தலைசொல் | பொருள் |
---|---|
ஞெ | ஞெñe, ‘ஞ’கர மெய்யொலியும் ‘எ’ கர உயிரொலியும் சேர்ந்த உயிர்மெய்யெழுத்து; the syllable formed by adding the short vowel’e’ to the consonant{‘fi’.} [ஞ் + எ_- ஞெ] |
ஞெகிழம் | ஞெகிழம்ñegiḻm, பெ. (n.) ஞெகிழி, 6 பார்க்க;{seigi6} “சீரார் நெகிழஞ் சிலம்ப” (கலித். 90);. ம. ஞெகிழம் [நெகிழ் → ஞெகிழம்] |
ஞெகிழி | ஞெகிழி1ñegiḻi, பெ. (n.) 1. கடைக்கொள்ளி; fire brand. “விடுபொறி ஞெகிழியிற் கொடிபட மின்னி” (அகநா. 108);. 2. தீக்கடை கோல்; piece of wood used for kindling fire by friction. “கானவர் . . . ஞெகிழி பொத்த” (குறிஞ்சிப். 226);. 3. தீ (பிங்.);; fire. 4. விறகு (பிங்.);; fuel, fire wood. 5. கொடுவேலி (மலை.);; Ceylon leadwort. 6. சிலம்பு (பிங்.);; tinkling anklet ம. ஞெகிழி; க. நெசுள்;தெ. நெகடி, நெரெ [நெகிழ் → ஞெகிழி] ஞெகிழி2ñegiḻi, பெ. (n.) வெள்ளைச் சோளம்; white maize corn (சா.அக.);. |
ஞெகிழ்-தல் | ஞெகிழ்-தல்ñegiḻtal, 2 செ.கு.வி. (v.i.) 1. கழலுதல்; to become loose, slip off, as bangles. “ஞெகிழ்தொடி யிளையவர்” (கலித். 73:8);. 2. தளர்தல் (வின்.);; to languish, faint. 3. மனமிளகுதல் (தொல். பொருள். 72, உரை.);; to be tender hearted. 4. மலர்தல்; to blossom. “ஞெகிழிதழ்க் கோடலும்” (கலித். 101);. 5. உருகுதல்; to melt, as wax. “தீயுறு மெழுகின் ஞெகிழ்வனர்” (ஐங்குறு. 32);. 6. மெலிதல்; to become thin, emaciated. “தோண் ஞெகிழ்பு” (கலித். 146:6);. 7. சோம்புதல் (பிங்.);; to be lazy. ம. ஞெகிழுக;மா. நெத்த்கெ [நெகிழ் → ஞெகிழ்-.] |
ஞெண்டு | ஞெண்டு1ñeṇṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) கிண்டுதல் (சூடா.);; to scratch up, as a hen. [நெண்டு → ஞெண்டு] ஞெண்டு2ñeṇṭu, பெ. (n.) 1. நண்டு; crab. “வேப்பு நனையன்ன நெடுங்க ணீர்ஞெண்டு” (அகநா. 176);. 2. கடகவோரை (திவா.);; Cancer in the zodiac. ம. ஞெண்டு [நெண்டு → ஞெண்டு] |
ஞெண்டுகம் | ஞெண்டுகம்ñeṇṭugam, பெ. (n.) பெருவாகை (மலை.);; siris, a tree. |
ஞென்கோல் | ஞென்கோல்ñeṉāl, பெ. (n.) துலாக்கோல்; balance, steelyard. “ஞெமன்கோ லன்ன செம்மைத்தாகி” (மதுரைக். 491);. [சமன்_→ ஞெமன் + கோல்] |
ஞெமர்-தல் | ஞெமர்-தல்ñemartal, 2 செ.கு.வி, (v.i.) 1. பரத்தல்; to spread, extend. “நீர்ஞெமர வந்தீண்டி” (பதிற்றுப். 72:9);. 2. நிறைதல்; to be full. “இலம்படு புலவ ரேற்றகை ஞெமர” (பரிபா. 10:126);. [நிமிர் → ஞெமர்-.] |
ஞெமலி | ஞெமலிñemali, பெ. (n.) கொடுநுகம் நாண்மீன் (மகம்); (வீமேசு. உள். நட்சத். 3);. [ஞெமல் (= வளைவு); → ஞெமலி] |
ஞெமல் | ஞெமல்1ñemalludal, 13 செ.கு.வி. (v.i.) 1. திரிதல்; to wander, roam about. “அலர் ஞெமன் மகன்றில்” (பரிபா. 8:44);. ஞெமல்2ñemal, பெ. (n.) சருகு; dry leaf. “படுஞெமல் புதையப் பொத்தி” (அகநா. 39:7); |
ஞெமி-தல் | ஞெமி-தல்ñemidal, 2 செ.கு.வி. (v.i.) நெரிதல்; to break, to give way, as under a weight. “தேம்பலிடை ஞெமிய” (திருக்கோ. 165);. |
