தலைசொல் | பொருள் |
---|---|
நா(நா திருமூர்த்தி | நா(நா திருமூர்த்தி nānātirumūrtti, பெ. (n.) ஆயுர்வேதமுறைப்படி செய்த ஒரு வகைச் செந்துாரம்; a red oxide perhaps with three ingredients prepared as per process of Ayurveda (#m-23);. |
நாகக்குடி | நாகக்குடி nākakkuḍi, பெ.(n.) கும்பகோணம் (குடமூக்கு); வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Kumbakonam Taluk. [நாகம்+குடி] |
நாகத்துவனி | நாகத்துவனி nākattuvaṉi, பெ.(n.) இசைக் கலை வழக்குச் சொற்களில் ஒன்று; a word in music terms. [நாகம்+துவனி] |
நாகனி | நாகனி nākaṉi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvādānai Taluk. [நாவல்கனி-நாவல்கனி-நாகனி (கொ.வ.);] நாகனி nākaṉi, பெ. (n.) திருகுகள்ளி; trusted milk hedge. [நாகன் → நாகனி.] |
நாகபசுமம் | நாகபசுமம் nākabasumam, பெ.(n.) வெள்ளடத்தை (துத்தநாகத்தை); நீற்றி யெடுத்த மருந்து (இங்.வை.);; oxide of zinc, Zinci oxidum. [Skt. {} + bhasman → த. நாகபசுமம்] |
நாகபஞ்சமி | நாகபஞ்சமி nākabañjami, பெ.(n.) பால் பயறு முதலியவற்றை நாகத்துக்கு இட்டு அதனை வணங்கும் நாளாகிய சிராவண சுக்கில பஞ்சமி (இ.வ.);; the fifth lunar day of the bright for night in the month of sravana in which the Nagas or serpent – gods are worshipped with offerings of milk, grain, etc. [Skt naga → த. நாகபஞ்சமி] |
நாகபாடாணம் | நாகபாடாணம் nākapāṭāṇam, பெ.(n.) சூதம், இலிங்கம், கருவங்கம், பச்சை, பொன் அரிதாரம், காரம் இவைகளைப் பொடித்துக் குகையில் வைத்து மேல்மூடிச் சீல் மண் செய்து கசப்புடத்தில் போட்டு முதிர அனல் மூட்டிப் பிறகு ஆறியபின் உடைத்துப் பார்க்க மருந்து உருகி ஈயம் போல் வலிந்து இறுகிக் கட்டி யாயிருக்கும் இதுவே நாக பாடாணம் மாழையில் (உலோகத்தில்); பழுத்திடும்; a kind of prepared arsenic an alchemical compound of zinc. (சா.அக.); |
நாகப்பிரதிட்டை | நாகப்பிரதிட்டை nākappiradiṭṭai, பெ.(n.) பாம்பைக் கொன்ற தீவினையைப் போக்கு வதற்குச் சிலை முதலியவற்றில் நாகத்தை நிலைகோள் செய்தல்; ceremony of setting up a serpentidol under a pipal tree to expiate the sin of having killed a cobra. [நாகம் + பிரதிட்டை] |
நாகமங்கலம் | நாகமங்கலம் nākamaṅgalam, பெ.(n.) திருநள்ளாற்றுக்கு வடமேற்கே 14 அயிர மாத்திரி (கி.மீ.); தொலைவிலுள்ள ஒரு சிற்றுார்; name of a village 18 k.m. from Thirunallar. [நாகன்+மங்கலம்] |
நாகமரை | நாகமரை nākamarai, பெ.(n.) தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Dharmapuri district. [நாகன்துறை-நாகந்துறை-நாகமரை (கொ.வ.);] |
நாகம் | நாகம் nākam, பெ.(n.) பண் (இராக); வகையினுள் ஒன்று; a kind of tune. [நா-நாகம்] நாகம்1 nākam, பெ. (n.) 1. விண் (பிங்);; sky, visible heaven. “நீடுநாக மூடுமேக மோட” (கம்பரா.கலன்காண்.37);. 2. துறக்கம் (திவா.); வீடுபேறு; indiras paradise. “எம்மை நாகமேலிருத்து மாற்றால்’ (கந்தபு. திருவிளை.99);. 3. மேகம்: cloud: “நாகமே லாயுலவென்னாகமே” (கொண்டல் விடு);. 4.ஒலி (யாழ்.அக);. sound. [மாகம் = விண்ணுலகம், மேலானவிடம், தேவருலகம். மாகம் → நாகம் ] ஒ.நோ. முப்பது → நுப்பது. ஒருகா. [யாகு → ஞாகு → நாகு + அம் → நாகம். ] வானம் கரியது;நீல நிறத்தது. கருமையும் நீலமும் ஓரளவிற்கு ஒத்த தோற்றத்தின. [எடு] “கார்வான்’ (புறநா. 147:3); “நீல்நிற விகம்பின் மீனொடு புரைய” நற். 1999). விகம்பு கரிய நிறத்தது: நீலமும் கருமையும் ஒத்தன்மையின என்பதற்குக் கழக இலக்கியப் பதிவுகள் ஏராளமாக உள்ளன. ‘யா’ என்னும் கருமைக்கருத்து மூலவேர், நீலநிற வானைக் குறித்துப் பின்பு காலப்போக்கில், விண்ணுலகில் இருப்பதாகக் கருதப்படும். நாகப்பாம்பையும் குறிக்கலாயிற்று. நாகம்2 nākam, பெ. (n.) 1.நல்ல பாம்பு; cobra. ‘நன்மணியிழந்த நாகம்போன்று (மணிமே.25:195);. 2. பாம்பு (பிங்.);; serpent. “ஆடுநாகமோட்” (கம்பரா. கலன்காண்.37);, 3. நஞ்சு; poison. “அதகங் கண்ட பையண னாகம் போல’ (சீவக.403);. 4. நாகவுலகம்; nether region. “நாகர்நாகமும்” (சீவக.2550);. 5.யானை; elephant. “காளமேகமு நாகமுந் தெரிகில’ (கம்பரா.சித்திர.2);. 6. குரங்கு: monkey. “வேடச்சிறா ருழைத்தோற்பறையை நாகம் பறித்துலர் வாகை நெற்றாற் கொட்ட.” (திருப்போ.சந்.அலங்.14);. 7. கருங்குரங்கு (யாழ்.அக);; black monkey. 8,காரீயம்; black lead. 9. துத்தநாகம்(பிங்,);; zinc. 10.நஞ்சு வகை; a prepared arsenic. 11. நற்றூசு (பிங்,);; fine cloth, as resembling a snake’s slough. 12. நாகப்பச்சை பார்க்க;see nāgap-pacca. 13. மாட்டு வாலிலுள்ள தீச்சுழிவகை(அபி,சிந்,);; an unlucky hair curl in the tail of cattles. 14. குறிஞ்சிப்பண் வகை(பிங்.);; a melody of the kurifiji class. 15. கந்தகம் (யாழ்,அக,););; Sulphur. த. நாகம் → Skt naga. நாக). [நகர்வு= ஊர்ந்து செல்லுதல் நகர் → நாகம் = பாம்பு. ஊர்ந்து செல்லும் நச்சுயிரி.] [ஒ,நோ,] Esnake, Fsnican, to creep. [ஒ.நோ. நல்ல வெயில். வடவர் நக(மலை); என்னுஞ் சொல்லைக் காட்டி, மலையிலுள்ளதென்று பொருட் காரணங் கூறுவர். (வ.வ.பக்.19);. இஃது பொருந்தப்பொய்த்தலே. நகர்வு என்னும் வினையினின்று நாகம் தோன்றியது என்று மொழிஞாயிறு கருதுகின்றார். கருமைக்கருத்து வேரிலிருந்து, “நாகம்” என்ற சொல்லை வருவிப்பதும், இன்னொரு ஆய்வுப் பார்வையாகும். ஒருகா. [யாகு → ஞாகு → நாகு + அம்.] யா = கருமைக்கருத்து வேர். நாகம் = கருநாகம் கருங்குரங்கு, கருநாகம். காரீயம் போன்ற கருமைப் பொருட்களைக் குறிக்கும் கருமைக்கருத்து வேரினின்று, “நாகம்’ தோன்றிற்று என்றும் கொள்ளலாம். கருமைக்கருத்து வேரினின்று நாகம் தோன்றியது என்பதற்குக் கீழ்க்கண்ட இலக்கியச் சான்றுகள் வருமாறு. 1. ‘நீலநாகநல்கிய கலிங்கம்” (சிறுபாண்:96); 2. ‘திருமணி யுமிழ்ந்த நாகம்’ (அகம்.138.17); 3.”வேக வெந்திறல் நாகம் புக்கென” (புறம்37:2); 4.”எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்” (குறள்,763);. 