தலைசொல் | பொருள் |
---|---|
தே | தே1 tē, த் என்ற மெய்யெழுத்தும் ஏ என்ற உயிரெழுத்தும் சேர்ந்த கூட்டெழுத்து; the syllable formed by adding the long vowel__, to the consonant ‘t’ [த் + ஏ] தே2 tē, பெ. (n.) கொள்ளுகை (பிங்.);; acquiring. [தெவ்வு → தே] தே3 tē, பெ. (n.) 1. தெய்வம் (பிங்.);; the deity. “தேபூசை செய்யுஞ் சித்திரசாலை” (சிவரக நைமிச. 20);. 2. தலைவன் (இலக்அக.);; chief, lord. ம. தே [தேய்தல்=உரசுதன். தேய் → தே = (உரசிப் பற்றும்); நெருப்பு, (நெருப்பாகிய); தெய்வம், (தெய்வம் போன்ற); தலைவன் (வவ. 16);] தே5 tē, பெ. (n.) மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு; onom. expr. of driving cattle. |
தேக | தேக tēka, பெ. (n.) 1. ஒளி; bright. 2. பொன்; gold. 3. அழகு; beauty. “திருமா மணிவண்ணன் தேசு” (தி.வ். இயற். 3:9);. 4. புகழ்; fame. “நும்முடைத் திருவுந் தேகம்” (சீவக771);. 5. அறிவு (ஞானம்);; knowledge. “தேசுறு முண்பார்க் கென்றே தேறு’ (சைவச. பொது. 561);. 6. பெருமை; proud. “வலிச்சினமு மானமுந் தேகம்” (பு.வெ. 24);. 7. வீரியம் (வின்);; energy. த தேசு;வ. தேஜஸ் [தேய் → தேயு → தேசு] |
தேகக்கட்டளை | தேகக்கட்டளை tēkakkaṭṭaḷai, பெ. (n.) 1. உடம்பின் ஒழுங்கு அதாவது உடம்பையடுத்த ஊதை பித்தங் கோழையா(வாதபித்த சிலேட்டுமமா);கிய முக்குணங்களின் பண்பு (கிரமம்);; the characteristics of the three humours in the human system. 2. உடம்பின் தத்துவக் கட்டளை; the philosophical conceptions on the structure of human body. |
தேகக்கட்டு | தேகக்கட்டு tēkakkaṭṭu, பெ. (n.) 1. உடம்பின் திடம்; the robustness of the body. 2. தளர்வற்ற உடலமைப்பு; strong – built constitution. [Skt. {} → த. தேகம்+கட்டு] |
தேகக்கட்டுவிடல் | தேகக்கட்டுவிடல் tēkakkaḍḍuviḍal, பெ. (n.) உடம்பின் திடம் கெடுதல் (அ); குறைதல்; decaying of the build or robustness of the body. [Skt. {} → த. தேகம்+கட்டுவிடல்] |
தேகசம்பந்தம் | தேகசம்பந்தம் tēkasambandam, பெ. (n.) 1. உறவு; blood relationship. இனி நம்மிருவர்க்கும் தேகசம்பந்த மொழிய அர்த்தசம்பந்தமில்லை. 2. புணர்ச்சி (உ.வ.);; copulation. |
தேகசு | தேகசு tēkasu, பெ. (n.) 1. ஒளி; splendour. 2. கண் விளக்கம்; clearness of the eyes. 3. உடம்பின் வனப்பு; the heating and strengthening faculty of the human frame seated in the bile. 4. விந்து; semen virile. 5. உயிர் (பிராண); வலிவு; vital power. |
தேகநாளம் | தேகநாளம் tēkanāḷam, பெ. (n.) காரி ரத்தத்தை உடம்பின் பல பகுதிகளினின்று இருதயத்தின் வலது பக்கத்திற்கு திருப்பி விடும் ஓர் குழல்; one of those blood vessels which return impure blood to the right side of the heart. |
தேகநிதானம் | தேகநிதானம் tēkanitāṉam, பெ. (n.) 1. நோயின் பூர்வரூபம்; premonitory symptoms of the disease. 2. நோய்களின் குணங்களை விவரிக்கும் ஓர் வடமொழி நூல்; an Ayurvedic science determining the quality of diseases. |
தேகபரிவர்த்தம் | தேகபரிவர்த்தம் tēkabarivarttam, பெ. (n.) இருதயத்தினின்று கண்டரை வழியாய்ப் பிரிந்து உடம்பு முழுவதும் செவ்விரத்தமாய்ப் பரவி மறுபடியும் நாளங்கள் வழியாய் காரிரத்தமாக இருதயத்திற்கு செல்லும் கற்றோட்டம்; the circulation of the blood from the heart through aorta and other arteries throughout the body and back through the veins. |
தேகபலம் | தேகபலம் tēkabalam, பெ. (n.) 1. உடல் வலிமை; strength of the body. 2. குருவி; Indian sparrow, so called from its giving strength and vigour to the system when consumed. 3. மஞ்சள்; turmeric. |
தேகபலவீனம் | தேகபலவீனம் tēkabalavīṉam, பெ. (n.) உடம்பின் வலிமைக் குறைபாடு; bodily weakness, physical debility. |
தேகப்பயிற்சி | தேகப்பயிற்சி tēkappayiṟci, பெ. (n.) உடம்பின் வலுவிற்கும் (ஆரோக்கியத்திற்கும்); பலப்படுத்தவும் வேண்டி, தினப்படி பயிலுதல்; the art or practice of taking exercise for health and strength callesthenic performances. த.வ. உடற்பயிற்சி |
தேகமூறல் | தேகமூறல் tēkamūṟal, பெ. (n.) உடம்பு வளமாதல்; growing stout through nourishment. |
தேகமெலிவு | தேகமெலிவு tēkamelivu, பெ. (n.) உடம்பிளைப்பு; general or physical debility general weakness. |
தேகம் | தேகம் tēkam, பெ. (n.) உடம்பு (சூடா);; body. [Skt. {} → த. தேகம்] |
தேகளிதீபநியாயம் | தேகளிதீபநியாயம் tēkaḷitīpaniyāyam, பெ. (n.) இடைகழியில் வைத்த விளக்கு இருபுறமும் ஒளிவீசுவது போல ஒரு பொருள் இடையினின்று இரண்டிடத்தும் பயின்று வரும் நெறி;{} of the lamp at {}, illustrating how one abject serves simultaneously a two-fold purpose as the lamp at {} lights the portions on either side. |
தேகவமைப்புநூல் | தேகவமைப்புநூல் tēkavamaippunūl, பெ. (n.) 1. உடம்பின் கட்டுப்பாட்டை கூறும் நூல்; that branch of science dealing with the physiological structure of the body- physiology. |
தேகாதனம் | தேகாதனம் tēkātaṉam, பெ. (n.) கையின் மேற் கை மலரவிரியவும் கண்கள் நுனி மூக்கைப் பார்க்கவும் அமையும் ஒக இருக்கை (யோகாசன); வகை. (தத்துவப்.107,உரை);; cyogal sitting posture with the back of one hand placed against the palm of the other the eyes being fixed at the tip of the nose. [Skt. {} → த. தேகாதனம்] |
தேகாத்துமவாதம் | தேகாத்துமவாதம் tēkāttumavātam, பெ. (n.) உடலே ஆதன் (ஆன்மா); என்று கூறும் சாருவாகமதம்; materialism that identifies the soul with the body. [Skt. {} → த. தேகாத்துமவாதம்] |
தேகாந்தம் | தேகாந்தம் tēkāndam, பெ. (n.) உடலின் இறுதி சாவு; death. |
தேகான்மவாதி | தேகான்மவாதி tēkāṉmavāti, பெ. (n.) தேகாத்தும ஊதை (வாத);க் கொள்கையினன் (சி.போ.பா.பக்.36.புதுப்.);; a follower of the doctrine of {}. [Skt. {}+atma → த. தேகான்மாவாதி] |
தேகாப்பியாசம் | தேகாப்பியாசம் tēkāppiyācam, பெ. (n.) 1. உடம்பின் பயிற்சி; bodily or physical exercise. 2. அடயோகத்திற்கு உடம்பின் உழைப்பு; bodily exercise indispensible or Hutha yoga. த.வ. உடற்பயிற்சி |
தேகாரோக்கியம் | தேகாரோக்கியம் tēkārōkkiyam, பெ. (n.) உடம்பின் நலநிலைமை; healthy condition of the body. |
தேகி | தேகி1 tēki, பெ. (n.) 1. ஆதன்; soul. “தேகமுந் தேகியும் (திருமந்.1785);. 2. புல்லுருவி (மலை);; joneysuckle mistletoe, loranthus. [Skt. {} → த. தேகி] தேகி2 tēki, பெ. (n.) 1. உடம்பை உடையவன்; any person embodied. 2. புல்லூரி; parasitic plant. 3. சீவாத்துமா; individual soul or life. [Skt. {} → த. தேகி] |
தேகிகை | தேகிகை tēgigai, பெ. (n.) ஒரு புழு; a worm. |
தேகியெனல் | தேகியெனல் tēkiyeṉal, பெ. (n.) ஈ என இரத்தற் குறிப்பு; expr. signifying one’s request for alms. “ஐயத் தேகியெனச் செப்பி” (சைவச.பொது.366);. |
தேக்கநிலை | தேக்கநிலை tēkkanilai, பெ.(n.) தேங்கிய நீர்; stagnant water. [தேக்கம்+நிலை] தேக்கநிலை tēkkanilai, பெ.(n.) தேங்கிய நீர்; stagnant water. [தேக்கம்+நிலை] |
தேக்கந்தீவு | தேக்கந்தீவு tēkkandīvu, பெ. (n.) ஏழுதீவுகளு ளொன்று; an annular continent named after the tree called__,one of__,(செஅக.);. [தேக்கு → தேக்கம் + தீவு] |
தேக்கம் | தேக்கம்1 tēkkam, பெ. (n.) 1. தேங்குகை; being brimful. 2. நிறைவு (வின்.);; fullness, satiety. 3. நீரேட்டத்தின் தடை; obstruction of the flow of water. [தேங்கு → தேக்கு → தேக்கம்] தேக்கம்2 tēkkam, பெ. (n.) ஏப்பம்; eructation. “அக்னி தன்னிறம் பெற்றுத் தேக்கமிட்டபடி” (திவ்.திருநெடுந் 200, வியா. பக். 155);. ம. தேக்கம்; க.தேகு, தேகு;தெ. தேகு, தேஞ்சு, தேவு;து.தேரு;கோத. தேக்ள்;துட. தோக்;குட. தேகிலி;பட. தேகு;கோண். தேர்;கூ. தேபக்;கொலா. டேர்க் (கக்கல்); [தேங்குதல் = உயர்தல், மிகுதல் தேங்கு → தேக்கு → தேக்கம் (மு.தா.73);] தேக்கம்3 tēkkam, பெ. (n.) மனக்கலக்கம்; perturbation. [தயக்கம் → தியக்கம் → தேக்கம். தயக்கம் = செய்வதறியாது நிற்கும் நிலை] தேக்கம்4 tēkkam, பெ. (n.) 1. தடை; obstruction. தேக்கமொன்று மிலன் (திவ்.பெரியாழ். 2,9,3);. 2.அச்சம்; fear (திவ்.பெரியாழ்.2,9,3, வியாப.457);. [தேங்கு + தேக்கம்] |
தேக்கரண்டி | தேக்கரண்டி tēkkaraṇṭi, பெ. (n.) 60 துளி கொள்ளளவு கொண்ட சிறுகரண்டி; a small spoon holding 60 drops of liquid;tea spoon. [தே + கரண்டி] |
தேக்கர் | தேக்கர் tēkkar, பெ. (n.) மிகுதி; abundance. “மான்மதத் தேக்கரும்” (கம்பரா. எதிர்கொள்.13);. |
தேக்கல் | தேக்கல் tēkkal, பெ. (n.) செம்பாறை; gravel rock, gravel stone (சாஅக.); |
தேக்கிடு-தல் | தேக்கிடு-தல் dēkkiḍudal, 4 செ.கு.வி (v.i.) 1. உணவின் மிகுதியால் அதில் வெறுப்பு நிலையடைதல்; to be satiated, as a person with rich food. 2. ஏப்பமிடுதல்; to belch, eructate. “நெருப்புத் தின்றுதேக்கிடுகின்றது” (கம்பரா. இலங்கையெரி. 46);. 3. நீர் முதலியன உள் நிரம்பி வெளிவருதல்; to brim over. “அமுத மயிர்க்கா றோறுந் தேக்கிடச் செய்தனன்” (திருவாச. 3,171);. [ஏ → தே → தேக்கு + இடு-.] |
தேக்கித் தள்ளு-தல் | தேக்கித் தள்ளு-தல் tēkkittaḷḷutal, 6 செ.குன்றாவி. (v.t.) குண்டினைக் கையை அல்லது காலினை மடக்கிக்கொண்டு. தள்ளுதல்; to push away a ball with the knee or elbow. [தேக்கி+தள்ளு-] தேக்கித் தள்ளு-தல் dēkkiddaḷḷudal, 6 செ.குன்றாவி.(w.t.) குண்டினைக் கையை அல்லது காலினை மடக்கிக்கொண்டு தள்ளுதல்; to push away a ball with the knee or elbow. [தேக்கி+தள்ளு-] |
தேக்கிவருவி | தேக்கிவருவி tēkkivaruvi, பெ. (n.) தொழு நோய், குட்டம்; leprosy (சாஅக);. |
தேக்கிவி | தேக்கிவி tēkkivi, பெ. (n.) மொகசி மரம்; mootchy tree (சாஅக);. |
தேக்கு | தேக்கு1 dēkkudal, 5 செ.குன்றாவி. (v.i.) 1. நீர் முதலியவற்றை ஒரிடத் தேங்கக் கட்டுதல்; to stop the flow, as of water; to dam up. “செவ்வழி நீரொடுங் குருதி தேக்கினான்” (கம்பரா. கும்பகருண.99);. 2. நிரம்பப் பருகுதல்; to drink to the full. “நிறைமத்த மதுவைத் தேக்கி” (கம்பரா. அதிகாய.215);. 3 தடை பண்ணுதல் (சங் அக.);: to obstruct. [தேங்கு → தேக்கு-.] தேக்கு2 dēkkudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நிறைதல்: to be full, copious, abundant, replete. “தேக்கியதேனுடன்” (கல்லா. 1);. 2. ஏப்பம் விடுதல்; to belch. “ஆலமுண் டமுதேமிகத் தேக்குவர்” (தேவா. 529, 3);. 3. தெவிட்டுதல்; to be sated, glutted, cloyed, satiated. “நாய்கழு கொருநாள் கூடியுண்டு தேக்கு விருந்தா முடலை” (தாயு. எந்நாட். யாக்கை.3);. [தேங்குதல் → உயர்தல், மிகுதன். தேங்கு → தேக்கு. தேக்குதல்=அடிவயிற்றிலுள்ள காற்றை எழுப்புதல், ஏப்பம் விடுதல். ஏப்பம் என்னும் சொல்லும் ஒலிக் குறிப்பொடு எழுச்சி குறித்த ஏகாரங் கலத்ததே (மு.தா.73);] தேக்கு3 tēkku, பெ. (n.) 1. தெவிட்டு (அக.நி.);; fullness; repletion, satiety. 2. ஏப்பம்; belching, cructation. . “தேக்கின் தூய்மை” (குறள்,942 உரை);. [தேங்கு → தேக்கு] தேக்கு4 tēkku, பெ. (n.) தேக்குமரம்; teak wood tree. ம. தேக்கு; க. தேகு, தேக, தேங்கு; தெ. டேகு, தேகு; கோண். டேகா, தேகர; கொலா, தேக், டெக்;பர். டேரிக்மெரி (தேக்கு மரம்); [தேங்குதல் = உயர்தல், மிகுதல். தேங்கு → தேக்கு. உயர்ந்த அல்லது உயர்வான மரம் (மு.தா. 73);] தேக்கு வகை 1. பெருந்தேக்கு – large variety of teak tree. 2. வெண்தேக்கு – white teak. 3. குமிழ்த் தேக்கு – cashmere tree. 4. கற்றேக்கு – patana oak. 5. சிறுதேக்கு – cleodendron serratum. 6. பூந்தேக்கு – flower teak. 7. சொறிதேக்கு – cori teak 8. மெழுகுத் தேக்கு – wax teak 9. சோலை வெண்தேக்கு – looking glass plant of southern ghats. 10. கொழுக்கட்டைத் தேக்கு (அல்); கொள்ளிக் கட்டைத் தேக்கு – firebrand teak. 11. நாய்க் தேக்கு – dog teak. 12. பலந்தேக்கு – godaveri sebestan. 13. பூனைத் தேக்கு – rosy flowered batavian teak. 14. உவாத்தேக்கு -sand peper tree. 15. வத்தேக்கு -strong teak. 16. மஞ்சள் தேக்கு (அ); மஞ்சக்கடம்பு – saffron teak. தேக்கு5 tēkku, பெ. (n.) 1. கமுகு; areca nut. 2. சண்பகம்; champauk tree (சாஅக.);. தேக்கு6 tēkku, பெ. (n.) இனிப்பு; sweetness (சாஅக.);. [தீம் → தேம் → தேம்கு → தேக்கு] |
தேக்கு-தல் | தேக்கு-தல் tēkkutal, 6 செ.கு.வி.(v.i) நகர்தல்; to move with a little pause. [துக்கு-தெக்கு-தேக்கு] தேக்கு-தல் dēkkudal, 6 செ.கு.வி.(v.i.) நகர்தல்; to move with a little pause. [துக்கு-தெக்கு-தேக்கு] |
தேக்குடிச்சி | தேக்குடிச்சி tēkkuḍicci, பெ. (n.) கருவண்டு; a black bee. [தேன் + குடிச்சி. தேங்குடிச்சி → தேக்குடிச்சி] |
தேக்கெறி | தேக்கெறி1 dēkkeṟidal, 3 செ.கு.வி. (v.i.) 1. தெவிட்டுதல்; to be satiated; to be surfeited, cloyed. 2. ஏப்பமிடுதல்; to belch. “தேக்கெறிந்து வருதலிற் றீம்புனல்” (கம்பரா. பாலகா. ஆற்றுப். 10);. 3. நிறைதல்; to be full, brimfui; to swell, as the ocean. [தேக்கு2 + எறி–] தேக்கெறி2 dēkkeṟidal, 2 செ.குன்றாவி. (v.t.) நிரம்பவுண்ணுதல்; to cat to the full. “செயற்றலைநின் றுழப்பவர்க டேக்கெறிவர்” (தணிகைப்பு.நாட்.130);. [தேக்கு + எறி-.] |
தேக்கை | தேக்கை tēkkai, பெ.(n.) தேகை எனும் இராசாளிப் பறவை; royal falcon. மறுவ தேகை, டேகை, வல்லுறு [தாக்கு-தாக்கை-தேக்கை] |
தேக்கொக்கு | தேக்கொக்கு tēkkokku, பெ.(n.). தேமா; sweet mango. [தே + கொக்கு. கொக்கு = மாமரம்] |
தேக்சா | தேக்சா tēkcā, பெ. (n.) ஒரு வகைக் கிடாரம்; a cauldron. [U. {} → த. தேக்சா] தேக்சா2 tēkcā, பெ. (n.) வாய்கன்றகுடம்; broad vessel. [U. {} → த. தேக்சா.] |
தேங்கங்காய் | தேங்கங்காய் tēṅgaṅgāy, பெ. (n.) தேங்காய்; coconut. தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல்” (யாப்.வி. 95, பக்372);, ம. தெக்கன்காய், தெங்கன்காய்;பட தெங்கெ [தென் → தென்கு → தெங்கு. தெங்கு + அம் + காய்] |
தேங்கண்ணி | தேங்கண்ணி tēṅgaṇṇi, பெ. (n.) காட்சிக்கு அழகிய கண்களை உடைய கடல் மீன்; sea fish which has beautiful eyes. [தேம் + கண்ணி] |
தேங்கனி | தேங்கனி1 tēṅgaṉi, பெ. (n.) தேங்காய்; coconut. “தேங்கனியுங் கொண்டு வந்து சீராக வைத்தாராம்” (கோவக. 65);. [தெங்கு + கனி → தெங்குகனி → தேங்கனி. தேங்காம் பார்க்க] தேங்கனி2 tēṅgaṉi, பெ. (n.) சுவை நிறைந்த பழவகை; sweet fruit. [தேம் + கனி. தேம் = இனிமை] |
தேங்கமுகந்தளத்தல் | தேங்கமுகந்தளத்தல் tēṅgamugandaḷattal, பெ. (n.) படி முதலியவற்றால் அளக்கும் அளவுவகை (தொல்.எழுத்து. 2, உரை);; measuring grain, etc., with a standard measure. [தேங்கு + முகத்து + அளத்தல்] |
தேங்கல் | தேங்கல் tēṅgal, பெ. (n.) 1. நிறைதல்; full. 2. அச்சக் குறிப்பு; gesture of fear. 3. மிகுதல்; overwhelm. 4. குலைதல்; collapse. [தேங்கு + அல். ‘அல்’ தொழிற்பெயரீறு.] |
தேங்காத்தொட்டி | தேங்காத்தொட்டி tēṅkāttoṭṭi, பெ.(n.) தேங்காய் மூடி; one part of the coconut shell. [தேங்காய்+தொட்டி] தேங்காத்தொட்டி tēṅgāttoṭṭi, பெ.(n.) தேங்காய் மூடி; one part of the coconut shell. [தேங்காய்+தொட்டி] |
தேங்காப்பாறை | தேங்காப்பாறை2 tēṅgāppāṟai, பெ. (n.) தேங்காய்ப்பூவைக் கொண்டு செய்யப்படும் தின்பண்டம்; a toffee made by coconut. [தேங்காய் + பாறை] |
தேங்காப்பாலவியல் | தேங்காப்பாலவியல் tēṅgāppālaviyal, பெ. (n.) தேங்காய்ப்பாலோடு பல கறிகள் ஒன்று சேர்த்துச் சமைத்த கறிவகை (யாழ்ப்);; a vegetable curry cooked with coconut juice. மறுவ. சொதி (நெல்லை); [தேங்காய் + பால் + அவியல்] |
தேங்காயடி | தேங்காயடி tēṅgāyaḍi, பெ. (n.) எதிரியின் தேங்காயைத் தன் தேங்காயில் உடைத்தவனே வென்றவனென்று கருதப்படும் விளையாட்டு வகை (யாழ்அக);; a game in which a person breaking the coconut of his antagonist with his own, is declared the winner. [தேங்காய் +அடி] |
தேங்காயெண்ணெய் | தேங்காயெண்ணெய் tēṅgāyeṇīey, பெ. (n.) தேங்காயின் எண்ணெய்; coconut oil (சாஅக);. ம. தேங்காணி;பட. தெங்கெண்ணெ [தேங்காய் + எண்ணெய்] தேங்காய்க் கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டக் கிடைப்பது. வெளிர்மஞ்சள் நிறமுடையதாயும் மணமுடையதாயும் நெய் போன்றுமிருக்கும். குளிரில் உறையுந் தன்மையுடைது. நாட்படவிருந்தால் கெட்டுப் போகும். மருந்துக்குதவும். மயிர்ப் பூச்செண்ணெயாயும், சமையலெண்ணெ யாயும் பயன்படும். |
தேங்காயெண்ணெய்ச்சவ்வு | தேங்காயெண்ணெய்ச்சவ்வு tēṅgāyeṇīeyccavvu, பெ. (n.) சவுக்காரக் கட்டி; soap (சாஅக);. [தேங்காய் + எண்ணெய் + சவ்வு] |
தேங்காயெறி-தல் | தேங்காயெறி-தல் dēṅgāyeṟidal, 3 செ.குவி. (v.i.) இறைத்திருமேனியின் முன் சிதறு தேங்கா யுடைத்தல் (நாஞ்);; to dash coconuts and break, as offering to an idol. [தேங்காய் + எறி] |
தேங்காயோடு | தேங்காயோடு tēṅgāyōṭu, பெ. (n.) கொட்டாங்கச்சி; coconut shell (சாஅக);. [தேங்காய் + ஒடு] |
தேங்காயோது-தல் | தேங்காயோது-தல் dēṅgāyōdudal, 5 செ.கு.வி. (v.i.) தேங்காயில் ஆற்றல் உண்டாகும்படி மந்திரித்தல் (வின்.);; to confer magical virtues on coconut by incantations. [தேங்காய் + ஒது] |
தேங்காய் | தேங்காய்1 tēṅgāy, பெ. (n.) தென்னை மரத்தின் காய்; fruit of coconut tree. தேங்காய் தின்னவன் இருக்கக் கோம்பை சூப்பினவன் தெண்டம் இறுக்கிறதா? (பழ.);. ம. தேங்ங, தெங்வங்காயி; க. தெங்கின காயி, தெங்காயி; தெ. டெங்காய, தெங்காய; குட. தெங்கெ; கோத. தெங்காய்; துட. தொக்;பட. தெங்கெ [தென்னை + காய் → தென்னங்காய் → தெங்கங்காய் → தேங்காய்] மேற்பக்கம் ஓடால் மூடப்பட்டிருக்கும். உட்பக்கம் வெண்ணிறமான சதையும், நீருமிருக்கும். முற்றின தேங்காயில் சதைப்பற்று மிகுந்து நீர் குறைந்தும், இளந்தேங்காயில் சதைப்பற்று குறைந்து நீர் மிகுந்துமிருக்கும். தேங்காயை உலர்த்திக் கொப்பரையாக்கி, அதைச் செக்கிலிட்டு ஆட்டித் தேங்காயெண்ணெய் எடுப்பர் (சாஅக.); தேங்காய் வகை 1. குருவித் தேங்காய் – இதுவே நெல்லி. 2. குறுந்தேங்காய் – சமுத்திராப் பழம் 3. கொட்டைத் தேங்காய் – matured coconut. 4. கொப்பரைத் தேங்காய் – dried coconut. 5. சிறுதேங்காய் – fully riped though small. 6. இளநீர்த் தேய்காய் – tender coconut. 7. தேளித் தேங்காய் – a kind of red coconut. தேங்காய்2 tēṅgāy, பெ. (n.) இனிய காய்; Sweet fruit. தேங்காய் நெல்வியும் (பெருங். உளுத்சைக் 52, 43);. [தீம் → தேம் + காம். தீம் = இனிமை] |
தேங்காய் உடைத்தல் | தேங்காய் உடைத்தல் tēṅkāyuṭaittal, பெ. (vbl.n.) கரகாட்டக் கலைஞர் நிகழ்த்தும் ஒரு திறம்சார் விளையாட்டு; a skillful play of the folklorists in karagam play. [தேங்காய்+உடைத்தல்] தேங்காய் உடைத்தல் tēṅgāyuḍaittal, தொ.பெ. (v.bl.n.) கரகாட்டக் கலைஞர் நிகழ்த்தும் ஒரு திறம்சார் விளையாட்டு; a skill ful play of the folklorists in karagam play. [தேங்காய்+உடைத்தல்] |
தேங்காய்கட்டியடி-த்தல் | தேங்காய்கட்டியடி-த்தல் tēṅgāykaḍḍiyaḍittal, 4 செகுன்றாவி (v.t.) தொந்தரவு செய்தல்; to give trouble, to vex, worry. [தேங்காய் + கட்டி + அடி-.] |
தேங்காய்க்கணு | தேங்காய்க்கணு tēṅgāykkaṇu, பெ. (n.) தேங்காயோட்டின் நரம்பு; joints of the three sections of a coconut shell. [தேங்காய் + கணு] |
தேங்காய்க்கண்திற-த்தல் | தேங்காய்க்கண்திற-த்தல் tēṅgāykkaṇtiṟattal, 4. செ.குவி (v.i.) தேங்காய்க்குள் மருந்தைப் புகட்டுவதற்காக அதன் கண்ணைத் துளைத்தல்; to make a hole through one of three eyelets on the top of the shell in order to insert medicine or other drugs into it after clearing the water contained it. [தேங்காய் + கண் + திற-.] |
தேங்காய்க்கன் | தேங்காய்க்கன் tēṅgāykkaṉ, பெ. (n.) தேங்காயின் மேலிடத்துள்ள முக்கண்; he three eyes of the coconut ம. தேங்ஙாக்கண்ணு [தேங்காய் + கண்] |
தேங்காய்க்கன்னமுது | தேங்காய்க்கன்னமுது dēṅgāykkaṉṉamudu, பெ. (n.) தேங்காய்க்கன்னலமுது பார்க்க;see__, [தேங்காய்க்கன்னலமுது → தேங்காய்க் கன்னமுது] |
தேங்காய்க்கன்னலமுது | தேங்காய்க்கன்னலமுது dēṅgāykkaṉṉalamudu, பெ. (n.) தேங்காய்ப்பாலைச் சேர்த்துச் செய்த கன்னலமுது; a sweet preparation with coconut pulp. [தேங்காய் + கன்னலமுது] |
தேங்காய்க்கயர் | தேங்காய்க்கயர் tēṅgāykkayar, பெ. (n.) 1. தேங்காய் உச்சியின் மெல்லோடு (யாழ்ப்.);; soft or spongy crown of the coconut. 2. தேங்காயோட்டோடு பற்றியிருக்கும் பருப்பின் தோல்; lowest part of the coconut kernal sticking to the shell (செஅக.);. [தேங்காய் + கயர்] |
தேங்காய்க்கயில் | தேங்காய்க்கயில் tēṅgāykkayil, பெ. (n.) பாதித் தேங்காய்; half of a coconut. மறுவ. தேங்காய் மூலி, தேங்காய் மூடி [தேங்காய் + கயில்] |
தேங்காய்க்கீரை | தேங்காய்க்கீரை tēṅgāykārai, பெ. (n.) தேங்காய்ப்பூக்கீரை பார்க்க;see__, [தேங்காய் + கீரை] |
தேங்காய்க்கீற்று | தேங்காய்க்கீற்று tēṅgāykāṟṟu, பெ. (n.) தேங்காய்ப் பத்தை; cocoanut kernel sliced into several pieces. மறுவ, தேங்காய்ப் பத்தை தேங்காய்ச் சில், தேங்காய்த் துண்டு, தேங்காய் வகிர். தேங்காய்ப்பல் [தேங்காய் + கீற்று] |
தேங்காய்க்குடுக்கை | தேங்காய்க்குடுக்கை tēṅgāykkuḍukkai, பெ. (n.) தேங்காயோட்டினாற் செய்த குப்பி; a round empty shell of coconut made to serve as a bottle to preserve anything (சாஅக.);. ம. தேங்ஙாக்குடுக்க [தேங்காய் + குடுக்கை] |
தேங்காய்க்குடுமி | தேங்காய்க்குடுமி tēṅgāykkuḍumi, பெ. (n.) உரித்த தேங்காயில் விடப்பட்ட உச்சிநார்க் கற்றை; tuft of fibres on the crown of the coconut. [தேங்காய் + குடுமி] |
தேங்காய்க்குருப்பு | தேங்காய்க்குருப்பு tēṅgāykkuruppu, பெ. (n.) தேங்காய்ப்பூ பார்க்க;see__, [தேங்காய் + குருப்பு] |
தேங்காய்க்குரும்பை | தேங்காய்க்குரும்பை tēṅgāykkurumbai, பெ. (n.) முதிராத் தேங்காய்; immature coconut perhaps not fertilised (சாஅக.);. [தேங்காய் + குரும்பை] |
தேங்காய்க்கூடு | தேங்காய்க்கூடு tēṅgāykāṭu, பெ. (n.) தேங்காய்கள் இட்டுவைத்திருக்கும் சிறு கொட்டகை (நாஞ்);; a shed where coconuts are stored ம.தேங்ஙக்கூடு [தேங்காய் + கூடு] |
தேங்காய்க்கொப்பரை | தேங்காய்க்கொப்பரை tēṅgāykkopparai, பெ. (n.) உலர்ந்த தேங்காய்; dried kernal of coconut (சாஅக.);. [தேங்காய் + கொப்பரை] |
தேங்காய்க்கோம்பை | தேங்காய்க்கோம்பை tēṅgāykāmbai, பெ. (n.) தென்னங்கோம்பை பார்க்க;see __, [தேங்காய் + கோம்பை] |
தேங்காய்ச்சதை | தேங்காய்ச்சதை dēṅgāyccadai, பெ. (n.) தேங்காயினுட் சதைப்பற்று; kernal of coconut (சாஅக.);. [தேங்காய் + சதை] |
தேங்காய்ச்சிண்டு | தேங்காய்ச்சிண்டு tēṅgāycciṇṭu, பெ. (n.) தேங்காய்க்குடுமி பார்க்க;see__, [தேங்காய் + சிண்டு] |
தேங்காய்ச்சிரட்டை | தேங்காய்ச்சிரட்டை tēṅgāycciraṭṭai, பெ. (n.) கொட்டங்கச்சி; half of a coconut shell. ம. சிரட்ட;க. கரட: குட. செரடெ: பட. கரட்டலு [தேங்காய் + சிரட்டை] |
தேங்காய்ச்சில் | தேங்காய்ச்சில் tēṅgāyccil, பெ. (n.) 1. தேங்காய்ப் பருப்பின் கூறு; a piece of coconut albumen with or without the shell. 2. கொட்டங்கச்சிக் கூறு; a piece of coconut shell. [தேங்காய் + சில்] |
தேங்காய்ச்சுடு-தல் | தேங்காய்ச்சுடு-தல் dēṅgāyccuḍudal, 4 செ.குன்றாவி. (v.t.) தேங்காயைக் கண் வழியாகத் துளைத்து வெல்லம், கடலை, அரிசி, வறுத்த எள் முதலானவற்றை உள்ளே நிறைத்தடைத்து நிலத்தில் புதைத்து அவ்விடத்தில் தீமூட்டி வேகவைத்தல்; to cook the coconut by kiln method, with some edibles. [தேங்காய் + சுடு] |
தேங்காய்ச்சொட்டு | தேங்காய்ச்சொட்டு tēṅgāyccoṭṭu, பெ. (n.) தேங்காய்ப் பருப்பின் துண்டு (வின்);; Slice or thin piece of coconut albumen. [தேங்காய் + சொட்டு] |
தேங்காய்த்தட்டு | தேங்காய்த்தட்டு tēṅgāyttaṭṭu, பெ. (n.) கப்பலின் பின்பக்கத்து மேற்றட்டு; poop deck [தேங்காய் + தட்டு] |
தேங்காய்த்தண்ணீர் | தேங்காய்த்தண்ணீர் tēṅgāyttaṇṇīr, பெ. (n.) 1. இளநீர்; the sweet astringent fluid of tender coconut. 2. முற்றிய தேங்காயின் தண்ணிர்; sweet water of the riped coconut (சாஅக);. [தேங்காய் தண்ணீர்] |
தேங்காய்த்தலையன் | தேங்காய்த்தலையன் tēṅgāyttalaiyaṉ, பெ. (n.) தேங்காயைப் போன்ற தலையுடையோன்; one having a big head like coconut (சாஅக);. [தேங்காய் + தலையன்] |
தேங்காய்த்திருகல் | தேங்காய்த்திருகல் tēṅgāyttirugal, பெ. (n.) தேங்காய்த்துருவல் பார்க்க;see__,(சாஅக.);. [தேங்காய் + திருகல்] தேங்காய்த்துருவி பார்க்க:see__, [தேங்காய் + திருகி] |
தேங்காய்த்துண்டு | தேங்காய்த்துண்டு tēṅgāyttuṇṭu, பெ. (n.) தேங்காய்க்கீற்று பார்க்க;see__, [தேங்காய் + துண்டு] |
தேங்காய்த்தும்பு | தேங்காய்த்தும்பு tēṅgāyttumbu, பெ. (n.) தேங்காய் நார்க் கயிறு (யாழ்ப்);; thread made by fibres of the coconut-husk [தேங்காய் + தும்பு] |
தேங்காய்த்துருவல் | தேங்காய்த்துருவல் tēṅgāytturuval, பெ. (n.) தேங்காய்ப் பருப்பின் துருவிய பூ; coconut scrapings (சாஅக.);. [தேங்காய் + துருவல்] |
தேங்காய்த்துருவி | தேங்காய்த்துருவி tēṅgāytturuvi, பெ. (n.) தேங்காய்ப் பருப்பைத் துருவுங் கருவி; coconut scraper. [தேங்காய் + துருவி] |
தேங்காய்த்துருவுமனை | தேங்காய்த்துருவுமனை tēṅgāytturuvumaṉai, பெ. (n.) தேங்காய்த்துருவி பார்க்க;see__, [தேங்காய் + துருவும் + மணை] |
