தலைசொல் | பொருள் |
---|---|
தெ | தெ te, ‘த்’ என்ற மெய்யெழுத்தும் ‘எ’ என்ற உயிரெழுத்தும் கூடிய கூட்டெழுத்து; the syllable formed by adding the short vowel ‘e’ to the consonant ‘t’. [த் எ – தெ] |
தெகட்டாதமூலி | தெகட்டாதமூலி tegaṭṭātamūli, பெ. (n.) பிரமியிலை; leaf of hissop plant; diabetis plant (சாஅக);. [தெகட்டாத+ மூவிதிகட்டு→தெ.கட்டு] |
தெகிடி | தெகிடி tegiḍi, பெ.(n.) 1 சூது விளையாட்டு வகை; a game in gambling. 2. புரட்டு; fraud, deception. [நெகிது→நெகிடி→தெகிடி.] |
தெகிட்டு | தெகிட்டு tegiṭṭu, பெ. (n.) 1. தெவிட்டுகை; surfeit. 2. கக்லுணர்வு (வின்);; vomitting sensation. ம. தெகிட்டு [திகட்டு→தெகட்டு→தெகிட்டு] |
தெகிள் | தெகிள்1 tegiḷ, பெ. (n.) புனலிக் கொடி; hog creeper (சாஅக);. மறுவ. கொடிப்புன்கு தெகிள்2 tegiḷ, பெ. (n.) மென்மை; soft. [நெகிள் → தெகிள்] |
தெகிள்உளி | தெகிள்உளி tegiḷuḷi, பெ. (n.) மென்மையான குழைவு உளி; chisel which is soft. [தெகின்+உளி] |
தெகிழ்-தல் | தெகிழ்-தல் tegiḻtal, 3 செகுவி (v.i.) விளங்குதல்; to be manifest. to shine. “தெகிழ்ந்த மாதவத்தேசினான்” (விநாயகபு. 59;29);. 2. வாய்விடுதல்; to blossom, open, as the mouth. “தேங்கயத்தனிமலர் தெகிழ்ந்த நாற்றமும்” (சீவக 1440);. 3.நிறைதல் (திவா.);; tobefull. “துணர் தெகிழ்ந்துக்கநனையுள்” (மாறனலங். 261, உதா. 651);. [திகழ் → தெகிழ்] |
தெகுடாடு-தல் | தெகுடாடு-தல் deguṭāṭudal, 5 செ.கு.வி (v.i.) திண்டாடுதல்; to struggle or strive hard. “தெகுடாடா நிற்கிற என்னாலே”(திவ்,திருவாய்,7,9,10,இருபத்து நாலாயிரப்படி); [தெகிடி → தெகுடி → தெகுடு. தெகுடு+. ஆடு] |
தெகுட்டல் | தெகுட்டல் teguṭṭal, பெ. (n.) மரத்தில் தோன்றும் குறைபாடு; defect appears in the tree. |
தெகுட்டி | தெகுட்டி teguṭṭi, பெ.(n.) தேட்கொடுக்கி; scorpion sting plant (சாஅக);. [தேன்கொடுக்கி → தேகொடுக்கி. தேகொடுக்கி → தெகுட்டி (கொ.வ.);] |
தெகுட்டிகை | தெகுட்டிகை teguṭṭigai, பெ. (n.) தெகுட்டி பார்க்க;see__,(சாஅக);. [தெகுட்டி → தெகுட்டிகை] |
தெகுட்டு-தல் | தெகுட்டு-தல் deguṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) தெவிட்டுதல்; to cloy, glut. “மாளாமையாலுந்தெகுட்டாமையாலும்” (ஈடு.67, ஜூ);, [தெவிட்டு→ தெகுட்டு-.] |
தெகுப்பூச்சி | தெகுப்பூச்சி teguppūcci, பெ. (n.) தெள்ளுப் பூச்சி; small wingless jumping insect feeding on human and other blood, flea (சாஅக.);, [தெகு + பூச்சி] |
தெகுளம் | தெகுளம் teguḷam, பெ (n.) 1. நிறைவு; fullness. 2. பெருக்கம்; abundance (சாஅக);. [தெகுன் → தெகுளம்) |
தெகுளவம் | தெகுளவம் teguḷavam, பெ. (n.) மருதுமேற் புல்லுருவி; a parasite grown on murdah tree (சாஅக.); |
தெகுள்-தல் (தெகுடல்) | தெகுள்-தல் (தெகுடல்) teguḷtalteguḍal, 12 செகுவி (v.i.) 1. நிறைதல் 2. பெருகுதல் (யாழ்அக);; to increase,overflow. [திகழ் → தெகுன்] |
தெகை | தெகை tegai, பெ.(n.) உறுதி, இறுதி நிலை; a final settlement of bargain. “மாடு விலை தெகைஞ்சாச்சு” (பே.வ.);. [திகை-தெகை] |
தெக்கணம் | தெக்கணம்1 tekkaṇam, பெ. (n.) 1. தெற்கு; south. “தெக்கண மலையகச் செழுஞ்சே றாடி” (சிலப் 14;8); 2. வலப்பக்கம் (சூடா);; rightside. ம, தெண்ண [தக்கு + அணம் – தக்கணம் தக்கு = தாழ்வு. தக்கணம் – தெக்கணம்] த. தக்கணம் – Skt. daksina தெக்கணம் tekkaṇam, பெ. (n.) இந்தியாவில் விந்தியத்தின்; southern part of India. “தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும் (மனோன். வதும்); [தக்கணம் – தென்கணம்] |
தெக்கணாமட்டி, | தெக்கணாமட்டி, tekkaṇāmaṭṭi, பெ. (n.) 1. மூடன்; simpleton, fool. 2. சோம்பேறி; lazy fellow. [தெக்கணம் + மட்டி. தக்கு = தாழ்வு, தக்கனம் – தெக்கணம். மட்டி = மடையன் முடன்] |
தெக்கணாமுட்டி | தெக்கணாமுட்டி tekkaṇāmuṭṭi, பெ.(n.) தெக்கணாமட்டி பார்க்க;see__, [தெக்கணமட்டி – தென்கணமுட்டி] |
தெக்கணாம்பட்டி | தெக்கணாம்பட்டி tekkaṇāmbaṭṭi, பெ. (n.) தெக்கணாமட்டி பார்க்க;see__, |
தெக்கத்தி நையாண்டி இசை | தெக்கத்தி நையாண்டி இசை tekkattinaiyāṇṭiisai, பெ.(n.) நையாண்டியிசையின் ஒரு கூறு; a type of naiyandi music concert. [தெற்கு+அத்தி+நையாண்டி+இசை] |
தெக்கத்தித்தெம்மாங்கு | தெக்கத்தித்தெம்மாங்கு tekkattittemmāṅgu, பெ.(n.) தென்பாண்டிச் சீமையில் பாடப்பெறும் தெம்மாங்கு வகை; afolklore of southern tip of Tamilnadu. [தெற்கு+அத்தி+தெம்மாங்கு] |
தெக்கித்திநோய் | தெக்கித்திநோய் tekkittinōy, பெ.(n.) தெற்கத்தி நோய் பார்க்க;see__, [தெற்கத்திதோப் – தெக்கித்திதோப் (கொ.வ.);] |
தெக்கு | தெக்கு1 dekkudal, 5 செகுன்றாவி, (v.t.) 1. கொள்ளுதல்; to receive, lake. தெக்குநீர்த் திரைகள் மோதும்’ (தேவ, 839, 2); 2. கொழித்தல்; to winnow, தெக்கிய மாவைத் தின்னலாம் (உவ);. ம. தெக்குக;க. தெகெ, தெகு தெ. திடியு, திடுசு து. தெகுனி கொலா. திப் நா. திவ்வ [தக்கு – தெக்கு தக்கு – வளைதல், தாழ்தல்] தெக்கு2 tekku, பெ. (n.) தெற்கு (பிங்);. south. “சலவரைத் தெக்கா நெறியே போக்குவிக்குஞ் செல்வன்”[திவ்பெரியாழ்.4.2,3) ம. தெக்கு;க. தெங்க, தெங்கன், தெங்கு;து. தெனுகாயி, தென்காயி குட தெக்கி [தெற்கு → தெக்கு] |
தெங்கணம் | தெங்கணம் teṅgaṇam, பெ. (n.) ஒரு நாடு; a country. [தக்கணம் → தங்கணம் → தெங்கணம்] |
தெங்கநாடு | தெங்கநாடு teṅganāṭu, பெ. (n.) கடல் கொண்ட தமிழ்நிலப்பகுதியுள் ஒன்று; an ancient province in the Tamil land, said to have been submerged by the sea. “ஏழ்தெங்க நாடும்” (சிலப், 8;1, உரை); [தெங்கு + நாடு] |
தெங்கம் | தெங்கம் teṅgam, பெ .(n.) தெங்கு பார்க்க;see “தெங்கங்களு நெடும் பெண்ணையும் பழம்வீழ் மணற் படப்பை” (தேவா.846,3);. [தெங்கு → தெங்கம்] |
தெங்கம்பழம் | தெங்கம்பழம் teṅgambaḻm, பெ.(n.) தென்னை நெற்ற; mature.coconut. “நாய்பெற்ற தெங்கம்பழம்” (பழ);. [தெங்கு + பழம்] |
தெங்காஞ்சி | தெங்காஞ்சி teṅgāñji, பெ.(n.) திடுமெனத் தோன்றல், எதிர்பாரா காட்சி: sudden and unexpected appeaгance அவன் தெங் காஞ்சியாக வந்தான் (வடார்க்); [தீம்-தேம்-தெம்+காட்சி);-காஞ்சி (கொ.வ.);] |
தெங்கால் | தெங்கால் teṅgāl, பெ.(n.) வாலாசாவட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Walajah Taluk. [தென்+கால்] |
தெங்கிட்டம் | தெங்கிட்டம் teṅgiṭṭam, பெ. (n.) தெகுட்டி பார்க்க;see__, [தேன்கொடுக்கி → தேங்கொடுக்கி → தெகுட்டி. தெகுட்டி →தெங்குட்டி → தெங்கிட்டி தெங்கிட்டி →தெங்கிட்டம்] |
தெங்கிதம் | தெங்கிதம் deṅgidam, பெ. (n.) தெகுட்டி பார்க்க;see(சாஅக);. |
தெங்கின் கற்கண்டு | தெங்கின் கற்கண்டு teṅgiṉkaṟkaṇṭu, பெ. (n.) தென்னஞ் சாற்றினின்று காய்ச்சி இறக்கும்; கற்கண்டு sugar candy prepared from the sweet sap or juice of coconut tree. [தெங்கு + இன் + கற்கண்டு] |
தெங்கின்எண்ணெய் | தெங்கின்எண்ணெய் teṅgiṉeṇīey, பெ. (n.) தேங்காயெண்ணெய் பார்க்க;see(சாஅக.); [தெங்கு + இன் + எண்ணெய். ‘இன்’ வேற்றுமையுருபு] |
தெங்கின்குருத்து | தெங்கின்குருத்து teṅgiṉkuruttu, பெ. (n.) தென்னையின் குருத்து; tender leaves or shoot of coconut palm (சாஅக);. [தெங்கு + இன் + குருத்து] |
தெங்கின்மது | தெங்கின்மது deṅgiṉmadu, பெ. (n.) தென்னங்கள் பார்க்க;see(சாஅக); [தெங்கு + இன் + மது] |
தெங்கின்வெல்லம் | தெங்கின்வெல்லம் teṅgiṉvellam, பெ. (n.) தென்னஞ் சாற்றினின்று காய்ச்சி உண்டாக்கும் வெல்லம்; jaggery prepared from the juice or sap of coconut palm (சாஅக);. [தெங்கு + இன் + வெல்வம். ‘ இன்’ வேற்றுமையுருபு] |
தெங்கு | தெங்கு1 teṅgu, பெ. (n.) 1. தென்னை; coconut-palm. “தெங்கி னிள நீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு”(புறநா,29);, தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் தெங்காகுமோ( பழ);. 2. போர்ச் சேவலின் தன்மை குறிக்கும் குழுஉக் குறியுளொன்று; quality of a fighting cock, a slang term. “தெங்குக்குத் தெங்கு வெல்லுமெனக் கோழிகளின் நிறமறிந்துவிடுதல்” (பு.வெ. 12 , வென்றப். 6, உரை);. ம. தெங்நு; க., து. தெங்கு; குட. தெங்கிமர;பட . தெங்கெ மொர [தில் → தெல் → தென். தென் → தென்னை = பெரும்பாலும் கோணி வளரும் மரம். தென் → தென்கு → தெங்கு (வேக 144);] தெங்கு2 teṅgu, பெ. (n.) தித்திப்பு; sweetness. [தீம் →தெம் + கு தெம்கு → தெங்கு] |
தெங்கு திட்டு | தெங்கு திட்டு deṅgudiṭṭu, பெ.(n.) கருநாடகத் தெருக்கூத்தின் ஒரு வகைப்பாணி; a kind of street dance of Karnātaka. [தெங்கு+திட்டு] |
தெங்கூர் | தெங்கூர் teṅār, பெ. (n.) தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊர்; a willage in Tanjavur Dt. “வித்தன் றாழ் பொழில் றெங்கூர் வெள்ளியம் குன்றமர்ந்தாரே” (தேவர.229-2);. ஞான சம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடல் பெற்ற ஊர். இவ்வூரை மர அடிப் படையிலான ஊர் என்று இரா.பி. சேதுப்பிள்ளை குறிப்பிடுகின்றார். [தெங்கு + ஊர்] |
தெங்கெண்ணெய் | தெங்கெண்ணெய் teṅgeṇīey, பெ. (n.) தேங்காயெண்ணெய் பார்க்க;see(சாஅக);. பட தெங்கெண்ணெ [தெங்கு + எண்ணெ’ய்] |
தெசனி | தெசனி tesaṉi, பெ. (n.) 1. மஞ்சள்; country turmeric. 2.பெருங்குரும்பை ; browstring hemp. |
தெசலம் | தெசலம் tesalam, பெ. (n.) தெசவம் பார்க்க;see [தெசவம் → தெசவம்] |
தெசவம் | தெசவம் tesavam, பெ.( n.) மாமரம் (மலை);; mango tree. |
தெசி-த்தல் | தெசி-த்தல் tesittal, 4 செ.குன்றாவி, (v.t.) கைவிடுதல்; to abandon. “சிகை நூறெசித்துச் செபங்கள் பண்ணி”( பாடு. 71, சத்தியாசம், 1); [தெளி →தெசி] |
தெச்சி | தெச்சி tecci, பெ. (n.) தெட்சி பார்க்க;seeம. தெச்சி [தெட்சி →தெச்சி] |
தெடாரி | தெடாரி teṭāri, பெ. (n.) கினைப்பறை; a drum of tabor of the agricultural tract. “தெடாரித் தெண்கண் டெளிர்ப்ப வொற்றி” (புறதா,368);. [தடாரி→ தெடாரி] |
தெட்சி | தெட்சி teṭci, பெ.(n.) வெட்சி; scarlet ixora. [தெள் + சி – தென்சி → தெட்சி] |
தெட்ட | தெட்ட teṭṭa, பெ.எ. (adj.) 1. முற்றிய; ripe mellow. “தெட்டபழஞ் சிதைந்து” (திவ். பெரியதி. 3,4,8); 2. தெளிவான; clear, plain. “மால்கரி தெட்ட மதப்பசை கட்டின”(கம்பரா,சரபங்க8);. |
தெட்டங்காசச்செடி | தெட்டங்காசச்செடி teḍḍaṅgācacceḍi, பெ. (n.) ஒட்டுப்புல்; sticking grass (சாஅக);. மறுவ நடந்தாரைத் தொடர்ந்தான் |
தெட்டத்தெறி-த்தல் | தெட்டத்தெறி-த்தல் teṭṭatteṟittal, 4 செ.கு.வி. (v.i.) இரண்டாய் முறுதல்; to break asunder snap in twain. [தெட்ட + தெறி-.] |
தெட்டத்தெறிப்பான் | தெட்டத்தெறிப்பான் teṭṭatteṟippāṉ, பெ. (n.) ஒரு வகைச் சொல்; a term of abuse. [தெட்டத்தெறி → தெட்டத்தெறிப்பான்] |
தெட்டத்தெளிய | தெட்டத்தெளிய teṭṭatteḷiya, விஅ. (adv.) தெள்ளத்தெளிவாக; plainly, obviously (யாழ்ப்);, |
தெட்டத்தெளிவு | தெட்டத்தெளிவு teṭṭatteḷivu, பெ. (n.) மிகத்தெளிவு; plainly, obviously (சாஅக);. [தென்னத் தெளிவு → தெட்டத் தெளிவு] |
தெட்டரசர் | தெட்டரசர் teṭṭarasar, பெ. (n.) வெல்லப்பட்ட மன்னர்; vanquished kings. “பூம்புயத்துத் தெட்டரச கூட்டத் திறைகொணர வீற்றிருந்தான்” (பாரத வெண். 209);. [தெட்டு + அரசர்] |
தெட்டல் | தெட்டல் teṭṭal, பெ. (n.) 1. கொள்ளையிடல் (யாழ்அக);; misappropriation. 2. ஏமாற்றுகை; trick, fraud, deception [தெட்டு → தெட்டல்] |
தெட்டவர் | தெட்டவர் teṭṭavar, பெ. (n.) தெளிந்தவர்; clear sighted persons, men of unclouded vision. “பரமஞானம் போய்த் தெட்டவ ரல்லரேல்” (கம்பரா மத்திர 20);. |
தெட்டி | தெட்டி1 teṭṭi, பெ. (n.) வஞ்சிப்பவள்-ன் deceiful person. “அனணமீதிற்றுயில் பொழுதே தெட்டிக ளவரேவற் செய்து” (திருப்பு. 777);. தெட்டிப் பறிப்பாரை எட்டிப் பறிப்பான் (பழ);. 2. யானை (அகநி.);; elephant. தெட்டி2 teṭṭi, பெ. (n.) வணிகன் (அகநி);; merchant. [செட்டி → தெட்டி] |
தெட்டு | தெட்டு1 deṭṭudal, 18 செகுன்றாவி. (v.t.) 1. வஞ்சித்தல்; todeceive, cheat, defraud, swindle, “தெட்டிப் பொருள் பறித்த பாவம்” (பணவிதி.340);. 2. பறித்தல்; smatch. தெட்டு2 teṭṭu, பெ. (n.) 1. வஞ்சனை; deception, cheating. “தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே” (தா[யுமலைவனர் 2);, 2. பறிக்கை (யாழ்அக);; snatching by force. தெட்டு3 deṭṭudal, 5 செகுவி (v.i.) நிறைதல்; to be sufficient. [தென் → தெட்டு] தெட்டு4 teṭṭu, பெ. (n.) யானைக் கணையம் (வின்);; wooden partition between two elephants to prevent their fighting. |
தெட்டுண்(ணு)-தல் | தெட்டுண்(ணு)-தல் deṭṭuṇṇudal, 13 செகுன்றாவி (v.t.) கவர்ந்துண்ணப்படுதல்; to be satched and devourcd. “தெட்டுண்டபோன் முழுத் திங்களென் றேக்கறும் ‘ ‘ ‘ செம்பாம்பு” (குமர. பிர. முத்துக் பின்னை. 54); [தெட்டு + உண்ணு-] |
தெட்பம் | தெட்பம் teṭpam, பெ. (n.) 1. தெளிவு (யாழ்அக);; clearness. 2, மூதறிவு (திவா.);; ripe wisdom, 3. முதிர்ச்சி (பிங்.);; maturity, ripeness. 4. மனத்தேற்றம்; presence of mind, courage, ‘சயந்த னங்க ணிருந்தனன் றெட்ப மெய்தி (கத்தபு, இத்திரன்கரத் 32);. [தெள் → தெண் →தெட்பு →தெட்பம்] |
தெண் | தெண் teṇ, பெ. (n.) தெளிவு; clarity. [தெள் → தெண்] |
தெண்ட | தெண்ட2 tead, 4 செகுவி (v.i.) வருந்தி முயலுதல்(யாழ்அக);; to make efforts, take pains. [தண்டி → தெண்டி] |
தெண்டகை | தெண்டகை teṇṭagai, பெ. (n.) 1. நெருக்கிடை; pressure, urgency. 2. தேவை; necessity. [தென் → தெண்டு → தெண்டகை] |
தெண்டகைக்குத்தேவை | தெண்டகைக்குத்தேவை teṇṭagaigguttēvai, பெ. (n.) வேண்டாவெறுப்பு (வின்.);; un willingness [தெண்டகைக்கு+ தேவை] தெண்டகைக்குத்தேவை teṇṭagaigguttēvai, பெ. (n.) தெண்டகைக்குத்தேவை (வின்); பார்க்க;see__, [தெண்டகைக்குத் தேவை → தெண்டைக்குத் தேவை] |
தெண்டக்குற்றம் | தெண்டக்குற்றம் teṇṭakkuṟṟam, பெ. (n.) தெண்டந்தீர்வை பார்க்க;see{} (தெக.தொ. 335);, [தெண்டம் + குற்றம். தண்டம் → தெண்டம் (கொ.வ.);] |
தெண்டந்தீர்வை | தெண்டந்தீர்வை teṇṭandīrvai, பெ. (n.) ஒறுப்பாக விதிக்கும் வரி; penal tax. “தெண்டந் தீர்வை கொடுத்தபின்” (கட்டபொம்மு ப23);. [தெண்டம் + தீர்வை. தண்டு → தண்டம் → தெண்டம்] |
தெண்டனிடு-தல் | தெண்டனிடு-தல் deṇḍaṉiḍudal, 18 செகுன்றாவி. (v.t.) தண்டனிடுதல்; to do homage by prostration. “அடியேன் றெண்டனிட்ட விண்ணப்பம்” (தனிப்பா.i,401,19);. ம. தெண்டனிடுக [தெண்டன்+ இடு→தண்டன் → தெண்டன் (கொ.வ.);] |
தெண்டனை | தெண்டனை teṇṭaṉai, பெ. (n.) தண்டனை; punishment [தண்டனை → தெண்டனை (கொ,வ);] |
தெண்டன் | தெண்டன் teṇṭaṉ, பெ. (n.) தண்டன்; obeisance. “எதிர்தெண்டனாக விழுந்தெழுந்து” (சேக்கிழார் பு.429);. [தண்டன்→ தெண்டன் (கொ.வ.);] |
தெண்டம் | தெண்டம் teṇṭam, பெ. (n.) தண்டம்; punishment, penalty. “தெண்டங் கொள்ளா வறப்பய னருத்துவாரின்” (இரகு ஆற்று 12);; ம, தெண்டம்; Skt. daņda [தண்டு→தண்டம்→ தெண்டம் (கொவ);] |
தெண்டல்தெரிசல் | தெண்டல்தெரிசல் teṇṭalterisal, பெ, (n.) தெளிவு இல்லாமை not clear. “தெண்டல் தெரிசலாகக் கிடக்கிறது (தென்லை);. [தெண்டல்+ தெரிசல்] |
தெண்டாயுதம் | தெண்டாயுதம் deṇṭāyudam, பெ. (n.) கதுவாழை; fissured plantain (சாஅக);. [தண்டு → தெண்டு + ஆயுதம்] |
தெண்டி | தெண்டி1 teṇṭittal, 4 செகுன்றாவி (v.t.) 1. ஒறுத்தல்; to chastise, punish. “தெலுங்கப்ப நாரணன் றெண்டிக்க” (தனிப்பா. i ;83, 165);. 2. வற்புறுத்துதல்; to insist, press. ம. தெண்டிக்குக [தண்டி → தெண்டி] தெண்டி3 teṇṭi, பெ.(n.) இரப்பாளி (இ.வ.);; beggar. ம. தெண்டி [தண்டு→ தெண்டு.தெண்டு→ தெண்டி] |
தெண்டிக்கரைசல் | தெண்டிக்கரைசல் teṇṭikkaraisal, பெ. (n.) தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் கரையையொட்டிய நீரோட்டம் (மீனவ.);; current runs from the south to north direction and near the bank. [தெண்டி + கரைசல்] |
தெண்டிதெம்மாஒள்ளி | தெண்டிதெம்மாஒள்ளி deṇṭidemmāoḷḷi, பெ. (n.) தென்மேற்காய்ச் செல்லும் நீரோட்டம்(மீனவ.);; current which runs through south west direction. [தென் + தி-தென்தி → தென்றி→ தெண்டி. தெண்டி + தெம்மா + ஒன்னி. தெண்டி – தெற்கு . தெற்கு + மேற்கு – தென்மேற்கு → தெம்மாக்கு → தெம்மா. தெம்மா – மோனை தோக்கி வந்த எதிரிடை மரபினை மொது. நல்லி → நள்ளி → ஒள்ளி. நல்லி – நீரோடை] |
தெண்டிமே முறி | தெண்டிமே முறி teṇṭimēmuṟi, பெ.(n.) தென்கிழக்காய்ச் செல்லும் கடல் நீரோட்டம் (மீனவ.);; current runs through south east direction. [தெண்டி – மேமுறி] |
தெண்டிரை | தெண்டிரை teṇṭirai, பெ.(n.) கடல் (பிங்;); Sea. ‘தெண்டிரை எழினி காட்ட தேம்விழி மகரயாழின் கம்பன; [தென்தெண் + திரை. திரை = அவை, அவை பாயும் கடன்] |
தெண்டில் | தெண்டில் teṇṭil, பெ. (n.) ஒணான் (இவ);; blood sucker. மறுவ, அணத்தான் ம. தெண்டல்; க. தொண்டெ; தெ. தொண்ட;கொண். டொண்டொ [தெண்டு → தெண்டின் (தலையை அடிக்கடி மேற் கிளப்பும் ஓணான்); (முதா,73);] |
தெண்டு | தெண்டு7 teṇṭu, பெ. (n.) மனத்தைத் துளைக்கும் ஐயம்; suspicion which agitate one’s mind. [தென் → தெண்டு] |
தெண்டு-தல் | தெண்டு-தல் lepiu, 5 செகுன்றாவி (v.t.) 1. osmol/go, to raise up, to move with a lever. 2. loorGodi (ump-oo; to attack, assail. தெண்டு-தல் lepiu- 5 செ.குவி. (v.i) நரம்பு associ to affect the joints, limbs, as cramp. [கி.கிண்டு – தெண்டு – தெண்டு] தெண்டு-தல் rendu, 5 செகுன்றாவி (v.t.) இரத்தல் இவ; to beg ம. தெண்டுக [தண்டு – தெண்டு] |
தெண்டுக்கி | தெண்டுக்கி teṇṭukki, பெ. (n.) கல்லாட்டன்; celycine (சாஅக.);. |
தெண்டுச்சலாகை | தெண்டுச்சலாகை teṇṭuccalākai, பெ. (n.) சித்தர்களின் அறுவை மருத்துவத்திற்குப் பயன்படும் 26 கருவிகளிலொன்று; a blunt probe one of the 26 surgical instruments or appliances contemplated in Siddhars science (சா_அக.);. [தெண்டு + சவாகை] |
தெண்டுதடி | தெண்டுதடி deṇḍudaḍi, பெ. (n.) கமைமிகுந்த பொருள்களை மேலே கிளப்புங் கம்பி (வின்);, lcver. [தெண்டு4 + தடி] |
தெண்டுபூக்கொடி | தெண்டுபூக்கொடி teṇḍupūkkoḍi, பெ. (n.) கொட்டைக் கரந்தை; Indian globe thistle (சாஅக.);. [தெண்டு + பூ + கொடி] |
தெண்டை | தெண்டை teṇṭai, பெ. (n.) தெண்டகை பார்க்க;see__, [தெண்டகை → தெண்டை] |
தெண்ணீர் | தெண்ணீர் teṇṇīr, பெ. (n.) தெளிந்த நீர்; clear water flowing from sediment water free from noxious substances (சாஅக.);. ம. தெண்ணீர் [தெள் + நீர்] |
தெண்னர் | தெண்னர் teṇṉar, பெ. (n.) அறிவிலிகள்; senseless or dense persons, fools. “தேசனைப் புகழார்சிலர் தெண்னர்கள்” (தேவா.1207,1); [தெள் → தெண் → தெண்னு → தெண்ணர்] |
தெண்மை | தெண்மை teṇmai, பெ. (n.) 1. தெளிவு (குறுந். 96);; clearness, lucidity, transparency. 2. அறிவின்றெளிவு; clearness of intellect. “தெண்மையுடையார்” (பு.வெ. 8,12, உரை);. [தெள் + மை – தெண்மை] |
தெத்தபடம் | தெத்தபடம் tettabaḍam, பெ. (n.) எரிபட்ட துணி, burnt cloth. “தெத்த படமானேண்டி தீயிரும்பீனீரானேன்” (பட்டினத்துப். பக்.244);. [தீய்த்த -தெத்த + படம் (கொ.வ.);] |
தெத்தம் | தெத்தம்2 tettam, பெ. (n.) ஞாயிறு இருக்கும் விண்மீனிற்கு முந்திய விண்மீன்; the naksatra previous to that where the sun is (செஅக,);. |
தெத்தம்’ | அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.) அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);; Tamil Alphabet. எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்; ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது; அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்; |
தெத்தாபகாரம் | தெத்தாபகாரம் tettāpakāram, பெ. (n.) தானங்கொடுத்த்தைத் கவர்கை; taking back a gift once made, revocation of a gift. [தெறு → தெற்று → தெற்றா → தெத்தா + அபகாரம்] |
தெத்தாபகாரி | தெத்தாபகாரி tettāpakāri, பெ. (n.) தானஞ் செய்த பொருளைக் கவர்வோன்; one who takes back his gift. “தெத்தாபகாரிகளாகிய கொடிய பாவிகளொடு” (சித். மரபுகண். பக்17);. [தெத்தாபகாரம் → தெத்தாபகாரி] |
தெத்தி | தெத்தி tetti, பெ.(n.) நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Nagapattinam Taluk. [தெற்றி(திட்டு);-தெத்தி] |
தெத்து | தெத்து1 tettu-, 5 செ.குன்றாவி. (v.t.) தெற்று-தல் பார்க்க;see__, “தடிகொடு தெத்தி” (திருப்பு, 602); [தெற்று → தெத்து ஒ.நோ.;கற்று → கத்து;பற்று → பத்து] தெத்து2 tettu-, 5 செ.கு.வி (v.i) திக்குதல்; to stammer (சாஅக.); [தெற்று → தெத்து-.] தெத்து3 tettu-, பெ. (n.) 1. வேலி; hedge of bamboo or thorns. 2. மூலை; corner. [தெற்று2 → தெத்து-.] தெத்து4 tettu-, பெ. (n.) தத்துப்பிள்ளை; adopted son. “இனிதுறு தெத்துமைந்தன்” (காசிக. சிவ. அக்.15); [தத்து → தெத்து] தெத்து5 tettu-_, பெ. (n.) ஏமாற்று (இ.வ.);; deception. [தெற்று3 → தெத்து] தெத்து6 tettu, பெ. (n.) பருமல்; yard-arm in a vessal or dhoney. |
தெத்துக்கி | தெத்துக்கி tettukki, பெ. (n.) வெள்ளைப்புனை; cuspidate-leaved calycine croton (சாஅக.);. |
தெத்துப்பல் | தெத்துப்பல் tettuppal, பெ. (n.) ஒன்றின் மேலோன்று வளர்ந்து இடறும்படிச் செய்யும் பல்; teeth arising from other teeth irregularly thus affecting the speech (சாஅக.);. [தெற்று + பல், தெற்று →தெத்து, தெத்துப்பல்=இடறியபல்] |
தெத்துமாற்றிப்போடு-தல் | தெத்துமாற்றிப்போடு-தல் deddumāṟṟippōṭudal, 20 செகுவி. (v.i.) ஏறுவாசி வைத்துச் கவர் கட்டுதல்; to break joint in building walls. [தெத்து + மாற்று + போடு-.] |
தெத்துமாற்று | தெத்துமாற்று tettumāṟṟu, பெ. (n.) வஞ்சகம்; tricks; lies; chicanery. தெத்துமாற்றி தெசை மாற்றில் கெட்டிக்காரன் (பழ.);. [தெத்து + மாற்று] |
