தலைசொல் | பொருள் |
---|---|
நீ | நீ1 nī, ‘ந’கர மெய்யும் ‘ஈ’ கார உயிருங் கூடிய கூட்டெழுத்து; the compound of’n’ and ‘i’ [ந் + ஈ.] நீ2 nīttal, 11 செ.குன்றாவி. (v.t.) 1. பிரிதல்; to separate from “நல்லசொல்லி மணந்தினி நீயே னென்ற தெவன்கொல் லன்னாய்” (ஐங்குறு.22.);. 2. துறத்தல்; to renounce. as the world. “ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு” (குறள்.21.);. 3. தள்ளுதல் (வின்.);; to put away. reject 4. இழித்தல்; to put to disgrace, “பிள்ளையேயாயினு நீத்துரையார்” (ஆசாரக்.69.);. 5. வெறுத்தல்; to despise, loathe. “ஊரேது வல்லதே தென்றா னீத்து” (திருவால.13.13.);. 6. விடுதல்; to abandon. leave. “மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” (குறள்.969.);. நீ3 nīttal, 4. செ.கு.வி. (v.i.) நீங்குதல்; to be removed. “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா” (குறள்,969.);. நீ4 nī, ம.பெ. (pron.) முன்னிலையொருமைப் பெயர்; second person singular. “நீயென வரூஉங்கிளவி” (தொல்.சொல்.190); ம. நிங்ங்ள்; க., து., கோத. நிம்; தெ. ஈறு, மீறு; து. இரு. மிரு; கொலா. நிர்; நா. நிர்; பர். இம்; கட. இம்; கோண்.இம்மக், நிம்மத் நிமெக்; கூ.ஈறு; குவி. மீம்பு; குரு. நீம்; மால. நம்; பிரா. நும்;நீன் → நீ (கடைக்குறை); நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற் போல நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கணவறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப் படுகின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது (இலக்.கட்.4.);. நீ5 nī, பெ. (n.) நீங்கு; remove. நீ6 nī, பெ. (n.) மலைவேம்பு; hill neem-melia composita.(சா.அக.);. |
நீகதம் | நீகதம் nīkadam, பெ. (n.) கொடிவகை (பதார்த்த.29.);; climbing asparagus. [நீர் + கதம் = நீகதம். ] |
நீகம் | நீகம் nīkam, பெ. (n.) 1. தவளை (திவா.);; frog. 2. மேகம் (சது.);; cloud. [நீரகம் → நீகம். நீர் + அகம் – நீருள்வாழ்வது, நீரையுடையது.] |
நீகாசம் | நீகாசம்1 nīkācam, பெ. (n.) 1. ஒப்பு; resemblance. 2. உண்மை; truth. நீகாசம்2 nīkācam, பெ. (n.) உறுதி (நாநார்த்த.); certainty. நீகாசம் nīkācam, பெ.(n.) உறுதி (நாநார்த்த.);; certainty. [Skt. {} → த. நீகாசம்.] |
நீகான் | நீகான் nīkāṉ, பெ. (n.) ஒசுநன், மாலுமி; captain, pilot, steersman. (திவா.);; “திசையறி நீகானும் போன்ம்” (பரிபா.10;55.);. “கோடுயர் திணிமணலகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய” (அகநா. 255.);. [நீர் + கலமகன். கலமகன் → காமான் → கான் ஒ.நோ; பெருமகன் → பெருமான் பெம்மான் குலமகன் → கோமகன் → கோமான்.] |
நீகாமன் | நீகாமன் nīkāmaṉ, பெ. (n.) நீகான் (வின்.); பார்க்க;see {nigān.} [நீர் + கலமகன் → நீகாமன். ] |
நீகாரம் | நீகாரம்1 nīkāram, பெ. (n.) நீ என்னும் எழுத்துக் குறியீடு; the letter {ni.} [நீ + காரம்] ‘காரம்’ நெடிற் சாரியை நீகாரம்2 nīkāram, பெ. (n.) பனி (திவ.);; frost, hoarfrost, dew. heavy dew. “நீகார மழை பொழிய” (பாரத.காண்டவ.19.);. [நீர் + காரம்] நீகாரம்3 nīkāram, பெ. (n.) மும்மலங்களு ளொன்றான ஆணவமலம் (சி.சி.2.80. மறைஞா);; பொருட்டாகக் கருதுகையின்மை (யாழ்.அக.);; contempt, disdain. [நீங்கு + ஆரம்.] |
நீக்கடவுள் | நீக்கடவுள் nīkkaḍavuḷ, பெ. (n.) நெருப்புத் தெய்வம்; the God offire. [தி+கடவுள்] |
நீக்கப்பெருக்கம் | நீக்கப்பெருக்கம் nīkkapperukkam, பெ. (n.) நீக்குப் போக்கு (நாஞ்.); பார்க்க;see {nikku-p-pôkku.} [நீக்கம் + பெருக்கம்.] |
நீக்கப்பொருள் | நீக்கப்பொருள் nīkkapporuḷ, பெ. (n.) ஐந்தாம்வேற்றுமைப் பொருள்களுளொன் றாகிய நீக்குதற்குரிய பொருள்; case ending of the ablative denoting separation. அது, மலையினின்று நீங்கினான் என்பதிற்போல வரும். (நன்.219,உரை.);. [நீக்கம் + பொருள்] |
நீக்கமற | நீக்கமற nīkkamaṟa, வி.எ. (adv.) ஓர் இடம்கூட விடாமல்;எங்கும்; everywhere, omnipresent. காற்று நீக்கமற நிறைந்துள்ளது. (உ.வ.); [நீக்கம் + அற → நீக்கமற.] |
நீக்கம் | நீக்கம்1 nīkkam, பெ. (n.) 1. நீங்குகை; separation, removal, disengagement. Liberation. ‘நீக்கப்பொருண்மை தீர்தல் பற்று விடுத லென்பனவற்றாற் பெறப்படும்’ (தொல். சொல்.77. சேனா.);. 2. பிளப்பு (வின்.);; interstice, gap, chink, crack. 3. நீளம் (திவா.);; length. 4. முடிவு; end, close ‘இயற்கைப் புணர்ச்சியது நீக்கத்துக்கண்’ (திருக்கோ.110. உரை.);. 5. தறுவாய்; occasion, opportunity. “நீக்கங்கிடைத்தால் விடமாட்டான்” (வின்.);. [நீங்கு → நீக்கு → நீக்கம்.] நீக்கம்2 nīkkam, பெ. (n.) இடைப்பட்ட இடம்; interspace. “எள்ளிருக்க நீக்கமின்றி” (கதிரைமலைப் பேரின்பக்காதல்,பக்.12..);. [நீங்கு → நீக்கம்.] நீக்கம்3 nīkkam, பெ. (n.) குறுக்குக் கோடிடுகை, அழிக்கை; cancellation. [நீங்கு → நீக்கு → நீக்கம்.] நீக்கம்4 nīkkam, பெ. (n.) 1. நீக்கல்; removal. 2. பிரிப்பு (சிவஞானபோத. சூத்.1.);; separation. [நீக்கு → நீக்கம்.] நீக்கம்5 nīkkam, பெ. (n.) காப்பு, நீக்கம், நிறைப்பு என்னும் மூன்றுவகை மருந்துகளில் ஒன்று. நோய்களைத் தீர்க்கும் மருந்து; one of the three kinds of treatment by medicine ie. curing disease.(சா.அக.);. |
நீக்கல் | நீக்கல்1 nīkkal, பெ. (n.) அகக்கூத்தின் ஒருபிரிவாகிய வடுகிற்குரிய கால்கள் பதினான்கனுள் ஒன்று; one of the dance posture. வடுகிற்குறிய கால்களின் வகைகள்; 1. சுற்றுதல். 2. அறிதல். 3. உடைத்தல். 4. ஒட்டுதல். 5. கட்டுதல். 6. வெட்டுதல். 7. போக்கல். 8. நீக்கல். 9. முறுக்கல். 10. அணுக்கல். 11. வீசல். 12. குடுப்புக்கால். 13. கத்தரிகைக்கால். 14. கூட்டுதல். (சிலப்.3; 15 உரை.);. நீக்கல்2 nīkkal, பெ. (n.) 1. அழிக்கை; destroying “உலகம் யாவையுந் தாமுளவாக்கலு நிலைபெறுத் தலு நீக்கலும்” (கம்பரா.சிறப்.1.);. 2. மாறுபாடு(வின்.);; opposition. disagreement. 3. துளை; opening hole. நீக்கல்வழியாய்ப் பார் (யாழ்ப்.);. 4. படகின் தையலிணைப்பு (யாழ்ப்.);; seam of a ship. [நீக்கு → நீக்கல்.] |
நீக்கல்போடு-தல் | நீக்கல்போடு-தல் nīkkalpōṭudal, 19 செ.குன்றாவி. (v.t.) தொண்டைப் பயிரைக் காற்றோட்டம் ஏற்பட நீக்கி விடுதல்; to make a gap in the crop field for free circulation of air. [நீக்கல் + போடு-.] |
நீக்கவுருபு | நீக்கவுருபு nīkkavurubu, பெ. (n.) நீக்கப்பொருளைத்தருமுருபு; oblative case ending. [நீக்கல் + உருபு.] |
நீக்கி | நீக்கி nīkki, பெ. (n.) ஒழுக்கு; leakage. அறையின் வடமேற்குச்சாரில் ஒரு நீக்கியிருக்கிறது. (உ.வ.);. [நீக்கு + இ.] |
நீக்கிலக்கம் | நீக்கிலக்கம் nīkkilakkam, பெ. (n.) கணக்குவகை (கணக்கதி.);; a kind of calculation. [நீக்கு + இலக்கம்.] |
நீக்கு | நீக்கு1 nīkkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. ஒழித்தல்; to remove, exclude. put aside. dismiss. “இளைப்பினையியக்கம் நீக்கி” (திவ். திருக்குறுந்.18.);. 2. (ஒருவரைப்பதவியிலிருந்து); வெளி யேற்றுதல், (ஒருவரின் பெயரைப் பட்டியல் போன்றவற்றிலிருந்து); எடுத்தல்; remove, dismies (a person from his post);/Strike oft (one’s name);. அவரைப் பதவியிலிருந்து நீக்க ஆணை வந்துள்ளது. (உ.வ.); வாக்காளர் பட்டியலிலிருந்து என் பெயரை நீக்கி இருக்கிறார்கள். (உ.வ.);. 3. விடுவித்தல்; to extricate, liberate, exempt. “இப்புழுக்கூடு நீக்கெனை” (திருவாச. 5.100.);. 4. கழித்தல்; to deduct. வட்டியை நீக்கிக் கொடுத்தான் (உ.வ.);. 5. ஒதுக்குதல்; to turn. draw aside. as a curtain. திரையை நீக்கிப் பார்த்தான் (உ.வ.);. 6. அழித்தல் (அக.நி.);; to kill, despatch, destroy. 7. அகலவைத்தல்; to spread out, as the legs, fingers. விரலை நீக்கு (உ.வ.);. 8. திறத்தல்; to open, force apart. கதவை நீக்கிக் கொண்டு போ (உ.வ.);. 9. பிரித்தல்; to separate. அவர் நட்பை நீக்கிவிட்டான் (உ.வ.);. 10. கைவிடுதல்; to give up, abandon. “மான வருங்கல நீக்கி” (நாலடி,40.);. 11. மாற்றுதல்; to change. அவனெண்ணைத்தை நீக்கி விட்டான். (உ.வ.);. 12. விதித்திருக்கும் தடையை மாற்றிக் கொள்ளுதல்; வேண்டாம் என விடுதல். lift (sanctions, prohibition etc.,);. பொருளியல் தடைகளை நீக்கினால் போதுமா. (உ.வ.); தெ., க., நீகு. ம.நீக்குக. [நீங்கு → நீக்கு.] நீக்கு2 nīkku, பெ. (n.) விலக்கு; separation, removal. “நீக்கிலாத்துப்பு” (சூடா.8,46.);. 2. பிளப்பு (வின்.);; opening, cleft, crack. 3. கழிவு; deduction. 4. மிச்சம்; remainder,Balance. நீக்கு உருவாய் பதினைந்து (வின்.);. [நீங்கு → நீக்கு.] நீக்கு3 nīkku, பெ. (n.) நீக்கம் பார்க்க;see {nikkam,} “நீக்கற வெடுத்துப் பல்காலின்னண நிரந்து கூறி” (இரகு. திக்குவி. 218.);. |
நீக்குப்பல்லன் | நீக்குப்பல்லன் nīkkuppallaṉ, பெ. (n.) 1. குட்டிப்பல்லன்; one having snaggy teeth. 2. சிங்கப்பல்லன்; one having high teeth i.e. with one cuspid or point. (சா.அக.);. [நீக்கு + பல்லன்.] |
நீக்குப்போக்கு | நீக்குப்போக்கு nīkkuppōkku, பெ. (n.) 1. இணக்கமாயிருக்கை; adaptabiltiy, giveand-take. அவன் நீக்குப்போக்குள்ளவன் (உ.வ.);. 2. மதிப்புரவு; etiquette, courtesy. நீக்குப்போக்கறியாதவன். (உ.வ.);. 3. வழி முறை (உபாயம்);; means, expedient, contrivance. அதற்கு ஒரு நீக்குப் போக்குக் காட்டவேண்டும். (உ.வ.);. 4. உதவி; help. அவனுக்கு நீக்குப்போக்குக் கிடையாது (உ.வ.);. 5. சாக்குப் போக்கு (இ.வ.);; excuse. 6. இடைவெளி (வின்.);; opening, interstice, gap. 7. இளைப்பாறுகை (இ.வ.);; leisure, rest. 8. வாலாயம், முறைப்பணி, செயல் வரிசை (காரியக்கிரமம்); (வின்.);; routine of business. [நீக்கு + போக்கு. ] |
நீங்கலாக | நீங்கலாக nīṅgalāka, பெ. (n.)(part.) except;other than. பிடிப்பட்டவர்களில் ஒருவர் நீங்கலாக மற்றவர்களைக் காவலர் உடனே விடுவித்து விட்டனர். (உ.வ.);. ஆளுங்கட்சி நீங்கலாக மற்ற கட்சிகள் அனைத்தும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. (உ.வ.);. [நீங்கு → நீங்கல் → நீங்கலாக.] |
நீங்கல் | நீங்கல்1 nīṅgal, பெ. (n.) 1. விலகுகை, removing, separating. 2. பிளப்பு (யாழ்ப்.);; gap,chink. 3. புறம்பு (யாழ்.அக.);; outside. [நீங்கு → நீங்கல்.] நீங்கல்2 nīṅgal, பெ. (n.) காட்டுப்பூவரசு; false fern tree. நீங்கல்3 nīṅgal, பெ. (n.) மாறுதல்; |
நீங்கள் | நீங்கள் nīṅgaḷ, பெ. (n.) முன்னிலைப்பன்மைப் பெயர்; you “நூலவையார் போனீங்க ணோக்குமினே” (சீவக.1045.);. [நீன் → நீம் → நீங்கள்.] நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல, நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கணவறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படுகின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது. மகரம் பன்மைப் பொருளுரைத்தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப் பன்மை. (இலக்.கட்.4.);. |
நீங்காசலமலம் | நீங்காசலமலம் nīṅgācalamalam, பெ. (n.) கடற்பாசி; sea weeds-graciaris lichenoides alias G onfervides (சாஅக.);. |
நீங்காதவோசையோன் | நீங்காதவோசையோன் nīṅgātavōcaiyōṉ, பெ. (n.) சங்கு (யாழ்.அக.);; conch. [நீங்காத + ஒசையோன்.] |
நீங்காமை | நீங்காமை nīṅgāmai, பெ. (n.) பிரியாமை; impatience of separation. [நீங்கு + ஆ + மை.] மை – பண்பு விகுதி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை. |
நீங்காவிக்கல் | நீங்காவிக்கல் nīṅgāvikkal, பெ. (n.) தொடர்விக்கல்; non-stopping or continous hiccupS (சா.அக.);. [நீங்கா + விக்கல்] |
நீங்காவிட்டம் | நீங்காவிட்டம் nīṅgāviṭṭam, பெ. (n.) 1. கூரைக் கைகளை யிணைக்கும் மரம் (இ.வ.);; cross-piece connecting the rafters. 2. வீட்டின் கூரையைத் தாங்கும் உத்திரம் (வின்.);; a beam strengthen the roof of a house. [நீங்கு + ஆ + விட்டம்.] ‘ஆ’ எதிர்மறை இடைநிலை |
நீங்கு | நீங்கு1 nīṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. பிரிதல்; to leave. go, depart, separate from, “நீங்கிற் றெறுஉம்” (குறள்,1104.);. 2. ஒழித்தல்; to give up, abandon. “பரிவு மிடுக்கணும் பாங்குற நீங்குமின்” (சிலப். 30;186.);. 3. கடத்தல்; to pass over. “நீங்கி னானந்த நெடுநதி” (கம்பரா.வனம்புகு.36.);. தெ., க. நீகு. ம. நீன்னுக. [நீள் → நீங்கு-,] நீங்கு2 nīṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. (பசி, நோய் முதலியவை); இல்லாமற் போதல், தீர்தல்; (of hunger, illness etc.,); to cease end, வயிறு முட்ட நீர் குடித்த பிறகே பசி நீங்கியது போன்றிருந்தது. (உ.வ.);. 2. (ஒருவரை விட்டு); அகலுதல், ஒன்றிலிருந்து விலகுதல்; to leave, depart (from);. மக்கள் வேலை தேடிச் சொந்த ஊர் நீங்கி நகரத்திற் குவியத் தொடங்கி விட்டனர் (உ.வ.);. நெஞ்சிலிருந்து நீங்கா நினைவுகள் (உ.வ.);. [நீள் → நீங்கு-,] நீங்கு3 nīṅgudal, 5 செ.கு.வி. (v.i.) 1. மாறுதல் (வின்.);; to turn away; to be warded off. 2. விடுதலையாதல் (வின்.);; to be liberated, released. 3. தள்ளுண்ணுதல்; to be dismissed, discharged. 4. ஒழிதல் (வின்.);; to be excepted excluded. 5. நடத்தல் (சூடா.);; to go, proceed. 6. நீந்துதல் (யாழ்ப்.);; to swim. 7. பிளவுபடுதல் (யாழ்ப்.);; to form, as a gap, crevice, chasm. 8. விரிந்தகலுதல் (வின்.);; to be spread out. as fingers, legs. 9. சிதறுதல் (வின்.);; to be dispelled, Scattered. [நீள் → நீங்கு-,] |
நீங்கெழுத்துப்பா | நீங்கெழுத்துப்பா nīṅgeḻuttuppā, பெ.(n.) ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி, அச் சொல்லில், ஒரோரெழுத்தாக நீக்க, வேறுவேறு பொருள் பயக்கும் சித்திரப்பா; verse composed with a play on words, a word by gradual elimination becoming different word with different meaning as in Kanakāri nakāri kāri or pālāvipālā, pā. [நீங்கு+எழுத்து+பா] |
நீசகம் | நீசகம் nīcagam, பெ. (n.) தண்ணீர்; water. (சா.அக.);. [நீசு + அகம்.] |
நீசக்கிரகம் | நீசக்கிரகம் nīcaggiragam, பெ.(n.) 1. நட்பு நிலையில் இல்லாதகோள் (நீசத் தானத்திலிருக்கும் கிரகம்);; 2. நிழல் கோள் களான ராகு கேதுகள்; nodes of the moon (யாழ்.அக.);. [Skt. {}+ → த. நீசக்கிரகம்.] |
நீசடுவா | நீசடுவா nīcaḍuvā, பெ. (n.) பால்; milk. (சா.அக.);. |
நீசதை | நீசதை nīcadai, பெ. (n.) நீசம் பார்க்க;see {nišam} நீசதை nīcadai, பெ.(n.) நீசம்1, 1 பார்க்க;see {}. “என்னீசதைக்கு” (திவ்.இராமானுச. 48);. [Skt. {} → த. நீசதை.] |
நீசத்தனம் | நீசத்தனம் nīcattaṉam, பெ.(n.) திட்டும் சொல்; an abusing word. [நீசம்+தனம்] |
நீசத்தானம் | நீசத்தானம் nīcattāṉam, பெ.(n.) கோளின் உச்சத்திற்கு ஏழாவதான இடம்; position of the planets in the seventh house from the uccam, considered weak. [Skt. {}+ → த. நீசத்தானம்.] |
நீசன் | நீசன் nīcaṉ, பெ.(n.) 1. இழிந்தோன்; low, vile person. “நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப் பரக்கும்” (நாலடி, 68);. 2. நீசக்கிரகம், 1 பார்க்க (Astrol.); see {}. [Skt. {} → த. நீசன்.] |
நீசபங்கரசயோகம் | நீசபங்கரசயோகம் nīsabaṅgarasayōkam, பெ.(n.) கணிய ஒகவகையுள் (சோதிட யோகவகையுள்); நன்மை பயப்ப தொன்று (பெரியவரு.144);; [Skt. {}+yoga → த. நீச பங்கராயோகம்.] |
நீசப்படு-தல் | நீசப்படு-தல் nīcappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. ஈனப்படுதல்; to become base, vile or degraded, as by mean or improper actions. 2. நீசத்தானழறுதல்; [Skt. {} → த. நீசம்+படு-,] |
நீசம் | நீசம் nīcam, பெ. (n.) மஞ்சள்; turmeric. (சா.அக.);. நீசம்1 nīcam, பெ. (n.) 1. இழிவு; meanness, vileness. “நீச முயர்வா நோக்கங்கள்” (ஞானவா.தேவபூ.52);. 2. பள்ளம்; depression. 3. தாழ்ச்சி; lowness. “வடாஅதுதிசை மேனாள் நீசமுற” (கம்பரா.அகத்.40);. 4. கிரக நிலை ஐந்தனுள் அது வலியிழந்து நிற்கும் நிலை; 5. கொடுமை (வின்.);; cruelty, barbarity, savageness. 6. பொருத்த மில்லாத ஆண் பெண்களின் புணர்ச்சி; sexual union between ill-matched person. “அடைவற நீசமென் றிரண்டுமாகுமே” (கொக்கோ.3, 6);. [Skt. {} → த. நீசம்1.] நீசம்2 nīcam, பெ.(n.) மஞ்சள் (சங்.அக.);; turmeric. [Skt. {} → த. நீசம்2.] |
நீசரக்கு | நீசரக்கு nīcarakku, பெ. (n.) நீசம் பார்க்க;see {nišam} (சா. அக.);. |
நீசராசி | நீசராசி nīcarāci, பெ.(n.) நீசத்தானம் பார்க்க; (C.G.); see {}. [Skt. {} → த. நீசராசி.] |
நீசல் | நீசல் nīcal, பெ. (n.) நீர்ச்சீலை, (இ.வ.);; loin cloth. [நீர்ச்சீலை → நீச்சல் → நீசல்.] |
நீசவாகனம் | நீசவாகனம் nīcavākaṉam, பெ.(n.) கழுதை (வின்.);; ass, as a mean conveyance. [Skt. {} → த. நீசவாகனம்.] |
நீச்சக்குட்டை | நீச்சக்குட்டை nīccakkuṭṭai, பெ. (n.) நீச்சல்2 (இ.வ.); பார்க்க;see {niccal=.} [நீச்சல்2 + குட்டை.] |
நீச்சசலம் | நீச்சசலம் nīssasalam, பெ. (n.) சிறுநீர்; urine. (சா.அக.);. [நீச்சம் + சலம். சலசலத்து ஒடுவதால் சலம்.] |
நீச்சடி | நீச்சடி1 nīccaḍittal, 4 செ.கு.வி. (v.i.) நீந்துதல்; to swim. [நீஞ்சு → நீச்சு + அடி. ] நீச்சடி2 nīccaḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) கால்நடைகளைக் குளிப்பாட்டுதல்; to wash as cattle. [நீச்சு + அடி-,] நீச்சடி3 nīccaḍittal, 4 செ.கு.வி. (v.i.) மீன், நாற்றம்போன்று நாற்றமடித்தல் (இ.வ.);; to Smell as fish. [நீச்சு + அடி.] |
நீச்சத்தண்ணி | நீச்சத்தண்ணி nīccattaṇṇi, பெ. (n.) நீர்ச்சோற்றுத்தண்ணீர் பார்க்க;(இ.வ.); see {mic-corru-t-tannir} நீர் + சோற்று + தண்ணீர் → நீர்ச்சோற்றுத் தண்ணீர் → நீச்சோற்றுத் தண்ணீர் – நீ ச் சோ த் து த் த ண் ணீ ர் – நீச்சுத்தண்ணீர் → நீச்சத்தண்ணி (கொ.வ.);. |
நீச்சத்தாணி | நீச்சத்தாணி nīccattāṇi, பெ. (n.) இதளியம், (வைத்தியபரிபா.);; mercury. |
நீச்சன் | நீச்சன் nīccaṉ, பெ. (n.) நீச்சாள் (இ.வ.); பார்க்க;see {niccāļ.} [நீச்சாள் → நீச்சான் → நீச்சன்.] |
நீச்சம் | நீச்சம்1 nīccam, பெ. (n.) நீந்துகை; swimming [நீஞ்சு → நீச்சு.] நீச்சம்2 nīccam, பெ. (n.) முடைநாற்றம்; stink offersive smell. |
நீச்சல் | நீச்சல்1 nīccal, பெ. (n.) நீந்துகை; swimming. [நீஞ்சு → நீஞ்சல் → நீச்சல்.] நீச்சல்2 nīccal, பெ. (n.) நீர்ச்சீலை. குளித்துணி (இ.வ.);; man’s loin cloth. [நீர்ச்சீலை → நீச்சல்.] |
நீச்சல்குளம் | நீச்சல்குளம் nīccalkuḷam, பெ. (n.) மகிழ்ச்சிக்காகவும், பயிற்சிக்காகவும் நீந்துவதற்குச் செயற்கையாய் அமைக்கப்பட்ட குளம்; swimming pool. [நீச்சல் + குளம்.] |
நீச்சல்போட்டி | நீச்சல்போட்டி nīccalpōṭṭi, பெ. (n.) நீந்துவதில் போட்டியிடும் விளையாட்டு; swimming race as a sports. மாநிலங்களுக்கிடையிலான நீச்சல் போட்டியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றது (உ.வ.); [நீச்சல் + போட்டி.] |
நீச்சாள் | நீச்சாள் nīccāḷ, பெ. (n.) நீந்துவோன்; swimmer. [நீச்சு +ஆள்.] |
நீச்சு | நீச்சு1 nīccu, பெ. (n.) 1. நீந்துகை; swimming 2. வெள்ளம்; flood. “நீச்சாற் பெருத்திடு காவிரியாற்றை” (தனிப்பா. 1,82,163.);. 3. நீந்தக்கூடிய ஆழம்; swimming depth, as of water. “நீச்சுநிலை காணாமனிற்கு நாள்” (தாயு. எந்நாட். ஆனந்த.1);. [நீந்து → நீச்சு.] நீச்சு2 nīccu, பெ. (n.) முடைநாற்றம், மீன்நாற்றம்; bad smell of fish. இவனுக்கு மீசை மேலே நீச்சடிக்க வேண்டும். (பழ.); தெ.நீச்சு. |
நீச்சுக்காரன் | நீச்சுக்காரன் nīccukkāraṉ, பெ. (n.) நீச்சலடிப்போன் (வின்.);; swimmer. [நீச்சல் → நீச்சு. நீச்சு + காரன்.] |
நீச்சுத்தண்ணிர் | நீச்சுத்தண்ணிர்1 nīccuttaṇṇir, பெ. (n.) நீர்ச் சோற்றுத்தண்ணி பார்க்க;see {mir-corru-ttaրրlr} [நீர்ச்சோற்று + தண்ணீர் – நீர்ச்சோற்றுத் தண்ணீர் → நீச்சோற்றுத் தண்ணீர் – நீச்சுத்தண்ணீர் (கொ.வ);.] நீச்சுத்தண்ணிர்2 nīccuttaṇṇir, பெ. (n.) நீந்தக்கூடிய ஆழமுள்ள நீர் (வின்.); water of swimming depth. [நீச்சு + தண்ணீர்.] |
நீச்சுநிலையறி-தல் | நீச்சுநிலையறி-தல் nīccunilaiyaṟidal, 2 செ.கு.வி. (v.i.) 1. ஆழத்தைஅறிதல்; lit, to Sound the deep and shallow places. 2. உள்ள நிலைமையை ஆய்ந்து அறிதல் (வின்.);; to investigate a business, examine a position. [நீச்சுநிலை + அறி-,] |
நீச்சோற்றுத்தண்ணீர் | நீச்சோற்றுத்தண்ணீர் nīccōṟṟuttaṇṇīr, பெ. (n.) நீர்ச்சோற்றுத் தண்ணி பார்க்க;see {ոir-c-cԾrru-t-taրոir} [நீர்ச்சோற்றுத்தண்ணீர் → நீச்சோற்றுத் தண்ணீர். ] |
நீஞ்சு-தல் | நீஞ்சு-தல் nīñjudal, 5 செ.கு.வி. (v.t.) 1. நீந்து(வின்.); பார்க்க;see {mindu-} 2. அருஞ் செயல்களை முடிக்கப் பெருமுயற்சி யெடுத்தல்; to be activity engaged, as in a stupendous work. வேலையில் நீஞ்சிச் கொண்டிருக்கிறான். (உ.வ.);. 3. மிகுதியாகக் குடித்தல் (வின்.);; to drink to excess, especially toddy. கள் மிடாயில் நீஞ்சக் கூடியவன். (உ.வ.);. |
நீஞ்சுமூசி | நீஞ்சுமூசி1 nīñjumūci, பெ. (n.) நீந்துமூசி பார்க்க;see {nindum-JS.} [நீந்தும் + ஊசி → நீந்தும் ஊசி → நீஞ்சும் ஊசி = நீஞ்சுமூசி.] |
நீடசேந்திரன் | நீடசேந்திரன் nīṭacēndiraṉ, பெ. (n.) கருடன்; brahmini kite. (சா.அக.);. |
நீடம் | நீடம்1 nīṭam, பெ. (n.) பறவைக் கூடு (இலக்.அக.);; birds nest. [நீள் → நீடு + அம் தொடர்ந்து தங்குமிடம்.] நீடம் nīṭam, பெ. (n.) இடம் (நாநார்த்த);; place. |
நீடலர் | நீடலர் nīṭalar, பெ. (n.) காலம் நீட்டியார்; time not extender. “பூச்சேரணையிற் பெருங்கவின் றொலைந்த நின் நாடுதுயர் கேட்பின் நீடலர் மாதோ” (குறுந். 253.);. [நீள் → நீடு + அல் + அர்] ‘அல் எதிர்மறை இடைநிலை. ‘அர்’ பன்மையீறு. |
நீடல் | நீடல்1 nīṭal, பெ. (n.) 1. காலம் நீட்டித்தல்; to extends the time. 2. நீளுகை (வழக்);; prolongation. [நீள் → நீளல் → நீடல்.] நீடல் nīṭal, பெ. (n.) நீளுகை (வழக்);; prolongation. [நீள் → நீளல் → நீடல்.] |
நீடாணம் | நீடாணம் nīṭāṇam, பெ. (n.) நீட்டாணம் (யாழ்.அக.); பார்க்க;see {milaram.} [நீட்டானம் → நீடானம்-இடைக்குறை.] |
நீடாமங்கலம் | நீடாமங்கலம் nīṭāmaṅgalam, பெ.(n.) தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in Thanjavur. [நீராட்டு+மங்கலம்] நீடாமங்கலம் என்ற பெயர் நீராட்டுமங்கலம்’ என்பதன் திரிபு. கரிகாற் சோழன் போர் முடித்து வெற்றி தந்த தன் வாளுக்கு நீராட்டுமங்கலம்’ இங்கே செய்ததால் இவ்வூர் அப்பெயர் பெற்றது. நாளடைவில் நீடாமங்கலம் எனப்பட்டது. தஞ்சையை ஆண்ட மன்னன் பிரதாபசிங் தன் மனைவியருள் ஒருத்தியான யமுனாம்பாளுக்காக இவ்வூரில் அரண்மனையும், பிற வசதிகளும் செய்து கொடுத்துள்ளான். இவ்வூரில் இவ்வம்மையாரின் பெயரில் சத்திரமும், கோயிலும் அமைக்கப்பட்டதால் யமுனாம்பாள்புரம் எனும் பெயரும் பெற்றது. |
நீடி | நீடி1 nīṭittal, 4 செ.கு.வி. (v.i.) 1. நீளுதல், to lengthen time, distance. வாணாள் நீடிக்க வழியுண்டு. (உ.வ.);. 2. நிலைநிற்றல் (வின்.);; to endure, last to be permanent. அவர் ஐந்தாண்டு காலம் பதவியில் நீடித்ததே அருஞ்செயல் தான். (உ.வ.);. [நீடு → நீடி-.] நீடி2 nīṭittal, 4 செ.கு.வி. (v.i.) முடிவுக்கு வருவது தள்ளிப் போதல்; (of time); to last, extend. பேச்சு மேலும் அரை மணி நேரம் நீடித்தது (உ.வ.);. இரு நாடுகளின் நீடித்த நட்பின் அடையாளம் இந்த ஒப்பந்தம் (உ.வ.);. சட்டத்தை மேலும் ஒராண்டிற்கு நீடித்து ஆணையிட்டார். (உ.வ.);. [நீள் → நீளு → நீடு → நீடி-.] நீடி3 nīṭi, பெ. (n.) நீக்கமற நிறைந்திருக்கை; omnipresence. “தேய நீடி யில்லாமை போல்” (ஞானவா. லீலை. 32.);. [நீடு → நீடி.] |
நீடித்திரு-த்தல் | நீடித்திரு-த்தல் nīṭittiruttal, 3 செ.கு.வி. (v.i.) நெடுங்காலத்திற் கிருத்தல்; to be for a long time. [நீடித்து + இரு-,] |
நீடின்றி | நீடின்றி nīṭiṉṟi, பெ. (n.) நீடுதலின்றி; without extended the time. “கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும்” (குறள், 566.);. [நீடு + இன்றி] |
நீடிப்பு | நீடிப்பு1 nīṭippu, பெ. (n.) தொடர்ந்திருக்கை; persistence. [நீள் → நீளு → நீடு → நிடி → நீடிப்பு.] நீடிப்பு2 nīṭippu, பெ. (n.) பதவி, வேலை போன்றவற்றில் ஒருவர் உரியகாலம் முடிந்த பின்பும் தொடர்ந்து இருப்பதற்கு ஏற்ற வகையில் அளிக்கப்படும் கால அதிகரிப்பு; extension (of Service, permit, visa etc.,); அவருக்கு மேலும் ஒராண்டிற்குப் பதவி நீடிப்புக் கிடைத்துள்ளது. (உ.வ.);. [நீள் → நீளு → நீடு → நீடி → நீடிப்பு.] |
நீடிரும்பெண்ணை | நீடிரும்பெண்ணை nīṭirumbeṇṇai, பெ. (n.) நீண்ட கரிய பனை; a long palmora tree. “நீடிரும் பெண்ணைத் தொடுத்த கூட்டினும் மயங்கிய மையலுரே” (குறுந்.374.);. [நீடு + இரும் + பெண்ணை.] |
நீடு | நீடு1 nīṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நீளுதல்; to grow long; to be lengthened; to be extended through space or time. “அள்பிறந்து யிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப” (தொல். எழுத்து. 33.);. 2. பரத்தல்; to spread; to extend. “நீடாழி யுலகத்து” (பாரத. சிறப்புப். 1.);. 3. பெருகுதல்; to abound; to be copious; நீடிய செல்வம் (வின்.);. 4. செழித்தல் (யாழ்.அக.);; to thrive, grow well. 5. மேம்படுதல்; to rise high. “நிலைமை நீடுத றலைமையோ வன்றே”(ஞானா. பாயி. 3.);. 6. நிலைத்தல்; to last long; to endure; to be Permanent. “அளி நீடளகம்” (திருக்கோ. 122.);. 7. இருத்தல் (வின்.);; to exist, subsist 8. காலம் நீட்டித்தல்; to delay. “நீடன்மின்; வாரு மென்பவர் சொற்போன்றனவே” (பரிபா. 14;9.);. 9. கெடுதல்; to become decayed. “நீடாப் பனைவிளைவு நாமெண்ண” திணைமாலை. 5.). தெ. நெகது க. நீடு ம. நீடுக [நீள் → நீடு. (மு.தா.287);.] நீடு2 nīṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தாண்டுதல் (திவா.);; to pass over to leap over. 2. பொழுது கடத்துதல்; to dellay. “நீடலை முடியுதென்றான்” (யசோதர.2;35.);. [நீள் → நீடு-,] நீடு3 nīṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) தேடுதல் (அக.நி.);; to Seek, Search. [நேடு → நீடு. நேடு = தேடு.] நீடு4 nīṭu, பெ. (n.) 1. நெடும் பொழுது; a long time “நீடுநீர் நெடுஞ்சுனை ஆயமொ டாடாய்” (அகநா. 358.); 2. நெடுங்காலம்; a long time. “நிலமிசை நீடு வாழ்வார்” (குறள், 3.);. 3. நிலைத்திருக்கை; permanence. “நெடுஞ்செல்வ நீடின்றி யாங்கே கெடும்” (குறள், 566.);. [நீளு → நீடு.] |
நீடுநினைந்திரங்கல் | நீடுநினைந்திரங்கல் nīṭuniṉaindiraṅgal, பெ. (n.) theme in which the hero bewails his long separation form the heroine. [நீடு + நினைந்து + இரங்கல்.] |
நீடுநினைந்துருகல் | நீடுநினைந்துருகல் nīṭuniṉaindurugal, பெ. (n.) நினைந்திரங்கல் பார்க்க;see {nidu-ninaindirangal.} [நீடு + நினைந்து + உருகல்.] |
நீடுநீர் | நீடுநீர் nīṭunīr, பெ. (n.) துய்ய நீர்; sacred water. “நீடு நீர்மணி நீரு மல்லவும்” (சீவக. 24.18.);. [நீடு + நீர்.] |
நீடுநீர்வையை | நீடுநீர்வையை nīṭunīrvaiyai, பெ. (n.) ஒழுக்கறா நீருடைய வையையாறு; perennial vaigai river. “நீடுநீர் வையை நெடு மாலடியேத்தத் தூவித் துறைபிடியப் போயினாண்மேவி” (சிலப். 18;4.);. [நீள் → நீளு → நீடு. நீடு + நீர் + வையை.] |
நீடுருவாணி | நீடுருவாணி nīṭuruvāṇi, பெ. (n.) சித்தரத்தை; lesser galangal-alpinia galanga (minor);. (சா.அக.);. |
நீடுவரை | நீடுவரை nīṭuvarai, பெ. (n.) நெடிய மலை; a long hills. “நீடுவரை யடுக்கத்து நாடுகைக் கொண்டு” (நற். 55;18.);. [நீடு + வரை.] |
நீடுவாழி | நீடுவாழி nīṭuvāḻi, பெ. (n.) நீண்ட வாழ்நாளுடையவன்; long iived person as living hundred years. [நீடு+வாழி] |
நீடூரம் | நீடூரம் nīṭūram, பெ. (n.) நஞ்சு (பாடாணம்); (சங்.அக.);; arsenic. |
நீடூர் | நீடூர் nīṭūr, பெ. (n.) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர். a village in Tanjavur, dt. “நீரில் வாளை வரால் குதி கொள்ளும் நிரைநற் கழனிச் செல்வ நீடுர்” (சுந்தரர். 56-1.);. |
நீடூழி | நீடூழி nīṭūḻi, பெ. (n.) நீடுழிக் காலம் பார்க்க;see {nidus-k-kālam} [நீடு + ஊழி.] |
நீடூழிகாலம் | நீடூழிகாலம் nīṭūḻikālam, பெ. (n.) நீடூழிக் காலம் பார்க்க;see{ nigūļi-k-kālam} [நீடு + ஊழி.] |
நீடூழிக்காலம் | நீடூழிக்காலம் nīṭūḻikkālam, பெ. (n.) நெடுநாள்; long aeons; long ages. [நீடுழி + காலம்.] |
நீட்சம் | நீட்சம் nīṭcam, பெ. (n.) குருவி; a kind of sparrow, (சா.அக.);. |
நீட்சி | நீட்சி nīṭci, பெ. (n.) நீட்டம் (உ.வ.); பார்க்க;v see {vnittam} [நீள் → நீட்டு → நீட்டம் → நீட்சி.] |
நீட்சிமை | நீட்சிமை nīṭcimai, பெ. (n.) நீட்டம் (யாழ்.அக.); பார்க்க;see {niftam} [நீள் → நீட்டம் → நீட்சி → நீட்சிமை.] |
நீட்டக்கத்தரி | நீட்டக்கத்தரி nīṭṭakkattari, பெ. (n.) கத்தரிக்காய் வகை; long {brinjäl.} [நீட்டம் + கத்தரி.] நீள் → நீட்டம் + கத்திரி. கத்தரிக்காயைக் கத்திரிக்காய் என்றழைப்பது வழு. |
நீட்டக்காவிதம் | நீட்டக்காவிதம் nīṭṭakkāvidam, பெ. (n.) சுரைக்காய்; bottle gourd-cucurbita lagenaria. (சா.அக.);. [நீட்டம் + காவிதம்.] காவிதம் என்னுஞ் சொல்லிற்குக் கருங் குவளை எனப்பொருள் கூறும் சாம்பசிவம் பிள்ளை மருத்துவ அகர முதலி, நீட்டக்காவிதம் என்ற சொல்லுக்குச் சுரைக்காய் என்ற பொருளைப் பதிவு செய்துள்ளது. |
நீட்டச்சோதி | நீட்டச்சோதி nīṭṭaccōti, பெ. (n.) ஒளிரும் மரம்; a tree luminous in the dark-phosphorous tree. (சா.அக.);. [நீட்டம் + சோதி.] |
நீட்டம் | நீட்டம் nīṭṭam, பெ.(n.) நீளம்; length. மறுவ. நீளம், நீட்டு [நீள்-நீட்டு-நீட்டம்] நீளத்தை நீட்டு அல்லது நீட்டம் என்பது வடதமிழ்நாட்டு வழக்காறு. நீட்டம்1 nīṭṭam, பெ. (n.) 1. நீளம்; length. “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு” (குறள், 595.);. 2. ஓசையின் நீட்சி; elongation of sound. “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்” (தொல், எழுத்து. 6.);. [நீள் → நீட்டு → நீட்டம். (மு.தா;286.);.] நீட்டம்2 nīṭṭam, பெ. (n.) 1. நீட்டுகை; stretching, lengthening. 2. காலநீட்டிப்பு; procrastination. “நிலைமை யறிய நீட்ட மின்றி” (பெருங். மகத. 23;51.);. [நீள் → நீட்டு → நீட்டம்.] |
நீட்டலளவு | நீட்டலளவு nīṭṭalaḷavu, பெ. (n.) நீளத்தை அளக்கும் அலகு; linear unit measure. [நீள் → நீட்டு → நீட்டல் + அளவு.] |
நீட்டலளவை | நீட்டலளவை nīṭṭalaḷavai, பெ. (n.) நீளத்தை அளக்கும் அளவை முறை; linear measure. [நீட்டல் + அளவை.] |
நீட்டல் | நீட்டல்1 nīṭṭal, பெ. (n.) தலைமயிரைச் சடையாக்குகை; twisting into matted, locks. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் (குறள், 280.);. [நீட்டு → நீட்டல்.] நீட்டல்2 nīṭṭal, பெ. (n.) 1. நீளச்செய்கை; lengthening, extending, stretching 2. (இலக்.); குற்றுயிரை நெட்டுயிராக இசைக்கும் செய்யுள் திரிபு (விகார); வகை (தொல். சொல். 403.);;(gram.);; poetic licence which consists in the lengthening of a short vowel into a long one. 3. அளவை நான்கனுள் நீட்டி யளக்கும் முழம் காதம் போன்ற அளவு; linear measure, one of four {alavai.} “முகத்த னீட்டல்” (குறள், 280.);. 5. பெருங்கொடை (பிங்.);; liberality. [நீள் → நீட்டு → நீட்டல்.] |
நீட்டல்மானம் | நீட்டல்மானம் nīṭṭalmāṉam, பெ. (n.) நீட்டல், (யாழ்.அக.); அளவு; linear measure. [நீள் → நீட்டு → நீட்டல் + மானம், மானம் = அளவு.] |
நீட்டாணம் | நீட்டாணம் nīṭṭāṇam, பெ. (n.) 1. உப்புநீர், சாறு; soup. 2, குழம்பு;(வின்.);; pottage, [நீட்டு + ஆணம்.] நீள் → நீட்டு, நீள் → ஒழுங்கு, அமைப்பு. அள் → அளம் → ஆளம் → ஆணம். அள் → அளம் → சேறு, சாறு, குழம்பு. இறைச்சியையோ மரக்கறிகளையோ வேகவைத்து உப்பு மிளகு முதலியன இட்டுக் கொதிக்க வைத்து வடித் தெடுத்தச் சாறு. இது குழம்புபோல் கெட்டியாய் இல்லாமல் நீர்த்த தன்மை யுடையதாயிருக்கும். |
நீட்டாய்நட-த்தல் | நீட்டாய்நட-த்தல் nīḍḍāynaḍattal, 3 செ.கு.வி. (v.i.) நேராய் நடத்தல்; to walk straight. [நீள் → நீடு → நீட்டு + ஆய் + நட.] |
நீட்டாய்ப்போ-தல் | நீட்டாய்ப்போ-தல் nīṭṭāyppōtal, 8 செ.கு.வி.(v.i.) நேராய்ப் போதல் (சென்னை.);; to go Straight. [நீள் → நீடு → நீட்டு + ஆய் + போ-,] |
நீட்டாள் | நீட்டாள்1 nīṭṭāḷ, பெ. (n.) வேலையாள்; attendant or waiting servant. நாட்டாளுக்கு ஒரு நீட்டாளோ? (பழ.);. [நீட்டு + ஆள்.] நீள் → நீட்டு. ஆல் → ஆள் – வினையாற்றுபவன், செயல் திறவோன். நீட்டாள்2 nīṭṭāḷ, பெ. (n.) நெட்டையாள் (உ.வ.);. tall person. [நீள் → நீளு → நீடு → நீட்டு + ஆள்.] |
நீட்டி | நீட்டி1 nīṭṭittal, 8 செ.குன்றாவி. (v.t.) 1. நீளச் செய்தல்; to lengthen. மடங்கி யிருக்கும் இருப்புக் கம்பியை நீட்டிக்க வேண்டும். (உ.வ.);. 2. நீட்டிப்பேசு-, பார்க்க;see {nitti-p-péâu,} பேச்சை நீட்டிக்கிறான். (உ.வ.);. 3. காலந்தாழ்த்துதல்; to dellay. “தீம்பால் பெருகு மளவெல்லா நீட்டித்த காரணமென்” (கலித். 83.);. 4. முடித்தல் (அக.நி.);; to finish, complete. 5.நெடும் பொழுது செல்லல் (1, 2, வழக்.);; to elongate. [நீள் → நீளு → நீடு → நீட்டு → நீட்டி-.] |
நீட்டித்திரு-த்தல் | நீட்டித்திரு-த்தல் nīṭṭittiruttal, 5 செ.கு.வி. (v.i.) நெடுங்காலம் நிலைத்தல்; to be prolonged; to endure long. “இவ்வுடம்பு நீட்டித்து நிற்கு மெனின்” (நாலடி, 40.);. [ நீடு → நீட்டு → நீட்டி-.] நீட்டித்திரு-த்தல் nīṭṭittiruttal, 3 செ.கு.வி. (v.i.) நீளுதல்; to lengthen. “கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு நீட்டித்திராது நீபோ கென்றே” (சிலப். 15;199.);. [நீட்டித்து + இரு-,] |
நீட்டிநட | நீட்டிநட1 nīḍḍinaḍattal, 3 செ.கு.வி. (v.i.) மெல்ல நடத்தல்; to walk slowly. [நீள் → நீட்டு → நீட்டி + நட-,] கால நீட்டிப்பு, கணக்கம். நீட்டிநட2 nīḍḍinaḍattal, 3 செ.கு.வி. (v.i.) எட்டி நடத்தல்; to take long strides. [நீள் → நீட்டு → நீட்டி + நட-,] காலைநீட்டி வைத்து நடத்தல். |
நீட்டிப் பேசு-தல் | நீட்டிப் பேசு-தல் nīṭṭippēcudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. விளக்கிச் சொல்லுதல்; to speak at great length. in great detail. ‘நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தன னெந்தாய் (அருட்பா, பிள்ளைப் பெரு.63.);. 2. சொற்களை நீட்டிப் பலுக்கிப் பேசுதல்; to draw Out. [நீள் → நீட்டு → நீட்டி + பேசு.] |
நீட்டிப்படு-த்தல் | நீட்டிப்படு-த்தல் nīḍḍippaḍuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. உடம்பைப் படுக்கையில் கிடத்துதல்; to lie the body on the bed. பணிச்சுமை யிலேற்பட்ட களைப்பினைப் போக்க நேற்று நீட்டிப்படுத்து விட்டேன். (உ.வ.);. 2. செயல் செய்யாது முடங்கிப் போதல்; to strike retuse to work until a grievance is remedied என் கோரிக்கை நிறைவேறும் வரை நீட்டிப்படுத்து விடப் போகிறேன். (உ.வ.);. [நீட்டி + படு-,] |
நீட்டிப்பு | நீட்டிப்பு nīṭṭippu, பெ. (n.) உரிய காலம் முடிந்த பின்பும் தொடர்வதற்கான காலநீடிப்பு; extension ( time.); பணியிட நீட்டிப்பு இன்னும் வழங்கவில்லை. (உ.வ.); [நீள்டி → நீட்டு → நீட்டிப்பு-,] |
நீட்டிப்போடு-தல் | நீட்டிப்போடு-தல் nīṭṭippōṭudal, 19 செ.குன்றாவி. (v.t.) 1. நடக்கும் போது காலை எட்டி வைத்தல் to take a big Stride in walking. இந்த வேகத்தில் நடந்தால் ஊரடையு முன் பொழுது அடைந்துவிடும்;நடையைச் சற்று நீட்டிப்போடு. (உ..வ.);. 2. கால(ம்); நீட்டித்தல்; to put off. இந்த வழக்கிற்குத் தீர்ப்பு சொல்வதைக் கொஞ்சம் நீட்டிப் போடு;அதற்குள் அவர்கள் இணக்கமாகப் போகக் கூடும். (உ.வ);. 3. உட்கார்ந்த நிலையில் காலை நீட்டி மடக்காமல் நீளமாய் வைத்துக் கொள்ளுதல்; to sit by. காலை நீட்டிப் போட்டுக் கொண்டு பாட்டியைப் போல் அமர்ந்துள்ளாயே. (உ.வ.);. 4. பயிர்த் தொழிலில் வேலையாளுக்குரிய பகிர்வை அகலமாய்ப் போடுதல்; to extended in agriculture cooly’s shares எனக்கு மட்டும் மனையை நீட்டிப் போடுவது முறையா. (உ.வ.);. [நீட்டி + போடு-,] |
