செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
தோ

தோ1 tō,    த் என்ற மெய்யும் ஒ என்ற உயிரும் சேர்ந்த கூட்டெழுத்து; the compound of ‘t’ and

{}.

     [த் + ஒ]

 தோ2 tō, இடை (part.)

   நாயைக் கூப்பிடுமொலி; vocable used in calling a dog or other animals.

தோகடம்

 தோகடம் tōkaḍam, பெ. (n.)

   குழந்தைப் பருவம்; child hood (சா.அக.);.

தோகதம்

தோகதம் dōkadam, பெ. (n.)

   1. கருவுற்ற பெண்கள் சில உணவுப் பொருள்களின் மேல் கொள்ளும் ஆசை; morbid desire of a pregnant woman for particular objects.

   2. நெஞ்சு நோய்; disease of the heart.

   3. வெறுப்புணர்வு; neusea.

தோகம்

தோகம்1 tōkam, பெ. (n.)

   குழந்தை; child.

     [Skt. {} → த. தோகம்]

 தோகம்2 tōkam, பெ. (n.)

   சிறுமை (சூடா.);; smallness, minuteness, trifle.

     [Skt. {} → த. தோகம்]

 தோகம்3 tōkam, பெ. (n.)

   வருத்தம் (துக்கம்);; grief.

     “தோக மொருமிக்கத் தந்தீர்” (இராமநா.உயுத்.60);. [Perh. {} → த. தோகம்]

 தோகம்4 tōkam, பெ. (n.)

   பால்; milk.

     [Skt. {} → த. தோகம்]

தோகாரை

 தோகாரை tōkārai, பெ.(n.)

   ஒரு வகை மீன்; Indian thread finned thevally.

     [தூவாலை-தூகாரை-தோகாரை.]

 தோகாரை tōkārai, பெ.(n.)

   ஒரு வகை மீன்; Indian threadfinned thewally. [தூவாலை-துகாரை-தோகாரை.]

 தோகாரை tōkārai, பெ. (n.)

   காரல் மீன் (மீனவ.);; alactis indica.

தோகை

தோகை tōkai, பெ.(n.)

   ஒரு வகை மீன்; band fish.

     [தொகு-தோகை]

 தோகை tōkai, பெ.(n.)

   ஒரு வகை மீன்; band fish.

     [தொகு-தோகை]

 தோகை tōkai, பெ. (n.)

   1. மயிற்பீலி (பிங்.);; tail of a pea-cock.

   2. மயில்; pea-cock.

     “அன்னமுந் தோகையும்” (சீவக. 346);.

   3. பெண்; woman.

     “தோகை பாகற்கு” (கம்பரா.திருவவ.1௦);.

தோகை அழகைத் தொட்டுப் பொட்டிட்டுக் கொள்ளலாம். (பழ.);.

   4. சிறகு (பிங்.);; feather, plumage.

   5. விலங்கின் வால் (திவா.);; tail of an animal.

     “தோகைமண் புடைக்குங் காய்புலி (கல்லா.6);.

   6. ஆடை; cloth for wear, garment.

பொன்னந் தோகையு மணியரிச் சிலம்பும் (கல்லா. 41:14);.

   7. முன்றானை (திவா.);; front end of a cloth.

   8. கொய்சகம்; plaited folds of a woman’s cloth.

தூசுலா நெடுந் தோகையி னல்லவர்” (சீவக. 132௦);.

   9. நெல் கரும்பு வாழை முதலியவற்றின் தாள்; sheath, as of sugarcane, of a plantain stem.

     ‘பரிய தோகையை யுடைய சிறிய தினை” (புறநா. 168, உரை.);.

தோகைச் செந்நெல் (பெருங். மகத. 2, 18);.

   10. பெருங் கொடி (பிங்.);; long flag, streamer, banner.

   11. தொங்கல் (வின்.);; anything hanging down, as a flag, as woman’s hair.

   12. பனங்கிழங்கின் வாற்றோல் (வின்.);; hallow head of a palmyra root.

   13.ஆண் குறியின் நுனித்தோல்; foreskin, prepuce.

   14. பெண்மயிர் (யாழ்.அக.);; women’s hair.

   15. மீன் வகை; a kind of fish.

     “குளக்கன் றோகை பருந்துவாயன்” (பறாளை. பள்ளு.15);.

     [தொகு → தொகை → தோகை = தொங்கும் கரும்பு, சோளம் முதலியவற்றின் தாள், தொங்கும் மயிற்பீலி (மு.தா. 304);]

தோகைக்குழல்

 தோகைக்குழல் tōkaikkuḻl, பெ. (n.)

   முதியோர் கூந்தல்; Virginian silk (சாஅக);.

     [தோகை + குழல்]

தோகைநோய்

 தோகைநோய் tōkainōy, பெ. (n.)

   மாட்டு நோய் வகை; a disease of cattle.

     [தோகை + நோய்]

ஒருகா. சோகை → தோகை

தோகைப்பகை

 தோகைப்பகை tōgaippagai, பெ. (n.)

   ஒந்தி (உரி.நி.);; chameleon, as the enemy of pea-cock.

     [தோகை + பகை. தோகை = மயில்]

தோகைப்பாகன்

 தோகைப்பாகன் tōkaippākaṉ, பெ. (n.)

   சிவ பெருமான்; Lord Sivan.

     [தோகை + பாகன். தோகை = பெண்]

தோகைமஞ்ஞை

 தோகைமஞ்ஞை tōkaimaññai, பெ. (n.)

தோகைமயில் பார்க்க;see {} துணையில் தோகை மஞ்சை.

     [தோகை → மஞ்ஞை]

மயில் → மஞ்ஞை

தோகைமயில்

தோகைமயில் tōkaimayil, பெ. (n.)

   ஆண் மயில்; male peacock.

     ‘பேடுந் தோகைமயிலும் சேரவிருந்தன’ (சீவக. 65, உரை);.

     [தோகை + மயில்]

தோகைமுகப்பூடணம்

 தோகைமுகப்பூடணம் tōgaimugappūṭaṇam, பெ. (n.)

   மஞ்சள் (தைலவ.தைல.);; turmeric, as used to beautify a woman’s face.

     [தோகை + முகம் + பூடணம். தோகை = பெண்]

தோக்கியம்

 தோக்கியம் tōkkiyam, பெ.(n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Thiruppattur Taluk.

     [தூக்கு-தோக்கு-தோக்கியம்]

 தோக்கியம் tōkkiyam, பெ.(n.)

   திருப்பத்துர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Thiruppattur Taluk.

     [தூக்கு-தோக்கு-தோக்கியம்]

 தோக்கியம் tōkkiyam, பெ. (n.)

தோக்குமம் (யாழ்.அக.); பார்க்க;see {}.

தோக்கு

தோக்கு1 tōkku, பெ. (n.)

   பறவை சுடும் துமுக்கியில் கெட்டித்த சிறு மாழைக்குண்டு (நெல்லை);; thick bullets used to shoot birds.

 தோக்கு2 tōkku, பெ. (n.)

   கைத்துமுக்கி; hand- gun.

     [துமுக்கி → துமுக்கு → தோக்கு]

தோக்குமம்

தோக்குமம் tōkkumam, பெ. (n.)

   1. காதுக் குறும்பி; ear wax.

   2. முகில்; cloud.

தோக்குளம்

 தோக்குளம் tōkkuḷam, பெ. (n.)

   பருத்திச் செடி வகை (மலை.);; common cotton.

தோக்கை

தோக்கை tōkkai, பெ. (n.)

   1. முன்றானை; front end of a cloth.

     “அடலெடுத்த வேற்கணார் தோக்கைபற்றி” (திவ். பெரியதி. 4.4:3);.

   2. கொய்சகம்; plaited folds of a woman’s cloth.

     “தோக்கையந் துகிலினாடன்” (சீவக.2477);.

   3. சீலை (அகநி.);; cloth, garment.

   4. மேற்போர்வை (சது.);; upper covering, scarf, cloak.

     [தொகு → தோகு → தோகை → தோக்கை]

தோசக்காய்

தோசக்காய் tōcakkāy, பெ. (n.)

   1. வெள்ளரிக் காய்; common cucumber.

   2. கக்கரிக்காய்; field cucumber (சா.அக.);.

தோசம்

தோசம் tōcam, பெ. (n.)

   1. குற்றம்; fault.

   2. பாவம்; sir, guilt.

   3. குறை; defect, lack.

   4. நாடிக்கொதிப்பு; disorder of the humours of the body.

   5. கண்ணேறு முதலானவற்றால்

   வருந்தீங்கு; illness believed to be due to the evil eye.

     [Skt. {} → த். தோசம்]

தோசி

 தோசி tōci, பெ.(n.)

   நாட்டுப்புறக் கதைப் பாடல்களில், மலட்டுத்தன்மை உடைய பெண்டிரைக் குறிக்குஞ்சொல்; word referring to a barren woman in folklore.

     [துச்சம்-தோக்கம்-தோச்சி-தோசி]

 தோசி tōci, பெ.(n.)

   நாட்டுப்புறக் கதைப் பாடல்களில், மலட்டுத்தன்மை உடைய பெண்டிரைக் குறிக்குஞ்சொல்; word referring to a barren woman in folklore.

     [துச்சம்-தோக்கம்-தோச்சி-தோசி]

 தோசி tōci, பெ. (n.)

   நற்பேறு இல்லாதவன்-ள்; unclucky person.

தோசிப் பெண்ணுக்கேற்ற சொறியாங் கொள்ளி மாப்பிள்ளை (பழ.);.

தோசிக்கொக்கு

தோசிக்கொக்கு tōcikkokku, பெ. (n.)

   கொக்குவகை; green heron.

   2. தோசி பார்க்க;see {}.

     [தோசி + கொக்கு]

தோசை

 தோசை tōcai, பெ. (n.)

   அரிசிமாவில் செய்யும் ஒருவகைச் சிற்றுண்டி; rice-cake tiffin.

     “வடைசுகியன் றோசை வகைகள்” (விறலிவிடு.);.

     [தோய்த்து செய்வது தோசை. (தோய் → தோயை → தோசை);]

தோசைகுத்து-தல்

தோசைகுத்து-தல் dōcaiguddudal,    4 செ.கு.வி. (v.i.)

தோசைவார்-த்தல் பார்க்க;see {}.

     [ஊற்று → ஊத்து (கொ.வ.); தோசை + குத்து (இ.வ.);]

தோசைக்கல்

 தோசைக்கல் tōcaikkal, பெ. (n.)

   அடுப்பில் வைத்துத் தோசை கடுங் கலம்; griddle, pan for baking {}, usually of iron.

     [தோசை + கல்]

தோசைக்காய்

 தோசைக்காய் tōcaikkāy, பெ. (n.)

   வெள்ளரி வகை (இ.வ.);; melon.

தோசைச்சட்டுவம்

 தோசைச்சட்டுவம் tōcaiccaṭṭuvam, பெ. (n.)

தோசைத்திருப்பி பார்க்க;see {}.

தோசைச்சுடு-தல்

தோசைச்சுடு-தல் dōcaiccuḍudal,    20 செ.கு.வி. (v.i.)

தோசைவார்-த்தல் பார்க்க;see {}.

     [தோசை + சுடு-,]

தோசைத்திருப்பி

 தோசைத்திருப்பி tōcaittiruppi, பெ. (n.)

   கல்லில் வார்க்குத் தோசையைத் திருப்பிடவு மெடுக்கவும் உதவுங் கருவி; a kind of spit used to turn {} from one side to another and remove it from the griddle.

மறுவ. தோசைச் சட்டுவம்

     [தோசை + திருப்பி]

தோசைவார்-த்தல்

தோசைவார்-த்தல் tōcaivārttal,    4 செ.கு.வி. (v.i.)

   தோசை சுடுதல்; to bake rice-cakes.

     [தோசை + வார்-,]

தோஞ்சல்

 தோஞ்சல் tōñjal, பெ. (n.)

   குடலில் தொங்கும் ஒரு சவ்வு; a membraneous expansion which floats upon the intestines.

     [தொங்கல் → தொஞ்சல் → தோஞ்சல்]

தோஞ்சை

 தோஞ்சை tōñjai, பெ. (n.)

தோஞ்சல் பார்க்க;sec {} (சா.அக.);.

     [தோஞ்சல் → தோஞ்சை]

தோஞ்சைப்பெருங்குடல்

 தோஞ்சைப்பெருங்குடல் tōñjaipperuṅguḍal, பெ. (n.)

   பெருங்குடல் நடுவிலிருக்கும் நரம்புக் கூட்டம்; net work of nerves in the middle of the colon.

     [தோஞ்ஞை + பெருங்குடல்]

தோடகச்சிரங்கு

 தோடகச்சிரங்கு tōṭagacciraṅgu, பெ. (n.)

தோட்டுச்சிரங்கு (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [தோடகம் + சிரங்கு]

தோடகம்

தோடகம் tōṭagam, பெ. (n.)

   1. தாமரை (மலை);; lotus.

   2. கொப்புளம் (யாழ்.அக.);; pustule, blister.

தோடங்காய்

 தோடங்காய் tōṭaṅgāy, பெ. (n.)

   தோடை மரத்தின் காய்; citrus fruit (செ.அக.);.

     [தோடை + காய்]

தோடஞ்சிரங்கு

 தோடஞ்சிரங்கு tōṭañjiraṅgu, பெ. (n.)

தோட்டுச்சிரங்கு (யாழ்.அக.); பார்க்க;see {} (செ.அக.);.

தோடமூர்ச்சிதம்

தோடமூர்ச்சிதம் dōṭamūrccidam, பெ. (n.)

   பசுமைநிறங் காட்டும் மரகதக் குற்ற வகை (திருவிளை.மாணிக்.68);; a flaw in emerald giving the colour of grass.

தோடம்

தோடம் tōṭam, பெ. (n.)

தோசம் பார்க்க;see see {}.

     “ஐம் பூதத்தாலே யலக்கழிந்த தோடமற”. (தாயு.எந்நாட்தத்துவ.1);.

தோடயம்

தோடயம் tōṭayam, பெ. (n.)

   நாடகத்தின் முன்மொழிப்பாட்டு; song at the beginning of a drama invoking the aid of the gods.

     “தோடயஞ் சொல்வேனே” (இராமநா. பாலகா. 1);.

தோடர்

 தோடர் tōṭar, பெ. (n.)

தொதவர் பார்க்க;see {}.

     [தொழு → தொழுவர் → தொதுவர் → தோடர்]

தோடர்மால்

 தோடர்மால் tōṭarmāl, பெ. (n.)

தொதவர் பார்க்க;see todavar.

தோடலேசம்

தோடலேசம் tōṭalēcam, பெ. (n.)

   தாமரை யிலை நிறங் காட்டும் மரகதக் குற்றவகை (திருவிளை.மாணிக்.68);; a flaw in emerald giving the colour of lotus leaf.

     [Skt. {} → த. தோடலேசம்]

தோடா

தோடா tōṭā, பெ. (n.)

   1. கையணி வகை; an armlet.

   2. கல்வித் திறமைக்குப் பரிசிலாகப் பெறும் பொற்கங்கணம்; gold bracelet, as a reward of merit.

தோடாப்போடு-தல்

தோடாப்போடு-தல் dōṭāppōṭudal,    20 செ.குன்றாவி. (v.t.)

   புலவர் முதலியவர்க்கு அவர் திறமையறிந்து பொற்கங்கணம் பூட்டுதல்; to present {}, as to scholars in recognition of their merit (செ.அக.);.

     [தோடா + போடு. தோடா = பொற்கங்கணம்]

தோடாழ்குளம்

தோடாழ்குளம் tōṭāḻkuḷam, பெ. (n.)

   கையைக் கூப்பி மூழ்கி நீர்நிலை காட்டுங்காலத்துக் கையமிழக் கூடிய ஆழமுள்ள குளம்; a tank deep enough to immerse a person standing with outstretched hands.

     “தோடாழ் குளத்த கோடுகாத் திருக்கும்” (பெரும்பாண். 273);.

     [தோடு + ஆழ் + குளம்]

தோடி

தோடி tōṭi, பெ. (n.)

   ஒரு பண் (சிலப். 8: 35, உரை);; a specific melody type.

தோடு

தோடு1 tōṭu, பெ. (n.)

   1. ஓலை; palm leaf.

     ‘வண்டோட்டுத் தெங்கின்’ (பெரும்பாண். 353);.

   2. காதோலைச் சுருள் (வின்.);;{}

 roll worn in the perforation of the ear.

   3. காதணி; ear jewel.

     “வெள்ளி வெண்டோட்டு” (மணிமே. 3:118);.

   4. பூவிதழ்; flower petal.

     “தோடேறு மலர்க் கடுக்கை” (தேவா. 885, 4);

   5. பூ; flower.

     “தோட்டார்

கதுப்பினா டோள்” (குறள், 11௦5);.

   6. கதிர்த்தாள் (அகநா.13,18,உரை);; sheath of grain.

   7. பழத்தினோடு (வின்);; shell of a fruit, as of a wood-apple.

   8. தொகுதி (திவா.);; collection, assemblage, crowd, cluster, bunch.

     “தோடு கொண் முரசுங் கிழிந்தன கண்ணே” (புறநா.238);.

   9. கறிக்காக அரியப்பட்ட காயின் வட்டப் பகுதி (யாழ்ப்.);; round slice of fruits used for curry.

   10. வட்டத்திரணை (யாழ்ப்.);; round moulding.

     [தொள் → தோள் → தோடு]

 தோடு2 tōṭu, பெ. (n.)

   தாழை; fragrant screw pine.

     [தொள் → தோள் → தோடு]

 தோடு3 tōṭu, பெ. (n.)

   1. தோல்; skin.

தோட்டை நீ பூணியோ (நீலகேசி, 273);.

   2. இலை (புறநா. 120);; leaf.

     [தொள் → தோள் → தோடு]

தோடுமொக்கு

 தோடுமொக்கு tōṭumokku, பெ. (n.)

   மராட்டிய மொக்கு; Marattiya buds (சா.அக.);.

     [தோடு + மொக்கு]

தோடுவாய்ப்பிலை

 தோடுவாய்ப்பிலை tōṭuvāyppilai, பெ.(n.)

   வள்ளைக் கொடிமாலை; leaf of creeping bindiweed (சா.அக.);.

தோடை

தோடை1 tōṭai, பெ. (n.)

   முத்துக் குளியலில் ஒரு முழுக்கிற் கிடைக்கும் சிப்பிகள் (வின்.);; produce of a single dive at a pearl-fishery.

 தோடை2 tōṭai, பெ. (n.)

   ஒரு மருந்துச் செடி, ஆடாதோடை (மூஅ.);; Malabar nut tree.

 தோடை3 tōṭai, பெ.(n.)

   1. கிச்சிலி வகை; different kinds of citrus, as lemons, citrons, oranges.

 தோடை4 tōṭai, பெ. (n.)

   சங்கு குளிப்பவர் களுக்குத் துணையாயிருப்பவர் (நெல்லை. மீனவ);; one who helps the pearl-fishers.

தோடையன்

தோடையன் tōṭaiyaṉ, பெ. (n.)

தோடை2 பார்க்க;see {}.

தோடையம்

 தோடையம் tōṭaiyam, பெ. (n.)

தோடயம் பார்க்க;see {}.

தோட்கட்டு

தோட்கட்டு tōṭkaṭṭu, பெ. (n.)

   1. தோட்சந்தி; shoulder-joint.

     ‘தோட்கட்டும் குடமுழாவை யொக்கும் தோள்களும் ஐராவதத்தின் கையை யொக்கும்’ (சீவக. 1461, உரை);.

   2. தோள்; shoulder.

     [தோள் + கட்டு]

தோட்காப்பு

 தோட்காப்பு tōṭkāppu, பெ.(n.)

   தோள் வளை; armlet.

     [தோள் + காப்பு]

தோட்கோப்பு

தோட்கோப்பு tōṭāppu, பெ. (n.)

   கட்டுச் சோறு; boiled rice tied up for a journey, as slung over the shoulder in walking.

     “தோட்கோப்புக் காலத்தாற் கொண்டு ய்ம்மின்” (நாலடி.2௦);.

     [தோள் + கோப்பு]

தோட்சுமை

தோட்சுமை tōṭcumai, பெ. (n.)

   1. தோளிற் றாங்கப்படும் சுமை; burden carried on shoulder.

   2. காவடி (யாழ்.அக.); பார்க்க;see {}.

   3. மூட்டை (இ.வ.);; pack, bundle.

     [தோள் + சுமை]

தோட்சேலை

 தோட்சேலை tōṭcēlai, பெ. (n.)

தோள்சேலை பார்க்க;see {}.

தோட்சேலைப்போராட்டம்

 தோட்சேலைப்போராட்டம் tōṭcēlaippōrāṭṭam, பெ. (n.)

தோள்சேலைப்போராட்டம் பார்க்க;see {}.

தோட்டக்கள்ளன்

 தோட்டக்கள்ளன் tōṭṭakkaḷḷaṉ, பெ. (n.)

   தோட்டப்பயிரை அழிக்கும் பறவை வகை; a bird destructive to garden-plants.

     [தோட்டம் + கள்ளன்]

தோட்டக்காரன்

தோட்டக்காரன் tōṭṭakkāraṉ, பெ. (n.)

   1. தோட்ட வேலை செய்பவன்; gardener, husbandman.

தோட்டக்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு (பழ.);.

   2. தோட்டத்தின் சொந்தக்காரன்; proprietor of a garden.

   3. தோட்டத்தின் காவற்காரன்; watchman of a garden.

