தலைசொல் | பொருள் |
---|---|
தொகக்காரன் | தொகக்காரன் togaggāraṉ, பெ. (n.) மதிப்பிடுவோன் (வின்.);; one who estimates, [தொகை + காரன். தொகை → தொக (கொ.வ);] |
தொகம் | தொகம் togam, பெ. (n.) மதிப்பு (வின்.);; estimate, total |
தொகம்பார்-த்தல் | தொகம்பார்-த்தல் togambārttal, 4 செகுன்றாவி (v.t.) மதிப்பிடுதல் (வின்);; to estimate, value, as the produce of a field. [தொகம் + பார்-.] |
தொகாநிலை | தொகாநிலை tokānilai, பெ. (n.) தொகாநிலைத் தொடர் (நன்.152. உரை); பார்க்க; see [தொகு + ஆ + நிலை, ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தொகாநிலைத்தொடர் | தொகாநிலைத்தொடர் tokānilaittoḍar, பெ. (n.) முற்றுத்தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத்தொடர், எழுவாய்த் தொடர் விளித்தொடர், வேற்றுமைத்தொடர், இடைத்தொடர், உரித்தொடர், அடுக்குத் தொடர் என்ற ஒன்பது வகைத்தாய் இடையில் வேற்றுமையுருபு முதலியன தொக்கு நில்லாமலும் ஒருமொழித்தன்மைப் படாமலுமுள்ள தொடர்சொற்கள் (நன். 152, உரை);; a phrase, clause or sentence of two words, as a combination of words having no ellipsis between them of nine kinds. [தொகு + ஆ + நிலை + தொடர். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தொகு | தொகு1 dogudal, 4 செ.கு.வி. (v.i.) 1. கூடுதல்; to assemble, collect, accumulate. “பலர் தொகுபுரைக்கும்” (மணிமே 2:35);. 2. ஒன்றாதல்; to form, as a whole or lump; to aggregate. 3. அடுக்கி வருதல்; to appear repeatedly. ‘உம்மை தொக்கவெனாவென் கிளவியும்” (தொல் சொல். 291);. 4. மொத்தமாதல்; to be summed up, totalled; to aggregate. 5. நெருங்குதல் (யாழ்.அக.);; to be compact, crowded. 6. மறைதல்; to be elided, as a particle in the combination of words. “மெய்யுருபு தொகாஅ விறுதியான” (தொல் சொல். 105);. 7. கருங்குதல்; to be contracted. “தொகுபீலி கோலின” (கம்பரா. வனம்பு, 4);. 8. ஒடுங்குதல்; to merge. “அசுத்த தத்துவங்க டொகும் முதலில்” (கோஉற்பு. இரணியவன்ம 2);. 9. குட்டையாதல்; to be shortened. “தொகுசரனந் தண்பார் தாங்க” (கோயிற்பு நடராச 29);. 10 வீணாதல்; to be of no avail; to fail of its purpose. தொடர் நீப்பிற் றொகுமிவ னலம் (கலித் 286);. ம. தொகுக தொகு2 dogudal, 4 செ.கு.வி. (v.i.) 1. ஒத்தல்; to conform, agree. “உடன் மூவர் சொற்றொக்க” (குறள், 589);. 2. உள்டங்குதல்; 3. to be included “தோன்றன் மலர்மணம் போற்றொக்கு (சி.போ. 7,3);. தொகு3 toguttal, 4 செகுவி (v.i.) 1. திரட்டிக் கூட்டுதல்; to cause to assemble; to bring together; togather. “புத்தகமே சாலத் தொகுத்தும்” (நாலடி, 318);. 2. எண் கூட்டுதல்; to sum up, to total, loadd, “இரண்டொடுந் தொகைஇ” (தொல் சொல் 112);. 3. சொல்லின் முதலிடை இறுதியில் எழுத்துகளை நீக்குதல்; to omit, elide, as a letter or letters in the beginning, middle or end of a word: “தொகுக்கும்வழித் தொகுத்தலும்” (தொல். சொல். 403);. 4. ஈட்டுதல் (யாழ்.அக);; to carn. 5. செய்தல்; to do, make. “விருந்து துனைந்து தொகுத்தனள்” (காஞ்சிப்பு. திருதகரேற் 26);. 6. சுருக்குதல்; to abridge, summarise. “தொகுத்துக் கூறல்” (தொல்பொருள். 666);. ம. தொகுக தொகு4 togu-, 4 செ.குன்றாவி (v.t.) மதிப்பிடுதல் (யாழ்.அக);; to estimate, value. |
தொகுதி | தொகுதி1 dogudi, பெ. (n.) 1. கூட்டம்; assembly, collection, aggregation. “வினையின் றொகுதி யொறுத்தெனை யாண்டுகொள்” (திருவாச. 6,6);. 2. வரிசை; series, class, as of persons or things. “வாம்பரித் தொகுதி” (கத்தபு. வச்சிபு,. 56);. 3. சவை (பிங்..);; society. 4. சேர்க்கை company, association. “வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும்” (தொல் சொல். 33 தெய்வச். உரை);. 5. குலம்; genus 6. பொத்தகப் பகுதி; volume, as of a journal. இது பத்தாவது தொகுதி. 7. மந்தை; flock, herd, swarm. 8. பகுதி; section, as of a book. “மக்கட்பெயர்த் தொகுதி (குடா);. 9. உருபு முதலியவற்றின் மறைவு: clision. “தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்” (தொல். எழுத்து 132, உரை);. 10. மொத்தவெண்; aggregate, total. “உம்மை யென்ணு மெனவெ னென்னுந் தம்வயிற் றொகுதி கடப்பாடிலவே’ (தொல். சொல். 289);. [தொகு → தொகுதி] தொகுதி2 dogudi, பெ. (n.) மக்களின் படி நிகராளிகளாகச் சட்ட மன்றம் நாடாளு மன்றம் ஆகியவற்றிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள மக்கள் வாழும் நாட்டுப் பகுதி; an electoral division of voters; constitutency. வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளும் தம் கட்சி போட்டியிடுமெனத் தலைவர் அறிவித்தார். [தொகு → தொகுதி] தொகுதி3 dogudi, பெ. (n.) கீழ் வாயிலக்கத்தில் கோட்டுக்குக் மேல் உள்ள எண்; numerator. 3/4 என்பதில் 3 தொகுதி. [தொகு → தொகுதி] |
தொகுதிப்பெயர் | தொகுதிப்பெயர் dogudippeyar, பெ. (n.) 1. குழுவைக் குறிக்கும் பெயர்: noun of multitude, collective noun. 2. குழுஉக்குறிப் பெயர் (யாழ்அக);: slang, cant, conventional name. 3. மொத்தவெண்; aggrigate, total. “பன்னிருகையு மென்புழியும் தொகுதிப்பெயர் வினையொடு தொடராது கையென்பதனோ டொட்டி நிற்றலின்” (தொல். சொல். 33, சேனா.);. [தொகுதி + பெயர்] |
தொகுதியெண் | தொகுதியெண் dogudiyeṇ, பெ. (n.) மேல் வாயிலக்கம்; numerator. [தொகுதி + எண்] |
தொகுதியொருமை | தொகுதியொருமை dogudiyorumai, பெ. (n.) குலத்தினை (சாதி); உணர்த்துதற்கு வரும் ஒருமை; singular noun denoting a genus, class or group. “அதன் பொருள் என்பது தொகுதி யொருமை யாதலின்” (நன். 297, உரை);. எறும்புப் புற்று, பாம்புப் பண்ணை. [தொகுதி + ஒருமை] |
தொகுத்தமொழியின்வகுத்தனகோடல் | தொகுத்தமொழியின்வகுத்தனகோடல் toguttamoḻiyiṉvaguttaṉaāṭal, பெ. (n.) . சொல்லின்முடிவிலப்பொருள்முடித்தல் (மாறனலங். 25); பார்க்க; see 2. பலவாக வகை செய்து கூறியதனை ஒரு சொல்லால் தொகுத்துக் கூறும் உத்தி (தொல். பொருள். 666);; the literary device of stating by a general term what is described in detail under various heads. |
தொகுத்தல் | தொகுத்தல் togutttal, பெ. (n.) 1. நூல் யாப்பு நான்கனுள் விரிந்த நூலைச் சுருக்கிக் கூறுவது (தொல். பொருள். 652);; synopsis, one of four {}. 2. சொல் அல்லது அசை கெடுதலாகிய செய்யுள் வேறுபாடு; clision of a syllable or syllables in words for the sake of metre. “தொகுக்கும் வழித் தொகுத்தலும்” (தொல். சொல். 403);. |
தொகுத்துக்கூறல் | தொகுத்துக்கூறல் toguttugāṟal, பெ. (n.) முப்பத்திரண்டு உத்திகளுள் நூற் செய்தியை ஓரிடத்தே சுருக்கிக் கூறுவது (தொல், பொருள். 666);; summarising, abridgement, one of 32 utti. գ.V. [தொகுத்து + கூறல்] |
தொகுத்துச்சுட்டல் | தொகுத்துச்சுட்டல் toguttuccuṭṭal, பெ. (n.) தொகுத்துக்கூறல் (நன். 21);; பார்க்க: see [தொகுத்து + கட்டல்] |
தொகுத்துரை | தொகுத்துரை togutturai, பெ. (n.) பொழிப்புரை தொகுத்துக்கூறல் (நன் 21);; free rendering of the text (செஅக);. [தொகுத்து + உரை] |
தொகுநிலைத்தொடர்மொழி | தொகுநிலைத்தொடர்மொழி togunilaittoḍarmoḻi, பெ. (n.) வேற்றுமையுருபு முதலியன நடுவே தொக்கு நிற்கச் சொற்கள் தொடர்ந்து வருவது; a phrase, clause or sentence of two words having ellipsis between them. [தொகுதிதிலை + தொடர்மொழி] |
தொகுபு | தொகுபு togubu, வி.எ.(adv.) கூடி; combine. [தொகுப்பு → தொகுபு] |
தொகுப்பு | தொகுப்பு toguppu, பெ. (n.) 1. தொகை (வின்.);: sum, total. 2. எல்லை;, boundary. 3. கூட்டம்; multitude, crowd. “தொகுப்புறு சிறுவர்” (அருட்பா, பின்னைப் பெரு 32);. [தொகு → தொகுப்பு] தொகுப்பு toguppu, பெ. (n.) 1. ஒன்றாகத் தொகுக்கப்பட்டது அல்லது மொத்தமாகச் சேர்க்கப்பட்டது; தொகுதி; collection, compilation. பாவாணருடைய தொகுப்பில் பல அரிய நூல்களுள்ளன |
தொகுப்பூதியப்பணியாளர் | தொகுப்பூதியப்பணியாளர் toguppūtiyappaṇiyāḷar, ஒட்டுமொத்தச் சம்பளத்தில் பணியாற்றும் பணியாளர்; person appointed in consolidated pay. [தொகுப்பூதியம் + பணியானர்] |
தொகுப்பூதியம் | தொகுப்பூதியம் toguppūtiyam, பெ. (n.) அரசுப் பணியில் சில வகைப் பணியாளருக்கு அடிப்படைச் சம்பளமோ அகவிலைப் படியோ இல்லாமல் மொத்தமாக வழங்கப்படும் மாதச் சம்பளம்; consolidated pay without the distinction of basic pay, allowance, etc. in govt. services. [தொகுப்பு, + ஊதியம்] |
தொகுரு | தொகுரு toguru, பெ. (n.) துவர்ப்பு: astringence. [துவர் → துகர் → துகரு → தொகரு → தொகுரு (கொ.வ);] துவர்ப்பு பார்க்க: See {} |
தொகை | தொகை togai, பெ. (n.) 1. கூட்டம்; assembly, collection. “உன்னடியவர் தொகை நடுவே” (திருவாச. 44. 1); 2. சேர்க்கை; association. “உயர்திணைத் தொகைவயின்” (தொல். சொல். 90, இளம்.);. 3, விலங்கு முதலியவற்றின் திரள்: flock, herd, swarm, school. “புள்ளின் றொகையொப்ப” (பு. வெ. 6, 20); 4. கொத்து: bunch. “தொகைப்பிச்சம்” (கம்பரா. எதிர்கோட் 7); 5. மொத்தம்; sum, amount, total. 6. பணம்; property, stock, money. 7. எண்; number. “ஏயினாகிய வெண்ணி னிறுதியும், யாவயின் வரினுந் தொகையின் றியலா” (தொல். சொல். 292);. 8. கணக்கு; calculation, account, measure. “தொகையி லன்பினால்” (கம்பரா. கினைகண்டு 102);. 9. கூட்டல்; Addition. 10. தொகுத்துக் கூறுகை (நன். 50);; summary, epitome, substance of a narrative, abstract of a subject. 11. தொகைச்சூத்திரம் பார்க்க; see 12. உருபு முதலியன மறைகை; omission, as of an inflectional sign in combination of words. “ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே” (தொல். சொல். 78, இனம்பூ.); 13. வேற்றுமைத்தொகை, வினைத் தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என்று அறுவகையாய் ஒரு சொன்னிர்மைப் பட்ட தொடர்ச்சொல்; compound word of six kinds, “எல்லாத் தொகையு மொருசொன் னடைய” (தொல். சொல். 420); 14. ஆசிரியம் (திவா);; a class of verse. 15. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள்; ancient anthologies, numbering eight. அது தொகைகளினுங் கீழ்க்கணக்கினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க. (தொல். பொருள். 5, உரை);. 16, ஐம்புலன்களின் கூட்டத்தாலாகிய ஆதன் (மணிமே.30:92);; the individual soul, as a product of aim-pulan. 17. புலவர் கழகம்: academy. “மதுரைத் தொகை யாக்கினானும்” (தேவா. 1179,11);. 18. கலந்திருப்பதை இனம் இனமாகப் பிரித்தெடுக்கை (வின்);: assortment [துல் → துன் → தொன் → தொழு = மாட்டு மத்தை. தொழு → தொகு. மு – க, போவித்திரிபு. ஒ.தோ, மழவு → மகவு. முழை → முகை. தொகு → தொகுப்பு = கூட்டம், தொகை. தொகு → தொகை (வேக. 127-130);] ஐந்தும் அடக்கடக் கென்பர் அறிவிலார் ஐந்தும் அடக்குதற் கமரரும் அங்கிலை ஐந்தும் அடக்கிடில் அசேதனமாம் என்றிட்டு ஐந்து மடக்கியமர்ந்திருந் தாரே (திருமந்); |
தொகைகட்டு | தொகைகட்டு1 dogaigaṭṭudal, செகுவி (v.i.) 1. மொத்தமிடுதல்; to sum up, to make out the total; to cast up. 2. கணக்கு முடிவு செய்து பணம் கொடுத்தல்; to deliver up; to make over, as money; to pay, as into the treasury; to make a final payment (W);. [தொகை + கட்டு-.] |
தொகைகட்டு-தல் | தொகைகட்டு-தல் dogaigaṭṭudal, 5 செகுன்றாவி (v.t.) முடித்தல் (w);; to finish, conclude, bring to an end [தொகை + கட்டு-.] |
தொகைகாட்டு-தல் | தொகைகாட்டு-தல் dogaigāṭṭudal, 5 செ.குவி (v.i.) 1. கணக்கு ஒப்புவித்தல்; to give a written account. 2. கணக்கை மிகுதியாகக் காட்டுதல்; to make a sum appear large, to magnify. [தொகை + காட்டு-.] |
தொகைக்காரன் | தொகைக்காரன் togaiggāraṉ, பெ. (n.) செல்வன்l; moneyed man; rich man. [தொகை + காரன்] |
தொகைக்குடிநீர் | தொகைக்குடிநீர் togaigguḍinīr, பெ. (n.) சரக்குகளின் தொகையைக் கொண்டு பெயரிடப்பட்ட கருக்கு வகை; a name given to decoction according to the prescribed number of drugs. [தொகை + குடிநீர்] |
தொகைக்குறிப்புச்சொல் | தொகைக்குறிப்புச்சொல் togaigguṟippuccol, பெ. (n.) குறிப்பினால் தொகை கொண்ட பொருளை உணர்த்தும் எண்ணுப்பெயர் (நன். 269);; numeral noun suggesting the intended object by contest. [தொகை + குறிப்பு + சொல்] |
தொகைச்சூத்திரம் | தொகைச்சூத்திரம் togaiccūttiram, பெ. (n.) குறிப்பிட்ட செய்தியின் பகுப்பை எண்ணிட்டுக் காட்டும் நூற்பா (நன். 20);; sutra enumerating the classification of a topic. [தொகை + குத்திரம்] Skt. {} → த. சூத்திரம் |
தொகைதை-த்தல் | தொகைதை-த்தல் dogaidaiddal, 4 செகுவி. (v.i.) கணக்கு முடித்தல் (இ.வ);: to cast up, to close an account. [தொகை + தை-.] |
தொகைநிலை | தொகைநிலை togainilai, பெ. (n.) 1. திரளாக நிற்கை; assembling, forming a class. 2. சுருங்கி நிற்கை (வின்.);; contraction. 3. தொகைநிலைத் தொடர் (நன். 361); பார்க்க; see 4. வென்ற வேந்தன் தன் படைகட்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்கு தொகுக்கும் உழிஞைத் துறை (தொல், பொருள். 68);; theme of a victorious king bringing his armies together to honour them. 5. போரில் இருதிறத்தாரும் ஒருங்கொழிந்ததைக் கூறும் புறத்துறை (பு. வெ. 7, 28);; theme of the contending kings destroying each other on the battle field. 6. பகைவேந்தரெல்லாம் ஒருங்கு பணிதலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 6, 32); theme of the simultaneous surrender of hostile kings at the feet of a victorious king. 7. தொகைநிலைச் செய்யுள் பார்க்க; see [தொகை + நிலை. தொகு → தொகை] |
தொகைநிலைச்செய்யுள் | தொகைநிலைச்செய்யுள் togainilaicceyyuḷ, பெ. (n.) ஒருவராலேனும் பலராலேனும் பாடப்பட்டனவாய்ப் பொருள் இடம் காலம் தொழில் என்பன பற்றியும் பாட்டு அளவு என்பன பற்றியும் ஒருங்கு திரட்டப்பட்ட செய்யுள் நூல் first(தண்டி-4);; anthology of poems collected on certain definite principles opp. to {} [தொகை + நிலை + செய்யுள்] ஒருவராலுரைக்கப்பட்டது- திருக்குறள் பலரால் தொகுக்கப்பட்டது-அகநானூறென்னும் நெடுந்தொகை பொருளாற்றொகுத்தது – புறநானூறு இடத்தாற் றொகுத்தது – களவழி நாற்பது காலத்தாற் றொகுத்தது – கார் நாற்பது தொழிலாற்றொகுத்தது – ஐந்திணை பாட்டாற் றொகுத்தது – கலித்தொகை, அளவாற் றொகுத்தது – குறுந்தொகை; |
தொகைநிலைத்தொடர் | தொகைநிலைத்தொடர் togainilaittoḍar, பெ. (n.) தொகை,13 (நன், 362, உரை); பார்க்க: see [தொகை + நிலை + தொடர்] |
தொகைநிலையுருவகம் | தொகைநிலையுருவகம் togainilaiyuruvagam, பெ. (n.) தொகையுருவகம் (யாழ்அக); பார்க்க; see [தொகை + நிலை + உருவகம்] |
தொகைநூல் | தொகைநூல் togainūl, பெ. (n.) தொகை நிலைச்செய்யுள் பார்க்க: see [தொகை + நூல்] |
தொகைப்படுத்து | தொகைப்படுத்து1 dogaippaḍuddudal, 5 செகுன்றாவி (v.t.) 1. மொத்தமிடுதல் (உவ.);: to sum up. 2. பிரித்துக்காட்டுதல் (வின்);; to reduce under various heads. [தொகை படுத்து-.] தொகைப்படுத்து2 dogaippaḍuddudal, 5 செகுவி (v.i) பெரும் பொருள் திரட்டுதல் (வின்.);; to make a large sum, amass wealth. [தொகை + படுத்து-.] |
தொகைப்பிசகு | தொகைப்பிசகு togaippisagu, பெ. (n.) 1. கணக்குத் தவறு: error in reckoning an account. 2. தவறு; mistake, blunder. [தொகை + பிசகு] |
தொகைப்பொருள் | தொகைப்பொருள் togaipporuḷ, பெ. (n.) 1. பிண்டப் பொருள்; gist, summary, “இச்சூத்திரத்து அதிகரணங்காற் போந்த தொகைப் பொருளாவது” (கி போ. பா. 1, 3, பக் 53, கவாமிநா);. 2. தொகைநிலைத் தொடரின் பொருள் (நன். 370);; meaning of a compound word [தொகை + பொருள்] |
தொகைமொழி | தொகைமொழி togaimoḻi, பெ. (n,) பொருளணி வகை; a figure of speech. நெஞ்சினிற் பொருளை நிரப்ப வேறொரு செஞ்சொலிற் காட்டுந் திறமே தொகைமொழி (வீரசோ. 151, உரை.);. எ-டு: வேட்டொழிவ தல்லால் விளைஞர் விளைவயலுட் டோட்ட கடைஞர் சுடுநந்து – மோட்டாமை வன்புறத்து மீதுடைக்கும் வச்சத் திளங்கோவை யின்புறுத்த வல்லாமோயாம். [தொகை + மொழி] |
தொகைமோசம் | தொகைமோசம் togaimōcam, பெ. (n.) 1. தொகைப்பிசகு பார்க்க; see {}. 2. பொருளிழப்பு; loss of money. [தொகை + மோசம்] Skt. {} → |
தொகையடியார் | தொகையடியார் togaiyaḍiyār, பெ. (n.) சிவனடியார்களுள் ஒன்பது பிரிவினராயுள்ள கூட்டவடியார்; the nine group of Saiva saints. [தொகை + அடியார்] சிவனடியார்களின் ஒன்பது பிரிவுகளாவன: தில்லைவாழ் அந்தணர், பொய்யடிமை யில்லாத புலவர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார். முப்பொழுதுத் திருமேனி தீண்டுவார். முழுநீறு பூசிய முனிவர் அப்பாலுமடிச்சார்ந்தார். |
தொகையல் | தொகையல் togaiyal, பெ. (n.) துவையல் (உவ.);; chutney, a kind of strong relish. [துவையல் → தொவையன் (கொ.வ.);] தொகையல் togaiyal, பெ. (n.) தொவச்சல் பார்க்க; see |
தொகையாக்கு-தல் | தொகையாக்கு-தல் dogaiyāggudal, 8 செகுன்றாவி (v.t.) தொகைப்படுத்து-தல் (யாழ்அக.); பார்க்க; see [தொகு → தொகை. தொகை + ஆக்கு-.] |
தொகையிறக்கு-தல் | தொகையிறக்கு-தல் dogaiyiṟaggudal, 6 செ.குன்றாவி (v.t.) 1. தொகைப்படுத்து-தல் (யாழ்அக); பார்க்க; see 2 சிறிது சிறிதாகக் கொடுத்துக் கடனைக் குறைத்தல்: to lessen one’s liability gradually, as by paying in instalments. [தொகு → தொகை. தொகை + இறக்கு-.] |
தொகையுருவகம் | தொகையுருவகம் togaiyuruvagam, பெ. (n.) ஆகிய என்ற உருபு தொக்குவரும் உருவகம்: abbreviated metaphor, in which the word of correlation is understood மிக்கவுவமை விரியா துரையிற் றொக்கு நிற்பது தொகையுரு வகமே (வீரசோ. 159, உரை.);. [தொக்கு → தொகு → தொகை. தொகை + உருவகம்] |
தொகையுவமம் | தொகையுவமம் togaiyuvamam, பெ. (n.) பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராய்ந்துணரும்படி மறைந்து நிற்கும் உவமை (தண்டி 30);; a simile where the point of comparison is not brought out, but is implied, opp. to viri-y-uvamam [தொக்கு → தொகு → தொகை. தொகை + உவமம்] |
தொகையூட்டு-தல் | தொகையூட்டு-தல் dogaiyūṭṭudal, 1.செ.குவி (v.i.) 1. கணக்குச் சரிக்கட்டுதல்; to balance accounts; to strike a balance. 2. கணக்கு மொத்தங் கட்டுதல்; to make out the grand total of an account. [தொகை + பூட்டு-.] |
தொகையேற்று-தல் | தொகையேற்று-தல் dogaiyēṟṟudal, 5 செ.குன்றாவி, (v.t.) 1. சிறுகச் சிறுகக் கொடுத்துக் கடனேற்றுதல்; to increase the debt by frequently lending small sums. 2. எண் கூட்டுதல்; to add up figures. 3. கணக்குப் பதிதல்; to post up accounts [தொகை + ஏற்று-.] |
தொகைவிரி | தொகைவிரி togaiviri, பெ. (n.) நூல்யாப்பு நான்கனுள் விரித்துக் கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக் கூறியதனை விரித்தும் கூறும் முறை (நன். 50);; the method adopted in writing a treatise by summarising the facts elaborately treated by others and elaborating the facts briefly treated by them, one of four {} [தொகு → தொகை. தொகை + விரி] |
தொகைவிரியுருவம் | தொகைவிரியுருவம் togaiviriyuruvam, பெ. (n.) ஆகிய, ஆக என்னும் உருவக உருபுச் சொற்கள் தொக்கும் விரிந்தும் நிற்பது (தண்டி 37);; metaphor in which the words of correlation are understood or marked. எ-டு வையந் தகளியாக வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய கடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை இடராழி நீங்குகவே யென்று |
தொக்கசிவரி | தொக்கசிவரி tokkasivari, பெ. (n.) வலது கால்: right leg (சாஅக.);. |
தொக்கட தொக்கணம் | தொக்கட தொக்கணம்1 dokkaḍadokkaṇam, பெ. (n.) கையினால் குத்தி உடம்பைப் பிடிப்பது; a process consisting in stricking with fist and then pressing the body or its part of a person suffering from some oilment massage(சா.அக);. [தொக்கடம் → தொக்கணம்] |
தொக்கடதைலம் | தொக்கடதைலம் dokkaḍadailam, பெ. (n.) ஐந்தெண்ணெயோடு தில்லைப் பால், முருங்கைப்பட்டை, காட்டு வாகைப்பட்டை, மாவிலிங்கம்பட்டை, பெருங்காயம், இந்துப்பு, வெள்ளைப்பூண்டு, வசம்பு ஆகிய எட்டுச் சரக்குகளையும் பொடித்துப் போட்டுக் காய்ச்சும் நெய்மம்; a name for the medicated oil prepared by boiling the mixture of the five oils. viz. Indian beech, castor, gingelly, margosa and poon with the following eight drugs the tiger’s milk, powders of the barkes of moringa or drum stick tree, common sirisa and lingam tree and the paste of asofoetida rock salt and garlic and sweet flag (சா.அக);. |
தொக்கடம் | தொக்கடம்1 tokkaḍam, பெ. (n.) 1. மிதித்துத் துவைக்கை; pressing, pounding, treading down. 2. தொக்கடி1 பார்க்க; see தொக்கடம்2 tokkaḍam, பெ. (n.) ஊதைநோய் கொண்டவர்களுக்கு உடம்பில் நெய்மத்தைப் பூசிக் கையால் அழுத்தியும் மேலேறி மிதித்தும் இதத்தை உண்டாக்குமோர்வகை மருத்துவ முறை; treatment by massage chiefly consisting in rubbing with medicated oil all over the body or the affected part of a person attacked with rheumatism neuralgia or other nervous affections then pressing and treading with the hands (சா.அக);. |
தொக்கடம்போடு-தல் | தொக்கடம்போடு-தல் dokkaḍambōḍudal, 20 செ.குவி (v.i.). 1. உடம்பு பிடித்தல்; to massage or press the limbs for relief. 2. கசக்கிச் சாறு பிழிதல்; to crush and extract juice, as from leaves; to express [தொக்கடம் + போடு] |
தொக்கடவு | தொக்கடவு tokkaṭavu, பெ.(n.) அடவுமுறைகளில் ஒன்று; a stepping method in dance. [தொக்கு+அடைவு] தொக்கடவு tokkaḍavu, பெ.(n.) அடவுமுறைகளில் ஒன்று; a stepping method in dance. [தொக்கு+அடைவு] தொக்கடவு tokkaḍavu, பெ. (n.) குறுக்குவழி (யாழ்அக);: shortcut [தொக்கடை – தொக்கடவு] |
தொக்கடி | தொக்கடி1 tokkaḍi, பெ. (n.) 1. மரத்திற் பழங்களைப் பொதிந்து வைக்கும் ஒலை மறைவு; a kind of {} covering to protect fruits. on the tree. 2. பழம் வைக்கும் சிறு கூடை; a small {} basket for fruits. தொக்கடி2 tokkaḍi, பெ. (n.) காவற்குடிசை; a small hut for watchers in a field |
தொக்கடை | தொக்கடை tokkaḍai, பெ. (n.) வறுமை (யாழ்ப்);; poverty. |
தொக்கட்டி | தொக்கட்டி tokkaṭṭi, பெ. (n.) தொக்கடி (வின்.); பார்க்க; see [தொக்கடி → தொக்கட்டி] |
தொக்கணம் | தொக்கணம்2 tokkaṇam, பெ. (n.) தொக்கடம்1 (பதார்த்த:1484); பார்க்க; see (செஅக);. [தொக்கடம்1 → தொக்கணம்] |
தொக்கம் | தொக்கம் tokkam, பெ.(n.) பல்லாங்குழியில் தேவையான கற்களைப் பெறாவிடின் துரும்பினை எடுத்துப்போடுதல்; a playing method in palankuli game. [தொக்கு-தொக்கம்] தொக்கம் tokkam, பெ.(n.) பல்லாங்குழியில் தேவையான கற்களைப் பெறாவிடின் துரும் பினை எடுத்துப்போடுதல்; a playing method in palankuligame. [தொக்கு-தொக்கம்] தொக்கம்1 tokkam, பெ. (n.) செரிக்காமல் வயிற்றிற் சிக்கிக் கொள்ளும் பொருள் (வின்);: undigested matter adhering to the bowls, [தொங்கு → தொக்கு → தொக்கம்] தொக்கம் tokkam, பெ. (n.) 1. வயிற்றுச் சிக்கல்: any hindrance to the passage of the contents of the stomach. 2. குழந்தைகள் மண் சாம்பல் முதலியவற்றை உட்கொள்வதால் உண்டாகும் குடற்சிக்கல், வயிற்றுப்பிசம், வயிற்றுப் போக்கு முதலியவற்றையுண்டாக்கும் ஒரு வகை நோய்; a disease in children marked by distension of stomach, diarrhoea etc., due to the hindrance to the passage of the intestinal contents and by their swallowing or eating whatever they come across with as mud, ash etc.,(சாஅக);. [தொங்கு → தொக்கு → தொக்கம். எலும்பு முதலியன செறியாமற்றொங்கிக் கொள்ளுதல்] தொக்கம்3 tokkam, பெ. (n.) வழக்கு; law-suit தொக்கக்காரன் (யாழ்.அக.);. தொக்கம் tokkam, பெ. (n.) கொடி; flag. தொக்கயங்க டொக்கெனவே சூறையிட்டு (மான்விடு.96);. |
தொக்கார் | தொக்கார் tokkār, பெ. (n.) 1. கூட்டத்தார்; assembly, company (w);. 2. தோழர் (யாழ்அக.);; friends, adherents [தொக்கு5 + தொக்கார்] |
தொக்கி | தொக்கி tokki, பெ. (n.) கடற்பச்சை (மலை.); பார்க்க; see |
தொக்கிடம் | தொக்கிடம் tokkiḍam, பெ. (n.) எண்ணெய் தேய்கை (யாழ்அக.);; inunction. [தொக்கடம் → தொக்கிடம்] |
தொக்கிநில்-தல் | தொக்கிநில்-தல் tokkiniltal, 14 செ.குவி. (v.i.) (பேச்சில்; எழுத்தில் அல்லது முகக்குறியில் நேரடியாக வெளிப்படுத்தப்படாத கேள்வி, பொருள், உணர்வு போன்றவை); மறைந்து நிற்றல்; to implicit. யார் நீ என்ற வினா கதவைத் திறந்தவரின் முகத்தில் தொக்கி நின்றது. எங்கு போயிருந்தாய் என்றஅவருடைய வினாவில் சினம் தொக்கி நின்றது. [தொக்கு → தொக்கி + நில்] |
தொக்கிந்திரியக்காட்சி | தொக்கிந்திரியக்காட்சி tokkindiriyakkāṭci, பெ. (n.) ஒர் அளவை; இது தொடுதலால் அறிவது; a measurement understood by touch, contact as with objects of sense. [தொக்கித்திரியம் + காட்சி] |
தொக்கு | தொக்கு tokku, பெ.(n.) 1. காரணம், சாக்கு ; excuse, pretex. 2. இளக்காரம்; laxity state. நான் என்றால் எல்லாருக்கும் தொக்காப் போச்சு.(பே.வ.); [தொள்கு-தொக்கு] தொக்கு tokku, பெ.(n.) 1 காரணம், சாக்கு : excuse, pretex. 2. இளக்காரம்; laxity state. நான் என்றால் எல்லாருக்கும் தொக்காப் போச்சு.(பே.வ.); [தொள்கு-தொக்கு] தொக்கு1 tokku, பெ. (n.) 1. பொருட்டின்மை (அற்பம்);; small matter, trifle. அது தொக்காய்ப் போகாது (வின்.); 2. எளிமை; case. சொத்துகளைத் தொக்கிலே அடித்துக் கொண்டு போனான். 3. இளப்பமானவன்; but to ridicule. அவன்தான் எல்லார்க்குந் தொக்கு (இ.வ.);. 4. நேர்மை; attractiveness, neatness. “வரித்தோற் கச்சை தொக்காக வரிந்திறுக்கி” (குற்றா. குற.29);. தொக்கு2 tokku, பெ. (n.) துவையல் வகை (இவ.);: chutney, a kind of strong relish. மாங்காய்த் தொக்கு தக்காளித் தொக்கு. தொக்கு3 tokku, பெ. (n.) தொடுவுணர்ச்சியறிவு: the sense of touch. “வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும்” (மணிமே 27:215);. 2. உடம்புத் தோல் (சூடா.);; skin, cuticle, surface of the body. “அரினத் தொக்கு” (பாரத. இராச. 105);. 3. மரப்பட்டை (தைலவதைல);; bark of a tree. 4. கனியின் தோல்: rind “தொக்குக் கழிந்த சுளைபோலே” (ஈடு 10, 7, 5);. 5. ஆடை cloth, raiment. 6. பற்று; stake, material concern. அக்குத் தொக்கில்லாதவன் (செஅக);. ம. தொக்கு தொக்கு4 tokku, பெ. (n.) ஐம்புலன்களில் ஒன்றான மெய்; one of the five sense organs, skin (சாஅக);. மறுவ, துவக்கு தொக்கு5 tokku, பெ. (n.) நட்பு; friendship. |
தொக்குசை | தொக்குசை tokkusai, பெ. (n.) கல்லு பயிற்றங் கொடி; creeper of stone pulse (சாஅக);. |
தொக்குதகம் | தொக்குதகம் doggudagam, பெ. (n.) நிணநீர்; lymph(சாஅக);. தொக்குநில்-தல் (தொக்குநிற்றல்); tokku-nil-, 14 செ.குவி. (v.i.); வெளிப்படாது நிற்றல் (குறள், 141, உரை);; to be understood, as a particle(செஅக.);. [தொக்கு + நில்-.] |
தொக்குத்தொக்கெனல் | தொக்குத்தொக்கெனல் tokkuttokkeṉal, பெ. (n.) 1. ஈரடுக்கொலிக் குறிப்பு (யாழ்.அக);; onom. expr, of creaking noise, as of shoes. 2. தன்னாடற் குறிப்பு; expr: of rocking unsteady motion, as of a corpulent person in walking. தொக்குத்தொக்கென்று நடக்கிறான். [தொக்கு + தொக்கு + எனல்] |
தொக்கை | தொக்கை tokkai, பெ. (n.) கம்பளத்தாருள் ஒரு வகையான்; a subject of {} தொக்கை tokkai, பெ. (n.) பருமன், தடிமன் (யாழ்ப்);; fat. ஆள் தொக்கையாயிருப்பான் (உவ.);. |
தொக்கைக்குன்றி | தொக்கைக்குன்றி tokkaikkuṉṟi, பெ. (n.) அறுவடையில் இழப்பு; loss or waste in cultivation (S.I.I.v, 499);. [தொக்கை + குன்றி] தொக்கைக்குன்றி2 tokkaikkuṉṟi, பெ. (n.) நிலங்களுக்கு இடும் பசுந்தாள் சாணம் ஆகியவற்றைச் சேர்க்கும் பொது இடத்துக்கு ஊரவையார் பெறும் வரி; tax collected by the village committee, for the place, where the fertilizers are prepared. |
தொங்கட்டம் | தொங்கட்டம் toṅgaṭṭam, பெ. (n.) 1. உடம்பின் ஒர் உறுப்பில் தொங்கும் பாகம், நஞ்சுக் கொடி முதலியன; that which is attached to or hanging in an organ as umbilical cord etc. 2. குடற்றொங்கட்டம்: measentary. [தொங்கு → தொங்கட்டம்] |
தொங்கட்டான் | தொங்கட்டான் toṅgaṭṭāṉ, பெ. (n.) 1. தொங்கலாயுள்ள அணிவகை (j);: any ornament that hangs; a pendant. 2. உடையைத் தளர்வாகக் கட்டுகை; a mode of tying cloth loosely. 3. கடிகார எடை; pendulam of a clock. [தொங்கு → தொங்கட்டம் → தொங்கட்டான்] |
தொங்கணி | தொங்கணி toṅgaṇi, பெ. (n.) தொங்கலணி (வின்.);; pendent ornament. [தொங்கு + அணி] |
தொங்கன் | தொங்கன் toṅkaṉ, பெ.(n) தொங்கவிடும் கொக்கி; hanger. [தொங்கு-தொங்கன்] தொங்கன் toṅgaṉ, பெ.(n.) தொங்கவிடும் கொக்கி; hanger. [தொங்கு-தொங்கன்] தொங்கன் toṅgaṉ, பெ. (n.) robber, thief. ம. தொங்கன், தெ. தொங்க, டொங்க; நா. கொலா. டொங்க பர். டொங்கல: கோண். தொங்க, கொண். டொஙரி; குவி. தொங்க [தொங்கு → தொங்கி → தொங்கன்] |
தொங்கலில் விடு-தல் | தொங்கலில் விடு-தல் toṅkalilviṭutal, 8 செ.கு.வி. (v.i.) 1. ஏமாற்றத்தில் விடுதல்; to deceive. 2. இணைந்திருந்து இடையிலேயே விட்டுவிடுதல்; to omit in the middle. [தொங்கலில்+விழு] தொங்கலில் விடு-தல் doṅgalilviḍudal, 8 செ.கு.வி. (v.i) 1. ஏமாற்றத்தில் விடுதல்; to deceive. 2. இணைந்திருந்து இடையிலேயே விட்டுவிடுதல்; to omit in the middle. [தொங்கலில்+விழு] |
தொங்கலில்விடு-தல் | தொங்கலில்விடு-தல் doṅgalilviḍudal, செ.கு.வி. (v.i.) இடர்ப்படுமாறு விட்டுவிடுதல், உதவி செய்யாமல் விட்டுவிடுதல்; to leave aperson in distress without helping. [தொங்கல்+இல்+விடு] |
தொங்கலுக்குப்பார்-த்தல் | தொங்கலுக்குப்பார்-த்தல் toṅgalukkuppārttal, 4 செகுன்றாவி (v.t.) மந்திரத்தால் வயிற்றுத் தங்கலை நீக்க முயலுதல்; to try to remove extraneous matter sticking in the bowels by magic. |
தொங்கல் | தொங்கல் toṅkal, பெ.(n.) பாடலில் அமையும் தனிச்சீர், சொற்சீர் போன்றவற்றைக் குறிக்கும் சொல்; metric gradation in prosody. [தொங்கு+கல்] தொங்கல் toṅkal, பெ.(n.) அடிமுந்தி; border. [தொங்கு-தொங்கல்] தொங்கல் toṅgal, பெ.(n.) பாடலில் அமையும் தனிச்சீர், சொற்சீர் போன்றவற்றைக் குறிக்குஞ் சொல்; metric gradation in prosody. [தொங்கு+கல்] தொங்கல் toṅgal, பெ.(n.) அடிமுந்தி; border. [தொங்கு-தொங்கல்] தொங்கல் toṅgal, பெ. (n.) 1. தொங்குகை; hanging “தொங்கல்வார் குழல்’ (சீவக. 661); 2. தொங்கற்பொருள் (திருக்கோ:34, உரை);; anything pendent, hangings. 3. அணிகலத் தொங்கல் (திவா.);: pendent part of an ornament. 4. காதணிவகை (யாழ்அக.);; an ear-ornament. 5. தொங்கவிட்டுள்ள ஆடை முந்தி (வின்);; outer end of woman’s cloth either hanging or brought round the neck; end of a man’s cloth thrown over the shoulder. 6. அணியாகுப் பதாகைகள், தோரணங்கள்; decorative hangings, as of cloth; festoons. “தொங்கலுங் குடையும்” (கம்பரா. எழுச்சி. 78);. 7. பருத்த பூமாலை; thick garland. “தோமரமாகத் தொங்கல் சிந்துபு மயங்கினாரே’ (சீவக 2656);. 8. ஐம்பாற் கூந்தலுள் ஒருவகை (பிங்.);; a mode of dressing woman’s hair, one of {} 9. ஆண்மக்களின் மயிர் (திவா.);: man’s hair. 10. மயிற்றோகை (திவா.);: tail of a pea-cock. 11. மயிற்குஞ்சம் (பிங்.);; pea-cock’s feathers, as arranged for a fan or a parasol. 12. வெண் குடை (திவா.);; white umbrella, as an emblem of royalty. “மாமதி தொங்கலாக” (திருப்பு. 871);. 13. சேறாடி குடை சாமரம் முதலிய விருது: insignia of royalty. “கொற்றங் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழ” (ஆதியுலா. 57);. 14. பிணத்தை நீராட்டக் கொண்டு வரும் நீர்க்குடங்களின் மீது பிடிக்கப்படும் துணி: cloth spread above the water-pots while carrying water to wash a corpse. “சின்னமூதத் தொங்கல் வந்திட” (சி.சி. 2.95); 15. வயிற்றுத் தங்கல்: any undigested matter sticking to the bowels. 16. விழக்கூடிய நிலையில் ஒட்டிநிற்கை (யாழ்ப்);; anything sticking and hanging ready to fall. 17. முனை; projection, cape, headland. 18. மூலை; street corner, end of a street, extremity. “தொங்கலுக்குத் தொங்கல் (வின்.);. 19. பெண்களின் மேலாக்குச் சீலை (யாழ்.அக);; cloth worn as upper garment by women. 20. முந்துகை (யாழ்அக.);, going in advance. 21. அணிகலன்களின் கடைப்பூட்டு (யாழ்.அக);; clasp of an ornament. 22. குறை; shortage. முப்பது உருவா தொங்கல். 23 களை கணின்மை (ஆதரவின்மை);; helplessness. அவர்பாடு தொங்கல் தான் (உ.வ);. 24. ஒன்றைப் பற்றியிருக்குந் தன்மை; dependence ம. தொங்கல்: க. தொங்கல்; து. தொங்கெ, தொங்கெலு: பட. தொங்கலு [தொங்கு → தொங்கன். ‘அல்’ தொ.பெ.ஈ.று.] |
தொங்கல் விழு-தல் | தொங்கல் விழு-தல்1 doṅgalviḻudal, செ.குன் றாவி (v.t.) பற்றாக்குறைகாணுதல்; to deficit. [தொங்கல்-விழு-] தொங்கல் விழு-தல்2 doṅgalviḻudal, செ.கு.வி. (v.i.) பணம் முதலியன குறைதல் (டொங்கு விழுதல்);; to decrease, dwindle, to be short as money. மறுவ குறைபடல் [தொங்கல்+விழு-] |
தொங்கல்கழிச்சல் | தொங்கல்கழிச்சல் toṅgalkaḻiccal, பெ. (n.) குழந்தைகளுக்குண்டாகும் ஒருவகைக் கழிச்சல் நோய்; a kind of diarhea in childhood (சா. அக.);. [தொங்கல் + கழிச்சல்] |
தொங்கல்போடு-தல் | தொங்கல்போடு-தல் doṅgalpōṭudal, 20 செகுன்றாவி, (v.t.) மேலாக்கிடுதல்; to wear a cloth as upper garment [தொங்கல் + போடு-.] |
தொங்கல்விடு | தொங்கல்விடு1 doṅgalviḍudal, 18 செகுன்றாவி. (v.t.) தொங்கல்போடு-தல் பார்க்க; see [தொங்கல் + விடு-.] |
தொங்கல்விடு-தல் | தொங்கல்விடு-தல் doṅgalviḍudal, 18 செகுன்றாவி, (v.t.) கருப்பை, பிடுக்கு, பெண்முலை முதலியன தளர்ந்து கீழ் நோக்குதல்; getting loose and hanging downwards as womb, scrotum, female breast etc.,(சாஅக);. |
தொங்கல்விட்டம் | தொங்கல்விட்டம் toṅgalviṭṭam, பெ. (n.) ஒப்பனைக் குஞ்சம் (இவ);; decorative hangings. [தொங்கல் + விட்டம்] |
தொங்கல்விழு-தல் | தொங்கல்விழு-தல் doṅgalviḻudal, 3 செகுன்றாவி (v.t) குறைவாதல்; to be short. முப்பது உருவா தொங்கல் விழுந்திருக்கிறது. [தொங்கல் + விழு-.] தொங்கும் பொருளுக்கும் நிலத்திற்கும் இடையீடிருப்பது போல் வரவிற்கும் செலவிற்கும் இடையீடிருத்தல் (முதா. 60);. |
