செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
நூ

நூ nū,      ‘ஞ’கர மெய்யொலியும் ‘ஊ’ கார உயிரொலியும் சேர்ந்தமைந்த உயிர்மெய் யெழுத்து;

 the compound of{‘fi} and{‘u’.}

     [ஞ் + ஊ- நூ]

 நூ1 nū,    நகர ஒற்றும் ஊ கார உயிரும் சேர்ந்து பிறக்கும் எழுத்து; the compound of ந் and ஊ.

     [ந் + ஊ-நூ]

தமிழ் நெடுங்கணக்கில் எட்டாவதாக அமையும் உயிர் மெய்யெழுத்தாகிய நகரத்தின் ஆறாவது எழுத்து.

 நூ2 nū, பெ. (n.)

   எள் (சூடா.);; sesame.

   தெ. நூ, நூவு, நுவு, நுவ்வு;   கொலா. நுவ்வூ;   நா. நுவ்வ்;கோண். நூநக்.

     [நூல் → நூ, நூல் = எள். எள் மிகக் சிறிய கூலமாதலால், நூ (நூல்); என பெயர் பெற்றது. எள்ளளவும் எள்ளத்தனையும், எட்டுனையும் என்னும் வழக்குகளை நோக்குக. (வே.க.);]

 நூ3 nū, பெ. (n.)

   யானை (அக.நி.);; elephant.

 நூ4 nū, பெ. (n.)

அணிகலன் (யாழ்.அக.);

 Ornament.

 நூ5 nūttal,    4.செ.கு.வி.(v.i.)

   நொதுத்தல்; to turn sour.

நூதனக்காரன்

நூதனக்காரன் nūtaṉakkāraṉ, பெ.(n.)

நூதனன், 3 (வின்.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. நூதனக்காரன்.]

நூதனன்

நூதனன் nūtaṉaṉ, பெ.(n.)

   1. புதியவன்; new- comer.

   2. புதியனவற்றில் விருப்பமுடையவன்; person fond of curiosities.

   3. புதிய செய்திகளை உண்டாக்குபவன்; innovator.

     [Skt. {} → த. நூதனன்.]

நூதனம்

நூதனம் nūtaṉam, பெ.(n.)

   1. புதுமை (திவா.);; newness, novelty, strangeness.

   2. புதியது; anything new, un common or extra- ordinary.

     “நொய்யப் பஃறுகி னூதனஞ் சாத்தினார்” (கந்தபு.தேவகிரி.26);.

     [Skt. {} → த. நூதனம்.]

நூதனம்விடு-த்தல்

நூதனம்விடு-த்தல் nūtaṉamviḍuttal,    20 செ.கு.வி. (v.i.)

   ஆர்வமான கதைகள் கூறி மகிழ்வித்தல் (j.);; to amuse with curious stories.

     [Skt. {} → த. நூதனம்+விடு-,]

நூதனி

நூதனி nūtaṉi, பெ.(n.)

   1. புதிய ஆள்; new comer, stranger, male or female.

   2. நூதனன், 3 பார்க்க;see {}. [Skt. {} → த. நூதனி.]

நூனதை

நூனதை nūṉadai, பெ.(n.)

   குறைவு; defect.

     “சிவனுக்கு… நூனதை ஆரோபித்தலின் சுவாமித் துரோகிகளாய்” (சிவசமவா.பக்.38);.

     [Skt. {} → த. நூனதை.]

நூனாதிகம்

 நூனாதிகம் nūṉātigam, பெ.(n.)

   குறை சொல்லுங் குணம் (வின்.);; finical criticism.

     [Skt. {} → த. நூனாதிகம்.]

நூபுரம்

நூபுரம் nūpuram, பெ.(n.)

கிண்கிணி எனும் காலணி a kind of ankle, “நாகச்சிரம் செய் நூபுரமும்வண்டும் சிலம்பொடு சிலம்பிஆர்ப்ப” (பால:22:22);.