ஞெமிடு-தல் | ஞெமிடு-தல்ñemiḍudal, 5 செ.குன்றாவி. (v.t.) கசக்குதல்; to crush, press out with the hands; to rub, “அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டுதன்” (நற். 22);. [நிமிண்டு → ஞெமிண்டு → ஞெமிடு] |
ஞெமிர் | ஞெமிர்1ñemirtal, 2 செ.கு.வி. (v.i.) 1. பரத்தல்; to spread, extend. “தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து” (நெடுநல். 90);. 2. தங்குதல்; to rest, stay. “திருஞெமி ரகலத்து” (சிலப். 28:157);. 3. முற்றுதல் (அக.நி.);; to be mature, ripe. 4. ஒடிதல்; to break, snap off. 5. நெரிதல்; to be crushed, compressed; to be pressed out, as pulp. “மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர்குழை” (நற். 20);. [நிமிர் → ஞெமிர்-.] ஞெமிர்2ñemirttal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. ஒடித்தல் (திவா.);; to snap, break off. 2. நெரித்தல்; to press with the hands. “சிறுமந்தி . . . தந்தையை . . . விரலான் ஞெமிர்த்திட்டு” (நாலடி, 237);. [நிமிர் → ஞெமிர்-.] |
ஞெமிர்தம் | ஞெமிர்தம்ñemirtam, பெ. (n.) உடலுக்கு வரக்கூடிய பற்பல நோய்களைத் தடுக்கும் தன்மை கொண்ட நாற்பக்க பிரண்டை; variety of kitis quadran gularis with square Stem (சா.அக.);. |
ஞெமுக்கம் | ஞெமுக்கம்ñemukkam, பெ. (n.) அழுந்துகை (சங். அக.);; yielding to pressure. [ஞெமுங்கு → ஞெமுக்கம்] |
ஞெமுக்கு-தல் | ஞெமுக்கு-தல்ñemukkudal, செ.குன்றாவி. (v.t.) நெருக்கி வருத்துதல்; to press hard. “ஒண்டொடி ஞெமுக்கதீமோ’ (அகநா. 60);. [ஞெமி → ஞெமு → ஞெமுக்கு-.] |
ஞெமுங்-தல் | ஞெமுங்-தல்ñemuṅtal, 5 செ.கு.வி. (v.i.) 1. அழுந்துதல்; to yield, to pressure, to be pressed in, squeezed as ripe fruit. “வளைந்துவர விளமுலை ஞெமுங்க” (அகநா. 58(. 2. செறிதல் (திவா.);; to be compact, in close contact. ம. நமுங்க [ஞெமுக்கு → ஞெமுங்கு-.] |
ஞெமை | ஞெமைñemai, பெ. (n.) மரவகை; a tree. “திருந்தரை ஞெமைப் பெரும்புனற் குன்றத்து” (அகநா. 395);. |
ஞெயம் | ஞெயம்ñeyam, பெ. (n.) நெய்; ghee. [நெய் → நெயம் → ஞெயம்] |
ஞெரல் | ஞெரல்ñeral, பெ. (n.) 1. ஒலி; sound, noise. 2. விரைவு; haste, quickness. [ஞரல் → ஞெரல்-.] |
ஞெரி | ஞெரி1ñeridal, 2 செ.கு.வி (v.i.) முறிதல் (சங்.அக.);; to break, snap off, to be crushed. ம. ஞெரியுக. [நெறி → ஞெறி-.] ஞெரி2ñerittal, 4 செ.குன்றாவி. (v.t.) நெறிதல்; to be crushed. [நெறி → ஞெறி → ஞெரி-.] ஞெரி3ñeri, பெ. (n.) முறிந்த துண்டு; cut or broken piece. “முண்ஞெரி” (நன். 227, விருத்.);. தெ. நெரிய [நெறி → ஞெறி → ஞெரி] |
ஞெரேரெனல் | ஞெரேரெனல்ñerēreṉal, பெ. (n.) 1. விரைவுக் குறிப்பு; onom, expr, of haste. “ஞெரேனெக் குணக் கெழு திங்கள் கனையிரு ளகற்ற” (புறநா. 376:7);. 2. பொதுக்கெனல் (அகநா.. 32);; suddenness. [சரேல் → ஞெரேல் → ஞெரேர் + எனல்] |
ஞெரேலெனல் | ஞெரேலெனல்ñerēleṉal, பெ. (n.) 1. விரைவுக் குறிப்பு; expr of haste. “சிலைகாலூன்றி ஞெரேலென வளைத்து” (கந்தபு. அக்கினிமுக. 139);. 2. அச்சக்குறிப்பு (திவா.);; quivering with fear. 3. ஒலிக்குறிப்பு (பிங்.);; sounding, tinkling, rattling. 4. தண்மைக்குறிப்பு (அக.நி.);; being chill [சரேல் (விரைவுக்குறிப்பு); → ஞெரேல் + எனல்] |