தொங்கான் | தொங்கான் toṅgāṉ, பெ. (n.) சில்லறை யணிகலக்கள்; small, miscellaneous ornaments. “வங்கானுந் தொங்கானும் மாட்டிக் கிளுகிளுத்து” (ஆதியூரவதாணி.); [தொங்கு → தொங்கன் → தொங்கரன்] |
தொங்காரப்பாய்ச்சல் | தொங்காரப்பாய்ச்சல் toṅgārappāyccal, பெ. (n.) குதிரை முதலியவற்றின் ஒட்டம் (w.);; gallop, as of a horse. [தொங்கு → தொங்கி + பாய்ச்சல் = தொங்கிப் பாய்ச்சல் → தொங்காரப் பாய்ச்சல்] |
தொங்காரம் | தொங்காரம் toṅgāram, பெ. (n.) ஏளனம்; contempt. உனக்கு என்னைப் பார்த்தால் தொங்காரமாக விருக்கிறதா? ம. தொங்காரம் |
தொங்கி | தொங்கி toṅgi, பெ. (n.) தொங்குங்கல் அதாவது ஆட்டுக்கல்; a kind of stone pestle(சா.அக);. [தொங்கு → தொங்கி] தொங்கி toṅgi, பெ. (n.) கள்ளி (யாழ்.அக);; thieving woman. [தொங்கன் (ஆ.பா.); → தொங்கி (பெ.பா);] |
தொங்கிப்பாய்-தல் | தொங்கிப்பாய்-தல் toṅgippāytal, 3 செ.குவி. (v.i.) குதித்தோடுதல்; to jump, to gallap, to skip. [தொங்கி + பாய்-.] |
தொங்கிப்பூ | தொங்கிப்பூ toṅgippū, பெ. (n.) கொடி சம்பங்கி (இ.வ.); பார்க்க; see [தொங்கு → தொங்கி + பூ] |
தொங்கிப்போ-தல் | தொங்கிப்போ-தல் toṅgippōtal, 8 செ.குவி (v.i.) 1. வைத்ததுக் காணாமற் போதல்; to be lodged and lost, as a thing thrown. 2. பொருளிழத்தல்; to be in another’s possession, to be misappropriated, as a deposit. 3. வழியிற்களைத்துத் தங்கல்; to tarry in the road from fatigue. 4. சாதல்; to die. 5. ஓடிப்போதல்; to run away. [தொங்கி + போ-.] |
தொங்கிவிடு-தல் | தொங்கிவிடு-தல் doṅgiviḍudal, 20 செ.கு.வி. (v.i.) தொங்கிப்போ-தல், பார்க்க: see அவன் தொங்கிவிட்டான் (நெல்லை);. [தொங்கி + விடு-.] |
தொங்கு-தல் | தொங்கு-தல் doṅgudal, 5 செ.குவி. (v.i.) 1. நாலுதல்; to hang, to be suspended, to hang down. வறுமை தாளாது தொங்கிவிட்டான் (உ.வ.);. 2. நிலைத்து நிற்றல்; to continue remain long in possession, as another’s property; to be permanent. “தொங்காது போலேயிருந்தது” to stay, abide. “ஆசைப் பட்டார் பக்கல்….தொங்கானாயிற்று” (ஈடு. 7,7,4);. 4. அண்டிக்கிடத்தல்; to be dependent, servile. “தொங்கிநீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கு… பணிசெய்” (தேவா. 393,6);. அவனிடத் தொங்கிக் கொண்டிருக்கிறான். தொங்குவது குட்டிச் சுவர், |
தொங்குகயிறு | தொங்குகயிறு toṅgugayiṟu, பெ. (n.) வள்ளத்திற்கும் கடலில் இறக்கிய வலைக்கும் இடையில் தொங்கும் கயிறு; hanging twine. [தொங்கு + கயிறு] |
தொங்குகாது | தொங்குகாது toṅgukātu, பெ. (n.) வடிந்த காது (உவ.);; hanging ears, stretched ears. [தொங்கு + காது] |
தொங்குகிழவன் | தொங்குகிழவன் toṅgugiḻvaṉ, பெ. (n.) தொண்டு கிழவன்; decrepit, old man. மறுவ, வங்கிழவன் [தொங்கு + கிழவன்] |
தொங்குக் கம்பி | தொங்குக் கம்பி toṅkukkampi, பெ.(n.) பேட்டு அட்டையில் அடியில் உள்ள ஒரு சாண் கம்பி; a string in loom. [தொங்கு+கம்பி] தொங்குக் கம்பி toṅgukkambi, பெ.(n.) பேட்டு அட்டையில் அடியில் உள்ள ஒரு சாண் கம்பி; a string in loom. [தொங்கு+கம்பி] |
தொங்குக்கட்டில் | தொங்குக்கட்டில் toṅgukkaṭṭil, பெ. (n.) நோயாளிகளை எடுத்துப் போகப் பயன்படும் ஒரு நீண்ட மூங்கிலின் நடுவில் தொங்கும் கட்டிலை உடைய ஒரு கருவி(டுவி);; a swinging lifter for carrying sick persons, a cot, or frams suspended by the four corners from a bamboo pole. [தொங்கு+கட்டில்] |
தொங்குங்கல் | தொங்குங்கல் toṅguṅgal, பெ. (n.) ஆட்டுக்கல் (யாழ்அக);; grinding mill-stone. [தொங்கும் + கல்] |
தொங்குசட்டம் | தொங்குசட்டம் toṅgusaṭṭam, பெ. (n.) கூரைவாய்ப் பட்டையில் வைக்கும் பலகை (இ.வ.);; eave board, barge board. [தொங்கு + சட்டம்] |
தொங்குதொப்பூழ் | தொங்குதொப்பூழ் doṅgudoppūḻ, பெ. (n.) மாட்டுக்குற்ற வகை (மாட்டுவா. 17);; a defect of cows and oxen. [தொங்கு + தொப்பூம்] |
தொங்குநாரை | தொங்குநாரை toṅgunārai, பெ. (n.) மாட்டுக் குற்றவகை (மாட்டுவா. 17);; a defect of cows and oxen. [தொங்கும் + நாரை] |
தொங்குநார் | தொங்குநார் toṅgunār, பெ. (n.) எலும்பின் பாகத்தைக் கவர்ந்துள்ள சவ்வு மடிப்பு: any peritoneal or other fold that serves to hold any small bone. 2. கண்ணின் பாவை மேற் கவர்ந்துள்ள மடிப்பு; the suspensory ligament of the eye lens. [தொங்கும் + நார்] |
தொங்குந்தோட்டம் | தொங்குந்தோட்டம் toṅgundōṭṭam, பெ. (n.) உலக வியப்புகள் எட்டனுளொன்றான, பாபிலோன் நகரத்தமைந்துள்ள தோட்டம்; hanging garden of Babylon one of the eight wonders of the world. [தொங்கும் + தோட்டம்] |
தொங்குபறிவு | தொங்குபறிவு toṅgubaṟivu, பெ. (n.) ஒட்டியு மொட்டாமலு மிருக்ககை; hanging just ready to fall or slip off. 2. விலக வழிபார்க்கை; being ready or waiting for a pretext to leave. [தொங்கு + பறிவு] |
தொங்குபாலம் | தொங்குபாலம் toṅgupālam, பெ. (n.) இரு நீண்ட கம்பிகளுக்கிடையே பிணைக்கப் பட்டிருக்கும், இடையில் தூண்களில்லாத இருப்புப் பாலம் (கட்டட நாமா-11);; suspension bridge. [தொங்கு + பாலம்] |
தொங்குபுளுகன் | தொங்குபுளுகன் toṅgubuḷugaṉ, பெ. (n.) செருக்கிக் குதித்து நடக்கும் வீண் பெருமைக் காரன் (வின்);; vain person who walks with a springling gait. [தொங்கும் + புளுகன்] |
தொங்குபுழுதி | தொங்குபுழுதி doṅgubuḻudi, பெ. (n.) வயலில் இறுகாது இளகி நிற்கும் புழுதி (இ.வ.); loose mud, as in fields immediately after ploughing. மறுவ ஈளைக்கழனி, ஈளைப்புலம் [தொங்கு + புழுதி] |
தொங்குபெட்டி | தொங்குபெட்டி toṅgubeṭṭi, பெ. (n.) வில் வண்டியின் பின்பக்கம் அமைக்கப்படும் பெட்டி (இ.வ.);; a box at the rear of a spring cart, [தொங்கு + பெட்டி] |
தொங்குபொறி | தொங்குபொறி toṅguboṟi, பெ. (n.) தொங்குபறிவு பார்க்க;see {} [தொங்குபறிவு → தொங்கு பொறிவு → தொங்குபொறி] |
தொங்குபொறிவு | தொங்குபொறிவு toṅguboṟivu, பெ. (n.) தொங்குபறிவு (யாழ்); பார்க்க;see {} |
தொங்குமஞ்சம் | தொங்குமஞ்சம் toṅgumañjam, பெ. (n.) தூக்கிச்செல்லும் மஞ்சம் (டோலி);; lifter, dooly, a kind of sedan. [தொங்கு+மஞ்சம்] [P] |
தொங்குமதி | தொங்குமதி toṅkumati, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [தூங்கு+மடி] தொங்குமதி doṅgumadi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk. [துங்கு+மடி] |
தொங்குமார் | தொங்குமார் toṅgumār, பெ. (n.) தளர்ந்து கீழ் நோக்கு முலை; sagging bust(சாஅக);. [தொங்கு + மார்] |
தொங்கும்தோட்டம் | தொங்கும்தோட்டம் toṅgumtōṭṭam, பெ. (n.) பார்க்க;see {} [தொங்கும் + தோட்டம்] |
தொசுக்கு | தொசுக்கு tosukku, பெ. (n.) 1. தகாப்புணர்ச்சி: illicit connection, as concubinage. 2. மிச்சம்; remainder, what is left unfinished. நீ எதையுந்; தொசுக் கில்லாமற் செய்யமாட்டாய். [தொடு → தொடுக்கு → தொசக்கு. (முதா.86);] |
தொச்சம் | தொச்சம் toccam, பெ. (n.) நிலுவை (கசர்பா பத்து); (வின்.);; undisturbed balance. இன்னும் எங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொச்சம் இருக்கிறது (இ.வ.);. [தொள்-தொச்சம்] |
தொடக்கப்பள்ளி | தொடக்கப்பள்ளி toḍakkappaḷḷi, பெ. (n.) ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம்; primary school, elementary school. ஆறகமூரிலுள்ள தொடக்கப் பள்ளியில் ஆயிரம்பேர் படிக்கின்றனர். [தொடக்கம் + பள்ளி] |
தொடக்கம் | தொடக்கம் toḍakkam, பெ. (n.) 1. தோற்றம்; origin. 2. ஆதி (திவா.);; beginning. commence ment. “ஊரது உண்டது என்றற்றொடக்கத்தன” (நன். 242. மயிலை.);. 3. முயற்சி (வின்);; means for an attempt. 4. செல்வம் (யாழ்அக);; wealth. 5. வகுப்பு, குலம் (யாழ்அக);; class. [தொடு → தொடங்கு → தொடக்கம் (முதா. 86);] |
தொடக்கறை | தொடக்கறை toḍakkaṟai, பெ. (n.) உடல்; human body. “மும்மல பாண்டத்தொடக்கறையை” (தாயு. பாயப்புலி. 18);. [தொடக்கு1 + அறை-.] |
தொடக்கினி | தொடக்கினி toḍakkiṉi, பெ. (n.) கருவு; foetus in the womb(சாஅக);. [தொடக்கு → தொடக்கினி] |
தொடக்கிழுப்பு | தொடக்கிழுப்பு toḍakkiḻuppu, பெ. (n.) தொடக்குவலிப்பு பார்க்க;see {} (சாஅக);. [தொடக்கு + இமுப்பு] |
தொடக்கு | தொடக்கு toṭakku, பெ.(n.) இயந்திரம் போன்றவற்றில் தொடக்க இயக்கம்; starting as of an engine. இந்தப் பேருந்து தொடக்கு ஆகவில்லை. [தொடு-தொடக்கு] தொடக்கு toḍakku, பெ.(n.) இயந்திரம் போன்றவற்றில் தொடக்க இயக்கம்; starting as of an engine. இந்தப் பேருந்து தொடக்கு ஆகவில்லை. [தொடு-தொடக்கு] தொடக்கு1 doḍakkudal, 5 செ.குன்றாவி (v.t) 1. கட்டுதல்; to tie. ‘நினைத் துன்பத்தாற் றொடக்கினேன்” (சீவக.579);. 2.அகப்படுத்துதல்; to catch hold of ensnare, “விளை பொருள் மங்கையர் முகத்தினும் சொல்லினுந் தொடக்கும்” (கல்லா. 62 28);. 3. அணிதல்; to wear, put on. ‘பாதுகை திருவடி தொடக்கி”(விநாயகபு. 80,278);. 4. பொருத்துதல்; to make to agree. க. தொடகு;தெ. தொடகு தொடக்கு2 doḍakkudal, 5 செ.குன்றாவி. (v.t.) சிக்கிக் கொள்ளுதல்; to get entangled, obstructed. “சங்கத்துங்க விலைக்கதலிப் புதன் மீது தொடக்கி” (பெரியபு. ஆனாய. 4);. க. தொடகு தொடக்கு3 doḍakkudal, 5 செகுன்றாவி (v.t.) தொடங்குதல்; to begin. [தொடங்கு → தொடக்கு] தொடக்கு4 toḍakku, பெ. (n.) 1. கட்டு; tying, binding, entanglement .”படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇ” (பெருங். மகத 2, 13);. 2. பிணைப்பு: bondage. “தொடக் கெலா மறுத்தநற் சோதி” (திருவாச 37);. 3. பற்று: connection, attachment. “தொடக்றுத்தோர் சுற்றமே” (கம்பரா. சரபங். 27);. 4. தீட்டு: uncleanness, as of a woman in her periods or in childbirth. 5. குஞ்சம்; decorative hangings. “தொடக்கொடு துக்கி” (சீவக.1343);. 6. தொடக்கு வடிவு (வின்.); பார்க்க;see {} ம. தொடக்கு [தொடக்கு → தொடக்கு1] |
தொடக்கு-தல் | தொடக்கு-தல் toṭakkutal, 3 செ.கு.வி.(v.t.) இயந்திரம் போன்றவற்றை முதலில் இயக்கச் செய்தல்; to start machine or engine. [தொடு-தொடக்கு] தொடக்கு-தல் doḍakkudal, 3 செ.கு.வி.(v.t.) இயந்திரம் போன்றவற்றை முதலில் இயக்கச் Gloiloš, ; to start machine or engine. [தொடு-தொடக்கு] |
தொடக்குபடு-தல் | தொடக்குபடு-தல் doḍakkubaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. தீட்டு படல்; being unclean through menses. 2. சாவு, பிள்ளைப்பேறு முதலியவற்றால் ஏற்படும் தீட்டு; ceremonial uncleanliness through death, child birth etc.,(சாஅக.);. [தொடக்கு + படு-.] |
தொடக்குப்பைத்தியம் | தொடக்குப்பைத்தியம் toḍakkuppaittiyam, பெ. (n.) மாதவிலக்குக் கோளாறினால் பெண்களுக்கு ஏற்படும் ஒருவித மன வெறிநோய்; a variety of insanity or mania as one of the concomitants of a hysteric condition (சாஅக.);. [தொடக்கு3 + பைத்தியம்] |
தொடக்குவடிவு | தொடக்குவடிவு toḍakkuvaḍivu, பெ. (n.) அணிகல வகை (வின்.);; an ornament [தொடக்கு + வடிவு] |
தொடங்கி | தொடங்கி toḍaṅgi, இடை (part.) ஆதிமுதல்; from, ever since. “தொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை” (நாவடி, 123);. |
தொடங்கிவை-த்தல் | தொடங்கிவை-த்தல் toḍaṅgivaittal, 8 செ.குன்றாவி. (v.t.) முதல் கட்டப் பணியை நடைபெறச் செய்தல்; to inaugurate. திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். [தொடங்கி + வை] |
தொடங்கு | தொடங்கு1 doḍaṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தோற்றுவித்தல்; to begin, commence, originate. “அலர் தொடங்கின்றாலூரே” (ஐங்குறு. 75);. 2. முயலுதல்; to undertake, enter upon, engage in. 3. ஒத்தல்; to resemble “இருவர் நூற்கு மொருசிறை தொடங்கி” (நன்.8);. ம. தொடங்ங்க துடங்ஙுக; க. தொடங்கு; தெ. தெடகு, தொட்டு; து. தொடங்குனி; கூ. தோண்ட;மா. தெட்கெ தொடங்கு2 toḍaṅgu, பெ. (n.) 1. காலணி; footwear. 2. விலங்கு; animal. |
தொடந்தனுர் | தொடந்தனுர் toṭantaṉur, பெ.(n.) விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Villupuram Taluk. [தொடந்தன்+ஊர்] தொடந்தனுர் toḍandaṉur, பெ.(n.) விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Villupuram Taluk. [தொடந்தன்+ஊர்] |
தொடரர் | தொடரர் toḍarar, பெ. (n.) மேவினர் (அகதி);; dependents. |
தொடரல் | தொடரல் toḍaral, பெ. (n.) கடல் (அகநி);: sea, [தொடு → தொடர் + அல் = தொடரல்] |
தொடராமுறி | தொடராமுறி toḍarāmuṟi, பெ. (n.) விடுதலையாவணம் (யாழ்.அக.);; deed of renunciation 2. தொடர்முறி பார்க்க;see {} [தொடர் + ஆ முறி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தொடரி | தொடரி toḍari, பெ. (n.) 1. செடி வகை; a species of jujube. 2. முட்செடி வகை; a thorny straggling shurb. “கடுவுந் தான்றியுங் கொடுமுட் டொடரியும்” (பெருங்.உஞ்சைக், 52, 38);. 3. புலித்தொடக்கி; tiger stopper. [தொடு → தொடர் → தொடரி] தொடரி2 toḍari, பெ. (n.) தொடர்வண்டி பார்க்க;see {} ம. தொடரி, கூரி தொடரி3 toḍari, பெ. (n.) மாழை வளையத் தொடர்; chain. [தொடல் → தொடர் → தொடரி (வேக. 257);] |
தொடரிசைக்குறி | தொடரிசைக்குறி toḍarisaikkuṟi, பெ. (n.) சொல்லும் பொழுது இரண்டு மாத்திரைக் காலம் நிறுத்தும் பொருட்டு இடும் அரைப்புள்ளி (யாழ்ப்.);; semi-colon [தொடர் + இசை + குறி] |
தொடரிடு-தல் | தொடரிடு-தல் doḍariḍudal, 20 செ.குன்றாவி (v.t.) இடைவிடாது செய்தல்; to work at continuously. “பாவிநான் தொடரிட்டதொழில்க ளெல்லாம்” (தாயு. மலைவளர். 4);. [தொடர் + இடு-.] |
தொடரியம் | தொடரியம் toḍariyam, பெ. (n.) பொருள் முற்றுப்பெறுமாறு எழுவாய், பயனிலை ஆகியவற்றைக் கொண்ட சொற்கூட்டு; set of words completed in itself, containing subject and predicate. [தொடர் + இயம்] வாக்கியம் என்பது வடசொல் தொடரியம் toḍariyam, பெ. (n.) கூற்று, வினா போன்றவற்றை வெளிப்படுத்த வினைச் சொல்லை உள்ளடக்கிய முற்றுத்தொடர்: sentence. [தொடர்+இயம்] |
தொடரியல் | தொடரியல் toḍariyal, பெ. (n.) சொற்றொடர் அமைப்பின் விதிமுறைகளையும் சொற் றொடர்களுக்கிடையிலான உறவையும் விளக்கும் மொழியியற் பிரிவு; syntax. [தொடர் + இயல்] |
தொடருறு சுற்றுகை | தொடருறு சுற்றுகை toṭaruṟucuṟṟukai, பெ.(n.) நடனத்திற்குரிய வினைகளில் ஒன்று: one of the action in dance. [தொடர்+உறு+சுற்றுகை] தொடருறு சுற்றுகை toḍaruṟusuṟṟugai, பெ.(n.) நடனத்திற்குரிய வினைகளில் ஒன்று; one of the action in dance. [தொடர்+உறு+சுற்றுகை] |
தொடரெழுத்து | தொடரெழுத்து toḍareḻuttu, பெ. (n.) அவனடித் தான், வந்தடித்தான் என்னுமிடங்களில் னகரமும் தகரமும் போல் நிலைமொழி யிற்றையும் வருமொழி முதலையும் தழுவி நிற்கும் எழுத்து (யாழ்அக.);; the letter formed by the combination of the final consonant or the final shortened ‘u’ of a word and the initial vowal of the succeeding word as or in அவனடித்தான் and த in வந்தடித்தான். [தொடர் + எழுத்து] |
தொடரொழுக்கு | தொடரொழுக்கு toḍaroḻukku, பெ. (n.) தடையில்லாத ஒழுக்கு; uninterrupted or free flow of anything(சாஅக);. [தொடர் + ஒழுக்கு] |
தொடர் | தொடர்1 toḍartal, 3 செ.கு.வி. (v.i.) 1. இடையறாது வருதல்; to follow uninterruptedly; to continue in unbroken succession. “தொடர்ந்த குவளைத் தூநெறி யடைச்சி” (பதிற்றுப். 27, 2);. 2. பிணைந்து நிற்றல்; to be linked. “தாடொறுந் தொடர்ந்த தழங்குபொற் கழலின்” (கம்பரா. நிந்தனை 6);. 3. அமைதல்; to form. “வாரண வுரித்தொகுதி நீவி தொடர” (கம்பரா. விராதன். 14);. 4. மிகுதல்; to increase. “தம்முட்பகை தொடர்ந்து” (பரிபா. 7, 72);. 5. நெருங்குதல்; to be close-knit. “வரைமலை – யெல்லா நிறைந்து முறழ்ந்து நிமிர்ந்துத் தொடர்ந்தும்” (பரிபா. 19, 82);. க. தொடர் [தொடு → தொடர்] தொடர்2 toḍartal, 2 செகுன்றாவி. (v.t.) 1. பின் புற்றுதல்; to follow after, cling to, pursue. “அவரை அரக்கியர் தொடர்குவர்” (கம்பரா. ஊர்தேடு.22);. 2. ஊக்கத்தோடு மேற் கொள்ளுதல் (வின்);; to insist upon, persist in with energy, perseverein. 3. பயிற்சி செய்தல்; to practise, pursue, as study. “வடகலை தொடர்வார்” (கோயிற்பு.திருவிழா 32);. 24, தேடுதல்; to seek out, find out, trace. “மறையிலீறமுன் றொடரொணாத நீ” (திருவாச. 5, 95);. 4. வழக்குக் கிழுத்தல்; to prosecute, sue, அந்தக் கடனுக்கு உன்னைத் தொடரப் போகிறேன் (யாழ்.அக.);. 6. கட்டுதல் (திவா.);; to connect, tie, bind. “சிறுமணி தொடர்ந்து” (நற். 220);. 7. பற்றுதல்: to seize. “யானுன்னைத் தானை தொடரவும்” (புவெ. 12, பெண்பாற் 18);. 8. பெறுதல்; to get, obtain. “சாந்தினணி தொடர்ந்து” (புவெ. 12, பெண்பாற் 11);. 9. வினவுதல்; question, enquire. “தோடவிழ் தார் யானுந் தொடர” (பு. வெ. 11, பெண்பாற்.10.);. 10. தாக்குதல் (வின்.);; to assail, attack. 11. நெருங்குதல்; to be near or close to. 12. தொங்கவிடுதல்; to hang. “மாலை தொடரி”(அகநா.86);. தெ. தொடரு. தொடர்3 toḍar, பெ. (n.) 1. தொடர்கை: following, succession. 2. தொடரி (சங்கிலி);; chain “தொடர்ப்படு ஞமலியின்” (புறநா. 74);. 3. விலங்கு fetters. “தொடர் சங்கிலிகை” (திவ். பெரியாழ். 1, 7, 1);. 4. வரிசை (வின்.);; series. 5. சொற்றொடர்; phrase; clause; sentense; compound-word. இறைக்குருவனார் தம் கட்டுரையில் கழக இலக்கியத் தொடர்களை மிகுதியாக எடுத்தாண்டுள்ளார். 6. நட்பு; friendship, love. “நல்லார் தொடர் கைவிடல்” (குறள், 450);. 7. உறவு (சூடா..);; connection, relation. 8. கால்வழி; lineal succession. 9. பழைமை (யாழ்அக.);; long-standing connection. 10. பூமாலை (யாழ்அக.);; flower garland. 11. நூல் (யாழ்அக.);; thread. 12. பிசின் (யாழ்அக.);; gum, glue. தொடர்4 toḍar, பெ. (n.) 1. நாய்; dog. 2. கோவை; Indian caper. 3. குடற்றொடர்; that portion of the alimentary canal either above or below the region of intestines (சாஅக.);. தொடர் toḍar, பெ. (n.) குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருமுறை எனத் தொடர்ந்து வருவது; seriol. மாதிகையில் வந்த கட்டுரைத் தொடர் முடிந்துவிட்டது. தொடர்3 toḍar, பெ. (n.) வழக்குத் தொடுத்தல்; file a suit. எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் மீது இழப்பீட்டு வழக்குத் தொடர்ந்தார். |
தொடர் உறு சுற்றுகையாட்டம் | தொடர் உறு சுற்றுகையாட்டம் toṭaruṟucuṟṟukaiyāṭṭam, பெ. (n.) பாடலுக்கு ஆடி முடித்த பின், மாற்றத்திற்காக ஆடும் ஆட்டம்: dance for a change after advance for a song. (35:244);. [தொடர்+உறு+சுற்றுகை+ஆட்டம்] தொடர் உறு சுற்றுகையாட்டம் toḍaruṟusuṟṟugaiyāḍḍam, பெ.(n.) முடித்த பின், மாற்றத்திற்காக ஆடும் ஆட்டம் : dance for a change after advance for a song. (35:244);. [தொடர்+உறு+சுற்றுகை+ஆட்டம்] |
தொடர் கண்ணி | தொடர் கண்ணி toḍarkaṇṇi, பெ. (n.) தொழுகண்ணி பார்க்க;see {} (சாஅக);. |
தொடர் தாவு-தல் | தொடர் தாவு-தல் toṭartāvutal, 3 செ.கு.வி. (vi.) விளையாட்டில் குனிந்தவரைத்தொடர்ந்து தாவுதல்; to climb on the bending person in play. (த.நா.வி.);. [தொடர்+தாவு] தொடர் தாவு-தல் doḍardāvudal, 3 செ.கு.வி. (v.i.) விளையாட்டில் குனிந்தவரைத் தொடர்ந்து தாவுதல்; to climb on the bending person in play. (த.நா.வி.). [தொடர்+தாவு] |
தொடர்ஒட்டம் | தொடர்ஒட்டம் toḍaroḍḍam, பெ. (n.) 1. ஒட்டத் தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையைத் தந்து மற்றவர் அந்த இடத்திலிருந்து ஒட்டத்தைத் தொடர்ந்து ஓடி நிறைவேற்றும் ஒட்டப் போட்டி; relay race. 4×4 மீட்டர் பெண்களுக்கான தொடர் ஒட்டம். 2. விளையாட்டுப் போட்டி, விழா முதலியன நடைபெறும் இடத்துக்கு ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் ஒடி ஒன்றைக் கொண்டு வருதல்; running in relays as in bringing the torch etc. சென்னையில் நடந்த பாவாணர் நூற்றாண்டு விழாவுக்கு அவர் பிறந்த ஊரான நெல்லையிலிருந்து ஒளிப்பந்தத்தைத் தொடர் ஓட்டமாகக் கொண்டு வந்தனர். [தொடர் + ஒட்டம்] |
தொடர்கதை | தொடர்கதை doḍarkadai, பெ. (n.) வார, மாத இதழ்களில் பகுதி பகுதியாகத் தொடர்ந்து வெளியிடப்படும் நீண்ட கதை; serial in periodicals. [தொடர்5 + கதை] |
தொடர்குரு | தொடர்குரு toḍarkuru, பெ. (n.) கொப்புளங்கள் நெருங்கத் தோன்றும் ஒர் அம்மை நோய்: confluent variola (சாஅக.);. [தொடர் + குரு. குரு – கொப்புளம்] |
தொடர்கோவை | தொடர்கோவை toḍarāvai, பெ. (n.) 1. தொடரி (சங்கிலி);; chain, 2. கட்டளை: commanding word. 3. தொடர்; connection. 4. நூல்; thread. 5. பஞ்சு; cotton thread. 6. பழைமை; ancient. 7. பிசின்; paste. 8. பூமாலை; garland. 9. மணம்; smell. 10. விலங்கு; animal. [தொடர் + கோவை] |
தொடர்சிரங்கு | தொடர்சிரங்கு toḍarciraṅgu, பெ. (n.) ஒன்றன் பின் ஒன்றாய்க் கிளைக்கும் சிரங்கு; itch rising one after the other (சாஅக.);. [தொடர் + சிரங்கு] |
தொடர்சொற்புணர்த்தல் | தொடர்சொற்புணர்த்தல் toḍarcoṟpuṇarttal, பெ. (n.) உத்தி முப்பத்திரண்டனுள் ஒன்றற் கொன்று தொடர்புள்ள சொற்களைச் சேர்த்துக் கூறுவது (நன். 14);; grouping related words, one of 32 utti. [தொடர் + சொல் + புணர்] |
தொடர்சொல் | தொடர்சொல் toḍarcol, பெ. (n.) தொடர்ச் சொல் பார்க்க;see {} [தொடர் + சொல்] ஒற்று மிகுந்தும் மிகாமலும் வரும் இயல்புடையது இச்சொல். |
தொடர்ச்சி | தொடர்ச்சி toḍarcci, பெ. (n.) 1. தொடர்கை; pursuit, following, continuance. 2. தொடர்பு; association, connection, touch. ‘முந்தை யறிவின் றொடர்ச்சியினால்” (பெரியபு. சண்டேக. 13);. 3. உறவு முறை; relationship. 4. கொடிவழித் தொடர்பு; heriditary succession, lineal descent. 5. நட்பு; friendship, intimacy. “தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியும்” (திரிகடு.1);. 6. வரிசை: series, train, range, row, chain. “சுருந்தேன் றொடர்ச்சியும்” (கல்லா. 26, 30);. 7. பூங்கொத்து (பிங்.);; cluster or bunch of flowers. 8. கரணிய கருமியப் பொருட்டு; chain of causes and effects. “தொடர்ச்சி வித்து முளைதா ளென்றிந் நிகழ்ச்சியிலவற்றை நெல்லென வழங்குதல்” (மணிமே. 30:200);. 9. வழக்குத் தொடர்ச்சி (யாழ்.22);; claim in a law-suit. 10. பேய்பிடிக்கை (வின்.);; demoniacal possession. 11. தொடுக (உவ);; illicit connection, concubinage. 12. முயற்சி (யாழ்அக.);; effort. [தொடு → தொடர் → தொடர்ச்சி] |
தொடர்ச்சிக்காரன் | தொடர்ச்சிக்காரன் toḍarccikkāraṉ, பெ. (n.) எடுத்துரைப்போன் (வாதி); (வின்.);; claimant, prosecutor, plaintiff. [தொடர்ச்சி + காரன். ‘காரன்’ பெயரீறு.] |
தொடர்ச்சிப்பண்ணு-தல் | தொடர்ச்சிப்பண்ணு-தல் doḍarccippaṇṇudal, பெ. (n.) 15 செ.கு.வி. வழக்கிடுதல் (வின்);; to prosecute in law, file a suit. [தொடர்ச்சி + பண்ணு-.] |
தொடர்ச்சொல் | தொடர்ச்சொல் toḍarccol, பெ. (n.) 1. தொடர் மொழி (வின்.);; compound word. 2. சொற்களின் தொடர் (யாழ்அக.);; phrase; clause; sentence. [தொடர் + சொல்] |
தொடர்நிலைச்செய்யுட்குறியணி | தொடர்நிலைச்செய்யுட்குறியணி toḍarnilaicceyyuḍkuṟiyaṇi, பெ. (n.) வெல்ல வேண்டும் பொருளின் கரணியத்தை வெளிப்படையாகக் கூறும் அணிவகை அணியி. 60); a figure of speech in which the cause that is to be inferred is plainly stated in words. [தொடர்திலை + செய்யுள் + குறி + அணி] |
தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறனி | தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறனி toḍarnilaicceyyuḍporuḍpēṟaṉi, பெ. (п.) தண்டத்தைத் தின்ற எலி அதிலேயுள்ள அப்பத்தையுந் தின்றிருப்பது பெறப்படுவது போல வெளிப்படையான செய்தியை யுணர்த்தும் அணிவகை (அணியி.50);; a figure of speech in which a statement leads to an inference by the application of __, [தொடர்திலைச்செய்யுள் + பொருட் பேறணி] |
தொடர்நிலைச்செய்யுள் | தொடர்நிலைச்செய்யுள் toḍarnilaicceyyuḷ, பெ. (п.) ஒரு கதைமேல் நாற் பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுணுால் (சீவக. 1, உரை); narrative poem, cpic poem. [தொடர்திலை + செய்யுள்] இது, பொருள் தொடர்நிலைச் செய்யுளும், சொற்றொடர் நிலைச் செய்யுளும் என இரு வகைத்து. |
தொடர்ந்தார் | தொடர்ந்தார் toḍarndār, பெ. (n.) நண்பர் (சூடா.);; friends, companion. [தொடு → தொடர் → தொடர்ந்தார்] |
தொடர்ந்து | தொடர்ந்து toḍarndu, பெ. (n.) 1. இடைவிடாமல்; continuously, without break.. மூன்று நாட்களாகத் தொடர்ந்து காய்ச்சல், 2. அடுத்து, உடனே; following immediately, after. இடி மின்னலைத் தொடர்ந்து அடைமழை பெய்ததது; கூட்டத்தைத் தொடர்ந்து விருந்து உண்டு. [தொடர் → தொடர்த்து] |
தொடர்ந்தேற்றி | தொடர்ந்தேற்றி toḍarndēṟṟi, பெ. (n.) 1. விடா முயற்சி (வின்.);; perseverance, persistence. 2. தொடர்ச்சி (யாழ்அக.);; continuity. [தொடர்ந்து + ஏற்றி] |
தொடர்ந்தேற்றியாய் அரை-த்தல் | தொடர்ந்தேற்றியாய் அரை-த்தல் toḍarndēṟṟiyāyaraittal, 4 செ.குன்றாவி, (v.t.) கை யோயாமல்அரை-த்தல் பார்க்க;see {} (சாஅக.);. |
தொடர்பற | தொடர்பற toḍarpaṟa, பெ. (п.) முழுவதும்; entirely, without the least trace. “இப்புனத்துத் தினையுள்ளது இன்றுதொடர்பறக் கொய்தற்றது” (திருக்கோ. 143. அவ);. [தொடர்பு + அற] |
தொடர்பின்மையணி | தொடர்பின்மையணி toḍarpiṉmaiyaṇi, பெ. (п.) தொடர்பின்றி வினை நிகழ்ந்ததாகக் கூறும் அணி (அணியி. 37);; a figure of speech in which a fact is stated without any refevancy, [தொடர்பு + இன்மை + அணி] |
தொடர்பு | தொடர்பு1 toḍarpu, பெ. (n.) 1. தொடர்ச்சி, 1, 2, 3, 4, 6, 8, பார்க்க;see {} 2. நட்பு; attachment, friendship. ‘அஞ்சுசு கேள்போற் பகைவர் தொடர்பு” (குறள், 882);. 3. பாட்டு (பிங்.);; verse, poem. “ஏனோர் வளங்கெழு தொடர்பு போலும் மற்றைய பழமும்” (பிரபுவிங். ஆரோக. 36);. 4. நெறி; முறைமை; rule, principle. “உயிரெலா பிரிந்துபோந் தொடர்பு” (சேதுபு. கத்தமா. 82);. 5 ஒட்டுகை (வின்.);; stickiness. [தொடு → தொடர் → தொடர்பு] தொடர்பு toḍarpu, பெ. (n.) 1. உடற்றொடர்பு; carnal intercourse. 2. உறவு; chemical affinity (சாஅக);. [தொடு → தொடர் → தொடர்பு] |
தொடர்புகொள்-தல் | தொடர்புகொள்-தல் toḍarpugoḷtal, 7 செகுன்றாவி.(v.i.) 1. செய்திப் பரிமாற்றம் கொள்ள வழி ஏற்படுத்துதல்; getin touch with. மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன் (உ.வ.);. பேராசிரியரோடு மடல் வழியாகத் தொடர்பு கொண்டேன் (உவ.);. இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் (உவ.);. [தொடர்பு + கொள்] |
தொடர்புநோய் | தொடர்புநோய் toḍarpunōy, பெ. (n.) பிறப்பிலேயே வாய்த்த நோய்; hcreditary disease(சாஅக.);. [தொடர்பு + நோய்] |
தொடர்புயர்வுநவிற்சி | தொடர்புயர்வுநவிற்சி toḍarpuyarvunaviṟci, பெ. (n.) தொடர்பில்லாதிருப்பத் தொடர்பையும் தொடர்பிருப்பத் தொடர் பின்மையையும் கூறும் உயர்வு நவிற்சியணி: a variety of hyperbole in which an imaginary connection is stated between two objects. [தொடர்பு + உயர்வு நவிற்சி] |
தொடர்ப்பாடு | தொடர்ப்பாடு toḍarppāḍu, பெ. (п.) 1. தொடர்ச்சி (யாழ்.அக);; continuity. 2. பற்று: connection, attachment. “மற்றுந் தொடர்ப் பாடெவன்கொல்” (குறள், 345);. 3. காம நுகர்ச்சி: sexual enjoyment. உய்யு மேற்றோடர்ப் பாட்டினிங் கியாவையும் எய்தி னார்களு முய்பவென்றோதினான் (சீவக. 1426);. [தொடர் → தொடர்பாடு] |
தொடர்ப்பூ | தொடர்ப்பூ toḍarppū, பெ. (п.) விரிபூ (பிங்.);: full-blown blossom [தொடர் + பூ] |
தொடர்முருந்து | தொடர்முருந்து toḍarmurundu, பெ. (n.) மெதுவெலும்பு; loose cartilage(சாஅக.);. மறுவ. முருக்கெலும்பு [தொடர் + முருத்து] |
தொடர்முறி | தொடர்முறி toḍarmuṟi, பெ. (n.) ஒருவர் மீது இனி வழக்குத் தொடர்வதில்லை என்று உறுதி செய்து எழுதிக் கொடுக்கும் ஆதரவுச் சீட்டு (W.G);; a deed or promise in writing not to pursue a person further at law. [தொடர் + முறி] |
தொடர்முழுதுவமை | தொடர்முழுதுவமை doḍarmuḻuduvamai, பெ. (n.) உவமானச் சொற்றொடரிலும், உவமேயச் சொற்றொடரிலும், பொதுத் தன்மையைத் தெரிவிக்குஞ் சொல் தனித்தனி வரும் அணி (அணியி. 17);; a figure of speech in which the point of comparison is clearly stated both in the sentence containing the __, [தொடர் + முழுதும் + உவமை] |
தொடர்மொழி | தொடர்மொழி toḍarmoḻi, பெ. (n.) 1. இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துகளைக் கொண்ட சொல்; a word of more than two letters. “இரண்டிறந் திசைக்குத் தொடர் மொழி யுளப்பட” (தொல். எழுத்து. 45);. 2. சொற்களால் ஆகுந்தொடர்; clause or sentence made up of words. “தொடர் மொழி பலபொருளன” (நன். 260);. [தொடர் + மொழி] |
தொடர்வட்டி | தொடர்வட்டி toḍarvaḍḍi, பெ. (n.) வட்டிக்கு வட்டி; compound interest [தொடர் + வட்டி] |
தொடர்வண்டி | தொடர்வண்டி toḍarvaṇḍi, பெ. (n.) பல பெட்டிகளைக் கொண்ட வண்டித் தொடர்; train. மறுவ. தொடரி [தொடர் + வட்டி] |
தொடர்வு | தொடர்வு toḍarvu, பெ. (n.) தொடர்ச்சி பார்க்க;see {} “சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான்” (திருவாச. 8, 20);. |
தொடர்வைப்பு | தொடர்வைப்பு toḍarvaippu, பெ. (n.) தொடர்வைப்புக்கணக்கு பார்க்க;see {} [தொடர் + வைப்பு] |
தொடர்வைப்புக்கணக்கு | தொடர்வைப்புக்கணக்கு toḍarvaippukkaṇakku, பெ. (n.) வங்கி, அஞ்சல் நிலையம் முதலியவற்றில் குறிப்பிட்ட ஆண்டுகள் வரைத் திங்கள்தோறும் தொடர்ந்து ஒரு தொகையைச் சேமித்து வட்டியோடு திரும்பப் பெறுதல்; recurring deposit in a bank or post office, etc. [தொடரிவைப்பு + கணக்கு] |
தொடலவம் | தொடலவம் toḍalavam, பெ. (n.) நெட்டி; pith(சாஅக.);. |
தொடலி | தொடலி toḍali, பெ. (n.) தொடரி1 (யாழ்அக.); பார்க்க;see {} [தொடு → தொடரி → தொடலி] |
தொடலை | தொடலை toḍalai, பெ. (n.) 1. தொங்கவிடுகை; hanging, suspension. “தொடலை வாளர்” (மதுரைக். 636);. 2 மாலை; garland. “தொடலைக் குறுந்தொடி” (குறள், 113.5);. 2. மகளிர் விளையாட்டுவகை (திவா.);; a girls game. 3. மணிக்கோவைகளால் தொடுக்கப்பட்ட மேகலை; jewelled girdle. “தொடலை யல்குற் றொடித்தோண் மகளிர்” (புறநா. 339);. [தொடு → தொடல் → தொடலை (வேக 251);] |
தொடலைவயல் | தொடலைவயல் toṭalaivayal, பெ.(n.) அறந் தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Arantangi Taluk. [தொடலை+வயல்] தொடலைவயல் toḍalaivayal, பெ.(n.) அறந் தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Arantangi Taluk. [தொடலை+வயல்] |
தொடல் | தொடல் toḍal, பெ. (n.) தொடரி பார்க்க;see {} [தொடு → தொடர் → தொடல்] |
தொடவல் | தொடவல் toḍaval, பெ. (n.) மாலை (அகநி.);; garland [தொடு → தொடவு → தொடவல் (வேக. 257);] |
தொடாக்காஞ்சி | தொடாக்காஞ்சி toṭākkāñji, பெ. (n.) போர்ப் புண்ணுற்ற தன் கணவனைப் பேய் தீண்டுதலை நீக்கிய மனைவி தானுந் தீண்டா திருத்தலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 4.19);; a theme describing the devils being scared away by the ghastly wounds of a warrior lying in the battle field. [தொடு + ஆ + காஞ்சி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தொடாச்சாதி | தொடாச்சாதி toṭāccāti, பெ. (n.) தீண்டாக் குலம்; untouchable caste. மறுவ, கீழ்ச்சாதி [தொடு + ஆ + சாதி. ‘ஆ’ எதிர்மறை இடைதிவை] |
தொடாப்பூ | தொடாப்பூ toṭāppū, பெ. (n.) 1. விரிந்த பூ; blossomed flower. 2. பெண்குறி மலர்; கன்னிப்பூ; an organ of the female genital (சாஅக.);. [தொடு + ஆ + பூ. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தொடி | தொடி toḍi, பெ. (n.) 1. வளைவு; curve, bend. “தொடிவளைத் தோளும்’ (சிலப். 10:128);. 2. கைவளை (பிங்.);; braccle. “குறுந்தொடி கழித்தகைச் சாபம்பற்றி” (புறநா. 77);. 3. தோள் வளை, armlet, “நீப்ப நீங்காது வரின்வரை யமைந்து… போக்கில் பொலந்தொடி” (நற். 136);. 4. வீரவளை; |
தொடிசு | தொடிசு toḍisu, பெ. (n.) கூத்திவைப்பு; illegitimate connections, concubinage. [தொடு → தொடுக → தொடிக (முதா. 86);] தொடிசு2 toḍisu, பெ. (n.) 1. உடந்தை; support. 2. தொடர்வு; connection. [தொடுக → தொடிக] |
தொடிதோட் செம்பியன் | தொடிதோட் செம்பியன்பெ.(n) சோழ அரசனின் பெயர்: toṭitōṭcempiyaṉpecōḻaracaṉiṉpeyar, [தொடி+தோள்+செம்பியன்] தொடிதோட் செம்பியன் toḍitōḍcembiyaṉ, பெ.(n.) சோழ அரசனின் பெயர்; name of a Chola king. [தொடி+தோள்+செம்பியன்] |
தொடித்தலைவிழுத்தண்டினார் | தொடித்தலைவிழுத்தண்டினார் toḍittalaiviḻuttaṇḍiṉār, பெ. (n.) புறநானூற்றில் 243 ஆம் பாடலை இயற்றிய புலவர்; an ancient poet, author of 243rd poem in __, [தொடித்தலை விழுத்தண்டு → தொடிதலை விழுத்தண்டினார்] |
தொடிமகள் | தொடிமகள் toḍimagaḷ, பெ. (n.) விறலி பார்க்க;see {} “தொடிமண் முரற்சிபோல்” (கலித். 36, 4);. [தொடி + மகள்] |
தொடியொடு | தொடியொடு toḍiyoḍu, armlet. “வலிகெழு தடக்கை தொடியொடு சுடர்வர” (மதுரைக் 720);. ring, ferrule, ornamental knob of an elephant’s tusk. “தொடித்தலை விழுத்தண்டுன்றி” (புறநா. 243);. 5. பாறைக் கிணறுகளில் படியாக உதவ வெட்டப்படும் சுற்றுவட்டம் (இ.வ.);; circular projections in stone wells serving as steps. 6. பலம் என்னும் பண்டைய எடையளவு; a standard weight. “தொடிப்புழுதி கஃசா வுணக்கின்” (குறள். 103);. |
தொடியோள் | தொடியோள் toḍiyōḷ, பெ. (n.) பெண்; woman. [தொடி → தொடியோள்] |