     [நூவுரம்_நூபுரம்]

 நூபுரம் nūpuram, பெ.(n.)

   1. பாதகிண்கிணி (திவா.);; anklets formed of little bells.

   2. சிலம்பு (சூடா.);; tinkling anklets.

     “ஆடுவார் பொருவி னூபுரத்தை” (கம்பரா. நகர.56);.

     [Skt. {} → த. நூபுரம்.]

நூம்பல்

 நூம்பல் nūmbal, பெ.(n.)

   சைதாப்பேட்டை, வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in SaidapetTaluk,

     [நரம்பு-நாம்பல்→நூம்பல்]

நூரோலை

 நூரோலை nūrōlai, பெ.(n.)

   கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Kallakurichi Taluk.

     [நூரை+உலை]

நூற்பாநிலை

 நூற்பாநிலை nūṟpānilai, பெ. (n.)

   ஆற்றொழுக்கு அரிமா நோக்கு, தவளைப் பாய்ச் சல்,பருந்தின் வீழ்வு என நால்வகைப்பட்டதாய் நூற்பாக்கள் ஒன்றோடொன்று பொருளால் தொடர்ந்து நிற்கும்; position of sutras in a treatise as the guiding principle of interpretation four in number.

     [நூற்பா+நிலை]

நூற்றுவர்கன்னர்

 நூற்றுவர்கன்னர் nūṟṟuvarkaṉṉar, பெ.(n.)

   சாதவாகனர் என்னும் குடியினரின் தமிழ்ப் பெயர்; Tamil name of Satavahan class of Andra royal family.

     [நூறு→ நூற்றுவர்+கன்னர்]

நூல்

நூல் nūl, பெ.(n.)

   மரத்தை அறுக்க அளவு எடுக்கப்பயன்படும் அளவுமுறை; measuring method for finding the thickness of wooden planks.

     [நுல்-நூல்]

   நூல்-தல் எப். செ.கு.வி.(v.i.); இழுத்தல்; to pull.

க. நூல்

     [நூ-நூல்(இழுத்தல்);]

 நூல்1 nūl, பெ. (n.)

   1. பஞ்சிநூல்; yarn, cotton thread, string.

     “நூல் விரித் தன்ன கதுப்பினள்” (புறநா.159);.

காந்தியடிகள் இராட்டையால் நூல் நூற்றார். நூல் இல்லாமல் மாலை கோத்தது போல (பழ.);.

   நூல் நூற்கும் இராட்டை அல்ல;ஆடைநெய்யும் தறியல்ல அது என்ன? -சிலந்தி. (விடுகதை);.

   2. பூணூல்; sacred thread.

     “நூலே கரக முக்கோல் மணையே” (தொல்பொருள்.625);.

   3. மங்கல நாண்; the cord of the wedding badge.

     “தகுமகட் பேசினோன் வீயவே நூல் போன சங்கிலிபால்” (திருத்.திருவந்:69);.

   4. எற்றநூல் முதலியன; carpender’s or mason’s line.

     “பொல்லா மரத்தின் கனக் கோட்டந் தீர்க்குநூ லஃதேபோல்” (நன்.25);.

   5. பொருத்தனைக்காக தெய்வச் சிலைக்குக் (விக்கிரகம்); கட்டும் நூல் (R.C);; string tied round an image in token of a vow.

   6. ஆண்குறியிலுள்ள நரம்பு (யாழ்.அக.);; sinew in the private parts of a male.

   7. ஆண்குறி (யாழ்.அக.);; male organ.

   ம. க. நூல்;   தெ. து. நூலு;   கோத நுல்;   துட. நுசு (nu-s);: குட. நுலி;   கொலா. நுவ்;   பர். நூல்;   கட. நூல்;   கோண். நூல்;   கூ. நூடு;   குவி. லூலூ;குரு. நோஏநா.

     [நுல் → நூல் = நுண்ணிய இழை.