நீட்டிமுழக்கு-தல் | நீட்டிமுழக்கு-தல் nīṭṭimuḻkkudal, 5 செ.குன்றாவி. (v.t.) dwell upon, speak at great length (on something);, hold forth. நீட்டி முழக்காமல் சுருக்கமாய்ச் சொல். (உ.வ.);. [நீட்டி + முழக்கு-.] |
நீட்டியள | நீட்டியள1 nīṭṭiyaḷattal, 3 செ.குன்றாவி. (v.t.) எஞ்சாது அளத்தல், குறைவற அளத்தல்; to measure accurately. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டியளப்பதோர் கோல் (குறள்,796.); |
நீட்டியள-த்தல் | நீட்டியள-த்தல் nīṭṭiyaḷattal, 3 செ.கு.வி. (v.i.) துணி, இடம் போன்றவற்றை அளக்கும் போது ஏமாற்றாய் அளத்தல்; as measuring the cloth place to cheating. Emoró, முழத்துணியை ஐந்து முழத்துணியாய் நீட்டியளத்து விட்டான். (உ.வ.); நிலத்தை அளக்கும் போது கோலை நீட்டியளந்து என்னுடைய இடத்தையும் சேர்த்துக் கொண்டான் (உ.வ.); நீள்- நீட்டு- நீட்டி+அள-) |
நீட்டியளத்தல் | நீட்டியளத்தல் nīṭṭiyaḷattal, பெ. (n.) ஒரிடத்தையேனும் பொருளையேனும் கோல் முதலிய கருவிகொண்டு அளக்கை (தொல். stg55. 7. 2_sm7);; measuring by rod, etc. [நீள்- நீட்டு அநீட்டி அளத்தல்.] |
நீட்டு | நீட்டு nīṭṭu, பெ.(n.) நீளம் length. மறுவ நீட்டம் [நீள்+து-நீட்டு-நீளம்] நீட்டு என்னும் பிறவினைச் சொல் முதனிலைத் தொழிற்பெயராகி நீளத்தைக் குறித்தது. நீட்டு2 nīṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. முன்நோக்கிக் காட்டுதல்; to brandish, draw (something);; put forth. கத்தியை நீட்டி அச்சுறுத்தினான். (உ.வ.);. அவர் கேட்டதும் பணத்தை நீட்டுவதா? (உ.வ.);. 2. (கால அளவில்); மிகுதியாதல்; to prolong, extend. பேச்சை நீட்டாதே. (உ.வ.); பெயர்ப்பட்டியவை இதற்குமேல் நீட்ட வேண்டாம். (உ.வ.);. 3. (பேச்சில், பாட்டில்); சொற்களை இழுத்துப் பலுக்குததல்;அந்த ஊர்க்காரர்கள் எப்பொழுதும் நீட்டி நீட்டித்தான் பேசுவார்கள். (உ.வ.);. [நீள் → நீட்டு-,] நீட்டு3 nīṭṭu, பெ. (n.) 1. நீளம்; length, as of time or space. ஆவணம் நீட்டிலே மடித்திருந்தது. (உவ.);. 2. தொலைவு (தூரம்);; distance. “மதுரை நீட்டைந்து கூப்பிடு” (திருவாலவா. 26. 8.);. 3. திருமுகவோலை; rescripts, writs, as of a king. “சித்திர சேனனீட்டவிழா” (உபதேசகா. சிவத்துரோ. 174.);. (T.A.S.II.i.4.);. [நீள் → நீட்டு.] நீட்டு4 nīṭṭu, பெ. (n.) 1. நீட்டுகை; extend. 2. தெரிநிலை வினைப்பகுதி; sign of vbl.part. [நீள் → நீட்டு] |
நீட்டு-தல் | நீட்டு-தல் nīṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. foráGlgigi); to lengthen reach forth, extent to stretch out 2. UpLéâmná, GEs நிறுத்துதல்; to straighten, கையை நீட்டினான். 3. திருப்படையல் முதலியன படைத்தல்; to offer, as oblations, “ossilso floorGlost லாம்”திருவிருத்.33. பக்.204). 4. கொடுத்தல், to give பாடிய புலவர்க்குப் பரிசினிட்டின்று” (பு. வெ.3.16. கொளு);. 5. செருகுதல்; to insert drive into göğkıtsir. ustörgyf’ış” (சீவக. 2293);, 6.நீளப்பேசுதல்; to speak al length or too much. 7. Gong Upgous soli, 5TA foly 55%; to prolong, as a note 8. GIIsu #Ủlạ#gả, to delay, procrastinate, retard, defer. |
நீட்டுக்கதியோன் | நீட்டுக்கதியோன் nīṭṭukkadiyōṉ, பெ. (n.) வெள்ளாடு; goat. (சா.அக.);. |
நீட்டுக்கால் | நீட்டுக்கால் nīṭṭukkāl, பெ. (n.) முடவாட்டுக் கால்; goats foot-ipomea bilobs. (சா.அக.);. |
நீட்டுசெடிச்சி | நீட்டுசெடிச்சி nīḍḍuseḍissi, பெ. (n.) பேய்த்தும்பை; devil toombay-leucas sinifolia alias phlomis zeylanica (சா.அக.);. |
நீட்டுப்பாவு | நீட்டுப்பாவு nīṭṭuppāvu, பெ. (n.) சேலைக்கும் வேட்டிக்கும் உரிய தோய்ச்சல் பாவு; spun thread. esp. for knitting and weaving;yarn. [நீட்டு + பாவு.] |
நீட்டுப்பை | நீட்டுப்பை1 nīṭṭuppai, பெ. (n.) 1. சுருக்கி விரிக்கக்கூடிய தையற் பை; a long bag or purse opened or closed by means of a string. [நீட்டு + பை.] நீட்டுப்பை2 nīṭṭuppai, பெ. (n.) பெருவயிறு; capacious stomach. நீட்டுப்பை சுருக்குப்பை வைத்திருக்கிறான். (தஞ்சை.);. [நீட்டு + பை. பொள் → பொய் → பை. பை போன்ற வயிறு.] |
நீட்டுப்போக்கு | நீட்டுப்போக்கு nīṭṭuppōkku, பெ. (n.) 1. நீளவாட்டு; lengthwise direction. 2. உயரம்; tallness. 3. திறமை, ஆற்றல், வல்லமை; ability, pecuniary or otherwise. அவன் நீட்டுப் போக்கான ஆள். (உ.வ.);. [நீட்டு + போக்கு.] |
நீட்டுமிளகாய் | நீட்டுமிளகாய் nīṭṭumiḷakāy, பெ. (n.) மலை மிளகாய்; chilly. [நீட்டு + மிளகாய்.] |
நீட்டுமுடக்கில்லாதவன் | நீட்டுமுடக்கில்லாதவன் nīḍḍumuḍakkillātavaṉ, பெ. (n.) 1. ஏழை; person in straitened circumstances. 2. இறைவன், நெஞ்சீரமிலாதான் (உலோபி);; miser, unaccommodating person. 3. குடும்பக் கவலையற்றவன்; person free from domestic worries. மகன் தலை யெடுத்த பிறகு அவன் நீட்டு முடக்கில்லாதவனாகி விட்டான். (உ..வ.);. [நீட்டு + முடக்கு + இல்லாதான்.] |
நீட்டுமுடக்கு | நீட்டுமுடக்கு nīḍḍumuḍakku, பெ. (n.) 1. கொடுக்கல் வாங்கல்; giving and receiving; lending and borrowing. 2. உதவுங்குணம்; accommodating disposition. 3. நீட்டுப் போக்கு 3 பார்க்க. see {miu-p-pokku} [நீட்டு + முடக்கு.] |
நீட்டோலை | நீட்டோலை nīṭṭōlai, பெ. (n.) திருமுகவோலை; rescripts writs as of a king. “நீட்டோலை வாசியா நின்றான்” (மூதுரை.);. [நீட்டு + ஒலை.] |
நீட்பம் | நீட்பம் nīṭpam, பெ. (n.) நீளம் (யாழ்ப்.);; length. [நீள் → நீட்பம்.] |
நீணகர் | நீணகர் nīṇagar, பெ. (n.) நீண்ட பெருமனை; a large house. “நெடுமணிஞ்சி நீணகர் வரைப்பின்” (பதிற். 68;16.);. [நீள்+நகர்.] |
நீணாளம் | நீணாளம் nīṇāḷam, பெ. (n.) நீள் புகைக் குழாய் (தைலவ. தைல.);; long blow-pipe. [நீள் + நாளம் நாளம் – உட்டுளை, தண்டு.] |
நீணிதி | நீணிதி nīṇidi, பெ. (n.) பெருஞ்செல்வம்; great riches. “நீணிதி வணிகர்” (சீவக. 615.);. [நீள் + நிதி.] Skt. Nidi |
நீணிரை | நீணிரை nīṇirai, பெ. (n.) நெடும்பிணக்குவை; collection of carcass. “நிலமிழி நிவப்பி னீணிரை பலசுமந் துருவேழு கூளிய ருண்டு மகிழ்ந்தாட” (பதிற்றுப். 36;11.);. [நீள் + நிரை.] |
நீணிலங்கடந்தநெடுமுடியண்ணல் | நீணிலங்கடந்தநெடுமுடியண்ணல் nīṇilaṅgaḍandaneḍumuḍiyaṇṇal, பெ. (n.) திருமால்;{Tirumal,} “நீணிலங் கடந்த நெடுமுடி யண்ணல் தாடொழு தகையேன் போகுவல் யானென” (சிலப். 11;148.);. [நீள் + நிலம் + கடந்த + நெடுமுடி + அண்ணல்.] |
நீணிலமளந்தோன் | நீணிலமளந்தோன் nīṇilamaḷandōṉ, பெ. (n.) Tirumal. “வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோ னாடிய குடமும்” (சிலப். 6;54.);. [நீள் + நீளம் + அளந்தோன்.] |
நீணிலமளந்தோன்மகன் | நீணிலமளந்தோன்மகன் nīṇilamaḷandōṉmagaṉ, பெ. (n.) திருமாலின் மகனாகிய காமன், {Kaman} “வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் மகன்முன் னாடிய பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்” (மணிமே. 3;116.);. [நீணிலம் + அளந்தோன் + மகன்.] |
நீணிலம் | நீணிலம் nīṇilam, பெ. (n.) பெருநிலப்பரப்பு; a large area, “நிரப்பின் றெய்திய நீணிலம்” (மணிமே.14;51.);. |
நீணிலை | நீணிலை nīṇilai, பெ. (n.) ஆழம்; depth. “நீணிலைக் கூவல்” (கல்லா. 12.);. [நீள் + நிலை.] |
நீணு-தல் | நீணு-தல் nīṇudal, 5 செ.கு.வி. (v.i.) நெடுந் தொலைவு செல்லுதல்; to go a long distance. “மாலொடு தண்டாமரையானு நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்” (தேவா. 62. 9.);. [நீள் → நீளு → நினு-,] |
நீணெறி | நீணெறி nīīeṟi, பெ. (n.) 1. நீண்டவழி (யாழ்.அக.);; long way. “வேலியில் இடுமுள் ளொன்றைப் பிரித்து அதனை நீங்கிக் காலைக் கடன் கழித்தற்கு நீணெறிக் கண்ணதோர் நீர்நிலைக்கண் தலைப் படுகின்றவனென்க.” (சிலப். 13;43, உரை.);. 2. இடைவிடா இன்பத்திற்குரிய நெறி (வின்.);; the path of lasting happiness. [நீள் + நெறி.] |
நீணோக்கம் | நீணோக்கம் nīṇōkkam, பெ. (n.) விடாமற் பார்த்தல்; seeing without stop. “நீணோக்கங் கண்டு நிறைமதி வாண் முகத்தைத் தானோர் குரக்குமு மாகென்று போன” (சிலப். 21;20.);. [நீள் + நோக்கு+அம்] |
நீண்ட | நீண்ட nīṇṭa, பெ.அ. (adv.) (in length and time); long. நீண்ட கடிதம் (உ.வ.); நீண்ட கூந்தல் (உ.வ.); நீண்ட காலக் கடன்(உ.வ.); நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். (உ.வ);. [நீள் → நீண்ட.] |
நீண்ட குழல் | நீண்ட குழல் nīṇṭaguḻl, பெ.(n.) ஒயிலாட் டத்தில் இசைக்கப்பெறும் ஒரு வகை இசைக்கருவி; a musical instrument, used in ‘oyilättam’. [நீண்ட+குழல்] |
நீண்ட வளை கொம்பு | நீண்ட வளை கொம்பு nīṇṭavaḷaigombu, பெ.(n.) திருந்தா ஊது கருவி; a musical instrument. [நீண்ட+வளை+கொம்பு] [P] |
நீண்டகையன் | நீண்டகையன்1 nīṇṭagaiyaṉ, பெ. (n.) யானை; elephant. [நீண்ட + கையன்.] நீண்டகையன்2 nīṇṭagaiyaṉ, பெ. (n.) களவுப்பழக்கமுள்ளவன், thief. [நீள் → நீண்ட + கையன்.] இவன் கை நீளமுள்ளவன் என்னும் வழக்குக் களவாணியைக் குறிக்கும். மேலும் பிழைசெய்தவன், தன் தவறு தெரியாதிருக்க, பேசி கொண்டிருக்கும் போதே அடித்துவிடும் இயல்புடை யானையும் குறிக்கும். |
நீண்டகையானை | நீண்டகையானை nīṇṭagaiyāṉai, பெ. (n.) ஒற்றைக் கொம்பனின் கொம்பு (யாழ். அக.);; the horn of the rhinoceros. |
நீண்டகையான் | நீண்டகையான் nīṇṭagaiyāṉ, பெ. (n.) ஒற்றைக்கொம்பன் (காண்டா மிருகம்);; rhinoceros. (சா.அக.);. |
நீண்டதும்பை | நீண்டதும்பை nīṇṭadumbai, பெ. (n.) பேய்த்தும்பை; devil toombay-Leucas liniflia alias phlomis zeylanica. [நீண்ட + தும்பை.] |
நீண்டவன் | நீண்டவன் nīṇṭavaṉ, பெ. (n.) திருமால்;{višnu;} as one who grew to great height in his dwarf incarnation. “நீண்டவன் றுயின்ற சூழ லிதுவெனின்” (கம்பரா. குகப். 41.);. [நீள் – நீண்டவன்.] தோற்றரவில் குறுமையுரு வெடுத்து மூன்றடி மண்கேட்டபின் பேருருக் கொண்டு உலகளந்து மாவலியின் செருக்கடக்கியதான தொன்மக்கதை. |
நீண்டவிலை | நீண்டவிலை nīṇṭavilai, பெ. (n.) ஆடாதோடை; malabar nut-adthoda vasica. (சா.அக.);. [நீள் → நீண்ட + இலை.] |
நீண்டாயம் | நீண்டாயம் nīṇṭāyam, பெ. (n.) நீளம் (யாழ்.அக.);; length. [நீள்→நீண்ட.நீண்ட+ஆயம் நீண்டாயம்.] |
நீண்டொழுகுமேகம் | நீண்டொழுகுமேகம் nīṇṭoḻugumēgam, பெ. (n.) தந்துமேகம் பார்க்க;see {tandப mēgam} (சா.அக.);. |
நீண்டோன் | நீண்டோன் nīṇṭōṉ, பெ. (n.) நீண்டவன் பார்க்க;see {nindavan} [நீள்→நீண்ட→நீண்டவன்→நீண்டோன்.] |
நீண்முடி | நீண்முடி nīṇmuḍi, பெ. (n.) அரசன்; king, as wearing a high crown. “நின்றமா மள்ளர்க் கெல்லா நீண்முடி யிலக்க மானான்” (சீவக. 286.);. [நீள் + முடி.] |
நீண்மை | நீண்மை nīṇmai, பெ. (n.) பழைமை; antiquity, olden times. “நீண்மைக்க ணின்று வந்த நீதியெலாந் தருவல்” (சீவக. 1119.);. [நீள்→நீண்மை.] |
நீண்மொழி | நீண்மொழி nīṇmoḻi, பெ. (n.) 1. சூளுரை; vow. “நீண்மொழிக் குன்றா நல்லிசைச் சென்றோ ரும்பல்” (மலைபடு. 539.);. 2. வீர னொருவன் செய்த வஞ்சினங் கூறும் புறத்துறை (புறநா. 287, தலைப்பு.);; a theme describing the vow taken by a warrior. “நீண்மொழி யெல்லா நீலன் கூற” (சிலப்.28;109.);. [நீள் + மொழி.] |
நீதகம் | நீதகம் nītagam, பெ. (n.) 1. வெற்றிலைக் கொடி எனும் கொடிவகை; betel-pepper. 2. நீர்வல்லி பார்க்க;see {mil-wal} [நீர் → நீத்தம் → நீதம் → நீதகம்.] |
நீதச்சிலைச்சூதம் | நீதச்சிலைச்சூதம் nītaccilaiccūtam, பெ. (n.) துரிசு; blue vitriol, verdigris. |
நீதச்செம்மண் | நீதச்செம்மண் nītaccemmaṇ, பெ. (n.) நிலத்தின் மேல் மண்; the red soil of a tab land. (சா.அக.);. [நீதம் + செம்மண்.] |
நீதன் | நீதன்1 nītaṉ, பெ.(n.) நீதிமான் பார்க்க;see {}. “நீதன்… துன்மேத னூர்புரக்க வைத்து” (சேதுபு.சீதைகண்ட.9);. [Skt. {} → த. நீதன்1.] நீதன்2 nītaṉ, பெ.(n.) நீசன்; low, vile person. “நீதரல்லார் தொழுமாமருகல்” (தேவா. 660, 10);. [Skt. {} → த. நீதன்2.] |
நீதபரிமளம் | நீதபரிமளம் nītabarimaḷam, பெ. (n.) சீதாங்கச் செய்நஞ்சு (யாழ். அக.);; a minera poison. [நீதம் + பரிமளம்.] நீதபரிமளம் nītabarimaḷam, பெ.(n.) சீதாங்க பாடாணம் என்னும் ஒருவகைச் செய்ந்நஞ்சு (யாழ்.அக.);; a mineral poison. |
நீதப்பிழை | நீதப்பிழை nītappiḻai, பெ.(n.) நீதிக்கேடு பார்க்க;see {}. [Skt. {}+ → த. நீதப்பிழை.] |
நீதம் | நீதம் nītam, பெ.(n.) 1. தகுதியானது; that which is suitable, proper. “அருளாய் நிற்கும்நிலை கற்பதுவே நீதம்” (தாயு.பராபர. 353);. 2. முறைமை (நீதி);; propriety, justice. “பொல்லாத சேயெனில் தாய்தள்ளனீதமோ” (தாயு. சுகவாரி.3);. 3. தவசம் (தானியம்); (யாழ்.அக.);; grain. 4. நற்பேறு (பாக்கியம்); (யாழ்.அக.);; prosperity. [Skt. {} → த. நீதம்.] |
நீதம்பாதம் | நீதம்பாதம் nītambātam, பெ.(n.) முறைமை (நீதி);; justice (Loc.);. [Skt. {}+Perh.{} → த. நீதம்பாதம்.] |
நீதவான் | நீதவான் nītavāṉ, பெ.(n.) 1. நீதிமான் பார்க்க;see {} (colloq.);. 2. நியாயாதி பதி (வின்.);; judge. [Skt. {} → த. நீதவான்.] |
நீதாசனம் | நீதாசனம் nītācaṉam, பெ.(n.) வழக்குமன்றம் (யாழ்.அக.);; court of justice. [Skt. {} → த. நீதாசனம்.] |
நீதி | நீதி nīti, பெ.(n.) 1. நயன், நியாயம்; equity, justice. “நீதியாவன யாவையு நினைக்கிலேன்” (திருவாச.26, 2);. 2. முறைமை; discipline. “கட்டமை நீதிதன்மேற் காப்பமைந்து” (சீவக. 1145);. 3. ஒழுக்கநெறி; right conduct, morality. “நீதியா லவர்கடம்மைப் பணிந்து” (பெரியபு. தடுத்தாட்.197);. 4. மெய் (பிங்.);; truth. 5. உலகத்தோடு பொருந்துவகை (குறள்.97, உரை);; conformity with the ways of the world. 6. இயல்பு; nature. “ஊர்தியிற் சேறலு நீதியாகும்” (நம்பியகப்.83);. 7. தருமசாத்திரம்; law. “உணர்ந்தாய் மறைநான்கு மோதினாய் நீதி” (திவ்.இயற்.2, 48);. 8. நடத்துவது (சி.போ.பா. பக்.20, சுவாமிநா.);; that which guides. 9. வழிவகை (உபாயம்);; means, contrivance. “உலகமெல்லா மாண்டிட விளைக்கு நீதி” (சீவக.755);. 10. பார்வதி (கூர்மபு.திருக்.21);;{}. த.வ. முறை, முறைமை [Skt. {} → த. நீதி.] |
நீதிகர்த்தா | நீதிகர்த்தா nītigarttā, பெ.(n.) முறை மன்றத் தலைவர்; judge (pond.);. [Skt. {}+ → த. நீதிகர்த்தா.] |
நீதிகர்மம் | நீதிகர்மம் nītigarmam, பெ.(n.) பதி னோரங்குல நீளமுள்ள நூலை நாசியிற் செலுத்தி வாய் வழியாக வாங்குகை (யோகஞான.பக்.33);; inserting a thread 11 inches long through the nostril and drawing it out of the mouth. [Skt. {}+ → த. நீதிகர்மம்.] |
நீதிகெட்டவன் | நீதிகெட்டவன் nītigeṭṭavaṉ, பெ.(n.) முறைமை தவறியவன்; unjust man. [Skt. {} → த. நீதி+கெட்டவன்.] |
நீதிகேள்-தல் (நீதிகேட்டல்) | நீதிகேள்-தல் (நீதிகேட்டல்) nītiāḷtalnītiāṭṭal, 12 செ.கு.வி.(v.i.) வழக்கு விசாரித்தல் (வின்.);; to hear or try a case. த.வ. வழக்கு நேர் கேட்டல் [Skt. {} → த. நீதி+கேள்-,] |
நீதிக்கேடு | நீதிக்கேடு nītikāṭu, பெ.(n.) 1. நியாயத் தவறு; injustice, illegality. 2. ஒழுக்கத் தவறு; immorality. த.வ. முறைகேடு [Skt. {}+ → த. நீதிக்கேடு.] |
நீதிசாத்திரம் | நீதிசாத்திரம் nīticāttiram, பெ.(n.) அறு பத்து நாலு கலைகளுள் அரசியல் பற்றிய சாத்திரம் (வின்.);; science of polity, one of {}-kalai. [Skt. {} → த. நீதிசாத்திரம்.] |
நீதிசாரம் | நீதிசாரம் nīticāram, பெ.(n.) நீதி நூல்களில் ஒன்று (யாழ்.அக.);; a diactic work. [Skt. {} → த. நீதி+ சாரம்] |
நீதிச்செல்வம் | நீதிச்செல்வம் nīticcelvam, பெ.(n.) தலை மழிப்பு (சௌளம்);; tonsure ceremony of a child. “தலைகுன்றா நீதிச்செல்வம் மேன்மேனீந்தி” (சீவக.366);. [Skt. {} → த. நீதி+செல்வம்.] |
நீதித்தொழில் | நீதித்தொழில் nītittoḻil, பெ.(n.) ஒருவனுக்கு உரிய செய்கை (வின்.);; one’s proper or professional duty. [Skt. {} → த. நீதி+தொழில்.] |
நீதிநியாயம் | நீதிநியாயம் nītiniyāyam, பெ.(n.) 1. நீதி முறை; justice and reason. 2. சட்ட திட்டங்கள்; law, legislative enactments. 3. முறைமன்ற ஒழுங்கு; practice or procedure in the courts of law. த.வ. முறைமை ஒழுங்கு [Skt. {}+ → த. நீதிநியாயம்.] |
நீதிநூலன் | நீதிநூலன் nītinūlaṉ, பெ.(n.) 1. நியாயப் பிரமாணிகள் (வின்.);; legislator. 2. அருகன் (சது.);; Arhat. [Skt. {} → த. நீதி+நூலன்.] |
நீதிநூல் | நீதிநூல் nītinūl, பெ.(n.) 1. அறப் பொருள் களைக் பற்றிக் கூறும் நூல்; science of polity and ethics. “வியாழவெள்ளிகள் துணிபு தொகுத்துப் பன்னீதி நூலுடையார் கூறியவாறு” (குறள், 662, உரை);. 2. சட்ட நூல் (வின்.);; legal treatise. த.வ. முறைநூல், அறநூல் [Skt. {} → த. நீதி+நூல்.] |
நீதிநெறி | நீதிநெறி nītineṟi, பெ.(n.) நல்லொழுக்கம் (வின்.);; morality, moral conduct. த.வ. நன்னெறி [Skt. {} → த. நீதி+நெறி.] |
நீதினி | நீதினி nītiṉi, பெ.(n.) முறைமை தவறாதவள் (நன். 146, மயிலை);; she who is just. [Skt. {} → த. நீதினி.] |
நீதிபதி | நீதிபதி nīdibadi, பெ. (n.) நயனகர், அறமன்ற நடுவர்; judge. [Skt. niti-bati → த. நீதிபதி.] |
நீதிமதி | நீதிமதி nīdimadi, பெ.(n.) மேள கர்த்தாக்களுள் ஒன்று (சங்.சந்.);; |
நீதிமான் | நீதிமான் nītimāṉ, பெ.(n.) நன்னெறி நிற்போன்; just righteous man. nom. masc. sing. of {}-mat. [Skt. {} → த. நீதிமான்.] |
நீதியதிபதி | நீதியதிபதி nīdiyadibadi, பெ.(n.) முறைமன்ற நடுவர்; judge. “நீதியதிபதி நாமுணர்வீர்” (வேதநாயகம்);. [Skt. {}+ → த. நீதி+அதிபதி.] |
நீதியறிந்தோன் | நீதியறிந்தோன் nītiyaṟindōṉ, பெ.(n.) அமைச்சர் (வின்.);; minister of state. [Skt. {} → த. நீதி+அறிந்தோன்.] |
நீதியொழுங்கு | நீதியொழுங்கு nītiyoḻuṅgu, பெ.(n.) நீதிநெறி பார்க்க;see {}. [Skt. {} → த. நீதி+ஒழுங்கு.] |
நீதிராசா | நீதிராசா nītirācā, பெ.(n.) நீதியதிபதி பார்க்க (j.);;see {}. [Skt. {} → த. நீதிராஜா.] |
நீதிவழு | நீதிவழு nītivaḻu, பெ.(n.) முறைமைத் தவறு; injustice. த.வ. முறைகேடு [Skt. {} → த. நீதி+வழு.] |
நீதிவான் | நீதிவான் nītivāṉ, பெ.(n.) 1. நீதிமான் பார்க்க;see {}. 2. நீதியதிபதி (இ.வ.); பார்க்க;see {}. [Skt. {} → த. நீதிவான்.] |
நீதிவிளக்கம் | நீதிவிளக்கம் nītiviḷakkam, பெ.(n.) முறை மன்றத்தில் செய்யும் முறை, நேர்கேட்பு (விசாரணை); (யாழ்.அக.);; inquiry or trial of a suit or case. [Skt. {} → த. நீதி+விளக்கம்.] |
நீதிவிளங்கு-தல் | நீதிவிளங்கு-தல் nīdiviḷaṅgudal, 5 செ.கு.வி. (v.i.) நீதிகேள் (யாழ்.அக.); பார்க்க;see {}. [Skt. {} → த. நீதி+விளங்கு-,] |
நீத்தடி | நீத்தடி nīttaḍi, பெ.(n.) நீச்சல். (கொ.வ.வ. சொ.98);; swimming. [நீந்தல்+அடி-நீத்தல-நீத்தடி (கொ.வ.);] |
நீத்தண்ணீர் | நீத்தண்ணீர் nīttaṇṇīr, பெ. (n.) நீர்ச் சோற்றுத் தண்ணீர் (இ.வ.);; water allowed to stand over cooked rice over-night. [நீர்ச்சோற்றுத் தண்ணீர் → நீர்த்தண்ணர் → நீத்தண்ணீர்.] |
நீத்தம் | நீத்தம்2 nīttam, பெ. (n.) தண்ணீர் விட்டான் கிழங்கு; water root, aspargus racemes. |
நீத்தவன் | நீத்தவன் nīttavaṉ, பெ. (n.) 1. துறவி; ascetic. 2. அருகன் (சூடா.);; Arhat. [நீ → நீக்கு → நீத்தல். நீத்தல் = விடுபடுதல், விலகுதல், துறத்தல். நீத்து → நீத்தவன்.] |
நீத்தார் | நீத்தார் nīttār, பெ. (n.) இறந்தவர் (இக்.வழ.); மறைந்தவர்; the dead. ‘நீத்தாருக்கு ஆற்ற வேண்டிய கடன்’ (உ.வ.);. நீத்தார் – உயிரை நீத்தவர், இறந்தவர்.] நீத்தார் என்பது முற்றத்துறந்த முழு முனிவரையே குறிக்குமெனினும், உயிரைத் துறந்த பின் துறப்பதற் கேதுமின்மை கருதி மறைந்தவரைக் குறிக்கவும் இச்சொல் வழங்குவது இக்கால வழக்கு. நீத்தார்2 nīttār, பெ. (n.) முற்றுந் துறந்த முனிவர், renounced person. “ஒழுக்கத்து நீத்தார் பெருமை” (குறள், 21.);. [நீ → நீக்கு → நீத்தார்.] முற்றத் துறந்த முழுமுனிவர். தமக்குரிய ஒழுக்கத்தின் கண் உறைந்து நின்று உலகப் பற்றைத் துறந்த முனிவர். |
நீத்தார்இறுதிச்சடங்கு | நீத்தார்இறுதிச்சடங்கு nīddāriṟudiccaḍaṅgu, பெ. (n.) இறந்தவரின் பொருட்டு அவர் பிறங்கடைகள் செய்யும் இறப்புக்குப் பிந்தைய காரணம்; performence funeral rites to the death by their heir. [நீத்தார் + இறுதிச்சடங்கு.] |
நீத்தார்கடன் | நீத்தார்கடன் nīttārkaḍaṉ, பெ. (n.) நீத்தார் இறுதிச் சடங்கு பார்க்க;see {nittār-irudi-ccagangu.} [நீத்தார்2 + கடன். கடம் → கடன் = செய்யத் தக்கது. செலுத்தத் தக்கது.] |
நீத்தார்சடங்கு | நீத்தார்சடங்கு nīttārcaḍaṅgu, பெ. (n.) நீத்தார் இறுதிச்சடங்கு பார்க்க;see {nitarirud-c-cadargu} [நீத்தார் + சடங்கு.] |
நீத்தார்பெருமை | நீத்தார்பெருமை nīttārperumai, பெ. (n.) திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று; one of the chapters of {Tirukkural} [நீத்தார் + பெருமை.] இறைவன் திருவருளைப் பெற்றவரும், மழை பெயற்கு ஓரளவு கரணியமாகக் கருதப்பெறுபவரும், பேரரசர்க்கும் பெருந் துணையாகும் அறிவாற்றல் மிக்கவரும், மழைக்கு அடுத்தபடியாக நாட்டு நல்வாழ்விற்கு வேண்டியவருமான, முற்றத் துறந்த முழு முனிவரின் பெருமை கூறுதல் (குறள், மரபுரை 1;50.);. |
நீத்திடு-தல் | நீத்திடு-தல் nīddiḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. பெருக்கிடுதல்;(சீவக. 1382, உரை.);; to overflow, flood. 2. மிகுத்திடுதல்; to become excessive. “இகவாவிட ரென்வயி னீத்திட” (சீவக. 1382.);. [நீத்து + இடு-,] |
நீத்திருணி | நீத்திருணி nīttiruṇi, பெ. (n.) காமப்பால்; semen virile (சா.அக.); |
நீத்து | நீத்து1 nīttu, பெ. (n.) பெருக்கம் (ஐங்குறு.); multiplicity. நீத்து2 nīttu, பெ. (n.) 1. நீந்துகை; swimming. “நீத்துநீ ரிருங்கழி” (ஐங்குறு.162.);. 2. நீந்தக்கூடிய ஆழமுடைய நீர்; water of swimming depth. “யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப” (தொல்.சொல்.406,சேனா.);. 3. வெள்ளம்; flood. [நீந்து → நீத்து.] |
நீத்துநீர் | நீத்துநீர் nīttunīr, பெ. (n.) நீந்துதற்குரிய ஆழ்ந்த நீர்; depth of water to be used for swimming. “பெருங்கடற் கரையது சிறு வெண்காக்கை நீத்து நீர் இருங்கழி இரைதேர்ந்துண்டு பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு” (குறுந்.313.);. [நீந்து → நீத்து + நீர்.] |
நீத்தோர் | நீத்தோர் nīttōr, பெ. (n.) பிரிந்தோர்; as divider. “அஞ்சி லோதி யாய்வளை நெகிழ நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம் வாழீ தோழி” (குறுந்.21.);. [நீத்து → நீத்தோர்.] |
நீந்தக்கொடு-த்தல் | நீந்தக்கொடு-த்தல் nīndakkoḍuttal, செ.குன்றாவி. (v.t.) நீந்தப் பெய்-தல் பார்க்க;see {ninda-p-pe} [நீந்து2 + கொடு-,] |
நீந்தப்பெய்-தல் | நீந்தப்பெய்-தல் nīndappeytal, செகுன்றாவி. (v.t.) மிகுதியாய்க் கொடுத்தல்; to give or pour in abundance, “கன்னலு நெய்யு நீந்தப் பெய்து” (சீவக. 2401.);. [நீந்து2 பெய். நீஞ்சு → நீந்து = கடத்தல், அளவு கடத்தல், மிகுதி. பிள் → பிய் → பெய் = பொழிதல், கொடுத்தல், வழங்குதல்.] |
நீந்தல் | நீந்தல் nīndal, தொ.பெ. (vbl.n.) நீந்துதல் (சூ.நிக.5;25. மூலம்.);; to swim. [நீர் + நீந்து + அல்.] அல்- தொழிற்பெயரீறு. |
நீந்து | நீந்து1 nīndudal, 5 செ.கு.வி. (v.i.) 1. கைகால்களாலடித்து நீரில் மிதந்து செல்லுதல்; to swim in water. “நீந்துபுனல்” (திவா. 5.68.);. 2. பெருகுதல்; to overflow. “நெடும்பெருங்க ணீந்தின நீர்” (பு.வெ.12. பெண்பாற்.8.);. [நீஞ்சு →நீந்து.] நீந்து2 nīndudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கடத்தல்; to swim across, cross over. escape from. “பிறவிப் பெருங்கடனீந்துவர்” (குறள்,10.);. 2. வெல்லுதல்; to get over. Overcome. “கலங்கருவிய வரைநீந்தி” (மதுரை 57.);. 3. கழித்தல்; to relinquish, give up. “மணப்பருங் காமந் தணப்ப நீந்தி” (அகநா. 50.);. நீந்து2 nīndu, பெ. (n.) பெருங்கடல்; ocean. “நீந்து நித்தில விதான நிழலான்” (சீவக.2421.);. |
நீந்துபுனல் | நீந்துபுனல் nīndubuṉal, பெ. (n.) ஆழமுள்ள நீர் (திவா.);; deep water. [நீந்து + புனல்.] |
நீந்துப்பாகம் | நீந்துப்பாகம் nīnduppākam, பெ. (n.) நீர்ச் சோற்றுத்தண்ணீர் பார்க்க;see {mir-soru-ttaրրir} [நீர் + பாகம் → நீர்ப்பாகம் → நீற்றுப்பாகம் → நீத்துப்பாகம்.] |
நீந்துமூசி | நீந்துமூசி nīndumūci, பெ. (n.) காந்தம்; load Stone. [நீந்தும் + ஊசி.] |
நீனிறடவினை | நீனிறடவினை nīṉiṟaḍaviṉai, பெ. (n.) கரிசு (பாவச்செயல்);; sinful deeds. “நீனிற வினையி னீங்கி” (சீவக. 947.);. [நீல் + நிறம் + வினை.] |
நீனிறமஞ்ஞை | நீனிறமஞ்ஞை nīṉiṟamaññai, பெ. (n.) நீலநிறமயில்; peacock. “கானக்கோழியு நீனிற மஞ்ஞையும்” (சிலப். 12;34.);. [நீல + நிறம் + மஞ்ஞை.] |
நீனிறம் | நீனிறம் nīṉiṟam, பெ. (n.) நீலநிறம்; blue; blue-black; purple, “நீனிற வோரி பாய்ந்தென” (மலைபடு. 524.);. “வயச்சுறா எறிந்த புண்தணிந் தெந்தையும் நீனிறப் பெருங்கடல் புக்கனன்” (குறுந். 209.);. [நீல் + நிறம்.] |
நீனிறவண்ணன் | நீனிறவண்ணன் nīṉiṟavaṇṇaṉ, பெ. (n.) திருமால்;{Tirumal,} “அவனுடைய நகர வீதியிற் சென்ற நிலங்கடந்த நீனிற வண்ணன் குடங் கொண்டாடிய குடக்குத்தும்” (சிலப். 6;55, உரை.);. [நீல + நிறம் + வண்ணன்.] |
நீனிறவியலகம் | நீனிறவியலகம் nīṉiṟaviyalagam, பெ. (n.) நீலப்பரப்பாகிய கடல் (ஐங்குறு. 401.);; sea. ocean, as the blue expanse. [நீனிறம் + வியலகம்.] |
நீன்மை | நீன்மை nīṉmai, பெ. (n.) நீலநிறம்; blue colour. “நீன்மை மேனியன்” (சேதுபு. விதூம.1.);. |
நீபம் | நீபம்1 nīpam, பெ. (n.) 1. நீர்க்கடம்பு (பிங்.); பார்க்க;see {mir-k-kadambu} 2. பெண் கடம்பு; Common Indian oak. 3. செங்கடம்பு; small Indian oak. 4. மரவகை; niepabark. 5. உத்திரட்டாதி (பிங்.); பார்க்க;see {uttirattädi} நீபம்2 nīpam, பெ. (n.) கரணியம் (பிங்.);; cause, reason. நீபம்1 nīpam, பெ.(n.) 1. நீர்க்கடம்பு (பிங்.); பார்க்க;see {} 2. வெண்கடம்பு (மலை.);; common Indian oak. 3. செங் கடம்பு; small Indian Oak. 4. மரவகை. 5. பிற் கொழுங்கால் என்னும் விண்மீன் (உத்திரட் டாதி); (பிங்.);; the 26th naksatra. [Skt. {} → த. நீபம்1.] நீபம்2 nīpam, பெ.(n.) காரணம் (பிங்.);; cause, reason. [Skt. nibha → த. நீபம்2.] |
நீபோடநட-த்தல் | நீபோடநட-த்தல் nīpōḍanaḍattal, 3 செ.கு.வி. (v.i.) நெடுங்காலம் நிகழ்தல் (வின்.);; to last, a long time. [நீடு + ஒட + நட.] |
நீப்பு | நீப்பு nīppu, பெ. (n.) 1. துறவு; relinquishment, renunciation. 2. பிரிவு; separation, parting. [நீ → நீப்பு] |
நீப்புரவு | நீப்புரவு nīppuravu, பெ. (n.) நீங்குகை; leaving, abudoning. “யாப்புறு பால்வகை நீப்புரவின்றி” (பெருங். மகத. 6;63.);. [நீ → நீப்பு → நீப்புரவு.] |
நீமம் | நீமம் nīmam, பெ. (n.) 1. ஒளி; light 2. பளபளப்பு; lustre. (சா.அக.);. |
நீம் | நீம் nīm, பி. பெ. (pron.) முன்னிலைப் பன்மைப்பெயர்; you. “நீமே வென்றிக் களிற்றானுழைச் செல்வது வேண்டு மென்றான்” (சீவக. 1932.);. [நீன் → நீ → நீம்.] நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற் போல் நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படுகிறது. நீனுக்குப் பன்மை நீம். மகரம் பன்மைப் பொருளுணர்த்தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம் (இலக்.கட்.4.);. |
நீம்பயம் | நீம்பயம் nīmbayam, பெ. (n.) பனிதாங்கி; southern wood-artimisa abrotanum (சா.அக.);. |
நீம்பல் | நீம்பல் nīmbal, பெ. (n.) 1. இரண்டு பலகையினூடே தோன்றுவது போன்ற பிளப்பு (இ.வ.);; interstice, gap, cleft, chink, as between two boards. 2. வெடியுப்பு (சா.அக.);; saltpetre. [நூல் → நெல் → நெள் → நெரு → நெகிழ் (நெகிள்); நீள்→நீம்→நீம்பு→நிம்பல்.] |
நீயான் | நீயான் nīyāṉ, பெ. (n.) கப்பலின் தலைவன்; captain of a ship. “பௌவத்தருங்கலமியக்கு நீயான் போல” (பெருங். உஞ்சைக்.49;10.); [நீர்கலமகன் → நீகாமன் → நீகான் → நியான்] |
நீயிர் | நீயிர்1 nīyir, பி.பெ. (pron.) முன்னிலைப் பன்மைப்பெயர்; you. நீயிர் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமைப்படும்போது நும் என்று திரியு மேயன்றி, நும் மென்னும் வேற்றுமைத் திரிபுப் பெயர் நீயிரென்று திரியாது. முன்னிலைப் வேற்றுமைத்திரிபு பெயர் நீ, நீ நின், நுன், உன் நீம் நும், உம் நீம் + கள் = நீங்கள் நுங்கள், உங்கள் நீம் + இர் = நீவிர் நும், உம். நீயிர், நீவிர்;நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல், நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப்படுகிறது. நீனுக்குப் பன்மை நீம் என்பது மகரம் பன்மைப் பொருளுணர்த்தலை ஆங்கில இலக்கண நூல்களிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப்பன்மை. (இலக்.கட். 4.);. நீன், நீம், நூன், நூம் என்பன பழந்தமிழ் முன்னிலைப் பெயர்கள். இவற்றின் னகரவீறு ஒருமையையும் மகரவீறு பன்மையையுங் குறிக்கும். இவற்றுள் நீன் என்னுஞ் சொல் இன்றும் தென்னாட்டு வழக்கிலுள்ளது. நூன் நூம் என்பன இருவகை வழக்கும் அறினும், அவற்றின் வேற்றுமைத் திரிபான நுன், நும் என்னும் அடிகள் இன்றுஞ் செய்யுள் வழக்கிலுள்ளன. நீன் என்னுஞ் சொல்லின் கடைக்குறையான நீ என்பது இருவகை வழக்கிலுமுள்ளது. நீ என்பது சீனமொழியில் ‘நி’ எனக் குறுகி வழங்குகின்றது. ‘நிமென்’ என்பது இதன் பன்மை. பொர்னு என்னும் ஆப்பிரிக்க மொழியில் ‘நி’ என்பதே முன்னிலை யொருமைப் பெயர். சில பழஞ்சிந்திய மொழிகளில் நீ என்னும் பெயர் தமிழிற் போன்றே சிறிதும் திரியாமல் வழங்கிவந்தது. ஆத்திரேலிய மொழிகளின் முன்னிலை யொருமை ‘நின்ன’ ‘ஙின்னி’ ‘ஙிந்தெ’ என்பன; இருமை ‘நிவ’ ‘நுர’ என்பன; பன்மை ‘நிமெதூ’ என்பது. இங்ங்னமே ஏனை யிடப் பெயர்களும் இயல்பு வடிவில் அல்லது திரிபுவடிவில் ஏறத்தாழ எல்லா மொழிகட்கும் பொது வாகவுள்ளன. (மொழி.கட்.14.);. நீயிர்2 nīyir, பி.பெ. (pron.) நீவிர்; you “நீயிர்கள் வாய்மையை நிகழ்த்துமென்னவே” (கந்தபு. சூரனகர்புரி.18.);. |
நீயேகூறென்றல் | நீயேகூறென்றல் nīyēāṟeṉṟal, பெ. (n.) திருக்கோவையார் கூறும் அகப் பொருள் துறைகளிலொன்று; one of the theme of the love-poetry. தன் பிரிவைத் தலைவியிடங் கூறுமாறு தலைவன் தோழியிடம் வேண்ட, அதற்கவள் உடம்படாளாய்த் தலைவ, அவளுக்கு நீயே கூறுக’ எனுந்துறை. [நீயே + கூறு + என்றல்.] |
நீரகம் | நீரகம்1 nīragam, பெ. (n.) 1. கடல் சூழ்ந்த நிலம்; the earth, as sea-girt. “நீரகம் பனிக்கு… கடுந்திறல்” (மலைபடு. 81.);. 2. கச்சியிலுள்ள திருமால் கோயில்களுள் ஒன்று (திவ். திருநெடுந். 8.);; a Tirumal shrine in {Kāñjipuram.} [நீர் + அகம்.] நீரகம்2 nīragam, பெ. (n.) நீர்நிலை; water sources. “அவிழ் வேண்டுநர்க் கிடையருளி விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப நீர்நிலை பெருத்தவார்மண லடைகரை” (புறநா.366;18.);. |
நீரங்காடி | நீரங்காடி nīraṅgāṭi, பெ. (n.) நீராட்டுக்குரிய பொருள் விற்கும் கடை; bathing market. “ஊரங்காடி யுய்த்துவைத் ததுபோல் நீரங்காடி நெறிபட நாட்டி” (பெருங். உஞ்ஞைக். 38;56.);. [நீர் + அங்காடி.] |
நீரங்கொண்டி | நீரங்கொண்டி nīraṅgoṇṭi, பெ. (n.) நொச்சி; five leaved notch-vitex negundo. (சா.அக.);. |
நீரசம் | நீரசம்1 nīrasam, பெ. (n.) 1. சுவையற்றது; anything insipid. tasteless. “நீரசமான செய்யுள்” 2. மாதுளை (யாழ்.அக.);; pome granate. நீரசம்2 nīrasam, பெ. (n.) நீரிலுண்டாகும் தாமரை (யாழ்.அக.);; lotus, as produced in Water. நீரசம்3 nīrasam, பெ. (n.) நீரக வளி (பாண்டி.);; hydrogen. |
நீரசாதிசாத்திரம் | நீரசாதிசாத்திரம் nīracāticāttiram, பெ. (n.) மாழை சாத்திரம் (md.);; mineralogy. [நீரசாதி + (skt); சாத்திரம்.] |
நீரடி | நீரடி1 nīraḍi, பெ. (n.) நீர்வெட்டிமுத்து (யாழ்.அக.); பார்க்க;see {nir-vettimuttu.} [நீர் + அடி.] மருந்துவகைச் செடி; நீரடிமுத்து நீரெட்டி, நீர்வெட்டி முத்து என்றும் கூறுவர் (hydrocarpus-egdhiarae.);, கழலை, பெருநோய், வாதம், சிரங்கு, நமைச்சல் ஆகியனவற்றை நீக்கும். நீரடி2 nīraḍi, பெ. (n.) நீரடிமுத்து பார்க்க;see {niradi- muttu.} (சா.அக.);. |
நீரடிமுத்தம் | நீரடிமுத்தம் nīraḍimuttam, பெ. (n.) நீரடி முத்து பார்க்க;see {niradi – muttu,} (சா.அக.); [நீரடி + முத்தம். முத்து → முத்தம்.] |
நீரடிமுத்து | நீரடிமுத்து nīraḍimuttu, பெ. (n.) பேயாமணக்கு; fish poison tree -hydnocapus incbrians. |
நீரடிமுத்தெண்ணெய் | நீரடிமுத்தெண்ணெய் nīraḍimutteṇīey, பெ. (n.) நீரடிமுத்துக் கொட்டையினின்று வடித் தெடுக்கும் எண்ணெய்; oil prepard from the kernel of hydnocarpus wightiana nut is almost equal to chaulmoogra oil. (சா.அக.);. [நீரடிமுத்து + எண்ணெய்.] |
நீரடை | நீரடை1 nīraḍai, பெ. (n.) நீராவியில் வேக வைக்கும் அடைவகை (இ.வ.);; rice-cake boiled in stream. [நீர் + அடை.] நீரடை2 nīraḍai, பெ. (n.) பன்றிப் புடல்; hogsnake gourd or small snake gourdtrichosanthes. (சா.அக.);. |
நீரடைப்பான் | நீரடைப்பான் nīraḍaippāṉ, பெ. (n.) ஆட்டு நோய்வகை (இ.வ.);; a disease affecting sheep. [நீர் + அடைப்பான்.] |
நீரடைப்பு | நீரடைப்பு nīraḍaippu, பெ. (n.) சிறுநீர்த் தடைநோய்; retention of urine. “வருநீரடைப்பினுடன் வெகுகோடி சிலை நோயடைத்த வுடல்” (திருப்பு. 627.);. [நீர் + அடைப்பு.] |
நீரட்டு-தல் | நீரட்டு-தல் nīraṭṭudal, 5 செ.குவி. (v.i.) தாரை வார்த்தல்; to pour water in making a gift. ‘இவனைக் கண்டுவைத்துக் கடுக நீரட்டிக் கொடாதே’ (திவ். இயற். திருவிருத். 21, 140.);. [நீர் + அட்டு-,] |
நீரணங்கு | நீரணங்கு nīraṇaṅgu, பெ. (n.) நீரரமகள் பார்க்க;see {mir-aramagal} [நீர் + அணங்கு.] |
நீரணி | நீரணி nīraṇi, பெ. (n.) நீர்க்கோலம் பார்க்க;see {mir-k-kösam.} “நீர்கொ ணீரணி நின்று கனற்றலின்” (சீவக.2668.);. “நீரணி வெறிசெறி மலருறு கமம்தண்” (பரிபா.11;62.);. [நீர் + அணி.] |
நீரணிமாடம் | நீரணிமாடம் nīraṇimāṭam, பெ. (n.) நீர்மாடம் பார்க்க;see {mir-mâdam } “காவிரிப் பேரியாற்று நீரணிமாடத்து நெடுந்துறை போகி” (சிலப்.10;214-15.);. [நீர் – அணிமாடம்.] |
நீரணிவிழவு | நீரணிவிழவு nīraṇiviḻvu, பெ. (n.) புதுப்புனலாட்டு; sporting in water. “நீரணி விழவினு நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉந் தகுதி யுண்டாமென” (சிலப். 10;22,); [நீரணி + விழவு.] |
நீரணை | நீரணை nīraṇai, பெ. (n.) நீரை எதிர்நின்று தடுக்கும் கல்; water hinder stone. “கொல் புனல் சிறையின் கரையைக் கொல்லும் புனலின்கண் நீரணை போல” (புறநா. 263. உரை.);. [நீர் + அணை.] |
நீரண்டம் | நீரண்டம் nīraṇṭam, பெ. (n.) நீர்ப்புட்டை பார்க்க;see {mir-p-puffal.} [நீர் + அண்டம்.] |
நீரதம் | நீரதம்1 nīradam, பெ. (n.) நீரைக் கொடுப்பதாகிய முகில்; cloud, as giving water. நீரதம்2 nīradam, பெ. (n.) நீரற்றது; that which is waterless. “நீரத நெறியில் வாவி நிறைந்த நீரென நின்றான்” (பாரத. திரெளபதி. 5.);. |
நீரதி | நீரதி nīradi, பெ. (n.) 1. கடல்; sea. 2. சாறு; juice. |
நீரதிசாரம் | நீரதிசாரம் nīradicāram, பெ. (n.) நீரிழிவு(m.I.); பார்க்க;see {mir-ilīvu.} [நீர் + அதிசாரம்.] |
நீரத்தம் | நீரத்தம் nīrattam, பெ. (n.) நீரையுடைய வழி; water path. “வயச்சுறா வழங்குநீ ரத்தந் தவச்சின் னாளினன் வரவறி யானே” குறுந். 230.). [நீர் + அத்தம்.] |
நீரத்தி | நீரத்தி nīratti, பெ. (n.) பேயத்தி (வின்.;); wild fig. [நீர் + அத்தி.] |
