செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
நி

நி1 ni,      ‘ந்’ என்ற மெய்யெழுத்தும் ‘இ’ என்ற உயிரெழுத்துங் கூடிய கூட்டெழுத்து;

 the syllable formed by adding the short vowel ‘i’ of to the consonant ‘n’.

     [ந் + இ.]

நிக[ர்மலர்

நிக[ர்மலர் nigarmalar, பெ. (n.)

   1. புதுப்பூ; fresh flower.

     “ஆய்கனை நிகர்மலர் போன்மென நசைஇ வீதேர் பறவை விழையும் போதார் கூந்தனங் காதலி கண்ணே.” (அகநா. 371.);.

   2. ஒளியுடைய பூ; flower with brightness.

     “காது சேர் நிகர்மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே” (குறுந். 311.);.

     “அகனக ரெல்லாம் மரும்பவிழ்முல்லை நிகர்மலர் நெல்லோடு தூஉய்க்”. (சிலப்.9:1.);.

     [நிகர் + மலர்.]

நிகடை

 நிகடை nigaḍai, பெ. (n.)

   மாழையை உருக்க உதவும் மண் சிமிழ்; a melting pot used by goldsmiths, chemists and others for melting metals etc.

நிகண்டகம்

 நிகண்டகம் nigaṇṭagam, பெ. (n.)

   கடலைச் செடி; bengal gram plant-cicer anetinum.

நிகண்டு

நிகண்டு nigaṇṭu, பெ.(n.)

   1. பொதுவாக ஒரு சொல்லுக்குள்ள பலபொருள்களைச் செய்யுள் வடிவாக விளக்கும் நூல்; any book containing words arranged in order with their several meanings explained breifly in verses – poetic vocabulary.

   2. வைத்திய நிகண்டு; a word book which communicates information in an entire subject or branch of a subject in medicine arranged in verses, a medical vocabulary of plants and drugs complied in intelligible verse. (சா.அக.);

நிகன்னம்

 நிகன்னம் nigaṉṉam, பெ. (n.)

   கொலை; murder

 நிகன்னம் nigaṉṉam, பெ.(n.)

   கொலை; murder. (சா.அக.);

நிகமனம்

 நிகமனம் nigamaṉam, பெ. (n.)

   அனுமானவுறுப்பு ஐந்தனுள் இறுதியானது (தருக்க. சங்.);; conclusion, being the fifth member of the Indian Syllogism.

நிகமம்

நிகமம் nigamam, பெ. (n.)

   1. முடிவு; conclusion.

     ‘நிகமத்தில் இத்திரு வாய்மொழி, (ஈடு.1,811);.

   2. வேதம்; vedam,

     ‘நிகமாகமம் விதித்தநீதி’ (சிவஞா.27,7.);.

   3. நகரம் (சூடா.);; town, city.

   4. நெடுந்தெரு, பொதுச் செல்வழி; street thoroughtare.

     ‘நீண்டவந் நிகமம் புக்க நிமலன்’ (கந்தபு. ததீசியுத்.83.);.

   5. கடைவீதி (யாழ்.அக.);; bazaar

   6. வணிகம் (யாழ்.அக.);; trade

   7. வணிகக் கூட்டம் (யாழ்.அக.);; group of traders.

 நிகமம் nigamam, பெ.(n.)

   ஒர் வடமொழி நூல், இது 4 வேதங்களின் தொகுதியைக் குறிக்கும். வேதாந்தத்தைப் போலவே சித்தாந்தம் என்பது சைவநெறிகளைக் கூறும்; vedictext PIt is a Collective name for the four vedas and is of opposed to Agamam referring shaving regligous rites. (சா.அக.);

நிகமி-த்தல்

நிகமி-த்தல் nigamittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   முடித்தல் (ஈடு.1, 6, பிர.ஜீ.பக். 262.);; to Conclude.

நிகம்

 நிகம் nigam, பெ. (n.)

   ஒளி (அக.நி.);; brightness, brilliance.

நிகர

நிகர1 nigara, இடை.

   ஒர் உவம உருபு (நன்.367.);; a term of comparison.

     [நிகர் → நிகர.]

 நிகர2 nigara, இடை.

   ஒளி; light;lustre.

     [நிகு → நிகர.]

நிகரணம்

நிகரணம் nigaraṇam, பெ.(n.)

   1. மிடறு; pharynx.

   2. தொண்டை; larynx, throat.

   3. விழுங்குதல்; swallowing. (சா.அக.);

நிகரணாளகி

 நிகரணாளகி nigaraṇāḷagi, பெ. (n.)

   காதிற்குள் நடுவரையிலிருந்து மிடற்றுக்குச் செல்லும் குழல்; the tube which forms a communication between the internal ear and the back of the mouth-Eustachiartube

நிகரம்

நிகரம்1 nigaram, பெ. (n.)

   1. கூட்டம்; company, assemblage, flock, multitude.

     “உடனடப்பன புகர்முகக் கரிநிகரமே” (பாரத.அணி.6.);.

   2. குவியல்; heap.

     ‘பருத்த நிகரமாகிய கருப்பூரம்’ (மலைபடு. 516, உரை.);.

   3. மொத்தம் (வின்.);; total

   4. அரும்பொருட்குவை (யாழ். அக.);; treasure.

   5. கொடை (யாழ்.அக.);; gift.

     [நிகர் → நிகரம்.]

 நிகரம்2 nigaram, பெ. (n.)

   விழுங்குகை; swallowing,

     “நிகரம்பயி லமுதுண்டு” (பாரத. அருச்சுனன்றவ. 154.);.

நிகரவா

 நிகரவா nigaravā, பெ. (n.)

பிரமிப்பூண்டு; பார்க்க; see {pirami-p-pundu}

நிகரா

நிகரா nigarā, வி.எ. (adv.)

   பகையாத; without having enmity.

     “தன்னொடு நிகரா வென்னொடுநிகரி” (ஐங்குறு.67.);.

     [நிகர்+ஆ.]

நிகரார்

நிகரார் nigarār, பெ. (n.)

   பகைவர் (திவா.);; enemies.

     “நிகரா ருயிர்க்கு நஞ்சாய வேற்கைக் குலோத்துங்க சோழன்” (குலோத். கோ. 384.);.

     [நிகர் → நிகரார்.]

நிகரி

 நிகரி nigari, வி.எ. (adv.)

   பகைத்து; with enmity.

     [நிகர் + இ.]

நிகரிடு-தல்

நிகரிடு-தல் nigariḍudal, செ.குன்றாவி. (v.t.)

   ஒப்பிடுதல்; to compare.

     “தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலம் தருக்கம் என்ப விரிமலர்த்” (ஐங்குறு. 67.);.

     [நிகர்+இடு.]

நிகரிலிசோழன்

நிகரிலிசோழன் nigarilicōḻṉ, பெ. (n.)

   முதலாம் இராசராசன் பட்டப்பெயர்களுளொன்று (I.M.P.Tn. 109.);; one of the titles of {Rāja Rāja} the first

     [நிகரிலி+ சோழன்.]

நிகரிலிசோழமண்டலம்

 நிகரிலிசோழமண்டலம் nigarilicōḻmaṇṭalam, பெ. (n.)

   சோழராட்சிக்குள்ளடங்கியிருந்த எருமையூ (மைசூ); ரிலொரு பகுதி; a division in Mysore when it formed part of the {Côa} dominion.

     [நிகரிலிசோழன் + மண்டலம்.]

மண்டிலம் → மண்டலம்

நிகரில்பக்கம்

நிகரில்பக்கம் nigarilpaggam, பெ. (n.)

   1. எதிர்க்கட்சி; opposite side or party.

   2. எதிரிடையான கொள்கை; opposite view.

     “பக்க நிகர்பக்க நிகரில்பக்கமென” (சி.சி.அளவை.9);.

     [நிகர்+இல்+பக்கம்.]

நிகரில்லகறை

 நிகரில்லகறை nigarillagaṟai, பெ. (n.)

   கரிசலாங் கண்ணி; eclipse plant- Echypta prostata. (சா. அக.);.

     [P]

நிகரில்லாவாசான்

 நிகரில்லாவாசான் nigarillāvācāṉ, பெ. (n.)

 eye of wisdom.

 நிகரில்லாவாசான் nigarillāvācāṉ, பெ.(n.)

   ஞானக்கண்; eye of wisdom. (சா.அக.);

நிகரோதயம்

 நிகரோதயம் nigarōtayam, பெ. (n.)

   சிற்றரத்தை; lesser galangal. Alpinia galanga (minor.); (சா.அக.);.

 நிகரோதயம் nigarōtayam, பெ.(n.)

   சிற்றரத்தை; lesser glangal – Alpinio galanga (minor);. (சா.அக.);

நிகர்

நிகர்1 nigartal,    4 செ.குன்றாவி. (v.t.)

நிகர்2-,

பார்க்க; see nigar-

     “மஞ்சை நிகருந் த்யாக வள்ளலே” (விறலிவிடு.902.);.

 நிகர்2 nigarttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   ஒத்தல்; to be similar, alike.

     ‘கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை’ (தொல். பொருள். 290.);.

 நிகர்3 nigarttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மாறுபடுதல்; to rival.

     “தன்னொடு நிகரா வென்னொடு நிகரி” (ஐங்குறு.67.);

   2.விளங்குதல்; to shine; to be visible.

     “தஞ்சேணிக காவின்” (திருக்கோ. 183.);.

நிகர்-

நிகர்-4 nigar, பெ. (n.)

   1. ஒப்புமை; comparison. likeness, simile.

     “தனக்கு நிகருமேலுமின்றாகியே” (கந்தபு. ததீசியுத். 150.);.

   2. ஒப்பு; equal, parallel, match.

     “நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்” (நாலடி, 64.);.

   3. ஒளி; lustre, brightness, splendour.

     “நீர்வார் நிகர்மலர் (அக.நா.11.);.

     “காம செங்கையிற் கண்ணீ மாற்றித் தூநீர் மாலை தூத்தகை இழந்தது நிகர்மலர் நீயே கொணர்வாயென்றலும்” (மணிமே.5:13-15.);.

   4. போர்

 battle.fight

   5. கூட்டம்; crowd.

து. நிசாசு, தெ. நிகநிக, நிகாரிஞ்சு.

நிகர்த்த

 நிகர்த்த nigartta, பெ.அ. (adj.)

   ஒத்த; similar.

     [நிகர் → நிகர்த்த.]

நிகர்த்தல்

 நிகர்த்தல் nigarttal, பெ. (n.)

   போர் (சூடா.);; battle, War.

நிகர்த்து-தல்

நிகர்த்து-தல் nigarddudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   நன்றாகப் புடைத்தல்; to tharsh, give a good drubbing.

     [நகர்த்து-நிகர்த்து-.]

நிகர்பக்கம்

 நிகர்பக்கம் nigarpaggam, பெ. (n.)

உவமைப் பொருளிருக்குமிடம்:

 comparing thing’s place.

     [நிகர் + பக்கம்.]

நிகர்ப்பு

நிகர்ப்பு nigarppu, பெ. (n.)

   1. ஒப்பு:

 resemblance, likeness.

   2. போர் (திவா.);; battle, fight.

     [நிகர்-நிகர்ப்பு.]

நிகர்வு

 நிகர்வு nigarvu, பெ. (n.)

   ஒப்பு (வழக்.);; comparison.

     [நிகர் → நிகர்வு.]

நிகற்பம்

 நிகற்பம் nigaṟpam, பெ.(n.)

   பத்து இலட்ச கோடி (பிங்.);; ten kalpas.

     [Skt. nikalpa → த. நிகற்பம்]

நிகற்புதம்

 நிகற்புதம் nigaṟpudam, பெ. (n.)

   வியப்பு (அற்புதம்); (பிங்.);; wonder

     (கதி.அக.);.

நிகலம்

நிகலம் nigalam, பெ. (n.)

   1. தோள்மேல். (வின்.);; the upper part of the shoulder

   2. பிடர் (வின்.);; nape.

நிகளம்

நிகளம்1 nigaḷam, பெ. (n.)

   1. நீர்க்கடம்பு; water cadambam tree-Nauclia parviflora.

   2. மலம்; filth. (சா.அக.);.

 நிகளம்2 nigaḷam, பெ. (n.)

   நீளம் (உ.வ.);; length

வகுள பரிமள நிகள கவிமாலை சூடுவதும் (திருவகுப்பு,);. நீட்சிக் கருத்து நெகிழ்ச்சிக் கருத்தின் வழிநிலைக் கருத்தே. நிற்றற் கருத்தும் நடத்தற் கருத்தும் நீட்சிக் கருத்தினின்று தோன்றும். நுல் → நெல் → நெள் → நெகு → நெகிழ் (நெகிள்); → நீள். நெகிள் (நெகிழ்); → நிகள் → நீள் → நீளம் → நிகளம். எதுகை முகனை என்பதை எகனை முகனை யென்பதுபோல், அகலம் நீளம் என்பதை அகலம் நிகளம் என்றும் பொதுமக்கள் வழங்கியிருக்கலாம். ஈயமும் மெழுகும் போல்வன உருகியும், களியும் களிமண்னும் போல்வன நீர்கலந்தும் நெகிழும் போது நீளுதல் காண்க. (வே.க.3;37);.

 நிகளம்3 nigaḷam, பெ. (n.)

   1. யானைக் காற் சங்கிலி; chain for an elephant’s feet.

     “அயிராவதத்தி னிகளங்கால் விட்ட நினைவு” (தமிழ்நா. 123.);.

   2. விலங்கு; chain, fetters.

     “மறலின நிகளஞ் சீத்து” (தணிகைப்பு. அகத்தி.170.);.

   3. பிணை (பந்தம்.);; bondage.

     “யார்க்கு நிகளமரம் விருத்தி தோன்ற” (திருவிளை. தீர்த்.3);.

   4. நீர்க் கடம்பு மரம் (சங்.அக.);; water cadamba tree.

     [நீளம் → நிகளம்.]

 நிகளம் nigaḷam, பெ.(n.)

   1. நீர்க்கடம்பு; water cadamba tree -Naucliaparuliflora.

   2. மலம்; filth. (சா.அக.);

நிகழாசம்

 நிகழாசம் nigaḻācam, பெ. (n.)

   உயிர்ப்பினை (இரேசகம்); விடுத்தல்; exhabation of vital air in scientific breathing, It is opposed to

உயிர்ப்பினை உள்ளிழுத்தல் (பூரகம்); (சா.அக.);.

நிகழும்

நிகழும் nigaḻum, வி.எ. (adv.)

   நடைபெற்றுக் கொண்டிருக்கிற; current. in force.

நிகழும் திருவள்ளுவராண்டு 2034 துலைத் திங்கள் பத்தாம் பக்கல் எம் மகளுக்குத் திருமணம் நடக்கவுள்ளது. (உ.வ.);.

   2. செல்லுகின்ற, ஒழுகும்; on going, adapt.

     “நாறுபு நிகழும் யாறு கண்டழிந்து வேறுபடு புனலென விரை மண்ணுக் கலிழைப் புலம்புரி யந்தணர் கலங்கினர் மருண்டு” (பரிபா.6;

   43.).

நிகழ்

நிகழ்1 nigaḻtal,    4 செ.கு.வி. (v.i.)

   1. நேருதல்; to happen, occur.

     “தொண்டனார்க் கங்கு நிகழ்ந்தன” (பெரியபு. திருநா. 380.);.

   2. நடந்துவருதல்; to be current; cassing as time,

     “நிகழுங் காலத்துச் செட்ட பென்னுங்கிளவியொடு” (தொல். சொல்.229.);.

   3. செல்லுதல்; to enter; pass.

     “செயிர்க்க ணிகழாது” (பு.வெ.8,17.);.

   4. தங்குதல்; to abide, continue.

     “தொன்மை மேன்மையி னிகழ் பெருந் தொண்டைநன்னாடு” (பெரியபு. திருக்குறிப்பு. 2.);.

   5. நிறைவேறுதல்; to be performed, transacted, carried on.

 நிகழ்2 nigaḻtal,    4 செ.கு.வி. (v.i.)

   1. விளங்குதல்; to shine

     “வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்பட” (பதிற்றுப்.49, 15. உரை.);.

   2. ஒளி செய்தல்; to emit light, to be respiendent.

நிகழ்களன்

 நிகழ்களன் nigaḻgaḷaṉ, பெ. (n.)

   கதை நாடகம் முதலியன நிகழ்வதாகக் காட்டப்படும் இடம்; scene; setting for a play, etc.,

போர்க்களத்தை நிகழ்களனாகக் கொண்ட நாடகம். (உ.வ.);.

     [நிகழ் + களன்.]

நிகழ்காலம்

நிகழ்காலம் nigaḻgālam, பெ. (n.)

   வினை நடைபெறுகிற காலம் (தொல்.சொல். 240, இளம்பூ.);; தொழில் தொடங்கப் பெற்று முற்றுப் பெறாத நிலைமை (தொல். சொல்.200, சேனா.);; present tense.

     [நிகழ் + காலம்.]

தொழிலாவது பொருளினது புடைப் பெயர்ச்சியாகலின் அஃதொருகணம் நிற்பதல்லது இரண்டுகணம் நில்லாமையில் நிகழ்ச்சி யென்பதொன்று அதற்கில்லை.

நிகழ்காலவினையெச்சம்

 நிகழ்காலவினையெச்சம் nigaḻgālaviṉaiyeccam, பெ. (n.)

   அகர ஈறுபெற்று இடைநிலை யோடு கூடாது தானே நிகழ்காலம் காட்டி நிற்குஞ்சொல் (த.சொ.அக.);; present verbal participle.

     [நிகழ்காலம் + வினையெச்சம்,]

எ-டு.

வந்திருக்கிறான் – நிகழ்கால நிறைவு.

வந்திருப்பான் – எதிர்கால நிறைவு.

வந்திருந்தான் – இறந்தகால நிறைவு.

வந்து கொண்டிருக்கிறான் – நிகழ்கால நிறைவுத் தொடர்ச்சி.

வந்து கொண்டிருந்தான் – இறந்தகால நிறைவுத் தொடர்ச்சி.

வந்து கொண்டிருப்பான் – எதிர்கால நிறைவுத் தொடர்ச்சி.

நிகழ்காலவிலக்கு

நிகழ்காலவிலக்கு nigaḻgālavilaggu, பெ. (n.)

   நிகழ்காலம் பற்றிவரும் முன்னவிலக்கென்னும் அணி (தண்டி.42, உரை.); ; a kind of rhetoric signifying the present.

     [நிகழ்காலம் + விலக்கு.]

நிகழ்சாதி

 நிகழ்சாதி nigaḻcāti, பெ. (n.)

   ஆண்சாதி நான்கு வகைகளில் ஒன்று; one of the four classes of men. (சா.அக.);.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி1 nigaḻcci, பெ. (n.)

   1. நேர்ச்சி; occurrence, incident. Event.

     ‘மூன்று கால நிகழ்ச்சியையும் அறியுமவன்’ (பு.வெ. 8, 13, உரை.);.

   2. நிலைமை; situation.

     “ஒலி யெழுதற்கஞ்சி நின்ற நிகழ்ச்சியும் போன்ம்” (பரிபா.10;62.);.

   3. செயல்; business.

     “நினக்கு யான்புரிய நிகழ்ச்சி யாது” (காஞ்சிப்பு. தழுவக்.10.);.

   4. இக்காலம்; present moment.

     [நிகழ் → நிகழ்வு → நிகழ்ச்சி.]

 நிகழ்ச்சி2 nigaḻcci, பெ. (n.)

   ஒளி; light.

     [நிகர் → நிகழ்.] [நிகர் = ஒளி.]

 நிகழ்ச்சி3 nigaḻcci, பெ. (n.)

   வரவு, பெருக்கம்; income, increasing the quantity.

     “கெழியின்மை கேட்டாலறிக பொருளின் நிகழ்ச்சி யானாக்கம் அறிக” (நான்மணி.64.);.

 நிகழ்ச்சி4 nigaḻcci, பெ. (n.)

   தொலைக்காட்சி வானொலி முதலியவற்றில் நடத்திக்காட்டப்படுவது; programme, broadcast.

இன்றையத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காணத் தகுவனவாய் இல்லை (உ.வ.);.

     “வானொலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்கும் பழக்கத்தைக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகக் கொண்டவர்” (உ.வ.);.

     [நிகழ் → நிகழ்ச்சி.]

நிகழ்ச்சி வளைவர்

 நிகழ்ச்சி வளைவர் nigaḻccivaḷaivar, பெ.(n.)

   தொலைக்காட்சி,வானொலி, காணொலிகளில் நாட்டு நடப்புகள், விழாக்கள், கலை நிகழ்ச்சி கள் புறத்தீடு செய்வதற்காக நிகழ்ச்சிகளை நேரிற் சென்று காணொலியில் அல்லது கேட்பொலியில் பதிவு செய்யும் தொழில்நுட்பப் Listofum’ssif; technicians for video coverage or audio coverage.

     [நிகழ்ச்சி+வளைவர்]

நிகழ்ச்சிநிரல்

 நிகழ்ச்சிநிரல் nigaḻcciniral, பெ. (n.)

   நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் ஒழுங்கு படுத்தப்பட்ட தொகுப்பு; agenda;list of programmes.

கலைமாமணி விருது வழங்கும் நிகழ்ச்சி நிரலைச் சரியாக அமைத்து வழங்கியிருந்தனர் (உ.வ.);. முதலமைச்சரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரலைப் பெற்றுக் கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும் (உ.வ.);. இன்றையக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை அணியப் படுத்திவிட்டேன் (உ.வ.);.

     [நிகழ்ச்சி → நிரல்.]

நிகழ்த்து

நிகழ்த்து1 nigaḻddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அருஞ்செயல் புரிதல்; to create a record.

அகரமுதலித் துறையில் அருஞ்செயல் நிகழ்த்தியோர் பலர் (உ.வ.);.

   2. விந்தை ஏற்படுத்துதல்; to work a miracle.

இறைவன் நிகழ்த்தி யதாகக் கூறப்படும் விந்தைகளின் தொகுப்பே திருவிளையாடற் புராணமெனும் தொன்ம நூலாகும் (உ.வ.);.

   3. நாடகம், நாட்டியம் முதலிய வற்றை நடித்து, நடத்துதல்; to perform.

நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப் படுவதுதான். (உ.வ.);. தெருக்கூத்தைச் சிறப்பாக நிகழ்த்திக் காட்டினார்கள். (உ.வ.);.

   4. உரை வழங்குதல்; to deliver a speech etc.,

குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவார். (உ.வ.);.

   5. சொற் பொழிவாற்றுதல். கலந்துரையாடல்; to conduct a discussion

மதுரையில் நடந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் தேவநேயப் பாவாணர் நிகழ்த்திய உரையை நூலாக வெளியிட்டுள்ளனர். (உ.வ.);.

 நிகழ்த்து2 nigaḻddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. நடப்பித்தல்; to effect, perform, transact, set on foot, bring to pass.,

     “ஐந்தொழி னிகழ்த்தலாகும்” (திருவாத. பு. திருவெம்.6.);.

   2. சொல்லுதல்; to speak, say, mention, narrate, declare.

     “முதல்வன் வன்மை யாவரே நிகழ்த்தற்பாலர்” (கந்தபு. சூரப. வதை.74.);.

நிகழ்த்துநர்

 நிகழ்த்துநர் nigaḻttunar, பெ.(n.)

   பொம்மலாட்டம், காளியாட்டம் முதலான நாட்டுப்புறக் கலைகளை நடத்துபவர்; organiser of puppet show. [நிகழ்த்து+நர்]

நிகழ்பு

நிகழ்பு nigaḻpu, பெ. (n.)

நிகழ்ச்சி, 1.2 பார்க்க; see {nigalcci}

     “முக்காலமு நிகழ்பறிபவன்” (பு.வெ.8.13, கொளு.);.

     [நிகழ்-நிகழ்பு.]

நிகழ்முறை

 நிகழ்முறை nigaḻmuṟai, பெ. (n.)

நிகழ்ச்சி நிரல் பார்க்க; see {ngasco-niral}

     [நிகழ்+முறை.]

நிகழ்வாக்கம்

நிகழ்வாக்கம் nigaḻvāggam, பெ. (n.)

   படிநிலை மாற்றம், படிநிலை வளர்ச்சி; transformation.

     “ஒத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து

நின்றேன்” நீலகேசி, 421.).

     [நிகழ்வு + ஆக்கம்.]

நிகழ்வினைவிலக்கு

 நிகழ்வினைவிலக்கு nigaḻviṉaivilaggu, பெ. (n.)

   நிகழ் வினையைக் காட்டி விலக்குவதாகிய ஓர் அணி; a figure of speech.

     [நிகழ்வினை + விலக்கு.]

   எ-டு;மாதர் நுழைமருங்கு நோவ மணிக்குழைசேர் காதின்மிசை நீலங்கவின் புனைவீர்-மீதுலவு நீனிலவு வாட்கண் நிமிர்கடையே செய்யாவோ நானிலஞ் செய்யு நலம்.

நிகழ்வு

நிகழ்வு1 nigaḻvu, பெ. (n.)

நிகழ்ச்சி1, 1,4 பார்க்க; see {nigalcci.}

     “இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றா” (தொல். சொல். 202.);.

     [நிகழ் → நிகழ்வு.]

 நிகழ்வு2 nigaḻvu, பெ. (n.)

   1. வாழ்க்கையில் இயற்கையாக நிகழ்வது, நடைபெறுவது; happening, occurrence.

பிறப்பு, இறப்பு என்ற இரு நிகழ்வுகளுக்கு இடையே நடைபெறுவது தான் வாழ்க்கை. (உ.வ.);.

   2. நிகழ்ச்சி; incident.

   3. நடப்பு; event.

உண்மை நிகழ்வுகளை அடித்தளமாய் கொண்டமைக்கப்பட்டது இந்நாடகம். (உ.வ.);.

நிகவா

நிகவா nigavā, பெ. (n.)

   1. பிரமிப்பூடு; hysso;plant-zoofa-hyssopus officinalis

   2. நீர்ப்பிரமி; Indian brahmi-Gratiola monicri

நிகா

நிகா nikā, பெ.(n.)

   1. குறிப்பு(வின்.);; mark, aim, idea, notion.

   2. எச்சரிக்கை; care, carefulness.

   3. கொழுப்பு; impudence.

     “உனக்கு உடம்பில் நிகா ஏறிவிட்டது” (Madr);.

     [U. {} → {} → த. நிகா]

நிகாசகம்

நிகாசகம்2 nigācagam, பெ. (n.)

   மகிழமரம்; morning face flower-mimusops alingi-

நிகாதன்

 நிகாதன் nikātaṉ, பெ.(n.)

   வஞ்சகன் (பிங்.);; deceiver crafty man.

நிகாநயம்

 நிகாநயம் nikānayam, பெ. (n.)

   நிலவுமலர் (சந்திரகாந்தி);; moon flower Ipomaea grandi flora.

நிகாயன்

 நிகாயன் nikāyaṉ, பெ.(n.)

   கடவுள் (யாழ்.அக);; God, as formless. (காயமற்றவன்);.

     [Skt. nikaya → த. நிகாயன்]

நிகாயம்

நிகாயம் nikāyam, பெ. (n.)

   குக்கில் எனும் செடி; Indian dammar regin-shorea robusta

 நிகாயம் nikāyam, பெ.(n.)

   1. கூட்டம் (சூடா.);; assembly, multitude, company.

   2. இடம் (பிங்.);; place, site.

   3. வீடு; habitation, dwelling.

   4. நகரம் (பிங்.);; town, city.

     [Skt. {} → த. நிகாயம்]

நிகாரணன்

 நிகாரணன் nikāraṇaṉ, பெ. (n.)

   கொலைஞன் (யாழ்.அக.);; murderer.

 நிகாரணன் nikāraṇaṉ, பெ.(n.)

   கொலைஞன் (யாழ்.அக.);; murderer.

     [Skt. {} → த. நிகாரணன்]

நிகாரம்

நிகாரம் nikāram, பெ. (n.)

   1. பனி; dew.

   2. உறைந்த பனித்தூள்; white particles of frozen dew, hoar frost (

சா.அக.).

     [நில் + காரம்.]

நில் – நி எனக் குறுகி முன்னொட்டானது. காரச்சீலை, காரச்சேவு. காரத்துளி(பூந்தி); காரப்பகை, காரப்பொடி, கார்மருந்து முதலியன வேகத்தையும் உறைப்பை யுமுடைய பொருள்கள். கரி என்னும் வினையடியால் பிறந்த தொழிற்பெயர். கரி + அம்-காரம்; முதனிலைத் திரிந்து விகுதி பெற்ற தொழிற் பெயர். ஒ.நோ. படி + அம் = பாடம், தவி+அம்=தாவம். கரித்தல் – மிகுதல், காரம்மிகுதி. காரம் என்னும் சொல் முதலாவது மிகுதியை உணர்த்திப் பின்பு உறைப்பு மிகுதியை உணர்த்தும். உறைப்பு உறைந்த பணியையும் உணர்த்தும்.

காரம் பார்க்க; see {karam}

 நிகாரம் nikāram, பெ.(n.)

   1. பனி; dew.

   2. உறைந்த பனித்தூள்; white particles of frozen dew, hear frest. (சா.அக.);

 நிகாரம்1 nikāram, பெ.(n.)

   பனி (வின்.);; dew.

     [Skt. nihara → த. நிகாரம்]

 நிகாரம்2 nikāram, பெ.(n.)

   1. அவமரியாதை (யாழ்.அக.);; dishonour.

   2. தவறு; error.

   3. தூற்றுகை; slandering.

   4. விழுங்குகை; swallowing.

     [Skt. {} → த.நிகாரம்]

நிகாலம்

 நிகாலம் nikālam, பெ. (n.)

   கழுத்து; neck. (சா.அக.);.

நிகாவப்புடவி

 நிகாவப்புடவி nikāvappuḍavi, பெ. (n.)

   நிகவா பார்க்க; see {nigavச்}

நிகாவரி

 நிகாவரி nikāvari, பெ. (n.)

நிகவா பார்க்க; see {nigavá} (சா.அக.);.

நிகாவா

 நிகாவா nikāvā, பெ. (n.)

   நிகவா பார்க்க; see {ngavā}

நிகிதம்

நிகிதம் nigidam, பெ.(n.)

   1. படை (வின்.);; army, troops.

   2. பொருத்தப்பாடின்மை; unsuita- bility.

     “வெந்துயற் குதவுமவ னிகித குரு” (வேதா.சூ, 16, உரை);.

     [Skt. nihita → த. நிகிதம்]

நிகிருட்டம்

 நிகிருட்டம் nigiruṭṭam, பெ.(n.)

   இழிவு (சா.அக.);; baseness.

     [Skt. {} → த. நிகிருட்டம்]

நிகிருதி

நிகிருதி nigirudi, பெ.(n.)

   1. வறுமை(யாழ்.அக.);; poverty.

   2. பொல்லாங்கு; evil, wickedness.

   3. பழிப்பு; reproach.

     [Skt. {} → த.நிகிருதி]

நிகிர்தம்

நிகிர்தம் nigirtam, பெ.(n.)

   பிசி (இலக். வி. 904, உரை);; a verse which has an inner significance.

     [Skt. nikrta → த. நிகிர்தம்]

நிகிலம்

 நிகிலம் nigilam, பெ.(n.)

   எல்லாம்; entireness, whole.

     “பாதாளமாதி லோக நிகிலமும்”.

     [Skt. nikhila → த. நிகிலம்]

நிகீனன்

 நிகீனன் niāṉaṉ, பெ.(n.)

   கீழ்மகன் (யாழ்.அக.);; base person.

     [Skt. nihina → த. நிகீனன்]

நிகீயெனல்

 நிகீயெனல் niāyeṉal, பெ. (n.)

   குதிரையின் கனைப்புக் குறிப்பு; onom. Expr. of the neighing of a horse.

நிகு

நிகு1 nigu, பெ. (n.)

   அறியுங் கருவி (யாழ்.அக.);; instrument of knowledge.

 நிகு2 nigu, பெ. (n.)

   மஞ்சள்; turmeric-curcuma longa.

நிகுஞ்சகம்

 நிகுஞ்சகம் niguñjagam, பெ. (n.)

   ஒரு மரம்; a kind of a tree.

நிகுஞ்சம்

நிகுஞ்சம் niguñjam, பெ.(n.)

   1. புதர் வீடு(வின்.);; bower, place overgrown with creepers.

   2. குகை (பிங்.);; cavern.

   3. சிற்றில் (யாழ்.அக.);.

     [Skt. {} → த. நிகுஞ்சம்]

நிகுஞ்சரம்

 நிகுஞ்சரம் niguñjaram, பெ. (n.)

   சுக்குநாறிப்புல்; ginger grass-andropogon hardus. (

சா.அக.).

நிகுட்டம்

 நிகுட்டம் niguṭṭam, பெ.(n.)

   இரைச்சல் (யாழ்.அக.);; noise, sound.

     [Skt. {} → த. நிகுட்டம்]

நிகுதி

நிகுதி nigudi, பெ.(n.)

   1. செய் வழக்கம்; method, custom.

   2. வரி; fee, tribute (C.G.);.

     [Skt. niyati → த. நிகுதி]

நிகுத்தை

 நிகுத்தை niguttai, பெ.(n.)

   கதவு (பிங்.);; door.

     [Cf. ni-gupta → த. நிகுத்தை]

நிகுநிகுவெனல்

 நிகுநிகுவெனல் niguniguveṉal, பெ. (n.)

   மினுமினுத்தற் குறிப்பு; expr. signifying the glittering of an object.

நெய் பூசிய கத்தி நிகுநிகு வென்றிருக்கிறது. (உ.வ.);.

க. நிகிநிகி

     [நிகு + நிகு + எனல்.]

நிகுமம்

 நிகுமம் nigumam, பெ. (n.)

நிகும்பம் பார்க்க; see {nigumbam} (சா.அக.);.

     [நிகும்பம் → நிகுமம்.]

நிகும்பசாரி

 நிகும்பசாரி nigumbacāri, பெ. (n.)

   காட்டாமணக்கு; parging nut-jhatropha Curcas.

     [P]

நிகும்பன்

 நிகும்பன் nigumbaṉ, பெ.(n.)

   கும்பகருணன் மகனாகிய ஓர் அரக்கன் (கம்பரா.);; a giant, Son of kumbhakarna.

     [Skt. nikumbha → த. நிகும்பன்]

நிகும்பம்

நிகும்பம் nigumbam, பெ. (n.)

   1. நேர்வாளம்; croton oil plant-croton tigilium.

   2. நேர்வாளக் கொட்டை; croton seed.

   3. காட்டு நேர்வாளம்; small wild aumanac-Jatropha

 multifida.

   4. எலியாமணக்கு; rat aumanac, adul oil plant-Jatropha glandulifera.

   5. சிவதை; Indian rhubarb-lpomaea turpethem

     (சா..அக.);.

 நிகும்பம் nigumbam, பெ.(n.)

   நேர்வாளம் (மலை.);; purging croton.

     [Skt. nikumbha → த. நிகும்பம்]

நிகுரம்

நிகுரம் niguram, பெ. (n.)

   1. பினத்தல் நளிர்; delirium.

   2. ஒருவகை வெறி; frenzy-phrenitis

நிகூடம்

நிகூடம் niāṭam, பெ.(n.)

   1. மறைவு (யாழ்.அக.);; concealment.

   2. ஆழம்; depth.

     [Skt. {} → த. நிகூடம்]

நிகேசரம்

நிகேசரம்1 niācaram, பெ. (n.)

   1.சம்பங்கிமரம்; champauk tree michelia champaca.

   2. சம்பங்கிப் புல்; a kind of grass with fragrance of champak. (சா.அக.);.

நிகேதனம்

நிகேதனம் niātaṉam, பெ.(n.)

   1. வீடு (அக.நி.);; house, habitation.

     “நிதி நிகேதனங்களெங்கும்” (பெரியபு.திருநாட்.33);.

   2. கோவில்; temple.

     “இந்நிகேதன மேகுதி நீயென்றன்” (கந்தபு. திருவி. 119);.

   3. நகரம் (பிங்.);; town, city.

     [Skt. {} → த. நிகேதனம்]

நிகேரம்

நிகேரம்2 niāram, பெ. (n.)

   மரவகை;     (சங்.அக.);;

 a kind of tree.

நிகோடா

 நிகோடா niāṭā, பெ. (n.)

   பூவந்தி எனும் மரவகை; four leaved soap nut.

நிகோதம்

நிகோதம் niātam, பெ.(n.)

   1. கொடிய கீழாம் நரகவகை (சீவக. 2793, உரைக் குறிப்பு);; a hell.

   2. விலங்கினம்; animal kingdom.

     “நிகோதப் பிறவியும்” (சூளா. துற. 118);.

     [Skt. {} → த. நிகோதம்]

நிங்கசம்

 நிங்கசம் niṅgasam, பெ. (n.)

   சங்குத் திராவகம் பார்க்க; see {sangu-t-tiravagam.}

நிசக்கல்லு

 நிசக்கல்லு nisakkallu, பெ. (n.)

   நஞ் (வைத்திய பரிபா.);; a kind of prepared po son.

     (கதி.அக.);.

நிசங்கம்

நிசங்கம் nisaṅgam, பெ.(n.)

   1. அம்புக் கூடு (யாழ்.அக.);; quiver of arrows.

   2. இணக்கம்; acquiescence.

     [Skt. {} → த. நிசங்கம்]

நிசசதன்

 நிசசதன் nisasadaṉ, பெ.(n.)

   நிசவான் (வின்.);; honest man.

     [நிசம் → நிசகதன்]

நிசதம்

நிசதம் nisadam, வி.எ.(adv.)

   நாள்தோறும்; daily without fail.

     “ஒரு நந்தா விளக்கினுக்கு நிசதம் உழக்கு நெய்” (S.I.I. i, 142);.

     [Skt. niyata → த. நிசதம்]

நிசனம்

 நிசனம் nisaṉam, பெ.(n.)

   தனிமை (உரி.நி.);; loneliness, solitude.

     [Skt. nir-jana → த. நிசனம்]

நிசப்தம்

 நிசப்தம் nisaptam, பெ.(n.)

   எந்தவிதச் சத்தமும் இல்லாத நிலை, அமைதி; silence, stillness.

     “நிசப்தமான இரவு. கூட்டத்தினர் இடையே சலசலப்பு ஒய்ந்து நிசப்தம் நிலவியது”. (இ.வ.);

 நிசப்தம் nisaptam, பெ.(n.)

   ஒலியின்மை; silence, stillness.

     [Skt. {} → த. நிசப்தம்]

நிசப்பசி

 நிசப்பசி nisappasi, பெ.(n.)

   உண்மையாக அல்லது சாதாரணமாகவுண்டாகும் பசி; true hunger occuring in the usual course as opposed to, false hunger. (பொய்ப்பசி);.(சா.அக.);

நிசமம்

 நிசமம் nisamam, பெ. (n.)

நியமம் பார்க் (யாழ்.அக.);;see niyamam.

     [நியமம் → நிசமம்.]

நிசம்

நிசம் nisam, பெ.(n.)

   1. நிச்சயம்; certainty, assurance, ascertainment.

   2. சத்தியம்; truth, veracity.

     “சோர மங்கையர்கணிச முரையார்கள்” (குமரே. சத. 36);.

   3. இயல்பாக வுரியது; that which is proper or one’s own.

     “என்னிச வடிவினையாண் காண” (கைவல். தஞ். 64);.

     [Perh. Njia(T.nijamu, K., Tu.nija, M. nijam);]

நிசர்

நிசர் nisar, பெ.(n.)

   1. இராத்திரி; night.

   2. நடு ராத்திரி; mid night. (சா.அக.);

நிசர்மசேபம்

 நிசர்மசேபம் nisarmasēpam, பெ.(n.)

   தோலுட் புகட்டல் (lit);; inserting through the skin intro dermal. (சா.அக.);.

நிசவலி

 நிசவலி nisavali, பெ.(n.)

   உடம்பில் நோயினால் உண்டாகும் வலி; p. (சா.அக.);

நிசவான்

 நிசவான் nisavāṉ, பெ.(n.)

   உண்மையுள்ளவன் (வின்.);; true, sincere, upright, honest man.

     [நிசம் → நிசவான்]

     [நிசம் + வான்]

நிசவிரணம்

 நிசவிரணம் nisaviraṇam, பெ.(n.)

   திரிதோசங் களினாலும், தொந்தத்தினாலும் ஏற்படும் விரணம்; sores caused in the body either constitutionally or by infection. It is opposed to inflicted wounds or injuries. (சா.அக.);

நிசா

நிசா1 nicā, பெ.(n.)

   போதை; intoxication.

   2. குடி மயக்கம்; giddiness due to drunkenes. (சா.அக.);

     [Skt. {} → த. நிசா]

 நிசா2 nicā, பெ.(n.)

   இரவு (பிங்.);; night.

     [Skt. {} → த. நிசா]

நிசாகசம்

நிசாகசம் nisākasam, பெ. (n.)

   1. இரவி மலரும் வெள்ளாம்பல்; white Indian water lily nymphaea pubescense.

   2. மகிழமரம்; morn ing face flower-mimusops alingi.

நிசாகசி

 நிசாகசி nisākasi, பெ. (n.)

   தாமரைக் கொடி; lotus creeper-nelumbium speciosur

நிசாகம்

 நிசாகம் nicākam, பெ. (n.)

   மஞ்சள்; turmeric-curcuma longa.

 நிசாகம் nicākam, பெ.(n.)

   ஒருவகையான வீர முழவு; a percussion instrument.

     [நிசாளம்-நிசாகம்]

நிசாகரன்

நிசாகரன் nicākaraṉ, பெ.(n.)

   1. திங்கள் (பிங்.);; moon.

   2. சேவல் (சங்.அக.);; cock.

     [Skt. {} + த. கரன் → த. நிசாகரன்]

நிசாகரம்

 நிசாகரம் nicākaram, பெ. (n.)

கோழிக்கீரை

 cocks green-portulaca oleracea

நிசாகரி

 நிசாகரி nicākari, பெ.(n.)

   கூகை; owl. (சா.அக.);

நிசாசதா

 நிசாசதா nicācatā, பெ.(n.)

   கோதுமைச்சத்து; malt prepared from wheat. (சா.அக.);

நிசாசரன்

நிசாசரன் nicācaraṉ, பெ.(n.)

   1. அசுரன்; Asura (இரவில் திரிவோன்);

 night-rover.

     “நிசாசரர் மேற் பேராழி கொண்ட பிரான்” (திவ். இயற். 1, 83);.

   2. அரக்கன்;{}.

     “நிசாசர னுருப்புணர் நெருப்பு நீர்மையான்” (கம்பரா. யுத்த. மந்திரப். 42);.

   3. திங்கள்; moon.

     “இப்பெண் சிறையைச் சீர்த்த நிசாசரனுஞ் செய்யுமோ” (திருவாரூ. 299);.

     [Skt {} → த. நிசாசரன்]

நிசாசரம்

நிசாசரம் nicācaram, பெ.(n.)

   1. ஆந்தை; owl.

   2. பாம்பு; snake.

     [Skt. {}-cara → த. நிசாசரம்]

நிசாசரி

நிசாசரி nicācari, பெ.(n.)

   1. அரக்கி;{}.

     “ஓர் நிசாசரி தான் வந்தாளை” (திவ். இயற். சிறியம. 39);.

   2. கூகை (பிங்.);; owl.

   3. பரத்தை (யாழ்.அக.);; whore.

     [Skt. {}-cari → த. நிசாசரி]

நிசாசலம்

 நிசாசலம் nicācalam, பெ.(n.)

   பனி(யாழ்.அக.);; dew.

     [Skt. {} + த. சலம் → த. நிசாசலம்]

நிசாடம்

 நிசாடம் nicāṭam, பெ.(n.)

   ஆந்தை (யாழ்.அக.);; owl.

     [Skt. {} → த. நிசாடம்]

நிசாடு

 நிசாடு nicāṭu, பெ. (n.)

   மஞ்சள்; turmeric (சா.அக.);.

 நிசாடு nicāṭu, பெ.(n.)

   மஞ்சள் (மலை.);; turmeric.

     [Skt. {} → த. நிசாடு]

நிசாடுகம்

 நிசாடுகம் nicāṭugam, பெ. (n.)

நிசாடு பார்க்க see {nišādu}

நிசாதனம்

 நிசாதனம் nicātaṉam, பெ. (n.)

   பழமுள்ளிட்பாலை; edible palay, mimusops kank

நிசாதன்

நிசாதன் nicātaṉ, பெ.(n.)

   வஞ்சகன் (சூடா.);; deceiver.

   2. கீழ்மகன் (யாழ்.அக.);; low, mean person.

     [Skt. {} → த. நிசாதன்]

நிசாதமை

 நிசாதமை nicātamai, பெ. (n.)

   பழமுள்ளிட் பாலை; edible palay mimusops kank

நிசாதல்

 நிசாதல் nicātal, பெ. (n.)

   நவச்சாரம்; ammonia chloride.

நிசாதி

 நிசாதி nicāti, பெ.(n.)

   மாலை நேர ஒளி (யாழ்.அக.);; evening twilight.

     [Skt. {} → த. நிசாதி]

நிசாதைலம்

 நிசாதைலம் nicātailam, பெ.(n.)

   பவுத்திரத்தின் மேல் பூசும் ஒரு தைல மருந்து; an ointment used in fistula. (சா.அக.);

     [Skt. {} → த. நிசாதைலம்]

நிசாந்தம்

நிசாந்தம்1 nicāndam, பெ.(n.)

   வைகறை, விடியற்காலம் (வின்.);; day break, as the end of the night.

     [Skt. {} → த. நிசாந்தம்]

 நிசாந்தம்2 nicāndam, பெ.(n.)

   விடியற்காலம்; day break dawn. (சா.அக.);

நிசான்

நிசான் nicāṉ, பெ.(n.)

   கொடி; flag, banner.

     “நாடு நகரு நிசா ஏட்டிய பாளயமும்” (தாயு. பராபரக். 232);.

     [U. {} → த. நிசான்]

நிசாபதி

நிசாபதி nicāpadi, பெ.(n.)

   கற்பூரம்; camphor. (சா.அக.);

 நிசாபதி nicāpadi, பெ.(n.)

   1. திங்கள் (பிங்.);; moon, as Lord of the night.

   2. கருப்பூரம் (எரியணம்); (சங்.அக.);; camphor.

     [Skt. {} → த. நிசாபதி]

நிசாபிகம்

 நிசாபிகம் nicāpigam, பெ. (n.)

   மரமஞ்சள்; tree turmeric-coscinum fenestratum

நிசாபிகாரி

 நிசாபிகாரி nicāpikāri, பெ. (n.)

   சிற்றாமரைப்பூ; small lotus flower.

நிசாபிசா

 நிசாபிசா nicāpicā, பெ. (n.)

   நிசாபிகம் பார்க்க; see {nišābigam}

நிசாபுட்பம்

நிசாபுட்பம் nicāpuṭpam, பெ.(n.)

   1. இரவில் மலரும் வெள்ளாம்பல்; white indian water-lily, as opening its petals at night.

   2. செவ்வாம்பல் (மலை.);; red indian water-lily.

   3. உறைபனி (யாழ்.அக.);; ice.

     [Skt. {} → த. நிசாபுட்பம்]

 நிசாபுட்பம் nicāpuṭpam, பெ.(n.)

   1. உறைபனி; foozen dew, snow. (சா.அக.);

நிசாமணி

நிசாமணி1 nicāmaṇi, பெ.(n.)

   மின்மினி; glow woom, fire fly. (சா.அக.);

 நிசாமணி2 nicāmaṇi, பெ.(n.)

   1. திங்கள் (வின்.);; moon, as the gem of night.

   2. மின்மினி (யாழ்.அக.);; firefly, glow-worm.

     [Skt. {} → த. நிசாமணி]

நிசாமனம்

நிசாமனம் nicāmaṉam, பெ.(n.)

   1. கேள்வி (யாழ்.அக.);; listening to words of wisdom.

   2. பார்வை; sight.

   3. நிழல்; shade.

     [Skt. {} → த. நிசாமனம்]

 நிசாமனம் nicāmaṉam, பெ.(n.)

   உடம்பின் உள்ளுறுப்புகளைக் கருவியால் சோதித்துத் திட்டமாக்கல்; a kind of diagnosis or determining the disease by examination of the internal organs of the body through instruments such as stesthoscope used for chest auscultation. (சா.அக.);

நிசாமனி

 நிசாமனி nicāmaṉi, பெ.(n.)

   இருதயத் துடிப்பு முதலிய உள்ளுறுப்புகளின் நிலைமையைக் கண்டறியும் கருவி; an instrument used for determining or distinguishing the state of the internal organs of the body – stethoscope. (சா.அக.);

நிசாமானம்

 நிசாமானம் nicāmāṉam, பெ.(n.)

   இரவு கால வளவு (வின்.);; night time, duration.

     [Skt. {} + mana → த. நிசாமானம்]

நிசாரணன்

 நிசாரணன் nicāraṇaṉ, பெ.(n.)

   கொலைஞன் (யாழ்.அக.);; executioner, murderer.

     [Skt. {} → த. நிசாரணன்]

நிசாரணம்

 நிசாரணம் nicāraṇam, பெ.(n.)

   கொலை; murder. (சா.அக.);

நிசாரம்

நிசாரம் nicāram, பெ. (n.)

   1. மஞ்சள்; turmericcurcumalonga.

   2. வாழை; plantain.

 நிசாரம் nicāram, பெ.(n.)

   1. சாரமற்றது (யாழ்.அக.);; that which is insipid, dry or uninteresting.

   2. வருத்தம் (வின்.);; trouble, vexation.

     [Skt. nis-{} → த. நிசாரம்]

 நிசாரம் nicāram, பெ.(n.)

   1. மஞ்சள்; turmeric- circumalonga.

   2. பயனற்றது; that which is worthless.

   3. ஒரு வகைக் கழிச்சல்; a kind of diarrhoea.

   4. வாழை; plantain.

   5. சாறமற்றது; that which sapless. (சா.அக.);

நிசாரி

நிசாரி nicāri, பெ.(n.)

   கதிரவன்; sun, as enemy of the night.

     “நிசாரி புதல்வன்” (பாரத. அணி. 20);.

     [Skt. {}+ari → த. நிசாரி]

நிசார்

நிசார் nicār, பெ.(n.)

   நீண்ட காற்சட்டை; long drawers or trousers.

     “தங்கரேக் கென்னத் தயங்கு நிசார் தொட்டிறுக்கி” (கூளப்ப. 42);.

     [U. {} → த. நிசார்]

நிசார்த்தம்

 நிசார்த்தம் nicārttam, பெ.(n.)

நிதார்த்தம் பார்க்க (யாழ்.அக.);;see {}.

நிசாறு

நிசாறு nicāṟu, பெ.(n.)

   நீண்ட கால் சட்டை; trousers.

     “நேயத்தாற் பொற்பூ நிசாறு தந்தான்” (விறலிவிடு. 1120);.

     [U. {} → த. நிசாறு]

நிசாளம்

 நிசாளம் nicāḷam, பெ.(n.)

   பழம்பெரும் தோற் கருவியினுள் ஒரு வகை; an ancient percussion instrument.

நிசாவர்த்தி

 நிசாவர்த்தி nicāvartti, பெ. (n.)

   மஞ்சள், இந்துப்பு, கடுகு, குங்கிலியம் இவற்றைத் தேனில் அரைத்துத் துணிக்குத் தடவி வர்த்தியாகச் செய்து நாடிவிரணம், பவுத்திரம் முதலியவைகளுக்கு இடும் ஒரு மருந்து; a medicinal gauze or wick used for introducing into simus ulcer of fistula, the gauze or wick is smeared with the paste prepared with turmeric mustard, Conkany resin, rock salt and honey.

 நிசாவர்த்தி nicāvartti, பெ.(n.)

   மஞ்சள், இந்துப்பு, கடுகு, குங்கிலியம் இவைகளைத் தேனில் அரைத்துத் துணிக்குத் தடவி வத்தியாகச் செய்து நாடி விரணம், பவுத்திரம் முதலியவைகளுக்கு இடுமோர் மருந்து; a medicinal gauze or wick used for introducing into a simusulcer or fistula : the gauze or wick is smeared with the paste prepared with turmeric mustard, conkany resin, rocksalt and honey. (சா.அக.);

நிசி

நிசி nisi, பெ. (n.)

   1. மஞ்சள்; turmeric.

   2. மான்மணத்தி; musk.

 நிசி1 nisi, பெ.(n.)

   1. நடு இராத்திரி; midnight.

   2. பொன்; gold.

   3. மஞ்சள்; turmeric.

   4. கத்தூரி; musk. (சா.அக.);

 நிசி2 nisi, பெ.(n.)

   1. இரவு (பிங்.);; night.

     “நிசிவேளை நித்திரை” (திருவாச. 4, 28);.

   2. நள்ளிரவு; midnight.

     “நிசியில் கதவைத் தட்டினான்”.

   3. இருள் (திவா.);; darkness.

   4. மஞ்சள் (பிங்.);; turmeric.

     [Skt. {} → த.நிசி]

 நிசி3 nisi, பெ.(n.)

   பொன் (பிங்.);; gold. (சா.அக.);

     [Skt. nis(ka); → த.நிசி]

நிசிகம்

 நிசிகம் nisigam, பெ. (n.)

   மஞ்சள்; turmeric

நிசிசரன்

நிசிசரன் nisisaraṉ, பெ.(n.)

   இரவில் திரிவோன்; night rover.

     “நிசிசரன்முடியுடைதர” (தேவா. 615, 8);.

     [Skt. {}-cara → த. நிசிசரன்]

நிசிச்சுரம்

 நிசிச்சுரம் nisissuram, பெ.(n.)

   நடு இராத்திரியில் வரும் சுரம்; midnight fever. (சா.அக.);

நிசிதம்

நிசிதம்1 nisidam, பெ. (n.)

   1. கூர்மை; sharp- ness, keenness.

     “நிசித பாணங்களால்” (பாரதவெண். 801, உரைநடை);.

   2. இரும்பு (யாழ்.அக.);; iron.

     [Skt. {} → த. நிசிதம்]

 நிசிதம்2 nisidam, பெ.(n.)

   இகழ்ச்சி (யாழ்.அக.);; meanness, vileness, ignoring.

     [Skt. ni-siddha → த. நிசிதம்]

நிசிதாவி

 நிசிதாவி nisitāvi, பெ. (n.)

   செங்கொன்றை; red cassia-cassia marginata.

 நிசிதாவி nisitāvi, பெ.(n.)

   செங்கொன்னை; red cassia – Cassia marginata. (சா.அக.);

நிசித்தம்

நிசித்தம் nisittam, பெ.(n.)

   நெறிமுரண்; that which is contrary to the rule or objectionable.

     “விதி நிசித்தமெல்லாம்” (சைவச. பொது. 224);.

   2. இகழ்ச்சி (இ.வ.);; meanness, vileness, ignominy.

     [Skt. ni-siddha → த. நிசித்தம்]

நிசிந்தன்

நிசிந்தன் nisindaṉ, பெ.(n.)

   சிவன்; God, as free from all passions.

     “புனலன் மேனியினிசிந்தன் விடுமம்பு” (தக்கயாகப். 710);.

     [Skt. {}-cinta → த. நிசிந்தன்]

நிசிந்தா

நிசிந்தா nisindā, பெ.(n.)

   உதவியாளர்;   2. கோயிற்கணக்கன்; temple accountant.

     “கோயில் நிசிந்தா கடுமுடுக்காயிருக்கிறார்”.

     [U. nawisindah → த.நிசிந்தா]

நிசீதம்

நிசீதம்1 nicītam, பெ.(n.)

   1. இரவு; night.

   2. நள்ளிரவு; midnight.

     [Skt. {} → த. நிசீதம்]

 நிசீதம்2 nicītam, பெ.(n.)

   கூர்மை (யாழ்.அக.);; sharpness.

     [Skt. {} → த. நிசீதம்]

 நிசீதம்3 nicītam, பெ.(n.)

   சிறுமை, அற்பம் (யாழ்.அக.);; trifling.

     [Skt. ni-siddha → த. நிசிதம்]

நிசீதிகை

நிசீதிகை nicītigai, பெ.(n.)

   உண்ணா நோன்பால் உயிர் விடுகை; death by fasting, a custom among jains.

     “சந்திரநந்தி யாசிரிகர் நிசீதிகை” (T.A.S.I.1, 231);.

     [Skt. {} → த. நிசீதிகை]

நிசீத்தியை

 நிசீத்தியை nicīttiyai, பெ.(n.)

   இரவு(யாழ்.அக.);; night.

     [Skt. {} → த. நிசீத்தியை]

நிசுனம்

 நிசுனம் nisuṉam, பெ. (n.)

   நீர்க்கடம்பு எனும் செடி; a plant called {nir-k-kaçlambu.

நிசும்பனம்

 நிசும்பனம் nisumbaṉam, பெ.(n.)

   கொலை; murder.

     [Skt. {} → த. நிசும்பனம்]

நிசும்பன்

நிசும்பன் nisumbaṉ, பெ.(n.)

   கொலைஞன்; murderer.

     “நிசும்பரன்னதோர் நோலர்” (கந்தபு. வச்சிர. 24);.

     [Skt. {} → த. நிசும்பன்]

நிசும்பம்

 நிசும்பம் nisumbam, பெ.(n.)

   கொலை (யாழ்.அக.);; murder, slaughter.

     [Skt. {} → த. நிசும்பம்]

நிசுலகம்

 நிசுலகம் nisulagam, பெ.(n.)

   மார்புக் கவசம் (யாழ்.அக.);; coat of mail.

     [Skt. niculaka → த. நிசுலகம்]

நிசுலம்

 நிசுலம் nisulam, பெ. (n.)

   அலரி; oleanderNerium odorum.

நிசுளம்

 நிசுளம் nisuḷam, பெ. (n.)

   நீர்க்கடம்பு; water cadamba-stephegyne parviflora alias s.purpurea.

 நிசுளம் nisuḷam, பெ.(n.)

   நீர்க்கடம்பு; water cadamba.

     [Skt. nicula → த. நிசுளம்]

நிசுளாபுரி

 நிசுளாபுரி nisuḷāpuri, பெ.(n.)

சோழர் தலைநகராகிய உறையூர் (குருபரம்);;{},

 the chola capital.

     [Skt. nicula-puri → த. நிசுளாபுரி]

நிசுவாசம்

 நிசுவாசம் nisuvāsam, பெ.(n.)

 expiration.

     [Skt. {} → த. நிசுவாசம்]

நிசூதனம்

 நிசூதனம் nicūtaṉam, பெ.(n.)

   அழிக்கை (யாழ்.அக.);; destroying, killing.

     [Skt. {} → த. நிசூதனம்]

நிசேகம்

 நிசேகம் nicēkam, பெ.(n.)

   கருத்தரித்தல்; conception. (சா.அக.);

     [Skt. {} → த. நிசேகம்]

நிசேடம்

 நிசேடம் nicēṭam, பெ.(n.)

   முழுமை; entireness, completeness.

     [Skt. {} → த. நிசேடம்]

நிசை

நிசை nisai, பெ.(n.)

   இரவு; night.

     “தெவ்வரா நிசையழிந்து வெளியாக” (பாரத. இராச. 45);.

     [Skt. {} → த. நிசை]

நிசோதகம்

 நிசோதகம் nicōtagam, பெ. (n.)

   செஞ்சிவதை; a red variety of turbith rootIpomaea turpithum.

நிச்சடம்

நிச்சடம் niccaḍam, பெ. (n.)

   1. தாளிக்கொடி; hedge bind weed-lpomaca sepiaria alias-convolvulus marginatus.

   2. காட்டுத்தாளி; kaldanah-convolvulus muri-Catus.

நிச்சதம்

 நிச்சதம் niccadam, பெ. (n.)

   செடிக் காசரைக் கீரை. குப்பைக்கீரை; dung hill green Amurunthus virdis.

நிச்சத்தம்

 நிச்சத்தம் niccattam, பெ.(n.)

   சத்தமின்மை (இ.வ.);; absence of noise, silence.

     [Skt. {} → த. நிச்சத்தம்]

நிச்சநிரப்பு

நிச்சநிரப்பு niccanirappu, பெ. (n.)

   நாடோறும் இரவான் வருந்தித்தன் வயிறு நிறைத்தல்; living on daily begging.

     “பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு” (குறள், 532.);.

     [நித்தம் → நிச்சம் + நிரப்பு எப்போதும் வறுமையிலிருப்பது.]

நிச்சனதாரி

 நிச்சனதாரி niccaṉatāri, பெ. (n.)

   மாமரம்; mango tree-mangifera indica

நிச்சம்

நிச்சம்1 niccam, வி.எ. (adv.)

   1. எப்பொழுதும்; always, perpetually.

   2. நிலைத்த; constantly,

     “நிச்சமும் பெண்பாற்குரிய வென்ப” (தொல்.

பொருள். 99.).

   2. என்றும்; daily. pkt. niccam skt. nitya

நில் → நிற்றம் = நிலைப்பு

   ஒ.நோ;வெல் → வெற்றம்

கொல் → கொற்றம்.

நிற்றம் → நிச்சம்

   ஒ.நோ;முறம் → முற்றில் → முச்சில்.

 நிச்சம்2 niccam, பெ. (n.)

நிச்சயம் பார்க்க; see niccayam,

     “நிச்ச நினையுங்காற் கோக் கொலையாம்” (நாலடி.81.);.

{Skt.niš-caya}

     [நில் → நிற்றம் → நிச்சம் = நிலைப்பு.]

நிச்சயதாம்பூலம்

 நிச்சயதாம்பூலம் niccayatāmbūlam, பெ. (n.)

   திருமணத்தை உறுதிப்படுத்த மணமகனின் தகப்பன் மணமகளின் தகப்பனுக்குத் தாம்பூலம் முதலியன அளிக்கை; presentation of betel, plantains, turmeric, new cloths etc. by the father of the bride in confirmation of a marriage, betrothal.

     [நில் → நிற்றம் → நிச்சம் → நிச்சயம்

   ஒ.நோ;முற்றில் → முச்சில்.

     [நிச்சயம் + தாம்பூலம்.]

நிச்சயப்பத்திரிகை

 நிச்சயப்பத்திரிகை niccayappattirigai, பெ. (n.)

   உறுதிச் சீட்டு (புதுவை.);; certificate.

     [நில் → நித்தம் → நிச்சம் → நிச்சயம் + பத்திரிகை.]

 Skt. பத்திகா

நிச்சயம்

நிச்சயம் niccayam, பெ. (n.)

   1. உறுதி; certainty, assurance.

   2. மெய் (திவா.);; truth, veracity.

   3. துணிவு; decision, resolution, determination,

     “நிச்சயமெனுங் கவசத்தான் நிலைநிற்பதன்றி” (கம்பரா. சூரன்வதை.142.);.

     [நிச்சம் + அயம்.]

நிச்சயாந்தம்

நிச்சயாந்தம் niccayāndam, பெ. (n.)

   அணிவகை (பாப்பா.132.);;

நிச்சயார்த்தம்

நிச்சயார்த்தம் niccayārttam, பெ. (n.)

   1. மெய்ப்பொருள் (வின்.);; certainty, truth.

   2. நிச்சயதாம்பூலம் பார்க்க (இ.வ.);;see niccaya – {tāmbulam}

நிச்சயி-த்தல்

நிச்சயி-த்தல் niccayittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. உறுதிப்படுத்துதல் (வின்);; to ascertain, confirm.

   2. உறுதிசெய்தல்; to resolve, determine, decide,

     “அறிஞர் நிச்சயித்தனர்” (கந்தபு. சூரனமைச்.137.);.

     [நில் → நிச்சம் → நிச்சயி.]

நிச்சரேணி

 நிச்சரேணி niccarēṇi, பெ.(n.)

   ஏணி (யாழ்.அக.);; ladder.

     [Skt. {} → த. நிச்சரேணி]

நிச்சலன்

நிச்சலன் niccalaṉ, பெ.(n.)

   1. அசைவற்றவன்; steadfast, immovable person.

   2. கடவுள்; God.

     [Skt. {} → த. நிச்சலன்]

நிச்சலம்

நிச்சலம்1 niccalam, பெ.(n.)

   1. அசைவின்மை (யாழ்.அக.);; immobility, fixedness, steadfastness.

   2. இலக்கு (நால்வகையுள் அசைவற்றிருப்பது); (பாரத.வாரண.56);; fixed target, one of four ilakku. q.v.

   3. நித்தி யத்துவம் (யாழ்.அக.);; etermity.

     [Skt. {}-cala → த.நிச்சலம்]

 நிச்சலம்2 niccalam, பெ.(n.)

   நீருமுண்ணா திருக்கும் முழுப் பட்டினி (இ.வ.);; complete fasting in which even water is forbiden.

     [Skt. nir-jala → த. நிச்சலம்]

 நிச்சலம்3 niccalam, பெ.(n.)

   பட்டினி; starvation.

   2. அசைவின்மை; state of being without motion or movement, state of being still. (சா.அக.);

நிச்சலும்

நிச்சலும் niccalum, வி.எ.(adv.)

நிச்சல் பார்க்க; see niccal

     “நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய”(திவ்.திருவாய்,1,9,11.);.

     [நிச்சல் → நிச்சலும்.]

நிச்சல்

நிச்சல் niccal, வி.எ. (adv.)

   1.நிச்சம்1 பார்க்க; see niccam,

     “நிச்ச லேத்து நெல்வாயிலார் தொழ” (தேவா.213.);.

தெ. நிச்சலு, க. நிச்சல்

நில் → நிற்றம்-நிலைப்பு.

   ஒ. நோ;வெல் → வெற்றம்

கொல் → கொற்றம்.

நிற்றம் → நிற்றல் → நிச்சல்.

நிச்சல்காவி

நிச்சல்காவி niccalkāvi, பெ. (n.)

   காவிபாயின் கீழ்ப் பகுதி (M.Navi. 83);; lower top-sail.

     [நிச்சல் + காவி.]

நிச்சல்சவர்

 நிச்சல்சவர் niccalcavar, பெ. (n.)

   சவர் பாயின் கீழ்ப் பகுதி;     [நிச்சல் + சவர்.]

நிச்சள்

 நிச்சள் niccaḷ, பெ. (n.)

   கொடி வகை (மலை.);; hedge bind-weed.

நிச்சாணம்

 நிச்சாணம் niccāṇam, பெ. (n.)

   இதளியம்; mercury-hydargyrum.

நிச்சாரகம்

 நிச்சாரகம் niccāragam, பெ.(n.)

   காற்று; wind. (சா.அக.);

நிச்சி-த்தல்

நிச்சி-த்தல் niccittal,    11 செ.குன்றாவி. (v.t.)

நிச்சயி- பார்க்க; see niccayi-

     “நிச்சித்திருந் தேனென் னெஞ்சங் கழியாமை” (திவ். திருவாய்.10.45.);.

     [நில் → நிச்சல் → நிச்சி.]

நிச்சிதம்

நிச்சிதம் niccidam, பெ. (n.)

   உறுதி; cer tainty.

     ‘இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப்படப் படைத்தான் நிச்சிதமாக’ (புறநா. 194, உரை.);.

     [நில் → நிச்சம் → நிச்சிதம்.]

நிச்சிதார்த்தம்

 நிச்சிதார்த்தம் niccitārttam, பெ. (n.)

நிச்சயதாம்பூலம் (உ.வ.);

பார்க்க; see niccaya {tāmbŪlam}

     [நிச்சயதாம்பூலம் – நிச்சிதார்த்த (கொ.வ.);.]

நிச்சித்தம்

நிச்சித்தம் niccittam, பெ.(n.)

   1. விருப்பழிவு (வின்.);; extinction of the will;cessation of volition.

   2. கவலையின்மை (சங்.அக.);; absence of anxiety.

     [Skt. {}-citta → த. நிச்சித்தம்]

நிச்சிந்தன்

நிச்சிந்தன் niccindaṉ, பெ.(n.)

   1. கவலை யற்றவன்; one who is free from care.

   2. நிசிந்தன்; God, as free from all passions.

   3. அருகன் (பிங்.);; Arhat.

     [Skt. {} → த. நிச்சிந்தன்]

நிச்சிந்தை

 நிச்சிந்தை niccindai, பெ.(n.)

   கவலையின்மை (வின்.);; freedom from care or anxiety, unconcern peace of mind, entire repose.

     [Skt. {} → த. நிச்சிந்தை]

நிச்சியம்

 நிச்சியம் nicciyam, பெ. (n.)

   வெள்ளை பூண்டு; garlic – alliumsativum.

     [P]

நிச்சிரம்

 நிச்சிரம் nicciram, பெ. (n.)

நிச்சியம் பார்க்க; see nicciyam.

நிச்சிரேயசம்

 நிச்சிரேயசம் nissirēyasam, பெ.(n.)

   முத்தி, வீடுபேறு (யாழ்.அக.);; salvation.

     [Skt. {} → த. நிச்சிரேயசம்]

நிச்சுவசனம்

நிச்சுவசனம் nissuvasaṉam, பெ.(n.)

   1. பெரு மூச்சு; sigh.

   2. கோபம்; anger. (சா.அக.);

நிச்சுவாசம்

நிச்சுவாசம் niccuvācam, பெ.(n.)

   1. மூச்சு வெளிவிடுகை (தக்கயாகப். 674, உரை);; expiration.

   2. மூச்சு; breath.

   3. மூச்சடக்குகை (சி.சி. 4, 8, ஞானப்);; suspension of breath.

   4. சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச.பொது.333, உரை);; an ancient saiva scripture in sanskrit, one of

     [Skt. {} → த. நிச்சுவாசம்]

நிச்சேடம்

நிச்சேடம் niccēṭam, பெ.(n.)

   மிச்சமின்மை (சி.சி.2, 56, சிவாக்.); (சங்.அக.);; being without remainder.

     [Skt. {} → த. நிச்சேடம்]

நிச்சேட்டை

நிச்சேட்டை niccēṭṭai, பெ.(n.)

   செயலற் றிருக்கை (சி.சி. 4,8, சிவாக்.);; inactivity.

     [Skt. {} → த. நிச்சேட்டை]

நிடதன்

 நிடதன் niḍadaṉ, பெ.(n.)

   நிடத நாட்டரசனான் நளன்; Nala, the king of {}.

நிடதம்

நிடதம் niḍadam, பெ.(n.)

   ஓர் இரட்டைக்கை முத்திரை நிலை; a hand pose in dance.

     [நீடு-நிடுதம்-நிடதம்]

 நிடதம் niḍadam, பெ.(n.)

   1. எட்டு மலைகளில் ஒன்று (திவா.); (இரகு. குலமு.);; a mountain, one of {}-kula-parvatam. (q.v.);.

   2. ஒரு தேசம் (நைடத. நாட். 25);; a country in the N.E. of india.

     [Skt. {} → த. நிடதம்]

நிடலம்

 நிடலம் niḍalam, பெ. (n.)

   நெற்றி (சூடா.);; forehead

     [நுதல் → நுதலம் → நிதலம் → நிடலம்.]

 நிடலம் niḍalam, பெ.(n.)

   நெற்றி; fore head. (சா.அக.);

     [Skt. nitala → த. நிடலம்]

நிடலாட்சன்

 நிடலாட்சன் niḍalāḍcaṉ, பெ. (n.)

   கண்ணையுடையவனான) சிவன்; sivan, as having an eye in his forehead.

     [நுதல் → நிதல் → நிடல் + அட்சன்.]

 Skt. அக்ஷய → அட்ச → அட்சன்

 நிடலாட்சன் niḍalāḍcaṉ, பெ. (n.)

சிவா;{},

 as having an eye in his forehead.

     “நெற்றிக் கண்ணையுடையவன்”.

     [Skt. {} → த. நிடலாட்சன்]

நிடாடம்

 நிடாடம் niṭāṭam, பெ. (n.)

   ஆந்தை (வைத்தியகருப்பொ.);; owl.

 நிடாடம் niṭāṭam, பெ.(n.)

   ஆந்தை; owl. (சா.அக.);

நிடாலம்

 நிடாலம் niṭālam, பெ. (n.)

   நெற்றி (வைத்திய. (கருப்பொ.);; forehead.

     (கதி.அக.);.

     [நுதல் → நிதல் → நிடல் → நிடலம் → நிடாலம்.]

நிடாலைக்கோடு

 நிடாலைக்கோடு niṭālaikāṭu, பெ. (n.)

   சூடாலைக்கல் (யாழ்.அக.);; a kind of stone.

     [நீடு + ஆலை + கோடு.]

நிடூதனன்

 நிடூதனன் niṭūtaṉaṉ, பெ.(n.)

   கொலைஞன் (சது.);; murderer.

     [Skt. {} → த. நிடூதனன்]

நிடூதனம்

 நிடூதனம் niṭūtaṉam, பெ.(n.)

   கொலை (யாழ்.அக.);; slaughter murder.

     [Skt. {} → த. நிடூதனம்]

நிட்கண்டகன்

நிட்கண்டகன் niṭgaṇṭagaṉ, பெ.(n.)

