ப்.);; rope. 2. குரங்கு; money. [நெடும் + வால் + அன்] |
நெடுவாலி | நெடுவாலி neḍuvāli, பெ.(n.) உடும்பு (நாஞ்.);; iguana. [நெடும் + வால் + இ. நீண்டவாலை யுடைய உடும்பு, இ-சொல்லாக்க ஈறு.] |
நெடுவாலிக்கோங்கு | நெடுவாலிக்கோங்கு neḍuvālikāṅgu, பெ.(n.) நெடுவாற் கோங்கு பார்க்க;see neduvār-köngu. [நெடுவாலி + கோங்கு, கோங்கு = மரவகை] |
நெடுவாலியூடகம் | நெடுவாலியூடகம் neḍuvāliyūḍagam, பெ.(n.) நெடுவாலூடகம் பார்க்க;see __, |
நெடுவாலூடகம் | நெடுவாலூடகம் neḍuvālūḍagam, பெ.(n.) 8 விரலம் நீளம் வளர்வதும் வெண்மை நிறமுடையதுமான கடல்மீன் வகை; sea-fish, silvery, attaining 8 inch in length, Gerres filamentosus. “செப்பலியுற்ற நெடுவாலூடகம்” (பறாளை,பள்ளு.75);. [நெடும் + வாலூடகம். வாலூடகம் = நீண்ட வெண்மையான கடல்மீன்] |
நெடுவிரல் | நெடுவிரல் neḍuviral, பெ.(n.) 1. நாய்ப்பாகல் (மலை.);; bryony. 2. ஆடாதோடை (சங்.அக.);; Malabar nut. 3. நீண்ட விரல்; long finger. [நெடும் + விரல். விரல்போன்று நீண்ட நாய்ப்பாகலும், ஆடாதோடையும் நெடுவிரல் எனப்பட்டது] |
நெடுவிரியன் | நெடுவிரியன் neḍuviriyaṉ, பெ.(n.) விரியன் பாம்பு வகை (M.M.);; long viper. [நெடும் + விரியன். நீண்ட விரியன் பாம்புவகை] |
நெடுவீடு | நெடுவீடு neḍuvīḍu, பெ. (n.) துறக்கவுலகம்; salvation. “அழகு கூடு நெடுவீடுற” (மாறனலங்,299.உதா.811);. [நெடும் + வீடு. நீண்ட தொலைவில் உள்ள துறக்கவுலகம்] |
நெடுவெண்ணிலவினார் | நெடுவெண்ணிலவினார் neḍuveṇṇilaviṉār, பெ.(n.) கழகக் காலப் புலவர்; a Sahgam poet. [நெடு + வெண் + நிலவு + இன் + ஆர்] களவொழுக்கத்திலே இரவுக் குறிக்கண் வருந் தலைவனுக்கு இடையூறாக உள்ள நிலவை “நெடு வெண்ணிலவே’ என்று விளித்துப்பாடியதால், “நெடுவெண்ணிலவினார்” என்ற பெயர் பெற்றார் என்பர். இவர் பாடியதாக குறுந்தொகை 47 ஆம்பாடல் காணப்படுகிறது. “கருங்கால் வேங்கை விபுகு துறுகல் இரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண்ணிலவே” (குறுந்:47); |
நெடுவெண்பாட்டு | நெடுவெண்பாட்டு neḍuveṇpāḍḍu, பெ. (n.) ஐந்தடி சிறுமையும் பன்னீரடிப் பெருமையும் உடைய வெண்பாவகை; stanza in veņbā metre, consisting of 5 to 12 lines. “நெடுவண்பாட்டே முந்நால் அடித்தே” (தொல்பொருள். செய்.156);. [நெடு + வெண்பாட்டு. வெண்பாட்டு = வெண்பாவகை] நெடுவெண்பாட்டு – அளவின் நெடிய பாட்டு ஐந்து முதல் பன்னிரண்டடிக்குள் வருவதை பஃறொடை வெண்பா என்றும் அதன்மேல் வரும் அடிப்பாடல் கலிவெண்பா எனவும் கூறுவர். ஐந்தடியாலான நெடுவெண்பாட்டு: “ஆர்ப்பெழுந்த ஞாட்பினுள் ஆள்ஆன் எதிர்த்தோடித் தாக்கி எறிதர விழ்தரும் ஒண்குருதி கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்றனவே போர்க்கொடித் தானைப் பொருபுனல் நீர்நாடன் ஆர்த்தமர் அட்ட களத்து” (களவழி.17); ஆறடியாலான நெடுவெண்பாட்டு: “பன்மாடக் கூடல் மதுரை நெடுந் தெருவில் என்னோடு நின்றா ரிருவர் அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன் (முத்தொள்.58); ஏழடியாலான நெடுவெண்பாட்டு: “வையக மெல்லாங் கழனியா-வையகத்துச் செய்யகமே நாற்றிசையின் தேயங்கள்-செய்யகத்து வான்கரும்பே தொண்டை வளநாடு-வான்கரும்பின் சாறேஅந் நாட்டுத் தலையூர்கள்-சாறட்ட கட்டியே கச்சிப் புறமெலாங்-கட்டியுள் தானேற்ற மான சருக்கரை மாமணியே ஆனேற்றான் கச்சி யகம்” (யா.கா.26,மேற்); சென்னைப் பல்கலைக் கழக அகர முதலியில் நெடுவெண்பாட்டு என்பதற்கு “ஏழடிச் சிறுமையும் பன்னிரடிப் பெருமையும் உடைய வெண்பாவகை” என்று பொருளெழுதியுள்ளது. இதற்கு மேற்கோளாகத் தொல்காப்பியம் பொருளதிகாரம், செய்யுளியல் “நெடுவெண் பாட்டே முந்நால் அடித்தே குறுவெண் பாட்டின் அளவெழு சீரே” என்ற நூற்பாவை (156);க் காட்டியுள்ளது. இந்நூற்பா வெண்பாவின் அடியளவு பற்றிக் கூறுகிறது. வெண்பா, பன்னிரடிப் பெருமையும் எழுசீர் சிறுமையும் உடைத்து என்பது பொருள். எழுசீரான் அமைவது குறள் வெண்பா. நெடுவெண்பாட்டு என்பது பன்னிரடி பெருமையும் ஐந்சிரடி சிறுமையும் உடையதாக அமையும். குறள் வெண்பா இரண்டடியாயும் நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா போன்றவை நன் நான்கடியாகவும் அமையும். நான்கடியின் மிக்க பலவடியான்வரின் பஃறொடை வெண்பா எனப்படும். எனவே நான்கடியின் மிக்கு பன்னீரடி வரையுள்ள வெண்பா நெடுவெண்பாட்டு வகையாகும். |
நெடுவெள்ளூசி | நெடுவெள்ளூசி neḍuveḷḷūci, பெ.(n.) 1. புண், காயம் போன்றவற்றைத் தைக்கும் ஊசி; surgical needle for stitching wounds. “கயமூழ்கிச் சிரல் பெயர்ந்தன்ன நெடுவெள்ளூசி (பதிற்றுப்.42);. 2. நெட்டை என்னும் கருவி (பதிற்று.42:3 உரை);; a kind of weapon. [நெடும் + வெள்ளூசி. வெள்ளூசி = மருத்துவர் புண்களைத் தைக்கும் ஊசி] |
நெடுவேட்டுவன் | நெடுவேட்டுவன் neḍuvēḍḍuvaṉ, பெ.(n.) கோடை மலைப் பகுதியை ஆண்ட கடைக் கழக மன்னன்; a king ruled Ködaimalai. கடிய நெடுவேட்டுவன் என்பது இவனது முழுப் பெயர். கடியம் என்பது நெடுவேட்டுவன் ஊர். இது கோடைக்கானல் என்று இன்று வழங்கும் கோடைமலைச் சாரலில் உள்ளது. கோடைமலையை ஆண்டவன். இவன் தன்னைத் துணை வேண்டி யவர்க்குப் பெரும்புகலாகி, ஆதரவு நல்குபவன், பகைத்துப் பொரக் கருதுவாரை அவர் வலியறுத்துக் கருத்தழிவிக்கும் காட்டாண் மையுடையவன். கொடை வண்மையால் இவன் பால் பரிசிலர்கட்கு மிக்க தொடர்புண்டு. அதனால் கடலுக்குச் சென்ற முகில், நீர் பெற்றன்றி வாராதவாறு போல, இந்நெடு வேட்டுவனைக் காணும் பரிசிலர் இவனது கொடை நலத்தைப் பெற்றன்றிப் பெயர்ந்து போகாரென்னும் பெருமை இவனுக்குப் பிறங்கியிருந்தது. இவனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியுள்ளார். (புறநா.205);. “முற்றிய திருவின் மூவ ராயினும் பெட்பின் றிதல் யாம் வேண்டலமே விறற்சினந் தணிந்த விரையரிப் புரவி உறுவர் செல்சார் வாகிச் செறுவர் தாளுளந் தபுத்த வாண்மிகு தானை வெள்வீ வேலிக் கோடைப் பொருத சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய மான்கணந் தொலைச்சிய கடுவிசைக் கதநாய் நோன் சிலை வேட்டுவ நோயிலை யாகுக ஆர்கலி யாணர்த் தரிஇய கால்வீழ்த்துக் கடல்வயிற் குழிஇய வண்னலங் கொண்மூ நீரின்று பெயரா வாங்குத் தேரொ டொளிறுமருப் பேந்திய செம்மற் களிறின்று பெயரல் பரிசிலர் கடும்பே” (புறநா.205); |
நெடுவேள்குன்றம் | நெடுவேள்குன்றம் neḍuvēḷkuṉṟam, பெ. (n.) சோழ நாட்டிலுள்ள திருச்செங்குன்று; a hill in Chola country. [நெடு + வேள் + குன்றம்] |
நெடோடை | நெடோடை neṭōṭai, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நெடு+ஒடை] |
நெட்டி வேலை | நெட்டி வேலை neṭṭivēlai, பெ.(n.) ஒரு வகையான கைவினைக் கலை; a decoration art. [நெட்டி+வேலை] |
நெட்டிமையார் | நெட்டிமையார் neṭṭimaiyār, பெ.(n.) கடைக் கழகப் பெண்பாற் புலவர்; poetess of sangam period. க. நெட்டம் மிளகு, மூங்கில்.நெட்டி_அழகு, செம்மை [நெட்டு-நெட்டிமை(செம்மை);+ஆர்] நெட்டிமையார் neṭṭimaiyār, பெ. (n.) கழகக் காலப் புலவர்; a Šangam poet. இவர், நீண்ட இமைகளையுடையவர் என்னுங் கரணியம் கருதி இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புறநானூற்றில் (9,12,15); பாடியுள்ளார். இவர் பாடல்களால் பகைவர் அரண்களை அழித்து அவை இருந்த இடத்தைக் கழுதை பூட்டி உழுது பாழ்படுத்தும் வழக்கம் அக்காலத்து இருந்தது என்பதும், முதுகுடுமி ஊன் வேள்வியல்லாத நெய்ம்மலி ஆகுதி பொங்கும்); வேள்வி வேட்டனன் என்பதும் புலப்படுகின்றது. “பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனே மற்றிது விறன்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண்கொண் டினிய செய்திநன் னார்வலர் முகத்தே” (புறநா.12); [நெடு → நெட்டு → நெட்டி + இமை + ஆர்] |
நெட்டுக்குச்சி | நெட்டுக்குச்சி neṭṭukkucci, பெ.(n.) கட்டிலில் நெட்டு வாக்கில் இரண்டு கால்களை இணைக்கும் கட்டை; lengthy wooden raft connecting two legs of the cot. [நெட்டு+குச்சி] |
நெட்டுச் சட்டம் | நெட்டுச் சட்டம் neṭṭuccaṭṭam, பெ.(n.) கதவுகளில் தட்டுப்பலகையினை இணைக்கும் சட்டம்; wooden planks connecting pieces in a door. [நெட்டு+சட்டம்] |
நெட்டுப் பலகை | நெட்டுப் பலகை neṭṭuppalagai, பெ.(n.) பேழை (அலமாரி);யின் ஒரத்தில் உள்ள பலகை, vertical wooden piece in an almyrah. [நெட்டு+பலகை] |
நெட்டுப்பார் . | நெட்டுப்பார் . neṭṭuppār, பெ.(n.) வண்டியின் நடுவில் இருக்கும் மரப்பார்: central core wooden long in a cart. [நெட்டு+பார்) |
நெண்டு | நெண்டு1 neṇṭudal, 5.செ.கு.வி.(v.i.) 1. எதிர்க்களித்தல் (யாழ்ப்.);; to rise upon the stomach, keck. 2. நொண்டுதல்; to limp. “நெண்டிக்கொண்டே” (தேவா.743.8);. [நுல்(துளை); → நுள் → நொள் → நொண்டு → நெண்டு → நெண்டு-தல்.(வே.க.);] நெண்டு2 neṇṭudal, 5.செ.குன்றாவி.(v.t.) தோண்டுதல் (நாமதீப.737);; to dig. [நொண்டு → நெண்டு-தல்] |
நெதி | நெதி1 nedi, பெ. (n.) 1. செல்வம்; treasure. “விழுநெதி பெறினும்” (நற்.16);. 2. முத்து; pearl. “நெதிசொரி சங்க மேந்தி” (சூளா.அரசி.308); [நெல் → நெதி, பழங்காலத்தில் கூலியாக நெல் முதலிய கூலங்களே கொடுக்கப்பட்டது. நெல் வயல் அதிகமுள்ளவன் செல்வந்தனாக மதிக்கப்பட்டான். எனவே நெல் → நெதி என்றாயிற்று. பின் நெதி → நிதியாயிற்று.] நெதி2 nedi, பெ. (n.) தேனிப்பு, ஊழ்கம், உள்ளொடுக்கம் (தியானம்);; meditation. “தப்பாம னெதிபண்ண” (தத்துவப்.262);. [நுல் → நெல் → நெதி, நெதி → நிதி = செல்வம்.] |
நெதியம் | நெதியம் nediyam, பெ.(n.) செல்வம்; wealth riches. “நெதிய மென்னுள” (தேவா.556,5);. [நெதி → நெதியம்] |
நெதியாளன் | நெதியாளன் nediyāḷaṉ, பெ. (n.) குபேரன்; Kuberan. “நெதியாளன் றோழனை” (தேவா,688,7); [நெதி → நெதி + ஆளன்] |
நெதுட்டி | நெதுட்டி neduṭṭi, பெ. (n.) மருது; mardah tree, Terminalia alata. (சா.அக.);. |
நெத்தகர் | நெத்தகர் nettagar, பெ. (n.) நெல்லுடன் முளைக்கும் களை வகை (யாழ்.அக.);; a weed that grows with paddy. வயலில் நெத்தகர் அதிகமாகி விட்டது. [நெல் + தகர். நெல் விளைவைத் தகர்க்கும் களை] |
நெத்தப்பலகை | நெத்தப்பலகை nettappalagai, பெ. (n.) சூதாடும்பலகை; dice-board. “நெத்தப் பலகையை எடுத்து நிறுத்தினாற் போன்ற… குறளனே” (கலித்.94, உரை);. க. நெத்தபலகெ [நெட்டு + பலகை-நெட்டுப் பலகை → நெத்தப்பலகை] சூதாட்டம் ஆடுவதற்காக கோடுகள் வரையப்பட்ட பலகை. [P] |
நெத்தமண்டலி | நெத்தமண்டலி nettamaṇṭali, பெ. (n.) தேள்வகை (சங்.அக.);; a scorpion. [நெத்தம் + மண்டலி. அரத்தம் போன்று சிவந்து காணப்படும் தேள் வகை. அரத்த மண்டலி → நெத்த மண்டலி.] |
நெத்தம் | நெத்தம் nettam, பெ. (n.) அரத்தம்; blood. [அரத்தம் → இரத்தம் → நெத்தம். ஒ.நோ. நிரம்ப → நொம்ப] |
நெத்தலி | நெத்தலி nettali, பெ. (n.) நெய்த்தோலி பார்க்க;see __, [நெத்தல் → நெத்தலி.] |
நெத்தல் | நெத்தல் nettal, பெ. (n.) நெய்த்தோலி பார்க்க;see ney-t-tos (சா.அக.);. |
நெத்தி | நெத்தி netti, பெ. (n.) மீன் நீந்துதற்குக் கரணியமான மிதவைப் பை (மீனவ.);; swimming bladder of a fish. [நத்தி → நெத்தி, நத்தி = மீனின் மிதவைப்பை] |
நெத்திக்கட்டுதடி | நெத்திக்கட்டுதடி neddikkaḍḍudaḍi, பெ.(n.) தடி விளையாட்டில் தன்னுடைய உயரத்திற்கு வைத்திருக்கும் கெட்டியான மூங்கில் கழி; a bâmboo pole used in martial fight. (கொ.வ.வ.சொ.99);. [நெற்றி+கட்டுதடி] |
நெத்தியடி | நெத்தியடி nettiyaḍi, பெ.(n.) செயலிழக்கச் செய்யும் தாக்குதல் அல்லது பாதிப்பு; crushing defeat. தேர்தலில் எதிர்க்கட்சி பெற்ற வெற்றி ஆளுங்கட்சிக்கு நெத்தியடியாக இருந்தது. [நெற்றி → நெத்தி + அடி. நெற்றியில் அடித்தால் ஏற்படும் வலி போன்றது] |
நெத்திலி | நெத்திலி nettili, பெ. (n.) நெய்த்தோலி பார்க்க;see __, தெ. நெத்தெலு. [நெய்த்தோலி → நெத்திலி. வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒருவகைச் சிறிய கடல் மீன்] |
நெத்திலிப்பொடி | நெத்திலிப்பொடி nettilippoḍi, பெ. (n.) 1. நெய்த்தோலிக் கருவாடு (வின்.);; anchovy salted and dried. 2. சிறுநெய்த்தோலி மீன்; small anchovy fish. [நெத்திலி + பொடி] |
நெத்திலிவலை | நெத்திலிவலை nettilivalai, பெ. (n.) நெய்த்தோலி மீன் பிடிக்கும் வலை; anchovy fishing net. [நெத்திலி + வகை] நெத்திலி மீனுக்காகவே சிறப்பாகச் செய்யப்படும் வலை. இதில் வலைக்கண் மிகச்சிறியது. இவ்வலை 5 அடி அகலம் 5 அடி நீளம் கொண்டதாய் இருக்கும் [P] |
நெத்தில் | நெத்தில் nettil, பெ. (n.) நெய்த்தோலி பார்க்க;see ney-t-tos (சா.அக.);. |
நெத்து | நெத்து nettu, பெ. (n.) நெற்று பார்க்க;see __, [நெற்று → நெத்து (பே.வ);] |
நென்னல் | நென்னல் neṉṉal, பெ. (n.) வி.எ. (adv.); முன்னாள்; yesterday. “அன்னந் துணையோ டாடக் கண்டு நென்னல் நோக்கி நின்றா ரொருவர் நென்னல் நோக்கி நின்றா ரவர்தம் பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்” (சிலப். 7, பாட்_45);. “அம்மவாழிதோழி நென்னல் ஒங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவன்” (ஐங்குறு. 113);. [நெருநல் → நென்னல்.] ஒ.நோ. திருநின்றவூர் → தின்னனுர் – வழக்குத்திரிபு. |
நென்னேற்று | நென்னேற்று neṉṉēṟṟu, பெ. (n.) & வி.எ. (adv.); நென்னல் பார்க்க;see neonal. “காலைப் பிடிக்கா நின்ற நென்னேற்றும்” (திவ். திருப்பா.16, வியா.158);. [நெருநல் → நென்னல் → நென்னற்று → நென்னேற்று.] [நெருநல் → நெருநற்று → நென்னேற்று → நேற்று.] |
நென்பு | நென்பு neṉpu, பெ. (n.) 1. ஏணிப்பழு (யாழ்ப்.);; rung of a ladder. 2. ஆப்பு (யாழ்.அக.);; wooden pin. [நெம்பு = ஏணிப்பழு. நெம்பு → நென்பு] |
நென்புடவை | நென்புடவை neṉpuḍavai, பெ. (n.) மெல்லிய ஆடைவகை; a kind of fine cloth. “நென்புடவை பொதி ஒன்றுக்குக் காசு இருபதும்” (தெ.க.தொ. 8, 233);. [மென்மை + புடவை- மென்புடவை → நென்புடவை. ம → ந – திரிபு; முப்பது → நுப்பது.] |
நென்மணி | நென்மணி neṉmaṇi, பெ. (n.) நெல்லின் தவசம்; grain of paddy. 2. குறத்திப் பாசி (A);. Job’s tears. 3. அரைக் குன்றிமணி கொண்ட சிறிய எடை; goldsmith’s weight = 1/2 kunrimani = 3/8 grain. 4. மங்கல அரிசி (அட்சதை);; rice mixed with turmeric. “நென்மணி நீட்டுவாரும்” (இரகு.குறைகூறு.5);. [நெல் + மணி. மணி = அரிசி, அரிசிமணி.] |
நென்மலி | நென்மலி neṉmali, பெ.(n.) மன்னார்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in Mannarkudi. [நெல்+மலி] இவ்வூர் தற்போது நெம்மேலி என்னும் பெயருடன் உள்ளது. |
நென்மா | நென்மா neṉmā, பெ. (n.) அரிசிமாவு (திவா.);; rice flour. “நென்மா நீரிற் குழைத்து” (காஞ்சிப்பு. தான்றோ. 4);. [நெல் + மா. நெல் அரிசியை அரைத்தமாவு.] ஈண்டுநெல் ஆகுபெயராக அரிசியைக் குறிக்கும். |
நென்மெலி | நென்மெலி neṉmeli, பெ. (n.) திருமால் கோயிலுள்ள இடம்;(திவ்.2.9:8);; a shrine of Thirumal. |
நென்மேனி | நென்மேனி neṉmēṉi, பெ.(n.) சாத்துர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Sattur Taluk. [நெல்+மேனி] |
நெப்பியல் | நெப்பியல் neppiyal, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [நெப்பு+இயல்] |
நெமமீன் | நெமமீன் nemamīṉ, பெ. (n.) மூட்டுவலியை உண்டாக்குமோர் வகை மீன்; a kind of fish causing rheumatisum. (சா.அக.);. |
நெமம் | நெமம் nemam, பெ. (n.) நெமிசந்தனா பார்க்க; seе пет:Sanaара (சா.அக.); |
நெமிசந்தனா | நெமிசந்தனா nemisandaṉā, பெ. (n.) அரத்த வேங்கை மரம்; red kino tree – Pterocarpus marsupium (acuminata); (சா.அக.);. |
நெமிரல் | நெமிரல் nemiral, பெ.(n.) சோறு (அக.நி.);; rice. [நிமிரல் → நெமிரல். நிமிரல் = சோறு (நற்.258);. அரிசி சோறாகும்போது அதன் வடிவம் மாறி நிமிர்கிறது.] |
நெமிலி | நெமிலி nemili, பெ.(n.) செங்கற்பட்டு மாவட் டத்தில் உள்ள ஒரு சிற்றுர்; name of the village in Chenglepet Taluk. [மயில்-மிகுதில்-மிகுதிலி-ளுமிலி-நெமிலி] |
நெம்பாணி | நெம்பாணி1 nembāṇi, பெ.(n.) வண்டியில் பயன்படும் ஆணி; of a kind of nail used in cart. [வண்டிப்பழு வில் தைக்கும் ஆணி வகை. நெம்பு + ஆணி.] நெம்பாணி2 nembāṇi, பெ.(n.) நெம்பப் பயன்படும் ஆணி; of a nail use to lift out. [நெம்பு + ஆணி] |
நெம்பு | நெம்பு1 nembudal, 5.செ.குன்றாவி.(v.t.) 1. கழி அல்லது கருவியை ஒரு பொருளின் அடியிற் செலுத்தி மேலே உயரும்படி கிளப்புதல்; to lift with a leaver. பாறையின் அடியிற் கம்பியைச் செலுத்தி ஒரே நெம்பில் கல்லைப் பெயர்த்து விட்டான். 2. உடைத்துத் திறத்தல்; to force open. தாழ்ப்பாளை ஒரு நெம்பில் உடைத்து விட்டான். [எம்பு-தல் → நெம்பு-தல்] நெம்பு2 nembu, பெ. (n.) 1. மேலெழுப்புகை; lifting with a lever. 2. இருபக்கமும் கூர்மையுடைய இணைப்பாணி (கட்டிட.நாமா);; joining dowel or nail. 3. ஓடாணி (தெ.க.தொ.2,172);; pins for jewels. 4. ஏணிப் பழு (வின்.);; rung or round of a ladder. 5. ஏற்றத்தின் மடலானி (வின்.);; ribs joining. together the two beams of a well-sweep, serving also as steps for the man who treads it. 6. நெம்புதடி (வின்.); பார்க்க;see membu-ta.p 7. விலா எலும்பு (வின்.);; ribs. இன்று நெம்பு கழிய வேலை செய்தான். ம. நும்பு;தெ. நெம்மு. [எம்பு → நெம்பு] |
நெம்புகோல் | நெம்புகோல் nembuāl, பெ. (n.) ஒரு பொருளினை உயர்த்தவோ நகர்த்தவோ பயன்படும், ஒரு புள்ளியை மூலமாகக் கொண்டு இயக்கப் பயன்படும் கம்பி அல்லது கருவி; the lever. ஒரு நெம்புகோல் இருந்தால் இந்தக் கல்லை நகர்த்தலாம். ஒரு பெரிய நெம்புகோல் கிடைத்தால் நான் உலகை நகர்த்திக் காட்டுவேன் என்று ஐசக் நியூட்டன் கூறியுள்ளார். [நெம்பு + கோல்] [P] |
நெம்புதடி | நெம்புதடி nembudaḍi, பெ. (n.) பொருளைக் கிளப்ப அதனடியில் செலுத்துங்கோல் (வின்.);; lever, in mechanics. நெம்புதடி கொண்டு கட்டையைப் புரட்டினான். [நெம்பு + தடி] |
நெம்புத்தடி | நெம்புத்தடி nembuttaḍi, பெ.(n.) நெம்புதடி (வின்.); பார்க்க;see nembu-tagi. [நெம்பு + அடி.] |
நெம்பை | நெம்பை nembai, பெ.(n.) வீட்டினுள் வாசலின் மேற் பகுதியில் உள்ள சிறிய அறை a small room above the entrance of a house. [தும்பு-நெம்பை] |
நெய் | நெய்1 neytal, 1செ.குன்றாவி.(v.t.) 1. துணி, பாய் முதலியவற்றை உருவாக்கு வதற்காகத் தறியில் நீளவாட்டில் நூலையோ, கோரையையோ செலுத்திக் குறுக்குவாட்டில் கோத்துப் பின்னுதல், நூலை ஆடையாகச் செய்தல்; to weave, as clothes. “நெய்யு நுண்ணுரல்” (சீவக.3019);. நெய்து கொண்டிருக்கும் பொழுது நெய்கிறதை விட்டு நினைத்துக் கொண்டானாம் கைக்கோளன் (பழ.);. நெய்கிறவனுக்கு ஏன் குரங்குக் குட்டி? (பழ.);. 2. தொடுத்தல்; to string, to link together. “நெய்தவை தூக்க” (பரிபா.19:80);. ம. நெய்க: தெ நேயு; க. நேய், நேயி, நெய்யு; கோத. நெச் (nec);; துட, நிச் (nic);; குட. நெய் (ney);; து. நெயுநி: கூ. நெப; குவி. நெநை (nennai);; குரு. எஸ்நா (essnä);;மா. எசே (ese = to plait);. [நுள் → நெள் → நெய் → நெய்-தல், நுள்ளுதல் = அடைதல், பொருந்துதல், செறிதல் (த.ம.);] நெய்2 ney, பெ. (n.) 1. ஆவின் அல்லது எருமையின் வெண்ணெயை உருக்கி உண்டாக்கும் பொருள்; ghee, clarified butter. “நீர்நாண நெய்வழங்கியும்” (புறநா.166:21);. ‘நெய்க்குடத்தில் எறும்பு மொய்த்தது போல’ (பழ);. ‘நெய்யை உருக்கித் தயிரைப் பெருக்கிச் சாப்பிட வேண்டும்’ (பழ.);. ‘நெய்க்குடம் உடைந்தால் நாய்க்கு விருந்து’ (பழ.);. “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்……….. தீக்குறளை சென்றோதோம்” (திருப்பாவை);. 2. வெண்ணெய்; butter. “நெய்குடை தயிரி னுரையொடும்” (பரிபா.16:3);. 3. ஒட்டும் நீர்ப்பொருள் (எண்ணெய்);; oil. “நெய்யணி மயக்கம்” (தொல்.பொருள்.கற்பு.5);. 4. புழுகுநெய்; civet. “மையிருங் கூந்த னெய்யணி மறப்ப” (சிலப்.4:56);. 5. நெய்போல் ஒட்டுந்தேன்; honey. “நெய்க்கண் ணிறாஅல்” (கலித்.42);. 6. நெய்போலுறையும் அரத்தம்; blood. “நெய்யரி பற்றிய நீரெலாம்” (நீர்நிறக்.51);. 7. நெய்யாய் உருகும் கொழுப்பு, (நிணம்);; grease, fat. “நெய்யுண்டு” (கல்லா.71);. 8. உளம் ஒட்டும் நட்பு; friendship, love. “நெய்பொதி நெஞ்சின் மன்னர்” (சீவக.3049);. 9. 14 ஆம் விண்மீனாகிய நெய்ம்மீன் (சித்திரை); (சூடா.);; the 14th naksatra. ம.க. நெய்; தெ. நெய்யி; வ. ஸ்நிஹ்ஸ்நேஹ; கோத. நாய் (nay=ghee);; துட. நீய்; கொலா, கட, பா. நா. நெய், கூ. நீசு (niu);; குவி. நீயூ (niyu);; குரு. நேத (nēta=grease, fat);;மா. நென்ய. [நுல்(பொருந்தல்); → நுள் → நெள் → நெய்] நெய்ப் பொருளெல்லாவற்றுள்ளும் ஆவின் அல்லது எருமையின் நெய் ஊட்டமான உணவிற்குரியதாய்த் தலைசிறந்ததாதலால், நெய்யென்னும் பொதுப் பெயரையே சிறப்புப் பெயராகக் கொண்டது. முதன்முதலாக எள்ளின் நெய்யைக் குறித்த எண்ணெய் என்னும் சொல், மிகப் பெருவழக்காய் வழங்கியதால் நாளடைவில் தன் சிறப்புப் பொருளை இழந்து, நெய்யல்லாத நெய்ப் பொருள்களின் பொதுப்பெயராயிற்று. அதனால், தன் பழம்பொருளைக் குறித்தற்கு நல் என்னும் அடை பெற்றது. இதனால், நெய்க்கு அடுத்துச் சிறந்தது நல்லெண்ணெய் என்பது பெறப்படும். “வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு” என்பது பழமொழி. (வே.கநூல்.6); புரைகுற்றிய பாலைக் கடைவதினா லுண்டாகிய பசையுள்ள பொருளே வெண்ணெய். இவ்வெண்ணெயைத் தண்ணிர் போக உருக்கி வடிகட்டியதே நெய்யெனப்படும். நல்ல நெய் கெட்டுப்போகாமல் நெடு நாளிருக்கும். தேன் நெய் இருவகை சுவையும் பொருந்தியது. இது பொதுவாக எருமை அல்லது ஆவின் பாலிலிருந்து எடுக்கப்படும். இதனை உண்ண உடம்பிற்குக் குளிர்ச்சியையும் வலுவையும் உண்டாக்கும். இது மனநோய் (பைத்தியம்);, காக்கைவலி, வயிறு வீக்கம் முதலியவற்றைக் குணப்படுத்தும், நினைவாற்றலை உண்டாக்கும், கண் பார்வையைத் தெளிவு படுத்தி உடம்பில் இருக்கும் நஞ்சைப் போக்கும். (சா.அக.); வகைகள் : 1. ஆவின் நெய், 2. கருப்பு ஆவின் நெய், 3. எருமைநெய், 4. வெள்ளாட்டு நெய். 