செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
தை

தை1 tai, பெ. (n.)

   த் என்ற மெய்யும் ஐ என்ற உயிரும் சேர்ந்த கூட்டெழுத்து; the syllable formed by adding the dipthong ‘ai’ to the consonant ‘t’.

 தை2 taittal,    4 செ.குன்றா.வி (v.t.)

   1. தையலிடுதல் (சூடா.);; to sew, stitch.

   2. ஆனி முதலியன அடித்தல்:

 to nail, fasten beams with nails, spikes or pegs; to pin.

     “படத்திற்கு ஆணி தைத்தாயிற்றா”.

   3. இலை முதலியன குத்தியிணைத்தல்; to plait or stitch, as leaves into plate.

   4. பொருத்துதல்; to join.

     “பலகை தைத்து” (பாரத. கிருட்டிண. 102,

   5. முள் முதலியன ஊடுருவுதல்; to pierce penetrate, prick, as a thorn, an arrow.

     “மேனி தைத்த வேள்சரங்கள்” (கம்பரா.உலாவியன் 15);

   5. மாலை தொடுத்தல்; to tie, weave, as a wreath.

     “தொடலை தைஇய மடவரன் மகளே” (ஐங்குறு. 361);.

   7. கோத்தல்; to string, as beads

.”அவிரிழை முத்தந் தைஇய மின்னுமிழ் பிலங்க” (பதிற்றுப். 39, 15);,

   8. ஒப்பனை செய்தல்; to adorn, decorate.

தைஇய மகளிர் (கலித். 27:19);.

   9. உருவாக்குதல்:

 to make, create.

     “வல்லவன் தைஇய பாவைகொல்” (கலித். 56);.

   10. பதித்தல்; to set, enchase,

     “திகழொளி முத்தங் கரும்பாகத் தைஇ” (கலித். 80, 4);.

   11. இடுதல்; to place, put, as a mark on the forehead.

     “திலகந் தைஇய தேங்கமழ் திருதுதல்” (திருமுருகு 24);.

   12. உடுத்துதல்; to wear put on

     “ஏர்தழை தைஇ” (கலித் 125:12);.

   13. சித்திரித்தல்; to paint.

     “அணிவரி தைஇயும்” (கலித் 76:2);.

   14. சூழ்தல்; to surround, cover, encircle.

     “சீர்மிகு முத்தந் தைஇய நார்முடி” (பதிற்றுப் 39:36);.

   15. வலைபின்னுதல் (வின்);:

 to make a net.

   16. அடைத்தல் (யாழ்அக);; to close, shut.

     [துன் – (தன்); – (தய்); + தை, தைத்தல் = துணி, பலகை முதலியவற்றை இணைத்தல்]

 தை3 taittal, செகுவி (v.i.)

   1. உள்நுழைதல்:

 to enter, dart.

     “அவ்வழித் தைத்தது பூதம்” (கம்பரா.திருவவ. 88);.

   2. மனத்திலுறைத்தல்:

 to Pierce the mind, to rankle, to cause pain.

     “அவன் சொன்ன சொல் என் மனத்திற் றைத்தது”

     [துள் – (தள்); → (தய்); + தை.]

 தை4 tai, பெ. (n.)

   1. ஒப்பனை; decoration, embellishment.

     “தைபுனை மாது” (நிகண்டு.);.

   2. தையல் (தைலவ. தைல);; sewing.

 தை5 tai, பெ. (n.)

   ஒரு தாளக்குறிப்பு (அருநி.);; onom. expr. of beating time.

 தை6 tai, பெ. (n.)

   1. தமிழாண்டின் தொடக்க

   மாதம்; first month of Tamil era.

   2. திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம்(இக்வ.);:

 first month of Thiruvalluvar era.