   சிவ பெருமான் (பகையற்றவன்);; Siva as having no enemies.

     “தக்கன் றன்பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டக” (தேவா. 1049, 9);.

     [Skt. {} → த. நிட்கண்டகன்]

நிட்கண்டகம்

நிட்கண்டகம் niṭgaṇṭagam, பெ.(n.)

   1. தீமை யின்மை; freedom from danger or trouble.

   2. இரக்கமின்மை; mercilessness, lack of consideration.

     “நிட்கண்டக்ஞ்க் செய்து வாழ்வேன்” (தேவா. 743,5);.

     [Skt. {} → த. நிட்கண்டகம்]

நிட்கம்

நிட்கம்1 niṭkam, பெ.(n.)

   1. வராகனெடை (தைலவ. தைல.);; weight of a gold pagoda.

   2. நாணயவகை; a coin.

   3. பொன்; gold.

 நிட்கம்2 niṭkam, பெ.(n.)

   பறை வகை (யாழ்.அக.);; a kind of drum.

 நிட்கம்3 niṭkam, பெ.(n.)

   1. பலம்; one pallam weight.

   2. பொன்; gold.

   3. ஒரு வராகனெடை; a pagoda weight. (சா.அக.);

     [Skt. {} → த. நிட்கம்]

நிட்கருடபத்திரிகை

நிட்கருடபத்திரிகை niḍgaruḍabattirigai, பெ.(n.)

   1. உறுதிப்பத்திரம்; a certificate or warrant.

   2. விடுதலைப் பத்திரம்; a deed of renuniation.

நிட்கருடம்

 நிட்கருடம் niḍkaruḍam, பெ.(n.)

   நிச்சயம்; certainty, assurance, finality.

     [Skt. {} → த. நிட்கருடம்]

நிட்கருடை

 நிட்கருடை niḍkaruḍai, பெ.(n.)

   நிச்சயம்; assurance, certainly, finality.

நிட்கலம்

 நிட்கலம் niṭkalam, பெ.(n.)

   பெண்குறி; female genitals. (சா.அக.);

நிட்கலி

நிட்கலி niṭkali, பெ.(n.)

   மாதவிடாய் நின்ற பெண்; a woman whose menstruration has stopped (i.e.); a woman of 40 or 45 years old. (சா.அக.);

நிட்கலை

 நிட்கலை niṭkalai, பெ.(n.)

   பூப்பு நின்று போனவள் (யாழ்.அக.);; woman past menstruation.

     [Skt. {} → த. நிட்கலை]

நிட்களக்கல்

 நிட்களக்கல் niṭkaḷakkal, பெ. (n.)

   ஒருவகை நஞ்சு (சீதங்க பாடாணம்);; a mineral poison.

 நிட்களக்கல் niṭkaḷakkal, பெ.(n.)

   சீதாங்க பாடாணம்; a mineral poison. (சா.அக.);

நிட்களங்கம்

 நிட்களங்கம் niṭkaḷaṅgam, பெ.(n.)

   மாசின்மை; immaculateness, purity.

     [Skt. {} → த. நிட்களங்கம்]

நிட்களசிவம்

நிட்களசிவம் niṭkaḷasivam, பெ.(n.)

   அருவ மான சிவம் (சதா.சிவ. 3, உரை);; the formless aspect of {}.

     [Skt. {} + (saiva); → த.நிட்களசிவம்]

நிட்களம்

நிட்களம் niṭkaḷam, பெ.(n.)

   உருவமின்மை; formlessness.

     “நிட்களங் கட்காண்டகுதி நீளிடை” (ஞானா. 61, 3);.

     [Skt. {} → த. நிட்களம்]

நிட்களர்

 நிட்களர் niṭkaḷar, பெ.(n.)

   அருவடிவாகிய சிவபிரான்; formless {}.

     [Skt. {} → த. நிட்களர்]

நிட்காபட்டியம்

 நிட்காபட்டியம் niṭkāpaṭṭiyam, பெ.(n.)

   கவடின்மை; guilelessness, sincerity simplicity.

     [Skt. {} → த. நிட்காபட்டியம்]

நிட்காமியகருமம்

 நிட்காமியகருமம் niṭgāmiyagarumam, பெ.(n.)

   பயனை விரும்பாது செய்யுஞ் செயல்; deed done without expectation of any reward.

நிட்காமியம்

நிட்காமியம்1 niṭkāmiyam, பெ.(n.)

   பயனை விரும்பாது செய்யுஞ் செயல்; deed done without expectation of any reward.

     [Skt. {} → த. நிட்காமியம்]

 நிட்காமியம்2 niṭkāmiyam, பெ.(n.)

   ஆசை யின்மை; freedom from desire. (சா.அக.);

 நிட்காமியம்3 niṭkāmiyam, பெ.(n.)

   1. முற்றுந் துறத்தல்; leaving or abandoning one’s house. casting off the house holders mode of life for adoption of sanyasam or life renuniciation.

   2. விருப்பமின்மை; freedom from selfish desire as in the proper performance duties. (சா.அக.);

     [Skt. {} → த. நிட்காமியம்]

நிட்காரணம்

 நிட்காரணம் niṭkāraṇam, பெ.(n.)

   காரண மின்மை; being without cause or reason.

     [Skt. {} → த. நிட்காரணம்]

நிட்கிராமம்

 நிட்கிராமம் niṭkirāmam, பெ.(n.)

   கூத்துவகை (யாழ்.அக.);; a kind of dance.

     [Skt. {} → த. நிட்கிராமம்]

நிட்கிரியம்

நிட்கிரியம் niṭkiriyam, பெ.(n.)

   தொழிற் செய்யாதது (வேதாந். சா. 85);; that which is inactive.

     [Skt. {} → த. நிட்கிரியம்]

நிட்கிறாமணம்

நிட்கிறாமணம் niṭkiṟāmaṇam, பெ.(n.)

   காரணமின்மை; being without cause or reason.

     “ஆயுளும் வளர வம்மழவினுக்கு நிட்கிறாமணந்தானாற்றுதல் வேண்டும்” (திருவானைக். கோச்செங். 84);.

     [Skt. {} → த. நிட்கிறாமணம்]

நிட்குடி

 நிட்குடி niḍkuḍi, பெ. (n.)

   ஏலம்; cardomumElleteria cardamomum.

     (சா. அக.);.

 நிட்குடி niḍkuḍi, பெ.(n.)

   மணகம் (ஏலம்);; cardomum – Elleteria cardamomum. (சா.அக);.

     [Skt. {} → த. நிட்குடி]

நிட்க்கிரமப்பிரசவம்

 நிட்க்கிரமப்பிரசவம் niṭkkiramappirasavam, பெ.(n.)

   அக்கிரமப் பிரசவம்; abnormal labour. (சா.அக.);

     [Skt. {} → த. நிட்க்கிரமப்பிரசவம்]

நிட்சணம்

 நிட்சணம் niṭcaṇam, பெ.(n.)

   முத்தம் கொடுப்பு (யாழ்.அக.);; kissing.

     [Skt. {} → த. நிட்சணம்]

நிட்சேபம்

 நிட்சேபம் niṭcēpam, பெ.(n.)

   புகட்டல்; injection. (சா.அக.);

 நிட்சேபம் niṭcēpam, பெ.(n.)

   எண் வகைத் துய்ப்பு (போகப்); பொருள்களில் ஒன்றாகிய புதை பொருள்; treasure-trove, one of {}.

நிட்சைமாதுறுதம்

 நிட்சைமாதுறுதம் niṭcaimāduṟudam, பெ. (n.)

   சிற்றரத்தை; lesser galangal-alpinia galanga. (minor);

 நிட்சைமாதுறுதம் niṭcaimāduṟudam, பெ.(n.)

   சிற்றரத்தை; lesser glangal – Alpinia galanga. (சா.அக.);

நிட்டீவனம்

 நிட்டீவனம் niṭṭīvaṉam, பெ.(n.)

   கக்கல் வாந்தி; vomitting. (சா.அக.);

நிட்டுரதரன்

நிட்டுரதரன் niṭṭuradaraṉ, பெ.(n.)

   கடு நெஞ்சன் (கடுஞ்சித்தமுள்ளவன்);; hard- hearted person.

     “கடுஞ்சித்தமுள்ளவன் நிட்டுதரர் நினைவழியவும்” (சிவதரு.சுவர். 47);.

     [Skt. {} – tara → த. நிட்டுரதரன்]

நிட்டூரம்

நிட்டூரம் niṭṭūram, பெ.(n.)

   கொடுமை; harshness, severity.

     “இந்த நிட்டூர மென்னோ” (பாரத. நச்.40);.

     [Skt. {} → த. நிட்டூரம்]

 நிட்டூரம் niṭṭūram, பெ.(n.)

   கொடுமை; harshness, in humanity. (சா.அக.);

நிட்டூரி

 நிட்டூரி niṭṭūri, பெ.(n.)

   கொடியவள் (வின்.);; hard hearted woman.

     [Skt. {} → த. நிட்டூரி]

நிட்டை

 நிட்டை niṭṭai, பெ.(n.)

 observance of religious duties and vows.

     “விரதானுட்டானம்”.

     “நிட்டையிலேயிருந்து மனத்துறவடைந்த பெரியோர்க்கும்” (தனிப்பா.);.

     [Skt. {} → த. நிட்டை]

நிட்பலம்

நிட்பலம் niṭpalam, பெ. (n.)

   1. அவரை; bean

   2. மொச்சைப்பயிறு (1,2 வைத்திய. பரிபா.);; hyacinth bean

நிட்பவம்

நிட்பவம் niṭpavam, பெ. (n.)

   1. அவரை; bean

   2. மொச்சை; country bean.

நிட்பாவம்

 நிட்பாவம் niṭpāvam, பெ. (n.)

   மொச்சைக் கொட்டை; dry bean.

 நிட்பாவம் niṭpāvam, பெ.(n.)

 vigna catjany. (சா.அக.);

நிண

நிண1 niṇattal,    4 செ.கு.வி. (v.i.)

   கொழுத்தல்; to grow fat.

     [நிணம் → நிண-,]

 நிண2 niṇattal,    3செ. குன்றாவி. (v.t.)

   1. கட்டுதல்; to tie up, fasten.

     “கட்டினிணக்கு மிழிசினன்” (புறநா.82.);.

   2. முடைதல் (சூடா.);; to braid

     [நிணர் → நிண-,]

நிணக்கழலை

 நிணக்கழலை niṇakkaḻlai, பெ. (n.)

   கொழுப்புக்கட்டி (M.L.);; fatty tumour.

     [நிணம் + கழலை.]

நிணக்கும்

நிணக்கும் niṇakkum, கு.வி.எ. (adv.)

   கட்டும்; binding

     “சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரிஞான்ற ஞாயிற்றுக் கட்டினிணக்கு மிழிசினன் கையது” (புறநா.82.);.

நிணங்கிழிப்ப

நிணங்கிழிப்ப niṇaṅgiḻippa, கு.வி.எ. (adv.)

   தசையின் உள்சவ்வு கிழிபட; trint out fies tissue

     “ஈங்கை மறந்தவெனிரும்பே ரொக்கள் கூர்ந்த வெவ்வம் விடக்கொழு நிணங்கிழிப்பக் கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த” (புறநா.393;10);

     [நிணம் + கிழப்ப.]

நிணங்கொள்புலால்

நிணங்கொள்புலால் niṇaṅgoḷpulāl, பெ. (n.)

   கொழுப்பு நிறை இறைச்சி; fatted flesh.

     “நிணங்கொள் புலாலுணங்கனின்று

புள்ளோப்புறலைக் கீடாகக் கணங்கொள் வண்டார்த்துலாங் கன்னி நறுஞாழல் கையிலேந்த (சிலப்.7;9.);.

     [நிணம் + கொள் + புலால்]

நிணச்செருக்கு

 நிணச்செருக்கு niṇaccerukku, பெ. (n.)

   உடற்கொழுப்பாலாகிய செருக்கு; priden one s own muscular strength,

நிணச்செருக்கு அவனை ஆட்டுகிறது.

நிணச்சோறு

நிணச்சோறு niṇaccōṟu, பெ. (n.)

   புலால் விரவின சோறு (சிலப். 5;68. உரை.);; meal rice.

     [நிணம் + சோறு.]

நிணஞ்சுடுபுகை

நிணஞ்சுடுபுகை niṇañjuḍubugai, பெ. (n.)

   கொழுப்பைத் தீயிலிடுவதால் ஏற்படும் புகை; smoke arising out of burning fats

     “நிணஞ்சுடு புகையொடு கனல் சினந் தவிராது நிரம்பகல் பறிய வேறா வேணி” (நற்.43;32.);.

     [நிணம் + சுடு + புகை.]

நிணத்திசு

 நிணத்திசு niṇattisu, பெ. (n.)

   குருதிச்சவ்வு; adipose tissue.

     [நிணம் + திசு.]

நிணநரம்புகள்

 நிணநரம்புகள் niṇanarambugaḷ, பெ. (n.)

   ஊன் நரம்புகள் (M.L.);; lymphatic vessels;absorbents.

     [நிணம் + நரம்புகள்.]

நிணநீர்

 நிணநீர் niṇanīr, பெ. (n.)

   குருதியில் சென்று சேரும் வெள்ளையணுக்களைக் கொண்ட நிறமற்ற நீர்மம்; lymph.

     [நிணம் + நீர்.]

நிணநெய்

 நிணநெய் niṇaney, பெ. (n.)

மணிக்கட்டு

   களிலுண்டாகும் பசை (M.L.);; synovia.

     [நிணம் +நெய்.]

நிணந்தவை

நிணந்தவை niṇandavai, பெ. (n.)

   தெற்றின மாலை; garland.

     “நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை போல வரைமலை யெல்லாம்” (பரிபா.19;80.);.

நிணந்து

நிணந்து niṇandu, வி.எ. (adv.)

   பிணித்து; bond.

     “நிணந்தெ னெஞ்ச நிறை கொண்ட கள்வனை” (சீவக.பதுமை 144.);.

நிணனுகுகுருதி

நிணனுகுகுருதி niṇaṉugugurudi, பெ. (n.)

   நிணத்தோடு கலந்து உகா நின்ற குருதிப் பலி; sacrifer with fat stained blood.

     “நிணனுகு குருதிகொ ணிகரடு விலையே” (சிலப்.12;19);.

நிணப்பு

 நிணப்பு niṇappu, பெ. (n.)

   கொழுப்பு; fat

     [நிணம் + நிணப்பு.]

நிணமுருக்கு

நிணமுருக்கு niṇamurukku, பெ. (n.)

   உடம்பிலுள்ள கொழுப்பைக் கரையும்படி செய்யும் ஒரு நோய்; a disease lending to decrease fat in the system, a wasting disease as tuberculosis etc.

   2. உடம்பின் கொழுப்பைக் கரையச்செய்யும் மருந்து; any medicine prescribed for reducing the fat in the body.

     [நிணம் + உருக்கு.}

நிணமூரி

நிணமூரி niṇamūri, பெ. (n.)

   நிணத்தின் துண்டம்; a piece of fat.

     “மூடைப் பண்ட மிடை நிறைந்தன்ன வெண்ணின மூரி யருள” (புறநா.393.);.

     [நிணம் + மூரி.]

நிணம்

நிணம் niṇam, பெ. (n.)

   1. கொழுப்பு; fat

     “நிணங்குடர் நெய்த்தோ நிறைத்து” (பு.வெ.3,5.);.

   2.ஊன்; flesh.

     “மைந்நிண விலைஞர்” (மணிமே.28;33.);.

   3. ஊனிர் (வின்.);; serum.

   க. நிணெ ம., கநிணம்;   க.நிணெ;   து. நிணம்;   கோத. நினிக்;

நிணம்படுகுருதி

நிணம்படுகுருதி niṇambaḍugurudi, பெ. (n.)

   குருதி கலந்த கொழுப்பு; fat stained with blood,

     “பிணஞ்சமந் தொழுகிய நிணம்படு குருதியிற் கணங் கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட” (சிலப்.26;209.);.

     [நிணம்படு + குருதி]

நிணர்

நிணர்1 niṇartal,    2 செ.கு.வி. (v.i.)

   கட்டுதல்; to tie, fasten

     “பட்டு நிணர்கட்டில்” (சீவக. 2030.);.

   து. நிணே, நிணெ, நினெ;துட. நின்,

 நிணர்2 niṇartal,    2 செ.கு.வி. (v.i.)

   செறிதல்; to crowd, gather thick.

     “எங்கணு நிணர்ந்த பூங்குளிர் நிழல்” (திருவானைக். நாட்.109.);.

நிணறு

நிணறு niṇaṟu, பெ. (n.)

   1. உருக்கம்; affection, love

     “அவன் நெஞ்சம் நிணறு கொண்டு பேசினான்” (வின்.);.

   2. நலம்; benefit, good.

     “கிணறு வெட்ட வேணும் நிணறு சொன்னேன்” (இராமநா. உயுத்.23.);.

தெ. நெனறு

     [நில் → நிணம் → நிணர் → நிணறு.]

நிணர் = கட்டு, இறுக்கம். செறிவு, நட்பு.

நிணல்

 நிணல் niṇal, பெ. (n.)

   சாயை; shade.

     [நில் → நில → நிழல் → நிணல்.]

நிணவுதி

 நிணவுதி niṇavudi, பெ. (n.)

   நிணத்திசு (இ.வ.); பார்க்க; see {nina-t-tisu.}

நிணவை

நிணவை niṇavai, பெ. (n.)

   1. பிணிப்பு (பெருங்.உஞ்சைக். 34, 144.);; tying, bondage.

   2. பின்னிச் செய்யப்பட்டது; that which is plaited. அம்பணை மூங்கிற் பைம்போழ் நிணவையும் (பெருங், உஞ்சைக்.42,28.);.

     [நிணர் → நிண → நிணவை.]

நிண்ணயம்

நிண்ணயம் niṇṇayam, பெ. (n.)

   1. உறுதி (யாழ்.அக.);; determination, resolution.

   2. ஆராய்வு (சங்.அக.);; ascertaining

     “நிண்ணயந் தெரிவிவேகம்” (கைவல்.தத்.8);.

     [நில் = உறுதி, உறுதிப்பாடு. நில் + நயம்.]

நிண்ணயி-த்தல்

நிண்ணயி-த்தல் niṇṇayittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   முடிவுபடுத்துதல் (உ.வ.);; to determine, resolve

     [நிண்ணயம் → நிண்ணயி-,]

நிண்ணி-த்தல்

நிண்ணி-த்தல் niṇṇittal,    4 செ. குன்றாவி. (v.t.)

நிண்ணயி-த்தல் பார்க்க (உ.வ.);;see {ninnayl-,}

     [நி ண் ண ய ம் → நி ண் ண யி → நிண்ணி-,]

நிண்ணையூர்

 நிண்ணையூர் niṇṇaiyūr, பெ.(n.)

   கள்ளக் குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakurichi Taluk.

     [திண்ணன்-நிண்னன்+ஊர்]

நிதகம்

 நிதகம் nidagam, பெ. (n.)

   நீர்முள்ளி (மலை.);; water {thistle-nygrophila spinosa} allas barleria longiflora.

நிதகாரி

 நிதகாரி nidakāri, பெ. (n.)

நிதகம் பார்க்க; see nidagam (சா.அக.);.

நிதத்துரு

 நிதத்துரு nidadduru, பெ. (n.)

   சோனைப்புல்; guinea grass-panicum maximum. (சா.அக.);.

நிதந்துய்-த்தல்

நிதந்துய்-த்தல் nidanduyddal,    4 செ.குன்றாவி. (v.t.).

   நாள்தோறும் உண்ணல்; to eat all the day.

     [நிதம் + துய்-.]

நிதனம்

நிதனம் nidaṉam, பெ.(n.)

   1. சாவு; death.

   2. அழிவு; loss. (சா.அக.);

நிதம்

நிதம்1 nidam, பெ. (n.)

   நஞ்சு; poison (சா.அக.);.

 நிதம்2 nidam, வி.எ. (adv.)

   நாளும்; daily,

     “நிதமிந்தப் படியிருந்து” (திருப்பு.788.);.

     [நித்தம் → நிதம்.]

நிதம்பசூலை

 நிதம்பசூலை nidambacūlai, பெ. (n.)

   பிள்ளைப் பேற்றின் (பிரசவத்தின்); முறைக் கேட்டால் உண்டாம் நோய்வகை (வின்.);; an arthritic disease, due to derangement in the process of childbirth.

     [நிதம்பம் + சூலை.]

நிதம்பம்

நிதம்பம் nidambam, பெ. (n.)

   1. பெண்ணின் குந்துபுறம் (குண்டி); (பிருஷ்டம்);; buttocks or hind quarters; posteriors, especially of a woman.

   2. அல்குல் (பிங்.);; pubic region.

     “இன்றீங் கிளவியு நிதம்பமு மொன்றி” (ஞானா. 60,6.);.

   3. மலைப்பக்கம் (பிங்.);; side or swell of a mountain

   4. ஆற்றின் கரை (யாழ். அக.);; bank or shore as of a river.

   5. நடனக் கை வகை (சிலப்.பக்.81.);;{(natya);} a hand-pose.

   6. கற்பரி நஞ்சு; a mineral poison.

   7. தோள் (யாழ்.அக.);; shoulder. Skt.-nitamba.

நிதர்சனம்

 நிதர்சனம் nidarcaṉam, பெ.(n.)

   வெளிப் படையானது, தெளிவானது, கண்கூடு; obuious, evident.

     “இந்த நிதர்சனமான உண்மையை உன்னால் ஏன் ஏற்க முடியவில்லை? உன் வாதம் பொய் என்பது இப்போது நிதர்சனம் ஆகிவிட்டது”. (இ.வ.);.

நிதற்பம்

 நிதற்பம் nidaṟpam, பெ. (n.)

   வேம்பு; margosaazadiracta indica.

     ( சா.அக.);.

நிதாககரன்

 நிதாககரன் nitāgagaraṉ, பெ.(n.)

   கதிரவன் (யாழ்.அக.);; sun.

     [Skt. {}-kara → த. நிதாககரன்]

நிதாகம்

நிதாகம் nitākam, பெ.(n.)

   1. முதிர்வேனிற் காலம்; severe summer days.

   2. உட்காங்கை; internal heat.

   3. வியர்வை; sweat, perspiration. (சா.அக.);

 நிதாகம் nitākam, பெ.(n.)

   1. முதுவேனிற் காலம்; summer.

   2. வெப்பம்; heat, warmth.

   3. வியவை; sweat.

     [Skt. {} → த. நிதாகம்]

நிதானகாண்டம்

 நிதானகாண்டம் nitāṉakāṇṭam, பெ. (n.)

   வளி முதலா எண்ணிய முக்கூற்றின் அளவு வேறுபாட்டினால் உடம்பிலுண்டாகும் நோய் பற்றிக்கூறும் மருத்துவநூல்; the branch of medicine in ayurveda which treats of the essential nature of diseases. their structural and functional changes. their causes and symptoms. etc.

     [நிதான + காண்டம்.]

 நிதானகாண்டம் nitāṉakāṇṭam, பெ.(n.)

   பலவித நோய்களைக் குறித்துச் சொல்லும் ஒரு ஆயுள் வேத நூல்; the branch of medicine in ayurveda which treats of the essential nature of diseases – their structural and functional changes, their causes and sysmptoms. (சா.அக.);

     [நிதான + கண்டம்]

நிதானக்காரன்

 நிதானக்காரன் nitāṉakkāraṉ, பெ.(n.)

   கருத்துள்ளவன் (யோசனையுள்ளவன்);; careful person.

     [Skt. {} + த. காரன் → நிதானக்காரன்]

நிதானநூல்

 நிதானநூல் nitāṉanūl, பெ. (n.)

   மாதவ நிதானம் என்னும் மருத்துவநூல்; an ayurvedic book called mãdava midānam.

 நிதானநூல் nitāṉanūl, பெ.(n.)

   மாதவ நிதானம் என்னும் ஆயுள் வேத நூல்; an ayurvedic book called {}. (சா.அக.);

நிதானன்

 நிதானன் nitāṉaṉ, பெ.(n.)

   கடவுள் (வின்.);; deity, as the first cause.

     [நிதானம் -→ நிதானன்]

நிதானம்

நிதானம்1 nitāṉam, பெ.(n.)

   1. முதல் காரணம்; first cause, origin.

     “பந்த நிதானஞ் சங்கற்ப மன்றோ” (ஞானவா. மானுவே 8);.

   2. நோய்க் காரணம்; cause of a disease.

     “வாத முதலிய பிணிகட்கு….. நிதான மாயினவன்றி மாறாயவியல் பினையுடையனவாம்” (குறள்,

   1102, உரை).

   3. சார்பு (மணிமே. 24.105, உரை);; cause of misery.

     [Skt. nidana → த. நிதானம்]

 நிதானம்2 nitāṉam, பெ.(n.)

   1. முதற் காரணம்; primary cause, the disease and which gives clue to diagnosis.

   2. பொன்; gold.

   3. இரத்தினப் பொது; gem in common. (சா.அக.);

 நிதானம்3 nitāṉam, பெ.(n.)

   நோயின் காரணங்கள்; those causes which induce diseases. (சா.அக.);

 நிதானம்4 nitāṉam, பெ.(n.)

   1. மணி (இரத்தினம்); (சூடா.);; gem.

   2. பொன் (உரி.நி.);; gold.

     “கவிபாட நிதான நல்கப் பற்றி கையினர்” (தேவா. 418, 6);.

   3. படை (திவா.);; army.

   4. தீர்மானம்; ascertainment, assurance, decision.

     “நிதான மொடு….. கூறன்மி னென்மரும்” (பெருங். வத்தச். 17, 62);. 55. மதிப்பீடு (உத்சேம்);;

 guess, estimate, conjecture.

     “நிதானமாய்சொல்”.

   6. நோக்கம்; motive, object.

     “உன் நிதானம் என்ன” (வின்.);.

   7. நேர்மை; uprightness, rectitude.

   8. நிதானமுள்ளவன்; carefulness, discrimination.

     “சாவதானம் நிதானமாய் பேசுகிறவன்”.

   9. சமம்; equality, sameness.

   10. பிரமாணம்; standard, criterion rule.

     [Skt. {} → த.நிதானம்]

நிதானவித்தை

 நிதானவித்தை nitāṉavittai, பெ.(n.)

   நோயின் காரணத்தையும் குறியையும் தெரிந்து கொள்ளும் வித்தை; the determination of disease, its causes any symptoms – Diagnosis. (சா.அக.);

நிதானி

நிதானி nitāṉi, பெ.(n.)

   1. வேண்டிய கவனம் மேற்கொள்ளுதல்; pause, exercise caution pay due attention.

   2. உறுதிப்படுத்துதல்; make sure, determine.

     “அமைச்சர் உடனடியாக பதில் சொல்லாமல் சற்று நிதானித்தார்.”குரல் எந்தச் திசையிலிருந்து வருகிறது என்பதை அவரால் நிதானிக்க முடியவில்லை”. (இ.வ.);

 நிதானி nitāṉi, பெ.(n.)

   முன் எச்சரிக்கை உள்ளவன் (யோசனையுள்ளவன்);; careful person.

     [Skt. {} → த. நிதானி]

நிதானி-த்தல்

நிதானி-த்தல் nitāṉittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. உறுதி செய்தல் (நிச்சயித்தல்);; to ascertain, determine, resolve.

   2. மதிப்பீடுதல் (உத்தே சித்தல்);; to estimate, judge.

   3. அளவு திட்டப் படுத்துதல் (வின்.);; to fix a measure or standard.

   4. (அனுமானித்தல்); உன்னித்தல்; to inferdeduce.

     [நிதானம் நிதானித்தல்]

நிதி

நிதி1 nidi, பெ.(n.)

   1. குவை, பொருட்டிரள்; treasure-hoard.

     “பெருநல நிதி தலை சிறந்தது” (சீவக. 331);.

   2. பொன் (சூடா.);; gold.

   3. ஒன்றிய ஐக்கிய நாணயச் சங்கம்; joint- stock company.

     [Skt. niidhi → த. நிதி]

 நிதி2 nidi, பெ.(n.)

   1. செல்வம், பணம்; wealth, money.

   2. பொது வருவாய்; finance, fund.

     “நிதி அமைச்சர், வெள்ள நிவாரண நிதி”.

     “நிதியும் மதியும் இருந்தால் எதையும் அடையலாம்”. (இ.வ.);.

நிதிஅறிக்கை

 நிதிஅறிக்கை nidiaṟikkai, பெ.(n.)

   வரவு செலவுத் திட்டம்; budget.

     “மக்களவையில் நிதிஅறிக்கை படைக்கப்பட்டது”.

த.வ. பாதீடு

நிதிஆண்டு

 நிதிஆண்டு nidiāṇṭu, பெ.(n.)

   வரவு செலவுத் திட்டம் செயலாக்கப்படும் மாதத்திலிருந்து அடுத்த வரவு செலவுத் திட்டம் வரையிலான காலம்; financial year.

த.வ. திட்ட ஆண்டு, பாதீட்டு ஆண்டு

நிதிகோமல்

 நிதிகோமல் nidiāmal, பெ. (n.)

   முருங்கை; moringa tree-Hyperinthera moringo.

     ((சா.அக.);.

நிதிக்கிழவன்

நிதிக்கிழவன் nidikkiḻvaṉ, பெ.(n.)

   தலைச்சங்கப் புலவருள் ஒருவர்; a poet of the first sangam.

     “நிதியின் கிழவன்” (இறை. கள. 1, உரை. பக்.4.);

நிதிசம்

 நிதிசம் nidisam, பெ. (n.)

   பெருவழுதலை; long brinjal- Solanum melongina.

நிதிசாத்திரம்

 நிதிசாத்திரம் nidicāddiram, பெ.(n.)

   புதையல் கண்டுபிடிக்கும் நூல்; treastise on the discovery of treasure-troves.

     [Skt. nidi → த. நிதிசாத்திரம்]

நிதித்திகம்

நிதித்திகம் nididdigam, பெ. (n.)

   1. கண்டங் கத்திரி; prickly night shade, yellow berried night shade-Solanum jacquini.

   2. ஏலம்; cardomum.

     (சா. அக.);.

மறுவ, நிதித்திகா.

நிதித்தியாசனம்

நிதித்தியாசனம் nididdiyācaṉam, பெ.(n.)

   இடைவிடா ஊழ்கம் (தியானம்);; un- interrupted meditation.

     “நிதித்தியா சனத்தின் மன்னுவாய்” (பிரபுலிங். கதலி. 16);.

     [Skt. {} → த. நிதித்தியாசனம்]

நிதித்துருஞ்சு

 நிதித்துருஞ்சு nididduruñju, பெ. (n.)

   வெண் கருங்காலி; egg fruited ebony-diosphyros vocarpa.

நிதித்துறை

 நிதித்துறை nididduṟai, பெ.(n.)

   அரசின் செல்வத்துறை; finance department of the Government.

த.வ. செல்வத்துறை

நிதிநாயகன்

 நிதிநாயகன் nidināyagaṉ, பெ. (n.)

   வெட்டி வேர்; cuscus root-andropogon muricatus.

நிதிநிசேபம்

 நிதிநிசேபம் nidinicēpam, பெ.(n.)

   நிலத்தின் (பூமியின்); கீழுள்ள புதையல்; treasure hidden underground, a documentary term. (R.F.);

     [Skt. nidhi + {} → த.நிதிநிசேபம்]

நிதிநூல்

 நிதிநூல் nidinūl, பெ. (n.)

   புதையலைக் கண்டறியும் செய்திபற்றிக் கூறும் நூல்; a system of metallurgy burried treasures.

 நிதிநூல் nidinūl, பெ.(n.)

   புதையலைக் கண்டறியும் செய்தி பற்றிக் கூறும் நூல்; a system of metallurgy burried treasures. (சா.அக.);

நிதிந்தம்

 நிதிந்தம் nidindam, பெ. (n.)

நிதித்திகம் பார்க்க; see nidittigam

நிதிப்பலகை

நிதிப்பலகை nidippalagai, பெ.(n.)

   பொற் பலகை; golden seat.

     “தண்ணிதிப் பலகைச் சந்தனச் சார்வணை” (பெருங். இலாவாண. 18. 41);

     [Skt. nidi + த. பலகை → த. நிதிபலகை]

நிதிப்பொதி

 நிதிப்பொதி nidippodi, பெ.(n.)

   பொற்கிழி (வின்.);; a purse of gold.

     [நிதி + பொதி]

நிதியமைச்சர்

 நிதியமைச்சர் nidiyamaiccar, பெ.(n.)

   செல்வத்துறையின் அமைச்சர்; minister for finance.

த.வ. செல்வ அமைச்சர்

நிதியம்

நிதியம் nidiyam, பெ. (n.)

   மிளகு; pepper-piper nigrum

 நிதியம்1 nidiyam, பெ.(n.)

   நிதி; a celestial.

     “நிலந்தினக் கிடந்த நிதியமொடு” (மலைபடு. 575);.

     “நிதிய மலைமிசைத் தவனநெட்டெயி றொன்றினை முறித்து…… எழுத” (சேதுபு. அகத். 1);.

     [Skt. nidi -→ த. நிதியம்]

 நிதியம்2 nidiyam, பெ.(n.)

   பெரும் தொகையை நிருவகிக்கும் அமைப்பு; financial consortium.

நிதியவம்

 நிதியவம் nidiyavam, பெ. (n.)

   சிறுதேக்கு; bettle killer-cleodendron serrata.

நிதியோபம்

 நிதியோபம் nidiyōpam, பெ. (n.)

   குங்கிலியம்; bedellium-shorea robusta.

நிதுவனம்

நிதுவனம் niduvaṉam, பெ.(n.)

   1. கலப்பு; mixing.

   2. புணர்ச்சி; sexual union.

   3. மகிழ்ச்சி; joy.

   4. விளையாட்டு; sport.

     [Skt. nidhvana → த. நிதுவனம்]

நிதேசம்

நிதேசம் nitēcam, பெ.(n.)

   1. கட்டளை; command.

   2. சொல்; word.

   3. அருகில். அண்மை (சமீபம்);; proximity. [Skt. ni-{} → த. நிதேசம்]

நிதைருநூறு

 நிதைருநூறு nidairunūṟu, பெ. (n.)

   சிந்தில்; moon creeper -menispermum condifolium alias tinosphora cordifolium,

நித்தக்கட்டளை

 நித்தக்கட்டளை nittakkaṭṭaḷai, பெ. (n.)

   நாள்தோறுமாய ஏற்பாடு (வின்.);; daily allotment, whether of allowance or expense.

     [நித்தம் + கட்டளை.]

நில் → நிற்றல் → நித்தல் → நித்தம்.

   கள் → கட்டு → கட்டளை = முறைமை;முறையான செலவு.

நித்தக்கத்தரி

நித்தக்கத்தரி nittakkattari, பெ. (n.)

   பெரிய கத்தரி; long brinjal.

   நித்தக்கருமம் 1. அறநூல்களில் விதிக்கப்பட்டதும், செய்யாமற்போவது கரிசெனக் கருதப்படுவதுமான செயல்; a constant act or duty enjoined by {sastras,} non-performance of which is considered a sin,

   2. நாள்தோறும் செய்வதான செயல்; daily duties enjoined by {sastrås.}

     [நித்தம் + கருமம்.]

நில் → நிற்றம் → நித்தம்.

ஒ.நோ. வெல் → வெற்றம்

கொல் → கொற்றம்

குற்று → குத்து

முற்றகம → முத்தகம்

பீற்றல் → பீத்தல்.

குல் → குரு → கரு → கருமம்.

கரு → கருத்தல் – செய்தல்.

நித்தக்காய்ச்சல்

 நித்தக்காய்ச்சல் nittakkāyccal, பெ. (n.)

   நாளும் அடிக்கும் காய்ச்சல் (வின்.);; quotidian fewer.

     [நித்தம் + காய்ச்சல்.]

நில் → நிற்றல் → நித்தல் → (நித்தன்);→நித்தம்.

நித்தத்துவம்

நித்தத்துவம் nittattuvam, பெ. (n.)

   என்றுமுளதாந் தன்மை; eternity.

     “நிராமய மான நித்தத்துவம்” (உத்தரரா.திக்குவி.248.);.

     [நித்தம் + தத்துவம்.]

நில் → நிற்றல் → நித்தல் → (நித்தன்);→நித்தம்.

 நித்தத்துவம் nittattuvam, பெ.(n.)

   என்று முளதாந்தன்மை; eternity.

     “நிராமயமான நித்தத்துவம்” (உத்தாரா. திக்குவி. 248);.

     [Skt. nitya-tva → த. நித்தத்துவம்]

     [த.நித்த(ம்); + (tva); → த. நித்தத்துவம்]

நித்தநிமந்தம்

நித்தநிமந்தம் nittanimandam, பெ. (n.)

   நித்தியக் கட்டளை; daily offerings in a temple.

     “மகாதேவர்க்கு நித்த நிமந்தஞ் செலுத்துகைக்கு” (S.I.II;392);.

     [நித்தம் + நிமந்தம்.]

நில் → நிற்றல் → நித்தல் → (நித்தன்);→நித்தம்.

 நித்தநிமந்தம் nittanimandam, பெ.(n.)

   கோயில் நித்தியக் கட்டளை; daily offerings in a temple.

     “மஹாதேவர்க்கு நித்த நிமந்தஞ் செலுத்துகைக்கு” (S.I.I.ii, 392);.

     [Skt. nitya → த. நித்தநிமந்தம்]

நித்தன்

நித்தன் nittaṉ, பெ. (n.)

   1. கடவுள்; the supreme being as eternal.

   2. சிவன் (பிங்.);; Lord Sivan.

   3. அருகன் (பிங்.);; Arhat.

     [நில் → நிற்றல் = நிற்கை, நிலை. நிற்றல் → நித்தல் = என்றும். நித்தல் → நித்தலும் = நிலையான, என்றுமுள்ள. நித்தல் → நித்தன் = நிலையானவன், என்றுமுள்ளவன்.]

நித்தப்படிகாரன்

 நித்தப்படிகாரன் nittappaḍikāraṉ, பெ. (n.)

   நாட்கூலிக்காரன்; one who works on daily wages.

     [நித்தப்படி + காரன்.]

நித்தம்

நித்தம்1 nittam, பெ. (n.)

   1. என்றும் அழியாதுள்ள நிலை; eternity.

     “நேரினித்தமு மொட்டின னாகுமே” (மேருமந்.592.);.

   2. ஒமகுண்டம் (பிங்.);; sacrificial pit

   3. நித்திய கருமம் பார்க்க; see nittiya karumam.

     “கருமநித்த நைமித்தங் காமியங்கள்” (பிரபோத.39,13.);.

   4. நீர்முள்ளி (மலை.); பார்க்க; see {nirmulli.}

     [நில் → நிற்றம் → நித்தம்.]

நித்தம் → நித்தல்.

ஒ.நோ. வெல் → வெற்றம்

கொல் → கொற்றம்

குற்று → குத்து

முற்றகம் → முத்தகம்

பீற்றல் → பீத்தல்.

இடம் (வெளி);, காலம், இறைவன் மூன்றும் வேறு ஒன்றினின்றும் தோன்றாது என்றும் ஒரே தன்மையாய் நிற்கும் நித்தப் பொருளாம். காலம் கருத்துப் பொருளே. (த.ம.85.);.

நிற்றம், நிச்சம், நித்தம் என்னும் மூவடிவுகளுட் கடைப்பட்ட நித்தம் என்னும் வடிவினின்று நித்ய என்னும் வடசொல்லைத் திரித்துக் கொண்டு, அதையே முத்தென்சொல் வடிவிற்கும் மூலமாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர் வடமொழியாளர். இதற்கு ஏதுவானது, ஏமாறுந் தன்மை மிக்க தமிழரின் பேதைமையே.

என்றுமுண்மைக் கருத்தைத் தோற்றுவித்தற்கு நிலைப்புக் கருத்தே பொருத்தமானது. வடமொழியாளர்

     ‘நி’ என்னும் முன்னொட்டை மூலமாகக் கொண்டு, ஒன்றன் உட்பட்டது, ஒன்றொடு தொடர்புள்ளது, தொடர்ந்தது, நீடித்தது. நிலைத்தது என்று கருத்துத் தொகுத்து, நித்ய என்னும் சொற்குப் பொருட்கரணியங் காட்டுவர். இதன் பொருந்தாமையை இனி மேலாயினுங் கண்டு தெளிக. (வே.க.3;47.);.

 நித்தம்2 nittam, வி.எ. (adv.)

   எப்போதும்; constantly, perpetually, eternally

     “நித்தமணாளர் நிரம்பவழகியர்” (திருவாச. 17;3.);.

நில் → நிற்றம் → நித்தம்.

ஒ.நோ. வெல் – வெற்றம்

கொல் → கொற்றம்

குற்று → குத்து

முற்றகம் → முத்தகம்

பீற்றல் – பீத்தல்.

 நித்தம்3 nittam, பெ. (n.)

   நாட்டியம்; dance.

     “நித்தந் திகழு நேரிழை முன்கையால்” (பரிபா.12;43.);.

 Skt. Nrtta

 நித்தம்2 nittam, பெ. (n.)

   1.நீந்தற்குரிய ஆழிய இடம்; swimming depther place.

     “வெள்ளநீர் நீத்தத்து ளூர்பூர் புழுக்குநரும்.” (பரிபா.11;53.);.

   2.வெள்ளம்; flood.

     “நிவந்துசென் னீத்தங்குளங் கொலச் சாற்றி” (மதுரைக்.. 246.);.

   3. ஆழம்; depth.

     “வெள்ளநீர் நீத்தத்துள்” (பரிபா. 11;53.);.

   4. கடல்; Sea. (சீவக.2421, உரை.);.

   5. மிகுதி; excess, abundance.

     “நிறை நறுங் கூந்த னீத்தம்” (கம்பரா. நாடவி. 59.);.

     [நீந்து → நீத்தம்.]

 நித்தம்1 nittam, பெ.(n.)

   1. என்றும் அழியாதுள்ள நிலை; eternity.

     “நேரினித் தமு மொட்டின னாகுமே” (மேருமந். 652);.

   2. ஒமகுண்டம் (பிங்.);; sacrifical pit.

   3. நீர்முள்ளி (மலை.);; water thorn.

     [Skt. nitya → த. நித்தம்]

 நித்தம்2 nittam, பெ.(n.)

   1. நடனம்; dancing.

     “நித்தந் திகழு நேரிழை முன்கையார்” (பரிபா. 12, 43);. [Skt. {} → த.நித்தம்]

நித்தரு

 நித்தரு nittaru, பெ. (n.)

   கற்பூரம்; camphorcamphora officinarum.

நித்தற்கத்தி

 நித்தற்கத்தி nittaṟkatti, பெ. (n.)

நித்தக்கத்தரி பார்க்க; see nitta-k-kattari

     [நித்தல் + கத்திரி.]

நித்தலம்

நித்தலம்1 nittalam, பெ. (n.)

   முத்து; pearlmargarita sinensis.

 நித்தலம்2 nittalam, பெ. (n.)

   நித்திலம் பார்க்க; see nitti/am.

     ” நத்தளித்த வெண்டூய வனித்தலத் தண்வயல்” (மருதூரந்.37.);.

     [நூல் → நெல் → நில் → நில = ஒளிவீசுதல். நில + திலம் = நிலத்திலம் = ஒளிவீசும் முத்து நிலத்திலம் → நித்திலம்(வே.க.3;21.);.]

நித்தலழிவு

நித்தலழிவு nittalaḻivu, பெ. (n.)

   நாட்படிச் செலவு; daily expenses. (தெ.க.தொ. 3;298.);.

     [நில் → நிற்றல் → நித்தல் + அழிவு. அழிவு = செலவு.]

நித்தலும்

நித்தலும் nittalum, வி.எ. (adv.)

   எந்நாளும்; always, continually, perpetually.

     “உமை நித்தலுங் கைதொழுவேன்” (தேவா. 25,1.);.

     [நில் → நிற்றல் → நித்தல் → நித்தலும்.]

நித்தல்

நித்தல்1 nittal, வி.எ. (adv.)

   நித்தலும் பார்க்க; see nittalum.

     ‘நித்தல் பழி தூற்றப்பட்டிருந்து” (இறை.கள.1,14.);.

     [நில் → நிற்றல் → நித்தல்.]

 நித்தல்2 nittal, பெ. (n.)

நித்தம் பார்க்க; see nittam

     [நில் → நிற்றல் → நித்தல்.]

நித்தல்விழா

நித்தல்விழா nittalviḻā, பெ. (n.)

   கோயிலில் நடக்கும் நாள்பூசை (நித்தியோற்சவம்);; daily procession of the {cipaliidol}

     “நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே” (சிலப்.உரைபெறுகட்.4.);.

     [நில் → நிற்றல் → நித்தல் + விழா.]

நித்தவஞ்சி

 நித்தவஞ்சி nittavañji, பெ. (n.)

   பூவந்தி; soap nut tree-sapindas trifoliatus.

நித்தவினோதம்

 நித்தவினோதம் nittaviṉōtam, பெ. (n.)

   அருகனின் முக்குடைகளுளொன்று (சூடா.);; an umbrella of Arhat, one of mukkudai.

     [நித்தல் + ( skt.); வினோதம்.]

நித்தவினோதவளநாடு

நித்தவினோதவளநாடு nittaviṉōtavaḷanāṭu, பெ. (n.)

   சோழமண்டலத்தின் பழைய நாடுகளில் ஒன்று; an ancient division in {Cõla maņdalam,}

     “நித்தவினோத வளநாட்டுக் கிழார்க் கூற்றத்துப் பிரமதேயம்” (தெ.க.தொ.2;76;95.);.

     [நில் → நிற்றல் → நித்தல் → நித்தம். நித்தம் (skt.); வினோதம் + வளநாடு.]

நித்தாசம்

 நித்தாசம் nittācam, பெ. (n.)

   நிலவேம்பு; ground neem. french chiretta-Justicia paniclata.

நித்தாசில்லி

 நித்தாசில்லி nittācilli, பெ. (n.)

   பொருத்துள் பொசியும் நீர்மம்; an ankaline fluid contained in a joint cavity-synovia—a secretion like the white of a egg moisteniny the joints.

நித்தாநித்தம்

நித்தாநித்தம் nittānittam, பெ. (n.)

நிலை

   பேறும், நிலையாமையும்; being eternal and temporal,

     “நித்தநித்த நிகழுநல்லேது” (மணிமே. 29;121.);.

     [நித்தம் + அநித்தம்.]

நித்தாரம்

நித்தாரம் nittāram, பெ. (n.)

   உறுதிப்பாடு நிலைப்பேறு; determination;ascertainment.

     “நித்தாரமி தென்றலும்” (ஞானவா.சிகித்.134.);.

 Skt. {nir-dhåra}

     [நித்தம் + ஆரம்.]

நித்திகம்

நித்திகம்1 nittigam, பெ. (n.)

   கண்டங்கத்தரி; a prickly plant with diffuse branches.

   2. தூதுவைளை; climbing brinjal.

 நித்திகம்2 nittigam, பெ. (n.)

   ஒருவகைப் பூடு; a kind of shurb.

     (த.சொ.அ.);.

நித்திடம்

 நித்திடம் nittiḍam, பெ. (n.)

   கொடிக்கத்தரி; climbing brinjal – Solanum trilobatum.

நித்திட்டம்

 நித்திட்டம் nittiṭṭam, பெ. (n.)

   செஞ்சந்தனம்; red sandal-pterocarpus santalinus.

நித்திதம்

 நித்திதம் niddidam, பெ. (n.)

நித்திகம் (மலை,);

   பார்க்க; see nittigam.

நித்தியகண்டம்

 நித்தியகண்டம் nittiyagaṇṭam, பெ. (n.)

   நாள்தோறும் வரும் ஏதம் ; daily peri

     ‘நித்திய கண்டம் பூரணாயுள்’ (உ.வ.);.

     [நித்தியம் + கண்டம். நில் → நிற்றல் → நித்தல் → நித்தம் → நித்தியம்.]

நித்தியகதி

 நித்தியகதி niddiyagadi, பெ. (n.)

   காற்று; wind, as ever moving.

     [நித்தியம் + கதி.]

நித்தியகம்பலை

 நித்தியகம்பலை nittiyagambalai, பெ. (n.)

   ஒயாச்சண்டை (யாழ்ப்.);; constant quarrelling.

     [நித்தியம் + கம்பலை.]

நில் → நிற்றல் → நித்தம் → நித்தியம். கும் → கம் → கம்பல் → கம்பலை = திரண்டெழும் பேரோசை, சண்டை.

நித்தியகம்புலு

 நித்தியகம்புலு nittiyagambulu, பெ. (n.)

நித்திய கம்பலை (யாழ்ப்.); பார்க்க; see nittiya kambalai.

     [நித்தியம் கம்புலு.]

நித்தம் → நித்தியம்

கம்பலை → கம்பலு → கம்புலு.

நித்தியகருமம்

நித்தியகருமம் nittiyagarumam, பெ. (n.)

   1.சாத்திரங்களில் விதிக்கப்பட்டதும் செய்யாமை தீதென்று கருதப்படுவதுமான செயல்; a Constant act Or duty enjoined by Sastra, non-performance of which is considered a sin.

   2. சாத்திரங்களில் அறுதியிடப்பட்ட அன்றாட செயல்கள்; daily duties enjoyed by Sastras.

     [நித்தம் → நித்தியம் + கருமம்.]

நில் → நிற்றம் → நித்தம் → நித்தியம்

குல் → குரு → கரு → கருமம் → கம்மம் (பே.வ.); karma- Pali and Prak.

எ-டு; (கருமான்);-கருமாளன்-கம்மாளன். கரு என்னும் முதனிலை இன்று வழக்கற்றது. கருத்தல்-செய்தல்.

கருமம் → கம்மம் → கம். கம்மம் = முதற்

றொழிலாகிய பயிர்த்தொழில்.

கம்மவர் → கம்மவாரு = பயித் தொழில் செய்யும் தெலுங்கர். கம் = பல்வேறு கனிம (உலோக);த் தொழில்.

     “ஈமும் கம்மும்” (தொல், 328.);.

கம்மாளன் = பொற்கொல்லன், ஐங்கொல்லருள் ஒருவன். கம்மியன் = கற்றச்சன் (சிற்பி.); கரு + வி = கருவி. கரு + அணம் = கரணம் = செய்கை, திருமணச் சடங்கு, கருவி, அகக்கருவி.

     ‘கற்பெனப்படுவது கரணமொடு புணர’ (தொல். 1088.);.

இதிற்கரணம் என்பது திருமண வினையாகிய சடங்கைக் குறித்தது. வடவர்

     ‘கரு’ என்னும் முதனிலையைக்

     ‘க்ரு’ எனத் திரித்துள்ளனர். இங்ஙனம் சொன் முதல் உயிர்மெய்யில், உயிரை நீக்குவது ஆரிய மரபு.

ஒ.நோ. பொறு → ப்ரு, திரு → ச்ரீ, வரி-வ்ரீஹ. கரை — E cry. துருவு = Ethrough புருவம் — E brow.

வடவர் கரணம் என்னும் சொல்லைக் காரண என நீட்டி, அதற்கேற்பக் கார்ய என்னும் சொல்லைத் திரித்துள்ளனர். காரணம் என்னும் நீட்டம் தமிழுக்கேற்கும். ஆயின், காரிய என்னும் திரிபு ஏற்காது. ஏற்கனவே காரணம் என்பதினின்று கரணியம் என்னும் சொல் திரிந்துள்ளது. அதற்கேற்பக் கருமம் என்பதினின்று, கருமியம் (காரியம்); என ஒரு சொல்லைத் திரித்துக் கொள்ளலாம்.

செய், பண்(ணு);, புரி முதலிய பல பிற ஒருபொருட் சொற்கள் தமிழில் இருப்பதனாலும், கரு என்பது வழக்கற்றுப் போனதினாலும், பின்னது வடசொல்லென மயங்கற் கிடந்தருகின்றது. தமிழ் வடமொழிக்கு முந்தியதென்றும் பெருஞ் சொல்வள மொழியென்றும் அறியின், இம்மயக்கந் தெளிந்துவிடும். தமிழ் திராவிட மொழிகட்குரிய இல், மனை, வீடு முதலிய சொற்களை மட்டுமின்றி, ஆரிய மொழிகளில் புகுந்த

     ‘குடி’ என்னுஞ் சொல்லையுந் தன்னகத்துக் கொண்டுள்ள தென்று, கால்டுவெலார் கூறியிருப்பதைக் கூர்ந்து நோக்குக. (வ.வ.274.);.

கரு – கருத்தல் = செய்தல், வினையாற்றுதல். நெல்லை மாவட்ட மீனவர் உழைப்பாளியைக் கருவாளி எனக் குறிப்பிடுதலை இன்றுங் காணலாம். கருத்தல் என்னும் வினை வடதமிழில் வழக்கூன்றித் தென்னகத்தில் வழக்கிழந்த தெனினும் இது தொன்முது செந்தமிழ்ச் சொல் என அறியத்தகும்.

நித்தியகலியாணம்

 நித்தியகலியாணம் nittiyagaliyāṇam, பெ. (n.)

   தொலையா மகிழ்ச்சி (நிரந்தரசுகம்); (வின்.);; everlasting, perpetual happiness.

     [நித்தியம் + கலியாணம்.]

நித்தியகலியாணி

நித்தியகலியாணி nittiyagaliyāṇi, பெ. (n.)

   செடிவகையுளொன்று; old-maid, a garden plant.

     [நித்தியம் + கலியாணி.]

நில் → நிற்றல் = நிற்கை, நிலை.

நிற்றல் → நித்தல் = என்றும்.

நித்தல் → நித்தம் = என்றும்.

நித்தம் → நித்தியம் = நிலையான, என்றும்.

கலி + யாணம் = கலியாணம்.

கலி = தழைத்தல்.

யாணம் = புதுமை, புதுவருவாய்.

கலியாணம் → கலியாணி (தென்.கட்.12.);.

நித்தியக்கட்டளை

 நித்தியக்கட்டளை nittiyakkaṭṭaḷai, பெ. (n.)

   நாள்தொறுமாய ஏற்பாடு(வின்.);; daily allotment, whether of allowance or expense.

     [நில் → நிற்றல் → நித்தம் → நித்தியம் + கட்டளை.)]

இதனை நிதக்கட்டளை என்பர்.

நித்தியசகலம்

 நித்தியசகலம் nittiyasagalam, பெ. (n.)

   இரு வகைச் சகலாவத்தையுளொன்று.; one among two types of {sagālavattai.}

     (கதி.அக.);.

நித்தியசிலேட்டுமரோகம்

நித்தியசிலேட்டுமரோகம் nittiyasilēṭṭumarōkam, பெ.(n.)

   1. சதா ஒக்காளம் எப்பொழுதும் இருமல், சுரம் முதலிய குணங்களையுண்டாக்கும் ஓர் வகை ஈளை நோய்; a kind of phlegmatic disease marked by constant straining to vomit, fever, cough etc.

   2. ஈளைநோய்; asthma. (சா.அக.);

நித்தியசீவி

நித்தியசீவி nittiyacīvi, பெ.(n.)

   1. எக்காலும் வாழ்ந்து இருப்பது; that which exists for a long time – Everlasting.

   2. அழிவில்லாச் சீவன்; eternal spirit.

   3. என்றும் நீடுவாழி (சிரஞ்சீவி);; eternal being. (சா.அக.);

நித்தியசுந்தரேசுவரர்

 நித்தியசுந்தரேசுவரர் nittiyasundarēsuvarar, பெ. (n.)

   திருநெடுங்களத்திருக்கோயிலில் கோயில் கொண்டிருக்கும் இறைவன்; the deity at {Thirunedungalam. }

நித்தியசுமங்கலி

 நித்தியசுமங்கலி nittiyasumaṅgali, பெ. (n.)

   கணிகையர்; dancing-girl.

     [நித்தியம் + சுமங்கலி.]

நில் → நிற்றல் = நிலையான, என்றும்.

நிற்றல் → நித்தல் = என்றும்.

நித்தல் → நித்தியல் = என்றும்.

நித்தம் → நித்தியம் = என்றும்.

நன்கலம் (நங்கலம்); = மங்கலம்.

நன்கலம் = தாலி, சிறந்த அணி.

நன்கலம்=அணியத்தக்கநிலை, மங்கலம்.

நன்கலம்=மங்கலம். ந=ம,போலி

மாட்டுப் பெண் = நாட்டுப்பெண்

முனி = நுனி

மங்கலம் = மங்கலி..

     ‘சு’ வடசொல் முன்னொட்டு தமக்கென வரைந்த கணவரின்றி நாடொறுமொருவரைக் கணவராய்க் கொள்ளுதலின் கணிகையர் நித்தியசுமங்கலி எனப்பட்டனர்.

நித்தியசேவகம்

 நித்தியசேவகம் nittiyacēvagam, பெ. (n.)

   நாடோறும் செய்யுஞ் தொண்டு; daily service.

     [நித்தியம் + Skt. சேவகம்.]

நித்தியசேவனை

 நித்தியசேவனை nittiyacēvaṉai, பெ. (n.)

   நித்திய சேவகம் ; see nittiya-sevagam

     [நித்தியசேவகம் → நித்தியசேவனை.]

நித்தியதாநம்

 நித்தியதாநம் nittiyatānam, பெ. (n.)

நித்தியதானம் பார்க்க; see {nittiya-dānam}

நித்தியதானம்

 நித்தியதானம் nittiyatāṉam, பெ. (n.)

   நாடொறுமளிக்குங் கொடை (வின்.);; daily alms, gifts, or presents.

     [நித்தியம் + தானம்.]

நித்தியநட்சத்திரம்

 நித்தியநட்சத்திரம் nittiyanaṭcattiram, பெ. (n.)

நித்தியவிண்மீன் பார்க்க; see {mittiyavinmin}

     [நித்திய + skt. நட்சத்திரம்]

நித்தியநைமித்திகம்

நித்தியநைமித்திகம் nittiyanaimittigam, பெ. (n.)

   1. நாட்சடங்கும் சிறப்புச்சடங்கும்; daily and occasional or special ceremonies.

   2. பழம் நூல்களால் உருவாக்கப்பட்டதும், கோள்நிலை கண்டு இன்றியமையாது செய்ய வேண்டியதுமான செயல்; any regularlyrecurring, occasional duty enjoined by SaStras.

     [நித்தியம் + skt.நைமித்திகம்.]

நித்தியன்

 நித்தியன் nittiyaṉ, பெ. (n.)

   கடவுள்(வின்.);; God, as eternal.

     [நித்தம் → நித்தியம் → நித்தியன்.]

நித்தியப்பகுவசனம்

நித்தியப்பகுவசனம் nittiyappaguvasaṉam, பெ. (n.)

   1. பன்மையாகவே வழங்குஞ் சொல்; words used always in the plural as makkal.

   2. வசவு (உ.வ.);; abusive language.

     [நித்தியம் + பகுவசனம்.]

நித்தியப்படி

நித்தியப்படி1 nittiyappaḍi, வி.எ. (adv.)

   நாடோறும்; daily.

     ‘நித்தியப்படிக்குத் தனித்துப்படுத்து’ (தனிப்பா. ii, 49,118.);.

     [நித்தியம் + படி.]

படி = போல.

 நித்தியப்படி2 nittiyappaḍi, பெ. (n.)

நித்தியக்

கட்டளை பார்க்க; see {nittiya-k-kattalai.}

நித்தியம் + படி.

படி = படியளந்து செய்யும் கட்டளை.

நித்தியப்படிமோகினி

 நித்தியப்படிமோகினி nittiyappaḍimōkiṉi, பெ. (n.)

   ஆலயத்திற்கு நாள்தொறும் நிகழ்வுறும் பூசையின் பொருட்டு அரசால் கொடுக்கப்படும் படித்தொகை (ரொக்கம்); (W.G.);; allowance in money for daily services in a temple, made by the government.

     [நித்தியப்படி + skt. மோகினி]

நித்தியப்பிரளயம்

நித்தியப்பிரளயம்1 nittiyappiraḷayam, பெ. (n.)

   1. உயிர்களின் உறக்க (சுழுத்தி); நிலை (சங்.அக.);; lit. daily dissolution; sound sleep.

   2. இறப்பு (வின்.);; death.

     [நித்தியம் + skt. பிரளயம்.]

 நித்தியப்பிரளயம்2 nittiyappiraḷayam, பெ. (n.)

   இடைவிடாத சாவு; continuous death. (த.சொ.அக.);.

நித்தியப்பூசை

 நித்தியப்பூசை nittiyappūcai, பெ. (n.)

   அன்றாடு நிகழ்வுறும் பூசை; daily worship, as in a temple.

     [நித்தியம் + பூசெய் → பூசை.]

நித்தியமல்லி

நித்தியமல்லி nittiyamalli, பெ. (n.)

   1. சிவப்பப் பூக்களையுடைதொரு பூடு; jasmine bendyhisbiccus hirtus.

   2. ஒருவகை மல்லிகை;

நித்தியமல்லிகை

நித்தியமல்லிகை nittiyamalligai, பெ. (n.)

   மல்லிகை வகை; a Kind Of {jã5mine.}

     [நித்தம் → நித்தியம் + மல்லிகை.]

நித்தியமுத்தன்

நித்தியமுத்தன் nittiyamuttaṉ, பெ. (n.)

   1. கடவுள் (வின்.);; God, as the being of eternal bliss.

நித்தியமுத்தி

 நித்தியமுத்தி nittiyamutti, பெ. (n.)

   மீளா நற்கதி (யாழ்.அக.);; eternal bliss.

     [நித்தியம் + முத்தி.]

நித்தியமோட்சம்

 நித்தியமோட்சம் nittiyamōṭcam, பெ. (n.)

நித்தியமுத்தி (யாழ்.அக.); பார்க்க; see nittiya mutti.

     [நித்தியம் + மோட்சம்.]

நித்தியம்

நித்தியம்1 nittiyam, பெ. (n.)

 eternity, permanence.

நித்தியமாய் நிர்மலமாய் (தாயு. பொருள்வ. 1);.

   2. முத்தி (யாழ். அக.);; everlasting bliss.

   3. நித்திய பூசை பார்க்க; see nittiya {pūšai.}

   4. நித்திய விதி, 1 பார்க்க. உடையவர் நித்தியம்.

   5. கடல் (யாழ்.அக.);; sea, ocean.

     [நில் → நித்தம் → நித்தியம்.]

 நித்தியம்2 nittiyam, வி.எ. (adv.)

   நாடோறும்; daily.

 நித்தியம்3 nittiyam, பெ. (n.)

நித்திகம் பார்க்க; see {nittigagam}

நித்தியயோகம்

நித்தியயோகம் nittiyayōkam, பெ. (n.)

   1. குறையா(த); செல்வம்(வின்.);; everlasting wealth.

   2. என்றும் விடாசேர்க்கை; perpetual, inseparable union.

நித்தியல்

நித்தியல்1 nittiyal, பெ.அ. (adj.)

   நாள்தோறும்; daily.

     “நித்தியல் திருப்பெருக்கு அமுது கொடுக்கிற” (T.A.S.v.117.);.

     [நித்தம் → நித்தயம் → நித்தியல்.]

 நித்தியல்2 nittiyal, பெ. (n.)

   1. நித்தியபூசை பார்க்க; see {nittiya-pusai.}

   2. நித்தியக்கட்டளை பார்க்க; see {nittiya-k-kattalai}

நித்தியவஞ்சி

 நித்தியவஞ்சி nittiyavañji, பெ. (n.)

   கொஞ்சிவஞ்சி; gum lac tree-schleichera trijuga. (சா.அக.);.

நித்தியவநித்தியம்

நித்தியவநித்தியம் nittiyavanittiyam, பெ. (n.)

நித்தாநித்திம் பார்க்க; see {nitta-nittam..}

     “நித்தியவ நித்தியங் கணிண்ணயம்” (கைவல். தத்.8.);

     [நித்தியம் + அ(ல்);நித்தியம்.]

நித்தியவாசம்

 நித்தியவாசம் nittiyavācam, பெ. (n.)

   நிலையான இருப்பு; permanent habitation.

     [நித்தியம் + வாசம்.]

நித்தியவாசி

 நித்தியவாசி nittiyavāci, பெ. (n.)

   இறைவன்(கிறித்.);; God, as the eternal being.

     [நித்தியம் + வாசி நித்தல் → நித்தம் → நித்தியம் வதி → வசி → வாசி..]

நித்தியவிண்மீன்

 நித்தியவிண்மீன் nittiyaviṇmīṉ, பெ. (n.)

   அன்றன்று நிலவுடன் சேரும் நாண்மீன்; lunar asterism pertaining to each day.

     [நித்தியம் + விண்மீன்.]

நித்தியவிதி

நித்தியவிதி niddiyavidi, பெ. (n.)

   1. அன்றாடக் கடமையுணர்த்தும் நூல்; book of rules on daily duties.

   2. இறந்தவர் பொருட்டு பத்து நாளுஞ் செய்யும் சடங்கு (உ.வ.);; daily offering to the deceased during the ten days following death.

   3. ஒமக்கிடங்கு (யாழ்.அக.);; sacrificial pit.

   4. காவு கொடுக்குமிடம் (யாழ்.அக.);; sacrificial altar.

     [நித்தியம் + விதி.]

 Skt. விதி

த. நெறி.

நித்தியவிபூதி

நித்தியவிபூதி nittiyavipūti, பெ. (n.)

   திருமாலின் இருப்பிடம் (அஷ்டாதச. ஶ்ரீவசன.4. பிர. 381, வியா.);; the abode of Tirumal.

நித்தியாசாரம்

 நித்தியாசாரம் nittiyācāram, பெ. (n.)

   நாடொறும் கடைப்பிடிக்க வேண்டுவன (C.G.);; daily observance.

     [நித்தியம் + Skt. ஆசாரம்.]

நித்தியாதேவா

 நித்தியாதேவா nittiyātēvā, பெ. (n.)

   தழுதாழை; wind killer-cleodendron phlomoides.

நித்தியாநித்தியம்

 நித்தியாநித்தியம் nittiyānittiyam, பெ. (n.)

நித்தாநித்தம் பார்க்க; see nitta-nittam.

     [நித்தியம் + அல் + நித்தியம்.]

நித்தியானந்தன்

 நித்தியானந்தன் nittiyāṉandaṉ, பெ. (n.)

   கடவுள் (சங்.அக.);; God.

     [நித்தியம் + Skt. ஆனந்தன்.]

 நித்தியானந்தன் nittiyāṉandaṉ, பெ. (n.)

   நீடுமகிழ்நன்; an happy person for ever.

     [Skt. nity-{}-nanda → த. நித்தியானந்தன்]

நித்தியானந்தம்

நித்தியானந்தம் nittiyāṉandam, பெ. (n.)

   நிலையான மகிழ்ச்சி (வின்.);; eternal bliss.

   2. வீடுபேறு (யாழ்.அக.);; Salvation.

     [நித்தியம் + Skt. ஆனந்தம்.]

நித்தியானம்

 நித்தியானம் nittiyāṉam, பெ. (n.)

பார்க்கை (யாழ்.அக.);;seeing, sight.

 நித்தியானம் nittiyāṉam, பெ.(n.)

பார்க்கை (யாழ்.அக.);;seeing, sight.

     [Skt. {} → த. நித்தியானம்]

நித்தியானுட்டானம்

 நித்தியானுட்டானம் nittiyāṉuṭṭāṉam, பெ.(n.)

   நாட்(தினசரிக்); கருமம் (வின்.);; daily religious duties.

     [Skt. nitya+{} → த. நித்தியா னுட்டானம்]

நித்திரகாசம்

 நித்திரகாசம் nittirakācam, பெ. (n.)

   நொச்சி; notchi-vitex negundo.

நித்திரம்

 நித்திரம் nittiram, பெ. (n.)

நிதித்திகம் பார்க்க; see nidittigam.

நித்திரவரி

 நித்திரவரி nittiravari, பெ. (n.)

நிதித்திகம் பார்க்க; see nidittigam

நித்திராகாரிலேகியம்

 நித்திராகாரிலேகியம் nittirākārilēkiyam, பெ.(n.)

   தூக்கத்தைத் தரும் மருந்து; anodyne confection or electuary. (சா.அக.);

நித்திராபங்கம்

 நித்திராபங்கம் nittirāpaṅgam, பெ.(n.)

   தூக்கமின்மை; sleeplessness. (சா.அக.);

நித்திராலு

நித்திராலு nittirālu, பெ.(n.)

   தூங்குபவன்; sleepy, drowsy person.

     “நித்திராலுவை மீளவுங் கொல்லுவான்” (பாரத. வாரணா. 8);.

     [Skt. {} → த. நித்திராலு]

நித்திராவி

 நித்திராவி nittirāvi, பெ. (n.)

   ஊமத்தை; dhatura-datura stramonium.

நித்திரை

நித்திரை1 nittirai, பெ.(n.)

   உறக்கம்; sleep, repose.

     “நிசிவேலை நித்திரையாத்திரை பிழைத்தும்” (திருவாச. 4, 29);.

     [Skt. {} → த.நித்திரை]

 நித்திரை2 nittirai, பெ.(n.)

   1. உணவினாலே மயக்கம்; drowsiness arising from taking food.

     “உண்ட மயக்கம் தொண்டருக்கு முண்டு”.

   2. ஆழ்ந்த தூக்கம்; deep sleep.

   3. சுழுத்தி; entire insensibility in deep sleep.

   4. யோக நித்திரை; a conscious sleep.

   5. தூக்கம்; sleep. (சா.அக.);

நித்திரைகுலை-த்தல்

நித்திரைகுலை-த்தல் nittiraigulaittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. தூக்கத்தைக் கலைத்தல்; sleepless.

   2. பித்தியத்தினால் தூக்கம் பிடியமை; entire absence of the capacity to sleep as in sanity-Ahypnosis. (சா.அக.);

நித்திரைகொள்ளு-தல்

நித்திரைகொள்ளு-தல் niddiraigoḷḷudal,    3 செ. குன்றாவி.(v.t.)

   தூங்குதல்; sleeping. (சா.அக.);

நித்திரைக்கலிதம்

நித்திரைக்கலிதம் niddiraikkalidam, பெ.(n.)

   1. தூங்கும் போது விந்து கழலுதல்; reflex emission of semen during sleep – Nocturnal emission uet – dream.

   2. தூக்கத்தில் தன்னை அறியாமலே அடிக்கடி விந்து கழலும் ஓர் நோய்; an involuntary, too frequent and excessive discharge of semen without copulation – Spermatorrheca. (சா.அக.);

நித்திரைசோபம்

 நித்திரைசோபம் nittiraicōpam, பெ.(n.)

   மயக்கம்; drewsiness. (சா.அக.);

நித்திரைதெளி-தல்

நித்திரைதெளி-தல் niddiraideḷidal,    3 செ. குன்றாவி. (v.t.)

   1. தூக்கந் தெளிதல்; recovering from drowsiness or sleep.

   2. தூக்கத்தினின்று எழுதல்; rising from sleep. (சா.அக.);

நித்திரைப்பரிகாரம்

நித்திரைப்பரிகாரம் nittiraipparikāram, பெ.(n.)

   1. தூக்கம் வராதிருக்கும் படிச் செய்யும் முயற்சி; preventive measures taken for doing away with sleep.

   2. நான்கு வகை பரிகாரத்திலொன்று; one of the four prescribed remedies (i.e.); preventing sleep. (சா.அக.);

நித்திரைமயக்கம்

 நித்திரைமயக்கம் nittiraimayakkam, பெ.(n.)

   தூக்கக் கலக்கம்; sleepingness, drowsi- ness. (சா.அக.);

நித்திரைமருந்து

 நித்திரைமருந்து nittiraimarundu, பெ.(n.)

   தூக்கத்தைத் தரும் மருந்து; a drug of medicine that has the quality of inducing profound sleep – Soparific. (சா.அக.);

நித்திரைவரு-தல்

நித்திரைவரு-தல் niddiraivarudal,    8 செ.கு.வி. (v.i.)

   தூக்கம் பிடித்தல்; becoming sleepy, to be sleepy. (சா.அக.);

நித்திரைவருவி-த்தல்

நித்திரைவருவி-த்தல் nittiraivaruvittal,    4 செ.கு.வி. (v.i.)

   தூக்கம் வரும்படிச் செய்தல்; inducing sleep 5 or 7 grains of veronal taken mixing in water before bed time is enough.

     “படுப்பதற்கு முன் இதற்கு விரோணல் 55-7 துளி தண்ணீரில் கலந்து குடிக்கத் தூக்கம் வரும்” (சா.அக.);

நித்திரைவெறி

 நித்திரைவெறி nittiraiveṟi, பெ.(n.)

   தூக்கத் திலாவது தூக்கத்தினின்று எழுந்தாவது திடீரென முறை பிசகான காரியத்தைச் செய்தல்; a condition of incomplete sleep in which some of the faculities are excited when the person becomes violent-sleep drungness – Somnolentia. (சா.அக.);

நித்திறம்

 நித்திறம் nittiṟam, பெ. (n.)