தெத்துவாயன் l | தெத்துவாயன் l tettuvāyaṉ, பெ. (n.) திக்கு வாயன்; Stammcrer. [தெத்து + வாயன். தெற்று → தெத்து] |
தெத்துவாய் | தெத்துவாய் tettuvāy, பெ. (n.) திக்கிப் பேசும் வாய்; stammering mouth (சாஅக.);. மறுவ. திக்குவாய் [தெற்று → தெத்து. தெத்து + வாய்] |
தெத்துவாளி | தெத்துவாளி tettuvāḷi, பெ. (n.) ஏமாற்றுக் காரன்; cheat. “அவன் சரியான தெத்துவாளி;கடன் வாங்கினால் திருப்பித் தரமாட்டான் (நெல்லை);. [தெற்று5 → தெத்து + ஆளி] |
தெத்தேயெனல் | தெத்தேயெனல் tettēyeṉal, பெ. (n.) ஒர் ஒலிக் குறிப்பு; onom. expr. of singing. “தெத்தேயென முரன்று” (தேவா.747,1);. [தெத்தே + எனல்] தெத்தேயெனல் tettēyeṉal, பெ.(n.) தெந்தனா பார்க்க;see__, |
தெந்தனமடி-த்தல் | தெந்தனமடி-த்தல் tendaṉamaḍittal, 4 செ.கு.வி. (v.i.) 1. வீணே திரிதல்; to loaf, loiter about. 2. வேலையை உழப்புதல்(இவ);; to shirk work. [தெத்தனம் +அடி-.] |
தெந்தனம் | தெந்தனம்1 tendaṉam, பெ. (n.) கவலையற்ற தன்மை; carelessness. “தெந்தனவென்றே திரிந்ததுண்டேயோ” (அருட்ப. vi, பின்ளைப் பெரு.98). ம. தெந்தனம் [தெந்தனவெனல் → தெத்தனம்] தெந்தனம்2 tendaṉam, பெ. (n.) 1 சோம்பல்; laziness. 2. தாழ்ச்சி; delay “கருணை பொழிய இன்னந் தெந்தனமா” (கனம் கிருஷ்ணையர்,65);. |
தெந்தனவெனல் | தெந்தனவெனல் tendaṉaveṉal, பெ. (n.) தெந்தனம் பார்க்க;see__, |
தெந்தனா | தெந்தனா tendaṉā, பெ. (n.) தாளச் சொற்கட்டு (சங்அக);; set syllables used in marking time in music. |
தெனாது | தெனாது teṉātu, பெ. (n.) 1. தெற்குள்ளது; that which is in the south. “தெனாஅ துருகெழுகுமரி” (புறநா. 6);. 2. தெற்கு; South. “வடாதுந் தெனாதும் பாராசர் வகுத்த நேமி” (பாரத பதின்மூன்றாம் 50);. [தென் + அது. அது → ஆது] |
தெனாவட்டு | தெனாவட்டு teṉāvaṭṭu, பெ.(n.) தினவாட்டு பார்க்க;see tipavattu [தினவாட்டு – தெனாவட்டு] |
தென் | தென் ten, பெ. (n.) 1. தென்னை (சூடா.); பார்க்க;see__, 2. தெற்கு (பிங்.);; south, southern region. தென்திசை. 3. அழகு (பிங்.);; beauty. “மதனன்றன் தென்னிருருவமழிய” (தேவா.1155,4);. 4. கற்பு (சூடா);; chastity. 5. இசை (பிங்.);; harmony, music. 6. இசைப்பாட்டு (பிங்.);; song. 7. இனிமை; sweetness. “தென்னிசை பாடும் பாணன்” (திருவாலவா.56,7);. 8. வலப்பக்கம்; right side. “இடக்கால் தென்றொடைமே லொன்றச் செறி” (சைவச. பொது. 273);. ம., க., தென் [தில் → தெல் → தென். தென்னுதல் = கோணுதல், சாய்தல், தென் = தென்னை மரம் இயற்கையாக வளர்ந்த தென்றிசை, குமரிக் கண்டத்தில் ஏழ்தெங்க நாடியிருந்தமையையும், தென் கண்டத்திலும் அதனையடுத்த தீவுகளிலும் இன்றும் தென்னை செழித்து வளர்தலையும் தோக்குக (வே.க.144);, 145);] |
தென்கடல் | தென்கடல் teṉkaḍal, பெ. (n.) 1. கோடியக் கரையையொட்டித் தென்பக்கமாய் உள்ள கடல்; sea near the__, 2. குமரிக் கடல்; Cape Comerin sea; Kanniya-k-kumari Sea. [தென் + கடல்] |
தென்கயிலாயம் | தென்கயிலாயம் teṉkayilāyam, பெ. (n.) கைலாயத்தை ஒத்ததும் தென்தேயத்தில் உள்ளதுமான தில்லை (சிதம்பரம்); திருக்காளத்தி, திருவையாறு போன்ற சிவன் கோயில்; Sivan shrines of the south, as Tillai, Chidambaram, Tirukkalatti, Tiruvaiyaru, etc. [தென் + கயிலாயம்] Skt. kailas → த. கயிலாயம் |
தென்கயிலை | தென்கயிலை teṉkayilai, பெ. (n.) தென் கயிலாயம் பார்க்க;see__, “தென்கயிலைக்குப் போவன்” (சீகானத். பு. தென்கை. 9); [தென் + கயிலை] |
தென்கரைநாடு | தென்கரைநாடு teṉkaraināṭu, பெ. (n.) காவிரிக்குத் தென்கரையாகச் சோழ மண்டலத்துள் அமைந்த நாடு; country situated in chola mandalam, which is south of cauvery. “தென்கரை நித்த விநோத வளநாடு” (கரத்தைச் செப்பேடுகள்);. [தென் + கரை + நாடு] |
தென்கலை | தென்கலை teṉkalai, பெ. (n.) 1. தமிழ்; the Tamil literature and art, as belonging to the South. “வடகலை தென்கலை வடுகு கன்னடம்” (கம்பரா. பாயி);. 2. தென்கலையார் பார்க்க;see__, 3. தென்கலைத்திருமண் பார்க்க;see__, |
தென்கலைத்திருமண் | தென்கலைத்திருமண் teṉkalaittirumaṇ, பெ. (n.) தென்கலை மாலியர் இடும் திருமண்; the mark worn on the forehead by the__, [தென்கலை + திரு + மண்] |
தென்கலைநாம்ம் | தென்கலைநாம்ம் teṉkalaināmm, பெ. (n.) தென்கலைத்திருமண் பார்க்க;see__, [தென்கலை + நாமம். ராமம் → நாமம்] |
தென்கலையார் | தென்கலையார் teṉkalaiyār, பெ. (n.) தென்கலைத் திருமண் இடும் மாலியப் பிரிவினர்; the vainava sect wearing__, [தென் + கலையார்] |
தென்கலைராம்ம் | தென்கலைராம்ம் teṉkalairāmm, பெ. (n.) தென்கலைத்திருமண் பார்க்க;see__, [தென்கலை + ராமம்] |
தென்காசி | தென்காசி teṉkāci, பெ. (n.) குற்றாலத்திற்கு அருகில் சிற்றாற்றங்கரையில் உள்ளதும், பிற்காலப் பாண்டியரது தலைநகராய் இருந்த்துமான நகரம்; a__,on the river__,north-east of__,in Tirunelveli district, capital of the later__, [தென் + காசி] |
தென்காசியாசாரம் | தென்காசியாசாரம் teṉkāciyācāram, பெ. (n.) தென்காசிவிருந்தோம்பல் பார்க்க;see__, தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம் (பழ.);. [தென்காசி + ஆசாரம்] Skt.__,→ த. ஆசாரம் |
தென்காசிவழக்கு | தென்காசிவழக்கு teṉkācivaḻkku, பெ. (n.) இரு திறத்தார்க்கும் நடுவுகூறி எளிதில் வழக்குத் தீர்க்குமுறை (நெல்லை.);; rough and ready settlement of a dispute by striking a mean [தென்காசி + வழக்கு] |
தென்காசிவிருந்தோம்பல் | தென்காசிவிருந்தோம்பல் teṉkācivirundōmbal, பெ. (n.) உள்ளன்பில்லாத விருந்தோம்பல் (நெல்லை);; insincere and hollow courteousness. |
தென்காற்று | தென்காற்று teṉkāṟṟu, பெ. (n.) தென்றல்; balmy breeze, as blowing from the south. ம. தென்னிகாற்று [தென் + காற்று] |
தென்கால் | தென்கால் teṉkāl, பெ. (n.) தென்காற்று பார்க்க;see__, [தென் + கால்;கால் = காற்று] |
தென்கிழக்கு | தென்கிழக்கு teṉkiḻkku, பெ. (n.) தென்கீழ்த் திசை; south east. ம. தெக்குகிழக்கு [தென் + கிழக்கு] |
தென்கீழ்த்திசை | தென்கீழ்த்திசை teṉāḻttisai, பெ. (n.) தென்கிழக்கு பார்க்க;see__, [தென் + கீழ் + திசை] |
தென்கீழ்த்திசைப்பாலன் | தென்கீழ்த்திசைப்பாலன் teṉāḻttisaippālaṉ, பெ. (n.) தென்கீழ்த்திசையிறை பார்க்க;see__, [தென் + கீழ் + திசை + பாலன்] |
தென்கீழ்த்திசையிறை | தென்கீழ்த்திசையிறை teṉāḻttisaiyiṟai, பெ. (n.) தென்கீழ்த் திசையின் தலைவனாகிய தீத் தெய்வம் (சூடா);; Agni, as regent of the south-east. [தென் + கீழ் + திசை + இறை] |
தென்கீழ்த்திசையோன் | தென்கீழ்த்திசையோன் teṉāḻttisaiyōṉ, பெ. (n.) தென்கீழ்த்திசையிறை பார்க்க;see__, “தென்கீழ்த்திசையோனாக்கிய தனிமுதற் றிருமாமதுரை” (கல்லா.31,10);. [தென் + கீழ் + திசையோன்] |
தென்குரங்காடுதுறை | தென்குரங்காடுதுறை deṉkuraṅgāṭuduṟai, பெ. (n.) காவிரியின் தென்கரையிலுள்ள பாடல் பெற்ற சிவன் கோயில்; a__,place;on the south bank of the Cauvery. [தென் + குரங்காடுதுறை] இதுவே இன்று கபிஸ்தலம் என்றழைக்கப் படுகிறது. |
தென்கோடு | தென்கோடு teṉāṭu, பெ. (n.) பிறைநிலவின் தென்முனை; Southern cusp of the moon. “வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு தாழ்ந் தென்ன வான்பிறைக்கே” (பட்டினத். பொது. 1);. [தென் + கோடு] |
தென்சார் | தென்சார் teṉcār, பெ. (n.) தென்பக்கம்; south side. [தென் + சார்] |
தென்சிதம்பரம் | தென்சிதம்பரம் deṉcidambaram, பெ. (n.) சிவ வழிபாட்டுக்குரிய முதன்மையான இடங்களுள் ஒன்று; an important__,temple, one among many (இரு.நூற்தமி);. [தென் + சிதம்பரம்] சிற்றம்பலம் → சிதம்பரம் |
தென்னகர் | தென்னகர் teṉṉagar, பெ. (n.) கூற்றுவன் நகரம் (தெற்கிலுள்ளது);;__, capital, as being in the south. “தென்னகர்க்கிறை சென்றனன்” (உபதேசகா. சிவபுண். 227);. ம. தென்னகர் [தென் + நகர்] |
தென்னங்கட்டை | தென்னங்கட்டை1 teṉṉaṅgaṭṭai, பெ. (n.) பனங்கட்டை போன்று தென்னை மரத்திலிருந்து அறுத்து எடுக்கப்பட்ட கட்டை; log of wood obtained by cutting, coconut trec. [தென்னை + கட்டை] இவை கைமரங்களாகப் பயன்படுத்தப் படுகின்றன தென்னங்கட்டை2 teṉṉaṅgaṭṭai, பெ. (n.) தேய்ந்த தென்னம் விளக்குமாறு; wornoul broom of coconut leaf fibre. [தென்னை + கட்டை. கட்டை = தேய்த்தது, குட்டையானது] |
தென்னங்கன்று | தென்னங்கன்று teṉṉaṅgaṉṟu, பெ. (n.) தென்னம்பிள்ளை பார்க்க;see__, [தென்னை + கன்று] |
தென்னங்கருப்பநீர் | தென்னங்கருப்பநீர் teṉṉaṅgaruppanīr, பெ. (n.) தென்னையின் பதநீர் (வின்.);; Sweet coconut-toddy. [தென்னை + கருப்ப நீர்] |
தென்னங்கள் | தென்னங்கள் teṉṉaṅgaḷ, பெ. (n.) தென்னம் பாளையிலிருந்து வடிக்குங்கள்; coconut toddy. ம. தெங்ஙின் கள்ளு [தென்னை + கள்] |
தென்னங்காடி | தென்னங்காடி teṉṉaṅgāṭi, பெ. (n.) தென்னங் கள்ளைப் புளிக்க வைத்து அதனின்று வடிக்கப்படும் சாறு; coconut vinigar (சாஅக.);. [தென்னை + காடி.] நெல்லுமியைப் பயன்படுத்திவிரைந்து புளிக்க வைக்கலாம். இக்காடி ஊறுகாய்க் குதவும். தாகத்தைத் தணிக்கும். |
தென்னங்காய் | தென்னங்காய் teṉṉaṅgāy, பெ. (n.) தேங்காய்; coconut fruit ம. தெங்ஙன் [தென்னை + காய்] |
தென்னங்கிடுகு | தென்னங்கிடுகு teṉṉaṅgiḍugu, பெ. (n.) தென்னங் கீற்றால் முடைந்த தட்டி; screen made of braided coconut leaf. [தென்னை + கிடுகு] தென்னங்கிடுகு teṉṉaṅgiḍugu, பெ. (n.) தென்னங்கீற்றால் ஆன தட்டி, coconutpalm leaf screen. |
தென்னங்கிளி | தென்னங்கிளி teṉṉaṅgiḷi, பெ. (n.) பெரும்பாலும் தென்னையில் வாழும் கிளி வகை; rose-ringed parakeet as nesting the coconut tree. [தென்னை + கிளி] |
தென்னங்கீற்று | தென்னங்கீற்று teṉṉaṅāṟṟu, பெ. (n.) தென்னை மட்டையின் ஒலையைமிடைந்த கீற்று; split coconut leaf. [தென்னை + கீற்று] |
தென்னங்கீலகம் | தென்னங்கீலகம் teṉṉaṅālagam, பெ. (n.) மேகநாத மூலி; unknown drug (சாஅக.);. |
தென்னங்குருகு | தென்னங்குருகு teṉṉaṅgurugu, பெ. (n.) தென்னையின் உள்ளீடு; heart of the coconut tree. [தென்னை + குருகு] |
தென்னங்குருத்து | தென்னங்குருத்து teṉṉaṅguruttu, பெ. (n.) தென்னை மரத்துத் தளிர்; tender terminal bud on the top of the coconut tree-coconut cabbage (சாஅக.);. [தென்னை + குருத்து] இது சமையலுக்கு உதவும். எனினும் மரத்தை யழிக்காமல் இதைப் பறிக்க வியலாது. |
தென்னங்குரும்பி | தென்னங்குரும்பி teṉṉaṅgurumbi, பெ. (n.) இளநீர்பிடியாத காய்; very immature coconut. [தென்னை + குரும்பி] |
தென்னங்குரும்பை | தென்னங்குரும்பை teṉṉaṅgurumbai, பெ. (n.) 1. தென்னை மரத்தில் முதன்முதலாக விடும் இளங்காய்; the germ or the first setting of the young coconut. 2. பக்குவப்படாத தேங்காய்; immature coconut. தென்னங் குரும்பை திருக்குரும்பை பன்னாடையெல்லாம் ஒரு மரத்துக்காய் (பழ.); (சாஅக.);. [தென்னை + குரும்பை] |
தென்னங்குளி | தென்னங்குளி teṉṉaṅguḷi, பெ.(n.) ஒருவகை மீன்; a kind of fish. [தென்னம்+(குள்ளி);குளி] |
தென்னங்கூந்தல் | தென்னங்கூந்தல் teṉṉaṅāndal, பெ. (n.) தேங்காயைச் சுற்றி அமைந்த நார்; fibre around the coconut. [தென்னை + கூந்தல்] |
தென்னங்கெளுத்தி | தென்னங்கெளுத்தி teṉṉaṅgeḷutti, பெ. (n.) சுவையுள்ள ஒரு வகை மீன் (மீனவ.);; a kind of tasty fish. |
தென்னங்கொட்டு | தென்னங்கொட்டு teṉṉaṅgoṭṭu, பெ. (n.) தென்னைத் தூறு; stump of a coconut tree. [தென்னை + கொட்டு] |
தென்னங்கோம்பை | தென்னங்கோம்பை teṉṉaṅāmbai, பெ. (n.) 1. இரு கூறாக்கி உள்ளீடு எடுக்கப்பெற்ற தேங்காய் (இ.வ.);; split coconut with its kernel taken out. 2. தென்னங்கோழை பார்க்க;see__, [தென்னை + கோம்பை] |
தென்னங்கோழை | தென்னங்கோழை teṉṉaṅāḻai, பெ. (n.) தேங்காய்க் குடுவை; coconut with the milk and kernal taken out. [தென்னை + கோழை] |
தென்னஞ்சருக்கரை | தென்னஞ்சருக்கரை teṉṉañjarukkarai, பெ. (n.) தென்னங் கற்கண்டு; coconut jaggery the brown sugar obtained from the pure sweet toddy. [தென்னை + சருக்கரை. சருக்கு → சருக்கரம் → சருக்கரை] |
தென்னஞ்சாம்பல் | தென்னஞ்சாம்பல் teṉṉañjāmbal, பெ. (n.) தென்னையோலையை எரித்த சாம்பல்; the ashes of the burnt leaves of coconut tree (சாஅக.);. [தென்னை + சாம்பல்] இது மிகவும் காரமானது, மருந்திற்குப் பயன்படும். |
தென்னஞ்சாலை | தென்னஞ்சாலை teṉṉañjālai, பெ. (n.) இரு பக்கத்திலும் தென்னைமரம் உள்ள சாலை; a road having rows of coconut trees on either side. [தென்னை + சாலை] |
தென்னஞ்சேகு | தென்னஞ்சேகு teṉṉañjēku, பெ. (n.) தென்னையின் மரப்பாகம்; the porcupinc wood of commerce. [தென்னை + சேகு] |
தென்னந்தடுக்கு | தென்னந்தடுக்கு teṉṉandaḍukku, பெ.(n.) தென்னை ஓலையால் பின்னப்பட்ட கீற்று. a side screen made of coconut Heaves. [தென்னை+தடுக்கு] |
தென்னந்தும்பு | தென்னந்தும்பு teṉṉandumbu, பெ. (n.) தென்னை நாரில் திரித்த கயிறு; rope made by the coconut husk. [தென்னை + தும்பு] |
தென்னந்தெளியலாக | தென்னந்தெளியலாக teṉṉandeḷiyalāka, பெ. (n.) அங்கங்கே ஒவ்வொன்றாக; sporadically. [தென்னம் + தெளியலாக] |
தென்னன் | தென்னன் teṉṉaṉ, பெ. (n.) தென்னவன் பார்க்க;see__, “தென்னன் வாழ்க வாழ்கவென்று” (சிலப். 29, கத்துகவரி);. [தென் → தென்னன்] |
தென்னமட்டை | தென்னமட்டை teṉṉamaṭṭai, பெ. (n.) தென்னைமட்டை பார்க்க;see__, [தென்னைமட்டை → தென்னமட்டை] |
தென்னமரம் | தென்னமரம் teṉṉamaram, பெ. (n.) தென்னை பார்க்க;see__, தென்னமரத்திலே தேள்கொட்டப் பனை மரத்திலே நெறி கட்டினது போல (பழ.);. [தென்னை + மரம்] தென்னமரம் teṉṉamaram, பெ. (n.) தென்னை பார்க்க;see தென்னை மரத்தில் ஏண்டா ஏறினாய், கன்றுக் குட்டிக்குப் புல்பிடுங்க, தென்னை மரத்தில் புல் ஏதடா? அதுதான் கீழே இறங்குகிறேன் என்றானாம் (பழ.);. தென்னை மரத்திற்குத் தண்ணிர் வார்த்தால் தலையாலே தரும் (பழ.);. ம. தென்னமரம் [தென்னை + மரம்] |
தென்னம்பஞ்சு | தென்னம்பஞ்சு teṉṉambañju, பெ. (n.) தென்னைமட்டையின் அடிப்புறத்திலிருக்கும் பஞ்சுபோன்ற மெல்லிய பொருள்; soft, downy substance on the outside of the lower part of the coconut leaves. [தென்னை + பஞ்சு] |
தென்னம்பன்னாடை | தென்னம்பன்னாடை teṉṉambaṉṉāṭai, பெ. (n.) தென்னை மட்டைக்கும், மரத்திற்கும் இடையே மட்டை பிரியுமிடத்தில் காணப்படும் வலை போன்ற பொருள்; a coarse net-like fibrous matting found at the trunk where the foot stalks branch out [தென்னை + பன்னாடை] |
தென்னம்பழம் | தென்னம்பழம் teṉṉambaḻm, பெ. (n.) தேங்காய் நெற்று; ripe coconut (S.I.I.V. 93);. [தென்னை + பழம்] |
தென்னம்பால் | தென்னம்பால் teṉṉambāl, பெ. (n.) தென்னங்கள் பார்க்க;see__, [தென்னை + பால்] |
தென்னம்பாளை | தென்னம்பாளை teṉṉambāḷai, பெ. (n.) 1. தென்னம்பூ உள்ளடங்கிய உறை; coconut flower with the integument covering it. 2. தென்னம்பூவினுறை; integumentor spathe of the blossom, which covers it until it expands. [தென்னை + பாளை] |
தென்னம்பிசின் | தென்னம்பிசின் teṉṉambisiṉ, பெ. (n.) தென்னை மரத்துப் பிசின்; coconut gum. [தென்னை + பிசின்] இது சிறிதளவே காணப்படும், பயனற்றது. |
தென்னம்பிள்ளை | தென்னம்பிள்ளை teṉṉambiḷḷai, பெ. (n.) தென்னங்கன்று; coconut sapling. [தென்னை + பிள்ளை] |
தென்னம்பூ | தென்னம்பூ teṉṉambū, பெ. (n.) தென்னை மரத்தின் பாளைப்பூ; flowers of coconut tree (சாஅக.);. [தென்னை + பூ] |
தென்னம்பூநீர் | தென்னம்பூநீர் teṉṉambūnīr, பெ. (n.) தென்னம்பூவின் சாறு; juice extracted from coconut flower (சாஅக.);. [தென்னை + பூ + நீர்] |
தென்னம்பொருப்பு | தென்னம்பொருப்பு teṉṉamboruppu, பெ. (n.) பொதியமலை; Mount Podiyam as the southern mountain. “தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்” (புறநா. 33);. [தென் + அம் + பொருப்பு] |
தென்னம்மாறு | தென்னம்மாறு teṉṉammāṟu, பெ. (n.) தென்னைவிளக்குமாறு பார்க்க;see__, |
தென்னம்வெல்லம் | தென்னம்வெல்லம் teṉṉamvellam, பெ. (n.) தென்னஞ் சருக்கரையைக் கட்டியாகத் திரட்டிய வெல்லம்; coconut jaggery (சாஅக.);. [தென்னை + வெல்லம்] |
தென்னம்வேர் | தென்னம்வேர் teṉṉamvēr, பெ. (n.) நார்த் தன்மையுடைய தென்னையின் வேர்; the long fibrous roots of coconut tree. [தென்னை + வேர்] மருத்துவப் பண்புடையது |
தென்னரங்கன்சம்பா | தென்னரங்கன்சம்பா teṉṉaraṅgaṉcambā, பெ. (n.) சம்பா நெல்வகை; a kind of camba paddy, “தென்னரங்கன் சம்பா திருக்குறுங்கை நம்பிசம்பா” (நெல்விடு.183);. [தென் + அரங்கன் + சம்பா] |
தென்னர் | தென்னர்1 teṉṉar, பெ. (n.) தெற்கு; south. “அதற்குத் தென்னர். மன்னு மம்பல மொன்றுண்டு” (கோயிற்பு, பதஞ். 71);. [தென் + அர். ‘அர்’ சொல்வாக்க ஈறு] தென்னர்2 teṉṉar, பெ. (n.) 1. தென்னாட்டவர்; people of southern country. “தென்னர்பிரான் கழறிற் றறிவான் (பதினொ. திருத்தொண். 44);. 2. பாண்டிய வரசர்; the__,kings. “தேவர் கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே” (சிலப்.17;பக்.29);. [தென் + அர். ‘அர்’ பலர்பாலீறு] தென்னர் teṉṉar, பெ. (n.) பகைவர் (யாழ்.அக.);; foes. ம. தென்னர் [தெறுநர் → தென்னர்] |
தென்னர்நிலம் | தென்னர்நிலம் teṉṉarnilam, பெ. (n.) 1. பகைவர் நாடு; enemy’s country. 2. போர்க் களம்; battle field. [தென்னர் + நிலம்] |
தென்னல் | தென்னல் teṉṉal, பெ. (n.) தென்றல் பார்க்க;see__, ம. தென்னல் [தென்றல் → தென்னல் (கொ.வ.);] |
தென்னவன் | தென்னவன் teṉṉavaṉ, பெ. (n.) 1. தென் புலத்தையாண்ட பாண்டியன்; as ruling in the south. “வாடாச்சீர்த் தென்னவன் றொல்லிசை நட்ட குடியொடு” (கலித். 104, 6);. 2. இராவணன்; “தென்னவன் மலையெடுக்க” (தேவா. 1051, 10);. 3. கூற்றுவன்;ம. தென்னவன் |
தென்னவன்பிரமராயன் | தென்னவன்பிரமராயன் teṉṉavaṉpiramarāyaṉ, பெ. (n.) மாணிக்கவாசகர் அமைச்சராயிருந்த பொழுது பாண்டியன் கொடுத்த பட்டப்பெயர்; tittle conferred by the__,king on__,while he was minister. “தென்னவனோலை தென்னவன் பிரமராயனே காண்க” (திருவாலவா. 27, 61);. (செஅக.);. [தென்னவன் + பிரமராயன்] |
தென்னவிளக்குமாறு | தென்னவிளக்குமாறு teṉṉaviḷakkumāṟu, பெ. (n.) தென்னைவிளக்குமாறு பார்க்க;see__, [தென்னை + விளக்குமாறு] |
தென்னவெனல் | தென்னவெனல் teṉṉaveṉal, பெ. (n.) இசைக் குறிப்பு; a syllable sung in tunes. “தென்னவென்னு மிசைவளர்த்து” (சிலப். 8;41, அரும்);. [தென்னா + எனல்] |
தென்னவெல்லம் | தென்னவெல்லம் teṉṉavellam, பெ. (n.) தென்னம்வெல்லம் பார்க்க;see__, [தென்னை + வெல்லம்] |
தென்னா | தென்னா teṉṉā, பெ. (n.) இசையொலிக் குறிப்புச் சொல்; onom. expr. in musical note. |
தென்னாடு | தென்னாடு teṉṉāṭu, பெ. (n.) இந்தியாவின் தென்பகுதி; South India. தென்னாடுடைய சிவனே போற்றி (தேவா.);. [தென் + நாடு] |
தென்னாதெனாவெனல் | தென்னாதெனாவெனல் teṉṉāteṉāveṉal, பெ. (n.) தாளச் சொற்செட்டு; syllables used in humming tunes or singing. “தென்னா தெனாவென்று வண்டுமுர றிருவேங்கடத் தென்னானை” (திவ். திருவாய். 3, 9, 1);. (சிலப். 3;26);,உரை,பக்.105);. [தென்னா + தெனா + எனல்] |
தென்னி | தென்னி teṉṉi, பெ. (n.) வாழை (மூ.அ);; plantain (செஅக.);. [தென் → தென்னி] |
தென்னிப்பார்-தல் | தென்னிப்பார்-தல் teṉṉippārtal, செ.குன்றாவி (v.t.) வலையின் அப்போதைய நிலையை எண்ணிப் பார்த்தல் (மீனவ.);; to watch the prevailing condition of a net. |
தென்னிலம் | தென்னிலம் teṉṉilam, பெ. (n.) போர்க்களம்; battle-field. [தென்னர் + நிலம் = தென்னர்நிலம். தென்னாநிலம் → தென்னிலம்] |
தென்னிலை | தென்னிலை teṉṉilai, பெ. (n.) தென்னோலை; coconut leaves. “தென்னிலையின் பகுதியென” (திருக்காளத். 4, 2, 11); [தென்(னை); + இலை] |
தென்னீர்க்கு | தென்னீர்க்கு teṉṉīrkku, பெ. (n.) தெங்கு ஓலையின் ஈர்க்கு (வின்.);; rib of the coconut leaf. [தென்னை + ஈர்க்கு] |
தென்னு | தென்னு1 deṉṉudal, 5 செ.கு.வி. (v.i.) 1. வளைதல்; to bent. 2. நெம்புதல்; to lift, as with a lever, 3. கிளம்புதல்; to rise. |
தென்னுரை | தென்னுரை teṉṉurai, பெ. (n.) தென்மொழி பார்க்க;see__, “அன்ன நடையார். . . மடலூரார் என்பதோர் வாசகமுந் தென்னுரையிற் கேட்டறிவ துண்டு” (தி.வ்.பெரியதிரும. 391); (செஅக.);. [தென் + உரை] |
தென்னுலகு | தென்னுலகு teṉṉulagu, பெ. (n.) தென்றிசை யுலகம்; the world of the manes. “தென்னுலகிற் புகுந்தனையோ” (திருவிளை. வன்னியுங் கிணறும். .21);. [தென் + உலகு] |
தென்னை | தென்னை teṉṉai, பெ. (n.) தெங்கு (பிங்.);; coconut-palm. ம. தென்ன [தென் → தென்னை] தென்னை வகை 1. பச்சைத் தென்னை, பச்சிளநீர்; green coconut tree. |
தென்னை மரத்து விளையாட்டு | தென்னை மரத்து விளையாட்டு teṉṉaimarattuviḷaiyāṭṭu, பெ.(n.) காலில் குழந்தை யினை வைத்து ஆடும் விளையாட்டு, a play sitting the child on the fore-leg. [தென்னை+மரத்து+விளையாட்டு] |
தென்னைநீர் | தென்னைநீர் teṉṉainīr, பெ. (n.) இளநீர்; water of tender coconut. [தென்னை + நீர்] |
தென்னைமட்டை | தென்னைமட்டை teṉṉaimaṭṭai, பெ. (n.) 1. தென்னையோலையின் நடுவிலுள்ள மட்டை; coconut leaf stalk. 2. தேங்காயின் கூந்தல்; coconut husk [தென்னை + மட்டை] |
தென்னையோலை | தென்னையோலை teṉṉaiyōlai, பெ. (n.) தென்னைமட்டையின் ஒலை; the leaf of the coconut palm. ம. தெங்ஙோல [தென்னை + ஓலை] |
தென்னைவட்டு | தென்னைவட்டு teṉṉaivaṭṭu, பெ. (n.) தென்னை வெல்லத்தைப் பலவடிவாகத் திரட்டிய கட்டி; calles of cocoanut jaggery (சாஅக.); [தென்னை + வட்டு)] |
தென்னைவிளக்குமாறு | தென்னைவிளக்குமாறு teṉṉaiviḷakkumāṟu, பெ. (n.) தென்னையோலையின் ஈர்க்கு களாலான துடைப்பம்; broom made of palm leaf fibre. [தென்னை + விளக்குமாறு] |
தென்னைவெல்லம் | தென்னைவெல்லம் teṉṉaivellam, பெ. (n.) தென்னம்வெல்லம் பார்க்க;see__, [தென்னை + வெல்வம்] |
தென்னோகலம் | தென்னோகலம் teṉṉōkalam, பெ. (n.) கருநாவல்; black jamoon (சாஅக.);. |
