தலைசொல் | பொருள் |
---|---|
ஞொ | ஞொño, ‘ஞ’ என்ற மெய்யொலியும் ‘ஓ’ என்ற உயிரொலியும் சேரந்த உயிர்மெய்யெழுத்து; the compound of {‘fi’} and {‘o’.} [ஞ் + ஒ – ஞொ] |
ஞொள்கு | ஞொள்குñoḷku, 5 செ.கு.வி. (v.i.) 1. மெலிதல் (திவா.);; to languish, become weak, faint, be worn out. 2. குறைவுபடுதல்; to diminish. “புலங்கடைமடங்கத் தெறுதலின் ஞொள்கி” (அகநா. 31);. 3. சோம்புதல் (திவா.);; to be lazy, dull. 4. அஞ்சுதல் (திவா.);; to fear, to be timid, agitated. 5. அலைதல் (பிங்.);; to wander. 6. குலைதல் (பிங்.);; to be disarranged, thrown into confusion. [நொள் → நொள்கு → ஞொள்கு-. (சு.வி.59);] |
ஞொள்ளெனல் | ஞொள்ளெனல்ñoḷḷeṉal, பெ. (n.) ஓர் ஒலிக்குறிப்பு (பிங்.);; an imitative sound. [ஞொள் + எனல்] ஞோ |