   கண்டங்கத்தரி;   என்னுஞ் செடி; a plant called {kandan-kattar}

நித்திலக்கோவை

நித்திலக்கோவை nittilakāvai, பெ. (n.)

   அகநானூற்றின் மூன்றாவது பகுதி; the third section of {Agananuru.}

     [நித்திலம் + கோவை.]

நிலத்திலம் என்பது இடைக்குறையாய் நித்திலம் என்றாயிற்று என்பது பாவாணர் கருத்து.

சங்கப் பனுவலுள் அகநானூறென்னும், நூலின் மூன்று பகுதிகளுள் இறுதிப் பகுதி நித்திலக்கோவை என்பதாகும். அகம் பற்றிய நானூறு பாக்களின் தொகுதி அகநானூறென்று கொள்வோமாயின், அப்பொருள்பற்றிய நானூறு பாக்களைக் கொண்ட குறுந்தொகைக்கும், நற்றிணைக்கும் இப்பெயர் பொருந்துதல் வேண்டும். அங்ஙனமின்மையை அறிவோர் ஒர்ந்துணர்க. அகநானூற்றுக்கு நெடுந்தொகையென்றொரு பெயருமுண்டு. இஃது அடி நிமிர்ந்தோடி அகப்பொருட் பனுவலுக்கியன்ற முதல் கரு உரி என்னும் முப்பொருளையும் அப்பொருட்கேயுரிய உள்ளுறையுவமைகளையும் இறைச்சிப்பொருளையும் விரித்தோதும் சிறப்புடைத்தாதலால் அகநானூறு என்னும் பெயர் இதற்கு மாத்திரமே பொருந்துவதாயிற் றென்பது கற்றறிந்தார் துணிபு.

இதன்கண்ணமைந்துள்ள நானுறு பாக்களை வரிசைப்படுத்தியமைத்த அமைப்பு வியத்தற்குரியதும் தனிச்சிறப்பு வாய்ந்ததுமாகும். 1, 3, 5, 7, 9 என ஒற்றைப்படை எண் பற்றி வரும் பாக்களனைத்தும் பாலைத் திணைக்கும், 2, 8, 12, 18, 22, 28 என்னும் முறை பற்றி வரும் பாக்களனைத்தும் குறிஞ்சித் திணைக்கும் 4, 14, 24, 34 என்னும் முறைபற்றி வரும் பாக்களனைத்தும் முல்லைத் திணைக்கும், 6, 16, 26, 36 என்னும் முறைபற்றி வரும் பாக்களனைத்தும் மருதத் திணைக்கும், 10, 20, 30, 40 என்னும் முறை பற்றி வரும் பாக்களனைத்தும் நெய்தற்றிணைக்குமுரிய வாயமைந்து பாலைக்கு இருநூறும், குறிஞ்சிக்கு எண்பதும், முல்லை, மருதம் நெய்தலுக்கு நாற்பது நாற்பதுமாக நானூறு பாக்களடங்கிய பனுவலாயமைந் திலங்குகின்றது.

முதலிலுள்ள 120 பாக்களுக்குக் களிற்றியானை நிரை எனவும், 121 முதல் 300 பாக்களுக்கு மணிமிடைபவளம் எனவும், 301 முதல் 400

முடியவுள்ள பாக்களுக்கு நித்திலக் கோவை எனவும் பெயர் கொடுத்து இந்நூலை மூன்று பகுதிகளாகப் பகுத்திருப்பதும் போற்றற்குரியதே. இவ்வாறு பெயரிட இந்நூலிற் போந்துள்ள அழகிய சொற்றொடர்களையே ஆய்ந்தெடுத்துப் பெயராக அமைத்தல் வேண்டு மென்று இப்பெயர்களைச் சூட்டியவர் முயன்றுள்ளன ரென்று ஊகித்தற்கிடனுளது. மணிமிடைபவளம் என்னுந் தொடர் இந்நூலகத்து இடைக்காடனார் பாடிய 304 ஆவது பாடலில்

     ‘கரும்பிமிர் பூதப் பிடத்தளையவிழ

அரும்பொறி மஞ்ஞை யால வரிமணல்

மணிமிடை பவளம் போல அணிமிகக்

காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்

ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப’

என்றங்கமைந்துள்ளதைக் கண்டு இத்தொடர் தானே ஒரு பகுதிக்குப் பெயராக அமையுமென்று கருதி இதுபோன்று பெயர்த்தன்மையுடைய வேறு இரண்டு தொடர் பெறுதற்கு முயன்றும் கிடைக்கப் பெறாமை யால் நிரலாகத் தொடுக்கப்பட்ட கோவையாகலின் அப்பொருளமைந்த ‘களிற்றின நிரை’ என இந்நூலுள் போந்த தொடரினையே களிற்றியானை நிரை என சிறிது திருத்தி அதனை ஒரு பகுதிக்குப் பெயரமைத்தனரென்றும் எஞ்சிய பகுதிக்கு நித்திலக் கோவை என்னும் பொருள்பட இந்நூலிற் போந்துள்ள அழகிய சொற்றொடர் பலவற்றையும் கருதி அப்பொருள் பயப்ப நித்திலக்கோவையென்று பெயரமைத்தனரென்றும் கொள்ளலாம்.

இனி, இவ்வகநானூற்றின் முற்பகுதியில் சார்த்து வகையால் வருகின்ற அக்காலத்து மன்னர் போரும் புகழும் அமைந்த செய்யுள்களை ஆராய்ந்தெடுத்துக் கோத்து அவற்றினூடே களிற்றியானையின் பெயர்களும் மறப்பண்பும் மிக்குத் தோன்றுதலால் அம் மறப்பண்பு இப்பெயரினும் தோன்றல் வேண்டும் என்று கருதி

     ‘களிற்றியானை நிரை’ என்னும் இப்பெயரை அம்முற்பகுதிக் கிட்டனரெனலாம். இப்பெயர் மறப்பண்புணர்த்தும் தன்மையுடைத் தாதலும் நினைக.

இங்ங்னமே மணிமிடைபவளத்தில் சார்த்து வகையாற் கூறப்பட்ட புறப்பொருளும் நூல்நுவலும் அன்பறமாகிய அகப்பொருளும் விரவி வருமாறு கோவை செய்து அச்செய்கை தோன்ற மணிமிடைபவளம் எனப் பெயரிட்டனரெனலாம்.

நித்திலக்கோவையில் முழுவதும் இன்பநுதலிய செய்யுள்களே காணப்படுகின்றன. முற்பகுதிகளிற் போலச் சார்த்துவகையால் மன்னருடைய போரும் புகழும் கூறுகின்ற செய்யுள்கள் இல்லை. ஆதலான், இஃது இன்பமாகிய ஒரு பொருளே நுதலி வருகின்ற பண்பு தோன்ற நித்திலக்கோவை என்னும் இனிய இப்பெயரை இட்டனர் எனலாம்.

நித்திலத்தாமம்

நித்திலத்தாமம் nittilattāmam, பெ. (n.)

   முத்துமாலை; pear garland.

     “மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த நித்திலத் தாம நிலையின்வாழாமை”.(பெருங்.உஞ்ஞைக்.48;62.);.

     [நித்திலம் + தாமம்.]

நித்திலப்பூண்

நித்திலப்பூண் nittilappūṇ, பெ. (n.)

   முத்தாலான பூண்; pear ring.

     “நித்திலப் பைம்பூ ணிலாத்திக ழவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன்.” (சிலப்.22;17.);.

     [நித்திலம் + பூண்.]

நித்திலப்பூம்பந்தர்

நித்திலப்பூம்பந்தர் nittilappūmbandar, பெ. (n.)

   முத்துப் பந்தல்; roof with pearis.

     “நீல விதானத்து நித்திலப் பூம்பந்தர்க் கீழ்”. (சிலப்.1;49.);.

     [நித்திலம் + பூ + பந்தல் → பந்தர். ல → ர போலி]

நித்திலமதாணி

நித்திலமதாணி nittilamatāṇi, பெ. (n.)

   ஒருவகை அணிகலன், முத்துமாலை; an ornament made up of pearl.

முத்தாலாயது நித்திலமதாணி அத்தகு மதிமறு, (பரிபா.2;30.);.

     [நித்திலம் + அது + அணி.]

நித்திலமாலை

நித்திலமாலை nittilamālai, பெ. (n.)

முத்து

   மாலை; pearl garland.

     “உரைபெறு நித்திலத்து மாலைத் தாமம்” (சிலப்.3;11.);.

     [நித்திலம் + மாலை.]

நித்திலம்

நித்திலம் nittilam, பெ. (n.)

   முத்து; pearl.

     “உரைபெறு நித்திலத்து மாலை” (சிலப்.3;112-3.);.

     “எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த நித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப” (ஐந்.ஐம்.48.);.

நுல் → நெல் → நில் → நில.

நில = ஒளி வீசுதல்.

நில + திலம் = நிலத்திலம்.

நிலத்திலம் = ஒளிவீசும் முத்து.

நிலத்திலம் → நித்திலம். (வே.க.3;21.);

இனி,

நிழற்றுதல் = ஒளிவீசுதல்.

நிழற்றி = ஒளிஉமிழ்வது.

நிழற்றி → நிழத்தி → நித்தி → நித்திலம்

என்றுமாம்.

நித்திலவட்டம்

நித்திலவட்டம் nittilavaṭṭam, பெ. (n.)

   முத்து மாலை; garland of pearls.

     “நித்தில வட்டமோர் பொன்செய் நாண்” (சீவக.1323.);.

     [நித்திலம் + வட்டம். வள் → வளை → வட்டம்.]

நித்திலவிதானம்

நித்திலவிதானம் nittilavitāṉam, பெ. (n.)

   முத்துப்பந்தர்; pearl ceiling.

     “திகழொளி நித்திலச் சித்திர விதானத்து விளங்கொளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து” (மணிமே. 18;46–47.);.

நித்திலவூர்தி

நித்திலவூர்தி nittilavūrti, பெ. (n.)

   முத்துப் பல்லக்கு; a planquin decorated with pearls.

     “நீந்து நித்திலவூர்தி” (சீவக. 858.);.

     [நித்திலம் + ஊர்தி.]

நித்தில்

நித்தில்1 nittil, பெ. (n.)

   நொச்சி; five leaved chaste tree-Vitex negundo.

     (சா. அக.);.

 நித்தில்2 nittil, பெ. (n.)

   மின்மினி (நாமதீப. 253.);; firefly.

     [நிலத்தில் → நித்தில்.]

நித்தை

நித்தை1 nittai, பெ. (n.)

   உமை; Parvadi, as eternal,

     “நித்தை யனுப்பிரவேசி” (கூர்மபு. திருக்.21.);.

     [நில் → நிற்றல் = நிலையானது.]

நிற்றல் → நித்தல் = நிலையானது, அழிவற்றது. நித்தல் → நித்தன் = அழிவற்றவன்.

நித்தன் → நித்தை = அழிவற்றவள், நிலைத்திருப்பவள்.]

 நித்தை2 nittai, பெ. (n.)

   உறக்கம்; sleep.

     “நித்தைநீள் பசலைப் பேரோர் விராகெனும் வேலின் வீழ” (சீவக.3080.);.

க. நித்தெ.

நிந்தகன்

நிந்தகன் nindagaṉ, பெ.(n.)

   இழிவுரைஞன் (இழிவாக பேசுவோன்);; who despises, scoffes.

     “வேதநிந்தகனே புன்மை விடாக்குணும் புலையவனாவான்” (சிவ. தருசுவர்க். சேட. 37);.

     [Skt. {} → த. நிந்தகன்]

நிந்தக்காணி

 நிந்தக்காணி nindakkāṇi, பெ.(n.)

   ஒருவனுக்கே உரிமையான நிலம்; land which is the exclusive property of a single proprietor.

நிந்தனை

 நிந்தனை nindaṉai, பெ.(n.)

   இகழ்ச்சி; censure, scorn.

     [Skt. {} → த. நிந்தனை]

நிந்தம்

 நிந்தம் nindam, பெ.(n.)

   தனி உரிமை; one’s own exclusive right.

     [Skt. nija → த. நிந்தம்]

நிந்தாசுதுதி

 நிந்தாசுதுதி nindācududi, பெ.(n.)

   எள்ளி யேத்தல் (இகழ்தல் போலப் புகழ்கை);; praise in the apparent from of abuse.

     [Skt. {} +cutudi → த. நிந்தாசுதுதி]

நிந்தாட்சணை

 நிந்தாட்சணை nindāṭcaṇai, பெ.(n.)

   இரக்க மின்மை; mercilessness, implacable nature, severity.

நிந்தி-த்தல்

நிந்தி-த்தல் nindittal,    3 செ.கு.வி.(v.i.)

   1. இகழ்தல்; to vilify, abuse, slander.

   2. அசட்டை பண்ணுதல் (பொருட்படுத்தா திருத்தல்);; to neglect, disregard.

     [Skt. nind + (-த்தல்); → த. நிந்தித்தல்]

நிந்திதம்

நிந்திதம் nindidam, பெ.(n.)

   1. இகழப்பட்டது; which is abused or despised.

   2. பரிகாசம் (எள்ளல்); (யாழ்.அக.);; prohibition.

     [Skt. nindita → த. நிந்திதம்]

நிந்திரம்

 நிந்திரம் nindiram, பெ. (n.)

   கண்டங்கத்தரி (மலை.);; a thorny plant.

நிந்து

 நிந்து nindu, பெ.(n.)

   இறந்த மக வீன்றாள் (யாழ்.அக.);; woman delivered of a still-born child.

     [Skt. nintu → த.நிந்து]

நிந்தை

 நிந்தை nindai, பெ.(n.)

   இகழ்ச்சி; reproach, blasphemy, abuse.

     [Skt. {} → த. நிந்தை]

நிந்தைத்துதி

 நிந்தைத்துதி nindaiddudi, பெ.(n.)

   பழிப்பதைப் போல் புகழ்ந்து பாடுதல்; apparent praise or censure suggesting the opposite.

     [நிந்(தை);+துதி]

நிந்தைவுவமை

நிந்தைவுவமை nindaivuvamai, பெ.(n.)

   உவமேயத்தை உயர்த்தி உவமானத்தை இகழ்ந்து சொல்லும் உவமையணி வகை (தண்டி. 30, உரை);; figure of speech in which the object chosen for comparison is belittled.

     [நிந்தை + உவமை]

நினவ

நினவ niṉava, வி.எ. (adv.)

   உன்னுடைய; yours.

     ‘நினவ கூறுவல் எனவ கேண்மதி'(புறநா. 35.);.

     [நீ → நின் → நினவ; ‘அ’ பலவின் பால் விகுதி.]

நினாதம்

 நினாதம் niṉātam, பெ.(n.)

   ஓசை (வின்.);; sound, noise.

     [Skt. ni-nada → த. நினாதம்.]

நினை

நினை1 niṉaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கருதுதல்; to think.

     “விளியுமென் இன்னுயிர் வேறெல்லாம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து” (குறள்,1209.);.

   2. (ஆலோசித்தல்); கலத்தல்; to consider, reflect, ponder.

     “வினை வேறு படாஅப் பலபொரு ளொருசொன் னினையுங் காலைக் கிளந்தாங்கியலும்” (தொல். சொல். 55.);.

   3. நினைவிற் கொணர்தல்; to remember.

   4. ஒன்றித்திருத்தல் (தியானத்தல்);; to medidate.

     “நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற், குறித்த பொருளொடு கொளுத்துவது நினைவே” (சிலப். 14;11, உரை.);;

   5. அறிதல்; to know. Understand.

     “நீதிகள் சொல்லியு நினைய கிற்கிலார்” (தேவா. 52. 10.);.

   6. நோக்கமாகக் கொள்ளுதல்; to intend, design, have in view.

   7. போலச் செய்தல் (பாவித்தல்);; to imagine, fancy.

க. நெனே.

 நினை2 niṉaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. நினை1- பார்க்க;see {minal-}

     “என்கொலோ நினைப்பதே” (திருவாச.5,75.);.

   2. தீர்மானித்தல்; திகைத்தல் (வின்..);; to resolve determine.

ம. நினையுகே. க நீனாசு.

நினைஇ

 நினைஇ niṉaii, வி.எ. (adv.)

   நினைந்து; to think.

     [நினை+இ; இ – அளபெடை.]

நினைதல்

நினைதல் niṉaidal, பெ. (n.)

   மனனம்; refection.

     “தெரித னினைத லெண்ண லாகாத் திருமாலுக்கு” (திவ். திருவாய். 6,9,11.);.

     [நினை → நினைதல்.]

நினைத்தகாரியம்

 நினைத்தகாரியம் niṉaittakāriyam, பெ. (n.)

   எண்ணிய பொருள்; thinking matter

     [நினைத்த + காரியம். கரு → கார் → காரியம்.]

நினைப்பணி

நினைப்பணி niṉaippaṇi, பெ. (n.)

   ஒரு பொருள் ஒப்புமையாற் பிறிதொன்றினை நினைவு படுத்துவதாகக் கூறும் அணிவகை (அணிவகை. 8.);; figure of speech where in an object suggests another similar to it.

     [நினைப்பு + அணி.]

நினைப்பாயிரு-த்தல்

நினைப்பாயிரு-த்தல் niṉaippāyiruttal,    3 செ.கு.வி. (v.i.)

   1. கருத்தாயிருத்தல்; to be mindful, cautious, attentive, thoughtful.

   2. மனத்தினை ஒரு முகப்படுத்துதல்; to concentrate ones thoughts.

     [நினைப்பு → நினைப்பாய் + இரு.]

நினைப்பாளி

 நினைப்பாளி niṉaippāḷi, பெ. (n.)

   நினைவாற்றலுடையோன் (வின்.);; person of retentive memory.

     [நினைப்பு + ஆள் + இ.]

ஒ.நோ.முதலாளி.

நினைப்பிடு-தல்

நினைப்பிடு-தல் niṉaippiḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1.ஆணையிடுதல்; to give command, issue an order.

இராஜா இன்ன மண்டபத்தேயிருந்து நினைப்பிட்டான் என்றால் (திவ். திருமாலை.1. வியா.13.);.

     [நினைப்பு + இடு.]

நினைப்பீடு

நினைப்பீடு niṉaippīṭu, பெ. (n.)

நினைப்பு பார்க்க;see {mirappu}

சர்வேச்வரன் இவர் களுடைய பூர்வாபராதத்தாலேயிட்ட நினைப்பீடு மாறுகைக்கு ப்ரதான காரணம் மூன்றுண்டு (ரஹஸ்ய. 709.);.

     [நினைப்பிடு → நினைப்பிடு.]

நினைப்பு

நினைப்பு1 niṉaippu, பெ. (n.)

   1. நினைவு பார்க்க;see {miaivப}

     “நினைப்பெறு நெடுங் கிணந்றை நின்றுநின் றயராதே” (தேவா. 1145. 8.);.

   2. (ஏரணம்); கரணியம் நிகழாது உனக்கிவர் தாயுந் தந்தையும் என்றாற் போலப் பிறர் சொலத் தான் கருதுதலாகிய பிரமாணபாசம் (மணிமே. 27;75.);; fallacious reasoning based only on hearsay, one of eight {piramāna pāsam}

     [நினை → நினைப்பு.]

 நினைப்பு niṉaippu, பெ. (n.)

சூள். Will.

     “நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப் புரத்துக்கு அரிதாக வேணுமோ” (ஈடு, 1, 4, 5, பக். 191.);.

     [நினை → நினைப்பு.]

 நினைப்பு2 niṉaippu, பெ. (n.)

   1. (ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்த); எண்ணம்; thought idea.

அவர் மறுக்க மாட்டார்;என்னும் நினைப்பில் அதைச் சொன்னேன். (உ.வ.);.

     ‘நினைப்பு பிழைப்பைக் கெடுக்கும்’ (பழ.);.

   2. நினைவு பார்க்க;see {minaivய}

     [நினை → நினைப்பு.]

 நினைப்பு4 niṉaippu, பெ. (n.)

   1. நினைக்குகை; thought.

அது உடற்குற்றம் பதினெட்டி னொன்று (சூ. நி. 2 12;118.);.

நினைப்பூட்டு

நினைப்பூட்டு1 niṉaippūṭṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. நினைவுபடுத்துதல்; to put in mind.

மாலையில் முதல்வரைச் சந்திக்க வேண்டு மென்பதைச் செயலருக்கு நினைப்பூட்டினார். (உ.வ.);.

   2. அறிவுறுத்துதல்; to suggest, indicate.

குறித்த காலத்தில் அகரமுதலி வெளிவருதல் கட்டாயமென்பதை இயக்குநர் நினைப்பூட்டினார். (உ.வ.);.

     [நினைப்பு + ஊட்டு.]

 நினைப்பூட்டு2 niṉaippūṭṭu, பெ. (n.)

நினைவூட்டு பார்க்க;see {minalytiப}

     [நினைவூட்டு → நினைப்பூட்டு.]

நினைவஞ்சலி

 நினைவஞ்சலி niṉaivañjali, பெ. (n.)

   ஒருவர் இறந்தநாளில் அவரை நினைத்துச் செலுத்தும் இரங்கல்; homage (done on Someones death anniversary.);.

     [நினைவு + அஞ்சலி.]

நினைவற்றுப்போ-தல்

நினைவற்றுப்போ-தல் niṉaivaṟṟuppōtal,    8செ.கு.வி. (v.i.)

   மறந்துபோதல்; to forget.

     [நினைவு + அற்று+ போதல்.]

நினைவாலயம்

 நினைவாலயம் niṉaivālayam, பெ. (n.)

நினைவாலையம் பார்க்க;see {ninaj-v-âlayam}

     [நினைவாலையம் – நினைவாலயம்.]

நினைவாலையம்

 நினைவாலையம் niṉaivālaiyam, பெ. (n.)

 memorial, mausoleum.

     [நினைவு + ஆலையம். ஆல் → ஆலை = சுற்றிவருதல், சுற்றுமதில். மதிலகத்துக் கோயில். ஆலை → ஆலையம். ஆலை =கோயிலின் சுற்றுமதில்.]

நினைவிற்கொள்ளு-தல்

நினைவிற்கொள்ளு-தல் niṉaiviṟkoḷḷudal, செ.குன்றாவி. (v.t..)

   1. திட்டமிடல்,

 to plan

   2. எண்ணத்தில் இருத்துதல்; to keep in the mind.

நினைவில்கொள்(ளு)-தல்

நினைவில்கொள்(ளு)-தல் niṉaivilkoḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t.)

நினைவிற் கொள்(ளு);–, பார்க்க;see {niai-vir-kol(/u);-,}

     [நினைவில் கொள்(ளு); → நினைவிற் கொள்(ளு);-,]

நினைவில்வை-த்தல்

நினைவில்வை-த்தல் niṉaivilvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

நினைவுவை- பார்க்க, see {ninasvu-Val}

நினைவு

நினைவு niṉaivu, பெ. (n.)

   1. எண்ணம்

 thought, idea

     “நினைவந் துணிபுமாகும் (தொல். சொல். 337.);.

   2. உசாவு, கலப்பு

 reflection, consideration.

     “நினைவிலார் போல நெஞ்ச நெகிழ்த்தியோ” (கம்பரா. நாகபா. 213.);.

   3. நினைவாற்றல்; recollection, remembrance.

   4. பாவனை; imagination.

   5. நோக்கம்; object, design, purpose.

   6. விழிப்பு (கவனம்.);; care, attention, thoughtfulness.

   7. ஒன்றிப்பு (தியானம்);; meditation, contemplation.

     ‘மனநிலை திரியாமற் குறித்த பொருளொடு கொலுத்த நினைவே’ (தொல். பொருள். 75, உரை.);

   8. வருத்தம்; anxiety, distress.

     “நெறிமையிற் கூற நினைவினகன்றான்” (சீவக. 333.);.

   9. அரசர்கட்டனை (கல்.);; order, command as of a king.

   10. நினைவுப் பொருள் (வின்.);; memorandum, memento.

   11. ஊகம்; supposition.

   12. கருத்து; notion.

   13. கருத்துருவம்; conception.

   14. கற்பனை; fancy.

ம. நினம்.

     [நினை → நினைவு.]

நினைவுஅஞ்சலி

 நினைவுஅஞ்சலி niṉaivuañjali, பெ. (n.)

நினைவஞ்சலி பார்க்க;see {ninai-walal}

     [நினைவு + அஞ்சலி.]

நினைவுகூர்-தல்

நினைவுகூர்-தல் niṉaivuārtal,    2 செ.குன்றாவி. (v.t.)

   நினைவுக்குக் கொண்டு வருதல்; to remember, recollect, to bring ones mind.

தலைவர் தன் இளமைக் காலத்தை நினைவு கூர்ந்தார். (உ.வ.);. இது உங்கள் வாழ்க்கையில் என்றும் நினைவு கூரத்தக்க செய்தி. (உ.வ.);.

     [நினைவு + கூர்-,]

நினைவுகேடு

 நினைவுகேடு niṉaivuāṭu, பெ. (n.)

நினைவுத்தப்பு பார்க்க;see {miraivப-t-tappப.}

     [நினைவு + கேடு.]

நினைவுக்குறிப்பு

 நினைவுக்குறிப்பு niṉaivukkuṟippu, பெ. (n.)

   ஒருவர் தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் சந்தித்த பெருமக்களையும் நினைவு கூர்ந்து எழுதிய செய்திகளின் தொகுப்பு; memories.

     [நினைவு + குறிப்பு.]

நினைவுச்சின்னம்

 நினைவுச்சின்னம் niṉaivucciṉṉam, பெ. (n.)

   நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படுவது; memorial, monument.

மொழிப்போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.(உ.வ.);.

இவை விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவுச்சின்னம். (உ.வ.);.

     [நினைவு + சின்னம்.]

நினைவுதிரும்பு-தல்

நினைவுதிரும்பு-தல் 7 niṉaivudirumbudal, செ.கு.வி. (v.i.)

     [நினைவு + திரும்பு-.]

நினைவுத்தடுமாற்றம்

நினைவுத்தடுமாற்றம் niṉaivuttaḍumāṟṟam, பெ. (n.)

   1. நினைவுத் தப்பு பார்க்க;see {nipalvu-t-tappu }

   2. மயக்கம்; delirium, delirium tremens.

   3. மனநலக்கேடு (பைத்தியம்);; பித்து,

 dementia.

     [நினைவு + தடுமாற்றம்.]

நினைவுத்தப்பு

நினைவுத்தப்பு1 niṉaivuddappudal,    7செ.கு.வி. (v.i.)

   மறதியாதல்; to forget.

     [நினைவு + தப்பு-.]

 நினைவுத்தப்பு2 niṉaivuttappu, பெ. (n.)

   1. நினைவுக்குறைவு; loss of memory.

   2. அறிவு அழிகை; loss of consciousness.

     [நினைவு + தப்பு.]

நினைவுத்தூண்

 நினைவுத்தூண் niṉaivuttūṇ, பெ. (n.)

   ஒருவரின் நினைவாக நிறுவப் பெறும் தூண்; memorial pillar.

சங்கப் புலவர்கள் வாழ்ந்ததாக கண்டறியப்பட்ட ஊரில் நினைவுத்தூண் நிறுவும் பணியைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் அறிவித்தார். (உ.வ.);.

     [நினைவு + தூண்.]

நினைவுநாள்

நினைவுநாள் niṉaivunāḷ, பெ. (n.)

 death anniversary.

ஆண்டுதோறும் சனவரி 30ஆம் பக்கல் வரும் அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. (உ.வ.);.

     [நினைவு + நாள்.]

நினைவுபடுத்து-தல்

நினைவுபடுத்து-தல் niṉaivubaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. நினைவுக்குக் கொண்டுவருதல்; to recollect.

ஏதம் நடந்தபோது என்ன நிகழ்ந்தது என்பதை என்னால் நினைவு படுத்த முடியவில்லை. (உ.வ.);.

   2. (ஒன்றை மறந்து விடாமல்); நினைக்கச் செய்தல்; to remind.

நாளை திருமணத்திற்குச் செல்ல வேண்டுமென அமைச்சருக்கு அவர் உதவியாளர் நினைவுபடுத்தினார். (உ.வ.);.

     [நினைவு + படுத்து-.]

நினைவுமறதி

 நினைவுமறதி niṉaivumaṟadi, பெ. (n.)

   நினைவின்மை (இ.வ.);; loss of memory.

     [நினைவு + மறதி.]

நினைவுமோசம்

நினைவுமோசம் niṉaivumōcam, பெ. (n.)

நினைவுத் தப்பு2 (யாழ்.அக.); பார்க்க;see {ոiրaivu-t-tappս}

நினைவுவை-த்தல்

நினைவுவை-த்தல் niṉaivuvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. மனம்வைத்தல்; to fix the mind on. concentrate the thoughs on.

   2. நினைதல் (வின்.);; to think

   3. நன்றியின் பொருட்டேனும் அன்பினாலேனும் நினைவு வைத்தல்; to remember with gratitude or affection.

   4. இச்சித்தல்; to hanker after, desire.

     [நினைவு + வை-,]

நினைவூட்டிக்கொள்(ளு)-தல்

நினைவூட்டிக்கொள்(ளு)-தல் niṉaivūṭṭikkoḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   மறந்தவற்றை நினைவுபடுத்துதல்; to remember.

     [நினைவு + ஊட்டிக்கொள்-,]

நினைவூட்டு

நினைவூட்டு1 niṉaivūṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

நினைவுபடுத்து-, பார்க்க;see {minalvயpaduftu-,}

     [நினைவு + ஊட்டு-,]

 நினைவூட்டு2 niṉaivūṭṭu, பெ. (n.)

   கிடப்பில் உள்ள செய்தியை முடிக்குமாறு எழுதும் மடல்; reminder.

அகரமுதலி விற்பனையான செய்தியைத் தெரிவிக்குமாறு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குப் பல நினைவூட்டு எழுதியும் மறுமொழி இல்லை.(உ.வ.);.

     [நினைவு + ஊட்டு.]

நினைவேந்தல்

நினைவேந்தல் niṉaivēndal, பெ. (n.)

   1. சான்றோரையோ மதிப்புமிக்க குடும்பப் பெரியோரையோ அவரின் மறைவையொட்டி அவரின் பெருமைகளை நினைவு கூர்வதான நிகழ்ச்சி, இரங்கற்கூட்டம்; condolence meeting after the death of respected leader or family head.

   2. மறைந்தவரின் நினைவுநாள்; anniversary commemorative of a person’s death.

     [நினைவு + ஏந்தல்]

நினைவோடு-தல்

நினைவோடு-தல் niṉaivōṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   மறந்தவை நினைவுக்கு வருதல்; to remember.

     [நினைவு + ஒடு.]

நினைவோட்டம்

 நினைவோட்டம் niṉaivōṭṭam, பெ. (n.)

   மறந்ததை நினைக்கை; remembrance.

     [நினைவு + ஒட்டம்.]

நின்

 நின் niṉ, பெ. (n.)

உனது

 yours.

     [நீன் → நின்.]

நீன் என்னும் பெயரே நீ என்று குறைந்து வழங்குகின்றது. நீன் என்னும் வடிவை இன்றும் தென்னாட்டுலக வழக்கிற் காணலாம். தான் என்பது தன் என்று குறுகினாற் போல், நீன் என்பது நின் என்று வேற்றுமை உருபேற்கக் குறுகும். நீன் என்பது இலக்கண வறியாமை காரணமாகக் கொச்சையாகக் கருதப் படுகிறது. நானும் நீனும் செல்வோமா? (உ.வ.);

நின்னாங்கூலி

 நின்னாங்கூலி niṉṉāṅāli, பெ.(n.)

   வேலை செய்யாமல் வெறுமனே நின்று கொண்டு கூலி பெறுதல்; getting wages without doing any work [நின்றான்+கூலி. நின்றான்-நின்னான் (கொ.வ.);]

நின்னாமன்

நின்னாமன் niṉṉāmaṉ, பெ.(n.)

   1. பெயரில் லாதவன், அருகன் (சூடா.);; arhat, as nameless.

   2. சிவன் (நாமதீப.16);;{}.

     [Skt. nir-{} → த. நின்னாமன்.]

நின்பம்

 நின்பம் niṉpam, பெ. (n.)

   வேம்பு; neem treemargora tree. (சா.அக.);.

நின்மலசாக்கிரம்

நின்மலசாக்கிரம் niṉmalacākkiram, பெ.(n.)

   சிவபெருமானது அருளால் சத்தாதி விசயங்களைச் சிவாகாரமாகவும், விசயசுகங் களைச் சிவானந்தமாகவும் அனுபவிக்கும் சுத்தாவத்தைவகை (சி.சி.4, 34, சிவாக்.);;

நின்மலசுழுத்தி

நின்மலசுழுத்தி niṉmalasuḻutti, பெ.(n.)

   ஆன்மா ஞாதுரு, ஞானம், ஞேயம் என்ற வேறு பட்ட அறிவுடன் அருண்மயமாகிச் சுகத்தை யனுபவிக்கும் சுத்தாவத்தை வகை (சி.சி.பு.34, சிவாக்.);;     [Skt. nir-mala → த. நின்மலசுழுத்தி.]

நின்மலசொப்பனம்

நின்மலசொப்பனம் niṉmalasoppaṉam, பெ.(n.)

ஆதன் (ஆன்மா); அருளிடத்தே நின்று அதனையுணரும் சுத்தாவத்தை வகை (சி.சி.பு.34, சிவாக்.); ({}.);,

 a condition of the sould in its uplifted state when it gets a vision of the Divine Grace, one of five {}, q.v.

     [Skt. nir-mala → த. நின்மலசொப்பனம்.]

நின்மலதுரியம்

நின்மலதுரியம் niṉmaladuriyam, பெ.(n.)

   ஆதனின் (ஆன்மாவின்); மலங்கழல அதற்கு ஆனந்தவொளி தோன்றுதலாகிய சுத்தா வத்தை வகை (சி.சி.பு.34, சிவாக்.);;     “Light of Bliss”, one of five {}.

     [Skt. nir-mala → த. நின்மலதுரியம்.]

நின்மலதுரியாதீதம்

நின்மலதுரியாதீதம் niṉmaladuriyādīdam, பெ.(n.)

   பொருள் – பொருள் நாட்டம் (ஞாதுரு ஞேயம்); என்ற வேறுபாடற்று (ஆன்மா); ஆதன் ஆனந்த மயமாகி விளங்கும் சுத்தாவத்தை வகை (சி.சி.பு.34, சிவாக்.);;     [Skt. nir-mala → த. நின்மலதுரியாதீதம்.]

நின்மலன்

நின்மலன் niṉmalaṉ, பெ.(n.)

   1. அழுக்கற்ற வனாகிய கடவுள்; God, as immaculate.

     “நின்மலா போற்றி போற்றி” (திருவாச.5, 61);

   2. அருகன் (சூடா.);; arhat.

     [Skt. nir-mala → த. நின்மலன்.]

நின்மலம்

 நின்மலம் niṉmalam, பெ.(n.)

   மாசின்மை; purity.

     [Skt. nir-mala → த. நின்மலம்.]

நின்மலரசம்

நின்மலரசம் niṉmalarasam, பெ.(n.)

   பத்து வகை சாற்றுச் சத்துக்களில் ஒன்று (இது சாரணைக்குதவும். இதை 201தரம் சாரணைத் தீர்த்தால் (ககனம்); வான்வழியே பாயலாம் எனக் கருதப்படுவது;

நின்மலாவத்தை

நின்மலாவத்தை niṉmalāvattai, பெ.(n.)

   சாக்கிர முதலாயுள்ள ஐந்து வகையான உயிர் நிலைத் தொல்லைகளை நீக்குவதற்காக அடையும் நிலைகள்;   2. நின்மலசாக்கிரம்; soul coming to a full vision.

   3. நின்மலசொற்பனம்; sould being affected by dream.

   3. நின்மலசுழுத்தி; insensibility to sinful disires.

   4. நின்மல துரியம்; reaching the regions of happiness.

   5. நின்மலதுரியாதீதம்; enjoying transcend- dental bliss which is the highest state of the soul free from all corporal entanglements (சா.அக.);.

நின்மலி

நின்மலி niṉmali, பெ.(n.)

   வில்வம் (நாமதீப. 289);; sacred bael.

     [Perh. nir-mala → த. நின்மலி.]

நின்மாலியம்

நின்மாலியம் niṉmāliyam, பெ.(n.)

நிர்மாலியம் பார்க்க;see {}.

     “எந்தை நின்மாலியங் கவர்ந்தனன்” (காசிக.சிவ.வாயு.38);.

     [Skt. nir-malya → த. நின்மாலியம்.]

நின்மிதம்

நின்மிதம் niṉmidam, பெ.(n.)

நிருமிதம் (நாமதீப.691); பார்க்க;see nirumidam.

நின்மிதி

நின்மிதி niṉmidi, பெ.(n.)

   1. உண்டாக்குகை; formation, creation, making.

   2. தொடக்கம்; beginning.

     “நின்மிதி யின்றி யூர்பாடின்று” (மணிமே.30, 37);.

     [Skt. nir-miti → த. நின்மிதி.]

நின்மூடன்

நின்மூடன் niṉmūṭaṉ, பெ.(n.)

   முழுமூடன்; absolute fool.

     “நிலமத்தனை பொன்னை நின்மூடர்க் கீந்தால்” (திருமந். 5௦1);.

     [Skt. nir-{} → த. நின்மூடன்.]

நின்றசீர்நெடுமாறன்

நின்றசீர்நெடுமாறன் niṉṟacīrneḍumāṟaṉ, பெ. (n.)

   திருஞானசம்பந்தர் காலத்தவரும் பாண்டியவரசரும் நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவருமான அடியார்; a cononized {Šaiva} saint, Pandiya king and contemporary of {Tiruñānašambandamoorti nāyaņār} of 63.

     “நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்” (தேவா. 737, 8.);.

நின்றசொல்

 நின்றசொல் niṉṟasol, பெ. (n.)

   மாறாவாக்கு; promise.

     [நில் → நின்ற + சொல்.]

நின்றசொல்லர்

நின்றசொல்லர் niṉṟasollar, பெ. (n.)

   சொன்ன சொல் மாறா மாண்பினர்; the man who keeps his promise, honest man.

     “நின்ற சொல்லர் நீடுதோன்றினியர்” (நற்.1.);.

     [நின்றசொல் → நின்றசொல்லர்.’அர்’ உடைமைப் பொருள்பற்றிய மதிப் பொருமை ஈறு.]

நின்றச்சளவு

நின்றச்சளவு niṉṟaccaḷavu, பெ. (n.)

   சரியான அளவு (தெ.க.தொ. ii;107.);; full and correct measure.

     [நிறை → நிறைத்த→நிறைச்ச+அளவு.]

நின்றதிருக்கோலம்

 நின்றதிருக்கோலம் niṉṟadirukālam, பெ. (n.)

   திருமால் திருக்கோலம் மூன்றனுள் நின்றருளும் நிலை; standing posture of {Visnu,} one of three {tiru-k-kölam.}

     [நில் → நின்ற + திருக்கோலம்.]

நின்றது

நின்றது niṉṟadu, பெ. (n.)

   1. நிலைத்த பொருள்; that which is permanent.

     “நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந்து” (நாலடி, 47.);.

   2. நிலைத்திணை; category of immovables.

     “நின்றனவுந் திரிந்தன” (கம்பரா. கையடை. 13.);.

   3. எஞ்சியது; remainder, as standing over.

     “நின்றதிற் பதினையாண்டு பேதை பாலகன தாகும்” (திவ். திருமாலை. 3.);.

     [நில் → நின்றது.]

நின்றநிலை

நின்றநிலை niṉṟanilai, பெ. (n.)

   1. நிற்கும் நிலை; standing posture.

   2. ஒரே நிலை; same position or condition.

   3. முரண்டு (பிடிவாதம்);.

 obstinacy.

     [நின் → நின்ற + நிலை.]

நின்றவடி

நின்றவடி niṉṟavaḍi, பெ. (n.)

   1. நின்ற இடம்; standing place.

   2. காலடி; foot-print.

     [நில் → நின்ற + அடி.]

நின்றவிடந்தீய்ஞ்சான்

 நின்றவிடந்தீய்ஞ்சான் niṉṟaviḍandīyñjāṉ, பெ. (n.)

   குருவிச்சை என்னுஞ் செடி; boxleaved, ivory wood.

     [நில் → நின்ற + இடந்தீய்ஞ்சான். தீய்ந்தான் → திய்ஞ்சான்.]

நின்றாடல்

நின்றாடல் niṉṟāṭal, பெ. (n.)

   அல்லியம், கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல் என்ற அறுவகைப்பட்ட நின்றாடுந் தெய்வக் கூத்து (சிலப். 3;14, உரை.);; divine dance in Standing posture, of six kinds, viz., alliyam, {kotti, kuda, kudam, pändarangam, } mal.

     [நில் → நின்று + ஆடல்.]

நின்றாற்சிணுங்கி

நின்றாற்சிணுங்கி niṉṟāṟciṇuṅgi, பெ. (n.)

   சிறியா நங்கை (பதார்த்த. 247.); எனுஞ்செடி; a species of small milkwort, a herb that is continuously emitting water.

     [நின் → நின்று → நின்றால் + சிணுங்கி.]

இது பாம்பின் நஞ்சினை முறிப்பதோடு பெண்ணைத் தன்வயப்படுத்தவுமுதவும் என்பது குறிப்பு.

நின்றாற்போல்

 நின்றாற்போல் niṉṟāṟpōl, வி.எ. (adv.)

   திடீரென்று; suddenly.

நின்றாற்போல் விழுந்து விட்டான். (உ.வ.);.

நின்றால்மேனி

 நின்றால்மேனி niṉṟālmēṉi, பெ. (n.)

   மாந்தர் நிழல்விழுந்தால் பொன்னிறமாகுமொரு பூடு. இதில் இரசங்கட்டும்.வங்கம் சுண்ணமாகும்; a plant that turns to golden colour when mens shadow fall on it, it is capable of binding mercury and calcifying tin. (சா.அக.);.

நின்றிடம்தீஞ்சான்

நின்றிடம்தீஞ்சான் niṉṟiḍamtīñjāṉ, பெ. (n.)

   1. நின்றவிடம் தீய்ஞ்சான் பார்க்க;{ninja-v-idam tyrjan}

   2. பல்லிப்பூடு; lizard plant-buchnere asiatica or strigalutea (lour.); (சா.அக);.

     [நின்ற விடந்தீஞ்சான் → நின்றிடம் தீஞ்சான். தீய்ந்தான் → தீஞ்சான் (கொ.வ);.]

நின்றிதம்

 நின்றிதம் niṉṟidam, பெ. (n.)

   தரைப்பசலி; malabar night shade. (சா.அக.);.

நின்று

நின்று1 niṉṟu, வி.எ. (adv.)

   எப்பொழுதும்; always, permanently.

     “நிறைமய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே” (பரிபா. 15, 7.);.

     [நில் →நின்று.]

 நின்று2 niṉṟu, இடை. (part.)

   ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒரிடைச்சொல் (திருக்கோ. 34, உரை.);; a particle used in the ablative sense.

மரத்தினின்று பழம் விழுந்தது.

     [நில் → நின்று.]

 நின்று3 niṉṟu, பெ. (n.)

   1. நிற்றல்.

 Standing.

   2. நிறுத்தல்; stop.

நின்றுசிணுங்கி

 நின்றுசிணுங்கி niṉṟusiṇuṅgi, பெ. (n.)

நின்றாற்சிணுங்கி பார்க்க;see {mirrcinungi}

     [நில் → நின்று + சிணுங்கி.]

நின்றுபயனின்மை

நின்றுபயனின்மை niṉṟubayaṉiṉmai, பெ. (n.)

   நூற்குற்றம் பத்தனுள் சொல் அல்லது தொடர் பொருட்பேறின்றி இருத்தலாகிய குற்றம் (நன். 12.);; the state of being purposeless, as of a word or phrase, one of ten {nür-kurram.}

     [நில் → நின்று + பயன்+இன்மை.]

நின்றுபிடி-த்தல்

நின்றுபிடி-த்தல் niṉṟubiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   தாக்குப்பிடித்தல் (யாழ்ப்.);; to withstand.

கட்டடம் எந்தப் புயலுக்கும் நின்றுபிடிக்கும்.(உ.வ.);.

இந்தத் துணி இரண்டு வெள்ளைக்கு நின்று பிடிக்காது, வெளுத்துவிடும். (உ.வ.);.

     [நின்று + பிடி-,]

நின்றுபோ

நின்றுபோ1 niṉṟupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   வேலை முதலியன நடவாதுபோதல்; to stop. cease as work.

வேலை நின்றுபோய்விட்டது. (உ.வ.);

     [நில் → நின்று + போ.]

 நின்றுபோ2 niṉṟupō, வி.எ. (adv.)

   ஓரிடத்தைக் கடக்குமுன் விழிப்பாய்க் கட; stop and go.

     [நின்று + போ.]

நின்றும்

 நின்றும் niṉṟum, வி.எ. (adv.)

   ஐந்தாம் வேற்றுமை யினீக்க வுருபுகளினொன்று; a particle used in the ablative sense.

ஊர்தியினின்றும் இழிந்தான். (உ.வ.);.

     [நின்று → நின்றும்.]

நின்றுவற்று-தல்

நின்றுவற்று-தல் niṉṟuvaṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   சொல் அல்லது தொடர் இருந்தும் பயனிலதாதல் (குறள், 825, உரை.);; to be wanting in significance, as a word or phrase in a sentence.

     [நில் → நின்று + வற்று-,]

நின்றுவா-தல் (நின்றுவருதல்)

நின்றுவா-தல் (நின்றுவருதல்) niṉṟuvādalniṉṟuvarudal,    18 செ.கு.வி. (v.i.)

   1. காலந்தாழ்ந்து வருதல் (உ.வ.);; to delay in coming.

   2. விட்டு விட்டு வருதல்; to come intermittently.

காய்ச்சல் நின்றுவருகிறது. (உ.வ);.

     [நின்று + வா-,]

நின்றுவிடு-தல்

நின்றுவிடு-தல் niṉṟuviḍudal,    18 செ.குன்றா.

வி. (v.t.);

நின்று போ-, பார்க்க;see {mirrயpõ}

     [நில் → நின்று+ விடு.]

நின்றுவெட்டி

 நின்றுவெட்டி niṉṟuveṭṭi, பெ. (n.)

   மண்வெட்டி வகை; a long-handled hoe.

     [நில் → நின்று + வெட்டி.]

மண்வெட்டியின் காம்பு நின்று மண்வெட்டுவதற்குப் பெரிதாகவும், குனிந்து வெட்டுவதற்குச் சிறிதாகவும் இருக்கும்.

நின்றேத்துவார்

நின்றேத்துவார் niṉṟēttuvār, பெ. (n.)

   நின்று கொண்டு அரசரின் புகழ்பாடுவோர் (சிலப். 3; 48, உரை.);; panegyrists who stand and praise their king.

     [நில் → நின்று + ஏத்துவார்.]

நின்றை

நின்றை1 niṉṟai, இடை. (part.)

   அசைநிலை (தொல். சொல். 426.);; an-expletive.

 நின்றை1 niṉṟai, பெ. (n.)

   சென்னைக் கருகிலுள்ள தின்னனூர் என்று வழங்கும் திருநின்றவூர்;{Tinnanur,} a village near Chennai.

     “காளத்தி நின்றைக்கே சென்றக்கால்” (தொண்டை. சத. 32.);.

   நின்றவூர் → நின்றை. ஒ.நோ;தஞ்சாவூர் → தஞ்சை.

நின்றோசி

 நின்றோசி niṉṟōci, பெ. (n.)

   நாகப்படக் கற்றாழை; thorn less aloe. (சா.அக.);.

நிபச்சொல்

 நிபச்சொல் nibaccol, பெ.(n.)

   பழிச்சொல் (வின்.);; slandex backbiting, calumny.

     [Skt. nibha → த. நிபச்சொல்]

நிபடிதம்

 நிபடிதம் nibaḍidam, பெ.(n.)

 studying.

     [Skt. {} → த. நிடிதம்]

நிபதனம்

நிபதனம் nibadaṉam, பெ.(n.)

   1. விழுகை (யாழ்.அக.);; falling down.

   2. கீழ் இறக்குகை; throwing down, letting down;dropping.

     [Skt. ni-patana → த. நிபதனம்]

நிபத்தியை

 நிபத்தியை nibattiyai, பெ.(n.)

   போர்க்களம் (யாழ்.அக.);; battle-field.

     [Skt. {} → த. நிபத்தியை]

நிபந்தனக்கிரந்தம்

 நிபந்தனக்கிரந்தம் nibandaṉakkirandam, பெ.(n.)

   பல நூல்களிலிருந்து திரட்டிய மறைநூல் (வின்.);; a treatise compiled from various smrtis.

     [Skt. nibandhana+kiranta → த. நிபந்தனக் கிரந்தம்]

நிபந்தனம்

 நிபந்தனம் nibandaṉam, பெ.(n.)

   தொகுப்பு (வின்.);; collection, compendium.

     [Skt. nibandhana → த. நிபந்தனம்]

நிபந்தனை

நிபந்தனை nibandaṉai, பெ.(n.)

   1. கட்டுப்பாடு; agreement, compact, condition.

   2. பொது விதி; canon, regulation, general rule.

   3. ஏற்பாடு (இ.வ.);; arrangement.

   4. தண்டனை (வின்.);; punishment, penalty.

     [Skt. {} → த. நிபந்தனை]

நிபந்தம்

நிபந்தம் nibandam, பெ.(n.)

   1. தாவரப் பொருள்; immoveable property.

   2. தவணையாகச் செலுத்துவது; that which has been qromised or is deliverable in instalments. (R.F.);.

   3. கோவில்களுக்கு விடப்பட்ட சொத்து; endowment of property for temple workship.

     “நிபந்த வகுப்பு நாதன் வைத்தபணியென” (கோயிற்பு. திருவிழா.18);.

   4. கடமை (வின்.);; obligation, duty.

   5. அணை (யாழ்.அக.);; dam.

   6. யாப்பு (யாழ்.அக.);; poem.

     [Skt. ni-bhandha → த. நிபந்தம்]

நிபம்

நிபம் nibam, பெ. (n.)

   1. கடம்பு; cadamba treenauclea cadamba.

   2. வேம்பு; margasaazadiracta indica.

   3. நீர்ச்சாடி; water jar.

 நிபம்1 nibam, பெ.(n.)

   1. உவமை (வின்.);; comparison, likeness, resemblance.

   2. காரணம்; cause, reason, pretext.

     “வெய்யன் வரநிபமென்னை கொலென” (கம்பரா. பரசு. 15);.

   3. வஞ்சகன், கரவடம், ஏய்ப்பு (வின்.);; fraud.

   4. கோள் (வின்.);; accusation, slander, calumny.

     “திருவல்லிக்கேணி பஞ்சொல்லித் கண் முத்தங்கள் சிந்துங் கண்டாய்” (தனிப்பா. Ii. 183. 447);.

     [Skt. nibho → த. நிபம்]

நிபலம்

 நிபலம் nibalam, பெ. (n.)

   முடக்கொத்தான்; palsy creepe-cardiospermum halicacabum

நிபாகம்

 நிபாகம் nipākam, பெ.(n.)

   சமைக்கை (யாழ்.அக.);; cooking.

     [Skt {} → த.நிபாகம்]

நிபாதம்

நிபாதம் nipātam, பெ.(n.)

   1. இறங்குகை (வின்.);; falling, descending.

   2. செயலொழிகை (வின்.);; cessation of activity, prostration.

   3. இறப்பு (யாழ்.அக.);; death.

   4. உடம்பொடு புணர்த்தல் (பி.பி.50, உரை);; a device in literary art.

     [Skt. {} → த. நிபாதம்]

நிபானம்

நிபானம் nipāṉam, பெ.(n.)

   1. கிணறு (யாழ்.அக.);; well.

   2. நீர்த் தொட்டி; reservoir of water trough for watering cattle.

   3. பாற் கலசம்; milk pail.

     [Skt. {} → த. நிபானம்]

நிபிடாருட்சா

 நிபிடாருட்சா nibiṭāruṭcā, பெ.(n.)

   கருப்புக் கடலை; black bengal gram. (சா.அக.);

நிபிடீகரம்

நிபிடீகரம் nibiṭīkaram, பெ.(n.)

   1. நெருக்கம்; closeness, thickness, as of men, of leaves.

   2. கடுமை; sevenity as of disease, urgency, pressure.

     [Skt. {} → த. நிபிடீகரம்]

நிபீடனம்

நிபீடனம் nipīṭaṉam, பெ.(n.)

   மற்போர் (சுக்கிரநீதி. 215);; wrestling.

     [Skt. {} → த. நிபீடனம்]

நிபீடிதம்

நிபீடிதம் nipīṭidam, பெ.(n.)

   1. பிசைதல்; squeezing.

   2. தழுவல்; embracing. (சா.அக.);

நிபுணத்துவம்

நிபுணத்துவம்1 nibuṇattuvam, பெ.(n.)

   1. நுண்திறன் (சாமர்த்தியம்);; skill, cleverness.

   2. திறப்பாடு; excellence, superiority.

     “வாசிட்டமா நிபுண ஞான நூல்” (ஞானவா. வைரா. 16);.

     [Skt. {} → த. நிபுணத்துவம்]

 நிபுணத்துவம்2 nibuṇattuvam, பெ.(n.)

   தேர்ச்சி; expertise, professionalism.

நிபுணன்

நிபுணன் nibuṇaṉ, பெ.(n.)

   1. நுண் திறத்தன், மிக வல்லோன் (திவா.);; skilful man, expert.

   2. கலைவல்லோன் (பிங்.);; learned man.

   3. அறிவன் (புதன்); (வின்.);; mercury.

     [Skt. {} → த. நிபுணன்]

நிபுணர்

 நிபுணர் nibuṇar, பெ.(n.)

   தேர்ச்சியும், திறமையும் பெற்றவர்; expert, specialist.

     “மருத்துவ நிபுணர் / வேறு எதில் அவர் நிபுணரோ எனக்குத் தெரியாது, ஆனால் பொய் சொல்வதில் நிபுணர்”. (இ.வ.);.

த.வ. திறவோன்

நிப்பரம்

நிப்பரம் nipparam, பெ.(n.)

   1. பாரமின்மை (சுமையின்மை);; lightness.

   2. அசைவின்மை; firmness.

     [Skt. nir-bhara → த. நிப்பரம்]

நிப்பாட்டம்

 நிப்பாட்டம் nippāṭṭam, பெ. (n.)

நிற்பாட்டம் பார்க்க; see nir-pâttam.

     [நிற்பாட்டம் → நிப்பாட்டம்.]

நிப்பாட்டியம்

 நிப்பாட்டியம் nippāṭṭiyam, பெ. (n.)

நிற்பாட்டம் (இ..வ..); பார்க்க; see nirpattam.

     [நிற்பு + ஆட்டம் → நிற்பாட்டம் → நிற்பாட்டியம் → நிப்பாட்டியம்]

நிப்பாட்டு

நிப்பாட்டு1 nippāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

நிற்பாட்டு1-தல் பார்க்க; see nir-pattu.

 நிப்பாட்டு2 nippāṭṭu, பெ. (n.)

நிற்பாட்டு2 பார்க்க; see nirpāttu

நிமந்தம்

நிமந்தம் nimandam, பெ.(n.)

   கோயில் நிருவாகததிற்கான திட்டம்; a committee to supervise to temple administration. “ஆள்வார்க்கு நித்தல் நிமந்தம் சந்நியாதியம் செல்லக்கடவதாக.” (தெ.சா.8:4:எ:456);. [நிவந்தம் – நிபந்தம்]

நிமம்

 நிமம் nimam, பெ. (n.)

   பிடர்த்தலை (பிங்.);; nape of the neck.

     [நிவ → நிம → நிமம், நிவ = உயர, மேலே.]

நிமயம்

நிமயம் nimayam, பெ. (n.)

   1. கண்ணிமைப் பொழுது; twinkling of the eye, moment, instant;

   2. அறுபது நொடி கொண்ட காலஅளவு; minute of time =1/60 hour.

     [நிமையம் → நிமயம்]

நிமரம்பாம்பு

 நிமரம்பாம்பு nimarambāmbu, பெ. (n.)

     ‘இரையெடுத்து அசைய முடியாமற் கிடக்கும் பாம்பு’ (நாஞ்.);;

 snake unable to move after taking its prey.

     [நிமிர் → நிமர் + அம் + பாம்பு.]

நிமி

நிமி2 nimi, பெ. (n.)

   கதிரவன் குலத்து வேந்தரு ளொருவன்; a king of the solar race.

     “நிமித்திருமரபுளான்” (கம்பரா.திருவவதா.9.);.

நிமி’-தல்

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

நிமிச்சுற

 நிமிச்சுற nimiccuṟa, வி.எ. (adv.)

   நிறைய; full. to the brim.

நிமிடன்

 நிமிடன் nimiḍaṉ, பெ. (n.)

   மிகத்திறமையானவன்; extremely clever person.

     [நிமிடு → நிமிடி → நிமிடன்.]

நிமிடம்

நிமிடம் nimiḍam, பெ.(n.)

   1. 60 விநாடி கொண்ட காலம் (நிமையம்);; a period of 60 minutes (i.e.); a minute.

   2. சிமிட்டுக் கண் (இமைப் போது);; continous winking – Blepharism. (சா.அக.);

நிமிடி

நிமிடி1 nimiḍi, பெ. (n.)

   நெருடி; a hand signal.

     “அகினா றங்கை சிவப்ப நல்லோர் துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி உள்ளழுதுறீஇய வொள்ளடர்ப் பாண்டி” (பெருங். உஞ்சை.33;91.);.

 நிமிடி2 nimiḍi, பெ. (n.)

   சுறுசுறுப்புள்ளவன்; clever, active person.

அவன் வேலையில் நிமிடி.. (உ.வ.);.

     [நிமிடு → நிமிடி.]

நிமிடிபாதம்

நிமிடிபாதம் nimiḍipātam, பெ. (n.)

   1. கண்டிப்பு; strictness.

   2. தன்முரண்டு; obstinancy.

நிமிடு

நிமிடு1 nimiḍu, பெ. (n.)

   திறன்மிகு வேலை (இ.வ.);; clever workmanship.

     [நிமையம் → நிமிடு.]

ஒரு வேலையை விரைவாய்ச் செய்தலை ஒரு நொடியில் முடி என்றும் ஒரு நிமையத்தில் முடி என்றும் வழங்கும் வழக்கில் இச்சொல் உருவாகியிருக்கலாம்.

 நிமிடு2 nimiḍudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   நெருங்குதல்; to feel between fingers.

     “துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி” (பெருங். உஞ்சை.33,92.);.

நிமிட்டாம்பழம்

 நிமிட்டாம்பழம் nimiṭṭāmbaḻm, பெ. (n.)

   கிள்ளு; pinch, humorously expressed as a fruit which a child may expect.

     [நிமிட்டு + ஆம் + பழம்.]

நிமிட்டு

நிமிட்டு1 nimiṭṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. கிள்ளுதல் (வின்.);; to pinch, as in punishment.

   2. நெருடித் தூண்டுதல்; to trim, as a wick.

   3. கசக்குதல் (வின்.);; to rub or crush between the hands, as grain.

     [நிமிடு → நிமிட்டு-,]

 நிமிட்டு2 nimiṭṭu, பெ. (n.)

   கிள்ளுகை; pinch.

நிமிண்டி

நிமிண்டி nimiṇṭi, பெ. (n.)

   1. சிறு திருடன் (வின்.);; sly thief.

   2. எறும்பு வகை (யாழ்.அக.);; a kind of ant.

     [நிமிண்டு → நிமிண்டி.]

நிமிண்டு

நிமிண்டு1 nimiṇṭudal, செ.குன்றாவி, (v.t.)

   1. கசக்குதல்); to crush, squeeze between the hands, as grain,

     “கொல்லைக்கம்பை நிமிண்டியு மூதியுந் தின்ன வல்லோர்” (தனிப்பா.i,142,38.);.

   2. கிள்ளுதல்; to pinch, nip off, with the fingers.

   3. பிறர் அறியாமல் சிறிதுசிறிதாகக் கவர்தல் (யாழ்ப்.);; to pilter little by little.

     [நிமி → நிமிண்டு-.]

 நிமிண்டு2 nimiṇṭudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   கட்டை விரலுக்கும் சுட்டுவிரலுக்கும் இடையே பிடித்து அழுத்தி முன்பின் அசைத்தல்; to pinch, to trim as a wick. etc.

குழந்தையின் கன்னத்தை நிமிண்டக் கை குறுகுறுத்தது (உ.வ..);. விளக்குத்திரியை நிமிண்டினாள். (உ.வ..);

     [நிமி → நிமிண்டு-.]

நிமிதகம்

 நிமிதகம் nimidagam, பெ.(n.)

   கொக்கோக நூலின்படி ஓர் வகை முத்தமிடல்; a mode of kissing, limited or normal kiss in which the girl merely touches the lips or her lover with her own but not operate or take any other active part. (சா.அக.);

நிமித்த சூடாமணி

 நிமித்த சூடாமணி nimittacūṭāmaṇi, பெ. (n.)

   நிமித்த (சகுண); நூல் (யாழ்.அக.);; a treatise on omens.

     [நிமித்தம் + சூடாமணி.]

நிமித்தகம்

 நிமித்தகம் nimittagam, பெ.(n.)

   முத்தமிடல் (யாழ்.அக.);; kissing.

     [Skt. nimittaka → த. நிமித்தகம்]

நிமித்தகாரணம்

நிமித்தகாரணம்1 nimittakāraṇam, பெ.(n.)

   மூலகாரணம்; primary cause. (சா.அக.);

 நிமித்தகாரணம்2 nimittakāraṇam, பெ.(n.)

   காரணம் மூன்றனுள் குடத்துக்குக் குயவன் போலக் காரியத்தோடு அனுவிருத்தியில்லாத கரணியம்; efficient cause, as the potter for a pot one of three {}.

     “அதற்கு நிமித்த காரணங்கேவலப் பொருளென் பதூஉம்” (குறள், 352, உரை); (தருக்க. சங்.பக்.24);.

     [நிமித்தம் + காரணம்]

     [Skt. nimitta → த. நிமித்தகாரணம்]

நிமித்தக்காரன்

 நிமித்தக்காரன் nimittakkāraṉ, பெ.(n.)

   கோள் நிலையை நோக்கி வருங் காரியஞ் சொல்வோன் (வின்.);; Astrologer, soothsayer.

     [Skt. nimitta → த. நிமித்தக்காரன்]

நிமித்தசுரம்

 நிமித்தசுரம் nimittasuram, பெ.(n.)

   வேண்டு மென்று உண்டாக்கிய சுரம்; fever that is wantenly brought about – indued fever. (சா.அக.);

நிமித்தசூடாமணி

 நிமித்தசூடாமணி nimittacūṭāmaṇi, பெ.(n.)

   ஒரு புட்குறிநூல் (சகுனதுால்); (யாழ்.அக.);; a treatise on omens.

     [Skt. nimitta → த. நிமித்தசூடாமணி]

நிமித்ததானம்

 நிமித்ததானம் nimittatāṉam, பெ.(n.)

   பிணத்திற்கு உருக்கமாகச் செய்யும் கொடை (வின்.); (பிரேதப் பிரீதியாகச் செய்யுந் தானம்);; gifts or offerings made for the benefit of the soul of a deceased person before he is included among manes.

     [Skt nimitta + த. தானம் → த.நிமித்ததானம்]

நிமித்தத்துவம்

 நிமித்தத்துவம் nimittattuvam, பெ. (n.)

ஏதுத் தன்மை (சங்.அக.);

 causality.

 நிமித்தத்துவம் nimittattuvam, பெ.(n.)

   ஏதுத்தன்மை(சங்.அக.);; causality.

     [Skt nimitta + த. தத்துவம் → த. நிமித்தத்துவம்]

நிமித்தம்

நிமித்தம் nimittam, பெ.(n.)

   1. காரணம்; cause, motive, occasion.

     “புணர்தலும் புணர்தனி மித்தமும்” (தொல்.பொ.13, உரை);.

   2. குறி சொல்லுதல்; omen.

     “நெறியி னல்கின புள்ளு நிமித்தமும்” (சீவக. 2168);.

   3. அடையாளம் (வின்.);; mark, sign, spot, token.

   4. சபிண்டீ கரணத்தில் இறந்தோர்க்கு நிகராளியாய் (பிரதிநிதி);வரிக்கப் பெற்றவர்க்குரிய இடம்; the office of a Brahmin representing deceased on the 12th day ceremony.

   5. பொருட்டு; for the sake of, on account of.

     “அதனிமித்தம் வந்தேன்” (வின்.);

     [Skt. ni-mitta → த. நிமித்தம்]

நிமித்தம் காக்கும் நாயகன்

நிமித்தம் காக்கும் நாயகன் nimittamgāggumnāyagaṉ, பெ.(n.)

   நிமித்தம் சொல்பவன்; foreteller of omens.

     [நிமித்தம்+காக்கும்+நாயகன்]

விக்கிரம சோழன் 7ஆம் ஆட்சி ஆண்டில் கி.பி.125ஆம் ஆண்டு அரியாவூர் ஊர்ச்சபையில் நிமித்தம் காக்கும் நாயகன் இருந்துள்ளான்.

நிமியும்வாய்

 நிமியும்வாய் nimiyumvāy, பெ. (n.)

   நெளிந்த வாய்; dented mouth, out of shape as the lips of a child in crying.

     [நிமியும் + வாய்.]

நிமிரல்

நிமிரல் nimiral, பெ. (n.)

   1. நிமிர்கை; straightening out, becoming erect.

   2. சோறு (பிங்.);; boiled rice,

     “மகளிர் புறங்கடை யுகுத்த கொக்குகிர் நிமிரல் (நற்.258.);.

     [நிமிர் → நிமிரல்.]

வளைவு நீளுவதே நிமிரல். அரிசி சோறாகும் போது சற்று நீளுகிறது. அந்த நீளலும் நிமிரலின் பாற்பட்டதாய்க் கொள்ளப்படும்.

நிமிரி

நிமிரி nimiri, பெ. (n.)

   1. மஞ்சனிறம் (G.Tj.D.i.120.);; yellow colour.

   2. குதிரை வலிப்பு நோய் (M.Cm.d.249.);; a disease of cattle.

நிமிர்

நிமிர்1 nimirrudal,    4 செ.கு.வி.). (v.i.)

   1. உயர்தல் (சூடா,);; to become erect;

 to be straightened;

 to stand upright;

 to raise or hold the head erect.

   2. நீளுதல்; to be outstretched, as the arm,

     “திரையெனு நிமிர்கையால்” (கம்பரா.கங்கை. 62.);.

   3. வளர்தல்; to grow tall, as a youth;

 to increase in height;

 to shoot up;

     “ஓங்கியழலாய் நிமிர்ந்தாய் போற்றி” (தேவா. 1160, 5.);.

   4. ஏறுதல்; to exceed the limit, as a foot in verse.

     “அம்மை தானே அடிநிமிர் பின்றே ” (தொல். பொருள்.547.);.

   5. பரத்தல்; to extend, expand, spread out

     “உரைகுறுக நிமிர் கீர்த்தி” (கம்பரா. குலமுறை.4.);.

   6. நுடங்குதல்; to bend, shake.

     “மின்னு நிமிர்ந் தனையராகி” (மதுரைக். 679.);.

   7. நடத்தல்; to walk, proceed,

     “கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரின்” (பு.வெ. 7.5.);.

   8. ஓடுதல் (சூடா.);; to run.

   9. மிகைத்தல்; to be excessive.

     “நிமிர்பரிய மாதாங்கவும்” (புறநா.14.);.

   10. தொலைவாதல்; to be far distant

     “நணுகவு நிமிரவு நடக்கு ஞானத் தருணர்வினின்” (கம்பரா.கடிமண. 60.);.

   11. பொன்போல் உயர்ந்ததாதல்; to be of superior quality. as gold.

     “நிமிர்பொன் சொயும் வரையே” (சீவக.1376.);

   12. நெருங்குதல் (வின்.);; to be close, thick. crowded.

   13. உறுதியாதல்; to be Bold. firm decided.

செயற்றிறத்தில் நிமிர்ந்து நிற்கிறான். (வின்.);.

   14. இறுமாத்தல் (வின்.);; to be proud. affected. arrogant.

   15. முயலுதல்; to be active. make an effort.

இசைச் சொலளவைக் கென்னா

நிமிராது (மணிமே. 11;81.);.

   16. கோள் முறைமாறி (வக்கிரித்து); திரும்புதல் (வின்.);; to return from retrograde motion-, as a planet.

க.நிமிர்.

 நிமிர்2 nimirtal,    4.செ.கு.வி. (v.i.)

   இடையிடுதல்; to interpose

     “நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும்'” (பரிபா.19;82.);.

 நிமிர்3 nimir, பெ. (n.)

   தெரிநிலை வினைப் பகுதி; verb explicity denoting tense by a tense-sign;

     “நிமிர்சுடா” (நான்மணி. 9.);.

நிமிர்கழிச்சேர்ப்பன்

 நிமிர்கழிச்சேர்ப்பன் nimirkaḻiccērppaṉ, பெ. (n.)

   நீண்ட கழியைக் கையில் வைத்திருக்கும் கடற்கரைத் தலைவன்; chief of maritime tract who holding strick.

     “எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ நெறியிறாக் கொட்டும் நிமிர்கழிச் சேர்ப்பன்” (திணை. மொழி.);

     [நிமிர்கழி + சேர்ப்பன்.]

நிமிர்சுடர்

நிமிர்சுடர் nimircuḍar, பெ. (n.)

   நிமிர்ந்தெரியும் நெருப்பு; a straight flame.

     “மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர்” (நன்மணி.38.);.

நிமிர்ச்சி

நிமிர்ச்சி1 nimircci, பெ. (n.)

   1. இறுமாப்பு; proud.

   2. உறுதி; confidence.

   3. நிமிர்வு பார்க்க; see nimirvu

   4. மேட்டிமை; vanity haughtiness.

 நிமிர்ச்சி2 nimircci, பெ. (n.)

   1. உயர்ச்சி; hight

   2. நிமிர்வு; erect.

   3. நீட்சி; length.

     (கதி.அக.);.

நிமிர்ச்சுவாசம்

 நிமிர்ச்சுவாசம் nimirccuvācam, பெ.(n.)

   நிமிர்ந்தபடி இருந்தாலொழிய மூச்சுவிட முடியாமை; inability to breathe except in an upright position-Orthopnea. (சா.அக.);

நிமிர்த்திப்பிடி-த்தல்

நிமிர்த்திப்பிடி-த்தல் nimirttippiḍittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. நேர்நிற்கச் செய்தல்; to hold erect.

   2.வலுக்கட்டாய (பிடிவாத);மாக வற்புறுத்துதல்; to persist in; to be obstinate in.

   3. உயர்த்துதல்; to hold aloft, lift up.

     [நிமிர்த்தி + பிடி-,]

நிமிர்த்திவிடு-தல்

நிமிர்த்திவிடு-தல் nimirddiviḍudal,    18 செ. குன்றாவி. (v.t.)

   1. நிமிரச் செய்தல்; to straighten,

   2. நன்றாய்ப் புடைத்தல் (வின்.);; to give a good drubbing.

     [நிமிர்த்தி + விடு-,]

நிமிர்த்து

நிமிர்த்து1 nimirddudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. நேர்நிற்கச் செய்தல்; to straighten up, set upright, as a pot.

நீர்க்குடத்தை நிமிர்த்து. (உ.வ.);.

   2. வளைவு நீக்குதல்; to unfold. Uncoil. as an ola.

     “மண்மூடு தோட்டின் முடங்க னிமிர்த்து” (கம்பரா. பள்ளி.6.);.

   3. சீர்படுத்துதல் (வின்.);; to improve. as one’s circumstances.

உன்னை வளர்த்து நிமிர்த்தினவன் நானல்லவோ? (உ.வ..);.

   4. நன்றாய்ப் புடைத்தல்; to thrash, beat severely.

அவனை நன்றாய் நிமிர்த்தி வெளியே அனுப்பு. (உ.வ.);

க. நிமிர்சு.

     [நிமிர் → நிமிர்த்து-,]

 நிமிர்த்து2 nimirddudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   1. இருக்கும் நிலையிலிருந்து உயர்த்துதல்; raise.

குனிந்து எழுதிக் கொண்டிருந்தவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான் (உ.வ.); கூனிக் குறுகாமல் நெஞ்சை நிமிர்த்தி நில். (உ.வ.);.

   2. நோக்குதல்; straighten.

கம்பியை நிமிர்த்தப் போட்க் கையைக் கிழித்துக் கொண்டாயா (உ.வ.); தவலையை நிமிர்த்தி வைக்கக் கூடாதா? (உ.வ.);.

நிமிர்ந்தநைடை

 நிமிர்ந்தநைடை nimirndanaiḍai, பெ. (n.)

