செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
ஞா

ஞா1ñā,    தமிழ் நெடுங்கணக்கில், ‘ஞ்’ என்ற மெய்யொலியும் ‘ஆ’ வெனும் உயிரொலியும் சேர்ந்தமைந்த உயிர்மெய்யெழுத்து; the syllable formed by the addition of the long vowel

{‘a’} to the consonant {‘n’.}

     [ஞ் + ஆ – ஞா]

 ஞா2ñā,    1. கட்டு; bind.

   2. பொருந்து; joint (சா.அக.);.

 ஞா3ñāttal,    4 செ.குன்றாவி (v.i.)

   கட்டுதல் (யாழ்.அக.);; to tie, fasten.

 ஞா4ñāttal,    4 செ.கு.வி. (v.i.)

   பொருந்துதல்; to stick, adhere.

     ‘மண் ஞாத்த கோட்ட மழகளிறு தோன்றுமே’ (தொல். எழுத்து. 146. உரை);.

ஞாங்கர்

ஞாங்கர்1ñāṅgar, பெ. (n.)

   1. பக்கம் (திவா.);; side.

   2. இடம் (திவா.);; place, situation, locality.

   3. வேற்படை; lance,dart.

     “ஞாங்கர் வினைப்பூண் டெண்மணி வீழ்ந்தன” (நற். 171);.

   4. கரை; bank.

     “ஞாநமா தீர்த்தஞாங் கரிருந்தவை நயந்து செய்யில்” (திருவிளை. தீர்த்த விசேட 23);.

     [ஆங்கு → ஞாங்கு → ஞாங்கர்]

 ஞாங்கர்2ñāṅgar, கு.வி.எ. (adv.)

   1. மேல்; above, on, over.

     “ஞாங்கர் . . . உழவர் . . . பெரும்பகடு புதவிற்பூட்டி” (பெரும்பாண். 196);.

   2. அங்கே; there.

     “ஞாங்கர் வருட மடமறி யூர்விடைத் துஞ்சும்” (கலித். 50);.

   3. முன்; before, forward, intront.

     “ஞாங்கர் கிளந்த மூன்று பொருளாக” (தொல். பொருள். 141);.

   4. இனி (சங்.அக..);; hence. forth, henceforward, hereafter.

     [ஆங்கு → ஞாங்கு → ஞாங்கர்]

ஞாஞ்சில்

ஞாஞ்சில்ñāñjil, பெ. (n.)

   1. கலப்பை (அக.நி.);; plough.

   2. மதிலுறுப்பு; a component part of a fortification.

   ம. ஞேங்கோல்;   க. நேகல், நேகில், நேகில;   தெ. நாகலி, நாகெலு, நாகேலு;   து. நாயெரு;   குட. நெங்கி;   கோத, நேல்க்;   கோண். நாங்கேல்;   கூ. நான்கெலி;   குவி. நன்கெல்லி;   நா. நாங்கர்;   கொலா, நாங்கலி, நாங்ங்லி;பர். நாகில்

 Skt. {lãngala;

 pãli. Nangala}

     [நாஞ்சில் → ஞாஞ்சில்]

ஞாடு

ஞாடுñāṭu, பெ. (n.)

   நாட்டுப்பகுதி; district, country,

     “வேங்கைஞ்ஞாடும்” (தெ.க.தொ. 3,5);.

     [நாடு → ஞாடு]

ஞாட்பு

ஞாட்புñāṭpu, பெ. (n.)

   1. போர்; battle, fight.

     “கடல் வயிறு கலக்கிய ஞாட்பும்” (சிலப். 26:237);.

   2. போர்க்களம்; battlefield.

     “ஞாட்பினு னண்ணாரு முட்குமென் பீடு” (குறள், 1088);.

   3. படை; army.

   4. கூட்டம் (சூடா.);; assemblage, crowd.

     “வந்தனர் மண ஞாட்பின்” (காஞ்சிப்பு தழுவக். 279);.

   5. கனம் (பிங்.);; thickness, heaviness.

   6. வன்மை (வின்.);; power, strength, force.

ஞாண்

ஞாண்ñāṇ, பெ. (n.)

   1. கயிறு; string, cord.

     “திண்ஞா ணெழினி வாங்கிய” (முல்லைப். 63);.

   2. வில்லின் நாண்; bowstring.

     “சாப நோன் ஞாண்” (புறநா. 14:9);.

   ம. ஞாண், ஞாணு;   க. நேணு, நேண்;   தெ. நானு (ஒருவகைக் கழுத்தணி);;   து. நேணு;   கோண். நோனே;கூ. நோணு, நோசு

     [நாண் → ஞாண்]

ஞாண்டு

 ஞாண்டுñāṇṭu, பெ. (n.)