தேங்காய்த்துவையல் | தேங்காய்த்துவையல் tēṅgāyttuvaiyal, பெ (n.) தேங்காய்ப் பருப்பும் மசாலையும் கலந்தரைக்கப்படும் தொடுகறி வகை; chutny, as side dish, made of coconut kernal and spices. [தேங்காய் + துவையல்] |
தேங்காய்நார்புல் | தேங்காய்நார்புல் tēṅkāynārpul, பெ.(n.) புல் வகை; a kind of grass. [தேங்காய்+நார்புல்] தேங்காய்நார்புல் tēṅgāynārpul, பெ.(n.) புல் வகை; a kind of grass. [தேங்காய்+நார்+புல்] |
தேங்காய்நெய் | தேங்காய்நெய் tēṅgāyney, பெ. (n.) தேங்காய்ப் பாலினின்று காய்ச்சியெடுக்கப்படும் எண்ணெய்; a kind of fragrant oil prepared from coconut juice. தேங்காயெண்ணெய் வேறு;தேங்காய்நெய் வேறு ம. தேங்ஙாநெய் [தேங்காய் + தெம்] |
தேங்காய்நெற்று | தேங்காய்நெற்று tēṅgāyneṟṟu, பெ. (n.) முதிர்ந்த தேங்காய்; matured and dried coconut useful for rising seedlings (சாஅக.);. [தேங்காய் + தெற்று] |
தேங்காய்ப்பத்தை | தேங்காய்ப்பத்தை tēṅgāyppattai, பெ. (n.) தேங்காய்க்கீற்று பார்க்க;see__, [தேங்காய் + பத்தை] |
தேங்காய்ப்பருப்பு | தேங்காய்ப்பருப்பு tēṅgāypparuppu, பெ. (n.) தேங்காயின் உட்சதைப்பற்று; coconut kernal (சாஅக);. [தேங்காய் + பருப்பு] |
தேங்காய்ப்பல் | தேங்காய்ப்பல் tēṅgāyppal, பெ. (n.) தேங்காய்கீற்று பார்க்க;see__, ம. தேங்ஙாப்பல் [தேங்காய் + பல்] |
தேங்காய்ப்பாயசம் | தேங்காய்ப்பாயசம் tēṅgāyppāyasam, பெ. (n.) தேங்காய்க்கன்னலமுது பார்க்க;see__, [தேங்காய் + பாயசம்] |
தேங்காய்ப்பாரை | தேங்காய்ப்பாரை1 tēṅgāyppārai, பெ. (n.) தேங்காய் மட்டை உரிக்க உதவும் கருவி; an iron-piece fixed in a stone for husking coconut. தேங்காய்ப்பாரை2 tēṅgāyppārai, பெ.. (n.) எட்டுவிரல நீளம் வளரக்கூடியதும் நீலப்பச்சை நிறமுடையதுமான கள்ளப் பாறை மீன் (மீனவ);; horse-mackerel, bluish green, attaining 8 inch in length. [தேங்காய் + பாரை] |
தேங்காய்ப்பாறை | தேங்காய்ப்பாறை1 tēṅgāyppāṟai, பெ. (n.) கடல் பாறை மீனின் வகை; a kind of sea fish of the caranx genus (சாஅக,);. [தேங்காய் + பாறை] |
தேங்காய்ப்பால் | தேங்காய்ப்பால் tēṅgāyppāl, பெ. (n.) 1. தேங்காய்த் துருவலினின்று பிழிந்த பால்; coconut juice pressed from the scraped kernal. ஆப்பத்தைத் தேங்காய்ப் பாலில் சேர்த்துண்டால் அருமையான சுவை. 2.. தேங்காய்த் துருவலினின்று பிழிந்து சருக்கரையிட்டுச் சமைக்கப்படும் பருகம்; a sweet preparation of coconut juice. ம. தேங்காப்பால் [தேங்காய் + பால்] |
தேங்காய்ப்பிண்ணாக்கு | தேங்காய்ப்பிண்ணாக்கு tēṅgāyppiṇṇākku, பெ. (n.) தேங்காயினின்றும் எண்ணெய் எடுத்த பிறகு எஞ்சிய சக்கை; the residue or refuse or oil cake left after extracting the oil from the kernal by a mill (சாஅக.);. இது கோழி, புறா, பன்றி போன்றவற்றுக்கு உணவாகவும், தென்னைக்கு எருவாகவும் பயன்படும். ம. தேங்காப்பிண்ணாக்கு [தேங்காய் + பிண்ணாக்கு] |
தேங்காய்ப்புரிக்கயிறு | தேங்காய்ப்புரிக்கயிறு tēṅgāyppurikkayiṟu, பெ. (n.) தென்னம் நாரினாலான கயிறு; thread made of coconut fibre. [தேங்காய் +புரி + கயிறு] |
தேங்காய்ப்பூ | தேங்காய்ப்பூ tēṅgāyppū, பெ. (n.) 1. தேங்காய் முனை; the white solid albumen sprouting inside the coconut. 2. தேங்காய்த்துருவல் பார்க்க;see__,(சாஅக);. [தேங்காய் + பூ] |
தேங்காய்ப்பூக்கீரை | தேங்காய்ப்பூக்கீரை tēṅgāyppūkārai, பெ. (n.) தேங்காய்த் துருவல் போலுள்ள பூவைக் கொண்ட கீரைவகை; a kind of brown spinach, the flowers of which resemble scraped coconut. [தேங்காய் + பூ + கீரை] |
தேங்காய்ப்பூடு | தேங்காய்ப்பூடு tēṅgāyppūṭu, பெ. (n.) அரிசிப்பூடு எனும் செடி; a plant [தேங்காய் + பூடு] |
தேங்காய்ப்பூத்துண்டு | தேங்காய்ப்பூத்துண்டு tēṅgāyppūttuṇṭu, பெ. (n.) தேங்காய்த் துருவல் போல் மெத்தென்று நெய்த பருத்தித் துண்டு; turkey towel. பேச்சாளர்களுக்குத் தேங்காய்ப்பூத் துண்டு போர்த்தினேன் (உவ.);. |
தேங்காய்ப்பூநாறி | தேங்காய்ப்பூநாறி tēṅgāyppūnāṟi, பெ. (n.) தேங்காய்ப்பூக்கீரை (யாழ்அக); பார்க்க;see__, [தேங்காய் +பூ + நாறி] |
தேங்காய்ப்பூவறை | தேங்காய்ப்பூவறை tēṅgāyppūvaṟai, பெ. (n.) பால் பிழியப்பட்ட தேங்காய்த் துருவலாற் செய்யப்படும் கறிவகை; a kind of curry prepared from coconut-scrappings whose juice has been pressed out. [தேங்காய் + பூவறை] |
தேங்காய்ப்போர் | தேங்காய்ப்போர் tēṅkāyppōr, பெ.(n.) இரண்டு தேங்காய்களை உருட்டி ஒன்றுடனொன்று மோத விடுதல்; making coconuts to dash with each other with force. [தேங்காய்+போர்] தேங்காய்ப்போர் tēṅgāyppōr, பெ.(n.) இரண்டு தேங்காய்களை உருட்டி ஒன்றுடனொன்று மோத விடுதல்; making coconuts to dash with each other with force. [தேங்காய்+போர்] |
தேங்காய்மட்டை | தேங்காய்மட்டை tēṅgāymaṭṭai, பெ. (n.) தேங்காயின் மேலிருக்கும் நார்ப்பாகம் – கதம்பை; coconut fibre and husk (சாஅக);. [தேங்காய் + மட்டை] தென்னை மட்டை வேறு;தேங்காய் மட்டை வேறு |
தேங்காய்மணி | தேங்காய்மணி tēṅgāymaṇi, பெ. (n.) 1. தேங்காய் முனை (வெ);;seed of a coconut 2. தேங்காய்க் கொப்பரை; kernal of coconut. [தேங்காய் + மணி] |
தேங்காய்மந்திரி-த்தல் | தேங்காய்மந்திரி-த்தல் tēṅgāymandirittal, செ.கு.வி. (v.i.) தேங்காயோது-தல் பார்க்க;see__, [தேங்காய் + மத்திரி] |
தேங்காய்மரம் | தேங்காய்மரம் tēṅgāymaram, பெ.. (n.) தென்னைமரம் பார்க்க;see__, தேங்காய் மரத்தில் தேள்கொட்ட மாங்காய் மரத்தில் நெரி ஏறியதாம் (பழ);. க. தெங்கின மர;பட தெங்கெமொர [தேங்காய் + மரம்] |
தேங்காய்முகரி | தேங்காய்முகரி tēṅgāymugari, பெ. (n.) தேங்காய்க் கண்களின் இடைப்பாகம்; the portion in the coconut – shell between its two closed eyes, deemed the hardest part. [தேங்காய் + முகரி] |
தேங்காய்முகிழ் | தேங்காய்முகிழ் tēṅgāymugiḻ, பெ. (n.) தேங்காயின் மடல் (வின்.);; the integument of coconut [தேங்காய் + முகிழ்] |
தேங்காய்முறி | தேங்காய்முறி tēṅgāymuṟi, பெ. (n.) தேங்காய் மூடி பார்க்க;see__, மறுவ, தேங்காய் மூளி, தேங்காய் மூடி [தேங்காய் + முறி] |
தேங்காய்முளை | தேங்காய்முளை tēṅgāymuḷai, பெ. (n.) தேங்காய்ப் பருப்பின் முளைப்பகுதி; the almond like substance (சாஅக.);. [தேங்காய் + முனை] இது முற்றும்போது உட்பக்கம் முழுவதையும் கவர்ந்துகொள்ளும். |
தேங்காய்மூடி | தேங்காய்மூடி tēṅgāymūṭi, பெ. (n.) உடைத்த தேங்காயின் பாதி; half of a coconut (சாஅக); [தேங்காய் + முடி. முறி → முடி → முடி] தேங்காயின் நரம்பு; the three nerves of a coconut. [தேங்காய் + மூரி] |
தேங்காய்மொத்தி | தேங்காய்மொத்தி tēṅgāymotti, பெ. (n.) மாட்டின் முன்னங்காலின் இடையிலுள்ள தசைத் திரட்சி (யாழ்.அக.);; lump of flush in the middle of the forelegs of cattle or buffaloes (செஅக);. [தேங்காய் + மொத்தி] |
தேங்காய்வகிர் | தேங்காய்வகிர் tēṅgāyvagir, பெ. (n.) தேங்காய்க்கீற்று பார்க்க;see__, [தேங்காய் + வகிர்] |
தேங்காய்வழுக்கை | தேங்காய்வழுக்கை tēṅgāyvaḻukkai, பெ. (n.) தேங்காயின் முற்றாத உள்ளீடு; soft kernal or albumen of an immature coconut. [தேங்காய் + வழுக்கை] |
தேங்காய்வெட்டி | தேங்காய்வெட்டி tēṅgāyveṭṭi, பெ. (n.) தேங்காய் மட்டை உரிக்குங் கருவி; instrument for husking coconut. [தேங்காய் + வெட்டி] |
தேங்காய்வெண்ணெய் | தேங்காய்வெண்ணெய் tēṅgāyveṇīey, பெ. (n.) தேங்காய்நெய் பார்க்க;see__, [தேங்காய் + வெண்ணெய்] |
தேங்கிட்டி | தேங்கிட்டி tēṅgiṭṭi, பெ. (n.) தேள் கொடுக்கிப் பச்சிலை; a kind of medicinal plant (சாஅக);. |
தேங்கு | தேங்கு2 dēṅgudal, 5 செ.கு.வி. (v.i.) 1. மனங்கலங்குதல் (பிங்.);; to be puzzled, to be in trepidation. “நீர் தேங்க வேண்டாவிறே” (ஈடு. 9,7,9);. 2. கால நீட்டித்தல்; to delay, tarry. “தேங்காதிருவோ நேரிறைஞ்ச” (பெரிய,பு திருதா,267);. 3. கெடுதல்; to perish; to be ruined. “தேங்காத மள்ளர்” (சீவக. 16);. தேங்கு3 dēṅgudal, 5 செ.கு.வி. (v.i.) அஞ்சுதல்; to be afraid. “நாம் இத்தைச் செய்யும்படியென் என்று தேங்குதல் அல்பமுமுடைய வனல்லன்” (தி.வ்.பெரியாழ். 2,9,3, வியா, பக். 45);. [தியங்கு → தேங்கு] தேங்கு4 tēṅgu, பெ. (n.) தெங்கு; coconut. [தெங்கு → தேங்கு] |
தேங்கு-தல் | தேங்கு-தல் dēṅgudal, 5 செ.கு.வி. (v.i.) 1. நிறைதல்; to fill, become full, rise to the brim. “மதுவது தேங்கு கும்பம்” (திருப்பு.501);. 2. தங்குதல்; to stay, stagmate. “தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்” (கம்பரா. காட்சி. 21);. 3. மிகுதல் (வின்);; to be crowded, abundant, copious. [தெண்டுதல் = தெம்புதல், மேற்கிளப்புதல். தெண்டு → தெங்கு → தேங்கு. தேங்குதல் = உயர்தல், மிகுதல்] |
தேங்குதண்ணீர் | தேங்குதண்ணீர் dēṅgudaṇṇīr, பெ. (n.) தேங்கி நிற்கும் தண்ணீர்; stagnant water (சாஅக);. [தேங்கு + தண்ணீர்] |
தேங்குழற்செப்பு | தேங்குழற்செப்பு tēṅguḻṟceppu, பெ. (n.) தேங்குழல் பிழியுங் கருவி; cylindrical utensil for preparing__, மறுவ. தேங்குழல் அச்சு [தேன் + குழல் + செப்பு] |
தேங்குழலுரல் | தேங்குழலுரல் tēṅguḻlural, பெ. (n.) தேங்குழற் செப்பு பார்க்க;see__, [தேன் + குழல் + உரல்] |
தேங்குழலுழக்கு | தேங்குழலுழக்கு tēṅguḻluḻkku, பெ. (n.) தேங்குழற்செப்பு பார்க்க;see__, [தேங்குழல் + உழக்கு] |
தேங்குழல் | தேங்குழல் tēṅguḻl, பெ. (n.) பணியார வகை; a kind of vermicular confection made of rice paste. “பொரி தேங்குழ லப்பம்” (தனிப்பா. 2,75,189);. ம. தேங்குழல் [தேன் + குழல்] |
தேங்கைச்சுட்டுப்புகைத்துவிடு-தல் | தேங்கைச்சுட்டுப்புகைத்துவிடு-தல் dēṅgaiccuḍḍuppugaidduviḍudal, 20 செ.கு.வி (v.i.) தேங்காயைச் சுட்டு புகைகாட்டுதல்; exposing to the fumes of burnt coconut (சாஅக.);. |
தேசகாலம் | தேசகாலம் tēcakālam, பெ. (n.) குறிப்பிட்ட வேளை; பொழுது, சந்தி எனும் காலம்; particular time, day, evening and dusk (கல்வெ.);. |
தேசக்காவல் | தேசக்காவல்1 tēcakkāval, பெ. (n.) தாய் நாட்டைக் காவல் புரிகை; guarding the mother-land. [தேசம் + காவல்] தேசக்காவல்2 tēcakkāval, பெ. (n.) கொள்ளையரால் துன்பம் நேராதபடி இறையிலி நிலமளித்து நாட்டைக் காவல் புரியச் செய்யும் பழைய முறை; the ancient system of guarding a tract of country against marauders and compensating the person or persons employed for the purpose by grants of land rent free or by various fees or allowances (R.F.);. [தேசம் + காவல்] |
தேசதருமம் | தேசதருமம் dēcadarumam, பெ. (n.) தேசப்பழமை பார்க்க; __, [தேசம் + தருமம்] |
தேசத்தலைவர் | தேசத்தலைவர் tēcattalaivar, பெ. (n.) நாடு முழுதும் செல்வாக்குள்ள தலைவர்; national leader. [தேசம் + தலைவர்] |
தேசத்துரோகம் | தேசத்துரோகம் tēcatturōkam, பெ. (n.) நேசவஞ்சனை பார்க்க;see__, [தேசம் + துரோகம்] Skt. dhuroha → த. துரோகம் |
தேசத்துரோகி | தேசத்துரோகி tēcatturōki, பெ. (n.) நாட்டைக் காட்டிக் கொடுப்பவன், நாட்டுக்குத் தீமை செய்பவன்; traitor. த.வ. தாயகக்கயவன் |
தேசத்தொண்டன் | தேசத்தொண்டன் tēcattoṇṭaṉ, பெ. (n.) தேசப்பற்றாளன் பார்க்க;see__, [தேசம் + தொண்டன். தொண்டு – தொண்டன்] |
தேசத்தொண்டு | தேசத்தொண்டு tēcattoṇṭu, பெ. (n.) நாட்டு நலனை முன்னிறுத்திச் செய்யும் ஊழியம்; patriotrict service. விடுதலைப் போரில் தேசத் தொண்டே முன்னிறுத்தப்பட்டது. [தேசம் + தொண்டு] |
தேசபக்தன் | தேசபக்தன் tēcabaktaṉ, பெ. (n.) தேசப்பற்றாளி பார்க்க;__, [தேசம் + பக்தன். பத்தன் → பக்தன்] த.பத்தன் → Skt. bakta தேசபக்தன் tēcabaktaṉ, பெ. (n.) நாட்டின் மீது அதிகப் பற்றுடையவன்; patriot. விடுதலைப் போராட்ட காலத்தில் தேசபக்தர்கள் (நாட்டுப் பற்றுடையவர்கள்); நாடு கடத்தப்பட்டார்கள். |
தேசபக்தி | தேசபக்தி tēcabakti, பெ. (n.) தேசப்பற்று பார்க்க; __, [தேசம் + பக்தி. பத்தி → பக்தி] த. பத்தி → Skt. bakti தேசபக்தி tēcabakti, பெ. (n.) நாட்டுப்பற்று; patriotism, love for one’s country. |
தேசபண்டாரி | தேசபண்டாரி tēcabaṇṭāri, பெ. (n.) தெள்ளாறு எறிந்த நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று; name of __, [தேசம் + பண்டாரி’] |
தேசப்படம் | தேசப்படம் tēcappaḍam, பெ. (n.) நாட்டின் அரசியல், நில அமைப்பைக் காட்டும் படம்; map (of a country);. [தேசம் + படம்] தேசப்படம் tēcappaḍam, பெ. (n.) நாட்டின் அரசியல், நில அமைப்பைக் காட்டும் படம்; map (of a country);. த.வ. நாட்டுப்படம் |
தேசப்பண் | தேசப்பண் tēcappaṇ, பெ. (n.) தேசியப்பண் பார்க்க; __ மறுவ. நாட்டுப்பண் [தேசம் + பண்] |
தேசப்பற்றாளி | தேசப்பற்றாளி tēcappaṟṟāḷi, பெ. (n.) தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுடையவன்; patriotic person. விடுதலைப் போரிலிடுபட்ட தேசப்பற்றாளிகள் தனிமைச் சிறையிலடைக்கப் பட்டனர் (உ.வ.); [தேசம் + பற்றாளி] |
தேசப்பற்று | தேசப்பற்று tēcappaṟṟu, பெ. (n.) ஒருவர் தம் நாட்டு நலனிலும் வளர்ச்சியிலும் கடமையுணர்வோடிருக்கும் ஈடுபாடு; patriotism; love for one’s country. [தேசம் + பற்று] |
தேசப்பழமை | தேசப்பழமை tēcappaḻmai, பெ. (n.) நாட்டு வழக்கம் (யாழ்ப்.);; ancient or established customs or usages of a country. [தேசம் + பழமை] |
தேசமுகி | தேசமுகி tēcamugi, பெ. (n.) அரசிறையதிகாரி (யாழ்.அக.);; head of the revenue department. [Skt. {} + mukhya → த. தேசமுகி] |
தேசம் | தேசம் tēcam, பெ. (n.) 1. இடம்; place. காலதேச மறிந்து நடத்த வேண்டும். தேசங்கள்தோறும் மொழி (பாஷை);கள் வேறு (பழ);. 2. நாடு; country, province, territory, land, district. தேசமெல்லாம் புகழ்ந்தாடுங் கச்சி (திருவாச. 94);. தேசத்து நன்மை தீமை அரசர்க்கு இல்லையா?(பழ);. 3. நாவலந் தீவில் அமைந்த 56 தேசங்கள்; countries of ancient India, 56 in number. ம. தேசம் [துகு → திகு → திகை = முடிவு, எல்லை. திகைதல்=முடிதன், தீர்தல், தீர்மானமாதல், ‘மாதம் திகைந்த சூவி’, ‘அதன் விலை இன்னும் திகையவில்லை’ என்பது தென்னாட்டு வழக்கு. திகை → திசை = முடிவு, எல்லை, பக்கம். திசை → (தேக → தேசம்] திசை, தேசம் என்னும் சொற்கள் பக்கம் என்னும் பொருளில் வருதலை ‘அந்தத் திசைக்கே போக மாட்டேன்’ என்னும் தமிழ் வழக்காலும், ‘ஏகதேசம்’ என்னும் வடமொழி வழக்காலும் அறியலாம். ஏகதேசம் = ஒரு பக்கம், ஒரு பகுதி. தேசம் என்னும் சொல் முதலாவது எல்லையைக் குறித்து, பின்பு ஒர் எல்லையில் அல்லது பக்கத்தில் உள்ள நாட்டைக் குறித்தது. ஒநோ: சீமை = எல்லை, நாடு (முதா. 97); த. தேசம் → skt. 56 தேசங்களாவன அங்கம், அவந்தி, ஆந்திரம், ஆலயம், இடங்கணம், இலாடம் உகந்தரம், ஒட்டம், கடாரம், கருசம், கலிங்கம், கன்னடம், காசுமீரம், காந்தாரம், காம்போகம், கிராதம், குகுரம், குரு குளிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கோசலம், கெளடம், சவ்வீரம், சாதகம், சாலவம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சேரி, சோழம், சோனகம், திராவிடம், திரிகர்த்தம், துளுவம், நிடதம், நேபாளம், பப்பரம், பாஞ்சாலம், பாண்டியம், பாரசீகம், புளிந்தம், போடம், மகதம், மச்சம், மத்திரம், மராடம், மலையாளம், மாளவம், வங்கம், வங்காளம், விதர்ப்பம், விராடம், தேசம் tēcam, பெ. (n.) 1. நாடு; country. அவர் வாழ்நாள் முழுவதும் தேசத்திற்குத் தொண்டு செய்தார். 2. (நாட்டின்); பகுதி; பிரிவு; principality, land, region. எங்களுக்கு வடதேசம். |
தேசவழமை | தேசவழமை tēcavaḻmai, பெ. (n.) தேசப்பழமை பார்க்க;see__, [தேசம் + வழமை] |
தேசா | தேசா tēcā, பெ. (n.) ஒரு பண் (வின்);; a melody- type. [Skt. {} → த. தேசா] |
தேசாசாரம் | தேசாசாரம் tēcācāram, பெ. (n.) நாட்டு வழக்கம்; customs, usages and manners of a country. [Skt. {} → த. தேசாசாரம்] |
தேசாட்சரி | தேசாட்சரி tēcāṭcari, பெ. (n.) kind of node. |
தேசாதி | தேசாதி tēcāti, பெ, (n.) கவரையர் குலத்தலைவன் (வின்.);; chief of the Kavaraiyar Caste. |
தேசாதேசம் | தேசாதேசம் tēcātēcam, பெ. (n.) பற்பல நாடு; various countries. [தேசம் + தேசம்] |
தேசாந்தரம் | தேசாந்தரம் tēcāndaram, பெ. (n.) 1. அயல் நாடு; foreign country. 2. நிலநடுக்கோட்டின் தொலைவு; 3. நிலநடுக்கோட்டின் தொலைவை கணிப்புச் செய்ய உதவும் கணனபாகம் (வின்.);; |
தேசாந்தரரேகை | தேசாந்தரரேகை tēcāndararēkai, பெ. (n.) ஒருத்தியின் மங்கள நாண் (தாலி); வலிமையைக் குறிப்பதாகக் கருதப்படும் உள்ளங்கை வரி (இரேகை); வகை. (திருவாரூ.குற.);; a distinctive mark in the palm of a woman, believed to denote a long period of married life. |
தேசாந்திரம் | தேசாந்திரம் tēcāndiram, பெ. (n.) நோக்கம் எதுவுமின்றி நாட்டின் பல இடங்களுக்கும் தன் விருப்பப்படி செல்லும் பயணம்; moving about places free from responsibilities. தேசாந்திரம் போகிறேன் என்று கிழவர் கிளம்பிவிட்டார். (இ.வ.); |
தேசாபிமானம் | தேசாபிமானம் tēcāpimāṉam, பெ. (n.) தாய் (நாட்டுப்); பற்று; love of one’s country. [Skt. {} → த. தேசாபிமானம்] |
தேசி | தேசி tēci, பெ. (n.) அழகி; beautiful women. “தேசியைச் சிறையில் வைத்தான்” (கம்பரா. அங்கத. 4);. [உல் → துல் → துள் → தொள் → தோள் → தோய் → தேய் → தேசு → தேசி] |
தேசிகன் | தேசிகன் tēcigaṉ, பெ. (n.) 1. குரு (பிங்.);; spiritual teacher preceptor. “முன்னர்த் தேசிகர்ப் பிழைத்து” (கம்பரா.மிதிலை.109);. 2. சிவணிய (சிவ);ச் சமய (சைவம்); குருக்கள் வகுப்பினருள் ஒரு சாரான்; title of a section of Non-Brahmin briestly caste. “வாய்மைதரு தியாகராச தேசிகனே” (இலக்.பி.பதிகம்);. 3 மடாதிபதிக்கு வழங்கும் பட்டப் பெயர்; title of the head of a mutt. “அம்பலவாண தேசிகன்” (மீனாட்.பிர. ஸ்ரீஅம்.பிள்.1);. 4. தந்தை (பிதா.);; father. “தேசிகன் வரங்குறை படுத்திடா” (காஞ்சிப்பு. இரேணு.13); 5. மனம் போன போக்கில் சுற்றித் திரிபவன் (தேசாந்தரி); (பிங்.);; traveller, wanderer, foreigner. 6. வணிகன் (பிங்.);; merchant. 7. வேதாந்த தேசிகர்;a {}. 8. ஆசிரியன் (உபாத்தி யாயன்);; teacher. “எங்கள் தேசிகனடிப்பான்” (பெரியபு. திருமுறைகண்டபு.5);. [Skt. {} → த. தேசிகன்] |
தேசிகப்பாடு | தேசிகப்பாடு tēcigappāṭu, பெ. (n.) நாட்டில் நிகழும் வழக்கப்படி, வெளிநாடுகளில் இருந்து வருவோர்க்குத் திருக்கோயில்களில் ஒரு வேளை உணவு அளிக்கச் செய்யும் ஏற்பாடு; custom of supplying one time food for those who come from foreign countries. “விண்ணகோவரையர் வைத்த தானம் நிசதி நாநாழி அரிசி தேசிகப்பாடு கொடுப்போ மானோம்” (தெகதொ. 12, 1, 42);. |
தேசிகப்பிரபந்தம் | தேசிகப்பிரபந்தம் tēcigabbirabandam, பெ. (n.) வேதாந்த தேசிகர் தமிழில் இயற்றிய பனுவல் (பிரபந்தம்); தொகுதி; Tamil poems composed by {}. [Skt. {}+pra-bandha → த. தேசிகப்பிரபந்தம்] |
தேசிகம் | தேசிகம்1 tēcigam, பெ. (n.) 1. அவ்வந்நாட்டுச் சொல்; provincialism, local idiom, word peculiar to a province. 2. அயல்நாட்டுச் சொல்; foreign terms introduced into a language. “தேசிகச் சொல்லோடு செறிவட மொழியினை” (பி.வி.2,உரை);. 3. இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என இசைப்பாடல்களில் வரும் சொற்பயன்பாடு (சிலப்.3:47, உரை);; 4. கூத்துவகை (அக.நி.);; a kind of dance. 5. சிந்தகம் (இந்துத்தானி); போன்ற அயல் நாட்டுப்பண்; foreign melody-type as Hindustani. [Skt. {} → த. தேசிகம்] தேசிகம்2 tēcigam, பெ. (n.) 1. ஒளி; light, lustre, brightness. “பல்லினைத் தேசிகம் படத்துடைத்து” (சீவக.1480);. 2. பொன் (பிங்.);; gold. 3. அழகு (பிங்.);; beauty. [Skt. {} → த. தேசிகம்2] |
தேசியகீதம் | தேசியகீதம் tēciyaātam, பெ. (n.) தேசியப் பண் பார்க்க;see__, [தேசம் → தேசியம் + கீதம்] |
தேசியக்கொடி | தேசியக்கொடி tēciyakkoḍi, பெ. (n.) ஒரு நாட்டுக்குரிய அடையாளக்கொடி; national flag. மூவண்ணக் கொடியாகிய நமது தேசியக் கொடியைக் காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறுமணி வரை மட்டுமே பறக்கவிடவேண்டும். [தேசம் → தேசியம் + கொடி.] |
தேசியச்சின்னம் | தேசியச்சின்னம் tēciyacciṉṉam, பெ. (n.) நாட்டை அடையாளப்படுத்தற்குக் கையாளப் படும் கொடி, பண் முதலியன; national flag, national anthem etc., to mark as an emblem of a country [தேசம் → தேசியம் + சின்னம்] |
தேசியத்தலைவர் | தேசியத்தலைவர் tēciyattalaivar, பெ. (n.) தேசத்தலைவர் பார்க்க;see__, [தேசம் → தேசியம் + தலைவர்] |
தேசியப்பண் | தேசியப்பண் tēciyappaṇ, பெ. (n.) நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவதும், நாட்டுச் சின்னமாக விளங்குவதுமாகிய பாடல்; national anthem. விழாமுடிவில் சேதியப்பண் இசைக்கப்பட்டது. மறுவ, நாட்டுப்பண் [தேசம் → தேசியம் + பண்] |
தேசியப்பறவை | தேசியப்பறவை tēciyappaṟavai, பெ. (n.) ஒரு நாட்டுக்குரியதாக அறிவிக்கப்படும் பறவை; national bird. மயில் நமது நாட்டின் தேசியப் பறவை. [தேசம் → தேசியம் + பறவை] |
தேசியமலர் | தேசியமலர் tēciyamalar, பெ. (n.) ஒரு நாட்டிற்குரியதாக அறிவிக்கப்படும் பூ; national flower. தாமரைப்பூ நமது நாட்டின் தேசிய மலர். [தேசம் → தேசியம் + மலர்] |
தேசியமாணவர்ப்படை | தேசியமாணவர்ப்படை tēciyamāṇavarppaḍai, பெ. (n.) படைப்பயிற்சி பெறும் மாணவ இளைஞர் படை; national cadet corps (NCC);. [தேசியம் + மாணவர் + படை] |
தேசியம் | தேசியம் tēciyam, பெ. (n.) 1. நாட்டின் முழுமையையும் ஒற்றுமையையும் நோக்கமாகவுடைய போக்கு; nationalism. முன்னைப் பிரிவினைக்காரர்கள் இன்று தேசியம் பேசுகின்றனர். 2. ஒர் இனமக்கள் தங்கள் தனித்துவத்தை வலியுறுத்தி அரசியலில் தனியுரிமைகோரும் போக்கு; nationalism advocated by ethnic groups. 3. நாடு முழுவதற்கும் உரியது அல்லது நாடு முழுவதையும் சார்ந்தது; that which belongs to the nation. தேசியக்கொடி, தேசியப்பண் [தேசம் → தேசியம்] |
தேசியவியக்கம் | தேசியவியக்கம் tēciyaviyakkam, பெ. (n.) நாட்டின் நலன் கருதி இயங்கும் இயக்கம்; national movement. மொழிவளர்ச்சிக்குத் தேசியவியக்கம் தேவை. [தேசம் → தேசியம் + இயக்கம்] |
தேசியவிலங்கு | தேசியவிலங்கு tēciyavilaṅgu, பெ. (n.) ஒரு நாட்டுக்குரியதாக அறிவிக்கப்படும் விலங்கு; national animal. புலி நமது நாட்டின் தேசிய விலங்கு. [தேசம் → தேசியம் + விலங்கு] |
தேசுகொள் | தேசுகொள் tēcugoḷ, பெ.எ. (adj.) புகழாகிய ஒளியைக் கொண்டுள்ள; live so gloriously with fame. “செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோராஜ கேஸரிவர்மரான பூர்ராஜராஜ தேவர்க்கு” (தெக.தொ.31, 4); [தேச + கொள்] |
தேசூரஞ்சு | தேசூரஞ்சு tēcūrañju, பெ. (n.) 1. வேட்டியின் ஒரத்தில் அமைக்குங் கரைவகை; a kind of straight broder of red colour about one or more inches in breadth, woven along the selvedge of men’s cloths. |
தேசூரான்வேட்டி | தேசூரான்வேட்டி tēcūrāṉvēṭṭi, பெ. (n.) காஞ்சீபுரம் பட்டுக்கரை வேட்டி; cloth with crushed-strawberry-coloured silk broder. |
தேசோமயம் | தேசோமயம் tēcōmayam, பெ. (n.) 1. பேரொளி; splendour, light, brilliance. “அறிவான தெய்வமே தேசோமயானந்தமே” (தாயு. தேசோ.);. 2. அழகு (யாழ்.அக.);; beauty. [Skt. {}-maya → த. தேசோமயம்] |
தேடாக்கி | தேடாக்கி tēṭākki, பெ.(n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantangi Taluk. [தோடு-தேடு+ஆக்கி] தேடாக்கி tēṭākki, பெ.(n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantangi Taluk. [தோடு-தேடு+ஆக்கி] |
தேடாக்கூறு | தேடாக்கூறு tēṭākāṟu, பெ.(n.) பேணாமை (யாழ்ப்.);; lack of support, neglected condition. [தேடு + ஆ + கூறு. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தேடாத்தேட்டம் | தேடாத்தேட்டம் tēṭāttēṭṭam, பெ. (n.) பெருமுயற்சி அல்லது தீயவழியா லீட்டிய பொருள் (வின்.);; acquisition by unparalleled labour or by unworthy and unjust means. [தேடு + ஆ + தேட்டம். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தேடி | தேடி tēṭi, பெ. (n.) அதிவிடயம்; atis. “தேடித் தீந்தேன் றிப்பிலி” (சீவக. 2703);. |
தேடித்தின்(னு)-தல் | தேடித்தின்(னு)-தல் dēṭiddiṉṉudal, செ.குன்றாவி. (v.t.) 1. அற்றை நாளீட்டிய பொருளான் வாழ்வு நடத்தல் (இ.வ);; to live from hand to mouth. 2. பரத்தமையாய் வாழ்தல் (வின்.);; to live by whoredom. மறுவ. அன்றாடங்காய்ச்சி [தேடு → தேடி + தின்.] |
தேடிப்பிடி-த்தல் | தேடிப்பிடி-த்தல் tēḍippiḍittal, 4 செ.குன்றாவி. (v.i.) 1. கண்டுபிடித்தல்; to search. 2. கள்ளக் கணவளைப் பெறுதல்; to procure a paramour. ம. தேடிப்பிடிக்குக [தேடி + பிடி-.] |
தேடியதேட்டம் | தேடியதேட்டம் tēṭiyatēṭṭam, பெ. (n.) தாமே ஈட்டிய செல்வம் (யாழ்ப்.);; self acquired property. [தேடு → தேடி + தேட்டம்] |
தேடியாடித்திரி-தல் | தேடியாடித்திரி-தல் dēṭiyāṭiddiridal, 3 செ.கு.வி. (v.i.) தேடியோடித்திரி-தல், பார்க்க;see__,(செ.அக);. [தேடி + ஆடி + திரி-.] |
தேடியோடித்திரி-தல் | தேடியோடித்திரி-தல் dēṭiyōṭiddiridal, 3.செ.குவி (v.i.) பெருமுயற்சி செய்தல்; to make great efforts. [தேடி + ஒடி + திரி.] |
தேடிவை-த்தல் | தேடிவை-த்தல் tēṭivaittal, 4 செ.குன்றாவி. (v.t.) பெருள் சேர்த்து வைத்தல்; to earn and lay up. [தேடி + வை-.] |