   மேட்டிமையான நடை; haughtiness style.

நிமிர்ப்பு

 நிமிர்ப்பு nimirppu, பெ. (n.)

நிமிர்ச்சி பார்க்க; see nimircci.

     [நிமிர் → நிமிர்ப்பு.]

நிமிர்வு

 நிமிர்வு nimirvu, பெ. (n.)

நிமிர்ச்சி பார்க்க; see nimircci.

     [நிமிர்ச்சி → நிமிர்வு.]

நிமிளன்

நிமிளன் nimiḷaṉ, பெ. (n.)

   1. திறமையாளன் (கெட்டிக்காரன்); (நெல்லை);; clever, tactful person.

   2. சுருசுருப்பானவன்.; agile, active person.

     [நிமிடன் → நிமிளன்.]

நிமிளை

நிமிளை1 nimiḷai, பெ. (n.)

   செவ் வெண்மையான கல்வகை (பதார்த்த. 1133.);; bismuth pyrites.

 நிமிளை2 nimiḷai, பெ. (n.)

   1. அம்பரை; bismuth.

   2. கூட்டுக்கலவை; compound Stone.

 நிமிளை nimiḷai, பெ.(n.)

   இது ஓர் வகைத் தாது; It is a kind of metal.

     “தமிழ் வைத்திய நூலில் இதை ஒரு உபரசச்சரக்காக எடுக்கப் பட்டுள்ளது”. (சா.அக.);

நிமீலனம்

நிமீலனம் nimīlaṉam, பெ.(n.)

   1. கண்ணிமைப்பு; twinkling of the eye.

   2. மரணம்; death. (சா.அக.);

நிமுட்டு-தல்

நிமுட்டு-தல் nimuṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

நிமிண்டு-தல் பார்க்க; see nimindu.

     [நிமிண்டு → நிமிட்டு → நிமுட்டு.]

நிமேசகம்

 நிமேசகம் nimēcagam, பெ. (n.)

   மின்மினிப் பூச்சி; firely glow worm. (சா.அக.);.

 நிமேசகம் nimēcagam, பெ.(n.)

   மின்மினிப் பூச்சி; firefly, glow-worm. (சா.அக.);

நிமேடவர்த்தமம்

 நிமேடவர்த்தமம் nimēṭavarttamam, பெ.(n.)

   கண்ணின் இமைச்சந்தில் வாயு நிற்கும் போது, ஓயாது இமைகளைக் கொட்டி ஒரு வேளை மூடவும், திறக்கவும் செய்யுமோர் வகைக் கண்ணோய்; an eye disease characterised by constent winking of the eyelids owing to the incarceration of the deranged vayu within the nerves or veins controlling their winking. (சா.அக.);

நிமேடா

 நிமேடா nimēṭā, பெ.(n.)

   அடிக்கடி கண் சிமிட்டல்; winking very often. (சா.அக.);

நிமை

நிமை1 nimai, பெ. (n.)

   இமை; eyelid.

     ‘நீலிக்கு கண்ணீர் நிமையிலே’ (பழ.);.

     [இமை → நிமை.]

உம்முதல் = பொருந்துதல், கூடுதல்.

உம் → அம். அம்முதல் = பொருந்துதல்.

அம்- அமை. அமைத்தல் = பொருந்துதல்.

அமை → இமை. இமைத்தல் = கண்மூடுதல் இமை – நிமை.

 நிமை2 nimaittal,    11 செ. குன்றாவி. (v.t.)

   இமைத்தல்; to wink.

     “புருவநிமிரவிரு கண வாள் நிமைக்க” (திருப்பு.497.);.

     [இமை → நிமை.]

நிமைகொட்-தல்

நிமைகொட்-தல் nimaigoṭtal,    5 செ.கு.வி. (v.i.)

   கண் இமை மாறி மாறி வேகமாக மூடவும் திறக்கவும் செய்தல்; to close and open the eye lids alternatively and also repeatedly-nictating.

   2. சாடை காட்டுதல்; to have a hint or intimation by the motion of eyelids.

     (சா. அக.);.

     [நிமை + கொட்டு-,]

நிமைக்கழலை

 நிமைக்கழலை nimaikkaḻlai, பெ. (n.)

   கண் இமையில் வரும் கட்டி; a tumour in the eyelid-Blepharoneus.

     [நிமை + கழலை.]

நிமைதொங்கு-தல்

நிமைதொங்கு-தல் nimaidoṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   கண்ணிமை செயலற்றுத் தொங்குதல்; droping of the upper eyelid from paralysis

நிமைத்தடிப்பு

 நிமைத்தடிப்பு nimaittaḍippu, பெ. (n.)

   இமைத் தடிப்பு; the morbid thickening of an eyelid.

     [நிமை + தடிப்பு.]

நிமைமூடு-தல்

நிமைமூடு-தல் nimaimūṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கண் இமைமூடுதல்; to shutting or closing of the eyelids.

     [நிமை + மூடு-.]

நிமையம்

நிமையம் nimaiyam, பெ. (n.)

   1. கண்ணிமைப் பொழுது; twinkling of the eye, moment. instant

   2. அறுபது நொடி கொண்ட கால அளவு; minute of time = 1/60 hour.

     [இமை → நிமை → நிமையம்.]

நிமையழற்சி

 நிமையழற்சி nimaiyaḻṟci, பெ. (n.)

   கண் இமையிலுண்டாகும் அழற்சி; inflammation of the eyelid.

     [நிமை + அழற்சி.]

நிமையாட்டம்

 நிமையாட்டம் nimaiyāṭṭam, பெ. (n.)

கண்

   இமையின் ஆட்டம்; consistant movement of the muscles of the eyelid.

     [நிமை + ஆட்டம்.]

நிமையொட்டு-தல்

நிமையொட்டு-தல் nimaiyoṭṭudal,    5 செகுன்றாவி, (v.t.) கண் இமைகளைச் சேரத் தைத்தல்; to stich the upper and lower lids together-the plastic surgery of the eye lids.

     [நிமை + ஒட்டு-,]

நிமைவீழ்ச்சி

 நிமைவீழ்ச்சி nimaivīḻcci, பெ. (n.)

   கண் இமையின் செயலிழப்பு; paralysis of an eyelid.

     [நிமை + விழ்ச்சி.]

நிம்தேசன்

 நிம்தேசன் nimtēcaṉ, பெ. (n.)

கொத்தான்

 air creeper-cassytha filiformis.

நிம்பகம்

 நிம்பகம் nimbagam, பெ. (n.)

   வேம்பு; margosa tree-azadiracta indica.

நிம்பக்காய்

நிம்பக்காய் nimbakkāy, பெ. (n.)

   1. வேப்பங்காய்; margosa fruit.

   2. எலுமிச்சங்காய்; lime fruit.

நிம்பசேதம்

 நிம்பசேதம் nimbacētam, பெ. (n.)

   முடக் கொற்றான் (மலை.);; ballon vine.

நிம்பச்சாறு

 நிம்பச்சாறு nimbaccāṟu, பெ. (n.)

   எலுமிச்சம் பழச்சாறு; juice of lime fruit or margosa fruit.

நிம்பதரு

நிம்பதரு nimbadaru, பெ. (n.)

   1. வேப்பமரம்; margosa tree.

   2. எலுமிச்சை மரம்; lime tree citrusmedica (acida);.

நிம்பதேசி

 நிம்பதேசி nimbatēci, பெ. (n.)

   முடக்கொத்தான்; palsy curer-cardio spermum halicacabum

நிம்பதைலம்

நிம்பதைலம் nimbadailam, பெ. (n.)

   1. வேப்பெண்ணெய்; margosa oil.

   2. வேப்பெண்ணெய்த் தைலம்; a medicated oil prepered with the margosa oil as the chief ingredient along with other drugs.

நிம்பத்தாரோன்

 நிம்பத்தாரோன் nimbattārōṉ, பெ. (n.)

   பாண்டிய குல அரசர்; the pândiya-kings.

     [நிம்பம் +தாரோன்.]

தமிழக வேந்தர்கள் தமக்குரிய குறியீடுகளுளொன்றாகப் பூவையும், மாலையையும் கொள்வது பண்டை மரபு. அந்த வகையில் வேம்பு மாலையை அடையாளமாகக் கொண்டகுடி பாண்டியகுடி.

நிம்பத்தின்சளி

 நிம்பத்தின்சளி nimbattiṉcaḷi, பெ. (n.)

   வேப்பம்பிசின் (தைலவ.தைல.);; margosa resin.

     [நிம்பம் + சளி.]

நிம்பன்

 நிம்பன் nimbaṉ, பெ. (n.)

   வேப்பமாலையுடைய பாண்டியன்(பழ.);; the pandya king, as wearing a garland of morgosa flowers.

     [நிம்பம் → நிம்பன்.]

நிம்பப்பத்திரி

 நிம்பப்பத்திரி nimbappattiri, பெ. (n.)

   வேப்பிலை; margosa leaf.

நிம்பப்பழம்

நிம்பப்பழம் nimbappaḻm, பெ. (n.)

   1. வேப்பம்பழம்; margosa ripe fruit.

   2. எலுமிச்சம் பழம்; lime fruit.

நிம்பப்பாசி

 நிம்பப்பாசி nimbappāci, பெ. (n.)

   வேப்பம் பாசி; an acquatic plant-moschara corallina.

நிம்பப்பாசிகம்

 நிம்பப்பாசிகம் nimbappācigam, பெ. (n.)

   எலுமிச்சம் பழச்சாறு; juice of lime fruit.

நிம்பமாலை

 நிம்பமாலை nimbamālai, பெ. (n.)

நிம்பளம் பார்க்க (நாஞ்.);;see{ nimbalam.}

நிம்பமோலி

 நிம்பமோலி nimbamōli, பெ. (n.)

   வேப்பம் பட்டை; bark of margosa tree.

நிம்பம்

நிம்பம் nimbam, பெ. (n.)

   வேம்பு; margosa, neem.

     “நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம்” (மணிமே.27;173.);.

நிம்பயிலை

நிம்பயிலை nimbayilai, பெ. (n.)

   1. வேப்பிலை; margosa leaf.

   2. கறிவேப்பிலை; curry leaf used in preparation of food – murraya koenigi.

நிம்பளம்

 நிம்பளம் nimbaḷam, பெ. (n.)

நிம்மதி (இ.வ.); பார்க்க; see nimmadi.

நிம்பழச்சாறு

 நிம்பழச்சாறு nimbaḻccāṟu, பெ. (n.)

   வேப்பம் பழச்சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு அல்லது எலுமிச்சம் பழச்சாறு; juice of margosa fruit or lime fruit.

நிம்பாணி

 நிம்பாணி nimbāṇi, பெ. (n.)

   இணைக்கும்படி இருபக்கமும் கூருள்ள ஆணி; coupling nail.

     [நெம்பு + ஆணி → நெம்பாணி → நிம்பாணி.]

     [P]

நிம்பிச்சி

 நிம்பிச்சி nimbicci, பெ. (n.)

   சர்க்கரை வேம்பு; sweet margosa so called from its bark being sweet after some years.

நிம்பியம்

 நிம்பியம் nimbiyam, பெ. (n.)

   வாழை; plantain tree-musa paradisiaca.

நிம்பிரி

நிம்பிரி nimbiri, பெ. (n.)

   பொறாமை; jealousy.

     “சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு” (தொல். பொருள்.245.);.

நிம்பு-தல்

நிம்பு-தல் nimbudal,    5 செ.குன்றாவி.(v.t.)

   நெம்புதல்; to lift with a lever.

     [நெம்பு-. → நிம்பு-.]

நிம்புகம்

 நிம்புகம் nimbugam, பெ. (n.)

   எலுமிச்சை; lime-citrus medica.

நிம்பொளம்

நிம்பொளம் nimboḷam, பெ. (n.)

   முத்துவகை; a kind of pearl,

     “ஒப்புமுத்துங் குறுமுத்தும் நிம்பொளமும்” (தெ.க.தொ.2;143.);.

நியக்கரணம்

 நியக்கரணம் niyakkaraṇam, பெ.(n.)

   அவமதிப்பு (யாழ்.அக.);; degradation, disrespect.

     [Skt. {} → த. நியக்கரணம்]

நியக்கி

 நியக்கி niyakki, பெ. (n.)

   மான் (யாழ்.அக.);; deer.

     [Skt. {} → த. நியக்கி]

நியக்கியம்

 நியக்கியம் niyakkiyam, பெ. (n.)

   நரிமுருங்கை; tranduebar genderussa-Justicia tranque barensis.

நியக்கு

 நியக்கு niyakku, பெ. (n.)

   நாளவம்; elder wood tree wine-Leea sambucena.

நியக்குரோதம்

 நியக்குரோதம் niyakkurōtam, பெ. (n.)

   ஆலமரம்; banyan tree.

 நியக்குரோதம் niyakkurōtam, பெ.(n.)

   ஆலமரம் (மலை.);; banyan tree.

     [Skt. nya-{} → த. நியக்குரோதம்]

நியங்கு

 நியங்கு niyaṅgu, பெ.(n.)

   பொன்; gold. (சா.அக.);

நியசி-த்தல்

நியசி-த்தல் niyasittal, செ.குன்றாவி.(v.t.)

   வைத்தல்; to place, to locate.

   2. பதித்தல்; to insert.

     [Skt. nyas → த. நியசித்தல்]

நியதம்

நியதம்1 niyadam, பெ.(n.)

   1. அடக்கம் (யாழ்.அக.);; restraint, self-control.

   2. எப்பொழுதும்; always, invariablity.

     “நியதமு மத்தாணிச் சேவகமும்” (திவ். திருப்பல். 8);.

     [Skt. niyata → த. நியதம்]

 நியதம்2 niyadam, பெ.(n.)

   ஒழுங்கு; regularity.

     [Skt. niyata → த. நியதம்]

நியதி

நியதி1 niyadi, பெ.(n.)

   1. செய்கடன்; religious or moral duty, obligation.

     “புனல் கொண்டு நியதிகள் முடித்து” (கோயிற்பு. பதஞ். 4);.

   2. ஒழுக்க நெறி; custom, usage, law, rule.

     “அருநியதி நாடிய சன்னியாசப் பெருந் தவத்த னாயினான்” (இராகு. 8);.

   4. ஊழ்; destiny. (குறள், அதி, 38, அவ.);.

   6. வரையறை முறைமை (இ.வ.);; method.

   5. வரையறை; restriction.

     “இன்னவிடத்து என்னும் நியதியின்றி” (நன். 393, மயிலை);.

     [Skt. niyati → த. நியதி]

 நியதி2 niyadi, பெ.(n.)

   1. கிரமம்; fixed order of things.

   2. ஊழ்; destiny, fate.

   3. செய்கடன்; religious or moral duty.

   4. தத்துவம்; one of the thirty six principles in mystic philosophy.

நியதி-த்தல்

நியதி-த்தல்3 niyadiddal, செ.கு.வி.(v.i.)

   உறுப்புகளை (அங்கங்களை); மந்திரத்தால் தெய்வங்கட்கு உரிய வாக்குதல் (வின்.);; to appropriate, assign parts of the body to a deity in incantations.

     [Skt. nyas → த. நியதி-த்தல்]

நியதிதத்துவம்

நியதிதத்துவம் niyadidadduvam, பெ.(n.)

   சுத்தாசுத்ததத்துவத்துள் ஒவ்வோர் ஆன்மாவும் தன் கருமபலனை நுகரச் செய்வது (சி.கோ. பா.2.2.பக்.150);; category of desting which makes each soul experience the fruits of its own karma, one of seven {}-tattu-vam. q.v.

     [Skt. niyati → த. நியதி + தத்துவம்]

நியதிபண்ணுதல்

நியதிபண்ணுதல் niyadibaṇṇudal, செ.குன்றாவி. (v.t.)

   நீக்குதல் (சங்கற்ப. 3 வரி 187, உரை);; to remove.

     [Skt. niyati → த. நியதி + பண்ணுதல்]

நியதிப்பெயர்

 நியதிப்பெயர் niyadippeyar, பெ.(n.)

   ஏற்புடைய மொழி (வின்.);; appropriate word or epithet.

     [Skt. niyati → த. நியதிப்பெயர்]

நியதீசம்

 நியதீசம் niyatīcam, பெ. (n.)

   சுனைப்புன்கு; rusty Soap nut erioglossum adule.

 நியதீசம் niyatīcam, பெ.(n.)

   சுனைப்புன்கு; rusty soap nut Eriogpssum adule. (சா.அக.);

நியது-தல்

 நியது-தல் niyadudal, செ.குன்றாவி.(v.t.)

   விடுதல் (சது.);; to leave, let go, release.

     [Skt. nyas → த. நியதுதல்]

நியதேந்திரியன்

 நியதேந்திரியன் niyatēndiriyaṉ, பெ.(n.)

   இந்திரியங்களை அடக்குபவன்; one who suppresses the five senses one restraining his passions. (சா.அக.);

 நியதேந்திரியன் niyatēndiriyaṉ, பெ.(n.)

   புலனடக்கி (இந்திரியங்களை அடக்கினவன்); (யாழ்.அக.);; one who has subdued his senes.

     [Skt. {} → த. நியதேந்திரியன்]

நியந்தா

நியந்தா niyandā, பெ.(n.)

   1. கட்டளையிடுவோன்; one who guides, controls.

   2. கடவுள்; God.

     “அசடமொடுசட நியந்தா வின்மிக்கோர்” (வாயுசங். ஞானநி.5);.

     [Skt. {} → த. நியந்தா]

நியமக்காரன்

நியமக்காரன் niyamakkāraṉ, பெ.(n.)

   1. விரதம் பூண்டவன்; one who has taken a religious vow.

   2. (ஆசாரமுள்ளவன்); ஒழுக்க முள்ளவன்; he who strictly observes religious ordinances.

     [நியமம் + காரன்]

நியமக்கிரிகை

நியமக்கிரிகை niyamaggirigai, பெ.(n.)

   சாத்திரம் (கலை, நூல்); வகுத்த (அனுட்டானம்); நடைமுறை; duties enjoined by sastras.

     “நீர்க்கட னாற்றிய நியமக் கிரிகையன்” (பெருங். உஞ்சைக். 53, 92);.

     [நியமம் + கிரிகை]

நியமக்குறைப்பு

 நியமக்குறைப்பு niyamakkuṟaippu, பெ.(n.)

   பெரிய எண் படிப்படியாக குறைந்து வருதல்; decreasing in total.

     [நெய்(நெய்தல்);-சேர்த்தல்-நெயமம் நியமம்+குறைப்பு]

நியமங்கெட்டவன்

 நியமங்கெட்டவன் niyamaṅgeṭṭavaṉ, பெ.(n.)

   ஒழுக்கந் தவறியவன்; man of unrighteous habits.

     [நியமம் + கெட்டவன்]

நியமசதன்

நியமசதன் niyamasadaṉ, பெ.(n.)

   1. அமர்த்தம் பெற்ற அலுவலன்; person appointed to an office or duty.

   2. நடைமுறைகளை பின்பற்று பவன்; regular observer of religious duties.

     [Skt. niyama + த. சதன் → த. நியமசதன்]

நியமச்சிலேடை

நியமச்சிலேடை niyamaccilēṭai, பெ.(n.)

   பல பொருளுக்கு இயையுமாறு ஒன்றுக்கு நிய மிக்கும் சிலேடையணி (தண்டி.755); (சிலேடை – இரட்டுறமொழிதல்);; a figure of speech wherein an expression capable of many applications is restricted to only one object by suitable devices.

     [நியமம் + சிலேடை]

நியமச்சூத்திரம்

நியமச்சூத்திரம் niyamaccūttiram, பெ.(n.)

   ஓரிடத்திற் பலவிதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம் (யாப். வி. 1. பக். 11);; a {} directing the application of a particular rule when along with others, it is merely optional.

     [நியமம் + சூத்திரம்]

நியமஞ்செய்-தல்

நியமஞ்செய்-தல் niyamañjeytal,    1 செ. குன்றாவி. (v.t.)

   1. ஏற்படுத்துதல்; to make an engage- ment, form a purpose.

   2. வேலையில் அமர்த்துதல்; to appoint to an office.

     [நியமம் + செய்தல்]

நியமநிட்டை

 நியமநிட்டை niyamaniṭṭai, பெ.(n.)

   சமயா னுட்டானம், சமய நடைமுறைகள்; religious, duties.

     [நியமம் + நிட்டை]

நியமனம்

நியமனம் niyamaṉam, பெ. (n.)

   வேம்பு(வைத்திய பரிபா.);; margosa

 நியமனம்1 niyamaṉam, பெ.(n.)

   1. கட்டளை; precept, rule, order.

     “நியமனமிருந்த படியே…… அவ்விக்ரஹத்தை முடித்துக் கொடுக்க” (குருபரம். 173);.

   2. அமர்த்தம்; appointment to an office.

   3. உத்தரவு; permission, {}.

   4. வகைப்படுக்கை; classification.

     “உணர்வினிய மனஞ் செய்வனெவன்” (கூர்மபு. பிரகிருதி.2);.

     [Skt. ni-yamana → த. நியமனம்]

 நியமனம்2 niyamaṉam, பெ.(n.)

   1. அதிகார நிலையில் ஏற்படுத்தும் பணி அமர்த்தம்; appointment.

     “சத்துணவுத் திட்ட அமைப் பாளர்களாக இருநூறு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்”.

     “மின் வாரியத் தலைவராக நியமனம் பெற்றுள்ளவர் யார்? வேலைக்கான நியமனக் கடிதம் வந்துள்ளது”.

   2. நேரடியாக ஒரு பொறுப்புக்கு ஒருவரை அல்லது தனக்கு மாற்றாக செயற்பட ஒருவரை அமர்த்தும் முறை; nomination.

     “நியமன உறுப்பினர் . வருடாந்திரக் கூட்டத்தில் உங்களுக்கு பதில் மற்றொருவரை நியமனம் செய்யலாம்”(இ.வ.);.

த.வ. அமர்த்தம்

நியமம்

நியமம்1 niyamam, பெ.(n.)

   1. செய்கடன் (திவா.);; moral or religious duty.

     “நித்தலுங் நியமஞ் செய்து” (தேவா. 39, 1);.

   2. அட்டாங்க யோகத் துள் தவம், தூய்மை, தத்துவமோர்தல், மழை வந்திருத்தல்,தெய்வ வழிபாடு என்ற விதிமுறை களில் வழுவாதொழுகல் (திவா.);;   3. விதி; ordinance, injunction.

   4. உறுதி (பிங்.);; certainty, assurance.

   5. வழக்கு (வின்.);; usage, practice.

   6. வரையறுக்கை; defining, delimiting.

     [Skt. niyama → த. நியம(ம்);]

 நியமம்2 niyamam, பெ.(n.)

   1. முடிவு; close, end, finish.

   2. நகரம் (பிங்.);; town, city.

     “நெடுநீர்க் கழனிசூழ் நியமஞ் சேர்த்தி” (சீவக. 2601);.

   3. கோயில்; temple.

     “உவணச் சேவ லுயர்த்தோ னியமமும்” (சிலப். 14, 8);.

   4. கடைத் தெரு; bazaar street.

     “ஓவுக் கண்டன்ன விருபெரு நியமத்து” (மதுரைக். 365);.

   5. தெரு (பிங்.);; street.

   6. இடம் (பிங்.);; location.

   7. மண்டபம்; a hall.

     “பட்டி நியமம்” (பெருங். வத்தவ. 2, 73);.

     [Skt. nigama → த. நியமம்]

 நியமம் niyamam, பெ.(n.)

   1. நீர் முள்ளி; water thistle-Barteria longifolia.

   2. இடம்; place, location.

   3. ஒவ்வொருவரும் அனுசரிக்க வேண்டிய கடமைகள்; certain minor duties to be observed by every man.

   4. முறைமை; established course rite or ceremony.

   5. செய்கடன்; moral obligation or duty.

   6. எட்டு வகை ஒகத்தில் ஒன்று; one of the eight stages of yoga.

   7. மதக் கொள்கை; religious observances, a rule or precept laying down or specifying something otherwise optional.

   8. மனவடக்கம்; restraint of the mind.

   9. ஒகப் பயிற்சியில் (ஒகாப் பியாசத்தில்); இயமம் என்பதைத் தவிர்த்து மற்ற முறைகளை அனுசரிப்பது; any act of voluntary enance or meritorious piety in yoga practice other than yamam restraint of appetite especially a lesser vow or minor dependent on external condition, not so obligatory as.

   10. உலோகங்களில் அவைகளில் முதன்மையாக இரச முறையில் அனுசரிக்க வேண்டிய கோட்பாடு; a process applied to minerals especially to quick silver. (சா.அக.);

     [Skt. nigma → த. நியமம்]

நியமவிஞ்சனம்

நியமவிஞ்சனம் niyamaviñjaṉam, பெ.(n.)

   இன்றியமையாத துணைப் பொருள்கள்; necessary accessories.

     “மங்கலப் கருவிக்கு நியமவிஞ்சன மமைமின்” (பெருங். உஞ்சைக். 34, 171-2);.

     [Skt. ni-yama + {} → த. நியமம் + விஞ்சனம்]

நியமவிலக்குச்சிலேடை

நியமவிலக்குச்சிலேடை niyamavilakkuccilēṭai, பெ.(n.)

   நியமஞ் செய்து கூறிய சிலேடையை வேறொன்றற்குங் கூறி அந் நியமத்தை விலக்கும் சிலேடையணி (தண்டி. 76, உரை);; a figure of speech in which an expression capable of many applications is restricted to one of them in the first instance and then extended to another.

     [நியமம் + விலக்குச்சி + சிலேடை]

நியமவுவமை

நியமவுவமை niyamavuvamai, பெ.(n.)

   உவமானமாகக் கூறத்தக்கன பலவற்றுள் சிறந்ததொன்றனையே தேற்றே காரத்தால் நிச்சயித்துக் கூறும் உவமை வகை (தண்டி. 30, உரை, 9);; simile in which only one object, among many, is expressly taken as {}.

     [நியமம் + உவமை]

நியமி-த்தல் niyami-

நியமி-த்தல் niyami-4 niyamittalceguṉṟāvi,  to appoint, designate, ordian, institute,assign, appropriate.

   2. தீர்மானித்தல்; to resolve, determine.

     “இடமுங்காலமும் நியமித்து” (தொல். பொ. 3, உரை);.

   3. உறுதி செய்தல்; to consecrate, dedicate, devote.

   4. ஓரிடத்திற் பல நெறி (விதி);கள் நிகழ் நிலையில் ஒன்று அல்லது சிலவே வரும் என்று வரையறுத்தல். (தொல். 87, சேனா.);;   5. பிறப்பித்தல் (சூடா.);

 to produce, originate, bring into being.

   6. கட்டளையிடுதல்;({});

 to order, command.

   7. வகைப்படுத்துதல்; to classify.

   எவ்வாறு நியமிக்கப்படும் (கூர்மபு. பிரகிருதி.2);;     [Skt. niyama → த. நியமி-]

நியமிதம்

நியமிதம் niyamidam,    பெ.(n);   1. அமர்த்தம் பெற்றது (வின்.); that which is prescribed, appointed, fixed, regulated, determined.

   2. உறுதியானது (யாழ்.அக);; determination.

     [Skt. ni-yamita → த. நியமிதம்]

நியமித்தல்

 நியமித்தல் niyamittal, பெ.(n.)

   பிறப்பித்தல்; causing to originate, bringing into being.

நியரசம்

 நியரசம் niyarasam, பெ. (n.)

நியரதம் பார்க்க; see niyaradam

நியரதம்

 நியரதம் niyaradam, பெ. (n.)

   வேம்பு; margosa tree.

நியர்

நியர் niyar, பெ. (n.)

   ஒளி; light, brilliance.

     “நியர்வளை முன்கையாள்” (தேவா.134,4.);

     [நிகர் → நியர்.]

நியர்ப்புதம்

 நியர்ப்புதம் niyarppudam, பெ. (n.)

   பதினாயிரங்கோடி (பிங்.);; a hundred thousand millions.

 நியர்ப்புதம் niyarppudam,    பெ.(n);   பதினா யிரங்கோடி (பிங்.); a hundred thousand millions.

த.வ. பத்தாயிரம் குவளை

     [Skt. nyarbuda → த. நியர்ப்பதம்]

நியா

 நியா niyā, பெ. (n.)

   சிவதுளசி;{sivas} basilbesilicumalba.

நியாக்கியம்

 நியாக்கியம் niyākkiyam, பெ.(n.)

   பொரி யரிசி. (யாழ்.அக.);; fried rice.

     [Skt. {} → த. நியாக்கியம்]

நியாக்குரோதம்

நியாக்குரோதம் niyākkurōtam, பெ.(n.)

நியக்குரோதம் பார்க்க;see niyakkurodam. (சா.அக.);.

     [Skt. {} → த. நியாக்குரோதம்]

நியாசசுவரம்1

__,

பெ.(n.);

   பண் முடிவில் அமையும் இசைச் சுரம்; tonic at the conclusion of a piece. [Skt. {}. (Mus.); → த. நியாசசுவரம்]

நியாசசுவரம்

நியாசசுவரம்2 niyāsasuvaram, பெ.(n.)

   பண்ணைக் காட்டி முடித்தற்குரிய சுரம் (mus. of Ind. 39.);;     [Skt. {}+swara → த. நியாஸஸ்வரம்]

நியாசதி

 நியாசதி niyācadi, பெ. (n.)

   அனிச்சம்; snake jasmine-Rhinecanthas communis.

 நியாசதி niyācadi, பெ.(n.)

   அனிச்சை; snake jasmine. (சா.அக.);.

நியாசம்

நியாசம்1 niyācam, பெ.(n.)

   1. வைக்கை; putting down;

 placing;

 inserting;

   2. கடவுளே புகலென்று அவரிடம் மனச் சுமையை வைத்தல்; placing one’s burden on God, as one’s final refuge.

     “கைவிடா நன்னியாசத் தருநியதி” (இரகு. இரகுக. 18);.

   3. மந்திர எழுத்துகளைப் பலுக்கித் தேவதை களை உறுப்புகளில் வைக்கும் சடங்கு; assignment of the various parts of the body to different deities with appropriate mantras.

     “நியாசமுந் தியானமுமாற்றி” (காஞ்சிப்பு. சனற். 13);.

   4. ஈடுவைத்த பொருள். (வின்); deposit, pledge, mortgage.

     [Skt. {} → த. நியாசம்]

 நியாசம்2 niyācam, பெ.(n.)

   வேம்பு (மலை.);; margosa.

 நியாசம்3 niyācam, பெ.(n.)

   1. முணு முணுத்தல்; uttering words with a low voice and compressed lips – muttering.

   2. துறவு; renouncement (சா.அக.);.

நியாசிசம்

 நியாசிசம் niyāsisam, பெ.(n.)

   கருப்பு மரு; a painless circulor eruption of dark colour. (சா.அக.);.

நியாதனம்

 நியாதனம் niyātaṉam, பெ.(n.)

   கொல்லுகை (யாழ்.அக.);; destroying, killing.

     [Skt. {} → த. நிபாதனம்]

நியாதம்

நியாதம்1 niyātam, பெ.(n.)

நியாசம்1 பார்க்க;see niyasam1.

     “பண்ணி நியாதம் பரம சிவன்பாத முண்ணினைக.” (சைவச. பொது. 328);.

     [Skt. {}. → த. நியாதம்.]

 நியாதம்2 niyātam, பெ.(n.)

நியாசம்2 (மூ.அ.); பார்க்க;see {}.

     [Skt. nyasa → த. நியாதம்.]

நியாதுற்றி

 நியாதுற்றி niyātuṟṟi, பெ. (n.)

   கடம்பு; cadamba tree-nancles cadamba alias n.purpurea.

நியானம்

நியானம் niyāṉam, பெ.(n.)

   1. பொதுவான அறிவு; knowledge in general.

   2. மெய்யறிவு (அ); மெய்யியல் அறிவு;  knowledge of a specific and religious kind derived from meditation and study of philosophy.

   3. ஆண் அல்லது பெண்ணின் பெயர்; name of male or female especially among christians.

நியாமகன்

நியாமகன் niyāmagaṉ, பெ.(n.)

   1. இயக்கு பவன், ஆள்பவன் (நியமிப்பவன்);; one who rules;

 director.

     “உயிர்க்குயிராகி நியா மகனாய்” (அஷ்டப். திருவரங்கத். மா. 4);.

   2. தேரோட்டி (யாழ்.அக.);; charioteer.

   3. கப்பலைச் செலுத்துவோன் (யாழ். அக);; sailor.

     [Skt. {} → த. நியாமகன்.]

நியாமகம்

நியாமகம் niyāmagam, பெ.(n.)

   கட்டுப் படுத்துவது; that which binds or sanctions.

     “நியாமகம் என்னையென்பீராயின்” (சிவசம. 51);.

     [Skt. {} → த. நியாமகம்.]

நியாய விசாரணை

 நியாய விசாரணை niyāyavicāraṇai, பெ. (n.)

   வழக்கு உசாவல்; judicial trail, enquiry or, examination.

     [Skt. {} → த. நியாயவிசாரணை]

நியாயக்கேடு

 நியாயக்கேடு niyāyakāṭu, பெ.(n.)

   நியாயத்தப்பு பார்க்க;{}.

     [Skt. {} → த. நியாயக்கேடு.]

நியாயங்களிலார்

நியாயங்களிலார் niyāyaṅgaḷilār, பெ.(n.)

   ஒருசார் கூட்டத்தைச் சேர்ந்தவர் (T.A.S. iv, 122.);; members of an association.

     [Skt. {} → த. நியாயங்களிலார்.]

நியாயங்காட்டு-தல்

நியாயங்காட்டு-தல் niyāyaṅgāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   காரணங்கூறுதல்; to adduce argument, account for.

     [Skt. {} → த. நியாயம்+காட்டு-]

நியாயங்கேள்-தல்

நியாயங்கேள்-தல் niyāyaṅāḷtal,    2 செ.கு.வி. (v.i.)

வழக்கு உசாவுதல் (வின்.);

 to hear a complaint, try a case.

     [Skt. {} → த. நியாயம்+கேள்-]

நியாயசபை

 நியாயசபை niyāyasabai, பெ.(n.)

   முறை மன்றம்; court.

     [Skt. {} → த. நியாயசபை]

நியாயசாத்திரம்

நியாயசாத்திரம் niyāyacāttiram, பெ.(n.)

நியாயநூல், 1,

   2. பார்க்க;see {}, 1, 2.

     [Skt. {} → த.நியாயசாத்திரம்]

நியாயதுரந்தரன்

நியாயதுரந்தரன் niyāyadurandaraṉ, பெ.(n.)

   1. வழக்குரைஞர்; Barrister, advocate, proctor, pleader, Lawyer.

   2. நீதியுள்ளவன்; just person, one who maintains justice. (யாழ். அக.);.

நியாயத்தப்பு

 நியாயத்தப்பு niyāyattappu, பெ.(n.)

   முறைகேடு (நீதிக்கேடு);; unfairness, injustice.

     [Skt. {} → த. நியாயம் + தப்பு.]

நியாயத்தலம்

 நியாயத்தலம் niyāyattalam, பெ.(n.)

   முறைமன்றம் உசாவல் செய்யுமிடம்; court of justice, tribunal.

     [Skt. {}+sthala → த. நியாயாத்தலம்]

நியாயத்தார்

நியாயத்தார் niyāyattār, பெ.(n.)

   நடுவர், நீதிபதிகள் (T.A.S. iv, 122.);; judges.

     [Skt. {} → த. நியாயத்தார்]

நியாயத்தீர்ப்பு

 நியாயத்தீர்ப்பு niyāyattīrppu, பெ.(n.)

   வழக்கில் நடுவர் (நீதிபதி); கொடுக்குந் தீர்ப்பு (வின்.);; judgement.

     [Skt. {} → த. நியாயம்+தீர்ப்பு.]

நியாயத்தீர்ப்புநாள்

 நியாயத்தீர்ப்புநாள் niyāyattīrppunāḷ, பெ.(n.)

   உலக முடிவில் இயேசுநாதர் தீர்ப்பு கொடுக்கும் நாள் (கிறித்);; the day of judgement.

     [Skt. {} → த. நியாயம் +தீர்ப்புநாள்]

நியாயநிட்டூரம்

 நியாயநிட்டூரம் niyāyaniṭṭūram, பெ.(n.)

   முறைகேடு; injustice, unreasonableness.

     [Skt. {} → த. நியாயநிட்டூரம்]

நியாயநூல்

நியாயநூல் niyāyanūl, பெ.(n.)

   1. தருக்க நூல்.

 logic, dialecticals.

   நியாய நூலா ராய்ச்சி யென்க. (தொல்.பொ.514, உரை);;   2. சட்ட நூல். (யாழ்.அக.);; code of laws.

   3. ஒழுக்க நூல் (வின்.);; ethical treatise.

     [Skt. {} → த. நியாயம்+நூல்]

நியாயநெட்டூரம்

 நியாயநெட்டூரம் niyāyaneṭṭūram, பெ.(n.)

நியாயநிட்டூரம் (யாழ். அக.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. நியாயநெட்டூரம்.]

நியாயபத்திரம்

 நியாயபத்திரம் niyāyabattiram, பெ.(n.)

   வழக்குத் தீர்ப்பு (i.nsc);; judgement or decree.

     [Skt. {} → த. நியாயபத்திரம்.]

நியாயபரிபாலனம்

 நியாயபரிபாலனம் niyāyabaribālaṉam, பெ.(n.)

   அறநெறியாட்சி; administration of justice.

     [Skt. {} → த. நியாயபரிபாலனம்.]

நியாயபோதனை

நியாயபோதனை niyāyapōtaṉai, பெ.(n.)

   1. நன்னெறியுணர்த்துகை; inculcation of natural virtues.

   2. அறமொழிகள் (வின்.);; precept.

     [Skt. {}+bothana → த. நியாயபோதனை.]

நியாயப்பிரமாணம்

 நியாயப்பிரமாணம் niyāyappiramāṇam, பெ. (n.)

   முறைமைச்சட்டம்; law, divine or human.

     [Skt. {} → த. நியாயப்பிரமாணம்.]

நியாயப்பிரமாணி

நியாயப்பிரமாணி niyāyappiramāṇi, பெ.(n.)

   1. ஒழுக்கமுள்ளவன்; upright man.

   2. முறை தவறாது நடப்பவன் (வின்.);; one who conforms to laws.

     [Skt. {} → த. நியாயப்பிரமாணி.]

நியாயப்பிரமாணிக்கன்

 நியாயப்பிரமாணிக்கன் niyāyappiramāṇikkaṉ, பெ.(n.)

நியாயப்பிரமாணி பார்க்க;see {}. (இ.வ.);

     [Skt. {} → த. நியாயப்பிரமாணிக்கன்.]

நியாயமலைவு

நியாயமலைவு niyāyamalaivu, பெ.(n.)

   1. ஏரண (தருக்க); நூல் கருத்துக்கு எதிரான கூற்று. (தண்டி. 120.);; illogical statement.

     [Skt. {} → த. நியாயம் + மலைவு.]

நியாயமுத்தரி-த்தல்

நியாயமுத்தரி-த்தல் niyāyamuttarittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நியாயங்காட்டுதல்; to state arguments, give reasons.

   2. எதிர் வழக்குச் சொல்லுதல்; to reply in agrument.

     [Skt. {} → த. நியாயமுத்தரி-த்தல்.]

நியாயமுரசு

நியாயமுரசு niyāyamurasu, பெ.(n.)

   மும்முரசுகளுள் அரசன் முறை புரிவதற்கு அறிகுறியாக முழங்கும் முரசு. (கலித். 132, உரை););; drum proclaiming the adminis- tration of justice by a king, one of mummuracu.

     [Skt. {} → த. நியாயம்+முரசு.]

நியாயம்

நியாயம்1 niyāyam, பெ.(n.)

   1. முறை (நீதி);; propriety, fairness, equity, justice, right.

   2. வாய்மை (பிங்);; truth, honesty.

   3. நன்னனெறி; morality, natural virtues

     “நியாயமத்தனைக்கு மோர் நிலய மாயினான்” (கம்பரா. கிளை. 55);.

   4. சட்டம்; law, rule, precept.

   5. காரணம்; cause, reason, ground of action.

   6. தருக்கம் (வாக்குவாதம்);, (யாழ்.அக.);; argument, debate.

   7. கௌதமர் மதம் பற்றிய தருக்கநூல். (phil.);

 the {} system of philosophy, founded by Gautama.

     “நியாய வைசேஷிகங்களை” (தக்கயாகப் 246 , உரை);;

   8. நியாயவை சேஷிகங்களாகிய தருக்கநூல்;{}

 systems.

   9. ஒப்பு; resemblance.

     “நீலக்கரு நிறமேக நியாயற்கு”.

   10. உலக வியலாகவும் நூலியலாகவும் வழங்கும்

   எடுத்துக்காட்டு நெறி; illustrative maxims.

   11. போக்கு (வின்.);

 plea, excuse.

   12. வழக்கு (யாழ். அக);; usage.

   13. கட்டுப்பாடு (வின்.);; constitution.

     [த. நயன் → Skt. {}. → த. நியாயம்.]

 நியாயம்2 niyāyam, பெ.(n.)

   1. இடம் (சது.);; place.

   2. ஒரு நோக்கத்துடன் அமைந்த கூட்டம்; collection, body, group or association of persons having the same duties or interests.

     “அவ்வவர் நியாயங் களுக்குத் தக்கவரில் … யோக்கியராய் இருப்பாரை ஆளிட்டு” (S,l,l, ii 261);.

 நியாயம்3 niyāyam, பெ.(n.)

   1. ஏரணம் (தருக்கம்);; logical conclusion.

   2. நையாயிகம் என்னும் மெய்யியல் (தத்துவம்);; Nyaya philosophy one of the six schools of philosophy

   2.வழிபாடாகும் ஆன்மத்தின் தெய்வத் தன்மையையும்; மூலகாரணத்தையும், உலக நடப்பில் மாயையின் தொடர்பும் அதன் கோட் பாடுகளும், கடைசியாக அதினின்று விலகி இறைவனோடு ஒன்றுபடும் என்பதையும் உணர்த்தும் மெய்யியல் (தத்துவம்);; the study of philosophy which teaches man the devine nature and origin of his immaterial with unreality of corporeal enjoyments of worldly forms and which separating him during life from terrestrial objects secures him after death a final emancipation from existense and reunion with the universal spirit. (சா. அக.);

நியாயம்பேசு-தல்

நியாயம்பேசு-தல் niyāyambēcudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. வழக்கை விளக்குதல் (விவரித்தல்);; to discuss a lawsuit.

   2. வழக்கில் தீர்ப்புக் கொடுத்தல்; to give judgment, as a friend between contending parties.

     [Skt. {} → த. நியாயம்+பேசு-,]

நியாயர்

 நியாயர் niyāyar, பெ. (n.)

ஏரண (தருக்க); நூல் வல்லோர்.

 persons versed in {} philosophy.

     [Skt. {} → த. நியாயர்]

நியாயவாதி

நியாயவாதி niyāyavāti, பெ. (n.)

   1. வழக்கறிஞர், pleader, advocate, lawyer.

   2. முறை தவறாது சொல்வோன் one who utters nothing but what is just, justice – loving person.

     [Skt. {} → த. நியாயவாதி]

நியாயவான்

நியாயவான் niyāyavāṉ, பெ. (n.)

   1. நேர்மை யாளன் (நீதிமான்);; just man.

   2. நியாயவாதி பார்க்க;see {}.

   3. நியாயாதிபதி; judge.

     [Skt. {}. → த. நியாயவான்]

நியாயவிதாயகன்

 நியாயவிதாயகன் niyāyavitāyagaṉ, பெ. (n.)

   சட்டம் உருவாக்குபவன் (நிருமானஞ் செய்வோன்);; law – giver, legislator.

     [Skt. {} → த.நியாயவிதாயகன்]

நியாயவிரோதம்

 நியாயவிரோதம் niyāyavirōtam, பெ.(n.)

   முறைமைத்தவறு; violation of justice.

     [Skt. {}+ {} → நியாயவிரோதம்]

நியாயாசனம்

 நியாயாசனம் niyāyācaṉam, பெ. (n.)

   முறை (நீதி); வழங்குவோர் அமரும் அற (தரும); இருக்கை (வின்.);; Judgement seat, tribunal.

     [Skt. {} → த. நியாயாசனம்]

நியாயாசாரன்

 நியாயாசாரன் niyāyācāraṉ, பெ. (n.)

   ஒழுக்கமுள்ளோன் (யாழ். அக);; a man of righteous conduct.

     [Skt. {}+ → த.நியாயாசாரன்]

நியாயாதிபதி

 நியாயாதிபதி niyāyādibadi, பெ.(n.)

   நடுவர், நீதிவழங்குபவன்; judge;

     [Skt. {}+tatipati → த. நியாயாதிபதி]

நியாளம்

நியாளம் niyāḷam, பெ. (n.)

ஒரு வகைப் பாறை a kind of drum.

     “இடக்கை யுடுக்கை நன்னியாளம்” (திருவாலவா. 39.18);;

     [Skt. {} → த. நியாளம்]

நியுதம்

நியுதம் niyudam, பெ.(n.)

   பத்து இலக்கம் (சுக்கிர நீதி, 106.);; a million = 10,00,000.

     [த. நெய்தல் → Skt. ni-yuta. → த. நியுதம்]

நெய்தல் என்பது பழந்தமிழில் (10,00,000); பத்திலக்கத்தைக் குறித்த எண்ணுப் பெயர். குவளை கோடியைக் குறித்த சொல். பத்து நெய்தல் கொண்டது ஒரு குவளை. நெய்தல் ஒரியா மொழியில் நியுத்த எனவும், வடமொழியில் நியுத எனவும் கடன் கொள்ளப்பட்டுள்ளது

நியுத்தன்

நியுத்தன் niyuttaṉ, பெ.(n.)

   1. மனங்கவிந்தவன். (வின்.);; one engrossed in any matter.

   2. ஒரு குறிப்பிட்ட செயல் செய்தற்கு அமர்த்தப் பெற்றவன். (யாழ்.அக.);; one engaged for a specific purpose.

     [Skt. ni-yukta. → த. நியுத்தன்]

நியுத்தம்

 நியுத்தம் niyuttam, பெ.(n.)

   மற்போர் (யாழ். அக.);;  boxing.

     [Skt. niyuddha → த. நியுத்தம்]

நியுப்பிசம்

நியுப்பிசம் niyuppisam, பெ.(n.)

   1. நோய்; disease.

   2. பருமன் இல்லாத தன்மை, ஒல்லி; not stout but thin and slendor.

   3. வீக்கமின்மை; a absence of swelling. (சா.அக);.

நியூனம்

நியூனம் niyūṉam, பெ.(n.)

   1. குறைவு. defect, deficiency.

     “நியூனாதிகங்களுமிம்சையு மசுசியும்” (சி.சி.2,28,சிவாக்);.

   2. தோல்வித்தான வகை. (சி.சி. அளவை,14. நிரம்ப.);; a weak position in disputation [Skt. {} → த. நியூனம்]

நியோககுற்றம்

நியோககுற்றம் niyōgaguṟṟam, பெ.(n.)

   ஏரண (தருக்க);த்தில் எதிரியின் தோல்வி அல்லது அறியாமைத்தன்மை; ignorance of opponent’s weakness or defeat in disputation.

     “எதிரிதன் றோல்வித்தன மறியாமையிசைப்பரு நியோக குற்றந்தான்” (த.நி.போ.304);;

     [Skt. {} → த. நியோக(ம்);+குற்றம்]

   அல்லது அறியாமைத்தன்மை; ignorance of opponent’s weakness or defeat in disputation.

     “எதிரிதன் றோல்வித்தன மறியாமையிசைப்பரு நியோக குற்றந்தான்” (த.நி.போ.304);;

     [Skt. {} → த. நியோக(ம்);+குற்றம்]

நியோகதர்மம்

 நியோகதர்மம் niyōkadarmam, பெ.(n.)

   ஆரிய மரபின் வண்ணம் மகப்பேறில்லாதவனுடைய மனையாள் மகப்பெறுதற்கு உறவினரு ளொருவனை (ஞாதியொருவனை); அமர்த்தும் முறை; the Aryan system of appointing a kinsman to raise up seed to a childless person by consorting with his wife (R.F);.

     [Skt. {} + dharma → த. நியோகதர்மம்]

நியோகம்

நியோகம் niyōkam, பெ.(n.)

   1. கட்டளை. (S.I.I.Vi, 13.);; command, order, authority.

   2. அமர்த்தப்பட்ட தொழில். (யாழ். அக.);; appointed task, commission, charge.

   3. உறுதி; certainty.

   4. முயற்சி (யாழ். அக.);; exertion.

   5. நியோக தர்மம் பார்க்க;see niyogatarmam.

     [Skt. {} → த. நியோகம்]

நியோகி

நியோகி niyōki, பெ.(n.)

   பெரியோன்; sage, wise man.

     “போந்திடு நியோகியர்கள் வார்த்தையுசிந்தான் பொருந்தவே வாது வெல்வார்” (திருவேங். சத.19);.

     [Skt. {} → த. நியோகி]

 நியோகி1 niyōkittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கட்டளையிடுதல்; to command, order, direct.

     [Skt. {} → த. நியோகி –த்தல்]

 நியோகி2 niyōki, பெ. (n.)

நியோகிப் பிராமணன் பார்க்க;see {}.

     “பிரசண்ட நியோகிகளும்” (விறலிவிடு.);

     [Skt. Perh. {} → த. நியோகி2]

நியோகிப்பிராமணன்

 நியோகிப்பிராமணன் niyōkippirāmaṇaṉ, பெ. (n.)

   ஒரு தெலுங்குப் பார்ப்பன வகுப்பு; a class of secular Andhra Brahmins, as distinguished from Vaidika Brahmins.

     [Skt. {} → த. நியோகிப்பிராமணன்]

நியோக்கியம்

 நியோக்கியம் niyōkkiyam, பெ.(n.)

   தகுதி. (யாழ்.அக.);; fitness.

     [Skt. {} → த. நியோக்கியம்]

நியோசனம்

நியோசனம் niyōcaṉam, பெ. (n.)

   1. கட்டளை; Order, Command.

   2. இசைவு; fastening, Joining.

     [Skt. ni {}. → த. நியோசனம்]

நியோதூற்றி

__,

பெ. (n.);

   1. கடம்பு; cadamba free. (சா.அக.);

நிர

நிர nira, பெ. (n.)

   1. நிறைவடைதல்; to be full

படி நிரக்க அளந்து ஊற்றினாள் (உ.வ.);.

   2. பங்கிடுதல்; to share.

எல்லோருக்கும் நிரந்து கொடு (உ.வ.);

நிரகங்காரம்

 நிரகங்காரம் niragaṅgāram, பெ.(n.)

   செருக் கின்மை; absence of egotism or pride, humility.

     [Skt. nir- {} → த. நிரங்காரம்.]

நிரகங்கிருதி

நிரகங்கிருதி niragaṅgirudi, பெ.(n.)

   புற விவகாரம் (வேதா.சூ.148, உரை);;     [Skt. nirahan – krti → த. நிரகங்கிருதி.]

நிரகுள்ளி

 நிரகுள்ளி niraguḷḷi, பெ. (n.)

   நொச்சி; five leaved chaste tree-vitex negundo.

 நிரகுள்ளி niraguḷḷi, பெ.(n.)

   நொச்சி; five leaved chaste tree (சா.அக.);.

நிரக்க

 நிரக்க nirakka, வி.எ. (adv.)

 to be full.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு நிரக்கப் பரிமாறினார்கள் (உ.வ.);

     [நிர → நிரக்க.]

நிரக்கம்

நிரக்கம் nirakkam, பெ.(n.)

   சுட்டறிவின்மை; absence of consciousness or sense- perception, as in ecstasy.

     “நிரக்கம் பெருகியிரக்க மலிவுற்ற” (கோயிற்பு.நட.46);.

     [Skt. nir-aksa → த. நிரக்கம்.]

நிரக்கரகுக்கி

நிரக்கரகுக்கி niraggaraguggi, பெ.(n.)

நிரட்சரகுட்சி பார்க்க;see {}.

     “பிறரெலா நிந்தை செய்யு நிரக்கர குக்கியான்” (குற்றா.தல.மந்தமா.92);.

     [Skt. niraksara + kuksi → த. நிரக்கரகுக்கி.]

நிரக்கு

நிரக்கு nirakku, பெ.(n.)

   1. அகவிலை (C.G.);; price, rate, tariff, especially as established by authority, price-current.

   2. நேர்மை; correctness, precision.

     “அளவு நிரக்கா யிருந்தது” (உ.வ.);.

த.வ. நறுக்கு

     [U. nirkh → த. நிரக்கு.]

நிரக்குநாமா

 நிரக்குநாமா nirakkunāmā, பெ.(n.)

   நடப்பு விலைப்பட்டி; current price or market rate.

     [U. nirkh+ {} → த. நிரக்குநாமா.]

நிரங்கிருதி

நிரங்கிருதி niraṅgirudi, பெ.(n.)

நிரகங்கிருதி பார்க்க;see {}.

     “அகங்கிருதி நிரங்கிருதி யுறாமல்” (வேதா.சூ.148);.

     [Skt. {} → த. நிரங்கிருதி.]

நிரங்குசன்

 நிரங்குசன் niraṅgusaṉ, பெ.(n.)

   கட்டுப் படாதவன் (யாழ்.அக.);; uncontrollable person, self-willed person.

     [Skt. nir-{} → த. நிரங்குசன்.]

நிரங்குசம்

 நிரங்குசம் niraṅgusam, பெ.(n.)

   கட்டுப் படாமை (வின்.);; state of being self-willed or uncontrollable.

     [Skt. nir- {} → த. நிரங்குசம்.]

நிரசசாத்திரம்

 நிரசசாத்திரம் nirasasāttiram, பெ.(n.)

   கனிமங்களை (தாதுவை);ப் பற்றிக் கூறும் நூல்; the science which treats of the properties of mineral Substances and their classi- fications (சா.அக.);.

நிரசநூல்

 நிரசநூல் nirasanūl, பெ.(n.)

நிரசசாத்திரம் பார்க்க;see nirasa-sattiram (சா.அக.);.

நிரசனம்

நிரசனம்1 nirasaṉam, பெ.(n.)

   1. அழிக்கை (யாழ்.அக.);; destruction.

   2. எதிரிடை; opposition.

   3. தள்ளுகை; rejection.

   4. கக்கல்; vomiting.

     [Skt. nir-asana → த. நிரசனம்.]

 நிரசனம்2 nirasaṉam, பெ.(n.)

   பட்டினி; fasting.

     [Skt. {} → த. நிரசனம்.]

நிரசம்

நிரசம் nirasam, பெ.(n.)

   1. சாரமின்மை (யாழ்.அக.);; lack of juice.

   2. சுவையின்மை; tastelessness.

     [Skt. ni- rasa → த. நிரசம்.]

நிரசவசுது

நிரசவசுது nirasavasudu, பெ.(n.)

   1. சுவை யற்ற பொருள் (யாழ்.அக.);; tasteless things.

   2. இரும்பு முதலிய கனிப்பொருள் (வின்.);; mineral substance.

     [Skt. {}-rasa → த. நிரசவஸ்து.]

நிரசவர்க்கம்

 நிரசவர்க்கம் nirasavarkkam, பெ.(n.)

   தாது வருக்கம்; mineral kingdom (சா.அக.);.

     [Skt. {}- rasa+varkka → த. நிரசவர்க்கம்.]

நிரசவுப்பு

 நிரசவுப்பு nirasavuppu, பெ.(n.)

   கனிம (தாது);வுப்பு; mineral salt (சா.அக.);.

     [நிரசம் + உப்பு.]

நிரசி-த்தல்

நிரசி-த்தல் nirasittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அழித்தல்; to destroy.

     “பாண்டவரையும் நிரஸிக்கப் பிராப்தமாயிருக்க” (ஸ்ரீவசன.21);

   2. தோல்வியுறச் செய்தல்; to defeat, as ïn an argument.

     [Skt. nir-as-, → த. நிரசி-த்தல்]

நிரஞ்சத்திமூலி

 நிரஞ்சத்திமூலி nirañjattimūli, பெ. (n.)

   நிலத்துளசி; ground basil- ocimum prostatum.

 நிரஞ்சத்திமூலி nirañjattimūli, பெ.(n.)

   நிலத் துளசி; ground basil (சா.அக.);.

நிரஞ்சனன்

நிரஞ்சனன் nirañjaṉaṉ, பெ.(n.)

   1. அழுக் கற்ற தூய வடிவினனான கடவுள்; the supreme being, as immaculate.

     “நிரஞ்சன நிருத்தானந்த” (திருவிளை. தீர்த்தவி.7);.

   2. அருகன் (சூடா.);; Arhat.

   3. சிவன் (நாமதீப. 16);;{}.

     [Skt. nir- {} → த. நிரஞ்சனன்.]

நிரஞ்சனம்

நிரஞ்சனம் nirañjaṉam, பெ. (n.)

   1. அறிவு (ஞான);க் கண்; eye of wisdom.

   2. உணவு கொள்ளாமை; abstaing from food.

 நிரஞ்சனம்1 nirañjaṉam, பெ.(n.)

   1. குற்ற மில்லாதது; that which is spotless, pure.

     “நிரஞ்சன நிராமயித்தை” (தாயு. திருவருள்வி. 3);.

   2. வெளி (பிங்.);; open space.

   3. நிறைவு (பிங்.);; fulness.

   4. வீடுபேறு (பிங்.);; final bliss.

   5. இரசகருப்பூரம் (சங்.அக.);; calomel.

     [Skt. nir-{} → த. நிரஞ்சனம்.]

 நிரஞ்சனம்2 nirañjaṉam, பெ.(n.)

   1. அறிவுக் கண்; eye of wisdom.

   2. உணவு கொள்ளாமை; abstaining from food (சா.அக.);.

நிரஞ்சனி

 நிரஞ்சனி nirañjaṉi, பெ.(n.)

பார்வதி (யாழ்.அக.);;{}.

     [Skt. {} → த. நிரஞ்சனி.]

நிரட்சதேசம்

நிரட்சதேசம் niraṭcatēcam, பெ.(n.)

   1. வெப்ப நாடு (யாழ்.அக.);; equatorial region.

   2. இராப்பகல் நாழிகை சரியாயுள்ள நாடு; region where days and nights are of equal duration.

     [Skt. niraksa- → த. நிரட்ச+தேசம்.]

நிரட்சம்

 நிரட்சம் niraṭcam, பெ.(n.)

   நிலநடுக்கோடு (பூமத்திய ரேகை); (வின்.);; terrestrial equator.

     [Skt. niraksa → த. நிரட்சம்.]

நிரட்சரகுட்சி

 நிரட்சரகுட்சி niraṭcaraguṭci, பெ.(n.)

   எழுத்தறிவற்றவன்; literate person.

     [Skt. nirak-sara+kuksi → த. நிரட்சரகுட்சி.]

நிரட்சரேகை

 நிரட்சரேகை niraṭcarēkai, பெ.(n.)

நிரட்சம் (வின்.); பார்க்க;see {}.

     [Skt. niraksa → த. நிரட்சரேகை.]

நிரட்டிகா

 நிரட்டிகா niraṭṭikā, பெ. (n.)

   கண்டங்கத்திரி; yellow barried night shade-solanum jacquini.

 நிரட்டிகா niraṭṭikā, பெ.(n.)

   கண்டங்கத்தரி; yellow berried night shade (சா.அக.);.

நிரதன்

நிரதன் niradaṉ, பெ.(n.)

   மிக்க பற்றுடையவன்; a man of excessive attachment.

     “தூய நிரதராயினர் சிலர்” (பிரபோதசந். 7, 37);.

     [Skt. nirata → த. நிரதன்.]

நிரதம்

நிரதம் niradam, பெ.(n.)

   எப்பொழுதும்; ever, always.

     “நிரதங் கொடுத்திளைத்த தாதா” (தனிப்பா. i, 92, 7);.

     [Skt. nirantara → த. நிரதம்.]

நிரதி

 நிரதி niradi, பெ.(n.)

   பற்று (யாழ்.அக.);; attachment, connection.

     [Skt. nirati → த. நிரதி.]

நிரதிகரணதீட்சை

நிரதிகரணதீட்சை niradigaraṇadīṭcai, பெ.(n.)

சைவதீக்கை வகை;(Saiva);

 a way of initiation.

     “சத்திசங்கற்ப மாத்திரமா யிருக்கின்ற நிதிகரண தீஷையினாலே” (சி.சி.பாயி.3, ஞானப்.);.

     [Skt. {}+ → த. நிரதிகரண தீஷை.]

நிரதிகாரதீக்கை

நிரதிகாரதீக்கை niradikāradīkkai, பெ.(n.)

   நிர்ப்பீசதீட்சை பார்க்க (சைவச.ஆசாரி.62, உரை);;     [Skt. {}+ → த. நிரதிகார தீக்கை.]

நிரதிகாரன்

 நிரதிகாரன் niradikāraṉ, பெ.(n.)

   ஒன்றற் குரிய அதிகாரமற்றவன்; incompetent or unqualified person;

 an unauthorised person.

     [Skt. niradhi-{} → த. நிரதிகாரன்.]

நிரதிகாரி

 நிரதிகாரி niradikāri, பெ.(n.)

நிரதிகாரன் பார்க்க;see {}.

நிரதிகாரை

நிரதிகாரை niradikārai, பெ.(n.)

நிரதிகார தீக்கை பார்க்க;see {}.

     “தானுமொழி னிரதி காரை யெனநின்று” (சி.சி.8, 4);.

     [Skt. nir- {} → த. நிரதிகாரை.]

நிரதிசயம்

 நிரதிசயம் niradisayam, பெ.(n.)

   உயர்வற உயர்ந்த நிலைமை (இலக்.அக.);; the state of being unsurpassed.

     [Skt. nir- {} → த. நிரதிசயம்.]

நிரதிசயவின்பம்

நிரதிசயவின்பம் niradisayaviṉpam, பெ.(n.)

 salvation, as unsurpassed bliss.

     “நிரதிசயவின்பத்துக்குரிய நீ…. இன்னையாதல் தகாது” (குறள், 1103, உரை);.

     [Skt. nir- {} → த. நிரதிசயவின்பம்.]

நிரத்தகம்

 நிரத்தகம் nirattagam, பெ.(n.)

   பயனின்மை (யாழ்.அக.);; fruitlessness, futility.

     [Skt. nir-arthaka → த. நிரத்தகம்.]

நிரத்திமாலி

 நிரத்திமாலி nirattimāli, பெ.(n.)

சிவபிரான் (யாழ்.அக.);;{}.

     [Skt. {} → த. நிரத்திமாலி.]

நிரத்தியயம்

 நிரத்தியயம் nirattiyayam, பெ.(n.)

   குற்ற மின்மை (யாழ்.அக.);; faultlessness.

     [Skt. nir-atya-ya → த. நிரத்தியயம்.]

நிரத்திரியம்

நிரத்திரியம் nirattiriyam, பெ.(n.)

   1. பேடித் தனம்; impotency.

   2. ஆண்மை இல்லாமை; destitude of manly power (சா.அக.);.

நிரநுயோச்சியாநுயோகம்

நிரநுயோச்சியாநுயோகம் niranuyōcciyānuyōkam, பெ.(n.)

   தோல்வித்தானத்து ளொன்று (செந்.iii, பக்.13);;     [Skt. {} → த. நிரநுயோச்சியா நுயோகம்.]

நிரந்தம்

நிரந்தம்1 nirandam, பெ.(n.)

   முடிவற்றது; that which is endless.

த.வ. நிலைப்பு

     [Skt. nir-anta → த. நிரந்தம்1.]

 நிரந்தம்2 nirandam, பெ.(n.)

   1. நிரந்தரம், 5 பார்க்க;see nirantaram.

     “அன்னிரந்த வினங்களங்க ணடைந் திராமனை” (சேதுபு. கவிதீர். 4); (நாமதீப.225);.

   2. நெருக்கிடை (வின்.);; being closely pressed, as by a pursuing enemy.

     [Skt. nir-antara → த. நிரந்தரம்.]

நிரந்தரசுரம்

 நிரந்தரசுரம் nirandarasuram, பெ.(n.)

   விடாக்காய்ச்சல் (M.L.);; unintermittent fever.

     [Skt. nir-antara → த. நிரந்தரசுரம்.]

நிரந்தரன்

நிரந்தரன் nirandaraṉ, பெ.(n.)

   1. எப்போது முள்ளவனான கடவுள் (இலக்.அக.);; the supreme being, as eternal.

   2. சிவன் (நாமதீப.16);;{}.

     [Skt. nir-antara → த. நிரந்தரன்.]

நிரந்தரம்

நிரந்தரம் nirandaram, பெ.(n.)

   1. இடை விடாமை; continuity

     “நின்றன் வார்கழற் கன்பெனக்கு நிரந்தரமா யருளாய்” (திருவாச. 5, 6);.

   2. முடிவற்று எப்போதுமிருக்கை; eternity, endlessness.

   3. நெருக்கம்; closeness, nearness.

     “நிரந்தரந் தோன்றி நின்றார்” (கம்பரா.இந்திரசித்.57);.

   4. அழிவு; ruin.

     “தக்கன்றன் பெருவேள்வி நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனை” (தேவா.1049, 9);.

   5. குரங்கு (திவா.);; monkey.

   6. சராசரி; average.

     “நிரந்தரம் தேங்காயொன்றுக்கு முக்காலணா தருகிறேன்” (நாஞ்சில்.);.

     [Skt. nir-antara → த. நிரந்தரம்.]

நிரந்தரி

நிரந்தரி1 nirandari, பெ.(n.)

மலைமகள் (யாழ்.அக.);;{}.

     [Skt. nir-antara → த. நிரந்தரி1.]

 நிரந்தரி2 nirandarittal,    11 செ.கு.வி.(v.i.)

   எப்போதுமிருத்தல்; to live or exist for ever.

     “எருமைகணிரந்தரித்தன” (விநாயகபு. திருநாட்.76);.

     [Skt. nirantara → த. நிரந்தரி-.]

நிரந்தவர்

நிரந்தவர்1 nirandavar, பெ. (n.)

   பகையரசர்;
 நிரந்தவர்2 nirandavar, பெ. (n.)

 to attacher.

     “சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” (குறள், 821.);.

நிரந்து

நிரந்து nirandu, பெ. (n.)

   1. நிரல்படக் கோத்து; to join correctly.

     “விரைந்து தொழில்கேட்கும்

ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்” (குறள், 648.);.

   2. வரிசையுற்று; to roll.

     ”நரந்த நாறுங் குவையிருங்கூந்தல் நிரந்திலங்கு வெண்பல் மடந்தை” (குறுந். 52..);

     [நிர → நிரந்து]

நிரனிறு-த்தல்

நிரனிறு-த்தல் niraṉiṟuttal,    10 செ.கு.வி. (v.i.) நிறுத்தமுறையால் வரிசையாக அமைத்தல்; to arrange words or phrases in different sets so that each term of one set may qualify or govern the corresponding term in another set

     “நிரனிறுத்துக்கூறிய ஒழுக்கம்” (தொல். பொருள்.12,உரை.);.

     [நிரல் + நிறு-,]

நிரனிறை

நிரனிறை niraṉiṟai, பெ. (n.)

   பொருள்கோள் வகையுள் நிறுத்தமுறையே சொற்களை வரிசைப்பட அமைத்துப் பொருள் கொள்ளுதல் (தொல்.சொல்.405.);; mode of construing a verse in which words are so arranged in groups that each term of one group is made to govern or qualify the corresponding term in another group,0ne of porul-köl.

     [நிரல் + நிறை.]

   பொருள்கோள் வகைகள்;   1. யாற்று நீர்.

   2. மொழி மாற்று.

   3. நிரனிறை.

   4. விற்பூட்டு.

   5. தாப்பிசை,

   6. அளைமறிபாப்பு.

   7. கொண்டு கூட்டு.

   8. அடிமறிமாற்று.

   நிரனிறை;சொல்லையும் பொருளையும் வரிசைபட அமைத்து முறையே என்பதுபோல நிரலே பொருள் கொள்ளப்படுவதாகும். இது பெயர் நிரனிறையும் வினை நிரனிறையும் என இருவகைப்படும்.

     [நிரல் + நிறை]

நிரனிறைத்தொடை

நிரனிறைத்தொடை niraṉiṟaittoḍai, பெ. (n.)

   பொருளைச் சேர நிறுத்திப் பயனைச் சேர நிறுத்தல் (இளம். தொல். செய். 87.);; meaningful of words which is similar in meaning.

     [நிரனிறை + தொடை.]

நிரனிறையணி

 நிரனிறையணி niraṉiṟaiyaṇi, பெ. (n.)

   சொல்லையும் பொருளையும் நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்ளும் அணிவகை; rhetoric mode of construing a verse in which words are so arranged in groups that each term of one group is made to govern or qualify the corresponding term in another group.

   எ-டு;   நிரலே நிறுத்தி நேரே பொருள் கொள்வது;காரிகை மென்மொழியா னோக்காற் கதிர்முலையால் வார்புருவத் தாலிடையால் வாய்த்தளிரால் நேர்

தொலைந்த

கொல்லி வடிநெடுவேற் கோங்கரும்பு விற்கரும்பு வல்லி

கவிர் மென்மலர்.

   நிரலே நிறுத்தி மொழி மாற்றிப் பொருள் கொள்வது;ஆடவர்க ளெவ்வா றகன்றொழிவார் வெஃகாவும் பாடகமு மூரகமும் பஞ்சரமா- நீடியமால் நின்றா னிருந்தான் கிடந்தா னிதுவன்றோ மன்றார் மதிற்கச்சி மாண்பு.

     [நிரனிறை + அணி]

நிரனிறைவழு

நிரனிறைவழு niraṉiṟaivaḻu, பெ. (n.)

 a defect in composition which consists in following one order at one place and the reverse order later on. (இலக்.வி.697.);.

     [நிரனிறை + வழு.]

நிரபம்

நிரபம் nirabam, பெ.(n.)

   1. நீரற்றது; sapless- ness.

   2. சாறற்றது; devoid of juice (சா.அக.);.

நிரபராதி

நிரபராதி nirabarāti, பெ.(n.)

   குற்றமற்றவன் (மணிமே.26, 28, உரை);; innocent, guiltness person.

     [Skt. {} → த. நிரபராதி.]

நிரபி

நிரபி nirabi, பெ.(n.)

   1. மரமஞ்சள்; tree turmeric.

   2. மஞ்சள்; turmeric (சா.அக.);.

நிரபிமானம்

நிரபிமானம் nirabimāṉam, பெ.(n.)

   1. பற்றின்மை (யாழ்.அக.);; absence of bias or attachment.

   2. அடக்கம்; self-restriant.

     [Skt. {} → த. நிரபிமானம்.]

நிரபேட்சம்-

நிரபேட்சம்- nirapēṭcam, பெ.(n.)

   ஒன்றைச் சார்ந்து இல்லாமை; that which is not dependent.

     “இந்திரியாந்தக்கரண நிரபேட்சம்” (சி.சி.அளவை, 1,சிவாக்.பக்.109);.

     [Skt. {} → த. நிரபேட்சம்.]

நிரபேட்சை

 நிரபேட்சை nirapēṭcai, பெ.(n.)

   விருப்ப மின்மை (யாழ்.அக.);; absence of attachment or desire, unconcernedness, opp. to {}.

     [Skt. {} → த. நிரபேட்சை.]

நிரப்படுபுணை

நிரப்படுபுணை nirabbaḍubuṇai, பெ. (n.)

   வறுமையைக் கடத்தற்குரிய தெப்பம்; a device to manage the poverty.

     “இரப்ப சிந்தியே னிரப்படு புணையின் உளத்தினளக்கு மிளிர்ந்த தகையேன்” (புறநா. 376.);.

     [நிரப்பு = வறுமை, ஏழ்மை. நிரப்பு + படு + புணை.]

நிரப்பம்

நிரப்பம் nirappam, பெ. (n.)

   1. முழுமை

 fullness, repletion, perfection.

     ‘நிரப்ப மெய்திய நேர்பூம் பொங்கணை’ (பெருங். மகத. 14,62.);.

   2. சிறப்பு; superiority, excellence.

   3. ஒப்புமை; Symmetry.

     ‘நிரப்பமில் யாக்கை’ (கலித். 94.);.

   4. சமம்; uniformity.

     “குடக்குந் தெற்குங் கோண முயர் நிரப்பங் கொளீஇ” (பெருங். இலாவாண. 4,59-60.);.

   5. கற்பு; chastity.

     [நிரம்பு → நிரப்பு → நிரப்பம்.]

நிரப்பலா

 நிரப்பலா nirappalā, பெ. (n.)

ஆசினிப்பலா

 the bread fruit tree- artocarpus. incisa.

 நிரப்பலா nirappalā, பெ.(n.)

   ஆசினிப்பாலா; the bread fruit tree (சா.அக.);.