புனர்பூசம், பூசம் என்னும் விண்மீன் பெயர்கள் புனர்தை, தை என்றிருத்தல் வேண்டும் என்றும் வரிசையில் அவை முன்பின்னாக இடம் மாறியுள்ளன என்றும் கணியர் இ.மு. சுப்பிரமணியனார் கூறுகிறார். புனர்தை என்பதிலுள்ள தையே மாதப் பெயராக விளங்குகின்றது. மாதங்கள் பற்றிய காலக் கணக்கீடு தமிழருடையதே. மாதங்களைப் பற்றி அறியுமுன் அவற்றிற்கு அடிப்படையான சிலவற்றைத் தெரிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாததாகும் வானப் பெருவெளியில் கோள்களும் விண்மீன்களும் ஒரு நீள்வட்டப்பாதையில் முறையாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. விண்மீன்கள் எண்ணற்றனவாயினும், அவை இருபத்தேழு குழுக்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. பொதுவாக ஒரு விண்மீன் என்று நாம் கருதுவது அல்லது குறிப்பிடுவது உண்மையில் ஒரு விண்மீன் குழுவேயாகும். இருபத்தேழு நாண்மீன்களும் அவற்றின் தோற்றத்தைக் கொண்டு ஒப்புமையாற் பெயர் பெற்றிருக்கின்றன. குதிரை போன்று காட்சியளிப்பது புரவி என்றும், அடுப்புப் போன்றே தோற்றமுடையது அடுப்பு என்றும் இவ்வாறே பிறவும் பெயர் பெற்றன. புரவி அஸ்வதி என்றும் அடுப்பு பரணி என்றும் வடசொல் வழக்குப் பெற்றுள்ளன. பிறவும் இத்தகையன. வானவெளியில் கிழக்கு மேற்காக அமைந்த நீள்வட்ட மண்டிலம் முந்நூற்றறுபது சிறுபிரிவுகளாகவும், முப்பது பாகைகள் கொண்ட பன்னிரு பெரும் பிரிவுகளாகவும்

பகுக்கப்பட்டுள்ளன. இவையே ஒரைகள் எனப்படுகின்றன. இப்பன்னிரு ஒரைகளிலும் இருபத்தேழு விண்மீன்களும் அடங்கியுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டேகால் விண்மீன்கள் இடம்பெறுகின்றன. ஒரைகள் கோள்வீடுகள் என்று குறிப்பிடப்படுகின்றன. கோள்வீடுஇராசி. கதிரவன் வானமண்டிலத்தைச் சுற்றிவரும் கால அளவைப் பன்னிரண்டு பிரிவாக்கி யுள்ளமையால் அவை ஒவ்வொன்றிலும் கதிரவன் இடம்பெறுவது நோக்கிப் பன்னிரு மாதங்கள் பகுக்கப்பட்டன. கதிரவன் ஒவ்வொரு ஒரையிலும் இடம் பெறும் கால அளவே ஒரு மாதம் ஆகும்.

இம்மாதங்கள் தனித்தனிச் சில நாழிகை ஏறத்தாழ இருபத்தொன்பது முதல் முப்பத்திரண்டு நாட்கள் வரையுள்ள கால அளவாம். இந்த அளவு எக்காலத்தும் ஒரே நிலையாக இருக்கும். ஆகவே ஒரைகளின் பெயர்களையொட்டியே மாதங்களின் பெயர்களும் அமைந்தன. கதிரவனும் நீள்வட்டப்பாதையும் நிலையானவை. நிலவுலகம் கதிரவனைச் சுற்றி வரும்போது கதிரவனை நோக்கி அதன் பின்புறம் மறையும் ஒரையை நாம் அம்மாதமாகக் குறிக்கின்றோம். ஒரைகள் அவற்றின் தோற்றத்தைப் பொறுத்து ஒப்புமை வகையில் பெயர் பெற்றிருக்கின்றன. ஆடு, காளை, இருவர். நண்டு, அரிமா, கன்னி, நிறைகோல், தேள், வில், சுறா, குடம், மீன் ஆகியவற்றினைப் போன்று வடிவ அமைப்புடைமையால் ஒரைகள் முறையே மேழம், விடை ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலாம், நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்று பெயர் பெற்றன. இப்பன்னிரு ஒரைகளும் மாதத்திற்கு ஒன்றாகக் கதிரவன்பின் மறைந்து கால வேறுபாட்டைக் காட்டுகின்றன. அன்றாடம் காலையில் கதிரவன் தோன்றுவதற்கு முன்னும், மாலையில் கதிரவன் மறைந்த பின்னும் முதன்முதலில் வானில் தோன்றும் விண்மீன் கூட்டமே அன்று பகலில் கதிரவன் பின்னால் மறைந்த விண்மீன் கூட்டமாகும். இதைக் கொண்டே அம்மாதத்தின் பெயர் அமைகிறது.

