செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்

ச ca,      ‘ச’கர மெய்யும் ‘அ’கர உயிரும் சேர்ந்த உயிர்மெய்யெழுத்து;

 syllable formed by adding the short vowel ‘a’ to the consonant ‘c’.

     [ச் + அ]

     “சகரம் மொழி முதல் வாராதென்று கூறுவது தமிழுக்குச் சற்றும் பொருந்தாது.

     “அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே” (தொல் எழுத்து மொழி 62); என்னும் தொல்காப்பிய நூற்பா அடிக்கு அவை ஒள எனும் ஒன்றலங்கடையே என்ற பாட வேறுபாடும் உள்ளது. சக்கட்டி, சக்கை, சகடு, சகதி சங்கு சட்டென. சட்டம், சட்டகம், சட்டி சட்டை சடசட சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சணல், சதுப்பு, சப்பட்டை, சப்பென்று, சப்பாணி, சப்பு, சப்பை, சம்பு, சம்மட்டி சமட்டு, சமம், சமழ், சமை, சரடு, சரள், சரி, சருகு, சருக்கரை, சரேல்என, சல்லடை, சல்லரி, சல்லி, சலசல, சலங்கை, சலி, சவ்வு, சவம், சவர் சவை, சழக்கு சள்ளென, சள்ளை, சளக்கென, சளி, சளை, சற்று, சறுக்கு, சன்னம் முதலிய நூற்றுக்கும் மேற்பட்ட தனித்தமிழ்ச்சொற்கள் அடிப்படையானவும் தொன்றுதொட்டனவும் இன்றியமையாதனவும் வேரூன்றினவும் சேரி வழக்கினவுமாயிருக்க, அவற்றைப் பிற்காலத்தினவென்று கொள்ளுவது பெருந்தவறாகும். சக்கை, சட்டி, சண்டு, சண்டை சதை சப்பு, சவி, சற்று, சறுக்கு முதலிய சொற்கள் எத்துணை எளிமையும் இயல்புமானவை என்பது சொல்லாமலே விளங்கும். சண்டு, சருகு முதலிய பல சொற்கள் சகர முதலினவாய் இருந்திருத்தல் கூடுமெனினும் சக்கு, சடாரி, சடேர் சரட்டு, சலசல, சரேல், சவ்வு, சள், சளக்கு சளார் முதலிய ஒலிக்குறிப்புச் சொற்களும் அவற்றினடிப் பிறந்தனவும் துவக்கந்தொட்டுச் சகர முதலனவாயே இருந்திருத்தல் வேண்டும். சாப்பிடு என்னும் உலகவழக்கெளிமைச் சொல் சப்பு என்னும் மூலத்தினின்று தோன்றியதாகும். சப்பு + இடு – சப்பிடு → சாப்பிடு, சுவை என்னும் சொல்லும் சவை என்பதன் திரிபாகவே தோன்றுகின்றது. செத்தான் என்னும் இறந்தகால வினைமுற்று பண்டைக்காலத்தில் சத்தான் என்றே இருந்திருத்தல் வேண்டும்.

ஒநோ: காண் → கண்டான். நோ → நொந்தான். நெடில் முதலான வினைப் பகுதி இறந்தகால முற்றில் முதல் குறுகும்போது இனக்குறிலாய்க் குறுகுவதே மரபு தெலுங்கிலும் சச்சினாடு (செத்தான்); சச்சிப் போயினாடு (செத்துப் போனான்); என்றே சொல்வர். மேலும்

     “முழுமுதல் அரணமும்” (தொல். பொருள் புறத், 10);

     “வருபகை பேனார் ஆரெயிலும்” (தொல். பொருள் புறத் 12);, அமைத்துக்கொண்ட தொல்காப்பியர்காலத் தமிழர், சட்டி செய்யத் தெரியாதிருந்தனர் என்பது, பெருநகைக்கு இடமானதாகும். சட்டி என்பது, சமையலுக்கு இன்றியமையாததும் எளிநிலையானதும் மறுபெயரற்றதுமான கலவகை

     “சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி

சளிசகடு சட்டைசவளி – சவிசரடு

சந்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்

வந்தனவாற் சம்முதலும் வை”

என்பது நன்னூல் மயிலைநாதருரை மேற்கோள்’ (தொல். எழுத்து மொழிமரபு பாவாணர் அடிக்குறிப்பு);

மொழிமுதல் சகரம் மறைவது, பலசொற்களில் உண்டென்று, இற்றை மொழியியலாளர் கருதுகின்றனர். அவ்வடிப்படையிலேயே உப்பு, ஏர் என்னும் சொற்கள் சுப்பு, சேர் என்னும் சொற்களினின்று உருவாகின எனக் கருதுகின்றனர். ஆயினும், அவை → சவை போன்ற சொற்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சகரச்சேர்ப்பு உண்டென்று கூறுவது பொருத்தமுறும் அமைதல் = பொருந்துதல், கூடுதல், நிலைதல். அவை = கூட்டம். அவை → சவை ஒநோ அமை → சமை. இவ்வாறே ஏமம் → சேமம் ஆலை- சாலை, ஏணி சேணி. ஊசி → குசி, ஆயிரம் → சாவிரம் (கன்னடம்); போன்றன சகரச் சேர்ப்புடன் கூடித் தமிழிலும் தமிழ் இனமொழிகளிலும் வழக்கூன்றியுள்ளன. இவை வடமொழியில் முறையே எனத் திரிந்துள்ளனர்.

   ஆவம் (வில் நாண்); → Skt. cāpa (வில்);; Pkt. cāv.

அரண், அரணம் (காப்பு, கோட்டை → Skt. šaraņa (புகலிடம்);

ஆலை, சாலை → Skt., Pkt. sālā

ஐயவி வெண்சிறுகடுகு – Ski.sarspa

இவ்வடிப்படையிலேயே உப்பு, ஏர் என்பன முறையே சுப்பு, சேர் என மாற்றம் பெற்றுள்ளன எனக் குறித்தல் பொருத்தமுடையதாம்.

     “ஊசி என்னும் சொல் தமிழ்ச் சொல் என்பது அதன் பொருட்காரணத்தால் மட்டுமன்றி, ஊசிக்கண் (சிறுகண்);, ஊசிக்களா முள்ளுக் களா);, ஊசிக்காது துணித்துக் கேட்குஞ்செவி);. ஊசிக்காய், ஊசிக்காரர், ஊசிச்சம்பா, ஊசித் துாற்றல், ஊசிப்பாலை, ஊசிப்புழு, ஊசி மல்லிகை, ஊசிமிளகாய், ஊசி முல்லை, ஊசிவேர், குத்துளசி, துன்னுரசி, தையலூசி, முதலிய பெயர் வழக்குகளாலும் அறியப்படும் மேலும் வடமொழியிலுள்ள சூசி என்னுஞ் சொல் siv (to sew); என்னும் வேரினின்று பிறந்ததாகக் காட்டப்படுவது. ஊசி என்னும் தென் சொல்லோ குத்துவது என்று பொருள் படும் உள் என்னும் வேரினின்று உள்→உளி→உசி→ஊசி என ஒழுங்காகத் திரிந்திருப்பது” (முதா121); என்று சகரச்சேர்ப்பிற்குப் பாவாணர் காட்டும். எடுத்துக்காட்டு, தெளிவாய் இருத்தலைக் காண்க.

இற்றை மொழியியலாளர்கள் முந்து திரவிடத்தில், இடையண்ண அடைப்பொலி சகரத்திற்கும் (c); முன்னண்ண உரசொலி சகரத்திற்கும் (S); தனித்தனியான ஒலியன் இடம் கொடுக்கவேண்டியது இல்லை என்கின்றனர். இதற்கு இனமொழி இனச் சொற்களில் ஒருமொழியில் முறையாக இவற்றுள் ஒன்று ஒலியனாய் இருக்க மற்றொன்றில் இன்னொன்று இருக்கும் நிலையைக் காட்டுவர். முந்துதிரவிட பழந் தமிழ் இடையண்ண அடைப்பொலிச் சகரம் (c);, இனமொழிகளில் முன்னண்ண உரசொலி (8);, பின்னண்ண அடைப்பொலி (k);, பல் அடைப்பொலி (t);, பின்னண்ண உரசொலி (h); என மாறியிருக்கும் தன்மையைக் காட்டுவர்.

பழந்தமிழ் மொழிமுதல் சகரம் தமிழிலும் அதன் இனமொழிகளிலும் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக மொழி முதலிலும் மொழியிடையிலும் உயிருடன் கூடி வரும்பொழுது உரசொலி (Sibilant);யாக ஒலிக்கப்படுவது பரவலாக உள்ளது. எனினும் இம் மாற்றம் பொருள் வேறுபாடு எதனையும் உருவாக்காததால் நெடுங்கணக்கில் உரசொலி சகரம் என்று தனியான ஒன்றைக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படவில்லை. தமிழின் இன மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் நெடுங் கணக்குகள் வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றியமைத்தனவாக இருப்பதால் உரசொலிச்சகரத்திற்குத் தனியான எழுத்தைக் கொண்டுள்ளன. எனினும் வெடிப்பொலிச் சகரத்திற்கும் உரசொலிச் சகரத்திற்கும் வேறுபாடு இல்லாமல் பயன்படுத்துவது அங்கும் பெரும்பான்மை, எ-டு: தெ சூடு, சூடு (பார். க. சளி, சளி குளிர்);.

சஃகுல்லி

 சஃகுல்லி caḵkulli, பெ. (n.)

   சிற்றுண்டி வகை. (பிங்);; a kind of pastry or cake.

     [அக்குன்ன? – அஃகுல்லி – சஃகுல்லி]

சஃகுல்லி → Skt. Saskuli

சக

சக1 caga,    பெ.அ.(adv.) ஒரே துறையில் பணிபுரிபவர்கள்; collegue, fello.

     “சக ஆசிரியர்களே ஒன்றுபடுங்கள்! சக எழுத்தாளருக்கு நேர்ந்தது நமக்கும் நேரலாம்”

த.வ. உடன்கூட்டு.

     [Skt.saha → த.சக.]

 சக2 caga, பெ.(n.)

   கணிதத்தில் கூட்டல்குறி (இலங்.);;     “ஐந்து சக ஐந்து சமன் பத்து”.

த.வ. கூட்டல்.

சககமனம்

 சககமனம் cagagamaṉam, பெ.(n.)

   உடன்கட்டையேறுகை; self-immolationof a Hindu widow on her husband’s funeral pyre, concremation, sati.

த.வ. மாலை நிலை.

     [சக + கமனம்.]

     [Skt.saha → சக.]

கம் → கமனம் = செல்லுதல்.

சககாரம்

 சககாரம் cagagāram, பெ. (n.)

   தேமா (பிங்.);; a kind of sweet mango.

     [சக்கரை → சகக்கரை → சககாரம்]

சககாரி

சககாரி cagagāri, பெ.(n.)

   துணைக்காரணம்; secondary cause.

     “அடுத்துவருமனன சககாரிகளாம்” (வேதா.சூ.134);.

     [Skt.{} → த.சககாரி.]

சகசட்சு

 சகசட்சு sagasaṭsu, பெ.(n.)

   கதிரவன் (யாழ்.அக.);; sun, as the eye of the world.

     [Skt.jagat-caksuh → த.சகசட்சு.]

சகசண்டி

 சகசண்டி sagasaṇṭi, பெ.(n.)

   பெருமுரடன் (இ.வ.);; rough, quarrelsome person.

த.வ. சண்டைக்காரன்.

     [சக + சண்டி.]

     [Skt.jagat → த.சக.]

சகசநிட்டை

சகசநிட்டை sagasaniṭṭai, பெ.(n.)

   பயிற்சியால் (அப்பியாசத்தால்); ஒருவனுக்கு இயற்கையாயமைந்த ஊழ்கம் (நிட்டை);; religious meditation that has becomesecond nature by long practice.

     “இன்னணஞ் சகசநிட்டை யெய்திய நந்திப்புத்தேள்” (தணிகைப்பு.நந்தியு.147);.

த.வ. இயல்பு ஊழ்கம், தன்மெய்யுணர்வு.

     [Skt.saha-ja+ni-stha → த.சகசநிட்டை.]

சகசன்

 சகசன் sagasaṉ, பெ.(n.)

   உடன்பிறந்தவன் (சகோதரன்); (சங்.அக.);; brother.

த.வ. பிறவன்.

     [Skt.saha-ja → த.சகசன்.]

சகசமலம்

சகசமலம் sagasamalam, பெ.(n.)

   உயிர்கட்கு இயல்பாயுளதாகிய ஆணவமலம் (சிவப்பிர.2, 20, உரை);; the {}, as an obstructive principle or bond inherent in the soul.

     [சகச(ம்); + மரம்.]

த.வ. பிறப்பு மலம்.

     [Skt.saha-ja → த.சகசம்.]

சகசம்

சகசம்1 sagasam, பெ. (n.)

   1. செம்முள்ளி; thorny nail dye-barleria prionitis.

   2. நத்தைச் சூரி; bristly button weed (சா.அக.);.

     [சிகப்பு = செம்மை திறம். சிகப்பு → சகப்பு → சகம் → சகசம்]

 சகசம்2 sagasam, பெ. (n.)

   1. இயற்கை; nature.

   2. சகடம், cart.

 சகசம் sagasam, பெ. (n.)

   1. கூடவுண்டானது (சி.சி.3:4, சிவாக்.);; concomitant.

   2. இயல்பு; nature.

     [Skt. saha-ja → த. சகசம்.]

சகசரநாமம்

 சகசரநாமம் sagasaranāmam, பெ.(n.)

   கடவுளின் ஓராயிரம் திருப் பெயர்த (நாமங்);களைக் கூறும் நூல்; sacred book containing thousand names of a deity.

த.வ. ஆயிரம் பெயர்.

     [Skt.sahas-ra-{} → சகசுரநாமம்.]

சகசரநாமார்ச்சனை

 சகசரநாமார்ச்சனை sagasaranāmārssaṉai, பெ.(n.)

   கடவுளுடைய ஓராயிரம் பெயர் (நாமங்);களையும் ஒவ்வொன்றாகச் சொல்லி மலர் முதலியவற்றை அவன் திருவடிகளில் இட்டு வழிபாடுசெய்கை; worship of a deity by offering at its feet a leaf, flower or pinch of saffron on pronouncing each of its thousand names.

த.வ. ஆயிரம் பூசனை.

     [Skt.sahasra-{}+{} → த.சகசரநாமார்ச்சனை.]

சகசரன்

 சகசரன் sagasaraṉ, பெ.(n.)

   தோழன்; fried, companion, associated.

     [Skt.saha-cara → த.சகசரன்.]

சகசரம்

சகசரம் sagasaram, பெ.(n.)

   ஆயிரம்; the number 1000.

     [Skt.sahasra → த.சகசுரம்.]

சகசரி

சகசரி sagasari, பெ. (n.)

   1. பொன்னிறங்கலந்த கரிய பூமருதோன்றி (மலை);.

 henna.

   2. வாடாக் குறிஞ்சி (திவா.);; a plant of ever fresh flowers.

     [சகசம் → சகசரி]

சகசரிதம்

சகசரிதம் sagasaridam, பெ.(n.)

   உடன் நிகழ்வது; concomitant.

     “ஆணவ சகசரிதமாக” (சி.சி.2.80, சிவாக்.);.

த.வ. உடனிகழ்ச்சி.

     [Skt.saha+carita → த.சகசரிதம்.]

சகசவேது

சகசவேது sagasavētu, பெ.(n.)

   கூறப்பெற்ற பண்பினால் பண்பியைப் பற்றி அறியும் வழி, ஏது (சி.சி.அளவை.10, சிவாக்.);; inference by which a thing is determined from a predication of its nature.

     [Skt.saha-ja+{} → த.சகசவேது.]

சகசா

 சகசா cagacā, பெ. (n.)

   சிறு குறிஞ்சா (மலை);; small Indian ipecacuanha.

 சகசா cagacā, பெ.(n.)

   சிறுகுறிஞ்சா (மலை);; small Indian impecacuanha.

     [Skt.{} → த.சகசா.]

சகசாகிகம்

 சகசாகிகம் cagacāgigam, பெ. (n.)

   மிளகுத் தக்காளி; chilly takkali – Solanum melangena (சா.அக.);.

சகசாட்சி

 சகசாட்சி cagacāṭci, பெ.(n.)

 sun, as spectator of the whole world.

     [Skt.jagat + {} → த.சகசாட்சி.]

சகசாதிசயம்

சகசாதிசயம் sagasātisayam, பெ.(n.)

   விந்தை (அதிசயம்); மூன்றனுள் ஒன்று (சீவக.2813, உரை);; innatepre-eminence, one of the three adisayam.

     [Skt.saha-ja+ato-{} → த.சகசாதிசயம்.]

சகசாலக்காரன்

 சகசாலக்காரன் cagacālaggāraṉ, பெ.(n.)

சகசாலக்கில்லாடி பார்க்க;see {}.

த.வ. வித்தைக்காரன்.

     [சகம் + சாலக்காரன்.]

     [Pkt.jaga → Skt.jagat → த.சகம்.]

சகசாலக்கில்லாடி

சகசாலக்கில்லாடி cagacālaggillāṭi, பெ.(n.)

   1. தந்திரக்காரன்; a cunning person.

   2. நாடறிந்த மாயவித்தைக்காரன்; a famous magician.

த.வ. படுகில்லாடி.

     [சகசாலம் + கில்லாடி.]

     [Pkt.jaga → Skt.Jagat → த.சகம்.]

சலுக்கு → சாலக்கு → சாலம்.

கிள்ளை + ஆடி → கிள்ளையாடி → கில்லாடி.

சகசாலப்புரட்டன்

 சகசாலப்புரட்டன் cagacālappuraṭṭaṉ, பெ.(n.)

   பெருமோசக்காரன்; consummate deceiver, as a magician.

த.வ. பெரும்புரட்டன்.

     [சகசாலம் + புரட்டன்.]

     [Pkt.jaga → Skt.jagat → த.சகம்.]

சகசாலம்

சகசாலம் cagacālam, பெ.(n.)

   மாய வித்தை; magical ilusion.

     “மானெனுமோர் சகசாலச் சிறுக்கி” (அருட்பா.vi,தான்பெற்ற.9);.

     [சக + சாலம்.]

     [Pkt.jaga → Skt.jagat → த.சகம் + சாலம்.]

சகசாலவித்தை

 சகசாலவித்தை cagacālavittai, பெ.(n.)

   ஞாலம் புகழும் மாயக்கலை; a famous magic or jugglery.

த.வ. பெரும்மாயக்கலை.

     [சக + சால(ம்); + வித்தை.]

     [Pkt.jaga → Skt.jagat → த.சகம்.]

சகசிரம்

சகசிரம் sagasiram, பெ.(n.)

சகச்சிரம்1 பார்க்க (திவா.);;see saga-c-ciram.

     [Skt.sahasra → த.சகசிரம்.]

சகசீலகம்

 சகசீலகம் cagacīlagam, பெ. (n.)

   முட்டைக் கோசு; cabbage (சா.அக.);.

சகசுரபேதி

 சகசுரபேதி sagasurapēti, பெ.(n.)

   மாழை (உலோக); மண் வகை; a kind of ore.

சகசுராரசக்கரம்

சகசுராரசக்கரம் sagasurārasaggaram, பெ.(n.)

   புத்தரது பாதத்திலுள்ள வரி (இரேகை);ச் சிறப்பு. (விசேடம்); (மணிமே.5, 104, உரை);; a discus-mark on the foot of Lord Buddha, as having thousand spokes.

த.வ. ஆயிரஆரச்சக்கரம்.

     [சகசுரார(ம்); + சக்கரம்.]

     [Skt.sahasra → த. சகசுரார(ம்);.]

சகசுராரத்தட்டு

 சகசுராரத்தட்டு sagasurārattaṭṭu, பெ.(n.)

சகத்திரதாரை பார்க்க;see {}.

     [சகசுராரம் + தட்டு.]

     [Skt.sahasra-{} → த.சகசுரார(ம்);.]

சகசை

 சகசை sagasai, பெ.(n.)

   உடன்பிறந்தாள் (சங்.அக.);; sister.

த.வ. பிறவி.

     [Skt.saha-{} → த.சகசை.]

சகசோதி

சகசோதி cagacōti, பெ.(n.)

   1. பேரொளி; brilliant light that illumines the whole world, over powering light.

   2. (உலகிற்கு ஒளியாயிருப்பவன்); கடவுள் (வின்.);; God, as the light of the world.

     [Skt.jagat+jyotis → த.சசசோதி.]

சகசோபை

 சகசோபை cagacōpai, பெ. (n.)

ஆதொண்டை:

 thоппу сарег (சா.அக.);.

சகச்சாரகம்

 சகச்சாரகம் cagaccāragam, பெ. (n.)

   சிவப்பு நெல்; a red variety of paddy (சா.அக.);.

     [சிவப்பு → செகப்பு = செம்மைநிறம். செகப்பு → சகப்பு. சக + சாரகம்]

சகச்சிரம்

சகச்சிரம் cagacciram, பெ.(n.)

   1. ஆயிரம்; the number 1000.

   2. சிவத்தோன்றியங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று (சைவச.பொது.332, உரை);; an ancient {} scripute in sanskrit,one of 28 {}.

     [Skt.sahasra → த.சகச்சிரம்.]

சகச்சிராட்சி

சகச்சிராட்சி cagaccirāṭci, பெ. (n.)

   ஒருவகைப் பூடு (தைலவ. தைல. 23); ; a kind of plant.

சகச்சை

 சகச்சை cagaccai, பெ. (n.)

   பொன்னாங்காணி; a yellow flowered edible plant known as verbesina mary-gold (சா.அக.);.

சகடக்கால்

சகடக்கால் cagaḍaggāl, பெ. (n.)

   வண்டிச் சக்கரம்; cart-wheel;

 carriage-wheel.

     “சகடக்கால் போல வரும்” (நாலடி. 2);.

     [சகடம் + கால். வண்டிக்குக் காலாக இருக்கும் சக்கரம்]

சகடக்கை

 சகடக்கை cagaḍaggai, பெ. (n.)

   ஒரு வகையான இரட்டைக்கை; double handpose in dance.

     [சகடம்+கை]

சகடபலம்

 சகடபலம் cagaḍabalam, பெ. (n.)

   நீர்க்கோழி (சங். அக.);; water-fowl.

சகடப்பாதை

 சகடப்பாதை cagaḍappātai, பெ. (n.)

   பெரும் பாதை (வின்.);; highway, road for wheeled traffic.

     [சகட + பாதை. பதி → பதம் = நிலத்திற் பதியும் காலடி. பதம் → பாதம் → பாதை = பாதம்பட்டு உண்டாகும்வது]

ஒருவர் மட்டும் செல்லக்கூடிய அளவினதான ஒற்றையடிப்பாதையைப் (கால்பாதை); போலில்லாமல் வண்டியோடும் பாதை அகலமானதாக அமையும் தன்மை நோக்கி, சகடபாதை பெரும் பாதையைக் குறித்தது.

சகடப்பொறி

சகடப்பொறி cagaḍappoṟi, பெ. (n.)

   சக்கர வடிவான ஒரு பொறி (சிலப். 15:216 உரை);; a machine in the shape of a wheel, used as a weapon of defence.

     [சகடம் + பொறி]

சகடமங்கலம்

சகடமங்கலம் cagaḍamaṅgalam, பெ. (n.)

   திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்தை உள்ளடக்கிய ஓரூர்; a village in Tiruvarur district.

     “நெற்குணம், சகடமங்கலம் ராமன்நதீசுவரம் ராமனாதசுவாமி கிராமம்” (நன்னி. க. தொ. 2. கல். 15, வரி 17);.

     [சகடம் + மங்கலம்]

சகடம்

சகடம்1 cagaḍam, பெ. (n.)

   1. சக்கரம் (சங் அக);; wheel.

   2. வண்டி; wheeled conveyance drawn by cattle, carriage, chariot.

     ‘பல்கதிர் முத்தார் சகடம் (சீவக. 363);.

   3. தேர்; car. ‘சகட சக்கரத் தாமரை நாயகன்’ (கந்தபு. காப்பு. 1);

   4. சகடயூகம் பார்க்க;see sagada-yugam.

     ‘சகடமாம் வெய்ய யூகமும்’ (பாரத. எட்டாம். 3);.

   5. கிணற்றிலிருந்து நீரிறைக்கப் பயன்படும் மாவுருளை; a wooden pulley used for drawing water from the well.

   ம. சகடம், சாடு: க. சகட, சகடி, சக்கடி;   தெ. செகடா; Skt. sakata;

 H., Mar. chakada;

 Pkt. sagada.

     [சக்கு → சக்கடம் → சக்கடா = கட்டை வண்டி. சக்கடம் → சகடம் = சக்கரம், வண்டி, பொது வகையான மாட்டு வண்டி, தேர் (வே.க. 2:);

வளைவுப் பொருளைக் கொண்ட வண்டி (வள்+தி); முதலாவதாக வட்டமான சக்கரத்தை யுணர்த்திப் பின்பு ஆகுபெயராய்ச் சகடத்தை உணர்த்துகின்றது. சக்கரத்தை வண்டியென்னும் வழக்கு இன்றும் தென்னாட்டிலுள்ளது. சிறுவர் களிமண்ணாற் செய்த சக்கரத்தை வண்டி என்பர். உழவர் கமலையேற்றத்தின் மேலுள்ள உருளை (pulley);யைக் கமலைவண்டி என்பர்.

 சகடம்2 cagaḍam, பெ. (n.)

   துந்துபி (பிங்);; a large drum.

     [சகடு → சகடம்]

சகடை3 பார்க்க

 சகடம்3 cagaḍam, பெ. (n.)

   ஊர்க்குருவி (பிங்.); ; Sparrow (செ.அக.);.

மறுவ. குருவி, அடைக்கலான்

ம. சடகம், சடக்கம்

     [சகடு → சகடம். வட்டமாகப் பறக்கும் குருவி. ஒ.நோ.: ஆல் → ஆலா = வட்டமிட்டுப் பறக்கும் பறவை வகை]

 சகடம்4 cagaḍam, பெ. (n.)

வட்டில் (பிங்.);

 plate;

 cup.

     [சகடு → சகடம் – வட்டமானது]

 சகடம்5 cagaḍam, பெ. (n.)

   தமரத்தை (மூ.அ.);; carambola Irce (செ.அக.);.

 சகடம்6 cagaḍam, பெ. (n.)

   ஓர் ஓக (யோகம்); நிலை; a kind of yogic posture.

     [சகடு = சக்கரம், வட்டம் சகதி → சகடம் = உடலை வளைத்துச் செய்யும் ஓக நிலை]

 சகடம்7 cagaḍam, பெ. (n.)

   1. முழுமையானது; the whole in a lump.

   2, சராசரி; average.

ம. க. சகடு

     [சகடு = வட்டம். சகடு → சகடம் = வட்டம், திரட்சி முழுமை]

சகடம்புறா

 சகடம்புறா cagaḍambuṟā, பெ. (n.)

   பச்சைப் புறாவில் ஒரு வகை; a kind of dove.

     [சகடம் + புறா]

சகடயூகம்

 சகடயூகம் cagaḍayūgam, பெ. (n.)

   சகட வடிவாக அமைக்கப் பெறும் அணிவகுப்பு வகை; the array of an army in the shape of a ca (செ.அக.);.

     [சகடம் + யூகம்]

சகடயோகம்

சகடயோகம் cagaḍayōgam, பெ. (n.)

   குருவுக்கு ஆறு எட்டு பன்னிரண்டாம் வீட்டில் திங்கள் (சந்திரன்); இருத்தலால் உண்டாகும் பயன் (சரசோ. குணாகுண. 117);; occasional prosperity resulting from the situation of the moon in the sixth, eighth or twelth sign from jupiter (astrol.);

     [சகடம் + யோகம்]

த. ஓகம் → Skt. yoga → த. யோகம்

சகடாசுரன்

 சகடாசுரன் cagaṭācuraṉ, பெ. (n.)

   கண்ணனைக் கொல்வதற்காக கம்சனால் அனுப்பப்பட்ட ஓர் அசுரன்; a demon sent by Kamsa to kill Krisna (சிறப். பெ.அக);.

     [சகடம் + அசுரன். இவன் தன்னுடைய ஆற்றலை ஒரு வண்டியிற் புகுத்திக் கொண்டு கண்ணனைக் கொல்லுவதற்கு நேரம் பார்த்துக் காத்திருத்ததாகவும், கண்ணன் அவ் வண்டியைக் காலால் உதைத்து அவ்வசுரனைக் கொன்றதாகவும் கதை. சரண் = தேவன். அசுரன் = தேவனல்லாதான் தேவர்க்குப் பகைவன். ‘அ’ அன்மை மறுதலைப் பொருள் முன்னொட்டு]

சகடான்னம்

 சகடான்னம் cagaṭāṉṉam, பெ. (n.)

   தூய்மையற்ற உணவு (யாழ். அக.);; bad food.

     [கசடு → சகடு + அன்னம், கசடு → சகடு → முன் பின்னாக மாறிய இலக்கணப் போலி]

 Skt. anna → த. அன்னம்

சகடி

சகடி cagaḍi, பெ. (n.)

   வண்டி (சங்.அக.); ; cart.

     [சகடம் → சகடு → சகடி (வே.க. 240);]

த. சகடி → Skt. Sakaki

சகடிகை

சகடிகை cagaḍigai, பெ. (n.)

   கைவண்டி (யாழ். அக.);; hand-cart.

     [சகடு → சகடி → சகடிகை (வே.க. 240);]

த. சகடிகை → Skt. sakatika

சகடு

சகடு1 cagaḍu, பெ. (n.)

   1. சக்கரம்; wheel.

   2. வண்டி; cart.

     “பெருஞ்சகடு தேர்காட்ட” (பெரியபு. திருநா. 6);.

   3. தேரைக் குறிக்கும் சதுரங்கக் காய்; bishop in chess.

   ம. சகடு; Skt. Sagata

     [தகடு → சகடு. சகடு என்னும் வடிவம் வடமொழியில் இல்லை (வே.க. 240);]

 சகடு2 cagaḍu, பெ. (n.)

கசடு பார்க்க;see kasadu.

     [கசடு → சகடு]

 சகடு3 cagaḍu, பெ. (n.)

   மொத்தம்; as a whole, in a lump.

   ம. சகடு;   க. சகுடம்;பட. சகட்டு Skt. sagata

     [தகடு → சகதி = வட்டமானது. ஒரு வளைவுக்குன் இருப்பது மொத்தமானது]

சகடை

சகடை1 cagaḍai, பெ. (n.)

சகடு பார்க்க (புறநா. 60, 8, உரை);;see Sagadu,

     [சகடு → சகடை (வே.க. 241);]

 சகடை2 cagaḍai, பெ. (n.)

   1. மணம்: smell.

   2. வசம்பு; sweet flag – Aeorus calamus (சா.அக.);

     [சகடு → சகடை]

 சகடை3 cagaḍai, பெ. (n.)

   1. சகண்டை பார்க்க: see sagandai.

     ‘சகடையோ பார்த்தவன்றே’ (கம்பரா. பிரமாத்திர. 5);

   2. இறப்பு நிகழ்வில் ஊதும் துந்துபி என்னும் இசைக்கருவி (வாச்சியம்); (வின்.);; a tabret used as funerals.

     [சுவள் → சவள் → சகள் → சகண்டை = வட்டமான பறை. சண்டை → சகடை = சக்கரம், சக்கரமுள்ள வண்டி பறை]

 சகடை3 cagaḍai, பெ. (n.)

   கிணற்றில் நீரிறைக்கப் பயன்படுத்தும் கப்பி; roller-pulley to draw water from well.

தண்ணி மொள்ள சகடையுங் கயிறுங் கொண்டு வா.

ம, சிகிட

     [சகடு → சகடை]

த. சகடை – Skt. Sakata

 சகடை cagaḍai, பெ.(n.)

வண்டிபோன்ற பீடம்

 a seat designed as wheel.

     [கசடு+கசட்டை]

 சகடை2 cagaḍai, பெ. (n.)

   மந்தமான போக்கு சுறுசுறுப்பின்மை; dullness stupidity.

     [சகடு-சகடை]

சகடைக்கொடி

சகடைக்கொடி cagaḍaiggoḍi, பெ. (n.)

   முரசறைவோன்; drummer (S.I.I.ii. 277);.

     [சகடை3 + கொட்டி. கொள் → கொட்டு → கொட்டி = கொட்டுபவன், அடிப்பவன்]

சகடோல்

 சகடோல் cagaṭōl, பெ.(n.)

   அம்பாரி (வின்.);; howdah.

     [U.{} → த.சகடோல்.]

சகட்டடியாக

 சகட்டடியாக cagaḍḍaḍiyāga,    கு.வி.எ. (adv.) மொத்தமாக; by the lump, at a sweep, on an average (செ.அக.).

     [சவட்டு → சகட்டு → சகட்டி → சகட்டடி + ஆக]

சகட்டிலே

 சகட்டிலே cagaṭṭilē, கு.வி.எ. (adv.)

சகட்டடியாக பார்க்க (கொ.வ.);;see guviesagaḍḍaḍiyāgapārggagova,(செ. அக.);.

     [சகடு → சகட்டு + இலே]

சகட்டுக்கு

 சகட்டுக்கு cagaṭṭuggu, கு.வி.எ. (adv.)

சகட்டடியாக பார்க்க (கொ.வ.);;see guviesagaḍḍaḍiyāgapārggagova,(செ. அக.);.

     [சகடு → சகட்டுக்கு]

சகட்டுமேனிக்கு

 சகட்டுமேனிக்கு cagaṭṭumēṉiggu, வி.எ. (adv.) எந்த வகை வேறுபாடும் பார்க்காமல், பாகுபாடு இல்லாமல், ஒட்டுமொத்தமாக:

 without any discretion or discrimination in a lump on, an average,

என்ன ஏது என்று கேட்காமல் சகட்டுமேனிக்குப் பேசாதே.

ம. சாட்டுமேனி

     [சகடம் = முழுமை, மொத்தம், சகட்டு + மேனி + கு. முழுமையாக அல்லது ஒட்டு மொத்தமாக. இனி, சகட்டு + மேனி. சகடு = சக்கரம், வண்டி. வண்டியோடும் போது அதன் சக்கரங்கன் சேறு, புழுதி. மேடு, பள்ளம், குப்பை என்று வேறுபாடு பார்க்காது செல்வதுபோல் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் அனைத்தையும் உள்ளடக்கியது என்னும் பொருளில் சகட்டுமேனிக்கு ஆளப்பட்டுள்ளது என்றுமாம். ஒ.நோ. கண்டமேனிக்கு]

சகட்டை

 சகட்டை cagaṭṭai, பெ. (n.)

   தமரத்தை; coromandal goose-berry (சா.அக.);.

சகணம்

சகணம்1 cagaṇam, பெ. (n.)

   புளியாரை; Indian sorrel – Oxalis corniculata (சா.அக.);.

 சகணம்2 cagaṇam, பெ. (n.)

   சாணம்; cow-dung (செ.அக.);.

     [சண்ணுதல் = நீக்குதல். சண் → (சாண்); → சானம் = சாணி, மாட்டுப்பவ்வீ. சாணம் → சகணம்]

   க. சகண;   பட. செகணி; Skt. chagana

சாணம் பார்க்க

 சகணம்3 cagaṇam, பெ. (n.)

   1. பயனற்ற பொருள்; something useless or worthless.

   2. உள்ளீடற்ற தேங்காய்; an empty or seedless coconut (சேரநா.);.

ம. சகணம்

     [சாணம் → சகணம். சாணியை உருவகப்படுத்தி இழிபொருள் உணர்த்தும் வழக்கு நோக்கி இப்பொருள்கள் ஆளப்பட்டுள்ளன]

     ‘இந்தச் சாணிப் பயலுக்கு என்ன சொன்னாலும் ஏறாது’ (உ.வ.); எனும் வழக்கைக் காண்க.

சகணவர்த்தமரோகம்

சகணவர்த்தமரோகம் cagaṇavarttamarōgam, பெ. (n.)

   கண்னோய் வகை (சீவரட் 245);; an eye disease.

     [சக்கு → சக → சகண + வர்த்தம + ரோகம்]

சகண்டை

சகண்டை cagaṇṭai, பெ. (n.)

   1. துந்துபி யென்னும் முரசு (பிங்.);; a kind of large drum.

   2. பறை (வாச்சியப்பொது); (திவா.);; drum.

     [சுவள் → சவள் → (சகள்); → சகண்டை (மு.தா. 268]

சகதண்டம்

சகதண்டம் cagadaṇṭam, பெ.(n.)

   உலக உருண்டை; world, as being spherical, universe.

     “பெற்றாள் சகதண்டங்களனைத்தும்” (பாரத.அருச்சுனன்றீர்.15);.

     [Skt.jagat+anda → த.சகதண்டம்.]

சகதலப்புரட்டன்

 சகதலப்புரட்டன் cagadalappuraṭṭaṉ, பெ.(n.)

   பெருஏமாற்றுக்காரன்; consummate cheat, as one capable of over turning or upsetting the whole world.

த.வ. உலகப்புரட்டன்.

     [சக(ம்); + தலம் + த.புரட்டன்.]

     [Pkt.jaga → Skt.{} → த.சகம்.]

சகதாதான்மியம்

 சகதாதான்மியம் cagatātāṉmiyam, பெ.(n.)

   உலகத்தின் அழுந்திய பற்று (வின்.);; earthly connections worldliness, secularity.

     [Skt.jagat+{} → த.சகதாதான்மியம்.]

சகதாத்திரி

 சகதாத்திரி cagatāttiri, பெ.(n.)

கொற்றவை (துர்க்கை); (உலகத்திற்குத் தாய்); (யாழ்.அக.);;see {},

 as the mother of the universe.

த.வ. வெற்றிச்செல்வி.

     [Skt.jagat+{} → த.சகதாத்திரி.]

சகதாமத்தி

 சகதாமத்தி cagatāmatti, பெ. (n.)

   தகரை (வின்.);; foetid cassia.

மறுவ. சக்கரம்

சகதி

சகதி1 cagadi, பெ. (n.)

   1. சேறு, ஈரக்குழைவான மண் (திவா.);; mud; mire.

     ‘சகதியில் கல்லை விட்டெறிந்தால் தன்துணி என்றும் அசலார் துணி என்றும் பாராது’ (பழ.);.

   2. பொல்லாநிலம்; bog, puddle.

   ம. சகதி;   க. கரிய;   கோத. கெத்தெ;   குரு. கச்; Skt. sada.

     [அள்ளுதல் = செறிதல் அள் → அள்ளல் = செறிவு, சேறு. அள்ளல் = சள்ளல். சள் → சய → சக+தி → சகதி]

 சகதி2 cagadi, பெ. (n.)

   1. ஒற்றொழித்துப் பாதம் ஒன்றுக்குப் பன்னிரண்டு எழுத்தாய்த் தமிழில் வழங்கும் வடமொழி மண்டிலம் (விருத்தம்); (வீரசோ. யாப். 33, உரை);; Sanskrit verse of four metrical lines of I2 syllables each, adopted in Tamil.

   2. நிலம் (யாழ். அக.);; the earth.

     [சகடம் → சகடி → சகதி]

த. சகதி → Skt. jagati

சகதீசன்

 சகதீசன் cagatīcaṉ, பெ.(n.)

   கடவுள் (உலகத்திற்குத் தலைவன்);; God, as lord of the universe.

த.வ. ஞாலமுதல்வன்.

     [Skt.Jagad-{} → த. சகதீசன்.]

சகதேவன்

 சகதேவன் cagatēvaṉ, பெ.(n.)

   பாண்டவர் ஐவரின் இளையோன் (பாரத.);;{}, the youngest of the {} princes, one of {}.

     [சகம் + தேவன்.]

     [Skt.saha → த.சகம்.]

சகதேவம்

சகதேவம் cagatēvam, பெ.(n.)

   உண்கலமாக பயன்படுத்தத் தகாத இலைகளுடைய ஒருவகை மரம்; a kind of tree whose leaves should not be used for serving food.

     “சகதேவ முண்முருக்கு” (அறப்.சத.73);.

     [Skt.{} → த.சகதேவம்.]

சகதேவி

சகதேவி1 cagatēvi, பெ.(n.)

   நிலமகள் (வின்.);; Goddess of the earth.

     [சகம் + தேவி.]

     [Skt.jagat → த.சகம்.]

 சகதேவி2 cagatēvi, பெ.(n.)

   நெய்ச்சிட்டி (தைலவ.தைல.64);; wild cumin.

     [Skt.{} → த.சகதேவி.]

 சகதேவி3 cagatēvi, பெ.(n.)

   திருமகள் (இலக்குமி); (யாழ்.அக.);; Lakshmi.

     [Skt.jagat → த.சகம். + த.தேவி.]

சகதேவித்தைலம்

சகதேவித்தைலம் cagatēvittailam, பெ.(n.)

   நெய்ச்சிட்டியினின்று வடிக்கப்பட்ட தைல மருந்து (தைலவ.தைல.64);; a medicinal oil extracted from {}.

     [Skt.{}+tailam → த.சகதேவித் தைலம்.]

சகத்குரு

 சகத்குரு cagatguru, பெ.(n.)

   பரமகுரு (இ.வ.);; preceptor of the world, an eminent religious leader.

     [சக(ம்); + குரு.]

     [Skt.jagat → த.சகம்.]

சகத்தன்

சகத்தன் cagattaṉ, பெ.(n.)

   நடுவு நிலைமையுள்ளவன்; unbiassed, impartial person.

     “சகத்தனாய் நின்றொழுகுப் சால்பு” (பழ.339);.

த.வ. நயனாளன்.

     [Skt.{} → த.சகத்தன்.]

சகத்திரதாரம்

 சகத்திரதாரம் cagattiratāram, பெ.(n.)

   ஆயிரம் முனைகளையுடைய திருமாலின் சக்கரப்டை (யாழ்.அக.);; discus of {}, as thousand pointed.

த.வ. மாலாழி.

     [Skt. sahas-ra-{} → த.சகத்திரதாரம்.]

சகத்திரதாரை

சகத்திரதாரை cagattiratārai, பெ.(n.)

   பல கண்களுள்ள பூசை (அபிடேக);த் தட்டு; sieve like vessel used in bathing an idol.

     “சகத்திர தாரையாலே…. நீராட்டி” (விநாயகபு.பட்டாபி.74);.

த.வ. ஆயிரம் கண்தட்டு.

     [Skt.sahasra-{} → த.சகத்திரதாரை.]

சகத்திரபேதி

சகத்திரபேதி cagattirapēti, பெ.(n.)

   1. பெருங்காயம்; asafoetida.

   2. சகச்ரபேதி பார்க்க;see {}.

     [Skt. {} → த.சகத்திரபேதி.]

சகத்திரம்

சகத்திரம் cagattiram, பெ.(n.)

   சகச்சிரம்; a kind of ore.

     “சகத்திர கோதான பலன்” (சேதுபு.பலதீர்.19);.

     [Skt.sahasra → த.சகத்திரம்.]

சகத்திரவீரியம்

 சகத்திரவீரியம் cagattiravīriyam, பெ.(n.)

   அருகு (மலை);; hurrially grass.

     [சகத்திர(ம்); + வீரியம்.]

     [Skt.sahasra → த.சகத்திர(ம்);.]

வீரம் → வீரி → வீரியம்.

சகத்திரவேதி

 சகத்திரவேதி cagattiravēti, பெ.(n.)

சகத்திரபேதி பார்க்க;see {}.

     [Skt.sahasra-{} → த.சகத்திரவேதி.]

சகத்திராட்சன்

 சகத்திராட்சன் cagattirāṭcaṉ, பெ.(n.)

 Indra, as thousand eyed.

     [Skt.{} → த.சகத்திராட்சன்.]

சகத்திராமி

 சகத்திராமி cagattirāmi, பெ. (n.)

   முப்பிரண்டை; triangular-stalked wine vitis (சா.அக.);.

சகத்து

 சகத்து cagattu, பெ.(n.)

   உலகம்; universe, world, earth.

     [Pkt.jagat → Skt.jagat → த.சகத்து.]

சகநாதன்

சகநாதன் caganātaṉ, பெ.(n.)

சகந்நாதன் பார்க்க;see sagan-{}.

     “தையலோர்புறம் வாழ் சகநாதனே” (தாயு.பொன்னை.59);.

     [Skt.jagat+{} → த.சகநாதன்.]

சகநாதம்

 சகநாதம் caganātam, பெ. (n.)

   துணிவகை (இ.வ.);; a kind of cloth (செ.அக.);

சகநாயகன்

 சகநாயகன் caganāyagaṉ, பெ.(n.)

   காந்தம் (யாழ்.அக.);; magnet.

சகந்நாதன்

சகந்நாதன் cagannātaṉ, பெ.(n.)

   1. கடவுள் (உலகிற்கு இறைவன்);; God, as Lord of the world.

   2. பூரியில் கோயில் கொண்டுள்ள திருமால்; Visnu worshipped in Jagannath.

த.வ. உலகிறைவன்.

     [Skt.jagan-{} → த.சகந்நாதன்.]

சகந்நாதம்

 சகந்நாதம் cagannātam, பெ.(n.)

   ஒரிசா மாநிலத்தில் பூரி என்று வழங்கும் (விட்டுணு); மாலியத்தலம்; Puri in Orissa famous as a Visnu shrine and place of pilgrimage.

     [Skt.jagan+{} → த.சகந்நாதம்.]

சகனம்

சகனம்1 cagaṉam, பெ. (n.)

   உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ள பகுதி, பிட்டம்; buttock, rump (செ.அக.);.

     [சகடம் → சகனம்]

த. சகனம் → Skt. jaghana

 சகனம்2 cagaṉam, பெ. (n.)

   பொறுமை; patience; forbearance (செ.அக.);.

     [அகம் → அகன் = மனம், உள்ளம். ம் → ன் (போலி);. அகன் → அகனம் → சகனம் = மனத்துள் அடக்கிவைத்தல், பொறுமை]

சகனம் → Skt. saghana

 சகனம்1 cagaṉam, பெ.(n.)

   பிருட்டம் (பிங்.);; buttocks, rumb.

     [Skt.jaghana → த.சகனம்.]

 சகனம்2 cagaṉam, பெ.(n.)

சகாப்தம் பார்க்க;see {}.

     “ஏழஞ்சிருநூ நெடுத்தவாயிரம் வாழுநற் சகன மருவா நிற்ப” (சங்கற்ப.பாயி.);.

     [Skt.{} → த.சகனம்.]

சகன்

சகன் cagaṉ, பெ. (n.)

   சாலிவாகனன்; Sali vahana.

     ‘சகன்காலம்’ (பெருந்தொ. 956);.

     [அகன் = கணவன், தலைவன். அகன் → சகன்]

 சகன்1 cagaṉ, பெ.(n.)

   உலக நாயகன்; Lord of the Unvierse.

     “குறைவில்சகன் சூழ்கொள்பவர்க்கு” (சி.போ.8, 2);.

     [Skt.jagat → த.சகன்.]

 சகன்2 cagaṉ, பெ.(n.)

   தோழன்; companion.

     [Skt.{} → த.சகா.]

சகன்னம்

 சகன்னம் cagaṉṉam, பெ. (n.)

   உற்றுக் கேட்டல்; listening attentively

சகன்பன்னி

 சகன்பன்னி cagaṉpaṉṉi, பெ. (n.)

   அகத்தி; Sesbania grandiflora (சா.அக.);.

சகன்மகதாது

சகன்மகதாது cagaṉmagatātu, பெ.(n.)

   செயப்படு பொருள் குன்றாவினை (பி.வி.35, உரை);; transitive verb, as a verb accompanied by an object.

     [Skt.sakarmaka + த.தாது.]

சகன்மகர்த்தரிப்பிரயோகம்

சகன்மகர்த்தரிப்பிரயோகம் cagaṉmagarttarippirayōgam, பெ.(n.)

   செயல்படு பொருள் குன்றாவினை கொண்ட செய்வினை வழக்கு (பி.வி.36, உரை);; active voice of a transitive verb.

     [Skt.sakarma+kartari-prayoga.]

சகன்மம்

 சகன்மம் cagaṉmam, பெ.(n.)

சகன்மகாதாது பார்க்க;see {}.

சகபாடி

சகபாடி1 cagapāṭi, பெ.(n.)

   ஒருசாலை மாணாக்கன்; classmate, school-fellow.

த.வ.பள்ளித்தோழன்.

     [Skt.saha-{} → த.சகபாடி.]

 சகபாடி2 cagapāṭi, பெ.(n.)

சகலபாடி பார்க்க;see {}.

 சகபாடி3 cagapāṭi, பெ.(n.)

   கூடப்பாடுவோன் (யாழ்.அக.);; accompanist.

த.வ. உடன்பாடி.

     [Skt.saha-{} → த.சகபாடி.]

சகப்பிராந்தி

 சகப்பிராந்தி cagappirāndi, பெ.(n.)

   உலகவின்பத்தால் ஏற்படும் மயக்கம்; infatuation in worldly enjoyments and attractions.

த.வ. மண்ணுலகப்பற்று.

     [Skt.jagat + {} → த.சகப்பிராந்தி.]

சகப்புரட்டன்

 சகப்புரட்டன் cagappuraṭṭaṉ, பெ.(n.)

சகதலப்புரட்டன் பார்க்க;see {}.

     [சக+புரட்டன்.]

     [Skt.jagat → த.சக.]

சகப்புரட்டு

 சகப்புரட்டு cagappuraṭṭu, பெ.(n.)

   பெருமோசம் (இ.வ.);; audacious swindling.

     [சகம்+புரட்டு.]

     [Skt.jagat → த.சகம்.]

சகப்புரளி

 சகப்புரளி cagappuraḷi, பெ.(n.)

சகப்புரட்டு பார்க்க (இ.வ.);;see {}.

     [சக+புரளி.]

     [Skt.jagat → த.சகம்.]

சகமாதா

சகமாதா cagamātā, பெ.(n.)

   மலைமகள் (பார்வதி); (கூர்மபு.திருக்கலியாண.23);;{}.

     [Skt.jaga+{} → த.சகமாதா.]

சகமார்க்கம்

சகமார்க்கம் cagamārggam, பெ.(n.)

   கடவுளைப் போல் வடிவம் பெறுவதற்குரிய ஓக (யேகா); நெறி;{}, as the path leading to {}.

     “சகமார்க்கம்… அட்டாங்க யோகமுற்று முழத்தல்” (சி.சி.8, 21);.

த.வ. தோழமைநெறி.

     [Skt.saha+{} → த.சகமார்க்கம்.]

சகமீன்றவன்

 சகமீன்றவன் cagamīṉṟavaṉ, பெ.(n.)

{}, as the mother of the universe.

     [சகம் + ஈன்றவள்]

     [Skt.{} → த.சகம்.]

ஈல் → ஈன் → ஈன்ற → அவள்.

சகமுனியா

 சகமுனியா cagamuṉiyā, பெ.(n.)

   மாமூதா என்னுங் கொடி (M.M.);; gum scam-mony.

சகம்

சகம் cagam, பெ. (n.)

   1. வெள்ளாடு; goal.

   2. முயல்; hare (சா.அக);.

     [தகர் → தகம் → சகம்]

 சகம்1 cagam, பெ.(n.)

   உலகம் (பிங்.);; earth, world, universe.

     [Pkt.jaga → Skt.jagat → த.சகம்.]

 சகம்2 cagam, பெ.(n.)

   1. சகாப்தம் பார்க்க;see {}.

   2. குறிப்பிட்ட காலங்களிலிருந்து தொடங்கிக் காலங்கணிக்க வழங்கப்பட்டு வரும் ஆண்டு மானம்; era, in general.

     [Skt.{} → த.சகம்.]

 சகம்3 cagam, பெ.(n.)

   1. பாம்புச்சட்டை (சங்.அக.);; slough of a serpent.

   2. சட்டை (அக.நி.);; coat.

     [Skt.jahaka → த.சகம்.]

சகரஆகாரம்

 சகரஆகாரம் cagaraāgāram, பெ. (n.)

     ‘சா’ என்னும் எழுத்து;

 the letter ‘sa’.

     [சகரம் → ஆகாரம்]

உயிர்மெய்யெழுத்துகளுள் குறிலுக்குக் கரம் சாரியை நெடிலுக்குத் தனிச் சாரியை இல்லை. இதனால் மெய்யையும் நெடிலையும் பிரித்து சகர ஆகாரம் எனச் சொல்லப்பெறும்.

சகரஈகாரம்

 சகரஈகாரம் cagaraīgāram, பெ. (n.)

     ‘சீ’ என்னும் எழுத்து;

 the letter ‘si’.

     [சகரம் → ஈகாரம்]

சகரஊகாரம்

 சகரஊகாரம் cagaraūgāram, பெ. (n.)

     ‘சூ’ என்னும் எழுத்து;

 the letter ‘su’.

     [சகரம் → ஊகாரம்]

சகரஏகாரம்

 சகரஏகாரம் cagaraēgāram, பெ. (n.)

     ‘சே’ என்னும் எழுத்து;

 the letter ‘se’.

     [சகரம் + ஏகாரம்]

சகரஐகாரம்

 சகரஐகாரம் cagaraaigāram, பெ. (n.)

     ‘சை’ என்னும் எழுத்து;

 the letter ‘šai’.

     [சகரம் + ஐகாரம்]

சகரஓகாரம்

 சகரஓகாரம் cagaraōgāram, பெ. (n.)

     ‘சோ’ என்னும் எழுத்து;

 the letter ‘so’.

     [சகரம் + ஒகாரம்]

சகரச்சாரி

 சகரச்சாரி cagaraccāri, பெ. (n.)

   சத்திசாரம் (வின்.);; a salt of acid and burning taste.

சகரநீர்

சகரநீர் cagaranīr, பெ. (n.)

   கடல்; sea. ‘சகரநீர் சுலாம் புவி’ (பிரமோத். 13, 66].

     [சக்கரம் → சகரம் + நீர். சகரம் = நிலவுலகைச் சுற்றியிருப்பது]

சாகரம் பார்க்க

சகரன்

 சகரன் cagaraṉ, பெ. (n.)

   முதலேழு வள்ளல்களுள் ஒருவன்; a chief famed for liberality, one of seven mutal-vallalkal (செ.அக.);.

     [அகரம் = மருத நிலத்தூர், ஊர். அகரம் → அகரன் → சகரன். இனி, அகலம் → அகலன் = பெருமையுடையவன். அகலன் → (அகரன்); → சகரன் என்றுமாம்]

சகரம்

சகரம் cagaram, பெ. (n.)

   வேம்பு; margosa tree – Aza dirachta Indica (சா.அக.);.

 சகரம் cagaram, பெ. (n.)

   பீர்க்கு; sponge-gourd.

     [தகரம் → சகரம்]

 சகரம் cagaram, பெ. (n.)

     ‘ச’ என்னும் தமிழ் வண்ணமாலை எழுத்து;

 the letter ‘sa’.

     [சகரம், கரம் குறிற்சாரியை]

 சகரம்3 cagaram, பெ. (n.)

சாகரம் பார்க்க: see šāgaram.

     [சக்கரம் → சகரம் = மண்ணுலகைச் சுற்றி இருப்பது]

சகரர்

சகரர் cagarar, பெ.(n.)

   கடலுண்டாகுமாறு (பூமியை);த் தோண்டியவரான சகரமக் (புத்திரர்);கள்; the sons of sagara, who are believed to have dug out of the sea.

     “சகரர் தொட்டலாற் சாகர மெனப் பெயர் தழைப்ப” (கம்பரா.அகலி.43);.

த.வ. கடலகழர்.

     [Skt. {} → த.சகரர்.]

இத்தொன்மக்கதையின் மூலம் தென்தமிழகக்கந்தபுராண காலத்து ஆகலாம். கடல் கொண்ட குமரி நாட்டின் கிழக்கிலிருந்ததாகக் கூறப்படும் இந்துமாக்கடல் பகுதிக்குத் தொடுகடல் எனும் பெயர் இருந்தது. தோண்டிய கடல்தொடுகடல் எனப்பட்டது. கடல்வழி மரத்தோணிப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த தீவுநில இணைப்புகளை வெட்டிக்கால்வாய் உண்டாக்கிய பழந்தமிழக மன்னர் மரபினர் கடலர் (சகரர்); – கடலகழர் ஏனம் பெயர் பெற்றிருக்கலாம்.

சகராதனம்

சகராதனம் cagarātaṉam, பெ.(n.)

   ஓகவிருக்கை (யோகாசன); வகை (தத்துவப்.109, உரை);;     [சகரா + ஆதனம்.]

     [Skt.sakara → த.சகர.]

சகரிகம்

 சகரிகம் cagarigam, பெ. (n.)

   நாயுருவி (மலை);; a plant growing in hedges and thickets.

ம. சகரிகம் (ஒரு மருந்துச் செடி);: Skt. saikharika.

சகருவம்

 சகருவம் cagaruvam, பெ. (n.)

   பெருமை; celebrity.

     [அகல் → அகலம் → (அகரம்); → சகரம் → சகருவம்]

சகரூபன்

 சகரூபன் cagarūpaṉ, பெ.(n.)

   உடன்பிறந்தவன் (யாழ்.அக.);; brother.

     [Skt.saha+{} → த.சகரூபன்.]

த.உருவம் → Skt.{}.

சகரையாண்டு

சகரையாண்டு cagaraiyāṇṭu, பெ. (n.)

   கி.பி. 78இல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டு மானம்; Sālivāhana Era commencing from 78 A.D. (செ.அக.);.

     [சகரை + ஆண்டு]

சக்கரம் = ஆணைச் சக்கரம். சக்கரம் → சகரம் → சகரை → ஆண்டுழி என்றுமாம்.

சகர்

 சகர் cagar, பெ. (n.)

   பாம்புகொல்லி;   கீரிப்பூடு; Indian snake root;

 snake-killer;

 Ophiorrhiza mungos (சா.அக.);.

சகர்ப்பபிராணாயாமம்

சகர்ப்பபிராணாயாமம் cagarbbabirāṇāyāmam, பெ.(n.)

   மத்திரத்தோடு செய்யப்படும் வளிநிலை (பிராமணாயாமம்); (திருக்காளத்.பு. ஞானயே.16);; restraint of breath, practised with the use of mantras.

த.வ. மந்திர வளியோகம்.

     [Skt. sa-kalpa+{} → த.சகர்ப்பபிராணாயாமம்.]

சகலகம்

 சகலகம் cagalagam, பெ. (n.)

   வெள்ளாடு; goat (யாழ்.அக.);.

     [சகம் → சகலகம்]

சகலகலாவல்லவன்

 சகலகலாவல்லவன் cagalagalāvallavaṉ, பெ.(n.)

   எல்லாக் கலைகளுங் கற்றுத் தேர்ந்தவன்; person well-versed in all branches of learning.

     [சகலம் + கலா + வல்லவன்.]

     [Skt. sakala+{} → த.சகலகலா.]

த.கலை → Skt.{}

சகலகலாவல்லி

 சகலகலாவல்லி cagalagalāvalli, பெ.(n.)

 Kalaimagal, as the Goddess of all learning.

     “சகலகலாவல்லி மாலை” (குமர.பிர.சகல);.

த.வ. அருங்கலைச்செல்வி.

சகலகுணசம்பன்னன்

 சகலகுணசம்பன்னன் sagalaguṇasambaṉṉaṉ, பெ.(n.)

   நற்குணங்களெல்லாம் நிரம்பியவன்; one endowed with all good qualities.

த.வ. சான்றோன்.

     [சகல + குணம் + சம்பன்னன்.]

     [Skt.sakala → த.சகல + குணம் + panna.]

சகலத்திராள்

 சகலத்திராள் cagalattirāḷ, பெ.(n.)

   எல்லோரும் (இ.வ.);; all persons, including men, women and children.

த.வ. ஐந்திணையார்.