தேடு | தேடு1 dēṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. துருவி நாடுதல்; to seek, search for, enquire after. “தேடினே னாடிக்கண்டேன்” (தேவா. 1189, 3);. தேடித் தின்றவர் தெய்வத்தோ டொத்தவர் (பழ.);. 2. ஈட்டுதல்; to acquire, earn, procure. “பாடுபட்டுத் தேடி” (நல்வழி,22);. தேடிய மூலிகை காலில் தட்டினாற்போல (பழ.);. 3. பேணல்; to take care of, cherish, foster, provide for. அவனை ஒருவருந் தேடுவாரில்லை (உ.வ.);, தேடுவார் அற்றபிணம் தெருவோடு (பழ.);. ம. தேடுக; குட. தெட்;துட. தொட்க் [தோண்டு → தேண்டு → தேடு.] ஒ.நோ.;தோண்டு – தேண்டு – தேடு. தேடுதல் – தோண்டுதல் – தோண்டிப் பார்த்தாற் போன் தேடுதல். தேடிப்பார்த்தல் (வே.க. 287);] தேடு2 dēṭudal, 5 செ.கு.வி. (v.i.) முயலல்; to seek, try, as to do a thing. “கோயிலுக்கு எழுந்தருளத் தேட” (குருபரம். 511);. தேடிப் புதைத்துத் தெருவில் இருக்கிறதா? (பழ.);. தேடு3 tēṭu, பெ. (n.) மீன்வகை; a fish. தேட்டுத் துண்டம் (நாஞ்);. ம. தேடு |
தேடுகூலி | தேடுகூலி tēṭuāli, பெ. (n.) ஆவணம் முதலியவற்றைத் துருவிக் கண்டெடுத்தற் குரிய கூலி; search fee, paid for searching a document in a record office (செ.அ.க.);. [தேடு + கூலி] |
தேட்கடி | தேட்கடி tēḍkaḍi, பெ. (n.) தேட்கொட்டு பார்க்க;see__, [தேள் + கடி] |
தேட்கடை | தேட்கடை1 tēḍkaḍai, பெ. (n.) 1. குருகு விண்மீன் (மூலம்); (பிங்.);; 19th __, 2. பூடு வகை (மூஅ.);; a medicinal plant [தேள் + கடை] |
தேட்கடைப்பூண் | தேட்கடைப்பூண் tēḍkaḍaippūṇ, பெ. (n.) தேட்கொடுக்கி பார்க்க;see__, (சாஅக);. |
தேட்குமச்சி | தேட்குமச்சி tēṭkumacci, பெ. (n.) தேக்குடிச்சி பார்க்க;see__, (தமி.சொஅக.);. |
தேட்கெண்டை | தேட்கெண்டை tēṭkeṇṭai, பெ. (n.) ஐந்து விரல நீளம் வளரும் கடல்மீன் வகை (யாழ்.அக);; sea-fish, olive, attaining 5 inch in length. [தேன் + கெண்டை] |
தேட்கொடுக்கி | தேட்கொடுக்கி tēḍkoḍukki, பெ. (n.) 1. சிறு செடி வகை (பதார்த்த 263);; turnsole. 2. செடி வகை; tiger’s claw. [தேள் + கொடுக்கி] |
தேட்கொடுக்கு | தேட்கொடுக்கு tēḍkoḍukku, பெ. (n.) தேளின் வாலிலுள்ள கொடுக்கு; scorpion sting. [தேள் + கொடுக்கு] |
தேட்கொட்டான் | தேட்கொட்டான் tēṭkoṭṭāṉ, பெ. (n.) பனையிலையிலுள்ளதும் தீண்டினால் தேள்நஞ்சுபோற் கடுப்பை உண்டாக்குவதுமான பூச்சிவகை (இவ);; a green insect whose touch produces the same sensation as scorpion – sting found on palmyra leaves. [தேன் + கொட்டான்] |
தேட்கொட்டு | தேட்கொட்டு tēṭkoṭṭu, பெ. (n.) கொடுக்கு முனையால் தேள் குத்துகை; stinging of a scorpion thrust of a scorpion’s sting. [தேன் + கொட்டு] |
தேட்டக்காரன் | தேட்டக்காரன் tēṭṭakkāraṉ, பெ. (n.) 1. வருவாயுள்ளவன்; person who has amassed riches. 2.திருடன்; thief, pick pocket [தேட்டம் + காரன்] |
தேட்டாக்கூறு | தேட்டாக்கூறு tēṭṭākāṟu, பெ. (n.) தேடாக்கூறு பார்க்க;see__, [தேடு + ஆ + கூறு] |
தேட்டாண்மை | தேட்டாண்மை1 tēṭṭāṇmai, பெ. (n.) ஈட்டம்; earning, as of wealth. “தேட்டாண்மை செய்வாய்” (அருட்பா. 1, தெஞ்சறி 377);. [தேடு → தேட்டு + ஆண்மை. ஆள்+மை – ஆண்மை] |
தேட்டாமரம் | தேட்டாமரம் tēṭṭāmaram, பெ. (n.) மர வகைகளுள் ஒன்று; a kind of tree. கூரைக்கை, தூண்கள் இவற்றிற்குப் பயன்படும் மரம். |
தேட்டாறு | தேட்டாறு tēṭṭāṟu, பெ. (n.) கால்நடை நோய் வகை; a disease of cattle. |
தேட்டாளன் | தேட்டாளன்1 tēṭṭāḷaṉ, பெ. (n.) வருவாயுள்ளவன்; thriving, wealthy person. “தேட்டாளன் காயற்றுரை சீதக்காதி” (தனிப்பா. 238, 8);. 2.. புதல்வன் (இ.வ.); : Son. [தேட்டு + ஆளன்] தேட்டாளன்2 tēṭṭāḷaṉ, பெ. (n.) உழைப்பாளி; labour. ம. தேட்டாளன் (வேடன்); [தேட்டு + ஆளன்] |
தேட்டு | தேட்டு tēṭṭu, பெ. (n.) 1. விருப்பம்; eamest desire. “தேட்டறுஞ் சிந்தை திகைப்பறும்” (திருமந் 2745);. 2. வருவாய் ஈட்டுகை; earning. “தேட்டற்ற தேட்டமே” (தாயு. தேசோ. 5);. 3. துருவிக் கொள்ளுகை;seeking. “தேட்டருந் திறற் றேனினை” (திவ். பெருமாள் 2);. 4. சாப்பாடு முதலியவற்றின் நிறைவு (சம்பிரமம்);; richness, as of dinner. 5. பேணுகை (வின்);; supporting. [தேடு → தேட்டு] |
தேட்டுண் | தேட்டுண் tēṭṭuṇ, பெ. (n.) வருமானம் (சம்பாத்தியம்);; earnings. “தேட்டுணு மெங்கள் குடியிருப்பும்… எல்லாம் போச்சுது” (தெய்வச். விறவிவிடு. 499);. [தேடு + ஊண்] |
தேட்டை | தேட்டை1 tēṭṭai, பெ. (n.) தேட்டம் பார்க்க;see__, தேட்டை2 tēṭṭai, பெ. (n.) தெளிந்த மோர்; clear butter milk (சாஅக);. தேட்டை3 tēṭṭai, பெ (n.) 1. தெளிவு; clearness. transparancy. 2. தெளிந் நீர் (வின்.);; clear water. 3. உயர்ந்த்து; that which is superior. அதற்கு இது தேட்டை (இ.வ.); |
தேட்படை | தேட்படை tēḍpaḍai, பெ. (n.) கொம்பரக்கு; stic lac (சாஅக);. |
தேணிறம் | தேணிறம் tēṇiṟam, பெ. (n.) மாந்தளிர்க் கல் (யாழ்அக);; a kind of green stone. மறுவ. கற்காவி [தேள் + திறம்] |
தேண்டு-தல் | தேண்டு-தல் dēṇṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) தேடு-1 பார்க்க;see__, “தேண்டிநேர் கண்டேன் வாழி” (கம்பரா. உருக்காட்டு.77);. [தேடு + தேண்டு-] |
தேண்மண்டலி | தேண்மண்டலி tēṇmaṇṭali, பெ. (n.) தேள் மண்டலி பார்க்க;see__, [தேன் → தேண் + மண்டலி] |
தேதாவெனல் | தேதாவெனல் tētāveṉal, பெ. (n.) இசைக் குறிப்பு; onom. expr. of humming the syllables தே, தா in a tune. “தேதாவென வண்டொடு தேன் வரிசெய்ய” (சீவக 1066);. [தேதா + எனல்] |
தேதி | தேதி tēti, பெ. (n.) மாதத்தின் ஒரு பகுதியாகிய நாள்; date, day of the month. “மாசித் திங்களில் முதற்றேகியில்” (சீவக.493,உரை);. த.வ. பக்கல் [Skt. tithi → த. தேதி] |
தேதிமழை | தேதிமழை tētimaḻai, பெ. (n.) ஐந்திய நூலில் (பஞ்சாங்கம்); குறிப்பிட்டுள்ள நாளிற் பெய்யும் மழை (உ.வ.);; rain that falls on the date specified in the calendar. த.வ. பக்கல்மழை [Skt. tithi → த. தேதி + மழை] |
தேது | தேது tētu, பெ. (n.) தேது பார்க்க;see__, ‘தேதெரி பாங்கையி லேந்தி” (தேவா 892, 4);. தெ. தேசு |
தேதேயெனல் | தேதேயெனல் tētēyeṉal, பெ. (n.) இசை குறிப்பு; onom. expr, of humming the syllables தே, தே in a tune. “அஞ்சிறைவண்டு தண்டேன் பருகித் தேதேயெனுந் தில்லையோன்” (திருக்கோ. .82);. [தேதே + எனல்] |
தேத்தடை | தேத்தடை tēttaḍai, பெ. (n.) தேத்திறால் பார்க்க;see__, “தேத்தடைத் திரள் கிழிந் தசும்பறா வரை” (தணிகைப்பு.நாட்டு. 14);. [தேம் + அத்து + அடை] |
தேத்தா | தேத்தா tēttā, பெ. (n.) ஒரு வகை மரம் (யாழ்ப்.);; a kind of tree. |
தேத்தான் | தேத்தான் tēttāṉ, பெ. (n.) 1. தேத்தான் கொட்டை பார்க்க;see__, 2. கழற்சிக்காய், molucca bean (சாஅக);. |
தேத்தான்கொட்டை | தேத்தான்கொட்டை tēttāṉkoṭṭai, பெ. (n.) மருந்துக்குப் பயன்படும் தேற்றா மரத்தின் கொட்டை; seed of the water clearing tree (சாஅக.);. [தேத்தான் + கொட்டை. தேற்றான் → தேத்தான்] |
தேத்தாலடி-த்தல் | தேத்தாலடி-த்தல் tēttālaḍittal, 4 செ.கு.வி. (v.i.) பலவிடத்தும் மலிவாக விற்றல்; to be available everywhere at a nominal price. கத்தரிக்காய் தெருவெல்லாந் தேத்தா லடிக்கிறது. (நாஞ்); ம. தேத்தலடிக்குக |
தேத்தி | தேத்தி tētti, பெ. (n.) தேத்தான்கொட்டை பார்க்க;see__,(சாஅக.);. |
தேத்தியன் | தேத்தியன் tēttiyaṉ, பெ. (n.) தேத்தான் பார்க்க;see__,(சாஅக.);. |
தேத்திறால் | தேத்திறால் tēttiṟāl, பெ. (n.) தேனிறால் (தொல் எழுத்து 344, உரை);; honeycomb. [தேன் → தேம் → தேத் + இறால்] |
தேத்துக்காலி | தேத்துக்காலி tēttukkāli, பெ. (n.) அடங்காதவன்-ன்; vagabond, loafer. [தேம் + காலி → தேத்துக்காலி] |
தேத்துலை | தேத்துலை tēttulai, பெ. (n.) பாறை மீன்; kind of fish called__, |
தேத்துவாளை | தேத்துவாளை tēttuvāḷai, பெ. (n.) வாளை மீன் வகையுள் ஒன்று; kind of fish in __, species. [தேம் → தேத்து + வானை] |
தேத்தெலே | தேத்தெலே tēttelē, பெ. (n.) ஒரு மீன் வகை (மீனவ.);; a kind of fish. |
தேநவரை | தேநவரை tēnavarai, பெ. (n.) ஐந்துவிரல நீளம் வரை வளரும் நவரை மீன் வகை; red mullet, chestnut, attaining 5 inch in length. [தேம்’ + தவரை] |
தேநீர் | தேநீர் tēnīr, பெ. (n.) தேனில் நீரைக் கலந்து குடிக்குமொரு பருகம்; a drink of honey mixed Water. [தேன் + நீர்] |
தேந்தம் | தேந்தம் tēndam, பெ. (n.) குதிரைச்சுழி வகை; a mark in horses. “பிறப்புவகை வளருந்தேந் தம்” (தஞ்சர. iii, 117);. |
தேந்தலை | தேந்தலை tēndalai, பெ. (n.) 1. செத்தை பார்க்க;see__, 2. தேங்குழல் (தஞ்சை); பார்க்க;see__, |
தேந்தே மெனல் | தேந்தே மெனல் tēndēmeṉal, பெ. (n.) இசைக்குறிப்பு, onom. expr. of the sound of a drum, “தேந்தேமென்னு மணிமுழவமும்” (சீவக 292);. [தேம் + தேம் + எனல்] |
தேனகக்குடிச்சி | தேனகக்குடிச்சி tēṉagagguḍicci, பெ. (n.) கதண்டுக்கல்; stone in the head of wild beetle (சாஅக.);. புதையலைக் கண்டுபிடிக்கும் மந்திரத்தில் இதைப் பயன்படுத்துவர். |
தேனகம் | தேனகம் tēṉagam, பெ. (n.) 1. மராமரம்: common soul. 2. ஒருவகைக் கடம்பு; white Indian oak (சாஅக.);. |
தேனஞ்சு | தேனஞ்சு tēṉañju, பெ. (n.) ஐயமுதம் (பஞ்சாமிர்தம்);; mixture of five delicious substances. “தேனஞ்சாடிய தெங்கிள நீரொடு”(தேவா. 1020,10);. [தேன் + (ஐந்து); → அஞ்சு] |
தேனடை | தேனடை tēṉaḍai, பெ. (n.) தேனிறால் பார்க்க: see ம. தேனட, தேன்தட்டு, க. சேனகுட்டி [தேன் + அடை] |
தேனத்தி | தேனத்தி tēṉatti, பெ. (n.) சீமையத்தி: common cultivated fig (செஅக.);. [தேன் + அத்தி] இம்மரத்தின் பழத்திலிருந்து தேன் போன்ற நீர்மம் எடுக்கப்படுவதால் இப்பெயர் பெற்றது. |
தேனன் | தேனன் tēṉaṉ, பெ. (n.) திருடன் (சூடா);; thief, robber. [ஏய் → ஏய்ப்பபு = ஏமாற்றுகை. ஏய் → ஏயம் = தள்ளத்தக்கது. ஏயம் → தேயம் = கனவு. தேய → தேயன் → தேனன்] த. தேனன் → Skt. {} தேயம்4 பார்க்க |
தேனம் | தேனம் tēṉam, பெ. (n.) கடல் (யாழ்.அக);: ocean (செஅக);. |
தேனம்பாறை | தேனம்பாறை tēṉambāṟai, பெ. (n.) ஒருவகை மீன்; a kind of fish. குறிப்பிட்டதொரு மீன் அதன் உரு அல்லது வளர்ச்சி நிலைக்கேற்ப வெவ்வேறு பெயர் பெறும் கொம்புப் பாறை, சேங்கடாப் பாறை, செம்பாறை என வெவ்வேறு பெயர் பெறும் இம்மீன். |
தேனருவி | தேனருவி tēṉaruvi, பெ. (n.) குற்றால மலையின் மேலருவி (குற்றா. குற. 52);; the highest of the three sacred water falls at {} [தேன் + அருவி] |
தேனலை | தேனலை tēṉalai, பெ. (n.) மரக்கலத்தைக் கடற்பரப்பிலுதைத்துச் செலுத்துதற்கேது வான கடலலை (மீனவ.);; tides which helps the boat to go easily. [தேன் + அலை, தேன் = இனிமை, தேன் அவை = இனிமையாக அல்லது எனிமையாக (மரக்கலத்தை);ச் செலுத்த உதவும் அவை] |
தேனழி-த்தல் | தேனழி-த்தல் tēṉaḻittal, 4 செ.குவி. (v.i.) தேன் கூட்டைக் கலைத்துத் தேன் கொள்ளுதல்: to take honey from a bee-hive, driving away the bees. ‘தேனிழைத்த என்றதனானே தேனழிக்க வருவாராலும்’ (அகநா. 18, உரை);. [தேன் + அழி-.] |
தேனவரை | தேனவரை tēṉavarai, பெ. (n.) தேநவரை பார்க்க; see [தேன் + நாவரை, தேம் → தேன்] |
தேனாயி | தேனாயி tēṉāyi, பெ. (n.) தேனீக்கள் போலுஞ் சேமிக்கும் பழக்கமுடையவர் (தஞ்சைமீனவ);: people who saves money like bees. |
தேனார்மொழியம்மை | தேனார்மொழியம்மை tēṉārmoḻiyammai, பெ. (n.) திருக்குடந்தைக்காரோணத்திலே கோயில் கொண்டிருக்கும் தேவியின் பெயர்: names of Goddess abode in {} temple. |
தேனி | தேனி2 tēṉi, பெ. (n.) ஒரு மாவட்டத் தலைநகர்: district head-quarter. வையையாற்றின் துணையாறான தேனியாற்றின் கரையில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. தேனி3 tēṉi, பெ. (n.) 1. கடுரோகினி (மலை);: black hellebore. 2. கொத்துமல்லி; corriander (சாஅக.);, |
தேனி-த்தல் | தேனி-த்தல் tēṉittal, 4 செகுவி (v.i.) 1. இனித்தல்; to be sweet. 2.. மகிழ்தல்; to be happy. ‘கேசவன்பேரிட்டு நீங்க டேனித்திருமினோ” (திவ்..பெரியாழ் 4. 6:1);. [துல் → (தெல்); → தென் = (தெளிவு, கள்); இனிமை, தென் → தேன் = தெளிவு, கள், மது, தேன் → தேம் → தீம் → தீவு = இனிமை, தேன் → தேனி. தேனித்தல் = இனித்தல் (முதா. 145);] |
தேனிகா | தேனிகா tēṉikā, பெ. (n.) தேனி பார்க்க; see (சாஅக);, |
தேனிகை | தேனிகை tēṉigai, பெ. (n.) கொத்துமல்லி: corriander. [தேனி1 – தேனிகை] |
தேனிட்டகலவை | தேனிட்டகலவை tēṉiṭṭagalavai, பெ. (n.) பல மருந்துகள் சேர்ந்த கலப்பு மருந்தைத் தேனில் கட்டிவைக்க; mixture of different medicines with purified honey (சாஅக.);. [தேன் + இட்ட + கலவை] |
தேனிரும்பு | தேனிரும்பு tēṉirumbu, பெ. (n.) உயர்ந்த இரும்பு; superior iron. [தேன் + இரும்பு] |
தேனிறக்கு-தல் | தேனிறக்கு-தல் dēṉiṟakkudal, 5 செ.குவி (v.i.) தேனழி-த்தல் பார்க்க: see [தேன் + இறக்கு-.] |
தேனிறம் | தேனிறம் tēṉiṟam, பெ. (n.) மாந்துளிர்க்கல்: red ochre (சாஅக.);. மறுவ, கற்காவி [தேன் + திறம்] |
தேனிறாட்டு | தேனிறாட்டு tēṉiṟāṭṭu, பெ. (n.) தேனிறால் பார்க்க: see |
தேனிறால் | தேனிறால் tēṉiṟāl, பெ. (n.) தேனைச் சேர்த்து வைக்க மெழுகால் தேனிக்கள் செய்யும் கூடு: honey-comb. “நறும்பழம்.பெருந்தேனிறாஅல் கீறு நாடன்” (ஐங்குறு.214);, [தேன் + இறால்] |
தேனிலிட்டமருந்து | தேனிலிட்டமருந்து tēṉiliṭṭamarundu, பெ. (n.) தேனிலிட்டு வைத்த இஞ்சி முதலியன: medicines or any drug preserved in honey as greenginger (சாஅக.);. [தேனில் + இட்ட + மருத்து] |
தேனிலுண்ணல் | தேனிலுண்ணல் tēṉiluṇṇal, பெ. (n.) நல்ல தேனில் மருந்தைக் குழைத்து உட் கொள்ளுகை; taking medicine steped in purified honey in the proportion of 18 (சாஅக.);. [தேனில் + உண்ணல் ‘அல்’ தொ.பொறு] |
தேனிலையான் | தேனிலையான் tēṉilaiyāṉ, பெ. (n.) தேனி. (யாழ்அக); பார்க்க :see [தேன் + திலை + ஆன்] |
தேனிழை-த்தல் | தேனிழை-த்தல் tēṉiḻaittal, 4 செ.கு.வி. (v.i.) தேன்கூடு கட்டுதல்; to construct a bee-hive. “தேனிழைத்த கோடுயர் நெடுவரை” (அகநா. 18);. [தேன் + இழை-] |
தேனிவாதுமை | தேனிவாதுமை tēṉivātumai, பெ. (n.) தித்திப்பு வாதுமை; sweet almond (சாஅக.);. |
தேனீ | தேனீ tēṉī, பெ. (n.) தேன் தொகுக்கும் ஈ: honey bee. “மலைநாட வுய்த் தீட்டுந் தேனீக்கரி” (நாலடி, 10);. 2. தேன் கூட்டும் வண்டு: honey bee. ம. தேநீச்ச; க. சேனு நொண; கோண். தேனெ. பர். தீனி; குரு தீந்: மா. தெனி [தேன் + ஈ = தேனீ] |
தேனீக்குடிக்கீரனார் | தேனீக்குடிக்கீரனார் tēṉīkkuḍikāraṉār, பெ. (n.) கடைக்கழகப் புலவர்களுள் ஒருவர்; a poet, one among last {} (இருநூ);, [தேனீக்குடி + கீரனார்] |
தேனீக்கூடு | தேனீக்கூடு tēṉīkāṭu, பெ. (n.) தேன் வண்டுக் கூடு; honey bag; bee hives (சாஅக.);. ம. தேனீச்சக்கூடு [தேன் + ஈ + கூடு = தேனீக்கூடு] |
தேனீயிரைப்பை | தேனீயிரைப்பை tēṉīyiraippai, பெ. (n.) தேனீக்கூடு பார்க்க; see (சாஅக.);. [தேனி + இரைப்பை] |
தேனு | தேனு tēṉu, பெ. (n.) களவு (சூடா.);; robbery (செஅக);. தேனு1 tēṉu, பெ. (n.) 1. ஆன்; cow. 2. எருமை; buffalo. 3. குதிரை; horse. 4. கறவை ஆன்; milch cow. [p] தேனு2 tēṉu, பெ. (n.) களவு (சூடா.);; theft, robbery. [Skt. {} → த. தேனு] |
தேனுகன் | தேனுகன் tēṉugaṉ, பெ. (n.) கண்ணனால் கொல்லப்பட்ட ஓர் அகரன்; an Asura slain by Kannan. “தேனுகன் பிலம்பன் காளியனென்னும்” (திவ் பெரியாழ். தேதி: 3,6,4);. |
தேனுகம் | தேனுகம்1 tēṉugam, பெ. (n.) பெண் யானை (யாழ்அக.);; female elephant தேனுகம்2 tēṉugam, பெ. (n.) 1. மிளகு நங்கை; pepper mangay. 2. கொத்துமல்லி; coriander (சாஅக.);. |
தேனுகாரி | தேனுகாரி tēṉukāri, பெ. (n.) கண்ணன்: Kannan, as the foe of Dhenuka. |
தேனுண்ணி | தேனுண்ணி tēṉuṇṇi, பெ. (n.) தேனைக் குடிக்கும் பறவை: honey eater (சாஅக);. [தேன் + உண்ணி] |
தேனுமுத்திரை | தேனுமுத்திரை tēṉumuttirai, பெ. (n.) கை முத்திரை; a hand pose. “தேனு முத்திரையுங் காட்டி” (வாயுங்சங்கிவவோம 7);. |
தேனுறிஞ்சி | தேனுறிஞ்சி tēṉuṟiñji, பெ. (n.) தேனை உறிஞ்சும் ஒரு வகைப் பறவை; honey sucker (சாஅக);. [தேன் + உறிஞ்சி] |
தேனுறு-தல் | தேனுறு-தல் dēṉuṟudal, 5 செ.கு.வி. (v.i.) இனிமையாதல்; to be honey sweet. “என்னுள்ளந் தேனுாறி யெப்பொழுதுத் தித்திக்குமே” (திவ்பெரிதி.7:4:5);. [தேன் + ஊறு-.] |
தேனெய் | தேனெய் tēṉey, பெ. (n.) தேன்: honey. “தேனெய்யொடு கிழங்குமாறி யோர்” (பொருத.26); (செஅக.);. [தேன் + நெய்] |
தேனெறும்பு | தேனெறும்பு tēṉeṟumbu, பெ. (n.) 1. பெரிய எறும்பு வகை; a large emmet, as found of Sweet things. 2. நஞ்சுள்ள எறும்பு வகை; a small poisonous ant. ம. தேனுறும்பு [தேன் + எறும்பு] |
தேனோடைப்பழம் | தேனோடைப்பழம் tēṉōṭaippaḻm, பெ. (n.) நாகரப்பழம் பார்க்க; see (சாஅக.);, |
தேன் | தேன் tēṉ, பெ. (n.) எரிவண்டு; blistering fly (சாஅக.);. [தேள் + ஈ] தேள் கொட்டியதைப் போன்ற எரிச்சல் உண்டாக்குவதால் இப்பெயர். தேன் tēṉ, பெ. (n.) 1. மது: honey. “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறியநீர்” (குறள், 1121);. தேன் உள்ள இடத்தில் ஈ மொய்க்கும் (பழ.);. 2. கள் (சூடா);; toddy. 3. இனிமை, Sweetness. “தேனுறை தமிழும்” (கல்லா. 9);. தேனே போலும் செந்தமிழ்க் கல்வி (பழ.);. 4. இனிப்புச் சாறு sweet juice, “ஆலைவாய்க் கரும்பின் றேனும்” (கம்பரா. நாட் 9);. 5. மணம் (சூடா);; fragrance, odour. “அகிற்புகையளைந்து தேனளாய்ப் பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்” (குனா. குமர, 17);. 6. வண்டு வகை (திவா.);; a kind of beetle or bee. 7. பெண்வண்டு (சூடா);; a female beetle orbee, “தேனோ டினவண்டுழு பூந்தெரியலாய்” (உபதேசகா. சூராதி. 4);. 8. தேனிறால்; honey. Comb “தீந்தே னெடுப்பி” (ஜங்குறு. 272);. ம.கோத தேன்; க தேனு, சேனு: தெ தேனெ: து. தீய; குட. தேனி; துட தோன்; கொலா, நா. தேனெ; பர். தீன்நெய்; கட தீன், தீனு: மா. தெனி; பிரா. கனேன்; பட சேனு Pkt. {} [தெல் → தென் → தேன்] தேன் என்னும் சொல்லின் வேர்ப்பொருள் தெளிவு (தெளிந்தது); என்பதே தேன் என்னும் சொல் தெளிவு என்னும் வேர்ப்பொருள் கொண்ட தென்சொல் லென்றும்; அது முறையே தேம் → தீம் → தீவு எனத் திரியுமென்றும்; தீ என்னும் பகுதி இரட்டிக்குமிடத்துத் தித்தி என மருவிப் புணருமென்றும் தமிழ்ச் சொற்களைத் தமிழடிப்படையாகவே ஆய்தல் வேண்டு மென்றும் பண்டைத் தனித்தமிழ் நூல்களும் பல்லாயிரக்கணக்கான தென்சொற்களும் மறைந்து, இன்றுள்ள இலக்கண நூல்களும் விளங்காதவிடத்து, மொழித் திறத்தின் முட்டறுப்பது மொழிநூலேயென்றும் கள், மது என்னும் சொற்கள் மயக்குவது என்பதை வேர்ப்பொருளாகக் கொண்ட தென் சொற்களென்றும் தமிழே திரவிடமாகத் திரிந்துள்ளதென்றும்; வடமொழியில் வழங்குத் துணையானே ஒரு சொல் வடசொல்லாகிவிடாதென்றும் தெற்றெனத் தெரிந்து கொள்க (குயில், 258.1959);. வகைகள் 1. கொம்புத் தேன் 2. கொசுத்தேன் 3. பாகுத் தேன் 4. கதண்டுத் தேன் 5. மலைத் தேன். 6. மரப்பொந்துத்தேன் 7. புற்றுத் தேன் 8. மனைத் தேன் 9. இறால் தேன் 10. குறிஞ்சித் தேன் 11. சிறுதேன் 12. பெருந்தேன் (சாஅக.); |
தேன்கடல் | தேன்கடல் tēṉkaḍal, பெ. (n.) கட்கடல்; sea of toddy. [தேன் + கடன்] |
தேன்கட்டை | தேன்கட்டை tēṉkaṭṭai, பெ. (n.) யானை நெரிஞ்சில்; elephant caltrope (சாஅக.);. |
தேன்கதலி | தேன்கதலி dēṉkadali, பெ. (n.) வாழை வகை (மூஅ);; a kind of plantain. ம. தேன்கதளி [தேன் + கதலி] |
தேன்கற்கண்டு | தேன்கற்கண்டு tēṉkaṟkaṇṭu, பெ. (n.) இறுகிய தேன்கட்டி (பதார்த்த. 190);; crystalline honeySugar. [தேன் + கல் + கண்டு] |
தேன்கற்பம் | தேன்கற்பம் tēṉkaṟpam, பெ. (n.) தேனை மண்ணில் புதைத்து வைத்துக் கட்டியான வுடன் எடுத்து முறைப்படிக் கொள்ளும் காயமருந்து; honey crystallised by keeping it burried under the earth and then taken but for use in rejuvenating medicine (சாஅக.);. [தேன் + கற்பம்] |
தேன்கல் | தேன்கல் tēṉkal, பெ. (n.) திருமணி (கோமேதகம்);; cinnamon stone. |தேன் + கல். தேன் போலும் வெளிர் மஞ்சள் நிறமுடைய கல்மணி] |
தேன்களிம்பு | தேன்களிம்பு tēṉkaḷimbu, பெ. (n.) தேன்மெழுகு: bces-wax [தேன் + களிம்பு] |
தேன்காய் | தேன்காய் tēṉkāy, பெ. (n.) 1. தேன்பச்சை பார்க்க: see 2. தேன்பூச்சிக்காய் பார்க்க; see (சாஅக);. [தேன் + காய்] |
தேன்குடுக்கை | தேன்குடுக்கை tēṉkuḍukkai, பெ. (n.) தேன் அடைத்துவைத்திருக்கும் மூங்கிற்கூடு: bamboo container for storing honey. [தேன் + குடுக்கை] |
தேன்குழல் | தேன்குழல் tēṉkuḻl, பெ. (n.) உளுத்தமா, அரிசிமாவினால் முறுக்குப் போலச் செய்யப்படும் சிற்றுண்டி வகை; a preparation made out of the flours of black gram and rice in the proportion of E4 and ghee. “தேன் குழ லுக்காரி வடையிலட்டுகம்” (விநாயகபு. 39, 39);. ம. தேன்குழல் [தேன் + குழல்] |
தேன்குழாய் | தேன்குழாய்1 tēṉkuḻāy, பெ. (n.) தேன்குழல் (மூ.அ.); பார்க்க;{} [தேன் + குழாய்] தேன்குழாய்2 tēṉkuḻāy, பெ. (n.) தேனீ கட்டும் மெழுகினால் செய்த கூண்டு; bee-hive made of wax (சாஅக);. [தேன் + குழாய்] |
தேன்கூடு | தேன்கூடு tēṉāṭu, பெ. (n.) 1. தேனிறால்: honey comb. 2. தேன்கூட்டின் உள்ளறை (வின்);; cells in a bee-hive. 3. தேனித் தங்கும் கூடு (வின்);; bee-hive. ம. தேன்கூடு;க. சேனுகூடு [தேன் + கூடு] |
தேன்கூட்டுக்கட்டு | தேன்கூட்டுக்கட்டு tēṉāṭṭukkaṭṭu, பெ. (n.) தேன்கூடு போன்று இடைவெளி விட்டு 4 1/2 விரல அகலத்தில் சுற்றுச் சுவராக அமையும் கட்டுமானம்; place built like a bee hive, learning 41/2 inches in breath in the circular wall; honey-comb wall. [தேன் + கூடு + கட்டு] |
தேன்சிட்டு | தேன்சிட்டு tēṉciṭṭu, பெ. (n.) தேன்நிறமுள்ள சிட்டுக்கருவி; a sparrow of the colour of honey (சாஅக.);. [தேன் + சிட்டு] |
தேன்சுவைமருந்து | தேன்சுவைமருந்து tēṉcuvaimarundu, பெ. (n.) தேனைப் போலச் சுவையுடைய மருந்து: any medicine which has the consistence and sweetness as honey (சாஅக.);. [தேன் + சுவை + மருத்து] |
தேன்சேரான் | தேன்சேரான் tēṉcērāṉ, பெ. (n.) சேங்கொட்டை வகை; glabrous marking nut. |
தேன்தட்டு | தேன்தட்டு tēṉtaṭṭu, பெ. (n.) தேனடை: honey comb (சேரநா.);. ம. தேன்தட்டு [தேன் + தட்டு] |
தேன்தொடை | தேன்தொடை tēṉtoḍai, பெ. (n.) தேன்தோடம் பழம் பார்க்க; see [தேன் + தொடை] |
தேன்தோடம்பழம் | தேன்தோடம்பழம் tēṉtōṭambaḻm, பெ. (n.) தித்திப்புக் கிச்சிலி: Sweet orange (சாஅக.);. [தேன் + தோடம் + பழம்] |
தேன்தோடை | தேன்தோடை tēṉtōṭai, பெ. (n.) தேன்றோடை பார்க்க; see |
தேன்பச்சை | தேன்பச்சை tēṉpaccai, பெ. (n.) அக்கமணி (உருத்திராக்க); மரம்: honey fruit tree (சாஅக.);. [தேன் + பச்சை] |
தேன்பதமாய்க்காய்ச்சு-தல் | தேன்பதமாய்க்காய்ச்சு-தல் dēṉpadamāykkāyccudal, 5 செகுன்றாவி (v.t.) தேனைப் போல் சிவந்த பாகுபதமாய்க் காய்ச்சுதல்; boiling a liquid till it attains the colour and the consistency of honey (சாஅக.);. [தேன் + பதம் + ஆய் + காய்ச்சு-.] |
தேன்பயில்பொதும்பு | தேன்பயில்பொதும்பு dēṉpayilpodumbu, பெ. (n.) தேன் கூடுகள் நிறைந்த வளமான சோலை; grove where bee-hives are found in large amount .”மீன் பயில் பள்ளமும் தேன் பயில் பொதும்பும்” (பெரிய லெப்டன் செப்பேடுகள்); [தேன் + பயில் + பொதும்பு] |
தேன்பருந்து | தேன்பருந்து tēṉparundu, பெ. (n.) பருந்து வகை; crested honey buzzard (செஅக.);. [தேன் + பருத்து] |
தேன்பலா | தேன்பலா tēṉpalā, பெ. (n.) தேனொழுகும் பலாப்பழம்; honey dripping common jack fruit (சாஅக.);. [தேன் + பலா] |
தேன்பாகு | தேன்பாகு tēṉpāku, பெ. (n.) தேனைப் போன்ற வெல்லப்பாகு அதாவது வைப்புத் தேன்; an artificial honey like syrup prepared from sugar or jaggery (சாஅக.);. [தேன் + பாகு] |
தேன்பாசி | தேன்பாசி tēṉpāci, பெ. (n.) கடற்பாசி; sea weed (சாஅக.);. [தேன் + பாசி] |
தேன்பிராக்கு | தேன்பிராக்கு tēṉpirākku, பெ. (n.) சேரான் கொட்டை; marking nut (சாஅக.);. |
தேன்பூ | தேன்பூ tēṉpū, பெ. (n.) தீன்யூ பார்க்க; see (சாஅக.);. ம. தேன்பு [தேன் + பூ] |
தேன்பூச்சிக்காய் | தேன்பூச்சிக்காய் tēṉpūccikkāy, பெ. (n.) தூண் மரத்தின் காய்; fruit of white cedar tree (சாஅக.);. |
தேன்பூச்சிமரம் | தேன்பூச்சிமரம் tēṉpūccimaram, பெ. (n.) ஆயா பார்க்க: See {} |
தேன்மண்டலம் | தேன்மண்டலம் tēṉmaṇṭalam, பெ. (n.) கொண்டலாந்தி மரம்; a tree (சாஅக);. |
தேன்மரம் | தேன்மரம் tēṉmaram, பெ. (n.) நுனாமரம் (இங்வை); பார்க்க; see (செஅக);. [தேன் + மரம்] |
தேன்மிருதிகம் | தேன்மிருதிகம் dēṉmirudigam, பெ. (n.) சாறாயம்; honey coloured liquior or spiritbrandy. [தேன் + மிருதிகம்] |
தேன்முளரி | தேன்முளரி tēṉmuḷari, பெ. (n.) சருக்கரை அல்லது தேன் கலந்து பக்குவப்படுத்தியமுளரி (ரோசாப்பூ இதழ் (குல்கந்து);; a confection of rose prepared in sugar or honey candied TOSE. [தேன்+முளரி] |
தேன்மெழுகு | தேன்மெழுகு tēṉmeḻugu, பெ. (n.) தேனடையிலுள்ள மெழுகு: bees-wax ம. தேன்மெழுகு [தேன் + மெழுகு] |
தேன்மெழுகு முறை | தேன்மெழுகு முறை tēṉmeḻukumuṟai, பெ.(n.) செப்புப் படிமங்கள் செய்யும் முறைகளில் ஒன்று; a method of making bronze statues. [தேன்+மெழுகு+முறை] தேன்மெழுகு முறை tēṉmeḻugumuṟai, பெ.(n.) செப்புப் படிமங்கள் செய்யும் முறை களில் ஒன்று; a method of making bronze statues. [தேன்+மெழுகு+முறை] |
தேன்மொழி | தேன்மொழி tēṉmoḻi, பெ. (n.) 1. தேன் போன்ற இனிமையான பேச்சு; words as sweet as honey. தென்மொழிதேன்மொழி 2. இனிய மொழியை உடையவள்; a woman of sweet words. ம. தேன்மொழி [தேன் + மொழி] |
தேன்றாடு | தேன்றாடு tēṉṟāṭu, பெ. (n.) தேனிறால் (நாஞ்); பார்க்க; see |
தேன்றோடம் | தேன்றோடம் tēṉṟōṭam, பெ. (n.) தித்திப் பெலுமிச்சை; sweet lime (செஅக.);. [தேன் + தோடம்] |