நிரப்பிவிடு-தல்

நிரப்பிவிடு-தல் nirappiviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   1. நிறைவு செய்தல்; to complete, fulfil.

   2. சூலடையச் செய்தல்; to impregnate. (Loc.);

   3. நிறைகுடத்தடியில் நெற்பரப்புதல்;(வின்.);.

 to strew paddy round a niraikudam.

நிரப்பு

நிரப்பு1 nirappudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. நிறைத்தல்; to fill, replenish; to cause to abound.

     ‘அல்லன் மாக்கட் கில்லது நிரப்புனர்’ (மணிமே. 23,133, பி.ம்.);. நீர் வந்தால் தொட்டியை நிரப்பு. (உ.வ.); மண்ணைக் கொட்டிப் போட்டுப் பள்ளத்தை நிரப்பு. (உ.வ.);

   2. நிறைத்தல்; to load a gun etc.

துமுக்கியில் குண்டுகளைப் போட்டு நிரப்பி வை. (உ.வ.);

   3. நிறைவு செய்தல்; to complete, to perform satistactorily.

     ‘வேள்வி நிரப்பி’ (கம்பரா. பிராட்டிகளங்.20.);. இந்த விண்ணப்பத்தை நிரப்பிக்கொடுங்கள். (உ.வ.); வினாத்தாளில் கோடிட்ட இடங்களைத் தக்க சொற்களைக் கொண்டு நிரப்புக. (உ.வ.);

   4. அமர்த்துதல்; to fill a vocancy, post.

அகர முதலித்துறையில் வெறுமையாயுள்ள இடங்களைத் தக்கவர்களைக் கொண்டு நிரப்பினால் பணி விரைவாய் நிறைவுறும். (உ.வ.);

   5. பொந்திகையாக்குதல் (யாழ்.அக.);; to satisty.

   6. விடையளித்தல்; to tell, reply, respond, answer.

     ‘உயிர் நீக்கினரியாரது நிரப்புவீர்’ (கம்பரா. சம்பாதி. 29.);.

   5. பரப்புதல்; to spread.

     [நிரம்பு → நிரப்பு.]

 நிரப்பு3 nirappu, பெ. (n.)

   1. நிறைவு (சூடா.);; fullness, completeness.

   2. சமதளம்; levelness.

தரை நிரப்பு வரவில்லை. (உ.வ.);.

   3. வறுமை; destitution, poverty.

     “நெருநலுங்கொன்றது போல நிரப்பு” (குறள், 1048.);.

   4. குறைவு (வின்.);; deficiency, want.

   5. சோம்பு; inactivity, sloth, want of energy.

   6. நிறை குடத்தினடியில் இடப்படும் நெல்; paddy strewn round a {niraikudam.}

   7. நிறை நாழி (யாழ்.அக.);; measure full of paddy.

நிரப்புநர்

நிரப்புநர் nirappunar, பெ. (n.)

   கொடுப்போர்; donars givers/.

     “அல்லன் மாக்கட் கில்லது நிரப்புநர்” (மணிமே.23;133.);.

நிரப்பு → நிரப்புநர்

நிரப்புதல் – நிறைத்தல்,

நிறைவு செய்தல், கொடுத்தல்.

நிரப்போர்

நிரப்போர் nirappōr, பெ. (n.)

   1. இரப்பவர்; beggars.

   2. வ்றியவர்; the destitute.

     [நிரப்பு → நிரப்போர்.]

நிரமதி

 நிரமதி niramadi, பெ.(n.)

   கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Kallakurichi Taluk.

     [நிரல்+மதி]

நிரம்சம்

நிரம்சம் niramcam, பெ.(n.)

   பகுக்கத் தகாதது; that which is indivisible.

     “ஏகபிரதேதியாகலின் நிரம்சமாகிய பரமாணுவினுக்கு” (நீலகேசி.397, உரை);.

     [Skt. {} → த. நிரம்சம்.]

நிரம்ப

நிரம்ப niramba, வி.எ. (adv.)

   1. நிறைய; fully.

   2. மிகுதியாக; abundantly, highly,

     “நிரம்ப வெழுந்ததங் கூர்மையும்” (நாலடி,28.);.

     [நிரம்பு → நிரம்ப.]

நிரம்பவழகியர்

நிரம்பவழகியர்1 nirambavaḻkiyar, பெ. (n.)

   பேரழகுள்ளவர்; exquisitely

     “நித்தமாணாளர் நிரம்ப வழகியர்” (திருவாச.173.);.

     [நிரம்ப + அழகியர்]

 நிரம்பவழகியர்2 nirambavaḻkiyar, பெ. (n.)

   சேதுபுராணம், திருப்பரங்குன்றப் புராணம் முதலிய நூல்களினாசிரியரும். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான புலவர்; the author of {sedupuranam Trupparañkunra-ppurănam} and other works, 16th century.

நிரம்பாச்சொல்

 நிரம்பாச்சொல் nirambāccol, பெ. (n.)

நிரம்பா மென்சொல் பார்க்க (யாழ்.அக.);;see nirambāmencol.

     [நிரம்பு + ஆ + சொல்.

     ‘ஆ’ எதிர்மறை இடைநிலை.]

நிரம்பாத்துயில்

 நிரம்பாத்துயில் nirambāttuyil, பெ. (n.)

நிரம்பாத் தூக்கம் (பிங்.); பார்க்க; see niramba-t-tukkam.

     [நிரம்பு + ஆ + துயில்.

ஆ-எதிர்மறை இடைநிலை.]

நிரம்பாத்தூக்கம்

 நிரம்பாத்தூக்கம் nirambāttūkkam, பெ. (n.)

   அரைத்தூக்கம் (திவா.);; unsound. sleep; broken sleep.

     [நிரம்பு + ஆ + தூக்கம்.

ஆ-எதிர்மறை இடைநிலை.]

நிரம்பாநெறி

நிரம்பாநெறி nirambāneṟi, பெ. (n.)

   கடைபோய் நிரம்பாத குறைவழி; not filed fully,

     “அரம்போ ழவ்வளை மகளிர் மனத்தின் நிரம்பா நெறியினவாகி யரும் பொருள் கல்லா மாந்தருள்ளம் போல” (பெருங். உஞ்சை.50;10-13.);.

நிரம்பாநோக்கு

நிரம்பாநோக்கு nirambānōkku, பெ. (n.)

   இடுக்கிப் பார்க்கும் பார்வை; look with eyes contracted,

     “நிரம்பா நோக்கினிரையங் கொண்மார்” (அகநா.67.);.

     [நிரம்பு + ஆ + நோக்கு. ஆ-எதிர்மறை இடைநிலை.]

நிரம்பாமென்சொல்

 நிரம்பாமென்சொல் nirambāmeṉcol, பெ. (n.)

   மழலைச் சொல் (திவா.);; lisping indistinct prattle.

     [நிரம்பு + ஆ + மென்சொல். ஆ-எதிர்மறை இடைநிலை.]

நிரம்பாமேனி

நிரம்பாமேனி nirambāmēṉi, பெ. (n.)

   முற்ற வளராத உடல்; not growth full body

     “இரந்தூணி ரம்பா மேனி யொடு விருந்தினூரும் பெருஞ் மலனே” (குறுந்.33.);.

நிரம்பாமொழி

 நிரம்பாமொழி nirambāmoḻi, பெ. (n.)

நிரம்பா மென்சொல் பார்க்க யாழ்.அக.);see niramba-men-sol.

     [நிரம்பு + ஆ + மொழி. ஆ-எதிர்மறை இடைநிலை.]

நிரம்பினபெண்

 நிரம்பினபெண் nirambiṉabeṇ, பெ. (n.)

   பூப்பெய்திய பெண் (யாழ்.);; girl who has attained puperty.

     [நிரம்பு → நிரம்பின+ பெண்.]

நிரம்பிப்பாய்-தல்

நிரம்பிப்பாய்-தல் nirambippāytal,    2 செ.கு.வி. (v.i.) ததும்பி வழிதல் (வின்.); to over flow.

     [நிரம்பு + பாய்-,]

நிரம்பியபுட்பம்

 நிரம்பியபுட்பம் nirambiyabuṭbam, பெ. (n.)

நிரம்பிய பூ பார்க்க; see nirambiya-pu.

     [நிரம்பிய + புட்பம்.]

 Skt. புஷ்பம்.

நிரம்பியபூ

 நிரம்பியபூ nirambiyapū, பெ. (n.)

   வாழை (மலை.);; plantain

     [நிரம்பிய + பூ.]

நிரம்பியமரம்

நிரம்பியமரம் nirambiyamaram, பெ. (n.)

   1. வாழை மரம்; plantain tree- musa paradisiaca.

   2. தென்னை மரம்; coconut tree-cocos nuciyerd

   3. ஆலமரம்; banyan tree-ficus bengalansis.

     [நிரம்பிய + மரம்.]

 நிரம்பியமரம் nirambiyamaram, பெ.(n.)

   1. வாழை மரம்; platain tree.

   2. தென்னை மரம்; cocoanut tree.

   3. ஆலமரம்; banyan tree (சா.அக.);.

நிரம்பியம்

 நிரம்பியம் nirambiyam, பெ. (n.)

நிரம்பிய பூ பார்க்க (சங்.அக.);;see nirambiya- pū.

நிரம்பிவழி-தல் _

நிரம்பிவழி-தல் _ nirambivaḻidal,    2செ.கு.வி. (v.i.)

   அளவுக்கதிகமாக நிறைந்து காணுதல்; over flow spill over.

மண்டபத்தில் உட்கார இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது. (உ.வ.); பெட்டி ஏற்கனவே நிரம்பி வழிகிறது. இதில் இந்த புத்தகத்தை எப்படி திணிப்பது? (உ.வ.);

நிரம்பு

நிரம்பு1 nirambudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நிறைதல்; to become full, complete, replete

     “பருவ நிரம்பாமே” (திவ்.பெரியாழ். 1,2,17.);.

   2. மிகுதல்; to abound, be abundant, copious,

     “நெற்பொதி நிரம்பின” (கம்பரா. கார்கால.74.);.

   3. முடிவுறுதல்; to be over, to

 end, terminate.

     “நெறிமயக்குற்ற நிரம்பா நீடத்தஞ் சிறுநனி நீதுஞ்சி யேற்பினு மஞ்சம்” (கலித்.12.);.

   4. பூப்படைதல்; to attain puperty as a girl.

அவள் நிரம்பின பெண் (யாழ்ப்.);.

   5. முதிர்தல் (வின்.);; to mature, as grain.

க. நெர.

 நிரம்பு2 nirambudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முழுமையாதல், நிறைதல்; to be filled with, become full,

குளத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. (உ.வ.);. பை நிரம்பக் காய்கறிகள் வாங்கி வந்தார். (உ.வ);.

   2. முழுமை யடைதல்; finish or complete (certain years in one’s age);.

இன்றோடு குழந்தைக்கு மூன்று அகவை நிரம்புகிறது. (உ.வ.);. அவளுக்கு இன்னும் பதினெட்டு அகவை நிரம்பவில்லை. (உ.வ.);.

   3. அதிக அளவில் இடம் பெறுதல்; to be full (of);.

பிறமொழிச் சொற்கள் நிரம்பியிருக்கும் கதை. (உ.வ.);.

நிரம்பையர்காவலன்

 நிரம்பையர்காவலன் nirambaiyarkāvalaṉ, பெ. (n.)

   கொங்குநாட்டிலுள்ள நிரம்பை என்ற ஊர்த்தலைவரான அடியார்க்குநல்லார்;{Adiyarkku nallár,} the chief of Nirambai, a village in kongu country.

     “காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே” (சிலப். உரைச்சிறப்புப்பாயிரம்.);.

     [நிரம்பையர் + காவலன்.]

நிரயத்தானை

நிரயத்தானை nirayattāṉai, பெ. (n.)

   மாற்றாருக்குப் பெருந்துன்பந்தரும் படை; to oppose, confront.

     “இரவிடங் கொடுத்த

   நிரைமணி விளக்கின் விரவுக் கொடி யடுக்கத்து நிரயத்தானையோ டைம்பெருங் குழவு மெண்பேராயமும்” (சிலப்.26;37.);;     [நிரயம் + தானை.]

நிரயம் = அளறு.

அளறிடைப் பட்டாருவதொப்பத் துன்பத்தைத் தரும் படை யென்க.

நிரயத்துன்பம்

நிரயத்துன்பம் nirayattuṉpam, பெ. (n.)

   அளறு (நரக);த்துன்பம்; consigned to hell.

     “இனிப்பேரின்பத்தைத் தரும் தவத்தில் நின்றோர் அதனைவிட்டு இழிதலின் விளைவாகிய நிரயத்துன்பத்தை யுறுதலுமாம்” (சிலப்.14-2. உரை.);.

     [நிரயம் + துன்பம். நிரயம் = அளறு.]

நிரயனம்

நிரயனம் nirayaṉam, பெ. (n.)

   மேழராசியின் தொடக்கத்திலிருந்து கணிக்கப்படும் வான் செலவின் தொலைவு (செந்.viii. 67.);; celestial longitudinal difference measured from the zero point of the fixed Hindu zodiac.

 நிரயனம் nirayaṉam, பெ.(n.)

   மேட ராசியின் தொடக்க இடத்திருந்து கணிக்கப்படும் வான்கதி தொலைவு (செற்.viii, 67);; celestial longitudinal difference measured from the zero point of the fixed Hindu zodiac.

     [Skt. {} → த. நிரயனம்.]

நிரயபாலர்

நிரயபாலர் nirayapālar, பெ. (n.)

   நிரயத்தின் தலைவர்; chief of the infernal regions.

     ‘நிரயபாலர் பலரும்’ (சீவக. 2771. உரை.);.

     [நிரயம் + பாலர்.]

நிரயம் = அளறு.

 நிரயபாலர் nirayapālar, பெ.(n.)

   நரகத் திலுள்ள தலைவர்; chiefs of the internal

 Regions.

     “நிரயபாலர் பலரும்” (சீவக.2771, உரை);.

     [Skt. niraya + {} → த. நிரயபாலர்.]

நிரயப்பாலர்

நிரயப்பாலர் nirayappālar, பெ. (n.)

நிரயபாலர் பார்க்க; see niraya-palar.

     [நிரயம் + பாலர்.]

 நிரயப்பாலர் nirayappālar, பெ.(n.)

நிரய பாலர் பார்க்க;see niraya-{}.

     “அணங்கென்பன பேயும்… நிரயப்பாலரும்” (தொல்பொ.256, உரை.);

     [Skt. niraya + {} → த. நிரயப்பாலர்.]

நிரயம்

நிரயம் nirayam, பெ. (n.)

   அளறு; hell,

     “நீங்கா நிரயங் கொள்பவரோ டொன்றாது” (புறநா.5.);.

மாந்தப் பிறப்புற்று வாழுங் காலத்து நன்மையைச் செய்து, நன்னெறி செல்வோர் இறப்புக்குப் பின் துறக்கம் செல்வர் என்பதும், அல்லவர் நிரயம் செல்வர் என்பதும் நம்பிக்கை.

 நிரயம் nirayam, பெ.(n.)

   நரகம்; hell.

     “நிரயங் கொள்பவரொ டொன்றாது” (புறநா. 5);.

     [Skt. nir-aya → த. நிரயம்.]

நிரயவட்டம்

 நிரயவட்டம் nirayavaṭṭam, பெ. (n.)

பெருகளற்றுவட்டம், மணல்வட்டம், எரிபரல் வட்டம், அரிபடைவட்டம், புகைவட்டம், இருள்வட்டம், பெருங்கீழ்வட்டமாகிய ஏழு

   நிரயங்கள் (பிங்.);; the seven internal regions, viz., peru {kalarru vattam, manalvattam, eriparal wattam, aripadai vattam, pugaivattam, irulvattam, perunki vattam}

     [நிரயம் + வட்டம்.]

 நிரயவட்டம் nirayavaṭṭam, பெ.(n.)

   பெரு களற்று வட்டம், மணல் வட்டம், எரிபரல் வட்டம், அரிபடை வட்டம், புகை வட்டம், இருள் வட்டம், பெருங்கீழ் வட்டமாகிய ஏழு நரகங்கள் (பிங்.);; the seven internal regions, viz., {}.

     [Skt. nir-aya → த. நிரயவட்டம்.]

நிரயாசிப்பால்

 நிரயாசிப்பால் nirayācippāl, பெ.(n.)

நிரியாசப்பால் பார்க்க;see {}. (சா.அக.);.

நிரர்த்தகம்

 நிரர்த்தகம் nirarttagam, பெ.(n.)

நிரர்த்தம் பார்க்க (வின்.);;see nirarttam.

     [Skt. nir-arthaka → த. நிரர்த்தகம்.]

நிரர்த்தம்

 நிரர்த்தம் nirarttam, பெ.(n.)

   பயனற்றது; that which is meaningless, worthless, useless.

     [Skt. nir-artha → த. நிரர்த்தம்.]

நிரலளவு

 நிரலளவு niralaḷavu, பெ. (n.)

   பொதுப்படை யான மதிப்பீட்டளவு; average.

கிடைத்த தொகையை நிரலளவாய்ப் பகிர்ந்து கொண்டனர். (உ.வ.);

     [நிரல் + அளவு.]

நிரல்

நிரல்1 niral, பெ. (n.)

   1. வரிசை; row. order arrangement.

     “நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு” (தொல். பொருள்.482.);.

   2. ஒப்பு; equality, similarity.

     “நிரலல்லோர்க்குத் தரலோ வில்லென” (புறநா.345.);.

ம. நிர.

க.து. நிருகெ. கோத. நெர்வ் (வரிசையில் நிற்றல்); நெர்ட் (வரிசையில் நிற்கவை); துட. நெர் (வரிசையில் செல்தல்);

     [நில் → நில → நிர → நிரல்.]

 நிரல்2 niralludal,    11 செ.கு.வி. (v.i.)

   ஒழுங்குபடுதல்; to be placed in a row. arranged in order.

     ‘நேரின மணியை நிரலவைத் தாற் போல’. (தொல்.பொருள். 482.உரை.);.

     “நெடுங்காழ்க் கண்ட நிரல்பட நிரைத்த கொடும்பட நெடுமதிற் கொடித்தேர் விதியுள் குறியவு நெடியவுங்குன்று கண்டன்ன” (சிலப்.27;151.);.

நிரல்பட

 நிரல்பட niralpaḍa, வி.எ. (adv.)

   வரிசைப்படி; in proper order.

நடந்த நிகழ்ச்சிகள் நிரல்படத் தரப்பட்டுள்ளன.

     [நிரல் + பட.]

நிரளியசாரை

 நிரளியசாரை niraḷiyacārai, பெ. (n.)

   ஒரு வகை மாழைக் கரு (கானகக் கல்); (யாழ்.அக.);; a kind of metallic ore.

நிரவகாசவிதி

நிரவகாசவிதி niravakācavidi, பெ.(n.)

   குறித்த இடந்தவிர வேறு இடத்திற் செல்லக் கூடாத விதி (சிவசமவா.பக்.65);; a rule or precept applicable only to the point in question, opp. to {}.

     [Skt. {} → த. நிரவகாசவிதி.]

நிரவகாலிகை

 நிரவகாலிகை niravagāligai, பெ.(n.)

   திறந்த வெளி (யாழ்.அக.);; open space.

     [Skt. Perh. {} → த. நிரவகாலிகை.]

நிரவதிகம்

 நிரவதிகம் niravadigam, பெ.(n.)

நிரவதி பார்க்க;see niravati.

     “நிரவதிகதேஜோ மயமாய்” (குருபரம்.);.

     [Skt. nir-avayava → த. நிரவதிகம்.]

நிரவனிலம்

 நிரவனிலம் niravaṉilam, பெ. (n.)

   நீர்வாரடித்த நிலம்; influx of water over the land, flooded land.

     [நிரவல் + நிலம்.]

நிரவயன்

 நிரவயன் niravayaṉ, பெ.(n.)

   கடவுள் (அழிவில் லாதவன்); (சங்.அக.);; god, as undecaying.

     [Skt. nir-avyaya → த. நிரவயன்.]

நிரவயம்

நிரவயம் niravayam, பெ.(n.)

   உறுப்பற்றது; that which is without limbs or parts.

     “நிரவாயவமாயுள்ள வான்மாவை” (மணி.29, 299);.

     [Skt. nir – avayava → த. நிரவயம்.]

நிரவற்பயிர்

 நிரவற்பயிர் niravaṟpayir, பெ. (n.)

   பெருமழையில் மண்ணால் மூடப்பட்ட பயிர் (வின்.);; growing corn covered with earth during heavy rain.

     [நிரவு → நிரவல் + பயிர்.]

நிரவலடி-த்தல்

நிரவலடி-த்தல் niravalaḍittal,    4 செ.கு.வி. (v.i.) உழுத நிலத்தைச் சமனாக்குதல் (யாழ்ப்.); to cover, fill up, level, as furrows.

     [நிரவு → நிரவல் + அடி-.]

நிரவல்

நிரவல்1 niraval, பெ. (n.)

நிரவு-, பார்க்க; see niravu-,

எல்லோருக்கும் ஒரே நிரவலாகப் பங்கீடு செய். (உ.வ);.

     [நிரவு → நிரவல்.

     ‘அல்’ தொழிற்பெயரீறு.]

 நிரவல்2 niraval, பெ. (n.)

   ஒரு பாட்டின் வரியை அதற்கான பண்ணின் அழகைக் காட்டும் வகையில் பயன்படுத்தும் முறை; rendering a line of musical composition elaboratley so as to bring the nuances of ragam.

 நிரவல்3 niraval, பெ. (n.)

   சராசரி (இ.வ.);; average.

     [நிர → நிரவல்]

 நிரவல் niraval, பெ.(n.)

   காட்டாளத்தி பண் வகையினுள் ஒன்று; a tune type.

     [நிரவு-நிரவல்]

நிரவிப்பிடி-த்தல்

நிரவிப்பிடி-த்தல் niravippiḍittal,    4 .செ. குன்றாவி. (v.t.)

   1. நிரப்புதல்; to fill up, make full.

   2. சிறுகச் சிறுகக் கடனைத் தீர்த்தல்; to discharge by small instalments as a debit

   3. குளமுதலியவற்றைத் தூர்த்து நிலமாக்கி அடாவடியாய்த் தனதாக்கிக் கொள்ளல்; to fill up a tank and appropriate the land to one self, generally unjustly.

     [நிரவி+பிடி.]

நிரவு

நிரவு1 niravudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. சமனாக்குதல்; to level, fill up, as a hole or well,

     “உழாஅ நுண்டொளி விரவிய வினைஞர் ” (பெரும்பாண்.211.);. அந்தப் பள்ளத்தை நிரவு. (உ.வ.);.

   2. குறை தீர்த்தல் (வின்.);; to make up a deficiency.

அவரின் அருளினால் என் துன்பமெல்லாம் நிரவிப் போயிற்று. (உ.வ.);.

   3. பொதுப்படையான மதிப்பீடு பார்த்தல்; to average.

எல்லோருக்கும் நிரவிக் கொடு. (உ.வ.);.

   4. சரிபடுத்துதல்; to equalise, as threads for weaving; to proportion, as income and expenditure. to adjust.

இழைகளை நிரவி நெய்தால் துணி நயமாயிருக்கும். (உ.வ.);. வருவாயைக் கருத்திற் கொண்டு நிரவி செலவிடு. (உ.வ.);.

   5. அழித்தல்; to demolish, as a fort; to level down.

     “அடங்கார் புரமூன்றும் நிரவ வல்லார்” (தேவா. 77,2.);. தேவநேயப் பாவணர் தம் ஆய்வாற்றலால் மொழிநூலின் மூடக் கருத்துகளனைத்தையும் நிரவிவிட்டார். (உ.வ.);

     [நிர → நிரவு-]

 நிரவு2 niravudal,    7 செ.கு.வி. (v.i.)

   1. சமனாதல்; to be filled, become level. Full. covered as a well. a furrow or a sore.

பெரு வெள்ளத்தினால் வயல் நிரவி விட்டது. (உ.வ.);. பயன்பாடற்ற பாழுங்கிணறு எப்போது நிரவமோ. (உ.வ.);.

   2. தீர்தல்; to be liquidated, as a dept.

இவ்வாண்டு வேளாண்மையில் கிடைத்த வருவாயினால் என் எல்லாக்கடனும் நிரவியது.

   3. பரவுதல்; to spread, expand.

     “பார்முழுதும் நிரவிக் கிடந்து” (தேவா.152.9.);.

   4. வரிசையாயிருத்தல்; to lie in rows,

     “நிரவிய தேரின் மேன்மேல்” (கம்பரா. முதற்போர்.151.);.

     [நிர → நிரவு-.]

நிரவுவீடு

 நிரவுவீடு niravuvīṭu, பெ. (n.)

   கவருக்குப் பகரமாய் மரப்பலகைகளை வைத்துக் கட்டிய வீடு (நாஞ்.);; house in which wooden planks are used for walls

     [நிரவு + வீடு.]

நிரவ்வியயம்

 நிரவ்வியயம் niravviyayam, பெ.(n.)

   நீண்ட காலம் வாழவல்லது; that which is eternal (யாழ்.அக.);

     [Skt. nir-avyaya → த. நிரவ்வியயம்.]

நிரா

 நிரா nirā, பெ. (n.)

   பழம் முதலியவற்றின் கன்றின நிலை (யாழ்.அக.);; hardness in fruit through blight or injury.

     [நரா → நிரா.]

 நிரா nirā, பெ.(n.)

   பழம் முதலியவற்றின் கன்றின நிலை (யாழ்.அக.);; hardness in fruit through blight or injury.

     [Skt. {} → த. நிரா.]

நிராகம்

 நிராகம் nirākam, பெ.(n.)

   உடலின்மை (வின்.);; incorporeality.

     [Skt. nir+augam → த. நிராகம்.]

நிராகரணம்

நிராகரணம் nirākaraṇam, பெ.(n.)

   1. மறுப்பு; refutation, confutation, repudiation.

     “ஈசுவர நிராகரணம் பண்ணுமவன்” (தக்கயாகப். 183, உரை);.

   2. மதிப்பளிக்காமை; disregard.

     [Skt. {} → த. நிராகரணம்.]

நிராகரன்

 நிராகரன் nirākaraṉ, பெ.(n.)

   உருவமற்ற கடவுள் (யாழ்.அக.);; god, as formless.

     [Skt. {} → த. நிராகரன்.]

நிராகரி-த்தல்

நிராகரி-த்தல் nirākarittal, பெ.(n.)

   1. மறுத்தல்; to refute, reject, as the terms of an appointment.

   2. மதிப்புக் குறைவு செய்தல்; to disregard, treat with disrespect.

     [Skt. {} → த. நிராகரி-,]

நிராகாரநிலை

 நிராகாரநிலை nirākāranilai, பெ.(n.)

   உண்ணாமலே நிற்கும் ஒக நிலை; a stage of yoga in which the practising yogi remains abstaining from food and drink (சா.அக.);.

நிராகாரன்

நிராகாரன் nirākāraṉ, பெ.(n.)

   1. சிவ பெருமான் (பிரான்);;{}.

   2. திருமால்;{} (யாழ்.அக.);.

     [Skt. nir- {} → த. நிராகாரன்.]

நிராகாரம்

நிராகாரம்1 nirākāram, பெ.(n.)

   1. நிராகரணம் பார்க்க (வின்.);;see {}.

   2. உருவின்மை; shapelessness, formless- ness.

     “நிராகார வடிவேயோ” (திருப்பு.970);.

   3. விண் (யாழ்.அக.);; air, ether, as formless.

   4. வீடுபேறு (யாழ்.அக.);; beatitude.

     [Skt. {} → த. நிராகாரம்.]

 நிராகாரம்2 nirākāram, பெ.(n.)

   உண வின்மை; fasting; lack of food.

     “நிராகாரத் தொடுவைகி” (விநாயகபு. 29, 4);.

     [Skt. nir- {} → த. நிராகாரம்2.]

 நிராகாரம்3 nirākāram, பெ.(n.)

   1. உண வின்மை; want of food.

   2. உணவு வேண்டாமை; no appetite for food (சா.அக.);.

நிராகிருதம்

நிராகிருதம் nirākirudam, பெ.(n.)

   1. தள்ளுண்டது; that which is refuted or rejected.

   2. உருவமற்றது (யாழ். அக.);; formless thing.

     [Skt. nir-{}-krta → த. நிராகிருதம்.]

நிராகிருதி

நிராகிருதி nirākirudi, பெ.(n.)

   1. வடிவின்மை (யாழ்.அக.);; formlessness.

   2. நிராகரணம் பார்க்க (இலக்.அக.);;see {}.

     [Skt. {} → த. நிராகிருதி.]

நிராகுலம்

 நிராகுலம் nirākulam, பெ.(n.)

   கலக்கமின்மை; absence of anguish.

     [Skt. {} → த. நிராகுலம்.]

நிராங்கு-தல்

நிராங்கு-தல் nirāṅgudal,    9 செ.கு.வி. (v.i.)

   நரங்குதல் (யாழ்ப்.);; to be thin, stunded, as a person, a beast, vegetable.

     [நரங்கு → நருங்கு → நிருங்கு → நிராங்கு-,]

நிராசனர்

நிராசனர் nirācaṉar, பெ.(n.)

   கடவுளர்; gods.

     “நிராசனர் வருக வென்றான்” (கம்பரா. மிதிலைக். 114);.

     [Skt. {} → த. நிராசனர்.]

நிராசாரம்

 நிராசாரம் nirācāram, பெ.(n.)

   தூய்மை யின்மை (யாழ்.அக.);; want of ceremonial purity, impurity.

     [Skt. {} → த. நிராசாரம்.]

நிராசிராவம்

 நிராசிராவம் nirācirāvam, பெ.(n.)

   மாத விடாய் அரத்தம் படாமை; absence of discharge of blood (சா.அக.);.

நிராசை

நிராசை nirācai, பெ.(n.)

   1. ஆசையின்மை; freedom from or absence of desire or attachment.

     “வருபோகங்களினிராசை” (கைவல்.தத்.84);.

   2. நம்பிக்கையறுகை; despair, hopelessness (LOC.);.

     [Skt. nir- {} → த. நிராசை.]

நிராடகோலம்

 நிராடகோலம் nirāṭaālam, பெ.(n.)

   வேங்கைப்புலி; man-eater (சா.அக.);.

நிராடங்கம்

 நிராடங்கம் nirāṭaṅgam, பெ.(n.)

   தடை யின்மை அற்றது; an unobjectionale thing.

     [Skt. nir + T. {} → த. நிராடங்கம்.]

நிராடபதி

 நிராடபதி nirāṭabadi, பெ.(n.)

   உடும்பின் கொழுப்பு; fat of guana. (சா.அக.);.

நிராட்சேபணை

 நிராட்சேபணை nirāṭcēpaṇai, பெ.(n.)

   தடை யின்மை; being unobjectionable.

     [Skt. nir- {} → த. நிராட்சேபணை.]

நிராதபகை

 நிராதபகை nirātabagai, பெ.(n.)

   இரவு (யாழ்.அக.);; night.

     [Skt. nir- {} → த. நிராதபகை.]

நிராதாரன்

 நிராதாரன் nirātāraṉ, பெ.(n.)

   பற்றுக் கோடற்றவன் ஆகிய கடவுள் (யாழ்.அக);; god, as independent.

     [Skt. {} → த. நிராதாரன்]

நிராதாரம்

நிராதாரம்1 nirātāram, பெ.(n.)

   1. ஆதார மின்மை; absence or lack of foundation or support.

   2. சார்பு வேண்டாமை; inde- pendance, not needing extraneous support, as an attribute of deity.

   3. நிராதாரயோகம் பார்க்க;see {}.

     “நிராதாரத்தே சென்று” (திருவுந்தி.8);.

     [Skt. nir – {} → த. நிராதாரம்]

 நிராதாரம்2 nirātāram, பெ.(n.)

   ஆறாதாரங் களுள் ஒன்றான சுவாதிட்டானம்; which see.

 one of the six regions of the body situated in genitals. c.f.

ஆறாதாரம் (சா.அக.);.

நிராதாரயோகம்

நிராதாரயோகம் nirātārayōkam, பெ.(n.)

   ஆதன் (ஆத்மா); தன்னறிவிழந்து அறிவுரு வாகிய (ஞானசொரூபமாகிய); சிவனை யடைந்து பற்றற நிற்கும் நிலை; the state of the soul in which it loses all self- consciousness, attains {}hood and remains without any attachment.

     “ஆதாரயோக நிராதாரயோகமென” (திருக்களிற்றுப்.22, உரை);.

     [Skt. {} → த. நிராதாரயோகம்.]

நிராதேசம்

நிராதேசம் nirātēcam, பெ.(n.)

   1. கடனி றுக்கை (யாழ்.அக.);; compulsory payment.

   2. சார்பின்மை, ஆதாரமின்மை; want of support.

   3. இழப்பு; loss.

நிராதேவி

 நிராதேவி nirātēvi, பெ.(n.)

   வட்டத்திருப்பி; sickle leaf (சா.அக.);.

நிராபாதை

 நிராபாதை nirāpātai, பெ.(n.)

   துன்பம் அல்லது வலியற்றது; not causing any injury or pain (சா.அக.);.

நிராமயசெயநீர்

 நிராமயசெயநீர் nirāmayaseyanīr, பெ.(n.)

   அண்டச் செயநீர்; a pungent liquid extracted from a fowl’s egg or from the foetus (சா.அக.);.

     [நிராமயம் + செயநீர்.]

     [Skt. {} → த. நிராமயம்.]

நிராமயதி

 நிராமயதி nirāmayadi, பெ.(n.)

   கலவியின் பந்தருகை; giving pleasure by sexual union (சா.அக.);.

நிராமயன்

நிராமயன்1 nirāmayaṉ, பெ.(n.)

   கடவுள்; the Supreme Being.

     “நிராமய பராபரபுராதன” (தேவா,148, 6);.

     [Skt. {} → த. நிராமயன்.]

 நிராமயன்2 nirāmayaṉ, பெ.(n.)

   1. நோயற்றவன்; one who is free from illness, healthy man.

   2. மூச்சுக் காற்றை நிறுத்தும் கலைவல்லோன்; one who suppresses respiration.

   3. முனிவர்; a yogi (சா.அக.);.

நிராமயம்

நிராமயம் nirāmayam, பெ.(n.)

   1. நோயின்மை; freedom from disease or ailment, as an attribute of deity.

   2. நோயற்றது; that which is free from ailment.

     “நிரஞ்சன நிராமயத்தை” (தாயு. திருவருள்வி.3);.

     [Skt. {} → த. நிராமயம்.]

 நிராமயம்2 nirāmayam, பெ.(n.)

   பன்றி; hog (சா.அக.);.

நிராமலம்

 நிராமலம் nirāmalam, பெ. (n.)

   விளா; wood apple tree.- feronium elephantum.

     (சா. அக.);.

 நிராமலம் nirāmalam, பெ.(n.)

   விளா; wood apple tree (சா.அக.);.

நிராமாதிசாரம்

நிராமாதிசாரம் nirāmāticāram, பெ.(n.)

   வெப்பக் கழிச்சல்; diarrhoea from excessive heat of the body.

   2. குளிர்க் கழிச்சல்; dysentery (சா.அக);.

நிராமாலு

 நிராமாலு nirāmālu, பெ. (n.)

நிராமலம் பார்க்க; see {nirāmalam.}

 நிராமாலு nirāmālu, பெ.(n.)

   விளாமரம்;{}- maram (சா.அக.);.

நிராமிலம்

 நிராமிலம் nirāmilam, பெ.(n.)

   எரிமச் சத்தற்றது; non acid (சா.அக.);.

நிராயுசியம்

நிராயுசியம் nirāyusiyam, பெ.(n.)

   அகவை யின்மைத் தன்மை (சிலப்.10, 188, அரும்.);; agelessness.

     [Skt. {} → த. நிராயுசியம்.]

நிராயுதன்

நிராயுதன் nirāyudaṉ, பெ.(n.)

   1. படைக்கல மில்லாதவன்; unarmed person.

     “மறைந்து நிராயுதன் மார்பினெய்யவோ” (கம்பரா. வாலிவ.90);.

   2. அருகன் (சூடா.);; arhat.

     [Skt. {} → த. நிராயுதன்.]

நிராயுதபாணி

நிராயுதபாணி nirāyudapāṇi, பெ.(n.)

நிராயுதன், 1 பார்க்க;see {}.

     [Skt. {} → த. நிராயுதபாணி.]

நிராலம்பன்

 நிராலம்பன் nirālambaṉ, பெ.(n.)

 the supreme being, as independent.

     [Skt. {} → த. நிராலம்பன்.]

நிராலம்பம்

நிராலம்பம் nirālambam, பெ.(n.)

   1. பற்றுக் கோடின்மை; absence of support, independence.

     “நிராலம்ப வாலம்ப சாநதபத வியோமநிலையை” (தாயு. திருவருள்வி.3);.

   2. திறந்தவெளி; open space.

     “நிரயமிசை நிராலம்பத் துச்சிமிசை” (சிவதரு.கோபுர.18);.

   3. நூற்றெட்டு துணைத் தொன்மங்களுள் ஒன்று; an upanisad one of 108.

     [Skt. nir-lamba → த. நிராலம்பம்.]

நிராலம்பயோகம்

நிராலம்பயோகம் nirālambayōkam, பெ.(n.)

   நிட்களத்தைப் பற்றிச் செய்யும் ஒகம் (சி.போ.8, 1);; a kind of {} in which the formless God is contemplated.

     [Skt. nir-lamba +{} → த. நிராலம்பயோகம்.]

நிரிகதாபனரோகம்

 நிரிகதாபனரோகம் nirigatāpaṉarōgam, பெ.(n.)

   முட்டையின் வெள்ளை போன்ற நீர்மம் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் ஒரு நோய்; a whitish viscid discharge like the white of an egg from the vagina and uterine cavity (சா.அக.);.

நிரிகம்

 நிரிகம் nirigam, பெ.(n.)

   தாமரைக் காயின் அல்லது நெஞ்சாங்குலையின் உட்புறத்துச் சவ்வு; the membrane lining the interior of the heart-Endocardium (சா.அக.);.

நிரியசம்

 நிரியசம் niriyasam, பெ. (n.)

   வேம்பு; margosa or neem tree-azadirachta indica

 நிரியசம் niriyasam, பெ.(n.)

   வேம்பு; margosa or neem tree (சா.அக.);.

நிரியம்

 நிரியம் niriyam, பெ. (n.)

   தினை; italian-millet-panicum italicum.

     (சா. அக.);.

 நிரியம் niriyam, பெ.(n.)

   தினை; Italian millet (சா.அக.);.

நிரியாசப்பால்

நிரியாசப்பால்1 niriyācappāl, பெ.(n.)

நிரியாசம், 1 பார்க்க;see {}.

     [Skt. {} → த. நிரியாசப்பால்.]

 நிரியாசப்பால்2 niriyācappāl, பெ.(n.)

   எரிகாசு; java stora.

   2. நெரியாசிப்பால் பார்க்க;see {} (சா.அக.);.

நிரியாசம்

நிரியாசம்1 niriyācam, பெ.(n.)

   1. புகை வகை (தூபவர்க்கம்); ஆறனுள் ஒன்று, ஒருவகைப் பிசின் (சிலப்.5, 14);; a kind of resin used as incense, one of six {}-varkkam.

   2. வேம்பு; neem.

     [Skt. {} → த. நிரியாசம்.]

 நிரியாசம்2 niriyācam, பெ.(n.)

   1. மராமரம்; Indian dammar, black dammar.

   2. ஒரு வகைப் பிசின்; gum or resin.

   3. மரத்தின்பால்; exudation from tree, as சால நிரியாசம், அசுவகரண நிரியாசம், which means shorea resin.

   4. பூண்டின் பால் அல்லது சாறு; juice of plants resin, milk any thick fluid substance from plants,

நெரியாசிப்பால் பார்க்க;see {} (சா.அக.);.

நிரியாணசக்கரம்

 நிரியாணசக்கரம் niriyāṇasakkaram, பெ.(n.)

   ஒருவன் இறப்புக் காலத்தைக் கணக்கிட உதவும் சக்கர வடிவம் (வின்.);;     [Skt. {}+ → த. நிரியாணசக்கரம்.]

நிரியாணதசை

 நிரியாணதசை niriyāṇadasai, பெ.(n.)

   இறப்பைக் குறிக்குங் கோள்நிலை (வின்.);; influence of the planet that forebodes death.

     [Skt. nir- {} + → த. நிரியாணதசை.]

நிரியாணதிசை

 நிரியாணதிசை niriyāṇadisai, பெ.(n.)

   இறக்குங் காலம்; period of death (சா.அக.);.

நிரியாணம்

நிரியாணம்1 niriyāṇam, பெ.(n.)

   1. யானை யின் கடைக்கண் (பிங்.);; outer corner of an elephant’s eye.

   2. இறப்பு (பிங்.);; death.

   3. வீடுபேறு (வின்.);,

 emancipation from births, final beatitude.

     [Skt. {} → த. நிரியானம்.]

 நிரியாணம்2 niriyāṇam, பெ.(n.)

   1. இறப்பு; death.

   2. பிறவி நீங்கல்; freedom from birth (சா.அக.);.

நிரியானக்குறி

 நிரியானக்குறி niriyāṉakkuṟi, பெ.(n.)

   இறப்புக்குறி; symptoms of death (சா.அக.);.

த.வ. சாக்குறி

நிரீக்கணம்

நிரீக்கணம் nirīkkaṇam, பெ.(n.)

   1. பார்வை; sight.

   2. இடக்கண்ணிலே அமுதங்கொண்டு நனைத்துத் தூய்மை செய்வதாகப் பாவிக்குஞ் செய்கை (சைவச.பொது.354);;     [Skt. {} → த. நிரீக்கணம்.]

நிரீச்சுரசாங்கியன்

நிரீச்சுரசாங்கியன் nirīccuracāṅgiyaṉ, பெ.(n.)

நீர்ச்சுவரசாங்கியன் பார்க்க (தத்துவப்.176);;see {}.

     [Skt. nir- {}+ → த. நிரீச்சுரசாங்கியன்.]

நிரீச்சுவரசாங்கியன்

 நிரீச்சுவரசாங்கியன் nirīccuvaracāṅgiyaṉ, பெ.(n.)

நிரீச்சுவரசாங்கியக்

   கொள்கையைக் கொண்டவன் (சங்.அக.);; one who follows the doctrines of {}.

     [Skt. {} → த. நிரீச்சுவர சாங்கியன்.]

நிரீச்சுவரசாங்கியம்

நிரீச்சுவரசாங்கியம் nirīccuvaracāṅgiyam, பெ.(n.)

   கடவுளின்மையைக் கூறும் சாங்கிய மதம் (தக்கயாகப். 246, உரை);; atheistic school of the {} system of philosophy.

     [Skt. {} → த. நிரீச்சுவர சாங்கியம்.]

நிரீச்சுவரவாதம்

 நிரீச்சுவரவாதம் nirīccuvaravātam, பெ.(n.)

நிரீச்சுவரசாங்கியம் பார்க்க (சங்.அக.);;see {}.

     [Skt. {} → த. நிரீச்சுவர வாதம்]

நிரீச்சுவரவாதி

நிரீச்சுவரவாதி nirīccuvaravāti, பெ.(n.)

   கடவுளில்லையென்போன் (சி.சி.1, 1, சிவாக்.);; atheist.

     [Skt. {} → த. நிரீச்சுவரவாதி.]

நிரீட்சணசுத்தி

 நிரீட்சணசுத்தி nirīṭsaṇasutti, பெ.(n.)

   கண்ணேறு கழிக்கை (சங்.அக.);; purification to prevent the evil eye.

     [Skt. {}+ → த. நிரீட்சணசுத்தி.]

நிரீட்சணமுத்திரை

 நிரீட்சணமுத்திரை nirīṭcaṇamuttirai, பெ.(n.)

   கண்முத்திரை என்னும் நாட்டிய குறி; a hand pose.

     [Skt. {}+ த. முத்திரை.]

நிரீட்சணம்

நிரீட்சணம் nirīṭcaṇam, பெ.(n.)

   1. பார்வை (சங்.அக.);; sight.

   2. எதிர்பார்த்திருக்கை; expectation.

   3. மதிப்பு; honour.

   4. நிர்க்கணம், 2 பார்க்க;see {}.

   5. பார்வையின்மை; absence of sight.

     [Skt. nir-{} → த. நிரீட்சணம்.]

நிரீட்சமாணம்

நிரீட்சமாணம் nirīṭcamāṇam, பெ.(n.)

   1. நம்பிக்கை; faith.

   2. பார்க்கை;seeing.

     [Skt. nir-{} → த. நிரீட்சமாணம்.]

நிரீட்சி-த்தல்

நிரீட்சி-த்தல் nirīṭcittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. பார்த்தல்; to cast a look.

   2. பார்வை பார்த்தல்; to cure a disease by incantation.

   3. எதிர்பார்த்தல்; to expect.

     [Skt. {} → த. நிரீட்சி-த்தல்.]

நிரீட்சிதம்

 நிரீட்சிதம் nirīṭcidam, பெ.(n.)

   பார்க்கப்பட்டது (சங்.அக.);; that which is seen.

     [Skt. nir- {} → த. நிரீட்சிதம்.]

நிருகம்

 நிருகம் nirugam, பெ.(n.)

   மானிடருக்கடுத்த நோய்; diseases peculiar to human beings (சா.அக.);.

நிருகேசரி

 நிருகேசரி niruācari, பெ.(n.)

நிருசிங்கம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. நிருகேசரி.]

நிருக்கிட்டுக்கொடுத்தல்

 நிருக்கிட்டுக்கொடுத்தல் nirukkiḍḍukkoḍuttal, தொ.பெ.(vbl.n.)

   மருந்தை அள விட்டுக் கொடுத்தல்; giving medicine in pro. portionate doses (சா.அக.);.

நிருக்கிரம்

நிருக்கிரம் nirukkiram, பெ.(n.)

   1. கொடுமை யின்மை; absence of violence, non-violent.

   2. உச்சமற்றது; non-malignant as in fever, tumour etc. (சா.அக.);.

     [நிர் + உக்கிரம்.]

நிருங்கு

நிருங்கு1 niruṅgudal,    9 செ.கு.வி. (v.i.)

   1. நொறுங்குதல்; to be mashed, crushed to pieces.

   2. தேய்கடையாதல்; to be deficient in growth; to decay; to grow lean, as a child; to fail, as a business, a harvest.

     [நலிவு → நலுங்கு → நருங்கு → நிருங்கு.]

 நிருங்கு2 niruṅgu, பெ. (n.)

   வளர்ச்சிக் குறைவு; stunted growth.

     [நலிவு → நருங்கு → நிருங்கு.]

நிருசிம்மதாபினி

நிருசிம்மதாபினி nirusimmatāpiṉi, பெ.(n.)

   நூற்றெட்டு துணைத் தொன்மங்களுள் (உபநிடதம்); ஒன்று; an upanisad, one of 108.

     [Skt. {} → த. நிருசிம்ம தாபினி.]

நிருச்சத்தன்

 நிருச்சத்தன் niruccattaṉ, பெ.(n.)

அரக்கன் (இராக்கதன்); (யாழ்.அக.);;{}.

     [Skt. {} → த. நிருச்சத்தன்.]

நிருச்சுவாசம்

நிருச்சுவாசம்1 niruccuvācam, பெ.(n.)

   மூச்சு விடாதிருக்கை (சிவதரு.சுவர்க்கநரக. 147);; breathlessness.

     [Skt. nir-{} → த. நிருச்சுவாசம்.]

 நிருச்சுவாசம்2 niruccuvācam, பெ.(n.)

   1. மூச்சின்மை; absence of breath.

   2. மூச்சடக்கம்; suppression of breath.

   3. மூச்சொடுக்கம்; suspension of breath (சா.அக.);.

நிருச்சுவாசவுச்சுவாசம்

நிருச்சுவாசவுச்சுவாசம் niruccuvācavuccuvācam, பெ.(n.)

   அரச நிரயம் எட்டனுள் ஒன்று (சி.போ.பா.2, 3 பக்.204);; a hell, one of eight {}-nirayam.

     [Skt. {} → த. நிருச்சுவாசவுச் சுவாசம்.]

நிருணயக்கணக்கு

 நிருணயக்கணக்கு niruṇayakkaṇakku, பெ.(n.)

   குறிக்கணக்கு (பீசகணிதம்);; algebra (Pond.);.

     [Skt. {} → த. நிருணயம்+கணக்கு]

நிருணயம்

நிருணயம் niruṇayam, பெ.(n.)

   1. உறுதி (யாழ்.அக.);; determination, resolution.

   2. ஆராய்வு (சங்.அக.);; ascertaining.

     [Skt. {} → த. நிருணயம்.]

நிருணயி-த்தல்

நிருணயி-த்தல் niruṇayittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   உறுதி செய்தல்; to determine.

     [Skt. nir – {} → த. நிருணயி-,]

நிருணாமன்

நிருணாமன் niruṇāmaṉ, பெ.(n.)

   1. பெயரில் லாதவனாகிய கடவுள் (சங்.அக.);; god, as nameless.

   2. அருகன்; Arhat.

த.வ. பெயரிலி

     [Skt. nir- {} → த. நிருணாமன்.]

நிருணி-த்தல்

நிருணி-த்தல் niruṇittal,    4 செ.குன்றாவி. (v.t.)

நிருணயி- (வின்.); பார்க்க;see {}.

நிருதர்

நிருதர் nirudar, பெ.(n.)

   பதினெண்கணத்துள் ஒருவராகிய அரக்கர்;{}, one of {},

     “நிருதாதியர் வேரற” (கம்பரா.சடாயுவு.79);.

     [Skt. nairrta → த. நிருதர்.]

நிருதி

நிருதி1 nirudi, பெ.(n.)

   1. எட்டுத் திக்குப் பாலகருள் தென்மேற்றிசைக்காவலன் (சூடா.);; regent of the south-west, one of asta-tikku-p-{}.

     “நிருதி வாயுத்திப்பிய சாந்தனாகி” (தேவா.663, 6);.

   2. முதல் வள்ளல்கள் எழுவருள் ஒருவன் (சூடா.);; a liberal chief, one of seven {}.

   3. பகல் 15 முழுத்தத்துள் (முகூர்த்தத்துள்); பன்னிரண்டாவது (விதான.குணாகுண.73, உரை);; the 12th of 15 divisions of day-time. [Skt. nirrti → த. நிருதி1.]

 நிருதி2 nirudi, பெ.(n.)

   அரக்கி; raksasa woman.

     “நிருதி கூறும்” (கம்பரா. சூர்ப்பணகை.138);.

     [Skt. nirrti → த. நிருதி.]

நிருதிதா

 நிருதிதா nirudidā, பெ. (n.)

   கோடாசூரி; a virulent mineral poison.

     (சா. அக.);.

 நிருதிதா nirudidā, பெ.(n.)

   கோடாசூரி என்னும் செய்ந்நஞ்சு; a virulent mineral poision (சா.அக.);.

நிருதிதிசை

 நிருதிதிசை nirudidisai, பெ.(n.)

 the s.w.quarter, as that of niruti.

     [Skt. nirrti → த. நிருதி+திசை.]

நிருதிபாசம்

 நிருதிபாசம் nirudipācam, பெ.(n.)

   கடற்பாசி (மலை.);; seaweed.

நிருதிரம்

 நிருதிரம் nirudiram, பெ.(n.)

   குரத்தம் அதாவது அரத்தமின்மை; bloodless ness-anemia (சா.அக.);.

     [Skt. nir-rudhira → த. நிருதிரம்.]

நிருதூளி

 நிருதூளி nirutūḷi, பெ.(n.)

   தூசி (யாழ்.அக.);; dust.

     [Skt. nir → த. நிரு+தூளி.]

நிருத்தகீதவாத்தியம்

 நிருத்தகீதவாத்தியம் niruttaātavāttiyam, பெ.(n.)

   கூத்தும் பாட்டுங் கொட்டும் (வின்.);; dancing, singing and instrumental music.

     [Skt. nrtta-gita-{} → த. நிருத்தகீத வாத்தியம்.]

நிருத்தகுதம்

 நிருத்தகுதம் niruddagudam, பெ.(n.)

   எரு வாய்ச் சுருக்கம்; constriction of the anus stricture of the rectum; constraction or obstruction the anus. In this cathetars should be used or inserted in the same way as in case of urethra (சா.அக.);.

நிருத்தக்கண்டம்

நிருத்தக்கண்டம் niruttakkaṇṭam, பெ.(n.)

   1. மூச்சுவிட முடியாமை; having the breath

 obstructed;

 suffocated.

   2. தொண்டை யடைப்பு; obstruction in the throat (சா.அக.);.

நிருத்தக்கை

நிருத்தக்கை niruttakkai, பெ.(n.)

   சதுரச்சிரம், உத்துவீதம், தலமுகம், சுவத்திகம், விப்பிர கீர்ணம், அருத்தரேசிதம், அராளகடகாமுகம், ஆவித்தவத்திரம், சூசீமுகம், கிரேசிதம், உத்தானவஞ்சிதம், பல்லவம், நிதம்பம், கசதந்தம், இலதை, கரிக்கை, பக்கவஞ்சிதம், பக்கப்பிரதியோகம், கருடபக்கம், தண்ட பக்கம், ஊர்த்துவமண்டலி, பக்கமண்டலி, முட்டிச்சுவத்திகம், நளினீபதுமகோசம், அலபதுமம், உற்பணம், இலளிதை, வலிதை என்னும் முப்பது வகைப்பட்ட அவிநயக்கை (சிலப்.3,13, உரை, பக்.81);;{}, pallavam, {}, iladai, karikkаi, {}.

     [Skt. nrtta+ → த. நிருத்தக்கை.]

நிருத்தசபை

நிருத்தசபை niruttasabai, பெ.(n.)

   1. சிவன் கோயிலில் ஆடல் வல்லானின் நாட்டிய அவை; dancing hall of {} in {} temples.

   2. கூத்து நிகழ்த்தும் இடம்; dancing-hall.

த.வ. ஆடரங்கு

     [Skt. nrtta → த. நிருத்தசபை.]

நிருத்தன்

நிருத்தன் niruttaṉ, பெ.(n.)

   நடனமாடுவோன் (பிங்.);; dancer.

     “உமையொடு மொருபாக மதுவாய நிருத்தன்” (தேவா.194, 5);.

     [Skt. nrtta → த. நிருத்தன்.]

நிருத்தப்பிரகாசம்

நிருத்தப்பிரகாசம் niruttappirakācam, பெ.(n.)

   1. வாயுவினால் இலிங்க மணிக்கு மேலாக இழுத்த முன் தோல் அம்மலரில் வலுவாக பிடித்து அதனால் கீழுக்குத் தள்ள முடியாமலும்; மூத்திரத்தாரையை நீர் வெளிவராது அழுத்தியும் வலியையுண்டாக்கித் துன்பத்தைக் கொடுக்கும் ஓர் நோய்; the prepuce affected by deranged vayu when once drawn quite behind the glans penis cannot be drawn down to its original position owing to its contraction by which the passage of the urethra is obstructed and the emission of urine is completely stopped-paraphimosis. நிருதிமொய்த்தல் பார்க்க.

   2. மேக சம்பந்தத்தினால் மூத்திரத் தாரை அடைப்பட்டு, அதனால் சிறுநீர் வெளிவராது வருத்தத்தையும் வலியையும் உண்டாக்கும் ஒரு நோய்; obstruction to the free passage of urine due to the abnormal narrowing of the urethra either from contraction or from deposit of abnormal tissue. This condition is attributed to venereal or syphilitic causes (சா.அக.);.

நிருத்தப்பிரசவம்

 நிருத்தப்பிரசவம் niruttappirasavam, பெ.(n.)

   பெண்ணின் யோனித் தாரையில் கழலையாகத் தடுத்தும் அல்லது மேற்படி தாரைச் சுருக்கம் அடைந்தும் இருப்பதால் கருப்பிண்டம் வெளிவர முடியாது துன்பப்படும் பிள்ளைப்பேறு; child birth which is attended by some mechanical hindrance as from a tumour or a contracted parturient cannal (சா.அக.);

நிருத்தமண்டபம்

நிருத்தமண்டபம் niruttamaṇṭabam, பெ.(n.)

நிருத்தசபை (I.m.p.ii, 1226, 128); பார்க்க;see nirutta-{}.

த.வ. நாட்டியமண்டபம், ஆடரங்கு

     [Skt. nrtta → த. நிருத்த+மண்டபம்.]

நிருத்தமாது

 நிருத்தமாது niruttamātu, பெ.(n.)

   நாடகக் கணிகை (சூடா.);; dancing-girl.

     [Skt. nrtta → த. நிருத்த+மாது.]

நிருத்தம்

நிருத்தம் niruttam, பெ.(n.)

   தாளங்களின் வேறு பாடுகளைக் கொண்டு கை, கால், முகம் இவற்றின் நிலைகளோடு கூடிய அடவுகள் கொண்ட ஆடல் வகை; gesture of hands,

 face and movement of limbs to express emotion, ideas through dance according

 to the variation of beating of time.

மறுவ நிறுத்தம்

     [நில்-நிறுத்து+அம்-நிறுத்தம்-திருத்தம் (கொ.வ.);]

அடவுகளுக்கும், தாளத்துக்கும், பண்ணி சைக்கும் ஏற்ப மெய்ப்பாடுகளைக் கால ஒழுங்குக்கு ஏற்ப நிறுத்திக் காட்டுதலால் நிறுத்தம் எனப் பெயர் பெற்றது. இது வடமொழியில் நிருத்தம் எனத் திரிந்தது.

 நிருத்தம்1 niruttam, பெ.(n.)

   எந்த தாது நீறாக (பற்பமாக);ச் செய்யப்படுகிறதோ அந்தத் தாதுவை எவ்வகை வழியினாலும் அந் நீறினின்று பிரித்தெடுக்கக் கூடாமை; the impossibility of eliminating by any contrivance or means, the element from the calcined compound of which it formed a component part (சா.அக.);.

 நிருத்தம்2 niruttam, பெ.(n.)

   அறுபத்து நாலு கலைகளுள் ஒன்றாகிய நடனம்; dancing, one of {}-kalai.

     “பாவை நிருத்த நோக்கி மெய்யுருகி” (சீவக.682);.

     [Skt. nrtta → த. நிருத்தம்1.]

 நிருத்தம்3 niruttam, பெ.(n.)

   வேதாங்கம் ஆறனுள் வேதங்களிலுள்ள சொற்களை ஆராயும் நூல்; class of works containing etymological explanation of difficult vedic words, one of six {}.

     “தெற்றெனிருத்தஞ் செவி” (மணி.27, 101);.

     [Skt. nir-ukta → த. நிருத்தம்2.]

 நிருத்தம்4 niruttam, பெ.(n.)

   பற்றின்மை; absence of attachment.

     “நிருத்த சுகசிற்கனத்து நிலையுற்றவன்” (சிவதரு. சனனமரன.96);

     [Skt. ni-ruddha → த. நிருத்தம்4.]

நிருத்தாங்கம்

நிருத்தாங்கம் niruttāṅgam, பெ.(n.)

   நிருத் தத்துக்கு வாசிக்கும் மத்தளந் தாளம் முதலியன (சிலப்.3, 14, உரை);; musical instruments accompanying dancing.

த.வ. ஆடல் இன்னியம்

     [Skt. nrtta+{} → த. நிருத்தாங்கம்.]

நிருத்தாசனம்

நிருத்தாசனம் niruttācaṉam, பெ.(n.)

   தெளிவு (நாமதீப.647);; clearness, clarity of vision.

     [Skt. {} → த. நிருத்தாசனம்.]

நிருத்தாட்சிணியம்

 நிருத்தாட்சிணியம் niruttāṭciṇiyam, பெ. (n.)

   கண்ணோட்டமின்மை (யாழ்.அக.);; impartiality.

     [Skt. nir-{} → த. நிருத்தாட்சிணியம்.]

நிருத்தாதனம்

 நிருத்தாதனம் niruttātaṉam, பெ.(n.)

   ஒருகாலைத் தூக்கிநிற்கும் நிலை வகை (யாழ்.அக.);; a dancing posture in which one of the legs is held aloft.

     [Skt. {}-sana → த. நிருத்தாதனம்.]

நிருத்தானுகம்

நிருத்தானுகம் niruttāṉugam, பெ.(n.)

நிருத்தாங்கம் (சிலப்.3, 14, அரும்); பார்க்க;see {}.

     [Skt. nrtta + anu-ga → த. நிருத்தானுகம்.]

நிருத்தி

 நிருத்தி nirutti, பெ. (n.)

   ஒரு தருக்கநூல்; an astorict book.

 நிருத்தி nirutti, பெ.(n.)

   சொற்கு உறுப்புப் பொருள் கூறுகை; etymological interpret-tation of a word.

     [Skt. nir-ukti → த. நிருத்தி.]

நிருத்தியலங்காரம்

 நிருத்தியலங்காரம் niruttiyalaṅgāram, பெ.(n.)

   பிரிநிலை நவிற்சியணி (சங்.அக.);; a figure of speech.

     [Skt. nir-ukti+alam-{} → த. நிருத்தி யலங்காரம்.]

நிருநாசன்

 நிருநாசன் nirunācaṉ, பெ.(n.)

 God, as indestructible.

     [Skt. {} → த. நிருநாசன்.]

நிருநாசம்

 நிருநாசம் nirunācam, பெ.(n.)

   அழிவின்மை (யாழ்.அக.);; indestructibility.

     [Skt. {} → த. நிருநாசம்.]

நிருநாமன்

 நிருநாமன் nirunāmaṉ, பெ.(n.)

   கடவுள் (யாழ்.அக.);; the supreme being, as nameless.

     [Skt. {} → த. நிருநாமன்.]

நிருபசரிதம்

நிருபசரிதம் nirubasaridam, பெ.(n.)

   மதிப் புரவாக (உபசாரமாக); ஏற்றிக் கூறப்படாதது; that which is not complimentary, secondary or figurative.

     “சிவசத்திகட்குப் பிரிப்பில்லாவந்தரங்கவா நந்தியம் இயற்கை யாகய் நிருபசரிதமாயும்” (சி.சி.1, 68, ஞானப்.);.

     [Skt. nir-upacarita → த. நிருபசரிதம்.]

நிருபச்சம்படம்

நிருபச்சம்படம் nirubaccambaḍam, பெ.(n.)

   அரசர் ஆணைகளைக் கொண்டு வருவோனுக்குரிய கூலி (M.E.R.1921-22, P.109);; pay of the messenger carrying royal orders.

     [Skt. {} → த. நிருப+சம்படம்.]

நிருபதி

நிருபதி nirubadi, பெ.(n.)

   1. அரசன் (வின்.);; king, sovereign.

   2. குபேரன் (யாழ்.அக.);;{}.

     [Skt. nr-pati → த. நிருபதி.]

நிருபதுங்கராகம்

 நிருபதுங்கராகம் nirubaduṅgarākam, பெ.(n.)

   பெரும்பண் வகை (பிங்.);;     [Skt. nrpa-{} → த. நிருபதுங்க ராகம்.]

நிருபத்திரன்

 நிருபத்திரன் nirubattiraṉ, பெ.(n.)

   நுண்ணு டம்புடன் (சூக்கும சரீரத்துடன்); இருக்கும் ஆதன் (ஆன்மா); (யாழ்.அக.);; soul having a subtle body.

     [Skt. nir-upadrava → த. நிருபத்திரன்.]

நிருபத்திரவம்

 நிருபத்திரவம் nirubattiravam, பெ.(n.)

   தொல்லையில்லாத தன்மை (யாழ். அக.);; freedom from trouble, calamity or danger.

     [Skt. nir-upodrava → த.நிருபத்திரவம்.]

நிருபன்

நிருபன் nirubaṉ, பெ.(n.)

   1. அரசன் (திவா.);; king, sovereign.

   2. ஒர் இலக்கத்திற்கு மேல் மூன்று இலக்கம் வரை வருமானமுடைய அரசன் (சுக்கிரநீதி.25);; a king whose revenue is above one lakh and below 3 lakhs.

     [Skt. nr-pa → த. நிருபன்.]

நிருபமன்

 நிருபமன் nirubamaṉ, பெ.(n.)

   ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்;   ஒப்பில்லாதவன்; one who has no equal.

     [Skt. nir-upama → த. நிருபமன்.]

நிருபமம்

 நிருபமம் nirubamam, பெ.(n.)

   ஒப்பின்மை; state of being unequalled, incompara- bleness.

     [Skt. nir-upama → த. நிருபமம்.]

நிருபம்

நிருபம் nirubam, பெ.(n.)

   1. எழுதியனுப்புங் கட்டளை; letter of authority;

 epistle from a king or other superior;

 mandate;

 order.

     “நாயனார் கோயில் தானத்தார்க்கு நிருபம்” (S.I.l. i. 120, 123);.

   2. மடல் (யாழ்.அக.);; note, letter.

   3. தீர்மானம் (வின்.);; decree.

     [Skt. {} → த., ம. நிருபம்.]

நிருபர்

 நிருபர் nirubar, பெ.(n.)

   நாளிதழ்களுக்குச் செய்திக் குறிப்பு எழுதுவோன்; corres- pondent (mod.);.

த.வ. செய்தியாளர்

     [Skt. {} → த. நிருபர்.]

நிருபவல்லவை

 நிருபவல்லவை nirubavallavai, பெ.(n.)

   அரசி (யாழ்.அக.);; queen.

     [Skt. nrpa + {} → த. நிருபவல்லவை.]

நிருபாதானம்

நிருபாதானம் nirupātāṉam, பெ.(n.)

   முதற்காரணமின்மை; absence of a material cause.

     “சகத்து நிருபாதானமோ. சி.சி. (வரலாறு. பக்.7);” (சங்.அக.);.

     [Skt. nir-{} → த. நிருபாதானம்.]

நிருபாதானவாதி

 நிருபாதானவாதி nirupātāṉavāti, பெ.(n.)

   முதற்காரணத்தினின்றும் இவ்வுலகம் (பிரபஞ்சம்); தோன்றவில்லை யென்ற கொள்கை யுடையோன்; one who holds that the phenomenal world has no material cause.

     [Skt. {} → த. நிருபாதான வாதி.]

நிருபாதி

நிருபாதி1 nirupāti, பெ.(n.)

   வருத்தம் அல்லது வலியின்மை; absence of pain or suffering (சா.அக.);.

 நிருபாதி2 nirupāti, பெ.(n.)

   1. தொல்லை (உபாதி);யின்மை; freedom or liberation from passions, from pain.

   2. காரண மின்மை; being without a cause, absolute.

   3. தடை யின்மை (யாழ்.அக.);; freedom from limitations or abstacles.

     [Skt. nir-{} → த. நிருபாதி.]

நிருபாதிகம்

நிருபாதிகம் nirupātigam, பெ.(n.)

   துன்பம், தொல்லை (உபாதி);யில்லாமை; freedom from secularities (சா.அக.);.

 நிருபாதிகம் nirupātigam, பெ.(n.)

   1. காரண மற்றது (சங்.அக.);; that which is without cause.

   2. தடையற்றது; that which is free from limitations.

     [Skt. rnir- {} → த. நிருபாதிகம்.]

நிருபி-த்தல்

நிருபி-த்தல் nirubittal,    4 செ.குன்றாவி.(v.t.)

நிரூபி பார்க்க;see {}.

நிருமதம்

நிருமதம் nirumadam, பெ.(n.)

   1. யானை (பிங்.);; elephant.

   2: மதமொழிந்த யானை (சது.);; rutless elephant.

     [Skt. nir-mada → த. நிருமதம்.]

நிருமலதானம்

 நிருமலதானம் nirumalatāṉam, பெ.(n.)

   அறிவாளர் (ஞானி);கட்கு உதவுங் கொடை; gifts to the wise.

     [Skt. nirmala → த. நிருமலதானம்.]

நிருமலன்

நிருமலன் nirumalaṉ, பெ.(n.)

   1. குற்ற மற்றவன்; spotless person, blameless one.

     “நெறியிலை சாதலலாதெனக் கேட்ட நிருமல னிரங்கி” (திருவாலவா.39, 14);.

   2. கடவுள்; the supreme being, as immaculate.

     [Skt. nir-mala → த. நிருமலன்.]

நிருமலம்

நிருமலம்1 nirumalam, பெ.(n.)

   பால் துத்தம்; white vitriol (சா.அக.);.

 நிருமலம்2 nirumalam, பெ.(n.)

   மாசின்மை; spotlessness,

     “நித்த நிருமல சகித” (தாயு.திருவருள்வி.3);.

     [Skt. nir-mala → த. நிருமலம்.]

நிருமலி

நிருமலி nirumali, பெ.(n.)

   மலைமகள்;{} as immaculate…

     “எண்ணான்கு நிகரிலாவற நிருமலி வளர்த்தனள் வருங்கால்” (காஞ்சிப்பு. கழுவா.87);.

     [Skt. nir-mala → த. நிருமலி.]

நிருமாலியம்

நிருமாலியம்1 nirumāliyam, பெ.(n.)

   பெரிய மாவிலிங்கம் (L.);; sacred lingam tree.

 நிருமாலியம்2 nirumāliyam, பெ.(n.)

   கூவிளம்; garlic pear (சா.அக.);.

 நிருமாலியம்3 nirumāliyam, பெ.(n.)

   1. இறைக்குப் படைத்து எடுத்தது (நிர்மாலியம்);; offering made to an idol and removed.

     “மதுகேச னருமாலிய மதேற்று” (பிரபுலிங். மாயைபூசை.58);.

   2. வில்வம்; sacred bael.

     [Skt. nir- {} → த. நிருமாலியம்.]

நிருமி-த்தல்

நிருமி-த்தல் nirumittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. படைத்தல்; to create, produce by art, form.

     “வானோர் நிருமித்தனபடை” (கம்பரா.இராவணன்வதை.47);.

   2. உறுதி கொள்ளுதல்; to determine.

     “அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்து” (திவ்.திருவாய். பு.7, 1);.

   3. ஏற்படுத்துதல்; to ordian, constitute.

   4. ஆராய்தல் (பிங்.);; to examine, investigate.

   5. பொய்யாகக் கற்பித்தல்; to fabricate, concoct.

     [Skt. {} → த. நிருமி-,]

நிருமிதம்

நிருமிதம் nirumidam, பெ.(n.)

   1. உண்டாக் கப்பட்டது; that which is created or formed.

     “நினைத்திருந் தியற்றிய நிருமித மகனிவன்” (சீவக.707);.

   2. பொய்யாகக் கற்பித்தது; that which is fabricated.

     [Skt. nir-mita → த. நிருமிதம்.]

நிருமிதி

நிருமிதி1 nirumidi, பெ.(n.)

   அம்மணம்; nakedness (சா.அக.);.

 நிருமிதி2 nirumidi, பெ.(n.)

   படைப்பு; creation.

     “இலதுகாத்தல் நிருமிதி யிச்சை செய்தி நிழனட மாகுமன்றே” (கோயிற்பு.பதஞ்.66);.

     [Skt. nir-mita → த. நிருமிதி.]

நிருமூடன்

 நிருமூடன் nirumūṭaṉ, பெ.(n.)

   முழுதும் அறிவற்றவன்; man of utter ignorance.

     [Skt. nir- {} → த. நிருமூடன்.]

நிருமூடம்

 நிருமூடம் nirumūṭam, பெ.(n.)

   முழுதும் அறிவின்மை; utter ignorance.

     [Skt. nir-{} → த. நிருமூடம்.]

நிருமூடி

நிருமூடி nirumūṭi, பெ.(n.)

   1. முழுதும் அறிவற்றவள்; an utterly ignorant woman.

   2. உதவுங் குணமில்லாதவன் (இ.வ.);; miserly woman.

     [Skt. nir- {} → த. நிருமூடி.]

நிருமூலம்

 நிருமூலம் nirumūlam, பெ.(n.)

நிர்மூலம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

நிருமூலி

 நிருமூலி nirumūli, பெ.(n.)

நிர்மூலி பார்க்க;see {}. (சா.அக.);.

நிருமூளி

நிருமூளி nirumūḷi, பெ.(n.)

நிருமூடி, 2 பார்க்க;see {}.

நிருவகம்

 நிருவகம் niruvagam, பெ.(n.)

நிருவாகம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

நிருவகி-த்தல்

நிருவகி-த்தல் niruvagittal,    4 செ.குன்றாவி. (v.t.)

நிர்வகி- (வின்.); பார்க்க;see nirvagi.

நிருவசனம்

நிருவசனம் niruvasaṉam, பெ.(n.)

நிருத்தி (பி.வி.50, உரை); பார்க்க;see nirutti.

     [Skt. nir-vacana → த. நிருவசனம்.]

நிருவாககன்

 நிருவாககன் niruvāgagaṉ, பெ.(n.)

நிர்வாகி பார்க்க;see {}.

     [Skt. nir-{} → த. நிருவாககன்.]

நிருவாகசபை

 நிருவாகசபை niruvākasabai, பெ.(n.)