5. ‘பை அவிந்த நாகம் போல்’ (நாலடி.66.3); மேற்குறித்த கழகவிலக்கியங்களில், நாகம் கருமைக்கருத்துப் பொருண்மையில் ஆளப்பட்டுள்ளது. இவ் வுண்மையினை அறியாத வடவர் மலையில் உள்ளது என்னும் பொருண்மையில் மா,வி. அகரமுதலியில் நாக(g); என்று குறித்துள்ளது. நாகம் அனைத்து இடத்திலும் வாழுந்தன்மைத்து. நாகம் தொடர்பான நல்ல தமிழ்ச்சொற்கள், நற்றமிழில் பேராளமாகப் பயின்று வந்துள்ளன. அவற்றுட் சில வருமாறு: நாகணை = திருமாலின் நாகப்படுக்கை. நாகதாளி (நாகத்தாளி); நாகப்படம் போன்ற தோற்றங்கொண்ட கள்ளிச்செடி (நாகக்கள்ளி);. நாகப்பாம்பு=நாகம், கருநல்லரா. நாகப்பகை = நாகத்துக்குப் பகைவனான கலுழன், இன்னும், நாகமல்லி: நாகவல்லி, நாகவடம் போன்றசொற்கள் தமிழ்மொழியின் இருவகை வழக்கிலும், வழக்கூன்றியுள்ளது குறிக்கத்தக்கது. தமிழிலிருந்து வடவர் கடன்கொண்ட ‘இச் சொல், இந்திய ஆரியமொழிகளில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. த, நாகம் → skt nāga;pāli-nāgapkt nāya-oriya-naa sinhalese nay, nā மேற்குறித்தசான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் பயின்றுள்ளதால், நாகம் என்பது நற்றமிழ்ச்சொல்லே யெனலாம். நாகம்3 nākam, பெ. (n.) மலை(பிங்.);; mountain. “பொன்னாகமும்” (கம்பரா.கார்முக.32); [மாகம் =மேலான இடம், உயர்ந்த இடம் மாகம் → நாகம்.] ஒருகா. [யாகு → ஞாகு → நாகு + அம் → நாகம்.] யாழ்ப்பான அகரமுதலியும், பிங்கலமும், நாகம் என்னுஞ் சொல் மலை என்னும் பொருள் பற்றியது என்று குறித்துள்ளது காண்க. “நாகமென் கிளவி. வெற்பும்” (பிங்,); நாகம்4 nākam, பெ. (n.) 1. சிறு கண்ணாகம், பெருங்கண்ணாகம் முதலான துத்த நாகவகை; term refering to different kinds of zinc as mentioned siru-kan-nāgam and peruñannagam. 2. ஐம்மாழைக் கலவை (பஞ்சலோகக்கலவை);; an alloy of five metals. [யாகம் → ஞாகம் → நாகம்.] நாகம்5 nākam, பெ. (n.) 1. சுரபுன்னை: longleaved two – sepalled gamboge. “நறுவீ யுரைக்கு நாகம் (சிறுபாண்.38); 2. புன்னை (பிங்);, mast-wood. 3. ஞாழல் வகை (திவா.); cinnamon, Cinnamomum. 4. கஞ்சாங் கோரை; white basil. 5. இலாமிச்சைவேர்: CUSCUSS TOOť [ஞாகு → நாகு + அம் → நாகம்.] புன்னை மரத்தின் தோற்றம் கருநீல நிறத்தது. இரவு போன்ற இருண்ட நிறத்தையுடைய புன்னை என்று. நற்றினை நவில்வது காண்க. “எல்லியன்ன இருள்நிறப் புன்னை” (நற்.3545); “கருங்கோட்டுப் புன்னை” (311.9.); நற்றினை, ஐங்குறு (161:1-2); போன்ற கழக இலக்கியப் பதிவுகள், புன்னை கருமை வண்ணத்தது என்பதற்கு நற்சான்றாய்த் திகழ்கின்ற தெனலாம். நாகம்6 nākam, பெ. (n.) 1. கண்டத் திப்பிலிவேர் ; root of long pepper. 2. நாகம் விரும்பியுறையும் வெண்சம்பங்கி மலர்; white champak flower. [ஞாகம் → நாகம்.] நாகம் nākam, பெ. (n.) நாவல்மரம் (இ.வ);. Jaumooan plum. [ஞாவல் → நாவல் →நாகல் →நாகம்.] யா=கருமை நிறத்தினைக் குறிக்கும் வோடி கரிய கனிகளைத்தரும் நாகம் என்னும் சொல்லும் கருமைப் பொருண்மையிலிருந்து முகிழ்த்த சொல் எனலாம். நாகப்பழம் என்று மக்களிடையே இச்சொல் வழக்கூன்றியது அறிக. நாகம்9 nākam, பெ. (n.) அம்மணம்; nakedness. [நகு → நாகு + அம்.] நகுகை = ஆடையற்ற நிலையைக் கண்டு நகைக்கை. |
நாகரம் | நாகரம் nākaram, பெ.(n.) கோயில் விமான அமைப்பின் ஒரு பகுதி; a temple tower structure. [நகர்-நாகரம்] [P] நாகரம் nākaram, பெ. (n.) 1. தேவநாகரி: sanskrit script. “நாகரநந்தி முதலியவை” (சிவதரு. சிவஞான தா.32.);. 2. சுக்கு (தைலவ,தைல);.; dry ginger. நாகரம்2 nākaram, பெ, (n.) 1. ஆதன் (ஆன்மா); அடையும் பேரின்பம்: blissful state for soul. 2. இளைப்பு; emaciation. நாகரம்3 nākaram, பெ. (n.) 1. நாகரங்கம் (சங்.அக,);; sweet orange. 2. நராத்தை; bitter Orange. நாகரம்4 nākaram, பெ. (n.) இணைவிழைச்சு இன்பவிளையாட்டுகளுள் ஒன்று; a posture of consisting of two attitudes. [நாகர் + அம்.] கணவனும், மனைவியும் ஒருவரது தொடையுடன், மற்றொருவர் தொடையைச் சேர்த்து, நாகம் போல் பின்னிப் பிணைந்து புணரும் நிலை. இஃது அறுபத்து நான்கு இன்ப விளையாட்டுகளுள் ஒன்று என்று, சா.அ.க. கூறுகிறது. |
நாகர் | நாகர் nākar, பெ.(n.) கழுத்தில் அணியப்படும் நீண்ட சங்கிலியொத்த அணிகலன்; an ornament which is like a chain worn on neck. (65:74);. [நகு:நாகர்] நாகர்3 nākar, பெ. (n.) இந்தியாவில் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களில் வாழும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழங்குடியினர்; Nāgās. [நகு → நகர் → நாகர்] நாகர்கள் மஞ்சள் வண்ணத்துடன் விளங்கித் தோன்றுபவர் இயற்கைவளம் கொழிக்கும் பகுதியில், மிகுந்த வளத்துடனும், செல்வத்துனும் வாழ்பவர். வேளாண்மை செய்து வாழும் இவர்தம் எண்ணிக்கை, 5 இலக்கம் ஆகும். |
நாகவன் | நாகவன் nākavaṉ, பெ.(n.) முடி ஒப்பனையர் barber. மறுவ, குடிமகன் [நாவு-நாயு-நாசு-நாசுவன்] |
நாகவன்விளை | நாகவன்விளை nākavaṉviḷai, பெ.(n.) அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Agastheeswaram Taluk. [நாவு-நாவுவன்-நாசுவன்+விளை] |
நாகவயல் | நாகவயல் nākavayal, பெ.(n.) திருப்பத்தூர் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruppattur.Taluk. [நாகன்+வயல்] |
நாகாச்சி | நாகாச்சி1 nākācci, பெ.(n.) 1. அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. 2. பரமக்குடி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Paramagudi Taluk. [நாகன்+குறிஞ்சி-குறிச்சி-காச்சி (கொ.வ.);] |
நாகாடி | நாகாடி nākāṭi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a willage in Tiruvadanai Taluk. [நாகன்+பாடி-நாகன்பாடி-நாகாடி (கொ.வ.);] |
நாகிமரா | நாகிமரா nākimarā, பெ.(n.) இருளர் இன மக்களின் இசைக்கருவிகளிலொன்று; a musical instrument of the Irula tribe. |
நாகு | நாகு nāku, பெ.(n.) எருமையின் பெண் கன்று; female buffalo Cub. [நாள்-நாள்கு-நாகு] நாகு என்பதை நாவு என வட ஆற்காடு பகுதியில் வழங்குவது கொச்சை வழக்கு. நாகு nāku, பெ. (n.) புற்று (தைலவதைல);; anti-hill. நாகு3 nāku, பெ. (n.) மலை (யாழ்.அக.);. mountain. [நகு → நாகு.] வலிமையுடன், வளர்ந்து விளங்கித் தோன்றும் மலை. |
நாகுனி | நாகுனி nākuṉi, பெ.(n.) கிளியாற்றுார்க்குத் தெற்கில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in South Kiliyārrür. [ஒருகா. நாகன்+ஊருணி] |
நாக்கினால் தள்ளு-தல் | நாக்கினால் தள்ளு-தல் nākkiṉāldaḷḷudal, செ.குன்றாவி, (v.t) கோலிக்குண்டு விளை யாட்டில் தோற்றவர் குண்டினை நாக்கினால் தள்ளுதல்; to push with tongue. a children’s game. (த.நா.வி.). [நாக்கு+இன்+ஆல்+தள்ளு] |
நாக்குச்சதம்பனம் | நாக்குச்சதம்பனம் nākkuccadambaṉam, பெ.(n.) நாக்கு இழுப்பு நோய் (பைஷஜா.);; palsy of the tongue. [Skt. {} → த. நாக்கு + சதம்பனம்] |