     [Skt.sakala → சகலம் + த.திரள் → திராள்.]

சகலன்

 சகலன் cagalaṉ, பெ.(n.)

   தன் மனைவியின் உடன் பிறந்தாள் கணவன் (பிங்.);; wife’s sister’s husband.

     [Skt.sakula → த.சகலன்.]

சகலபாசனம்

 சகலபாசனம் cagalapācaṉam, பெ. (n.)

   அருகன் முக்குடையுள் ஒன்று; an umbrella of Arhat, one of muk-kudai (சூடா.);.

 சகலபாசனம் cagalapācaṉam, பெ.(n.)

   அருகன் முக்குடையுள் ஒன்று (சூடா.);; an umbrella of Arhat, one of mu-k-kudai.

     [Skt.sakala+{} → த.சகலபாசனம்.]

சகலமங்கலை

 சகலமங்கலை cagalamaṅgalai, பெ. (n.)

   மலைமகள்; Parvati (யாழ். அக.);.

 சகலமங்கலை cagalamaṅgalai, பெ.(n.)

   மலைமகள் (யாழ்.அக.);; Malaimagal.

     [Skt.sakala + த.மங்கலம் → மங்கலை.]

சகலமோகினி

 சகலமோகினி cagalamōgiṉi, பெ.(n.)

   உலகத் தோற்றத்திற்குக் காரணமாயுள்ள மாயை சக்தி (வின்.);;{}, the power of illusion in creation, personified as a female principle obscuring the mind.

த.வ. மாயை மகள்.

     [Skt.sakala+{} → த.சகலமோகினி.]

சகலம்

சகலம் cagalam, பெ. (n.)

   துண்டு; piece, fragment.

     ‘கொடிஞ்சியுஞ் சகலமுற்று’ (பாரத பதினான். 150);

     [கில் → சன் → சகல் → சகலம்]

 Skt. Sakala

 சகலம்1 cagalam, பெ.(n.)

   1. எல்லாம்; all the whole.

     “சகலத்திற்குநேத்திரமாகி நின்றோன்” (உத்தாரா.அசுவமேத.1);.

   2. சகலாவத்தை பார்க்க;see {}.

     “கலாதிசேர்ந்த சகலமாந் தன்மை” (சிவப்பிர.உண்மை.4, 12);.

த.வ. எல்லாம்.

     [Skt.sa-kala → த.சகலம்.]

சகலரும்

 சகலரும் cagalarum, பெ.(n.)

   எல்லோரும், அனைவரும் (அ.வ.);; all everyone.

     “சகலரும் இதையே சொல்கிறார்கள்” (கிரியா.);.

     [சகலர் + உம்.]

     [Skt.sakala → த.சகலர்.]

சகலர்

சகலர் cagalar, பெ.(n.)

   கடை மக்கள் மும்மலமுடைய ஆதன்; souls of the lowest class subject to mummalam.

     “அஞ்ஞான ரச்சகலத்தர் சகலராம்” (திருமந்.498);.

     [Skt.sakala → த.சகலர்.]

சகலவியாபி

 சகலவியாபி cagalaviyāpi, பெ.(n.)

   சர்வவியாபி பார்க்க; God, as omni present.

த.வ. அனைத்தூடி.

     [Skt.sa-kala+{} → த.சகலவியாபி.]

சகலாகமபண்டிதர்

 சகலாகமபண்டிதர் cagalāgamabaṇṭidar, பெ.(n.)

   சிவஞானசித்தியார் இயற்றிய அருணந்தி சிவாசாரியர்; Arunanti-{}, the author of {}, as learned in all the {}.

     [சகலாகமம் + பண்டிதர்.]

     [Skt.sa-kala+{} → த.சகலகமம்.]

பண்டு → பண்டம் → பண்டிதம் → பண்டிதர்

சகலாத்தன்

சகலாத்தன் cagalāttaṉ, பெ. (n.)

   அருகருள் நிகண்டவர்களால் கடவுளென்று கொள்ளப் படுபவர்; God worshipped by the Nirgrantha fect of lains

     “அனையாஞ் சகலாத்தரை” (பிரபோத. 33,6);

     [அகலன் = கடவுள். அத்தன் = அருகன். அகவன் + அத்தன் – அகலத்தன் → சகலத்தன்]

சகலாத்து

சகலாத்து cagalāttu, பெ. (n.)

   ஒருவகை கம்பளித் துணி; woollen stuff;

 broadcloth.

     “கட்டிலின் மேற்கட்டி சகலாத் தென்றும்” (விறலிவிடு. 142);,

   ம. சகலாத்து; U. saklat;

 Pkt, escarlata

     [சல்லாத்து = நெருக்கமான இழை யோடாத துணி. சல்லாத்து → சகலாத்தல்]

சகலாத்துக்கீரை

 சகலாத்துக்கீரை cagalāttugārai, பெ.(n.)

   கீரை வகை (வின்.);; sorrel.

     [சகலாத்து + கீரை.]

     [Port. escarlata → U.{} + த.சகலாத்து + கீரை.]

சகலி

 சகலி cagali, பெ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish (செ.அக.);.

சகலிகரணம்

 சகலிகரணம் cagaligaraṇam, பெ. (n.)

   துண்டு துண்டாக்குகை; breaking into pieces (யாழ்.அக);.

     [சகலி + கரணம்]

சகல்

 சகல் cagal, பெ. (n.)

கொதுகு: gnats, small flies (செ.அக);.

சகளதத்துவம்

சகளதத்துவம் cagaḷadadduvam, பெ.(n.)

   வழிபாடு (கிரியை); மிகுந்து அறிவு குறைந்த தூயமெய்ப்பொருள் (ஈச்சுர தத்துவம்); (சி.சி.165, ஞானப்.);;     ({}.); the function of God in which the principle of energy predominates over that of wisdom.

     [சகளம் + தத்துவம்.]

     [Skt.sakala → த.சகளம்+தத்துவம்.]

சகளத்திருமேனி

 சகளத்திருமேனி cagaḷattirumēṉi, பெ. (n.)

   சிவனது உருவவடிவம்; the body or form assumed by Śiva (செ.அக.);.

     [சகளம் + திருமேனி]

சகளநிட்களம்

சகளநிட்களம் cagaḷaniṭgaḷam, பெ. (n.)

   இலிங்கமாகிய சிவனது அருவுருவத் திருமேனி; the aspect of Śivan as being with and without form, represented by the linga (சி.போ.பா. 81, 359);.

     [சகளம் + நிட்களம்]

 Skt. niskala → த. நிட்களம்

சகளன்

சகளன் cagaḷaṉ, பெ. (n.)

உருவத் திருமேனி கொண்ட சிவன்:

Śiva, as with form (சி.சி. 165 ஞானப்.);,

     [சகளம் → சகளன்]

சகளபஞ்சகம்

சகளபஞ்சகம் cagaḷabañjagam, பெ.(n.)

   மாநோன்புடையாரது (மகாவிரதருடைய); முழுமையான பணி விடைசெய்கைக்குரிய மது மச்சிய மாங்கிச முத்திரை இணைவிழைச்சு என்பன (தக்கயாகப். 51, உரை);; the five categories, viz, drink, fish, flesh, pose and coition, required in {} worship of {}.

     [Skt.sakala+{} → த.சகளபஞ்சகம்.]

சகளப்பாடி

 சகளப்பாடி cagaḷappāṭi, பெ. (n.)

சகலன் பார்க்க: See sagala (செ.அக.);.

     [சகலப்பாடி → சகளப்பாடி]

சகளம்

சகளம் cagaḷam, பெ. (n.)

   உருவத் திருமேனி; the aspect of Śivan as having form, represented by the images.

     ‘சகளமாய் வந்ததென் றுந்தீபற’ (திருவுத்தி. 1);

     [சட்டம் → சடம் → சகடம் → சகளம்]

சகளவல்லகி

சகளவல்லகி cagaḷavallagi, பெ. (n.)

   வீணை வகை; a kind of lute. (பரத. ஒழி. 15);.

     [சகளம் + வல்லகி]

சகளாதனம்

 சகளாதனம் cagaḷātaṉam, பெ. (n.)

   இடக் கையின் மேல் இருகாலையும் ஊன்றி அட்டனைக் காலிட்டிருக்கும் இருக்கை; a yogic posture in which a person sits crosslegged over his left hand (யாழ்.அக.);.

     [சக்கரம் → சக்கரணம் (கால்); → சகரணம் → சகனம் → சகளாதனம்]

சகளீகரணஞ்செய்-தல்

சகளீகரணஞ்செய்-தல் cagaḷīgaraṇañjeytal,    1. செ.கு.வி.(v.i.)

   உடல் நிலம் புரள, வலம் வந்து வழிபடுதல் (சங்.அக.);; to perform anga-{} and kara-{}.

த.வ. உருண்தண்டம்.

     [Skt.{} → சகளீ + த.கரணம் + செய்-,]

சகளீகரி-த்தல்

சகளீகரி-த்தல் cagaḷīgarittal,    4. செ.கு.வி.(v.i.)

   உருவங்கொள்ளுதல் (சிவப்பிர.4, அவ.);; to assume form.

     [Skt.{}-, → த.சகளிகரி-.]

சகவபாடி

 சகவபாடி cagavapāṭi, பெ.(n.)

சகலன் பார்க்க;see {}.

     [சகலம் + பாடி.]

     [Skt.sakula → த.சகல.]

படு → பாடி

சகவம்

சகவம்1 cagavam, பெ. (n.)

   பறவை வகை; a bird. (யாழ்.அக.);.

     [சகடம் → சகணம் → சகவம்]

 சகவம்2 cagavam, பெ. (n.)

   பெண் வாத்து; duck (சா.அக.);.

     [சகமம் → சகவம்]

சகவாசம்

 சகவாசம் cagavācam, பெ.(n.)

   நட்பு; association, friendship, intercourse.

     [Skt.saha-{} → த.சகவாசம்.]

சகவாசி

 சகவாசி cagavāci, பெ.(n.)

   நண்பன் (பாண்டி.);; associate.

     [Skt.saha-{} → த.சகவாசி.]

சகா

 சகா cakā, பெ. (n.)

சகர் பார்க்க (மலை); see sagar.

மறுவ. கீரிப்பூடு

     [சகர் → சகா]

சகாகோடிசங்கம்

 சகாகோடிசங்கம் sakāāṭisaṅgam, பெ.(n.)

சதகோடிசங்கம் பார்க்க (வின்.);;see {}.

சகாகௌலம்

 சகாகௌலம் cakākaulam, பெ.(n.)

   நிரைய (நரக); வகை (யாழ்.அக.);; a hell.

சகாசகா

 சகாசகா cakācakā, பெ. (n.)

   ஆவாரை; tanner’s cassia – Cassia auriculata (சா.அக.);.

சகாசீரகம்

சகாசீரகம் cagācīragam, பெ.(n.)

   சீமைச்சீரகம் (இந்துபா.96);; caraway.

சகாடி

 சகாடி cakāṭi, பெ. (n.)

சகரம் பார்க்க (மலை);;see Sagaram (சா.அக.);,

     [சகரம் → சகா → சகாடி]

சகாடுப்பெட்டி

 சகாடுப்பெட்டி cakāṭuppeṭṭi, பெ.(n.)

   தறியின் மேல் பாகத்தில் அமைக்கப்பட் டிருக்கும் கருவி; an implement used in loom.

     [சகாடு+பெட்டி]

சகாட்டுத் தறி

 சகாட்டுத் தறி cakāṭṭuttaṟi, பெ. (n.)

   சேலை முழுவதும் பட்டுச் சரிகையால் நெய்ய உதவும் பெரிய தறி வகை; a big loom.

     [சகாட்டு+தறி]

சகாதம்

 சகாதம் cakātam, பெ. (n.)

   வேம்பு; margosa tree – Azadirachta Indica (சா.அக.);.

சகாதி

 சகாதி cakāti, பெ. (n.)

சகர் பார்க்க;see šagar (செ.அக.);.

     [சகர் → சக → சகாதி]

சகாதேவன்

 சகாதேவன் cakātēvaṉ, பெ.(n.)

சகதேவன் பார்க்க;see {}.

     [Skt.{} → த.சகா + த.தேவன்.]

சகாதேவம்

 சகாதேவம் cakātēvam, பெ. (n.)

   ஏலம்: ஏலக்காய்; cardamom – Elliteria cardamomum (சா.அக.);

சகாதேவி

சகாதேவி cakātēvi, பெ.(n.)

சகதேவி2 பார்க்க;see {}.

     [Skt.saha → த.சகா + த.தேவி.]

சகாத்தன்

 சகாத்தன் cakāttaṉ, பெ.(n.)

   தோழன் (யாழ்.அக.);; companion, fried.

     [Skt.{}+{} → த.சகாத்தன்.]

சகாத்தம்

 சகாத்தம் cakāttam, பெ.(n.)

சகாப்தம் பார்க்க;see {}.

     “எண்ணிய சகாத்தமெண்ணூற் றேழின்மேல்” (கம்பரா.தனியன்.);.

த.வ.நூறாண்டு, நூற்றாண்டு

     [Skt.{} → த.சகாப்தம்.]

சகானா

சகானா cakāṉā, பெ.(n.)

   ஒரு வகை அராசம் (பரத.இராக.55);;     (Mus.); a specific melody type.

     [U.{} → த.சகானா.]

சகாபாடி

 சகாபாடி cakāpāṭi, பெ.(n.)

சகபாடி பார்க்க;see {}.

சகாப்தம்

சகாப்தம் cakāptam, பெ.(n.)

   கி.பி.78-ல் தொடங்குவதும் சாலிவாகனன் பெயரால் வழங்குவதுமான ஆண்டுமானம்;{} era commencing from 78 A.D.

     [Skt.{} → த.சகாப்தம்.]

சகாமியம்

சகாமியம் cakāmiyam, பெ. (n.)

   ஆலமரம்; banyan tree – Ficus indica alias F. bengalensis (சா.அக.);.

 சகாமியம் cakāmiyam, பெ.(n.)

   பயன்கருதிச் செய்யும் வினை; acts performed in expectation of reward, opp. to nis-{}.

     “சாபாதிக்குச் சகாமியமே யேது” (வேதா.சூ.179);.

     [Skt.sa-{} → த.சகாமியம்.]

சகாயதனம்

 சகாயதனம் cakāyadaṉam, பெ.(n.)

   உதவியாகக் கொடுக்கும் பணம்; grant in aid.

     [சகாயம் + தனம்.]

     [Skt.{}+ → த.சகாயம்.]

சகாயன்

சகாயன் cakāyaṉ, பெ.(n.)

   1. உதவி செய்வோன்; assistant, helper.

   2. தோழன் (பிங்.);; companion, friend.

     [Skt.{} → த.சகாயன்.]

சகாயம்

சகாயம் cakāyam, பெ.(n.)

   1. துணை (பிங்.);; help, aid, support, patronage.

   2. விலைநயம்; cheapness, low or moderate price.

     ‘சகாயமாக வாங்கினேன்’.

   3. நலம் (சௌக்கியம்);; relief, ease, improvement in health.

     ‘எனக்கு உடம்பு கொஞ்சம் சௌக்கியம்தான்’ (இ.வ.);.

த.வ. உதவி.

     [Skt.{} → த.சகாயம்.]

சகாயி

சகாயி1 cakāyittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. உதவி செய்தல்; to assist, help.

   2. மலிவாய்க் கொடுத்தல்; to sell cheap.

த.வ. உதவுதல்.

     [Skt.{} → த.சகாயி-.]

 சகாயி2 cakāyi, பெ.(n.)

சகாயன் பார்க்க;see {}.

     [Skt.{} → த.சகாயி.]

சகாரம்

சகாரம்1 cakāram, பெ. (n.)

   மாமரம்; mango tree Mangiferus indica (சா.அக.);.

     [சக்கரை → சக்காரம் → சகாரம் = இனிப்புச் சுவையுள்ள பழத்தைத் தருவது]

சகாரம் கனியைக் குறிப்பின் பண்பாகு பெயரும் மரத்தைக் குறிப்பின் சினையாகு பெயரும் இருமடியாகு பெயரும் ஆகும்.

 சகாரம்2 cakāram, பெ. (n.)

   ஏச்சு (நாஞ்.);; abuse.

ம. சகாரம்

     [சகா → சகாரம்]

சகாரி

 சகாரி cakāri, பெ.(n.)

{} of Ujjayini, as the enemy of the {}.

     [Skt.{}+ari → த.சகாரி.]

சகாரி-த்தல்

சகாரி-த்தல் cakārittal,    11 செ.குன்றாவி (v.t)

   ஏசுதல் (நாஞ்.);; to abuse, revile.

ம. சகாரம்

சகார்த்தத்திருதியை

சகார்த்தத்திருதியை cakārddaddirudiyai, பெ.(n.)

   உடனிகழ்ச்சிப் பொருளில்வரும் மூன்றாம் வேற்றுமை (பி.வி.6, உரை);;     [Skt.{}+{} → த.சகார்த்தத்திருதியை.]

சகாவதீதம்

 சகாவதீதம் cakāvatītam, பெ. (n.)

   மலை நொச்சி மரம்; tell chaste tree – Vites altissima (சா.அக.);.

சகாவாங்கு-தல்

சகாவாங்கு-தல் cakāvāṅgudal,    5 கெ.குன்றாவி.(v.t.)

   பின்வாங்குதல்; to withdraw, to retreat.

     [Skt.{} → த.சகா + த.வாங்கு-.]

சகி

சகி1 cagi, பெ.(n.)

   தோழன்; male companion.

     “சிந்தை கலந்தசகியாகச் சேர்ந்து” (உத்தரரா.அனுமப்.45);.

     [Skt.sakhi → த.சகி.]

 சகி2 cagi, பெ.(n.)

   தோழி; female companion, lady’s maid.

     [Skt.sakhi → த.சகி.]

 சகி3 cagittal,    4 செ.குன்றாவி.(v.t.)

   1. பொறுத்தல் (சூடா.);; to bear, brook, toierate, forbear.

   2. மன்னித்தல் (இ.வ.);; to excuse, forgive.

     [Skt.sah → த.சகி-.]

சகிசரதாரை

சகிசரதாரை sagisaratārai, பெ.(n.)

   1. முத்துமாலை வகை (தக்கயாகப்.106, உரை);; a garland of pearls.

   2. திருநீராட்டில் (அபிஷேகத்தில்); பயன்படுத்தப்டுந் துளைகளுள்ள தட்டு (இ.வ.);; a seive-like vessel used in {}.

     [Skt.sahasra+{} → த.சகசிரதாரை.]

சகிதன்

சகிதன்1 cagidaṉ, பெ.(n.)

   உடன் கூடியவன்; one in company with another.

     “உமாசகிதா போற்றி” (சிவரக.கணபதிகுமர.4);.

     [Skt.sahita → த.சகிதன்.]

 சகிதன்2 cagidaṉ, பெ.(n.)

   அஞ்சி நடுங்குபவன் (சூடா.);; timid person, coward.

     [Skt.cakita → த.சகிதன்.]

சகிதம்

 சகிதம் cagidam,    கு.வி.எ.(adv.) கூட; togeter, in company with.

தன்சினேகிதன் சகிதம் வந்தான்.

     [Skt.sahita → த.சகிதம்.]

சகித்தல்

சகித்தல் cagittal,    தொ.பெ.(vbl.n.) சமாதி இன்ப-துன்பங்களை ஒரு நிகராக நுகர்கை;     “அமர்செயுஞ் சுகதுக்காதி யனுபவிப்பது சகித்தல்” (கைவல்.தத்துவ.9).

த.வ. பொறுத்தல்.

     [Skt.sah → த.சகித்தல்.]

சகித்துவம்

 சகித்துவம் cagittuvam, பெ.(n.)

   தோழமை (யாழ்.அக.);; companionship, friendship.

     [Skt.sakhi-tva → த.சகித்துவம்.]

சகிப்பாளி

 சகிப்பாளி cagippāḷi, பெ.(n.)

   பொறுமையுள்ளவன்; one who bears with patience; one who forgives.

     [Skt.caki → த.சகிப்பு+ஆளி.]

சகிப்பு

 சகிப்பு cagippu, பெ.(n.)

   பொறுக்கை; bearing, sustaining, enduring, forgiving.

த.வ. பொறுமை, பொறை.

     [Skt.caki → த.சகிப்பு.]

சகிப்புத்தன்மை

 சகிப்புத்தன்மை cagipputtaṉmai, பெ.(n.)

   பொறுத்துக் கொள்ளும் குணம்; tolerance.

     “விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத் தன்மையும் இல்லாவிட்டால் நட்பு என்பதே இயலாதே?.

த.வ.பொறையுடைமை.

     [Skt.caki → த.சகிப்பு + தன்மை.]

சகியம்

சகியம்1 cagiyam, பெ. (n.)

   1. நிலப்பனை; ground neem.

   2. மஞ்சள்; turmeric-Curcuma longa.

   3. சேம்பு; Indian kales – Colocasia antiguorum.

   4. சேப்பங் கிழங்கு; an esculent root-Caladium nymphaefolium (சா.அக.);.

     [சகதி = வளைந்தது, வளைவு, சகடு → சகடி → சகிடி → சகியம்]

 சகியம்2 cagiyam, பெ. (n.)

காவிரி ஆறு = GsurrSlb los (sv:

 the mountain in Coorgwhere the Cauveri has its source (Glæ-go);.

 Skt. shya

சகிலாகி

 சகிலாகி cagilāgi, பெ. (n.)

   கண்டத்திப்பிலி; Bengal long pepper-Clavica Roxburg.

சகு

 சகு cagu, பெ.(n.)

   நெய்ப்பரிசி (சவ்வரிசி); (மூ.அ.);; sago.

     [Malay.sagu → த.சகு.]

சகுச்சம்

 சகுச்சம் caguccam, பெ. (n.)

   ஏழிலைப் புன்னை; seven-leaved milky plant – Alstonia scholaris (சா.அக.);.

சகுடம்

சகுடம்1 caguḍam, பெ. (n.)

   சேம்பு; cocco.

     ‘சகுட நீரெனங (பாரதகுருகுல.14);.

     [சகடம் → சகுடம்]

 சகுடம்2 caguḍam, பெ. (n.)

நாய்,

 dog.

     ‘சகுடம்போ லவன் மனத்திற் சசிகாமம் பிடித்தலைப்ப’ (குற்றா.தல.மந்தமா. 38);

     [சகடம் = வளைவு, சகடம் → சகுடம்]

த. சகுடம் → Skt. jakuta

சகுடு

 சகுடு caguḍu, பெ. (n.)

   ஆழ்துளைக் கிணற் றில் நீரோட்டத்தின் மேல் படிவாகப் படிந்திருக்கும் நொய் மணல்; fine sand layer before water level in borewell.

     [சகுள்-சகுடு]

சகுடை

 சகுடை caguḍai, பெ. (n.)

   சிற்றகத்தி; common sesbane – Sesbania aegyptiaca (சா.அக.);.

சகுட்டகம்

 சகுட்டகம் caguṭṭagam, பெ. (n.)

   ஆடு தீண்டாப் பாலை (மலை);; worm-killer, a medicinal plant.

சகுட்டம்

 சகுட்டம் caguṭṭam, பெ. (n.)

சகுட்டகம் பார்க்க (வின்.);;see šaguttagam.

     [சகுட்டகம் → சகுட்டம்]

சகுணசாத்திரம்

 சகுணசாத்திரம் caguṇacāttiram, பெ.(n.)

   அறுபத்துநாலு கலையுள் புள்குறிணர்த்தும் நூல்; science of augury, one of {}.

த.வ. புள்குறி(நிமித்த); நூல், புள்ளோர்ப்புகல்.

     [Skt.sakuna + {} → த.சாத்திரம்.]

சகுணத்தியானம்

 சகுணத்தியானம் caguṇattiyāṉam, பெ.(n.)

   கடவுளைக் குணவுருவங்களுடையவராக ஊழ்கம் செய்கை (தியானிக்கை);; meditation on God, as having from and attributes.

     [Skt.{} → த.சகுணத்தியானம்.]

சகுணம்

சகுணம் caguṇam, பெ. (n.)

   குணத்தோடு கூடியது; that which has qualities or attributes.

     ‘சாடரிய சகுணமென’ (திருவினை. மாணிக்கம். 66);,

     [குணம் → சகுணம்]

சகுண்டகம்

 சகுண்டகம் sāagasaguṇṭagam, பெ. (n.)

   முக்கிளிக் கீரை; kind of greens – Corchorus capsularis (சா.அக.);.

சகுண்டகா

 சகுண்டகா caguṇṭagā, பெ. (n.)

சகுட்டகம் பார்க்க;see Saguttagam.

     [சகுட்டகம் → சகுண்டகா]

சகுண்டக்கொடி

 சகுண்டக்கொடி caguṇḍaggoḍi, பெ. (n.)

   ஊசலாங்கொடி; a kind of medicinal creeper (சா.அக.);.

சகுண்டிகை

 சகுண்டிகை caguṇṭigai, பெ. (n.)

   பாக்குமரம்; areca-nut (சா.அக.);.

சகுந்தம்

சகுந்தம்1 cagundam, பெ. (n.)

   1. பறவை; bird

     ‘சகுந்தங்க ணீள நோக்கின’ (கம்பரா சித்திர.43);.

   2. கழுகு (சூடா.);;   3. கமுகு (மலை);:

агесараlm.

     [சகடம் → சகுடம் → சகுண்டம் → சகுத்தம்]

த. சகுந்தம் → Skt. Sakunta

 சகுந்தம்2 cagundam, பெ. (n.)

   பூதம் (அக.நி.);; goblin.

சகுனக்காரன்

 சகுனக்காரன் caguṉaggāraṉ, பெ.(n.)

   குறிகூறுவோன் (இ.வ.);; fortune teller.

த.வ. புள்கணியன்.

     [சகுனம் + காரன்.]

     [Skt.{} → த.சகுன(ம்);.]

சகுனத்தசை

 சகுனத்தசை saguṉattasai, பெ.(n.)

   கெட்டது காட்டும் குறி; ill-omen.

த.வ. புள்தடை.

     [சகுனம் + தடை.]

     [Skt.{} → த.சகுனம்.]

சகுனப்பிழை

 சகுனப்பிழை caguṉappiḻai, பெ.(n.)

சகுனத்தடை பார்க்க;see {}.

     [சகுனம் + பிழை.]

     [Skt.{} → த.சகுனம்.]

சகுனம்

சகுனம்1 caguṉam, பெ. (n.)

   1. பறவை (பிங்.); bird.

   2. பறவைகள் வலமிடமாதல் முதலிய நன்மை தீமைக்குறி; omen, as indicated by flight of birds, etc.

     ‘நிமித்தமுஞ் சகுனமும்’ (பெருங். இலாவாண 18,39);. ‘சகுனம் நன்றா யிருக்கிறதென்று பொழுதுவிடிகிற வரைக்கும் கன்னம் வைக்கலாமா?’ (பழ.);,

   3. சகுனி3 பார்க்க. (விதான. பஞ்சாங். 29, உரை);;see saguni3 (Astron.);.

   4. சகோரம் பார்க்க (உரி.நி.);; sec šagõram.

     [சகடம் → சகணம் → சகுனம் → சகுனம் = வளைத்து அல்லது வட்டமாகப் பறக்கும் பறவை. அப்பறவையின் பறக்கும் தன்மையை வைத்துக் கணிக்கும் நிமித்தம். வடமொழியில் சகுன (sakuna); என்பதற்குப் பறவை, குறிப்பாகப் பெரிய பறவை என்னும் பொருள் கொண்டு அதற்கு மூலமாக சக் (sak); என்பதனைக் காட்டுகிறது. மா.வி. அகரமுதலி. ஆற்றல் எனும் பொருள்படும் சக் என்பதற்குப் பிறவகை ஆற்றன்கனே பொருத்தம். பறக்கும் தன்மையால் பெறும் பெயர் பொருத்தமில்லாமையைக் கண்டு கொள்க,

த. சகுனம் → Skt. śakuna

வல்லூறு, ஆந்தை, காகம், கரிக்குருவி, காடை முதலிய பறவைகளின் குரலையும் இயக்கத்தையும் கொண்டு, வரப்போகும் நன்மை தீமைகளைக் கணித்துக் கூறுவது சகுனம் (புள்நூல்.);. சகுனம் – பறவை. பறவையால் அறியப்படும் குறியைச் சகுனம் என்பது ஆகுபெயர்]

 சகுனம்2 caguṉam, பெ. (n.)

   1. கிழங்கு (பிங்.);; edible or other tuberous roots.

   2. பேரரத்தை (மூ.அ.); பார்க்க;see pērarattai.

     [சகடம் = வட்டமானது சகடம் → சகடம் → சகணம் → சகுணம் → சகுனம். உருண்டை வடிவான கிழக்கு]

சகுனி

சகுனி1 caguṉi, பெ. (n.)

   1. பறவை (பிங்.);; bird.

   2. கூகை (யாழ்.அக.);; owl.

   3. கரணம் பதினொன்றில் இருட்பக்கத்துப் பதினான்காம் பிறையின் (கிருட்டிணபட்சத்துச் சதுர்த்தசியின்); பிற்பகுதியில் வருங்காலம்; a division of time, the latter half of the 14th day of the dark fortnight, one of 11 karanam.

     [சகுனம் → சகுனி]

 சகுனி2 caguṉi, பெ. (n.)

   நிமித்தம் பார்ப்போன் (பிங்.);; augur, one who predicts future by omens.

     [சகுனம் → சகுனி]

சகுனிகிரகம்

சகுனிகிரகம் caguṉigiragam, பெ.(n.)

   குழந்தை பிறந்த ஆறாம் நாளிலேனும், ஆறாம் மாதத்திலேனும், ஆறாம் ஆண்டிலேனும் குழந்தை அல்லது தாயை வருத்துவதாகக் கருதப்படும் ஒரு தீக்கோள் (சீவரட்.227);; an evil planet supposed to cause distress to an infant or its mother on the 6th day, 6th month or 6th year of its birth.

த.வ. ஆறாம் கேடு.

     [Skt.{}+graha → த.சகுனிகிரகம்.]

சகுனிமாமன்

 சகுனிமாமன் caguṉimāmaṉ, பெ.(n.)

   சகுனியைப் போல் கெடுமதியுடையோன்; evil counsellor, as {}.

     [Skt.{} → த.சகுனி + மாமன்.]

சகுன்மம்

சகுன்மம் caguṉmam, பெ. (n.)

காட்டுக் கரணை (M.M.414); purple stalked dragon.

சகுலகண்டம்

 சகுலகண்டம் cagulagaṇṭam, பெ. (n.)

   பொன் வண்ண மீன் (புதுவை.);; a kind of fish (செ.அக.);.

     [சகுலம் → கண்டம்]

சகுலன்

 சகுலன் cagulaṉ, பெ. (n.)

   ஒருவகைப் பாம்பு; a kind of snake (சா.அக.);.

சகுலம்

சகுலம் cagulam, பெ. (n.)

   1. மொந்தன் வாழை; a large plantain.

   2. வலுமிக்க மீன் அதாவது திமிங்கிலம்; a powerful fish as whale (சா.அக.);.

சகுலாட்சகம்

 சகுலாட்சகம் cagulāṭcagam, பெ. (n.)

   பவள மறுகு; a red species of grass – Cynoden genus (சா. அக.);.

சகுலாட்சம்

 சகுலாட்சம் cagulāṭcam, பெ.(n.)

   வெள்ளறுகு (மலை);; white bermuda grass.

     [Skt.{} → த.சகுலாட்சம்.]

சகுலாதி

 சகுலாதி cagulāti, பெ. (n.)

   கடுரோகிணி (மலை);; christmas rose (சா.அக.);.

சகுலாதினி

 சகுலாதினி cagulātiṉi, பெ. (n.)

சகுலாதி பார்க்க;see saguládi.

     [சகுலாதி → சகுலாதினி]

சகுலி

சகுலி1 caguli, பெ. (n.)

   மீன்வகை (வின்.);; a kind of fish.

 சகுலி2 caguli, பெ. (n.)

   அப்பவகை; a kind of cake.

     ‘அங்கைச் சகுலியு நோக்கி’ (கந்தபு. சத்திரசாப. 11);.

த. சகுலி → Skt. Sakuli

     [அஃகுல்லி → அக்குல்லி → சக்குல்லி → சகுலி]

 சகுலி3 caguli, பெ. (n.)

   ஒளி; light.

     [அழல் = நெருப்பு, அழல் → அழலி → அகலி → அகுலி → சகுலி]

சகுல்யன்

 சகுல்யன் cagulyaṉ, பெ.(n.)

   பேரனுக்குப் பேரன் முதலிய கொடிவழியொன்றிற் பிறந்த உரிமைப் பங்காளி (தாயாதி);; distant relation, remote kinsman, said to apply to a grandson’s grandson, and sometimes extended to one of tenth remove.

த.வ. தாயன், தாயப்பங்காளி.

     [Skt.sa-kulya → த.சகுல்யன்.]

சகேரா

 சகேரா caārā, பெ.(n.)

   பண்டசாலை (வின்.);; store, treasure, hoard.

     [U.{} → த.சகோரா.]

சகை

 சகை cagai, பெ. (n.)

   கரிய போளம்; black bole or aloe.

சகோடன்

சகோடன் caāṭaṉ, பெ.(n.)

   பிறனுக்குண்டான கருப்பத்தோடு திருமணமான பெண்ணிடம் அந்தக் கருப்பத்திற் பிறந்தவன் (மநு.9, 173);; son begotten by another father but born after marriage, as received with the bride one of twelve {}.

     [Skt.{} → த.சகோடன்.]

சகோடம்

சகோடம் caāṭam, பெ. (n.)

சகோடயாழ் பார்க்க (சிலப். 3, 26, உரை);;see sagodayal.

     [சகடம் → சகோடம் (வேக.241);]

சகோடயாழ்

சகோடயாழ் caāṭayāḻ, பெ. (n.)

   16 நரம்பு கொண்ட யாழ் (சிலப். 3, 26, உரை);; a lute with 16 strings.

     [சகோடம் + யாழ்]

நரம்புக் கருவி பல வகைப்படும். அவற்றுள் ஐந்து பெரு வழக்கானவை. அவை பேரியாழ் (21 நரம்பு);, மகாயாழ் (19 நரம்பு);, சகோடயாழ் (16 நரம்பு);, செங்கோட்டி யாழ் (7 நரம்பு);, சுரை யாழ் (1 நரம்பு); என்பன.

நரம்புக் கருவிகளெல்லாம் பண்டைக் காலத்தில் யாழ் என்றே கூறப்பட்டன. இப்போதுள்ள வீணை செங்கோட்டி யாழாக அல்லது அதன் திருத்தமாக இருத்தல் வேண்டும். செங்கோடு நேரான தண்டு. செங்கோல் என்பதை இதனொடு ஒப்பு நோக்குக (ஒ. மொ. 177);,

சகோதரன்

சகோதரன் caātaraṉ, பெ.(n.)

   1. உடன் பிறந்தவன் (சூத.ஞான.7, 15);; brother.

   2. தந்தையுடன் பிறந்தான், தாயுடன் பிறந்தாள் இவர்கள் மகன் (இ.வ.);; son of the father’s brother or mother’s sister, cousin.

த.வ. பிறவன்.

     [Skt.{} → த.சகோதரன்.]

சகோதரி

சகோதரி caātari, பெ.(n.)

   1. உடன் பிறந்தாள்; sister.

   2. தந்தையுடன் பிறந்தான் தாயுடன் பிறந்தாள் இவர்கள் மகள் (இ.வ.);; daughter of the father’s brother or mother’s sister, cousin.

த.வ. பிறவி.

     [Skt.{} → த.கோதரி.]

சகோத்தி

சகோத்தி caātti, பெ.(n.)

   உடனிகழ்ச்சியணி (அணியி.21);; a figure of speech.

     [Skt.{} → த.சகோத்தி.]

சகோத்திரன்

 சகோத்திரன் caāttiraṉ, பெ.(n.)

   ஒரே குலத்தில் பிறந்தவன்; a kinsman belonging to the same kulam.

தவ. ஒரு பிதிரன், ஒரு கிளையன்.

     [Skt.{} → த.சகோத்திரன்.]

சகோரக்கண்ணி

 சகோரக்கண்ணி caārakkaṇṇi, பெ. (n.)

   சகோரப் பறவையின் கண் போன்ற கண்ணையுடைய அழகானவள்; a beautiful woman, -to has beautiful eye like cakora bird’s eye.

ம., க. சகோராக்ழி

     [சகோரம் + கண்ணி]

சகோரம்

சகோரம்1 caāram, பெ. (n.)

   நிலா முகிப்புள் (பிங்.);; cakora, the Greek patridge fabled to subsist on moon beams, Caccabis graeca (செ.அக.);.

   ம. சம், சகோரம், சகோரகம்;க. சகோர சகோரக

     [சகோடம் → சகோரம் (வே.க. 241);]

சகோரம் → Skt. cakra

நிலாக் கதிர்களை உணவாகக் கொண்டு வாழ்வதாகக் கருதப்படும் புள்வகை

 சகோரம்2 caāram, பெ. (n.)

   செம்போத்து; crow pheasant (செ.அக.);.

மறுவ. கள்ளிக் காக்கை

     [சகோடம் → சகோரம்]

செந்நிறமானதாகவும் செங்கண்ணுடையதாகவும் காக்கையைப் போன்றுமிருக்கும் ஒரு பறவை. பூச்சிகளையும் பழங்களையும் உண்டு வாழும் இப் பறவையின் அலகு காக்கையைப் போல் நீண்டிராது.

 சகோரம்3 caāram, பெ. (n.)

   செம்பரத்தை (மலை.);; shoe flower.

     [செவ் → செவு → செகு → செக்கு → செக்கம் = சிவப்பு. செக்கச்செவேர் எனல் = மிகச் சிவத்திருத்தல், செக்கம் → செக்கர் = செல்வந்தி. செக்கல் → செக்கல் = சிவப்பு. செக்கர் → சக்கர் → சகோரம்]

 சகோரம்4 caāram, பெ. (n.)

   பேராந்தை (பிங்.);; a species of large owl.

     [சகோடம் → சகோரம் (வேக. 241);]

சகோரி

 சகோரி caāri, பெ. (n.)

   பெண் சகோரப் பறவை; a female cagora bird (சேரநா.);.

ம., க. சகோரி

     [சகோரம் (ஆ.பா.); → சகோரி (பெ.பா.);]

சக்கசேனாதபதி

சக்கசேனாதபதி cakkacēṉādabadi, பெ. (n.)

   இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபனின் படைத் தலைவன்; army chief of Ceylon king Kāsiban V.

     [சக்கை → சக்க சேனாதிபதி, சேனை அதிபதி – சேனாதிபதி]

கி.பி.919இல் வெள்ளுர் எனும் ஊரில் நடந்த போரில் இவன் தலைமையில் இலங்கைப் படையும் மூன்றாம் இராசசிம்மனின் பாண்டியப் படையும் சேர்ந்து சோழமன்னன் முதல் பராந்தகனிடம் போர்செய்து தோல்வி அடைந்தன. (பிற். சோழ. வர. பக். 35);

சக்கடா

சக்கடா cakkaṭā, பெ. (n.)

சக்கடாவண்டி பார்க்க: see Sakkada-Vandi.

     [சக்கு → சக்கடம் → சக்கடா (வவ. 134);]

சகடம் பார்க்க

சக்கடாவண்டி

சக்கடாவண்டி cakkaṭāvaṇṭi, பெ. (n.)

   கட்டை வண்டி (இ.வ.);; springless bullock-cart.

   ம. சக்கடவண்டி, சக்கடாவண்டி;தெ. செகடாபண்டி

     [சகடம் → சக்கடம் → சக்கடா வண்டி]

சக்கரத்தின் பெயர் அதை உறுப்பாகக் கொண்ட ஊர்திக்கு ஆகி வந்தது சினையாகுபெயர்.

ஒ.நோ: வண்டி = சக்கரம், சக்கரத்தையுடைய ஊர்தி. இன்றும் கமலைவண்டி வண்டி யுருட்டுதல் என்னும் வழக்குகளை நோக்குக.

சக்கரத்தைக் குறிக்கும் கால் என்னுஞ் சொல் வண்டியையும் குறித்தல் காண்க. ‘கலத்தினுங் காவினுந் தருவன ரீட்ட’ (சிலப். 2:7);

சக்கடி

சக்கடி cakkaḍi, பெ. (n.)

சக்கணி பார்க்க: See Sakkal

     “இயங்கொட்டச் சக்கடி கற்று” (திருப்பு:417);

     [சக்கணி – சக்கடி]

சக்கட்டம்

சக்கட்டம் cakkaṭṭam, பெ. (n.)

   1. ஏளனம் (பரிகாசம்); (வின்.);; scoff, mockery, sport;

   2. கண்டனம் (நிந்தை); (யாழ். அக.); censure.

க. சக்கந்த சக்குளிசு, சக்குலிசு (மகிழ்வி);:

து. சக்கந்த தெ. சக்கலிம்பு E.kickle

 சக்கட்டம் cakkaṭṭam, பெ. (n.)

மயிர் (யாழ். அக.);:

 hair.

     [சள் → சள்ளு. சள்ளுதல் = சிக்கு விழுதல். சள் + கட்டம் → சட்கட்டம் → சக்கட்டம். சிக்கு விழும் தன்மையது]

சக்கட்டிசக்கட்டியெனல்

 சக்கட்டிசக்கட்டியெனல் sakkaṭṭisakkaṭṭiyeṉal, பெ. (n.)

   மென்பொருள்கள் விழும் ஒலிக்குறிப்பு; onom. expr. of repeated thud (செஅக.);.

     [சக்கட்டி + சக்கட்டி + எனல்]

சக்கட்டை

சக்கட்டை cakkaṭṭai, பெ. (n.)

   1. திறமையின்மை (யாழ்ப்.);; badness, unfitness, inferiority, incompetency.

   2. இளப்பம்; degradation.

   3. மடையன்; block head, dolt.

அவன் ஒரு சக்கட்டை

     [சத்தற்றகட்டை → சக்கட்டை]

சக்கட்டை → Skt. sakata

சக்கட்டையாள்

 சக்கட்டையாள் cakkaṭṭaiyāḷ, பெ. (n.)

   வலுவில்லாதவன் (யாழ்ப்.);; fragile, Weak person.

     [சக்கட்டை + ஆள்]

சக்கணி

சக்கணி cakkaṇi, பெ. (n.)

கூத்துவகை,

 a kind of dance

     ‘சக்கணியி லோர்தருவுஞ் சாதித்து’ (பணவிடு 186);.

தெ. சக்கிணி

     [அக்குளு → அக்குளி → சக்குளி → சக்கணி (மகிழ்ச்சி);

சக்கதேவி

சக்கதேவி cakkatēvi, பெ. (n.)

சக்கம்மாள் பார்க்க;see akkam

     ‘கருத்து நன்றாய்ப் பேசுது சக்கதேவி’ (குற்றா. குற71);

     [இயக்கி → இசக்கி → சக்கி + தேவி. இசக்கிதேவி → சக்கிதேவி → சக்கதேவி. இது மக்கள் வழக்கின் ஜக்கம்மாள் என்றும் ஜக்கதேவி என்றும் திரிந்தது]

சக்கத்து

 சக்கத்து cakkattu, பெ. (n.)

   நடுவில் உயர்ந்தும் இருபுறமும் சரிந்தும் சிராய்ப்புப் போன்ற தோற்றமுடன் உருவான முத்து; a kind of pearl which has bulging shape at centre and slope in either sides.

     [அங்கு → சங்கு → சங்கத்து → சக்கத்து]

சக்கந்தம்

சக்கந்தம் cakkandam, பெ. (n.)

சக்கட்டம் பார்க்க;see Sakkattam.

க., து. சக்கந்த

     [சக்கட்டம் → சக்கத்தம்]

 சக்கந்தம்1 cakkandam, பெ. (n.)

   மகிழ்ச்சி (யாழ். அக.);; joy

க., து. சக்கந்த

சக்கந்தி

 சக்கந்தி cakkandi, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruvadanai Taluk.

     [சக்கை+கந்தி]

சக்கந்து

 சக்கந்து cakkandu, பெ. (n.)

சக்கந்தம் பார்க்க;see Sakkandam.

     [சக்கத்தம் → சக்கத்து]

சக்கப்பற்று

 சக்கப்பற்று cakkappaṟṟu, பெ.(n.)

   கல்குளம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kalkulam Taluk.

     [சக்கை+பற்று]

சக்கப்பிரதமன்

 சக்கப்பிரதமன் cakkappiradamaṉ, பெ. (n.)

   பலாப்பழங்கொண்டு செய்யப்படும் கன்னலமுது (பாயச); வகை (நாஞ்.);; a kind of sweet milkporridge prepared from jack-fruit (செ. அக.);.

ம. சக்கப்ரதமன் து. சங்குளி, சங்குலி, தங்குளி

     [சக்கை → சக்க(ம்); + பிரதமன். சக்க = பலாப்பழம். பிரதமன் = கன்னலமுது (பாயச); வகை.

 Skt. prādhama → த. பிரதமன்

சக்கம்

 சக்கம் cakkam, பெ.(n.)

   சாறு; extract (சா.அக.);.

சக்கம்மா

 சக்கம்மா cakkammā, பெ. (n.)

சக்கம்மாள் பார்க்க;see šakkammāl.

     [சக்கம்மாள் → சக்கம்மா]

சக்கம்மாள்

சக்கம்மாள் cakkammāḷ, பெ. (n.)

   1. ஒரு பெண் தேவதை; a demoness.

   2. பெண்பாற்பெயர்; female proper name (செ.அக.);

   ம. சக்கி, தெ. சக்கம்;பட சக்கி (பெண்பாற் பெயர்);

     [இயக்கி → இசக்கி → சக்கி + அம்மாள் – சக்கியம்மாள் → சக்கம்மாள்]

சக்கரகபிரசங்கம்

 சக்கரகபிரசங்கம் saggaragabirasaṅgam, பெ.(n.)

   வளைய வளையப் பேசுகை (பாண்டி.);; arguing in a vicious circle a defect in argumentation.

த.வ. வேணாவெட்டிப்பேச்சு, வேண்டா வெற்றுப்பேச்சு.

சக்கரகம்

சக்கரகம் caggaragam, பெ.(n.)

   1. ஒரு வகைப் பாம்பு; a kind of serpent.

   2. கொள்ளு; Madras horse gram-Dolichos unflorus.

   3. வெண்குன்றி; white abrus-Abrus precatorius (சா.அக.);.

     [Skt.cakraka → த.சக்கரகம்.]

சக்கரகாரகம்

 சக்கரகாரகம் caggaragāragam, பெ. (n.)

   புலி தொடக்கி (மலை);; tiger-stopper

சக்கரகுச்சம்

 சக்கரகுச்சம் caggaraguccam, பெ. (n.)

   செயலை (அசோகு); மரம்; asoka trec – Jonesia asoka (சா.அக.);

மறுவ. பிண்டி

     [சக்கரம் + குச்சம். குச்சம் = கொத்து, கற்றிலும் கொத்துக் கொத்தாக இலைகள் உள்ள மரம்]

சக்கரகுலியம்

 சக்கரகுலியம் caggaraguliyam, பெ. (n.)

   மலை நாட்டுப்பூடு வகை; a kind of fern found in hilly tracts (சா.அக.);

     [சக்கரம் + குலியம்]

சக்கரக் கூடம்

 சக்கரக் கூடம் cakkarakāṭam, பெ. (n.)

   சக்கரத்தின் நடுவில் ஆரக்கால்கள் ஒன்றுசேரும் வட்டவடிவமான பாகம்; the axis of a wheel.

ம. சக்கரக்கூடம்

     [சக்கரம் + கூடம்]

சக்கரக்கலப்பை

 சக்கரக்கலப்பை cakkarakkalappai, பெ. (n.)

   சேற்றைக் கூழாக்கும் கருவி; a kind of instrument for ploughing.

     [சக்கரம் + கலப்பை]

சக்கரக்கல்

 சக்கரக்கல் cakkarakkal, பெ. (n.)

   திருமால் கோயிலுக்குக் கொடையாக விடப்பட்ட நிலங்களின் எல்லை குறிக்கும் திருவாழிக்கல்; boundary or demarcation – stone for lands granted to Tirumāl (Visnu); temples (செ.அக.);

     [சக்கரம் + கல், சக்கரம் = வட்டம், வளைவு, எல்லை]

சக்கரக்கள்ளன்

 சக்கரக்கள்ளன் cakkarakkaḷḷaṉ, பெ. (n.)

   கஞ்சன் (கருமி); (நாஞ்.);; close-fisted person, miser (செ.அக.);

     [சக்கரம் = ஒரு வகைச் சிறு காசு. சக்கரக்கள்ளன் = சிறுகாசும் கொடாதவன்]

சக்கரக்கவி

 சக்கரக்கவி cakkarakkavi, பெ. (n.)

   வண்டிச் சக்கரம் போன்ற சித்திரத்தில் அமையுமாறு பாடும் மிறைப்பாடல்; a fantastic metrical composition in the diagrammatic form of the cart-wheel.

     [சக்கரம் + கவி]

சக்கரப்பா எனில் தமிழாம் சக்கரக்கவி நாலாரைக் கவி, ஆறாரைக் கவி, எண்ணாரைக் கவி என்றாற்போல் பல வகைப்படும்.

சக்கரக்காரன்

 சக்கரக்காரன் cakkarakkāraṉ, பெ. (n.)

   செல்வன் (இ.வ.);; rich man (செ.அக);.

ம. சக்கரக்காரன்

     [சக்கரம் = காசு. சக்கரம் + காரன். காரன் = உடையானைக் குறிக்கும் ஈறு]

சக்கரக்குளிகை

சக்கரக்குளிகை caggaragguḷigai, பெ. (n.)

   காசு (நாணய); வகை; a coin (M.E.R. 1 of 1925); (செ.அக.);

     [சக்கரம் + குளிகை. குள் → குளம் → குளகம் = வெல்ல உருண்டை. குளியம் = உருண்டை. குளிகை = உருண்டை மாத்திரை. இங்கு வட்டவடிவையே உணர்த்திற்றென்க]

சக்கரக்கையன்

சக்கரக்கையன் cakkarakkaiyaṉ, பெ. (n.)

திருமால் God Tirumal

     “சக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து” (பெரி.1:4:4);

     [சக்கர[ம்]+கையன்]

சக்கரக்கொடம்

 சக்கரக்கொடம் cakkarakkoḍam, பெ. (n.)

சக்கரக்கூடம் பார்க்க;see Sakkara-k-kúgam.

ம. சக்ரகூடம்

     [சக்கரம் + கொடம். குள் → குட → குடம். குடம் → கொடம்]

சக்கரக்கொடி

 சக்கரக்கொடி cakkarakkoḍi, பெ. (n.)

   பீர்க்கு; sponge-gourd – Luffa acutangularis (சா. அக.);

     [சக்கரம் + கொடி கொள் → (கொண்); → கொடு = வளைவு, வளைவானது கொடு → கொடி = வளைந்து படரும் நிலைத்திணை]

சக்கரக்கோட்டம்

சக்கரக்கோட்டம்1 cakkarakāṭṭam, பெ. (n.)

   முதலாங் குலோத்துங்கச் சோழனால் வெல்லப்பட்டதும் நடுவண் (மத்தியப் பிரதேச); மாநிலத்தில் உள்ளதுமான ஒரு நாடு (இராச்சியம்);; an ancient state in the central provinces conquered by Kulöttunga Cöla I.

     “விருதராச பயங்கரன் ……………… வென்ற சக்கரக் கோட்டத்திடை” (கலிங். 134);

     [சக்கரம் + கோட்டம், கோடு = வளைவு, எல்லை. கோடு → கோட்டம் = பெரும் எல்லைப் பரப்பைக் கொண்டது]

 சக்கரக்கோட்டம்2 cakkarakāṭṭam, பெ. (n.)

   ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நடுவண் (மத்திய); மாவட்டத்தைச் சேர்ந்த இராசபுரத்திற்கு எட்டுக்கல் தொலைவில் உள்ளதும் முதல் இராசேந்திரனால் வெல்லப்பட்டதுமான ஊர்; an ancient state with central provinces conquered by Rajendran.

     “விக்கிரம வீர்ர் சக்கர கோட்டமும்” (முதல் இராசேத்திரன் மெய்க்கீர்த்தி);:

     [சக்கரம் + கோட்டம்;

கோடு → கோடுதல் = வளைதன் கோட்டம், வளைவு, மதியைச் சூழ்ந்த ஒளி, வட்டம், மதில் சூழ்ந்த கோயில், குளக்கரை, நிலப்பிரிவு]

சக்கரசரம்

 சக்கரசரம் sakkarasaram, பெ. (n.)

சருக்கரச்சரம் பார்க்க;see Sarukkara-c-caram.

     [சருக்கரம் → சக்கரம் சக்கரம் சரம்]

சக்கரச்சக்கரம்

சக்கரச்சக்கரம் cakkaraccakkaram, பெ. (n.)

   சித்திரப்பா வகை (யாப் வி. 497);; a variety of metrical composition (pros.);

     [சக்கரம் + சக்கரம்]

சக்கரச்சுழி

 சக்கரச்சுழி cakkaraccuḻi, பெ. (n.)

   நீர்ச்சுழி; whirlpool.

ம. சக்ரச்சுழி

     [சக்கரம் + சுழி. சுள் → சுளி → சுழி (வி.); = வளை, உருள், சுற்று சுழி (பெ.); = சுற்றும் பகுதி]

சக்கரச்சுவாசம்

 சக்கரச்சுவாசம் cakkaraccuvācam, பெ. (n.)

சக்கரவுயிர்ப்பு பார்க்க;see: Sakkara-v-yirppu

ம. சக்ரசுவாசம்

     [சக்கரம் + சவாசம்]

 Skt. Sväsa – → த. சுவாசம்

சக்கரச்செல்வம்

சக்கரச்செல்வம் cakkaraccelvam, பெ. (n.)

   பெருஞ்செல்வம்; great wealth and prosperity, as of Indra

     “சக்கரச் செல்வம் பெறினும்” (நாலடி. 346);

     [சக்கரம் + செல்வம். சக்கரம் = ஆணைச் சக்கரம் சக்கரச்செல்வம் = அரசுச்செல்வம்]

சக்கரஞ்சுற்று-தல்

சக்கரஞ்சுற்று-தல் cakkarañjuṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சுழலுதல் (இ.வ.);; to revolve, rotate, as a wheel.

   2. சுற்றி விளையாடுதல் (வின்);; to whirl around in play.

   3. பெரிதுந் துன்பப்படுதல்; to be in sore distress.

கையிற் பணமில்லாமல் சக்கரஞ் சுற்றுகிறான் (நாஞ்.);.

     [சக்கரம் + கற்று சக்கரம் போல் சுற்றுதல். துன்பத்தில் துவளும் நிலை சக்கரஞ் சுற்றலாயிற்று, ஒ.நோ: ஆலாய்ப் பறத்தல்]

சக்கரணங்கால்

 சக்கரணங்கால் cakkaraṇaṅgāl, பெ. (n.)

அட்டங்காலிடுகை, act of sitting flat and cross-legged.

க. சக்களபக்கள, சக்கலுபக்கலு, சக்கள மக்கள, சக்களமுக்கள, சக்களெமுக்களெ: பட சக்கரமள்ளு

     [சக்கரம் + அணை + கால்]

சக்கரதரன்

சக்கரதரன் cakkaradaraṉ, பெ. (n.)

   1. திருமால்:

 Visnu, as discus bearer.

   2. பாம்பு (யாழ்.அக.);:

 snake, as being hooded.

     [சக்கரம் + தரன். சக்கரப் படையையுடையவன் என்னும் பொருளில் திருமால் சக்கரதரன் என அழைக்கப் பட்டார். பாம்பின் படம் சக்கரம்போல் இருப்பதால் அதுவும் சக்கரதரன் எனப்பட்டது]

சக்கரதானம்

 சக்கரதானம் cakkaratāṉam, பெ. (n.)

   முயன்று பாடுந் தாளவகை; a difficult type of tânam.

     [சக்கரம் + தானம்]

சக்கரதானர்

சக்கரதானர் cakkaratāṉar, பெ. (n.)

   சிவவுருவங்களுளொன்று (காஞ்சிப்பு. சிவபுண். 23);; a manifestation of Śivan (Saiva);.

     [சக்கரம் + தானர்]

சக்கரதாரி

 சக்கரதாரி cakkaratāri, பெ. (n.)

சக்கரதரன் பார்க்க;see Sakkaradaran

     [சக்கரம் + தாரி]

 Skt. dhårin → தாரி

சக்கரதிசை

 சக்கரதிசை sakkaradisai, பெ. (n.)

வானாள் முடிவறியுஞ் திசைகளுளொன்று:

 the direction which gives the indication of one’s end of life.

     [சக்கரம் + திசை ஒருவரது வாணன் ஒரு வட்டமாக நிறைவுறும் எனக் கருதப்பட்டதன் அடிப்படையே சக்கரம் வாணாளைக் குறித்ததென்க]

சக்கரதீர்த்தம்

சக்கரதீர்த்தம் cakkaratīrttam, பெ. (n.)

   நூற்றெட்டுத் திருப்பதிகளுளொன்றாகிய திருவெள்ளறையென்னுந் தலத்தில் உள்ள நன்னீர்; the sacred water of Tiruvellarai, one of the 108 sacred temples.

     [சக்கரம் + தீர்த்தம்]

 Skt. firtha → த. தீர்த்தம்

சக்கரத்தாபனம்

 சக்கரத்தாபனம் cakkarattāpaṉam, பெ. (n.)

சக்கர நிறுவு-தல் பார்க்க: see Sakkaraոiruvu

     [சக்கரம் + தாபனம்]

 Skt. Sthäpana → த. தாபனம்

சக்கரத்தாழ்வார்

 சக்கரத்தாழ்வார் cakkarattāḻvār, பெ. (n.)

   திருமாலின் சக்கரமாகக் கருதப்படும் ஆழ்வார்; Visnu’s discus, considered a deity.

     [சக்கரம் + அத்து + ஆழ்வார். ‘அத்து’ சாரியை]

சக்கரத்தீவட்டி

 சக்கரத்தீவட்டி cakkarattīvaṭṭi, பெ. (n.)

   வட்டத்தீவட்டி; a kind of roundtorch (செ.அக.);

     [சக்கரம் + தீவட்டி]

சக்கரத்துன்பம்

 சக்கரத்துன்பம் cakkarattuṉpam, பெ. (n.)

   ஒரு வகைத் துன்புறுத்தல் (சித்திரவதை);; a mode of torture.

     [சக்கரம் + துன்பம்]

சக்கரத்தேமல்

 சக்கரத்தேமல் cakkarattēmal, பெ. (n.)

   நல்லூழைக் (அதிர்ஷ்டம்); குறிப்பதாகக் கருதப்படும் வட்டத் தேமல் (இ.வ.);; round whitish spots on the body believed to indicate fortune

ம. சக்ரப்பொரிகண்ணி

     [சக்கரம் + தேமல்]

சக்கரத்தேர்

 சக்கரத்தேர் cakkarattēr, பெ. (n.)

   இழுப்புத் தேர் (வின்);; a wheeled car.

     [சக்கரம் + தேர். தில் → திர் → (திரி); → தேர். தோளில் வைத்துத் தூக்கிச் செல்லும் பல்லக்குக்கு அடுத்த திவை வளர்ச்சியே சக்கரம் அமைத்த தேர்]

சக்கரத்தேவன்

 சக்கரத்தேவன் cakkarattēvaṉ, பெ. (n.)

   கலிங்கதேச மன்னனாகிய கருதாயுவினது இரண்டாம் புதல்வன்; the second son of Surudayu king of Kalinga country.

     [சக்கரம் + தேவன். தேய் → தேய்வு → தேவு = தெய்வம், தெய்வத்தன்மை. தேவு → தேவன் = கடவுள், அரசன், இயற்பெயர்]

த. தேவன் → Skt. dēva

சக்கரநாமன்

 சக்கரநாமன் cakkaranāmaṉ, பெ.(n.)