     [தோட்டம் + காரன். ‘காரன்’ – பெயரீறு]

தோட்டக்கால்

 தோட்டக்கால் tōṭṭakkāl, பெ. (n.)

   கிணற்றுப் பாய்ச்சலுள்ள கொல்லை நிலம் (வின்.);; garden lands watered by means of a well and rendered fit for the growth of vegetables, tobacco, fruit- tree, crops of grain.

     [தோட்டம் + கால்]

தோட்டக்கீரை

 தோட்டக்கீரை tōṭṭakārai, பெ. (n.)

   அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கிரை முதலிய தோட்டத்திற் பயிராகும் கீரை வகைகள்; garden greens or spinach cultivated in garden and fields especially those belonging to amaranthus family (சா.அக.);.

     [தோட்டம் + கீரை]

தோட்டக்குடிசை

 தோட்டக்குடிசை tōḍḍakkuḍisai, பெ. (n.)

   கொடிவீடு, வேனிற் கொட்டகை; summer- house.

     [தோட்டம் + குடிசை]

தோட்டக்குழி

 தோட்டக்குழி tōṭṭakkuḻi, பெ. (n.)

   கொல்லைக் கொட்டாரத்தில் அவரை, புடலை போடும் குழி; pit at the backyard to sow, beans and snake guard.

     [தோட்டம் + குழி]

தோட்டக்கூறு

தோட்டக்கூறு tōṭṭakāṟu, பெ. (n.)

   1. மரங்கள் வளர்ப்பதற்குத் தகுதியான நிலப்பகுதி; land fit for growing trees.

   2. மா, பலா, வாழை முதலிய பயன்தரு மரங்கள் வளர்க்கப்பட்ட தோட்டத்தின் ஒரு பகுதி; a part of a garden where, mango, jack and banana trees are grown (கல்.அக.);.

     [தோட்டம் + கூறு]

தோட்டச்சம்பா

 தோட்டச்சம்பா tōṭṭaccambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை (இவ.);; a kind of reddish paddy (செஅக.);.

     [தோட்டம் + சம்பா]

தோட்டத்துமுட்பாறை

தோட்டத்துமுட்பாறை tōṭṭattumuṭpāṟai, பெ. (n.)

   கடலடிப் பாறை ஒன்றின் பெயர்; name of a rock beneath the sea.

     “நெட்டுக் குப்பத்தின் நேர் கிழக்கே 60 பாகத் தொலைவாய் காணத்தரும் கடலடிப் பாறை (மீனவ.);

தோட்டந்துரவு

 தோட்டந்துரவு tōṭṭanduravu, பெ. (n.)

   தோட்டமும் பாசனத்துக்குதவும் பெருங் கிணறும்; land property and large well for irrigation purpose.

அவர் தோட்டந்துரவு உடையவர்.

     [தோட்டம் + துரவு]

தோட்டந்தூரம்

 தோட்டந்தூரம் tōṭṭandūram, பெ. (n.)

   செவிடு (இ.வ.);; deafness.

     [தோட்டம் + தூரம். தோடு → தோட்டம்]

 Skt. {} → த. தூரம்

தோட்டப்பயிர்

 தோட்டப்பயிர் tōṭṭappayir, பெ. (n.)

   காய்கறிப் பயிர்கள் (இ.வ.);; garden vegetables.

ம. தோட்டப்பயறு

     [தோட்டம் + பயிர்]

தோட்டப்பாழானநிலம்

தோட்டப்பாழானநிலம் tōṭṭappāḻāṉanilam, பெ. (n.)

   பயன்தரும் மரங்களோடு இருந்து, பின்னர்ப் பாழாகி, வறிதாகக் கிடக்கும் நிலம்; barren land where once trees grew flourisly.

     “இவ்வூர் மும்முடிச் சோழப் பெருந் தெருவில் வியாபாரி ஆச்செருமான், வயிரமேகன் தோட்டப் பாழான நிலத்தின் வடவருகேய்” (முதல் இராசராசன் கல்வெட்டு, தெ.க.தொ.3:1, கல்.15);.

     [தோட்டம் + பாழான + நிலம்]

தோட்டப்பைரி

 தோட்டப்பைரி tōṭṭappairi, பெ. (n.)

   பைரிப்புள் வகை; a peregrine falcon.

     [தோட்டம் + பைரி]

தோட்டம்

தோட்டம் tōṭṭam, பெ. (n.)

   1. ஈட்டுகை; acquiring, earning, accumulation.

   2. துருவிக் கொள்ளுகை;seeking, search, pursuit.

   3. திரட்டப்பட்ட பொருள்; acquisition;that which is earned or hoarded.

     “தேட்டற்ற தேட்டமே” (தாயுதேசோ 5);.

   4. கவலை; anxiety, solicitude.

     ‘அவனுக்குப் பிள்ளைமேல் வெகு தேட்டம்’.

   5. விருப்பம்; earnest desire, appetite, longing.

     “தேட்டந்தான் வாளெயிற்றிற்றின்னவோ” (கம்பரா. குர்ப். 121);.

ம. தேட்டம்

     [தேடு → தேட்டு → தேட்டம்]

 தோட்டம் tōṭṭam, பெ. (n.)

   1. வளர்ப்புச் செடிகளின் தொகுதி; garden, orchard, plantation.

     “வயலுந் தோட்டமும்” (பெருங். உஞ்சைக். 39, 63);.

   2. சோலை (பிங்.);; grove.

தோட்டம் நிலைத்தல்லவோ தென்னம்பிள்ளை வைக்கவேணும் (பழ.);.

   3. வீட்டுக் கொல்லை (இ.வ.);; back yard, enclosure.

தோட்டத்தில் பழமிருக்கத் தூரப்போவானேன் (பழ.);.

   ம. தோட்டம்;   க. தோட, தோண்ட;   தெ., பட., து., குட. தோட;   கோத.தோட்டம்;   துட. த்வோடம்;   கூ டுட;   குவி. தொந்த;துட. தோண்ட

     [துள் → தொள் → தோள் → தோண்டு → தோடு → தோட்டம்]

தோட்டல்

தோட்டல் tōṭṭal, பெ. (n.)

   1. துளைத்தல்; to drill.

     “கேள்வியாற் றோட்கப் படாத செவி” (குறள், 418);.

   2. தோண்டுதல்; to dig.

     “தெவ்வேந்த ருடறோட்ட நெடுவேலாய்” (கம்பரா. குலமுறை. 8);.

     [தொள் → தோள் → தோட்டல்]

தோட்டழுத்தமானமாடு

 தோட்டழுத்தமானமாடு tōṭṭaḻuttamāṉamāṭu, பெ. (n.)

   மெல்லிய தோலையும் மினு மினுப்பான மயிரையும் கொண்ட அழகான மாடு (நெல்லை);; cow which has silky skin and hair.

     [தோல் + அழுத்தமான மாடு. அழுத்தம் = நயம். ஒ.நோ. அழுத்தமான சேவை = நயமான சேலை]

தோட்டவாரியம்

தோட்டவாரியம் tōṭṭavāriyam, பெ. (n.)

   தோட்டக் கண்காணிப்பு; supervision of gardern (T.A.S.ii, 78);.

     [தோட்டம் + வாரியம்]

தோட்டா

 தோட்டா tōṭṭā, பெ. (n.)

   கோலா மீன் (நெல்லை. மீனவ.);; garfish, garpike.

 தோட்டா tōṭṭā, பெ. (n.)

   வெடிமருந்துச் சுருள்; cartridge, wadding.

     [U. {} → த. தோட்டா]

தோட்டாளம்

 தோட்டாளம் tōṭṭāḷam, பெ.(n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [தோடு+ஆளம்]

 தோட்டாளம் tōṭṭāḷam, பெ.(n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [தோடு+ஆளம்]

தோட்டி

தோட்டி1 tōṭṭi, பெ. (n.)

   1. ஆணை; authority.

     “எருமையிருந் தோட்டி” (பரிபா. 8:36);.

   2. காவல்; watch, guard.

     “உடன்றோர் மன்னெயிறோட்டி வையா” (பதிற்றுப். 25: 5);.

   3. கதவு; door.

     “நாடுடை நல்லெயிலணங் குடைத் தோட்டி” (மதுரைக். 693);.

   4. மனைவாயில் (பிங்.);; gateway, gate.

   5. சூழகழிருக்கை (சது.);; town surrounded with a moat.

   6. கட்டழகு (திவா);; exquisite beauty.

     “இம்பரினில்லாத் தோட்டியிரதியை” (விநாயகபு. 44:19);.

   7. செங்காந்தள் (மலை.);; Malabar glory lily.

   8. நெல்லி (மலை.);; emblic myrobalan.

 தோட்டி2 tōṭṭi, பெ.(n.)

   1. துறட்டி; elephant hook or goad.

     “யானைமே லிருந்தோன் றோட்டிக் கயலொன் றீயாது” (மணிமே. 27:4);.

   2. கொக்கி (வின்.);; hook, clasp.

   3. பகைவரை வருத்த நிலத்துப் பதிக்கப்படும் கூரிய படைக்கலன்; sharp weapon planted in the ground to keep off enemies.

     ‘தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடு’ (தொல். பொருள்.65, உரை);.

   ம. தோட்டி;   க. தோடி, லோடி;   தெ. தோடி;   து. தோண்டி;   பர். டோடன்;   குரு. டோடோ;   த. தோட்டி;வ. த்ரோட்டி, த்ரோத்ர, தோத்ர

     [துறடு → துறட்டி → தோட்டி]

 தோட்டி3 tōṭṭi, பெ. (n.)

   1. வெட்டியான்; a menial servant of a village.

   2. குப்பை ,முதலியன வாருவோன்; scavenger.

தோட்டி போல் உழைத்துத் துரைபோல் சாப்பிட வேண்டும்.

     [தொள் → தோள் → தோண்டு → தோண்டி → தோட்டி.]

 தோட்டி4 tōṭṭi, பெ. (n.)

   ஏரி நீரை நிலங்களுக்குப் பங்கிட்டுத் தருபவர்; a village servant who, looks after the distribution of water for irrigation.

     [தோண்டி → தோட்டி.]

தோட்டிச்சி

 தோட்டிச்சி tōṭṭicci, பெ. (n.)

   தோட்டிப் பெண்; a woman of {} caste.

     [தோட்டி (ஆ.ப.); – தோட்டிச்சி (பெ.பா.);]

தோட்டிச்சிமூக்குத்தி

 தோட்டிச்சிமூக்குத்தி tōṭṭiccimūkkutti, பெ. (n.)

மலைகளா பார்க்க;see {}.

     [தோட்டிச்சி + மூக்குத்தி]

தோட்டிடைகொள்(ளு)-தல்

தோட்டிடைகொள்(ளு)-தல் dōḍḍiḍaigoḷḷudal,    12 செ.கு.வி. (v.i.)

   எதிர்த்து நிற்றற் குறியாகத் தோள் தட்டுதல்; to strike the shoulder, as a combatant in challenging.

     “அல்லாக்காற் றோப்புடைக் கொள்ளா வெழும் (நாலடி, 312);.

     [தோள் + புடை + கொள்ளு-,]

தோட்டிப்பறையன்

 தோட்டிப்பறையன் tōṭṭippaṟaiyaṉ, பெ. (n.)

   வெட்டியான்; a division of the {} caste who act on village scavengers or messengers.

     [தோட்டி + பறையன்]

தோட்டிமை

தோட்டிமை1 tōṭṭimai, பெ. (n.)

   வெட்டியான் வேலை; occupation of a village messenger or scavenger.

     [தோட்டி → தோட்டிமை]

 தோட்டிமை2 tōṭṭimai, பெ. (n.)

   ஒற்றுமை (சூடா);; symmetry, harmony.

     [தோள் → தோளி →- தோளிமை → தோட்டிமை]

தோட்டுகாரிக் கதைப்பாடல்

 தோட்டுகாரிக் கதைப்பாடல் tōṭṭukārikkataippāṭal, பெ.(n.)

   வாய்மொழி இலக்கியத்தின் ஒரு வகை; a folk ballad.

     [தோடு+காரி+கதை]

 தோட்டுகாரிக் கதைப்பாடல் dōṭṭukārikkadaippāṭal, பெ.(n.)

   வாய்மொழி இலக்கியத்தின் ஒரு வகை; a folk ballad.

     [தோடு+காரி+கதை]

தோட்டுக்கணவா

 தோட்டுக்கணவா tōṭṭukkaṇavā, பெ. (n.)

   மீன் வகை; a kind of fish in kanavay species.

     [தோட்டு + கணவா]

தோட்டுக்காது

தோட்டுக்காது tōṭṭukkātu, பெ. (n.)

   ஓலைச் சுருள் முதலியன இட்ட காது; car – wearing {}.

   2. காதினடித்தண்டு; ear-lobe (செ.அக.);.

     [தோடு + காது]

தோட்டுச்சக்கரம்

 தோட்டுச்சக்கரம் tōṭṭuccakkaram, பெ. (n.)

   சக்கரவாணம்; wheel rocket.

     [தோடு + சக்கரம்]

தோட்டுச்சிரங்கு

 தோட்டுச்சிரங்கு tōṭṭucciraṅgu, பெ. (n.)

   கொப்புளச் சிரங்கு (யாழ்ப்.);; itch with large scabby ulcers (செ.அக.);.

     [தோடு + சிரங்கு – தோட் சிரங்கு → தோட்டுச்சிரங்கு]

தோட்டுப்பாய்

 தோட்டுப்பாய் tōṭṭuppāy, பெ. (n.)

   நெல் காயப்போடும் பெரிய பாய்; mat use to dry the paddy in the sun (நெல்லை.);.

தோட்டுப்பாய் முடைகிறவனுக்குத் தூங்கப் பாயில்லை (பழ.);.

     [தோடு + பாய். தோடு = ஒலை, இலை, கோரை. இதைத் தோட்டப்பாப் என்பது தஞ்சை வழக்கு]

தோட்டுப்புழுக்கொடியல்

 தோட்டுப்புழுக்கொடியல் tōḍḍuppuḻukkoḍiyal, பெ. (n.)

   பனங்கிழங்குப் புழுக்கல் (யாழ்ப்.);; palmyra roots, boild, cut in thin slices and dried in the sun.

     [தோடு + புழுக்கு + ஒடியல்]

தோட்பட்டி

 தோட்பட்டி tōṭpaṭṭi, பெ. (n.)

   உடையின் தோட்பாகம்; yoke of a garment, shoulder piece of a cloak (செ.அக.);.

     [தோள் + பட்டி]

தோட்பட்டை

 தோட்பட்டை tōṭpaṭṭai, பெ. (n.)

   தோட்புறத் தெலும்பு; shoulder blade, scapula (செ.அக.);.

     [தோள் + பட்டை]

தோட்பலகை

 தோட்பலகை tōṭpalagai, பெ. (n.)

தோட்பட்டை (இவ.); பார்க்க;see {}.

     [தோள் + பலகை]

தோட்புரவு

 தோட்புரவு tōṭpuravu, பெ. (n.)

   தோட்டமாக அமைந்த நிலத்திற்குரியதாக அரசு பெறும் வரி; tax collected by the government for the land fit to grow trees.

தோணாமுகம்

தோணாமுகம் tōṇāmugam, பெ. (n.)

   அகழி சூழ்ந்ததும் 400 சிற்றூர்களுக்குத் தலைமையானதுமான நகரம் (பிங்.);; a town surrounded with a moat, being the chief of 400 villages.

தோணி

தோணி tōṇi, பெ.(n.)

துடுப்புகளால் இயக்கப்படும் சிறு படகு,

 canoe.

     [துளை-தொளை-தோணி]

     [P]

 தோணி tōṇi, பெ.(n.)

   துடுப்புகளால் இயக்கப் படும் சிறு படகு ; canoe. [துளை-தொளை-தோணி]

     [P]

 தோணி1 tōṇi, பெ. (n.)

   1. ஓடம்; boat, dhoney.

     “புனைகலம் பெய்த தோணி” (சீவக. 967);. தோணிபோகும், துறை கிடக்கும் (பழ.);.

   2. கப்பல்; ship.

     “கடன்மண்டு தோணியில்” (புறநா. 299 : 3);.

   3. மிதவை (பிங்.);; float, raft, canoe.

   4. நீர்த் தொட்டி; water trough.

     “தாழிகடோணி கடாரங்கள்” (அரிச்.பு. விவாக. 293);.

   ம. தோணி;   க., து. தோணி;   தெ. தோனி;   கோண். தொங்கா;   கட. தொன;   த. தோணி; Pali. {};

 Sinh. {};

 Skt. {}

     [துல் → துள் → தொள் → தோள் → தோண் → தோணி. குடையப்பட்ட மரக்கலம், அதுபோற் பலகைகளாத் பொருத்திச் செய்த கலம் (தி.ம. 746);]

 தோணி2 tōṇi, பெ. (n.)

   1. மதிலுறுப்பு (பிங்.);; projections, bastons in a fortress wall.

   2. அம்பு (திவா.);; arrow.

     “தொண்டமதனைக் கொடு நிமிர்ந்த சில தோணி” (இரகு.திக்குவி. 103);

   3. சேறு (சூடா.);; mud, mire.

   4. நீர் (அக.நி.);; water.

   5. சிறு வழுதுணைச் செடி வகை(தைலவ.தைல.);; Indian nightshade.

   6. மரு தோன்றி; fragrant nail dye.

 தோணி3 tōṇi, பெ. (n.)

   ஒட்டுக் கூரையின் மீது விழும் மழைநீர் வெளியே செல்ல அமைந்த அமைப்பு; slope made on the roof of the house likes for the rain water to drain.

தோணிகாவு-தல்

தோணிகாவு-தல் dōṇikāvudal,    5 செ.கு.வி. (v.i.)

   மீன்பிடி தொழிலுக்குப் புறப்படும் பொழுது துண்டு தடிகளில் கயிற்றைக் கட்டி அதனூடே தோணி மரங்களைத் தூக்கிச் சென்று கரையோரம் வைத்தல்; to keep the small boat on the shore by tying it with the help of the rod tied with the rope while going for fishing.

     [தோணி + காவு]

தோணிக்கடமை

 தோணிக்கடமை tōṇikkaḍamai, பெ. (n.)

   தோணிக்கு வாங்கும் வரி; a tax on boats (செஅக.);.

     [தோணி + கடமை]

தோணிக்காரன்

 தோணிக்காரன் tōṇikkāraṉ, பெ. (n.)

   பட கோட்டி; boatman (செஅக);.

ம. தோணிக்காரன்

     [தோணி + காரன்]

தோணிக்குத்தகை

 தோணிக்குத்தகை tōṇigguttagai, பெ. (n.)

   தோணியைப் பயன்படுத்தற்கு மொத்தமாகப் பேசும் ஒப்பந்தம் (இ.வ.);; contract for a whole {} without reference to the number of trips or weight of cargo (செ.அக..);.

     [தோணி + குத்தகை]

தோணிதள்ளு-தல்

தோணிதள்ளு-தல் dōṇidaḷḷudal,    15 செ.கு.வி. (v.i.)

   ஓடத்தை நீரில்விடுதல் (வின்.);; to launch a boat (செஅக);.

     [தோணி + தள்ளு-,]

தோணிதாங்கு-தல்

தோணிதாங்கு-தல் dōṇidāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   படகைக் கழையாற்றள்ளுதல்; to punt a boat (செ.அக.);.

     [தோணி + தாங்கு-,]

தோணித்துறை

 தோணித்துறை tōṇittuṟai, பெ.(n.)

   ஆற்றைக் கடக்கும் படகு இருக்கும் இடம்; ferry.

     [தோணி+துறை]

 தோணித்துறை tōṇittuṟai, பெ.(n.)

   ஆற்றைக் கடக்கும் படகு இருக்கும் இடம்; ferry.

     [தோணி+துறை]

 தோணித்துறை tōṇittuṟai, பெ. (n.)

   துறைமுகம் (இவ.);; port, harbour (செ.அக.);.

     [தோணி + துறை]

தோணிபுரம்

 தோணிபுரம் tōṇiburam, பெ. (n.)

   சீகாழி (தேவா.);; Shiyali.

இவ்வூர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயர் தோணியப்பர். திருஞான சம்பந்தர் திருவருள் பெற்ற இடம். ஊழிப் பெருவெள்ளத்தில் உலகப்பந்து நீரில் மூழ்கிய ஞான்று இவ்வூர் தோணியாக நின்றதாகவும் சிவனும் சிவையும் ஆண்டிருந்து அருள் புரிந்ததாகவும் தொன்மம் கூறும்.

தோணிப்பாலம்

 தோணிப்பாலம் tōṇippālam, பெ. (n.)

   தோணி போல் அமைக்கப்படும் கற்பாலம் (இ.வ.);; Irish bridge, as scooped like a boat.

     [தோணி + பாலம்]

தோணிமீன்

 தோணிமீன் tōṇimīṉ, பெ. (n.)

   தோணி வலைப்பிற் கிடைத்த மீன் (முகவை. மீனவ.);; fish gained in boat fishing (மீனவ.);.

     [தோணி + மீன்]

தோணியப்பர்

 தோணியப்பர் tōṇiyappar, பெ. (n.)

   சீகாழி சிவத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்;{} worshipped at {}.

     [தோணி + அப்பர்]

தோணிபுரம் பார்க்க

தோணியம்

 தோணியம் tōṇiyam, பெ. (n.)

   அம்பு; arrow.

தோணியுழுந்து

 தோணியுழுந்து tōṇiyuḻundu, பெ. (n.)

   கப்பல் வழியாய் இறக்குமதியாகும் உழுந்து (இவ.);; imported black gram, as brought by boat.

