தலைசொல் | பொருள் |
---|---|
ஞி | ஞிñi, ‘ஞ’கர மெய்யொலியும் ‘இ’கர உயிரொலியும் சேர்ந்த உயிர்மெய்யெழுத்து; the syllable formed by adding the short vowel’i’ tothe consonant’fi’. [ஞ் + இ – ஞி] |
ஞிமிர் | ஞிமிர்1ñimirtal, 2 செ.கு.வி. (v.i.) நிமிர்தல் (சங்.அ.க);; to be erect. [நிமிர்- → ஞிமிர்-.] ஞிமிர்2ñimirtal, 8 செ.கு.வி. (v.i.) வண்டு முதலியன ஒலித்தல் (சங்.அக);; to sound, buz, hum, as bees. [இமிர்- → ஞிமிர்] ஞிமிர்3ñimir, பெ. (n.) ஒலி (வின்.);; sound. [இமர் → ஞிமிர்] |
ஞிமிறு | ஞிமிறுñimiṟu, பெ. (n.) தேனீ; bee, honey bee. “வரிஞ மிறார்க்கும் வாய்புகு கடாஅத்து” (புறநா. 93:12);. [ஞிமிர்2 → ஞிமிறு] |