   ஒரு வகை அய மாட்சிகம்; a pyritic ore of iron (சா.அக.);.

சக்கரநாற்காலி

 சக்கரநாற்காலி cakkaranāṟkāli, பெ. (n.)

   நடக்க முடியாதோர் இடம்விட்டு இடம் செல்லப் பயன்படுத்தும் சக்கரங்கள் பொருத்தப்பட்ட நாற்காலி; wheelchair.

     [சக்கரம் + நாற்காலி]

சக்கரநிறுவுதல்

சக்கரநிறுவுதல் cakkaraniṟuvudal, பெ. (n.)

   1. பிறர் செய்த தீங்கைப் போக்க மந்திரமமைந்த சக்கரத்தைப் பதித்து வைக்கை; ceremonial setting of a plate containing mystical diagrams and letters for counteracting evil.

   2. கோயில் கருவறையின் (மூலஸ்தானத்தின் கீழ் மந்திரத் தகட்டைப் பதித்து வைக்கை; ceremonial setting of a plate containing a mystic diagram under the ‘mūlavar”.

     [சக்கரம் + நிறுவுதல்]

சக்கரநோவு

 சக்கரநோவு cakkaranōvu, பெ. (n.)

   ஒரு வகைக் கடுநோடு (சித்திரவதை);; a mode of torture.

     [சக்கரம் + நோவு. சக்கரம் சுழலுவது போல் தொடர்த்து ஏற்படும் நோவு சக்கரநோவு]

சக்கரந்தறி-த்தல்

சக்கரந்தறி-த்தல் cakkarandaṟittal,    4 செ.கு.வி (v.i.)

   இயந்திரமாட்டல்; to rotate a mill.

     [சக்கரம் + தறி-,]

சக்கரன்

சக்கரன்1 cakkaraṉ, பெ. (n.)

   திருமால் (யாழ்.அக);; Tirumāl (Vişņu);.

     [சக்கரம் → சக்கரன், சக்கரப்படைக் கருவியையுடையவன்]

 சக்கரன்2 cakkaraṉ, பெ. (n.)

   1. சக்கிரன் பார்க்க (சங்.அக.);;see sakkiran:

   2. பன்னிரு ஆதித்தருள் (துவாத சாதித்தருள்); ஒருவர்; Sun-god, one of tuvāta-cãtittar, q.v.

     ‘துளங்கு சக்கரன்’ (கூர்மபு. ஆதவச்சிறப். 2);

     [சக்கரம் → சக்கரன்]

 சக்கரன்3 cakkaraṉ, பெ. (n.)

   மணிமலைத் தமிழ்க் கழகத்தில் தலைமைப் புலவராக இருந்து தமிழாய்வு செய்த பெரும்புலவர்; chief poet of the Manimalai Tamil academy,

     [சக்கரம்= பெருமை. சக்கரம் → சக்கரன்]

சக்கரபதி

சக்கரபதி1 cakkarabadi, பெ. (n.)

தகரை (இராட்);:

 foetid cassia.

மறுவ, மசகெண்ணெய்

     [சக்கரம் + பதி]

சக்கரம்4 பார்க்க

 சக்கரபதி2 cakkarabadi, பெ. (n.)

   அரசன்; the lord of a dominion, a king.

ம. சக்ரபதி

     [சக்கரம் + பதி]

சக்கரபந்தம்

 சக்கரபந்தம் cakkarabandam, பெ. (n.)

சக்கரக்கவி பார்க்க;see Sakkara-k-kavi,

     [சக்கரம் + பந்தம்]

 Skt. bandha → த. பந்தம்

சக்கரபாணம்

 சக்கரபாணம் cakkarapāṇam, பெ. (n.)

சக்கரவாணம் பார்க்க;see Sakkara-Wiam

     [சக்கரம் + பாணம். வாணம் → பாணம்]

சக்கரபாணி

சக்கரபாணி1 cakkarapāṇi, பெ. (n.)

   திருமால் (சக்கரப்படையைக் கையில் உடையவன்);; Tirumāl (Visnu);, as holding the discus in His hand. சாமவேத சீதனாய சக்ரபாணி யல்லையே (திவ். திருச்சந். 14);

     [சக்கரம் + பாணி. பண் = பண்ணுதல். பண் → பாண் → பாணி = செயல் செய்கின்ற உறுப்பு. பண்ணுவது பாணி. ஒ.நோ. பெண் → பேண். செய்வது செய். செய்(தெ.); = கை செய்(கை); → கை.]

த. பாணி → Skt, pani

 சக்கரபாணி2 cakkarapāṇi, பெ. (n.)

   காளி; goddess Durga.

     [சக்கரம் + பாணி]

த. பாணி → Skt. pani

சக்கரபாணிஆச்சார்

 சக்கரபாணிஆச்சார் cakkarapāṇiāccār, பெ. (n.)

   செல்லாண்டியம்மன் சதகம் என்னும் நூலின் ஆசிரியர்; author of šellān diyamman sadagam.

     [சக்கரபரணி + ஆச்சார். ஆச்சார் = ஆசிரியர். இவர் கொங்கு நாட்டிலுள்ள ஊஞ்சலுளினர் (த. பு. அக.);]

சக்கரபாணிநல்லூர்

சக்கரபாணிநல்லூர் cakkarapāṇinallūr, பெ. (n.)

   ஆழ்வார் திருநகரிக்கு அருகிலிருந்த செவ்விருக்கை நாட்டிலமைந்த ஓரூர்; a place name situated in Sevvirukkai nãdu near Ãlvãr Tirunagari.

     “செவ்விருக்கை நாட்டுக் சக்கரபாணி நல்லூர்” (தெ. க. தொ. 26. கல். 492-5);

     [சக்கரபாணி + நல்லூர்]

சக்கரபுட்பி

 சக்கரபுட்பி cakkarabuṭbi, பெ. (n.)

   குப்பைமேனி (மலை);; Indian acalypha.

     [சக்கரம் + புட்பி. புட்பம் → புட்பி. வட்டவடிவப் பூவைக் கொண்டது.]

 Skt. puspa → த. புட்பம்.

சக்கரப்படை

 சக்கரப்படை cakkarappaḍai, பெ. (n.)

சக்கராயுதம் பார்க்க: Sce Sakkaiyudam

     [சக்கரம் + படை]

சக்கரப்பட்டி

சக்கரப்பட்டி cakkarappaṭṭi, பெ. (n.)

   விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்திலுள்ள ஊர்; a village in Vilupuram district Tindivanam taluk.

     “ஆழ்வார் தேவர்தானம் சக்கரப்பட்டி செறுவுக்கும் வடக்கும்” (தெ. க. தொ. 7, கல் 853 – 9);

     [சக்கரம் + பட்டி. பட்டுதல் = தட்டுதல். பட்டு → பட்டி = பட்டை, மூங்கிற்பிளாச்சு, அதனாலமைத்த தொழு, தொழு இருத்த ஊர்]

சக்கரப்பட்டித்தடி

சக்கரப்பட்டித்தடி cakkarappaḍḍittaḍi, பெ. (n.)

   நீட்டல் அளவுகோல்; linear measure scale.

     “திருவாபரணங்களுஞ் செய்வார்களாகவு(ம்); சக்கரப்பட்டி தடி இரண்டும்” (தெ. க. தொ.7. கல். 392/3. பக் 251);

     [சக்கரப்பட்டி + தடி. தண்டு → தண்டி → தடி]

சக்கரப்பட்டை

 சக்கரப்பட்டை cakkarappaṭṭai, பெ. (n.)

சக்கரத்தில் வெளிப்புற எஃகு வளையம்:

 Steel tyre of as cart-wheel.

     [சருக்கரம் → சக்கரம் + பட்டை]

சக்கரப்பணம்

சக்கரப்பணம் cakkarappaṇam, பெ. (n.)

   காசு வகை; a coin (M.E.R. 261 of 1929-30);.

     [சக்கரம் + பணம். சக்கரம் = வட்டவடிவு. படம் → பணம் = தகடான காசு. சக்கரப் பணம் = வட்டவடிவுடைய நாணயம்]

சக்கரப்பரிபாலனம்

 சக்கரப்பரிபாலனம் cakkarapparipālaṉam, பெ. (n.)

   அரசாட்சி செய்கை; governing, ruling, reigning

     [சக்கரம் + பரிபாலனம்]

 Skt. paripälana → த. பரிபாலனம்

சக்கரப்பள்ளி

 சக்கரப்பள்ளி cakkarappaḷḷi, பெ. (n.)

   தஞ்சை மாவட்ட ஊர் பெயர்; a village in Tañjāvūr district.

     [சக்கரம் + பள்ளி. பள் = பள்ளம், படுக்கை பள் = படு. பள் → பள்ளி = படுக்கை அல்லது அதை, படுக்கும் அறையுள்ள வீடு, கோயில், அரண்மனை, ஊர்]

சக்கரப்பாடியார்

சக்கரப்பாடியார் cakkarappāṭiyār, பெ. (n.)

   செக்கார்; oilmen. ‘சக்கரப்பாடியார் குலமெய்த்தவ மாயுள்ளார்’ (திருத்.பு.50);

     [சக்கு → செக்கு → செக்கரர் + பாடி + ஆர். செக்கரப்பாடியார் → சக்கரப்பாடியார்]

சக்கரப்பாதை

 சக்கரப்பாதை cakkarappātai, பெ. (n.)

   வண்டிப்பாதை வண்டித்தடம்; Cartroad.

     [சக்கரம் + பாதை பதி → பதம் → பாதை]

சக்கரப்பாத்தி

 சக்கரப்பாத்தி cakkarappātti, பெ. (n.)

   சக்கரங்கள் சென்றதால் பாதையில் உருவான சால்; wheel track (சேரநா.);

ம. சக்கரப்பாத்தி

     [சக்கரம் + பாத்தி]

சக்கரப்பிரசங்கம்

சக்கரப்பிரசங்கம் sakkarappirasaṅgam, பெ. (n.)

   ஏரணக் குற்றங்களுளொன்றான சக்கிரகம் (நீலகேசி, 391, உரை);; a defect in argumentation.

     [சக்கரகம் + பிரசங்கம். சக்கரம் = வளைவு, சக்கிரகம் = வளைய வளையப் பேசுகை]

சக்கரப்பிரதர்

சக்கரப்பிரதர் cakkarappiradar, பெ.(n.)

   சிவத்திருவுருவங்களு ளொன்று (காஞ்சிப்பு.சிவபுண்.23);; a manifestation of {} ({});

     [Skt. cakra+prada → த.சக்கரப்பிரதர்.]

சக்கரப்பிள்ளை

 சக்கரப்பிள்ளை cakkarappiḷḷai, பெ.(n.)

   அச்சுக்கும் கொரங்காட்டிக்கும் நடுவில் உள்ள சக்கரம்; a wheel in loom.

     [சக்கரம்+பிள்ளை]

சக்கரப்புளி

 சக்கரப்புளி cakkarappuḷi, பெ. (n.)

   இனிப்புப் புளி; sweet tamarind – Tamaridus Indicus (சா.அக.);.

     [சருக்கரை → சக்கரை + புளி]

சக்கரப்புள்

 சக்கரப்புள் cakkarappuḷ, பெ. (n.)

சகோரம் பார்க்க;see šagõram.

     [சக்கரம் + புள்]

சக்கரப்பொறி

சக்கரப்பொறி cakkarappoṟi, பெ. (n.)

   திருமாலியத்தைப் பெறுதற்கு அடையாளமாக அருட்குரவரால் வலத்தோளில் பொறிக்கப் படும் சக்கர முத்திரை; branded mark of the discus upon the right shoulder of a person, made by his preceptor at the time of his initiation into vaisnavism. ‘உன் சக்கரப்பொறி யொற்றிக் கொண்டு’ (திவ். பெரியாழ். 5, 4, 1.);

     [சக்கரம் + பொறி]

சக்கரமடை-த்தல்

 சக்கரமடை-த்தல் cakkaramaḍaittal, செ.கு.வி. (v.i.)

   எந்திரத்தில் மந்திரவெழுத்து அடைத்தல் (வின்);; to inscribe letters of a mantra in a mystic diagram.

     [சக்கரம் + அடை-,]

சக்கரமண்டலி

 சக்கரமண்டலி cakkaramaṇṭali, பெ. (n.)

   பெரும்பாம்பு; a kind of big snake, the Python, boa constricter.

ம. சக்ர மண்டலி

     [சக்கரம் + மண்டலி. மண்டு → மண்டலி, வளைந்து, வட்டமிட்டு இருக்கும் இயல்புடையது]

சக்கரமாற்று

சக்கரமாற்று cakkaramāṟṟu, பெ. (n.)

   திருக்காழி (சிர்காழி);யின் பன்னிரு பெயர்களையுஞ் செய்யுடோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம் (தேவா. I45);; a poem on Tirukkali (Sirkali); by Saint Sampandar, where in each stanza mentions all the names of that sacred shrine and the last mentioned name in stanza begins the next stanza.

     [சக்கரம் + மாற்று]

சக்கரமுடிவு

 சக்கரமுடிவு cakkaramuḍivu, பெ. (n.)

ஒருவனது வாழ்நாள் முடிவு (வின்); the close of one’s life. as indicated in one’s horoscope.

     [சக்கரம் + முடிவு. வாழ்நாள் ஒரு வட்டமாகக் கருதப்பட்டதன் அடிப்படைவில் வட்டம் திதைவு பெதுதல் வாத்தாள் முடிவாகக் கருதப்பட்டது]

சக்கரமூதூர்

சக்கரமூதூர் cakkaramūtūr, பெ. (n.)

   காஞ்சிபுர வட்டத்திலுள்ள சக்கரமல்லூர் என்ற ஊரின் பண்டைய பெயர்; a village in Kanjipuram taluk

     “இம்மண்டலத்து தாமர்கக்கோட்டத்துத் தனியூர் சக்கரமுதூர் காணிஉடைய ஊரவர்” (தெ. க. தொ. XII க. எண். – 190,5);

     [சக்கரம் + மூதூர்]

சக்கரம்

சக்கரம்1 cakkaram, பெ. (n.)

   1. வட்டம் (பிங்.);: circle.

   2. உருளை (சூடா);; wheel, as of a cart, car.

   3. குயவன் சக்கரம்; potter’s wheel.

     “சக்கரந்தான் கழற்றத்தகுங் குயத்தி” (சிவப்.பிரபந் பிக்ஷாடன.6);

   4. சக்கரப்படை; discus, especially of Visnu;missile weapon, sharp edged and circular.

     “சக்கரக்கை மன்னுயிர் முதல்வன்” (மணிமே. 13:57);.

   5. ஆட்சிச் சக்கரம்; Symbol of Sovereignity.

     “வழுக்கில் சக்கரம் வலவயி னுய்க்கும்” (பெருங். வத்தவ. 5,106);

   6. கோள் நிலைச் சக்கரம்; chart showing the position of planets at one’s birth;

 astrological diagram.

   7. மந்திர வெழுத்தடைக்கும் தகடு; engraved magic circles on amulets;

 mystical diagrams for counteracting evil influences.

     ‘சக்கரஞ் சீர்த்தமிழ் விரகன்’ (தேவா. 146. 12);.

   8. சக்கரக்கவி (தண்டி 94); பார்க்க;see Sakkara-k-kavi.

   9. சக்கரமாற்று பார்க்க;see Sakkara-Imārru.

   10. சக்கரயூகம் பார்க்க;see Sakkara-yijgam.

   11. பழைய காசு வகை; ancient silver coin formerly current in South India – 1/16 gold pagoda.

     “சால்பு திருவையாற்றுச் சக்கரமென்றும்” (பணவிடு.14);.

   12. அரையனா மதிப்புள்ளதாய் வழங்கும் மலையாளக் காசு வகை; a coin in Travancore nearly equal to six pies.

   13. ஒரு தண்டனைக் கருவி (வின்);; turning pillory, wheel of torture.

   14. சக்கரவாகப்புள் (சூடா);; ruddy goose (Anas cascara);.

   15. அரைக்கும் பொறி (வின்);; grind mill. 15 செக்கு;

 oil mill.

     “தயிலவினைத் தொழின் மரபிற் சக்கரபாடித் தெருவு” (பெரியபு. கலியனா. 5);.

   17. நிலவுலகம் (பிங்.); ; the carth.

   18 மதில் (பிங்.);:

 fortress wall, compound wall.

   19. கடல் (சூடா.);; Sea.

   20. மலை (சூடா.);; mountain.

   21. பாம்பின் படம்; hood.

   22. பிறப்பு (சூடா.);; birth, transmigration of souls.

   23. அறுபது ஆண்டு கொண்ட காலம்; a cycle of 60 years.

   24. பதக்கு (தைலவ. தைல 14);; a measure of capacity.

   25. பீர்க்கு பார்க்க;see pirkku.

   26. அத்தி (மலை.);; fig, ficus.

   27. வாணாள்; life time.

   ம. சக்ரம்;   க. சக்ர;   து. சக்ர;பட, சக்கர

     [சருக்கு → சருக்கரம் → சக்கரம் (வே.க. 239);.]

சக்கரம் (ஆழி); → Skt. Cakra

செக்கு வட்டமாயிருத்தலாலும் வட்டமாய் எள்ளாடுதலாலும் சக்கரம் எனப்பட்டது. செக்காரக் குடியைச் ‘சக்கரப்பாடித் தெருவு’ என்று பெரியபுராணம் கூறுதல் காண்க (வேக. 114);.

சுழிதல் = வளைதல், திருகுதல் சுழி → சழி. சழிதல் = ஒருபக்கஞ்சரிதல். சழி → சரி → சருவு, சருவுதல் = சாய்தல். சரி = வளையல் வகை. சருவு = சருக்கு. சருக்குதல் = சாய்தல், வளைதல், சறுக்குதல். சருக்கு → சருக்கம் = வட்டம், நூற்பிரிவு. L. Circum = வட்டம்.

   சருக்கு → சருக்கல் → சருக்கர் → சருக்கரம் → சக்கரம் = வட்டம், உருளி, குயவன் சக்கரம், சக்கரப்படை வட்டக்காசு. சக்கரப்புள், மாநிலம், செக்கு Gk. Kuklos; E.cycle = சக்கரம்.

சக்கரம் → (சக்கு); → செக்கு = எண்ணெய் ஆட்டும் வட்டமான உரல், ஒ.நோ: பரு → பெரு, சத்தான் → செத்தான், சக்கு → சக்கடம் → சக்கடா = கட்டைவண்டி. தெ. செக்கடா பண்டி. சக்ர என்னும் வடசொல் வடிவிற்கு வடமொழியாளரால் குறிக்கப்பட்டுள்ள மூலம் க்ரு (செய்); என்பதே. மா.வி. அகரமுதலி சர் (car); என்னும் சொல்லை வினாக்குறியுடன் குறித்துள்ளது. சர் = இயங்கு. இவ்விரண்டுள் முன்னதின் பொருந்தாமையையும் பின்னதின் வன்புணர்ப்புத் தன்மையையும் அறிஞர் கண்டுகொள்க. (வ.வ. 134-135);.

நூற்கும் சக்கரம் கையினாற் சுற்றப்படுவதனால், அது கையிறாட்டு அல்லது கையிறாட்டை அல்லது கையிறாட்டினம் என்று சொல்லப்படும்.

 சக்கரம்2 cakkaram, பெ. (n.)

   1. மலைமல்லிகை (மூ.அ);; Indian cord.

   2. பெருமை (பிங்);; greatness, majesty.

     [சருக்கு → சருக்கரம் → சக்கரம்]

 சக்கரம்3 cakkaram, பெ. (n.)

   நெசவில் ஊடை நூலை மாட்டி நூல் இழைப்பதற்குரிய கருவி; pulley in a loom.

மறுவ. பூட்டுத்தலை, குச்சிராட்டினம். திருவட்டம், பூட்டை.

     [சருக்கு → சருக்கரம் (வட்டம்); → சக்கரம்]

இது சிறுசிறு மூங்கில் சிம்புகளால் செய்யப்பட்டது. சிம்புகளின் தலைப்பகுதி பூட்டுப் போல் கட்டுக்கட்டி வைக்கப்பட்டுள்ளமையால் இது பூட்டுதலை எனப்பட்டது. இஃது ஒரு கொம்பில் அல்லது கம்பியில் சுற்றப்படும் தன்மையுடையதனால் சொழல் (சுழல்); என்றும் சக்கரம் போன்றுள்ளதால் சக்கரம் என்றும் அழைக்கப்படுகிறது.

 சக்கரம்4 cakkaram, பெ. (n.)

   தகரைச் செடி; foetid cassia.

ம. சக்ரம்

     [சருக்கு → சருக்கரம் (வட்டம்); → சக்கரம் = சக்கரத்திற்கு இடும் எண்ணெயைத் தருவது]

 சக்கரம்1 cakkaram, பெ. (n.)

   தகரை; ringworm plant.

     [சக்கரம் → சக்கிரம்]

சக்கரம்4 பார்க்க

 சக்கரம்2 cakkaram, பெ. (n.)

   1. மாமரம்; mango tree.

   2. பூவரசு; portia tree – Thespesia populrea (சா.அக.);.

 சக்கரம் cakkaram, பெ.(n.)

   தட்டாங்கல் ஆட் டத்தில் ஐந்து கற்கள் சேர்ந்தது; five stones in taffārga play.

சக்கரயானம்

 சக்கரயானம் cakkarayāṉam, பெ. (n.)

சக்கர வண்டி பார்க்க;see Sakkara-vandi (செ.அக.);

ம. சக்ரயானம்

     [சக்கரம் + யானம்]

 Skt. yana → த. யானம்

சக்கரயூகம்

சக்கரயூகம் cakkarayūkam, பெ. (n.)

   சக்கர வடிவாக அமைத்த படைவகுப்பு (சீவக. 757, உரை);; circular of an army.

     [சக்கரம் + யூகம்]

 Skt. vyuha → த. யூகம்

சக்கரயெண்ணெய்

சக்கரயெண்ணெய் cakkarayeṇīey, பெ. (n.)

   தகரைச் செடியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்; oil extracted from the plant cassia tora.

ம. சக்ரதைலம்

     [சக்கரம் + எண்ணெய்]

சக்கரம்4 பார்க்க

சக்கரராசன்

 சக்கரராசன் cakkararācaṉ, பெ. (n.)

   சக்கரத்தாழ்வார் பார்க்க (இ.வ.);; Sakkarattalvar (செ.அக.);.

     [சக்கரம் + ராசன். அரசன் → ராசன்]

சக்கரரேகை

 சக்கரரேகை cakkararēkai, பெ. (n.)

சக்கர வரிகை பார்க்க;see Sakkara-Vargai (செ.அக.);.

     [சக்கரம் + ரேகை]

 Skt. rekha → த. ரேகை

சக்கரலிபி

 சக்கரலிபி cakkaralibi, பெ. (n.)

சக்கர வெழுத்து பார்க்க;see Sakkara-v-eluttu.

ம. சக்ரலிபி

     [சக்கரம் + லிபி]

 Skt. lipi → த. லிபி

சக்கரவங்கம்

 சக்கரவங்கம் cakkaravaṅgam, பெ. (n.)

   நாணற் கோரை; straight-sedge-cyperus pertinuis (சா.அக.);.

     [சக்கரம் + வங்கம். வங்கு → வங்கம் = வளைவு. வளைத்தாலும் நிமிரும் தன்மையையுடைய வங்கம் சக்கரம் என்னும் நேர்ப்பொருளை அடையாக ஏற்றது]

சக்கரவட்டம்

 சக்கரவட்டம் cakkaravaṭṭam, பெ. (n.)

   வட்டவடிவு; circular form (செ.அக.);

     [சக்கரம் + வட்டம். வல் → வள் → வண்டு → வட்டு → வட்டம். வட்ட → வட்ட (பிரா.);; வ்ருத்த (வ.); L. verto (turn);. சக்கரவட்டம் மீமிசைச் சொல். எனினும் சக்கரத்தைப் போன்ற வட்ட வடிவம் எனப் பொருள்படவும் இடமுண்டு]

சக்கரவட்டி

 சக்கரவட்டி cakkaravaṭṭi, பெ. (n.)

   கூட்டுவட்டி; interest upon interest, compound interest.

   க. சக்கரபட்டி;தெ. சக்ரவ்ருத்தி

     [சக்கரம் + வட்டி. தொடர்ந்து சுழலும் சக்கரத்தின் தன்மைபோல் முதலுடன் வட்டிசேர அதற்கும் சேர்த்து வட்டியாகும் தன்மை]

சக்கரவட்டை

 சக்கரவட்டை cakkaravaṭṭai, பெ. (n.)

   வண்டிச் சக்கரத்தின் புறவட்டம்; the rim of a wheel.

ம. சக்ரதாா

     [சக்கரம் + வட்டை. வள் → வடு → வட்டை. வள் = வளைந்தது]

சக்கரவண்டி

சக்கரவண்டி1 cakkaravaṇṭi, பெ. (n.)

   சக்கரத்தை உடைய வண்டி; wheeled cart.

     [சக்கர(ம்); + வண்டி]

 சக்கரவண்டி2 cakkaravaṇṭi, பெ. (n.)

நீர் இறைக்கும் உருளையின் அச்சுமரம்:

 the axle tree of a water-wheel (சேரநா);.

ம. சக்ரதார

     [சக்கர(ம்); + வண்டி]

சக்கரவரி

 சக்கரவரி cakkaravari, பெ. (n.)

சக்கரவரிகை பார்க்க;see Sakkara-Vargai.

     [சக்கர(ம்); + வரி]

சக்கரவரிகை

 சக்கரவரிகை caggaravarigai, பெ. (n.)

   ஒருவனது நல்லூழை (அதிர்ஷ்டத்தை);க் காட்ட வட்ட வடிவாகக் கையில் அமைந்த வரை; circular marks, usually on palm, believed to indicate one’s fortune.

     [சக்கரம் + வரிகை. வரி → வரிகை. ‘கை’ பெயராக்க ஈறு]

சக்கரவர்த்தி

சக்கரவர்த்தி1 cakkaravartti, பெ. (n.)

   1. பேரரசன்: emperor.

     “சக்கரவர்த்திகளாற் பயமுண்டெனும்” (சிலப். 15:98 உரை);

   2. திகிரி மன்னவர் (சூடா. 12, 55);; any one of tikiri mannavar (செ.அக.);.

ம. சக்ரவர்த்தி

     [சக்கரம் + வர்த்தி]

த. வட்டம் → Skt. vartin → த. வர்த்தி

 சக்கரவர்த்தி2 cakkaravartti, பெ. (n.)

   குயவன்; potter.

மறுவ. வேட்கோ

க. சக்ரவர்த்தி

     [சக்கரம் + வர்த்தி]

 சக்கரவர்த்தி3 cakkaravartti, பெ. (n.)

   மற்றொருவனைப் பணியாத தனியாள் வேலை; independent work.

     [சக்கரம் + வர்த்தி. மன்னவன், மன்னவன் போல் பிறர் ஆணையில்லாமல் தன் விருப்பம் போல் செய்யும் வேலை]

சக்கரவர்த்திக்கீரை

 சக்கரவர்த்திக்கீரை cakkaravarttikārai, பெ. (n.)

சமையலுக்குப் பயன்படும் முளைக் கீரையைப் போன்ற ஒருவகைக் கீரை:

 a kind of greens.

மறுவ. கண்ணாடிக் கீரை

     [சக்கரவர்த்தி + கீரை]

சக்கரவர்த்தித் திருமகன்

சக்கரவர்த்தித் திருமகன்1 caggaravarttittirumagaṉ, பெ. (n.)

இராமன்,

 Raman, as the son of the emperor Dasaratha

     ‘சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில்லு கைவந்திருக்குமா போல’ (ஈடு. 6, 42); (செ.அக.);

     [சக்கரவர்த்தி + திருமகன். சக்கரவர்த்தி = தசரதமன்னன். சக்கரவர்த்தித் திருமகன் = அவரது மகன் இராமப் பெருமான்]

 சக்கரவர்த்தித் திருமகன்2 caggaravarttittirumagaṉ, பெ. (n.)

   நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகிய அயோத்தியிற் கோயில் கொண்ட திருமால்; The Tirumal temple of Ayodya, one among 108 famous temples.

     [சக்கரவர்த்தி + திருமகன். தசரதனின் மகன் இராமபிரான் திருமாலின் தோற்றரவமாகக் கருதப்படுவதால் அயோத்திக் கோயிலில் வீற்றிருக்கும் திருமால் சக்கரவர்த்தித் திருமகன் என அழைக்கப்பட்டார்.]

சக்கரவர்த்தினி

சக்கரவர்த்தினி1 cakkaravarttiṉi, பெ. (n.)

   பேரரசி; empress.

க. சக்ரவர்தினி

     [சக்கரம் + வர்த்தினி]

சக்கரவர்த்தி (ஆ.பா.); – சக்கரவர்த்தினி (பெ.பா);

 Skt. Vartini → த. வர்த்தினி

 சக்கரவர்த்தினி2 cakkaravarttiṉi, பெ. (n.)

   1. சடாமாஞ்சி (சங்.அக.);; spikenard herb.

   2. செம்பஞ்சு (சங்.அக.);; redlac (செ.அக.);.

சக்கரவாகப்புள்

 சக்கரவாகப்புள் cakkaravākappuḷ, பெ. (n.)

   வட்டவடிவினதும், இரண்டடி நீளம் உள்ளதுமான பறவை; brahminy duck, ruddy goose – cascara – rutila alias Anas ruba alias A. cascara.

க. சக்கவக்தி, சக்கவக்கி, சக்ரவாக பக்ழி

     [சக்கரவாகம் + புள். வாளம் → வாகம்]

இணைபிரிந்ததால் வருந்துவதாகக் கூறும் பறவை வகை. இதன் தலை, கழுத்து வெளிர் மஞ்சள் நிறமாகவும், கண் பிடரி வெளிர் சாம்பல் நிறமாகவும், கழுத்து மஞ்சள் வண்ணத்தில் கருப்புக் கோடுடையதாகவும், உடம்பு மஞ்சள், கருப்பு, நீலம் கலந்த வண்ணமாகவும், மூக்கு கால் கருப்பு வண்ணமாகவும் காணப்படும் (சா.அக.);.

சக்கரவாகம்

சக்கரவாகம் cakkaravākam, பெ. (n.)

   1. சக்கரவாகப்புள் பார்க்க;see Sakkara-vigap-pul,

     “சக்கரவாகச் செழும் பெடைகாள்” (தணிகைப்பு. களவு. 347);.

   2. ஒரு பண் (இராகம்);; a musical mode.

மறுவ. நேமிப்புள், சகோரம், கோகம், யானைக் குருகு, சக்கரப்புள்

ம. சக்ரகம்

     [சக்கரம் + வாகம்]

வாள் → வாளம் = வாளம் (sword);, வட்டம். வாளம் → வாகம். இணைபிரித்து வருத்துவதைக் காட்டும் பண்.

சக்கரவாகாதனம்

சக்கரவாகாதனம் cakkaravākātaṉam, பெ. (n.)

   ஒக (யோகாசன); வகை (தத்துவப். 107. உரை);; a yogic posture.

     [சக்கரம் + வாகாதனம்]

சக்கரவாணம்

 சக்கரவாணம் cakkaravāṇam, பெ. (n.)

   சக்கரம் போலச் சுழன்று தீப்பொறிகளைச் சிதறும் வாணம்; wheel-rocket

   ம. சக்கரவாணம்;   க. சக்கரபாண;தெ. சக்கரபாணமு.

     [சக்கரம் + வாணம்]

சக்கரவாலை

 சக்கரவாலை cakkaravālai, பெ. (n.)

   நீர்மம் (திராவகம்); காய்ச்சப் பயன்படும் வட்டமான வாலைக் குடுவை; a round distilling apparatus used for preparing acids (சா.அக.);.

     [சக்கரம் + வாலை]

சக்கரவால்

 சக்கரவால் cakkaravāl, பெ. (n.)

   ஒரு வகைக் குதிரை நோய்; ring-bone in horses (சா.அக.);

     [சக்கர(ம்); + வால்]

சக்கரவாளகிரி

 சக்கரவாளகிரி caggaravāḷagiri, பெ. (n.)

   ஆழியங்குன்றம் என மணிமேகலையிற் குறிக்கப்பட்டுள்ள மலை; a mountain mentioned in Manimégalai, an ancient Tamil epic,

     [சக்கரவாளம் + கிரி]

 Skt. giri → த. கிரி

சக்கரவாளக்கோட்டம்

சக்கரவாளக்கோட்டம் cakkaravāḷakāṭṭam, பெ. (n.)

   காவிரிப்பூம்பட்டினத்தில் நன்காட்டுப் புறத்திருந்த ஓர் இடம்; a place in the ancient city of Käviri-p-pum-pattinam adjoining its buring-ground.

     ‘சக்கரவாளக் கோட்ட மீங்கிதுகாண்’ (மணிமே. 6:202);

மறுவ. சுடுகாட்டுக் கோட்டம்

     [சக்கரவானம் + கோட்டம். கோடுதல் = வளைதல், கோடு → கோட்டம் = வளைவு, மதியைச் சூத்த ஒளி வட்டம், மதில் சூழ்ந்த கோவில், குளக்கரை]

கோயிலைக் குறிக்கும் கோட்டம் என்னும் சொல் உல் என்னும் மூல வேரின்றும் குல் என்னும் அடிவேரினின்றும் தோன்றிய தூய தென் சொல்லாயிருப்பினும் செ.ப.அகரமுதலி அதை kosta என்று திரித்து வடசொல்லாகக் காட்டியுள்ளது.

மா.வி. அகரமுதலியில் ‘கோஷ்ட்ட’ என்னும் சொற்கு மூலமென வினாக்குறியுடன் ஐயுறவாகக் காட்டப்படும் சொல்,

 to tear as under, to pinch, to force or draw art, extract, to knead, to test, examine ?, to shine-?, to gnaw, nibble, to weigh, balance என்று பொருள் குறிக்கப்பட்டுள்ள ‘குஷ்’ என்பதே, குஷி (வயிறு);, கோச (உறை); என்பன உறவுச் சொற்களாயிருக்கலாமென்றுங் குறிக்கப்பட்டுள்ளது. அறிஞர் இதன் புரைமையைக் கண்டு கொள்க. (வள்ளுவர் கோட்டக்

கால்கோல் விழா வாழ்த்து)

சக்கரவாளம்

சக்கரவாளம்1 cakkaravāḷam, பெ. (n.)

   உட்புறம் ஒளியும் வெளிப்புறம் இருளுங்கொண்டு நிலவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும் மலை; a mythical range of mountains encircling the orb of the earth and forming the limit of light and darkness.

     “சூழ்ந்து நிற்குஞ் சக்கரவாளச் சையம்” (கந்தபு. அண்டகோ. 20);

   2. மேரு மலையின் மூன்றாந் தாழ்வரை (சி.போ.பா. 2,3, பக். 205);; the third slope or tier of mt. Meru.

   3. சக்கரவாளக் கோட்டம் பார்க்க (மணிமே. 6:183);;see sakkravāsā-k-kössam.

   4. வட்டவடிவு; circular form.

ம. சக்கரவாளம்

     [சக்கரம் + வாளம்]

வாள் → வாளம் = வாளம் (Sword);,

வட்டம். வளைந்த மலைத் தொடர் (சு.வி.16);

 சக்கரவாளம்2 cakkaravāḷam, பெ. (n.)

   எல்லை (யாழ். அக);; boundary, limit

ம. சக்ரவாடம்

     [சக்கரம் (வட்டம், வளைவு, விளிம்பு, எல்லை); + வாளம்]

 சக்கரவாளம்3 cakkaravāḷam, பெ. (n.)

சக்கரவாகப்புள் பார்க்க;see Sakkara-Wigapul

     [சக்கரம் + வாளம்]

சக்கரவாளிநம்பி

சக்கரவாளிநம்பி cakkaravāḷinambi, பெ. (n.)

   திருவரங்கத் திருக்கோயிலுக்கு நிலம் கொடுத்தவன்; the land donar to Tiruvarangam (Srirangam); temple.

     “சக்கரவாளி நம்பி திருநந்த வன வாத்தலைக்கு மேற்கும்” (தெ. க. தொ. 24, கல். 246-3);

     [சக்கரம் → சக்கரவாளி + நம்பி]

சக்கரவித்து

 சக்கரவித்து cakkaravittu, பெ. (n.)

   வட்டமான விதை; any round seed.

     [சக்கரம் + வித்து]

சக்கரவியூகம்

 சக்கரவியூகம் cakkaraviyūkam, பெ. (n.)

சக்கர யூகம் பார்க்க;see Sakkara-yogam (செ.அக.);

     [சக்கரம் + வியூகம்]

 Skt. vyūha → த. வியூகம்

சக்கரவிருத்தி

 சக்கரவிருத்தி cakkaravirutti, பெ. (n.)

சக்கரவட்டி பார்க்க (சங்.அக);;see Sakkara-vatti.

     [சக்கரம் + விருத்தி]

த. வட்டம் → Skt. vrddhi → த. விருத்தி

சக்கரவுயிர்ப்பு

 சக்கரவுயிர்ப்பு cakkaravuyirppu, பெ. (n.)

   இறப்புக்காலத்திற் போலத் திணறியெழும் மூச்சு; gasp for breath, dying breath.

     [சக்கரம் + உயிர்ப்பு]

சக்கரவெழுத்து

சக்கரவெழுத்து cakkaraveḻuttu, பெ. (n.)

   இந்திய நாட்டின் பழைமையான ஒரு வகை எழுத்து; an ancient Indian script.

க. சக்ரலிபி

     [சக்கரம் + எழுத்து]

   தமிழ் எழுத்து கீறெழுத்தும் வட்டெழுத்தும் என இருவகைப்பட்டது. முன்னது ஒலையெழுத்து;பட்டயவெழுத்தையே வட்டெழுத்தென்ப.

எழுத்தாணி கொண்டு ஏட்டில் கீறியெழுதுவதற்கு வளைகோட்டெழுத்தும், உளி கொண்டு பட்டயத்தில் குழித்தெழுதுவதற்கு நேர்கோட் டெழுத்துமே ஏற்றவாதல் காண்க (ப.ப.134,135);.

சக்கரம் வட்டவடிவைக் குறித்தலால் சக்கர வெழுத்தென்பது வட்டெழுத்தைக் குறித்த தாயிருக்கலாம்.

சக்கரவேதனை

 சக்கரவேதனை cakkaravētaṉai, பெ. (n.)

   ஒரு வகைத் துன்பம்; a mode of torture.

     [சக்கரம் + வேதனை]

சக்கராகாரம்

 சக்கராகாரம் cakkarākāram, பெ. (n.)

   வட்ட வடிவு; circle, circular form (செ.அக.);

     [சக்கரம் + ஆகாரம். சக்கரம் = வட்டம். ஆகாரம் = உருவம், வடிவம்]

சக்கராக்கினை

சக்கராக்கினை cakkarākkiṉai, பெ. (n.)

   1. உண்மைக்குப் புறம்பான தண்டனை; arbitrary punishment inflicted by a despot.

   2. அரசனாணை; the decree of a monarch (செ.அக.);

     [சக்கரம் + ஆக்கினை]

த. ஆணை → Skt. ājnã → த. ஆக்கினை

சக்கராங்கனம்

 சக்கராங்கனம் cakkarāṅgaṉam, பெ. (n.)

   திருமாலியத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஒருவரது தோள்மீது சங்கு சக்கர முத்திரைகளைக் குரவர் (ஞானாசிரியர்); பொறிக்கை; branding with Safigu and Sakkaram of Tirumāl (Visnu); made by preceptor on the shoulders of a person at the time of his initiation into vaisnavism (செ.அக.);.

     [சக்கரம் + ஆங்கனம்]

சக்கராங்கி

 சக்கராங்கி cakkarāṅgi, பெ. (n.)

கடுகு ரோகிணி,

 black hellibore – Helliborus niger (சா.அக.);.

சக்கராங்கிதம்

 சக்கராங்கிதம் cakkarāṅgidam, பெ. (n.)

சக்கராங்கனம்;see šakkaringanam (செ.அக.);.

     [சக்கராங்கனம் → சக்கராங்கிதம்]

சக்கராடி

சக்கராடி cakkarāṭi, பெ. (n.)

   1. எத்தன்; deceiver.

   2. பாம்பாட்டி; Snake charmer.

     [சக்கரம் + அடி – சக்கராடி = சக்கரம் போல் படம் எடுக்க வைத்து ஆட்டுபவன், சுழன்று சுழன்று பேசி ஏமாற்றுபவன்]

சக்கராதபம்

 சக்கராதபம் cakkarātabam, பெ. (n.)

   செம்புளி மரம்; deccany deodar – Erythroxylon monogynum.

சக்கராதிபம்

சக்கராதிபம் cakkarātibam, பெ. (n.)

   பேரரசன் ஆணை; paramount power

     ‘புவிச்சக்கராதிபம் உடற்சோதரர் தாங் கொண்டிருப்பவும்’ (பாரதி. பாஞ்சாலி. I, 74);

     [சக்கரம் + ஆதிபம்]

 Skt. ådhipatya → த. ஆதிபம்

சக்கரான்கட்டு

 சக்கரான்கட்டு cakkarāṉkaṭṭu, பெ. (n.)

   ஒன்றாகத் தைக்கப்பட்ட இரண்டு அல்லது மூன்று சாக்கு (இ.வ.);; two or three gunnies stitched together (செ.அக.);.

     [சக்கரம் + ஆம் + கட்டு – சக்கராங்கட்டு → சக்கரான்கட்டு ஒன்று சேர்த்துச் சுற்றிக் கட்டுதல்]

சக்கராபந்தம்

 சக்கராபந்தம் cakkarāpandam, பெ. (n.)

   வட்டத்துத்தி அல்து சிறுதுத்தி; membranouscarpelled evening mallow – abutilon crispum (சா.அக.);.

     [சக்கரம் + பந்தம்]

சக்கராயுதத்தி

 சக்கராயுதத்தி cakkarāyudaddi, பெ. (n.)

   காளி; goddess Durga.

ம. சக்ராயுதி

     [சக்கரம் + ஆயுதம் + அத்தி. சக்கர ஆயுதத்தையுடையவள்]

சக்கராயுதன்

 சக்கராயுதன் cakkarāyudaṉ, பெ. (n.)

   திருமால் (திவா); (சக்கரப்படையுடையவன்);; Tirumāl (Visnu); as having the discus weapon.

   ம. சக்ராயுதன்;க. சக்கராயுத

     [சக்கரம் + ஆயுதன்]

சக்கராயுதம்

 சக்கராயுதம் cakkarāyudam, பெ. (n.)

   வட்ட வடிவமான படைக்கலன்; a discus-weapon.

   ம., து. சக்ராயுத;க. சக்ராயுத

     [சக்கரம் + ஆயுதம்]

த. சக்ராயுதம் → Skt. Sakrayudha

சக்கராயுதி

 சக்கராயுதி cakkarāyudi, பெ. (n.)

   காளி (துர்க்கை); (பிங்.);; Durgā, as having the discus weapon.

ம. சக்ராயுதி

     [சக்கரம் + ஆயுதி]

சக்கராரம்

 சக்கராரம் cakkarāram, பெ. (n.)

   ஆரக்கால்; spoke of a wheel.

ம. சக்ராரம்

     [சக்கரம் + ஆரம். ஆர் → ஆரம்]

சக்கரேந்திரகம்

 சக்கரேந்திரகம் caggarēndiragam, பெ.(n.)

   ஒரு வகைக் கடுகு; a kind of mustard (சா.அக.);.

சக்கரை

 சக்கரை cakkarai, பெ. (n.)

சருக்கரை பார்க்க;see Sarukkarai.

     [சருக்கரை → சர்க்கரை → சக்கரை]

சக்கரைக்கட்டி

 சக்கரைக்கட்டி cakkaraikkaṭṭi, பெ. (n.)

சருக்கரைக்கட்டி பார்க்க;see Sarukkarai-kkatti.

     [சருக்கரைக்கட்டி → சக்கரைக்கட்டி]

சக்கரைக்கத்தி

 சக்கரைக்கத்தி cakkaraikkatti, பெ. (n.)

சருக்கரைக்கத்தி பார்க்க;see Sarukkarai-k-katti.

     [சருக்கரைக்கத்தி → சக்கரைக்கத்தி]

சக்கரைக்கரண்டி

 சக்கரைக்கரண்டி cakkaraikkaraṇṭi, பெ. (n.)

சருக்கரைக்கரண்டி பார்க்க;see sarukkarai-k-karaṇdi.

     [சருக்கரைக்கரண்டி → சக்கரைக்கரண்டி]

சக்கரைக்குத்தி

 சக்கரைக்குத்தி cakkaraikkutti, பெ. (n.)

சருக்கரைக்குத்தி பார்க்க;see sarukkarai-k-kutti.

     [சருக்கரைக்குத்தி → சர்க்கரைக்குத்தி → சக்கரைக்குத்தி]

சக்கரைக்கேளி

 சக்கரைக்கேளி cakkaraikāḷi, பெ. (n.)

சருக்கரைக்கேளி பார்க்க;see Sarukkaraf-k-keli.

     [சருக்கரைக்கேளி → சக்கரைக்கேளி]

சக்கரைச்சோறு

 சக்கரைச்சோறு cakkaraiccōṟu, பெ. (n.)

சருக்கரைக்சோறு பார்க்க;see sarukkarai-c-coru.

     [சருக்கரைக்சோறு → சக்கரைக்சோறு. சொல் = நெல். சொல் + தி = சொன்றி. சொன்றி → சோறு]

சக்கரைநோய்

 சக்கரைநோய் cakkarainōy, பெ. (n.)

   நீரிழிவு நோய்; diabetes.

     [சருக்கரை → சக்கரை + நோய்]

சக்கரைப்பேச்சு:

 சக்கரைப்பேச்சு: cakkaraippēccu, பெ. (n.)

சருக்கரைப்பேச்சு பார்க்க;see sarukkarai-p-рeccu.

     [சருக்கரைப்பேச்சு → சக்கரைப்பேச்சு]

சக்கரைப்பொங்கல்

 சக்கரைப்பொங்கல் cakkaraippoṅgal, பெ. (n.)

சருக்கரைப்பொங்கல் பார்க்க;see sarukkarai-p-pongal.

     [சருக்கரைப்பொங்கல் → சக்கரைப்பொங்கல்]

சக்கரையமுது

 சக்கரையமுது cakkaraiyamudu, பெ. (n.)

சருக்கரையமுது பார்க்க;see sarukkarai-yamudu.

     [சருக்கரையமுது → சக்கரையமுது]

சக்கரைவள்ளி

 சக்கரைவள்ளி cakkaraivaḷḷi, பெ. (n.)

சருக்கரைவள்ளி பார்க்க;see sarukkarai-valli.

ம. சக்கரவள்ளி

     [சருக்கரைவள்ளி → சக்கரைவள்ளி]

சக்கல்

சக்கல் cakkal, பெ. (n.)

   1. மக்கல்; rotten straw, muck.

   2. சாரமற்றது; that which is withered, shriveled.

தெ. சக்கு

     [சள் → சளக்கல் → சக்கல்]

சக்களம்

 சக்களம் cakkaḷam, பெ. (n.)

   தோல்; skin.

க. சக்கள

     [அக்கு = எலும், அளம் = செறிவு, நெருக்கம். எலும்புடன் நெருக்கியிருப்பது, எலும்பைப் போர்த்தியிருப்பது, தோல்]

சக்களவி

சக்களவி cakkaḷavi, பெ. (n.)

   1. சதுரக் கள்ளி; square – spurge – Euphorbia antiquorum.

   2. திருகுக் கள்ளியின் புல்லுருவி; a parasite on twisted spurge – Euphorbia tirucalli.

     [சதுரக்கள்ளி → சக்கள்ளி → சக்களவி]

சக்களா

 சக்களா cakkaḷā, பெ. (n.)

   வாலை; the female energy worshipped in the form of an immatured girl (சா.அக.);.

சக்களி

சக்களி1 cakkaḷidal,    4 செ.கு.வி. (v.i.)

   தட்டையாதல் (யாழ்ப்.);; to become oblate, flattened, compressed.

ம., கி. சக்கழி.

     [தக்கை → சக்கை → சக்கு + அளி-.]

 சக்களி2 cakkaḷidal,    4 செ.கு.வி. (v.i.)

   சளிதல் (யாழ். அக.);; to be fermented;

 to grow stale.

     [சக்கழி – சக்களி]

சக்களையன்

 சக்களையன் cakkaḷaiyaṉ, பெ. (n.)

வீணே பொழுதைப் போக்கும் சோம்பேறி (யாழ்ப்.);:

 corpulent, sluggish fellow,

     [சக்களி → சக்களை + அள்)

சக்காத்து

 சக்காத்து cakkāttu, பெ.(n.)

   இலவயம் (நெல்லை.);; anything obtained free or gratis.

     [U.{} → த.சக்காத்து.]

சக்காந்தம்

சக்காந்தம் cakkāndam, பெ. (n.)

   பகடி (பரிகாசம்);; ridicule

     ‘மின்னார்களுமே சக்காந்த முரைக்கில்’ (தனிப்பா. i, 378,22);

     [சக்கந்தம் → சக்காந்தம்.]

சக்கந்தம்2 பார்க்க

சக்காரம்

 சக்காரம் cakkāram, பெ. (n.)

   சருக்கரை போல் இனிக்கும் தேமா; a kind of mango.

     [அக்காரம் = சருக்கரை போல் இனிக்கும் மாங்கனி அல்லது மாங்கனி வகைகளுள் ஒன்று, அக் கனிமரம். அக்காரம் → சக்காரம்]

சக்கி

 சக்கி cakki, பெ. (n.)

   துண்டுச் சட்டம் (உ.வ.);; any wooden piece or frame.

   தெ. செக்க;பட சக்கெ.

     [தக்கை → சக்கை → சக்கி]

சக்கிக்காரம்

 சக்கிக்காரம் cakkikkāram, பெ.(n.)

   உப்பு வகை; impuren carbonate of soda.

     [Skt.{} → த.சச்சிக்காரம்.]

சக்கிடுத்தார்

 சக்கிடுத்தார் cakkiḍuttār, பெ.(n.)

   செயலாளர் (யாழ்ப்.);; secretary.

     [E.secretary → த.சக்கிடுத்தார்.]

சக்கிந்திரியம்

 சக்கிந்திரியம் cakkindiriyam, பெ.(n.)

   கண்; the organ of sight (சா.அக.);.

சக்கினம்

 சக்கினம் cakkiṉam, பெ.(n.)

   அம்பர்; ambersuccinum (சா.அக.);.

சக்கிமுக்கி

சக்கிமுக்கி cakkimukki, பெ. (n.)

   1. நெருப்பு உண்டாக்கப் பயன்படுத்தும் கல்; a Steel or flint-stone to strike fire with.

   2. தீப்பற்றும் ஓர் எஃகு; a steel for striking fire.

   3. தீப்பற்றும் கட்டை (திருவாங்கூர் மலையர்கள் பயன்படுத்துவது);; a wood used for producing fire – Isora corlifolia.

   மறுவ. தீத்தட்டி;ம. சக்கிமுக்கி, சக்குமுக்கி: க. சக்கமுக்கி, சக்கமுங்கி, சகமுகி, சகமகி.

     [சக்கி + முக்கி]

சக்கிமுக்கிக்கல்

 சக்கிமுக்கிக்கல் cakkimukkikkal, பெ. (n.)

   நெருப்பையுண்டாக்கப் பயன்படுத்திய ஒரு வகைக் கல்; flint-stone used for kindling fire.

மறுவ. தீத்தட்டிக்கல்.

     [சக்குமுக்கி + கல்]

சக்கிமுக்கிக்குடுக்கை

 சக்கிமுக்கிக்குடுக்கை cakkimukkikkuḍukkai, பெ. (n.)

   தீப்பற்றும் பஞ்சை வைத்திருக்கும் குடுக்கை; a box for keeping tinder such as, charred linen used in obtaining fiге, tinder-box (சா.அக.);.

மறுவ. தீத்தட்டிக் குடுக்கை

     [சக்கிமுக்கி + குடுக்கை]

சக்கிமுக்கிதட்டு-தல்

சக்கிமுக்கிதட்டு-தல் cakkimukkidaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சக்கிமுக்கிக் கல்லைக் கொண்டு தீ வளர்த்தல்; to kindle fire with flint and steel.

   2. சண்டை மூட்டுதல் (வின்.);; to stir up strife.

     [சக்கிமுக்கி தட்டு-]

கற்களைத் தட்டி தீ உண்டாக்குவது போல் இருவரிடையே கலகமூட்டுதலும் சக்கிமுக்கி தட்டுதல் எனப்பட்டது.

சக்கிமுக்கிபோடு-தல்

சக்கிமுக்கிபோடு-தல் cakkimukkipōṭudal,    20 செகுவி (v.i.)

சக்கிமுக்கிதட்டு-தல் பார்க்க;see Sakki-mukki-tattu-.

     [சக்கிமுக்கி + போடு-,]

சக்கிமுக்கிப்பஞ்சு

 சக்கிமுக்கிப்பஞ்சு cakkimukkippañju, பெ. (n.)

   தீப்பஞ்சு; an inflammable substance such as charred liner used for obtaining fire with a steel and flint in olden days, tinder (சா.அக.);.

     [சக்கிமுக்கி + பஞ்சு]

சக்கிமுக்கிப்பை

 சக்கிமுக்கிப்பை cakkimukkippai, பெ. (n.)

   சக்கிமுக்கிக்கல், சக்கிமுக்கிக்குடுக்கை, எஃகு இவை மூன்றும் அடங்கிய பை; a purse containing flint, tinder and steel (சா.அக.);.

     [சக்கிமுக்கி + பை, பொள் → பொய் → (பய்); → பை = உட்டுனையுடையது]

சக்கிமுக்கிவளையம்

 சக்கிமுக்கிவளையம் cakkimukkivaḷaiyam, பெ. (n.)

   சக்கிமுக்கி தட்டும் இரும்பு வளையம்; a round plate of iron used with strike a light.

மறுவ. தீத்தட்டி, வளையம்.

     [சக்கிமுக்கி + வளையம், வள் → வளை → வளையம்]

சக்கியன்

 சக்கியன் cakkiyaṉ, பெ. (n.)

   நண்பன், தோழன் (இராட்);; friend.

     [சக்கியம் → சக்கியன் = ஏற்புடைத் தலைவன், ஒத்தவுணர்வுள்ளவன், நண்பன்]

சக்கியம்

 சக்கியம் cakkiyam, பெ. (n.)

   இயல்வது; that which is possible, practicable (செ.அக.);

     [தக்கு = ஏற்றதாதல், தக்கு → சக்கு → சக்கியம் = இயல்வது]

த. சக்கியம் → Skt. Sakya

சக்கியார்த்தம்

 சக்கியார்த்தம் cakkiyārttam, பெ.(n.)

   சொல்லாற்றலால் உணரும் பொருள்; explicit, direct or literal meaning of a word or sentence.

த.வ. வெளிப்படை.

     [Skt.{}+artha → த.சக்கியார்த்தம்.]

சக்கிரகம்

 சக்கிரகம் caggiragam, பெ. (n.)

 arguing in a vicious circle.

     [சக்கரம் = வளைவு. சக்கரம் → சக்கிரகம்]

சக்கரப்பிரசங்கம் பார்க்க.

சக்கிரகாசிகம்

 சக்கிரகாசிகம் caggiragācigam, பெ. (n.)

மாசிக்காய்:

 Oak-gall (சா.அக.);.

     [சக்கிரம் + காகிகம்]

சக்கிரகாரகம்

 சக்கிரகாரகம் caggiragāragam, பெ. (n.)

சக்கரகாரகம் பார்க்க;see Sakkara-karagam.

சக்கிரசம்

 சக்கிரசம் sakkirasam, பெ. (n.)

   அத்தி; fig tree-ficus glomerata (சா.அக.);.

     [சக்கரம் → சக்கிரம் → சக்கிரசம்]

சக்கிரதரம்

 சக்கிரதரம் cakkiradaram, பெ.(n.)

   பாம்பு; snake (சா.அக.);.

சக்கிரநாயகம்

 சக்கிரநாயகம் caggiranāyagam, பெ. (n.)

   ஓமாலிகைகளில் ஒன்றாகிய புலியுகிர் (சங். அக.);; an aromatic substance.

சக்கிரன்

 சக்கிரன் cakkiraṉ, பெ. (n.)

   இந்திரன் (பிங்.);; Indra.

     [சக்கரன் → சக்கிரன். ஆணைச் சக்கரத்தையுடையவன்]

சக்கிரபாணி

சக்கிரபாணி cakkirapāṇi, பெ. (n.)

   1. காளி (துர்க்கை);, (சூடா);; Durga.

   2. சக்கரபாணி பார்க்க;see Sakkara-pani.

     [சக்கரம் → சக்கிரம் + பாணி. சக்கரத்தை யுடையவ-ள்-ன்;

பாணி = கை. பண்ணுவது பாணி]

சக்கிரபாதம்

சக்கிரபாதம் cakkirapātam, பெ. (n.)

   1. உருளைகளை (சக்கரங்களை);க் கால்களாக உடைய வண்டி; cart, as having wheels for its legs.

   2 வட்டமான கால்களையுடைய யானை; elephant, as having round legs.

     [சக்கரம் + பாதம். பதி → பாதம் நிலத்தில் பதியும் உறுப்பு அல்லது பாகம்]

சக்கிரபுட்பி

 சக்கிரபுட்பி cakkirabuṭbi, பெ. (n.)

சக்கரபுட்பி பார்க்க;see Sakkara-pulpi.

     [சக்கரபுட்பி → சக்கிரபுட்பி]

 சக்கிரபுட்பி cakkirabuṭbi, பெ. (n.)

   குப்பைமேனி; a kind of plant.

     [சக்கரபுட்பி → சககிரபுட்பி]

சக்கிரபுளிச்சை

 சக்கிரபுளிச்சை cakkirabuḷiccai, பெ. (n.)

   செம்புளிச்சை; deccany dender-Erythroxylon monogynum (சா.அக.);.

சக்கிரமண்டலி

 சக்கிரமண்டலி cakkiramaṇṭali, பெ. (n.)

சக்கரமண்டலி பார்க்க;see Sakkara-mangali (யாழ். அக.);.

     [சக்கரம் → சக்கிரம் + மண்டலி]

சக்கிரமாமூலி

 சக்கிரமாமூலி cakkiramāmūli, பெ. (n.)

   கருநொச்சி; willow-leaved justicia – Justicia gendarussa (சா.அக.);.

     [சக்கரம் → சக்கிரம் + மா + மூலி(கை);]

சக்கிரமுகம்

 சக்கிரமுகம் caggiramugam, பெ. (n.)

   பன்றி (யாழ். அக.);; pig.

     [சக்கரம் → சக்கிரம் + முகம். முகம் = முன்பக்கம், தலையின் முன்பக்கம்]

சக்கிரமுகம் = சக்கரம் போன்று வட்டவடிவ முகத்தை (வாய்ப்பகுதியை); யுடையது.

சக்கிரம்

சக்கிரம் cakkiram, பெ. (n.)

சக்கரம் பார்க்க;see sakkaram.

     “சோழன சக்கிரமாங் கருணாகரன்” (கலிங். 350);.

     [சக்கரம் → சக்கிரம்]

சக்கிரயானம்

 சக்கிரயானம் cakkirayāṉam, பெ. (n.)

சக்கரயானம் பார்க்க;see Sakkarayånam.

     [சக்கரம் → சக்கிரம் + யானம்]

 Skt. yana → த. யானம்

சக்கிரலேகை

 சக்கிரலேகை cakkiralēkai, பெ. (n.)

சக்கிர வரிகை பார்க்க;see Sakkara-varigai.