தென்னோலை | தென்னோலை teṉṉōlai, பெ. (n.) தென்னை யோலை பார்க்க;see__, [தென்னை + ஓலை] |
தென்படு-தல் | தென்படு-தல் deṉpaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. புலப்படுதல்; to meet, appear, strike one’s eyes. அது என் கண்ணிலே தென்பட்டது. 2. பயிற்சியடைதல்; to be versed, experienced. “அதிலே நன்றாய்த் தென்பட்டவன்” (இ.வ.);. |
தென்பரதம் | தென்பரதம் deṉparadam, பெ. (n.) ஒன்பது கண்டங்களுள் ஒன்று (நவகண்டங்களுள் ஒன்று);; a continent, one of__, [தென் + பரதம்] |
தென்பல்லி | தென்பல்லி teṉpalli, பெ. (n.) புல்லகம் என்ற தலையணியின் உறுப்பிரண்டனுளொன்று; one of the two sections of the ornament pullakam. “தென்பல்லி வடபல்லி என்னும் இவையும்… ஒன்றான தலைக் கோலத்தை” (சிலப்.6;107,உரை);. [தென் + பல்லி] |
தென்பாங்கு | தென்பாங்கு teṉpāṅgu, பெ.(n.) தென் பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் பாடுகின்ற பாடல் வகை; a southern type of melodious folk song. மறுவ_தெம்மாங்கு [தென்+பாங்கு] |
தென்பாண்டி | தென்பாண்டி teṉpāṇṭi, பெ. (n.) தென்பாண்டி நாடி பார்க்க;see__, “தென்பாண்டி குட்டங் குடங்கற்கா” (நன்.273, உரை);. 2. பாண்டிய நாடு; the__,country, as being in the south. “தென்பாண்டி நாடே தெளி” (திருவாச.19,.2);. ம. தென்பாண்டி [தென் + பாண்டி] |
தென்பாண்டிநாடு | தென்பாண்டிநாடு teṉpāṇṭināṭu, பெ. (n.) நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டி நாட்டுத் தென்பகுதி (நன். 273, உரை);; the Southern__,countryidentified with__, [தென் + பாண்டி + நாடு] |
தென்பாரதம் | தென்பாரதம் deṉpāradam, பெ. (n.) தென்பரதம் பார்க்க (யாழ்.அக.);;see__, [தென் + பாரதம்] Skt.→ த. பாரதம் |
தென்பாரிசம் | தென்பாரிசம் teṉpārisam, பெ. (n.) தெற்குச் சிறகம்; south wing. [தென் + பாரிசம்] |
தென்பார் | தென்பார் teṉpār, பெ. (n.) 1. தென்னாடு; South India. “தென்பாராளு மறிவிற் குறுமுனி” (தமிழ்நா.. 239);.. 2. பாண்டி நாடு; the__,country, as the southern part of the earth. “தென்பார் வைகுவோர் தவமோ” (திருவிளை. உக்கிர பாண்டியன். 20);. [தென் + பார்] |
தென்பாற்பரதம் | தென்பாற்பரதம் deṉpāṟparadam, பெ. (n.) ஒன்பது கண்டங்களுள் ஒன்று; a continent, one of__, [தென் + பால் + பரதம்] |
தென்பாலி | தென்பாலி teṉpāli, பெ. (n.) குமரிக் கண்டப் பகுதிகஎளான்று; an ancient division of the Tamil land. “தென்பாலி முகத்துக்கு வடவெல்லையாகிய பஃறுளி” (சிவப். 8,;1, உரை);. [தென் + பாலி] |
தென்பால் | தென்பால் teṉpāl, பெ. (n.) தெற்குப் பாகம்; the southern part. ம. தென்பால் [தென் + பால்] |
தென்பு | தென்பு teṉpu, பெ. (n.) தெம்பு பார்க்க;see tembu. தெ. தென்பு [தெம்பு → தென்பு] |
தென்புலக்கோன் | தென்புலக்கோன் teṉpulakāṉ, பெ. (n.) |
தென்புலத்தார் | தென்புலத்தார் teṉpulattār, பெ. (n.) தென்றிசையில் வாழ்ந்து மறைந்த முன்னோர்; the manes, as living in the south. “தென்புலத்தூர் தெய்வம் விருத்தொக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தார் ஓம்பல்தலை’ (குறள், 43);. 2. தென்புலர் பார்க்க;see__, “தென்புலத் தார்க் கென்னுக் கடைவுடையேன் யான்” (திவ். இராமானுச. தனியன்);. [தென் + புலத்தார்] |
தென்புலத்தார்வேள்வி | தென்புலத்தார்வேள்வி teṉpulattārvēḷvi, பெ. (n.) 1. ஐவகை வேள்வியு ளொன்றாய் நாள்தோறும் தென்றிசையிலுள்ளார் (பிதிரர்);; பொருட்டுச் செய்யும் நீத்தார் கடன்; one of ai-vagai__,daily offering of libations to the manes. [தென + புலத்தார் + வேள்வி] |
தென்புலம் | தென்புலம் teṉpulam, பெ. (n.) 1. தென்றேயம்; the southern country. “தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப” (தெடுநல். 52);. 2. தென்றிசையிலுள்ளவருலகம்; region of the manes. “தென்புல வாழ்நர்க்கு” (புறநா. 9);. 3. கூற்றுவனுலகு; the abode of the God of death, world of__, “தென்புலக் கோன் பொறி யொற்றி” (திவ். பெரியாழ். 5,22);. 4. தமிழகத்தின் தெற்கிலிருந்த பாண்டி நாடு; country. “தென்புலங் காவலி னொரீஇ” (புறநா. 7);. ம. தென்புலம், தெக்கன்புரி [தென் + புலம்] |
தென்புலர் | தென்புலர் teṉpular, பெ. (n.) காலதூதர்; messengers, “தென்புலர்க் கென்னைச் சேர்கொடான்” (திவ். பெரியதி. 7,3,3,);. [தென்புலம் → தென்புலர்] |
தென்மச்சேறு | தென்மச்சேறு teṉmaccēṟu, பெ. (n.) கடலடிச் சேற்று வகையுள் ஒன்று; kind of mud, which deposit beneath of the sea. [தென்மம் + சேறு] |
தென்மதுரை | தென்மதுரை deṉmadurai, பெ. (n.) 1. தலைச் சங்கமிருந்து கடல் கொள்ளப்பட்ட நகரம் (சிலப். 8;1, உரை);; Southern Madurai the reputed city where the first Sangam met, supposed to have been submerged by the sea. 2. தென் பாலுள்ள மதுரை; Madurai dist. fr. Vada Madurai. [தென் + மதுரை, மதி → மதிரை → மதுரை = மதிக்குனத்தவனான பாண்டியன் முதன் தலைநகர் (தென் மதுரை);, கண்ணன் ஆண்ட வடமதுரை, அப்பெயர் பெற்ற கடைக்கழகப் பாண்டியா தலைநகர் (வைகை மதுரை); (வ.வ.52);] |
தென்மலை | தென்மலை teṉmalai, பெ. (n.) பொதிய மலை; Mount Podiyam, believed to be the residence of Agattiyar.opp. to__, “தென்மலையிருந்த சீர்சான் முனிவரன்” (பு.வெ. சிறப்புப்பாயிரம்);. [தென் + மலை] |
தென்மாடு | தென்மாடு teṉmāṭu, பெ. (n.) தென் பக்கம்; south side. “கோயிலில் அர்த மண்டபத்தில் தென்மாட்டில் வாசலில் மேற்கடைய உத்திரத்திலும்” (தெ.க.தொ. 5,கல். 588);. [தென் + மாடு. மாடு = பக்கம்.”மாடு” பார்க்க] |
தென்முக நம்பி | தென்முக நம்பி teṉmuganambi, பெ. (n.) தென்புறமாக அமர்ந்து நால்வர்க்கும் அருளிய சிவன் திருவுருவம் (தட்சிணாமூர்த்தி);; a Siva’s posture. [தென்+முகம்+நம்பி] |
தென்முனி | தென்முனி teṉmuṉi, பெ. (n.) அகத்தியன்; Agattiyan, as residing in the south. “தென்றிசை வைகென்று தென்முனிக்குக் கயிலையின்முன் புகன்ற ஞான்று” (கடம்ப.பு.இலீலா.18);. மறுவ. குடமுனி ம. தென்முனி [தென் + முனி] |
தென்முனை | தென்முனை teṉmuṉai, பெ. (n.) தென்கோடி முனை (இ.வ.);; the South pole. [தென் + முனை] |
தென்முனைக் கண்டம் | தென்முனைக் கண்டம் teṉmuṉaikkaṇṭam, பெ.(n.) நிலவுருண்டையின் தென் முனைப்பகுதி; Antartica. [தென்+முனை+கண்டம்] |
தென்மேற்கு | தென்மேற்கு teṉmēṟku, பெ. (n.) தெற்கைச் சார்ந்த மேற்றிசை; South-west. ம. தெக்கு படிஞ்ஞாறு [தென் + மேற்கு. மேன் – மேற்கு] |
தென்மேற்றிசைப்பாலன் | தென்மேற்றிசைப்பாலன் teṉmēṟṟisaippālaṉ, பெ. (n.) தென்மேற்குத் திசையின் தலைவன் (நிருதி); (பிங்.);; Niruti, regent of the south-west. [தென் + மேல் + திசை + பாலன்] |
தென்மொழி | தென்மொழி teṉmoḻi, பெ. (n.) 1. தென்னாட்டில் பேசப்படும் மொழி; South Indian language. 2. தமிழ்; Tamil, as the speech of the South. “வடமொழி தென்மொழி” (கம்பரா. பாயி.);. ம. தென்மொழி [தென் + மொழி. தென்குமரிக்கண்டத்தின் தோன்றிய தமிழ் மொது] தமிழ் என்பது தமிழை மட்டும் குறிக்குமென்றும் ‘திரவிடம்’ என்பது தமிழினின்று திரிந்த பிறமொழிகளையே குறிக்குமென்றும்; ‘தென்மொழி’ என்பது அவ்விரண்டையும் குறிக்குமென்றும் வேறு பாடறிந்து கொள்க. (தென்மொழி. ஆகத்து 1959); தமிழும் திரவிடமும் சேர்ந்தது தமிழியம். தமிழல்லாத தமிழின மொழிகளே திரவிடம். தமிழ் ஆரியத்துணை வேண்டாத இயன் மொழியென்றும், திரவிடம் அதை வேண்டும் திரிமொழியென்றும் வேறுபாடறிக. தமிழும் திரவிட மொழிகளிலுள்ள தமிழ்க் கூறும் சேர்ந்ததே தென்மொழி (வண்.மொ. வழு.1);. |
தென்றமிழ் | தென்றமிழ் teṉṟamiḻ, பெ. (n.) தமிழ்மொழி; Tamil, as the language of the south. “என்றுமுள தென்றமி ழியம்பியிசை கொண்டான்” (கம்பரா. அகத்திய.47);. [தென் + தமிழ்] |
தென்றற்றேரோன் | தென்றற்றேரோன் teṉṟaṟṟērōṉ, பெ. (n.) காமன் (பிங்.);; as having the south wind for his chariot. [தென்றல் + தேரோன்] காமவிருப்பை மிகுவிக்கும் தென்றலைத் தேராகக் கொண்டிருப்பதால் காமனுக்கு இப்பெயரமைந்தது. |
தென்றலை | தென்றலை teṉṟalai, பெ. (n.) தெற்கு; south. தென்றலையில் தேவநேயனார் வீடு (இ.வ.);. [தென் + தலை] |
தென்றல் | தென்றல் teṉṟal, பெ. (n.) 1. தென்காற்று; South wind, balmy breeze from the south. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” (சிலப். 2;24);. 2. கோடைத் தென்காற்று (இவ.);; South-West monsoon in June – September. தென்றல் முற்றிப் பெருங் காற்றாகும் (பழ.);. ம. தென்றல் [தென் → தென்றல்] |
தென்றல்வருமலை | தென்றல்வருமலை teṉṟalvarumalai, பெ. (n.) தென்மலை (பிங்.); பார்க்க;see__,(செஅக.);. [தென்றன் + வருமலை] |
தென்றி | தென்றி teṉṟi, பெ. (n.) 1. தெற்கு; south. “தென்றிக் கயிலையிலே” (காளத். உலா, 9);. 2. தென்றல் பார்க்க;see__, “தென்றியா யசைந்து” (கந்தபு. திருவவ.11);. [தென் – தென்றி] |
தென்றிசைக்கிழவன் | தென்றிசைக்கிழவன் teṉṟisaikkiḻvaṉ, பெ. (n.) தென்றிசைமுதல்வன் பார்க்க;__, [தென் + திசை + கிழவன்] |
தென்றிசைக்கோன் | தென்றிசைக்கோன் teṉṟisaikāṉ, பெ. (n.) தென்றிசைமுதல்வன் பார்க்க;__, [தென் + திசை + கோன்] |
தென்றிசைப்பாலன் | தென்றிசைப்பாலன் teṉṟisaippālaṉ, பெ. (n.) தென்றிசைமுதல்வன் பார்க்க;see__, [தென் + திசை + பாலன்] |
தென்றிசைமுதல்வன் | தென்றிசைமுதல்வன் deṉṟisaimudalvaṉ, பெ. (n.) தென்திசையின் தலைவனான கூற்றுவன் (திவா.);;__, as regent of the south ம. தென்னல்; க. தெம்பரல், தென்காலி, தம்பெலர்;தெ. தெம்மா (காற்று); மூழ்கிப்போன குமரிக்கண்டம் தென்றிசை யிலிருந்ததாலும் தென்புலத்தார் என்பது நீத்தாரைக் குறிப்பதாலும், தென் திசைக்கு உரிய தலைவனாக, கூற்றுவன் கருதப் பட்டான். [தென் + திசை + முதல்வன்] |
தென்றிசையங்கி | தென்றிசையங்கி teṉṟisaiyaṅgi, பெ. (n.) உயிர்களைக்கொன்று கடவுளுக்கு உணவளிக்கும் வேள்வித் தீ; one of the three sacred fires of vedic sacrifice. [தென் + திசை + அங்கி] |
தென்று-தல் | தென்று-தல் deṉṟudal, 5 செ.கு.வி. (v.i.) 1. சிதறுதல்; to be scattered, split to pieces. “ஆயிரந்தோளுந் திருச்சக்கரமதனாற் றென்றித் திசை திசைவீழ” (திவ்.பெரியாழ்.5,3,9);. 2. இனம்பிரிதல்; to stray away, as from a group. “தென்றியிருளிற் றிகைத்த கரி” (தேவா. 1156, 5);. ம. தென்னுக [தெறி → தெற்று → தென்று] |
தென்ற்ற்கோன் | தென்ற்ற்கோன் teṉṟṟāṉ, பெ. (n.) பாண்டியவரசன்; king as the lord of__, “தென்றற்கோன் செவிமடுத்தார்” (திருவிளை.மெய்க்கா.12);. [தென்றல் + கோன்] பொதிகை மலைக்கு அரசனாதலால் அங்கிருந்து வீசும் தென்றலுக்கும் அரசன் என்பதால் இப்பெயர் பெற்றான் |
தென்வரை | தென்வரை teṉvarai, பெ. (n.) தென்மலை பார்க்க;see “தென்வரைச் சாந்துமூழ்கி” (சீவக. 2081);. [தென் + வரை] |
தெப்பக்கட்டை | தெப்பக்கட்டை teppakkaṭṭai, பெ.(n.) மிதக்கப் பயன்படுத்தும் கட்டை, floating block of timber. மறுவ: மிதப்புக்கட்டை [தெப்பம்+கட்டை] தெப்பக்கட்டை teppakkaṭṭai, பெ. (n.) 1. வண்டியச்சுக்கோத்த மரம் (இ.வ.);; wooden shaft over the axle of a cart. 2. மிதவை; raft, logs of a raft 3. கிணற்றடியில் வைத்துக் கட்டும் மரச்சட்டம் (இ.வ);; protecting wooden frame at the bottom of a well. 4. ஏற்றமரத்தில் நீர்ச்சாலைக் கட்டவுதவும் மரக்கட்டை; wooden piece for attaching a bucket to a picotah [தெப்பம் + கட்டை] |
தெப்பக்குளம் | தெப்பக்குளம் teppakkuḷam, பெ.(n.) ஒரு வகையான பச்சைக்கோலம்; a kind of green ‘kolam’. [தெப்பம்+குளம்] தெப்பக்குளம் teppakkuḷam, பெ. (n.) தெப்பத் திருவிழா நடைபெறும் தடாகம்; tank atached to a temple in which the deity is floated on rafts during festival. “தெப்பக் குளங் கட்டித் தேர்மண்டபங் கட்டி” (குற்றா.குற 91,4); ம. தெப்பக்குளம் [தெப்பம் + குளம். தெப்பம் = மிதவை] |
தெப்பத்திருநாள் | தெப்பத்திருநாள் teppattirunāḷ, பெ. (n.) தெப்பத்திருவிழா பார்க்க;see__, [தெப்பம் + திரு + நாள்] |
தெப்பத்திருவிழா | தெப்பத்திருவிழா teppattiruviḻā, பெ. (n.) தடாகத் திற்கோயிற்றிருமேனியைத் திருக்குளத்தின் மீது எழுந்தருளப் பண்ணிக் கொண்டாடும் திருவிழா; floating festival in which a deity of a temple is taken on rafts in a tank. [தெப்பம் + திருவிழா] |
தெப்பமரம் | தெப்பமரம் teppamaram, பெ. (n.) நுணா என்னுங் கொடி; small ach root (சாஅக.);. |
தெப்பம் | தெப்பம்1 teppam, பெ. (n.) மிதவை (திவா.);; raft, float. ம. தெப்பம்; க., து., பட, தெப்ப; தெ. தேப, தெப்ப; Mar.__,Pkt. tappa;Skt. tarpa, talpa. தெப்பம்2 tappam. பெ.(n.) தணக்கு பார்க்க;see__,(சாஅக.);. தெப்பம் teppam, பெ. (n.) உப்பளத்தில் நீர் இறைக்கப்படும் முதல் பாத்தி: firstsalt-pan. [தெப்பு-தெப்பம்] |
தெப்பலகரு | தெப்பலகரு teppala-karu, பெ. (n.) வெள்ளைக் கருக்கட்டை; a white species eagle wood. (சாஅக.);. |
தெப்பலங்கெட்டவன் | தெப்பலங்கெட்டவன் teppalaṅgeṭṭavaṉ, பெ. (n.) உடல்நலிந்தோன்( இ.வ.);; weak-bodied person. [துப்பு + பலம் + கெட்டவன். துப்பலங் கெட்டவன் → தெப்பலங்கெட்டவன்] |
தெப்பல் | தெப்பல் teppal, பெ. (n.) தெப்பம்1 பார்க்க;see teppam’ [தெப்பம் → தெப்பல்] |
தெப்பெடுத்தல் | தெப்பெடுத்தல் teppeḍuttal, தொ.பெ. (vbl.n.) “தத்தெடுத்தல்’ என்பதனைக் குறிக்கும் கதைப்பாடல் சொல்; a word used infolklore. [தெப்பு+எடுத்தல்] |
தெப்பை | தெப்பை teppai, பெ. (n.) தெப்பம் பார்க்க;see teppam. [தெப்பம்1 → தெப்பை] |
தெம்பல் | தெம்பல் tembal, பெ. (n.) மழையால் வயல் இறுகுகை; hardening of ploughed land after heavy rain. |
தெம்பாங்கு | தெம்பாங்கு tembāṅgu, பெ.(n.) 1. ஒருவகைச் சந்தனம் (சங்அக.);; a kind of sandal paste. 2. தெம்மாங்கு பார்க்க;see__, [தென்+ பாங்கு → தென்பாங்கு → தெம்பாங்கு] |
தெம்பு | தெம்பு tempu, பெ. (n.) 1. உடல் வலிமை; physical strength. தெம்பு கெட்ட பயலிடம் தும்பைக் கொடுக்காதே (பழ.);. 2. துணிபு; daring, bravery. “தெம்பை நானெற்று காண்பேனோ” (இராமநா. உயுத் 81);. தெம்பிருந்தால் மோதிப்பார் (உ.வ.);. 3. செருக்கு (அகங்காரம்);; arrogance, pride. “சொம்புத் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர்” (திருப்பு. 609);. 4. சுறுசுறுப்பு; energy, enthusiasm. “அந்த வேலையைச் செய்ய எனக்குத் தெம்பாயிருக்கிறது”. [எம்பு → தெம்பு] |
தெம்புறம் | தெம்புறம் tempuram, பெ. (n.) தென்புறம் பார்க்க;see ten-puram (சாஅக.); [தென் + புறம் = தென்புறம் → தெம்புறம் (கொ.வ.);] |
தெம்மாங்கு | தெம்மாங்கு temmāṅgu, பெ.(n.) நாட்டுப்புறப்பாடல் வகைகளுள் ஒன்று; a kind of folklore. [தெம்+பாங்கு] தெம்மாங்கு temmāṅgu, பெ. (n.) தென்னாட்டில் நாட்டுப்புறத்தார் பாடும் இசைப் பாட்டுவகை (கொ.வ.);; a kind of ditty peculiar to the rustics of Southern India. [தென்பங்கு → தெம்மாங்கு] |
தெம்மாடி | தெம்மாடி temmāṭi, பெ.(n.) கோழை, அறிவில் லாதவன்; coward. (நெவ.வ.சொ.);. [தன்பாடு-தம்பாடு-தெம்மாடு-தெம்மாடி] தெம்மாடி temmāṭi, பெ. (n.) ஒன்றுக்கு முதவாதவன் (உ.வ.);; senceless person, fool,incompetent person, “தெம்மாடித்தனமா இருக்காதே” (மதுரை.); ம. தெம்மாடி;தெ. திம்மரி, திம்மடு |
தெம்மாண்டி | தெம்மாண்டி temmāṇṭi, பெ. (n.) தெம்மாடி பார்க்க;see__, [தெம்மாடி→ தெம்மாண்டி] |
தெம்முனை | தெம்முனை tem-munai, பெ.(n.) போர்க்களம்; the front line of battle;battle field. “தொலையாக் கற்பநின் றெம்முனை யானே” (பதிற்றுப். 82,17);. [தெவ் + முனை. தெவ் = பகை. தென்+ முனை – தெவ்முனை → தெம்முனை] |
தெம்மேலு | தெம்மேலு temmēlu, பெ. (n.) தென்மேற்கு (மீனவ.);; south west. [தென் → தெம் மேல். மேல் → மேலு] தெய்’ tey, பெ.(n.); கொலை (பிங்.);; killing [தேய் →தெய்] |
தெயிலுப்பு | தெயிலுப்பு teyiluppu, பெ. (n.) தெல்லுப்பு பார்க்க;see telluppu (சாஅக.);. |
தெய் | தெய்2 tey, பெ. (n.) தெய்வம் (பிங்.);. the deity. [தேம் → தெய்] |
தெய்தெய் | தெய்தெய் tey-tey, பெ. (n.) தாளக் குறிப்பு; Set syllables used for marking time in singing and dancing [தைதை → தெய்தெய்] |
தெய்தெய்யெனல் | தெய்தெய்யெனல் tcy-tcy-y-enal, பெ.(n.) 1. சினத்தால் ஆடுதற் குறிப்பு (கொ.வ.);; expr. of dancing in rage. தெய்தெய்யென்று குதிக்கிறான். 2. மாடுகளைச் செலுத்தும் ஒலிக்குறிப்பு; onom. expr. of driving bullocks (செஅக.);. [தெய் + தெய் + எனல்] |
தெய்ய | தெய்ய teyya, பெ.(n.) தெய்யோ பார்க்க;see__, “சொல்லினித் தெய்ய யாந்தெயு மாறே” (அகநா. 220);. |
தெய்யார் | தெய்யார் teyyār, பெ.(n.) வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Wandiwash Taluk. [தெய்+ஊர்-தெய்பூர்-தெய்யா] |
தெய்யோ | தெய்யோ teyyō, பெ. (n.) ஒர் அசைநிலை; poetic expletive. “வாரா யாயின் வாழேந் தெய்யோ” (ஜங்குறு.239);. [தெய் → தெய்யோ] |
தெய்வ ஆவி | தெய்வ ஆவி teyvaāvi, பெ.(n.) தூய ஆவி; holy spirit. [தெய்வம் + ஆவி] |
தெய்வஏனம் | தெய்வஏனம் teyvaēṉam, பெ. (n.) அருட்டன்மையுடைய ஏனம்; divine vessel or bowl, believed to become full with food whenever needed. [தெய்வம் + ஏனம்] |
தெய்வக்கட்டாடி | தெய்வக்கட்டாடி teyvakkaṭṭāṭi, பெ. (n.) தெய்வங்கொண்டாடி பார்க்க;see__, [தெய்வம் + கட்டாடி] |
தெய்வக்கணம் | தெய்வக்கணம் teyvakkaṇam, பெ. (n.) தேவக் குட்டம்; celestial host. “மன்பெருந் தெய்வ கணங்களி னுள்ளேன்” மணிமே. 21;120). 2. தேவக்கணம் பார்க்க;see__, [தெய்வம் + கணம்] |
தெய்வக்கண்ணோர் | தெய்வக்கண்ணோர் teyvakkaṇṇōr, பெ. (n.) மெய்யறிவுடையவர்; persons having perfect spiritual knowledge. “ஓரணுத்கண்ணோ ருணர்குவர்” (மணிமே. 27;146);. [தெய்வம் + கண்ணோர்] |
தெய்வக்கம்மியன் | தெய்வக்கம்மியன் teyva-k-kammiyan பெ. (n.) தேவத்தச்சன்; celestial architect. “முமுவதும் வல்ல தெய்வக்கம்மியர் தம்மால்” (திருவாலவா. 26,11);. ம. தெய்வக்கம்மியன் [தெய்வம் + கம்மியன்] |
தெய்வக்கரி | தெய்வக்கரி teyva-k-kari, பெ.(n.) இறையைச் சான்றாய்க் கொள்ளுகை; God as witness. [தெய்வம்+ கரி. கரி பார்க்க] |
தெய்வக்கற்பனை | தெய்வக்கற்பனை teyvakkaṟpaṉai, பெ. (n.) தெய்வக் கட்டளை; divine order or injunction, especially as uttered by an oracle. 2. விதி (உ.வ.);; fate. [தெய்வம் + கற்பனை] |
தெய்வக்கலா | தெய்வக்கலா teyvakkalā, பெ. (n.) அரிசந்தனம்; red sandal wood (சாஅக.);. |
தெய்வக்கல் | தெய்வக்கல் teyva-k-kal. பெ. (n.) தெய்வவுரு அமைத்தற்குரிய சிலை; stone used for making idols. “இமைய மால்வரைத் தெய்வக் கல்லும்” (மணிமே.26;89);. [தெய்வம் + கல்] |
தெய்வக்களை | தெய்வக்களை teyvakkaḷai, பெ.(n.) தெய்வீக ஒளிவீசும் அழகு (சோபை);; devine radiance, as of the countenances of saints. [தெய்வம் + களை] |
தெய்வக்காப்பு | தெய்வக்காப்பு teyvakkāppu, பெ. (n.) பாட்டுடைத் தலைவனைத் தெய்வங் காக்க வென்று கூறும் பிள்ளைத்தமிழ்ப் பகுதி (திவா.);; a section in pillai-t-tamil in which gods are invoked to protect the hero of the poem. [தெய்வம் + காப்பு] |
தெய்வக்கிளவி | தெய்வக்கிளவி teyvakkiḷavi, பெ. (n.) 1. தெய்வீகப் பேச்சு; divine speech. “திப்பிய முரைக்குந் தெய்வக் கிளவியின் (மணிமே. 7;97);. 2. வடமொழி; Sanskrit, as the language of the gods. “தெய்வக் கிளவியிற் றெய்வங் கூறும்” (மணிமே. 21;46); (செஅக.);. [தெய்வம் + கிளவி] உலக வழக்கற்றதும் அரைச்செயற்கைக் கலவை மொழியுமான வட மொழியைத் தெய்வக் கிளவி என செ.அ.க. குறித்திருப்பது ஆரியக் குறும்பு. |
தெய்வக்குஞ்சரி | தெய்வக்குஞ்சரி teyvakkuñjari, பெ.(n.) தெய்வயானை பார்க்க;see__, [தெய்வம் + குஞ்சரி] |
தெய்வக்குறை | தெய்வக்குறை teyvakkuṟai, பெ. (n.) தெய்வக் குற்றம் பார்க்க;see teyva-k-kurram [தெய்வம்+ குறை] |
தெய்வக்குற்றம் | தெய்வக்குற்றம் teyvakkuṟṟam, பெ. (n.) நேர்த்திக் கடனை நிறைவேற்றாமையால் அல்லது வழிபாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமையால் தெய்வங்கட்குண்டாகுஞ் சினம் (உ.வ.); divine displeasure as due to nonperformance of enjoined rites. [தெய்வம் + குற்றம்] |
தெய்வங்கொண்டாடி | தெய்வங்கொண்டாடி teyvaṅgoṇṭāṭi, பெ. (n.) தெய்வம் பேய் முதலியவற்றால் உணர்வேற்றப் பாட்டு ஆடுபவர் (நாஞ்.);; a person possessed by a deity, evil spirit etc. [தெய்வம் + கொண்டு + ஆடி] |
தெய்வங்கொள்கை | தெய்வங்கொள்கை teyvaṅgoḷkai, பெ. (n.) கடவுள் உண்டென்னுங் கொள்கை; theistic belief. “குலனரு டெய்வங் கொள்கை” (நன்பாயி.26);. [தெய்வம் + கொள்கை] |
தெய்வச்சகாயம் | தெய்வச்சகாயம் teyvaccakāyam, பெ.(n.) தெய்வத்துணை பார்க்க;see__, [தெய்வம் + சகாயம்] |
தெய்வச்சங்கற்பம் | தெய்வச்சங்கற்பம் teyvaccaṅgaṟpam, பெ. (n.) நேர்ந்துகொள்(ளு);-தல் பார்க்க;see__, |
தெய்வச்சாட்சி | தெய்வச்சாட்சி teyvaccāṭci, பெ. (n.) தெய்வக்கரி பார்க்க;see teyva-k-kari. [தெய்வம் + சாட்சி] |
தெய்வச்சாட்சியாய | தெய்வச்சாட்சியாய teyvaccāṭciyāya, பெ.எ. (adv.) உறுதி கூறும்போது வழங்குவதும் கடவுள் சாட்சியாக என்று பொருள்படுவதுமாகிய தொடர்; a term of swearing, meaning before God, with God to witness, [தெய்வம் + சாட்சியாய்] |
தெய்வச்சாயல் | தெய்வச்சாயல் teyvaccāyal, பெ. (n.) தெய்வக்களை பார்க்க;see__, [தெய்வம் + சாயல்] |
தெய்வச்சித்தம் | தெய்வச்சித்தம் teyva-c-cittam, பெ. (n.) நேர்ந்துகொள்(ளு);-தல் பார்க்க;see__, [தெய்வம் + சித்தம்] |
தெய்வச்சிந்தனை | தெய்வச்சிந்தனை teyva-c-cindanai. பெ. (n.) இறையூழ்கம்; divine meditation, contemplation of the deity. [தெய்வம் + சித்தனை] |
தெய்வச்சிலையான் | தெய்வச்சிலையான் teyvaccilaiyāṉ, பெ. (n.) திருப்புல்லாணியிற் கோயில் கொண்டுள்ள திருமால் as worshipped at “தெய்வச் சிலையாற் கென் சிந்தைநோய் செப்புமினே” (திவ். பெரியதி 2 ,4, 3);. |