நீரமுக்குஎந்திரம் | நீரமுக்குஎந்திரம் nīramukkuendiram, பெ. (n.) நீரியல் அழுத்தி பார்க்க;see {niriyal-alutti} [நீர் + அமுக்கு + எந்திரம்.] |
நீரமுக்குப்பொறி | நீரமுக்குப்பொறி nīramukkuppoṟi, பெ. (n.) நீரியல் அழுத்தி பார்க்க;see {miriyalalutti} [நீரமுக்கு + பொறி.] |
நீரம் | நீரம் nīram, பெ. (n.) நீர் (பிங்.);; water. “ஆறுநாலுகுளிர் நீரமுறை கூறினோம்” (சேதுபு. பாலோடை.);. [நீர் + அம். அம் சாரியை.] [நீர் → நீரம். நீரம் என்னும் தமிழ்ச் சொல் வடமொழியில் நீர் என்று கடைகுறைந்து ஒலிக்கும் (வே.க. 3;119.);.] |
நீரரண் | நீரரண் nīraraṇ, பெ. (n.) அரண் நான்கனுள் நீர் நிறைந்துள்ள அகழி (குறள். 742, உரை.);; moat, considered as a defence. One of four {aran.} [நீர் + அரண்.] |
நீரரமகள் | நீரரமகள் nīraramagaḷ, பெ. (n.) நீரில் வாழும் தெய்வப் பெண்; water-nymph. “நீரர மகளிவள்” (பெருங். வத்தவ. 14;40.);. “புலவி நோக்கத்துப் பூந்தொடி புலம்பி நீரரமகளிரொடு நிரந்துடனின்ற” (பெருங். உஞ்சைக். 40;327.);. [நீர் + அரமகள்.] |
நீரரவு | நீரரவு nīraravu, பெ. (n.) தண்ணீர்ப் பாம்பு (நாமதீப. 257.);; water-snake. [நீர் + அரா.+நீர் + அரவு அர → அரவு – பாம்பு அரவுதல் – வருத்துதல். அரவு → அரா.ஒ.நோ;கனவு → கனா நிலவு → நிலா.] |
நீரரா | நீரரா nīrarā, பெ. (n.) நிரரவு பார்க்க;see {nir-aravu.} [நீரரவு-நீரரா.] |
நீரருகல் | நீரருகல் nīrarugal, பெ. (n.) 1. சிறுநீர் அருகி இறங்குகை (வின்.);; passing urine with difficulty, Strangury. [நீர் + அருகல் அருகு → அருகல் அருகல்=குறைதல்.] |
நீரலரி | நீரலரி nīralari, பெ. (n.) ஆற்றலரி; aligators rose. [நீர் + அலரி அலர் → அலரி – மலர்ந்தபூ, பூவின் அழகு.] |
நீரலறி | நீரலறி nīralaṟi, பெ. (n.) ஒருவகை நீர்ப்பூண்டு; a kind of water shrub. [நீர் + அலறி.] |
நீரலை | நீரலை nīralai, பெ. (n.) 1. நீரின் அலை; water-wave. 2. ஈர்ம்பதக் கூந்தல் அலை. dripped hair. [நீர் + அலை.] |
நீரலைக்கிண்ணி | நீரலைக்கிண்ணி nīralaikkiṇṇi, பெ.(n.) நீர் நிரப்பிய கிண்ணங்களைத் தட்டி இன்னிசை எழுப்பும் இசைக்கருவி (சலதரங்கம்);; water glass musical instrument. [நீர்+அலை+கிண்ணி] |
நீரல்லாநீர் | நீரல்லாநீர் nīrallānīr, பெ. (n.) சிறுநீர் (மூத்திரம்);; urine. “நீரல்லாத ஈரத்துப்பிணவு பசியால் வருந்த வேட்டை மேற்சென்ற” (நற். 103;உரை.);. |
நீரளவி | நீரளவி nīraḷavi, பெ. (n.) நீரையளக்கும் கருவி; water-meter. [நீர் + அளவி. அளப்பது அளவி.] |
நீரளவு | நீரளவு nīraḷavu, பெ. (n.) காற்றிலுள்ள ஈரத்தன்மையின் அளவு; moisture content. [நீர் + அளவு.] |
நீரழிபாக்கம் | நீரழிபாக்கம் nīraḻipākkam, பெ. (n.) தம் நீர்மையழிந்த பேரூர்; destructed town. “நீசிவந் திறுத்த நீரழிபாக்கம்” (பதிற். 13;12.);. [நீர் + அழி + பாக்கம்.] |
நீரழிவு | நீரழிவு nīraḻivu, பெ. (n.) நீரிழிவு (நெல்லை.); பார்க்க;see {nir-livu} ம. நீரழிவு. [நீரிழிவு → நீரழிவு.] |
நீரவர் | நீரவர் nīravar, பெ. (n.) அறிவுடையவர்; man of knowledge. savant wiseman. “நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு” (குறள், 782.);. [நீர் + அவர்.] நீர்மையுடையவர் நீரவர். நீர்மை = சிறந்த தன்மை. நீர்மையுடையவர் சொலின் (குறள்,195.);. என்பதிற்போல நட்பைக் கேண்மை யென்றதினால், அது இனவுறவுபோற் சிறந்ததென்பது பெறப்படும் (குறள்,782, மரபுரை.] |
நீரா-தல் | நீரா-தல் nīrātal, 6 செ.கு.வி. (v.i.) நீர் மயமாய்ப் போதல்; to become watery, diluted. 2. நெட்டுருவாதல்; to be committed to memory. [நீர் + ஆ.] |
நீராகாசிதம் | நீராகாசிதம் nīrākācidam, பெ. (n.) நான்முகப்புல்; wild sugarcane four faced stalk grass-saccharum genus. (சா.அக.);. [நீர்+(skt.);அகாசிதம்.] |
நீராகாரம் | நீராகாரம் nīrākāram, பெ. (n.) பழஞ்சோற்றிற் கலந்த நீர்; rice water. usually kept overnight. [நீர் + ஆகாரம்.] இந்நீர் பருகுவதால் வளிமுதலா எண்ணிய மூன்றும் போவதோடு ஒளிநீர்சுரப்பு பெருக்கமுண்டாகும். (சா.அக.);. |
நீராகாரி | நீராகாரி nīrākāri, பெ. (n.) பாலாட்டங்கொடி பார்க்க;see {påsåttangodi} (சா.அக.);. |
நீராக்கு-தல் | நீராக்கு-தல் nīrākkudal, 9செ.கு.வி. (v.i.) 1. ஒருவனை இரக்கங்கொள்ளும்படி செய்தல்; to make one pity. 2. மாழை முதலியவற்றை நீர்மமாக்குதல்; to melt the metal into liquid state. 3. பால் முதலியவற்றிற்கு நீர் கலத்தல்; to dilute, as milk. 4. நெட்டுருப் பண்ணுதல்; to get by heart. [நீர் + ஆக்கு.] |
நீராசனம் | நீராசனம் nīrācaṉam, பெ. (n.) நீராரத்தி பார்க்க;see {miraat} “அன்றெதிர் கொண்டு நன்னீராசன மெடுத்து வாழ்த்த” (பாரத. நிரை. 131.);. |
நீராசனை | நீராசனை nīrācaṉai, பெ. (n.) நீராரத்தி (திவ். திருவாய், 1, 8, 9, சீ.); பார்க்க;see {mirarati} [நீர் + ஆசனை.] |
நீராஞ்சனம் | நீராஞ்சனம் nīrāñjaṉam, பெ. (n.) நீராரத்தி பார்க்க;see {mirratt,} “துபதிபத் தட்டேந்தி பெருவி னிராஞ்சன முதவி” (பிரமோத். 18. 31.);. [நீர் + அ + அஞ்சனம்.] |
நீராஞ்சனை | நீராஞ்சனை nīrāñjaṉai, பெ. (n.) நீராரத்தி (இ.வ.); பார்க்க;see {mi-araft} |
நீராடற்காய் | நீராடற்காய் nīrāṭaṟkāy, பெ. (n.) முற்றின தேங்காய் (இ.வ.);; ripe cocoanut in which the water Sounds when shaken. [நீர் + ஆடற்காய்.] அளவாக முற்றின தேங்காயை உலுக்கிப் பார்த்தால் உள்ளிருக்கும் நீர் ஆடும். அஃதாவது உள்ளிருக்கும் நீரின் அளவைப் பொறுத்துத் தேங்காயின் தன்மையறிவர். தேங்காய் முற்றமுற்ற உள்ளிருக்கும் நீரினளவு குறையும். இளநீர்ப் பதத்தை அடுத்த நிலையிலுள்ள தேங்காயில் முழுஅளவும், அது முற்றிய நிலையில் அளவுகுறைந்தும் காணப்படும். முழுதும் நீரற்ற தேங்காயைச் சமையலுக்குப் பயன் படுத்துவதில்லை. அதை எண்ணெய் எடுப்பதற்குப் பயன்படுத்துவர். |
நீராடற்பதம் | நீராடற்பதம் nīrāṭaṟpadam, பெ. (n.) நீர் குலுங்கும்படி தேங்காய் முற்றிய பருவம் (வின்.);; the stage in the ripening of a cocoanut when the milk Sounds if shaken. [நீராடல் + பதம்.] |
நீராடற்பருவம் | நீராடற்பருவம் nīrāṭaṟparuvam, பெ. (n.) பெண்பாற் பிள்ளைத் தமிழ்ப் பருவம் பத்தனுள் பாட்டுடைத் தலைவி நீராடுதலைக் கூறும் பகுதி; section of {penpär-pillai-t-tamil,} which describes the stage of childhood in which the child delights in bath, one of ten. [நீராடல் + பருவம்.] |
நீராடல் | நீராடல் nīrāṭal, பெ. (n.) 1. நீராட்டு பார்க்க;see {mir-āţu} 2. நீர்விளையாட்டு; sporting in water. “சுந்தரச் சுண்ணமுந் தூநீராடலும்” (மணிமே. 2;23.);. [நீர் + ஆடல்.] |
நீராடி | நீராடி nīrāṭi, பெ.(n.) செங்கற்பட்டு வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Chenglepet Taluk. [நீராட்டு-நீராட்டி-நீராடி] |
நீராடு | நீராடு1 nīrāṭudal, 5 செ.கு.வி. (v.i.) எண்ணெய்க் குளியல்; oil bath. “சனிநீராடு [நீர் + ஆடு-,] நீராடு2 nīrāṭudal, 5 செ.கு.வி. (v.i.) குளித்தல்; to bathe (in a river, sea, etc.); கடலில் நீராடுவது சிறார்களுக்கு மிகுந்த இன்பம்தரும். (உ.வ.);. [நீர் + ஆடு-.] நீராடு3 nīrāṭu, பெ. (n.) குளியல்; bathing. “நெய்யாட்டரவ நீராட்ட டரவமும்” (பெருங். நரவாண. 6, 71.);. [நீர் + ஆடு.] |
நீராடுங்காய் | நீராடுங்காய் nīrāṭuṅgāy, பெ. (n.) நீராடற் காய் பார்க்க;see {nirådar-käy} [நீர் + ஆடுங்காய்.] |
நீராட்டணி | நீராட்டணி nīrāṭṭaṇi, பெ. (n.) நீர்க்கோலம், 3, பார்க்க;see {mir-k-kolam,} “வான் கிளர்ந்தன்ன வளநீராட்டணி” (பெருங். உஞ்சைக். 37;273.);. [நீர் + ஆட்டு + அணி.] |
நீராட்டம் | நீராட்டம்1 nīrāṭṭam, பெ. (n.) நீராட்டு பார்க்க;see {miaiப} மார்கழி நீராட்டம் (உ.வ.);. [நீராட்டு → நீராட்டம்.] நீராட்டம்2 nīrāṭṭam, பெ. (n.) காதலர் ஆடும் புனலாட்டம்; young lover’s play in the water. [நீர் + ஆட்டம்.] |
நீராட்டரவம் | நீராட்டரவம் nīrāṭṭaravam, பெ. (n.) குளித்தல் ஒலி; bathing sound. [நீராட்டு + அரவம்.] பெருங்கதை உஞ்சைக் காண்டத்து நாற்பத் தொன்றாம் காதை. உஞ்சை நகர மாந்தரும் உதயணனும் பிறரும் திருநீர்ப் பொய்கையில் நீராடுதலால் உண்டான முழக்க வகைகளைக் கூறும் பகுதி. |
நீராட்டு | நீராட்டு1 nīrāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) முழுக்காட்டுதல்; to bathe, as an idol. “நீராட்டி யாட்டுபொற் சுண்ணந் திமிர்ந்தள்ளி” (குமர. மீனாட். பிள்ளைத். செங்கீரை.1.);. [நீர் + ஆட்டு-.] நீராட்டு2 nīrāṭṭu, பெ. (n.) குளியல்; bathing. “நெய்யாட்டரவமுநீரட்டரவமும்” (பெருங். நரவாண. 6.71.);. [நீர் + ஆட்டு] |
நீராணி | நீராணி nīrāṇi, பெ. (n.) 1. நீராணிக்கண் பார்க்க;see {nirāni-k-kan.} 2. முந்தைக் காலத்து நீர்வரி; an ancient irrigation tax. [நீர் + ஆணி.] |
நீராணிக்கன் | நீராணிக்கன் nīrāṇikkaṉ, பெ. (n.) 1. நீர்க்கண்டி, சிற்றூரில் நீர்ப்பாய்ச்சும் பணியாள்; village servent who distributes water for irrigation. 2. நீர் வளம்; abundance of water in a region. 2. கொங்குநாட்டு ஏரிமதகின் காவற்காரன் (வின்.);; one who is incharge of the sluice of a public tank in the kongu country. [நீர் + ஆணிக்கன்.] |
நீராணிக்கம் | நீராணிக்கம் nīrāṇikkam, பெ. (n.) 1. நீர்ப் பாய்ச்சுவோனுக்குக் குடிகள் கொடுக்கும் தொகை; fee paid by ryots to the village servent who distributes water for irrigation. 2. நீர் வளம்; abundance of water in a region. நீராணிக்கமான தேயம் (உ.வ.);. 3. ஈரம் (நாஞ்.);; moisture. [நீர் + ஆணிக்கம்.] |
நீராணிக்கர் | நீராணிக்கர் nīrāṇikkar, பெ.(n.) வயலுக்கு நீர்பாய்ச்சும் தொழில் உரிமையாளர்; one who manages the village irrigation. [நீர்+(ஆளுநர்); ஆணிக்காரர்-ஆணிக்கர்] |
நீராணிக்காரன் | நீராணிக்காரன் nīrāṇikkāraṉ, பெ. (n.) நீராணிக்கன் பார்க்க;see {nirānikkan} [நீராணி + காரன்.] |
நீராத்திரை | நீராத்திரை nīrāttirai, பெ. (n.) நீர்ச்செலவு பார்க்க;see {mir-c-celavu.} “விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை” (பெருங். உஞ்சைக். 38, 1.);. [நீர் + யாத்திரை.] |
நீராத்தோற்பலம் | நீராத்தோற்பலம் nīrāttōṟpalam, பெ. (n.) செங்கழுநீர்; red Indian water lily. |
நீராமம் | நீராமம்1 nīrāmam, பெ. (n.) நீராம்பற்கட்டி (யாழ்.அக.); பார்க்க;see {nir-āmbar-katti.} [நீர் + ஆமம்.] நீராமம்2 nīrāmam, பெ. (n.) ஒரு நோய் (வழக்);; a kind of disease. [நீர் + ஆமம்.] |
நீராமயம் | நீராமயம் nīrāmayam, பெ. (n.) நீராம்பற்கட்டி பார்க்க;see {nor-āmbar-kaff} [நீர் + ஆமயம்.] |
நீராமை | நீராமை1 nīrāmai, பெ. (n.) கடலாமை (வின்.);; sea-turtle. [நீர் + ஆமை.] நீராமை2 nīrāmai, பெ. (n.) அகட்டு நீர்க் கோவை (மகோதரம்);; a kind of dropsy marked by swelling of the abdomen which almost resembles the shell of a tortoise. (சா.அக.);. மறுவ. அமைக்கட்டி, கெண்டைக்கட்டி.. நீராமை3 nīrāmai, பெ. (n.) பெண்களுக்கு கருப்பையிற் காணும் கட்டி; overian tumour occuring in women. (சா.அக.);. |
நீராமைக்கட்டி | நீராமைக்கட்டி nīrāmaikkaṭṭi, பெ. (n.) நீராமற்பற்கட்டி பார்க்க;see {mir-āmbar-kaff} 2. சிலந்திக் கட்டி (யாழ்.அக.);; tumour. [நீராமை + கட்டி.] |
நீராம்பற்கட்டி | நீராம்பற்கட்டி nīrāmbaṟkaṭṭi, பெ. (n.) அகட்டு நீர்க்கோவை (மகோதரம்);; ascites. [நீர் + ஆம்பற்கட்டி.] |
நீராம்பல் | நீராம்பல்1 nīrāmbal, பெ. (n.) ஆம்பல்; water-lily. “நீரளவே யாகுமா நீராம்பல்” (வாக்குண். 7.);. [நீர் + ஆம்பல்.] நீராம்பல்2 nīrāmbal, பெ. (n.) நீராம்பற்கட்டி (வின்.); பார்க்க;see {nirāmbar-kați} [நீர் + ஆம்பல்.] நீராம்பல்3 nīrāmbal, பெ. (n.) குளஆம்பல் செடி; water-platter. [நீர் + ஆம்பல்.] |
நீராய்வு | நீராய்வு nīrāyvu, பெ. (n.) நீரைப் பகுப்பாய்வு செய்யும் ஆய்வு; water analysis. [நீர் + ஆய்வு.] |
நீராரத்தி | நீராரத்தி nīrāratti, பெ. (n.) நீராலத்தி பார்க்க;see {nir-ālatti} [நீர் + ஆரத்தி. ஆலத்தி →ஆரத்தி.] |
நீராரம் | நீராரம் nīrāram, பெ. (n.) நீராகாரம் பார்க்க;see {nir-āgāram.} [நீராகாரம் → நீராரம்.] |
நீராரம்பம் | நீராரம்பம் nīrārambam, பெ. (n.) நீர்ப் பாய்ச்சல் வாய்ப்பு உள்ள நிலம்; காடாராம் பத்துக்கு எதிரானது. tract having irrigation facilities opp. to {kādārāmbam.} [நீர் + ஆரம்பம்.] |
நீராரம்பலம் | நீராரம்பலம் nīrārambalam, பெ. (n.) நீராரம்பம் (தஞ்சை.); பார்க்க;see {mirārambam} |
நீராரை | நீராரை nīrārai, பெ. (n.) கீரைவகை (பதார்த்த. 594.);; cryptogamous plant. |
நீராரைக்கீரை | நீராரைக்கீரை nīrāraikārai, பெ. (n.) ஒரு வகை கீரை; a kind of greens. (சா.அக.); அரத்தப்போக்கு, பித்து, நீரிழிவு ஆகிய நோய்களைக் குணமாக்கும். [நீர் + ஆரை + கீரை.] |
நீராலத்தி | நீராலத்தி nīrālatti, பெ. (n.) கண்ணேறு கழிப்பதற்காக முன்னால் நின்று இடமுறை யாகச் சுற்றப்படும் மஞ்சள் நீர் மங்கலத்தட்டு அல்லது மஞ்சள் நீரிடை விளக்கிட்ட மங்கலத் தட்டு; ritual of waving turmeric water-plate to avert the blight of the eyes of unlucky persons on marriage or other special occasions, also in front of the idol, after the procession, before if is taken into the temple. [நீர் + ஆலத்தி ஆல் + ஆற்று – ஆலாற்று → ஆலாத்து → ஆலாத்தி → ஆலத்தி. ஆலாற்றுதல் → சுற்றச்செய்தல்.] |
நீரால் | நீரால் nīrāl, பெ. (n.) ஆலின் ஒருவகை; narrow leaved fig-ficus nervosa. (சா.அக.);. [நீர் + ஆல்.] |
நீராளக்கஞ்சி | நீராளக்கஞ்சி nīrāḷakkañji, பெ. (n.) தடிமனில்லாக்கஞ்சி; water-gruel. [நீர் → நீராளம் + கஞ்சி.] |
நீராளங்கட்டியிறக்கு-தல் | நீராளங்கட்டியிறக்கு-தல் nīrāḷaṅgaṭṭiyiṟakkudal, 5 செ.கு.வி (v.i.) மாலைப் பதநீர் இறக்குதல் (இ.வ.);; to draw the Sweet toddy of the evening from the palmyra tree. [நீராளம் + கட்டி + இறக்கு-,] |
நீராளமாய்விடு-தல் | நீராளமாய்விடு-தல் nīrāḷamāyviḍudal, 20 செ.கு.வி. (v.i.) உணவில் குழம்பு முதலிய வற்றை மிகுதியாய்ப் பரிமாறுதல்; to serve in large quantity, as curry, curds, broth. [நீர் → நீராளம் → நீராளமாய் + விடு.] |
நீராளம் | நீராளம் nīrāḷam, பெ. (n.) 1. நீர்த்தன்மை; fluidity. “நீராளமாயுருக வுள்ளன்பு தந்தது நின்னதருள்” (தாயு.பரிபூரண.8.);. 2. நீர்மிகுதி; abundance of water, “நீராள வாவிசெறி நாடனைத்தும்” (அரிச்.பு.மயா.25.);. 3. நீருடன் கலந்த உணவு; liquid food. 4. மயக்க மளிக்காத தித்திப்புக்கள் (வின்.);; sweettoddy. [நீர் → நீராளம்.] |
நீராழி | நீராழி nīrāḻi, பெ. (n) கடல் (பிங்);, sea. [நீர்+ஆழி, ஆழ்-ஆழி] நீரென்பது ஆகுபெயராய் நீராலான கடலைக் குறிக்குமேனும், இங்கு ஆழிக்கு அடையாய் வந்தது. ஆல்-சுற்று, சூழ். ஆல்→ஆலி→ஆழி. உலகைச் சுற்றியிருப்பது; நிலத்தைச் சூழ்ந்திருப்பது எனினுமாம். நீராழி2 nīrāḻi, பெ. (n.) (மாட்டுவை.);; a disease of cattle. குளம்பில் வரும் ‘கோமாரி’ நோய் ஆகலாம். நீராழி3 nīrāḻi, பெ. (n.) நீராழி மண்டபம் பார்க்க;see {nirass-mandabam} |
நீராழிமண்டபம் | நீராழிமண்டபம் nīrāḻimaṇṭabam, பெ. (n.) ஆறு, தடாகம் இவற்றின் நடுவே அமைந்த மண்டபம்; hall in the Centre of a tank or river. [நீராழி + மண்டபம்.] |
நீராவி | நீராவி1 nīrāvi, பெ. (n.) வெப்பத்தினால் மாறிய நீரின் ஆவி; steam. [நீர் + ஆவி, ஆவு-முன்செல், மேலேறு. ஆவு→ஆவி=புகை, நீராவி.] நீராவி2 nīrāvi, பெ. (n.) தடாகம் (சிலப். 25;4 அரும்);; tank or well. மறுவ. இலவந்திகை, இலவந்தி. [நீர் + ஆவி.] ஆவு → ஆ.வி. ஆவி = சூளை, சூளையிருந்த பள்ளத்தில் தேங்கிய நீர்நிலை. |
நீராவிஆற்றல் | நீராவிஆற்றல் nīrāviāṟṟal, பெ. (n.) நீராவியாற்றல் பார்க்க;see {nirāvī-y-ārral} [நீராவி + ஆற்றல்.] |
நீராவிக்கப்பல் | நீராவிக்கப்பல் nīrāvikkappal, பெ. (n.) நீராவியாற் செல்லுங்கப்பல்; steamer. [நீராவி + கப்பல்.] கள் → கய் → கவ், கப்பு → கப்பம் = பள்ளம், குழி. கப்பல் = உட்குழிந்த மரக்கலம். |
நீராவிக்கொதிகலம் | நீராவிக்கொதிகலம் nīrāviggodigalam, பெ. (n.) கொதிகலம்; boiler. [நீராவி1 + கொதிகலம்.] |
நீராவிச்சட்டை | நீராவிச்சட்டை nīrāviccaṭṭai, பெ. (n.) நீராவியானது இடைவழி ஊடுசென்று வெப்பூட்டும்படி அமைக்கப்பட்ட எந்திர இயக்குருளையின் புறத்தோடு; steamerjacket. [நீராவி1 +சட்டை.] |
நீராவிச்சுத்தி | நீராவிச்சுத்தி nīrāviccutti, பெ. (n.) நீராவியாலியங்கும் சுத்தி; rig by hammer. [நீராவி1 + சுத்தி.] |
நீராவிச்சூழ்ச்சியப்பொறி | நீராவிச்சூழ்ச்சியப்பொறி nīrāviccūḻcciyappoṟi, பெ. (n.) நீராவி ஆற்றலால் இயங்கும் பொறி; steam engine. நீராவி1 + குழ்ச்சிப்பொறி.] |
நீராவிச்சோலை | நீராவிச்சோலை nīrāviccōlai, பெ. (n.) சோலைகள்; park “கூடாரப் பண்டியும் கடகத் தண்டும் பல்லக்குமென்னும் இவ்வரிசைகள் பெற்றதேயன்றி நீராவிச் சோலைக் கண்ணே தமக்கு உற்ற துணைவனாகிய அரசனோடு மேவி மெய்தொட்டு விளையாடும் மகிழ்ச்சியும்” (சிலப். 14;126, உரை.);. [நீராவி2 + சோலை.] |
நீராவிப்படகு | நீராவிப்படகு nīrāvippaḍagu, பெ. (n.) நீராவியின் விசையினாலியங்கும் படகு; Steam-launch, Steam boat, steamer. [நீராவி1 + படகு.] |
நீராவிப்பண் | நீராவிப்பண் nīrāvippaṇ, பெ. (n.) வெந்நீர் முதலியன பட்டு உண்டாம் புண்;(M.L.);; Scald. [நீராவி1 + புண்.] |
நீராவிமண்டபம் | நீராவிமண்டபம் nīrāvimaṇṭabam, பெ. (n.) ஆறு, தடாகங்களின் நடுவே அமைந்த மண்டபம்; hall in the centre of a tank or river. “தாமரை சூழ்ந்த நீராவி மண்டபம்” (சீவக. 2869, உரை.);. [நீராவி2 + மண்டபம்.] |
நீராவியந்திரம் | நீராவியந்திரம் nīrāviyandiram, பெ. (n.) 1. நீராவியினாற் செலுத்தப்படும் பொறி; steam engine. 2. நீராவி விசையாக்கப் பொறி; engine which uses steam to generate power. [நீராவி’ + இயந்திரம்.] |
நீராவியம் | நீராவியம் nīrāviyam, பெ. (n.) பாற்கடுக்காய்; white myrobalan of cudappa-terminalia pallide. (சா.அக.);. |
நீராவியாற்றல் | நீராவியாற்றல் nīrāviyāṟṟal, பெ. (n.) நீராவியின் ஆற்றல்; steam-power. [நீராவி’ + ஆற்றல்.] |
நீரி | நீரி nīri, பெ. (n.) நீரில் வாழ்வது; that which lives in water, aquatic life. “நீரியா யூர்வனவாய் நின்றநாள் போதாதோ” (பட்டினத்துப்பக்.200.);. [நீர் → நீரி.] |
நீரிக்கதவு | நீரிக்கதவு nīrikkadavu, பெ. (n.) ஏரி முதலியவற்றிலிருந்து நீர் விடுதற்குரிய கதவு; flood gate. (C.E.M.);. [நீர் + கதவு.] |
நீரிடம் | நீரிடம் nīriḍam, பெ. (n.) நாவல்; common jaumoon-eugenia jambolina. (சா. அக.);. |
நீரிடை | நீரிடை nīriḍai, பெ. (n.) செயநீர்; a pungent saline liquid. (சா.அக.);. |
நீரிணை | நீரிணை nīriṇai, பெ. (n.) இருகடல்கள் இணையுமிடத்தமைந்த குறுகிய நீர் வழி; narrow passage of water connecting two Seas or large bodies of Water. மறுவ. சலசந்தி. [நீர் + இணை.] |
நீரிண்டம் | நீரிண்டம் nīriṇṭam, பெ. (n.) தொட்டாற் சுருங்கியை உள்ளடக்கிய துவரை (நுரையிண்டு); இனக்குத்துச்செடிவகை; a variety of mimosa. (சா.அக.);. |
நீரிண்டு | நீரிண்டு nīriṇṭu, பெ. (n.) see {niriņợam.} (சா.அக.);. |
நீரின்மைநிலை | நீரின்மைநிலை nīriṉmainilai, பெ. (n.) நீர்த் தட்டுப்பாடான தன்மை (சிலப்.பதி,உரை.);; scarcity of water cure. [நீர் + இன்மை + நிலை.] |
நீரின்றிவேனில்தெறுநிலம் | நீரின்றிவேனில்தெறுநிலம் nīriṉṟivēṉilteṟunilam, பெ. (n.) பாலை (சிலப்.பதி.உரை.);; desert. [நீர் + இன்றி + வேனில் + தெறுநிலம்.] |
நீரிய | நீரிய nīriya, பெ.அ. (adj.) நீர்சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த; aqueous. [நீர் → நீரிய.] |
நீரியக்கவியல் | நீரியக்கவியல் nīriyakkaviyal, பெ. (n.) நீர் இயக்க விசை சார்ந்த இயற்பியல் துறை; hydrodynamics. [நீரியக்கம் + இயல்.] |
நீரியல் | நீரியல் nīriyal, பெ. (n.) நிலத்தின் அடியிலும் மேற்பரப்பிலும் இருக்கும் நீரைப்பற்றியும் அந்த நீருள்ள இடத்தின் அமைப்பைப் பற்றியும் விளக்கும் அறிவியற்பிரிவு; hydrology. [நீர் + இயல்.] |
நீரியல் அழுத்தி | நீரியல் அழுத்தி nīriyalaḻutti, பெ. (n.) நீராற்றலால் இயக்கப்படுகின்ற அமுக்கும் பொறி; hydraulic press. மறுவ. நீரமுக்குப் பொறி, நீரமுக்கு எந்திரம். [நீரியல் + அழுத்தி.] |
நீரியல்உயர்த்தி | நீரியல்உயர்த்தி nīriyaluyartti, பெ. (n.) இயங்கு நீரின் தடையாற்றலால் அதன் பகுதியை உயர்த்தும் அமைவு; hydraulic ram. [நீரியல் + உயர்த்தி.] |
நீரியல்சரிவு | நீரியல்சரிவு nīriyalcarivu, பெ. (n.) நீராற்றல் இயக்கப்படும் திறன்; hydraulic slope. [நீரியல் + சரிவு.] |
நீரியல்திறன் | நீரியல்திறன் nīriyaltiṟaṉ, பெ. (n.) நீராற்றலால் இயக்கப்படும் திறன்; hydraulic efficiency. [நீர் + இயல் + திறன்.] |
நீரிறக்கம் | நீரிறக்கம் nīriṟakkam, பெ. (n.) 1. கடலில் நீரேற்றம் உள்வாங்கும் நிலை (யாழ்.அக.);; ebb of the tide. 2. நீரிழிவு (இ.வ.); பார்க்க;see {nirilivu} |
நீரிறங்குதல் | நீரிறங்குதல் nīriṟaṅgudal, பெ. (n.) 1. சிறுநீர் இறங்குகை; urination. 2. உடம்பில் கெட்டநீர் தங்குகை; formation of impure watery humours in the body. [நீர் + இறங்குதல்.] |
நீரிறை-த்தல் | நீரிறை-த்தல் nīriṟaittal, 4 செ.குன்றாவி. (v.t.) வேளாண் பயிருக்கு நீர் பாய்ச்சுதல்; to irrigate for crops. [நீர் + இறை-.] |
நீரிறைவன் | நீரிறைவன் nīriṟaivaṉ, பெ. (n.) நீர்க் கடவுள் (நாமதீப.82.); பார்க்க;see {mir-kkadavul} [நீர் + இறைவன்.] |
நீரிலாநிலம் | நீரிலாநிலம் nīrilānilam, பெ. (n.) பொட்டற்காடு, பாலைநிலம் (யாழ்.அ,க.);; desert tract, as waterless. [நீர் + இலா + நிலம்.] |
நீரிலாறு | நீரிலாறு nīrilāṟu, பெ. (n.) நீரற்ற வழி; route, as wateress. “படுமுடை பருந்துபார்த்திருக்கும் நெடு மூதுடைய நீரில் லாறே” (குறுந்.283.);. [நீர் + இல் + ஆறு. ஆறு=வழிதடம்.] |
நீரிலை | நீரிலை nīrilai, பெ. (n.) 1. நூல்தாளி; larger chinese lauvel-antidesma menasu. 2. பொன்னாங்காணி சக்களத்தி; water leaf, river blatty-hydrolea zeylanica. |
நீரிலோடி | நீரிலோடி nīrilōṭi, பெ. (n.) ஒருவகை நெட்டி; a kind of pitch plant. (சா.அக.);. [நீரில் + ஒடி.] |
நீரில்வறுங்கயம் | நீரில்வறுங்கயம் nīrilvaṟuṅgayam, பெ. (n.) நீரில்லாத வறிய குளம்; dry lake. “வருவர்கொல்வாழி தோழி நீரில் வறுகயந் துழைஇய விலங்கு மருப்பியானை” (குறுந்.215.);. [நீர் + இல் + வறிய + கயம்.] |
நீரில்வைப்பு | நீரில்வைப்பு nīrilvaippu, பெ. (n.) நீரற்ற பாலை நிலம்; dry barren sandy tract; desert. “நீரில் வைப்பிற் சுரனிறந்தோரே” (குறுந்.211.);. [நீர் + இல் + வைப்பு.] |
நீரிழிச்சல் | நீரிழிச்சல் nīriḻiccal, பெ. (n.) நீரிழிவு; diabetes. “நீரிழிச்சல் பெருவயிறு” (திருப்பு.627.);. [நீர் + இழிச்சல்.] |
நீரிழிபிரமேகம் | நீரிழிபிரமேகம் nīriḻibiramēkam, பெ. (n.) கடுமையான வெட்டைநோய்வகை; (கடம்ப.பு. இலீலா.113.);; a severe form of gonorrhoea. [நீரிழி + பிரமேகம்.] |
நீரிழிவு | நீரிழிவு nīriḻivu, பெ. (n.) மூத்திரம் சர்க்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்; diabetes. “நீரிழிவாளர்” (கடம்ப.பு. இலீலா.109.);. “மூக்கடைப்புட்காந்தி நீரிழிவு, குன்மம்” (தைல.தைலவ.140.);. [நீர் + இழிவு.] |
நீரிவிசையுருளை | நீரிவிசையுருளை nīrivisaiyuruḷai, பெ. (n.) 1. நீரின் விசையாற் சுழலும் சக்கரம்; the wheel moved by water. 2.உந்தத்தில் நீரை மேலே ஏற்றுஞ்சக்கர உருளை; a roller for raising water in water motor pump. |
நீரீச்சுரம் | நீரீச்சுரம் nīrīccuram, பெ.(n.) கடவுளில்லை யென்று கூறும் மதம்; atheism, atheistic doctrine. [Skt. {} → த. நீரீக்சுரம்.] |
நீரீச்சுரவாதி | நீரீச்சுரவாதி nīrīccuravāti, பெ.(n.) நிரீச்சுவாதி பார்க்க;see {}. [Skt. {}+ → த. நீரிச்சுரவாதி.] |
நீரீச்சுவரசாங்கி | நீரீச்சுவரசாங்கி nīrīccuvaracāṅgi, பெ.(n.) நிரீச்சுவரசாங்கியன் பார்க்க;see {}. “நிரீச்சுவரசாங்கி புகல்வது தானறியாத பிரகிருதியாவும்” (தத்துவப். 174);. [Skt. {} → த. நிரீச்சுவர சாங்கி.] |
நீருடும்பு | நீருடும்பு nīruḍumbu, பெ. (n.) உடும்புவகை; a kind of iguana, water gaunaneut. க. நீருடு. [நீர் + உடும்பு.] |
நீருடை | நீருடை1 nīruḍai, பெ. (n.) நனைந்த ஆடை; wet cloth. “போகா தாடுநர் புன்க மெய்தி மேகலை விரீஇய தூசுவிசி யல்குல் நீருடை களைதல் செல்லார்” (பெருங்.உஞ்சைக்.44;5.);. [நீர் + உடை.] உடை = ஆடை. நீருடை2 nīruḍai, பெ. (n.) நீருடைய மரம்; rubber thorn-acacia latronum. [நீர் + உடை. உடை = உடைமை.] நீருடை3 nīruḍai, பெ. (n.) வேலமர வகை; buffalo thorn cutch. |
நீருணவு | நீருணவு nīruṇavu, பெ. (n.) உப்புநீர், கஞ்சி முதலியன; liquid diet as soup, conjee., etc. (சா.அக.);. [நீர் + உணவு.] |
நீருதடன் | நீருதடன் nīrudaḍaṉ, பெ. (n.) அட்டை; leech so called from its sucking blood. (சா.அக.);. [நீர் + உதடன்.] |
நீருதித்தநாள் | நீருதித்தநாள் nīrudiddanāḷ, பெ. (n.) நீர் நாள் (சூடா.); பார்க்க;see {mi-mal} [நீர் + உதித்த + நாள்.] |
நீருதிபாசம் | நீருதிபாசம் nīrudipācam, பெ. (n.) கடற்பாசி, sea moss-gracilaria lichenoides. (சா.அக.);. |
நீருந்தம் | நீருந்தம் nīrundam, பெ. (n.) நிலத்தடியிலிருக்கும் நீரைக் குழாய் வழி உறிஞ்சிமேலேற்றும் பொறி; water-motor. [நீர் + உந்தம். உந்து → உந்தம்.] |
நீருமரி | நீருமரி nīrumari, பெ. (n.) 1. சிறுமரவகை; cyprus tamarisu. 2. சாயத்துக்கு உதவும் பூடுவகை; seaside Indian salt wort. [நீர் + உமரி.] |
நீருமிழ்நோய் | நீருமிழ்நோய் nīrumiḻnōy, பெ. (n.) உமிழ்நீர் பெருகிவரும் நோய்; excessive orabnormal Salivation. [நீர் + உமிழ் + நோய்.] |
நீருமிழ்வியாதி | நீருமிழ்வியாதி nīrumiḻviyāti, பெ. (n.) நீருமிழ் நோய் பார்க்க;see {nir-umil-nõy} [நீருமிழ் + (skt.); வியாதி.] |
நீருருள் | நீருருள் nīruruḷ, பெ. (n.) சகடமாகப் பண்ணித் தண்ணீரேற்றியுருட்டுங் கருவி; a kind of cart-like water barrel. “நீருருள் பிளந்து” (சீவக.1831.);. [நீர் + உருள்.] |
நீருரோகம் | நீருரோகம் nīrurōkam, பெ. (n.) நீரிழிவு (m.l.); பார்க்க;see {nir-ilivu} [நீர் + உரோகம்.] |
நீருறை | நீருறை1 nīruṟai, பெ. (n.) 1. நீர்மநிலை மருந்து ; liquid medicine, lotion. 2. மருந்துநீர்; mixture of solution. (சா.அக.);. [நீர் + உறை.] நீருறை2 nīruṟai, பெ. (n.) குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டிய பொறியின் பாகத்தைச் சுற்றியுள்ள நீர் நிரப்பப்பட்ட உறை; waterjacket. [நீர் + உறை.] |
நீருறைதெய்வம் | நீருறைதெய்வம் nīruṟaideyvam, பெ. (n.) நீரில் வாழும் தெய்வம்; watersprite. [நீர் + உறை + தெய்வம். உறை = வாழ்தல்.] |
நீருறைமகன்றில் | நீருறைமகன்றில் nīruṟaimagaṉṟil, பெ. (n.) நீரில் வாழும் மகன்றிற் பறவை; a species of love bird which lives in water. “பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போல” (குறுந்.57.);. [நீருறை + மகன்றில்.] இப்பறவைகள் ஆணும் பெண்ணும் கூடி இணைபிரியாது வாழும் இயல்புடையன. தம்முட் சிறியதொரு பிரிவு நிகழினும் ஆற்றாது உயிர்விடும் ஆராக் காதலுடையன என்பர். |
நீருளாரை | நீருளாரை nīruḷārai, பெ. (n.) நீராரை பார்க்க see {nir-āraī} (சா.அக.);. [நீருள் + ஆரை.] |
நீருள்ளாரை | நீருள்ளாரை nīruḷḷārai, பெ. (n.) நீராரை பார்க்க;see {mir-arai.} [நீர் + உள் + ஆரை.] |
நீருள்ளி | நீருள்ளி nīruḷḷi, பெ. (n.) வெங்காயம்; onionallium Sepa (சா.அக.);. மறுவ. ஈரங்காயம். க.தெ. நீருள்ளி. [நீர் + உள்ளி.] |
நீருவஞ்சி | நீருவஞ்சி nīruvañji, பெ. (n.) வஞ்சிமரம்; common willow of India; South Indian willow – sabix tetrasperma. (சா.அக.);. [நீர் + உ + வஞ்சி.] |
நீரூர்பாதை | நீரூர்பாதை nīrūrpātai, பெ. (n.) நிறைபுனல் (நாமதீப.534.);; full flood. |
நீரூறி | நீரூறி nīrūṟi, பெ. (n.) கீழ்க்காய் நெல்லிச்செடி; a small plant (M.M.587.);. ம. நீரூரி. [நீர் + ஊறி.] |
நீரூற்று | நீரூற்று nīrūṟṟu, பெ. (n.) 1. ஊற்று; spring. Fountain. 2. கழிவு; oozing, dampness. [நீர் + ஊற்று.] |
நீரெக்கி | நீரெக்கி nīrekki, பெ. (n.) 1. சிவிறி; a kind of syringe. “நெய்த்தோர் நிறவரக்கி னிரெக்கி” (பரிபா 10;12.);. 2. துருத்தி; belloWS. [நீர் + எக்கி;எக்குதல் → பிலிற்றுவித்தல்;பீச்சுதல்.] |
நீரெடுப்பு | நீரெடுப்பு nīreḍuppu, பெ. (n.) நீரேற்றம், 1 (வின்.); பார்க்க;see {nřr-ērram.} [நீர் + எடுப்பு.] |
நீரெட்டி | நீரெட்டி nīreṭṭi, பெ. (n.) நீரெட்டிமுத்து பார்க்க;see {mir-eff-muttu} |
நீரெட்டிமுத்து | நீரெட்டிமுத்து nīreṭṭimuttu, பெ. (n.) 1. பேயாமணக்கு (பைஷஜ.96.);; wild croton 2. மரவட்டை மரம் (l.);; marotti. [நீரெட்டி + முத்து.] |
நீரெரிப்பு | நீரெரிப்பு nīrerippu, பெ. (n.) நீர்க்கடுப்பு பார்க்க;see {mir-k-kaduppu.} [நீர் + எரிப்பு.] |
நீரெரிவு | நீரெரிவு nīrerivu, பெ. (n.) நீர்க்கடுப்பு (புதுவை);; dysury. [நீர் + எளிவு.] |
நீரெலி | நீரெலி nīreli, பெ. (n.) எலிவகை (வின்.); water rat. [நீர் + எலி.] |
நீரெழுச்சி | நீரெழுச்சி nīreḻucci, பெ. (n.) வெள்விழியில் காணும் கண்ணோய்; a film flesh growth or the scientific of the eye as transparent as drop as water.(சா.அக.);. [நீர் + எழுச்சி.] |
நீரேந்தல் | நீரேந்தல் nīrēndal, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvadānai Taluk. [நீர்+ஏந்தல்(ஏரி); |
நீரேற்றநுண்பொறி | நீரேற்றநுண்பொறி nīrēṟṟanuṇpoṟi, பெ. (n.) நீரின் தடையாற்றலால் அதன் பகுதியை யுயர்த்தும் அமைவு; water-ram. [நீர் + ஏற்றம் + நுண்பொறி.] |
நீரேற்றம் | நீரேற்றம்1 nīrēṟṟam, பெ. (n.) 1. நீர்ப்பெருக்கு (வின்.);; flood, tide, flow. 2. சளி; catarrh 3. தீய நீரால் உடம்பு வீங்கும் நோய் (பதார்த்த.24.);; dropsy. 4. திமிர் (தஞ்சை.);; impudance. [நீர் + ஏற்றம்.] நீரேற்றம்2 nīrēṟṟam, பெ. (n.) வெள்விழியில் ஏற்படும் நீர்பெருக்கு; accumulation of morbid fluid in the white of the eye. (சா.அக.);. [நீர் + ஏற்றம்.] |
நீரேற்றுநிலையம் | நீரேற்றுநிலையம் nīrēṟṟunilaiyam, பெ. (n.) குழாய் வழியாக நீர் எல்லா இடங்களுக்கும் சீராகச் செல்வதற்கான அழுத்தத்தைத் தரும் எந்திரம் உள்ள நிலையம்; pumping station. [நீரேற்று + நிலையம்.] |
நீரேற்றுமடு | நீரேற்றுமடு nīrēṟṟumaḍu, பெ. (n.) நீர் பாய்ச்சமுடியாத மேட்டுநிலம். (R.T.);; high and that cannot be irrigated. [நீரேற்று + மடு.] |
நீரொடி | நீரொடி nīroḍi, பெ. (n.) நீரொட்டி பார்க்க;see {mir-off } (சா.அக.);. [நீரொட்டி → நீரொடி.] |
நீரொடுசொரிந்தமிச்சில் | நீரொடுசொரிந்தமிச்சில் nīroḍusorindamissil, பெ. (n.) நீரொடு தானம் செய்தெஞ்சிய பொருள்; leavings, what is left after making gifts by pouring water on the right hand of the done. “நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோ ளறியாச் சொன்றி நிரைகேற் குறுந்தொடி தந்தை யூரே” (குறுந்-233.);. [நீரொடு + சொரிந்த + மிச்சில்.] |
நீரொடை | நீரொடை nīroḍai, பெ. (n.) நீருடை2 பார்க்க;see {mir-udal} (சா.அக.);. [நீருடை → நீரொடை.] |
நீரொட்டி | நீரொட்டி nīroṭṭi, பெ. (n.) நீராரை (மலை.); பார்க்க;see {nir-āraī.} [நீர் + ஒட்டி.] |
நீரொற்றி | நீரொற்றி nīroṟṟi, பெ. (n.) நீரை ஒற்றி யுலர்த்தும் பொறி; desiccator. [நீர் + ஒற்றி.] |
நீரொலி | நீரொலி nīroli, பெ. (n.) நீரலையின் ஒசை; water noise. பெருமிதம் என்பது கரைகடவா நீரொலி போன்றது. தற்பெருமை என்பது உள்ள நீரையும் வற்றச் செய்து கரையைப் புரைப்படுத்தும் கதிர்ச்சூடு போன்றது. (உ.வ.); [நீர் + ஒலி.] |
நீரொழுக்கு | நீரொழுக்கு1 nīroḻukku, பெ. (n.) 1. துளை யினின்று நீரொழுகும் ஒழுக்கு; leakage through a hole. 2. வானின்று பெய்யும் மழை; rain. [நீர் + ஒழுக்கு.] நீரொழுக்குச் சிறுத்திருப்பின் பெய்தலென்றும் திரண்டிருப்பின் பொழிதலென்றும் சொல்லப்படும். நீரொழுக்கு2 nīroḻukku, பெ. (n.) நீரிழிவு பார்க்க;see {nir-livu.} [நீர் + ஒழுக்கு.] |
நீரொவ்வாமை | நீரொவ்வாமை nīrovvāmai, பெ. (n.) நீர்ப்பகை பார்க்க;see {mir-p-pagal} [நீர் + ஒவ்வாமை. உல் → ஒல் → ஒவ் → ஒவ்வு + ஆ மை.] |
நீரோசை | நீரோசை nīrōcai, பெ. (n.) 1. கொண்டாட்டம்; festivity, joviality. 2. மகிழ்ச்சி; delight, joy, enjoyment, gratification. [நீர் + ஒசை.] |
நீரோடட்டிக்கொ-த்தல் | நீரோடட்டிக்கொ-த்தல் nīrōṭaṭṭikkottal, 4 செ.குன்றாவி. (v.t.) தனக்குரியாதைப் பிறருக்குத் தாரைவார்த்துக் கொடுத்தல்; to make gifts by pouring water on the right hand of the donee. இருநூறு பறை செய்து நெல் ஆண்டு வரை கொடுப்பதாகப் பொதுவாள் கையில் நீரோடட்டிக் கொடுத்தான்” (மாம்பள்ளிக் கல்வெட்டு-தி.தொ.4;1);. [நீரோடு + அட்டி + கொடு.] அட்டு = பொருந்து. அட்டு → அட்டி..] |
நீரோடி | நீரோடி1 nīrōṭi, பெ. (n.) 1.மதகு; sluice, conduit. 2. நீரோடும் உள்வாய்; bed of a stream. [நீர் + ஒடி.] நீரோடி2 nīrōṭi, பெ. (n.) கூரைக் கூடல்வாய் (வின்.);; gutter of a roof. [நீர் + ஒடி..] |
நீரோடுகால் | நீரோடுகால் nīrōṭukāl, பெ. (n.) 1. கால்வாய்; water course, canal. 2. ஊரில் நீர் வடிந்து செல்லுந் தாழ்ந்த நிலம் (R.T.);; low lands into which the rain water of a village discharges itself. [நீர் + ஒடு + கால்.] |
நீரோடை | நீரோடை1 nīrōṭai, பெ. (n.) 1. நீரோடுகால், (வின்.); பார்க்க;see {nir-õgu-kās} 2. நீர்நிலை (தஞ்சை);; pond. [நீர் + ஓடை.] நீரோடை2 nīrōṭai, பெ. (n.) stream or rivulet [நீர் + ஒடை.] |
நீரோட்டஆற்றல் | நீரோட்டஆற்றல் nīrōṭṭaāṟṟal, பெ. (n.) இயங்கு நீரின் ஆற்றல்; flow energy. [நீர் + ஒட்டம் + ஆற்றல்.] |
நீரோட்டம் | நீரோட்டம்1 nīrōṭṭam, பெ. (n.) 1. ஓடும் நீர் (நாமதீப.80.);; running water, current. 2. மணியின் உள்ளொளி; lustre or water of a gem. செல்லுங்கால்; 3. நீர் செல்லுங்கால்; rivulet, channel. [நீர் + ஒட்டம்.] நீரோட்டம்2 nīrōṭṭam, பெ. (n.) 1. கடல், ஆறு போன்றவற்றில்); வெளியே தெரியாத, விசையோடு செல்லும் நீரின் இயக்கம்; current (in a river or sea);. ஆற்றின் நடுவே நீரோட்டம் மிகுதியாயிருக்கும் விழிப்பாய் நீந்த வேண்டும்.(உ.வ.); [நீர் + ஒட்டம்] நீரோட்டம்3 nīrōṭṭam, பெ. (n.) 2. (உரூவாத் தாள், தாள் முதலியவற்றில்); வெளிச்சத்திற்கு எதிராய்ப் பார்த்தால் மட்டுமே புலப்படக்கூடிய வகையில் அச்சடிக்கப் பட்டிருக்கும் உருவம் அல்லது எழுத்து; watermark (in a currency note, paper etc.);. [நீர் + ஒட்டம்.] நீர் ஓடிய தாரையைப் போன்றிருப்பது. நீரோட்டம்4 nīrōṭṭam, பெ. (n.) நாட்டின் பொதுத்தன்மை; common persptive. இந்தியாவின் எந்த மாநிலமும் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகிச் செல்வதை ஏற்கவியலாது எனக் குடியரசுத் தலைவர் தனது குடியரசுநாள் விழா உரையில் வலியுறுத்திக் குறிப்பிட்டார். (உ.வ.);. இளைஞர்கள் தேசிய நீரோட்டத்தில் பங்கு பெற வேண்டுமென இந்தியத் தலைமை யமைச்சர் தனது பொழிவில் குறிப்பிட்டார். (உ..வ.);. [நீர் + ஒட்டம்.] ஒடும் நீர் ஒரே திசைநோக்கிச் செல்வது போன்று நாட்டுமக்கள் அனைவரும் ஒருபோகாய்ச் செல்வதைக் குறித்து வந்த சொல். |
நீரோட்டவலை | நீரோட்டவலை nīrōṭṭavalai, பெ. (n.) நீரின் மேற்பரப்பு அசையா நிற்க கீழ்பரப்பின்நீரின் ஓட்டம் current in the lower part of the sea or river. [நீர் + ஒட்டம் + அலை.] |
நீரோட்டு | நீரோட்டு nīrōṭṭu, பெ. (n.) நீரோட்டம் பார்க்க;see {mir-dttam} [நீரோட்டம் → நீரோட்டு.] |
நீரோது-தல் | நீரோது-தல் nīrōdudal, 5 செ.கு.வி. (v.i.) பேற்றுக்கால வேதனையிலிருக்கும் பெண்டிர் முதலியோருக்குக் கொடுக்க நீரை மந்திரித்தல்; to consecrate water by mantras, for being given to a woman in labour. [நீர் + ஒது-,] |