மகரம் என்பது சுறாமீனைக் குறிக்கும் வடசொல். சுறாவின் வடிவில் விளங்கும் ஒரை சுறவம் இதுவே வடமொழியில் மகரராசி எனப்படுகிறது. குத்தல் உணர்ச்சியைக் குறிக்கும்

     ‘சுள்’ என்னும் வேர்ச்சொல், கல்-சுர்-சுரி எனத் திரிந்து அவ்வுணர்ச்சிப் பொருள் அடிப் படையில் சுரி, சூரி, சுணை, சுளுக்கி முதலான பல்வேறு சொற்களைத் தோற்று விக்கிறது. சுறுக்கென்று குத்துவது போற் கடிக்கும் எறும்பு சுள்ளான். கூரிய செதிலால் வெட்டுங் கடல் மீன் சுறா. சுறா – சுறவு, சுறவு + அம் = சுறவம்,

     ‘அம்’ பெருமைப் பெயர் பின்னொட்டு. சுறவவோரையில் (மகர ராசியில்); கதிரவன் தோன்றும் நாள் என்னும் பொருளிலேயே அம்மாத முதல் நாள் (பொங்கல்); மகர சங்கராந்தி எனப்படுகிறது. இச்சுறவ மாதவே தமிழாண்டின் தொடக்கம். நாள் என்பது இயல்பாகக் கதிரவன் தோற்றத்தையே தொடக்கமாகக் கொண்டுள்ளது. கிழமை (வாரம்); என்பதும் கதிரவனிலிருந்தே தொடங்குகின்றது. கிழமையின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமையே. மாதத்தின் தொடக்கமும் கதிரவனையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. கதிரவன் ஒரைக்குள் தங்கிச் செல்லும் காலமே மாதம் ஆதலால் மாதத் தொடக்கம் என்பது கதிரவன் ஒரைக்குள் புகுங்காலமேயாகும். ஆகவே கதிரவனை அடிப்படையாகக் கொண்டே மாதம் தொடங்குகிறது என்பது தெளியப்படும் எனவே, ஆண்டின் தொடக்கமும் கதிரவனின் இயக்கத்தை ஒட்டியதாக இருத்தலே இயற்கை நெறியும் தமிழ் மரபுமாம். கதிரவன் இயக்கம் என்பது கடக (ஆடி); மாதம் முதல்நாள் தொடங்கி தெற்கு நோக்கிச் செல்லும் தென்செலவும் (தட்சணாயணம்);, சுறவம் முதல்நாள் தொடங்கி வடக்கு நோக்கிச் செல்லும் வட செலவும் (உத்திராயணம்); என இருவகைப்படும். தமிழ்நாட்டு மக்கள் தாமிருக்கும் தென் திசையிலிருந்து வடசெலவு தொடங்குதலால் அச்சுறவ முதல்நாளையே கதிரவனைப் போற்றியும், பொங்கலிட்டு மகிழ்ந்தும் புதுநாளாகக் கொண்டாடியும் வருகின்றனர்.

தை நோம்பி

 தை நோம்பி tainōmpi, பெ. (n.)

பொங்கல் பண்டிகை (கொ.வ.வ.சொ.);.

     [தை+நோன்பு-நோம்பி (கொ.வ.);]

     [P]

 தை நோம்பி tainōmbi, பெ.(n.)

பொங்கல் பண்டிகை, (கொ.வ.வ.சொ.);.

     [தை+நோன்பு-தோம்பி (கொ.வ.);]

     [P]

தைத்தியன்

 தைத்தியன் taittiyaṉ, பெ. (n.)

   உடம்பு அல்லது உடலுறுப்பு (அவயவம்); பருத்தவன்; man with a body of great size giant.

தைத்தியர்

 தைத்தியர் taittiyar, பெ. (n.)

   திதி என்பவளின் பிள்ளைகளும் பதினெண்கணத்துள் ஒரு வகையினருமான அரக்கர் (பிங்.);; Asuras, as sons of Diti, one of {}.