     [சக்கரம் + ரேகை → சக்கரரேகை → சக்கரவேகை (கொ.வ.);]

 Skt. rekha → த. ரேகை

சக்கிரவர்த்திக்கீரை

 சக்கிரவர்த்திக்கீரை cakkiravarttikārai, பெ. (n.)

   மலமிளக்கியாகப் பயன்படும் ஒருவகைக் கீரை; a kind of edible greens – Amaranthus (சா.அக.);.

     [சக்கிரவர்த்தி + கீரை]

சக்கிரவாணு

 சக்கிரவாணு cakkiravāṇu, பெ.(n.)

   கழுதை; ass (சா.அக.);.

சக்கிரவாதபம்

 சக்கிரவாதபம் cakkiravātabam, பெ. (n.)

   செம்புளிச்சை (மலை);; red cedar.

சக்கிரவாதம்

 சக்கிரவாதம் cakkiravātam, பெ. (n.)

   சுழல் காற்று (யாழ். அக.);; whirlwind.

     [சக்கரம் → சக்கிரம் + வாதம். சக்கரம் = வட்டம், உருளை, சுழற்சி]

 Skt. Vata → த. வாதம்

சக்கிரவான்

 சக்கிரவான் cakkiravāṉ, பெ. (n.)

   வேங்கை மரம்; kino tree – Pterocarpus marsupium (சா.அக.);.

சக்கிரவாளம்

 சக்கிரவாளம் cakkiravāḷam, பெ. (n.)

   வட்டம்; circle.

     [சக்கரவாளம் → சக்கிரவாளம்)

சக்கிரவிருத்தி

 சக்கிரவிருத்தி cakkiravirutti, பெ. (n.)

சக்கரவட்டி பார்க்க;see Sakkaravatti.

     [சக்கரவிருத்தி + சக்கிரவிருத்தி]

சக்கிராங்கம்

 சக்கிராங்கம் cakkirāṅgam, பெ. (n.)

   வண்டி;Сагt.

     [சக்கரம் + அங்கம் → சக்கராங்கம் → சக்கிராங்கம். சக்கரத்தை உறுப்பாக (அங்கமாக);க் கொண்டது]

 Skt. anka → த. அங்கம்.

சக்கிராங்கி

சக்கிராங்கி cakkirāṅgi, பெ. (n.)

   நோய் நீக்கி (கடுரோகிணி); (தைலவ, தைல 23);; christmas rose.

     [சக்கராங்கி → சக்கிராங்கி]

சக்கிராடி

 சக்கிராடி cakkirāṭi, பெ. (n.)

சக்கராடி பார்க்க;see Sakkaradi.

     [சக்கராடி → சக்கிராடி]

சக்கிராதம்

 சக்கிராதம் cakkirātam, பெ. (n.)

   பன்றி (மூ. அ.);; pig.

     [சக்கரம் → சக்கிரம் → சக்கிராதம் = வட்டமான முக்குப் பகுதியுடையது]

சக்கிரி

சக்கிரி1 cakkiri, பெ. (n.)

   1. (சக்கரத்தை உடைய); அரசன் (சூடா.);; king, emperor,

   2. சக்கரத்தைக் கையில் கொண்டவன், திருமால் (சூடா.);; Tirumāl (Visnu);.

மறுவ. புரவலன், பெருமான், ஏந்தல், வேந்தன், மன்னன், பொருநன், குரிசில், கோ, கொற்றவன், இறைவன், அண்ணல், தலைவன், காவலன்.

     [சக்கரம் → சக்கரி → சக்கிரி]

 சக்கிரி2 cakkiri, பெ. (n.)

   சக்கரத்தால் மட்பாண்டம் செய்யும் குயவன் (பிங்.);; potter.

மறுவ. கும்பகாரன், குவாலன், வேட்கோவன், மட்பகைவன்.

     [சக்கரம் → சக்கரி → சக்கிரி]

 சக்கிரி3 cakkiri, பெ. (n.)

   1. செக்கான் (திவா);; oil-monger, oil-grinder.

   2. பாம்பு; Snake.

     [சக்கரம் → சக்கரி → சக்கிரி]

சக்கிரிகம்

 சக்கிரிகம் caggirigam, பெ.(n.)

   கொள்ளு; Madras horse gram, Dolichos unflorus. (சா.அக.);.

த.வ. காணம்.

சக்கிரிகை

 சக்கிரிகை caggirigai, பெ. (n.)

   முழந்தாள் (யாழ். அக.);; knee.

     [சக்கரிகை → சக்கிரிகை. சக்கரம் போன்று அசையும் உறுப்பு]

சக்கிரிதம்

சக்கிரிதம் cakkiridam, பெ.(n.)

   குதிரை நடை வகை (சுக்கிரநீதி, 72);; a pace of horses.

     [Skt.cakrita → த.சக்கிரிதம்.]

சக்கிரீவதம்

 சக்கிரீவதம் cakkirīvadam, பெ.(n.)

   கழுதை; ass (சா.அக.);.

சக்கிலி

சக்கிலி1 cakkili, பெ. (n.)

   கண்ணில்லாதவன்; blind.

     [சக்கு + இலி]

 சக்கிலி2 cakkili, பெ. (n.)

   தோல்; skin, leather.

   க. சக்கலி; Mar. Saga (goat’s skin, leather);

     [அக்கு = எலும்பு. அளம் = செறிவு, நெருக்கம். அக்கு + அளம் → அக்களம் → சக்களம் = எலும்புடன் செறித்து மூடியிருப்பது, தோல். சக்களம் → சக்கலி]

 சக்கிலி3 cakkili, பெ. (n.)

   சக்கிலியர் இனம்; caste of shoe-makers.

     [சக்கிலி → சக்கிலி, தோலைக் கொண்டு பணி செய்பவன்]

தமிழ்நாட்டில் இப்போதுள்ள சக்கிலியர் தெலுங்கராதலின் விசயநகர ஆட்சியில் அல்லது அதற்குச் சற்று முன்பு தெலுங்க நாட்டினின்று தமிழ்நாட்டிற்கு வந்தவராவர். அவர் வருமுன்பு, அவர் தொழிலைச் செய்து கொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்); என்னும் தமிழ் வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பறையர். பாணரும் சக்கிவியரைப் போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு அதனாற் செருப்பு. கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடு தின்பவர்க்கே மிக இசையும் தோல் வேலை செய்பவர் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப்படும். பாணருக்குத் தையல்தொழிலுமுண்டு.

     “பாணர்க்குச்சொல்லுவதும்… தை…” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ங்னமே சக்கிலியர் பறம்பர் தொழிலை மேற்கொண்ட பின், செம்மார் பிற தொழிலை மேற்கொண்டு பெயர் மறைந்தனர். சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி என்னும் தெலுங்கப்பெயரும் இன்று வழங்கி வருகின்றன. (ஒ.மொ. முன். 33);.

சக்கிலிக்குருவி

சக்கிலிக்குருவி cakkilikkuruvi, பெ. (n.)

   மீன் குத்திப் பறவை; king fisher (M.M.416);.

     [கிச்சிலி → சிக்கலி → சக்கிலி + குருவி. குரீ → குரீஇ → குருவி]

சக்கிலிச்சி

சக்கிலிச்சி1 cakkilicci, பெ. (n.)

   சக்கிலிய இனத்துப் பெண்; a woman of the sakkili caste (செ. அக.);.

     [சக்கிலியன் (ஆ.பாவ.); – சக்கிலிச்சி (பெ.பா.);]

 சக்கிலிச்சி2 cakkilicci, பெ. (n.)

   ஒரு வகை எரியுப்பு (சத்திசாரம்); (வின்.);; a salt of burning and acrid nature (செ.அக.);.

சக்கிலிடல்

 சக்கிலிடல் cakkiliḍal, பெ.(n.)

   கண்ணுக்கிடல்; to apply to the eye, as collyrium (சா.அக.);.

சக்கிலியன்

சக்கிலியன் cakkiliyaṉ, பெ. (n.)

   செம்மான்; chucklers, workers in leather (செ.அக.);.

   ம. சக்கிலியன்;க. சக்கள

     [சக்கிலி → சக்கிலியன்]

சக்கிலி3 பார்க்க

சக்கிலியப்பெண்

 சக்கிலியப்பெண் cakkiliyappeṇ, பெ. (n.)

சக்கிலிச்சி பார்க்க;see sakkilicci.

     ‘சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைஞ்சா தெரியும்’ (பழ.);.

     [சக்கிலி + அ + பெண்]

சக்கு

சக்கு1 cakku, பெ. (n.)

   கண்; eye.

     “புரந்தர னெனுஞ் சக்கு வாயிர முடைக்களிறு” (கலிங். 175);

மறுவ. தாரை, விழி, திருக்கு, அம்பகம், கோ, நாட்டம், அக்கம்

     [அஃகுதல் = சுருங்குதல், சிதறியதாதல், நுணுகுதல். அஃகு → அக்கு = துண்டு, சிறியது. அக்கு → சக்கு = சிறிய உருப்பாகிய கண்]

 Skt. saksuh;

 Pkt. §akkhü

யானையின் உருவத்தை நோக்க அதன் கண் சிறியதாதலால் சக்கு என்பது முதலில் யானைக் கண்ணைக் குறித்துப் பின் பொதுப் பெயராயிற்று.

 சக்கு2 cakku, பெ. (n.)

   செக்கு; a country oil-press.

   ம. சக்கு;   க. செக்கு; Pkt., Pali. cakka;

 Mar., H.cakki

     [சருக்கரம் → சருக்கு → சக்கு. இற்றைச் செகர முதற்சொற்கள் சில பண்டு சகர முதாயிருந்தனவென்று அறிதல் வேண்டும். எ-டு: சத்தான் → செத்தான், சக்கு → செக்கு]

 சக்கு3 cakku, பெ. (n.)

   பூஞ்சாளம் (யாழ்ப்.);; mouldiness.

தெ. சக்கு

     [சருகு → சருக்கு → சக்கு]

 சக்கு cakku, பெ.(n.)

   தோலாற் கைவினைப் பொருள்கள் செய்யப்பயன்படும் ஒரு கருவி; an implement used to make leather artefact.

     [சக்கை-சக்கு]

சக்குக்கட்டு-தல்

சக்குக்கட்டு-தல் cakkukkaṭṭudal,    5 செ.கு.வி (v.i.)

   பூஞ்சாளம் பூத்தல் (யாழ்ப்.);; to grow mouldly.

     [சருகு → சருக்கு → சக்கு + கட்டு-,]

சக்குச்சக்கெனல்

 சக்குச்சக்கெனல் cakkuccakkeṉal, பெ. (n.)

   ஓர் ஒலிக்குறிப்பு (வின்);; onom. expr. signifying harsh, dissonant, dull sound, as of a muffled drum

     ‘சக்குச் சக்கென்று பாக்குத் தின்பான் சபை மெச்ச; வீட்டிலே வந்து கடைவாயை நக்குவான் பெண்டுகள் மெச்ச’ (பழ.);.

     [சக்கு + சக்கு + எனல்]

சக்குச்சுசியம்

சக்குச்சுசியம் sakkussusiyam, பெ. (n.)

   1. கண்மை; collyrium for the eyes, extracted from Amomum antorhiza;

   2. தாழை; a fragrant plant-Pandanus odaratissimus (சா. அக.);.

சக்குடி

 சக்குடி cakkuḍi, பெ.(n.)

   மதுரை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Madurai Taluk.

     [செக்கு+சக்கு+குடி]

சக்குத்தானம்

 சக்குத்தானம் cakkuttāṉam, பெ. (n.)

   தெய்வத் திருவுருவின் கண்களை நீரால் தூய்மை செய்யும் பூசைவகை (யாழ். அக.);; ceremonial washing of the eyes of a deity in a temple.

     [சக்கு + தானம்]

சக்குபு

 சக்குபு cakkubu, பெ. (n.)

   கையாந்தகரை (மூ. அ.);; a plant growing in wet places.

     [சளசளத்தல் = சேறாகிருத்தல். சள → சளக்கு. சளக்கு → சக்கு = சேற்று நிலம். சக்கு → சக்குபு = நீர் கோத்த நிலத்தில் வளர்வது.]

சக்குப்பிடி-த்தல்

சக்குப்பிடி-த்தல் cakkuppiḍittal,    4 செ.கு.வி (v.i.)

   பூஞ்சாளம் பூத்தல் (இ.வ.);; to grow mouldy.

     [சருகு → சருக்கு → சக்கு + பிடி-,]

சக்குப்பூ-த்தல்

சக்குப்பூ-த்தல் cakkuppūttal,    4 செ.கு.வி. சக்குப்பிடி-த்தல் பார்க்க (யாழ். அக.) see sakku-p-pidi.

     [சக்கு + பூ-,]

சக்குரம்

 சக்குரம் cakkuram, பெ.(n.)

   கண்ணோய்ப் பொது; a general term for the diseases of the eye – Ophthal-mia (சா.அக.ஸ்ரீ.

சக்குவரி

சக்குவரி cakkuvari, பெ. (n.)

   ஒற்றொழித்து அடியொன்றுக்கு 14 எழுத்துகள் கொண்ட நாலடி மண்டிலம் (விருத்தம்); (வீரசோ, யாப். 33, உரை);; a verse of four lines, each of them consisting of 14 letters.

 Skt. sakvari

சக்கேரம்

 சக்கேரம் cakāram, பெ. (n.)

மெல்லிய தண்டும், முரட்டுத்தன்மையும் கொண்ட கரும்பு வகை:

 a kind of sugar cane.

     [சக்கு = கண். சக்கு → சக்கேரம் = கண் போன்ற கணுக்கள் உள்ள கரும்பு]

சக்கேரா

 சக்கேரா cakārā, பெ.(n.)

சகேரா பார்க்க;see {}.

     [U.zakhira → த.சக்கேரா.]

சக்கை

சக்கை1 cakkai, பெ. (n.)

   உள்ளீடற்றது; that which is hollow.

   2. தட்டையானது; that which is flat.

   3. கோது, சிராய்; refuse, as of sugarcane after pressing;

 rind as fibrous parts of fruits;

 anything wanting in solidity or strength;

 anything useless;

   4. பட்டை; bark.

   5. இறுக்கும் தக்கை; bark small wooden peg.

   4. துமுக்கி (துப்பாக்கி);த் தக்கை (யாழ்ப்.);; wadding of a gun.

   ம. சக்க;   க., து., பட. சக்கெ;தெ. செக்க.

     [தக்கை → சக்கை]

 சக்கை2 cakkai, பெ. (n.)

   1. பாலா (இ.வ.);; jack.

   2. காட்டுப் பலா; jungle jack (செ.அக.);.

   ம. சக்க;   க. சக;   து. குச்செ;குட., பட, சக்கெ.

     [தக்கை → சக்கை]

த. சக்கை → E. jack

 சக்கை3 cakkai, பெ. (n.)

   தவச மணி நீக்கப்பட்ட கதிர்; grainless ear.

     [தக்கை → சக்கை]

சக்கைக்கல்

 சக்கைக்கல் cakkaikkal, பெ. (n.)

   கற்சிறாய்; a thin split of stone.

க., பட. சக்கெ கல்லு

     [சக்கை + கல்]

சக்கைக்காய்

 சக்கைக்காய் cakkaikkāy, பெ. (n.)

   பலாப் பழத்தின் பிஞ்சு; unripe fruit of jack fruit.

     [சக்கை + காய்]

சக்கைச்சுளை

 சக்கைச்சுளை cakkaiccuḷai, பெ. (n.)

   பலாப் பழத்திலுள்ள தசைப் பகுதி; the pulp of jack fruit.

ம. சக்கச்சுள

     [சக்கை + சுளை. சுள் → சுளை = திரட்சி, திரண்ட பழச்சதைப் பகுதி]

சக்கைபுரட்டிவிடு-தல்

சக்கைபுரட்டிவிடு-தல் cakkaiburaḍḍiviḍudal,    20 செ.கு.வி (v.i.)

சக்கைபோடுபோடு-தல் பார்க்க;see sakkai-podu-podu- (செ.அக.);.

தெ. தெக்க

     [சக்கை + புரட்டி + விடு-,]

சக்கைபோடுபோடு-தல்

சக்கைபோடுபோடு-தல் cakkaipōṭupōṭudal,    20 செ.கு.வி & செ.குன்றாவி. (v.i.)& (v.t.)

   திறமையாகச் செய்தல் (கொ.வ.);; to accomplish a task skilfully (செ.அக.);

     [தக்கை → சக்கை + போடு + போடு-,]

சக்கைப்பட்டம்

சக்கைப்பட்டம் cakkaippaṭṭam, பெ. (n.)

   மாதத்தின் 14, 15ஆம் நாள்களில் செய்யும் விதைப்பு; sowing during 14th and 15th days of a month.

     [சக்கை + பட்டம்]

மாதத்தின் 14, 15ஆம் நாள்களில் செய்யும் விதைப்பு போதிய விளைச்சல் தராமல் போய் விடும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் இச் சொல் அமைந்திருக்கக் கூடும்.

சக்கைப்பப்படம்

 சக்கைப்பப்படம் cakkaippappaḍam, பெ. (n.)

சக்கையப்பளம் பார்க்க;see sakkai-y-appalam.

ம. சக்கப்பப்படம்

     [சக்கை + பப்படம்]

அப்பளி → அப்பளம். அப்பளித்தல் = சமனாகத் தேய்த்தல். த. அப்பளம் → Skt. рагppatа → த. பப்படம்.

சக்கைப்பழம்

சக்கைப்பழம் cakkaippaḻm, பெ. (n.)

   பலாப்பழம்; jack fruit.

   ம. சக்கப்பழம்;பட. சக்கண்ணு.

     [சக்கை2 + பழம்]

சக்கைப்பால்

 சக்கைப்பால் cakkaippāl, பெ. (n.)

   பலாப் பழத்தை வெட்டும்போது வடியும் ஒட்டும் தன்மையுள்ள வெண்மையான நீர்மம்; the sticky exudation from the jack fruit when cut.

ம. சக்கயரக்கு

     [சக்கை + பால்]

சக்கைப்புரட்டி

 சக்கைப்புரட்டி cakkaippuraṭṭi, பெ. (n.)

   களத்தில் சக்கைகளைப் புரட்டி விடவும், சென்று சேர்க்கவும் பயன்படும் கருவி; an implement used to gather straw.

     [சக்கை + புரட்டி]

சக்கைமடல்

சக்கைமடல் cakkaimaḍal, பெ. (n.)

   பலாப் பழத்தின் புறத்தோல்; the thicky thormy rind of jack fruit.

ம. சக்கமடல்

     [சக்கை2 + மடல்]

சக்கைமரம்

சக்கைமரம் cakkaimaram, பெ. (n.)

   பலா மரம்; the jack tree.

ம. சக்கமரம்

     [சக்கை2 + மரம்]

சக்கைமுக்கி

 சக்கைமுக்கி cakkaimukki, பெ.(n.)

சக்கிமுக்கி பார்க்க;see sakkimukki (சா.அக.);.

சக்கைமுல்லை

சக்கைமுல்லை cakkaimullai, பெ. (n.)

   ஒரு வகை முல்லை; a kind of jasmine.

   ம. சக்கமுல்ல; Skt. cakra malliga

     [சக்கை2 + முல்லை. முல் → முல்லை = வெண் பூக்கொடி வகை]

சக்கைமுள்

சக்கைமுள் cakkaimuḷ, பெ. (n.)

   பலாப் பழத்தின் புறத்தோலில் இருக்கும் முள்; thorny projections on the rind of the jack fruit (சேரநா.);

ம. சக்கமுள்ளு

     [சக்கை2 + முள்]

சக்கையன்

 சக்கையன் cakkaiyaṉ, பெ. (n.)

   உடல் வலியற்றுப் பருத்திருப்பவன் (யாழ்ப்.);; a Stout, but weak person (செ.அக.);.

ம. சக்கச்சன், சக்கமாடன்

     [தக்கை → சக்கை → சக்கையன்.]

சக்கையப்பளம்

 சக்கையப்பளம் cakkaiyappaḷam, பெ. (n.)

பலாக்காயின் சுளை கொண்டு செய்யும் அப்பளம்:

 a kind of pappadam – wafer prepared with the pulp of unripe jack fruit.

ம. சக்கப்பப்படம்

     [சக்கை + அப்பளம். அப்பளித்தல் = சமமாகத் தேய்த்தல். அப்பளி → அப்பளம்]

சக்கையாய்

 சக்கையாய் cakkaiyāy,    கு.வி.எ. (adv.) மிகுதியாக; in great measure, abundantly, excessively,

மழை சக்கையாய்ப் பெய்தது (சா.அக.);.

     [சால் → சால்கு → சால்கை → சாக்கை → சக்கை + ஆய். சாலுதல் = நிறைதல், மிகுதல், ஆய் – வி.எ. ஈறு.]

சக்கையாய்ப்பிழி

சக்கையாய்ப்பிழி2 cakkaiyāyppiḻidal,    2 செ.குன்றாவி, (v.t.)

   கடுமையாக வேலை வாங்குதல்; to extract hard work from, overwork, as reducing one to skeleton (செ.அக.);.

     [தக்கை → சக்கை + ஆய் + பிழி-,]

சக்கையாய்ப்பிழி-தல்

சக்கையாய்ப்பிழி-தல் cakkaiyāyppiḻidal,    2 செ.குன்றாவி (v.t.)

   சாறு (சத்து); முழுவதும் அறும்படி பிழிதல்; to squeeze out the essence from a thing so completely as to leave only the refuse (சா.அக.);.

     [சக்கையாய் + பிழி-,]

சக்கையெடு-த்தல்

சக்கையெடு-த்தல் cakkaiyeḍuttal,    4 செ.கு.வி (v.i)

   கதிரைப் பிணையிட்டுக் கூலங்கள் நீங்கிய பின் சக்கையையெடுத்தல்; to remove Straws after removing grains.

     [சக்கை3 + எடு-,]

சக்கைவாக்குவாங்கு-தல்

சக்கைவாக்குவாங்கு-தல் cakkaivākkuvāṅgudal,    5 செ.குன்றாவி (v.t.)

   1. சக்கையாய்ப் பிழி-தல்

 cakkaiyāyppiḻidalpārkka,

   2. மிகக் கடிந்து பேசுதல்; to take to task severely (செ.அக.);.

அவனைச் சக்கை வாங்கு வாங்கினான்.

     [சக்கை → வாங்கு → வாங்கு-,]

சக்கோலி

 சக்கோலி cakāli, பெ.(n.)

   ஒரு வகைப் பூடு (சங்.அக.);; a plant.

சக்சு

 சக்சு cakcu, பெ.(n.)

   பார்வைத்திறன்; faculty of seeing (சா.அக.);.

சக்சுபீதம்

 சக்சுபீதம் cakcupītam, பெ.(n.)

   கண்வலி; pain of eye (சா.அக.);.

சக்சுரியம்

சக்சுரியம் cakcuriyam, பெ.(n.)

   1. கண்ணுக்கினிமை; agreeable to the eyes.

   2. கண்மை; collyrium for the eyes, extracted from Amomum antorhiza.

   3. தாழை; a fragrant plant – Pandanus odaratissimus (சா.அக.);.

     [Skt.cakcu → த.சக்சுசியம்.]

சக்சுரோகம்

 சக்சுரோகம் cakcurōkam, பெ.(n.)

   கண்ணோய்; disease of the eye (சா.அக.);.

சக்சை

சக்சை cakcai, பெ.(n.)

   1. ஆராய்ச்சி; research, investigation, deliberation, discussion.

   2. பலமுறை ஓதுகை; repeated reading, recitation.

     “சச்சை மறையின்” (பாரத.இராச.114);.

     [Skt.{} → த.சச்சை.]

சக்தன்

 சக்தன் caktaṉ, பெ.(n.)

சக்திமான் பார்க்க;see {}.

த.வ. திறமையாளன், ஆற்றலாளன்.

     [Skt.{} → த. சக்தன்.]

சக்தி

 சக்தி cakti, பெ.(n.)

சத்தி பார்க்க;see {}.

த.வ. ஆற்றல், திறமை, வல்லமை.

     [Skt.{} → த.சக்தி.]

சக்திபூசை

 சக்திபூசை caktipūcai, பெ.(n.)

   பேராற்றலைப் பூசிக்கும் வாமமார்க்கம்; worship of sakti or the principle of energy in Godhead.

த.வ. காளிவழிபாடு.

     [சக்தி + பூசை.]

     [Skt.{} → த.சக்தி.]

     [பூசு → பூசி → பூசை = வழிபாடு செய்தல்.]

சக்திபோற்றல்

 சக்திபோற்றல் caktipōṟṟal, பெ.(n.)

   ஆண் வித்தமிழ்தை (விந்தைக்); காப்பாற்றல்; conservation of energy through preservation of semen in the system (சா.அக.);.

     [சக்தி + போற்றல்.]

     [Skt.{} → த.சக்தி.]

சக்திமான்

 சக்திமான் caktimāṉ, பெ.(n.)

   ஆற்றலுள்ளவன் (இ.வ.);; strong man, able or skilful person, a man of powerful personality.

த.வ.திறவன்.

     [Skt.{} → த.சக்திமான்.]

சக்திமாற்றம்

 சக்திமாற்றம் caktimāṟṟam, பெ.(n.)

   ஒன்றன் வலிமையைப் பிறிதொன்றாக மாற்றுதல்; converting energy from one from into another (சா.அக.);.

த.வ. திறன்.

     [சக்தி + மாற்றம்.]

     [Skt.{} → த.சக்தி.]

சக்திமுகம்

 சக்திமுகம் cagtimugam, பெ.(n.)

   அரசாணை;     [சக்தி + முகம்.]

     [Skt.{} → த.சக்தி.]

சக்தியானுசாரம்

 சக்தியானுசாரம் caktiyāṉucāram, பெ.அ.(adv.)

   ஆற்றலுக்கு ஏற்ப; to the best of one’s ability.

     “சக்தியானுசாரம் தானஞ் செய்ய வேண்டும்”.

     [Skt.{}+-{} → த.சக்தியானுசாரம்.]

சக்பந்தி

 சக்பந்தி cakpandi, பெ.(n.)

செக்குபந்தி பார்க்க;see {}.

     [U.cakbandi → த.சக்பந்தி.]

சக்ரகம்

 சக்ரகம் cagragam, பெ.(n.)

சக்கரகம் பார்க்க;see {}.

     [Skt.cakraka → த.சக்ரகம்.]

சக்ரவத்துப்பிடி-த்தல்

சக்ரவத்துப்பிடி-த்தல் cakravattuppiḍittal,    4. செ.கு.வி. (v.i.)

   மாமன்னரென்ற சிறப்புப்பட்டம் எய்துதல்; to proclaim title to sovereignty.

     “நடைச் சக்கரவத்துப்பிடிக்கலாம் படி” (ஈடு.3, 9, 9);.

     [சக்ரவத்து + பிடி.]

     [Skt.cakravarti → த.சக்ரவத்து.]

சங்க

சங்க caṅga, பெ.(n.)

   1. கக்கம்; the space below the arm-pit between the hip and the bend of arm.

   2. அக்குள்; arm-pit (சா.அக.);.

சங்ககிரி

 சங்ககிரி caṅgagiri, பெ. (n.)

   திருச்செங்கோடு வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruchengode Taluk.

     [சங்கரன்+Ski.கிரி]

சங்கக்காணிக்கை

 சங்கக்காணிக்கை caṅgakkāṇikkai, பெ. (n.)

   அவைக் (சபை); காணிக்கை (கிறித்.);; congregational contribution (செ.அக.);.

     [சங்கம் + காணிக்கை]

சங்கக்காப்பு

 சங்கக்காப்பு caṅgakkāppu, பெ. (n.)

   மகளிர் கையிலனியும் சங்குவளை (மீனவ.);; bracelet made of conch-shells worn by women (செ.அக.);.

     [சங்கு → சங்கம் + காப்பு]

சங்கக்காலம்

 சங்கக்காலம் caṅgakkālam, பெ. (n.)

கழகக் காலம் பார்க்க;see kalaga-k-kalam.

     [சங்கம் + காலம்]

சங்கக்குழையான்

சங்கக்குழையான் caṅgakkuḻaiyāṉ, பெ. (n.)

   சங்கினாலியன்ற காதணியை யுடையவன், சிவன்; Sivan, as wearing conch-shell ear-ring ornaments.

     “சங்கக்குழையனைத் தென்கருவாபுரித் தானுவை” (திருக்கருவை. கலித். 56);,

     [சங்க + குழையன்]

சங்கக்கூலி

 சங்கக்கூலி caṅgakāli, பெ. (n.)

   சங்கூதும் கூலி; wage for blowing conch.

     [சங்கம் + கூலி]

சங்கக்கையன்

 சங்கக்கையன் caṅgakkaiyaṉ, பெ. (n.)

   சங்கினைக் கையில் கொண்டவன், திருமால்; Tirumāl (Visnu); as holding conch in his hand.

     [சங்கம் + கையன்]

சங்கங்காட்டிலுமரி

 சங்கங்காட்டிலுமரி caṅgaṅgāṭṭilumari, பெ.(n.)

   நாகர வண்டு; a kind of golden coloured beetle supposed to live under the tree, four spined monetia (சா.அக.);.

சங்கங்குப்பி

சங்கங்குப்பி caṅgaṅguppi, பெ. (n.)

   பீநாறிச் சங்கு (பதார்த்த. 257);; smooth volkameria.

மறுவ. பீச்சுவிளாத்தி

ம. சங்கக்குப்பி

     [சங்கம் + குப்பி]

சங்கங்கோலகம்

 சங்கங்கோலகம் caṅgaṅālagam, பெ.(n.)

   மிளகாய் நங்கை; dhoby’s itch (சா.அக.);.

சங்கசம்

 சங்கசம் saṅgasam, பெ. (n.)

   புறா முட்டை யளவாய் சங்கில் பிறந்த முத்து; oyster pearl of the size of a pigeon egg (சா.அக.);.

     [சங்கு → சங்கசம்]

சங்கசுத்தம்

 சங்கசுத்தம் saṅgasuttam, பெ. (n.)

   சீமைச் செவ்வந்தி; chamomile flower – Authemis nobilis (சா.அக.);.

     [சங்கம் + சுத்தம்]

 Skt. suddha → த. சுத்தம்

சங்கச்செய்நஞ்சு

 சங்கச்செய்நஞ்சு caṅgacceynañju, பெ. (n.)

   பிறவி செய்நஞ்சு (பாஷாணம்); வகை; a mineral poison.

     [சங்கம் + செய்நஞ்சு]

சங்கச்செய்யுள்

சங்கச்செய்யுள் caṅgacceyyuḷ, பெ. (n.)

   கழகக் காலத்துப் பாடல்; classical poem of the sangam period (செ.அக.);.

     [சங்கம் + செய்யுள்]

பண்டைய புலவர் உரைநடை செய்யுள் என இருவகை நடையுள்ளும் செய்யுள் சிறந்ததென்று கண்டே உரைகளும் அகரமுதலி போன்ற உரிசொற்றொகுதிகளும் உட்பட எல்லாப் பனுவல்களையும் செய்யுளில் இயற்றினர் (தமி. வ. 107);.

சங்கஞ்சாறு

 சங்கஞ்சாறு caṅgañjāṟu, பெ. (n.)

   சங்கிலைச் சாறு; juice of leaves of four-spinned monetia -Azema tetracantha (சா.அக.);.

     [சங்கம் + சாறு]

சங்கஞ்செடி

 சங்கஞ்செடி caṅgañjeḍi, பெ. (n.)

   முட்சங்கஞ் செடி; mistletoe berry thorn, four-spinned monetia – Azema tetracantha (சா.அக.);.

     [சங்கம் + செடி]

இலை சங்கு வடிவினதாக இருப்பது. சளியை நீக்கக் குழந்தைகட்கு இதன் இலைச் சாற்றைக் கொடுப்பதுண்டு.

சங்கடக்கண்

 சங்கடக்கண் caṅgaḍakkaṇ, பெ. (n.)

   துன்ப மிகுதியால் கண்ணை மூடுகை; the closing of eyes as in distress.

     [சங்கடம் + கண்]

சங்கடப்படலை

 சங்கடப்படலை caṅgaḍappaḍalai, பெ. (n.)

   இரும்புக்கம்பி யாலான தடைவாசல் (யாழ்ப்.);; a barred gate at the entrance of a house or garden (செ.அக.);.

     [சங்கடம் + படலை, படர்தல் = பரவுதல். படர் → படல் = ஓலை, தட்டை, மாறு முதலியவற்றாலாகிய, கதவு போன்ற அடைப்பு. உழுதநிலத்திற் பரம்படிக்கும் பரந்த மாறு, கண்ணிற் படரும் புரை. படல் + அம் = படலம். படல் → படலை]

சங்கடப்படு-தல்

 சங்கடப்படு-தல் caṅgaḍappaḍudal, செ.கு.வி., (v.i.)

   துன்பப்படுதல் (கொ.வ.);; to be in trouble;

 To be distressed or grieved at heart (செ.அக.);.

தெ. சங்கடப்படு

     [சங்கடம் + படு. ‘படு’ – து.வி.]

சங்கடப்பாடு

 சங்கடப்பாடு caṅgaḍappāḍu, பெ. (n.)

   துன்புறும் நிலை (கொ.வ.);; state of being in trouble or distress (செ.அக.);.

தெ. சங்கடப்பாடு

     [சங்கடம் + பாடு. படு → பாடு]

சங்கடம்

சங்கடம் caṅgaḍam, பெ. (n.)

   1. வருத்தம்; difficulty, trouble, straitened.

     “ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய” (தேவா. 702, 2);;

   2. ஒடுக்கவழி (யாழ்.அக.);; narrow path.

   3. சங்கடப்படலை பார்க்க (யாழ்.அக.);;see sangada-p-padalai.

     [சாக்கடை → சக்கடை → சங்கடம்]

சங்கடம் → Skt. sankada.

சங்கடாட்சம்

 சங்கடாட்சம் caṅgaṭāṭcam, பெ. (n.)

சங்கடக் கண் பார்க்க (யாழ்.அக.);;see Sangada-k-kan.

     [சங்கடம் + அட்சம்]

 Skt. atcam → த. அட்சம்

சங்கடி

சங்கடி caṅgaḍi, பெ. (n.)

   கேழ்வரகுக்களி (இந்துபாக. 83);; ragi porridge.

   ம. சங்கிலிப்புல்லு (ஒரு வகைக் கேழ்வாகு);;   க. சங்கடி;தெ. சங்கடி

சங்கடை

சங்கடை1 caṅgaḍai, பெ. (n.)

சங்கடம் பார்க்க;see sangadam (செ.அக.);.

     [சாங்கடை → சங்கடை]

 சங்கடை2 caṅgaḍai, பெ. (n.)

   வாழ்நாளின் மூன்று பகுதிகளுள் கடைப்பகுதி (வின்.);; the last of the three stages of a man’s life (செ.அக.);.

     [சாங்கடை → சங்கடை]

 சங்கடை caṅgaḍai, பெ.(n.)

   குழந்தைகளுக்குப் பால் ஊட்டும் கிண்ணம்; a vessel for supplying liquid food to an infant.

     [சங்கு+அடை]

சங்கடைப்பன்

சங்கடைப்பன் caṅgaḍaippaṉ, பெ. (n.)

   மாட்டு நோய் வகை (மாட்டுவா. 67);; a kind of cattle disease.

ம. சங்கடப்பன்

     [சங்கு + அடைப்பன்]

சங்கட்டங்கெளுத்தி

 சங்கட்டங்கெளுத்தி caṅgaṭṭaṅgeḷutti, பெ. (n.)

   கெளுத்தி மீன்வகையுள் ஒன்று; a kind of fish.

     [சங்கட்டம் + கெளுத்தி]

சங்கட்டசதுர்த்தி

சங்கட்டசதுர்த்தி saṅgaṭṭasadurddi, பெ. (n.)

   பிள்ளையாரைக் குறித்து மேற்கொள்ளும் ஒரு நோன்பு; a fast observed in honour of Ganesa.

     “சங்கட்ட சதுர்த்தி முறைமையிற் செய்து” (விநாயகபு. 47, 46);.

     [சங்கட்டம் + சதுர்த்தி]

சங்கட்டம்

சங்கட்டம் caṅgaṭṭam, பெ. (n.)

   1. சங்கடம் பார்க்க;see sangadam.

     “சார்ந்த லதுபெரிய சங்கட்டம்” (அருட்பா, 1, விண்ணப்பக்கலி 348);.

   2. உடல்நலமின்மை (வின்.);; uneasiness, sickness, bodily pain.

   3, இறப்புத் துன்பம் (வின்.);; death thores.

     “அவன் வெகு சங்கட்டமாய்க் கிடக்கிறான்”.

பட. சங்கட (நோய்);

     [சங்கடம் → சங்கட்டம்]

சங்கணித்துறை

சங்கணித்துறை caṅgaṇittuṟai, பெ. (n.)

   ஆழ்வார்திருநகரியில் தண்பொருநை’யின் தென்கரை; the south bank of the river Tāmiraparani at Alvār-tirunagari.

     “பொருநற் சங்கணி துறைவன்” (திவ். திருவாய். 10, 3, 11);,

     [சங்கணி + துறை]

சங்கதம்

சங்கதம்1 caṅgadam, பெ. (n.)

   முல்லைப்பூ; evate-leaved jasmine- Jasminum augustifolium (சா.அக.);.

     [சங்கு → சங்கதம்]

 சங்கதம்2 caṅgadam, பெ. (n.)

   1. பொருத்தம்; appropriateness, consistency.

   2. நட்பு (வின்.);; acquaintance, friendship.

   3. முறையீடு (வின்.);; complaint.

     [சங்கு → சங்கதம்]

சங்கதம் → Skt. Sangata

சங்கதி

சங்கதி caṅgadi, பெ. (n.)

   1. செய்தி; affair, news.

   2. பொருள், உண்மை; matter, fact.

   3. இசை வேறுபாடு; short flourishes introduced in a melody (mus.);.

   4. தொடர்பு; connection, relation.

     ‘கீழ் ஒருபடி சங்கதி சொல்லிக்கொண்டு போந்தோம்’ (ஈடு. 4, 6, பிர);.

     [செய்தி → சங்கதி]

சங்கதி → Skt. sangati

சங்கதூதி

 சங்கதூதி caṅgatūti, பெ. (n.)

   கூட்டிக் கொடுப்பவள் (யாழ்.அக.);; procuress.

     [சங்கம் + தூதி. தூது → தூதி]

சங்கதூதி → Skt. sanga-duti

சங்கதை

 சங்கதை caṅgadai, பெ. (n.)

   செய்தி (இ.வ.);; news (செஅக.);.

     [சங்கதி → சங்கதை]

சங்கதோசம்

 சங்கதோசம் caṅgatōcam, பெ.(n.)

   பெற்றோர் தம் புணர்ச்சிக்குப் பிறகு குழந்தைகளைக் குளியாமற் தொடுவதால் ஏற்பட்ட குற்றம் (தோசம்);; a morbid affection in children due to parents handling them, immediately after sexual intercourse without having a bath.

     [Skt.san-ga+{} → த.சங்கதோசம்.]

சங்கத்தமிழ்

சங்கத்தமிழ் caṅgattamiḻ, பெ. (n.)

   1. கழகக் காலத்து வழங்கிய தமிழ்; classical Tamil of the Sangam period.

     “சங்கத்தமிழ் மாலை முப்பதும்” (திவ். திருப்பா. 30);.

   2, கழகக்காலத்துத் தமிழ்நூல்; Tamil works of the sangam age.

     “சங்கத்தமிழ் மூன்றுந் தா” (நல்வழி. கடவுள் வாழ்);.

     [சங்கம் + தமிழ்]

சங்கத்தார்

சங்கத்தார் caṅgattār, பெ. (n.)

   1. அவையோர்; members of an assembly, academy, a society, councilor committee.

   2. புத்த சமண சங்கத்தார் (சீவக. 4, உரை;சிலப். 30:32, அரும்.);; Buddhist and Jain fraternity of monks.

   3. மதுரைச் சங்கப் புலவர்; the learned body of poets in Madura, in ancient times.

     “சங்கத்தாரெல்லாம்” (திருவிளை. தருமிக்கு. 82);

     [சங்கம் + அத்து + ஆர்]

சங்கத்தாளி

 சங்கத்தாளி caṅgattāḷi, பெ. (n.)

   சாதிபத்திரி; mace or pulp of nutmeg (சா.அக.);.

     [சங்கம் + தாளி]

சங்கத்திராவகம்

 சங்கத்திராவகம் caṅgattirāvagam, பெ. (n.)

சங்கநீர்மம் பார்க்க (மூ.அக.); See sanga-nirmam.

     [சங்கம் + திராவகம்]

சங்கத்துறவு

 சங்கத்துறவு caṅgattuṟavu, பெ. (n.)

   விருப்ப மக்களை இழந்ததினால், அவரிடம் உண்டான பற்றே துன்பக்காரணம் என்ற உணர்ச்சியில் தோன்றும் துறவு; renunciation on the death of relatives and friends, caused by the idea that attachment is the source of grief.

     [சங்கம் + துறவு]

சங்கத்தூதுவளை

 சங்கத்தூதுவளை caṅgattūtuvaḷai, பெ. (n.)

   வெள்ளைப்பூவுடைய ஒருவகைத் துாதுவளை; a kind of three-lobed night shade with white flowers – Solanum trilobatum (சா.அக.);.

     [சங்கம் + தூதுவளை. சங்கு வெண்ணிறமானது ஆகையால் சிங்கைப் போன்ற வெண்ணிறமும் சங்கெனப்பட்டது. ஒ.நோ.: அக்கு = வெள்ளை சங்கு]

இது காயச்சித்தி மூலிகைகளுள் ஒன்று.

சங்கநகை

 சங்கநகை caṅganagai, பெ. (n.)

   நத்தை; snail.

     [சங்கம் + நகை]

சங்கநனம்

 சங்கநனம் caṅganaṉam, பெ. (n.)

   நரம்பு; nerve, vein (சா.அக.);.

சங்கநாதம்

சங்கநாதம் caṅganātam, பெ. (n.)

   1. சங்கவோசை; blowing sound of a conch.

   2. கோயிலிற் சங்கு ஊதுதற்கு ஏற்பட்ட கொடை; inam for blowing conch in a temple (R.T.);.

     [சங்கம் + நாதம்]

சங்கநாபி

சங்கநாபி caṅganāpi, பெ.(n.)

   1. ஒரு கடைச் சரக்கு; a bazaar drug.

   2. வெண்ணாபி; white aconite (சா.அக.);.

சங்கநிதி

சங்கநிதி1 caṅganidi, பெ. (n.)

   குபேரனது ஒன்பான் நிதியுள் ஒன்று; one of the nine treasures of Kubera.

     “சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து” (தேவா. 1230.10);

     [சங்கம் + நிதி]

 சங்கநிதி2 caṅganidi, பெ. (n.)

   வட்டக் கிலுகிலுப்பை (வின்.);; blue flowered crotalaria.

     [சங்கம் + நிதி]

 சங்கநிதி caṅganidi, பெ. (n.)

   சோழர்காலக் கோயில்களில் காணப்படும் புடைப்புச் சிற்பம்; embossing sculpture of a hola period temples.

     [சங்கம்+நிதி]

சங்கநிறக்கரந்தை

 சங்கநிறக்கரந்தை caṅganiṟakkarandai, பெ. (n.)

   வெண்கரந்தை; white-flowered sweet basil – Ocimum basilicum (சா.அக.);.

     [சங்கதிறம் + கரந்தை. சங்குவின் நிறம் வெள்ளை]

சங்கநீர்மம்

 சங்கநீர்மம் caṅganīrmam, பெ. (n.)

   சங்குகளைக் கரைக்கக் கூடிய ஒருவகை நீர்மம்; Solvent for conch or other shells, nitric acid.

     [சங்கம் + நீர்மம். நீர் → நீர்மம்]

சங்கநூல்

 சங்கநூல் caṅganūl, பெ. (n.)

   கழகக் காலத்து நூல்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்; the eight anthologies and ten idyllies of Sangam age.

     [சங்கம் + நூல்]

சங்கனனம்

 சங்கனனம் caṅgaṉaṉam, பெ.(n.)

   நரம்பு (சூடா.);; nerves, tendons, veins.

     [Skt.sam-hanana → த.சங்கனனம்.]

சங்கன்

 சங்கன் caṅgaṉ, பெ. (n.)

   ஒரு சிறிய வௌவால் மீன்; a small sea fish known as bat fish of pink colour- cirrhitichthys aurues (சா.அக.);.

சங்கபதம்

 சங்கபதம் caṅgabadam, பெ.(n.)

   அறநூல்களுளொன்று (வின்.);; a treatise on Hindu law.

     [Skt.{}+pada → த.சங்கபதம்.]

சங்கபாடாணம்

 சங்கபாடாணம் caṅgapāṭāṇam, பெ.(n.)

   பிறவி நஞ்சு வகை (மூ.வ.);; a mineral poison (சா.அக.);.

சங்கபாடானம்

 சங்கபாடானம் caṅgapāṭāṉam, பெ. (n.)

சங்கச் செய்நஞ்சு பார்க்க (மூஅ.); see sanga-c-ceynanju.

     [சங்கம் + பாடாணம்]

சங்கபாணி

 சங்கபாணி caṅgapāṇi, பெ. (n.)

சங்கக் கையன் பார்க்க;see Sanga-k-kaiyan.

     [சங்கம் + பாணி. பண் → பாணி = கை]

சங்கபாலன்

சங்கபாலன் caṅgapālaṉ, பெ. (n.)

   எண்வகை நாகத்தொன்று; a divine Serpent one of asta-ma-nagam.

     “சங்கபால குளிகாதி வாலெயிறு” (கம்பரா. நாகபா. 62);

     [சங்கம் + பாலன்]

சங்கபீடம்

சங்கபீடம் caṅgapīṭam, பெ. (n.)

   1. நாணல்; reed.

   2. நாணற்புல்; coarse grass (சா.அக.);.

     [சங்க + பீடம்]

சங்கபுங்கி

 சங்கபுங்கி caṅgabuṅgi, பெ. (n.)

   கடுரோகிணி வேர் (மலை);; root of christmas rose (செ.அக.);.

     [சங்கம் + புங்கி]

சங்கபுட்பம்

 சங்கபுட்பம் caṅgabuṭbam, பெ. (n.)

சங்கப்பூ பார்க்க (மலை);;see sanga-p-pu.

     [சங்கம் + புட்பம்]

 Skt. puspam → த. புட்பம்

சங்கபுட்பி

சங்கபுட்பி caṅgabuṭbi, பெ. (n.)

சங்கப்பூவை பார்க்க (விநாயகபு. 3, 57);;see Sanga-p-puvai.

     [சங்கம் + புட்பி]

சங்கபோட்டம்

 சங்கபோட்டம் caṅgapōṭṭam, பெ.(n.)

   புணர்ச்சி; sexual intercourse (சா.அக.);.

சங்கப்பலகை

சங்கப்பலகை caṅgappalagai, பெ. (n.)

   தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்க கூடியதாய்ச் சிவபிரானாற் சங்கத்தார்க்கு அருளப்பெற்ற ஒரு தெய்வத்தன்மை வாய்ந்த பலகை; miraculous seat capable of accommodating only deserving scholars, believed to have been granted by sivan at Madurai to the Sangam poets.

     “சங்கப் பலகையாந் தொட்டிலேற்றி” (சீகாளத். பு. பாயி.15);.

     [சங்கம் + பலகை]

சங்கப்பாடல்

 சங்கப்பாடல் caṅgappāṭal, பெ. (n.)

சங்கச் செய்யுள் பார்க்க;see sanga-c-ceyyul.

     [சங்கம் + பாடல்]

சங்கப்புலவர்

 சங்கப்புலவர் caṅgappulavar, பெ. (n.)

   முற்காலத்தே மதுரையிலிருந்த தமிழ்ச் சங்கப் புலவோர்; the poets of the Madurai academy of ancient times (Gloss.);.

     [சங்கம் + புலவர்]

சங்கப்பூ

 சங்கப்பூ caṅgappū, பெ. (n.)

   ஞாழல்; cinnamon.

     [சங்கம் + பூ]

சங்கப்பூவை

 சங்கப்பூவை caṅgappūvai, பெ. (n.)

   வெண் மலருடைய ஒரு வகைக் கொடி; a Creeper with white flowers.

     [சங்கம் + பூவை, சங்கம் = வெண்ணிறம்]

சங்கமங்கலம்

சங்கமங்கலம் caṅgamaṅgalam, பெ. (n.)

   கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இருந்த செங்கம் வட்டாரத்து ஓரூர்; a place name of 7th century A.D. around Cengam area.

     “சிரிகங்கரை சரு சங்கமங்கலத் தெறிந்த ஞான்று” (த.நா.தொ. 1971/100, செங்கம் நடுகற்கள்);.

     [சங்கம் + மங்கலம்]

சங்கமங்கை

 சங்கமங்கை caṅgamaṅgai, பெ. (n.)

   சாக்கிய நாயனார் பிறந்த ஊர்; Cākkiyanāyanār’s native village.

     [சங்கம் + மங்கை. இவ் வூர் தொண்டை மண்டலத்துக் காஞ்சியை யடுத்துள்ளது]

சங்கமடைப்பள்ளி

 சங்கமடைப்பள்ளி caṅgamaḍaippaḷḷi, பெ. (n.)

   அமைச்சர்க்குச் சமையல் செய் மரபினராகிய இனத்தார் (யாழ்ப்.);; a sub-caste of ‘madai-p-palli’ so called from their ancestors having been cooks of ministers (செ.அக.);.

     [சங்கம் + மடைப்பள்ளி]

சங்கமண்டபம்

சங்கமண்டபம் caṅgamaṇṭabam, பெ. (n.)

   சங்கத்தார் வீற்றிருந்த மண்டபம்; hall where sangam poets assembled.

     ‘தெய்வப் பலகையைச் சங்க மண்டபத்திடை நடுவிட்டு’ (திருவாலவா. 15.4);

     [சங்கம் + மண்டபம், மண்டு → மண்டகம் = மக்கள் கூடுமிடம். மண்டகம் → மண்டபம்]

சங்கமன்னர்

சங்கமன்னர் caṅgamaṉṉar, பெ. (n.)

   நட்பினரான வேந்தர்; kings in alliance.

     “சங்க மன்னர்க்குத் தம்படை கூட்டி” (பெருங்மகத. 25, 41);

     [சங்கம் + மன்னர்]

சங்கமம்

சங்கமம் caṅgamam, பெ. (n.)

   1. கூடுகை; meeting, union.

   2. ஓர் ஆறு வேறோர் ஆற்றுடனேனும் கடலுடனேனும் கூடுமிடம்; river-mouth;

 confluence of rivers.

     “குந்தளரைக் கூடற் சங்கமத்து வென்ற” (கலிங். 193);.

   3. சிவனடியார் திருக்கூட்டம்; saiva devotees, as viewed collectively.

   4. கோள்கள் சேருகை (வின்.);; conjunction of celestial bodies (Astron.);

   5. புணர்ச்சி; sexual intercourse.

     [சங்கம் → சங்கமம்]

 சங்கமம் caṅgamam, பெ.(n.)

   1. இயங்கு திணைப் பொருள்; living creatures, as capable of locomotion, opp.to nilai-t-tinai

   2. சங்கமசொத்து (இக்.வ.);; movable property.

     [Skt.jangama → த.சங்கமம்.]

சங்கமராயன்பேட்டை

சங்கமராயன்பேட்டை caṅgamarāyaṉpēṭṭai, பெ. (n.)

   தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த பண்டைய ஊர்; an ancient village in Tanjavoor district.

     “நித்ய வினோத வளநாட்டு மிலட்டுர் பற்று சங்கமராயன் பேட்டை கிராமம்” (தெ. க.தொ-5, க.14-2-5);.

     [சங்கமம் + ராயன் + பேட்டை. அரையன் → ராயன்]

சங்கமருவு-தல்

சங்கமருவு-தல் caṅgamaruvudal,    5 செ.குவி (v.i.)

   பண்டைத் தமிழ்ச் சங்கத்தாரது அனுமதி பெறுதல்; to be approved by the sangam poets, as a literary work of merit.

     ‘சங்கம் மருவிய நூல்’ (செ.அக.);.

     [சங்கம் + மருவு-,]

சங்கமரூபம்

 சங்கமரூபம் caṅgamarūpam, பெ.(n.)

   சிவவுருவம் (சங்.அக.);; a manifested form of {}.

     [Skt.san-gama+{} → த.சங்கமரூபம்.}

சங்கமர்

 சங்கமர் caṅgamar, பெ.(n.)

   ஒருசார் வீரசைவர்; a class of {}, lingayats.

     [Skt.san-gama → த.சங்கமர்.]

சங்கமலிங்கம்

 சங்கமலிங்கம் caṅgamaliṅgam, பெ.(n.)

   சங்கம வகுப்பினன் (வின்.);; person belonging to the Jangama sect.

     [Skt.jangama+linga → த.சங்கமலிங்கம்.]

சங்கமாண்டி

சங்கமாண்டி caṅgamāṇṭi, பெ.(n.)

   1. இலங்கங்கட்டிகளுள் ஒருவகையார் (திருநெல்.);; a sect of lingayats.

   2. இரந்துண்ணும் இனத்தாருள் ஒருவகையார் (இ.வ.);; a sub-sect of {} caste.

     [சங்கமம் + ஆண்டி.]

     [Skt.san-gama → த.சங்கமாம்.]

சங்கமிரு-த்தல்

சங்கமிரு-த்தல் caṅgamiruttal,    3 செ.கு.வி (v.i.)

   மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராய் இருத்தல்; to be a member of the Tamil academy at Madurai.

     ‘அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது’ (இறை. 1, 5);.

     [சங்கம் + இரு-,]

சங்கமுகம்

சங்கமுகம்1 caṅgamugam, பெ. (n.)

   ஆறு கடலுடன் கூடுமிடம் (சிலப். 9:57, உரை);; river-mouth.

     [சங்கம் + முகம். முகம் = முன்னிடம், இடம்]

 சங்கமுகம்2 caṅgamugam, பெ. (n.)

   சங்கின் முகம்; face of a conch.

     “அற்றை நாளால் சங்கமுகம்” (தெ.க.தொ. 14, கல் – 192.20);

     [சங்கம் + முகம் முகம் = முன் பக்கம்]

சங்கமுத்தரை

சங்கமுத்தரை caṅgamuttarai, பெ. (n.)

   வலக் கைப் பெருவிரனுனி சுட்டுவிரலினடியைத் தொடும் முத்திரை (சைவச. பொது 519);; a hand posture in religious worship in which the tip of the right thumb is placed at the root of the right forefinger, as resembling the form of a chank.

 |[சங்கம் + முத்திரை]

சங்கம்2 பார்க்க

சங்கமுழி பறமமுழி சங்கிலிகை

சங்கமுழி பறமமுழி சங்கிலிகை saṅgamuḻibaṟamamuḻisaṅgiligai, பெ. (n.)

   ஏனங்களின் வகை; a kind of copper vessel

     “துக்கையென் சந்தியாதீபம் ஒன்றுக்கும் நிலங்காணி சகசரதாரை சங்கமுழி பறமமுழி சங்கிலிகை உட்பட எடை எண்பது செம்பு அழி” (புது. கல். 563/5);.

     [சங்கமுழி + பறமமுழி + சங்கலிகை]

சங்கமுழுக்கு

சங்கமுழுக்கு caṅgamuḻukku, பெ. (n.)

   1. சங்கத்தினால் இறைவனுக்குச் செய்யும் திருமுழுக்கு; ceremonial bath of an idol with chanks filled with water.

   2. ஒருவரை ஆச்சாரி யனாக்குவதற்கு இறைவன் முன்னிலையில் அவர்க்குச் சங்கினாற் செய்யும் திருமுழுக்கு:

 ceremonial bath of a person in the presence of a deity with water in a chank, ordaining Him to sacred order (saiva.);.

     [சங்கம் + முழுக்கு]

சங்கமூலி

 சங்கமூலி caṅgamūli, பெ. (n.)

   பீநாறிச் சங்கு; smooth volkameria.

     [சங்கம் + மூலி]

சங்கமேந்தி

 சங்கமேந்தி caṅgamēndi, பெ. (n.)

   திருமால் (பிங்.);; Tirumāl (Visņu);, as conch-bearer.

     [சங்கம் + ஏந்தி]

சங்கம்

சங்கம்1 caṅgam, பெ. (n.)

   1. சங்கு; conch-shell, an instrument of sound.

     “அடுதிரைச் சங்க மார்ப்ப” (சீவக 701);.

   2. கைவளை,

 bracelet.

     ‘சங்கங் சுழல்’ (இறை. 39, உரை, 260);

   3. நெற்றி (பிங்.);; fore-head.

   4. குரல்வளை; Adam’s apple.

   5. இலக்கங்கோடி; hundred billions or one hundred thousand crores.

     “நெய்தலுங் குவளையு மாம்பலுஞ் சங்கமும்” (பரிபா. 2, 13);.

   6. 2187 தேர்களும், 2187 யானைகளும், 6561 குதிரைகளும், 10,935 காலாட்களுமுள்ள சேனை வகை (பிங்.);; a large army consisting of 2187 chariots, 2187 elephants, 6561 horses, 10,935 infantry.

   7. சங்கநிதி பார்க்க (மூ.அ.);;see sanganidi.

   8. தாலம்பாடாணம் பார்க்க;see talam-padanam.

   9. சங்கபாடாணம் பார்க்க;see sanga-padanam.

   10. வெண்ணிறம்; white colour.

     [சங்கு → சங்கம், ‘அம்’ பெருமைப் பொருட் பின்னொட்டாதலால் இலக்கண நெறிப்படி, சங்கம் என்பது பெருஞ் சங்கையே குறிக்கும். சங்கு என்னும் இயல்பான வடிவு வடமொழியிலின்மை, அது வடசொல்லன்மையை யுணர்த்தும் (வே.க. 241);

சங்கம் (சங்கு); என்பது ஒவ்வொரு புரிக்கும் (வளைவிற்கும்); ஒரு பெருந்தொகையாக உரையிடல் முறையில் பேரெண்ணிக்கைப் பொருள் ஏற்பட்டது.

 சங்கம்2 caṅgam, பெ. (n.)

   பெருவிரல் நிமிர்ந்திருக்க ஒழிந்த நான்கு விரலும் வளைந்து இருப்பது (சிலப். 3:18);; keeping the thumb straight and the rest four fingers folding, a kind of hand posture.

     [சங்கு → சங்கம்]

கட்டை விரலை உயர்த்தி மற்ற விரல்களை மடக்கிக் காட்டுவது சங்கு வடிவம் போல் அமைவதைக் காணலாம்.

 சங்கம்3 caṅgam, பெ. (n.)

   கணைக்கால் (பிங்);; shank, part of the leg from the ankle to the knee (செ.அக.);.

     [சங்கு → சங்கம்]

சங்கு4 பார்க்க

 சங்கம்4 caṅgam, பெ. (n.)

   கைக்குழி; armpit.

     [சங்கு → சங்கம்]

 சங்கம்5 caṅgam, பெ. (n.)

   சங்கஞ்செடி; mistletoe berry thorn.

மறுவ. இசங்கு

     [சங்கு → சங்கம். சங்கு போன்ற இலைகளை உடையது)

சங்கஞ்செடி பார்க்க

 சங்கம்6 caṅgam, பெ. (n.)

   1. நேர்மையற்றது; crookedness.

   2. முரண்பாடானது (கருநா.);; perversiveness.

     [சங்கு = வளைந்தது. சங்கு → சங்கம்]

 சங்கம்7 caṅgam, பெ. (n.)

   அழகு (யாழ்.அக.);; beauty.

     [சங்கு → சங்கம். சங்கு = வெண்மை, அழகு. இனி, சந்தம் → சங்கம் என்றுமாம்]

 சங்கம்8 caṅgam, பெ. (n.)