நாக்குடி | நாக்குடி nākkuḍi, பெ.(n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Arandangi Taluk. [நல்+குடி-நற்குடி-நாக்குடி(கொ.வ.);] |
நாங்கு | நாங்கு nāṅgu, பெ.(n.) வயலில் நடவுக்குப்பின் மண்புழுக்கள் ஏற்படுத்தும் சிறு துளை, small holes made by earthworms in the paddy field after plantation. [நள்-நாள்-நாங்கு(உட்டுளை);] நாங்கு1 nāṅgudal, 5.செ.கு.வி.(V.I.) மனவுறுதி தளர்தல்; to shrink in spirit, become nerveless. ” தாங்கி நாங்கியப் போக” (யாழ்ப்);. [நால்கு → நாங்கு-.] நாங்கு2 nāṅgu, பெ. (n.) தவசமாகச் செலுத்தும் வட்டி (CG);; interest on debt, paid in grain . நாங்கு3 nāṅgu, பெ.(n.) மரவகை; musua. (சா.அக);. |
நாசகாரிவாயு | நாசகாரிவாயு nācakārivāyu, பெ.(n.) நைட்ரசன்; nitrogen. (சா.அக.); |
நாசகேரளம் | நாசகேரளம் nācaāraḷam, பெ.(n.) சிவதை வேர்; India rhubarb, Indian jalap – lpomaea turpethum. (சா.அக.); |
நாசவக்கணை | நாசவக்கணை nācavakkaṇai, பெ.(n.) காகதும்புரு; kanjilals mottled ebony – Diospyros kanjiali. (சா.அக.); |
நாசாகிராவம் | நாசாகிராவம் nācākirāvam, பெ.(n.) மூக்கிலொழுகும் அரத்தவொழுக்கு; bleeding from the nose – Epistaxiz. (சா.அக.); |
நாசாக்கிரம் | நாசாக்கிரம் nācākkiram, பெ.(n.) மூக்கு நுனி; tip of the nose. (சா.அக.); |
நாசாதக்கணம் | நாசாதக்கணம் nācātakkaṇam, பெ.(n.) வலது நாசி; right nostrill. (சா.அக.); |
நாசாபாக்கரோகம் | நாசாபாக்கரோகம் nācāpākkarōkam, பெ.(n.) மூக்கு நோய்; a nose disease. (சா.அக.); |
நாசாபுடம் | நாசாபுடம் nācāpuḍam, பெ.(n.) மூக்குத் துளை; nostrill. (சா.அக.); |
நாசாரிசம் | நாசாரிசம் nāsārisam, பெ.(n.) மூக்கில் வளரும் சதை; polypus of the nose. (சா.அக.); |
நாசாவாமம் | நாசாவாமம் nācāvāmam, பெ.(n.) இடது மூக்கு; nose. (சா.அக.); |
நாசி | நாசி nāci, பெ.(n.) 1. மூக்கு; nose. 2. வஞ்சி; rattan of S. India – calamus rotang. 3. மூக்குத் துளை; nostril. (சா.அக.); நாசி nāci, பெ.(n.) மூக்கு; nose. |
நாசிஉக்கிரமம் | நாசிஉக்கிரமம் nāciukkiramam, பெ.(n.) மூக்கு நோய்; disease of the nose. (சா.அக.); [நாசி + உக்கிரமம்] |
நாசிஉதிரம் | நாசிஉதிரம்1 nāciudiram, பெ.(n.) மூக்கு நோய்; disease of the nose. [நாசி + உதிரம்] நாசிஉதிரம்2 nāciudiram, பெ.(n.) மூக்கில் அரத்தம் வடிதல்; bleeding from the nose – Epistaxis. (சா.அக.); |
நாசிஉயிர் | நாசிஉயிர் nāciuyir, பெ.(n.) ஒகப்பயிற்சிக்கு உதவும் இயல்புள்ள நீர்மம் (சுக்கிலம்);; semen which is considered important for suppressing the breath in the {} practice and hence the name. (சா.அக.); |
நாசிகதமம் | நாசிகதமம் nācigadamam, பெ.(n.) மூக்குச் சிந்தல்; blowing the nose. (சா.அக.); |
நாசிகமலம் | நாசிகமலம் nācigamalam, பெ.(n.) 1. மூக்குப் பீ; nose dirt. 2. மூக்குச் சளி; mucous from the nose snot. (சா.அக.); |
நாசிகாக்கிரம் | நாசிகாக்கிரம் nācikākkiram, பெ.(n.) நுனிமூக்கு; tip of the nose. “விழித் துணைகணாசி காக்கிரத்தினுற” (பிரபோத. 44, 14);. [Skt. {} + agra → த. நாசிகாக்கிரம்] |
நாசிகாசிராவம் | நாசிகாசிராவம் nācikācirāvam, பெ.(n.) மூக்கினின்று அதிகமாய் நீர் வடியும் ஒர்வகைப் உளைச்சளி (பீனசம்);; catarrh of the nose. (சா.அக.); |
நாசிகாசூரணம் | நாசிகாசூரணம் nācikācūraṇam, பெ.(n.) 1. நாசிவழியாக ஏற்றும் அல்லது இழுக்கும் மருந்துப் பொடி; a medicinal powder sniffed. 2. மூக்குத் தூள்; snuff. (சா.அக.); |
நாசிகாபீடம் | நாசிகாபீடம் nācikāpīṭam, பெ.(n.) மூக்கிற்குள் சதை வளரும் நோய்; polypus of the nose. (சா.அக.); |
நாசிகாபீடை | நாசிகாபீடை nācikāpīṭai, பெ.(n.) 1. மூக் கழுக்கு; rheum. 2. மூக்குச் சளி; mucous from the nose snot. (சா.அக.); |
நாசிகாபூசணி | நாசிகாபூசணி nācikāpūcaṇi, பெ.(n.) மேளகர்த்தாக்களுளொன்று (சங்.சந், 47);; a primary {}. [நாசிகா +பூசணி] |
நாசிகாரோகம் | நாசிகாரோகம் nācikārōkam, பெ.(n.) பொதுவாக மூக்கில் வரும் நோய்கள்; diseases in general of the nose. (சா.அக.); |
நாசிக்கனைப்பு | நாசிக்கனைப்பு nācikkaṉaippu, பெ.(n.) சளி முதலியவற்றால் மூக்கு வீங்கியிருக்கை (வின்.);; inflammation of the nose from cold or mucus. [Skt. naci → த. நாசி + கனைப்பு] |
நாசிக்கிரந்தி | நாசிக்கிரந்தி nācikkirandi, பெ.(n.) மூக்கை யரிக்கும் மேகப்புண்; a kind of syphilitic ulcer eating away or otherwise affecting the nose. (சா.அக.); |
நாசிசிந்தல் | நாசிசிந்தல் nāsisindal, பெ.(n.) மூக்குச் சிந்தல்; blowing the nose. (சா.அக.); |
நாசிச்சளி | நாசிச்சளி nāciccaḷi, பெ.(n.) மூக்குச்சளி; mucous from the nose. (சா.அக.); |
நாசித்தாரு | நாசித்தாரு nācittāru, பெ.(n.) மேல் வாய் உதடு; upper lips. (சா.அக.); |
நாசித்தாரை | நாசித்தாரை nācittārai, பெ.(n.) மூக்குத் துளை வழி; passage of the nose. (சா.அக.); |
நாசித்துளை | நாசித்துளை nācittuḷai, பெ.(n.) நாசித் துவாரம் பார்க்க;see {}. |
நாசித்துவாரம் | நாசித்துவாரம் nācittuvāram, பெ.(n.) மூக்குத்துளை; nostril. (சா.அக.); [நாசி + துவாரம்] |
நாசித்தூள் | நாசித்தூள் nācittūḷ, பெ.(n.) மூக்குப்பொடி; snuff. “மிளகுப் பொடி நாசித்தூளாய்” (சரவண. பணவிடு. 123);. [நாசி + தூள்] |
நாசிநீரோட்டம் | நாசிநீரோட்டம் nācinīrōṭṭam, பெ.(n.) மூக்கின் வழியாய் நீர் வழிதல்; catarrh of the nose. (சா.அக.); |
நாசிநீர்ப்பாய்ச்சல் | நாசிநீர்ப்பாய்ச்சல் nācinīrppāyccal, பெ.(n.) மூக்கினின்று நீர் வழிதல்; catarrah of the nose. (சா.அக.); |
நாசிநீர்வர்த்தினி | நாசிநீர்வர்த்தினி nācinīrvarttiṉi, பெ.(n.) மூக்கில் நீர் வழிந்து தும்மலையுண்டாக்கும் நோய்; errhinc. (சா.அக.); [நாசி + நீர்வர்த்தினி] |
நாசினி | நாசினி1 nāciṉi, பெ.(n.) அழிக்கக் கூடியது. கொல்லி; used in compound formation. “கிருமி நாசினி”. நாசினி2 nāciṉi, பெ.(n.) திப்பலி மூலம்; root of long pepper. (சா.அக.); |
நாசிபங்கம் | நாசிபங்கம் nācibaṅgam, பெ.(n.) மூக்கழிவு; decaying or destruction of the nose. (சா.அக.); |
நாசிபாகம் | நாசிபாகம் nācipākam, பெ.(n.) மூக்கி லுண்டாகும் அழற்சி; inflammation of the nose. (சா.அக.); [நாசி + பாகம்] |