நூல் = நுண்மை, கூர்மை (வே.க.);]

நூல் என்பது பருத்தியிலிருந்து பெறப்படும் பஞ்சு இழைகளையோ, பட்டு இழை, ஆட்டு மயிர், சணல் நார், போன்றவற்றையோ முறுக்குவதால் பெறப் படுகிறது. செயற்கை முறையில் தோற்றுவித்த இழைகளை முறுக்கேற்றியும் நூல் செய்கின்றனர்.

 நூல்2 nūl, பெ. (n.)

   1. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கூறும் நூல் (சாத்திரம்);; systematic treatise, science.

     “ஒற்றுமுரை சான்ற நூலும்” (குறள்,581);.

நூல் கற்றவனே மேலானவன் (பழ.);.

   2. தோன்றியம் (ஆகமம்);; agama.

     “உரைநூல் மறை” (திவ் இயற்.1:5);.

   3. பண்டை நாடகத் தமிழ் நூல்களில் ஒன்று (சிலப்.உரைப்பா.பக்.9);; an ancient treatise on drama and dancing.

   4. கலந்தாய்வு (ஆலோசனை);

 deliberation.

     “ஏதில வேதிலார் நூல்” (குறள்,440);;

   ம. நூல்;க.தெ. து. நூலு.

     [நுள் → நூள் → நுவள் → நுவண் + அம் – நுவணம் = நுட்பம், மாவு, கல்வி நூல். நுவணை = நுட்பம், மாவு, கல்வி நூல், நூல் → நுவல். நூல் = நுண்ணிய பஞ்சிழை இழை போல் நீண்டு செல்லும் செய்யுள் அல்லது கல்வி நூல். ஒநோ. இழை → இழைபு = ஒருவகை நூல். Eyarn, a thread, a sailor’s story (spun out to some length);. Text = the original words of an author, Lit. ‘Something woven’ L.textus – texo, to weave, இனி நுவல் → நூல் என்றுமாம். பல் → பன் = சொல்லு, நூலிழு. சொல்லுக்குப் பல் தேவை.

     “பல்போனால் சொல் போகும்” என்பது பழமொழி. பல்லில்லா விடின் சொல்

தெளிவாயிராது. பன் → பன்னல் = கல்விநூல், பஞ்சுநூல், பஞ்சு, பருத்தி. பன்னல் – L.punnus, cotton. பன்னா — It panno, cloth.

     “பன் → பன்னு → பனுவல் = கல்விநூல், பருத்தி நூல். கல்வி நூலுக்கும், பருத்தி நூலுக்கும் நுண்மையிலும் நெடுமையிலும் ஒப்புமையுள்ளது. ஒரு நீண்ட செய்யுள் அல்லது நூல் ஒரு நீண்ட இழை போன்றி ருக்கின்றது. ஒருவன் வாயினின்று தொடர்ந்துவரும் சொல் ஒரு மொத்தைப் பஞ்சினின்று தொடர்ந்து நூற்கும் நூல் போல், அல்லது ஒரு சிலந்தியின் அல்லது பட்டுப்பூச்சியின் உடம்பினின்று வரும் நூல் போலிருக்கின்றது. நூற்றல் = நூலிழைத்தல். நுவல் = நூலுரை, உரை. பா = நெசவின் நெடுக்கிழை (wrap);;

செய்யுள் அல்லது செய்யுள் நூல். பா → பாவு → பாவுதல் = பரவுதல், பரப்புதல், நீட்டல்.

பஞ்சி நூற்பாள் பருத்திப் பெண்டு.

     “நூல் போறலின் நூல் என்ப பாவை போல் வாளைப் பாவை என்றது போல, என்னை? நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளாற் கைவல் மகடுஉத் தனது செய்கை நலந் தோன்ற ஒரிழைப் படுத்தலாம் உலகத்து நூல் நூற்றலென்பது. அவ்வாறே பரந்த சொற் பரவைகளாற் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியின் பிண்டம், படலம், ஒத்துச் சூத்திர மென்னும் யாப்பு நடைபடக் கோத்து நூற்கப் படலி னென்க” (இறைய.1);.