5. செம்மறியாட்டு நெய், 6. பள்ளையாட்டு நெய், 7. குறும்பாட்டு நெய், 8. கலப்பு நெய், 9. ஒட்டக நெய், 10. பன்றி நெய், 11. உடும்பு நெய், 12. காக்கை நெய். சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி கீழ்கண்ட நெய்வகைகளைக் கூறுகிறது. உயிரிகளின் நெய்வகைகள் : 1. ஆவின் நெய் – இருமல், வயிற்று வலி, பித்தவிக்கல், புண், தாகம், மூலம் இவைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 2. கருப்பு ஆவின்நெய் – கண், புருவம், நெற்றி தலை முதலியவற்றின் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 3. எருமை நெய் – இதை உண்ண அறிவு குன்றும், கண்ணொளி மங்கும், கரப்பான் உண்டாகும். 4. வெள்ளாட்டு நெய்-சளித்தொல்லைக்கும், பத்தியத்திற்கும் மருந்தாகப் பயன் படுகிறது. 5. செம்மறியாட்டு நெய் – இதை உண்ணச் சளிநோய் கபநோய்) உண்டாகும். 6. பள்ளையாட்டு நெய் – பித்தநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. 7. குறும்பாட்டு நெய் – வளியால் வாயு உண்டாகும் நோய்கள் வரும். 8. கலப்பு நெய் – இதை உண்ண உடம்பின் சூடு குறையும், பலமுண்டாகும். 9. ஒட்டக நெய் – நீரிழிவு நோய்க்கும் பித்தத்திற்கும் மருந்து. 10. பன்றிநெய் – மூலம், மூத்திர(சிறுநீரக);க்கடுப்பு இவைகளுக்கு மருந்தாகிறது. 11. உடும்பு நெய் – அரத்தக் கழிச்சல் நோய்க்கு மருந்து. 12. காக்கை நெய் – காமாலை நோய்க்கு மருந்து. 13. ஆமை நெய் – அரத்த மூலம் நீங்கும். 14. ஓணான் நெய் – பின்னிசிவு நீங்கும் (convulsions);. 15. கரடி நெய் – மூட்டு வலி, பாத வெடிப்பு இவைகளுக்கு இது மருந்து. 16. மீன் நெய் – மாலைக்கண், இளைப்பு நோய் இவைகளுக்கு மருந்தாகிறது. பயிரிகளின் நெய். 17. ஆமணக்குநெய் – வயிற்றுவலி (குன்மம்);, குடலேற்றம், உடலெரிவு, கண்ணெரிவு இவைகளுக்கு மருந்து. 18. சிற்றாமணக்கு நெய் – உடலுக்கு மருந்துகளினால் உண்டாகும் வெப்பம், மூல வெப்பம் ஆகியவற்றை நீக்கும். 19. எள்நெய் – உடல் ஆற்றல் குறைவு (தேக பலவீனம்);, கண்காது நோய், தலைச்சூடு போன்றவற்றுக்கு இது மருந்தாகிறது. 20. வேப்பெண்ணெய் – புண், சொரி, சிரங்கு இவைகளைக் குணமாக்கும் மருந்து. 21. இலுப்பெண்ணெய் – காப்பான், கடி, நஞ்சு, சிரங்கு இவைகளுக்கு மருந்து. 22. புங்கெண்ணெய் – சொறி, சிரங்கு, வெடிப்புகளுக்கு இந்நெய்யைத் தடவ குணமாகும். 23. வாதுமைநெய் – உடல் சூடு நீங்கும். 24. புன்னைநெய் – முன்னிசிவு, பின்னிசிவு, வலிப்பு நீங்க இது பயன்படுகிறது. 25. தேங்காயெண்ணெய் – தீப்புண், படர்தாமரை, சிரங்கு இவைகளுக்கு மருந்து. 26. கடுகுநெய் – அரத்தக் கொதிப்பு குட்டம், மூளை, மூலம், சூலை முதலிய நோய்களுக்கு மருந்தாகிறது. 27. நீரடிமுத்து நெய் – சொறி சிரங்கு பெருநோய், தோல் நோய்கள் நீங்கும். மருந்தாகப் பயன்படும் மேலும் பல நெய் வகைகள். 28. ஆவாரை நெய். 29. கொன்றை நெய். 30. நாவல் நெய். 31. பொன்னாங்காணிநெய். 32. கடுக்காய் நெய். 33. வில்வ நெய் 34. அவுரி நெய் 35. அறுகம்வேர் நெய் 36. சமுத்திரா பழநெய் 37. கண்டங்கத்திரிநெய் 38. தூதுவளை நெய் 39. முலைப்பால்நெய் 40. சுக்கு நெய் 41. பிரமி நெய் 42. வல்லாரை நெய் 43. சதாவேரிநெய் 44. புளியாரைநெய் 45. பூசணிநெய் 46. சோம்பு நெய் 47. கருவாப்பட்டை நெய் 48. வெற்றிலைப் பூ நெய் 49. நாரத்தை நெய் 50. எலுமிச்சை நெய் 51. ஆளி விதை நெய் 52. கையாப்புடை நெய் 53. கற்பூர நெய் 54. நாட்டு அக்ரோட் நெய் 55. சீமைச்சோம்பு நெய் 56. இலவங்க எண்ணெய் 57. கொத்தமல்லி எண்ணெய் 58. பருத்திக்கொட்டை நெய் 59. திப்பிலி நெய் 60. புன்னை நெய் 61. ஒம நெய் 62. நீலகிரி எண்ணெய் 63. மாசிப்பத்திரி நெய் 64. கரிசாலை நெய் 65. சதகுப்பை நெய் 66. முசுமுகக்கை நெய் 67. சேரங்கொட்டை நெய் 68. தேற்றாங் கொட்டை நெய் நெய்1 neyttal, 4.செ.கு.வி.(v.i.) 1. பளபளத்தல்; to be glossy, polished. “நீண்டு குழன்று நெய்த்திருண்டு” (கம்பரா. உருக்காட்டு.57). 2. ஒட்டும் நீர்ப்பொருளாக உருகும் கொழுப்பு வைத்தல், கொழுத்தல்; to be fleshy, fat, plump. “நெய்தத மீன்” (வின்.);. 3. ஒட்டும் பசைத்தன்மை யுடையதாயிருத்தல் (வின்.);; to become greasy, unctuous or sticky. 4. ஒட்டுதல்; to stick, to affix. [நுல்(பொருந்தல்); → நுள் → நெள் → நெய் → நெய்-த்தல் (வே.க.);] நெய்4 ney, பெ. (n.) சாந்துடன் சேர்ந்து இறுகப் பிடித்துக் கொள்ளுதற்குரிய கருப்புக் கட்டி முதலியன; cementing substance. “மணலும் நீருங்கூட வரைத்த சாந்திற் கருப்புக் கட்டியாகிய நெய் அளவினவாறு போல” (நீலகேசி, 310 உரை);. [நெய்2 – நெய்4] |
நெய்கடம்பு | நெய்கடம்பு neykaḍambu, பெ. (n.) நாய்க்கடம்பு; bastard cedar of PalghatHymenodictyon excelsusm. (சா.அக.);. மறுவ. வெள்ளைக் கடம்பு. [நெய் + கடம்பு] |
நெய்குப்பி | நெய்குப்பி neykuppi, பெ.(n.) திண்டிவனம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Tindivanam Taluk. [தென்நெய்);+குப்பம்(கும்பி);] |
நெய்க்கடல் | நெய்க்கடல் neykkaḍal, பெ. (n.) ஏழுகடலுள் நெய்மயமாகிய கடல்; the ocean of ghee, one of Élu-kadal. [நெய் + கடல்] |
நெய்க்கடுகு | நெய்க்கடுகு neyggaḍugu, பெ. (n.) 1. வெண்ணெய் உருக்கிக் காய்ச்சியெடுக்கும் போது அடியில் நிற்கும் வண்டல்; the sediment deposited at the bottom during melting of butter into ghee. 2. அகத்தியர் வல்லாதி 600-ல் சொல்லியிருக்கும் முறைப்படி ஆவின் நெய்யை மற்ற மருந்துச் சரக்குகளோடு சேர்த்துக் காய்ச்சி வடித்த மருந்து நெய். இது வயிற்றில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது; a medicated oil prepared with cow’s ghee as chief ingredient along with other drugs according to the process laid down in Agastyar Vallathy 600. It is prescribed for all diseases of the stomach. (சா.அக.);. [நெய் + கடுகு. கடுகு = வண்டல்] |
நெய்க்கியாழம் | நெய்க்கியாழம் neykkiyāḻm, பெ. (n.) ஆவின் நெய்யுடன் மற்ற கடைச்சரக்குகளைச் சேர்த்துச் செய்யும் மருந்து; medicated oil in common prepared from cow’s ghee mixed with other bazaar drugs. (சா.அக.);. [நெய் + கியாழம். கியாழம் = காய்ச்சிய மருந்து குடிநீர்] |
நெய்க்கிழி | நெய்க்கிழி neykkiḻi, பெ. (n.) எண்ணெய் தோய்த்த சீலைத்துண்டு; bandage soaked in oil. “நெய்க்கிழி வைக்கப்பட்டார்” (சீவக.818);. [நெய் + கிழி. கிழி = கிழிந்த துணி] |
நெய்க்குப்பை | நெய்க்குப்பை neykkuppai, பெ.(n.) கும்பகோணம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Kumbakonam Taluk. [நெய்+குப்பை] |
நெய்க்குரணி | நெய்க்குரணி1 neykkuraṇi, பெ. (n.) அழிஞ்சில்; sage-leaved alangium. நெய்க்குரணி2 neykkuraṇi, பெ. (n.) ஐங்கோல எண்ணெய் (ஐந்து மாதத்திய தலைப்பிண்டத்தினின்று வடிக்கும் நெய்மம்);; a medicinal oil extracted from the first born fetus five months old. (சா.அக.);. |
நெய்க்குறி | நெய்க்குறி neykkuṟi, பெ. (n.) தேரையர் செய்த ஒரு மருத்துவ நூல்; a medical Tamil treatise by Theraiyer which treats about the examination of urine and their indications. (சா.அக.);. [நெய் + குறி] |
நெய்க்குறிநீர்க்குறி | நெய்க்குறிநீர்க்குறி neykkuṟinīrkkuṟi, பெ. (n.) நெய்யில் சிறுநீரைக் (மூத்திரத்தைக் கலந்து செய்யும் ஆராய்ச்சி (சோதனை);; examining the urine by testing if in ghee. [நெய்க்குறி + நீர்க்குறி] |
நெய்க்குறிநூல் | நெய்க்குறிநூல் neykkuṟinūl, பெ. (n.) எண்ணெய் விட்டு சிறுநீர் (மூத்திரத்); தேர்வு செய்வதைக் கூறுவதும், தேரையர் இயற்றியதுமான நூல்; a treatise by Tēraiyar on the test of urine by means of oil. [நெய் + குறி +நூல்] |
நெய்க்குழம்பு | நெய்க்குழம்பு neykkuḻmbu, பெ.(n.) 1. நெய்விட்டுத் தாளித்த குழம்பு; thick broth seasoned with ghee. 2. இறுகிய நெய்; thick ghee. [நெய் + குழம்பு] |
நெய்க்கொட்டான் | நெய்க்கொட்டான் neykkoṭṭāṉ, பெ. (n.) பூவந்தி (மலை.);; soap-nut. மறுவ. நெய்க்கொட்டை. [நெய் + கொட்டான்] |
நெய்க்கொட்டான்விதை | நெய்க்கொட்டான்விதை neykkoṭṭāṉvidai, பெ. (n.) பூவந்திக்கொட்டை; soap nut. (சா.அக);. [நெய்க்கொட்டான் + விதை] |
நெய்க்கொட்டை | நெய்க்கொட்டை neykkoṭṭai, பெ. (n.) 1. மரவகை; (மலை.);; soap-nut, Sapindus trifoliatus. 2. மரவகை; butterfly soap-nut, Harpullia Cupanoides. [நெய் + கொட்டை. நெய் போல் பளபளப்பான கொட்டையுடைய மரம்] |
நெய்க்கோணம் | நெய்க்கோணம் neykāṇam, பெ.(n.) புதுக் கோட்டையிலிருந்து 20 அயிர மாத்திரி (கி.மீ.); தொலைவிலுள்ள சிற்றூர்; name of a village 20 k.m. from Pudukottai. [நெல்(தெய்);+(குன்றம்-குணம்); கோணம் (கொ.வ.);] இவ்வூர் நெல்குன்றம் எனக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. |
நெய்சாயம் | நெய்சாயம் neycāyam, பெ. (n.) மெருகெண்ணெய்; varnish. [நெய் + சாயம். சாயம் = வண்ணம்] |
நெய்ச்சசிகரி | நெய்ச்சசிகரி neyssasigari, பெ. (n.) சீமைத் தக்காளி; Europe brinjal, tomato, Hycopersicum esculentum (சா.அக.);. |
நெய்ச்சட்டி | நெய்ச்சட்டி neyccaṭṭi, பெ. (n.) 1. செங்கழுநீர் (மலை.);; purple Indian waterlily. 2. கீரைவகை (சங்.அக.);; a kind of greens. 3. பவளக் குன்றிமணி (மலை.);; crab’s eye. மறுவ : செங்கழுநீர். இச்செடி ஆண்டிற்கு ஒரு முறை வளர்ந்து ஒயும். இலை நீண்டு நான்கு மூலையுடையதாய் இருக்கும்; பூவிதழ் ஊதா நிறமுடையது; வங்காளம், கொரநாடு, மலையாளம் ஆகிய பகுதிகளில் வளர்கிறது. இதைக் குடிநீராக்கிக் காய்ச்சலுக்குக் கொடுக்கலாம்;உடற்குட்டை இது தணிக்கும். பசி, அழகு இவைகளை உண்டாகும். வாந்தி அழற்சி இவைகளைப் போக்கும். இதன் பூ கண் சிவப்பை மாற்றும் காமாலை, கைகால்எரிச்சல், கண்ணோய்கள் முதலியன நீங்கும். (சா.அக);. |
நெய்ச்சட்டிக்கீரை | நெய்ச்சட்டிக்கீரை neyccaṭṭikārai, பெ. (n.) வேப்பெண்ணெயை நெய்யாகச் செய்யும் (சீதேவியார்); செங்கழுநீர் கீரை; a kind of waterlily, Nymphae odorata or Grewia orbiculata. It converts margose oil into ghee. (சா.அக.);. [நெய்ச்சட்டி + கீரை] |
நெய்ச்சாதம் | நெய்ச்சாதம் neyccātam, பெ. (n.) நெய்ச்சோறு; ghee rice. [நெய் + சாதம்] சாதம் என்பதற்கு வேர் வடமொழிலியில்லை. அரிசி சதசதவென்று கொதிபெற்று மலர்வதால் சாதம் தமிழ்ச் சொல்லே. |
நெய்ச்சாரிகம் | நெய்ச்சாரிகம் neyccārigam, பெ. (n.) அரத்த வேங்கை மரம்; red kino tree. Pterocarpus marsupium (சா.அக.);. |
நெய்ச்சி | நெய்ச்சி1 neycci, பெ. (n.) எண்ணெய்ச்சிக்கு; oil-sediment. (சா.அக.);. [நெய் → நெய்ச்சி. நெய் + சி(க்கு);.] சிக்கு என்பதில் முதலெழுத்து நின்று பிற இரண்டும் நீங்கின. நெய்ச்சி neycci, பெ. (n.) நெய்யால் செய்த பண்ணியம் (பலகாரம்);; ghee preparation of sweet confection. [நெய் → நெய்ச்சி] |
நெய்ச்சிக்கு | நெய்ச்சிக்கு neyccikku, பெ. (n.) 1. நெய் குடலில் தங்குதலினா லுண்டாகும் செரிமானத் தடை; indigestion caused by ghee. 2. நெய்யைப் பூசிக்கொள்வதனா லுண்டாம் நாற்றம் (இ.வ.);; rancid smell caused by smearing one’s body with ghee. [நெய் + சிக்கு. சிக்கு = சிக்கிக் கொள்ளுகை, தடை செய்கை, எண்ணெய்ச்சிக்கு, சிக்கு நாற்றம்] |
நெய்ச்சிக்குபேதி | நெய்ச்சிக்குபேதி neyccikkupēti, பெ. (n.) சிக்குப்பட்ட நெய்யை உட்கொள்வதனால் ஏற்படும் கழிச்சல்; purging due to taking rancid ghee in food. (சா.அக.);. [நெய்ச்சிக்கு + Skt பேதி] |
நெய்ச்சிக்குபோக்கி | நெய்ச்சிக்குபோக்கி neyccikkupōkki, பெ. (n.) சிகைக்காய் (சீயக்காய்);; soap-nut. (சா.அக);. [நெய்ச்சிக்கு + போக்கி] |
நெய்ச்சிட்டிக்கிழங்கு | நெய்ச்சிட்டிக்கிழங்கு neycciṭṭikkiḻṅgu, பெ. (n.) செங்கழுநீர்க்கிழங்கு; bulb of Nymphae odorata. (சா.அக.);. [நெய்ச்சிட்டி + கிழங்கு] |
நெய்ச்சிந்தி | நெய்ச்சிந்தி neyccindi, பெ. (n.) பெய்க்கடலை; bitter Bengal gram – Cicer genus. (சா.அக.);. |
நெய்ச்சீலா | நெய்ச்சீலா neyccīlā, பெ. (n.) விலையும் சுவையும் மிகுதியான சீலா மீன் வகை; a kind of Šila fish. (க.ப.அ);. |
நெய்ச்சீவிகம் | நெய்ச்சீவிகம் neyccīvigam, பெ. (n.) நெய்ச்சிந்தி பார்க்க;see ney-c-cindi (சா.அக.); |
நெய்ச்சுட்டி | நெய்ச்சுட்டி neyccuṭṭi, பெ. (n.) கீரை வகை (வின்.);; a kind of greens. [நெய்ச்சட்டி → நெய்ச்சுட்டி] |
நெய்ச்சுண்டு | நெய்ச்சுண்டு neyccuṇṭu, பெ. (n.) 1. கலயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் நெய் (வின்.);; small quantity of ghee sticking to a pot. 2. நெய்யளக்க உதவுஞ் சிறிய அளவுக்கருவி (தஞ்சை);; small vessel for measuring ghee. [நெய் + கண்டு. சுண்டு = ஒரு சிற்றளவு. காய்ச்சும்போது ஏனத்தின் அடியில் தங்குவது] |
நெய்தனிலநீர் | நெய்தனிலநீர் neytaṉilanīr, பெ. (n.) உவரி நீர்; salt water. (சா.அக.);. [நெய்தல் + நிலம் + நீர்)] |
நெய்தனிலப்பறவை | நெய்தனிலப்பறவை neytaṉilappaṟavai, பெ. (n.) கடற் காக்கை (நம்பியகப்.24);, sea crow. [நெய்தல் + நிலம் + பறவை] |
நெய்தனிலமக்கள் | நெய்தனிலமக்கள் neytaṉilamakkaḷ, பெ. (n.) கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் நுளையன், நுளைச்சி (நம்பியகப்.24);; people living in the maritime coastal tract. [நெய்தல் + நிலம் + மக்கள்] |
நெய்தற்கருப்பொருள் | நெய்தற்கருப்பொருள் neytaṟkarupporuḷ, பெ.(n.) நெய்தல் நிலக் கருப்பொருள்; growing, ripening grain in Neydal land. [நெய்தல் + கருப்பொருள்] தெய்வம், தலைவர், மாக்கள், புள், விலங்கு ஊர், நீர், பூ, மரம், உணா, பறை, யாழ், பண், தொழில் முதலிய பதினான்கும் நெய்தல் நிலக் கருப் பொருள்கள். “ஆரணங்கு உயர்ந்தோர் அல்லோர் புள் விலங்கு ஊர் நீர் பூ மரம் உணாப்பறை யாழ்பண் தொழிலெனக் கரு ஈ. ரெழுவகைத் தாகும்” (நம்பியகப்.19);. நெய்தலின் கருப்பொருள்கள் தெய்வம் : வாரணன் (வருணன்); தலைவன் : சேர்ப்பன், புலம்பன் மக்கள் : பரத்தி, நுளைச்சி,நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர்,அளத்தியர். புள் : கடற்காக்கை விலங்கு : சுறவம் ஊர் : பாக்கம், பட்டினம் நீர் : உவர் நீர்க்கேணி பூ : நெய்தல், முண்டகம், கைதை, அடம்பு மரம் : புன்னை, ஞாழல் உணவு : மீன், உப்பு இவைகள் விற்றுப் பெறுவன பறை : மீன்கோட்பறை, நாவாய், பம்பை யாழ் : விளரியாழ். தொழில் : மீன் உப்புப்படுத்தல் (கருவாடாக்கல்); மீனை உணங்கவைத்தல், விற்றல், மீனை உணக்கல், புல் ஒப்பல் நெடுங்கடல் ஆடல். “வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன் பரும அல்குல் பரத்தி நுளைச்சி நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர் அளவர் அளத்தியர் அலைகடற் காக்கை கறவம் பாக்கம் பெறலரும் பட்டினம் உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல் கண்டகக் கைதை முண்டகம் அடம்பு கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல் புலவு மீன்உப்பு விலைகளிற் பெற்றன நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை விளரியாழ் செவ்வழி மீன் உப்புப்படுத்தல் உணங்கவை விற்றல்மீன் உனக்கல்புள் ஒப்பல் நெடுங்கடல் ஆடல் நெய்தற்கருப் பொருளே” (நம்பியகப்.24); |
நெய்தற்கார்க்கியர் | நெய்தற்கார்க்கியர் neytaṟkārkkiyar, பெ. (n.) கழகக் காலப் புலவர்; Sahgam poet. [நெய்தல் + கார்க்கியர்] கார்க்கியர் என்பது இவரின் இயற்பெயர். நெய்தல் திணையைப் பற்றி இவரது பாடல்கள் அமைவதால் நெய்தற்கார்க்கியர் எனப்பட்டார். மணிப்பூ முண்டகத்தின் வேறாய் மணிமருள் நெய்தலை மணப்பூ என வழங்கிக் காட்டி யதனால் இவர் நெய்தற்கார்க்கியர் எனப் பட்டனர் ஆவார் என ஊகிப்பாருமுளர். நெய்தல் நிலத்தின் கழியிலுள்ள நீலப்பூக்கள் கூம்புவதும், கடல்வளி வீசுவதும் ஊதைக் காற்றுத் துன்பத்தை உண்டாக்குவதும், தலைவன் மணியொலிக்கத் தேரிலேறிக் கடற்கரை வழியாக வருவதும் இவர் பாடல் களில் சொல்லப்படுகின்றன. இவர் குறுந் தொகையில்:55, 212 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். “மார்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப் பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக் கையற வந்த தைவரல் ஊதையொடு இன்னா வுறையுட் டாகும் சின்னாட் டம்மவிச் சிறுநல்லூரே” (குறுந்:55);. “கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் தெண்கடலடைகரைத் தெளிமணி யொலிப்பக் காணவந்து நாணப் பெயரும்அளிதோ தானே காமம் விளிவது மன்ற நோகோ யானே” (குறுந்.212);. |
நெய்தற்கிழங்கு | நெய்தற்கிழங்கு neytaṟkiḻṅgu, பெ. (n.) அம்பற்கிழங்கு; the tuberous roots of white Indian water lily, Nymphae pubescens alias Nistellata. (சா.அக.);. [நெய்தல் + கிழங்கு] இக்கிழங்கை அவித்துச் சருக்கரையிட்டுச் ‘ി ம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படும். பித் ரிச்சல் அரத்தக் கழிச்சல் நீங்கும். |
நெய்தற்சாய்த்துய்த்தஆவூர்கிழார் | நெய்தற்சாய்த்துய்த்தஆவூர்கிழார் neytaṟcāyttuyttaāvūrkiḻār, பெ. (n.) கடைக்கழகக் காலத்து வாழ்ந்த ஒரு புலவர்; Sahgam poet. வேளாண்குலத்தவர். தலை மகனைத் தோழி வரைவு கடாவுவதாகச் செய்துள்ள இவரது அகப்பாடல் படிப்போர்க்கு இன்பம் தருவதாக அமைந்துள்ளது. இப்படலால் மிக்க வேட்கை யுடையவரேனும் சான்றோர் பழியோடு வரும் இன்பத்தை விரும்பார், புகழோடு வரும் இன்பத்தையே விரும்புவர்” என்னும் நெறி விளக்கப்படுகிறது. இவ்வொரு பாட்டு மட்டுமே இவர் பாடியதாகக் காணப்படுகிறது. “கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி சிதலை செய்த செந்நிலைப் புற்றின் மண்புனை நெடுங்கோ டுடைய வாங்கி இரைநசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் ஈன்றணி வயவுப்பினப் பசித்தென மறப்புலி ஒளிறேந்து மருப்பின் களிறட்டுக் குழுமும் பனியிருஞ் சோலை எமியம் என்னாய் தீங்கு செய் தனையே ஈங்குவந் தோயே நாளிடைப் படினென் தோழி வாழாள் தோளிடை முயக்க நீயும் வெய்யை கழியாக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் வரையின் எவனோ வான்தோய் வெற்ப கணக்கலை இகுக்குங் கறியிவர் சிலம்பின் மணப்பருங் காமம் புணர்ந்தமை அறியார் தொன்றியல் மரபின் மன்றல் அயரப் பெண்கோள் ஒழுக்கம் கண்கொள நோக்கி நொதுமல் விருந்தினம் போலவிவள் புதுநாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே” (அகநா.1.12); |
நெய்தற்பறை | நெய்தற்பறை neytaṟpaṟai, பெ. (n.) 1. நெய்தல் நிலத்து மக்கள் முழக்கும் மீன்கோட் பறை, நாவாய் பறை நம்பியகப்.24); drum peculiar to maritime tracts. 2. சாப்பறை (குறள்,1115, உரை);; funeral drum. [நெய்தல் + பறை, பறை = கொட்டிசைக் கருவி.] |
நெய்தற்றத்தனார் | நெய்தற்றத்தனார் neytaṟṟattaṉār, பெ. (n.) கடைக் கழகக் காலப் புலவர்; Sahgam poet. [நெய்தல் + தத்தனார்] இவர் குடிக்கிழார் மகனார் நெய்தற்றத்தனார் எனவும் அழைக்கப்பட்டார். கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார் எனவும் கூறப்படுகிறார் (அகநா.243);. இவர் அகநா.243, நற்.49,130 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரது இயற்பெயர் தத்தன். நெய்தலையும், பாலையையும் பாடுவதில் வல்லவர். நீ படும் துன்பத்தைத் தலைமகன் ஊருக்குச்சென்று அவன் அறிந்து கொள்ளும்படி கூறுவோம் என்று தோழி தலை மகளை நோக்கிக் கூறியதாக இவரது பாடல் காணப்படுகிறது. “படுதிரை கொழிஇய பானிற எக்கர்த் தொடியோர் மடிந்தெனத் துறைபுலம் பின்றே முடிவலை முகந்த முடங்கிறாப் பாவைப் படுபுள் ளோப்பலிற் பகன்மாய்ந் தன்றே கோட்டுமீன் எறிந்த உவகையர் வேட்டமடிந்து எமரும் அல்கினர் ஏமார்ந் தனமெனச் சென்றுநாம் அறியின் எவனோ தோழி மன்றப் புன்னை மாச்சினை நறுவீ முன்றிற் றாழையொடு கமழுந் தென்கடற் சேர்ப்பன்வாழ் சிறுநல் ஊர்க்கே” (நற்.49);. இதுநெய்தற்றிணைப் பாடல். “அவரை ஆய்மலர் உதிரத் துவரின வாங்குதுளைத் துகிரின் ஈங்கை பூப்ப இறங்குபோ தவிழ்ந்த ஈர்ம்புதற் பகன்றை கறங்குநுண் துவலையின் ஊருழையணியப் பெயனிர் புதுவரல் தவிரச் சினைநேர்பு பீள்விரிந் திறைஞ்சிய பிறங்குகதிர்க் கழனி நெல்லொலி பாசவல்துழைஇக் கல்லெனக் கடிதுவந் திறுத்த கண்ணில் வாடை நெடிதுவந் தனையென நில்லா தேகிப் பலபுலந் துறையயுந் துணையில் வாழ்க்கை நம்வலத் தன்மை கூறி யவர்நிலை அறியு மாயின் நன்றுமன் தில்ல பணிவார் கண்ணே மாகி யினியது நமக்கே யெவ்வம் ஆகின்று அனைத்தாற்றோழிநந் தொல்வினைப் பயனே” (அகநா.243);. இது பாலைத் திணைப்பாடல். |
நெய்தலாம்பல் | நெய்தலாம்பல் neytalāmbal, பெ.(n.) ஒருவகை நீர்ச்செடி (MM588);; fringed waterlily, Limnanthemum cristatum. [நெய்தல் + ஆம்பல். நெய்தல் நிலத்து வளரும் ஆம்பல் செடி.] |
நெய்தல் | நெய்தல் neytal, பெ. (n.) 1. வெள்ளாம்பல்; white Indian water-lily. “பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும்” (ஐங்குறு.2); (திவா.);. 2. கருங்குவளைமலர்; blue nelumbo. “காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்” (குறிஞ்சிப்.84);. 3. செங்கழுநீர்க்கிழங்கு (சங்.அக.);; tuber of red Indian water-lily. ம. நெய்தல், து. நைதிலெ;க. நெய்தல். [நெய் → நெய்தல் = வறண்ட கோடைக் காலத்தும் குளநிலத்தோ டொட்டியிருக்கும் கொடி வகை. ” . . . . . . . . அ க் கு ள த் தி ற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு” (மூதுரை,17);] நெய்தல்2 neytal, பெ. (n.) 1. கடலும் கடல் சார்ந்த இடமும்; maritime tract. “எற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும்” (தொல்,பொருள்.8);. 2. நெய்தற்றிணையின் உரிப்பொருளாகிய இரங்கல்; sorrow of lovers due to separation, assigned by poetic convention to the maritime tract. “நெய்தல் சான்ற வளம்பல” (மதுரைக்.325);. 3. சாப்பறை; funeral drum. “ஓரினெய்தல் கறங்க” (புறநா.194);. 4. ஒரு பேரெண்; a big number. “நெய்தலுங் குவளையும்” (பரிபா.2:13); ம. க. நெய்தல். [நெய் → நெய்தல் = நெய்தல் கொடி வளரும் கடற்கரை (வே.க.);] |
நெய்தல் தத்தனார் | நெய்தல் தத்தனார் neytaltattaṉār, பெ. (n.) நெய்தற்றத்தனார் பார்க்க;see neydarrattanår [நெய்தல் + தத்தனார்] தத்தனார் என்பது இயற்பெயர். நெய்தலைப் பாடுவதில் வல்ல வராயிருந்ததால் நெய்தல் தத்தனார் என்று பெயர் வந்திருக்கலாம். நற்றிணையில் இவர் பாடிய பாட்டு நெய்தல் நிலத்தைப் புனைந்த துரைக்கிறது. |
நெய்தல் நிலநீர் | நெய்தல் நிலநீர் neytalnilanīr, பெ. (n.) உவநீர்; brackish water. [நெய்தல் + நிலநீர். நெய்தல் நிலத்திற்குரிய நீர்] |