   1. கூட்டம்; mustering, gathering.

     ‘சங்கமாகி வெங்கணை வீக்கமொடு’ (பெருங். மகத. 17, 38);

   2. (ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு, அவை; society, assembly, council, senate, academy.

     ‘புலம்பரிச் சங்கம் பொருளொடு முழங்க’ (மணிமே. 7: 114);.

   3. புலவர் (திவா.);; literati, poets.

   4. பாண்டியரால் புரக்கப்பெற்று விளங்கிய தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற முச்சங்கங்கள்; learned assemblies or academies of ancient times patronised by Pandya kings, three in number, viz., talai-c-cangam, idai-c-cangam, kadai-c-cangam. எம்மை பவந்திர்ப்பவர் சங்கமிருந்தது (பெரியபு. மூர்த்திநா. 7);.

   5. சமண புத்தர்களின் சங்கம்; fraternity of monks among Buddhists and Jains.

     [சங்கு = பேரெண். சங்கு → சங்கம் = கூட்டம், அவை,

வடமொழியின் சங்க (sangha); என்னும் சொல்லை. சம்+ஹன் (Sam+han); என்று பிரித்து ஹன் என்பதற்கு அடித்தல், தாக்குதல் போன்ற பொருள்களையும் சம் என்பதற்கு ri என்னும் மூலத்தைக் காட்டிப் போதல், அசைதல், எழுதல் போன்ற பொருள்களையும் காட்டுகிறது மா.வி. அகரமுதலி. இவை இரண்டும் சேர்த்து கூட்டப் பொருள் தராமையைக் கண்டு கொள்க

வளைவு கருத்தடிப்படையில் தோன்றியுள்ள சங்கத்திற்கு உள்வளைதல், வட்டமாதல், வளைவுக்குள் இருக்கும் கூட்டம் என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு]

பழம் பாண்டி நாட்டு முத்தமிழ்க் கழகங்களும் தமக்கு முந்திய தமிழிலக்கியத்தை ஆராய்ந்து வந்ததனால், கற்றோர் பயிலும் இடத்தைக் குறித்த சங்கம் என்னும் சொல் நாளடைவில் கற்றோராக விளங்கிய புலவரையும் குறிக்கத் தலைப்பட்டது.

     “அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப” என்று இறையனாரகப் பொருளுரை முறையே முத்தமிழ்க் கழகங்களையும் பற்றிக் கூறுதல் காண்க.

அம் என்னும் வேர் சம் எனத்திரிந்து அந்து → சந்து, அமர் → சமர், அமை → சமை என்றாங்குப் பற்பல சொற்களைத் தோற்றுவித்துள்ளது. சம் → சம்க → சங்க என்பது வடபுலத்திரிபு என்று மொழி ஞாயிறு பாவாணர் கருதியதனால் சங்கம் என்னும் சொல்லாட்சியைத் தவிர்த்துக் கழகம் என்னும் சொல்லையே வழங்கினார்.

 சங்கம்9 caṅgam, பெ. (n.)

   1. சேர்க்கை (சூடா);; union, junction, contact.

   2. அன்பு; friendship. love, attachment.

     “சங்கந்தருமுத்தி” (திருக்கோ. 85);

   3. புணர்ச்சி; sexual intercourse.

     “சங்கமுண்கிகள்” (திருப்பு. 556);.

   4. சங்கமம் பார்க்க (யாழ். அக.);;see Sangamam.

     [சங்கு → சிங்கம்]

 சங்கம்0 caṅgam, பெ. (n.)

சங்கமம் பார்க்க: see sangaman.

     “தாபர சங்கத்தினுக்கு” (வரத. பாகவத. நாரசிங்க 116);

     [சங்கு → சங்கம்]

சங்கம் வாங்கு-தல்

சங்கம் வாங்கு-தல் caṅgamvāṅgudal,    5 செ.குன்றாவி (v.t.)

   கூட்டிக் கொடுத்தல் (வின்);; to pimp, pander (செ.அக.);

     [சங்கம் + வாங்கு-,]

சங்கம்பட்டை

 சங்கம்பட்டை caṅgambaṭṭai, பெ. (n.)

   சங்கஞ் செடியின் பட்டை; bark of the four-spined monetia (சா.அக.);.

     [சங்கம் + பட்டை]

இப்பட்டை காய்ச்சல், சளி, ஈளை, இருமல், புழுநோய் முதலியவற்றைக் குணப்படுத்தும் தன்மையது.

சங்கம்வாங்கி

 சங்கம்வாங்கி caṅgamvāṅgi, பெ. (n.)

   கூட்டிக் கொடுப்போன் (வின்);; pimp.

     [சங்கம் + வாங்கி. தொடர்பு ஏற்படச் செய்பவன். வாங்கு → வாங்கி]

சங்கயம்

சங்கயம் caṅgayam, பெ.(n.)

   ஐயம்; doubt.

     “சங்கய மெய்தி யநேகாந்திகமாம்” (மணிமே.29, 230);.

     [Skt.{} → த.சங்கயம்.]

சங்கரக்கழிச்சல்

 சங்கரக்கழிச்சல் caṅgarakkaḻiccal, பெ. (n.)

   காய்ச்சல், இருமலுடன் ஏற்படும் செரியாக் கழிச்சல் நோய்வகை; a form of diarrhoea arising from indigestion, and it is marked by rumbling noise in the stomach, fever, excess of phlegm in the chest etc. -sympathetic diarrhoea.

சங்கரசாதி

சங்கரசாதி caṅgaracāti, பெ.(n.)

   கலப்புச் சாதி (சீவக.116, உரை);; mixed castes.

     [Skt.sangara+{} → த.சங்கரசாதி.]

சங்கரநமச்சிவாயர்

சங்கரநமச்சிவாயர் caṅgaranamaccivāyar, பெ.(n.)

   18-ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் நன்னூல் விருத்தியுரை இயற்றியவருமான புலவர்; a commentator on {}, 18th C.

சங்கரநாராயணன்

 சங்கரநாராயணன் caṅgaranārāyaṇaṉ, பெ.(n.)

   அரி அர(ன்); வடிவமான சிவத் திருமேனி; manifestation of God in the combined form orf {} and Visnu.

     [Skt.{}+{} → த.சங்கரநாராயணன்.]

சங்கரன்

சங்கரன்1 caṅgaraṉ, பெ.(n.)

   1. நலஞ் செய்பவன் (சிலப்.10, 186, உரை);; dispenser of happiness.

   2. சிவன்;{}.

   3. பதினோரு (ஏகாதச); உருத்திரருள் ஒருவர் (திவா.);; a Rudra, one of {}-ruttira.

     [Skt.{} → த.சங்கரன்.]

 சங்கரன்2 caṅgaraṉ, பெ.(n.)

   கலப்பினத்துள் பிறந்தவன்; a person born of a mixed caste, hybrid.

     “சதுரவேதஞ் சொலுமிதனைச் செய்திடானேற் சங்கரனாய் விடுவன்” (சிவரக.சிவடுண்டி.46);.

     [Skt.san-kara → த.சங்கரன்.]

சங்கரன்பாடியார்

 சங்கரன்பாடியார் caṅgaraṉpāṭiyār, பெ. (n.)

சக்கரப்பாடியார் பார்க்க;see sakkara-p-padiyar.

     [சக்கரப்பாடியார் → சங்கரன் பாடியார்]

சங்கரன்பெண்டிர்

 சங்கரன்பெண்டிர் caṅgaraṉpeṇṭir, பெ.(n.)

   கவுரிபாடாணம்; a prepared yellow oxide of arsenic (சா.அக.);.

சங்கரப்பாடியார்

சங்கரப்பாடியார் caṅgarappāṭiyār, பெ. (n.)

சக்கரப்பாடியார் பார்க்க;see sakkara-p-padiyar.

     “சங்கரப்பாடியான் கண்டன் மாறனான சோழேந்திர சிங்க மாயிலட்டி” (தெ.க.தொ. 3. கல் 19);

     [சக்கரப்பாடியார் → சங்கரப்பாடியார்]

சங்கரம்

சங்கரம்1 caṅgaram, பெ.(n.)

   இனக்கலப்பு; mixture of castes.

     [Skt.san-kara → த.சங்கரம்.]

 சங்கரம்2 caṅgaram, பெ.(n.)

   1. போர்; war, battle.

   2. நஞ்சு; poison.

     [Skt.san-gara → த.சங்கரம்.]

சங்கரர்

 சங்கரர் caṅgarar, பெ.(n.)

   போர்வீரர் (யாழ்.அக.);; warriors.

     [Skt.{} → த.சங்கரர்.]

சங்கராசனம்

 சங்கராசனம் caṅgarācaṉam, பெ.(n.)

   இரண்டு கால்களையும் மடக்கி, பாதங்களையும் நெருங்கி, முகப்பின் மேல் நிற்கும் ஓர் இருக்கை (ஆசனம்);; a posture in yoga practice in which the man rests on his knees with folded legs while feet remain close together (சா.அக.);.

சங்கராசாரியார்

 சங்கராசாரியார் caṅgarācāriyār, பெ.(n.)

   அத்வைத மதநிறுவனமும் உபநிடத்து பிரமசூத்திரம் பகவத்கீதைகட்கு விரிவுரைகளும் பிற வடநூல்களும் செய்தவருமாகிய பெரியவர்; the celebrated teacher of Advaita philosophy and author of commentaries on Upanisads, {} and Bhagavadgita and many original works in Sanskrit.

     [Skt.{} → த.சங்கராச்சாரியர்.]

சங்கராதனம்

 சங்கராதனம் caṅgarātaṉam, பெ.(n.)

   இருகால்களையும் மடக்கி இருபாதத்தையுங் கூட்டி நேரேயூன்றி இருகான் முகப்பின்மேல் நிற்பது (யாழ்.அக.);; a standing posture with legs bent and feet close together.

     [Skt.san-kara → த.சங்கரன் + ஆதனம் → த.சங்கராதனம்.]

     [P]

சங்கராந்தி

 சங்கராந்தி caṅgarāndi, பெ.(n.)

சங்கிராந்தி பார்க்க;see {}.

     [Skt.{} → த.சங்கராந்தி.]

சங்கராபரணம்

சங்கராபரணம் caṅgarāparaṇam, பெ.(n.)

   பண்வகை (பரத.இராக.55, உரை);; a specific melody type.[Skt.{} → த.சங்கராபரணம்.]

சங்கராமீன்

 சங்கராமீன் caṅgarāmīṉ, பெ. (n.)

   சாவாமீன் என்னும் ஒருவகைக் கடல் மீன்; a sea-fish known as Java fish (சா.அக.);.

சங்கராவாசம்

 சங்கராவாசம் caṅgarāvācam, பெ.(n.)

   கருப்பூர வகை (மூ.அ.);; a kind of camphor.

     [Skt.{} → த.சங்கராவாசம்.]

சங்கரி

சங்கரி1 caṅgari, பெ.(n.)

   மலைமகள் (பிங்.);; Malaimagal.

     [Skt.{} → த.சங்கரி1.]

 சங்கரி2 caṅgarittal,    4 செ.கு.வி.(v.i.)

   அழித்தல்; to destroy, annihilate.

     [Skt.sam-{} → த.சங்கரி-.]

சங்கரிங்கி

 சங்கரிங்கி caṅgariṅgi, பெ. (n.)

   கடுரோகிணி (வின்.);; christmas rose, black hellibore,

     [சங்கு → சங்கரிங்கி]

சங்கரீகரணம்

 சங்கரீகரணம் caṅgarīkaraṇam, பெ.(n.)

   இனக்கலப்பு (வின்.);; mixing of castes.

     [Skt.{} → த.சங்கரீகரணம்.]

சங்கருடணன்

சங்கருடணன் caṅgaruḍaṇaṉ, பெ.(n.)

   திருமாலின் ஐந்து நிலைகளுள் ஒன்று (அஷ்டாதச.தத்துவ.பக்.23);; a manifestation of Visnu, as destroyer, one of four {}.

     [Skt.sankarsana → த.சங்கருடணன்.]

சங்கருடம்

 சங்கருடம் caṅgaruḍam, பெ.(n.)

   எதிரிடை (யாழ்.அக.);; opposition.

     [Skt.sankarsa → த.சங்கருடம்.]

சங்கரேகை

 சங்கரேகை caṅgarēkai, பெ. (n.)

சங்கவரிகை பார்க்க;see Saiga-varigai.

     “சங்கரேசையிது சக்ர்ரேகையிது” (திருவாரூ. குற. MSS); (செ. அக.);.

     [சங்கு → சங்க + ரேகை]

 Skt. rekha → த. ரேகை

சங்கரோகம்

 சங்கரோகம் caṅgarōkam, பெ.(n.)

   வளி (வாத);கோழை (சிலேட்டுமம்);களினால் இரண்டு தாடைகளிலும், சிவந்து, வீங்கிப் பழுத்துடைந்து மூன்று நாளைக்குள் இறப்பையுண்டு பண்ணும் ஒரு நோய்; a phleg matic disease in which the tonsils are inflamed, glands swollen with redness of the parts and the characteristic exudation makes its appearance, resulting in a fatal termination within three dyas, probably Diphtheria (சா.அக.);.

     [Skt.sanka-{} → த.சங்கரோசம்.]

சங்கரோகிணி

 சங்கரோகிணி caṅgarōkiṇi, பெ. (n.)

   கடுரோகிணி; christmas rose, black hellibore (சா.அக.);

     [சங்கு → சங்க + ரோகிணி]

சங்கறு-த்தல்

சங்கறு-த்தல் caṅgaṟuttal,    4 செ. குன்றாவி. (v.t.)

   சங்குகளை அறுத்து வளையல் முதலியன செய்தல்; to cut conch, to make bracelets and other ornaments from conch.

     [சங்கு + அறு-,]

சங்கறுப்போர்

 சங்கறுப்போர் caṅgaṟuppōr, பெ. (n.)

   சங்குகளை அறுத்து வளையல் முதலியன செய்வோர் (பிங்.);; chank-cutters, makers of bracelets and other ornaments from chanks.

மறுவ. வளைபோழ்நர்

     [சங்கு + அறுப்போர்]

சங்கற்பசிராத்தம்

 சங்கற்பசிராத்தம் saṅgaṟpasirāttam, பெ.(n.)

   வேள்வி நெருப்பின்றி இறந்தோர் பொருட்டுச் செய்யுஞ் சடங்கு (சிராத்தம்);;     [Skt.san-{}+{} → த.சங்கற்பசிராத்தம்.]

சங்கற்பஞானம்

சங்கற்பஞானம் caṅgaṟpañāṉam, பெ.(n.)

   அறிவிற்குரிய அறிவு அறிபொருள்கள் (சி.சி.11,2,சிவாக்.);; relative knowledge.

     “ஞானம்” (சி.சி.11,2,சிவாக்.);.

     [Skt.kankalpa + Pkt.{}

சங்கற்பநிராகரணம்

சங்கற்பநிராகரணம் caṅgaṟpanirākaraṇam, பெ.(n.)

   மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றானதும் உமாபதி சிவாசாரியரால் இயற்றப் பெற்றதுமான நூல்; a text book on {} Philosophy by {}, being a statement and refutation of the doctrines of some of the {} sects related to the same {}, one of 14 {}.

     [Skt.sankalpa+nir-{} → த.சங்கற்ப நிராகரணம்.]

சங்கற்பனை

 சங்கற்பனை caṅgaṟpaṉai, பெ.(n.)

சங்கற்பம் பார்க்க;see {}.

     [Skt.{} → த.சங்கற்பனை.]

சங்கற்பனைஞானம்

சங்கற்பனைஞானம் caṅgaṟpaṉaiñāṉam, பெ.(n.)

சங்கற்பஞானம் பார்கக;see {}.

     “ஞாதிரு ஞானஞேயந் தங்கிய ஞானஞ் சங்கற்பனை ஞானமாகும்” (சி.சி.11, 2);.

     [Skt.{}+{}<{} → த. சங்கற்பனைஞானம்.]

சங்கற்பமாசம்

சங்கற்பமாசம் caṅgaṟpamācam, பெ.(n.)

   1. சாந்திரமான மாதம்; lunar month.

   2. இரண்டு காருவா (அமாவாசைகளை);க் கொண்ட மாதம் (விதான.குணாகுண.81, உரை);; a solar month in which two new moon days occur.

த.வ. இரு காருவா மாதம்.

     [சங்கற்பம் + மாசம்.]

மாதம் → மாசம்.

சங்கற்பம்

சங்கற்பம் caṅgaṟpam, பெ.(n.)

   1. உறுதியுளளம் (மனோநிச்சயம்);; mental resolve, solemn row, determination.

   2. சடங்குத் தொடக்கத்தில் அச்சடங்கினைச் செய்வதாகக் கூறும் உறுதிக் கட்டுரை; a declaration of intention made at the commencement of any ritual.

   3. ஒருவன் தன்பட்டறிவால்பொருளின் குணங்களினின்று இன்னபொருளென்று துணியும் துணிவு (சி.போ.பா.2, 2, 171);; determination of an object from a consideration of its properties.

   4. கருத்து; purpose, intention, design, motive.

     “மறைநூற் சங்கற்பவிதிப்படி” (திருவிளை.மலயத்துவச.18);.

   5. கொள்கை; doctrine.

     “அழகிது நீங்கள் சங்கற்பம் நிராகரித்தமை” (சங்கற்ப.பாயி.);.

   6. மனப்பாங்கு (சித்தவிருத்தி);; volition, mental activity.

     “அடத்தக்கது மனச்சங்கற்பம்” (திருக்கருவை.கலித்.33);.

த.வ.மனவுறுதி, கடைப்பிடி.

     [Skt.san-kalpa → த.சங்கற்பம்.]

சங்கற்பி-த்தல்

சங்கற்பி-த்தல் caṅgaṟpittal,    4 செ.கு.வி.(v.i.)

   உறுதி செய்து கொள்ளுதல்; to determine, resolve.

     “துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து” (திவ்.நாய்ச்.1, 4);.

த.வ. உறுதியேற்றல்.

     [Skt.san-kalpa → த.சங்கற்பி-.]

சங்கற்பிதம்

சங்கற்பிதம் caṅgaṟpidam, பெ.(n.)

   முன்னே உறுதி செய்யப்பட்டது (சி.சி.2, 59, ஞானம்);; that which was will or pre – determined.

த.வ. உறுதிப்பாடு.

     [Skt.san-kalpita → த.சங்கற்பிதம்.]

சங்கலனம்

சங்கலனம்1 caṅgalaṉam, பெ.(n.)

   1. கலப்பு; blending, inter mixture.

   2. சங்கலிதம்2, பார்க்க;see {}.

     [Skt.sankalana → த.சங்கலனம்.]

 சங்கலனம்2 caṅgalaṉam, பெ.(n.)

   தொகுக்கை; collecting.

     “நீர்வேலிச் சங்கரபண்டித ரவர்களாற் சங்கலனஞ் செய்யப்பட்டு… பதிப்பிக்கப்பட்டது” (தாதுமாலை, முகப்புப் பக்கம்);.

     [Skt.sankalana → த.சங்கலனம்.]

சங்கலம்

சங்கலம்1 caṅgalam, பெ.(n.)

சங்கலனம் பார்க்க (சங்.அக.);;see {}.

 சங்கலம்2 caṅgalam, பெ.(n.)

   ஊன் (யாழ்.அக.);; flesh, meat.

{Skt.jangala → த.சங்கலம்]

சங்கலார்

சங்கலார் caṅgalār, பெ.(n.)

   பகைவர்; enemies, foes.

     “சங்கலாரிடை வளைத்த சக்கரத்தை” (பாரத.பதின்மூ.142);.

     [Skt.sanga → த.சங்கலார்.]

சங்கலிகரணம்

சங்கலிகரணம் caṅgaligaraṇam, பெ. (n.)

   1. பிறவிக்குல (சாதிக் கலப்பினையுண்டாக்குதலாகிய கரிசு (பாவம்);; Sin of causing admixture of Castes.

     ‘காழகந்தரு சங்கலிகரணமும்’ (திருச்செந். பு. செயந்திபுர.12);.

   2. முறையிலாப் புணர்ச்சி (வின்.);; bestiality, sodomy.

   3. உயிர்க் கொலையாகிய கரிசு; sin of killing animals.

     [சங்கலி + கரணம்]

சங்கலிகிதம்

சங்கலிகிதம் caṅgaligidam, பெ.(n.)

   சங்கர் லிகிதர் என்ற முனிவரிருவரால் இயற்றப்பெற்றதும், அறநூல் பதினெட்டனுள் ஒன்றுமாகிய நூல்; a Sanskrit text book on Hindu law described two stages, {} and likhita, one of 18 taruma-{}.

     [Skt.{}-likhita → த.சங்கிலிகிதம்.]

சங்கலிக்கண்

சங்கலிக்கண் caṅgalikkaṇ, பெ. (n.)

   கழுத்து அணிகலன்களில் கோர்க்கப்படும் பதக்கக் கல்; a kind of locket stone.

     “சங்கிலிக்கண் 15 செப்பு உள்பட” (தெ.க.தொ. 24-கல் 598-8);.

     [சங்கிலி → சங்கலி + கண். கல் → கள் → கண்]

சங்கலிதம்

சங்கலிதம் caṅgalidam, பெ.(n.)

   1. கலப்பு (பிங்.);; blending, intermixture.

   2. எட்டு (அட்ட); கணிதங்களுள் ஒன்றான எண் கூட்டல் (பிங்.);;   3. குறித்த கணிதமுறை யொன்றன்படித் தொடர்ந்து செல்லும் எண்களின் தொடர் அல்லது அவற்றின் கூட்டல்;     [Skt.san-kalita → த.சங்கலிதம்.]

சங்கலேகை

சங்கலேகை caṅgalēkai, பெ. (n.)

சங்கவரிகை பார்க்க;see Sanga-Varigai.

     “சங்கலேகையும் சக்கிரலேகையும்” (சூளா. குமார. 45);.

     [சக்கரேகை → சங்கலேகை (கொ.வ.);]

சங்கல்வகோட்டம்

 சங்கல்வகோட்டம் caṅgalvaāṭṭam, பெ.(n.)

   பேரொலி ஆரவாரம்; Arabian costus – Costus speciosus (சா.அக.);.

சங்களை

 சங்களை caṅgaḷai, பெ. (n.)

   மணற்கேணியிற் சுற்றுக்கட்டாக அமைக்கப்படும் பலகை (யாழ்);; beams or timbers for shoring up a well (செ.அக.);.

     [சங்கு + அளை]

சங்களைக்கிணறு

 சங்களைக்கிணறு caṅgaḷaikkiṇaṟu, பெ. (n.)

   பலகைக்கட்டுக் கிணறு (யாழ்ப்.);; well in loose soil walled with timber beams or logs of wood (செ.அக.);.

     [சங்களை + கிணறு]

சங்கவரிகை

 சங்கவரிகை caṅgavarigai, பெ. (n.)

   கையில் சங்கு போல் அமைந்த கோடுகள்; the palm line like conch.

     [சங்கு + வரிகை]

கையில் சங்கவரிகை இருப்பவனை மேன்மையனாகவும் அவனைத் தெய்வப் பிறப்பினன் என்றும் கருதியதைத் தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. அதிலும் வலம்புரிச் சங்கின் வரிகை இருப்பது தெய்வத்திற்கு நிகரானது எனக் கொள்ளப் பட்டது. சங்குவரிகையுள்ளோர் அரசு, செல்வம் ஆகியவற்றோடு இன்பமாக வாழ்வர் என்னும் நம்பிக்கை இருந்தது. வலம்புரிச் சங்கு வரிகை உடையவர்கள் கொடுக்கும் நீர் தெய்வத்தன்மையுடையது என்றும் அவ்வாறானோரிடமிருந்து பெற்ற நீரை அருந்துவது பெரும்பேறு என்றும் கருதப் பட்டது. திருமாலும் சீவகனும் வலம்புரிச் சங்குவரிகையுடையவர்கள் என்று இலக்கியங்கள் கூறுவது இதன்பால் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையைத் தெரிவிக்கிறதென்க.

சங்கவருணர்

சங்கவருணர் caṅgavaruṇar, பெ. (n.)

   புறநானூறு 360ஆவது பாடலின் ஆசிரியரான கடைக்கழகப் புலவர்; a sangam poet, author of puranānūru 360.

மறுவ. நாகரியர்

     [சங்கம் + வருணர்]

பெருங்காஞ்சித்துறை பாடுவதில் வல்லவர். இவர் பாடல் யாக்கை நிலையாமையைக் கூறும். இவர் தந்துமாறனைப் புறநானூறு 360இல் பாடியுள்ளார்.

சங்கவளை

சங்கவளை caṅgavaḷai, பெ. (n.)

   சங்கினால் செய்த வெள்வளை (பு.வெ. 12 இருபாற் 9, கொளு, உரை);; white bangles or bracelets made of conch-shell.

     [சங்கு → சங்கம் + வளை]

சங்கவாதவத்திரோகம்

 சங்கவாதவத்திரோகம் caṅgavātavattirōkam, பெ.(n.)

   வளி (வாயு);யானது கீழ் வயிற்று முகத்தை அடைத்து நீரை உள்ளில் சேர்த்துக் கட்டுப்படுத்துவதாலேற்படும் நோய்; suppression of urine due to vayu prevailing upon the downmost portion of the abdomen i.e., about the genital region, and obstructing the urethra (சா.அக.);.

த.வ. அடிவயிற்று கழலை.

சங்கவிடம்

சங்கவிடம் caṅgaviḍam, பெ.(n.)

   1. வெள்ளை நஞ்சு; white arsenic.

   2. பாம்பு இன நஞ்சு; animal poisons (சா.அக.);.

சங்கவைராக்கியம்

 சங்கவைராக்கியம் caṅgavairākkiyam, பெ. (n.)

சங்கத்துறவு பார்க்க;see sanga-t-turavu (செ.அக.);.

     [சங்கம் + வைராக்கியம்]

 Skt. vairāgya → த. வைராக்கியம்

சங்காசம்

 சங்காசம் caṅgācam, பெ.(n.)

   ஒப்புமை (வின்.);; likeness, similarity, resemblance.

     [Skt.{} → த.சங்காசம்.]

சங்காடகம்

சங்காடகம் caṅgāṭagam, பெ.(n.)

   கொக்கோகத்திற் சொல்லியுள்ள 64 கலைகளில் ஒன்று; one of the 64 postures in the embrace of or sexual intercourse with women, described in the Erotic science of the sage named Kokkogamuni (சா.அக.);.

     [Skt.{} → த.சங்காடகம்.]

சங்காடம்

 சங்காடம் caṅgāṭam, பெ. (n.)

   சங்குவடம், ஒரு வகைப் படகு (நாஞ்.);; a kind of boat (செ.அக.);.

   ம. சங்ஙாடம்;   து. சங்கால; Skt., Pali. sanghāda;

 Port. Jangada

     [சங்குவடம் → சங்கரடம்]

சங்காடு-தல்

சங்காடு-தல் caṅgāṭudal,    5. செ.கு.வி. (v.i.)

   சங்கினாற் புடைவை முதலியவற்றை மினுங்கச் செய்தல் (வின்.); ; to polish with a chank, as cloth, paper.

     [சங்கு + ஆடு-,]

சங்காட்டம்

சங்காட்டம் caṅgāṭṭam, பெ. (n.)

சேர்க்கை union, intercours.

     ‘சங்காட்டந்தவிர்த்து’ (தேவா. 655,1);.

     [சங்கம் + சங்காட்டம்]

சங்காதமணல்

 சங்காதமணல் caṅgātamaṇal, பெ. (n.)

   கருமணல்; black sand.

     [சங்கு + ஆ + மணல். சங்கு = வெள்ளை, ஆ – எதிர்மறை இடைநிலை, சக்கு + ஆ = சங்கா = வெள்ளைக்கு எதிரானது, கருப்பு]

சங்காதமரணம்

 சங்காதமரணம் caṅgātamaraṇam, பெ. (n.)

சங்காதவிறப்பு;see Sangāda-V-irappu.

     [சங்காத + மரணம்]

சங்காதம்

சங்காதம்1 caṅgātam, பெ. (n.)

   1. கூட்டம் (சி.சி. 1, 14, சிவாக்.);.

   2. அழிவு (வின்.);; destruction or dissolution of the world.

   3. ஒரு நிரயம் (நரகம்); (வின்.);; a hell.

   4. பாதங்களைக் கூட்டி ஐந்தடி யெடுத்து வைக்கும் நடிப்புவகை (வின்.);; taking five steps forward in succession, with the feet close together.

     [சங்கம் → சங்காதம்]

 சங்காதம்2 caṅgātam, பெ. (n.)

   கூடவருவது; a thing that always goes along with another thing concomitant.

     “வங்காரமு …. மடந்தையரும் சங்காதமோ” (கந்தரலங். 59);

     [சங்கம் → சங்காதம்]

சங்காதவிறப்பு

 சங்காதவிறப்பு caṅgātaviṟappu, பெ. (n.)

   எதிர்பாராத நிகழ்ச்சியால் மக்கள் பலர் ஒரு சேர மடிகை; disastrous and unexpected death of a number of persons at a time (செ.அக.);.

     [சங்கு + ஆ + இறப்பு. தங்கு → சங்கு. சங்குதல் = தங்குதல், நின்றுவிடுதல். ‘ஆ’ – எதிர்மறை இடைநிலை. சங்கு + ஆ + (த); – சங்காத → தங்காத எதிர்பார்க்காத]

சங்காதோசம்

 சங்காதோசம் caṅgātōcam, பெ.(n.)

   பேய்க்கோளாறு; demoniac possession.

     [Skt.{}+{} → த.சங்காதோசம்.]

சங்காத்தம்

சங்காத்தம் caṅgāttam, பெ. (n.)

   1. இணக்கம்; friendship, intimacy, familiar intercourse.

     “பூனைக்கும் வீட்டெலிக்குஞ் சங்காத்தமுண்டோ” (தனிப்பா. ii, 13, 28);.

   2. இருப்பிடம்; residence.

     “துறையூரெனுத் தலத்திற் சங்காத்தங் கொண்டிருப்பாய்” (தமிழ்நா. 62);.

ம. சங்ஙாத்தம், செங்ஙாத்தம், சங்ஙாய்த்தம்

     [சங்கம் → சங்காத்தம்]

சங்காத்தி

சங்காத்தி caṅgātti, பெ.(n.)

   தோழன்; friend, intimate acquaintance, companion.

     “அளகைக்கோன்றன் சங்காத்தி” (தேவா.886, 5);.

     [Skt.{} → த.சங்காத்தி.]

சங்கான்பெண்டிர்

 சங்கான்பெண்டிர் caṅgāṉpeṇṭir, பெ.(n.)

   கவுரி பாடாணம்; a prepared yellow oxide of arsenic (சா.அக.);.

சங்காபிடேகம்

 சங்காபிடேகம் caṅgāpiṭēkam, பெ. (n.)

சங்கமுழுக்கு பார்க்க: See sanga-mulukku.

     ‘சிதம்பரம் சபாநாயகம் உண்ணாழிகையில் சங்காபிடேகஞ் செய்வித்தார்கள்’ (உ.வ.);.

     [சங்க(ம்); + அபிடேகம்]

 Skt. abhisēka → த. அபிடேகம்

சங்காயம்

சங்காயம் caṅgāyam, பெ. (n.)

   1. கரும்புத் தோகைச் சருகு (இ.வ.);; dried leaves of sugarcane.

   2. வயலிற் களையோடு முளைக்கும் ஆனைப்புல்; weeds growing in paddy fields, typha elephantina.

     “மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர்” (ஈடு, 4, 2 ப்ர);.

   3. உழுந்து, துவரை முதலியவற்றின் முற்றாத அல்லது பதரான மணி (தஞ்சை.);; thin immature grain or chaff of black-gram, etc., (செ.அக.);.

ம. சங்காயம் (வயவில் வளரும் ஒரு வகைப் புல்);

     [சருகு + அயம் → சருகயம் → சங்காயம் அயம் = அலரி, களை]

சங்காரகர்த்தா

 சங்காரகர்த்தா caṅgāragarttā, பெ.(n.)

{}, as the destroyer of the worlds.

     [Skt.sam-{}+{} → த.சங்கார கர்த்தா.]

த.கரு → கருத்தன் → Skt.karta.

சங்காரன்

சங்காரன் caṅgāraṉ, பெ.(n.)

   அறிப்பவன்; destroyer.

     “அந்தகாசுர சங்காரனை” (சிவரக.கத்தரிப்.15);.

     [Skt.sam-{} → த.சங்காரன்.]

சங்காரமுத்திரை

சங்காரமுத்திரை caṅgāramuttirai, பெ. (n.)

   கட்டைவிரல் நிற்க மற்றை நான்கு விரல்களையும் வளைத்துச் செய்யும் சிவபூசைக்குரிய முத்திரைவகை (செந். x.424);; a hand-pose in which the thumb is kept erect and the other fingers are folded inward, assumed in the worship of sivan (செ.அக.);.

     [சங்கு → சங்காரம் + முத்திரை]

சங்குக்கை பார்க்க

சங்காரமூர்த்தி

சங்காரமூர்த்தி caṅgāramūrtti, பெ.(n.)

   அறித்தற் தொழிலைப் புரியும் சிவன்;{}, the God of destruction.

     “சங்காரமூர்த்தி ஆறுமாக” (சி.சி.1, 47, மறை.);.

     [Skt.{}-{}+{} → த.சங்காரமூர்த்தி.]

சங்காரம்

சங்காரம்1 caṅgāram, பெ.(n.)

   1. அழிக்கை (சூடா.);; destruction, annihilation, dissolution in general.

   2. மூலகாரணத்தில் அனைத்தும் ஒடுங்கும் உலகவழிவு (சி.சி.1, 33, ஞானப்.);; periodical destruction of the universe reducing it to the primitve {}, one of {}-kiruttiyam, q.v.

   3. அடக்குகை (வின்.);; suppression, restraining.

     [Skt.{} → த.சங்காரம்1.]

 சங்காரம்2 caṅgāram, பெ.(n.)

சங்காரித்தம் (சூடா.); பார்க்க;see {}.

     [Skt.{} → த.சங்காரம்.]

சங்காராதனம்

சங்காராதனம் caṅgārātaṉam, பெ.(n.)

   ஓகவிருக்கை (யோகாசன); வகை (தத்துவப்.108, உரை);;     [சங்காரா(ம்); + ஆதனம்.]

     [Skt.sam-{} → த.சங்காராம்.]

சங்காரி

 சங்காரி caṅgāri, பெ.(n.)

   குதிரைவாலி (மலை.);; horse-tail millet.

     [Skt.sam-{} → த.சங்காரி.]

சங்காரித்தம்

 சங்காரித்தம் caṅgārittam, பெ.(n.)

   ஏழு மேகங்களுள் பூவைப் பொழியும் மேகம்(பிங்.);; celestial cloud which rains flowers, one of catta-{}, q.v.

     [Skt.sam-hrta → த.சங்காரித்தம்.]

சங்காலி

 சங்காலி caṅgāli, பெ. (n.)

   மாசி பத்திரி; santonin – cood. Artimesia Indica (சா.அக.);.

சங்கால்பச்சை

 சங்கால்பச்சை caṅgālpaccai, பெ. (n.)

   செம்புக் களிம்பு; sub-acetate of copper, verdigris (சா.அக.);.

     [செங்கால் பச்சை → சங்கால் பச்சை]

சங்காளர்

சங்காளர் caṅgāḷar, பெ. (n.)

   கலவியையே நாடுபவர்; lustful presons, as prostitutes.

     “சங்காளர் சூது கொலைகாரர்” (திருப்பு. 748);.

     [சங்க(ம்); + ஆளர். ஆளர் → உடைமை குறித்த பன்மை யீறு.]

சங்காவர்த்தம்

 சங்காவர்த்தம் caṅgāvarttam, பெ.(n.)

   சங்கினுட் பக்கத்துச் சுழியைப் போன்ற முறிவு; an ulcer resembling the inner spiral of a conch, an ulcer of a spiral form (சா.அக.);.

சங்காவியத்துக்குப்பார்-த்தல்

சங்காவியத்துக்குப்பார்-த்தல் caṅgāviyattukkuppārttal,    4 செ.கு.வி.(v.i.)

   பேதலிப்பு நீங்க மந்திரித்தல் (யாழ்ப்.);; to attempt by magic to relieve one who is panicstricken.

     [Skt.{}+bhaya → த.சங்காரியம் + பார்-.]

சங்காவியம்

 சங்காவியம் caṅgāviyam, பெ.(n.)

   அச்சத்தால் நிகழும், தன்வயப்படா (அவச); நிலை (யாழ்ப்.);; state of panic.

த.வ. பேதலிப்பு.

     [Skt.{}+bhaya → த.சங்காவியம்.]

சங்கி

சங்கி2 caṅgi, பெ. (n.)

   தொடர்புடையது; that which is related, connected.

     “விஷய சங்கியாயிருக்கும் ஆணவ தர்மம்” (சி.சி. 2, 56, சிவாக்.);.

     [சங்கம் → சங்கி]

 சங்கி3 caṅgi, பெ. (n.)

   1. சிறுபூனைக்காலி:

 whitish passion flower – Passiflora foetida.

   2. சங்கஞ் செடி; four-spined monetia (சா.அக.);.

     [சங்கம் → சங்கி]

சங்கி-த்தல்

சங்கி-த்தல்1 caṅgittal,    11 செ.குன்றாவி (v.t.)

   பெருமைப்படுத்துதல்; to honour, respect, regard.

     “சவையில் வந்திங்குளோரைச் சங்கியாதகன்ற தூதை” (பிரபோது 25, 37);.

     [சங்கம் → சங்கி.-,]

சங்கிக்கடுக்காய்

 சங்கிக்கடுக்காய் caṅgikkaḍukkāy, பெ. (n.)

   உனானி மருந்தில் வழங்கும் கடுக்காய்; a species of gall-nut used in unani medicine (சா.அக.);.

     [சங்கி + கடுக்காய்]

சங்கிசீயம்

 சங்கிசீயம் caṅgicīyam, பெ. (n.)

   உகாமரம்; tooth-brush tree – Salvadora persica (சா.அக.);.

சங்கிதன்

 சங்கிதன் caṅgidaṉ, பெ.(n.)

   தீரமில்லாதவன்; a timid person (சா.அக.);.

சங்கிதம்

சங்கிதம் caṅgidam, பெ.(n.)

   ஐயப்பட்டது (சி.சி.6, 5, சிவாக்.);; that which is questioned or doubted.

     [Skt.{} → த.சங்கிதம்.]

சங்கிதாதுரம்

 சங்கிதாதுரம் caṅgitāturam, பெ. (n.)

   கிச்சிலிக் கிழங்கு; orange root – Hedysarum spicatum alias kompferia galanga (சா.அக.);.

சங்கிதாமந்தரம்

சங்கிதாமந்தரம் caṅgitāmandaram, பெ.(n.)

   மந்திரவகை (தத்துவப்.70, உரை);;     [சங்கிதா + மந்திரம்.]

     [Skt.{} → த.சங்கிதா.]

சங்கிதை

சங்கிதை caṅgidai, பெ.(n.)

   1. செய்தித் தொகுதி; தொகுப்பியம்

 collection, extensive compilation, any systematically arranged collection of texts or verses.

     “வாயு சங்கிதை”.

   2. திருமறையை (வேதத்தை);ப் பதப்பிரிப்பின்றித் தொடர்ச்சியாக ஓதும் பாடம்; a continuous hymnal text of the {}, formed out of the padas or individual words by proper phonets changes.

   3. மறையின் (வேதத்தின்); ஒரு பகுதி; the collectionof mantras in Rig-{}, etc.

     “ஒட்டரிய சங்கிதைகளும்” (கலிங்.170);.

   4. வரலாறு (இலக்.அக.);; history.

     [Skt.sam-{} → த.சங்கிதை.]

சங்கினி

சங்கினி caṅgiṉi, பெ.(n.)

   1. காமநூல்கள் கூறும் நால்வகைப் பெண்களில், மூன்றாம் வகையினள் (கொக்கோ.1, 11-14);;     (Erot.); the thrid of the four classes into which women are classified in {}.

   2. பத்து வகை நாடிய ளொன்று (சிலப்.3, 23, உரை);; a principal tubular vessel of the human body, one of {}, q.v.

   2. சங்கங்குப்பி (மலை);; smooth volkameria.

     [Skt.{} → த.சங்கினி.]

சங்கின்குடியோன்

 சங்கின்குடியோன் caṅgiṉkuḍiyōṉ, பெ. (n.)

   பொன்வண்டு (நாகரவண்டு); (யாழ்.அக.);; a gold-coloured beetle.

     [சங்கின் + குடியோன்]

 சங்கின்குடியோன் caṅgiṉkuḍiyōṉ, பெ.(n.)

நாகரண்டு (யாழ்.அக.);.

 a gold-coloured beetle.

சங்கின்னராகம்

 சங்கின்னராகம் caṅgiṉṉarākam, பெ.(n.)

 melody-type.

     [Skt.{}-{} → த.சங்கின்னராகம்.]

சங்கின்பிள்ளை

 சங்கின்பிள்ளை caṅgiṉpiḷḷai, பெ. (n.)

   முத்து; pearl born of, or produced from oyster (சா.அக.);.

     [சக்கின் + பிள்ளை]

சங்கிப்பருதி

 சங்கிப்பருதி caṅgipparudi, பெ. (n.)

   கடுகு ரோகிணி; christmas rose – Helleborus niger (சா.அக.);.

     [சங்கி + பருகி]

சங்கிப்பீடம்

 சங்கிப்பீடம் caṅgippīṭam, பெ. (n.)

   நாணற் கொடி; reed- Saccharum spontaneum (சா.அக.);.

     [சங்கி + பீடம்]

சங்கியை

சங்கியை caṅgiyai, பெ.(n.)

   1. எண் (சங்.அக.);; number.

   2. எண்ணிக்கை; calculation, reckoning.

   3. மதி (புத்தி); (இலக்.அக.);; intellect.

     [Skt.san-{} → த.சங்கியை.]

சங்கிரகக்கிராணி

 சங்கிரகக்கிராணி caṅgiragaggirāṇi, பெ.(n.)

   வயிறு பொருமி, சோறு செரியாது, எருவாய் (அபானம்); சூடாகி, வாந்தி, மயக்கங் கண்டு, கண்ணிரண்டும் சுழலும் ஒரு வகைக் கழிச்சல்; a form of diarrhoea characterised by the following symptoms viz. rumbling noise, in the stomach, indigestion, purging, burning pain at the anus, fever, vomitting, giddiness, whirling of the eyes etc.-Lienteric diarrhoea (சா.அக.);.

     [Skt.san-graha+grahani → த.சங்கிரகக் கிராணி]

சங்கிரகக்கூர்மை

 சங்கிரகக்கூர்மை caṅgiragagārmai, பெ. (n.)

   கடலுப்பு (வின்.);; sea-salt.

     [சங்கிரகம் + கூர்மை]

 சங்கிரகக்கூர்மை caṅgiragagārmai, பெ.(n.)

   கடலுப்பு (வின்.);; sea-salt.

சங்கிரகம்

 சங்கிரகம் caṅgiragam, பெ.(n.)

   சுருக்கம்; compendium, abridgement, epitome.

     “தர்க்கசங்கிரகம்”.

த.வ.சங்கிரகம்.

     [Skt.san-graha → த.சங்கிரகரணம்.]

சங்கிரகி-த்தல்

சங்கிரகி-த்தல் caṅgiragittal,    4 செ.கு.வி. (v.i.)

   சுருக்குதல்; to abridge, summarise.

     “இம்மூன்று விருத்தத்தினானும் சங்கிரகித்துச் சொன்ன” (சி.சி.1, 14, சிவாக்.);.

     [Skt.san-graha → த.சங்கிரகி-.]

சங்கிரண்டூதுவார்

சங்கிரண்டூதுவார் caṅgiraṇṭūtuvār, பெ. (n.)

   கோயிலில் பூசை செய்பவர், மந்திரம் ஒதுபவர்; temple priest.

     “மஞ்சள் நீராட்டவான் நிலத்தொடும் மேற்கடைய நிலன் மூன்றுமா சங்கிரன்டூதுவார் இருவரி(ா);டிகள் மார்க்கு” (தெ க.தொ-2, கல்-2,25);.

     [சங்கு + இரண்டு + ஊதுவார். இரட்டைச் சங்கை ஊதிப் பூசைசெய்பவர்]

சங்கிரந்தனன்

 சங்கிரந்தனன் caṅgirandaṉaṉ, பெ.(n.)

   இந்திரன் (பிங்.);; Indiran.

     [Skt.san-krandana → த.சங்கிரந்தனன்.]

சங்கிரமசாதி

 சங்கிரமசாதி caṅgiramacāti, பெ.(n.)

சங்கரசாதி பார்க்க (யாழ்.அக.);;see {}.

சங்கிரமணம்

சங்கிரமணம் caṅgiramaṇam, பெ.(n.)

   1. ஒரு கோள் ஓர் ஓரை (இராசி);யிலிருந்து அடுத்த ஓரை (இராசி);க்குச் செல்லுகை;   2. கதிரவன் ஓர் ஓரை (இராசி);யிலிருந்து அடுத்த ஓரை (இராசி);க்குச் செல்லுகை;   3. கதிரவன் (சூரியன்); ஓர் ஓரை (இராசி);யிற் புகும் காலம்;த.வ. ஓரைச்செலவு.

     [Skt. san-kramana → த.சங்கிரமணம்.]

சங்கிரமதுரவம்

 சங்கிரமதுரவம் caṅgiramaduravam, பெ.(n.)

   புதுவருடம் பிறக்கும் நாட்பொழுது (வின்.);;த.வ. புத்தாண்டு நேரடி.

சங்கிரமம்

சங்கிரமம் caṅgiramam, பெ.(n.)

   1. சங்கிரமணம், 1,2 பார்க்க;see sangiramanam.

     “சீர்தரு சங்கிரமத்தினும்” (விதான.தெய்வவழி.1);.

   2. சென்று பற்றுகை; meeting, approaching, entering into relationship.

     “சித்துக்கன்றிச் சடத்துச்குச் சங்கிரமங் கூடாது” (சி.சி.8, 28, சிவஞா.);.

     [Skt.san-krama → த.சங்கிரமம்.]

சங்கிரமி-த்தல்

சங்கிரமி-த்தல் caṅgiramittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. ஒரை (இராசி); மாறுதல் (விதான.குணாகுண.81);;   2. நோய் பரவுதல்; to spread, as a contagious disease.

   3. சேர்தல்; to meet, encounter, enter.

     “முதல்வன் திருவருள், ஆன்மாவின் மாட்டுஞ் சங்கிரமித்துச் சென்று” (சி.போ.பா.7, 2, பக்.155);.

த.வ. கலத்தல்.

     [Skt.sankram → த.சங்கிரமி-.]

சங்கிரம்

 சங்கிரம் caṅgiram, பெ.(n.)

   காடு (பிங்.);; jungle, forest.

     [Skt.Perh.{} → த.சங்கிரம்.]

சங்கிராகி

 சங்கிராகி caṅgirāki, பெ. (n.)

   ஓமை அதாவது மாமரம்; mango tree-Mangifera indica (சா.அக.);.

சங்கிராகியம்சம்

 சங்கிராகியம்சம் caṅgirākiyamcam, பெ. (n.)

   நாவல் மரம்; jamoon tree-Eugenia jambalina (சா.அக.);.

சங்கிராணி

 சங்கிராணி caṅgirāṇi, பெ.(n.)

   வயிறூதி, சீழ், சீதம், நெய் போலும் மற்றும் பல விதமாய்க் கழிந்து, எருவாய்க் கடுத்து, வலியை உண்டாக்கும் ஒரு வகைக் கழித்தல் (சீதபேதி);; an acute form of dysentery accompanied by distension of abdomen, mucous discharge, passing of stool in varied forms, irritation of the anus attended with pain etc. (சா.அக.);.

     [Skt.san-grahani → த.சங்கிராணி.]

சங்கிராந்தசமவாதம்

சங்கிராந்தசமவாதம் saṅgirāndasamavātam, பெ.(n.)

   பாசுபதம் (சி.போ.பா.அவை.பக்.50);; a {} sect.

     [சங்கிராந்த(ம்); + சமம் + வாதம்.]

     [Skt.san-{} → த.சங்கிராந்தம் + த.சமம் + Skt.vata.]

சங்கிராந்தவாதசைவன்

 சங்கிராந்தவாதசைவன் saṅgirāndavātasaivaṉ, பெ.(n.)

சங்கிராந்தவாதி பார்க்க;see {}.

சங்கிராந்தவாதம்

சங்கிராந்தவாதம் caṅgirāndavātam, பெ.(n.)

   மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் தோன்றும் தன்மை, அதனை அருள் வடிவம் என்று கூறும் சமயம் (சங்கற்ப.11);;த.வ. உள்ளங்கோயில் கோட்பாடு.

     [Skt.san-{}-{} → த.சங்கிராந்த வாதம்.]

சங்கிராந்தவாதி

சங்கிராந்தவாதி caṅgirāndavāti, பெ.(n.)

   சங்கிராந்தவாத சமயத்தைச் சார்ந்தவன் (சி.சி.9,1, நிரம்ப.);; flower of the doctrine of {}.

     [Skt.{} → த.சங்கிராந்தவாதி.]

சங்கிராந்தி

சங்கிராந்தி caṅgirāndi, பெ.(n.)

   1. மாதப்பிறப்பு; beginning of a month, passage of the sun from one sign of the zodiac to another.

     “ஆசில் சங்கிராந்தி தன்னோடயனத்தில்” (சரசோ.தெய்வ.4, சங்.அக.);.

   2. பொங்கல் விழா கொண்டாடும் தைமாதம் முதல் நாள்; tai, when {}-pandigai is celebrated.

த.வ. மாதநாள், மாதப்பிறப்பு.

     [Skt.{} → த.சங்கிராந்தி.]

சங்கிராந்தி-த்தல்

சங்கிராந்தி-த்தல் caṅgirāndittal,    4 செ.கு.வி. (v.i.)

   தொடர்புபடுத்தல்; to become connected, related. “முத்தான்மாவிற் சிவசத்தி சங்கிராந்திக்கும்” (சி.சி.10, 1, ஞானப்.);.

     [Skt.san-{} → த.சங்கிராந்தி-.]

சங்கிராமம்

சங்கிராமம்1 caṅgirāmam, பெ.(n.)

   மலைமேல்வழி (யாழ்.அக.);; hill path.

     [Skt.{} → த.சங்கிராமம்.]

 சங்கிராமம்2 caṅgirāmam, பெ.(n.)

   போர் (திவா.);; war, battle,

     [Skt.{} → த.சங்கிராமம்.]

சங்கிராமவிலக்கணம்

 சங்கிராமவிலக்கணம் caṅgirāmavilakkaṇam, பெ.(n.)

   அறுபத்துநான்கு கலைகளுள் ஒன்றாகிய போர்த்தொழில்கலை (வின்.);; art of warfare, one of {}-kalai,q.v.

த.வ. போர்நூல்.

     [சங்கிரராம(ம்); + இலக்கணம் சங்கிராம(ம்);]

     [Skt.{} → த.இலக்கணம்.]

சங்கிரியம்

 சங்கிரியம் caṅgiriyam, பெ.(n.)

   நொய்; ghee, clarified butter (சா.அக.);.

சங்கிருதம்

சங்கிருதம்1 caṅgirudam, பெ.(n.)

   வடமொழி (வின்.);; sanskrit.

     [Skt.sam-s-krta → த.சங்கிருதம்.]

 சங்கிருதம்2 caṅgirudam, பெ.(n.)

   கலப்பு (யாழ்.அக.);; mixture.

     [Skt.san-krta → த.சங்கிருதம்.]

சங்கிருதி

சங்கிருதி1 caṅgirudi, பெ.(n.)

   ஒற்றொழித்து ஓரடிக்கு 24 எழுத்துக் கொண்டதாய்த் தமிழில் வழங்கும், வடமொழிச் சந்தம் (வீரசோ.யாப்.33, உரை);; metrical line of 24 letters exclusive of consonants adopted from sanskrit.

த.வ. வடசந்தம்.

     [Skt.sankrti → த.சங்கிருதி.]

 சங்கிருதி2 caṅgirudi, பெ.(n.)

   பேரழிவு; destruction.

     [Skt.sam-hrti → த.சங்கிருதி.]

சங்கிற்கூர்மை

 சங்கிற்கூர்மை caṅgiṟārmai, பெ. (n.)

   ஒருவகை உப்பு; a kind of salt.

சங்கிலி

சங்கிலி1 caṅgili, பெ. (n.)

   தொடை; thigh (சா.அக);.

     [அங்கு → சங்கு → சங்கிவி]

 சங்கிலி2 caṅgili, பெ. (n.)

   தொடரி; chain, link.

     “சங்கலிபோ லீர்ப்புண்டு’ (சேதுபு. அகத். 12);.

   2. நில அளவைக்குப் பயன்படும் அளவுச் சங்கிலி (C.G.);; land-measuring chain, Gunter’s chain 22 yards long.);.

   3. ஒரு நிலவளவு (G.Th.D.I. 239); a superficial measure of dry land = 3.64 acres,

   4. வயிரச்சங்கலி (பொன்னில் வயிரம் பதித்தது); என்னும் அணி; a chain ornament of gold, inset with diamonds.

     “சங்கிலி நுண்டொடர்” (சிலப். 6:90);

   5. குற்றவாளிக்குப் பூட்டும் விலங்கு; hand-cuffs, fetters.

   ம. சங்கல; Skt. śriñkhale.

     [அங்கு → சங்கு = வளைந்தது. சங்கு → சங்கிலி. வளைந்து ஒன்றுடன் ஒன்று கோர்த்திருப்பது. சங்கிவியைக் குறிக்கும் வடமொழிச் சொல் srinkhale என்பதற்கு மூலம் ஐயத்திற்குரியது (derivation doubtful); என்று மா.வி. அகரமுதலி குறித்துள்ள நிலையில் சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி சங்கிலி வடசொல் srinkhaleயிலிருந்து வந்தது எனக் காட்டியிருப்பது பொருத்தமற்றது]

 சங்கிலி3 caṅgili, பெ. (n.)

சங்கிலியார் பார்க்க;see sangiliyar.

     “சங்கிலிக்கு மெனக்கும் பற்றாய பெருமானே” (தேவா. 678, 11);

     [சங்கு → சங்கிலி]

சங்கிலி முடிச்சு

 சங்கிலி முடிச்சு caṅgilimuḍiccu, பெ. (n.)

   முடிச்சு வகை; kind of knot.

     [சங்கிலி+முடிச்சு]

சங்கிலி முளை

 சங்கிலி முளை caṅgilimuḷai, பெ.(n.)

   மூக்கணைப் பாரினைச் சங்கிலியோடு இணைக்கும் இரும்புக் கருவி; an implement in loom.

     [சங்கிலி+முளை]

சங்கிலிகரணம்

 சங்கிலிகரணம் caṅgiligaraṇam, பெ.(n.)

   இயற்கைக்கு மாறான புணர்சி (யாழ்.அக.);; unnatural coition.

த.வ. வன்புணர்வு.

     [Skt.{} → த.சங்கிலிகரணம்.]

சங்கிலிக்கறுப்பன்

 சங்கிலிக்கறுப்பன் caṅgilikkaṟuppaṉ, பெ. (n.)

   சிற்றூர்த் தெய்வம்; a minor village-deity.

     [சங்கிலி + கறுப்பன்]

சங்கிலிக்காரன்

 சங்கிலிக்காரன் caṅgilikkāraṉ, பெ. (n.)

   நங்கூரச் சங்கிலி இழுபடும் கப்பலின் துளை; hawse-hole (naut.);.

     [சங்கிலி + காரன்]

சங்கிலிக்குப்பம்

 சங்கிலிக்குப்பம் caṅgilikkuppam, பெ. (n.)

சங்கொலிக்குப்பம் பார்க்க;see Saigoli-k-kuppam (த.ஊ.பெ);.

     [சங்கொலி + குப்பம் – சங்கொலிக் குப்பம் → சங்கிலிக்குப்பம்]

சங்கிலிக்கோவை

 சங்கிலிக்கோவை caṅgilikāvai, பெ. (n.)

   தொடர்ச்சியானது; arrangement, sequence, Series.

     [சங்கிலி + கோவை. கோவை → கோவை]

சங்கிலிதம்

 சங்கிலிதம் caṅgilidam, பெ.(n.)

சங்கலிதம் பார்க்க (j.);see {}.

     [Skt.san-kalita → த.சங்கிலிதம்.]

சங்கிலித் தொடுகை

 சங்கிலித் தொடுகை caṅgilittoḍugai, பெ. (n.)

   கைகளைக் கோர்த்து விளையாடல்; a play of children.

     [சங்கிலி+தொடுகை]

சங்கிலித்துருமம்

 சங்கிலித்துருமம் caṅgilitturumam, பெ. (n.)

   தான்றிக்காய்; fruit of devil tree – Terminalia bellerica (சா.அக.);.

சங்கிலிப்பின்னல்

சங்கிலிப்பின்னல் caṅgilippiṉṉal, பெ. (n.)

   1. சங்கிலியின் பின்னல் (வின்.);; linking of a chain.

   2. ஒருவகைத் தலைப்பின்னல்; a mode of hair braiding.

     [சங்கிலி + பின்னல்]

சங்கிலிப்பிரண்டை

 சங்கிலிப்பிரண்டை caṅgilippiraṇṭai, பெ. (n.)

   பிரண்டை வகை; a species of pirandai.

     [சங்கிலி + பிரண்டை]

சங்கிலிப்பூட்டு

சங்கிலிப்பூட்டு caṅgilippūṭṭu, பெ. (n.)

   1. சங்கிலியின் பின்னல்; linking of a chain.

   2. சங்கிலிமாட்டும் ஆணி; clasp of a chain.

   3. மற்போரில் ஒருவகைப் பிடி (யாழ்ப்.);

 chain hold in wrestling.

   4. பெருஞ்சிக்கல் (வின்.);

 intricacy.

     [சங்கிலி + பூட்டு]

சங்கிலிப்பூதத்தான்

 சங்கிலிப்பூதத்தான் caṅgilippūtattāṉ, பெ. (n.)

சங்கிலிக்கறுப்பன் பார்க்க: See sangili-k-karuppan.

     [சங்கிலி + பூதத்தான். ஊதுதல் = விங்குதல், பருத்தல். ஊது → பூது → பூதல் → பூதலி. பூதலித்தல் = பருத்தல், தடித்தல். பூது → பூதம் = பருத்தது. பருத்த பேப். பூதம் → பூதத்தான்]

சங்கிலிமண்டபம்

 சங்கிலிமண்டபம் caṅgilimaṇṭabam, பெ. (n.)

   இணைப்பு மண்டபம் (நெல்லை);; connecting pavilion.

     [சங்கிலி + மண்டபம். மண்டு → மண்டகம் = மக்கள் கூடும் கல் அல்லது காரைக்கூடம். மண்டகம் → மண்டபம். முதற்காலத்தில் கல்லாலும் பிற்காலத்தில் செங்கலாலும் மண்டபம் அமைந்தது]

தனியாக இருக்கும் அம்மன் கோயிலை மூலக் கோயிலுடன் இணைத்து நிற்பது சங்கிலி மண்டபம்!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுடன் காந்தியம்மைக் கோயிலை இணைத்து நிற்பது சங்கிலி மண்டபம்.

சங்கிலிமோதிரம்

சங்கிலிமோதிரம் caṅgilimōtiram, பெ. (n.)

   1. சிக்குமோதிரம்; finger-ring of small links.

   2. கொடி கட்டும் வளையம்; ring fastened in 1 team for suspending ropes.

     [சங்கிலி + மோதிரம்]

சங்கிலியார்

சங்கிலியார் caṅgiliyār, பெ. (n.)