தெய்வச்சிலையார் | தெய்வச்சிலையார் teyvaccilaiyār, பெ. (n.) தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியவர்களுள் ஒருவர்; a commentator on__,of |
தெய்வச்சுரபி | தெய்வச்சுரபி teyva-c-curabi, பெ. (n.) காமதேனு (சங்.அக); celestial cow. [தெய்வம் + சுரபி] |
தெய்வச்செயல் | தெய்வச்செயல் reyva-c-ceyal, பெ.(n.) 1. தெய்வத்தின் செய்கை; providential occurrence, act of God. “துரந்தான் றெய்வச் செயலன்ன கணையை” (கம்பரா அதிகாய. 194);. 2. தற்செயல்; chance. தெய்வச்செயல் இருந்தால் செத்தவனும் எழும்புவான் (பழ.);. [தெய்வம் + செயல்] |
தெய்வச்சோதனை | தெய்வச்சோதனை teyvaccōtaṉai, பெ. (n.) கடவுளின் நோட்டம்; trial of a person by God, subjecting him to suffering or hard treatment (செஅக);. [தெய்வம் + சோதனை] [Skt.__,→ தா. சோதனை] |
தெய்வஞானம் | தெய்வஞானம் teyvañāṉam, பெ. (n.) தெய்வத்தைப் பற்றிய அறிவு; spiritual knowledge. “தெய்வ ஞானத் திறப்படக் காட்டி” (பெருங். இவரவாண.11,134); [தெய்வம் + ஞானம் → த.ஞானம் ] |
தெய்வஞ்செப்பு-தல் | தெய்வஞ்செப்பு-தல் deyvañjeppudal, 7 செ.குவி. (v.i.) துணைவேண்டிக் கடவுளை வழிபடுதல்; to invoke the aid of the God. “பகை பெருமையிற் றெய்வஞ் செப்ப” (பதிற்றுப்.82,1);. [தெய்வம் + செப்பு] |
தெய்வதம் | தெய்வதம் teyvadam, பெ. (n.) 1. தெய்வம்; deity, divinity. ” ஆங்கத் தெய்வதம் வாராதோ வென” (மணிமே.9;70); 2. ஆண்டு (பிங்);; year. |
தெய்வதயானை | தெய்வதயானை deyvadayāṉai, பெ. (n.) தெய்வயானை பார்க்க;see__, “தெய்வதயானை கேள்” (கத்தபு. தெம்வயா.171);. [தெய்வம்+ யானை] |
தெய்வதை | தெய்வதை teyadai, பெ. (n.) தேவதை பார்க்க;see__, “திருவாக்குத் தெய்வதையும்… தேற்ற வழிபாடு செய்வதே” (சிறுபஞ் 43);. |
தெய்வத்தச்சன் | தெய்வத்தச்சன் terva-t-taccan. பெ. (n.) தெய்வக்கம்மியன்; the celestical architect. “தெய்வத்தச்சனைப் புகழ்துமோ” (கம்பரா. ஊர்தேடு.18);. [தெய்வம்+ தச்சன்] |
தெய்வத்தன்மை | தெய்வத்தன்மை teyvattaṉmai, பெ. (n.) கடவுளின் இயல்பு; divine nature, godliness. [தெய்வம் + தன்மை] |
தெய்வத்தரு | தெய்வத்தரு teyva-t-taru. பெ. (n.) 1. வானுலக மரம்; celestial tree. “தெய்வத்தரு வளரும் பொழிற்புறவம்” (தேவா. 145, 2);. 2. தேவதாரு பார்க்க;see [தெய்வம் + தரு] |
தெய்வத்தலம் | தெய்வத்தலம் teyva-t-talam, பெ. (n.) கோயில் (இ.வ.);; temple. [தெய்வம் + தலம்] |
தெய்வத்தானம் | தெய்வத்தானம் teyvattāṉam, பெ. (n.) கோயில்; temple. “தெய்வத் தானமோ டவ்வழி யொழிய” (பெருங் உஞ்சைக். 43,177);. [தெய்வம் + தானம்] |
தெய்வத்தீர்வை | தெய்வத்தீர்வை teyvattīrvai, பெ. (n.) தெய்வத்தின் தீர்ப்பு (யாழ்.அக.);; divine judgment [தெய்வம் + தீர்வை] |
தெய்வத்துணை | தெய்வத்துணை teyvattuṇai, பெ. (n.) கடவுளின் துணை; God’s help [தெய்வம் + துணை] |
தெய்வத்துந்துமி | தெய்வத்துந்துமி teyva-t-tundumi, பெ. (n.) தேவலோக முரசு; cclestial drum. “சங்குந் தெய்வ துந்துமியுந் தழங்க” (பிரபுலிங். விமலை. 32);. |
தெய்வத்துவனி | தெய்வத்துவனி teyva-t-tuvani, பெ. (n.) shouts of praise to Arhat by the celestials. “சுடர்மண்டலஞ் சுரதுந்துபி தெய்வத்துவனி” ( திருநாற் 80); [தெய்வம்+ துவனி. துல் → தொல் → தொனி → துவனி = ஒசை, ஒலி இசை முழக்கம்] |
தெய்வத்துவம் | தெய்வத்துவம் tayva-t-tuvam, பெ. (n.) கடவுட்டன்மை (யாழ்அக.);; godhood, godliness. |
தெய்வத்தை வருத்து-தல் | தெய்வத்தை வருத்து-தல் deyvaddaivaruddudal, செ.கு.வி. (v.i.) வில்லுப்பாட்டின் தொடக்கத்தில், தெய்வத்தை அழைத்தல்; to invoke deities in folklore villuppattufor open as a opening Song. [தெய்வம்+அத்து+ஐ+வருத்து] |
தெய்வநதி | தெய்வநதி teyva-hadi,. பெ. (n.) கங்கை (பிங்.);; the Ganges, as the sacred river. [தெய்வம் + நதி] |
தெய்வநானம் | தெய்வநானம் teyvanāṉam, பெ. (n.) walking seven steps in an easterly direction in the rain while the sun shines. [தெய்வம் + தானம்] |
தெய்வநிந்தை | தெய்வநிந்தை teyva-nindai, பெ. (n.) கடவுளைப் பழிக்கை; humilate God’s grace. ம. தைவநிந்த [தெய்வம் + நித்தை] |
தெய்வநியமம் | தெய்வநியமம் teyva-niyamam, பெ. (n.) 1. கடவுளாணை; divine decree, judgment of heaven. 2. தற்செயல்; providential occurrence (செஅக.); [தெய்வம் + நியமம்] |
தெய்வப் பிறவி | தெய்வப் பிறவி teyvappiṟavi, பெ.(n.) வில்லுப்பாட்டில் ஆண்,பெண் தெய்வங்களின் வரலாற்றைச் சொல்லும் முறை a method in villuppattu to narrate the history of male andfemale deities. [தெய்வம்+பிறவி] |
தெய்வப்பகை | தெய்வப்பகை teyva-p-pagai, பெ. (n.) குழந்தைகளை வருத்துகின்ற தீய கோள்கள்; the evil planet believed to affect babies. “செல்லும் மன்னோ சீவகன் றெய்வப் பகை வென்றே” (சீவக.364); [தெய்வம் + பகை] |
தெய்வப்பக்தி | தெய்வப்பக்தி teyva-pakti, பெ. (n.) தெய்வப்பத்தி பார்க்க;see teyva-p-patti. [தெய்வம் + பக்தி] த. பத்தி → Skt. bhakti |
தெய்வப்பசு | தெய்வப்பசு teyvappasu, பெ. (n.) காமதேனு (பிங்.);; celestial cow. [தெய்வம் + பக] Skt. pasu → த. பசு |
தெய்வப்படை | தெய்வப்படை teyvappaḍai, பெ. (n.) தெய்வப் படைக்கலம் (திவ்விய அஸ்திரம்);; divine weapon. “தெய்வப் படையும் சினமுந் திறனும்” (கம்பரா. அதிகாயன்.55);. [தெய்வம் + படை] |
தெய்வப்பத்தி | தெய்வப்பத்தி teyva-p-patti, பெ. (n.) கடவுளிடம் பத்திமை; devotion of god, அத்திக்காய், கோரைக்காய், தேத்தன்காய், ஐவிரலிக்காய், வெள்ளைக் கத்திரிக்காய், சோற்றுக்காந்தல் கற்றாழை ஆகியவற்றைப் புசிப்பவர்களுக்குத் தெய்வபக்தி கிடையாது (சாஅக.);. [தெய்வம் + பத்தி] |
தெய்வப்பயம் | தெய்வப்பயம் teyva-p-payam, பெ. (n.) தெய்வவச்சம் பார்க்க;see teyva-vaccam. [தெய்வம் + பயம்] Skt. bhaya → த. பயம் |
தெய்வப்பலகை | தெய்வப்பலகை teyva-p-palagai, பெ. (n.) தகுதியுள்ள புலவர்கட்கு மட்டும் இடங் கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரானாற் கழகத்தார்க்கு அருளப்பெற்ற பலகை; the miraculous seat of sangam poets. “வாங்கருந் தெய்வப் பலகையைச் சங்க மண்ட பத்திடை நடுவிட்டு” (திருவாலவா.15,4);. , [தெய்வம்+ பலகை] |
தெய்வப்பாடல் | தெய்வப்பாடல் teyvappāṭal, பெ. (n.) 1. தேவர் பாடும் பாடல்; songs of the gods. 2. தெய்வத்தைப் பற்றிய பாடல்; Songs in praise of the gods, as at the opening of a dance. “நன்மையுண்டாகவும் தீமைநீங்கவும் வேண்டித் தெய்வப் பாடல்… பாட” (சிலப்.3;135, உரை); 3. அருட்பாடல்; inspired song or hymn. [தெய்வம் + பாடல்] |
தெய்வப்பாத்திரம் | தெய்வப்பாத்திரம் teyvappāttiram, பெ. (n.) தெய்வஏனம் பார்க்க;see__, “தெய்வப் பாத்திரஞ் செவ்விதின் வாங்கி” (மணிமே.21;151);. [தெய்வம் + பாத்திரம்] |
தெய்வப்பாவை | தெய்வப்பாவை teyvappāvai, பெ. (n.) கொல்லி மலையில் தேவரால் நிறுவப்பட்ட நோக்குவோரைத் தன்வயப்படுத்தும் தெய்வப் படிமை; a woman – shaped statue in the Kolli mount, believed to have been made by demons. “சிலைத் தொழிற் சிறுநுதற் றெய்வப் பாவைபோல்” (சீவக.687);. [தெய்வம் + பாவை] |
தெய்வப்பிரமம் | தெய்வப்பிரமம் teyva-p-piramam, பெ. (n.) தெய்வத்தன்மையுடைய நான்முகன் (பிரம); வீணை; the divine lute of__, “தெய்வப் பிரமஞ் செய்குவோரும்” (பரிபா. 19, 40);. |
தெய்வப்பிறப்பு | தெய்வப்பிறப்பு teyva-p-pirappu, பெ. (n.) தெய்வப்பிறவி பார்க்க;see teyva-p-piav.i [தெய்வம் + பிறப்பு] |
தெய்வப்பிறவி | தெய்வப்பிறவி teyva-p-pirawi, பெ. (n.) இறைகூறு கொண்ட பிறப்பு; godly being [தெய்வம் + பிறவி] |
தெய்வப்புணர்ச்சி | தெய்வப்புணர்ச்சி teyvappuṇarcci, பெ. (n.) தலைவனும் தலைவியும் இயல்பினாற் கூடும் முதற்கூட்டம்; union of lovers brought about by destiny. “தெய்வப் புணர்ச்சி செம்ம றுணிந்தது” (திருக்கோ. 7, கொளு.);. மறுவ. இயற்கைப் புணர்ச்சி [தெய்வம் + புணர்ச்சி] |
தெய்வப்புலமை | தெய்வப்புலமை teyva-p-pulamai, பெ. (n.) இறைத்தன்மை வாய்ந்த புலமை; poctic gift, as divinely inspired. “தெய்வப் புலமை யருந்திறல் வள்ளுவன்” (குறள், சிறப்புப் பாயிரம்);. [தெய்வம் + புலமை] |
தெய்வப்புலவன் | தெய்வப்புலவன் teyva-p-pulavan. பெ. (n.) 1. இறைத்தன்மை வாய்ந்த கவிஞன்; gifted poet, as divinely inspired. தெய்வப் புலவனுக்கு நா உணரும், சித்திர ஓடாவிக்குக் கை உணரும் (பழ.);. 2. திருவள்ளுவர்; Thiruvalluvar. தெய்வப் புலவன் திருவள்ளுவனுரைத்த மெய் வைத்த சொல் லொன்றும் மேவாமே. (நெஞ்சுவிடு தூது);. [தெய்வப் புலமை → தெய்வப் புலவர்] |
தெய்வப்புள் | தெய்வப்புள் teyvappuḷ, பெ. (n.) கருடன்; garuda, as the celestial bird. ” தெய்வப் புள்ளோறி வருவான் சித்திர கூடத்துள்ளானே” (திவ். பெரியதி. 3,3,6);. [தெய்வம் + புள்] |
தெய்வப்பெண் | தெய்வப்பெண் teyvappeṇ, பெ. (n.) தேவ நங்கை (திவா.);; celestial nymph. “தெய்வப் பெண் ணேத்திசைப்ப” (திருவாச. 19,6);. [தெய்வம் + பெண்] |
தெய்வப்பெண்டிர் | தெய்வப்பெண்டிர் teyvappeṇṭir, பெ.(n.) தெய்வ நங்கை (திவா.);; celestial nymph. “சிறுகாஞ்சொறி நன்னாரி தெய்வப் பெண்டீருடனாக” (சாஅக.);. [தெய்வம் + பெண்டிர்] |
தெய்வப்பெயர்த்தொகுதி | தெய்வப்பெயர்த்தொகுதி teyva-p-peyar-t-togudi, பெ. (n.) அகராதியில் ஒரு பகுதி; a part of dictionary. [தெய்வப்பெயர் + தொகுதி] |
தெய்வமணம் | தெய்வமணம் teyvamaṇam, பெ. (n.) 1. இறை மணம்; divine fragrance. 2. தெய்வப் புணர்ச்சி பார்க்க;see__, 3. வேள்வி செய்வோன் வேட்பிக்கின்றாருள் ஒருவற்குத் தன் பெண்ணைத் தீ முன்னர்க் காணிக்கையாகக் கொடுப்பது; a form of marriage in which the sacrificer gives away his daughter to an officiating priest before the sacrificial fire, as the latter’s fee. “தெய்வ மணத்தார் திறம்” (தொல். பொருள். 92, உரை);. [தெய்வம் + மணம்] |
தெய்வமணி | தெய்வமணி teyvamaṇi, பெ. (n.) 1.சிந்தாமணி (பிங்.);; celestial wishing gem. 2. பொன்னாக்கி (பரிசவேதி);; philosopher’s stone. “தீண்டளவில் வேதிகை செய் தெய்வமணி கொல்லோ” (கம்பரா. உருக்காட்டு 68.); 3. குதிரைக்கழுத்திலுள்ள நற்சுழி (அகவசா. 14);; auspicious curl on a horse’s neck. 4. நற்சுழியுள்ள குதிரைவகை; horse with a lucky curl. “கமுத்தில் வலஞ் சுழித்திருந்தால். தெய்வமணியென விசைப்பர்” (திருவினை.நரிபரி.111);. [தெய்வம் + மணி] |
தெய்வமந்திரி | தெய்வமந்திரி teyva-mandiri, பெ.. (n.) தெய்வவமைச்சன் பார்க்க;see__, [தெய்வம் + மத்திரி] |
தெய்வமயக்கம் | தெய்வமயக்கம் teyva-mayakkam, பெ. (n.) தெய்வமேறிய மருள் நிலை; inspiration of obsession by a spirit. “தெய்வமயக்கத்தாற் கூறினாள்” (சிலப்.12;51, உரை] [தெய்வம் + மயக்கம்] |
தெய்வமயக்கு | தெய்வமயக்கு teyva-mayakku, பெ. (n.) தெய்வத்தாலேற்பட்ட மன மயக்கம்; trance induced by a deity. “ஆங்குநிற் கொணந்த வருந்தெய்வ மயக்கம்” (மணிமே.21;109);. [தெய்வம் + மயக்கு] |
தெய்வமரம் | தெய்வமரம் teyva-maram, பெ. (n.) விண்ணுலக மரம்; celestial tree. [தெய்வம் + மரம்] |
தெய்வமாடம் | தெய்வமாடம் teyvamāṭam, பெ. (n.) தெய்வத்தானம் பார்க்க;see__, “தெய்வ மாடமுந் தேர்நிலைக் கொட்டிலும்” (பெருங். இலாவாண.7,143); [தெய்வம் + மாடம்] |
தெய்வமாடு-தல் | தெய்வமாடு-தல் deyvamāṭudal, 5 செ.குவி. (v.i.) தெய்வத்தன்மையுறுதல் (கொ.வ.);; to be possessed or inspired by a spirit [தெய்வம் + ஆடு-.] |
தெய்வமானுடம் | தெய்வமானுடம் teyvamāṉuḍam, பெ. (n.) தெய்வத்தன்மை பொருந்திய மாந்த நிலை; semi-divine nature. “யான் அவளைத் தெய்வமானுட மென்றறிந்து” (திருக்கோ. 251. உரை);. [தெய்வம் + மானுடம்] |
தெய்வமுனி | தெய்வமுனி teyva-muni, பெ. (n.) நாரதர் போன்ற தேவ முனி; celestialsage as__, [தெய்வம் + முனி] |
தெய்வமுறு-தல் | தெய்வமுறு-தல் deyvamuṟudal, 20 செ.கு.வி. (v.i.) 1. தெய்வ உணர்வு மேலிடல்; to become possessed by a spirit. “சாலினி தெய்வமுற்று” (சிலப்.12;8);. 2. தெய்வத்தன்மையுறுதல் (சிவப். 19;26.அரும்.);; to gain godhood. [தெய்வம் + உறு-.] |
தெய்வமுறுதல் | தெய்வமுறுதல் deyvamuṟudal, தொ.பெ.(vbl.n) வில்லுப்பாட்டின் ஒரு கூறு a part of villu-ppāțțuinfolklore [தெய்வம்+உறுதல்] |
தெய்வமேறி ஆடல் | தெய்வமேறி ஆடல் teyvamēṟiāṭal, பெ.(n.) தன்னுள் தெய்வமேறிய நிலையில் ஒருவன் ஆடுகின்ற ஆடல்; dancing of a person possessed by a diety. [தெய்வம்+ஏறி+ஆடல்] |
தெய்வமேறு-தல் | தெய்வமேறு-தல் deyvamēṟudal, 5 செ.கு.வி. (v.i.) தெய்வ உணர்வு மேலுறுதல்; to be possessed by a spirit [தெய்வம் ஏறு-.] |
தெய்வம் | தெய்வம் teyvam, பெ. (n.) 1. கடவுள் ( சூடா);; God, deity. “தெய்வ முணாவே” ( தொல். பொருள். 18);. 2. தெய்வத்தன்மை; divine nature. “தெய்வமே கமழு மேனி” (சீவக.1718);. 3. தெய்வத் தன்மையுள்ளது; that which is divine. “தெய்வத்தாற் கூறாயோ’ (திணைமாலை.90); 4. ஊழ்; fate, destiny. “தெய்வத்தா லாகா தெனினும்” (குறன், 619);. 5. தெய்வமணம் பார்க்க;see__, 6. தெய்வாதனம் பார்க்க;see__, “குஞ்சித வராகத் தெய்வம்” (தத்துவப்.108);. 7. ஆண்டு (தைலவ. தைல; year. 8. மனம் (பல்பொருட் சூளா);; fragrance. 9. புதுமை (பல்பொருட் சூளா.);; newness, ம. தெய்வம், தேவன், தைவம், தெய்யம்; க. தேவ[தோய் → தேய்.தேய்தல் = உரசுதல். தேய்த்தல் (பி.வி);தேய் → தேய்வை= உரசும் சந்தனக் கட்டைதேய் → தே → தீ = நெருப்பு.தேய் → தேயு (வ.);தீயானது முதற்காலத்தில் தெய்வமாக வணங்கப்பட்டதினால் தீயின் பெயரினின்று தெய்வத்தைக் குறிக்கும் பெயர்கள் திரிந்தன. கள் → கர் → சுரம் → கரன் = தேவன் தேய் → தே = தெய்வம், தலைவன். தே → தேவு → தேவன். தேய் → (தெய்); → தெவ்வு → தெய்வம் (முதா. 205);] இனி,இருளும்பெறுக்கொணாததுன்பமாகி,தீயகம் என்னும் எரிநரகிற்கு இருளுலகம் என்றொரு பெயரும் ஏற்பட்டிருப்பதால், கதிரவ வடிவிற் பகலிருளையும் விளக்கு வடிவில் இரவிருளையும் போக்கும் தீயும் கண்ணிற்கு இன்றியமையாத ஒளியைத் தருவதுடன், உடம்பிற்கும் உணவிற்கும் வேண்டிய வெம்மையையும் உதவுகின்றது பற்றி, தெய்வம் எனப் போற்றத்தக்க பூதமுந் தீயேயாகி, தெய்வம் என்னும் பெயரும் தீயின் பெயரின்றே தோன்றியுள்ளது (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 53. பக். 164);. |
தெய்வயாகம் | தெய்வயாகம் teyvayākam, பெ.(n.) தெய்வவேள்வி பார்க்க;see__, [தெய்வம் + யாகம்] |
தெய்வயானை | தெய்வயானை teyvayāṉai, பெ. (n.) 1. இந்திரனின் யானை; தேவயானை; Indira’s elephant. 2. குமரக்கடவுள் தேவியருள் ஒருத்தி (பிங்.);; a wife of Lord Murugan. “குமரற் சிந்திரன் றருந் தெய்வயானையே” ( கத்தபு. தெய்வயா.52);. [தெய்வம்+ யானை] |
தெய்வயானைகாந்தன் | தெய்வயானைகாந்தன் teyvayāṉaikāndaṉ, பெ. (n.) முருகக்கடவுள் (சூடா);;__, as the Lord of __; [தெய்வம் + யானை + காந்தன்] |
தெய்வயானைதண்ணீர்வாங்கு-தல் | தெய்வயானைதண்ணீர்வாங்கு-தல் deyvayāṉaidaṇṇīrvāṅgudal, 11 செ.கு.வி. (v.і.) கிட்டதட்ட 1000 அடிப்பரப்புள்ள நீர் கொந்தளித்து அதில் சிக்கும் கலங்களுக்கு இடர் உண்டாகும் வகையில் வாடைக் காலத்தில் கடலின்மேல் குறிப்பிட்ட இடத்தில் கருத்த மேகங்கள் திரண்டு விழுதுகளைப் போலக் கோடு கோடாகத் தொடுதல்; to rain in a particular place on the surface of the sea with cluster of murkey sky, during winter season, which effects a tumultuous surface at about 1000 feet breadth and it goes to the level of causing damage to ships. |
தெய்வலோகம் | தெய்வலோகம் teyvalōkam, பெ. (n.) தெய்வவுலகம் பார்க்க;see teyva-v-ulagam. “தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே அவதரித்தது” (பு. வெ. 9.17. உரை);. [தெய்வம்+ லோகம்] த. உலகம் → த. லோகம் |
தெய்வவணக்கம் | தெய்வவணக்கம் teyvavaṇakkam, பெ. (n.) 1. கடவுளை வணங்குகை; worship of God. 2. நூன்முதலிற் கூறப்படும் கடவுள் வாழ்த்து; invocation of a deity at the beginning of a treatise. “தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளும்” (காரிகை. பாயி. 1. உரை);. [தெய்வம்+ வணக்கம்] |
தெய்வவமைச்சன் | தெய்வவமைச்சன் teyva-vamaiccan, பெ. (n.) தேவர்களுக்கு அமைச்சனான வியாழன்; Jupiter, as counsellor of the gods. [தெய்வம் + அமைச்சன்] |
தெய்வவவச்சம் | தெய்வவவச்சம் teyva-vaccam, பெ. (n.) கடவுளானைக்கு அஞ்சுகை; fear of God. [தெய்வம் + அச்சம்] |
தெய்வவாக்கு | தெய்வவாக்கு teyvavākku, பெ. (n.) 1. கடவுள் திருமொழி; word of God, divine utterance. 2. உருவிலிச் சொல் (அசரீரி);; voice or utterance of an invisible speaker. [தெய்வம்+ வாக்கு] |
தெய்வவாழ்த்து | தெய்வவாழ்த்து teyvavāḻttu, பெ. (n.) தெய்வவணக்கம் பார்க்க;see__, [தெய்வம் + வாழ்த்து] |
தெய்வவியப்பு | தெய்வவியப்பு teyva-viyappu, பெ. (n.) வியப்புகள் மூன்றனுள் ஒன்று (சிலப். 10;167, உரை);; pre-eminence resulting from divinity, one of three adisayam. [தெய்வம் + வியப்பு] |
தெய்வவீடு | தெய்வவீடு teyvavīṭu, பெ. (n.) வானூர்தி; celestial vehicle. “திக்குற நிளைப்பினிற் செல்லுந் தெய்வ வீடு” (கம்பரா. நகரப். 32);. [தெய்வம் + வீடு] |
தெய்வவுத்தி | தெய்வவுத்தி teyva-vutti. பெ. (n.) தலைக் கோலம்; woman’s head ornament. “தெய்வ வுத்தியோடு வலம்புரி வயின்வைத்து” (திருமுரு23);. [தெய்வம் + உத்தி] |
தெய்வவேள்வி | தெய்வவேள்வி teyvavēḷvi, பெ. (n.) வானுலகம்; the celestial world, heaven. [தெய்வம் + உலகம்] தெய்வவேள்வி teyvavēḷvi, பெ. (n.) தேவருக்காக ஒமம் வளர்த்துச் செய்யும் வேள்வி; sacrifice to deities. [தெய்வம் + வேள்வி] |
தெய்வாதனம் | தெய்வாதனம் teyvātaṉam, பெ. (n.) ஒரு கால் மடித்து ஒரு கால் ஊன்றியிருக்கும் இருக்கை வகை; a kind of yogic posture in which one leg is bent and the other leg is planted crect. |
தெய்வாதீனம் | தெய்வாதீனம் teyvātīṉam, பெ. (n.) 1. தெய்வச் செயல்; divine providence. 2. தற்செயல் (உ.வ.);; chance. |
தெய்வானை | தெய்வானை teyvāṉai, பெ. (n.) தெய்வயானை பார்க்க;see__, [தெய்வம் + யானை] |
தெய்வாவி | தெய்வாவி teyvāvi, பெ. (n.) holy ghost [தெய்வம் + ஆவி] |
தெய்விகம் | தெய்விகம் teyvigam, பெ.(n.) சிற்பங்களை அமைப்பதில் உள்ள அளவு முறை; a measurement in making a sculpture. [தெய்வம்-தெய்வீகம்] தெய்விகம் teyvigam, பெ. (n.) 1. கடவுள் தன்மையுள்ளது; that which is divine. 2. கடவுட்செயல்; divine act or injunction. 3. ஒன்பது பனை உயரமுள்ள ஒர் அளவு (சுக்கிர நீதி.232);; a lineal measure of nine talam. 4. தற்செயல்; chance. “சேனைக ளிளைப்பறத் தெய்விகந்தனில் வந்த” (பாரத. பதினான்காம்.68);, 5. மேன்மை; transcendence, magnificence, super-eminance. [தெய்வம் + இகம்] |
தெய்விகாதிசயம் | தெய்விகாதிசயம் teyvikātisayam, பெ. (n.) தெய்வவியப்பு பார்க்க;see teyva-viyappu. |
தெய்வீகமா-தல் | தெய்வீகமா-தல் teyvīkamātal, 7 செ.கு.வி. (v.i.) இறத்தல்; to die as attaining the divine state (திருப்பணி. மதுரைத்தல, 5); [தெய்வீகம் + ஆ-.] |
தெய்வீகம் | தெய்வீகம் teyvīkam, பெ. (n.) தெய்விகம் பார்க்க;see teyvigam. “தெய்வீகமாக நீர்தாமித் திசையில் வந்தது” (சிவரக. சிவடுண்டிவன.44); [தெய்விகம் → தெய்வீகம்] |
தெய்வீகவுலா | தெய்வீகவுலா teyvīkavulā, பெ. (n.) இரட்டையர் இயற்றிய ஏகாம்பரநாதர் உலா; a poem by__,in praise of Sivan at Kanjipuram. [தெய்வீகம் + உலா] |
தெய்வேந்திரி | தெய்வேந்திரி teyvēndiri, பெ.(n.) திருவில்லிப் புத்துர் வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in SrivilliputturTaluk. [தெய்வம்+(ஏந்தல்); ஏந்திலி-ஏந்திரி (கொ.வ.);] |
தெய்வை | தெய்வை teyvai, பெ. (n.) குழம்பு (அக.நி);; mixture of thick consistency. [தேய்வை → தெய்வை] |
தெய்வ்விசுவாசம் | தெய்வ்விசுவாசம் teyvvisuvāsam, பெ. (n.) 1. கடவுளிடம் நம்பிக்கை; faith in God. 2. நம்பும் மதம்; theistic belief. 3. கடவுளிடத்துக் காட்டுவதுபோற் காட்டும் நம்பிக்கை; reverence and faith, as in God. [தெய்வம் + விசுவாசம்] |
தெய்வ்விரதன் | தெய்வ்விரதன் deyvviradaṉ, பெ. (n.) சிறப்பு நோன்பு கொண்ட வீடுமன்; as one who took a divine vow. [தெய்வம் + விரதன்] |
தெரங்கண்ணி | தெரங்கண்ணி teraṅgaṇṇi, பெ.(n.) தூண்டில் முள்ளில் வைக்கப்படும் இறை bait. [திரள்+கண்ணி] |
தெரட்டை | தெரட்டை teraṭṭai, பெ.(n.) வெளவால் மீன் ; batfish. [தெரள்-தெரட்டை] |
தெரணை | தெரணை teraṇai, பெ.(n.) அறுந்து போன இழை; cutoff thread. [தெரன்-தெரணை] |
தெரவல் | தெரவல் teraval, பெ.(n.) திறவுகோல் (சாவி);; key(நெவ.சொ.);. [திறவன்-தெரவல், (கொ.வ.);] [P] |
தெரவாங்கனை | தெரவாங்கனை teravāṅgaṉai, பெ. (n.) மீன் வகை; a kind of fish. |
தெராட்டு | தெராட்டு1 terāṭṭu, பெ. (n.) விரைவாகச் செல்லுதல்; going speed. ‘வண்டி தெராட்டுலே போகுது’ (நெல்லை.);. தெராட்டு2 terāṭṭu, பெ. (n.) தனியாய் விடுவது, களைகணின்றி விடுவது; abandon, leaving, helpless. ‘தெராட்ல விட்டு விட்டான்’ (நெல்லை.);. |