     [Skt. daitya → த. தைத்தியர்]

தைத்திரியன்

தைத்திரியன் taittiriyaṉ, பெ. (n.)

   எசுர் வேதத்தில் தைத்திரிய சாகையைச் சேர்ந்தவன்; a follower of the {} recension of the yajur-{}.

     “ஐந்தழ லோம்பு தைத்திரியன்” (திவ்.பெரியதி. 5.5.9);.

     [Skt. {} → த. தைத்திரியன்]

தைத்திரீயசம்மிதை

 தைத்திரீயசம்மிதை daiddirīyasammidai, பெ. (n.)

   தைத்திரேயே முனிவரால் (ரிஷி); செய்யப்பட்ட ஓர் ஆயுள் வேத நூல்; an Ayurvedic science compiled by Thithreya sage.

தைனாத்து

தைனாத்து taiṉāttu, பெ. (n.)

   1. பணியமர்த்தம்; appointment.

   2. வேலையாள்; peon, personal attendant.

     [U. {} → த. தைனாத்து]

தைனாத்துச்சேவகன்

 தைனாத்துச்சேவகன் taiṉāttuccēvagaṉ, பெ. (n.)

   தொழில் கற்றுக்கொள்ளும் பொருட்டுச் சம்பளமில்லாமல் வேலை பார்க்குஞ் சேவகன் (வின்.);; a volunteer peon.

தைனியம்

தைனியம் taiṉiyam, பெ. (n.)

   1. எளிமை; poverty, affliction, depression.

   2. கீழ்மை (வின்.);; meanness.

   3. இவறன்மை (உலோபம்); (வின்.);; covetousness.

     [Skt. {} → த. தைனியம்]

தைப்புமுத்து

தைப்புமுத்து taippumuttu, பெ. (n.)

   முத்து வகை; a kind of pearls (S.I.l. ii, 34);.

     [தைப்பு + முத்து]

தைப்பூ

 தைப்பூ taippū, பெ. (n.)

   உவர்ப்பு; the effloresent salt found on the fuller’s soil (சாஅக.);.

தைப்பூசம்

 தைப்பூசம் taippūcam, பெ. (n.)

   சுறவத் திங்களின் முழுநிலவோடு கூடிய கொடிற்றுத் திருவழா; the full moon in the month of tai, a day of festival. [தை + ஆசம்]

தைப்பை

 தைப்பை taippai, பெ. (n.)

சட்டை (அகநி.);:

 coat, jacket, as sewn

     [தை + பை]

தைப்பொங்கல்

 தைப்பொங்கல் taippoṅgal, பெ. (n.)

   சுறவ மாதப்பிறப்பன்று பொங்கலிட்டுக் கொண்டாடப்படும் தமிழர் திருவிழா; Tamizhar festival on the first day of tai, celebrated with {}

     [தை + பொங்கல்]

தையறம்

 தையறம் taiyaṟam, பெ. (n.)

   சுறவத் திங்களில் உண்டாகும் வறட்சி (யாழ்.அக);; droughtin the month of tai (செஅக);.

     [தை + அறம்]

தையற் காரன்

தையற் காரன் taiyaṟkāraṉ, பெ. (n.)

   1. தைப்போன்:

 tailor,

   2. பின்னல் வேலை செய்வோன் (வின்);:

 knitter.

ம. தையல்காரன்

     [தையல் + காரன்]

தையற்காரக்குருவி

 தையற்காரக்குருவி taiyaṟkārakkuruvi, பெ. (n.)

   ஒரு வகைக் குருவி; a kind of sparrow.

     [தையற்காரன் + குருவி]

தையற்பெட்டி

 தையற்பெட்டி taiyaṟpeṭṭi, பெ. (n.)

தையற் கருவி அடங்கியபெட்டி (வின்.);:

 work.basket, box containing articles for needle work (செஅக);.

     [தையல் + பெட்டி]

தையலூசி

 தையலூசி taiyalūci, பெ. (n.)

   துன்னூசி; sewing needle.

     [தையல் + ஊசி. உள் → உளி → உ.சி → ஊசி]

தையல்

தையல் taiyal, பெ. (n.)