தொடியோள் பெளவம் | தொடியோள் பெளவம் toḍiyōḷpeḷavam, பெ. (n.) குமரியாறு; the ancient river kumari. [தொடியோன் + பெளவம்] குமரியாற்றைக் கடல்கொண்டபின், அவ்விடத்துள்ள கடல் குமரிக்கடல் எனப்பட்டது. இப்போது அப்பக்கத்துள்ள நிலக்கோடி குமரிமுனையென்னப்படுகிறது. கோவலன் காலத்தில் குமரியாறு இருந்தமை, மாடலன் என்னும் மறையோன் அதில் நீராடி விட்டுத் திரும்பும்போது, மதுரையில் கோவலனைக் கண்டதாகக் கூறும் சிலப்பதிகாரச் செய்தியால் அறியலாகும். கோவலன் இறந்து சில ஆண்டுகட்குப் பின், குமரியாற்றைக் கடல் கொண்டது. அதன்பின் சிலப்பதிகாரம் இயற்றப் பட்டதினால், தொடியோள் பெளவமும்” என்று தெற்கிற் கடலெல்லை கூறப்பட்டது. ‘தொடியோள் பெளவம்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் கூறிய குறிப்புரையாவது: “தொடியோள் – பெண்பாற் பெயராற் குமரியென்பதாயிற்று. ஆகவே, தென்பாற் கண்ணதோர் ஆற்றிற்குப் பெயராம். ஆனால், நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பெளவமுமென்றது என்னையெனில், முதலுாழியிறுதிக்கண், தென் மதுரையகத்துத் தலைச்சங்கத்து, அகத்தியனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர், எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரையுள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து, நாலாயிரத்து நானுற்று நாற்பதிற்றி யாண்டு இரீஇயினார், காய்சின வழுதிமுதற் கடுங்கோனிறாயுள்ளார் எண்பத் தொன்பதின்மர் அவருட்கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன், சயமா கீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர்நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றிற்கும் குமரியென்னுமாற்றிற்கு மிடையே எழுநூற்றுக்காவதவாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்முன் பாலை நாடும், ஏழ்பின் பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனைநாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்ல முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும், கடல்கொண்டொழி தலாற் குமரியாகிய பெளவமென்றாரென் றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின், ‘வடிவேலெறிந்த கொடுங்கடல் கொள்ள’ என்பதனாலும், கணக்காயனார் மகனர் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரண வடிகள் முகவுரையானும் பிறவாற்றானும் பெறுதும் என்பது. இதில், பஃறுளியாற்றிற்கும் குமரிக்கும் இடையிலுள்ள சேய்மை 700 காவதம் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ஒரு காவதம் பத்துமைல் என்றும் சொல்லப்படுகிறது. முற்காலத்தில் அது எத்துணைச் சேய்மையைக் குறித்ததோ தெரியவில்லை. இக்கால அளவுப்படி கொண்டாலும், தென்துருவத்திற்கும் குமரி முனைக்கும் இடையிலுள்ள சேய்மை ஏறத்தாழ 7000 மைல் என்பதைத் திணைப்படத்தினின்றும் அறியலாம். தென்துருவ அண்மையில் விக்ற்றோரியா நாடு (Victoria Land); என்றொரு நிலப்பகுதியுமுள்ளது. அப்பகுதியும் குமரி முனையும் ஒருகால் இணைக்கப்பட்டு ஒரு நெடுநிலப்பரப்பாகவும் இருந்திருக்கலாம். ஆனாலும், தென்துருவ வரையில், தமிழ்நாடு இருந்திருக்க முடியாது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒருகாலத்தில் இணைக்கப்பட்டிருந்த ன வென்று மேனாட்டுக் கலைஞர் கூறியிருப்பதினின்றும் இம்முக்கண்டங்களுக்கும் நிலைத்திணை, பறவை, விலங்கு, மாந்தன்குலம், மொழி முதலியவற்றிலுள்ள பல ஒப்புமைகளினின்றும், தெற்கே 3000 கல்தொலைவுவரை தமிழர் வதிந்திருக்கலாமென்று தோன்றுகிறது. குமரியாறு கடலில் அமிழ்ந்தது. கடைக்கழகக் காலமாதலின், இடைக்கழக நூலாகிய தொல்காப்பியப் பாயிரத்திற் குமரியென்று குறிக்கப்பட்டது குமரியாறேயாகும். இது “தொல்காப்பியம் அதன் வழிநூலென்பது உம், அது தானும் பனம்பாரனார், “வடவேங்கடந் தென்குமரி” (பாயிரம்); எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய்தமையிற்…… கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனை நாட்டோடு கெடுவதற்கு முன்னையதென்பது உம்” என்று பேராசிரியர் கூறியதினின்றறியப்படும். ஆகவே, தெற்கில் கடலையெல்லையாகக் கூறும் நூல்களெல்லாம், குமரியமிழ்ந்ததற்குப் பிற்பட்டனவே யாகும். “வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசையுள்ளிட்டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்கம்…” எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லை யாகிய காலத்துச் சிறு காக்கைபாடினியார் செய்தநூல்” என்று பேராசிரியர் கூறியதுங் காண்க. (ஒமொ. 42-44);. |
தொடு | தொடு1 toḍu, பெ. (n.) பழுவெலும்பு; collar bone. [தோள் → தொள் → தொடு] தொடு2 doḍudal, 17 செ.குன்றாவி, (v.t.) 1. தீண்டுதல்; to touch, come in contact with feel or perceive by the touch. “தொடிற்கடி னல்லது” (குறள், 11.59);. 2. பிடித்தல்; to handle, take hold of, use. “தொட்ட மூவிலைச் சூலந் துளக்குவார்” (கத்தபு. வீரபத். 38);. 3. பொருந்துதல்: to be connected, united with or joined to. 4. அணிதல்; to put on, as a ring, clothes. “சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள்” (கலித். 84, 2.3);. 5. தோண்டுதல்; to dig, scoop out, excavate. “குணா.அது கரைபொரு தொடுகடற் குணக்கும்” 6. துளைத்தல்; to pierce through. “உழலை மரத்தைப்போற் றொட்டன வேறு” (கலித். 106);. 7. தொடங்குதல்; to begin. “அன்று தொட்டனங்கனே யாயினான்” (கம்பரா. தாடக. 1);. 8. செலுத்துதல்; to discharge, as an arrow or other missile. “கடுங்கணைக டம்மைத் தொட்டனன்’ (கத்தபு.சூரபன்மன்வ. 191);. 9. உண்ணுதல் (சூடா.);; to eat.10. நினைத்தல்; to think. “நின்பெருமுலை மூழ்க வென்னுளத் தினிற் றொடாமுன்” (கல்லா. 52, 5);. 11. இசைக் கருவி இசைத்தல்; to play, as a musical instrument; to beat, as a drum. “கலித்த வியவ ரியத்தொட் டன்ன” (மதுரைக். 304);. 12 கட்டுதல்; to fasten, insert. “கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டு” (புறநா. 77);. 13. அடித்தல்; to strike, beat. “ததிமுகாதிகளை நான் தொட்டுத் தருகிறேன்” (ஈடு. 3, 5 பிர.);. 14. பிழிதல்; to strain, squeeze out as juice. “நறவுந் தொடுமின்” (புறநா. 262);. 15. ஆணையிடதல்; to swear upon. “தொட்டு விடுத்தே னவனை’ (சீவக. 1876);. 16. எடுத்தல்; to take up, lift. “பதுமுகன் சிலை தொட்டானே” (சீவக. 1862);, 17. வெளுத்தல்; to wash, as clothes. “இவற்றைத் தொட்டபடி” (ஈடு. 10,5,6);. 18. மகளிரொடு கூடுதல் (இ.வ.); to have intercourse. 19. செருப்பணிதல்; to wear, as shoes. “பாதஞ் சேரத்தொடு நீடுசெருப்பு” (பெரியபு. கண்ணப்ப. 62);. [தள் → தொள் → தொடு] தொடுதல் (அல்லது முட்டுதல்); என்பது, உள்ளிருந்து தொடுதல் வெளியிருந்து தொடுதல் என இருவகைத்து கருப்பைக் குள்ளிருந்து தாய் வயிற்றைக் குழவிமுட்டுதல் உள்ளிருந்து தொடுதல், தாய் வயிற்றினின்று பிறந்த உயிர்கள் தம்மை அடுத்தவற்றைத் தொடுவது வெளியிலிருந்து தொடுதல். மரத்துள்ளிலிருந்து துளிரும் நிலத் துள்ளிலிருந்து முளையும் முண்டி வருவது போல, தாய் வயிற்றினுள்ளிருந்து குழவியும் முண்டி வெளிவருவது அதற்குத் தோற்றம்(முதா. 154);. தொடு2 doḍudal, செ.கு.வி. (v.i.) உண்டாதல்: to occur, happen, come into being. “பழிபாவமுந் தொடுமே” (விநாயகபு. 77, 35);. தொடு3 toḍuttal, 17 செ.குன்றாவி (v.t.) 1. இயைத்தல்; to connect, join. 2. விடாது புரிதல்; to frame one after another or weave, தொடு toḍu, பெ. (n.) 1. மருத நிலம்; field, agricultural land. 2. தோட்டம்; garden. 3. ஏமாற்று; deceit, guile. |
தொடு பந்து | தொடு பந்து toṭupantu, பெ.(n.) வட்டக் கோட்டின் மீது நின்றிருப்பவர்கள் பந்தினை மாறி மாறிப் போட்டு விளையாடும்போது தொடுபவன் பந்தைப் பிடிக்க முயலுதல்; ball tag. [தொடு+பந்து] தொடு பந்து toḍubandu, பெ.(n.) வட்டக் கோட்டின் மீது நின்றிருப்பவர்கள் பந்தினை மாறி மாறிப் போட்டு விளையாடும்போது தொடுபவன் பந்தைப் பிடிக்க முயலுதல்; ball tag. [தொடு+பந்து] |
தொடுகடல் | தொடுகடல் toḍugaḍal, பெ. (n.) கீழ்க்கடல்; eastern ocean “குணா அது கரைபொரு தொடுகடற் குணக்கும்” (புறநா. 6);. [தொடு + கடல்] |
தொடுகடி | தொடுகடி toḍugaḍi, பெ. (n.) மேற்கடி; bite, |
தொடுகயிறு | தொடுகயிறு toḍugayiṟu, பெ. (n.) உழவுக் கயிறு; rope used in ploughing ம. தொடு கயறு [தொடு + கயிறு] |
தொடுகறி | தொடுகறி toḍugaṟi, பெ. (n.) உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்கான காய்கறி போன்ற உணவு பொருள்; dish prepared to go with courses of a meal. இரண்டு வகைத் தொடு கறியுடன் விருந்து ஏற்பாடு செய்துள்ளேன். [தொடு + கறி] |
தொடுகழல் | தொடுகழல் toḍugaḻl, பெ. (n.) செருப்பு (அகநி.);; slippers [தொடு + கழல்] |
தொடுகிலும் | தொடுகிலும் toḍugilum, வி.அ.(adv.) ஒரு பொழுதும் (யாழ்ப்.);; it all, in any wise. |
தொடுகுறி | தொடுகுறி toḍuguṟi, பெ. (n.) கிணறு வெட்டும் முன் அவ்விடத்தில் உள்ள நீரின் ஆழம், தன்மை அறிவதற்குப் பின்பற்றப்படும் வழக்கு; a measurement used to know the depth of the well before digging. [தொடு + குறி] உடம்பின் ஒரு பகுதியை நெற்றி, கை கால், கண், காது. மூக்கு எனத்தொட்டு அதற்கு வகுக்கப்பட்ட நெறிகளின் மூலம் நீரியல்பு அறிதலாகும் (கட்டட);. |
தொடுகை | தொடுகை toḍugai, பெ. (n.) 1. தொடுதல்; touching. 2. பிடித்தல்; taking hold of(சாஅக.);. [தொடு → தொடுகை] |
தொடுக்கம் | தொடுக்கம் toḍukkam, பெ. (n.) பொன் (பிங்.);; gold |
தொடுக்கு | தொடுக்கு toḍukku, பெ. (n.) தொசுக்கு பார்க்க;see {} [தொடு → தொடுக்கு (முதா. 86);] |
தொடுக்கை | தொடுக்கை toṭukkai, பெ.(n.) வைக்கோல் வைக்கும் தடுப்புப் பகுதி; a stopper in straw heар. [தொடு-தொடுக்கை] தொடுக்கை toḍukkai, பெ.(n.) வைக்கோல் வைக்கும் தடுப்புப் பகுதி; a stopper in straw heар. [தொடு-தொடுக்கை] |
தொடுசு | தொடுசு toḍusu, பெ. (n.) தொடிசு பார்க்க;see {} |
தொடுசுவை | தொடுசுவை toḍusuvai, பெ. (n.) உணவுடன் கொள்ளும் ஊறுகாய், துவையல் முதலியன; a relish to food condiment(சாஅக.);. [தொடு + சுவை] |
தொடுதுணை | தொடுதுணை doḍuduṇai, பெ. (வி.) உதவி; help. [தொடு + துணை] |
தொடுதோல் | தொடுதோல் toḍutōl, பெ. (n.) செருப்பு sandals, slippers (பட்டினப். 265);. மறுவ. காலணி [தொடு + தோல்] |
தொடுத்து | தொடுத்து toḍuttu, இடை (part.) முதல்; from, ever since. அன்று தொடுத்து. [தொடு → தொடுத்து] |
தொடுத்துவிடு-தல் | தொடுத்துவிடு-தல் doḍudduviḍudal, 18 செ.குவி. (v.i.) 1. சேர்த்துக் கட்டுதல்; to fasten together; to take on. 2. நெறிதவறிச் சேர்த்தல் (வின்.);; to unite persons irregularly in marriage. 3. நீக்குதல் (வின்.);; to put out, as an apprentice. 4. ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய்ப் போம்படி செய்தல் (இ.வ.);; to cause to go in single file. [தொடுத்து + விடு-.] |
தொடுத்துவை-த்தல் | தொடுத்துவை-த்தல் toḍuttuvaittal, 4 செ.கு.வி. (v.i.) எளிதாக இணைத்தல்; to attach, fasten or stich lightly. [தாடுத்து + வை-.] |
தொடுபதம் | தொடுபதம் doḍubadam, பெ. (n.) சோறு(w);; boiled rice. [தொடு + பதம்] |
தொடுபிடியாக | தொடுபிடியாக toḍubiḍiyāka, வி.எ. (adv.) 1. இடைவிடாமல்; continuously;in quick succession. 2. விரைவாக; with all speed, expeditiously. வேலை தொடுபிடியாக நடக்கிறது. [தொடு + பிடி + ஆக] |
தொடுப்பி | தொடுப்பி toḍuppi, பெ. (n.) புறங்கூறுவோன்; slanderer, tale-bearer. [தொடு → தொடுப்பி] |
தொடுப்பு | தொடுப்பு toṭuppu, பெ.(n.) கள்ள உறவு; ilicit contact liaison. (கொ.வ.வ.சொ);. [தொடு-தொடுப்பு] தொடுப்பு toḍuppu, பெ.(n.) கள்ள உறவு illicit contact liaison. (கொ.வ.வ.சொ.);. [தொடு-தொடுப்பு] தொடுப்பு1 toḍuppu, பெ. (n.) பொருத்து; joint(சாஅக.);. [தொடு → தொடுப்பு] தொடுப்பு toḍuppu, பெ. (n.) 1. தொடர்பு; sexual relation, intercourse. 2. கள்ளக் கணவன்; paramour(சாஅக.);. [தொடு → தொடுப்பு] [தொடுப்பாவது இருபொருட்குண்டான தொடர்பு. அது ஒன்றையொன்று தொட்டபின் நிகழ்வது (முதா. 86);] தொடுப்பு toḍuppu, பெ. (n.) 1. எய்கை; discharging. 2. தொடர்ந்திருக்கை; continuity. 3. கட்டுகை; fastening, changing, linking. 4. கட்டு; tic, bandage. 5. தொடரி (சங்கிலி); (யாழ்.அக.);: chain. 6. விதைப்பு; sowing. “தொடுப்பினாயிரம் வித்தியது விளைய” (மதுரைக் 11);. 7. கலப்பை (பிங்.);; plough, 8 தந்திரம் (யாழ்.அக.);; stratagem. 8. வளைத்து உழுகை; ploughing in rounds. “தொடுப்பே ருழவர்” (சிலப். 29:230);. 13. குறளை (திவா.);; slander, aspersion. 11. தொடுக; illicit connection. அவனுக்கம் அவளுக்கும் வெகு காலமாகத் தொடுப்புண்டு. 12. கூட்டுறவு (வின்.);; close intimacy. 13. செய்கைத் தொடர்ச்சி; pursuit, prosecution. 14. காலணி (வின்.);; sandals. 15. கள்ளக்கணவன் அல்லது கூத்தி; paramour, concubine. 16. கட்டுக்கதை (வின்.);; fabrication, concoction. 17. மரக்கொம்பு, branch of a tree. 18. பழக்கம் (யாழ்அக.);; practice. 19. தொடக்கம் (யாழ்.அக.);; commencement. ம. தொடுப்பு [தொடு → தொடுப்பு] தொடுப்பு4 toḍuppu, பெ. (n.) களவு; theft. “தொடுப்புண்டாய் வெண்ணெயை யென்று” (திவ். பெரியாழ். 2,3,9, வியா பக்.297);. |
தொடுப்புக்கட்டு-தல் | தொடுப்புக்கட்டு-தல் doḍuppukkaḍḍudal, 12 செ.குன்றாவி. (v.t.) மனவுறுதியோடு பின்பற்றுதல்; to pursue with malice. [தொடுப்பு + கட்டு-.] |
தொடுப்புக்கத்தி | தொடுப்புக்கத்தி toḍuppukkatti, பெ. (n.) பட்டாக்கத்தி (வின்.);; a sword with an iron gard covering the arm upto the elbow. [தொடுப்பு + கத்தி] |
தொடுப்புக்காரன் | தொடுப்புக்காரன் toḍuppukkāraṉ, பெ. (n.) 1. கள்ளக் கணவன்; paramour. 2. நெருங்கிய நண்பன்; intimate friend. [தொடுப்பு + காரன்] |
தொடுப்புரசம் | தொடுப்புரசம் toḍuppurasam, பெ. (n.) வேதையில் மாற்றுயரச் செய்யும் கொங்கணவர் பொன்னாக்கப் பாவியத்தில் சொல்லியுள்ள பொன்னின் தரமுயர்த்தும் பத்து வகை இதளியச் சத்துகளுள் ஒன்று: one of mercury preparations contemplated in Konganavar’s work in Alchemy which is capable to increase the fineness of gold in transmutation of metals(சாஅக.);. |
தொடுப்பெலும்பு | தொடுப்பெலும்பு toḍuppelumbu, பெ. (n.) பொருத்தெலும்பு; bones of a joint. [தொடுப்பு + எலும்பு] |
தொடுர் | தொடுர் toṭur, பெ.(n.) காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kanchipuram Taluk. [தொடு+ஊர்] தொடுர் toḍur, பெ.(n.) காஞ்சிபுரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kanchipuram Taluk. [தொடு+ஊர்] |
தொடுவழக்கு | தொடுவழக்கு1 toḍuvaḻkku, பெ. (n.) தொடர்ந்து வரும் வழக்கு (W.G.);; a long – pursued litigation. 2. விடாது பற்றிவரும் வழக்கம்; persistent habit. “திரும்புமோ தொடுவழக்காய்” (தாயு. பரிபூ. 5);. [தொடு + வழக்கு] தொடுவழக்கு2 toḍuvaḻkku, பெ. (n.) கள்ள வழக்கு; litigation on false hood. [தொடு + வழக்கு] |
தொடுவானம் | தொடுவானம் toḍuvāṉam, பெ. (n.) தொடுவான்2 பார்க்க;see {} [தொடுவான் → தொடுவனம்] |
தொடுவான் | தொடுவான் toḍuvāṉ, பெ. (n.) பிணையடி மாடுகளைத் தொடுக்குங் கயிறு (யாழ்ப்);; rope attached to a pole with a swivel to which the inneryoke of oxen is tied, the others being tied Oxto Ox. [தொடு → தொடுவான்] தொடுவான்2 toḍuvāṉ, பெ. (n.) அடிவானம்; horizon, as the place where the heavens touch the earth. [தொடு + வான். வான் = வானம்] |
தொடுவான்கயிறு | தொடுவான்கயிறு toḍuvāṉkayiṟu, பெ. (n.) தொடுவான் (வின்); பார்க்க;see {} [தொடுவான் + கயிறு] |
தொடுவாய் | தொடுவாய் toḍuvāy, பெ. (n.) 1. கூடுமிடம் (யாழ்ப்.);; confluence or junction, as of two rivers or of a river with the sea. 2. புறங்கூறுகை (அகநி.);; slander, aspersion [தொடு + வாய்] |
தொடுவிண்டு | தொடுவிண்டு toḍuviṇḍu, பெ. (n.) தொடரி1 பார்க்க;see {} (சா.அக); [தொடு + விண்டு] |
தொடுவிலங்கு | தொடுவிலங்கு toḍuvilaṅgu, பெ. (n.) இருவரைத் தளைக்கும் விலங்கு (யாழ்.அக);; fetters binding two persons to each other. [தொடு +__,] |
தொடுவு | தொடுவு toḍuvu, பெ. (n.) 1. கொல்லை (சது.);: paddock, in closed ground adjoining a house. 2. களவு; theft. “வெண்ணெய் தொடுவுண்ட”(திவ். திருவாய். 3,5,3.ஜீ);. [தொடு → தொடுவு. வீட்டைத் தொடர்த்த கொல்லை (முதா. 86);] |
தொடுவை | தொடுவை toḍuvai, பெ. (n.) 1. தொடுத்திருப்பது; which is joined or appended. 2. புதிய யானையைப் பயிற்றும் யானை; tame elephant to which a wild one is enchained for taming. 3. பாங்கன் associate, crony. 4. வைப்புக் காதலர்; man and woman living in concubinage. தொடுவை2 toḍuvai, பெ. (n.) ஒன்றின் சேர்க்கை; anything or part appended something subsidiary hanging or attached (சாஅக.);. [தொடு → தொடுவை] |
தொடுவைவள்ளம் | தொடுவைவள்ளம் toḍuvaivaḷḷam, பெ. (n.) துணைச் சிறுபடகு (வின்.);; boat attached to a dhoney. [தொடுவை + வள்ளம்] |
தொடை | தொடை1 toḍaittal, 4 செ.குன்றாவி. (v.t.) துடை-த்தல்பார்க்க: see {} “துன்பந் தொடைக்குத் துணைவன் காண்” (அருட்பா. 9, திருமு. நெஞ்சறி.190);. [துடை → தொடை (கொ.வ);] தொடை toḍai, பெ. (n.) 1. வீரரின் ஐம்பெருஞ் செய்கைகளுளொன்றாகிய அம்பெய்கை; discharging, shooting. “செந்தொடை பிழையா வன்க ணாடவர்” (புறநா. 3);. (சீவக. 16 76, உரை); 2. பின்னுகை; braiding, weaving. “தொடையுறு வற்கலை யாடை” (கம்பரா. முதற்போ. 109);. 3. இடையறாமை; unbroken succession or continuity. “தொடையிழி யிறாலின் றேனும் (கம்பரா. நாட்டுப் 9);. 4. கட்டுகை; fastening, lying. “தொடை மாண்ட கண்ணியன்” (கலித். 37);. 5. எற்று; kicking, stroke. “ஒருதொடையான் வெல்வது கோழி” (நான்மணி. 54);. 6. தொடர்ச்சி; series, train, succession. “தாபதர் தொடை மறை முழக்கும்” (கல்லா. 39, 10);. 7. வடம்; string. “முத்துத் தொடை” (பரிபா. 6,16);. 8. சந்து; joints of the body. “வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள்” (புறநா. 78);. 9. கொத்து; cluster, bunch. “தொடைமலர் வெறுக்கை யேந்தி” (சீவக. 2708);. பூமாலை (பிங்.);; flower garland. 11. மலர் முறுக்கு; compactness of an unblown flower. “தொடையவிழ் தண்குவளை (பு.வெ.பொது. 1);. 12. யாழ் நரம்பு; lute string. 13. வில்லின் நாண் (பிங்.);; bowstring. “தொடையை நிரம்ப வாங்கி விடாத முன்பே” (சீவக. 2320);. 14. அம்பு (சூடா.);; arrow. 15. படிக்கட்டு: stairs, Step. “குறுந்தொடை நெடும்படிக்கால்” (பட்டினப். 142);. 16. கருத்து முரண்; question, criticism. “தொடைவிடை யூழாத் தொடைவிடை துன்னி” (பு.வெ. 8, 19); 17. தொடர்மொழி (அக.நி.);பார்க்க;see {} 18. தாறு; bunch of fruits. “பூமாண்ட தீந்தேன் றொடைகீறி” (சீவக. 31);. 19. மதிற்கற்று (திவா.);; surrounding wall, bulwark, fortification. 20. சுவர்ப்புறத்து வைத்த உத்திரந் தாங்கு கட்டை (வின்.);; block projecting from a wall to support a beam. 21. பாட்டு; stanza, verse 22. மோனைத் தொடை, எதுகைத் தொடை, முரண் தொடை, இயைபுத் தொடை அளபெடைத் தொடை என்ற ஐவகையான செய்யுள் தொடுக்கும் வகை (இலக்.வி. 723);; mode of versification of five kinds viz,__, 23.தொடைக்கயிறுபார்க்க;see {} “எழுதுகத்தோடிணைப்பகடு தொடுத்த தொடை” (ஏரெழு. 10);. 24. சட்டம்; law. “தொன்மனுநூற் றொடைமனுவாற் றொடைப்புண்டது (பெரியபு. மனுநீதி. 37);. ம. துட; க.. து., குட., பட. தொடெ: தெ. தொட; துட. த்வட்; குவி. துந்து (இடுப்பு);;கொலா. துட் (இடுப்பு); [தொடு → தொடை] தொடை3 toḍai, பெ. (n.) முத்து எடுக்கும்போது ஒரு குளிப்பில் கவர்ந்து வரும் சரக்கு (W.G.);: the produce of a single diving, in pearl-fishery. [தொடு → தொடை] தொடை4 toḍai, பெ. (n.) 1. மாந்தரின் இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள பகுதி; of human beings thigh. 2. விலங்குகளில் பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி; of animals upper part of the hind legs, shank. [தொடு → தொடை] |
தொடைகிள்ளு-தல் | தொடைகிள்ளு-தல் doḍaigiḷḷudal, 6 செ.குன்றாவி. (v.t.) தொடைநிமிண்டு-தல் பார்க்க; __, [தொடை + கிள்ளு-.] |
தொடைகொள்(ளு)-தல் | தொடைகொள்(ளு)-தல் doḍaigoḷḷudal, 13. செ.குன்றாவி. (v.t.) கண்டறிதல்; to learn, understand. “வடிவிலே தொடைகொண்டே னென்கிறார்” (ஈடு. 2,5,5);. [தொடை + கொன்-.] |
தொடைக்கயிறு | தொடைக்கயிறு toḍaikkayiṟu, பெ. (n.) கலப்பை நுகத்தொடு எருதை இணைக்கும் சிறுகயிறு (இ.வ.);; small rope used in tying the plough-ox to the yoke. [தொடு → தொடை + கயிறு] |
தொடைக்கவுட்டி | தொடைக்கவுட்டி toḍaikkavuḍḍi, பெ. (n.) தொடைச்சந்து பார்க்க;see {} (சாஅக.);. [தொடை + கவுட்டி] |
தொடைச்சந்து | தொடைச்சந்து toḍaiccandu, பெ. (n.) 1. கவட்டி; that part in the fold between the thigh and the scrotum. 2. துடைச்சத்து; the lowest part of the abdominal wall near its junction with the thigh. 3. தொடைநடு பார்க்க;see {} (சாஅக.);. [தொடை + சத்து] |
தொடைச்சந்துநோய் | தொடைச்சந்துநோய் toḍaiccandunōy, பெ. (n.) கவட்டி நோய்; disease of the groin (சாஅக.);. [தொடை + சத்து + நோய்] |
தொடைச்சந்துபொருத்து | தொடைச்சந்துபொருத்து toḍaiccanduboruttu, பெ. (n.) இடுப்புப் பொருத்து; hip joint. மறுவ. பந்துகிண்ண மூட்டு [தொடை + சத்து + பொருத்து] |
தொடைச்சந்துரோகம் | தொடைச்சந்துரோகம் toḍaiccandurōkam, பெ. (n.) தொடைச்சந்துநோய் பார்க்க: see {} (சாஅக.);. [தொடை+ சந்து + ரோகம்] Skt.__, |
தொடைதட்டிவேளாளர் | தொடைதட்டிவேளாளர் doḍaidaḍḍivēḷāḷar, பெ. (n.) பண்டிதர்; barbers, as honing their razors on the thigh, used in contempt(செஅக.);. [தொடை + தட்டி + வேளாளர்] |
தொடைதட்டு-தல் | தொடைதட்டு-தல் doḍaidaḍḍudal, 5 செ.கு.வி. (v.i.) தொடையில் அடித்துக் கொண்டு வீர முரைத்தல்; to show one’s bravery or defiance by striking the thigh. “குண்டோதரன் கண்டு கொண்டாற் றொடைதட்டிக் கொள்ளுவனே.” (தனிப்பா. 1, 403, 23);. 2. சண்டைக்கழைத்தல் (உ.ம);; to make a challenge to battle(செஅக.);. [தொடை + தட்டு-.] |
தொடைதட்டுதல் | தொடைதட்டுதல் doḍaidaḍḍudal, பெ. (n.) பிணத்தினருகில் நீர்க் குடத்தை உடைத்தபின் தொடையைத் தட்டிக்கொண்டு சுற்றிவருஞ் சடங்கு; __, ceremony of tapping one’s thigh and going round a corpse in funeral ceremonies(செஅக.);. [தொடை + தட்டு-.] |
தொடைநடு | தொடைநடு toḍainaḍu, பெ. (n.) இரு தொடைகளுக்கும் இடைப்பட்ட இடை வெளி; space between the thighs(சாஅக.);. [தொடை + நடு] |
தொடைநடுங்கி | தொடைநடுங்கி toḍainaḍuṅgi, பெ. (n.) மிக அஞ்சுபவன் (உ.வ.);; extremely timid person, coward. [தொடை + நடுங்கி] |
தொடைநடுங்கு-தல் | தொடைநடுங்கு-தல் doḍainaḍuṅgudal, செ.கு.வி. (v.i.) மிகவும் அஞ்சுதல்; feel timid. செயலாளருடன் பேச ஏன் தொடை நடுங்குகிறாய்? [தொடை + நடுங்கு] |
தொடைநரம்பு | தொடைநரம்பு toḍainarambu, பெ. (n.) தொடையின் பின்புறமுள்ள ஒரு பெரிய நரம்பு; a big nerve that passes down the back of the thigh(சாஅக.);. [தொடை + நரம்பு] |
தொடைநரம்புவாதம் | தொடைநரம்புவாதம் toḍainarambuvātam, பெ. (n.) குளிர்ச்சியான உணவுகளை மிகுதியாக உண்பதால் உண்டாகும் ஊதை நோய்; a painful affection of the large nerve passing down the back of the thigh due to consuming cooling substances, sedentary habit etc., (சாஅக.);. [தொடை + நரம்பு + வாதம்] |
தொடைநாளம் | தொடைநாளம் toḍaināḷam, பெ. (n.) தொடையின் அரத்த நரம்பு (இங்.வை.);: femoral vein. [தொடை + நாளம்] |
தொடைநிமிண்டு –தல் | தொடைநிமிண்டு –தல் doḍainimiṇḍudal, பெ. (n.) 5 செ.குன்றாவி. (v.t.); 1. தொடையைக் கிள்ளுதல்; to pinch the thigh, as a punishment. 2. தூண்டி விடுதல் (உ.வ.);; to stimulate. 3. நினைவுபடுத்தல்; to call one’s attention, remind, as by pinching [தொடை + திமிண்டு-.] |
தொடைநேர்ப்பேசி | தொடைநேர்ப்பேசி toḍainērppēci, பெ. (n.) நீளப்போக்குள்ள தொடைச்சதை; Straight muscle of the thigh(சாஅக.);. |
தொடைப்பற்று | தொடைப்பற்று toḍaippaṟṟu, பெ. (n.) தொடையென்னுமுறுப்பு (உ.வ.);: thigh. [தொடை + பற்று] |
தொடைப்பாடு | தொடைப்பாடு toḍaippāḍu, பெ. (n.) குடை காலணி; appendage, as sandals, etc. [தொடு + பாடு] |
தொடைமுரண் | தொடைமுரண் toḍaimuraṇ, பெ. (n.) முரண்டொடை; antithesis, in the first foot of a verse, “செம்மை பசுமை தொடை முரண்’ (சீவக. 2, உரை.);. [தொடை + முரண்] |
தொடையகராதி | தொடையகராதி toḍaiyagarāti, பெ. (n.) சதுரகராதிப் பிரிவினுள் எதுகையாக வருவதற்குரிய சொற்களைக் கூறும் அகரமுதலி; a section of __, [தொடை + அகராதி] |
தொடையகற்றும்பேசி | தொடையகற்றும்பேசி toḍaiyagaṟṟumbēci, பெ. (n.) தொடையைக் கவர்ந்துள்ள நார்ப் பாகத்தை இறுகச் செய்யும் சதை: the muscle that tightens the fibrous sheath of the thigh(சாஅக.);. |
தொடையடிகூழை | தொடையடிகூழை toḍaiyaḍiāḻai, பெ. (n.) தொடை முட்டுக்குக் கீழ்வாராமல் மயிரின்றியிருக்கும் வாலையுடைமையாகிய மாட்டுக் குற்றவகை மாட்டுவா. 18); a defect of cattle which consists in having a short hairless tail [தொடை + அடி + கூழை] |
தொடையல் | தொடையல் toṭaiyal, பெ.(n.) யாழின் ஒரு உறுப்பு; a part of harp. [தொடு-தொடையல்] தொடையல் toḍaiyal, பெ.(n.) யாழின் ஒரு உறுப்பு; a part of harp. [தொடு-தொடையல்] தொடையல் toḍaiyal, பெ. (n.) 1. தொடர்ச்சி; succession, continuation. “நீள்விசித் தொடையல்” (பொருந. 18);. 2. கட்டுகை; fastening, tying, weaving. “தொடையலங் கோதை” (சீவக.464);. 3. தோளாணி மாலை (பிங்.);; flower garland worn over shoulders. 4. வாசிகை (திவா.); பார்க்க;see {} 5. தேன்கூடு; honey comb. “நெய்ம்முதிர் தொடையல் கீறி” (சீவக. 1198);. [தொகு → தொடு → தொடை → தொடையல்] தொடையல்2 toḍaiyal, பெ. (n.) அழிவு; ruin, destruction. “பையன் தொட்டது தொடையல் தான்”. [தொடை → தொடையல்] |
தொடையானந்தம் | தொடையானந்தம் toḍaiyāṉandam, பெ. (n.) அளபெடைத் தொடைப்பாட்டினுள் பாட்டுடைத் தலைவனது பெயர்சார்த்தி அளபெடுப்பத்தொடுக்கும் குற்றம் (யாப்.வி. 522);; use of __, [தொடை + ஆனந்தம்] |
தொடையெலும்பு | தொடையெலும்பு toḍaiyelumbu, பெ. (n.) தொடையிலுள்ள எலும்பு; thigh bone, femur. [தொடை + எலும்பு] |
தொடையெலும்புக்கவை | தொடையெலும்புக்கவை toḍaiyelumbukkavai, பெ. (n.) தொடைச்சந்துபொருத்து பார்க்க;see {} (சாஅக.);. [தொடை + எலும்பு + சுவை] |
தொடைவாதம் | தொடைவாதம் toḍaivātam, பெ. (n.) 1. தொடையில் ஏற்படும் ஊதை நோய்: painful affection of the muscles of the thigh. 2. அகவை முதிர்ச்சியால் தொடை நரம்பில் ஏற்படும் இழுப்பு நோய்; inflammation of the nerve of the thigh(சாஅக);. [தொடை + வாதம்] |
தொடைவாழை | தொடைவாழை toḍaivāḻai, பெ. (n.) 1. அடித் தொடையிற் புறப்படும் வெள்ளை நோய்; abscess in the thigh or near the groin. 2. வீக்கக்கால்; milkleg, white leg, swelled leg. 3. மருந்துச் செடிவகை (யாழ்ப்.);; a plant, used in curing tumour, [தொடை + வாழை] |
தொடைவில்லை | தொடைவில்லை toḍaivillai, பெ. (n.) சிறிய வட்டத் தலையணை; small round cushion(செஅக.);. [தொடை + வில்லை] |
தொட்ட | தொட்ட toṭṭa, பெ. (n.) பெரிய; big. க. பட. தொட்ட [தொழு → தொடு → தொட்ட] |
தொட்டகுறை | தொட்டகுறை toṭṭaguṟai, பெ. (n.) முற் பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை: karma or action commenced in a previous birth and left unfinished, opp. to__, [தொடு → தொட்ட + குறை] |
தொட்டக்கால்வாடி | தொட்டக்கால்வாடி toṭṭakkālvāṭi, பெ. (n.) தொட்டாற்சுருங்கி பார்க்க;see {} (சாஅக);. [தொட்டக்கால் + வாடி] |
தொட்டடி | தொட்டடி toḍḍaḍi, பெ. (n.) செய்யுளின் முதலடி: the opening or first line of a poem, dist. fr. vittadi. விட்டடி தொட்டடி அவனுக்குத் தெரியாது (வின்);. [அடி+தொடு] |
தொட்டது | தொட்டது doṭṭadu, பெ. (n.) செருப்பு: shoes. [தொடு → தொட்டது] |
தொட்டபூடு | தொட்டபூடு toṭṭapūṭu, பெ. (n.) ஆனை நெருஞ்சில்; elephant calt rods(சாஅக);. [தொட்ட + பூடு] |
தொட்டப்பன் | தொட்டப்பன் toṭṭappaṉ, பெ. (n.) அறிவுத் தந்தை (யாழ்ப்.);; god father. க. தொட்டப்ப [தொட்ட + அப்பன்] |
தொட்டம் | தொட்டம் toṭṭam, பெ. (n.) சிறு நிலம் (யாழ்ப்.);: small piece of ground. [தொடு → தொட்டு → தொட்டம்] |
தொட்டல் | தொட்டல்1 toṭṭal, பெ. (n.) 1. கட்டுகை (திவா.);: tying, binding. 2. உண்ணுகை (சூடா.);; eating. 3. தோண்டுகை (திவா.);: digging. 4. தீண்டுகை; touching [தொடு → தொட்டு → தொட்டல்] தொட்டல்2 toṭṭal, பெ. (n.) பெருங்குறிஞ்சி; medium white silky backed cone head. |
தொட்டவிரல்தறித்தான் | தொட்டவிரல்தறித்தான் toṭṭaviraltaṟittāṉ, பெ. (n.) பெருங்குறிஞ்சா பார்க்க;see {} [தொட்டவிரல் + தறித்தான்] |
தொட்டாச்சி | தொட்டாச்சி toṭṭācci, பெ. (n.) அறிவுத்தாய் (வின்.);; god mother. [தொட்ட + ஆய்ச்சி] |
தொட்டாட்டுமணியம் | தொட்டாட்டுமணியம் toṭṭāṭṭumaṇiyam, பெ. (n.) குற்றேவல் (யாழ்ப்.);; minor domastic duties. மறுவ. புழுக்கு வேலை. [தொடு → தொட்டு + ஆட்டு + மணியம்] |
தொட்டாட்டுவேலை | தொட்டாட்டுவேலை toṭṭāṭṭuvēlai, பெ. (n.) தொட்டாட்டுமணியம்பார்க்க;see {} |
தொட்டாணி | தொட்டாணி toṭṭāṇi, பெ.(n.) ஈரோடு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Erode Taluk. [தோடு+அணி] தொட்டாணி toṭṭāṇi, பெ.(n.) ஈரோடு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Erode Taluk. [தோடு+அணி] |
தொட்டான் | தொட்டான் toṭṭāṉ, பெ. (n.) உப்பளத்தில் தெப்பத்திற்கும் பாத்திக்கும் இடையில் உள்ள நீர்ந்தேக்கம்; stagnant water in between the tank division and the salt-pan (மீனவ.); |
தொட்டாப்பு | தொட்டாப்பு1 toṭṭāppu, பெ. (n.) சிட்டைமரம் (யாழ்ப்.); பார்க்க;see {} தொட்டாப்பு2 toṭṭāppu, பெ. (n.) வலையின் துண்டம்; piece of net. |
தொட்டாய்ச்சி | தொட்டாய்ச்சி toṭṭāycci, பெ. (n.) தொட்டாச்சி (யாழ்.); பார்க்க;see {} [தொட்டாய்ச்சி → தொட்டாச்சி] |
தொட்டாற்கருங்கி | தொட்டாற்கருங்கி1 toṭṭāṟkaruṅgi, பெ. (n.) தொட்டால் தன் இலைகளைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையுடைய சிறு இலைகளைக் கொண்ட மருந்துக்குதவும் செடி; sensitive plant(சாஅக);. [தொட்டால் + கருங்கி. கருக்கு → கருங்கி] |
தொட்டாற்சிணுங்கி | தொட்டாற்சிணுங்கி toṭṭāṟciṇuṅgi, பெ. (n.) தொட்டாற்கருங்கி (இ.வ.); பார்க்க:see {} |
தொட்டாற்சுருங்கி | தொட்டாற்சுருங்கி2 toṭṭāṟcuruṅgi, பெ. (n.) தொட்டவுடன் கூச்ச முண்டாக்கும் உடம்பின் பாகம் அல்லது இடம்; body marked by abnormal sensibility(சாஅக);. [தொட்டால் + சுருங்கி] |
தொட்டாற்சொறியன் | தொட்டாற்சொறியன் toṭṭāṟcoṟiyaṉ, பெ. (n.) காஞ்சொறி; scorpion leaf(சாஅக);. [தொட்டால் + சொறயென்] இவ்விலை உடலின் மீது பட்டவுடன் அரிப்புண்டாவதால் இப்பெயர் பெற்றது. |
தொட்டால்வாடி | தொட்டால்வாடி toṭṭālvāṭi, பெ. (n.) 1. தொட்டாற்கருங்கிபார்க்க: see {} 2. சுண்டிவகை(M.M.531);; a species of sensitive plant. [தொட்டால் + வாடி] |
தொட்டால்வேசி | தொட்டால்வேசி toṭṭālvēci, பெ. (n.) சிமிட்டி பார்க்க;see {} (சாஅக);. |
தொட்டி | தொட்டி1 toṭṭi, பெ. (n.) 1. நீர்த்தொட்டி (w);; water-trough, tub, cistern, reservoir. ‘துற்றுவ துற்றுந் துணையிதழ் வாய்த் தொட்டி” (பரியா. 20,51);. 2. அழி (வின்.);; manger, crib. 3. குப்பைத் தொட்டி; refusebin. 4. தொட்டிக்கட்டு பார்க்க;see {} 5. அம்பாரி; howdah. “தொட்டியுடன் பொரு சமர் முனை சீறிய தும்பிகள்” பரத பதினாறாம். 6. கள் (அகநி);; toddy. 7. வைப்பு நஞ்சு வகை (சங்அக);; a prepared arsenic. ம. க. தெ. து. பட தொட்டி [தொடு – தொட்டி] தொட்டி வகைகள் 1. இரும்பு தொட்டி – irontrough. 2. Garı’ıLğ Qğrılış– coppertrough. 3. *joptio to -stone trough. 4. toT;#Ggfru’ uậ– wooden trough. தொட்டி2 ali. பொ. 1 தொட்டாற்சொறியன்;see to stir-coriyan. 2. 350/5Gorrl of rose coloured sticky mallow. 3. Gome-to-1, uml–morib unifáo;see totti-p-pādānam. தொட்டி3 lot. பெ. (n) 1. வேலியடைப்பு வின்): fence,yard, pound. 2. மரம் விறகு விற்குமிடம்: enclosure for selling timber, firewood. விறகுத் தொட்டி 3. முத்துச்சிப்பி விற்குமிடம் (umpi’i.);; enclosure for selling oysters at the pearl fishery. 4. 55 mtrf; small village. “ஊரெல்லாம் பட்டி தொட்டி” தனிப்பா/2 2 ம. க. தொட்டி தெ. தொட்டி:து. துட்டி: குவி, கொண். தொட்டி4 Qžmuilą” tosti, பெ. (n.) SP pirių; fine, punish ment. தொட்டிப்பணம் (வின்);, தொட்டி5 lot. பெ. (n.) இறைச்சிக்காக ஆடு lomólssonan Gisul-Glål to slaughterhouse. தொட்டி6 lot. பெ. (n.) தொட்டில் பார்க்க; see tostil. தொட்டி7 toṭṭi, பெ. (n.) வேலிதாண்டும் கால்நடைகளை ஒறுப்புக்காக அடைக்கும் இடம்; cattle pound. |
தொட்டிக்கட்டு | தொட்டிக்கட்டு toṭṭikkaṭṭu, பெ. (n.) வீட்டமைப்பில் நடுவில் திறந்த வெளியுடைய சதுரக்கட்டு, open quandrangular section in the centre of a house. ஒரு வீட்டில் அடக்கடுக்காய் மூன்று தொட்டிக்கட்டுகள் அமைக்கப்படாது (சர்வா. சிற்.47); (செஅக);. |
தொட்டிக்கட்டுவீடு | தொட்டிக்கட்டுவீடு toṭṭikkaṭṭuvīṭu, பெ. (n.) நாற்புறமும் தாழ்வாரமும் இடையில் முற்றமும் அடைந்த வீடு; house with an open quandrangular section in the centre (கட்டட);. [தொட்டி + கட்டு + வீடு] |
தொட்டிக்கலவடை | தொட்டிக்கலவடை toḍḍikkalavaḍai, பெ. (n.) நீர்த்தொட்டியின் அடிமனை (வின்.);; foot of a laver. [தொட்டி + கலவடை] |
தொட்டிக்கால் | தொட்டிக்கால் toṭṭikkāl, பெ. (n.) 1. உள் வளைந்த கால் அல்லது படப்புக்கால்; bandy legged. 2. முட்டிக் கால் தட்டி; knock knee(சாஅக.);. மறுவ. கவட்டைக்கால். [தொட்டி + கால்] |
தொட்டிக்காளவாய் | தொட்டிக்காளவாய் toṭṭikkāḷavāy, பெ. (n.) தரையிலேயே சதுரமாகவோ, வட்டமாகவோ கவர் அமைத்து அதன் ஒரு பக்கம் காற்றைச் செலுத்தும் வழியுடைய காளவாய்: kin made in the floor with walls in the circular or square form, and make way the blow wind in one side. [தொட்டி + காளவாய்] |
தொட்டிச்சி | தொட்டிச்சி toṭṭicci, பெ. (n.) தொட்டியக் குலப்பெண்; a woman of __, [தொட்டியன் (ஆ..பா.); → தொட்டிச்சி (பெ.பா.);] |
தொட்டிச்செம்பு | தொட்டிச்செம்பு toṭṭiccembu, பெ. (n.) தொட்டி நஞ்சினின்று எடுத்த செம்பு; copper extracted from totty padanam(சா.அக);. [தொட்டி + செம்பு] |
தொட்டித்தொகை | தொட்டித்தொகை toṭṭittogai, பெ. (n.) இரும்புத் தொட்டி, செம்புத்தொட்டி நஞ்சு; the two kinds of prepared arsenics containing iron and copper respectively as ingredients(சாஅக);. [தொட்டி + தொகை] |
தொட்டிப்பணம் | தொட்டிப்பணம் toṭṭippaṇam, பெ. (n.) வேலைக்காரர்க்கிடும் தண்டத் தொகை (வின்);; fine for default of workmen. [தொட்டி + பணம்] |
தொட்டிப்பனை | தொட்டிப்பனை toṭṭippaṉai, பெ. (n.) மலைப்பனை; hill palmyra so called probably of its trunk being used as a tub (சாஅக);. [தொட்டி + பனை] இம்மரத்தின் பகுதியைக் குடைந்து தொட்டி போல் பயன்படுத்தியமையால் இப்பெயர் அமைந்தது. |
தொட்டிப்பாகிதம் | தொட்டிப்பாகிதம் doṭṭippākidam, பெ. (n.) சிவப்பு நெல்லி; a red variety of Indian goose berry (சாஅக);. |