நாசிப்பரிசோசம் | நாசிப்பரிசோசம் nācipparicōcam, பெ.(n.) மூக்கடைப்பு; difficulty of respiration. “மூக்கின் வறட்சினால் சளி திரண்டு மூச்சு விட முடியாத படி மூக்கையடைத்துக் கொள்ளும்”. (சா.அக.); |
நாசிப்பரிச்சிராவம் | நாசிப்பரிச்சிராவம் nācippariccirāvam, பெ.(n.) மூக்கு நோய்; a disease of nose. “இரவு காலங்களில் மூக்கினின்று சதா சளி நீர் வழியச் செய்யும்” (சா.அக.); |
நாசிப்பிணி | நாசிப்பிணி nācippiṇi, பெ.(n.) உட்சளி; various diseases of the nose. (சா.அக.); |
நாசிப்பிரதிநாகம் | நாசிப்பிரதிநாகம் nācippiradinākam, பெ.(n.) மூக்கடைப்பு தலையில் நிற்கும் உதானவளி, கோளாறடைந்து சளியோடு கூடி மூக்கின் துளையை அடைக்கும்; the condition under which the upcoursing udana vayu of the region of the head is deranged in its passaged by a sur charge of kapha stuff the nasal passages. (சா.அக.); |
நாசிப்பீனிசம் | நாசிப்பீனிசம் nāsippīṉisam, பெ.(n.) மூக்கின் சளி சவ்வு வீக்கம் (தாபிதங்); கண்டு அதனால் மூக்கின் வழியாய் நீர்ச் சளியாய் வடிதல்; a catarrhal affection of the nasal mucous membrance attended with a ropy discharge from the nostrils coryza. (சா.அக.); |
நாசிப்புண் | நாசிப்புண் nācippuṇ, பெ.(n.) நாசியில் தோன்றும் புண்; ulcer in the nose. (சா.அக.); |
நாசிப்பொடி | நாசிப்பொடி nācippoḍi, பெ.(n.) 1. மூக்குத் தூள்; snuff. 2. மூக்குச் சூரணம்; powder for snuffing. (சா.அக.); |
நாசிம்வேதனை | நாசிம்வேதனை nācimvētaṉai, பெ.(n.) பாகல்; bitter cucumber – momordiea charantia. (சா.அக.); |
நாசியிரத்தபித்தம் | நாசியிரத்தபித்தம் nāciyirattabittam, பெ.(n.) மூக்கினின்று அரத்தம் வடிதல்; bleeding from the nose – Epistaxis. (சா.அக.); |
நாசியெலும்பு | நாசியெலும்பு nāciyelumbu, பெ.(n.) மூக்கெலும்பு; nasal bone. (சா.அக.); |
நாசிரந்திரம் | நாசிரந்திரம் nācirandiram, பெ.(n.) மூக்குத் துளை; nostrill nose-aperture. (சா.அக.); |
நாசிரோகம் | நாசிரோகம் nācirōkam, பெ.(n.) மூக்கு நோய் வகை (தைலவ. தைல. 53);; discharge of the fetid matter from the nostrils. oxena. [நாசி + ரோகம்] |
நாசிவால் | நாசிவால் nācivāl, பெ.(n.) மணத்தக்காளி; black berried solanum – solanum nigrum. (சா.அக.); |
நாசிவிடம் | நாசிவிடம் nāciviḍam, பெ.(n.) நோய்வகை; a disease. “எரிகுணா நாசிவிடமே” (திருப்பு. 260, புதுப்.); [நாசி + விடம்] |
நாசுகாதீதம் | நாசுகாதீதம் nācukātītam, பெ.(n.) 1. பீர்க்கு; gourd plant, strainer vine – cucurbita acutangularis. 2. விழி, அதாவது விழுதி; chilli fruited capper- Cadaba indica alias stromeria tetrandra. (Rox);. (சா.அக.); |
நாசுடம் | நாசுடம் nācuḍam, பெ.(n.) கட்டு மருந்து; a quack patent or secret remedy-Nostrum. “இது நாட்டு மருத்துவர் பயன்படுத்தும் மருந்து”. (சா.அக.); |
நாசுதா | நாசுதா nācutā, பெ.(n.) சிற்றுண்டி; lunch. (சா.அக.); |
நாசூக்கு | நாசூக்கு nācūkku, பெ. (n.) நயத்திறம்; nice and talented approach. [U. {} → த. நாசூக்கு.] |
நாச்சநார் | நாச்சநார் nāccanār, பெ.(n.) நஞ்சா; spurge laurel. (சா.அக.); |
நாச்சி | நாச்சி nācci, பெ.(n.) கோயில் விளக்கெரிக்க கறவை மாடு தந்த சோழர்காலத்துப் பெண் name of a woman who donated cows to use the ghee for lighting lamp in temple. [நாயன்-நாயத்தி-நாச்சி] மூன்றாம் இராசராசன் காலத்தில் (கி.பி.1231 அத்தி என்ற ஊரில் வாழ்ந்த பரிக்கிரகத்து நிலைட் பெண்டுகளில் வம்புழுத்தாள் மகள் நாச்சி விளக்கெரிக்க வேண்டி கறவை மாடுகளை வழங்கியுள்ளாள். நாச்சி nācci, பெ. (n.) தலைவி நாமதீப.183); lady, mistress. [நாயகன் → நாயகச்சி+நாச்சி.] |
நாச்சியார் கோயில் | நாச்சியார் கோயில் nācciyārāyil, பெ.(n.) திருவாரூர் மாவட்டத்திலுள்ளல் பூந்தோட்டம் கும்பகோணம் வழிச் சாலையில் உள்ள ஒரு சிற்றூர்; name of the village in Thiruvarul district on the way to Poonthottam Kumbakkam salai. [நாச்சி+ஆர்+கோயில்] |
நாஞ்சில் வள்ளுவன் | நாஞ்சில் வள்ளுவன் nāñjilvaḷḷuvaṉ, பெ.(n.) கடைக்கழகக் காலத்திய குறுநில மன்னன்; a chieftarin of sangam period. [நாஞ்சில்+வள்ளுவன்] |
நாஞ்சிவயல் | நாஞ்சிவயல் nāñjivayal, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village ir Tiruvādānai Taluk. [நாஞ்சில்+வயல்] |
நாடக மடந்தையர் | நாடக மடந்தையர் nāḍagamaḍandaiyar, பெ.(n.) கூத்தில் பங்கேற்கும் மகளிர்; dancing girls. [நாடகம்+மடந்தையர்] |
நாடன் | நாடன் nāṭaṉ, பெ.(n.) 1 குறுநிலத் தலைவன்; a chieftain head of a land track. 2. மண்ணின் மைந்தன்; son of the soil. [நாடு+அன், நாடன். காடன் என்பதின் எதிர்ச்சொல்] ஒ.நோ. குறும்பொறை நாடன் நாடன் nāṭaṉ, பெ. (n.) 1. தேசத்தான்; inhabitant, countryman. ” வானாடர் கோவுக்கே” (திருவாச13:5);. “வான நாடனே வழித்துணை மருந்தே” (தேவா); 2. ஆளுந் தலைவன்; ruler, lord of a country. “தென் பாண்டி நாடனைக் கூவாய்’ (திருவாச. 18:2);. 3. குறிஞ்சிநிலத் தலைவன்; chief of kuri tract. “நாட னென்கோ ஆர னென்கோ’ (புறநா.49);. 4. கார்த்திகை விண்மீன் (திவா.);: the third(naksatra); winmin. [நாடு + அன் → நாடன்.] |
நாடா | நாடா nāṭā, பெ.(n.) கைத்தறியில் குறுக்காகச் சென்று வரும் கருவி; to and fro moving device in handloom weaving. [நள்-நாள்-நாள-நாடா] நாடா1 nāṭā, பெ.(n.) தறியில் வாட்டு போடுவதற்குரிய கருவி a weavers device. [(நள்-நாளா-நாடா] நாடா2 nāṭā, பெ.(n.) பாவு நூலில் இடையே ஊடு நூலாகச் செல்லும் நாடா yarn which intervene through a warp. [நடு-நாடு-நாடா] நாடா nāṭā, பெ. (n.) 1. நெசவுக்கருவி வகை; weaver’s shuttle, commonly made of a small hallow bamboo. “தார் கிடக்கும் நாடாப்போல , மறுகுவர்” (சீவக.3019, உரை);. 2. கட்டுதற்கு உதவும்படி ஆடைக்கரையில் நெய்யப்பட்ட நாற்பட்டை ribbon, tape. நாடா வைத்துத் தை. 3. யூதர்கள் தம் வேதத்தொடர்களை எழுதிச் சிறுதோற்பையிலடக்கஞ் செய்து அணிந்து கொள்ளும் அணிவகை(கிறித்);; phylactery, front|et. த. நாடா → ப. நாரா. நாளம் → நாளி → நாழி=உள்துளைப்பொருள். நாழி → நாடி= அரத்தக்குழாய். நாடி → நாடா = நெசவுக்குழல். |
நாடா ஆணி | நாடா ஆணி nāṭāāṇi, பெ.(n.) நாடாவின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பி; a string which runs in the middle of tape. [நாடா+ஆணி] |