   1. தைப்பு; sewing, stitching.

   2. தைபயல்வேலை; needle work, embroidery.

   3. ஒப்பனைத் துணி (இ.வ);; lace.

   4. புனையப்படுவது (திருக்கோ. 60. கொளு);:

 that which is adorned, decorated.

   5. கட்டழகு; symmeterical beauty or gracefulness.

   6. பெண்; woman

     “தையா றம்பலந் தின்றியோ” (கலித் 65, 13);.

தையலும் இல்லான் மையலும் இல்லான் (பழ);.

   7. முகில்; cloud.

     “தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்” (திருமத் 10);.

     [தை → தையல்]

தையல் குருவி

 தையல் குருவி taiyalkuruvi, பெ.(n.)

   ஒருவகை குருவி இனம்; a kind of sparrow.

     [தையல்+குருவி]

தையல்குருவி

 தையல்குருவி taiyalkuruvi, பெ.(n)

   ஒருவகை குருவி இனம்; a kind of sparrow.

     [தையல்+குருவி]

தையல்பாகன்

தையல்பாகன் taiyalpākaṉ, பெ. (n.)

சிவன்;{}

 as having Parvadi on his left.

     “தையல் பாகனுஞ் சதுமுகக் கடவுளுங் கூடி” (கம்பரா. அகவிகை 19);.

     [தையல் + பாகன்]

தையல்போடு-தல்

தையல்போடு-தல் daiyalpōṭudal, பெ. (n.)

   20 செகுவி. (v.i.);

   தைத்தல்; suturing (சாஅக);.

     [தையல் + போடு]

தையான்

 தையான் taiyāṉ, பெ. (n.)

தையற்காரன்:

 tailor (செஅக);.

     [தை → தையலன் → தையான்]

தையெனல்

தையெனல் taiyeṉal, பெ. (n.)

   இசைக்குறிப்பு; onom. expr. musical sound.

     “தையெனக் கோவலர் தனிக்குழ லிசை கேட்டு” (கலித் 118:13);.

     [தை5 + எனல்]

தைரியம்

 தைரியம் tairiyam, பெ. (n.)

   மனத்துணிவு; courage, self-confidence.

     [Skt.dhairya → த. தைரியம்]

தைலக்காப்பு

 தைலக்காப்பு tailakkāppu, பெ.(n.)

கரு வறையில் அமைந்துள்ள சுதைச் சிற்பங்களுக்குச் செய்யப்படும் காப்பு:

 embalming ointment for the conservation of wooden or concrete statues,

     [தைலம்+காப்பு]

 தைலக்காப்பு tailakkāppu, பெ.(n.)

கரு வறையில் அமைந்துள்ள கதைச் சிற்பங் களுக்குச் செய்யப்படும் காப்பு: embalming ointment for the conservation of wooden or Concrete statues.

     [தைலம்+காப்பு]

தைலமாட்டு-தல்

தைலமாட்டு-தல் dailamāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. எண்ணெய்க்காப்பிடுதல்; to anoint the head or body.

   2. உடலை எண்ணெய்யால் சேமித்து வைத்தல்; to preserve a corpse by immersing it in oil, embalm.

     “தைலமாட்டு படலம்” (கம்பரா.);.

தைலம்

தைலம் tailam, பெ. (n.)

   1. நல்லெண்ணெய் (சூடா.);; sesame oil.

   2. ஆமணக்கெண்ணெய் (மூ.அ.);; castor oil.

   3. எண்ணெய்; oil, unguent.

   4. மண(வாசனை);ப் பண்டங்களு ளொன்று (சிலப். 14, 108, உரை.);; fragrant oil.

   5. கூட் டெண்ணெய் (வின்);; essential vegetable oil, balsam, medicinal oil.

   6. மரச்சத்து (வின்.);; sap of a tree or plant.

     [நுல் (எண்);-தில் → திலம் → Skt. Taila → த. தைலம்]

தைலவருக்கச்சுருக்கம்

 தைலவருக்கச்சுருக்கம் tailavarukkaccurukkam, பெ. (n.)