தொட்டிப்பாடம் | தொட்டிப்பாடம் toṭṭippāṭam, பெ. (n.) பெரிய மீன்களிலுள்ள குடலை நீக்கித் தூய்மை செய்து உப்பிட்டு, நான்கு அல்லது ஐந்து நாட்கள் தொட்டியிலிட்டுப் பின்பு பாடஞ் செய்தல் (மீனவ.);; cure the fish by removing its intestine, and then soak it in the salt for five days, and then make it suitable for cooking. [தொட்டி + பாடம் → பக்குவம்] |
தொட்டிப்பாடாணகத்தி | தொட்டிப்பாடாணகத்தி toṭṭippāṭāṇagatti, பெ. (n.) தொட்டி நஞ்சைத் துண்டு துண்டாய் நறுக்கிக் கிளிகட்டி நெல்லில் அவித்து எடுத்துக் கொள்ளுதல்; cut the __, into small pieces and bundle them in a piece of white cloth and keep it in the middle of paddy contained in an earthern pot which is then boiled and taking it out as soon as the husk of the paddy brakes(சாஅக.);. |
தொட்டிப்பாடாணம் | தொட்டிப்பாடாணம் toṭṭippāṭāṇam, பெ. (n.) இதளியமும், கந்தகமும் கூட்டிப் பாண்டத்தில் சமைத்தது; a kind of arsenic prepared by mixing mercury and sulphur to form a chemical compound by a process mentioned in Tamil medicine. 2. அயத்தொட்டிப்பாடாணம் பார்க்க;see {} . 3. செம்புத் தொட்டிப்பாடாணம் பார்க்க;see {} (சாஅக.);. |
தொட்டிப்பாலம் | தொட்டிப்பாலம் toṭṭippālam, பெ. (n.) மேட்டு நிலத்துள் நீர் பாயுமாறு கட்டப்படும் ஒருவகைப் பாலம் (நாஞ்);, a kind of aqueduct, as trough-like. [தொட்டி + பாலம்] |
தொட்டிப்பூட்டு | தொட்டிப்பூட்டு toṭṭippūṭṭu, பெ. (n.) தைக்கும் பூட்டுவகை (தஞ்சை.);; a kind of padlock. [தொட்டி + பூட்டு] |
தொட்டிமயமூவி | தொட்டிமயமூவி toṭṭimayamūvi, பெ. (n.) நோம்புவாலி; unknown plant(சாஅக.);. [தொட்டி + மயமூவி] |
தொட்டிமுற்றம் | தொட்டிமுற்றம் toṭṭimuṟṟam, பெ. (n.) வீட்டிலுள்ளாகத் தொட்டி போல் அமைந்துள்ள முற்றம் (இவ.);; inner yard of a house. [தொட்டி + முற்றம்] 3. கெடுதல் சூழியக் கலை (வின்);; witchcraft and legerdemain |
தொட்டிய நாயக்கர் | தொட்டிய நாயக்கர் toṭṭiyanāyakkar, பெ.(n.) இராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் வாழும் கம்பளத்து நாயக்கரைச் சுட்டும் பெயர்; a community name in Ramnad Tindukkal districts. [தொட்டியம்+நாயக்கர்] தொட்டிய நாயக்கர் toṭṭiyanāyakkar, பெ.(n.) இராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் வாழும் கம்பளத்துநாயக்கரைச் சுட்டும் பெயர் a community name in Ramnad Tindukkal districts. [தொட்டியம்+நாயக்கர்] |
தொட்டியன் | தொட்டியன் toṭṭiyaṉ, பெ. (n.) ஆந்திர நாட்டில் உழவுத் தொழில் செய்துவந்து மதுரை நாட்டில் நாயக்கன் என்ற பெயர் கொண்டு வாழுமொரு குலத்தான்(E.T.);; person of a Telugu caste of cultivators, settled in the western part of the Madurai District, who assume the tittle__, |
தொட்டியம் | தொட்டியம்2 toṭṭiyam, பெ. (n.) கெடுதல் செய்யும் சூழியம், தன் வயப்படுத்தல், குறி முதலிய கலைகளைக் கற்றுப் பழகிய கம்பளத்தார்; a treatise on mantric science or magic containing the art of witchcraft sorcary necromancy, love philter etc.,(சாஅக.);. தொட்டியக் கலையைக் கற்றதனால் இச்சாதியருக்கு இப்பெயர் அமைந்தது போலும். |
தொட்டியர் | தொட்டியர் toṭṭiyar, பெ. (n.) ஒரு குலத்தினர்; people of__, |
தொட்டியலை | தொட்டியலை toṭṭiyalai, பெ. (n.) ஒரு மீன்பிடி வலை; kind of fishing net(மீனவ.);. [தொட்டிவலை → தொட்டியலை] |
தொட்டியவித்தை | தொட்டியவித்தை toṭṭiyavittai, பெ. (n.) தொட்டியச் சாதியார் செய்யும் கெடுதல் சூழியம், கருவேலை முதலிய கலை முறைகள்: the various performances in sorcary witchcraft etc., done by the class of people known as tottiyas, தொட்டியப் பேய் சுடுகாடு மட்டும் . (பழ.); [தொட்டிய(ர்); + வித்தை. விச்சை → வித்தை. ஓ.தோ. அச்சன்-அத்தன்] |
தொட்டிலிடு-தல் | தொட்டிலிடு-தல் doḍḍiliḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) முதன்முறையாகக் குழந்தையைத் தொட்டிலில் ஏற்றுவித்தல்; to cradle for the first time, as a child. [தொட்டில்2 + இடு-.] |
தொட்டில் | தொட்டில்1 toṭṭil, பெ. (n.) குழந்தைகளைப் படுக்க வைத்து ஆட்டற்குரிய மஞ்சம் அல்லது தூளி; cradle, swinging cot for an infant. “கிடக்கிற் றொட்டில் கிழிய உதைத்திடும்”(திவ். பெரியாழ் 11, 9);. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் (பழ.);, தொட்டிலும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுவான் (பழ.); மறுவ. ஏணை ம. க., து. தொட்டில்;தெ. தொட்டிலா. தொட்டில்2 toṭṭil, பெ. (n.) தொட்டி1 (யாழ்ப்);பார்க்க;see {} [தொட்டி → தொட்டின்] |
தொட்டில் பாடல் | தொட்டில் பாடல் toṭṭilpāṭal, பெ.(n.) தாலாட்டுப் பாடலில் ஒரு பிரிவு, variety of lullaby. [தொட்டில்+பாடல்] தொட்டில் பாடல் toṭṭilpāṭal, பெ.(n.) தாலாட்டுப் பாடலில் ஒரு பிரிவு, variety of lullaby. [தொட்டில்+பாடல்] |
தொட்டில்ஏற்றம் | தொட்டில்ஏற்றம் toṭṭilēṟṟam, பெ. (n.) உழவுத் தொழிலில் கால்வாயிலிருந்து மேட்டுப் பகுதிக்கு ஏற்றத்தின் உதவியால் நீர் பாய்ச்சும் முறை; methods of irrigation in cultivation by spring water from the channel to the ridge with the help of picottah. [தொட்டில்1 + ஏற்றம்] |
தொட்டில்குழந்தைத்திட்டம் | தொட்டில்குழந்தைத்திட்டம் toṭṭilkuḻndaittiṭṭam, பெ. (n.) தொட்டிற்குழந்தைத்திட்டம் பார்க்க;see {} [தொட்டில் + குழந்தை + திட்டம்] |
தொட்டில்பத்தை | தொட்டில்பத்தை toṭṭilpattai, பெ. (n.) வண்டியின் முன் பகுதியில் ஏர்க்காலைத் தொடுமாறு பொருத்தப்பட்டுள்ள மூங்கில் பத்தைகன்; bamboo rod, joined in front of the cart, to louch the plough. மறுவ. சப்பைக்கழி [தொட்டில்2 + பத்தை] |
தொட்டில்முண்டு | தொட்டில்முண்டு toṭṭilmuṇṭu, பெ. (n.) தொட்டிற்சீலை பார்க்க;see {} [தொட்டில்1 + முண்டு. முண்டு = சீலை] |
தொட்டில்ராட்டி | தொட்டில்ராட்டி toṭṭilrāṭṭi, பெ. (n.) மேல் கீழாகச் சுற்றும் இராட்டின விளையாட்டு வகை; a kind of merry-go-round. [தொட்டில் + ராட்டு] |
தொட்டிவயிறு | தொட்டிவயிறு toṭṭivayiṟu, பெ. (n.) விலாப் புடைத்த வயிறு; belly like that of animals paunch belly(சாஅக.);. [தொட்டி + வயிறு] |
தொட்டிவலை | தொட்டிவலை toṭṭivalai, பெ. (n.) மீன் பிடி வலை வகையுள் ஒன்று; a kind of fishing net(மீனவ.);. [தொட்டி + வலை] |
தொட்டு | தொட்டு toṭṭu, பெ.(n.) காய்கறிகளின் மேற்புறத்தில் காம்பை ஒட்டியுள்ள பகுதி; a stalk portion of vegetable. (கொ.வ.வ.சொ.);. மறுவ தோடு [தோடு-தொட்டு] தொட்டு toṭṭu, பெ.(n.) காய்கறிகளின் மேற் புறத்தில் காம்பை ஒட்டியுள்ள பகுதி: a stalk portion of vegetable. (கொ.வ.வ.சொ.);. மறுவ தோடு [தோடு-தொட்டு] |
தொட்டு விளையாட்டு | தொட்டு விளையாட்டு toṭṭuviḷaiyāṭṭu, பெ.(n.) பட்டவரை (தோற்றவரை); பாடல் மூலம் தேர்ந்தெடுப்பது; pointing the defeat through Song. [தொட்டு+விளையாட்டு] தொட்டு விளையாட்டு toṭṭuviḷaiyāṭṭu, பெ.(n.) பட்டவரை (தோற்றவரை); பாடல் மூலம் தேர்ந்தெடுப்பது; pointing the defeat through Song. [தொட்டு+விளையாட்டு] |
தொட்டுக்கொள்(ளு)-தல் | தொட்டுக்கொள்(ளு)-தல் doṭṭukkoḷḷudal, 7 செ.குன்றாவி (v.t.) 1. எட்டிப் பிடித்தல்; to touch; to catch, “தொட்டுக் கொள் தொட்டுக் கொள் என்ன வேண்டும் படி” (ஈடு. 1,1,1);. 2. உணவுக்குத் துணையாக ஊறுகாய் முதலியவற்றைச் சிறிது உட்கொள்ளுதல்; to take small bites, as at pickles. தொட்டுக் கொள்ள ஊறுகாய் வேண்டும். (உ.வ.);. [தொட்டு + கொள்-.] |
தொட்டுச்சாப்பிடுமுறவு | தொட்டுச்சாப்பிடுமுறவு toḍḍuccāppiḍumuṟavu, பெ. (n.) close relationship of women making it permissible for them to take food at one another’s house. [தொட்டு + சாப்பிடும் + உறவு] |
தொட்டுத் தொட்டாட்டம் | தொட்டுத் தொட்டாட்டம் toṭṭuttoṭṭāṭṭam, பெ.(n) தொடுபவன் தான் தொட்ட பாகத்தைப் பிடித்துக்கொண்டு ஓடுதல்; a sport. [தொட்டு+தொட்டு+ஆட்டம்] தொட்டுத் தொட்டாட்டம் toṭṭuttoṭṭāṭṭam, பெ.(n.) தொடுபவன் தான் தொட்டபாகத்தைப் பிடித்துக்கொண்டு ஓடுதல்; a sport. [தொட்டு+தொட்டு+ஆட்டம்] |
தொட்டுத்தின்(னு)-தல் | தொட்டுத்தின்(னு)-தல் doṭṭuddiṉṉudal, 14 செ.கு.வி. (v.i.) கீழ் வகுப்பைச் சார்ந்தோர் சமைத்த உணவை, உடன் இருந்து உண்ணுதல்; to take food at the house of a low caste person. தொட்டுத் தின்றும் பட்டினியா? [தொட்டு + தின்] |
தொட்டுத்தெறி-த்தல் | தொட்டுத்தெறி-த்தல் toṭṭutteṟittal, 4 செகுன்றாவி, (v.t.) ஆலாத்தி நீரை மணமக்கள் மேல் தெளித்தல்; to sprinkle a coloured liquid, as on a newly married couple. 3. சிறுமையாய்க் கொடுத்தல்; to give sparingly. தொட்டுத் தெறிக்காதவன். [தொட்டு + தெறி-.] |
தொட்டுத்தெளித்-தல் | தொட்டுத்தெளித்-தல் toṭṭutteḷittal, 4 செகுன்றாவி. (v.t.) தொட்டுத்தெறி-த்தல் பார்க்க: see {} [தொட்டு + தெளி-.] |
தொட்டுத்தொட்டு | தொட்டுத்தொட்டு toṭṭuttoṭṭu, வி.எ. (adv.) சிறுகச் சிறுக (இவ);; little by little. “தொட்டுத் தொட்டு நூறு உருவா செலவாயிற்று”. |
தொட்டுப்பார்த்தல் | தொட்டுப்பார்த்தல் toṭṭuppārttal, 4 செகுன்றாவி. (v.t.) கையாற் தொடல்; feeling by touch as in fever (சா.அக);. [தொட்டு + பார்-.] |
தொட்டுப்பிடி | தொட்டுப்பிடி1 toḍḍuppiḍittal, 4 செகுன்றாவி. (v.t.) பேறு காலத்தில் பக்கத்திலிருந்து உதவி செய்தல் (நாஞ்);; to act as midwife in childbirth. [தொட்டு + பிடி-.] தொட்டுப்பிடி2 toḍḍuppiḍittal, 4 செகுன்றாவி, (v.t.) சிறுவர் விளையாட்டு வகை; a kind of childerns game. [தொட்டு + பிடி-.] |
தொட்டுப்போடு-தல் | தொட்டுப்போடு-தல் doṭṭuppōṭudal, 20 செகுன்றாவி. (v.t.) மருந்தெண்ணெயைப் புண், காயம் முதலியவற்றுக்கிடுதல்; besmearing or applying medicated oils or ointments to wounds, sores etc.,(சா.அக);. |
தொட்பம் | தொட்பம் toṭpam, பெ. (n.) திறம் (அகநி);; cleverness skill. [ஒட்பம் → தொட்பம்] |
தொணதொண-த்தல் | தொணதொண-த்தல் doṇadoṇaddal, 4 செ.கு.வி. (v.i.) வெறுப்புண்டாம்படி அலப்பிப் பேசுதல் (இ.வ.);; to vex with ceaseless talk. தொண தொணக்காமல் கொஞ்சநேரம் சும்மா யிரு (உவ.);. |
தொணதொணப்பு | தொணதொணப்பு doṇadoṇappu, பெ. (n.) வெறுப்புண்டாம்படி அலப்பிப் பேசுகை; chattering, babbling. அம்மாவின் தொண தொணப்பு தாங்காமல் வீடு மாறிவிட்டோம். |
தொணலக்கவலை | தொணலக்கவலை toṇalakkavalai, பெ. (n.) கவலை மீனுள் ஒரு வகை; kind of fish in kavalai species. [தொணலை + கவலை]. |
தொண்டகப்பறை | தொண்டகப்பறை toṇṭakappaṟai, பெ.(n.) பழம் பெரும் பறை வகை; a drum belong to ancient period. [தொண்டகம்+பறை] தொண்டகப்பறை toṇṭagappaṟai, பெ.(n.) பழம் பெரும் பறை வகை; a drum belong to ancient period. [தொண்டகம்+பறை] |
தொண்டகம் | தொண்டகம் toṇṭakam, பெ.(n.) ஒரு வகையான பறை; a drum. [தொண்டு(துளை);+அகம்] தொண்டகம் toṇṭagam, பெ.(n.) ஒரு வகையான பறை; a drum. [தொண்டு (துளை);+அகம்] தொண்டகம் toṇṭagam, பெ. (n.) 1. குறிஞ்சி நிலப்பறை (திவா.);; a small drum used in __, “தொண்டகச் சிறுபறைப் பாணி” (நற் 104);. 2. ஆகோட்பறை; drum beaten while capturing the enemy’s cows. “தொண்ட கப்பறை துடியொ டார்த்தெழ” (சீவக. 418);. |
தொண்டகை | தொண்டகை toṇṭagai, பெ. (n.) ஆதொண்டை: thorny or ceylon on caper(சாஅக.);. |
தொண்டச்சி | தொண்டச்சி toṇṭacci, பெ. (n.) தொண்டி4, பார்க்க;see {} [தொண்டி → தொண்டித்தி → தொண்டிச்சி → தொண்டச்சி] |
தொண்டத்தி | தொண்டத்தி toṇṭatti, பெ. (n.) பெண்மை நலப்பாடு நோக்கி வகுத்த நால்வகைப் பெண்டிருள் ஒரு பிரிவு; one of the four classes of women classified accroding to lust (சாஅக.);. [தொண்டி → தொண்டித்தி → தொண்டத்தி] |
தொண்டன் | தொண்டன் toṇṭaṉ, பெ.(n.) ஒரு வகை சிறு கடல் மீன்; rainbow Sardine. [தொண்டு+அன்] தொண்டன் toṇṭaṉ, பெ.(n.) ஒரு வகை சிறு கடல் மீன்; rainbow sardine. [தொண்டு+அன்] தொண்டன்1 toṇṭaṉ, பெ. (n.) a kind of fish. தொண்டன் toṇṭaṉ, பெ. (n.) தொண்டர்2 பார்க்க;see {} |
தொண்டப்பறையன் | தொண்டப்பறையன் toṇṭappaṟaiyaṉ, பெ. (n.) வேளாண் முதலிய தொழில் செய்பவன்; a sub-division of the paraiya caste which includes domestic servants. [தொண்டு + பறையன்] |
தொண்டரடிப்பொடி | தொண்டரடிப்பொடி toṇḍaraḍippoḍi, பெ. (n.) ஆழ்வார் பதின்மரு ளொருவர் (திவ்.திருமாலை. 45);; a Vaisnava saint, as the dust lying on the feet of devotees, one of ten__, [தொண்டர் + அடிப்பொடி] |
தொண்டர் | தொண்டர் toṇṭar, பெ. (n.) 1. அடிமைகள்; slaves. 2. அடியார்; devotees, as slaves of God. ‘தொண்டர் குழாந் தொழுதேத்த வருள் செய்வானை” (தேவா. 228, 3);. 3. உலகப் பற்றில் ஈடுபட்டவர்; persons who are slaves to worldly pleasures. “எம்மானை யடைகிலாத் தொளை யிலாச் செவித் தொண்டர்” (தேவா. 42.9, 3);. [துல் → துள் → தொள் → தொழு → தொழும்பு → தொண்டு → தொண்டர்] தொண்டர்2 toṇṭar, பெ. (n.) ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியமில்லாமல் பணி செய்பவர்; worker in a party, volunteer in a service organization. தேர்தல் நேரத்தி தொண்டர்கள் இல்லாவிட்டால் கட்சிக்கு வெற்றி வாய்ப்பே இல்லை (உ.வ.); தமிழியக்கத் தொண்டர்களைத் தளைப்படுத்தியது தகாது (உ.வ.);. [தொண்டு → தொண்டர்] |
தொண்டர்சீர்பரவுவார் | தொண்டர்சீர்பரவுவார் toṇṭarcīrparavuvār, பெ. (n.) பெரிய புராணமியற்றிய ஆசிரியராம் சேக்கிழார்தம் பட்டப் பெயர்; the title given to __, “தொண்டர்சீர் பரவுவா ரெனப்பெயர் சுமத்தி” (சேக்கிழார்பு. 95);. [தொண்டர் + சீர் + பரவுவார்] |
தொண்டலக்குழி | தொண்டலக்குழி toṇṭalakkuḻi, பெ. (n.) இறைவைக் கூனைநீர் வால் வழியாக விழும் பள்ளம்; water pit where the drawing water from the well is poured. [தொண்டலம் + குழி + வேக. 285] |
தொண்டலம் | தொண்டலம்1 toṇṭalam, பெ. (n.) 1. யானைத் துதிக்கை (சூடா);: elephant’s trunk. “சூர்மக னுந்து தொண்டலம் பற்றி” (கத்தபு, அமரச்சி. 83);. 2.. கள் (திவா.); toddy (செஅக.);. [துல் → துன் → தொன் → தொண் → தொண்டு → தொண்டலம்] தொண்டலம்2 toṇṭalam, பெ. (n.) கமலை இறைவையின் கூனைத் தோல்வால்; trunk of leather container which used for drawing water from well. [தொன் → தொண்டு → தொண்டவம் (வேக. 285);] |
தொண்டாடு-தல் | தொண்டாடு-தல் doṇṭāṭudal, செ.கு.வி. (v.i.) பணி செய்தல்; to serve. தொண்டாடித் திரிவேனை (தேவா. 677, 5);. [தொண்டு + ஆடு-.] |
தொண்டான் | தொண்டான் toṇṭāṉ, பெ.(n.) வயலுக்கு நீர் இறைக்கப் பயன்படும் தோலால் ஆகிய சால்; a leather bag like basket used for the irrigation purpose. [தொண்டு-தொண்டி(துளை, பள்ளம்); தொண்டான்] தொண்டான் toṇṭāṉ, பெ.(n.) வயலுக்கு நீர் இறைக்கப்பயன்படும் தோலால் ஆகிய சால்; a leather bag like basket used for the irrigation purpose. [தொண்டு-தொண்டி(துளை, பள்ளம்);தொண்டான்] தொண்டான் toṇṭāṉ, பெ. (n.) தோலால் செய்யப்பட்டு கமலைச் சாலின் கீழ்ப்புறம் நீர் வெளியேறும் பகுதியில் கட்டப் பட்டிருப்பது; trunk of leather container which used for drawing water from well. |
தொண்டான் தொடுபிடித் தொண்டான் | தொண்டான் தொடுபிடித் தொண்டான் toṇṭāṉtoṭupiṭittoṇṭāṉ, பெ.(n.) நெல்லிக் காய் விளையாட்டின் வேறு பெயர் (மதுரை வட்டாரம்);; a kind of playing. [தொண்டான்+தொடுபிடி+தொண்டான்] தொண்டான் தொடுபிடித் தொண்டான் toṇḍāṉtoḍubiḍittoṇḍāṉ, பெ.(n.) நெல்லிக் காய் விளையாட்டின் வேறு பெயர் [மதுரை வட்டாரம்); a kind of playing, [தொண்டான்+தொடுபிடி+தொண்டான்] |
தொண்டான்கயிறு | தொண்டான்கயிறு toṇṭāṉkayiṟu, பெ. (n.) தொண்டானுடன் இணைக்கப்பட்டு நுகத் தடியில் கட்டப்பட்ட கயிறு; coir used to tie with yoke and leather trunk in kamalai. [தொண்டான் + கயிறு] |
தொண்டான்குச்சி | தொண்டான்குச்சி toṇṭāṉkucci, பெ. (n.) தொண்டானையும், தொண்டாங் கயிற்றையும் இணைக்கும் பகுதியில் உள்ள குச்சி; a stick which connects trunk of leather container and горе. [தொண்டான் + குச்சி] |
தொண்டி | தொண்டி toṇṭi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvadanai Taluk. [தொள்-தொண்டி] தொண்டி toṇṭi, பெ.(n.) திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvâdanai Taluk. [தொள்-தொண்டி] தொண்டி1 toṇṭi, பெ. (n.) 1. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ளதும் முன்பு சோழர்க்குரிய தாயிருந்ததுமானதொரு துறைமுகப் பட்டினம்; an ancient sea-port of the Cholas in Ramanatha puram district. “தொண்டியென்னும் பகுதியிலுள்ள அரசரால்” (சிலப். 14:107, உரை);. 2. மலை நாட்டில் சேரர்க்குரிய பழையதொரு துறைமுகப்பட்டினம்; an ancient sea-port of the Cherasin Malabar. கட்டுவன் றொண்டியன்ன (ஜங்குறு. 178);. 3. தொண்டிக்கள் (சூடா); பார்க்க;see {} தொண்டி2 toṇṭi, பெ. (n.) 1. துளை (இவ.);; hole. 2.தொண்டு4 பார்க்க;see {} 3.வேலிகளைத் தாண்டாதிருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குங் கட்டை; block of wood suspended from the neck of an animal to prevent it from passing through hedges. [தொண்டு → தொண்டி = துளை. ஒ.நோ. தொண்டை (throat); = தொனையுன்னது (ஒ.மொ. 120);] தொண்டி3 toṇṭi, பெ. (n.) 1. கலப்பைக் கிழங்கு; Malabar glory-lily. 2. மரவகை; blood drop ordure tree. 3. மதகரிவேம்பு பார்க்க;see {} தொண்டி4 toṇṭi, பெ. (n.) பரத்தை; dancing girl. “வேட்கைமது மொண்டு தருந் தொண்டியர்கள்” (தாயு. எந்நாட் மாதரைப். 14);. [தொண்டு → தொண்டி] தொண்டி5 toṇṭi, பெ. (n.) கடற்கழி; small arm of the sea. தொண்டி6 toṇṭi, பெ. (n.) தொண்டு செய்பவள் (நாநார்த்த. 296);; maid-servant. [தொண்டு → தொண்டி] தொண்டி6 toṇṭi, பெ. (n.) சிறுதோட்டம்; small garden. [தொள் → தொண்டி (முதா. 156);] தொண்டி toṇṭi, பெ. (n.) திறை (வரி); (மீனவ.);; tax. தொண்டி8 toṇṭi, பெ. (n.) களவுபோன பொருள் (நாஞ்.);: stolen article. |
தொண்டிக்கட்டை | தொண்டிக்கட்டை toṇṭikkaṭṭai, பெ.(n.) மாடுகளுக்குக் கழுத்தில் தொங்கவிடும் கட்டிக் கட்டை; small wooden block which is tied in the neck of cattles. (ம.வ.சொ.);. [தொண்டி+கட்டை] [P] தொண்டிக்கட்டை toṇṭikkaṭṭai, பெ.(n.) மாடுகளுக்குக் கழுத்தில் தொங்கவிடும் கட்டிக் கட்டை; Small wooden block which is tied in the neck of cattles. (ம.வ.சொ.);. [தொண்டி+கட்டை] [P] தொண்டிக்கட்டை toṇṭikkaṭṭai, பெ. (n.) வேலிகளைத் தாண்டாதிருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்குங் கட்டை; block of wood suspended from theneck of an animal to prevent it from passing through hedges. [தொண்டி2 + கட்டை] |
தொண்டிக்கள் | தொண்டிக்கள் toṇṭikkaḷ, பெ. (n.) நெல்லாற் சமைத்த கள்; toddy made from paddy. “உண்டுந் தொண்டிக் களிதனை” (சீவக. 1233);. [தொண்டி + கள்] |
தொண்டிச்சி | தொண்டிச்சி toṇṭicci, பெ. (n.) தொண்டி4 (யாழ்.அக.); பார்க்க;see {} (செஅக.);. [தொண்டு → தொண்டி → தொண்டித்தி → தொண்டிச்சி] |
தொண்டிச்சுரம் | தொண்டிச்சுரம் toṇṭiccuram, பெ. (n.) ஈரோட்டிலுள்ள திருக்கோயில்; a temple in __, |
தொண்டிப்பூடு | தொண்டிப்பூடு toṇṭippūṭu, பெ. (n.) நத்தைச் சூரிச் சக்களத்தி; a plant skin to bristly button weed (சாஅக.);. [தொண்டி4 + பூடு] |
தொண்டியோர் | தொண்டியோர் toṇṭiyōr, பெ. (n.) 1. சோழ குலத்தோர்; the Cholas. “வங்க வீட்டத்துத் தொண்டிரயோ ரிட்ட வகிலும்” (சிலப். ஊர்காண். 107);. 2. சேரர்; the Cheras. “தொண்டியோர் பொருந” (பதிற்றுப். 88);. [தொண்டி → தொண்டியோர் (முதா. 156);] |
தொண்டில் | தொண்டில் toṇṭil, பெ. (n.) யானைக் கை; trunk of elephant [தொள் → தொண்டு → தொண்டில்] |
தொண்டிவாரம் | தொண்டிவாரம் toṇṭivāram, பெ. (n.) பயிரிடுங் குடியானவனுக்குரிய விளைச்சற் பகுதி; cultivation share in the produce. [தொண்டி + வாரம்] |
தொண்டீரன் | தொண்டீரன் toṇṭīraṉ, பெ. (n.) தொண்டை மான் (M.M. 908); பார்க்க;see {} [தொண்டைமான் → தொண்டீரன்] |
தொண்டு | தொண்டு1 toṇṭu, பெ. (n.) 1. அடிமைத்தனம் (பிங்.);; Slavery. 2. கடவுள் வழிபாடு (சூடா.);; devotedness to a deity; devoted service. ‘”தொண்டு பூண்டு” (திவ்.திருமாலை. 5);. 3. அடிமையாள்; slave, devoted servant. “தொண்டாயிரவர் தொகுபவே”(நாவடி, 224);. 4. ஒழுக்கங்கெட்டவன்-ள்; person of loose character. 5. கொண்டித்தொழு; cattle pound. 6. ஒரு வகை உள்ளான் (வின்.);; a kind of snipe. 7. தேங்காய் பலா முதலியவற்றின் மேற்றொலி (நாஞ்);; husk, as of coconut. 8. பூடுவகை(யாழ்அக.);; a plant க. தொள்ட்டு;தெ. தொட்டி [துல் → துள் → தொள் → தொழு → தொழும்பு → தொண்டு] தொண்டு2 toṇṭu, பெ. (n.) பழைமை (திவா.);; antiquity, old times, former times. “தொண்டு போல வெவ்வுலகமுந் தோன்றுதல் வேண்டும்”(விதாயகபு. 82,55);. [தொல் → தொள் → தொண் → தொண்டு] தொண்டு3 toṇṭu, பெ. (n.) ஒன்பது; nine. ‘”தொண்டுபடு திவவின்”(மலைபடு. 21);. “தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே” (தொல்.பொருள். 413);. [தொள் + து → தொண்டு] ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது. தொண்டு + பத்து = தொண்பது -தொன்பது ஒன்பது. தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொன்பது என்பதை ஒப்பு நோக்குக (ஒ.மொ. 66);. ஒன்பது என்னும் பெயருக்கு, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவது பொருந்தப் புகலல் என்னும் உத்திபற்றியது. இக்கூற்றிற்கு உருதுவிலும் இந்தியிலும் உள்ள, உன்னிஸ் (19);, உன்தீஸ் (29);, உன்சாலிஸ் (39);, உன்சாஸ் (49);, உன்சட் (59);, உன்த்தர் (69);, உன்யாசி (79); என்னும் எண்ணுப் பெயர்கள் ஒருகால் சான்றாகலாம். ஆனால், அங்கும், அப்பெயர்கள் ஒழுங்கற்ற முறையில மைந்தவையென்பதை நவாசீ (89);, நின்னா நபே (99); என்னும் பெயர்களாளறியலாம் (ஒமொ.68);. தொண்டு4 toṇṭu, பெ. (n.) 1. ஒடுக்கவழி; gap, narrow passage. 2. உருவு சுருக்கு (அகநி.);; Snare, noose. 3. வேலிகளைத் தாண்டாதிருக்க மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்குங் கட்டை; block of wood suspended from theneck of an animal to prevent it from passing through hedges. ம. தொண்டு: க. தொண்டி தொண்டு5 toṇṭu, பெ. (n.) தன்னலம் கருதாமல், எதையும் எதிர்பாராமல் ஒன்றின் நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செய்யும் பணி; Service. நாட்டுப்புற மக்களுக்குத் தொண்டு செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும் (உ.வ.);. பாவாணர் தமிழ்மொழி மீட்புக்குச் செய்த தொண்டு அளப்பரிதாகும் (உவ.);. [துல் → – துள் → தொள் → தொழு → தொழும்பு → தொண்டு] |
தொண்டு சில்லி | தொண்டு சில்லி toṇṭusilli, பெ.(n.) நம்பர் நொண்டி;வட்டமான அரங்கில் எண்களைக் குறித்துச் சில்லினை எறிந்து சிறுவர் ஆடும் நொண்டிவிளையாட்டு; the game of hopping with folded legs. [நொண்டு+சில்லி] [P] |
தொண்டுகிழவன் | தொண்டுகிழவன் toṇṭugiḻvaṉ, பெ. (n.) முதிர்ந்த கிழவன்; ripe. old man. “தொண்டுகிழவ னிவனாரென”(திருப்பு. 59);. [தொண்டு + கிழவன்] |
தொண்டுதுரவு | தொண்டுதுரவு doṇṭuduravu, பெ. (n.) 1. பணி விடை; service. 2. உளவு; movements, concerns, affairs of a person, as watched, by a theif or Spy. [தொண்டு + துரவு] |
தொண்டுநிறுவனம் | தொண்டுநிறுவனம் toṇṭuniṟuvaṉam, பெ. (n.) ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சிக்காகப் பணியாற்றும் அமைப்பு: service organization or society, voluntary agency. நாற்பது தொண்டு நிறுவனங்கள் கூட்டாக முயன்று இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. [தொண்டு + நிறுவனம்] |
தொண்டுப்பட்டி | தொண்டுப்பட்டி toṇṭuppaṭṭi, பெ.(n.) சிறு (பள்ளமான பகுதி); பொருள்கள் வைக்கும் குடிசை போன்ற அமைப்பு (கொ.வ.வ.சொ.93);; a hut for stock little things. [தொள்-தொண்டு+பட்டி] தொண்டுப்பட்டி toṇṭuppaṭṭi, பெ.(n.) சிறு (பள்ளமான பகுதி); பொருள்கள் வைக்கும் குடிசைபோன்ற அமைப்பு (கொ.வ.வ.சொ.93);; a hut for stock little things. [தொள்-தொண்டு+பட்டி] தொண்டுப்பட்டி toṇṭuppaṭṭi, பெ. (n.) மாட்டை அடைக்குங் கொண்டி (எங்களூர், 20);; cattle pound. [தொண்டு + பட்டி] |
தொண்டுப்பணி | தொண்டுப்பணி toṇṭuppaṇi, பெ. (n.) ஊழியம் (நாஞ்);; menial service, [தொண்டு + பணி] |
தொண்டுமுட்டி | தொண்டுமுட்டி toṇṭumuṭṭi, பெ.(ո.) எருமையோ, மாந்தனோ தப்பி ஓடாதிருக்க முன்னங்கால் களுக்கிடையே கட்டப்படும் முட்டி. (கொ.வ.வ.சொ.);; a wooden piece tied between fasten the knees with rope to prevent them from escaping. [தொண்டு+முட்டி] தொண்டுமுட்டி toṇṭumuṭṭi, பெ.(n.) எருமையோ, மாந்தனோ தப்பி ஓடாதிருக்க முன்னங்கால் களுக்கிடையே கட்டப்படும் முட்டி. (கொ.வ.வ.சொ.);; a wooden piece tied between fasten the knees with rope to prevent them from escaping. [தொண்டு+முட்டி] |
தொண்டுர் | தொண்டுர் toṇṭur, பெ.(n.) செஞ்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Senji Taluk. [தொண்டி+ஊர்-தொண்டூர்] தொண்டுர் toṇṭur, பெ.(n.) செஞ்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Senji Taluk. [தொண்டி+ஊர்-தொண்டூர்] |
தொண்டூழியம் | தொண்டூழியம் toṇṭūḻiyam, பெ. (n.) தொண்டுப் பணி (நாஞ்); பார்க்க;see {} [தொண்டு + ஊழியம்] |
தொண்டை | தொண்டை toṇṭai, பெ. (n.) மிடறு (பிங்.);; throat, gullet. 2. குரல்வளை; windpipe, larynx. தொண்டையிலே தூறு முளைக்க (பழ.);. 3. குரல்; voice, singing voice. அவனுக்கு நல்ல தொண்டையுண்டு. 4. யானைத் துதிக்கை (பிங்);: elephant’s trunk. “கருநாகத் தொண்டைக் கயமுனிக் கூட்டங்கள்” (திருப்போசத் அலங்கா. 18);. [தொள் → தொண் → தொண்டை = தொனையுள்ளது (ஒமொ. 119, 120);] தொண்டை toṇṭai, பெ. (n.) 1. ஆதொண்டை (சூடா.); பார்க்க;see {} 2. கோவை (பிங்.); பார்க்க;see {} 3. சிறு கடல்மீன் வகை; sea fish, bluish green. 4. தொண்டை மண்டலம் பார்க்க;see {} “ஆறோ டீரெட்டுத் தொண்டை” |
தொண்டைஅடைப்பான் | தொண்டைஅடைப்பான் toṇḍaiaḍaippāṉ, பெ. (n.) தொண்டையடைப்பான் பார்க்க;see {} |
தொண்டைகத்து-தல் | தொண்டைகத்து-தல் doṇṭaigaddudal, 5 செ.கு.வி. (v.i.) பெருங்குரலிடுதல் (யாழ்ப்.);; to bawl (செஅக.);. [தொண்டை + கத்து-.] |
தொண்டைக்கட்டி | தொண்டைக்கட்டி toṇṭaikkaṭṭi, பெ. (n.) 1. தொண்டையிலுண்டாகும் புண்கட்டி: swelling in the throat. 2. உண்ணாக்கு நோய்; tonsilitis. [தொண்டை + கட்டி] |
தொண்டைக்கட்டு | தொண்டைக்கட்டு toṇṭaikkaṭṭu, பெ. (n.) 1. கரகரப்பால் தொண்டை அடைத்துக் கொள்ளுகை; hoarse throat. 2. உண்ணவும் பேசவும் முடியாதவாறு தொண்டை புண்படுகை (பதார்த்த. 24);; sore-throat, pharyngitis. 3. தொண்டை நோய்வகை: inflammation of the larynx, laryngitis(செஅக.);. [தொண்டை + கட்டு] |
தொண்டைக்கணப்பு | தொண்டைக்கணப்பு toṇṭaikkaṇappu, பெ. (n.) தொண்டைக்கட்டு (இவ.); பார்க்க;see {} (செஅக.);. [தொண்டை + கனப்பு] |
தொண்டைக்கதிர் | தொண்டைக்கதிர் doṇṭaikkadir, பெ. (n.) கதிர் வெளிப்படுதற்குரிய பருவம் (இவ);; the stage of growing crop when it is ready to shoot forth ears (செஅக.);. [தொண்டை + கதிர்] |
தொண்டைக்கனைப்பு | தொண்டைக்கனைப்பு toṇṭaikkaṉaippu, பெ. (n.) கனைத்தல்; braying like horse(சாஅக.);. [தொண்டை + கனைப்பு] |
தொண்டைக்கபம் | தொண்டைக்கபம் toṇṭaikkabam, பெ. (n.) கோழை, சளி; phlegm(சாஅக.);. [தொண்டை + கபம்] |
தொண்டைக்கம்மல் | தொண்டைக்கம்மல் toṇṭaikkammal, பெ. (n.) 1. தொண்டையழற்சி; inflammation of the throat. 2. குரலடைப்பு; hoarseness. 3. குரல் கம்மல்; inflammation of the larynx a condition attended with dryness and soreness of the throat, hoareness cough etc.(சாஅக.);. [தொண்டை + கம்மன், கமறுதல் → கம்மல்] |
தொண்டைக்கரகரப்பு | தொண்டைக்கரகரப்பு toṇṭaiggaragarappu, பெ. (n.) தொண்டையறுப்பு; irritation of throat(சாஅக.);. [தொண்டை + கரகரப்பு] |
தொண்டைக்களகளப்பு | தொண்டைக்களகளப்பு toṇṭaiggaḷagaḷappu, பெ. (n.) தொண்டைக்குள்ளிரைச்சல் பார்க்க;see{} [தொண்டை + கனகனப்பு] |
தொண்டைக்கழலை | தொண்டைக்கழலை toṇṭaikkaḻlai, பெ. (n.) தொண்டைக்குள்ளாக இருக்கும் கேடயக் கோளம் பருத்து அதனால் கழுத்தின் முன்பாகம் கழலைக் கட்டியைப் போற் காணப்படும் வீக்கம்; enlargement of thyroid body causing a swelling in the front part of the neck(சாஅக.);. [தொண்டை + கழலை] |
தொண்டைக்காறல் | தொண்டைக்காறல் toṇṭaikkāṟal, பெ. (n.) சளியை வெளிப்படுத்த கனைத்தல்; making harsh cry or sound to bring out phlegm, forcible expectration(சாஅக.);. [தொண்டை + காதல்] |
தொண்டைக்குத்தல் | தொண்டைக்குத்தல் toṇṭaikkuttal, பெ. (n.) தொண்டைக்குத்து பார்க்க;see {} (சாஅக.);. [தொண்டை + குத்தல். குத்து → குத்தல்] |
தொண்டைக்குத்து | தொண்டைக்குத்து toṇṭaikkuttu, பெ. (n.) 1. உண்ணாக்கு வளர்ச்சி; elongation of the uvula touching the throat. 2. தொண்டை வலி; shooting pain of the throat(சாஅக);. [தொண்டை + குத்து] |
தொண்டைக்குத்துக்குத்து-தல் | தொண்டைக்குத்துக்குத்து-தல் doṇṭaikkuddukkuddudal, 5 செ.கு.வி. (v.i.) ஒயாமல் வாயாடுதல்; to argue unceasingly. உன்னோடு தொண்டைக் குத்துக்குத்த யாரால் முடியும்? (உவ.); (செஅக);. [தொண்டை + குத்து + குத்து] |
தொண்டைக்குறுகுறுப்பு | தொண்டைக்குறுகுறுப்பு toṇṭaigguṟuguṟuppu, பெ. (n.) தொண்டைக்குள்ளிரைச்சல் பார்க்க;see {} [தொண்டை + குறுகுறுப்பு] |
தொண்டைக்குள்ளிரைச்சல் | தொண்டைக்குள்ளிரைச்சல் toṇṭaikkuḷḷiraiccal, பெ. (n.) குரட்டை விடுவதாலும் இருமலாலும் தொண்டைக்குள் ஏற்படும் வலி; throat pain. [தொண்டைக்கு + உள் + இரைச்சல்] |
தொண்டைக்குழி | தொண்டைக்குழி toṇṭaikkuḻi, பெ. (n.) தொண்டையின் அடிக்குழி; a depression at the base of the neck just above the sternum (சாஅக.);. [தொண்டை + குழி] |
தொண்டைக்கோளம் | தொண்டைக்கோளம் toṇṭaikāḷam, பெ. (n.) வாயின் அடிப்பாகத்தில் முன் தொண்டையின் இரு பக்கத்திலும் வாதுமைக் கொட்டையைப் போல் தடித்த சதைப்பற்று; a small almond shape mass of flesh between the pillars of the fauces on either side in the region of the pharynx. 2. தொண்டை அல்லது கழுத்திலிருக்கும் கோளங்கள்; glands in general of the throat or the neck. 3. கழுத்தின் நிணநீர்க் கோளம்; lymph glands of the neck. 4. கேடயக்கோளம்; thyroid gland (சாஅக.);. [தொண்டை + கோளம்] |
தொண்டைச்சங்கு | தொண்டைச்சங்கு toṇṭaiccaṅgu, பெ. (n.) குரல் வளை முருந்து; shield shaped cartilage of the larynx(சா.அக.);. [தொண்டை + சங்கு] |
தொண்டைச்சளி | தொண்டைச்சளி toṇṭaiccaḷi, பெ. (n.) கோழை, சளி, phlegm(சாஅக,);. [தொண்டை + சளி] |
தொண்டைச்சீதளக்கட்டி | தொண்டைச்சீதளக்கட்டி toṇṭaiccītaḷakkaṭṭi, பெ. (n.) தொண்டைத்தூறு பார்க்க;see {} [தொண்டை + சீதளம் + கட்டி] |
தொண்டைச்செவிடு | தொண்டைச்செவிடு toṇḍaicceviḍu, பெ. (n.) தொண்டையடைப்பினால் ஏற்படும் செவிடு; deafness due to obstruction in the throat arising from enlargement of some glands. [தொண்டை + செவிடு] |
தொண்டைதிறத்தல் | தொண்டைதிறத்தல் doṇṭaidiṟaddal, பெ. (n.) 1. இசைக் குரல் இனிமைப்படுகை; clearing of the throat, becoming clear in tone, as in singing. 2. உரக்க்க்கத்துகை; bawling out. [தொண்டை + திறத்தல்] |
தொண்டைத்தாபம் | தொண்டைத்தாபம் toṇṭaittāpam, பெ. (n.) 1. தொண்டையழற்சி; inflammation of the throat and in its adjacent parts. 2. தொண்டைக் கோளவழற்சி; inflammation of tonsils (சாஅக.);. [தொண்டை + தாபம்] |
தொண்டைத்திறப்பு | தொண்டைத்திறப்பு toṇṭaittiṟappu, பெ. (n.) மிடறடைப்பு நீக்குகை; relief from the obstruction in the passage of the throat (சாஅக.);. [தொண்டை + திறப்பு] of Arcot, __, and __, with __, as the capital. [தொண்டை + மண்டலம்] |
தொண்டைத்துறு | தொண்டைத்துறு toṇṭaittuṟu, பெ. (n.) தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சி; a disease of throat giving rise to vegetation or fleshy growth of papillae or false membrane.(சாஅக.);. [தொண்டை + தூறு] |
தொண்டைநாடு | தொண்டைநாடு toṇṭaināṭu, பெ. (n.) தொண்டைமண்டலம் பார்க்க;see {} “பேண நீடிய முறையது பெருந் தொண்டை நாடு” (பெரியபு. திருக்குறிப்பு. 4); (செஅக.);. [தொண்டை + நாடு] |
தொண்டைநாளம் | தொண்டைநாளம் toṇṭaināḷam, பெ. (n.) குரல்வளை; wind pipe, larynx. [தொண்டை + நாளம்] |
தொண்டைநெரி-த்தல் | தொண்டைநெரி-த்தல் toṇṭainerittal, 4 செ.குவி. (v.i.) 1. மூச்சு விடாதபடி தொண்டையை அமுக்குதல்; to compress the throat so as to choke. 3. தொண்டை நெரியச் செய்தல்; crush the throat causing fracture(சாஅக.);. [தொண்டை + தெரி-.] |
தொண்டைநோய் | தொண்டைநோய் toṇṭainōy, பெ. (n.) தொண்டை தொடர்பான குரல்வளை, காற்றுக் குழாய் முதலிய உறுப்புகளில் ஏற்படும் நோய்கள்; diseases in general of the throat organs such as larynx, trachkea, gullet etc.(சாஅக.);. [தொண்டை + நோய்] |
தொண்டைநோவு | தொண்டைநோவு toṇṭainōvu, பெ. (n.) 1. தொண்டைக்கட்டு; sore throat, pharyngitis. 2. உள்நாக்கு நோய்; tansilitis. [தொண்டை + நோவு] |
தொண்டைப்பிடி | தொண்டைப்பிடி toṇḍaippiḍi, பெ. (n.) 1. தொண்டையடைப்பு பார்க்க;see {} 2. கடினமாய் நெருக்குகை; extremepressure, as for paying a debt. கடனுக்குத் தொண்டையைப் பிடிக்கிறான். [தொண்டை + பிடி] |
தொண்டைப்புகைச்சல் | தொண்டைப்புகைச்சல் toṇṭaippugaiccal, பெ. (n.) தொண்டை புகைந்திருமுகை; catarh, bronchitis, laryngitis, irritation of the throat(செஅக.);. [தொண்டை + புகைச்சல்] |
தொண்டைப்புண் | தொண்டைப்புண் toṇṭaippuṇ, பெ. (n.) தொண்டை உள்ளுறுப்புகளுக்கு ஏற்படும் வேக்காடு, புண், குருதிக்காயம் முதலியன; disease of the throat such as inflammation, soreness ulceration etc., of the internal parts as tonsils, larynx, pharynx, oesphagus etc known astansilitis, larngitis, pharyngitis etc. [தொண்டை + புண்] |
தொண்டைப்புற்று | தொண்டைப்புற்று toṇṭaippuṟṟu, பெ. (n.) 1.தொண்டக்குள் ஏற்படும் சிலந்தி, புண்கட்டி; cancer of the throat. 2.. புற்றைப் போல் தொண்டைக்குள் ஏற்படும் சீழ் கூடிய சதை வளர்த்தி; growth of flesh inside the throat(சாஅக.);. [தொண்டை + புற்று] |
தொண்டைப்பூச்சி | தொண்டைப்பூச்சி toṇṭaippūcci, பெ. (n.) நெற் பயிரில் விழும பூச்சி வகை; a paddy pest(செஅக.);. [தொண்டை + பூச்சி] |