நாடா எகிறு-தல் | நாடா எகிறு-தல் nāṭāegiṟudal, செ.கு.வி. (v.i.) நாடாபாவினிடையே தாண்டிச்செல்லல்; tape which passes through the warp. [நாடா+எகிர்] |
நாடாந்தல் | நாடாந்தல் nāṭāndal, பெ.(n.) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in Viluppuram. [நாடு+ஏந்தல்(ஏரி);-நாடேந்தல்-நாடாந்தல்] |
நாடாழ்வா நாடு | நாடாழ்வா நாடு nāṭāḻvānāṭu, பெ.(n.) நாடாழ்வான் பெயரிலமைந்த நாடு; an area named of the nādalvān. [நாடு+ஆழ்வான்+நாடு] 11ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் அகளங்க நாடாழ்வான் கொல்லி மலையை வென்றான் எனும் குறிப்பு உள்ளது. |
நாடு தலையாரிக்கம் | நாடு தலையாரிக்கம் nāṭudalaiyārikkam, பெ.(n.) நாடு காவல் புரிவோர் செலுத்தும் வரி; Watch-man’s dues. [நாடு+தலையாரி-தலையாளிக்கா] |
நாட்டடைவு | நாட்டடைவு nāḍḍaḍaivu, பெ.(n.) பரத நாட்டி யத்தில் இடம் பெறும் ஓர் அடைவு வகை; a stepping type in dance. [நாட்டு+அடவு] |
நாட்டன் | நாட்டன் nāṭṭaṉ, பெ.(n.) 1. நாட்டகத்து வாழ்வோன்; native man of an area. 2. நாட்டகப் பகுதியின் ஆள்குடித் தலைவன்; an administrative officer of an area in a land. [நாடு→நாட்டன்] |
நாட்டம் | நாட்டம் nāṭṭam, பெ.(n.) ஒரு வகையான நெய்தற் பண்; a kind of tune which is concerned with coastal region, Maritime melody, melody belongs to litteral region [நடு-நாட்டம்] நாட்டம்1 nāṭṭam, பெ. (n.) 1. கண்; eye. “வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன” (கம்பரா.கரன்வதை.71);. 2. பார்வை: sight. 3. ஆராய்ச்சி; examination, investigation. ‘நன்மதி நாட்டத் தென்மனார்’ (தொல்.எழுத்.483);. 4. கணியநூல்; astrology. “சொற்பெயர் நாட்டங்கேள்வி நெஞ்ச மென்று (பதிற்றுப்.21,1);. 5. செவ்வழி யாழ்த்திற வகையுளொன்று, (பிங்.);; a secondary melody-type of the mullai class. 6. அழகு; beauty. ‘இராசபுரமென்னு நாட்டமுடை நகரம்” (சீவக.1785);. 7. விருப்பம்; desire: ‘அரசனுக்கு அன்னத்தில் நாட்டமில்லை (வின்);. அவனுக்கு படிப்பில் நாட்டமில்லை (இக்.வ.);. 8. நோக்கம் intention, pursuit, aim, quest. “வேறொரு நாட்ட மின்றி’. (தாயு.பாயப்புலி.12);. 9. சிறப்புநோக்கு; special sight. “நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் கூட்டியுரைக்கும் குறிப்புரை யாகும்’ (தொல்.களவு.5);. 10. ஐயம் (வின்);; suspicion. “அவன்பேரில் நாட்டமாயிருக்கிறது’ (வின்.);. 11. அசைவு, இயக்கம்: movement. “பெண்ணாட்ட மொட்டேன்” (கம்பரா. நகர்நீ.122);. ம. நாட்டம். [நாடு- → நாட்டம்.] நாட்டம்2 nāṭṭam, பெ. (n.) மாவட்டத் தலைமை; 1. நிலைநிறுத்துகை establishment. 1. மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழ்க் கொள்கையை, மொழி ஞாயிறு தமது சொல்லாய்வின் மூலம், தமிழர்தம் மனதில் நிலைநாட்டம் செய்தார். இக்.வ.) “உரைத்திறநாட்டம்” (தொல். பொருள்.41);. 2. வாள் (பிங்.);; sword. [நடு → நாடு → நாட்டம்.] =நாட்டம் – கொள்கையை நிலைநாட்டுகை |
நாட்டாவளி | நாட்டாவளி nāṭṭāvaḷi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvādāai Taluk. [நாட்டு+ஆவளி] |
நாட்டியக்கோலம் | நாட்டியக்கோலம் nāṭṭiyakālam, பெ.(n.) சிற்பவடிவிலான இறைவடிவம்: a pose of the god in sculpture. [நாட்டியம்+கோலம்] |
நாட்டுக்கூத்து | நாட்டுக்கூத்து nāṭṭukāttu, பெ.(n.) நாட்டுப்புறக் கூத்து வகை; a kind of folkdance, [நாட்டு+கூத்து] |
நாட்டுப்புற கும்மி | நாட்டுப்புற கும்மி nāṭṭuppuṟagummi, பெ.(n.) கும்மியாட்டத்தின் ஒரு வகை: girls dance accompanied by clapping. [நாட்டு+புறம்+கும்மி] [P] |
நாட்டுப்புற மக்கள் | நாட்டுப்புற மக்கள் nāṭṭuppuṟamakkaḷ, பெ.(n.) சிற்றுார்களில் வாழும் மக்கள்; people living in rural areas. [நாட்டு+புற(ம்);+மக்கள |
நாட்டுப்புற வழக்கு | நாட்டுப்புற வழக்கு nāṭṭuppuṟavaḻkku, பெ.(n.) ஊர்ப்புறத்து வழக்கு; usage of countryside. [நாட்டு+புறம்+வழக்கு] |
நாட்டை | நாட்டை nāṭṭai, பெ.(n.) பாடலிசையரங்கு தொடங்குங்கால் பாடப்படும் பண்; improvised introduction to a melody meant to notify to the audience the nature of the raga and get into its swing. [நாள்-நாட்டு+ஐ] |
நாணக்குடி | நாணக்குடி nāṇakkuḍi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [நாணன்+குடி-நாணன்குடி-நாணக்குடி] |
நாணயசுதன் | நாணயசுதன் nāṇayasudaṉ, பெ.(n.) நேர்மை யானவர்; honest man. |
நாணயநோட்டகன் | நாணயநோட்டகன் nāṇayanōṭṭagaṉ, பெ. (n.) காசு ஆய்வாளன்; teller employed by banks and commercial firms. 2. கருவூல வேலைக்காரன், treasury assistant. 3. காசுக்கடைக்காரன்; banker, dealer in precious metals. [நாணயம்+நோட்டகன்] |
நாணாக்குடி | நாணாக்குடி nāṇākkuḍi, பெ.(n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Arantangi Taluk. [நாணன்+குடி-நாணன்குடி-நாணாக்கு, (கொ.வ.);] |
நாதசுவரம் | நாதசுவரம் nātasuvaram, பெ.(n.) மரத்தால் நீண்ட குழல் வடிவில் செய்து சீவாளி பொருத்தி மங்கல நிகழ்ச்சிகளில் இசைக்கப்படும் இசைக்கருவி(ஒலகம்);; wind instrument with a long pipe. த.வ. ஒலகம் நாதசுவரம் nātasuvaram, பெ. (n.) பெரு வாக்கியம்; ஒலகம்; a musical wind instrument. த.வ. ஒலகம் [Skt. nad-{} → த. நாதசுவரம்.] |
நாதந்தி | நாதந்தி nātandi, பெ.(n.) இலாவணிப்பாடலில் பயன்படுத்தப்படுகின்ற மெட்டு வகை; a melody which is used in songs which are sung in debating an issue on several subjects. [நாதந்த-நாதந்திவண்ணச் சுழிப்புத் தாளக் குறிப்பொலி] |
நாதன் | நாதன் nātaṉ, பெ. (n.) 1. தலைவன்; headman. 2. முனிவன்; sage. 3. கடவுள்; god. 4. கணவன்; husband. [Skt. {} → த. நாதன்.] |
நாதவசுது | நாதவசுது nādavasudu, பெ.(n.) நாதச் சினைக்குள்ளிருக்கும் அணுவிற்கணுவான பொருள்; a microscopic matter in which life is manifested and as such forms the essential material of all plants and animal cells. It is usually viscid holding fine granules in suspension – protoplasm. (சா.அக.); |
நாதி | நாதி nāti, பெ.(n.) பற்றுக்கோடு, காப்பாற்றும் உறவு protector. எனக்கு நாதி யாரும் இல்லை (பேவ);. [நள்-தன்-நற்று-நத்து-நாதி] நாதி nāti, பெ. (n.) 1. பெருங்காய வகை (வின்.);; a kind of asafoetida. 2. தான்றிக்காய்; devils abode. நாதி nāti, பெ. (n.) 1. உறவினன்; relative. 2. பேணுநன்; care taker. [Skt. {} → த. நாதி.] |