தேன்றோடை | தேன்றோடை tēṉṟōṭai, பெ. (n.) கிச்சிலி வகை: mandarin orange (செஅக.);. |
தேன்வதை | தேன்வதை dēṉvadai, பெ. (n.) தேன்கூடு (யாழ்ப்);; honey comb. [தேன்+ வதை. பதி = பதிவாயிருக்கும் இடம், வீடு, ஊர், நகர் பதி → வதி → வசி → வாசம் பதி → வதி → வதை] |
தேன்வளையல் | தேன்வளையல் tēṉvaḷaiyal, பெ. (n.) பூநீறு: efflorescent salt found in the soil of fuller’searth (சாஅக.);. |
தேபூசை | தேபூசை tēpūcai, பெ. (n.) கடவுள் பூசை; worship, reverent homage paid to god. தே பூசைமேற் கவனந் தீர்ந்துவிட்டேன் (விறலிவிடு.);. [தே + பூசை] |
தேப்பானை | தேப்பானை tēppāṉai, பெ. (n.) தேன் பெய்த பானை; pot containing honey (நன்213.மயிலை);. [தேன் + பானை – தேன்பானை → தேம்பானை → தேப்பானை] |
தேப்புல் | தேப்புல் tēppul, பெ. (n.) தேயிலைப் புல் அல்லது கன்னாரிப்புல்; tea-grass. [தே + புல்] |
தேப்பெருமாள் | தேப்பெருமாள் tēpperumāḷ, பெ. (n.) காஞ்சிபுரத்திற் கோயில் கொண்டுள்ள திருமால்; __, as worshipped at Kanjipuram. [தே3 + பெருமாள்] |
தேப்பை | தேப்பை tēppai, பெ. (n.) தெப்பம்; raft. ‘பிறவிநீர்க் கடலை நீந்துநற் றேப்பையாம்” (மேருமந். 1201);. |
தேமணி | தேமணி tēmaṇi, பெ. (n.) தெய்வமணி-3 பார்க்க;see__, [தே + மணி] |
தேமனம் | தேமனம்1 tēmaṉam, பெ. (n.) புளிப்பு; sourness (சாஅக);. தேமனம்2 tēmaṉam, பெ., (n.) துன்பம்; distress, |
தேமம் | தேமம் tēmam, பெ. (n.) ஈரம்; dampness (சாஅக.);. [தேம்3 → தேமம்] |
தேமல் | தேமல் tēmal, பெ. (n.) 1. கணக்கு; whitening of the skin with epithelial debris; yellow spreading spots about the breasts of women. 2. வெள்ளை நோய்; ringworm. 3. தோலைப்பற்றி வரும் நோய்வகை; fish-skin, a disease. ம. தேமல் [தேம்பு → தேமல்] |
தேமல்படர்-தல் | தேமல்படர்-தல் tēmalpaḍartal, 2 செ.கு.வி. (v.i.) உடம்பின்மேல் தேமல் உண்டாதல்; spreading of the yellow spots on the body (சாஅக.);. [தேமல் + படர்.] |
தேமல்முகம் | தேமல்முகம் tēmalmugam, பெ. (n.) தேமல் படர்ந்த முகம்; freckle face (சாஅக);. [தேமல் + முகம்] |
தேமா | தேமா2 tēmā, பெ. (n.) நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 4);; the technical term for the metrical foot of __, [தே + மா] |
தேமா’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
தேமாங்கனி | தேமாங்கனி tēmāṅgaṉi, பெ. (n.) நேர், நேர், நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 4);; a technical term for the metrical foot, of __, [தே + மா + கனி] |
தேமாங்காய் | தேமாங்காய்1 tēmāṅgāy, பெ. (n.) நேர், நேர், நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 4);; a technical term for the metrical foot of __, [தே + மா + காய்] தேமாங்காய்2 tēmāṅgāy, பெ. (n.) தேமாவின் காய்; sweet mango. ம. தேன்மாங்ங [தே + மாங்காய்] |
தேமாநறுநிழல் | தேமாநறுநிழல் tēmānaṟuniḻl, பெ. (n.) நேர் நேர் நிரை நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 5);; a technical term for the metrical foot __, [தே + மா + தறு + நிழல்] |
தேமாநறும்பூ | தேமாநறும்பூ tēmānaṟumbū, பெ. (n.). நேர் நேர் நிரை நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 5);; a technical term for the metrical foot of __, [தே + மா + நறும் + பூ] |
தேமாந்தண்ணிழல் | தேமாந்தண்ணிழல் tēmāndaṇṇiḻl, பெ. (n.) நேர் நேர் நேர் நிரை என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப்பு. 5);; a technical term for the metrical foot of __, [தே + மா + தண் + நிழல்] |
தேமாந்தண்பூ | தேமாந்தண்பூ tēmāndaṇpū, பெ. (n.) நேர் நேர் நேர் நேர் என்ற சீரைக் குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 5);; a technical term for the metrical foot __, [தே + மா + தண் + பூ] |
தேம் | தேம்1 tēm, பெ. (n.) 1. இனிமை; sweetness; pleasantness. “தேங்கொள் கண்ணம்” (சீவக. 12); 2. மணம் (பிங்.);; fragrance, odour. “தேங்கமழ் கோதை” (பு.வெ.127);. 3. தேன்; honey; “தேம்படு நல்வரை நாட” (நாலடி, 239);. 4. தேனீ; honey bee. “தேம்பாய் கடாத்தொடு” (பதிற்றுப். 53:17);. 5. கள் (சூடா.);; toddy. 6. மதம்; must of an elephant. “தேம்படு கவுள. யானை” (முல்லைப். 31);. 7. நெய்; oil. “தேங்கலந்து மணிநிறங் கொண்ட மாயிருங் குஞ்சியின்” (குறிஞ்சி. 111);. 8. தேமம் (இ.வ.); பார்க்க;see__, ம. தேம் [தேன் → தேம். ஒ.நோ. மேன்பாடு → மேம்பாடு] தேம்2 tēm, பெ. (n.) 1. இடம் (திவா);; place. 2. தேயம் (சூடா.);; land, country. “தெவ்வர் தேஎத்து” (புறநா.6);. 3. திக்கு; direction, quarter; “அவன் மறை தேஎ நோக்கி” (அகநா. 48);. 4. ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு (நன். 302);; a word used as locative case-suffix. [தேயம் → தேம்] தேம்3 tēm, பெ. (n.) ஈரம் (யாழ்.அக);; wetness. |
தேம்ப | தேம்ப tēmba, வி.எ. (adv.) புலர; to dawn. |
தேம்பல் | தேம்பல்1 tēmbal, பெ. (n.) 1. வாட்டம் (பிங்);; fading. being faded. 2. குறைந்த நிலை; reduced or diminished state. “தேம்ப வினமதியஞ் சூடிய சென்னியான்” (தேவா. 1017, 3);. 3. வருத்தம் (உவ);; difficulty. 4. பழம்பூ (பிங்.);; faded flower. 5. விம்மியழுகை; heaving sob. அவன் தேம்பலை நிறுத்து. [தேம்பு → தேம்பல்] தேம்பல்2 tēmbal, பெ. (n.) தேமல் பார்க்க;see__, [தேமல் → தேம்பல்] |
தேம்பா | தேம்பா tēmbā, பெ.எ. (adj.) 1. குறையாத; not decrease. 2. அழியாத, not ruined. 3. தேயாத; not wane. 4. சுருங்காத; not shrink. தேம்பாவணி வீரமாமுனிவரால் இயற்றப்பட்டது. |
தேம்பாரை | தேம்பாரை tēmbārai, பெ. (n.) சேரான் கொட்டை; marking nut (சாஅக.);. |
தேம்பாறை | தேம்பாறை tēmbāṟai, பெ. (n.) சேங்கொட்டை; marking nut. |
தேம்பாவணி | தேம்பாவணி tēmbāvaṇi, பெ. (n.) கிறித்துவின் தந்தை சூசையின் வரலாற்றைப் பற்றி வீரமாமுனிவர் 1726ஆம் ஆண்டில் பாடியதொரு தமிழ்ப் பாவியம்; an epic poem on the life of Joseph, the father of Christ, by Beschi @__,written in 1726 A.D. [தேம் + பா + அணி. தேம்பா + அணி எனலுமாம்] |
தேம்பிப்போ-தல் | தேம்பிப்போ-தல் tēmbippōtal, 8 செ.கு.வி. (v.i.) உலர்ந்து போதல்; become dry. [தேம்பல் → தேம்பு → தேம்பி + போ-.] |
தேம்பியழு-தல் | தேம்பியழு-தல் dēmbiyaḻudal, 1 செ.கு.வி. (v.i.) விம்மியழுதல்; to sob violently (சாஅக.);. [தேம்பி + அழு-.] |
தேம்பு-தல் | தேம்பு-தல் dēmbudal, 5 செ.கு.வி. (v.i.) 1. வாடுதல்; to fade; wither, droop; to be tired; to faint. “கொழும்பதிய குடிதேம்பிச் செழுங்கேளிர் நிழல்சேர” (மதுரைக் 167);. 2. மெலிதல்; to grow thin; to be emaciated. “ஆனாச் சிறுமைய விவளுந் தேம்பும்” (குறிஞ்சிப். 26);. 3. விம்மியழுதல்; to sob violently. “விழிநீர் மல்கவே நின்று தேம்பு மன்னே” (வெங்கைக்கோ. 329);. 4. வருந்துதல்; to be in trouble; to suffer. “அவாவினாற் றேம்புவார்” (கலித். 97);. 5. அழிதல்; to perish. “ஊடியார் நலந்தேம்ப” (கலித் 68);. 6. ஆண்டழிக்க உரியதாதல்; to be fit for enjoyment. “தேம்பூண் சுவைத்து” (திவ் இயற் பெரியதிருவ. 14);. ம. தேம்புக [தேம் + பு] |
தேயனம் | தேயனம் tēyaṉam, பெ. (n.) ஒளி; lustre, brilliance. “தேயனநாடராகித் தேவர்கடேவர் போலும்” (தேவா. 838, 2);. |
தேயன் | தேயன்1 tēyaṉ, பெ. (n.) ஊழ்கம் செய்யப் படுவோன் (சங்அக.);; one who is meditated upon தேயன்2 tēyaṉ, பெ. (n.) திருடுபவன்; thief. “இரும்பினைச் செம்பினைத் தேயனும்” (சிவதரு பாவ.94);. [தேயம் → தேயன்] |
தேயப்பகுதி | தேயப்பகுதி dēyappagudi, பெ. (n.) நாட்டின் ஒரு பகுதி (சுபா);; district of province, especially of the moghul empire. [தேயம்+பகுதி] |
தேயம் | தேயம்1 tēyam, பெ. (n.) தேசு பார்க்க;see__, “அரனம்பலம் போற்றேயத்ததாய்” (திருக்கோ. 39);. தேயம்2 tēyam, பெ. (n.) பொருள்; wealth. “தீரரா மவரே தேயத் தியாகஞ்செய் சீவன் முத்தர்” (ஞானவா. புண். 18);. தேயம்3 tēyam, பெ. (n.) 1. நாடு; country, land, district. “வரம்பிலா வுருவத்தா னெத்தேயத்தான்” (கம்பரா. மகரக்கண். 28);. 2. இடம்; place, location, room [திகைதல் – முடிதல், திகை – முடிவு, எல்லை, திசை. திகை → திசை → தேசம்] வடமொழியில் திசா என்னும் சொற்குத் ‘திச்’ என்பதை மூலமாகக் காட்டுவர். திச் – காட்டு Gk. deiknumi (to show);. இந்தியில் திக்கா என்னுஞ் சொல் காட்டுதலைக் குறிக்கின்றது. நோக்கு – தேக்கு (த.வி); – திக்கா (பி.வி.); இதற்கு மூலமான சூரசேனிச் சொல் கிரேக்க நாடு சென்று வேதமொழிக்கு வந்திருக்கலாம். வட மொழியிலுள்ள திக் என்னும் வடிவே திச் என்றும் திரிந்திருக்கலாம். அங்ஙனமாயின், தென் சொல்லும் வடசொல்லும் வெவ்வேறு வழியில் தோன்றினவாகும் (திம.745);. தேயம்4 tēyam, பெ. (n.) ஒகத்திற்குகந்தது; which is worthy of meditation, as god. “அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது” (கந்தபு. அவைபுகு 126);. தேயம்5 tēyam, பெ. (n.) களவு (சூடா.);; thert. [ஏய் → ஏப்ப்பு = ஏமாற்றுகை ஏய் ஏயம் = தன்னத்தக்கது. ஏயம் → தேயம்] த. தேயம் → Skt. |
தேயவியற்கை | தேயவியற்கை tēyaviyaṟkai, பெ. (n.) நாட்டு வழக்கம்; customs, usages and manners of a country, “உணர்வு மிகுதியானும் தேயவியற்கை யானும் அறியப்படுதலானும்” (குறள், பரிமே. உரைப்பா);. [தேயம் + இயற்கை] |
தேயாமணி | தேயாமணி tēyāmaṇi, பெ. (n.) வயிரம்; diamond so called from its notabilites hardness (சாஅக.);. [தேம் + ஆ + மணி] |
தேயாமண்டிலம் | தேயாமண்டிலம் tēyāmaṇṭilam, பெ. (n.) தேய்ந்து குறையாத கதிரவன் மண்டிலம்; disc of the sun, as never waning. தேயா மண்டிலங், காணுமாறு (பரிபா. 17:32);. [தேய் + ஆ + மண்டிலம். ஆ எதிர்மறை இடைநிலை] |
தேயாமதி | தேயாமதி dēyāmadi, பெ. (n.) முழுநிலவு; full moon. “தேயாமதி போல்” (மணிமே 27:137);. [தேய் + ஆ + மதி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தேயிலைக்கரண்டி | தேயிலைக்கரண்டி tēyilaikkaraṇṭi, பெ. (n.) தேக்கரண்டி பார்க்க;see__, [தேயிலை + கரண்டி] |
தேயு | தேயு1 tēyu, பெ. (n.) 1. நெருப்பு; fire. 2. நெருப்பினால் உடம்பிலேற்படும் செயல்கள்; the five actions of fire in the human system. 3. பசி; hunger. 4. சோர்வு; faintness. 5. அச்சம்; fear. 6. தூக்கம்; sleep. 7. கேள்வி; hearing. [தேய் → தேயு] தேயு2 tēyu, பெ. (n.) மயக்கம் (பிங்.);; bewilderment. [தேய் → தேயு] தேர்-தல் |
தேயுடலி | தேயுடலி tēyuḍali, பெ. (n.) தேவாங்கு பார்க்க;see__, [தேய் + உடலி] |
தேயுறை | தேயுறை tēyuṟai, பெ. (n.) தேய்க்கும் மருந்து; a medicine applied by rubbing. [தேய் + உறை] |
தேயுலிங்கம் | தேயுலிங்கம் tēyuliṅgam, பெ. (n.) ஐந்து இலிங்கங்களுள் தழல் வடிவினதாய்த் திருவண்ணாமலையிலுள்ள சிவலிங்கம்; the lingam at __, believed to be constituted of the fire-element, one of five lingam. [தேயு2 + லிங்கம். இலிங்கம் →- லிங்கம். தேயு – தீ] |
தேயுவின்கணம் | தேயுவின்கணம் tēyuviṉkaṇam, பெ. (n.) தீக்கணம் பார்க்க;see__, [தேயு + இன் + கணம். இன் இடைநிலை] |
தேயுவின்கூறு | தேயுவின்கூறு tēyuviṉāṟu, பெ. (n.) புறநிலைக் கருவி பதினொன்றனுள் தீயின் கூறான உணவு, தூக்கம், அச்சம், புணர்ச்சி, சோம்பல் என்பவை (சைவ.);; categories which partake of the nature of the fire element, five in number, viz. [தேயு + இன் + கூறு. இன் இடைநிலை] |
தேய் | தேய்1 tēytal, 2 செ.கு.வி. (v.i.) 1. உரைசுதல்; to wear away by friction; to be rubbed. 2. குறைதல்; to lessen, decrease, wane, as the moon; to waste away, as the oil in a burning lamp; to become exhausted. “தொடர்புந் தேயுமே நின்வயி னானே” (குறுந். 42);. தேய்ந்தாலும் சந்தனக்கட்டை மணம் போகாது (பழ.);. 3. மெலிதல்; to be emaciated; to grow thin, as achild. “சிவனேநின்று தேய்கின்றேன்” (திருவாச. 32, 8);. 4. வலிகுன்றுதல்; to become weakened. “அரம்பொருத பொன்போலத் தேயுமே” (குறள், 888);. 5. கழிதல்; to lapse, pass, wear away, as time. 6. அழிதல்; to be effaced, erased, obliterated by rubbing; to be destroyed. “தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்” (கலித். 103); 7. சாதல்; to die. “எம்பியோ தேய்ந்தான்” (கம்பரா. பாசப்.5);. ம. தேயுது; க. தேய்; தெ. தேயு; து. தேயுனி; பட. தேயி; |
தேய்கடை | தேய்கடை tēykaḍai, பெ. (n.) 1. தேய்ந்தது; that which is worn out, as an implement. 2. வளர்ச்சியற்றது; that which is stunted in growth. [தேய்வு → தேய்வடை → தேய்கடை] |
தேய்கடைப்பணம் | தேய்கடைப்பணம் tēykaḍaippaṇam, பெ. (n.) வழங்கித் தேய்ந்த காசு; coin worn out by use. [தேய்கடை + பணம்] |
தேய்கடைப்பிள்ளை | தேய்கடைப்பிள்ளை tēykaḍaippiḷḷai, பெ. (n.) 1. வளர்ச்சியில்லாத குழந்தை; child of stunted growth or dwarfish in size. 2. மெலிவடைந்த குழந்தை; an emaciated child. மறுவ. சவலைக் குழந்தை [தேம்கடை + பின்னை] |
தேய்கல் | தேய்கல் tēykal, பெ. (n.) உரைகல்; touch-stone (W);. ம. தேப்புகல்லு;தே. தேங்கல்லு [தேய் + கல்] |
தேய்க்கல் | தேய்க்கல் tēykkal, பெ. (n.) 1. தேக்கல் பார்க்க;see__, 2. தேய்க்குதல்; rubbing (சாஅக.);. |
தேய்ச்சுமாய்ச்சுப்போடு-தல் | தேய்ச்சுமாய்ச்சுப்போடு-தல் dēyccumāyccuppōṭudal, 19 செ.குன்றாவி. (v.t.) 1. பொருள் முதலியவற்றைச் சிறுகச் சிறுகச் செலவிட்டு வீணாக்குதல்; to waste gradually or little by little. 2. கடன் கொடுத்தவனுக்குப் பொந்திகை (திருப்தி);யில்லாமல் சிறிது சிறிதாகக் கொடுத்துக் கழித்தல்; to pay; as a debt, in such small sums as not to satisfy the creditor, 3. அழுத்தமின்றிச் செய்தல்; to do superficially, as a work. 4. அமுக்கிவிடுதல்; to hush up, as a crime. [தேய்ச்சு + மாய்ச்ச + போடு-.] |
தேய்தவளை | தேய்தவளை tēytavaḷai, பெ. (n.) தேரை பார்க்க;see__,(சாஅக);. [தேய்(ந்த); + தவளை] |
தேய்த்துக்குளி | தேய்த்துக்குளி1 tēyttukkuḷi, பெ. (n.) எண்ணெய்க் குளியல் (நாஞ்);; oil bath. ம. தேச்சுகுளி [தேய் → தேய்த்து + குளி] தேய்த்துக்குளி2 tēyttukkuḷittal, 4 செ.குன்றாவி. (v.t.) உடலைத் தேய்த்துக் குளித்தல்; to rub of body (சாஅக.);. ம. தேச்சுகுளிக்குக [தேய் → தேய்த்து + குளி] |
தேய்த்துக்கொள்ளு-தல் | தேய்த்துக்கொள்ளு-தல் dēyddukkoḷḷudal, 7 செ.குன்றாவி. (v.t.) 1. எண்ணெய்யை உடம்பிற் தேய்த்துன் கொள்ளல்; rub or smearing of oil on the body. 2. இரு பெண்டிர் தம்முடன் ஏற்படுத்திக் கொள்ளும் கலவி; to have an unnatural or immoral practice between women consisting in mutual friction of their genitals (சா.அக.);. [தேய்த்து + கொன்-.] |
தேய்த்துப்புரட்டு-தல் | தேய்த்துப்புரட்டு-தல் dēydduppuraṭṭudal, 8 செ.குன்றாவி. (v.t.) நெய்மமிட்டுக் கழுவுதல் (யாழ்ப்.);; to rub an ointment to wash oneself, as in bathing. [தேய்த்து + புரட்டு-.] |
தேய்த்துவிடு-தல் | தேய்த்துவிடு-தல் dēydduviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1. அழுக்கைத் தேய்த்து நீக்குதல்; to rub the dust. 2. உப்பைத் தளம் வைத்து வாரும் முறையில் முதலில் படிந்த உப்பை அளத்தோடு தேய்த்துவிடுதல்; to rub the salt, which in deposited first in the salt pan when scoop the salt from the floor (மீனவ.);. [தேய்த்து + விடு-.] |
தேய்ந்தபல் | தேய்ந்தபல் tēyndabal, பெ. (n.) குறைந்த பல்; worn out tooth (சாஅக.);. [தேய்த்த + பல்] |
தேய்ந்துமாய்ந்துபோ-தல் | தேய்ந்துமாய்ந்துபோ-தல் tēyndumāyndupōtal, 8 செ.குவி. (v.i.) கவலையால் உடல் மெலிவுறுதல்; to become emaciated with care; to pine. [தேய்ந்து + மாய்த்து + போ-.] |
தேய்பிறை | தேய்பிறை tēypiṟai, பெ. (n.) 1. குறைமதி; waning moon. “தேய்பிறையும் போல்” (திவ்திருவாய். 8,8,10);. 2. கரும் (கிருட்டிண);ப் பக்கம்; dark fortnight. ம. தேய்பிற, தேவற [தேய்1 + பிறை] |
தேய்பிறையிரும்பு | தேய்பிறையிரும்பு tēypiṟaiyirumbu, பெ. (n.) அரிவாள்; sickle, as a crescent-shaped iron instrument. “தேய்பிறை யிரும்பு தம்வலக்கை சேர்த்தினார்” (சீவக.55);. [தேய் + பிறை + இரும்பு] |
தேய்புரிபழங்கயிற்றனார் | தேய்புரிபழங்கயிற்றனார் tēypuripaḻṅkayiṟṟaṉār, பெ.(n.) கடைக்கழகப் புலவர்; a poet of sangam age. தேர்ச் சிற்பாசாரிகள் பெ.(n.); கம்மாளர் இனத்திலுள்ள ஒரு பிரிவினர்; a Sub caste of Kammālar. [தேர்+சிற்பம்+ஆசாரிகள்] தேய்புரிபழங்கயிற்றனார் tēyburibaḻṅgayiṟṟaṉār, பெ.(n.) கடைக்கழகப் புலவர் a poet of sangam age. |
தேய்ப்புக்கட்டை | தேய்ப்புக்கட்டை tēyppukkaṭṭai, பெ. (n.) சாந்து பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும், மரப்பலகையாலோ, தகரத்தாலோ ஆன கருவி; an instrument made of wood or tin to rub, after plaster the mortar. [தேய்ப்பு + கட்டை] |
தேய்ப்புக்கரணை | தேய்ப்புக்கரணை tēyppukkaraṇai, பெ. (n.) பூச்சு வேலைகளில் பயன்படும் கரணை; Small trowel used to plaster the mortar (கட்ட்ட);. ஒருகா. (கரண்டி → கரணை); [தேய்ப்பு + கரணை] |
தேய்ப்புக்கல் | தேய்ப்புக்கல் tēyppukkal, பெ. (n.) பூச்சு மண்ணைச் சுவரில் பூசிக் தேய்க்கப் பயன்படும் கல்; stone used for smearing the sand on the walls (கட்டட);. [தேய்ப்பு + கல்] |
தேய்ப்புணி | தேய்ப்புணி tēyppuṇi, பெ. (n.) செட்டுள்ளவன் (வின்.);; thrifty person (செஅக.); [தேம்1 → தேய்ப்பு + உணி] |
தேய்ப்புத்தாள் | தேய்ப்புத்தாள் tēypputtāḷ, பெ. (n.) உப்புத்தாள் (நாஞ்);; sand paper. ம. தேப்புதாள் [தேய்ப்பு + தாள்] |
தேய்ப்புப்பலகை | தேய்ப்புப்பலகை tēyppuppalagai, பெ. (n.) சாணை பிடிக்கும் பலகை (இவ.);; whetstone. ம. தேப்புபலக [தேய் → தேய்ப்பு + பலகை] |
தேய்ப்புமட்டப்பலகை | தேய்ப்புமட்டப்பலகை tēyppumaṭṭappalagai, பெ. (n.) மணியாகப் பலகை; mason’s smoothing plane. [தேய் + மட்டம் + பலகை] |
தேய்ப்பூணி | தேய்ப்பூணி tēyppūṇi, பெ. (n.) தேய்ப்புணி (வின்); பார்க்க;see__, [தேம்ப்புணி → தேம்ப்பூணி] |
தேய்மானக்காரன் | தேய்மானக்காரன் tēymāṉakkāraṉ, பெ. (n.) பிறர் செலவிற் வாழ்க்கை நடத்தும் இவறன்; parasite, sponge-cake. [தேய்மானம் + காரன்] |
தேய்மானம் | தேய்மானம் tēymāṉam, பெ. (n.) 1. தேய்வு; loss by wear and tear. 2. பொன்னை உரைத்தலால் உண்டாம் குறைவு; loss sustained in testing gold by rubbing on a touchstone. அந்த நகையில் தேய்மானம் மிகுதி (உவ.);. 3. சிக்கனம்; frugality, parsimony. 4. சோம்பல்; laziness ம. தேமானம்;க., தெ. தேமான [தேய் + மானம்] |
தேய்வாங்கு | தேய்வாங்கு tēyvāṅgu, பெ. (n.) தேவாங்கு பார்க்க;see__,(சாஅக.);. [தேவாங்கு → தேய்வங்கு] |
தேய்வு | தேய்வு tēyvu, பெ. (n.) 1. குறைபாடு; wearing away, lessening, abrasion, diminution, wasting. 2. கழிவு; disgrace, degradation. “தோற்றோர் தேய்வும்” (தொல்பொருள்.63);. 3. மெலிவு; emaciation. “பிரிவினாற் றேய்ந்த தேய்வு” (கம்பரா. முதற்போ. 108);. 4. அழிவு; decay, decline, downfall. “அரக்கர்தம் வருக்கந் தேய்வின்று நிரம்பியதென” (கம்பரா. கடிமன. 75);. 5. தேய்மானம் பார்க்க;see;__, 6. பல் தேய்வு; erosion of teeth. [தேய் + தேய்வு] |
தேய்வுக்கட்டை | தேய்வுக்கட்டை tēyvukkaṭṭai, பெ. (n.) தேய்ந்த சந்தனக் கட்டை (இவ.);; a piece of sandalwood worn out by trituration. [தேய்வு + கட்டை] |
தேய்வை | தேய்வை tēyvai, பெ. (n.) சந்தனக் குழம்பு; fragrant unguent from sandalwood, formed by trituration. “நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை” (திருமுருகு 33);. [தேய் → தேய்வு → தேய்வை] |
தேரகத்தி | தேரகத்தி tēragatti, பெ. (n.) தரகதி மரம்; large brahma’s baniyan rough leaf fig (சாஅக.);. [தேர் + அகத்தி] |
தேரகன் | தேரகன் tēragaṉ, பெ. (n.) தேர்ப்பாகன் (சது.); பார்க்க; see [தேர் + அகன்] |
தேரகம் | தேரகம்1 tēragam, பெ. (n.) செவ்வந்தி; red fig (சாஅக.);. [தேர் → தேரகம்] தேரகம்2 tēragam, பெ. (n.) வெண்ணிறமுள்ள சிறு கடல்மீன் வகை; whitebait, silvery. |
தேரடி | தேரடி tēraḍi, பெ. (n.) 1. தேர்முட்டி பார்க்க; see 2. தேர்க்சக்கரம்; wheel, as the support of the car. 3. திருமாவின் சக்கரப்படை; Discus weapon of {} “தேரடிக்கூர், வெம் படையாற் காப்பதூஉம்” (இலக்வி. 679, உரை); [தேர் + அடி] |
தேரடிச்சம்பாவனை | தேரடிச்சம்பாவனை tēraḍiccambāvaṉai, பெ. (n.) தேரடிப்பணம் பார்க்க; see |
தேரடிப்பணம் | தேரடிப்பணம் tēraḍippaṇam, பெ. (n.) 1. தேர்த் திருவிழாவன்று மாப்பிள்ளைக்குச் செய்யும் பரிசளிப்பு; present given by a person to his son-in-law on the day of car-festival. 2. தேர்த் திருவிழாவன்று தேர்த்தச்சன் தேர்க்கொற்றன் முதலியோர்க்கு வழங்கும் பரிசில்; present given on the day of car festival to the architect who finished the chariot and its driver. [தேரடி + பணம்] |
தேரணை | தேரணை tēraṇai, பெ. (n.) இன்புறத்தான்; black honey thorn (சாஅக.);. |
தேரனார் | தேரனார் tēraṉār, பெ. (n.) தேரையர் (அபிசிந்); பார்க்க; see |
தேரன் | தேரன் tēraṉ, பெ. (n.) தேரையர் பார்க்க; see (சாஅக.);. |
தேரம் | தேரம் tēram, பெ.(n.) நேரம் time. (நெ.வ. வ.சொ.);. [நேரம்-தேரம் (கொ.வ.); ] தேரம் tēram, பெ.(n.) நேரம் time. (நெ.வ. வ.சொ.);. [நேரம்-தேரம்(கொ.வ.);] |
தேரர் | தேரர் tērar, பெ. (n.) புத்தத் துறவி (பிட்சு);: buddha bhiksus. “தேர ரமணரை” (தேவா. 139, 111);. |
தேரறேர் | தேரறேர் tēraṟēr, பெ. (n.) காணல் நீர்; mirage, as of a phantom car. “மடமான்…தேரறேர்க் கோடல்” (கலித். 13,4);. [தேர் + அல் + தேர். ‘அல்’ எதிர்மறை வினை இடைநிலை] |
தேரலர் | தேரலர் tēralar, பெ. (n.) பகைவர்; foes, enemies [தேர் + அல் + அர்] |
தேரல் | தேரல் tēral, பெ. (n.) 1. தேன்; honey. 2. தேறுகை; recovery from illness (சாஅக.);. [தேர் → தேரல்] |
தேரழுந்துர் | தேரழுந்துர் tēraḻundur, பெ. (n.) சோழ நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில்; a place in {} which is in {} [தேர் + அழுத்தூர்] “திருவழுந்தூர்” எனவும் வழங்கப்படும். இது கம்பர் பிறந்தவூர் என்பர். |
தேராங்கிணி | தேராங்கிணி tērāṅgiṇi, பெ. (n.) தேராங்குணி பார்க்க; see |
தேராங்குனி | தேராங்குனி tērāṅguṉi, பெ. (n.) 8 விரல நீளம் வளர்வதும் வெண்மை நிறமுடையதுமான கடல்மீன் வகை; whitebait, silvery, attaining 8 inch in length |
தேராச்செய்கை | தேராச்செய்கை tērācceykai, பெ. (n.) ஆய்ந்துபாராத செயல்; incognizant activity. தேராச்செய்கை தீராத் துன்பம் (பழ.);. [தேர் + ஆ + செய்கை. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தேராணி | தேராணி tērāṇi, பெ. (n.) தேரின் அச்சாணி: linchpin of a chariot [தேர் + ஆணி] |
தேராதுதெளிதல், | தேராதுதெளிதல், dērādudeḷidal, பெ. (n.) ஆராயாது ஒன்றை மற்றொன்றாக உறுதி செய்கை; mistaking one object for another without investigation, as a post for a man. “தேராது தெளிதல் செண்டு வெளியில் ஒராது தறியை மகனென வுணர்தல்” (மணிமே 27.67);. [தேர் + ஆ + து + தெளி-. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை. ‘து’ வினையெச்சவிகுதி] |
தேராத்தாழை | தேராத்தாழை tērāttāḻai, பெ. (n.) கூத்தன் குதம்பை; a kind of screw pine (சாஅக);. |
தேரார் | தேரார் tērār, பெ. (n.) 1. அறிவிலி; the ignorant. 2. கீழ்மக்கள் (திவா.);; the low, the base. 3. பகைவர்; foes, enemies, [தேர் + ஆர்] |
தேராள் | தேராள் tērāḷ, பெ. (n.) 1. தேர்வீரன்: chariot warior. 2. தேர் இழுத்தற்கு அனுப்பும் ஆட்கள்: persons who are by custom, sent by the mirasdar, to drag temple cars. ம. தேராறி, தேராள் [தேர் + ஆன்] |
தேராவைக்காத்தான் | தேராவைக்காத்தான் tērāvaikkāttāṉ, பெ. (n.) உடல் அமைப்பில், சூடை மீன்போலும் காணக்கூடும் ஒரு கடல் மீன் (மீனவ);; a fish which resembles {} |
தேரி | தேரி tēri, பெ. (n.) 1. மணற்குன்று; sand hill. 2. மணற்றரை (நெல்லை);; sandy tract. ம. தேரி; க, தெவரி (மேட்டு நிலம்);; பட தெவரு (வரப்பு); [தேர்=உயரமான ஊர்தி. தேர் → தேரி] |
தேரிக்காட்டான் | தேரிக்காட்டான் tērikkāṭṭāṉ, பெ. (n.) பாலைவனப்பகுதியில் வாழ்பவன்; one who dwells in desert like place. [தேரி+காடு+ஆன்] தேரிக்காட்டான் tērikkāṭṭāṉ, பெ.(n.) பாலைவனப்பகுதியில் வாழ்பவன்; one who dwells in desert like place. [தேரி+காடு+ஆன்] |
தேரிடக்கியம் | தேரிடக்கியம் tēriḍakkiyam, பெ. (n.) தேர்க்கொடி பார்க்க; see [தேர் + இடக்கியம்] |
தேரிலைச்சி | தேரிலைச்சி tērilaicci, பெ. (n.) சத்தி சாரணை; diffuse hoyweed(சாஅக.);. |
தேரிவிளை | தேரிவிளை tēriviḷai, பெ.(n.) அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Agastheeswaram Taluk. [தேரி+விளை(மிளை);] தேரிவிளை tēriviḷai, பெ.(n.) அகத்தீசுவரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Agastheeswaram Taluk. [தேரி+விளை(மிளை);] |
தேருமச்சி | தேருமச்சி tērumacci, பெ. (n.) தேர் போன்ற மேலோட்டையுடைய சிறு நத்தை வகை; a kind of snail, as haiving a turbinate shell [தேர் + ஊமச்சி] |
தேரூர்சுவடு | தேரூர்சுவடு tērūrcuvaḍu, பெ. (n.) தேர் ஊர்ந்து சென்ற அடையாளம்; the track of a car. “தேனார் பொழுதிற் றிருந்தா தேநீ சிந்தைகொண் டேவே றுாரிற் போனார் தேரூர்சுவடு புதையல் வாழி” (வீரசோ.136, உரை);. [தேர் + ஊர் + சுவடு] |