தொண்டைமணி | தொண்டைமணி toṇṭaimaṇi, பெ. (n.) குரல்வளை; adam’s apple (C.G.);. [தொண்டை + மணி. முள் → (மள்); → மண் → மணி] |
தொண்டைமண்டலசதகம் | தொண்டைமண்டலசதகம் doṇṭaimaṇṭalasadagam, பெ. (n.) தொண்டை மண்டலத்தின் பெருமைகளைப் பற்றிப் படிக்காகப் புலவர் இயற்றி நூறகம் (சதகம்);; poem of 100 stanzas an__,(செஅக.);. [தொண்டை + மண்டல + சதகம்] |
தொண்டைமண்டலம் | தொண்டைமண்டலம் toṇṭaimaṇṭalam, பெ. (n.) காஞ்சியைத் தலைநகராகக் கொண்டதும் ஆர்க்காடு, செங்கற்பட்டு, நெல்லூர் மாவட்டங்களை உள்ளடக்கியதுமான தமிழகப் பகுதி; an ancient division of the Tamil country, which included the districts. கனாக் காண்பது மச்சு மாளிகை (பழ.); துணிவாதல் (ஈடு. 7, 55, 11);; to be effective, strong. 6. உண்டது வயிற்றில் தங்குதல்; to stay in the bowels, as anything eaten. “நாய்க் குடலுக்கு நறுநெய் தொங்காதாப் போல” (ஈடு.); 7. கிடைத்தல்; to be obtained, to come into possession. “கால்பாதி தொங்காதோ வென்று சுழல்வாரும்” (பணவிதி. 290);. 8. குதித்தல்; to leap, to skip, as a child; to gallop. “குதிரை தொங்கிப் பாய்கிறது” (வின்);. 9. சாதல் (யாழ்ப்.);; to die. 10. முடிவு பெறாது தாமதித்திருத்தல் (கொ.வ.);; to be in suspense. தமிழ்வழிக் கல்வி பற்றிய வழக்கு உச்சமுறைமன்றில் தொங்கலாயுள்ளது. 11. உதவி யற்றிருத்தல்; to be helpless. ‘ஆள் தொங்குகிறான்’ (உவ.); ம. தொங்ஙுக; க., தெ., பட. தொங்கு; குட. துங்க்; கோத. தொங்க்;துட. தங்க் [ஞாலு → நாலு → தாலு → தொலு → தொங்கு (அடி ஒன்றிட்படாமல் வானத்து நிற்றல்;ஒன்றைப் பற்றிக் கொண்டு தொங்குதல் போல ஒருவனை நெருங்கி வேண்டல்);] |
தொண்டைமண்டலவேளாளர் | தொண்டைமண்டலவேளாளர் toṇṭaimaṇṭalavēḷāḷar, பெ. (n.) வேளாளப் பிரிவினர்; a section of the __, [தொண்டை + மண்டலம் + வேளாளர்] |
தொண்டைமான் | தொண்டைமான் toṇṭaimāṉ, பெ. (n.) 1. தொண்டைமண்டல அரசன்; ruler of Tondaimandalam. “தொண்டைமா னுழைச் சென்ற ஒளவைக்கு” (புறநா. 95, குறிப்பு.);. 2. புதுக்கோட்டையரசர் பட்டப்பெயர்; title of the Raja of __, 3. கள்ளர் மறவர் முதலிய சில குலத்தாரின் பட்டப்பெயர்; title of certain castes, as __, [தொண்டைமகன் → தொண்டைமான்] |
தொண்டைமான்இளந்திரையன் | தொண்டைமான்இளந்திரையன் toṇṭaimāṉiḷandiraiyaṉ, பெ. (n.) கிள்ளிவளவனுக்கும் பீலிவளைக்கும் மகனாகப் பிறந்து தொண்டைநாட்டை ஆண்டவன்; a king who was the son of the __, who ruled __, [தொண்டைமான் + இத்திரையன்] |
தொண்டைமாரி | தொண்டைமாரி toṇṭaimāri, பெ. (n.) தொண்டைக்கட்டி; swelling in the throat, goitre. [தொண்டை + மாரி] |
தொண்டைமுடிச்சு | தொண்டைமுடிச்சு toṇḍaimuḍiccu, பெ. (n.) குரல்வளை வெளியிற் காணப்படும் முருந்தினாலாக்கப்பட்ட பிதுக்கம்; the prominence in front of the neck cause by the cartilages which enclose the larynx (சாஅக.);. [தொண்டை + முடிச்சு] |
தொண்டையடைத்தல் | தொண்டையடைத்தல் toṇḍaiyaḍaittal, பெ. (n.) எவ்வகைக் காரணத்தினாலாவது தொண்டையில் பொதுப்பட உண்டாகும் அடைப்பு; obstruction in general in the passage of the throat due to any cause. 2. தொண்டைச் சுருக்கத்தினால் மூச்சு விட முடியாமல் ஏற்படும் அடைப்பு; a disease or symptom characterised by spasmodic suffocative attacks (சாஅக.);. [தொண்டை + அடைத்தல்] |
தொண்டையடைப்பான் | தொண்டையடைப்பான் toṇḍaiyaḍaippāṉ, பெ. (n.) தொண்டை முழுவதும் வீங்கி விழுங்க முடியாமலும், உள்காற்று தொடர்பால் வாய், குரல்வளை முதலிய இடங்களில் அழற்சி கண்டு மூச்சு விட முடியாமலும் மிகுதியான காய்ச்சல் காய்ந்து கோழை, சளி கோளாறினால் ஏற்படும் ஒருவித அடைப்பான் நோய்; a disease in which large swelling occurs along the whole throat so as to obstruct completely the passage of food solid or liquid. It is marked by suffocation and high fever on a result dangerous phlegom in the system. 2. ஆடு மாடுகளுக்கு உண்டாகும் அடைப்பான் நோய்; inflammation of the throat in cattle. 3. குரலடைக்கும் ஒரு நோய்; a maligrant sore throat (சாஅக.);. [தொண்டை + அடைப்பான்] |
தொண்டையடைப்பு | தொண்டையடைப்பு toṇḍaiyaḍaippu, பெ. (n.) தொண்டை நோய் வகை; a throat disease. “ஆதியான் மடத்திற் றம்பல முமிழ்ந்தோ ரருந் தொண்டை யடைப்பு நோயாளர் (கடம்ப.பு. இலீலா. 132);. [தொண்டை + அடைப்பு] |
தொண்டையிடு-தல் | தொண்டையிடு-தல் doṇḍaiyiḍudal, பெ. (n.) 20 செ.கு.வி. (v.i.); கூவுதல் (இ.வ.);; to bawl. [தொண்டை + இடு-.] |
தொண்டையிளநீர்க்கட்டி | தொண்டையிளநீர்க்கட்டி toṇṭaiyiḷanīrkkaṭṭi, பெ. (n.) உள்நாக்கு நோவு; tonsilitis(செஅக.);. [தொண்டை + இளநீர் + கட்டி] |
தொண்டையுடைதல் | தொண்டையுடைதல் doṇḍaiyuḍaidal, பெ. (n.) பருவத்தாற் குரல் மாறுகை (உவ);; breaking of voice, as at manhood. [தொண்டை + உடைதல்] |
தொண்டையைத்தீட்டு-தல் | தொண்டையைத்தீட்டு-தல் doṇṭaiyaiddīṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) தொண்டையிடு-தல் (நாஞ்.); பார்க்க;see {} [தொண்டை + தீட்டு] |
தொண்டையோர் | தொண்டையோர் toṇṭaiyōr, பெ. (n.) தொண்டை மண்டலவரசர்; kings of Tondaimandalam. “கொண்டியுண்டித் தொண்டையோர் மருக” (பெரும்பாண். 454);. [தொண்டை → தொண்டையோர்] |
தொண்டைவலி | தொண்டைவலி toṇṭaivali, பெ. (n.) தொண்டை நோவு; pain in the throat (சாஅக.);. [தொண்டை + வலி] |
தொண்டைவலிப்பு | தொண்டைவலிப்பு toṇṭaivalippu, பெ. (n.) தொண்டைக்குள் ஏற்படும் நரம்புச் சுருக்கம்; spasmodic contraction of the musles of the throat especially in a disease of the pharnyx (சாஅக.);. [தொண்டை + வலிப்பு] |
தொண்டைவளர்ச்சி | தொண்டைவளர்ச்சி toṇṭaivaḷarcci, பெ. (n.) தொண்டையினுட்சவ்வு பருத்துத் தொண்டையை அடைத்தல்; growth of the false membranes obstructing the throat as in diptheria (சாஅக.);. [தொண்டை + வளர்ச்சி] |
தொண்டைவிடு-தல் | தொண்டைவிடு-தல் doṇḍaiviḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. தெளிவாய்க் குறிப்பிடுதல்; to let out the voice, as in singing; to utter clearly and loudly. 2. பெருங்குரலிடுதல்; to bawl, howl. “தொண்டை விடுவன வண்டம் வெடிபட” (திருவாலவா. 29, 3);. [தொண்டை + விதி-.] |
தொண்டைவீக்கம் | தொண்டைவீக்கம் toṇṭaivīkkam, பெ. (n.) தொண்டைவேகல் பார்க்க;see {} [தொண்டை + வீக்கம்] |
தொண்டைவேகல் | தொண்டைவேகல் toṇṭaivēkal, பெ. (n.) தொண்டை வீங்குதலாகிய நோய்வகை; inflammation of the throat, quinsy, tonsilitis (செஅக.);. [தொண்டை + வேகல்] |
தொண்டைவை-த்தல் | தொண்டைவை-த்தல் toṇṭaivaittal, 4 செ.கு.வி. (v.i.) கூவுதல் (வின்);; to bawl [தொண்டை + வை-.] |
தொண்டொண்டொடெனல் | தொண்டொண்டொடெனல் toṇḍoṇḍoḍeṉal, பெ. (n.) பறையினொலிக் குறிப்பு; onom.expr. of the sound of drumming. “தொண்டொண் டொடென்னும் பறை” (நாலடி, 25);. [தொண் + தொண் + எனல்] |
தொண்ணா-த்தல் | தொண்ணா-த்தல் toṇṇāttal, 6 செ.கு.வி. (v.i.) கெஞ்சி நிற்றல் (நெல்லை.);; to cinge. அவனிடம் போய் தொண்ணாந்து நிற்காதே. |
தொண்ணூறு | தொண்ணூறு toṇṇūṟu, பெ. (n.) ஒருபத் தொழிய நின்ற நூறு; ninety. ம. தொண்ணுாறு [தொண்டு + நூறு = தொண்ணூறு] ஒன்பது + பஃது = தொண்ணூறு எனக் காட்டுகிறது தொல்காப்பிய நூற்பா (தொல். எழுத்து. 445);. இம்முடிவு எவ்வகையிலும் பொருந்தாததொன்றாம். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம்பெயர் தொண்டு என்பது. “தொண்டு தலையிட்ட” (தொல்.1258); என்று ஆசிரியரும் “தொண்டுபடு திவவு” (மலைபடு. 21); என்று பெருங்குன்றூர்ப் பெருங் கெளசிகனாரும் கூறுதல் காண்க. தொண்டு என்னும் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப் போய்விட்டது. அவர் காலத்திற்கு முன் தொண்டு தொண்பது தொண்ணுாறு தொள்ளாயிரம் என்பன முறையே 9, 90, 900, 9000 என்னும் எண்களைக் குறிக்கும் பெயர்களாயிருந்தன. தொண்டு என்னும் ஒன்றாமிடப் பெயர் வழக்கறவே, தொண்பது என்னும் பத்தாமிடப் பெயர் ஒன்றாமிடத்திற்கும் தொண்ணுாறு என்னும் நூறாமிடப் பெயர் பத்தா மிடத்திற்கும், தொள்ளாயிரம் என்னும் ஆயிரத்தாமிடப் பெயர் நூறாமிடத்திற்கும் வழங்கவே 9000 என்னும் பெயரைச் சேர்க்க வேண்டியதாயிற்று, முதற் பத்து எண்ணுப் பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர மற்றவையெல்லாம் ஒரு சொல்லா யிருப்பதையும், ஒன்பது என்பது இரு சொல்லாய்ப் பது (பத்து); என்று முடிவதையும், தொண்ணுறு என்பது நூறு என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் நோக்குக தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறை பற்றி ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவர் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணுறு தொள்ளாயிரம் என்பவற் றிற்கும் அப்பொருள் ஏற்க வேண்டும். அங்ங்னம் ஏலாமையின் அது போலியுரை யென மறுக்க. ஆகவே தொண்டு + பத்து = தொண்பது; தொண்டு + நூறு = தொண்ணுாறு;தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என்று புணர்ப்பதே முறையென்றும், தொண்டு என்னும் எண்ணுப் பெயர் வழக்கற்றதினால் அதன் மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோ ரிடமாய்த் தாழ்ந்து வந்து வழங்கின என்றும் அறிந்து கொள்க. (பாவாணர், தொல். எழுத்து. 445, அடிக்குறிப்பு);. |
தொண்ணை | தொண்ணை toṇṇai, பெ. (n.) பெருந்தடி; stout stick or club. [துள் → தொ ள் → தொண் → தொண்ணை (முதா. 208);] தொண்ணை toṇṇai, பெ.(n.) இனிப்பில்லாத கரும்பின் நுனிப்பகுதி,கோதாளை tipportion of the sugarcane. [தொள்-தொண்-தொண்ணை] |
தொண்ணைத்தடி | தொண்ணைத்தடி toṇṇaittaḍi, பெ. (n.) பெருந்தடி; stout stick or club. [தொண்ணை + தடி] தொண்ணை எனினும் தடி எனினுமொக்கும். தொண்ணைத்தடியென்பது மீமிசை |
தொண்மணி | தொண்மணி toṇmaṇi, பெ. (n.) முத்து, மாணிக்கம் போன்ற ஒன்பது வகையான மணிக்கற்கள்; the nine gems or precious stones. [தொண்பது → தொண் → ஒன்பது. தொண் + மணி.] |
தொதல் | தொதல் dodal, பெ. (n.) தித்திப்புப் பண்டவகை; a confection. |
தொதவம் | தொதவம் dodavam, பெ. (n.) நீலமலையில் பேசப்படும் திருந்தாத தமிழிய (திராவிடக் குடும்ப மொழிகளுளொன்று; one of the uncultivated languages of Dravidian family spoken at Nilgiris hills. [தொழு → தொது → தொத → தெrதவம்] |
தொதவர் | தொதவர் dodavar, பெ. (n.) நீலமலையில் வாழ்பவரும் எருமை மந்தை ஒம்புதலை முதன்மையாகக் கொண்டவருமான மலைவாழ் வகுப்பினர்; todars of Nilgiris hills the people who are having the buffalo rearing as prime occupation. [தொழு → தொது → தெரத → தொதவர்] |
தொதி | தொதி dodi, பெ. (n.) பப்பரப்புளி பார்க்க;see {} [தது → தொது → தொதி] |
தொத்தன் | தொத்தன் tottaṉ, பெ. (n.) அடிமையாள் (வின்.);; slave. [தொத்து → தொத்தல் → தொத்தன்] |
தொத்தல் | தொத்தல் tottal, பெ. (n.) 1. வலியற்றவன்-வள்-து; emaciated, weak person or animal. தொத்தல் மாடு. 2. பயனிலி, பதடி; uscless person or thing. “ஆகாத தொத்தலுன் னுர்பேரென்ன” (ஆதிபுரவதானி. 27);. |
தொத்தளவு | தொத்தளவு tottaḷavu, பெ.(n.) பாவில் ஒட்டு நீக்குவதற்கும் தெளிவு எளிதில் உண்டாக்கவும் பயன்படுத்தப்படும் கோல்கள்; a pole used by the weavers to remove the tangle in the lengthwise thread in a loom. [தெழி-தொழித்து-தொத்து+அளவு] தொத்தளவு tottaḷavu, பெ.(n.) பாவில் ஒட்டு நீக்குவதற்கும்தெளிவு எளிதில் உண்டாக்கவும் பயன்படுத்தும் கோல்கள்; apole used by the weavers to remove the tangle in the lengthwise thread in a loom. [தெழி-தொழித்து-தொத்து+அளவு] |
தொத்தாள் | தொத்தாள் tottāḷ, பெ. (n.) 1.அடிமை (நிகண்டு);; slave. 2. தொத்தா பார்க்க;see {} [தொத்து → தொத்தாள்] |
தொத்தி | தொத்தி totti, பெ. (n.) 1. கொடி; crceper. 2. ஒருமரம்; an unknown tree (சாஅக.);. [தொற்றி → தொத்தி] |
தொத்திப்பிடித்தல் | தொத்திப்பிடித்தல் tottippiḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஒட்டிக் கொள்ளுதல்; to cling to. 2. சார்பாகப் பற்றுதல்; to cleave to for support. 3. அடைக்கலம் புகுதல்; to take refuge with one; to seek one’s friendship obsequiously. 4. கூட்டி விடுதல்; to bring, fetch, as a woman to her paramour. [தொத்தி + பிடி] |
தொத்தியேறு-தல் | தொத்தியேறு-தல் doddiyēṟudal, 5 செ.கு.வி. (v.i.) 1. கைகால்களாற் பற்றியேறுதல்; to climb by clinging, as a horse. 2. தன்மேம்பாடு காட்டுதல் (வின்.);; to assume authority or dominance, as climbing on others. [தொத்தி + ஏறு-.] |
தொத்து | தொத்து1 tottu, பெ. (n.) 1. தொற்று பார்க்க;see {} 2. பூங்கொத்து; bunch of flowers (சாஅக.);. [துல் (துற்று); → தொற்று → தொத்து (மு.தா. 156);] தொத்து2 doddudal, 5 செ.கு.வி. (v.i.) 1. தொத்தியேறு-தல் பார்க்க;see {} “நரருமினித் தொத்துவர்” (திருவாலவா. 29, 1);. 2. ஒட்டுதல்; to cling, adhere. “உடுமீன் தொத்தப் பொலி கனகக்கிரி வெயில் சுற்றிய தொத்தான்” (கம்பரா. பிரமாத்.117);. 3. தொங்குதல்; to hang. “செச்சைக் கண்டத் தொத்துரன் போல” (ஞான. பாயிர. 5, 12);. 4. கூடுதல்; to be obtained. “சத்திபதிப்பிற் சம்பிரதாயந் தொத்துவதென்பது” (ஞான.62,9);. 4. படர்தல்; to climb up, spread, as the vine. [தொற்று → தொத்து] தொத்து3 doddudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. பற்றுதல்; to hold, grasp, as a stick. “கோற்றொத்து கூனனும்”பதினொ.திருத்தொண்.48). 2. தொடர்தல்; to follow, pursue. “விருத்திரனைக் கொல்லத் தொத்திய பாவம்” (உத்தரரா. அசுவமே. 8);. 3. நோயொட்டுதல்; to catch, as a disease; to infect. [தொற்றி → தொத்து] தொத்து tottu, பெ. (n.) பூ முதலியவற்றின் தொத்து (திவா.);; cluster, bunch, as of flowers. “தொத்தீன் மலர்ப்பொழிற் றில்லை” (திருக்கோ. 121);. 2. திரள்; mass, bundle. “தொத்தொளி முத்துத்தாமம்” (சீவக. 2653);. 3. தொடர்பு; connection. “தொத்தற விட்டிட” (திருமந் 2245);. 4. பற்று; Attachment. “சித்தத் தொத்தற” (ஞானவா. சரகு. 23);. 5.. சார்பு (பிங்.);; dependance. 6. அடிமை (பிங்.);; slave, dependant, menial. 7. பழைமையாய் வரும் நட்பு (திவா.);; long established intimacy. 8. வைப்பாட்டி (பல்பொருட் சூளா);; concubine. 9. தொற்று நோய்க்குணம்; contagion, infection. 10. சார்ப்புப் பொருள்; anything attached to another as support. [துல் (துற்று); → தொள்து → தொத்து (முதா. 156);] |
தொத்துகாமாலை | தொத்துகாமாலை tottukāmālai, பெ. (n.) காமாலை நோய் வகை; a kind of jaundice (சாஅக.);. [தொற்று + காமாலை. தொற்று → தெரத்து] ஒ.நோ. பற்று → பத்து |
தொத்துக்குட்டி | தொத்துக்குட்டி tottukkuṭṭi, பெ. (n.) உடன் பற்றித் திரிபவன் (இ.வ.);; a dependent, satellite (செஅக.);. [தொற்று → தொத்து + குட்டி] |
தொத்துச்செடி | தொத்துச்செடி tottucceḍi, பெ. (n.) 1. மண்ணில் படாமல் வெளியிற் காற்றுப்பட்டுக் கொண்டிருக்கும்படித் தொங்கி நிற்கும் வேர்களுள்ள செடி; plants the roots of which do not enter into the ground but hang in the air as air creeper. 2. தனக்கென ஊட்ட மில்லாமலே ஒரு செடியின் வேரில் வளரும் மற்றொரு செடி; a plant growing on another plant but not deriving its nourishment from it. 3. புல்லுருவி; a plant which grows upon another plant and also feeds its juice. [தொத்து + செடி. தொற்று → தெரத்து] |
தொத்துநோய் | தொத்துநோய் tottunōy, பெ. (n.) ஒட்டு நோய்; infection or contagious disease. [தொற்று + நோய் → தொற்று நோய்] |
தொத்துன் | தொத்துன் tottuṉ, பெ. (n.) தொங்கு சதை; hanging flash, dewlap. “செச்சைக் கண்டத் தொத்தூன் போல” (ஞானா. பாயி. 5,12);. [தொத்து + ஊன். தொற்று → தொத்து] |
தொத்துப்பல் | தொத்துப்பல் tottuppal, பெ. (n.) தெற்றுப்பல் பார்க்க;see {} (சாஅக.);. [தெற்று → தெத்து → தொத்து + பல்] |
தொத்துளிப்பாய் | தொத்துளிப்பாய் tottuḷippāy, பெ. (n.) பாய் வகை; mat made of rushes. “தொத்துளிப் பாயாலே வேய்ந்த” (பெரும்பாண். 50, உரை);. [தொத்துளி + பாய்] |
தொத்துவான் | தொத்துவான் tottuvāṉ, பெ. (n.) தொத்துநோய் பார்க்க;see {} [தொற்று → தொத்து → தொத்துவான்] |
தொத்துவேலை | தொத்துவேலை tottuvēlai, பெ. (n.) 1. ஒட்டி வைத்து இணைக்கும் வேலைப்பாடு; joining work welding. 2. சரியாக முடிக்காத வேலை; pieced and unsound work [தொற்று → தொத்து + வேலை] |
தொந்த நோய் | தொந்த நோய் tondanōy, பெ. (n.) 1. பழைமையான நோய்; old disease, 2. நாட்பட்ட நோய்; long continued or chronic disease. 3. பிறப்பிலேயே வாய்த்த நோய், hereditary disease, 4. சேர்க்கையால் உண்டான நோய்; venereal syphilitic or other urinary diseases (சாஅக.);. [தொந்தம் + நோய். தொத்து → தொந்து, தொத்தம். தொந்தம் = பழைமை] |
தொந்தகாமாலை | தொந்தகாமாலை tondakāmālai, பெ. (n.) 1. கருவில் ஏற்பட்ட காமாலை; congenital form of iaundice, 2. நாட்பட்ட காமாலை; haeniolytic jaundice of a chronic nature. 3. செயற்கையாய் உண்டான காமாலை; the acquire form of jaundice (சாஅக.);. [தொத்தம் + காமாலை] |
தொந்தக்காரர் | தொந்தக்காரர் tondakkārar, பெ. (n.) 1. உறவினர்; persons connected by ties of relationship; relations. 2. பழம்பகைவர்; inveterate foes. [தொத்தம் + காரர்] |
தொந்தசலம் | தொந்தசலம் tondasalam, பெ. (n.) ஊதை, பித்தம், கோழை, சளி குறைபாட்டினால் உடம்பில் உண்டாகும் கெட்ட நீர்; morbid fluid in the system collected through the derangement of the three humours (சாஅக.);. |
தொந்தசுரம் | தொந்தசுரம் tondasuram, பெ. (n.) நாட்பட்ட காய்ச்சல்; fever continuing from a long time (சாஅக.);. [தொந்து → தொந்தம் + கரம். தொந்து = பழைமை] |
தொந்தநோயர் | தொந்தநோயர் tondanōyar, பெ. (n.) 1. பழைய நோயினால் தாக்குண்டவன்; one suffering from a chronic disease. 2. குடும்ப நோயில் தாக்குண்டவன்; one tained with the affliction of family or hereditary disease. [தொந்தம் + தோமா] |
தொந்தனை | தொந்தனை tondaṉai, பெ. (n.) இணை விழைச்சு; sexual union. “பரத்தை மாதர் தொந்தனைத் துவட்சி நீங்கான்” (குற்றா.தல. கவுற்சன 26.); |
தொந்தப்படு-தல் | தொந்தப்படு-தல் dondappaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. ஒட்டுநோய் பற்றுதல்; to cleave, as a chronic or hereditary disease. 2. உடலில் வளி தொடர்பானவை ஒன்றுடனொன்று பிணைந்திருத்தல்; to be disordered, deranged, brought into conflict, as the different humours of the body. 3. தொடர்புறுதல் (இ.வ.);; to be connected (சாஅக.);. [தொந்தம் + படு] |
தொந்தப்பழி | தொந்தப்பழி tondappaḻi, பெ. (n.) தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பகை; hared, malice, perpetuated from generation to generation, vendetta. 2. தலைமுறை தலை முறையாக நிற்கும் பழிப்பு; stigma or stain that will continue for generations. [தொந்தம் + பழி] |
தொந்தப்பாடு | தொந்தப்பாடு tondappāṭu, பெ. (n.) தொடர்பு (நாஞ்.);. connection [தொந்தம் + பாடு] |
தொந்தப்பாலை | தொந்தப்பாலை tondappālai, பெ. (n.) தொந்தம்பாலை பார்க்க;see {} [தொத்தம்பாலை → தொந்தப்பாவை] |
தொந்தமயினம் | தொந்தமயினம் tondamayiṉam, பெ. (n.) பச்சைக் கடலை; green bengal gram (சா.அக.); |
தொந்தமலம் | தொந்தமலம் tondamalam, பெ. (n.) பழைய மலம்; long retained stool (சா.அக.);. [தொந்தம் + மலம்] |
தொந்தமிடு-தல் | தொந்தமிடு-தல் dondamiḍudal, 20 செ.கு.வி. (v.i.) சேர்க்கையினால் சரக்குகளை உறவாக்கல்; to set up chemical combination by addition of drugs or agents (சா.அக.);. [தொத்தம் + இடு-,] |
தொந்தமுறு-தல் | தொந்தமுறு-தல் dondamuṟudal, 20 செகுவி (v.i.) ஒன்றுபடுதல்; to unite. “தொந்தமுறச் சேர்குடிநீர்” (தைலவ.தைல.135);. [தொந்தம் + உறு-,] |
தொந்தமேறு-தல் | தொந்தமேறு-தல் dondamēṟudal, 5 செகுவி (v.i.) சேர்க்கையினால் சரக்குகளின் உறவாக்கு தலை அதிகப்படுத்தல்; to increase of chemical affinity by addition of other agents in alchamy (சா.அக.);. [தொந்தம் + ஏறு] |
தொந்தம் | தொந்தம்1 tondam, பெ. (n.) 1. இரட்டை; pair. 2. பழைமை; oldness. 3. நெருக்கம்; intimacy. 4. சேர்க்கை; addition, adherence. 5. பாலியற் தொடர்பு; sexual union. 6. கால்வழி; hereditary (சாஅக.);. [தொந்து → தொந்தம்] தொந்தம்2 tondam, பெ. (n.) எதிரெதிரான இரண்டு இணைகள்; pairs or couples of opposites as heat and cold, desire and aversion, light and darkness, weal and woe, wet and dry etc.(சாஅக.);. தொந்தம்3 tondam, பெ. (n.) 1. தொடர்பு; connection. “தொல்லை வல்வினைத் தொந்தந்தானென்செயும்” (தேவா 4,4); 2. பகை; hatred, animosity, malice. நரர்க்கும் வானரர்க்கு முண்டோ தொந்தம் (இராமாதா கிஷ். 8.); 3. படைக்கல வகை; a kind of weapon. “சவளமும் தொந்தமும் விட்டேறும் தக்காகப் 559. உரை). 4.நெருங்கிய பழக்கம்; familiarity, close intimacy. 5. தொடுப்பு; improper intimacy. அவனுக்கும் அவளுக்குத் தொந்தமுண்டு. |
தொந்தம்பாலை | தொந்தம்பாலை tondambālai, பெ. (n.) நிலப்பாலை; blue dying rosebay (சா.அக.);. |
தொந்தயுத்தம் | தொந்தயுத்தம் tondayuttam, பெ. (n.) இருவர் தமக்குள் செய்யும் போர்; duel, hand to hand fight. “தொந்தயுத்த நின்று ஞற்றினார்” (சேதுபு. சீதைகுண்ட. 12);. [தொந்தம் + யுத்தம்] Skt.yudda → த. யுத்தம் |
தொந்தரவு | தொந்தரவு tondaravu, பெ. (n.) துன்பம் (உ.வ);; trouble, vexation, difficulty. பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஊர்வலம் நடத்தத் தமிழியக்கத் தொண்டர்கள் முடிவு செய்தனர். ம. தொந்தரம் க.தொந்தரெ;தெ. தொந்தர [துள் → (துய்); → துயர் → துயரம். துள் → தொன் → தொய் → தொய்யல் = துன்பம். தொய் → தொ → தொந்தரவு (மு.தா.285);] |
தொந்தரி-த்தல் | தொந்தரி-த்தல் tondarittal, 4 செ.குன்றாவி (v.t.) வருத்துதல்; to trouble, vex, annoy. ஏன் சும்மா வந்து தொந்தரிக்கிறாய்? (உ.வ.);. [தொத்தரை → தொந்தரி] |
தொந்தரை | தொந்தரை tondarai, பெ. (n.) தொந்தரவு பார்க்க;See tondaravu. “ஆசாபாசத் தொந்தரை யிட்டவர்மேல் வீழ்வார்பால்” (திருப்பு. 623.);. [தொய் → தொ → தொத்தரை] |
தொந்தரோகம் | தொந்தரோகம் tondarōkam, பெ. (n.) தொந்த நோய் பார்க்க;See tonda-ாy (சா.அக.);. [தொந்தம் + ரோகம்] Skt. rõga → த. ரோகம் |
தொந்தரோகி | தொந்தரோகி tondarōki, பெ. (n.) தொந்த நோயர் பார்க்க;See tonda-ndyart (சா.அக.);. [தொத்தம் + ரோகி] Skt. Rögin → ரோகி. |
தொந்தவழுக்கை | தொந்தவழுக்கை tondavaḻukkai, பெ. (n.) சரவடிசரவடியாக ஏற்பட்ட தலை வழுக்கை; hereditary baldness (சா.அக.); [தொத்தம் + வழுக்கை] |
தொந்தவாதம் | தொந்தவாதம் tondavātam, பெ. (n.) ஒரு ஊதை மற்றொரு மாத்திரை ஊதையோடு கலந்திருத்தல்; väta humour in combination with another measure of vätam (சா.அக.);. [தொத்தம் + வாதம்] |
தொந்தவினை | தொந்தவினை tondaviṉai, பெ. (n.) முற்பிறப்பிற் செய்த இருவினைப் பயன் (வின்.);; fruit of former actions, good or evil. [தொந்தம் + வினை] |
தொந்தவியாதி | தொந்தவியாதி tondaviyāti, பெ. (n.) தொந்தநோய் பார்க்க;See tonda-ndy (சா.அக.); [தொந்தம் + வியாதி. தொந்தம் → பழைமை] Skt.vyådhi → த. வியாதி |
தொந்தார்த்தனை | தொந்தார்த்தனை tondārttaṉai, பெ. (n.) ஒருவர்க்கொருவர் கூறும் கடுஞ்சொல்: reciprocal abuse. 2. ஒருவருக்கொருவரோடுள்ள பகை; mutual hatred (செ.அக.);. |
தொந்தார்த்தம் | தொந்தார்த்தம் tondārttam, பெ. (n.) 1. இரட்டைப் பொருள்; double entendre. அவன் தொந்தார்த்தத்தோடு பேசுகிறான். 2. தொந்த வினை (வின்.); பார்க்க;see tonda-vinai [தொந்தம் + அர்த்தம்] Skt. artha → த. அர்த்தம் |
தொந்தி | தொந்தி1 tondittal, 4 செ.கு.வி. (v.i.) ஊதை, பித்தம், கோழை, சளி நோய்கள் ஒன்றோ டொன்று முரணுதல்; to be in conflict, as the different humours of the body with one another, to be complicated as a disease. 2. பற்றுதல் (யாழ்.அக.);; to adhere, clave, to be united, familiar with. 3. தாறுமாறாதல்; to become disorderly, to be spoiled. தொந்தி2 tondittal, 4 செ.குன்றாவி (v.t.) 1. கலத்தல்; to compound, as medicines, mix. சரி கூட்டி தொந்தித்து (பணவிடு. பக். 22); 2. தொடர்தல்; to be perpetuated, to continue, as the fruit of karma. தொந்தி3 tondi, பெ. (n.) பெருவயிறு: large belly, abdomen. “தொந்திகொ டந்திபடும் பெருந்துறை” (திருவாலவா. 27, 36);. 2. தசை மடிப்பு (வின்.);; fold or callop of fat. 3. நோய்வகை; obesity, enteroptosis. 4. பரவ மகளிர் அணியுங்கைக்காப்பு; bracelet of parava women (செ.அக.); ம. தொந்தி தொந்தி4 tondi, பெ. (n.) 1. வயிறு; belly. 2. கீழ்வயிறு; abdomen. 3. தொப்பை; pot belly. 4. தொந்தித்தல்; becoming complicated as disease (சா.அக.);. |
தொந்திக்கணபதி | தொந்திக்கணபதி dondikkaṇabadi, பெ. (n.) பெருவயிற்றுப் பிள்ளையார்; big-bellied Ganēsā (செ.அக.);. [தொந்தி + கணபதி] |
தொந்திக்கெளுத்தி | தொந்திக்கெளுத்தி tondikkeḷutti, பெ. (n.) ஏரியிலும் குளங்களிலும் மேயும் மீன்; fish that roams in the lake and ponds. [தொந்தி + கெளுத்தி] இதன் அடிவயிறு பருத்துக் காணப்படும் |
தொந்திதள்ளுதல் | தொந்திதள்ளுதல் dondidaḷḷudal, பெ. (n.) 1. பெருவயிறாகை (உ.வ.);; becoming pot-bellied. 2. வளைந்து போகை; being curved or folded. பட்டம் தொந்தி தள்ளியிருக்கிறது (தஞ்சை.); [தொந்தி + தள்ளு] |
தொந்தித்தரை-த்தல் | தொந்தித்தரை-த்தல் tondittaraittal, 4 செ.கு.வி. (v.i.) இரண்டு சரக்குகளும் ஒன்றுபடக் கலந்த பிறகு அரைத்தல்; to grind after the drugs had chemically combined as insulphur and mercury (சா.அக.); [தொந்தித்து + அரை-,] |
தொந்திப்பாதல் | தொந்திப்பாதல் tondippātal, பெ. (n.) ஒன்றோடொன்று பின்னிக் கொள்ளல்; pulse becoming complicated by combined with one another (சா.அக.); [தொந்திப்பு + ஆதல்] |
தொந்திப்பு | தொந்திப்பு1 tondippu, பெ. (n.) 1, நட்பு; union, friendship. 2. தீராப்பகை; perpetuation of hatred. 3. நோய்க் கலப்பு; complication of disease (செ.அக.);. தொந்திப்பு2 tondippu, பெ. (n.) 1. நெருக்கம்; intimacy. 2. பழந்தொடர்பு; oldy relation. 3. ஒன்றோடொன்றின் தொடர்பு; relative connection, mutual connection (சா.அக.);. தொந்திப்பு3 tondippu, பெ. (n.) 1. இரட்டிப்பு; double. 2. வேறுபாடு; difference. |
தொந்திமணல் | தொந்திமணல் tondimaṇal, பெ. (n.) புதை மணல் (இ.வ.);; quicksand, bed of loose sand, readily swallowing animals (செ.அக.);. [தொந்தி + மணல்] |
தொந்திவயிறு | தொந்திவயிறு tondivayiṟu, பெ. (n.) தொப்பை வயிறு; pot belly (சா.அக.); [தொந்தி + வயிறு] |
தொந்திவிழு-தல் | தொந்திவிழு-தல் dondiviḻudal, 3 செ.குவி (v.i.) வயிறு பெருத்தல்; to get pot belly (சா.அக.);. [தொந்தி + விழு-,] |
தொந்திவைத்தல் | தொந்திவைத்தல் tondivaittal, பெ. (n.) 1. தொந்திதள்ளுதல் பார்க்க;See loadi-talu-dal. 2. செல்வனாகை; becoming prosperous (செ.அக.);. [தொந்தி + வைத்தல்] |
தொந்துவநோய் | தொந்துவநோய் tonduvanōy, பெ. (n.) பல நோய்களின் கலப்பு; to complicated diseases (சா.அக.);. [தொத்துவம் + நோய்] |
தொந்துவம் | தொந்துவம் tonduvam, பெ. (n.) கலப்பு; mixture, union (சா.அக.); [தொந்து → தொந்துவம்] |
தொந்தை | தொந்தை tondai, பெ. (n.) தொந்தம்பாலை பார்க்க;See tondam-pālai. |
தொந்தோமெனல் | தொந்தோமெனல் tondōmeṉal, பெ. (n.) தாளவொலிக் குறிப்பு (சூடா. 12, 123);; onom. expr. of beating time. [தொம் + தோம் + எனல்] |
தொனத்து-தல் | தொனத்து-தல் toṉattutal, 15 செ.கு.வி.(v.i.) தொடர்ந்து பேசிக் கொண்டிருத்தல், பயனில் சொல் (வீண் பேச்சு); பேசுதல் ; blabbering indulging in useless talk. [துனை-துனைத்தல்-தொனத்து] தொனத்து-தல் doṉaddudal, 15 செ.கு.வி.(v.i.) தொடர்ந்து பேசிக் கொண்டிருத்தல், பயனில் சொல் (வீண் பேச்சு) பேசுதல்; blabbering indulging in useless talk. [துணை-துணைத்தல்-தொனத்து] |
தொனப்பு-தல் | தொனப்பு-தல் doṉappudal, 5 செ.கு.வி. (v.i.) தொனுப்பு-தல் (இ.வ.); பார்க்க;see {}, (செஅக);. |
தொனி | தொனி1 toṉi, பெ. (n.) 1. துளையிலிருந்து உண்டாகும் ஒலி (திவா.);; sound, noise, intonation, twang, peal. “திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே” (கலிங். 382);. 2. தொனியர்த்தம் பார்க்க;see {}. தொனி2 toṉittal, 5 செ.கு.வி. (v.i.) 1. ஒலித்தல்; to sound, to twang, to emit vocal or instrumental sound. “கோவியர் மழலை தொனித்த குழலிசைத் தோய்” (அழகர்கல. 1);. 2. குறிப்புப் பொருள் தோன்றுதல்; to suggest itself, as a meaning. த. தொனி;வ. த்வனி [தொள் → தொல் → தொன் → தொனி (சு.வி. 35);] தொனி3 toṉittal, 5 செ.குன்றாவி. (v.t.) சொல்லுதல்; to say, tell. “அதன் றன்மை தொனித்துணர்த்துறின்” (உபதேசகா. சிவவிரத. 185);. |
தொனிசங்கு | தொனிசங்கு toṉisaṅgu, பெ. (n.) ஊதுசங்கு; conch use to blow. [தொனி + சங்கு] |
தொனிப்பொருள் | தொனிப்பொருள் toṉipporuḷ, பெ. (n.) ஆற்றலால் அன்றிக் குறிப்பாலறியப்படும் பொருள்; suggested or implied meaning. [தொணி + சங்கு] |
தொனியர்த்தம் | தொனியர்த்தம் toṉiyarttam, பெ. (n.) தொனிப்பொருள் பார்க்க;see {}. |
தொனுதொனு-த்தல் | தொனுதொனு-த்தல் doṉudoṉuddal, 4 செ.கு.வி. (v.i.) துணதுண-த்தல் (உவ.); பார்க்க;see {}. [துணதுண-த்தல் → தொனுதொனு-த்தல்] |
தொனுதொனுப்பு | தொனுதொனுப்பு doṉudoṉuppu, பெ. (n.) 1. அலப்புகை (வின்);; babbling, idle gossip. 2. துன்புறுத்துகை; worrying (செஅக);. [துணதுணப்பு → தொனுதொனுப்பு] |
தொனுப்பன் | தொனுப்பன் toṉuppaṉ, பெ. (n.) அலப்புவோன் (வின்.);; babbler, vain talker (செ.அக);. [தொனுப்பு → தொனுப்பன்] |
தொனுப்பு-தல் | தொனுப்பு-தல் doṉuppudal, 4 செ.கு.வி. (v.i.) அலப்புதல் (உவ.);; to chatter, babble, blab (செஅக.);. தோ |
தொன்னிலம் | தொன்னிலம் toṉṉilam, பெ. (n.) பண்டை நாடு; ancient country. தொன்னிலம் முழுதும் தோன்றிய கல்வி (பழ.);. |
தொன்னீர் | தொன்னீர் toṉṉīr, பெ. (n.) கடல் (பிங்.);; sea as ancient (செ.அக.);. [தொல் + நீர்] |
தொன்னூல் | தொன்னூல் toṉṉūl, பெ. (n.) 1. தொன்மம் (சூடா.);; puranas. 2. தொன்னூல்விளக்கம் (வின்.); பார்க்க;see {} (செ.அக.); [தொன்மை + நூல்] |
தொன்னூல்விளக்கம் | தொன்னூல்விளக்கம் toṉṉūlviḷakkam, பெ. (n.) வீரமாமுனிவர் செய்த தமிழ் இலக்கண நூல்; a Tamil grammar by Beschi @ {} (செ.அக.); [தொன்னூல் + விளக்கம்] |
தொன்னை | தொன்னை toṉṉai, பெ. (n.) 1. இலைக்கலம்; a cup made of plantain or other leaf pinned up at the comers. “செவிக்கனகத் தொன்னையா லுண்டு” (சிவரக. சதானந்த. 2);. “கைக்கே யிலைகொண்டு தொன்னையுங் கொண்டு” (தனிப்பா.);. 2. எச்சிற் கல்லை போன்ற இழிந்தோன் (வின்.);; mean wretch. தெ., க. தொன்னெ [துல் → துள் → துன் → தொன் → தொன்னை (வே.க. 274);] E. tun = 1 large cask for wine, beer, etc, esp. formerly as measure of capacity (252 wine gallons); [brewer’s fermenting – vat; OE. tunne, OHG = ON = tunna, F. Gaulish tunna] |
தொன்னைக்காது | தொன்னைக்காது toṉṉaikkātu, பெ. (n.) தொன்னை போல் மடங்கிய காது (உவ.);; prominent ear slightly bent, as cup shaped (செஅக.);. [தொன்னை + காது] |
தொன்மரம் | தொன்மரம் toṉmaram, பெ. (n.) ஆலமரம் (பிங்.);; common banyan, as the ancient tree. “தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன” (சீவக. 498);. [தொல் + மரம்] |
தொன்மரவன் | தொன்மரவன் toṉmaravaṉ, பெ. (n.) பண்டைய பழக்கவழக்கங்களைப் பின்பற்று பவன் (சம்பிரதாயத்தன்);; one who respects customs or traditions, a traditionist. 2.திறமைசாலி; skillfull person. [தொன்மை+[மரபன்]மரவன்] |
தொன்மறை நெறிகள் | தொன்மறை நெறிகள் toṉmaṟaineṟigaḷ, பெ. (n.) அறநூலிற் கூறிய நெறிகள் (சுமார்த்தம்);; percepts or rules laid down in ancient works, [தொல்+மறை+நெறிகள்] |
தொன்மை | தொன்மை1 toṉmai, பெ. (n.) 1. பழைமை (திவா.);; oldness, antiquity. “தொன்மை யுடையார் தொடர்பு” (நாலடி, 216);. 2. உரைவிரவிப் பழைமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது (தொல். பொருள். 549);; narrative poem interspersed with prose, having for its subject an ancient story. [தொல் → தொன்மை (வே.க. 274);] தொன்மை2 toṉmai, பெ. (n.) தன்மை (சங்கற்ப நிராகரணம்);; nature. தொன்மை நாடி நன்மைவிடாதே (பழ.);. [தொல் → தொன்மை] |
தொன்மைக்காட்சிஅனுமானம் | தொன்மைக்காட்சிஅனுமானம் toṉmaikkāṭciaṉumāṉam, பெ. (n.) ஒர் அளவை; a logic. [தொன்மை + காட்சி + அனுமானம்] அஃது ஒரு பூவைக்காணாமலே மணத்தால் இன்ன பூ என்று அறிவது. |
தொன்மைக்கூத்து | தொன்மைக்கூத்து toṉmaikāttu, பெ.(n.) குறும்பர் இனத்தவர் ஆடுகின்ற கூத்து, kutu, which is adorned by kurumbar. [தொன்மை+கூத்து] தொன்மைக்கூத்து toṉmaikāttu, பெ.(n.) குறும்பர் இனத்தவர் ஆடுகின்ற கூத்து, kuttu. whichis adorned by kurumbar. [தொன்மை+கூத்து] |
தொன்மையோர் | தொன்மையோர் toṉmaiyōr, பெ. (n.) தொன்முதுரிமையர் (வின்.);; ancients (செஅக);. [தொன்மை → தொன்மையோர்] |
தொன்மொழி | தொன்மொழி toṉmoḻi, பெ. (n.) 1. பழமொழி; proverb, maxim. “பொற்கிரிசேர் கருங்கொடியும் பொன்னிறமாமெனச் சொன்ன தொன்மொழியும்” (பதினொராம். பட்டின. திருக்கழு. 40);. 2. பழைமையான மொழி; ancient language. “தோலென மொழிப தொன்மொழிப் புலவர்” (தொல். பொருள். 551);. இன்று வழங்கும் தொன்மொழிகளுள் தமிழே மூத்தது (உவ.);. [தொல் + மொழி] |
தொன்றி | தொன்றி toṉṟi, பெ. (n.) தொண்டி பார்க்க;see {} (சா.அக.);. |
தொன்று | தொன்று toṉṟu, பெ. (n.) 1. பழைமை; oldness, antiquity. “தொன்றுமொழிந்து தொழில் கேட்ப” (மதுரைக். 72);. 2. பழையது; that which is old, ancient. “தொன்றாகிப் புதிதாகி” (விநாயகபு. கடவு. 8);. 3. ஊழ்; fate. “தொன்று சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு” (சீவக. 903);. [தொல் → தொன்று] |
தொன்றுதொட்டு | தொன்றுதொட்டு doṉṟudoṭṭu, கு.வி.எ. (adv.) பழங்காலம் முதல்; from of old, from time immemorial. “தொன்றுதொட்டனாதி வித்தி னிடத்தினில்” (சி.சி.210);. [தொன்று + தொட்டு] |
தொன்றூயம் | தொன்றூயம் toṉṟūyam, பெ. (n.) பாலாட்டங் கொடி பார்க்க;see {}. (சா.அக.);. |