நெய்தல்தத்தனார் | நெய்தல்தத்தனார் neytaltattaṉār, பெ.(n.) கடைக்கழகப் புலவர்; poet of sangam period. [நெய்தல்+தத்தன்+ஆர்] |
நெய்தல்திணை | நெய்தல்திணை neytaltiṇai, பெ. (n.) நெய்தல் நிலம்; coastal region. [நெய்தல் + திணை. திணை = ஒழுக்கம், நிலம்] |
நெய்தல்தெய்வம் | நெய்தல்தெய்வம் neytalteyvam, பெ. (n.) வாரணன், மழைக்கடவுள் (வருணன்);; Varuņaŋ. [நெய்தல் + தெய்வம்] நெய்தல் தெய்வம் : நெய்தல் நில மக்கள், கடலில் மீன்பிடித்தும், உப்பு விளைவித்தும், முத்தும் பவழமுங் குளித்தும், நீர் வாணிகஞ் செய்தும், கடலாலேயே வாழ்ந்ததனால், தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு, அதற்கு வாரணன் என்று பெயரிட்டனர். வள் → வர் → வார் → வார்தல் = வளைதல். வார் + அணம் = வாரணம். நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருப்பதால், கடல் வாரணம் எனப்பட்டது. வலம்புரியும் இடம்புரியுமான சங்கு வாரணம் எனப் பெயர் பெற்றதும், உள் வளைந்திருப்பதனாலேயே வாரணம் → வாரணன் = கடலோன். வாரணன் → வ. வருண. தொல்காப்பியர் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்தவாதலின், வருணன் என்று வடசொல் வடிவிற் குறித்தார். “மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” (தொல்பொருள்.அகத்.5); இந்திய வாரியிலும், அமைதி (Pacific); வாரியிலும் பெரியதும் வலியதும் கொடியதுமான மீன் சுறாவாதலால், அதன் முதுகந் தண்டை வாரணன் சின்னமாக நட்டு, நெய்தல் வாணரான பரதவர் வணங்கியும் விழாவெடுத்தும் வந்தனர். “சினைச் சுறவின் கோடுநட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினால் மடற்றாழை மலர் மலைந்தும் பினர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் புன்றலை யிரும்பரதவர் பைந்தழைமா மகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா துவவுமடிந் துண்டாடியும் புலவுமணற பூங்கானல மாமலை யணைந்த கொண்மூப் போலவும் தாய்முலை தழுவிய குழவிபோலவும் தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கும் மலியோதத் தொலிகட்டற் தீதுநீங்கக் கடலாடியும்” (பட்டினப்.86-99); |
நெய்தல்நிலத் தலைவன் | நெய்தல்நிலத் தலைவன் neytalnilattalaivaṉ, பெ. (n.) சேர்ப்பன்; chief of maritime tract. [நெய்தல் + நிலம் + தலைவன். நெய்தல் நிலத் தலைவனின் பெயர்] |
நெய்தல்நிலத்தொழில் | நெய்தல்நிலத்தொழில் neytalnilattoḻil, பெ. (n.) 1. மீன்பிடிக்கை; fishing. 2. உப்பு விளைவிக்கை; salt plantation. [நெய்தல் + நிலம் + தொழில். நெய்தல் நிலமக்கள் செய்யும் தொழில்.] |
நெய்தல்நிலப்பறவை | நெய்தல்நிலப்பறவை neytalnilappaṟavai, பெ. (n.) கடல் காக்கை; a kind of sea-bird. [நெய்தல் + நிலப்பறவை. நெய்தல் நிலமான கடற்பகுதியில் காணப்படும் பறவை] |
நெய்தல்நிலப்பறை | நெய்தல்நிலப்பறை neytalnilappaṟai, பெ. (n.) பம்பை (பிங்.);; tabour coarse. [நெய்தல் + நிலப்பறை. கடலும் கடல் சார்ந்த நிலமான நெய்தல் நிலத்து முழங்கும் பறை] [P] |
நெய்தல்நிலப்பா | நெய்தல்நிலப்பா neytalnilappā, பெ. (n.) தன்னைப்பிரிந்திருக்கும் தலைவனைக் குறித் துத் தலைவி கடற்கரையிலிருந்து புலம்புவ தாகக் கூறப்படும் சிற்றிலக்கிய வகை; poem in which a maiden laments on the seashore for her lovers separation. [நெய்தல்+நில+பா] |
நெய்தல்நிலப்பெண் | நெய்தல்நிலப்பெண் neytalnilappeṇ, பெ. (n.) மீனவப் பெண், நுளைச்சி (பிங்.);; a fisher-woman. [நெய்தல் + நிலப்பெண்] |
நெய்தல்நிலமரம் | நெய்தல்நிலமரம் neytalnilamaram, பெ. (n.) 1. அடம்புமரம்; a fragrant flowering tree. 2. கோங்குமரம்; red cotton tree. 3. தாழைமரம்; screw pine tree. 4. புன்னைமரம்; Indian beech tree. 5. முள்ளிச்செடி; thorny plant. [நெய்தல் + நிலம் + மரம். நெய்தல் நிலத்து வளரும் மரஞ்செடி கொடிகள்.] |
நெய்தல்நிலம் | நெய்தல்நிலம் neytalnilam, பெ. (n.) கடலோரப் பகுதி; sea coast countries maritime tract. (சா.அக.);. [நெய்தல் + நிலம்] பழந்தமிழ்நாட்டில் நிலத்தியல்பைக் கொண்டு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என ஐவகையாக நிலத்தைப் பிரித்தனர். இவற்றுள் கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல் எனப்படும். இந்நிலப்பகுதியில் நெய்தல் மலர் நிறைந்திருப்பதைக் கொண்டு இப்பெயர் வந்ததென்பர். இரங்கலும் இரங்கல் நிமித்தமுமாகிய) குறியுமாகிய ஒழுக்கம் பற்றி இப்பெயர் வந்த தென்பாரும் உண்டு. நெய்தல் நிலத்தலைவன் சேர்ப்பன், புலம்பன்: தலைவி பரத்தி, நுளைச்சி. இந்நிலமக்கள் பரதர், பரத்தியர், நுளையர், நுளைச்சியர், அளவர், அளத்தியர், வலையர், வலைச்சியர், என்று அழைக்கப்படுவர். இவர்களின் கடவுள் மழைக்கடவுளான வருணன். “வருணன் மேய பெருமனலுலகம்” என்பர் தொல்காப்பியர். இந்நிலமக்கள் உப்பையும் மீனையும் விற்றுக் கிடைக்கும் உணவுப் பொருளைக் கொண்டு வாழ்வர். இவர்களின் தொழில், மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், மீனைக் காயவைத்தலும், பறவைகளை யோட்டுதலும், கடலாடுதலும், தெப்பம் விடுதலும் ஆகும். இவர்கள் மீன்கோட் பறை, பம்பை, விளரியாழ் என்னும் இசைக் கருவிகளைப் பயன்படுத்துவர்; செவ்வழி என்னும் பண்ணை இசைப்பர். இங்குள்ள விலங்குகள் உப்பு மூட்டைகளைக் கமக்கும் பகடும், கடற்கறாவும், முதலையுமாகும். பறவைகள் அன்னமும் அன்றிலும். தாழை, நீர்முள்ளி அடம்பு, புன்னை, ஞாழல் என்னும் மலர்களை இம்மக்கள் அணிவர். இவர்களுக்கு உவர் நீர்க்கேணியிலிருந்தும், மணற்கேணி யிலிருந்தும் நீர் கிடைக்கும். இவர்களின் ஊர் பேரூர், பட்டினம், சிற்றுார், பாக்கம் எனப்பெறும். காதலரைப் பிரிந்தவர்கள் தனிமை பொறாமல் இரங்கலும் அதற்குரிய குறியும் இந்நிலத்துக் குரிய அகவொழுக்கமென அகப்பொருளி லக்கணம் கூறும். புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடலென்னும் எல்லா அகவொழுக்கமும் எல்லா நிலத்திற்கும் உரியவை யெனினும், இந்நிலத்திற்கு இரக்கமே அகவொழுக்கமெனக் கூறுவது புலனெறிவழக்க மென்பர். இக்கரணியம்பற்றியே பிற்பகலாகிய எற்பாடு எனும் சிறு பொழுது இந்நிலத்திற்குரிய தென்பர். இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பணி யென்னும் பெரும் பொழுதுகள் ஆறும் இந்நிலத்திற் குரியனவே. தன்வலிமையே பொருளாக வந்த வேந்தனை, மற்றொரு மன்னன் சென்று தடுத்துப் பொருவதாகிய தும்பைத் திணை இந்நிலத்திற்குரிய புறவொழுக்கம், மணல் பரந்த வெளியுங் களர்நிலமும் போர் செய் வதற்குத் தக்க சிறந்த இடமெனக் கொண்டு இத்திணை யிந்நிலத்திற் சிறந்த தென்பர். |
நெய்தல்நிலவூர் | நெய்தல்நிலவூர் neytalnilavūr, பெ. (n.) பாக்கம்; Pakkam, the sea side village. [நெய்தல் + நிலவூர்] |
நெய்தல்பூண்டோன் | நெய்தல்பூண்டோன் neytalpūṇṭōṉ, பெ. (n.) நெய்தல் மாலையணிந்த ஐயனார் என்னும் ஊர்த் தெய்வம் (நாமதீப.43);; a village deity, as wearing a garland of neydal. [நெய்தல் + பூண்டோன். பூண்டோன் = அணிந்தவன்.] |
நெய்தல்யாழ் | நெய்தல்யாழ் neytalyāḻ, பெ. (n.) நெய்தல் நிலப் பெரும்பண்களுள் ஒன்று (திவா.);; a primary melody-type of neydal tract. [நெய்தல் + யாழ். நெய்தல் நிலமக்கள் இசைக்கும் யாழ்.] |
நெய்தல்யாழ்த்திறம் | நெய்தல்யாழ்த்திறம் neytalyāḻttiṟam, பெ. (n.) நெய்தல் நிலப்பண் வகை (திவா.);; a secondary melody-type-of the neydal class. [நெய்தல் + யாழ்த்திறம். யாழ்த்திறம் = இசைப்பண்] |
நெய்தல்வாயில் | நெய்தல்வாயில் neytalvāyil, பெ.(n.) திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள ஊர்; a village in Thiruvalluvar Dt., Ponnēri taluk. [நெய்தல் + வாயில்] நெய்தல் நிலத்துக்கு இவ்வூர் வாயிலாக அமைவதாலும் நெய்தல் வாயில் எனப்பெயர் பெற்றது. நெய்தல் வாயில் மருவி நெய்தல் வாயல் என்று வழங்குகிறது. |
நெய்தல்விளைவு | நெய்தல்விளைவு neytalviḷaivu, பெ. (n.) 1. உப்பு; common salt. 2. மீன்; fish. 3. கடலில் மூழ்கிக் கிடைக்கும் பொருள்களான பவளம், முத்து முதலியன; substances obtained from the Sea Such as coral, pear amber etc. (சா.அக.);. மறுவ. கடல்படுபொருள்கள். [நெய்தல் + விளைவு] |
நெய்தாங்கி | நெய்தாங்கி neytāṅgi, பெ. (n.) விளக்கு வகை (1.M.P.S.A.402);; a lamp. [நெய் + தாங்கி, நெய்யூற்றி எரிக்கும் விளக்குவகை] |
நெய்தை | நெய்தை neytai, பெ. (n.) பெருமை (பிங்.);; greatness, dignity, importance. [நெய்3″ — நெய்தை] |
நெய்த்தானம் | நெய்த்தானம் neyttāṉam, பெ. (n.) தஞ்சை மாவட்ட வூர்; a village in Tanjore district. இவ்வூர் திருநெய்த்தானம் என்று முன் அடை பெற்று இன்று தில்லைத் தானம் என்று வழங்குகிறது. இவ்வூரை அப்பர் “நிலா வெண்மதி யுரிஞ்ச நீண்டமாட நிறைவயல் சூழ் நெய்த்தானம்” எனவும், சம்பந்தர், “அறையும் புனல்வரு காவிரி யலை சேர் வடகரைமேல் நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானமெனிரே” எனவும் புகழ்ந்து பாடுகின்றனர். முதலில் கோவில் பெயராக இருந்து பின் ஊர்ப்பெயராக மாறி இருக்கலாம். [நெய் + தானம். கோயிலில் விளக்கெரிக்க நெய் அதிகமாக வழங்கிய ஊராக இருக்கும்.] |
நெய்த்திருக்கை | நெய்த்திருக்கை neyttirukkai, பெ. (n.) திருக்கை மீன் வகை (வின்.);; a kind of thornback fish. [நெய் + திருக்கை. நெய் மிகுந்திருக்கும் மீன் வகை] |
நெய்த்துடுப்பு | நெய்த்துடுப்பு neyttuḍuppu, பெ.(n.) 1. வேள்விகளில் பயன்படுத்தும் நெய்க்கரண்டி (திவா.);; spatula, used especially in Védic sacrifices. 2. தீவட்டிக்காரர் பயன்படுத்தும் எண்ணெய்க்கலம்; vessel for oil used by torch bearers. [நெய் + துடுப்பு. துடுப்பு = சட்டுவம், அகப்பை, கரண்டி] |
நெய்த்தோர் | நெய்த்தோர்1 neyttōr, பெ. (n.) நெய்ப்பதமுள்ள அல்லது நெய்போலுறையும் அரத்தம்; blood. “நெய்த்தோரிடையறா தொழுகுங் கோட்டு” (நைடதம்.போர்புர்.21);. “நெய்த்தோர் வாய…. குருளை” (நற்.2);. க. நெத் + தரு, தெ. நெத்துரு துட. நெத்ஸ்; கோத, நெத்ர் (metr);; குட. நெத்த; து. நெத்தரு; கொலா.நெத்ரு; நா. நெத்துரு; பர். நெதிர்; கட. நெத்துர்; கோண.நத்துர்; கூ. நெகுதரி; குவி. நெதொரி;பிரா. திதர். [நெய்துவர் → நெய்த்தோர். துவர் = சிவப்பு, அரத்தம்.] நெய்த்தோர்2 neyttōr, பெ. (n.) ஒதியமரம் (வைத்தியபரி);; Indian ash tree. |
நெய்த்தோலி | நெய்த்தோலி neyttōli, பெ. (n.) வெண்ணிற முள்ள சிறிய கடல் மீன் வகை (பதார்த்த.938);; anchovy, silvery, Engraulis indicus. [நெய் + தோலி, நெய்போல் பளபளப்பும் வெண்மையும் உடைய மீன் வகை.] தீவக்குறை இந்தியாவின் கிழக்கு, மேற்கு ஆகிய இரண்டு கடற்கரைகளிலும் காணப்படும் சிறுமீ ன்கள். இவை மெல்லிய உடலினையும் கூரிய முகத்தையும் உடையன. தலைமுதல் வால் வரை வெள்ளி போன்று பளபளப்பான பட்டை ஒன்றிருக்கும். மேற்குக் கடற்கரைப்பகுதியில் ஆண்டுதோறும் இம்மீ ன் அதிகம் பிடிக்கப் படுகிறது. சுறவ மாதம் முதல் கடக (சனவரி முதல் சூன்); மாதம் வரை இம்மீன்கள் அதிகம் பிடிக்கப்படுகின்றன. இம்மீனை கருவாடாகச் செய்து சேமித்து வைப்பர். இம்மீன்கள் கரையருகேயே வாழும் இயல்புடையது. [P] |
நெய்நெட்டி | நெய்நெட்டி neyneṭṭi, பெ. (n.) சம்பங்கோரை (சங்.அக.);; elephant grass. [நெய் + நெட்டி. நெட்டி = கோரைவகை. நெய்போல் பளபளப்பான சம்பங்கோரை.] |
நெய்ப்பசை | நெய்ப்பசை neyppasai, பெ. (n.) எண்ணெய்ப் பசை; oilness, greasiness. (சா.அக.); [நெய் + பசை] |
நெய்ப்பந்தம் | நெய்ப்பந்தம் neyppandam, பெ. (n.) 1. நெய்யூற்றி எரிக்கும் பந்தம்; torch burning ghee. 2. இறந்தவரின் உடலுக்குக் கொள்ளி வைப்பதற்காக நெய்யில் நனைத்த தீப்பந்தம்; torch fed with ghee used for lighting funeral pyre. 3. இறந்தவரின் உடலைச் சுற்றி பேரன், பேர்த்திகள் பிடிக்கும் நெய்யில் நனைத்த பந்தம்; torch fed with ghee holding grand son and grand daughter at the time of funeral. தாத்தாவின் சாவில் பேரன்பேத்திகள் நெய்ப் பந்தம் பிடித்தல் மரபு. [நெய் + பந்தம். பந்தம் = தீவட்டி, தித்திரள்] |
நெய்ப்பயிறு | நெய்ப்பயிறு neyppayiṟu, பெ.(n.) சிறுதுவரை; small leaved ebony, Diosphyros microphylla. (சா.அக.);. |
நெய்ப்பரி | நெய்ப்பரி neyppari, பெ.(n.) பன்னாடை; the web at the bottom of the palmyra tree the fiber covering about the base of palmyra tree (சா.அக);. [நெய்யரி → நெய்ப்பரி] |
நெய்ப்பற்று | நெய்ப்பற்று neyppaṟṟu, பெ. (n.) 1. நெய்யின் ஒட்டுந்தன்மை; greasiness, stickiness of ghee. இத்தின்பண்டத்தில் நெய்ப்பற்று மிகுந்ததுள்ளது. 2. கொழுப்பு; fat corpulence. [நெய் + பற்று. பற்று = பசை] |
நெய்ப்பாகம் | நெய்ப்பாகம் neyppākam, பெ. (n.) நெய்யினால் செய்யும் பண்டங்கள்; ghee preparations. (சா.அக.);. [நெய் + பாகம்] |
நெய்ப்பான | நெய்ப்பான neyppāṉa, கு.பெ.எ.(adj.) கொழுத்த; filled with fat, fatty. [நெய் → நெய்ப்பான] |
நெய்ப்பிடி | நெய்ப்பிடி neyppiḍi, பெ. (n.) நெய்ப்பற்று (வின்.); பார்க்க;see ney_p-paru. [நெய் + பிடி] |
நெய்ப்பிடிப்பு | நெய்ப்பிடிப்பு neyppiḍippu, பெ. (n.) நெய்ப்பற்று (வின்.); பார்க்க: see ney_p-paru. சர்க்கரைப் பொங்கலில் நெய் பிடிப்பு மிகுதி. [நெய் + பிடிப்பு] |
நெய்ப்பிரியக்காய்ச்சு-தல் | நெய்ப்பிரியக்காய்ச்சு-தல் neyppiriyakkāyccudal, 5செ.குன்றாவி.(v.t.) எண்ணெய் வெளிவரும்படி காய்ச்சுதல்; boiling down till the material which is boiled gives out or sheds all its oil contents. (சா.அக.); [நெய் + பிரிய + காய்ச்சு-தல்] |
நெய்ப்பிலி | நெய்ப்பிலி neyppili, பெ. (n.) ஒரு வகை மாணிக்கக் குற்றம்; flaw in a ruby. “சந்தை நெய்ப்பிலி யெனத் தகுபதினாறும்” (கல்லா.97);. [நெய்ப்பு + இலி. நெய்ப்பு இல்லாத மாணிக்கம், நெய்ப்பு = பளபளப்பு] |
நெய்ப்பீர்க்கு | நெய்ப்பீர்க்கு neyppīrkku, பெ.(n.) நுரைப்பீர்க்கு (மலை.);; oil-giving luffa. [நெய் + பீர்க்கு] |
நெய்ப்பு | நெய்ப்பு1 neyppu, பெ. (n.) 1. நெய்ப்பத முடைத்தாயிருக்கை (திருக்கோ.56,உரை);; unctuousness, oiliness. இனிப்பில் நெய்ப்புத் தன்மை அதிகம். 2. பளபளப்பு (சீவக.169. உரை);; shining appearance, gloss, polish. 3. கொழுப்பு (வின்.);; fatness, plumpness. 4. சீழ் (வின்.);; pus, matter. [நெய் → நெய்ப்பு. நெய் = பளபளப்பு] நெய்ப்பு2 neyppu, பெ. (n.) 1. சிதல்; white ant. 2. புல்லாமணக்கு; creeping castor plant, Sebastiana chamaclea. (சா.அக.);. [நெய் → நெய்ப்பு] |
நெய்ப்புச்சுவரி | நெய்ப்புச்சுவரி neyppuccuvari, பெ.(n.) மான் செவிக்கள்ளி (சங்.அக.);; spurge. [நெய்ப்பு + சுவரி, சுவறுதல் = வற்றுதல், உறிஞ்சப்படுதல். சுவறு → சுவரி.] |
நெய்ப்புள்ள | நெய்ப்புள்ள neyppuḷḷa, பெ.எ. (adj.) 1. கொழுப்புள்ள; unctuous. 2. எண்ணெய்ப் பசையுள்ள; oleaginous (சா.அக.);. [நெய் → நெய்ப்பு + உள்ள] |
நெய்ப்புழு | நெய்ப்புழு neyppuḻu, பெ. (n.) நெய்யில் உண்டாகும்: a worm found in pulugred ghee. [நெய்+புழு] |
நெய்மம் | நெய்மம் neymam, பெ. (n.) 1. வடித்த மருந்தெண்ணெய் (சூடா.);; ointment, medicated oil, balm. 2. எண்ணெய் oil. [நெய் → நெய்மம்] |
நெய்மரம் | நெய்மரம் neymaram, பெ. (n.) நெய்யைப் போல் உறையும் எண்ணெய் உள்ள வெண்ணெய் மரம்; name given to several tress, the fruit or bark which yields a solid Oily or fatty substance such as Mowah butter, Cokum butter, Cocoa butter etc. மறுவ. வெண்ணெய் மரம் [நெய் + மரம்] |
நெய்முட்டை | நெய்முட்டை neymuṭṭai, பெ.(n.) நெய் யெடுக்குங் கரண்டி; spoon for taking ghee. “நெய்முட்டை யொன்று வெள்ளி எண்பத்தேழு கழஞ்சு” (தெ.க.தொ.2:418);. [நெய் + முட்டை. முட்டை = சிறுகரண்டி] இங்கு முட்டி எடுப்பதால் முட்டை என்பது கரண்டி என்ற பொருளில் வந்தது. |
நெய்ம்மிதி | நெய்ம்மிதி neymmidi, பெ.(n.) நெய்ம்மி திகவளம் பார்க்க;see ney-m-midi-kavasam. “நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ” (புறநா.44);. [நெய் + மிதி] |
நெய்ம்மிதிகவளம் | நெய்ம்மிதிகவளம் neymmidigavaḷam, பெ.(n.) குதிரை, யானைக்குக் கொடுக்க நெய்கலந்து மிதித்துத் திரட்டப்பட்ட உணவு; food for elephants and horses, rolled into balls after mixing it with ghee and trampling it with foot. “நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம்” (பெரும்பாண்.394); [நெய்ம்மிதி + கவளம். கவளம் = உணவுத்திரள்] |
நெய்ம்மீன் | நெய்ம்மீன் neymmīṉ, பெ. (n.) 1. பதினான்காம் விண்மீன் (சித்திரை);; the 14th naksatra. 2. வெள்ளிறால் மீன் (வின்.);; white prawn. [நெய் + மீன், நெய்யின் தன்மை கொண்ட மீன்.] |
நெய்யடிசில் | நெய்யடிசில் neyyaḍisil, பெ. (n.) நெய் கலந்த சோறு; rice food mixed cow’s ghee. (சா.அக.);. மறுவ. நெய்ச்சோறு. [நெய் + அடிசில்] |
நெய்யணி | நெய்யணி neyyaṇi, பெ. (n.) மகப்பேற்றின் பிறகு குழந்தைக்குச் செய்யும் மங்கல நீராட்டுச் சடங்கு; the ceremonial oil-bath taken after the birth of a child. “கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை”(தொல்,பொருள்.147);. “மையாடிய தடங்கண்ண னொரு நன் மகவுயிர்த்து நெய்யாடினள்” (வெங்கைக்கோவை,360);. [நெய் + அணி. எண்ணெய் கலந்த நீரால் குழந்தையைக் குளிப்பாட்டும் விழா.] |
நெய்யன்னம் | நெய்யன்னம் neyyaṉṉam, பெ. (n.) நெய்யடிசில் பார்க்க;see ney-y-adsl (சா.அக.);. [நெய் + அன்னம்] |
நெய்யரி | நெய்யரி neyyari, பெ. (n.) தென்னை, பனை முதலிய மரங்களில் மட்டைகளை மரத்தோடு பிணைக்கும் வலைபோன்ற பகுதி, பன்னாடை; the fibrous covering about the base of the palmyra or cocoanut stalk. “அன்னமாவே மண்ணொடுகிளியே யில்லிக்குடமா டெருமை நெய்யரி அன்னர்” (நன்.38);. [நெய் + அரி. அரி = பனங்கருக்கு] |
நெய்யற்கயிறு | நெய்யற்கயிறு neyyaṟkayiṟu, பெ. (n.) நெசவு செய்யும் நெய்வார் கருவியுளொன்று (யாழ்.அக.);; a weaver’s implement. [நெய்யல் + கயிறு. நெய்வதற்குப் பயன்படும் கயிறு] [P] |
நெய்யல் | நெய்யல் neyyal, பெ. (n.) நெசவு செய்கை; weaving. [நெய் → நெய்யல்] |
நெய்யாடல் | நெய்யாடல் neyyāṭal, பெ. (n.) 1. திருவிழாக் காலங்களில் மங்கலமாக ஆடும் எண்ணெய் முழுக்கு: oil bath. “இவளைத் தோற்பித்ததுக்கு நெய்யாடல் போற்றுகிறபடி” (ஈடு, 7.3:1);. 2. நெய்யணி பார்க்க;see __, [நெய் + ஆடல், ஆடல் = நீராடல், அல்-ஈற்றுத் தொழிற் பெயர்] |
நெய்யாடு-தல் | நெய்யாடு-தல் neyyāṭudal, 5.செ.கு.வி. (v.i.) 1. எண்ணெய்த் தேய்த்து மங்கல நீராடல்; to take oil-bath, on festive occasions. “அண்டர் மிண்டிப்புகுந்து நெய்யாடினார்” (திவ். பெரியாழ்.1.1:5);. 2. நெய்பூசுதல்; to anoint. நெய்யாடிய வேல். [நெய் + ஆடு. ஆடுதல் = நெய் முதலியன பூசி நீராடுதல். இது தல்லிற்றுத் தொழிற் பெயராகவும் வரும்.] |
நெய்யாட்டல் | நெய்யாட்டல் neyyāṭṭal, பெ. (n.) வெண்ணெய் திரட்டல்; collecting butter. (சா.அக.);. [நெய் + ஆட்டல். நெய் என்ற சொல் .வெ ள் + நெய் = .வெண்ணெய், எள் + நெய் = எண்ணெய் என்னும் பொருளில் வருவது வழக்கம்.] |
நெய்யாட்டு | நெய்யாட்டு neyyāṭṭu, பெ. (n.) நெய்யாடல் பார்க்க; seе __, (சா.அக.);. [நெய் + ஆட்டு] |
நெய்யுண்டை | நெய்யுண்டை neyyuṇṭai, பெ. (n.) நெய் கலந்த சோற்றுத் திரள் (இ.வ.);; ball of food mixed with ghee. கோயிலில் நெய்யுண்டை கொடுத்தார்கள். [நெய் + உண்டை. உண்டை = சோற்றுத் திரள், கவளம். உருண்டை → உண்டைஇடைக்குறை.] |
நெய்யுண்ணி | நெய்யுண்ணி neyyuṇṇi, பெ. (n.) கொடி வகை, ஐவிரலி; ghee eater from its medicinal property, creeper known as bryony, Bryonia laciniosa. (சா.அக.);. |
நெய்யுருண்டை | நெய்யுருண்டை neyyuruṇṭai, பெ. (n.) நெய்யுண்டை (இ.வ.); பார்க்க;see ney-y-undai. [நெய் + உருண்டை] |
நெய்யுலை | நெய்யுலை neyyulai, பெ.(n.) உணவு சமைத்தற்காக நெய் காய்ச்சுகின்ற உலை; pot of ghee heated for cooking. “நெய்யுலை சொரிந்த மையூ னோசை” (புறநா.261); [நெய் + உலை. உலை = நெருப்புள்ள அடுப்பு] |
நெய்யேற்று-தல் | நெய்யேற்று-தல் neyyēṟṟudal, 5.செ.கு.வி.(v.i.) அருகம்புல்லை நெய்யிற் தோய்த்து மணமக்கள் தலையில் மகளிர் வாழ்த்தித் தடவுதல்; to bless a bride and bridegroom by stroking their heads with quitch grass soaked in ghee. “மன்னுவாய் திருவோ டென்று வாழ்த்திநெய் யேற்றினாரே” (சீவக.2417);. [நெய் + ஏற்று. ஏற்றுதல் = வாழ்த்துதல்] |
நெய்வண்ணம் | நெய்வண்ணம் neyvaṇṇam, பெ.(n.) வண்ணக் குழம்பின் ஒரு வகை; a kind of colour mix. [நெய்+வண்ணம்] |
நெய்வண்ணவோவியம் | நெய்வண்ணவோவியம் neyvaṇṇavōviyam, பெ. (n.) எண்ணெயில் வண்ணங் களைக் கரைத்து வரைந்த ஒவியம்; oil painting. [நெய் + வண்ணம் + ஒவியம்] ஓவியக்கலை சிறந்த நிலையை அடைய நெய்வண்ண முறை முதற் கரணியமாக இருந்தது. இம்முறையைப் பெல்சிய நாட்டு பிளாண்டர் (anders); பகுதியைச் சேர்ந்த யான் வான் ஐக் (Jan van Eyck 1389-1440); என்பவர் கண்டுபிடித்தார். இவருக்கு முன்பு வண்ணங்களைக் குழைக்க முட்டைக் கருவையோ, தண்ணிரையோ பயன்படுத்தினர். இவருடைய முயற்சியால் ஆளிவிதை போன்ற விதைகளின் எண்ணெய் பயன்படும் என்பது தெரிய வந்தது. எண்ணெயில் கரைத்துத் தீட்டப் பெறும் ஒவியங்கள் ஒளிபெற விளங்குவதோடு தண்ணிர்பட்டால் அழி வதில்லை. மற்ற முறைகளில் ஒவியத்தை வரைந்த பிறகு அதன்மேல் வேறு வண்ணங்களைத் தீட்டிப் படத்தை மாற்ற முடியாது;மாற்றவும் கூடாது. ஆனால், நெய்வண்ணங்களைப் பலவாறு, பலநாள், பலமாதம், பல ஆண்டுங்கூட வண்ணந் தீட்டிக் கொண்டி ருக்கலாம். |
நெய்வனை | நெய்வனை neyvaṉai, பெ.(n.) திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tirukkoyilur.Taluk. [நெல்(நெய்);+மனை-வனை] |
நெய்வாசல் | நெய்வாசல் neyvācal, பெ.(n.) சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chidambaram Taluk. [நெல்(நெய்);+வாசல்] |
நெய்வான்மீன் | நெய்வான்மீன் neyvāṉmīṉ, பெ. (n.) 14 ஆம் விண்மீன் (சித்திரை);;(திவா.); the 14th naksatra. மறுவ. நெய்ம்மீன். [நெய் + வான்மீன். விண்ணில் உள்ள 27 நாண்மீன் தொகுதிகளுள் ஒன்று.] |
நெய்வாய்க்குடி | நெய்வாய்க்குடி neyvāykkuḍi, பெ.(n.) மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of village in Mayiladuturai. [நெல்(நெய்);+வாய்+குடி] தற்போது இவ்வூர் நல்லத்துக்குடி என்னும் பெயருடன் உள்ளது. |