நெய்ம வகையிற் கண்ட ஐந்துவகை நெய்மங்களையுஞ் செய்யும் முறையைப் பற்றிச் சுருக்கமாகக் கூறும், தேரையார் செய்த தமிழ் மருத்துவ நூல்:

 a scientific treatise compiled in Tamil by the reputed physician {} which the process of preparing the five kinds of medicated oils, their uses, dietic, rules and their vertues are given.

     [தைலவருக்கம் + சுருக்கம்]

தைலா

 தைலா tailā, பெ. (n.)

   மரப்பெட்டி; wooden box.

தைலி

தைலி1 taili, பெ. (n.)

   பணப்பை; money bag.

     [Skt. thaili → த. தைலி]

தைவரல்

தைவரல் taivaral, பெ.(n)

   பண்ணின் சுரங்களை ஆறுசுருதியுடன் அழகுறப் பாடுதல்; singing perfectly.

     [தை+வா]

 தைவரல் taivaral, பெ.(n.)

   பண்ணின் சுரங்களை ஆறுசுருதியுடன் அழகுறப் பாடுதல்; singing perfectly

     [தை+வா]

 தைவரல்1 taivaral, பெ. (n.)

   வருடுகை; a shampoing softly pressing and stroking the limbs with hands.

 தைவரல்2 taivaral, பெ. (n.)

   கலைத்தொழில் எட்டனுள் குரலோசையேற்றுகை; harmonising with the key-note, one of eight {}

     [தை3 + வரல்]

தைவரல் எழால்

 தைவரல் எழால் taivaraleḻāl, பெ.(n.)

   ஒரு இசைவகைக்குரிய எழால்; a musical note.

     [தைவரல்+எழால்]

 தைவரல் எழால் taivaraleḻāl, பெ.(n.)

   ஒரு இசை வகைக்குரிய எழால்; a musical note.

     [தைவரல்+சாழால்]

தைவா-தல் (தைவருதல்)

தைவா-தல் (தைவருதல்) daivādaldaivarudal,    6 செ.குவி. (v.i.)

   1. வருடுதல்; to shampoo.

     “சீறடி கல்லா விளையர் மெல்லத் தைவர (சிறுபாண். 33);.

   2. தொட்டுச் சீர்ப்படுத்தல்; to touch, adjust.

     “ஊழணி தைவரல் (தொல்பொருள். 2.62);.

   3 தடவி வருதல்; to spread, extend, pervade

     “விசும்பு தைவரு வளியும்” (புறதா:2);.

   4. மாசு நீக்குதல்:

 to wipe off, clean by dusting

     “தைவரு நவமணிச் சயிலம்” (பாரத வாரணா. 4);.

   5. குரலோசை ஏற்றுதல் (சீவக. 65, உரை);; to harmonise with the key-note.

     [தை + வா]

தைவிகம்

தைவிகம் taivigam, பெ. (n.)

   1. கடவுள் தன்மையுள்ளது; the supernatural;

 that which relates to the gods.

     “புத்தகமிங்கு நண்ணும் புதுமை தைவிகமாம்” (திருவாத. பு.திருவடி.17);.

   2. ஆதிதைவிகம் பார்க்க;see {}.

     “தைவிக மாதிய மூன்றில்” (சிவதரு.கோபு.62);.

   3. தைவிகலிங்கம் பார்க்க;see taivikalingam.

     “சயம்புவுந் தைவிகமும்” (சைவச.பொது.431);.

தைவிளை

தைவிளை taiviḷai, பெ. (n.)

தைவேளை1 பார்க்க; see (சாஅக);.

     [தைவேளை → தைவினை]

தைவேளை

தைவேளை1 taivēḷai, பெ. (n.)

   1. வளி பிடிப்பு:

 rheumatism.

   2. பொன்னாங்கண்ணி; sessible plant.

   3. தயிர்; curd.

   4. பொருத்தம்; fitting (சாஅக.);.

     [தை + வேளை]

 தைவேளை taivēḷai, பெ. (n.)

வேளைச் செடி:

 five leaved eleoma (சாஅக.);.

ம. தைவேள

     [தை + வேளை]

   தொ to, த் என்ற மெய்யும் ஒ என்ற உயிரும் கூடிய கூட்டெழுத்து; the compound of ‘t’ and “o”.

     [த் + ஒ]