நெயவு நூலுக்கும் அறிவு நூலுக்கும் பலபெயர்கள் பொதுவாக உள்ளன. இரண்டும் ‘நூல்’ பெயர் பெற்றமைக்குக் கரணியத்தை

     “பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா – எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு” (நன்.24);.

எனவும்,

     “உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப் புரத்தின் வளமுருக்கிப் பொல்லா-மரத்தின் கனக்கோட்டந்திர்க்குநூல் அஃதே போல் மாந்தர் மனக்கோட்டம் தீர்க்குநூல் மாண்பு” (நன்.25);.

எனவும், உன்னித்துக் கூறினார் பவணந்தியார்.

பருத்தி நூலுக்கும் அறிவு நூலுக்கும் பனுவல் என்பது பொதுப்பெயர். இழைபு என்றொரு நூல்வகையின் இலக்கணம் தொல்காப்பியத்தில்,

     “ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியான் ஆங்ங்னம் ஒழுகின் இழையின் இலக்கணம் இயைந்த தாகும்” (தொல்.பொருள்.செய்.240);.

எனக் கூறப்பட்டுள்ளது. இழைபு என்னும் பெயர்

நூலை அல்லது இழைத்தலைக் குறிக்கும் இழை என்னும் சொல்லடியாய்ப் பிறந்ததாகும்.

பா என்பது, நெயவுப்பாவிற்கும் செய்யுட் பாவிற்கும் பொதுப் பெயர். ஆங்கிலத்திலும் நூற் பொருளைக் குறித்தற்கு நெசவுத் தொழிலினின்று text yarn என்னும் இருசொற்கள் எடுத்தாளப் பெறுகின்றன. (E text from L.Texre, weave);. நூல் மடியைக் குறிக்கும் yarn என்னும் சொல், ஒசுநர் (Sailors); கூறும் கதைக்குப் பொதுப்பெயராகும். அதை Sailor’s yarn என்பர்.

இங்ங்ணம் நூலும் நெயவும் பற்றிய சொற்கள் அறிவுநூலையும் செய்யுட்பாவையும் குறிக்க வருதலால், நெயவுத் தொழிலுக்கும் செய்யுள் தொழிலுக்கும் யாதேனும் ஒப்புமையுண்மை பெறப்படும்.

முதலாவது இருவகை நூலையும் நோக்கின், அவற்றுக்குப் பொதுவான நுண்மை, நீட்சி, நேர்மை என்னும் மூவியல்புகள் புலனாகும். பஞ்சினால் நெயவு நூலிழைப்பதுபோலச் சொல்லால் அறிவு நூலிழைத்தல் அல்லது சிலந்தி, பட்டுப்பூச்சி முதலியவற்றின் உடம்பினின்று வெளிவரும் நெயவு நூலைப் போலப் புலவனின் உள்ளத்தினின்று அறிவுநூல் வெளிப்படுதல், மற்றுமொரு பொதுத் தன்மையாகும்.

இரண்டாவது இருவகைப் பாவையும் நோக்கின், அவற்றிற்குப் பொதுவான நீட்சி, பரப்பு, இசைப்பு ஆகிய மூவியல்புகள் புலனாகும்.

நூல் என்பது காரணப் பெயர். ஒருவர் பஞ்சினால் நூல் நூற்றல் போல் ஒரு புலவன் சொற்களால் நூல் இயற்றுகிறான். நூலை நூற்பதற்குக் கதிர் கருவியாவது போலப் புலவனுக்கு அவன் அறிவு பயன்படுகிறது. (நன்.பொது.24);. இவ்வாறு ஒரு புலவன் செய்த நூல், ஒரு மரத்தை அறுக்கப் புகுமுன் அதன் கோணலைத் தீர்க்கப் பயன்படும் நூல்போலக் கற்போனுக்கு அறிவின் கோட்டத்தை நீக்கப் பயன்படுகிறது. (நன்.பொது.25);.