   நண்டு; crab (சா.அக.);.

மறுவ. அலவன், கற்கடகம்.

     [நண்டு → ஞண்டு → ஞெண்டு → ஞாண்டு]

ஞான்றஞாயிறு

ஞான்றஞாயிறுñāṉṟañāyiṟu, பெ. (n.)

   கதிரவன் மறையும் நேரம்; sunset.

     “ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கு மிழிசினன்” (புறநா. 82);.

     [ஞால் + ஞாயிறு – ஞான்ற ஞாயிறு.]

ஞான்று

ஞான்று1ñāṉṟu, பெ. (n.)

   1. பொழுது; time.

   2. நாள்; day.

     “ஊசலூர்ந்தாட வொரு ஞான்று வந்தானை” (கலித். 37);.

ம. ஞாந்நு

 ஞான்று2ñāṉṟu, கு.வி.எ. (adv.)

   காலத்தில்; at the time of.

     “அம்மனைக்கோ லாகிய ஞான்று” (நாலடி. 14);.

ம. ஞான்நு

ஞான்றுகொள்(ளு)-தல்

ஞான்றுகொள்(ளு)-தல்ñāṉṟugoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   கழுத்திற் சுருக்கிட்டுச் சாதல்; to hang oneself, commit suicide.

     “ஞான்று கொள்வேனன்றி யாது செய்வேன்” (அருட்பா. 2, பிரார்த்தனைப். 2);.

     [ஞால் → ஞான்று]

ஞான்றை

ஞான்றைñāṉṟai, பெ. (n.)

ஞான்று பார்க்க;see {inru.}

     “அரக்கன் வவ்விய ஞான்றை” (புறநா. 378);.

     [ஞான்று → ஞான்றை]

ஞாயம்

ஞாயம்ñāyam, பெ. (n.)

   நேர்மை, உண்மை; honesty, truth.

     “நன்று நன்றரசர் ஞாயமே” (பாரத. கிருட்டிண. 122);.

     [நயம் → நாயம் → ஞாயம்]

ஞாயிறு

ஞாயிறுñāyiṟu, பெ. (n.)

   1. கதிரவன்; the sun.

     “ஞாயிறு போல விளங்குதி” (பதிற்றுப். 88:38);.

   2. ஞாயிற்றுக்கிழமை பார்க்க;see {iyiru-kkilamai}

மறுவ. பகலவன், செங்கதிர்ச் செல்வன், கதிரவன்.

   ம. ஞாயர்;   க. நேசர், நேசரு;   து. நெசுரு (காலை);;   மா. நீறு (ஞாயிற்றொளி);;   துட. நொர்; Pkt. {ņesar}

     [நாயர் → (நாயிர்); → நாயிறு → ஞாயிறு (வ.மொ.வ.337);.

ஞாயிறு திரும்பி

ஞாயிறு திரும்பிñāyiṟudirumbi, பெ. (n.)

   1. சூரியகாந்தி (மலை.);; Sunflower.

   2. நெருஞ்சி; cow’s thorn.

     [ஞாயிறு + திரும்பி]

ஞாயிறுபோது

ஞாயிறுபோதுñāyiṟupōtu, பெ. (n.)

   உச்சிப் போது; midday.

     “விடிவோரை நட்டு ஞாயிறு போது வந்து பார்த்தால்” (திவ். திருப்பா. 3:62, வியா.);.

     [ஞாயிறு + (போழ்து →); போது]

ஞாயிறுவணங்கி

 ஞாயிறுவணங்கிñāyiṟuvaṇaṅgi, பெ. (n.)

   கொள்ளுக்காய் வேளை; purple wild indigo.

     [ஞாயிறு + வணங்கி]

ஞாயிற்றுக்கிழமை

 ஞாயிற்றுக்கிழமைñāyiṟṟukkiḻmai, பெ. (n.)

   கிழமை (வார); நாட்களுள் முதலாவது; sunday, first day of the week.

     [ஞாயிறு + கிழமை]

ஞாயிற்றுக்கிழமைநோன்பு

 ஞாயிற்றுக்கிழமைநோன்புñāyiṟṟukkiḻmainōṉpu, பெ. (n.)

   கண்ணோய் வராதிருத்தற் பொருட்டுக் கதிரவனைக் குறித்து ஞாயிற்றுக் கிழமையில் மேற்கொள்ளும் நோன்பு; sunday fast in honour of the Sun, observed primarily for the prevention of eyedisease.

     [ஞாயிற்றுக்கிழமை + நோன்பு]

ஞாயில்

ஞாயில்ñāyil, பெ. (n.)