நீரோம்பல் | நீரோம்பல்1 nīrōmbal, பெ. (n.) 1. பூமருது; flowering murdah. 2. நீர்க்கடம்பு; water cadamba. [நீர் + ஒம்பல்.] நீரோம்பல்2 nīrōmbal, பெ. (n.) பேய்க்கடுக்காய் (கதி.அக.);; crape myrtle. [நீர் + ஒம்பல்.] |
நீரோருகம் | நீரோருகம் nīrōrugam, பெ. (n.) தாமரை; lotus. (சா.அக.);. |
நீர் | நீர்1 nīrttal, 11 செ.கு.வி. (v.i.) அடர்த்தியைக் குறைத்தல்; (மோர் போன்வற்றில்); நீர் கலந்து நீர்த்தன்மை உடையதாக்குதல்; to dilute (a liquid); make thin (by adding water);. நீர்த்த மோராக இருந்தாலும் குடிப்பதற்குச் சுவையாய் இருக்கிறது. (உ.வ.);. மேலும் மேலும் திருத்தங்கள் செய்ததால் கருத்து நீர்த்துப் போய்விட்டது. (உ.வ.);. 2. (சுண்ணாம்பில்); நீர் சேர்த்துக் குழைத்தல்; slake (lime);. [நீள் → நீர்.] நீர்2 nīrttal, 4 செகு.வி. (v.i.) 1. நீராதல்; to become thin or watery, as liquid food in cooking. 2. ஈரமாதல்; to be wet, moist. “நீர்க்கின்ற செஞ்சடை” (திருமந்.2121.);. நீர்3 nīr, பெ. (n.) 1. ஐம்பூதங்களிலொன்றான நீர்; water, one of the five elements. “தீமுரணிய நீரும்” (புறநா. 2.);. 2. கடல்; sea ocean. “நீரொலித்தன்ன” (மதுரைக்.369.);. 3. சாறு (இரசம்);; juice, liquor. “கரும்பினை….. யிடித்துநீர் கொள்ளினும்” (நாலடி. 156.);. 4. பனிநீர்; rose water. “நீரால் வெண்ணிறப் பொடியை மாற்றி” (சீவக.117.);. 5. உடலிலுள்ள அரத்தம், பித்தநீர் முதலிய நீர்மப்பொருள் (வின்.);; humours of the body, as serum, lymph. 6. சிறுநீர்; urine. “இவ்வெல்லையி னீர்பெய்து யான் வருகாறும்” (பிரமோத்.2.50.);. 7. பூராடம் (பிங்.); பார்க்க;see {pladam} 8. பூராட்டாதி (அக.நி.); பார்க்க;see {pūrattādī} 9. ஈரம் (வின்.);; dampness, moisture, humidity. 10. ஒன்பான் மணியொன்றின் (இரத்தினத்தின்); ஒளி; water in a gem. “நெடுநீர் வார்குழை” (நெடுநல்.139.);. 11. குணம்; nature, disposition. “அன்ன நீரார்க்கேயுள” (குறள்,527.);. 12. நிலை (வின்.);; state, condition. 13. முறைமை; order, manner. “பேர்யாற்றடை கரை நீரிற் கேட்டாங் கார்வ நெஞ்சமோ டவலங் கொள்ளார்” (சிலப்.10;140.);. ம., க., கோத., து., கட., குவி., நீர்; தெ., நீர்., நீள்ளு; து., பர்., நீர்; கொலா., இர்;பிரா., திர்., Skt. {niru} = water, juice, liquor. [நூல் (நீட்சிக்கருத்துவேர் நுல் → நெல் → நெள் → நெகு → நெகி (நெகிள்); → நீள் → நீர் (வே.க.342.);.] நீர்4 nīr, பெ. (n.) தன்மை; nature. “செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே” (புறநா.9.);. “நீர்மிகிற் சிறையு மில்லை தீமி கின் மன்னுயிர் நிழற்று நிழலுமில்லை” (புறநா.9.);. “இரங்கு முரசி னினஞ்சால் யானை முந்நீ ரேணி விறல் கெழுமூவரை கடல்” (புறநா.137.);. “காரொவ்வா வேனில் கலங்கின் தெளிவரல் நீரொவ்வா வையை நினக்கு” (பரிபா.11;73.);. நீர்5 nīr, பெ. (n.) நீ என்ற முன்னிலை ஒருமைச் சொல்லைவிட மதிப்புக் கூடியதாகவும் நீங்கள் என்ற முன்னிலைச் சொல்லைவிட மதிப்பிற் குறைந்ததாகவும் உள்ள முன்னிலைச் சொல். (இக்.வ.);; second person pronoun more polite than நீ but less polite than/ நீங்கள். [நீ → நீர்.] நீர்6 nīr, பெ. (n.) முன்னிலைப் பன்மைப் பெயர்; yOU. [நீன்→நீ→நீர்.] நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற்போல நீன் என்பது நின் என்று குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப் படுகின்றது. நீனுக்குப் பன்மை நீம் என்பது. மகரம் பன்மைப் பொருளுணர்த்தலை ஆங்கில இலக்கண நூலிலும் காணலாம். நீங்கள் என்பது விகுதிமேல் விகுதி பெற்ற இரட்டைப் பன்மை. நீவிர் என்பது இலக்கணப் போலி. நீயிர் என்னும் சொல்லே நீர் என இடைக்குறைந்து நின்றது. (இலக்.கட்.4.);. i0]’ |
நீர் அளவு | நீர் அளவு nīraḷavu, பெ. (n.) நீரின் கொள்ளளவு; water content. [நீர் + அளவு.] |
நீர் திரட்டுதல் | நீர் திரட்டுதல் nīrdiraṭṭudal, பெ.(n.) தீமிதி விழாவுக்குமுன் பூசாரிபாடல்பாடியவாறே, தீக் குண்டத்திற்குச் சென்று திரும்புதல்; a ritual walking acrose a fire – pit by singing hymn. [நீர்+திரட்டுதல்] |
நீர் நோன்பு | நீர் நோன்பு nīrnōṉpu, பெ. (n.) மூன்று நாள் வ ரை மட்டும்.பருகிப்பட்டினிலிருக்கும் ஒரு நோன்பு (யாழ்.அக);; a fast for three days, drinking only water. [நீர்+நோன்பு] |
நீர்அடைவு | நீர்அடைவு nīraḍaivu, பெ. (n.) நீர்ப்பெருக்கு; water gain or bleeding. [நீர் + அடைவு.] |
நீர்அளவை | நீர்அளவை nīraḷavai, பெ. (n.) நீரைக்கணக்கிடுகை; water measurement. [நீர்+அளவை.] |
நீர்இயக்கவியல் | நீர்இயக்கவியல் nīriyakkaviyal, பெ. (n.) நீரின் இயக்கம் பற்றிய அறிவியற் பிரிவ; hydro dynamics. [நீர் + இயக்கம் + இயல்.] |
நீர்ஊடுருவாமை | நீர்ஊடுருவாமை nīrūṭuruvāmai, பெ. (n.) நீர்ப்புகா இறுக்கம்; water tightness. [நீர் + ஊடுருவாமை.] |
நீர்ஒட்டம் | நீர்ஒட்டம் nīroṭṭam, பெ. (n.) நீர்ப்பெருக்கு current (water);. [நீர் + ஒட்டம்.] |
நீர்ஒவ்வாமை | நீர்ஒவ்வாமை nīrovvāmai, பெ. (n.) உடம்புக்கு நீர் ஒத்துக்கொள்ளாமையாகிய மாறுபாடு; injuriousness of some kinds of water. [நீர் + ஒவ்வாமை, உல் → ஒல் → ஒவ் → ஒவ்வு + ஆ + மை.] ஆ-எதிர்மறை இடைநிலை. |
நீர்கடம்பு | நீர்கடம்பு nīrkaḍambu, பெ. (n.) ஒருவகை மரம்; a kind of tree.(நீர் கடம்பு.); |
நீர்கட்டல் | நீர்கட்டல் nīrkaṭṭal, பெ. (n.) சிறுநீர் (மூத்திரம்); அடைபட்டிருக்கும் நோய் (m.l.);; retention of urine. [நீர் + கட்டல்.] அல்- தொழிற்பெயரீறு. |
நீர்கட்டு | நீர்கட்டு1 nīrkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) வயல் முதலியவற்றில் நீர் பாய்ச்சுதல்; to irrigate a field, garden bed etc., மேல் வயலுக்கு நீர் கட்டினாயா? (உ.வ.);. [நீர் + கட்டு-,] நீர்கட்டு2 nīrkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) நீர்க் கொப்புளங்கொள்ளுதல்; to form pus; to blister. [நீர் + கட்டு.] |
நீர்கரந்தசெஞ்சடைக்கடவுள் | நீர்கரந்தசெஞ்சடைக்கடவுள் nīrkarandaseñsaḍaikkaḍavuḷ, பெ. (n.) சிவன்; sivan. “ஆடக மாடத் தறிதுயி லமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர் நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி வைத்தலின்” (சிலப். 26;63.);. [நீர் + கரந்த + செஞ்சடை + கடவுள்.] |
நீர்கள் | நீர்கள் nīrkaḷ, பெ. (n.) நீங்கள்; you (திவ். திருவாய். 7, 3, 9.);. |
நீர்கழி-த்தல் | நீர்கழி-த்தல் nīrkaḻittal, 4 செ.குன்றாவி. (v.t.) சிறுநீர் கழித்தல்; to urimate. [நீர் + கழி. நீள் → நீர் = நிலம் போல் ஓரிடத்து நில்லாது நீண்டு செல்லும் புனல், சிறுநீர்.] |
நீர்காட்டு | நீர்காட்டு1 nīrkāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) கால்நடைகளை நீர்குடிக்க வைத்தல்; to water as beasts. [நீர் + காட்டு.] கால்நடைகளைத் தீனியும் நீருங் கலந்த தொட்டியில் நீர்பருகுமாறு அத்தொட்டியின் அணித்தே இட்டுச் சென்று காட்டு வித்தல் நீர் காட்டுதல் எனப்படும். நீர்காட்டு2 nīrkāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. குடிக்கவொட்டாது நீரைக் காட்டுவதை மட்டும் செய்து ஏமாற்றுதல் (வின்.);; to deceive over reach, as showing water without allowing one to drink. 2. அலைக்கழித்தல்; to tantalize, harass. [நீர் + காட்டு-,] |
நீர்கிள்ளி | நீர்கிள்ளி nīrkiḷḷi, பெ. (n.) ஒரு வகைப் பூண்டு; a kind of herb. [நீர் + கிள்ளி.] |
நீர்கிழி | நீர்கிழி nīrkiḻi, பெ. (n.) தண்ணீரைக் கிழித்துச் செல்லும் கப்பலின் முன்புற முகப்பு; பாலத்தின் அலைதாங்கி முன்விளம்பு; cut Water. [நீர் + கிழி.] |
நீர்குடித்தல் | நீர்குடித்தல் nīrkuḍittal, பெ. (n.) 1. விடாய்க்கு நீரைப் பருகுகை; drinking water for thirst. 2. சூளுறுதற் கறிகுறியாக நீரை உட்கொள்ளுகை; drinking of water. considered a form vow taking. ‘நீர் குடித்தலும் ஒரு சூளுற வென்று கொள்க’ (குறிஞ்சிப். 211. உரை.);. [நீர் + குடித்தல்.] |
நீர்குண்டிக்காய் | நீர்குண்டிக்காய் nīrkuṇṭikkāy, பெ. (n.) சிறுநீர் உருவாகும் (உற்பத்தியாகும்); an organ that secretes urinekidney. (Gr. 915);. [நீர்+குண்டிக்காய், ] |
நீர்கொள்ளுதல் | நீர்கொள்ளுதல் nīrkoḷḷudal, பெ. (n.) தடுமன்; cold. மறுவ. நீர்க்கோவை. [நீர் கொள்ளுதல்.] |
நீர்கோலு-தல் | நீர்கோலு-தல் nīrāludal, 7 செ.கு.வி. (v.i.) கிணற்றிலிருந்து நீரிறைத்தல்; to take up or bale Water. [நீர் + கோலு-,] |
நீர்க்கசிவு | நீர்க்கசிவு1 nīrkkasivu, பெ. (n.) ஊற்று பாய்தல்; welling up. [நீர்+கசிவு.] நீர்க்கசிவு2 nīrkkasivu, பெ. (n.) கசிவு; dampneSS. [நீர் + கசிவு. கள் → கழி → கசி → கசிவு.] |
நீர்க்கடன் | நீர்க்கடன் nīrkkaḍaṉ, பெ. (n.) நீத்தார் பொருட்டுச் செய்யும் நீர்க்கரணம் (சடங்கு);; libations of water with sesame seeds and quitch grass or kaus, offered to one’s manes. “நீர்க்கடன் மரபுதாங்கி” (சீவக.1737.);. 2. சந்தியாவந்தனம் (இ.வ.); பார்க்க;see santhiyavanthanam. [நீர் + கடன். நீள் → நீர். கட = இயங்கு, செல். கடம் → கடன் = செய்யத்தக்கது, செலுத்தத் தக்கது. கடம்→கடன்-கடைப்போலி. ஒ.நோ; நலம்→நலன்.] |
நீர்க்கடம்பு | நீர்க்கடம்பு nīrkkaḍambu, பெ. (n.) கடப்ப மரவகை (L.);, water cadamba tree. [நீர் + கடம்பு. நீள் → நீர் கடு → கடம்பு.] |
நீர்க்கடலை | நீர்க்கடலை nīrkkaḍalai, பெ. (n.) பேய்க்கடலை; bitter bengal gram, devil’s gram – cicergenus. (சா.அக.);. [நீர் + கடலை.] |
நீர்க்கடவுள் | நீர்க்கடவுள் nīrkkaḍavuḷ, பெ. (n.) மழைக்கடவுள், வருணன்;{varunan,} as god of the waters. “வருணன் மேய பெருமண லுலகமும்” (தொல்.பொருள்.5.);, “கதுமெனக் கண்ட சிங்கனீர்க்கடவுளை நினைந்தான்” (உபதேசகா. உருத்திராக். 227.);. [நீர் + கடவுள்.] நீள் → நீர். கடவு → கடவுள் = இயக்குபவன், செலுத்துபவன். கடவுள் என்னும் பெயர், மனமொழி மெய்களையும் எல்லாவற்றையுங் கடந்த முழுமுதற் கடவுளையே குறிக்க எழுந்த சொல்லென்பது அதன் பகுதியாலேயே விளங்கும் (சொ.ஆ.க.87.);. |
நீர்க்கடிகை | நீர்க்கடிகை1 nīrggaḍigai, பெ. (n.) நேரத்தைத் தெரிந்து கொள்வதற்காகப் பழந்தமிழர் பயன்படுத்திய கருவி; clepsydra, ancient clock worked by flow of water; hour-glass. [நீர் + கடிகை.] கடிகை-சிறிய மட்பானை, நீர்க்கலம், நாழிகை வட்டில். குள்→குண்டு = குழி, ஆழம். குண்டு→குண்டான் – குழிந்த அல்லது குண்டானகலம். குண்டான் – குண்டா. குண்டு → குண்டிகை → குடிகை → குடிக்கை, குடுவை. குடிகை-நீர்க்கலம் (கமண்டலம்);. குடிகை → கடிகை-நீர்க்கலம், நாழிகை வட்டில். நீர்க்கடிகை2 nīrggaḍigai, பெ. (n.) துறவியர் கையிலேந்தும் வளைந்த கைப்பிடியுடைய மூக்குச் செம்பு; a vessel for holding water used by ascetics. [நீர் + கடிகை.] |
நீர்க்கடியாரம் | நீர்க்கடியாரம் nīrkkaḍiyāram, பெ. (n.) நீர்க்கடிகை பார்க்க;see {nir-k-kadigai,} [நீர் + கடியாரம்.] கடிகை + ஆரம்-கடிகையாரம் → கடிகாரம். கடிகை → கழிகை. ஒ.நோ.;வட்டு + ஆரம்-வட்டாரம், கொட்டு+ஆரம்-கொட்டாரம் ஆரம்-சொல்லாக்க ஈறு (வே.க.158.);. பழங்காலத்தில் காலம் அறிவதற்குப் பயன்படுத்திய கருவி நீர்க்கடிகை எனப்பட்டது. கடிகை=சிறிய மட்பானை, நீர்க்கலம், நாழிகைவட்டில். கடீயந்திர, கடிகாயந்திர என்னும் வடசொற் புணர்ப் பினின்று கடிகாரம் என்னும் தென்சொல் வந்ததன்று (வ.வ.103.);. |
நீர்க்கடுப்பு | நீர்க்கடுப்பு nīrkkaḍuppu, பெ. (n.) சிறுநீரில்சூடுபிடிப்பு; எரிச்சலோடு துளி துளியாய்ச் சிறுநீர் இறங்கும் நோய்வகை; dysury, strangury, urethritis, stricture of urethra. [நீர்+கடுப்பு.] மறுவ. நீர்க்கிரிச்சரம், நீர்க்குத்து, நீர்க்கொதி, நீர்க்கொதிப்பு. |
நீர்க்கடும்புத்தோல் | நீர்க்கடும்புத்தோல் nīrkkaḍumbuttōl, பெ. (n.) ஒருவகை மருந்துப் பச்சிலை (மாட்டுவா.);; a medicinal herb. |
நீர்க்கட்டி | நீர்க்கட்டி1 nīrkkaṭṭi, பெ. (n.) கம்முக்கட்டி; water boil. [நீர் + கட்டி.] நீர்க்கட்டி2 nīrkkaṭṭi, பெ. (n.) 1. நீர்க்கண்டி பார்க்க;see {nĩr-k-kanợi.} 2. ஆலங்கட்டி (இ.வ.);; hail-stone. 3. கெடுநீர் (சலம்); வைத்த புண் கட்டி (இ.வ.);; a cyst. [நீர் + கட்டி.] குள் → கள் → கட்டு → கட்டி (மு.தா. 244.); கள்-திரளல், பெருகுதல், உருண்டையாதல், உருண்டு கட்டியாதல், திரண்டு பெருகுதலால் தோற்றப் பொலிவு பெறுதல். |
நீர்க்கட்டு | நீர்க்கட்டு1 nīrkkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) புண் சீழ் பிடித்தல் (வின்.);; to form pus. [நீர் + கட்டு-.] குள்→கள்→கட்டு. கள்-திரளல், பெருகுதல், உருண்டையாதல், திரண்டு பெருகுதலால் தோற்றப் பொலிவு பெறுதல். நீர்க்கட்டு2 nīrkkaṭṭudal, பெ. (n.) 1. சிறுநீர்தடைப்பட்டிருக்கும் நோய் (வின்.);; retention or stoppage of urine, stricture of urethra. 2. நீராலுண்டாம் உடல் வீக்கம் (வின்);; dropsy 3. நீர்க்கோவை (இ.வ.);; tonsilitis 4. நீர்நோய் வகை (இ.வ.);; inflammation of a synovial membrance, synoVitis. [நீர் + கட்டு-.] நீர்க்கட்டு2 nīrkkaṭṭu, பெ. (n.) ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு; the maximum height up to which water collects, as in a lake, tank, etc. இந்த ஏரிக்கு நீர்க்கட்டு எவ்வளவு? (உ.வ.);. [நீர் + கட்டு.] |
நீர்க்கட்டுக்கொடி | நீர்க்கட்டுக்கொடி nīrkkaḍḍukkoḍi, பெ. (n.) பெருங்கட்டுக்கொடி; a bigger variety of coagulating creeper-cocaulus villofus. (சா.அக.);. [நீர் + கட்டு + கொடி.] |
நீர்க்கட்டுவாதம் | நீர்க்கட்டுவாதம் nīrkkaṭṭuvātam, பெ. (n.) நீர்க்கட்டுவூதை பார்க்க;see {mir-kkattu-Jaaf} [நீர்க்கட்டு + வாதம்.] Skt. {vådam »} த. ஊதை. |
நீர்க்கட்டுவூதை | நீர்க்கட்டுவூதை nīrkkaṭṭuvūtai, பெ. (n.) ஊதைநோய் வகை; rheumatism. [நீர்க்கட்டு + ஊதை.] |
நீர்க்கணம் | நீர்க்கணம்1 nīrkkaṇam, பெ. (n.) செய்யுளின் முதலில் மங்கலமாக அமைக்கத் தக்கதும் நேர்நிரைநிரையென வருவதுமாகிய செய்யுட்கணம் (திவா.);; metrical foot of one {nër} and two nirai, as {kū-vilafi-gani,} considered auspicious at the commencement of a poem. [நீர் + கணம்.] நீர்க்கணம்2 nīrkkaṇam, பெ. (n.) குழந்தைகட்குவரும் கண நோய்வகை (பாலவா. 41.);; a wasting disease, in children. [நீர் + கணம்.] குள்→குண் → கண் → கண → கணம்(வே.க.187.);. |
நீர்க்கண்டகி | நீர்க்கண்டகி nīrggaṇṭagi, பெ. (n.) நீர்முள்ளிச் செடி (தைலவ.தைல;135.);; a herb growing in moist places. [நீர் + கண்டகி.] கள்→கண்டு→கண்டகி. கள்-முள். கண்டகி-முட்செடி. |
நீர்க்கண்டம் | நீர்க்கண்டம்1 nīrkkaṇṭam, பெ. (n.) நீரில் மூழ்கிப் போதல் முதலிய ஏதம்; peril by water, as drowing. [நீர் + கண்டம்.] நீர்க்கண்டம்2 nīrkkaṇṭam, பெ. (n.) பனிக்கட்டி, ice, snow, (சா.அக.);. [நீர் + கண்டம்.] |
நீர்க்கண்டி | நீர்க்கண்டி nīrkkaṇṭi, பெ. (n.) நீர் பாய்ச்சும் வேலையைக் கவனிக்கும் ஊர் ஊழியக்காரன் (இ.வ.);; a village servant who looks to the distribution of water for irrigation. க. நீர்க்கண்டி. மறுவ, நீர்ப்பாய்ச்சி, நீராணிக்காரன். |
நீர்க்கனதி | நீர்க்கனதி nīrkkaṉadi, பெ. (n.) நீர்க்கனம் (இ.வ.); பார்க்க;see {mir-k-kanam} [நீர் + கனதி.] கல் → கனம் → கனதி. |
நீர்க்கனம் | நீர்க்கனம் nīrkkaṉam, பெ. (n.) சளி; cold. [நீர் + கனம்.] கனம்-செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி. கல்→கன். கல் = உறுதிப்பாடு. கன்- கன. கனத்தல் = பளுவாதல், மிகுதியாதல். கன→ கனம் = தடிமன், பருமன், பெருமை, செறிவு, திரட்சி, உறுதி, மிகுதி, கூட்டம். சளிப்பிடித்திருத்தலைத் தடுமன் பிடித்துள்ளது என்று கூறுவது முண்டு. |
நீர்க்கமல்லி | நீர்க்கமல்லி nīrkkamalli, பெ. (n.) அல்லி (மலை.);; water lily. [நீர் + கம் + அல்லி.] நீர் எனினும் கம் எனினும் ஒக்கும். அம் → கம். அம் = நீர். அல்-இரா. அல் → அல்லி = இரா. ஒ.நோ. அல் → எல் → எல்லி = → இரா. அல் → அல்லி-இரவில் மலரும் பூவகை. |
நீர்க்கம்பம் | நீர்க்கம்பம் nīrkkambam, பெ. (n.) காற்றில் சிதறுண்டு மேலெழும் நீர்த்திவலை; rising of water from the Sea or lake in Spray or gets to a certain level giving the appearance of a pillar due to a violent wind – water spout. (சா.அக.);. [நீர் + கம்பம்.] |
நீர்க்கம்பல் | நீர்க்கம்பல் nīrkkambal, பெ. (n.) நோய்வகை (தைலவ. தைல.34.);; a disease. [நீர் + கம்மல் செறுமுதல் → செம்முதல் → கெம்முதல் → கெம்மல் → கம்மல்.] |
நீர்க்கரப்பன் | நீர்க்கரப்பன் nīrkkarappaṉ, பெ. (n.) சொறிப்புண் (சிரங்கு);வகை (m.l.);; eczema. [நீர் + கரப்பன் கரப்பு→கரப்பான். கரப்பு-சொறி, சுரசுரப்பு.] |
நீர்க்கருநோய் | நீர்க்கருநோய் nīrkkarunōy, பெ. (n.) சிறுநீரகத்திலுண்டாகும் நோய் வகை; brights disease. [நீர் + கருநோய் நீர்-சிறுநீர்.] |
நீர்க்கருவியாதி | நீர்க்கருவியாதி nīrkkaruviyāti, பெ. (n.) see {mirk-karaய-ncy } [நீர்க்கரு + வியாதி.] த. நோய் → skt. வியாதி. |
நீர்க்கரை | நீர்க்கரை nīrkkarai, பெ. (n.) 1. ஆறு குளம் இவற்றின் கரை; embankment of a river or tank. “நீர்க்கரை நின்ற கடம்பையேறி” (திவ். நாய்ச்.12;5.);. 2. நீருள்ள பகுதி; water side. [நீர் + கரை.] கரு → கரை. கரு = மேடு, உயரம். |
நீர்க்கலம் | நீர்க்கலம் nīrkkalam, பெ. (n.) 1. நீர் இருக்கும் ஏனம்; water vessels. 2. நீரருந்தும் ஏனம்; vessel for drinking water. 3. கமண்டலம்; a vessel for holding water used by ascetics. [நீர் + கலம்.] |
நீர்க்கல்லடைப்பு | நீர்க்கல்லடைப்பு nīrkkallaḍaippu, பெ. (n.) சிறுநீர்ப்பையில் கல்லுண்டாக்கி நீர்த் துளையினை அடைத்து நீர் இறங்காமையாகிய நோய்; retention of urine due to the obstruction of calculus or Stone in the passage of urethra, this stone is the formation in the bladder. [நீர் + கல்லடைப்பு.] |
நீர்க்கழலை | நீர்க்கழலை nīrkkaḻlai, பெ. (n.) ஒருவகை இமைக்கட்டி; excrescence on the eyelid. [நீர் + கழலை] கழல்→கழலை. கழல்-கழற்சிக்காய், கழற்சிக்காய் போன்ற கட்டி.] |
நீர்க்கழிவு | நீர்க்கழிவு nīrkkaḻivu, பெ. (n.) நீரிழிவு (யாழ்.அக.); பார்க்க;see {mir-lvu.} [நீரிழிவு → நீக்கழிவு.] |
நீர்க்கவிதை | நீர்க்கவிதை nīrkkavidai, பெ. (n.) நீர்க்கோவை; dropsy (சா.அக.);. |
நீர்க்காகம் | நீர்க்காகம் nīrkkākam, பெ. (n.) நீர்க்காக்கை பார்க்க;see {nir-k-käkkal} நீர் + காகம். காக்கை → காகம். |
நீர்க்காக்கை | நீர்க்காக்கை nīrkkākkai, பெ. (n.) நீர் நிலைகளின் கரையில் காணப்படும்) வாத்து போன்ற தோற்றமும், கூரிய அலகுமுடைய மீனை உணவாகக் கொண்டு வாழும் காக்கையினத்தைச் சார்ந்த ஒருவகைக் கருநீலப் பறவை; COrrn Orant. “செங்காலன்னமும் பைங்காற் கொக்கும் கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும் உள்ளு மூரலும் புள்ளும் புதாவும் வெல்போர் வேந்தர் முனையிடம் போல” (சிலப். 10;115.);. மறுவ. நீர்நிறக்காக்கை. [நீர் + காக்கை.] |
நீர்க்காங்கு | நீர்க்காங்கு nīrkkāṅgu, பெ. (n.) காட்டுப் பூவரசு மரம்; false fern free. நீர்+காங்கு. கோங்கு- காங்கு. |
நீர்க்காசம் | நீர்க்காசம் nīrkkācam, பெ. (n.) ஈளை (காச); நோய்வகை; a kind of asthma, consumption. |
நீர்க்காணம் | நீர்க்காணம் nīrkkāṇam, பெ. (n.) நீர்வரி (கல்வெட்டு);; water cess. [நீர் + காணம் . கண் → காணி = காணப்படுவது, கண்காணிக்கப்படுவது, பேணுகையில் உள்ள நிலம். வெறுந் தரையாயிருந்து யாரும் நுழைந்திட இடங்கொடாமல், ஒருவரின் காப்பிலிருப்பது காணி. அக்காணிக்கு இறுக்கப்படும் இறை, காணம்.] |
நீர்க்காப்பு | நீர்க்காப்பு nīrkkāppu, பெ. (n.) நீர்புக வழியளிக்காத காப்பு; water proof. [நீர் + காப்பு. நீள்→நீர்கா → காப்பு.] |
நீர்க்காயம் | நீர்க்காயம் nīrkkāyam, பெ. (n.) நத்தை; Snail. (சா.அக.); |
நீர்க்காய் | நீர்க்காய் nīrkkāy, பெ. (n.) நீர்த்தன்மை மிகுந்துள்ள காய்; vegetables with more water content. [நீர் + காய்.] சுரை, வெள்ளரி, பூசணி முதலான காய்களில் நீர்த்தன்மை மிகுந் திருத்தலின் இவை நீர்க்காய்கள் எனப்படுகின்றன. |
நீர்க்காய்ச்சுப்பு | நீர்க்காய்ச்சுப்பு nīrkkāyccuppu, பெ. (n.) 1. இந்துப்பு; rock salt. [நீர் + காய்ச்சு + உப்பு.] |
நீர்க்காரன் | நீர்க்காரன் nīrkkāraṉ, பெ. (n.) நீர்க் கொணர்பவன் பார்க்க;see {mir-k-konarbavan.} [நீர் + காரன்.] “காரன் உடைமைப்பொருள் பின்னொட்டு |
நீர்க்காரி | நீர்க்காரி nīrkkāri, பெ. (n.) நீர்க்கொணர்பவள் பார்க்க;see {mir-kkonarbaval} [நீர் + காரி. காரன், காளி என்பன உடைமைப் பொருள் பின்னொட்டு.] |
நீர்க்காரிச்சி | நீர்க்காரிச்சி nīrkkāricci, பெ. (n.) நீர்க்கொணர்பவள் பார்க்க;see {mir-kkonarbaval.} [நீர்க் கொணர்பவள் → நீர்க்காரி → நீர்க்காரிச்சி.] காரிச்சி – விகுதிமேல்விகுதி. |
நீர்க்காலி | நீர்க்காலி nīrkkāli, பெ. (n.) நீர்போற் ஊட்டமில்லாத பாலைக் கொடுக்கும் ஆன் (உ.வ.);; cow which gives watery milk. [நீர் + காலி.] காலி – கால்நடை, கறவை, ஆன். |
நீர்க்கால் | நீர்க்கால் nīrkkāl, பெ. (n.) 1. நீரோடும் வழி; Water Course. (C.E.M.);. 2. வாய்க்கால்; Canal, “நீர்க்கால் கொழுநிழல் ஞாழல்” (கலித்.56.);. [நீர் + கால் நீள்→ நீர் குல் = தோன்றுதல் கருத்துவேர். குல் → கல் → கால் = தோன்றுதல், வருதல், பாய்தல், ஒடுதல், பரவுதல், வழி, தடம், பாதை.] |
நீர்க்கால்சலாகை | நீர்க்கால்சலாகை nīrkkālcalākai, பெ. (n.) சந்திர காந்தக்கல் (சூ.நி.4;41);; moon stone. [நீர் + கால் சலாகை.] |
நீர்க்காவி | நீர்க்காவி nīrkkāvi, பெ. (n.) அடிக்கடி துவைத்து ஈரந் தங்க வைத்தலால் ஆடையிற் பற்றுஞ் செந்நிறம்; a kind of reddish tinge in cloth, produced by frequently washing it in water without allowing it to dry. 2. கருங்குவளை. (வின்);, blue nelumbo. [நீர் + காவி.] |
நீர்க்கிண்ணம் | நீர்க்கிண்ணம் nīrkkiṇṇam, பெ. (n.) நீர்க்கடிகை (புதுச்.); பார்க்க;see {ni-k-kdgai} [நீர் + கிண்ணம்.] |
நீர்க்கிரந்தி | நீர்க்கிரந்தி nīrkkirandi, பெ. (n.) நோய் வகை (இ. வை. 166.);; a disease. [நீர் + கிரந்தி.] |
நீர்க்கிராம்பு | நீர்க்கிராம்பு nīrkkirāmbu, பெ. (n.) செடிவகை; prime rose-willow. |
நீர்க்கிரிச்சரம் | நீர்க்கிரிச்சரம் nīrkkiriccaram, பெ. (n.) நீர்க்கடுப்பு (m.l.); பார்க்க;see {mirk-kaduppu} |
நீர்க்கிரிச்சினம் | நீர்க்கிரிச்சினம் nīrkkiricciṉam, பெ. (n.) சிறுநீர் தடைப்படுததல்; stricture of urine. (சா.அக.);. |
நீர்க்கிழங்கு | நீர்க்கிழங்கு nīrkkiḻṅgu, பெ. (n.) 1. சிறு கிழங்கு; small water root. 2. தண்ணீர் விட்டான் கிழங்கு பார்க்க;see {tannir-wittàn kilangu} (சா.அக.);. [நீர்+கிழங்கு.] |
நீர்க்கிழவன் | நீர்க்கிழவன் nīrkkiḻvaṉ, பெ. (n.) நீர்க்கடவுள் (திருவிளை. பதிக.4.); பார்க்க;see {nir-k-kadavu/} [நீர் + கிழவன்.] கிழவன் – உரிமையுடையவன் |
நீர்க்கீரி | நீர்க்கீரி nīrkāri, பெ. (n.) நீர் நாய் பார்க்க;see {nir-nāy.} [நீர் + கீரி.] |
நீர்க்கீரை | நீர்க்கீரை1 nīrkārai, பெ. (n.) நீரிலுண்டாகும் கீரை வகை;(வின்’.);; an edible water-plant. [நீர் + கீரை.] நீர்க்கீரை2 nīrkārai, பெ. (n.) ஆரைக்கீரை;{ărai-k-kirai} (சா.அக.);. [நீர் + கீரை.] |
நீர்க்கீழ் | நீர்க்கீழ் nīrkāḻ, பெ. (n.) நீர்த்தானம் (வின்.); பார்க்க;see {nir-t-tānam} [நீர் + கீழ்.] |
நீர்க்குடத்தி | நீர்க்குடத்தி nīrkkuḍatti, பெ. (n.) தண்ணீர் விட்டான் கிழங்கு; water-root, asparagus гасето.sus (சா.அக.);. [நீர் + குடத்தி.] |
நீர்க்குடம் | நீர்க்குடம் nīrkkuḍam, பெ. (n.) 1. Éif (up&&Gú GLún; water-pot. |
நீர்க்குட்டம் | நீர்க்குட்டம் nīrkkuṭṭam, பெ. (n.) ஒருவகை நோய்; a kind of disease. [நீர் + குட்டம்.] |
நீர்க்குணம்பாடம் | நீர்க்குணம்பாடம் nīrkkuṇambāṭam, பெ. (n.) பதார்த்த குண சிந்தாமணியில் சொல்லியபடி ஆறு, ஏரி, அருவி, கடலிற் பொருந்திய மருத்துவ குணத்தைப் பற்றியதொரு நூல்; the science which deals about the medicinal properties of the principle rivers and different water like tank, lake, shallow Well,deep well, stream and sea. (51.95);. [நீர்க்குணம் பாடம்.] |
நீர்க்குண்டம் | நீர்க்குண்டம் nīrkkuṇṭam, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tinuvadanai Taluk. [நீர்+குண்டம்(குட்டை);] |
நீர்க்குண்டி | நீர்க்குண்டி1 nīrkkuṇṭi, பெ. (n.) 1. சிறுநீர் ; in continence of urinenocturnol enuresis. 2. நீர்மடையைத் திருப்பி நிரவலாகப் பாயவைக்கும் பணியாளன்,மடையான்; one who distributes water for irrigation. [நீர்+குண்டி. ] நீர்க்குண்டி2 ni-k-kund பெ. (n.) நொச்சி மரம்; a Species of Chaste tree. [நீர்+குண்டி.] |
நீர்க்குதிரை | நீர்க்குதிரை nīrkkudirai, பெ. (n.) குதிரை முகம் போன்ற தலையை நீட்டியவாறே நீந்திச் செல்லும் மீன்வகை; sea horse fish – hippo CampuS. [நீர் + குதிரை.] |
நீர்க்குத்தல் | நீர்க்குத்தல் nīrkkuttal, பெ. (n) நீர்க்குத்து ;see mir-k-kuttu. [நீர் + குத்தல்.] |
நீர்க்குத்திரம் | நீர்க்குத்திரம் nīrkkuttiram, பெ. (n.) நீர்ச்சுண்டி பார்க்க;see {mir-c-cபnd } (சா.அக.);. [நீர் + குத்திரம்.] |
நீர்க்குத்து | நீர்க்குத்து1 nīrkkuttu, பெ. (n.) 1. சிறுநீர் தடைப்படுவதால் நீர்வழியிலேற்படும் குத்தல் வலி; an acute pain caused in the urethra from suppression or retention of urine. 2. கல்லடைப்பினால் நீர்த்தாரையில் உண்டாகும் குத்தல் வலி; pin prick pain felt in the urethra due to obstruction of Calculus in the urethra, a urinary disease. 3. கொப்பூழ் (தொப்புள்);; naval. (சா.அக.);. [நீர் + குத்து. நீர்க்குத்து2 nīrkkuttu, பெ. (n.) நீர்க்கடுப்பு பார்க்க;see {nir-k-kaduppu.} [நீர் + குத்து. ] நீர்க்குத்து3 nīrkkuttu, பெ. (n.) நீர்நிலைக்கு எதிராக விட்டுவாயில் அமைந்திருக்கும் நிலை (இ.வ.);; position of the entrance of a house being opposite to a tank, well, etc., considered inauspicious. [நீர் + குத்து.] |
நீர்க்குன்று | நீர்க்குன்று nīrkkuṉṟu, பெ. (n.) நத்தை (யாழ்.அக.);; snail. [நீர் + குன்று.] |
நீர்க்குப்பி | நீர்க்குப்பி nīrkkuppi, பெ. (n.) நீர்முள்ளி (மலை.);;see {nir-mulli.} [நீர் + குப்பி.] |
நீர்க்குமிழம் | நீர்க்குமிழம் nīrkkumiḻm, பெ. (n.) வெள்விழியில் சங்கம் பழம் போல் கொப்புளத்தை யுண்டாக்கும் ஒரு வகை கண் நோய் (சீவரட். 206.);; an eye disease. [நீர் + குமிழம்.] |
நீர்க்குமிழி | நீர்க்குமிழி nīrkkumiḻi, பெ. (n.) நீரிற்றோன்றும் மொக்குள் (திவா.);; water bubble. “நீர்க்குமிழி போலென்னினைவு வெளி வாய்க் கரைய” (தாயு. பராப. 204.);. [நீர் + குமிழி கும் → குமி → குமிழ் → குமிழி.] |
நீர்க்கும்பி | நீர்க்கும்பி nīrkkumbi, பெ. (n.) நீர்முள்ளி பார்க்க;see {nir-musi} [நீர் + கும்பி.] |
நீர்க்குரு | நீர்க்குரு nīrkkuru, பெ. (n.) 1. வியர்க்குரு; prickly heat-millaria. 2. நீர்க்கொள் சிறுகுரு; pimple, pastule. 3. குருப்பொது; any papule 4. தேரையர் கரிசலில் மருத்துவப்பிரிவுகளுள் ஒன்று; one of the medicinal classification referred to in the karisal work of Theraiyar an authority in Tamil medicine. (சா.அக.);. [நீர் + குரு.] |
நீர்க்குறட்டை | நீர்க்குறட்டை nīrkkuṟaṭṭai, பெ. (n.) வயற் பாம்புவகை; checkered snake, as holding tne flesh like pincers while biting. [நீர் + குறடு- நீர்க்குறட்டை. ] |
நீர்க்குறி | நீர்க்குறி1 nīrkkuṟi, பெ. (n.) 1. தேரையர் செய்ததொரு தமிழ்மருத்துவ நூல். இது சிறுநீரை ஆராய்ந்து நோயைப் பற்றிக் கூறும்; a Tamil medical work compiled by Theraiyar, it treats of diagnostic examination of urine in detail before ascertaining or determining the disease 2. சிறுநீர் ஆய்வு; the medical examination of urine-urinos copy, uroscopy 3. தண்ணீர் ஏறுவதையும் இறங்குவதையும் காண்பிக்கும் அடையாளம்; a mark indicating the raise and fall of water-water mark. (சா.அக.);. [நீர் + குறி.] நீர்க்குறி2 nīrkkuṟi, பெ. (n.) நீர்க்குறியறியும் நிமித்தம்; art of divining the existence of water under ground. [நீர் + குறி.] |
நீர்க்குறிஞ்சா | நீர்க்குறிஞ்சா nīrkkuṟiñjā, பெ. (n.) கழுதைப் பாலை என்னும் நஞ்சறுப்பான் கொடி (வின்.);; Indian ipecacuanna [நீர் + குறிஞ்சா.] |
நீர்க்குளரி | நீர்க்குளரி nīrkkuḷari, பெ. (n.) கல்லாரச் செடி (பெரியபு. தடுத்தா. 173, உரை.);; creeper. [நீர் + குளிரி.] |
நீர்க்குளிரி | நீர்க்குளிரி nīrkkuḷiri, பெ. (n.) 1. செடிவகை (திவா.);; arrow-head-sagittarai obtusifolia. 2. பற்றுக்கோடின்மை; want of support. 3. இழப்பு; loss. [நீர் + குளிரி.] |
நீர்க்குளுமையூட்டி | நீர்க்குளுமையூட்டி nīrkkuḷumaiyūṭṭi, பெ. (n.) நீரோட்டத்தால் அறையின் வெம்மையைத் தணிக்கும் கருவி; water cooler. [நீர் + குளுமை + ஊட்டி.] |
நீர்க்குளுவான் | நீர்க்குளுவான் nīrkkuḷuvāṉ, பெ. (n.) நீர்க் கொளுவான் (இ.வ.); பார்க்க;see {mirk-kosuvân.} [நீர் + குளுவான் கொளுவான் → குளுவான்.] |
நீர்க்குழாய் | நீர்க்குழாய் nīrkkuḻāy, பெ. (n.) நீரினைக் கொண்டு செல்லும் குழாய்; water-pipe. [நீர் + குழாய்.] |
நீர்க்குவை | நீர்க்குவை1 nīrkkuvai, பெ. (n.) கடைக் கண்ணில் குளிர் (சிலேட்டும); மொத்தைபோல் சதை வளர்ப்பிக்குமொரு கண்ணோய்; a disease of the inner corner or angle of the eyes marked by a mucous growth. (சா.அக.);. [நீர் + குவை.] நீர்க்குவை2 nīrkkuvai, பெ. (n.) கடைக் கண்ணில் வளரும் தேவையற்ற தசை (சீவரட்.);, proud flesh in the corner of the eye. |
நீர்க்கூட்டை | நீர்க்கூட்டை nīrkāṭṭai, பெ. (n.) குளவட்டை, நீரட்டை; small kind of leech. [நீர் + கூட்டை.] |
நீர்க்கூலி | நீர்க்கூலி nīrkāli, பெ. (n.) நீருக்கான தீர்வை (r.t.);; water rate. [நீர் + கூலி.] |
நீர்க்கைக்கதவு | நீர்க்கைக்கதவு nīrkkaikkadavu, பெ. (n.) மதகு (வின்.);; sluice. [நீர் + கை + கதவு.] |
நீர்க்கொணர்பவர் | நீர்க்கொணர்பவர் nīrkkoṇarpavar, பெ. (n.) நீர்சுமந்து கொடுப்பவன்; water-carrier. [நீர் + கொணர்பவர்.] |
நீர்க்கொணர்பவள் | நீர்க்கொணர்பவள் nīrkkoṇarpavaḷ, பெ. (n.) நீர் சுமந்து கொடுப்பவள்; water supplying women, water women fem, of waterman. [நீர் + கொணர்பவள்.] |
நீர்க்கொதி | நீர்க்கொதி nīrkkodi, பெ. (n.) நீர்க்கடுப்பு (வின்.); பார்க்க;see {nir-k-kaguppu.} [நீர் + கொதி.] |
நீர்க்கொதிப்பு | நீர்க்கொதிப்பு nīrkkodippu, பெ. (n.) நீர்க் கடுப்பு (யாழ்ப்.); பார்க்க;see {mir-k-kadபppu} [நீர் + கொதிப்பு.] |
நீர்க்கொத்தை | நீர்க்கொத்தை nīrkkottai, பெ. (n.) ஒருவகை தண்ணீர்ப் பாம்பு; a kind of water snake.(சா.அக.);. |
நீர்க்கொப்புளம் | நீர்க்கொப்புளம் nīrkkoppuḷam, பெ. (n.) உடலில் ஏற்படும் கொப்புளவகை; waterblister. [நீர் + கொப்புளம்.] |
நீர்க்கொம்பன் | நீர்க்கொம்பன் nīrkkombaṉ, பெ. (n.) நீர்க் கொம்பு (இ.வ.); பார்க்க;see {mir-k-kombu.} [நீர் + கொம்பன். ] |
நீர்க்கொம்பு | நீர்க்கொம்பு nīrkkombu, பெ. (n.) கக்கல் கழிச்சல்; cholera, இந்தப்பாவி நீர்க்கொம்பிலே போக (உ.வ.);. [நீர் + கொம்பு.] |
நீர்க்கொளுவான் | நீர்க்கொளுவான் nīrkkoḷuvāṉ, பெ. (n.) சின்னம்மை வகை; measles. [நீர் + கொளுவான்] |
நீர்க்கொள்(ளு)-தல் | நீர்க்கொள்(ளு)-தல் nīrkkoḷḷudal, 12 செ.கு.வி. (v.i.) 1. சளி பிடித்தல்; to feel heavy with cold, as the head. 2. சீழ்பிடித்தல் (இ.வ.);; to suppurate, form pus, as a tumour. [நீர் + கொள்-,] |
நீர்க்கொள்கை | நீர்க்கொள்கை1 nīrkkoḷkai, பெ. (n.) நீர்க்கனம் பார்க்க;see {nir-k-kanam} [நீர் + கொள்கை.] [கொள் → கொள்ளு → கொள்ளுகை →கொள்கை.] நீர்க்கொள்கை2 nīrkkoḷkai, பெ. (n.) மாநிலங்களுக்கிடையே ஒடும் ஆற்று நீரைப் பங்கிட்டுக் கொள்ளும் கொள்கை; water policy. [நீர் + கொள்கை.] |
நீர்க்கொள்வான் | நீர்க்கொள்வான் nīrkkoḷvāṉ, பெ. (n.) நீர்க்கொளுவான் (யாழ்ப்.); பார்க்க;see {ni-kkosuvân} [நீர் + கொள்வான்.] |
நீர்க்கொழுக்கட்டை | நீர்க்கொழுக்கட்டை nīrkkoḻukkaṭṭai, பெ. (n.) நீராவியில் வெந்ததும் இனிப்பு சேராததுமான கொழுக்கட்டை வகை (இ.வ.);; a kind of ball-cake made of pure flourpaste and steamed. [நீர் + கொழுக்கட்டை.] |
நீர்க்கொழுந்து | நீர்க்கொழுந்து nīrkkoḻundu, பெ. (n.) நீரோட்டம் (சூடா,);; head or flow of a current or stream;head of a tide. [நீர் + கொழுந்து.] |
நீர்க்கோங்கு | நீர்க்கோங்கு nīrkāṅgu, பெ. (n.) கோங்கு வகை; iron wood of malabar. [நீர் + கோங்கு.] |
நீர்க்கோசம் | நீர்க்கோசம் nīrkācam, பெ. (n.) சிறுநீர்ப்பை; urinary bladder. (சாஅக.);. [நீர் + கோசம்.] |
நீர்க்கோத்தை | நீர்க்கோத்தை nīrkāttai, பெ. (n.) நீர்ப் பாம்பு வகை (யாழ்ப்.);; a Water snake. [நீர் + கோத்தை.] |
நீர்க்கோன் | நீர்க்கோன் nīrkāṉ, பெ. (n.) மழைக்கடவுள், வருணன்; rain god. “நீர்க்கோ னொல்லை தாழ்ந்து” (திருவிளை. நான்மட. 21.);. [நீர் + கோன். நீள் → நீர். கோ → கோவன் → கோன்.] |
நீர்க்கோப்பு | நீர்க்கோப்பு nīrkāppu, பெ. (n.) சளி; cold. [நீர் + கோப்பு.] |
நீர்க்கோரை | நீர்க்கோரை nīrkārai, பெ. (n.) கோரை வகை (a.);; a smooth sedge, leafy at base. [நீர் + கோரை.] |
நீர்க்கோலம் | நீர்க்கோலம்1 nīrkālam, பெ. (n.) புனலாட்டின் போது மகளிர் கொள்ளும் ஆடைவகை; dress and adornment of girls for sporting in water. [நீர் + கோலம்.] நீர்க்கோலம்2 nīrkālam, பெ. (n.) தண்ணீரால் இடப்படும் குறியான கோலம் (இ.வ.);; diagrams on the ground made with water, believed to be inauspicious. 2. நீரிலெழுதும் வரை (இ.வ.);; lines drawn on water, as unstable. “நீர்க்கோல வாழ்வை நச்சி” (கம்பரா. கும்ப. 154.);. [நீர் + கோலம்.] |
நீர்க்கோலி | நீர்க்கோலி nīrkāli, பெ. (n.) தண்ணீர்ப் பாம்பு (இ.வ.);; water snake. [நீர் + கோலி.] |
நீர்க்கோழி | நீர்க்கோழி nīrkāḻi, பெ. (n.) நீர்வாழ் பறவை வகை; water fowl. “நீர்க்கோழிக் கூய்ப் பெயர்க் குந்து” (புறநா. 395.);. [நீர் + கோழி.] நுல் (நீட்சிக்கருத்து வேர்); நுல் → நெல் → நெ ள் → நெரு → நெகிழ் (நெகிள்); → நீள் → நீர். உள் → உளு துளைக்கும் புழு. உளுத்தல் = புழு மரத்தைத் துளைத்தல். உளு → உழு → உழுதல் = நிலத்தைக் கீறுதல். குள் → கு ழி → கு ழை → கு டை . குடைதல் = துளைத்தல். குழி → கொழு → கொழுது → கோது. கோது தல் = குடைதல். கொழு = நிலத்தைத் துளைக்கும் ஏரூசி. கொழு → கொழி → கோழி = நிலத்தைக் கிளைக்கும் பறவை. கோழி பார்க்க;see {kol} |
நீர்க்கோவை | நீர்க்கோவை1 nīrkāvai, பெ. (n.) நீர்தங்கி நிற்கக் கூடிய நிலப்பகுதி (தெ.க.தொ.3.479.);; water-spread. [நீர் + கோவை.] நீர்க்கோவை2 nīrkāvai, பெ. (n.) 1. சளி; cold. 2. சிலேட்டும (கப); நோய்; bronchial catarrh. 3. நீராலுண்டாகும் உடம்பு விக்கம்; dropsy. “நீர்ப்பந்த ரழித்தவர் நீர்க்கோவை நோயர்” (கடம்ப. பு. இலீலா. 148.);. [நீர் + கோவை.] |
நீர்செய்காந்தமணி | நீர்செய்காந்தமணி nīrceykāndamaṇi, பெ. (n.) சந்திரகாந்தக்கல் (சீவக. 1671.);; moonstone. [நீர் + செய் + காந்த + மணி.] |
நீர்சோதிப்பு | நீர்சோதிப்பு nīrcōtippu, பெ. (n.) நீராய்வு பார்க்க;see {nir-āvu.} [நீர் + skt.சோதிப்பு.] |
நீர்சோற்றுத்தண்ணீர் | நீர்சோற்றுத்தண்ணீர் nīrcōṟṟuttaṇṇīr, பெ. (n.) அரிசிச் சோறு ஊறிய நீர்; water extracted from cooked rice. mixed with water and kept overnight. water allowed to stand over cooked rice overnight. [நீர் + சோறு + தண்ணீர்.] |
நீர்ச்சங்கு | நீர்ச்சங்கு nīrccaṅgu, பெ. (n.) ஒருவகைச் செடி (மலை.);; mistle-toe berry thorn. [நீர் + சங்கு.] |