தெரி | தெரி1 teri-, 4 செ.குன்றாவி (v.t.) 1. வெளிப்படுத்துதல்; to make evident, bring to view. “தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே” (கம்பரா. சிறப். 6);. 2. சொல்லுதல் (திவா.);; to tell, declare, inform. 3. குறிப்பிட்டு விளக்குதல்; to explain specifically. “தெரிந்து மொழி கிளவி” (தொல். சொல்.56);. 4. எழுதுதல் (பிங்.);; to write, inscribe. 5. கொழித்தல் (யாழ்அக.);; to sift. 6. தெரிந்தெடுத்தல்; to choose, select. “தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ் செந்தீயின் மூழ்கவே (தேவா. 10. 7);. 7. பங்கிடுதல் (யாழ். அக.);; to partition, divide. 8. காலங்கழித்தல்; to pass. as a certain period of time. தெரி2 teri-, 4 செ.கு.வி. (v.i.) மாறுபடுதல் (யாழ்அக.);; to be perverse. தெரி3 teri-, 4 செ.கு.வி (v.i.) ஆராய்ந்து வரையறை செய்தல்; எல்லை தெரித்தல்; to determine the border. “எல்லை தெரித்த பிடி சூழ்ந்து பிடாகை நடந்து கல்லும், கள்ளியும் நாட்டி” (பெரிய வெய்டன் செப்பேடுகள்);. தெரி4 teri-, 4 செ.குன்றாவி (v.t.) அகலல்; to get rid of as diseases (சாஅக.);. தெரி5 teri-,4 செ.கு.வி. (v.i.) 1. தோன்றுதல்; to be seen, to become evident. ” அந்த விண்மீன் கண்ணுக்குநன்கு தெரிகின்றது”. 2 விளக்கமாதல்; to be understood, intelligible, clear. “தன்னா னிகழ்ந்த தன்மை தானே தெரியச் சொன்னாள்” (கம்பரா. நகர்நீ.37);. 3. காணும் ஆற்றலைப் பெற்றிருத்தல்; to possess the power of sight. “அவனுக்குக் கண் தெரிகின்றது”. 4. மனமறிதல்; to be conscious, as of one’s guilt. ‘தெரிந்து செய்த பாவம்’. ம. தெரியுக;கூ திளி;தெ.தெலியு;து.தெரியுனி;குட. திரி;கோத. தெய்ர்;துட. திர்ய;கூதிரி தெரி6 teri-, 4 செ.குன்றாவி. (v.t.) 1.ஆராய்தல்; to investigate, test, ascertain, enquire. “திறந் தெரிந்து தேறப்படும்” (குறள்,501);. 2. அறிதல்; to know, understand. “எல்லாந் தெரியக் கேட்குநர் யார்?” (பரிபா.12,38);. 3. தெரிந் தெடுத்தல்; to select, choose. “புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே” ( கவித். 7);. 4. கேட்டு அறிதல்; to learn through listening. “தெரிதல் நினைதலெண்ணலாகத் திருமாலுக்கு” (திவ். திருவாய்.6,9,11);. 5. அரித்தெடுத்தல் (திவா.);; to sift (செஅக.);. |
தெரிகடை | தெரிகடை terigaḍai, பெ.(n.) 1. கழிவு; refuse. 2. தள்ளுபடி; that which is rejected as waste malter (சாஅக.);, [தெரி + கடை] |
தெரிகவி | தெரிகவி terikavi, பெ. (n.) தெரிந்தெடுக்கப்பட்ட செய்யுள் திரட்டு; a poetic selection, anthology. [தெரி + கவி] |
தெரிகவிச்செய்யுள் | தெரிகவிச்செய்யுள் terikavi-c-ceyyul, பெ. (n.) பல நூல்களினின்று பொறுக்கி எடுக்கப் பட்ட செய்யுள்களின் தொகுதி; anthology of poems. [தெரி + கவி + செப்யுள்] |
தெரிகாரம் | தெரிகாரம் terikāram, பெ. (n.) பொரி காரம்; borax (சாஅக.);. [தெரி + காரம்] |
தெரிகுச்சி | தெரிகுச்சி terigucci, பெ.(n.) விழுது கயிற்றை இழுத்துக் கட்டும்குச்சி; a stick used to unite thе горе (ம.வ.தொ.89);. [தெரி+குச்சி] |
தெரிக்கல் | தெரிக்கல் teri-k-kal, பெ. (n.) விளக்கி narration in detail. “சைவத் திறத்தினைத் தெரிக்கலுற்றாம்” (சிசி.பாயி.2);. [தெரி → தெரிக்கல்] |
தெரிசனம் | தெரிசனம் terisaṉam, பெ. (n.) 1. பார்வை; auspicious sight, perception, view. 2. கண் (குருபரம்.);; eye. 3. தோற்றம்; appearance. “சுவாமிதரிசனம் அழகாயிருந்தது”. 4. தெய்வம் அல்லது பெரியோர்களைக் காண்கை; sight as of a great person, a deity. “தரிசனமுந் தீர்ந்து” (ஞானவா.மாவலி.48);. 5. கனவு (சொப்பனம்); முதலிய தோற்றம் (வின்.);; dream, vision, trance, supernatural appearance. 6. கண்ணாடி; mirror, looking – glass. 7. மதக் கொள்கை; religious doctrine. “நமது தரிசனத்துக் கடியப்பட்ட வாற்றால் தேனுண் டலைப் பரிகரிக்க” (சிலப்.10, 85, உரை);. [Skt. {} → த. தெரிசனம்] |
தெரிசனவேதி | தெரிசனவேதி terisaṉavēti, பெ. (n.) தாழ்ந்த மாழை (உலோகங்);களை உயர்ந்த மாழை (உலோகங்);களாக மாற்றவல்ல பச்சிலை வகை; an alchemic agent. “தெரிசனவேதி கண்ட சீருணம்போல” (சேதுபு.வேதாள.71);. [Skt. {} → த. தெரிசனவேதி] |
தெரிசனை | தெரிசனை terisaṉai, பெ. (n.) 1. காட்சி (உ.வ.);; auspicious sight. 2. தர்சன வுண்டியல்; hundi payable at sight. [Skt. {} → த.தெரிசனை] |
தெரிசம் | தெரிசம் terisam, பெ. (n.) காருவா (அமாவாசை);; new moon. “இரட்டிய தெரிசஞ் சேர்ந்த மலமதியொழித்து” (திருவிளை.இந்திரன்முடி.9);. [Skt. {} → த. தெரிசம்] |
தெரிசி-த்தல் | தெரிசி-த்தல் terisittal, 4 செ.குன்றாவி. (v.t.) கடவுளர் பெரியோர்களையும் நல்வினைப்பயன் அளிக்கும் இடத்தையும் (புண்ணியதலம்); காணுதல்; to see, behold, to obtain sight, as of an idol, a great person, a sacred place. [Skt. {} → த. தரிசி → தெரிசி-] |
தெரிசொல் | தெரிசொல் terisol, பெ. (n.) 1. ஆணை, உண்மை (சத்தியம்); (அக.நி.);; order, truth, promise. 2. தெரிந்த கரணியம் (சது.);; cause, discovered, oralleged. 3, அருஞ்சொல் விளக்கம்; glossary (W);. [தெரி + சொல்] |
தெரிதரல் | தெரிதரல் teridaral, பெ. (n.) 1. அறிதல்; under stand. 2. தோற்றுதல்; to appear. [தெரி → தெரிதரல்] |
தெரிதருதேற்றவுவமை | தெரிதருதேற்றவுவமை deridarudēṟṟavuvamai, பெ. (n.) ஐயுற்றதினைத் தெரிந்து துணிவதாகிய அணி வகை; a kind of rhetoric, [தெளிதரு + தேற்றவுவமை] நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கட் பட்ட திரு. இக்குறளில், கல்லாதா ரிடத்திற் பொருந்திய செல்வம், கற்றாரிடத்தில் பொருந்திய வறுமையினும் துன்பஞ் செய்வதாம், என்புழி, கல்லார் மாட்டுச் செல்வத்திற்குக் கற்றார் மாட்டு வறுமை உவமை கூறத்தக்கதன்று என்பது தெளிந்து கூறப்படுதலின் இது தெரிதருதேற்ற உவமையாம். “தாமரை நாண்மலருந்தண்மதியால் வீறழியும் காமர் மதியுங் கரைவிரவும் – ஆமிதனால் பொன்னை மயக்கும் புனை கணங்கி னார்முகமே என்னை மயக்கு மிது” இதுவு மஃதே. |
தெரிநிலை | தெரிநிலை terinilai, பெ.(n.) ஒற்றை முத்திரை நிலையின் ஒரு பிரிவு; a dance pose. [தெரி+நிலை] தெரிநிலை teri-nilai, பெ. (n.) 1. தெளிவுபட அறிவிக்கும் நிலை (நன். 423);; the state of clear indication. 2. ஆராய்ந்து அறியும் நிலை; the state of being investigated. “தெரிநிலைக் கிளவி” (தொல். சொல். 256, சேனா.);. 3. தெரிநிலை வினை பார்க்க;see terinilai-vinai. 4. எல்லா விரலும் விரிந்து வளைந்து நிற்கும் இணையா வினைக்கை வகை (சிலப்.3,18, உரை);; a gesture with one hand in which all the fingers are stretched and slightly bent. [தெரி + நிலை] |
தெரிநிலைக்கை | தெரிநிலைக்கை terinilai-k-kai. பெ. (n.) தெரிநிலை,4 (சிலப். 3; 18 உரை); பார்க்க;see terinilai.4. [தெரி + நிலை + கை] |
தெரிநிலையும்மை | தெரிநிலையும்மை terinilai-y-ummai, பெ. (n.) தெளிவாகத் தெரிந்ததால் கூறும் உம்மை; declaration of a conviction as in ஆணுமன்று, பெண்ணுமன்று. தெரிதற் பொருட்கண் வருதலிற் றெரிநிலை யும்மை (தொல். சொல். 255, சேனா);, [தெரிநிலை + உம்மை] |
தெரிநிலைவினை | தெரிநிலைவினை terinilai-vinai, பெ., (n.) காலத்தை வெளிப்படையாகத் தோற்றுவிக்கும் வினை (நன். 320, a உரை);; verbs explicity denoting tense by a tense-sign, opp. to__, [தெரிநிலை + வினை] |
தெரிநிலைவினைப்பெயரெச்சம் | தெரிநிலைவினைப்பெயரெச்சம் terinilaivinai. பெ. (n.) செயலும் காலமும் விளக்கிப் பெயரை அவாவி நிற்பது; verbal noun which acts as an adjective. [தெரிதிலைவினை + பெயரெச்சம்] |
தெரிநிலைவினைமுற்று | தெரிநிலைவினைமுற்று terinilai-vinaimurru, பெ. (n.) செயல், காலம், இடம் எனும் மூன்றனையும் விளக்கி முற்றுப்பெற்று நிற்பது; a verb which gives complete meaning. [தெரிநிலை + வினைமுற்று] ‘வந்தாய்’ எனும் சொல், வருதலாகிய செயலையும் இறந்த காலத்தையும் முன்னிலை இடத்தையும் காட்டி முற்றுப்பெற்றுள்ளது. |
தெரிநிலைவினையெச்சம் | தெரிநிலைவினையெச்சம் terinilai-vinai-y. பெ. (n.) செயல், காலம் இரண்டை மட்டும் காட்டி, வினை எஞ்சி நிற்பது; a verbal clause which shows only, the tense, and the deed [தெரிதிலை + வினையெச்சம்] வந்து என்னும் சொல் வருதலாகிய செயலும் இறந்த காலமும் அமையப்பெற்று வினையை அவாவி நிற்கிறது. |
தெரிந்தவன் | தெரிந்தவன் terindavan, பெ. (n.) அறிவுடை யோன்; a man of knowledge and learning [தெரி + த் + த் + அ + அன்] |
தெரிந்துசெயல்வகை | தெரிந்துசெயல்வகை terinduseyalvagai, பெ. (n.) மன்னன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந் திறம் (குறள், 47, அதிகாரம்);; the king’s duty of acting after due deliberation. [தெரிந்து + செயல் + வகை] |
தெரிந்துணர்ச்சி | தெரிந்துணர்ச்சி terinduṇarcci, பெ. (n.) . அறிந்துணரும், உணர்வு; judgment, discretion, wisdom. “மெய்யுறுவதாகா தென்னுந் தெரிந் துணர்ச்சி யுண்டாயின்” (இறை. 2, 31);. [தெரிந்து + உணர்ச்சி] |
தெரிந்துணர்வு | தெரிந்துணர்வு terinduṇarvu, பெ. (n.) தெரிந்துணர்ச்சி பார்க்க;see “தெரிந்துணர்வொன்றின்மையால்” (திவ். இயற். பெரியதிருவந். 82);. [தெரிந்து + உணர்வு] |
தெரிந்துதெளிதல் | தெரிந்துதெளிதல் derindudeḷidal, பெ. (n.) அமைச்சர் முதலாயினாரைப் பல்வகை யானும், ஆராய்ந்து தெளிகை (குறள், 5ஆம் அதி.);; to select, by a king of ministers, after careful, consideration of their qualification. [தெரிந்து + தெளி-தல்] |
தெரிந்துவினையாடுதல் | தெரிந்துவினையாடுதல் derinduviṉaiyāṭudal, பெ. (n.) தெளியப்பட்ட அமைச்சர் முதலாயினாரை, அவர் செய்யவல்ல, வினைகளை அறிந்து அவற்றின் கண்ணே ஆளுந் திறம் (குறள், 52ஆம் அதி.);; employment of ministers and other agents in suitable duties. [தெரிந்து + வினையாடுதல்] |
தெரிபடு-தல் | தெரிபடு-தல் deribaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. தெரிந்தெடுக்கப்படுதல்; to be selected. 2. தோன்றுதல்; to appear. [தெரி + படு-.] |
தெரிபொருள் | தெரிபொருள்1 teriboruḷ, பெ. (n.) அறிபவனாகிய ஆதன்; soul, as the agent of cognition. “தெரிபொரு டேரின்” (பரிபா. 2,26);. [தெரி + பொருள்] தெரிபொருள்2 teriboruḷ, பெ. (n.) 1. தேர்ந்த பொருள்; elected meaning. 2. தேட்டம்; thrived property. [தெரி + பொருள்] |
தெரிப்பான் | தெரிப்பான் terippāṉ, பெ. (n.) 1. வயிறு வீங்கி நீர் கழியச் செய்யும் ஆட்டு நோய் வகை; a disease peculiar to sheep in which the abdomen gets swollen, and there is watery discharge from the bowls. [தெரி → தெரிப்பான்] |
தெரிப்பு | தெரிப்பு terippu, பெ. (n.) 1. அறிவிப்பு; informing, acquainting, communicating. 2. ஆராய்வு (யாழ்.அக.);; investigation. 3. சொல்லுகை (வின்.);; saying, mentioning. 4. சீட்டு; note of hand. 5. கொழிப்பு; sifting with a fan. 6. பிரிப்பு (யாழ்அக.);; dividing. 7. கொக்கான் விளையாட்டில் கற்களைத் தெரிபடு-தல் தெரிந்தெடுக்கை (யாழ்ப்.);; selecting stones in the__,play. 9. கொழிக்கப்பட்டவை; things sifted, assorted or chosen. 10. எழுதுகை (சூடா.);; writing, inscription. [தெரி → தெவிப்பு] |
தெரிமா | தெரிமா terimā, பெ. (n.) 1. இரைக்காக அலையும் விலங்கு; any animal that roams about in search of prey. 2. அரிமா; lion (சாஅக);. [தெரி + மா] |
தெரிமானனப்புள் | தெரிமானனப்புள் terimāṉaṉappuḷ, பெ. (n.) ஆந்தை; owl |
தெரிமுத்தம் | தெரிமுத்தம் teri-muttam, பெ. (n.) இதளியம்; mercury (சாஅக.);. [தெரி + முத்தம்] தெரித்தால் முத்தைப்போல் எங்கும் பரவிக் கிடப்பதால் இப்பெயர் வந்தது போலும். |
தெரியசிங்கி | தெரியசிங்கி teriyasiṅgi, பெ. (n.) பருந்து; kite, heron (சாஅக.);. |
தெரியத்தெரி-தல் | தெரியத்தெரி-தல் teriya-t-teri-, 2 செ.குன்றாவி.(v.t.) தெளிவாயறிதல்; to understand clearly. “தெரியத் தெரியுந் தெரிவிலாதாரை” (நாலடி, 247);. [தெரிய + தெரி-.] |
தெரியப்படுத்து-தல் | தெரியப்படுத்து-தல் deriyappaḍuddudal, 5 செ.குன்றாவி (v.t.) அறிவித்தல்; to explain, to submit, to make known, or reveal. ‘அவன் தன் முதலாளியிடத்தில் தெரியப்படுத்தினான். [தெரிய + படுத்து-.] |
தெரியலர் | தெரியலர் teriyalar பெ. (n.) 1. அறிவில்லார் (யாழ்அக.);; the ignorant, the unenlightened, the uninformed. 2. பகைவர்; enemies. “தெரியலர் வந்து வணங்கித் திறையிடுஞ் சீர்மதுரை” (திருவாலவா.பக் 320, பயகர 11);. [தெரி + அல் + அர்] |
தெரியல் | தெரியல் teriyal, பெ. (n.) 1. தெரிந்து கொள்ளுகை; selection. “தேங்கமழ் தெரியற் றீம்பூந்தா ரவன்” (சீவக. 2253);. 2. பூமாலை; flower garland. “புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்” (புறநா.29);. [தெரி → தெரியல்)] |
தெரியவுணர்-தல் | தெரியவுணர்-தல் teriya-v-unar-, 2 செ.குன்றாவி. (v.t.) தெளியவறிதல்; to understand clearly. “தேறித் தெரியவுணர்நீ” (பரிபா. 6, 92);. [தெரிய + உணர்-,] |
தெரியாத்தனம் | தெரியாத்தனம் teriyāttaṉam, பெ. (n.) அறியாமை (கொ.வ.);; ignorance [தெரி + ஆ + தனம் ‘ஆ’ எதிர் மறை இடைநிலை] |
தெரியாத்தன்மை | தெரியாத்தன்மை teriyāttaṉmai, பெ. (n.) தெரியாத்தனம் பார்க்க;see__, [தெரி + ஆ + தன்மை. ‘ஆ’ எதிர் மறை இடைநிலை] |
தெரியாநிலைவினை | தெரியாநிலைவினை teriyānilaiviṉai, பெ. (n.) குறிப்புவினை (சங்அக.); பார்க்க;see kurippu-vinai. [தெரி + ஆ + நிலை + வினை] |
தெரியாப்புத்தி | தெரியாப்புத்தி teriyāpputti, பெ. (n.) தெரியாத்தனம் பார்க்க;see__, [தெரி + ஆ + புத்தி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தெரியிழை | தெரியிழை teriyilai, பெ. (n.) 1. தேர்ந்த அணிகலன்; choiced ornament. 2. பெண்; woman, as wearing choice ornaments. தெரியிழை வந்தாள். [தெரி + இழை] |
தெரியுமோர் | தெரியுமோர் teriyumōr, பெ. (n.) தெரிவோர். those who know, or understand, learned men. “நேரிற் றியற்சீர் நிலைக்குரீத்தன்றே தெரியு மோர்க்கே” (தொல். பொருள். 337);, [தெரியும் + ஓர்] |
தெரிவி-த்தல் | தெரிவி-த்தல் terivi-, 4 செ.குன்றாவி. (v.t.) 1. அறிவித்தல்; to explain, point out, show, teach. 2. வெளிப்படுத்துதல்; to bring to light, manifest, reveal, display. [தெரி + வி. ‘வி’ பிறவினை ஈறு] |
தெரிவிடு-தல் | தெரிவிடு-தல் deriviḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) 1.தெரிந்தெடுத்தல்; to choose, select, cull. 2.ஆராய்மல்; to examine. [தெரிவு + இடு-.] |
தெரிவினை | தெரிவினை teri-vinai, பெ. (n.) தெரிநிலை வினை பார்க்க;see terinilai-vinai. [தெரி + வினை] |
தெரிவில்புகழ்ச்சி | தெரிவில்புகழ்ச்சி terivil-pugalcci, பெ. (n.) ஒன்றைப் பழித்தற்கு வேறொன்றைப் புகழும் அணி (வீரசோ.அலங்.32);; figure of speech in which one is praised by way of slighting another. [தெரிவு + இல் + புகழ்ச்சி] எ-டு பிறர்செல்வங் கண்டாற் பெரியோர் மகிழ்வுஞ் சிறியோர் பொறாத திறமு – மறிவுறீஇச் செங்கமல மெய்மலர்ந்த தேங் குமுத மேபசந்த பொங்கொளியோன் வீறெய்தும் போது |
தெரிவெடு-த்தல் | தெரிவெடு-த்தல் teriveḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) கடலில் வீசிய வலையில் மிதப்புக் கட்டிய மேற்பாகத்தையும், கல் கட்டப்பட்ட கீழ்பாகத்தையும் பிரித்து எடுத்தல் (மீனவ.);; to separate the upper part of the net which is tied with the buoy and the lower part, which is tied with the stone. [தெரிவு + எடு-.] |
தெரிவை | தெரிவை1 terival, பெ. (n.) 1, 25 முதல் 31 வரையான அகவைக்குட்பட்ட பெண் (திவா.);; a woman between the age of 25 and 31 years. 2.31 முதல் 40 வரையிலான அகவைக்குட்பட்ட பெண்; any woman between the age of 31 and 40 years, 2. பெண்; woman. “தெரிவை மார்க்கொரு கட்டளையெனச் செய்த திருவே” (கம்பரா. சித்திர.33);. ம. தெரிவ; க. தரளெ (பெண்);;தெ. தெரவ தெரிவை2 terivai, பெ. (n.) கன்னி ஒரை (பிங்.);; virgo in the zodiac. தெரு teru, பெ. (n.); 1. வீதி (திவா.);; street. “வாரல் வாழிய ரையவெந் தெருவே” (குறுந்.139);. 2. வழி; highway, public road. “தெருவும் மாமறுகலின் மயக்குற்றன” (புறநா.345);. ம. தெரு; தெ. தெருவு முடுக்கு சிறு சந்து; சந்து தெருவின் கிளை; தெரு சிறு வீதி; மறுகு போக்குவரத்து மிகுந்த பெருந்தெரு அல்லது வீதி; ஆவணம் கடைத்தெரு; அகலுள் அகன்ற மறுகு;சாலை பெருவழி சந்தி மூன்று தெருக்கள் கூடுமிடம் சதுக்கம் நான்கு தெருக்கள் கூடுமிடம் (சொல்.50);. |
தெருக்கதவு | தெருக்கதவு teru-k-kadavu, பெ. (n.) தெருப் பக்கத்திலமைந்த கதவு; Street door [தெரு + கதவு] |
தெருக்கந்தம் | தெருக்கந்தம் teru-k-kandam, பெ. (n.) குங்கிலியம்; Indian lammder resin (சா.அக.);. |
தெருக்காட்சிகொடு-த்தல் | தெருக்காட்சிகொடு-த்தல் teruggāḍcigoḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) கமுக்கமாக வைத்திருக்க வேண்டியதை விளம்பரப்படுத்தல்; to publish what should be kept secret (செஅக.);, [தெரு + காட்சி + கொடு-.] |
தெருக்கால் | தெருக்கால் terukkāl, பெ. (n.) வீட்டருகில் பரவர் நடும் முழுத்தக்கால்; post planted near a marriage-house in the first night of a wedding ceremony. [தெரு + கால்] |
தெருக்காவல் | தெருக்காவல் terukkāval, பெ. (n.) தெருவிற் செய்யும் காவல்; patrol of streets. [தெரு + காவல்] |
தெருக்குத்து | தெருக்குத்து teru-k-kuttu, பெ. (n.) தெருவுக்கு நேராக அமைந்திருக்கும் வீடு; considered inauspicious portion of a house, being opposite to a street. “அந்த வீடு தெருக்குத்தாக உள்ளது” (உ.வ.);. [தெரு + குத்து] இத்தகைய வீடுகள் செழிப்படையா என்பதுநம்பிக்கை. |
தெருக்குத்துவா | தெருக்குத்துவா terukkuttuvā, பெ. (n.) 1. குத்துவா மீன்வகை; a herring, golden, glossed with purple. 2. நீலநிறமுள்ள கடல்மீன் வகை; a herring bluish. |
தெருக்குத்துவீடு | தெருக்குத்துவீடு terukkuttuvīṭu, பெ. (n.) தெருக்குத்து பார்க்க;see teru-k-kuttu. [தெருக்குத்து + வீடு] |
தெருக்கூத்து | தெருக்கூத்து terukāttu, பெ. (n.) 1. தெரு வெளியில் நடக்கும் நாடகம்; dramatic performance or dance in a street. 2. எல்லோராலும் நகைக்கத்தக்கது; that which is a public disgrace. [தெரு + கூத்து] |
தெருக்கோலம் | தெருக்கோலம் terukālam, பெ. (n.) தெருப் பக்கத்துள்ள தரையில் இடுங்கோலம் (நாஞ்.);; decoration on the side of the floor facing a street. [தெரு + கோலம்] |
தெருச்சண்டை | தெருச்சண்டை teruccaṇṭai, பெ. (n.) ஒன்றுக்கும் உதவாதவற்றுக்கு முரண்பட்டுத் தெருவில் செய்யும் தகராறு; quarrel at street due to insignificant matter. தெருச்சண்டை கண்ணுக்கு இன்பம் (பழ.);. [தெரு + சண்டை] |
தெருட்சி | தெருட்சி teruṭci, பெ. (n.) 1. அறிவு (பிங்.);; knowledge, wisdom, understanding. 2. தெளிவு; clearness. “தெருட்சி சேரவைத் திசைமுகன் சபித்த நாள்” (சேதுபு. விதம.71);. 3. முதற்பூப்பு; attaining puberty. [தெருள் → தெருட்சி] |
தெருட்டல் | தெருட்டல் teruṭṭal, பெ.(n.) இசைக்கரணத்தின் ஒரு வகை; a type in musical performance. [தெருள்-தெருட்டு+அல்] தெருட்டல் teruṭṭal, பெ. (n.) யாழ் நரம்பை உருட்டும் இசைக்கரண வகை; rubbing the lute-string to test the tone. “சீருடனுருட்ட றெருட்டல்” (சிலப்,7, கட்டுரை.);. [தெருட்டு + அல். ‘அல்’ தொ.பெ. ஈறு] |
தெருட்டிக்கலியாணம் | தெருட்டிக்கலியாணம் teruṭṭikkaliyāṇam, பெ. (n.) தெருட்டுக்கலியாணம் பார்க்க;see__, [தெருட்டி + கலியாணம்] |
தெருட்டு | தெருட்டு1 deruṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. அறிவுறுத்துதல்; to inform, make known. ‘தலைமகள் உடன்போகியவழித் தெருட்டு வார்க்குச் செவிலித்தாய் சொல்லியது” (ஐங்குறு. 380. உரை);. 2. மனம் தெளியச் செய்தல்; to convince, persuade, enlighten the mind. 3. ஊடல் தீர்த்தல்; to pacify, make up a love quarrel. “தெருட்டவுந் தெருளா துாடலொடு துயில்வோர்” (மணிமே. 7;52);. 4. வற்புறுத்துதல்; to confirm, assure. 5. இசை பார்க்க யாழ் நரம்பை அழுந்தத் தீண்டித் திருகிவிடுதல்; to rub and test the tone of a lute string. “திருந்து நரம்பை யுறத்தொட்டுத் திருகிவிட றெருட்டல்” (கூர்மபு. கண். 140);. [தெருன் → தெருட்டு-.] தெருட்டு2 teruṭṭu, பெ. (n.) 1. அறிவிப்பு; informing, convincing. 2. தேற்றுகை; consoling, pacifying. 3. பூப்பெய்துதல்; attaining puberty, as of a girl. [திரள் → தெருள் → தெருட்டு] |
தெருட்டுக்கலியாணம் | தெருட்டுக்கலியாணம் teruṭṭukkaliyāṇam, பெ. (n.) 1. குழந்தைத் திருமணப் பெண்ணின் மணநிறைவு (இருதுசாந்தி);; consummation after a child-wife attains puberty. 2. திருமணம் செய்தற்குரிய பருவத்திற் செய்யும் சடங்கு; ceremony at the time of a girl’s becoming marriageable. [திரள் → திரட்டு → தெருட்டு + கலியாணம். திரள் = சமைதல், பருவ மெய்துதல்] |
தெருணை | தெருணை teruṇai, பெ. (n.) மரவகை; potato plum of Mysore. |
தெருண்டபெண் | தெருண்டபெண் teruṇṭabeṇ, பெ. (n.) சமைந்த பெண்; a girl who has attained puberty (சாஅக.);. [திரண்ட + பெண். திரண்டபெண் → தெருண்ட பெண்] |
தெருண்டமேலவர் | தெருண்டமேலவர் teruṇṭamēlavar, பெ. (n.) அறிவிற் சிறந்தவர்கள்; wise people. [தெருண்ட + மேலவர்] |
தெருத்திண்ணை | தெருத்திண்ணை teruttiṇṇai, பெ. (n.) வாயிற் புறத்துள்ள திண்ணை; pial facing street. [தெரு + திண்ணை] |
தெருப்பங்காளி | தெருப்பங்காளி teruppaṅgāḷi, பெ. (n.) ஒரே தெருவில் வாழ்வோன்; one who lives in the same Street. [தெரு + பங்காளி] |
தெருப்பள்ளிக்கூடம் | தெருப்பள்ளிக்கூடம் teruppaḷḷikāṭam, பெ. (n.) வாயிற்றிண்ணையில் அமைந்துள்ள பள்ளிக்கூடம்; pial-school. மறுவ. திண்ணைப் பள்ளிக்கூடம் [தெரு + பள்ளி + கூடம்] |
தெருப்பாய்ச்சல் | தெருப்பாய்ச்சல் teruppāyccal, பெ. (n.) தெருக்குத்து பார்க்க;see teru-k-kuttu. [தெரு + பாய்ச்சல்] |
தெருப்பிள்ளை | தெருப்பிள்ளை teruppiḷḷai, பெ. (n.) ஒரு தெருவிற் பெரியவராய் உள்ளவர் (இ.வ.);; the most wealthy and influential man of a street. [தெரு + பிள்ளை] |
தெருமரல் | தெருமரல் teru-maral, பெ. (n.) 1. மனச்சுழற்சி; giddiness, confusion, perplexity, distress. “அலமர றெருமர லாயிரண்டுஞ் சுழற்சி” [தொல். சொல்.311). 2. அச்சம்; fear. [தெருமரு → தெருமரல்] |
தெருமரு-தல் | தெருமரு-தல் teru-maru, 12 செ.கு.வி (v.i.) மனஞ் சுழலுதல்; to be unnerved, to sink under distress, to be confused in mind. “வளைமுன் கை பற்றி நலியத் தெருமந்திட்டு” (கலித். 51);. |