   1. கோட்டையின் ஏவறை; breast-workin fortification, bastion.

     “ஞாயிலுஞ் சிறந்து” (சிலப். 15:217);.

   2. மதில் (திருவிளை. நரிபரி. 86);; fort-wall.

ம. ஞாயில்

ஞாயில்காவல்

 ஞாயில்காவல்ñāyilkāval, பெ. (n.)

   நகர்ப்பாது காப்பு (W.G.);; guarding a town, as keeping watch over its fortress.

     [ஞாயில் + காவல்]

ஞாய்

ஞாய்ñāy, பெ. (n.)

   தாய்; mother.

     “ஞாயையு மஞ்சுதி யாயின்” (கலித். 107);.

     [யாய் → ஞாய்]

ஞாறு-தல்

ஞாறு-தல்ñāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. மணம் வீசுதல்; to smell, emit an odour.

     “விரை ஞாற வருதென்றல்” (சூளா. இரத். 54);.

   2. தோன்றுதல்;     “கண்ணிழல் ஞாறிய காமர் பள்ளியுங்” (பெருங். இலாவாண. 11:15);.

     [நாறு → ஞாறு-.]

ஞாற்சி

ஞாற்சிñāṟci, பெ. (n.)

   தொங்குகை; hanging, pending.

     “ஞாற்சியிற் றிரண்டவந் நாகம்” (சேதுபு. கந்தமா. 27);.

     [நால் → ஞால் → ஞாற்சி]

ஞாற்று

ஞாற்று1ñāṟṟudal,    6 செ.குன்றாவி. (v.t.)

   தொங்கவிடுதல்; to hang up, suspend.

     ‘பூஞாற்றினார்’ (தொல்.எழுத்து. 145, உரை);.

ம. ஞாற்றுக

     [நால் → நாற்று → ஞாற்று-.]

 ஞாற்றுñāṟṟu, பெ. (n.)

ஞாற்சி பார்க்க;see {ici}

     “வாவன் ஞாற்றே” (பிங். 3:56);.

     [ஞால் → ஞாற்று]

ஞாலமுண்டோன்

ஞாலமுண்டோன்ñālamuṇṭōṉ, பெ. (n.)

   திருமால்;{Thirumāl}

     [ஞாலம்1 + உண்டோன்]

ஞாலம்

ஞாலம்ñālam, பெ. (n.)

   1. நிலம் (பூமி);; earth.

     “மண்டிணி ஞாலத்து” (பு.வெ. 2:41, கொளு.);.

   2. உலகம்; world, universe.

     “ஞால மூன்றடித் தாயமுதல்வற்கு” (கலித். 124);.

   3. உயர்ந்தோர்; the great, the wise.

     “இம்மூவர் ஞாலமெனப் படுவார்” (திரிகடு. 26);.

   4. தோணி அசையாது நிலைத்து நிற்பதற்கு இடும் மண் முதலிய சுமை; ballast of a dhoney, as sand.

தோணிக்கு ஞாலமேற்றி னான் (யாழ்ப்.);.

   ம. ஞாலம்;   தெ. நேல;   கோண். நேலி;   கூ. நேல, நேத;   குவி. நேல;   நா. ஏல்;   கொலா. என்;குரு. நால் (மட்டமான நிலம்);

     [ஞால் → ஞாலம் (தவ.146);]

 ஞாலம்ñālam, பெ. (n.)

   1. ஊமத்தை; purple stramony.

ஞாலற்பூ

 ஞாலற்பூñālaṟpū, பெ. (n.)

ஞாழல்பூ பார்க்க;see {fia/alpit (orros);.}

ஞாலல்

ஞாலல்1ñālal, பெ. (n.)

   மின்மினிப்பூச்சி; firefly or glowworm (சா.அக.);.

 ஞாலல்2ñālal, பெ. (n.)

   தொங்குதல்; hanging.

     [ஞால் → ஞாவல்]

ஞாலித்தட்டு

 ஞாலித்தட்டுñālittaṭṭu, பெ. (n.)

   சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்திலணியும் அணிவகை (நாஞ்.);; a kind of woman’s ornament, worn along with {cirruru.}

     [ஞால் → ஞாலி + கட்டு.]

ஞாலுத்தட்டு

 ஞாலுத்தட்டுñāluttaṭṭu, பெ. (n.)

ஞாலித் தட்டு (நாஞ்.); பார்க்க;see {ili-t-tatu}

ஞால்(லு)தல்

ஞால்(லு)தல்ñālludal,    5 செ.கு.வி. (v.i.)

   1. தொங்குதல்; to hang.

     “ஞான்றன வயிரமாலை” (சீவக. 140.);.