நீர்ச்சண்டி | நீர்ச்சண்டி nīrccaṇṭi, பெ. (n.) நீர்ப்பூடு வகை; water mimosa. desmanthus vergatus. [நீர் + சண்டி.] |
நீர்ச்சண்டை | நீர்ச்சண்டை nīrccaṇṭai, பெ. (n.) புனற் பூசல், நீர் விளையாட்டாலுண்டாகும் சண்டை; quarrel in water play. (புறநா. 42, உரை.);. [நீர் + சண்டை.] |
நீர்ச்சப்பி | நீர்ச்சப்பி nīrccappi, பெ. (n.) நீர்க் கக்கி, கெட்ட நீரை இழுக்கும் பூண்டு; a kind of chinese laurel plant daphriphy//um/ g/ancescens, it is so called from its probebitity of absorbing morbid fluid from the body. (சா.அக.);. [நீர் + சப்பி.] |
நீர்ச்சம்மட்டி | நீர்ச்சம்மட்டி nīrccammaṭṭi, பெ. (n.) குழாய் உள் நீரழுத்த விசை; உள் நீரழுத்த மோதொலி; குழாயுள் நீராவி அழுத்த விசை; water hammer. [நீர் + சம்மட்டி.] |
நீர்ச்சலவை | நீர்ச்சலவை nīrccalavai, பெ. (n.) துணிகளை வெள்ளாவி வையாது வெளுக்கை; washing cloth without boiling it lye. [நீர் + சலவை.] |
நீர்ச்சாடி | நீர்ச்சாடி nīrccāṭi, பெ. (n.) 1. நீண்டு குறுகிய கழுத்துடைய நீர்க்கலம்; water monkey. 2. வாயகன்ற நீர்க்கலம்; நீர்க்கொள் கலன்; water trough, tub, cistern. [நீர் + சாடி.] |
நீர்ச்சாணை | நீர்ச்சாணை nīrccāṇai, பெ. (n.) சாணைக் கல் வகை (வின்.);; a kind of stone. [நீர் + சாணை.] |
நீர்ச்சாய்வு | நீர்ச்சாய்வு nīrccāyvu, பெ. (n.) நீர்க் கசிவுள்ள நிலம்; wet soil. “ஒரூருக்குப் போம்போது நீர்ச்சாய்வையும் நிலச்சாய்வையும் பற்றிப் போவாரைப் போலே” (திவ். திருநெடுந். 6, வியா.);. [நீர் + சாய்வு.] |
நீர்ச்சாரை | நீர்ச்சாரை nīrccārai, பெ. (n.) நீர்ப்பாம்பு வகை; a kind of rat-Snake. [நீர் + சாரை.] |
நீர்ச்சால் | நீர்ச்சால்1 nīrccāl, பெ. (n.) தண்ணீர் பூரிக்குஞ் சால் (சூ.நிக.7;64.);; water trough. நீர்ச்சால்2 nīrccāl, பெ. (n.) 1. நீர் மிடா; large water-pot “நீச்சாலை யொத்த நிறைந்த சுனைகளையுடைய” (மலைபடு. 104, உரை.);. 2. நீரிறைக்குஞ் சால் (வின்.);; bucket. [நீர் + சால்.] |
நீர்ச்சாவி | நீர்ச்சாவி1 nīrccāvi, பெ. (n.) வெள்ளக் கெடுதியாலுண்டாம் நெற்பதர் (யாழ்.அக.);; blighted crop, due to flood. [நீர் + சாவி.] நீர்ச்சாவி2 nīrccāvi, பெ. (n.) நீரின்மையால் உண்டாம் பயிர்ச்சாவி; blighted crop, due to lack of water. ‘ஒரு நீர்ச்சாவி கிடக்கக் கடலிலே (ஈடு. 6, 8,8.);. [நீர் + சாவி] |
நீர்ச்சி | நீர்ச்சி nīrcci, பெ. (n.) நீர்க்கோவை; containing both serum and purulent mattersero purulent as in boils.(சா.); |
நீர்ச்சிகரம் | நீர்ச்சிகரம் nīrccigaram, பெ. (n.) நீர் வழங்கீட்டு விசைக்குரிய உயர்முகட்டு நீர்த் தொட்டி; water-tower. [நீர் + சிகரம்.] |
நீர்ச்சிக்கு | நீர்ச்சிக்கு nīrccikku, பெ. (n.) நீர்க் கடுப்பு (வின்.); பார்க்க,;see {nir-k-kaguppu} [நீர் + சிக்கு.] |
நீர்ச்சிங்கி | நீர்ச்சிங்கி nīrcciṅgi, பெ. (n.) ஒருவகைச் சீழ்ப்புண் நோய்; an ulcer. [நீர் + சிங்கி.] |
நீர்ச்சித்திரம் | நீர்ச்சித்திரம் nīrccittiram, பெ. (n.) நீரடி முத்து (தைலவ. தைல;116.); பார்க்க;see {mirad muttu.} [நீர் + சித்திரம்.] |
நீர்ச்சின்னி | நீர்ச்சின்னி nīrcciṉṉi, பெ. (n.) செடிவகை (மூ.அ,);; a plant. [நீர் + சின்னி.] |
நீர்ச்சிரங்கு | நீர்ச்சிரங்கு nīrcciraṅgu, பெ. (n.) சேற்றுப் புண் (யாழ்ப்.);; itching sore between the toes. caused by contact with slush or mire. [நீர் + சிரங்கு.] |
நீர்ச்சிறுப்பு | நீர்ச்சிறுப்பு nīrcciṟuppu, பெ. (n.) நீர்க் கட்டல் (வின்.); பார்க்க;see {mir-k-katal} [நீர் + சிறுப்பு செறி → செறு → செறுப்பு → சிறுப்பு.] |
நீர்ச்சிறை | நீர்ச்சிறை nīrcciṟai, பெ. (n.) 1. அணையிட்டுத் தடுக்கை, குறுக்கணை; check dam. 2. இடைத்தடையிடும் திட்டமிட்ட குண்டுமாரி (பட..);; barrage. [நீர் + சிறை.] |
நீர்ச்சிலந்தி | நீர்ச்சிலந்தி nīrccilandi, பெ. (n.) சிலந்தி வகை (அபி.சிந்.);; a kind of spider. [நீர் + சிலந்தி.] தேங்கிய குளத்துநீர் ஓரத்தில் கூடுகட்டும் இயல்புடையது. |
நீர்ச்சீலை | நீர்ச்சீலை nīrccīlai, பெ. (n.) குளித்துணி (இ.வ.);; loin cloth. [நீர் + சிலை.] மறுவ. கோவணம். |
நீர்ச்சுண்டல் | நீர்ச்சுண்டல் nīrccuṇṭal, பெ. (n.) கருக்கு (கஷாயம்); வடிநீர்; decoction. [நீர் + சுண்டல் கள் → கள் + டு → சுண்டு → சுண்டல் = வற்றுதல், குறைதல். |
நீர்ச்சுண்டி | நீர்ச்சுண்டி1 nīrccuṇṭi, பெ. (n.) 1. கண்டைக் கீரை; floating desmanthus, floating sensitive plant-neptumia genus. 2. நீலப்பூடு வகை; water mimosa-mimosa virgata alias desmanthus virgata as opposed to வறட்சுண்டி. (சா.அக.);. [நீர் + சுண்டி.] நீர்ச்சுண்டி2 nīrccuṇṭi, பெ. (n.) கொடி நெட்டிச் செடி (வைத்தியபரிபா.);; mimosan. |
நீர்ச்சுரப்பு | நீர்ச்சுரப்பு1 nīrccurappu, பெ. (n.) 1. நீரால் உண்டாம் உடல்வீக்கம் (உ.வ.);; dropsy. 2. நீரிழிவு (இ.வ.); பார்க்க;see {milvu.} [நீர் + சுரப்பு.] நீர்ச்சுரப்பு2 nīrccurappu, பெ. (n.) நீர்க் கோவை, நீர்ச்சுரப்பினால் காணும் உடல் வீக்கம்; swelling from accumulation of bad fuild oedema. (சா.அக.);. மறுவ. நீர்க்கோவை. [நீர் + சுரப்பு.] பிடங்கு நாறியிலையால் இந்நோய் தீரும். |
நீர்ச்சுரம் | நீர்ச்சுரம்1 nīrccuram, பெ. (n.) கப்பல் செல்லும் பாதை; கடல் வழி, கடல் நெறி; seaway, sea faring. “தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக் கொடுந்திமிற் பரதவர் கோட்டு மீனெறிய” (குறுந். 304.);. [நீர் + சுரம்.] நீர்ச்சுரம்2 nīrccuram, பெ. (n.) நீர்க் கோவையால் உண்டாகும் காய்ச்சல்; cold with fever. [நீர் + சுரம்.] |
நீர்ச்சுரவை | நீர்ச்சுரவை nīrccuravai, பெ. (n.) நீர்ச்சுரப்பு (m.l.); பார்க்க;see {nir-c-curappu} [நீர் + சுரவை.] |
நீர்ச்சுருக்கு | நீர்ச்சுருக்கு nīrccurukku, பெ. (n.) 1. நீர்க் கடுப்பு பார்க்க;see {nir-k-kaguppu.} 2. மூத்திரப்பை நோய்வகை; inflammation or irritablity of the urine baldoer. [நீர் + சுருக்கு.] |
நீர்ச்சுறுக்கு | நீர்ச்சுறுக்கு nīrccuṟukku, பெ. (n.) நீர்க்கடுப்பு பார்க்க;see {nir-k-kaguppu} (கதி.அக.);. |
நீர்ச்சுழல் | நீர்ச்சுழல் nīrccuḻl, பெ. (n.) நீச்சுழி பார்க்க;see {nir-c-cuff} [நீர் + சுழல்.] |
நீர்ச்சுழி | நீர்ச்சுழி1 nīrccuḻi, பெ. (n.) தண்ணீரிலுண்டாம் சுழி; eddy, whiripool. ‘கடிய நீர்ச் சுழியிலே அகப்பட்டான்’ (கலித். 140, உரை.);. [நீர் + சுழி. நீள்→நீர் சுழி = சுழித்துச் செல்வது.] நீர்ச்சுழி2 nīrccuḻi, பெ. (n.) மாட்டுச் சுழிவகை (மாட்டுவா. 21.);; circular or curved marks on the head or body of cattle, indicating their good or ill luck. [நீர் + சுழி.] நீரில் தோன்றும் சுழியைப் போன்று மாட்டின் மேற்றோலிற் காணப்படுவதை, நீர்ச்சுழி யென்றே பெயரிட்டழைத்தனர். |
நீர்ச்சூசம் | நீர்ச்சூசம் nīrccūcam, பெ. (n.) நீரடிமுத்து பார்க்க;see {mi-ad-multய} (சா.அக.);. [நீர் + சூசம்.] |
நீர்ச்சூலை | நீர்ச்சூலை nīrccūlai, பெ. (n.) 1. அண்ட வீக்கம்; hydrocele. 2. அண்டவாயு; scrotal hernia. [நீர் + சூலை.] |
நீர்ச்செடி | நீர்ச்செடி nīrcceḍi, பெ. (n.) நீர்வாழ் நிலைத் திணை; aquatic plant. [நீர் + செடி.] |
நீர்ச்செண்டாட்டம் | நீர்ச்செண்டாட்டம் nīrcceṇṭāṭṭam, பெ. (n.) நீச்சுக்காரர்கள் இலக்கு வைத்தாடும் கைப் பந்தாட்டம்; water-polo. [நீர் + செண்டு + ஆட்டம்.] |
நீர்ச்செண்டு | நீர்ச்செண்டு nīrcceṇṭu, பெ. (n.) நீச்சுக் காரர்கள் இலக்கு வைத்தாடுதற்குப் பயன் படும் பந்து; a kind of bouquet used as ball in water polo. [நீர் + செண்டு.] |
நீர்ச்செம்பை | நீர்ச்செம்பை1 nīrccembai, பெ. (n.) நீர்வளர் செம்பை; sensitive pea-sesbenia aculeate alias coro nillia aculeata. (சா.அக.);. [நீர் + செம்பை.] நீர்ச்செம்பை2 nīrccembai, பெ. (n.) செங்கிடை என்னும் ஒருவகை முட்செடி (மூ.அ.);; prickly Sesban [நீர் + செம்பை.] |
நீர்ச்செறுப்பு | நீர்ச்செறுப்பு nīrcceṟuppu, பெ. (n.) நீர் கட்டல் பார்க்க;see {ni-kaltal,} “அரத்தமூல நீர்ச்செறுப்பு வெங்கயத்தர்” (கடம்ப.பு.இலீலா. 128.);. [நீர் + செறுப்பு.] |
நீர்ச்செலவு | நீர்ச்செலவு nīrccelavu, பெ. (n.) 1. நீர் விளையாட்டிற்குச் செல்லும் செலவு; journey for sporting in water. 2. நீர்வழிச் செலவு; journey by ship, Seafaring. மறுவ, நீர்ப்பயணம், நீராத்திரை. [நீர் + செலவு.] |
நீர்ச்சேம்பு | நீர்ச்சேம்பு nīrccēmbu, பெ. (n.) 1. நீரில் வாழும் செடிவகை (m.m.);; arrow-head, aquatic plant. 2. பருவெட்டான் பூண்டுவகை; Cocco, a coarse herb. [நீர் + சோம்பு.] |
நீர்ச்சோகை | நீர்ச்சோகை nīrccōkai, பெ. (n.) உடல் வீக்கம்; dropsy. [நீர் + சோகை.] |
நீர்ச்சோதனை | நீர்ச்சோதனை nīrccōtaṉai, பெ. (n.) நீரைக் கலந்து செய்த பார்க்கப்படும் ஆய்வு; analysis by mixing water. [நீர் + skt. சோதனை.] நீர்ச்சோதனை nīrccōtaṉai, பெ. (n.) நீராய்வு பார்க்க;see {nir-ājvu.} த. ஆய்வு. [நீர் + skt.சோதனை.] |
நீர்ச்சோபை | நீர்ச்சோபை nīrccōpai, பெ. (n.) உடல் வீக்கம்; dropsy. [நீர் + சோபை.] |
நீர்ச்சோறு | நீர்ச்சோறு nīrccōṟu, பெ. (n.) நீர் கலந்த பழைய சோறு; cooked rice mixed with water and kept overnight. ‘கையாற் பிழிந்து கொள்ளப் பட்ட நீர்ச்சோற்றுத் திரளுடனே’ (புறநா. 246, உரை.);. [நீர் + சோறு.] |
நீர்தலைப்படு-தல் | நீர்தலைப்படு-தல் nīrdalaippaḍudal, 20 செ.கு.வி. (v.i.) சந்தியில் வழிபாடு செய்தல்; to perform daily ablutions. “நெடு நெறி மருங்கி னிர்தலைப் படுவோன்” (சிலப். 13;45.);. 2. நீர்த்துறையை அடைதல்; to get into the water tank, canal for banking and etc., [நீர் + தலைப்படு-.] |
நீர்தலைப்படுகை | நீர்தலைப்படுகை nīrtalaippaḍugai, பெ. (n.) நீர்நிலையை அடைகை; getting into water sorces for bathing and etc., “இடுமுள் வேலி நீங்கி யாங்கோர் நெடுநெறி மருங்கி னிர்தலைப் படுவோன்” (சிலப். 13;42.);. [நீர் + தலைப்படுகை.] |
நீர்தூவுந்துருத்தி | நீர்தூவுந்துருத்தி nīrtūvundurutti, பெ. (n.) நீர்விடு சிவிறி; water sprinkle. [நீர்தூவும் + துருத்தி.] |
நீர்தெளி-த்தல் | நீர்தெளி-த்தல் nīrteḷittal, 4 செ.குன்றாவி. தூய்மை செய்தற்காக நீர் தெளித்தல்; to Sprinkle water for purificatum. [நீர் + தெளி-,] |
நீர்தெளித்துவிடு-தல் | நீர்தெளித்துவிடு-தல் nīrdeḷidduviḍudal, 5.செ.குன்றாவி. (v.t.) ஒருவனைத் தன்போக்கிற் தன்போக்கிற் செல்லும்படி விடுதல்; to leave one to oneself. [நீர் + தெளித்துவிடு.] |
நீர்தொடு-தல் | நீர்தொடு-தல் nīrdoḍudal, 20 செ. கு.வி. (v.i.) 1. சிறுநீர் பெய்தபின் பிறப்புறுப்பை நீராற் கழுவுதல்; to clean the parts with water after urination. 2. சிறுநீர் பெய்தல்; to pass urine. “நீர் தொடுகிற்பான் போமவன் முன்னர்” (பிரமோத். 2, 49.);. [நீர் + தொடு.] வாய்பூசி வந்தான் என்பது போன்ற வழக்காறு. |
நீர்த்தசுண்ணாம்பு | நீர்த்தசுண்ணாம்பு nīrttasuṇṇāmbu, பெ. (n.) நீர் கலந்த கண்ணம்; diluted lime. [நீர்த்த + சுண்ணாம்பு.] |
நீர்த்தடுப்பு | நீர்த்தடுப்பு1 nīrttaḍuppu, பெ. (n.) நீர் இறங்காமை; water proofing. [நீர் + தடுப்பு.] நீர்த்தடுப்பு2 nīrttaḍuppu, பெ. (n.) பொறியில் தண்ணீர் வடிவிலுள்ள தடையமைவு; water Seal. [நீர் + தடுப்பு.] |
நீர்த்தடை | நீர்த்தடை nīrttaḍai, பெ. (n.) நீரால் விளையும் கேட்டைத் தடுப்பது; water-proof. [நீர் + தடை.] |
நீர்த்தட்டு | நீர்த்தட்டு nīrttaṭṭu, பெ. (n.) நீர்ப்பற்றாக்குறை; scarcity of water. சென்ற கோடையை விட விட இந்தக் கோடையில் நீர்த்தட்டு மிகுதி. (உ.வ.);. [நீர் + தட்டு; தட்டு – தட்டுப்பாடு.] |
நீர்த்தட்டுப்பாடு | நீர்த்தட்டுப்பாடு nīrttaṭṭuppāṭu, பெ. (n.) நீர்த்தட்டு பார்க்க;see {mir-t-tatu.} [நீர்த்தட்டு + பாடு. படு – பாடு; பாடு- சொல்லாக்க ஈறு.] |
நீர்த்ததண்ணீர் | நீர்த்ததண்ணீர் nīrddadaṇṇīr, பெ. (n.) நீர்த்த நீர் பார்க்க;see {nirtta-nir} [நீர்த்தநீர் → நீர்த்ததண்ணீர்.] |
நீர்த்தநீர் | நீர்த்தநீர் nīrttanīr, பெ. (n.) கரைசல் தன் பதத்தில் திரிந்த நீர்; turning to water as of lost proper congistency of a mixture. [நீர்த்த+நீர்.] |
நீர்த்தருபூசல் | நீர்த்தருபூசல் nīrttarupūcal, பெ. (n.) நீர் விளையாட்டி லெழும் ஆரவாரம்; pollo water Noice. “நீர்த்தரு பூசலினம் பழிக்குநரும்” (பதிற்றுப். 22;29.);. [நீர்தரு + பூசல்.] |
நீர்த்தலை | நீர்த்தலை nīrttalai, பெ. (n.) மூளையில் அரத்தம் குறைவாகும் நோய் (m.m.);; hydrocephalus. [நீர் + தலை.] |
நீர்த்தல் | நீர்த்தல் nīrttal, பெ. (n.) hydration. “எட்டொன்றாய் நீர்க்கூட்டி” (தைல. தைலவ. 32.);. [நீர் → நீர்த்தல்.] |
நீர்த்தளம் | நீர்த்தளம் nīrttaḷam, பெ. (n.) நீர்நிலையின் அடித்தரை; bottom of a water tank. [நீர் + தளம்.] |
நீர்த்தாக்கு | நீர்த்தாக்கு nīrttākku, பெ. (n.) நீர் அதிக மாகத் தேங்கி நிற்குமிடம்; water-logged place. [நீர் + தாக்கு.] |
நீர்த்தானம் | நீர்த்தானம்1 nīrttāṉam, பெ. (n.) நீர் வழங்குகை; giving water. [நீர் + தானம்.] நீர்த்தானம்2 nīrttāṉam, பெ. (n.) [நீர் + தானம்.] |
நீர்த்தாரை | நீர்த்தாரை1 nīrttārai, பெ. (n.) 1. சாக்கடை; gutter. 2. மழைத்தாரை; rain water. [நீர் + தாரை.] நீர்த்தாரை2 nīrttārai, பெ. (n.) 1. ஆண் குறி; membrum virile. 2. மூத்திரப்பையிலிருந்து சிறுநீர் கொண்டுவருங்குழாய் (C.E.M.);; urethra. [நீர் + தாரை.] நீர்த்தாரை3 nīrttārai, பெ. (n.) உடம்பின் பலவிடங்களில் உள்ள நீரைக் கொண்டு செல்லும் குழல்; ducts or canals conveying liquids or fluids to the various parts of the body. [நீர் + தாரை.] |
நீர்த்தாரைக்கல் | நீர்த்தாரைக்கல் nīrttāraikkal, பெ. (n.) சிறுநீர்க் குழாயிலுண்டாகும் கல்; calculus obstructing the passage of urine. நீர்த்தாரை கல். |
நீர்த்தாரைப்புண் | நீர்த்தாரைப்புண் nīrttāraippuṇ, பெ. (n.) சிறுநீர்ப் பாதையிலுண்டாகும் புண், ulcer in the urethral passage. [நீர்த்தாரை + புண்.] |
நீர்த்தாரையடைப்பு | நீர்த்தாரையடைப்பு1 nīrttāraiyaḍaippu, பெ. (n.) நீர்க்கடுப்பு (M.L.);; stricture of urethra. [நீர்த்தாரை + அடைப்பு] நீர்த்தாரையடைப்பு2 nīrttāraiyaḍaippu, பெ. (n.) சாக்கடை யடைப்பு; drainage blocking. [நீர்த்தாரை1 + அடைப்பு.] |
நீர்த்தாரையெரிச்சல் | நீர்த்தாரையெரிச்சல் nīrttāraiyericcal, பெ. (n.) சிறுநீர்ப்பாதையிலுண்டாகும் எரிச்சல்; inflammation of urethera-urithritis. [நீர்தாரை2 + எரிச்சல்.] |
நீர்த்தாளி | நீர்த்தாளி nīrttāḷi, பெ. (n.) நீரில் முளைக்குஞ் செடி; a running plant of the Convolvulus genus. (சா.அக.);. |
நீர்த்தாழ்வு | நீர்த்தாழ்வு nīrttāḻvu, பெ. (n.) நீர்நிலை (சூடா. 11. 91.); பார்க்க;see {mir-nilai} [நீர் + தாழ்வு.] நீர்நிற்கும் நிலக்குழி |
நீர்த்திசம் | நீர்த்திசம் nīrttisam, பெ. (n.) மஞ்சள்; Indian saffron, turmeric-curcuma lanfa (சா.அக.);. |
நீர்த்தித்திப்பு | நீர்த்தித்திப்பு nīrttittippu, பெ. (n.) நீரிழிவு (M.L.); பார்க்க;see {nirilivu} [நீர் + தித்திப்பு.] |
நீர்த்திப்பலி | நீர்த்திப்பலி nīrttippali, பெ. (n.) திப்பலி வகை (மலை.); (M.M. 997.);; water longpepper, climber. [நீர் + திப்பலி.] |
நீர்த்திமிரம் | நீர்த்திமிரம் nīrttimiram, பெ. (n.) கண்ணில் நோயையுண்டாக்கிக் கருவிழிப் பக்கங்களில் குத்தலையும் நடுவில் புகைச்சலையும் உண்டாக்கும் ஒரு கண்ணோய்; a disease of the black of the eye marked by lesion of the eye, acute pain and dimness of vision.(சா.அக.);. [நீர் + திமிரம்.] |
நீர்த்திரை | நீர்த்திரை nīrttirai, பெ. (n.) கடலலை; sea wave. “நீர்த்திரையரங்கத்து நிகர்த்து முன்னின்ற” (சிலப். 6;50.);. [நீர் + திரை.] |
நீர்த்திரையரங்கம் | நீர்த்திரையரங்கம் nīrttiraiyaraṅgam, பெ. (n.) நீரலையரங்கம்; sea-wave. நீர்த் திரை யரங்கத்து நிகர்த்து முன்நின்ற (சிலப். 6;50.);. [நீர்த்திரை + அரங்கம்.] கரிய கடலினடுவு நின்ற சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தையறிந்து அவன் போரைக் கடந்த முருகன் அக்கடனடுவண் திரையே அரங்கமாக நின்று துடி கூத்தாடியதாகத் தொன்மக் கதை. |
நீர்த்திவலை | நீர்த்திவலை nīrttivalai, பெ. (n.) நீர்த்துளி பார்க்க;see {nir-t-tuff} [நீர் + திவலை.] |
நீர்த்து | நீர்த்து nīrttu, பெ. (n.) நீர்மையுடைத்து தன்மையது; nature. “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து (குறள், 596.);. [நீர் → நீர்த்து.] |
நீர்த்துப்போ-தல் | நீர்த்துப்போ-தல் nīrttuppōtal, 8 செ.கு.வி. (v.i.) நீரின்தன்மையடைதல் (உ.வ.);; to become watery, thin, as honey from fermentation. [நீர்த்து + போ-,] |
நீர்த்தும்பல் | நீர்த்தும்பல் nīrttumbal, பெ. (n.) ஒரு வகைக் கண்ணோய்; an eye disease. (சா.அக.);. [நீர் + தும்பல்.] |
நீர்த்தும்பு | நீர்த்தும்பு1 nīrttumbu, பெ. (n.) மதகு; sluice. “செங்குளக் கோட்டுக் கீழ் நீர்த்தும்பு” (களவழி. 2.);. [நீர் + துரம்பு.] நீர்த்தும்பு2 nīrttumbu, பெ. (n.) கூரை நீர் வழிந்தோட அமைக்கப்பட்டிருக்கும் குழாய்; water-shoot. |
நீர்த்தும்பை | நீர்த்தும்பை nīrttumbai, பெ. (n.) ஒரு வகைத்தும்; a kind of tombay of the leucas genus. [நீர் + தும்பை.] |
நீர்த்துரும்பு | நீர்த்துரும்பு nīrtturumbu, பெ. (n.) பருகும் நீரிலுள்ள துரும்பு போன்ற இடையூறு; obstruction, as a straw in drinking water. [நீர் + துரும்பு.] |
நீர்த்துறை | நீர்த்துறை nīrttuṟai, பெ. (n.) நீர்நிலையில் இறங்குமிடம்; ghat, a path of descent to a tank or river, ford, ferry; watering-place for cattle; place for bathing or washing clothes. “ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல” (புறநா. 94.);. [நீர் + துறை.] |
நீர்த்துறையேறு-தல் | நீர்த்துறையேறு-தல் nīrdduṟaiyēṟudal, 5.செ.கு.வி. (v.i.) பெண்கள் விட்டு விலக்காய்த் தீட்டாதல்; to be in ones periods. [நீர்த்துறை + ஏறு-.] |
நீர்த்துலக்கி | நீர்த்துலக்கி nīrttulakki, பெ. (n.) மகப்பேறு காலத்தில் கருப்பையிலுள்ள நீரை எடுப்பதற்காக பயன்படுத்தும் கருவி; a delicate probe used for causing escape of fluid the womb during labour. (சா.அக.);. |
நீர்த்துளக்கி | நீர்த்துளக்கி nīrttuḷakki, பெ. (n.) 1. நீர்க் குழலின் துளக்கி; stilette of probe, a delicate probe. 2. நீர்க்குழலின் கம்பி; a wire used to stiffen or clear a catheter (சா.அக.);. [நீர் + துளக்கி.] |
நீர்த்துளி | நீர்த்துளி nīrttuḷi, பெ. (n.) சொட்டு; drop as tears. “கல்லென அதிர்குர லேறொடு துளிசெளிந் தாங்கு” (புறநா. 160.);. [நீர் + துளி.] |
நீர்த்துளை | நீர்த்துளை nīrttuḷai, பெ. (n.) 1. சிறுநீர்ப் பாதையின் துளை; urethral opening. 2. சிறுநீர் வரும் வழி; opening of the urinary paSSage. [நீர் + துளை.] |
நீர்த்துளையுள்ளிப்பு | நீர்த்துளையுள்ளிப்பு nīrttuḷaiyuḷḷippu, பெ. (n.) 1. சிறுநீர்ப் பாதையிலுண்டாகும் தினவு; itching of the urethra. [நீர்துளை + உள்ளரிப்பு.] |
நீர்த்துவாரம் | நீர்த்துவாரம் nīrttuvāram, பெ. (n.) நீர்த்துளை பார்க்க;see {mir-t-tulal.} [நீர் + துவாரம்.] த.துளை. skt. துவாரம். |
நீர்த்துவாரவுள்ளரிப்பு | நீர்த்துவாரவுள்ளரிப்பு nīrttuvāravuḷḷarippu, பெ. (n.) நீர்த்துளையுள்ளரிப்பு பார்க்க;see {mir-t-tulal-y-ussarippu} [நீர்த்துவாரம் + உள்ளரிப்பு.] |
நீர்த்துவையல் | நீர்த்துவையல் nīrttuvaiyal, பெ. (n.) தளர இருக்கும் துவையல்; a kind of strong relish prepared by adding paste of chilli to coconut, ginger, curry leaf or to similar things in semi solid condition. [நீர் + துவையல்.] |
நீர்த்தெளி | நீர்த்தெளி nīrtteḷi, பெ. (n.) திருக்கோயிலிற் செய்யும் குடமுழுக்கு; ceremony of consecration or purificatum in a temple. [நீர் + தெளி.] எங்கும் நிறைந்து விளங்கும் பரம்பொருள் வழிபடற்கெளிதாய் ஒமகுண்டத்துத் தீயின்கண் முனைந்து விளங்குவதாகக் கொண்டும் கண்டும் போற்றி, அருகில் புதிய மட்குடங்களில் நிரப்பி வைக்கப் பட்டிருக்கும் நீரின்கண் எழுந்தருளுமாறு வழுத்தி வேண்டி அதனை வழிபட்டு, அந்நன்னீரைக் கோயிலின் உச்சியில் உள்ள கலசத்தின் மீதும் கோயிலில் உள்ள திருமேனிகளின் மீதும் ஊற்றி முழுக்காட்டுதலே கோயிலில் இறைவன் எழுந்தருளுவதாகக் கொள்ளப்படுதலால் அது ‘கும்பாபிடேகம்’ எனப்படுகின்றது. கும்பாபிடேகத்தில் இடம் பெற்றுள்ள கும்பம் என்னுஞ் சொல் வடமொழியில் வழக்கூன்றி இருப்பினும் அது தூய தமிழ்ச் சொல்லேயாம். கும்முதல் (கும்); என்னுஞ் சொல் குவிதல் என்னும் பொருளது. கும்→குமி→குமிழ்→குமிழி என்பவற்றை நோக்குக! கும் என்பது கும்பு என வளர்ந்தும், கூம்பு என நீண்டும் குவிதற் பொருளை உணர்த்துகின்றது. கும்புதல் → கூம்புதல் – குவிதல். கும்பு → கும்பிடு → கும்பிடுதல் = கை குவித்தல். கும்பு என்றது கும்பம் என்றாகிக் குடம், தேர்முடி, யானைத்தலைக் குலவு, கட்டடக் குவிமுகடு ஆகியவற்றைக் குறிக்கின்றது. ஆகவே கும்பம் தமிழ்ச் சொல்லேயாதல் தெளியப்படும். குவிந்த சுரைக்காய் கும்பச்சுரை எனவும், கீழ்நோக்கிக் குவிந்த உண்கலம் கும்பா எனவும் வழங்கப் பெறுதல் காண்க! இனி, கும்ப என்னுஞ் சொல் இருக்கு வேதத்திலேயே இடம்பெற்றிருப்பினும் வடவர் அதற்குக் காட்டும் ‘கும்ப்’ என்னும் மூலம் கும்பு என்னுந் தமிழ்ச் சொல்லின் சிதைவே. இதற்கு வடவர் கூறும் பொருள் கவிதல் என்பதும் தென்னவர் கூறும் பொருள் குவிதல் என்பதும் ஆகும். கவிதல் கீழ்நோக்கியது என்றும் குவிதல் மேல்நோக்கியது என்றும் வேறுபாடு காட்டி விளக்குகிறார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். கும்பம் என்பது தூய தமிழ்ச்சொல்லே யாயினும் அது வடமொழியில் வழக் கூன்றியுள்ளமையால் வடசொல்லாகவே கருதப்படுதலானும் கும்பாபிடேகம் குட முழுக்கு எனத் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் பழந்தமிழ் நூல்களில் மட்டுமன்றி இடைக்கால நூல்களிலுங் கூடக் குடமுழுக்கு, கும்பாபிடேகம் என்னுஞ் சொற்களோ அவற்றைப் பற்றிய வேறு குறிப்புகளோ காணப்படவில்லை. திருத்தொண்டர் புராணத்தில் அல்லது தொன்மத்தில் பூசலார் நாயனார் கோயில் கட்டியது பற்றிக் கூறப்பட்டுள்ளது. கடைக்கால் போட்டுப் படிப்படியாகக் கட்டி முடிக்கப்பட்ட நாயனாரின் மனக் கோயிலிலோ, அவ்வாறே பல்லவமன்னன் கட்டிய புறக்கோயிலிலோ, இறைவன் எழுந்தருளும் நிகழ்ச்சி, கும்பாபிடேகம் அல்லது குடமுழுக்கு என்னுஞ் சொல்லால் குறிக்கப்படவில்லை. புதுமனைப் புகுவோர், வீடுகட்டி முடித்து ஒழுங்குபடுத்திய பின் தூநீர் தெளித்துக் குடிபுகுவது இன்றும் வழக்கமாக இருப்பது போலவே கோயில் திருப்பணி செய்வது வழக்கமாய் இருந்திருக்கிறது. இது நீர்த்தெளி என வழங்கப் பெற்றுள்ளது. என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. ஆனைமலைக் கல்வெட்டு; கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற் பகுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (768-816); மதுரையை ஆண்ட சடில பராந்தக நெடுஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனின் மதியமைச்சனாக விளங்கிய மாறன்காரி என்பவன் மதுரையையடுத்த ஆனை மலையில் நரசிங்கப் பெருமாள் கோயிலொன்று கட்டினான் என்றும், அது முற்றுப்பெறு முன்னரே அவன் இறந்து விட்டமையால், அவனுக்குப் பின் அவ்வமைச்சுப் பதவியை ஏற்ற அவன் தம்பி மாறன் எயினன் என்பவன் அத்திருப்பணியை நிறைவேற்றி நீர் தெளித்தான் என்றும் ஆனைமலை வட்டெழுத்துத் தமிழ்க் கல்வெட்டுக் கூறுகிறது. அதுவருமாறு; “கோமாறஞ் சடையற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரரையன் ஆகிய மாறன் காரி இக் கற்றளி செய்து நீர்த் தெளியாதேய் சு(ஸ்);வர்க்காரோகணம் செய்த பின்றை அவனுக்கு அநுச(ஜ);ன் உத்தர பதமெய்தின பாண்டியமங்கல விசையரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ் செய்து நீர்த்தெளித்தான்.” ‘ இக்கல்வெட்டில் பல வடசொற்கள் இடம் பெற்றிருந்தும் கும்பாபிடேகம் நீர்த்தெளி என்னும் தமிழ்ச் சொல்லாலேயே குறிக்கப்பட்டிருக்கிறது என்பதும், இக் கல்வெட்டின் அருகில் அவனாலேயே பொறிக்கப் பெற்றுள்ள வடமொழிக் கல் வெட்டிலுங்கூடக் கும்பாபிடேகம் இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத் தக்கன. மாறன்காரி, மாறன்எயினன் என்னும் உடன்பிறந்தார் வடமொழியில் அல்லது வடமொழி மிகுதியும் கலந்த தமிழில் எழுதும் வழக்கமுடையவர்களாய் இருந்தும், அவர்களேகூட இதனைக் கும்பாபிடேகம் எனக் குறியாமையால் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலும் நீர்த் தெளி என்பதே பெருவழக்காய் இருந்தமை அறியப்படும் எனத் தொல்லியல் அறிஞர் க.குழந்தைவேலன் தமிழிய வாழ்வில் கல்லுஞ் சொல்லும் என்னும் நூலில் உறுதியாய்க் கூறுகிறார். (இத்தரவு, திருக்குறள்மணி இறைக்குருவனாரின் திருக்கோயில் வழிபாடும் தமிழ்க் குடமுழுக்கும் என்னும் நூலிலிருந்து);. |
நீர்த்தெளியான் | நீர்த்தெளியான் nīrtteḷiyāṉ, பெ. (n.) தரைக்கு நீர் தெளித்துத் தூய்மை செய்யும் வேலைக்காரன்; servant who cleans the floor of a building by sprinkling water. “நீர்த்தெளியான் நால்வர்க்குப் பேராற் பங்கு அரையாக” (தெ. க. தொ. 2;227.);. மறுவ. நீர்த்தெளியன். [நீர் + தெளியான்.] |
நீர்த்தெளிவி | நீர்த்தெளிவி nīrtteḷivi, பெ. (n.) 1. நீரைத் தெளியச் செய்யும் கருவி; water-filter. 2. தேற்றான் (தேத்தான்); கொட்டை; water cleaning nut-stry chnos potatorum. (சா.அக.);. |
நீர்த்தேக்கம் | நீர்த்தேக்கம் nīrttēkkam, பெ. (n.) ஆற்றின் குறுக்கே அணை கட்டி நீரைத்தேக்கி வைத்திருக்கும் இடம்; ஆற்றுநீர் அல்லது மழைநீர்தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏரி, (ஏரி குளம் முதலியவை; dam, reservoir, tank அண்மையில் பெய்த பெருமழையில் ஆறகமூர் நீர்த்தேக்கம் நிரம்பியது. (உ.வ.);. [நீர் + தேக்கம்.] |
நீர்த்தேள் | நீர்த்தேள் nīrttēḷ, பெ. (n.) நீரில் வாழும் ஒருவகைத் தேள்; water scorpion. [நீர் + தேள்.] |
நீர்த்தொட்டி | நீர்த்தொட்டி nīrttoṭṭi, பெ. (n.) நீர் வைத்திருக்கும் தொட்டி; water butt. [நீர் + தொட்டி. தொடு → தொட்டு → தொட்டி.] |
நீர்த்தொப்பை | நீர்த்தொப்பை nīrttoppai, பெ. (n.) ஆறு அல்லது ஏரியின் நீரானது வாய்க்கால் வழியே வந்து ஓரிடத்தில் மேலும் பலகிளைகளாகப் பிரிந்து செல்லுமிடம்; water Canal. மறுவ. நீர்த்தொந்தி, [நீர் + தொப்பை.] |
நீர்த்தோசம் | நீர்த்தோசம் nīrttōcam, பெ. (n.) நீர்க்கோப்பு (யாழ்.அக.);; cold. மறுவ. நீர்க்கோவை. [நீர் + skt.தோசம்.] |
நீர்நக்கல் | நீர்நக்கல் nīrnakkal, பெ. (n.) ஏரியின் உள் வாய்நீர் தேங்கும் எல்லையிடம்; limit of water-spread of a tank. “கீழெல்கை சங்கரனேரிக் குளத்து நீநக்கலுக்கு மேற்கு” (T.A.S. I;IV 103.);. [நீர் + நக்கல்.] |
நீர்நசைவேட்கை | நீர்நசைவேட்கை nīrnasaivēṭkai, பெ. (n.) நீரை விரும்பும் விருப்பம்; desire in water. “வருநர்ப் பார்க்கும் வன்கண் ணாடவர் நீர்நசை வேட்கையின் நாமென்று தணியும்” (குறுந். 274.);. [நீர் + நசை + வேட்கை.] |
நீர்நரம்பு | நீர்நரம்பு nīrnarambu, பெ. (n.) நிலத்துட் பாயும் நீரோட்டம்; underground spring or flow of water. ‘கடின ஸ்தலததிலே நீர்நரம்பு அறியுமவனா கையாலே (ஈடு, 10, 6, 4, பக். 195.);. [நீர் + நரம்பு.] |
நீர்நாகம் | நீர்நாகம் nīrnākam, பெ. (n.) நீர் ஓரங்களில் காணப்படும் நாகப்பாம்பு; cobra found on the Sea CoastS-Water Cobra. [நீர் + நாகம்.] |
நீர்நாங்கல் | நீர்நாங்கல் nīrnāṅgal, பெ. (n.) நீண்ட மரவகை (nels.);; long-leaved large-flowered iron WOOd. [நீர் + நாங்கல். நாங்கு – மரவகை. நாங்கு → நாங்கல்.] |
நீர்நாங்கள் | நீர்நாங்கள் nīrnāṅgaḷ, பெ. (n.) நீர்நாங்கு பார்க்க;see {mir-maigய} (சா.அக.);. |
நீர்நாங்கு | நீர்நாங்கு nīrnāṅgu, பெ. (n.) நாங்கின் ஒருவகை; a kind of ceylon iron woodmesna ferrea (speciosa);. (சா.அக.);. [நீர் + நாங்கு.] |
நீர்நாடு | நீர்நாடு nīrnāṭu, பெ. (n.) நீர்வளமுள்ள சோழநாடு;{Côla} country, as well-watered. “நாவலர் புகழு நீர்நாடு” (திருவானைக். திருநாட். 1.);. [நீர் + நாடு.] |
நீர்நாணநெய்வழங்கு | நீர்நாணநெய்வழங்கு nīrnāṇaneyvaḻṅgu, பெ. (n.) மிகுதியாய் நெய்யிடுகை; put more ghee. “நீர்நாண நெய் வழங்கியும் எண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்ப்பரப்பியும்” (புறநா. 166.);. “மண்ணாணப் புகழ் வேட்டு நீர் நாண நெய் வழங்கிப்” (புறநா. 384.);. [நீர்நாண + நெய்வழங்கு] விலையற்ற நீர் வெட்குமாறு விலைமிக்க நெய் வழங்குதலைக்குறிக்கும். |
நீர்நாய் | நீர்நாய் nīrnāy, பெ. (n.) நீரில் வாழும் ஒரு வகை நாய்வகை; a kind of water dog, otter. “அரிற்பவர்ப் பிரம்பின் விரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊரன்” (குறுந். 364.);. “ஒண்செங் குரலித் தண்கயகங் கலங்கி வாளை நீர்நாய் நாறிரை பெறூஉப்” (புறநா.283.);. “வாளை மேய்ந்த வள்ளெயிற்றுநீர்நாய்”(அகநா.6;18.);. [நீர் + நாய்] |
நீர்நாய்ச்சவ்வாது | நீர்நாய்ச்சவ்வாது nīrnāyccavvātu, பெ. (n.) ஒருவகை நீர்நாயின் நறுமணச் சட்டம்; secretion from the beaver. 2. புனுகு; civet. [நீர்நாய் + சவ்வாது.] |
நீர்நாற்று | நீர்நாற்று nīrnāṟṟu, பெ. (n.) நீர்பாய்ச்சிய நிலத்தில் உண்டாகும் நாற்று (G.T.D. 1. 97);; seedlings grown in watered lands. [நீர்+நாற்று.] |
நீர்நாள் | நீர்நாள் nīrnāḷ, பெ. (n.) 20 ஆவது விண்மீன் பூராடம் (பிங்.);;{puradam.} [நீர் + நாள்.] |
நீர்நாவல் | நீர்நாவல் nīrnāval, பெ. (n.) 1. சிறு மரவகை; munro’s apple. 2. நாவல் மரவகை; gardener’s black plum. [நீர் + நாவல்.] |
நீர்நிதி | நீர்நிதி1 nīrnidi, பெ. (n.) கடல்; sea. [நீர் + நிதி. நீரின் மிகுதி, நீரின் குவை, நீராகிய செல்வம்.] [நீர் + (skt.); நிதி] நீர்நிதி2 nīrnidi, பெ. (n.) செந்தாமரை; red lotus flower-nelumbrum speciosum. (சா.அக.);. [நீர் + நிதி. நீரில் உண்டாகும் குவை, செல்வம்.] |
நீர்நிறக்காக்கை | நீர்நிறக்காக்கை nīrniṟakkākkai, பெ. (n.) நீர்க்காக்கை பார்க்க;see {nir-k-käkkai} “கானக்கோழியு நீர்நிறக் காக்கையும்” (சிலப். 10;116.);. [நீர் + நிறக்காக்கை.] |
நீர்நிறம் | நீர்நிறம்1 nīrniṟam, பெ. (n.) நீரின் நிறம்; colour of water. [நீர் + நிறம்.] நீர்நிறம்2 nīrniṟam, பெ. (n.) நீரில் குழைத்து எழுதும் வண்ணம்; water colour. [நீர் + நிறம்.] |
நீர்நிலஇயக்கம் | நீர்நிலஇயக்கம் nīrnilaiyakkam, பெ. (n.) நிலத்திலும் நீரிலும் வாழ்கை; amphibious. [நீர் + நிலம் + இயக்கம்.] |
நீர்நிலக்காசு | நீர்நிலக்காசு1 nīrnilakkācu, பெ. (n.) பழைய (வரி); காசாய வகை (தெ. க.தொ. 1;89.);; an ancient tax in cash. [நீர் + நிலம் + காசு.] நீர்நிலக்காசு2 nīrnilakkācu, பெ. (n.) நீர் நிலங்களுக்கான வரி; water land tax. [நீர் + நிலம் + காசு.] நீர் நிலைகளின் நிலங்களுக்கு வரியிட்டு அதனைத் தண்டி அதைக் கொண்டு நீர் நிலைகளைப் பேணி வந்தனர். இது மூன்றாம் இராசராசன் காலத்தில் நடை முறையிலிருந்தது. (அபி.சிந்.);. |
நீர்நிலம் | நீர்நிலம் nīrnilam, பெ. (n.) நன்செய் (கல்);; Wet land. [நீர் + நிலம்.] |
நீர்நிலை | நீர்நிலை nīrnilai, பெ. (n.) ஏரிகுளம் முதலியன; tank, lake, pond etc. “நிலம் குழிந்த விடத்தே நீர்நிலை மிகும்” (புறநா. 18, உரை.);. [நீர் + நிலை.] நீர்நிலை2 nīrnilai, பெ. (n.) முத்தின்குற்றம்; a flaw in the pearl. “அருவியாடியு மகன் சுனை குடைந்தும் என்பதனால் நீர் நிலையும்” (சிலப். பதி. உரை);. “காற்றேறு மணலேறு கல்லேறு நீர்நிலை யென்பன மிக்க குற்றங்கள்” (சிலப். 14;193 உரை.);. நீர்நிலை3 nīrnilai, பெ. (n.) 1. சதுப்பு நிலம் (c.g.);, place where water stagnates, marshy ground. 2. ஆழம்; depth of water. ‘கையை மேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங் காலத்து’ (பெரும்பாண். 273. உரை.);. [நீர் + நிலை.] |
நீர்நிலைஇயல் | நீர்நிலைஇயல் nīrnilaiiyal, பெ. (n.) அமைந்த நிலையில் உள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றலமைதி; hydrostatics. [நீர் + நிலை + இயல்.] |
நீர்நிலைக்காவலர் | நீர்நிலைக்காவலர் nīrnilaikkāvalar, பெ. (n.) 1. நீர் நிலைகளைக் காப்பவர்; security for water tanks. 2. காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்பதைத் தடுப்பவர்; water-bailiff. [நீர்நிலை + காவலர்.] |
நீர்நிலைச்செறு | நீர்நிலைச்செறு nīrnilaicceṟu, பெ. (n.) நீர்வளமிக்க வயல்; fertile field. “அங்ங்னம் ஒலித்தல் செல்லாக் கழனியிற் செந்நெல்லும் கரும்புஞ் சூழ்ந்த இடத்தையுடைய நீர்நிலைச் செறுவி லுண்டாகிய தாமரைக் காட்டி லென்க”. (சிலப். 10;122, உரை.);. |
நீர்நீக்கம் | நீர்நீக்கம் nīrnīkkam, பெ. (n.) நீர்க் கூறசுற்றம்; dehydration. [நீர் + நீக்கம்.] |
நீர்நீக்கி | நீர்நீக்கி nīrnīkki, பெ. (n.) நீர்க்கூறகற்றி; dehydrator. [நீர் + நீக்கி.] |
நீர்நுங்கு | நீர்நுங்கு nīrnuṅgu, பெ. (n.) நீரையுடைய பனநுங்கு; pulpy kernel of a tender palmyra fruit with full of water. “நீர்நுங்கின் கண்வலிப்பக்கானவேம்பின் காய்திரங்கக் கயங்களியுங் கோடையாயினும் ஏலா வெண்பொன் போருறு காலை” (புறநா. 389.);. [நீர் + நுங்கு.] |
நீர்நெட்டி | நீர்நெட்டி nīrneṭṭi, பெ. (n.) கிடைப் பூடுவகை (யாழ்.அக.);; a species of pith. [நீர் + நெட்டி.] |
நீர்நெருப்பு | நீர்நெருப்பு1 nīrneruppu, பெ. (n.) கல்லுருவி (சங்.அக.); என்னும் நிலைத்திணை; blistering plant. [நீர் + நெருப்பு.] நீர்நெருப்பு2 nīrneruppu, பெ. (n.) 1.நீர்மேல் நெருப்பு; fire on water. 2. கல்லுருவி; gravel plant-ammrnnia vesi-catoria alies a baccifera. 3. ஆகாயத் தாமரை; sky lotuspislia stratotes. 4. கொட்டைப்பாசி; green moss found on the surface of water. (சா.அக.);. |
நீர்நெல்லிக்காய் | நீர்நெல்லிக்காய் nīrnellikkāy, பெ. (n.) நீரல் ஊறவைத்த நெல்லிக்காய்; fruits of myrobalan pickled in water. [நீர் + நெல்லிக்காய்.] |
நீர்நொச்சி | நீர்நொச்சி nīrnocci, பெ. (n.) 1. நொச்சி மரவகை (I.);, three-leaved chaste tree. 2. மரவகை; Water peacock’s-foot tree. 3. பீநாறிச்சங்கு; smooth volkameria. 4. காட்டுச்சீரகம்; purple fleabane. [நீர் + நொச்சி.] |
நீர்பாய்ச்சி | நீர்பாய்ச்சி nīrpāycci, பெ.(n.) விளைச்சல் நிலங்களுக்கு நீர்பாய்ச்சும் பணியாளன்; servant employed for irrigation work. மறுவ நீர்கட்டி [நீர்+பாய்ச்சி] |
நீர்பாய்ச்சு-தல் | நீர்பாய்ச்சு-தல் nīrpāyccudal, 5 செகுன்றாவி. (v.t.) வயலுக்கு நீரைப்பாய்ச்சுதல்; to irrigate to the fields. நீர்ப்பற்றாக்குறையினால் கீழ்மடையிலுள்ள நெற்பயிருக்குப் போதுமான நீர் பாய்ச்ச இயலவில்லை. (உ.வ.);. [நீர் + பாய்ச்சு-,] |
நீர்பிரி-தல் | நீர்பிரி-தல் nīrpiridal, 2செ.குன்றாவி. (v.t.) சிறுநீர் கழிதல்; discharge of urine. அப்பாவுக்குக் கடந்த நான்கு நாட்களாக நீர் பிரியவில்லை. (உ.வ.);. [நீர் + பிரி-,] |
நீர்பூசா | நீர்பூசா nīrpūcā, பெ. (n.) பூடுவகை (மாட்டுவா.109.);; a plant. [நீர் + பூசா.] |
நீர்பெயர்வலகு | நீர்பெயர்வலகு nīrpeyarvalagu, பெ. (n.) மிகக் குறைந்த அழுத்தத்தில் ஒரு விரல விட்டமுள்ள குழாய் மூலம் 24 மணிநேரத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவு; water-inch. [நீர் + பெயர்வு + அலகு.] |
நீர்பெய்-தல் | நீர்பெய்-தல் nīrpeytal, 1. செ.குன்றாவி. (v.t.) சிறுநீர்விடுதல்; to pass urine, to urinate. “நீர்பெய்தவித்துமே” (தக்கயாகப்.506.);. [நீர் + பெய்.] |
நீர்பெய்கலன் | நீர்பெய்கலன் nīrpeykalaṉ, பெ. (n.) நீரைப் பரிமாறும் ஏனம் (வின்.);; water-jug. [நீர் + பெய்கலன்.] |
நீர்போகி | நீர்போகி nīrpōki, பெ. (n.) மதகு (பிங்.);; sluice. [நீர் + போகி. போக்கி→போகி.] |