     [தோணி + உழுந்து. தோணி = கப்பல்]

தோணியோடு

 தோணியோடு tōṇiyōṭu, பெ. (n.)

   கூடல் வாயோடு (இவ.);; gutter tiles.

     [தோணி + ஒடு]

தோணிவயிறு

 தோணிவயிறு tōṇivayiṟu, பெ. (n.)

   தோணியைப் போன்ற வயிறு; boat shaped abdomen (சா.அக.);.

     [தோணி + வயிறு]

தோணிவரி

 தோணிவரி tōṇivari, பெ. (n.)

   தோணியின் தலத்திலிருந்து மேல்வரும் மரப்பலகை (நெல்லை. மீனவ.);; wooden rod comes up from the bottom of a boat.

     [தோணி + வரி]

தோணிவலைப்பு

 தோணிவலைப்பு tōṇivalaippu, பெ. (n.)

   பெரியவலை வலைப்பு (முகவை. மீனவ.);; fishing with a big size net.

     [தோணி + வலைப்பு]

தோணு-தல்

தோணு-தல் dōṇudal,    5 செ.கு.வி. (v.i.)

தோன்று-தல் பார்க்க;see {}.

     “வேதை தோணாமல்” (இராமநா.பாலகா.1);.

     [தோன்று → தோணு (கொ.வ.);]

தோணை

 தோணை tōṇai, பெ. (n.)

   வெள்ளைத் தொழு நோய்; white leprosy, leucoderma.

     [தோல்நோய் → தொழுநோய் → தோனோய் → தோணை]

தோணோக்கம்

தோணோக்கம் tōṇōkkam, பெ. (n.)

   மகளிர் விளையாட்டு வகை; a game played by girls.

     “குழலினீர் தோணோக்க மாடாமோ” (திருவாச. 15, 2);.

   2. காதினடித்தண்டு; ear-lobe.

     [தோள் + நோக்கம். தோள் → தோண்]

தோண்டல்

தோண்டல் tōṇṭal, பெ. (n.)

   ஊற்று (திவ். பெரியாழ். 4-3-6);; spring.

     [துல் → துள் → தொள் → தோள் → தோண் → தோண்டு]

தோண்டவம்

 தோண்டவம் tōṇṭavam, பெ. (n.)

   பிச்சிப்பூ; large flowered jasmine. spanish jasmine (சா.அக.);.

தோண்டா

 தோண்டா tōṇṭā, பெ. (n.)

   கரைவலையிற் கட்டப் பெறும் மிதப்புக் கட்டை (மீனவ);; float of a fishing line, net, etc.

தோண்டான்

 தோண்டான் tōṇṭāṉ, பெ. (n.)

ஒநாய் (சது.);:

 wolf.

தெ. தோடேலு

தோண்டி

தோண்டி tōṇṭi, பெ.(n.)

   மண், மாழையால் செய்த குடம்; a pot designed by clay, or metal. (கொ.வ.வ.சொ.95);.

     [தோண்டு+இ]

     [P]

 தோண்டி tōṇṭi, பெ.(n.)

   மண், மாழையால் செய்த குடம்; a pot designed by clay, or metal. (கொ.வ.வ.சொ.95);.

     [தோண்டு+இ]

     [P]

 தோண்டி1 tōṇṭi, பெ. (n.)

   நீர் சேந்தும் கல வகை; pot of earth or metal, used for drawing water (செ.அக.);.

   2. சிறுகுடம்; small pot

ம. தோண்டி

     [துல் → துள் → தோள் → தோண்டு → தோண்டி.]

 தோண்டி2 tōṇṭi, பெ. (n.)

   1. சுண்டி வகை; a species of sensitive plant.

   2. கொட்டைக் கரந்தை (சங்.அக.);; globe thistle.

 தோண்டி3 tōṇṭi, பெ. (n.)

   64 சேர் கொண்ட முகத்தலளவை (இவ.);; a liquid measure of 64 seers.

தோண்டிக்கூடை

 தோண்டிக்கூடை tōṇṭikāṭai, பெ. (n.)

   வலைப்பு மீனை அள்ளுதற்குரிய கூடை (தஞ்சை.மீனவ.);; basket helps to scoop the fishes from the net.

     [தோண்டி + கூடை]

தோண்டியும்கயிறும்

 தோண்டியும்கயிறும் tōṇṭiyumkayiṟum, பெ. (n.)

   ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பவர்; good support to each others like pot and the rope.

அவர்களிருவரும் தோண்டியும் கயிறும் ஆனவர்.

     [தோண்டியும் + கயிறும்]

நீர்முகக்கத் தோண்டியும் அதிற் கட்டுங் கயிறும் இணைந்திருத்தல் போல, ஒரு வினை நிகழ ஒருவருக்கொருவர் உறுதுணையா யிருப்போர்.

தோண்டு-தல்

தோண்டு-தல் dōṇṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. அகழ்தல்; to dig, hollow, excavate.

   2. குடைதல்; to scoop out, bore.

   3. முகத்தல்; to draw or fetch water from a well.

     “நெடுங் கிணற்று வல்லூற்றுவரி தோண்டி” (பெரும்பாண்.98);.

   4. செய்தியை உசாவியறிதல்; to drawout details of.

ஏன் அச்செய்தியைத் தோண்டுகிறாய்?

   5. பண்ட மிறக்குதல்; to unload, as a ship.

     “மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்” (புறநா.3௦);.

   ம. தோண்டுக;   க., தெ. தோடு;   து. தோடுணி;   குட., கோத. தோட்;துட. த்விட்

     [துல் → துள் → தோன் → தோண்டு]

தோண்டுச்சால்

 தோண்டுச்சால் tōṇṭuccāl, பெ. (n.)

   நாற்றங்காலில் தேங்கின நீரை வடிக்கத் தோண்டும் சிறுகால் (இவ.);; a small channel to drain the excess water in a seed-bed.

     [தோண்டு + சால்]

தோண்ணாரு

 தோண்ணாரு tōṇṇāru, பெ. (n.)

   வழக்காடு; to dispute (நெல்லை);.

தோண்மாற்று

தோண்மாற்று1 dōṇmāṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   சுமையை ஒரு தோளினின்று மற்றொரு தோளுக்கு மாற்றிக் கொள்ளுதல்; to change from one shoulder to another shoulder, as a load.

     [தோன் + மாற்று]

 தோண்மாற்று2 dōṇmāṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   மணப்பெண்ணும் மாப்பிள்ளையும், தத்தம் தாய் மாமன் தோளேறிக் கொண்டு மாலை மாற்றிக் கொள்ளும் மணவினை; to exchange garlands, as bridegroom and bride.

     [தோள் + மாற்று-,]

தோண்முதல்

தோண்முதல் dōṇmudal, பெ. (n.)

தோண்மை பார்க்க;see {}.

     “மாண்முடி மன்னன் றோண்முதல் வினவி” (பெருங்.இலாவாண.9, 30);.

     [தோள் + முதல்]

தோண்மேல்

 தோண்மேல் tōṇmēl, பெ. (n.)

   பிடரி (திவா.);; nape of the neck.

     [தோள் + மேல்]

தோண்மை

தோண்மை tōṇmai, பெ. (n.)

   தோள்வலிமை; strength of one’s arm.

     “தோண்மையா லமர் தொலைத்து” (பாரத. படை 1௦);.

     [தோள் + வலிமை → தோண்மை]

தோதகத்தி

தோதகத்தி1 tōtagatti, பெ. (n.)

   1. நூக்கமரம் அல்லது ஈட்டி மரம்; Indian rosewood.

   2. புங்கு; Indian beech (சா.அக.);.

 தோதகத்தி2 tōtagatti, பெ. (n.)

   1. வஞ்சகி; deceitful woman.

   2. கற்பொழுக்கமற்றவன் (யாழ்.அக.);; immodest woman (செ.அக.);.

தோதகன்

தோதகன் tōtagaṉ, பெ. (n.)

   1. ஒழுக்க மற்றவன்; quarrelsome, immodest person.

   2. வஞ்சகன்; deceiver.

   3. கடுகடுப்புள்ளவன்; unhappy, vexed person (செ.அக.);.

தோதகமாடு-தல்

தோதகமாடு-தல் dōdagamāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. இடையூறு பண்ணுதல்; to tease, annoy, bother.

   2. ஒழுக்கமற்றிருத்தல்; to be immodest, as a woman (சா.அக.);.

     [தோதகம் + ஆடு-,]

தோதகம்

தோதகம் tōtagam, பெ. (n.)

   1. வருத்தம்; vexation, pain.

     “தோதகமாக வெங்கும்” (சீவக. 463);.

   2. வஞ்சகம்; guilt, fraud, deceit.

     “தோதகத்துட னென்னையோ சகுனிதன் சூதினுக் கெதிரென்றான்” (பாரத. சூது. 6);.

   3. சாலவித்தை; sleight of hand, jugglery.

     “தோதகம் பலகாட்டி” (திருவாலவா. 17);.

   4. கற்பொழுக்கமின்மை; immodesty, lewdness (செ.அக.);.

தோதகி

 தோதகி tōtagi, பெ. (n.)

   சவுட்டு மண்; fuller’s earth (சா.அக.);.

தோதனா

 தோதனா tōtaṉā, பெ. (n.)

   சிறுகீரை; field spinach (சா.அக.);.

தோதம்

 தோதம் tōtam, பெ. (n.)

   ஆவின் கன்று; cow calf (சாஅக);.

தோதலி-த்தல்

தோதலி-த்தல் tōtalittal,    4 செ.கு.வி. (v.i.)

   முரணுதல்; to be perverse.

     “மெத்த மெத்தத் தோதலித்துப் பேசுஞ் சுணைகெட்ட மூளி” (பஞ்ச. திருமுக. 1509);.

தோதவத்தி

தோதவத்தி tōtavatti, பெ. (n.)

   தூய ஆடை; clean clothes.

     “தோதவத்தித் தூமறையோர்” (திவ். பெரியாழ். 4, 8, 1);.

தோதானநேரம்

 தோதானநேரம் tōtāṉanēram, பெ. (n.)

   ஏந்தான நேரம்; suitable time.

     [ஏது → தோது]

தோதிகம்

 தோதிகம் tōtigam, பெ. (n.)

   பேராமுட்டி; fragrant sticky (சா.அக.);.

தோதிபேலா

 தோதிபேலா tōtipēlā, பெ. (n.)

   செடி வகை (மலை);; pimk-tinged white sticky mallow (செ.அக.);.

தோது

தோது tōtu, பெ.(n.)

   செப்பம், பொருத்தம்;ргорег. (கொ.வ.வ.சொ.);.

     [துத்து-தோது]

 தோது tōtu, பெ.(n.)

   செப்பம், பொருத்தம்; proper, (கொ.வ.வ.சொ.);. [துத்து-தோது]

 தோது tōtu, பெ. (n.)

   1. தொடர்பு; connection.

நீ சொல்வதற்குமிதற்கும் என்ன தோது?

   2. பொருந்தம்; affinity, suitability.

பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தோதில்லை.

   3. ஒப்பு; equality, similitude, paralled.

அவனுக்குத் தோது ஒருவருமில்லை

   4. போட்டி; rivalry, dispute.

அவனோடு உனக்கென்ன தோது?

   5. நலம் வாய்ப்பு; convenience.

அவரைச் சந்திக்க எப்பொழுது தோதுபடும்.

   6. விழுக்காடு (வீதம்);; established rate.

தோதுப்படி கொடுப்பேன்.

   7. வழி வகை; device, means.

அந்தச் செயல் முடிய ஒரு தோது சொல் (செஅக.);.

   க.தோது;தெ. தோது

     [தொது → தோது]

தோதுவாது

 தோதுவாது tōtuvātu, பெ. (n.)

   நேரங்காலம்; time and opportunity.

அவரிடம் தோதுவாது பார்த்துப் பேசு (நெல்லை);

     [தோது + வாது]

தோத்தாங்குழி

 தோத்தாங்குழி tōttāṅkuḻi, பெ.(n.)

   தோற்ற வெற்றுக்குழி; empty square in a play board.

     [தோற்ற+ஆம்+குழி]

 தோத்தாங்குழி tōttāṅguḻi, பெ.(n.)

   தோற்ற வெற்றுக்குழி; empty square in a play board.

     [தோற்ற+ஆம்+குழி]

தோத்தாணி தோல்பிடுங்கி

 தோத்தாணி தோல்பிடுங்கி tōttāṇitōlpiṭuṅki, பெ.(n.)

   தோற்றவர் பெயர் (குமரி);; a failure person.

     [தோற்றவன்+தோல்பிடுங்கி]

 தோத்தாணி தோல்பிடுங்கி tōttāṇitōlpiḍuṅgi, பெ.(n.)

தோற்றவர் பெயர் (குமரி);: a failure person.

     [தோற்றவன்+தோல்பிடுங்கி]

தோத்தி

 தோத்தி tōtti, பெ. (n.)

   விளையாட்டில் தோற்றவர் (நெல்லை.);; one who is defeated in a game.

மறுவ. தோற்றாங்கொள்ளி

     [தோல்வி → தோல் → தோத்தி]

தோத்திரம்

தோத்திரம் tōttiram, பெ. (n.)

   1. புகழ்ச்சி; praise, laudation, eulogy, panegyric.

   2. வணக்கமொழி, வழிபாடு; words of salutation.

     “இருக்கொடு தோத்திர யியம்பினர்” (திருவாச.20.4);.

   3. தோத்திரப் பாட்டு பார்க்க;see {}.

     [Skt. {} → த. தோத்திரம்]

தோத்திரி-த்தல்

தோத்திரி-த்தல் tōttirittal,    4 செ.குன்றாவி (v.t.)

   புகழ்தல்; to praise, extol, belaud.

     “எளிய ரேந்துயருமிறுத் தருளென்று தோத்திரித்தார்” (விநாயகபு.75.336);.

     [Skt. {} → த. தோத்திரி]

தோத்தை

 தோத்தை tōttai, பெ. (n.)

   சிறங்கையளவு; small quantity – as can be held in the hollow of the hand.

மறுவ. உள்ளங் கையளவு

   க. தோதே;தெ. தோதெமு

தோனாய்

 தோனாய் tōṉāy, பெ. (n.)

   ஒரு வகை நாய்; a kind of dog.

     [தோல் + நாய்]

தோனி

 தோனி tōṉi, பெ. (n.)

   இருகூரைகளுக்கிடையில் நீர் ஓடுமாறு தகட்டால் ஆன அமைப்பு; rain water drainer.

     [தோணி-தோனி]

 தோனி tōṉi, பெ.(n.)

இருகூரைகளுக்கிடையில் நீர் ஓடுமாறு தகட்டால் ஆன அமைப்பு: rain water drainer.

     [தோணி-தோனி]

தோனிறம்

 தோனிறம் tōṉiṟam, பெ. (n.)

   உடம்பின் தோல் நிறம்; colour of skin or body (செ.அக.);.

     [தோல் + நிறம்]

தெள

தோனை

 தோனை tōṉai, பெ. (n.)

   பாவு நூல் சுற்றும் கருவி; a device in loom.

     [தூரல்-தூனை-தோனை]

     [P]

 தோனை tōṉai, பெ.(n.)

   பாவு நூல் சுற்றும் ; a device in loom.

     [துரல்-துணை-தோனை]

     [P]

தோனைக்கம்பி

 தோனைக்கம்பி tōṉaikkampi, பெ. (n.)

   சேலை நுனியை முடியும் சன்னமான கம்பி (ம.வ.சொ.);; thin wire used to make knot at – border of a saree.

     [நுனை-துனை-தோனை+கம்பி]

 தோனைக்கம்பி tōṉaikkambi, பெ.(n.)

   சேலை நுனியை முடியும் சன்னமான கம்பி (ம.வ.சொ.);; thin wire used to make knot at – border of a saree.

     [துணை-துணை-தோனை+கம்பி]

தோனைக்குச்சி

 தோனைக்குச்சி tōṉaikkucci, பெ. (n.)

   தோனையைத் திருகுவதற்குப் பயன்படும் குச்சி; a stick used as a screw driver.

     [தோனை+குச்சி]

 தோனைக்குச்சி tōṉaikkucci, பெ.(n.)

   தோனையைத் திருகுவதற்குப் பயன்படும் குச்சி; a stick used as a screw driver.

     [தோனை+குச்சி]

தோன்றக்கொடு-த்தல்

தோன்றக்கொடு-த்தல் tōṉṟakkoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   போதுமானபடி கொடுத்தல் (வின்.);; to give sufficiently.

தோன்றல்

தோன்றல்1 tōṉṟal, பெ. (n.)

   1. தோற்றம்; appearance.

     “வரைமருளு முயர்தோன்றல் வினைநவின்ற பேர் யானை” (மதுரைக். 46);.

   2. தோன்றல் வேறுபாடு (நன். 154); பார்க்க;see {}.

   3. தலைமை; superiority, greatness.

     “பூவினுட் பிறந்த தோன்றல் புண்ணியன்” (சீவக. 316);.

   4. உயர்ச்சி; height, loftiness.

     “வரைகண்டன்ன தோன்றல்” (நெடுநல். 108);.

   5. விளக்கம்; splendour.

     “இருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொல்” (சீவக. 1261);.

   6. தலைவன்; chief, great person.

     “புலவரை

யிறந்த புகழ்சா றோன்றல்” (புறநா. 21);.

   7. முல்லை நிலத் தலைவன் (பிங்.);; chief of a jungle tract.

   8. வேந்தன் (அரசன்); (யாழ்அக);; king.

   9. மகன் (பிங்.);; son.

   10. தமையன் (பிங்.);; elder brother.

ம. தோன்னல்

     [தோன்று → தோன்றல்]

தோன்றல்விகாரம்

 தோன்றல்விகாரம் tōṉṟalvikāram, பெ. (n.)

தோன்றல்வேறுபாடு பார்க்க;see {} (செ.அக.);.

     [தோன்றல் + விகாரம்]

தோன்றல்வேறுபாடு

தோன்றல்வேறுபாடு tōṉṟalvēṟupāṭu, பெ. (n.)

   புணர்ச்சிவேறுபாடு மூன்றுள் புதிதாக எழுத்து, சாரியை முதலியன தோன்றுகை (நன். 154, உரை);; insertion of a letter, particle etc., in sandi one of three {}.

     [தோன்றல் + வேறுபாடு]

தோன்றாத்துணை

தோன்றாத்துணை tōṉṟāttuṇai, பெ. (n.)

   பிறரறியாமல் உதவுவோன்; unseen helper, as God.

     “தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங் களுக்கே” (தேவா. 1௦11, 1);.

     [தோன்று + ஆ + துணை ‘ஆ’ எதிர்மறை இடைநிலை]

தோன்றாமற்பேசு-தல்

தோன்றாமற்பேசு-தல் dōṉṟāmaṟpēcudal,    6 செ.குன்றாவி. (v.t.)

   குறிப்பிற் கூறுதல்; to speak darkly, indicate in a subtle manner (செ.அக.);.

தோன்றாவெழுவாய்

தோன்றாவெழுவாய் tōṉṟāveḻuvāy, பெ. (n.)

   வெளிப்படச் சொல்லப்படாத எழுவாய் (சீவக. 1, உரை);; subject not expressed but understood.

     [தோன்று + ஆ + எழுவாய். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை]

தோன்றி

தோன்றி1 tōṉṟi, பெ. (n.)

   1. மருதோன்றி; fragrant nail dye.

   2. ஆனைத் தோன்றி, குடைத் தோன்றி; heart leaved or dure tree.

 தோன்றி2 tōṉṟi, பெ. (n.)

   1. செங்காந்தள்; Malabar glory lily.

     “கொய்ம்மலர தோன்றிபோற் சூட்டுடைய சேவலும்” (சீவக. 73);.

   2. வெண் காந்தள் (பிங்.);; the white species of gloriosa superba.

   3. குருதி; blood.

   4. ஒரு மலை; ancient

 name of a hill.

     “வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவே” (புறநா. 399);.

தோன்றிகர்

 தோன்றிகர் tōṉṟigar, பெ. (n.)

   வணிகர் (அக.நி.);; chetti merchants.

தோன்றியடி

 தோன்றியடி tōṉṟiyaḍi, பெ. (n.)

   காந்தள் கிழங்கு; plough shaped bulbous root of November flower (சா.அக.);.

     [தோன்றி + அடி. அடி = வேர், கிழங்கு]

தோன்று

தோன்று1 dōṉṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கட்புலனாதல்; to be visible.

     “துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் வந்து தோன்ற” (கம்பரா. வாலிவதை. 74);.

   2. அறியப்படுதல்; to come to mind.

   3. உண்டாதல்; to appear, seem, spiring up, come into existence.

     “பெருஞ் செல்வந் தோன்றியக் கால்” (நாலடி, 2);.

   4. பிறத்தல்; to be born.

     “தோன்றிற் புகழொடு தோன்றுக” (குறள், 236);.

   5. நிலைகொள்ளுதல்; to exist.

     “புணரிய னிலையிடை யுணரத் தோன்றா” (தொல்.எழுத்து. 482);.

   6. வருதல்; to come, turn up.

     “நிறுதர் தோன்றியுள ரென்றால்” (கம்பரா. அகத்திய. 52);.

   7. சாரியை முதலியன சொற்களிடையே வருதல்; to be inserted, as cariyai.

     “வற்றென் சாரியை முற்றத் தொன்றும்” (தொல். எழுத்து. 189); (நன்.);.