நாத்திகன் | நாத்திகன் nāttigaṉ, பெ. (n.) இறை மறுப்பாளன் நம்பா மதத்தன்; atheist. [Skt. {} → த. நாத்திகன்.] |
நாத்திக்கலி | நாத்திக்கலி nāttikkali, பெ.(n.) அடிப்பகுதி தடிப்பு இல்லாத பிஞ்சு மூங்கில்; a tender bamboo tree, which has not broad base. [நாற்று-நாத்து+கலி-நாத்துக்கலி-நாத்திக்கலி] |
நாத்தியோசம் | நாத்தியோசம் nāttiyōcam, பெ.(n.) வரகு; a kind of black millet – Paspalum frumentaceum. (சா.அக.); |
நானல்பந்தி | நானல்பந்தி nāṉalpandi, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நாணல்+பந்தி(வரிசை);] |
நான்கு மூலைக்கல் | நான்கு மூலைக்கல் nāṉkumūlaikkal, பெ.(n.) நான்கு மூலையில் உள்ளவர்களும் ஒவ்வொரு கல்லாக எடுத்து விளையாடும் ஆட்டம்; a children’s game. [நான்கு+மூலைகல்] |
நாபகம் | நாபகம் nāpagam, பெ.(n.) கடுக்காய்; Indian gallnut – Terminalia chebula. (சா.அக.); |
நாபளூர் | நாபளூர் nāpaḷūr, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Tiruthani Taluk. [நாவலூர்-நாபளூர் (கொ.வ.);] |
நாபாஞ்சம் | நாபாஞ்சம் nāpāñjam, பெ.(n.) பற்பாடகம்; fever plant. (சா.அக.); |
நாபாரிசம் | நாபாரிசம் nāpārisam, பெ.(n.) 1. நாக்குப் பக்கம்; sides of the tongue. 2. நாபாகம்; part adjointing the tongue, ligual region. (சா.அக.); |
நாபி | நாபி1 nāpi, பெ. (n.) 1. கொப்புழ்; navel. 2. கத்தூரி; musk. 3. நாபித்தானம்; umbillical region. 4. மூலத்தானம்; principal seat in the human system. 5. இடுப்பெலும்பு; pelvis. 6. குருவண்டு., (சா.அக.); நாபி2 nāpi, பெ.(n.) 1. கொப்பூழ் (பிங்.);; navel. 2. மான்மணத்தி (கஸ்தூரி); (தைலவ. தைல);; musk. [Skt. {} → த. நாபி] நாபி3 nāpi, பெ.(n.) அந்தண நாபி, சத்திரிய நாபி, வைசிய நாபி, சூத்திர நாபி என்று நால் வகைப்பட்ட வச்சநாபி முறிவு (வின்.);; antidoes to aconite, being four in number viz. {}, cattiriya-napi, {}. [Skt. vatsa-{} → த. நாபி] |
நாபிகந்தம் | நாபிகந்தம் nāpigandam, பெ.(n.) கத்தூரி நறுமணம்; musk adour. (சா.அக.); |
நாபிகை | நாபிகை nāpigai, பெ.(n.) 1. உந்தியைப் போன்ற குழி; a navel like cavity. 2. ஒரு பூண்டு; a plant. (சா.அக.); |
நாபிக்கட்டி | நாபிக்கட்டி nāpikkaṭṭi, பெ.(n.) கொப்பூழில் எழும்பும் ஓர் வித்திரதிக்கட்டி; a deep seated local abscess in the navel region. (சா.அக.); |
நாபிக்கமலம் | நாபிக்கமலம் nāpikkamalam, பெ.(n.) 1. கொப்பூழ்; lotus like navel. 2. உந்தியைச் சுற்றிலுமுள்ள இடுக்குகள்; the interstice space about the umbilicus. (சா.அக.); |
நாபிக்கமலவிரணம் | நாபிக்கமலவிரணம் nāpikkamalaviraṇam, பெ.(n.) 1. நாபியழற்சி; inflame- mation of the navel omphalitis. 2. நாபியைச் சுற்றிலும் கானும் கொப்புளங்கள்; boils around the navel in the navel region – omphalel cosis. 3. நாபியின் கீழ்க் கொண்ட விரணம்; suppurative lessions of the umbilical region or navel ill – omphalophlebitis. |
நாபிக்கழலை | நாபிக்கழலை nāpikkaḻlai, பெ.(n.) நாபிக் கமலத்தில் காணும் கழலைக் கட்டி; tumour of the umbilicus ophaloma. (சா.அக.); |
நாபிக்கிழங்கு | நாபிக்கிழங்கு nāpikkiḻṅgu, பெ.(n.) பச்சை நாவிக் கிழங்கு; green aconite root Aconitum ferox (root of.);. (சா.அக.); |
நாபிக்கூரிகம் | நாபிக்கூரிகம் nāpigārigam, பெ.(n.) நேர்வாளக் கொட்டை; croton seeds-physic ոսl. (சா.அக.); |
நாபிக்கொடி | நாபிக்கொடி1 nāpikkoḍi, பெ.(n.) தொப்புட் கொடி (இங்.வை.);; umbilical card. [நாபி + கொடி] நாபிக்கொடி2 nāpikkoḍi, பெ.(n.) கொடிவகை; malabar glory – lily – Gloriosa superba. [நாபி + கொடி] நாபிக்கொடி nāpikkoḍi, பெ.(n.) 1. கொப்பூழ்க் கொடி; navel or umbilical cord. 2. காந்தள்; country aconite – Gloriosa superba. (சா.அக.); |
நாபிசன் | நாபிசன் nāpisaṉ, பெ.(n.) பிரமன் (யாழ்.அக);;{}, as born of {} navel. “திருமாலின் உந்தியிற் பிறந்தோன்”. [Skt. {} → த. நாபிசன்] |
நாபிசாருவாதம் | நாபிசாருவாதம் nāpicāruvātam, பெ.(n.) தொப்புளைப் பற்றி வலிப்பு நோய்; a kind of monoplegia about the navel region. (சா.அக.); [நாபி+ சாரு வாதம்] |
நாபிசூத்திரம் | நாபிசூத்திரம் nāpicūttiram, பெ.(n.) கொப்பூழ்க் கொடி, தொப்புட் கொடி (வின்.);; umblical cord. [Skt. {} → த. நாபிசூத்திரம்] |
நாபிச்சக்கரம் | நாபிச்சக்கரம் nāpiccakkaram, பெ.(n.) தொப்புள் வளையம்; navel circle. (சா.அக.); |
நாபிச்சுற்று | நாபிச்சுற்று nāpiccuṟṟu, பெ.(n.) நாபிக் கமலம் பார்க்க;see {}. |
நாபிச்சூத்திரம் | நாபிச்சூத்திரம் nāpiccūttiram, பெ.(n.) நாபிக்கொடி பார்க்க;see {}. |
நாபிச்சூரை | நாபிச்சூரை nāpiccūrai, பெ.(n.) நாபிச்சூலை பார்க்க;see {}. |
நாபிச்சூலை | நாபிச்சூலை nāpiccūlai, பெ.(n.) தொப்பு களிலும், கீழி வயிற்றிலும், நடுக்கல் வாந்தி, ஆண் குறியிலும் வலி முதலிய குணங்களைக் காட்டும் ஓர் வாத நோய்; a kind of disease of the navel region marked by cruciating pain in the navel abdomen a stomach, vomiting, trembling pain the anus and genital. (சா.அக.); |
நாபித்தானம் | நாபித்தானம் nāpittāṉam, பெ.(n.) சூழ்வகம் (உத்திரபிரதேசம்);; region of the navel. [Skt. {} → த. நாபித்தானம்] |
நாபித்தாரி | நாபித்தாரி nāpittāri, பெ.(n.) வசம்பு; sweet flag – Acoruscalamus. (சா.அக.); |
நாபிநாடி | நாபிநாடி nāpināṭi, பெ.(n.) 1. உந்திக் கொடி; umbilical cord. 2. உந்தியின் இரத்தக் குழாய்கள்; cateries of the navel region – navel artery. (சா.அக.); |
நாபிநாளம் | நாபிநாளம் nāpināḷam, பெ.(n.) 1. நஞ்சுக் கொடி; umblical card. 2. நஞ்சினின்று பிண்டத்திற்குப் போகும் இரத்தக்குழல்; a vessel which conveys back the blood after its purification from the placenta to the foetus – Umbilical vein. (சா.அக.); |
நாபிநாளோதயம் | நாபிநாளோதயம் nāpināḷōtayam, பெ.(n.) பிள்ளைப் பேற்றில் நஞ்சுக் கொடி வெளிக் காணல்; presentation of navel cord or umblical card. (சா.அக.); |
நாபிபதுமம் | நாபிபதுமம் nābibadumam, பெ.(n.) 1. மணி பூரகம்; p. 2. தாமரைப் போன்ற உந்தி; navel lotus and the power to destroy and create is dequired. (சா.அக.); |