தொப்பக்கடமான் | தொப்பக்கடமான் toppakkaḍamāṉ, பெ. (n.) வயிறு பருத்துக் காணப்படும் முட்களில்லாத தொரு கடல் மீன்; thornless sea fish which has large stomach. [தொப்பை + கடமான்] |
தொப்பக்கெடுத்தை | தொப்பக்கெடுத்தை toppakkeḍuttai, பெ. (n.) வயிறு பெருத்த கெடுத்தை என்னும் நச்சுத் தன்மையுள்ள கடல்மீன் (தஞ்சை மீனவ.);; poisonous sea fish, called keduttai. [தொப்பை + கெடுத்தை] |
தொப்பக்கெண்டை | தொப்பக்கெண்டை toppakkeṇṭai, பெ. (n.) வயிறு பெருத்த கெண்டை மீன் (தஞ்சை. மீனவ.);: kendai fish which has large belly. [தொப்பை + கெண்டை] |
தொப்பணம் | தொப்பணம் toppaṇam, பெ. (n.) பிள்ளையார் வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும் இடக்கையால் வலக் காதையும் பிடித்து உட்கார்ந்தெழுந்திருக்கை; a form of obeisance to Ganesā, in which the hands are crossed over each other, the fingers grasp the ear-lobes and the motions of sitting and standing are gone through alternately. “வளர்கை குழைபிடி தொப்பன குட்டொடு வனச பரிபுர பொற்பத வர்ச்சனை” (திருப்பு.விநாயகர்துதி,5);. |
தொப்பணம்போடு-தல் | தொப்பணம்போடு-தல் doppaṇambōṭudal, 20 செ.கு.வி. (n.) பிள்ளையார் வணக்கம் போன்றவற்றில் இடக்கையால் வலக் காதையும் வலக்கையால் இடக்காதையும் பிடித்து உட்கார்ந்தெழுந்திருத்தல்; to form of obeisance to Ganesā in which the hands are crossed over each other the fingers grasp the ear-lobes and motions of sitting and standing are gone through alternately. [தொப்பணம் + போடு] |
தொப்பற | தொப்பற toppaṟa, வி.எ. (adv.) நன்றாய்; soundly, thoroughly. என்னைத் தொப்பற அடித்தார்கள் (இ.வ.); |
தொப்பறை | தொப்பறை toppaṟai, பெ. (n.) எளியநிலை; miserable condition. தொப்பறைக் குடித்தனம் (தஞ்சை); |
தொப்பளம் | தொப்பளம் toppaḷam, பெ. (n.) பாதிவெந்த காய்கறி கொண்ட குழம்புவகை (இ.வ.);; half boiled vegetable soup. தெ. தப்பளமு |
தொப்பாரம் | தொப்பாரம்1 toppāram, பெ. (n.) 1. துணியிற் கட்டித் தோள்மேற் கொண்டுபோகப்படும் பெருமூட்டை (யாழ்.அக.);; a large bundle of things tied in a cloth, as carried over the shoulders; pack. 2. புற்கட்டு; a large truss of grass. 3. நெடுஞ்சப்பாத்து (யாழ்.அக);; a kind of spurge. [தோள் + பாரம் → தோள்பாரம் → தோப்பாரம் → தொப்பாரம்] தொப்பாரம்2 toppāram, பெ. (n.) 1. சிறு கொப்புளம்; vessicle, pustule. 2. பெருங் குவியல்; big hoap, pile (சா.அக.);. தொப்பாரம்3 toppāram, பெ. (n.) முகமூடி வகை; a kind of veil. தெ. தொப்பாரமு தொப்பாரம்4 toppāram, பெ. (n.) மணிமுடி வகை; a kind of crown. “குற்றுடை வாளுங் கட்டிக் குலவு தொப்பாரங் கட்டி” (திருவாலவா. 4.12);. தெ. தபாரமு தொப்பாரம்5 toppāram, பெ. (n.) பெரிய கட்டடம் (வின்.);; large building தெ. சப்பாரமு |
தொப்பி | தொப்பி1 toppi, பெ. (n.) கள் toddy. [தோப்பி → தொப்பி] தொப்பி2 toppi, பெ. (n.) முழவின் (மிருதங்கத்தின்); இடப்பக்கம்; left side of a mirudañgam. தொப்பி3 toppi, பெ. (n.) நெல்லி; Indian-gooseberry (சா.அக.);. |
தொப்பி மத்தளம் | தொப்பி மத்தளம் toppimattaḷam, பெ.(n.) கேரளக்கோயிலில் இசைக்கப்படும் இசைக் கருவி; an instrument which is used in temples of Kérala state. [தொப்பி+மத்தளம்] தொப்பி மத்தளம் toppimattaḷam, பெ.(n.) கேரளக்கோயிலில் இசைக்கப்படும் இசைக் கருவி; an instrument which is used in temples of Kérala state. [தொப்பி+மத்தளம்] |
தொப்பிக்கட்டை | தொப்பிக்கட்டை toppikkaṭṭai, பெ. (n.) வைக்கோற்புரி சூட்டி நீரில் நடப்பட்ட மரம் (யாழ்ப்.);; sticks or posts setup in shallow waters to indicate the course of the channel, as a hanging straw on the top to make them conspicuous. [தொப்பி + கட்டை] |
தொப்பிச் சம்பா | தொப்பிச் சம்பா toppiccampā, பெ.(n.) நெல்வகை (வ.வ.வே.க.);; a kind of paddy. [தொப்பி+சம்பா] தொப்பிச் சம்பா toppiccambā, பெ.(n.) நெல் வகை. (வ.வ.வே.க.);; a kind of paddy. [தொப்பி+சம்பா] |
தொப்பிச்சாடி | தொப்பிச்சாடி toppiccāṭi, பெ. (n.) கள்சாடி; toddy jar (சா.அக.);. [தோப்பி → தொப்பி + சாடி] |
தொப்பித் தலைகுயில் | தொப்பித் தலைகுயில் toppittalaikuyil, பெ.(n.) ஒரு வகை பறவை; black cap. [தொப்பி+தலை+குயில்] தொப்பித் தலைகுயில் toppittalaiguyil, பெ.(n.) ஒருவகை பறவை; black cap. [தொப்பி+தலை+குயில்] |
தொப்பிமடல் | தொப்பிமடல் toppimaḍal, பெ. (n.) பாக்கு மரத்தின் பாளை (யாழ்ப்.);; integument of the areca flower (சா.அக.);. [தொப்பி + மடல்] |
தொப்புட்கழலை | தொப்புட்கழலை toppuṭkaḻlai, பெ. (n.) கொப்பூழிலேற்படுங் கழலை; tumour of the umbilics (சா.அக.);. [தொப்புள் + கழலை] |
தொப்புட்குழி | தொப்புட்குழி toppuṭkuḻi, பெ. (n.) தொப்புளின் பள்ளம்; naval depression (சா.அக.); [தொப்புள் + குழி] |
தொப்புட்கொடி | தொப்புட்கொடி toppuḍkoḍi, பெ. (n.) கொபூழ்க்கொடி (உ.வ.);; umbilical cord, navel string. [தொப்புள் + கொடி.] |
தொப்புட்கொடியுறவு | தொப்புட்கொடியுறவு toppuḍkoḍiyuṟavu, பெ. (n.) மொழிவழியான இனவுணர்வு; ethinical relationship through mother tongue. ஈழத்தவருக்கும் தமிழருக்கும் தொப்புள் கொடியறவு உள்ளது. [தொப்புன்கொடி + உறவு] கருவில் வளரும் சேய்க்குத் தாயுடன் இணைக்கப்பட்டுள்ள தொப்புட் கொடி வழியே உணவு புகட்டப்படுவது போன்ற உருவகம். |
தொப்புத்திப்பெனல் | தொப்புத்திப்பெனல் topputtippeṉal, பெ. (n.) தொப்பெனல் பார்க்க;See toppenal [தொப்பு + திப்பு + எனல்] |
தொப்புத்தொப்பெனல் | தொப்புத்தொப்பெனல் topputtoppeṉal, பெ. (n.) தொப்பெனல் பார்க்க;See toppenal. |
தொப்புளறு-த்தல் | தொப்புளறு-த்தல் toppuḷaṟuttal, 5 செ.குவி (v.i.) பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடி அறுத்தல்; cutting off the umbilical card of a new born baby (சா.அக.);. [தொப்புள் + அறு] |
தொப்புளான் | தொப்புளான் toppuḷāṉ, பெ. (n.) பெரிய தொப்புளையுடையவன்; one having a large navel (சா.அக.);, [தொப்புள் + உளான்] |
தொப்புளொழுக்கு | தொப்புளொழுக்கு toppuḷoḻukku, பெ. (n.) தொப்புளில் உண்டாகும் குருதியொழுக்கு; hemorrhage from the navel (சா.அக.);. [தொப்புன் + ஒழுக்கு] |
தொப்புள் | தொப்புள் toppuḷ, பெ. (n.) கொப்பூழ்; navel (சா.அக.);. |
தொப்புள் கட்டை | தொப்புள் கட்டை toppuḷkaṭṭai, பெ.(n.) பட மரத்தை இருபுறமும் சமமாகத் தாங்கிக் கொண்டிருக்கும் கருவி; a wooden supporter. [தொப்புள்+கட்டை] தொப்புள் கட்டை toppuḷkaṭṭai, பெ.(n.) பட மரத்தை இருபுறமும், சமமாகத் தாங்கிக் கொண்டிருக்கும் கருவி; a wooden supporter. [தொப்புள்+கட்டை] |
தொப்புள்கடுப்பு | தொப்புள்கடுப்பு toppuḷkaḍuppu, பெ. (n.) கொப்பூழ் அழற்சி; inflammation of the navel. [தொப்புள் + கடுப்பு] |
தொப்புள்கட்டி | தொப்புள்கட்டி toppuḷkaṭṭi, பெ. (n.) கோழை, சளியினால் கொப்பூழின் கீழேனும், மேலேனும் கட்டியைப் போல் வீக்கத்தை யுண்டாக்கும் ஊதை நோய்; a kind of rheumatic abscess like swelling below the navel (சா.அக.);. [தொப்புள் + கட்டி] |
தொப்புள்கழலை | தொப்புள்கழலை toppuḷkaḻlai, பெ. (n.) கொப்பூழண்டை காணப்படும் கழலை அல்லது நீர்க்கட்டி; a Watery tumour or cyst at the navel (சா.அக.);. |
தொப்புள்கொடி | தொப்புள்கொடி toppuḷkoḍi, பெ. (n.) தாய்க்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கும் தொடர்புடையதாயிருக்கும் நஞ்சுக்கொடி; the navel string or umbilical cord (சா.அக.);. [தொப்புள் + கொடி.] |
தொப்புள்பிதுக்கம் | தொப்புள்பிதுக்கம் doppuḷpidukkam, பெ. (n.) தொப்புள் புடைத்து வெளித்தள்ளல்; protrusion of navel tissue (சா.அக.);. [தொப்புள் + பிதுக்கம்] |
தொப்புள்மந்திரம் | தொப்புள்மந்திரம் toppuḷmandiram, பெ. (n.) a mantra uttered in the ceremony of consummation. [தொப்புள் + மந்திரம்] |
தொப்புள்வீக்கம் | தொப்புள்வீக்கம் toppuḷvīkkam, பெ. (n.) கொப்பூழ் வீக்கம்; swelling of the umbilicus (சா.அக.); [தொப்புள் + வீக்கம்] |
தொப்பெனல் | தொப்பெனல் toppeṉal, பெ. (n.) 1.கீழ்விழுதற் குறிப்பு; falling with a thumbing noise. 2. அடிவிழுதற் குறிப்பு; sound of falling blow (செ.அக.);. |
தொப்பென்று விழு-தல் | தொப்பென்று விழு-தல் doppeṉṟuviḻudal, 3.செ.குவி (v.i.) நிலம் அல்லது நீருக்குள் சுமை கொண்டு விழுதல்; falling of a heavy body on the ground or into the water. [தொப்பு + என்று + விழு-,] |
தொப்பை | தொப்பை1 toppai, பெ. (n.) 1. தொந்தி; paunch belly. 2. கொப்புளம்; boil. 3. கடல்மீன்; a sea fish. 4, திண்மையின்றிப் பருத்தது; that which has swelled without firmness or soft and weak. 5. பருத்துச் சரிந்த வயிறு; a relaxed condition of the abdominal walls in which they hangdown loose over the pubil by thier own weight (சா.அக.);. தெ. தொப்ப [துல் → துள் → துண்பு → தும்பு → தொம்பு → தொம்பை – தொப்பை (வே.க. 282);] தொப்பை toppai, பெ. (n.) மத்தளத்தில் அடிக்கும் நடுவிடம் (இ.வ.);; the central portion of the head of a drum. |
தொப்பைக் கூத்தாடி | தொப்பைக் கூத்தாடி toppaikāttāṭi, பெ.(n.) கம்பளத்தார் சேவையாட்டத்தில், பங்கு பெறும் நகைச்சுவை கலைஞர். (4:26);. [தொப்பை+கூத்தாடி] தொப்பைக் கூத்தாடி toppaikāttāṭi, பெ.(n.) கம்பளத்தார் சேவையாட்டத்தில், பங்கு பெறும் நகைச்சுவை கலைஞர். (4:26);. [தொப்பை+கூத்தாடி] |
தொப்பைக்கணபதி | தொப்பைக்கணபதி dobbaikkaṇabadi, பெ. (n.) தொந்திக்கணபதி பார்க்க;See tond. k-kasapadi. [தொப்பை + கணபதி] |
தொப்பைக்காரன் | தொப்பைக்காரன் toppaikkāraṉ, பெ. (n.) பணக்காரன் (இ.வ.);; wealthy person, as having a big paunch. [தொப்பை + காரன்] |
தொப்பைக்காரி | தொப்பைக்காரி toppaikkāri, பெ.(n.) பணக்காரி, rich woman. “கப்பல்காரன் பெண்டாட்டி தொக்காரி, கப்பல் கவிழ்ந்து போனால் பிச்சைக்காரி (பழ.);. [தொப்பை+காரி] |
தொப்பைக்கூத்தாடி | தொப்பைக்கூத்தாடி toppaikāttāṭi, பெ. (n.) கோமாளி (இ.வ.);; clown, as having a made-up pot-belly. [தொப்பை + கூத்தாடி] |
தொப்பைக்கெண்டைச்சாலா | தொப்பைக்கெண்டைச்சாலா toppaikkeṇṭaiccālā, பெ. (n.) வயிற்றின் அடிப்பகுதி பருத்துக்காணும் ஆற்று மீன் வகை (தஞ்சை. மீனவ.);; river fish with a big lower part. |
தொப்பைக்கெளுத்தி | தொப்பைக்கெளுத்தி toppaikkeḷutti, பெ. (n.) அடிவயிறு பெருத்த கெளுத்தி மீன் (செங்கை. மீனவ.);; kejutti fish with a large size stomach. [தொப்பை + கெளுத்தி] |
தொப்பைச்சாலா | தொப்பைச்சாலா toppaiccālā, பெ. (n.) உடல் பருத்துக் காணப்படும் ஒரு சாலாமீன்; Sala fish, which has big size body. [தொப்பை + சாவா] |
தொப்பைதள்ளு-தல் | தொப்பைதள்ளு-தல் doppaidaḷḷudal, 15 செ.குவி. (v.i.) வயிறு பருத்துச் சரிதல்; hanging of the abdominal walls through relaxation (சா.அக.); [தொப்பை + தள்ளு-,] |
தொப்பைமிளகாய் | தொப்பைமிளகாய் toppaimiḷakāy, பெ. (n.) குட மிளகாய்; large plump chillies; bell pepper, capsicum (சா.அக.);. [தொப்பை + மிளகாய்] |
தொப்பைமீன் | தொப்பைமீன் toppaimīṉ, பெ. (n.) ஒரு வகைக் கடல் மீன்; a sea fish (சா.அக.);. [தொப்பை + மீன்] |
தொமலாடி | தொமலாடி tomalāṭi, பெ. (n.) எட்டி; nuxuomica strychnine (சா.அக.);, |
தொம்பக்கூத்தாடி | தொம்பக்கூத்தாடி tombakāttāṭi, பெ. (n.) தொம்பன் (இ.வ.); பார்க்க;See tomban [தொம்பம் + கூத்தாடி] |
தொம்பதம் | தொம்பதம் dombadam, பெ. (n.) ‘தத்வமஸி’ என்னும் மறைத் தொடரில் த்வம் எனுஞ் சொல் (திருப்பு. 348);; the word ‘tvam’ in the sacred sentence tat-tvam-asi. “தொம்பத்துப் பண்புரைத்து” (திருப்பு .348);. |
தொம்பன் | தொம்பன் tombaṉ, பெ. (n.) கழைக்கூத்தன்; a person belonging to the tribe of tumblers, acrobats and bole-dancers. “தொம்பர் போலலாகுகொண்டு” (இராமநா. உயுத். 88);. க. தொம்பம் |
தொம்பன்கூத்தாடி | தொம்பன்கூத்தாடி tombaṉāttāṭi, பெ. (n.) தொம்பன் பார்க்க;See tomban. [தொம்பன் + கூத்தாடி] |
தொம்பம் | தொம்பம் tombam, பெ. (n.) கழைக்கூத்து (யாழ்.அக.);; pole-dancing. |
தொம்பரக்குடித்தனம் | தொம்பரக்குடித்தனம் tombarakkuḍittaṉam, பெ. (n.) செலவாளிக்குடும்பம் (உ.வ.);; domestic life of extravagance and waste, lack of domestic cconomy. [தொம்பரம் + குடித்தனம்] |
தொம்பரம் | தொம்பரம்1 tombaram, பெ. (n.) பலருக்குச் சமைத்த ஊண்; a mess prepared formany, an open table, as in a palace (W);. தெ. தொம்மரமு தொம்பரம்2 tombaram, பெ. (n.) சமையற் பானை; cooking pot. அந்த அரிசியைத் தொம்பரத்திற் போட்டுச் சமையல் செய்யுங்கள்(தமிழறி.46);. தொம்பரம்3 tombaram, பெ. (n.) தொப்பாரம்3 பார்க்க;See toppäram. |
தொம்பரவன் | தொம்பரவன் tombaravaṉ, பெ. (n.) தொம்பன் பார்க்க;See tomban. [தொம்பன் → தொம்பரவன்] |
தொம்பரை | தொம்பரை tombarai, பெ. (n.) ஊர்சுற்றி (இ.வ.);: a vagabond [தொம்பன் → தொம்பரை] தொம்பரை tombarai, பெ. (n.) தெற்குதிர்; granary. தொம்பரைக டோறுமுன்னாட் டாழ்வின்றி வைத்திடு நெற் றான்யமதை (பஞ்ச. திருமுக. 193); [தொம்பறை → தொம்பரை] |
தொம்பறை | தொம்பறை tombaṟai, பெ. (n.) 1. களஞ்சியம்; granary, barn. 2. தொம்பை1, 2 பார்க்க;See tombai’,2 .3. பெருவயிரன் ; pot-bellied person, as resembling a grain basket. |
தொம்பல் | தொம்பல் tombal, பெ. (n.) கலப்பையி லொட்டுஞ்சேறு (இ.வ.);; the mud that sticks to the plough-share. |
தொம்பு வெறு | தொம்பு வெறு tompuveṟu, பெ.(n.) பொரப் பாவிலும், பட்டுப் பாவிலும் விசை முன் கீழ் நோக்கி அழுத்திப் பிடித்து நெசவு அழுத்தமா யிருக்கப் பயன்படுத்தும் அமைப்பு முறை; a device in loom. [தொம்பு+வெறு] தொம்பு வெறு tombuveṟu, பெ.(n.) பொரப் பாவிலும், பட்டுப் பாவிலும் விசை முன் கீழ் நோக்கி அழுத்திப் பிடித்து நெசவு அழுத்தமா யிருக்கப் பயன்படுத்தும் அமைப்பு முறை a device in loom. [தொம்பு+வெறு] |
தொம்பை | தொம்பை1 tompai, பெ.(n.) தேவையற்ற பொருள்களை வைக்க மூங்கிலால் பின்னப்பட்ட பெரிய கூடை; dust bin which is made from bamboo. [தூம்பு – தொம்பை] தொம்பை2 tompai, பெ.(n.) தவசங்களைக் கொட்டி வைக்கும் இடம்; a container of the grain. (ம.வ.தொ);. [தூம்பு-தொம்பு-தொம்பை] தொம்பை1 tombai, பெ.(n.) தேவையற்ற பொருள்களைவைக்க மூங்கிலால் பின்னப்பட்ட பெரிய கூடை; dustbin which is made from bamboo. [தூம்பு- தொம்பை] தொம்பை tombai, பெ.(n.) தவசங்களைக் கொட்டி வைக்கும் இடம்; a container of the grain. (ம.வ.தொ.);. [தூம்பு-தொம்பு-தொம்பை] தொம்பை1 tombai, பெ. (n.) 1. மூங்கிலாலான நெற்குதிர்; grain bin, high wicker-basket used as a receptacle for grain. “அவனைத் தொம்பைக் மேவுவித்து” (பஞ்சதந். மத்திர. 183.);. தொம்பைக் கூண்டிலே எலியைக் காவல் வைத்துக் கட்டினது போல (பழ.); 2. தொம்பை மாலை (இ.வ.); பார்க்க;See tombai-mălaj. 3. இறைத்திருமேனி புறப்பாட்டின் போது முன் கொண்டு செல்லப்படும் பொருள்களுலொன்று (இ.வ.);; a paraphernal article carried before an idol. [துல் → துன் → துண்பு → தும்பு → தொம்பு → தொம்பை (வே.க. 282);] தொம்பை2 tombai, பெ. (n.) குந்தாணி; large mortar. 2. பறை; large drum. [தும்பு → தொம்பை (மு.தா. 277);] தொம்பை3 tombai, பெ. (n.) எருமைக்கு வரும் நோய்களுள் ஒன்று; a disease that affects the buffaloes. தொம்பை4 tombai, பெ. (n.) தேரில் தொங்க விடப்படும் துணிக்கூடு; festoons. தொம்பை tombai, பெ.(n.) சீழ் முடியொடு மூங்கிற் பிளாச்சினால் செய்த தவசம் கொட்டி வைக்கும் மட்பாண்டத் தாழி போன்ற மூங்கில் கலன்; a barrel like storage oval shaped basket utensil to save food grains with small opening at the bottom. மறுவ, குதிர், இருவாய்சால் [அம்பு-தும்பை-தொம்பை] |
தொம்பைக்கூடு | தொம்பைக்கூடு tombaikāṭu, பெ. (n.) தொம்பை1, 1 பார்க்க; sce tombai. “பலதொம்பைக் கூட்டிற் சம்பா நெற்கட்டி வைக்கிறேன்” (விறலிவிடு 824); [தொம்பை + கூடு] |
தொம்பைக்கூண்டு | தொம்பைக்கூண்டு tombaikāṇṭu, பெ. (n.) தொம்பை1 பார்க்க;See tombai. [தொம்பை + கூண்டு] |
தொம்பைநாற்று | தொம்பைநாற்று tombaināṟṟu, பெ. (n.) அடிப்பாகம் பருத்து மண் இறுகலாகப் பிடித்துள்ள நெல் நாற்று; rice-plant with its root grown stout in hardened clay (செ.அக.); மறுவ, தொளிம்பை [தொம்பை + நாற்று. தொளி → தொளும்பை → தொம்பை. தொளி = சேறு] |
தொம்பைபாய்-தல் | தொம்பைபாய்-தல் tombaipāytal, 1 செ.கு.வி. (v.i.) நெல் நாற்றின் வேர்ப்பாகம் பருத்து மண் இறுகலாகப் பிடித்திருத்தல் (நாஞ்.);; to grow stout in root stuck in hardened clay, as rice plant. [தொம்பை + பாய்-,] |
தொம்பைமாலை | தொம்பைமாலை tombaimālai, பெ. (n.) தேர் முதலியவற்றின் ஆடைத் தொங்கல் வகை; a kind of cylindrical cloth-ornament hung about a chariot or pandal. [தொம்பை + மாலை] |
தொம்மனை | தொம்மனை tommaṉai, பெ. (n.) தொம்பை (வின்.); பார்க்க;See tombai. [தொம்பை → தொம்மனை] |
தொம்மெனல் | தொம்மெனல் tommeṉal, பெ. (n.) ஒலிக் குறிப்பு; onom. expr. of drum-beat. “தொம்மென….. குடமுழவெழு முழக்கம்” (கோயிற்பு நடராச.); [தொம் + எனல்] |
தொம்மை | தொம்மை tommai, பெ. (n.) 1. தொம்பை பார்க்க;See tombai, “வடமேற்கில் தானியத் தொம்மை யமைக்கவும்” (சர்வா.சிற். 17);. 2. பருமன்; bulkiness, corpulence. |
தொயில்கீரை | தொயில்கீரை toyilārai, பெ.(n) காட்டில் முளைக்கும் கீரை வகை; an edible green which is grown in forest. (நெ.வ.வ.சொ.192);. மறுவ. தொய்யாக்கரை [தொய்யில்-தொயில்+கீரை] தொயில்கீரை toyilārai, பெ.(n.) காட்டில் முளைக்கும் கீரை வகை; an edible green which is grown in forest. (நெ.வ.வ.சொ.192);. மறுவ. தொய்யாக்கரை [தொய்யில்-தொயில்+கீரை] |
தொய் | தொய்1 toytal, செ.கு.வி. (v.i.) 1. இளைத்தல்; to languish, pine, grow weak. 2. சோர்தல்; to be weary, fatigued; to fail in energy; to droop, faint, flag. “தொய்யுமான் போலத் துவக்குண்டேன்” (விறலிவிடு. 407);. இத்தனை பேருக்கிடையில் நமக்கு எங்கே வேலை கிடைக்கப் போகிறது என்ற நினைப்பில் மனம் தொய்ந்தாள். 3. துவளுதல்; to become slack, to be loose, supple, yielding. “தொய்யு மரவணைக்குள்” (திருப்பு.1173); நிறையத் துணிகள் தொங்குவதால் கொடி தொய்யத் தொடங்கி விட்டது 4. வளைதல்; to bend through weakness or want of support. கட்டடம் தொய்கிறது. 5 வயிறு முதலியன வாடுதல் (வின்.);; to sink in, as the belly through hunger or disease. உணவின்றி வயிறு தொய்கிறது. 6. கெடுதல்; to perish; to be ruined. “தொய்யா வெறுக்கைகொடு” (பெரும்பாண்.434); 7. பயன் குறைதல் (வின்.);; to be past the prime, as trees; to be reduced in fruitlessness. 8. மூச்சுத் திணறுதல் (வின்.);; to breathe short and hard, as while suffering from asthma. 9, வினை செய்தல்; to labour do work. “தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்” (புறநா.214.); [துல் → துள் → தொன் → தொய் (மு.தா. 281);] தொய்2 toytal, செ.குன்றாவி (v.t.) உழுதல்; to plough. “தொய்யாது வித்திய துளர்படு துடவை” (மலைபடு. 122);. [தொள் → தொளி = சேறு. தொள் → தொய்] தொய்3 toy, பெ. (n.) குற்றம்; fault, blemish, deficiency. “தொய்யறப் பெய்த… பவளச் செப்பும்” (சீவக. 2474);. |
தொய்தவம் | தொய்தவம் toytavam, பெ. (n.) பரம்பை அல்லது வன்னி மரம்; Indian mesquit (சா.அக.);. |
தொய்படு-தல் | தொய்படு-தல் doypaḍudal, 20 செ.கு.வி. (v.i.) நனைதல்; to be moistened, wet. “நும்மியந் தொய்படாமல்” (மலைபடு. 365);. [தொய் + படு-,] |
தொய்ய வாங்கு | தொய்ய வாங்கு2 doyyavāṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) நிலை தாழ்த்துதல்; to reduce a person by draining away his property. [தொய்ய + வாங்கு-,] |
தொய்யகம் | தொய்யகம் toyyakam, பெ.(n.) அம்மன் சிற்பத்திலுள்ள தலையணி; a head ornament in sculpture. [தை+தொய்+அகம்] தொய்யகம் toyyagam, பெ.(n.) அம்மன் சிற்பத்திலுள்ள தலையணி; a head ornament in sculpture. [தை+தொய்+அகம்] தொய்யகம் toyyagam, பெ. (n.) தலைக் கோலத்தின் ஒர் உறுப்பு; a part of a head ornament.. “தொய்யகத் தாழ்ந்த கதுப்பு” (கவித்.28);. (சிலப். 6.107);. [தொய் → தொய்யகம்] தொய்யகம்2 toyyagam, பெ. (n.) தலைப் பாளை; the first flower sheath or spathe of palmyra, coconut or areca nut (சா.அக.);. |
தொய்யப்போடு-தல் | தொய்யப்போடு-தல் doyyappōṭudal, 20 செகுன்றாவி (v.t.) பயனோக்கிச் சிறிது காலந் தாழ்த்தல் (உ.வ.);; to delay purposively. வேலையைத் தொய்யப் போட்டான் (உ.வ.); (செ.அக.); [தோங்கப் போடுதல் → தொங்கப் போடுதல் → தொப்யப் போடுதல், தோங்கப்போடுதல் = நிறுத்தி வைத்தல்] |
தொய்யல் | தொய்யல் toyyal, பெ. (n.) 1. சோர்கை; fainting, languishing, despondency. “அறியாத் தொய்யற் சிந்தையாம் யாவரை யாதென்று துதிப்பேம்” (கம்பரா. ஊர்தே 18); 2. துன்பம் (சூடா.);; affliction. 3. சேறு (பிங்.);; mud. 4. உழவு; ploughing. [தொள்ளல் → தொய்யல்] தொய்யல்2 toyyal, பெ. (n.) களிப்பு (திவா.);; delight, pleasure, gladness, joy. |
தொய்யவாங்கு | தொய்யவாங்கு1 doyyavāṅgudal, 5 செ.கு.வி. (v.i.) மெல்ல மூச்சு வருதல்; to be very slow in breathing. [தொய்ய + வாங்கு] |
தொய்யவிடு | தொய்யவிடு2 doyyaviḍudal, 20 செ.கு.வி. (v.i.) இணங்குதல்; to be yielding. |
தொய்யவிடு-தல் | தொய்யவிடு-தல் doyyaviḍudal, 18 செ.குன்றாவி, (v.t.) 1. கயிறு முதலானவற்றைத் தளர விடுதல்; to slacken, as a rope. 2. விலையேறுதற் பொருட்டு விற்பனைப் பொருளைக் கட்டி வைத்தல்; to hold back for a time with a view to raise the price, as merchandise. 3. நிறுத்தி வைத்தல்; to put off, delay. [தொப்ய + விடு-,] |
தொய்யா | தொய்யா toyyā, பெ. (n.) தொய்யாக்கீரை பார்க்க;See toyyā-k-kirai |
தொய்யாக்கீரை | தொய்யாக்கீரை toyyākārai, பெ. (n.) கீரை வகை; the smallest Indian amaranth, a weed of gardens and a wholesome potherb. [தொய்யா + கீரை] |
தொய்யாவுலகம் | தொய்யாவுலகம் toyyāvulagam, பெ. (n.) துறக்கம்; heaven, as the world where nobody need work. “தொய்யா வுலகத்து நுகர்ச்சி” (புறநா. 214, 9); [தொய் + ஆ + உலகம்] |
தொய்யில் | தொய்யில் toyyil, பெ. (n.) மகளிர் முலையிலும் தோளிலும் எழுதுங்கோலம்; decorative make-up, by sandal paste and fragrant paste on women’s breast and shoulder. “சுணங்கணி மென்முலைமேற் றொய்யிலெ முதுகோ” (கவித். 111.14);. [தொய் → தொய்யில்] |
தொய்வம் | தொய்வம் toyvam, பெ.(n.) தேய்வை; Rubber. [தொய்-தொய்வம்] தொய்வம் toyvam, பெ.(n.) தேய்வை; rubber, [தொய்-தொய்வம்] |
தொய்வு | தொய்வு1 toyvu, பெ. (n.) 1. இளைப்பு; fatigue. 2. ஈளை; asthma. 3. மூச்சு முட்டல்; hard breathing (சா.அக.);. [தொய்வு = தடை படல்] தொய்வு2 toyvu, பெ. (n.) 1. கட்டின் தளர்ச்சி; laxity, looseness, as of a rope. துணிபோடும் கொடிக் கயிறு தொய்வடைந்து விட்டது. 2. சோர்வு; faintness. தமிழின. தமிழ்மொழியின் விடுதலைக்காகப் பாவலரேறு தம் இறுதி மூச்சுவரைத் தொய்வின்றிப்பாடுபட்டார் (உ.வ.);. வேலையில் தொய்வு ஆகி விட்டான். 3. மூச்சுத் திணறல் (யாழ்.அக.);; difficulty of breathing. |
தொய்வுறல் | தொய்வுறல் toyvuṟal, பெ.(n.)ப பின்வாங்கல், தளர்தல்; sagging [தொய்வு+உறல்] தொய்வுறல் toyvuṟal, பெ.(n.) பின்வாங்கல், தளர்தல்; sagging [தொய்வு+உறல்] |
தொரக்குழி | தொரக்குழி torakkuḻi, பெ.(n.) சிதம்பரம் வட்டத் திலுள்ள சிற்றுார்; a village in Chidambaram Taluk. [துவர+குழி] தொரக்குழி torakkuḻi, பெ.(n.) சிதம்பரம் வட்டத் திலுள்ள சிற்றுார்; a village in Chidambaram Taluk. [துவர+குழி] |
தொரட்டி | தொரட்டி toraṭṭi, பெ.(n.) அரிவாள் மீன் ; sickle fish. [துரட்டி-தொட்டி] தொரட்டி toraṭṭi, பெ.(n.) அரிவாள் மீன் : sickle fish. [துரட்டி-தொட்டி] தொரட்டி1 toraṭṭi, பெ. (n.) இரும்பு முள்; iron crook. தொரட்டி2 toraṭṭi, பெ. (n.) தொரட்டி முட்செடி; Ceylon caper (சா.அக.);. [துரட்டி → தொரட்டி] தொரட்டி3 toraṭṭi, பெ. (n.) ஒரு மீன்: kind of fish. |
தொரட்டிமுள்ளி | தொரட்டிமுள்ளி toraṭṭimuḷḷi, பெ. (n.) வெள்ளைத் துரட்டி; raghota caper which is a curved thorny variety (சா.அக.); [தொரட்டி + முள்ளி] |
தொரம் | தொரம் toram, பெ. (n.) கட்டுமரத்தின் இரு விளிம்பாய் அமையுந்தடி (மரத்தடி); (நெல்லை. மீனவ.);; wooden rod on both side of the raft. |
தொரலை | தொரலை toralai, பெ.(n.) காய் கறிகளின் மேலிருக்கும் தோல்; a peal of the vegetable. (கொ.வ.வ.சொ.);. [துரலை-தொரலைாமணி+பிணை] தொரலை toralai, பெ.(n.) காய் கறிகளின் மேலிருக்கும் தோல்; a peal of the vegetable. (கொ.வ.வ.சொ.);. [துரலை-தொரலைாமணி+பிணை] |
தொரவி | தொரவி toravi, பெ.(n.) விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Villupuram Taluk. [துரவை-தொரவை-தொரவி] தொரவி toravi, பெ.(n.) விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Villupuram Taluk. [துரவை-தொரவை-தொரவி] |
தொரா | தொரா torā, பெ. (n.) வீட்டின் பூந் தொட்டியில் வைத்துப் பயிராக்கக் கூடிய மூலிகை; it is the most important of pot herb in our houses and garden. இது மூலிகைக்கெல்லாம் அரசனாகக் கருதப்படும் (சா.அக.); மறுவ. துரா, தரா. |
தொறக்கோல் | தொறக்கோல் toṟakāl, பெ.(n.) திறவுக் கோல் பார்க்க; see tiravu-köl. [திறவுக்கோல்-தொறக்கோல் (கொ.வ.);] தொறக்கோல் toṟakāl, பெ.(n.) திறவுக் கோல் பார்க்க;see tiravu-köl. [திறவுக்கோல்-தொறக்கோல் (கொ.வ.);] |
தொறட்டு | தொறட்டு toṟaṭṭu, பெ. (n.) துறட்டு பார்க்க;see {}. |
தொறு | தொறு1 toṟu, பெ. (n.) 1. ஆவின் கூட்டம்; herd of cows. “தொகைமலி தொறுவையாளுந் தோன்றல்” (சீவக. 474);. 2. தொழு (பிங்.);; cattle-stall. 3. இடைச்சாதி; shepherd caste. “நலத்தகு தொறுவினுள்ளேன்” (சீவக. 477);. 4. கூட்டம் (பிங்.);; crowd, multitude. “படைப்பெருந் தொறுவொடும் படர்ந்து” (கந்தபு. யுத்த. முதனாட் 15);. 5. மிகுதி (யாழ்.அக.);; plenty, abundance. [தொழு → தொறு] தொறு2 toṟu, பெ. (n.) 1. அடிமையாள் (பிங்.);; slave. 2. அடிமைத்தனம் (W.G.);; slavery (செஅக);. [தொழு → தொறு] தொறு3 toṟu, இடை. (part.) தான் புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கே என்பனபட நிற்கும் ஒரிடைச்சொல்; a distributive suffix of place, time. “நவிறொறும் நூனயம் போலும்” (குறள், 783); (நன். 420, மயிலை);. |
தொறுதொறுவெனல் | தொறுதொறுவெனல் doṟudoṟuveṉal, பெ. (n.) 1. ஒயாது பேசுதல்; gossipping indulging in lengthy, discourse. 2. பயன்படாது பேசுதல்; talking much and with little purpose. ‘தொறுதொறுவென்று பேசாதே’ (சா.அக.);. மறுவ. தொணதொண [தொறு + தொறு + எனல்] |
தொறுத்தி | தொறுத்தி toṟutti, பெ. (n.) இடைச்சி; shepherdess. “தொறுத்தியர் திகைத்து நின்றார்” (சீவக. 488);. [தொழு → தொறு → தொறுத்தி] |
தொறுநிலை | தொறுநிலை toṟunilai, பெ. (n.) 1. ஆக்கள் (பசுக்கள்); கட்டும் கொட்டம்; shed. “எம்மூர் எல்லாச்சேர தொறு நிலையும்” (S.I.I.vi.167);. [தொறு + நிலை] |
தொறுப்பட்டி | தொறுப்பட்டி toṟuppaṭṭi, பெ. (n.) ஆயிரம் மாடுகள் அடைக்கப்பெறும் அளவுள்ள நிலம், ஒரு தொறுப்பட்ட நிலம்; a measure of land, as sufficient for thousand cattle to fold. “பொத்தனம் கிழர்களும் தொறுப்பட்டி நிலம் குடுத்தார்கள்” (செங்கம் நடுகற்கள் – கல்வெட்டு);. [தொறு + பட்டி] |
தொறுப்பு-தல் | தொறுப்பு-தல் doṟuppudal, 5 செ.குன்றாவி. (v.t.) அலப்புதல்; to harass. [தொணப்பு – தொறுப்பு] |
தொறுப்போ-தல் | தொறுப்போ-தல் toṟuppōtal, 8 செ.கு.வி. (v.i.) ஆநிரை கவரப்படுதல்; to be captured in herds, as cattle. மாடு தொறுப் போகா நிற்க (செ.அக.);. [தொறு + போ] |
தொறுவத்து | தொறுவத்து toṟuvattu, பெ. (n.) நஞ்சுண்டான் பார்க்க;see {} (செ.அக.);. |
தொறுவன் | தொறுவன் toṟuvaṉ, பெ. (n.) இடையன் (திவா.);; shepherd (செ.அக.);. [தொழுவன் → தொறுவன்] |
தொறுவி | தொறுவி toṟuvi, பெ. (n.) தொறுத்தி (சூடா.); பார்க்க;see {} (செ.அக.); |
தொறுவிடம் | தொறுவிடம் toṟuviḍam, பெ. (n.) மாட்டுத் தொழு (பிங்.);; cattle shed (செ.அக.); [தொழு → தொறு + இடம்] |
தொறுவிடுவித்துப்பட்டான் | தொறுவிடுவித்துப்பட்டான் toṟuviḍuvittuppaḍḍāṉ, பெ. (n.) பகைவரிடமிருந்து ஆநிரைகளைப் போரிட்டு மீட்டுக் கொண்டு வந்து தங்களூரில் இடுவித்த பின்னர் இறப்பவர் (செங்கம் நடுகற்கள் – கிபி. 7ஆம் நூற்றாண்டு);; die after recovering the herd of cows seized by the enemy. இச்செயல் கரந்தைத் திணைக்குரியதாகும். [தொறு + விடுவித்து + பட்டான். படு → பட்டான்] |
தொறுவிடுவித்துப்பட்டான்கல் | தொறுவிடுவித்துப்பட்டான்கல் toṟuviḍuvittuppaḍḍāṉkal, பெ. (n.) தம்மூர் ஆநிரைகளைப் பகைவரிடமிருந்து மீட்டுப் போரில் இறந்தவன் நினைவாக நாட்டப்பட்டக் கல்; memorial stone of a deceased warrior, who died when he rescued the cattle seized by the enemy. (செங்கம் நடுகற்கள், கி.பி. 7ஆம் நூற்றாண்டு, கரந்தைத் திணை); [தொறுவிடுவித்து + பட்டான் + கல்] |
தொறுவு | தொறுவு toṟuvu, பெ. (n.) 1. தொறு1 பார்க்க;see {}. 2. செய்தொழில்; work, trade, craft, occupation (செ.அக.);. [தொறு → தொறுவு] |
தொற்பதம் | தொற்பதம் doṟpadam, பெ. (n.) தொம்பதம் பார்க்க;see tompadam. “தொற்பத மேவித் துரிசற்று” (திருமந். 1421);. |
தொற்றம்பு | தொற்றம்பு toṟṟambu, பெ. (n.) ஊடுருவிச் செல்லாமல் உடம்பின் மேல்படும் அம்பு; arrow which causes only a surface wound. ‘அது தன்னிலும் தொற்றம்பன்றிக்கே மறுபாடுருவத் தைப்பதுமாயிருந்தது’ (திவ். இயற். திருவிருத். 75, வியா. பக். 385);. [தொற்று + அம்பு] |
தொற்றி | தொற்றி toṟṟi, பெ. (n.) 1. ஏறுகை; to climb. 2. ஒட்டு; combine. 3. தொற்றனேவல்; commanding word. 4. பற்று; grip. 5. பொருத்து; joint. 6. மூலைக்கையோடணைத்த மரம்; a piece of wood attached to the hip of roof. |
தொற்றிளை | தொற்றிளை toṟṟiḷai, பெ.(n.) கைத்தறி நெசவுப் பாவில் உடன் சேர்ந்த வேண்டாத நூலிழை; unwanted thread included by mistake in the process by weaving. [தொற்று+இழை] தொற்றிளை toṟṟiḷai, பெ.(n.) கைத்தறி நெசவுப் பாவில் உடன் சேர்ந்த வேண்டாத நூலிழை; unwanted thread included by mistake in the process by weaving. [தொற்று+இழை] |
தொற்று | தொற்று1 doṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. தொடுத்தல்; to attach, tack. “அதன் கழுத்திலே காக்கைப் பொன்னைத் தொற்றி” (ஈடு. 3, 1, 1௦);. 2. ஒட்டித்தொடர்தல்; to affect, as a contagious disease, தொற்றுநோய். தொற்று2 doṟṟudal, 7 செ.கு.வி. (v.i.) 1. படர்தல் [ to spread, as a vine. “புரைதீர் தவந்தொற்று கொள்கொம் பெனுந் தெய்வமுனி” (உபதேசகா. சிவபுண்ணிய. 93);. 2. கைகால்களால் பற்றியேறுதல்; to climb. தொற்று3 doṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) பற்றியிருத்தல்; to be connected with. “இங்குக் கழிக்கிற அகங்காரம் ஸுஷ்மசரீரம் விடுமளவும் இவனைத் தொற்றிக் கிடக்கும்” (ரஹஸ்ய. 959);. தொற்று4 toṟṟu, பெ. (n.) 1. தொடர்பு; connection. “கர்ப்பத்திலே தொற்றில்லாமை” (திவ்.திருப்பா.5, வியா. 82);. 2. நோயின் ஒட்டுத் தொடர்பு; contagion. 3. மூலைக்கையோடு அணைத்த மரம் (யாழ்.அக.);; a piece of wood attached to the hip of a roof. |
தொற்றுக்காய்ச்சல் | தொற்றுக்காய்ச்சல் toṟṟukkāyccal, பெ. (n.) ஒட்டுக் காய்ச்சல்; contagious fever, epidemic fever. 2. மாரிக் காய்ச்சல்; plague pertilence (சாஅக);. [தொத்து → தொற்று + காய்ச்சல்] |
தொற்றுத்தொடிசு | தொற்றுத்தொடிசு toṟṟuttoḍisu, பெ. (n.) சிறுபிழை (யாழ்.அக);; triffling error. [தொற்று + தொடிசு] |
தொற்றுநோயாளி | தொற்றுநோயாளி toṟṟunōyāḷi, பெ. (n.) ஒட்டுநோயுற்றவன்; one attacked of contagious disease (சா.அக);. [தொத்து → தொற்று + நோயாளி] |
தொற்றுநோய் | தொற்றுநோய் toṟṟunōy, பெ. (n.) 1. ஒருவரைத் தொடுவதினாலும் முடை நாற்றத்தை நுகர்வதாலும் ஒருவரிடமிருந்து மற்றொரு வருக்கு ஒட்டும் நோய்; disease communicated by mediate or immediate contact or by eflluvia from one person to another person-contagious disease. 2. பழைய நோய்; an old disease. 3. குட்டம்; leprosy. [தொத்து → தொற்று + தோய்] |
தொற்றுப்பல் | தொற்றுப்பல் toṟṟuppal, பெ. (n.) மிகுதியாகத் தோன்றும் பல் (திவ். பெரியாழ். 11, வியா. பக். 13);; irregular, extra tooth. [தொற்று + பல்] |
தொற்றுரோகி | தொற்றுரோகி toṟṟurōki, பெ. (n.) தொற்று நோயாளி பார்க்க;see {} (செ.அக.);. [தொற்று + ரோகி] Skt. {} –→ த. ரோகி |
தொற்றுவியாதி | தொற்றுவியாதி toṟṟuviyāti, பெ. (n.) தொற்றுநோய் பார்க்க;see {} (சா.அக.);. [தொற்று + வியாதி] Skt. {} –> த. வியாதி |
தொலகை | தொலகை tolagai, பெ. (n.) செம்பாதியாய்ப் பிளந்து எடுக்கப்பட்ட மூங்கிற் கழி (குமரி. மீனவ.);; bamboo rod, attained by making into two halves. மறுவ. பிளாச்சி |
தொலாகுழி | தொலாகுழி tolākuḻi, பெ.(n.) ஏற்றம் இறைக்கத் தோண்டும் குழி. (வ.வ.வே.க.29);; a pit digged for lift irrigation. [துலை+குழி] தொலாகுழி tolākuḻi, பெ.(n.) ஏற்றம் இறைக் கத் தோண்டும் குழி. (வ.வ.வே.க.29);; a pit digged for lift irrigation. [துலை+குழி] |
தொலி | தொலி1 tolittal, 4 செ.குன்றாவி, (v.t.) 1. உரித்தல்; to stip off, as rind, bark; to flay. “தொலி எடு” 2. உமி அல்லது தோடு போக உரித்தல் (இ.வ.);; to husk, hull, pound. 3. புடைத்தல்; to beat severely. ‘அவனைத் தொலித்துவிட்டார்கள்.’ தொலி2 toli, பெ. (n.) 1. தோல்; skin, rind. “வெங்காயத் தொலி”. 2. உமி; husk. நெல்லுத் தொலி ம. தொலி தொலி3 toli, பெ. (n.) மேற்றோல்; the natural outer coating of an animal separated from the body. ஆட்டுத் தொலியை உரித்துக் கொடு (இ.வ.); (சா.அக.);. |
தொலிம்பு | தொலிம்பு tolimpu, பெ.(n.) நிலக்கடலைப் போன்றவற்றின் மேல் உள்ள தோல் கூடு; the outer shell like ground nut. [தோல்-தொலி-தொலிம்பு] தொலிம்பு tolimbu, பெ.(n.) நிலக்கடலைப் போன்றவற்றின் மேல் உள்ள தோல் கூடு; the outer shell like ground nut. [தோல்-தொலி-தொலிம்பு] |
தொலியக்கரம்பை | தொலியக்கரம்பை toliyakkarambai, பெ. (n.) நத்தைச் சூரி (மலை.);; bristly buttonweed. [தொலி + ஆ + கரம்பை] |