நெய்வார் | நெய்வார் neyvār, பெ. (n.) நெசவு செய்பவர் (யாழ்.அக.);; the caste of weavers. க. நேயுவவரு [நெய்1 → நெய்வு + ஆர்] |
நெய்விலை | நெய்விலை neyvilai, பெ. (n.) வரிவகை (தெ.க.தொ.2, 352);; a tax. [நெய் + விலை. சாந்துடன் சேர்ந்து இறுகப் பிடித்துக் கொள்ளும் நெய் போன்ற பொருளுக்கு வாங்கப்பட்ட வரியாகலாம்.] |
நெய்விளக்கு | நெய்விளக்கு neyviḷakku, பெ.(n.) நெய்யால் எரியும் விளக்கு; a lamp which is lighted in ghee. [நெய்+விளக்கு] நெய்விளக்கு1 neyviḷakku, பெ. (n.) 1. கோயில்களில் நெய்யூற்றி யெரிக்கும் விளக்கு; lamp fed with ghee. கோயிலில் நெய்விளக்கு வைத்தால் ஊழ் வினை அகலும் என்பது பழமை நம்பிக்கை. 2. தெய்வத்துக்கு முன் ஏற்றும் மாவிளக்கு (இ.வ.);. lamp of dough burnt with ghee before an idol. நெய் விளக்குப் போட நேர்ந்து கொண்டேன். [நெய் + விளக்கு] [P] நெய்விளக்கு neyviḷakku, பெ. (n.) நாகை மாவட்டம் திருமறைக்காடு வட்டத்தில் உள்ள ஊர்; a village in Thirumaraikkadu taluk, Nagapattinam district. திருமறைக்காட்டுக் கோயிலில் விளக்கு எரிப்பதற்காக இவ்வூர்ப் பகுதியில் இலுப்பை மரங்கள் வளர்க்கப்பட்டன. அதற்காகவே இப்பகுதி மானியமாக வழங்கப்பட்டது. விளக்கெரிக்க நெய் கொடுக்கும் ஊராகையால் நெய் விளக்கு எனப்பட்டது. |
நெய்விழா | நெய்விழா neyviḻā, பெ.(n.) மங்கலமாக இடும் நெய் முழுக்கு: considered auspicious anointment.”நிரம்பின உலகு எலாம் உவகை நெய் விழா”, [நெய்+விழா] நெய்விழா neyviḻā, பெ. (n.) நெய்யாடல் பார்க்க;see ney-y-adal. “உலகெலா முவகை நெய்விழாப் பரம்பின்” (கம்பரா.மருத்து.106);. [நெய் + விழா. நெய்யால் குளிப்பாட்டும் விழா.] |
நெய்விழுது | நெய்விழுது neyviḻudu, பெ.(n.) 1. உறைந்த நெய்; congealed ghee. 2. புதிதாகத் திரண்ட வெண்ணெய் (வின்.);; butter freshly prepared from cream. [நெய் + விழுது. விழுது = வெண்ணெய், நீர்விட்டரைத்துத் திரட்டியது] |
நெய்வு | நெய்வு neyvu, பெ. (n.) நெசவு (உ.வ.);; weaving. நூலை நெய்வு செய்ய வேண்டும். நெய்வுக்கு ஆள்வேண்டும். [நெய்1 → நெய்வு] |
நெய்வெட்டி | நெய்வெட்டி neyveṭṭi, பெ. (n.) 1. பழுப்பு நிறமுள்ள கடல் மீன் வகை; mud-skipper, olive-brown, Periophthalmus koelreuteri. 2. ஒன்பது விரலம் வளரக் கூடியதும் பழுப்பு நிறமுள்ளதுமான கடல் மீன் வகை; mudskipper, brownish, attaining 9 inch in length, Periophthalmus schlosseri. [நெய் + வெட்டி.. நெய்யின் மனமும், எண்ணெய்ப் பசையுமுடைய மீன் வகை] [P] |
நெய்வேலி | நெய்வேலி neyvēli, பெ. (n.) தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்; a town in Cuddalore district. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி கிடைக்கும் இடம். இந்நிலக்கரின்யப் பயன்படுத்தி அனல் மின்சாரம் இங்குச் செய்யப்படுகிறது. நிலநடுக்கத்தில் நிலத்துள் புதைந்த காடு சில்லாயிரம் ஆண்டுகளில் வெட்டப்படின் பழுப்பு நிலக்கரியும், பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வெட்டப்படின் கருப்பு நிலக்கரியும், ஓரிலக்கம் ஆண்டு சென்ற பின் வெட்டி எடுக்கப்படின் வயிரமும் கிடைக்கும் என்பது நிலவியல் ஆய்வுக் குறிப்பு. ‘வேலி’ என்பது நிலவளவைப் பெயர்களுள் ஒன்று. சில இடங்களில் நெல் விளையும் கழனியையும் வேலி என்னும் சொல் குறிக்கிறது. (நெல் வயல்கள் நிறைந்த இடத்தில் அமைந்த ஊராகையால் நெல்வேலி எனப் பெயர் பெற்று பின் நெய்வேலி ஆயிற்று எனலாம்.); |
நெய்வை-த்தல் | நெய்வை-த்தல் neyvaittal, 4 செ.கு.வி. (v.i.) 1. மருந்து நெய் செய்தல்; to make medicated ghee. 2. கொழுப்பேறுதல் (யாழ்.அக.);; to become fat. உடம்பில் நெய் வைத்து விட்டது. [நெய் + வை-த்தல்.] |
நெரசல் | நெரசல் nerasal, பெ.(n.) ஒலையால் மறைத்துக் கட்டப்படும் தட்டி; a screen like seperation made with dried leaves of palmyra or coconut tree leaves. [நிரவு-நெரசல்] |
நெரடு | நெரடு1 neraḍudal, 5 செ.குன்றாவி. (v.t.) நெருடு-தல் பார்க்க;see __, [நெருடு-தல் → நெரடு-தல்.] நெரடு2 neraḍudal, 5 செ.கு.வி. (v.i.) 1. கடினமாதல்; to be rough, hard. தரை நெரடுது. 2. தட்டுப்படுதல் (வின்.);; to be halting. அந்தப்பாட்டில் இரண்டிடங்கள் நெரடுகின்றன. நாவில் ஏதோ நெரடுது. [நெருடு → நெரடு-தல்] நெரடு3 neraḍu, பெ. (n.) நெருடு பார்க்க;see nerugu. [நெருடு + நெரடு.] |
நெரலைத்தாளி | நெரலைத்தாளி neralaittāḷi, பெ. (n.) தாளிக்கொடி வகை; a kind of hedge bind weed, Ipomaea genus. (சா.அக.);. |
நெரளைதாளி | நெரளைதாளி neraḷaitāḷi, பெ. (n.) மரவகை (பாண்டி);; a tree, Antidesma alexiteria. |
நெரி | நெரி1 neridal, 2 செ.கு.வி. (v.i.) 1. நெருங்கியுரசி நொறுங்குதல்; to be crushed, broken, smashed, to crack. “தலை பத்து நெரியக் காலாற் றொட்டானை” (தேவா.177);. 2. நிலை கெடுதல் (சூடா.);; to be routed. 3. நெருங்குதல்; to be crowded. together. “நெரிமுகைக் காந்தள் (பரிபா.14:13);. 4. வளைதல்; to arch, curve, bend. “புருவம் நெரிந்தேற” (திவ்.பெரியாழ்.3.6:2);. 5. நசுங்குதல்; to crack. “செழும் பரம்பு தோறும் படிந்து நெரிந்தவே” (அரிச்ச. நாட்டுச்.34);. ம. நெரியுக [நுல்(பொருந்தல்); → நுள் → நெள் → நெரு → நெரி → நெரி-தல் (மு.தா);. நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நசுங்குதல், வளைதல். இது தன்வினைவடிவம்.] நெரி2 nerittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. நொறுக்குதல்; to break to pieces. 2. நசுக்குதல்; to crush, press, squeeze. “கழை நெரித்து வீழ்த்த சாறு” (சேதுபு. திருநாட்78);. “வளைக்கரநெரித்து (திருவிளை. விருத்த 34.);. பொதுகூட்ட நெரிசலில் சிக்கிக் காலை இழந்து விட்டான். 3. கையால் கூலம் (தவச); முதலியவற்றை நிமிண்டுதல் (வின்.);; to rub or crush with the hand, as ears of grain. கம்பங் கதிரைக் கையால் நெரித்துத் தின்றான். “கம்பங் கதிரைக் கண்டாலும் கை நிக்காது அம்மான் மகளைக் கண்டாலும் வாய் நிக்காது” (பழ.);. 4. துன்பம் முதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல்; to break the knuckles, as women in distress. ” கையைக் கையினெரிக்கும்” (கம்பரா. நகர்நீங்கு.11);. 5. கைவிரல்களைச் சுடக்குதல்; to crack as the fingers. கால் விரல்களைச் கொஞ்சம் நெரித்து விடு. 6. நிலைகெடச் செய்தல் (திவா.);; to rout. 7. திறமையாய் நடத்துதல் (வின்.);; to acquit oneself creditably. 8. நெருங்குதல்; to approach. “எரிப்பூம் பழன நெரித்து” (புறநா.249);. 9. குவித்தல் (இ.வ.);; to crowd together. 10. இறுக்கி அழுத்துதல்; strangle throtile. நான் தான் அவர் விரலை நெரித்து ஒடித்தேன். [நெரி1- → நெரி2 -. இது பிறவினை வடிவம்.] நெரி3 neri, பெ. (n.) 1. நெரிவு; crack, bruise, smash. 2. புடைவையின் கொய்சகம் (யாழ்.அக.);; close and short plaits of cloth in wearing. 3. சொரசொரப்பு; roughness. “நெரிபுறத்தடற்று வாளும்” (சீவக.2517);. [நெரி1 → நெரி3] நெரி4 neri, பெ. (n.) 1. புண்புறப்பாடு முதலியவற்றால் கைகாற் சந்துகளில் உண்டாகும் புடைப்பு; temporary swelling in joints due to boil, etc. இந்தக் காயத்தின் கரணியமாகக் தொடையில் நெரிகட்டி யிருக்கிறது. “தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெரி கட்டுமா” (பழ.);. 2. நோய்வகை; debility. [நெறி → நெரி] |
நெரிகட்டி | நெரிகட்டி nerigaṭṭi, பெ. (n.) நெறிக்கட்டி பார்க்க;see ners-k-kaff. [நெரி → நெரிகட்டி. புண் முதலியவற்றில் உள்ள நோயை உண்டாக்கும் பூச்சிகள், நுண்ணுயிரிகள் (கிருமிகள்); உடலில் பரவாமல் தடுப்பதற்காக அவற்றின் அருகில் உள்ள நிணநீர் முடிச்சு வீக்கம் அடைதல்] |
நெரிகட்டிசுரம் | நெரிகட்டிசுரம் nerigaṭṭisuram, பெ. (n.) நெறிக்கட்டிச் சுவரம் பார்க்க;see meri-k-kalŠuvaram. [நெறிக்கட்டிச்சுவரம் → நெரிகட்டிசுரம்] |
நெரிகம் | நெரிகம் nerigam, பெ.(n.) ஒசூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Hosur Taluk. [நரி-நரியகம்-நெரிகம்] |
நெரிகுரல்படு-தல் | நெரிகுரல்படு-தல் neriguralpaḍudal, 20செ.கு.வி. (v.i.) குழந்தைகட்கு குற்றம், தீட்டு (தோஷம்); முதலியவைகளால் குரல் கம்முதல்; affection of throat through cold, sore throat in children due to planetary influence. (சா.அக.);. [நெரிகுரல் + படு-தல்] |
நெரிகொட்டை | நெரிகொட்டை nerigoṭṭai, பெ. (n.) நறுக்கிய பாக்கு (யாழ்ப்.);; crumpled areca nuts. [நெரி + கொட்டை. நெரித்தல் = நொறுக் குதல். கொட்டை = பாக்குக் கொட்டை] |
நெரிக்கோரை | நெரிக்கோரை nerikārai, பெ. (n.) கோரைவகை (இ.வ.);; a kind of sedge. [நெரி1 + கோரை. கோரை = புல்வகை.] |
நெரிசம் | நெரிசம் nerisam, பெ. (n.) ஈட்டி (இ.வ.);. spear. |
நெரிசல் | நெரிசல்1 nerisal, பெ. (n.) 1. நெரிந்தது; anything broken or cracked. 2. நெருக்கமாக இருக்கும் கூட்டம்; the state of being overcrowed, as of a place. கடற்கரைக் கூட்டத்தில் நெரிசல் மிகுதி. தலைவரின் இறுதி ஊர்வல நெரிசலில் பலர் மாண்டனர். கோயில் திருவிழா நெரிசலில் பலருக்குப் புண் ஏற்பட்டது. 3. மன வேறுபாடு; misunderstanding. [நெரி → நெரியல் → நெரிசல்] ஓரிடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் அல்லது ஊர்திகள் குவிவதால் ஏற்படும் தேக்கநிலை. நெரிசல்2 nerisal, பெ. (n.) 1. கண்ணோவு வகை (இ.வ.); corneal ulcer. 2. பசலை நோய் (நாமதீப்.585);; dull colour of the skin. [நெரி → நெரிசல். நெரிதல் = நிலை கெடுதல்.] |
நெரிஞ்சகத்தி | நெரிஞ்சகத்தி neriñjagatti, பெ. (n.) நெரிஞ்சியிலை; leaf of caltrops – Ground burnut, Tribulus terrestris-leaf of. (சா.அக.);. |
நெரிஞ்சி | நெரிஞ்சி neriñji, பெ. (n.) நெருஞ்சி (உ.வ.); பார்க்க;see neruñji. [நெரி → நெரிஞ்சி. நெரிதல் = நொறுங்குதல்] நெருஞ்சியை சாம்பசிவம் மருத்துவ அகர முதலி நெரிஞ்சி என்றே வழங்குகிறது. நெரிஞ்சி என்பது பேச்சு வழக்கு. |
நெரிஞ்சிக்கீரை | நெரிஞ்சிக்கீரை neriñjikārai, பெ. (n.) நெருஞ்சியிலை; leaves of small caltrops. (சா.அக.);. [நெரிஞ்சி + கீரை] |
நெரிஞ்சிமுள் | நெரிஞ்சிமுள் neriñjimuḷ, பெ. (n.) நெருஞ்சிக்கொடியின் முள்; leaves of small caltrops, (சா.அக.);. [நெரிஞ்சி + முள்] [P] |
நெரிஞ்சில் | நெரிஞ்சில் neriñjil, பெ. (n.) நெருஞ்சில் பார்க்க;see nerயர் (சா.அக.);. [நெருஞ்சில் + நெரிஞ்சில்] |
நெரிநெட்டி | நெரிநெட்டி nerineṭṭi, பெ. (n.) சம்பங்கோரை (மலை.);; elephant-grass. [நெரி + நெட்டி. நெட்டி = கோரை வகை. நெருங்கி வளரும் கோரை வகை.] |
நெரிநெட்டிவாங்கு-தல் | நெரிநெட்டிவாங்கு-தல் nerineṭṭivāṅgudal, 5.செ.கு.வி.(v.i.) நெட்டியை முறித்தல்; to be arduous exhausting. வேலை நெரிநெட்டி வாங்குகிறது. [நெரி3 + நெட்டிவாங்கு-தல்] |
நெரிநேவி | நெரிநேவி nerinēvi, பெ. (n.) நெரிநெட்டி பார்க்க;see ners-neffi (சா.அக.);. |
நெரிபிடி-த்தல் | நெரிபிடி-த்தல் neribiḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) கொய்சகம் வைத்தல் (யாழ்.அக.);; to plat one’s cloth in wearing. நெரிபிடித்துச் சேலை கட்டக் கற்றுக் கொள். [நெரி + பிடி-த்தல்] |
நெரிபுருவம் | நெரிபுருவம் neriburuvam, பெ. (n.) கண் புருவம்; eye-brow [நெரி + புருவம்.] |
நெரிபுலம் | நெரிபுலம் neribulam, பெ. (n.) கண் புருவம்; eye-brow (சா.அக.);. [நெரி + புலம்.] |
நெரிபூசம் | நெரிபூசம் neripūcam, பெ. (n.) சொக்காங் கீரை; a kind of grans. (சா.அக.);. மறுவ. சொக்காக்கீரை |
நெரிமடு-தல் | நெரிமடு-தல் nerimaḍudal, 4 செ.கு.வி. (v.i.) நசுங்குதல்; be crumpled. திருவிழாக் கூட்டத்தில் நெரிமடுபட்டு வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. [நெரி + மடு-தல், மடுதல் – தன்வினை. மடுத்தல் – பிறவினை.] |
நெரிமீட்டான் | நெரிமீட்டான் nerimīṭṭāṉ, பெ. (n.) புண்ணை ஆற்றும் ஒருவகைப் பூடு(வின்.);; a herb the root of which is used for curing bruises. [நெரி1 + மீட்டான்] |
நெரியரிசிப்பால் | நெரியரிசிப்பால் neriyarisippāl, பெ. (n.) நெரியாசிப்பாற்செடி (M.M. 856); பார்க்க;see neriyāši-p-pār-ced. [நெரி + அரிசி + பால். நெரியாசி → நெரியரிசி + பால்] |
நெரியல் | நெரியல் neriyal, பெ. (n.) மிளகு; black pepper. “நெரியற் புணர்ப்பொறை தாங்கிய. கழுதை” (பெரும்பாண்.78);. [மிரியல் → நெரியல்,மிரியல் = மிளகு] உறைப்புமிக்க மிளகைத் தேள் கடி போன்ற சிறு நச்சு இறங்க சிலர் அரிசியோடு கலந்து உண்பர். வெறும் மிளகை மிகுதியாய் உண்டால் குரலில் மாற்றம் ஏற்படும். |
நெரியாசம் | நெரியாசம்1 neriyācam, பெ. (n.) நறும்புகை யுண்டாக்குதற்குரிய பண்டத்தொகுதி ஆறனுள் ஒன்றான, நெரியாசிப்பால் மரத்தின் பிசின்; juice of Java Storax. [நிரியாசம் → நெரியாசம். நிரியாசம் = ஒருவகை மணப்பிசின்] நறும்புகை யெழுப்பப் பயன்படும் பொருள்கள்: நேர்கட்டி, செந்தேன், நிரியாசம், கர்பூரம், ஆரம், அகில். “நேர்கட்டி செந்தேன், நிரியாசம், பச்சிலை ஆாம் அகிலு றுப்போராறு” என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 514);. “நேர்கட்டி செந்தேன் நிரியாசங் கப்பூாம் ஆர மகிலுறுப்போ ரைந்து” (சீவக.534); என்று நச்சினார்க்கினியர் கூறுவார். நெரியாசம்2 neriyācam, பெ.(n.) எரிகாசு, காசுக்கட்டி; a kind of perfuming ingredient (சா.அக.);. |
நெரியாசி | நெரியாசி neriyāci, பெ.(n.) நெரியாசிப்பால்2 பார்க்க;see neriyāši-p-pâl. |
நெரியாசிப்பாற்செடி | நெரியாசிப்பாற்செடி neriyācippāṟceḍi, பெ. (n.) நீண்ட மரவகை, நெரியாசிப் பால் மரம்; Indian storax tree, Liquidambar orientale. இது செடி என்னும் பெயரிலுள்ள ஒரு மரம். இது அறுபது முதல் 100 அடி வரை உயரமான மரம். இதன் இலையின் இருபுறமும் மொகமொசுப்பாய் அல்லது இலையின் அடிப்பாகத்தின் நரம்புகளில் இழைகள் பொருந்தியிருக்கும். இதன் பட்டை கசப்பு, உறைப்பு குணமுடையது;மனமுடையது: குத்தினால் பால் வரும். இதன் பாலினின்று வடிக்கும் எண்ணெய் மருத்துவ குண முடையது. (சா.அக);. |
நெரியாசிப்பாலெண்ணெய் | நெரியாசிப்பாலெண்ணெய் neriyācippāleṇīey, பெ.(n.) நெரியாசிப் பாற்செடி பார்க்க;see пeriyaSi-p-parced! (சா.அக.);. |
நெரியாசிப்பால் | நெரியாசிப்பால்1 neriyācippāl, பெ. (n.) ஒருவகைப் பெருமரம் (M.M. 856);, Java storax, Altingia excelsa. நெரியாசிப்பால்2 neriyācippāl, பெ. (n.) 1. நெரியாசிப்பாற் செடியின் பட்டையினின்று வடிக்கும் ஒருவகைப் பாற்பிசின்; Indian storax, Liquid amber orientale. It is a milk resin collected from the bark of the gigantic tree. It is also known as Indian silaurus. (சா.அக.);. 2. ஒருவகை மரம்; Indian storax tree, Liquidambar orientale. இப்பிசின் உடம்பின் வெப்பத்தைப் போக்கும், தலைநோய், தும்மல், இசிவு முதலியவற்றையும் குணமாக்கும் என்பது பழைய மருத்துவக் குறிப்பு. [நெரியாசி + பால்.] சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி நெரியாசிப்பால் நெரியாசிப்பாற் செடி என இரண்டாக காட்டும் மரவகையைச் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி ஒன்றாக ஒரே மரவகை யாகக் காட்டுகிறது. சென்னை பல்கலைக் கழக அகரமுதலி Java storax, Altingia excelsa என்பதைப் பெருமரம் என்றும். Indian storax. Liquid amber orientole என்பதை நீண்ட மரவகை என்றும் கூறுகிறது. ஆனால் சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி Java storax என்பதைக் கூறவில்லை. Indian storax-Altangia excels alias liquid amber altingis என்று இரண்டு பயிரியல் பெயர்களையும் ஒன்றாகவே காட்டுகிறது. |
நெரிவருணச்சுக்கிரன் | நெரிவருணச்சுக்கிரன் nerivaruṇaccukkiraṉ, பெ.(n.) கருவிழியில் சிவந்த புள்ளியை உண்டாக்கும் ஒருவகைக் கண்ணோய்; a red flesh growth in the black of the eye. (சா.அக.);. |
நெரிவிடம் | நெரிவிடம் neriviḍam, பெ. (n.) கலப்பைக் கிழங்கு; plough root, Gloriosa superba, (சா.அக.); |
நெரிவிளா | நெரிவிளா neriviḷā, பெ. (n.) நிலவாகை; Indian senna, Tinneveely Senna, Senna indica alias Cassia lanceolata alias celongata. (சா.அக.); |
நெரிவு | நெரிவு nerivu, பெ. (n.) 1. சொடுக்கு; cracking. விரல்களில் நெரிவு எடுப்பதில் இவன் வல்லவன் 2. நசுக்குகை; pressing, crushing. 3. பகை (வின்.);; variance, discord, disunion. [நெரி1 → நெரிவு] |
நெருக்கடம் | நெருக்கடம் nerukkaḍam, பெ. (n.) நெருக்கம், (இ.வ.);; நெருக்கியழுத்தும் நிலை; pressure. வாழ்க்கையில் ஒரு நெருக்கடமும் இல்லை. தெ. நெக்கடமு [நெருக்கு → நெருக்கடம்] |
நெருக்கடி | நெருக்கடி nerukkaḍi, பெ. (n.) 1. நெருக்கம் (இ.வ.);; pressure. நெருக்கடியில் வந்து பணம் கேட்டான். கடன் நெருக்கடி, 2. இக்கட்டான நேரம்; busy time, time of preoccupation, critical time. இந்தியாவுக்கு இது நெருக்கடியான நேரம். 3. போக்குவரவு ஊர்திகள், மக்கள் போக வர இயங்க இடம் போதாத நிலை; want of space. 4. தேவையான பொருட்கள் கிடைக்காத நிலை, பற்றாக்குறை; financial squeeze or straits. பணநெருக்கடி, 5. நெருக்கும் மக்கட் கூட்டம்; overcrowed of people. 6. சடுத்த நிலை; Urgency. 7. வறுமைத்தொல்லை; poverty. 8. கடுந்துன்ப நிலை; difficulty. [நெருக்கு → நெருக்கடி] |
நெருக்கடிநிலை | நெருக்கடிநிலை nerukkaḍinilai, பெ. (n.) உள்நாட்டுப்போர், கலகம் முதலானவை ஏற்படுகின்ற நேரத்தில் அரசு கூடுதல் அதிகாரங்களை மேற்கொண்டு செயல்பட வேண்டிய நிலை; state of emergency in a country. (சா.அக.);. [நெருக்கடி + நிலை] |
நெருக்கட்டியெனல் | நெருக்கட்டியெனல் nerukkaṭṭiyeṉal, பெ. (n.) 1. எதிர்பாராது வருதற்குறிப்பு; onom. expr-signifying suddenness, abruptness. 2. விரைவுக்குறிப்பு; promptness, quickness. 3. ஒடிதற்குறிப்பு; sudden breaking, as of a stick. 4. ஒலியுடன் திடீரென விழுதற்குறிப்பு (வின்.);; falling suddenly with a crash. [நெருக்கடி → நெருக்கட்டி + எனல்] |
நெருக்கமான | நெருக்கமான nerukkamāṉa, பெ. (n.) 1. செறிவான; dense. 2. இறுக்கமாக இணைக்கப்பட்ட; compact. [நெருக்கம் + ஆன – நெருக்கமான.] |
நெருக்கம் | நெருக்கம் nerukkam, பெ. (n.) 1. இடை வெளியில்லாத செறிவு (பிங்.);; denseness, crowded state. 2. ஒடுக்கம்; narrowness, straitness, tightness. நெருக்கமான பாதை. 3. வேலைக்கடினம், வேலையினால் ஏற்படும் துன்பம் (உ.வ.);; pressure of business. closeness of application. 4. இடைவிடாமை; frequency, constancy. பணம் வேண்டு மென்று நெருக்கமாய் வந்து கேட்டான். அவனுக்கு அருகில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டான். 5. விரைவு; urgency. திருமணம் நெருக்கத்தில் நடந்ததால் உனக்கு அழைப்பிதழ் அனுப்ப இயலவில்லை. 6. துன்பம்; distress, trouble. 7. வலுக்கட்டாயம் (உ.வ.);; complusion, restraint. 8. கொடுமை (வின்.);; oppression, tyranny. 9. நோய் முதலியவற்றின் கடுமை; severity, as of the times, the weather or an epidemic. 10. கையிறுக்கம்; closefistedness. 11. நெருக்கமான உறவுகள், அண்மை, nearness, closeness. 12. இறுதிக் காலம், (இறப்பு வாயில்);; approach of death. 13. நெருங்கிய பழக்கம்; closeness, intimacy. நெருக்கமான உறவினர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்தான். 14. குறைந்த வேறுபாடு, மிகுந்த ஒற்றுமை; affinity, closeness. தமிழும், மலையாளமும் நெருக்கமான தொடர்புடைய மொழிகள். நாட்டியத்திற்கும் இசைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. [நெருக்கு → நெருக்கம்] |
நெருக்கல் | நெருக்கல்1 nerukkal, தொ.பொ. (vbl.n) நெருங்கு-தல் பார்க்க;see nervikku. நெருக்கல்2 nerukkal, தொ.பொ. (vbl.n) நெருக்குதல்; to press hard. “நேரடர்ந்து நெருக்கலின்” (அரிச்சந். நகரச்.3);. [நெருக்கு → நெருக்கல்] |
நெருக்கவாரம் | நெருக்கவாரம் nerukkavāram, பெ. (n.) 1. வறுமை (தரித்திரம்);; destitution. 2. நெருக்கம்; be close together. |
நெருக்கிக்கூறு-தல் | நெருக்கிக்கூறு-தல் nerukkikāṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) இடித்துச் சொல்லுதல்; to rebuke. [நெருக்கு → நெருக்கி + கூறு-தல்] |
நெருக்கிடை | நெருக்கிடை nerukkiḍai, பெ. (n.) நெருக்கடி பார்க்க;see nerukkagi. [நெருங்கு → நெருக்கு + இடை – நெருக்கிடை] |
நெருக்கித்தள்ளு-தல் | நெருக்கித்தள்ளு-தல் nerukkiddaḷḷudal, 5செ.கு.வி. (v.i.) முட்டி மோதுதல்; to knock against. [நெருக்கி + தள்ளு-தல்.] |
நெருக்கித்தாக்கு-தல் | நெருக்கித்தாக்கு-தல் nerukkiddākkudal, 5 செ.கு.வி. (v.i.) சூழ்ந்துகொண்டு தாக்குதல்; to beset (ந.அக.); |
நெருக்கிப்பார்-த்தல் | நெருக்கிப்பார்-த்தல் nerukkippārttal, 4 செ.கு.வி. (v.i.) 1. வற்புறுத்துதல்; to press. நெருக்கிப் பார்த்துக் கடனைக்கேள். 2. முயற்சி யெடுத்தல் (வின்);; to try, take pains. தேர்வுக்கு எவ்வளவோ நெருக்கிப் பார்த்தேன்; இருந்தாலும் மதிப்பெண் குறைவு தான். [நெருக்கு + இ + பார்-த்தல்] |
நெருக்கிப்பிடி | நெருக்கிப்பிடி1 nerukkippiḍittal, 4.செ.குன்றாவி, (v.t.) 1. தொடர்ந்து பற்றுதல்; to come in close pursuit of, to press hard, to overtake. கையை நெருக்கிப் பிடித்துக் கொண்டு சென். 2. செட்டாக இருந்து மிச்சம் பிடித்தல் (உ.வ.);; to save by economy. [நெருக்கு + இ + பிடி-த்தல்] நெருக்கிப்பிடி1 nerukkippiḍittal, 4.செ.கு.வி.(v.i.) மிகுதியாக வுண்ணுதல் (வின்.);; to eat too fast or too much, used in burlesque. சாப்பாட்டை இன்று நெருக்கிப் பிடித்தேன். [நெருக்கு + இ + பிடி-த்தல்] |