   ம. தோன்னுக;   க., கோத. தோர்;   தெ. தோசு;   து. தோசுனி, சோ சுனி;   பட. தோரு;   துட. த்வீன், த்வீற்;   பர். தோந்த்;   கட. தோன்ட்;மா. துண்ட், தொண்ட்

     [துல் → துன்று → தோன்று. தோன்றுதல் = கண்ணொடு பொருந்துதல், தெரிதல், உருக்கொளல், உதித்தல், பிறத்தல் (மு.தா. 188);]

 தோன்று2 dōṉṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   விளங்குதல்; to be clear, explicit.

     “மதுரகவி தோன்றக் காட்டுந் தொல் வழியே நல்வழி” (ரஹஸ்ய.26);.

தோபனி

தோபனி tōpaṉi, பெ. (n.)

   1. மிகுபனி; excess dew.

   2. உறைந்த பனி; snow, ice.

மறுவ. மூடுபனி

     [தோல் + பனி]

தோப்பணம்

தோப்பணம் tōppaṇam, பெ. (n.)

தொப்பணம் பார்க்க;see {}. (திருப்புகழ். தொகுதி. 1, பக். 4, கீழ்க்குறிப்பு);.

தோப்பறா

தோப்பறா tōppaṟā, பெ. (n.)

   1. குதிரைக்குக் கொள்ளுவைக்கும் பை; leather bag used in feeding horses.

   2. நீரிறைக்கும், தோலான கருவி வகை; leather bucket for drawing water.

     [U. {} → த. தோப்புறா]

தோப்பாடி

 தோப்பாடி tōppāṭi, பெ. (n.)

   கொடியவன் (வின்.);; wicked, base person (செ.அக.);.

தெ. த்ரோபரி

தோப்பாண்டி

 தோப்பாண்டி tōppāṇṭi, பெ. (n.)

   சிவன் கோயில், மலர்ச்சோலையிற் பணி செய்யும் இரவலன் (நாஞ்.);; saiva devotee who waters the flower- garden of a temple (சா.அக.);.

மறுவ. பண்டாரம்

     [தோப்பு + ஆண்டி]

தோப்பாதாயம்

 தோப்பாதாயம் tōppātāyam, பெ. (n.)

   தோட்ட வருவாய்; income from a grove of trees (செஅக);.

     [தோப்பு + ஆதாயம்]

தோப்பாமீன்

 தோப்பாமீன் tōppāmīṉ, பெ.(n.)

   ஒரு வகை மீன்; one kind of fish.

     [தோப்பை+மீன்]

 தோப்பாமீன் tōppāmīṉ, பெ.(n.)

   ஒரு வகை மீன்; one kind of fish. [தோப்பை+மீன்]

 தோப்பாமீன் tōppāmīṉ, பெ. (n.)

   ஒரு வகைக் கடல் மீன்; a sea fish (catta calta);.

தோப்பி

தோப்பி1 tōppi, பெ. (n.)

   1. நெல்லாற் சமைத்த கள்; beer.

     “பாப்புக்கடுப்பன்ன தோப்பி பருகி” (அகநா. 348);

   2. கள் (திவா.);; toddy.

 தோப்பி2 tōppi, பெ. (n.)

   நெல்லி; Indian gooseberry (சா.அக);.

தோப்பிக்கரணம்

 தோப்பிக்கரணம் tōppikkaraṇam, பெ. (n.)

தொப்பணம் பார்க்க;see {}.

தோப்பிக்கள்

தோப்பிக்கள் tōppikkaḷ, பெ. (n.)

தோப்பி1 பார்க்க;see {}.

     “தோப்பிக்கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய” (அகநா. 35);.

     [தோப்பி + கள்]

தோப்பு

 தோப்பு tōppu, பெ. (n.)

   சோலை (பிங்.);; tope.

தனிமரம் தோப்பாகுமா (பழ.);

   ம. தோப்பு;க., தெ., து. தோபு

     [தொகுப்பு → தோப்பு]

தோப்புக்கண்டம்

 தோப்புக்கண்டம் tōppukkaṇṭam, பெ. (n.)

தொப்பணம் பார்க்க;see {} (செஅக.);.

     [தோப்பிக்கரணம் → தோப்புக்கரணம் → தோப்புகண்டம் (கொ.வ.);]

தோப்புக்கரணம்

 தோப்புக்கரணம் tōppukkaraṇam, பெ. (n.)

தொப்பணம் பார்க்க;see {}.

தோப்புக்கரணம்போடு

தோப்புக்கரணம்போடு1 dōppukkaraṇambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   பிறர் சொன்னபடி யெல்லாம் நடத்தல்; to be submissive (செ.அக);.

பொண்டாட்டி தோப்புக்கரணம் போடு என்றால் எண்ணிக் கொள் என்பான் (உ.வ.(

 தோப்புக்கரணம்போடு2 dōppukkaraṇambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

தொப்பணம்போடு-தல் பார்க்க;see {}.

மறுவ. உக்கி போடுதல்

தோப்புக்குடிகள்

தோப்புக்குடிகள் tōppugguḍigaḷ, பெ. (n.)

   வழிபாடு, திருப்படையல் ஆகியவற்றிற்குரிய காய்கள், பழங்கள் ஆகியவற்றைக் கோயிலார் விட்ட நிலத்திலேயே பயிர் செய்து, அங்கேயே குடியிருக்கும் கோயிற் பணியாளர்; people who live in the temple land, and render service by cultivating fruit trees to yield fruits for worship.

விக்கிரம சிங்கபுரத்து மேற் புறத்தில் செய்வித்த ஆளியார் திருத்தோப்பில், பலாக்காய், வாழைக்காய், பழங்கள் உள்ளிட்டவை திருமடைப் பள்ளி பண்டாரத்துக்கு முதலாக எடுக்கவும், தோப்புக் குடிகளாக ஐம்பது ஆள் முதல் கொள்ளவும்” (தெ.க.தொ.8.கல்.52);.

     [தோப்பு + குடிகள்]

தோப்புநெல்லி

தோப்புநெல்லி tōppunelli, பெ. (n.)

தோப்பி2 பார்க்க;see {} (சா.அக.);.

     [தோப்பு + நெல்லி]

தோப்புமரம்

 தோப்புமரம் tōppumaram, பெ. (n.)

   தோப்புகளில் கூட்டமாகவும், பல இன, தன் இன மரங்களுடன் வளரும் மரம்; tree which grows in the tope in single or in group with other kinds of trees.

     [தோப்பு + மரம்]

தோப்புறா

 தோப்புறா tōppuṟā, பெ. (n.)

   நிலவரி; land tax.

தோப்புறா பணத்திற்கு அண்ணே நம்மை தொந்தரை செய் தொற்றைக் காலில் நிற்க வைப்பா னண்ணே. (நாட்பா.);

தோப்பை

 தோப்பை tōppai, பெ. (n.)

   தொங்குதசை; anything which is flabby, as a leather bag (செ.அக.);.

     “விரல் தோப்பையாய்க் கழன்று போயிற்று”

     [தோற்பை → தோப்பை]

தோப்பைமுலை

 தோப்பைமுலை tōppaimulai, பெ. (n.)

   சரிந்த முலை; loose breast (சா.அக.);.

     [தோப்பை + முலை. தோப்பை = தொங்கும் தசை]

தோமக்காரன்

 தோமக்காரன் tōmakkāraṉ, பெ. (n.)

   மாப்பிள்ளைத் தோழன் (தமி.சொ.);; bridegroom’s companion.

     [தோமம் + காரன்]

தோமம்

 தோமம் tōmam, பெ. (n.)

   தடித்த நாடி; selerosis.

தோமரம்

தோமரம் tōmaram, பெ. (n.)

   1. தண்டாய்தம்; large club.

     “தோமரவலத்தர்” (பதிற்றுப். 54, 14);.

   2. கைவேல் (பிங்.);; lance, javelin, dart.

   3. வாச்சியம் (அக.நி.);; drum.

   4. இருப்பு உலக்கை; iron pestle.

தோம்

தோம் tōm, பெ. (n.)

   1. குற்றம்; fault, defect, blemish.

     “தோமறு கடிஞையும்” (சிலப். 10;98);.

   2. தீமை; moral evil, vice.

   3. துன்பம்; trouble.

     “தீச்சொல்லிறுத்தனர் தோமும்” (கல்லா. 74: 24); (செஅக.);.

தோம்பு

தோம்பு1 tōmbu, பெ. (n.)

   சிவப்பு; redness, red dye.

 தோம்பு2 tōmbu, பெ. (n.)

   ஊடும், பாவும் ஒரே நிறமுடைய வண்ண வேட்டி (லுங்கி);; tartan with the same colour warp and the woof (உழ.நெ.க.சொ);.

 தோம்பு3 tōmbu, பெ. (n.)

   நிலவிவரக் கணக்கு (வின்.);; public register of lands.

தோம்பு நூல்

 தோம்பு நூல் tōmpunūl, பெ.(n.)

   ஊடையும், பாவும் ஒரே நிறமுடைய சாரம் (லுங்கி);; chequerred cloth of men.

     [தோம்பு+நூல்]

 தோம்பு நூல் tōmbunūl, பெ.(n.)

   ஊடையும், பாவும் ஒரே நிறமுடைய சாரம் (லுங்கி);; chequerred cloth of men.

     [தோம்பு+நூல்]

தோம்புச்சீலை

 தோம்புச்சீலை tōmbuccīlai, பெ. (n.)

   சிவப்புச் சீலை; red cloth.

     [தோம்பு + சீலை]

தோயக்கல-த்தல்

தோயக்கல-த்தல் tōyakkalattal,    3 செ.குன்றாவி. (v.t.)

   நனையும்படி ஊற்றிக் கலத்தல்; to mix after fully wetting (சா.அக.);.

     [தோய்வு + கல-,]

தோயசம்

 தோயசம் tōyasam, பெ. (n.)

   தாமரை (சங். அக.);; lotus.

     [Skt. {} → த. தோயசம்]

தோயடம்

 தோயடம் tōyaḍam, பெ. (n.)

   சடாமாஞ்சி; Indian spilenand (சா.அக.);.

தோயதி

 தோயதி dōyadi, பெ. (n.)

   கடல்; sea (செ.அக.);.

தோயபாணம்

 தோயபாணம் tōyapāṇam, பெ. (n.)

பொடுதலை (தைலவ. தைல); பார்க்க;see {} (செஅக);.

தோயப்பகை

 தோயப்பகை tōyappagai, பெ. (n.)

   நீர் உடம்புக்கு ஒவ்வாமை; disagreeableness of water of a plce to one’s health due to climate difference from the native one (சா.அக.);.

தோயப்பண்ணு-தல்

தோயப்பண்ணு-தல் dōyappaṇṇudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   நீரில் மூழ்கும்படி செய்தல்; to immerse.

     [தோய் + பண்ணு-,]

தோயப்பம்

 தோயப்பம் tōyappam, பெ. (n.)

   தோசை (வின்.);; rice cake (செ.அக.);.

     [தோய் → தோயை + அப்பம்.]

தோயம்

தோயம் tōyam, பெ. (n.)

   1. நீர் (பிங்.);; water.

     “தோய மெதிர்வழங்கு கொண்மூ” (பு.வெ. 8:28);.

   2. கடல் (பிங்.);; sea.

     “தோயமுஞ் சுவறப் பொரும் வேலா” (திருப்பு. 1௦1);.

ம. தோய

     [தொள் → தோள் → தோய் → தோயம். ஒ.நோ. புள் → பொள் → பொய் → பொய்கை (மு.தா. 268);] த. தோயம் → Skt. {}

தோயல்

தோயல் tōyal, பெ. (n.)

   1. இரும்பைக் காயச்சித் தோய்த்தல்; dipping of a heated red hot iron or instrument into water.

   2. குளித்தல்; bathing commonly in cold water (சா.அக.);.

     [தோய் → தோயல்]

தோயல்வாய்த்தல்

 தோயல்வாய்த்தல் tōyalvāyttal, பெ. (n.)

   நேரம் வாய்க்கை (யாழ்ப்.);; occuring of a good opportunity.

     [தோயல் + வாய்த்தல்]

தோயாஞ்சுபத்திரம்

 தோயாஞ்சுபத்திரம் tōyāñjubattiram, பெ. (n.)

   காட்டாத்தி; holy mountain (சா.அக);.

தோயாப்பூ

 தோயாப்பூ tōyāppū, பெ. (n.)

   அகவை யடைந்தும் பூப்படையாத பெண்; woman not attained puberty though aged enough.

     [தோயா + பூ. ‘தோயா; – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்]

தோயாப்பூப்பு

 தோயாப்பூப்பு tōyāppūppu, பெ. (n.)

   பூப்படையாமை; not matured (சா.அக);.

     [தோயா + பூப்பு. ‘தோயா’ ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்]

தோய்

தோய்1 tōy, பெ. (n.)

   உவமச் சொல்; similie word.

 தோய்1 tōytal,    3 செ.கு.வி. (v.i.)

   1. முழுகுதல்; to bathe, commonly in cold water.

     “மங்கையர் தோய்தலால் (கம்பா.நீர்விளை. 19);.

   2. நனைதல்; to become wet, soaked.

     “தோயுங் கதழ் குருதி” (பு.வெ. 4:16);.

   3. நிலத்துப் படிதல் (வின்.);; to trial, as a long garment.

   4. உறைதல்; to be curdled, as milk;

 to be thickened, clotted, coagulated, as blood.

     “தோயும் வெண்டயிர்” (கம்பரா. நாட்டுப். 28);.

   5. செறிதல்; to be dense, crowded.

     “தோய்ந்த விசும் பென்னுந் தொன்னாட்டகம்” (சீவக. 29௦);.

   6. அகப்பட்டுக் கொள்ளுதல்; to commit oneself in speaking, used in the negative.

அவன் தோயாமல் பேசுகிறான்.

   ம. தோயுக;   க. தோய், துய், தொய்யு, தொய், தோ;   தெ. தோகு. தோகு;   து. தொய்புனி, தொயிபுனி, தோயிபுனி;   கோத. தோய்;துட. த்விய்

     [தொய் → தோய்]

 தோய்2 tōytal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. பொருந்துதல்; to come in contact with, reach, touch.

     “தாடோய் தடக்கை” (புறநா. 14);.

   2. அணைதல்; to unite, embrace, copulate.

     “நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர்” (குறள், 917);.

   3. முகத்தல்; take in, as water.

     “கருங்கலந் தோய்விலாக் காமர் பூந்துறை” (சீவக. 97);.

   4. கலத்தல்; to mix, blend, mingle, associate with, keep company.

     “தோய்ந்தும் பொருளனைத்துந் தோயாது” (கம்பரா. சரபங்.27);.

   5. நட்டல்; to be in friendship with.

     “தோய்ந்தாருட்டோய்ந்தா ரெனப்படுதல்” (திரிகடு. 81);.

   6. கிட்டுதல்; to approach.

     “விண்டோயு மிளை கடந்து” (புவெ. 6 : 16);.

   7. ஒத்தல்; to resemble.

விசும்புதோ யுள்ளமொடு (மலைபடு. 558);.

   8. துவைச்சலிடுதல்; to temper by dipping in water, as heated metal (சா.அக.);.

க. தோ

 தோய்3 tōyttal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. நனைத்தல்; to dip, soak.

   2. துவைச்சலிடுதல்; to temper, as iron.

     “இரும்பைக் கருமகக் கம்மியன் றோய்த்த தண்புனல்” (கம்பரா. பம்பைப். 37);.

   3. உறையச் செய்தல்; to thicken, curdle.

     “தோய்த்த தண்டர்” (திவ். பெருமாள். 2, 4);.

   4. சாய மேற்றுதல்; to dye, tinge, stain, imbue.

   5. ஆடை துவைத்தல்; to wash, cleanse.

துணி தோய்க்கிறான்.

ம. தோய்க்குக

     [துவை → தோய்]

தோய்ச்சல்

தோய்ச்சல் tōyccal, பெ. (n.)

   1. உறைகை; curdling as milk.

   2. இரும்பைத் துவைச்ச லிடுகை; tempering heated metal.

     [தோப் → தோய்ச்சல்]

தோய்தலை

 தோய்தலை tōytalai, பெ. (n.)

   பொடுதலை; creeping vervain (சா.அக.);.

தோய்ந்தார்

தோய்ந்தார் tōyndār, பெ. (n.)

   நட்பினர்; friends.

     “தோய்ந்தாருட் டோய்ந்தா ரெனப் படுதல்” (திரிகடு. 81);.

     [தோய் → தோய்த்தார்]

தோய்ந்துபோ-தல்

தோய்ந்துபோ-தல் tōyndupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   உறைந்து போகுதல்; to coagulate (சா.அக.);.

     [தோய்த்து + போ-,]

தோய்ந்தூட்டு-தல்

தோய்ந்தூட்டு-தல் dōyndūṭṭudal,    12 செ.குன்றாவி. (v.t.)

   தண்ணீர் அல்லது எண்ணெயில் சுவறும்படி அடிக்கடி நனைத்தல்; to dip frequently in water juice or oil (சா.அக.);.

     [தோய்ந்து + ஊட்டு-,]

தோய்பனி

 தோய்பனி tōypaṉi, பெ. (n.)

   மிகுபனி; heavy dew (செ.அக.);.

     [தோய் + பனி. தோய் = செறிந்த]

தோய்பிழி

 தோய்பிழி tōypiḻi, பெ. (n.)

   செறிந்த மது; rich wine.

     [தோய் + பிழி. பிழி = சாறு, நறவு, கள்]

தோய்ப்பன்

 தோய்ப்பன் tōyppaṉ, பெ. (n.)

   ஒரு வகை இனிப்புப் பணியாரம்; a kind of sweet pastry ball (செ.அக.);.

தோய்ப்பாடி

தோய்ப்பாடி tōyppāṭi, பெ. (n.)

தோப்பாடி பார்க்க;see {}.

     “தோய்ப்பாடி கூனியும்” (இராமநா.அயோத்.4);.

தெ. த்ரோபரி

     [தோப்பாடி → தோய்பாடி]

தோய்ப்பான்

 தோய்ப்பான் tōyppāṉ, பெ. (n.)

   பணியாரமா; mixed flour for making cakes (செ.அக.);.

தோய்ப்பு

 தோய்ப்பு tōyppu, பெ. (n.)

தோய்ச்சல் பார்க்க;see {} (செ.அக.);

     [தோய் → தோய்ப்பு]

தோய்வு

தோய்வு1 tōyvu, பெ. (n.)

   1. ஏற்றபடி கலத்தல்; mixing or combining in due proportions.

   2. கலப்பு; mixture, the act of mixing.

   3. எண்ணெய் தேய்த்துக் கொள்ளாது குளித்தல்; ordinary bath without anoiting oil (சாஅக);.

     [தோய் → தோய்வு]

 தோய்வு2 tōyvu, பெ. (n.)

   தோயல்; unite (கழ.தமி.அக);.

தோய்வுறு-த்தல்

தோய்வுறு-த்தல் tōyvuṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   முழுமையான, ஒரே சீரான ஊடுபரவல் ஏற்படும் வரை எஃகை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்திருத்தல்; to soake iron in a particular heat.

     [தோய் → தோய்வுறு]

தோரக்கால்

 தோரக்கால் tōrakkāl, பெ. (n.)

   வளைவைத் தாங்கும் தூண்; pillar bears the roof.

தோரண வீதி

தோரண வீதி tōraṇavīti, பெ. (n.)

   தோரணங்களால் ஒப்பனை செய்யப்பட்ட தெரு; streets decorated with festoons.

     “தோரண வீதியுந் தோமறு கோட்டியும்” (மணிமே. 1:43);.

     [தோரணம் + வீதி]

தோரணகம்பம்

தோரணகம்பம் tōraṇagambam, பெ. (n.)

   கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் ஒப்பனை வளைவைத் தாங்கி நிற்கும் கம்பம்; posts at the entrance, as of a temple surmounted by an arch.

     “தோரண கம்பத்தெஞ் ஞான்றும் வீற்றிருக்கும் பெருமானை” (தணிகைப்பு. காப்பு. 2);.

   2. தோரணக்கால், 2 பார்க்க;see {}.

     [தோரணம் + கம்பம்]

தோரணகாணிக்கை

 தோரணகாணிக்கை tōraṇakāṇikkai, பெ. (n.)

   வீதிகளில் தோரணமிட்டு, ஒப்பனை செய்தற்கு, ஊரவையார் பெறும் வரி; tax collected by the village committee for festoons of leaves, and flowers suspended across streets and entrances.

     [தோரணம் + காணிக்கை]

தோரணக்கந்து

தோரணக்கந்து tōraṇakkandu, பெ. (n.)

தோரணகம்பம் பார்க்க;see {}.

     “தோரணக் கந்தின் றாண் முதற் பொருந்தி” (பெருங்.உஞ்சைக். 47:6);.

     [தோரணம் + கந்து]

தோரணக்கல்

 தோரணக்கல் tōraṇakkal, பெ. (n.)

   நீராழமறியுங் கல் (வின்.);; stone pillar erected in a large tank to show the depth of water (செ.அக.);.

     [தோரணம் + கல்]

தோரணக்கால்

தோரணக்கால் tōraṇakkāl, பெ. (n.)

   1. தோரணகம்பம் பார்க்க;see {}.

   2. ஒப்பனைத் தொங்கல் கட்டுங்கால்; pole supporting ornamental arches of twigs or leaves.

   3. திருவாசிக்கால்; pillar of the aureola over the idol.

     “தேவரையும்… கவித்த தோரணக் காலிரண்டும்” (S.I.I.ii.179);.

     [தோரணம் + கால்]

தோரணதீபம்

 தோரணதீபம் tōraṇatīpam, பெ. (n.)