தெருமறிச்சான் | தெருமறிச்சான் terumaṟiccāṉ, பெ. (n.) திருவிழாக் காலங்களில் தீண்டாக்குலத்தினர் வாராதபடி தெருவையடைத்து வைக்குந்தட்டி (நாஞ்.);; ‘tattis’ placed across a street preventing the untouchables from entering during a festival. [தெரு + மறிச்சான்] |
தெருளல் | தெருளல் teruḷal, பெ. (n.) 1. திரளல்; attaining puberty. 2. தெளிவடைதல்; having mature knowledge. 3. தெளிவு; good understanding. தெருளாமனதுக்கு இருளே இல்லை (பழ.);. 4. திரண்டு வருதல்; coming together as butter while churning the curd (சாஅக.);. [திரளல் → தெருளல்] |
தெருளான் | தெருளான் teruḷāṉ, பெ. (n.) அறிவிலி (அக.நி.);; fool. [தெருள் + ஆ + அன். ‘ஆ’ எதிர்மறை. இடைநிலை] |
தெருளுடைமை | தெருளுடைமை teruḷuḍaimai, பெ. (n.) அறிவுடைமை; possessing clear knowledge acuteness of discernment (சாஅக.);. [தெருள் + உடைமை] |
தெருள் | தெருள்1 deruḷḷudal, 16 செ.கு.வி. (v.i.) 1. உணர்வுறுதல்; to know, to gain true knowledge. “தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்” (குறள், 249);. 2. தெளிதல்; to perceive, ascertain, understand clearly. “தெருண்ட வறிவினர்” (நாலடி, 301);. 3. பூப் பெய்துதல்; to arrive at puberty as a girl. 4. புகழடைதல்; to be renowned. 5. விளங்குதல்; to be clear lucid. “வளமலை நாடனைத் தெருள… நீ யொன்று பாடித்தை” (கலித்.43);. தெருள்2 teruḷ, பெ. (n.) 1. திரளல்; maturing. 2. தெளிவடைதல்; intellectual clearness (சாஅக.);. [திரள் → தெருள்] |
தெருள்வு | தெருள்வு teruḷvu, பெ. (n.) தெருள் பார்க்க;see__, [தெருள் → தெருள்வு] |
தெருவம் | தெருவம் teruvam, பெ. (n.) தெரு பார்க்க;see teru. “உருவச் செங்கொடி தெருவத்துப் பரப்பி” (பெருங். உஞ்சைக் 38. 351);. [தெரு → தெருவம்] |
தெருவாக்கு-தல் | தெருவாக்கு-தல் deruvākkudal, 8 செ.குன்றாவி. (v.t.) வீணாக்குதல்; to make it useless. ‘எல்லாத்தையும் தெருவாக்கிட்டான்’ (நெல்லை.);. [தெரு + ஆக்கு-.] வீணானவற்றைத் தெருவிற்குப் போடும் தன்மையினால் வீணாக்குதல் தெருவாக்குதல் எனக் குறிப்பதற்கு அடிப்படையாயிற்று |
தெருவாசல் | தெருவாசல் teruvācal, பெ. (n.) வெளிவாசல்; door or gate of house, opening into a street, dist. fr.__, [தெரு + வாசல்] |
தெருவிசு | தெருவிசு teruvisu, பெ. (n.) 1. திறமையுடையது; that which is strong. 2. நல்வடிவு; healthy, formation of body, shapeliness. ‘குழந்தைக்கு இன்னும் தெருவிசு ஏற்படவில்லை’. [திறவிது → தெருவிது → தெருவிசு] ஒ.நோ. நறுவிது – நறுவிசு |
தெருவிலழகி | தெருவிலழகி teru-vil-alagi, பெ. (n.) குப்பைமேனி; plant adoring rubbish heap (சாஅக.);. [தெருவில் + அழகி (மருத்துவக் குழூஉக் குறி);] |
தெருவில்விடு-தல் | தெருவில்விடு-தல் deruvilviḍudal, 20 செ.கு.வி. (v.i.) ஏதிலியாய் விடுதல்; களைகணின்றி விடுதல்; abandon, helpless. [தெருவில் + விதி-.] |
தெருவு | தெருவு teruvu, பெ. (n.) தெரு பார்க்க;see teru. “தேடுகின்றிலை தெருவுதோ றலறிலை” (திருவாச. 5. 31);. [தெரு → தெருவு] |
தெருவுப்பாடு | தெருவுப்பாடு teruvuppāṭu, பெ. (n.) வீட்டின் முன்புறம்; front portion of a house facing a street. [தெருவு + பாடு] |
தெறக்கோலா | தெறக்கோலா teṟakālā, பெ. (n.) உருட்டாய் உள்ள ஒரு கடல் மீன்; fish in a round form (மீனவ.);. உருவ அமைப்பில் சாலா போலுங் காணப்படும். |
தெறஞ்சுபோ-தல் | தெறஞ்சுபோ-தல் teṟañjupōtal, 8 செ.கு.வி. (v.i.) திரைந்து (திரிந்து); போதல்; to coagulate, form into clots, as milk. ‘பால் தெறஞ்சு போயிடுச்சு’ (நெல்லை);. [திரித்து → திரைத்து → தெறைந்து → தெறஞ்க. ஒ. நோ.;கரைத்து → கரைஞ்சு] |
தெறல் | தெறல் teṟal, பெ. (n.) 1. அழிக்கை; ruining. “வலியுந் தெறலு மளியு முடையோய்” (புறநா. 2);. 2. சினத்தல்; being angry. “தெறலருங் கடுந்துப்பின்” (மதுரைக். 32);. 3. வெம்மை; heat. “தீயுனுட்டெறனீ” (பரிபா. 3. 63);. 4. வருந்துகை; affliction. “தேடறு நலத்தபுன லாசைதெற லுற்றார்” (கம்பரா. கடிமண. 2);. [தெறு → தெறல்] |
தெறி | தெறி1 teṟittal, 4 செ.கு.வி (v.i.) 1. தாக்கப் பட்டு வெளிப்படுதல்; to strike and fly off. “மன்னவன் வாய்முதற் றெறித்தது மணியே” (சிலப். 20;72);. 2. பிதுங்குதல்; to start, as eyes. “கண் தெறித்துப் போகிறது” 3. பொறி அல்லது துளியாய்ச் சிதறுதல்; to be sprinkled, as drops or particles of water; to splash up, as spray; to fly off, as sparks. “கண்பனி நெகிழ்நூன் முகத்தின் முகிழ்முலைத் தெறிப்ப” (அகநா. 289);. 4. முறிதல்; to break. 5. அறுதல்; to burst asunder, snap in twain, as a rope. 6. குலைதல்; to be scattered, as an army. “மாப்படை தெறித்துச் சிந்த” (கம்பரா. மூலபல. 134);. 7. துள்ளுதல்; to spring, leap, hop, as a stag. “தாவுபு தெறிக்குமான்மேல்” (புறநா. 259);. 8. பிளத்தல்; to split. “தெறித்தன செறிசுடர்க் கவசம்” (கம்பரா. கிங்கர. 32);. 9. முற்றுதல்; to be complete, full. “தெறிப்ப விளைந்த தீங்கந்தாரம்” (புறநா. 258);. 10. வேறுபடுதல்; to be broken off, as friendship, to become disunited. 11. நீங்குதல்; to be removed, cured, as a disease. “பிணி தெறித்துப் போயிற்று” (வின்.);. 12. தவறுதல்; to fail, end unsuccessfully. “செயல் தெறித்துப் போயிற்று” 13. குறும்பு பண்ணுதல்; to be mischievous. “அவன் மிகவும் தெறித்தவன்”. 14. செருக்குத் திமிராயிருத்தல்; to be proud. 15. நரம்பு துடித்து நோவுண்டாதல்; to give the throbbing pain. [தெறு → தெறி] தெறி2 teṟittal, 4 செ.குன்றாவி (v.t.) 1. விரலாற் கண்டுதல்; to shoot with the finger and thumb. 2. விரலால் உந்துதல்; to twang, as a bow-string with the finger and thumb; to thrum, as the strings of a lute. ‘சிலையை நாண் டெறித்தான்’ (கம்பரா. தேரேறு. 29);. 3. உடைத்தல்; to break, cut. ‘பூட்டைத் தெறித்தான்’. தெறி3 teṟittal, 4 செ.கு.வி. (v.i.) 1. தெறிக்குதல்; to break suddenly or to snap off. 2. விண் என வலித்தல், to throb pain as of boils. 3. கண் தெறிக்குதல்; to grow blind by dazzling. 4. எட்ட விழல்; to spirtas drops of particles of water (சாஅக.);. தெறி4 teṟi, பெ. (n.) 1. சிதறுகை (சங் அக.);; spattering, splashing, scattering. 2. அணி, குப்பாயம் முதலியவற்றின்கடைப்பூட்டு (யாழ்.அக.);; clasp, as of an ornament. 3. குறும்புப் பேச்சு; mischievous talk. “எப்போதும் அவன் தெறி பேசுகிறான்” (நாஞ்.); (செஅக.);. [தெளி + தெறி] தெறி4 teṟi, பெ. (n.) தேள்; scorpion (சாஅக.);. |
தெறிகெடு-தல் | தெறிகெடு-தல் deṟigeḍudal, 11 செ.கு.வி (v.i.) நிலைகுலைதல்; to be routed, scattered. “தெறிகெட வோடுதல் கண்டு” (சேதுபு. கத்தமா. 39);. [தெறி + கெடு-.] |
தெறிக்கடி-த்தல் | தெறிக்கடி-த்தல் teṟikkaḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. சிதறவடித்தல்; to scatter, disperse. 2. எதிரி அடங்கும்படி பேசுதல்; to confound, puzzle, as in controversy (செஅக.);. [தெறி → தெறிக்க + அடி-.] |
தெறிக்கப்பேசு-தல் | தெறிக்கப்பேசு-தல் deṟikkappēcudal, 5 செ.குன்றா.வி. (v.t.) பொறுமையின்றி கடுத்துப் பேசுதல் (கொ.வ.);; to speak, rashly and inconsiderately (செஅக.);. [தெறிக்க + பேசு-.] |
தெறிசிங்கி | தெறிசிங்கி1 teṟisiṅgi, பெ. (n.) மாந்தரின் மீது தெளித்தால் பட்ட இடம் புண்ணாகும் ஒரு வகைக் கூட்டு மருந்து (நாஞ்.);; a mixture whose drops cause swelling in the body (செஅக.);. [தெளி → தெறி + சிங்கி] தெறிசிங்கி2 teṟisiṅgi, பெ. (n.) அகத்தியர் பெருநூலிற் சொல்லியுள்ள ஒரு வகைச் சிங்கி வித்தை; a magic performance or an art in jugglery described in__, of __,(சாஅக.);. |
தெறிசோறு | தெறிசோறு teṟicōṟu, பெ. (n.) உண் கலத்தினின்று சிதறிவிழுஞ் சோற்றுப் பருக்கை; spoon drift. [தெறி + சோறு] |
தெறிச்சமீன் | தெறிச்சமீன் teṟiccamīṉ, பெ. (n.) 1. விரைவாக நீந்திச் செல்லும் மீன்; fish that swims fast in the water. 2. பெரிய மீன்; big fish. [தெறி → தெறித்த → தெறிச்ச + மீன்] |
தெறிச்சவெள்ளம் | தெறிச்சவெள்ளம் teṟiccaveḷḷam, பெ. (n.) நீரோட்டமில்லாத கடல்; currentless sea (மீனவ.); [தெறிச்ச + வெள்ளம்] |
தெறிதலை | தெறிதலை deṟidalai, பெ. (n.) தறிதலை (இ.வ.);; அடங்காதவன்; swollen-headed person. [தறிதலை → தெறிதலை] |
தெறித்தளத்தல் | தெறித்தளத்தல் teṟittaḷattal, பெ. (n.) ஒன்றைத் தட்டுதலால் உண்டாம் ஒலியின் தன்மையினைக் கூர்ந்து செவியில் அளக்கை (தொல். எழுத்து 7, உரை.);; measurement by determining the quality of the sound by the ear. 2. கூர்ந்து (நிதானித்து); அளக்கை (இ.வ.);; careful measuring [தெறித்து + அளத்தல்] |
தெறித்தவன் | தெறித்தவன் teṟittavaṉ, பெ. (n.) 1. செறுக் குள்ளவன்; headstrong, proud man. 2. கொடியவன் (வின்,);; cruel man. [தெறு → தெறி → தெறித்தவன்] |
தெறித்தவள் | தெறித்தவள் teṟittavaḷ, பெ. (n.) குடும்பத்தினின்று வெளியேறி விலைமகளானவள்; an unchaste woman who has deserted her home and become a prostitute. [தெளி → தெறி. தெறி →தெறித்தவள்] |
தெறித்துநடை | தெறித்துநடை teṟittunaḍai, பெ. (n.) துள்ளு நடை; hopping gait. “தெறித்து நடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி” (குறுந். 213);. [தெறித்து + நடை. தெறி → தெறித்து] |
தெறித்துப்போ-தல் | தெறித்துப்போ-தல் teṟittuppōtal, 11 செ.கு.வி. (v.i.) 1. குடும்பத்தைவிட்டு விலகி விலை மகளாதல் (சென்னை);; to desert one’s home and become a prostitude. 2. பிணி தீர்தல்; to be cured. ‘பிணி தெறித்துப் போயிற்று’ 3. ஒளியாற் கண் கூசி மழுங்குதல் (இ.வ.);; to be dazzled by excess of light. இயங்கியின் முகப்புவிளக்கு வெளிச்சத்தினால் கண் தெறித்துப் போயிற்று (உவ.);. மின்னல் வெளிச்சத்தினால் கண் தெறித்துப் போயிற்று (உ.வ.);. [தெறி → தெறித்து + போ-.] |
தெறிநடை | தெறிநடை teṟinaḍai, பெ. (n.) தெறித்துநடை பார்க்க;see__, “தெறிநடை மரைக் கண மிரிய” (அகநா. 224);. [தெறி + நடை] |
தெறிபடு-தல் | தெறிபடு-தல் deṟibaḍudal, 20 செ.கு.வி. (v.i.) 1. சிதறுண்ணுதல்; to be scattered, as cattle. 2. அலைந்துலைதல்; to be tossed about, as a vessel at sea. 3. தோற்றோடுதல்; to be discomfited, routed, as an army. 4. கலங்குதல்; to be puzzled, confounded. 5. திக்கறுதல் (வின்.);; to be desolate, forsaken. 6. தவறுதல்; to fail, come to naught. ‘செயல் தெறிபட்டது’. [தெறி + படு-.] |
தெறிபட்டவள் | தெறிபட்டவள் teṟibaṭṭavaḷ, பெ. (n.) தெறித்தவள் பார்க்க;see__, [தெறித்தவள் → தெறிபட்டவள்] |
தெறிபதம் | தெறிபதம் teri-padam, பெ. (n.) நெய்மம் காய்ச்சுகையில் எண்ணெய் வெடிபடும் நிலை; spirtling stage of medicinal oil when boiling. [தெறி + பதம்] |
தெறிப்படங்கு | தெறிப்படங்கு1 deṟippaḍaṅgudal, 9 செ.கு.வி. (v.i.) வெடியுப்பு, உப்பு முதலியவற்றைக் கட்டும் போது படபட வென்று தெறிக்கும் குணம் அடங்குதல்; to be over the busting noises of salts, nitre, etc., which were produced while they are heated (சாஅக.);. தெறிப்படங்கு2 deṟippaḍaṅgudal, 9 செ.கு.வி. (v.i.) செறுக்கு அடங்குதல்; to control presumptous conduct தேர்தலில் தோற்றபின் அவர் தெறிப்படங்கின்று (உவ.);. [தெறிப்பு1 + அடங்கு-.] |
தெறிப்பான் | தெறிப்பான் teṟippāṉ, பெ. (n.) தலை சிதறத்தக்கவன் என்று பொருள்படுமோர் வசை மொழி (உவ.);; a curse meaning that the person cursed deserves to have his head blown to pieces. [தெறிப்பு → தெறிப்பான்] |
தெறிப்பு | தெறிப்பு teṟippu, பெ.(n.) மரம், பலகை போன்றவற்றில் பிளவு; crevice in a wooden plank or rafter. [தெறி-தெறிப்பு] தெறிப்பு1 teṟippu, பெ. (n.) செறுக்கு மேலிட்ட ஒழுக்கம்; presumptuous conduct. தெறிப்பு2 teṟippu, பெ. (n.) கடைப் பூட்டு (வின்.);; button, clasp of thread or metal. ம. தெறிப்பு [தெறி → தெறிப்பு] தெறிப்பு3 teṟippu, பெ. (n.) தெறித்துப் போதல்; break caused abruptly (சாஅக.);. [தெற்று → தெறி → தெறிப்பு] தெறிப்பு4 teṟippu, பெ. (n.) அதிர் வெடி; rocket. [தெறி → தெறிப்பு] |
தெறிப்புநாடி | தெறிப்புநாடி teṟippunāṭi, பெ. (n.) 1. துள்ளு நாடி; swift abrupt pulse. 2. பின்னுக்கு உதைத்தோடும் நாடி; rebounding pulse (சாஅக.);. [தெறிப்பு1 + நாடி] |
தெறிப்புமசகு | தெறிப்புமசகு teṟippumasagu, பெ. (n.) மசகுப் பொருள்களை வாரித் தெறித்து மசகிடும் முறை; splash lubrication. [தெறிப்பு + மசகு] |
தெறிமுற்று-தல் | தெறிமுற்று-தல் deṟimuṟṟudal, 5 செ.கு.வி. (v.i.) முழுதும் பழுத்தல் (இ.வ.);; to become fully ripe. [தெறிக்க + முற்று-.] |
தெறிவாதம் | தெறிவாதம் teṟivātam, பெ. (n.) நோய் வகை; a disease. |
தெறிவில் | தெறிவில் teṟivil, பெ. (n.) கண்டு வில்; a small bow for shooting pellets. “சுரிகையுந் தெரிவில்லுஞ் செண்டுகோலும்” (திவ். பெரியாழ்.3, 4, 3);. ம. தெறிவில்லு [தெறி1 + வில்] |
தெறு | தெறு1 deṟudal, 6 செ.குன்றாவி. (v.t.) 1. சுடுதல்; to burn, scorch. “நீங்கிற் றெறூஉம்” (குறள், 1104);. 2. தண்டஞ்செய்தல்; to punish. “கொடியோர்த் தெறுதலும்” (புறநா.29);, 3. அழித்தல்; to destroy. “பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும்” (கலித். 11);. 4. கொல்லுதல் (பிங்.);; to kill. “முள்ளி னெய்தெற விழுக்கிய” (மலைபடு. 301);. 5. வருத்துதல்; to trouble, plague. “செம்முக மாத்தெறு கட்டழிய” (திருக்கோ. 313);. 6. நெரித்தல் (திவா.);; to crush, bruise. 7. காய்ச்சுதல்; to boil down. “கரும்பினைத் தெற்ற கட்டியின்” (காசிக இல்ல.3);. 8. சினத்தல்; to be angry at or with. “தெறலருங் கடுந்துப்பின்” (மதுரைக் 32);. 9. கொட்டுதல்; to sting, as a wasp. “கடிதாகத் தெறுதலை யுடைய மிக்க குளவியினம் (பதித்துப். உரை);. 10. மிகுத்தல் (பிங்.);; to increase. தெறு2 deṟudal, 6 செ.கு.வி (v.i.) 1. தங்குதல்; to tarry. 2. நீங்குதல்; to leave, forsake. “பொய்ம்மை தெறுவது” (திருநூற்.13);. தெறு3 teṟuttal, 11 செ.குன்றாவி. (v.t.) 1. நெரித்தல் (பிங்.);; to crush, bruise. 2. குவித்தல்; to heap. “விருந்தின் மன்ன ரருங்கலத் தெறுப்ப” (அகநா. 54);. ம. தெறுக்குக (சுருட்டுதல், பின்னுதல்); தெறு4 teṟu, பெ. (n.) 1. சுடுகை; burning, scorching. “தீத்தெறுவிற் கவின்வாடி” (பட்டினப். 10);. 2. சினம்; anger. “தெறுவர விருபாற் படுக்குநின் வாள்வாய்” (புறநா.50);. 3. அச்சம்; fear. “தெறுவர வென்னாகு வள்கொல்” (அகநா. 73);. 4. துன்பம்; distress. “தெறுவர வீங்கினம் வருபவோ” (குறுந்.336);. |
தெறுகுவர் | தெறுகுவர் teṟuguvar, பெ. (n.) அழிப்பவர்; one who destroys. [தெறு1 → தெறுகுவர்] |
தெறுக்கால் | தெறுக்கால் teṟukkāl, பெ. (n.) 1. தேள் (திவா.);; scorpion 2. நளிஒரை (சூடா.);; scorpio in the zodiac. [தெறு + கால்] |
தெறுநர் | தெறுநர் teṟunar, பெ. (n.) 1. பகைவர் (பிங்.);; foes, enemics 2. கொலையாளர் (யாழ்அக.);; murderers. [தெறு1 → தெறுநர்] |
தெறுபொருள் | தெறுபொருள் teṟuboruḷ, பெ. (n.) திறைப் பொருள்; indemnity, tribute. “உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்” (குறள், 756);. [தெறு1 + பொருள்] |
தெறுப்பதம் | தெறுப்பதம் deṟuppadam, பெ. (n.) தெறுக்கால் பார்க்;;see__, “தெறுப்பதங் கழீஇ செறிந்தெழு நரகிடை” (உபதேசகா. சிவத்துரோ. 229);. [தெறு + பதம்] |
தெறுழ் | தெறுழ் teṟuḻ, பெ. (n.) 1. காட்டுக்கொடி வகை; a creeper. “தெறுழ்வீ பூப்ப” (புறநா.119);. 2. புளிமா பார்க்க (புறநா.119, உரை);;see__, [தெறு → தெறுழ்] |
தெறுவர் | தெறுவர் teṟuvar, பெ. (n.) பகைவர்; foes, enemics. “தெறுவர் பேருயி ருண்ணு மாதோ” (புறநா.307);. [தெறு → தெறுவர்] |
தெறுவி | தெறுவி teṟuvi, பெ. (n.) அகப்பை; ladle. “தெறுவியாலன்றி” (காசிக இல்லற. 29);. [தெறு → தெறுவி] |
தெறுவு | தெறுவு teṟuvu, பெ. (n.) கடுகை; burning. [தெறு3 → தெறுவு] |
தெற்கத்தி | தெற்கத்தி terkati, பெ.எ. (adi.) தெற்கிலுள்ள; south, southern. “தெற்கத்திப் பேச்சு” (உ.வ.);. தெற்கத்திக் குருவியை வடக்கத்திக் குருவி தெற்றி அழைத்ததாம் சீகம்பழம் தின்ன (பழ.);. ம. தெக்கே [தெற்கு → தெற்கத்தி] |
தெற்கத்தி மெட்டு | தெற்கத்தி மெட்டு teṟkattimeṭṭu, பெ.(n.) தென்னாட்டுத் தெருக்கூத்தில் காணப்படும் மெட்டு வகை; a rythm in street drama, [தெற்கு+ஆத்தி+மெட்டு] |
தெற்கத்திக்கனை | தெற்கத்திக்கனை teṟkattikkaṉai, பெ. (n.) குழந்தைநோய் வகை, bronchitis, bronchopneumonia, whooping cough, infantile convulsions. [தெற்கு → தெற்கத்தி + கணை] |
தெற்கத்திக்காற்று | தெற்கத்திக்காற்று teṟkattikkāṟṟu, பெ. (n.) தென்றல் பார்க்க;see__,(செஅக.);. ம. தெக்கன்காற்று [தெற்குகாற்று → தெற்கத்திக்காற்று] |
தெற்கத்திநோய் | தெற்கத்திநோய் teṟkattinōy, பெ. (n.) தெற்கத்திக்கணை பார்க்க;see __, [தெற்கு → தெற்கத்தி + தோய்] |
தெற்கத்திப்பேச்சு | தெற்கத்திப்பேச்சு teṟkattippēccu, பெ. (n.) 1. தென்றேயத்திலுள்ளார் வழங்கும் மொழி; southern dialect. 2. தென்றேயத்திலுள்ளவர்களுக்குரிய பேச்சுமுறை; intonation peculiar to the southerns. [தெற்கு → தெற்கத்தி + பேச்சு] |
தெற்கத்தியான் | தெற்கத்தியான்1 terkattiyan, பெ. (n.) 1. தென்னாட்டான்; person belonging to South India. 2. தென்பகுதிக்காரன்; southerner. ம. தெக்கன் (தெற்கு); [தெற்கு – தெற்கத்தி + ஆன்] தெற்கத்தியான்2 teṟkattiyāṉ, பெ. (n.) தென் திசையினின்று வரவழைக்கப்பட்ட மாடுகள்; cows brought from the southern side. [தெற்கு – தெற்கத்தி + ஆன்] |
தெற்கித்தி | தெற்கித்தி terkitti, வி. (adj.) தெற்கத்தி பார்க்க;see terkatti. [தெற்கத்தி → தெற்கித்தி] |
தெற்கு | தெற்கு terku, பெ. (n.) தென்றிசை (திவா.);; South ம. தெக்கு; க. தெங்க, தெங்கல், தெங்கு; து. தெனுகாயி, தென்காயி, தெங்காயி;குட. தெக்கி [தென் + கு – தெற்கு] |
தெற்குகட்டலி | தெற்குகட்டலி teṟgugaṭṭali, பெ.(n.) பரமக்குடி வட்டத்திலுள்ள சிற்றுார்; a_village in Paramakkuqi Taluk. [தெற்கு+கூடல்+இ] |
தெற்குத்தி | தெற்குத்தி terkutti, பெ. (n.) தெற்கத்தி பார்க்க;see terkatti. [தெற்கத்தி → தெற்குத்தி (இ.வ.);] |
தெற்குப்பார்த்தவீடு | தெற்குப்பார்த்தவீடு teṟkuppārttavīṭu, பெ. (n.) தெரு வாசல் தெற்குப் பக்கமாக அமைந்த வீடு; house built with its main gate on the southern side. [தெற்கு + பார்த்த + வீடு] |
தெற்குமுகமாய்ப்போ-தல் | தெற்குமுகமாய்ப்போ-தல் teṟgumugamāyppōtal, 8 செ.கு.வி. (v.i.) . இறத்தல் (வின்.);; to die (செஅக.);. தெற்குப் பகுதி கடற்கோளுக்கு ஆட் பட்டதால் இது இறந்தவர்களுக்கு உரிய திசையாகக் கருதப்படுகிறது. |
தெற்குவாசல் | தெற்குவாசல் teṟkuvācal, பெ. (n.) 1. தென் திசையிலமைந்த வாயில்; door in south side. 2. தென் திசையில் வாசலமைந்த வீடு; house facing south side. [தெற்கு + வாசல்] |
தெற்கோட்டம் | தெற்கோட்டம் teṟāṭṭam, பெ. (n.) கருக்கொண்ட மேகத்தின் தென்திசை நோக்கய ஒட்டம்; southern passage of the rain clouds. [தெற்கு + ஒட்டம்] |
தெற்பை | தெற்பை terpai. பெ. (n.) தருப்பை (யாழ்அக.); பார்க்க;see taruppai. [தருப்பை → தெற்பை] |
தெற்றல் | தெற்றல்1 terral, பெ. (n.) மாறுபாடு உடையவன்; perverse person. “தெற்றலாகிய தென்னிலங்கைக் கிறைவன்” (தேவா. 680, 8);. [தெள் → தெற்று → தெற்றல்] தெற்றல்2 terral, பெ. (n.) அறிவில் தெள்ளியவன்; clear sighted person. “இணைமரு திற்றுவீழ் நடைகற்ற தெற்றல்” (திவ். பெரியதி. 11, 4, 9);. |
தெற்றி | தெற்றி teṟṟi, பெ.(n.) மகளிர் விளையாட்டு (புறம்-53);; a game of young women. [தெற்று+இ] தெற்றி1 terri, பெ. (n.) 1. திண்ணை; raised verandal. “இலங்குவளை மகளிர் தெற்றியாடும்” (புறநா. 53);. 2. மாடம் (பிங்.);; mansion, palace. 3. மேட்டிடம்; elevated ground, mound. “புற்றுந்தெற்றியும் சாடும்” (தெக தொ. iii,410);. 4 தெற்றி யம்பலம் (நிகண்டு); பார்க்க;see terri-y-ambalam. தெற்றி2 terri, பெ. (n.) மரவகை; a tree. “தெற்றியுலறினும் வயலை வாடினும்” (அகநா. 259);. தெற்றி3 terri, பெ. (n.) பழிபளகு விளைப்பவன்; one who brings ruin or disgrace. “தெற்றியுமாய் நின்றான் றெரிந்து” (பாரதவெண். 193);. [தெற்று → தெற்றி] |
தெற்றிக்கால் | தெற்றிக்கால் teṟṟikkāl, பெ. (n.) தெற்றுக்கால் (இ.வ.); பார்க்க;see__, [தெற்றுக்கால் → தெற்றிக்கால்] |
தெற்றிக்காளை | தெற்றிக்காளை teṟṟikkāḷai, பெ. (n.) பின்னங்கால் முட்டியிடும் காளை; knack kneed bull. “தெற்றிக்காளை கழுத்தால் நெரிக்கச் சிதைந்து போன” (பறாளை. பள்ளு);. [தெற்றி + காளை] |
தெற்றியம்பலம் | தெற்றியம்பலம் terri-y-ambalam, பெ. (n.) மேட்டிடமாக அமைந்த சித்திரக்கூடம் (பிங்.);; raised hall in a place or temple. [தெற்றி + அம்பலம்] |
தெற்றியிலக்கை | தெற்றியிலக்கை terri-y-ilakkai, பெ. (n.) ஊர்ப் பொதுவிலொரு பகுதியை மேட்டிடமாகச் செய்து பயன்படுத்துவோர் செலுத்தும் வரி; tax paid by the people, who use the common elevated land in the village. [தெற்றி + இலக்கை] |
தெற்றிவீழ்த்து-தல் | தெற்றிவீழ்த்து-தல் deṟṟivīḻddudal, 5 செ.குன்றாவி. (v.t.) தட்டி விழச் செய்தல் (வின்.);; to trip, cause to stumble. [தெற்றி + வீழ்த்து-.] |