தேரூர்ந்தசித்தியான் | தேரூர்ந்தசித்தியான் tērūrndasittiyāṉ, பெ. (n.) 1. சவர்க்காரம்; fuller’s earth. 2. சவர்க்காரக் கட்டி; soap prepared from fuller’s earth mixed with other ingredients(சாஅக);. |
தேரூழியம் | தேரூழியம் tērūḻiyam, பெ. (n.) கோயிற்றேரை இழுப்பதற்கு ஊர்வாரியாக ஆள்களைத் திரட்டி அனுப்பும் ஊழியம்; service where by each village is required to provide a fixed quota of men to drag the great temple cars [தேர் + ஊழியம்] |
தேரெழுத்தாணி | தேரெழுத்தாணி tēreḻuttāṇi, பெ. (n.) தேருருவான கொண்டையுள்ள எழுத்தாணி வகை (வின்.);; style having a turbinate head [தேர் + எழுத்து + ஆணி] |
தேரை | தேரை tērai, பெ. (n.) 1. தவளை (பிங்.);; frog. “அவ்வழித் தேரை தினப்படலோம்பு” (கலித் 147. 32);. தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல (பழ.);. 2. தவளை வகை; Indian load. “தேரையார் தெங்கிளநீருண்ணார் பழிசுமப்பர்” (தமிழ்நா. 74);. தேரை மோந்த தேங்காய் போல (பழ.);. 3. துண்டிலிலுணவு; fish bait. “தூண்டிலி னுட் பொதிந்த தேரையும்” (திரிகடு 24);. 4. தேங்காய் நோய் வகை (சீவக. 1024, உரை);; coconut blight. 4. கல்லில் ஒடுங் கோட்டுக் குற்றம்; a defect of stone consisting of a granular line. “தேரை சிம்புள் சிலம்பி” (தத்துவப் 109);. ம. தேர |
தேரைகுடி-த்தல் | தேரைகுடி-த்தல் tēraiguḍittal, பெ. (n.) 4 செ.குவி. (v.i.); தேங்காயின் உள்ளீடு கெடுதல் (யாழ்ப்);; to be blighted and eaten up, as coconuts. [தேரை + குடி-.] |
தேரைக்கணம் | தேரைக்கணம் tēraikkaṇam, பெ. (n.) குழந்தைகளுக்கேற்படும் ஒருவகைக் கணை நோய்; a congenital disease in children(சாஅக.);. [தேரை + கணம்] |
தேரைக்கால்கை | தேரைக்கால்கை tēraikkālkai, பெ. (n.) தேரை தீண்டலினால் குச்சியைப் போல் இளைத்துப் போன கால் வகைகள்; kind of legs of children, emaciated through disease (சாஅக.);. [தேரை + கால் + கை] |
தேரைக்குண்டி | தேரைக்குண்டி tēraikkuṇṭi, பெ. (n.) 1. நோயினால் இளைத்த பிட்டம்; buttocks losing its roundity from disease. 2. சரத் தொட்டி; flat buttocks (சாஅக.);. |
தேரைக்குற்றம் | தேரைக்குற்றம் tēraikkuṟṟam, பெ. (n.) உடம்புலர்ந்து, வற்றி, வெளுத்து, கண் பொடித்து, கை கால் வற்றி, மேல் மூச்சு வாங்கி, நெரிகுரல் பட்டுத் தேரையைப் போலச் சுருங்கிக் குழந்தையைக் கொல்லும் ஒரு நோய்; a fatal disease in childhood said to be due to trammission of infection caused by the Indian toad falling and secreting its urine on them(சாஅக.);. [தேரை + குற்றம்] |
தேரைச்சூரணம் | தேரைச்சூரணம் tēraiccūraṇam, பெ. (n.) தேரையை உலர்த்தி அரைக்கும் பொடி; a fine powder prepared from the Indian toad(சாஅக);. [தேரை + சூரணம்] மருத்துவக் குணமுடையது. |
தேரைத்தேங்காய் | தேரைத்தேங்காய் tēraittēṅgāy, பெ. (n.) தேரைநோய் விழுந்த தேங்காய்; blighted coconuts. [தேரை + தேங்காய்] “தேரையார் தெங்கிளநீ ருண்ணார் பழி சுமப்பர்” தேரைக்கும் இந்நோய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாவிட்டாலும், தேரையின் பெயரே அந்நோய்க்குச் சூட்டப்பட்டது. செய்யாத் தவற்றுக்கு ஒருவர் பழி சுமப்பதற்கு இதனை உவமையாகக் கூறுவர். |
தேரைத்தோசம் | தேரைத்தோசம் tēraittōcam, பெ. (n.) தேரைக்குற்றம் பார்க்க; see [தேரை + தோசம்] |
தேரைபாய்-தல் | தேரைபாய்-தல் tēraipāytal, 3 செ.குவி. (v.i.) தேரை தீண்டலினால் உடம்பிளைத்தல்; to emaciate of the body especially in children arising from the malgin and baleful influence of Indan-toad (சாஅக.);. [தேரை + பாய்-.] |
தேரைபாய்தல் | தேரைபாய்தல் tēraipāytal, பெ. (n.) 1. பிறக்கும் குழந்தை இளைக்கும்படி கருப்பிணி மீது தேரைவிழுகை; leaping of a toad on a pregnant woman belived to cause wasting disease in the child. 2. உடல் மெலிவாகை; becoming emaciated about the buttocks. [தேரை + பாய்-.] |
தேரைபோ-தல் | தேரைபோ-தல் tēraipōtal, 8 செ.கு.வி. (v.i.) தேங்காயை உள்ளிடற்றதாக்கும் நோய் பற்றுதல்; to be blighted and eaten up, as coconut. “தேரைபோயிற்று என்றாற் போல்வதொரு நோய் என்க” (சீவக. 1024, உரை);. [தேரை + போ-.] |
தேரைமுகந்தகாய் | தேரைமுகந்தகாய் tēraimugandagāy, பெ. (n.) தேரை நோயுற்ற தேங்காய்; blighted or withered coconut, coconut with no kernal inside (சாஅக.);. [தேரை + முகந்த + காய்] |
தேரைமேய்-தல் | தேரைமேய்-தல் tēraimēytal, 3 செ.கு.வி. (v.i.) தேரைக்குடி-த்தல் (இவ.); பார்க்க; see [தேரை + மேய்-.] |
தேரைமோ-த்தல் | தேரைமோ-த்தல் tēraimōttal, 3 செ.குவி. (v.i.) தேரைகுடி-த்தல் (வின்.); பார்க்க; See {} [தேரை + மோத்தல்] |
தேரையர் | தேரையர் tēraiyar, பெ. (n.) தமிழ் மருத்துவ நூல்கள் பல இயற்றிய சித்தர்; a Saint who composed many medical treatises in Tamil verse. [தேரை + அர்] அகத்தியரிடம் தமிழ் மருத்துவம் கற்றுக் கொண்ட மாணாக்கருள் ஒருவர் என்பர். |
தேரையாதனம் | தேரையாதனம் tēraiyātaṉam, பெ. (n.) கவிழ்ந்திருந்து கைகள் இரண்டு விலாவிலும் கால்கள் இரண்டு பிட்டத்திலும் சேரும்படி முடக்கிக் கிடக்கும் ஒகிருக்கை (தத்துவப். 109, உரை);; a {} posture of lying down frog – like, with arms touching the sides and the feet drawn up touching the hips [தேரை + ஆதனம்] |
தேரைவிழு-தல் | தேரைவிழு-தல் dēraiviḻudal, 3 செ.கு.வி. (v.i.) தேரைபோ-தல் பார்க்க; see [தேரை + விழு-.] |
தேரைவிழுந்தகல் | தேரைவிழுந்தகல் tēraiviḻundagal, பெ. (n.) குறையுடைய கல்; defective stone. [தேரை + விழுத்த + கல்] |
தேரைவிழுந்தபிள்ளை | தேரைவிழுந்தபிள்ளை tēraiviḻundabiḷḷai, பெ. (n.) தேரை தீண்டலினால் இளைத்த குழந்தை; an emaciated child which is affected by the baleful influence of the Indian toad(சாஅக.);. [தேரை + விழுந்த + பிள்ளை] |
தேரோடும்வீதி | தேரோடும்வீதி tērōṭumvīti, பெ. (n.) தேர்வீதி பார்க்க; see [தேர் + ஓட்டு + வீதி] |
தேரோட்டம் | தேரோட்டம் tērōṭṭam, பெ. (n.) தேர்த்திருநாள்: car festival. ம. தேரோட்டம் [தேர் + ஓட்டம்] |
தேரோட்டி | தேரோட்டி tērōṭṭi, பெ. (n.) அச்சாணி (யாழ்அக);; axle pin. [தேர் + ஓட்டி] |
தேரோட்டு | தேரோட்டு1 tērōṭṭu, பெ. (n.) தேரோட்டம் பார்க்க; See __, [தேர் + ஓட்டு] தேரோட்டு2 dērōṭṭudal, 8 செ.கு.வி. (v.i.) குடித்தனம் பண்ணுதல் (யாழ்ப்.);; to leading domestic life(மீனவ.);. [தேர் + ஓட்டு-.] |
தேரோன் | தேரோன் tērōṉ, பெ. (n.) ஞாயிறு; the sun, as having a chariot. “தேரோன் மலைமறைய” (திணைமாலை 112);. [தேர் + ஓன்] |
தேரோர் | தேரோர் tērōr, பெ. (n.) 1. தேர்வீரர்; chariot warriors. 2. தேரேறிவந்து ஏர்க்களத்தையும் போர்க்களத்தையும் இசைக்கருவிகளுடன் பாடியாடும் புலவர் (தொல்.பொருள்.76);; a class of minstrels who go on chariots and with drum accompaniment sing the praises of the cultivators at the threshing-floor or of the warriors on the battle field. [தேர் + ஒர்] |
தேர் | தேர்1 tērtal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஆராய்தல் (பிங்.);; to examine, investigate inquire into. “தேர்ந்துசெய்வஃதே முறை” (குறள், 541);. 2. அறிதல்; to understand, know. “தேர்ந்தனன் முருகன் வாய்மை” (கந்தபு. மூவாயிர. 81);. 3. சிந்தித்தல்; to consider, deliberate, ponder well. 4. தெரிந்தெடுத்தல்; to elect. 5. தேடுதல்; to seek “சிறுவெண் காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு” (ஐங்குறு. 162);. 6. உறுதி செய்தல்; to ascertain, form a conclusion. “பேதைபாகனே பரமெனத் தேர்ந்துணர் பெரிய” (திருவினை. புராணவா. 8);. 7. கொள்ளுதல் (பிங்.);; to acquire, obtain. 8. ஐயுறுதல் (குறள், 144, உரை);; to doubt, question. தேர்2 tērtal, செ.கு.வி. (v.i.) பயிற்சியடைதல்; to be well versed, proficient in. நூல்களிற் றேர்ந்த புலமை ம. தேருக தேர்3 tērttal, செ.கு.வி. (v.i.) கலத்தல்; to mingle, combine. “குழம்பும் . . . கண்ணமும் விரையுந் தேர்த்தரோ …அளறுபட்டது” (சூளா. சுயம்.130);, தேர்3 tēr, பெ. (n.) 1. உருளி, தேர் (இரதம்);; car, chariot. “கடலோடா கால்வ னெடுந்தேர்” (குறள், 496);. தேரோடு போச்சுது திருநாள் தாயோடு போச்சுது பிறந்தகம் (பழ.);. 2. கொல்லாவண்டி பார்க்க;see__, 3. சிறுதேர்; boy’s small car. “புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே” (அகநா. 16);. 4. உருள் (உரோகிணி); விண்மீன் (சூடா);; the 4th naksatra. 5. கானல்; mirage. “யானை விலங்குதேர்க் கோடு நெடுமலை” (கலித் 24);. 6. பாடை; funeral fier. ம, தெ. தேரு, தேர்;க., து., பட. தேரு chariot. comp. Mongol chariot (C.G.D.F.L. 620); [தேங்குதல் = உயர்தல், மிகுதன் தேங்கு → தேக்கு = உயர்த்த அல்லது உயர்வான மரம், தேக்கு → தே → தேர் = உயரமான ஊர்தி] தேர்4 tēr, பெ. (n.) தேரர் பார்க்க;see__, அலவை சொல்லுவார் தேரமணாதர்கள்” (தேவா. 95, 10);. தேர்5 tēr, பெ. (n.) வலை கொள்ளுதற்குரிய முக்கோண வடிவுடைய மூங்கிலாலான கழலுங் கருவி (மீனவ.);; a rotating instrument in a conical shape to catch the net. மறுவ. கதிர் |
தேர்கடை | தேர்கடை tērkaḍai, பெ. (n.) தீர்மானம்; decision (இருநூ.);. [தேர் + கடை] |
தேர்க்கடம்பு | தேர்க்கடம்பு tērkkaḍambu, பெ. (n.) கொழுஞ்சி மரம்; common country orange (சாஅக.);. |
தேர்க்கள்ளி | தேர்க்கள்ளி tērkkaḷḷi, பெ. (n.) தாமரை வடிவிலான பூவையுடைய சீமைக்கள்ளி; a kind of foreign spurge known as Madagascar spurges (சாஅக.);. [தேர் + கள்ள] |
தேர்க்கவி | தேர்க்கவி tērkkavi, பெ. (n.) 1. சித்திரப் பாவகை; variety of cittira-k-kavi which is fitted into a fanciful diagram representing a temple chariot. [தேர் + கவி] |
தேர்க்காசு | தேர்க்காசு tērkkācu, பெ. (n.) தேர்விழாவன்று குழந்தைகட்கு அன்பொடு கொடுக்கும் சில்லறைக் காசு; coin given as present to children on the day of car festival. [தேர் + காசு] |
தேர்க்கால் | தேர்க்கால்1 tērkkāl, பெ. (n.) தேர்ச்சக்கரம்; wheel of a chariot. தேர்க்கால்2 tērkkāl, பெ. (n.) குயவன் சக்கரம்; poter’s wheel. “வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண்” (புறநா. 32);. [தேர் + கால்] |
தேர்க்குடம் | தேர்க்குடம் tērkkuḍam, பெ. (n.) 1. தேரின் சக்கரக்குடம்; hub of a chariot-wheel. 2. தேரின் ஒப்பனைத் தூண்; brass knobs in the form of inverted pots, as ornaments to a chariot. [தேர் + குடம்] |
தேர்க்குறடு | தேர்க்குறடு tērkkuṟaḍu, பெ. (n.) தேர்க்குடம் பார்க்க;see__, “பல ஆருந் தைத்து நிறைந்த தேர்க்குறடு” (சீவக 790, உரை);. [தேர் + குறடு] |
தேர்க்குழிசி | தேர்க்குழிசி tērkkuḻisi, பெ. (n.) தேர்க்குடம் பார்க்க;see__, “ஆரமே யமைந்த தேர்க்குழிசி யாயினார்” (சீவக 790);. [தேர் + குழிசி] |
தேர்க்கூம்பு | தேர்க்கூம்பு tērkāmbu, பெ. (n.) 1. தேர்க்கொடிஞ்சி பார்க்க;see__, 2. தேரின் உச்சி; finial of a chariot |
தேர்க்கொடி | தேர்க்கொடி tērkkoḍi, பெ. (n.) தேரிற்கட்டிய பதாவை; flag hoisted at the top of a chariot. [தேர் + கொடி] |
தேர்க்கொடிஞ்சி | தேர்க்கொடிஞ்சி tērkkoḍiñji, பெ. (n.) 1. கொடிஞ்சி பார்க்க;see__, “நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன்” (புறநா.77);. 2. தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம்; the wooden frame to which the yoke of a chariot is fixed. “புரவிபூண்ட பொன்னுகக் கொடிஞ்சி” (பெருங்உஞ்சைக் 4815);. 3. தேர்க்கூம்பு,2 பார்க்க;see__, [தேர் + கொடிஞ்சி] |
தேர்க்கொடுங்கை | தேர்க்கொடுங்கை tērkkoḍuṅgai, பெ. (n.) தேரின் வெளிப்பக்கத்தின் மேல் வளைவு; curved cornice or projections of a chariot. [தேர் + கொடுங்கை] |
தேர்க்கொத்தர் | தேர்க்கொத்தர் tērkkottar, பெ. (n.) தேர் இழுக்கிறவர்கள்; one who drag temple car (இருநூ.);. [தேர் + கொத்தர்] |
தேர்க்கொற்றன் | தேர்க்கொற்றன் tērkkoṟṟaṉ, பெ. (n.) தேரோட்டுவோன் (இவ.);; charioteer [தேர் + கொற்றன்] |
தேர்ச் சிற்பாசாரிகள் | தேர்ச் சிற்பாசாரிகள் tērcciṟpācārigaḷ, பெ.(n.) கம்மாளர் இனத்திலுள்ள ஒரு பிரிவினர்; a sub caste of Kammalar. [தேர்+சிற்பம்+ஆசாரிகள்] |
தேர்ச்சக்கரம் | தேர்ச்சக்கரம் tērccakkaram, பெ. (n.) தேர் உருனை; wheel of a chariot. [தேர் + சக்கரம்] |
தேர்ச்சார்பலகை | தேர்ச்சார்பலகை tērccārpalagai, பெ. (n.) தேர்த்தட்டு (வின்.); பார்க்க;see__, [தேர் + சார் + பலகை] |
தேர்ச்சி | தேர்ச்சி tērcci, பெ. (n.) 1. ஆராய்ச்சி; examination, investigation. 2. கல்வி; learning. 3. தெளிவு; discernment; ascertainment. 4. கலந்தாய்வு (பிங்.);; deliberation, council. 5. பயிற்சி; experience. 6. தேர்வில் தேறுகை; success in examination. ம. தேர்ச்சி [தேர் + சி = தேர்ச்சி. சி – சொல்வாக்க ஈறு] |
தேர்ச்சித்துணைவர் | தேர்ச்சித்துணைவர் tērccittuṇaivar, பெ. (n.) 1. மந்திரத் தலைவர் (பிங்.);; Ministers of State, King’s counsellors, Statesmen. “தூநான் மறையோருடன் றேர்ச்சித் துணைவர் தொடர” (சேதுபு. அனும 14);. 2. நட்பாளர் (பிங்);; friends. [தேர்ச்சி + துணைவர்] |
தேர்ச்சினை | தேர்ச்சினை tērcciṉai, பெ. (n.) கொடிஞ்சி பார்க்க (கலித். 85:18);;see__, [தேர் + சிணை] |
தேர்ச்சில் | தேர்ச்சில் tērccil, பெ. (n.) தேர்க்கால் பார்க்க;see__, [தேர் + சில்] |
தேர்ச்சிவரி | தேர்ச்சிவரி tērccivari, பெ. (n.) உறவு முறையார்க்குத் தன் துயரங்களைத் தெரிவிக்கும் கூத்து வகை; a dramatic action in which a person expresses in detail all his sufferings to his relatives. “கிளைகட்குத் தன்னுறு துயரந் தேர்ந்து தேர்ந்துரைத்த தேர்ச்சிவரி” (சிலப். 8:103-4);. [தேர்ச்சி + வரி] |
தேர்ச்சீலை | தேர்ச்சீலை tērccīlai, பெ. (n.) 1. தேரை ஒப்பனை செய்தற்கெனக் கட்டுஞ் சீலை; bright coloured cloths with which a chariot is ornamented. 2. பாடைச் சீலை; the cloth decorating the biar (செ.அக.);. [தேர் + சீலை] |
தேர்ச்சேனை | தேர்ச்சேனை tērccēṉai, பெ. (n.) நால்வகைப்படையுள் ஒன்றான தேர்ப்படை; one among four army. [தேர் + சேணை] |
தேர்தல் | தேர்தல் tērtal, பெ. (n.) அவைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கை; election. சட்டமன்றத் தேர்தல் கலவரத்தில் முடிந்தது [தேர் → தேர்தல்] |
தேர்த்தடம் | தேர்த்தடம் tērttaḍam, பெ. (n.) தேர்ச்சுவடு; print of the car in the sand on its way. [தேர் + தடம்] |
தேர்த்தட்டு | தேர்த்தட்டு tērttaṭṭu, பெ. (n.) தேரின் உட்பரப்பு; central seating space of a chariot. “அழிந்த தேர்த்தட்டினின்று” (கம்பரா.இந்திரசித் 39);. ம. தேர்த்தட்டு [தேர் + தட்டு] |
தேர்த்தானை | தேர்த்தானை tērttāṉai, பெ. (n.) தேர்ப்படை; chariot division of an army. “திறல் விளக்கு தேர்த்தானை” (புவெ. 48);. [தேர் + தானை] |
தேர்த்திருநாள் | தேர்த்திருநாள் tērttirunāḷ, பெ. (n.) கோயிற் றேர்த் திருவிழா; car festival. [தேர் + திரு + நான்] |
தேர்த்துகள் | தேர்த்துகள் tērttugaḷ, பெ. (n.) 1. தேர்ச் செலவால் எழுந்தூளி; dust rising from a chariot in motion. 2. எட்டுக் கதிரெழு துகள் கொண்டதோர் அளவு (வின்.);; minute measure of length = 4 atoms of dust in a sunbeam = 8 [தேர் + துகள்] |
தேர்த்தொழில் | தேர்த்தொழில் tērttoḻil, பெ. (n.) தேர் நடாத்தும் கலை; art of charioteering. “மற்றொழிலுந் தேர்த் தொழிலும் வாரணத்தின் றொழிலும்” (சீவக. 1795);. [தேர் + தொழில்] |
தேர்நிலை | தேர்நிலை tērnilai, பெ. (n.) தேர்முட்டி பார்க்க (கொ.வ.);;see__, [தேர் + நிலை] |
தேர்நூல் | தேர்நூல் tērnūl, பெ.(n.) தேர் செய்யும் முறைகளைக் கூறும் நூல்; a treatise on chariot making. நீளியல் நெடுந்தேர் (அகம்.234); நூலமை சிறப்பின் வாமான் திண்தேர். . (அகம்400); [தேர்+நூல்] தேர்நூல் tērnūl, பெ.(n.) தேர் செய்யும் முறைகளைக் கூறும் நூர்; a treatise on chariot making. நீளியல் நெடுந்தேர் (அகம்:234); நூலமை சிறப்பின் வாமான் திண்தேர். – (அகம்400); [தேர்+நூல்] |
தேர்ந்தவன் | தேர்ந்தவன் tērndavaṉ, பெ. (n.) திறமையானவன்; skilled person in certain matter. தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால் (பழ.);. [தேர் → தேர்த்த + அவன்] |
தேர்ந்துசெயல் | தேர்ந்துசெயல் tērnduseyal, பெ. (n.) வாய்க்கும் திறன் நாடிச் செய்கை; fruitful attempt. “தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லதமைச்சு” (குறள், 634);. [தேர்’ → தேர்த்து + செயல்] |
தேர்பாவுக் குச்சி | தேர்பாவுக் குச்சி tērpāvukkucci, பெ. (n.) நூல் இழைத்தலின் பயன்படுத்தப்படும் கருவி; a device in weaving. [தேர்+பாவு+குச்சி] தேர்பாவுக் குச்சி tērpāvukkucci, பெ.(n.) நூல் இழைத்தலின் பயன்படுத்தப்படும் கருவி, a device in weaving. [தேர்+பாவு+குச்சி] |
தேர்போகி | தேர்போகி tērpōki, பெ.(n.) இராமநாதபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Ramanathapuram Taluk. [தேர்+போகி] தேர்போகி tērpōki, பெ.(n.) இராமநாதபுரம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Ramanathapuram Taluk. [தேர்+போகி] |
தேர்ப்பந்தர் | தேர்ப்பந்தர் tērppandar, பெ. (n.) தேர்போலும் பந்தல்; pandal. [தேர் + பந்தர். பந்தல் → பந்தர். ல → ர போலி] |
தேர்ப்பாகன் | தேர்ப்பாகன் tērppākaṉ, பெ. (n.) 1. தேரோட்டி (சிலப். 5, 55, அரும்);; charioteer, 2. அறிவன் (புதன்); (பிங்.);; the planet mercury. ம. தேர்ப்பாகன் [தேர் + பாகன்] |
தேர்ப்பார் | தேர்ப்பார் tērppār, பெ. (n.) தேர்த்தட்டு (சூடா.); பார்க்க;see__, [தேர் + பார்] |
தேர்ப்புரை | தேர்ப்புரை tērppurai, பெ.(n.) கொம்பு முறி விளையாட்டில் இரு சாராரும் உருவாக்கு கின்ற தேர்களை வைக்கும் கூடம்: a common place station to place temple cars of two groups. [தேர்+புரை] தேர்ப்புரை tērppurai, பெ.(n.) கொம்பு முறி விளையாட்டில் இரு சாராரும் உருவாக்கு கின்றதேர்களை வைக்கும்கூடம்; a common place station to place temple cars of two groups. [தேர்+புரை] |
தேர்மண்டபம் | தேர்மண்டபம் tērmaṇṭabam, பெ. (n.) தேர் நிறுத்துமிடம்; the stand of a temple car. “தெப்பக்குளங் கட்டி தேர்மண்டபங் கட்டி” (குற்றா.குற.91:4); [தேர் + மண்டபம்] |
தேர்மரச்சுற்று | தேர்மரச்சுற்று tērmaraccuṟṟu, பெ. (n.) தேர்த்தட்டைச் சுற்றி அமைக்கப்பட்ட பலகை (பிங்.);; boards round the body of a chariot [தேர் + மரம் + கற்று] |
தேர்மறம் | தேர்மறம் tērmaṟam, பெ. (n.) அரசனது போர்த் தேரின் சிறப்பினைக் கூறும் புறத்துறை (பு.வெ. 7,10);; theme eulogising a king’s war-chariot [தே + மறம்] |
தேர்முட்டி | தேர்முட்டி tērmuṭṭi, பெ. (n.) கோயில் திருத்தேர் தங்கி நிற்குமிடம் (கொ.வ);; the stand of a temple car. “தேர்முட்டி கிட்டே இருக்கின்ற சந்தையில் வாங்கினேன்” (மதுரை);. [தேர் + முட்டி] |
தேர்முல்லை | தேர்முல்லை tērmullai, பெ. (n.) பகைவரை வென்று மீண்ட தன் தலைவனது தேர் வரவறிந்து தலைவி மகிழ்ந்து கூறும் புறத்துறை (புவெ10, முல்லைப்.3);; theme of the return of a hero in his chariot after subduing his enemies, sung in joy by his lady-love. [தேர் + முல்லை] |
தேர்மூடு | தேர்மூடு tērmūṭu, பெ. (n.) தேர்நிலை (நாஞ்);; chariot stand [தேர் + மூடு] |
தேர்மொட்டு | தேர்மொட்டு tērmoṭṭu, பெ. (n.) 1. தேர்க்கூம்பு பார்க்க; see 2. பூவரச மரத்தின் முதிர்ந்த மொட்டு (நாஞ்);; mature bud of portia. [தேர் + மொட்டு] |
தேர்வகச்சீட்டு | தேர்வகச்சீட்டு tērvagaccīṭṭu, பெ. (n.) தேர்வு எழுதும் மாணவர்க்கு வழங்கும் புகவுச்சீட்டு: hall ticket. மறுவ. நுழைவுச்சீட்டு [தேர்வு+அகம்+சீட்டு] தேர்வகச்சீட்டு tērvagaccīṭṭu, பெ.(n.) தேர்வு எழுதும் மாணவர்க்கு வழங்கும் புகவுச்சீட்டு: hall ticket. மறுவ, நுழைவுச்சீட்டு [தேர்வு+அகம்+சிட்டு] |
தேர்வடம் | தேர்வடம் tērvaḍam, பெ. (n.) தேரிழுத்தற்குரிய பெரிய கயிறு; cable, thick rope for drawing a car. “மணலையு மேவுதேர்வட மாக்கலாம்” (அருட்பா.6, வகித்திய. 4);, [தேர் + வடம்] |
தேர்வட்டை | தேர்வட்டை tērvaṭṭai, பெ. (n.) தேர்க்கால் (சிலப். 14:165); பார்க்க; see ம. தேர்வட்டு [தேர் + வட்டை] |
தேர்வண்மலையன் | தேர்வண்மலையன் tērvaṇmalaiyaṉ, பெ. (n.) வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனாரால் புறநானூற்றிலே பாடப்பெற்றவன்; supposed to be a king sung by {} (தமி.சொஅக);. [தேர்வண் + மலையன்] |
தேர்வண்மை | தேர்வண்மை tērvaṇmai, பெ. (n.) புலவர் முதலியோர்க்கு அரசர் அளிக்குத் தேர்க் கொடை; gift of chariots made by kings to poets. “தேர்வண்பாரி” (புறநா.74);. [தேர் + வண்மை] |
தேர்வலவன் | தேர்வலவன் tērvalavaṉ, பெ. (n.) தேர்ப்பாகன்; charioteer. “திண்டேர் வலவ கடவெனக் கடைஇ” (அகதா.74);. [தேர் + வலவன்] |
தேர்வலான் | தேர்வலான் tērvalāṉ, பெ. (n.) தேர்வலவன் பார்க்க; see “தேர்வலான் செப்புவான்” (கம்பரா. தைவ.20);. [தேர் + வலான்] |
தேர்வளி | தேர்வளி tērvaḷi, பெ.(n.) பொன்னேரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Ponneri Taluk. [தேர்+வழி] தேர்வளி tērvaḷi, பெ.(n.) பொன்னேரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Ponneri Taluk. [தேர்+வழி] |
தேர்வாசம் | தேர்வாசம் tērvācam, பெ. (n.) அரசு; pipal tree (சாஅக);. |
தேர்வாணம் | தேர்வாணம் tērvāṇam, பெ. (n.) வானவகை; a kind of rocket. [தேர் + வானம்] |
தேர்வாணைக்குழு | தேர்வாணைக்குழு tērvāṇaikkuḻu, பெ. (n.) அரசுப்பணிக்குத் தக்கவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைய, அரசால் அமர்த்தம் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு; public service commission (to select employees for government service);. [தேர்வாணையம் + குழு] |
தேர்வாணையம் | தேர்வாணையம் tērvāṇaiyam, பெ. (n.) தேர்வாணைக்குழு பார்க்க; see [தேர்வு + ஆணையம்] |
தேர்வாய் | தேர்வாய் tērvāy, பெ.(n.) பொன்னேரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Ponneri Taluk. [தேர்+வாய்] தேர்வாய் tērvāy, பெ.(n.) பொன்னேரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Ponneri Taluk. [தேர்+வாய்] |
தேர்விருந்து | தேர்விருந்து tērvirundu, பெ. (n.) தேர்த் திருநாளன்று ஒருவன் தன் மாப்பிள்ளைக்குச் செய்யும் விருந்து (இ.வ.);; feast given by a person to his son-in-law on the day of car festival in the local temple. [தேர் + விருந்து] |
தேர்விளக்கு | தேர்விளக்கு tērviḷakku, பெ. (n.) தேர்போ லொப்பனை செய்யப்பெற்ற அடுக்கு விளக்கு (இ.வ.);; light arranged in the form of a chariot [தேர் + விளக்கு] |
தேர்வீதி | தேர்வீதி tērvīti, பெ. (n.) தேரோடுந் தெரு; main street through which the car of an idol or a king passes. “தேர்வீதி யெழுதுகள் சேர்ந்து” (மணிமே 4:14); ம. தேர்வீதி; க.தேர்பீதி [தேர் + விதி] |
தேர்வு | தேர்வு tērvu, பெ. (n.) 1. ஆராய்ச்சி; examination, search. 2. பயிற்சி; thorough acquaintance, proficiency, practice, experience; the discerning faculty. 3. சுவை; beauty, sweetness, as of expression. “தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொற் றேர்வு” (நாலடி. 259);. 4. தெரிந் தெடுக்கை (இ.வ.);; election, as to a council [தேர் + தேர்வு] |
தேர்வுநிலை | தேர்வுநிலை tērvunilai, பெ. (n.) 1. அரசுப் பணியில், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்றியவருக்கு, அதே பணியிடத்தில் தரும் உயர்நிலை; selection grade. பத்தாண்டு பணிபுரிந்த தமிழக அரசு ஊழியர்களுக்குத் தேர்வு நிலை வழங்கப்படும். 2 வருமான அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் உயர்நிலை; selection grade to local bodies on the basis of higher revenue raised. சேவம் மாவட்டத்திலுள்ள ஆறகழுர் ஊராட்சியைத் தேர்வுநிலை ஊராட்சியாக இந்த நிதியாண்டில் அரசு அறிவித்தது. [தேர்வு + நிலை] |
தேர்வென்றி | தேர்வென்றி tērveṉṟi, பெ. (n.) தன்றேரைச் செலுத்திப் பகைவர் தேர்களை அழிக்கும் வீரனது செயலைச் சிறப்பிக்கும் புறத்துறை (பு.வெ.12, ஒழிபு. 14);; theme describing the valorous deeds of a warrior who rides his chariot and destroys his enemies’ chariots. [தேர் + வென்றி] |
தேற | தேற tēṟa, விஎ. (adv.) கடைபோக; thoroughly. தேற உசாவவேண்டும். [தேறு + தேற] |
தேறகம் | தேறகம் tēṟagam, பெ. (n.) தேரகம் பார்க்க; see [தேரகம் → தேமுகம்] |
தேறம் | தேறம் tēṟam, பெ. (n.) மிகுதியாயிருப்பது that which exceeds. ஒரு கல் தொலைவுக்கு தேறமாயிருக்கும் (செஅக);. [தேற்றம் → தேறம்] |
தேறலர் | தேறலர் tēṟalar, பெ. (n.) தேறார் பார்க்க: see [தேறு + அல் + அர். ‘அல்’ எதிர்மறை இடைநிலை] |
தேறலார் | தேறலார் tēṟalār, பெ. (n.) தேறார் பார்க்க; see “தேறலார் தமைத் தேறலும்” (பாரத குது. 72);. [தேறு + அல் + ஆர். ‘அல்’ எதிர்மறை இடைநி லை] |
தேறல் | தேறல் tēṟal, பெ. (n.) 1. தெளிவு (பிங்.);; clearness. 2. தெளிந்த கன்; pure, clarificd toddy. “தேக்கட் டேறல்” (புறநா. 115);. 3. தேன்; honey. “மலர்த்தேற லூறவின்” (தேவா. 94, 3); 4. சாறு; clarified juice. “ஆனெயைக் கரும்பினின் றேறலை” (திருவாச. 5:38); (செஅக.);. ம. தேறல்; க. தேட, தேடெ: தெ. தேட: து. தேடு . [தேறு → தேறல்] |
தேறாங்குனி | தேறாங்குனி tēṟāṅguṉi, பெ. (n.) பெரிய தெத்திலி மீன்; anchovy fish. |