தோரணவிளக்கு பார்க்க;see {}.

தோரணன்

தோரணன் tōraṇaṉ, பெ. (n.)

   யானைப் பாகன் (நாமதீப. 167);; elephant’s driver (செ.அக.);.

தோரணப்பலகை

 தோரணப்பலகை tōraṇappalagai, பெ. (n.)

   குத்துக் கல்லில் அல்லது குத்துக் காலில் பொருத்தப்பட்டிருக்கும் மரப்பலகை; a wooden rod attached to the, up right stand of a frame.

     [தோரணம் + பலகை]

தோரணம்

தோரணம்1 tōraṇam, பெ. (n.)

   1. தெருவிற் குறுக்காகக் கட்டும் ஒப்பனைத் தொங்கல்; festoons of leaves and flowers suspended across streets and entrances an auspicious occasions.

     “புரமெங்குந் தோரணநாட்டக் கனாக்கண்டேன்” (திவ். நாய்ச். 6:1);.

   2. ஒப்பனை வளைவுள்ள வாயில்; ornamented gateway surmounted with an arch.

     “தோரணத்தி ணும்பரிருந்த தோர் நீதியானை” (கம்பரா. அட்ச. 21);.

   3. நீராட்டுமிடத்திற் கட்டும் வரம்பு; mound raised near a bathing place for a mark.

   4. துலை தாங்கி; beam of a balance (செ.அக.);.

ம.தோரணம்

     [துருவு → தூர் → தோர் → தோரணம். தூர்தல் = புகுதல், துருவுதல், குறுக்காகச் செல்லுதல்]

 தோரணம்2 tōraṇam, பெ. (n.)

   1. குரங்கு (பிங்.);; monkey.

   2. போக்குவரத்திற்குரிய வண்டி (யாழ்.அக.);; conveyance (செ.அக.);.

 தோரணம்3 tōraṇam, பெ. (n.)

   முன்காலை வைத்த கவட்டிடத்தே பின்காலை வைத்து நடக்கும் யானை நடைத்தோரணை; gait of an elephant in which it places its hind foot in the track of its forefoot.

     “முன்ன ரூன்றிய காற்குறி தன்னிற் பின்னர்ப் பதமிடுவது தோரண மென்ப” (பன்னிருபா. 276);.

தோரணரேகை

 தோரணரேகை tōraṇarēkai, பெ. (n.)

தோரணவரிகை பார்க்க;see {}.

தோரணவரிகை

 தோரணவரிகை tōraṇavarigai, பெ. (n.)

   கையிற் காணப்படுவதொரு வரைவகை; a kind of mark in the palm (செ.அக.);

     [தோரணம் + ரேகை]

தோரணவாசல்

தோரணவாசல் tōraṇavācal, பெ. (n.)

தோரணம்1, 2 பார்க்க;see {} -2.

     [தோரணம் + வாசல்]

தோரணவாயில்

தோரணவாயில் tōraṇavāyil, பெ. (n.)

தோரணம்1, 2 பார்க்க;see {}, 2.

     “கொடித் தோன்றுந் தோரணவாயில் காப்பானே” (திவ். திருப்பா. 16);.

     [தோரணம் + வாயில்]

தோரணவிளக்கு

 தோரணவிளக்கு tōraṇaviḷakku, பெ. (n.)

   தோரணமாகப் பந்தங்களைக் கட்டி திருவிழாக் காலங்களில் தூக்கிச் செல்லும் தீப்பந்தம்; rod carried overhead, supporting a row of lights to grace procession (செ.அக.);.

     [தோரணம் + விளக்கு]

தோரணி

தோரணி1 tōraṇi, பெ. (n.)

தோரணை (யாழ்.அக.); பார்க்க;see {}.

 தோரணி2 tōraṇi, பெ. (n.)

   ஒர் எடுத்துக்காட்டு வார்ப்பு; pattern.

     [தூர் → தோர் → தோரணி. தூர்தல் – புகுதல்]

முன் மாதிரியாகக் கொண்டு ஒரே மாதிரியான பொருட்களை வார்ப்படம் மூலம் செய்வதற்கான படிவம்

தோரணிக்கம்

 தோரணிக்கம் tōraṇikkam, பெ. (n.)

தோரணை பார்க்க;see {}.

தோரணிப்பட்டறை

 தோரணிப்பட்டறை tōraṇippaṭṭaṟai, பெ. (n.)

   வார்ப்படங்கள் உண்டாக்கப் பயன் படுத்துவதற்கான மரத்தோரணிகளை உருவாக்கும் பட்டறை; pattern shop.

     [தோரணி + பட்டறை]

தோரணிவார்ப்படம்

 தோரணிவார்ப்படம் tōraṇivārppaḍam, பெ. (n.)

   வார்ப்படத் தொழிலில் பல்வேறு மாதிரிகளை அல்லது உருவரைகளை உண்டாக்கப் பயன்படும் வார்ப்படம்; pattern making.

     [தோரணி + வார்ப்படம்]

தோரணை

தோரணை1 tōraṇai, பெ. (n.)

   1. துடித்தல்; palpitate.

   2. நடை; style (கழ.அக.);.

 தோரணை2 tōraṇai, பெ. (n.)

   முறை; order, arrangements, method, plan as of discourse.

அவன் பேசுகின்ற தோரணையே சரியில்லை (உ.வ.);.

     [தோர் → தோரணை = கோவை, கோவையாகச் சொல்லும் முறை]

தோரமல்லி

தோரமல்லி tōramalli, பெ. (n.)

   ஒருவகை மணி; tourmaline (திருவாலவா. 25, 22. அரும்);.

தோரம்

தோரம் tōram, பெ.(n.)

   ஒரு வகையான இரட்டைக் கை முத்திரை; double hand pose in dance.

     [துரம்-தோரம்]

 தோரம் tōram, பெ.(n.)

ஒரு வகையான

   இரட்டைக் கை முத்திரை; double hand pose in dance,

     [துரம்-தோரம்]

 தோரம் tōram, பெ. (n.)

   இரண்டு கையும் பதாகையாக்கி அகம்புறமொன்றி முன் தாழ்ந்து நிற்கும் இணைக்கை வகை (சிலப்.3: 18, உரை);; a gesture with both hands in their {} pose, in which they are stretched out and lowered a little in the front (செ.அக.);.

தோராமல்லி

 தோராமல்லி tōrāmalli, பெ. (n.)

தோரமல்லி பார்க்க;see {}.

     [தோரமல்லி → தோராமல்லி]

தோராயம்

 தோராயம் tōrāyam, பெ. (n.)

   ஏறத்தாழ; approximate, estimate, guess.

தோரயமாக இந்த நகை எவ்வளவு இருக்கும் (உவ.);.

தோராவல்லி

தோராவல்லி tōrāvalli, பெ. (n.)

தோரமல்லி பார்க்க;see {}.

கனகதோராவல்லி (திருவாலவா. 25, 22);.

     [தோரமல்லி → தோராமல்லி → தோராவல்லி]

தோராவழக்கு

தோராவழக்கு tōrāvaḻkku, பெ. (n.)

   ஒயாத வழக்கு; endless wrangle.

     “தோரா வழக்கிட்டால் வகை வாராவழக் கிடுவேன்” (தனிப்பா.1, 271:11);.

     [(தோல்வி); தோல் → தோர் + ஆ + வழக்கு. ‘ஆ’ எதிர்மறை இடைதிலை]

தோரி

 தோரி tōri, பெ.(n.)

   ஆட்டிடையளின் தலைவன்; head of the sheperds.

     [துரு-துரி-தோரி, துரு-செம்மறியாடு]

 தோரி tōri, பெ.(n.)

   ஆட்டிடையளின் தலைவன்; head of the sheperds.

     [துரு-துரி-தோரி துரு-செம்மறியாடு]

 தோரி tōri, பெ. (n.)

   சோறு (அகநி.);; boiled rice.

தோரியமகள்

தோரியமகள் tōriyamagaḷ, பெ. (n.)

   1. ஆடி முதிர்ந்த பெண்; expert dancing girl.

     “தொன்னெறி யியற்கைத்… தோரிய மகளிரும்” (சிலப். 3:134);.

   2. பின்பாட்டுப் பாடுவோர்; playback singers.

வாரம் பாடும் தோரிய மகளிரும் (சிலப். 14:15);.

     [தோரியம் + மகள்]

தோரியம்

தோரியம் tōriyam, பெ.. (n.)

   1. கூத்து; dancing.

   2. இசைக்கருவி; musical instrument (செ.அக.);.

தோரை

தோரை tōrai, பெ. (n.)

   1. ஒருவகை மலைநெல்; a kind of paddy raised in hilly tracts.

     “கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை” (மதுரைக். 287);.

   2. மூங்கிலரிசி (திவா.);; bamboo seed, as resembling rice.

   3. கைவரை (சூடா);; lines on the palm and the fingers of the hand.

   4. மயிற்பீலி விசிறி; bunch of peacock’s feathers, used as a fan.

     “கவரியினிரை தோரை” (கோவிற்பு.திருவிழா. 29);.

   5. அணிவடம்; strings of jewels.

     “பொற்றோரை மின்ன” (சீவக. 2132);.

   6. நான்கு விரற்கிடை அளவுள்ள நீட்டலளவை வகை; a standard linear measure, of four fingers, breath.

இரண்டு தோரை உசரத்து… பத்மம் (S.l.l.ii,135);.

   7. மங்கல நிறம்; pale reddish colour.

   8. செங்காய் கொண்ட பனை வகை (யாழ்ப்.);; a palmyra tree producing reddish fruit.

   9. குருதி (வின்.);; blood (செ.அக.);.

தெ. தோர

     [துவர் → தோரை]

தோரையம்

 தோரையம் tōraiyam, பெ. (n.)

   புல்லாமணக்கு; creeping castor plant.

தோர்-த்தல்

தோர்-த்தல் tōrttal,    4 செ.கு.வி. (v.i.)

தோல் பார்க்க;see {}.

     “தோராத தனிவீரன் தொழுத கோயில்” (தேசிகப் பிரபந்தம்);.

   ம. தோல்க;க. சோல்

     [தோல் (தோல்வி); → தோர்]

தோர்த்தண்டன்

 தோர்த்தண்டன் tōrttaṇṭaṉ, பெ. (n.)

   திண்டோளன் (கொண்டல்விடு);; person strong in his arm (செ.அக);.

     [தோர் + தண்டன் தோள் → தோர்]

தோர்ப்பாடி

 தோர்ப்பாடி tōrppāṭi, பெ. (n.)

   தன்மான மற்றவன் (இ.வ.);; a shameless loafer.

     [தோப்பாடி → தோர்ப்பாடி]

தோர்மூலம்

 தோர்மூலம் tōrmūlam, பெ. (n.)

   அக்குள்; arm pit (சா.அக.);.

     [தோள் + மூலம்]

தோர்வி

 தோர்வி tōrvi, பெ. (n.)

   பின்னிடல்; flinch.

     [தோல்வி → தோர்வி (கொ.வ);

தோர்வை

 தோர்வை tōrvai, பெ. (n.)

   தோல்வி (வின்.);; defeat.

     [தோல்வி → தோர்வை (கொ.வ.);]

தோறு

 தோறு tōṟu, இடை. (part.)

தோறும் பார்க்க;see {}.

குன்றுதோறாடு குமரன்.

தோறும்

தோறும் tōṟum, இடை. (part.)

   ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல்; each, every, whenever, a distributive suffix.

     “காண்டோறும் பேசுந் தோறும்” (திருவாச. 1௦, 3);.

தோற்கடகு

தோற்கடகு tōṟgaḍagu, பெ. (n.)

   தோற்கேடகம்; leather shield.

     “தான் அம்புபடில் தளராது பிறர்க்கு அரணமாகும் தோற்கடகு போன்ற பண்பு” (பதிற்றுப். 45,16, உரை);.

     [தோள் + கடகு. கிடுகு → கடுகு → கடகு]

தோற்கடி-த்தல்

தோற்கடி-த்தல் tōṟkaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தோல்வியுறச் செய்தல்; to defeat (செஅக);.

     [தோல் → தோல்வி. தோற்க + அடி-,]

தோற்கட்டடம்

 தோற்கட்டடம் tōṟkaḍḍaḍam, பெ. (n.)

   பொத்தகத்திற்குத் தோலாற் செய்த மேற்கட்டு; leather binding for books (செ.அக.);.

     [தோல் + கட்டடம். கட்டு → கட்டடம்]

தோற்கட்டு

தோற்கட்டு1 tōṟkaṭṭu, பெ. (n.)

   முன்கைத் தோற்கவசம்; armour for the fore arm; usually of leather (செ.அக.);.

     [தோள் + கட்டு]

 தோற்கட்டு2 tōṟkaṭṭu, பெ. (n.)

   வல்லமை; strength of the shoulder (சா.அக.);.

     [தோல் + கட்டு. கட்டு = இளமை, வலிமை, வல்லமை]

தோற்கருவி

தோற்கருவி tōṟkaruvi, பெ. (n.)

ஐவகை இசைக் கருவிகளுள், தோலாற் செய்யப்பட்ட இசைக் கருவிவகை (சிலப். 3:27, உரை);,

 musical instrument made of leather, as drum, tabor, one of five isai-k-karuvi (செ.அக.);.

     [தோல் + கருவி]

ஐவகை இசைக் கருவிகள்

   1. தோற்கருவி.

   2 துளைக் கருவி.

   3. நரம்புக் கருவி.

   4. கஞ்சக் கருவி.

   5. மிடற்றுக் கருவி.

தோற்கருவியாளர்

தோற்கருவியாளர்1 tōṟkaruviyāḷar, பெ. (n.)

   வாச்சியக்காரர் (பிங்.);; drummers (செ.அக.);.

     [தோல் + கருவி + ஆளர். ஆள்பவர் → ஆளர்]

 தோற்கருவியாளர்2 tōṟkaruviyāḷar, பெ. (n.)

   தோல் பொருட்களைச் செய்யும் தொழிலாளர்; one who mends and do leather works (கழ.தமி.அக.);.

     [தோல் + கருவியாளர்]

தோற்கவசம்

 தோற்கவசம் tōṟkavasam, பெ. (n.)

   தோலாலான சட்டை (வின்.);; leather jacket (செ.அக.);.

     [தோல் + கவசம்]

தோற்காது

 தோற்காது tōṟkātu, பெ. (n.)

தோற்செவி பார்க்க;see {} (செ.அக.);.

     [தோல் + காது]

தோற்காற்பறவை

 தோற்காற்பறவை tōṟkāṟpaṟavai, பெ. (n.)

தோலடிப்பறவை;see {} (செஅக);.

     [தோல் + கால் + பறவை]

தோற்கிடங்கு

 தோற்கிடங்கு tōṟkiḍaṅgu, பெ. (n.)

   தோல் பதனிடுமிடம்; tannery (செஅக);.

     [தோல் + கிடங்கு. கீழ் → கிழ → கிட → கிடங்கு]

தோற்குடைச்சல்

 தோற்குடைச்சல் tōṟkuḍaiccal, பெ. (n.)

தோள் வாதம் பார்க்க;see {} (சாஅக.);.

     [தோல் + குடைச்சல்]

தோற்குல்லாய்

 தோற்குல்லாய் tōṟkullāy, பெ. (n.)

   தோலாற் செய்த கவிப்பு வகை; a leather cap (செஅக);.

     [தோல் + குல்லாய்]

தோற்கூத்து ஓவியங்கள்

 தோற்கூத்து ஓவியங்கள் tōṟāttuōviyaṅgaḷ, பெ.(n.)

   ஒரு வகையான கைவினைக் கவின் கலை; leather puppet art.

     [தோல்+கூத்து+ஒவியங்கள்]

தோற்கைத்தளம்

தோற்கைத்தளம் tōṟkaittaḷam, பெ. (n.)

   முன்கையி லணியுந் தோற்கவசம் (சிலப். 14, 170, அரும்);; armour for the fore-arm, made of leather (செ.அக);.

     [தோல் + கை + தளம்]

தோற்கொதிப்பு

 தோற்கொதிப்பு dōṟkodippu, பெ. (n.)

   தோலுக் கடியிலுள்ள தசைக்கொதிப்பால் வரும் நோய் வகை; inflammation of the cellular tissue immediately beneath the skin (செ.அக);.

     [தோல் + கொதிப்பு]

தோற்கொம்பு

தோற்கொம்பு tōṟkombu, பெ. (n.)

   1. விலங்கின் கட்டுக்கொம்பு; movable horn fixed in the skin.

   2. கொம்பு ஆடுதலாகிய மாட்டுக் குற்றவகை (மாட்டுவா. 16);; a defect in cattle in which the horns are not firm (செ.அக.);.

ம. தோல்கொம்பு

     [தோல் + கொம்பு]

தோற்சட்டையுரித்தோன்

 தோற்சட்டையுரித்தோன் tōṟcaṭṭaiyurittōṉ, பெ. (n.)

   காயகற்பம் சாப்பிட்டு அதனால் திரை நீங்கி, அதாவது உடம்பிலுள்ள சுருங்கிய தோல் கழன்று காய சித்தியடைந்த சித்தர்களில் ஒருவன்; one of those Siddhars who rejuvenated their system and restored to youth by casting off the wrinkled skin on consuming the rejuvenation drug (சா.அக.);.

     [தோல் + சட்டை + உரித்தோன்]

தோற்சித்தை

 தோற்சித்தை tōṟcittai, பெ. (n.)

   எண்ணெய் வைக்க உதவுந் தோற்பை வகை (யாழ்.அக.);; leathern bottle or vessel for oil.

     [தோல் + சித்தை]

தோற்செருப்பு

தோற்செருப்பு tōṟceruppu, பெ. (n.)

   செருப்பு வகை; a kind of shoe.

     “தோற் செருப் பார்த்த பேரடியன்” (கம்பரா. கங்கை. 29);.

     [தோல் + செருப்பு]

தோற்செவி

தோற்செவி tōṟcevi, பெ. (n.)

   1. புறச்செவி; auricle of the ear.

     “அந்தோற் செவியிலுண் மந்திரமாக” (பெருங். உஞ்சைக். 45,47);, (சீவக. 2718, உரை, அடிக்குறிப்பு);.

   2. புறச்செவியுள்ள விலங்குகள் (வின்.);; creatures having external ears (செஅக.);.

     [தோல் + செவி]

தோற்பனாட்டு

 தோற்பனாட்டு tōṟpaṉāṭṭu, பெ. (n.)

   பனம் பழத்தின் மெல்லிய உள்ளீடு; thin layer of the juicy substance of palmyra fruit (செ.அக.);.

தோற்பரம்

தோற்பரம் tōṟparam, பெ. (n.)

   தோற்கேடகம்; buckler, leathern shield.

     “போர் மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம்’ (சீவக. 2218);.

   2. நெடுஞ் செருப்பு (வின்.);; boots.

     [தோல் + பரம்]

தோற்பறை

தோற்பறை1 tōṟpaṟai, பெ. (n.)

   தோற்கருவி வகை; durm, a musical instrument.

     [தோல் + பறை]

 தோற்பறை2 tōṟpaṟai, பெ. (n.)

   1. குதிரைக்குக் கொள் வைக்கும் பை; leather bag used in feeding horses.

   2. நீரிறைக்கும் கருவி வகை; leather bucklet for drawing water.

ம. தோல்பற

     [தோல் + பறை]

தோற்பலகை

 தோற்பலகை tōṟpalagai, பெ. (n.)

தோற்பரம் (பிங்.); பார்க்க;see {} (செ.அக.);.

     [தோல் + பலகை]

தோற்பாடி

தோற்பாடி tōṟpāṭi, பெ. (n.)

   1. விலை மாது (வின்.);; strumpet.

   2. இழிந்தோன்; mean, worthless, shameless person (செ.அக.);.

     [தோல் + பாடி]

தோற்பாய்

 தோற்பாய் tōṟpāy, பெ. (n.)

   தோலால் அமைந்த இருக்கை (தவிசு); (சூடா);; undressed skin used as a seat (செஅக.);.

     [தோல் + பாய்]

தோற்பாரை

தோற்பாரை tōṟpārai, பெ. (n.)

   1. மூன்றடி நீளம் வளரும் கடல்மீன்வகை; sea-fish, attaining 3 feet in length, as having a thick-skin.

   2. நீலங் கலந்த பச்சைநிறங் கொண்டதும் 18 விரலம் வளர்வதுமான கடல்மீன் வகை; sea-fish, greenish, shot with blue, attaining 18 inch in length (செ.அக.);.

     [தோல் + பாரை]

தோற்பாவை

தோற்பாவை tōṟpāvai, பெ. (n.)

   1. தோலாற் செய்து ஆட்டும் பாவை; leathern puppet marionette.

     “தோற்பாவைக் கூத்தும்” (சி.சி. 4, 24,நிரம்ப);.

   2. தோற்பாவைக்கூத்து (சிலப். 3, 12, உரை); பார்க்க;see {}

     [தோல் + பாவை]

தோற்பாவைக் கூத்து

 தோற்பாவைக் கூத்து tōṟpāvaikāttu, பெ. (n.)

   தோலால் செய்யப்பட்ட பாவைகளைத் திரைக்குப் பின்னிருந்து ஆட்டியசைத்து கதைகளைச் சொல்லும் கலை; puppet show.

     [தோல்+பாவை+கூற்று]

 தோற்பாவைக் கூத்து tōṟpāvaikāttu, பெ.(n.)

தோலால் செய்யப்பட்ட பாவைகளைத்

   திரைக்குப் பின்னிருந்து ஆட்டியசைத்து கதைகளைச் சொல்லும் கலை; puppet show.