நாபிப்பாலாமிர்தம் | நாபிப்பாலாமிர்தம் nāpippālāmirtam, பெ.(n.) சாராயம்; arrack. (சா.அக.); |
நாபியம் | நாபியம் nāpiyam, பெ.(n.) வெள்ளூமத்தை; white flowered dhatura – Datura fastuosa. (சா.அக.); |
நாபியுருக்காந்தம் | நாபியுருக்காந்தம் nāpiyurukkāndam, பெ.(n.) ஊசிக்காந்தம்; magnet attracting needles. (சா.அக.); |
நாபிரசம் | நாபிரசம் nāpirasam, பெ.(n.) விந்து; semen. (சா.அக.); |
நாபிரம் | நாபிரம் nāpiram, பெ.(n.) விந்து (சங்.அக.);; semen. [Skt. {} → த. நாபிரம்] |
நாபிலம் | நாபிலம் nāpilam, பெ.(n.) கொப்பூழ்க்குழி; cavity of the navel. (சா.அக.); |
நாபிவத்திகம் | நாபிவத்திகம் nāpivattigam, பெ.(n.) கொப்பூழில் சிறு கொப்புளம்; umbilical vesicle. (சா.அக.); |
நாபிவர்த்தனம் | நாபிவர்த்தனம் nāpivarttaṉam, பெ.(n.) 1. நாபியின் பிதுக்கம்; umbilical hernia. 2. தடித்தவுடம்பு; corpulency. (சா.அக.); |
நாபிவளையம் | நாபிவளையம் nāpivaḷaiyam, பெ.(n.) தொப்புள் வளையம்; umbilical ring-Annulus umbilicus. (சா.அக.); |
நாபிவிரேசனம் | நாபிவிரேசனம் nāpivirēcaṉam, பெ.(n.) மருந்தை தொப்புளில் தடவ பேதியாதல்; causing euacuation from the bowels by an external application of medicine on the naval region. (சா.அக.); |
நாபீலம் | நாபீலம் nāpīlam, பெ.(n.) 1. கடிதடம்(யாழ்.அக.);; pudendum muliebre. 2. கொப்பூழ்க் கொடி (குழி);; the cavity of the navel. [Skt. {} → த.நாபீலம்] |
நாமகரணம் | நாமகரணம் nāmagaraṇam, பெ.(n.) பெயரீட்டுக் கரணம் சோடச சம்சகாரத்துள் பிறந்த குழந்தைக்குப் பதினொராம் நாளிற் பெயரிடுவதான சடங்கு; ceremony of naming a child on the 11th day at two birth, one of {}. “மாதவிமகட்கு நாமகரணம் பண்ணுவோமென்று” (சிலப். 13, 26, உரை); (திருவானைக். கோச்செங். 14);. [Skt. {} + த. கரணம் → த. நாமகரணம்] நாமகரணம் nāmagaraṇam, பெ.(n.) பெயர் சூட்டல்; christening. |
நாமகீர்த்தனம் | நாமகீர்த்தனம் nāmaārttaṉam, பெ.(n.) திருப்பெயர் ஏத்தற்பா, கடவுள் திருப்பெயர் ஒதுகை; singing God’s names. [நாம(ம்); + கீர்த்தனம்] [Skt. {} → த. நாம(ம்);] |
நாமக்கல் | நாமக்கல் nāmakkal, பெ.(n.) நில அளவைக் காக அரசினரால் நடப்படும் குறியீட்டுடன் கூடிய கல்; boundary stone of Revenue department. [நாமம்+கல்] நாமக்கல்1 nāmakkal, பெ. (n.) வெள்ளைக் களிமண்; pipe clay. [நாமம் + கல்.] நாமம் = வெண்மை. நாமக்கல்2 nāmakkal, பெ. (n.) ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒர் பேரூர்; a city in Erode dist. தமிழ்நாட்டிலேயே அதிகமான சரக்குந்துகள், கோழிப்பண்ணைகள், நிறைந்த பேரூராகும். |
நாமக்குழி | நாமக்குழி nāmakkuḻi, பெ.(n.) முன்கழுத்தின் அடியில் உள்ள தொண்டைக்குழி; a dip like portion at the lower throat. [நாமம்+குழி] |
நாமதேயம் | நாமதேயம் nāmatēyam, பெ.(n.) யாகங் களுக்குப் பெயரிடும் வேத வாக்கியவகை (விவேக சிந். பக். 5);; the {} passages which give the names of sacrifices etc. [Skt. {} → த. நாமதேயம்] |
நாமத்தராசு | நாமத்தராசு nāmattarācu, பெ.(n.) தராசு வகை (இ.வ.);; the common balance. [நாமம் + தராசு] |
நாமநட்சத்திரம் | நாமநட்சத்திரம் nāmanaṭcattiram, பெ.(n.) ஒருவனுடைய பெயரின் முதலெழுத்திலிருந்து விதிப்படி கொள்ளப்படும் அவனது நட்சத்திரம் (பஞ்ச.);; the natal star of a person dedued by set rules, from the initial letter of his name. [நாமம் + நட்சத்திரம்] |
நாமா | நாமா nāmā, பெ. (n.) ஆவணம்; document. [U. {} → த. நாமா.] |
நாயகனி இசை | நாயகனி இசை nāyagaṉiisai, பெ.(n.) கரகத்தின் துணை நிலை ஆட்டமான பாம்பு நடனத்திற்கு இசைக்கப்படும் இசை a wind instrument used in snake dance offolklore. [தாயணக்காரன்+இசை] |
நாயகவாடி | நாயகவாடி nāyagavāṭi, பெ.(n.) அறுவடைப் பயிரைப்பாதுகாக்கும் காவல்காரன்; one who guards the crops. மறுவ.. பந்தற்காரன் [நாயக+ஆளி-வாளி)-வாடி] |
நாயச்சுரம் | நாயச்சுரம் nāyaccuram, பெ.(n.) மூக்கில் வருமோர் நோய்; a disease of the nose. (சா.அக.); |
நாயனேந்தல் | நாயனேந்தல் nāyaṉēndal, பெ.(n.) அருப்புக் கோட்டை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Aruppukkottai Taluk. [நாயன்+ஏந்தல்(ஏரி);] |
நாயர் | நாயர் nāyar, பெ.(n.) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுார்; name of the village in Chengalpet. [ஞாயில்-தாயிர்-நாயர்] கோட்டையை உணர்த்தும் ஞாயில் என்பது காலப்போக்கில் ‘நாயர் என்று மருவி இருக்கலாம். நாயர் nāyar, பெ. (n.) மலையாளருள் ஒர் இனத்தார்; a caste of hindus in malabar. ம. நாயர். [நாயன் → தலைவன், அரசன்.கடவுள்,தந்தை.நாயம் → நாயன் → நாயர்=சேரமயைாள]-நாட்டுப் படைத்தலைர் வழிவந்த குலத்தார் [மு.தா.170].] |
நாரக்கரந்தை | நாரக்கரந்தை nārakkarandai, பெ.(n.) நாட்டு முள்ளங்கி; wall radish. “பழைய சுவரின் சந்துகளிலும் சுடுகாட்டிலும் விளையும் இதையே சுவர் முள்ளங்கி என்று கூறலாம்”. (சா.அக.); |
நாரங்கசீகம் | நாரங்கசீகம் nāraṅgacīkam, பெ.(n.) சித்தா முட்டி; yellow stick mallow – paonia zeylanica alias p. glechomifolia. (சா.அக.); நாரங்கசீகம் nāraṅgacīkam, பெ.(n.) சித்தா முட்டி; yellow stickmallow – pavonia zeylanica. (சா.அக.); |
நாரசிம்மரசம் | நாரசிம்மரசம் nārasimmarasam, பெ.(n.) சரகரால் சொல்லப்பட்ட புராண சுரத்தை ஒட்டும் ஓர் ஆயுள்வேத மருந்து; an Ayurvedic preparation prescribed for chronic fever named Narasimharasam. (சா.அக.); |
நாரட்டை | நாரட்டை nāraṭṭai, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்; a village in Sivaganga Taluk. [நார்+அட்டு-நாரட்டு-நாரட்டை] |
நாராயணாட்திரம் | நாராயணாட்திரம் nārāyaṇāṭtiram, பெ.(n.) திருமாலை அதிதேவதையாகவுடைய அம்பு; a powerful arrow whose presiding dlity is {}. [Skt. {} → த. நாராயணாட்திரம்] |
நாரீதூசணம் | நாரீதூசணம் nārītūcaṇam, பெ.(n.) பாதி விரத்தியத்தைக் கெடுப்பது (யாழ்.அக.);; that which makes a woman loss her honour. [Skt. {} → த. நாரீதூசணம்] |
நாரைக்கிணறு | நாரைக்கிணறு nāraikkiṇaṟu, பெ.(n.) 1. இராசிபுரம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றுர்; a village in Rasipuram Taluk. 2. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்; a village in Tirunelvelidistrict. [நாரை+கிணறு] |