தெற்று | தெற்று1 deṟṟudal, 5.செ.கு.வி (v.i.) 1. இடறுதல்; to stumble. “தெற்றுகாலின ரோடினர்” (உபதேசகா. சிவவிரத. 139);. 2. தடைப்படுதல்; to be obstructed, hindered. “இல்வாழ்க்கை யென்னு மியல்புடை வான்சகடஞ் செல்லாது தெற்றிற்று நின்று (அறநெறி. 158, பக். 39); (யாழ். அக.);. 3. மாறுபடுதல் (சூடா.);; to be perverse, obstinate. 4. பிழை செய்தல்; to mistake, commit a fault, do wrong. “தெற்றினார் புரங்கள் செற்றார்” (பெரியபு. திருநீலகண்ட. 3);. 5. முறுக்கிக் கொள்ளுதல்; to become intertwined. “தெற்றுகொடி முல்லையொடு” (தேவா.622,6);. 6. இகலுதல்; to quarrel.’சுமவாது மருட்டி யெங்குந் தெற்றிய விவனையோமுன் றெரிப்ப தின்று’ (திருவாலவா. 30, 23);. 7. வாய் கொன்னுதல், to stammer in speaking, stutter. 8. செறிதல்; to throng, to be dense, crowded. “கற்றவர் தெற்றிவர” (திவ். பெரியாழ். 1, 5, 8);. ம. தெற்றுக; க. தெத்து;தெ. தொற்றுபடு. [தெள் → தென் → தெற்று] தெற்று2 deṟṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. மோதுதல்; to beat, strike. “தெற்று வெண்டிரைச் சரையு” (உபதேசகா. சிவநாம. 135);. 2. அலைத்தல்; to disturb, shake. “தோரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்க” (தேவா. 46, 8);. 3. தடுத்தல்; to obstruct, hinder. “பிணப் பெருங் குன்றந் தெற்றி” (கம்பரா. சம்புமாலி. 19);. 4. மாற்றுதல்; to change. “இது சந்திரன் தொழிலைத் தெற்றினமையால் தெற்றுருவகம்” (வீரசோ. அலங். 18, உரை);. 5. பல்லைக்கடித்தல்; to gnash, grind, as the teeth. “தெற்றின ரெயிறுகள்” (கம்பரா. கரன். 104);. 6. பின்னுதல்; to braid, plait entwine, weave. “குடம்பைநூ றெற்றி” (கல்லா. கணபதிதுதி);. 7. தொடுத்தல்; to Bring up, tie together. “ஆய்பூந் தட்டத் தகத்தோடு தெற்றிய தாமம்” (பெருங். வத்தவ. 7,26);. 8. இறுக்குதல் (யாழ்அக.);; to tighten [தெள் → தென் → தெற்று] தெற்று3 teṟṟu, பெ. (n.) 1. பின்னுகை; entwining. 2. இடறுகை; tripping. 3. வேலியடைப்பு (யாழ்அக);; hedge of thorns protecting a passage. 4. செறிவு; denseness. “தெற்றார் சடைமுடியான்” (திருவாச. 34, 5);.. 5. மாறுபாடு (பிங்.);; perversity. 6. தவறு (நாஞ்.);; mistake, wrong. ம. தெற்று; க. தட்டு; தெ. தொட்டு;து. தண்டுணி தெற்று4 teṟṟu, பெ. (n.) தேற்றம் (வின்.);; certainty, ascertainment, assurance, persuasion, confidence. [தேற்று → தெற்று] |
தெற்றுக்காலன் | தெற்றுக்காலன் teṟṟukkālaṉ, பெ. (n.) முட்டிக்காலுள்ளவன்-து; knock-kneed person or animal. [தெற்றுக்கால் → தெற்றுக்காலன்] |
தெற்றுக்கால் | தெற்றுக்கால் teṟṟukkāl, பெ. (n.) 1. முட்டிக் கால்; knocking knee. 2. முட்டிக் காலுள்ளவன்-ள்-து; knock-kneed person or animal. [தெற்றுக் + கால்] |
தெற்றுப்பல் | தெற்றுப்பல் teṟṟuppal, பெ. (n.) 1. ஒன்றோ டொன்று பின்னியிருக்கும் பல்; snagged tooth. 2. மிகையான பல்; supernumerary tooth. [தெற்று + பல்] |
தெற்றுப்பல்லன் | தெற்றுப்பல்லன் teṟṟuppallaṉ, பெ. (n.) பின்னற் பல்லுள்ளவன்; a person with snagged teeth. [தெற்று + பல்லன்] |
தெற்றுப்பல்லி | தெற்றுப்பல்லி1 teṟṟuppalli, பெ. (n.) பின்னற் பல்லுள்ளவள்; a woman with snagged teeth. [தெற்று + பல்லி] தெற்றுப்பல்லி2 teṟṟuppalli, பெ. (n.) தீச்சொல்லுடையவள்; a woman of evil tongue (செஅக.);. [தெற்று + பல்லி. தெற்று = கோணல், நேர்மைக்கு மாறானது] |
தெற்றுமாற்று | தெற்றுமாற்று teṟṟumāṟṟu, பெ. (n.) ஏமாற்று (வின்.);; tricks, shifts, deception. |
தெற்றுருவகம் | தெற்றுருவகம் teṟṟuruvagam, பெ. (n.) அணியிலக்கண வகை; a kind of rhetoric. எஞ்சிய பண்பி லியையினு மொழிதொழில் செஞ்சொலாற் கிளப்பது தெற்றுரு வகமே (வீரசோ. பக்.234);. எ-டு. “தாமரையைக் குவியாது தாட்குமுத மலர்த்தாது தீமை செயும் என்னுயிர்க்குன் றிருமுகமாந் திங்களே” இச்செய்யுளில் நிலவின் தொழிலைத் தெற்றினமையால் தெற்றுருவகம். [தெற்று + உருவகம்] |
தெற்றுரை | தெற்றுரை teṟṟurai, பெ. (n.) மாறுபடுமொழி; inconsistent speech. “தெற்றுரை செய்து தியக்கமுற்று” (பிரபோதசந். 11,19);. [தெற்று + உரை] |
தெற்றுவமை | தெற்றுவமை teṟṟuvamai, பெ. (n.) அணியிலக்கண வகை; a kind of rhetoric. பொருள்போ லமைந்த பொருவிது வென்னு மரபொடு தெற்றி வருவது தெற்றே (வீரசோ. பக்.224);. எ-டு;நின்முகம்போல மலர்ந்த தரவிந்த மன்னமே பாரா யது. இதில் தெற்ற உவமித்தலால் தெற்றுவமை |
தெற்றுவாசல் | தெற்றுவாசல் teṟṟuvācal, பெ. (n.) திட்டி வாசல்; wicket. “பல தெற்றுவாசல்களையுடைய அரிய கோபுர வாயிலை ஐயுறாமற் புகுவீர்” (மலைபடு. 490, உரை);. [தெற்று + வாசல்] |
தெற்றுவாய் | தெற்றுவாய் teṟṟuvāy, பெ. (n.) திக்குவாய்; stammering. [தெற்று + வாய்] |
தெற்றென | தெற்றென teṟṟeṉa, கு.வி.எ. (adv.) 1. விரைவாக; speedily, hastily. “தெற்றெனச் செலவுகடைக் கூட்டுதிராயின்” (பொருந. 174);. 2. உடனே; forthwith, immediately. “அகல்யா றகழ்ந்தக்காற், றெற்றெனத் தண்ணீர் படும்” (நாவடி, 150);. 3. தெளிவாக; clearly. “யானுந் தெற்றென உணரேன்” (அகநா. 58);. ம. தெற்றன. தெற்றென [தெற்று + என] |
தெற்றெனவு | தெற்றெனவு teṟṟeṉavu, பெ. (n.) 1. தெளிவு; certainty, clearness. “தெற்றென வில்லார் தொழில்” (திரிகடு. 54);. 2. வெட்கமின்மை; immodesty. “சோற்றை முன்னிருந்து முற்றத்தான் துற்றிய தெற்றெனவும்” (திவ்.இயற். பெரியதிரு. 141);. [தெற்று + எனவு] |
தெற்றென்(னு)-தல் | தெற்றென்(னு)-தல் deṟṟeṉṉudal, 5 செ.குன்றாவி. (v.t.) தெளிதல்; to discern, conclude. “தெற்றென்க மன்னவன்கண்” (குறன்,581);. |
தெலகு-தல் | தெலகு-தல் delagudal, செ.கு.வி. (v.i.) விலகுதல்; move, get-away: [துலகு-திலகு] |
தெலக்கம் | தெலக்கம் telakkam, பெ.(n.) விலக்கம்; removal, giving space in between. [திலக்கு-தெலக்கம்] |
தெலக்கம்வை-த்தல் | தெலக்கம்வை-த்தல் telakkamvaittal, செ.குவி (v.i.) மரம் அறுக்கும் வாளின் பல் வரிசையில் ஒன்றின் கூர்மை இடசாய்வாகவும் அடுத்த பல்லின் கூர்மை வலசாய்வாகவும் வைக்கப்படும் விலக்கம்; shaping the filing system ITBSBW. |
தெலக்கு-தல் | தெலக்கு-தல் delakkudal, செ.குன்றாவி..(vt.) வழியில் நிற்கும் ஒருவரை ஒதுக்குதல்; to make way by clearing the tresspassers on the road. [தில-தெல-தெலக்கம்] |
தெலிங்கம் | தெலிங்கம் teliṅgam, பெ. (n.) தெலுங்கம் பார்க்க;see__, “தெலிங்கங் கலிங்கம் வங்கம்” (நன். 272, மயிலை);. [தெனுகு → தெலுகு → தெலுங்கு → தெலிங்கம்] |
தெலுகு | தெலுகு telugu, பெ. (n.) தெலுங்கம் பார்க்க;see__, [தெனுகு → தெலுகு] |
தெலுங்கன் | தெலுங்கன் teluṅgaṉ, பெ. (n.) தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவன்; Telugu man. “திகைத்து நின்றேந் தெலுங்கரேம்” (கலிங். 456);. [தெலுங்கு + அன்] |
தெலுங்கம் | தெலுங்கம் teluṅgam, பெ. (n.) 1. தெலுங்கு நாடு; Telugu country. 2. தமிழியக் குடும்ப மொழிகளுள் ஒன்றான தெலுங்கு மொழி; one of the Dravidian language, the Telugu language. [தெலுங்கு + அம்] |
தெலுங்கு | தெலுங்கு teluṅgu, பெ. (n.) ஆந்திரநாட்டு மொழி; language of Andra Pradesh. கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் (மனோன்மணீயம்);. மறுவ. வடுகு, ஆந்திரம் [தெனுகு → தெலுகு → தெலுங்கு] தென்னிந்தியாவில், கிழக்கே கடற்கரை யொட்டிப் பழவேற்காட்டிலிருந்து சிக்காக் கோல் வரைக்கும், மேற்கே மராட்டிய மைசூர்ச் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், ‘கொடுக்கப்பட்ட கோட்டங்கள்’ (ceded districts); கர்நூல், ஐதராபாத்துச் சீமையின் பெரும்பகுதி நாகபுர நாட்டின் ஒரு பகுதி கோண்டுவனம் ஆகிய இடங்களில் பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது தெலுங்கு. தெலுங்கிற்கு வடுகு, ஆந்திரம் என்னும் பெயர்களுண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது;வடுகு என்பது தமிழராலும், ஆந்திரம் என்பது ஆயராலும் இடப்பட்டன. தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கில் வழங்குவதால் வடுகு எனப்பட்டது. தெலுங்கு என்பதன் பண்டை வடிவம் திரிலிங்கம். தெலுங்கு என்னும் பெயர் தெலிங்க, தைலிங்க, தெலுகு, தெனுங்கு, தெனுகு என்னும் வடிவங்களிலும் தெலுங்கர்க்குள் வழங்கி வருகின்றது. இவற்றுள் தெனுகு என்னும் வடிவத்தைச் சிறந்ததாகக் கொண்டு அதற்குத் ‘தேன் போன்றது’ என்னும் பொருள் கற்பிப்பது தெலுங்குப் பண்டிதர் வழக்கம் (தி.தா.81-82);. |
தெலுங்குக்கட்டு | தெலுங்குக்கட்டு teluṅgukkaṭṭu, பெ. (n.) மாம்பழக் கட்டு என்னும் புடைவையணியும் வகை; a mode of wearing the saree. [தெலுங்கு + கட்டு] |
தெலுங்குச்சிற்றாடை | தெலுங்குச்சிற்றாடை teluṅgucciṟṟāṭai, பெ. (n.) தெலுங்குக்கட்டு பார்க்க;see__, [தெலுங்கு + சிற்றாடை] |
தெலுங்குச்செட்டி | தெலுங்குச்செட்டி teluṅgucceṭṭi, பெ. (n.) 1. தெலுங்கு மொழி பேசும் செட்டி இனம்; telugu caste. 2. சலுப்பான்; a trading caste speaking Telugu. [தெலுங்கு + செட்டி] |
தெல் | தெல்1 tel, பெ. (n.) தெல்லு பார்க்க;see tellu (செஅக.);. தெல்2 tel, பெ. (n.) அஞ்சல்; post. தெல்3 tel, பெ. (n.) தெல்லாட்டு பார்க்க;see__, |
தெல்லடி | தெல்லடி1 tellaḍittal, 4 செ.கு.வி. (v.i.) தெல் விளையாடுதல்; to play at the game of tel. [தெல்’ + அடி-.] தெல்லடி2 tellaḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) வஞ்சனை செய்தல்; the practice fraud. ‘தெல்லடித்துப் புலவரெனத் திரியலாமே” (தமிழ்நா. 230);. [தெல் + அடி-.] |
தெல்லாட்டம் | தெல்லாட்டம் tellāṭṭam, பெ. (n.) 1. தெல்லு பார்க்க;see tellu. 2. வஞ்சனை; fraud, trick, deception. [தெருள் + ஆட்டம் – தெருளாட்டம் தெல்லாட்டம்] |
தெல்லாட்டு | தெல்லாட்டு tellāṭṭu, பெ. (n.) விளையாட்டு வகை; a kind of play. [சில் → தெல் + ஆட்டு] கோலியும் தெல்லும் கருவி வகையாலன்றி ஆட்டு வகையால் ஏறத்தாழ ஒன்றே. கோலிக்குப் பதிலாய்த் தெல்லுக்காயைப் பயன்படுத்துவதே தெல்லாட்டு, ஆயினும், கருவி வேறுபாட்டிற்குத் தக்கபடி தெறிக்கும் வகையும் வேறுபட்டதாம். இடக்கைச் சுட்டுவிரற்கும் பெருவிரற்கும் இடையில் இடுக்குவது இருகருவிக்கும் பொதுவெனினும், வலக்கைச் சுட்டுவிரலால் தெறிப்பது கோலிக்கும், வலக்கை நடுவிரலால் தெறிப்பது தெல்லிற்கும் சிறப்பாம். சிலர் வலக்கை மோதிர விரலைத் தெல்லிற்குப் பயன்படுத்துவர். கோலியைத் தெறிக்கும்போது வலக்கை யகங்கை முன்னோக்கி நிற்கும்;தெல்லைத் தெறிக்கும்போது அது மேனோக்கி நிற்கும். |
தெல்லி | தெல்லி telli, பெ. (n.) 1. மீன்பிடித்து இடுவதற்கான சிறுகூடை; angler’s basket. 2. சிறுவயல்; a small field. |
தெல்லு | தெல்லு tellu, பெ. (n.) 1. தெல்லுக்காய்; the disclike seed of a plant, used in a game. ‘தெல்லுக்கரகங் கோங்கரும்பு (உவமான சங்கிரகம், 11);. 2. விளையாட்டு வகை; a game with a small disc-like seed of a plant. 3. வழிச்செல்லும் ஒரு நிலையில், பல்லக்குத் தூக்குபவர்கள் தோள் மாற்றும் அஞ்சலிடம் (யாழ்அக.);; stage in a journey by palanquin; place of changing palanquin-bearers. 4. நெடும்பாத்தி; oblong plots bounded by small ridge of a field. 5. ஒரு வகைக்கொடி; a climber. 6. நெடுங்கிடங்கு (யாழ்.அக);; long pil. [தென் → தெல்லு] |
தெல்லுக்கட்டு-தல் | தெல்லுக்கட்டு-தல் dellukkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. இழுபறிப்படதல்; to be pushed this way and that, to be distracted. 2. பாத்தி கட்டுதல்; to put up ridges, as in a field. [தெல்லு + கட்டு-.] |
தெல்லுக்காய் | தெல்லுக்காய் tellukkāy, பெ.(n.) தெல்லுக்காய் கொண்டு ஒளிந்து விளையாடுதல்; a hide and seek game. [தெல்லு-காய்] தெல்லுக்காய் tellukkāy, பெ. (n.) தெல் மரத்தின் காய்; the seed of ‘tel’ tree. தெல்லுக்காய் தெறித்தல் பாண்டி நாட்டு விளையாட்டு. [தெல்லு + காய்] |
தெல்லுக்காரர் | தெல்லுக்காரர்1 tellukkārar, பெ. (n.) மாற்றுச் சிலிகையாளர் (யாழ்ப்.);; relay of bearers fora palanquin. [தெல்லு + காரர்] தெல்லுக்காரர்2 tellukkārar, பெ. (n.) அஞ்சற்காரர்; postman. [தெவ்லு + காரர்] |
தெல்லுக்கொடி | தெல்லுக்கொடி tellukkoḍi, பெ. (n.) தெல்லு பார்க்க;see tellu (சாஅக.);. [தெல்லு + கொடி] |
தெல்லுப்பு | தெல்லுப்பு telluppu, பெ. (n.) வளையலுப்பு; white medicinal salt. |
தெல்லோட்டு | தெல்லோட்டு tellōṭṭu, பெ. (n.) ஓய்வில்லாத அலைக்கழிப்பு; continual teasing, pressing or harassing. [தென் + ஓட்டு] |
தெள | தெள teḷa, ‘த்’ என்ற மெய்யும் ‘ஒள’ என்ற உயிரும் கூடிய உயிர்மெய்க் கூட்டெழுத்து; the compound of t and au. |
தெளட்டியம் | தெளட்டியம் teḷaṭṭiyam, பெ. (n.) தீச்செயல் (உ.வ.);; mischievousness. [Skt. {} → த. தௌஷ்டியம்] |
தெளதிகம் | தெளதிகம் deḷadigam, பெ. (n.) முத்து (மூ.அ.);; pearis. [Skt. tautika → த. தௌதிகம்] |
தெளத்தியம் | தெளத்தியம்1 teḷattiyam, பெ. (n.) 1. தூது; message, mission. 2. ஒருத்தியைக் கூட்டிவிடுகை; pimping pandering. [Skt. dautya → த. தௌத்தியம்] தெளத்தியம்2 teḷattiyam, பெ. (n.) போற்றி, புகழ் (யாழ்.அக.);; praise. [Skt. stauya → த. தெளத்தியம்] |
தெளமியன் | தெளமியன் teḷamiyaṉ, பெ. (n.) பாண்டவர் கரணக் குரு (புரோகிதன்);; the priest of the {}. “தெளமியமுனியைக் கண்டு” (பாரத.திரெளபதி.9);. [Skt. dhaumya → த. தெளமியன்] |
தெளர்ப்பல்லியம் | தெளர்ப்பல்லியம் teḷarppalliyam, பெ. (n.) வலுவின்மை; weakness of mind or body. [Skt. daurbalya → த. தெளர்ப்பல்லியம்] |
தெளலேயம் | தெளலேயம் teḷalēyam, பெ. (n.) ஆமை (மூ.அ.);; turtle. [p] |
தெளவல் | தெளவல்1 teḷaval, பெ. (n.) கேடு (அக.நி.);. ruin, destruction (செ.அக.);. [தவ்வு → தௌவல்] தெளவல்2 teḷaval, பெ. (n.) 1. இளம் பருவம்; young age. 2. கெடுதல்; destroy. [தாவு → தவ்வு → தௌவல்] தெளவல்3 teḷaval, பெ. (n.) குந்தி நடத்தல்; stumble while walking. [தாவு → தௌவல்] |
தெளவாரிகன் | தெளவாரிகன் teḷavārigaṉ, பெ. (n.) வாயில் காப்போன் (சங்.அக.);; doorkeeper. [Skt. {} → த. தௌவாரிகன்] |
தெளி | தெளி teḷi, பெ.(n.) விழுப்புரம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Villupuram Taluk. [தளி-தெளி] தெளி1 deḷidal, 3 செ.கு.வி. (v.i.) 1. கசடு நீக்கித் தெளிவுறல்; to clear from a sediment. 2. நோயினின்று குணமடைதல்; to recover from illness. 3. மூர்ச்கை தெளிதல், to regain consciousness. 4. ஒன்றையே சிந்தித்தல்; to ponder, ruminate on only one thing. 5. துளைத்தல்; to pierce, perforate. 6. தானே அறிதல்; to know or experience one self. ம..தெளியுக;க.திளி;தெ. தெலி;து. தெலியுனி தெளி2 deḷidal, 3. செ.கு.வி. (v.i.) 1. தெளிவாதல்; to become clear, limpid, transparent, as water by the settling of sediment. 2. அமைதியுறுதல்; to become screne, as the mind. “தெளியா நோக்க முள்ளினை” (அகநா. 33);. 3. ஒளிர்தல்; to be bright, as the countenance. 4. வெண்மையாதல்; to become white, as cloths by washing. 5. ஒழிதல்; to clear away, disappear, as famine, as an epidemic ‘வற்கடந் தெளிந்தது’. 6. ஐயநீங்குதல்; to clear up, as doubt; to become evident, obvious, as the meaning of a passage. பேராசிரியரின் விளக்கம் கேட்டபின் தெளிந்தது. 7. முடிவுக்கு வருதல்; to come to a conclusion. 8. குணப்படுதல்; to be cured, as disease. “நோய் தெளிந்துவிட்டது”. 9. செழித்தல்; to grow stout, fat, sleek, as persons or animals; to thrive, as vegetation. ‘ஆள் இப்போது தெளிந்திருக்கிறான்’. 10. மேல்வரும்படி காணுதல்; to turn out, as clear profit; to accrue, as gain; to be a clear gain after allowing for all expenses. தெளி3 deḷidal, 2 செ.குன்றாவி. (v.t.) 1. ஆராய்தல்; to consider, investigate. 2. அறிதல்; to know, understand, perceive,experience. “பிரியலேத் தெளிமே” (குறுந். 273);. 3. நம்புதல்; to trust, confide in. “தெளியாதான் கூரையுட் பல்காலுஞ் சேறலும்” (திரிகடு. 11);. 4. துளைத்தல் (வின்.);; to pierce, perforate. [தெள் → தெளி] ஆராய்ச்சியால் ஐயம் நீங்கித் தெளிவு பிறக்கும். அதன்பின் தெளியப்பட்டதன் மீது நம்பிக்கையுண்டாகும். அதனால் ஒரு வினை முயற்சிக்கு உறுதியான தீர்மானஞ் செய்யப் பெறும். தெளி4 teḷittal, 2 செ.குன்றாவி. (v.t.) 1. துப்புரவாக்குதல்; to clear, free, as from turbid or feculent matter; to clarify, refine, clean. 2. தெளிவித்தல்; to make known, affirm clearly, cause to believe. “தெளித்தசொற் றேறியார்க் குண்டோ தவறு” (குறள், 1154);. 3. ஊடலுணர்த்துதல்; to pacify, make up, as a love-quarrel. “பரிந்தோட் குறுகி யிரத்தலுந் தெளித்தலும்” (தொல். பொருள். 41);. 4. வெளிப்படுத்துதல்; to make, manifest, reveal. 5. உறுதி செய்தல் (யாழ். அக.);; to determine. 6. தூவுதல்; to strew scatter, sprinkle, as water. “நறுவிரை தெளித்த நாறினர்மாலை” (அகநா. 126);. 7. விதைத்தல்; to sow, as seed. 8. கொழித்தல் (வின்.);; to cast up in sifting, as sand, as pearls. 9. புடைத்தல் (வின்.);; to winnow, separate large from small particles by a fan. 10. சாறுவடித்தல்; to extract the essence. “திருக்கொண் மாங்கனி தெளித்த தேறலின்” (சீவக. 2402);. 11. உருக்கியோட வைத்தல்; to mell, as in refining gold. “தெளித்த செம்பொற் சுண்ணம்” (சீவக. 1956);. 12. நீக்குதல்; to dispel, as fear, sorrow, delirium. [துளித்தல் = துளி விழுதல் (தன்வினை);;துளிகனைச் சிந்துதல், தெளித்தல், தெறித்தல், இறைத்தல், சித்துதல் (பிற வினை.);. துளி → தெளி. தெளித்தல் = துளி துளியாய்ச் சிந்துதல், மலர், அரிசி முதலியவற்றைச் சிற்றனவாய்த் தூவுதல் (முதா. 52);] தெளி5 teḷittal, 3 செ.கு.வி. (v.i.) சூளுறுதல்; to take an oath. “தீதிலேமென்று தெளிப்பவும்” (கலித். 81, 33);. தெளி6 teḷi, பெ. (n.) 1. தெளிவு; clearness. “தெளி கொண்ட வெங்கள்” (பு.வெ. 1, 15);. 2. சாறு; juice, essence. “கரும்பின் தெளி” (தேவா. 280); 3. ஒளி; light. “தெளிவளர் வான்சிலை” (திருக்கோ. 16, உரை);. தெளி7 teḷi, பெ. (n.) விதைப்பு; sowing, as of seeds in a field. “நடவுக்குத் தெளி நாலத் தொன்று” (தஞ்சை.);. தெளி8 teḷi, பெ. (n.) புல்லூரி; a parasitic plant (சா. அக.);. |
தெளிச்சல் | தெளிச்சல் teḷiccal, பெ. (n.) உடலின் பூரிப்பு; healthy appearance, plumpness. ‘வேலையான பிறகு அவனுக்கு உடலில் தெளிச்சல் காணுகிறது’ (நாஞ்.);. [தெளி → தெளிச்சல்] |
தெளிஞன் | தெளிஞன் teḷiñaṉ, பெ. (n.) அறிஞன் (வின்.);; learned, wise man, sage (செஅக.);. [தெளி → தெவிஞன்] |
தெளிதேன் | தெளிதேன் teḷitēṉ, பெ. (n.) தூயதேன்; pure honey, “பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான் தருவேன்” (ஒளவையார்);. |
தெளித்துவார்-த்தல் | தெளித்துவார்-த்தல் teḷittuvārttal, 4 செ.குன்றாவி. (v.t.) தெளிந்ததை ஒன்றினின்று மற்றொன்றில் ஊற்றுதல்; to pour off gently from one vessel to another, to decant (சா.அக.);. [தெளித்து + வார்-.] |
தெளிநீர் | தெளிநீர்1 teḷinīr, பெ. (n.) 1. தெளிவடைந்த நீர்; cleared liquid or water. 2. தூயநீர்; pure water. 3. பனி நீர்; dew water. 4. வாலை நீர்; distilled water (சா. அக.);. [தெளி + நீர்] தெளிநீர்2 teḷinīr, பெ. (n.) ஒரு பண்டத்தைக் கரைத்துத் தெளிய வைத்து வடித்த நீர் clear solution. [தெளி + நீர்] |
தெளிந்த வலை | தெளிந்த வலை teḷindavalai, பெ.(n.) அகலமானகண்கள் உள்ளவலை; a net with large holes [தெளி-தெளிந்த+வலை] |
தெளிந்தகுரல் | தெளிந்தகுரல் teḷindagural, பெ. (n.) அடைப்பில்லாத குரலொலி; clear voice (சா.அக.);. [தெளி + குரல்] |
தெளிந்தநீர் | தெளிந்தநீர் teḷindanīr, பெ. (n.) 1. முட்டை நீர்; albumen. 2. மழைநீர்; rain water. 3. தெளி நீர்; clear water. 4. பனிக்குடத்து நீர்; amniotic fluid (சா. அக.);. [தெளி + நீர்] |
தெளிந்தபுத்தி | தெளிந்தபுத்தி teḷindabutti, பெ. (n.) தெளிந்தவறிவு பார்க்க;see__, [தெளித்த + புத்தி] Skt. buddhi → த. புத்தி |
தெளிந்தவறிவு | தெளிந்தவறிவு teḷindavaṟivu, பெ. (n.) பகுத்தறிவு, நுண்ணறிவு; mature understanding, clear intellect, discernment, profound wisdom. [தெளித்த + அறிவு] |
தெளிந்தவலை | தெளிந்தவலை teḷindavalai, பெ. (n.) பெரும் வலைக் கண்களுடைய மீன்பிடி வலை; a fishing net with large holes, |
தெளிந்துகொடு-த்தல் | தெளிந்துகொடு-த்தல் teḷindugoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) சூளுரைத்தலால் ஐயம் நீக்குதல்; to remove doubt, as by an oath. [தெளித்து + கொதி-.] |
தெளிந்துவரு-தல் | தெளிந்துவரு-தல் deḷinduvarudal, 3 செ.கு.வி (vi.) 1. நோய் குணமடைதல்; to progress from illness showing improvinent. 2. நீர் தெளிவாகுதல்; to become clear as water. 3. மயக்கந்தெளிதல்; to recover gradually from giddiness (சாஅக.);. [தெளித்து + வரு-.] |
தெளிப்பு | தெளிப்பு teḷippu, பெ. (n.) 1. தூய்மை செய்கை; clearing, clarification, refinement, purification. 2. கொழிக்கை; separating grains on a winnowing fan. 3. வடிக்கை; straining off;decanting. 4. தூவுகை; sprinkling, scattering, strewing. 5. விதைப்பு; sowing of seeds [தெளி → தெளிப்பு] |
தெளிப்புத்திரவம் | தெளிப்புத்திரவம் teḷipputtiravam, பெ. (n.) தெளிப்புநீர்மம் பார்க்க;see__, [தெளிப்பு + திரவம்] Skt. drava →த. திரவம் |
தெளிப்புநீர்ப்பாசனம் | தெளிப்புநீர்ப்பாசனம் teḷippunīrppācaṉam, பெ. (n.) குழாய் மூலம் வரும் நீரைப் பீய்ச்சி அடிக்கும் கருவி மூலம் சிதறச் செய்து பயிரின் அடிப்பகுதி நனையும்படிச் செய்யும் பாசனமுறை; sprinkling irrigation. |
தெளிப்புநீர்மம் | தெளிப்புநீர்மம் teḷippunīrmam, பெ. (n.) எண்ணெய்கள், துப்புரவு நீர்மங்கள், வண்ணங்கள் உட்பட மெருகேற்றுவதற்குப் பயன்படும் நீர்மப்பொருள்கள்; spraying liquid. [தெளிப்பு + நீர்மம்] |
தெளிமணி | தெளிமணி teḷimaṇi, பெ. (n.) தூமணி (யாழ்அக.);; a gem of purest ray. [தெளி + மணி] |
தெளிய | தெளிய teḷiya, வி.எ. (adv.) தெளிவாக; clearly, distinctly, evidently, obviously. [தெளி + தெளிய] |
தெளியக்கடை-தல் | தெளியக்கடை-தல் deḷiyakkaḍaidal, 2 செ.குன்றாவி. (v.t.) சிக்கனமாயிருத்தல்; to thrift. [தெளிய + கடை-.] |