   சுந்தரமூர்த்தி நாயனார் மனைவியரிருவருள் ஒருத்தி; one of two wives of Sundara-mürtti-nāyanār,

     “தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார்” (பெரியபு. ஏயர் கோன்.211);.

சங்கிலிவடம்

சங்கிலிவடம் caṅgilivaḍam, பெ. (n.)

   1. சங்கிலி வடிவில் அமைந்த கழுத்தணி; a neck-ornament shape of a chain.

   2. தேரிழுக்குஞ் சங்கிலி (வின்.);; iron chain for drawing a car.

     [சங்கிலி + வடம்]

சங்கிலிவட்டகை

 சங்கிலிவட்டகை caṅgilivaṭṭagai, பெ. (n.)

   மாழையால் செய்து சங்கிலியாலிணைத்த கரண்டியுடன் கூடிய ஒரு விளக்கு; a kind of lamp chained with a spoon, for pouring oil.

     [சங்கிலி + வட்டகை]

சங்கிலிவலயம்

 சங்கிலிவலயம் caṅgilivalayam, பெ. (n.)

சங்கிலிவளையம் பார்க்க;see šargili-valaiyam.

     [சங்கிலி + வலயம். வளையம் → வலையம்]

சங்கிலிவளையம்

 சங்கிலிவளையம் caṅgilivaḷaiyam, பெ. (n.)

   சங்கிலியின் உறுப்பாகவுள்ள வளையம்; links or rings of a chain.

     [சங்கிலி + வளையம்]

சங்கிலிவிரியன்

 சங்கிலிவிரியன் caṅgiliviriyaṉ, பெ. (n.)

   சங்கிலி போன்ற வரிகளையுடைய ஒருவகைப் பாம்பு; russell’s viper, as having marks like chain.

     [சங்கிலி + விரியன்]

சங்கிலிவிளக்கு

சங்கிலிவிளக்கு caṅgiliviḷakku, பெ. (n.)

   1. சங்கிலி வட்டகை பார்க்க: See sngili-vattagai.

   2. சங்கிலியில் தொங்கும் விளக்கு; a kind of bronze lamp hung on a chain.

ம. சங்கல விளக்கு

     [சங்கிலி + விளக்கு]

சங்கீதக்கச்சேரி

 சங்கீதக்கச்சேரி caṅātakkaccēri, பெ.(n.)

   துணை இன்னியங்களுடன் நிகழும் பாட்டரங்கம்; music performance with accompaniments.

த.வ. பல்லியப்பாட்டரங்கம்.

     [Skt.{}+U.machahri → த.சங்கீதக் கச்சேரி.]

சங்கீதக்காரன்

சங்கீதக்காரன் caṅātakkāraṉ, பெ.(n.)

   1. இசையில் வல்லவன்; musician.

   2. கிறித்தவப் பாடல்களைப் பாடுவோன்; paslmist.

     [சங்கீதம் + காரன்.]

த.வ. வாணன்.

     [Skt.{} → த.சங்கீதம்.]

சங்கீதக்கியானம்

 சங்கீதக்கியானம் caṅātakkiyāṉam, பெ.(n.)

   இசையறிவு; knowledge of music, skill in music.

     [Skt.{}-{}+{} → த.சங்கீதக் கியானம்.]

சங்கீதசாகித்தியம்

சங்கீதசாகித்தியம் caṅātacākittiyam, பெ.(n.)

   1. இசைப் பாடல்கள்; the arts of music and poetry.

   2. இசைப் பயிற்சி (யாழ்.அக.);; practice in the art of music.

த.வ. பண்இலக்கியம்.

     [Skt.{}-{}+{} → த.சங்கீத சாகித்தியம்.]

சங்கீதபூசணம்

 சங்கீதபூசணம் caṅātapūcaṇam, பெ.(n.)

   இசைவல்லுநருக்கு வழக்கும் சிறப்புப் பட்டம்; a title given to musicians.

த.வ. இசைமாமணி.

     [Skt.san-{}+{} → த.சங்கீதப்பூசணம்.]

சங்கீதப்பாரி

 சங்கீதப்பாரி caṅātappāri, பெ.(n.)

பாட்டுடன் ஊர்காவல் செய்யும் இராக் காவலாளர் (Pd.);

 night watch patrolling the streets with instrumental music.

த.வ. இராக்காவல்பாடகன்.

     [Skt.{}_{}+U.pahra → த.சங்கீதப்பாரி.]

சங்கீதப்பிரியர்

 சங்கீதப்பிரியர் caṅātappiriyar, பெ.(n.)

   இசை ஆர்வலர்; music affectionate.

     [Skt.{}-{}+priya த.சங்கீதப்பிரியர்.]

சங்கீதப்பெட்டி

 சங்கீதப்பெட்டி caṅātappeṭṭi, பெ.(n.)

   இசைக் கருவி வகை (இக்.வ.);; hand harmonium.

த.வ. நொடிப்பிசைப்பெட்டி

     [சங்கீதம் + பெட்டி.]

     [Skt.san-{} → த.சங்கீதம்.]

சங்கீதம்

சங்கீதம் caṅātam, பெ. (n.)

   கிச்சலிக் கிழங்கு; orange-root – Hedychium coronatium (சா.அக.);.

 சங்கீதம்1 caṅātam, பெ.(n.)

   1. இசை (பிங்.);; music.

   2. இசைநூல்; art of science of music.

   3. இசைப்பாட்டு (கிறித்.);; psalm, humn.

     [Skt.{} → த.சங்கீதம்.]

 சங்கீதம்2 caṅātam, பெ.(n.)

   கச்சோரம்,2. (தைலவ.தைல.); பார்க்க; spiked garland flower.

சங்கீதலோலன்

 சங்கீதலோலன் caṅātalōlaṉ, பெ.(n.)

   இசையில் பெரிதும் ஈடுபட்டவன்; one who revels in music, a votary of music.

த.வ. இசையார்வலன்.

     [Skt.{}+{}, த.சங்கீதலோலன்.]

சங்கீதவாத்தியம்

 சங்கீதவாத்தியம் caṅātavāttiyam, பெ.(n.)

   இசைக்கருவி; musical instrument.

     [சங்கீதம் + வாத்தியம்.]

     [Skt. {} → த.சங்கீதம்.]

சங்கீதி

 சங்கீதி caṅāti, பெ.(n.)

   கலந்துரையாடல் (யாழ்.அக.);; conversation.

     [Skt.{} → த.சங்கீதி.]

சங்கீனீ

 சங்கீனீ caṅāṉī, பெ. (n.)

   உழமண்; fuller’s earth (சா.அக.);.

சங்கீரணம்

சங்கீரணம் caṅāraṇam, பெ.(n.)

   1. கலப்பு; mixing, commingling, coalescing.

   2. கலவையணி (தண்டி.87);;   3. சங்கீர்ணசாதி பார்க்க (பரத.தாள.47);;see {}.

   4. மத்தள வகை (பரத.ஒழியி.13);; a kind of mattalam.

     [Skt.{} → த.சங்கீரணம்.]

சங்கீர்ணசாதி

சங்கீர்ணசாதி caṅārṇacāti, பெ.(n.)

   ஒன்பது எழுத்துக் காலங் கொண்ட தாளவளவை (பரத.தாள.47, உரை);;த.வ. இருசீர்த்தாளம்.

     [Skt.{}+{} → த.சங்கீர்ணசாதி.]

கருவிளங்கனி, புளிமா போன்ற யாப்பு வகைக்குரிய தாளம்.

சங்கீர்ணம்

 சங்கீர்ணம் caṅārṇam, பெ.(n.)

சங்கீரணம் பார்க்க (இலக்.அக.);;see {}.

     [Skt.{} → த.சங்கீர்ணம்.]

சங்கீர்தம்

சங்கீர்தம் caṅārtam, பெ.(n.)

   1. ஒன்று சேர்கை; combination, amalgamation.

   2. புணர்ச்சி; compulation.

     [Skt.{} → த.சங்கீர்த்தம்.]

சங்கீர்த்தனம்

சங்கீர்த்தனம் caṅārttaṉam, பெ.(n.)

   1. சொல்லுகை; telling, reciting.

   2. புகழ்கை (வின்.);; celebration, praise.

   3. கரிசு (பாவ); அறிக்கை (R.C.);; confession to a priest.

     [Skt.{} → த.சங்கீர்த்தனம்.]

சங்கு

சங்கு1 caṅgu, பெ. (n.)

   1. நந்துக்கூடு, chank, conch, large convolute shell.

     “சங்குதங்கு தடங்கடல்” (திவ். பெரியதி. 1, 8, 1);

     ‘சங்காயிரம் கொண்டு காசிக்குப் போனாலும் தன் பாவம் தன்னோடே’ (பழ.);;

     ‘சங்கு சுட்டாலும் வெண்மை தரும்’ (பழ.);.

   2. ஐம்படை என்னும் அணியின் ஓர் உரு (சூடா.);; a constituent of the aimpadai ornament.

   3. சங்கவரிகை பார்க்க (திவா.);;see Sanga-Varigai.

   4. சங்கினால் செய்த கைவளை; Shell bracelet.

   5. குரலென்னு மிசை (திவா.);; a musical note.

   6. மிடறு; throat.

   7. ஒரு பேரெண்; thousand billions.

     “சங்குதரு நீணிதியம்” (சீவக. 493);.

   8 பேரெண் கொண்ட போர்ப்படை (சூடா.);; a large army.

   9. பெருவிரல் நிமிர ஒழிந்த நான்கு விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக்கை வகை (சிலப். 3:18 உரை);;   10. கோழி; cock.

   11. வெண்ணிறம்; white colour.

மறுவ. கோடு, கரிமுகம், புரி, வளை, வாரண்ம். நந்து வெள்ளை, ஊட்டி பணிலம், நாரு கம்பு, சுத்தி, தரா.

ம. சங்கு

     [‘சுல்’ வளைதற்கருத்துவேர். சுல் → சுலவு. சுலவுதல் = சுற்றுதல். சுல் → சள் → சழி. சழிதல் = உடற்சதை சரிந்து தளர்தல். சுல் → சுர் → சரு → சருவு. சருவுதல் = சாய்தல், சரிதல், சரிவு → சருகு → சருக்கு. சருக்குதல் = சாய்தல், சரிதல், வளைதல், வழுவுதல், சறுக்குதல். சருக்கு → சருக்கம் = வட்டம். சருக்கு → சக்கு → சக்கடம் → சக்கடா = கட்டைவண்டி சக்கு → சங்கு]

உள் வளைந்துள்ள நந்துக்கூடு, சங்கு வடிவான ஐம்படைத் தாலியுரு, சங்கு வடிவான வரை, சங்கினாற் செய்த கைவளை, சங்கு போன்ற ஊட்டி என்னும் மிடற்றுறுப்பு, மிடற்றில் இயல்பாக எழும் குரல் என்னும் இசை, சங்கு வளைவுகளால் அல்லது முட்களால் ஏற்பட்ட பேரெண், பேரெண் கொண்ட போர்ப்படை, பெருவிரல் நிமிர மற்ற நால் விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக்கை, சங்கு வடிவான தலையுடைய கோழி.

சங்கு உள் வளைந்திருப்பதால் கோடு, அரிமுகம், புரி (வலம்புரி, இடம்புரி);, வளை, வாரணம் என்னும் அதன் பெயர்களெல்லாம் வளைவுக் கருத்தையே வேர்ப்பொருளாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. (வே.க.24); சங்கினால் குழந்தைகட்குப் பால் ஊட்டுவதால் அதற்கு ஊட்டி என்றும் பெயர்.

   சங்கு ஒரே ஒட்டால் ஆனது;சிறிய சங்கு கடுகின் அளவும், பெரிய சங்கு ஒர் அடிக்கு மேலும் இருக்கும்.

சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்பன திருமாவின் ஐம்படை. இவ்வைம்படை உறுப்புகளைப் பொருத்தியதும் குழந்தைகட்குக் காப்பாக அணிவதுமான தாவி ஐம்படைத் தாலி என்று சாம்பசிவம் மருத்துவ அகரமுதலி குறிப்பிடுகிறது. மேலும்,

ஏவுகணைச் சங்கு-மிக அரிதாக கிடைப்பது.

இராமேசுவரம் சங்கு – இராமேசுவரம் கடற்பகுதியில் கிடைப்பது.

இராவணன் வழி – இதுவும் இராமேசுவரம் கடற்பகுதியில் கிடைப்பது.

எழுத்தாணிச் சங்கு – நீளமாகவம் சற்றுக் கூர்மையாகவும் இருப்பது.

ஐவிரவிச் சங்கு – கையைப் போல அமைந்திருப்பது.

சப்பாத்திச் சங்கு – அகன்றதாகவும் பெரியதாகவும் இருப்பது.

இரட்டைச் சங்கு – பெரியதாக இருப்பது. திருவோட்டுச் சங்கு என்றும் இதனை அழைப்பர். இரப்போரும், சிவனிய ஆண்டிகளும் இதனைப் பயன்படுத்துவர்.

முள்ளிச் சங்கு – மேற்பரப்பில் கூரான பகுதிகள் இருப்பது.

யானை முள்ளிச் சங்கு – யானையின் தோற்றம் போன்று, பெரியதாகவும் முள்ளுள்ளதாகவும் இருப்பது.

வாழைப் பூச்சங்கு – வாழைப் பூவைப் போன்றிருப்பது.

வெள்ளையன் சங்கு – வெண்ணிறமானது.

வெள்ளைப்பூண்டுச் சங்கு – வெண்ணிறமானது.

செவ்வாயன் – சிவந்த நிறமுடையது.

சொறி சங்கு மேற்பகுதி சொரசொரப்பாக இருப்பது.

சோழிச் சங்கு – கிளிஞ்சல் வகையைச் சார்ந்தது.

சங்கு நண்டு – நண்டு போன்ற தோற்றமுடையது.

குதிரை முள்ளிச் சங்கு குதிரையை போன்றும் முள் உள்ளதுமானது.

குருவிச் சங்கு – குருவியைப் போன்றிருப்பது.

குழாய்ச் சங்கு – மிகவும் சிறியது.

பல்பப் பூச்சி – மிகவும் சிறியது.

பால் சங்கு – வெண்ணிறமுடையது.

பிள்ளையார் சங்கு – யானை முகத்தோற்றம் உடையது.

புறா முட்டைச் சங்கு – புறாமுட்டையைப் போன்றிருப்பது.

என்று சங்கின் வகைகளை பரதவர் கலைச் சொல்லகரமுதலி குறிப்பிடுகிறது.

சங்கு வகைகள்

   1. சஞ்சலம் – a conch – shell of super eminent qualities – Voluta ryrum.

   2. முட்சங்கு/கோலச்சங்கு – prickly chank, one with thorn-like points.

   3. பட்டி அல்து சிறு சங்கு – short chank.

   4. சூற்சங்கு – chank containing or impregnated with pearls,

   5. தாழஞ் சங்கு – one with a wide mouth.

   6. வலம்புரிச்சங்கு – one with the spiral opening to the right; chank shell of happy convolutions.

   7. இடம்புரிச்சங்கு – ordinary chank with – an opening to the left.

   8. பாலடைச் சங்கு – small conch used for giving milk to children.

   9. உவர்ச்சங்கு – prickly chank.

   10. நீர்வாழ் சங்கு – conch-shell Turbinella rapa.

   11. பாற்சங்கு – white chank.

   12. பச்சைச் சங்கு அல்லது ஊது சங்கு – conch used for blowing in temples.

   13. வெண்சங்கு – white dead shell.

   14. கண்ணச்சங்கு – the conch worn by Tirumāl (Vişņu);.

   15. தூநீர்ச் சங்கு – sacred conch shell – Mazza rapa.

   16. வரிச்சங்கு – striped conch.

   17. கடற்சங்கு – a large convolute shell regarded with religious veneration – Turbinella pyrom.

   18. கண்டகச்சங்கு – a thorny chank-in the sacred Gandhaka river near Benares.

சங்கின் வாழ்க்கை முறையையும் அதன் பயன்பாட்டையும் பற்றித் தமிழர்கள் 3000 ஆண்டுகட்கு முன்பே அறிந்திருந்தனர். சங்கு அணிகலன் செய்வதில், வழிபாட்டில், போர்க்களத்தில் என்று தமிழர் வாழ்க்கை முறையில் பெரும்பங்கு பெற்றுள்ளது. அதுபோல் சங்கு வளமைக் குறியீடாகவும் வெற்றிக் குறியீடாகவும் கருதப்பட்டுள்ளது. சங்கு வளையல்கள் பெண்களின் மங்கல அணிகலன்களாகக் கொள்ளப்பட்டிருந்ததையும், கணவன் மறைவிற்குப்பின் அவ் வளையல்களை உடைந்தெறிந்து கைம்மைத் தோற்றங் கொண்டிருந்ததையும் பழந்தமிழ் நூல்கள் தெரிவிக்கின்றன.

அக் காலப் பெண்கள் சங்கு வளையல்களைப் பெரிதும் விரும்பி அணிந்துள்ளனர். சங்கு வளையல் மிகுதியாக இருந்ததால் சங்கிற்கு வளை என்ற பெயரும் உருவாயிற்று. சங்கைக் கொண்டு செய்யப்பட்ட அணிகள் யாவும் வட்டமாகவே இருந்துள்ளதையும் இது குறிக்கிறது.

சில்வளை, எல்வளை, இலங்குவளை, அணி வளை, கோல்வளை, செறிவளை, நிறைவளை, நிரைவளை, வால்வளை, வாள்வளை, புரிவளை, இளவளை, உடைவளை, புணரிவளை, நீர்ப்பரப்பின்வளை, நனிமுரல்வளை, தொடிவளை, கைவளை, பவளவளை, இடுப்புணர்வளை, இடுவளை, ஓடுவளை, ஆய்வளை, வரிவளை. நல்வளை, தோள்வளை, ஈர்வளை, தொடுவளை, வலம்புரிவளை எனப் பலவகை வளையல்களைப் பற்றிய செய்திகளைக் கழக இலக்கியங்கள் மூலம் அறிகிறோம்.

சங்கு அடிபெருத்தும், துனி சிறுத்தும் உருண்டு திரண்டுமிருக்கும். இது வெண்மை யானது. தொல்காப்பியர் சங்கினை ஈரறிவு உயிரினமாகக் குறித்துள்ளார்.

     “நந்தும் முரளும் ஈரறி வினவே” (தொல் பொருள். மரபு. 29);

வலம்புரிச் சங்கிலிருந்து கிடைத்த முத்துகள் மன்னனுக்குப் பரிசாகவும் திரையாகவும் அளிக்கப் பெற்றதைச் சீவகசிந்தாமணி (697, 2410, 919, 1503); தெரிவிக்கின்றது.

 சங்கு2 caṅgu, பெ. (n.)

சங்கஞ்செடி பார்க்க (பதார்த்த. 118);;see Sangan-jedi.

     [இசங்கு → சங்கு]

 சங்கு3 caṅgu, பெ. (n.)

   கடுரோகிணி (மலை);; christmas rose.

 சங்கு4 caṅgu, பெ. (n.)

   கனைக்கால்; shank.

     [சங்கு → சங்கு = சங்கு வடிவின் திரண்ட கெண்டைக்கால்]

 சங்கு5 caṅgu, பெ. (n.)

   1. முளை; stake, peg, spike.

   2. நிழலால் நேரமறிவதற்காக நேராக நடப்பெறுங் கோல் (வின்.);; gnomon or perpendicular column for measuring the altitude of the sun by the length of its shadow.

   3. மட்டிப் படைக்கலம் (திவா.);; a kind of weapon

சங்கு-தல்

சங்கு-தல்6 caṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   பல்லாங்குழி ஆடுபவனுக்கு ஊதியமின்றி (இலாபமின்றி); முடிந்து விடுதல்; to be blocked in ones turn without any gain in the game of pallānguli.

பட. பிங்கு

     [தங்கு → சங்கு-,]

 சங்கு-தல்7 caṅgudal,    5 செ.கு.வி. (v.i)

   துணிவு அழிதல் (வின்.);; to be dispirited, lose courage.

 Skt. sanka

     [இங்குதல் = அழுந்துதல். இங்கு → சிங்கு. சிங்குதல் = குன்றுதல், இளைத்தல், அழிதல். சிங்கு → சங்கு-,]

 சங்கு-தல்8 caṅgudal,    4 செ.கு.வி (v.i.)

   குதித்தல், தாண்டுதல்; to jump (கருநா.);.

க. சங்கு

     [கல் → சல் → சன் → சங்கு-,]

சங்குகடை-தல்

சங்குகடை-தல் caṅgugaḍaidal,    2 செகுன்றாவி (v.i.)

   இறக்கும் நேரத்தில் நெஞ்சில் களகளவெனும் ஓசை உண்டாதல்; to rattle in the throat, as of dying persons.

ம. சங்குகாயுக.

     [சங்கு + கடை-,]

சங்கு போன்ற ஊட்டி என்னும் மிடற்றுருப்பில் கடைதல் போன்ற ஓசை ஏற்படுதல் சங்கு கடைதல் எனப்பட்டது.

சங்குகட்டு-தல்

சங்குகட்டு-தல் caṅgugaṭṭudal,    5 செ.குவி (v.i.)

   கால்நடைகளுக்குக் சங்கு கட்டுதல்; to tie conch to cattles.

     [சங்கு + கட்டு-,]

கால்நடைகளின் கழுத்து, நெற்றி, வயிற்றுப் பகுதி ஆகியவற்றில் கருப்புக் கயிற்றில் சங்கைக் கோத்துக் கட்டித் தொங்க விடுவதுண்டு. அழகுபடுத்துவதற்கும் சில தீய விளைவை அகற்றும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையிலும் சங்கு கட்டுவர் மாட்டு வண்டி போன்றவற்றிலும் சங்கு கட்டுவதுண்டு.

சங்குகர்ணம்

சங்குகர்ணம் caṅgugarṇam, பெ. (n.)

   1. ஒட்டகம்; camel.

   2. கழுதை; donkey.

     [சங்கு + கர்ணம். சங்கு போன்ற காதினை உடையது]

 Skt. karna → த. கர்ணம்.

சங்குகழித்தல்

 சங்குகழித்தல் caṅgugaḻittal, தொ. பெ. (vbl.n.)

   தரங்குறைந்த சுறாக்கடி, சொரி, நண்டுக்கடி முதலிய சங்கு வகைகளைக் கழித்தல்; separating substandard conches (மீனவ.);.

     [சங்கு + கழித்தல்]

சங்குகாசம்

 சங்குகாசம் caṅgukācam, பெ. (n.)

   கண்ணோய் வகை (சங்.அக.);; a kind of eye-disease.

     [சங்கு + காசம்]

சங்குகிளரி

 சங்குகிளரி caṅgugiḷari, பெ. (n.)

   புவிநறளை; fox-grape (சா.அக.);.

சங்குகுலை

 சங்குகுலை caṅgugulai, பெ. (n.)

   ஆமை; tortoise, turtle (சா.அக.);.

     [சங்கு + குலை]

சங்குகுளி-த்தல்

சங்குகுளி-த்தல் caṅguguḷittal,    4 செ.கு.வி. (v.i.)

   மூழ்கிச் சங்கெடுத்தல்; to dive for chanks.

     [சங்கு + குளி-,]

சங்குகுளிக்காரன்

சங்குகுளிக்காரன் caṅguguḷiggāraṉ, பெ. (n.)

   1. கடலில் சங்கெடுப்பதற்காக முக்குளிப்போன்; one who dives for chanks.

   2. சங்கெடுப்பதற்காக விடப்பட்ட வரியிலி நிலம் (R.T);;     ‘inam’ granted for diving for chank-shells.

     [சங்கு + குளி + காரன்]

சங்குக் கிடங்கு

 சங்குக் கிடங்கு caṅgukkiḍaṅgu, பெ. (n.)

   சங்குகளைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் அறை; chankgodown.

     [சங்கு+கிடங்கு]

சங்குக்கீரை

சங்குக்கீரை caṅgukārai, பெ. (n.)

   கீரைவகை (சங்.அக.);; a kind of greens.

     [சங்கு7 + கீரை, சங்கு வடிவான இலையைக் கொண்ட கீரை]

சங்குக்கை

சங்குக்கை caṅgukkai, பெ. (n.)

   பெருவிரல் நிமிர ஒழிந்த நான்கு விரல்களும் வளைந்து நிற்கும் இணையாவினைக்கை வகை (சிலப். 3: 18, உரை);; a gesture with one hand in which the thumb is held upright while the other fingers are bent.

     [சங்கு + கை. செய் → (சை); → கை]

பெருவிரலை நிமிர்த்தி மற்ற விரல்களை வளைத்ததாக சங்கின் வடிவம் தோன்றும்

சங்குக்கொட்டான்

 சங்குக்கொட்டான் caṅgukkoṭṭāṉ, பெ. (n.)

   சங்குகளை ஒரிடத்திலிருந்து வேரோரிடத்திற்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் பெட்டி (மீனவ.);; box used to take conch from one place to another.

     [சங்கு + கொட்டான். குட்டான் = சிறிய ஓலைப்பெட்டி. குட்டான் → கொட்டான் = ஓலைப் பெட்டி, பெட்டி]

சங்குக்கோலம்

 சங்குக்கோலம் caṅgukālam, பெ. (n.)

   சங்கு உருவம் அமையுமாறு போடும் கோலம்; ornamental figures like conch, drawn on floor, wall or sacrificial pots.

     [சங்கு + கோலம்]

பெரும்பாலும் மாலிய (வைணவ சமயத்தார் இல்லங்களில் சிலை (மார்கழி);த் திங்களில் வாயிலில் சங்குக் கோலம் போடுவர். சங்குக் கோலம் தீமைகளினின்று விடுபடவும் செல்வ வளத்தைக் கொடுக்கவும் வல்லது என்பது நம்பிக்கை.

சங்குசக்கரக்கடுக்கன்

 சங்குசக்கரக்கடுக்கன் saṅgusakkarakkaḍukkaṉ, பெ. (n.)

   இடது காதில் சங்கின் வடிவாகவும் வலது காதில் சக்கர வடிவாகவும் திருமாலடியவர்கள் அணியும் கடுக்கன் வகை; ear-rings in the form of chank for the left ear and of a discus for the right, used by vaisnavās.

     [சங்கு + சக்கரம் + கடுக்கன்]

சங்குசக்கரம்

சங்குசக்கரம் saṅgusakkaram, பெ. (n.)

   தரையிலோ கம்பியிலோ சுழலக் கூடிய சுருள் வடிவான ஒரு பட்டாசு; cracker that either spins on the floor or rotates on a metal wire when lit.

     [சங்கு + சக்கரம்]

 சங்குசக்கரம் saṅgusakkaram, பெ. (n.)

   சங்கு சக்கர முத்திரை பொறிக்கப்பட்ட ஒரு வகை அணிகலன்; a kind of ornament with the shape of the conch and discus embossed (சேரநா.);.

ம. சங்குசக்ரம்

     [சங்கு + சக்கரம்]

 சங்குசக்கரம்3 saṅgusakkaram, பெ. (n.)

   சங்குசக்கர வடிவான வரிகை; conch and circle shaped palm lines.

     [சங்கு + சக்கரம்]

சங்குசாரம்

 சங்குசாரம் caṅgucāram, பெ. (n.)

   சங்கைச் சுட்டெடுக்கும் உப்பு; an essence of salt extracted by burning and reducing chank into ashes (சா.அக.);.

     [சங்கு + சாரம்]

சங்குசிதம்

சங்குசிதம் saṅgusidam, பெ. (n.)

   சுருக்கமானது (சி.சி. 4, 36, சிவாக்);; that which is contracted shrunk, narrowed.

     [சங்கு + சிதம்]

சங்குசுட்டநீறு

 சங்குசுட்டநீறு saṅgusuṭṭanīṟu, பெ. (n.)

   சங்குச் சுண்ணாம்பு; lime obtained by or delivered from, slaking conch-shell; slaked shell-lime (சா.அக.);.

     [சங்கு + சுட்ட + நீறு]

சங்குசூலை

 சங்குசூலை caṅgucūlai, பெ. (n.)

   ஆமை; tortoise, turtle (சா.அக.);.

     [சங்கு + சூலை]

சங்குச்சன்னி

சங்குச்சன்னி caṅguccaṉṉi, பெ. (n.)

   உடல் வெதும்பி, நாக்கு வறண்டு, வயிறு பொருமி, கக்கல், விக்கல், காதடைப்பு திடுக்கிட்டெழுதல் முதலிய குணங்களுடன், 14 நாள் வரைக்கும் நீடித்திருக்கும் ஒருவகைக் காய்ச்சல், சன்னி; a kind of deilrium from enteric fever extending to a period of fourteen days, with characterised by aching of the limbs, parched tongue, rumbling of the stomach, vomitting, hiccough, dullness of hearing restless due to frequent and sudden rise from the bed etc., (சா.அக.);

     [சங்கு + சன்னி]

சங்குச்சலாபம்

 சங்குச்சலாபம் caṅguccalāpam, பெ. (n.)

   சங்கு குளித்தெடுக்கை; chank fishery.

     [சங்கு + சலாபம். சலாபம் = முத்துக் குளிக்கை]

சங்குச்சுண்ணாம்பு

 சங்குச்சுண்ணாம்பு caṅguccuṇṇāmbu, பெ. (n.)

   சங்கு சுட்ட சுண்ணாம்பு; chank-lime, shell-lime.

     [சங்கு + சுண்ணாம்பு]

 சங்குச்சுண்ணாம்பு caṅguccuṇṇāmbu, பெ. (n.)

சங்கு சுட்டநீறு பார்க்க;see sangu-sutta-niru.

     [சங்கு + சுண்ணாம்பு, சுள் → சுள்ளை → சூளை. சள் → சுண் → சுண்ணம் = நீற்றுதல், நீறு, சுண்ணாம்பு]

சங்குச்சுரி

 சங்குச்சுரி caṅguccuri, பெ. (n.)

   புரியாணி (யாழ்ப்.);; screw, as being spiral.

ம. சங்கிரி

     [சங்கு + சுரி]

சங்குடம்

 சங்குடம் caṅguḍam, பெ. (n.)

   கொத்தான்கொடி; air-creeper – Cassytha filiformis.

சங்குட்டம்

 சங்குட்டம் caṅguṭṭam, பெ.(n.)

   எதிரொலி (யாழ்.அக.);; echo, reverberation.

     [Skt.san-ghusta → த.சங்குட்டம்.]

சங்குணப்புல்

 சங்குணப்புல் caṅguṇappul, பெ. (n.)

   நான்முகப்புல்; square – stalked grass – Saccharum spontaneum (சா.அக.);.

சங்குத்தான்

 சங்குத்தான் caṅguttāṉ, பெ.(n.)

   கிறித்தவக் கோயிலைச் சார்ந்த பணியாளன்;     [E.sacristan → த.சங்குத்தான்.]

சங்குத்தாபனம்

 சங்குத்தாபனம் caṅguttāpaṉam, பெ. (n.)

சங்கு நிலைநிறுத்தம் பார்க்க;see sangu-nilai-niruttam (கட்டட);,

     [சங்கு + தாபனம்]

 Skt. ståbana → த. தாபனம்

சங்குத்தாலி

சங்குத்தாலி caṅguttāli, பெ. (n.)

   1. சங்கு வடிவான தாலி (வின்.);;     ‘tāli’ with beads in imitation of chanks, one on either side.

   2. சங்கினாற் செய்யப்பட்ட மகளிரணியுந் தாலி; tāli made of shell, worn by women.

     [சங்கு + தாலி]

சங்குத்தாலி வெள்ளாளர்

 சங்குத்தாலி வெள்ளாளர் caṅguttāliveḷḷāḷar, பெ. (n.)

   சங்கினாலியன்ற தாலியை மகளிர் அணியும் வழக்குமுடைய ஒருவகை வேளாளர் (வின்.);; a class of velālas whose women wear sangu-t-täli.

     [சங்கு + தாலி + வெள்ளாளர்]

சங்குத்திரி

 சங்குத்திரி caṅguttiri, பெ. (n.)

   சங்கின் உட்சுழி (இ.வ.);; spiral winding in shells.

ம. சங்குதிரி

     [சங்கு + திரி]

சங்குத்திருகி

சங்குத்திருகி caṅguttirugi, பெ. (n.)

   1. சங்கறுக்குங் கருவி (வின்.);; machine for sawing and cutting shells.

   2. அடைத்த நெட்டித் தக்கையை இழுத்து வாங்குங் கருவி; cork-Screw (செ.அக.);.

ம. சங்குதிரி

     [சக்கு + திருகி]

சங்குநகம்

சங்குநகம் caṅgunagam, பெ. (n.)

   நாகுணம் என்னும் மணப்பொருள் நாதார்த்த 135, உரை; nākunam, an aromatic substance.

     [சங்கு + நகம்]

சங்குநண்டு

 சங்குநண்டு caṅgunaṇṭu, பெ. (n.)

   ஒரு வகைச் சங்கு (மீனவ.);; a kind of chank.

     [சங்கு + நண்டு]

சங்குநண்டு•

சங்குநண்டு•2 caṅgunaṇṭu, பெ. (n.)

   பெரிய சங்கிற்குள் வாழும் ஒருவகை நண்டு; a crab living in the hollow of a big chank (சா.அக.);

     [சங்கு + நண்டு]

சங்குநாதம்

 சங்குநாதம் caṅgunātam, பெ. (n.)

சங்கநாதம் பார்க்க;see Sanga-nādam (செ.அக.);.

     [சக்கு + நாதம்]

சங்குநிதி

 சங்குநிதி caṅgunidi, பெ. (n.)

   வட்டக் கிலுகிலுப்பை (மலை.);; blue-flowered crotalaria.

     [சக்கு + நிதி]

சங்குநிலம்

 சங்குநிலம் caṅgunilam, பெ. (n.)

சங்குப் படுகை பார்க்க;see Sangu-p-padugai (மீனவ.);.

     [சங்கு + நிலம்]

சங்குநிலைநிறுத்தம்

சங்குநிலைநிறுத்தம் caṅgunilainiṟuttam, பெ. (n.)

   1. வீட்டின் பீடைகள் நீங்குமெனும் நம்பிக்கையில் நீர் நிரப்பிய சங்கினை 45 நாள் மந்திரித்துச் சுவரின் கீழ்ப் புதைத்தல்; burrying under a wall a conch filled with water after doing manthra for 45 days to drive out affliction of a house.

   2. புதிதாக அமைக்கும் கட்டடத்திற்கு எல்லை தெரியும்படி முளையடிக்குஞ் சங்கு; setting up conch as peg to identity the area of new building.

     [சங்கு + நிலைநிறுத்தம்]

சங்குந்தி

 சங்குந்தி caṅgundi, பெ. (n.)

   ஒருவகைக் கிலுகிலுப்பை; rattle-wort – Crotalaria genus

     [சங்கு → சங்குத்தி]

சங்குபிடி-த்தல்

சங்குபிடி-த்தல் caṅgubiḍittal,    4 செ.கு.வி (v.i.)

சங்கூது-தல் பார்க்க;see sangudu-, (செ.அ.க.);

     [சங்கு + பிடி-,]

சங்குபுட்பம்

 சங்குபுட்பம் caṅgubuṭbam, பெ. (n.)

சங்கப்பூ பார்க்க;see sangu-p-pu.

சங்குப்படுகை

 சங்குப்படுகை caṅguppaḍugai, பெ. (n.)

   சங்குகள் நிறைந்திருக்கும் கடற்பகுதி (மீனவ.);; chank bed.

மறுவ. சல்லி, பிறால்

     [சங்கு + படுகை]

சங்குப்பட்டினி

 சங்குப்பட்டினி caṅguppaṭṭiṉi, பெ. (n.)

   ஒரு வகை நோன்பு (இ.வ.);; a kind of fast (செ.அக.);

     [சக்கு + பட்டினி]

சங்குப்பறை

 சங்குப்பறை caṅguppaṟai, பெ. (n.)

சங்குப் பறையர் பார்க்க (வின்.);;see Sangu-p-paraiyar,

     [சங்கு + பறை]

சங்குப்பறையர்

 சங்குப்பறையர் caṅguppaṟaiyar, பெ. (n.)

   இறப்புச் சடங்கில் சங்கு ஊதும் இனத்தார்; a sub-caste whose men act as conch-blowers at funerals (E.T.); (செ.அக.);.

     [சங்கு + பறையர்]

சங்குப்பிடி

 சங்குப்பிடி caṅguppiḍi, பெ. (n.)

   வலுக்கட்டாயம் (இ.வ.); ; extreme compulsion (செ.அக.);

     [சங்கு + பிடி. சங்கு = சங்கு வடிவான மிடற்றுறுப்பு, கழுத்து. சங்குப்பிடி = கழுத்தை தெரித்தல்]

சங்குப்புரி

சங்குப்புரி caṅguppuri, பெ. (n.)

   1. சங்கின்புரி; the spire of a conch.

   2. புரியாணி; screw.

   3. சங்குப் புரிபோல் உள்ள கருவி; a tool having spirals like a conch (செ.அக.);.

     [சங்கு + புரி]

புல் → புரு → புரி. புரு → புருவம் = கண்ணின் புருவம். புரிதல் = வளைதல் வலம்புரி, இடம்புரி என்னும் சங்குகளை நோக்குக.

சங்குப்பூ

 சங்குப்பூ caṅguppū, பெ. (n.)

   சங்கின் முட்டைக் கூடு; egg mass.

     [சங்கு + பூ]

சங்குப்பூச்சு

 சங்குப்பூச்சு caṅguppūccu, பெ. (n.)

   சங்கினுள் இருக்கும் பூச்சி (மீனவ.);; the insect living inside conch.

     [சங்கு + பூச்சி]

சங்குப்பூச்சி, இராவணன் விழி, பலகறை, சொறிசங்கு, பல்பப்பூச்சி எனப் பல வகைப்படும்.

சங்குப்பூதம்

 சங்குப்பூதம் caṅguppūtam, பெ. (n.)

   கோயிற் கோபுர மேற்றளங்களில் கைகளில் சங்கு ஏந்தியவாறு அமைந்த பூத உருவம் (மீனவ.);; the figure which has conch at temple tower.

     [சங்கு + பூதம்]

சங்குப்பூனைமதம்

சங்குப்பூனைமதம் caṅguppūṉaimadam, பெ. (n.)

   1. சவ்வாது; zibeth.

   2. புனுகு; civet, perfume from the anal gland of a cat (சா.அக.);.

     [சங்குப்பூனை + மதம்]

பூனையின் கழிவுறுப்பின் அருகில் சுரக்கும் நீரிலிருந்து எடுக்கும் மணப்பொருள்.

சங்குமடப்பளி

 சங்குமடப்பளி caṅgumaḍappaḷi, பெ. (n.)

சங்க மடைப்பள்ளி (யாழ்ப்.); பார்க்க;see sangamagai-p-palli (செ.அக.);.

     [சங்கம் + மடப்பளி. மடைப்பள்ளி → மடப்பள்ளி]

சங்குமணி

 சங்குமணி caṅgumaṇi, பெ. (n.)

   சங்குத் துண்டங்களால் ஆக்கப்பட்ட மணி; beads cut out from chanks (செ.அக.);.

     [சங்கு + மணி. மண் → மணி = உருண்டையானது, உருண்டையான பாசி அல்லது முத்து அல்லது ஒளிக்கன் வகை. உருண்டையான விதை அல்லது அரிசி. ஒ.நோ.: மணிமாவை, தொண்மணி (நவரத்தினம்);, கூலமணி, சிறுமணி (அரிசி);]

சங்குமதம்

 சங்குமதம் caṅgumadam, பெ. (n.)

   புனுகு (இ.வ.);; civet perfume (செ.அக);.

தெ. சங்குமதமு

     [சங்கு + மதம். சங்கு = சங்குப்பூனை]

சங்குமரு

 சங்குமரு caṅgumaru, பெ. (n.)

   வேம்பு (மலை);; neem tree.

     [சங்கு + மரு]

சங்குமரை

 சங்குமரை caṅgumarai, பெ. (n.)

   சங்கின் முறுக்கு; spiral of conch.

     [சங்கு + மறை]

சங்குமாத்திரை

 சங்குமாத்திரை caṅgumāttirai, பெ. (n.)

   சங்க நீற்றினால் செய்யப்படுவதும் கண்ணோய்களுக்கு உதவுவதுமான மருந்து (சங்.அக.);; a medicinal pill prepared from calcined chank, for use in eye-diseases.

     [சங்கு + மாத்திரை]

சங்குமாருதம்

 சங்குமாருதம் caṅgumārudam, பெ. (n.)

   வேம்பு; margosa tree (சாஅக.);.

     [சங்கு + மாருதம்]

சங்குமால்

 சங்குமால் caṅgumāl, பெ. (n.)

   சங்கு சேமிக்கும் கிடங்கு (மீனவ.);; chank godown.

     [சங்கு + மால்]

சங்குமுகம்

 சங்குமுகம் caṅgumugam, பெ. (n.)

   ஆறு கடலுடன் கலக்கும் இடம் (மீனவ.);; river mouth.

     [சங்கமுகம் → சங்குமுகம்]

சங்குமுத்திரை

சங்குமுத்திரை caṅgumuttirai, பெ. (n.)

   1. வலது கட்டைவிரல்நுனி சுட்டுவிரலின் அடியைத் தொடுதலாற் சங்கு வடிவாக அமையும் முத்திரை; a pose of the right hand in the form of a chank, the thumb touching the root of the fore-finger.

   2. திருவிதாங்கூரில் உள்ள சங்குவடிவமான அரச முத்திரை; the conch-seal of the Travancore government. ({}); (செ.அக.);.

     [சங்கு + முத்திரை]

சங்குமுத்து

 சங்குமுத்து caṅgumuttu, பெ. (n.)

   சங்கின் முத்து; conch pearl.

     [சங்கு + முத்து. முட்டு → முத்து = உருண்டையான மணி வகை]

சங்குமூடகி

 சங்குமூடகி caṅgumūṭagi, பெ. (n.)

   வெண் கீரைத் தண்டு; a white species of spinach – Amaranthus blitum (சா.அக.);.

     [சங்கு + மூடகி. சங்கு = வெண்ணிறம்]

சங்குமூர்த்தினி

 சங்குமூர்த்தினி caṅgumūrttiṉi, பெ. (n.)

   வானத்துச்சி (வின்.);; zenith.

     [சங்கு + மூர்த்தினி. சங்கு → சங்கை = மேன்மை. சங்கு = வெள்ளை, தூய்மை, மேன்மை, உச்சி]

சங்குமூலம்

 சங்குமூலம் caṅgumūlam, பெ. (n.)

   சங்கஞ் செடியின் வேர்; root of the four spined monetia (சாஅக.);.

     [சங்கு + மூலம்]

சங்குமோதிரம்

சங்குமோதிரம் caṅgumōtiram, பெ. (n.)

   1. சங்கினாற் செய்த மோதிரவகை; a ring made of conch-shell.

   2. சங்கு முத்திரையுள்ள மோதிரம்; ring which has chank mark.

     [சங்கு + மோதிரம். முகம் + திரை = முகத்திரை → முத்திரை. முகத்திரம் → மோதிரம் = முத்திரையுள்ள விரலணி. சங்கு முத்திரையுள்ள விரலணியும் சங்கு மோதிரம் என்றுமாம்]

சங்குருளை

 சங்குருளை caṅguruḷai, பெ. (n.)

   ஆமை (யாழ்.அக.);; tortoise.

மறுவ. சங்குகுலை

     [சங்கு + உருளை]

சங்குலம்

சங்குலம் caṅgulam, பெ. (n.)

   1. கூட்டம் (சங்.அக..);; gathering, crowd.

   2. போர் (யாழ்.அக.);; war, battle.

     [சங்கம் → சங்குலம்]

சங்குலிகம்

 சங்குலிகம் caṅguligam, பெ. (n.)

   இலுப்பை மரம்; honey-tree – Bassia longifolia.

சங்குலிகயுத்தம்

சங்குலிகயுத்தம் caṅguligayuttam, பெ. (n.)

   கைகலப்பு (வேதாரணி. பக்.124, குறிப்.);; hand- to-hand fight.

சங்குலை

 சங்குலை caṅgulai, பெ. (n.)

   உளி; chisel.

     [சங்கு = சங்குவனை அல்லது முட்கள். சங்கு → சங்குலை]

சங்குவங்கணம்

 சங்குவங்கணம் caṅguvaṅgaṇam, பெ. (n.)

   நற்சீரகம்; cummin seed- Cuminum cyminum (சாஅக.);.

     [சங்கு + வங்கணம்]

சங்குவடம்

 சங்குவடம் caṅguvaḍam, பெ. (n.)

   தோணி வகை (இ.வ.);; ferry-boat (செஅக.);.

ம. சங்ஙடம்

     [சக்கு → சங்கு + வடம்]

சங்குவளலை

 சங்குவளலை caṅguvaḷalai, பெ. (n.)

   சங்கினுள் இருக்கும் சதைப்பகுதி; fleshy part of a conch.

 seeஆமை தின்னி தூமை தின்னி அடைகோழி முட்டை தின்னி சங்குவளலை தின்னி – இப்போ சருவாதடா என்னோட” (நாட்டுப்பாடல்);.

     [சங்கு + வளலை. வழலை → வளலை]

சங்குவளை

சங்குவளை caṅguvaḷai, பெ. (n.)

   சங்கினாற் செய்த வளையல்; shell bracelets.

 seeசங்கு வளை இறுகின இறையையுடைய” (நெடுநல். 36, உரை);.

     [சங்கு + வளை]

சங்குவளையல்

 சங்குவளையல் caṅguvaḷaiyal, பெ. (n.)

சங்குவளை பார்க்க;see {}.

     [சங்கு + வளையல்]

சங்குவாதம்

 சங்குவாதம் caṅguvātam, பெ. (n.)

சங்கூதை பார்க்க;see {} (சாஅக.);.

     [சங்கு + வாதம்]

சங்குவிரியன்

 சங்குவிரியன் caṅguviriyaṉ, பெ. (n.)

   பாம்பு வகை (இ.வ.);; a variety of snake (செஅக.);.

     [சங்கு + விரியன்]

சங்குவெள்ளை

சங்குவெள்ளை caṅguveḷḷai, பெ. (n.)

   1. சங்குச் சுண்ணத்தின் காரை; mortar made of shell-lime.

   2. தூயவெள்ளை; pure whiteness (செஅக.);.

     [சங்கு + வெள்ளை]

சங்கூதி

சங்கூதி caṅāti, பெ. (n.)

   1. சங்கூதுவோன் (யாழ்ப்.);; conch-blower.

   2. வழக்குத் தீர்ப்பதற்கு ஊரவையைக் கூட்டுபவன்; convener of a village committee for settling disputes. (G.Sm. D.I.i.181);.

     [சங்கு + ஊதி]

சங்கூதித்திருக்கை

 சங்கூதித்திருக்கை caṅātittirukkai, பெ. (n.)

   சங்கு முழங்கினாற்போல் ஒலியெழுப்புந் திருக்கைமீன்; tirukkai fish which gives sound as blowing conch.

     [சங்கூதி + திருக்கை]

     [p]

சங்கூது

சங்கூது1 caṅādudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கோயில் முதலியவற்றில் சங்கை ஊதுதல்; to blow a conch, as at a marriage house, a temple, etc.

   2. வேலைக்களத்துக்கு ஆட்களை அழைக்க பொறியால் ஒலியெழுப்புதல்; to sound a mil-whistle.

   3. சாலை அறிவிக்கச் சங்கொலி எழுப்புதல்; to blow conch as in death (செ.அக.);.

     [சங்கு + ஊது-,]

 சங்கூது2 caṅādudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. ஒரு செயலை இடையிலேயே முடித்து விடுதல்; to end abruptly, as a work.

அவன் தன் படிப்புக்கு ஆறாம் வகுப்போடு சங்கூதிவிட்டான்.

   2. ஒருவரது வாணாள் முடிவுக்கு வருதல்; to come an end, as of one’s life.

தன் மகள் திருமணத்திற்கு முன்பே சங்கூதிவிட்டாள் (உ.வ.);.

     [சங்கு + ஊது-,]

சங்கூதுவோன்

 சங்கூதுவோன் caṅātuvōṉ, பெ. (n.)

சங்கூதி பார்க்க;see {} (செ.அக.);.

     [சங்கூது + ஓன்]

உழவர்க்கு வேண்டிய பொருள்களைச் செய்துதவப் பக்கத்துணையாகத் தோன்றிய பதினெண்குடிமக்களுள் சங்கூதுவோன் (கோயிற்குடியான்); என்பதும் ஒன்று.

வண்ணான் எண்ணெய் வணிகன்

நாவிதன் உப்பு வாணிகன்

குயவன் இலை வாணிகன்

தட்டான் பள்ளி

கன்னான் பூமாலைக்காரன்

கற்றச்சன் பறையன்

கொல்லன் ஒச்சன்

தச்சன் வலையன்

பாணன் கோயிற்குடியான்

சங்கூதை

 சங்கூதை caṅātai, பெ. (n.)

   வெட்டை தொடர்பான ஒருவகை முடக்கு (வாத); நோய்; a kind of rheumatism associated with gonorrhoea – Gonnorrheal rheumatism (சா.அக.);.

     [சங்கு + ஊதை]

சங்கூமச்சி

 சங்கூமச்சி caṅāmacci, பெ. (n.)

   சிப்பி வகை (வின்.);; boat-shell, a gastroped, cymbium.

     [சங்கு + ஊமச்சி.]

சங்கெரி

 சங்கெரி caṅgeri, பெ. (n.)

   புளியாரை; Indian sorrel – oxalis carniculata (சா.அக.);.

     [சங்கு → சங்கெரி]

சங்கேசுரம்

 சங்கேசுரம் caṅācuram, பெ. (n.)

   மருளூமத்தை; head-ache plant – Xanthum strumarium (சா.அக.);.

சங்கேசுரரசன்

 சங்கேசுரரசன் saṅāsurarasaṉ, பெ.(n.)

   கெந்தி, நாதப் பொடி, இதளியப் பொடி, வெண்காரம், பலகறை, நீலத்துத்தம் இவற்றைச் சேர்த்தரைத்து, ஆயுள்வேத முறைப்படி புடமிட்டெடுத்து நோய்க்காகக் கொடுக்கும் மருந்து; a medicine prepared by mixing sulphur, calcined zinc and mercury, berax, cowries and blue vitriol in due proportions and grinding them all together the products is then calcined according to Ayurvedic method. it is prescribed for consumption (சா.அக.);.

சங்கேசுவரம்

சங்கேசுவரம் caṅācuvaram, பெ. (n.)

   சிவக் கோயில்கள் (சிவத்தலங்கள்); ஆயிரத்தெட்டனுள் ஒன்று; one of the shrine of 1008 {} shrines.

     [சங்கு + ஈசுவரம்]

சங்கேதமொழி

 சங்கேதமொழி caṅātamoḻi, பெ.(n.)

   குறியீடு (அ); குமூஉக்குறி (பரிபாஷை); வார்த்தை; technical term; code word (சா.அக.);.

     [சங்கேதம் + மொழி.]

     [Skt.{} → த.சங்கேதம்.]

சங்கேதமொழிப்பிரயோகம்

 சங்கேதமொழிப்பிரயோகம் caṅātamoḻippirayōkam, பெ.(n.)

   சாத்திரார்த்தம்; use of term or technical expression; technicality (சா.அக.);.

     [Skt.{} → த.மொழி + pra-{}.]

சங்கேதம்

சங்கேதம்1 caṅātam, பெ.(n.)

   1. குறி; preconcerted sign, signal.

   2. உடன்படிக்கை; agreement, stipulation, understanding between parties.

   3. சாதிசமயங்களால் உளதாகும் ஒற்றுமையுணர்ச்சி (குறள், 735, உரை);; sense of solidarity due to religious or social identify.

   4. குமூஉக்குறி; conventional terms limited to trades, professions.

   5. உறுதிமொழி; word of assurance.

     “எனக்கோர் சங்கேதஞ் சொன்னால்” (சேதுபு.சாத்தி.17);.

     [Skt.{} → த.சங்கேதம்1.]

 சங்கேதம்2 caṅātam, பெ.(n.)

   கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட மானிய நிலம் (நாஞ்சி.);; land assigned to a temple and made tax-free.

சங்கேதி

 சங்கேதி caṅāti, பெ.(n.)

   பார்ப்பனருள் ஒரு வகையினர் (இ.வ.);; a sub-sect among Brahmins.

     [Skt.{} → த.சங்கேதி.]

சங்கேப்பம்

 சங்கேப்பம் caṅāppam, பெ.(n.)

   சுருக்கம்; abstract, epitome, compendium, abridgement.

     [Skt.{} → த.சங்கேப்பம்.]

சங்கேமாயி

 சங்கேமாயி caṅāmāyi, பெ.(n.)

   ஒரு சேணிய (யுனானி); கடைச் சரக்கு; a bazaar drug useful in unani system (சா.அக.);.

சங்கை

சங்கை1 caṅgai, பெ. (n.)

   1. வறட்சுண்டி (யாழ்.அக.);; floating sensitive plant.

   2. சுக்கு (வின்.);; dried ginger.

     [சல் = சுடுதற் கருத்துவேர். சுல் → சுள் → சள் → சண்டு = காய்ந்த புற்றாள், கூளம். சண்டு → சங்கு → சங்கை = சுண்டி, காய்ந்த இஞ்சி]

சங்கை → Skt. samanga

 சங்கை2 caṅgai, பெ. (n.)

   மேன்மை (யாழ்ப்.);; honour, esteem, reverence (செ.அக);.

     [சங்கு = வென்னை, தூயது. சங்கு → சங்கை = தூயது, மேன்மையானது]

 சங்கை3 caṅgai, பெ. (n.)

   1. எண்; number.

     ‘சங்கை தணிக்குங் கொட்டாரம்’ (சிவதரு. சிவஞானதான.7௦);.

   2. அளவு; measure, estimate.

     [சங்கு = ஒரு பேரெண். சங்கு → சங்கை = எண், அளவு]

த. சங்கை → Skt. {}

 சங்கை4 caṅgai, பெ. (n.)

   கணைக்கால்; shank, part of the leg between the ankle and the knee.

     ‘திரண்டு நீண்ட சங்கையும்’ (திருவிளை. உக். 35);.

     [சங்கு → சங்கை = சங்கு வடிவான திரண்ட கெண்டைக்கால்]

 சங்கை1 caṅgai, பெ.(n.)

   1. ஐயம்; doubt, hesitation, suspicion.

     “சங்கையுத் துணிவும்” (திவ்.பெரியதி.4, 5, 8);.

   2. அச்சம் (வின்.);; fear, terror, apprehension.

   2. பூதபிசாசு முதலியவை; evil spirit.

     “சங்கையஞ்சார்… பங்கயத்தானடிப் பக்தர்களே” (திருநூற்.68);.

     [Skt.{} → த.சங்கை1.]

 சங்கை2 caṅgai, பெ.(n.)

   1. எண்ணம்; motive, thought.

     “சங்கையிற் சழக்கிலன்” (கம்பரா.சம்பா.28);.

   2. வழக்கம் (வின்.);; custom, usage.

     [Skt.{} → த.சங்கை2.]

சங்கைக்கேடு

 சங்கைக்கேடு caṅgaikāṭu, பெ. (n.)

   புகழ்க்கேடு (வின்.);; disgrace, dishonour.

ம. சங்கக்கேடு

     [சங்கை = மேன்மை, புகழ், சங்கை + கேடு]

சங்கைசங்கையாக

 சங்கைசங்கையாக saṅgaisaṅgaiyāka,    இழிவாக; fowl usage of words.

   சங்கை சங்கையாகத் திட்டினான்;     [சங்கை+சங்கை+ஆக]

சங்கைத்தாழ்ச்சி

 சங்கைத்தாழ்ச்சி caṅgaittāḻcci, பெ. (n.)

   புகழின்மை (யாழ்ப்.);; disrepute (செ.அக.);.

     [சங்கை = மேன்மை. சங்கை + தாழ்ச்சி]

சங்கைப்பாடு

சங்கைப்பாடு caṅgaippāṭu, பெ.(n.)

   ஐயப்பாடு; doubt, uncertainty.

     “எங்கள் குடியிருப்புச் சங்கைப்பா டென்னத்தகாது” (தெய்வச்.விறலிவிடு.233);.

     [Skt.{}+ → த.சங்கை+பாடு.]

சங்கைமான்

 சங்கைமான் caṅgaimāṉ, பெ. (n.)

   மதிப்புள்ளவன் (வின்.);; a respectable person.

     [சங்கை = மேன்மை, மதிப்பு. சங்கை + மான். மகன் → மான்]

சங்கைமூலி

 சங்கைமூலி caṅgaimūli, பெ. (n.)

   பெருமருந்து; Indian birth-wort-Aristolochia Indica (சா.அக.);.

     [சங்கை + மூலி]

சங்கையீனம்

 சங்கையீனம் caṅgaiyīṉam, பெ. (n.)

   இழிவாகப் பேசுதல் (வின்);; indecency as in talk or conversation.

     ‘அவன் சங்கையீனமாகப் பேசுகிறான்’ (செஅக.);.

     [சங்கை = மேன்மை, புகழ். சங்கை + ஈனம்]

 Skt. {} → த. ஈனம்

சங்கைவான்

 சங்கைவான் caṅgaivāṉ, பெ. (n.)

சங்கைமான் பார்க்க;see {} (செ.அக.);.

     [சங்கைமரன் → சங்கைவான்]

சங்கைவிடம்

 சங்கைவிடம் caṅgaiviḍam, பெ.(n.)

   பாம்பைத் தொடுதல், பார்த்தல் முதலியவற்றால் தோன்றிய அச்சத்தாலாகிய நோய் (சீவரட்.);; suffering caused by fear at the sight or touch of serpents.

     [Skt.{}+{} → த.சங்கைவிடம்.]

சங்கொலி

 சங்கொலி caṅgoli, பெ. (n.)

   சங்கிலிருந்து எழும் ஒலி; blowing sound of a conch.

ம. சங்கொலி, சங்குவிளி

     [சங்கு + ஒலி]

சங்கொலிக்குப்பம்

 சங்கொலிக்குப்பம் caṅgolikkuppam, பெ. (n.)

   கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊர்; a village in Cuddalore district.

மறுவ. சங்கிலிகுப்பம்

     [சங்கொலி + குப்பம்]

சங்கொலி = சங்குகளில் சிறந்த வலம்புரிச் சங்குகளின் ஒலி, சங்கொலிகுப்பம்= வலம்புரிச் சங்குகளின் ஒலி கேட்கப்படும் ஊர்.

சங்கோசகம்

 சங்கோசகம் caṅācagam, பெ.(n.)

   இறப்பை யுண்டாக்கும் ஒரு நச்சுக் கிழங்கு; a poisonous root causing death (சா.அக.);.

சங்கோசனகாரி

சங்கோசனகாரி caṅācaṉakāri, பெ.(n.)

   துவர்ப்புப் பொருள் (பைஷஜ.12);; astringents.

     [Skt.{}+ → த.சங்கோசனகாரி.]

சங்கோசபரிவாரம்

சங்கோசபரிவாரம் caṅācabarivāram, பெ.(n.)

   தக்கோரை மதித்தழைப்பதற்கென்று, அரசனால் நியமிக்கப்பட்ட சிறு கூட்டத்தார் (சிலப்.28, 89, உரை);; a small company of men appointed by a king to receive guests.

     [Skt.{}+{} → த.சங்கோச பரிவாரம்.]

சங்கோசபிசுனம்

 சங்கோசபிசுனம் saṅāsabisuṉam, பெ.(n.)

   செஞ்சாந்து (குங்குமம்.);; English saffron-croeus sativus (சா.அக.);.

சங்கோசம்

சங்கோசம் caṅācam, பெ.(n.)

   1. சுருங்குகை; contracting, shrinking.

     “மாயையிதற் கிருதருமஞ் சங்கோச விகாச மென்றாம்” (வேதா.சூ.60);.