எனவே கற்று வல்ல அறிஞனாற் செய்யப் பெறுவதே நூலெனவும், அந்நூல் அறியாமையை நீக்க வல்லது எனவும் கொள்ளலாம். ஒரு புலவனுடைய அறிவாகிய உடம்பை அவன் நூலில் காணலாம். அது அவனுக்குப் புகழுடம்பாக அமைகிறது. நூலைப் படிக்கும் போது நூலாசிரியனையே காண்கிறோம்.

ஒரு நூல் என்பது ஆழ்ந்த கருத்துக்களைத் தெள்ளிய இனிய சொற்களால் அமைத்ததாக இருத்தல் வேண்டும். படிக்குந்தொறும் புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கும் நயமுடைய தாக இருக்கவேண்டும். தொல்காப்பியத்தில், நூல் என்பது முன்னுக்குப் பின் முரணின்றிப் பொருளைத் தொகுத்தும் வகுத்தும் கூறப் பெற்ற தாகவும், உள் நின்றகன்ற உரையொடு பொருந்தி யுமிருக்க வேண்டும் என்றும் (தொல்,பொருள்.478);, அது ஒரு பொருளைக் கூறும் சூத்திரமும், இனமான பொருளைத் தொகுக்கும் இயலும், பல பொருட்கும் பொதுவாகிய படலமும் ஆகிய மூன்று உறுப்பினை அடக்கியிருக்கும் எனவும் (தொல். பொருள்.480); நூலின் பொது விலக்கணங் கூறப் பெற்றுள்ளது. மற்றும் பத்துவகைக் குற்றமின்றிப் பத்துவகையழகுகளுடனும், முப்பத்திரண்டு வகை உத்திகளுடனும் நூல் வருமெனத் தொல்காப்பியர் மரபியலிலும் நூலுக்கிலக்கணம் கூறினார். (தொல்பொருள்.653);.

நன்னூலாசிரியர் தொல்காப்பியர் கருத்தைத் தழுவி மேலும் சிறிது விளக்கமாகப், பொதுப்பாயிரம், வழி சார்பு எனும் மூவகையுள் ஒன்றாய், அறம், பொருள், இன்பம், வீடு எனும் நால்வகைப் பொருட்பயன் தருவதாய், எழுவகைக் கொள்கை களையும் தழுவி வரும் என்றார்

     ‘நூலினியல்பே நுவலி னோரிரு பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய் நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ டெண்ணான் குத்தியி னோத்துப் படலம் என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை விருத்தியாகும் விகற்பநடை பெறுமே” (நன்.4);.

ஏழுவகைக் கொள்கை: பிறர் நூற் கொள்கையைத் தான் உடன்படல், மறுத்தல், மேற்கொண்டு ஒரு காரணத்தால் மறுத்தல், தன்கொள்கையை ஓரிடத்தில் நிலைநாட்டிப் பின் பலவிடத்தும் அதனைக் காட்டி நிறுத்தல், இருவர் மாறுகொண்ட கருத்தைக் கூறி ஒன்றை உடன்படல், பிறர்நூற் குற்றங்காட்டல், பிறர் கொள்கைக்கு உடன்படாமல் தன் கொள்கையையே வற்புறுத்தல் (நன்.11);.

நூலில் அமையக்கூடாத பத்துக்குற்றம் கூறியது கூறல், மாறுகொளக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருள் இலாதன கூறல், மயங்கக் கூறல், இனிமையல்லாத யாப்புடையதாதல், இழி சொற்களாற் புனைதல், ஆதாரமின்றித்தானே ஒரு பொருளைப் படைத்துக் கூறல், எவ்வகையினும் படிப்போர் மனங் கொள்ளாதவாறு செய்தல் (தொல்பொருள்.663);.