நெருக்கு | நெருக்கு1 nerukkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. செறியச் செய்தல்; to put close, to set thick. நெருக்கி யம்முடி நின்றிசை வானவர் (தேவா.927.5);. 2. சுருக்குதல்; to circumscribe, contract. 3. ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளுதல்; to press hard, exert pressure upon. மரமுமலையும்…சென்று நெருக்கலால் (கம்பரா.முதற்போர்.10);. கூட்ட மில்லா விட்டாலும் நெருக்கித் தள்ளுகின்றனர். 4. நசுக்குதல் (தேவா.1117,9);; to squeeze, bruise. mash. 5. வருந்துதல் (பு.வெ.11, பெண்பாற்.8,உரை);; to oppress, persecute, distress. 6. வருத்திக் கேட்டல்; to urge, importune, solicit earnestly, as a creditor. கடன் கொடுத்தவர்கள் நெருக்குகின்றனர். 7. அமுக்குதல்; to choke, smother, throttle. 8. கட்டாயப் படுத்துதல் (பலவந்தம் பண்ணுதல்);; to compel, force, coerce. 9. தாக்குதல் (வின்.);; to attack, assail, assault. [நெருங்கு-தல் → நெருக்கு-தல். பிறவினை வடிவம்.] நெருக்கு2 nerukkudal, 5 செ.கு.வி. (v.i.) 1. விடாப்பிடியாயிருத்தல்; to be frequent persevere. 2. உரத்தல்; to rage, prevail, assamite, to be severe as epitomo & of abundant, as rain. [நெருங்கு-தல் → நெருக்கு-தல். பிறவினை வடிவம்] நெருக்கு3 nerukkudal, 5.செ.குன்றாவி.(v.t.) 1. ஆலை, செக்கு முதலியவற்றிலிட்டு ஆட்டுதல்; to press, as in a mill, to crush. “நல்ல கரும்பு நெருக்கிச் சாறுதிரட்டி வட்டாகச் செய்த அக்காரமும்” (திவ். பெரியாழ்.2.9.7, வியா,பக்.468);. 2. குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்யும்படி வலியுறுத்துதல்; வற்புறுத்துதல்; pressurize. வாங்கிய கடனைத் திருப்பித் தரும்படி நெருக்குகின்றனர். உடனே வேலையை முடிக்கச் சொல்லி நெருக் கினார்கள். [நெருங்கு-தல் → நெருக்கு-தல் பிறவினை வடிவம்] நெருக்கு4 nerukku, பெ. (n.) நெருக்கம் (பு.வெ.11, பெண்பாற்.8, உரை); பார்க்க;see nerukkam. [நெருங்கு → நெருக்கு] நெருக்கு nerukku, பெ. (n.) வள்ளத்தின் உள்ளுறுப்பு (மீனவ);; canoe’s part. (க.ப.அ.); வள்ளம் = மீன்பிடிபடகு |
நெருக்குவாரம் | நெருக்குவாரம் nerukkuvāram, பெ. (n.) நெருக்கடி (யாழ்ப்.); பார்க்க;see nerukkaa. [நெருக்கு + வாரம்] |
நெருக்கெனல் | நெருக்கெனல் nerukkeṉal, பெ. (n.) விரைவுக் குறிப்பு (வின்.);; expr. of suddenness, promptness.” [நெருக்கு + எனல்] |
நெருங்கப்பிசைதல் | நெருங்கப்பிசைதல் neruṅgappisaidal, பெ.(n.) அழுத்திப் பிசைதல்; squeezing by pressing hard with force. (சா.அக.);. [நெருங்கு + பிசைதல் → நெருங்கப்பிசைதல். பிசைதல்- தல் ஈற்றுத்தொழிற்பெயர்] |
நெருங்கல் | நெருங்கல் neruṅgal, பெ. (n.) 1. செறிவு (திவா.);; throng, press. 2. கண்டிப்புச் சொல் (வின்.);; reprimand. [நெருங்கு + அல். அல்- தொ.பெ.] |
நெருங்கவியலாத | நெருங்கவியலாத neruṅgaviyalāta, பெ.எ. (adj.) அருகில் சென்றிட முடியாத; difficult to meet or reach. [நெருங்கு → நெருங்க + இயலாத] |
நெருங்கிக்கூறு-தல் | நெருங்கிக்கூறு-தல் neruṅgikāṟudal, 5.செ.கு.வி.(v.i.) மறுதலித்தல்; to rebuke, (ந.அக.); [நெருங்கு → நெருங்கி + கூறு-தல்] |
நெருங்கிக்தழுவு-தல் | நெருங்கிக்தழுவு-தல் neruṅgikdaḻuvudal, 5.செ.கு.வி.(v.i.) மிக அருகில் சென்று அணைத்தல்; to snuggle (சா.அக.);. [நெருங்கு → நெருங்கி + தழுவு-தல்] |
நெருங்கிய | நெருங்கிய neruṅgiya, பெ.எ.(adi.) உறவு, நட்பு தொடர்பு முதலியவற்றால் நெருக்கமான; close, intimate. நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பர் நெருங்கியத் தொடர்புடைய மொழிகள். [நெருங்கு → நெருங்கி → நெருங்கிய] |
நெருங்கியநாடி | நெருங்கியநாடி neruṅgiyanāṭi, பெ.(n.) படபடப்பாகத்துடிக்கும் நாடி; frequent pulse. (சா.அக.);. [நெருங்கிய + நாடி.] |
நெருங்கு | நெருங்கு1 neruṅgudal, 5.செ.கு.வி.(v.i.) 1. அண்மையாதல்; to be near, approximate. பேருந்து நெருங்கி வந்து விட்டது. மாட்டு வண்டியை ஒதுக்கி ஒட்டு, 2. செறிதல்; to be close together, to crowd. “நெருங்கு மடியார்களு நீயுநின்று” (திருவாச.21:7);. 3. நெருங்கிய வுறவாதல்; to be close, as relationship, connection. நெருங்கின சுற்றத்தான். 4. ஒடுக்கமாதல்; to be confined, narrow, as a road or doorway. 5. நசுங்குதல் (வின்.);; to be pressed, compressed, Squeezed. 6. தொடர்தல்; to be frequent. என்னிடம் நெருங்கி வருபவன். 7. முனைப் பாதல் (திவா.);; to be vehement, to prevail, as disease, famine, wild beasts. robbers. 8. நிகழ்ச்சி அல்லது ஒன்றைச் செய்வதற்குரிய நேரம் விரைந்து வருதல், விரைவாதல்; to be urgent. கடமை (காரியம்); நெருங்குகிறது. விளக்கணி விழா (தீபாவளி); நெருங்கி விட்டது. 9. மீதுர்தல் (திவா);; to increase; to grow excessive; to be overwhelming. [நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருங்கு → நெருங்கு-தல் (வே.க.);] நெருங்கு2 neruṅgudal, 5 செகுன்றாவி. (v.t.) 1. கிட்டுதல், அணுகுதல்; to approach, to go near. “பொய்கைகளை நெருங்க” (புறநா.249, உரை);. அந்தக் கட்சியின் ஊர்வலம் கடற்கரையை நெருங்கியது. 2. இடித்துக் கூறுதல்; to rebuke. “கிழவனை நெருங்கி யிழைத்து” (தொல்பொருள்.150);. 3. சினத்தல்; to be angry with. “மகப்பழித்து நெருங்கலும்” (தொல்பொருள்.147);. 4. உறவில், கொள்கையில் வேற்றுமை குறைந்து ஒற்றுமைப்படுதல்; come closer in understanding etc. எதிரும் புதிருமாக இருந்த நண்பர்கள் நெருங்கி வருகின்றனர். எதிரும் புதிருமாக இருந்த கட்சிகள் தேர்தல் நேரத்தில் உறவுகொள்ள நெருங்கி வருகின்றன. [நெருங்கு-1 → நெருங்கு- ] |
நெருஞ்சி | நெருஞ்சி neruñji, பெ. (n.) முட்கள் நிறைந்த காய்களையும், மஞ்சள் நிறப் பூக்களையும், சிறுசிறு இலைகளையும் கொண்ட, கொத்தாகத் தரையில் படர்ந்து வளரக்கூடிய செடி வகை; cow’s thorn, a small prostrate herb. Tribulusterrestris, “நெருஞ்சிக் காடுறு கடுநெறியாக” (பதிற்றுப்.26);. நெருஞ்சி முள் தைத்தாலும் குனிந்துதான் பிடுங்க வேண்டும். (பழ.); நெருஞ்சி : இது ஒரு முட்செடி ஒன்றை ஒன்று பற்றி நிற்கும். இலைகள் நேர் நேராகச் சிறகைப் போன்றது. இலைக்காம்பு இலையைவிடக் குட்டையானது. பூக்கள் கிளைகளினின்று பிரிந்து சிறு காம்புகளின் மேல் நிற்கும். உள்ளிதழ் 5 பிரிவுகளாயிருக்கும். இலைகள் அகலமாகவும் நான்கு மூலையாகவும் இருக்கும். காய்கள் சிறியவை, முள்ளுள்ளது: பூக்கள் பெரியன. மஞ்சள் நிறமுடையது; ஆண்டு முழுதும் பூக்கும். எங்கும் காணப்படும்;குளம், குட்டை வாய்க்கால் எங்கும் காணப்படும். இதன் காய், இலை, வேர் இவைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நீரை வெளிப்படுத்தும்;பாண்டு, வெள்ளை முதலியவற்றைக் குணப்படுத்தும். இதன் கொம்புகளை மோரில் போட்டு அதனைத் தடிப்பாக்குவர். காய்கள் முள்ளுள்ளதால் நடப்போர்க்குத் துன்பம் தரும். துணிகளில் ஒட்டிக் கொண்டு குத்தும். இது உலகம் முழுவதும் காணப்படும் செடி, தரையின் மேல் படிந்து, பல கிளைகள் விட்டு படர்ந்து வளரும். ஒரு கணுவில் வளரும் இரண்டு கூட்டிலைகளில் ஒன்று பெரியதாகவும், ஒன்று சிறியதாகவும் இருக்கும். அடுத்த கணுவில் பெரிய இலை இருந்த பக்கம் சிறிய இலையும், சிறிய இலை இருந்த பக்கம் பெரிய இலையுமாக மாறி இருக்கும். இப்படியே கிளை நெடுகிலும் இருக்கும். இதனால் இலைகள் ஒன்றை யொன்று மறைக்காமல் எல்லாம் ஞாயிற்றின் ஒளியை முற்றிலும் ஏற்கக் கூடும். பூக்கள் இலை கக்கங்களில் தனித்து (solitary); உண்டாகும். இதன் கனி கடலை அளவினது; கனியின் முதுகுப்புறத்தில் முட்கள் இருக்கும்;இதுகாலில் குத்தும் இயல்புடையது. அதனால் தரைத் தொந்தரவு என்ற பெயரும் உண்டு. வகைகள் : 1. ஆணை நெருஞ்சில், 2. செப்பு நெருஞ்சில், 3. சிறுநெருஞ்சில், 4. கருநெருஞ்சில், 5. கொடி நெருஞ்சில், 6. பெரு நெருஞ்சில் (சா.அக);. சிறுநீர் தொடர்பான நோய்களுக்கு நெருஞ்சி மருந்தாகிறது என்பது சித்தமருத்துவக்குறிப்பு. [P] நெருஞ்சிப்பச்சை nerயர்-p-paccal. பெ. (n.); நெருஞ்சி பார்க்க;see nerunchi. (சா.அக.);. |
நெருஞ்சின்முள் | நெருஞ்சின்முள் neruñjiṉmuḷ, பெ. (n.) படைக்கல வகை (சூடா.);; a weapon. [நெருஞ்சில் + முள். நெருஞ்சி முள்போல் குத்தும் படைக்கலன். இஃது உவமைத் தொகை.] நெருஞ்சி முள்போல் வடிவமும், வலிமையும் உடைய படைக்கலக் கருவியாகக் கொள்ளலாம். |
நெருஞ்சிப்பாகல் | நெருஞ்சிப்பாகல் neruñjippākal, பெ. (n.) மிதி பாகல்; a kind of balsam pear. [நெருஞ்சி + பாகல், நெருஞ்சிமுள் போன்ற (மேல்பகுதி); தோற்ற முடையபாகல்] |
நெருஞ்சிப்பூ | நெருஞ்சிப்பூ neruñjippū, பெ. (n.) ஓரணிகலன் (கல்.);; an ornament. [நெருஞ்சி + பூ. நெருஞ்சிமுள் போல தோற்றமுடைய அணிகலன். இஃது உவமையாகுபெயர்] |
நெருஞ்சிப்பூச் செயல் | நெருஞ்சிப்பூச் செயல் neruñjippūcceyal, பெ. (n.) நெற்றிப் பட்டையின் தொங்கல் வகை (தெ.க.தொ.2,163);; a neruñji-shaped pendant of a frontlet. [நெருஞ்சி + பூச்செயல். நெருஞ்சிப்பூ போல் அழகு செய்யப்பட்ட தொங்கல் வகை.] |
நெருஞ்சில் | நெருஞ்சில் neruñjil, பெ. (n.) நெருஞ்சி பார்க்க;see __, “நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தான்” (திருமந்.1617);. [நெருஞ்சி → நெருஞ்சில்] |
நெருடன் | நெருடன் neruḍaṉ, பெ. (n.) 1. ஏய்ப்பவன் (வஞ்சகன்); (வின்.);; deceitful, scheming man. 2. கெட்டிக்காரன் (இ.வ.);; clever man. [நெருடு → நெருடன். நெருடு = வஞ்சனை] |
நெருடல் | நெருடல்1 neruḍal, பெ. (n.) 1. தன்னுடைய தவறான செய்கை அல்லது கரணியம் (காரணம்); புரியாத பிறருடைய செயல் பாட்டினால் மனதில் உண்டாகும் நிகழ்வு; the troubled feelings resulting from one’s guilty conscience or one’s inability to figure out something. இராமன் வாலியை ஏன் மறைந்து நின்று கொன்றான் என்ற நெருடல் மனதில் இருந்து கொண்டே இருந்தது. இக்கட்டான நேரத்தில் நண்பனுக்கு உதவமுடியவில்லையே என்ற நெருடல் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. 2. ஒத்துக் கொள்ளத் தயக்கம் ஏற்படுத்தும் சிறு வேறுபாடு; uneasy feeling caused by unevenness. கதையில் ஒரே ஒரு இடத்தில் தான் நெருடல்; தேர்வில் ஒர் இடத்தில் நெருடல் ஏற்பட்டது. [நெருடு → நெருடல்] நெருடல்2 neruḍal, பெ. (n.) ஒத்துக் கொள்ளத் தயங்கும் நிலையை உண்டாக்கும் சிறு வேறுபாடு; an uneasy feeling caused by unevenness. [நெருடு → நெருடல்] |
நெருடி | நெருடி neruḍi, பெ. (n.) 1. ஏய்ப்பவள் (வஞ்சகி);; deceitful, scheming. 2. கெட்டிகாரி; clever woman. [நெருடன் (ஆ.பா); → நெருடி(பெ.பா);] |
நெருடு | நெருடு1 neruḍudal, 5.செ.குன்றாவி.(v.t.) 1. நிமிண்டுதல்; to roll in the hand, to rub gently with the fingers. “ஒருகை யாலொரு முலைமுக நெருடா” (திவ்.பெருமாள்.7:7);. முள்ளை நெருடிக் கொண்டே இருக்காதே குத்தி விடும். 2. நிமிண்டிஇழை பொருத்துதல்; to roll two broken ends of yarn between the fingers and join them. “இழை நக்கி நூனெருடு மேழை அறிவேனோ” (தமிழ்நா.19);. 3. திரித்தல்; to twist. “அருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் கவிபாடி” (திருப்பு:265);. நூலைக் கொஞ்சம் நெருடிக் கொடு. 4. கை, கால் ஆகியவற்றால் தடவுதல் (வின்.);; to feel with the hand. மாட்டின் முதுகை நெருடிக் கொண்டிராதே. 5. ஏய்த்தல், வஞ்சித்தல்); (யாழ்ப்);; to deceive cheat. 6. ஒன்றின் மீது சிறிய பொருள் அல்லது சமபரப்பு அழுத்தி உராசுதல்; have an uneasy sensation. காலில் முள் நெருடுகிறது. உள்ளங்கையில் ஏதோ நெருடுகிறது;பிடுங்க வேண்டும். 7. ஒத்துக் கொள்ளத தயக்கம் ஏற்படும் வகையில் சிறிது வேறுபடுதல்; feel uneasy because something is uneven. கட்டுரையின் நான்காம் பத்தி கொஞ்சம் நெருடுகிறது. [நுல் → நுள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருடு → நெருடு-தல்] நெருடு2 neruḍu, பெ. (n.) 1. நிமிண்டுகை; rubbing with the fingers. 2. இழை பொருத்துகை; twisting two ends of yarn between the fingers and joining them. 3. தடுவுகை; feeling with the hands. 4. ஆடையிற் பிதிர்ந்தெழும் நூல் முடிச்சு (வின்.);; knots in a cloth from the joinings of the yarn. 5. கருகலானது; that which is knotty or abstruse, as a passage. இச்சொற்றொடர் நெருடு. 6. கரடான சொல்லுடையது; that which is ragged, as style. இப்பாட்டின் நடை நெருடு, 7. கரடுமுரடானது; that which is rough as a road. இச்சாலை கரடுமுரடானது. 8. ஏய்ப்பு (வஞ்சனை); (யாழ்ப்.);; guile, deceit, intrigue. க. து. நாடு. [நெருடு1 → நெருடு2] |
நெருட்டுக்கருத்து | நெருட்டுக்கருத்து neruṭṭukkaruttu, பெ. (n.) 1. கருகலான கருத்து; abstruse notion. 2. கருகலான பொருள்; abstruse meaning, as of a passage. [நெருடு → நெருட்டு + கருத்து. நெருடு = கருகலானது, கரடுமுருடானது, வஞ்சமானது.] |
நெருட்டுப்புத்தி | நெருட்டுப்புத்தி neruṭṭupputti, பெ. (n.) 1. கரவு (வஞ்சக); நெஞ்சம்; guileful disposition. 2. கோணலறிவு; perverted intellect. [நெருடு → நெருட்டு + புத்தி நெருடு = ஏய்ப்பு (வஞ்சனை);. Skt buddhi → த.புத்தி = அறிவு] |
நெருணாகம் | நெருணாகம் neruṇākam, பெ.(n.) சவ்வரிசி; sago. (சா.அக.);. |
நெருதலைநாள் | நெருதலைநாள் nerudalaināḷ, பெ. (n.) நேற்று (திருக்கோ.21, துறை விளக்கம்);. yesterday. [நெருநலைநாள் → நெருதலைநாள்] |
நெருநற்று | நெருநற்று nerunaṟṟu, பெ. (n.) நெருநல் பார்க்க;see merumal. “நெருநற்றுச் சென்றாரெம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து” (குறள்,1278);. [நெருநல் → நெருநற்று] |
நெருநலைநாள் | நெருநலைநாள் nerunalaināḷ, பெ. (n.) நெருநல் (திருக்கோ.21 துறை விளக்கம்); பார்க்க;see merumal. [நெருநல் → நெருநலை + நாள்] |
நெருநல் | நெருநல் nerunal, பெ. (n.) கு.வி.எ. (adv.); நேற்று; yesterday. “நெருநல் உளன்.ஒருவன் இன்றுஇல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு” (குறள்,336);. ம. இந்நாளே; கோத. நெர்; துட. ஈநெர்; த. நிந்நெ; குட. நிந்நாந்தீ; தெ. நிந்நா; கோண். நிந்நே;பிரா. தரோ. [நெருநாள் → நெருநல்] |
நெருநாள் | நெருநாள் nerunāḷ, பெ. (n.) நேற்று; நெருங்கியநாள்; yesterday. [நுல்(பொருந்தல்); → நுள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருநாள் (வே.க.);] |
நெருநெரு-த்தல் | நெருநெரு-த்தல் neruneruttal, 4.செ.கு.வி.(v.i.) 1. திடீரென வயிறு முதலியன வலித்தல்; to feel sudden pain, as in the stomach. 2. திடீரென வயிறு முதலியன வலித்தல்; to snap off suddenly, as a stick. |
நெருநெருப்பு | நெருநெருப்பு neruneruppu, பெ.(n.) 1. வயிற்றுவலி (வின்.);; pain in the abdomen; internal pain. 2. பேறுகாலத்து உண்டாகும் இடுப்புவலி (வின்.);; early labour-pain. 3. விரைவு; quickness, suddenness. செயல் நெருநெருப்பாய் நடக்கிறது (இ.வ.);. [நெருநெரு → நெருநெருப்பு] |
நெருநெரெனல் | நெருநெரெனல் nerunereṉal, பெ. (n.) 1. திடீரென வயிறு வலித்தற் குறிப்பு; onom. expr of sudden pain in the stomach. 2. திடீரென வயிறு வலித்தற் குறிப்பு; suddenness. நெருநெரென்று முள்ளேறி விட்டது. 3. நெரிதற் குறிப்பு; crashing sound. நெருநெரென்று முறிந்தது. |
நெருநை | நெருநை nerunai, பெ.(n.) & கு.வி.எ.(adv) நெருநல் பார்க்க;see nerயan. “நெருநையி னின்றுநன்று” (கலித்.91);. “நெருநைப் புணர்ந் தோர் புது நலம் வெளவி” (நற்.360:3);. “எஃகுடை எழில்நலத் தொருத்தியொடு நெருநை” (அகநா.116:9);. க. நிருனெ [நெருநல் → நெருநை] |
நெருப்பன் | நெருப்பன் neruppaṉ, பெ. (n.) 1. கடுஞ்சின முடையோன்; angry man. 2. கலகக்காரன்; incendiary; firebrand. 3. பொல்லாதவன்; dangerous man. [நெருப்பு + அன். நெருப்புப் போன்ற குணமுடையவன்.] |
நெருப்பாறு | நெருப்பாறு neruppāṟu, பெ.(n.) நெருப்பு மலையிலிருந்தோடுங் குழம்பு (வின்.);; lava. [நெருப்பு + ஆறு] இது பெரும்பாலும் எரிமலை வெடித்து அதிலிருந்து ஒடும் நெருப்புக்குழம்பைக் குறிக்கும். |
நெருப்பி | நெருப்பி1 neruppi, பெ.(n.) 1. கடுஞ்சின முடையாள்; angry woman. 2. கலகக்காரி; firebrand. 3. பொல்லாதவள்; dangerous woman. [நெருப்பன்(ஆ.பா.); → நெருப்பி(பெ.பா.);. நெருப்பு + இ] நெருப்பி2 neruppi, பெ. (n.) கலைச் செம்பு; superior kind of pure copper. (சா.அக.);. [நெருப்பு → நெருப்பி] செம்பு நெருப்புப் போன்ற நிறத்தில் உள்ளதால் பெற்ற பெயராகலாம். |
நெருப்பிடல் | நெருப்பிடல் neruppiḍal, பெ. (n.) 1. புடமெரித்தல்; to set up a conflagration of fire for calcining medicines. 2. பிணம் சுடுதல்; to set fire to the corpse. (சா.அக.); [நெருப்பு + இடல். நெருப்பில் இடுதல்] |
நெருப்பிடுகலம் | நெருப்பிடுகலம் neruppiḍugalam, பெ. (n.) நெடுப்புச்சட்டி (பிங்.); பார்க்க;see __, [நெருப்பு + இடு + கலம். நெருப்பு வைக்கும் ஏனம்.] |
நெருப்பிடுகலம் | நெருப்பிடுகலம் neruppiḍugalam, பெ. (n.) நெடுப்புச்சட்டி (பிங்.); பார்க்க;see __, [நெருப்பு + இடு + கலம். நெருப்பு வைக்கும் ஏனம்.] |
நெருப்பு | நெருப்பு1 neruppu, பெ. (n.) 1. தீ; fire. “நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை” (புறநா.125);. “நெருப்பெழும்படிப் பிசைந்து” (கூர்மபு.தக்கன்வேள்.36);. நெருப்பில்லாமல் புகை வருமா (பழ.);. நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும்;காணாமல் மிதித்தாலும் சுடும் (பழ.);. நெருப்பில் ஈ மொய்க்குமா (பழ.);. நெருப்பு என்றால் வாய் வேகுமா. (பழ.);. நெருப்பைத் தலைகீழாய்ப் பிடித்தாலும் அதன் சுடர் கீழாகுமா (பழ.);. 2. இடி; thunderbolt, “அண்டமுகடு நெருப்பறாது” (இலக்.வி. 655.உதா);. 3. உடற்சூடு; feverishness, abnormal heat of the body. 4. சின முதலியவற்றின் கடுமை (வின்.);; strong feelings, as great grief, envy, jealousy, anger. 5. நெருப்புத்துண்டம் (உ.வ.); பார்க்க;see neruppu-t-fundam. தெ. நிப்பு; அரபி. நார்; கொலா. நிப்க;மா. நரெ. 1. [நுல்(துளை); → நொல் → நெல் → நெலி → நெலி-தல் = கடைதல், நெல் → நெர் → நெரு → நெருப்பு = மூங்கில் ஒன்றோ டொன்று உரசிப் பற்றும் தி (வே.க.நுல்3);); 2. [நுல்(ஒளி); → நெல் → நெரு – நெருப்பு = உரசிப் பற்றும் தீ (வே.க.நுல்3);] நெருப்புப் பற்றிய ‘கள்’ அடிச்சொற்கள் உ-உல்-உல. உலத்தல் = எரிதல், காய்தல். உல-உலவை = காய்ந்த மரக்கிளை. “இலைதீந்த வுலவையால்” (கலித்.11);. உல-உலர். உலர்தல் = காய்தல். உலர்-உலறு. உலறுதல் = காய்தல், சினத்தல், வற்றுதல். உல-உலை = 1. நெருப்புள்ள அடுப்பு. 2. கொல்லன் அடுப்பு. 3. சோறு சமைக்கக் கொதிக்க வைக்கும் நீர். உல்-அல்-அன்று → அன்றுதல் = எரிதல், சினத்தல், பகைத்தல். அல்-அன்-அனல் = நெருப்பு. அனலுதல் = எரிதல். அனல்-அனலி = 1. நெருப்பு. 2. கதிரவன். அனல்-அனலம் = நெருப்பு. அனலம்-வ. அநல. அனலம்-அனலன் = நெருப்புத் தெய்வம். உல்-உள்-ஒள்-ஒண்மை = 1. நெருப்பின் தன்மையான விளக்கம். 2. உள்ளொளி, நல்லறிவு. 3. இயற்கையழகு 4. நன்மை. ஒள்-ஒளி = 1. நெருப்பின் விளக்கம். 2. ஒளிபோல் விளங்கும் புகழ், 3. உள்ளொளி. ஒளி-ஒளிர். ஒளிர்தல்= விளங்குதல். ஒளிர்-ஒளிறு, ஒளிறுதல் = விளங்குதல். ஒள்-ஒள்ளிய= ஒளியுள்ள, அறிவு மிக்க, நல்ல அழகிய. ஒள்ளியன் = அறிவுடையோன் . ஒள்ளியோன் = விளக்கம் மிக்க வெள்ளிக்கோள். ஒளி = 1. ஒளியுள்ள 2. அழகிய. ஒள் + தொடி – ஒண்டொடி = விளங்கும் வளைய லணிந்த பெண். ஒள் + நுதல் – ஒண்ணுதல் = விளங்கும் நெற்றியுடைய பெண். ஒள் + பு = ஒண்பு – ஒட்பு – ஒட்பம் = அறிவு, “கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும்” (குறள்,404);. உள்-அள்-அழ-அழல் = 1. நெருப்பு. 2. வெப்பம். 3. எரிவு. 4. நரகம். 5. துளங்கொளி (கேட்டை); 6. செவ்வாய் 7. சினம். அழலவன் = 1. தித்தெய்வம் 2. கதிரவன் 3. செவ்வாய். அழலுதல் = 1. எரிதல் 2. விளங்குதல். 3. காந்துதல் 4. சினத்தல். அழல்-அழற்று (பி.வி);, அழற்றுதல் = எரித்தல், வெம்மை செய்தல். அழல்-அழறு-அளறு-நிரயம்(நரகம்);. “அண்ணாத்தல் செய்யா தளறு” என்னுங் குறளடியில் (255); ‘அளறு’ என்னும் சொல் எட்டுப் பிழையாகவும் இருக்கலாம். “பூரியர்கள் ஆழும் அளறு” என்னுங் குளறடி (919); சேற்று வடிவான நிரய(நரக); வகையென்று கொள்ள இடந்தரினும், நிரயம் (நரகம்); நெருப்புலக மென்றே பொதுவாகக் கொள்ளப்படுவதனாலும், அழல், எரி முதலிய பெயர்கள் அதற்குண்மையாலும், ஊற்றளவிலேயே நெருப்புத் துன்புறுத்துவதனாலும், அழறு என்னுஞ் சொல்லே அளறு என மருவிற்றென்றோ, எட்டுப் பிழையாக நேர்ந்ததென்றோ கொள்வது பொருத்தமானதே. அழல்-அழலி – நெருப்பு. அழலித்தல் = எரிச்சல். அழல்-அழலை = தொண்டைக் கரகரப்பு. அழல்-அழன்-அழனம் = 1. நெருப்பு 2. வெம்மை. “அழனம்மை நீக்குவிக்கும்” என்னும் தேவார (225.4); அடியிலுள்ள அழனம்மை என்னுந் தொடரை, அழன் + நம்மை என்றும் பிரிக்கலாம். அழன்-அழனி. ஒநோ அழல்-அழலி, களன்கழனி. அழ-அக-அகை அகைதல் = எரிதல். “அகையெரி யானாது” (கலித்.139:26);. ஒ.நோ:.மழ-மக. அழனி-அகனி-வ. அக்நி (agni); -L igns. இதற்கு யாசுகர் (Yaskar); தம் நிருத்தத்திற் (Nirukta); கூறியிருக்கும் வேர்ப்பொருட் கரணியங்கள் முற்றும் பொருந்தாப் பொய்த்தல் என்பதை அங்கு நோக்கிக் காண்க. புதுச்சேரி அரவிந்தர் தவநிலைய இருக்கு வேதப் பதிப்பு அகோ (ago); என்று மூலங்காட்டுவதும், முற்றும் தவறாம். இது சமற்கிருதத்தில் அஜ் என்றே நிற்கும். உள்-உண்-உண்ணம்=வெப்பம். “உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு” (தேவா.510:6);. உண்ணம்-வ.உஷ்ண. மராத். ஊன். உண்-உண- உணத்தல்-காய்தல். மிளகாய் உணந்துவிட்டது (உவ);. உணந்த மிளகாய் (உ.வ.); = மிளகாய் வற்றல். உண-உணத்து (பி.வி.);- உணத்துதல் = 1. காயப் போடுதல், நெல்லை உணத்தினார் (உ.வ);. 2. உடம்பை மெலிவித்தல் அல்லது வற்ற வைத்தல். “மெய்யுணத்தலும்” (தைலவ. தைல,110);. உண-உணங்கு- உணங்குதல் = நெல் முதலியன காய்தல். “உணங்குணாக்கவரும்” (பட்டினப்.22);. “தினைவிளைத்தார் முற்றந் தினையுணங்கும்” (தமிழ்நா.154);. 2. மெலிதல். ஊட லுணங்க விடுவாரோடு” (குறள்,1310);. 3. வாடுதல். “உணங்கிய சிந்தையிர்’ (கந்தபு.மோன21);. 4. சுருங்குதல். “உணங்கரும் புகழ்” (காஞ்சிப்பு:நாட்டுப்.1);. உணங்கு-உணங்கல் = 1. உலர்த்திய கூலம். “உணங்கல் கெடக் கழுதை யுதடாட்டங் கண்டென் பயன்” திவ்.