   2. கூச்சம்; bashfulness, shyness, coyness, ticklishness.

     [Skt.{} → த.தங்கோசம்.]

சங்கோசா

 சங்கோசா caṅācā, பெ. (n.)

   விலை மதிப்புள்ள திருக்கைமீன் வகையுளொன்று (நெல்லை.);; a kind of valuable tirukkai fish.

சங்கோசி

 சங்கோசி caṅāci, பெ.(n.)

   கூச்சம் நிறைந்தவர் (அ.வ.);; shy person.

     “அவன் சரியான சங்கோஜி; பெண்களை சரியாக நிமிர்ந்துகூடப் பார்க்கமாட்டான்” (கிரியா.);.

சங்கோபனம்

 சங்கோபனம் caṅāpaṉam, பெ.(n.)

   மறைவு (சங்.அக.);; secrecy.

     [Skt.{} → த.சங்கோபனம்.]

சங்கோலம்

 சங்கோலம் caṅālam, பெ.(n.)

   தயிர்; curd (சா.அக.);.

சங்சரம்

சங்சரம் caṅcaram, பெ.(n.)

   1. சஞ்சலம் பார்க்க;see {}.

     “சஞ்சரத் திரைக்கரங்களால்” (பாரத.சம்பவ.40);.

   2. உடல் (இலக்.அக.);; body.

   3. வழி (சங்.அக.);; way path.

     [Skt.{} → த.சஞ்சரம்.]

சங்சலரகிதன்

சங்சலரகிதன் caṅcalaragidaṉ, பெ.(n.)

   மனக்கலக்கமற்றன் (தாயு.கருணாகர.1);; a person of undisturbed equanimity; one who is resolute and steadfast.

     [Skt.{}+rahita → த.சஞ்சலரகிதன்.]

சங்சாமாருதம்

 சங்சாமாருதம் caṅcāmārudam, பெ.(n.)

சண்டமாருதம் பார்க்க;see {}.

     [Skt.{}+{} → த.சஞ்சாமாருதம்.]

சங்சிதம்

சங்சிதம் caṅcidam, பெ.(n.)

   1. சேர்த்து வைக்கப்பட்டது; what is stored up, accumulated.

   2. தொடக்கம் கண்டறியப்படாத காலந்தொட்டு ஈட்டப்பட்டுள்ள கருமத்தில் துய்த்துத்தீர்ந்ததுபோக எஞ்சியது; accumulated karma of former births that still remains to be experienced, one of three karumam. q.v.

     “பிராயச்சித்தஞ் சஞ்சிதந் தவிர்க்கும் மன்றே” (பிரபோத.39, 18);.

     [Skt.{} → த.சஞ்சிதம்.]

சங்சேபம்

 சங்சேபம் caṅcēpam, பெ.(n.)

   சுருக்கம்; abstract, epitome.

     [Skt.{} → த.சங்சேபம்.]

சங்பங்கோழி

 சங்பங்கோழி caṅpaṅāḻi, பெ. (n.)

   காட்டுக் கோழி (திவா.);; grey jungle fowl.

மறுவ. கம்புள்

     [சம்பு + அம் + கோழி, குள் → கொழு → கோழி = நிலத்தையும் குப்பையும் கிளைக்கும் பறவை]

சம்பங்கோழி

சங்பளங்கி

 சங்பளங்கி caṅpaḷaṅgi, பெ.(n.)

   நக்கவாரத் தீவு; Nicobar islands.

     [Malay.sam-balang → த.சம்பளங்கி.]

சசகதி

 சசகதி sasagadi, பெ.(n.)

   குதிரை நடை ஐந்தனுள் முயலோட்டம் போன்ற நடை (திவா.);; a hare-like pace of horse, one of the five {}-kadi (q.v.);.

சசகம்

 சசகம் sasagam, பெ. (n.)

சசம் பார்க்க (சங்.அக.);;see {}.

     [சசம் → சசகம்]

த. சசகம் → Skt. {}

 சசகம் sasagam, பெ.(n.)

சசம் பார்க்க;see {}.

     [Skt.{} → த.சசகம்.]

சசகாரம்

 சசகாரம் sasakāram, பெ. (n.)

   காட்டுமா; jungle mango – Spondias mangifera (சா.அக.);.

சசசசவெனல்

சசசசவெனல் sasasasaveṉal, பெ. (n.)

   காற்று ஒலிக்குறிப்பு; onom. expr. signifying the blowing of the wind.

 seeவாயுவுக்குச் சசசச வான ஒலியும்’ (சி.சி. 2.65 மறைஞா);.

     [சசசச + எனல்]

சசசிருங்கம்

 சசசிருங்கம் sasasiruṅgam, பெ.(n.)

   முயற்கொம்பு; hare’s horn, a term figuratively used for indicating an impossibility or sometimes rarity (சா.அக.);.

சசச்செய்தி

 சசச்செய்தி sasasseyti, பெ. (n.)

   இல்பொருள் சான்றுக்குச் சுட்டப்படும் முயற்கொம்;பு hares horn, a term of illustrating and impossibility.

     [சசம் + செய்தி]

சசன்

சசன் sasaṉ, பெ. (n.)

   முயல் போன்ற இயல்பினன் (முயற் சாதியாடவன்); (கல்லா. 7, மயிலேறும். உரை);; man of hare like nature one of three {}.

     [செவியன் = முயல். செவியன் → செயன் → செசன் → சசன்.]

சசபரம்

 சசபரம் sasabaram, பெ. (n.)

   நாணல்; kaus, a large and coarse grass (செ.அக.);.

     [சரம் = நாணல். சரம் → சரபரம் → சயபரம் → சசபரம்]

சசமதம்

 சசமதம் sasamadam, பெ.(n.)

   மான்மணத்தி (கத்தூரி); (மூ.அ.);; musk.

     [சகம் + மதம்.]

     [Skt.{} → த.சச(ம்);.]

சசம்

 சசம் sasam, பெ. (n.)

   முயல் (திவா.);; hare, rabbit.

     [செவியன் → செயன் → சயன் → சசன் → சசம்]

த. சசம் → Skt. {}

சசம் என்பதற்கு மா.வி. அகரமுதலியில் மூலம் காட்டப்படவில்லை. இந்தைரோப்பிய மொழிகளிலும் இதற்கு இனச்சொல் இல்லை.

சசம்பரி

 சசம்பரி sasambari, பெ. (n.)

   ஆமணக்கு (மலை.);; castor plant.

சசம்பிரியம்

சசம்பிரியம் sasambiriyam, பெ. (n.)

   1. வெள்ளாம்பல்; white Indian water-lily.

   2. முத்து; pearl (சாஅக.);.

சசலம்

 சசலம் sasalam, பெ.(n.)

   ஈரம்; dampness (சா.அக.);.

சசவாதம்

 சசவாதம் sasavātam, பெ. (n.)

   முயல் ஊதை (மூ.அ.);; epilepsy.

     [சச(ம்); + வாதம்]

 Skt. {} → த. வாதம்

சசவிசாணம்

சசவிசாணம் sasavisāṇam, பெ.(n.)

   முயற்கொம்பு (இல்பொருட்டு எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது); (வேதா.சூ.57, உரை);; hare’s horn, a term for illustrating an impossibility.

     [Skt.{}+{}< த.சசவிசாணம்.]

சசாங்கன்

 சசாங்கன் cacāṅgaṉ, பெ. (n.)

   திங்கள் (முயர்கறையுடையவன்);; moon, as hare- marked (செ.அக.);.

     [சச(ம்); + அங்கன்]

 Skt. {} → த. அங்கம்;

அங்கம் → அங்கன்

 சசாங்கன் cacāṅgaṉ, பெ.(n.)

   நிலவன் (முயற்கறையுடையவன்);; moon as have marked.

     [Skt.{} → த.சசாங்கன்.]

சசாணிகம்

 சசாணிகம் cacāṇigam, பெ. (n.)

   நன்னாரி; Indian sarsaparilla – Hemidesmus indicus alias Periploca indica (சா.அக.);.

சசாதனம்

சசாதனம் cacātaṉam, பெ. (n.)

   1. கழுகு; vulture.

   2. பருந்து; heron, kite (சா.அக.);.

சசாபம்

 சசாபம் cacāpam, பெ. (n.)

   சிறுநன்னாரி (மலை.);; a kind of Indian sarasaparilla.

சசி

சசி1 sasi, பெ. (n.)

   திங்கள் (பிங்.);; moon.

     [சசம் → சசி = முயல் வடிவத்தைத் தம்முள் கொண்டது]

 சசி2 sasi, பெ. (n.)

   மழை (அக.நி.);; rain.

     [கசி → சசி]

 சசி1 sasi, பெ.(n.)

   1. சசாங்கன் (பிங்.); பார்க்க;see {}.

   2. கருப்பூரன் (சூடா.);; camphor.

   3. இந்துப்பு (தைலவ.தைல.119);; rock-salt.

   4. கடல் (அக.நி.);; sea.

     [Skt.{} → த.சசி1.]

 சசி2 sasi, பெ.(n.)

   இந்திராணி; wife of Indran.

     [Skt.{} → த.சசி2.]

சசிகன்னம்

 சசிகன்னம் sasigaṉṉam, பெ. (n.)

   நில வுலகத்திற்கும் திங்களுக்குமுள்ள தொலைவு (வின்.);; true distance of the moon from the earth (Astron.);.

     [சசி + கன்னம்]

சசிகலை

 சசிகலை sasigalai, பெ. (n.)

   தேய்ந்து வளரும் இயல்புடைய திங்கள்; moon.

     [சசி + கலை]

த. கலை → Skt. {}

சசிகாந்தம்

 சசிகாந்தம் sasikāndam, பெ. (n.)

   திங்கள் காந்தமணி (சந்திரகாந்தமணி);; moonstone, a crystal said to emit water when exposed to moonlight, as moon-beloved

     [சசி + காந்தம். காந்து → காந்தம்]

சசிகேந்திரம்

சசிகேந்திரம் sasiāndiram, பெ. (n.)

   1. திங்கள் வீட்டுக்கு ஒன்று நான்கு ஏழு பத்தாம் இடங்களில் இருக்கை; situation of the moon in the ascendant or in the fourth, seventh or tenth house from it. (Astrol.);.

   2. திங்களின் வேறுபாடு; moon’s anomaly (Astron.);. (செ.அக.);.

     [சசி + கேந்திரம்]

 Skt. {} → த. கேந்திரம்

சசிசேகரன்

சசிசேகரன் sasisēkaraṉ, பெ. (n.)

சசியுடையான் பார்க்க;see {}.

     [சசி + சேகரன்]

 சசிசேகரன் sasisēkaraṉ, பெ.(n.)

   சந்தினைத் தலையில் சூடிய சிவன்;{}, as wearing the moon on his head.

     [Skt.{} → த.சசி2.]

சசிதரன்

 சசிதரன் sasidaraṉ, பெ.(n.)

சசிசேகரன் பார்க்க (பிங்.);;see {}.

சசிதாகிகம்

 சசிதாகிகம் sasitāgigam, பெ. (n.)

   வெண் சந்தனம்; white sandal-wood – Santanum album (சாஅக.);.

சசிதுருவம்

 சசிதுருவம் sasiduruvam, பெ. (n.)

   கோள் சாய்வு (கிராந்தி); பாதத்துக்கும் திங்கள் நிலைக்கும் ஒரு குறித்த காலத்திலிருந்து கிழக்கு மேற்கிலுள்ள சராசரி வேறுபாடு; mean longitude of the moon at epoch.

     [சசி + துருவம்]

சசிதேகம்

 சசிதேகம் sasitēkam, பெ. (n.)

   திங்கள் வட்டம் (வின்.);; moon’s disk.

     [சசி + தேகம்]

 Skt. {} → த. தேகம்.

சசிபுடபுத்தி

 சசிபுடபுத்தி sasibuḍabutti, பெ. (n.)

   குறித்த காலத்தில் திங்களுக்கு உரிய கதி (வின்.);; true motion of the moon in a given time (Astron);.

     [சசி + புடபுத்தி]

 சசிபுடபுத்தி sasibuḍabutti, பெ.(n.)

   குறிப்பிட்ட நேரத்திலேற்படும் நிலவின் நிலை (வின்.);; true motion of the moon in a given time.

     [சசிபுடம் + புத்தி.]

     [Skt.{}+puta → த.சசிபுடம்.]

சசிபுடம்

 சசிபுடம் sasibuḍam, பெ.(n.)

   குறித்த காலத்தில் கோள்சாய்விலிருந்து நிலவு நிற்கும் நிலை (வின்.);;     [Skt.{}-puta → த.சசிபுடம்.]

சசிப்பிரியம்

சசிப்பிரியம் sasippiriyam, பெ. (n.)

   1. முத்து (மூ.அ.);; pearl.

   2. வெள்ளாம்பல் பார்க்க; white Indian water-lily (செ.அக);.

     [சசி + பிரியம். புரியம் → பிரியம்]

 சசிப்பிரியம் sasippiriyam, பெ.(n.)

   1. முத்து (மூ.அ.);; pearl.

   2. வெள்ளாம்பல்; white indian water – lily.

     [Skt.{}+priya → த.சசிப்பிரியம்.]

சசிமணாளன்

 சசிமணாளன் sasimaṇāḷaṉ, பெ.(n.)

 IOndran, as husband of {}.

     [சசி + மணாளன்.]

     [Skt.{} → த.சசி.]

சசியம்

சசியம்1 sasiyam, பெ. (n.)

   1. பயிர் (சி.சி. 2, 58, சிவாக்.);; crop.

   2. தவசம், காய்கனி முதலிய விளைபொருள் (வின்.);; grain, fruit, vegetable produce.

     [செய் = நிலம், புன்செய் நிலம், வயல். செய் → சய் → சசி → சசியம் = வயலில் விளையும் பயிர், விளைபொருட்கள்]

த. சசியம் → Skt. sasya

 சசியம்2 sasiyam, பெ. (n.)

   மரா (மலை.);; Ceylon ebony.

     [சசியம்1 → சசியம்]

 சசியம்3 sasiyam, பெ. (n.)

   இந்துப்பு (மூ.அ.);; rock-salt.

     [சசி → சசியம்]

 சசியம்4 sasiyam, பெ. (n.)

   1. கஞ்சா (மலை.);; Indian hemp.

   2. நிலப்பனை; a plant common in sandy tracts (செ.அக.);.

     [சசி → சசியம்]

சசியா

 சசியா sasiyā, பெ. (n.)

   ஆச்சா அல்லது மரா மரம்; Ceylon cbony – Diospyros ebenum (செஅக.);.

     [சசியம் → சசியா]

சசியாதிதம்

 சசியாதிதம் sasiyādidam, . பெ. (n.)

   மாசிபத்திரி; santonic wood – Artemesia Indica (சாஅக.);.

சசியாதிபதி

 சசியாதிபதி sasiyādibadi, பெ. (n.)

   ஒவ்வொரு ஆண்டிற்குமுரிய பயிர்த்தலைவர் (பஞ்சாங்.);; the planet which is lord of the crops for the year (செ.அக.);.

     [சசியம் + அதிபதி]

சசியாதிபன்

 சசியாதிபன் sasiyātibaṉ, பெ. (n.)

சசியாதிபதி பார்க்க;see {} (செஅக.);.

     [சகியாதிபதி → சசியாதிபன்]

சசியாமி

 சசியாமி sasiyāmi, பெ. (n.)

   முயற் செவிக் கள்ளி; a kind of spurge, the leaves of which resemble the ear of a hare, probably referring to leaf spurge – Euphorbia neirifolia (சா.அக.);.

     [சசி → சசியாமி]

சசியுடையான்

 சசியுடையான் sasiyuḍaiyāṉ, பெ. (n.)

   திங்களைத் தலையில் அணிந்தவன், சிவன்;{}, as wearing the moon on His head.

     [சசி + உடையவன்]

சசியுப்பு

 சசியுப்பு sasiyuppu, பெ.(n.)

   இந்துப்பு; rock salt; sindh salt (சா.அக.);.

சசிவன்

சசிவன் sasivaṉ, பெ.(n.)

   1. அமைச்சன்; minister.

   2. நண்பன்; friend.

     [Skt.saciva → த.சசிவன்.]

சசிவர்ணபோதம்

 சசிவர்ணபோதம் sasivarṇapōtam, பெ.(n.)

   தத்துவராயர் தமிழில் இயற்றிய ஒரு மறைமுடிவு நூல்; a {} work in Tamil by {}.

     [Skt.{}-varna-{} → த.சசிவர்ண போதம்.]

சசிவல்லவன்

 சசிவல்லவன் sasivallavaṉ, பெ.(n.)

சசிமணாளன் பார்க்க (பிங்.);;see {}.

     [சசி + வல்லவன்.]

     [Skt.{} → த.சசி.]

சசிவிக்கேபம்

சசிவிக்கேபம் sasivikāpam, பெ. (n.)

   திங்களின் மறைப்பு காலத்தில் மேழமாதியாக வேனும் தலையாதியாக வேனும் நிற்கும் நிலை (சூடா. உள். 441);; moon’s latitute during eclipse position of the moon to the north or south of the ecliptic during eclipse.

சசுந்தரம்

 சசுந்தரம் sasundaram, பெ.(n.)

   ஒரு கடைச் சரக்கு; a bazaar drug (சா.அக.);.

சசுபம்

சசுபம் sasubam, பெ. (n.)

   1. அசோகு (மலை); பார்க்க;see Asoka tree.

   2. நெட்டிலிங்கம்; mast tree (செஅக.);.

சசுபாகிரம்

 சசுபாகிரம் sasupākiram, பெ.(n.)

   முக்கூட்டு நெய்; நோய் தீர்ந்தவுடன் தலைமுழுகக் கொடுப்பது; a mixture of three oils viz., cow’s ghee, gingelly oil and castor oil. It is prescribed for patients to have an oil bath immediately after cure (சா.அக.);.

த.வ. முக்கூட்டெண்ணெய்.

சசேலசநானம்

 சசேலசநானம் sasēlasanāṉam, பெ.(n.)

   சாச்சடங்கில் உடுத்த உடையோடு முழுகுகை; ceremonial bathing without undressing oneself.

     [Skt.{}-{}+{} → த.சசேலஸ்நானம்.]

சசோபநேத்திரபாகம்

 சசோபநேத்திரபாகம் cacōpanēttirapākam, பெ.(n.)

   கண் நோவெடுத்து, குத்தல் குண்டு, பீளை சேர்ந்து, சீழும் நீரும் வடிந்து விழியில் எரிச்சலை யுண்டாக்கும் ஒரு கண்ணோய்; an eye disease attended with symptoms of itching sensation, pricking pain, suppuration of the eyes, deposit of mucous matters, slimy discharge lacrimation and inflammation with burning sensation (சா.அக.);.

த.வ. குத்தல் கண்ணோய்.

சச்சடம்

 சச்சடம் caccaḍam, பெ. (n.)

   தாமரை (மலை.);; lotus (செஅக.);.

சச்சடி

 சச்சடி caccaḍi, பெ. (n.)

   மக்கள் திரண்டு கூடுகை (யாழ்ப்.);; crowding, thronging of people (செஅக.);.

     [சந்தடி → சச்சடி]

சச்சதுரம்

 சச்சதுரம் caccaduram, பெ. (n.)

   சமசதுரம்; perfect square

     ‘வீட்டுக்குச் சச்சதுரமாகக் கூரை போடு’ (உ.வ.);

     [சமம் + சதுரம்;சமசதுரம் → சச்சதுரம்.]

சச்சந்தன்

 சச்சந்தன் caccandaṉ, பெ.(n.)

   சீவகனுடைய தந்தை (சீவக.);; father of {}.

     [Skt. satyan-dhara → த.சச்சந்தன்.]

சச்சனம்

சச்சனம்1 caccaṉam, பெ. (n.)

   நாவல்; common jaumoon – Eugenia jambolina (சா.அக.);.

 சச்சனம்2 caccaṉam, பெ. (n.)

   காவல் (யாழ்.அக.);; protection, watch (செ.அக.);.

 சச்சனம் caccaṉam, பெ.(n.)

   நாவல்; common jaumoon-Eugenia jambolina (சா.அக.);.

சச்சம்

 சச்சம் caccam, பெ.(n.)

   உண்மை (வின்.);; truth, genuineness.

     [Skt.satya → த.சச்சம்.]

சச்சம்பிரதாயம்

சச்சம்பிரதாயம் caccambiratāyam, பெ.(n.)

   நல்ல வரன்முறை; good custom or approved usage.

     “சச்சம்பிரதாயந் தாமுடையோர் கேட்டக்கால்” (உபதேசரத்.58);.

     [Skt.{} → த.சச்சம்பிரதாயம்.]

சச்சரவு

 சச்சரவு caccaravu, பெ. (n.)

   கலகம்; quarrel, disturbance (செ.அக.);.

     [சல் → சச் → சச்சு + அரவு]

சச்சரி

சச்சரி caccari, பெ. (n.)

   இசைக்கருவி (வாத்திய); வகை; a kind of drum.

 seeகொக்கரையின் சச்சரியின் பாணியானை” (தேவா. 722, 1);.

     [சச் + அரி. அரி = மருதநிலப் பறை.]

த. சச்சரி → Skt. jharjhara.

சச்சரை

சச்சரை1 caccarai, பெ. (n.)

சச்சரவு பார்க்க;see {}.

     [சச்சரவு → சச்சரை]

 சச்சரை2 caccarai, பெ. (n.)

   பிளந்த துண்டு (நன். 273, மயிலை.);; broken piece.

     [அரி = துண்டம். சச் + அரி → சச்சரி = சமமான துண்டம். சச்சரி → சச்சரை = பிளந்த துண்டு.]

 சச்சரை3 caccarai, பெ. (n.)

சச்சரி பார்க்க (நன். 273, மயிலை.);;see {}.

     [சச்சரி → சச்சரை]

 சச்சரை4 caccarai, பெ. (n.)

சச்சரவு பார்க்க;see {}.

     [சச்சரவு → சச்சரை]

சச்சரைப்படு-தல்

சச்சரைப்படு-தல் caccaraippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   சண்டை பிடித்தல்; to engage fight.

     [சச்சரை + படு-,]

சச்சற்புடன்

சச்சற்புடன் caccaṟpuḍaṉ, பெ.(n.)

   இரண்டு குருவும், ஓர் இலகுவும், ஒரு புலுதமுமாக எட்டு மாத்திரை கொண்ட தாளவகை (பரத.தாள.11);;த.வ. எண்மாத்திரைத்தாளம்.

     [Skt.caccat-puta → த.சச்சற்புடம்.]

சச்சவுக்கம்

 சச்சவுக்கம் caccavukkam, பெ. (n.)

   சமச் சதுரம்; exact sqare (செ.அக.);.

தெ. சச்சக்கமு.

     [சமச்சதுக்கம் → சச்சவுக்கம்]

சச்சாயிரு

சச்சாயிரு1 caccāyiruttal,    3 செ.கு.வி. (v.i.)

   புகையிலை முதலியன தாழ்ந்ததாயிருத்தல். (யாழ்ப்.);; to be of inferior quality, as tobacco (செஅக.);.

     [சச்சு + ஆய் + இரு-,]

 சச்சாயிரு2 caccāyiruttal,    3 செ.கு.வி. (v.i.)

   1. நெருக்கமாயிருத்தல் (கொ.வ.);; to be crowded.

   2. குழப்பமாயிருத்தல்; to be in confusion (செஅக.);.

     [சள் → சச்சு + ஆயிரு-,]

சச்சாரம்

சச்சாரம் caccāram, பெ.(n.)

   யானைக்கூடம்; elephant-stable.

     “வாசமுறு சச்சாரமீ தென்னை….. மத்தகசமென வளர்த்தாய்” (தாயு.மௌனகுரு.1);.

     [T.{}<{}< த.சச்சாரம்.]

சச்சிதம்

 சச்சிதம் caccidam, பெ. (n.)

   அழகுபடுத்தி வைக்கை (யாழ்.அக.);; state of being fully decorated or dressed (செ.அக.);.

     [சச்சு + இதம்]

சச்சிதானந்தன்

 சச்சிதானந்தன் caccitāṉandaṉ, பெ.(n.)

   உளதாயிருத்தல் மெய்யறிவு இன்பம் என்னும் முக்குணங்களையுடைய பரம்பொருள்; the Supreme Spirit, as having the threefold attributes of existence, knowledge and bliss.

     [Skt.{}+{}+{} → த.சச்சிதானந்தன்.]

சச்சிதானந்தம்

 சச்சிதானந்தம் caccitāṉandam, பெ. (n.)

   கல்லுப்பு; insoluble rock-salt found underneath the sea (சாஅக.);.

சச்சிதானந்தவெளி

சச்சிதானந்தவெளி caccitāṉandaveḷi, பெ. (n.)

சச்சிதானந்தம்1 பார்க்க;see {} (செஅக.);.

     [சச்சிதானந்தம் + வெளி]

சச்சிதானந்தை

சச்சிதானந்தை caccitāṉandai, பெ.(n.)

   உளதாயிருத்தல். மெய்யறிவு, இன்பம் என்னும் முன்குணங்களுடைய உமாதேவி (சக்தி சொரூபம்);; the Supreme {}, as having the three fold attributes of existence, knowledge and bliss.

     “அகண்டாகார சச்சிதானந்தையை யறியாதபேர்” (சி.சி.148 சிவாக்.);

     [Skt.sat+cit+{}-nanda → த.சச்சிதானச்தை.]

சச்சினி

 சச்சினி cacciṉi, பெ.(n.)

   ஆறாவது மாதம்; the sixth month (சா.அக.);.

சச்சு

சச்சு1 caccu, பெ. (n.)

   1. தாழ்ந்த தரமான புகையிலை முதலியன (யாழ்ப்.);; inferior quality of articles as tobacco leaves.

   2. பதர் (இ.வ.);; chaff (செ.அக.);.

தெ. சச்சு

     [சுள் → சள் → சச்சு]

 சச்சு2 caccu, பெ. (n.)

   1. சந்தடி; crowd, throng, bustle, confusion.

   2. தொல்லை (தொந்தரவு); (இ.வ.);; irksomeness (செ.அக.);.

     [சல் → சள் → சச் → சச்சு]

 சச்சு3 caccu, பெ. (n.)

   பறவை மூக்கு (வின்.);; birds beak.

     [சுல் → சுண்டு → சொண்டு. சுல் → சல் → சல்சு → சச்சு]

 சச்சு4 caccu, பெ. (n.)

   சிறிதளவு (கொஞ்சம்);; littleness, smallness.

     ‘சச்சில் அடங்காது’ (செ.அக.);.

     [சற்று → சச்சு]

 சச்சு5 caccu, பெ. (n.)

   நீர்ச்சுண்டி (மலை.);; a kind of water mimosa.

     [சுல் → சல் → சல்சு → சச்சு]

 சச்சு6 caccudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அடித்தல், தட்டுதல்; to strike, to beat, to crush (கருநா.);.

   க. சச்சு, செச்சு, சுச்சு, சர்சு, செச்சு, தெ. சடின்சு, து, சுச்சு;பட. சச்சு.

     [சல் → சல்சு → சச்சு]

சச்சுண்டி

 சச்சுண்டி caccuṇṭi, பெ. (n.)

   நீர்ச்சுண்டி; sensitive plant floating on water – neptunia oleracia (சா.அக.);.

     [சச்சு → சச்சுண்டி]

சச்சுருவம்

 சச்சுருவம் caccuruvam, பெ.(n.)

   மெய்யுருவம் (இ.வ.);; exact resemblance or likeness.

     [Skt.{} → Tu.{} → த.சச்சுருவம்.]

சச்சுவாயு

சச்சுவாயு caccuvāyu, பெ.(n.)

   1. தூய்மைக்கேடான காற்று; contaminated air.

   2. மாசடைந்த காற்று; impure air or gas.

   3. கரியமில வாயு; carbonic acid gas (சா.அக.);.

த.வ.கெடுங்காற்று.

     [T.tcaccu+{} → தசச்சுவாயு.]

சச்சை

சச்சை1 caccai, பெ. (n.)

   சட்டை; jacket, coat (செ.அக.);.

     [சட்டை → சச்சை]

 சச்சை2 caccai, பெ. (n.)

   செறிகுழம்பு; a liquid of thick consistency, as sandal paste (செ.அக.);.

     [அள் → சள் → சள்சை → சச்சை]

 சச்சை3 caccai, பெ. (n.)

   சண்டை; quarel.

     ‘சச்சை வருமுன்னே நடவென்றான்’ (தெய்வச். விறலிவிடு, 471);.

     [சண்டை → சச்சை]

 சச்சை caccai, பெ. (n.)

சந்தனம்:

 sandal.

     “குங்குமச்சச்சைகமழும்தடந்தோளும்”(ஒட் t350);

     [சுள் → சள் → சள்சை → சச்சை]

சச்சையன்

சச்சையன் caccaiyaṉ, பெ.(n.)

   உண்மைப் பொருளானவன்; God, as reality.

     “சச்சையானே மிக்க தண்புனல்… விச்சையனே” (திருவாச.6, 31);.

     [Skt.{} → த.சச்யைன்.]

சஞ்சகாரம்

 சஞ்சகாரம் cañjakāram, பெ. (n.)

   அச்சாரம்; earnest money (செ.அக);.

தெ. சஞ்சகாரமு

     [அச்சு → அச்சாரம் = அடையாளமாகக் கொடுக்கும் முன்பணம். அச்சாரம் → சச்சாரம் → சஞ்சகாரம்]

சஞ்சகாரம் – Skt. {}.

சஞ்சடி

__,

பெ. (n.);

சந்தடி பார்க்க (யாழ். அக.);;see {}.

     [சந்தடி → சஞ்சடி]

சஞ்சத்தகர்

சஞ்சத்தகர் cañjattagar, பெ.(n.)

   போரில் வீரச் செய்கை ஒன்றைச் செய்வதாகச் சூளுரை செய்து, அச்சூளுரைப்படியே தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார்; a band of warrior kings who, under a vow, perform a heroic deed in battle.

     “அருச்சுனனைச் சஞ்சத்தகரொழிந்தார் வந்து அறை கூவிக்கொண்டு” (பாரதவெண்.772, உரைநடை);.

த.வ. சூள்வாறாமறவர்.

     [Skt.{} → த.சஞ்சத்தகத்.]

சஞ்சனம்

 சஞ்சனம் cañjaṉam, பெ.(n.)

   அணிகலன்களால் எழும் ஒலி (யாழ்.அக.);; tinkling of ornaments.

     [Skt.{} → த.சஞ்சனம்.]

சஞ்சமஞ்சம்

 சஞ்சமஞ்சம் cañjamañjam, பெ.(n.)

   ஆரவாரம் (கோஷ்டம்);; Arabian costus costus speciosus (ச.அக.);.

சஞ்சமனம்

 சஞ்சமனம் cañjamaṉam, பெ.(n.)

   முப்பிணிக் கூறுகளைச்சமனப்படுத்தி, அதனாலுண்டான சினங்களை அமைதிப் (சாந்தம்);படுத்தி, உடம்பினின்று கழிவு ஏற்படாமல் செய்யும் மருந்து; medicine rectifying the deranged humoursis this system and calm their excitement without promoting the excretions (சா.அக.);.

த.வ. சீர்செய் மருந்து.

சஞ்சம்

சஞ்சம் cañjam, பெ.(n.)

   1. பூணூல் (வின்.);; sacred cord or thread worn by the twice born.

   2. கச்சு (யாழ்.அக.);; sash.

     [T.tjannidamu<,{} → த.சஞ்சம்.]

சஞ்சயனம்

 சஞ்சயனம் cañjayaṉam, பெ.(n.)

   பால் தெளித்தலாகிய ஈமச்சடங்கு; funeral ceremony in which the ashes and bones of a cremated body are collected, sprinkled with milk and thrown into sacred waters.

த.வ. பால்தெளி.

     [Skt.{} → த.சஞ்சயனம்.]

சஞ்சயன்

சஞ்சயன் cañjayaṉ, பெ.(n.)

   திருதராட்டிரனுடைய தேர்ப்பாகன்; the cahrioteer of {}, a character in the Mahabharatam.

     “சஞ்சயன் றனை வருகவென்று” (பாரத.சஞ்சயன்றூது.2);.

     [Skt.{} → த.சஞ்சயன்.]

சஞ்சயம்

சஞ்சயம் cañjayam, பெ. (n.)

   கூட்டம் (யாழ். அக.);; assembly, multitude, collection.

     [சங்கை3 → சங்கியை = எண், எண்ணிக்கை; சங்கியை → சஞ்சியை → சஞ்சயம்]

த. சஞ்சயம் → Skt. {}

 சஞ்சயம்1 cañjayam, பெ.(n.)

   கூட்டம் (யாழ்.அக.);; assembly, multitude, collection.

     [Skt.sam-{} → த.சஞ்சயம்.]

 சஞ்சயம்2 cañjayam, பெ.(n.)

   ஐயம் (இலக்.அக.);; doubt.

     [skt.sam-{} → த.சஞ்சயம்.]

சஞ்சரி

 சஞ்சரி cañjari, பெ. (n.)

   தேனீ; honey-bee (சா.அக);

மறுவ. அளி

     [சல் → சல்சு → சஞ்சு = பறவை மூக்கு. சஞ்சு → சஞ்சரி = கூரிய கொடுக்கினை யுடையது]

சஞ்சரி-த்தல்

சஞ்சரி-த்தல் cañjarittal,    4 செ.கு.வி.(v.i.)

   1. நடமாடுதல்; to move about.

   2. திரிதல்; to wander, range, haunt, as beasts.

   3. வாழ்தல்; to lodge, dwell, abide.

     “மாலவிடஞ் சஞ்சரியாமல்” (தனிப்பா.ii.25, 57);.

   4. நெறிதப்பி ஒழுகுதல் (இ.வ.);; to lead immoral life.

     [Skt.{} → த.சஞ்சரி.]

சஞ்சரிகம்

சஞ்சரிகம் cañjarigam, பெ. (n.)

   வண்டு; bee.

     “சஞ்சரிக நறுமலர்த்தார்த் தனஞ்சயன்” (வியா.7:36);

     [சல் → சல்சு → சஞ்சு பறவை மூக்கு சஞ்சு → சஞ்சரி கூரிய கொடுக்கினையுடைய வண்டு]

 சஞ்சரிகம் cañjarigam, பெ.(n.)

சஞ்சரீகம் பார்க்க;see {}.

     “சஞ்சரிக நறுமலர்த்தால்” (பாரத.அருச்சுனன்றீர்.36);.

சஞ்சரிகை

 சஞ்சரிகை cañjarigai, பெ. (n.)

   இலந்தைப் பழம்; common jujube – Zizyphus jujuba (சாஅக.);.

சஞ்சரீகம்

சஞ்சரீகம் cañjarīkam, பெ.(n.)

   வண்டுவகை; a large black bee, beetle.

     “சஞ்சரீக மிசைபாட” (மச்சபு.நைமிசா.9);.

     [Skt.{} → த.சஞ்சரி.]

சஞ்சலசீவனன்

 சஞ்சலசீவனன் cañjalacīvaṉaṉ, பெ.(n.)

   ஒன்பான் மணியுளொன்று; topaz (சா.அக.);.

சஞ்சலனம்

 சஞ்சலனம் cañjalaṉam, பெ.(n.)

   அச்சத்தால் உண்டாகும் நடுக்கம் (யாழ்.அக.);; trepidation.

     [Skt.{} → த.சஞ்சலனம்.]

சஞ்சலம்

சஞ்சலம்1 cañjalam, பெ.(n.)

   1. காற்று; wind.

   2. மின்னல்; lighting.

     [Skt.{} → த.சஞ்சலம்.]

 சஞ்சலம்2 cañjalam, பெ.(n.)

   1. நிலையின்மை; fickleness, unsteadiness.

   2. விரைந்து அசைகை; rapid motion.

   3. நடுக்கம் (உரி.நி.);; trembling, shivering, tremulousness.

   4. துன்பம்; sorrow, grief, trouble.

     “சாந்துணையுஞ் சஞ்சலமே தான்” (நல்வழி.28);.

   5. நோய்; disease, ailment.

     “அவன் சஞ்சலமாய்க் கிடக்கிறான்” (வின்.);.

     [Skt.{} → த.சஞ்சலம்.]

சஞ்சலிக்கீரை

 சஞ்சலிக்கீரை cañjalikārai, பெ. (n.)

   ஒரு வகைக் கீரை; a kind of greens (சா.அக);.

     [சஞ்சலி + கீரை]

சஞ்சலை

 சஞ்சலை cañjalai, பெ. (n.)

   திப்பிலி (சங். அக.);; long pepper.

     [சஞ்சலி → சஞ்சலை]

சஞ்சலைசீவகன்

 சஞ்சலைசீவகன் cañjalaicīvagaṉ, பெ.(n.)

   குருந்தம் (புட்பராகம்); (யாழ்.அக.);; topaz.

சஞ்சா

 சஞ்சா cañjā, பெ.(n.)

   ஆற்றும் மருந்து; healling balm (சா.அக.);.

சஞ்சாங்கம்

 சஞ்சாங்கம் cañjāṅgam, பெ. (n.)

   பெரு முத்தக் காசு; koray root – Cyprus rotundus (சா.அக.);.

சஞ்சாயகம்

சஞ்சாயகம் cañjāyagam, பெ.(n.)

   வண்டு; bee.

     “சஞ்சாயகமங்குச் சார்ந்தால்” (கச்சி.வண்டுவிடு.396);.

     [Skt.{} → த.சஞ்சாயகம்.]

சஞ்சாயக்குளி

 சஞ்சாயக்குளி cañjāyakkuḷi, பெ.(n.)

   அரசாங்கத்தில் நடத்தும் முத்துக்குளி; pearl fishery undertaken by the government.

     [சஞ்சாயம் + குளி.]

     [Skt.{} → த.சஞ்சாயம்.]

சஞ்சாயம்

சஞ்சாயம் cañjāyam, பெ. (n.)

   1. குடிவாரம் (R.T.);; portion of the produce of a field assigned to the cultivator.

   2. நாட்கூலி; daily wages.

   3. குத்தகைக்கு நிலத்தைவிடாமல் உரிமையாளர் தாமே பயிர் செய்தல் (வின்.);; direct management of lands, fisheries, etc. by the proprietor.

   4. இலவயம் (வின்.);; gratuity.

   5. மிகுஉஊதியம் (நாஞ்.);; extra gain.

க. சந்தாய, சந்தாயித

     [சல் + ஆயம் = சல்லாயம் → சஞ்ஞாயம்= கட்ட வேண்டியதைச் செலுத்துதல். சல் = செலுத்துதல். ஆயம் = வரி]

சஞ்சாரசமாதி

 சஞ்சாரசமாதி sañsārasamāti, பெ.(n.)

   பசி தாகத்தை அமைதி (சாந்தி); செய்து கொண்டு நடக்கையிலும், இருக்கையிலும் இருபுருவ நடுவில் (கேசரி); மனத்தை நாட்டிக் கடைப்பிடிக்கும் ஒரு நிலைமை; a state or condition in which one after appeasing his hunger and thirst, concentgrates his mind even while walking and sitting during his wakeful life (சா.அக.);.

     [சஞ்சாரம் + சமாதி.]

     [Skt.{} → த.சஞ்சாரம்.]

சஞ்சாரபிரேதம்

சஞ்சாரபிரேதம் cañjārabirētam, பெ.(n.)

   நடைப்பிணம் மக்கட்பதர்; a good for nothing person, worthless fellow.

சிவபூசையில்லாதான்…. சஞ்சார பிரேதமெனக் கூறலாமே” (சிவரக.கத்தரிப்.19);.

த.வ. நடைப்பிணம்.

     [Skt.{}-{}+{} → த.சஞ்சார பிரேதம்.]

சஞ்சாரமன்

சஞ்சாரமன் cañjāramaṉ, பெ.(n.)

   1. உயிர்; life

   2. திரிந்து வாழ்பவன்; one leading a wandering life (சா.அக.);.

     [Skt.{}-{} → த.சஞ்சாரன்.]

சஞ்சாரம்

சஞ்சாரம்1 cañjāram, பெ.(n.)

   1. உலா; travelling, touring.

   2. நடமாட்டம்; movement, frequenting.

   3. அமைக்கப்படாது இயற்கையில் அமைந்த விடுதி (இ.வ.);; natural habitat.

   4. நெறிதப்பிய ஒழுக்கம்; immoral life.

   5. நடனத்திற்குரிய பாதவைப்பு வகை ஐந்தனுள் ஒன்று (சிலப்.3, 12, பக்.81, கீழ்க்குறிப்பு);;   6. எடுப்பிசையும் இறங்கிசையும் கலத்தல் (ஆரோகண அவரோகண); (விண்.);;     [Skt.{} → த.சஞ்சாரம்.]

 சஞ்சாரம்2 cañjāram, பெ.(n.)

சமுசாரம் பார்க்க;see {}.

     [Skt.sam-{} → த.சஞ்சாரம்.]

 சஞ்சாரம்3 cañjāram, பெ.(n.)

   1. தொற்று நோய்; contagious disease.

   2. நாக மணி (ரத்தினம்.);;{}, a fabulous gem.

     [Skt.{} → த.சஞ்சாரம்.]

சஞ்சாரவியாதி

 சஞ்சாரவியாதி cañjāraviyāti, பெ.(n.)

   தொற்று நோய் (வியாதி); (இ.வ.);; contagion, infectious, disease.

     [Skt.{}-{}+{} → த.சஞ்சாரவியாதி.]

சஞ்சாரி

சஞ்சாரி cañjāri, பெ. (n.)

   பூனைக் காஞ்சொறி; cowhage plant-Tragia involucrata (சா.அக);.

     [சஞ்சுரி → சஞ்சாரி]

 சஞ்சாரி1 cañjāri, பெ.(n.)

   1. அலைந்து திரிவோன்; wanderer, traveller.

   2. இசையின் பல வகை;     (Mus.); a melody type having a considerable variety of notes.

     [Skt.{}-{} → {}-{} → த.சஞ்சாரி.]

 சஞ்சாரி2 cañjāri, பெ.(n.)

   1. குடியானவன்; cultivator, farmer.

   2. பெருங்குடும்பமுடையவன்; a man having a large family.

     [sam-{} → த.சஞ்சாரி.]

சஞ்சாரிகன்

 சஞ்சாரிகன் cañjārigaṉ, பெ.(n.)

   தூதன் (யாழ்.அக.);; ambassador, messenger.

     [Skt.{} → த.சஞ்சாரிகன்.]

சஞ்சாலி

 சஞ்சாலி cañjāli, பெ.(n.)

   பெரிய துமுக்கி (வின்.);; large gun.

     [U.{} → த.சஞ்சாலி.]

சஞ்சாலிகம்

 சஞ்சாலிகம் cañjāligam, பெ.(n.)

சஞ்சரீகம் (சூடா.); பார்க்க;see {}.

சஞ்சாளிகம்

 சஞ்சாளிகம் cañjāḷigam, பெ.(n.)

சஞ்சரீசம் (சூடா.); பார்க்க;see {}.

சஞ்சாவரம்

 சஞ்சாவரம் cañjāvaram, பெ. (n.)

   தகரை; cassia foetid or ringworm plant – Cassia tora (சா.அக.);.

சஞ்சாவாதம்

 சஞ்சாவாதம் cañjāvātam, பெ.(n.)

   காற்றும் மழையும் (யாழ்.அக.);; wind and rain, stormy weather.

     [Skt.{}+{} → த.சஞ்சாவாதம்.]

சஞ்சி

 சஞ்சி cañji, பெ.(n.)

   பை (இ.வ.);; bag, pouch.

த.வ. தூக்குப்பை.

     [T.{} → த.சஞ்சி.]

சஞ்சிகை

 சஞ்சிகை cañjigai, பெ.(n.)

   புத்தகம் அல்லது தாளிகையின் பகுதி; part, as of book; issue, number, as of a periodical.

     [Skt.{} → த.சஞ்சிகை.]

சஞ்சிதிகை

 சஞ்சிதிகை cañjidigai, பெ. (n.)

   இலந்தைக் கனி; jujube fruit (சா.அக.);.

சஞ்சினி

 சஞ்சினி cañjiṉi, பெ. (n.)

   புளிக்கரணை; a species of soursorrel plant – Oxalis genus.

சஞ்சிமூலி

 சஞ்சிமூலி cañjimūli, பெ.(n.)

   உயிர்ப்பிக்கச் செய்யும் (சஞ்சீவி); மருந்து; elixir (சா.அக.);.

     [சஞ்சி + த.மூலி.]

     [Skt.{} → த.சஞ்சி.]

சஞ்சீவகரணி

சஞ்சீவகரணி cañjīvagaraṇi, பெ.(n.)

   1. மூர்ச்சைதீர்த்து உயிர்தரு(ம்); மருந்து (மூ.அ.);; medicine that restores suspended animation.

   2. புளியமரம் (பிங்.);; tamarind tree.

     [Skt.{}-{}-{} → த.சஞ்சீவகரணி.]

சஞ்சீவகாசிகம்

 சஞ்சீவகாசிகம் cañjīvagācigam, பெ. (n.)

   முசுறுப்புல்; maritime grass – Pommeruella cornucopia (சா.அக.);.

சஞ்சீவகி

 சஞ்சீவகி cañjīvagi, பெ. (n.)

   புளியமரம்; tamarind tree – Tamarindus indicus (சா.அக.);.

சஞ்சீவசரணியம்

 சஞ்சீவசரணியம் sañsīvasaraṇiyam, பெ. (n.)

   பாலை; ironwood – Mimusops hexandra(சா.அக.);.

சஞ்சீவனம்

சஞ்சீவனம்1 cañjīvaṉam, பெ.(n.)

   உயிர்ப்பிக்கை (யாழ்.அக.);; restoring to life, resuscitating.

     [Skt.{} → த.சஞ்சீவனம்.]

 சஞ்சீவனம்2 cañjīvaṉam, பெ.(n.)

   நிரய வகை (மணிமே.6, 181, அரும்.);; a hell.

     [Skt.{} → த.சஞ்சீவனம்.]

சஞ்சீவனி

சஞ்சீவனி cañjīvaṉi, பெ.(n.)

சஞ்சீவி பார்க்க;see {}.

     “சஞ்சீவனி கண்ட செம்பொனிமயாசலத்தில்” (திருவாவடு.கோ.113);.

     [Skt.{} → த.சஞ்சீவனி.]

சஞ்சீவனை

சஞ்சீவனை cañjīvaṉai, பெ.(n.)

   1. சஞ்சீவி பார்க்க;see {}.

   2. நாங்கூழ்; earth worm.

     [Skt.Perh.{} → த.சஞ்சீவனை.]

சஞ்சீவன்

 சஞ்சீவன் cañjīvaṉ, பெ. (n.)

   மாமரம் (மலை.);; mango tree.

சஞ்சீவராயர்

சஞ்சீவராயர் cañjīvarāyar, பெ.(n.)

   அனுமன் (M.E.R.95 of 1923);;{}.

     [Skt.{}+K.{} → த.சஞ்சீவராயர்.]

சஞ்சீவி

சஞ்சீவி cañjīvi, பெ.(n.)

   உயிர்ப்பிக்கும் மருந்து அல்லது மூலிகை; medicine or herb for reviving one from swoon or death.

     “மூர்ச்சை கடிதகல வலியவரு ஞான சஞ்சீவியே” (தாயு.சின்மயானந்த.3);.

   2. சீந்தில்; gulancha.

     [Skt.{} → த.சஞ்சீவி.]

சஞ்சீவிக்கருணை

 சஞ்சீவிக்கருணை cañjīvikkaruṇai, பெ. (n.)

காட்டுக்கரணை பார்க்க;see {} (சா.அக.);.

     [சஞ்சீவி + கருணை]

சஞ்சீவினி

சஞ்சீவினி cañjīviṉi, பெ.(n.)

சஞ்சீவி பார்க்க;see {}.

     “சோருமுயிர் பரக்குஞ் சஞ்சீவினிபோல்” (திருவாவடு.கோ.66);.

சஞ்சீவினிக்குடிகம்

 சஞ்சீவினிக்குடிகம் cañjīviṉigguḍigam, பெ. (n.)

   திரிகடுகம், திரிபலை, சேங்கொட்டை ஆகியவற்றைச் சேர்த்துச் செய்து பாம்புக் கடிக்கும் காய்ச்சலுக்கும் கொடுக்கும் மாத்திரை; a pill prepared from Trikadugu viz. dried ginger, long pepper and black pepper, tripala (consisting of gall-nut, tandri-fruite and gooseberry);, dhoby-nut etc. as chief ingredients and prescribed for snake-bites, typhoid fever, etc. (சா.அக.);.

     [சஞ்சீவினி + குடிகம். குளிகம் → குடிகம்]

சஞ்சீவிபருவதம்

 சஞ்சீவிபருவதம் cañjīvibaruvadam, பெ.(n.)

   இறந்தவரைப் பிழைப்பிக்கும் மூலிகை யுடையதாக இராமாயணத்துக் கூறப்பட்ட ஒரு மலை; a mountain mentioned in Ramayana, as producing herbs which restore the dead to life.

     [Skt.{}-{}+{} → த.சஞ்சீவி பருவதம்.]

சஞ்சீவிமூலிகை

 சஞ்சீவிமூலிகை cañjīvimūligai, பெ.(n.)

   உயிர்தரும் ஒருவகை மருந்துப் பச்சிலை (வின்.);; revivifying roots or herbs.

த.வ. உயிரூட்டி.

     [சஞ்சீவி + மூலிகை.]

     [Skt.{} → த.சஞ்சீவி.]

சஞ்சீவிமேதி

 சஞ்சீவிமேதி cañjīvimēti, பெ. (n.)

   முடக்கற்றான்; palsy curer – Cadiospermum halicacabum (சா.அக.);.

     [சஞ்சீவி + மேதி]

சஞ்சு

சஞ்சு1 cañju, பெ. (n.)

   1. பறவை மூக்கு; bird’s beak.

     ‘கனியிற் றீண்டுபு சஞ்சடர்த்திட’ (இரகு. குறைகூ. 31);.

   2. ஆமணக்கு (மலை.);; castor plant.

   ம. சுண்டு (பறவை மூக்கு);, சுண்டன் (கூரிய தோண்டு கருவி);;   க. சுண்டு;பர். சொண்ட். குவி. சுட (பறவைமூக்கு);

     [சுல் = குத்தற்கருத்துவேர். கல் = கண்டு, சொண்டு = பறவை மூக்கு. சுல் → சல் →

சல்சு → சச்சு = பறவை மூக்கு. சச்சு → சஞ்சு = பறவை மூக்கு, கூரிய முள்ளுள்ள ஆமணக்கு]

த. சஞ்சு → Skt. {}

 சஞ்சு2 cañju, பெ. (n.)

   குலப்பழக்கம் (வின்.);; manners, customs, habits, as peculiar to individuals or castes.

க. சஞ்சு

     [சல் = செல்லுதல். சல் → சஞ்சு → சஞ்சு = செல்லுதல், திரும்பத்திரும்பச் செல்லுதல், ஒரே வழியில் (பழக்கத்தில்); செல்லுதல், திரும்பத்திரும்ப ஒரு பழக்கத்தைக் கடைப்பிடித்தல், குலப்பழக்கம்]

 சஞ்சு3 cañju, பெ. (n.)

   சாயல் (யாழ்ப்.);; likeness, form, shape.

     [சய்யல் → சச்சல் → சச்சு → சஞ்சு]

சஞ்சுகை

சஞ்சுகை cañjugai, பெ. (n.)

சஞ்சு3 பார்க்க;see {} (செ.அக.);.

     [சஞ்சு → சஞ்சுகை]

சஞ்சுபம்

சஞ்சுபம் cañjubam, பெ. (n.)

   1. அரசர்க்குரிய விருதுகள்; paraphernalia of a king.

     ‘சஞ்சுபவர்க்கந் தளதளென’ (பணவிடு. 75);.

   2. உடைமை (வின்.);; appurtenances.

சஞ்சுரி

 சஞ்சுரி cañjuri, பெ. (n.)

   காஞ்சொறி; climbing nettle – Tragia involucrata (சா.அக.);.

     [காஞ்சொறி → சஞ்சுரி]

சஞ்சுவம்

 சஞ்சுவம் cañjuvam, பெ. (n.)

சஞ்சுபம் (வின்.); பார்க்க;see {}.

     [சஞ்சு → சஞ்சுவம்]

சஞ்சுவிருதம்

 சஞ்சுவிருதம் cañjuvirudam, பெ.(n.)

   பறவை; bird (சா.அக.);.

சஞ்சேபம்

 சஞ்சேபம் cañjēpam, பெ. (n.)

   சுருக்கம்; epitome, abstract (செ.அக.);.

     [சஞ்சு → சஞ்சேபம்]

த. சஞ்சேபம் → Skt. {}

 சஞ்சேபம் cañjēpam, பெ.(n.)

   சுருக்கம்; epitome, abstract.

     [Skt.{}-{} → த.சஞ்சேபம்.]

சஞ்சேயம்

 சஞ்சேயம் cañjēyam, பெ. (n.)

   ஈட்டியது; earned things.

சஞ்சை

சஞ்சை cañjai, பெ. (n.)

   1. பெருமழை (யாழ்அக);; heavy rain.

   2. பேரொலி; loud noise.

   ஒ.நோ. க. சடி, சடிமழெ (தொடர்மழை);;பட. சாடுமே (பெருமழை);

     [சடசட = பேரொலியைக் குறிக்கும் ஒலிக் குறிப்புச் சொல், சடசட = மழை விழுதலைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொல். சட → சடி → சடிசை → சஞ்சை]

த. சஞ்சை – Skt. {}

சஞ்சோதனம்

 சஞ்சோதனம் cañjōtaṉam, பெ.(n.)

   வளி, பித்த, கோழையின் தலைமை உடம்பில் அதிகமாகத் தங்காமலும், அப்படிச் சேர்ந்தாலும், கழிவு வழியாக வெளிப்படுத்தும் மருந்து; medicine preventing the accumulationof the deranged humours or discharging them even if retained, by excretions (சா.அக.);.

     [Skt.{} → த.சஞ்சோதனம்.]

சஞ்சோளி

 சஞ்சோளி cañjōḷi, பெ. (n.)

   பண்வகை; a specific melody-type (செ.அக.);.

சடகந்தம்

 சடகந்தம் caḍagandam, பெ. (n.)

சடக்கோதன் பார்க்க;see {}.

     [சடம் + கந்தம்]

சடகப்பிண்டி

சடகப்பிண்டி caḍagappiṇḍi, பெ. (n.)

   கேடகம்பிடிக்கை; holding the shield.

     “செருவா ளாட்டுஞ் சேடகப் பிண்டியும்” (பெருங். உஞ்சைக். 37:32);.

     [சேடகம் + பிண்டி.]

சடகம்

சடகம்1 caḍagam, பெ. (n.)

   1. ஊர்க்குருவி (சூடா.);; sparrow.

   2. கரிக்குருவி; kingcrow.

     ‘சடகமேநின்-இளம்பார்ப்பிற்கும்’ (திருவாலவா. 6௦: 8);.

     [சகடம் → சடகம் = வட்டமிட்டுப் பறக்கும் பறவை, ஊர்க்குருவி, கரிக்குருவி]

 சடகம்2 caḍagam, பெ. (n.)

   வட்டில் (சூடா.);; cup, drinking vessel.

     [சகடு → சகடம் → சடகம்]

சகடம் → Skt. {}

சடகை

__,

பெ. (n.);

   ஊர்க்குருவிப் பேடு; hen-sparrow (சா.அக.);.

ம. சடக்க

     [சகடம் → சடகம் = ஊர்க்குருவி; சடகம் → சடகை. சடகம்(ஆ.பா.); → சடகை(பெ.பா.);]

 சடகம் caḍagam, பெ. (n.)

   கேடகம்; shield.

     “மயிர்ப்புளக சேடகமு மேந்தி” (சூளா. அரசி. 159);.

மறுவ. கேடயம், கிடுகு.

     [சேடகம் → சேடகம்]

சடகவட்டம்

சடகவட்டம் caḍagavaḍḍam, பெ. (n.)

   வட்டவடிவக் கேடகம்; shield of round shape.

     “கோலுங் குந்தமுஞ் சேடக வட்டமும்” (பெருங். உஞ்சைக். 46:58);.

     [சேடகம் + வட்டம்]

சடகாசம்

சடகாசம் caḍakācam, பெ.(n.)

   1. மூச்சுக் குழல் வெடிப்பு; rupture or ulcar of the respiratory organs.

   2. நுரையீரல் வெடிப்பு; fissure of the lungs (சா.அக.);.

சடகோபதாசர்

சடகோபதாசர் caḍaāpatācar, பெ. (n.)

   அரி சமய தீபம் என்னும் நூலை இயற்றியவரும் 17ஆம் நூற்றாண்டிலிருந்தவருமாகிய ஆசிரியர்; author of the Ari-{}, 17th c. (செ.அக.);.

     [சடகோபன் + தாசர்]

 Skt. {} → த. தாசர்

சடகோபன்

சடகோபன் caḍaāpaṉ, பெ. (n.)

நம்மாழ்வார் (சடமென்னும் வளியை (வாயுவை); வென்றவன்);;{}, a

{} saint, as one who subdued the evil humour {}.

     ‘குருகூர்ச்சட கோபன்’ (திவ்.திருவாய். 1, 1, 1);.

     [சடம் + கோபன்]

சடகோபம்

சடகோபம் caḍaāpam, பெ. (n.)

   திருமால் கோயிலில் இறைவழிபாடு செய்பவர்களது முடியில் வைத்து அருள் வழங்குதற்கும் பிறவற்றுக்குமாக அமைக்கப்பட்டு இறைவனின் முன்பாக வைக்கப்பெற்றுள்ள திருமாலின் திருவடி நிலை; small metal head-cover on which {}({});’s sandals or feet are engraved and which is placed over the head of worshippers in {} temples.

     ‘சடகோபஞ் சித்திக்க’ (அழகர்கலம். காப்பு. 1);.

     [சகடம் → சடம் + கோபம்]

சடகோபம் —→ Skt. {}

சடகோபரந்தாதி

 சடகோபரந்தாதி caḍaāparandāti, பெ. (n.)

   நம்மாழ்வார் மீது கம்பன் இயற்றியதாகக் கூறப்படும் ஒர் ஈறு தொடங்கி (அந்தாதி); நூல்; poem on {} said to be composed to {}.

     [சடகோபர் + அந்தாதி]

சடக்ககடம்

சடக்ககடம் caḍaggagaḍam, பெ. (n.)

   பெருந்தீனிகொள் பருவயிறு; astomach. with a sensation of over appetite.

     “சடக்க கடத்துக் கிரை தேடி பலவுயிர் தம்மைக் கொன்று”(பட்டினத் திருவேசம்பி33);.

     [சடம்(சடக்க);+(குடம்); கடம்]

சடக்கடை

சடக்கடை caḍakkaḍai, பெ. (n.)

   ஒன்பது (தைலவ.தைல 114);; nine.

சடம் + கடை. சடம் = உடம்பு. கடை = இடம். உடம்பிற் காணப்படும் ஒன்பது துளைகள், ஒன்பது.]

சடக்கன்

சடக்கன் caḍakkaṉ, பெ. (n.)

   கடல்மீன் வகைகள்; sea-fish. (a.); pearly -white, attaining 18 in. in length. (b.); greyish, attaining 20 in. in length. (c.); brownish (செ.அக.);.

சடக்கன்வெட்டு

சடக்கன்வெட்டு caḍakkaṉveḍḍu, பெ. (n.)

   ஒரு வகைக் காசு (நாணயம்); (பணவிடு. 133);; a coin.

     [சடக்கன் + வெட்டு]

சடக்கரம்

 சடக்கரம் caḍakkaram, பெ.(n.)

   குமரக் கடவுளுக்குரிய ஆறெழுத்துக்களாலாகிய மந்திரம் (இலக்.அக.);; the mantra of six letter, sacred to God Kumaran.