ஞெலி | ஞெலி1ñelidal, 2 செ.குன்றாவி. (v.i.) 1. தீக்கடைதல்; to rub one stick on another for producing firebyfriction “ஞெலிதீ விளக்கத்து” (புறநா. 247:2);. 2. குடைதல் (அக.நி.);; to make hollow. [நெலி → ஞெலி-.] ஞெலி2ñelidal, 2 செ.கு.வி (v.i.) உரசுதல்; to rub, grate, as bamboos. “ஞெலிகழை” (ஐங்.குறு. 307);. [நெலி → ஞெலி-.] ஞெலி3ñeli, பெ. (n.) கடையப்பட்ட மூங்கில்; grated bamboo. ‘ஞெலிசொரி யொண் பொறி’ (அகநா. 39, உரை);. [நெலி → ஞெலி-.] |
ஞெலிகோல் | ஞெலிகோல்ñeliāl, பெ. (n.) தீக்கடை போல்; piece of wood for producing fire by friction. “ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழி’ (பெரும்பாண். 178);. மறுவ. ஞெகிழி, தீக்கடைகோல், தீக்கோல் பட. நெலிகோலு [ஞெலி + கோல்] |
ஞெலுவன் | ஞெலுவன்ñeluvaṉ, பெ. (n.) தோழன் (சங். அக.);; male companion. [எலுவன் → ஞெலுவன்] |
ஞெலுவல் | ஞெலுவல்ñeluval, பெ. (n.) செத்தல் (யாழ்.அக.);; dying. |
ஞெளி-தல் | ஞெளி-தல்ñeḷidal, 2 செ.கு.வி. (v.i.) 1. நெளிதல் (நன். 104, மயிலை.); பார்க்க;see {ieli.} 2. பிணங்குதல்; non accepting other’s desire be at variance. [நெளி → ஞெளி] |
ஞெளிர் | ஞெளிர்1ñeḷirtal, 2 செ.கு.வி. (v.i.) எடுத்தலோசையுடன் ஒலித்தல் (பிங்.);; to sound in a high pitch. [ஞெள் → ஞெளிர்-.] ஞெளிர்2ñeḷir, பெ. (n.) 1. யாழ் முதலியவற்றின் உள்ளோசை (பிங்.);; gentle, vibrant, sound as of {yāl.} 2. ஒலி (வின்.);; sound. [ஞெள் → ஞெளிர்] ஞே |
ஞெள்(ளு)-தல் | ஞெள்(ளு)-தல்ñeḷḷudal, 15 செ.கு.வி (v.i.) 1. பள்ளமாதல் (வின்.);; to become hollow. 2. ஒலித்தல் (வின்.);; to sound. 3. உடன்படுதல் (அக.நி.);; to agree, yield, consent. [நொள் (= பள்ளம்); → ஞெள்-.] |
ஞெள்ளன் | ஞெள்ளன்ñeḷḷaṉ, பெ.(n.) பழங்கால இயற் பெயர்; a proper name, ஞெள்ளா வா (இலக். உரை);. ம. நெளியுக (நிமிர்தல்);, நெளிச்சு நடக்குக. [ஞெள்ளுதல் – நிமிர்தல். ஞெள்ளன் – நிமிர்ந்தவன் நெடியவன் – உயரமானவன் – யாருக்கும் பணியாதவன்).] |
ஞெள்ளல் | ஞெள்ளல்1ñeḷḷal, பெ. (n.) 1. குற்றம்; defect, fault. “ஞெள்ளற்பை” (திருப்பு. 289);. 2. பள்ளம் (பிங்.);; hole, hollow, pit, depression. 3. பள்ளம் விழுந்த சாலை; road, way. “கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்” (புறநா. 15);. 4. மேன்மை (திவா.);; greatness. 5. உடன் படுகை (திவா.);; yielding, consenting. 6. விரைவு (சூடா.);; quickness, haste. 7. மிகுதி (திவா.);; abundance. 8. ஒலிக்கை (திவா.);. sounding. 9. பூசல் (அக.நி.);; fight, strife. [நொள் → நெள் → ஞெள் → ஞெள்ளல்] ஞெள்ளல்2ñeḷḷal, பெ. (n.) சோர்வு; weakness, exhaustion. [நொள்கு- → நொள்ளல் → நெள்ளல். நொள்கு-தல் = இளைத்தல், சுருங்குதல்-.] |
ஞெள்ளெனல் | ஞெள்ளெனல்ñeḷḷeṉal, பெ. (n.) ஒலிக்குறிப்பு (திவா.);; an imitative sound. [ஞெள் (=ஒலி); + எனல்] |
ஞெள்ளை | ஞெள்ளைñeḷḷai, பெ. (n.) நாய் (தொல். சொல்.400, உரை);; dog மறுவ. ஞமலி, குக்கல் [ஞெள் → ஞெள்ளை] |