     [தோல்+பாவை+கூற்று]

தோற்பாவைக்கூத்து

தோற்பாவைக்கூத்து tōṟpāvaikāttu, பெ. (n.)

   தோற்பாவையைக் கொண்டு ஆட்டுங் கூத்து; show with leathern puppets.

     “தோற்பாவைக் கூத்துந் தொல்லைமரப் பாவை யியக்கமும்” (சி.சி. 4,24);.

     [தோல் + பாவை + கூத்து]

தோற்பிரண்டல்

 தோற்பிரண்டல் tōṟpiraṇṭal, பெ. (n.)

தோல்மேலேறுதல் பார்க்க;see {}.

     [தோல் + பிரள்தல். புரள் → பிரள்]

தோற்பு

தோற்பு tōṟpu, பெ. (n.)

   தோல்வி; defeat, discomfiture, loss.

     “தோற்பு வெல்வது சொல்பவர் யார்” (உபதேசகா. சிவவிரத. 342);.

தோற்புடை

தோற்புடை1 tōṟpuḍaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மேற்றோல் போகும்படி முறத்தில் தேய்த்துப் புடைத்தல்; to winnow by fan (சாஅக.);.

     [தோல் + புடை-,]

 தோற்புடை2 tōṟpuḍaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

தோள்கொட்டு-தல் பார்க்க;see {}-

     [தோல் + புடை]

தோற்புரட்டல்

 தோற்புரட்டல் tōṟpuraṭṭal, பெ. (n.)

தோல்மேலேறுதல் பார்க்க;see {}.

தோற்புரை

தோற்புரை tōṟpurai, பெ. (n.)

   1. தோலின் துளை; pores of the skin.

   2. மேற்றோல்; cuticle.

     “தோற்புரை போமதன்றிக்கே பிராணனிலே தைப்பதுமாயிருந்தது” (ஈடு.அவ.ஜீ.);.

   3. சவ்வுள்ள உடலிடம் (யாழ்.அக.);; membrance (செ.அக.);.

     [தோல் + புரை]

தோற்புலவு

 தோற்புலவு tōṟpulavu, பெ. (n.)

   ஒரு வகைப் பிலா மரம்; lance wood (சா.அக);.

     [தோல் + புலவு. பிலா → புலா → புலாவு → புலவு]

தோற்புழு

 தோற்புழு tōṟpuḻu, பெ. (n.)

   சதையின் அடியிலுண்டாகும் கயிற்றைப் போன்ற புழு, நரம்புச் சிலந்தி; guinea worm (சாஅக.);.

     [தோல் + புழு]

தோற்பெட்டி

தோற்பெட்டி tōṟpeṭṭi, பெ. (n.)

   1. தோலாற் செய்த பேழை (வின்.);; leather bag.

   2. சாதிக் காய் மரப்பெட்டி; dealwood case covered with thick brown paper (செ.அக.);.

     [தோல் + பெட்டி]

தோற்பை

தோற்பை tōṟpai, பெ. (n.)

   1. தோலாற் செய்த பை; leathern bag.

   2. துளையுள்ள தோற் கவிப்பு (குல்லா); (தைலவ.தைல.);; perforated leathern cap.

   3. உடம்பு; body.

     “தோற்பை யுணின்று தொழிலறச் செய்தூட்டுங் கூத்தன்” (நாலடி, 26);.

     [தோல் + பை]

தோற்றக்கவி

 தோற்றக்கவி tōṟṟakkavi, பெ. (n.)

   நாடகத்திற் கட்டியங்காரன் பாடும் பாட்டு (வின்.);; verse sung announcing the appearance of a person on the stage (செ.அக.);.

     [தோற்றம் + கவி]

தோற்றத்தரு

 தோற்றத்தரு tōṟṟattaru, பெ. (n.)

   நாடக நடிகர் தோன்றும் பொழுது ஆடிப்பாடும் பாட்டு; a kind of song sung by an actor while appearing on the stage (செ.அக.);.

     [தோற்றம் + தரு]

தோற்றனம்

 தோற்றனம் tōṟṟaṉam, பெ. (n.)

   கணைக்கேடு (யாழ்.அக.);; blunted sensibility (செ.அக.);.

     [தோல் + தனம்]

தோற்றன்

 தோற்றன் tōṟṟaṉ, பெ. (n.)

   துருசு; sub acetate of copper blue vitriol (சா.அக.);.

தோற்றப்பட்டவன்

 தோற்றப்பட்டவன் tōṟṟappaṭṭavaṉ, பெ. (n.)

தோற்றமானவன் (வின்.); பார்க்க;see {} (செ.அக.);.

     [தோற்றம் + பட்டவன்]

தோற்றமறைவுக்கணக்கு

 தோற்றமறைவுக்கணக்கு tōṟṟamaṟaivukkaṇakku, பெ. (n.)

   மக்களின் பிறப்பிறப்புப் பதிவு (சனனமரணக் கணக்கு);; birth death register.

     [தோற்றம்+மறைவு+கணக்கு]

தோற்றமா-தல்

தோற்றமா-தல் tōṟṟamātal,    6 செ.கு.வி. (v.i.)

   1. காணப்படுதல்; to come into existence.

   2. அரங்கில் நாடகமாந்தர் தோன்றல்; to appear on the stage (செ.அக.);

     [தோற்றம் + ஆ-,]

தோற்றமானவன்

 தோற்றமானவன் tōṟṟamāṉavaṉ, பெ. (n.)

   பல்லோர் அறிந்தவன் (வின்.);; conspicuous, celebrated man (செ.அக.);.

     [தோற்றம் + ஆனவன்]

தோற்றம்

தோற்றம் tōṟṟam, பெ. (n.)

   1. காட்சி; appearance.

     “இலக்குவன் றோன்றிய தோற்றம்” (கம்பரா. கும்பகருண. 231);.

     “தோற்றஞ்சான் ஞாயிறு” (நாலடி, 7);.

   2. பார்வை; vision, sight, perceptibility.

என்னுடைய தோற்றத்தில் அது மரமாக உள்ளது.

   3. உயர்ச்சி; conspicuosness, prominence, distinctness in appearance.

     “நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம் மலையினும் மானப்பெரிது” (குறள், 124);.

   4. விளக்கம்; splendour, brightness.

   5. தொடக்கம்; origin, rise, beginning, source.

     “தோற்றமு நிலையுங் கேடும்” (மணிமே. 27:181);.

   6. பிறப்பு (பிங்.);; birth, avatar.

     “நாயகன் றோற்றத்தின் (கம்பரா. சிறப். 11);.

   7. வகுப்பு; class.

     “வேறுபட வந்த வுவமத் தோற்றம்” (தொல்.பொருள். 307);.

   8. படைப்பு; creation.

     “எவ்வகைப் பொருளுந்தோற்ற நிலையிறுதி” (திருக்கோ. 1, உரையகவல்);.

   9. சாயை; reflection, semblance.

அவனுக்குத் தந்தையின் தோற்றமிருக்கிறது.

   10. புகழ்; fame, reputation.

     “ஈவார்க ணென்னுண்டாந் தோற்றம் இரந்து கோள் மேவார் இலாஅக்கடை” (குறள், 1௦59);.

   11. வலிமை (பிங்.);; vigour, strength, power, force.

   12. புனைவு (வேடம்);; costume, guise.

     “வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தானறி குற்றப் படின்” (குறள், 272);.

   13. உருவம்; form.

     “நாற்றத் தோற்றச் சுவையொளி யுறலாகி நின்ற” (திவ். திருவாய். 3,6);.

   14. சொன்மாலை (பிங்.);; panegyric.

   15. உறுப்பு; member, limb, part.

     “எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம்” (தொல். பொருள். 221);.

   16. தன்மை; nature.

     “அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல” (புறநா. 31);.

   17. எண்ணம்; idea.

     “தோற்றனனேயினி யென்னுந் தோற்றத்தால்” (கம்பரா. இராவணன் வதை, 78);.

   18. உய்த்துணர்வு, ஊகம்; guess, estimate.

     “பதினைந்தாம் பக்கல் என்றொரு தோற்றம்”.

   19. நாடக முன்னிகழ்வு; entrance on the stage; debut.

   20. எழுந்தருளுகை (உதயம்);; rising, as of a heavenely body.

   21. மாயை (வின்.);; phantom, apparition;illusion.

   22. அசையும் சொத்து அசையாச் சொத்து என்ற இருவகைத் திணை (பிங்.);; phenomenon, of two classes, viz., movable and immovable properties.

   23. உயிர்த் தோன்றல்; genesis of life (செ.அக.);.

   ம. தோற்றம்;க. தோறிகெ

     [தோன்று → தோற்று → தோற்றம்]

தோற்றரவு

தோற்றரவு tōṟṟaravu, பெ. (n.)

   1. காட்சி; appearance.

   2. உருவாதல் (உற்பத்தி);; coming into existence.

     “துன்பக் கதியிற் றோற் றரவின்றி” (மணிமே. 26:56);.

   3. அறிகை (வின்.);; conspicuousness, emineance, dignity.

   4. தோற்றம் (அவதாரம்);; incarnation.

     “ஒரு தோற்றரவு தோற்றியே யாகிலும் உதவவேணும்” (ஈடு. 3, 2,5);.

   5. பொய்த் தோற்றம்; phantom, apparition spectre (செ.அக.);.

     [தோற்றம் + அரவு. ‘அரவு’ தொழிற் பெயரீறு]

தோற்றல்

தோற்றல்1 tōṟṟal, பெ. (n.)

   1. தோன்றுகை; appearance.

   2. புகழ்; praise.

   3. வலிமை; vigour, strength.

 தோற்றல்2 tōṟṟal, பெ. (n.)

   1. தோல்வி (பிங்.);; defeat.

   2. வீண் எண்ணம் (யாழ்.அக.);; vain idea (செ.அக.);.

     [தோல் → தோற்றல்]

 தோற்றல்3 tōṟṟal, பெ. (n.)

   1. புலப்படல்; being perceived by the senses.

   2. பார்வை தெளிதல்; recovering eye sight.

   3. தோன்றல் பார்க்க;see {} (சா.அக.);.

     [தோன்றல் → தோற்றல்]

தோற்றவொடுக்கம்

 தோற்றவொடுக்கம் tōṟṟavoḍukkam, பெ. (n.)

   விளைச்சல் அழிவுகள் (உற்பத்தி விநாசங்கள்);; periodical appearance, and dispapearance, creation and dissolution.

     [தோற்றம் + ஒடுக்கம்]

தோற்றாங்கிருமி

 தோற்றாங்கிருமி tōṟṟāṅgirumi, பெ. (n.)

   குருதி நரம்புகளில் உலாவும் அணுவகைப் பூச்சிகளில் ஒன்று; one of the six rudimentary or embryo form of an organism in the blood vessles (சா.அக.);.

     [தோற்றம் → தோற்றாம் + கிருமி]

தோற்றாங்கொள்ளி

 தோற்றாங்கொள்ளி tōṟṟāṅgoḷḷi, பெ. (n.)

   அடிக்கடி தோற்றோடுபவன் (உ.வ.);; one who constantly suffers defeat, as in a game (செ.அக.);.

     [தோல் → தோற்றான் + கொள்ளி. ‘கொள்ளி’ சொல்லாக்க ஈறு. ஒ.நோ. பயந்தாங்கொள்ளி]

தோற்றாணி

 தோற்றாணி tōṟṟāṇi, பெ. (n.)

தோற்றாங் கொள்ளி பார்க்க;see {} (செ.அக.);.

தோற்றானம்

தோற்றானம் tōṟṟāṉam, பெ. (n.)

   1. தோற்கலம் (யாழ்அக);; leather vessel.

   2. வெடி மருந்துப்பை (வின்.);; cartridge bag (செஅக.);.

     [தோய் + தானம்]

தோற்றான்

 தோற்றான் tōṟṟāṉ, பெ. (n.)

   சில விளையாட்டு களில் இறுதியில் யாரேனும் தோற்க நேர்ந்தால், அவருக்காக இறுதியில் தொடரும் ஆட்டத்தின் பெயர். (எ.கா.); பல்லாங்குழி, உருட்டான், அச்சுப்பூட்டு; continuing game for a defeated person.

     [தோல்-தோற்றான்]

 தோற்றான் tōṟṟāṉ, பெ.(n.)

   சில விளையாட்டு களில் இறுதியில் யாரேனும் தோற்கநேர்ந்தால், அவருக்காக இறுதியில் தொடரும் ஆட்டத்தின் பெயர். (எ.கா.); பல்லாங்குழி, உருட்டான், அச்சுப்பூட்டு; continuing game for a defeated person. [தோல்-தோற்றான்]

 தோற்றான் tōṟṟāṉ, பெ. (n.)

   மயில் துத்தம்; blue vitriol (செ.அக.);.

தோற்றாமை

 தோற்றாமை tōṟṟāmai, பெ. (n.)

   வெளிப் படாமை; not exist.

     [தோன்று → தோன்றாமை → தோற்றாமை]

தோற்று

தோற்று1 dōṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

தோன்று-தல் பார்க்க;see {}.

     “நீற்றோடு தோற்றவல்லோன் போற்றி” (திருவாச. 3, 1௦8);.

   ம. தோற்று;க. தோறிசு

     [தோன்று → தோற்று-,]

 தோற்று2 dōṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தோன்றச் செய்தல்; to cause to appear;

 to show;

 to produce.

   2. பிறப்பித்தல் (பிங்.);; to create (செஅக.);.

     [தோன்று → தோற்று-,]

 தோற்று3 tōṟṟu, பெ. (n.)

   தோன்றுகை; appearacne.

     “தோற்றவன் கேடவன்” (தேவா. 448,2);.

     [தோன்று → தோற்று]

தோற்றுன்னர்

தோற்றுன்னர் tōṟṟuṉṉar, பெ (n.)

   செம்மார் (சூடா.);; shoe makers, leather workers (செ.அக.);.

மறுவ. சக்கிலியர்

     [தோல்1 + துன்னர்]

தோற்றுருத்தி

தோற்றுருத்தி tōṟṟurutti, பெ. (n.)

   1. உலைத் துருத்தி; leather bellows.

     “நிறைந்த தோற்றுருத்தி தன்னை” (சீவக. 1585);.

   2. உடம்பு; body (செஅக.);.

     [தோல் + துருத்தி]

தோற்றுவாய்

தோற்றுவாய் tōṟṟuvāy, பெ. (n.)

   பின்வருவதை முன்னர்க்கூறும் குறிப்பு; introduction to a topic, indication.

     “அறத்தொடு நிற்பாளாக முன்றோற்றுவாய் செய்து” (திருக்கோ. 29௦);.

தோற்றுவி-த்தல்

தோற்றுவி-த்தல் tōṟṟuvittal, பி.வி. (caus.v.)

   1. கண்ணொளி உண்டாக்கல்; to make the vision clear.

   2. உண்டாக்கல்; to bring to existence.

   3. பிழைக்க வைத்தல்; to restore to life.

   4. தோன்றும்படிச் செய்தல்; to cause to арреаг (சா.அக.);.

     [தோற்று → தோற்றுவி]

தோற்றேங்காய்

 தோற்றேங்காய் tōṟṟēṅgāy, பெ. (n.)

   உரிக்காத தேங்காய்; unhusked coconut (செ.அக.);.

     [தோல் + தேங்காய்]

தோலடிப்பறவை

 தோலடிப்பறவை tōlaḍippaṟavai, பெ. (n.)

   தோலாலிணைக்கப்பட்ட காலுள்ள பறவை (இக்.வ.);; web footed bird (செஅக.);

     [தோல் + அடி + பறவை]

தோலனம்

 தோலனம் tōlaṉam, பெ. (n.)

நிறுக்கை (யாழ்.அக.);:

 weighing (செ.அக.);.

     [துலை → தோல் → தோலம் → தோலனம்]

தோலன்

 தோலன் tōlaṉ, பெ.(n.)

   ஒரு வகைமீன்; kind of fish.

     [தோல்-தோலன்]

 தோலன் tōlaṉ, பெ.(n.)

   ஒரு வகைமீன்; a kind of fish.

     [தோல்-தோலன்]

 தோலன் tōlaṉ, பெ. (n.)

   எளியவன் (வின்.);; mean, insignificant man (செ.அக);.

     [தோல் → தோலன். தோல் = மேற்றோல், மெலிது, எளிது, எளியவன்]

தோலன்செம்மீன்

 தோலன்செம்மீன் tōlaṉcemmīṉ, பெ. (n.)

   தோல் போலும் மென்மையாக இருக்கும் ஒரு சிவந்த கடல் மீன் (தஞ்சை. மீனவ.);; red fish which has soft skin.

     [தோலன் + செம்மீன்]

தோலம்

தோலம் tōlam, பெ. (n.)

   1. அசைவு; movement.

   2. ஒரு நிறை; a scale.

தோலறச்சீவல்

 தோலறச்சீவல் tōlaṟaccīval, பெ. (n.)

   மேற்றோல் முழுவதும் நீங்கும்படி கத்தியால் சீவுதல்; removing the outer skin as in the purification of dry ginger or of a fruit with a knife (சா.அக.);.

     [தோல் + அற + சீவல்]

தோலா

தோலா tōlā, பெ. (n.)

   1. கொக்குமீன்; stork pipe- long nosed fish.

   2. கோனாய்; Indian wolf.

   3. வெட்டுக்கிளி; locust.

   4. ஐந்து தோலா கொண்ட சிற்றாழாக்கு; small half ollock.

   5. 150 குன்றிமணி எடை; weight 180 grams.

   6. ஓர் உரூபா எடை; one tola weight.

   7. 3 1/3 வராகனெடை; weight consisting of 3 1/3 pagoda weight (சா.அக.);.

தோலாசை

 தோலாசை tōlācai, பெ. (n.)

   பெண் மேலிச்சை; desire or craving for woman (சா.அக.);.

     [தோல் + ஆசை. தோல் = மேற்றோல், அழகு, பெண்ணழகு]

தோலாட்டம்

தோலாட்டம் tōlāṭṭam, பெ. (n.)

   பொருட்டின்மை (யாழ்.அக.);; meanness (செஅக);.

     [தோல்3 + ஆட்டம்]

தோல் = மேற்றோல், மெலிது, எளிது.

ஆட்டம் = உவமவுருபு

எ-டு. மலையாட்டம் குவிந்திருக்கிறது.

அண் – அட்டு = நெருங்கியிருத்தல், ஒத்திருத்தல், ஒத்திருக்கும் தன்மை.

அட்டு – ஆட்டு – ஆட்டம்= போன்றிருத்தல்

தோலாண்டி

 தோலாண்டி tōlāṇṭi, பெ. (n.)

தோலன் (வின்.); பார்க்க;see {} (செஅக.);.

     [தோல் + ஆண்டி]

தோலாநாவினர்

 தோலாநாவினர் tōlānāviṉar, பெ. (n.)

   நாவன்மையுடயார்; orator, eloquent speaker, as tongue-doughty (செ.அக.);.

     [தோல் + ஆ + நாவினர். தோல் + ஆ + தோல்வியுறாத நாவினர் = சொல்வளம் உடையவர். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை]

தோலாந்திரக்கிரியை

 தோலாந்திரக்கிரியை tōlāndirakkiriyai, பெ. (n.)

தோலாந்திரங்கட்டல் பார்க்க;see {} (சா.அக);.

தோலாந்திரங்கட்டல்

 தோலாந்திரங்கட்டல் tōlāndiraṅgaṭṭal, பெ. (n.)

   கிழிக்கட்டி எரித்தல்; applying heat to the bundle, of medicine consisting of small flowers, flours, minute seeds, and other substances floating in water for the purpose of extracting the essence (சா.அக.);.

தோலாந்துருத்தி

 தோலாந்துருத்தி tōlāndurutti, பெ. (n.)

   ஒன்றுக்கும் உதவாமல் காற்றடைத்த தோல் பையாக மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவன்; useless people, who respire like a air balloon.

     [தோலா(லான); + துருத்தி]

தோலான்

 தோலான் tōlāṉ, பெ. (n.)

தோலன் (வி.); பார்க்க;see {} (செ.அக.);.

     [தோலன் → தோலான்]

தோலான்துருத்தி

 தோலான்துருத்தி tōlāṉturutti, பெ. (n.)

தோலாந்துருத்தி பார்க்க;see {}.

தோலாமை

 தோலாமை tōlāmai, பெ. (n.)

   ஈடழியாமை; keep the fitness.

     [தோல் → தோலாமை]

தோலாமொழித்தேவர்

 தோலாமொழித்தேவர் tōlāmoḻittēvar, பெ. (n.)

 the jaina author of {} (செ.அக.);.

தோலாயந்திரம்

 தோலாயந்திரம் tōlāyandiram, பெ. (n.)

   மருந்துகளின் சத்து இறங்கும்படி அவற்றை ஒரு துணியில் முடிந்து எரிக்கும் ஏனத்திற்குள் தொங்க விடும்படி அமைக்கப்பட்ட எந்திரம்; an apparatus employed for purposes of obtained the soluble consitutents of a drug by the descent or suspension of a solvent through it (சாஅக);.

தோலாயா

 தோலாயா tōlāyā, பெ. (n.)

   இலவு (மலை);; red flowered silk cotton (செ.அக.);.

தோலாள்

 தோலாள் tōlāḷ, பெ. (n.)

   பயன்பாடிலாள் (வின்.);; good-for nothing woman (செ.அக.);

     [தோல் – தோலாள். தோல் = மீந்தோல், உமி போன்று பயனற்றது. அதுபோல் பயனற்றவள். தோற்பை போல உள்ளீடற்றவன் எனினுமாம்]

தோலாவழக்கு

 தோலாவழக்கு tōlāvaḻkku, பெ. (n.)