நீர்ப்பகண்டை | நீர்ப்பகண்டை nīrppagaṇṭai, பெ. (n.) நீர்ப் பகன்றை (வின்.);பார்க்க;see {mirp-pagarai} [நீர்பகன்றை → நீர்ப்பகண்டை.] |
நீர்ப்பகன்றை | நீர்ப்பகன்றை nīrppagaṉṟai, பெ. (n.) பகன்றை வகை (யாழ்.அக.);; a kind of Indian jalap. [நீர் + பகன்றை.] |
நீர்ப்பகை | நீர்ப்பகை nīrppagai, பெ. (n.) உடம்புக்கு நீர் ஒத்துக் கொள்ளாமையாகிய மாறுபாடு; நீர் ஒவ்வாமை; injuriousness of some kinds of water; water allergy. [நீர் + பகை.] |
நீர்ப்பசு | நீர்ப்பசு nīrppasu, பெ. (n.) காளிந்தி பார்க்க;see {kāindi} (சா.அக.);. |
நீர்ப்பச்சை | நீர்ப்பச்சை nīrppaccai, பெ. (n.) 1. ஆமை; tortoise. 2. கடலாமை; Sea turtle. 3. கடலாரை பார்க்க;see {kaga/-ārai} (சா. அக.);. [நீர் + பச்சை.] |
நீர்ப்பஞ்சு | நீர்ப்பஞ்சு1 nīrppañju, பெ. (n.) 1. காந்னதச் செய்-நஞ்சு (பாஷாணம்);; one of the 32 kind of native arsenic. 2. தண்ணீரிழுக்கும் பஞ்சு; absorbment cotton. (சா.அக.);. [நீர் + பஞ்சு.] நீர்ப்பஞ்சு2 nīrppañju, பெ. (n.) கடற்காளான் (யாழ்.அக.);; sponge. [நீர் + பஞ்சு.] |
நீர்ப்படலம் | நீர்ப்படலம் nīrppaḍalam, பெ. (n.) கண்ணோய் வகை (C.E.M);, opacity of the cornea, nebula. [நீர் + படலம்.] |
நீர்ப்படு-த்தல் | நீர்ப்படு-த்தல் nīrppaḍuttal, 20 செ.கு.வி. (v.i) முழுக்காட்டுதல்; to bathe. “தென் றமிழ் நாடாளும் வேந்தர்….. நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு வெம்மை நீங்கி” (சிலம்பு. 26;9-15. உரை.);. |
நீர்ப்படுகை | நீர்ப்படுகை nīrppaḍugai, பெ. (n.) ஆற்றோரத்து நிலம்; and on the banks of a river fit for cultivation. [நீர் + படுகை.] |
நீர்ப்படுக்கை | நீர்ப்படுக்கை nīrppaḍukkai, பெ. (n.) புண்பட்ட நோயருக்குரிய நீரடைத்த படுக்கை; water-bed for patients who is affected by bed Soar. [நீர் + படுக்கை.] |
நீர்ப்படுபருந்து | நீர்ப்படுபருந்து nīrbbaḍubarundu, பெ. (n.) மலை; mountain. “நீர்ப்படு பருந்தினிஞ்சிறகன்ன” (பதிற். 12;19.);. |
நீர்ப்படுவன் | நீர்ப்படுவன்1 nīrppaḍuvaṉ, பெ. (n.) நீர்ப் பாடு 1. 2 (வின்.); பார்க்க;see {mirp-padu} [நீர் + படுவன்.] நீர்ப்படுவன்2 nīrppaḍuvaṉ, பெ. (n.) காலின்கீழ் எப்பொழுதும் நீர் கசிந்து கொண்டிருக்கும் சிலந்திநோய்; an ulcer below the knee marked by constant watery discharge. (சா.அக.);. |
நீர்ப்படை | நீர்ப்படை nīrppaḍai, பெ. (n.) theme of bathing a nadukal before consecration. “காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகல்” (தொல். பொருள். 60.);. “தங்கிய நீர்ப்படை தகவோ வுடைத்தெனப் பொதியிற் குன்றத்துக் கற்கால் கொண்டு” (சிலப். 25.121.);. [நீர் + படை.] |
நீர்ப்படைக்காதை | நீர்ப்படைக்காதை nīrppaḍaikkātai, பெ. (n.) சிலப்பதிகாரத்தின் இருபத்தேழாம் காதை; 27th chapter of {Šilappadikaram} [நீர்ப்படை + காதை.] |
நீர்ப்படைசெய்-தல் | நீர்ப்படைசெய்-தல் nīrppaḍaiseytal, 1 செ.குன்றாவி. (v.t.) திருமுழுக்காட்டுதல்; holi bath to an idol. “கங்கைப் பேர்மாற்றுக் கரையகம் புகுந்து பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து” (சிலப். 27;14.);. [நீர்ப்படை + செய்-,] |
நீர்ப்பட்டை | நீர்ப்பட்டை nīrppaṭṭai, பெ. (n.) பிசின் பட்டை; a gum bark. (சா.அக.);. [நீர் + பட்டை.] |
நீர்ப்பணைப்பு | நீர்ப்பணைப்பு1 nīrppaṇaippu, பெ. (n.) நீர்க் கோப்பு (M.L.);, cold in the head. [நீர் + பணைப்பு.] நீர்ப்பணைப்பு2 nīrppaṇaippu, பெ. (n.) நீர்க்கோவையினால் உடம்பு பருத்துக் காணப்படுகை; Corpulency due to accumulation of morbid fluid in the system. [நீர் + பணைப்பு.] |
நீர்ப்பண்டமா-தல் | நீர்ப்பண்டமா-தல் nīrppaṇṭamātal, 6 செ.கு.வி. (v.i.) உருகுதல்; to become liquid; to melt. as the heart. [நீர் + பண்டம் + ஆ.] |
நீர்ப்பண்டம் | நீர்ப்பண்டம் nīrppaṇṭam, பெ. (n.) நீர்மப் பொருள்; liquid. “மனம் நீர்மப் பொருளா யுருகி” (திவ். பெரியாழ். 3, 6, 3, வியா. பக். 675.);. [நீர் + பண்டம்.] |
நீர்ப்பதுமம் | நீர்ப்பதுமம் nīrppadumam, பெ. (n.) இமையில் வரும் நோய்வகை (சீவரட்.);; a disease of the eyelids. [நீர் + பதுமம்.] |
நீர்ப்பத்தர் | நீர்ப்பத்தர்1 nīrppattar, பெ. (n.) நீர் பீறிட்டு வெளிப்படுங் குழாய் (திவா.);, தூம்பு; waterspOut. [நீர் + பத்தர்.] நீர்ப்பத்தர்2 nīrppattar, பெ. (n.) அம்மணம் (சூ.நி.க. 8;58.);; nude, naked, bare. |
நீர்ப்பத்தாயம் | நீர்ப்பத்தாயம் nīrppattāyam, பெ. (n.) நீர்த் தொட்டி; cistern reservior of water. [நீர் + பத்தாயம்.] [பற்று + ஆயம்.] அடுக்கடுக்காக நெல் கொட்டிவைக்க மரத்தால் அமைக்கப் படுவதைப்பற்றாயம் என்பதும், மண்ணால் அமைக்கப்படுவதைக் குதிர் என்பதும் தஞ்சைமாவட்ட வழக்கு. |
நீர்ப்பந்தர் | நீர்ப்பந்தர் nīrppandar, பெ. (n.) நீர்ப்பந்தல் பார்க்க;see {mir-p-pandal} [நீர் + பந்தர்;பந்தல் → பந்தர்- கடைப் போலி.] |
நீர்ப்பந்தல் | நீர்ப்பந்தல் nīrppandal, பெ. (n.) வேனிற் காலத்தில் வழிச் செல்வோர்க்குக் குடிநீர் முதலியன தந்துதவும் அறச்சாலை; place where drinking-water, butter-milk etc. are iven to passers-by during the hot season. [நீர் + பந்தல்.] |
நீர்ப்பனை | நீர்ப்பனை1 nīrppaṉai, பெ. (n.) பூடுவகை (மலை.);; creeping aumanac. [நீர் + பனை.] நீர்ப்பனை2 nīrppaṉai, பெ. (n.) புல்லாமணக்கு (வைத்திய பரி.);; caster plant. [நீர் + பனை.] |
நீர்ப்பன்றி | நீர்ப்பன்றி nīrppaṉṟi, பெ. (n.) பெருமீன் வகை; perpoise. [நீர் + பன்றி.] |
நீர்ப்பயணம் | நீர்ப்பயணம் nīrppayaṇam, பெ. (n.) நீர்ச் செலவு பார்க்க;see {mirc-celavu.} [நீர் + பயணம்.] |
நீர்ப்பயறு | நீர்ப்பயறு nīrppayaṟu, பெ. (n.) மின்னிப்பயறு; a species of jungle green gram. (சா.அக.);. [நீர் + பயறு.] பை → பையல் → பயிறு. |
நீர்ப்பயிர் | நீர்ப்பயிர் nīrppayir, பெ. (n.) நன்செய்ப் பயிர் (இ.வ.);; wet cultivation. [நீர் + பயிர்.] |
நீர்ப்பரிசகம் | நீர்ப்பரிசகம் nīrpparisagam, பெ. (n.) ஆமை; tortoise. (சா.அக.);. |
நீர்ப்பரிசை | நீர்ப்பரிசை nīrpparisai, பெ. (n.) ஆமை (மூ.அ.);; tortoise. |
நீர்ப்பருத்தி | நீர்ப்பருத்தி1 nīrpparutti, பெ. (n.) மரவகை (L.);; sea-coast rose mallow. [நீர் + பருத்தி.] நீர்ப்பருத்தி2 nīrpparutti, பெ. (n.) கடற் கரைப் பருத்தி; sea coast rose mellowhisbiscus tiliaceOUS. (சா.அக.);. [நீர் + பருத்தி.] |
நீர்ப்பறவை | நீர்ப்பறவை1 nīrppaṟavai, பெ. (n.) நீர்நிறக்காக்கை; little cormorant. “நீர்க் காக்கை” (சிலம்பு. 10;114-9, உரை.);. [நீர் + பறவை.] நீர்ப்பறவை2 nīrppaṟavai, பெ. (n.) நீரில் வாழும் பறவை (பிங்.);; water-bird. [நீர் + பறவை.] |
நீர்ப்பற்றாக்குறை | நீர்ப்பற்றாக்குறை nīrppaṟṟākkuṟai, பெ. (n.) அணைக்கட்டுகளில் போதுமான நீர் தேங்காமற் போதல்; shortage of water in the reservoir. நீர்ப்பற்றாக்குறைக் காலங்களில் தமிழ்நாடும் கருநாடகமும் காவிரி நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டு மென இந்தியத் தலைமையமைச்சர் தலைமையிலான காவிரி நடுவர் குழு வரையறை செய்கிறது. (உ.வ.);. [நீர் + பற்றாக்குறை.] |
நீர்ப்பா | நீர்ப்பா nīrppā, பெ. (n.) நீரிழிவு நோய்; diabetes. |
நீர்ப்பாக்கு | நீர்ப்பாக்கு nīrppākku, பெ. (n.) ஊறற் பாக்கு (வின்.);; arecanut cured in water. [நீர் + பாக்கு.] |
நீர்ப்பாசனம் | நீர்ப்பாசனம் nīrppācaṉam, பெ. (n.) வேளாண்மைக்கு நீரைப் பயன்படுத்துகை; water irrigation. காவிரியில் போதிய நீர்வரத்து இன்மையால் காவிரி நீர்ப்பாசனப் பகுதி இவ்வாண்டு வறண்டது. (உ.வ.);. [நீர் + பாசனம்.] ஆற்றுநீர், ஏரிநீர், கிணற்றுநீர் ஆகிய மூன்றையும் வேளாண்மைக்குப் பயன் படுத்துவர். பாசனமெனலே சாலும்;எ னி னும் , நீர் ப் பாசன மெ ன்ற து விளங்கத்தோன்ற. |
நீர்ப்பாசி | நீர்ப்பாசி1 nīrppāci, பெ. (n.) தண்ணீரில் மிதக்கும் பாசிவகை; moss or morass-weed. [நீர் + பாசி.] |
நீர்ப்பாடி | நீர்ப்பாடி nīrppāṭi, பெ. (n.) நீராரை பார்க்க;see {mir-āraī (oft.go);.} [நீர் + பாடி.] |
நீர்ப்பாடு | நீர்ப்பாடு1 nīrppāṭu, பெ. (n.) 1. கடும் வயிற்றுப் போக்கு; violent diarrhoea, sudden and often fatal. “நீர்ப்பாடு வந்ததாம்” (பணவிடு. 300.);. 2. நீரிழிவு (வின்.);; diabetes. 3. நீர்க்குறைவு; shortage of water. நீர்ப் பாடான பயிர் (வின்.);. [நீர் + பாடு.] நீர்ப்பாடு nīrppāṭu, பெ. (n.) குழந்தை நோய்வகை (பாலவா. 451.);; a disease of children. [நீர் + பாடு.] |
நீர்ப்பாண்டு | நீர்ப்பாண்டு nīrppāṇṭu, பெ. (n.) பாண்டு நோய்வகை (பைஷஜ.);; dropsy. [நீர் + பாண்டு.] |
நீர்ப்பானை | நீர்ப்பானை nīrppāṉai, பெ. (n.) நீர்ச்சால்; a pot for holding water water-pot. (சா.அக.);. [நீர் + பானை.] |
நீர்ப்பாம்பு | நீர்ப்பாம்பு nīrppāmbu, பெ. (n.) தண்ணீரில் வாழும் பாம்புவகை; common water-snake. “அஞ்சாப் புறங்கிடக்கு நீர்ப்பாம்பு” (வாக்குண். 25.);. [நீர் + பாம்பு.] |
நீர்ப்பாய்ச்சல் | நீர்ப்பாய்ச்சல் nīrppāyccal, பெ. (n.) 1. ஆறு கால்வாய் முதலியவற்றின் மூலம் ஏற்படும் பாசனம் (உ.வ.);; irrigation from a river, stream etc. 2. சீழ் வடிகை (வின்.);; discharge of serum from a Sore, of water from the eyes, of mucus from the nose. 3. நீர்க்குத்து, (இ.வ.); பார்க்க;see {mir-k-kuttu.} [நீர் + பாய்ச்சல்.] |
நீர்ப்பாய்ச்சி | நீர்ப்பாய்ச்சி nīrppāycci, பெ. (n.) நீர்க்கண்டி பார்க்க;see {nir-k-kand;} [நீர் + பாய்ச்சு → நீர்பாய்ச்சு → நீர்ப்பாய்ச்சி.] |
நீர்ப்பாய்ச்சிமானியம் | நீர்ப்பாய்ச்சிமானியம் nīrppāyccimāṉiyam, பெ. (n.) நீராணிக் காரற்குரிய இலவய நிலம் (இ.வ.);; service {avayinäm} held by a water distributor [நீர்ப்பாய்ச்சி + மானியம்.] |
நீர்ப்பாய்ச்சுமானியம் | நீர்ப்பாய்ச்சுமானியம் nīrppāyccumāṉiyam, பெ. (n.) வரியின்றி நீர்ப் பாய்ச்சிக் கொள்ளும் நிலம் (வின்.);, land irrigable free of waterrate. [நீர்ப்பாய்ச்சு(ம்); + மானியம்.] |
நீர்ப்பிச்சான் | நீர்ப்பிச்சான் nīrppiccāṉ, பெ. (n.) நேர்ப் பிசின்; false zedoary-koemferia rotunda alias klonga. (சா.அக.);. |
நீர்ப்பிடி | நீர்ப்பிடி1 nīrppiḍi, பெ. (n.) நீர்ப்பிடிப்பு பார்க்க;see {nir-p-pidippu} [நீர் + பிடி.] நீர்ப்பிடி2 nīrppiḍi, பெ. (n.) அகந்தை (இ.வ.);; arrogance. [நீர் + பிடி.] நீர்ப்பிடி3 nīrppiḍittal, 4 செ.கு.வி. (v.i.) நீர்க் கொள்ளு-தல் பார்க்க;see {ni-k-kolய} [நீர்க்கொள்ளு-, → நீர்ப்பிடி-,] |
நீர்ப்பிடிபரப்பு | நீர்ப்பிடிபரப்பு nīrbbiḍibarabbu, பெ. (n.) நீர்த்தேக்கங்களில் நிறைவதற்கான மழைநீர் வடிகால் பகுதி; area from which rainfall flows into a river etc. |
நீர்ப்பிடிப்பரப்பு | நீர்ப்பிடிப்பரப்பு nīrppiḍipparappu, பெ. (n.) அணைக்கு ஆற்று நீர்வரத்துப் பரப்பு; catchment area. [நீர்ப்பிடி + பரப்பு] |
நீர்ப்பிடிப்பு | நீர்ப்பிடிப்பு1 nīrppiḍippu, பெ. (n.) 1. ஏரியில் நீர்பற்றுமிடம்; water-spread of a tank. ஆறகமூர் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது (உ.வ.); 2. நிலத்தில் நீர் வடியாது நிற்கும் நிலை; water-logged condition, as of land. நீர்ப்பிடிப்பு நிலம். இந்த வயலில் நீர்ப்பிடிப்பு மிகுந்திருந்தமையால் பயிர் அழுகிவிட்டது. (உ.வ.);. 3. நீரளவு (வின்.);; quantity of water. இந்த ஆண்டு ஏரியின் நீர்ப்பிடிப்பு தாழ்வில்லை. (உ.வ.);. 4. காய்கனிகளிலுள்ள சாறு (வின்.);, juiciness of fruits or vegetables. இந்தப் பழம் நீர்ப்பிடிப்பானது. (உ.வ.);. [நீர் + பிடிப்பு.] பி டி – கை ப் பற்று த ல் , நிறுத் தி க் கொள்ளுதல், வயப்படுத்தல், பிடி → பிடிப்பு. நீர்ப்பிடிப்பு2 nīrppiḍippu, பெ. (n.) நீர்த்தட்டுப் பாடு (இ.வ.);; scarcity of water. [நீர் + பிடிப்பு.] பிடி – உறுதி, இறுக்கம். குறைவு, தட்டுப்பாடு. |
நீர்ப்பிடிப்புநிலம் | நீர்ப்பிடிப்புநிலம் nīrppiḍippunilam, பெ. (n.) தண்ணீரில் முழுகிநிற்கும் வயல் (c.g.);; land which is liable to frequent submersion. இந்த நீர்ப் பிடிப்பு நிலத்தில் என்ன வேளாண்மை செய்ய இயலும். (உ.வ.);. [நீர்பிடிப்பு + நிலம்.] |
நீர்ப்பிடிப்புப்பகுதி | நீர்ப்பிடிப்புப்பகுதி nīrppiḍippuppagudi, பெ. (n.) நீர்ப்பிடி பரப்பு பார்க்க;see {mir-pidip-parappu.} |
நீர்ப்பிணக்கு | நீர்ப்பிணக்கு nīrppiṇakku, பெ. (n.) நீர்ப் பிணிப்பு (இ.வ.); பார்க்க;see {nir-p-pinippu.} [நீர் + பிணக்கு.] |
நீர்ப்பிணிப்பு | நீர்ப்பிணிப்பு nīrppiṇippu, பெ. (n.) நீர்க்கோவையாலுண்டாகும் காய்ச்சல் (இ.வ.);; fever due to cold. [நீர் + பிணிப்பு.] |
நீர்ப்பிரமி | நீர்ப்பிரமி nīrppirami, பெ. (n.) நீர்க் கொடி வகை (M.M. 1045.);; water hyssop, climber herpestis monniera. |
நீர்ப்பிரமியம் | நீர்ப்பிரமியம் nīrppiramiyam, பெ. (n.) [நீர் + பிரமியம்.] |
நீர்ப்பிளவை | நீர்ப்பிளவை nīrppiḷavai, பெ. (n.) பிளவை வகை (வின்.);; a kind of carbuncle. [நீர் + பிளவை.] |
நீர்ப்பீனசம் | நீர்ப்பீனசம் nīrppīṉasam, பெ. (n.) சளி நோய்வகை (வின்.);; catarrh with offensive discharges of mucus through the nostrils. [நீர் + பீனசம்.] |
நீர்ப்பு | நீர்ப்பு nīrppu, பெ. (n.) நீர்த்துப்போனது; diuted. [நீர் → நீர்ப்பு.] |
நீர்ப்புடையன் | நீர்ப்புடையன்1 nīrppuḍaiyaṉ, பெ. (n.) நீரில் வாழும் நச்சுப் பாம்புவகை (யாழ்.அக.);; a poisonous water-snake. [நீர் + புடையன்.] நீர்ப்புடையன்2 nīrppuḍaiyaṉ, பெ. (n.) 1. ஆற்றுப்புடையன்; river water snake-hydrus granulatus. 2. புடையன்; water Snake. [நீர் + புடையன்.] இப்பாம்பு அலை வாய்க்கரையொட்டிய நான்கு கல் தொலைவு வரையுங் காணக்கூடும். (சா.அக.);. |
நீர்ப்புட்டை | நீர்ப்புட்டை nīrppuṭṭai, பெ. (n.) அண்டவீக்கவகை; hydrocele. [நீர் + புட்டை புடைத்தல் = பெருத்தல், வீங்குதல். புடைபுட்டை] |
நீர்ப்புணைப்பு | நீர்ப்புணைப்பு nīrppuṇaippu, பெ. (n.) நீர்ப்பிணிப்பு (C.L.); பார்க்க;see {mirp-pippu} [நீர் + புணைப்பு(கொ.வ.);.] பிணிப்பு → பிணைப்பு → புணைப்பு (கொ.வ.);. |
நீர்ப்புன்கு | நீர்ப்புன்கு nīrppuṉku, பெ. (n.) புன்கு மரவகை (l.);; poonga oil tree. [நீர் + புன்கு.] |
நீர்ப்புற்று | நீர்ப்புற்று nīrppuṟṟu, பெ. (n.) வெள்விழியிற் சதைவளரும் நோய்வகை (சீவரட்.266.);; growth of flesh on the cornea of the eye. [நீர் + புற்று.] இந்நோய்கண்டோரின் கண்கள் நீரை மிகுதியாய் ஒழுகுவித்தலின் இது நீர்ப்புற்று எனலாயிற்று. |
நீர்ப்புள் | நீர்ப்புள் nīrppuḷ, பெ. (n.) நீர்ப்பறவை (நாமதீப.244.); பார்க்க;see {mirp-paraval} [நீர் + புள்.] |
நீர்ப்புள்தோசம் | நீர்ப்புள்தோசம் nīrppuḷtōcam, பெ. (n.) நீர்ப்புள்ளுறு பார்க்க;see {miro-oப-ப்ய} த. ஊறு. skt. தோசம். [நீர்ப்புள் + தோசம்.] |
நீர்ப்புள்ளூறு | நீர்ப்புள்ளூறு nīrppuḷḷūṟu, பெ. (n.) நீர்வாழ்ப் பறவைகளினாலுண்டாகும் ஊறுபாடு; a disease of children, believed to be caused by aquatic birds. [நீர் + புள் + ஊறு.] |
நீர்ப்பூ | நீர்ப்பூ nīrppū, பெ. (n.) பூவகை நான்கனுள் நீரில் உண்டாவது; aquatic flower, one of four. “நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ” (திருவிருத்.55.);. “முழு நெறியாகிய மேதகு குவளையுடைய அரும்புகள் சுரும்பு இமிர இதழ் அவிழ்ந்த கழுநீர் முதலிய நீர்ப்பூக்களின் வாசத்தைக் கலந்துண்டு” (சிலப்.2;14உரை.);. [நீர் + பூ.] நால்வகைப்பூக்களாவன; 1. நீர்ப்பூ 2. நிலப்பூ. 3. கோட்டுப்பூ. 4. கொடிப்பூ. கொடிப்பூவையும் இவர்கொடி, படர்கொடி என இருவகையாய்ச் சொல்லலாம். |
நீர்ப்பூண்டு | நீர்ப்பூண்டு nīrppūṇṭu, பெ. (n.) நீர்முள்ளி (சங்.அக.); பார்க்க;see {mir-mul} [நீர் + பூண்டு.] |
நீர்ப்பூதம் | நீர்ப்பூதம் nīrppūtam, பெ. (n.) ஐவகைப் பூதங்களுள் நீராகிய பூதம்; water. [நீர் + பூதம்.] |
நீர்ப்பூலாஞ்சி | நீர்ப்பூலாஞ்சி nīrppūlāñji, பெ. (n.) நீரில் வாழும் பூலாச்செடிவகை; black-berried featherfoil. [நீர் + பூலாஞ்சி.] |
நீர்ப்பெருக்கு | நீர்ப்பெருக்கு1 nīrpperukku, பெ. (n.) 1. வெள்ளம்; flood. 2. கடல்நீரேற்றம் (வின்.);; flow of the tide. [நீர் + பெருக்கு.] நீர்ப்பெருக்கு2 nīrpperukku, பெ. (n.) நோய்வகை (இராசவைத்.166.);; a disease. [நீர் + பெருக்கு.] |
நீர்ப்பை | நீர்ப்பை nīrppai, பெ. (n.) சிறுநீர்ப்பை; urine {blapder.} [நீர் + பை நீர் = சிறுநீர் பொல் → பொள் → பொய் → பை.] |
நீர்ப்பைத்தாபனம் | நீர்ப்பைத்தாபனம் nīrppaittāpaṉam, பெ. (n.) நீர்ச்சுருக்கு, 2 (m.l.); பார்க்க;see {mir-c-curukku} [நீர்ப்பை + தாபனம்.] |
நீர்ப்போர் | நீர்ப்போர் nīrppōr, பெ. (n.) நீரின் கண்ணே போலிப் போர் புரியும் விளையாட்டு; the sport of mock-fight played in a tank or river “புணைபுறந் தழுவித் துநீர்ப் போர்த்தொழி றொடங்கினாரே” (சீவக.2655.);. [நீர் + போர்.] |
நீர்ப்பௌந்திரம் | நீர்ப்பௌந்திரம் nīrppaundiram, பெ. (n.) சிறுநீர்த் துளையில் உண்டாகும் புண்கட்டி (M.L.);, urethral fistula. [நீர் + skt. பெளந்திரம்.] |
நீர்மக்குறி | நீர்மக்குறி nīrmakkuṟi, பெ. (n.) நீர்மத்தினால் செய்யப்படும் குறி; water mark. [நீர்மம் + குறி.] |
நீர்மஞ்சள் | நீர்மஞ்சள் nīrmañjaḷ, பெ. (n.) மஞ்சள்வகை (சீவக.3076.உரை.);; a kind of turmeric. [நீர் + மஞ்சள்.] |
நீர்மட்டம் | நீர்மட்டம்1 nīrmaṭṭam, பெ. (n.) level of water (in a reservoir. lake, etc.,);. [நீர் + மட்டம்.] நீர்மட்டம்2 nīrmaṭṭam, பெ. (n.) 1. கொத்தன் நிலவாட்டம் பார்க்குங் கருவி; bricklayers level. 2. சாதிமட்டப்பலகை; spirit-level. தெ. நீருமட்டமு. க. நீர்மட்ட. [நீர் + மட்டம்.] நீர்மட்டம்3 nīrmaṭṭam, பெ. (n.) கடல் மட்டம்; Sea – level. [நீர் + மட்டம்.] |
நீர்மட்டு | நீர்மட்டு nīrmaṭṭu, பெ. (n.) நீர் நிலையில் நீர் நிற்கும் உச்சி; head of water in water tank. [நீர் + மட்டு.] |
நீர்மநிலை | நீர்மநிலை nīrmanilai, பெ. (n.) உலகப் பொருள்நிலை மூன்றனுள் நீர்மநிலை; one of three state of object, liquid state. [நீர்மம் + நிலை.] மூன்றுநிலையாவன – நீர்மநிலை, பருமநிலை, வளிமநிலை. |
நீர்மனிதன் | நீர்மனிதன்1 nīrmaṉidaṉ, பெ. (n.) மாந்தன் முகம்போல் முகமுடைய ஒருவகைக் கடலுயிரி; dugong, a cetaceous mammal. [நீர் + மனிதன்.] skt. மனிதன். தமாந்தன். நீர்மனிதன்2 nīrmaṉidaṉ, பெ. (n.) நீர்மாந்தன் பார்க்க;see {mir-mândan} [நீர் + மனிதன்.] |
நீர்மமாக்கல் | நீர்மமாக்கல் nīrmamākkal, பெ. (n.) திண்மத்தை நீர்மநிலைக்கு மாற்றுகை; liquefaction. [நீர்மம் + ஆக்கல்.] |
நீர்மம் | நீர்மம் nīrmam, பெ. (n.) நீர்ம நிலை; liquid state. [நீர் → நீர்மம்.] |
நீர்மருது | நீர்மருது nīrmarudu, பெ. (n.) மருதமரவகை; a kind of tree. [நீர் + மருது.] |
நீர்மருத்துவமுறை | நீர்மருத்துவமுறை nīrmaruttuvamuṟai, பெ. (n.) சிலநோய்களுக்கு நீரின் உதவியால் செய்யப்படும் மருத்துவ முறை; watertreatment method. [நீர் + மருத்துவம் + முறை.] |
நீர்மருத்துவம் | நீர்மருத்துவம் nīrmaruttuvam, பெ. (n.) நீரின் உதவியால் நோய் நீக்கும் மருத்துவம்; Water Cure. [நீர் + மருத்துவம்.] |
நீர்மறி-த்தல் | நீர்மறி-த்தல் nīrmaṟittal, 4 செ.குன்றாவி.(v.t.) நீரைத் தடுத்தல்; to stop the water of a channel. [நீர் + மறி-,] |
நீர்மறிப்பு | நீர்மறிப்பு nīrmaṟippu, பெ. (n.) 1. நீரைத் தடுத்துத் திருப்புகை; diverting the water of a channel by a bund. 2. நீரடைப்பு பார்க்க, see {nir-agaippu} [நீர் + மறிப்பு.] |
நீர்மலர் | நீர்மலர் nīrmalar, பெ. (n.) குவளைப்பூ; purple Indian water-lily. “தீஞ்சுனை நீர்மலர் மிலைந்து மதஞ் செருக்கி” (நற்.70.8.);. [நீர் + மலர்.] |
நீர்மலிகண் | நீர்மலிகண் nīrmaligaṇ, பெ. (n.) துன் பத்தாலே நீர் பெருகும் கண்; tearful eyes, grief-stricken. “சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பாகின்றே” (குறுந்.105.);. [நீர் + மலி + கண்.] |
நீர்மலிவான் | நீர்மலிவான் nīrmalivāṉ, பெ. (n.) மழைமேகம் சூழ்ந்தவான்; clouded sky. “அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவானென மலிந்த” (சிலப்.8;1-2, உரை.);. [நீர் + மலி + வான்.] |
நீர்மலை | நீர்மலை nīrmalai, பெ. (n.) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்; a village in Kanjipuram dt. “சேடார் பொழில் சூழ்திருநீர் மாலையான்” (நாலா. 1521.);. [நீர் + மலை.] நீர் சூழ்ந்த மலை என்ற காரணத்தினால் நீர் மலை என்பர். திரு என்னும் அடைமொழியுடன் திருநீர்மலை என வழங்கப்படுகிறது. |
நீர்மாங்காய் | நீர்மாங்காய் nīrmāṅgāy, பெ. (n.) நீரில் ஊறவைத்த வடுமாங்காய் (இ.வ.);; mangoes pickled in water. [நீர் + மாங்காய்.] |
நீர்மாடம் | நீர்மாடம் nīrmāṭam, பெ. (n.) பள்ளியோடம்; a kind of boat. “ஒங்குநீர் மாடமொடு நாவா யியக்கி” (சிலப்.14;74.);. [நீர் + மாடம்.] |
நீர்மாதளம் | நீர்மாதளம் nīrmātaḷam, பெ. (n.) வில்வம்; lingam tree-cretaeva religiosa. (சா.அக.);. |
நீர்மாந்தன் | நீர்மாந்தன் nīrmāndaṉ, பெ. (n.) உலகிய லறிவில்லாதவன் (இவ.);; person who knows nothing of the affairs of the world as if he lived in the Sea. [நீர் + மாந்தன்.] அகவைக்குத் தகுந்த அறிவில்லாதவனைக் கிணற்றுத்தவளை என்பர். தான் வாழும் நீர்நிலையே உலகென்று இறுமாந்திருக்கும் இயல்பைச் சுட்டி அதுபோல தனக்குத் தெரிந்ததே உலகமென்பாரையும் அவ்வாறே கூறுவர். |
நீர்மாந்தம் | நீர்மாந்தம் nīrmāndam, பெ. (n.) செரியாமை யாலுண்டாகும் குழந்தை, நோய்வகை (சீவரட்.);; a disease of children caused by indigestion. [நீர் + மாந்தம்.] |
நீர்மாறு-தல் | நீர்மாறு-தல் nīrmāṟudal, 4 செ.கு.வி. (v.i.) ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நீரை மாற்றிப் பாய்ச்சுத்ல்; to lead water, as from one field to another;from one channel to another. [நீர் + மாறு-,] |
நீர்மாலை | நீர்மாலை nīrmālai, பெ.(n.) இறந்தவர்க்கு மகன் செய்யும் சடங்கு; a death ritual done by the decease son. [நீர்+மாலை] நீர்மாலை nīrmālai, பெ. (n.) உயிர்நீங்கிய உடலைக் (பிணத்தை); குளிப்பித்தற்கு நீர்கொண்டுவருஞ் சடங்கு அல்லது செய்கை (இ.வ.);; ceremony of bringing water for bathing a corpse before cremation or burial. [நீர் + மாலை.] |
நீர்மாலைக்கடன் | நீர்மாலைக்கடன் nīrmālaikkaḍaṉ, பெ. (n.) நீர்மலை பார்க்க;see {mi-mala} [நீர்மாலை + கடன்.] |
நீர்மின்சாரம் | நீர்மின்சாரம் nīrmiṉcāram, பெ. (n.) நீரின் விசையாலுண்டாக்கப்படும் மின்னாற்றல்; hydro-electricity. [நீர் + மின்சாரம்.] |
நீர்மின்நிலையம் | நீர்மின்நிலையம் nīrmiṉnilaiyam, பெ. (n.) நீரோட்டவிசையைப் பயன்படுத்தி மின்சாரம் எடுக்கப்படும் இடம்; hydro electric power plant. [நீர் + மின் + நிலையம்.] |
நீர்மின்வாரியம் | நீர்மின்வாரியம் nīrmiṉvāriyam, பெ. (n.) மின்னாற்றலைப் பேணும் வாரியம்; electricityboard. [நீர் + மின் + வாரியம்.] |
நீர்மீட்டான் | நீர்மீட்டான் nīrmīṭṭāṉ, பெ. (n.) தண்ணீர் விட்டான் என்னும் கொடி; climbing aSparaguS. [நீர் + மிட்டான்.] |
நீர்முகம் | நீர்முகம் nīrmugam, பெ. (n.) 1. நீர்த்துறை (வின்.);; bathing ghat. 2.ஆற்றுவாய்த் (சங்கம); துறை (யாழ்.அக.);; mouth of a river. 3. இறங்குதுறை; landing place. “நீர்முகந்திகழ் நீரிலும்” (சேதுபு.கோடி.5.);. [நீர் + முகம்.] |
நீர்முட்டான் | நீர்முட்டான் nīrmuṭṭāṉ, பெ. (n.) நீர்விட்டான் பார்க்க;see {nor-witto} [நீர் + முட்டான். விட்டான்→மூட்டான்.] ஒ. நோ ;விழி → முழி |
நீர்முட்டு | நீர்முட்டு1 nīrmuṭṭudal, பெ. (n.) 5 செ.கு.வி. (v.i.); 1. நீர்நிரம்புதல்; to be {fuātothe brim.} as eyes with tears. 2. சிறுநீர் பெய்தல் (வின்.);; to make water, to urinate. [நீர் + முட்டு-,] நீர்முட்டு2 nīrmuṭṭu, பெ. (n.) பூச்சிக் கடியினாலேனும், கண்ணோவினாலேனும் கண்ணினின்று நீர்வடிகை (M.L);; incessai watering in the eyes, as in cases of bites, or corneal inflammation. [நீர் + முட்டு.] நீர்முட்டு3 nīrmuṭṭu, பெ. (n.) நீர்ப்பற்றாக்குறை; water scarcity. [நீர் + முட்டு. முட்டுப்பாடு → முட்டு.] |
நீர்முட்டுப்பாடு | நீர்முட்டுப்பாடு nīrmuṭṭuppāṭu, பெ. (n.) நீர்முட்டு பார்க்க;see {mi-mபtu.} [நீர் + முட்டு + பாடு.] |
நீர்முள்தையல் | நீர்முள்தையல் nīrmuḷtaiyal, பெ. (n.) குறுக்குத் தையல்வகை (இ.வ.);; herringbone stich, a cross-stich in needle work, chietly used on flannel. [நீர்முள் + தையல்.] |
நீர்முள்ளி | நீர்முள்ளி1 nīrmuḷḷi, பெ. (n.) நீர்க்கும்பி பார்க்க;see {mir-k-kumbi} [நீர் + முள்ளி.] நீர்முள்ளி2 nīrmuḷḷi, பெ. (n.) பூடுவகை; water thorn. [நீர் + முள்ளி.] |
நீர்முள்ளிக்காடி | நீர்முள்ளிக்காடி nīrmuḷḷikkāṭi, பெ. (n.) நீர்முள்ளி இலையை ஊறவைத்துப் பிழிந் தெடுத்த சாறு; expressed juice of the leaves of water thistle plant soaked in vinegar; distilled vinegar combined with juice of the leaves of water thistle plant. (சா.அக.);. [நீர்முள்ளி + காடி கடு → கடி → காடி கடு = உறைப்பு அல்லது புளிப்பு மிகுதி.] |
நீர்முழுகி | நீர்முழுகி nīrmuḻugi, பெ. (n.) 1.நீரில் முழுகுவோன்; diver. 2. மதகுக் கண்களில் அடைபட்ட செத்தை முதலியவற்றை முழுகி எடுப்போன் (W.G.);; one who dives down when a tank is full and removes silt and other obstructions in the Sluice. [நீர் + முழுகு = நீர் முழுகு→நீர்முழுகி.] |
நீர்முழுகியினாம் | நீர்முழுகியினாம் nīrmuḻugiyiṉām, பெ. (n.) நீர்முழுகிக்குக் கொடுக்கப்படும் இறையிலி நிலம் (W.G.);; tax-free land enjoyed by a {nir-mulugi.} [நீர்முழுகி+(உருது); இனாம்.] |
நீர்மூடிதழ் | நீர்மூடிதழ் nīrmūṭidaḻ, பெ. (n.) நீர் அடிப்பு; water closet. [நீர் மூடிதழ்.] |
நீர்மூளி | நீர்மூளி nīrmūḷi, பெ. (n.) பெருமரவகை (I.);; downy many-leaved tree of beauty. [நீர் + மூளி.] |
நீர்மூழ்கி | நீர்மூழ்கி1 nīrmūḻki, பெ. (n.) நீரில் நடந்துலாவும் பறவை; the dipper that can Walk about under water-water OzSel. [நீர் + மூழ்கி.] நீர்மூழ்கி2 nīrmūḻki, பெ. (n.) நீர்மூழ்கிக் கப்பல் பார்க்க;see {nir-mulgi-k-kappal} [நீர்மூழ்கிக்கப்பல் → நீர்மூழ்கி.] |
நீர்மூழ்கிக்கப்பல் | நீர்மூழ்கிக்கப்பல் nīrmūḻkikkappal, பெ. (n.) நீரினுள் அமிழ்ந்து செல்லக்கூடிய கப்பல்; submarine. [நீர்மூழ்கி + கப்பல்.] |
நீர்மூழ்கிவுந்தம் | நீர்மூழ்கிவுந்தம் nīrmūḻkivundam, பெ. (n.) நீரினுள் அமிழ்ந்திருந்து நீரோற்றும் உந்தம்; submercible motor. [நீர்மூழ்கி + உந்தம்.] |
நீர்மேகம் | நீர்மேகம் nīrmēkam, பெ. (n.) நீர்த்துளையினின்று சீழ்போன்று நீர்வடியும் நோய்வகை (M.L.);; gleet. [நீர் + மேகம்.] |
நீர்மேனெருப்பு | நீர்மேனெருப்பு nīrmēṉeruppu, பெ. (n.) கொட்டைப்பாசி (மலையக.);; a kind of moss. [நீர்மேல் + நெருப்பு.] |
நீர்மேற்செறிப்பு | நீர்மேற்செறிப்பு nīrmēṟceṟippu, பெ. (n.) கொட்டைப்பாசி (மலை.);; a kind of moss. [நீர்மேல் + செறிப்பு.] |
நீர்மேற்பிரிவு | நீர்மேற்பிரிவு nīrmēṟpirivu, பெ. (n.) கடல்கடந்து செல்லுகை; departing by sea. [நீர்மேல் + பிரிவு.] |
நீர்மேலாண்மை | நீர்மேலாண்மை nīrmēlāṇmai, பெ. (n.) நீரைப் பகிர்ந்தளிக்கும் ஆளுமை; water-management. |
நீர்மேலுரல் | நீர்மேலுரல் nīrmēlural, பெ. (n.) குளுவை எனும் உயிரி (சிலப்.10;114, உரை.);; a kind of insect. [நீர்மேல் + ஊரல்] ஊர்ந்து செல்வது ஊரல் ஒ.நோ. நீரினுள் வாழ்வது நீரி. |
நீர்மேலெழுத்து | நீர்மேலெழுத்து nīrmēleḻuttu, பெ. (n.) நிலையற்றதைக் குறிப்பதற்குப் பயன்படும் மரபுத் தொடர்; நீர்மேலெழுதும் எழுத்து; letters Written On Water, as unStable. “நீர்மேலெழுத்துக்கு நேர்” (மூதுரை,2.);. [நீர்மேல் + எழுத்து → நீர்மேலெழுத்து.] |
நீர்மேலேற்று-தல் | நீர்மேலேற்று-தல் nīrmēlēṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) கடல் கடந்து நாடு கடத்துதல்; to sentence one to transportation, as sending across the water. [நீர் + மேல் + ஏற்று-,] |
நீர்மேல்எழுத்து | நீர்மேல்எழுத்து nīrmēleḻuttu, பெ. (n.) நீர்மேலெழுத்து பார்க்க;see {mime-அபtய} [நீர்மேல் + எழுத்து → நீர்மேலெழுத்து.] |
நீர்மேல்செவ்வந்தி | நீர்மேல்செவ்வந்தி nīrmēlcevvandi, பெ. (n.) செந்தாமரை; red lotus. [நீர்மேல் + செவ்வந்தி.] |
நீர்மேல்நெருப்பு | நீர்மேல்நெருப்பு nīrmēlneruppu, பெ. (n.) கல்லுருவி என்னும் மூலிகைச் செடி; a medical herb called {kal-l-uruvi} [நீர்நெருப்பு → நீர்மேல்நெருப்பு.] |
நீர்மேல்வாழ்க்கை | நீர்மேல்வாழ்க்கை nīrmēlvāḻkkai, பெ. (n.) பரதவர் வாழ்க்கை; life of sea-man. [நீர்மேல் + வாழ்க்கை.] |
நீர்மேல்வெள்ளி | நீர்மேல்வெள்ளி nīrmēlveḷḷi, பெ. (n.) ஒருவகைப் புழு; a kind of water-worm. (சா.அக.);. [நீர் + மேல் + வெள்ளி.] |
நீர்மை | நீர்மை nīrmai, பெ.(n.) பண்ணின் இசை வகை; a musical note. [நீர்-நீர்மை-புறநீர்மை (பூண்டளம்);] நீர்மை1 nīrmai, பெ. (n.) 1. நீரின்றன்மை (குறள்,195,உரை.);; property of water, as coolness. 2. தன்மை; property, nature, inherent quality. “நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும்” (குறள்,17.);. 3. சிறந்த குணம்; goodness, essential excellence. “பயனில னீர்மையுடையார் சொலின்” (குறள்,196.);. 4. எளிமை; attability. “ஆவாவென்ற நீர்மையெல்லாம் புகழ்ப்பெறுவ தென்று கெல்லோ” (திருவாச.27.5.);. 5. அழகு; beauty. “மெய்ந்நீர்மை தோற்றாயே” (திவ். திருவாய். 2,1,6.);; 6. ஒளி; brilliance, lustre. “நெடுநீர் வார்குழை” (நெடுநல்.139.);. 7. நிலைமை; state. condition. “என்னீர்மை கண்டிரங்கி” (திவ். திருவாய்.1,4,4.);. 8. ஒப்புரவு (வின்.);; observance of proper rules or established Custom. [நீர் → நீர்மை.] நீர்மை2 nīrmai, பெ. (n.) பண்பு; quality. “நீருரை செய் நீர்மையில் சூளென்றி நேரிழாய்” (பரிபா.8;73.);. “இசைப்புலவன் ஆலத்தி வைத்த பண்ணீர்மையை முதலும், முறைமையும், முடிவும், நிறைவும், குறையும், கிழமையும், வளைவும், மெலிவும், சமனும், வரையறையும் நீர்மையுமென்னும் பதினொரு பாகு பாட்டினானும்” (சிலப்.3;41, உரை.);. [நீர் → நீர்மை.] |
நீர்மோர் | நீர்மோர் nīrmōr, பெ. (n.) மோருடன் நீர் பெருக விட்டு வேறு சிலவற்றைச் சேர்த்துண்டான பருகம்; butter milk diluted and mixed with certain ingredients, used as a drink. “நீர்மோ ரிள நீர்” (விநாயகபு.39.40.);. [நீர் + மோர்.] |
நீர்யானை | நீர்யானை nīryāṉai, பெ. (n.) hippopotamus. க. நீரனை. [நீர் → யானை.] |
நீர்ரோகம் | நீர்ரோகம் nīrrōkam, பெ. (n.) நீரிழிவு (உ.வ.);; diabetes. [நீர் + (skt); ரோகம்.] |
நீர்வஞ்சி | நீர்வஞ்சி1 nīrvañji, பெ. (n.) 1. ஆற்றுப்பாலை; four seeded willow. 2. ஆற்றில் வளரும் கொடிவகை; calamus rotang. [நீர் + வஞ்சி.] நீர்வஞ்சி2 nīrvañji, பெ. (n.) தண்ணீரில் முளைக்கும் பிரம்பு; water rattan-caiamus rotang (சா.அக.);. [நீர் + வஞ்சி.] |
நீர்வடி | நீர்வடி1 nīrvaḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஊறிய அரிசி போன்றவற்றிலிருந்து நீரை வடித்தல்; to drain the water from soaked rice etc. 2. வயலில் பாய்ந்த மிகுதியான நீரை வெளியேற்றுதல்; to drain the excess water from the field. [நீர் + வடி.] நீர்வடி2 nīrvaḍidal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கண்ணீர் முதலியன வடிதல்; to drain the water from eyes. 2. புண் முதலியவற்றிலிருந்து சீழ் வெளியேறுதல்; to drain the water from wound. 3. கஞ்சி போன்ற நீர்மம் வடிதல்; to drain the soaked rice water. [நீர் + வடி..] |
நீர்வண்டி | நீர்வண்டி1 nīrvaṇṭi, பெ. (n.) நீர் வழங்கும் வண்டி; water wagon. [நீர் + வண்டி.] நீர்வண்டி2 nīrvaṇṭi, பெ. (n.) தெருவில் நீர் தெளிக்கும் வண்டி; watering cart. [நீர் + வண்டி.] |
நீர்வண்டு | நீர்வண்டு nīrvaṇṭu, பெ. (n.) நீரில் வாழும் வண்டு வகை (வின்.);; a water-fly; wate beetle. Any of a large number of beetle; living on or in water, having fringed legs by means of which they swim easily. [நீர் + வண்டு.] |
நீர்வண்டுக்கடி | நீர்வண்டுக்கடி nīrvaṇḍukkaḍi, பெ. (n.) நீர்வண்டு கடிப்பதனால் கடிவாயில் ஏற்படும் தழும்பு; a kind of ring-worm due to the bit of water beetle. (சா.அக.);. [நீர் + வண்டு + கடி.] |
நீர்வண்ணஓவியக்கலை | நீர்வண்ணஓவியக்கலை nīrvaṇṇaōviyakkalai, பெ. (n.) நிறங்களை நீரில் கரைத்துத் தூரிகையால் தீட்டும் சித்திரக் கலை; water Colour painting. [நீர்வண்ணஓவியம் + கலை.] |
நீர்வண்ணஓவியம் | நீர்வண்ணஓவியம் nīrvaṇṇaōviyam, பெ. (n.) see { nor-vanna-dviya-k-kasai} [நீர்வண்ணம் + ஒவியம்.] |
நீர்வண்ணம் | நீர்வண்ணம் nīrvaṇṇam, பெ.(n.) வண்ணக் குழம்பின் ஒரு வகை ; coloured water. [நீர்+வண்ணம்] நீர்வண்ணம் nīrvaṇṇam, பெ. (n.) நீரில் கலந்தெழுதப்படும் வண்ண நீர்க் கரைசல்; water colour. [நீர் + வண்ணம்.] |
நீர்வரத்து | நீர்வரத்து nīrvarattu, பெ. (n.) 1. வெள்ளப்பெருக்கு (யாழ்.அக.); food. 2. நீரின் வருகை; water flow in river etc., நீர்ப்பிடிப்புப் பகுதியில் மூன்று நாளாக நல்ல மழை பெய்ததன் விளைவாய்க், காவிரியில் நீர்வரத்து மிகுந்து காணப்பட்டது. (உ.வ.); [நீர் + வரத்து.] |
நீர்வரம்பு | நீர்வரம்பு nīrvarambu, பெ. (n.) நீர்மப் பொருளின் வரம்பு; limit liquid. [நீர்மம் + வரம்பு.] |
நீர்வரி | நீர்வரி nīrvari, பெ. (n.) நீரின் பொருட்டு விதிக்கம் வரிவகை; water-rate, water-tax. [நீர் + வரி.] |
நீர்வரிக்குறி | நீர்வரிக்குறி nīrvarikkuṟi, பெ. (n.) நீர்மக் குறி பார்க்க;see {nirma-k-kur} |
நீர்வரும்பரப்பு | நீர்வரும்பரப்பு nīrvarumbarappu, பெ. (n.) நீர்த்தேக்கங்களுக்கான மழை நீரைப் பெரும் பரப்பு; catchment area. [நீர் + வரும் + பரப்பு.] |
நீர்வரைப்பு | நீர்வரைப்பு1 nīrvaraippu, பெ. (n.) நீர்வலயம் (பிங்.); பார்க்க;see {nir-valayam.} நீர்வரைப்பு2 nīrvaraippu, பெ. (n.) அலை வாய்க்கரை, கடற்கரை; sea-shore. “கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையு மிலங்குநீர் வரைப்பும் வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் புகையுமேவிய விரையும்” (சிலப்.5;11.);. “தத்துநீர் வரைப்பிடற் கொற்கைக் கோமான்” (சிறுபாண். 62.);. [நீர் + வரைப்பு.] |
நீர்வற்றம் | நீர்வற்றம் nīrvaṟṟam, பெ. (n.) நீரிறக்கம் (யாழ்.அக.);; ebb of the tide. [நீர் + வற்றம்.] |
நீர்வற்றற்றேங்காய் | நீர்வற்றற்றேங்காய் nīrvaṟṟaṟṟēṅgāy, பெ. (n.) கொப்பரைத் தேங்காய் (யாழ்.அக.);; Copra. க. நீருபட்டிடதெங்கிநகாய். [நீர்வற்றல் + தேங்காய்.] |
நீர்வற்றல் | நீர்வற்றல் nīrvaṟṟal, பெ. (n.) வற்றல் (வின்.); anything dried. [நீர் + வற்றல்.] |
நீர்வலயம் | நீர்வலயம் nīrvalayam, பெ. (n.) கடலாற் சூழப்பட்ட நிலம்; the earth, as surrounded by the sea. “மருவுநீர்வலய முதலிய உலக மனைத்தையும்” (கூர்மபு. அந்தகா.20.);. [நீர் + வலயம்.] |
நீர்வலி | நீர்வலி nīrvali, பெ. (n.) பேறு காலத்தில் சிறுநீர் பெய்ய முடியாமல் ஏற்படும் வலி; pain due to the difficulty of urination during childbirth. [நீர் + வலி.] |
நீர்வல்லி | நீர்வல்லி nīrvalli, பெ. (n.) 1. வெற்றிலை; bettel pepper. 2. தண்ணீர்விட்டான் என்னும் கொடி (மலை.);; climbing asparagus. [நீர் + வல்லி.] |
நீர்வல்லிக்காலா | நீர்வல்லிக்காலா nīrvallikkālā, பெ. (n.) புல்லூரி; a kind of parasitic plant. (சா.அக.);. [நீர் + வல்லி + காலா.] |