திருவாய், 4.6:7). 2. வற்றல். “வெள்ளென் புணங்கலும் மணிமே.16:67). 3. உலர்ந்த பூ (பிங்.);. உணங்கு-உனக்கு (பி.வி.);-உனக்குதல் = உலர்த்துதல். தொடிப்புழுதி கஃசா வுணக்கின்” (குறள், 1037);. உனக்கு-உனக்கம் = வாட்டம். ம. உணக்கம்;க. ஒனகிலுg), து. ஒணகெலு. உனக்கு – வாட்டம். “உனக்கி லாததோர் வித்து திருவாச.30:1). “உல்-உர்-உரு- உருத்தல் = 1. அழலுதல். ஆக முருப்ப நூறி (புறநா.25:10);. 2. பெருஞ்சினங் கொள்ளுதல். “ஒரு பகலெல்லா முருத் தெழுந்து” (கலித்.39.23);. உரு-உருத்திரம் = பெருஞ்சினம். உருத்திரம் – வ. ருத்ர ‘திரம்’ ஒரு தொழிற் பண்பீறு. ஒ.நோ: மாத்தல் = அளத்தல். மா + திரம் = மாத்திரம் (அளவு);. அவன் எனக்கு எம்மாத்திரம்? என்னும் வழக்கை நோக்குக. மானம் (மா + அனம்); என்னும் அளவுப் பொதுப் பெயரையும், மா, அரைமா, ஒருமா, இருமா, மாகாணி முதலிய அளவுச் சிறப்புப் பெயர்களையும், மேலை வ.ஆ. மாவட்டத்தில் படி என்னும் முகத்தலளவைப் பெயர் மானம் என்று வழங்குதலையும் நோக்குக. மாத்தல் என்னும் வினைச்சொல் பண்டே வழக்கிறந்தது. திரம் – திரை. மா + திரை – மாத்திரை = அளவு, எழுத்தொலிக்குங் கால அளவு, உண்ணும் மருந்தளவு. சினம் தியொத்தலால், தீப் பற்றிய சொற்களெல்லாம் சினத்தையுங் குறிக்கும். உருத்திரம் – வ. ரெளத்ர (raudar); = வெகுளி ஒ.நோ. E. wrath, nanger. O.E. wrreththu. As and ON, wraedo, ME wrathe. E. wroth, adj. angry. OE wrath, OS wreth OHG.reid, ON reithr. கீற்றும் (skeat); கிளேனும் (Klein); இச்சொற்களை reid (twristed); என்னும் மூலத்தினின்று திரிக்கின்றனர். இது தென்சொல்லை அறியாமையாலும் இருக்கலாம். உரு – உரும் – உருமம் = 1. வெப்பம், 2. வெப்பம் மிக்க நண்பகல். உரும் – உருமி – உருமித்தல் – வெப்பமாதல், புழுங்குதல். உரும் – உரும்பு – 1. கொதிப்பு, 2. வெகுளி. “உரும்பில் கூற்றத் தன்னநின்” (பதிற்றுப்.26:13);. உரும்பு – உருப்பு = 1. வெப்பம். “கனமிசை யுருப்பிறக் கனைதுளி சிதறென” (கலித்.16:7);. 2. சினத்தீ. “உருப்பற நிரப்பினை யாதலின்” (பதிற்றுப்50:16);. 3. கொடுமை. “உரும்பில் கற்றமோடு” (பெரும்பாண்.447);. உருப்பு – உருப்பம் – 1. வெப்பம். “கனலும். உருப்பமெழ” (அரிச்சந்:புவிவா.104);. 2. சினம். உரு – உருகு- உருகுதல் = 1. வெப்பத்தால் இளகுதல். 2. மனம் நெகிழ்தல். உருகு – உருக்கம் – 1. இளக்கம். 2. மன நெகிழ்ச்சி, இரக்கம். உருகு – உருக்கு(பி.வி.);-உருக்கு = உருக்கிய இரும்பு. உருக்குதல் = 1. இளக்குதல், 2. வாட்டுதல், மெலிவித்தல். உருக்கு – உருக்கன் – உடம்பை வாட்டும் நோய். உருக்கு – உருக்கி = 1. மாழை வகைகளை உருக்குபவன். 2. உடம்பை உருக்கும் நோய். உருக்காங்கல் = உருகிப் போன செங்கல். உல் – சுல் – சுல்லி = 1. அடுப்பு (திவா.);. 2. மடைப்பள்ளி. இலக்.அக);. கல்லி – வ.சுல்லி (c); கல் – கள் – கள்ளெனல் = வெயில் காய்தற் குறிப்பு, உறைத்தற் குறிப்பு. கள் = கருவாடு (காய்ந்த மீன்);. “கள்ளினைக் கறித்தனர்” (கந்தபு.அசமுகி நகர்.18);. கள் – கள்ளம் = சினம் (வின்.); கள்ளம் – கள்ளகம் – கள்ளக்கம் = 1. சினம் (யாழ்.அக.);. 2. வேர்க்குரு (சங்.அக);. கள்ளக்கம் – வ.க்ஷூல்லக. கள்ளக்காய் = மிளகாய். உறைப்புச்சுவை கடுதல்போன்றிருத்தலின், கடுதற்கருத்தினின்று உறைப்புக் கருத்துத் தோன்றும். ஒ.நோ.E.hot = of high temperature, pungent. சுகள் – சுள்ளி – காய்ந்த குச்சு. சுள் – சுள்ளை – செங்கல் சுடுமிடம். சுள்ளை – சூளை. சுள் – சுளுந்து = தீவட்டி, பந்தம் எரிக்கும் மாக்கழி. சுள் – சுள்கு – சுட்கு – சுட்குதல் – காய்தல், வற்றுதல்(வின்.);. ஒ.நோ: வெள்கு – வெட்கு – வெட்கம். சுட்கு-சுட்கம் – 1. வறட்சி, 2. வறண்டது. 3. உடம்பை வாட்டும் ஒரு நோய். 4. பணம் முதலிய பொருட்குறைவு. 5. இவறன்மை (கஞ்சத்தனம்);. சுட்கஞ் செய்யாதே (உ.வ.); சுட்க தருக்கம் = வீண் சொற்போர். சுட்கு – சுக்கு – சுக்குதல் = உலர்தல் (நாஞ்.);. சுக்கு = காய்ந்த இஞ்சி. கள் – வ.சுஷ் (to dry.); ஒ.நோ: உள்(ஒள்);-வ.உஷ்(to burn);-உஷா = ஒளி தோன்றும் விடியற்காலம். சுக்கு – வ.கஷ்க. சுக்கு – சுக்கான் = 1. சுண்ணாம்புக்கல், 2. உருக்குச் செங்கல். சுக்கு = காய்ந்தது, வறண்டது. பயனற்றது. சுட்கம்-சுக்கம் = 1. வறட்சி, 2. கஞ்சத்தனம். சுக்கஞ்செட்டி-கடுஞ்செட்டுள்ளவன். சுள்-சுள்பு-சுட்பு-சுப்பு-சுப்பி = சுள்ளி. கள்ளிசுப்பி என்பது மரபினைச் சொல். சுப்பெனல் = ஈரமுள்ளது காய்தல் அல்லது வறண்ட நிலம் நீரை உள்ளிழுத்தற் குறிப்பு. சுள்-கண்-கண்ணம் = 1. காளவாயிற் கட்டகல். 2. அக்கல்லை நீற்றின நீறு. 3. நீறு. 4. நறும்பொடி. 5. பூந்தாது. சுண்ணம் – சுண்ணம்பு – சுண்ணாம்பு = 1. கட்ட கண்ணாம்புக்கல். 2. நீற்றின சுண்ணாம்பு. சுண்ணக்கல் = சுக்கான்கல் (யாழ்.அக.); சுண்ணம்-சுண்ணகம் = விழா நாள்களில் மக்கள்மேல் தூவும் நறும்பொடி. சுள்-சுண்டு- சுண்டுதல் = (செ.கு.வி.); 1. நீர் வற்றுதல். 2. வாடுதல், சுருங்குதல். அச்செய்தி கேட்டவுடன் அவன் முகஞ் சுண்டிப் போயிற்று (உவ);-(செ.குன்றாவி.); நீர் வற்றக் காய்ச்சுதல் அல்லது அவித்தல். இன்றைக்குக் கடலைச் சுண்டினார்கள் (உ.வ.); சுண்டு-சுண்டல் = 1. நீர் முற்றும் வற்ற அவித்த கடலைப் பயறு. 2. கண்டற்கறி. சுண்டு-சுண்டான் = சிறு பிள்ளைகள் விளையாட்டாகக் கொளுத்தும் கொள்ளிக்குச்சு. சுண்டு-சுண்டி = 1. சுக்கு (காய்ந்த இஞ்சி);. 2. தொட்டாற் சுருங்கி, தொட்டாற் சிணுங்கி, தொட்டால் வாடி என்னும் பூண்டு. சுண்டி (சுக்கு);-வகண்டி(th);. இது வடமொழியிற் ‘கண்ட்டி’ என வலித்தொலிக்கும். சுண்டி-சுண்டில் = தொட்டாற்கருங்கி, வாடினது சுருங்கும். சுள்-சுடு-சுடுவல் = வெதும்பும் அரத்தம் (திவா.); சுடுவல்-சுடுவன் = வெதும்பும் அரத்தம் (பிங்.); சுடுவான் = மரக்கலச் சமையலறை. சுடு – சுடல் – சுடலை = சுடுகாடு. சுடு-சுடர்-சுடரோன் (சுடரவன்);= கதிரவன். சுடு-சூடு. சுல்-சுர்-சுரீர் + எனல் = 1. நெருப்புச் சுடும் குறிப்பு. 2. தழலிற்படும் நீர் கண்டும் குறிப்பு. சுர்-சுரம் = 1. காய்ச்சல், 2. கடும் பாலைநிலம். “சுரமென மொழியினும்” (தொல்பொருள்.216);. சுரம் (காய்ச்சல்);-வஜ்வர. சுர்-சூர் = 1. நெருப்பு. 2. கதிரவன். “சூர்புக வரியது. .தொன்மதில்” (கம்பராகவந்த21);. சூர்-சூரன் = 1. நெருப்பு (பிங்.);. 2. கதிரவன் (பிங்);. “காதற் சூரனை யனைய சூரா” (பாரத. பதினேழாம்.49);. சூரன்-வ.ஸூர(sural); – ஸூர்ய(suryal); சூர் என்னும் சொல்லிற்கு அச்சம், கொடுமை, உறைப்பு, மிளகு முதலிய பொருள்களிருப்பதும், அதைத்தென்சொல் லெனத் தெரிவிக்கும். சுள் (சுல்-சொல்);- L.sol, sun. cel sol, OE., ON.sol, Dan, Swed. sol. Esol: Goth, Soule, Lith, soule. Lett, soule. ir sūl; Russ, solntse, Whaul (for saul);; Coheuul, hau, Bret. heol, Sun. girasol, parasol, rosolio, turnsole என்னும் கூட்டுச் சொற்களின் இரண்டாம் உறுப்புகள், கதிரவனைக் குறிப்பனவே. solar என்பது sol என்பதன் குறிப்புப் (adj.); பெயரெச்ச வடிவம். சகர (ஸ்கா); முதல் ஹகர முதலாகத் திரிதல் இயல்பே. சிந்து–பார. ஹிந்து, I.sex (Esix}-Gk: hex ME. sonne OE sunne; ON., OS., OHG sunna; MDu sonne; DuzOn; Gisonne, Goth. Sunna-Sun இவற்றிற்கெல்லாம் ஸூ (su);, ஸௌ (sau); என்பன உய்த்துணர்வு மூலமாகக் காட்டப் படுகின்றன. மேலையாரியர் தமிழின் தொன்மை, முன்மை, தென்மைத் தன்மைகளை அறியாமையால் இங்ங்னங் கூறுகின்றனர்;அல்லது கொள்கின்றனர். இவற்றிற்கெல்லாம் சுல் என்னும் தென்சொல்லே அடிமூலம். சுல்-சொல் = நெருப்புப் போல் அல்லது பொன்போல் விளங்கித் தோன்றும் நெல். “சடைச்செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு” என்று நளவெண்பா (சுயம்வர.68); கூறுதலையும், பொன்விளைந்த களத்துர் என்னும் வழக்கையும் நோக்குக. நெல் என்னும் பெயரும் இப்பொருட் கரணியம் (காரணம்); கொண்டதே. நில்-நில-நிலா-நிலவு. நிலத்தல் = ஒளிர்தல், விளங்குதல். நில்-நெல். சொல்-சொலி-சொலித்தல் = 1. எரிதல். “நாப்பண் அழல் சொலிப்பதாகவுன்னி’ (பிரபோத:44:15);. 2. ஒளிர்தல். “மானமென் றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும்’ (பிரபோத.11:1);. சொலி-ஜொலி-வஜ்வலி என்று திரிந்துள்ளது. ஜ்வல் என்பதை மூலமாகக் காட்டுவர் வடமொழியாளர். இது செயற்கை மூலம். சொலித்தல் வினைச்சொல் ஆளப்பட்ட முன்னுல்கள் வழக்கிறந்தமையால், பின்னூலினின்று மேற்கொள் காட்டப்பட்டது. சொல்-சொன்-சொன்னம் = விளங்கும் நிறப்பொன் (திவா.);. “சொன்னதானப் பயனெனச் சொல்லுவர்” (கம்பரா.சிறப்பு);. சொன்னம்-வ.ஸுவர்ண = நன்னிறமுள்ளது. தங்கம். இது பொருந்தப் பொய்த்தலான சொற்றிரிப்பு. இனி, சூர் என்பதையே cur என்று திரித்து, சூர்ண (Curna); என்னுஞ் சொல்லைத் தோற்றுவித்தனர். சூர் (curl = எரி to burn);. சூர்ண-த. சூரணம் = நீறு, பொடி. சூரணம்-சூரணி. சூரணித்தல் = நீற்றுதல், பொடி செய்தல். ஒ. நோ = சுள் – சுள்ளம் – சுண்ணம் . சுள்ளல் = எரிதல் (வழக்கிறந்த வினைச்சொல்);. இனி, கள் என்னும் அடி போன்றே குள், துள், நுள், புள், முள் என்னும் வழியடிகளும் உள் என்னும் மூல அடியினின்று திரிந்து, நெருப்புப் பற்றிய பல்வேறு சொற்களைப் பிறப்பிக்கும். நெருப்பு : நெருப்பு பழங்காலத்தில் 1. கடைதல், 2. அறுத்தல், 3. தேய்த்தல், 4. அடித்தல் – என்ற நான்கு முறைகளில் உண்டாக்கப்பட்டது. மட்பாண்டம் செய்யத் தெரிவதற்கு முன்பே மக்கள் நெருப்பின் பயனை அறிந்திருந்தனர். 1. நெருப்புக் கடைதல் : மரத்தைக் கடைந்தோ, அறுத்தோ, தேய்த்தோ, நெருப்பை உண்டாக்கு வதற்குக் கடினமரத்துண்டு ஒன்றும், மென்மையான மரத்துண்டு ஒன்றும் இருக்கும். கடின மரத்துண்டில் சிறு குழியிருக்கும். மென்மை மரத்துண்டு ஒரு நீண்ட குச்சியாக இருக்கும். கடினத்துண்டைத் தரையில் அசையாதபடி வைத்துக் கொண்டு, குச்சியை அதன் குழியில் நட்டுக் கையால் தயிர் மத்தைக் கடைவதுபோல் கடைந்தால் அதனால் பிரியும் மரத்துளில் நெருப்புப் பற்றிக் கொள்கிறது. இந்த நெருப்புக்கடை மத்து இப்போது இலங்கையில் வெட்டர் (veddas); களிடம் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் ஆதிக்குடிகளான நாயாடிகள், ஏனாதிகள், கணிகர்கள் இதைப் பயன்படுத்துகின்றனர். படகர்களும் தொதவர்களும் மத்தைக் கையால் கடையாமல் கயிறு கொண்டு கடைவர். 2. அறுப்புமுறை : ஒரு மூங்கில் நீளமான பள்ளம் செய்து, அதைத் தரையில் அசையாதபடி வைத்துக்கொண்டு, மூங்கிலின் குறுக்கேயுள்ள பள்ளங்களில் மற்றொரு மூங்கிலைப் பலமுறை ஒட்டித் தேய்ப்பர். ஒருவரே செய்வதுமுண்டு;அல்லது ஒருவர் தரை மூங்கிலை அழுத்திக் கொள்வர், மற்றொருவர் தேய்ப்பர். மலையாளப் பணியர்கள் இம்முறையைப் பயன் படுத்துகின்றனர். 3. தேய்ப்புமுறை : ஒரு மரத்தில் V வடிவமான பள்ளம் வெட்டி வைத்துக் கொண்டு, ஆப்புப் போன்ற உருவமுடைய மற்றொரு மரத்துண்டால் அதில் பலமுறை தேய்த்தால், அப்போது பிரியும் மரத்துள் நெருப்புப் பற்றி எரியும். இதற்கு நீர்ப்பருத்தி மரம் என்னும் மரத்தையே பயன்படுத்துவது வழக்கம். இம்முறை ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியத் தீவுகள் முதலியவற்றில் காணப்படுகிறது. 4. அடித்தல் முறை : இம்முறையில் இரண்டு இரும்புக் கட்டிகளைப் (Iron pyrites); பயன்படுத்துவர். ஒன்றைக் கொண்டு மற்றதை அடித்தும், தீக்கல்லை எஃகு கொண்டு அடித்தும் நெருப்பை உண்டாக்குவர். இது தமிழ் நாட்டில் சிக்கிமுக்கிக் கல் முறை எனப்படும். தீக்கல் எஃகு முறையானது எசுக்கிமோக்கள், அமெரிக்க இந்தியர்கள், செஞ்சுக்கள் ஆகியோரிடம் காணப்படும். இவ்வாறு கடையும்போதும், தேய்க்கும் போதும், அறுக்கும்போதும் தீப்பற்றவைக்கப் பனை நாரைப் பயன்படுத்துவர். தீக்குச்சி செய்யப் பெறும் காலம் வரை சிக்கிமுக்கிக் கல் முறையே வழக்கிலிருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் மலேயா, பர்மா, போர்னியோ ஆகிய இடங்களிலுள்ள சில வகை ஆதிக்குடிகள் மற்றொரு முறையைப் பயன்படுத்தினர். இது தண்டுமுறை எனப்படும். இம்முறையில், ஒரு குழலின் அடிமுனை மூடியிருக்கும். திறந்துள்ள மேல்முனை வழியே ஒரு தண்டு இறுக்கமாகப் பொருந்தியிருக்கும். குழலின் அடிப்பக்கமுள்ள சிறு பள்ளத்தில் தீப்பற்றியை வைத்துக்கொண்டு தண்டைப் பலமாக அடித்தால் குழாயிலுள்ள காற்று அழுத்தப்படும். அப்போது நெருப்பு உண்டாகும். உடனே தண்டை வெளியே எடுத்துவிட்டு நெருப்பைப் பயன்படுத்துவர். நெருப்புப் பற்றிய பழமொழிகள் நெருப்பிலே (நெருப்பை); ஈ மொய்க்குமா? நெருப்பிருக்கிற காட்டை நம்பினாலும் நீரிருக்கிற காட்டை நம்பக்கூடாது. நெருப்பிலும் பொல்லாச் செருப்பு. நெருப்பிலே நெய் விட்டதுபோல். நெருப்பிலே புழு பற்றுமா? நெருப்பிலே போட்டாலும் நெஞ்சு வேகாது. நெருப்பிலே புழுப்போலத் துடிக்கிறது. நெருப்பினும் பொல்லாது கருப்பின் வாதை, நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும். நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? நெருப்பு என்றால் வாய் வெந்து போமா? நெருப்பு சிறிது என்று முன்றானையில் முடியலாமா? நெருப்பு நின்ற காட்டிலே ஏதாவது நிற்கும் நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது. நெருப்புப் பந்தம் கட்டிக் கொண்டு நிற்கிறான். நெருப்பைக் கண்டு மிதித்தாலும் சுடும் காணாமல் மிதித்தாலும் கடும். நெருப்பைச் சார்ந்த யாவும் அதன் நிறமாகும். நெருப்புப் பந்தலிலே மெழுகுப் பதுமை ஆடுமா? நெருப்பைத் தலைகிழாகப் பிடித்தாலும் சுவாலை கீழாகுமா? நெருப்பை மடியிலே கட்டிக் கொண்டிருக்கிறாள். நெருப்பை மடியிலே முடிகிறதா? நெருப்பு2 neruppu, பெ. (n.) 1. கத்தூரி மான்; musk. 2. வெடியுடிப்பு; nitre. (சா.அக.);. நிறத்தால் பெற்ற பெயர் நெருப்பு3 neruppu, பெ. (n.) 1. கத்தூரி மான்; musk. 2. வெடியுப்பு; nitre. (சா.அக.);. நிறத்தால் பெற்ற பெயர். |
நெருப்பு நடனம் | நெருப்பு நடனம் neruppunaḍaṉam, பெ.(n.) மாலி வகுப்பைச் சார்ந்த பெண்டிர் ஆடும் நடனம்; a kind of dance performed by Mali group ladies. (4:14);. [நெருப்பு+நடனம்] |
நெருப்புக்கட்டை | நெருப்புக்கட்டை neruppukkaṭṭai, பெ. (n.) தீக்கொள்ளி (வின்.);; fire brand. [நெருப்பு + கட்டை] |
நெருப்புக்கண் | நெருப்புக்கண் neruppukkaṇ, பெ.(n.) 1. கொள்ளிக்கண் (திட்டிவிழுங்கண்);; evil eye. 2. அனற்பொறி பறக்குங்கண்; fiery eye. 3. பொறாமைக்கண்; envious eye. 4. சிவனின் நெற்றிக்கண்; frontal eye of a Śiva. [நெருப்பு + கண்] நெருப்புக்கண் neruppukkaṇ, பெ. (n.) 1. கொள்ளிக்கண் (திட்டிவிழுங்கண்);; evil eye. 2. அனற்பொறி பறக்குங்கண்; fiery eye. 3. பொறாமைக்கண்; envious eye. 4. சிவனின் நெற்றிக்கண், frontal eye of a Siva. [நெருப்பு + கண்] |
நெருப்புக்கல் | நெருப்புக்கல் neruppukkal, பெ. (n.) 1. தீத்தட்டிக்கல் (வின்.);; flint. 2. காடிக்காரம் (யாழ்.அக.);; nitrate of silver. [நெருப்பு + கல்] நெருப்புக்கல் neruppukkal, பெ. (n.) 1. தீத்தட்டிக்கல் (வின்.);; flint. 2. காடிக்காரம் (யாழ்.அக.);, nitrate of silver. [நெருப்பு + கல்] |
நெருப்புக்காடு | நெருப்புக்காடு neruppukkāṭu, பெ. (n.) 1. பெருநெருப்பு; conflagration. 2. கடுவெயில்; scorching, hot sun. 3. கடுஞ்சினம்; intense anger, fury or rage. [நெருப்பு + காடு. காடு = மிகுதி]தால் பெற்ற பெயர். நெருப்புக்காடு neruppukkāṭu, பெ. (n.) 1. பெருநெருப்பு; conflagration. 2. கடுவெயில்; scorching, hot sun. 3. கடுஞ்சினம்; intense anger, fury or rage. [நெருப்பு + காடு. காடு = மிகுதி] |
நெருப்புக்காறாதகல் | நெருப்புக்காறாதகல் neruppuggāṟātagal, பெ.(n.) நெருப்பில் உருகாத செங்கல் வகை (C.E.M.);; fire-brick. [நெருப்பு ஆறு + ஆ கல். ஆ-எம.இ. நிலை, நெருப்பிலும் உருகாத செங்கல் வகை] |
நெருப்புக்காலி | நெருப்புக்காலி neruppukkāli, பெ. (n.) ஒருவகைச் சிலந்திப் பூச்சி; a kind of spider (சா.அக.);. [நெருப்பு + காலி, நெருப்பு வண்ணக்கால்களையுடைய பூச்சி] |
நெருப்புக்கிரை | நெருப்புக்கிரை neruppukkirai, பெ. (n.) 1. பிணம்; dead. 2. நீர்; water. (சா.அக.); [நெருப்பு + கு இரை. நெருப்புக்கு இரையாகும் பொருட்கள்] |
நெருப்புக்குச்சி | நெருப்புக்குச்சி neruppukkucci, பெ. (n.) தீக்குச்சி; match. நெருப்புக் குச்சியைக் கொளுத்து. [நெருப்பு + குச்சி. நெருப்பையுண்டாக்கும் குச்சி.] [P] |
நெருப்புக்குள்ளுப்பு | நெருப்புக்குள்ளுப்பு neruppukkuḷḷuppu, பெ. (n.) வளையலுப்பு; glass gall-Febvitri. (சா.அக);. |
நெருப்புக்கொட்டை | நெருப்புக்கொட்டை neruppukkoṭṭai, பெ.(n.) முள் முருங்கை விதை;seed of mulmurungai. [நெருப்பு+கொட்டை] இவ்விதையைத் தரையில் தேய்த்து உடம்பில் வைத்தால் சுடும்தன்மையாதலால் இப்பெயர் பெற்றது எனலாம். |
நெருப்புக்கொப்புளம் | நெருப்புக்கொப்புளம் neruppukkoppuḷam, பெ.(n.) தீப்புண்; burns, (சா.அக.);. [நெருப்பு + கொப்புளம். நெருப்புப்பட்டதால் ஏற்பட்ட கொப்புளம்.] |
நெருப்புக்கொளுத்து | நெருப்புக்கொளுத்து1 neruppukkoḷuddudal, 5.செ.கு.வி.(v.i.) 1. தீமூட்டுதல் (வின்.); அடுப்பில் தீ மூட்டிதல்; to kindle of fire, as in an oven. 2. கடுவெயி லெரித்தல் (உ.வ.);; to be hot, scorching, as the sun. 3. கடுமையாதல் (வின்.);; to be very severe, as showing anger in reproof. 4. தீமை (வின்.);; to do injustice, to tyrannise. 5. கலகமூட்டுதல் (உ.வ.);; to foment or instigate a quarrel. [நெருப்பு + கொளுத்து + தல்] நெருப்புக்கொளுத்து2 neruppukkoḷuddudal, 5செ.குன்றாவி.(v.t.) தீக்கொளுத்துதல். (உ.வ.);; to set fire to. [நெருப்பு + கொளுத்து-தல்.] |
நெருப்புக்கொள்ளி | நெருப்புக்கொள்ளி neruppukkoḷḷi, பெ. (n.) 1. தீக்கொள்ளி; firebrand. 2. கெட்டவன்; atrociously wicked man. 3. கலக்காரன்; incendiary, firebrand, 4. தேள்கடி; scorpion sting. [நெருப்பு + கொள்ளி. கொள்ளி = 1. கொள்ளிக்கட்டை, 2. கலகமூட்டுபவன், 3. கெட்ட குணமுள்ளவன்] |
நெருப்புக்கோழி | நெருப்புக்கோழி neruppukāḻi, பெ. (n.) 1. நீண்ட காலும், கழுத்தும் சிறிய தலையும் பறக்கப் பயன்படாத பெரிய சிறகுகளும் கொண்ட தீத்தணலை விழுங்கும் கோழிவகை; ostrich, as eating embers. 2. நெருப்புப் போன்று சிவந்த தொண்டையையுடைய வான்கோழி;(வின்.);; Turkey-cock, as having fire-red throat. [நெருப்பு + கோழி] [P] நெருப்புக்கோழி : இது பறவைகளில் பெரியது: நிமிர்ந்திருக்கும்போது ஆறு அடி முதல் எட்டு அடி உயரமிருக்கும். அரேபியாவிலும், தென்னாப்பிரிக் காவிலும் இதனைக் காணலாம், பறக்க முடியாது; காலில் இரண்டே விரல்கள் உண்டு. முட்டை இட்டு அடை காக்கும்; ஆண்டுக்கு ஒரு முறையே முட்டையிடும்;முட்டை பெரியது. இதன் கழுத்திலும் தொடைகளிலும் இறகுகளில்லாத படியால் அப்பாகங்கள் நெருப்புப் போல் சிவப்பாயிருக்கும். இஃது உண்ணும் உணவைச் செரிப்பிக்க வேண்டிக் கற்களையும் ஆணிகளையும் விழுங்கும் தன்மையது. |
நெருப்புச்சட்டி | நெருப்புச்சட்டி neruppuccaṭṭi, பெ.(n.) கணப்புச் சட்டி; firepan. [நெருப்பு + சட்டி. நெருப்புவைக்கும் சட்டி] |
நெருப்புச்சயநீர் | நெருப்புச்சயநீர் neruppuccayanīr, பெ.(n.) நெருப்புத் தண்ணிர் (யாழ்.அக.); பார்க்க;see neruppu-t-tannir. [நெருப்பு + சயநீர். சயநீர் = சுண்ணாம்பு, எரியுப்பு (நவச்சாரமும்); கலந்த நீர். செய் + நீர் – செயநீர் → சயநீர்.] |
நெருப்புச்சாணை | நெருப்புச்சாணை neruppuccāṇai, பெ. (n.) சாணைக்கல் வகை (யாழ்.அக.);; a kind of grindstone. [நெருப்பு + சாணை. சாணை → சாணைக்கல் = படைக்கலன் முதலிய கருவிகளைக் கூர்மை யாக்கும் கல்.] |
நெருப்புச்சூடு | நெருப்புச்சூடு neruppuccūṭu, பெ.(n.) தீப்பட்ட புண் (M.L.);; burns and scalds. [நெருப்பு + சூடு, சுடு → சூடு. சுட்டதால் ஏற்பட்டபுண்.] |
நெருப்புச்செயநீர் | நெருப்புச்செயநீர் neruppucceyanīr, பெ.(n.) நெருப்புச் சயநீர் பார்க்க;see nerயppu-Ccayanir. |
நெருப்புத்தணல் | நெருப்புத்தணல் nerupputtaṇal, பெ. (n.) கட்டை நெருப்பு (உ.வ.);; live coal. [நெருப்பு + தணல். நெருப்புத் துண்டம்.] |
நெருப்புத்தண்ணீர் | நெருப்புத்தண்ணீர் nerupputtaṇṇīr, பெ.(n.) வெடியுப்பு சாரம் (அமிலம்); (வின்.);; nitric acid. [நெருப்பு +தண்ணர். எரியுப்பு நீர்.] நெருப்புத்தண்ணீர்2 nerupputtaṇṇīr, பெ.(n.) 1. தீநீர்; distilled water. 2. கொதி நீர்; boiling water. 3. நீராவி; steam. 4. மிதமிஞ்சிய குளிர்நீர்; extremely chill water. (சா.அக.);. [நெருப்பு + தண்ணீர்.] |
நெருப்புத்தள்ளி | நெருப்புத்தள்ளி nerupputtaḷḷi, பெ.(n.) நெருப்புத் தள்ளுமொரு இரும்புக் கருவி (கட்டட.நாமா.40);; poker. [நெருப்பு + தள்ளி. தள்ளி = தள்ளு வதற்குப் பயன்படும் குச்சி. கருவி. நெருப்பைத் தள்ளும் கோல்.] |
நெருப்புத்தழல் | நெருப்புத்தழல் nerupputtaḻl, பெ. (n.) நெருப்புத் தணல் (யாழ்.அக.); பார்க்க;see neruppu-t-tanal. [நெருப்பு + தழல், தழல் = கனிந்த நெருப்பு, நெருப்பு] |
நெருப்புத்திராவகம் | நெருப்புத்திராவகம் nerupputtirāvagam, பெ.(n.) நெருப்புத் தண்ணீர் (வின்.); பார்க்க;see neruppu-t-tannir. [நெருப்பு + திராவகம். Skt.drava → த. திரவம் → திராவகம். திராவகம் = செய்நீர், சாரம்.] |
நெருப்புத்துண்டம் | நெருப்புத்துண்டம் nerupputtuṇṭam, பெ. (n.) ஒழுக்கத்தில் ஒரு போதும் தவறாதவ-ன்-ள் (உ.வ.);; a strict observer of moral and religious principles. அவள் ஒரு நெருப்புத் துண்டம். அவளிடம் யாரும் விளையாட முடியாது. [நெருப்பு + துண்டம். நெருப்புத் துண்டு போல் தீயதை அழிப்பவன்-ள். தவறு செய்யாத, தவறுகள் நெருங்க முடியாதவன்-ள்] |
நெருப்புத்துரண் | நெருப்புத்துரண் nerupputturaṇ, பெ.(n.) அடர்ந்து, உயர்ந் தெரியுந் தீப்பிழம்பு (வின்.);; pillar of fire. [நெருப்பு + தூண். தூண்போல் உயர்ந்து அடர்ந்து காணப்படும் தீப்பிழம்பு] |
நெருப்புப்படு-தல் | நெருப்புப்படு-தல் neruppuppaḍudal, 20செ.கு.வி.(v.i.) 1. நெருப்பால் அழிதல்; to be consumed by fire. நெருப்புப்பட்டு துணி ஒட்டையாகி விட்டது. 2. கடுங்கோடையால் வருந்துதல்; to be consumed with drought. 3. தெய்வத்தண்டனை முதலியவற்றால் அழிதல் (வின்.);; to be destroyed, as by divine retribution. கண்ணகியின் கடுஞ்சினத்தால் நெருப்புப் பட்டு மதுரை அழிந்தது. 4. முறையற்ற அரசனின் ஆட்சியால் துன்புறுதல் (வின்.);; to suffer oppression, injustice, as from a wicked ruler. 5. விலை முதலியன மிகுதியாதல்; to be abnormal as prices. [நெருப்பு + படு-தல். நெருப்புப்படுவதால் ஏற்படும் அழிவைப் போல், துன்பத்தைப்போல், கடுங்கோடையும், முறையற்ற அரசனும், விலை ஏற்றமும், மக்களை வாட்டும் தன்மையான வாதலால் நெருப்புப் படுதல் என்ற சொல்லுக்கு மேற்கண்ட பொருள்கள் அமைந்தன.] |