தெளியக்காண்-த(ட)ல் | தெளியக்காண்-த(ட)ல் teḷiyakkāṇtaḍal, 3 செ.குன்றாவி. (v.i.) 1. விளக்கமாய்ப் பார்த்தல்; to see distinctly and clearly. 2. ஐயமுற அறிதல்; to know or understand without any doubt. 3. முற்றமுணர்தல்; to have complete knowledge of a thing. 4. அறிவு தெளிவானதால் காணும் காட்சி; to have divine vision through intellectual advancement (சாஅக.);. [தெளிய + காண்] |
தெளியவயம் | தெளியவயம் teḷiyavayam, பெ. (n.) அனைத்துக் கரைப்பான் (சர்வத் திராவகம்);; universal solvent (சாஅக.);. |
தெளியவை-த்தல் | தெளியவை-த்தல் teḷiyavaittal, 4 செ.குன்றாவி. (v.t.) தெளியும்படி அசையாமலிருக்கச் செய்தல்; to set or allow to settle without disturbing, to become free from dregs by their sinking to the bottom. 2. ஐயம் தெளியும்படிச் செய்தல்; to change from a disturbed or troubled condition of mind to one of tranquility by clearing all doubts (சாஅக.);. [தெளிய + வை-.] |
தெளியாநோக்கம் | தெளியாநோக்கம் teḷiyānōkkam, பெ. (n.) வெருவின பார்வை; timid look. “மழைக்கண் டெளியா நோக்க முள்ளினை” (அகநா. 33);. [தெளி + ஆ + நோக்கம். ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தெளியாப்பினி | தெளியாப்பினி teḷiyāppiṉi, பெ. (n.) தீராத நோய்; incurable disease (செஅக.);. [தெளி + ஆ + பிணி. ‘ஆ’ எதிர்மறை இடைநிலை] |
தெளிரல் | தெளிரல் teḷiral, பெ. (n.) எடுத்தலோசை (பிங்);; loud sound, high pitch. |
தெளிர் | தெளிர்1 teḷirtal, செ.கு.வி. (v.i.) ஒளி பெறுதல்; to shine, sparkle. “வண்ணந் தெளிர” (பரிபா. 10, 55);. தெளிர்2 teḷirttal, 2 செ.கு.வி (v.i.) 1. ஒலித்தல்; to sound, articulate. “இலங்குவளை தெளிர்ப்பவலவ னாட்டி” (ஐங்குறு. 197);. 2. செழித்தல்; to be fertile. “வறந்த ஞாலத் தெளிர்ப்ப வீசி” (ஐங்குறு.452);. 3. மகிழ்ச்சியுறுதல்; to be happy. “சேயிழை தெளிர்ப்பக் கவைஇ” (அகநா.51);. தெளிர்3 teḷir, பெ. (n.) யாழின் உள்ளோசை (திவா.);; vibrating sound of a lute. |
தெளிர்தல் | தெளிர்தல்4 teḷirtal, பெ. (n.) 1. பேசுவதால் எழும்பும் ஒலி, sound raised by speaking. 2. பொருந்துதல்; become fit. |
தெளிவருடம் | தெளிவருடம் teḷivaruḍam, பெ. (n.) இலவங்கப் பத்திரி; leaf of wild cinnamon or cinnamon leaf (சாஅக.);. |
தெளிவாக்கு-தல் | தெளிவாக்கு-தல் deḷivākkudal, 5 செ.குன்றாவி. (v.t.) தூயதாக்குதல்; to purify from feculant matter, to clarify, to make clear. [தெளிவு + ஆக்கு-.] |
தெளிவாஞ்சேறு | தெளிவாஞ்சேறு teḷivāñjēṟu, பெ. (n.) கடலடிச் சேற்றில் ஒரு வகை; kind of mud lie under the sea (மீனவ.);. |
தெளிவாள் | தெளிவாள் teḷivāḷ, பெ. (n.) கூர்வாள்; sharp sword. “இவ் வவிவேகத்தை யறுக்கைக்குத் தெளிவாளாயிருப்பது ஏற்றச் சுருக்கமறத் தன்ன ளவிலுண்டான தெளிவு” (ரஹஸ்ய. 602);. [தெவி + வாள்] |
தெளிவி-த்தல் | தெளிவி-த்தல் teḷivittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. அறிவித்தல்; to announce. 2. தெரியப் பண்ணுதல்; to make one to understand. 3. விளக்கதல்; to explain. [தெளி → தெளிவி. ‘வி’ பிறவினையீறு] தெளிவி-த்தல் teḷivittal, 4 செ.குன்றாவி. (v.t.) அமைதி(சாந்த);ப்படுத்துதல்; to calm down. “பகவானோடு எதிரம்பு கோத்த உருத்திரனை ப்ரஹ்மா தெளிவித்து விலக்க” (ரஹஸ்ய. 609);. |
தெளிவிறு-த்தல் | தெளிவிறு-த்தல் teḷiviṟuttal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. தெளிந்த நீரை வண்டலினின்று வடித்துக் கொள்ளுதல்; to filter or separate clear water from the sediment. 2. பொருள் கரைந்த நீரைக் கரையாத ஏனத்தினின்றுப் பிரித்தல்; to separate the solution from the precipitate. 3. பூண்டெரித்த சாம்பலைத் தண்ணீரிலிட்டுக் கரைத்துப் பின் கரைந்திருக்கும் காரவுப்பை வண்டலினின்று வடித்து வாங்கல்; to extract alkaline salts, such as potash, soda, etc. from the ashes, derived by burning plants; to separate soluble from the insoluble matter and drawing off the solution – lixivriation. 4. கரையாத பொருளைப் பொடி செய்து தண்ணீரிலிட்டு வைத்திருந்து அடியில் நின்றது போக எஞ்சியதைக் கலங்காமற் இறுத்துக் கொள்ளல்; to purify by wasting or cleansing as ores by diffusing insoluable powder in water and allowing the heavy part to settle and the decanting the supernatant fluid (சாஅக.);. [தெளிவு + இறு] |
தெளிவில்புகழ்ச்சி | தெளிவில்புகழ்ச்சி teḷivilpugaḻcci, பெ. (n.) பழிப்பது போல் புகழ்வதாகிய அணி; a figure of speech, in which there is apparent censure, but veiled praise. “பழிமொழி மொழிந்து பல்புகழ்” விளக்குதல் தெளிவில் புகழ்ச்சி யென்மனார் புலவர்” (வீரசோ. அலங். 14, உரை);. [தெளிவு1 + இன் + புகழ்ச்சி] |
தெளிவு | தெளிவு teḷivu, பெ. (n.) வலையின் கண்கள் சுருங்கி விடாமல் விரிந்து இருத்தல்; eye of the net in a expand condition. தெளிவு1 teḷivu, பெ. (n.) 1. துலக்கம்; clarity, transparency, limpidness. 2. ஒளி; bright, brilliance, as of a gem, pearl etc. 3. பொருள் வெளிப்படப் புலப்படுதலாகிய செய்யுட் குணம்; perspicuity, clearness, as a merit of poetic composition. “தெளிவெனப்படுவது பொருள் புலப்பாடே” (தண்டி. 16);. 4. உடற் செழிப்பு (கொ.வ.);; plumpness, sleckness. 5. சாறு; juice, essence. “கரும்பின் றெளிவே” (திருவாச. 5,55);. 6. பதநீர் (கோவை.);; Sweet toddy. 7. கஞ்சித்தெளிவு பார்க்க;see__, 8. அறிவு (பிங்.);; knowledge, wisdom. “வலிதாயந் தேனியன்ற நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவாமே” (தேவா. 1114, 6);. 9. நனவு (திவா.);; conscious, waking state. 10. மனத்தெளிவு (திவா.);; clarity of mental vision. 11. ஆராய்ந்து கொண்ட முடிவு; conclusion, decision reached after full deliberation. “தெளிவிலதனைத் தொடங்கார்” (குறள், 464);. 12. நம்பிக்கை; confidence. “தெளிவிலார் நட்பிற் பகை நன்று” (நாலடி, 219);. 13. மனவமைதி; placidity, tranquillity, serenity of mind. 14. நற்காட்சி; clear vision of truth. “அறத்துளார்க்கெல்லா மினியராத லிதுதெளிவே” (சீவக. 2816);. 15. உளக் குறிப்பு (பிங்.);; thought, meaning, intention. 16. நீக்கம் (வின்.);; clearing, passing away, as of clouds, darkness, fear, sleep, etc. 17. செலவு போக உள்ள மேல்வரும்படி (வின்.);; net profit, profit or gain after deducting expenses and waste. 18. ஏது; evidence, proof. “தக்க தெளிவில்லாததால் வழக்கு தள்ளுபடி யாயிற்று” (நாஞ்.);. ம. தெளிவு; க. திளிவு; தெ. தெலுபு, தெலிவி;து. திளுவளிகெ. தெளிவு2 teḷivu, பெ. (n.) 1.தேர்ந்த அறிவு; mature knowledge. 2. துணிவு; fearlessness, intrepedity. 3. தூய்மை; clearness, perspicuity. 4. தெளிந்த நீர்ப்பகுதி; clear portion of liquid as distinguished from precipitated portion (சாஅக.);. [தெளி → தெளிவு] தெளிவு3 teḷivu, பெ. (n.) பாடற்பயன்வகை (சிலப்.3;16.உரை);;(செஅக.);. தெளிவு4 teḷivu, பெ. (n.) பதநீர்; புளிப்பேறாத படி கண்ணாம்பிட்ட கலயத்துள்ளிறக்கிய இனிப்புக் கள்; sweet toddy drawn in a pot lined with lime to prevent fermentation. [தெல் → தெள் → தெளி → தெளிவு] |
தெளிவுகொடு | தெளிவுகொடு1 teḷivugoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. நோயினின்று குணப்படும் குறியைக் காட்டல்; to exhibit improvement in health by showing symptoms of recovery as from disease. 2. சாவுக்கு முன் முகத்தில் ஒருவகை ஒளி (பிரகாசம்); காணப்படுதல்; to be seen a kind of brightness in face even before the death. [தெளிவு + கொடு-.] தெளிவுகொடு2 teḷivugoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) உணர்வு வரப்பண்ணுதல்; to make one’s consciousness. [தெளிவு + கொடு-.] |
தெளிவுசூடு | தெளிவுசூடு teḷivucūṭu, பெ. (n.) தேறுகுடு பார்க்க;see__, [தெளிவு + குடு] |
தெளிவுத்தண்ணீர் | தெளிவுத்தண்ணீர் teḷivuttaṇṇīr, பெ. (n.) கடலில் நீர் அலையின்றியிருத்தல்; clear water in sea. அப்பொழுது முத்துக் குளிக்கக் கடலில் இறங்கமாட்டார்கள். காரணம் திருக்கை, சுறா, போன்றவை மக்களைக் கடித்துத் துன்பம் விளைவிக்கும். (மீனவ); [தெளிவு + தண்ணீர்] |
தெளிவுப்பருவை | தெளிவுப்பருவை teḷivupparuvai, பெ. (n.) தெளிந்த நீர்ப்பரப்பில் மேயும் மீன் கூட்டம் (மீனவ);; fishes which swim in the clear water. [தெளிவு + பருவை] |
தெளிவுமீன் | தெளிவுமீன் teḷivumīṉ, பெ. (n.) தெளிந்த நீர்ப்பரப்பில் மேயும் மீன்; fish which swims in the clear water. [தெளிவு + மீன்] |
தெளிவுரை | தெளிவுரை teḷivurai, பெ. (n.) 1. தெளிவான பேச்சு; clear speech. 2. பாட்டுக்கெழுதும் உரை வகையுளொன்று; a kind of commentary for poem. [தெளிவு + உரை] |
தெளிவுறை | தெளிவுறை teḷivuṟai, பெ. (n.) 1. நோயைக் குணமாக்கும் மருந்து; medicines tending to cure disease, curative. 2. அறிவை வளர்க்கும் மருந்து; medicine improving the intellect as phosphates, etc. or clearness of understanding (சாஅக.);. [தெளிவு + உரை] |
தெளிவுவாங்கு-தல் | தெளிவுவாங்கு-தல் deḷivuvāṅgudal, 5 செ.கு.வி. (v.i.) தெளிவிறு-த்தல் பார்க்க;see__,(சாஅக.);. [தெளிவு + வாங்கு-.] |
தெளிவெண்ணெய் | தெளிவெண்ணெய்1 teḷiveṇīey, பெ. (n.) 1. கசடு நீக்கிய எண்ணெய்; oil free from sediment. 2. தூய எண்ணெய்; pure clear oil. 3. நறுவேப்பெண்ணெய்; a kind of dark margosa oil. 4. நெய்; ghee (சாஅக.);. [தெளிவு + எண்ணெய்] தெளிவெண்ணெய்2 teḷiveṇīey, பெ. (n.) தூய வெண்ணெய்; pure butter. [தெளிவு + வெண்ணெய்] |
தெளு | தெளு teḷu, பெ. (n.) கஞ்சித்தெளிவு; water strained from rice after it is well cooked. [தெளிவு → தெளுவு → தெளு] |
தெளுவு | தெளுவு teḷuvu, பெ..(n.) பதநீர்; tender palm juice, [தெள்-தெளுவு] தெளுவு teḷuvu, பெ. (n.) தெளிவு பார்க்க;see__,(செஅக.);. [தெளிவு → தெளுவு] |
தெள் | தெள்1 teḷ, பெ. (n.) தெள்ளுப்பூச்சி; a jumping insect, flea. தெள்2 teḷtalteṭṭal, 9 செ.கு.வி. (v.i.) தெளிதல்; to become clear, clear-minded. |
தெள்கு | தெள்கு1 deḷkudal, 5 செ.கு.வி. (v.i.) 1. தெளிவாதல் (யாழ்ப்.);; to become clear. 2. தேங்குதல்; to be overcrowded, overfull. “திரைநீர்த் தெள்கி” (திவ்.பெரியதி. 3,4,7);. [தென்ஞ → தெள்கு] தெள்கு2 teḷku, பெ. (n.) தெள்1 பார்க்க;see__, சிறிய தெள்கு துள்ளிக் கருடனார்க்குப் பறவை கற்பிப்பதென (அரிச்.பு. பாயி. 12); [தெள் → தெள்கு] |
தெள்ளச்சி | தெள்ளச்சி teḷḷacci, பெ. (n.) 1. பூநீறு (வின்.);; a medicinal powder. 2. உவர் மண்; fullers earth. (இ.வ.); (செ. அக.);. [தெள்ளு → தெள்ளச்சி] |
தெள்ளத்தெளி-தல் | தெள்ளத்தெளி-தல் deḷḷaddeḷidal, 3 செ.கு.வி. (v.i.) நன்றாய்த் தெளிதல்; to be free completely from obscurity. [தெள்ள + தெளி] |
தெள்ளாரி | தெள்ளாரி teḷḷāri, பெ.(n.) பெண்களைப் பகடி செய்துகொண்டு:ஊர் சுற்றும் இளைஞன். (கொ.வ.வ.சொ.);.; an youngster who goes on teasing giristoitering casanova. [தெள்ளல்+ஆரி] |
தெள்ளி | தெள்ளி1 teḷḷi, பெ. (n.) வெயிலில் காய்ந்த ஒரு கூடையளவுக் கருவாடு (மீனவ.);; basket full of dry-fish. [தெள் → தெள்ளி] தெள்ளி2 teḷḷi, பெ. (n.) யானை (அக.நி.);; elephant. |
தெள்ளிச்சி | தெள்ளிச்சி teḷḷicci, பெ. (n.) தெள்ளச்சி பார்க்க;see__, [தெள்ளச்சி → தெள்ளிச்சி] |
தெள்ளிப்போடு-தல் | தெள்ளிப்போடு-தல் deḷḷippōṭudal, 19 செ.குன்றாவி. (v.t.) 1. கொழித்துப் போடுதல்; to separate large from small pieces as with a fam. 2. மருந்துப் பொடியைச் சன்னத்தூளாகவே பிரித்துப் போடல்; to separate the fine powdered portion of medicine from the crushcd portion (சா.அக.);. பட. தெள்ளு [தெள்ளி + போடு-.] |
தெள்ளிமை | தெள்ளிமை teḷḷimai, பெ. (n.) 1. தெளிவு; clearness, obviousness, perspicuity. 2. அறிவு நுட்பம்; intelligence, sagacity, penetration, cleveness. சொன்னதென்ன தெள்ளிமையோ (விறலிவிடு.);. [தெனிமை → தெள்ளிமை] |
தெள்ளிய | தெள்ளிய teḷḷiya, வி.எ. (adv.) தெளிவான; clearly. [தெள் – தெள்ளிய] |
தெள்ளியசிங்கப்பெருமாள் | தெள்ளியசிங்கப்பெருமாள் teḷḷiyasiṅgapperumāḷ, பெ. (n.) சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன்; God in Chennai,__, Parthasarathy temple. [தெள்ளிய + சிங்கம் + பெருமாள்] இத்திருக்கோயிலைத் துளசிங்கப் பெருமாள் கோயில் என்றழைப்பது கொச்சை வழக்கு. |
தெள்ளியர் | தெள்ளியர் teḷḷiyar, பெ. (n.) தெளிந்த அறிவினர்; the learned, the wise, as persons of clear understanding. “திருவேறு தெள்ளிய ராதலும் வேறு” (குறள், 374);. [தெள் → தெள்ளியர்] |
தெள்ளு | தெள்ளு1 deḷḷudal, 5 செ.கு.வி. (v.i.) 1. தெளிவாதல்; to be clear, lucid, pure, refined as language; to shine clearly; to gleam. “தெள்ளுங் கழலுக்கே” (திருவாச. 10, 19);. 2. அறிவு முதிர்தல்; to be mature in knowledge or experience. [தெள் → தெள்ளு] தெள்ளு2 deḷḷudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. ஆராய்தல்; to examine, sift. “தெள்ளியறிந்த விடத்து மறியாராம்” (நாலடி. 380);. 2. கொழித்தல்; to sift, as grain. எள்ளைத் எதள்ளி உண். 3. புடைத்தல்; to sift gently in a winnowing fan. இடித்த சோளத்தைத் தெள்ளிக் கொடு. 4. அலைகொழித்தல்; to waft, as the sea;to cast upon the shore. “கரி மருப்புத் தெள்ளி நறவந் திசை திசை பாயும்” (திருக்கோ. 128);. [தெள் → தெள்ளு] தெள்ளு3 teḷḷu, பெ. (n.) தெள்1 பார்க்க;see__,(சாஅக.);. [தெல்லு → தெள்ளு] |
தெள்ளுக்கடி | தெள்ளுக்கடி teḷḷukkaḍi, பெ. (n.) தெள்ளுப் பூச்சிக் கடி; flea bite (சாஅக.);. [தெள்ளு + கடி.] |
தெள்ளுக்காய் | தெள்ளுக்காய் teḷḷukkāy, பெ. (n.) பெருந் தெள்ளுக்காய்; scimitar pod (சாஅக.);. [தெள்ளு + காய்] |
தெள்ளுக்காய்ச்செடி | தெள்ளுக்காய்ச்செடி teḷḷukkāycceḍi, பெ. (n.) பெரிய தெள்ளுக்காய்ச் செடி; negro bean co-witch (சாஅக.);. இது இரண்டாண்டிற்கொருமுறை முளைக்கும் பூடு;இலைகள் அகன்ற வடிவு. காம்பு நீளம், காய் வளைவு, முக முகப்பாயிருக்கும், ஒரே விதை. குண்டிக்காய் வடிவம். பூக்கள் பெரிதாயும் ஊதா நிறமாயிருக்கும். விதையைத் தின்னலாம். [தெள்ளு + காய் + செடி] |
தெள்ளுதமிழ் | தெள்ளுதமிழ் deḷḷudamiḻ, பெ. (n.) செந்தமிழ்; pure Tamil. [தெள் → தெள்ளு + தமிழ்] |
தெள்ளுப்பு | தெள்ளுப்பு teḷḷuppu, பெ. (n.) வளையலுப்பு; white medicinal salt. [தெள் + உப்பு] |
தெள்ளுப்பூச்சி | தெள்ளுப்பூச்சி teḷḷuppūcci, பெ.(n.) வண்டின் ஒரு வகை; a kind of bee, [தெள்ளு+பூச்சி] தெள்ளுப்பூச்சி teḷḷuppūcci, பெ. (n.) தெள்1 பார்க்க;see__, [தெள்ளு + பூச்சி] |
தெள்ளுர் | தெள்ளுர் teḷḷur, பெ.(n.) வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk: [தெள்+ஊர்] |
தெள்ளுள்ளி | தெள்ளுள்ளி teḷḷuḷḷi, பெ. (n.) வெள்ளுள்ளி; garlic (சாஅக.);. [வெண்மை + உள்ளி – வெள்ளுள்ளி → தெள்ளுள்ளி] பூண்டு வெண்மையாயிருத்தலாலும், உள்ளி வகையைச் சார்ந்ததாதலாலும் இவ்வாறு அழைக்கப்பட்டுப் பின் திரிந்திருக்கலாம். |
தெள்ளேணம் | தெள்ளேணம் teḷḷēṇam, பெ. (n.) கை கொட்டிப் பாடியாடும் மகளிர் விளையாட்டு வகை; a girls’ play accompained by singing and clapping of hands. “நாம் தெள்ளேணங் கொட்டாமோ” (திருவாச. 11,1);. |
தெள்விளி | தெள்விளி teḷviḷi, பெ. (n.) 1. தெளிந்தவோசை; clear sound or tone. “கோவலராம் பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற” (குறிஞ்சிப். 222);. 2. தெளிந்த சொல்; clear, distinct utterance or word. “வள்ளுயிர்த் தெள்விளி யிடையிடை பயிற்றி” (குறிஞ்சி. 100);. 3. கூவி வெருட்டும் ஒசை; ringing shout, as in scaring birds. “கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி” (அகதா. 28);. 4. இசைப் பாட்டு; musical song. “நரம்புரி தெள்விளி நான்மறை நெறியவர்” (சீவக. 661);. [தெள் + விளி] |
தெழி | தெழி1 teḻittal, 4 செ.குன்றாவி. (v.t.) மிதித் துழக்குதல்; to thresh, “நெற்போர் தெழிக்கும் பகட்டிளங் காளை” (நன். 101. உரை.);. தெழி2 teḻittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. அதட்டுதல்; to drive or control by shouting; to bluster, utter threats. “பகடு தெழி தெள்விளி” (அகநா. 17);. 2. முழக்குதல்; to sound forth, cause to sound, as a drum. “செங்கண்மா றெழிக்கப்பட்ட வலம்புரி” (சீவக, 811);. 3. அடக்குதல்; to subdue, suppress. “பஞ்சேந்தியக் குஞ்சரமுந் தெழித்தேன்” (பதினொ. பொன்வண். 23);. 4. பிரித்தல்; to separate. “ஒய்யெனத் தெழித்தாங்கு” (சிலப். 15;48, உரை);. 5 வருந்துதல்; to trouble, distress. “உலகு தெழித்துழலு மரக்கர் கோமான்” (தேவா. 133, 8);. தெழி3 teḻittal, 4 செ.கு.வி. (v.i.) ஒலித்தல்; to sound, resound, roar. “தெழிக்கும் புறங் காட்டிடை” (தேவா. 462, 4);. தெழி4 teḻi, பெ. (n.) ஒலி; sound, noise. “வெண்ணைய்த் தெழிகேட்கும்” (கலித். 108;35);. |
தெழித்தல் | தெழித்தல் teḻittal, பெ. (n.) ஆரவாரம்; uproar, tumult. |
தெழிப்பு | தெழிப்பு teḻippu, பெ. (n.) ஆரவாரம்; Sound, noise, bluster, noisy rage. “இடித்தவான் தொழிப்பினால்” (கம்பரா. கும்பகர்ண, 279);. |
தெழ்கு | தெழ்கு teḻku, பெ. (n.) இடையிலணியும் அணிகலன் வகை; a kind of waist-ornament. “இடைவிரவிக் கோத்த வெழிற் றெழ்கி னோடும்” (திவ்.பெரியாழ். 1, 32);. தெ. தேகா [தெழி4 → தெழ்கு] |
தெவம் | தெவம் tevam, பெ. (n.) மாமரம் (மூஅக);; mango tree. |
தெவிட்டல் | தெவிட்டல் teviṭṭal, பெ. (n.) உமிழப்பட்டது; that which is spit or vomitted. “வால் வெண் டெவிட்டல்” (அகநா. 224);. [தெவிட்டு → தெவிட்டல்] |
தெவிட்டாதவமிழ்தரசம் | தெவிட்டாதவமிழ்தரசம் teviṭṭātavamiḻtarasam, பெ. (n.) சத்தியுப்பு பார்க்க;see sattiuppu. |
தெவிட்டு | தெவிட்டு1 deviṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) தேக்கிடுதல்; to be sated or satiated fully. தெவிட்டாக்கனி பிள்ளை, தெவிட்டாப் பருகம் தண்ணீர் (பழ.);. [திகட்டு → தெவிட்டு] தெவிட்டு2 deviṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. தேக்கிடுதல்; to be sated, glutted as the stomach, to be cloyed. “தெவிட்டி விடுகிறேனோ” (ஈடு.2, 6, 5);. 2. அசையிடுதல்; to chew the cud. “வன்கலை தெவிட்டும் புறத7 %2 3. உமிழ்தல்; to spit. 4. நினைத்தல்; to think. 5. வாயா லெடுத்தல் (வந்தித்தல்);; to vomit, loathe. 6. திரளுதல்; to gather in a crowd. “மாடனகண மரமுதற் றெவிட்ட” (குறிஞ்சிப். 217);. 7. தங்குதல் to abide, stay, remain. 8. ஒலித்தல்; to make noise. “வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்ட” (ஐங்குறு. 468);. 9. நிறைதல் (சூடா);; to become full. “செஞ்சுடர் வெள்ளந் திசை தெவிட்ட” (திருவாச. 3,77);. க. தேகட்டு |
தெவு | தெவு tevu, பெ. (n.) கொள்ளுகை; taking, receiving. “தெவுக் கொளற் பொருட்டே” (தொல்.சொல். உரி. 47);. [தெவ்வு → தெவு] |
தெவுட்டு-தல் | தெவுட்டு-தல் devuṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) தெவிட்டு-தல் பார்க்க;see__, [தெவிட்டு → தெவுட்டு)] |
தெவுள்(ளு)-தல் | தெவுள்(ளு)-தல் devuḷḷudal, 2 செ.கு.வி. (v.i.) 1. நிறைதல் (அக.நி.);; to become full, filled. 2. திரளுதல்; to overflow, increase. |
தெவ் | தெவ்1 tev, பெ. (n.) 1. பகை; enmity, hostility. 2. போர் (சூடா.);; war, battle, fight. 3. பகைவன்; opposing power, enemy. “தெவ்வடு சிலையினாய்” (கம்பரா.பன்னியடை.59);. தெவ்2 tev, பெ. (n.) கொள்ளுகை (பிங்.);; seizing, taking. |
தெவ்வன் | தெவ்வன் tevvaṉ, பெ. (n.) பகைவன்; foe, enemy. “தெளிதல் செல்லாத் தெவ்வன்” (பெருங். மகத. 14, 28);. [தெவ்1 + அன். ‘அன்’- ஆண்பாலீறு] |
தெவ்வம் | தெவ்வம் tevam, பெ. (n.) பகைவர்; enemy. “திறை வழங்காத் தெவ்வம் பணியச் சென்றாலும்” (திருக்கோ.304);. [தெவ் + அம் = தெவ்வம்] |
தெவ்வர் | தெவ்வர் tevvar, பெ. (n.) பகைவர்; enemy, foe. என்னைமுன் நில்லன்மீன் தெவ்விர் (குறள்,771);. [தெவ் + அர் = தெவ்வர்] |
தெவ்வர்முனைப்பதி | தெவ்வர்முனைப்பதி devvarmuṉaippadi, பெ. (n.) பாசறை (சூடா.);; camp of an invading hostile army. [தெவ்வர் + முனைப்பதி] |
தெவ்வலை | தெவ்வலை tevvalai. பெ. (n.) 240 அடி தொலைவு பரவக்கூடியதும் 20 பேரால் இழுக்கப்படுவதுமான வலைவகை (இ.வ.);; drag net that spreads to a distance of about 80 yards, requiring for its use 20 men, who gradually form a semi-circle and then capture fish. [தெவ்வு + அலை] |
தெவ்வினை | தெவ்வினை tevviṉai, பெ. (n.) போர் (யாழ்அக.);; war, battle. [தெவ்1 + வினை] |
தெவ்வு | தெவ்வு1 tevvu-, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கொள்ளுதல் (பிங்.);; to get, take, obtain. “நீர் தெவ்வுநிரைத் தொழுவர்” (மதுரைக். 89);. 2. கவர்தல்; to seize, grasp, steal. “கடவுளரைத் தெவ்வினீரேற் பொருந்தவவர் தமைக் கொடுமின்” (விநாயகபு. 80, 131);. நிறைத்தல்; to fill. “பாடற்பயத்தாற் கிளர்செவி தெவி” (பரிபா.11, 69);. 4. மன்றாடிக்கேட்டல்; to beg hard, importune. “அந்தச் செயலுக்குத் தெவ்வுகிறான்” (தஞ்சை.);. [தெவு → தெவ்வு] தெவ்வு2 tevvu, பெ. (n.) தெவ்1 பார்க்க;see tev1. “தெவ்வுப் பகையாகும்” (தொல். உரி. 48);. ம. தெவ்வு [தெவ் → தெவ்வு] தெவ்வு3 tevvu, பெ. (n.) தெவ்2 பார்க்க;seetev. தெவ்வு4 tevvu, பெ. (n.) நிலா; moon. |
தெவ்வூன்றி | தெவ்வூன்றி tevvūṉṟi, பெ. (n.) கருங்கோள்; moon ascending node. [தெவ்வு + ஊன்றி] |
தெவ்வேந்தர் | தெவ்வேந்தர் tevvēndar, பெ. (n.) பகையரசர்; enemy king. “செங்கோல னெங்கோன் கொடுந்தொழிலாற் றெவ்வேந்தர்” (வீரசோ.157,உரை.);. |