நிர்வாகசபை பார்க்க;see {}.

     [Skt. nir-{} → த. நிருவாகம்+சபை.]

நிருவாகன்

 நிருவாகன் niruvākaṉ, பெ.(n.)

நிர்வாகி பார்க்க;see {}.

     [Skt. {} → த. நிருவாகன்.]

நிருவாகம்

 நிருவாகம் niruvākam, பெ.(n.)

நிர்வாகம் பார்க்க (வின்.);;see {}.

நிருவாகி

 நிருவாகி niruvāki, பெ.(n.)

நிர்வாகி (வின்.); பார்க்க;see {}.

நிருவாசம்

 நிருவாசம் niruvācam, பெ.(n.)

   குடியின்மை (யாழ்.அக.);; the state of being uninhabited.

     [Skt. nir- {} → த. நிருவாசம்.]

நிருவாணதீக்கை

 நிருவாணதீக்கை niruvāṇatīkkai, பெ.(n.)

நிருவாணதீட்சை (சி.போ.பா.சிறப்.); பார்க்க;see {}.

     [Skt. {} → த. நிர்வாணதீக்கை.]

நிருவாணதீட்சை

 நிருவாணதீட்சை niruvāṇatīṭcai, பெ.(n.)

   சிவதீக்கை மூன்றில் ஒன்று; the last of three introducing rites & ceremony of initiation by a spiritual Guru according to Saiva system (சா.அக.);.

நிருவாணம்

நிருவாணம் niruvāṇam, பெ.(n.)

   1. நிர்வாணம், 1 பார்க்க;see {}.

     “நித்திரை தெளியுமாபோல நிருவாண நிலைமெய்யாமே” (கைவல்.தத்வ.56);.

   2. நிர்வாணதீட்சை பார்க்க;see {}.

     “தரித்துச்சமய விசேட நிருவாணம்” (சைவச.மாணாக்.29);.

   3. நூற்றெட்டு துணைத் தொன்மங்களுளொன்று; an upanisad, one of 108.

     [Skt. {} → த. நிருவாணம்.]

நிருவாணி

நிருவாணி niruvāṇi, பெ.(n.)

   1. ஆற்றல் (சக்தி);; the universal energy represented in the form of a naked woman.

   2. பெண் தெய்வ பத்து ஆற்றல்களுளொன்று (தேவிதச வித்தை களிலொன்று);; one of the ten active powers of the female energy or deity (சா.அக.);.

நிருவாலி

 நிருவாலி niruvāli, பெ. (n.)

   காட்டுப்பூவரசு; false fern tree-folicium decipiens.

நிருவிகற்பசமாதி

நிருவிகற்பசமாதி1 niruvigaṟpasamāti, பெ.(n.)

நிர்விகற்பசமாதி பார்க்க;see {}.

 நிருவிகற்பசமாதி2 niruvigaṟpasamāti, பெ.(n.)

   சவ்விகற்ப சமாதி முற்றி அருளம்மை யால் அறிவிக்கப்பட்ட அருளாளன் ஆகிய அப்பனை அறிந்த ஞான்றே சிவதத்துவங் களும் அவற்றின் செயற்கைகளும் நன்கு விளங்கப் பெற்று, அந்தப் பரம்பொருளைக் கூடி நின்று விட்டுப் பிரியாது மகிழ்வது; a state of ecstacy which one obtains wisdom by the grace of the diety and enjoys the bliss by the union with the almighty (சா.அக.);.

 நிருவிகற்பசமாதி3 niruvigaṟpasamāti, பெ.(n.)

   தன்னை மறந்து தூக்கமுறும், மயக்கம் போல பிறர் சத்தம் காதிற் கேளாது ஐம்புலனும் ஒடுங்கி, சித்தமானது பூரணத்தில் இலயித் திருக்கும் ஓர் ஒக நிலை, விவகாரத்தாலே உலகமே பொய்யென்று உணர்ந்து உலக பாசத்தைத் தள்ளி நிற்பதினால் அடையும் மெய்யுணர்வு (சைதன்ய); நிலை; that state of perfect and spiritual ecstacy experienced by a sitting yogi, in which he remains in audible to the surrounding disturbances being absorbed in eternal bliss. Saitanyam is a stage where nothing exists but the transformation of mental consciousness in the form of Atman (soul);. It is an abstract meditation (சா.அக.);.

நிருவிகற்பநிட்டை

நிருவிகற்பநிட்டை niruvigaṟpaniṭṭai, பெ.(n.)

நிர்விகற்பசமாதி பார்க்க;see {}.

     “நிருவிகற்ப நிட்டை நிலையென்று வருமோ வறியேனே” (தாயு.உடல்பொய்.32);.

நிருவிகற்பமாதல்

 நிருவிகற்பமாதல் niruvigaṟpamātal, பெ.(n.)

   விவகாரத்தாலே உலகமே பொய் யென்று தனக்குள் நினைத்து உலக பாசத்தைத் தள்ளி மெய்யுணர்வு (சைதன்ய); நிலையை அடைதல்; that state of insensibility to one’s own surroundings, arrived at by a practising yogi by renunciation being appraised of the supreme knowledge that the material world is false. This stage can only be acquired by those who attain super natural illumination without the aid of physical or mental organs (சா.அக.);.

நிருவிகற்பம்

நிருவிகற்பம் niruvigaṟpam, பெ.(n.)

   1. நிர்விகற்பக்காட்சி (சி.சி.11, சிவாக்.); பார்க்க;see {}.

   2. நிர்விகற்ப சமாதி பார்க்க;see {}.

     “விரைந்தே நிருவிகற்ப மெய்த” (தாயு. உடல்பொய்.39);.

     [Skt. nir-vikarpa → த. நிருவிகற்பம்.]

நிருவிகற்பவாழ்க்கை

 நிருவிகற்பவாழ்க்கை niruvigaṟpavāḻggai, பெ.(n.)

   பேசாதிருத்தல்; to remain silent (சா.அக.);.

நிருவிக்கினம்

 நிருவிக்கினம் niruvikkiṉam, பெ.(n.)

   இடையூ றின்மை; absence of obstacles.

     [Skt. nir-Vighna → த. நிருவிக்கினம்.]

நிருவிசாரம்

 நிருவிசாரம் niruvicāram, பெ.(n.)

   கவலை யின்மை; absence of anxiety.

     [Skt. nir- {} → த. நிருவிசாரம்.]

நிருவிடம்

 நிருவிடம் niruviḍam, பெ.(n.)

   மருந்துவகை (யாழ்.அக.);; a kind of medicine.

     [Skt. nir-visa → த. நிருவிடம்.]

நிருவிடயானந்தம்

நிருவிடயானந்தம் niruviḍayāṉandam, பெ.(n.)

   புலனுணர்ச்சிக்கு எட்டாத களிப்பு; supreme bliss, not enjoyed by the sense.

     “கூடார் நிருவிடயானந்தசுக நீங்காத நோக்கும்” (ஒழிவி.அவத்தை.39);.

     [Skt. nir-visaya+{}-nanda → த. நிருவிட யானந்தம்.]

நிருவேதுகம்

நிருவேதுகம் niruvētugam, பெ.(n.)

நிரேதுகம் (சி.சி.8, 2, சிவாக்.);;see {}.

     [Skt. {} → த. நிருவேதுகம்.]

நிரூகணம்

 நிரூகணம் nirūkaṇam, பெ.(n.)

   எருவாய் வழியாக வழலை நீர் ஏற்றி மலங்கழிக்கும்படிச் செய்தல்; causing to purge with the aid of a clyster (சா.அக.);.

நிரூகம்

நிரூகம்1 nirūkam, பெ.(n.)

   மலங் கழிவதற்காக குதவாயில் உள்ளே வைக்கப்படும் ஒரு பொறி; a purging clyster, an enema not of an oil kind (சா.அக.);.

 நிரூகம்2 nirūkam, பெ.(n.)

   1. உறுதி (யாழ்.அக.);; certainty.

   2. சொற்போர்; logic, disputation.

   3. வெளிப்படைச் சொல்; explicit- term.

     [Skt. nir-{} → த. நிரூகம்.]

நிரூகவத்தி

 நிரூகவத்தி nirūkavatti, பெ.(n.)

   வடிநீர் முதலியவற்றை எருவாய் வழியாய் உள்ளுக்குச் செலுத்திக் குடலைக் கழுவல்; a liquid form of medicine as decoction etc. thrown into the rectum by a clyster (சா.அக.);.

நிரூடபசுபந்தம்

 நிரூடபசுபந்தம் nirūṭabasubandam, பெ.(n.)

   வேள்வி வகையுளொன்று (வின்.);; a kind of sacrifice.

     [Skt. {}-bandha → த. நிரூடபசு பந்தம்.]

நிரூடி

நிரூடி nirūṭi, பெ.(n.)

   1. நெட்டுரு; rote.

   2. தெளிவு; clearness, certainty.

     [Skt. {} → த. நிரூடி.]

நிரூபணம்

நிரூபணம்1 nirūpaṇam, பெ.(n.)

   இசைப்பாட்டு வகையான வரலாற்று நூலின் முதலில் அவ் வரலாற்றைச் சுருக்கிக்கூறும் பகுதி (கோபால கிருஷ்ண பாரதி, 39);; section containing the argument of a story, in musical composition.

     [Skt. {} → த. நிரூபணம்.]

 நிரூபணம்2 nirūpaṇam, பெ.(n.)

   மெய்ப்பித்தல்; to prove (சா.அக.);.

 நிரூபணம்3 nirūpaṇam, பெ.(n.)

   1. ஆராய்ச்சி; investigation.

   2. செயல்முறை விளக்கம்; demonstration.

     “சிவாபாவநா நிரூபணம்” (சி.சி.6, 7, சிவாக்.);.

     [Skt. {} → த. நிரூபணம்.]

நிரூபன்

 நிரூபன் nirūpaṉ, பெ.(n.)

 god, as formless.

     [Skt. {} → த. நிரூபன்.]

நிரூபம்

 நிரூபம் nirūpam, பெ.(n.)

   உருவில்லாமை; shapelessness (சா.அக.);.

நிரூபாவர்த்தம்

 நிரூபாவர்த்தம் nirūpāvarttam, பெ.(n.)

   உயர் மணி வகை (யாழ்.அக.);; a kind of gem.

நிரூபி-த்தல்

நிரூபி-த்தல் nirūpittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. மெய்ப்பித்தல்; to prove, demonstrate.

   2. ஆராய்தல் (வின்.);; to examine, investigate, search.

     [Skt. {} → த. நிரூபி-,]

நிரூபிதம்

நிரூபிதம் nirūpidam, பெ.(n.)

   உறுதிப்படுத்தப் பட்டது; that which has been ascertained or proved.

     “நிரூபிதமான வஸ்துவை நானறிந்தேன்” (சி.சி.பு., 5, சிவாக்.);.

     [Skt. ni-{} → த. நிரூபிதம்.]

நிரேசுவரசாங்கியம்

 நிரேசுவரசாங்கியம் nirēcuvaracāṅgiyam, பெ.(n.)

நிரீச்சுவரசாங்கியம் (யாழ்.அக.);;see {}.

நிரேதுகம்

நிரேதுகம் nirētugam, பெ.(n.)

   ஏதுவற்றது; that which is causless.

     “ஜகத்து நிரேதுகமென்றது தள்ளப்பட்டது” (சி.சி.1, 1, சிவாக்.);.

     [Skt. {} → த. நிரேதுகம்.]

நிரை

நிரை1 niraidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வரிசையாதல்; to be in a row; to form a column.

   2. முறைப்படுதல்; to be regular, orderly.

   3. திரளாதல்; to crowd, swarm.

     “நிரைவிரி சடைமுடி” (தேவா. 994.9.);.

     [நிர → நிரை.]

 நிரை2 niraittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. ஒழுங்காய் நிறுத்துதல்; to arrange in order, classify,

     “முட்ட நித்தில நிரைத்த பந்தரில்” (பாரத. கிருட்டிண.103.);.

   2. நிரப்புதல்; to crowd, cluster

     “நிரைதிமில் வேட்டுவா (மதுரைக்.116.);.

   3. பரப்புதல்; to spread over.

     “நெடுங்கழைக் குறுந்துணி நிறுவி மேனிரைத்து” (கம்பரா. சித்திர.46.);.

   4. கோத்தல்; to string together,

     “நிணநிரை வேலார்” (பு.வெ.1,9.);.

   5. நிறைவேற்றுதல்; to fulfil, accomplish, perform.

   6. தனித் தனியாகச் சொல்லுதல் (வின்.);; to enumerate, say, declare.

   7. ஒலித்தல் (வின்.);; to sound.

     [நிர → நிரை.]

 நிரை3 niraidal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. நிரப்புதல் (யாழ்ப்.);; to make full, crowd fill up by adding thing to thing.

     “வயிறு நிரைந்த மட்டும் உண்டேன் ” (உ.வ.);

   2. ஒழுங்காக்குதல்; to place in row

   3. ஓலை முதலியவற்றை வரிசையாக வைத்து மறைத்தல்; to hide or cover as with plaited leaves.

தோட்டம் மூன்றுபுறமும் நிரைந்திருக்கிறது (உ.வ.);.

   4. முடைதல்; to plait

வீடுவேயக் கிடுகு நிரைகிறார்கள் (உ.வ.);.

     [நிர → நிரை.]

 நிரை4 niraidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. திரளுதல்; to swarm, crowd together

     “மேகக் குழாமென நிரைத்த வேழம்” (சீவக.1859.);.

   2. அவைகூட்டுதல்; to form an assembly,

     “மறுநிலை மைந்தனை நிரைத்துக் கிளைகொள் வழக்குய்த்தலும்” (கல்லா.43.21.);.

   3. தொடர்ந்து வருதல்; to follow in succession

     “நிரைத்த தீவினை நீங்க” (சீவக.1603.);.

     [நிர → நிரை]

 நிரை5 nirai,    4 பெ. (n.)

   1. வரிசை; row,column, line, train, Serie S.

     “நிரைமனையிற் கைந்நீட்டுங் கெட்டாற்று வாழ்க்கையே நன்று” (நாலடி,288.);.

   2. ஒழுங்கு (சூடா.);; order, regularity, arrangement system.

   3. கொடிப்படை (திவா.);; van of an army.

   4. படைவகுப்பு (யாழ்.அக.);; array of an army. military division.

   5. மறை சொற்களை மேன்மேலுங் கூட்டியோதும் முறை; a mode of reciting vedic text.

   6. கோபுரம்; temple tower,

     ”உயர்ந்தோங்கிய நிரைப் புதவின்” (மதுரைக்.65.);.

   7. கூட்டம்; collection, pack herd,

     “சிறுகட் பன்றிப் பெருநிரை” (அகநா.94.);.

   8. ஆன்மந்தை

 herd of cows.

     “கணநிரை கைக்கொண்டு” (பு.வெ.1,9.);.

   9. ஆன் (பிங்.);; cow.

   10. நிரையசை (காரிகை.); பார்க்க; see {nirai-y-asai.}

   11. விளையாட்டு வகை (யாழ்.அக.);; a kind of game.

   12. எடை; weight.

   13. வலிமை; strength.

ம. நிர. தெ. தெறி. க. நிரி.

     [நிர → நிரை.]

நிரைகவர்தல்

 நிரைகவர்தல் niraigavartal, பெ. (n.)

நிரைகோடல் பார்க்க; see nirai-kõdal.

     [நிரை + கவர்தல்.]

நிரைகிளம்பி

 நிரைகிளம்பி niraigiḷambi, பெ. (n.)

   சினையாடு (சங்.அக.);; a pregnant sheep.

     [நிரை+ கிளம்பி.]

நிரைகோடல்

 நிரைகோடல் niraiāṭal, பெ. (n.)

   போர்த் தொடக்கமாகப் பகைவர் ஆன்மந்தையைக் கவர்கை; seizing the cattle of one’s enemy. considered as the chief mode of declaring war in ancient times.

     [நிரை + கோடல்.நிர → நிரை, கொள் + தல் = கொள்தல் → கொள்ளல் → (கொள்ளுதல்); → கோள் + தல் → கோடல்.]

நிரைகோட்பறை

நிரைகோட்பறை niraiāṭpaṟai, பெ. (n.)

   நிரைகவரும்போது அடிக்கும் பாலைப் பறைவகை (இறை.கள.1.18.);; drum for capturing cows, peculiar to {palai tract.}

     [நிரைகோள் + பறை.]

நிரைகோள்

நிரைகோள் niraiāḷ, பெ. (n.)

நிரைகோடல் பார்க்க; see nirai-kodal.

     “கொடுங்காற் சிலையர் நிரைகோ ளுழவர்” (திவ். இயற். திருவிருத்.37.);.

     [நிரை + கோள்.]

நிரைக்கட்டை

 நிரைக்கட்டை niraikkaṭṭai, பெ. (n.)

உல்லடைப்பு (புதுவை);,

 damming a river with stockade.

     [நிரை → கட்டை.]

நிரைக்கழு

நிரைக்கழு niraikkaḻu, பெ. (n.)

   எயிற்கதவுக்குக் காவலாக வைக்கப்படும் ஒருவகை முட்கழு (சிலப்.15.213.உரை.);; splkes set up to protect gates and walls; palisade.

     [நிரை → கழு.]

நிரைசல்

நிரைசல் niraisal, பெ. (n.)

நிரைச்சல், 1 (வின்.); பார்க்க; see nirajccal.

     [நிரைச்சல் → நிரைசல்.]

நிரைச்சம்

நிரைச்சம் niraiccam, பெ. (n.)

நிரைச்சல், 1,2 (இ.வ.); பார்க்க; see niraiccal 1,2.

     [நிரைச்சல் → நிரைச்சம்.]

நிரைச்சல்

நிரைச்சல் niraiccal, பெ. (n.)

   1. ஓலை முதலியவற்றாலிடும் அடைப்பு

 screen, hedge with stakes covered with plam leaves in regular order.

   2. இரவல் (வின்.);; loan of articles to be returned.

   3. சூதுவிளையாட்டு வகை (யாழ்.அக.);; a game with squares marked on the ground.

   4. படையின் முன்னணி (யாழ்.அக.);; vanguard,

   5. படைவகுப்பு (யாழ்.அக.);; disposition or array of an army.

க. நெரகே.

     [நிரை → நிரைச்சல், நிரை = கொடிப்படை, கூட்டம். விளையாட்டு.]

நிரைதல்

 நிரைதல் niraidal, பெ. (n.)

   மறைப்பு; keep out of sight, hide.

நிரைத்தாலி

நிரைத்தாலி niraittāli, பெ. (n.)

   ஒரு வகைத்தாலி (சிலப்.121;28உரை.);; a kind of {tai.}

     [நிரை + தாலி. நிரை-வரிசை.]

நிரைநிறை

 நிரைநிறை nirainiṟai, பெ. (n.)

நிரனிறை (வின்.); பார்க்க; see niranirai.

     [நிரல் + நிறை.]

நிரைந்துகாட்டு-தல்

நிரைந்துகாட்டு-தல் niraindukāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விளக்கிக்கூறுதல் (வின்.);; to explain seriatim in detail.

     [நிரை = நிரப்புதல், வரிசையாதல், முறைப்படுதல். நிரை → நிரைந்து + காட்டு-,]

நிரைபசை

 நிரைபசை niraibasai, பெ. (n.)

   முற்றியலு கரத்தாலேனும் குற்றியலுகரத்தாலேனும் தொடரப்படும் நிரையசை; a {nirai-y-ašai} followed by ‘u’ or shortened ‘u’.

     [நிரை → நிரைபு. நிரைபு + அசை.]

குறிலினையும் குறினெடிலும் ஒற்றடுத்தும் ஒற்றடாதும் இணைந் தொலிப்பது நிரையசை.

நிரைபு

நிரைபு niraibu, பெ. (n.)

நிரைபசை (தொல். பொருள்.327. உரை.);பார்க்க; see niraibasai.

     [நிரை. → நிரைபு.]

நிரைபுலிப்பற்றாலி

நிரைபுலிப்பற்றாலி niraibulibbaṟṟāli, பெ. (n.)

   வலிய புலியின் பற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தாலி (சிலப்.12;28.உரை.);;{tāli} with tiger’s teeth.

     [நிரை + புலிப்பல் + தாலி.]

வலிமை வாய்ந்த புலியின் வாயைப் பிளந்து உதிர்த்த பற்களை வரிசையா யமைத்துச் செய்யப்பட்ட தாலி.

நிரைபூத்தி

 நிரைபூத்தி niraipūtti, பெ. (n.)

   கோடகசாலை எனும் ஒரு வகைப்பூடு; a very small plant called ködagašālai.

     [நிரை + பூத்தி.]

நிரைபெயர்-த்தல்

நிரைபெயர்-த்தல் niraibeyarttal,    4செ.கு.வி. (v.i.)

   பகைவர் கைக்கொண்ட ஆனிரைகளைத் திரும்பக் கைப்பற்றல்; to recover cattle seized by one’s enemy.

     “தலைக்கொண்ட நிரைபெயர்த் தன்று” (பு.வெ.2.1.கொளு.);.

     [நிரை + பெயர்-,]

நிரைப்பு

 நிரைப்பு niraippu, பெ. (n.)

   ஒழுங்கு (பாண்டி.);; Order.

     [நிரல் → நிரை → நிரைப்பு.]

நிரைமணி

 நிரைமணி niraimaṇi, பெ. (n.)

   அவுரி; indigo-feratinctoria

நிரைமீட்சி

 நிரைமீட்சி niraimīṭci, பெ. (n.)

   பகைவர் கவர்ந்த ஆனிரை மீட்கை; recovering the cattle seized by one’s enemy.

     [நிரை + மீட்சி.]

நிரை = கூட்டம், ஆன்மந்தை.

மீள் → மீட்சி.

நிரைமீட்டல்

நிரைமீட்டல் niraimīṭṭal, பெ. (n.)

நிரைமீட்சி (பு.வெ.2.1.கொளு.உரை.); பார்க்க; see nirai-miţci.

     [நிரை + மீட்டல். நிரை = கூட்டம், ஆன்மந்தை (ஆநிரை); மீள் + தல் – மீள்தல் → மீட்டல்.]

நிரையசை

நிரையசை1 niraiyasai, பெ. (n.)

   இணைக்குறிலாலேனும் ஒற்றடுத்த இணைக் குறிலாலேனும் குறில்நெடிலாலேனும் ஒற்றடுத்த குறில் நெடிலாலேனும் ஆகிய செய்யுளசை; metrical syllable made up either of two short vowels as veri or of two short vowels followed by a consonant as {niram.} or of a short and a long vowel as {cură,} or of a short and a long vowel followed by a consonant as villiâm.

     “குறிலிணை குறினெடிற்றனித்து மொற்றடுத்து நெறிவரு நிரையசை நான்குமாகும்” (இலக்கணவி.714.);.

     [நிரை + அசை.]

இணைக்குறில்-வெறி.

ஒற்றடுத்த இணைக்குறில்-நிறம். குறில் நெடில்-சுறா. ஒற்றடுத்த குறில்நெடில்-விளாம்.

நிரையணி

 நிரையணி niraiyaṇi, பெ. (n.)

   அவுரி (வைத்தியபரிபா.);; indigo plant.

     (கதி.அக.);.

நிரையநிலம்

நிரையநிலம் niraiyanilam, பெ. (n.)

   நிரையம் (நீலகேசி, 75.உரை.);; hell.

     [நிரையம் + நிலம்.]

நிரையம்

நிரையம் niraiyam, பெ. (n.)

   மாந்தப் பிறவியில் தீவினை செய்வோர் இறப்புக்குப்பின் சென்ற டைவதாகக் கருதப்படுவது; hell.

     “நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம்” (பதிற்றுப்.15.);.

நிரையாடல்

 நிரையாடல் niraiyāṭal, பெ. (n.)

   தரையிற் சதுரக்கோடு கீறிக் கற்களை வைத்து ஆடும் விளையாட்டுவகை (யாழ்ப்.);; playing with stones an squares drawn on the ground.

     [நிரை + ஆடல்.]

நிரை = கூட்டம், கூடியாடும் விளையாட்டு, விளையாட்டு வகை.

நிரை ஆடல். ஆடுதல் → ஆடல்.

     [P]

நிரையொன்றாசிரியத்தளை

நிரையொன்றாசிரியத்தளை niraiyoṉṟāciriyattaḷai, பெ. (n.)

   ஆசிரியப்பாவில் நிரையீற்றியற்சீர்முன் நிரைமுதலியற்சீர் வந்து ஒன்றுந் தளை (காளிகை.உறுப்.10.);; metrical connection in {așiriyappa} between any two adjoining {cir} where the last syllable the preceding and the first syllable of the preceding and the first syllable of the succeeding {cir} are nirai.

     [நிரை + ஒன்றாசிரியத்தளை.]

     “திருமழை தலைஇய இருணிற விசும்பின் விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணமைந் தவர்தேர் சென்ற வாறே.”

இது நிரையொன்றாசிரியத் தலையால் வந்த செய்யுளாகும்.

நிரோகி

 நிரோகி nirōki, பெ.(n.)

   நோயில்லாதவன்; one free from disease, healthy man (சா.அக.);.

நிரோசாதம்

நிரோசாதம் nirōcātam, பெ.(n.)

நிரோதி பார்க்க;see {}.

     “விரற்புகை நிரோசாதம்” (தத்துவப். 140);.

     [Skt. {} → த. நிரோசாதம்.]

நிரோட்டகம்

 நிரோட்டகம் nirōṭṭagam, பெ.(n.)

   இதழி யைந்து பிறவா எழுத்துகளால் ஆகிய செய்யுள் – திருச்செந்தில் நிரோட்டகயமக வந்தாதி; a kind of verse Without labial or labiodentals.

த.வ. இதழகல்பா

     [Skt. nir – {} → த. நிரோட்டகம்.]

நிரோட்டம்

 நிரோட்டம் nirōṭṭam, பெ.(n.)

நிரோட்டகம் பார்க்க;see {}.

     [Skt. nir- {} → த. நிரோட்டம்.]

நிரோட்டி

நிரோட்டி nirōṭṭi, பெ.(n.)

   நிரோட்டகம் (யாப்.வி.510); (pros.);; poem composed without using the labials.

     [Skt. nir- {} → த. நிரோட்டி.]

நிரோட்டியம்

நிரோட்டியம் nirōṭṭiyam, பெ.(n.)

நிரோட்டகம் பார்க்க;see {}.

     “இதழ் குவிந்தியையா தியல்வது நிரோட்டியம்” (மாறனலங். 274);.

     [Skt. nir- {} → த. நிரோட்டியம்.]

நிரோட்டியவோட்டியம்

நிரோட்டியவோட்டியம் nirōṭṭiyavōṭṭiyam, பெ.(n.)

   செய்யுளின் முற்பாதி நிரோட்டியம் பிற்பாதி ஒட்டியமுமாகப் பாடும் பா (கவி); (மாறனலங்.276, உரை);; a stanza in which the first half is {} and the second half {}.

     [Skt. nir- {} → த. நிரோட்டிய வோட்டியம்.]

நிரோதகரணி

 நிரோதகரணி nirōtagaraṇi, பெ.(n.)

   மின்சார சத்தியைத் தடுக்கும் பொருள்; a substance which does not transmit electricity (சா.அக.);.

நிரோதனை

நிரோதனை nirōtaṉai, பெ.(n.)

   புலனடக்கம்;     “வீரனிரோதனை யம்பிற் கொன்றான்” (சீவக.3080);.

     [Skt. {} → த. நிரோதனை.]

நிரோதம்

நிரோதம்1 nirōtam, பெ.(n.)

   1. தடை; impediment, pediment, hindrance.

   2. அடக்கம்; restraint, control.

     [Skt. {} → த. நிரோதம்.]

 நிரோதம்2 nirōtam, பெ.(n.)

   சுருக்கம்; stricture (சா.அக.);.

நிரோதானமுத்திரை

நிரோதானமுத்திரை nirōtāṉamuttirai, பெ.(n.)

   சிறுவிரலை நீக்கி ஏனைய விரல்களை நுனிகள் பொருந்தச் சேர்த்துக் குவிக்கும் முத்திரை வகை (சைவாநுட்.வி.17);;     [Skt. {} → த. நிரோதான+முத்திரை.]

நிரோதி

நிரோதி nirōti, பெ.(n.)

   உடம்பிலுள்ள 16 வகையான மந்திர நிலைகளுள் (சோட கலையுள்); ஒன்று;     “சந்திரன்மேல் நிரோதிநாதம்” (செந்., 9, 248);.

     [Skt. {} → த. நிரோதி.]

நிரோதினி

நிரோதினி nirōtiṉi, பெ.(n.)

நிரோதி பார்க்க (தத்துவப்.130, உரை);;see {}.

     [Skt. {} → த. நிரோதினி.]

நிர்கதம்பம்

 நிர்கதம்பம் nirkadambam, பெ.(n.)

   நெஞ்சாங்குலையின் உட்புறத்து சவ்விற்குக் காணும் அழற்சி, இது ஊதைச்சூலை, மிகு காய்ச்சல் முதலிய நோய்களிற் காணும்; inflammation of the epithecial lining of the heart (endocardium); – Endocarditis. It is generally associated with acute rhemtism nad febrile diseases (சா.அக.);.

நிர்கூடம்

 நிர்கூடம் nirāṭam, பெ.(n.)

   மரப் பொந்து; hallow of a tree.

நிர்க்கததண்டனம்

நிர்க்கததண்டனம் nirkkadadaṇṭaṉam, பெ. (n.)

   தயாவிருத்தி பதினான்கனுள் தண்டனை யினின்று பிறனை விடுவிக்கை. (வின்.);; releasing or saving one from punishment, one of 14 {}.

     [Skt. nirgata-dandana. → த. நிர்க்கதண்டனம்]

நிர்க்கதி

 நிர்க்கதி nirkkadi, பெ. (n.)

   கதியின்மை; complete absence of refuge, utter helplessness.

த.வ. காப்பிலி

     [Skt. nir – gati. Dana. → த. நிர்க்கதி]

நிர்க்கந்தன்

 நிர்க்கந்தன் nirkkandaṉ, பெ. (n.)

   அருகக் கடவுள்; Arhat.

     [Skt.ni –grantha → த. நிர்க்கந்தன்]

நிர்க்கந்தவாதி

நிர்க்கந்தவாதி nirkkandavāti, பெ. (n.)

   சைனரில் பிரிவினராகிய நிகண்டவாதி. (மணி/27.167, / மே அடிக்குறிப்பு.);; a jainasect.

     [Skt. ni -grantha → த. நிர்க்கந்தவாதி]

நிர்க்கிரந்தம்

நிர்க்கிரந்தம் nirkkirandam, பெ. (n.)

   1. தங்கு தடையில்லாமை; free from all ties and hindrances.

   2. உலகத்தை வெறுத்து துறவறம் பூண்டு அம்மணமாய்த் திரியும் துறவி

 a saint who has withdrawn from the world, living as a hermit or religious mendicant and wandering about naked. (சா.அக.);

நிர்க்குணசைவம்

நிர்க்குணசைவம் nirkkuṇasaivam, பெ. (n.)

   சைவம் பதினாறனுள் சிவனைக் குணமற்ற வனாக எண்ணி ஊழ்கம் செய்ய (தியானம்); வேண்டும் என்று கூறும் சமயம்; a {} sect which holds that {} should be contemplated as the attributeless being, one of 16 saivam, i.v.);; releasing or saving one from punishment, one of 14

{} i.v.

     [Skt. nir-guna → த. நிர்க்குணசைவம்]

நிர்க்குணன்

நிர்க்குணன் nirkkuṇaṉ, பெ. (n.)

   1. (குண மற்றவன்); கடவுள்; god, as without attributes.

   2. குணமிகவுடையவன் (சி. போ. பா. 9, 2, பக். 195.);; one who is beyond all attributes.

     [Skt. nir-guna → த. நிர்க்குணன்]

நிர்க்குணம்

நிர்க்குணம் nirkkuṇam, பெ. (n.)

   1. குண மில்லாமை.

     “சுத்த நிர்க்குணமான பர தெய்வமே” (தாயு. சுகவாரி. 1);;

 being devoid of qualities, attributes, etc.

   2. இழிகுண மில்லாமை; being devoid of evil qualities. [Skt. nir-guna → த. நிர்க்குணம்]

நிர்க்குணி

நிர்க்குணி nirkkuṇi, பெ. (n.)

மணமகள் (பார்வதி); (கூர்மபு. திருக்கலியாண. 23);;{}.

   2. குணமிகவுடையவன் (சி.போ. பா. 9, 2, பக். 195.);; one who is beyond all attributes.

     [Skt. nir-guna → த. நிர்க்குணி]

நிர்க்குண்டி

நிர்க்குண்டி1 nirkkuṇṭi, பெ. (n.)

   நொச்சி (திவா.);; a species of chaste tree.

 நிர்க்குண்டி2 nirkkuṇṭi, பெ. (n.)

   தாமரைக் கிழங்கு; lotus root.

 நிர்க்குண்டி1 nirkkuṇṭi, பெ. (n.)

நொச்சி (திவா.);,

 a species of chaste tree.

     [Skt. ni rgundi → த. நிர்க்குண்டி]

 நிர்க்குண்டி2 nirkkuṇṭi, பெ. (n.)

   1. வெண் ணொச்சி; white notchi.

   2. தாமரைக் கிழங்கு; lotus root.

   3. கருநொச்சி; black variety of five leaved chaste tree. (சா.அக.);.

நிர்க்கோத்திரம்

நிர்க்கோத்திரம் nirkāttiram, பெ. (n.)

கோத்திரமின்மை. (சிலப், 10, 188, உரை.);

 the state of belonging to no family.

     [Skt. nir-{} → த. நிர்க்கோத்திரம்]

நிர்ச்சரம்

நிர்ச்சரம் nirccaram, பெ.(n.)

   கடுபாறையிற் கிடத்தல், தலைமயிர் பறித்தல், முதலிய சமண சமய நோன்பு (சி. போ. பா. அவைய. 12);;     [Skt. {} → த. நிர்ச்சரம்]

நிர்ச்சரை

நிர்ச்சரை nirccarai, பெ.(n.)

   நவபதார்த்தத்து ளொன்றும் சஞ்சித கர்மத்தை அழிக்க வல்லதுமான சமணதத்துவம். (சீவக, 2814, உரை.);;     [Skt. {} → த. நிர்ச்சரை]

நிர்ச்சலதேசம்

 நிர்ச்சலதேசம் nirccalatēcam, பெ. (n.)

   நீர் வறட்சியுள்ள நாடு; dry or barren country. (சா.அக.);

நிர்ச்சலம்

நிர்ச்சலம்1 nirccalam, பெ.(n.)

   1. நீரின்மை. “நிர்ச்சலமான பிரதேசம்; being waterless.

   2. நீருமுண்ணாப்பட்டினி; fasting without even drinking water, as in {} (உ.வ.);.

     [Skt. {} → த. நீர்ச்சலம்]

 நிர்ச்சலம்2 nirccalam, பெ.(n.)

அசைவின்மை. state of rest or inactivity.

     “நிர்ச்சல நிஸ்தரங்க போதப்பிராவக சமாதியிலும்” (சி.சி. 8, 22, ஞானப்.);.

     [Skt. {} – cala → த. நிர்ச்சலம்2]

நிர்ச்சலயோகி

 நிர்ச்சலயோகி nirccalayōki, பெ. (n.)

   கருமங்களை விடுத்துச் சலனமற்ற சமாதி நிலையிலுள்ள துறவி (சங். அக);; an ascetic in deep meditation, forsaking all karma;

     [Skt. {} → த. நிர்ச்சலயோகி]

நிர்ச்சலை

நிர்ச்சலை nirccalai, பெ.(n.)

   அசைவமற்ற சிவை ஆற்றல் (சிவசக்தி);; calm or undisturbed energy of {}.

     “நிர்ச்சலைகளாயிருக்கின்ற ஈசான்னியாதி மூர்த்தியந்த பஞ்சசத்தி” (சி.சி. 147, ஞானப்.);

     [Skt. {}. → த. நீர்ச்சலை]

நிர்ச்சீவனா – தல்

நிர்ச்சீவனா – தல் nirccīvaṉātal,    6 செ.கு.வி. (v.i.)

   முற்றும் சத்தியற்றுப் போதல்; to become lifeless, utterly devoid of vitality or strength.

     [Skt. {} → த. நீர்ச்சீவனா – தல்]

நிர்ணயம்

 நிர்ணயம் nirṇayam, பெ.(n)

நிருணயம் பார்க்க;see determination.

     [Skt. nir-naya. → த. நிர்ணயம்.]

நிர்ணயி – த்தல்

நிர்ணயி – த்தல் nirṇayittal,    4 செ. குன்றாவி (v.t.)

   முடிவுபடுத்துதல்; to determine, resolve.

     [Skt. nir-naya. → த. நிர்ணயி-,]

நிர்ணாயகம்

நிர்ணாயகம் nirṇāyagam, பெ. (n.)

   நிருணயிக்க உதவுவது; that which helps to determine;

 determinant.

     “இவ்வர்த்தத்திற்கு நிர்ணாயகம் இசையாயிற்று” (ஈடு, 6,1,6);.

     [Skt. {} → த. நிர்ணாயகம்]

நிர்த்தகனம்

நிர்த்தகனம் nirttagaṉam, பெ. (n.)

   சேரான் கொட்டை; marking nut – semi carpasanacardium alias sansviera roxburghiana.

 நிர்த்தகனம் nirttagaṉam, பெ.(n.)

   1. சேரான் கொட்டை; marking nut.

   2. புதைத்தல்; burying, not burning (சா.அக.);.

நிர்த்தத்துவன்

 நிர்த்தத்துவன் nirttattuvaṉ, பெ. (n.)

 god, as beyond tattuvam.

     [Skt. nistattva → த. நிர்த்தத்துவன்]

நிர்த்தனன்

நிர்த்தனன் nirttaṉaṉ, பெ.(n.)

   1. சொத்துரிமை யற்றவன்; person disqualified to hold property, as a slave, an idiot (R.f);.

   2. எளியவன்; poor man.

     [Skt. nir-dhana. → த. நிர்த்தனன்]

நிர்த்தனம்

நிர்த்தனம் nirttaṉam, பெ. (n.)

நிருத்தம்1 (உ.வ); பார்க்க;see niruttam, (சா.அக);

நிர்த்தமாராயன்

நிர்த்தமாராயன் nirttamārāyaṉ, பெ. (n.)

   நட்டுவர் தலைவன்; dancing master.

     “மும்முடிச் சோழ நிர்த்தமாராயனுக்குப் பங்கு இரண்டும்” (S.1.1.ii.274);

     [Skt. nrtta. → த. நிர்த்தமாராயன்]

நிர்த்தம்

நிர்த்தம் nirttam, பெ. (n.)

   1. நிருத்தம்1 பார்க்க;see niruttam,

     “ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக்கடவுளே” (தாயு. கருணாகர.1);

   2. வரிக்கூத்துவகை; a kind of masquerade dance.

     “தக்கபிடார் நிர்த்தந் தளிப்பாட்டு” (சிலப். 3, பக். 88, உரை);

     [Skt. nrtta. → த. நிர்த்தம்]

நிர்த்தாட்சிணியம்

 நிர்த்தாட்சிணியம் nirttāṭciṇiyam, பெ. (n.)

   இரக்கமின்மை; unkindness, merciless- ness, pitilessness, sternness.

     [Skt. {} → த. நிர்த்தாட்சிணியம்]

நிர்த்தாரணம்

நிர்த்தாரணம் nirttāraṇam, பெ. (n.)

   1. நிலை யிடுகை; setting ascertainment, establishing.

     [Skt. {} → த. நிர்த்தாரணம்]

நிர்த்தித்தம்

 நிர்த்தித்தம் nirttittam, பெ. (n.)

   கண்டங்கத்தரி; yellow berried night shade-solanum xanthocarpum.

 நிர்த்தித்தம் nirttittam, பெ.(n.)

   கண்டங்கத்திரி என்னும் முட்செடி வகை; yellow berried night shade (சா.அக);.

நிர்த்துகம்

 நிர்த்துகம் nirttugam, பெ.(n.)

   வடிநீர். (தைலவ. தைல.);; decoction

     [Skt. {} → த. நிர்த்துகம்]

 நிர்த்துகம் nirttugam, பெ. (n.)

   வடிநீர் (கசாயம்);; decoction (சா.அக.);.

நிர்த்தூளி

நிர்த்தூளி nirttūḷi, பெ. (n.)

   முழுச்சேதம்; utter destruction

     “ஆசை நிகளத்தினை நிர்த்தூளி படவுதறி”

     ” நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே” (தாயு.மெளனகுரு.1);.

     [Skt. {} → த. நிர்த்தூளி]

நிர்த்தூள்

நிர்த்தூள் nirttūḷ, பெ.(n.)

   சிறுதுகள்; atom.

     “பொருப்பை நிர்த்தூளாக்கி” (சந்திர கலாமாலை, 15);

     [Prob. nis + {} → த. நிர்த்தூள்]

நிர்த்தேசம்

நிர்த்தேசம் nirttēcam, பெ, (n.)

   கட்டளை; order, command

   2. குறித்துக் காட்டுகை

 painting out.

     “வத்து நிர்த்தேசமென” (வேதா. சூ.8);

   3. சூத்திர பீடத்தின் ஒரு பகுதி. (மணி மே.26.66 உரை);; a section of {}.

     [Skt. {} → த. நிர்த்தேசம்]

நிர்த்தேசி-த்தல்

நிர்த்தேசி-த்தல் nirttēcittal,    4 செ.குன்றாவி(v.t)

   குறித்துக்காட்டுதல்; to point out. rder, command.

     “நிர்த்தேசித்த வஸ்து” (வேதா. சூ.8, உரை);.

     [Skt. {} → த. நிர்த்தேசி-த்-தல்]

நிர்த்தேசியம்

நிர்த்தேசியம் nirttēciyam, பெ. (n.)

   கட்டளை; order, command.

   2. குறித்துக் காட்டுகை; pointing out – emphasised; point.

     [Skt. {}. → த. நிர்த்தேசியம்]

நிர்த்தொந்தம்

நிர்த்தொந்தம் nirttondam, பெ. (n.)

   1. பற்றின்மை; absence of connection or attachment.

   2. தொந்ததுக்கமின்மை; indifference to the opposite pairs of feelings, as pleasure and pain;

 stoicison.

     “நிர்த்தொந்தமாய்க்குவிதலுடன் விரிதலற்று” (தாயு சின்மய.8);.

     [Skt. nir-dvandva → த. நிர்த்தொந்தம்]

நிர்த்தோசம்

 நிர்த்தோசம் nirttōcam, பெ. (n.)

   குற்ற மின்மை; faultlessness, innocence.

     [Skt. {} → த. நிர்த்தோசம்]

நிர்நாசம்

நிர்நாசம் nirnācam, பெ.(n.)

   1. அழியாமை; indestructibility, imperishableness.

   2. முழுச்சேதாரம்; utter destruction

     [Skt. {} → த. நிர்நாசம்]

நிர்நாமன்

 நிர்நாமன் nirnāmaṉ, பெ. (n.)

 god, as nameless.

     [Skt. {} → த. நிர்நாமன்]

நிர்நாமம்

நிர்நாமம் nirnāmam, பெ.(n.)

   பெயரின்மை (சிலப் 10, 188, உரை.);; namelessness.

     [Skt. {} → த. நிர்நாமம்]

நிர்நிமித்தம்

 நிர்நிமித்தம் nirnimittam, பெ. (n.)

   காரண மின்மை; absence of cause or reason.

     [Skt. nir-nimitta. → த. நிர்நிமித்தம்]

நிர்நிமித்தியம்

 நிர்நிமித்தியம் nirnimittiyam, பெ. (n.)

நிர்நிமித்தம் (வின்); பார்க்க;see nirnimittam.

நிர்பந்தம்

நிர்பந்தம் nirpandam, பெ,(n)

   1. வலக்காரம், வல்லந்தம், வலுவந்தம்; restraint, compul- sion.

   2. துன்புறுத்துதல்; to afflict.

     [Skt. nir-bandha → த. நிர்பந்தம்]

நிர்பந்தி-த்தல்

நிர்பந்தி-த்தல் nirpandittal,    4 செ. குன்றாவி (v.t.)

   1. கட்டாயப்படுத்துதல்; to force, compel.

   2. துன்புறுத்துதல்; to afflict.

     [Skt. nirbandh. → த. நிர்வந்தி – த்தல்]

நிர்பாக்கியம்

 நிர்பாக்கியம் nirpākkiyam, பெ. (n.)

   போகூழ்; unluckiness, misfortune.

     [Skt. nir-{} → த.நிர்பாக்கியம்]

நிர்ப்பத்தியம்

 நிர்ப்பத்தியம் nirppattiyam,    பெ. (n);   பத்தியமின்மை; no restriction in diet;

 non – diet (சா.அக.);.

நிர்ப்பீசதீட்சை

நிர்ப்பீசதீட்சை nirppīcatīṭcai, பெ. (n.)

   சமயானுட்டானங்கள் செய்ய முடியாதவர் களுக்குத் அவற்றைச் செய்வதற்கு மாற்றாகச் செய்யும் ஒளத்திரி தீட்சைவகை. (சைவச. ஆசாரி. 62. உரை);;     [Skt. {} → த. நிர்ப்பீசதீட்சை]

நிர்ப்பீசம்

நிர்ப்பீசம் nirppīcam, பெ.(n.)

நிர்ப்பீசதீட்சை பார்க்க;see {}.

     “நிர்ப்பீசம் பீசமெனவிரண்டாய் நிகழும்” (சி.சி. 8, 3);.

     [Skt. {} → த. நிர்ப்பீசம்]

நிர்ப்பீசை

 நிர்ப்பீசை nirppīcai, பெ.(n.)

நிர்ப்பீச தீட்சை. (சங்.அக); பார்க்க;see {}.

     [Skt. nir {}. → த. நிர்ப்பீசை]

நிர்ப்புதம்

 நிர்ப்புதம் nirppudam, பெ. (n.)

நியர்ப்புதம். (வின்); பார்க்க see niyarppudam.

நிர்மதி

 நிர்மதி nirmadi, பெ. (n.)

   மனக்கவலையின்மை; tranquility, absence of anxiety.

     [Skt. nir-mati. → த. நிர்மதி]

நிர்மலதை

நிர்மலதை nirmaladai, பெ. (n.)

மலமற்றிருக்குந் தன்மை.

 the state of being spotless or pure.

     “ஸமலநிர்மலதையினாலே” (சி.சி.2,1, சிவாக்.);

     [Skt. nir mala- {}. → த. நிர்மலதை]

நிர்மலத்துவம்

 நிர்மலத்துவம் nirmalattuvam, பெ. (n.)

   தூய்மையாயிருத்தல்; the state of being pure. (சா.அக.);.

நிர்மலன்

 நிர்மலன் nirmalaṉ, பெ. (n.)

   மாசற்றவனான கடவுள்; the supreme being, as immaculate.

     [Skt. nir-mala. → த. நிர்மலன்]

நிர்மலம்

நிர்மலம்1 nirmalam, பெ. (n.)

   அழுக்கின்மை; free from dirt, freedom from impurity.

   2. தூய்மை; தெளிவு; pure.

   3. வெந்தயச் செடி; horse shoe – fenugreek. (சா.அக.);.

 நிர்மலம்2 nirmalam, பெ. (n.)

   1. மாசின்மை; immaculateness, purity.

     “நிர்மலசகித நிஷ்ப்ரபஞ்சப் பொருள்” (தாயு. திருவருள்வி.3);

   2. நிர்மதி (மதுரா);பார்க்க;see nirmadi.

     [Skt. nir-mala. → த. நிர்மலம்]

நிர்மலிபாவனம்

 நிர்மலிபாவனம் nirmalipāvaṉam, பெ. (n.)

   தேற்றாங் கொட்டை; water clearing nut. (சா.அக.);

நிர்மாணம்

நிர்மாணம்1 nirmāṇam, பெ. (n.)

   1. இயற்றுகை; production, manufacture.

   2. ஏற்பாடு (வின்);; institution, ordiance.

   3. கட்டமைப்பு; construction.

     [Skt. nir-{}. → த. நிர்மாணம்1]

 நிர்மாணம்2 nirmāṇam, பெ. (n.)

நிர்வாணம், 3 (உ.வ); பார்க்க;see nirvanam.

நிர்மானுசியம்

 நிர்மானுசியம் nirmāṉusiyam, பெ. (n.)

   மாந்த நடமாட்டமின்மை; state of being uninhabited or unfrequented by men.

     [Skt. nir – {} → த. நிர்மானுஷ்யம்]

நிர்மாலினியம்

 நிர்மாலினியம் nirmāliṉiyam, பெ. (n.)

   கண்தூய்மை அல்லது துலக்கம்; clear eyes. (சா.அக);

நிர்மாலியதரிசனம்

 நிர்மாலியதரிசனம் nirmāliyadarisaṉam, பெ. (n.)

   முந்தைய நாள் பூவொப்பனைகளைக் களைதற்குமுன் காலையிற் செய்யும் இறை வழிபாடு (நாஞ்சில்);; morning worship of a deity before the removal of the decoration done on the previous day.

     [Skt. nir {} + taricana → த. நிர்மாலிய தரிசனம்]

நிர்மாலியம்

நிர்மாலியம் nirmāliyam, பெ. (n.)

   நிர்மலம்; which see. (சா.அக.);

 நிர்மாலியம் nirmāliyam, பெ. (n.)

   பூசித்துக் கழித்த பொருள்; the remains of an offering made to a deity.

     “அர்ச்சித்து வைத்த சிர புட்பமான நிர்மானிய புட்பம் எடுத்துப்போக வந்த” (தக்கயாகப். 51, உரை);.

     [Skt. nir {} → த. நிர்மாலியம்]

நிர்மிதம்

நிர்மிதம் nirmidam, பெ. (n.)

   1. உண்டாக்கப் பட்டது. that which is created.

     “ஈச்சர நிர்மிதமான ஏகாரமும்” (த.நி.போ. பக். 115);.

   2. படைக்கை; creation, construction, production.

   3. புனைந்து கூறுகை (கற்பிதம்); (இ.வ);; fabrication.

   4. அமர்த்துகை (விதிக்கை); (வின்);; destiny; appointment, allotment.

     [Skt. nir-mita. → த. நிர்மிதம்]

நிர்மித்தல்

நிர்மித்தல் nirmittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. இயற்றுதல், அமைத்தல்; to produce by art, construct, form.

   2. நிறுவுதல் (விதித்தல்); (வின்);; to ordain, to constitute.

     [Skt. {}. → த. நிர்மாலியம்]

நிர்மூடன்

நிர்மூடன் nirmūṭaṉ, பெ. (n.)

   முழுமூடன்; absolute fool, blockhead.

     “நீணி திதனைக் கண்டாணவமான நிர்மூடனை” (திருப்பு. 44);.

     [Skt. nir-{} → த. நிர்மூடன்]

நிர்மூடி

நிர்மூடி nirmūṭi, பெ.(n.)

   1. மூடப்பெண்; stupid woman.

     “வாழும் மனைக்கு வங்காய் வந்தாயே நிர்மூடி” (ஆதியூரவதானி. 9);.

     [Skt. nir – {} → த. நிர்மூடி]

நிர்மூலம்

நிர்மூலம் nirmūlam, பெ. (n.)

   1. காரண மற்றது;   2. பாழாகை; extirpation, utter destruction.

     [Skt. nir-{}. → த. நிர்மூலம்]

நிர்மூலி

 நிர்மூலி nirmūli, பெ. (n.)

   ஒரு பூடு; aglaia minutiflora.

 நிர்மூலி nirmūli, பெ. (n.)

   ஒரு பூடு; agaia minutiflora. (சா.அக);

நிர்யாணம்

 நிர்யாணம் niryāṇam, பெ. (n.)

நிரியாணம் பார்க்க;see {}, appointment, allotment.

     [Skt. {} → த. நிர்யாணம்]

நிர்லோகம்

 நிர்லோகம் nirlōkam, பெ. (n.)

வெள்ளைப் போளம் என்னும் கடைச்சரக்கு myrrh. (சா.அக.);.

நிர்வகணம்

 நிர்வகணம் nirvagaṇam, பெ. (n.)

துய்த்தல் பார்க்க;see catastrophe of a drama.

     [Skt. nir-{} → த. நிர்வகணம்]

நிர்வகி-த்தல்

நிர்வகி-த்தல் nirvagittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. ஆளுதல், காரியம் நடப்பித்தல்; to manage, carry on one’s affairs successfully;

 to maintain, perform, fulful.

     “எப்படி நிர்வகிப்பேன்” (இராமநா. அயோத். 10);.

   2. பொறுத்தல் (வின்);; to bear, endure, sustain.

   உறுதிப்படுத்துதல் (வின்);; to make certain. {}.

     [Skt. nirvah. → த. நிர்வகி-த்தல்]

நிர்வசனீயம்

நிர்வசனீயம் nirvasaṉīyam, பெ. (n.)

நிர்வசனம்1, பார்க்க;see {}.

     [Skt. nir-vaca-niya → த. நிர்வசணீயம்]

நிர்வபனம்

 நிர்வபனம் nirvabaṉam, பெ. (n.)

   சமனப் படுத்தல்; Soothing. (சா.அக);.

நிர்வமிசியம்

 நிர்வமிசியம் nirvamisiyam, பெ. (n.)

   முதுகுத் தண்டின்மை; absence of spine, absence of back bone or verebral column; having a body consisting of single cavity enclosing all their vital organs as sponges, corals, startish, worm, centipede, spider, insect etc., it is opposed to வமிசியம். (சா.அக);.

நிர்வமீசம்

 நிர்வமீசம் nirvamīcam, பெ. (n.)

   கொடி வழியின்மை; being heirless.

த.வ. பூண்டறுதல்

     [Skt. nir-{}. → த. நிர்வமீசம்]

நிர்வர்த்தியம்

 நிர்வர்த்தியம் nirvarttiyam, பெ. (n.)

   மூவகைச் செயப்படு பொருள்களுள் ஒன்றான இயற்றப்படுவது;     [Skt. nir-vartya. → த. நிர்வர்த்தியம்]

நிர்வாக சபை

நிர்வாக சபை nirvākasabai, பெ. (n.)

   செயல்களைச் செய்துமுடிக்கும் குழு. (I.M.P. ii, 995.);; executive or managing committee.

த.வ. செயற்குழு

     [Skt. {}. → த. நிர்வாகசபை]

நிர்வாகன்

 நிர்வாகன் nirvākaṉ, பெ. (n.)

நிர்வாகி, பார்க்க;see {}.

     “வசனை நிர்வாக ரென்றபேரும்” (தாயு. பரிபூ.);

     [Skt. nir {} → த. நிர்வாகன்]

நிர்வாகப்படு-தல்

நிர்வாகப்படு-தல் nirvākappaḍudal,    20 செ.கு.வி.(v.i.)

   நிலைப்படுதல்; to become settled, established.

     “அவன் குடும்பம் நிர்வாகப்பட்டது”. (இ.வ);

     [Skt. nir- {}. → த. நிர்வாகப்படு-,]

நிர்வாகமா-தல்

நிர்வாகமா-தல் nirvākamātal,    6 செ.கு.வி. (v.i.)

   1. நேர்மையாய் நடத்தப்படுதல். (வின்);; to be managed properly.

   2. இளம் பெண்ணிற்கு முறைப்படி திருமணம் செய் வித்தல்; to be married regularly, as a girl.

     “குமாரி நிர்வாகமானதா?” (இ.வ.);.

     [Skt. nir- {}. → த. நிர்வாகமா-,]

நிர்வாகம்

நிர்வாகம் nirvākam, பெ. (n.)

   1. ஆளுவம்; administration.

   2. புணர்ச்சியில் ஏற்படும் நீண்ட நேர இன்பம்; prolonged intercourse (சா.அக.);.

த.வ. ஆளுவம்

 நிர்வாகம் nirvākam, பெ. (n.)

   1. நடப்பிக்கை; managing, maintaining, supporting.

   2. பொறுப்பு. (வின்);; burden, care, responsibility.

   3. பேணுதல், பராமரிப்பு. (வின்);; husbandry;economy.

   4. மேற்பார்வை; supervision, management.

   5. பொறுக்கை (வின்);

 endurance, tolerance.

   6. பொருள் கொள்ளுமுறை; method of interpretation.

     “இது பட்டர் நிர்வாகம்” (ஈடு);

   7. முடிவு(வின்);; settlement, establishment, conclusion.

   8. உறுதி (வின்);

 certainty, assurance.

   9. நிலைமை (வின்);; condition, state, circumstances.

     [Skt. nir- {}. → த. நிர்வாகம்]

நிர்வாகம் பண்ணு-தல்

நிர்வாகம் பண்ணு-தல் nirvākambaṇṇudal,    5 செ. குன்றாவி (v.t.)

   1. மேலாண்மை செய்தல் (வின்);; to economise.

   2. நிர்வாகி 1,2,

   3. பார்க்க;see nirvagi.

   முடிவு செய்தல் (வின்);; to acquit one self creditably.

   4. மெச்சும்படி யொன்றைச் செய்து காட்டுதல்; to settle, conclude.

     [Skt. nir-{} → த. நிர்வாகம்பண்ணு – தல்]

நிர்வாகவிலக்கை

நிர்வாகவிலக்கை nirvākavilakkai, பெ. (n.)

   ஆளுவப் பணிக்காக (நிருவாகத்திற்கு); தரப்படும் சம்பளம். (S.I.I.V. 504.);; fee for management.

     [Skt. {}. → த. நிர்வாகவிலக்கை]

நிர்வாகி

நிர்வாகி nirvāki, பெ. (n.)

   1. திறமைசாலி; person of ability.

   2. வாய்மையானவன் (வின்);; one faithful to his world; honest man.

   3. மேலாளன் (வின்);; manager.

   4. பொறுப் பாளி; one who is responsible.

த.வ. ஆளுவன், ஆளுவர்

நிர்வாசம்

 நிர்வாசம் nirvācam, பெ. (n.)

   குடியற்றது. (வின்);; that which is uninhabited.

     [Skt. nir {}. → த. நிர்வாசம்]

நிர்வாணதீட்சை

நிர்வாணதீட்சை nirvāṇatīṭcai, பெ. (n.)

தீட்சையில் மூன்றாவதும் செய்து கொண்ட வரின் முன் செய்த வினைகளைப் போக்க வல்லதுமான தீட்சை. (சைவச. ஆசாரி. 20, உரை.);;({});

 third or last state in initiation which enables the discilpe to free himself from the bonds of existence and attain emanacipation, one of three {}.

     [Skt. nir {} → த. நிர்வாண தீட்சை]

நிர்வாணமார்க்கம்

நிர்வாணமார்க்கம் nirvāṇamārkkam, பெ. (n.)

   புத்த சைன மதங்கள்; buddhism or Jainism.

     “வேதமார்க்க முதலாகிய மகா மார்க்கங்களைத் தவிர்ந்து நிர்வாண மார்க்கமாகிய மிக்க குற்றமேறின . . . அமணர்” (தக்கயாகப். 7, உரை);.

     [Skt. nir {} + த. நிர்வாண மார்க்கம்]

நிர்வாணம்

நிர்வாணம் nirvāṇam, பெ. (n.)

   1. சைன பெளத்தர்களின் முத்தி நிலை. (சூடா.); (Buddh. Jaina.);

 absolute extinction or annihilation of all desires and passions and attainment of perfect beatitude; nirvana.

   2. வீடுபேற்றின்பம்;  highest bliss or beatitude

     “நித்தமிப் படி செய்தக்கானிர் வாணம் பெறுவாய்” (கைவல். தத். 92);

   3. அம்மணம். (உ.வ);; nakedness, nudity.

     [Skt. nir {} → த. நிர்வாணம்]

நிர்வாணி

நிர்வாணி1 nirvāṇi, பெ. (n.)

   தான் நிற்குந் திக்கை நோக்கிப் பயணஞ் செய்வதற்காகாத படி கிழமைதோறும் இடம்மாறி நிற்குந் தேவதை. (பஞ்.);; a deity in a particular direction each day of the week, when it is inauspicious to start on a journey in that direction.

     [Skt. nir {} → த. நிர்வாணி]

 நிர்வாணி2 nirvāṇi, பெ. (n.)

   1. உடை யில்லாதவன்; naked person.

   2. அருகன்; arhat.

     [Skt. {} → த. நிர்வாணி]

நிர்விகற்பக்காட்சி

நிர்விகற்பக்காட்சி nirvigaṟpaggāṭci, பெ. (n.)

பொருளின் உண்மை மாத்திரம் உணரும் உணர்வு (சி.சி. அளவை, 3. மறை.);;(log.);

 indefinite knowledge in which only the bare existence of a thing is apprehended.

     [Skt. nir vikalpa → த. நிர்விகற்பக் காட்சி]

நிர்விகற்பசமாதி

நிர்விகற்பசமாதி nirvigaṟpasamāti, பெ. (n.)

தான்வேறு கடவுள்வேறென்ற வேறுபாட்டு உணர்வற்ற ஒக (யோக); நிலை. (சி.சி.10, 4, ஞானப்.);;({}.);

 highest state of concentration, in which the soul loses all conciousness of its being different from the universal soul.

     [Skt. nir vikalpa → த. நிர்விகற்பம்+ சமாதி]

நிர்விகற்பம்

நிர்விகற்பம் nirvigaṟpam, பெ. (n.)

   1. வேறு பாடின்மை; absence of differentiation or change.

   2. ஐயமின்மை; absence of doubt.

     [Skt. nir-vikalpa. → த. நிர்விகற்பம்]

நிர்விகாரம்

நிர்விகாரம் nirvikāram, பெ. (n.)

   1. விகார மின்மை; unchangeableness, immutability.

   2. நிர்விகாரி பார்க்க;see {}.

     “சுத்தமான நிர்விகாரத்தை” (தாயு. திருவருள்வி.3.);.

     [Skt. {} → த. நிர்விகாரம்]

நிர்விகாரி

 நிர்விகாரி nirvikāri, பெ.(n.)

   கடவுள்; the supreme being, as immutable.

     [Skt. {} → த. நிர்விகாரி.]

நிர்விக்கினம்

 நிர்விக்கினம் nirvikkiṉam, பெ. (n.)

   இடையூறின்மை; absence of obstruction or impediment.

     [Skt. nir vighna. → த. நிர்விக்கினம்]

நிர்விசக்கிழங்கு

 நிர்விசக்கிழங்கு nirvisakkiḻṅgu, பெ.(n.)

   சதாவேரிக் கிழங்கு; water root (சா.அக.);.

     [Skt. nirvisha → த. நிர்விசம் + கிழங்கு.]

நிர்விசம்

நிர்விசம் nirvisam, பெ.(n.)

   1. நஞ்சற்றது; that which is poisonless or innocuous.

   2. பூடுவகை (வின்.);; a plant, curcuma zedoaria.

   3. கத்தூரி மஞ்சள்; zedoary.

   4. அழிப்பன், கொடியவன் (துன்மார்க்கன்); (வின்.);; a wicked person.

     [Skt. nir-{} → த. நிர்விசம்.]

 நிர்விசம் nirvisam, பெ.(n.)

   1. நஞ்சில் லாதது; non-poisonous.

   2. நஞ்சில்லாத பாம்பு; non- venomous snake.

   3. மன்மணத்தி மஞ்சள்; round zodoary.

   4. நஞ்சற்ற ஒருவகைக் கிழங்கு; non-poisonous aconite root (சா.அக.);.

     [Skt. nirvishaya → த. நிர்விசம்.]

நிர்விசம்சுத்தி

 நிர்விசம்சுத்தி nirvisamsutti, பெ.(n.)

   நிருவிடம் (நிர்விஷம்); என்னும் கிழங்கைத் துண்டு துண்டாக நறுக்கி எருமைச் சாணியும், எருமை மூத்திரமும் கலந்து அதிலிட்டு எரித்துக் கழுவி உலர்த்தி யெடுப்பது ஒருவகைத் தூய்மை முறை; cleaning process of non poisonous aconite root. In this the root drug is sliced and soaked in buffalo dung and urine mixture and boiled. The product is then taken out, washed and dried (சா.அக.);.

நிர்விசயம்

நிர்விசயம் nirvisayam, பெ.(n.)

   புலனறிவு கடந்தது; that which is beyond sense – perception.

     “நிர்விஷய சுத்தமான நிர்விகாரத்தை” (தாயு.திருவருள்வி.3);.

     [Skt. nir-visaya → த. நிர்விஷயம்.]

நிர்விசாரம்

நிர்விசாரம் nirvicāram, பெ.(n.)

   1. கவலை யின்மை; carelessness, recklessness.

   2. தூக்கமின்மை; tranquillity, freedom from anxiety.

     [Skt. {} → த. நிர்விசாரம்.]

நிர்விடம்

நிர்விடம் nirviḍam, பெ.(n.)

   நஞ்சை நீக்கும் மருந்து; antidote for poison.

     “நிர்விடமு விடமுமொருமுதலாய் நின்றும்” (சிவநெறிப். 65);.

     [Skt. nir – visa → த. நிர்விடம்.]

நிர்விடயம்

நிர்விடயம் nirviḍayam, பெ.(n.)

   இல்பொருள்; that which is non-existent.

     “பிரயத்தின பூர்வகமாய் நிர்விடயம் பண்ணவேண்டும்” (வேதாந்தசா.42);.

     [Skt. nir-visaya → த. நிர்விடயம்.]

நிர்வியாசம்

 நிர்வியாசம் nirviyācam, பெ.(n.)

   காரணமாகச் சொல்லக்கூடியது யாதுமில் லாதது; that which has no apparent reason or excuse.

     [Skt. nir- {} → த. நிர்வியாசம்.]

நிர்விவரம்

 நிர்விவரம் nirvivaram, பெ.(n.)

   பெண்ணின் முலைகள் நெருங்கவிருத்தல்; contiguous- ness as of female breasts (சா.அக.);.

நிர்விவாதபோகம்

 நிர்விவாதபோகம் nirvivātapōkam, பெ.(n.)

   வில்லங்கமற்ற துய்ப்பு உரிமை (அனுபவ பாத்தியம்);; undisturbed or undisputed possession as the basis of, or as confering a title to, property (R.F.);.

     [Skt. {} → த. நிர்விவாத போகம்.]

நிர்விவாதம்

 நிர்விவாதம் nirvivātam, பெ.(n.)

   எதிரா டலுக்கு இடமில்லாதது; that which is undisputed or indisputable.

     [Skt. {} → த. நிர்விவாதம்.]

நிர்வீரியம்

நிர்வீரியம் nirvīriyam, பெ.(n.)

   1. ஆண் தன்மையில்லாமை; impotency.

   2. சோர்வு; exhaustion (சா.அக.);.

     [நீர் + வீரியம்.]

நிற ஆளத்தி

 நிற ஆளத்தி niṟaāḷatti, பெ.(n.)

நெட்டெழுத்துகள் அடிப்படையில் எழும் இசை song composed with long vowels.

     [நிறம்+ஆளத்தி]

நிற-த்தல்

நிற-த்தல் niṟattal,    11 செ.கு.வி. (v.i.)

   1. நிறம் பிடித்தல்; to take on colour as fruits or leaves to be tinged as flowers.

     ‘நிறத்தகாய்’.

   2. நிறம் முற்றுதல்; to deeper in Colour.

   3. புதுப்பொலிபோடு இருத்தல்; to be distinguished, brilliants to be bright and fresh in appearance.

     ‘சத்துவ குணப் பிறப்பினர் புவிமே னிறத்து வாழ்வது’ (ஞானவா.திதி.1.);.

   4. பயனளித்தல்; to have effect.

நான் செய்ததொன்றும் நிறக்கவில்லை. (உ.வ.);.

     [நில் → நிற-,]

நிறக்கதிர்

 நிறக்கதிர் niṟakkadir, பெ. (n.)

   வண்ண மிகுதியுடைய கதிர்; colour ray.

     ‘வானவில் ஏழு நிறக்கதிர்களைக் கொண்டது’. (உ.வ.);.

     [நிறம் + கதிர்.]

நிறக்குமஞ்சள்

 நிறக்குமஞ்சள் niṟakkumañjaḷ, பெ. (n.)

   கப்பு மஞ்சள், பூசு மஞ்சள்; turmeric (சா.அக.);.

     [நிறக்கும் + மஞ்சள்.]

நிறக்குருடு

 நிறக்குருடு niṟakkuruḍu, பெ. (n.)

   குறிப்பிட்ட சில வண்ணங்களை உணரவியலமை; unable to distinguish certain colour; colour-blind.

     [நிறம் + குருடு.]

நிறக்குறியீடு

 நிறக்குறியீடு niṟakkuṟiyīṭu, பெ. (n.)

   வண்ணத்தால் குறிக்கப்படும் ஒரு குழுஉக் குறி; colour code.

     [நிறம் + குறியீடு.]

நிறக்கேடு

நிறக்கேடு niṟakāṭu, பெ. (n.)

   புகழ்க் குறைவு; loss of repute.

     ‘இவனோடு சம்பந்திக்கை நிறக்கேடாம்’ (ஈடு, 4. 9. 3.);.

     [நிறம் + கேடு. நிறம் – புகழ். கெடு→கேடு→அழிவு, குறைவு.]

நிறங்குணம்

 நிறங்குணம் niṟaṅguṇam, பெ. (n.)

   இயல்பு (வின்.);; characteristics, traits of character. Properties.

     ‘நிறங்குணமறிந்து உறவாடு’ (பழமொழி);.

நிறங்கொடு

நிறங்கொடு1 niṟaṅgoḍuttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. நிறமூட்டுதல்; to tinge. give colour.

   2. நிறமுடைத்தாதல்; to be coloured, have a colour.

   3. மேனியாதல்; to be sleek, smooth, plump, as a person in health.

     [நிறம் + கொடு -,]

 நிறங்கொடு2 niṟaṅgoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஒளிரச் செய்தல்; to give lustre, brilliance, as to an occasion.

     [நிறம் + கொடு -,]

நிறஞ்சனாதிமூலி

 நிறஞ்சனாதிமூலி niṟañjaṉātimūli, பெ. (n.)

   சிவ துளசி; shivas basil-ocimum hirsutum. (சா.அக.);.

நிறஞ்சோதி

 நிறஞ்சோதி niṟañjōti, பெ. (n.)

   மரமஞ்சள்; tree turmeric-coscinium fenestratum. (சா.அக.);.

     [நிறம் + சோதி.]

நிறத்தகண்காரி

 நிறத்தகண்காரி niṟattagaṇgāri, பெ. (n.)

   குண்டுமணி, குன்றிமணி; wild licorice-abrus precatorius. (சா.அக.);.

நிறத்தகை

நிறத்தகை niṟattagai, பெ. (n.)

   நிறவழகு; handsome body.

     “மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தேர் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை”. (பரிபா. 5;12.);.

     [நிறம் + தகை.]

நிறநீக்கி

 நிறநீக்கி niṟanīkki, பெ. (n.)

   வண்ணம் போக்கி; bleaching powder.

     [நிறம் + நீக்கி.]

நிறன்

நிறன் niṟaṉ,    நிறம்; colour.

   வண்ணம்; colour.

ஒன்னார் உடங்குண்ணுங் கூற்றம் உடலே பொன்னேர் பவிரழல் நுடக்கதன் நிறனே (பரிபா. 2;51.);.

     [நிறம் – நிறன்.]

ம்-ன்-கடைப்போலி.

ஒ.நோ. கடம்→கடன்.

நிறப்பிறழ்ச்சி

 நிறப்பிறழ்ச்சி niṟappiṟaḻcci, பெ. (n.)

   வண்ணத்தினால் உண்டாகிற நிலையினின்று விலகுதல்; chromatic aberration.

     [நிறம் + பிறழ்ச்சி.]

நிறப்பெயர்ச்சி

 நிறப்பெயர்ச்சி niṟappeyarcci, பெ. (n.)

   நிறம் மாறுகை; change of colour.

     [நிறம் + பெயர்ச்சி.]

நிறப்பேதிப்பு

 நிறப்பேதிப்பு niṟappētippu, பெ. (n.)

நிறப் பெயர்ச்சி பார்க்க;see {mira-p-peyarcci}

     [நிறம் + பேதிப்பு.]

நிறமானபழத்தி

 நிறமானபழத்தி niṟamāṉabaḻtti, பெ. (n.)

   மணித்தக்காளி; black berried solanumsolanum nigrum. (சா.அக.);.

நிறமாலை

 நிறமாலை niṟamālai, பெ. (n.)

   வெண்ணிற ஒளி முப்பட்டகக் கண்ணாடியை ஊடுருவிச் செல்லும் போது ஏற்படும் ஏழு நிறத்தொகுப்பு; spectrum.

     [நிறம் + மாலை.]

நிறமி

 நிறமி niṟami, பெ. (n.)

     (தோல், முடி, இலை முதலியவற்றிற்கு); நிறம் தரும் இயற்கையான நுண்பொருள் அல்லது (பொருளுக்கு); நிறம் கொடுக்கும் நுண்ணிய வேதிப் பொருள்;

 pigment (which gives something a particular Colour);.