நெருப்புப்பட்டபுண் | நெருப்புப்பட்டபுண் nerubbubbaṭṭabuṇ, பெ.(n.) 1. தீப்புண்; burns. 2. நான்கு வகையான தீச்சுட்ட புண் 1. நிறமாற்றுப்புண், 2. கொப்புளப் புண், 3. தீய்ந்த புண், 4. அழிபுண்; the four kinds of or degrees of burns viz., 1. with change of a colour. 2. one accompained by blister. 3. black without much pain. 4. sloughing wound. (சா.அக);. [நெருப்பு + பட்ட + புண்] |
நெருப்புப்பறக்குஞ்சுரம் | நெருப்புப்பறக்குஞ்சுரம் neruppuppaṟakkuñjuram, பெ.(n.) சூடும் வலியுமுள்ள காய்ச்சல் நோய்; fever accompanied by excessive heat and burning sensation, Ardent thermal fever. (சா.அக.);. [நெருப்பு + பறக்கும் சுரம்] |
நெருப்புப்பற்று-தல் | நெருப்புப்பற்று-தல் neruppuppaṟṟudal, 5.செ.கு.வி. (v.i.) நெருப்புப்பிடி-த்தல் பார்க்க;see neruppu-p-pia- வீடு நெருப்புப் பற்றிக் கொண்டது. [நெருப்பு + பற்று-தல். பற்றுதல் = பற்றிக் கொள்ளுதல்.] |
நெருப்புப்பிடி-த்தல் | நெருப்புப்பிடி-த்தல் neruppuppiḍittal, 4.செ.கு.வி.(v.i.) தீப்பற்றி யெரிதல் (உ.வ);; to catch fire. [நெருப்பு + பிடி-த்தல்.] |
நெருப்புப்புண் | நெருப்புப்புண் neruppuppuṇ, பெ.(n.) நெருப்புச் சூடு (பைஷஜ.); பார்க்க;see ոerսppս-c-cմaս. [நெருப்பு + புண்] |
நெருப்புப்பூ-த்தல் | நெருப்புப்பூ-த்தல் neruppuppūttal, 6.செ.கு.வி.(v.i.) நீறுபூத்தல் (இ.வ.);; to smoulder, as live charcoal. [நெருப்பு + யூ-த்தல். நெருப்பின் மேல் சாம்பல் படிந்திருத்தல்] |
நெருப்புப்பெட்டி | நெருப்புப்பெட்டி neruppuppeṭṭi, பெ. (n.) தீப்பெட்டி; match box. நெருப்புப் பெட்டி ஒன்று வாங்கி வா. [நெருப்பு + பெட்டி. நெருப்புக் குச்சிகள் வைக்கும் பெட்டி.] [P] |
நெருப்புப்பொறி | நெருப்புப்பொறி neruppuppoṟi, பெ. (n.) தீப்பொறி (வின்.);; sparks of fire. [நெருப்பு + பொறி, நெருப்பில் இருந்து கிளம்பும் பொறி.] |
நெருப்புமணத்தில் | நெருப்புமணத்தில் neruppumaṇattil, பெ. (n.) புகை நாற்றம் (வின்.);; smell of fire, fumigation. [நெருப்பு + மணத்தல்] |
நெருப்புமரம் | நெருப்புமரம் neruppumaram, பெ.(n.) தில்லைமரம், Tillai-tree. (சா.அக.);. [நெருப்பு + மரம். இம்மரம் மிகவும் வெப்பமானது. இதன் நிழல் அல்லது புகை பட்டாலும் கண் குருடாகும். நெருப்புப் போல் வெப்பமானதால் இம்மரம் நெருப்பு மரம் எனப்பட்டது.] |
நெருப்புமழை | நெருப்புமழை neruppumaḻai, பெ.(n.) ஊழிக் காலத்தில் நீல வண்ணமுகில் பொழியுந் தீமழை (வின்.);; rain of fire from the nila-varnam clouds, at the universal dissolution. [நெருப்பு + மழை. உலக அழிவுக் காலத்தில் பெய்யும் நெருப்பாலாகிய மழை.] |
நெருப்புமூட்டு-தல் | நெருப்புமூட்டு-தல் neruppumūṭṭudal, 5.செ.கு.வி.(v.i.) 1. தீப்பற்ற வைத்தல்; to kindle fire. நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்தான். 2. கலகம் உண்டாக்குதல் (உ.வ.);; to arouse a disturbance, to instigate a quarrel. வீட்டில் நெருப்பு மூட்டி விட்டான். இனி அமைதியைக் காணமுடியாது. [நெருப்பு + மூட்டு, நெருப்பை யுண்டாக்கி உணவு சமைத்தலும் உண்டு. நெருப்பை உண்டாக்கிப் பொருள்களை அழித்தலும் உண்டு. அழித்தல் பொருளில் கலகம் உண்டாக்குதல் வந்தது. அஃது அமைதியை அழித்தல் என்பதாம்.] |
நெருப்புமூலி | நெருப்புமூலி neruppumūli, பெ. (n.) 1. தீச்சுட்டது போல் எரிச்சலையுண்டாக்கும் ஓர்பூடு,கொடிவேலி; a drug causing burning sensation – lead wort – Plumbago zeylanica. 2. மிக்க சூட்டை யுண்டாக்கும் மூலி; drug causing intense heat in the system. 3. கொப்புள மெழுப்பும் மூலி; drug causing blisters. 4. ஒளி (சோதி);ப்புல்; burning bush. (சா.அக.);. [நெருப்பு + மூலி. நெருப்புச் சூட்டைப் போல் எரிச்சலையுண்டாக்கும் பூடு.] |
நெருப்புமேனி | நெருப்புமேனி neruppumēṉi, பெ.(n.) நெருப்பைப்போல் சிவந்த உடம்பு; red body as bright as fire. (சா.அக.);. [நெருப்பு + மேனி, நெருப்பைப் போன்ற நிறமுடைய உடம்பு] |
நெருப்புவண்டு | நெருப்புவண்டு neruppuvaṇṭu, பெ.(n.) கடித்தால் கொப்புள மெழுப்பும் வண்டு; telini fly canth arides raising blisters, (சா.அக.);. [நெருப்பு + வண்டு. நெருப்பு வண்ண வண்டு.] |
நெருப்புவண்ணம் | நெருப்புவண்ணம் neruppuvaṇṇam, பெ. (n.) சிவந்த நிறம்; red colour. [நெருப்பு + வண்ணம்] |
நெருப்புவிரணம் | நெருப்புவிரணம் neruppuviraṇam, பெ, (n.) நெருப்புப் புண் பார்க்க;see meruppu-p-pur. (சா.அக.);. [நெருப்பு +Skt-விரணம்] |
நெருப்புவிழுங்கி | நெருப்புவிழுங்கி neruppuviḻuṅgi, பெ. (n.) நெருப்புக் கோழி; astrich (சா.அக.);. [நெருப்பு + விழுங்கி. நெருப்பை உணவாக உட்கொள்ளும் பறவை.] |
நெருப்புவிழுங்குகோழி | நெருப்புவிழுங்குகோழி neruppuviḻuṅguāḻi, பெ.(n.) நெருப்புக் கோழி (வின்.); பார்க்க;see neruppu-k-kös, [நெருப்பு + விழுங்கு கோழி. தித்தனலையே உணவாக உட் கொள்ளும் கோழி.] |
நெருப்புவிழுதல் | நெருப்புவிழுதல் neruppuviḻudal, பெ. (n.) 1. தீப்பொறி பறக்கை (வின்.);; flying of sparks, as from fire-wood, flint or grindstone. 2. தனலுண்டாகை (உ.வ.);, formation of live embers as in an oven. அடுப்பில் நெருப்பு விழுந்துவிட்டது. இனி விரைவில் சமைக்கலாம். 3. கூரைமேல் தீத்திரள் விழுகை; falling of balls of fire over roofs. 4. முறைகேடு (அநீதி); முதலியவற்றால் அழிகை; destruction, as by injustice of famine. 5. நெருப்பினா லழிகை (யாழ்.அக.); being consumed by fire. நெருப்பு விழுந்து துணி எரிந்து விட்டது. 5. தன்னிலை யழிகை (வின்.);; discomfiture, disheartenment. [நெருப்பு + விழுதல். நெருப்புப் பொறி பறந்து, துணி, வீடு முதலியவற்றை அழிப்பது போல் முறையற்ற வழியில் நடப்பவனையும் அழிக்கும். தன்னிலையில் இருந்து மாறியவனையும் அழிக்கும் என்பதையும் இச்சொல் காட்டுகிறது.] |
நெருப்பெரிச்சல் | நெருப்பெரிச்சல் neruppericcal, பெ.(n.) பல்லடம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Palladam Taluk. [நெருப்பு+எரிச்சல்] |
நெருப்பெறும்பு | நெருப்பெறும்பு neruppeṟumbu, பெ. (n.) கடித்த விடத்து நெருப்புப்பட்டது போல வலியுண்டாக்கும் ஒருவகைச் சிவப்புச் சிற்றெறும்பு (இ.வ.);; a kind of small red ant whose bite is very painful. நெருப்பெறும்பு கடித்தால் வலி பொறுக்க முடியாது. [நெருப்பு + எறும்பு. நெருப்புப் போன்ற சிவப்பு நிறமுடைய எறும்பு.] |
நெருப்போடு | நெருப்போடு neruppōṭu, பெ. (n.) தட்டார் வேலைக்குரிய நெருப்புச் சட்டி (உ.வ.);; chafing dish, used by goldsmith. [நெருப்பு + ஓடு. ஓடு = சட்டி. தட்டார் பொன்னைச் சுட்டெடுக்கப் பயன்படும் உமியும் நெருப்பும் உள்ள சட்டி.] [P] |
நெருமதங்கைக்குறியான் | நெருமதங்கைக்குறியான் nerumadaṅgaikkuṟiyāṉ, பெ. (n.) வெட்டிவேர்; cuscus root Andropogon aromaticus. (சா.அக.);. |
நெருமு-தல் | நெருமு-தல் nerumudal, 5.செ.குன்றாவி. (&) செ.கு.வி. (v.t. & v.i.). 1. பல்லைக் கடித்தல்; to grind the teeth, gnash. 2. பல்லாற் கடித்தல்; to bruise, crush between the teeth. [நருமு-தல் → நெருமு-தல். நெருமுதல் = பல்கலைக் கடித்தல்.] |
நெருள் | நெருள் neruḷ, பெ. (n.) திணுங்கிய மக்கட் திரள், மக்கட் கூட்டம் (இ.வ.);; dense crowd of people. “யானை போகிற போக்கைப் பார், பார்க்கப் போகிற நெருளைப் பார்” (பழ.);. [நுல் → துள் → நிள் → நிர் → நெர் → நெரு → நெருள்] |
நெரேலெனல் | நெரேலெனல் nerēleṉal, பெ. (n.) விரைவுக் குறிப்பு (திவா.);; expr, of suddenness. |
நெர்க்குண்டி | நெர்க்குண்டி nerkkuṇṭi, பெ. (n.) நொச்சி மரம் (மலை.);; chaste tree. |
நெர்சம்பளம் | நெர்சம்பளம் nercambaḷam, பெ. (n.) நெல்லாகப் பெறுங்கூலி; salary paid in paddy. “பணம் வேறு நெற்சம்பளம் வேறு பற்றி” (சரவண. பணவிடு.120); [நெல் + சம்பளம். சம்பளம் = கூலி. சம்பா + அளம் → சம்பளம் மருதநிலத்தில் சம்பாநெல்லும், நெய்தல்நிலத்தில் அளத்துப் பொருளாகிய மீனும், உப்பும் கூலியாகத்தரப்படுதலின் சம்பளம் என்ற சொல் உருவானதாகப் பாவாணர் கருதுகிறார். (சொ.ஆ.க);.] |
நெர்சிறுதாலி | நெர்சிறுதாலி nerciṟutāli, பெ. (n.) தாலிவகை; a kind of marriage badge. “நெற்சிறு தாலி நிரல்கிடந்திலங்க” (பெருங். வத்தவ. 16:29);. [நெல் + சிறுதாலி.] சிறுதாலி=சிறிய தாலி வகை சிறுதாலி = 1. கணவன் வாழ்நாள் வரை மகளிர் கழுத்தில் கயிற்றுடன் எப்பொழுதுமுள்ள தாலி. 2. வைப்பாட்டிக்குக் கொடுக்கும் தாலி. சிறுதாலிக்கட்டும் மரபு கைக் கோளரினத்தில் காணப்படுகிறது. திருமணத்திற்கிசையாத மாமன்மகள் அல்லது அத்தை மகளை விரும்பின ஒருவன், அவள் தன்னை மணம்புரியும் படி தாலியையேனும் துணியையேனும் துரங்கும்போது அவள் கழுத்திற் கட்டுவது, சிறுதாலிகட்டுதல் எனப்படும். நெற்சிறுதாலி = மணவுறுதிவிழாவில் கணவர் பெயர் குறித்த ஒலையைக் காதில் தென்புற மகளிர் அணிந்தது போல வயற்புற ஊர் மகளிர் கழுத்தில் பொன்தாலி அணிவிப்பதற்கு முன் நெல் முடிச்சிட்ட தாலி கட்டப்பட்டது என்று அறிக. |
நெர்சோளம் | நெர்சோளம் nercōḷam, பெ. (n.) இருங்குசோளம்; a kind of maize, redmillet-Holcus saccharatus. [நெல் + சோளம். நெல்போன்ற வண்ண முடைய சோளம்] |
நெர்பிரமாணம் | நெர்பிரமாணம் nerpiramāṇam, பெ. (n.) எட்டு எள்கொண்ட நெல்லளவு; size of paddy which is equivalent to that of 8 seasamum seeds. [நெல் + Skt, பிரமாணம்.] |
நெர்புகொள்ளல் | நெர்புகொள்ளல் nerpugoḷḷal, பெ. (n.) 1. சீழ் கொள்ளல்; the process or state of Suppurating or producing pus as in a wound or abscess. 2. அம்மைப்பால் கொள்ளல்; pustules containing pus as in small pox. (சா.அக.);. [நெற்பு + கொள்ளல். நெற்பு = சீழ்.] |
நெர்புடம் | நெர்புடம் nerpuḍam, பெ. (n.) சில மருந்துகளை நெற்குவையுட் புகுத்திச் சூடேற்றிப் பதப்படுத்தும் முறை (தைலவ.தைல. 46, உரை);; method of warming certain medicines by inserting them into a heap of paddy. [நெல் + புடம். புடம் = மருந்துகளைப் பதஞ்செய்யும் முறை.] |
நெறதழநாவி | நெறதழநாவி neṟadaḻnāvi, பெ. (n.) அலரி; oleander. (சா.அக.);. |
நெறநெறெனல் | நெறநெறெனல் neṟaneṟeṉal, பெ. (n.) ஓர்ஒலிக்குறிப்பு; onm. expr. of grinding or gnashing the teeth. “நிகரறுமுரகன் முடிநெறநெறென” (திருப்போ. சந். பெருங். 2:6);. பல்லை நெறநெறென கடித்தான். 2. மென்மையற்றிருத்தற் குறிப்பு; expr. signifying roughness or coarseness. மா நெறநெறென்றிருக்கிறது. [நெறநெற + எனல். ஈரடுக்கு ஒலிக்குறிப்பு] |
நெறி | நெறி1 neṟidal, 2 செ. கு. வி. (v.i.) மயிர் குழற்சியாதல்; to be wavy, curly, as the hair of a person. “நெறிந்தகருங் குழல்மடவாய்” (திவ். பெரியாழ். 3.10:1);. [நெரி → நெறி → நெறி-தல் = வளைதல், நொறுங்குதல், நிலைகெடுதல், நெருங்குதல்] நெறி2 neṟittal, 4 செ. குன்றாவி. (v.t.) 1. புறவித ழொடித்தல்; to strip a flower of its calyx. “மலர் வாங்கி நெறித்து” (கலித்.76);. 2. சினத்தால் நெற்றியைச்சுருக்கிப் புருவத்தை வளைத்தல்; to contract, as the brow in anger. “நெறித்த நெற்றியர்” (கம்பரா. கரன்வதை,43);. புருவத்தை நெறித்து என்னைப் பார்த்தார். 3. நிமிர்த்துதல்; to prick up as the ears. காதை நெறித்தான். 4. கையாற் பிடித்து விடுதல் (கலித்.32); to press firmly with the hand. 5. இரண்டு கைவிரல்களையும் கோத்துச் சொடுக்கு ஒசை கேட்க வைத்தல்; to crack the fingers. “நீ நாசமாய்ப்போ” என்று கைவிரல்களை நெறித்துச் வசவு (சாபம்); சொன்னான். து. நெசிபுநி [நெறி → நெறி2] நெறி3 neṟittal, 4 செ.கு.வி. (v.i.) 1. முறுக்காயிருத்தல் (இ.வ.);; to be stiff. 2. மயிர்சுருளல், மயிர் குழலுதல்; to curl in ringlets, as hair. “நெறித்திட்ட மென்கூழை” (திவ். பெரியதி. 10.6:8);. “நெறிசுரிபூங்குழல்” (யா.கா.செய்.3);. 3. நெளித்தல்; to cause to bend. [நெறி1 → நெறி3-த்தல்.] நெறி4 neṟittal, 4 செ. குன்றாவி. (v.t.) நோக்குதல் (நீலகேசி, 53,உரை);; to look. [நெறி1 → நெறி4-த்தல்.] நெறி5 neṟi, பெ. (n.) 1. முடக்கம், வளைவு; bend, curve, turning, as of a road. “நெறிகொள் வரிக்குடர்” (புறநா. 160);. 2. சுருள்; curliness of hair. “குறுநெறிக் கொண்ட கூந்தல்” (பெரும்பாண். 162);. 3. கருமணல், அறல்; black sand. “நெறிமருப்பெருமை” (சீவக. நாமக. 15);. 4. வழி, way, road, path. “கல்வரையு முண்டா நெறி” (நாலடி, 154);. “ஒரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே” (தொல். எழுத்து. 45);. “கோடியர் தலைவ கொண்ட தறிந அறியாமையின் நெறிதிரிந் தொராஅ தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே” (பொருந.57,59);. “நூனெறி மரபிற் பண்ணி யானது” (சிறுபாண்.230);. “பல்லெருத்துமணர் பதிபோகு நெடுநெறி எல்லிடைக் கழியுநர்க் கேமமாக” (பொரும்பா.65,66);. “படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் எடுத்து நிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி” (மலைபடு.15.16);. “நெடுநெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஒசை” (நற்.4);. “புலிபார்த்துறையும் புல்லதர்ச் சிறுநெறி” (நற்.29);. “பல்லா நெடுநெறிக் ககன்று வந்தென” (குறுந்.64);. “இறையுற வோங்கிய நெறியயல் மராஅத்த” (குறுந்-92);. “கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரணறுப்ப” (பதிற்றுப்.19:2);. “நெறிகெட விலங்கிய நீயிரிச்சுர மறிதலு மறிதிரோ வென்னுநர்ப் பெறினே” (அகநா.8);. “யறு நீ ரம்பியி னெறிமுத லுணங்கு” (அகநா.29);. “நாஅல் வேத நெறி திரியினும்” (புறநா. 3);. “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” (புறநா.55);. “காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே ஏம நெறிபடரு மாறு” (நாலடி,13);. “ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து” (நாலடி,49);. “நூனெறி மரபின் அரங்கம் அளக்குங் கோலள விருபத்து நால்விரலாக” (சிலப்.3:99,100);. “குயிலுவமாக்கள் நெறிப்பட நிற்ப” (சிலப்.3:130);. “தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி” (மணிமே.5:29);. “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” (குறள்,6);. “நின்றிடைவிடாது நெறிசென்றுற நெருக்கி” (கம்பரா. மந்திரப். 55);. ம. க. நெறி. [நெறி1 → நெறி5] நெறி: குணம் அல்லது பண்பணிகளின் தொகுதியை நெறி அல்லது மார்க்கம் என்பர். தண்டியாசிரியர் செய்யுள் நெறி இரண்டென்று கூறுவார். அவை வைதருப்பம், கவுடம் என்பன. வைதருப்பம் = விதர்ப்பநாட்டுமொழிநடை (நெறி);. கவுடம் = கவுடநாட்டு மொழிநடை. இந்நெறியை முறைமை (ரீதி); என்று வாமனகாரிகை முதலிய வடநூல்கள் கூறும். நெறி என்பது, சொல்லும் பொருளும் நோக்கிய தொரு வரையறை. அது செய்யுள் நடையென்று குறிப்பர். வீரசோழியமும் தண்டியலங்காரமும் வைதருப்பம், கவுடம் என்னும் இரண்டை உரைத்து, வை தருப்பத்தையே சிறந்ததாகக் கருதின. அதற்குரிய குணங்கள் பத்து. “மெய்பெறு மரபின் விரித்தசெய் யுட்கு வைதருப் பம்மே கெளடம் என்றாங்கு எய்திய நெறிதாம் இருவகைப் படுமே” (தண்டி. 18); என்பது தண்டி யலங்காரம். மாறனலங்காரத்தார் மூன்று நெறி கொண்டார். அவை வைதருப்பம், கவுடம், பாஞ்சாலம் என்பன. வாமனரும் இம் மூன்றைக் கூறினார். வாமனருடைய காலம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். (some aspects of literary criticism in Sanskrit, p.29);. மாறனலங்கார ஆசிரியர் 16-ஆம் நூற்றாண்டினர். ஆதலின், வாமனர் நூலைப் பின்பற்றியே மாறனலங்கார நூலாசிரியர் நெறி மூன்று வகுத்தனர் என்று கொள்ளலாம். தமிழ் விடு துது நூலின் ஆசிரியர் நெறி நான்கு என்றனர். “நல்ல நெறி நாலே விதையா”, 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந் திருந்த ருத்திரர் என்ற ஆசிரியர் இயற்றிய வடமொழி அணியிலக்கணத்தில் வைதருப்பி, கெளடி, பாஞ்சாலி, இலாடியம் என்னும் நான்கு நெறிகள் கூறப்படுகின்றன. அக்கினி புராணத்திலும் இந்நான்கு நெறிகளும் காணப்படும். போசன் இயற்றிய சரசுவதி கண்டாபரணத்தில் மேற்கூறிய நான்கு நெறி யோடு மாகதி, அவந்திகா என்ற இரண்டும் சேர்த்து ஆறாகக் கூறப்படுகின்றன. வாமனர் இந்நெறிகளுக்கு உறுப்புகளாக இருப்பவை குண அணிகள் என்றும், அவைகளில் ஒவ்வொன்றும் சொல்லின் குணம், பொருளின் குணம் என இருவகை ஆகும் என்றும் கூறுவர். நெறிகளைப் பற்றி மாறனங்கார நூலாசிரியர், அவை ஒவ்வொரு நாட்டிலும் வழங்கும் முறைபற்றிப் பெயர் பெற்றன என்பர். “மன்னியபேர் யாப்பிற்கு வைதருப்பம் வான்கவுடம். பன்னியபாஞ் சாலம் எனப்பகுத்து – மி ன்னிடையாய். நன்னூன் முழுதுணர்ந்தோர் நாட்டகத்து நாட்டலுறீஇ முன்னுாலுட் கண்ட நெறி மூன்று” (மாறனலங் 77);. உரையாசிரியர்கள் நெறியைப் பாகம் என்ற சொல்லாலும் குறிப்பர். மெல்லென்ற விழுமிய இனிய மொழியும் மெல்லென்ற விழுமிய இனிய அறம் முதலிய நாற்பொருளும் பொருந்துவன வைதருப்ப பாகம் (நெறி); என்றும், விழுமிய சொற்கடினமும் பொருட் கடினமும் தோய்ந்து அரிய நடைத்தாய்ப் புலவனாற் கூறப்படுவது கவுட பாகம் (நெறி என்றும், மென்மையும் கடினமுமாகிய வைதருப்ப கவுடங்களோடு கூடாதே இடைநிலைப்பட்டனவாம். இனிய சொல்லாலும் பொருளாலும் தடையின்றி நடைபெற்று ஒழுகுவது பாஞ்சாலம் என்றும் கூறுவர். அவ்வந் நெறியாலே பாடும் கவிகளுக்கு அந்நெறியினாலே பெயர் வழங்கும். ஒட்டக் கூத்தர் கவுடப்புலவர் என்று கூறப்படுதல் காண்க. நெறிகளில் வைதருப்ப நெறியே யாவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடியது. (தமிழ்க்காப்பியங்கள், கி.வா.செ.);. நெறி6 neṟi, பெ. (n.) 1. சமயம் (கம்பரா. கோலங்.12);; religion, 2. சமயக் கொள்கைக் காகவோ தனி மனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட முறை (விதி);; precept, rule, principle. “நாஅல் வேத நெறிதிரியினும்” (புறநா. 2);. இறுதிவரை சிவ நெறியைக் கடைப்பிடித்தார் 3. நல்லொழுக்கம்; path of virtue, righteousness. நெறிதப்புவார்க்கு அறிவிப்பது வீண் (பழ.); 4. செய்யுணடை; style of poetic composition. “எய்திய நெறி” (தண்டி. 12);. 5. குலம்; line, lineage. “மதிநெறி மாதை வேட்பான்” (திருவாலவா. 4:24); 6. சூழ்ச்சி (உபாயம்);; method means. “நெறி காட்டி நீக்குதியோ” (திவ்.இயற்பெரியதி. 6);. 7. கோயில் (யாழ்.அக.);; temple. 8. வீடுபேறு (அக.நி.);, salvation. 9. மனநிலை (வின்.);; state of mind, temper. 10. ஆணை, ஆளுகை; rule, sovereignty. “குடபுல வரசர்கனெறி செய்து” (திருவிளை. அன்னக்குழி, 20);. 11. குதிரை முதலியவற்றின்நடை; pace, as of a horse. “நெறியைந்து மோங்க” (திருவாலவா. 28:34);. 12. வரிசை (வின்.);; order, row, series. 13. அறம், முறைமை (நீதி); (சூடா.);; justice. ம. க. நெறி. நெறி7 neṟi, பெ. (n.) நெறிக்கட்டி (உ.வ.);; inflammation of the gland. “தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டினது போல” (பழ.); [நெரி → நெறி. இது ர- றகரப் பிழைத்திரிபு] கை கால்களில் காயங்கள் உண்டானால் தொடையிடுக்கிலும், அக்குளிலும் எழும் கட்டி போன்ற அமைப்பு. நெறி8 neṟi, பெ. (n.) 1. தாழ்ப்பாள் (கட்டட. நாமா);; bolt staple. 2. மண்டைக்குழி (வின்.);; temples. 3. புறவித ழொடிக்கை; stripping flower of its calyx. “முழுநெறிப்பகைத் தழை.” (அகநா.156);. [நெரி → நெறி] |
நெறி-த்தல் | நெறி-த்தல் neṟittal, செகுன்றாவி (n.) சோளம், கேழ்வரகு முதலியவற்றை மாவாக்குதல்; grinding cerials. சோளம் நெறித்துக்கொடு (உவ.);. [நுறு-நெறு-நெறி] |
நெறிகட்டி | நெறிகட்டி neṟigaṭṭi, பெ. (n.) நெறிக்கட்டி (ML);. பார்க்க;see neri-k-kați. [நெறி2 + கட்டி.] |
நெறிகாட்டுநாதர் | நெறிகாட்டுநாதர் neṟikāṭṭunātar, பெ. (n.) திருக்கூடலையாற்றுர் இறைவன்பெயர்; a god in Thirukkudalai-y-arrür. [நெறி (=வழி); + காட்டு + நாதர்] திருக்கூடலையாற்றுார் என்பது திருப்புறம்பயம், திருமுது குன்றம் இடையில் உள்ள ஊர். தேவாரப் பாடல் பெற்ற தலம். இங்குள்ள இறைவன் பெயர் நெறிகாட்டு நாதர் திருஞானசம்பந்தர் திருப்புறம் பியத்திலிருந்து திருமுது குன்றத்துக்குச் செல்கையில் எதிரில் மறையவர் கோலத்தில் வந்த இறைவனை அறியாது திருமுது குன்றத்துக்கு வழி கேட்க இறைவனும் ‘இவ்வழி திருக்கூடலை யாற்றுாருக்குச் செல்கிறது” என்றுகூறி வழி (நெறி காட்டித் தாமும் ஊரெல்லை வரை சென்று மறைந்தார் என்பர். இதனால் இவ்வூரில் உள்ள இறைவர்க்கு இப்பெயர் வந்தது. (சி.பெ.அ.); |
நெறிகேடன் | நெறிகேடன் neṟiāṭaṉ, பெ. (n.) நெறிகெட்டவன்; the person having immoral qualities. [நெறி + கேடன். கேடு → கேடன்.] [நல்வழியில் வாழ்வை அமைத்துக் கொள்ளாதவன்.] |
நெறிகேடு | நெறிகேடு neṟiāṭu, பெ. (n.) 1. முறைகேடு (அநீதி);; injustice. 2. தீயொழுக்கம்; immorality. [நெறி4 + கேடு.] “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஒம்பப் படும்” (குறள். 131.); பெண்ணுக்குப் கற்புப் போல ஆணுக்கு ஒழுக்கம் உயிர்போல் காக்க வேண்டும். காவாவிடின் உயிர்போம்;எய்ப்பு (எய்ட்ஸ்); நோய்வருமென்று அறிக. |
நெறிக்கட்டி | நெறிக்கட்டி neṟikkaṭṭi, பெ. (n.) புண் கட்டிக்காக உடற்சந்துகளிலுண்டாகும் புடைப்பு (M.L.);; inflammation of the lymphatic gland. [நெரி → நெறி + கட்டி.] உடலில் உண்டாகும் புண், கட்டி போன்ற வற்றின் கரணியாமாக தோள்மடிப்பு தொடைச் சந்துகளில் உண்டாகும் கட்டி போன்ற அமைப்பு. |
நெறிக்கட்டிக்காய்ச்சல் | நெறிக்கட்டிக்காய்ச்சல் neṟikkaṭṭikkāyccal, பெ. (n.) புண் அல்லது கட்டி அல்லது யானைக்கால் நோய் அல்லது யானைப் பிடுக்கு நோய் காண்பதற்கு முன், இரண்டு அக்குள் அல்லது இரண்டு தொடைச்சந்திலும் கட்டி ஏற்படுவதால் உண்டாகும் காய்ச்சல்; filarial fever;fever accompanying the swelling of the lymphaglands. நெறிக்கட்டிக் காய்ச்சலால் நேற்றுமுழுவதும் துன்பப்பட்டான். [நெறிக்கட்டி + காய்ச்சல்.] |