நூலில் அமைய வேண்டிய பத்தழகு, கருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், படிப்பவர்க் கினிமை, நல்ல சொற்களை யமைத்தல், இனிய ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல், பொருள் களை முறையுடன் அமைத்தல், உயர்ந்தோர் வழக்கத்துடன் மாறு படாமை, சிறந்த பொருள் உடைத்தாதல், விளக்கமான காட்டுகள் உடையதாதல் (நன்.13);.

முப்பத்திருவகை உத்திகளையும் நன்னூலும் (நன்.14);, தொல்காப்பியமும் (தொல். பொருள்.665); கூறுகின்றன.

நூலில் அமையும் உத்தி முப்பத்திரண்டு நுதலிப் புகுதல், ஒத்துமுறை வைப்பு, தொகுத்துச் சுட்டல், வகுத்துக் காட்டல், முடித்துக்காட்டல், முடிவு இடங்கூறல், தான் எடுத்து மொழிதல், பிறன்கோட் கூறல், சொற்பொருள் விரித்தல், தொடர்ச்சொற் புணர்த்தல், இரட்டுற மொழிதல், எதுவின் முடித்தல், ஒப்பின் முடித்தல், மாட்டெறிந்து ஒழுகல், இறந்தது விலக்கல், எதிரது போற்றல், முன்மொழிந்துகோடல், பின்னது நிறுத்தல், விகற்பத்தின் முடித்தல், முடிந்தது முடித்தல், உரைத்தும் என்றல், உரைத்தாம் என்றல், ஒருதலை துணிதல், எடுத்துக்காட்டல், எடுத்த மொழியின் எய்த வைத்தல், இன்னது அல்லது இது என மொழிதல், எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல், பிறநூல் முடிந்தது தான் உடன் படுதல், தன்குறி வழக்கம் மிக எடுத்துரைத்தல், சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல், ஒன்றின் முடித்தல், தன் இனம் முடித்தல், அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு முடித்தல் என உத்தி முப்பத்திரண்டு (நன்.14);.

இங்குக் கூறிய இலக்கணங்கள் நூல் சிறப்பாக அமைப்பதற்கும், அமையாமைக்கும் அடிப்படையாகக் கூறப்படும் இலக்கணம்.

நூல்வகை நூல் முதல்நூல், வழிநூல் என இருவகைப்படும் என்பர் தொல்காப்பியர். (தொல்பொருள்.648);. ‘வினையின் நீங்கிய விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூல்’ (தொல். பொருள். 649); என்பர். முதல் நூலைப் பின்பற்றி அந் நூலின் பொருளைத் தொகுத்தேனும், விரித்தேனும்,

தொகை விரியாகவேனும், மொழி பெயர்த்தேனும் இயற்றுவது வழிநூலாகும் (தொல்.பொருள்.652);. நன்னூல் சார்புநூல் என ஒருவகையைச் சொல்லுகிறது. அது முதனூலின் பொருளைச் சிறுபான்மையும் வழிநூலின் பொருளைப் பெரும் பான்மையும் தழுவி அமைப்பதென்பர் நன்னூலார் நன். 8);. ஆராயின் சார்பு நூலும் வழிநூலிலே அடங்கும். இன்றேல் சார்புநூலைத் தழுவி மற்றொருநூல் எழுதப்படுமேல் அதற்கு என்னபெயர் வைப்பது? ஆகையால் இருவகை நூலே போதுமானது. ஒருவர் எழுதிய நூலை மறுத்தெழுதுவது எதிர்நூல் எனப் பெறும். முதல் நூலுக்கு அகத்தியத்தையும். வழிநூலுக்குத் தொல் காப்பியத்தையும், சார்பு நூலுக்கு நன்னூலையும் சான்றாகக் கொள்ளலாம். மொழிபெயர்ப்பு நூல்களுக்குப் பல தொன்மங்களை (புராணங்களை);ச் சான்றாகக் காட்டலாம்.