   முடிவுறாப் பேச்சு; never-ending dispute (செஅக);.

மறுவ. தோரா வழக்கு, தீரா வழக்கு

     [தோல் + ஆ + வழக்கு]

தோலி

தோலி1 tōli, பெ. (n.)

   1. பழத்தோல்; rind, peel.

   2. மீன்வகை; a fresh water fish.

   3. தோலான் (யாழ்.அக.); பார்க்க;see {}.

     [தோல் → தோலி]

 தோலி2 tōli, பெ. (n.)

   1. அரக்கு (வின்.);; gum lac.

   2. அவுரி; indigo plant (செ.அக.);.

     [தோல் → தோலி. தோல் = மீந்தோல், மூடுவது]

தோலிகை

தோலிகை1 tōligai, பெ. (n.)

   1. காது; ear.

   2. ஒட்டிய விரல்கள்; finger united by webs or folds of skin.

 தோலிகை2 tōligai, பெ. (n.)

   1. ஊஞ்சல்; swing, cradle.

   2. காது; ear (செஅக.);.

தோலிக்கருவாடு

 தோலிக்கருவாடு tōlikkaruvāṭu, பெ. (n.)

   உலர்ந்த சிறுமீன்; dried silurus (சாஅக.);.

தோலின்றுன்னர்

தோலின்றுன்னர் tōliṉṟuṉṉar, பெ. (n.)

   தோல்வேலை செய்வோர்; leather workers.

     “துன்னகாரருந் தோலின்றுன்னரும்” (சிலப். 5:32);.

     [தோல் + இன் + துன்னர். ‘இன்’ சாரியை துல் → துன் → துன்னர்]

தோலியாய்ப்போ-தல்

தோலியாய்ப்போ-தல் tōliyāyppōtal,    8 செ.கு.வி. (v.i.)

   1. தோல் போலாதல்; to be reduced to skin and bone.

   2. இளைத்தல்; to be emaciated (சாஅக.);.

     [தோல் → தோலி + ஆய் + போ-,]

தோலிலேயூட்டு-தல்

தோலிலேயூட்டு-தல் dōlilēyūṭṭudal,    12.செ.குன்றாவி. (v.t.)

   1. தோலிற் சுத்தி வைத்தல்; to wrap in a skin as a process in absorption.

   2. தோலுக்குள் ஊசியால் குத்திப் புகும்படி செய்தல்; to inject in surgery introduction of medicine into the substance of skin, injection intra dermic injection as opposed subcutaneous injection (சா.அக);.

     [தோல் + இல் + ஊட்டு-,]

தோலுணி

 தோலுணி tōluṇi, பெ. (n.)

தோலன் (யாழ்.அக); பார்க்க;see {} (செஅக);.

தோலுண்ணி

 தோலுண்ணி tōluṇṇi, பெ.(n.)

   ஒருவகை யுண்ணி; stiutich (சாஅக);.

     [தோல் + உண்ணி]

தோலுந்துருத்தியுமாதல்

 தோலுந்துருத்தியுமாதல் tōlunduruttiyumātal, பெ. (n.)

   சதையும் எலும்புமாதல்; being reduced to skin and bone said of an emaciated person (சாஅக.);.

     [தோலும் + துருத்தியும் + ஆதல்]

தோலுரி

தோலுரி1 dōluridal,    3 செ.கு.வி. (v.i.)

   மேற்றோலுரிதல்; to exfolicate of the epidermis to peel off skin (சா.அக.);

ம. தோலுரியுக

     [தோல் + உரி]

 தோலுரி2 tōlurittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   மேற்றோலைப் போக்கல்; to peel off, as skin of fruits.

   2. உடம்பின் தோலையுரித்தல்; to flay as skin of body, escoriating.

   3. தோல் போக்கல்; to husk, as grains or pulse, to decoritcate.

   4. சட்டை கழற்றல்; to cast away the outer skin as snakes do (சா.அக.);.

     [தோல் + உரி-,]

தோலுரித்தோன்

தோலுரித்தோன் tōlurittōṉ, பெ. (n.)

   1. குப்பை மேனி; rubbish plant.

   2. கற்ப முறையால் சட்டை கழட்டியவன்; one who causes the wrinkled outer skin to shed or thrown off as in rejuvenation so as to look young (சா.அக);.

     [தோல் + உரித்தோன்]

தோலுள்

தோலுள் tōluḷ, பெ. (n.)

   1. உள் தோல்; inner skin.

   2. தோலுக்குள்; inside of the skin (சா.அக);.

     [தோல் + உள்]

தோலுழிஞை

தோலுழிஞை tōluḻiñai, பெ. (n.)

   கிடுகு படையைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை (பு.வெ. 6,12);; theme in praise of a shield (செ.அக);.

     [தோல்3 + உழிஞை]

தோலொட்டு

 தோலொட்டு tōloṭṭu, பெ. (n.)

   வரி வகை; a tax (செஅக);.

தோலோதோல்

தோலோதோல்1 tōlōtōl, இடை. (part.)

   உடம் படாமைக் குறிப்பு (பஞ்சதந்);; expr.signifying disagreement (செ.அக.);.

 தோலோதோல்2 tōlōtōl, கு.வி.எ. (adv.)

   எவ்வகையிலும் (வின்.);; afterall, howbeit.

தோல்

தோல்1 tōltaltōṟṟal,    13 செ.கு.வி. (v.i.)

   1. தோல்வியுறுதல்; to be defeated, discomfited, vanquished, as in battle, game, dispute etc.,

     “தோற்பதறியார்” (நாலடி, 313);.

   2. ஒப்பிற்றாழ்தல்; to fail in comparison.

     “பரவலருங் கொடைக்கு.. நெடும்பண்பு தோற்ற… கற்பகமும்” (கம்பரா. சடாயுகாண். 21);.

   3. இணங்குதல்; to yield, flinch, give way voluntarily.

 தோல்2 tōltaltōṟṟal,    12 செ.குன்றாவி. (v.t.)

   இழத்தல்; to lose.

     “தோற்றோமடநெஞ்ச மெம்பெருமான் நாரணற்கு” (திவ். திருவாய். 2. 1: 7);.

   ம. தோல்க்குக;   க. சோல், சோலு;   து. தோல்புனி, சோபுனி, தோலுனி;   குட., கோத. சோல்;   துட. த்வில்;பட. சோலு

 தோல்3 tōl, பெ. (n.)

   1. தோல்வி (பிங்.);; defeat, discomfiture.

   2. அல்லூழ் (வின்.);; misfortune, ill-luck (செ.அக);.

 தோல்4 tōl, பெ. (n.)

   1. தோல்; skin, leather, hide.

     “தோற்பையு ணின்று” (நாலடி, 26);.

   2. புறணி; bark, rind, peel, scales or coats of onion and other bulbous roots.

தோலிருக்கச் சுளைவிழுங்கி (பழ.);.

   3. விதையின் மேற்றோல்; pod, husk of seeds.

   4. உடம்பு (குறள், 1043, உரை);; body.

   5. தோலினாலியன்ற கேடகம்; leathern buckler, shield.

     “தோலின் பெருக்கமும்” (தொல்.பொருள். 67);.

   6. துருத்தி; bellows.

     “மென்றோன் மிதியுலைக் கொல்லன்” (பெரும்பாண். 206);.

   7. சேணம், பக்கரை; saddle.

     “தோறுமிபு வைந்நுனைப் பகழி மூழ்கலின்” (முல்லைப். 72);.

   8. மூங்கில் (மலை);; bamboo.

   ம. தோல், தோலு;   க. தோல், தெரவன்;   தெ., பட. தோலு;   து. தோலிகெ;   நா., கொலா., பர். தோல்;   குட. தொலி;   கோண். தோல்;குவி. தோலு, தோலூ

 தோல்4 tōl, பெ. (n.)

   1. பழையதொரு பொருண்மேல் மெல்லென்ற சொல்லான் அறம் பொருளின்பம் வீடு என்ற விழுமிய பொருள் பயப்பச் செய்யப்படும் நூல்; poem narrating an ancient story and inculcating the purusarthas in a felicitous diction.

     “இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர்” (தொல். பொருள்.551);.

   2. அழகு (பிங்.);; beauty.

   3. யானை; elephant.

     “புரைத்தோல் வரைப்பின்” (மலைபடு. 88);.

   4. புகழ்; fame.

     “தொல்வரவுந் தோலுங் கெடுக்கும்” (குறள், 1௦43);.

   5. பேச்சு (சூடா.);; speech, utterance.

     [தொல் → தோல் = பழைமை, பழம் பொருள் பற்றிய நூல், பழைமையான புகழ் (மு.தா. 274);]

தோல் கன்றுக்குட்டி

 தோல் கன்றுக்குட்டி tōlkaṉṟukkuṭṭi, பெ. (n)

   இறந்த கன்றுக்குட்டியிலிருந்து தோலை உரித் தெடுத்து வைக்கோல் திணித்து செய்யப்பட்ட கன்றுக்குட்டி பொம்மை; duplicate calf made by using its skin after death.

     [தோல்+கன்று+குட்டி]

 தோல் கன்றுக்குட்டி tōlkaṉṟukkuṭṭi, பெ.(n.)

   இறந்த கன்றுக்குட்டியிலிருந்து தோலை உரித் தெடுத்து வைக்கோல் திணித்து செய்யப்பட்ட கன்றுக்குட்டி பொம்மை; duplicate calf made by using its skin after death. [தோல்+கன்று+குட்டி]

தோல் முட்டை

 தோல் முட்டை tōlmuṭṭai, பெ.(n.)

   கண்ணாம்பு பற்றாக் குறைவினால் மேல் ஒடு இல்லாமல் கோழி வைக்கும் முட்டை; the egg without white shell by deficiency of calcium. (கொ.வ.வ.சொ.);.

     [தோல்+முட்டை]

 தோல் முட்டை tōlmuṭṭai, பெ.(n.)

   கண்ணாம்பு பற்றாக் குறைவினால் மேல் ஒடு இல்லாமல் கோழி வைக்கும் முட்டை; the egg without white shell by deficiency of calcium. (கொ.வ.வ.சொ.);.

     [தோல்+முட்டை]

தோல்கச்சை

தோல்கச்சை tōlkaccai, பெ. (n.)

   வார்ப்படத் தொழிலில் வார்ப்படங்களின் வலிமையை அதிகரிக்கவும், வார்ப்பட மணலில் கூர் முனைகளை நீக்கவும் பயன்படும் தோலினாலான பட்டை; leather filler.

     [தோல்4 + கச்சை]

தோல்காய்ப்பு

 தோல்காய்ப்பு tōlkāyppu, பெ. (n.)

   சதை காய்த்துக் கெட்டிப்படுதல்; any thickened or hardened part on the surface of the human body or animal (சா.அக.);.

     [தோல் + காய்ப்பு]

தோல்கீழ்ப்பீச்சி

 தோல்கீழ்ப்பீச்சி tōlāḻppīcci, பெ. (n.)

   உடம்புத் தோலின் கீழாகப் பீச்சுவதற்குப் பயன்படும் கருவி; a syringe for injecting substances beneath the skin (சா.அக.);.

     [தோல் + கீழ் + பீச்சி]

தோல்சிலிர்-த்தல்

தோல்சிலிர்-த்தல் tōlcilirttal,    4 செ.கு.வி. (v.i.)

   நீண்ட நேரம் தண்ணீரிற் கிடப்பதால் உடம்பின் சதை சுருங்கி வெளுத்தல்; to erect of the papillae of the skin as from remaining in water for a long time (சாஅக.);.

     [தோல் + சிலிர்-,]

தோல்சீவல்

 தோல்சீவல் tōlcīval, பெ. (n.)

   மேற்றோல் சுழித்தல்; scarpping of or removing the skin by rubbing (சா.அக.);.

     [தோல் + சீவல்]

தோல்சுத்தி

 தோல்சுத்தி tōlcutti, பெ. (n.)

   பதனிடப்படாத தோல் கொண்டையையுடைய கைச்சுத்தி; raw hide hammer.

     [தோல் + சுத்தி]

மாழை உறுப்புகளில் இச்சுத்தியைப் பயன்படுத்தும் போது கீறல்கள் ஏற்படாமல் இருக்கும் (அறி.கலை.களஞ்);.

தோல்தனம்

தோல்தனம் tōltaṉam, பெ. (n.)

   அறிவுக் குறைவு (யாழ்ப்.);; imprudence (செஅக.);.

     [தோல்3 + தனம். தோல்வியுறுதற்குக் காரணமாதலால் அறிவுக்குறைவு தோல்தனம் எனப்பட்டது]

தோல்தீய்ச்சி

 தோல்தீய்ச்சி tōltīycci, பெ. (n.)

   தோலைச் சுடுதல்; burning the skin with caustic (சா.அக.);.

     [தோல் + தீய்ச்சி]

தோல்நாய்

 தோல்நாய் tōlnāy, பெ. (n.)

   வேட்டை நாய் வகை (யாழ்.அக.);; hunting dog, greyhound (செஅக);.

     [தோல் + நாய்]

தோல்நோய்

தோல்நோய் tōlnōy, பெ. (n.)

   1. தோல் தொடர்பான நோய்; skin disease in general.

   2. சொறி, சிரங்கு, புண், தேமல், படை, கொப்புளம், புற்று முதலிய நோய்கள்; pruritus itch, sore macula, ringworm boil, ulcer, cancer etc.,

   3. முறையற்ற உடலுறவு கொள்வதால் ஏற்படும் நோய்; skin affection arising from veneral and syphlitic causes (சா.அக.);.

     [தோல் + நோய்]

தோல்நோய்க்காரம்

 தோல்நோய்க்காரம் tōlnōykkāram, பெ. (n.)

   உணர்ச்சி உண்டாகும்படி தோல் நோயில் மேற்பூச்சாக தடவும் மருந்து; any stimulant application in skin diseases (செஅக.);.

     [தோல் + தோய் + காரம்]

தோல்பட்டினச்சுட்டான்

 தோல்பட்டினச்சுட்டான் tōlpaṭṭiṉaccuṭṭāṉ, பெ. (n.)

   தோல் போலும் மெல்லியதாகக் காணப்படும் மீன் (தஞ்சை.மீனவ.);; a fish which has a soft skin.

     [தோல் + பட்டினச்சுட்டான்]

இம்மீனைப் பட்டினவர் சுட்டுத் தின்பர்.

தோல்பல்லிணை

 தோல்பல்லிணை tōlpalliṇai, பெ. (n.)

   இறுக்கமாக அழுத்தப்பட்டுப் பதனிடப் படாத தோல் வட்டுக்களினாலான ஒசை எழுப்பாத பல்லிணை; rawhide gears. (அறி.கலை.களஞ்);

     [தோல் + பல் + இணை]

தோல்பாரை

 தோல்பாரை tōlpārai, பெ.(n.)

   தோலால் மூடப் பட்ட ஒரு மேலங்கி; leather jacket.

     [தோல்+பாரை]

 தோல்பாரை tōlpārai, பெ.(n.)

   தோலால் மூடப்பட்ட ஒரு மேலங்கி; leather jacket.

     [தோல்+பாரை]

 தோல்பாரை tōlpārai, பெ.(n.)

   மீன் வகை; butter fish.

     [தோல் + பாரை]

தோல்பாறை

 தோல்பாறை tōlpāṟai, பெ. (n.)

   ஒரு வகைப் பாறை மீன்; kind of {} fish.

உடம்பு சப்பையாகவும் தோல் கனமாகவும் இருக்கும்.

     [தோல் + பாறை]

தோல்புரை-தல்

தோல்புரை-தல் dōlpuraidal,    3 செ.குன்றாவி. (v.t.)

   தோலால் தைத்தல்; to sew or fasten with thongs (செ.அக.);.

     [தோல் + புரை-,]

தோல்புளி

 தோல்புளி tōlpuḷi, பெ. (n.)

   சதைக் குறைந்த புளி; tamarind with very little pulp (சா.அக);.

     [தோல் + புளி]

தோல்போக்கு-தல்

தோல்போக்கு-தல் dōlpōkkudal,    5 செ.குன்றாவி. (v.t.)

தோலுரி-த்தல் பார்க்க;see {}. (சாஅக);.

     [தோல் + போக்கு-,]

தோல்போலாகு-தல்

தோல்போலாகு-தல் dōlpōlākudal,    5 செ.கு.வி. (v.i.)

   இளைத்தல்; to emaciate (சா.அக.);.

     [தோல் + போல் + ஆகு-,]

தோல்மட்டம்

 தோல்மட்டம் tōlmaṭṭam, பெ. (n.)

   தோல் ஆழம்; skin deep (சாஅக.);.

     [தோல் + மட்டம்]

தோல்மாடு

தோல்மாடு1 tōlmāṭu, பெ. (n.)

   சல்லிக்கட்டு மாடு; baiting bull (செ.அக.);.

     [தோல் + மாடு]

 தோல்மாடு2 tōlmāṭu, பெ. (n.)

   எலும்பும் தோலுமாய் இருக்கும் மாடு; emaciated cattles.

மறுவ. தொத்தல் மாடு

     [தோல் + மாடு]

தோல்முட்டை

தோல்முட்டை tōlmuṭṭai, பெ. (n.)

   1. கருவில்லாத முட்டை; empty shell of egg.

   2. தோடு கடினமாதற்கு முன்பு இடப்பட்ட முட்டை (வின்.);; egg laid before the shell is hard (செஅக);.

   ம. தோல்முட்ட;பட. தோலுமொட்டெ

     [தோல் + முட்டை]

தோல்மூடு-தல்

தோல்மூடு-தல் dōlmūṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   பக்கு கட்டுதல்; to form a coat of skin over a sore or healing as scab (சாஅக.);.

     [தோல் + மூடு-,]

தோல்மெருகு

 தோல்மெருகு tōlmerugu, பெ. (n.)

   தோல் பதனிடும் முறைகளுளொன்று; ooze leather (அறி.கலை.களஞ்.);.

     [தோல் + மெருகு]

தோலுக்கு வெல்வெட்டு போன்ற மென்மையான தன்மை அளிப்பதற்கு இம்முறை பயன்படும்.

தோல்மேலேறுதல்

 தோல்மேலேறுதல் dōlmēlēṟudal, பெ. (n.)

   குழந்தை யாண் குறியின் நுனித்தோல் மேலேயேறிக் கீழிறங்காமற் போகும் நிலை; paraphimosis, condition of the private part in male children in which the foreskin is permanantly retracted (செ.அக.);.

     [தோல் + மேல் + ஏறுதல்]

தோல்வறட்சி

தோல்வறட்சி tōlvaṟaṭci, பெ. (n.)

   1. உடம்பின் தோல் பசையற்று உலருதல்; abnormal dryness of the skin.

   2. சொறியால் மேற்றோல் சொரசொரத்து வறண்டு காணும் ஒரு நோய்; a disease marked by roughness and dryness of the skin especially in icththyosis (செ.அக);.

     [தோல் + வறட்சி]

தோல்வழலுகை

 தோல்வழலுகை tōlvaḻlugai, பெ. (n.)

   தோல் நோய் வகை; abrasian, susperficial excriation with loss of substance in the form of small shreds (செ.அக.);.

தோல்வி

தோல்வி tōlvi, பெ. (n.)

   வெற்றியின்மை; discomfiture, loss, defeat.

     “சால்பிற்குக் கட்டளையாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல்” (குறள், 986);.

ம. தோன்ம, தோல்ம, தோல்வி

     [துல் → தொல் → தொலை. தொலைதல் = தளர்தல், தோற்றல். தொலை → தொலைவு = தோல்வி. தொல் → தோல் → தோல்வி (மு.தா.286);]

தோல்வித்தானம்

தோல்வித்தானம் tōlvittāṉam, பெ. (n.)

   தோல்வியுறுதற் கேதுவாகிய நிலை (தருக்கசங். 36, நீலகண். 215);; weak point in an argument or fault in a syllogism (செ.அக);.

     [தோல்வி + தானம்]

தோல்வினைஞர்

 தோல்வினைஞர் tōlviṉaiñar, பெ. (n.)

தோல் வினைமாக்கள் (பிங்.); பார்க்க;see {} (செ.அக.);.

     [தோல் + வினைஞர்]

தோல்வினைமாக்கள்

 தோல்வினைமாக்கள் tōlviṉaimākkaḷ, பெ. (n.)

   செம்மார்; workers in leather(செ.அக.);

     [தோல் + வினை + மாக்கள்]

தோல்வியாதி

 தோல்வியாதி tōlviyāti, பெ. (n.)

தோல்நோய் பார்க்க;see {} (சாஅக.);.

     [தோல் + வியாதி]

 Skt. {} –> த. வியாதி

தோல்விலாங்கு

 தோல்விலாங்கு tōlvilāṅgu, பெ. (n.)

   விலாங்கு மீன் வகையுள் ஒன்று; kind of eel fish (மீனவ);.

     [தோல் + விவாங்கு]

தோல்வீக்கம்

 தோல்வீக்கம் tōlvīkkam, பெ. (n.)

   ஆண்குறியின் நுனித்தோல் மடங்கு வதாலுண்டாகும் வீக்கம்; swelling of the penis due to paraphimsos (செ.அக);.

     [தோல் + வீக்கம்]

தோல்வு

தோல்வு tōlvu, பெ. (n.)

தோல்வி (பிங்.); பார்க்க;see {}.

     “சாலங்காயனைத் தோல்வினையேற்றி” (பெருங்.நரவாண.7,1௦3);.