தேறார் | தேறார் tēṟār, பெ. (n.) 1. பகைவர்; enemies. 2. அறியாதார்; ignorant person. [தேறு + ஆ + ஆர் → தேறார். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது] |
தேறினகட்டை | தேறினகட்டை tēṟiṉagaṭṭai, பெ. (n.) தேறினவன் பார்க்க; see [தேறு → தேறின + கட்டை] |
தேறினகாய் | தேறினகாய் tēṟiṉakāy, பெ. (n.) முற்றின காய்; mature green fruit. [தேது → தேறின + கால்] |
தேறினர் | தேறினர் tēṟiṉar, பெ. (n.) ஆராய்ந்து கொண்ட நண்பர்; tested or tried friends. “தேறினர்த் தேறலாமையும்” (பாரத குது. 72);. [தேறு → தேறினர்] |
தேறினவன். | தேறினவன். tēṟiṉavaṉ, பெ. (n.) 1. பட்டறிவு மிக்கவன்; person of experience. 2. கலை முதலியவற்றில் தேர்ச்சி பெற்றவன்; one well versed in an art; an adept. [தேறு → தேறினவன்] |
தேறு | தேறு1 dēṟudal, 5 செ.குவி. (v.i.) 1. தெளிதல்: to be accepted as true. “ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப்படும்” (குறள், 589);. 2. நீர் தெளிதல்; to be clarified, made clear, as water. “தேறுநீர் சடைக்கரத்து” (கலித். கடவுள் வாழ்);. 3. மயக்கந் தெளிதல்: to be strengthened; to be recover from swooning, from intoxication or from drooping. 4. முதிர்தல்; to be thorough, accomplished, mature, as the mind, to reach perfection. “தேறின அறிவு” (வின்.);. 5. செழித்தல்; to thrive, improve, flourish, as vegetation. “தேறின பயிர்” (வின்.);. 6. ஆறுதல்; to becomforted, consoled, solaced, soothed. 7.துணிவு கொள்ளுதல்; to cheerup, take courage. 8. தேர்ச்சியடைதல்; to be successful in examination. தேர்வில் தேறினான். 9. சொல் நிறைவேறுதல் (பலித்தல்);; to prove; to result, amount to, as profit; to turn out.. அந்த வணிகத்தில் இவ்வளவு வரும்படி தேறும். 10. சோறு முதலியன விறைத்தல் (வின்.);; to become stiff, hard, as boiled rice, fruits. 11. தங்குதல் (வின்.);; to stay, abide. ம. தேறுக; க. தேட. தேடெ; தெ. தேறு: து. தேரு. கோத. தேர் தேறு2 dēṟudal, 5 செகுன்றாவி. (v.i.) 1. நம்புதல்; to trust, confide in, believe. “தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்வி தன்றால்” (கம்பரா. வாலிவ. 33);. 2 துணிதல்; to decide. “தேறுவ தரிது” (கம்பரா. மாயாசீதை, 89);. 3. கூடுதல்; to unite with, arrive at. “தேறினும் தேறாவிடினும் அழிவின்கட்டேறான் பகாஅன் விடல்” (குறள், 876);. தெ. தேறு தேறு3 tēṟu, பெ. (n.) 1. தெளிவு, clearness. 2. உறுதி (சூடா);; certainty 3. தேற்றா பார்க்க: see “மடிந்த தேறு பொடிந்தவேல்” (கலிங் 65);. 4 தேற்றாங்கொட்டை பார்க்க; see “தேறுபடு சின்னிர் போல” (மணிமே 23:142);. [தெள் → தெரி → தேர் → தேறு = தெளிவு. தேறுதல் = தெளிதல் தேது – திரைத் தெளிவிக்கும் தேற்றறாங்கொட்டை (முதா. 145);] தேறு4 tēṟu, பெ. (n.) கொட்டுகை; sting, as of a wasp. “கடுந்தே றுறுகிளை” (பதிற்றுப். 71.6);. [தெது → தேறு] தேறு5 tēṟu, பெ. (n.) துண்டு: piece. “கண்ட சருக்கரைத் தேற்றையும்” (மதுரைக் 532, உரை);. [தெறி → தேறி → தேறு] |
தேறுகடை | தேறுகடை tēṟugaḍai, பெ. (n.) தீர்மானம் (வின்.);; decision, settlement. அவன் அவ்வாறு தேறுகடை பண்ணினான் (உவ.); தெ. தேருகட;க. தேருகடெ [தேறு + கடை] |
தேறுசூடு | தேறுசூடு tēṟucūṭu, பெ. (n.) 1. மாடு முதலியன தேறுவதற்காகச் சூடிடுகை; branding cattle to promote their fattening. 2. ஆடுமாடுகட்கு இடுஞ் சூடு: brand on cattle. [தேறு + சூடு] |
தேறுதலை | தேறுதலை dēṟudalai, பெ. (n.) 1. துணிவு: courage, encouragement. 2. ஆறுதல்; comfort. “தேறுதலைச் சொல்வார் சிலரில்லை” (தனிப்பா.);. |
தேறுதி | தேறுதி dēṟudi, பெ. (n.) தேற்றாமரம் பார்க்க; see (சாஅக.);. |
தேறுநர் | தேறுநர் tēṟunar, பெ. (n.) 1. கற்றோர் (வின்.);; the learned. 2. நம்பத்தக்கவர் (வின்.);; trustworthy persons. 3. சேர்ந்தோர் (யாழ்அக);; relatives. [தேறு → தேறுநர்] |
தேறுமுகம் | தேறுமுகம் tēṟumugam, பெ. (n.) பற்றுக்கோடு: support, comfort. “தேறுமுகமின்றித் திரிந்தேமையாள” (கத்தபு, தேவர்கள்போற் 4);. [தேறு + முகம்] |
தேறுவம் | தேறுவம் tēṟuvam, பெ. (n.) பூனைக்காலி; cowiter plant (சாஅக);. |
தேறுவான் | தேறுவான் tēṟuvāṉ, பெ. (n.) சித்தரில் தேறியவர்: an expert scholar a chief amongst the Siddhars (சாஅக.);. [தேறு → தேறுவான்] |
தேறை | தேறை tēṟai, பெ. (n.) மீன்வகை (யாழ்.அக.);; a kind of fish. |
தேற்காலி | தேற்காலி tēṟkāli, பெ. (n.) தேறுவம் பார்க்க; see (சாஅக.);. |
தேற்றன் | தேற்றன் tēṟṟaṉ, பெ. (n.) உண்மையறி a fair sm susłr; a person of true knowledge. “தேற்றனே தேற்றத் தெளிவே” (திருவாச 1, 82);. |
தேற்றன்மை | தேற்றன்மை tēṟṟaṉmai, பெ. (n.) தெளிவு: certainty, clearness. “என்ன லதிலளெள் றன்னதோர் தேற்றன்மைதானோ” (தில். பெரியதி. 10, 9,9);, [தேற்றல் + மை] |
தேற்றமானவன் | தேற்றமானவன் tēṟṟamāṉavaṉ, பெ. (n.) 1.துணிவுடையோன்; courageous person. 2. உடம்பு தேறினவன்; invalid picking up strength, convalescent. [தேற்றம் + ஆனவன்] |
தேற்றம் | தேற்றம்1 tēṟṟam, பெ. (n.) 1. உறுதி; certainty; assurance; determination. “தேற்றம் வினாவே” (தொல்.சொல். 259);. 2. தெளிவு; clearness. “தேற்றச்சொற் றேர்வு” (தாவடி, 259);. 3. மனங்கலங்காமை; presence of mind. “தேற்ற மவா வின்மை” (குறள் 513); 4. ஆறுதல்; comfort, consolation. 5. குளுறவு; oath. “நீராத் தேற்றம்” (தொல்.பொருள். 102);. 6 செழிப்பு: thriving, luxuriant growth. “தேற்றமான பயிர்”. [தேறு → தேற்றம்] தேற்றம்2 tēṟṟam, பெ. (n.) கோட்பாடு; theory. பித்தகோரசு தேற்றம் |
தேற்றரவாளன் | தேற்றரவாளன் tēṟṟaravāḷaṉ, பெ. (n.) தேற்றரவாளி (யாழ்.அக);. பார்க்க: see (செஅக.);. [தேற்றரவாணி → தேற்றரவாளன்] |
தேற்றரவாளி | தேற்றரவாளி tēṟṟaravāḷi, பெ. (n.) 1. திடமுடையவன் (யாழ்அக.);; strong person. 2. ஆறுதல் சொல்வோன் (வின்.);; comforter, consoler, encourager. 3 தூய நல்லாவி; the Holy Spirit (chr.); |
தேற்றரவு | தேற்றரவு tēṟṟaravu, பெ. (n.) தேற்றம் பார்க்க; see |
தேற்றல் | தேற்றல் tēṟṟal, பெ. (n.) 1. தெளிவடையச் செய்தல்; effecting a cure in ones ailment. 2. மெலிந்த உடம்பைத் தெளியும்படிச் செய்தல்; feeding or supplying with nutriment to promote growth especially in an emaciated patient, nourishing the patient (சாஅக.);. [தேறுதல் → தேற்றுதல் → தேற்றல்] |
தேற்றா | தேற்றா tēṟṟā, பெ. (n.) தேற்றாமரம் அதாவது தேத்தான் கொட்டை மரம்; clearing nut tree “தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறு போல” (கலித். 142, உரை.); |
தேற்றாங்கொட்டை | தேற்றாங்கொட்டை tēṟṟāṅgoṭṭai, பெ. (n.) கலங்கனிரைத் தெளியச் செய்யும் தேற்றாவிதை; clearing nut, used for clearing turbid water. [தேற்றான் + கொட்டை] |
தேற்றாங்கொட்டைஇளகியம் | தேற்றாங்கொட்டைஇளகியம் tēṟṟāṅgoṭṭaiiḷagiyam, பெ. (n.) தேற்றான் கொட்டையில் செய்த மருந்து; a medicine prepared with clearing nut. [தேற்றான்கொட்டை+ இனகியம்] |
தேற்றான்கொட்டை | தேற்றான்கொட்டை tēṟṟāṉkoṭṭai, பெ.(n.) உடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் மரம்; a tree of medical use, [தேற்று-தேற்றான்+கொட்டை] தேற்றான்கொட்டை tēṟṟāṉkoṭṭai, பெ.(n.) உடல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் மரம்; a tree of medical use. [தேற்று-தேற்றான்+கொட்டை] |
தேற்றான்மரம் | தேற்றான்மரம் tēṟṟāṉmaram, பெ. (n.) தேற்றா (தைலவதைல); பார்க்க: see ம. தேற்றாமரம் [தேற்றா + மரம்] |
தேற்றான்விதை | தேற்றான்விதை dēṟṟāṉvidai, பெ. (n.) தேற்றான்கொட்டை பார்க்க; see (சாஅக.);. ம. தேற்றான்கொட்ட [தேற்றான் + விதை] |
தேற்றாம்பொடி | தேற்றாம்பொடி tēṟṟāmboḍi, பெ. (n.) தேற்றாங் கொட்டையிற் செய்த மருந்துப் பொடி: medicinal powders of {} [தேற்றம் + பொடி] |
தேற்றார் | தேற்றார் tēṟṟār, பெ. (n.) 1. அறிவிலி: the ignorant. 2. பகைவர்;; foes, enemies, [தேற்று + ஆ + அர். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தேற்றாவொழுக்கம் | தேற்றாவொழுக்கம் tēṟṟāvoḻukkam, பெ. (n.) ஐயுறத்தக்க தீயொழுக்கம்; doubtful, shady conduct. “தேற்றா வொழுக்க மொருவன்க னுண்டாயின்” (நாலடி, 75);. [தேற்று + ஆ + ஒழுக்கம்] |
தேற்று | தேற்று1 dēṟṟudal, 5 செ.குன்றாவி (v.t.) 1. தெளிவித்தல்; to make clear, convince, assure, relieve from doubt. “தையால் தேறெனத் தேற்றி” (கலித்.144);. 2. தெளிந்தறிதல்; to know, understand “இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு” (குறள். 1054);. 3. குளுறுதல்; to swear, take an oath. “தேரோடுந் தேற்றிய பாகன்” (கலித் 71);. 4 தேற்றாவிதையால் நீர்தெளியச் செய்தல்; to clear, clarify, as with {} “தேற்றுநர்போல்” (அஷ்டப் அழகர்கலம், 85);. 4. தூய்மை செய்தல்: to refine, 6 ஆற்றுதல்: to comfort, console. 7. வலுவுன்டாக்குதல்; to communicate strength; to nourish, cherish, invigorate. 8. துணிவேற்றுதல் (இ.வ.);; to encourage, hearten. 9. குணமாக்குதல்; to cure, give relief. ம. தேற்றுக [தென் → தெரி → தேர் → தேறு = தெளிவு. தேறுதல் = தெளிதல். தேறு → தேற்று (மு தா. 145);] தேற்று2 tēṟṟu, பெ. (n.) 1. தெளிவிக்கை; making clear. 2. தெளிவு; becoming clear. “செஞ்சொற் பொருளின் றேற்றறிந் தேனே’ (சிவப். பிரபந். நால்வர். 28); 3. தேற்றா (பிங்.);; cleaning.nut tree. “தேற்றின் வித்திற் கலிங்குநீர் தெளிவ தென்ன” (ஞானவா.தாமவியா. 3);. [தென் → தெரி → தேறு → தேற்று (முதா. 145);]. |
தேற்றுகம் | தேற்றுகம் tēṟṟugam, பெ. (n.) இலவு; silk cotton (சாஅக.);. |
தேற்றுமருந்து | தேற்றுமருந்து tēṟṟumarundu, பெ. (n.) உடம்பை வலுப்படுத்தும் மருந்து; any in vigorating specific-tonic (சாஅக.);. [தேற்றும் + மருந்து] |
தேற்றுமாடு | தேற்றுமாடு tēṟṟumāṭu, பெ. (n.) உணவு முதலியவற்றால் உடலைத் தேற்றி விற்கும் மாடு (இ.வ);; bull or cow fattened or soiled for sale. [தேற்றும் + மாடு] |
தேற்றேகாரம் | தேற்றேகாரம் tēṟṟēkāram, பெ. (n.) உறுதிப்பாட்டினையுணர்த்துமேகாரம் (குறள், 261, உரை);; the particle ‘e’ expressing emphasis or certainty. [தேற்றம் + ஏகாரம்] |
தேலரான் | தேலரான் tēlarāṉ, பெ. (n.) காமதேனு; celestial cow. “இன்ன தேவரான் கொடுப்ப” (திருவினை. நான் மாட 20);. [தேவர் + ஆன்] |
தேலிக்கை | தேலிக்கை tēlikkai, பெ. (n.) எளிது; superficiality, slightness, lightness. “வழக்கைத் தேலிக்கையாய் விட்டு விட்டான்” (யாழ்அக.);. |
தேலு-தல் | தேலு-தல் dēludal, 5 செ.கு.வி. (v.i.) 1. தப்புதல்; to get rid of; to escape danger as a ship. 2. தேறு-தல் பார்க்க; See {} ஆள் தேலுதலரிது. தெ. தேலு [தேறு + தேலு] |
தேளக்கனம் | தேளக்கனம் tēḷakkaṉam, பெ. (n.) தேளைக் களம் பார்க்க; see (சாஅக.);. |
தேளப்பாறை | தேளப்பாறை tēḷappāṟai, பெ. (n.) தேளைப் போன்ற தோற்றமுடைய பாறை மீன்: parai fish which resemble scorpion in structure. [தேன் + பாறை] |
தேளி | தேளி1 tēḷi, பெ. (n) அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள சிற்றூர் ; a village in Aruppukkottai Taluk. [தெள்-தெள்ளி-தேளி] தேளி2 tēḷi, பெ.(n.) ஒரு வகை மீன்; a kind of fish. [தேள்-தேளி] தேளி1 tēḷi, பெ.(n.) அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Aruppukkottai Taluk. [தெள்-தெள்ளி-தேளி] தேளி2 tēḷi, பெ.(n.) ஒரு வகை மீன்; a kind of fish. [தேள்-தேளி] தேளி1 tēḷi, பெ. (n.) தேள் போன்று கவ்வு முறுப்புக் கொண்டதும் ஒர் அடிக்குமேல் வளர்வதும் ஈயவெண்மை நிறமுடையதுமான நச்சு மீன் வகை; scorpion fish, leaden, attaining more than one ft. in length, poisonous and having rippers like a scorpion. “அயிரையுந் தேளியு மாராலுங் கொத்தியே” (குற்றா. குற. 91, அனுபல்);. தேளி2 tēḷi, பெ. (n.) 1. திரளி மீன்; a short flat headedeel. 2. கிழாத்தி; a fresh-water shark of cal fish family. 3. தேட் கெண்டை; scorpion gobi. 4. தேன்; scorpion (சாஅக.);. ம. தேள் மத்ச்யம் [தேள் → தேனி = தேன் போற் கொட்டும் மீன் (முதா 120);] தேளி3 tēḷi, பெ. (n.) தேளித் தேங்காய்; a kind of red coconut (சாஅக.);. ம. தேளி |
தேளிலை | தேளிலை tēḷilai, பெ. (n.) காஞ்சொறி; scorpion leaf (சாஅக.);. |
தேளுக்கொட்டி | தேளுக்கொட்டி tēḷukkoṭṭi, பெ. (n.) தேட்கொடுக்கி; scorpion sting (சாஅக.);. [தேன் + கொட்டி] |
தேளேறு | தேளேறு tēḷēṟu, பெ. (n.) தேட்கொட்டு; sting of a scorpion “வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போல (இறை.2. பக்.39);. |
தேளை | தேளை tēḷai, பெ. (n.) நெஞ்சத் துடிப்பு (நாஞ்);; palpitation of heart. ம. தேள (இதயம்); |
தேளைக்கனம் | தேளைக்கனம் tēḷaikkaṉam, பெ. (n.) நெஞ்கரப்பு (நாஞ்);; hardihood [தேனை + கனம்] |
தேள் | தேள் tēḷ, பெ. (n.) கொடுக்காற் கொட்டி வருத்தும் ஒருயிரி; Scorpion. “தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்” (புறநா. 192, 16);. தேளுக்குக் கொடுக்கிலே நஞ்சு, தேவடியாளுக்கு உடம்பிலே நஞ்சு, உனக்கோ உடம்பெல்லாம் நஞ்சு (பழ.);. தேளுக்கு மணியம் கொடுத்தால் நாழிகைக்கு முந்நூறு முறை கொட்டும். (பழ.);. 2. நளி ஒரை (பிங்.); (சிலப் 3J23, உரை);; scorpio in the zodiac (சாஅக,);, ம. தேள், தேரை; க. சேழ், தேழ்; தெ. தேலு; து. சேளு, தேளு; குட. தேளி; மா. தேலெ; பிரா. தேன்க் [துன் → (தென்); தேன் = குத்தும் தச்சவிரி வகை (முதா. 130);] வகை 1. கருந்தேள் 2. செந்தேள் 3. பார்ப்பாரத்தேள் 4. சிறு தேள் 5. அரசத் தேள் 6. உச்சிலிங்கத் தேள் 7. வாதத் தேள் 8. பித்தத் தேள் 9. சிலேட்டுமத்தேள் 10. மண்டலித் தேள் |
தேள்கடி | தேள்கடி tēḷkaḍi, பெ. (n.) தேள் கொட்டு; the sting of scorpio(சாஅக.);. [தேள் + கடி.] |
தேள்கல் | தேள்கல் tēḷkal, பெ. (n.) ஒரு வகை நச்சுக்கல்; scropion stone on mineral bezoar (சாஅக.);. |
தேள்கெண்டை | தேள்கெண்டை tēḷkeṇṭai, பெ. (n.) ஒருவகைக் கெண்டை மீன்; scorpio goby. [தேன் + கெண்டை] |
தேள்கெளுத்தி | தேள்கெளுத்தி tēḷkeḷutti, பெ. (n.) தேள் போலுந் தோற்றமுடைய கெளுத்தி மீன்; fish resembles scorpion in structure. [தேள் + கெளுத்தி] |
தேள்கொடுக்கி | தேள்கொடுக்கி tēḷkoḍukki, பெ. (n.) ஒருவகைப் புச்சிலை; devils claw tigers claw, scorpion sting martynia diandro, a bushy plant of 3-4 ft. high with large coarse leaves. [தேன் + கொடுக்கி] |
தேள்கொடுக்கு | தேள்கொடுக்கு tēḷkoḍukku, பெ. (n.) தேள் முன்; sting of a scorpion (சாஅக.);. [தேன் + கொடுக்கு] |
தேள்கொடுக்குஇணைப்பு | தேள்கொடுக்குஇணைப்பு tēḷkoḍukkuiṇaippu, பெ. (n.) கட்டட வேலைகளில் விட்டம் (கிராதி);, சாத்து, அலகு இவை சேதமடையாமல் பொருத்துவதற்குப் பயன்படும் இணைப்பு; joint used in the building construction. [தேன் + கொடுக்கு + இணைப்பு] |
தேள்கொட்டு-தல் | தேள்கொட்டு-தல் dēḷkoṭṭudal, 15 செகுன்றாவி. (v.t.) தேன் கடித்தல் the stinging of a scorpion (சாஅக.);. [தேன் + கொட்டு-.] |
தேள்தண்டட்டி | தேள்தண்டட்டி tēḷtaṇṭaṭṭi, பெ. (n.) புறக் காதில் உருக்குமணியணிக்கு மேலிடத்தில் மகளிரணியும் காதணி வகை; a kind of car. ring, worn by women above the urukkumani (செஅக);. [தேன் + தண்டட்டி] |
தேள்மண்டலி | தேள்மண்டலி tēḷmaṇṭali, பெ. (n.) மிக நஞ்கன்ன தேன்.; a scorpion with a very poisonous sting (சாஅக.);. |
தேள்மீன் | தேள்மீன் tēḷmīṉ, பெ. (n.) விசிறி போல் விரிந்து காணப்படுவதோர் மீன்; fish which has fern like wings. [தேன் + மீன்] தேள் போன்று நச்சுதன்மையுடைய மீன் (மீனவ.); இது மெல்ல நீந்தும், சிவப்பும், பழுப்பும் கலந்த இம்மீனை உண்ணவியலாது. |
தேவ துந்துமி | தேவ துந்துமி tēvatuntumi, பெ.(n.) தேவராட்டத்தில் இடம் பெறும் “உறுமி” எனும் இசைக் கருவி; urumi, a musical instrument. [தேவன்+ துந்துமி] [P] தேவ துந்துமி dēvadundumi, பெ.(n.) தேவராட்டத்தில் இடம் பெறும் “உறுமி” எனும் இசைக் கருவி; a musical instrument. [தேவன்+துந்துமி] [P] |
தேவகங்கை | தேவகங்கை tēvagaṅgai, பெ. (n.) வான வெளியிலிருந்து வருவதாகக் கருதப்படும் கங்கை ஆறு; Ganga believed to come from the sky. [தேவ + கங்கை] |
தேவகணம் | தேவகணம் tēvagaṇam, பெ. (n.) 1. கணம் பார்க்க; See {} 2. இரலை, மாழ்கு, கழை, கொடிறு, கைம்மீன், விளக்கு, பனை, முக்கோல், தொழுபஃறி முதலான ஒன்பது விண்மீன்கள்; the nine naksatras viz., {} [தேவர் + கணம்] |
தேவகணிகை | தேவகணிகை tēvagaṇigai, பெ. (n.) தேவதாசி பார்க்க; See {} “தேவகணிகையர்கள் கூத்தர்” (காஞ்சிப்பு. தலவி. 25);. [தேவ + கணிகை] |
தேவகணிகையதர் | தேவகணிகையதர் dēvagaṇigaiyadar, பெ. (n.) தேவதாசி பார்க்க; see [தேவ + கணிகையர்] |
தேவகண்ணி | தேவகண்ணி tēvagaṇṇi, பெ. (n.) மலை வேம்பு; chittagong wood. [தேவ + கண்ணி] |
தேவகதி | தேவகதி dēvagadi, பெ. (n.) உயிர்கடக்கும் பிறப்பு நிலைகளுளொன்று (சீவக. 2800, தலைப்பு);; the order of divine beings, one of four kati. [தேவர் + கதி] தேவப் பிறப்பு (தேவகதி); மக்கட் பிறப்பு (மக்கட்கதி); விலங்குப் பிறப்பு (விலங்குசுதி);, நரகர் பிறப்பு (நரககதி); என்பன நால்வகைப் பிறப்புகள். |
தேவகதியெழுத்து | தேவகதியெழுத்து dēvagadiyeḻuddu, பெ. (n.) செய்யுண் முதலில் வருதற்குரியனவும், நன்மை பயப்பனவுமாகிய அ, இ, உ, எ, க, ச, ட, த, ப என்ற எழுத்துகள் (வெண்பாப். முதன் மொழி. 18, உரை);; auspicious letters at the commencement of a poem. [தேவசுதி + எழுத்து] |
தேவகந்தம் | தேவகந்தம் tēvagandam, பெ. (n.) 1. குங்கிலியம் (மலை.);; Indian bdellium. 2. நெய்ச் சட்டி (தைலவ. தைல. 32);; purple Indian water-lily. [தேவ + சுத்தம்] |
தேவகந்தர் | தேவகந்தர் tēvagandar, பெ. (n.) செங்கழுநீர்; a kind of red water lily(சாஅக.);. [தேவ(ர்); + சுத்தம்] |
தேவகந்துவி | தேவகந்துவி tēvaganduvi, பெ. (n.) தேவகத்துறு பார்க்க; See {}(சாஅக.);. |
தேவகந்தூறு | தேவகந்தூறு tēvagandūṟu, பெ. (n.) செங்கழுநீர் (மலை);; a kind of purple Indian water lily. [தேவ + கத்தூறு] |
தேவகன் | தேவகன் tēvagaṉ, பெ. (n.) கண்ண (கிருட்டிண);னுடைய பாட்டன், தேவகியின் தந்தை; grand father of Kannan, father of {} [தேவன் → தேவகன்] |
தேவகன்னி | தேவகன்னி1 tēvagaṉṉi, பெ. (n.) 1. வாழை; plantain tree. 2. மதகிரி வேம்பு; Indian mahogany. [தெய்வ → தேவ + கன்னி] தேவகன்னி2 tēvagaṉṉi, பெ. (n.) தேவலோகத்து அரம்பை; Ramba who dances in the {} court-yard. [தேவ + கன்னி] |
தேவகன்னிகைமரம் | தேவகன்னிகைமரம் tēvagaṉṉigaimaram, பெ. (n.) கட்டடத்திற்குப் பயன்படும் கோங்கு வகை மரம்; common caung used in building construction. [தேவர் + கன்னிகை + மரம்] |
தேவகன்மி | தேவகன்மி tēvagaṉmi, பெ. (n.) கோயிலில் இறை (சுவாமி); பணி பார்ப்போன்; a temple official, as pricst, a manager etc., “தேவகன்மிகள் இவை தலைகண்ட முதற் கொண்டு” (தெக.தொ. 592);. [தேவ + கன்மி] |
தேவகம் | தேவகம் tēvagam, பெ. (n.) தெய்வீகமானது (யாழ்அக.);; that which is divine. [தெய்விகம் → தேவகம்] |
தேவகருமம்நவகருமம் | தேவகருமம்நவகருமம் tēvagarumamnavagarumam, பெ. (n.) கோயிலில் நிகழ்த்தப்படும் வழிபாட்டுப் பணியும், கோயிலைப் புதுப்பித்தல், இடிபாடுகளைச் சீர்செய்தல் ஆகிய திருப்பணிகளும்; temple service done for adoration, and to reconstruct the damage part of the temple building. [தேவ கருமம் + நவகருமம்] இதற்கு இறையிலி நிலம் அளிக்கப் பெறுவது வழக்கு |
தேவகா | தேவகா tēvakā, பெ. (n.) தேவர்களது பூங்கா; garden of {} [தேவர் + கா] |
தேவகாஞ்சனம் | தேவகாஞ்சனம் tēvakāñjaṉam, பெ. (n.) தேவதாரு; decany desdarn Indian cedar tree(சாஅக.);. |
தேவகாட்டம் | தேவகாட்டம் tēvakāṭṭam, பெ. (n.) தேவதாரு (சங்அக.); பார்க்க; see [தேவ + காட்டம்] |
தேவகாதம் | தேவகாதம் tēvakātam, பெ. (n.) மலைக்குகை; rock cave, |
தேவகாந்தாரி | தேவகாந்தாரி tēvakāndāri, பெ. (n.) ஒருவகைப் பண்; a melody type. |
தேவகானம் | தேவகானம் tēvakāṉam, பெ. (n.) தேவர்கள் பாடும் இசை; celestial music. “சோழன் வாசலிலே தேவகானம் பாடுவா ளொருத்தியும்” (குருபரம். 126);. [தேவ + கானம்] |
தேவகி | தேவகி tēvagi, பெ. (n.) கண்ணனின் தாய்: mother of Kannan. “தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்” (திவ். பெருமாள். 7, 11);. |
தேவகிரி | தேவகிரி tēvagiri, பெ. (n.) 1. முருகக் கடவுட்குரிய இமய மலைப்பகுதி: a mountain sacred to {} in the Himalayas. “தேவகிரிப்படலம் (கந்தபு.);. 2. துகில் வகை (சிலப். 14, 108, உரை);; a kind of cloth. [தேவர் + கிரி] Skt. giri → த. கிரி |
தேவகுசுமம் | தேவகுசுமம் tēvagusumam, பெ. (n.) கிராம்பு (யாழ்அக);: cloves. |
தேவகுஞ்சரி | தேவகுஞ்சரி tēvaguñjari, பெ. (n.) தெய்வ யானை பார்க்க; see “தேவ குஞ்சரிபாகா நமோநம” (திருப்பு. 94);. [தேவர் + குஞ்சரி] |
தேவகுடிமை | தேவகுடிமை1 tēvaguḍimai, பெ. (n.) பழைய வரி வகை; an ancient tax [தேவர் + குடிமை] தேவகுடிமை2 tēvaguḍimai, பெ. (n.) கோயிலுக்குரிய நிலத்தில், குடியிருப்பதோடு, கோயிற் பணிகளைப் பார்த்து வரும் குடிகள்: people who live in the temple land and do temple service. [தேவர் + குடிமை] |
தேவகுண்டம் | தேவகுண்டம் tēvaguṇṭam, பெ. (n.) தானாயுண்டான ஊற்று (யாழ்.அக.);; natural spring, as God-made(செஅக.);. [தேவர் + குண்டம்] |
தேவகுமாரன் | தேவகுமாரன் tēvagumāraṉ, பெ. (n.) இயேசு; Christ, as the son of God. [தேவர் + குமாரன்] |
தேவகுரு | தேவகுரு1 tēvaguru, பெ. (n.) வியாழன் (பிங்.);; Brhaspati, as priest of the celestials. [தேவர் + குரு] தேவகுரு2 tēvaguru, பெ. (n.) தேவகுருவம் பார்க்க; see |
தேவகுருவம் | தேவகுருவம் tēvaguruvam, பெ. (n.) விளை நிலங்கள் ஆறனுள் ஒன்று (பிங்);; a region of bliss where the fruits of good karma are enjoyed one of six {} [தேவர் + குருவம்] |
தேவகுலம் | தேவகுலம் tēvagulam, பெ. (n.) கோயில்; temple. “தேவகுலமுந் தெற்றியும் பள்ளியும்” (ഥணிமே. 26:72);. [தேவர் + குலம்] |
தேவகெந்தம் | தேவகெந்தம் tēvagendam, பெ. (n.) தேவகந்தம் (யாழ்அக.); பார்க்க; see [தேவகத்தம் → தேவகெந்தம்] |
தேவகோடி | தேவகோடி tēvaāṭi, பெ. (n.) ஒரு பேரெண்; a very large number. “தேவகோடி கார்மலி கடலங் காலாள்” (சீவக. 2219);. [தேவ(ர்); + கோடி] |
தேவகோட்ட தோரணங்கள் | தேவகோட்ட தோரணங்கள் tēvaāṭṭatōraṇaṅkaḷ, பெ.(n.) சோழர் காலக் கோயில்களில் சிற்பங்கள் உள்ள இடம்; a place where the Chola period sculptures are preserved. [தேவர்+கோட்டம்+தோரணங்கள்] |
தேவகோட்டதோரணங்கள் | தேவகோட்டதோரணங்கள் tēvaāṭṭatōraṇaṅgaḷ, பெ.(n.) சோழர்காலக் கோயில்களில் சிற்பங்கள் உள்ள இடம்; a place where the Chola period sculptures are preserved. [தேவர்+கோட்டம்+தோரணங்கள்] |
தேவகோட்டம் | தேவகோட்டம்1 tēvaāṭṭam, பெ. (n.) தேவகுலம் பார்க்க: see “தேவகுலம் மன்றாகச் செய்யப்பட்ட தேவ கோட்டத்தை” (திருக்கோ. 129);. [தேவர் + கோட்டம்] தேவகோட்டம்2 tēvaāṭṭam, பெ. (n.) கோயில் கருவறைப் புறச்சுவரில் இறைத்திரு மேனிகளை வைப்பதற்கான மாடங்கள்; niche in the outside of the temple sanctum to keep the iodls. [தேவர் + கோட்டம்] |
தேவக்கிரகம் | தேவக்கிரகம்1 tēvaggiragam, பெ. (n.) அமைதிப் பித்துநிலையையுண்டாக்கும் பேய்; a class of demon causing harmless madness. தேவக்கிரகம்2 tēvaggiragam, பெ. (n.) தேவர்களின் இருப்பிடம்; place where devar abide. [தேவர் + கிரகம்] |
தேவக்கிரியை | தேவக்கிரியை tēvakkiriyai, பெ. (n.) 1. தெய்வச் செயல் (வின்.);; act of God, providence. 2. ஒரிசை (பரத. இராக. 56);; a specific melody type. [தேவ + கிரியை] |
தேவசங்கு | தேவசங்கு tēvasaṅgu, பெ. (n.) சங்கப் பணம்; a treasure of Gubera. [தேவ + சங்கு] |
தேவசத்துவம் | தேவசத்துவம் tēvasattuvam, பெ. (n.) மகளிர்க்குரிய மெய்ப்பாடுகள் பத்தனுள் தேவத் தொடர்பான குணம் (கொக்கோ.);; the divine clement in the makeup of a woman, one of pattu cattuvam. [தேவர் + சத்துவம்] |
தேவசன்னிதானம் | தேவசன்னிதானம் tēvasaṉṉitāṉam, பெ. (n.) தேவசன்னிதி பார்க்க; see [தேவர் + சன்னிதானம்] |
தேவசன்னிதி | தேவசன்னிதி dēvasaṉṉidi, பெ. (n.) 1.தெய்வத்தின் திருமுன்பு; divine presence. 2. கோயில்; temple. [தேவர் + சன்னிதி] |
தேவசபை | தேவசபை tēvasabai, பெ. (n.) இந்திரன் அவை; audience-hall. [தேவா + சபை] |
தேவசமுகம் | தேவசமுகம் tēvasamugam, பெ. (n.) தேவசன்னிதி பார்க்க; see [தேவன் + சமூகம்] |
தேவசாட்சியாய் | தேவசாட்சியாய் tēvacāṭciyāy, குவி.எ.(adv.) உண்மையாய்; truly, as having God for witness [தெய்வம் → தேவம் + சாட்சியாய்] |
தேவசிகிச்சை | தேவசிகிச்சை tēvasigissai, பெ. (n.) மூன்று மருத்துவ முறைகளுள், இதளிய கந்தக நஞ்சுகளால் நோய்கட்குச் செய்யும் நீக்கவினை (பரிகாரம்); (பதார்த்த 1202);; treatment of diseases by the use of mercury. sulphur and arsenic, considered to be of divine origin, one of three methods. [தேவர் + சிகிச்சை] |
தேவசித்தன் | தேவசித்தன் tēvasittaṉ, பெ. (n.) கமலமுனி; name of a sage of {}(சாஅக.);. [தேவ + சித்தன்] |
தேவசிந்தனை | தேவசிந்தனை tēvasindaṉai, பெ. (n.) தெய்வத்தை நினைத்துச் செய்யும் ஊழ்கம்; religious meditation. [தேவர் + சித்தனை] |
தேவசிருட்டை | தேவசிருட்டை tēvasiruṭṭai, பெ. (n.) மது; any sweet drink beverage(சாஅக.);. |