 நூல்3 nūl, பெ. (n.)

   1. மரத்தை அறுக்கும்போது அளவிடும் 24 சதுரவடி; a measure = 24 sq.ft.

   2. ஆய்தவகை; a machine.

     “கூர்ந்தரிவ நுண்ணூல்” (சீவக.104);.

     [நூல்1 → நூல்3]

 நூல்4 nūltal,    14.செ.கு.வி. (v.i.)

   சூழ்ச்சி செய்தல்; to make a plot.

     “நூற்றுவரை யன்றுமங்க நூற்ற” (திவ்.திருவாய்.7.3:10);.

 நூல்5 nūltal,    9செ.குன்றாவி. (v.t.)

   நூலிழை யுண்டாக்குதல்; to spin.

     [நுல் → நூல் → நூல் – தல் , நுல் = நுண்மை. நுல் → நூல் = நுண்ணிய இழை. நூல் → நூல்-தல் = பஞ் சிழையுண்டாக்குதல் (வே.க.);]

 நூல்6 nūltal,    9செ.குன்றாவி. (v.t.)

   செய்யுளியற்றுதல்; to compose, as a poem.

     “நொய்ய சொன் னுாற்கலுற்றேன்” (கம்பரா.சிறப்.5);.

     [நுவல் → நூல் → நூல்-தல்.

நுவலுதல் = நுண்ணிய அறிவுச் செய்தியைச் சொல்லுதல்.வே.க.)]

 நூல்7 nūl, பெ. (n.)

   இறந்துபட்ட இசைநூல் களில் ஒன்று; an ancient treatise on music.

     ‘நூல்’ என்னும் பெயரையுடைய இந்நூல் தமிழில் இறந்துபட்ட இசை நூல்களில் ஒன்று. ‘ஆயிரம் நரம்புடையது ஆதியாழாகும்’ என்றும், அதன் உறுப்புக்கள் இவையெனவும் நூல்’ கூறுகிறது என்பர் அடியார்க்கு நல்லார். (சிலப். உரைப்பா. பக்.9);

சென்னைப் பல்கலைக் கழக அகர முதலி, இந்நூலை, பழைய நாடகத் தமிழ் நூல்களில் ஒன்று எனக் கூறுகிறது. இசை நூல் என்னும் பெயரின் முற்கூறு கரையான் அரிப்பில் விடுபட்டிருக்கலாம். ‘தமிழ்நூல்’ என்னும் நூலின் அணிந்துரையில் பாவாணர் நூல் என்பது இலக்கணம் பற்றியது என்று விளக்கியுள்ளார்.

 நூல்8 nūl, பெ. (n.)

   எள்; gingelly seed. (சா.அக);.

     [நூ → நூல்]

 நூல்9 nūl, பெ. (n.)

   எண்ணுமெண்ணம்; Deliberation.

     “ஏதிலார் நூல்” (குறள்,440);.

     [நுதலு-தல் → நுதல் → நூல்]

நூல்கயிறு

 நூல்கயிறு nūlkayiṟu, பெ.(n.)

   நூலால் திரித்த கயிறு; tender rope made of thread.

     [நூல்+கயிறு]

நூல்பாய்

 நூல்பாய் nūlpāy, பெ.(n.)

   நூலால் பின்னிய பாய்; mat made of threads. [நூல்+பாய்]

நூல்மா

 நூல்மா nūlmā, பெ. (n.)

   கோதுமை முதலிய தவசங்களால் திரித்திரியாகச் செய்யப்படும் உணவுப்பொருள்; vermicelli.

மறுவ துல்மாவு

     [நூல்+[மாவு]மா]

நூள்

 நூள் nūḷ, பெ.(n.)

   பொய்; lie, falsehood.

க. நூள்

     [நுள்-(துளை,உள்ளிடு இன்மை);-நூள். ஒ.நோ.நூழை-உள்வாயில்-நொள்ளை(குழி);]