   2. பொழுது சாய்தல்; to decline, descend, as the sun.

     “பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று” (புறநா. 82:2);.

   ம. ஞாலுக;   க. நேல்;   தெ. வாலு, வோலு;   து. நேலுனி, நெல்புனி;   குட. நேர், நேத்;   கோத. நேத்;பட. நேனு

     [நால் → ஞால்]

ஞாளம்

ஞாளம்1ñāḷam, பெ. (n.)

   தண்டு; flower-stalk.

     “அம்புய ஞாளநூலாலே” (ஞானவா. உற்ப. 30);.

     [நாளம் → ஞாளம்]

 ஞாளம்2ñāḷam, பெ. (n.)

   பொன்னாக்கத்தில் மாழை உருக்குவதற்கான குகை; Crucible as in.

     “ஞாளத்தில் வைத்தூதல்” (in alchemy); (சா.அக.);.

     [நாளம் → ஞாளம்]

 ஞாளம்3ñāḷam, பெ. (n.)

   படர்கொடி; creeper.

     [நாளம் → ஞாளம்]

ஞாளி

ஞாளி1ñāḷi, பெ. (n.)

   நாய்; dog.

     “வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும்” (அகநா.122);.

     [ஞமலி → ஞாளி]

 ஞாளி2ñāḷi, பெ. (n.)

   கள் (பிங்.);; toddy.

 ஞாளி3ñāḷi, பெ. (n.)

   கோழி; fowl (சா.அக.);.

 ஞாளி4ñāḷi, பெ. (n.)

ஞாழி (வின்.); பார்க்க;see {nāli}

     [ஞாழி → ஞாளி]

ஞாளிகம்

ஞாளிகம்ñāḷigam, பெ. (n.)

   வள்ளைக் கொடி; a creeper, convolvulus repens (சா.அக.);.

     [ஞாறி4 → ஞாளிகம்]

ஞாளியாதனம்

ஞாளியாதனம்ñāḷiyātaṉam, பெ. (n.)

ஒரு விருக்கை வகையுளொன்று (தத்துவப். 108, உரை.);:

 a yogic posture.

     [ஞானி1 + ஆதனம். Skt. {asana} -→ த. ஆதனம்]

ஞாளியூர்தி

ஞாளியூர்திñāḷiyūrti, பெ. (n.)

   நாயை ஊர்தியாக உடைய வைரவன் (பிங்.);; Bhairava, as riding a dog.

     [ஞானி1 + ஊர்தி]

ஞாழல்

ஞாழல்ñāḻl, பெ. (n.)

   1. புலிநகக்கொன்றை; orange-cup-calyxed brasiletto climber wagaty.

     “குவியிணர் ஞாழல்” (பதிற்றுப். 51:5);.

   2. மயிற் கொன்றை (மலை.);; peacock’s crest.

   3. பொன்னாவிரை (மலை..);; fetid cassia.

   4. கோங்கு (திவா.);; false tragacanth.

   5. மல்லிகை வகை (வின்.);; jasmine.

   6. கொடி வகை (வின்.);; cinnamon.

   7. குங்குமம் (அக.நி.);; saffron.

   8. மரவாயிரம் (வின்.);; heart-wood.

   9. ஆண்மரம் (அக.நி.);; hard, solid wood.

   ம. ஞாழல்;க. நேழல், நெழல்

ஞாழல் பூ

 ஞாழல் பூñāḻlpū, பெ. (n.)

   குங்குமப்பூ; saffron (சா.அக.);.

ஞாழல்மா

 ஞாழல்மாñāḻlmā, பெ. (n.)

   ஒட்டுமாமரம்; grafted mango tree (சா.அக.);.

     [ஞாழல் + மா. மா = மாமரம்]

ஞாழல்மாது

 ஞாழல்மாதுñāḻlmātu, பெ. (n.)

   ஊமத்தை (மலை.);; trumpet flower.

ஞாழல்வாசுகி

 ஞாழல்வாசுகிñāḻlvācugi, பெ. (n.)

   பெரியாநங்க; polygala elongata (சா.க.);.

ஞாழல்விரை

 ஞாழல்விரைñāḻlvirai, பெ. (n.)

   பொன்னா விரை; cassia siamea (சா.அக.);.

ஞாழி

 ஞாழிñāḻi, பெ. (n.)

   வள்ளைக் கொடி (மலை.);; aquatic convolvulus.

ஞாழ்

ஞாழ்ñāḻ, பெ. (n.)

   யாழ்; a stringed musical instrument.

     “தன் ஞாழ் நவிற்றிய தாமரை யங்கை” (பெருங். மகத. 6:17);.

     [யாழ் → ஞாழ்]