தேவசுத்தி | தேவசுத்தி tēvasutti, பெ. (n.) ஐந்துவகை மாசு நீக்குதலில், தெய்வத்தை இருக்கையில் அமர்த்தி, உடையை உடுத்துத் திருமஞ்சனம் ஆட்டி ஒப்பனை செய்து, நறும்புகை, விளக்குகளால் தூய்மை செய்தல்; purification of a deity, which consists in placing its image on a seat, bathing it, adorning it with garments, ornaments, etc, one of {} [தெய்வம் + கத்தி] |
தேவசுமம் | தேவசுமம் tēvasumam, பெ. (n.) கிராம்பு; cloves. |
தேவசேகரம் | தேவசேகரம் tēvacēkaram, பெ. (n.) தவனம்; southern wood. |
தேவசேனாபதி | தேவசேனாபதி dēvacēṉāpadi, பெ. (n.) முருகக்கடவுள்; Murugan as the commander of the celestial host. [தேவச் + சேனாபத] |
தேவசேனை | தேவசேனை tēvacēṉai, பெ. (n.) 1. இந்திரன் மகள்; daughter of {} 2. தேவக் கூட்டம்; celestials. [தேவர் + சேனை] |
தேவசேவை | தேவசேவை tēvacēvai, பெ. (n.) தெய்வத்திற்குச் செய்யும் தொண்டு; Service in a temple (செஅக.);. [தேவர் + சேவை] |
தேவச்சந்தம் | தேவச்சந்தம் tēvaccandam, பெ. (n.) நூறு சரமுள்ள முத்தாரம் (யாழ்.அக);; a garland of hundred strings of pearls(செஅக.);. [தேவர் + சத்தம்] |
தேவடி | தேவடி1 tēvaḍi, பெ. (n.) அரண்மனை; palace. தேவடி tēvaḍi, பெ. (n.) தேவரடியார் பார்க்க; see [தேவரடி → தேவடி] |
தேவடிச்சி | தேவடிச்சி tēvaḍicci, பெ. (n.) தேவரடியார் பார்க்க; see ம. தேவடிச்சி [தேவடி(யாள்); → தேவடிச்சி] |
தேவடிமை | தேவடிமை tēvaḍimai, பெ. (n.) கணிகையர்; dancing girl, as a servant of God (Pudu. insc. 930);. 2. வேலைக்காரி; servant maid. (I.M.P.N.A. 202); [தேவ + அடிமை] |
தேவடியான் | தேவடியான் tēvaḍiyāṉ, பெ. (n.) சிவனியப் பார்ப்பனன்; siva brahmin. “காளி தேவடியான் இரண்டாயிரத்து நாநூற்று வரேம்” (தெக.தொ. 3:1. கல். 10);. ம. தேவடியான் (கூட்டிக் கொடுப்பவன்); [தேவர் + அடியான்] |
தேவடியாள் | தேவடியாள் tēvaḍiyāḷ, பெ. (n.) தேவரடியார் பார்க்க; see தேவடியாள் ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கும், தேவடியாள் செத்தால் ஒன்றுமில்லை. [தேவரடியார் + தேவடியாள்] |
தேவடை | தேவடை tēvaḍai, பெ. (n.) எழுத்தழிந்த காசு: coin with face worn out. அந்தக் காசு தேவடை [தேய் → தேய்வடை → தேவடை] |
தேவதச்சன் | தேவதச்சன் dēvadaccaṉ, பெ. (n.) தேவகம்மியன்; {} [தேவர் + தச்சன்] |
தேவதத்தன் | தேவதத்தன் dēvadaddaṉ, பெ. (n.) 1. எவனை யேனுமொருவனைக் குறிக்குஞ் சொல்; a word used to denote an imaginary person. “தேவதத்தன் தானாகப் போகலானென்றால்” (யாப்.வி. 3, பக்.37);. 2. கொட்டாவியை உண்டு பண்ணும் வளி (பிங்.);; the vital air of the body which produces yawning |
தேவதத்தம் | தேவதத்தம் dēvadaddam, பெ. (n.) 1. கோயிலுக்குச் செய்யும் நன்கொடை (கோயிலுபயம்);; that which is given to a temple. 2. அருச்கனனுக்கு இந்திரன் கொடுத்த சங்கு (யாழ்.அக);;{} conch, as given by {} [தேவ + தத்தம்] |
தேவதத்தாக்கிரசன் | தேவதத்தாக்கிரசன் dēvadaddākkirasaṉ, பெ. (n.) புத்தன்; Lord {} |
தேவதத்துவம் | தேவதத்துவம் dēvadadduvam, பெ. (n.) தெய்வ அன்பு; god’s love(இருநூ.);. [தேவ(ர்); + தத்துவம்] |
தேவதரு | தேவதரு dēvadaru, பெ. (n.) 1. தெய்வ மரம்; one of the celestial trees .”அருள்பழுத் தொழுகு தேவதருவே” (தாயு. பரிபூரணா, 1);. 2. தேவதாரம் (மலை); பார்க்க; see 3. செம்புளிச்சை; red hemp bendy. 4. மந்தாரம்; mountain eboy. [தெய்வம் + தரு = தேய்வத்தரு → தேவதரு] |
தேவதாகாரம் | தேவதாகாரம் tēvatākāram, பெ. (n.) கோயில் (யாழ்அக.);; temple |
தேவதாசன் | தேவதாசன் tēvatācaṉ, பெ. (n.) 1. தெய்வத் தொண்டன்; devotee, servant of god. 2. அரிச்சந்திரன் மகன்: the son of Harichandran. [தேவர் + தாசன்] |
தேவதாசி | தேவதாசி tēvatāci, பெ. (n.) 1. கோயிற் பணி விடை புரியுங்கணிகை; dancing girl, dedicated to the service of a God. 2. தேவலோகத்து நாட்டிய அரம்பையர்; celestial dancing-girls |
தேவதாசிகள் | தேவதாசிகள் tēvatācikaḷ, பெ.(n.) கோயில் தெய்வத்தின் முன் பரதம் ஆடுபவர்; dancing women in temples. மறுவ. தேவரடியார் [தேவ+தாசிகள்] தேவதாசிகள் tēvatācigaḷ, பெ.(n.) கோயில் தெய்வத்தின் முன் பரதம் ஆடுபவர்; dancing women in temples. மறுவ. தேவரடியார் [தேவ+தாசிகள்] |
தேவதாடம் | தேவதாடம் tēvatāṭam, பெ. (n.) 1. கருங்கோள் (இராகு);; the moon’s ascending node. 2. தீ: fire(செஅக.);. |
தேவதானபிரமதேயம் | தேவதானபிரமதேயம் tēvatāṉabiramatēyam, பெ. (n.) கோயில் வழிபாட்டிற்கென்று உரிமை செய்யப்பட்ட தேவப்பார்ப்பனர்கட்கும், கோயிலுக்கும் அமைந்த செலவினங்கட்கு உரியதாக அளிக்கப்பெறும் இறையிலி நிலம்: land given to temples for the brahmins, and for the temple expenses. |
தேவதானம் | தேவதானம் tēvatāṉam, பெ. (n.) கோயிற்கு விடப்பட்ட இறையிலி நிலம்; endowment of tax-free land to a temple. “நன்றிகொ டேவதான நல்கி” (திருவாலவா. 48, 22);. ம. தேவதானம் [தேவ + தானம்] |
தேவதானியம் | தேவதானியம் tēvatāṉiyam, பெ. (n.) சிறுங்கி அல்லது தித்திப்புச் சோளம்; sweet cholam (சாஅக.);. [தேவ + தானியம்] வ. தானியம் → த. தவசம் |
தேவதாமரை | தேவதாமரை tēvatāmarai, பெ. (n.) தாமரைச் செல்வம் (பதுமநிதி);; patuma-nidi, a treasure of Kubera. [தேவர் + தாமரை] |
தேவதாயனம் | தேவதாயனம் tēvatāyaṉam, பெ. (n.) கோயில்; temple (இருநூ.);. |
தேவதாயம் | தேவதாயம் tēvatāyam, பெ. (n.) கோயிற்கு நிலம் வழங்கல் முதலிய நற்செயல்கள்; lands other endowments to a temple (R.F.);. “தேவதாயங்கள் வேதியர் செய்கள்மேற் கோவினா விறைகூட்டி” (குற்றா.தல. கவுற்சன. 62);. [தேவ + தாயம்] |
தேவதாரன் | தேவதாரன் tēvatāraṉ, பெ. (n.) தேவதாரம் பார்க்க; see (சாஅக);. |
தேவதாரம் | தேவதாரம் tēvatāram, பெ. (n.) 1. தேவதாரு 1,2 பார்க்க; see தேவதாரத்துஞ் சந்தினும் பூட்டின சிலமா” (கம்பரா. வரைக். 1);. 2. மதகரி வேம்பு; common bastard cedar |
தேவதாரி | தேவதாரி1 tēvatāri, பெ. (n.) தேவதாரு 1,2 பார்க்க; see தேவதாரி2 tēvatāri, பெ. (n.) இமயமலைச் சாரலில் வளரும் மருந்தாகும் இயல்புடைய மரம்; Indian cedar a medicinal tree (சாஅக.);. |
தேவதாரு | தேவதாரு1 tēvatāru, பெ.(n.) மரத்தாலான சிற் பங்கள் செய்யப் பயன்படும் மர வகை; wood variety used to make chariots. [துவை+தாரு] தேவதாரு2 tēvatāru, பெ.(n.) மருந்துக்குப் பயன்படும் மரம்; a tree of medical use. [தேவை+தாரு] தேவதாரு tēvatāru, பெ.(n.) மரத்தாலான சிற் பங்கள் செய்யப் பயன்படும் மர வகை, wood variety used to make chariots. [துவை+தாரு] தேவதாரு tēvatāru, பெ.(n.) மருந்துக்குப் பயன்படும் மரம்; a tree of medical use, [தேவை+தாரு] தேவதாரு tēvatāru, பெ. (n.) 1. வண்டுகொல்லி; deodar cedar. 2. மரவகை; red cedar. 3. நெட்டிலிங்கம் |
தேவதாளி | தேவதாளி1 tēvatāḷi, பெ. (n.) 1. ஊமத்தை; datura. 2. பூசணி; pumpkin தேவதாளி2 tēvatāḷi, பெ. (n.) 1. பெரும்பண் வகை (பிங்.);; a specific melody type. 2. ஆனை மலையிலுள்ள மரவகை; langsat of the {} hills in Coimbatoresm (m.tr);. 3. நுரைப் பீர்க்கு பார்க்க; see |
தேவதாளிதைலம் | தேவதாளிதைலம் dēvadāḷidailam, பெ. (n.) ஒருவகை மருந்தெண்ணெய்; a kind of medicinal oil (சாஅக.);. |
தேவதீபம் | தேவதீபம் tēvatīpam, பெ. (n.) 1. கண் (யாழ்அக.);; eye. 2. தெய்வீக ஒளி; divine light [தேவ + தீபம்] |
தேவதீர்த்தம் | தேவதீர்த்தம் tēvatīrttam, பெ. (n.) தெய்வங்களை மனங்குளிரச் செய்வதற்காக உள்ளங்கையிலே நீரை ஊற்றி, அது விரல்களின் வழியாக நிலத்தை அடையச் செய்யும் ஐவகைத் தூய நீருள் (தீர்த்தம்); ஒன்று (சைவச.பொது.66);; water poured from the palm of the hand, through the finger tips on the ground, to propitate devar one of {} [தேவ + தீர்த்தம்] |
தேவதுந்துபி | தேவதுந்துபி dēvadundubi, பெ. (n.) ஒர் இசைக் கருவி; drums of the Gods. “தேவதுந்துபி தேவர்கட் கோகையுய்த் துரைப்பான் (சீவக 2367); (செஅக.);. [தேவ + துத்துபி] |
தேவதூதன் | தேவதூதன் tēvatūtaṉ, பெ. (n.) 1. தெய்வச் செய்தி கொணர்வோன்; divine messenger. 2. தூதனாகிய தேவன் (கிறித்,);; Holy Angel (செஅக.);. [தேவர் + தூதன்] |
தேவதூபம் | தேவதூபம் tēvatūpam, பெ. (n.) வெள்ளைக் குங்கிலியம் பார்க்க (தைலவதைல);; see [தேவர் + தூபம்] |
தேவதேவன் | தேவதேவன் tēvatēvaṉ, பெ. (n.) பரம்பொருள்; the supreme being. “நீயே தவத் தேவதேவனும்” (திவ். இயற்.நான்மு.20);. [தேவர் + தேவன்] |
தேவதேவு | தேவதேவு tēvatēvu, பெ. (n.) தேவதேவன் பார்க்க: see “தேவதே வுபதேசித்த சித்தியை” (திருவிளை. அட்டமா. 29);. |
தேவதை | தேவதை dēvadai, பெ. (n.) 1. தெய்வம்: deity, god. 2. பேய் (யாழ்அக.);; evil spirit ம. தேவத |
தேவதைக்குறை | தேவதைக்குறை dēvadaikkuṟai, பெ. (n.) சிறுதெய்வக்குறையால் உண்டாகும் நோய் (வின்.);; disease due to possession by an evil spirit (செஅக);. [தேவதை + குறை] |
தேவதைக்குற்றம் | தேவதைக்குற்றம் dēvadaikkuṟṟam, பெ. (n.) ஊர்த் தேவதைகளின் சினத்தினால் ஏற்படும் கோளாறுகள்; diseases due to malignant influence of demon and monsters (சாஅக);. [தேவதை + குற்றம்] |
தேவதைத்தொடர்ச்சி | தேவதைத்தொடர்ச்சி dēvadaiddoḍarcci, பெ. (n.) சிறு தேவதையின் பீடிப்பு (வின்.);: possession or obsession by a demon. [தேவதை + தொடர்ச்சி] |
தேவத்துவம் | தேவத்துவம் tēvattuvam, பெ. (n.) தேவ தன்மை; heavenliness(இருநூ.);. [தேவம் → தேவத்துவம்] |
தேவநகர | தேவநகர tēvanagara, பெ. (n.) 1. கோயில்; temple. 2. துறக்கம்; city of the Gods. [தேவர் + நகர். நகுதன் = விளங்குதல். நகு → நகர் = விளங்கும் மாளிகை, மாணிகையுள்ள பேரூர்] |
தேவநற்கருணை | தேவநற்கருணை tēvanaṟkaruṇai, பெ. (n.) கிறித்தவரின் சடங்கு; a ceremony of Christianity. [தேவ + நற்கருணை] |
தேவநாகரம் | தேவநாகரம் tēvanākaram, பெ. (n.) தேவநாகரி பார்க்க; see “நந்திநாகரந் தேவநாகர முதலாய எழுத்துக்களை” (சிவதரு. சிவஞானதான. 32, உரை);. [தேவ + நாகரம்] |
தேவநாகரி | தேவநாகரி tēvanākari, பெ. (n.) வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து; North Indian Sanskrit script (செஅக.);. [தேவ + நாகரி] |
தேவநாயகன் | தேவநாயகன் tēvanāyagaṉ, பெ. (n.) தேவர்கள் தலைவன்; the Lord of celestials. ம. தேவநாயகன் [தேவ + நாயகன்] |
தேவநாழியோடொக்கும்உழக்கு | தேவநாழியோடொக்கும்உழக்கு tēvanāḻiyōṭokkumuḻkku, பெ. (n.) திருச்சோற்றுத் துறை சிவன்கோயிலில் நெய் அளப்பதற் கிருந்த அளவை; measurement use to measure the ghee in Sivan temple in {} “நிசதி உழக்கு நெய் – தேநாழியோ டொக்கும் உழக்கினால் அட்டுவேன்” (தெகதொ. 5, கல். 619);. [தேவ + நாழி + ஓடு + ஒக்கும் + உழக்கு] |
தேவநிகாயம் | தேவநிகாயம் tēvanikāyam, பெ. (n.) வீடுபேறு; salvation. [தேவ(ர்); + நிகாயம்] |
தேவநிந்தகன் | தேவநிந்தகன் tēvanindagaṉ, பெ. (n.) தெய்வத்தைத் தூற்றுபவன் (யாழ்.அக.);; blasphemer. [(தெய்வம்); தேவ + நிந்தகன்] |
தேவநினல் | தேவநினல் tēvaniṉal, பெ. (n.) நாவல்; jamboo tree (சாஅக.);. |
தேவநிறம் | தேவநிறம் tēvaniṟam, பெ. (n.) 1. சீந்தில்; moon creeper. 2. பொன்னிறம்; golden colours (சாஅக.);. [தேவ(ர்); + நிறம்] |
தேவநிலம் | தேவநிலம் tēvanilam, பெ. (n.) தேவதைகளுக் கென்று விடப்பட்ட ஆறிலொரு மனைப் பகுதி (வின்.);; portion of a house-site allotted to several deities, being one-sixth of a square plot (செஅக.);. [தேவர்) + நிலம்] |
தேவநீதி | தேவநீதி tēvanīti, பெ. (n.) தெய்வத் தண்டனை (யாழ்அக);; divine punishment [தேவ(ர்); + நீதி] |
தேவநேயன் | தேவநேயன்1 tēvanēyaṉ, பெ. (n.) இறைவன் மேல் அன்பு கொண்டோன் (கிறித்.);; Jesus [தேவன் + தேயன்] தேவநேயன் tēvanēyaṉ, பெ. (n.) வடமொழிப் பிணிப்பினின்று தமிழைக் காக்கப் பிறப்பு எடுத்ததாகக் கூறியவரும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுப்பது தம் வாழ்நாள் பணியென்று கொண்டவரும் மாந்தன் பிறந்தகம் குமரிக் கண்டமே என்று நிறுவியவரும் தமிழ் திரவிடத்திற்குத் தாய் ஆரியத்திற்கு மூலம், ஞால முதன் மொழி என்னும் முப்பெரும் முடிவுகளை நிறுவத் தம் வாழ்நாள் முழுமையும் ஆய்வு மேற் கொண்டவருமான இருபதாம் நூற்றாண்டின் தனித்தமிழ்ப் பேரறிஞர்; purist Tamil scholar of 20th century, who devoted his life time to establish the purity and the antiquity of Tamil, who considered his birth is for the same cause, who considered compilation of the etymological dictionary of Tamil language as his life time mission, who asserted Kumari continent was the birth place of human race, Tamil is the mother of Dravidian languages, Tamil has roots of Aryan languages, and Tamil is the primary classical language of the world [தேவன் + நேயன்] தேவன்;தேய் – தேய்தல் = உரசுதல் தேய் – தீய் – தீ = நெருப்பு, விளக்கு, நரகம். தீ – தீமை = தீயின் தன்மை. தீ – தீய = கொடிய தீய்தல் = எரிந்து போதல், கருகுதல், பற்றிப் போதல். தீதல் = தீய்தல். ஏகாரம் ஈகாரமாய்த் திரிதலை, தேன் – தேம் – தீம் என்னும் திரிபிலும் கண்டு கொள்க. தேய் – தேயு (சமற்கிருதம்); = நெருப்பு இத் ‘தேய்’ அடியினின்றே தெய்வப் பெயர் தோன்றிற்று தேய் – தேய்வு – தேவு – தேவன். தேய்வு – தெய்வு- தெய்வம். தேவு – தே = தெய்வம், தலைவன் பால் வரை தெய்வம் வினையே பூதம் (தொல். 341); தெய்வம் உணாவே மாமரம் புட்பறை (தொல். 964); தெய்வம் அஞ்சல் புரையறத் தெளிதல் (தொல். 1218); வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப (தொல். 1367);, யகர வொற்றுள்ள தெய்வப்பெயரே பெரும் பான்மையாகவும், தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே (தொல்.1395); என வகர வொற்றுள்ள பின்னை வடிவு அருகியும், இதுபோதுள்ள தமிழ் நூல்களுள் முந்தியதாகிய தொல்காப்பியத்துள் வருதல் காண்க சமற்கிருதம் – deva, daiva இலத்தீக் –dues= god கிரேக்கம் ‘தேவ’ என்னும் சொற்குச் சமற்கிருதத்திற் காட்டப்படும் div (to be bright); di, dip (to shine); என்னும் வேர்ச்சொற்கள் முதற் பொருளன்றி வழிப்பொருளே கொண்டுள்ளமையின் பொருந்தாமை காண்க. பின்வரும் சித்திய (scythian); ஆரியச் சொற்கள், ‘தீ’ (நெருப்பு); என்னும் தமிழ்ச் சொற்கு இனமானவை எனக் கால்டுவெல் கண்காணியார் காட்டுவார். சித்தியம்: சாமாயிதே மஞ்சு அங்கேரியம் ஒகத்தியக்கு துங்கசு இலகக்கியம் ஆரியம்;கேலிக்கம் வேலிக பாரசீகம் நேயன் நள் – நண் – நண்பு – நட்பு நள்ளுதல் = அடைதல், பொருந்துதல், நட்புக் கொள்ளுதல், செறிதல் நள்ளார் = பகைவர். நள்ளி = உறவு (சூடா); நள்ளிருள் = செறிந்தவிருள் (திருக்கோ 156, சிலப். 15:105); நள்ளுநர் = நண்பர் (திவா.);. நள் – நளி, நளிதல் = செறிதல், நள் – நெள் – நெய் = ஒட்டும் நீர்மப்பொருள் கருப்புக் கட்டிச்சாந்து. நெய்தல் = இணைத்தல், நூலை இணைத்து ஆடையாகச் செய்தல். நெய் = குருதி, நெய்த்தோர் (நெய்த்துவர்?); = குருதி. அகரம் எகரமாதலை, பரு – பெரு, சத்தான் – செத்தான் என்னும் திரிபுகளிற் காண்க. ளகர மெய்யீறு யகர மெய்யீறாவதை. கொள் – கொய், தொள் – தொய், பொள் – பொய் முதலிய திரிபுகளிற் காண்க நெய் – (நெய்ஞ்சு); – நெஞ்சு – நெஞ்சம் = விலாவெலும்புகள் இணைக்கப்பட்ட இடம் அல்லது அன்பிற்கிடமாகக் கருதப்படும் நெஞ்சாங்குலை உள்ள இடம் நெய் – நேய் – நேயம் = அன்பு, ஈரம் பசை முதலிய சொற்கள் ஒட்டும் பொருளையும் அன்பையும் குறித்தல் காண்க அன்பு, இருவரை அல்லது பலரை இணைப்பது. நேய் – நே = அன்பு. நேயம் – நேசம் ய -ச ஒநோ: நெயவு – நெசவு நேசம் – நேசி, நேசித்தல் = அன்பு கடாத்தல், விரும்புதல். நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவார் (தாயுமானவர்); நேயம் – நேயன். நேசம் – நேசன். நேயம் என்னும் தென்சொல் வடநாட்டுத் திரவிடத்தில் வழங்கி, பின்னர்ப் பிராகிருதத்திலும் தொடர்ந்து, இறுதியில் சமற்கிருதத்திற் புகுந்து ‘ஸ்நேஹ’ என்று வழங்குகின்றது. இவ்வரலாற்றை அறியாதார். பேரன் பாட்டனைப் பெற்றான் என்பது போல், ஸ்நேஹ (சமற்.);- நேயம் (பிராகிருதம்); -நேயம் (தமிழ்); எனத் தலைகீழாய்த் திரிப்பர். இங்ங்னமே சென்னைப் பல்கலைக் கழகத் தமிழகராதியிலும் உண்மைக்கு மாறாகக் காட்டப்பட்டுள்ளது. பகுத்தறிவும் நடுவு நிலைமையுமுள்ள அறிஞர் உண்மை கண்டுகொள்வாராக நேயம் வடசொல்லாயின் ‘நெய்’ என்பதும் அதன் அடிவேரான ‘நள்’ என்பதும் வட சொல்லாதல் வேண்டும். அங்ஙன மாகாமை வெள்ளிடை மலைபோல் தெள்ளிதே. வடமொழி ஆயிரக்கணக்கான தென் சொற்களைக் கடன் கொண்டிருப்பதால், மொழிநூல் முறைப்படி நடுவு நிலையாய் ஆராய்ந்து உண்மை காண வேண்டுமேயன்றி. வடமொழி தேவமொழியாதலால் பிற மொழியினின்று கடன் கொள்ளாதென்னும் கருநாடகக் குருட்டுக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டு, தூய தென் சொற்களையும் வடசொல்லென வலிப்பது, அறிவாராய்ச்சி மிக்க இக்காலத்திற் கேற்காதென வடமொழிவாணர் திடமாக அறிவாராக ஆராய்ச்சியில்லாத தமிழ்ப் பேராசிரியரும் வடமொழியிலுள்ள சொல்லெல்லாம் வடசொல்லெனக் கருதும் பேதைமையை விட்டுய்வாராக. மயிர் எனும் தொன்சொல் ச்மச்ரு (smrsru); எனச் சகரம் முற்கொண்டு வழங்குவது போன்றே, நேயம் என்னும் தென்சொல்லும் ‘ஸ்நேஹ’ என ஸகரம் முற்கொண்டு சமற்கிருதத்தில் வழங்கு கின்றதென அறிக. (தென்மொழி. நவ. 1959);, |
தேவந்தி | தேவந்தி tēvandi, பெ. (n.) சிலப்பதிகாரக் கண்ணகியின் தோழி; friend of {} in Cilappati-karam. |
தேவனம் | தேவனம் tēvaṉam, பெ. (n.) 1. தாமரை (மலை.);: lotus. 2. சூதாட்டம்; gambling |
தேவனுலகம் | தேவனுலகம் tēvaṉulagam, பெ. (n.) துறக்கம்; svarga, Indira’s heaven. [தேவன் + உலகம்] |
தேவன் | தேவன் tēvaṉ, பெ. (n.) 1. கடவுள்; god. “தேருங்காற் றேவ னொருவனே” (திவ். இயற். நான்மு. 2);. 2. அருகன் (பிங்.);; Arhat. 3. அரசன்; king “தேவா நின்கழல் சேவிக்க வந்தனன்” (கம்பரா. கங்கை. 39);. 4. கொழுந்தன் (யாழ்.அக);; husband’s brother. 5. மறவர், கள்ளர், அகம் படியார்க்கு வழங்கும்பட்டப் பெயர்; a title of {} 5. ஈட்டிக் காரன் (யாழ்.அக.);; lancer. 6. பரிசைக்காரன் (யாழ்.அக.);; shield-bearer. 7. மடையன் (யாழ்.அக.);; fool, idiot ம. தேவன் [தேம் → தேயு = தெருப்பு. தேய் → தேய்வு → தேவு = தெய்வம், தெய்வத் தன்மை, தேவு → தேவன் = கடவுள், அரசன், கணவன், தலைவன் (வ.வ. 17);] த. தேவன் → Skt. {} தேவன்2 tēvaṉ, பெ.(n.) 1. சூதம்; mercury. 2. கல்லுப்பு; rock salt. 3. கடலாத்தி; a plantsterospermum xylocarpus. |
தேவன்திருவரன்குளமுடையான் | தேவன்திருவரன்குளமுடையான் tēvaṉtiruvaraṉkuḷamuḍaiyāṉ, பெ. (n.) 13 ஆம் நூற்கல்வெட்டால் அறியப்பெறும் புலவர்; a poet known in the 13th century inscription. பாண்டி மண்டலத்தில் பொன்னமராவதி முதலிய நாடுகளில் வாழும் பெருவீரர்களாகிய மறமாணிக்கர்கள் மேல் தேவர் திருவரன் குளமுடையான் எனும் புலவர் “பேர் வஞ்சி” எனும் நூலொன்று பாடியதாகக் குறிப்பு காணப்படுகின்றது. |
தேவபட்சி | தேவபட்சி tēvabaṭci, பெ. (n.) ஆள்காட்டிப் பறவை; red wattled lapwing sand piper (சாஅக.);. [தேவ(ர்); + பட்சி] Skt. {} → த. பட்சி |
தேவபதம் | தேவபதம் dēvabadam, பெ. (n.) 1. விண்; heaven, firmament. 2. அரசக் குமுகாயம்; royal presence. [தேவ + பதம்] |
தேவபதி | தேவபதி dēvabadi, பெ. (n.) தேவர்கோன் (யாழ்அக.); பார்க்க; see ம. தேவபதி [தேவ(ர்); + பதி] Skt. pati → த. பதி |
தேவபவனம் | தேவபவனம் tēvabavaṉam, பெ. (n.) 1. அரசமரம்; pipal tree. 2. கோயில்; temple. 3. வீடுபேறு; heaven (சாஅக.);. ம. தேவபவனம் [தேவ(ர்); + பவனம்] Skt. bhavana → த. பவனம் |
தேவபாடை | தேவபாடை tēvapāṭai, பெ. (n.) வடமொழி; Sanskrit, as the language of the Gods. “தேவபாடையினிக்கதை செய்தவர்” (கம்பரா. சிறப்புப். 7);. [தேவ(ர்); + பாடை] Skt. {} → த. பாடை மொழி இயற்கையாய் உருவானதுமன்று; கடவுளால் படைக்கப்பட்டதுமன்று; மக்களால் உருவாக்கப்பட்டதே. அவ்வாறிருக்க ஒரு மொழியைத் தேவமொழி என்பது ஏமாற்று வேலை யென்றறிக. |
தேவபாணி | தேவபாணி tēvapāṇi, பெ. (n.) தேவரைப் புகழ்ந்து கூறும் பாட்டுவகை; songs in praise of Gods. “செந்துறை வெண்டுறை தேவபாணி யிரண்டும்” (சிலப். 6:35 உரை);. [தேவ(ர்); + பாணி] |
தேவபூசை | தேவபூசை tēvapūcai, பெ. (n.) இல்லத்தில் நடைபெறும் இறைவழிபாடு; daily worship in a house. ம. தேவபூச [தேவ(ர்); + பூசை. பூசுதல் = கழுவுதல். பூச → பூசை = தெய்வப் படிமையை நீராட்டிச் செய்யும் வழிபாடு] |
தேவப்பசு | தேவப்பசு tēvappasu, பெ. (n.) காமதேனு (யாழ்அக.);; the celestial cow. [தேவ(ர்); + பசு] Skt. {} → த. பசு |
தேவப்பிரணவம் | தேவப்பிரணவம் tēvappiraṇavam, பெ. (n.) தேவபாணி பார்க்க: see “தேவப்பிரணவமெனும் வடமொழியை’ (பன்னிருபா. 207);. [தேவ(ர்); + பிரணவம்] |
தேவப்பிறங்கி | தேவப்பிறங்கி tēvappiṟaṅgi, பெ. (n.) snake jasmine (சாஅக.);. |
தேவப்புள் | தேவப்புள் tēvappuḷ, பெ. (n.) எகினம் (அன்னம்);; swan, as a divine bird. [தேவ + புன்] |
தேவமூடம் | தேவமூடம் tēvamūṭam, பெ.(n.) தேவர்கள் தம்மைக் காப்பாற்றுவார் என்று மயங்கல்; believing Gods will protect, an illusionary idea. [தேவ + மூடம். முட்டு → முட்டான். முட்டு → முட்டன் → மூடன். மூடம்] |
தேவமேரையாய் | தேவமேரையாய் tēvamēraiyāy, வி.எ. (adv.) அழகாக, நன்றாக; divinely, [தேவ + மேரை + ஆய்] |
தேவயஞ்ஞம் | தேவயஞ்ஞம் tēvayaññam, பெ. (n.) க டவுள் வேள்ளி; sacrifice to deity. [தேவ(ர்); + யஞ்ஞம்] Skt. {} → த. யஞ்ஞம் |
தேவயாத்திரை | தேவயாத்திரை tēvayāttirai, பெ. (n.) நற்பேறு கிடைக்க செய்யும் பயணம்; pilgrimage to sacred places. “தேவயாத்திரை தீர்த்தயாத்திரை செய் சிவநேசர்” (தணிகைப்பு. அகத்திய 502);, 2. கோயில் தெய்வத்தின் புறப்பாடு; procession of the chief idol of a temple. ம. தேபயாத்ர [தேவ(ர்); + மாத்திரை] |
தேவயானம் | தேவயானம்1 tēvayāṉam, பெ. (n.) 1. கடவுளர் ஊர்தி; chariotor vehicle of a God. 2. அர்ச்சில் முதலிய தேவதைகளைக் கடந்து வீடு பேறடையச் செல்லும் வழி; way to the supreme heaven which is open only to the brahma-vit, and on which one has to pass by arccis and other deities. ம. தேவபானம் [தேவ(ர்); + யானம்] தேவயானம்2 tēvayāṉam, பெ. (n.) மூக்கின் வழியாய் வலது பக்கத்தில் ஒடும் மூச்சு; air passing through the right nostril (சாஅக.); |
தேவயானை | தேவயானை tēvayāṉai, பெ. (n.) 1. ஐராவதம் பார்க்க; see 2. தெய்வயானை; a wife of Lord Murugan. [தேவ + யானை] |
தேவயுகம் | தேவயுகம் tēvayugam, பெ. (n.) 12000 தெய்வ வாண்டு கொண்ட காலவளவு (சங்அக);; period consisting of 12000 divine years. ம. தேவயுகம் [தேவ + யுகம்] |
தேவரகசியம் | தேவரகசியம் tēvaragasiyam, பெ. (n.) தேவர்மத்தணம் பார்க்க; see [தேவர் + ரகசியம்] Skt. rahasya → த. ரகசியம் |
தேவரகன்டன் | தேவரகன்டன் tēvaragaṉṭaṉ, பெ. (n.) திருவாரூர்ச் சிவபெருமான்; {} as worshipped at {} “தேவரகன்டப் பெருமாள் தியாகப் பெருமாள்” (திருவாரூ. 35);. |
தேவரங்கம் | தேவரங்கம் tēvaraṅgam, பெ. (n.) பணிப் புடிடிவ (யாழ்அக);; cloth worn by women while engaged in household work |
தேவரடியார் | தேவரடியார் tēvaraṭiyār, பெ.(n.) கோயில் களில் பரதம் ஆடும் பெண்கள்; temple dancers. [தேவர்+அடியார்] தேவரடியார் tēvaraḍiyār, பெ.(n.) கோயில் களில் பரதம் ஆடும் பெண்கள்; temple dancers. [தேவர்+அடியார்] தேவரடியார் tēvaraḍiyār, பெ. (n.) தளிப் பெண்டிர்; temple dancing girls. “தேவரடியார்க்கும் உவச்சர்க்கும் (தெகதொ3::47);. ம. தேவடிச்சி [தேவர் + அடியார்] |
தேவரநீதி | தேவரநீதி tēvaranīti, பெ. (n.) கணவன் இறந்த பின், குல வளர்ச்சி கருதி அளியரை (மைத்துனரை);க் கூடி மகப்பெறும் பண்டை வடவர் வழக்கம்; the practice of north Indian’s which a childless widow is permitted to have sexual union with the borther of her deceased husband for the sake of raising up seed to the deceased. “ஈண்டு தேவர நீதியிற் கொழுந்தி யரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால்” (பாரதிசம்பவ. 4);. [தேவரன் + நீதி] |
தேவரன் | தேவரன் tēvaraṉ, பெ. (n.) கணவனுடன் பிறந்தான்; husband’s brother. “ஈண்டு தேவரநீதியிற் கொழுந்திய ரெழின் மகப்பெற நின்னால் வேண்டுமால்” (பாரத சம்பவ. 4);. |
தேவரம்பை | தேவரம்பை tēvarambai, பெ. (n.) 1. தேவ உலகத்து மகளிருளொருத்தி; a celestial damsel. 2. தெய்வப் பெண்; damsels in svarga. [தேவ + அரம்பை, அர் → அரம்=அச்சம், துன்பம். அரமகன் = துன்புறுத்தும் தெய்வப்பெண். அர் → அரம் → அரம்பை] |
தேவராசகவாமிகள் | தேவராசகவாமிகள் tēvarācagavāmigaḷ, பெ. (n.) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் கந்தர் சட்டிக் கவசம், சக்திக் கவசம் போன்ற நூல்களை எழுதியுள்ளனார்; a poet, author of kandar-satsi-k-kavacam, sakthi-k-kavasam, in 19th century. |
தேவராசன் | தேவராசன் tēvarācaṉ, பெ. (n.) தேவர்கோன் பார்க்க; see. {} [தேவ(ர்); + ராசன்] த அரசன் → Skt..ராசன் |
தேவராசப்பிள்ளை | தேவராசப்பிள்ளை tēvarācappiḷḷai, பெ. (n.) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர்; a poet lived in the 19th century. இவர் குசேலோபாக்கியானம், சூத சங்கிதை, பஞ்சாக்கர தேசிகர் பஞ்சரத்னம், பஞ்சாக்கர தேசிகர் பதிகம், சேடமலை மாலை, தணிகாசல மாலை எனும் சிற்றிலக்கியங்களை எழுதியுள்ளார். |
தேவராசியம் | தேவராசியம் tēvarāciyam, பெ (n.) வர்மந்தணம் பார்க்க; see. {} [தேவ + ராசியம்] Skt. rahasya → ரகசியம் → ரகசியம் |