     [நிறம் → நிறமி.]

நிறமேற்று-தல்

நிறமேற்று-தல் niṟamēṟṟudal,    5 செ.குன்றாவி.

   வண்ணமேற்றுதல்; to make colouring.

     [நிறம் + ஏற்று.]

நிறம்

நிறம்1 niṟam, பெ. (n.)

   1. வண்ணம்; complexion, colour.

     “நிறங்கொள் கண்டத்து நின்மலன்” (தேவா. 370;4.);.

   2. சாயம்; dye, tincture.

   3. இயல்பு; quality, property, temper, nature.

     “வின்னிறவாணுதல்” (திருக்கோ.58.);.

   4. ஒளி (சூடா.);; light, luster.

     “நிறப் பெரும் படைக்கலம்” (கம்பரா. தைல. 30.);.

   5. புகழ்; fame. reputation.

     ‘இவனோடு சம்பந்திக்கை தரமன்று;நிறக்கேடாம்’ (ஈடு. 4. 9. 3.);.

   6. இசை (ஈடு, 2. 6. 11.);; harmony in music.

   7. மார்பு; bosom. Breast.

     “செற்றார் நிறம்பாய்ந்த கணை” (கலித். 57.);

   8. நடுவிடம்; middle place.

     “கடலிற் நிறஞ்சேர் மத்தின்” (திருமந். 2313.);.

   9. உயிர்நிலை (அக.நி.);; vital spot.

   10. உடல்; body.

     “மெல்லியலை மல்லற் றன்னிற மொன்றி லிருத்தி நின்றோன்” (திருக்கோ. 58.);.

   11. தோல்; skin.

     “புலிநிறக் கவசம்” (புறநா. 13;2.);.

   க. நெற;   தெ. நெறனு (மந்தனம்);;து. நெரவு

கோண். (ஆண் விலங்கின் பிறப்புறுப்பு);

     [நில் → நிரை → நிறை = நிறைதல் = நிறைந்திருத்தல். நிறை → நிறம் = வண்ணம் நிறைந்திருக்கும் நிலை.]

 நிறம்2 niṟam, பெ. (n.)

   1. இயற்கையாக அமைந்து அல்லது செயற்கையாக ஊட்டப் பட்டு ஒளியின் உதவியால் கண்ணுக்குத் தெரியும் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் போன்ற வற்றின் பொதுப் பெயர்; colour.

விலங்கு களுக்கு மாந்தர்களைப் போல் நிற வேறுபாட்டை அறியும் ஆற்றல் இல்லை. (உ.வ.);.

   2. (உடல் நிறத்தைக் குறிக்கையில்); கறுப்பு அல்லாத வெளிர் நிறம்; fair comoplexion.

பெண் நல்ல நிறமாக இருக்கிறாள்.(உ.வ.);.

 நிறம் niṟam,    5. விண் (ஆகாயம்), வானம் sky –புகை நிறம்; smoke colour.

நிறம்நீக்குபவர்

 நிறம்நீக்குபவர் niṟamnīkkubavar, பெ. (n.)

   சாயம் போக்குபவர்;   வெளிரச் செய்யும் வண்ண நீக்குபவர்; beacher.

     [நிறம் + நீக்குபவர்.]

நிறம்படுகுருதி

நிறம்படுகுருதி niṟambaḍugurudi, பெ. (n.)

மார்பிற் வழியும் அரத்தம்

 blood drawn from the chest.

     “நெய்த்தோர் தொட்ட செங்கை மறவர் நிறம்படு குருதி நிலம்படர்ந்தோடி” (நற். 49;10.);.

     “நிறம்படு குருதி புறம்படி னல்லது” (நற். 79;16.);.

     [நிறம்+படு+குருதி.]

நிறம்பூசு-தல்

நிறம்பூசு-தல் niṟambūcudal,    5 செ.கு.வி. (v.i.)

   வண்ணம் பூசுதல்; to apply colour.

கோயிற் கோபுரத்திற்கு நிறம் பூசும்பணி தொடங்கிய பிறகு குடமுழுக்கு நடத்த நாள் குறித்தல் நலம். (உ.வ.);

     [நிறம் + பூசு-,]

நிறம்பெயர்-தல்,

நிறம்பெயர்-தல், niṟambeyartal,    4 செ.கு.வி. (v.i.)

   நன்னிறமாதல் (வின்.);; to improve in colour, become Vivid of hue.

     [நிறம் + பெயர் -,]

நிறம்போக்கி

 நிறம்போக்கி niṟambōkki, பெ. (n.)

நிறநீக்கி பார்க்க;see {niranikki}

     [நிறம் + போக்கி.]

நிறம்போடு-தல்

நிறம்போடு-தல் niṟambōṭudal,    19. செகுன்றாவி. (v.t.)

   நிறங் கொடுத்தல்; to tinge. give colour.

     [நிறம் + போடு.]

நிறவாளத்தி

நிறவாளத்தி niṟavāḷatti, பெ. (n.)

   இசையின் ஆலாபனவகை (சிலப். 3. 26. உரை.);; an elaboration of musical modes.

     [நிறம் + ஆளத்தி.]

     [ஆள் + அல் – ஆளல் ‘அல்’ தொழிற் பெயரீறு. ஆளல் – பாடிப் பாடிப் பழகிப் பண்படுத்திக்கொள்ளுதல். ஆளல் → ஆளத்தி – ஒரு பண்ணை ஆ ண்டு பாடுவது. ஆளத்தி – பாடிப்பழகி இனிமை மிகுவிக்கப்பட்ட ஒசையழகு.]

ஆளத்தி செய்யுமிடத்துத் தென்னா வென்றும் தெனாவென்றும் இரண் டிசையுங் கூட்டித் தென்னாதெனா வென்றும் பாடப் படும். இவைதாம் காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி என மூன்று வகைப்படும். இவற்றுட் காட்டாளத்தி அச்சுடனிகழும் நிறவாளத்தி நிறம் குலையாமற் பாரணை யுடனிகழும். பண்ணாளத்தி பண்ணையே கருதிவைக்கப்படும். (சிலப். 3;26. உரை.);.

நிறவெறி

 நிறவெறி niṟaveṟi, பெ. (n.)

   மாந்தவினத்தில் சில இனத்தினர் உடல் நிற அடிப்படையில் தங்களை உயர்வானவர்களாகக் கருதிப் பிற நிறத்தவரைத் தாழ்வாக நடத்தும் முனைப்பான போக்கு; racism.

     [நிறம் + வெறி.]

நிறவேறுபாடு

நிறவேறுபாடு1 niṟavēṟupāṭu, பெ. (n.)

   வண்ணங்களின் வேறுபாடு; difference of colour.

விலங்குகளுக்கு நிறவேறுபாடு. தெரியாது. (உ.வ.);.

     [நிறம் + வேறு + பாடு.]

 நிறவேறுபாடு2 niṟavēṟupāṭu, பெ. (n.)

   மாந்தருக்குள் பிறப்பை (நிறத்தை); அடிப்படையாகக் கொண்டு காணும் வேற்றுமை; racial discrimination; apartheid.

     [நிறம் + வேறுபாடு.]

நிறவேற்றுமை

நிறவேற்றுமை1 niṟavēṟṟumai, பெ. (n.)

நிற வேறுபாடு1 பார்க்க;see {nira-vērupādu}

     [நிறம் + வேற்றுமை.]

 நிறவேற்றுமை2 niṟavēṟṟumai, பெ. (n.)

   மாந்தவினத்தின் நிறத்தைக் கொண்டு உயர்வு தாழ்வு என்று வேற்றுமை கற்பிக்கும் போக்கு; discrimination on the grounds of colour (ot skin);.

தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கை நிற வேற்றுமையின் அடிப்படையில் ஏற்பட்டது. (உ.வ.);.

     [நிறம் + வேற்றுமை.]

நிறா

 நிறா niṟā, பெ. (n.)

   நறா (யாழ்.அக.);; hardness in fruit.

     [நறவு → நறா → நிறா.] ,

நிறாமணி

 நிறாமணி niṟāmaṇi, பெ.(n.)

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்); வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர் a village in Vriudhachalam Taluk. [நிறம்+மணி]

நிறீஇ

நிறீஇ niṟīi, வி.எ. (adv.)

   நிறுத்தி (பத்துப்பா);; stopness.

   2. நிறுவி; to prove.

     [நில் → நிறுவி → நிறீஇ.]

நிறு-த்தல்

நிறு-த்தல் niṟuttal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. தூக்குதல்; to weigh. poise, balance.

   2. தீர்மானித்தல்; to decide, determine.

     “நாள்வரை நிறுத்து” (கலித். 31;23.);.

   3. படைத்தல், அமைத்தல்; to create, construct.

     “காமர்சாலை தனி நிறுமின் (சீவக.306);

   4. வைத்தல்; to put, set, place.

நிறுத்த முறையானே” (நன். 109. மயிலை.);.

   5. துலைதூக்கி எடை பார்த்தல்; to weigh by using a balance.

     [நில் → நிறு. நில் → நிலு → நிலுவை = தங்குகை, கட்டளை; எச்சம். நிலு →நிறு -,]

நிறுதிட்டம்

நிறுதிட்டம் niṟudiṭṭam, பெ. (n.)

   1. நேர்நிற்கை; erectness, perpendicularity, uprightness.

   2. விறைப்பு; stiffness in posture or carriage.

     [நில் → நிறு → நிறுவு + திட்டம்.]

நிறுத்தகாமவாயில்

நிறுத்தகாமவாயில் niṟuttakāmavāyil, பெ. (n.)

   ஒத்த அன்பு; ஒத்த காதல் நிலை; similar affection.

     “பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காமவாயில்” (தொல்.பொருள்.மெய்.25.);.

     [நிறுத்த = தோன்றி நின்ற. காமம் = அன்பு. நிறுத்தம் + காமம் + வாயில்.]

நிறுத்தசொல்

நிறுத்தசொல் niṟuttasol, பெ. (n.)

நிலை மொழி பார்க்க. see {miai-mol}

     “நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென்று” (தொல். எழுத்து. 10.);.

     [நில் → நி லு → நிறு → நிறுத்து → நிறுத்தம். நிறுத்தம் + சொல்.]

நிறுத்தமை

நிறுத்தமை niṟuttamai, பெ. (n.)

   நிலை நாட்டுதல் (பிரதிட்டை செய்தல்);; erection.

     “இராகவனீடிலிங்கம் மிதியாமை நிறுத்தமை பேசுவ னென்று பேசும்” (சேதுபு. இராமனருச் 5.);.

     [நிறுத்து → நிறுத்தமை]

நிறுத்தம்

நிறுத்தம்1 niṟuttam, பெ. (n.)

   1. நிறுத்துகை (வின்.);; stop, pause, as in reading.

   2. நிற்குமிடம்; stopping place.

அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும். (உ.வ.);.

   3. தடுப்புக் கருவி, முட்டுக்கட்டை; instrument for retarding motion of Wheel on Vehicle, brake.

     [நிறுத்து → நிறுத்தம்.]

 நிறுத்தம்2 niṟuttam, பெ. (n.)

     (பேருந்து); ஊர்தியில் மக்களை ஏற்றிக்கொள்ளவும் இறக்கிவிடவும் குறிப்பிடப்பட்ட இடம்;

கலைஞர் கருணாநிதி நகரில் பாவாணர் இல்லம் என்பதும் பேருந்து நிறுத்தங்களுள் ஒன்று. (உ.வ.);. அண்ணா நகர் ஐயப்பன் கோயில் நிறுத்தத்திற்கருகில் அகரமுதலி இயக்கக அலுவலகம் அமைந்துள்ளது. (உ.வ.);.

     [நிறுத்து → நிறுத்தம்.]

நிறுத்தலளவை

நிறுத்தலளவை1 niṟuttalaḷavai, பெ. (n.)

   1. நிறையளவு

 weighing.

   2. நிறுத்தல் வாய்பாடு; table of weighing.

 நிறுத்தலளவை2 niṟuttalaḷavai, பெ. (n.)

   பொருள்களின் எடையைக் கணக்கிடு வதற்கான முறை; measure of weight.

     [நிறுத்தல் + அளவை.]

நிறுத்தல்

நிறுத்தல் niṟuttal, பெ. (n.)

   தடுத்தல்; stop.

ஒறுப்ப ஒவலை நிறுப்ப நில்லலை புணர்ந்தோர் போலப் போற்றுமதி நினக்கியான் கிளைஞன் அல்லனோ நெஞ்சே (அகநா. 342.);.

     [நிறுத்து → அல்.]

நிறுத்தளத்தல்

நிறுத்தளத்தல் niṟuttaḷattal, பெ. (n.)

நிறுத்தலளவை பார்க்க (தொல். எழுத்து. 7. உரை.);;see {niruttal-alaval}

     [நிறுத்து + அளத்தல்.]

நிறுத்தி

நிறுத்தி niṟutti, வி.எ. (adv.)

   1. தடை செய்தல்; to stop.

உன் புகைப் பழக்கத்தை உடனே நிறுத்தி விடு (உ.வ.);.

   2. தகுந்த இடை வெளிவிட்டு, மெதுவாக; giving pause slowly

பாடத்தைச் சற்று நிறுத்திப்படி (உ.வ.);.

நெல்லை நிறுத்தி அளந்துபோடு. (உ.வ.);.

     [நில் → நிறுத்து + இ.]

நிறுத்திக்கொள்(ளு)-தல்

நிறுத்திக்கொள்(ளு)-தல் niṟuddikkoḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   1. நிறுத்து– பார்க்க, see niruttu-.

   2. நிறைவேற்றுதல் (வின்.);; be bring about; to accomplish an object.

   3. மதிப்பிடுதல் (உத்தேசித்தல்); (வின்.);; to make an estimate, form a plan in the mind.

     [நிறுத்தி + கொள்-,]

நிறுத்திச்சொல்(லு)-தல்

நிறுத்திச்சொல்(லு)-தல் niṟuddiccolludal,    8 செ.குன்றாவி. (v.t.)

   வேகமின்றித் தெளிவாய்ச் சொல்லுதல்; to pronounce slowly and distinctly with proper pauses.

     [நிறுத்தி + சொல்-,]

நிறுத்திப்பிடி

நிறுத்திப்பிடி1 niṟuttippiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கண்டிப்பாதல் (வின்.);; to be rigid, strict, sharp.

   2. நிலைநிற்றல் (யாழ்.அக.);; to stand firm, persist.

     [நில் → நிறு → நிறுத்து → நிறுத்தி. நிறுத்தி + பிடி -,]

 நிறுத்திப்பிடி2 niṟuttippiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சிறு குற்றங்களைக் கவனித்தல்; to go minutely, as into ones little faults.

   2. தூக்கிப் பிடித்தல் (யாழ்.அக.);; to hold aloft.

     [நில் → நிறு →நிறுத்து – நிறுத்தி + பிடி-,]

நிறுத்தியெழுது-தல்

நிறுத்தியெழுது-தல் niṟuddiyeḻududal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. செவ்வையாயிருக்கும் படி மெதுவாய் எழுதுதல்; to write legibly and slowly.

   2. இடம் விட்டெழுதுதல் (வின்.);; to leave proper speces in writing.

   3. எழுத்துகள் சாய்வின்றி நிமிர்ந்து நிற்கும்படி எழுதுதல் (வின்.);; to write an upright hand.

     [நிறுத்தி + எழுது-,]

நிறுத்திவிடு-தல்

நிறுத்திவிடு-தல் niṟuddiviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றை நிலையாக நிறுத்தி விடுதல்; to stop constantly.

     [நிறுத்தி + விடு.]

நிறுத்திவை-த்தல்

நிறுத்திவை-த்தல் niṟuttivaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செயலை இடைக்காலமாக நிறுத்துதல்; to stop temprorily the continuious process.

     [நிறுத்தி + வை.]

நிறுத்து

நிறுத்து1 niṟuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. நிமிர நிற்கச் செய்தல்; to setup, raise erect, plant.

     “வெயில் வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை” (அகநா. 37.);.

   2. நிலை நாட்டுதல்; to fix on a firm basis;

 to set up, establish in life.

நீதானா என் குடும்பத்தை நிறுத்தியவன்? (உ.வ.);.

   3. முடிவுசெய்தல்; to determine, resolve.

   4. மனத்தை ஒருநிலையில் இருத்துதல்; to concentrate, as the mind.

   5. பணியமர்த்தல்; to appoint, place in office.

   6. பேணுதல் (வின்.);; to maintain, support.

   7. சீர்திருத்துதல் (வின்.);; to restore to better circumstances;

 to re-establish;

 to reform.

   8. தழுவிக் கொள்ளுதல் (இறை.களவி.12.);; to keep one on friendly terms.

   9. ஒப்புவித்தல் (வின்.);; to place under ones charge.

   10. மேற் செல்லாதிருக்கச் செய்தல்; to stop as a person;

 to arrest progress.

   11. தள்ளி வைத்தல் (வின்.);; to put off;

 defer, postpone.

   12. படிக்கும் போதும் பாடும் போதும் உரியவிடங்களில் நிறுத்துதல் (வின்.);; to make proper pauses. as in reading or singing.

   13. விலக்குதல்; to dismiss, suspend.

அவரைப் பணியிலிருந்து நிறுத்திவிட்டார். (உ.வ.);

   14. செய்யாதொழிதல்; to put an end to.

மதுகுடிப்பதை எப்போதோ நிறுத்தி விட்டான். (உ.வ.);.

   15. அவித்தல்; to put out. extinguish. as a lamp.

     “விளக்கமெய்யிற் காற்றினா னிறுத்தி” (உபதேசகா. சிவத்துரோ. 492.);.

க. நிரிசு. ம.நிறுத்துக.

     [நில் → நிறு → நிறுத்து-,]

 நிறுத்து2 niṟuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

 to weigh.

பழைய நகையை நிறுத்துப் பார்த்தபோது தேய்மானத்தால் எடை குறைந்திருப்பது தெரிய வந்தது. (உ.வ.);.

     [நில் → நிறு → நிறுத்து-,]

 நிறுத்து3 niṟuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. (ஒரு நோக்கத்திற்காக); நிற்கச் செய்தல்; to stop (a Vehicle, etc.);

போக்குவரத்துக் காவலர் கையைக் காட்டியதும் வண்டியை நிறுத்தி விட்டார். (உ.வ.);.

மாடு குறுக்கே வருகிறது, வண்டியை நிறுத்து. (உ.வ.);.

   2. (பேச்சை); மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்; to stop (in activity.);

பேச்சை நிறுத்து. (உ.வ.);. குழந்தை அழுவதை நிறுத்தி விட்டுச் சிரித்தது (உ.வ.);.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டது. (உ.வ.);.

   3. (மின் விசிறி, மின்விளக்கு போன்றவற்றின்); செயல்பாட்டை நிற்கச் செயல்; to stop (the functioning of something);;

 to switch off.

இருக்கையை விட்டுச் செல்லும் போதும் தேவையில்லாத போதும் விளக்கையும் விசிறியையும் நிறுத்திவிட்டுச் செல்வதே பண்புடைய செயல். (உ.வ.);.

   4. (வண்டியை, படை முதலியவற்றை அல்லது வீரர் முதலியோரை ஓரிடத்தில்); இருக்க விடுதல்; to park (a vehicle);;station (an army, a sentty);.

மிதிவண்டியை ஓரமாக நிறுத்து. (உ.வ.);. எல்லைப் பகுதியில் பட்டாளத்தை நிறுத்தி வைத்துள்ளனர். (உ.வ.);. (உ.வ.);.

   5. (ஒருவரைக் காத்திருக்கச் செய்தல்; to make (some one); wait (so as to join him or her later);

அம்மாவைக் கடை முன்னால் நிறுத்திவிட்டு வந்துள்ளேன் விரைந்து திரும்ப வேண்டும். (உ.வ.);.

   6. மற்றொருவர் முன் ஒருவரைக்); காணும்படி வைத்தல்; to produce (someone before someone);.

கொலையாளியைக் கண்டுபிடித்து என் முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டுமெனக் கட்டளையிட்டார். (உ.வ.);

அவருடைய பாடல் இயற்கையழகை நம் முன் நிறுத்துகிறது. (உ.வ.);.

   7. (மனத்தை ஒன்றில்); நிலைக்கச் செய்தல்; to focus (mind on something);

மனத்தை அலைபாயவிடாமல் நிறுத்த ஊழ்கம் உதவுகிறது.(உ.வ.);.

   8. (தேர்தலில்); போட்டியிட வைத்தல்; to putup (a candidate in an election); to field.

     ‘எங்கள் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் அறிவித்தார். (உ.வ.);.

     [நில் → நிறு → நிறுத்து-,]

 நிறுத்து4 niṟuttu, பெ. (n.)

   இசைப்பாட்டின் சிறுபகுதி (இ.வ.);; a single unit of a musical piece.

     [நிறு →நிறுத்து.]

நிறுத்துகட்டை

 நிறுத்துகட்டை niṟuttugaṭṭai, பெ. (n.)

   ஒட்டத்தைத்தடுத்து நிறுத்தும் கட்டை; Stop log.

     [நிறுத்து + கட்டை.]

நிறுத்துக்கட்டு-தல்

நிறுத்துக்கட்டு-தல் niṟuddukkaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அளவிடுதல் (யாழ்.அக.);; to make an estimate;

 to determine;

 to fathom.

     [நிறு – தூக்கு, தூக்கி அளவிடு, அளவிடு. நிறு → நிறுத்து + கட்டு-.]

நிறுத்துப்பார்

நிறுத்துப்பார்1 niṟuttuppārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   எடையளவை ஆய்ந்து பார்த்தல்; to weigh, examine the weight of.

அந்தக் கடையில் வாங்கிய நகையை நிறுத்துப் பார்த்த பிறகுதான் எடை குறைவாயிருப்பது தெரியவந்தது. (உ.வ.);.

     [நிறு → நிறுத்து + பார்-,]

 நிறுத்துப்பார்2 niṟuttuppārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கருதிப் பார்த்தல்; to consider.

இருதரப்பையும் நிறுத்துப் பார்த்துத் தீர்ப்புச் சொல். (உ.வ.);.

   2. ஆழ்ந்து ஆராய்தல்; to deliberate.

நன்றாக நிறுத்துப் பார்த்துத் தீர்வு செய். (உ.வ.);.

   3. தீர எண்ணிப்பார்த்தல்; to ponder.

எதையும் நிறுத்துப் பார்த்த பின்பே முடிவுக்கு வரவேண்டும். (உ.வ.);.

   4. ஒப்பிடுதல்; to compare,

அவரை இவரோடு நிறுத்துப் பார்த்தல் நன்றன்று. (உ.வ.);.

     [நிறுத்து + பார்.]

நிறுத்துமுள்

 நிறுத்துமுள் niṟuttumuḷ, பெ. (n.)

   துலையின் நடுமுள் (புதுவை.);; middle of a scale.

     [நிறுத்து + முள். நில் → நிறு.]

நிறுத்துமுள்ளு

 நிறுத்துமுள்ளு niṟuttumuḷḷu, பெ. (n.)

நிறுத்துமுள் பார்க்க;see {mutua-mபl}

     [நிறுத்து + முள்ளு. முள் → முள்ளு.]

நிறுபூசல்

நிறுபூசல் niṟupūcal, பெ. (n.)

   1. நிறைபூசல் (வின்.); பார்க்க;see {nirajpūšal}

   2. மும்முரம் (யாழ்.அக.);; condition of being in full swing.

     [நிறு + பூசல்.]

நிறுப்பான்

நிறுப்பான் niṟuppāṉ, பெ. (n.)

   1. துலை (பிங்.);; balance.

   2. துலையோரை (திவா.);; libra in the zodiac.

     [நில் → நிறு → நிறுப்பான்.]

நிறுப்பு

நிறுப்பு1 niṟuppu, பெ. (n.)

   1. நிறுவுதல்; establish.

   2. நிறுத்துகை; erection, stop.

     [நில் → நிறு → நிறுப்பு.]

 நிறுப்பு2 niṟuppu, பெ. (n.)

   சுணக்கம் (தாமதிப்பு);; late.

     [நில் → நிறு → நிறுப்பு.]

நிறுவனம்

நிறுவனம் niṟuvaṉam, பெ. (n.)

   1. ஊழியர், தொழிலாளர் முதலியோரைக் கொண்டு வணிகம், தொண்டு முதலியவற்றை மேற்கொள்வதற்கான ஆளுகை அமைப்பு; firm. Concern.

ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் அவர் வேலை செய்கிறார். (உ.வ.);.

இந்த நிறுவனம் தன் தொழிலாளர்களுக்கு அதிக ஊக்கத் தொகை அளிக்க முன்வந்துள்ளது. (உ.வ.);.

   2. கல்வி, ஆய்வுப்பணி அமைப்பு;அஞ்சல் வழிக் கல்வி நிறுவனம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தனியார் கல்வி நிறுவனங்கள்.

     [நில் → நிறு → நிறுவு நிறுவு → நிறுவனம்.]

நிறுவு

நிறுவு1 niṟuvudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. (மாதிகை, தாளிகை, அமைப்பு போன்றவற்றை முதன் முதலாக); தொடங்குதல், ஏற்படுத்துதல்; to found, to start, to constitute.

தென்மொழி மாதிகையை நிறுவியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். (உ.வ.);.

பாவாணர் பெயரில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓர் அறக் கட்டளையை நிறுவப்பலரும் கொடையளித்தனர். (உ.வ.);.

இந்த உசாவற்குழு எதற்காக நிறுவப்பலரும் கொடையளித்தனர். (உ.வ);.

   2. (கட்டடம், வரவேற்பு வளைவு முதலியவற்றை ஓரிடத்தில்); உருவாக்குதல், எழுப்புதல்; to be erect. to set up.

பாவாணர் பிறந்த ஊரில் பாவாணர் கோட்டத்தை நிறுவிட தமிழக அரசு நிதி ஒதுக்கிடவுள்ளது. (உ.வ.);. முதல்வரின் வருகையை ஒட்டிச் சாலையில் பல ஒப்பனை வளைவுகள் நிறுவப்பட்டுள்ளன. (உ.வ.);.

   3.(எந்திரம், பொறி, சிலை முதலியவற்றைக் கொண்டுவந்து ஓரிடத்தில்); பொருத்துதல், அமைத்தல்; to install (a statue. machinery etc.);.

மொழிப் போராளிகளின் சிலை நிறுவப்படும். (உ.வ.);. தொழிற்சாலை ஆட்சிக்குழு நச்சு நீக்கும் கருவியை நிறுவ ஒப்புக் கொண்டுள்ளது. (உ.வ.);.

   4. (ஒரு கருத்தைத் தக்க சான்றுகளுடன்); நிலை நாட்டுதல். வலியுறுத்தல்; establish (a fact one’s argument etc.);.

பல்லவர் காலத்தில் தமிழகத்தில் கலைகள் சிறந்திருந்தன என்பதை நிறுவுக. (உ.வ.);.

அவர் தன் கருத்தைப் பிறர் மறுக்க முடியாதபடி நிறுவுவதில் வல்லவர். (உ.வ.);.

     [நில் → நிறு → நிறுவு.]

 நிறுவு2 niṟuvudal,    5. செ.குன்றாவி. (v.t.)

நிறுத்து-. பார்க்க;see {niruttu}

     [நில் → நிறு → நிறுவு-,]

நிறுவுகை

 நிறுவுகை niṟuvugai, பெ. (n.)

   கோட்பாட்டை மறுப்புக்கிடமின்றி தக்க சான்றுகளுடன் நிலைநாட்டுகை; prove the theory with proper evidence.

     [நில் → நிறு → நிறுவு → நிறுவுகை-,]

நிறுவுதல்

 நிறுவுதல் niṟuvudal, பெ. (n.)

நிறுவுகை பார்க்க;see {niruvugal}

     [நிறு → நிறுவு → நிறுவுதல்-,]

நிறுவை

நிறுவை niṟuvai, பெ. (n.)

   1. எடையிடும் முறை; method of weighing.

   2. எடைக்கல்; weighing unit.

   3. எடையிடும் கருவி; weighing machine.

     [நில் → நிறு → நிறுவை-,]

நிறை

நிறை niṟai, பெ.(n.)

   ஆளத்தி பாடப்படும் ஒரு முறை; raising tone system in music.

     [நிறு-நிறை]

 நிறை1 niṟaidal,    2. செ.கு.வி. (v.i.)

   1. நிரம்புதல்; to become full. to be replete.

     “நிறையின்ன முதை” (திருவாச. 27:4.);.

   2. மிகுதல்; to abound;

 to be copious. Plentedus. profuse.

   3. எங்கும் நிறைந்திருத்தல் (வியாபித் திருத்தல்);; to be every where;

 to pervade.

   4. பொந்திகையாதல்; to be satisfied. Contended.

     “நிறைந்த மனத்து மாதரும்” (திருவாலவா. 38.5.);.

   5. அமைதியாதல்; to be silent.

நிறைந்திருங்கள் (வின்.);.

க. நிரி ம. நிறியக.

     [நில் → நிறு → நிறை.]

 நிறை2 niṟaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. நிரம்புதல்; to be or become full.

மழை பெய்ததால் ஏரி குளங்கள் நிறைந்தன. (உ.வ.);

வயிறு நிறைந்துவிட்டது. (உ.வ.);.

   2. குறிப்பிட்ட அகவை); முடிதல்; to complete (years of life);.

இந்த ஆண்டுடன் என் மகளுக்குப் பத்து அகவை நிறைகிறது. (உ.வ.);.

     [நில் → நிறு → நிறை-,]

 நிறை3 niṟaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. நிறை வடைதல்;   முழுமையாதல் (சூ.நிக.8;15.);; to complete.

   2. பெருகுதல்; fill.

     “நிறைதலொடு குறைதலாய” (சிவரக. 1. கணபதிவுந். 19.);.

     [நில் → நிறு → நிறை-,]

 நிறை4 niṟaittal,    11 செ.குன்றாவி. (v.t.)

   1. நிரம்பச்செய்தல்; to fill, make full;

 to supply abundantly.

     “குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே” (தொல். எழுத்து. 41.);.

   2. பரவச் செய்தல் (வின்.);; to diffuse. cause to pervade, suffuse.

   3. திணித்தல் (வின்.);; to Stuff. Cram.

ம. நிறுக்க.

     [நில் → நிறை-.]

 நிறை5 niṟai, பெ. (n.)

   1. நிறுக்கை (பிங்.);; weighing.

   2. துலை (பிங்.);; scale, balance.

   3. துலை ஓரை (திவா.);; libra, in the zodiac.

   4. எடை; standard weight

     “காவெனிறையும்” (தொல்.எழுத்து. 169.);.

   5. நூறு பலங் கொண்ட அளவு (சூடா.);; weight of 100 palam.

   6. வரையறை (திவா.);; measure. Standard, degree.

     [நில் → நிறு → நிறை.]

 நிறை6 niṟai, பெ. (n.)

   1. சிதைவுபடா முழுமை (பூர்த்தி);; completion. completeness.

     “நிறைப் பெருஞ் செல்வத்து நின்றக்கடைத்தும்” (நாலடி. 360.);.

   2. எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று (சிலப். 3;16, உரை.);; fulness repletion, copiousness, one of eight {pādarpayan}

   3. மாட்சிமை; excellence. splendour;

     “வானவரேத்து நிறைகழலோன்”(திருவாச. 13;13.);.

   4. அடுத்தடுத்துவரும் பண்; note repeated often in siging a musical piece.

   5. இரண்டு தாக்குடைய தாளவகை (பரிபா. 17;18.);.

 a timemeasure consisting of two beats

   6. நீர்ச்சால் (சூடா.);; large water-pot.

   7. நாட்கதிரும் நெல்லும் ஒரு பானையிலிட்டு நிறைக்கும் நிகழ்வு. (நாஞ்.);; the ceremony of filling up a pot with {nāt-kadir} and paddy.

   8. ஆசை (அக.நி.);; desire.

க. நெறெ.

     [நில் → நிறை-,]

 நிறை7 niṟai, பெ. (n.)

   1. நிறுத்துகை; bringing to stand; stopping.

     “நிறையருந் தானையொடு” (மணிமே. 9;26.);.

   2. வைத்து அமைக்கை; fixed position or arrangement.

     “நிறைக்கற் றெற்றியும்” (மணிமே.6;6.);.

   3. மனத்தைக் கற்புவழியில் நிறுத்துவகை; firm adherence to a life of chastity.

     “நிறைகாக்குந் காப்பே தலை” (குறள், 57.);.

   4. ஆடுஉக் குணம் நான்கனுள் ஒன்றான காப்பனகாத்துக் கடிவன கடியுந் திண்மை (பிங்.);, (இறை. 2;29.);; strength of mind, moral firmness, one of four {adu-u-k-kunam.}

   5. மனவடக்கம்; complete self control.

     “நிறையெனு மங்குசம்” (கம்பரா.மிதிலை.40.);.

   6. கற்பு; chastity, marital fidelity.

     “நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது” (மணிமே.18.100.);.

   7. சூளுரை (சபதம்);; vow.

     “இண்டை புனைகின்ற மாலை நிறையழிப்பன்” (தேவா.1040;4.);.

   8. வலிமை; strength.

     “கன்னிறையழித்த மொய்ம்பு” (கந்தபு. இரண்டாநாள். சூரா. யுத். 24.);.

   9. அறிவு (அக.நி.);; knowledge.

   10. மறைபிற ரறியாமை (கலித்.133.);; nonbetrayal of one’s secrets, silent enduring of one’s troubles.

   11. அழிவின்மை (சூடா.);; indissolubility, imperishableness.

   12. சமன்மை (வின்.);; equity.

   13. நிமிர் நேர்வு; uprightness

   14. கூறுபடா முழுமை; integrity,

   15. மனஒருமை; concentration.

     “கழல்களை நிறையால் வணங்க” (தேவா. 502;6.);.

     [நில் → நிறை.]

 நிறை8 niṟai, பெ. (n.)

   மிகுதி; abundance.

     “நிறையென்று மிகுதியாய்” (ஈடு.1,2,3.);.

     [நில் → நிறு → நிறை.]

நிறைஒளிமறை

 நிறைஒளிமறை niṟaioḷimaṟai, பெ. (n.)

வான் கோள்களின் முழு மறைப்பு:

 total eclipse.

     [நிறை+ஒளிமறை]

நிறைகட்டியபால்

 நிறைகட்டியபால் niṟaigaṭṭiyapāl, பெ. (n.)

   நீர் கலந்த பால்; water mixed milk.

     [நிறை + கட்டிய + பால்.]

கறந்த பாலுக்கு மறுதலையானது.

நிறைகட்டு

நிறைகட்டு1 niṟaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. எடைகட்டுதல்; to make up a weight equal to given thing.

   2. மதிப்புக்குத் தக்கவாறு பண்டமாற்றம் செய்தல் (வின்.);; to barter, give commodities of equal value in return for other commodities.

     [நிறை + கட்டு-,]

 நிறைகட்டு2 niṟaigaṭṭudal,    5 செ.கு.வி.(v.i.)

   பாலொடு நீரைக்கலத்தல்; to mix the water with milk.

     [நிறை + கட்டு-,]

நிறைகன்றுத்தாய்ச்சி

 நிறைகன்றுத்தாய்ச்சி niṟaigaṉṟuttāycci, பெ. (n.)

   கன்றொடு கூடிய ஆன் (யாழ்ப்.);; cow With calf.

     [நிறை + கன்று + தாய்ச்சி.]

நிறைகரகம்

 நிறைகரகம் niṟaigaragam, பெ. (n.)

   மாரியம்மன் முதலிய பெண் தெய்வங்களின் பொருட்டுத் தலைமேல் வைத்து ஆடிக் கொண்டு எடுத்துச் செல்லப்படுவதும் நீர் நிரம்பப் பெற்றதும் பூக்களால் ஒப்பனை செய்யப்பட்டதுமான குடம் (வின்.);; vessel filled with water decorated with flowers and carried on one’s head for propitiating {mariamman} and other deities.

     [நிறை + கரகம்.]

நிறைகருப்பம்

 நிறைகருப்பம் niṟaigaruppam, பெ. (n.)

   முழுவளர்ச்சியடைந்த கருப்பம்; advanced pregnancy.

     [நிறை + கருப்பம்.]

நிறைகருப்பிணி

 நிறைகருப்பிணி niṟaigaruppiṇi, பெ. (n.)

   முழுமையான கருப்பமுடையவள்; woman in advanced pregnancy.

     [நிறை + கருப்பிணி.]

நிறைகர்ப்பம்

 நிறைகர்ப்பம் niṟaigarppam, பெ. (n.)

நிறைகருப்பம் பார்க்க;see {nirai-karuppam}

     [நிறை + கர்ப்பம்.]

நிறைகர்ப்பிணி

 நிறைகர்ப்பிணி niṟaigarppiṇi, பெ. (n.)

நிறைகருப்பிணி பார்க்க;see {miral-karuppm}

     [நிறை + கர்ப்பிணி. சூல் கொண்டவளைச் சூலி என்றழைப்பதே தமிழ்வழக்கு.]

நிறைகலவை

 நிறைகலவை niṟaigalavai, பெ. (n.)

   செழுமையாகக் கலக்கப்பட்ட கலவை; rich mixiture.

     [நிறை + கலவை.]

நிறைகலை

நிறைகலை niṟaigalai, பெ. (n.)

   1. குறைவிலா முழுமை; fullness. completion of the parts.

   2. தெய்வப் படிமையின் முகத்திற் காணப் பெறும் ஒளிவட்டம்; splendour in the face of an idol from a supposed divine immanence.

   3. முழு நிலவு;வெள்ளுவா; full moon.

   4. தெய்வ வெளி; possession of a person by a deity or demon.

   5. முழு வெறி (வின்.);; being intoxicated;top-heaviness.

   6. முழுத் தோற்றரவு;(பூரணாவதாரம்);; the manifestation of a deity in its full glory.

     [நிறை + கலை.]

நில் → நிறை.குல் → கல்→கலை.குல்=தோற்றம், பொலிவு, அழகு, முழுமை ஆகியவற்றைக் குறிக்கும் வேர்.

நிறைகல்

 நிறைகல் niṟaigal, பெ. (n.)

   எடைக்கல், படிக்கல்; standard weight.

     [நிறை + கல்.]

நிறைகல்நகை

 நிறைகல்நகை niṟaigalnagai, பெ. (n.)

   மதிப்பு மிகு மணிக்கற்களை மிகுதியாக வைத்திழைத்த நகை; omamentset profusely with precious stones as dist fr. {Currukkal-nagai}

     [நிறை + கல் + நகை.]

நிறைகாவல்

நிறைகாவல் niṟaikāval, பெ. (n.)

காப்பன

   காத்துக் கடிவன கடிந்து ஒழுகுதல் (இறை. 27.);;   முழுமையான காப்பு; complete security. (உ.சொ.களஞ்.);.

     [நிறை + காவல்.]

நிறைகுடம்

நிறைகுடம் niṟaiguḍam, பெ. (n.)

   நீர் (நிறைந்தளவுள்ள); குடம்; a pot full of water.

     “நிறைகுடத்திட்ட கை புல்லினும் போதினும் நெகிழாமற் புணர்ந்தனராயும் நிரையினர்கள்” (சிலப்.1;58. உரை.);.

     [நிறை + குடம். நில்→நிறை குல்→குள் → குடம்.]

நிறைகுறை

நிறைகுறை niṟaiguṟai, பெ. (n.)

   ஆளத்தித் தொழில்கள்; mode of musics. improvised introduction to a melody,

     “பாடினி முரலும் பாலையங் குரலின் நீடுகிளர் கிழமை நிறைகுறை தோன்ற ஒரு திறம்” (பரிபா. 17;18.);.

     [நிறை + குறை]

நிறைகோல்

நிறைகோல் niṟaiāl, பெ. (n.)

   துலைக்கோல்; balance.

     “நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்” (நன்.26.);.

     [நிறை + கோல்.]

நில் → நிறை = எடை. குல் → குலவு. குலவுதல் = வளைதல். குலவு → குலாவு. குலுத்தல் = வளைந்த காயுள்ள கொள். குலுக்கை = உருண்டு திரண்டகுதிர்.

குல் → (கொல்); → கோல் = உருட்சி, திரட்சி, உருண்டு திரண்ட நீண்டகோல். நீண்ட கோலின் இருபுறமும் தட்டு களைத் தொங்கவிட்டுத் துலையாகப் பயன் படுத்தியமையால் துலைக் கோலையும் கோலெனவே வழங்கினர்.

நிறைக்குளப்புதவு

நிறைக்குளப்புதவு niṟaikkuḷappudavu, பெ. (n.)

   நீர் நிறைந்திருத்தலையுடைய குளத்தின் வாய்த்தலை; head-sluice of a water tank.

     “நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெனாகி” (புறநா. 376.);.

     [நிறைக்குளம் + புதவு]

நிறைக்கோற்றுலாம்

நிறைக்கோற்றுலாம் niṟaikāṟṟulām, பெ. (n.)

   நிறுக்கும் துலாக்கோல்; balance. Scale.

     “நிறைக்கோற் றுலாத்தர் பறைக்கட் பராரையர்”(சிலப்.14;208.);.

     [நிறைக்கோல் + துலாம்.]

நிறைசன்னி

 நிறைசன்னி niṟaisaṉṉi, பெ. (n.)

   இசிவு நோய் (வின்.);; severe fit of apoplexy.

     [நிறை + சன்னி.]

நிறைசபை

 நிறைசபை niṟaisabai, பெ. (n.)

   பெரியசபை; large assembly.

     [நில்→நிறை = முழுமை, பெருமை.

அவை → சவை → சபை.]

நிறைசூலி

 நிறைசூலி niṟaicūli, பெ. (n.)

   முழுமையான கருப்பமுடையவள்; woman in advanced pregnancy.

     [நிறை + சூலி, நில் → நிறை. சூல் → சூலி.]

நிறைசூல்

நிறைசூல் niṟaicūl, பெ. (n.)

   1. முழு வளர்ச்சி யடைந்த கருப்பம்; advanced pregnancy.

   2. மேகம் பொழிதற்குக் கருக் கொண்டுள்ள நிலை; heaviness of a cloud ready to drop rain.

   3. மிகுதியாகப் பூக்கும் நிலை (வின்.);; teeming with buds ready to blossom or bear.

     [நிறை + சூல் நில் → நிறை = முழுமை, நிறைவு.]

நிறைசெறிவு

 நிறைசெறிவு niṟaiseṟivu, பெ. (n.)

   தெவிட்டு நிலை; Saturation. state of being Saturated.

     [நிறை + செறிவு.]

நிறைசெலுத்து-தல்

நிறைசெலுத்து-தல் niṟaiseluddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கொண்டு செலுத்துதல் (நெல்லை);; to bring to fruition, contending against difficulties.

     [நிறை + செலுத்து-,]

நிறைசெல்வன்

நிறைசெல்வன் niṟaiselvaṉ, பெ. (n.)

   1. நிறைந்த சொத்துடையவன்; (குபேரன்); (உரி.நி.);; Kubera, as a person of immense wealth

   2. மணமகன்; bridegroom.

     [நிறை + செல்வன்.]

நிறைசெல்வம்

 நிறைசெல்வம் niṟaiselvam, பெ. (n.)

   நிரம்பிய சொத்து; abundant wealth.

     [நிறை + செல்வம்.]

நிறைதப்பு

 நிறைதப்பு niṟaidappu, பெ. (n.)

வழுவான நன்மை (யாழ்.அக.);

 miscarriage of justice.

     [நிறை – தப்ப.]

நிறைதருதுறு

 நிறைதருதுறு niṟaidaruduṟu, பெ. (n.)

   சீந்தில்; moon creeper-menispermum cordifolium alias tindsphora cardifolium. (சா.அக.);.

நிறைநரம்பு

 நிறைநரம்பு niṟainarambu, பெ. (n.)

   ஏழு சுரமுள்ள பண் (திவா.);; primary melody, heptatonic. opp. to {kurai narambu.}

     [நிறை + நரம்பு.]

நிறைநாழி

 நிறைநாழி niṟaināḻi, பெ. (n.)

   மங்கலக் குறியாக நெல் வைத்து நிரப்பிய நாழி; a measure filled with paddy, used on auspicious Occasions.

     [நிறை + நாழி.]

நிறைநாழிவை

நிறைநாழிவை1 niṟaināḻivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   திருமண முதலியவற்றில் மங்கலக் குறியாகப் படியில் கூலத்தை நிரம்பப்செய்தல்; to place a measure filled with paddy, as at a marriage, deemed auspicious,

     “பொற்கோலமிட்டு நிறைநாழி வையாய்” (குமர. பிர. மீனாட். குறம். 6.);.

     [நிறை + நாழி + வை-,]

 நிறைநாழிவை2 niṟaināḻivaittal,    4 செ.கு.வி. (v.i.)

   சாச் சடங்கி னொன்னு; a kind of ceremony on death.

     [நிறை + நாழி + வை-,]

நிறைநிலவு

 நிறைநிலவு niṟainilavu, பெ. (n.)

   முழுநிலவு;வெள்ளுவா; full moon.

     [நிறை + நிலவு.]

நிறைநிலை

 நிறைநிலை niṟainilai, பெ.(n.)

   சிற்ப வடிவைத் தேவிகமாக மாற்றும் நிலை; elevating the statue to divinity.

     [நிறை+நிலை]

நிறைநீராவி

 நிறைநீராவி niṟainīrāvi, பெ. (n.)

   ஈரத் தன்மை மிகுந்த நீராவி; saturated steam.

     [நிறை + நீர் + ஆவி.]

நிறைநீர்வேலி

நிறைநீர்வேலி niṟainīrvēli, பெ. (n.)

   1. கானல்நீர், பேய்த்தேர்; mirage.

     “நிறைநீர் வேலியு முறைபடக் கிடந்த” (சிலப். 11;69.);.

   2. உடை குளம்; breached tank.

     “அறையும் பொறையு மாரிடை மயக்கமும் நிறைநீர் வேலியு முறைபடக்கிடந்தே” (சிலப்.11;69.);.

     [நிறை + நீர் + வேலி.]

நிறைந்தகுணம்

நிறைந்தகுணம் niṟaindaguṇam, பெ. (n.)

   1. பொந்திகையுள்ள மனத்தன்மை; satisfied, contended state of mind.

   2. மகிழ்ச்சியுள்ள (சித்தம்); மனநிலை; cheerful disposition.

     [நிறைந்த + குணம்.]

     [நிறை + குணம். நில் → நிறை = நிறைவு, பொந்திகை. உல் → குல் → குணம் = வளைவு, அடங்கிய தன்மை, பணிவு, ஒத்துவருமியல்பு, நலம், மேன்மை மேம்பட்டு விளங்கும் திறம், அறிவு.]

நிறைந்தன்று

நிறைந்தன்று niṟaindaṉṟu, பெ. (n.)

   நிறைந்தது; fulfil.

     “துகில் சேர் மலர் போல் மணிநீர் நிறைந்தன்று’ (பரிபா. 12;93.);.

     [நிறை → நிறைந்து → நிறைந்தன்று.]

நிறைந்தமனம்

 நிறைந்தமனம் niṟaindamaṉam, பெ. (n.)

நிறைந்த குணம் பார்க்க;see {mirainda ցսրam}

     [நிறைந்த + மனம்.]

நிறைந்தமனிதன்

 நிறைந்தமனிதன் niṟaindamaṉidaṉ, பெ. (n.)

நிறைந்த மாந்தன் பார்க்க;see {niranda- māndan}

     [நிறைந்த + மனிதன்.]

நிறைந்தமாந்தன்

 நிறைந்தமாந்தன் niṟaindamāndaṉ, பெ. (n.)

   உயர்குணமுடையான் (வின்.);; perfect man; noble minded person.

     [நிறைந்த + மாந்தன். நில் → நிறை = நிறைவு, பொந்திகை, உயர்வு, உயர் குணம்.]

நிறைந்தவீடு

நிறைந்தவீடு niṟaindavīṭu, பெ. (n.)

   1.மங்கல மனை; house in prosperity.

   2. திருமண வீடு (வின்.);; marriage house.

     [நிறைந்த +வீடு.]

நிறைந்திடு-தல்

நிறைந்திடு-தல் niṟaindiḍudal,    18 செ. குன்றாவி. (v.t.)

நிறை-, பார்க்க;see {niraf-,}

     [நிறைந்து + இடு.]

நிறைபடி

 நிறைபடி niṟaibaḍi, பெ. (n.)

   தலைதட்டாத படி, தலை வெட்டாமல் அளக்கும்படியளவு;நிறைபடியாய் அளந்து போடு.(உ.வ..);

     [நிறை + படி.]

கூலங்களை யளக்க படி, மரக்கால், வள்ளம் போன்றவைப் பயன் பாட்டிலிருந்தன. அதனைக் கொண்டளக்கும் போது கூலங்கள் நிறையளவாய் இருக்கும் வகையில் அளக்கப்பட்டது. பதின்ம அளவையாகிய மெட்ரிக் அளவை வழக்கிற்கு வந்ததும், தலையைத் தட்டியளக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது. கூலத்தை அளக்கும் போது வழிய வழிய அளந்தால் மேன்மேலும் பெருகுமென்பது பண்டையர் நம்பிக்கை போலும்.

நிறைபணி

 நிறைபணி niṟaibaṇi, பெ. (n.)

   இந்திரனை வழிபடுவதற்காகத் திருவாரூர்க் கோயிலில் தியாகேசருக்கு நிறைபணி பூட்டிப் புரட்டாசி உவா நாளன்று கொண்டாடும் திருவிழா (இ.வ.);; a festival celebrated in the temple at {Tiruvarur} on the full moon day in the month of {purattasi} when Indran is believed to worship {Tiyakésar.}

     [நிறை + பணி.]

நிறைபண்

 நிறைபண் niṟaibaṇ, பெ. (n.)

   எல்லா இசை, ஒலிக்குறிப்புகளும் அமைந்த பண்; primary melody type as containing all the notes of the gamut.

     [நீறை+பண்]

நிறைபாரம்

நிறைபாரம் niṟaipāram, பெ. (n.)

   1. பெருஞ்சுமை; heavy load.

   2. அணி, அம்மை முதலியன உடல் முழுதும் நிறைந்திருக்கை; being loaded as a person with jewels, a tree with fruit, the bady with pustules in smallpox.

நிறைபாரமாக அணிந்திருக்கிறாள்.. (உ.வ.);.

   3. நிரம்ப உண்ணுகை; eating to the full.

     [நிறை + பாரம்.]

நிறைபிள்ளைத்தாய்ச்சி

 நிறைபிள்ளைத்தாய்ச்சி niṟaibiḷḷaittāycci, பெ. (n.)

நிறைசூலி பார்க்க;see {nirai-šūli}

     [நிறை + பிள்ளை + தாய்ச்சி.]

நிறைபூசல்

 நிறைபூசல் niṟaipūcal, பெ. (n.)

பேரொலி (வின்.);,

 great noise, bustle.

     [நிறை + பூசல்.]

நிறைபூத்தி

 நிறைபூத்தி niṟaipūtti, பெ. (n.)

   எனுஞ்செடி; a very small plant . called {kõợaga sālai.} (சா.அக.);.

நிறைபூரணம்

 நிறைபூரணம் niṟaipūraṇam, பெ. (n.)

   முழுப் பொந்திகை; full satisfaction.

     [நிறை + பூரணம்.]

நிறைபொங்கல்

நிறைபொங்கல்1 niṟaiboṅgal, பெ. (n.)

   மங்கலக்குறியாகப் பொங்கலன்று பொங்கல் மிகுதியாகப் பொங்குகை; abundant overflow of pongal at the pongal festival.

     [நிறை + பொங்கல், நில் → நிறை = மிகுதி, நிறைவு.]

 நிறைபொங்கல்2 niṟaiboṅgal, பெ. (n.)

   பல பானைகளிலிடும் பொங்கல்; rice boiling in a series of pots, as at a temple.

     [நிறை + பொங்கல், செழிப்பின் அறிகுறியாகப் பல பானைகளில் பொங்கலிடுவ தென்பது தமிழகத்தில் பெருவழக்கு. பலருக்குப் படையலிடவும் பல பானைகளில் பொங்கலிடுவர்.]

நிறைப்பண்

நிறைப்பண்1 niṟaippaṇ, பெ. (n.)

   ஆறுகரமுள்ள பண் (சிலப்.13.106);; secondary melody type, hexalonic.

     [நிறை+பண்]

நிறைப்பு

 நிறைப்பு niṟaippu, பெ. (n.)

   உடம்பிற்கு ஊட்டமூட்டும் மருந்து; a medicine that gives tone to the system-tonic.(சா.அக.);.

நிறைப்பு சுவடிப்பு

 நிறைப்பு சுவடிப்பு niṟaippusuvaḍippu, பெ.(n.)

   பாடலில் ஒலி வடிவம் முதலில் சிறுத்தும், செல்லச்செல்ல பெருத்தும் அமைதல்; tone variation in singing songs.

     [நிறைப்பு+சுவடிப்பு]

நிறைமணி

நிறைமணி niṟaimaṇi, பெ. (n.)

   1. பிள்ளை யாருக்குச் செய்யும் முழுக்காட்டுடன் கூடிய வழிபாடு; a profuse bath and offering, especially given to {Ganésa}

   2. கண்டிக்கை; taking a person to task.

அவனுக்கு நிறை மணி யாயிற்று (இ.வ.);.

     [நிறை + மணி.]

நிறைமதி

நிறைமதி niṟaimadi, பெ. (n.)

   முழுநிலவு, முழுத்திங்கள்; full moon.

     “நிறைமதி போல” (பெருங். மகத. 3. 14.);.

     “பிறைவளர் நிறைமதி யுண்டி அணிமணிப் பைம்பூண் அமரர்க்கு முதல்வனீ” (பரிபா. 3.52.);

மறுவ, வெள்ளுவா.

     [நிறை + மதி.]

 நிறைமதி niṟaimadi, பெ. (n.)

   வெள்ளுவா; ful.

     [நிறை+மதி]

நிறைமதியம்

நிறைமதியம்1 niṟaimadiyam, பெ. (n.)

   நண்பகல்;உச்சிப்பொழுது (யாழ்ப்.);,

 noon.

   நில் → நிறை = மிகுதி, உச்சம்;நிறை + மதியம்.]

 நிறைமதியம்2 niṟaimadiyam, பெ. (n.)

   முழு நிலவு நாள், வெள்ளுவா நாள்; full moon day.

     [நிறை + மதியம். மதி → மதியம் = நிலவு.]

நிறைமாசக்கருப்பிணி

 நிறைமாசக்கருப்பிணி niṟaimācakkaruppiṇi, பெ. (n.)

நிறைசூலி பார்க்க;see {niraišūli}

     [நிறைமாசம் + கருப்பினி, நில் → நிறை மாதம் → மாசம் (கொ.வ.);.]

நிறைமாசக்காரி

 நிறைமாசக்காரி niṟaimācakkāri, பெ. (n.)

நிறைசூலி பார்க்க;see {niras-su}

     [நிறை + மாசம் + காரி.]

நிறைமாசச்சூலி

 நிறைமாசச்சூலி niṟaimācaccūli, பெ. (n.)

நிறைசூலி பார்க்க;see {niral-šūh}

     [நிறை + மாசம் + சூலி.]

நிறைமாசம்

 நிறைமாசம் niṟaimācam, பெ. (n.)

நிறைசூலி பார்க்க;see {niraj-šū/}

     [நிறை + மாசம், மாதம் → மாசம்.]

நிறைமாதக்கருப்பிணி

 நிறைமாதக்கருப்பிணி niṟaimātakkaruppiṇi, பெ. (n.)

நிறைகுலி பார்க்க;see {niras-Susi}

     [நிறைமாதம் + கருப்பிணி. கரு → கருப்பிணி. நிறைமாதம் -நிறைந்த மாதம், குல் → சூலி.]

நிறைமாதச்சூலி

 நிறைமாதச்சூலி niṟaimātaccūli, பெ. (n.)

நிறைசூலி பார்க்க;see {nirai-Šuli}

     [நிறைமாதம் + சூலி சூல்→சூலி=சூலினை யுடையவள்.]

நிறைமாதம்

 நிறைமாதம் niṟaimātam, பெ. (n.)

   முழு வளர்ச்சி யடைந்த குழந்தையை ஈன் றெடுக்கும் பத்தாவது மாதம்; the last month of pregnancy.

அவள் நிறைமாதமாக இருக்கிறாள். (உ.வ.);.

     [நிறை + மாதம், நில் → நிறை = நிறைவு, முழுமை. முழு வளர்ச்சியடைந்த சூலினைத்தாங்கியிருக்கும் பெண்ணைக் குறிப்பது.]

நிறைமொழி

நிறைமொழி niṟaimoḻi, பெ. (n.)

   பயன்கள் தவறாத வாக்கு; prophetic words of holy persons which are sure to take effect.

     “நிறைமொழி மாந்தர் பெருமை” (குறள், 28.);.

   2. வேதம் (திவ். பெரிய, 11;6;3.);; vedic.

     [நிறை + மொழி.]

நிறைமொழிமாந்தர்

நிறைமொழிமாந்தர் niṟaimoḻimāndar, பெ. (n.)

   சொல்லாலும் செயலாலும் பிறன்கேடு சூழா மாந்தர்; noble man.

     “நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” (தொல். பொருள். 488.);.

     [நிறை + மொழி + மாந்தர். நில் → நிறை = பெருமை, முழுமை. மொழி = சொல்.]

சொல்லாலும், செயலாலும் பிறன்கேடு சூழாதவர் மொழிவதே சொற்கட்டா அமையும் மந்திரம்.

சொல்லியன சொல்லியாங்கு நிறைவேறு மாறு குறைவறப் பொருள் பயக்கும் சொற்களைப் பேசுவோராகிய சான்றோ நிறைமொழி மாந்தராவார்.

     ‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ -என்றார் திருவள்ளுவரும்.

நிறைமொழியாளர்

நிறைமொழியாளர் niṟaimoḻiyāḷar, பெ. (n.)

   1. முனிவர் (வின்.);; holy persons, sages.

   2. புலவர் (அக.நி.);; Scholars.

     [நிறை + மொழி + ஆளர்.]

நிறைய

நிறைய niṟaiya, வி.எ. (adv.)

   நிரம்ப; abundantly, plentifully.

     “தலைநிறைய பூச்சூடி” (நாலடி. 43.);.

     [நிறை → நிறைய.]

நிறையருந்தானை

நிறையருந்தானை niṟaiyarundāṉai, பெ. (n.)

   நிறுத்தற்கரிய படை; viberated army

     “நிறை யருந் தானை வேந்தரைத் திரை கொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே (புறநா. 156.);.

     “நிறையருந் தானை வெல்போ மாந்தரன், பொறையன்” (அகநா. 142;4-5.

     “நிறையருந் தானை வேந்தனு நேர்ந்து” (சிலப். 28;178.);.

     [(நில் → நிறை + அருந்தானை.]

நிறையறிகருவி

நிறையறிகருவி niṟaiyaṟigaruvi, பெ. (n.)

   1. கட்டளைக்கல் (திவா.);; touch-stone.

   2. துலை (வின்.);; balance.

     [நிறை + அறி + கருவி.]

நில் → நிறு → நிறை + அறிகருவி. நிறை யறியுங்கருவி என்க.

நிறையளவு

 நிறையளவு niṟaiyaḷavu, பெ. (n.)

   நிறுத்தறியுமளவு; measure of weight.

     [நில் → நிறு → நிறை + அளவு.]

நிறையழி-தல்

நிறையழி-தல் niṟaiyaḻidal,    4 செ.கு.வி. (v.i.)

   1. கற்பழிதல்; to lose chastity.

   2. ஒழுக்கங் கெடுதல்; to degenerate in character.

   3. யானை மதம் பிடித்தல்; to rut, as an elephant.

     “நிறையழி கொல்யானை”(கலித். 56.);.

     [நிறை + அழி-,]

நிறையவை

நிறையவை niṟaiyavai, பெ. (n.)

   எல்லா பொருளையும் அறிந்து எதிர்வரும் மொழிகளை எடுத்துரைக்க வல்லவர் குழுமிய அவை (யாப்.வி.பக். 515.);; assembly of the great.

     [நிறை + அவை.]

நிறையாமை

 நிறையாமை niṟaiyāmai, பெ. (n.)

   குறைவு; incompleteness.

     [நில் → நிறை. நிறை + ஆ + மை. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை.]

நிறையிலி

 நிறையிலி niṟaiyili, பெ. (n.)

   சிற்றூர் வரி வகை;     [நிறை + இலி.]

நிறையுடைமை

நிறையுடைமை niṟaiyuḍaimai, பெ. (n.)

   சால்புடைமை; noblety.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும் (குறள்,154.);.

     [நிறை + உடைமை.]

நிறையுரை

 நிறையுரை niṟaiyurai, பெ. (n.)

   எடையும் மாற்றும்; weight and quality of precious metals.

     “நிறையுரை பார்த்துப் பொன் முதலியவை வாங்கவேண்டும்” (உ.வ.);.

     [நிறை + உரை.]

நிறுத்துப்பார்க்குங்கால் எடையும் உரைத்துப் பார்க்குங்கால் தரமும் அளந்து அளவிட வியலும்.

நிறையுள்ளவன்

 நிறையுள்ளவன் niṟaiyuḷḷavaṉ, பெ. (n.)

   பொறுமைசாலி; man of patience.

     [நிறை + உள்ளவன்.]

அறிவும் பண்பும், குணமும் நிறைந் தோனுக்குச் சினம் மேலோங்காது. சினம் மேலோங் காதெனின் பொறுமையே மேலோங்கும். அத்தகையோனை அறிவும் பண்பும் குணமும் நிறைந்தவனென்பது நல்லுலகோர் பண்பு. நிறையெனின் இச்சால்பு நிறைதலையே குறிக்கும்.

நிறையுவா

நிறையுவா niṟaiyuvā, பெ. (n.)

   முழுமதி; full moon.

     “எண்மதி நிறையுவா இருண்மதிபோல நாள் குறைபடுதல் காணுநர் யாரே” (பரிபா.11;37.);

     [நிறை + உவா.]

நிறையெடு-த்தல்

நிறையெடு-த்தல் niṟaiyeḍuttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   நிறுத்தல்; to weigh.

தட்சிண மேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை யெடுத்தும். (தெ.க.தொ.ii;178.);.

     [நிறை + எடு-,]

நிறைவாகரம்

நிறைவாகரம் niṟaivākaram, பெ. (n.)

நிறைவு, 1, 2 (வின்.); பார்க்க;see {nifasvu}

     [நிறைவு + ஆகரம்.]

நிறைவிளக்கு

 நிறைவிளக்கு niṟaiviḷakku, பெ. (n.)

   ஏற்றாத விளக்கு (இ.வ.);; unlit lamp.

     [நிறை + விளக்கு.]

விளக்கேற்றி வினை தொடங்குத லென்பது தமிழப்பண்பு. வினை தொடங்கி நடக்குங்கால் ஏற்றிய விளக்கு கெட்ட தெனின் தீக்குறியா யெண்ணி மாழ்குவர். அத்தகைய தீக்குறியினைத் தவிர்த்தற் பொருட்டு தேய்த்துக் கழுவிப் பொட்டும் பூவுமிட்ட விளக்கில் நெய்யுந் திரியுமிட்டு வினைத் தொடங்குவ தென்பது வழக்கு. அதையே நிறை விளக்கு என்றனர். இங்கு நிறை யென்பது அனைத்தும் நிறைந்த தென்பதே.

நிறைவு

நிறைவு1 niṟaivu, பெ. (n.)

   1. முழுமை

 fullness, completeness, perfection.

     “குறைவிலா நிறைவே” (திருவாச. 22.5.);.

   2. மிகுதிl; abunance, copiousness, profusion.

   3. நிரப்புகை; filling, diffusing.

   4. பொந்திகை; satisfaction, contentment.

     “செல்வமென்பது சிந்தையினிறைவே” (குமர. பிர. சிதம்.மும். 25.);.

   5. மகிழ்ச்சி; joy, gladness.

     “முனிவர்க ணிறைவு கூர்ந்து” (திருவாலவா. 1. 36.);.

   6. மாட்சிமை (திவா.);; excellence, glory,

   7. துறக்கம் (மோட்சம்);; final bliss.

     “வினைபோகும் வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே” (தேவா. 241;2.);.

தெ. நெரவு.

     [நில் → நிறை → நிறைவு.]

 நிறைவு2 niṟaivu, பெ. (n.)

   1. அமைதி; peace. (தொல். பொருள். 206 இளம்.);,

   2. அறிவோடு

   கூடிய ஒழுக்கம் (பேரா. திரு. 18;1.);, (உ.சொ களஞ்.);; good behaviour with wisdom.

     [நிறை → நிறைவு.]

நிறைவுகுறைவாகியவெண்பொருட்டாரணை

 நிறைவுகுறைவாகியவெண்பொருட்டாரணை niṟaivuguṟaivāgiyaveṇporuṭṭāraṇai, பெ. (n.)

   ஒகவகை (தாரணை); ஒன்பதினு ளொன்று (திவா.);; one of {navatāranai,} nine modes in the art of meditation.

     [நிறைகுறை + ஆகிய + வெண்பொருள்+ தாரணை.]

நிறைவுரை

 நிறைவுரை niṟaivurai, பெ. (n.)

   விழாவிலோ, கருத்தரங்கிலோசிறப்புரையாய் நிகழ்த்தப்பெறும் சொற்பொழிவு; special address in a function Or Seminar.

     [நிறைவு + உரை]

நிறைவுவிழா

 நிறைவுவிழா niṟaivuviḻā, பெ. (n.)

   ஒன்று முடிவுபெறும் நாளில் நிகழ்த்தப்படும் விழா; concluding function (of a series);

விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார். (உ.வ);.

     [நிறைவு விழா.]

நிறைவேறு

நிறைவேறு1 niṟaivēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. முற்றுதல்; to be fulfilled, accomplished, completed.

   2. நன்னிலை அல்லது நற்பேறடைதல்; to attain heavenly bliss.

அவன் நற்செயலால் முன்னோர் நிறைவேறிப் போனார்கள். (உ.வ.);.

தெ. நெறவேறு.

     [நிறை → நிறைவு + ஏறு-.]

 நிறைவேறு2 niṟaivēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. (மேற்கொண்ட நடவடிக்கையால்); முடிவு அல்லது பயன் கிடைத்தல்; to be completed, to get fulfilled.

இந்த திட்டங்கள் நிறைவேற மூன்றாண்டுக் காலம் ஆகும். (உ.வ..);.

உன்னுடைய ஆசைகள் நிறைவேறும் காலம் வந்துவிட்டது. (உ.வ.);.

   2. (கடமை); செய்யப்பட்டு முடிதல்;என் கடமை நிறைவேறியது; இனி என் பொறுப்பும் விட்டது. (உ.வ..);.

   3. (தீர்மானம், சட்டமுன்வடிவு முதலியவை); பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறுதல்;     [நில் → நிறை→நிறைவேறு-,]

நிறைவேற்றம்

நிறைவேற்றம் niṟaivēṟṟam, பெ. (n.)

   1. முற்றுகை; fulfilment.

   2. நடத்துகை; performance, execution.

     [நிறை வேறு → நிறைவேற்று → நிறைவேற்றம்.]

நிறைவேற்று

நிறைவேற்று1 niṟaivēṟṟudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   1. முற்றச்செய்தல்; to fulfil, complete.

   2. நடத்துதல்; to perform, execute, effect

கட்டளையை நிறைவேற்றினான். (உ.வ.);.

     [நிறைவு + ஏற்று → நிறைவேற்று.]

 நிறைவேற்று2 niṟaivēṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. முடிவு பெறும்படி அல்லது பயன்கிடைக்கும்படி நடவடிக்கை மேற்கொள்ளுதல்; to carry out, to fulfil, to implement.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஏராளமாகச் செலவாகும். (உ.வ.);.

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பதில் ஆளுங்கட்சி ஆர்வமாக உள்ளது. (உ.வ.);.

தங்களது கோரிக்கைகளை ஆட்சிக்குழு நிறைவேற்றும்வரைப் போராடுவதெனத் தொழிற்சங்கம் முடிவெடுத்தது. (உ.வ.);.

   2. கடமையை, வேலையைச்); செய்தல், நிகழ்த்துதல்; to perform (ones duty);

அரசு அலுவலர் தம் பணியை நிறைவேற்றவிடாமல் தடுப்பது சட்டப்படிக் குற்றமாகும். (உ.வ.);.

     [நில் → நிறை → நிறைவேற்று-,]

நிறோவடி

 நிறோவடி niṟōvaḍi, பெ. (n.)

   பொன்னாங் காணி; sessila plant – illecebrum sessile. (சா.அக.);.

நிற்க

நிற்க niṟka, வியங்.வி. (opt.v.)

   1. இயங்கிக் கொண்டிருக்கிற அல்லது நடந்து கொண்டிருக்கின்ற ஒருவரை நிற்க வைக்கக் கூறும் ஏவற் சொல்; a word used to stop the person, who walking or doing.

   2. அமர்ந்திருக்கிற ஒருவரையோ பலரையோ நோக்கி எழச் சொல்லும் ஏவற்சொல்; a word used to stand up the person, who in sitting down.

   3. போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறையினர் கையில் காட்டிநிறுத்தும் வட்டப்பலகையில் எழுதியிருக்கும் சொல்; a Word on the sound board used to show and control by the traffic police man.

   4. (மடலில்);

   ஒரு செய்தி முடிவடைந்து அடுத்தது தொடங்குகிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படும் சொல்; a Connective used mostly in letters to indicate the ending of a subject and the beginning of another. நீ சேலம் சென்று சேர்ந்திருப்பாய். நிற்க. இங்கு நேற்று பெய்த பெருமழையில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் நமது ஊர் ஏரி நிறைந்துவிட்டது.

   5. ஒழுகுதல்; behavior.

     ‘கற்றபின் நிற்க அதற்குத்தக’ (குறள். 391);

     [நில் → நிற்க. ]

நிற்காங்கு

 நிற்காங்கு niṟkāṅgu, பெ. (n.)

நிருவாலி பார்க்க;see {miruval. }(சா.அக.);.

நிற்குண்டி

நிற்குண்டி niṟkuṇṭi, பெ. (n.)

   நொச்சி மரம் (தைலவ. தைல. 16);; stalked leaflet chaste tree.

நிற்கை

 நிற்கை niṟkai, பெ. (n.)

   நிற்றல் (பழமலை யந்தாதி);; standing.

     [நில் → நில்கை= நிற்கை ]

நிற்ப

 நிற்ப niṟpa, பெ. (n.)

 immovable as the vegetable kingdom.

     [நில் – நிற்பன – நிற்ப, கடைக்குறை. ]

நிலைத்திணை, இயங்குதிணை எனுமி ரண்டனுள் இயங்காது ஒரிடத்து நின்று வளர்ந்து மடியும் நிலைத்திணையைக் குறிக்கும் சொல்.

நிற்பது

நிற்பது niṟpadu, பெ. (n.)

   நிலைத்திணை; the immovables, as the vegetable kingdom.

     “நிற்பதுஞ் செல்வது மானோன் காண்க” (திருவாச. 3. 53.);.

     [நீள் → நிள் → நில். (வே.க. 343.); நில் – இடம் பெயராதிரு. நிற்பது – இடம் பெயராதிருப்பது. ஒரிடத்தில் நிலையாக நிற்பது.]

நிற்பன

நிற்பன1 niṟpaṉa, பெ. (n.)

   இயங்காதன;(நிலைத்திணை);; immovable.

அது மரமுதலியன.

     “உலகினிடை நிற்பனவு நடப்பனவு நெறியினிந்த” (இராமா. மாரிசன்வதை. 2.);

     [நில் → நில்பன → நிற்பன. ]

 நிற்பன2 niṟpaṉa, பெ. (n.)

நிற்ப பார்க்க see {ոirpa.}

     [நில் → நிற்பன]

நிற்பாடு

 நிற்பாடு niṟpāṭu, பெ. (n.)

   நிறுத்துகை; stopping.

     [நில்→ நிற்பு→நிற்பாட்டு→நிற்பாடு.]

நிற்பாட்டம்

நிற்பாட்டம் niṟpāṭṭam, பெ. (n.)

   1. நிறுத்துகை (இ.வ.);

 delay, stop.

   2. நேராக நட்டு வைக்கை; setting up, erecting.

   3. சாரமரத்தில் நாட்டும் கொம்பு (சென்னை);; post setup in scaffolding.

     [நீள் → நிள் → நில். நில் → நிற்பு → நிற்பாட்டு → நிற்பாட்டம்.]

நிற்பாட்டு

நிற்பாட்டு1 niṟpāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. நிறுத்துதல்; to leave, as an employment;

 to stop, as a carriage.

இறங்க வேண்டிய நிறுத்தம் வந்துவிட்டது வண்டியை நிற்பாட்டு (உ.வ.);.

   2. காலந் தாழ்த்துதல்; to delay, procrastinate.