நீர்வளம் | நீர்வளம்1 nīrvaḷam, பெ. (n.) நீர்நிறைவு (யாழ்.அக.);; abundance of water in a region. [நீர் + வளம்.] நீர்வளம்2 nīrvaḷam, பெ. (n.) நேர்வாளம் என்னும் நிலைத்திணை; true croton oil plant. (சா.அக.);. |
நீர்வள்ளி | நீர்வள்ளி nīrvaḷḷi, பெ. (n.) நீர்வல்லி (தைலவ. தைல. 94.); பார்க்க;see {nir-vals} [நீர் + வள்ளி.] |
நீர்வள்ளிக்கிழங்கு | நீர்வள்ளிக்கிழங்கு nīrvaḷḷikkiḻṅgu, பெ. (n.) தண்ணீர் விட்டான் கிழங்கு பார்க்க;see {tangir-Vittan –kilangu} (சா.அக.);. [நீர் + வள்ளிக்கிழங்கு.] |
நீர்வழங்கீடு | நீர்வழங்கீடு nīrvaḻṅāṭu, பெ. (n.) முறையாக நீர் வழங்குகை; water-supply. [நீர் + வழங்கீடு.] |
நீர்வழங்கீட்டுநிறுவனம் | நீர்வழங்கீட்டுநிறுவனம் nīrvaḻṅāṭṭuniṟuvaṉam, பெ. (n.) நீர்வழங்கீட்டுப்பணியாளர் குழாம்; water board. [நீர் + வழங்கிட்டு + நிறுவனம்.] குடிநீர் தட்டுப்பாட்டு நேரங்களில் பொது மக்களுக்காக அரசே முறையாகக் குடிநீர் அளிக்கும் நிறுவனம். |
நீர்வழங்கும்வாய்த்தலை | நீர்வழங்கும்வாய்த்தலை nīrvaḻṅgumvāyttalai, பெ. (n.) நீர் மிகுந்த இடம்; abundance of water in a region “எவ்வியது நீர்வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக் கூற்றத் துடனே வயலகத்துக் கயலை மேயும் நாரை” (புறநா.242. உரை.); [நீர் + வழங்கும் + வாய் + தலை.] |
நீர்வழி | நீர்வழி nīrvaḻi, பெ. (n.) கடலில் கப்பல் செல்லும் பாதை; water way; [நீர் + வழி.] |
நீர்வழிப்படும்புணை | நீர்வழிப்படும்புணை nīrvaḻippaḍumbuṇai, பெ. (n.) நீரின் வழிச்செல்லும் ஓடம்; a boat passes on the water. “நீர்வழிப்படூஉம் புணைபோ லாருயிர்”(புறநா.192.);. “நீர்வழிப்பட்ட புணை”- (நீதிநெறி. 44.);. [நீர் + வழிப்படும் + புணை.] |
நீர்வழிப்போக்குவரத்து | நீர்வழிப்போக்குவரத்து nīrvaḻippōkkuvarattu, பெ. (n.) நீரின் வழியாக போதல்; transport by the water. [நீர் + வழி + போக்கு + வரத்து.] கடல், ஆறு போன்ற நீர் சூழ்ந்த பகுதியினைக் கடப்பதற்குப் பயன்படுத்தும் போக்குவரத்து. |
நீர்வழிப்போக்குவரவு | நீர்வழிப்போக்குவரவு nīrvaḻippōkkuvaravu, பெ. (n.) நீர்வழியில் போகுகை; waterCarriage. [நீர்வழி + போக்கு + வரவு.] |
நீர்வழுக்கை | நீர்வழுக்கை nīrvaḻukkai, பெ. (n.) நீர்ப் பூடுவகை (யாழ்.அக.);; an aqutic plant. [நீர் + வழுக்கை.] |
நீர்வாகை | நீர்வாகை nīrvākai, பெ. (n.) நீர்வாழை (M.M. 922.);. பார்க்க;see {mir-vāsai} [நீர் + வாகை.] |
நீர்வாங்கு | நீர்வாங்கு nīrvāṅgu, பெ. (n.) மடல்வாத்து (இ.வ.);; a kind of water-fowl. [நீர் + வாங்கு.] |
நீர்வாங்குதளம் | நீர்வாங்குதளம் nīrvāṅgudaḷam, பெ. (n.) நீரித்தேக்கங்களுக்கு நீர்சேரும்பரப்பு; catchment basin. [நீர் + வாங்குதளம்.] |
நீர்வாசி | நீர்வாசி nīrvāci, பெ. (n.) 1. நீர்ப்பாசி பார்க்க;see {mir-p-past} 2. நீரால் நோய் நீக்குதல்; water cure. (சா.அக.);. [நீர் + வாசி.] |
நீர்வாசியாக்கு-தல் | நீர்வாசியாக்கு-தல் nīrvāciyākkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நிலத்து உப்புகள் கலந்துள்ள நீரைக்கொடுத்து நோயைக் குணப்படுத்துதல்; a mode of treating diseases by frequent use of mineral waters both internally and externally-water cure. 2. நீரை மந்திரித்துக் கொடுத்து நோயைக் குணப்படுத்துதல்; [நீர் + வாசி + ஆக்கு-,] |
நீர்வாட்டம் | நீர்வாட்டம் nīrvāṭṭam, பெ. (n.) water-fall, amount of slope required for unobstructed flow of water,Gradient. இந்தத் தரையில் நீர்வாட்டம் சரியாய் அமையாததால் நீர் தேங்குகிறது. (உ.வ.); [நீர் + வாட்டம்] |
நீர்வாதம் | நீர்வாதம் nīrvātam, பெ. (n.) 1. நீர்ப்புட்டை பார்க்க;see {mir-p-puttai} 2. வளி (வாத); நோய்வகை; synovitis. [நீர் + வாதம்.] |
நீர்வாத்து | நீர்வாத்து nīrvāttu, பெ. (n.) வாத்துவகை (வின்.);; fenduck. க. நீருபாடு. [நீர் + வாத்து.] |
நீர்வாய்ப்பத்தல் | நீர்வாய்ப்பத்தல் nīrvāyppattal, பெ. (n.) நீருள்ள கிணறு; well water. “சிறுசில வூறிய நீர்வாய்ப்பத்தற் கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்” (பதிற். 22;13.);. [நீர்வாய் + பத்தல்.] |
நீர்வாரம் | நீர்வாரம்1 nīrvāram, பெ. (n.) நீர்வஞ்சி (யாழ்.அக.); பார்க்க;see {mi-wal} [நீர் + வாரம்.] நீர்வாரம்2 nīrvāram, பெ. (n.) 1. குளநெல்; a kind of paddy. 2. தினை; Italian millet (சா.அக.);. |
நீர்வாரி | நீர்வாரி nīrvāri, பெ. (n.) யானைக் காலிற் கட்டுந்தொடரி (சங்கிலி); (மதுரைக். 382, உரை.);; foot chain of an elephant. [நீர் + வாரி.] |
நீர்வார் | நீர்வார்1 nīrvārttal, 4 செ.கு.வி. (v.i.) தாரைவார்த்துக் கொடுத்தல்; to make a gift by pouring water on the right hand of the Done. “திரு நெடுமாலோன் … பெறுநீர் வார்ப்ப மும்முலை யொருத்தியை மணந்து” (கல்லா. 30. 13.);. [நீர் + வார்-;] நீர்வார்2 nīrvārttal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. வழிச் செல்வோர் முதலாயினோர்க்கு விடாய்த் தீர்க்க நீர்விடுதல்; to give water for drinking as to travellers. 2. நோய் நீங்கினோ முதலாயினோரை நீராட்டி விடுதல்; to give bath, as to a ConvaleSCent. நீர்வார்3 nīrvārtal, 4 செ.குன்றாவி. (v.t.) தொடர்பற நீக்கிவிடுதல்; to wash ones hands of, give up, as a person. [நீர் + வார்-,] |
நீர்வார்கண் | நீர்வார்கண் nīrvārkaṇ, பெ. (n.) நீர் சொரியும் கண்; crying eye. “நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோநீ மடக்கொடி யோ யென” (சிலப்.20;48.);. [நீர்வார் + கண்] |
நீர்வார்கூந்தல் | நீர்வார்கூந்தல் nīrvārāndal, பெ. (n.) ஈரத்தலைமுடி; wet hair. “அடும்பி னாய்மல் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்” (குறுந்.);. [நீர்வார் + கூந்தல்] |
நீர்வாளம் | நீர்வாளம் nīrvāḷam, பெ. (n.) நேர்வாளம் பார்க்க;see {nēr – vālam} (சா.அக.);. [நீர் + வாளம்.] |
நீர்வாளி | நீர்வாளி nīrvāḷi, பெ. (n.) 1. காட்டுப் பூவரசு மரம்; false fern tree. 2. தண்ணீர்விட்டான் என்னும் கொடி (நாமதீப. 340.);; climbing asparagus. [நீர் + வாளி.] |
நீர்வாழி | நீர்வாழி nīrvāḻi, பெ. (n.) நீரில் வாழும் உயிர்; aquatic. [நீர்+வாழி] |
நீர்வாழுஞ்சாதி | நீர்வாழுஞ்சாதி nīrvāḻuñjāti, பெ. (n.) 1.நீரி; aquatic creatures;{niri.} 2. நெய்தனில மாக்கள்; people of the maritime tract. [நீர் + வாழுஞ்சாதி.] |
நீர்வாழை | நீர்வாழை nīrvāḻai, பெ. (n.) தண்ணீருதவும் வாழை; travellers palm or madagascar palm [நீர் + வாழை.] வாழையைப் போல் நீருள்ளதால் இதற்கு பெயராகலாம். (சா.அக.);. |
நீர்வாழைக்காய் | நீர்வாழைக்காய் nīrvāḻaikkāy, பெ. (n.) fish. [நீர் + வாழைக்காய்.] |
நீர்வாழையங்கம் | நீர்வாழையங்கம் nīrvāḻaiyaṅgam, பெ. (n.) மீனெலும்பு; fish bone. (சா.அக.);. மறுவ. மீன்முள்ளு. [நீர்வாழை + அங்கம்.] |
நீர்வாழ்சாதி | நீர்வாழ்சாதி nīrvāḻcāti, பெ. (n.) நீர்வாழுஞ்சாதி பார்க்க;see {mir-Mபர்sad} “நீர்வாழ் சாதியு ணந்து நாகே” (தொல். பொருள். 618.);. [நீர் + வாழ் + சாதி.] |
நீர்வாழ்வன | நீர்வாழ்வன nīrvāḻvaṉa, பெ. (n.) நீர்வாழுயிரி (பிங்.);; aquatic Creatures. [நீர் + வாழ்வன.] |
நீர்விசை | நீர்விசை nīrvisai, பெ. (n.) பொறிகளை இயக்குதற்குப் பயன்படுத்தப்படும் நீராற்றல்; Water-power. [நீர் + விசை.] |
நீர்விசைஉருளை | நீர்விசைஉருளை nīrvisaiuruḷai, பெ. (n.) நீர் விசையுருளை பார்க்க;see {nir-višai-urulai [நீர்விசை + உருளை.] |
நீர்விசையாலை | நீர்விசையாலை nīrvisaiyālai, பெ. (n.) நீரின் விசையாலியங்கும் ஆலை; a mil driven by water; water-mill. [நீர்விசை + ஆலை.] |
நீர்விசையியல் | நீர்விசையியல் nīrvisaiyiyal, பெ. (n.) நீர்விசையைப் பற்றிய பகுதி; hydraulics. [நீர் + விசை + இயல்.] |
நீர்விடுசிவிறி | நீர்விடுசிவிறி nīrviḍusiviṟi, பெ. (n.) நீர் தூவுந் துருத்தி பார்க்க;see {mir-tivபாturutti} [நீர் + விடு + சிவிறி] |
நீர்விட்டான் | நீர்விட்டான் nīrviṭṭāṉ, பெ. (n.) தண்ணீர் விட்டான் என்னும் கொடி (நாமதீப. 340.);; climbing asparagus. [நீர் + விட்டான்.] |
நீர்விட்டுப்போ-தல் | நீர்விட்டுப்போ-தல் nīrviṭṭuppōtal, 8 செ.கு.வி. (v.i.) 1. நீர்த்துப்போ-, (வின்.); பார்க்க;see {nirttu-p-pô-,} 2. பதனழிந்து சுவை கெடுதல் (யாழ்.அக.);; to become tasteless or spoiled, as boiled rice. 3. மிகுதியாக வியர்த்தல் (இ.வ.);; to perspire profusely, as in fever. [நீர் + விட்டுப்போ-,] |
நீர்விதை | நீர்விதை nīrvidai, பெ. (n.) நன்செய்ச் சாகுபடி (இ.வ.);; wet cultivation opp to podividai. [நீர் + விதை.] |
நீர்வியாதி | நீர்வியாதி nīrviyāti, பெ. (n.) 1. நீர்ச்சுரப்பு பார்க்க;see {mir-c-cபrappu} 2. நீரிழிவு பார்க்க;see {mir-isivu.} [நீர் + skt வியாதி.] |
நீர்விலை | நீர்விலை nīrvilai, பெ. (n.) நீருக்கான வரி; water cess. [நீர் + விலை.] |
நீர்விளவு | நீர்விளவு1 nīrviḷavudal, 5 செ.குன்றாவி. (v.t.) சரியான சூட்டிற்காக வெந்நீரோடு தண்ணீர் கலத்தல்; adding or mixing cold water with hot water. (சா.அக.);. [நீர் + விளாவு-. அள → அளவு → அளாவு → விளாவு. அளவுதல் = கலத்தல்.] நீர்விளவு2 nīrviḷavudal, 5 செ.குன்றாவி (v.t.) உணவு கொள்ளுமுன் உள்ளங்கையில் நீரையூற்றி உண்கலத்தைச் சுற்றிச் சிதற விடுதல்; to spread water around the plate dish or leaf with food before eat. [நீர் + விளாவு, வள் → வளை → விளை → விளா = வட்டம், சுற்று, கழனியில் ஒரு சுற்று உழவு. விளாவுதல் = சுற்றுதல்.] |
நீர்விளா | நீர்விளா nīrviḷā, பெ. (n.) 1. குட்டிவிளா; small wood apple tree-feronia elephantum. 2. மாவிலங்கை; water wood apple capparis nurvala. (சா.அக.);. [நீர் + விளா.] |
நீர்விளையாட்டு | நீர்விளையாட்டு nīrviḷaiyāṭṭu, பெ. (n.) நீச்சல் போட்டி; sporting in water. “விழவு நீர் விளையாட்டு விருப்பினால்” (சீவக. 856.);. [நீர் + விளையாட்டு.] |
நீர்விளைவமை | நீர்விளைவமை nīrviḷaivamai, பெ. (n.) உப்பு (சிந்தா.);; salt. (கதி.அக);. (சா.அக.);. [நீர் + விளைவமை. விளை → விளைவு → விளைவமை.] |
நீர்விழவு | நீர்விழவு nīrviḻvu, பெ. (n.) நீர்விளையாட்டு (சீவக. 856, உரை.);;பார்க்க;see {nir-wayättu} [நீர் விழவு.] |
நீர்விழு-தல் | நீர்விழு-தல் nīrviḻudal, 2 செ.குன்றாவி. (v.t.) மணியில் உள்ளொளி தங்குதல் (வின்.);; to be of good water, as gem, diamond. [நீர் + விழு-,] |
நீர்வீசுகருவி | நீர்வீசுகருவி nīrvīcugaruvi, பெ. (n.) நீர் விளையாட்டில் நீரை வீசுதற்கு உதவுங் கருவி (திவா.);; a squirt, used while sporting in Water. [நீர் + விசு + கருவி.] |
நீர்வீழ்ச்சி | நீர்வீழ்ச்சி nīrvīḻcci, பெ. (n.) மலையருவி (இக்.வ.);; water-fall. [நீர் + விழ்ச்சி.] |
நீர்வெக்கை | நீர்வெக்கை nīrvekkai, பெ. (n.) கால்நடைகளுக்கு வரும் நோய்; cattle disease. [நீர் + வெக்கை.] |
நீர்வெட்டி | நீர்வெட்டி nīrveṭṭi, பெ. (n.) நீரெட்டிமுத்து பார்க்க;see {mir-eff-muttu} [நீர் + வெட்டி.] |
நீர்வெட்டிக்கொட்டை | நீர்வெட்டிக்கொட்டை nīrveṭṭikkoṭṭai, பெ. (n.) நீர்வெட்டிமுத்து பார்க்க;see {mi-wellոսttu} (சா.அக.); [நீர்வெட்டி + கொட்டை.] |
நீர்வெட்டிமுத்து | நீர்வெட்டிமுத்து nīrveṭṭimuttu, பெ. (n.) பேயாமணக்கு; red physic nut, m.sh. baliospermum axillare. [நீர்வெட்டி + முத்து.] |
நீர்வெண்ணெய் | நீர்வெண்ணெய் nīrveṇīey, பெ. (n.) சுண்ணாம்பு நீர்த்தைலம் (C.E.M.);; liniment of lime. [நீர் + வெண்ணெய்.] |
நீர்வெள்ளி | நீர்வெள்ளி nīrveḷḷi, பெ. (n.) வெள்ளரிக் காய்; water cucumber, Common cucumber. cucumis sativus. (சா.அக.);. [நீர் + வெள்ளரி.] |
நீர்வெள்ளை | நீர்வெள்ளை nīrveḷḷai, பெ. (n.) எட்டு திங்களில் விளையும் நெல்வகை (cg.);; a kind of paddy that matures in eight months. [நீர் + வெள்ளை.] |
நீர்வேட்கை | நீர்வேட்கை nīrvēṭkai, பெ. (n.) நீர்விடாய் (திவா.);; thirst. “அங்ஙனம் அவள் போன பின்பு தாமரைப்பொதியுள் தான் அந்தவிடத்திற் குளிர்ந்த நீரைக்கொண்டு சென்று நீர்வேட்கை யான் வருத்தமுற்ற மடிந்தையது வருத்தத்தைத் தீர்த்தென்க” (சிலப். 11;201, உரை.);. [நீர் + வேட்கை.] |
நீர்வேட்டல் | நீர்வேட்டல் nīrvēṭṭal, தொ.பெ. (vbln.) நீர் வேட்கை பார்க்க;see {mir-Werkai.} (சா.அக.);. [நீர் + வேட்டல்.] |
நீர்வேணிப்பாசி | நீர்வேணிப்பாசி nīrvēṇippāci, பெ. (n.) கடற்பாசி; sea moss. (சா. அக.);. [நீரிவேணி + பாசி.] |
நீர்வேம்பு | நீர்வேம்பு nīrvēmbu, பெ. (n.) காளான்வகை (I.);; polypody fern family. [நீர் + வேம்பு.] |
நீர்வேலி | நீர்வேலி1 nīrvēli, பெ. (n.) 1. கிடங்கு; trench. “தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து நான் மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடல னென்போன்” (சிலப்.15;11.);. 2. ஏரிக்கரை; bond of a lake. “அறையும் பொறையு மாரிடை மயக்கமும் நிறை நீர் வேலியு முறைபடக் கிடந்த” (சிலப். 11;68.);. [நீர் + வேலி.] நீர்வேலி2 nīrvēli, பெ. (n.) யாழ்ப்பாணத்திலுள்ள ஓரூர்; a village in Jaffna, Ceylon. [நீர் + வேலி.] |
நீர்வேலிமூதூர் | நீர்வேலிமூதூர் nīrvēlimūtūr, பெ. (n.) சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள வளமிக்க பழைமையான ஊர்; olden willage with fertility. [நீர்வேலி + முது(மை); + ஊர்.] |
நீர்வேலியுத்தரம் | நீர்வேலியுத்தரம் nīrvēliyuttaram, பெ. (n.) சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு மாநிலம்; Northern state refered In {Siappatkâram,} “ஆங்கவ ரெதிர்கொள வந்நாடு கழிந்தாங் கோங்குநீர் வேலி யுத்தர மறீஇப் பகைப் புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப் பருந்தானை மறவோன்” (சிலப். 26;178.);. [நீர்வேலி + உத்தரம்.] |
நீர்வேலியுலகு | நீர்வேலியுலகு nīrvēliyulagu, பெ. (n.) கமடறசூழுலகு; the world sourrended with sea. “மாமழை போற்றுது மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற் கவனளிபோல் மேனின்று தான்சுரத்த லான்” (சிலப். 1;7.);. “ஒதங் கரை தவழ் நீர் வேலி யுலகினுள் வேதங் கரை கண்டான் வீற்றிருக்கும்- ஏதம் சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த விடுதடர் வேள்வி யகத்து” (பு.வெ.163.);. “வீங்கு நீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்காரணங் காத்த வுரவோன் யாரம்மானை.” (சிலப். 29;16.);. [நீர்வேலி + உலகு.] |
நீறடி-த்தல் | நீறடி-த்தல் nīṟaḍittal, 4 செ.கு.வி. (v.i.) சுண்ணாம்பு நீற்றில் தோய்த்த கயிற்றினால் கோடு போடுதல் (யாழ்.அக.);; to draw ornament figures on floor with a rope soaked in lime-water. [நீறு + அடி-,] |
நீறணிகடவுள் | நீறணிகடவுள் nīṟaṇigaḍavuḷ, பெ. (n.) நீறாடி (பிங்.); பார்க்க;see {nifāgi} [நீறு + அணி + கடவுள்.] |
நீறணிந்தோன் | நீறணிந்தோன் nīṟaṇindōṉ, பெ. (n.) நீறாடி (சூடா.); பார்க்க;see {nirādī} [நீறு + அணிந்தோன்.] |
நீறாகு-தல் | நீறாகு-தல் nīṟākudal, 7 செ.கு.வி. (v.i.) சாம்பலாய்ப் போதல்; to be burnt to ashes. “அசுரர்களை நீறாகும் படியாக நிருமித்துப் (திவ். திருவாய். 4, 8, 1.);. [நீறு + ஆகு-,] |
நீறாடி | நீறாடி nīṟāṭi, பெ. (n.) சிவன்; sivan, as wearing sacred ashes. “நீறாடி தான்காண மாட்டாத” (திவ். இயற். நான்முக. 27.);. மறுவ. நீறணிகடவுள், நீறணிந்தோன், நீறுபூசி. [நிறு + ஆடி.] |
நீறாடு | நீறாடு1 nīṟāṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) பொடியாக்குதல் (வின்.);; to reduce to ashes, bring to ruin. [நிறு + ஆடு-,] நீறாடு2 nīṟāṭudal, 7 செ.கு.வி. (v.i.) 1. திரு நீறணிதல்; to be smear one self with sacred ashes. 2. புழுதி படிதல்; to be covered with dust. [நிறு + ஆடு-,] |
நீறு | நீறு1 nīṟudal, 5 செ.கு.வி. (v.i.) 1. சுண்ணமாதல்; to become slaked, as lime. 2. சூரணமாதல்; to be turned to ashes or calcined, as metals or stones. “நீறியநீறு” (தணிகைப்பு. நாரத. 41.);. 3. அழிதல்; to perish, to be ruined. “பிணி செயும் வினைக ணீற” (விநாயகபு. நைமி. 3.);. ம. நீறுக [நூல் → நீள் → நீல் → நீர் → நிறு.] நீறு2 nīṟu, பெ. (n.) 1. சாம்பல்; ashes, dross of any substance after it has been burnt. “பொற்பாவாய் நீறாய் நிலத்து விளியரோ” (நாலடி, 266.);. 2. திருநீறு; sacred ashes. “மந்திரமாவது நீறு” (தேவா. 857.);. 3. புழுதி; dust. “அருவி துகளவிப்ப நீறடங்கு தெருவின்” (சிறுபாண். 201.);. 4. நீற்றின சுண்ணாம்பு; slaked line. ம., க., கெ. நீறு; பர். நித்;கோண். நீர் [நூல் → நீள் → நீல் → நிர் → நீறு] |
நீறுண்டி | நீறுண்டி nīṟuṇṭi, பெ. (n.) 1. தண்ணீர் விட்டான்; Water root-asparagus recemosus. 2. நன்னாரி வேர்; root of sarsaparilla [நீறு + உண்டி.] |
நீறுதரிக்கும்புதன்கிழமை | நீறுதரிக்கும்புதன்கிழமை nīṟudarikkumbudaṉkiḻmai, பெ. (n.) சாம்பலடிப் பெருநாள் (யாழ்ப்.);; ash wednesday. [நீறு தரிக்கும் + புதன் கிழமை.] புதன் என்பதற்கு அறிவன் என்பது தமிழ். |
நீறுதரித்தநெற்றி | நீறுதரித்தநெற்றி nīṟudariddaneṟṟi, பெ. (n.) திருநீறணிந்த நெற்றி; forehead with mark of sacred ash. [நீறு + தரித்த + நெற்றி.] |
நீறுபூ-த்தல் | நீறுபூ-த்தல் nīṟupūttal, 4 செ.கு.வி. (v.i.) 1. நன்றாய் நீறுதல்; to be slaked, as lime. சுண்ணாம்பு நீறு பூத்திருக்கிறது (உ.வ.);. 2. சாம்பனிறம் பிடித்தல்; to be covered with dirt, ashy coating. 3. உடலில் அழுக்குப் படிதல் (வின்.);; to be covered with dirt, as the body. [நீறு + பூ-,] |
நீறுபூசி | நீறுபூசி nīṟupūci, பெ. (n.) 1. நீறாடி பார்க்க see {mirad} 2. அருகசமயத்தவராயிருந்து சிவனியரான வேளாளவகையினர்; a sect of {vélalas} belived to be converts from Jainisim. 3. சிவத்தொண்டர்; canonized {Šaiva Saint.} [நீறு + பூசி.] |
நீறுபூத்தநெருப்பு | நீறுபூத்தநெருப்பு1 nīṟupūttaneruppu, பெ. (n.) சாம்பல் படிந்த கட்டைத் தணல்; live embers covered with ashes. நீறுபூத்தநெருப்பு1 nīṟupūttaneruppu, பெ. (n.) சினங் காட்டாதான் (பே.வ.);; person who conceals his anger. [நீறுபூத்த + நெருப்பு.] சினத்தைக் கனலும் நெருப்புக்கு உவமையாகவும், அச்சினத்தையடக்கியாளுந் தன்மைக்கு நீறுபூத்தலை உவமையாகவும் கொள்க. |
நீற்கண்டன் | நீற்கண்டன் nīṟkaṇṭaṉ, பெ. (n.) நீலகண்டன் பார்க்க;see {nila-kandan} [நீலகண்டன் → நீற்கண்டன்] நீலம் என்ற சொல் அம் ஈறு கெட்டு நீல் என நின்று ‘ல்’ , ‘ற்’ ஆயிற்று |
நீற்புப்பிழை | நீற்புப்பிழை nīṟpuppiḻai, பெ. (n.) எரி பொருள் எச்சம், ஆவியாக்கத்தில் மிச்சம்; residual error. கன்னெய் (பெட்ரோலியம்); பிரித்தெடுப்பின்போது நீற்புப்பிழையாக தார் கிடைக்கிறது. (உ.வ.);. [நீற்பு + பிழை.] |
நீற்றமுது | நீற்றமுது nīṟṟamudu, பெ. (n.) lime used With betel. [நீறு + அமுது.] சுண்ணாம்புக் கல்லைச் கட்டு நீறாக்கிச் சுண்ணாம்பாக்குவர் உண்ணத் தகுவன அனைத்தையும் அமு தென அழைப்பது மாலியர் வழக்கு. அவ் வகையில் சுண்ணாம்பு நீரும் அமுதெனப் பட்டது. |
நீற்றறை | நீற்றறை nīṟṟaṟai, பெ. (n.) சுண்ணாம்புக் காளவாய்; lime kiln. “நீற்றறை… மலர்ப் பொய்கையாக” ( பிரபுலிங். துதி. 9.);. [நீறு → நீற்று + அறை.] |
நீற்று | நீற்று1 nīṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நீறச் செய்தல்; to slake, as lime. 2. பொடியாக்குதல் (வின்.);; to reduce to ashes or powder. 3. கனிமங்களைப் பற்பமாக்குதல்; to calcine, as metals; to Calcinate. ம. நீற்றுக. [நீறு → நீற்று + தல்.] |
நீற்றுக்குட்டான் | நீற்றுக்குட்டான் nīṟṟukkuṭṭāṉ, பெ. (n.) கள்ளிறக்குவோன் பயன்படுத்தும் சிறிய சுண்ணாம்பு (யாழ்ப்.);; the small lime basket of a toddy drawer [நீறு → நீற்று + குட்டான்.] |
நீற்றுக்கோயில் | நீற்றுக்கோயில் nīṟṟukāyil, பெ. (n.) திருநீற்றுப்பை; bag for sacred ashes. “நீற்றுக்கோயி லுணீற்றை மென்கரத்தள்ளி” (திருவாலவா. 37, 57.);. [நிறு → நீற்று + கோயில்.] |
நீற்றுண்டவூமை | நீற்றுண்டவூமை nīṟṟuṇṭavūmai, பெ. (n.) முட்டை; egg. (சா.அக.);. |
நீற்றுண்டை | நீற்றுண்டை1 nīṟṟuṇṭai, பெ. (n.) நீற்றுருண்டை பார்க்க;see {mirய-பபndal} [நீறு → நீற்று + உருண்டை.] உருண்டை → உண்டை (கொச்சை.); நீற்றுண்டை2 nīṟṟuṇṭai, பெ. (n.) நீற்றுண்ட வூமை பார்க்க;see {mirunda-imal} (சா.அக.);. |
நீற்றுதல் | நீற்றுதல்2 nīṟṟudal, பெ. (n.) உலர்த்துதல், சாம்பலாக்குதல், பொடியாக்குதல்; calcinations. சுண்ணாம்புக் கல்லிருந்தும் கடல் சிப்பிகளி லிருந்தும் நீற்றுதல் முறையிலேயே சுண்ணாம் புப்பொடி பெறப்படுகிறது. (உ.வ.);. [நீறு → நீற்று] |
நீற்றுப்பாகம் | நீற்றுப்பாகம் nīṟṟuppākam, பெ. (n.) நீர் சோற்றுத் தண்ணீர் பார்க்க;see {mirru-ttaրոir} [நீர்ப்பாகம் → நீற்றுப்பாகம்.] |
நீற்றுப்பூசணி | நீற்றுப்பூசணி nīṟṟuppūcaṇi, பெ. (n.) கலியாணப்பூசணி; ash pumpkin or ash gourd-benincasa cerifera. (சா.அக.);. [நிறு → நிற்று + பூசணி. நிறு → சாம்பல்.] |
நீற்றுப்பூசணிக்குழம்பு | நீற்றுப்பூசணிக்குழம்பு nīṟṟuppūcaṇikkuḻmbu, பெ. (n.) கல்யாணப்பூசணி நெய்; a medicinal ghee, prepared with ash pumpkin as chief ingrediant. (சா. அக.);. [நீற்று + பூசணி + குழம்பு.] |
நீற்றுப்பெட்டி | நீற்றுப்பெட்டி1 nīṟṟuppeṭṭi, பெ. (n.) 1. பிட்டுசுடும் பெட்டி; basket in which the {pittu} pastry is cooked. 2. எண்ணெயூற்றுங் கூடை; a kind of basket in which the powdered mahwa or Other Seeds are kept while extracting oil. [நீறு + பெட்டி.] நீற்றுப்பெட்டி2 nīṟṟuppeṭṭi, பெ. (n.) திருநீறு வைக்கும் பெட்டி; casket of sacred ashes. [நீறு + பெட்டி.] |
நீற்றுமானம் | நீற்றுமானம் nīṟṟumāṉam, பெ. (n.) புடமிடுகை; calcination. “குழு முடித்து நீற்றுமானம் புரிய நேரறிவேன்” (பஞ்ச.திருமுக. 848.);. [நீறு → நீற்று + மானம்.] |
நீற்றுமுண்டி | நீற்றுமுண்டி nīṟṟumuṇṭi, பெ. (n.) திருநீறு அணிந்தவன்-ள் (திருவாலவா. 13, 14, உரை.);; one who wears marks of Sacred ashes. [நீறு → நீற்று + முண்டி.] |
நீற்றுருண்டை | நீற்றுருண்டை nīṟṟuruṇṭai, பெ. (n.) திருநீற்றுக்காக உருட்டி வைக்கும் சாணிவுருண்டை; cow dung ball for preparing sacred ashes. நீறு → நீற்று + உ ரு ண் டை → நீற்றுருண்டை.] |
நீலஒளி | நீலஒளி nīlaoḷi, பெ. (n.) நீல நிறம்; blue glow. [நீலம் + ஒளி.] |
நீலஒளிர்வு | நீலஒளிர்வு nīlaoḷirvu, பெ. (n.) நீலஒளி பார்க்க;see {nisa-off} [நீலம் + ஒளிர்வு.] |
நீலகண்டசிவாச்சாரியார் | நீலகண்டசிவாச்சாரியார் nīlagaṇṭasivāssāriyār, பெ. (n.) பிரமசூத்திரம் என்னும் நூலுக்குச் சிவபரமாக உரையெழுதியவர்; author of a {Šaiva} commentary of on {BrahmasUtra.} |
நீலகண்டனிலை | நீலகண்டனிலை nīlagaṇṭaṉilai, பெ. (n.) வெற்றிலை; betel leaf piper betle. (சா.அக.);. [நீலம் + கண்டன் + இலை.] |
நீலகண்டன் | நீலகண்டன் nīlagaṇṭaṉ, பெ. (n.) 1. சிவன் (திவா.);;{Śiva,} as having azure-coloured neck. “நீற்ற ரேற்ர் நீலகண்டர்” (தேவா.187.2.);. 2. நீலக்காரம் (மூ.அ.); பார்க்க;see {mia-kkāram} 3. முருங்கை; horse radish tree. 4. நஞ்சு; a prepared arsenic. [நீலம் + கண்டன்.] |
நீலகண்டபாடியம் | நீலகண்டபாடியம் nīlagaṇṭapāṭiyam, பெ. (n.) பிரமசூத்திரத்துக்கு நீலகண்ட சிவாச் சாரியார் இயற்றிய பேருரை; the {saiva} commentary on {Brahmasutra} by {Nilakandacivacariyur.} |
நீலகண்டமந்திரம் | நீலகண்டமந்திரம் nīlagaṇṭamandiram, பெ. (n.) சிவனிய மந்திரம்; a holy mandiram relating to {Śiva} (சா.அக.);. [நீலகண்டன் + மந்திரம்.] |
நீலகண்டம் | நீலகண்டம்1 nīlagaṇṭam, பெ. (n.) சிவ பெருமானுடைய நஞ்சு தங்கிய கண்டம்; neck of {Śivan,} as blue from poison. “சிவனெந்தை கண்டந்தன்னைத் திருநீல கண்டமென்பார்” (பெரியபு. திருநீல.4.);. “நீலமணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே” (புறநா.91.);. 2. மயில்; peacock as blue-throated. “நீல கண்டந் தம்போல் நிமலன் படைத்திருந்த கோலம்” (பூவண. உலா. 131.);. [நீலம் + கண்டம்.] நீலகண்டம்2 nīlagaṇṭam, பெ. (n.) 1. பெரு முள்ளங்கி; country raddish of a bigger variety-raphanus sativus. 2. காட்டுக்காடை; Indian Jay-coracias indica. (சா.அக.);. |
நீலகண்டவாலை | நீலகண்டவாலை nīlagaṇṭavālai, பெ. (n.) மருந்துவகை (இ.வ.);; a kind of medicine. [நீலகண்ட + வாலை.] |
நீலகண்டி | நீலகண்டி nīlagaṇṭi, பெ. (n.) 1. கொற்றவை;{korravai;} Durga. 2. பொல்லாதவள் (வின்.);; cruel woman. 3. பாம்பின் நச்சுப் பற்களு ளொன்று (வின்.);; a poison fang of a snake. [நீலம் + கண்டி.] |
நீலகந்தி | நீலகந்தி nīlagandi, பெ.(n.) கொற்றவைச் சிற்பத்தின் வேறு வடிவம்; a different posture of’korrawai Durga. [நீல+கந்தி] நீலகந்தி1 nīlagandi, பெ. (n.) நீலமலர், (குவளை, (சிலப்.14;182, உரை.);; a kind of blue flower. [நீலம் + கந்தி.] நீலகந்தி2 nīlagandi, பெ. (n.) மாணிக்கவகை (சிலப்.14;186,உரை.);; a kind of precious stone. |
நீலகமலம் | நீலகமலம் nīlagamalam, பெ. (n.) கருங்குவளை (மலை.);, blue nelumbo. [நீலம் + கமலம்.] |
நீலகம் | நீலகம் nīlagam, பெ. (n.) 1. காருப்பு; salt produced from sasamum seed. 2. துரிசு(1,2 வைத்திய பரிபா.);; fault. (கதி.அக.);. [நீலம் + அகம்.] |
நீலகாசம் | நீலகாசம் nīlakācam, பெ. (n.) கண்ணின் கருவிழியை பற்றிய கண்ணோய்; a disease relating to the black of the eye associated with the affection of the lens. (சா.அக.);. 2. கருவிழிநோய் வகை (வின்.);; a disease of the eye. |
நீலகாந்தி | நீலகாந்தி nīlakāndi, பெ. (n.) 1. ஒருவகை நீலப்பூ; a kind of azure blue flower. 2. நீலம்; sapphire. 3. நீலவொளி; blue brilliancy. 4. ஒருவகைக் கண்ணோய்; a kind of eye disease affecting the pupil. (சா.அக.);. |
நீலகாம்போதி | நீலகாம்போதி nīlakāmbōti, பெ. (n.) பண்வகை (பாரத நாக.பக்.103.);; a specific melody-type. [நீலம் + காம்போதி.] |
நீலகிரி | நீலகிரி nīlagiri, பெ. (n.) நீலமலை பார்க்க;see {mia-malai} “நீலகிரியி னெடும்புறத்திறுத்தாங்கு” (சிலப்.26;85.);. [நீலம் + கிரி. Skt. கிரி த. மலை நீலகேரி → நீலகிரி என்றுமாம். சேரி = சேர்ந்து வாழுமிடம். சேரி → கேரி.] |
நீலகிரிச்சண்பகம் | நீலகிரிச்சண்பகம் nīlagiriccaṇpagam, பெ. (n.) நீலமலைச்சண்பகம் பார்க்க;see {nlamalal-c-Canbagam} [நீலகிரி + சண்பகம். நீலமலை → நீலகிரி.] |
நீலகேசி | நீலகேசி nīlaāci, பெ. (n.) ஐஞ்சிறு காப்பியங்களுளொன்று; one of five small epic, {airijiru-kappiam.} [நீலம் → நீலகேசி.] இக்காப்பியத்தை நீலம் என்று வழங்கின ரென்பது, “தருக்கமாவன-ஏகாந்த வாதமும் அநேகாந்த வாதமுமென்பன. அவை, நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கியம் முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க” என வரும் யாப்பருங்கல விருத்தியின் குறிப்பாலறியலாம். இன்னும் யாப்பருங்கல விருத்தியிலேயே “சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிருதபதி என்பவற்றின் முதற்பாட்டு வண்ணத்தான் வருவன” என வரும் குறிப்பினால் நீலம், நீலகேசி என்னும் இருவகைப் பெயர்களால் அந்நூலாசிரியர் காலத்திலேயே வழங்கப் பட்டன என்பதும், சமய திவாகரர் வகுத்த இந்த நீலகேசியின் பழைய உரை நூலின்கண் சருக்கம்தோறும் இறுதியில் நீலகேசித்திரட்டு என்று இந்நூல் குறிப்பிடப்படுகின்றமையால் நீலகேசித்திரட்டு என்றும் வழங்கப்பட்டதென்று ணரலாம். இனி, இந் நூற்றலைவியாகிய நீலகேசியை நோக்கி அவள் ஆசிரியராகிய முனிச்சந்திரபட்டாரகர் “நங்காய்! இனி நீ கடல் நாட்டிற் சினவரன் நெறியே தெருட்டு” என்று பணிப்ப, நீலகேசியும் அப்பணி தலைமேற் கொண்டு பல நாட்டினும் சென்று அச்சினவரன் நெறியே தெருட்டுகின்றாள் ஆதலின் இந்நூல், தொடக்கத்தில் ‘நீலகேசித் தெருட்டு என வழங்கப்பட்டு நாளடைவில் தெருட்டு என்னும் சொல்லே திரட்டு என்று திரிந்துவழங்குவதாயிற்றென்று நினைத்திற்கும் இடமுண்டு. பெளத்த சமயத்தைச் சார்ந்த குண்டலகேசி ஆசிரியர் தம் பெருங்காப்பியத்துள் தமது சமயச் சிறப்பை உலகினர்க்குணர்த்தற் பொருட்டேயுமன்றி அக்காலத்தே ஆருகதர் தம் பெளத்த சமயத்தோடு இகலித் தமது சமயத்தைப் பரப்புவதில் பெரிதும் முனைந்திருந்தமையால் அவ் வாருகத சமயச் சான்றோர் கொள்கைகளைக் குற்றங்கூறி அச்சமயத்தை வீழ்த்துவதனையே சிறப்பான குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ரென்பதும் இந்நீலகேசி யாலறிய வருகின்றது. குண்டல கேசியின் பல கூற்றுகள் ஆருகத சமயக் கணக்கர்கள் உள்ளத்தைப் புண்படுத்து மளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தன வென்பதும், இவ்வாற்றால் மனம் புண்பட்ட இந்நீலகேசியின் ஆசிரியர் தாம் குண்டலகேசியின்கண் தமது ஆருகத சமயத்திற்குக் கூறப்பட்டிருந்த குற்றங்கட் கெல்லாம் தீர்வு காட்டுவதோடன்றி அப் பெளத்த சமயத்துக் கொள்கைகள் பெரிதும் குற்றமுடையனவென்று உலகினர்க்கு அம்பலப்படுத்தி, மேலும் தமது ஆருகத சமயமே சாலச்சிறந்த மெய்ச்சமயமாம் ஆதலால் இதன்கண் சேரவாரும் செகத்தீரே என்று அழைத்துத் தமது சமயத்தைப் பரப்ப வேண்டுமென்று கருதியவராய் நெடுநாள் நீள நினைத்து அக்கருத்தையெல்லாம் இந்நீலகேசி எனும் நூல்வழியாய்ப் பெரிதும் திறம்படவே செய்து நிறைவேற்றினாரென்பதும் தெரிய வருகின்றது. இவ்வாற்றால் இந்நூல் ‘பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் என வரும் திருக்குறட்குச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்ற தெனலாம். இனி, தெய்வப்புலவர் திருவள்ளுவனார் ‘கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்’ எனச் சொல்லிற்கு இலக்கணம் கூறிப் போந்தார். இக் குறட்பாவிலுள்ள கேளார் என்பதற்குப் பகைவர் என்பது பொருளாகும். பகைவரும் கேட்க விரும்பும் பெற்றிமை யுடையனவாகச் சொற்கள் அமைதல் வேண்டும் என்பது தெய்வப் புலவரின் கருத்தாகும். இந்நீலகேசி யாசிரியரின் சொல்வன்மை அத்தகையதே என்பது மிகையன்று. மேலும் இவர் செய்யுள் செய்வதினும் பேராற்றல் வாய்ந்தவர் என்பதனை இந்நூலிற் றிகழும் அவர்தம் செய்யுள்கள் நன்கு புலப்படுத்துகின்றன. மெய்யியல் (தத்துவ); நூல் பெரும்பாலும் கவையற்ற னவாகவே இருப்பதுதான் இயல்பு இப்புலவர் பெருமான் இத்தத்துவ நூலைப் பெருங் காப்பியத்திற்குரிய நகை முதலிய சுவையெல்லாம் கெழுமச் செய்திருக்கின்ற செயற்கைத் திறம் பெரிதும் போற்றற்பாலதாம். இத்தகைய சிறந்த நூலை யாத்தருளிய நல்லிசைப் பெரும் புலவர் யாவர், எவ்வூரினர், எந்நாட்டினர், எக்காலத்தினர் அவர்பெயர் யாதென்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் விடை யிறுத்தலளிதாம். |
நீலகேசித்திரட்டு | நீலகேசித்திரட்டு nīlaācittiraṭṭu, பெ. (n.) நீலகேசி பார்க்க;see {milakesi} [நீலகேசி + திரட்டு.] |
நீலகேசித்தெருட்டு | நீலகேசித்தெருட்டு nīlaācitteruṭṭu, பெ. (n.) நீலகேசி பார்க்க;see {milakesi} [நீலகேசி + தெருட்டு திரட்டு → தெருட்டு.] |
நீலக்கச்சு | நீலக்கச்சு nīlakkaccu, பெ. (n.) நீலநிறத்துணி; blue Cloth. “நிறங்கவர்பு புனைந்த நீலக்கச்சினர் மென்னூ லேணிப் பன்மாண் சுற்றினர் நிலனகழுளியர் கலனசைஇக் கொட்கும் கண்மாறாடவ ரொடுக்க மொற்றி” (மதுரைக்.639-42.);. [நீலம் + கச்சு.] |
நீலக்கச்சை | நீலக்கச்சை nīlakkaccai, பெ. (n.) நீலநிறத்துணி; blue Cloth. “நீலக்கச்சைப் பூவாராடைப் பலிக்கண்ணிப் பெருந்தகை மறவன்” (புறநா.274.);. [நீலம் + கச்சை.] |
நீலக்கடம்பை | நீலக்கடம்பை1 nīlakkaḍambai, பெ. (n.) நீலநெல்லி; lowly nelly madras phyllanthus. (சா.அக.);. [நீலம் + கடம்பை.] நீலக்கடம்பை2 nīlakkaḍambai, பெ. (n.) பூலா என்னுஞ் செடி வகை; a common weed. black-berried feather foil. [நீலம் + கடம்பை.] |
நீலக்கடிப்பிணை | நீலக்கடிப்பிணை nīlakkaḍippiṇai, பெ. (n.) குதம்பை போல்வதோர் அணி (சீவக நாமக. 266,உரை.); (கதி.அக.);; an ornament like gudambai. [நீலம் + கடிப்பு + இணை.] |
நீலக்கத்திரி | நீலக்கத்திரி1 nīlakkattiri, பெ. (n.) வழுதுணை வகை; New York purple brinjal. (சா.அக.);. [நீலம் + கத்தரி.] நீலக்கத்திரி2 nīlakkattiri, பெ. (n.) நீலக்கத்தரி பார்க்க;see {nila-k-kattari} நீலக்கத்தரி → நீலக்கத்திரி. (கொ.வ.);. |
நீலக்கபித்தம் | நீலக்கபித்தம் nīlakkabittam, பெ. (n.) மாங்காய்; mango mangifera indica. (சா.அக.);. |
நீலக்கல் | நீலக்கல் nīlakkal, பெ. (n.) நீலமணி; Sapphire. [நீலம் + கல்.] |
நீலக்களக்கட்டான் | நீலக்களக்கட்டான் nīlakkaḷakkaṭṭāṉ, பெ. (n.) ஒருவகை பூண்டு; a kind of plant. [நீலம் + களம் + கட்டான்.] |
நீலக்களிள் | நீலக்களிள் nīlakkaḷiḷ, பெ. (n.) அறுகோணக்கள்ளி; six angled torch lightcercus hexagonus. (சா.அக.);. [நீலம் + கள்ளி.] |
நீலக்காக்கட்டான் | நீலக்காக்கட்டான் nīlakkākkaṭṭāṉ, பெ. (n.) நீலக்காக்கணம் பார்க்க;see {ni’a-k-käkkanam} [நீலம் + கா + கட்டான்.] |
நீலக்காக்கணம் | நீலக்காக்கணம் nīlakkākkaṇam, பெ. (n.) காக்கணங்கொடி வகை; mussell-shell creeper. [நீலம் + காக்கனம்.] |
நீலக்காரம் | நீலக்காரம் nīlakkāram, பெ. (n.) துரிசு (யாழ்.அக.);; blue vitriol, verdigris. [நீலம் + காரம்.] |
நீலக்காலி | நீலக்காலி1 nīlakkāli, பெ. (n.) அவுரி (வின்.);; common indigo. [நீலம் + காலி.] நீலக்காலி2 nīlakkāli, பெ. (n.) நண்டுவகை (யாழ்.அக.);; a kind of crab. [நீல + காலி.] |
நீலக்காலிநண்டு | நீலக்காலிநண்டு nīlakkālinaṇṭu, பெ. (n.) நீலக்காலி 2 (வின்.); பார்க்க;see {mia-k-kal} [நீலம் + காலி + நண்டு.] |
நீலக்குடி | நீலக்குடி nīlakkuḍi, பெ. (n.) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுர்; a willage in Tanjavur dt. “கல்லினோடெனைப் பூட்டியமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கி வென் வாக்கினால் நெல்லு நீள் வயனீலக் குடியரன் நல்ல நாம நவிற்றி யுய்ந்தேனன்றே” (அப்பர்.18-7.);. [நீலம் + குடி.] ‘நீலகண்டன் குடி’ யெனச் சுட்டப்பட்டுப் பின்னர் நீலன்குடி ஆகி. பின்னர் நீலக்குடியெனத் திரிந்தது. பின்னர் இன்றைய ‘தென்னலக்குடி’ என்று திசையைக் குறித்து அழைக்கப்படுகிறது. |
நீலக்குதம்பை | நீலக்குதம்பை nīlakkudambai, பெ. (n.) காதணி வகை. a kind of ear’s ornament “முகப்பிற்கட்டின. இந்திரநீலத்திடையிடையே பயிலக்கட்டின வயிரங்களால் அழகுபெற்ற நீலக்குதம்பையை வடிந்த காதினிடத்தே அழகு மிகும்படி அணிந்தென்க” (சிலப்.6;103,உரை.);. [நீலம் + குதம்பை.] |
நீலக்குமிழ் | நீலக்குமிழ் nīlakkumiḻ, பெ. (n.) குமிழ்க் கொடி; small cashmere tree – gmelina asiatica alias gordonia obtrosa. (சா.அக.);. [நீலம் + குமிழ்.] |
நீலக்குருத்து | நீலக்குருத்து nīlakkuruttu, பெ. (n.) மூவிலைக்குருத்து; three leaved wild limeTrichilia spinosa. (சா.அக.);. [நீலம் + குருத்து.] |
நீலக்கொடி | நீலக்கொடி nīlakkoḍi, பெ. (n.) கருங்குவளை; blue Indian water lily, blue nelumbo – monochoria vaginalis. (சா.அக.);. [நீலம் + கொடி.] |
நீலக்கொடிவேலி | நீலக்கொடிவேலி nīlakkoḍivēli, பெ. (n.) நீலசித்திரமூலம்; blue flowered lead wortplum bago-capensis. [நீலம் + கொடிவேலி.] |
நீலக்கொடுவேலி | நீலக்கொடுவேலி nīlakkoḍuvēli, பெ. (n.) கொடுவேலிவகை; blue-flowered leadwort. [நீலம் + கொடுவேலி.] |
நீலக்கொண்டி | நீலக்கொண்டி nīlakkoṇṭi, பெ. (n.) புல்லா மணக்கு; creeper ammanac small castor plant – secastiana chamaciea. (சா.அக.);. [நீலம் + கொண்டி.] |
நீலக்கொழுந்து | நீலக்கொழுந்து nīlakkoḻundu, பெ. (n.) மாழையை யுருக்கும் பொழுது நெருப்பில் காணப்படும் நீல வெளிச்சம்; a blue glow found when melting metals (சா.அக.);. [நீலம் + கொழுந்து.] |
நீலக்கோலன் | நீலக்கோலன் nīlakālaṉ, பெ. (n.) காமன் (நாமதீப. 59.);; cupid. [நீலம் + கோலன்.] |
நீலங்கட்டு-தல் | நீலங்கட்டு-தல் nīlaṅgaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நீலச்சாயந் தோய்த்தல் (வின்.);; to dye a cloth with indigo. 2. பொய் கற்பித்தல் (யாழ்ப்);; to invent a lie. [நீலம் + கட்டு-,] |