நெறிக்கட்டிச்சுரம் | நெறிக்கட்டிச்சுரம் neṟikkaṭṭiccuram, பெ. (n.) நெறிக்கட்டிக் காய்ச்சல் பார்க்க;see ners-k-kaff-k-kāyccal. [நெறி + கட்டி + சுரம்.] |
நெறிக்கட்டிவீக்கம் | நெறிக்கட்டிவீக்கம் neṟikkaṭṭivīkkam, பெ. (n.) நெறிக்கட்டி (M.L.); பார்க்க;see merk-kaff. [நெரிக்கட்டி → நெறிக்கட்டி + வீக்கம்.] |
நெறிக்கட்டு | நெறிக்கட்டு neṟikkaṭṭu, பெ. (n.) நெறிக்கட்டி (M.L.); பார்க்க;see ner-k-kal. [நெரி → நெறி + கட்டு.] |
நெறிக்கல் | நெறிக்கல் neṟikkal, பெ. (n.) சுக்காங்கல் (யாழ்.அக.);; kunkur. [நெறி2 + கல்.] |
நெறிக்காய்ச்சல் | நெறிக்காய்ச்சல் neṟikkāyccal, பெ. (n.) நெறிக்கட்டிக்காய்ச்சல் பார்க்க;see ner-kКаlуi-к-Каусса! [நெறி + காய்ச்சல்.] |
நெறிக்குணம் | நெறிக்குணம் neṟikkuṇam, பெ.(n.) 1. பித்துக்குணம்; mad quality. 2. முரட்டுக குணம்; eccentric. 3. கழிகாமம்; lusty. [வெறி + குணம்] |
நெறிக்கோரை | நெறிக்கோரை neṟikārai, பெ. (n.) நெரிக்கோரை (வின்.); பார்க்க;see meri-kkõrai. [நெறி + கோரை.] |
நெறிசெய்-தல் | நெறிசெய்-தல் neṟiseytal, 1 செ. குன்றாவி. (v.t.) 1. நல்வழிப் படுத்துதல்; to lead in righteous path. “நெறிசெய்தருளி…. என்னை” (திருவாச. 13:8);. 2. ஆளுதல்; to reign. Sway. “குடபுல வரசர்க னெறி செய்து” (திருவிளை. அன்னக்குழி. 20); [நெறி4 + செய்-தல்.] |
நெறிதவறிநட-த்தல் | நெறிதவறிநட-த்தல் neṟidavaṟinaḍaddal, 3 செ. கு. வி. (v.i.) முறை தவறி நடத்தல்; to behave badly. நெறி தவறி நடந்தால் வாழ்வில் முன்னேற முடியாது. [நெறிதவறி + நட-த்தல்] வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டிய வழியில் அல்லாமல் முறைதவறிய வழியில் நடத்தல். நெறி தவறாமல் முறையான வழியில் நடப்பதால் அடையும் பயனைத் திருவள்ளுவர் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும், தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள், 50);. என்று கூறுகிறார். |
நெறிதவறிய நடத்தை | நெறிதவறிய நடத்தை neṟidavaṟiyanaḍaddai, பெ. (n.) தவறான நடத்தை; mis-conduct. செங்கோல் நெறி தவறிய நடத்தையால் நெடுஞ்செழியன் தானே இறந்தான். [நெறிதவறிய + நடத்தை. முறையற்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு நடத்தல்.] பசி, காமம் என்னும் இயற்கைப் பண்புகளுக்கு உரிய தீர்வுகளை அடையும் நடைதவறும் குறுக்குவழி, நடத்தை. |
நெறித்தழை | நெறித்தழை neṟittaḻai, பெ. (n.) தழை ஆடை; leaf cloth, foliage cloth. “கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ” (நற். 96);. “அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை” (குறுந்.293);. [நெறி + தழை. நெறிதல் = அடர்தல், நெருங்குதல்.] நூலாடைக்கு முன்னர் மாந்தர்இலை, தழைகளை முறையாக முன்பின் திறவாமல் இருக்கும்படி கட்டிய ஆடை என்றுணர்க. |
நெறிநீர் | நெறிநீர் neṟinīr, பெ. (n.) கடல்; sea. “நெறிநீர் வளையும் நிழனித்திலமும்” (சீவக. 1522);. [நெறி + நீர்.] உலகக்கோளத்தில் 70 விழுக்காடு பரப்பில் தேங்கியுள்ள கடல், அலையடித்தாலும் கரைகடவாது, நெறியோடு நிற்றல் காண்க. காற்றழுத்த மண்டிலத்தால் புயல் வருங்கால் நீர்கடத்தல் நெறி (விதி); விலக்கு. |
நெறிநெட்டி | நெறிநெட்டி neṟineṭṭi, பெ. (n.) நெரி நெட்டி (உ.வ.); பார்க்க;see ner-netti. [நெளிநெட்டி → நெறிநெட்டி.] |
நெறிநெட்டிக்கோரை | நெறிநெட்டிக்கோரை neṟineṭṭikārai, பெ. (n.) நெரிக்கோரை (சங்.அக.); பார்க்க;see ners-k-köraj [நெறி + நெட்டிக்கோரை, கோரைவகை.] |
நெறிபடு-தல் | நெறிபடு-தல் neṟibaḍudal, 20 செ. கு. வி. (v.i.) நெருங்குதல்; to be close together. “எறிவளி கமழு நெறிபடு கூந்தல்” (குறுந். 199);. “நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு” (பதிற்றுப். 67:15);. “நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த” (நற்.368);. [நெறி1 + படு-தல்] |
நெறிபு | நெறிபு neṟibu, பெ. (n.) நெறிப்பு2 பார்க்க;see merippu. “சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந் தனகொல்” (அகநா.117:14); [நெறிப்பு → நெறிபு-இஃது இடைக்குறை] |
நெறிபொறி | நெறிபொறி neṟiboṟi, பெ. (n.) முனைப்புச்செயற்பாடு; intense activity. வேலையின் நெறிபொறி (நெல்லை);. [நெறி2 + பொறி] |
நெறிப்படு-தல் | நெறிப்படு-தல் neṟippaḍudal, 20 செ. கு. வி. (v.i.) 1. ஒழுங்கு படுதல்; to be put in order, to be kept within bounds. “நெறிப்படக் கவலசைஇ” (கலித்.9);. “மற்றவர் குறிப்பிற் கண்டிசின் யானே நெறிப்பட வேலும் இலங்கிலை துடைப்ப” (நற்.177);. “நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றமுஞ் சிறிய” (நற்.368);. “கைவள் ளோரி கானந் தீண்டி எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்” (குறுந் 1994);. “நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு வளை தலைமாத்த தாழ்கரும் பாசவர்” (பதிற் 67:15);. நெறிப்பட பொருள்களை வைக்க வேண்டும். 2. நல்லொழுக்கத்தில் நிலைபெறுதல்; to be established in a good moral or religious course. 3. ஒன்றன் வழிப்படுதல்; to follow one’s lead. யாற்றுப் பெருக்கின் நெறிப்பட்ட புணை. 4. உள்ளடங்குதல்; to come under one’s power or control. [நெறி + படு-தல். படுதல் = அகப்படுதல். நிலைபெறுதல், ஒழுங்காதல் இது தன்வினை.] |
நெறிப்படுத்து-தல் | நெறிப்படுத்து-தல் neṟippaḍuddudal, 5 செ.கு.வி. (v.i.) வழிமுறைக்கு உட்படுத்துதல்; operate in a particular way. [நெறி + படுத்து-தல். இதுபிறவினை] |
நெறிப்பிறழ்வு | நெறிப்பிறழ்வு neṟippiṟaḻvu, பெ. (n.) கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க முறையில் இருந்து மாறுகை; delinquency. [நெறி + பிறழ்வு. நிற்க வேண்டிய, கடை பிடித்து நடக்க வேண்டிய முறையினின்று தவறுகை.] முற்காலத்தில் நெறிப்பிறழ்வு என்பது அறவழிதவறி நடக்கும் நடத்தை என்றும், அதற்குச் செய்ய வேண்டியது தண்டனை தருவது ஒன்றே என்றும் கருதப்பட்டு வந்தது. நாளடைவில் பலவகைக் கரணியங்கள் அறியப்பட்டன. இந்தக் கரணியங்களை மரபு நிலையின (Heridatary); என்றும், சூழ்நிலையின (Environmental); என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இவை யிரண்டும் ஒன்றொடுஒன்று தொடர்புடையன. ஒன்றையொன்று மாற்றுவன. சூழ்நிலையில் வீட்டுநிலைமை, பாட சாலையில் கற்றவை, அக்கம்பக்கத்து நிலைமை, பொருளியல் நிலைமை, கற்கும் விளையாட்டுகள், சேரும் நண்பர்கள் ஆகியவை அடங்கும். வறுமையும் நெறிப்பிறழ்வுக்கு ஒரு முதன்மைக் கரணியம். வறியவர் வீட்டுக் குழந்தைத் திருடவாய்ப்பிருக்கிறது. ஆளுமை பற்றிய நெறிப்பிறழ்வு கரணியம் இருவகைப்படும். உடல்பற்றியவை: உள்ளம் பற்றியவை. உடல்பற்றியவையின் குடிவழியில் (பாரம்பரியம்);, உடற் குறைகள், சுரப்புக்களின் குறைகள் என்பன அடங்கும். இவற்றால் மட்டுமே நெறிப்பிறழ்வு உண்டாகிவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நல்ல இயல்புகள் இல்லாதபோது இவை மிகுந்த முதன்மையான கரணியங்களாக ஆகிவிடுகின்றன. உள்ளம் பற்றியவை என்பன உள்ளத்தில் உண்டாகும் முரண்பாடுகளும், அவற்றால் உருவாகும் ஆளுமைப் பண்புகளுமாம். மனிதனுக்குப் பாதுகாவல், அன்பு, மதிப்பு போன்ற பல தேவைகள் உள்ளன. அவற்றை முழுமை செய்யாவிடில் அவை முழுமையாக வேறுவழிகளைத் தேடும். ஆளுமைப்பண்பும் (personality); முதன்மை யானது. ஆளுமைப்பண்பை உளவியலார் புறமுகன் textrovert); srsirgjith, gjengpässir (introvert); sisirglih இருகூறாகப் பிரிந்துள்ளனர். புறமுகன் உரத்தகுரலில் வெளிப்படையாகப்பேசி, நண்பரோடு சேர்ந்து இயங்கி, ஊரில் இன்ப நிகழ்ச்சியோ, துன்ப நிகழ்ச்சியோ நடந்தால் பங்கேற்பான். அகமுகன் இப்பண்புகளுக்கு மாறானவனாக இருப்பான். இருவரும் தம் பண்பில் வழிமாறினால் நெறிப்பிறழ்வே குடும்பத்திலும், சூழ்நிலை யிலும் ஏற்படும் குறைகளால் ஆளுமை வளர்ச்சிக்குத் தடை உண்டாகுமாயினும் நெறிப்பிறழ்வு தோன்றும். நெறிப்பிறழ்வைத் தடுப்பதற்குப் பெற்றோர்கள் தக்க கல்வி தருவது இன்றியமையாததாகும். எந்த வகையிலும் நெறிப்பிறழ்வு உண்டாகாமல் தடுப்பது குமுகாயத்தின் முதற் கடமையாகும். நெறிப்பிறழ்வு உண்டாவதன் கரணியத்தைக் கண்டுபிடித்து அதை நீக்குவதற்கேற்ற செயல்களைச் செய்தல் வேண்டும். |
நெறிப்பு | நெறிப்பு1 neṟippu, பெ. (n.) 1. புருவத்தை வளைக்கை; knitting of the brows. “பேரண்ட மனைத்தும் புருவச்சிறு நெறிப்பாற் குமைக்கும் பெருமான்” (விநாயகபு. 33:13);. 2. நிமிர்ந்திருக்கை; standing erect, bristling, stiffness. 3. செருக்குக் கொள்கை (அகங்ரிக்கை); (வின்.);; insolence, haughtiness. [நெறி2 → நெறிப்பு.] நெறிப்பு2 neṟippu, பெ. (n.) 1. சிலிர்ப்பு; sprouting. 2. முரிப்பு; break: (சா.அக.); 3. பெண்டிரின் மயிர் நெறிப்பு; curl and woman’s hair. [நெறி → நெறிப்பு.] |
நெறிமணல் | நெறிமணல் neṟimaṇal, பெ. (n.) 1. கருமணல்; black sand. “நெறி மண னேடினர் செல்லச் சொல் லேற்று” (பரிபா 20:43); 2. நுண்மணல்; fine sand. [நெறி + மணல்.] |
நெறிமயிர் | நெறிமயிர் neṟimayir, பெ. (n.) சிலிர்த்தமயிர்; hair standing on ends. (சா.அக.);. [நெறி + மயிர்] |
நெறிமருப்பு | நெறிமருப்பு neṟimaruppu, பெ. (n.) எருமை மான் முதலியவற்றின் முடங்கின கொம்பு; curved horn. “நெறிமருப் பெருமை” (ஐங்குறு.91:1);. “துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு, ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்து” (அகநா.3162); [நெறி1 + மருப்பு. மருப்பு = கொம்பு. கலைமான் என்னும் ஆண்மான் நெறிமருப்பு உடையது.] |
நெறிமாணவையம் | நெறிமாணவையம் neṟimāṇavaiyam, பெ. (n.) அறத்தைத் தெளியவுணர்ந்த ஒழுக்கத்தில் சிறந்த அவைக்களம்; assembly of gracious persons. “அறமறக் கண்ட நெறிமா னவையத்து” (புறநா.224); [நெறிமாண் + அவையம். நெறிமான் → நெறிமாண். நெறிமாண் = அறங்கூறும் அவை] |
நெறிமான் | நெறிமான் neṟimāṉ, பெ. (n.) அறங்கூறுவோன் (நீதிமான்); (யாழ். அக.);; person of integrity, just man. நெறிமான் வரும்வரை கூட்டம் கலையாது காத்திருந்தது. [நெறி + மான். ஆன், ஆர் போல மான், மார் ஒருமை பன்மைக்கு ஆதல் காண்க.] |
நெறிமாறு-தல் | நெறிமாறு-தல் neṟimāṟudal, 5 செ.கு.வி. (v.i.) வழிதப்புதல்; to lose one’s way. “நொந்து நெறிமாறி வந்த விருந்தும்” (திரிகடு.69);. [நெறி4 + மாறு-, மாறுதல் = வேறுபடுதல், நீங்குதல்] |
நெறிமுதல் | நெறிமுதல் neṟimudal, பெ. எ. (adj.) வழியின் கண்ணே உள்ள; way side. “குறுநடை பலவுள் ளலமே நெறிமுதல் கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி” (குறுந்.209);. “நீர்மருங் கறியாது நேர்மருங் கோடி யறுநீ ரம்பியி னெறிமுத லுணங்கு”(அகநா. 29:18);. “பரலவல் படுநீர் மாந்தித் துணையோ டிரலை நன்மா னெறிமுத லுகளும்” (குறுந் 250:2);. [நெறி + முதல். நெறி = வழி.] |
நெறிமுறை | நெறிமுறை neṟimuṟai, பெ. (n.) செயற்படும் போது பின்பற்றுவதற்கென வகுக்கப்பட்ட வழிமுறை; proper method. சாலை நெறிமுறையைக் கடைப்பிடித்து வண்டியை ஒட்டவேண்டும். ஆய்வு நெறி முறைகள். [நெறி + முறை. நெறி = வழி] |
நெறிமுறைமை | நெறிமுறைமை neṟimuṟaimai, பெ. (n.) அறவழி (நியாயவழி); (வின்.);; rules of propriety, rectitude or equity. [நெறி4 + முறைமை.] |
நெறிமை | நெறிமை neṟimai, பெ. (n.) 1. முறை (விதி);; rule. “நிதியினை… நெறிமையால் நினைய வல்லார்” (திவ். திருக்குறுந். 1);. “நெறிமையினான்காய் வருநிரையசையே” (யா.கா.உறுப்.2. உரை); 2. நன்னெறி; rectitude honesty. 3. வழக்கு; usage, literary usage. “எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான” (தொல். பொருள். 35);. [நெறி → நெறிமை] |
நெறியரு நீள்சுரம் | நெறியரு நீள்சுரம் neṟiyarunīḷcuram, பெ. (n.) கடத்தற்கரிய பாலை நிலம்; desert. “சிறுபுன் புறவொடு சிற்றெழால் சிறும் நெறியரு நீள்சுரத்து அல்குவர் கொல் தோழி” (தி. மொ. 15);. [நெறி + அரு + நீள்சுரம். அரு = அரியதான. நீள்சுரம் = நீண்டபாலை நிலம்] |
நெறியறஞ்செய்வார் | நெறியறஞ்செய்வார் neṟiyaṟañjeyvār, பெ.(n.) அசோகன் காலத்தில் புத்தமதம் பரப்புவதற்காக அமர்த்தப்பட்ட தர்மமகா மாத்திரர் என்னும் துறவிகள்: Dharma maha matras of Asokan period. [நெறி+அறம்+செய்வார்] களப்பிரர் காலக் கல்வெட்டில் இடம் பெற்ற இச்சொல்லாட்சி வேற்று மொழிச்சொற்களை உடனுக்குடன் தமிழாக்கிக் கொண்ட வழக்கத்தைக் காட்டுகிறது. |
நெறியாணங்கை | நெறியாணங்கை neṟiyāṇaṅgai, பெ. (n.) சிறியாணங்கைச்செடி; a species of small milkwort, Polygala glabra. (சா.அக.);. [நெறியாள் + நங்கை; சிறியாள் + நங்கை. நங்கைச்செடி] |
நெறியாளர் | நெறியாளர் neṟiyāḷar, பெ. (n.) 1. ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்; guide for one’s doctorial dissertation. முனைவர் பட்டத்திற்குச் சரியான நெறியாளர் அமையவேண்டும். 2. நாடக, திரைப்பட இயக்குநர்; drama, film director. இந்த நாடகத்தின் பொருளாளரும் நெறியாளரும் ஒருவரே. [நெறி → நெறியாளர்.] |
நெறியாள்கை | நெறியாள்கை neṟiyāḷkai, பெ. (n.) நாடகம், திரைப்படம் போன்றவற்றின் இயக்கம்; direction of a film, drama, etc. [நெறி + ஆள்கை. ஆள்கை = ஆட்சிச்செய்வது, ஆளுவது, இயக்குவது.] |
நெறியிருங்கதுப்பு | நெறியிருங்கதுப்பு neṟiyiruṅgaduppu, பெ. (n.) நெறிப்பினையுடைய கரிய கூந்தல்; long, flowing tresses of a woman. “நெறியிருங் கதுப்பொடு பெருந்தோணிவி” (குறுந். 190);. “நுண்ணறல் கடுக்கு நெறியிருங் கதுப்பினென் பேதை” (அகநா. 35);. “நெறியிருங் கதுப்பும் நீண்ட தோளும்” (நற். 387);. [நெறி + இரும் + கதுப்பு. நெறி = வளைவு சுருள். இரும் = இருண்ட, கரிய. கதுப்பு = கூந்தல், தலைமயிர்.] |
நெறியிலார் | நெறியிலார் neṟiyilār, பெ. (n.) 1. கீழ்மக்கள்; lowmen; persons inferior in status. 2. கேடர். ruined, miserable men. [நெறி + இலார். இல்லார் → இலார்.] நெறியிலார் neṟiyilār, பெ. (n.) நல்லொழுக்க மில்லாதவர் (உரி.நி.);; lawless or immoral persons. [நெறி + இல் + ஆர். இல்-எதிர்மறை இடைநிலை. ‘ஆர்’-உயர்வுப்பன்மை] |
நெறியிலி | நெறியிலி neṟiyili, பெ. (n.) கெட்ட வழியில் நடப்போன்; vicious man. [நெறி + இலி. நெறிமுறையில்லாதவன். ஒ. நோ. அறிவு + இலி = அறிவிலி] |
நெறியுரை | நெறியுரை neṟiyurai, பெ. (n.) அறவுரை; motto. [நெறி + உரை.] |
நெறியோன் | நெறியோன் neṟiyōṉ, பெ. (n.) பெரியோன் (அக.நி.);; great, noble-minded man. [நெறி → நெறியோன்.] நெறியோன் இயல்பு : “இன்னசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. (குறள். 314);. ‘இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு” (குறள், 987);. |
நெறிவிடம் | நெறிவிடம் neṟiviḍam, பெ. (n.) 1. கொடிய நஞ்சு; virulent poison. 2. நஞ்சற்ற நாபிக்கிழங்கு; non-poisonous aconite root-Delphinium denudatum. (சா.அக.);. [நெறி + Skt.விடம் = த. நஞ்சு.] |
நெறிவிலக்கல் | நெறிவிலக்கல் neṟivilakkal, பெ. (n.) வழியின் ஏதமுணர்த்தி இரவில் அவ்வழியே தலைவியிடம் வருதல் தகாதெனத் தோழி தலைவனை விலக்கும் அகத்துறை (மாறனலங். 101, உரை, பக்.148);; theme in which the hero is pointed out the danger of the way he treads during night in meeting the heroine clandestinely and is dissuaded by the maid from that course. [நெறி + விலக்கல். நெறி = வழி. விலக்கல் = நீக்கல், தடுத்தல்.] |
நெறு | நெறு neṟu, பெ. (n.) ஒசை (அக.நி.);; sound noise. |
நெறுக்கிடல் | நெறுக்கிடல் neṟukkiḍal, பெ. (n.) நெறுக்கென்று ஒடிகை (யாழ்ப்.);; snapping. [நெறு → நெறுக்கு + இடல். நெறு = ஒசை நெறுக்கென்று ஒசை கேட்கும்படி ஒடிதல். நெருக்கு → நெறுக்கு – பிழைவழக்கு.] |
நெறுக்கெனல் | நெறுக்கெனல் neṟukkeṉal, பெ. (n.) ஒடிதல், முறிதல் முதலியவற்றால் உண்டாம் ஒலிக் குறிப்பு; onom. expr. signifying snapping sound. “கயிலையைப் பற்றிய கையுமெய்யும் நெறுக்கென்றிற” (தேவா. 587.10);. [நெறு → நெறுக்கு + எனல்] |
நெறுநெறு-த்தல் | நெறுநெறு-த்தல் neṟuneṟuttal, 4 செ. கு. வி. (v.i.) 1. பல்லைக் கடித்தல்; to nash one’s teeth. அச்சமிகுதியால் நெறு நெறுவென்று பல்லைக் கடித்தான். 2. ஒலிபடப் பிளவுறுதல்; to snap, as a stick in breaking. முருங்கைமரம் நெறுநெறுவென முறிந்தது. 3. உறுமுதல்; to growl, rumble. 4. நெரிந்தொலித்தல்; to sound as the biting of a hard, brittle or crispy substance. [நெறு = ஒசை. நெறு + நெறு – நெறுநெறு → நெறுநெறு-த்தல்.] |
நெறுநெறெனல் | நெறுநெறெனல் neṟuneṟeṉal, பெ. (n.) 1. ஓசைக்குறிப்பு; crashing sound. “நெறுநெ றெனக்கொடு நிலவறையிற்புக நெடியவன்” (பாரத. கிருட்டின. 191);. 2. முறிதற் குறிப்பு; snapping or breaking sound. “அகர நிறைகளவை நெறுநெறென வெறிய” (திவ்.பெரியதி 5:10:4);. [நெறுநெறு + எனல்] |
நெறுமு-தல் | நெறுமு-தல் neṟumudal, 5 செ. கு. வி. (v.i.) & செ.குன்றாவி, (v.t.); நெருமு-(யாழ்.அக.); பார்க்க;see nerumu-. [நறுமு → நெறுமு. நறுமு = பல்லால்கடித்தல், பல்லைக்கடித்தல்.] |
நெற்கடமை | நெற்கடமை neṟkaḍamai, பெ. (n.) நெல்வரி பார்க்க;see nel-vari. [நெல் + கடமை-நெற்கடமை = நெல் விற்பவரிடம் வாங்கும் வரி. இது நெல்லாகவே பெறப்படும். கடம் = கடமை, முறைமை, கடு – கடன்- கடம். கடு = விரைவு, விரைந்து செய்தல். கடன் = விரைந்து செய்யத்தக்க பணி. கடமை = விரைந்து கட்டாயம் செய்ய வேண்டியபணி.] |
நெற்கடை | நெற்கடை1 neṟkaḍai, பெ. (n.) ஒரு நெல்லளவு கொண்ட இடம்; space occupied by a paddy. இந்தச் சொத்திலிருந்து நெற்கடை அளவு இடம் கூட உனக்குக் கிடைக்காது. (சா.அக.); [நெல் + கடை. கடை = இடம்.] நெற்கடை2 neṟkaḍai, பெ. (n.) பத்தொன்பதாம் விண்மீனாகிய குருகு (மூலம்); (அக.நி.);; the 19th naksatra. |
நெற்கணக்கு | நெற்கணக்கு neṟkaṇakku, பெ. (n.) நெல்லளவை வாய்பாடு (யாழ்.அக.);; table of dry measure for paddy. இப்போதைய வாய்பாட்டுநூலில் நெற்கணக்கு வாய்பாடு இல்லை. [நெல் + கணக்கு. குள் → கள் → கண் → கண → கனகு → கணக்கு = அளவு, எண், தொகை, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் முதலிய அளவீடு. அதற்கொரு கணக்கில்லை, கணக்கு வழக்கற்றுக் கிடக்கிறது என்னுந்தொடர்களில், கணக்கு என்னுஞ் சொல் அளவைக் குறித்தல்காண்க. நெல் தமிழ்நாட்டில் முகத்தலளவைக்கும், நிறுத்தல் அளவைக்கும் அடிப்படைப் பொருளாக இருந்திருக்கின்றது.] முகத்தலளவை 360 நெல் = 1 செவிடு (செவி+இடு); 5 செவிடு = 1 ஆழாக்கு (அரை உழக்கு → ஆழாக்கு); 2 ஆழாக்கு = 1 உழக்கு 2 உழக்கு = 1 உரி 3 உழக்கு = மூவுழக்கு 2 உரி = 1 நாழி 8 நாழி (படி); = 1 குறுணி (மரக்கால்); 2 குறுணி = 1 பதக்கு 3 குறுணி = 1 முக்குறுணி 2 பதக்கு (4 குறுணி); = 1 தூணி 2 தூணி = 8 குறுணி (குறு + உணி); 3 தூணி = 1 கலம் 5. மரக்கால் = 1 பறை 80 பறை அல்லது 400 மரக்கால் = 1 கரிசை நிறுத்தலளவை 1 நெல்லெடை = 1 வீசம் (வீசு + அம்); 2 வீசம் = 1 பிளவு 2 பிளவு = 1 குன்றிமணி 2 குன்றிமணி = 1 மஞ்சாடி (மஞ்சு+ஆடி); 2 மஞ்சாடி = 1 பணவெடை 5 மஞ்சாடி = 1 கழஞ்சு 2 கழஞ்சு = 1 கஃசு (1/4 பலம்); 4கஃசு = 1 பலம் 100 பலம் = 1 தூக்கு 2 தூக்கு = 1 துலாம் 32 துலாம் = 1 பாரம் 2 துலாம் = 1 பிசு 32 குன்றிமணி = 1 வாரகனெடை 9 வராகனெடை = 1 ஒஞ்சை 9 ஒஞ்சை = 1 சேர் 16 மஞ்சாடி = 1 வாரகனெடை 9 பணவெடை = 1 பூவராகன் 10 பணவெடை = 1 கழஞ்சு 10 பணவெடை = 1/8 ரவை மஞ்சாடி 1 கழஞ்சு பழகம் 10 1/2 மாத்துடையது = தங்கம் 3 1/2 மாத்துடையது = வராகன் 1/16 வராகனெடை= iரதி(பச்சை); பழந்தமிழ்நாட்டில் இதே முகத்தல், நிறுத்தல் அளவைகளைக் கொண்டு அனைத்து வகைக் கூலங்களும் அளக்கப்பட்டன. நெற்கணக்குப் போலவே குதிரைக் கணக்கு ஒனான் கணக்கு யானைக் கணக்கு அடிகணக்கு, வெற்றிலைக் கணக்கு, நெல் விற்பனைக்கணக்கு பால்கணக்கு, முத்துக்கணக்கு, களவுகணக்கு, எண்ணெய்க் கணக்கு, மிளகு கணக்கு, பலகாரந் தின்ற கணக்கு மாம்பழக்கணக்கு, விளம்பழக் கணக்கு கற்பூரக் கணக்குப் போன்றவை களும் இருந்தன. (கணக்கதிகாரம்);. |
நெற்கனம் | நெற்கனம் neṟkaṉam, பெ. (n.) நெற்பருமன்; as thick as paddy. (சா.அக.); நென்மணி பருத்து இருந்தால் திடமான நல்ல நெல் என்று அழைப்பர். [நெல் + கனம்.] |
நெற்களஞ்சியம் | நெற்களஞ்சியம் neṟkaḷañjiyam, பெ. (n.) 1. நெல்லிட்டு வைக்கும் புரை (உ. வ.);; granary for paddy. பழங்கால வீடுகளில் நெற்களஞ்சியம் இருக்கும். 2. நெல் அதிகம் விளையும் இடம்; place where paddy is cultivated in abundance. தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம். [நெல் + களஞ்சியம். களஞ்சியம் = தவசம் சேமித்து வைக்கும் இடம், கலம், கருவூலம், சரக்கறை, பண்டசாலை, குறைந்தளவு நெல்லைச் சேமிக்குமிடத்தை குழுமை என்றும் அழைப்பர் கலைபற்றிய செய்திகள் சேமித்து வைக்கும் இடம், பொத்தகக் கலைக்களஞ்சியம் எனப்படும். சொற்கள் பற்றிய விரிவான் விளக்கங்கள் அனைத்து மொழிகளிலும் தொகுக்கப்பட்டுக் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டு வருகிறது.] |
நெற்கழி | நெற்கழி neṟkaḻi, பெ. (n.) நெல் சாகுபடி யாதற்கேற்ற ஒருவகைநிலம் (யாழ்.அக);; a kind of soil fit for paddy cultivation. அவன் பாகமாக நெற்கழி நாலுகாணி வந்தது. [நெல் + கழி. கழி = நிலம். கழிமுகம் = உப்பங்கழியை ஒட்டிய நிலப்பரப்பு, நன்செய்நிலப்பகுதி நீர்நிற்கும் நிலப்பரப்பு.] |
நெற்காணி | நெற்காணி neṟkāṇi, பெ. (n.) நெல் விளையும் நிலம் (யாழ்.அக.);; land in which paddy is cultivated. புன்செய்க்காணி நாலும் நெற்காணி ஒன்றும் அவன் பங்குக்கு வந்தன. [நெல் + காணி. காணி = நிலம்.”ஊரிலேன் காணியில்லை” (திவ். திருமாலை. 29);. காணி என்பது நில அளவைப் பெயராகவும், கீழ்வாய் இலக்க எண்ணாகவும் இருக்கின்றது. காணி = 400 குழி, காணி = 1/80] |
நெற்காரிகம் | நெற்காரிகம் neṟgārigam, பெ. (n.) கருங்குறுவை; red rice having husk. (சா.அக.);. [நெல் + காரிகம். தோல் மெல்லிய கருமை படர்ந்து காவிநிறமுடைய அரிசியைக் கொண்டிருக்கும் நெல்வகை. இது மூன்று மாதப்பயிர்.] |