     [தோல்வி → தோல்வு]

தோல்வேலைப்பாடு

 தோல்வேலைப்பாடு tōlvēlaippāṭu, பெ. (n.)

   கருவிகளைக் கொண்டு தோலில் செய்யப் படும் ஒப்பனை வேலைப்பாடு; leather craft.

     [தோல் + வேலைப்பாடு]

தோல்வை-த்தல்

தோல்வை-த்தல் tōlvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஆறின புண்ணில் புதுத்தோல் உண்டாதல் (யாழ்ப்.);; to form a new skin as a healing sore.

ம. தோலுவய்க்குக

     [தோல் + வை-,]

தோளணி

தோளணி tōḷaṇi, பெ. (n.)

   தோட்பக்கத்தில் அணியப்படும் அணிகலவகை; ornaments worn on the upper arm.

     “தோளணி தோடு சுடரிழை நித்திலம்” (பரிபா. 1௦, 115);.

     [தோள் + அணி]

 தோளணி tōḷaṇi, பெ. (n.)

   வில்லையோடு கூடிய தொண்டனின் தோட்கச்சை (கொ.வ.); (டவாலி);; peon’s belt on which a badge is worn.

     [தோள்+அணி]

     [P]

தோளாச்செவியர்

தோளாச்செவியர் tōḷācceviyar, பெ. (n.)

   ஒரு வகைக் குலத்தினர்; a section of people (S.I.l.iii, 268);.

     [தோள் + ஆ + செவியர். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை]

தோளாமணி

தோளாமணி tōḷāmaṇi, பெ. (n.)

   துளையிடப் படாத மணி; uncut gem.

     “தோளா மணியே பிணையே பலசொல்லி யென்னை” (திருக்கோ. 47);

     [துல் → துள் → தொள். துல் – துளைத்தற் கருத்துவேர். தோள் + ஆ + மணி]

தோளி

தோளி tōḷi, பெ. (n.)

   1. நன்னீர் மீன்வகை; fresh- water fish.

   2. நீலிச்செடி; common indigo.

   3. அரக்கு (சங்அக.);; lac (செஅக);.

     [தோலி → தோளி]

தோளிற்கொள்(ளு)-தல்

தோளிற்கொள்(ளு)-தல் dōḷiṟkoḷḷudal,    7 செ.குன்றாவி. (v.t.)

   மணந்து கொள்ளுதல்; to marry.

     “நின்கோதையை யார்கொலோ தோளிற் கொள்பவர்” (பிரபுலிங். மாயையினுற். 69);.

     [தோளில் + கொள்-,]

தோளு-தல்

தோளு-தல் dōḷudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   துளைத்தல்; to perforate.

     [துல் → துள் → தொள் → தோள் → தோளு]

தோளுக்கினியான்

 தோளுக்கினியான் tōḷukkiṉiyāṉ, பெ. (n.)

   கோயிற் கடவுள்திருமேனியை எளிதில் தூக்கிச் செல்லக் கூடிய ஊர்தி வகை; a light frame for carrying in procession the idol of a temple, as easy for the shoulder (செஅக.);.

     [தோளுக்கு + இனியான்]

தோளெடுத்தல்

 தோளெடுத்தல் tōḷeḍuttal, பெ. (n.)

   மாலை மாற்றும் பொருட்டு மணமக்களை அவ்வவர் மாமன்மார் தோளிற்றூக்குகை; the ceremony in which bride and the bride-groom are carried upon the shoulder of their respective maternal uncles to enabled them to exchange garlands (செஅக);.

     [தோள் + எடுத்தல்]

தோளோச்சல்

 தோளோச்சல் tōḷōccal, பெ. (n.)

   தோளை எடுத்தல்; raise the shoulders.

     [தோள் + ஓச்சல்]

தோள்

தோள் tōḷ, பெ.(n.)

   கருவறை சிற்பத்தின் ஓர் உறுப்பு; a feature in sculpture,

 தோள்2 tōḷ, பெ. (n.)

   துளை (அகநி.);; perforation (செஅக.);.

     [துல் → துள் → தொள் → தோள்]

 தோள்3 tōḷ, பெ. (n.)

   1. கையின் திரண்ட மேற்பகுதி (புயம்);; shoulder.

     “சிலைநவி லெறுழ்த்தோ ளோச்சி” (பெரும்பாண். 145);.

     “தம்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள்” (குறள், 916);.

தோளிலமர்ந்து காதைக் கடிக்காதே (பழ.);.

   2. கை; arm.

     “தோளுற்றொர் தெய்வந் துணையாய்” (சீவக. 1௦);.

   ம. தோளு;   க. தோள், தோளு;   து. தோளு;   கோத. தோள்;   துட. த்விள்பொதி (தோள்வளை);;   த. தோள்; Skt. {}

     [தொள் → தோள் (மு.தா. 208);]

தோள்(ளு)

தோள்(ளு)1 dōḷḷudal,    10 செ.குன்றாவி. (v.t.)

   1. துளைத்தல்; to perforate bore through.

     “கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப்படாத செவி” (குறள், 418);.

   2. தோண்டுதல்; to dig out, scoop.

     “தோணீர்க் கடலுள்” (சீவக.2097);.

     “தெவ்வேந்த ருடறோட்ட நெடு வேலாய் … கடறோட்டா ரெனின்” (கம்பரா. குலமுறை. 8);.

   3. நீக்குதல்; to remove.

     “கடிதோட்ட களவகத்தே” (திருக்கோ. 8);.

க. தோடு

     [துல் → துள் → தொள் → தோள்]

தோள்கத்தளை

 தோள்கத்தளை tōḷkattaḷai, பெ.(n.)

   ஒருவகை மீன்; leather spined jew fish.

தோள்காய்த்தல்

 தோள்காய்த்தல் tōḷkāyttal, பெ. (n.)

   தோள் காய்ப்பு; shoulder becoming callous (சா.அக.);.

     [தோள் + காய்த்தல்]

தோள்கொடு-த்தல்

தோள்கொடு-த்தல் tōḷkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சுமையைத் தாங்குதல்; to take on one’s shoulders, the as the pole of a palanquin.

தாங்க முடியவில்லை, கொஞ்சம் தோள் கொடு (உவ.);.

   2. உதவி செய்தல்; to offer help in an emergency (செஅக.);.

     [தோள் + கொடு-,]

தோள்கொட்டு-தல்

தோள்கொட்டு-தல் dōḷkoṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வீரத்தின் அடையாளமாய்த் தோளைத் தட்டுதல்; to clap one’s shoulders, as in difiance.

     “தடுத்தானைத் தான்முனிந்து தன்றோள் கொட்டி” (தேவா. 689, 10);.

     [தோள் + கொட்டு-,]

தோள்சந்து

 தோள்சந்து tōḷcandu, பெ. (n.)

   அக்குள்; arm pit (சாஅக.);.

     [தோள் + சந்து]

தோள்சேர்-தல்

தோள்சேர்-தல் tōḷcērtal,    3 செ.குன்றாவி. (v.t.)

   தழுவுதல்; to embracc (செஅக);.

     [தோள் + சேர்-,]

தோள்சேலை

 தோள்சேலை tōḷcēlai, பெ. (n.)

   மார்பை மறைக்கும் பகுதியையுடைய சேலை; a sarce which has the portion that is drawn over the breast.

     [தோள் + சேலை. சீரை → சீலை → சேலை]

தோள்சேலைப்போராட்டம்

 தோள்சேலைப்போராட்டம் tōḷcēlaippōrāṭṭam, பெ. (n.)

   பெண்கள் மாராப்பு சேலை உடுத்தும் உரிமைக்கோரி செய்த போராட்டம்; the struggle to have the right to wear the saree that is drawn over the breast.

     [தோள்சேலை + போராட்டம்]

தோள்தட்டு

தோள்தட்டு1 dōḷdaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

தோள்கொட்டு-தல், பார்க்க;see {}, (செஅக.);.

     [தோள் + தட்டு-,]

 தோள்தட்டு2 dōḷdaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒருவரை ஊக்கப்படுத்துவதற்காகத் தோளில் தட்டிக் கொடுத்தல்; to pat one, on shoulder to encourage.

     [தோள் + தட்டு]

தோள்தீண்டி

தோள்தீண்டி tōḷtīṇṭi, பெ. (n.)

   நெருங்கி வருத்துவது; that which comes close and destroys, as touching one’s shoulders.

     “மரணமன்றோ தோள்தீண்டியாக வந்து நிற்கிறது.” (திவ். திருமாலை, 6, வியா. பக். 34);.

     [தோள் + தீண்டி]

தோள்தூக்குதல்

 தோள்தூக்குதல் dōḷdūkkudal, பெ. (n.)

தோளெடுத்தல் பார்க்க;see {} (செஅக.);.

     [தோள் + தூக்குதல்]

தோள்நாடி

 தோள்நாடி tōḷnāṭi, பெ. (n.)

   தோட் பக்கத்துள்ள தூய அரத்தக் குழாய்; subclavian artery (செஅக.);

     [தோள் + நாடி]

தோள்நாப்பை

 தோள்நாப்பை tōḷnāppai, பெ. (n.)

தோள்பை பார்க்க;see {}.

     [தோள் + நாலு + பை]

தோளில் நாலும் (தொங்கும்); பை. இது வட புல மொழிகளில் ஜோல்னாப்பை என வழங்குகிறது.

தோள்நாளம்

 தோள்நாளம் tōḷnāḷam, பெ. (n.)

   தோட் பக்கத்துள்ள தூய்மையிலா அரத்தக் குழாய்; subclavian vein (செ.அக.);.

     [தோள் + நாளம்]

தோள்படிகொள்(ளு)-தல்

தோள்படிகொள்(ளு)-தல் dōḷpaḍigoḷḷudal,    7 செ.குன்றாவி. (v.t.)

   ஒன்றைப் பற்றாகக் கொள்ளுதல்; to go a step further, proceed further.

     “கீழ்நின்ற நிலைமையமைத்து மேலே தோள்படி கொள்ளுகிறார்.” (ஈடு. 1,1,1, பக்.2);.

தோள்பட்டை

 தோள்பட்டை tōḷpaṭṭai, பெ. (n.)

   தோள் பலகை; shoulder blade (சா.அக.);.

     [தோள் + பட்டை]

தோள்பை

 தோள்பை tōḷpai, பெ. (n.)

   தோளில் தொங்கவிடும்படி பட்டை வைத்துத் தைத்த பை; shoulder bag.

     [தோள் + பை]

தோள்பொருத்து

 தோள்பொருத்து tōḷporuttu, பெ. (n.)

   தோள் மூட்டு; shoulder joint (சா.அக.);.

     [தோள் + பொருத்து]

தோள்பொருத்துவாதம்

 தோள்பொருத்துவாதம் tōḷporuttuvātam, பெ. (n.)

   தோள் வலி நோய்; inflammation of the shoulder joint (சா.அக.);.

     [தோல் + பொருத்து + வாதம்]

தோள்மாறு-தல்

தோள்மாறு-தல் dōḷmāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   மனம் வேறுபடுதல்; to change one’s mind, as changing shoulders.

     “கிட்டினவாறே நீரே அதிலே தோள்மாறுகிறீர்” (திவ். திருமாலை, 2, வியா. 8);.

     [தோள் + மாறு-,]

தோள்மாற்று-தல்

தோள்மாற்று-தல் dōḷmāṟṟudal,    5 செ.கு.வி. (v.t.)

   1. சுமையை ஒரு தோளின்று மற்றொரு தோளுக்கு மாற்றுதல்; to change one shoulder to another, as a load.

   2. பிறன் சுமையைத் தான் தூக்கி உதவிபுரிதல்; to relieve another in bearing a load (செ.அக.);.

     [தோள் + மாற்று-,]

தோள்மூட்டு

 தோள்மூட்டு tōḷmūṭṭu, பெ. (n.)

   தோட் பொருத்து; shoulder joint (செ.அக);.

     [தோள் + மூட்டு]

தோள்வந்தி

தோள்வந்தி tōḷvandi, பெ. (n.)

தோள்வளை பார்க்க;see {}.

     “அத்தோள்கடோறும் தோள்வந்தியை உடையராயிராநின்றார்” (திவ். பெரியதி. 9, 2,4, வியா.);.

     [தோள் + வந்தி. வங்கி → வந்தி. வங்கி = வளைந்தது]

தோள்வலி

தோள்வலி tōḷvali, பெ. (n.)

   தோள் வலிமை; strength or power of the arm.

     “இராமன் றோள்வலி கூறுவோர்க்கே” (கம்பரா. தனியன்);.

   2. தோள் நோவு; pain in the shoulder (செ.அக.);.

     [தோள் + வலி]

தோள்வளை

தோள்வளை tōḷvaḷai, பெ. (n.)

   தோளில் அணியும் வளைவகை; ring worn on the upper arm.

     “நெடுந்தோள் வளையுங் கடுங்கதிர்க் கடகமும்” (பெருங். இலாவாண. 5, 114);.

     [தோன் + வளை]

தோள்வாதம்

தோள்வாதம் tōḷvātam, பெ. (n.)

   1. தோள் வீங்கிக் கண்டம், பிடரி வலிப்புற்று கழுத்து நோகும் ஒருவகை நரம்பு நோய்; a kind of neuralgic pain of the shoulder’s marked by swelling and pain in the neck and nape.

   2. வளிக் குற்றத்தினால் (தோஷத்தினால்); தோள் மூட்டு பசையற வற்றல்; the vayu about the shoulder joint becomes excited dries up the kapa which substains the shoulder joint.

   3. வளிக் கோளாறினால் தோள் மூட்டில் விறைப் புண்டாகி அசைக்க முடியாமற் செய்யும் ஒரு ஊதை; stiffness of the shoulder joint in which the excited vayu causes the contraction of the muscles of the shoulder.

   4. தோள்பிடிப்பு; rheumatism of the shoulder (சா.அக.);.

தோள்விந்தி

 தோள்விந்தி tōḷvindi, பெ.(n.)

   பெண்கள் மேற்கையில் அணியும் தொடி போன்ற வெள்ளி நகை; a silver braceletworn by women on the upper arm.

     [தோன்+விந்தி ஒருகா வெள்ளி→ தெ வென்டி →த விந்தி]

தோழன்

தோழன் tōḻṉ, பெ. (n.)

   வினைவலபாங்கன், பாங்கன்; friend, companion, intimate acquaintance, camrade.

     “யானே தந்தை தோழன்” (புறநா. 2௦1);.

தோழனாவது துலங்கிய கல்வி (பழ.);.

   ம. தோழன்;   க. தெ. தோடு;   து. தோழ;   கொலா. தோரென் (தம்பி);;   நா. தோரென்;   பர். தொளெய (உடன் பிறந்தவன்);;   கட. தோரென் (தம்பி);;   கோண். தொர் (உதவி);;   கூ. தோஞ்சு;குவி. தோனெசி

     [துள் → தொள் → தொழு → தோழம் → தோழன்]

தோழப்பர்

தோழப்பர்1 tōḻppar, பெ. (n.)

   மிருதி (ஸ்மிருதி); நிபந்தனை என்னும் நூலின் ஆசிரியர்களுள் ஒருவர்; a writer on the smrtis.

 தோழப்பர்2 tōḻppar, பெ. (n.)

   நாய்; dog, an man’s friend.

     [தோழமை → தோழப்பர்]

தோழமை

தோழமை tōḻmai, பெ. (n.)

   நட்பு; friendship, companionship.

     “தோழமை யென்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ” (கம்பரா. குகப். 15);.

தோழமையோடும் ஏழைமை பேசேல் (பழ.);.

ம. தோழம

     [துள் → தொள் → தொழு → தொழுவம் → தோழம் → தோழமை]

தோழமைநெறி

 தோழமைநெறி tōḻmaineṟi, பெ. (n.)

   ஒக நெறி (சகமார்க்கம்);; yoga as the path leading to cãruppiyam.

     [தோழமை+நெறி]

தோழம்

தோழம்1 tōḻm, பெ. (n.)

   மாட்டுத் தொழுவம்; cattle-stall.

     ”தோழத்திடைப் புகுந்தாள்” (பிரமோத். 3, 14);.

ம. தோழம்

     [துள் → தொள் → தொழு → தொழுவம் → தோழம்]

 தோழம்2 tōḻm, பெ. (n.)

   1. கடல்; sea.

     “முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழம்” (கல்லா. 88,23);.

   2. பேரெண்; a large number.

     “ஒரு தோழந் தேவர் விண்ணிற் பொலிய” (தேவா. 102, 7);.

தெ. தோயமு

     [தோயம் → தோழம்]

 தோழம்3 tōḻm, பெ. (n.)

தோழமை பார்க்க;see {}.

     [துள் → தொள் → தொழு → தொழுவம் → தோழம்]

த. தோழம் → Skt. {}

தோழர்

தோழர் tōḻr, பெ. (n.)

   1. தோழன் பார்க்க;see {}.

   2. அரசியல் இயக்கங்கள் சிலவற்றில் ஒர் உறுப்பினர் மற்றொரு உறுப்பினரையோ, சார்பாளரையோ அழைக்கும் விளிச்சொல்; comrade, a calling word in certain political movements.

நம் தோழர்கள் அனைவரும் வென்று விட்டனர்.

     [தோழன் → தோழர். ‘அர்’ உயர்வுப் பன்மையீறு]

தோழா

தோழா tōḻā, பெ. (n.)

   விளிச்சொல்; calling word.

     [தோழன் → தோழா (விளி); (சு.வி.35);]

தோழி

தோழி1 tōḻi, பெ. (n.)

   1. பாங்கி; a lady’s maid.

     “நல்லவென் றோழி” (திவ். நாய்ச். 10, 10);.

   2. செவிலித் தாயின் மகள்; heroine confidante, being the daughter of her fostermother.

     “தோழிதானே செவிலிமகளே” (தொல். பொருள். 125);.

   3. மனைவி; wife.

     “பொற்றொடிப் பணைத்தோட் டோழியர்” (பெருங்.வத்தவ. 12, 19);.

   4. பணிப்பெண் (இலக்.வி. 207, உரை);; maidservant.

     [தோழன் (ஆ.பா.); → தோழி (பெ.பா.);]

 தோழி2 tōḻi, பெ. (n.)

   அரக்கு (அக.நி.);; gum lac.

     [தோலி2 → தோழி]

 தோழி3 tōḻi, பெ. (n.)

   கற்பூரவல்லி; country borage (சாஅக);.

தோழிச்சி

தோழிச்சி tōḻicci, பெ. (n.)

தோழி 1,2,3 பார்க்க;see {}. 1,2,3.

     “தோழரெல்லாந் தோழிச்சியாக” (பெருங்.மகத. 22, 39);.

     [தோழி → தோழிச்சி]

தோழிப்பொங்கல்

 தோழிப்பொங்கல் tōḻippoṅgal, பெ. (n.)

 bride procession on the fourth day of marriage, conducted by her maternal uncle (செ.அக.);.

     [தோழி + பொங்கல்]

தோழ்

தோழ் tōḻ, பெ. (n.)

   மாட்டுக் கொட்டில்; cattle stall.

     ‘ஊழிதொ றாவுந் தோழும் போன்று” (சீவக. 487);.

மறுவ. தொழுவம்

     [துல் → துள் → தொள் → தொழு → தோழ்]

தோழ்ப்பாடி

தோழ்ப்பாடி tōḻppāṭi, பெ. (n.)

   தீயவன்; போக்கிலி (போக்கிரி);; wiked person.

     “துர்த்தத் தனம் பேசுந் தோழ்ப்பாடி வித்தையில்” (தெய்வச். விறலிவிடு. 476);.

     [தோல் → தோழ் + பாடி]

தோவத்தி

தோவத்தி1 tōvatti, பெ. (n.)

   ஆண்மக்களின் அரையாடை; a cloth worn arround the waist by men (செஅக);.

தெ. தோவதி

 தோவத்தி2 tōvatti, பெ. (n.)

   புடவை; saree.

தோவனம்

 தோவனம் tōvaṉam, பெ. (n.)

தோவாளம் பார்க்க;see {}.

     [தோவாளம் → தோவளம் → தோவனம்]

தோவம்

தோவம் tōvam, பெ. (n.)

   ஒரு காலவளவு; a measure of time.

     “கணம்வளி யுயிர்ப்புத் தோவம்” (மேருமந். 94);.

தோவாளம்

 தோவாளம் tōvāḷam, பெ.(n.)

   கிணற்றுக் கைப்பிடிச் சுவர்; support wall around the well.

     [தூ+வாளம்]

தோள்

__,

பெ.(n.);

   கருவறை சிற்பத்தின் ஓர் உறுப்பு; a feature in sculpture.

தோள்கத்தளை

__,

பெ.(n.);

   ஒருவகை மீன்; leather spined jew fish,

தோற்கூத்து ஒவியங்கள்

__,

பெ.(n.);

   ஒரு வகையான கை வினைக் கவின் கலை; leather puppet art.

     [தோல்+கூத்து+ஒவியங்கள்]

 தோவாளம் tōvāḷam, பெ.(n.)

   கிணற்றுக் கைப்பிடிச் சுவர்; support wall around the well.

     [தூ+வாளம்]

 தோவாளம் tōvāḷam, பெ. (n.)

   கிணற்றைச் சுற்றி எழுப்பிய சுவர் (நெல்லை);; parapet wall of a well (செஅக);.

மறுவ. தோவனம்

தோவை

 தோவை tōvai, பெ. (n.)

   நெத்திலியைப் போல் ஒரு கடல் மீன் (தஞ்சை.மீனவ.);; kind of sea fish like anchovy fish.