தேவராட்டம் | தேவராட்டம் tēvarāṭṭam, பெ.(n.) கம்பளத்து நாயக்கர் ஆடும் ஆட்டம்; a folk dance. [தேவர்+ஆட்டம்] தேவராட்டம் tēvarāṭṭam, பெ.(n.) கம்பளத்து நாயக்கர் ஆடும் ஆட்டம்; afolk dance. [தேவர்+ஆட்டம்] |
தேவராட்டி | தேவராட்டி tēvarāṭṭi, பெ.(n.) குரவைக் கூத்தாடும் பெண்டிர்; dancer of kuravai dance. [தேவர்+ஆட்டி] தேவராட்டி tēvarāṭṭi, பெ.(n.) குரவைக் கூத்தாடும் பெண்டிர்; dancer of kuravai dance. [தேவர்+ஆட்டி] தேவராட்டி tēvarāṭṭi, பெ. (n.) தெய்வம் ஏறி அருள் கொண்டு குறி சொல்பவள்; a woman divinely inspired and possessed of oracular powers. “தலைமரபின் வழிவந்த தேவராட்டி தனையழைமின்” (பெரியபு. கண்ண. 47);. [தேவர் + ஆட்டி] |
தேவராண்டு | தேவராண்டு tēvarāṇṭu, பெ. (n.) தேவர்க்குரியதும் 365 மாந்த ஆண்டுகளைக் கொண்டதுமான ஆண்டு; year of the Gods= 365 years of mortals. [தேவர் + ஆண்டு] |
தேவராயன்சம்பா | தேவராயன்சம்பா tēvarāyaṉcambā, பெ. (n.) சம்பா நெல்வகை (இ.வ);. a kind of {} paddy, [தேவராயன் + சம்பா] |
தேவராளன் | தேவராளன் tēvarāḷaṉ, பெ.(n.) குரவைக் கூத்தாடும் ஆடவர்; male dancer of kuravai. (6:120);. [தேவர்+ஆளன்] தேவராளன் tēvarāḷaṉ, பெ.(n.) குரவைக் கூத்தாடும் ஆடவர்; male dancer of kuravai. (6:120);. [தேவர்+.ஆளன்] தேவராளன் tēvarāḷaṉ, பெ. (n.) தெய்வமருள் கொண்டு குறி சொல்பவன்; a man divinely inspired and possessed of oracular powers. “களித்தனன் றேவராளன்” (சீகரனத் பு, கண்ணப் 57);. [தேவர் + ஆனன்] |
தேவராவயம் | தேவராவயம் tēvarāvayam, பெ. (n.) தேவர்களின் இருப்பிடமான மாமலை மேரு (பிங்.);; mount Meru as the abode of the Gods. [தேவர் + ஆலயம்] |
தேவரிடைச்சான்றார் | தேவரிடைச்சான்றார் tēvariḍaiccāṉṟār, பெ. (n.) இடையர்; cow herd caste. “இவ்வூர் தேவரிடைச் சான்றோர் கோயில்கட்குரிய திருவிளக்கு நிவந்தமாக வைக்கப்பெறும் ஆடுகளைக் கைக்கொண்டு நிவந்தப்படி நாளும் கோயிலில் நெய்யளாள் வரும் இடையர் குலமக்கள். (தெகதொ. 19, 119);. மறுவ. மன்றாடிகள் |
தேவரீர் | தேவரீர் tēvarīr, பெ. (n.) பெரியோரை முன்னிலைப்படுத்துஞ் சொல்; you, yours, a term of respect. “தேவரீர் திருவடிகளைத் திக்குநோக்கித் தண்டம் பண்ணினேன்” (சில : 8 உரை தேவரீர் சித்தம் என் பாக்கியம் பழ. [தேவர் → தேவரீர்] |
தேவருணன் | தேவருணன் tēvaruṇaṉ, பெ. (n.) துரிஞ்சில்:bat (சாஅக);. மறுவ. துரிஞ்சி |
தேவருணவு | தேவருணவு tēvaruṇavu, பெ. (n.) அமுதம்: nectar, ambrosia, as the food of Gods. [தேவர் + உணவு] |
தேவருண் | தேவருண் tēvaruṇ, பெ. (n.) தேவருணவு பார்க்க; see [தேவர் + ஊண்] |
தேவரூர் | தேவரூர் tēvarūr, பெ. (n.) பொன்னாங்காணி (தைலவதைல.109); பார்க்க; See {} |
தேவரொட்டாதி | தேவரொட்டாதி tēvaroṭṭāti, பெ. (n.) எட்டி மரம்; nuxvomica tree (சாஅக);. |
தேவர் | தேவர் tēvar, பெ. (n.) 1. கடவுளர்; deities, objects of worship. “தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே” (தொல்பொருள். 490);. 2. உயர்ந்தோரைக் குறிக்குஞ் சொல்; a term of respect for persons, of high station. 3. திருவள்ளுவர்; Tiruvalluvar, “ஒன்னா ரழுத கண்ணீரு மனைத்து என்றார் தேவரும்” (சீவக 1891, உரை);. 4. சீவகசிந்தாமணி என்னும் பாவியத்தின் ஆசிரியரும், 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான திருத்தக்கத் தேவர் என்னும் சமண முனிவர்;{} the Jaina author of {} “தேவர் அதனை அபரகாத்திர மென்றார்” (சீவக. 806, உரை);. 5. அரசர், துறவியர் முதலியோரது, பெயர்ப்பின் வழங்கும் சிறப்புப் பெயர்; a word appended to the names of kings, ascetics, etc. “இராசராசதேவர், திருத்தக்கதேவர்” 6. தேவரீர் பார்க்க; see “தேவர் திருவடிகளிலே’ (ஈடு, 2,3,4);. 7. மறவர் சாதியினரின் பட்டப்பெயர்; title of marava caste. 8. நால்வகைத் தேவதை வகையார்; celestial of four classes. [தேவ(ம்); → தேவர்] |
தேவர்கடன் | தேவர்கடன் tēvarkaḍaṉ, பெ. (n.) தெய்வ கேள்வி பார்க்க; see (சாஅக.);. [தேவர் + கடன்] |
தேவர்கன்மி | தேவர்கன்மி tēvarkaṉmi, பெ. (n.) தேவகன்மி பார்க்க; see “திருவானிலை மாதேவர் கோயிலில் தேவர் கன்மிக்கும்” (தெகதொ. 543);. [தேவர் + கன்மி] |
தேவர்குலம் | தேவர்குலம் tēvarkulam, பெ. (n.) தேவகுலம் பார்க்க; see “தேவர் குலத்தை வலங்கொண்டு” (இறை 1, பாயி பக்3);. [தேவர் + குலம்] |
தேவர்கோ | தேவர்கோ tēvarā, பெ. (n.) தேவர்கோன் பார்க்க; see “தேவர் கோ வறியாத தேவதேவன்” (திருவாச. 5,30);. [தேவர் + கோ] |
தேவர்கோன் | தேவர்கோன்1 tēvarāṉ, பெ. (n.) தேவர்களுக்கு அரசனான இந்திரன்; Indiran, the lord of the cclestials. “தேவர்கோன் பூனாரந் தென்னர்கோன் மார்பினவே” (சிலப். 17, பக்447);., [தேவர் + கோன்] தேவர்கோன்2 tēvarāṉ, பெ. (n.) குளிர் நாவல்; superior jamoon tree (சாஅக.); |
தேவர்க்காடல் | தேவர்க்காடல் tēvarkkāṭal, பெ. (n.) தெய்வமேறி ஆடுதல் (ஆவேசம்); (வின்.);: temporary possession by a spirit. [தேவாக்கு + ஆடல்] |
தேவர்ணன் | தேவர்ணன் tēvarṇaṉ, பெ. (n.) தேன் நிறத்தில் சிறுநீர் கழிவதாகிய வெள்ளை நோய்; honey coloured urine one of the 18 varieties of veneral diseases (சாஅக.);. |
தேவர்நாடு | தேவர்நாடு tēvarnāṭu, பெ. (n.) துறக்கம் (மணிமே. 14:42);; heaven [தேவர் + நாடு] |
தேவர்பகைவர் | தேவர்பகைவர் tēvarpagaivar, பெ. (n.) அசுரர் (பிங்.);; asuras, as enemies of the Gods. [தேவர் + பகைவர்] |
தேவர்மந்தணம் | தேவர்மந்தணம் tēvarmandaṇam, பெ. (n.) தேவர்கட்கு மட்டும் தெரிந்த பூடகம்; profound secret, known only to Gods, [தேவர் + மத்தனம்] |
தேவர்வசம், | தேவர்வசம், tēvarvasam, பெ. (n.) தேவர்வாசம் பார்க்க; see [தேவர் + வசம்] |
தேவர்வாசம் | தேவர்வாசம் tēvarvācam, பெ. (n.) அரச மரம்; pipal, as the abode of the gods (சாஅக);. [தேவர் + வாசம்] இம்மரத்தில் தேவர்கள் வசிப்பதாக நம்பிக்கை |
தேவலகன் | தேவலகன் tēvalagaṉ, பெ. (n.) கோயிற் பூசகன் (யாழ்அக);; temple priest. |
தேவலன் | தேவலன் tēvalaṉ, பெ. (n.) 1. தேவரன் பார்க்க; see 2. ஒழுக்க வழியில் நடப்பவன்; virtuous man. 3. பார்ப்பனன்; brahmin. |
தேவலாம் | தேவலாம் tēvalām, பெ. (n.) தேவலை பார்க்க: see [தேவவை – தேவலாம்] |
தேவலை | தேவலை1 tēvalai, பெ. (n.) 1. ஏதுவான நிலை; better condition, as in health. இப்போது அவனுக்கு உடம்பு தேவலை. 2. சிறப்பானது; that which is preferable. அதை இது தேவலை. [தாழ்வு + இல்லை → தாவில்லை → தேவலை (கொ.வ.);] தேவலை tēvalai, பெ. (n.) பெரிய வலையின் நீள அகலத்தைச் சீர்படுத்தும் வலை (தஞ்சை.மீனவ);; a net which corrects the breath of the big net. |
தேவலோகம் | தேவலோகம் tēvalōkam, பெ. (n.) தேவர்நாடு பார்க்க; see [தேவன் + உலகம்] |
தேவளம் | தேவளம் tēvaḷam, பெ. (n.) கோயில்; temple. [தே + வளம்] |
தேவவசனம் | தேவவசனம் tēvavasaṉam, பெ. (n.) கடவுள் திருமொழி (chr.);, word of God |
தேவவசீகரம் | தேவவசீகரம் tēvavacīkaram, பெ. (n.) படையல் ஊனும், மதுவும் இயேசுவின் அரத்தமாக மாறுமெனக் கொண்டு செய்யும் வழிபாடு (R.C.);; transubstantiation at Eucharist. |
தேவவரசி | தேவவரசி tēvavarasi, பெ. (n.) இந்திராணி; {} (இருதூ);. |
தேவவரசு | தேவவரசு tēvavarasu, பெ. (n.) கொடியரசு; wild peepul tree (சாஅக);. |
தேவவருடம் | தேவவருடம் tēvavaruḍam, பெ. (n.) தேவராண்டு பார்க்க; see (இருநூ);. [தேவர் + வருடம்] த. ஆண்டு → Ski. வருஷம், த. வருடம் |
தேவவல்லபம் | தேவவல்லபம் tēvavallabam, பெ. (n.) கரபுன்னை; long leaved gamboge. |
தேவவிரதம் | தேவவிரதம் dēvaviradam, பெ. (n.) தெய்வவிரதன் பார்க்க; See {} |
தேவவிருட்சம் | தேவவிருட்சம் tēvaviruṭcam, பெ. (n.) தேவதரு பார்க்க see |
தேவவைத்தியன் | தேவவைத்தியன் tēvavaittiyaṉ, பெ. (n,) தேவ மருத்துவன் பார்க்க; see (சா.அக.);. [தேவர் + வைத்தியன்] |
தேவவைத்தியம் | தேவவைத்தியம் tēvavaittiyam, பெ. (n.) இதளியக் கந்தக முறையில் செய்யும் மருத்துவம்; the superior method of treating disease with the aid of compounds of mercury sulphur arsenic (சாஅக.);. |
தேவவைத்தியர் | தேவவைத்தியர் tēvavaittiyar, பெ.(n.) தெய்வ உலகத்து மருத்துவரான அகவினி தேவர் முதலானோர்; physician of the celestial aswini kumar, danvanthari, bagharam etc. (சாஅக.);. |
தேவா | தேவா tēvā, பெ. (n.) பெரும் குரும்பை; lowstring hemp(சாஅக);. |
தேவாங்கசெட்டி | தேவாங்கசெட்டி tēvāṅgaseṭṭi, பெ. (n.) நெசவுச் சாதிப்பிரிவினருள் ஒருவகையார்; a caste of Weavers. [தேவாங்கம் + செட்டி. எட்டி → செட்டி.] தெய்வப் படிமைக்கு (தெய்வ அங்கத்திற்கு);ச் சாத்தப்படும் ஆடையை நெய்யும் வகுப்பினர். |
தேவாங்கம் | தேவாங்கம் tēvāṅgam, பெ. (n.) பட்டுச்சேலை (வின்.);; silk-cloth. |
தேவாங்கு | தேவாங்கு1 tēvāṅgu, பெ. (n.) வேலைப் பாடமைந்த துகில் வகை (பிங்); (சிலப்.14, 105);, உரை);; embroidered cloth of superior quality. தேவாங்கு2 tēvāṅgu, பெ. (n.) உடலிளைத்துத் தோன்றும் ஒருவகை விலங்கு; lemur, the Indian sloth, loris gracilis, considered to be very thinly built. தின்கிறதைத் தின்றும் தேவாங்கு போலிருக்கிறான் (பழ);. ம. தேவாங்கு; தெ. தேவாங்கு [தேம் → தேய்வு + .அங்கம் = தேய்வங்கம் → தேவங்கம் → தேவாங்கம் → தேவாங்கு] |
தேவாசனம் | தேவாசனம் tēvācaṉam, பெ.(n.) தேர்ச் சிற்பத்திற்கு முறையாகப் பூசை புரிவோர்க் குரிய பங்கு; a traditional share for the priests who perform ritual to a temple car sculptures. [தேவர்+அசனம்] தேவாசனம் tēvācaṉam, பெ.(n.) தேர்ச் சிற்பத்திற்கு முறையாகப் பூசை புரிவோர்க்குரிய பங்கு; a traditional share for the priests who perform ritual to a temple car sculptures. [தேவர்+அசனம்] தேவாசனம்1 tēvācaṉam, பெ. (n.) ஒகிருக்கை வகை (யாழ்அக);; a kind of yogic posture தேவாசனம்2 tēvācaṉam, பெ. (n.) கோள் ஒன்பான் நிலைகள்; nine statues of the satelites. |
தேவாசிரியன் | தேவாசிரியன் tēvāciriyaṉ, பெ. (n.) திருக்கோயில்களில் மன்னர், அமைச்சர் முதலியோர் தனியாக வழிபாடு செய்வதற் கென அமைந்த மண்டபம்; a square or rectangular hall with a flat roof supported by pillars, which is made for the king and his ministers to worship separately. தேவாசிரியன்2 tēvāciriyaṉ, பெ. (n.) திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம்; the hall of thousand pillars in {} “உள்ளது, தேவாசிரிய னென்னுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட் 2);. |
தேவாசிரியன்கால் | தேவாசிரியன்கால் tēvāciriyaṉkāl, பெ. (n.) தேவாசிரியன் என்ற பெயரால் விளங்கிய மரக்கால்; a measurement in the name of Deväsiriyan. [தேவாசிரியன் + கால்] இம்மரக்கால் திருமுதுகுன்றமுடைய நாயனார் கோயிலிலும் இருந்ததனைக் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது. “உடையார் திருமுது குன்றமுடைய நாயநாற்கு – வைத்த திருதுந்தா விளக்கு ஒன்றுக்கு தேவாசிரியன் காலால் அளக்கும் நெய்” (தெக.தொ.144);. |
தேவாசிரியன்திருக்காவணம் | தேவாசிரியன்திருக்காவணம் tēvāciriyaṉtirukkāvaṇam, பெ. (n.) திருவாரூர் கோயிலில் உள்ள கருங்கல் திருப்பணியாக அமைந்த பெருமண்டபத்தின் சிறப்புப் பெயர்: name of the granite hall in the {} temple. “தேவாசிரியன் எனுந் திருக்காவணம்” (பெரியபு. திருக்கூட் 2); [தேவாசிரியன் + திரு + காவணம். காவணம் = கல்மண்டபம்] |
தேவாசிரியன்நாழி | தேவாசிரியன்நாழி tēvāciriyaṉnāḻi, பெ. (n.) திருமுதுகுன்றம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய கோயில்களில் நெய் அளக்கப் பயன்படுத்தப்பட்ட நாழிக்கமைந்த பெயர்; name for the measure of capacity to measure the ghee in {} and {} temple. [தேவாசிரியன் + நாழி] |
தேவாசீவன் | தேவாசீவன் tēvācīvaṉ, பெ. (n.) கோயிற் பூசகன் (யாழ்அக);; temple priest. |
தேவாசுரம் | தேவாசுரம் tēvācuram, பெ. (n.) தேவர்க்கும் தேவர்க்கும் அகரர்க்கும் நடந்த போர்; war between {} and Asural. “நீ யன்றே…தேவாகரம் பொருதாய்” (திவ். இயற் 368);. [தேவ(ம்); + அகரம்] |
தேவாண்டு | தேவாண்டு tēvāṇṭu, பெ. (n.) தேவராண்டு பார்க்க; see (சொஅக);. [தேவ + ஆண்டு] |
தேவாதாயோக்கியம் | தேவாதாயோக்கியம் tēvātāyōkkiyam, பெ. (n.) கடவுளர்க்குரியது; that which is worthy of Gods themselves. |
தேவாதி | தேவாதி tēvāti, பெ. (n.) தேவாதிதேவன் பார்க்க; see |
தேவாதிதேவன் | தேவாதிதேவன் tēvātitēvaṉ, பெ. (n.) முதற்கடவுள்; the God of Gods. “எனைப் பலருந் தேவாதிதேவனெனப்படுவான்” (தில்.இயற் 2, .28);. |
தேவாதீனம் | தேவாதீனம் tēvātīṉam, பெ. (n.) தெய்வத்திற்கு a உரியது; belonging of God (இருநூ.);. |
தேவாத்திரம் | தேவாத்திரம் tēvāttiram, பெ. (n.) தேவர்களால் கொடுக்கப்பட்ட அம்பு; arrow given by the deities (இருநூ.);. [தேவ + அத்திரம்] Skt. அஸ்திரம் → த. அத்திரம் |
தேவாத்துமா | தேவாத்துமா tēvāttumā, பெ. (n.) அரசமரம்: pipal tree (சாஅக.);. |
தேவானந்தல் | தேவானந்தல் tēvāṉantal, பெ.(n.) திருவண் ணாமலை வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Thiruvannamalai Taluk. [தேவன்+ஏந்தல்] தேவானந்தல் tēvāṉandal, பெ.(n.) திருவண்ணாமலை வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Thiruvannamalai Taluk. [தேவன்+ஏந்தல்] |
தேவான்னம் | தேவான்னம் tēvāṉṉam, பெ. (n.) திருப்படையல் அழுது; boiled rice offered to a deity. [தேவன் + அன்னம்] |
தேவாபீட்டை | தேவாபீட்டை tēvāpīṭṭai, பெ. (n.) வெற்றிலை; betel as a cherished object of the Gods. |
தேவாமணி | தேவாமணி tēvāmaṇi, பெ. (n.) மணிக்குடல்; resentery small intestines. |
தேவாமிருதம் | தேவாமிருதம் dēvāmirudam, பெ. (n.) 1. தேவருணவாகிய அமுதம்; ambrosia, the food of the immortals. 2. சுழுமுனையமுதம்; the ambrosia like the fluidsecreted by pineal gland and pituitary body in the cerelval region (சாஅக);. [தேவ + அவிழ்தம் → அவிர்தம்] த. அமிழ்தம் → Skt. amrude |
தேவாமுதம் | தேவாமுதம் dēvāmudam, பெ. (n.) தேவருணவு; ambrosia, food of the immortals. [தேவர் + அமிழ்தம் → அமுதம்] |
தேவாயதனம் | தேவாயதனம் dēvāyadaṉam, பெ. (n.) தேவாலயம் பார்க்க; see |
தேவாயுதம் | தேவாயுதம் dēvāyudam, பெ. (n.) வானவில் (யாழ்அக.);; rain-bow. [தேவா + ஆயுதம்] |
தேவாரஅகத்தியர் | தேவாரஅகத்தியர் tēvāraagattiyar, பெ. (n.) பொதியமலையிலுள்ள பாபநாசத்தில் தங்கியிருந்த பிற்கால முனிவர்; a poet. lived in the Podigai mountain. [தேவாரம் + அகத்தியர்] இவர் மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் 796இல் இருந்து 25 பதிகங்களைத் திரட்டியமைத்தார். அது “அகத்தியர் தேவாரத் திரட்டு” என்று வழங்கப் பெறுகின்றது. |
தேவாரத்துக்குத்திருப்பதியம் | தேவாரத்துக்குத்திருப்பதியம் dēvāraddukkuddiruppadiyam, பெ. (n.) சிவன் திருமேனிகளின் திரு முன் அப்பர், சம்பந்தர் கந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட திருப்பதிகங்களைப் பாடுதல்; sing {} written by Appar, Sundarar and Sambandar in front of {} idols. |
தேவாரத்துச்சுற்றுக்கல்லூரி | தேவாரத்துச்சுற்றுக்கல்லூரி tēvārattuccuṟṟukkallūri, பெ. (n.) தெய்வச் சிலைகள் மாடங்களில் அமைக்கப்பட்டு விளங்கும் திருச்சுற்றாக அமைந்த கல் மண்டபம்; Stone hall where the idols are kept in the niche .”முடி கொண்ட சோழன் திருமாளிகையால் வடபக்கத்துத் தேவாரத்துச் சுற்றுக் கல்லூரியில் தானஞ்செய்தருளா இருந்து” (முதன் இராசேத்திர சோழன், தெ.க.தொ.2:1, கல் 20);. |
தேவாரத்துவாசல் | தேவாரத்துவாசல் tēvārattuvācal, பெ. (n.) திருக்கோயில்களில் தேவாரத் திருப்பதி கங்களை வைத்து வழிபாடு செய்யுமிடம்; place where the books of {} are kept and worshipped in the temple. “இக்கோயில் தேவாரத்து வாசலில் எழுந்தருளியிருந்து” (தெ.க.தொ. .23, கல்.313);. [தேவாரம் + அத்து வாசல், அத்து = சாரியை] |
தேவாரத்தேவர் | தேவாரத்தேவர் tēvārattēvar, பெ. (n.) ஆதன்மை (ஆன்மார்த்த); வழிபாட்டுக்குரிய உருவச் சிலைகளும் பிற கருவிகளும்; idols and other objects worshipped by an idividual in private (செஅக.);. பெரிய பெருமாளுக்குத் தேவாரத் தேவராக எழுந்தருளுவித்த தேவர் பாதாதி கேசாந்தம் ஐவிரலே இரண்டு தோரை உசாத்து நாலு ஶ்ரீ ஹஸ்தமும் உடையராகக் கனமாகப் பித்தளையில் எழுந்தருளுவித்த சந்திரசேகரர் திருமேனி ஒன்று பெரிய பெருமாள் – முதல் இராசராசன் (தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு); (தெக.தொ. 22, கல். 38);. |
தேவாரப்பெட்டி | தேவாரப்பெட்டி tēvārappeṭṭi, பெ. (n.) அரசர் புறப்பாட்டில் முன்பாகக் கொண்டு செல்வதும் வழிபாட்டிற்குரிய சிலைகள் முதலியவற்றை வைத்திருப்பதுமாகிய பெட்டி (நாஞ்);; box containing idols and other objects of worship carried in front of a royal procession (செஅக);. |
தேவாரம் | தேவாரம்1 tēvāram, பெ. (n.) 1. வழிபாடு; worship. “உயர்தவ மூவாயிரவர்க டாவா மறையொடு தேவாரக் கைப்பற்றிய பணிமுற்ற” (கோவிற்பு. திருவிழா. 27);. 2. வீட்டில் வைத்து வணங்கப்படும் கடவுள்; deity worshipped privately in a house, “உம்முடைய தேவாரமோ” (ஈடு. 6,8,10);. ம. தேவாரம் தேவாரம்2 tēvāram, பெ. (n.) சிவனைப் போற்றி அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற நாயன்மார் மூவரால் அருளிச் செய்யப்பெற்ற பதிகங்கள் கொண்டதும் தமிழ்மறை என்று கொண்டாடப்படுவதுமான சிவநெறித் திருமுறை; a collection of devotional songs in honour of Sivan, composed by Appar, Cambandar and Cundarar, otherwise known as Tamil marai (I.M.P..Tj.1012);. “பேகவது தேவாரமேயலால் வாய்க்கெளிய பேய்க் கிரந்தங்கள் பேசோம்” (தமிழ்நா. 231);. ம. தேவாரம் தேவாரம் என்பது, இறைவனைப் பற்றிய இசைப்பாடல் என்று பொருள்படும். தே=தேவன். வாரம்= சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் உள்ள பாடல். தேவாரம் பொதுவான கீர்த்தனை போலாது செந்தமிழ்ப்பாவும் பாவினமுமாக இருப்பது நோக்கத்தக்கது. தனியர் மட்டுமன்றி அவையோரும் சேர்ந்து பாடக் கூடியனவாகவும் எவரும் இன்புறும் இனிய இசையொடு கூடியனவாகவும் தேவாரப் பாடல்கள் அமைந்திருப்பது மிகப் போற்றத் தக்கதாகும் (தஇவ.75);. |
தேவாராதனை | தேவாராதனை tēvārātaṉai, பெ. (n.) கடவுள் வழிபாடு; worship, divine service (செஅக.);. [தேவர் + ஆராதனை] |
தேவார்ப்பணம் | தேவார்ப்பணம் tēvārppaṇam, பெ. (n.) தெய்வத்துக்குப் படைத்த பொருள்; offering made to the Gods. [தெய்வம் → தேவம் + அர்ப்பணம்] |
தேவாலயம் | தேவாலயம் tēvālayam, பெ. (n.) 1. கடவுளர்க் குரிய கோவில்; temple, place of worship, church, sacred shrine, as Gods house. 2. மேரு மலை (யாழ்அக);; mount Meru [தேவா + ஆலயம்] இக்காலத்து இச்சொல் பெரும்பாலும் கிறித்தவக் கோவிலைக் குறித்து நின்றது. |
தேவாவாசம் | தேவாவாசம் tēvāvācam, பெ. (n.) 1. கோயில்; temple. 2. அரசமரம்; pipal tree. |
தேவி | தேவி1 tēvi, பெ. (n.) 1. தெய்வமகள் (பிங்.);; Goddess. 2. உமையம்மை (சூடா);; Goddess Umaiyammai. 3. காளிதேவி (சூடா);; Goddess Kāli. 4. மூதேவி (m.m.208);; Goddess of Misfortune. 5. பெரியம்மை (m.m.268);; Goddess of smallpox. 6. மனைவி; wife. “மன்னவ னாருயிர் மாபெருந் தேவியே” (சீவக 1403);. 7. தலைவி; queen, princess, lady, a term of respect “சித்திர தேவிப்பட்டத் திருமக னல்கினானே” (சீவக. 256);. ம. தேவி [தேவன் (ஆண்பால்); → தேவி (பெண்பால்);] தேவி2 tēvi, பெ. (n.) 1. வாலை, சத்தியின் சிறு பெண் உருவம்; one of the form of {} ie a young girl. 2. கற்புடைப் பெண்; the first of the four classes of woman divided according to lust. 3. சிதேவியார் செங்கழுநீர்; a species of red India waterlily. 4. கற்பூர வல்லி; thick leaved lavender. 5. தேவதாரு; பார்க்க; see 6. குண்டலினி; serpent’s power in the sacral region of the human body. 7. ஒருவகைப் புல்; a kind of cyprus grass. 8. ஒருவகைக் கடுக்காய்; a kind of gallnut (சாஅக.);. |
தேவிகந்தம் | தேவிகந்தம் tēvigandam, பெ. (n.) கந்தகம்; sulphur (சாஅக.);. |
தேவிகம் | தேவிகம் tēvigam, பெ. (n.) பூம்பாதிரி; yellow flowered fragrant trumpet flower (சாஅக.);. |
தேவிகல்பம் | தேவிகல்பம் tēvigalpam, பெ. (n.) சிவ பெருமான் சொல்ல, மலைமகள் எழுதியதாகக் கருதப்படும் ஒர் ஆயுர்வேத நூல்; a discourse on ayurvedic science as delivered by God Sivan to his concert {} which she has gifted (சாஅக.);. |
தேவிகை | தேவிகை1 tēvigai, பெ. (n.) ஒராறு; a river (இருநூ.);. தேவிகை2 tēvigai, பெ. (n.) ஊமத்தைச் செடி வகை; trumpet flower nightshade. |
தேவிகோட்டம் | தேவிகோட்டம் tēviāṭṭam, பெ. (n.) காளி கோயில்; temple of {} [தேவி + கோட்டம்] |
தேவிக்குமுத்திரை | தேவிக்குமுத்திரை tēvikkumuttirai, பெ. (n.) தேவிமுத்திரை பார்க்க; see (சாஅக.);. |
தேவிசாரணை | தேவிசாரணை tēvicāraṇai, பெ. (n.) சத்தி சாரணை; spreading haywood (சாஅக.);. |
தேவிநாதம் | தேவிநாதம் tēvinātam, பெ. (n.) 1. காந்தத்தினின்று எடுக்கும் ஈயம்; lead extract from magnet alchemically. 2. பூச்சு (அரிதாரம்);; orpiment. 3.கருங்காக்கைப்பொன் (கிருட்டிண அப்பிரம்);; black mica (சாஅக.);. |
தேவிமுத்திரை | தேவிமுத்திரை tēvimuttirai, பெ. (n.) காசுமீரப் படிகம்; crystal stone of cashmare, a mineral (சாஅக.);. |
தேவிமூலம் | தேவிமூலம் tēvimūlam, பெ. (n.) சிறுபீளை பார்க்க; see (சாஅக.);. |
தேவிமை | தேவிமை tēvimai, பெ. (n.) நாயகியாந் தன்மை; wifehood, “இவ்வுலக மூன்றுக்குந் தேவிமை தகுவார் பலருளர்” (திவ்திருவாய் 6, 2, 6);. |
தேவியச்சம் | தேவியச்சம் tēviyaccam, பெ. (n.) கெளரியச்சம் பார்க்க; see (சாஅக.);. |
தேவியர் | தேவியர் tēviyar, பெ. (n.) தேவி பார்க்க; see [தேவி → தேவியர்] |
தேவியர்குழாமும்பாவையர்ஈட்டமும் | தேவியர்குழாமும்பாவையர்ஈட்டமும் tēviyarkuḻāmumbāvaiyarīṭṭamum, பெ. (n.) அரசனின் மனைவியர் கூட்டமும், காமக் கிழத்தியர் கூட்டமும்; gang of king’s wives, and his concubines. ‘ஒப்பில் சத்தியல்வை சாங்கப்பையென் றிவர் முதல் தேவியர் குழாமும், பாவையர் ஈட்டமுமிணையெனப் பிறவு முனைவயிற் கொண்டு (விசயராசேந்திரன் மெய்க்கீர்த்தி); |
தேவியார் | தேவியார்1 tēviyār, பெ. (n.) தேவி பார்க்க; see [தேவி → தேவியா → தேவியா, ‘ஆர்’ – பலர்பால் ஈறு] தேவியார்2 tēviyār, பெ. (n.) அரசனின் உரிமை மனைவியர் அரசியர்; legal wives of the king. “பிரிதிவி கங்கரையர் தேவி அரிகண்டன் மகள் நங்கை மானி” (தெக.தொ.8, கல். 12);. [தேவி + ஆர்] |
தேவிரு | தேவிரு tēviru, பெ. (n.) கந்தகம்; sulphur (சாஅக.);. தேவிரு tēviru, பெ. (n.) 1. கொழுந்தன்; husbands younger brother. 2. முந்திய கணவன்; former husband (இருநூ.);. |
தேவில் | தேவில் tēvil, பெ. (n.) தேவாலயம் பார்க்க; see “கருவுடைத் தேவில்கள் எல்லாம்” (திவ்.திருவாய். 4, 4, 8);. [தே → தேவு + இல்] |
தேவிவிந்து | தேவிவிந்து tēvivindu, பெ. (n.) கந்தகம்; sulphur (சாஅக.);. |
தேவு | தேவு tēvu, பெ. (n.) 1. தெய்வம் (பிங்.);; deity. “நரகரைத் தேவு செய்வானும்” (தேவா. 696, 2);. 2. தெய்வத்தன்மை; godhead. “அயன்றிருமால் செல்வமு மொன்றோ வென்னச் செய்யுந்தேவே” (சிசி. காப்பு. ஞானப், உரை);. [தேய் → தேயு = தெருப்பு. தேய் → தேய்வு → தேவு = தெய்வம், தெய்வத்தன்மை (வ,வ. 17);] |
தேவுறை | தேவுறை tēvuṟai, பெ. (n.) தேவர்கள் மருந்து; medicine used by tewar (சாஅக.);, |
தேவுளி | தேவுளி tēvuḷi, பெ. (n.) தேய்ந்த சிறிய உளி; chisel which is reduced much. [தேம் → தேவு → தேவு + உணி = தேவுணி] |
தேவேக்கியம் | தேவேக்கியம் tēvēkkiyam, பெ. (n.) ஒமம் (யாழ்அக.);. bishop’s weed. |
தேவேசியம் | தேவேசியம் tēvēciyam, பெ. (n.) வியாழன் (யாழ்அக.);. jupiter. |
தேவேத்தனம் | தேவேத்தனம் tēvēttaṉam, பெ. (n.) தெய்வச் செயல்; act of God providence. |
தேவேந்திரன் | தேவேந்திரன் tēvēndiraṉ, பெ. (n.) தேவர்களுக்கு அரசன்; Indiran, the God of the celestials. “சிரபுரந் தேவேந்திரனுரர்” (தேவா. 142,2); (செஅக);. |
தேவேந்திரன்தங்கம் | தேவேந்திரன்தங்கம் tēvēndiraṉtaṅgam, பெ. (n.) தேவேந்திரனின் இருக்கையில் அமையப் பெற்ற 1008 மாற்றுப் பொன்; refined gold of 1008 matur or equivalent 2304 carats of pure gold (சாஅக.);. [தேவேத்திரன் + தங்கம்] |
தேவேந்திரப்பொங்கல் | தேவேந்திரப்பொங்கல் tēvēndirappoṅgal, பெ. (n.) தெல்வகை; a kind of paddy. |
தேவேந்திரமாமுனி | தேவேந்திரமாமுனி tēvēndiramāmuṉi, பெ. (n.) சீவசம்போதனை இயற்றிய சைன வாவிரிளர்; a jaina ascetic, author of {} (செஅக.);. |
தேவை | தேவை1 tēvai, பெ. (n.) செயல்; affairs, business. “ஏவித் தேவைகொள்ளுதல்” (ஈடு. 8, 3, பிர);. “தங்கள் தேவைகளுஞ் செய்யாதே” (சோழவமி. 65); 2. வற்புறுத்தல்; compelling need or necessity. “ஒரு தேவையிட்டிறே சொல்லிற்று” (ஈடு. 6,10,10);. 3. விருப்பம்; desire “தேவையுனக் கின்னதென்று செப்பாய்” (தாயு பராபர 247);. 4. முடுக்கம் (யாழ்அக);; haste, 5 அடிமைத் தனம்; slavery, bondage. “நீயுமுன் றேவைக் குரியைகாண்” (திவ்..பெரியாழ் 1,4,8);. 6. மகட் கொடுத்தவர் திருமணத்தின் பின் மணமகனை அழைத்துச் செய்யும் முதல் விருந்து (இ.வ.);; first wedding feast held in the parent’s house of a bride. தேவை2 tēvai, பெ. (n.) இராமேசுவரம் பார்க்க; see .”ஒரு தேவை வந்து பலதேவர் தாழு மிலக்குமணர் தண் புனலும்” (தேவை 19);((செஅக.);. தேவை3 tēvai, பெ. (n.) கொள்ளுகை; getting. [தெவு → தேவு → தேவை] |