நீலங்கம் | நீலங்கம் nīlaṅgam, பெ. (n.) வாழைவகை (G.sm, D.l.i,215.);; a kind of plantain. |
நீலச்சம்பா | நீலச்சம்பா nīlaccambā, பெ. (n.) நீலநெல்(இ.வ.); பார்க்க;see {nilane} [நீலம் + சம்பா.] |
நீலச்சால் | நீலச்சால் nīlaccāl, பெ. (n.) நீலச்சாயம் ஊறவைக்கும் சால்; the pot or jar in which indigo dye is kept. [நீலம் + சால்.] |
நீலச்சிகை | நீலச்சிகை nīlaccigai, பெ. (n.) நீலச் சிகைப்பூடு; blue crest plant-plumpego zeylanica. (சா.அக.);. [நீலம் + சிகை.] |
நீலச்சித்திரமூலம் | நீலச்சித்திரமூலம் nīlaccittiramūlam, பெ. (n.) நீலக்கொடிவேலி பார்க்க;see {miak-kog/vēli} (சா.அக.);. [நீலம் + சித்திரமூலம்.] |
நீலச்சுறா | நீலச்சுறா nīlaccuṟā, பெ. (n.) சுறாமீன்வகை; a kind of sea-fish. “நீச்சுறா பிறழ்வ போன்ற” (களவழி.9.);. |
நீலச்சூலி | நீலச்சூலி nīlaccūli, பெ. (n.) நீலக்குருத்து பார்க்க;see {nila-k-kuruttu} (சா.அக.);. [நீலம் + சூலி.] |
நீலச்செடி | நீலச்செடி nīlacceḍi, பெ. (n.) சேங்கொட்டை மரம்; marking nut tree. [நீலம் + செடி..] |
நீலச்செம்முள்ளி | நீலச்செம்முள்ளி nīlaccemmuḷḷi, பெ. (n.) 1. வெள்ளை நீலாம்பரம் (A.);; crested purple nail dye. 2. செடிவகை; Shining sepalled blue nail dye. [நீலம் + செம்முள்ளி.] |
நீலஞ்சம்பா | நீலஞ்சம்பா nīlañjambā, பெ. (n.) காஞ்சிபுரம் மாவட்டத்தில் விளையுஞ் சம்பா நெல்வகை; a kind of {campa} paddy, raised in the Kanjeepuram district. [நீலம் + சம்பா.] |
நீலஞ்சூத்திரன் | நீலஞ்சூத்திரன் nīlañjūttiraṉ, பெ. (n.) ஒன்பான் மணியுளொன்று; a kind of white stone – lupis lazuli. (சா.அக.);. |
நீலஞ்சோதி | நீலஞ்சோதி nīlañjōti, பெ. (n.) 1. திருகு கள்ளிவேர்; the root of the twisting spuoge tree. 2. இருளில் ஒளிரும் மரம்; a tree luminous in the dark. 3. கற்பவகையிலொன்று; one of the classified rejuvenating drugs. 4. புல்லூரி; a parasitic plant. Loranthus genus. |
நீலதரு | நீலதரு nīladaru, பெ. (n.) தென்னை (மூ.அ.);; Common cocoanut. [நீலம் + தரு.] |
நீலத்தாமரை | நீலத்தாமரை nīlattāmarai, பெ. (n.) கருங் குவளை; blue nelumboo. [நீலம் + தாமரை.] |
நீலத்திருவாத்தி | நீலத்திருவாத்தி nīlattiruvātti, பெ. (n.) மந்தாரை (இ.வ.);; purple mountain ebony. [நீலம் + திருவாத்தி.] |
நீலத்தொட்டி | நீலத்தொட்டி nīlattoṭṭi, பெ. (n.) பார்க்க;see {nila-c-cā} [நீலம் + தொட்டி.] |
நீலநாகம் | நீலநாகம் nīlanākam, பெ. (n.) கருநாகம்; cobra. “நீலநாகம் பைவிரித்தன்ன” (பெருங். இலாவாண.15;142.);. [நீலம் + நாகம்.] |
நீலநாரை | நீலநாரை nīlanārai, பெ. (n.) நாரைவகை (M.M. 907.);; Indian bastard. [நீலம் + நாரை.] |
நீலநிர்க்குண்டி | நீலநிர்க்குண்டி nīlanirkkuṇṭi, பெ. (n.) நீல நொச்சி; blue notchy-justica gendarussa. (சா.அக.);. [நீலம் + நிர்க்குண்டி.] |
நீலநெல் | நீலநெல் nīlanel, பெ. (n.) கார்நெல், a kind of paddy. ‘நீலநெல்லரி கூலிகொண் டுண்ணுநாள்’ (பெரியபு. அரிவாட். 10.);. [நீலம் + நெல்.] |
நீலநொச்சி | நீலநொச்சி nīlanocci, பெ. (n.) நீல நிர்க்குண்டி பார்க்க;see {mia-mirkkumai,} (சா.அக.);. [நீலம் + நொச்சி.] |
நீலந்தன் | நீலந்தன் nīlandaṉ, பெ. (n.) பாணன் (அக.நி.);; bard. |
நீலந்தீர்-தல் | நீலந்தீர்-தல் nīlandīrtal, 4 செ.கு.வி. (v.i.) நீலச் சாயந் தோய்தல் (யாழ்.அக.);; to be dyed or tinged with indigo. [நீலம் + தீர்-,] |
நீலன் | நீலன்1 nīlaṉ, பெ. (n.) 1. காரி (திவா.);; Saturn 2. கொடியவன்; wicked person. “நிவர்த் தியவை வேண்டு மிந்த நீலனுக்கே” (தாயு. பன்மாலை. 6.);. 3. குரங்கு வீரன் (கம்பரா. தானை. 8.);; a monkey chief in Rama’s army. 4. குதிரைவகை (அசுவசா.);; a horse with particular marks. 5. மாங்கனி வகை (இ.வ.);; a variety of mango. நீலன்2 nīlaṉ, பெ. (n.) 1. கருங்குரங்கு; blue black monkey. 2. துருசு; blue vitriol. 3. கரு நெல்லி; blue black gooseberry. (சா. அக.);. நீலம்→நீலன். |
நீலன்சம்பா | நீலன்சம்பா nīlaṉcambā, பெ. (n.) நீலஞ் சம்பா பார்க்க;see {nilañ-jambā.} [நீலன் + சம்பா.] |
நீலப்படாம் | நீலப்படாம் nīlappaṭām, பெ. (n.) இருள் (சிலப்.5;4, உரை.);; darkness. [நீலம் + படாம்.] |
நீலப்பணி | நீலப்பணி nīlappaṇi, பெ. (n.) நீலச்சாய மிடுந் தொழில்; work of dyeing with indigo. [நீலம் + பணி.] |
நீலப்பறவை | நீலப்பறவை nīlappaṟavai, பெ. (n.) மயில்; peacock, as blue coloured. “நீலப் பறவைமே னேரிழை தன்னொடும்” (சிலப். 24.15.);. [நீலம் + பறவை.] |
நீலப்பிசின் | நீலப்பிசின் nīlappisiṉ, பெ. (n.) கற்பூரமரம்; Camphor tree, blue gum-eucalyptus genus. (சா.அக.);. [நீலம் + பிசின்.] |
நீலப்புகார் | நீலப்புகார் nīlappukār, பெ. (n.) அழுத்தமாகப் படியாத நீலச் சாயம் (வின்.);; faint blue-dye. [நீலம் + புகார்.] |
நீலப்புடவை | நீலப்புடவை nīlappuḍavai, பெ. (n.) நீலப்புடைவை பார்க்க;see {mia-p-pudalvi} [நீலம் + புடவை.] |
நீலப்புடைவை | நீலப்புடைவை nīlappuḍaivai, பெ. (n.) காங்குச்சீலை (வின்.);; blue saree. [நீலம் + புடைவை.] |
நீலப்புறா | நீலப்புறா nīlappuṟā, பெ. (n.) கோயிற் புறா; blue rock pigeon-colomba intermedia. (சா.அக.);. [நீலம் + புறா.] |
நீலப்பைங்குடம் | நீலப்பைங்குடம் nīlappaiṅguḍam, பெ. (n.) பச்சைக்குப்பி; blue green jar. “நீலப் பைங்குடந் தொலைச்சி” (பெரும்பாண். 382.);. [நீலம் + பை + குடம்.] |
நீலப்பைஞ்சுனை | நீலப்பைஞ்சுனை nīlappaiñjuṉai, பெ. (n.) நீலப் பூவினையுடைய பசிய சுனை; blue flowered spring. “நிவந்த போல் இமயத்து நீலப் பைஞ்சுனை”. (பரிபா. 5;47.);. [நீலம் + பை + சுனை.] |
நீலப்பைம்போது | நீலப்பைம்போது nīlappaimbōtu, பெ. (n.) நீலமாகிய பசிய மலர்; blue-green flower. ‘வாராராயினும் வரினும் அவர்நமக்கு யாராகியரோ தோழி நீர நீலம்பைப்போ துளிப் புதல” (குறுந்.110.);. [நீலம் + பைம்போது நீலம் = கருங்குவளை.] |
நீலப்போது | நீலப்போது nīlappōtu, பெ. (n.) குவளை மலர்; nelumbo flower. “மாதரார் கண்ணு மதிநிழனீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப் போது மறியாது வண்டூச லாடும் புகரே யெம்மூர்” (சிலப்.6;6.);. [நீலம் + போது] |
நீலமணல் | நீலமணல் nīlamaṇal, பெ. (n.) கருமணல்; black sand. (சா.அக.);. [நீலம் + மணல்.] |
நீலமணி | நீலமணி1 nīlamaṇi, பெ. (n.) பனைமரம் (வைத்தியபரிபா.);; palmyra tree. [நீலம் + மணி.] நீலமணி2 nīlamaṇi, பெ. (n.) 1. நீலம் பார்க்க;see {miam} “நீலமணி மிடற்றொருவன்” (புறநா.91.);. 2. கருவிழி (வின்.);; pupil of the eye. 3. தென்னை (சங்.அக.);; cocoanut tree. [நீலம் + மணி.] |
நீலமணிகாசம் | நீலமணிகாசம் nīlamaṇikācam, பெ. (n.) நீலகாசம் பார்க்க;see {mia-kasam} (சா.அக.);. [நீலம் + மணிகாசம்.] |
நீலமணிவண்ணன் | நீலமணிவண்ணன் nīlamaṇivaṇṇaṉ, திருமால் (சிலப்.6;54 உரை.); God {Tirumal} [நீலம் + மணி + வண்ணன்.] |
நீலமணிவோன் | நீலமணிவோன் nīlamaṇivōṉ, பெ. (n.) முருகக்கடவுள் (நாமதீப.32.; Lord {Murugan.} {நீலம் + அணிவோன்.} |
நீலமண்டலம் | நீலமண்டலம்1 nīlamaṇṭalam, பெ. (n.) சிற்றீந்து (சங்.அக.);; dwarf wild date-palm. [நீலம் + மண்டலம்.] நீலமண்டலம்2 nīlamaṇṭalam, பெ. (n.) சிற்றீச்சை; small date fruit-phoenix farinifera. (சா.அக.);. [நீலம் + மண்டலம்.] மண்டிலம் → மண்டலம். |
நீலமந்தி | நீலமந்தி nīlamandi, பெ. (n.) கருங்குரங்கு; black monkey -macacus {silenus.} (சா.அக.);. [நீலம் + மந்தி.] |
நீலமருந்து | நீலமருந்து nīlamarundu, பெ. (n.) அவுரி (மலை.);; indigo. [நீலம் + மருந்து.] |
நீலமலிக்கம் | நீலமலிக்கம் nīlamalikkam, பெ. (n.) வில்வம்; bael fruittree – crataeva religiosa (சா.அக.);. |
நீலமலை | நீலமலை nīlamalai, பெ. (n.) கோயம்புத்துருக்கு அருகில் உள்ள நீண்ட மலைத்தொடர்; a hill station near Coimbatore. [நீலம் + மலை.] |
நீலமலைச்சண்பகம் | நீலமலைச்சண்பகம் nīlamalaiccaṇpagam, பெ. (n.) நீல மலையிலுண்டாகும் பெரிய மரம்; white stalked fruited tulip tree of The Nilgris. [நீலமலை + சண்பகம்.] |
நீலமலைத்தொடர் | நீலமலைத்தொடர் nīlamalaittoḍar, பெ. (n.) நீலமலை பார்க்க;see {mia-malai} [நீலமலை + தொடர்.] |
நீலமல்லிகை | நீலமல்லிகை nīlamalligai, பெ. (n.) 1. நீலமலிக்கம் பார்க்க;see {nilamalikkam} 2. நீலநிற மல்லிகை; blue jasmine-agle marmelos. (சா.அக.);. [நீலம் + மல்லிகை.] |
நீலமாதகம் | நீலமாதகம் nīlamātagam, பெ. (n.) கையாந்த கரை; eclipse plant. eclypta-prostrata. (சா.அக.);. |
நீலமார்க்கம் | நீலமார்க்கம் nīlamārkkam, பெ. (n.) கையாந்தகரை; eclipse plant-eclypta prostrata. (சா.அக.);. [நீல + மார்க்கம்.] |
நீலமீலிகை | நீலமீலிகை nīlamīligai, பெ. (n.) மின்மினிப்பூச்சி (யாழ்.அக.);; fire fly. [நீலம் + மீலிகை.] |
நீலமுள்ளி | நீலமுள்ளி nīlamuḷḷi, பெ. (n.) செடிவகை (c.);; fragrant sky bule. [நீலம் + முள்ளி.] |
நீலமெடு-த்தல் | நீலமெடு-த்தல் nīlameḍuttal, 4 செ.கு.வி. (v.i.) அவுரியிலிருந்து நீலச்சாயம் உண்டாக்குதல்; to extract blue dye from the indigo. [நீலம் + எடு-,] |
நீலமென்சிறை | நீலமென்சிறை nīlameṉciṟai, பெ. (n.) நீலநிறமுடைய மெல்லிய சிறகு; blue-coloured feather. “நீலமென்சிறை வள்ளுகிர்ப் பறவை நெல்லியம்புளிமாந்தியயலது முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும்” (குறுந். 201.);. [நீலம் + மென்சிறை] |
நீலமேகநோய் | நீலமேகநோய் nīlamēkanōy, பெ. (n.) குருதி யோட்டக் குறைவினாலும் குருதி தூய்மைப் படாமையாலும் உடலை நீலநிறமாகச் செய்யும் நோய்; a disease in which the body is rendered blue or has a blue tint arising either from imperfect circulation of the blood or due in sufficient oxygenation of the blood-cyanosis, blue disease.(சா.அக.);. |
நீலமேகன் | நீலமேகன் nīlamēkaṉ, பெ. (n.) நீலமேனியன், 1.பார்க்க;see {ni’améniyan} [நீலம் + மேகன்.] |
நீலமேகம் | நீலமேகம்1 nīlamēkam, பெ. (n.) கார்முகில்; dark clouds. “நீலமேக நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல” (சிலப். 11;35.);. [நீலம் + மேகம்.] நீலமேகம்2 nīlamēkam, பெ. (n.) நீலமேக நோய் பார்க்க;see {nỉla-mẽga – nõi} (சா.அக.);. [நீலம் + மேகம். மேகம் = மேகநோய்.] |
நீலமேகரோகம் | நீலமேகரோகம் nīlamēkarōkam, பெ. (n.) நீலமேகம்2 பார்க்க;see {nilamēgam} |
நீலமேனிநெடியோன் | நீலமேனிநெடியோன் nīlamēṉineḍiyōṉ, பெ. (n.) Tirumal. “வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும்” (சிலப். 5.171.);. [நீலம் + மேனி + நெடியோன்.] |
நீலமேனியன் | நீலமேனியன் nīlamēṉiyaṉ, பெ. (n.) 1. திருமால்;{Tirumal,} 2. நீலக்காரம் பார்க்க;see {nila-k-kāram} [நீலம் + மேனியன்.] |
நீலம் | நீலம்1 nīlam, பெ. (n.) நீலமல்ர்; nelumboflower. “ஊதை யவிழ்த்த வுடையிதழ் ஒண்ணீலம்” (பரிபா.11;22.);. நீலம்2 nīlam, பெ. (n.) தருப்பைப்புல், நாணல்; kaus the sacred grass. “நீவந்தோங் கிமயத்து நீலப்பைஞ்சுனை” (பரிபா.5;47.);. நீலம்3 nīlam, பெ. (n.) 1. நீலநிறம் (திவா.);; blue azure or purple colour. 2. நீலச்சாயம்; blue die, indigo. 3. தொன்மணியு ளொன்று (பிங்.);; Sapphire. 4. மாணிக்க வகை; a kind of gem. “பதுமமு நீலமும்” (சிலப்.14;186.);. 5. ஒன்பது செல்வத்துளொன்று; one of the nine treatise of {Kuběra.} (நாமதீப.387.);; 6. கருப்பு (திவா.);, black colour. 7. இருள் (திவா.);. darkness. 8. கருங்குவடிள (திவா.);; blue melumbo, “நீலமொடு நெய்த னிகர்க்குந் தண்டுறை யூரன்” (ஐங்குறு.2.);. 9. நீல ஆடை; blue Cloth. “பூக்கரை நீலந் தழீஇ” (கலித்.15.);. 10. நஞ்சு; poison. “நீரேறு மேனியார் நீல முண்டார்” (தேவா.226.9.);. 11. மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப் படிக அடை (மூ.அ.);; verdigris. 12. கண்ணிலிடும் மை; collyrium. “நீல மிட்டகண் மடவியர் மயக்கால்” (அருட்பா.ii.கருணைபெறாதிரங்.7.);. 13. நீலமலை1 (பிங்.); பார்க்க;see {mia-malai} 14. பனைமரம் (அக.நி.);; palmyra tree. 15. பழைய காசு வகை (நேமிநா. சொல்.10.உரை.);; an old coin. [நிழல்=சாயல், இருட்டு, நிழல் → நிழ் → நீல் → நீலம். நீர் → நீல் → நீலம் = கடலின் நிறம்.] {‘nila’,} of a dark colour; dark blue or black; darkness. Gt. (p.522); gives {nila} the meaning of ‘shade’ and compares {D nelal (nilal);} (KKEDXXVIII);. நீலம்4 nīlam, பெ. (n.) நீலகேசி என்னும் பாவியம் (காப்பியம்);; the epic {Nilakéši.} “தருக்கமாவன ஏகாந்தவாதமும் அநேகாந்த வாதமும் என்பன. அவை நீலம், பிங்கலம், அஞ்சனம் தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க” (யாப்.விருத். உரை.);. நீலம்8 nīlam, பெ. (n.) laundering blue. |
நீலம்பற்றவை | நீலம்பற்றவை2 nīlambaṟṟavaittal, 4 செ.கு.வி. (v.i.) ஆடைக்கு நீலமேற்றுதல்; to dye a cloth with blue. [நீலம் + பற்றவை-,] |
நீலம்பற்றவை-த்தல் | நீலம்பற்றவை-த்தல்1 nīlambaṟṟavaittal, 4 செ.கு.வி. (v.i.) கதைகட்டுதல்; to fabricate a story. [நீலம் + பற்றவை-,] துணிக்குச் சாயமேற்றுவதைப் போல கதை கட்டி விடுதல். |
நீலம்பாரி-த்தல் | நீலம்பாரி-த்தல் nīlambārittal, 4 செ.கு.வி. (v.i.) நச்சுயிரி தீண்டலால் உடம்பு நீலநிறமாதல் (இ.வ.);; to become blue, as the face or eyes by poisonous bites. 2. இருளடைதல் (வின்.);; to be darkened as the earth in an eclipse. [நீலம் + பாரி.] |
நீலம்பாலை | நீலம்பாலை nīlambālai, பெ. (n.) வெட்பாலை மரம் (L.);; ivory tree. |
நீலம்பாவி-த்தல் | நீலம்பாவி-த்தல் nīlambāvittal, 4 செ.கு.வி. (v.i.) நீலம்பாரி-(நெல்லை.); பார்க்க;see {miampāri} [நீலம் + பாவி பாவு = பரவு பாவு → பாவி.] |
நீலம்பிடிபடு-தல் | நீலம்பிடிபடு-தல் nīlambiḍibaḍudal, 20 செ.கு.வி. (v.i.) கைகூடாமற் போதல்; to be impossible of accomplishment. [நீலம் + பிடி + படு-,] |
நீலம்பூரி-த்தல் | நீலம்பூரி-த்தல் nīlambūrittal, 4 செ.கு.வி. (v.i.) நீலம் பாரி-த்தல் பார்க்க;see {miam-par} [நீலம் + பூரி.] |
நீலயானை | நீலயானை nīlayāṉai, பெ. (n.) இரவு; night “மாலை நெற்றி வான்பிறைக் கோட்டுநீல யானை மேலோர் இன்றி” (மணிமே. 19;19.);. |
நீலரோகம் | நீலரோகம் nīlarōkam, பெ. (n.) நீலமேகம் பார்க்க;see {nila-mégam.} [நீல + ரோகம்.] |
நீலர் | நீலர் nīlar, பெ. (n.) அரக்கர் (நாமதீப. 73.); {rāksasas.} [நீலம்→நீலர்.] |
நீலலோகிதம் | நீலலோகிதம் nīlalōkidam, பெ. (n.) ஏகாதசருத்திரருள் ஒருவர் (திவா.);; a rudra one of {ékātaca-rutti-rar.} “கருமையும் செம்மையும் கலந்த வடிவம் சோதியுணீலலோகித நிலவு மேருவைப் போலு மிக்கதோர் புருடனிற்பதே” (சேதுபு. சிவதீர். 74.); (கதி.அக.);. [நீலம் + லோகிதம்.] |
நீலல்லி | நீலல்லி nīlalli, பெ. (n.) நீலவல்லி (இ.வ. பார்க்க;see {nila-v-a/} [நீலம் + அல்லி.] |
நீலவண்ணன் | நீலவண்ணன் nīlavaṇṇaṉ, பெ. (n.) 1. திருமால்;{Tirumål.} 2. காரி; Saturn. [நீலம் + வண்ணன்.] |
நீலவண்ணம் | நீலவண்ணம் nīlavaṇṇam, பெ. (n.) 1. நீல நிறம்; blue colour. 2. நீலச்சாயம் (வின்.);; blue dye 3. தீப்பொழியும் முகில் (பிங்.);; a cloud which rains fire. [நீலம் + வண்ணம்.] |
நீலவண்ணான் | நீலவண்ணான் nīlavaṇṇāṉ, பெ. (n.) சாயக்காரன் (வின்.);; dyer. [நீலம் + வண்ணம் + ஆன்.] |
நீலவல்லி | நீலவல்லி nīlavalli, பெ. (n.) கருநெய்தல்; blue Indian water-lilly. [நீலம் + அல்லி.] |
நீலவல்லிக்கிழங்கு | நீலவல்லிக்கிழங்கு nīlavallikkiḻṅgu, பெ. (n.) நீல அல்லிக்கிழங்கு; bulb of nymphae stellata. (சா.அக.);. [நீல + அல்லி + கிழங்கு.] |
நீலவழுதலை | நீலவழுதலை nīlavaḻudalai, பெ. (n.) நீலக் கத்தரி பார்க்க;see {nila-k-kattari} [நீலம் + வழுதலை.] |
நீலவழுதுணை | நீலவழுதுணை nīlavaḻuduṇai, பெ. (n.) நீலக்கத்தரி (வின்.); பார்க்க;see {mia-katari} [நீலம் + வழுதுணை.] |
நீலவிதானம் | நீலவிதானம் nīlavitāṉam, பெ. (n.) நீலப்பட்டு மேற்கட்டியின் கீ நிறுத்திய பந்தல்; canopy. “நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்க் கீழ்” (சிலப். 1;49.);. [நீலம் + விதானம்.] |
நீலவூமத்தை | நீலவூமத்தை nīlavūmattai, பெ. (n.) ஊமத்தை வகை; bule thorn-apple. [நீலம் + ஊமத்தை.] |
நீலவேலி | நீலவேலி nīlavēli, பெ. (n.) நீலக்கொடி வேலி பார்க்க;see {nila-k-kod-vés} (சா.அக.);. [நீலம் + வேலி.] |
நீலா | நீலா nīlā, பெ. (n.) அவுரி (சங்.அக.);; indigo plant. |
நீலாங்கம் | நீலாங்கம் nīlāṅgam, பெ. (n.) 1. புழு ; worm. 2. மலைத் தேள்; scorpion of the hills. [நீலம் + அங்கம்.] |
நீலாங்கு | நீலாங்கு nīlāṅgu, பெ. (n.) நீலாங்கஙம், 1. (சங்.அக.); பார்க்க;see {nīlārigam} [நீலாங்கம் → நீலாங்கு.] |
நீலாஞ்சனக்கல் | நீலாஞ்சனக்கல் nīlāñjaṉakkal, பெ. (n.) கருப்புக்கல் (வின்.);; sulphide of antimony. [நீலம்+அஞ்சனம்+கல்.] |
நீலாஞ்சனம் | நீலாஞ்சனம் nīlāñjaṉam, பெ. (n.) 1. நீலக் காரம் (வின்.); பார்க்க;see {nilakkaram.} 2. நீலாஞ்சனக்கல் (யாழ்.அக.);;பார்க்க;see{nlalapa-k-kal} 3. கல்லீயம் (யாழ்.அக.);; a kind of lead. [நீலம்+அஞ்சனம்.] |
நீலாஞ்சனை | நீலாஞ்சனை nīlāñjaṉai, பெ. (n.) மின்னல் (யாழ்.அக.);; lightning. [நீலம்+அஞ்சனை.] |
நீலாப்பிரகம் | நீலாப்பிரகம் nīlāppiragam, பெ. (n.) கரு மணல் (யாழ்.அக.);; fine black sand. |
நீலாம்பரன் | நீலாம்பரன் nīlāmbaraṉ, பெ. (n.) பலபத்திரன்; Balabhatra. “நீலாம்பரனும் யதுவீர நிருபர் யாரும்” (பாரத. அருச்சனன்றீர். 81.);. [நீலம்+அம்பரன்.] |
நீலாம்பரம் | நீலாம்பரம் nīlāmbaram, பெ. (n.) செடி வகை; dense-spiked blue nail dye. [நீலம் + அம்பரம்.] |
நீலாம்பரி | நீலாம்பரி nīlāmbari, பெ. (n.) 1. செடிவகை; blue fox-tail nail dye. 2. நீலாம்புரி (இ.வ.); பார்க்க;see {niãmbur.} [நீலம் + அம்பரி.] |
நீலாம்பல் | நீலாம்பல் nīlāmbal, பெ. (n.) நீலோற்பலம் (இ.வ.); பார்க்க;see {niðrbalam} [நீலம் + ஆம்பல்.] |
நீலாம்புசம் | நீலாம்புசம் nīlāmbusam, பெ. (n.) நீலோற் பலம் (சங்.அக.); பார்க்க;see {micrbalam.} [நீலம் + அம்புசம்.] |
நீலாம்புரி | நீலாம்புரி1 nīlāmburi, பெ. (n.) ஒருவகைப் பண் (யாழ்.அக.);; a kind of melody type. [நீலம் + அம்புரி.] நீலாம்புரி2 nīlāmburi, பெ. (n.) 1. காசாங்கம்-காசாவின் சமூலம்; the entire iron wood tree-memy, cylon edule. 2. நிலவு; moon. 3.நீலாம்பரி பார்க்க;see {nilambari} (சா.அக.);. |
நீலாம்புரியாள் | நீலாம்புரியாள் nīlāmburiyāḷ, பெ. (n.) அலரி; oleander-nerium odorum. [நீலம் + அம்புரி + ஆள்.] |
நீலாரம் | நீலாரம் nīlāram, பெ. (n.) நீவாரம் பார்க்க;see {nivāram} (சா. அக.);. |
நீலார்கண்டம் | நீலார்கண்டம் nīlārkaṇṭam, பெ. (n.) கருமை; black. [நீலம் + ஆர் + கண்டம்.] |
நீலி | நீலி1 nīli, பெ. (n.) நீலநிறத்தை யுடையோள், கொற்றவையின் மறுபெயர்; durga. “சூலி நீலி மாலவற் கிளங்கிளை” (சிலப். 12;68.);. “சங்கரி யந்தரி நீலி சடாமுடி” (சிலப். 12;25.);. “நிலைக்களங் காணா நீலி யென்போள்” (சிலப். 23;159.);. [நீலம் → நீலி] நீலி2 nīli, பெ. (n.) 1. கருநிறம் (பிங்.);; black hue. 2. கொற்றவை (பிங்.);; Durgai. 3. மலை மகள் (பிங்.);;{Parvati} “நீலியோடுனை நாடொறு மருச்சித்து” (சிவப். பிரபந். சோண. 55.);. 4. ஒரு பெண் பேய்; afemale devil. “மாறுகொடு பழையனூர் நீலிசெய்த வஞ்சனையால்” (சேக்கிழார். பு. 15.);. 5. கொடியவள் (இ.வ.);; wicked woman. 6. அவுரி (நாமதீப. 295.);; indigo plant. 7. மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி (l.);; western ghats blue nail dye. 8. நீலாம்பரம் பார்க்க;see {milambaram} 9. கருநொச்சி (மலை.);; three-leaved chaste tree. 10. பாம்பின் நச்சுப் பற்களுளொன்று (வின்.);; a poison fang of a snake. 11. துரிசு (நாமதீப.397.);; bule vitriol. நீலி3 nīli, பெ. (n.) தீங்கு நினைக்கும் பசப்புக் காரி; Wicked woman who feigns innocence. அந்த நீலி சொல்வதைக் கேட்டுக் கொண்டு என்னைத் திட்டுவதா? (பழ.);. [நீலம் → நீலி] |
நீலிகற்பம் | நீலிகற்பம் nīligaṟpam, பெ. (n.) என்றும் மாறாஇளமைசெய் கற்பமூலிகை; a reluvenating drug taken for longevity. (சா.அக.);. [நீலி + கற்பம்.] |
நீலிகை | நீலிகை nīligai, பெ. (n.) அவுரி (யாழ்.அக.);; Indigo plant. |
நீலிக்கண்ணீர் | நீலிக்கண்ணீர் nīlikkaṇṇīr, பெ. (n.) உண்மையான வருத்தமின்றிப் பொய்யாக வடிக்கும் கண்ணீர், போலி வருத்தம்; insincere tears. crocodile tears. முதலாளியின் நீலிக்கண்ணீரைக் கண்டு தொழிலாளிகள் ஏமாந்து விடக் கூடாது எனக் தொழிற்சங்கத் தலைவர் முழங்கினார். (உ.வ.);. [நீலி + கண்ணீர்.] |
நீலிக்கிரந்தை | நீலிக்கிரந்தை nīlikkirandai, பெ. (n.) கிரந்தை வகை; vishnu’s basil – sphaeranthus indicus. (சா. அக.);. [நீலம் + கிரந்தை.] |
நீலிசம் | நீலிசம் nīlisam, பெ. (n.) பசலை; spinachportulaca qudrifida. (சா.அக.);. |
நீலிஞ்சிகை | நீலிஞ்சிகை nīliñjigai, பெ. (n.) பசு; cow. (சா.அக.);. |
நீலிதம் | நீலிதம் nīlidam, பெ. (n.) நீலநிறமானது; that which is blue. “பரிமள நீலிதவுடை யாடையுடுத்தாள் பாரத” (அருச்சுனன்றவ. 158.);. [நீலம் + இதம்.] |
நீலித்தனம் | நீலித்தனம் nīlittaṉam, பெ. (n.) 1. கொடுமை (இ.வ.);; cruelty, wickedness, hard-heartedness. 2. பாசாங்கு; pretence. 3. செருக்கு (வின்.);; impudence. [நீலி + தனம்] |
நீலினி | நீலினி nīliṉi, பெ. (n.) அவுரி (யாழ்.அக.);; indigo plant. |
நீலிமருந்து | நீலிமருந்து nīlimarundu, பெ. (n.) அவுரிச் சாயம்; indigo dye-indigo fera. (சா.அக.);. |
நீலியம் | நீலியம் nīliyam, பெ. (n.) மருதோன்றி; fra grant nail dye-mindic-lawsonia alba. (சா.அக.);. |
நீலியாவரை | நீலியாவரை nīliyāvarai, பெ. (n.) சூரத்து நீலாவரை; surat senna. (சா.அக.);. |
நீலோற்பலம் | நீலோற்பலம் nīlōṟpalam, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tīruttani Taluk. [நீல+உற்பலம்] நீலோற்பலம் nīlōṟpalam, பெ. (n.) 1. கருங் குவளை (திவா.);; blue nelumbo. 2. கரு நெய்தல் (பிங்.);; blue Indian water lily. [நீலம் + உத்பலம்.] |
நீல் | நீல்1 nīl, பெ. (n.) 1. நீலம்; blue. “நீனிற மஞ்ஞையும்” (சிலப்.12;34.);. “நீனெஉய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது” (பரிபா.11;124.);. 2. கறுப்பு (சூடா.);; black. 3. அவரி; common indigo. 4. கருங்குவனை; blue helumbo. “நீலிதழுண் கண்ணாய்” (கலித்.33;28.);. pkt. Nil. நீல்2 nīl, பெ. (n.) 1. காற்று; wind. 2. (வாதக்); வளிக்கூறுள்ள நோய் (தைலவ. பாயி.42);; diseases in which the wadam element is predominant. |
நீள | நீள nīḷa, பெ. அ. (adj.) 1. நெடுந்தொலைவாக; to a great length or distance. 2. நெடுங்காலமாக; all along. “நீளநினைந்தடியே னுமை நித்தலுங் கைதொழுதேன்” (தேவா. 825, 1.);. 3. மிகு தொலையில் (இ.வ.);; at a great distance. [நீள் → நீள.] |
நீளக்க | நீளக்க nīḷakka, பெ. அ (adj.) நீள பார்க்க;see {nila} [நீள் → நீள → நீளக்க.] |
நீளங்கடை | நீளங்கடை nīḷaṅgaḍai, பெ. (n.) நாட்செல்லுகை (யாழ். அக.);; delay, procrastination. [நீளம் + கடை.] |
நீளச்சம் | நீளச்சம் nīḷaccam, பெ. (n.) கொன்றை; cassia-cassia fistula. (சா.அக.);. |
நீளத்திலே போ-தல் | நீளத்திலே போ-தல் nīḷattilēpōtal, 8. செ.கு.வி. (v.i.) 1. நீளவாட்டமாய்ச் செல்லுதல்; to go lengthwise. 2. தாழ்ச்சியாதல் (வின்.);; to be protracted; to be put off. [நீள் → நீளம் → நீளத்திலே + போ-,] |
நீளத்தில்விடு-தல் | நீளத்தில்விடு-தல் nīḷaddilviḍudal, 17 செ.குன்றாவி. (v.t.) 1. காலநீட்டித்தல்; to protract delay. 2. வெறும் பேச்சுப் பேசிக்காலத்தைக் கடத்துதல்; to put off with empty words. 3. வேண்டுமென்றே புறக் கணிப்பு செய்தல்; to neglect intentionally. [நீள் → நீளம் → நீளத்தில் + விடு-,] |
நீளப்பூச்சி | நீளப்பூச்சி nīḷappūcci, பெ. (n.) வயிற்றுப் பூச்சிவகை (வின்.);; tapeworm, as being long. [நீளம் + பூச்சி.] |
நீளமல்லிகை | நீளமல்லிகை nīḷamalligai, பெ. (n.) மல்லிகை (இ.வ.);; Arabian jasmine. [நீளம் + மல்லிகை.] |
நீளமாக | நீளமாக nīḷamāka, பெ.அ. (adj.) இயல்பான நீளத்தை விட அதிகமாக; long. நீளமான பாதை (உ.வ.);. கயிறு நீளமாக இருக்கிறது. (உ..வ.);. [நீளம் → நீளமாக.] |
நீளம் | நீளம்1 nīḷam, பெ. (n.) 1. நெடுமை; extension, length. “நீளம் பெறுங் கண்களே” (திருக்கோ. 109.);. 2. தொலைவு (பிங்.);; distance remoteness. ‘கையானீளமாப் புடைப்ப’ (சீவக. 2248.);. 3. தாழ்ச்சி (வின்.);; delay, procrastination. க. நீள. ம. நீளம். [நீள் → நீளம்.] [நூல் → நீட்சிக்கருத்துவேர். நூல் → நெல் → நெள் → நெகிழ் → நெகிள்→ நிகள் → நீள் → நீளம் = நீண்டு செல்வது.] நீளம்2 nīḷam, பெ. (n.) பறவைக்கூடு; bird’s nest. “நீள நீங்கிய பறவையின் விண்ணுற நிமிர்ந் தான்” (கம்பரா. கவந். 40.);. |
நீளம்தாண்டுதல் | நீளம்தாண்டுதல் nīḷamdāṇṭudal, பெ. (n.) long jump. [நீளம் + தாண்டுதல்.] |
நீளலை | நீளலை nīḷalai, பெ. (n.) நெடுந்தொலைவு வரை தெரியும் ஒளியலை; long distance wave. சிவப்பு நிறம் நீளலையைக் கொண்டதால் போக்குவரத்து விளக்குகளில் நிறுத்துங் குறியாக அந்நிறம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. (உ.வ.);. [நீள் + அலை.] |
நீளவாடு | நீளவாடு nīḷavāṭu, பெ. (n.) நெடும்போக்கு (இ.வ.);; lengthwise direction. [நீளம் + வாடு. மாடு → வாடு.] ஒ.நோ;தலைமாடு |
நீளாதேவி | நீளாதேவி nīḷātēvi, பெ. (n.) திருமால் தேவியருளொருத்தி (அபி.சிந்.);; a wite of {Tirumā.} |
நீளி | நீளி1 nīḷittal, 11 செ.கு.வி. (v.i.) 1. நீளுதல் (வின்.);; to be lengthened, extended. 2.நெடுங்காலமிருத்தல்; to be long as time or life; to be prolonged; to last long endure. 3. கணங்குதல்; to be protracted delayed க. நீள். [நீள் → நீளி-,] நீளி2 nīḷi, பெ. (n.) 1. நெடியவன் (வின்.);; tall person. 2. நெடியது; that which is long, lofty. “நிணம்பசைகொண்ட நீளி நெடும்பல்” (பெருங். இலாவாண. 8, 108.);. [நீள் → நீளி.] நீளி3 nīḷi, பெ. (n.) 1. நீளத்தையுடையது; that which is long. ‘நெடுந்தரு நீளிகள்’ (கந்தபு. அக்கினிமுகா.104.);. 2. தெரிநிலை வினைப்பகுதி (கதி.அக.);; verbal part. [நீள் → நீளி.] |
நீளிடை | நீளிடை nīḷiḍai, பெ. (n.) 1. நெடுந்தொலைவு; long distance. “இன்ப நீளிடைப் பயக்கும்” (கல்லா. 2.);. 2. நெடியவழி; long way. “நீளிடைச் செல்” (கலித். 10.);. 3. காடு; jungle tract. “நீளிடை மருங்கின்” (சிலப். 13; 12, அரும்.). [நீள் → நீளிடை.] |
நீளிடையத்தம் | நீளிடையத்தம் nīḷiḍaiyattam, பெ. (n.) நீண்டநெறி; a long distance. “தோளும் அழியும் நாளும் சென்றென நீளிடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணுங் காட்சித் தெளிவின வெள்னீத்து” (நற். 397.);. [நீள் + இடை + அத்தம்.] |
நீளிப்பு | நீளிப்பு nīḷippu, பெ. (n.) நீளுகை (வின்.);; prolongation. [நீள் → நீளிப்பு.] |
நீளியசாரை | நீளியசாரை nīḷiyacārai, பெ. (n.) கானகக்கல் (யாழ்.அக.);; a kind of metallic ore. [நீளிய + காரை.] |
நீளியது | நீளியது nīḷiyadu, பெ. (n.) 1. நீண்டது (வின்.);; that which is long. 2. நீக்கமற நிறைந்திருப்பது; that which is omnipresent. “காலமுஞ் சிறிது நீளியதல்ல” (ஞானவா. லீலை. 32.);. [நீள் → நீளியது.] |
நீளியன் | நீளியன் nīḷiyaṉ, பெ. (n.) நெடியவன் (யாழ்.அக.);; tall man. [நீள் → நீளியன்.] |
நீளுமை | நீளுமை nīḷumai, பெ. (n.) உடையாமல் கம்பிகளாக இழுக்கப்படும் ஆற்றல்; ductility. [நீள் → நீளுமை.] |
நீளெட்டு | நீளெட்டு nīḷeṭṭu, பெ. (n.) தேசியப்படை மாணவர் பயிற்சி ஏவல்களுள் ஒன்று; one of the command in N.C.C., step out. [நீள் + எட்டு.] நீள் → நீளம் → நீளமாக எடு → எட்டு = காலின் எடுப்பு, அடிவைப்பு. எட்டு என்பது காலின் எடுப்பையும் அடிவைப்பையும் குறிக்கும். விரைவாய் நடத்தற்கேவுதலை எட்டி நடவென்றும், நாலெட்டில் சென்றுவாவென்றும், ஒரெட்டில் ஒடிவா என்றும் வழங்குவதைக் காணலாம். |
நீளெரி | நீளெரி nīḷeri, பெ. (n.) 1. பெருநெருப்பு; great fire. conflagration. “நீணகர் நீளெரி வைத்தருளாயென்று” (திவ். இயற். திருவிருத். 92.);. 2. மிகுவெப்பம்; extreme heat. “கதிர்தெற நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்து” (அகநா.51.);. [நீள் + எரி.] |
நீளை | நீளை1 nīḷai, பெ. (n.) காற்று (பிங்.);; wind. [நீள் + ஐ.] [நூல் – நீட்சிக்கருத்துவேர். நூல் → நெல் → நெள் → நெகிழ் → நெகிள் → நிகள் → நீள். நீள் → நீளை (நீண்டு இயங்குவது);.] நீளை2 nīḷai, பெ. (n.) நீளதேவி பார்க்க;see {ாladevi} “நீளைக்கு மணவாள ராடிரூசல்” (அஷ்டப். சீரங்கநாயக. 9.);. [நீள் → நீளை.] |
நீள் | நீள்1 nīḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) 1. நீடு பார்க்க;see {nidu.} 2. பெருமையாதல்; to be great. “நீள்கழற் கன்பு செய்வாம்” (கந்தபு. கடவுள்வா. 2.);. 3. ஒடுதல் (திவா.);; to run. ம. நீளுக, நீள, நீளெ, நீளவே. நூல் (நீட்சிக்கருத்துவேர்); → நெல் நெள் → நெகிழ் → நெகிள் → நிகள் → நீள். நீள்2 nīḷ, பெ. (n.) 1. நீளம் (வின்.);; length. extension, elongation. 2. நெடுங்காலம்; long time, duration. நீடுங்காய் (கலித். 131.);. 3. உயரம் (வின்.);; height, tallness, loftness. 4. ஆழம்; depth. “நீணிலைக் கூவல்” (கல்லா. 12.);. 5. ஒளி (வின்.);; light, ustre. 6. ஒழுங்கு (சது.);; order, series, row. தெ. நீலுகு (உடலுறுப்புக்களை நீட்டுதல்);; கோத, நீர், நீன்; நீட் (நீளுதல்);;துட நீர் (நீட்டுதல், விரித்தல்);. [நெகிள் → நிகள் → நீள்.] |
நீள் கம்பு | நீள் கம்பு nīḷkambu, பெ.(n.) இரண்டு முழம் முதல் மூன்று முழம் வரை அளவுள்ள கம்பு a millet variety [நீள்+கம்] |
நீள்கோளம் | நீள்கோளம் nīḷāḷam, பெ. (n.) முட்டை வடிவமான கோளம் (வின்.);; spheroid. [நீள் + கோளம்] |
நீள்சடையான் | நீள்சடையான் nīḷcaḍaiyāṉ, பெ. (n.) கொன்றை; Indian laburhnum. [நீள் + சடையாள்.] |
நீள்சடையோன் | நீள்சடையோன்1 nīḷcaḍaiyōṉ, பெ. (n.) நீளச்சம் பார்க்க;see {miaccam} (சா.அக.);. [நீள் + சடையோன்.] நீள்சடையோன்2 nīḷcaḍaiyōṉ, பெ. (n.) 1. சிவபெருமான்;{Sivan,} as having long matted locks. 2. சரக்கொன்றை (மலை.);; Indian laburnum. [நீள் + சடையோன்.] |
நீள்சதுரம் | நீள்சதுரம் nīḷcaduram, பெ. (n.) செவ்வகம்; rectangle. [நீள் + சதுரம்.] |
நீள்புகழ் | நீள்புகழ் nīḷpugaḻ, பெ. (n.) பொன்றாது நிற்கும் புகழ்; a great virture. “நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு” (குறள், 234.);. |
நீள்மைஅளவி | நீள்மைஅளவி nīḷmaiaḷavi, பெ. (n.) நீளத்தை அளவிடும் கருவி; extenso meter. [நீள்மை + அளவி.] |
நீள்வட்டம் | நீள்வட்டம் nīḷvaṭṭam, பெ. (n.) முட்டை வடிவம்; ellipse. ‘நிலவுலகம் கதிரவனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது’ (உ.வ.); |
நீழலவர் | நீழலவர்1 nīḻlavar, பெ. (n.) இரப்போர்க் கெல்லாம் ஈதலாகிய தண்ணளியுடையோர்; a kind hearted person. “பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்” (குறள், 1034.);. [நிழல் → நீழல் → நீழலவர்.] [நிழல் → நிழல். நிழல் = வெம்மைக்கு மாறானது குளுமை, தண்ணளி.] நீழலவர்2 nīḻlavar, பெ. (n.) agriculturists as kind hearted. “நீழலவர் என்றது இரப்போர்க் கெல்லாம் ஈயும் தண்ணளி பற்றி” (குறள், 1034, மரபுரை.);. [நீழல் + அவர்; நிழல் = குளுமை நிழல் → நிழல்.] |
நீழல் | நீழல்1 nīḻl, பெ. (n.) நிழல் பார்க்க;see {mial} “பலகுடை நீழலுந் தன்குடைக்கீழ்க் காண்பர்” (குறள், 1034.);. [நிழல் → நீழல்] நீழல்2 nīḻl, பெ. (n.) 1. காற்று (திவா.);; wind. 2. குளிர்தடம், ஒளி ஒதுக்கம், சாயல்; shade. “ஈசன் எந்தை இணையடி நீழலே” (திருஞான. தேவாரம்);. [நிழல் → நீழல்] |
நீழி | நீழி nīḻi, பெ. (n.) மரமஞ்சள்; tree turmericcoscinium fenestratum. (சா.அக.);. |
நீழை | நீழை1 nīḻai, பெ. (n.) ஒளி; light, lusture. “நீழை யாண்மலர்” (அரிசமய. குலசே. 5.);. நீழை2 nīḻai, பெ. (n.) நீளை1 (கயாகரம்); பார்க்க;see {nilai} |
நீவரகம் | நீவரகம் nīvaragam, பெ. (n.) dearth, tamine. |
நீவரசிகம் | நீவரசிகம் nīvarasigam, பெ. (n.) பிச்சிப்பூடு; spanish jasmin-jasminum grandflorum. |
நீவான் | நீவான் nīvāṉ, பெ. (n.) மீகாமன் (அக.நி.);; SteerS man. [நாவு → நீவு → நிவான்.] |
நீவாரம் | நீவாரம் nīvāram, பெ. (n.) குளநெல் (திவா.);; wild rice. “நீவாரத்தாளினில்” (இரகு அயனு. 15.);. 2. செந்தினை (மூ.அ.);;İtalian millet. |
நீவாரி | நீவாரி nīvāri, பெ. (n.) நீவாரம் பார்க்க;see {nivāram} [நீவாரம் → நீவாளி.] |
நீவார் | நீவார் nīvār, பெ. (n.) நீவாரம் பார்க்க. see {nivāram.} (சா.அக.);. [நீவாரம் → நீவார்] |
நீவி | நீவி1 nīvi, பெ. (n.) 1. கொய்சகம் (திவா.);; ornamental plaiting in a saree hanging from the waist 2. மகளிர் ஆடையுடுத்தும் போது இடையில் முடிக்கும் முடிச்சு; knot of a saree tied at the waist when dressing. “நீவி நிதம்ப வுழத்தியர்” (பெரியபு ஆனாய. 2.);. 3. ஆடை (திவா.);; cloth. 4. கிழி; money or other valuables tied up in a cloth. “ஓங்கிய நீவிக் கைக் கொடருமி” (திருவாலவா. 16. 11.);. நீவி2 nīvi, பெ. (n.) 1. துடைக்கை; wiping. 2. இறகு; feather. நீவி3 nīvi, பெ. (n.) 1. தெரிநிலை வினையெச்சம்; an inf ending. “மாசறு சுடர் நுத னீவி” (கு.பா. 182.);. 2. சீலை; saree “நீவியின்றியிந் நெற்றியுங்கண்ணுதல்” (கந்தபு. ததிசியுத்.56.); (கதி.அக.); |
நீவியம் | நீவியம் nīviyam, பெ. (n.) நீவி 1, 3 (சூடா.); பார்க்க;see {nivi} [நீவி → நீவியம்] |
நீவிர் | நீவிர் nīvir, பெ. (n.) முன்னிலைப் பெயர்; second person. “நீவிரிவண் வந்து புகலும்” (சிவரக. தாருக. 28.); (கதி.அக.);. நீவிர் nīvir, பெ. (n.) நீங்கள் (நன். 287.); you. க. நீவு. நீ (ஒருமை); → நீவிர் (பன்மை); |
நீவு | நீவு1 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) கையாலே தடவுதல் பூசுதல்; to stroke, daub. “சாரல் ஆரம் வண்டுபட நீவி” (நற். 259.);. நீவு2 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கைவிடுதல்; to cease, discontinue. “ஒலிநீவி யினநாரை முக்கோல்கொளந்தணர் முதுமொழி நினைவார்போல் எக்கர்மேல் இறைகொள்ள” (கலித். 126.);. 2. கடத்தல்; to pass beyond, transgress. “எந்தை யருங்கடி நீவி” (குறிஞ்சிப்.20.);. 3. அழித்தல் (அக.நி.);; to destroy. 4. அறுத்தல்; to break asunder, as a chain. “பின்னிய தொடர் நீவி” (கலித்.15.);. க. நீவு. நீவு3 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தடவிக்கொடுத்தல்; to stroke, rub gently, handle softly. “தன்னைப் புறம்பழித்து நீவ” (கலித். 51.);. 2. கோதுதல்; to smooth by passing the fingers over. “பொம்ம லோதி நீவி யோனே” (குறுந். 379.);. 3. துடைத்தல்; to wipe off. “ஒண்ணுத னீவுவர் காதலர்” (கலித்.4);. 4. பரப்புதல்; to spread. “நீவிநித்திலம் பரத்திய ருணக்குவ” (பெரியபு. திருக்குறிப். 6.);. 5. பூசுதல்; to daub, smear. “நறுஞ்சாந்து நீவிய கேழ்கிள ரகலத்து” (மதுரைக். 493.);. நீவு4 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) தூண்டுதல்; to propel; to raise, as the wick of a lamp. நீவு5 nīvudal, 5 செ.குன்றாவி. (v.t.) smooth out (the surface of a page);. to press (the pleats of a saree);. புத்தகத்தின் பக்கத்தை நீவி விட்டுக்கொண்டே படிப்பது சிலரின் பழக்கம். (உ.வ.);. சேலையின் கொய்சகத்தைப் பலமுறை நீவி விட்டுக் கொண்டாள். (உ.வ.);. |