   3. நேராக நடுதல் (சென்னை);; to setup, erect, as posts in sacffolding.

     [நிற்பு+ஆட்டு.]

நீள்→நிள்→நில். நில்→நிற்பு→நிற்பாட்டு (வே.க. 3;46.);.

 நிற்பாட்டு2 niṟpāṭṭu, பெ. (n.)

   நிறுத்துகை; Stopping.

     [நில்→ நிற்பு→நிற்பாட்டு.]

நிற்பின்

 நிற்பின் niṟpiṉ, வி.எ. (adv.)

   நின்றால்; same position or condition.

     [நிற்பு → நிற்பின்.]

நிற்பு

நிற்பு niṟpu, பெ. (n.)

   நிறுத்திவைப்பு; ceasing, stopping.

     [நில் → நிற்பு (வே.க. 3;46.);.]

நிற்றம்

நிற்றம் niṟṟam, பெ. (n.)

   நிலைப்பு; standing. staying.

     [நில் → நிற்றம்.]

ஒ.நோ. வெல் → வெற்றம். கொல் →கொற்றம் (வே.க.3.46.);.

நிற்றலும்

நிற்றலும் niṟṟalum, வி.எ. (adv.)

நித்தலும் பார்க்க; see nitalum.

     “குணபத்திரன்றாள் நிற்றலும் வணங்கி” (சூடா. 7. 76.);

     [நித்தல் → நிற்றல்→நிற்றலும்.]

நிற்றல்

நிற்றல்1 niṟṟal, பெ. (n.)

   நிற்கை; staying.

     “அவற்றொடு சிவணி நிற்றலு முரித்தே” (தொல். எழுத்து. 177.);.

     [நில் → நிற்பு = நிற்றல்.]

   ஒ.நோ;நில் → நிற்றம்.

கொல் → கொற்றம்.

வெல் → வெற்றம்.

நிற்றம் → நிற்றல்.

நில் + தல் – நிற்றல் எனினுமாம்.

 நிற்றல்2 niṟṟal, பெ. (n.)

   ஒழிதல்; cease.

     [நில்+ தல்.]

 நிற்றல்3 niṟṟal, பெ. (n.)

   1. நின்று கொண்டிருக்கும் நிலை; standing position

   இருக்கை (ஆசன); வகை; sitting posture.

நிற்றலிருத்தல் கிடத்த னடத்த லென் றொத்த நான்கி னொல்காநிலைமையொ டின்பம் பயக்குஞ் சமய முதலிய அந்தமில் சிறப்பினாசன மாகும். (சிலப். 14;11. உரை.);.

நிற்றிகா

 நிற்றிகா niṟṟikā, பெ. (n.)

   சிற்றேலம்; small cardamom. (சா.அக.);.

நில அதிர்வு

 நில அதிர்வு nilaadirvu, பெ. (n.)

   பேரழிவையுண்டாக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்படும் மெல்லிய நில அதிர்வு; after shock.

     [நிலம் + அதிர்வு.]

நில விலை ஆவணம்

 நில விலை ஆவணம் nilavilaiāvaṇam, பெ.(n.)

   ஒரு நிலத்திற்கு மாற்றாக வேறோர் நிலம் வழுங்குவதைக் குறிக்கும் ஆவணம்; document which shows the land transfer mutually.

     [நிலம்+விலை+ஆவணம்]

நிலஅளவர்

 நிலஅளவர் nilaaḷavar, பெ. (n.)

நிலங்களை

   அளந்து பதிவுசெய்து ஆவண மாக்கும் அலுவலர்; surveyor (of land);.

     [நிலம் + அளவர்.]

நிலஅளவை

 நிலஅளவை nilaaḷavai, பெ. (n.)

நிலங்களை அளந்து பதிவுசெய்கை (சர்வே);:

 survey.

     [நிலம்+அளவை]

நிலஅவுரி

 நிலஅவுரி nilaavuri, பெ. (n.)

   பேராவுரி; a large variety of indigo plant-Indigofera tinctoria.

     (சா .அக.);.

நிலஆவிரை

 நிலஆவிரை nilaāvirai, பெ. (n.)

   நிலவாகை பார்க்க; see nila-Vågai.

     [நிலம் + ஆவிரை.]

நிலஇயல்

 நிலஇயல் nilaiyal, பெ. (n.)

நிலவியல் பார்க்க; see nila-v-iyal.

     [நிலம் + இயல்.]

நிலஇலந்தை

 நிலஇலந்தை nilailandai, பெ. (n.)

நிலவிலந்தை பார்க்க; see nila-v-ilandai.

     [நிலம் + இலந்தை.]

நிலஉடமை

 நிலஉடமை nilauḍamai, பெ. (n.)

நிலஉடைமை பார்க்க; see nila-udaimai

     [நிலம் + உடமை. உடைமை → உடமை.]

நிலஉடைமை

 நிலஉடைமை nilauḍaimai, பெ. (n.)

   தனிப்பட்ட முறையில் நிலம் சொத்தாக இருப்பது; landed property,

நில உடைமைக் குமுகாயம்.

     [நிலம் + உடைமை.]

நிலகடகம்

 நிலகடகம் nilagaḍagam, பெ. (n.)

சிவதுளசி

 shiva’s basil-Basili cum alba.

நிலகந்திகம்

 நிலகந்திகம் nilagandigam, பெ. (n.)

நொச்சி

 notchy-vitex negundo

நிலகி

 நிலகி nilagi, பெ. (n.)

   கள்ளிக்கொடி; creeping milk hedge-sarcostemma intermedium

நிலகிக்கொத்தவரை

 நிலகிக்கொத்தவரை nilagiggottavarai, பெ. (n.)

   இனிப்புக்கொத்தவரை; sweet clus. ter bean-cyamopsis psoralioides.

நிலக்கடம்பு

நிலக்கடம்பு1 nilakkaḍambu, பெ. (n.)

   செடிவகை (A);; a plant.

     [நிலம் + கடம்பு.]

 நிலக்கடம்பு2 nilakkaḍambu, பெ. (n.)

   குதிரைக்குளம்பு; horse hoof plant.

நிலக்கடற்செடி

 நிலக்கடற்செடி nilakkaḍaṟceḍi, பெ. (n.)

   கடலாரை; Sea Sorrel-marsiles genus.

நிலக்கடலை

 நிலக்கடலை nilakkaḍalai, பெ. (n.)

 peanut (the nut and the crop);; ground nut.

     [நிலம் + கடலை.]

   இது வேரிற் காய்ப்பதால் வேர்க்கடலை;   நிலத்தடியிலிருப்பதால் நிலக்கடலை;   அயலகப் பயிராயினமையால் மணிலாக் கொட்டை அல்லது மல்லாக் கொட்டை;கப்பலில் வந்தமையின் கப்பற்கடலை என்றழைக்கப்படும்.

     [P]

நிலக்கடலைச்செடி

 நிலக்கடலைச்செடி nilakkaḍalaicceḍi, பெ. (n.)

 groundnut plant. groundnut crop.

     [நிலக்கடலை + செடி.]

     [P]

நிலக்கடலைப்பயறு

 நிலக்கடலைப்பயறு nilakkaḍalaippayaṟu, பெ. (n.)

நிலக்கடலை பார்க்க; see nila-k-kadalai.

     [நிலக்கடலை + பயறு.]

நிலக்கடலைப்பயிர்

 நிலக்கடலைப்பயிர் nilakkaḍalaippayir, பெ. (n.)

   வேளாண்மையில் இட்டிருக்கும் நிலக்கடலைச் செடி; crop of ground nut.

     [நிலக்கடலை + பயிர்.]

நிலக்கடலைமணி

 நிலக்கடலைமணி nilakkaḍalaimaṇi, பெ. (n.)

நிலக்கடலை பார்க்க; see nila-k-kadalai.

     [நிலக்கடலை + மணி.]

   ஒ.நோ;நெல்மணி.

நிலக்கடிம்பு

 நிலக்கடிம்பு nilakkaḍimbu, பெ. (n.)

   ஒருவகைப்பூண்டு; a kind of shurb.

     [நிலம்+கடிம்பு.]

நிலக்கணம்

நிலக்கணம் nilakkaṇam, பெ. (n.)

 metrical foot of three niral as karu-Vilani-kani, considered auspicious at the commencement of a poem.

     “நிலைக்கணந்தானே மலர்த் திருவிளங்கும்” (இலக்.வி.800.உரை.);.

     [நிலம் + கணம்.]

நிலக்கண்ணிவெடி

 நிலக்கண்ணிவெடி nilakkaṇṇiveḍi, பெ. (n.)

   நிலத்தில் மறைத்து வைத்து வெடிக்கச் செய்யும் வெடி; land mine.

     [நிலம் + கண்ணிவெடி..]

நிலக்கன்னி

நிலக்கன்னி nilakkaṉṉi, பெ. (n.)

   1. நிலம்பு; american bindweed.

   2. தாளி; impomea.

     [நிலம் + கன்னி.]

நிலக்கன்று

 நிலக்கன்று nilakkaṉṟu, பெ. (n.)

   சிறுபயிர் (யாழ்.அக.);; tender-crop.

     [நில் → நி லம் = நீரைப் போல்

நீண்டோடாது ஒரிடத்து நிற்பது. கல் → கன் → கன்று = மா, புளி,வாழை

   முதலியவற்றின் இளநிலைப்பெயர்;யானை, குதிரை, கழுதை, ஆன், எருமை முதலியவற்றின் இளமைப் பெயர்.]

     [நிலம் + கன்று.]

நிலக்கரி

 நிலக்கரி nilakkari, பெ. (n.)

   நிலத்தடியில் படிவுகளாக இருப்பதும் வெட்டியெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்துவதுமான கறுப்பு நிறக்கனிமம்; coal,pitcoal.

     [நிலம் + கரி.]

நிலக்கரிச்சுரங்கம்

 நிலக்கரிச்சுரங்கம் nilakkariccuraṅgam, பெ. (n.)

   நிலத்தடியில் படிந்தமைந்த கரியை வெட்டுதற்கான சுரங்கம்; coal mine.

     [நிலக்கரி + சுரங்கம்

சுல் – குத்தற் கருத்துவேர் சுல் → சுர் → சுரங்கு → சுரங்கம்.]

     [P]

நிலக்கறையான்

 நிலக்கறையான் nilakkaṟaiyāṉ, பெ. (n.)

   கறையான் வகை (சங்.அக.);; the common white ant.

     [நில் → நிலம் = நீர்போல் நீண்டோடாது

ஒரேயிடத்தில் நிற்கும் பூதவகை. கல் → கர் → கரை → கறை. கறையான் =

அரிப்பது, அரித்துக் கரைப்பது, குறைப்பது, நிலம் + கறையான்.]

நிலக்கலி

 நிலக்கலி nilakkali, பெ. (n.)

   பெருங்கட்டுக்கொடி; big broom creeper.

நிலக்கள்ளி

 நிலக்கள்ளி nilakkaḷḷi, பெ. (n.)

   கள்ளிவகை; green-tubed reddish backed white sepalled torch thistle.

     [நில் → நிலம் = நீர்போல் நீண்டோடாது ஒரேயிடத்தில் நிற்கும் பூதவகை. கள் → கள்ளி = பாலூறும் நிலைத் திணை. நிலம் + கள்ளி.]

     [P]

நிலக்காணிக்கை

நிலக்காணிக்கை nilakkāṇikkai, பெ. (n.)

   வரிவகை (தெ.க.தொ.4.:39);; a kind of tax.

     [நிலம் + காணிக்கை.]

நிலக்காரை

 நிலக்காரை nilakkārai, பெ. (n.)

   முட்செடிவகை (வின்.);; a low thorny shrub.

     [நிலம் + காரை.]

நில் → நிலம். குல் – குத்தற்கருத்துவேர். குல் → கல் → கார் → காரை = முட்செடி.

     [P]

நிலக்காலி

 நிலக்காலி nilakkāli, பெ. (n.)

   அவரி; indigo plant-Indigofera tinctoria

நிலக்காளான்

 நிலக்காளான் nilakkāḷāṉ, பெ. (n.)

   காளான் வகை; toadstool, a fungus.

     [நிலம் + காளான் நில் → நிலம் கல் → கள் → காள் → காளான்.]

     [P]

நிலக்கிடைக்கோடு

 நிலக்கிடைக்கோடு nilakkiḍaikāḍu, பெ.(n.)

   உலகப்படத்தில் நிலநடுக்கோட்டின் இருபாலும் உள்ள கிடை வரை; terrestrial

 latitude;

 imagenary horizontal line drawn on earth called as lattitudes.

மறுவ கிடைவேரைக்கோடு

     [நிலம்+கிடை+கோடு]

நிலக்கிழங்கு,

 நிலக்கிழங்கு, nilakkiḻṅgu, பெ. (n.)

   நிலப்பனைக்கிழங்கு (சங்.அக);; tuber of nila-p-panai.

     [நிலம் + கிழங்கு.]

நிலக்கிழவி

 நிலக்கிழவி nilakkiḻvi, பெ. (n.)

   மூவிலைக் குருத்து; thin leaved wild lime-Trichillia spinosa.

நிலக்கிழார்

 நிலக்கிழார் nilakkiḻār, பெ. (n.)

   பேரளவிலான விளை நிலத்தைச் சொத்தாக வைத்திருப்பவர்; பெரும் நில உடைமையாளர்; landowner. land lord.

நிலம்+கிழார்.

நில் → நிலம். குல் → கில் (திரட்சி,உருண்டை); கிழ → கிழான் → கிழார். நீரிறைக்கும் சால், நன்செட் வேளாண்மை செய்யும் உழவர், உரிமையாளர்.

நிலக்கீல்

 நிலக்கீல் nilakāl, பெ. (n.)

   கீல்; bitumen, asphalt.

நிலக்குண்டி

 நிலக்குண்டி nilakkuṇṭi, பெ. (n.)

   குன்றிமணி; Jeweller’s bead.

நிலக்குதம்

 நிலக்குதம் nilakkudam, பெ. (n.)

   சேனைக்கிழங்கு; elephant ham – typhonium trilobatum alias Dracontium maxima.

நிலக்குமிழ்

நிலக்குமிழ் nilakkumiḻ, பெ. (n.)

   நீண்டசெடிவகை (பதார்த்த.274.);; small Cashmere tree.-Gmelina Asiatica,

கழிச்சல், விழிசொருகல், கொட்டாவி, மந்தம் ஆகியவற்றைப் போக்கும் மருத்துவக் குணமுடையது. (சா.அக.);.

நிலக்குரா

 நிலக்குரா nilakkurā, பெ. (n.)

   நிலக்குரோசினை; an unknown drug.

இது பித்தளையின் களிம்பை அகற்றும்; வெடியுப்பைச் செந்தூரம் செய்யும். (சா.அக.);.

     [நிலக்குரோசினை → நிலக்குரா.]

நிலக்குரோசினை

 நிலக்குரோசினை nilakkurōciṉai, பெ. (n.)

   பெயரறியா மருந்துச் செடி; an unknown drug.

இது பித்தளையின் களிம்பை அகற்றும்; வெடியுப்பைச் செந்தூரம் செய்யும். (சா.அக.);.

     [நிலக்குரோசினை → நிலக்குரா.]

நிலக்குறி

 நிலக்குறி nilakkuṟi, பெ. (n.)

   நிலத்தின்மேல் சில சாற்றைப் பிழிய அதன் கீழுள்ள பொருட்குவையைக் கண்டறியுமாறு தோன்றும் அடையாளம் (வின்.);; sign said to appear on the ground when certain juices are poured on it. showing the presence of treasure underground and its quality.

     [நிலம் + குறி.]

நிலக்குற்றம்

நிலக்குற்றம் nilakkuṟṟam, பெ. (n.)

   அரங்கக்குற்றம்; defect in theatre, stage.

     “எண்ணப்பட்ட நாடக நூலாசிரியர், வகுத்த இயல்புகளின் வழுவாதவகை அரங்கு செய்யத்துவர் வரி வளை பொருத்தல் முதலிய நிலக்குற்றங்கள் நீங்கின விடத்து” (சிலப்.3;95.உரை.]

     [நிலம் + குற்றம்.]

நிலக்குழி

நிலக்குழி nilakkuḻi, பெ. (n.)

   1. உரல்குழி; pit in the ground in which a mortar is fixed

   2. எழுத்துக்குழி (அட்சரக்குழி);; the figure of a letter marked in sand for a child to trace over.

     [நிலம் +குழி.]

     [P]

நிலக்கூந்தல்

 நிலக்கூந்தல் nilakāndal, பெ. (n.)

   கொடியாள் கூந்தல் என்னும் செடி; pea-fruited dodder.

     [நிலம் + கூந்தல்.]

நிலக்கூலி

நிலக்கூலி nilakāli, பெ. (n.)

   நிலவாடகை; rent for land.

     “நிலக்கூலி தண்டிப் போந்த படிக்கும்” (தெ.க.தொ. 6;385.);.

     [நிலம் + கூலி.]

நிலக்கொடி

நிலக்கொடி nilakkoḍi, பெ. (n.)

நிலமகள் பார்க்க; see nila-magal.

     “நிலக்கொடியுந் துயர் நீத்தனள்” (கம்பரா. திருவவ.122.);.

     [நிலம் + கொடி.]

நிலக்கொடிவேலி

 நிலக்கொடிவேலி nilakkoḍivēli, பெ. (n.)

நீலக்கொடிவேலி பார்க்க; see nila-k-kodiveli.

நிலக்கொட்டை

நிலக்கொட்டை1 nilakkoṭṭai, பெ. (n.)

நிலக்கடலை பார்க்க; see nila-k-kadalai.

     [நிலம் + கொட்டை.]

 நிலக்கொட்டை2 nilakkoṭṭai, பெ. (n.)

   பூடுவகை (வின்.);; a kind of plant.

நிலக்கொதி

 நிலக்கொதி nilakkodi, பெ. (n.)

நிலக்கொதிப்பு பார்க்க (வின்.);;see nila-k-kodippu.

     [நிலம் + கொதி.]

நிலக்கொதிப்பு

 நிலக்கொதிப்பு nilakkodippu, பெ. (n.)

   வெய்யோனின் வெப்பத்தால் நிலத்திலெழும் வெக்கை; heat of the ground, due to hot sun.

     [நிலம் + கொதிப்பு.]

நிலக்கொறுக்கை

 நிலக்கொறுக்கை nilakkoṟukkai, பெ. (n.)

   மஞ்சணிறமானதும் இரண்டடி நீளம் வளர்வதுமான கடல்மீன் வகை; sea-fish. canary-yellow, attaining two feet in length.

     [நிலம் + கொறுக்கை.]

     [P]

நிலக்கோட்டை

 நிலக்கோட்டை nilakāṭṭai, பெ. (n.)

   ஒருவகைப்பூண்டு; a kind of shrub.

நிலங்கடந்தநீனிறவண்ணன்

நிலங்கடந்தநீனிறவண்ணன் nilaṅgaḍandanīṉiṟavaṇṇaṉ, பெ. (n.)

   திருமால்; tirumal.

     “காமன் மகன் அநிருத்தனைத் தன்மகள் உழை காரணமாக வாணன் சிறை வைத்தலின், அவனுடைய சோவென்னும் நகரவீதியிற் சென்று நிலங்கடந்த நீனிற வண்ணன் குடங்கொண்டாடிய குடக்கூத்தும்” (சில்ப்6.55;உரை.);.

     [நிலம் + கடந்த + நீலம் + நிறம் + வண்ணன்.]

நிலங்கடந்தநெடுமுடியண்ணல்

நிலங்கடந்தநெடுமுடியண்ணல் nilaṅgaḍandaneḍumuḍiyaṇṇal, பெ. (n.)
   திருமால்; tirumal.

     “நீணிலங்கடந்த நெடுமுடியண்ணல் தாடொழுதகையேன் போகுவல் யானென” (சிலப்.11;147.);.

     [நிலம் + கடந்த + நெடுமுடி + அண்ணல்.]

நிலங்கீறு-தல்

நிலங்கீறு-தல் nilaṅāṟudal,    7 செ.கு.வி. (v.i.)

   பொழுது புலருதல் (நெல்லை);; to dawn.

     [நிலம் + கீறு-,]

காலைக் கதிரவன் நிலத்தைக்கீறி வெளி வருவது போன்று தோன்றுதலால் இவ்வாறழைக்கப்பட்டிருக்கலாம்.

நிலங்கு

 நிலங்கு nilaṅgu, பெ. (n.)

   பெரியகாடை (பிங்.);; quail.

நிலங்கொள்பாம்பு

நிலங்கொள்பாம்பு nilaṅgoḷpāmbu, பெ. (n.)

   நிலத்திலிருக்கும் பாம்பு; snakes.

     “நிலங்கொள் பாம்பின் இழிதரும் விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே” (குறுந்.134.);.

     [நிலம் + கொள் + பாம்பு.]

நிலசம்

 நிலசம் nilasam, பெ. (n.)

   துருசு; blue vitrol-copper acetate.

நிலச்சம்பங்கி

 நிலச்சம்பங்கி nilaccambaṅgi, பெ. (n.)

   செடிவகை; tuberose.

     [நிலம் + சம்பங்கி.]

நிலச்சரிவு

 நிலச்சரிவு nilaccarivu, பெ. (n.)

   மேடான இடத்திலிருந்து மண், மலையிலிருந்து பாறை, கல் முதலியவை திடுமெனப் பெயர்ந்து விழுதல்; landslide.

பெருமழை பெய்ததால் நீலமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்துத் தடைபட்டது. (உ.வ.);.

     [நிலம் + சரிவு.]

நிலச்சருக்கரை

 நிலச்சருக்கரை nilaccarukkarai, பெ. (n.)

   நிலச்சருக்கரைக் கிழங்கு; wild. ground potato merma arenaria.

நிலச்சல்லியம்

 நிலச்சல்லியம் nilaccalliyam, பெ. (n.)

   கிணறு வெட்டுதற்குரிய தகுதியை யறிவிக்கும் நிலக்குறி; the sign on a plot of land indicating whether it is suitable for digging a well.

     [நிலம் + சல்லியம்.

சுல் – குத்தற் கருத்து வேர். சுல் → சல் → சல்லியம்.]

நிலச்சாடை

 நிலச்சாடை nilaccāṭai, பெ. (n.)

நிலச்சார்பு பார்க்க; see {nila-c-cărbu.}

     [நிலம் + சாடை.]

நிலச்சாந்து

நிலச்சாந்து nilaccāndu, பெ. (n.)

   1. சுண்ணாம்புக்காரை; lime, mortar.

   2. மண்ணைக்கொண்டு குழந்தை நெற்றியிலிடும் பொட்டு; mark on the forehead of child, made with earth.

     [நிலம் + சாந்து.]

நிலச்சாய்வு

 நிலச்சாய்வு nilaccāyvu, பெ. (n.)

நிலச்சார்பு பார்க்க; see nila-c-cărbu.

     [நிலம் + சாய்வு. சார்பு → சாய்வு.]

நிலச்சார்

 நிலச்சார் nilaccār, பெ. (n.)

நிலச்சார்பு (யாழ்ப்.); பார்க்க; see nila-c-cărbu.

     [நிலம் + சார். நில் → நிலம், சால் → சார்.]

நிலச்சார்பு

நிலச்சார்பு nilaccārpu, பெ. (n.)

   1. நிலத்தின் தன்மை; nature of the soil.

   2. நிலவளம்; fertility of the soil.

     [நிலம் + சார்பு. நில் → நிலம்.சால் → சால்பு → சார்பு.]

நிலச்சுருங்கி

நிலச்சுருங்கி1 nilaccuruṅgi, பெ. (n.)

   தொட்டாற்சுருங்கி; sensitive plantmimosa indica olias oxalis Sensitive.

     [நிலம் + சுருங்கி.]

நிலச்சுவான்தார்

 நிலச்சுவான்தார் nilaccuvāṉtār, பெ. (n.)

நிலக்கிழார் பார்க்க; see nila-k-kiļār.

நிலச்சூடு

 நிலச்சூடு nilaccūṭu, பெ. (n.)

நிலக்கொதிப்பு (வின்.); பார்க்க; see nila-k-kodipрu.

     [நிலம் + சூடு.]

நிலச்சேமை

 நிலச்சேமை nilaccēmai, பெ. (n.)

   சேம்பையினச் செடிவகை (A);; a kind of arum.

     [நிலம் + சேமை.]

நிலத்தடிநீர்

 நிலத்தடிநீர் nilattaḍinīr, பெ. (n.)

   நிலத்தின் அடியில் இருக்கும் நீர்; ground water.

ஆழ்த்துளைக் கிணற்றின் மூலம் நிலத்தடி நீரை எடுத்து வேளாண்மைக்குப் பயன்படுத்துவர். (உ.வ);.

     [நிலத்தடி + நீர்.]

நிலத்தடிநீர்மட்டம்

 நிலத்தடிநீர்மட்டம் nilattaḍinīrmaḍḍam, பெ. (n.)

   மண்ணுள்ளிருக்கும் நீரின் அளவு; ground water level.

     [நிலத்தடி + நீர்மட்டம்.]

நிலத்தண்டு

நிலத்தண்டு nilattaṇṭu, பெ. (n.)

   1. வேர்த்தண்டு; a stem resembling a rootrhizome

   2. கீரைத்தண்டு; garden green Amaranthus blitum.

     (சா. அக.);.

     [நிலம் + தண்டு.]

நிலத்தரசு

 நிலத்தரசு nilattarasu, பெ. (n.)

நிலத்தரசுகாரர் பார்க்க; see nilattarasu-kārar.

     [நிலம் + அத்து + அரசு.]

நிலத்தரசுகாரர்

 நிலத்தரசுகாரர் nilattarasukārar, பெ. (n.)

   நிலவுடையாளர் (யாழ்ப்.);; proprietors of the land.

     [நிலம் + அத்து + அரசுகாரர்.]

நிலத்தளம்

 நிலத்தளம் nilattaḷam, பெ. (n.)

   தரை; ground, earth.

     [நிலம் + தளம்.]

நிலத்தழல்

நிலத்தழல் nilattaḻl, பெ. (n.)

நிலச்சூடு (தக்கயாகப்.52, உரை.); பார்க்க; see nila-c-cudu.

     [நிலம் + தழல்.]

நிலத்தாமரை

 நிலத்தாமரை nilattāmarai, பெ. (n.)

   முளரி; rose-Rosa centifolia.

     [நிலம் + தாமரை.]

நீரிலுறையும் தாமரையையொத்திருக்கும் அயலகப் பூஞ்செடி.

     [P]

நிலத்தி

 நிலத்தி nilatti, பெ. (n.)

   மின்மினி, நுளம்பு (சூடா.);; firefly.

     [நித்தில் → நிலத்தி.]

நிலத்திணை

 நிலத்திணை nilattiṇai, பெ. (n.)

நிலைத்திணை பார்க்க; see nila-t-tinai.

நில் → நிலை + திணை.

நிலை → நில (கொ.வ.);

நிலத்திலம்

 நிலத்திலம் nilattilam, பெ. (n.)

   முத்து; pearl.

     [நிலத்தி – ஒளிர்வு

நிலத்தி → நிலத்திலம்.]

நிலத்துஇன்மைகூறிமறுத்தல்

 நிலத்துஇன்மைகூறிமறுத்தல் nilattuiṉmaiāṟimaṟuttal, பெ. (n.)

   அகப் பொருட்டுறையுள் ஒன்று; one of agapporulturai.

     [நிலைத்து + .இன்மைகூறி + மறுத்தல்.]

திருக்கோவையாளில் வரும் அகப்பொருட் துறைகளுளொன்று, இதன் பொருள் சந்தனத் தழையின்றி வேறுதழை கொண்டு செல்ல, இது எங்கள் நிலத்தில் இல்லாதது, உறவினர் ஐயுறுவர் என்று கூறி மறுப்பது என்பதாம்.

நிலத்துத்தி

நிலத்துத்தி1 nilattutti, பெ. (n.)

   அரிவாள் முனைப்பூண்டு; a shruby plant-sida cordifolia.

 நிலத்துத்தி2 nilattutti, பெ. (n.)

   துத்திவகை (யாழ்ப்.);; downy heart leved morning mallow.

     [நிலம் + துத்தி.]

நிலத்துளக்கு

நிலத்துளக்கு nilattuḷakku, பெ. (n.)

   நிலநடுக்கம்; earthquake. ‘

     “நிலத்துளக்கு விண்ண திர்ப்பு” (ஆசாரக்.48.);.

     [நிலம் + துளக்கு. துளங்கு → துளக்கு = அசைவு, அதிர்வு.]

நிலத்துளசி

நிலத்துளசி nilattuḷasi, பெ. (n.)

   துளசிவகை, (பதார்த்த.305.);; a kind of basilGeniospermum gracile.

     [நிலம் + துளசி.]

     [P]

நிலத்தூழி

நிலத்தூழி nilattūḻi, பெ. (n.)

   நிலத்துத் தோன்றிய ஐந்தாம் ஊழி; the fifth deluge.

     “உள்ளீடாகிய இருநிலத் தூழியும் நெய்தலுங் குவளையும் ஆம்பலும் சங்கமும்” (பரிபா.2;12.);.

     [நிலம் + அத்து + ஊழி]

நிலத்தெய்வம்

நிலத்தெய்வம் nilatteyvam, பெ. (n.)

   1. நிலத்தேவி (பூதேவி); (தக்கயாகப் 671, உரை.);; earthas goddess.

   2. ஐந்திணைக்குரிய தெய்வங்கள்; deities presiding over the five-foldi tinai.

     “நிலத்தெய்வம் வியப்பெய்த நீணிலத்தோர் மனமகிழக் கலத்தொடு புணர்ந்துமைந்த கண்டத்தாற் பாடத் தொடங்கு மன்” (சிலப்.7;24.);.

     [நிலம் + தெய்வம்.]

நிலத்தேவர்

நிலத்தேவர் nilattēvar, பெ. (n.)

   ஆரியப் பார்ப்பனர்; brahmins. மேலாத்தேவர்களும் நிலத்தேவரும் மேவித்தொழும். (திவ். திருவாய்.5.1.8.);

     [நிலம் + தேவர்.]

ஆரியப் பார்ப்பனர்களாகிய பிராமணர்கள் மண்ணுலகத் தேவர்களாகக் கருதப் பட்டமையானால் பூசுரர் எனப்பட்டனர். பூசுரர் என்பதின் தமிழ் வடிவமே நிலத்தேவர் என்பது.

நிலத்தேவர்குழு

 நிலத்தேவர்குழு nilattēvarkuḻu, பெ. (n.)

   பிராமணர்குழு; group of bramins.

     [நிலத்தேவர் + குழு.]

நிலத்தோர்

நிலத்தோர் nilattōr, பெ. (n.)

   மாந்தர்; human being.

இருநிலத்தோரும் இயைகென ஈத்தநின் தண்பரங் குன்றத் தியலணி. (பரிபா.19;4);

நிலநடுக்கம்

 நிலநடுக்கம் nilanaḍukkam, பெ. (n.)

 earth tremor, earthquake.

நேற்று சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கம் பத்து நொடிகள் நீடித்தது.

     [நிலம் + நடுக்கம்.]

நிலநடுக்கோடு

 நிலநடுக்கோடு nilanaḍukāḍu, பெ. (n.)

   இரு முனையங்களிலிருந்தும் நிலப்பந்தைச் சமஅளவில் பிரிக்கக் குறுக்கு வாட்டில் இருப்பதாகக் கொள்ளும் கற்பனைக்கோடு; equator.

     [நிலம் + நடு + கோடு.]

நிலநட்டம்

 நிலநட்டம் nilanaṭṭam, பெ. (n.)

   வேளாண்மை செய்யாமையால் உண்டாகும் இழப்பு (இ.வ.);; loss on land by allowing it to lie fallow.

     [நிலம் + நட்டம்.]

த. நட்டம். வ. நஷ்டம்.

நிலநயம்

 நிலநயம் nilanayam, பெ. (n.)

நிலநலம் பார்க்க; see nila-nalam.

     [நிலம் + நயம் நலம் → நயம்.]

நிலநலம்

நிலநலம் nilanalam, பெ. (n.)

   நிலத்தினது நன்மை; profit on land.

தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம் கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால்-பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. (நல்வழி.16.);.

நிலநெல்லி

 நிலநெல்லி nilanelli, பெ. (n.)

   நெல்லிவகை; a common herb-phyllanthus maɖeras patensis.

க.,து. நெலநெல்லி.

     [நிலம் + நெல்லி.]

நிலந்தடி

நிலந்தடி nilandaḍi, பெ. (n.)

நிலந்தட்டி1 (நாஞ்சில்.); பார்க்க; see nilan-tatti.

     [நிலந்தட்டி → நிலந்தடி.]

நிலந்தட்டி

நிலந்தட்டி1 nilandaṭṭi, பெ. (n.)

நிலஞ்சமனாக்கும் பலகை (யாழ்ப்.);,

 an instrument for levelling or smoothing a floor or road.

     [நிலம் + தட்டி.]

     [P]

 நிலந்தட்டி2 nilandaṭṭi, பெ. (n.)

   கடல்மீன் வகை; a kind of Sea-fish.

நிலந்தரஞ்செய்-தல்

நிலந்தரஞ்செய்-தல் nilandarañjeytal,    1செ.குன்றாவி. (v.t.)

   முற்றும் அழித்தல்; to destroy utterly, as razing to the ground

     “துயராயினவெல்லா நிலந்தரஞ் செய்யும்”

நிலம் + தரம்செய்-,]

நிலந்தரு திருவின் பாண்டியன்

 நிலந்தரு திருவின் பாண்டியன் nilandarudiruviṉpāṇṭiyaṉ, பெ.(n.)

தொல்காப்பியத்தை அரங்கேற்றிய பாண்டிய மன்னன்:

 Pandiya king in whose presence ancient Tamil grammer Tölkappiyam approval of the learned assembly.

நிலந்தருதிருவினெடியோன்

நிலந்தருதிருவினெடியோன் nilandarudiruviṉeḍiyōṉ, பெ. (n.)

நிலந்தருதிருவிற் பாண்டியன் பார்க்க; see nilan-taru-tiruvir-pandiyan.

     “புகழ்சால் சிறப்பினிலந்தரு திருவினெடியோன் போல்” (மதுரைக். 763.);.

     [நிலம்தருதிருவின் + நெடியோன்.]

நிலந்தருதிருவின்நிழல்

நிலந்தருதிருவின்நிழல் nilandarudiruviṉniḻl, பெ. (n.)

   நிலத்திற்குப் பல செல்வத்தினையும் தருகின்ற அருள்; benidiction.

நிலந்தருதிருவின் நிழல்வாய் நேமி (சிலப்.15;1.);.

     [நிலம்+தரும்+நிழல்.]

மன்னன் குடிகளிடத்து அருளுடையான் ஆயவழி நிலத்துப் பல்வளமும் பெருகுமாகலின் நிலந்தருவின் நிழலாயிற்று. நிழல்=அருள்.

மாற்றாரது நிலத்தைத்தரும் வெற்றியாகிய செல்வம் என்றும், ஒளிபொருந்திய ஆணைச்சக்கரம் என்றுமாம்.

நிலந்தருதிருவிற்பாண்டியன்

 நிலந்தருதிருவிற்பாண்டியன் nilandarudiruviṟpāṇṭiyaṉ, பெ. (n.)

   தொல்காப்பியம் அரங்கேறிய அவைக்குயோனும் இடைச்சங்க காலத்தவருமான பாண்டியன் (தொல்.பாயி.);; Pandiyan of the second sangam in whose court Tolkāppiyam was first approved and Published.

நிலந்திரைத்தானை

நிலந்திரைத்தானை nilandiraittāṉai, பெ. (n.)

   நிலஅகலத்தைத் தன்னுள்ளே அடக்கிய தானை; battalian of army.

     “கலந்த கேண்மையிற் கனக விசயர் நிலந்திரைத் தானையொடு நிகர்த்துமேல்வர” (சிலப்.26;186.);.

     “நிலந்திரைக்கும் கடற்றானை” (புறநா.96.);.

     [நிலம் + திரைத்த + தானை]

திரைத்தல் = சுருங்குதல், நிலவகலத்தைத்தன்னுள்ளே யடக்குதல்.

நிலந்தெளிதல்

 நிலந்தெளிதல் nilandeḷidal, பெ. (n.)

   பொழுது புலரல்; day-breaking.

     [நிலம் + தெளிதல்.]

இருளாற் கவ்வப் பட்டிருந்த நிலத்தைத் தன் கதிரொளியால் புலப்படுத்தித் தெளிவிக்கின்றமையால் பொழுது புலரலை நிலந்தெளிதல் என்றனர்.

நிலன்

 நிலன் nilaṉ, பெ. (n.)

நிலம் பார்க்க; see nilam.

     [நிலம் – நிலன் ம → ன போலி, கடைப்போலி.]

நிலபுலன்

 நிலபுலன் nilabulaṉ, பெ. (n.)

நிலபுலம் பார்க்க; see nila-bulam.

     [நிலபுலம் → நிலபுலன்.]

நிலபுலம்

 நிலபுலம் nilabulam, பெ. (n.)

   புன்செய், நன்செய், நிலம்;அவருக்கு நிறைய நிலபுலங்கள் இருக்கின்றன. (உ.வ.);

     [நிலம் + புலம்.]

நி ல் → நி ல ம் = நீ ர் போ ல் ஒடாது நிலைத்து நிற்கும் பூதம்.

புல் → புலம் = பொருந்தியிருக்கும் நிலம்.

நிலப்படுகை

 நிலப்படுகை nilappaḍugai, பெ. (n.)

   ஆற்றோரத்தமைந்துள்ள நீர்வளம் மிக்க நிலம்; land on the banks of a river fit for cultivation.

     [நிலம் + படுகை.]

நிலப்படை

நிலப்படை nilappaḍai, பெ. (n.)

 military one among the four divisions; of armed force in olden days.

     [நிலம் + படை.]

நிலத்தில் ஊர்ந்து சென்று பகைவரைத்தாக்கும் படைவகை. இப்படைவகைப் பழங் காலத்திலிருந்து இன்றுவரையுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

   நால்வகைப்படைகளாவன;இக்காலம் முற்காலம்

   1. நிலப்படை. 1. நிலப்படை.

   2. நீர்ப்படை. 2. குதிரைப்படை.

   3. வான்படை. 3. யானைப்படை.

   4. தேர்ப்படை.

நாட்டுமக்களையும் தன்னையும் காத்துக் கொள்வதற்கும், தம் பகைவரைத் தெருட்டுதற்கும், ஆளும் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்வதற்கும், பயன்படும் வகையில் அமைத்துக்கொள்வது படையாகும்.

அது மன்னராட்சிக் காலத்தில், தேர், கரி, பரி, காலாள் என நான்வகையாய் அமைந்திருந்தது. இன்றைய மக்களாட்சியில் நிலம், நீர் வான் என மூவகையாய்ப் பாகுபாடு கொண்டது. அஃதெவ்வாறாயினும் காலட் படையாம் நிலப்படை இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.

நிலப்பனை

நிலப்பனை nilappaṉai, பெ. (n.)

   செடிவகை (பதார்த்த.403.);; moosly or weevil root curculigo orchioides.

     [நிலம் + பனை.]

நிலப்பனைக்கிழங்கு

 நிலப்பனைக்கிழங்கு nilappaṉaikkiḻṅgu, பெ. (n.)

   நிலப்பனையின் கிழங்கு; ground palm-curculigo orchioides.

     [நிலப்பனை + கிழங்கு.]

பனைமரத்தின் கொட்டைகளை மண்ணில் புதைத்து வைத்து, குறிப்பிட்ட காலம் வரை தண்ணீர் ஊற்றி வந்தால் முளைவிட்டு கிழங்காக வளரும். இதுவே பனைக் கிழங்கு. இக் கிழங்கு மருத்துவக் குணங்களைக் கொண்டது. (சா.அக.);.

நிலப்பயன்

 நிலப்பயன் nilappayaṉ, பெ. (n.)

நிலவிளைவு (வின்.);,

 produce of the soil, profi on the land.

     [நிலம் + பயன்.]

நிலப்பயிர்

 நிலப்பயிர் nilappayir, பெ. (n.)

பெண் (வைத்தியபரி.கருப்பொ);,

 female,

நிலப்பரணி

 நிலப்பரணி nilapparaṇi, பெ. (n.)

சிற்றீஞ்சு

 small date fruit-phoenix farnifera.

நிலப்பரப்பு

நிலப்பரப்பு nilapparappu, பெ. (n.)

   1. நிலத்தின் பரப்பளவு (வின்.);; a measure o land.

   2. நிலத்தின் பரப்பளவு; spread of extent of the earth.

     [நிலம் + பரப்பு.]

நிலப்பலா

 நிலப்பலா nilappalā, பெ. (n.)

   வேர்ப்பலா (சங்.அக.);; common jack fruit.

     [நிலம் + பலா.]

நிலத்தடியில் காய்க்கும் கடலை நிலக்கடலை என்றாற் போல், நிலத்தையொட்டியுள்ள வேரில் பழுக்கும் வேர்ப்பலா நிலப்பலா எனப்பட்டது.

நிலப்பாகல்

 நிலப்பாகல் nilappākal, பெ. (n.)

   பாகல் வகை (மலை.);; balsam-apple, climbermormordica humilis.

     [நிலம் + பாகல்.]

பாகல் கொடிப்பாகல், நிலப்பாகல் என இரு வகையுடைத்து. கொடிப்பாகல் என்பது மரம்,செடி வேலி போன்றவற்றில் படர்ந்து காய்க்கும். நிலப்பாகல் என்பது நிலத்தில் கொடி போல் படர்ந்து காய்க்கும் தன்மையுடையது.

நிலப்பாகை

 நிலப்பாகை nilappākai, பெ. (n.)

நிலப் பாகல் (சங்.அக.); பார்க்க; see nila-p-pagal.

     [நிலம் + பாகை. பாகல் → பாகை.]

நிலப்பாசம்

 நிலப்பாசம் nilappācam, பெ. (n.)

   நாகப்பாம்பு;

நிலப்பாலை

நிலப்பாலை1 nilappālai, பெ. (n.)

   சிறுமரவகை (L);; round leaved discous feather foil.

     [நிலம் + பாலை.]

 நிலப்பாலை2 nilappālai, பெ. (n.)

   1. கும்பம் பாலை; blue dyeing roseberry wrightia tinetoria

   2. ஒழுகு; ground paulay, round leaved discous feather foilcleistanthus collinus alias amanoa Collina.

   3. நிலத்தையொட்டிப் படரும் ஒரு செடி வகை; an annual with procumbent branches Euphorbiahirta.

     [நிலம் + பாலை.]

நிலப்பாளை

நிலப்பாளை1 nilappāḷai, பெ. (n.)

அம்மான்பச்சரிசி (சங்.அக.); பார்க்க; see ammān- paccariši,

     [நிலம் + பாளை.]

     [P]

 நிலப்பாளை2 nilappāḷai, பெ. (n.)

   பங்கம்பாளை; Indian Worm killer-aristolochia bracteata.

     (சா. அக.);.

நிலப்பாவாடை

 நிலப்பாவாடை nilappāvāṭai, பெ. (n.)

   நடைபாவாடை (வின்.);; cloth spread on the ground to walk on, as in a procession.

     [நிலம் + பாவாடை.]

நில் → நிலம் பா= பரவுதல், பாவுதல் பா + ஆடை = பரவும் ஆடை.

நிலப்பிப்பிலி

 நிலப்பிப்பிலி nilappippili, பெ. (n.)

   ஒரு பூடு; lippia nodiflora.

     [நிலம் + பிப்பிலி.]

நிலப்பிரண்டை

 நிலப்பிரண்டை nilappiraṇṭai, பெ. (n.)

   ஓரிலைத்தாமரை; one leaf lotus-Londium sufsruticosum

     [நிலம் + பிரண்டை.]

நிலப்பிரபு

 நிலப்பிரபு nilabbirabu, பெ. (n.)

நிலக்கிழார் பார்க்க; see nila-k-kilär,

     [நிலம் + பிரபு.]

நிலப்பிரபுத்துவம்

 நிலப்பிரபுத்துவம் nilabbirabuttuvam, பெ. (n.)

   தனியாள் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கும் முறை; feudalism.

நிலப்புரபுத்துவக் குமுகாயத்தில் கொடித்தடிமை முறையும் இருந்தது. (உ.வ.);.

     [நிலம் + பிரபுத்துவம்.]

நிலப்பிரயோசனம்

 நிலப்பிரயோசனம் nilappirayōcaṉam, பெ. (n.)

நிலப்பயன் பார்க்க; see nila-p-payan.

     [நிலம் + பிரயோசனம்.]

நிலப்பிளப்பு

 நிலப்பிளப்பு nilappiḷappu, பெ. (n.)

நிலம்

   பலகாலாகப் பிரிதல்; வெடித்தல் (சங்.அக.);; crack in the earth.

     [நிலம் + பிளப்பு. நில் → நிலம், பிள் → பிள → பிளப்பு.]

நிலப்பீர்க்கு

 நிலப்பீர்க்கு nilappīrkku, பெ. (n.)

   பீர்க்கு வகை; species of luffa.

     [நிலம் + பீர்க்கு. நில் → நிலம், பிள் → பீர் → பீர்க்கு.]

நிலப்புரண்டி

 நிலப்புரண்டி nilappuraṇṭi, பெ. (n.)

நிலத்தில் புரண்டு கிடக்கும் பூண்டு (வின்.);

 a therb which takes fast hold of the ground.

     [நிலம் + புரண்டி]

     [புரள் – புரண்டு – புரண்டி.]

நிலப்புழு

 நிலப்புழு nilappuḻu, பெ. (n.)

நிலப்பூச்சி (வின்.); பார்க்க; see {nila-p-pūcci}

     [நிலம் + புழுக்கம்.]

நிலப்பூ

நிலப்பூ1 nilappū, பெ. (n.)

   புற்புதர் களிலுண்டாகும் பூ; flowers of grasses and herbs.

     “நீர்ப்பூ நிலப்பூ மரத்திலொண்பூ” (திவ்.இயற்.திருவிருத்;55.);.

     [நிலம் + பூ.]

 நிலப்பூ2 nilappū, பெ. (n.)

   தாளி; convolulus

நிலப்பூசணி

நிலப்பூசணி nilappūcaṇi, பெ. (n.)

   செடிவகை (1);; panicled bindweed.

     [நிலம் + பூசனி.]

நிலப்பூச்சி

 நிலப்பூச்சி nilappūcci, பெ. (n.)

   சில்வண்டுப்பூச்சிவகை (வின்.);; mob-cricke gryllotalpa forealis.

     [நிலம்+பூச்சி]

நிலப்பூதம்

நிலப்பூதம் nilappūtam, பெ. (n.)

   ஐவகைப் பூதங்களுளொன்று; the earth, one among the five elements of the nature.

     [நிலம் + பூதம்.]

   ஐவகைப் பூதங்களாவன;   1. நிலம்.

   2. நீர்,

   3. வான்.

   4. வளி,

   5. தீ.

நிலப்பெயர்

நிலப்பெயர் nilappeyar, பெ. (n.)

   வாழும் நாட்டின் அடிப்படையில் ஒருவனுக்கிடும் பெயர்; names of persons derived from their countries, as {aruvalan, cóliyan,}

     “நிலப்பெயர் குடிப்பெயர்” (தொல். சொல். 167.);.

     [நிலம் + பெயர்]

நிலப்பெயர்ச்சி

 நிலப்பெயர்ச்சி nilappeyarcci, பெ. (n.)

   இடமாறுகை (யாழ்.அக.);; change of place.

     [நிலம் + பெயர்ச்சி.]

நிலப்பெயர்வு

 நிலப்பெயர்வு nilappeyarvu, பெ. (n.)

நிலப்பெயர்ச்சி பார்க்க; see nila-p-peyarcci

     [நிலப்பெயர்ச்சி → நிலப்பெயர்வு.]

நிலப்பொட்டு

நிலப்பொட்டு1 nilappoṭṭu, பெ. (n.)

   மண்ணைக்கொண்டு குழந்தை நெற்றியில் இடும் பொட்டு; mark on the forehead of child, made on earth.

வீரபாண்டி கட்டப்பொம்மன் பிறந்த ஊராகிய பாஞ்சாலங் குறிச்சியில் இன்றும் அவ்வூரில் பிறந்த குழந்தைகளுக்கு மண்ணை எடுத்து நெற்றில் பொட்டு வைக்கும் வழக்கம் உண்டென்பதறிக.

     [நிலம் + பொட்டு.]

 நிலப்பொட்டு2 nilappoṭṭu, பெ. (n.)

   காளான்வகை (வின்.);; a kind of medicinal fungus.

     [நிலம் + பொட்டு.]

நிலமாகிய தரையில் பொட்டு போன்றிருப்பது.

நிலப்போக்கு

 நிலப்போக்கு nilappōkku, பெ. (n.)

   மண்ணின் தன்மை; quality of soil.

     [நிலம் + போக்கு.]

நிலப்போங்கு

 நிலப்போங்கு nilappōṅgu, பெ. (n.)

நிலத்தினியல்பு அல்லது தன்மை (வின்.);,

 quality of soil.

     [நிலம் + போங்கு.]

நில் → நிலம்

போக்கு → போங்கு.

நிலமகன்

 நிலமகன் nilamagaṉ, பெ. (n.)

 the planet mars, as the son of the earth.

     [நிலம் + மகன்.]

நிலமகள்

நிலமகள்1 nilamagaḷ, பெ. (n.)

சீதா செங்கழுநீர் பார்க்க; see sida -cenaalunir.

 நிலமகள்2 nilamagaḷ, பெ. (n.)

   நிலமாகிய பெண்; Goddess of earth.

     “நிலமகளழுத காஞ்சியும்”(புறநா.365.);.

     [நிலம் + மகள்.]

நிலமக்கள்

 நிலமக்கள் nilamakkaḷ, பெ. (n.)

   மண்ணின் மைந்தர்கள்; son of the soil.

     [நிலம் + மக்கள்.]

பழங்காலத் தமிழர்கள் தம் நிலங்களை அதன் தன்மைக்கேற்ப நால்வகையாகப் பிரித்துக் குறிஞ்சி. முல்லை. மருதம். நெய்தல் எனப் பாகுபடுத்தி அவற்றுள் முல்லையுங்குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்ததைப் பாலையென்றோர் படிவமாக்கி அவ்வந்நிலத்தில் வாழ்வோரை அவ்வந் நிலமக்கள் என்றழைத்தனர்.அந்நிலத்திற்கேற்ப ஒழுக்கத்தையும் புணர்தல், பிரிதல், ஊடல், இருத்தல், இரங்கல் என்ற வகையாக வரையறுத்துக்கொண்டு வாழ்க்கை நடத்தினர். இன்றும் அவ்வழக்கந் தொடர்ந்த போதிலும் பண்டிருந்த பண்பாட்டைத் தொலைத்துவிட்டு பண்பாடற்று, வாழும் மாநிலத்திற் கேற்ப மொழிவழிப் பாகுபாடு கொண்டு பகைமேலிட வாழ்கின்றனர்.

நிலமங்கை

நிலமங்கை nilamaṅgai, பெ. (n.)

நிலமகள்2 (திவ்.பெரியதி.8.4.9.); பார்க்க; see nila-magal.

     [நிலம் + மங்கை]

நிலமங்கைநாச்சியார்

நிலமங்கைநாச்சியார் nilamaṅgainācciyār, பெ. (n.)

நிலமகள் பார்க்க; see nila-magal.

     “பெருமாளுக்கும் நிலமங்கைநாச்சியார்க்கும்” (தெ.க.தொ.1;126.);.

     [நிலமங்கை + நாச்சியார் நாய்கன் – தலைவன் நாய்ச்சி – தலைவி நாய்ச்சி → நாய்ச்சியார்→நாச்சியார்.]

நிலமடக்கு-தல்

நிலமடக்கு-தல் nilamaḍakkudal,    5 செ.கு.வி. (v.i.)

நிலத்துக்குத் தரம் ஏற்படுத்துதல்

 to classify arable lands according to quality.

     [நிலம் + அடக்கு.]

நிலமடந்தை

நிலமடந்தை nilamaḍandai, பெ. (n.)

நிலமகள்2 பார்க்க (திவ்.பெரியதி.4.4.8.);;see nila-magal.

     [நிலம் + மடந்தை.]

நிலமட்டம்

நிலமட்டம் nilamaṭṭam, பெ. (n.)

   1. தரைமட்டம்; ground level.

   2. நீர்மட்டம் (வின்.);; water-level.

     [நிலம் + மட்டம்.]

நிலமண்

 நிலமண் nilamaṇ, பெ. (n.)

   மனைத்தளத்தை நிரப்புமண் (யாழ்ப்.);; earth forming the floo of the house.

     [நிலம் + மண்.]

நிலமண்டிலவாசிரியப்பா

 நிலமண்டிலவாசிரியப்பா nilamaṇṭilavāciriyappā, பெ. (n.)

நிலைமண்டி வாசிரியப்பா பார்க்க; see nilai-mangila-v-aširiyappӑ.

     [நிலைமண்டில வாசிரியப்பா → நிலமண்டி

வாசிரியப்பா.]

நிலமண்டில் ஆசிரியப்பா

 நிலமண்டில் ஆசிரியப்பா nilamaṇṭilāciriyappā, பெ. (n.)

நிலைமண்டில வாசிரியப்பா பார்க்க; see nilaimangila-v-ašriyappӑ.

     [நிலைமண்டில வாசிரியப்பா → நிலமண்டி ஆசிரியப்பா.]

நிலமதிப்பு

 நிலமதிப்பு nilamadippu, பெ. (n.)

   தரை மதிப்பு; ground value.

     [நிலம் + மதிப்பு.]

நிலமயக்கம்

நிலமயக்கம்1 nilamayakkam, பெ. (n.)

   ஒரு நிலத்துக்குரிய காலம் உரிப்பொருள் கரு பொருள்கள் மற்ற நிலத்துக்குரிய அப்பொருளுடன் கலந்துவரப் பாடலமைக்கையாகிய திணைமயக்கம் (சீவக.48.உரை.);; harmon ous blending of the features of one {tint} with those of another.

     [நிலம் + மயக்கம்.]

பழந்தமிழர் தம் வாழ்வுமுறையையும் நிலத்தின் தன்மைக்கேற்பவே பகுத்திருந்தனர். ஐவகை நிலப்பாகுபாட்டை ஐவகை ஒழுக்கலாறாகவே கருதினர். அவற்றைச் செய்யுளிலமைத்து

பாடுங்கால் ஒரு திணைக்குரிய ஒழுக்கம் மற்றொரு திணையில் மயங்கி வருதலுண்டு. அதையே நில மயக்கம் என்றனர்.

 நிலமயக்கம்2 nilamayakkam, பெ. (n.)

   மண்கலப்பு; mixing of soils.

     [நிலம் + மயக்கம்.]

நிலமறி-தல்

நிலமறி-தல் nilamaṟidal,    2 செ.கு.வி. (v.i.) சூதாட்டத்தில் வெற்றியடைவிக்கும் இடன் அறிதல் (வின்.); to know the lucky side in gambling.

     [நிலம் + அறி-,]

நிலமளந்தோன்

நிலமளந்தோன் nilamaḷandōṉ, பெ. (n.)

   திருமால்; Tirumal as having measured the earth

     “நீணில மளந்தோ னாடிய குடமும்” (சிலப்.6;55.);.

     [நிலம் + அளந்தோன்.]

மாவலிப் பேரரசனின் செருக்கடக்க, குறளனாய்த் தோற்றரவு செய்து மாவலியிடம் மூன்றடி மண்கேட்க, அவனும் அதற்கிசைய, நெடுமாலாந் திருமால் வானுயர்ப்பேருரு கொண்டு ஒரடியால் மண்ணுலகையும், அடுத்தவடியால் விண்ணுலகையும் அளந்து பின் மூன்றாமடி வைக்க இடமின்மையால் மாவலியின் தலைமீது காலூன்றி அவனையுங்கொண்டாரென்பது தொன்மக்கதை.

நிலமாந்தர்

 நிலமாந்தர் nilamāndar, பெ. (n.)

நிலமக்கள் பார்க்க; see nila-makkal.

     [நிலம் + மாந்தர்.]

மாந்தரெனினும் மக்களெனினு மொக்கும்.

நிலமானியம்

 நிலமானியம் nilamāṉiyam, பெ. (n.)

   கொடையாய் வழங்கிய இறையிலி நிலம்; emolument given as land.

     [நிலம் + மானியம்.]

வ. மானியம் த. இறையிலி.

நிலமாளிகை

 நிலமாளிகை nilamāḷigai, பெ. (n.)

   நிலவறை (இ.வ.);; cellar.

தெ. நேலமாலிகா.

     [நிலம் + மாளிகை.]

நிலமிதி

நிலமிதி nilamidi, பெ. (n.)

   1. ஒரு நாட்டை அடைகை; entering a region, as treading on it

     “நிலமிதி தானே அறிவை யுண்டாக்கும்” (ஈ.டு.);.

   2. இடத்தின் தன்மை; peculiarity of a place. as affecting health or disposition.

   3. நடைவாகு (யாழ். அக.);; accessibility.

     [நிலம் + மிதி.]

நிலமுதல்

 நிலமுதல் nilamudal, பெ. (n.)

   நிலஅடங்கற்குறிப்பு; land register.

     [நிலம் + முதல்.]

நிலமெடு-த்தல்

நிலமெடு-த்தல் nilameḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   வீடுகட்டுதற்கோ, கோயிலமைப்பதற்கோ, கிணறு தோண்டுதற்கோ அன்றி பிற வற்றிற்கோ உரிய இடத்தைக் கணியம்மூலம் கணித்தறிந்து தேர்வு செய்தல் (வின்.);; to select by astrological calculations an auspicious site for a house, temple or well.

     [நிலம் + எடு.]

நிலமை

 நிலமை nilamai, பெ. (n.)

   நிலஉடைமை;     (யாழ்ப்.);;

 landed property.

நிலம்

நிலம் nilam, பெ. (n.)

   1. நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை; the earth.

     “நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்”

   2. மண்; ground, land.

     “நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்கினத்தியல்ப தாகும் அறிவு’ (குறள்,452.);.

     ‘நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்’ (பழ.);.

   3. நிலத்தின் புறணி; soil.

     ‘நிலந்தினக் கிடந்தன நிதி’ (சீவக.1471.);.

   4. தரை; ground;

நிலத்திற் கிடந்து வணங்கினான். (உ.வ);.

   5. நன்செய் அல்லது புன்செய் ஆகிய வயல்; விளை நிலப் பரப்பு; field.

நிலத்திற்குத்தகுந்த கனியும் குலத்திற்குத் தகுந்த குணமும். (பழ.);.

   6. நீரும் நிலமுஞ் சேர்ந்த ஞாலம்; the world.

     ‘நிலந்திறம் பெயருங்காலையும்’ (பதிற்றுப்.63;6.);;

     “நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்” (புறநா.3.);.

   7. இடம்; place.

     “நிலப்பெயர்” (தொல்.சொல்.167.);.

   8. நிலத்திலுள்ளார்; inhabitants of the world.

     “நிலம் வீசும்” (சீவக.267.);.

   9. நிலமகள்; Goddess of earth.

     “இலமென்றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்” (குறள்.1040.);.

   10. நாடு; region.

     ‘செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி’ (தொல்.சொல்.398.);.

   11. நிலத்துண்டு; piece of land.

நிலந்தரு திருவிற் பாண்டிய னவையத்து (தொல்.சிறப்புப்பா.);.

   12. யாப்பின் நிலைக்களம்; prosody point

     “பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்” (தொல்.பொருள்.320.);.

   13. செய்யுளடியெழுத்து; poetical syllable.

     “மெய்வகையமைந்த பதினேழ் நிலத்தும்” (தொல்.பொருள்.290.);.

   14. எழுத்தசை சீரென்னும் இசைப்பாட்டிடம்; source of musical sound. as letters. syllables and metrical feet.

     ‘நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும் (மணிமே.28;42.);.

   15. வரிசை; rank.

     ‘கற்றுணர்ந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும்’ (நாலடி,133.);.

   16. புலனம் (விஷயம்);; object of sense.

     ‘அவதார ரகசியம் ஒருவர்க்கும் அறிய நிலமல்ல’ (ஈடு.1;3;11.);.

   17. மேன்மாடம் அல்லது மேல்தளம்; storey or upper floor of a building.

     ‘பல நிலமாக அகத்தைஎடுக்கும்’ (ஈடு. 4. 9. 3.);.

   18. நிலக்கள்ளி (மலை.); பார்க்க; see nila-kal1i.

   அகத்திணையில் முதற்பொருள் இரண்டினுளொன்று; one of the mudarporul (nature of land and season); in {Agattinai.}

     [நில் → நிலம்]

   ம., நிலம்;   க., து., குட., பட., நெல., தெ. நேல;   துட. நெல்ன்;   கோத. நெல்ம், நெதல்;பர். நெந்தில், நெதில்

     [நுல் – நீட்சிக்கருத்து வேர்.நுல் → நெல் → நெ ள் → நெரு – நெகிழ் (நெகிள்); → நீள் → நிள் → நில் → நிலம்.]

நிலம்க்கட்டி

 நிலம்க்கட்டி nilamkkaṭṭi, பெ. (n.)

   அவுரிச்சாயக் கட்டி (வின்.);; lumps of indigo due.

     [நீலம் + கட்டி.]

நிலம்நீச்சு

 நிலம்நீச்சு nilamnīccu, பெ. (n.)

நிலபுலம் பார்க்க; see nila-pulam

     [நில் → நிலம் – வயல், வேளாண் நிலம்.

நீர் → நீந்து → நீச்சு. நிலம் + நீச்சு –

நீர்வளம் சூழ்ந்த நிலப்பகுதி. எனினும் நிலபுலம் என்பதே வழக்கு.]

நிலம்பாலை

 நிலம்பாலை nilambālai, பெ. (n.)

   கும்பம் பாலை; blue dyeing rose {bery-wrightia tinctona}

நிலம்பி

 நிலம்பி nilambi, பெ. (n.)

   கொசுகு (பிங்.);; gnat.

     [நுளம்பு → நுளம்பி → நிலம்பி.]

நிலம்பிராண்டி

 நிலம்பிராண்டி nilambirāṇṭi, பெ. (n.)

நிலப்

புரண்டி பார்க்க; see {nila-p-puraņợi}

     [நிலம் + பிராண்டி]

நில் → நிலம். புரள் → புரண்டு → புரண்டி → புராண்டி → பிராண்டி.]

நிலம்பிறாண்டு-தல்

நிலம்பிறாண்டு-தல் nilambiṟāṇṭudal,    5.செ.குன்றாவி. (v.t.)

   நிலத்தைச் சுரண்டுதல்; to scratch the land.

     [நிலம் + பிறாண்டு-,]

     [நில் → நிலம்]

பு ல் → பு ர் → பு ர ள் → பி ற ழ் → பிறண்டு → பிறாண்டு-,]

நிலம்பு

 நிலம்பு nilambu, பெ. (n.)

   தாளி (மலை.);; american bindweed-ipomaca.

நிலம்புரண்டி

 நிலம்புரண்டி nilamburaṇṭi, பெ. (n.)

   மழைக்காலங்களில் புல்லில் நுரை போல் தோன்றி அதற்குள்ளிருக்கும் பச்சைப் பூச்சி; a green insect found in a middle of frothy substance that appears on grass during rainy seasens.

     [நிலம் + புரண்டி.]

நிலம்புறண்டி

நிலம்புறண்டி nilambuṟaṇṭi, பெ. (n.)

நிலம்புரண்டி (யதார்த்த.247.); பார்க்க; see nilam-purandi.

     [நிலம் + புறண்டி, புரண்டி → புறண்டி.]

நிலம்புலம்

 நிலம்புலம் nilambulam, பெ. (n.)

   பல்வகை நிலம் (வின்.);; different kinds of lands.

     [நிலம் + புலம்.]

நிலம்பூ

நிலம்பூ2 nilambū, பெ. (n.)

   1. நிலப்பூ பார்க்க; see {nila-p-pu}

   2. கள்ளி; milk spurgeephorbia genus.

   3. கொசு; mosquito.

   4. சீதாப்பழம்; custard apple-anona squamosa

   5. தாளி; a running plant of convolvulous genus.

     [நுளம்பு → நுலம்பூ → நிலம்பூ.]

நிலம்பெயர்கை

நிலம்பெயர்கை nilambeyarkai, பெ. (n.)

   வேற்று நாட்டிற்குச் செல்லுதல்; to go abroad.

     “நிலம் பெயர்ந்து உரைத்தல் வரைநிலை உரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய” (தொல்.பொருள்.கற்.28.);.

     [நிலம் + பெயர்கை.]

பெயர்=இடம்மாறுதல். பெயர் → பெயர்கை. கை -தொழிற்பெயரீறு.]

நிலயனம்

நிலயனம் nilayaṉam, பெ. (n.)

நிலையம் 1,2,3,4,5 (யாழ்.அக.); பார்க்க; see nilaiyam.

     [நில் → நிலை → நிலையனம் → நிலயனம்.]

நிலயம்

 நிலயம் nilayam, பெ. (n.)

நிலையம் பார்க்க; see nilaiyam.

     [நிலையம் – நிலயம்.]

நிலயம்பிடி-த்தல்

நிலயம்பிடி-த்தல் nilayambiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

நிலையம் பிடி-த்தல் பார்க்க; see nilaiyam-pidi-,

     [நிலையம் → நிலயம் + பிடி-.]

நிலலோசபற்பாந்தம்,

நிலலோசபற்பாந்தம், nilalōcabaṟbāndam, பெ. (n.)

   1. நறும்பிசின்; a fragrant resin or gum.

   2. குந்திரிக்கம் பார்க்க; see kundirikkam.

நிலவடலி

 நிலவடலி nilavaḍali, பெ. (n.)

   சிறுபனை (சங்.அக.);; young palmyra tree.

     [நிலம் + வடலி.]

நிலவடி

நிலவடி nilavaḍi, பெ. (n.)

   கையினாலடிக்கும் கதிரடிப்பு; threshing grain with the hand

   2. களத்திற் கையாலடித்த கூலமணி; grain threshed by the hand on the threshing-floor.

     [நிலம் + அடி.]

     [P]

நிலவடுப்பு

 நிலவடுப்பு nilavaḍuppu, பெ. (n.)

   நிலத்தில் அமைக்கும் அடுப்புவகை (வின்.);; a pit or hole dug in the ground. used as the fire-place.

     [நிலம் + அடுப்பு.]

நில் → நிலம் = ஓடாது நிலைத்து நிற்பது. அடுதல் = சுடுதல், சமைத்தல். அடு → அடுப்பு. நிலவடுப்பு = நிலத்திலமைக்கும் அடுப்பு.

     [P]

நிலவம்மான்பச்சரிசி

 நிலவம்மான்பச்சரிசி nilavammāṉpassarisi, பெ. (n.)

   பூடுவகை (a.);; kind of plant-euphorbia indica.

     [நிலம் + அம்மான்பச்சரிசி.]

நிலவரண்

நிலவரண் nilavaraṇ, பெ. (n.)

   1. நீரும் நிழலுமில்லாத மருநிலமாகிய அரண்வகை (குறள்,742.உரை.);; natural defences consisting of arid expanse of earth etc.,

     [நிலம்+அரண்.]

   அரண்கள் நான்கு;   1. எஞ்ஞான்றும் வற்றாத மணிநீரரண்.

   2. நீருநிலமுமில்லா மதிலரண்.

   3. செறிந்த காட்டரண்.

   4. நிலைத்த மலையரண்.

நிலவரம்

நிலவரம்1 nilavaram, பெ. (n.)

   1. நிலைவரம், 1 பார்க்க; see nilaivaram.

     “பாக்கியங்க ணிலவரமென் றுன்னுகின்ற நெஞ்சன்” (சிவரக.சிவதன்ம.4.);.

   2. நிலைவரம், பார்க்க; see nilaivaram.

     “குறுநில வரத்தைத் தேர்ந்து கொள்வாய்” (குற்றா.குற.64;3.);.

   3. அன்றாட விலை (இ.வ.);; current price.

தெ. நிலவரமு.

     [நிலைவரம் → நிலவரம்.]

 நிலவரம்2 nilavaram, பெ. (n.)

   1. (நாடு, வீடு

   முதலியவற்றின்); நடப்புநிலை, சூழ்நிலை; condition (of the country, home, etc.);.

நாட்டு நிலவரம் தெரியாத கிணற்றுத் தவளையாக இருக்கிறாயே. (உ.வ.);. வீட்டு நிலவரம் நன்றாக இருந்திருந்தால் மகளை மேல்படிப்புக்கு அனுப்பியிருப்பேன். (உ.வ.);. கலவரம் நடந்த இடத்தின் நிலவரத்தை அறிந்து கொள்ள அமைச்சர் வந்திருந்தார். (உ.வ.);

   2. (விற்பனை, அளவு முதலியவற்றின்); நிலைமை; report.

நேற்றைய நிலவரப்படி ஆறகழுர் அணையின் நீர்மட்டம் 18 அடியாக இருந்தது. (உ.வ.);.

நிலவரி

 நிலவரி nilavari, பெ. (n.)

   விளைச்சல் பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அசு தண்டும் ஆண்டு வரி; land revenue.

இந்த ஆண்டு நிலவரித் தண்டலில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. (உ.வ.);.

     [நிலம் + வரி.]

நிலவருந்தி

நிலவருந்தி nilavarundi, பெ. (n.)

   நிலாமுகிப்புள்; greek partvidege.

     “புதுநிலவருந்தியும்” (திருப்பு.843.);.

     [நிலவு + அருந்து → நிலவருந்து → நிலவருந்து → நிலவருந்தி.]

நிலவர்

நிலவர் nilavar, பெ. (n.)

   1. நீரின் நிலையை முழுகியறிபவர்; persons employed in sound. ing the depths of water. as in river,

     ‘சமுத்திரத்தே நிலவராயிருக்குமவர்கள் முழுகி மண்கொள்ளுமாபோலே’ (திவ்.திருநெடுந். 18;143.);.

   2. நிலத்துள்ளவர்; human-beings.

     “நிலவரையாற்றி (பரிபா.15.6.);.

     [நிலம் → நிலவர்.]

நீர்நிலையில் நிலம்வரை மூழ்குபவரும் நிலமிசை வாழ்பவரும் நிலவர் எனப்பட்டனர்.

நிலவறை

நிலவறை nilavaṟai, பெ. (n.)

   1. நிலத்துள்ளமைந்தஅறை; cellar, subterranean hall.

     “நிலவறை செயச்சிலர் விரைவார்” (செவ்வந்திப்பு.உறையூரழித்.62.);.

   2. எரி எண்ணெயைத் தேக்கி வைக்க நிலத்தடியில் அமைக்கப்படும் அறை; bunker.

     [நிலம் + அறை. நில் → நில → நிலம். அறு → அறை.]

நிலவலயம்

 நிலவலயம் nilavalayam, பெ. (n.)

நிலவலையம் பார்க்க; see nila-Valaiyam.

நிலவலயந் தாங்கு நளன் (நளவெண்.காப்பு.);.

     [நிலம் + வலயம். வலையம் → வலயம்.]

நிலவலையம்

 நிலவலையம் nilavalaiyam, பெ. (n.)

   நில மண்டிலம்; terrestrial globe, the earth.

     [நில் → நிலம், வல் → வள் → வளை → வளையம் → வலையம். நிலம் + வலையம்.]

நிலவளம்

 நிலவளம் nilavaḷam, பெ. (n.)

   மண்ணின் வளம்; fertility of the land.

     [நிலம் + வளம்.]

ஒவ்வொரு நிலத்தின் தன்மையினையும் அத் தன்மையின் மிகுதியினையும் குறிப்பிடுவது நிலவளம்.

நிலவளவங்கி

 நிலவளவங்கி nilavaḷavaṅgi, பெ. (n.)

   வேளாண்மைப் பிரிவினருக்குதவும் வங்கி (இக்.வழ.);; land development bank.

     [நிலவளம் + வங்கி.]

நிலவளம் என்பது ஆகுபெயராய் நிலத்தை வளப்படுத்தி நாட்டின் வளஞ் சேர்க்கும் வேளாண் பிரிவினரைக்குறித்தது. அப் பிரிவிரினரின் வேளாண்மை மேம்பாட்டுக்குக் கடன் உதவி பெறுவதற்காக அரசால் அமைக்கப்பட்டுக் கடனுதவி வழங்கும் வைப்பகம் நிலவள வங்கி. இதனை நிலவள வைப்பகம் எனலே சரி.

நிலவளி

 நிலவளி nilavaḷi, பெ. (n.)

   இயற்கை எரிவளி; natural gas used as fuel.

     [நிலம் + வளி.]

நிலவழி

 நிலவழி nilavaḻi, பெ. (n.)

   வாகனங்கள் செல்லவும், மக்கள் நடக்கவும் ஏற்றதாகத் தரையில் அமைக்கப்படும் வழி; சாலை; road intended for vehicles and publi