தொலியல் | தொலியல் toliyal, பெ. (n.) உமி போக்கிய அரிசி (வின்.);; husked rice. மறுவ, கொழியல் அரிசி [தொலி + அல். தொலி = தோன் தோன் அல்லாத அரிசி] |
தொலியாக்கலப்பை | தொலியாக்கலப்பை toliyākkalappai, பெ. (n.) தொலியக்கரம்பை பார்க்க: see toliya-kkarambai [தொலி + ஆ + கலப்பை] |
தொலுக்குநண்டு | தொலுக்குநண்டு tolukkunaṇṭu, பெ. (n.) ஒருவகைக் கடல் சிறு நண்டு (குமரி. மீனவ.);; a small size sea crab. |
தொலும்பு | தொலும்பு tolumbu, பெ. (n.) மாட்டின் மயிர் நிறத்தின் வகையைக் குறிக்க வழங்கும் தரகர் பேச்சுமொழி; a particular colour of cows (in broker’s language);. |
தொலை | தொலை tolai, பெ.(n.) ஏற்றம் உள்ள கிணற்றுப் பகுதி; provided with well sweep. (கொ.வ.வ.சொ.94);. [துலை-தொலை] தொலை tolai, பெ.(n.) ஏற்றம் உள்ள கிணற்றுப் பகுதி; provided with well sweep. (கொ.வ.வ.சொ.94);. [துலை-தொலை] தொலை1 dolaidal, 4 செ.கு.வி. (v.i.) 1. அழிதல்; to become extinct, perish, die. “தொலையாக் கற்ப” (பதிற்றுப். 43, 31);. 2 முடிதல்; to be exhausted, terminated, expended, expiated, liquidated. 3.வழி முதலியன கழிதல்; to end, as a way or distance; to expire, as time. “தொலையாத கானங் கடந்த வந்நாள்” (அஷ்டப் திருவரங்கக். 16);. 4. முற்றுதல்; to be over, finished. “எடுத்த வினை எப்போது தொலையும்? 5. சோர்தல்; to be weary. “நாத்தொலைவில்லா யாயினும்” (மணிமே.24;99); 6. தோற்றல்; to be defeated, outrivalled; to fail in comparison. “ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும்” (புறநா. 76);. 7. வருந்துதல்; to suffer. “சுடுதொழி லரக்கராற் றொலைந்து” (கம்பரா. திருவவ.); 8. காணாமற் போதல்; to be lost. ‘பொத்தகத் தொலைந்தது’ 9. நீங்குதல்; to leave, to depart for good. “என்னைவிட்டுத் தொலைந்தான்” [துல் → தொல் → தொலை] தொலை2 tolaittal, 4 செ.குன்றாவி, (v.t.) 1. அழித்தல்; to destroy, kill, exterminate, as in battle. “விலங்கலன்ன போர்முதற் றொலைஇ” (மலைபடு. 461);. 2. கழித்தல்; to spend, pass, as time. “துதித்து முழுநாட் டொலைப்போருளத்தான்” (சிவப். பிரபந். வெங்கையுலா. 285);. 3. நீக்குதல்; to remove, wipe off. 4. முற்றுப் பெறச் செய்தல் (வின்.);; to bring to an end, settle. 5. முடித்தல்; to finish. “தங்கடன் முறை தொலைத்து” (உபதேசகா. சிவவிரத. 311);. 6. சிதைத்தல்; to spoil. 7. கெட்டுபோக்குதல்; to lose. அரும்பாடுபட்டுச் சேர்த்த நற்பெயரை இச்சிறு செயலால் தொலைத்தான். 8. தோற்பித்தல்; to discomfit surpass, rout. “ஏறுமலை தொலைத்தார்க்கு” (திருக்கோ. 113);. [துல் → தொல் → தொலை] தொலை3 tolai, பெ. (n.) 1. அழிவு; ruin. “தொலைமக்க டுன்பந் தீர்ப்பார்” (நாலடி. 2௦5);. ‘உன்னைத் தொலைச்சுடுவேன்’ 2. தொலைவு; distance, great distances. “அந்நிலை நெடுந் தொலைபோதி” (உபதேசகா. சிவநாம. 146);. 3. அக்கரைச் சீமை; foreign country beyond the seas, as distant. “என் மகள் தொலைக்குப் போயிருக்கிறாள்” (செட் நா);. [துல் → தொல் → தொலை] தொலை4 tolai, பெ. (n.) ஒப்பு; resemblance, equality. |
தொலைகடல் | தொலைகடல் tolaigaḍal, பெ. (n.) சாக்கடல்; dead sea. [தொலை + கடல்] |
தொலைக்கடல் | தொலைக்கடல் tolaikkaṭal, பெ.(n.) தொலை விடத்தில் இருக்கும் கடலோரம்; offshore. [தொலை+கடல்] தொலைக்கடல் tolaikkaḍal, பெ.(n.) தொலை விடத்தில் இருக்கும் கடலோரம்: offshore. [தொலை+கடல்] |
தொலைக்காட்சி | தொலைக்காட்சி tolaikkāṭci, பெ. (n.) ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப்படமாகக் காணும் முறை; television. [தொலை + காட்சி] |
தொலைக்காட்சிநிலையம் | தொலைக்காட்சிநிலையம் tolaikkāṭcinilaiyam, பெ. (n.) ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பும் நிலையம்; television station. [தொலைக்காட்சி + நிலையம்] |
தொலைக்காட்சிப்பெட்டி | தொலைக்காட்சிப்பெட்டி tolaikkāṭcippeṭṭi, பெ. (n.) தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படுவதை உள்வாங்கிக் காட்சிகளாக மாற்றிக்காட்டும் திரை முதலியவை உள்ள பெட்டி போன்ற கருவி; television set. [தொலைக்காட்சி + பெட்டி] |
தொலைச்சு-தல் | தொலைச்சு-தல் dolaiccudal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. கொல்லுதல்; to kill, destroy. “முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை” (மலைபடு. 176);. 2. முடித்தல்; to exhaust. “வெங்கட் டொலைச்சியு மமையார்” (புறநா. 29);. 3. செலுத்துதல்; to pay, discharge as a debt. “நாளாதந்து நறவு நொடை தொலைச்சி” (பெரும்பாண். 141);. [தொலை → தொலைச்சு] |
தொலைதாரி | தொலைதாரி tolaitāri, பெ. (n.) பல்லிப்பூடு; lizard plant (சா.அக.); |
தொலைதூரக்கல்வி | தொலைதூரக்கல்வி tolaitūrakkalvi, பெ. (n.) கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலாமலேயே கல்விப்பட்டம் பெறும் பல்கலைக்கழக அமைப்பு; distance education; correspondence education. |
தொலைதூரக்கல்விமையம் | தொலைதூரக்கல்விமையம் tolaitūrakkalvimaiyam, பெ. (n.) அஞ்சல் வழியில் கல்வி கற்பிக்கும் மையம்; distance education directorate. மறுவ. தொலைதூரக்கல்வி இயக்ககம், தொலைதூரக்கல்வி நிறுவனம் [தொலைதூரக்கல்வி + மையம்] |
தொலைதூரத்தொடர்பகம் | தொலைதூரத்தொடர்பகம் tolaitūrattoḍarpagam, பெ. (n.) தொலைபேசி மூலம் தொலைவிலுள்ள இடங்களை இணைக்கும் நிலையம்; trunk exchange. [தொலைதூரம் + தொடர்பகம்] |
தொலைதூரம் | தொலைதூரம் tolaitūram, பெ. (n.) மிக்க தொலைவு (உவ.);; great distance. “தொலைதூரப் பயணமோ?” (செ.அக.); [தொலை + தூரம்] Skt. {} → த. தூரம் |
தொலைத்தொடர்பு | தொலைத்தொடர்பு tolaittoḍarpu, பெ. (n.) தொலைபேசி தொலைவரி முதலியன மூலம் ஓரிடத்திலிருந்து செய்திகளை அனுப்புதலும் பெறுதலுமான செயற்பாடு; tele- communication. [தொலை + தொடர்பு] |
தொலைநகல் | தொலைநகல் tolai-nagal, பெ.(n.) தொலைப்பதிவு பார்க்க;see tolai-p-pativu. [தொலை + நகல்] |
தொலைநோக்கி | தொலைநோக்கி tolainōkki, பெ. (n.) தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கேற்ற வகையில் ஆடிகள் பொருந்திய குழல் வடிவக் கருவி; binoculars, telescope. [தொலை + நோக்கி] |
தொலைநோக்கு | தொலைநோக்கு tolainōkku, பெ. (n.) எதிர்காலத்தில் ஏற்படவேண்டிய நலனைக் கருத்தில் கொண்ட கணிப்பு; forsightedness. பொருளாதாரத் திட்டங்களைத் தொலை நோக்குடன் தீட்டுவதே அறிவுடைமை. [தொலை + நோக்கு] |
தொலைந்துபோ – தல் | தொலைந்துபோ – தல் tolaindupōtal, 8 செ.கு.வி. (v.i.) 1. இறத்தல்; to die. 2. காணாமற் போதல்; to loss. பள்ளிக்குச் சென்றவன் வீடு திரும்பாமல் எங்கோ தொலைந்து போய்விட்டான். [தொலைந்து + போ-,] |
தொலைபு | தொலைபு tolaipu, பெ. (n.) அழிகை; perishing, destruction. “படைதொலைபறியா மைந்துமலி பெரும்புகழ்” (பெரும்பாண். 398);. [தொலை → தொலைபு] |
தொலைபேசி | தொலைபேசி tolaipēci, பெ. (n.) பேச்சொலியை மின்னலையாகவும் மின்னலைகளைப் பேச்சொலியாகவும் மாற்றி கம்பிமூலம் அனுப்பித் தொலைவில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு பேசிக் கொள்வதற்குதவும் கருவி; telephone. [தொலை + பேசி] |
தொலைபேசிஇணைப்பகம் | தொலைபேசிஇணைப்பகம் tolaipēciiṇaippagam, பெ. (n.) தொலைபேசித் தொடர்பகம் பார்க்க;see {}. [தொலைபேசி + இணைப்பகம்] |
தொலைபேசிஇணைப்பு | தொலைபேசிஇணைப்பு tolaipēciiṇaippu, பெ. (n.) தொலைபேசிக்கருவிக்கும் தொலைபேசித் தொடர்பகத்திற்கும் உண்டாக்கிக் கொள்ளும் இணைப்பு; telephone connection. [தொலைபேசி + இணைப்பு] |
தொலைபேசிக்கட்டணம் | தொலைபேசிக்கட்டணம் tolaipēcikkaṭṭaṇam, பெ. (n.) தொலைபேசியைப் பயன்படுத்துவோரிடமிருந்து அரசு தண்டும் கட்டணம்; charges for telephone usages. [தொலைபேசி + கட்டணம்] |
தொலைபேசிக்கையேடு | தொலைபேசிக்கையேடு tolaipēcikkaiyēṭu, பெ. (n.) தொலைபேசி பயன் படுத்தாளர்களின் பெயர் முகவரியை அகரநிரலில் பதிந்திருக்கும் கையேடு; telephone directory. [தொலைபேசி + கையேடு] |
தொலைபேசித்துறை | தொலைபேசித்துறை tolaipēcittuṟai, பெ. (n.) தொலைபேசியைப் பேணும் துறை; telephone department. [தொலைபேசி + துறை] |
தொலைபேசித்தொடர்பகம் | தொலைபேசித்தொடர்பகம் tolaipēcittoḍarpagam, பெ. (n.) தொலைபேசிகளுக் கிடையே தேவைப்படுகிற இணைப்பை ஏற்படுத்தித் தருகிற நிலையம்; telephone exchange. [தொலைபேசி + தொடர்பகம்] |
தொலைபேசித்தொடர்பு | தொலைபேசித்தொடர்பு tolaipēcittoḍarpu, பெ. (n.) 1. தொலைபேசிஇணைப்பு பார்க்க;see {}. 2. தொலைபேசி வழியேத் தொடர்பு கொள்கை; communication through telephone. [தொலைபேசி + தொடர்பு] |
தொலைபேசிப்பட்டியல் | தொலைபேசிப்பட்டியல் tolaipēcippaṭṭiyal, பெ. (n.) தொலைபேசியைப் பயன் படுத்தியதற்கான கட்டணத்தை நுகர்வோருக்கு அளிக்கும் பட்டியல்; telephone bill. [தொலைபேசி + பட்டியல்] |
தொலைப்பதிவு | தொலைப்பதிவு tolai-p-padivu, பெ. (n.) தொலை எழுதி மூலம் அனுப்பப்படும் தந்தி முறைச் செய்தி; telex. [தொலை + பதிவு] |
தொலையாநோய் | தொலையாநோய் tolaiyānōy, பெ. (n.) 1. தீராத நோய்; an incurrable disease. 2. நாட்பட்ட நோய்; long continued disease. 3. எளிதல் மருத்துவத்துக்கு வயப்படாத நோய்; chronic disease not amenable to treatment (சா.அக.);. [தொலை + ஆ + நோய். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தொலையெழுதி | தொலையெழுதி dolaiyeḻudi, பெ. (n.) ஒரு முனையில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் செய்தியை மறுமுனையில் தானாகத் தட்டச்சுப் பதிவு செய்யும் மின் கருவி; teleprinter. [தொலை + எழுதி] |
தொலைவரி | தொலைவரி tolaivari, பெ.(n.) கம்பி வழியும், கம்பியில்லா வழியும் அனுப்பப்படும் செய்தி; telegram. [தொலை+வரி] தொலைவரி tolaivari, பெ.(n.) கம்பி வழியும், கம்பியில்லா வழியும் அனுப்பப்படும் செய்தி: telegram. [தொலை+வரி] தொலைவரி tolai-vari, பெ. (n.) மின்கம்பி வழியேயனுப்புஞ் செய்தி; telegram. [தொலை + வரி] தொலைவரி tolaivari, பெ. (n.) மின்கம்பி வழியனுப்பும் செய்தி telegram (தந்தி);. [தொலை+வரி] |
தொலைவரி கொடு-த்தல் | தொலைவரி கொடு-த்தல் tolaivarigoḍuttal, செ.கு.வி. (v.i.) ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகக் கம்பி வழியாகச் செய்தி அனுப்புதல் (தந்தி);; to send a telegram, wire. மும்பை போய்ச் சேர்ந்ததும் உடனே தொலைவரிகொடு. |
தொலைவிலுணர்தல் | தொலைவிலுணர்தல் tolaiviluṇartal, தொ.பெ. (vbl.n.) ஐம்புலத் தொடர்பின்றித் தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந்திறம்; telepathy. [தொலைவில் + உணர்தல்] |
தொலைவு | தொலைவு tolaivu, பெ. (n.) 1. முடிவு; completion. “தொலைவில்லாச் சத்தமுஞ் சோதிடமும்” (நாலடி, 52);. 2. அழிவு; end, extinction, destruction. “தொலைவிலார் புரமூன்றும்” (தேவா. 44, 8);. 3. தோல்வி; defeat, failure. “தொலைவில் வெள்வேல் விடலையொடு” (அகநா.7);. 4. சோர்வு; fatigue, weariness. “நாத்தொலைவில்லா யாயினும்” (மணிமே.24:99);. 5. குறைகை; dwindling, decrease. “தொலை விடத்துத் தொல்படைக் கல்லா லரிது” (குறள், 262);. 6. சேய்மை நிலை (தூரம்);; distance. [தொலை – தொலைவு] |
தொலைவெட்டு | தொலைவெட்டு1 tolaiveṭṭu, பெ. (n.) தொலைவு (இ.வ.);; great distance. [தொலைவு + எட்டு] தொலைவெட்டு2 tolaiveṭṭu, பெ. (n.) ஆழமான கடல் (முகவை. மீனவ);; deep sea. [தொலை + வெட்டு] |
தொல் | தொல் tol, பெ.அ (adj.) 1. பழைய; old. 2. இயற்கையான natural. தொல்லெழில் (கலித் 17,5); 3. தொன்மையான; ancient. தொல்பழங் காலம். |
தொல் பெருங்குன்றுார் கிழார் | தொல் பெருங்குன்றுார் கிழார் tolperuṅkuṉrkiḻār, பெ.(n.) கடைக்கழகம் பெரு மகன் பெயர்; name of a land owner of sangam age. [தொல்+பெரும்+குன்றுார்+கிழார்] தொல் பெருங்குன்றுார் கிழார் tolperuṅguṉrkiḻār, பெ.(n.) கடைக்கழகம் பெரு மகன் பெயர்; name of a land owner of Sangamage. [தொல்+பெரும்+குன்றுார்+கிழார்] |
தொல்கணியாதன் | தொல்கணியாதன் tolkaṇiyātaṉ, பெ. (n.) சுழியத்தைக் கண்டுபிடித்த பழந்தமிழ்க் கணித வல்லுநர்; an ancient mathematical genius who invented zero for arithmatical and astronomical calculations. [தொல்+கணி+ஆதன்] தொல்கணியாதன் tolkaṇiyātaṉ, பெ.(n.) சுழியத்தைக் கண்டுபிடித்த பழந்தமிழ்க் கணித sufi sysbi: an ancient mathematical genius who invented zero for arithmatical and astronomical calculations. [தொல்கணி+ஆதன்] |
தொல்கதை | தொல்கதை dolkadai, பெ. (n.) தொன்மம்; purana. “சூதனோதியது மூவாறு தொல்கதை” [தொல் + கதை] |
தொல்காப்பியச்சூத்திரவிருத்தி | தொல்காப்பியச்சூத்திரவிருத்தி tolkāppiyaccūttiravirutti, பெ. (n.) தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவுக்குச் சிவஞான முனிவர் வரைந்த விரிவுரை விருத்தியுரை); an claborate commentary on the pāyiram and the first sutra of Tolkāppiyam by Civa-fiana-munivar. [தொல்காப்பியம் + சூத்திரம் + விருத்தி] |
தொல்காப்பியத்தேவர் | தொல்காப்பியத்தேவர் tolkāppiyattēvar, பெ. (n.) 13ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இயற்றிய வருமான ஆசிரியர் (தமிழ்நா.30);; a poet, author of Tiruppātiri-puliyūr-k-kalampagam. [தொல்காப்பியம் + தேவர்] |
தொல்காப்பியனார் | தொல்காப்பியனார் tolkāppiyaṉār, பெ. (n.) காப்பியக் குடியிற் பிறந்தவரும் அகத்தியனார் மாணாக்கரும் தொல்காப்பியமியற்றிய வருமாகிய ஆசிரியர்; author of Tolkāppiam, reputed to be a disciple of Agattyar, as born in kappiya-k-kudi. இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் (இறை,1. பக். 5. ); [தொல்காப்பியர் → தொல்காப்பியனார்] தொல்காப்பியர் மதிப்புரவு கருதித் தொல்காப்பியனார் என்றழைக்கப்படுவது முண்டு. தொல்காப்பியரின் இயற்பெயர் திரண துரமாக்கினியென்று சொல்லப்படுவதால், தொல்காப்பியர் என்னும் பெயர் சிறப்புப் பெயரேயாகும். இப்பெயருக்குப் பழைமையான காவிய மரபைச்சார்ந்தவரென்று பொருள் கூறப்படுகின்றது. தொல்காப்பியர் கவியென்ற முனிவரின் மரபினராயின், காவியர் அல்லது காப்பியர் என்றழைக்கப்படுதல் இயல்பே. ஆனால், பல்காப்பியர் என்று இன்னொரு புலவர் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்தார். தொல்காப்பியர் என்னும் பெயருக்குப் பழைமையான காவிய மரபினர் என்னும் பொருள் பொருந்துமாயினும், பல்காப்பியர் என்னும் பெயருக்குப் பல காவிய மரபினர் என்று பொருள்கூறல் பொருந்தாது. ஆகவே, காப்பியர் என்னும் பெயருக்கு வேறொரு பொருளிருத்தல் வேண்டும் அகத்தியர் காலத்திற்கு முன், சிறிது காலம் தமிழ்நாட்டில் தமிழாராய்ச்சி குன்றி யிருந்தமை, சில சான்றுகளால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியப் பாயிரத்தில், முந்து நூல் கண்டு என்று கூறியிருப்பதாலும், பிற சான்றுகளாலும், தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில பழைய தமிழ் நூல்களைக் கண்டுபிடித்தாரென்றும், அதனால் தொல்காப்பியரெனப்பட்டார் என்றும் தெரிகின்றது. தொன்மையான காப்பியங்களையறிந்தவர் தொல்காப்பியர் என்றும், பல காப்பியங்களையறிந்தவர் பல்காப்பியர் என்றும் கூறப்பட்டனர். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்றும், பல்காப்பியர் இயற்றிய நூல் பல்காப்பியம் என்றும் அதனதன் ஆசிரியராற் பெயர்பெற்றன இ.மொ. க. தொல்காப்பியர் தம்மை ஆரியவேத அறிஞர் என்று காட்டிக் கொள்வதாலும், சில ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருப்பதாலும், தமிழர் களவியலை ஆரியர் காந்தருவத்திற் கொப்பாகக் கூறியிருப்பதாலும் நான்மறை முற்றிய அதங்கோட்டாசான் தலைமையில் தம் நூலை அரங்கேற்றியதாலும் தொல்காப்பியத்திலுள்ள சில வழுக்களாலும் தொல்காப்பியர் ஆரியர் என்று துணியப்படும் (ஒ.மொ.62);. |
தொல்காப்பியன் | தொல்காப்பியன் tolkāppiyaṉ, பெ. (n.) தொல்காப்பியனார் பார்க்க;See tolkāppiyanār. “சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும்” (பு.வெ.சிறப்புப்பா.); [தொல்காப்பியம் → தொல்காப்பியன்] |
தொல்காப்பியப்புலவர் | தொல்காப்பியப்புலவர் tolkāppiyappulavar, பெ. (n.) தொல்காப்பியனார் பார்க்க;See tolkippiyani: தொல்காப்பியப்புலவர் தோன்ற விரித்துரைத்தார் பல்காய னார்பகுத்துப் பண்ணினார் (வீரசோ. 150, உரை.);. |
தொல்காப்பியம் | தொல்காப்பியம் tolkāppiyam, பெ. (n.) மிகப் பழையதும் தொல்காப்பியனார் இயற்றியதுமான தமிழிலக்கண நூல்; the most ancient Tamil grammar extant, by Tolkāppiyanár. [தொல் + காப்பியம்] தொல்காப்பியம் இன்றுள்ள முதல் தொன்னூல் மட்டுமன்றி, பண்டைத் தமிழ் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கும் ஒருபெருந்துரணாகும். அஃதின்றேல், கடைக்கழகத்திற்கு முந்திய தமிழும் தமிழ் வரலாறும் அதனால் தமிழர் வரலாறும் அறவே இல்லாமற்போம்: தமிழன் உலகுள்ள வளவும் ஆரியனுக் கடிமையாகவே இருந்துழல்வான்.குமரிநாட்டுத் தமிழன் தன் நுண்மாண் துழைபுலத்தால் வகுத்த பொருளிலக்கணம், அதற்கு அச்சிறப்பைத் தந்துள்ளது (தவ.வ.205);. |
தொல்காப்பியர் | தொல்காப்பியர் tolkāppiyar, பெ. (n.) தொல்காப்பியனார் பார்க்க;See tol-kāppiyanār [தொல் + காப்பியர்] |
தொல்காப்பியர் காலம் | தொல்காப்பியர் காலம் tolkāppiyarkālam, பெ. (n.) தொல்காப்பியர் வெள்ளணிபார்க்க;see folkāppiyar velani. [தெப்பு-தெப்பம்] |
தொல்காப்பியர் வெள்ளணி | தொல்காப்பியர் வெள்ளணி tolkāppiyarveḷḷaṇi, பெ.(n.) தொல்காப்பியர் பிறந்த நாள் sign; Birthday celebration of Tolkappiyathe great, தொல்காப்பியர் வெள்ளணி விழா கொண்டாடுவது மிகவும் இன்றியமையாதது. [தொல்காப்பியர்+வெள்ளணி] தமிழின் செம்மொழித் தகவுக்கு ஆணிவேராக இருப்பது தொல்காப்பியம். இதனை இயற்றிய தொல் காப்பியர் பிறந்த நாள் ஒவ்வோராண்டும் மேழ வெள்ளுவா (சித்திரை பெளர்ணமி); அன்று கொண் டாடுவது தகும் என நூற்றுக்கும் மேற்பட்ட தமிழறி ஞர்கள் கூடிய காரைக்குடிக் கருத்தரங்கில் 2009ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அந்தக் கருத்தரங்கில் தொல்காப்பியர் பிறந்த ஆண்டுகி.மு.71என வெளியிடப்பட்ட கருத்து மறு ஆய்வுக்கு உரியதாக இருக்கிறது. தொல்காப் பியரின் பிறந்த ஆண்டை கி.மு.864எனக் கணிப்பதே பொருந்தும் என்பதற்கான காரணங்கள் இங்கே தரப்படுகின்றன. 123.4.2010 நாளிட்ட Frontline இதழில் ஆர். கிருட்டிணகுமார் எழுதிய முசிறிப்பட்டின அகழ்வா ராய்ச்சிக் கட்டுரையில் கி.மு.1000 முதல் எகுபது நாட்டு பெரனிகே துறைமுகத்துக்குச் சேர நாட்டு வணிகக் கப்பல்கள் சென்று வந்ததைக் குறிப்பிட் டிருக்கிறார். இதே காலத்தைச் சார்ந்த சாலமன் கப்பல்கள் தமிழகத் துறைமுகங்களுக்கு வந்ததை விவிலியம் பழைய ஏற்பாடு குறிப்பிடுகிறது. இத்தகைய சூழல்களைக் கருதித் தொல்காப்பியர் காலம் கி.மு.1000 ஆகலாம் எனத் தனிநாயகம் அடிக ளரும் கருத்து வெளியிட்டிருக்கிறார். ஆர்.சிமகம்தார், தன் நூலில் கலிங்கத்தைக் கி.மு.1000 அளவில் ஒரு பாண்டியன் ஆண்டான் என்றும் அவன் வடபர்மா பரோமர் பகுதியையும் வென்றான் என்றும் கூறி யிருப்பது கருதத்தக்கது. ஆதலால் தொல்காப்பியர் காலத்தை கி.மு.711 எனப் பின்னோக்கிக் கணிக்க வேண்டியதில்லை. 2. 1920ஆம் ஆண்டில் மதுரை மனோன்மணி விலாச அச்சகத்தில் த. ஆறுமுகநயினார் பிள்ளை இயற்றிய நற்குடிவேளாளர் வரலாறு எனும் 1035 செய்யுள் கொண்ட நூல் வெளியிடப்பட்டது. இதில் கோட்டை வேளாளர் மரபு வழிப்பட்ட இருங்கோவேள் பாண்டிய மரபினரின் 201தலைமுறை வரலாறு கூறப் பட்டுள்ளது. இந்நூல் அறிஞர்களின் பார்வைக்கு வரவில்லை. இதில் கி.மு.901(கலியாண்டு 2200இல் ஏற்பட்ட கடல்கோளால் குசராத்து மாநில துவரை (துவாரகை); மாநகரும் தென்தமிழக மணலூர்ப் பகுதியும் கடலில் மூழ்கியதாக அறியமுடிகிறது. கடல்கோளால் நாடி ழந்த மக்களுக்கு நிலம் தந்த பேருதவி பொலந்தார் மார்பின் நெடியோனாகிய நிலந்தருதிருவின் பாண்டியன் தொல்காப்பியத்தை அரங்கேற்றிய வனாகக் கூறப்படுகிறான். ஆதலின் தொல்காப் பியத்தின் மேல் வரம்பு கி.மு.901 என்பது உறுதிப்படுகிறது. கொற்கைக்குக் குடிபெயர்ந்த பாண்டியர் மரபில் கி.மு.834இல் கூழைப் பாண்டியன் முடி சூட்டிக் கொண்டதால் இதற்கு முன்பே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்ட காலத்தின் கீர் வரம்பு கி.மு.834 ஆண்டுக்கு முற்பட்டது எனத் தெளிவாகிறது. 3. பெரும்பாலான நூற்பாக்களில் என்ப, என்மனார் எனக் குறிப்பிடும் தொல்காப்பியர் வடசோற் கிளவி வடஎழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே.” எனும் நூற்பாவில் தன்னுடைய புதிய கருத்தை வெளியிடுகிறார். ஐந்திர இலக்கணக் காலத்தில் இல்லாத வடசொற்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழில் புகத்தொடங்கியதால் இடப்பட்ட புதிய இலக்கணக் கட்டுப்பாடு இது. ஆரியர்கள் கி.மு.1600 முதல் 1300 வரை பஞ்சாபிலும், கி.மு.1300 முதல் 1000 வரை சாகவதி (குமரிக்கன்னி); ஆற்றுச் சமவெளியிலும் கி.மு.1100 முதல் கி.மு.900 வரை கங்கைப் பகுதியிலும் கி.மு.900 முதல் 800 வரை கலிங்கத்திலும் குடியேறினர். கி.மு. 800க்குப் பிறகு விந்திய மலைக்குத் தெற்கே குடி யேறத் தொடங்கினர். மேற்கண்ட இடங்களில் அந் தந்த காலவரம்பில் ஆரியர் பயன்படுத்திய சாம்பல் நிறப்பானை ஒடுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன எனத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கலிங்கத்தில் ஆரியர் குடியேறிய கி.மு.900 – கி.மு.800 கால அளவில் வடசொற்கள் உள்ளது உள்ளபடியே கலந்து பாலிமொழி உருவாகியது. அதற்கு கி.மு.800 அளவில் திருத்தியமைத்த 41 எழுத்துகள் பாலிமொழியின் எழுத்துகளாயின. பிராகிருத மொழி தமிழைப் போல் வடமொழி எழுத்து களை நீக்கிவிட்டது. எனவே, வடசொற் கலப்பு நேரடியாகத் தமிழைத் தாக்கிய கி.மு.900-கி.மு.800 கால வரம்பே தொல்காப்பியர் வாழ்ந்த காலமாகும். 4. ஆரியர் வருமுன் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கரும் குறிப்பிட்டிருக்கிறார். தொல்காப்பியச் சொற்களில் சில, சிந்தி மொழியில் உம்-உந்து என்றும் சிவனுதல் என்பது குசராத்தி மொழியில் ஜோவுன் என்றும் 10இலட்சம் எனும் எண்ணைக் குறித்த நெய்தல் என்பது ஒரியா (கலிங்கம்); மொழியில் நியூத என்றும் இன்றும் வழங்கி வருகின்றன. தொல் காப்பியர் காலத்தில் கோடி எனும் எண்ணுப்பெயர் இல்லை. குவளை என்னும் சொல்லே கோடியைக் குறித்தது. கோடி எனும் சொல் முதன் முதலாகப் பாலிமொழியில் தான் தோன்றியது. இதன் காலம் கி.மு.800 என்பதால் தொல்காப்பியர் கி.மு.800க்கு முன்பு வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. குவளை எனும் தமிழ்ச்சொல் பாலிமொழியில் குவளை-குவடி-கோடி எனத் திரிந்து விட்டது. குவளை என்னும் சொல் லுக்குக் கோடி எனும் எண்ணுப் பொருள் இருந்ததை “ஆயிரம் குவளை” என சுக்கிர நீதி (106); குறிப்பிடுகிறது. கோடி எனும் எண்ணுப் பெயர் தொல்காப்பியர் காலத்திலும் இருந்திருந்தால், “ஐ அம் பல் லென வரூஉம் இறுதி” எனும் நூற்பாவில் கோடி என்பதன் இகர ஈறும் அகப்படுத்தி, ‘இஜஅம்பல்லென வரூஉம் இறுதி என மாற்றி எழுதியிருப்பார். ஆதலின் தொல்காப்பியர் குவளை எனும் எண்ணுப்பெயர் கோடி எனத் திரிவதற்கு முன்பு கி.மு.9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார் எனத் தெரிகிறது. 5. கி.மு.901இல் கடல்கோள் நிகழ்ந்த பிறகு நிலத்தரு திருவின் பாண்டியன் தமிழ்ச்சங்கம் நிறுவிய செய்தி, தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல என மாங்குடி மருதனார் பாடிய பாடல் வரிகளாலும் அறியப்படுகிறது. 6. கடல்கோளுக்குப்பிறகு மக்கள் குடியமர்ந்து வாழத் தொடங்கிய பின் முந்நூல் கண்டு கல்வியும், கலையும் வளர்க்கவும் தமிழ்ச் சங்கம் நிறுவவும் ஒரு தலைமுறை அதாவது 37 ஆண்டுகள் ஆகியிருக்கும். இந்நிலையில் அதங்கோட்டாசானிடம் தொல்காப் பியர் மாணவராகச் சேர்ந்தார் எனக் கணக்கிட்டால் (901-37); தொல்காப்பியர் கி.மு.864 ஆண்டு பிறந்தவராக இருக்க வேண்டும். 864 எனும் எண் ஒன்பதால் வகுபடும் எண்ணாகவும் ஒன்பதின் பெருக்கல் மடங்காகவும் தனித்தனியாக கூட்டினால் ஒன்பது வருவதாகவும் இருப்பதைக் காணலாம். 7. கி.மு. 800 கால அளவில் ஆரியர் விந்திய மலையைக் கடந்து தென்னிந்தியாவில் குடியேறி யதன் அடையாளமாகத் தென்னிந்தியாவில் ஆரியர் களின் சாம்பல் நிறப்பானை ஓடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் சமற்கிருதக் கலப்புச் சொற்களைக் கி.மு.எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு வடசொல் என்று சொல்லியிருக்க முடியாது. எட்டாம் நூற்றாண் டுக்கு முன்புதான் வடசொல் என்று சொல்லியிருக்க முடியும். எனவே தொல்காப்பியர் கி.மு.711இல் வாழ்ந்தவராகக் கருத இயலவில்லை. 8. ஐந்திரனார் காலத்தில் ய,வ எனும் உடம்படு மெய்கள் பயன்படுத்தப்படவில்லை. ஈழத்துத் தமிழைப் போல் வரஇல்லை, கேட்க இல்லை எனச் சொற்கள் பிரிந்தே இசைத்தன. தனிச் சொல்லிலும் நாய் எனும் சொல் நாஇ என எழுதப்பட்டதைத் தொல்காப்பியர் கட்டிக் காட்டுகிறார். இந்த இலக்கண அமைப்பு இந்தியா முழுவதும் தமிழ்பேசப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வருவதால் இன்றும் வட இந்திய மொழிகள் அனைத்திலும் ஆய்-ஆயி(தாய்); எனும் தமிழ்ச்சொல் யகர உடம்படுமெய் பெறாமல் ஆஇ என்றே எழுதப்படுகின்றது. ஐ எனும் நெட்டெழுத்து பல்லவர் காலத்தில் தான் இந்த வடிவம் பெற்றது. இதற்கு முன் அஇ என்றே இரு குறில் எழுத்துகளின் கூட்டாக எழுதப்பட்டது. அகர இகரம் ஐகாரம் ஆகும் எனும் தொல்காப்பியர் நூற்பாவை நன்கு விளங்கிக் கொள்ளாத நச்சினார்க்கினியர் ‘ஐ’ வடிவமே பழையது என்றும் அஇ என எழுதுவது ஐகார எழுத்தின் போலி என்றும் கருதி உரையெழுதி விட்டார். சிந்துவெளிமுத்திரைகளிலும் ஐகாரம் அஇ எனும் இருகுறில் கூட்டாகவே எழுதப்பட்டுள்ளது. இன்றைய இந்தி மொழியிலும் சென்னை எனும் பெயர் சென்னஇ என எழுதப்பட்டிருப்பதைச் சென்னைத் தொடர்வண்டி நடுவணத்தில் காணலாம். இத்தென்மரபு கி.மு.800 அளவில் அசோகன் பிராமி எனும் பாலி மொழி எழுத்தில் காணப்பட வில்லை. ஆனால், முற்றிலும் தமிழ் எழுத்தைப் பின்பற்றிய பிராகிருதத்திலும் அதன் வழி வந்த வடஇந்திய எழுத்துகளிலும் நின்று நிலைத்துள்ளது. ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு.800க்கு முற்பட்டதாகும். 9.மூவேந்தர் ஆட்சி கி.மு.ஆறு ஏழாம் நூற்றாண்டுகளில் முற்றிலும் நிலைகுலைந்தது என நற்குடி வேளாளர் வரலாறு எனும் நூலின் 350ஆம் செய்யுள் கூறுகிறது. கி.மு.எட்டாம் நூற்றாண்டி லிருந்தே மூவேந்தர் ஆட்சிக்கு இடையூறுகள் தொன்றியிருக்க வேண்டும். “போந்தை வேம்பே ஆரென வருஉம் மாபெருந் தானையர்” எனவும் “வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு” எனவும் மூவேந்தர் ஆட்சி ஒற்றுமை மிக்கதாய் புகழேணியின் உச்சியில் இருந்த காலத்தை கி.மு.711 ஆம் ஆண்டு என்னும் வரையறை காட்டவே காட்டாது. இந்நிலைகளைக் கூர்ந்து நோக்கினால் தொல் காப்பியர் பிறந்த ஆண்டு கி.மு.864 எனவும் கி.மு.835 இல் தொல்காப்பியம் அரங்கேறியது என்பதே பொருந்தும் எனவும் உறுதிப்படுத்த முடிகிறது. |
தொல்காப்பியர்காலம் | தொல்காப்பியர்காலம் tolkāppiyarkālam, பெ. (n.) தொல்காப்பியர் வாழ்ந்த காலம்; the age of Tolkappiyar. [தொல்காப்பியர் + காலம்] காலம் : தொல்காப்பிய அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கிய அதங்கோட்டாசானை”நான்மறை முற்றிய” என்றும், தொல்காப்பியரை”ஐந்திரம் நிறைந்த” என்றும், தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் இயற்றிய பனம்பாரனார் அடைகொடுத்துக் குறிப்பதனால் ஆரிய மறையை நாலாக வகுத்த வேதவியாசர் காலத்திற்கும், ஐந்திரத்திற்கும் பிற்பட்ட அட்டாத்யாயி’யை இயற்றிய பாணினி காலத்திற்கும், தொல்காப்பியர் இடைப்பட்டவர் ஆவர். பாரதக் காலத்தினராகிய வேதவியாசர் காலம் கி.மு. 1000 பாணினி காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு. தொல்காப்பியர் இடைக்கழகத்திற்கும் கடைக் கழகத்திற்கும் இடைப்பட்டவர்.அகத்தியர்க்கு மிகப்பிற்பட்டவர். அவரை அகத்தியர் மாணவர் என்பது காலவழுவாகும்.அகத்தியர் பாரதத்திற்கு முந்தியவர், தொல்காப்பியர் பிந்தியவர். இருவரும் இடைக்கழகத்திற்குப் பிற்பட்டவரே. தொல்காப்பியர்க்குக் கழகத் தொடர் பின்மையினாலேயே அவர் நூல் அதங் கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப் பெற்றது. கடைக்கழகக்காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டு வரை என்பது, பண்டைத் தமிழ்நாட்டு வரலாற்றாராய்ச்சி யாளர் பேரா.இராமச்சந்திர தீட்சிதர் முடிபு. “விண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” (தொல். 1336); என்று தொல்காப்பியர் தம்காலத் தமிழகத்தை வண்ணித்திருப்பதால், எள்ளளவும் எதிர்ப்பின்றி மூவேந்தரே முடியுடையோராய் முத்தமிழ் நாட்டையும் தம் முன்னோர் போல் அறம் பிழையாது ஆட்சி செய்துவந்த நற்காலம் தொல்காப்பியரதென்பது அறியப் படும். மூவேந்தரும் தம்முள்ளும் தம் குறுநில மன்னரொடும் அடிக்கடி நிகழ்த்திய போரால் அமைதியின்மை தமிழகத்தில் நிலவி யிருந்தமையே. கடைக்கழக இலக்கியம் அளிக்கும் காட்சியாகும். ஆதலால் தொல்காப்பியர் அத்தகைய காலத்திற்கு மிக முற்பட்டவர் என்பது தெளிவு. “ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல. ” (தொல். 510); என்ற இலக்கண வரம்பு திருக்குறளிலும் கடைக்கழகச் செய்யுளிலும் மீறப்படுவதால், தொல்காப்பியர் காலம் கடைக்கழகத்திற்கு மிக முற்பட்டதாதல் வேண்டும் இனி, மேற்குறித்த 1336ஆம் நூற்பாவில் தொல்காப்பியர்”நாற்பெயரெல்லையகம்” என்றொரு தொடர்மொழியால் தமிழகத்தைக் குறித்திருப்பது உற்று நோக்கத்தக்கது. நால் வேறுபெயர் கொண்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு என்பது அத்தொடரின் பொருள் நால்வேறு பெயர்கொண்ட எல்லையாவன: வடக்கில் வடுகநாடும் தெற்கில் குமரியாறும் கிழக்கில் கீழைக்கடலும், மேற்கில் குட மலையும். முதற்காலத்தில் குடமலைக்குக் கீழ்ப்பட்ட கொங்குநாடே திருச்சிக் கருவூரைத் தலை நகராகக் கொண்ட சேர நாடாயிருந்தது. சேரர் கொங்கு வைகாவூர் நன்னாடதில்” என்று அருணகிரிநாதர் பாடுதல் காண்க பிற்காலத்தில் கொங்குநாடு ஒரு நிலையான போர்க்களமாய் மாறியதாலும், தொல்காப்பியர் காலத்திற்குப்பின் மேலைக் கடற்கரை சற்று விரிவடைந்ததினாலும், சேரன் தன் அகநாட்டுத் தலைநகரையும் மேலைத் துறைநகராகிய வஞ்சிக்கு மாற்றி அதற்குக் கருவூர் என்றும் பெயரிட நேர்ந்தது. மேலைக்கடற்கரையின் விரிவு பற்றியே, பரசுராமர் தம் தவ நிலையத்திற்கு இடம் வேண்டி ஓர் அம்பெய்து மேலைக்கடலைப் பின்வாங்கச் செய்தார் என்ற கதையும் எழுந்தது. ‘நாற்பெயரெல்லை’ என்றது நாற்றிசை எல்லைகளையேயன்றி நால்வேறு மண்டலங்களையன்று. மேலும், பிற்காலத்துருவான மண்டலங்கள் நான்கல்ல, ஐந்தாகும். அவை, பாண்டி மண்டலம், சோழமண்டலம், சேரமண்டலம் அல்லது மலை மண்டலம், தொண்டைமண்டலம், கொங்கு மண்டலம் என்பனவாகும். சேரநாட்டார் கிழக்கிலிருந்து சென்றவர் என்பதற்கு அவர் நாட்டமைப்பிற்கு நேர் முரணான கிழக்கு மேற்கு என்னும் சொற்களே போதிய சான்றாம். இதுகாறும் கூறியவற்றால், தொல்காப்பியர் காலம் கி.மு. 7ஆம் நூற்றாண்டென்று கொள்வதே மிகப்பொருத்தமாம் (ஒ.மொ. 82-84.); |
தொல்குணம் | தொல்குணம் tolkuṇam, பெ. (n.) பழமையாகிய பண்பு; characteristic of antiquity, எங்கோமா னெவ்வகைய னேந்திய தொல்குணத்தா லேனோரு மவ்வகையராமிவற்றி னால் (வீரசோ.157, உரை.); [தொல் + குணம்] |
தொல்பதி | தொல்பதி dolpadi, பெ. (n.) பழைமையான ஊர்; ancient city. [தொல் + பதி] |
தொல்பொருளாராய்ச்சி | தொல்பொருளாராய்ச்சி tolporuḷārāycci, பெ. (n.) பழம் பண்பாட்டினை வெளிப் படுத்தும் ஆய்வு; archaeology, [தொல்பொருள் + ஆராய்ச்சி] |
தொல்பொருள் | தொல்பொருள் tolporuḷ, பெ. (n.) பண்டைய மக்களின் பண்பாட்டைக் காட்டும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், கருவிகள், கலங்கள் போன்றவையும் அவற்றின் சிதைவும்; archaeological value. [தொல் + பொருள். தொல் – பழைய] |
தொல்பொருள்துறை | தொல்பொருள்துறை tolporuḷtuṟai, பெ. (n.) தொல்லியல்துறை பார்க்க;See toliyal-turai. [தொல்பொருன்துறை – தொல்லியல் துறை] |
தொல்மரம் | தொல்மரம் tolmaram, பெ. (n.) ஆலமரம்; banyan tree (சா.அக.);, |
தொல்லகம் | தொல்லகம் tollagam, பெ. (n.) முன்னோர் வாழ்ந்த இடம்; place of birth of one’s ancestors. ஆரியர்களின் தொல்லகம் தமிழ்நாடன்று அவர்கள் வந்தேறிகளே. |
தொல்லியல் | தொல்லியல் tolliyal, பெ. (n.) தொல்லியல் துறை பார்க்க;See tolliyal-turai. [தொல்லியன்துறை → தொல்லியல்] |
தொல்லியல்துறை | தொல்லியல்துறை tolliyaltuṟai, பெ. (n.) பண்டைய மக்களின் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்யும் துறை; archeological department. [தொல் + இயல் + துறை] |
தொல்லுகம் | தொல்லுகம் tollugam, பெ. (n.) பாவட்டை; pavetta (செ.அக.);. |
தொல்லெழில் | தொல்லெழில் tolleḻil, பெ. (n.) இயற்கையழகு; natural beauty. “தொல்லெழி றொலைபிவள்” (கலித் 17; 5). [தொல் + எழல்] |
தொல்லை | தொல்லை1 tollai, பெ. (n.) பழைமை; antiquity, ancientness. “தொல்லைக்கணின்றார் தொடர்பு” (குறள், 806);. தெ. தொல்லி [தொல் → தொல்லை (மு.தா. 285);] |
தொல்லையார் | தொல்லையார் tollaiyār, பெ. (n.) 1. தேவர்; trouble, perplexity, difficulty. மனத்தொல்லை யொழிவது என்று? 2. செயல், வினை, வேலை (அக.நி.);; work. அவனுக்குப் பலதொல்லைகளிருக்கின்றன. ம. தொல்ல [துல் → துன் → துன்பு, துல் → தொல் → தொல்லை (மு.தா.285);] தொல்லையார் tollaiyār, பெ. (n.) தேவர்; celestials, as the ancients. “தொல்லையா ரமுதுண்ண” (தேவா. 35);. [தொல்லை → தொல்லையார்] |
தொல்லைவையகம் | தொல்லைவையகம் tollaivaiyagam, பெ. (n.) துறக்கம்; heaven, as the ancient world. “தொல்லைவையகத் தேறுதொண்டர்கள்” (தேவா. 66, 3); [தொவ்வை + வையகம்] |
தொல்வரவு | தொல்வரவு tolvaravu, பெ. (n.) பழைய குடிவரவு; birth in an ancient family. “தொல்வரவுந் தோலுங் கெடுக்கும்” (குறள், 1043); [தொல் + வரவு] |
தொல்வரைவு | தொல்வரைவு tolvaraivu, பெ. (n.) அடிப்பட்ட குடியொழுக்கம்; ancient custom, rule of conduct. “செய்யாரே தொல் வரைவிற் றீர்ந்ததொழில்” (ஆசாரக். 37); [தொல் + வரைவு] |
தொல்வினை | தொல்வினை tolviṉai, பெ. (n.) பழவினை; karma. “தொல்வினைப் பயன்றுய்ப்ப” (கலித் 118;3); [தொல் + வினை] |
தொளதொள-த்தல் | தொளதொள-த்தல் doḷadoḷaddal, 4 செ.கு.வி. (v.i.) 1. துளையில் இறுக்கமாயில்லாமை, தளர்தல்; to be loose-fitting, lax. 2. இளகிப் போதல்; to be soft, as from over-ripeness, from moisture; to be thin, as pap. 3. உளறுதல்; to babble, rattle away. “அவன் தொளதொளக் கிறான்”. 4. மன உறுதியற்று இருத்தல்; to waver, to be undecided. [தொள் → தொளதொள] தொள தொளத்தலாவது துளையின்கண் ஒன்று இன்னொன்றுள் இறுகப் பொருந்தாதவாறு இருத்தல். |
தொளதொளப்பு | தொளதொளப்பு doḷadoḷappu, பெ. (n.) நெகிழ்வு; slakness, looseness. [தொளதொள → தொளதொளப்பு] |
