தலைசொல் | பொருள் |
---|---|
ஞே | ஞேñē, ‘ஞ’கர மெய்யொலியும் ‘ஏ’கார உயிரொலியும் சேர்ந்த உயிர்மெய் யெழுத்து; the syllable formed by adding the long vowel{‘č’} to the consonant{‘fi’.} [ஞ் + ஏ – ஞே] |
ஞேயம் | ஞேயம்1ñēyam, பெ. (n.) கடவுள் (அறிதற் குரியது);; God, as the chief objective of knowledge. [நேயம் → ஞேயம்] ஞேயம்2ñēyam, பெ. (n.) 1. நட்பு (அக.நி.);; friendship. 2.. அன்பு; love. [நேயம் → ஞேயம்] ஞேயம்3ñēyam, பெ. (n.) நெய்; ghee (சா.அக.);. [நேய → ஞேயம்] |
ஞேயர் | ஞேயர்1ñēyar, பெ. (n.) நண்பர் (யாழ்.அக.);; friends. [நேயம் → ஞேயர்] ஞேயர்2ñēyar, பெ. (n.) அறிவுடையோர் (யாழ்.அக.);; wise persons. [நேயம் → ஞேயர்] |
ஞேயா | ஞேயாñēyā, பெ. (n.) பெருமருந்து (மலை.);; Indian birthwort. |
ஞேயாசிதம் | ஞேயாசிதம்ñēyācidam, பெ. (n.) தேள் கொடுக்கு மூலிகை; scorpion stink plant (சா.அக.);.] |