நார்கத்தை | நார்கத்தை nārkattai, பெ.(n.) மட்டையிலிருந்து பிரித்த நார்க்கட்டு; bundle offibre taken from palmyra. [நார்+கத்தை] |
நார்க்கடவான் | நார்க்கடவான் nārkkaḍavāṉ, பெ.(n.) பனை நாரால் செய்த பெட்டி; basket woven by palmyra dried leaf. மறுவ. ஒலைப்பெட்டி [நார்+(கடகம்);கடவன்-நார்க் கடவன்] |
நார்சிப்பு | நார்சிப்பு nārcippu, பெ.(n.) கற்றாழையைக் காயவைத்துசீவப்பயன்படும் கருவி; adevice used to obtain fibre from karralai-aloe [நார்+சீப்பு] |
நார்த்தவாடா | நார்த்தவாடா nārttavāṭā, பெ.(n.) திருத்தணி வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Tiruttani Taluk. [நாரத்தை+பாடி+ நாரத்தைப்பாடி-நாரத்தைவாடி] |
நார்ப்பெட்டி | நார்ப்பெட்டி nārppeṭṭi, பெ.(n.) பனை நார்க்கடகம்; tray made of palmyra-stems. [நார்+பெட்டி] |
நார்முடிச்சேரல் | நார்முடிச்சேரல் nārmuḍiccēral, பெ.(n.) களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னன்; name of a Cera king known as Kalankâykanninärmud-c-ceral [நார்(தலைமயிர்);+முடிச்சேரல்] பதிற்றுப்பத்தில் பாடப்பட்டுள்ள இம்மன்னன் நாரால் ஆகிய முடிபுனைந்தவன் எனக் கூறுகின்றன ஆயின் மலையாள மொழியில் தலைமயிரைத் தலை நார் என்பதால் அப்பொருள் பொருந்தவில்லை. மரவுரியைக் கன்னட மொழியில் நார்மடி என்பர். நார்மடி என்பது பாடவேறு பாடாயின் மரவுரி உடுத்திய மன்னன் என்றும் பொருள் கொள்ள வாய்ப்புள்ளது. பொன் அணிகலன் அணியாமல் களங்கால் கண்ணி சூடியதாலுற்ற மேற்கொண்ட மன்னனாக அறியப்படுகிறான். |
நார்முடிச்சேலை | நார்முடிச்சேலை nārmuḍiccēlai, பெ.(n.) நாரால் செய்த துணி, மரவுரி; cloth woven by the fibre of the tree bark formerly worn by our ascetics. க. நார்மடி-நாரால் செய்த துணி – மரவுரி |
நாறி நலங்குலை-தல் | நாறி நலங்குலை-தல் nāṟinalaṅgulaidal, செ.கு.வி.(v.i.) கெடுமனத்தனாய் வன் கொடுமை பலி செய்து உறவினராலும் ஊரினராலும் இகழப்படுதல்; to be abused and condemned for one’s misdeeds. 9olsås என் இப்படி நாறி நலங்குலைகிறான். [நாறு-நாறி+நலம்+குலை] |
நாற்பண் | நாற்பண் nāṟpaṇ, பெ.(n.) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனும் நாற்பெரும் பண்கள் four major melodies of Tamil music. [நால்(நான்கு);+பண்] பண்கள்: குறிஞ்சி_படுமலைப் பாலைமுல்லை – செம்பாலை, தீம்பாலை (அரிகாம்போதி மோகனம்-சாதாரி, மருதம்-கோடிப்பாலை, நெய்தல் – விளரிப்பாலை. |
நாற்பாலைப்பண் | நாற்பாலைப்பண் nāṟpālaippaṇ, பெ.(n.) முல்லைக்குரிய செம்பாலை, குறிஞ்சிக்குரிய படுமலைப்பாலை, மருதத்துக்குரிய கோடிட் பாலை நெய்தலுக்குரிய விளரிப்பாலை எனும் நான்கு நிறைப் பண்களாகிய பாலை பண்கள்: melodies which belongs to hill tract, fores! tract, agricultural tract and maritime tract, and desert tract. [நால்+பாலை+பண்] |
நாற்று மாலை | நாற்று மாலை nāṟṟumālai, பெ.(n.) நாற்று முடிகளைக் கட்டி வாய்க்காலில் இழுத்தல்: pulling the bundle of saplings. [நாற்று+மாலை] |
நாற்றுப்பருவம் | நாற்றுப்பருவம் nāṟṟupparuvam, பெ.(n.) சோளக்கதிர் விளையாட்டின் பெயர்; a children’s play. [நாற்று+பருவம்] |
நாலடித்தாளம் | நாலடித்தாளம் nālaḍittāḷam, பெ(n.) பறை ..முழக்கத்தில் ஆளப்படும் தாளக்கட்டு time measure variation in beating in percussion instruments. [நாலடி+தாளம்] |
நாலன் அலகு | நாலன் அலகு nālaṉalagu, பெ.(n.) ஒரு தட்டும் மூன்று எண்ணிக்கையும் உடையது; beat variation in musical time measure. [நால்+அன்+அலகு] |
நாலறுவை மணிகள் | நாலறுவை மணிகள் nālaṟuvaimaṇigaḷ, பெ.(n.) கூட்டல் அடையாளம் போன்ற திறப்பினையுடைய மணிகள் a bead variety. [நால+அறுவ+மணி] |
நாலு வீடு கட்டு-தல் | நாலு வீடு கட்டு-தல் nāluvīṭugaṭṭudal, செ.கு.வி. (v.i.) சந்தத்திற்கு ஏற்ப ஆடும் கும்மியாட்டம்; dancing, accompanied with the clapping of hands for the same metre. [நாலு+விடு+கட்டு] |
நால்சாதிவிசக்கல் | நால்சாதிவிசக்கல் nālsātivisakkal, பெ.(n.) நான்கு வகைச் சாதிப் பெண்களின் கருப் பிண்டம்; the foetuses of four kinds of women divided according to their lust as referred to in the Tamil Erotic Science. (சா.அக.); |
நாளத்தி | நாளத்தி nāḷatti, பெ.(n.) இசைக்கலையில் இறக்கப் பண்ணோசை (அவரோகணம்);; a singing complete descent of the gamut [நாள்+நாளத்தி] நாளத்தி nāḷatti, பெ. (n.) ஊதும் உலைத்துருத்தி; belows. |
நாழிகைவழி | நாழிகைவழி nāḻigaivaḻi, பெ.(n.) ஒரு நாழிகையில் (24 நிமிடம்); நடக்கும் தொலைவு, ஒரு கட்டை (1 மைல்);; a distance of one mile – distance in anāliga (24 minutes); (யாழ்ப்.);. [நாழிகை+வழி] நாழிகைவழி nāḻigaivaḻi, பெ. (n.) நாழிவழி பார்க்க;see nås-was. [நாழிகை+ வழி.] |
நாழிவயல் | நாழிவயல் nāḻivayal, பெ.(n.) சிவகங்கை வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்; a village in Sivagangai Taluk. [நாழி+வயல்] |
நாவடம் | நாவடம் nāvaḍam, பெ.(n.) பெண்களின் அணிகலன்; an ornament of women. நாவடத்துக்காரியிடம் நாயத்தைச் சொன்னால் நாவடத்தைப் பார்ப்பாளா நாயத்தைக் கேட்பாள (கொ.வ.);. [நாண்+வடம்-நாவடம்] நாவடம் nāvaḍam, பெ. (n.) 1. நாகவடம்; a pendent ear-ornament. 2. தாலியுருவகை; a jewel worn along with the marriage-badge. [நால்வடம் → நாவடம்.] தொங்குமாறு செய்யப்பட்ட அணிகலன். |
நாவலி’-த்தல் | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
நாவான்னம் | நாவான்னம் nāvāṉṉam, பெ.(n.) வெஞ்சோறு, சுடுசோறு; hot cooked rice. (சா.அக.); |
நாவாயிகம் | நாவாயிகம் nāvāyigam, பெ. (n.) மரக் கலத்தொடர்பானது shipping. [நாவாய்+இகம்] |
நாவாய்கன் | நாவாய்கன் nāvāykaṉ, பெ. (n.) மீகாமன் பார்க்க;see mikaman. [நாவாய் +அன்-நாவாயன்-நாவாய்கன்] |
நாவீறு | நாவீறு nāvīṟu, பெ.(n.) சொல்லாடும் திறமை, பேச்சு வன்மை; talent in debate and conversation; gift of the gab. [நா(நாக்கு);விறு] |
நாவீறுடையபுரம் | நாவீறுடையபுரம் nāvīṟuḍaiyaburam, பெ.(n.) நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்; name of the village in Nellai. [நா+வீறு+உடையர்+புரம்ஹ ‘நாவீறுடையார் என்னும் புலவரின் பெயரால் நாவீறு என அமைந்த ஊர். |