தொளதொளெனல் | தொளதொளெனல் doḷadoḷeṉal, பெ. (n.) 1. நெகிழ்வுக் குறிப்பு; expr. of being slack, loose. 2. உளறுதற் குறிப்பு; rattling talk. “தொளதொள வென்று பேசுகிறான்”. [தொளதொள + எனல்] |
தொளத்தி | தொளத்தி toḷatti, பெ. (n.) தளத்தி; loose-fitting. [தொள் → தொள → தொளத்தி] |
தொளவேடு | தொளவேடு toḷavēṭu, பெ.(n.) திருவள்ளூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvallur Taluk. [துளவு+பேடு] தொளவேடு toḷavēṭu, பெ.(n.) திருவள்ளூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvallur Taluk. [துளவு+பேடு] |
தொளாபாரம் | தொளாபாரம் toḷāpāram, பெ. (n.) பழைய செயல் (இ.வ.);; ancient thing or affair. |
தொளாமணி | தொளாமணி toḷāmaṇi, பெ. (n.) துளைக்காத முழு மணி; a pearl which is not pored. [துள் → தொள் + ஆ + மணி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தொளி | தொளி1 toḷi, பெ. (n.) தொள்ளி பார்க்க;see {}. உழாநுண்டொளி (சிலப். 1௦, 12௦);. [தொள் → தொள்ளி → தொளி] தொளி1 toḷi, பெ. (n.) உழவு செய்வதற்காக நீர்கட்டப்பெற்றவயல்(சேடைநிலம்);; field filed with water to prepare it for sowing. மறுவ, நீர்கட்டல் [துலி(மிதித்தல்);-துளி-தொளி] தொளி2 toḷi, பெ. (n.) கசடுதங்கும் முதல் பாத்தி, first section of the field where the sediment stagnates. [துளி-தொளி] |
தொளிகலக்கு-தல் | தொளிகலக்கு-தல் doḷigalaggudal, 8 செ.கு.வி. (v.i.) தொளியடி-த்தல் பார்க்க;see {}. (செ.அக.);. [தொளி + கலக்கு-,] |
தொளிச்சல் | தொளிச்சல் toḷiccal, பெ.(n.) கல்குளம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kalkulam Taluk. [தொளி-தொளிச்சல்] தொளிச்சல் toḷiccal, பெ.(n.) கல்குளம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kalkulam Taluk. [தொளி-தொளிச்சல்] |
தொளிப்பருவம் | தொளிப்பருவம் toḷipparuvam, பெ. (n.) தொளிவிரைப்பு பார்க்க;see {}. (செ.அக.);. [தொளி + பருவம்] |
தொளியடி-த்தல் | தொளியடி-த்தல் toḷiyaḍittal, 4 செ.கு.வி. & செ.குன்றாவி (v.i. & v.t.) வயலிற் சேறு கலக்குதல்; to plough a flooded field. மறுவ. சேடையோட்டுதல் [சேறு → சேடு] |
தொளிவிச்சின்னம் | தொளிவிச்சின்னம் toḷivicciṉṉam, பெ. (n.) குரற்கம்மல் பார்க்க;see {} (சாஅக.);. |
தொளிவிரைப்பு | தொளிவிரைப்பு toḷiviraippu, பெ. (n.) வயலைச் சேறாக்கி விதைக்கை; sowing in the slush of a field, opp. to puluti-viraippu (செஅக.);. [தொளி1 + (விதைப்பு → ); விரைப்பு] |
தொளுக்கு | தொளுக்கு1 doḷukkudal, 8 செ.குன்றாவி. (v.t.) 1. தொடுத்தல்; to tie loosely. 2. தளரக் கட்டுதல்; to wear or attach loosely, as clothes. தொளுக்கு2 toḷukku, பெ. (n.) ஊழற் சதை பிடித்தவன் (இ.வ);; flabby person. |
தொளுக்குக்கொண்டை | தொளுக்குக்கொண்டை toḷukkukkoṇṭai, பெ. (n.) அவிழ்ந்த மயிர்முடி (வின்.);; loosened coil of a woman’s hair. [தொளுக்கு + கொண்டை] |
தொளுத்தை | தொளுத்தை toḷuttai, மீன் வகை; a kind of fish. |
தொளை | தொளை2 toḷai, பெ. (n.) 1. மூங்கில்; bamboo. 2. ஒட்டை; opening, hole. “தொளை கொடாழ் தடக்கை” (கம்பரா. சித்திர. 29);. 3. கண்; eye. 4. உட்டுளை; a cavity in a sore or an ulcers. 5. பெண்; woman. [துளை → தொளை (வே.க. 284);] |
தொளை-த்தல் | தொளை-த்தல் toḷaittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. துளையிடுதல்; to perforate, bore. “மணித் தோளையுந் தொளைத்தான்” (கம்பரா. நிகும்பலை. 123);. 2. தொந்தரவு செய்தல் (இவ.);; to tease. 3. செய்தி தெரிதற் பொருட்டு ஆழம் பார்த்தல் (இவ.);; to probe. [துளை → தொளை] |
தொளைக்காது | தொளைக்காது toḷaikkātu, பெ. (n.) தொள்ளைக்காது பார்க்க;see {} (சாஅக.); [துளை → தொளை + காது] |
தொள்(ளு) | தொள்(ளு)1 doḷḷudal, 8 செ.குன்றாவி. (v.t.) துளைத்தல்; to perforate, bore with an instrument. “செந்தீத் தொட்ட கருந்துளைக் குழலின்” (பெரும்பாண். 129);. [துல் → துள் → தொள்] தொள்(ளு)2 doḷḷudal, 8 செ.கு.வி. (v.i.) நெகிழ்தல் (வின்.);; to become weak, infirm. [துல் → துள் → தொள்] |
தொள்கல் | தொள்கல் toḷkal, பெ. (n.) துளைக்கை (பிங்.);; perforating. [துல் → துள் → தொள்கு → தொள்கல்] |
தொள்கு | தொள்கு toḷku, பெ. (n.) துளையுள்ள வலை; net for trapping. “தொள்கின்றலை யெய்திய மானென” (கம்பரா. சடாயுவு. 13௦);. 2. தோண்டப் பட்ட சேறு; slush, mire. “யானை தொள் கொடுங் கிடந்த தென்ன” (கம்பரா. வாலிவ. 73); (இலக்.அக.);. 3. பள்ளம் (வின்.);; excavation, pit. [துள் → தொள் → தொள்கு (வே.க. 283);] |
தொள்ளம் | தொள்ளம் toḷḷam, பெ. (n.) 1. தெப்பம் (திவா.);; float, raft. “தேர்களூர் தொள்ள மாதிகளா” (விநாயகபு. 37, 33);. 2. சேறு; mud, mire. “தொள்ளத்தின் வளைபாய்ந் தாழுங் கடலென” (இரகு. இலவணன். 15);. [துள் → தொள் → தொள்ளம்] |
தொள்ளற்காது | தொள்ளற்காது toḷḷaṟkātu, பெ. (n.) தொள்ளைக்காது பார்க்க;see {} (சா.அக.);. [தொள்ளைக்காது → தொள்ளற்காது] |
தொள்ளற்சரீரம் | தொள்ளற்சரீரம் toḷḷaṟcarīram, பெ. (n.) 1. பருத்த உடம்பு; flabby body. 2. மெலிந்த உடம்பு; weak body (சா.அக.);. [தொள்ளல் + சரீரம்] Skt. {} –> த. சரீரம். |
தொள்ளல் | தொள்ளல் toḷḷal, பெ. (n.) துளை (உவ.);; hole (செ.அக.);. [துள் → தொள் → தொள்ளல்] |
தொள்ளவாய் | தொள்ளவாய் toḷḷavāy, பெ.(n.) பெரிய வாய்; big mouth. [தொள்-தொள்ளை+வாய்] தொள்ளவாய் toḷḷavāy, பெ.(n.) பெரிய வாய், big mouth. [தொள்-தொள்ளை+வாய்] |
தொள்ளாடி | தொள்ளாடி toḷḷāṭi, பெ. (n.) 1. நலிந்தோன்; weak, infirm person or thing. 2. நெகிழ்ந்த உடல்வாகு கொண்டவன்-ள்-து; flaccid person or beast. 3. நலிவுறுகை; growing lax, as the muscles. [தொள் → தொள்ளாடி] |
தொள்ளாடு-தல் | தொள்ளாடு-தல் doḷḷāṭudal, 6 செ.கு.வி. (v.i.) 1. வலி தளர்தல் (வின்.);; to become weak. 2. தள்ளாடுதல்; to move with falterring steps, as an aged person. [துள் → தொள் → தொள்ளாடு] |
தொள்ளாயிரம் | தொள்ளாயிரம் toḷḷāyiram, பெ. (n.) ஒன்பது நூறு; nine hundred. “தொள்ளாயிரங் கடும்போர்க்கணை துரந்தான்” (கம்பரா. திரும்பலை. 124);. ம. தொள்ளாயிரம் [தொள் + ஆயிரம்] தொண்ணூறு பார்க்க |
தொள்ளாளி | தொள்ளாளி toḷḷāḷi, பெ.(n.) சிற்றுார்ப் புறங்களில் வண்ணக்கோலமிட்டுப் பேயை விரட்டு பவர்; driving out the goast by drawing a “kolam” தொழிலாளி என்பதன் மறு வழக்கு. தொள்ளாளி toḷḷāḷi, பெ.(n.) சிற்றுார்ப் புறங்களில் வண்ணக்கோலமிட்டுப்பேயை விரட்டுபவர் driving out the goast by drawing a ‘kolam’ தொழிலாளி என்பதன் மறு வழக்கு. தொள்ளாளி1 toḷḷāḷi, பெ. (n.) தொழிலாளி பார்க்க;see {}. [தொழிலாளி → தொள்ளாளி] தொள்ளாளி2 toḷḷāḷi, பெ. (n.) மந்திரவாதி; witch man. மீன்பாடு குறைந்தால் இவனிடம் தாயத்து வாங்கிச் சடங்கு செய்வர் (மீனவ.);. |
தொள்ளி | தொள்ளி toḷḷi, பெ. (n.) சேறு; mud, soft mire. “மைகுழைத்தன்ன தொள்ளியஞ் செறுவில்” (கல்லா. 36, 1);. [தொள் → தொள்ளி) |
தொள்ளியடி-த்தல் | தொள்ளியடி-த்தல் toḷḷiyaḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. தொளியடி-த்தல் பார்க்க;see {}. 2. கெடுத்தல்; to damage, as one’s reputation (செ.அக);. [தொள்ளி + அடி] |
தொள்ளை | தொள்ளை toḷḷai, பெ. (n.) 1. துளை; hole. “தொள்ளைப் புலாற்பை” (திருப்பு. 289);. 2. குழி; pit. “தொள்ளை மன்றத் தாங்கண்” (புறநா. 333);. 3. துளையுடைப்பொருள் (யாழ். அக.);; anything tubular. 4. மரக்கலம் (திவா);; sailing vessel. 5. குற்றம்; fault, defect. “தொள்ளை யுணர்வின் னவர்கள் சொல்லின்” (சீவக. 496);. 6. மரக்கால் (தைலவ. தைல. 135, 17);; standard measure of capacity. 7. அறியாமை; ignorance. “தொள்ளை பூத்தலர்ந்த நெஞ்சிற் றக்கன்” (கூர்மபு. தக்கன்வே. 6);. ம. தொள்ள;க., பட. தொள்ளெ [துல் → தொள் → தொள்ளை] |
தொள்ளை விழுதல் | தொள்ளை விழுதல் doḷḷaiviḻudal, செ.கு.வி. (v.i.) பெருச்சாளிமுதலியவற்றாற் கட்டடத் தரையில் விழும் குழிவு; depression or hollow in the saved floor, caused by bandicoot etc., [தொள்ளை+விழு-] |
தொள்ளைக்காதர் | தொள்ளைக்காதர் toḷḷaikkātar, பெ. (n.) ஊர்தோறும் திரிந்து பித்தளை ஏனம் விற்குமொரு குலத்தார் (இ.வ.);; a caste of itinerant vendors of brasware from Tirunelvely and Palghat, as having pierced ear-lobes (செஅக.); [தொள்ளைக்காது → தொள்ளைக்காதர்] |
தொள்ளைக்காது | தொள்ளைக்காது toḷḷaikkātu, பெ. (n.) 1. பெருந்துளையுள்ள காது; ear with a big perforation in its lobe, opp. to {}. 2. அணி நீங்கிய தொளைக்காது; perforated ear left unadorned and empty. [தொள்ளை + காது] |
தொள்ளைக்காதுச்செட்டி | தொள்ளைக்காதுச்செட்டி toḷḷaikkātucceṭṭi, பெ. (n.) கற்சட்டி வணிகர்; trader in stone – vessels. [தொள்ளை + காது + செட்டி] |
தொழவகா | தொழவகா toḻvakā, பெ. (n.) பவளமல்லிகை; coral jasmine. |
தொழி | தொழி1 toḻi, பெ. (n.) பழைய போக்கில் அணியம் செய்யப்படும் உப்பள முறையில் இருக்கும் தொட்டானின் மறுபெயர்; another name for {} in old method of salt preparation (மீனவ);. தொழி2 toḻittal, செ.கு.வி. (v.i.) 1. சினத்தல்; to be angry, enraged. “சிங்கம்போற் றொழித் தார்த்து” (சீவக. 2306);. 2. ஒலித்தல்; to sound, tinkle. “தொழித்த – கலனுஞ் சிந்தி” (சீவக. 2969);. தொழி3 doḻidal, 3 செ.கு.வி. (v.i.) சிதறுதல்; to be split, scattered. “தொழிந்துமட்டொழுக” (சீவக.2673);. |
தொழின்முதல் | தொழின்முதல் doḻiṉmudal, பெ. (n.) ஏவுதற் குரியோன்; directing agent. “ஏவற் கருத்தாவைத் தொழின்முத லென்றும்” (நன். 29, சங்கர.);. [தொழில் + முதல்] |
தொழின்மொழி | தொழின்மொழி toḻiṉmoḻi, பெ. (n.) வினைச்சொல் (வின்.);; verb. [தொழில் + மொழி] |
தொழிமரம் | தொழிமரம் toḻimaram, பெ. (n.) சேற்றுக் காலாக உழுதநிலத்தைச் சமஞ் செய்யப் பயன்படுத்தும் பரம்புப் பலகை (நாஞ்.);; board used to smoothened the ploughed surface of a wet land for {} cultivation. [தொளி = சேறு; தொளி → தொழி + மரம்] |
தொழிற்கல்வி | தொழிற்கல்வி toḻiṟkalvi, பெ. (n.) தொழிலைப் பயிற்றுவிக்கும் கல்வி; professional education. [தொழில் + கல்வி] |
தொழிற்காய்ச்சல் | தொழிற்காய்ச்சல் toḻiṟkāyccal, பெ. (n.) தொழிலில் ஏற்பட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமை; professional jealousy. “இவருக்கு எந்த மருத்துவமும் பயனளிக்காது. ஏனென்றால் இந்தத் தொழிற்காய்ச்சலுக்கு மருந்தே இல்லை”. [தொழில் + காய்ச்சல்] |
தொழிற்குறிப்பு | தொழிற்குறிப்பு toḻiṟkuṟippu, பெ. (n.) வினைக்குறிப்பு பார்க்க;see {}. “பெயரே யேனைத் தொழிற்குறிப் பிரண்டினுள்ளும்” (சேதுபு. திருநாட்டுப். 109);. [தொழில் + குறிப்பு] |
தொழிற்குறைவிசேடம் | தொழிற்குறைவிசேடம் toḻiṟkuṟaivicēṭam, பெ. (n.) தொழிற்குறைவிசேடவணி பார்க்க;see {}. “அது குணக்குறை விசேடமும், தொழிற்குறை விசேடமும் சாதிக்குறை விசேடமும் பொருட்குறை விசேடமும் உறுப்புக்குறை விசேடமும் என விகற்பிக்கப்படும்” (வீரசோ. 171, உரை);. [தொழில் + குறிப்பு] |
தொழிற்குறைவிசேடவணி | தொழிற்குறைவிசேடவணி toḻiṟkuṟaivicēṭavaṇi, பெ. (n.) அணியிலக்கண வகை; a kind of rhetoric. ஏங்கா முகில்பொழியா நாளும் புனறேங்கும் பூங்கா விரிநாடன் போர்மதமா-நீங்கா வளைபட்டதாளணிகண் மாறெதிர்ந்த தெவ்வர் தளைப்பட்ட தாட்டா மரை இச்செய்யுளில் சோழனுடைய யானைகள், போரணி பூண்ட மாத்திரத்தாலே, பகைவர் தோல்வியுற்று விலங்கிடப்பட்டனரென்பது கருத்து. போரணி பூண்டு போய்ப் பகைவருடன் எதிர்த்துப் போர் செய்தாலாகிய தொழில்களில் போரணி அணிதல் மாத்திரமே கூறிக் குறைவுபாடு விளக்கி செயலில் உயர்வு தோன்றச் சொன்னமையால் இது தொழிற் குறை விசேடவணியாயிற்று. ‘ஏங்கா முகில் பொழியா நாளும் புனல் தேங்கும் என்றதிலும் இவ்வணியமைந்திருத்தல் காண்க. ஏங்கா – செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம் |
தொழிற்கை | தொழிற்கை toḻiṟkai, பெ.(n.) நடனத்தில் மெய் குறிப்பிற்காகப் பிடிக்கப்படும் கைகள்; a hand pose in dance. [தொழில்+கை] தொழிற்கை toḻiṟkai, பெ.(n.) நடனத்தில் மெய் குறிப்பிற்காகப் பிடிக்கப்படும் கைகள்; a hand pose in dance. [தொழில்+கை] தொழிற்கை toḻiṟkai, பெ. (n.) கையால் மெய்ப்பாடு காட்டுகை (சிலப். 3, 18, உரை);; hand-pose (செ.அக.);. [தொழில் + கை] |
தொழிற்சாலை | தொழிற்சாலை toḻiṟcālai, பெ. (n.) வினைக் களம்; workshop, place of business, office (செ.அக.);. [தொழில் + சாலை] |
தொழிற்பகை | தொழிற்பகை toḻiṟpagai, பெ. (n.) தொழிற் போட்டியால் உண்டான பகை; professional revenge. [தொழில் + பகை] |
தொழிற்படு-தல் | தொழிற்படு-தல் doḻiṟpaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. செயற்படுதல்; to be formed, constructed, produced; to be operated upon. 2. வேலையிற் புகுதல்; to engage in an office, enter upon a work. [தொழில் + படு-,] |
தொழிற்படுத்துஞ்சொல் | தொழிற்படுத்துஞ்சொல் toḻiṟpaḍuttuñjol, பெ. (n.) ஏவல் வினை; verb denoting, command. “சொற்பொரு ளெல்லாந் தொழிற் படுத்துஞ் சொல்லானே உணர்தற்பாலன” (சி.போ.பா. அவையடக் மீமாஞ். சுவாமிநா.); (செ.அக.);. [தொழில் + படுத்தும் + சொல்] |
தொழிற்பட்டிகை | தொழிற்பட்டிகை toḻiṟpaṭṭigai, பெ. (n.) மகளிர் அரையிலணியும் ஒப்பனையோடு கூடிய பட்டிகை என்னும் அணி; ornament which woman wear in their waist. [தொழில் + பட்டிகை. தொழில் = வேலைப்பாடு, ஒப்பனை] |
தொழிற்பண்பு | தொழிற்பண்பு toḻiṟpaṇpu, பெ. (n.) செய்கை குறிக்கும் பண்புச் சொல்; action, considered as a quality nadattal dist. fr. {}. “பண்புகள் குணப்பண்புந் தொழிற் பண்பும் ஆகிய இரண்டனுள் அடங்குமாயினும்” (நன். 442, விருத்.); [தொழில் + பண்பு] |
தொழிற்பயில்வு | தொழிற்பயில்வு toḻiṟpayilvu, பெ. (n.) வினை மேன்மேலும் நிகழ்கை (திவா.);; repeated action (செ.அக.);. [தொழில் + பயில்வு] |
தொழிற்பாடு | தொழிற்பாடு toḻiṟpāṭu, பெ. (n.) வேலை (யாழ்.அக.);; labour. [தொழில் → தொழிற்பாடு] |
தொழிற்புரட்சி | தொழிற்புரட்சி toḻiṟpuraṭci, பெ. (n.) புதிய கருவிகளின் கண்டுபிடிப்பால் தொழில் துறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம்; industrial revolution. [தொழில் + புரட்சி] |
தொழிற்புலையர் | தொழிற்புலையர் toḻiṟpulaiyar, பெ. (n.) கீழ்ச்சாதியர் (கன்மசண்டாளர்);; one who is considered an outcaste because of his base actions. “கொலைத் தொழிலினையுடையவராகிய மாக்கள் தொழிற்புலையராகுவர்” (குறள், 329, மணக்.);. [தொழில் + புலையர்] |
தொழிற்பெயர் | தொழிற்பெயர் toḻiṟpeyar, பெ. (n.) 1. வினைப் பெயர்; verbal noun. “ஞகாரை தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்” (தொல். எழுத்து. 296);. 2. வினையா லணையும் பெயர்; personal noun derived from a verbal root. “தொழிற்பெயராயி னேகாரம் வருதலும்” (தொல். சொல். 141);. [தொழில் + பெயர்] |
தொழிற்பேட்டை | தொழிற்பேட்டை toḻiṟpēṭṭai, பெ. (n.) குடியிருப்புப் பகுதியிலிருந்து விலகிப் பேரளவில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் இடம்; cluster of industries in a place set aside by the government; industrial estate. [தொழில் + பேட்டை] |
தொழிற்றன்மை | தொழிற்றன்மை toḻiṟṟaṉmai, பெ. (n.) தொழிலிலுள்ள பலவிதமான தன்மைகளை உள்ளவாறே அலங்கரித்துக் கூறுவதாகிய அணி வகை; a kind of rhetoric. [தொழில் + தன்மை] சூழ்ந்து முரன்றணவி வாசந் துதைந்தாடித் தாழ்ந்து மதுநுகர்ந்து தாதருந்தும் – வீழ்ந்தபெரும் பாசத்தார் நீங்காப் பரஞ்சுடரின் பைங்கொன்றை வாசத்தார் நீங்காத வண்டு. இஃது இலக்கியத்திற் சிறுபான்மை;இலக்கணத்துள்ளே பயின்று வருவதெனக் கொள்க. |
தொழிற்று | தொழிற்று toḻiṟṟu, பெ. (n.) தொழிலை உடையது; that which has job. [தொழில் + து → தொழில்து → தொழிற்று (குறிப்பு வினைமுற்று);] |
தொழிற்றுறை | தொழிற்றுறை toḻiṟṟuṟai, பெ. (n.) 1. வணிகம் (யாழ்.அக.);; trade, business. 2. தொழிற்சாலை பார்க்க;see {}. [தொழில் + துறை] |
தொழிலாகுபெயர் | தொழிலாகுபெயர் toḻilākubeyar, பெ. (n.) வற்றலென்பது போலத் தொழிலின் பெயர் அதனையுடைய பொருட்கு ஆவது (நன். 290);; metonymy in which action is put for the agent (செ.அக.); [தொழில் + ஆகு + பெயர்] |
தொழிலாளன் | தொழிலாளன் toḻilāḷaṉ, பெ. (n.) தொழிலாளி 1, 2 பார்க்க;see {}. (செ.அக.);. [தொழில் + ஆளன்] |
தொழிலாளி | தொழிலாளி1 toḻilāḷi, பெ. (n.) 1. வேலைக்காரன்; labourer. 2. வினைத் திறனுள்ளவன்; a capable worker. 3. குடிமகன் அல்லது ஊர்ப்பிள்ளை; barber. [தொழில் + ஆளி] தொழிலாளி2 toḻilāḷi, பெ. (n.) 1. பொன்னாக்கம் செய்பவன்; an alchemist. 2. கருவாளி; a magician (சா.அக.);. [தொழில் + ஆளி] |
தொழிலி | தொழிலி toḻili, பெ. (n.) தொழிலை உடையவள்; career women. [தொழில் → தொழிலி] |
தொழிலுவமம் | தொழிலுவமம் toḻiluvamam, பெ. (n.) தொழிலைப் பொதுத்தன்மையாகக் கொண்ட உவமையணிவகை (தண்டி. 29);; simile where the point of comparison is action (செ.அக.);. எ-டு. “அரிமா வன்ன வணங்குடைத் துப்பிற்றிருமா வளவன்” “களிற்றிரை தெரீஇப் பார்வ லொதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல” [தொழில் + உவமம்] |
தொழிலுவமை | தொழிலுவமை toḻiluvamai, பெ. (n.) தொழிலுவமம் பார்க்க;see {}. (செ.அக.);. [தொழில் + உவமை] |
தொழிலெடு | தொழிலெடு1 toḻileḍuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. பணியேற்றல்; to obtain office, enter upon an occupation. 2. குறும்பு காட்டத் தொடங்குதல் (இ.வ.);; to begin doing mischeif. பணியிற் சேர்ந்து ஆறு திங்கள் ஆவதற்குள் அவன் தொழிலெடுத்து விட்டான். [தொழில் + எடு-,] தொழிலெடு2 toḻileḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) பணியினின்று விலக்குதல் (j.);; to dismiss one from office. [தொழில் + எடு-,] |
தொழிலோர் | தொழிலோர் toḻilōr, பெ. (n.) தொழிலாளர்; artisans, labourers. [தொழில் → தொழிலோர்] |
தொழில் | தொழில் toḻil, பெ.(n.) 1. செயல; act, action, deed, work. “பிறிது தொழி லறியா வாகலின்” (புறநா. 14);. 2. பணி; office, calling, profession. 3. ஏவல்; order, command. “தொன்றுமொழிந்து தொழில்கேட்ப” (மதுரைக். 72);. 4. திறமை; workmanship. அவனிடம் தொழிலுண்டு 5. உழவு, தொழில், வரைவு, வணிகம், விச்சை, சிற்பம் என்ற அறுவகைப் பட்ட செயல் (திவா.);; occupations pertaining to karumapumi, six in numbers viz., {}, varaivu, vanigam, viccai, {}. 6. அருளிப்பாட்டுச் செயல்; three fold functions of god. “தோற்றுவித்தளித்துப் பின்னுந் துடைத்தரு டொழில்கள் மூன்றும்” (சி.சி.1,33);. 7. வினைச் சொல்; verb. “பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப” (தொல். எழுத்து. 132);. 8. வேலை; occupation, work. 9. தந்திரம்; treachery, intrigue, cunning. ணீ என்னிடத்தில் தொழில் பண்ணாதே. 10. பயன்படுத்தும் முறை; method of using. “அவற்றது தொழிலுந் தோன்றவே” (சீவக. 1217);. 11. களவு (அக.நி.);; theft. 12. பெருமை (அக.நி.);; greatness (செஅக);. ம. தொழில் [துல் → துள் → தொள் → தொளில் → தொழில்] உலகில் முதன்முதல் தோன்றிய விளைப்பு அல்லது உண்டாக்கத் தொழில், நிலத்தைத் தோண்டி அல்லது கொத்தி அல்லது உழுது வித்திய பயிர்த் தொழிலாதலின், தோண்டுதலைக் குறிக்கும் தொள் என்னும் மூலத்தினின்று திரிந்த தொழில் என்னும் பெயர்ச்சொல், முதற்கண் உழவுத் தொழிலையும் பின்னர்ப் பிற தொழிற் பொதுவையும் குறித்தது. E. till, to prepare and use soil for crops, tiller = plough man. tillage = ploughing (வே.க. 289); |
தொழில் அதிபர் | தொழில் அதிபர் toḻilatipar, பெ.(n.) தொழில் நடத்துபவர், தொழிலதிபர் ; entrepreneur, tycoon. [தொழில்+அதிபர்] தொழில் அதிபர் doḻiladibar, பெ.(n.) தொழில் நடத்துபவர், தொழிலதிபர்; entrepreneur, tycoon. [தொழில்+அதிபர்] |
தொழில்காரர் | தொழில்காரர் toḻilkārar, பெ. (n.) வினைத் திறமுடையார் (தஞ்சை.மீனவ.);; one who is skilled in fishing. [தொழில் + காரர்] |
தொழில்செய்வோர் | தொழில்செய்வோர் toḻilceyvōr, பெ. (n.) கம்மியர் (பிங்.);; artisans. [தொழில் + செப்வோர்] |
தொழில்துறை | தொழில்துறை toḻiltuṟai, பெ. (n.) 1. தொழில் தொடங்குதல், மேம்படுத்துதல் முதலியவற்றைப் பேணும் அரசுத்துறை; department of industry of Government. தொழில்துறையின் ஒத்திசைவுக்குப் பிறகே தொழில் தொடங்க வியலும். 2. தொழில் தொடர்புடையது; industiral sector. தொழில் ஐந்தாண்டுகளாக தமிழ்நாடு தொழில்துறையில் முதலிடத்திலுள்ளது. [தொழில் + துறை] |
தொழில்நிறுவனம் | தொழில்நிறுவனம் toḻilniṟuvaṉam, பெ.(n.) பேரளவில் முதலீடு செய்து தொழில்நடத்தும் நிறுவனம்; industrial concern. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் கையோங்கியதால் உள்நாட்டுத் தொழில்கள் நசிந்தன. [தொழில் + நிறுவனம்] |
தொழில்நுட்பக்கலைச்சொல் | தொழில்நுட்பக்கலைச்சொல் toḻilnuṭpakkalaiccol, பெ. (n.) அறிவியல்துறை போன்றவற்றில் வழங்கும் அயன் மொழிச் சொற்களைத் தாய்மொழியில் வடிவமைத்தல்; technical terms. [தொழில்நுட்பம் + கலைச்சொல்] |
தொழில்நுட்பக்கல்லூரி | தொழில்நுட்பக்கல்லூரி toḻilnuṭpakkallūri, பெ. (n.) பொறிகள் தொடர்புடைய தொழில்முறைக் கல்வியைப் பாடமாகக் கொண்டு தொழிற்பயிற்சி அளிக்கும் கல்லூரி; educational institution providing training in traders connected with machines and tools; polytechnic. [தொழில்நுட்பம் + கல்லூரி] |
தொழில்நுட்பக்கல்வி | தொழில்நுட்பக்கல்வி toḻilnuṭpakkalvi, பெ. (n.) ஆக்கத்தில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய தொழில்பற்றிய அறிவையும் வழிமுறைகளையும் கற்பிக்கும் கல்வி முறை; technical education. [தொழில்துட்பம் + கல்வி] |
தொழில்நுட்பம் | தொழில்நுட்பம் toḻilnuṭpam, பெ. (n.) ஆக்கத்தில் பயன்படுத்தக்கூடிய தொழில் பற்றிய அறிவும் வழிமுறைகளும்; technology. மூலவளங்கள் இருந்தும் சில நாடுகள் தொழில் நுட்பத்தை அயல்நாடுகளிலிருந்து பெற வேண்டிய நிலையில் உள்ளன. [தொழில் + நுட்பம்] |
தொழில்நுட்பவணி | தொழில்நுட்பவணி toḻilnuṭpavaṇi, பெ. (n.) தெரிந்து கொண்டு வேறுபடமொழியாது அரிதாக நோக்கியுணருந் தன்மையுடைய அணிகளிரண்டனுளொன்று; a kind of rhetoric. [தொழில்நுட்பம் + அணி] மற்றது குறிப்பு நுட்பவணி, இதனைத் தொழில் நுணுக்கமென்பார் வீரசோழிய மியற்றினார். எ-டு. பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள் கூட லவாவாற் குறிப்புணர்த்தும் – ஆடவற்கு மென்றீத் தொடையாழின் மெல்லவிர தைவந்தாள் இன்றீங் குறிஞ்சி யிசை. குறிஞ்சிக்குக் காலம் இடையாம மாகலால், இடையாமத்திற் கூட்டம் நேர்ந்ததென கூறியது தொழில்நுட்பவணி. |
தொழில்நுணுக்கம் | தொழில்நுணுக்கம் toḻilnuṇukkam, பெ. (n.) தொழில்நுட்பம் பார்க்க;see {}. [தொழில் + நுணுக்கம்] |
தொழில்மயமாக்கு- தல், | தொழில்மயமாக்கு- தல், doḻilmayamākkudal, 5 செ.குன்றாவி. (v.t.) தொழில் வளர்ச்சி பெறச் செய்தல்; industrialize. [தொழில்மயம் + ஆக்கு-,] |
தொழில்மானிபம் | தொழில்மானிபம் toḻilmāṉibam, பெ.(n.) தொழில்மானியம் பார்க்க;see {} (செ. அக.); [தொழில் + மானிபம்] |
தொழில்மானியம் | தொழில்மானியம் toḻilmāṉiyam, பெ.(n.) ஊழியக்காரருக்கு விடப்பட்ட வரியில்லா நிலம்; service inam, rent-free land assigned to village servants in lieu of their services. [தொழில் + மானியம்] |
தொழில்மாறுதல் | தொழில்மாறுதல் doḻilmāṟudal, பெ. (n.) 1. வேலை மாறுகை; changing one’s profession or work. 2. வேலையினின்று நீக்கப்படுகை; dismissal. [தொழில் + மாறுதல்] |
தொழில்முடக்கம் | தொழில்முடக்கம் toḻilmuḍakkam, பெ. (n.) தொழில் செய்ய மறுத்திருக்கை; strike (செஅக.);. [தொழில் + முடக்கம்] |
தொழில்முனைவோர் | தொழில்முனைவோர் toḻilmuṉaivōr, பெ. (n.) கைமுதல் போட்டு ஒரு தொழிலைத் தொடங்கத் திட்டமிடுபவர்; entrepreneurship. [தொழில் + முனைவோர்] |
தொழில்வரி | தொழில்வரி toḻilvari, பெ. (n.) நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழில் செய்வோரிடம் தண்டும் வரி; profession tax. [தொழில் + வரி] |
தொழீஇ | தொழீஇ toḻīi, பெ. (n.) 1. தொழில் செய்பவள் (கலித். 103,40);; working woman. 2. பணிப்பெண்; maid servant, female slave. “தொழீஇயுட னுண்ணார்” (சிறுபஞ். 38);. [தொழில் + இ] |
தொழு | தொழு1 doḻudal, 1 செ.குன்றாவி. (v.t.) வணங்குதல்; to worship, adore, pay homage to. “தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்” (குறள், 828);. க. துளில்;ம. துழுக [துல் → துள் → தொள் → தொழு] தொழு2 toḻu, பெ. (n.) 1. மாட்டுக்கொட்டில்; cattle stall, manger. “ஏறுதொழூஉப் புகுத்தனர்” (கலித். 1௦1);. 2. பட்டிமாடுகளை அடைக்குமிடம்; pound. 3. சிறு குற்றவாளிகளுக்குத் தண்டனையாகக் கால்களை மாட்டி வைக்கும் குட்டையென்னும் மரச்சட்டம்; stocks. 4. சிறைக்கூடம்; prison. “வயிற்றிற் றொழுவைப் பிரித்து” (திவ். பெரியாழ். 5,2,3);. 5. இல்வாழ்க்கை; married life. “தொழுவிற் றோன்றிய தோமறு கேவலக்கிழவன்” (சீவக. 856);. 6. குட்ட நோய் வகை; a kind of leprosy. “துக்கத் தொழுநோ யெழுபவே” (நாலடி, 123);. 7. தொழு பஃறி 8. கட் குடுவையிருக்கும் ஏணி; stand for toddy jars. “தொழுவிற் குடக்கணீ கொண்டுவா” (பு.வெ. 1,4);. 9. உழலைமரம் (சூடா);; tumpike. 10. காட்டு விலங்குகளை அடைக்குங் கூடு; cage for wild animals. “தொழுவினிற் புலியனான்” (கம்பரா. மூலபல. 181);. 11. நீர்நிலை (இலக்அக);; tank, pond. [துல் → துள் → தொள் → தொழு (வே.க. 258);] |
தொழுகள்ளன் | தொழுகள்ளன் toḻugaḷḷaṉ, பெ. (n.) பாசாங்கு செய்பவன்; fawning hypocrite. [தொழு + கள்ளன்] 2. கற்பில்லாதவன் (சூடா.);; immoral woman. 3. பணிப்பெண்; maidservant. “தொழுத்தையாற் கூறப்படும்” (நாலடி, 326);. [தொழு → தொழுத்தை] |
தொழுகைப்பாய் | தொழுகைப்பாய் toḻukaippāy, பெ.(n.) முகமதியர்கள் தொழுகைக்குப் பயன்படுத்தும் பாய்; a mat which is used for Mohammadan worship in mosque, prayer mat. [தொழுகை+பாய்] தொழுகைப்பாய் toḻugaippāy, பெ.(n.) முகமதியர்கள் தொழுகைக்குப்பயன்படுத்தும் பாய்; a mat which is used for Mohammadan worship in mosque, prayer mat. [தொழுகை+யாய்] |
தொழுகைப்பூச்சி | தொழுகைப்பூச்சி toḻukaippūcci, பெ.(n.) வண்டின் ஒரு வகை; a beetle, praying mantis insect that hold its fore legs like hands folded in prayer. [தொழுகை+பூச்சி] தொழுகைப்பூச்சி toḻugaippūcci, பெ.(n.) வண்டின் ஒரு வகை; a beetle, praying mantis insect that hold its fore legs like hands folded in prayer. [தொழுகை+யூச்சி] |
தொழுக்கட்டை | தொழுக்கட்டை toḻukkaṭṭai, பெ. (n.) தொழு2, 3 பார்க்க;see {}. [தொழு + கட்டை] சிறுகுற்றவாளிகளுக்குத் தண்டனையாகக் கால்களை மாட்டி வைக்கும் குட்டை என்னும் மரச்சட்டம் (வே.க. 284);. |
தொழுக்கண்ணி | தொழுக்கண்ணி1 toḻukkaṇṇi, பெ. (n.) மருந்துப்பு; a quintessence salt useful in medicine (சா.அக.);. தொழுக்கண்ணி2 toḻukkaṇṇi, பெ. (n.) தென்னிந்திய மலைகளின் மேல் முளைக்கும் மருந்துப்பூடு; a medical drug found on hills in South India (சா.அக.);. |
தொழுக்கண்ணிப்பால் | தொழுக்கண்ணிப்பால் toḻukkaṇṇippāl, பெ. (n.) ஒரே தாயின் முலைப்பால்; breast milk of a particular woman or of one and the same woman (சா.அக.);. [தொழுகண்ணி + பால்] |
தொழுக்கன் | தொழுக்கன் toḻukkaṉ, பெ. (n.) அடிமை; slave. “தொழுக்க னென்னை ஆள்வீர்” (அருட்பா. ii, திருமுரு கொடிவிண்.7);. [தொழு → தொழுக்கன்] |
தொழுக்கல்லீர் | தொழுக்கல்லீர் toḻukkallīr, பெ. (n.) தொழுமாட்டாதவர்; person who do not worship. |
தொழுக்கொட்டான் | தொழுக்கொட்டான் toḻukkoṭṭāṉ, பெ. (n.) நான்கிலைக் பூவந்தி; four leaved soapnut (சாஅக.);. |
தொழுதகு-தல் | தொழுதகு-தல் doḻudagudal, 3 செ.கு.வி. (v.i.) 1. நன்கு மதித்தல்; to esteem, admire. “தொண்டையுங் கனியுமுத்துந் தொழுதக வணிந்து” (சீவக. 2076);. 2. விரும்புதல்; to love, desire. “களிற்றொடாடித் தொழுதகக் கழிப்பர்” (சீவக. 2807);. [தொழு + தகு-,] |
தொழுதகுதெய்வம் | தொழுதகுதெய்வம் doḻudagudeyvam, பெ. (n.) அருந்ததி; Arundhati as worthy of worship. “தொழுதகு தெய்வ மன்னாள்” (சீவக. 1912);. [தொழுதகு + தெய்வம்] |
தொழுதகை | தொழுதகை1 doḻudagai, பெ. (n.) இருகை குவித்துக் கும்பிடுகை; worshipping, by folded hands. “தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அமுதகண் ணீரும் அனைத்து” (குறள், 828); [தொழு → தொழுத + கை] தொழுதகை2 doḻudagai, பெ. (n.) தொழத்தக்க நிலையில் என்று பொருள்படும் சொல்; to esteem, admire. “கன்னெழில் வளருழியு ளெல்லா யாண்டுத் தொழுதகை விளங்கும் யாண்டே” (தெ. க. தொ. பக். 7); [தொழு + தகை] இச்சொல் முதல் இராசராசன் மெய்க் கீர்த்தியில் இடம்பெற்றுள்ளது. |
தொழுதகையீர் | தொழுதகையீர் doḻudagaiyīr, பெ.எ. (adv.) வணக்கத்திற்குரியீர்; his worshipped, a respective term. [தொழுதகை → தொழுதகையீர்] |
தொழுதணை | தொழுதணை doḻudaṇai, பெ. (n.) தழுதணை பார்க்க;see {}. (சா.அக.);. |
தொழுதி | தொழுதி doḻudi, பெ. (n.) 1. கூட்டம்; multitude, crowd, herd. “இரும்பிடித் தொழுதியொடு” |
தொழுதெடுப்பு | தொழுதெடுப்பு toḻuteṭuppu, பெ.(n.) போர்க் கலைப் பயிற்றும் களரிப் பயிற்றுக்கு இளை ஞரைத் தெரிந்தெடுக்கும் முறைகளில் முதலாவது; a method of selecting youngsters for martial fight. [தொழுது+எடுப்பு] தொழுதெடுப்பு doḻudeḍuppu, பெ.(n.) போர்க் கலைப் பயிற்றும் களரிப் பயிற்றுக்கு இளை ஞரைத் தெரிந்தெடுக்கும் முறைகளில் முதலாவது; a method of selecting youngsters for martial fight. [தொழுது+எடுப்பு] |
தொழுத்தை | தொழுத்தை2 toḻuttai, பெ. (n.) சொறிகளுள் மிகப் பெரியது; kind of skin disease which has itching sensation (மீனவ.);. |
தொழுநையாறு | தொழுநையாறு toḻunaiyāṟu, பெ. (n.) யமுனை ஆறு; river Jamuna. ம.தொழிக்க(அடி,தாக்கு);-கூட்டு,சேர். [தொழு-தொழுநை+யாறு] தொழுநையாறு toḻunaiyāṟu, பெ.(n.) யமுனை ஆறு; river Jamuna. ம.தொழிக்க(அடி,தாக்கு);-கூட்டு,சேர். [தொழு-தொழுநை+யாறு] |
தொழுனை | தொழுனை1 toḻuṉai, பெ. (n.) குட்டநோய் வகை; a kind of leprosy. “ஊனுகு தொழு னையின்” (ஞானா. 19, 6);. தொழுனை2 toḻuṉai, பெ. (n.) யமுனை; the river Jumuna. “வார்புனற் றொழுனை வார்மண லகன்றுறை” (அகநா. 59);. |
தொழுமகளிர் | தொழுமகளிர் toḻumagaḷir, பெ. (n.) குற்றேவல் மகளிர்; maidservants. “சிறு தொழுமகளி ரஞ்சனம் பெய்யும்” (ஐங்குறு. 16);. [தொழு + மகளிர்] |
தொழுமரம் | தொழுமரம் toḻumaram, பெ. (n.) தொழுக் கட்டை (உ.வ.);; stocks. [தொழு + மரம்] |
தொழுமறை | தொழுமறை toḻumaṟai, பெ. (n.) உடலெங்குஞ் சிறுவட்டங்கள் விழுவதாகிய மாட்டுக் குற்றவகை (மாட்டுவா. 19);; a defect of cattle in which there are small round patches all over the body. [தொழு + மறை] |
தொழுமாடு | தொழுமாடு1 toḻumāṭu, பெ. (n.) 1. சல்லிக்கட்டு மாடு; bull trained for the baiting sport. 2. சல்லிக்கட்டு (E.T.iii,89);; sport of bull-baiting (செ.அக.);. [தொழு + மாடு] தொழுமாடு2 toḻumāṭu, பெ. (n.) பட்டி மாடு; straying cattle. [தொழு + மாடு] |
தொழும்பன் | தொழும்பன் toḻumbaṉ, பெ. (n.) கழைக் கூத்தன் (கொ.வ.); (டொம்பர்);; a man of wandering tribe, singers and rope dancers. மறுவ, தொம்பன் [தொழு-தொழும்பு-அன்] [P] |
தொழும்பாளன் | தொழும்பாளன் toḻumbāḷaṉ, பெ. (n.) தொழும்பன் பார்க்க;see {}. “தொழும்பாள ரெய்ப்பினில் வைப்பனே” (திருவாச. 5, 98);. [தொழும்பு + ஆளன்] |
தொழும்பாள் | தொழும்பாள் toḻumbāḷ, பெ. (n.) தொழும்பன் பார்க்க;see {}. “தொழும்பாளாக வோலை கொடுக்குதுமே” (வெங்கைக்கோ. 332);. [தொழு → தொழும்பாள்] |
தொழும்பி | தொழும்பி toḻumbi, பெ. (n.) அடிமைப்பெண் (நன். 304. மயிலை);; slave-woman. [தொழு → தொழும்பி] |
தொழும்பு | தொழும்பு tolumbu, பெ. (n.) 1. அடிமை (திவா.);; slavery, servitude. 2. அடிமைத் தொழில்; servile work, drudgery. 3. அடிமையாள்; slave. “பலவாறே தொழும்பாகு மங்கு” (சி.போ. 1,3);. 4. கடவுளின் அருளிப்பாடு; devotion to the service of God. “தொழும்பாயார்க் களித்தால்” (திவ். திருவாய். 3,1,9);. [தொழு → தொழும்பு] |
தொழுவன் | தொழுவன் toḻuvaṉ, பெ. (n.) 1. பயிரிடுவோன்; cultivator, husbandman. 2. தொழிலாளி; a workman, artisan. தொழுவானெல்லாம் உழுவான் தலைக்கடையில் (பழ.);. மறுவ. உழவன், குடியானவன் [தொழு → தொழுவன்] |
தொழுவம் | தொழுவம் toḻuvam, பெ. (n.) மாட்டுக் கொட்டில்; cattle stall, manger. “பல்லான் தொழுவத் துறுமணிக் குரலே” (குறுந். 190);. தொழுவம் புகுந்த மாடு சாணியிடாமற் போமா (பழ.);. மறுவ. பட்டி, கட்டுத்தறி ம. தொலுட்டு; தெ.தொர்ரு பட்டு;பட. தோ [துள் → தொள் → தொழு → தொழுவு → தொழுவம்] |
தொழுவர் | தொழுவர் toḻuvar, பெ. (n.) 1. தொழில் செய்வார்; servants. “நீர்த்தெவு நிரைத் தொழுவர்” (மதுரைக். 89);. 2. உழவர்; agriculturists, plough men. “நெல்லரி தொழுவர்” (புறநா.2௦9);. [தொழுவன் → தொழுவர் (வே.க. 285);] |
தொழுவறை | தொழுவறை toḻuvaṟai, பெ. (n.) மாட்டுக் கொட்டில்; cattle-shed. “தொழுவறை வவ்விக் கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம்” (அகநா.253);. [தொழு + அறை] |
தொழுவாடு | தொழுவாடு toḻuvāṭu, பெ. (n.) 1. வழக்கம்; habit. இதே உனக்குத் தொழுவாடாப் போச்சு. 2. இயற்கை; nature. [தொழு + வாடு] |
தொழுவிலடி-த்தல் | தொழுவிலடி-த்தல் toḻuvilaḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) கட்டையிலடித்தல் (உவ.);; to confine in the stocks, as a criminal. [தொழுவில் + அடி-,] தொழுக்கட்டை பார்க்க |
தொழுவில்மாட்டு-தல் | தொழுவில்மாட்டு-தல் doḻuvilmāṭṭudal, 8 செ.குன்றாவி. (v.t.) தொழுவிலடி-த்தல் பார்க்க;see {}. [தொழு + இல் + மாட்டு-,] |
தொழுவிளிப்பூசல் | தொழுவிளிப்பூசல் toḻuviḷippūcal, பெ. (n.) வழிபாட்டு முழக்கம்; loud shouts of praise. “துறவோரிறந்த தொழுவிளிப் பூசலும்” (மணிமே. 6:75);. [தொழு + விளி + பூசல்] |
தொழுவு | தொழுவு1 toḻuvu, பெ. (n.) வணங்குகை; worshipping, adoration. ‘கால்வாய்த் தொழுவு” (ஆசாரக். 63);. [தொழு → தொழுவு] தொழுவு2 toḻuvu, பெ. (n.) மாட்டுக்கொட்டில்; cattle stall. [தொழு → தொழுவு] |
தொழுவுரம் | தொழுவுரம் toḻuvuram, பெ. (n.) ஆடுமாடு முதலியவற்றின் சாணம்; manure. [தொழு + உரம்] |
தொழுவை | தொழுவை toḻuvai, பெ. (n.) மடு; deep place in a river or a channel. [தொழு → தொழுவை] |