த.வ. ஆறெழுத்து மந்திரம்.

     [Skt.sad-aksara → த.சடக்கரம்.]

சடக்கினம்

 சடக்கினம் caḍakkiṉam, பெ. (n.)

   ஒருவகைப் பூ; a plant – Coryza lacera (சா.அக.);.

சடக்கு

சடக்கு1 caḍakku, பெ. (n.)

   1. வேகம்; speed, rapidity.

     ‘சாரிகை வந்த சடக்கு’ (ஈடு. 7.4 : 7);.

   2. செருக்கு; arrogance.

     ‘மீனின் சடக்கு நடக்காது’ (தனிப்பா. 1, 339: 51);.

   ம. சடக்கம், சடக்கு;க. செடகு

     [சட்டெனல் = விரைவைக் குறிக்கும் ஒலிக் குறிப்புச்சொல். சட்டு → சடக்கு]

 சடக்கு2 caḍakku, பெ. (n.)

   உடல்; body.

 seeமெய் போலிருந்து பொய்யாஞ் சடக்கை” (தாயு. சச்சிதானந்த.2);.

     [சடம் → சடக்கு]

சடக்குச்சடக்கெனல்

 சடக்குச்சடக்கெனல் caḍakkuccaḍakkeṉal, பெ. (n.)

   ஒர் ஒலிக்குறிப்பு; onom. Expr. of clacking as when walking with wooden sandals (செஅக.);.

     [சடக்கு + சடக்கு + எனல்]

சடக்கெனல்

சடக்கெனல் caḍakkeṉal, பெ. (n.)

   விரைவுக் குறிப்பு; onom. expr. signifying haste, rush.

 seeசடக்கென…….. கன்னறின்னென வேவினன்” (திருவாலவா. 14: 4);.

     [சடக்கு + எனல்]

சடக்கேதனம்

 சடக்கேதனம் caḍakātaṉam, பெ. (n.)

   முள்ளங்கி; Indian radish;

 garden radish (சாஅக.);.

சடக்கோதன்

 சடக்கோதன் caḍakātaṉ, பெ. (n.)

   வசம்பு (மலை.);; sweet flag.

சடக்கோல்

சடக்கோல் caḍakāl, பெ. (n.)

   தூக்குக்கோல், எடை அளக்குங்கோல் (G.Sm.D.1, i, 284.);; balance on the principle of the steelyard.

     [சேடம்2 + கோல்]

சடங்கடி

சடங்கடி caḍaṅgaḍi, பெ. (n.)

   ஏமாற்று (வஞ்சனை);; deceit.

 seeசடங்கடிக்கு வாய்த்த சளக்கா” (சரவண. பணவிடு. 36);.

     [சட்டம் → சடங்கு + அடி. அடி = திரும்புதல், நீக்குதல், மறுத்தல். சடங்கடி → சட்டத்திற்குப் பணியாமல் நடத்தல், ஏமாற்றுதல் (வ.வ.335);]

சடங்கன்

சடங்கன் caḍaṅgaṉ, பெ.(n.)

   கந்தக செய்நஞ்சு. இது 32 பிறவிச் செய்நஞ்சுகளுள் ஒன்று;

சடங்கப்படு-தல்

சடங்கப்படு-தல் caḍaṅgappaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. மூட்டையாகக் கட்டப்படுதல்; to be packed into a bundle.

   2. வேளையில் மூண்டிருத்தல்; to be engaged in a work or duty (செஅக.);.

     [சடங்கம் + படு-,]

சடங்கப்பூட்டு

சடங்கப்பூட்டு caḍaṅgappūḍḍu, பெ. (n.)

சடங்கு2 பார்க்க (யாழ்அக.);;see {}.

     [சடங்கம் + பூட்டு]

சடங்கம்

சடங்கம்1 caḍaṅgam, பெ. (n.)

   1. வழிச் செல்கைக்கான மூட்டை; knapsack

     ‘சடங்கத்திலே போட்டுக்கட்டு” (வின்.);.

   2. வருத்தம் (வின்.);; difficulty, straits, entanglement.

   3. வேலை (வின்.);; work, duty.

ம. சடங்ஙம் (மற்போர் வகை);

     [சடம் = பொருள். சடம் + அங்கம் = பொருள் பொதிந்த கட்டு, பயணமூட்டை]

 சடங்கம்2 caḍaṅgam, பெ. (n.)

   ஊர்க்குருவி; house sparrow.

     ‘இளங்களிறாயுஞ் சடங்கமாயும்’ (நீலகேசி, 206, உரை, மேற்கோள்);.

ம. சடகம்

     [சடகம் → சடங்கம்]

த. சடங்கம் → Skt. {}

சடங்கம்போடு-தல்

சடங்கம்போடு-தல் caḍaṅgambōḍudal,    9 செ.குன்றாவி. (v.t.)

   மூட்டையாகக் கட்டுதல் (வின்.);; to make up or pack into a bundle.

     [சடங்கம் + போடு-,]

சடங்கயம்

 சடங்கயம் caḍaṅgayam, பெ. (n.)

   வெள்ளை முத்துச்சோளம்; white maize (சா.அக.);.

சடங்கர்

சடங்கர் caḍaṅgar, பெ.(n.)

சடங்கவி பார்க்க;see {}.

     “சடங்கர் வாயடங்கிட” (பெருந்தொ.1814);.

     [Skt.sad-anga → த.சடங்கர்.]

சடங்கவி

சடங்கவி caḍaṅgavi, பெ.(n.)

   வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன்; one who is well versed in the six {}.

     “புத்தூர்ச் சடங்கவி மறையோன் றன்பால்” (பெரியபு.தடுத்தாட்7);.

த.வ. ஆறங்கவித்தகன்.

     [Skt.sad-anga-vit → த.சடங்கவி.]

சடங்கா-தல்

சடங்கா-தல் caḍaṅgātal,    6 செ.கு.வி. (v.i.)

   பெண் பூப்படைதல் (இ.வ.);; to arrive at puberty, as a girl.

     [சடங்கு + ஆ-,]

சடங்காகு-தல்

சடங்காகு-தல் caḍaṅgākudal,    5 செ.கு.வி. (v.i.)

சடங்கா-தல் பார்க்க;see {}.

     [சடங்கு + ஆகு-,]

சடங்கு

சடங்கு1 caḍaṅgu, பெ. (n.)

   1. நூன்முறை பற்றியும் வழக்கம் பற்றியும் மேற்கொள்ளும் செயற்பாடு; rite, ceremony.

 seeமறையவன் சடங்கு காட்ட” (கம்பரா. கிளைக. 81);.

   2. முதற் பூப்புச் சடங்கு; ceremony performed at the pubescence of a girl.

 seeசடங்கு மாதங் கழிக்கு முன்னாம்” (தனிப்பா.1, 378: 21);.

   4. திருமண உறவு (இ.வ.);; nuptials, consummation.

   ம. சடங்கு, சடங்ஙு;க. சட்டு, செட்டு (முதல் பூப்பு நீராட்டு விழாவின்போது, பெண், மஞ்சள் தடவிய கையால் கவரைத் தொட்டு உண்டாக்கும் கையடையாளம்);.

     [சட்டம் → சடங்கு = மதமுறைப்படி அல்லது ஒழுக்க முறைப்படி நடைபெறும் கரணம் (மு.தா. 108);]

 சடங்கு2 caḍaṅgu, பெ. (n.)

   குண்டுக் கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை; a variety of wrestler’s grapple, probably forcing a person into a ball- like position.

 seeசடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத் தொலைத்த மல்லாடலும்” (சிலப். 6: 49, உரை);.

     [சடங்கம்1 → சடங்கு]

 சடங்கு caḍaṅgu, பெ. (n.)

   வில்லுப்பாட்டு மரபில் காணப்பெறும் ஒருநிகழ்வு; a feature.

சடங்குகழி-த்தல்

சடங்குகழி-த்தல் caḍaṅgugaḻittal,    4 செ.கு.வி. (v.i.)

   பெண்ணின் முதற்பூப்பிற்கான சடங்கினைச் செய்தல் (உ.வ.);; to celebrate the pubescence of a girl with the prescribed ceremonies.

     [சடங்கு + கழி-,]

சடங்குவீடு

சடங்குவீடு caḍaṅguvīḍu, பெ. (n.)

   1. பூப்பு நீராட்டுச் சடங்கு நிகழும் வீடு (உ.வ.);; the house where puberty-ceremony is performed.

   2. திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சி நடக்கும் வீடு; the house where a ceremony is performed, as marriage (செ.அக.);.

     [சடங்கு + வீடு]

சடசடப்பு

 சடசடப்பு saḍasaḍappu, பெ. (n.)

   ஈரடுக் கொலிக் குறிப்பு; onom. expr. signifying dash, etc.

மறுவ. சடசடெனல்

     [சட + சடப்பு.

     ‘பு’ – பெ. ஆ. ஈறு]

சடசடவெனல்

 சடசடவெனல் saḍasaḍaveṉal, பெ. (n.)

   ஒலிக்குறிப்பு; onom. expr. signifying crash, peal of repeated sound (செ.அக.);. [சடசட + எனல்]

சடசடெனல்

சடசடெனல் saḍasaḍeṉal, பெ. (n.)

   ஒர் ஒலிக் குறிப்பு; onom. expr. signifying sound of falling trees, report of a gun, rattling of stones thrown.

     ‘சடசட விடுபெணை பழம்’ (தேவா. 515, 9);.

   ம. சடசட, சடசடா;   க., தெ., து. சடசட;   குட. சட்; Skt. {}

     [சடசட + எனல்]

சடசம்

 சடசம் saḍasam, பெ.(n.)

   ஒரு வகை இருமல்; a kind of cough (சா.அக.);.

சடசீதி

சடசீதி caḍacīti, பெ.(n.)

   1. சரராசியின் ஏழாம் பாகையிலும், திரராசியின் ஐந்தாம் பாகையிலும் உபயராசியின் ஒன்பதாம் பாகையிலும், கதிரவன் நிற்கச் சம காரியங்கள் செய்யத்தகாவென்று விலக்கப்பட்ட காலம் (விதான.குணாகுண.33);;   2. சடசீதிமுகம், 1 (சைவச.பொது.15); பார்க்க;(Astron.); see {}-mugam.

     [Skt.sad-{} → த.சடசீதி.]

சடசீதிமுகம்

சடசீதிமுகம் caḍacītimugam, பெ.(n.)

   1. ஆடவை (ஆனி);, கன்னி (புரட்டாசி);, சிலை (மார்கழி);, மீனம் (பங்குனி); மாதங்கள் பிறக்கும் நாள் (சைவச.பொது.14);;   2. கதிரவன் தனுசு 26வது பாகையிலும், மீனம் 22வது பாகையிலும், மிதுனம் 18வது பாகையிலும், கன்னி 14வது பாகையிலும், செல்லும் காலம் (செந்.X,378);;     (Astron.); time when the sun is in the 26th degree of {}, 22nd degree of {}, 18th degree of {}, and 14th of {}.

த.வ. கோளோட்டம்.

தெ.சடசீதிமுகம்.

     [Skt.sad-{} → த.சடசீதி + த.முகம்.]

சடச்சி

சடச்சி caḍacci, பெ. (n.)

   1. பொன்னிமிளை; a mineral, Bismuth pyrites.

   2. செவ்வலரி; red oleander (சா.அக.);.

     [சடை → சடம் → சடச்சி]

சடச்சியங்கம்

 சடச்சியங்கம் caḍacciyaṅgam, பெ. (n.)

   கருப்புக் கொள்; black horse-gram (சா.அக.);.

சடஞ்சு

 சடஞ்சு caḍañju, பெ. (n.)

சோர்வு, களைப்பு

 weariness, longuor.

     [சடைவு-சடஞ்சு]

சடஞ்சுபோ-தல்

 சடஞ்சுபோ-தல் caḍañjupōtal, பெ. (n.)

   களைப் படைதல்; tiredness.

     [சடைந்து-சடஞ்சு+போ-]

சடதன்

 சடதன் caḍadaṉ, பெ.(n.)

   முட்டாள்; an idiot (சா.அக.);.

     [Skt.sad → த.சட → த.சடதன்.]

சடதை

சடதை caḍadai, பெ.(n.)

   1. மடமை; modesty.

   2. அறியாத்தனம்; idioey, void of understanding.

   3. அறியாமை; ignorance.

   4. அறியாப் பெண்; a simple woman, simpletion (சா.அக.);.

     [சடதன் → சடதை]

சடத்தாங்கல்

 சடத்தாங்கல் caḍattāṅgal, பெ. (n.)

   வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Vellore.

     [ஒருகாசடையன் + தாங்கல்(ஏரி);]

சடத்துவசாத்திரம்

 சடத்துவசாத்திரம் caḍattuvacāttiram, பெ.(n.)

   பொய்த்தன்மையைக் குறிக்கும் நூல்; science which treats of the laws of nature and especially of the forces and general properties of matter-physics (சா.அக.);.

     [Skt.sad-{}+{} → த.சடத்துவ சாத்திரம்.]

சடத்துவம்

 சடத்துவம் caḍattuvam, பெ. (n.)

   சடத்தன்மை; lifeless nature.

     [சடம் → சடத்துவம்]

சடத்துவா

சடத்துவா caḍattuvā, பெ.(n.)

   ஆவி (ஞான.68, 1, உரை);;     [Skt.sad-{} → த.சடத்துவா.]

சடநிறம்

 சடநிறம் caḍaniṟam, பெ. (n.)

   கருமைநிறக்கல் (யாழ்.அக.);; a kind of blackstone.

     [சடம் + நிறம்]

சடன்

சடன் caḍaṉ, பெ. (n.)

   மூடன், அறிவிலி; fool, block head.

 seeதேகமிறு மென்றுசடர் தேம்புவதேன்” (தாயு. பராபரக். 181);.

     [சடம் → சடன்.

     ‘ன்’ – ஆ. பா. ஈறு]

சடபதார்த்தம்

சடபதார்த்தம் caḍabatārttam, பெ. (n.)

சடம்1 -1 பார்க்க;see {} (செ.அக.);.

     [சடம் + பதார்த்தம்]

சடபம்

சடபம் caḍabam, பெ. (n.)

   1. அறுகு; cynoden grass.

   2. புல்; grass (சாஅக);.

     [சடம் → சடபம்]

சடபரதன்

சடபரதன் caḍabaradaṉ, பெ. (n.)

   அறிவிலி போன்று திரிந்து கொண்டிருந்த ஒரு முனிவன்; a sage who was wandering about like an idiot.

     ‘ஒதுஞ் சடபரதன்றனை யுணராதவ னிலனே’ (பிரபோத. 5: 33);.

     [சட(ம்); + பரதன்]

சடபுட-த்தல்

சடபுட-த்தல் caḍabuḍattal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சடசடவென்னும் ஒலியுண்டாதல்; to make a crackling sound.

   2. மிகுதியும் பரபரப் படைத்தல்; to be inordinately hasty (செ.அக.);.

மறுவ. சடபுடாவெனல், சடபுடெனல்

     [சட + புட-,]

சடபுடெனல்

சடபுடெனல் caḍabuḍeṉal, பெ. (n.)

   1. ஓர் ஒலிக்குறிப்பு; onom. expr. of crackling noise, etc.

   2. மிகுவிரைவுக் குறிப்பு (உ.வ.);; expr. signifying inordinate or feverish haste (செ.அக);.

   ம. சடபுட, சடபடெ, சடபிட;   க., து. சடபட; Skt. {}

     [சட + புட + எனல்]

சடப்பால்

 சடப்பால் caḍappāl, பெ. (n.)

   முலைப்பால் (மூ.அ.);; mother’s milk.

     [சடம் + பால்]

சடப்பொருள்

சடப்பொருள் caḍapporuḷ, பெ. (n.)

சடம்1 பார்க்க;see {}.

     [சடம் + பொருள். சடப்பொருள் அழியும் இயல்பின.]

சடம்

சடம்1 caḍam, பெ. (n.)

   1. அறிவில் பொருள் (பிங்.);; inanimate, lifeless matter.

   2. உடல்; body.

     ‘சடங்கொள் சீவரப் போர்வையர்’ (தேவா. 8௦5, 10);.

   3. வயிறு; stomach.

     [சட்டம் → சடம்;

ஓ.நோ. பட்டம் → படம். (மு.தா. 1௦9);]

   த.சடம் —→ Skt. jada, jala, cold, rigid, chilly; cold, frost, winter;

 water. D. {}, tan etc. for water D. jani might be thought of. -jada, jala, senseless, stupid, apathetic, etc. i. {}, (jada and jala have been referred to the Indo- European languages by eminent scholars;

 the comparison with D. is only suggestive);. (K. K. E. D. XXVl);.

 சடம்2 caḍam, பெ. (n.)

   1. பொய் (பிங்.);; falsehood, illusion.

   2. ஏமாற்று (சூடா.);; deception, fraud.

   3. கொடுமை (பிங்.);; cruclty, savageness.

   4. சோம்பல் (பிங்.);; ideness.

   5. பிறக்கும்போது ஆதனிடம் (ஆன்மாவிடம்); மோதி அதன் நல்லறிவைக் கெடுப்பதாகக் கருதப்படும் ஒரு வகைக் காற்று; evil humour of the body that destroys the innate wisdom of the soul at birth.

     [சட்டம் → சடம்]

 சடம்3 caḍam, பெ. (n.)

   ஆறு (அக.நி.);; river.

     [சட்டம் → சடம்]

 சடம்4 caḍam, பெ. (n.)

   அறியாமை; spiritual. ignorance.

 seeசான்று வேண்டுஞ் சடத்தை யறிந்திலேன்” (மேருமந் .257);.

     [சட்டம் → சடம்]

 சடம்1 caḍam, பெ. (n.)

   1. பெருமை; greatness.

   2. மிகுதி; abundance.

   3. மீதி; reminder.

     [சேண் → சேடு → சேடம்]

 சடம்2 caḍam, பெ. (n.)

   எடை; weight.

சடம்பு

சடம்பு caḍambu, பெ. (n.)

சனல் (இ.வ.); sunn-hemp.

ம.சடம்பு

     [சடை → சடம் → சடம்பு (மு.தா.139);]

சடமுல்லாசம்

__,

பெ. (n.);

   தண்ணீர் விட்டான் கிழங்கு; water-root (சாஅக.);.

சடயிவிளை

 சடயிவிளை caḍayiviḷai, பெ.(n.)

   கல்குளம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Kalkulam Taluk.

     [சடையன்+விளை]

சடரச்சுவாலை

 சடரச்சுவாலை caḍaraccuvālai, பெ. (n.)

சடராக்கினி பார்க்க;see {}.

     [சடரம் + சுவாலை]

சடரம்

சடரம் caḍaram, பெ. (n.)

   வயிறு; belly.

     ‘முடிகென்று சடரத்தை….. தமிழ்வல்ல முனி தடவலும்’ (கந்தபு. வில்வலன்வாதாபிவ. 31);.

     [சடம் → சடர் → சடரம்]

சடரயாதனை

 சடரயாதனை caḍarayātaṉai, பெ. (n.)

   பேறுகால வலி; labour pain.

     [சடம் → சடர்(வயிறு); + ஆதனை]

சடராக்கினி

 சடராக்கினி caḍarākkiṉi, பெ. (n.)

   வயிற்றுத்தீ (சாடராக்கினி); (யாழ்.அக.);; gastric fire.

மறுவ. சடரச்சுவாலை

     [சடம் → சடர் + அக்கினி]

சடராமயம்

 சடராமயம் caḍarāmayam, பெ. (n.)

   ஒரு நோய்; a disease.

     [சடர் + ஆமயம்]

சடரி

 சடரி caḍari, பெ. (n.)

   சிதைவு (யாழ்.அக.);; being broken or spoilt.

     [சடம் → சடரி]

சடரூபம்

 சடரூபம் caḍarūpam, பெ. (n.)

   அறிவற்ற பொருள்; matter.

     [சடம் + ரூபம்]

த. உருவம் → Skt. {} → த. ரூபம்

சடர்

 சடர் caḍar, பெ. (n.)

   அறிவில்லாதவர்; ignorant person.

     [சடம் → சடன் → சடர்]

சடலட்சணம்

 சடலட்சணம் caḍalaḍcaṇam, பெ. (n.)

சடவியல்பு பார்க்க;see {}.

     [சட(ம்); + லட்சணம்]

 Skt. lakshna → த. லட்சணம்

சடலபுடலம்

 சடலபுடலம் caḍalabuḍalam, பெ. (n.)

   பருத்திருப்பது (யாழ்.அக.);; that which is big and stout.

     [சடலம் + புடலம். எதுகைநோக்கி வந்த மரபிணைமொழி]

சடலம்

சடலம் caḍalam, பெ. (n.)

   உடல் (சூடா.);; body.

     [சடம் → சடலம் = உடம்பு. இது உலக வழக்கு. ஒ.நோ. படம் → படலம். சடலம் என்னும் வடிவம் வடமொழியில் இல்லை. சடலம் → சதரம் = உடம்பு (நெல்லை வழக்கு);. சதரம் → சதிரம் (கொச்சைத் திரிபு); (வ.வ. 135, 136);.]

வடவர் குளிர்மை என்பதை மூலக்கருத்தாக வைத்துக் குளிர், சில்லெனல், விறைப்பு, மரப்பு, அசைவின்மை, உணர்வின்மை, உணர்ச்சியின்மை, மயக்கம், திமிர், மடமை, மந்தம், உயிரின்மை, அறிவின்மை என்று முறையே பொருள் வளர்ப்பர். அறிஞர் இதன் பொருந்தாமையை அறிந்து கொள்க. குளிர்மைப் பொருளில் வரும் ஜட என்பது சளி என்னும் தென்சொல் திரிபாகலாம்.

சடலை

சடலை1 caḍalai, பெ. (n.)

சடலபுடலம் பார்க்க (யாழ். அக.);;see {}.

     [சடல் → சடலை]

 சடலை2 caḍalai, பெ. (n.)

   வீண்செயல்; useless act.

     ‘இந்தச் சடலைகள் வேண்டுமோதான்’ (பாடு. 71, சந்தியாசம்);.

     [சடல் → சடலை]

சடவத்து

சடவத்து caḍavattu, பெ. (n.)

சடம்1 பார்க்க;see {}.

     [சடம் + வத்து]

 Skt. vastu → த. வத்து]

சடவியல்வு

 சடவியல்வு caḍaviyalvu, பெ. (n.)

   தன்னையும், தலைவனையும் அறிந்திருக்கும் மாயை யாக்கையின் இயல்பு; nature of {} which knows him and God.

     [சட(ம்); +இயல்வு]

சடவு

சடவு caḍavu, பெ. (n.)

   சலிப்பு; weariness, longuor. (கொ.வ.வ.சொ. 69.);.

     [சடைவு-சடவு]

சடவுப்பு

சடவுப்பு caḍavuppu, பெ. (n.)

   1. ஒரு வகை உப்பு; a kind of salt.

   2. அமரியுப்பு; salt from urine.

     [சடம் + உப்பு]

சடவேர்

 சடவேர் caḍavēr, பெ. (n.)

   மல்லிகை; jasmine (சாஅக.);.

     [சடை → சட + வேர்]

சடா

 சடா caṭā, பெ.(n.)

   காற்சோடுவகை; slippers with pointed toes, usually worn by muhammadans.

     [U.chedao → த.சடா.]

சடாகம்

 சடாகம் caṭākam, பெ. (n.)

   அருநெல்லி; star goose-berry – Phyllanthus distichus (சா.அக);.

சடாகுடம்

 சடாகுடம் caḍākuḍam, பெ. (n.)

   சடாமுடி, சடை (இ.நு.த.);; matted hair.

     [சடை → சடா + குடம்]

த. சடை → Skt. {}

சடாக்கரம்

சடாக்கரம் caṭākkaram, பெ.(n.)

சடக்கரம் பார்க்க;see {}.

     “ஆய்க்குஞ் சடாக்கர மில்லாத நாவிற்கும்” (தனிப்பா.ii, 141, 357);.

     [Skt.sad{} → த.சடாக்கரம்.]

சடாக்காரி

 சடாக்காரி caṭākkāri, பெ. (n.)

   நீர்; water (சாஅக.);.

சடாங்கன்

 சடாங்கன் caṭāṅgaṉ, பெ. (n.)

   சடைமுடியை யுடையவன், சிவன்; one who has matted hair, {}.

     [சடை → சடா + அங்கன். Skt. {} → த. அங்கம், அங்கம் → அங்கன்]

சடாடவி

சடாடவி caṭāṭavi, பெ. (n.)

   அடர்ந்த முடி; thick matted hair.

     ‘கமலைப்பிரான் செஞ்சடாடவிதான்’ (தனிப்பா. 1. 71:141);.

     [சடை → சடா + அடவி. அடு→ அடர் → அடர்வி → அடவி = மரமடர்ந்த காடு. சடை யடர்ந்த முடி சடாடவி எனப்பட்டது.]

த. அடவி → Skt. {}

சடாட்சரம்

 சடாட்சரம் caṭāṭcaram, பெ.(n.)

   ஆறு மந்திர எழுத்துகள்; the six mantric letters. (சா.அக.);.

     [Skt.sad-adsara.]

சடாதரன்

சடாதரன் caṭātaraṉ, பெ. (n.)

   1. சடை யுடையவன், சிவன்;{}, as having matted hair.

   2. வீரபத்திரன் (பிங்.);; Virabhadran.

     [சடை → சடா + தரன்]

 Skt. dhara → த. தரன்

சடாதரம்

 சடாதரம் caṭātaram, பெ. (n.)

   அருநெல்லி; star goose-berry (செ.அக.);.

சடாதரி

சடாதரி1 caṭātari, பெ. (n.)

   சடையை யுடையாள், மலைமகள் (பார்வதி);;{}.

     [சடை → சடா + தரி]

 Skt. dhari – த. தரி

 சடாதரி2 caṭātari, பெ. (n.)

   1. சவுரிக்கொடி; virginian silk – Peripioca asclepidoe.

   2. சவுக்கு; whip tree – Casuariana litoralis (சா.அக.);.

     [சடை → சடா + தரி. சடை முடியைப் போன்ற நீண்ட இலைகனையுடையது]

சடாதலிகம்

சடாதலிகம் caṭātaligam, பெ. (n.)

   1. மகிழமரம்; ape-face flower-Mimusops elengi.

   2. மொந்தன் வாழை; large plantain tree (சா.அக.);.

சடாதாரம்

 சடாதாரம் caṭātāram, பெ.(n.)

   ஆறாதாரம்; the six mystic cakras in the body.

     [சடா + தாரம்.]

     [Skt.sad → த.சடா.]

சடாதாரி

சடாதாரி caṭātāri, பெ. (n.)

   1. சடைமுடி உடையவன்; a person with matted hair.

   2. சிவன்;{}.

 seeதாமமே தந்து சடாதாரி நல்கானேல்” (பதினொ. திருக்கைலா. ப. 40);.

   3. வரிக்கூத்து வகை (சிலப். 3: 13, உரை);; a masquerade dance.

   4. அம்மையார் கூந்தல் (மலை.);;seeta’s thread.

     [சடை → சடா + தாரி]

 skt. {} → த. தாரி

சடாநாதர்

 சடாநாதர் caṭānātar, பெ. (n.)

   ஆனந்தத் தாண்டவபுரம் என்னும் ஊரில் திருக்கோயில் கொண்டருளிய சிவன்; Lord Siva of Ananda Thandavapuram.

     [சடை → சடா + நாதர்]

சடானனன்

சடானனன் caṭāṉaṉaṉ, பெ.(n.)

   ஆறுமுகன்; God {}, as being six faced.

     “மனோலய முற்றமெய்ப் பண்பினைக்காட்டிய சடானனனை” (குமர.பிரபந்.முத்துக்.4);.

     [Skt.sad-{} → த.சாடனைன்.]

சடாபடம்

 சடாபடம் caḍāpaḍam, பெ. (n.)

   எருக்கு; madar (செ.அக.);.

சடாபலம்

 சடாபலம் caṭāpalam, பெ. (n.)

   பனை (மூஅ);; palmyra tree.

     [சடை → சடா + பலம்]

சடாபாரம்

 சடாபாரம் caṭāpāram, பெ. (n.)

   சடைக்கற்றை; heavy matted hair, as of Sanyasin (செ.அக.);.

     [சடை → சடா + பாரம்]

 Skt. {} → த. பாரம்

சடாபூதம்

 சடாபூதம் caṭāpūtam, பெ. (n.)

   சடாமாஞ்சில்; Indian spikenard – Valeriana jatamansi (சா.அக.);.

     [சடை → சடா + பூதம்]

சடாமகுடன்

 சடாமகுடன் caḍāmaguḍaṉ, பெ. (n.)

   சிவன்; Lord {}.

     [சடை → சடா + மகுடன். மகுடம் → மகுடன்.]

சடாமகுடப்பெருமாள்

சடாமகுடப்பெருமாள் caḍāmaguḍapperumāḷ, பெ. (n.)

   நெல்லை மாவட்டம், பெருங் குளத்தில் உள்ள திருவழுதீசுவர ஆலயத்தின் வழிபாட்டுக் கடவுள்; presiding deity of the temple {} in Perungulam in Tirunelveli district.

 seeதிருவழுதி வளநாட்டுப் பெருங்குளத்துத் திருவழுதீஸ்வரத்து ஜடாமகுடப் பெருமாளுக்கு வேண்பு நாட்டு நால்வர்” (தெ. க. தொ. 14. கல். 59, 2);.

     [சடைமகுடம் → சடாமகுடம் + பெருமாள்]

சடாமகுடம்

சடாமகுடம் caḍāmaguḍam, பெ. (n.)

   சடைமுடி; matted hair coiled into a crown.

 seeசடா மகுடத்திலே கங்கை யடங்கும்” (தனிப்பா. 1, 5:23);.

     [சடை → சடா + மகுடம்]

சடாமாஞ்சி

 சடாமாஞ்சி caṭāmāñji, பெ. (n.)

   செடி வகை (வின்.);; spikenard herb, Nardostachys jatamansi

மறுவ. சடாமாஞ்சில்

ம. சடாமாஞ்சி

     [சடை → சடா + மாஞ்சி]

சடாமாஞ்சில்

 சடாமாஞ்சில் caṭāmāñjil, பெ. (n.)

   நமத்தம் என்கிற புல்லினம்; valarian or Indian spikenard – Valerrian jatamansi (சா.அக.);.

மறுவ. சடாசஞ்சி, சடாமாசி. பெருங்கோரைக் கிழங்கு, பெருங்கோரை

   இது ஒரு கடைச் சரக்கு;   சடையுடன் இருக்கும்;   சற்று மஞ்சள் சாயலான கறுப்பு நிறம் உடையது;காரம் நிறைந்தது.

சடாமுடி

 சடாமுடி caḍāmuḍi, பெ. (n.)

சடாமகுடம் பார்க்க;see {}.

 seeமின்னெறி சடாமுடி” (நன்னெறி, காப்பு);.

     [சடை → சடா + முடி]

சடாமுத்திரை

 சடாமுத்திரை caṭāmuttirai, பெ.(n.)

சபாமுத்திரை பார்க்க;see {}-muttirai (சா.அக.);.

சடாமுனி

 சடாமுனி caṭāmuṉi, பெ. (n.)

   பேய் வகை; a kind of demon (செ.அக.);.

     [சடை → சடா + முனி]

சடாமூலம்

 சடாமூலம் caṭāmūlam, பெ. (n.)

சடாவேரி பார்க்க;see {}.

     [சடை → சடா + மூலம்]

சடாயு

 சடாயு caṭāyu, பெ. (n.)

   இராம கதையில் கூறப்படும் ஒரு கழுகு வேந்தன் (கம்பரா.);; a vulture-king who figures in Ramayana.

     [சடை → சடா → சடாயு]

த. சடாயு → Skt. {}

சடாயுபுரம்

 சடாயுபுரம் caṭāyuburam, பெ. (n.)

   புள்ளிருக்குவேளூர் (வைத்தீசுவரன் கோயில்); என்னும் திருத்தலத்தின் மறுபெயர்; one of the name of {} koil.

     [சடை → சடா → சடாயு + புரம்]

சடாய்

சடாய்1 caṭāyttal,    4 செ.கு.வி. (v.i.)

   செழித்தல் (வின்.);; to grow thick, bushy, leafy.

க. சடாயுத. சடாயித, சடாய்த (மிகுதியாதல்);

     [சடை → சடாய்-,]

 சடாய்2 caṭāyttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. துமுக்கி (துப்பாக்கி); கெட்டித்தல்; to load, as a gun.

   2. அதட்டுதல்; to rebuke, to chide.

     [சடாய் → சடாய்த்தல் (வ.வ. 137);]

 சடாய்3 caṭāyttal,    4 செ.கு.வி. (v.i.)

   பெருமிதமாய் பேசுதல்; to talk tall, to boast.

     [சடாய்-2 → சடாய்-3]

 சடாய்4 caṭāy, பெ. (n.)

சடாயு பார்க்க;see {}.

     ‘புறங்கண்ட சடாயென்பான்’ (தேவா. 159, 6);.

சடாரட்டியெனல்

 சடாரட்டியெனல் caṭāraṭṭiyeṉal, பெ. (n.)

   விரைவுக் குறிப்பு; onom. expr. signifying haste.

     [சடார் + அட்டி + எனல்]

சடாரி

சடாரி1 caṭāri, பெ. (n.)

   1. சடகோபன்; a {} saint.

   2. சடகோபம் பார்க்க;see {} (செஅக.);.

     [சடை → சடாரி]

 சடாரி2 caṭāri, பெ. (n.)

   கவசம் (சூடா.);; coat of mail.

     [சடை → சடா → சடாரி]

சடாரிடல்

 சடாரிடல் caḍāriḍal, பெ. (n.)

சடாரெனல் பார்க்க (வின்.);;see {}.

மறுவ. சடாரெனல்

     [சடார் + இடல்]

சடாரெனல்

சடாரெனல் caṭāreṉal, பெ. (n.)

   1. ஓர் ஒலிக் குறிப்பு; onom. expr. signifying crackling sound

   2. திடீரென நிகழ்வதைக் குறிக்கும் ஒலிக்குறிப்பு; onom. expr. signifying all at once, suddenly, used of rising or a sneezing etc.

க. சடக்கனெ

     [சடார் + எனல்]

சடார்புடாரெனல்

 சடார்புடாரெனல் caṭārpuṭāreṉal, பெ. (n.)

   விரைவை உணர்த்தும் ஒலிக்குறிப்பு; onom. expr. signifying hasteness.

     [சடார் + புடார் + எனல்]

சடாலம்

சடாலம்1 caṭālam, பெ. (n.)

   ஆலமரம் (சங்.அக.);; banyan tree.

     [சடை → சடா + ஆலம்]

த. சடாலம் → Skt. {}

 சடாலம்2 caṭālam, பெ. (n.)

   தேன்கூடு (சங்.அக);; honey comb.

     [சடை → சடா → சடாலம்]

சடாலு

 சடாலு caṭālu, பெ. (n.)

   செண்பகப்பூ; champak flower – Michelia champaca (சா.அக.);.

     [சடை → சடா → சடாலு]

சடாவல்லவன்

சடாவல்லவன் caṭāvallavaṉ, பெ. (n.)

   சடை முறையில் மறைப்பகுதிகளைச் சொல்வதில் வல்லவன்; one clever at reciting {} texts according to {} arrangement.

இவன் சடாவல்லவனென்பான் (பிரபோத. 11: 5);.

     [சடை → சடா + வல்லவன்]

சடாவேரி

 சடாவேரி caṭāvēri, பெ. (n.)

   தண்ணீர்விட்டான்; a common climber with many thick fleshy roots (செ.அக.);.

     [சடை → சடா + வேரி. வேர் + இ =வேரி]

சடி

சடி caḍi, பெ. (n.)

   1. சடை; matted lock of hair.

   2. துப்பட்டி; sheet of cloth.

     [சடைத்தல் = நெருங்குதல், அடர்தல், நெருங்கிக்கிடத்தல், சடை → சடா. சடாய்த்தல் = அடர்த்து வளர்தல். சடா → சடி = சடை, அடர்த்தியாக நூலிழையால் நெய்த போர்வை]

சடிதி

சடிதி1 caḍidi,    கு.வி.எ. (adv.) விரைவாக; quickly, instantly, at once.

 seeவையமேற் சடிதி வீழ்ந்து” (சேதுபு. சீதைகுண். 2௦);.

     [சடுதி → சடிதி]

 சடிதி2 caḍidi, பெ. (n.)

சடிதிவு பார்க்க (வின்.);;see {}.

     [சடி → சடிதி]

சடிதியம்

 சடிதியம் caḍidiyam, பெ. (n.)

   குறிஞ்சான்; Indian ipecacuauha – Tylophora asthamatica (சா.அக.);.

சடிதிவு

 சடிதிவு caḍidivu, பெ. (n.)

   ஏலத்தோல் (வின்.);; cardamom husk.

     [சடி → சடிதிவு]

சடினம்

சடினம் caḍiṉam, பெ. (n.)

   1. வசம்பு (மலை.);; sweet flag.

   2. நெட்டிவேர் (மூ.அ.);; root of the sola-pith.

     [சடை → சடி → சடினம்.]

சடிபஞ்சு

 சடிபஞ்சு caḍibañju, பெ. (n.)

   மாதுளை; pomegranate – Punica granatum (சா.அக.);.

சடிரை

 சடிரை caḍirai, பெ. (n.)

   வெண்தகரை; white senna; sulphur-flowered senna – Cassia glauca (சாஅக.);.

சடிலமஞ்சில்

 சடிலமஞ்சில் caḍilamañjil, பெ. (n.)

சடாமாஞ்சில் பார்க்க;see {} (சாஅக);.

     [சடாமாஞ்சில் → சடிலமஞ்சில்]

சடிலம்

சடிலம்1 caḍilam, பெ. (n.)

   அரிமா; lion.

     [சடைத்தல் = அடர்ந்து கிளைத்தல். சடை= கற்றை, இயற்கையான மயிர்க்கற்றை, சடை → சடி → சடிலம். சடிலம் = நெருக்கம், நெருங்கிய பிடரி மயிரினையுடையது]

 சடிலம்2 caḍilam, பெ. (n.)

   1. செறிவு (திவா.);; closeness, thickness, denseness, as of hair, foliage.

   2. சடை4 பார்க்க;see {}.

 seeவெண்பிறைச் சடிலக்கோவே” (தாயு.சொல்லற் கரிய. 5);.

   3. குதிரை (பிங்.);; horse, as having a mane.

   4. வேர்; root.

 seeஉத்தாமணிச் சடிலத்தோடு” (தைலவ. தைல. 93);.

     [சடு → சடி → சடிலம்]

சடிலாகியம்

 சடிலாகியம் caḍilākiyam, பெ. (n.)

   மூக்கொற்றிப் பூடு; pointed-leaved hogweed (சா.அக.);.

சடிலை

சடிலை caḍilai, பெ. (n.)

   சடாமாஞ்சி (தைலவ. தைல. 14);; spikenard.

     [சடிலமஞ்சில் → சடிலை]

த. சடிலை → Skt. {}

சடு

சடு1 caḍu, பெ. (n.)

   வயிறு (யாழ். அக);; belly.

     [சடம் → சடு]

 சடு2 caḍu, பெ. (n.)

   ஆய்வு; examination, inspection.

     [அடுதல் = கருதுதல். அடு → சடு]

சடுகுடு

சடுகுடு caḍuguḍu, பெ. (n.)

   சிறுவர் விளையாட்டு (G.Tn.D.l. 105);; a boy’s game.

ம. சடுகுடு

     [சடு + குடு. ஒலிக்குறிப்புச் சொல், அவ்வாறு சொல்லிக் கொண்டு ஆடும் விளையாட்டு] ஆடுவாருள் ஒவ்வொருவனும் எதிர்க்கட்சியின் எல்லைக்குட் சென்று, சடுகுடு என்று சொல்லியாடும் ஆட்டு, சடுகுடு எனப்பட்டது. இது பாண்டி நாட்டில் குடட்டி என்றும், வடசோழ நாட்டில் பலிச்சப்பிளான் அல்லது பலீன் சடுகுடு என்றும் பெயர்பெறும். சடுகுடு என்பது தென் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இதற்கு வழங்கும் பெயராம்.

ஆடுவாரெல்லாரும், உத்திகட்டிச் சமத் தொகையான இரு கட்சியாகப் பிரிந்து கொள்வர். இரு கட்சியார் இடத்திற்கும் இடையில் ஒரு குறுக்குக் கோடு கீறப்பெறும். சோழ நாட்டார் இதை உப்புக்கோடு என்பர்.

முதலாவது எந்தக் கட்சியார் பாடிவருவது என்று ஏதாவதொரு வகையில் தீர்மானிக்கப் பெறும். அங்ஙனம் தீர்மானிக்கப்பெற்ற கட்சியாருள் ஒருவன் உப்புக் கோட்டைத் தாண்டி எதிர்க்கட்சி யெல்லைக்குட் புகுந்து

     ‘சடுகுடு சடுகுடு’ என்றோ

 seeசடுகுடு குடு குடு குடு” என்றோ

 seeபலிஞ் சடுகுடு” என்றோ, இடைவிடாது பாடிக்கொண்டு எதிர்க்கட்சியாருள் ஒருவனையோ, பலரையோ தொட்டுவிட்டு அவனிடமேனும் அவரிடமேனும் பிடி கொடாது தன் கட்சி எல்லைக்குள் வந்துவிட வேண்டும். அங்ஙனம் வரும்வரை பாடுவதை நிறுத்தக்கூடாது. அவனால் தொடப்பட்ட வரெல்லாம் தொலைந்துவிடுவர்.அவர் ஆட்டிற் கலவாது ஒரு புறமாய்ப் போயிருத்தல் வேண்டும். அதன்பின், தொடப்பட்ட கட்சியருள் ஒருவன் இங்ஙனமே எதிர்க் கட்சியெல்லைக்குட் புகுந்து ஆடிச் செல்ல வேண்டும்.

சடுகுடு என்னும் விளையாட்டு, வெட்சிப் போரினின்று தோன்றியதாகத் தெரிகின்றது. இரு கட்சியாரும் வெட்சி மறவரும் கரந்தை மறவரும் போல்வர். இடைக்கோடு, அவ்விரு சாரார் நாட்டிற்கும் இடைப்பட்ட எல்லைப் புறம் போன்றது.

     ‘பலிஞ்சடுகுடு” என்று பாடுவது, காளிக்குப் பலியிடுவதையும் துடி

கொட்டுவதையும் குறிப்பது. (துடிப்பறையின் சிறியவகை சடுகுடுக்கை அல்லது குடுகுடுப்பை என்று பெயர் பெற்றிருத்தல் காண்க);. இரு கட்சியாரும் தத்தம் எதிர்க்கட்சியாரைப் பிடித்து நிறுத்துவது நிரை கவர்தலையும் நிரை மீட்டலையும் நிகர்ப்பது.

     ‘பட்டுப்போதல்’ என்னும் வழக்கு வெட்சிப்போரில் வீழ்ந்திறத்தலைக் குறிப்பது. (த.வி. 57-6௦);.

     [p]

சடுக்கா

சடுக்கா caḍukkā, பெ. (n.)

   1. சடுக்கா வண்டி;{}, a small cart.

   2. விரைவு; quickness, swiftness.

     [சடு → சடுக்கா (மு.தா. 62);]

சடுதி

சடுதி caḍudi, பெ. (n.)

போட்டி,

 competition.

என்னோடு சடுதி போடாதே. (மீனவ.);

 Marijaduti.

     [சடைவு-சடுவு – சடுதி]

 சடுதி1 caḍudi, பெ. (n.)

சடுத்தி பார்க்க (கொ.வ.);;see {}.

     [சடுத்தி → சடுதி]

 சடுதி2 caḍudi, கு.வி.எ. (adv.)

சடிதி1 பார்க்க (கொ.வ.);;see {}.

     [சடு → சடுதி (மு.தா. 62);]

சடுதிபார்-த்தல்

சடுதிபார்-த்தல் caḍudipārddal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தேர்வு பண்ணுதல்; to review, muster as forces as inspect, examine accounts.

     [சடுதி + பார்-,]

சடுதியாக

 சடுதியாக caḍudiyāka, வி.எ. (adv.)

   விரைவாக; quickly, fast.

இந்த வேலையைச் சடுதியாக முடித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம்.

     [சடுதி + ஆக]

சடுதை

 சடுதை caḍudai, பெ. (n.)

   தொல்லை, நச்சரிப்பு (சிரமம்);; disturbance, nuisance

     [சாடு-சடு-சடுதை]

சடுத்த மருத்துவம்

 சடுத்த மருத்துவம் caḍuttamaruttuvam, பெ. (n.)

உடனடி மருத்துவம்,

 emergency treatment.

     [சடுத்தம்+மருத்துவம்]

சடுத்தக்காரன்

 சடுத்தக்காரன் caḍuttakkāraṉ, பெ. (n.)

   கட்டாயப்படுத்துவோன் (வின்.);; one who urges or compels one who is importunate.

     [சடுத்தம் + காரன்]

சடுத்தம்

சடுத்தம்1 caḍuttam, பெ. (n.)

   1. போட்டி (வின்.);; rivalry, competition.

   2. போராட்டம்; dispute.

சடுத்தத்திலே வந்து விழுந்தது.

   3. பூட்கை; challenge.

 seeஒருவருக்கொருவர் சடுத்தம் பேசி” (இராமநா. உயுத் .16);.

   4. கட்டாயப்படுத்துகை (வின்.);; compelling, urging, importuning, being obstinate.

     [சடு → சடுத்தம்]

 சடுத்தம்2 caḍuttam, பெ. (n.)

   விரைவு, உடனடித் தேவை; urgency.

     [சடு → சடுதி → சடுத்தம்]

சடுத்தம்பூட்டு-தல்

சடுத்தம்பூட்டு-தல் caḍuddambūḍḍudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   வலக்காரமாகப் புகுத்துதல்; to thrust by force.

     [சடுத்தம் + பூட்டு-,]

சடுத்தாசனம்

சடுத்தாசனம் caḍuttācaṉam, பெ.(n.)

சலாசனம் பார்க்க (சைவச.பொது.523, உரை);;see {}.

சடுத்தி

 சடுத்தி caḍutti, பெ. (n .)

   ஆய்வு (இ.வ.);; examination, inspection, review, search.

     [சடு → சடுத்தி]

சடுரசம்

 சடுரசம் saḍurasam, பெ.(n.)

   அறுசுவை; the six flavours.

     [Skt.sad-rasa → த.சடுரசம்.]

சடுலம்

சடுலம்1 caḍulam, பெ. (n.)

   நடுக்கம் (யாழ். அக.);; trembling, shaking.

     [சடு = விரைவு. சடு → சடுலம். தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது. இயங்குவது போல் அசையும் நடுக்கம்]

த. சடுலம் → Skt. {}

 சடுலம்2 caḍulam, பெ. (n.)

சடுலை பார்க்க;see {} (செ.அக.);.

     [சதி = விரைவு. சடு → சடுலம்= மிக வேகமாக பாய்வது, அவ்வாறு பாயும் மின்னல்]

சடுலவாரவம்

சடுலவாரவம் caḍulavāravam, பெ. (n.)

சடுலவோசை பார்க்க;see {}.

 seeகழை முதலிய தருக்களின் சடுலவாரவ மிஞ்சி” (பாரத. காண்டவ. 25);.

     [சடுலம் + அரவம்]

சடுலவோசை

சடுலவோசை caḍulavōcai, பெ. (n.)

   தீக்கொழுந்து முதலியவற்றின் அசைவினால் எழும் ஒலி; tremulous sound, as of leaves in a forest flames of fire, etc.

 seeவெடித்தெழு சடுல வோசையின்” (பாரத. காண்டவ. 2௦);.

     [சடுலம் + ஓசை]

சடுலை

 சடுலை caḍulai, பெ. (n.)

   மின்னல் (யாழ்.அக.);; lightning.

     [சடுலம் → சடுலை]

சடுவர்க்கம்

சடுவர்க்கம் caḍuvarkkam, பெ.(n.)

சட்டுவர்க்கம்2 பார்க்க;see {}-varkkam.

சடுவிதவாதம்

 சடுவிதவாதம் caḍuvidavādam, பெ.(n.)

   அறுவகை ஊதை (வாதம்.);; the six kinds of rheumatic or nervous affections (சா.அக.);.

சடை

சடை1 caḍaidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. சோர்வடைதல் (இ.வ.);; to become weary, disheartened, dispirited.

   2. உள்ளடங்குதல் (வின்.);; to be shut in.

   3. பயிர் முதலியன நறுங்கிப் போதல், வளர்ச்சி தடைபட்டுப் போதல்; to be stunted in growth, as trees, plants.

ம. சடயுக

     [சட்டு → சடை (மு.தா.117);]

 சடை2 caḍaidal,    2 செ.குன்றாவி. (v.t.)

   1. ஆணி முதலியன தறைதல் (வின்.);; to flatten, as the head or point of a nail by repeated blows;

 to clinch, rivet.

   2. தடுத்தல் (யாழ்ப்.);; to stop the progress, to interrupt, arrest, check, prevent, hinder.

     [(கட்டு); → சட்டு → சடை]

 சடை3 caḍaittal,    4 செ.கு.வி. (v.i.)

சடை1 -1 பார்க்க;see {}.

 seeகொடுக்கக் கை சடைப் பாரில்லை” (குற்றா.தல. தக்கன் வேள்விச். 8௦);.

     [கட்டு → சட்டு → சடை → சடைதல் (மு.தா.117);]

 சடை4 caḍaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. அடர்ந்து கிளைத்தல் (யாழ்.அக.);; to grow densely and luxuriantly.

   2. பெரியதாதல்; to grow big.

     [சடாய் → சடை → சடைதல் (வ.வ. 138);]

 சடை5 caḍai, பெ. (n.)

   1. நெட்டி (பிங்.);; sola pith.

   2. அடைப்பு; stopper of a bottle, cork.

     [சடாய் → சடை (வ.வ. 138);]

 சடை6 caḍai, பெ. (n.)

   1. சடையாக அமைந்த மயிர்முடி; matted locks of hair.

 seeவிரிசடைப் பொறையூழ்த்து” (பரிபா. 9:5);.

 seeசடைத் தம்பிரானுக்குச் சாதம் இல்லாதபோது மொட்டைத் தம்பிரானுக்கு மோர் எங்கே கிடைக்கும்’ (பழ.);.

   2. பின்னிய கூந்தல் (பிங்.);; plaited hair.

   3. அடர்ந்த மயிர்; bushy, shaggy or thick hair.

   4. வேர்; roots fibrous roots, as in a moss.

 seeகடும்பழிச் சடையலைந்து” (கல்லா.82.3);.

   5. விழுது (இலக்அக);; aerial roots.

   6. இலாமிச்சை (தைலவ. தைல. 98);; cuscus-grass.

   7. வெட்டிவேர் (தைலவ. தைல. 98);; black cuscus-grass.

   8. சடாமாஞ்சி (தைலவ. தைல. 6); பார்க்க;see {}.

   9. ஆறாவது விண்மீன் (பரிபா. II:2, உரை);; the sixth {}.

   10. ஆடவை ஒரை (பரிபா. 11:2, உரை);; Gemini.

   11. மறையோதும் முறைகளுள் ஒன்று; a method of recitting the {} in which a pair of words is repeated thrice, one repetition being in inverted order.

 seeசுரம்பதங் கிரமஞ் சடை” (பிரபோத. 11:4);.

   12. கற்றை; thick bunch.

   13. ஆணியின் கொண்டை (யாழ்ப்.);; flat head of a nail.

   14. பெரியது; which is big (செ.அக.);.

மறுவ. குடிலம், வேணி, கோடீரம், பின்னல், சடிலம்

   ம. சட, சட;   க, சடெ, சடெ;   தெ, சட;   து. சடெ, செடெ;   குட.,. பட. சடெ;கோத. செட்வ் [சள்ளுதல் = சிக்குதல். சழிதல் = நெருங்குதல், அடர்தல், நெருங்கிக் கிடத்தல்.

 seeதிங்கட் டொல்லரா கழிந்த சென்னி” (தேவா. 98௦: 6);. சடாய்த்தல் = செழித்தல், அடர்ந்து கிளைத்தல். சடாய் → சடை = கற்றை, இமற்கையான மயிர்ச் கற்றை, கற்றையான சடைப்பின்னல். சடை = சடாய். சடைச் பருத்தி, சடையவரை என்பன கற்றையான அல்லது கொத்தான பொருள்களை உணர்த்தும். சடைமுடி, சடைவிழுதல் சடையாண்டி, சடையன் என்னும் சொற்களில், சடை என்பது இயற்கையாகவோ எண்ணெப் தேய்க்காமையாலோ ஏற்படும் மயிர்க்கற்றையைக் குறிக்கும்.

வடவர் ஜட் ({}); என்னும் சொல்லை மூலமாகச் காட்டுவர். அது சிக்கற் பொருளையுணர்த்துதலால் சடாய் என்பதன் திரிபே. (வ.வ. 136);]

 சடை7 caḍai, பெ. (n.)

   400 இழைகள் கொண்ட நூற்றொகுதி (செங்கை.);; skein of thread.

மறுவ. சிலுப்பை

     [சடாய் → சடை = கற்றை நூற்றொகுதி]

சடைகட்டி

 சடைகட்டி caḍaigaḍḍi, பெ.(n.)

   திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tirukkoyilur Taluk.

     [சடை+கட்டி]

சடைகட்டு-தல்

சடைகட்டு-தல் caḍaigaḍḍudal,    5 செ.கு.வி. (v.i.)

   பின்னிய சடைமுடியைத் தூக்கிக் கட்டுதல்; to plait tresses.

க. சடெகட்டு

     [சடை6 + கட்டு]

சடைகட்டை

 சடைகட்டை caḍaigaḍḍai, பெ. (n.)

   மீன்பிடி வலையுடன் அடையாளத்தின் பொருட்டு கட்டப்பட்டிருக்கும் மிதவை (செங்கை.);; floating log tied with fishing net.

     [சடை + கட்டை]

சடைக்கஞ்சா

 சடைக்கஞ்சா caḍaikkañjā, பெ. (n.)

   கஞ்சா வகை (சங்.அக.);; a variety of Bengal hemp.

     [சடை + கஞ்சா]

சடைக்கட்டை

 சடைக்கட்டை caḍaikkaḍḍai, பெ. (n.)

சடைகட்டை பார்க்க;see {}.

     [சடை + கட்டை]

சடைக்கணவாய்

 சடைக்கணவாய் caḍaikkaṇavāy, பெ. (n.)

   கணவாய் மீன்வகை (வின்.);; a species of cuttle- fish.

     [சடை + கணவாய்]

சடைக்கந்தம்

சடைக்கந்தம் caḍaikkandam, பெ. (n.)

   1. வசம்பு; sweet flag.

   2. கந்தகம்; sulphur.

     [சடை + கந்தம்]

சடைக்கரப்பான்

 சடைக்கரப்பான் caḍaikkarappāṉ, பெ. (n.)

   ஒரு வகைக் கரப்பான் நோய்; a crowded skin eruption – Strophulous confertus (சா.அக.);.

     [சடை + கரப்பான்]

சடைக்காந்தாரி

 சடைக்காந்தாரி caḍaikkāndāri, பெ. (n.)

காட்டுச்சாரணை பார்க்க;see {} (சா.அக.);.

     [சடை + காந்தாரி]

சடைக்கால்

சடைக்கால் caḍaikkāl,    கொடிக்காற்பயிர் அழிப்பட்டு வரம் நிலம் (W.G.); land of an abandoned betel-garden. [சடை1 + கால்]

சடைக்கிரந்தி

சடைக்கிரந்தி caḍaikkirandi, பெ. (n.)

   கரப்பான் வகை (தஞ்சர. iii. 92);; a kind of eruption.

     [சடை + கிரந்தி]

சடைக்குச்சு

 சடைக்குச்சு caḍaikkuccu, பெ. (n.)

   தலை மயிரோடு பின்னித் தொங்கவிடுவதாய் இரண்டு மூன்று குச்சுக்களை உடைய அணி; hair- ornament with pendants composed of two or three small gold cups (செ.அக.);.

க. சடெகுச்சு

     [சடை + குச்சு]

     [p]

சடைக்குஞ்சம்

சடைக்குஞ்சம் caḍaikkuñjam, பெ. (n.)

சடைக்குச்சு பார்க்க (இ.வ.);;see {}.

     [சடை1 + குஞ்சம்]

சடைக்குட்டம்

சடைக்குட்டம் caḍaikkuḍḍam, பெ. (n.)

   யானைக் குட்டம்; a kind of leprosy with thickening of the skin (சா.அக.);.

     [சடை2 + குட்டம். குள் → குட்டு → குட்டம் = குட்டை, குட்டி, விரல்களும் மூக்கும் அழுகிக் குட்டையாகும் நோய்]

த. குட்டம் → Skt. {}

சடைக்குறண்டி

 சடைக்குறண்டி caḍaikkuṟaṇḍi, பெ. (n.)

   சுமாலிக் குறண்டி; a species of caranday – Lepidagathis genus (சா.அக.);.

     [சடை + குறண்டி]

சடைக்குலம்

 சடைக்குலம் caḍaikkulam, பெ. (n.)

   வெள்ளைக் குந்திரிக்கம்; white dammer – Valeria indica (சா.அக.);.

     [சடை + குலம்]

சடைக்குழல்

 சடைக்குழல் caḍaikkuḻl, பெ. (n.)

   இரட்டை எருதுகளால் இழுக்கப்படும் ஏர் வகை; seed- drill or drill-plough drawn by a pair of the bullocks (செ.அக);.

     [சடை + குழல். சதை → சடை]

சடைக்கை

 சடைக்கை caḍaikkai, பெ. (n.)

   இலைக் கள்ளி; leaf-spurge – Euphorbia neirirfolia (சா.அக.);.

     [சடை + கை]

சடைக்கொடி

சடைக்கொடி caḍaikkoḍi, பெ. (n.)

   நெட்டி; pith plant (சா.அக.);.

     [சடை5 + கொடி]

சடைக்கோங்கு

சடைக்கோங்கு caḍaikāṅgu,    மஞ்சட் கோங்கு (சித்.அக); a species of common caung.

     [சடை4 + கோங்கு]

சடைசார்

சடைசார்1 kagai-šār, பெ.(n.)

   1. தொழில்; business, transaction.

     [கடை + சார்.]

கடைசார்பான வணிகத் தொழில்முயற்சி.

சடைச்சம்பா

 சடைச்சம்பா caḍaiccambā, பெ. (n.)

   கற்றை கற்றையாகக் காய்க்கும் சம்பா நெல் வகை; a variety of {} paddy bearing grains in thick clusters (செ.அக.);.

ம. சடச்சம்பா

     [சடை + சம்பா]

சடைச்சி

சடைச்சி caḍaicci, பெ. (n.)

   1. நெட்டி (மலை.);; sola pith.

   2. கீரிப்பூண்டு (L.);; Indian snake- root.

   3. புளியாரை (மூ.அ.);; yellow wood-sorrel.

   4. பாசிவகை (பிங்.);; a kind of moss.

   5. மரவகை; common Indian linden.

   6. பொன்னிமிளை என்னும் செவ்வெண்மையான கல்வகை (வின்.);; a mineral.

ம. சடச்சி

     [சடை5 → சடைச்சி]

சடைச்சிகி

 சடைச்சிகி caḍaiccigi, பெ. (n.)

   நீர்ச்சுண்டி; floating sensitive plant – Neptunia oberacca (சா.அக);.

சடைச்சிகிரி

 சடைச்சிகிரி caḍaiccigiri, பெ. (n.)

   மிளகாய்; chilli – Capsicum fruitescens (சா.அக.);.

சடைச்சிகை

 சடைச்சிகை caḍaiccigai, பெ. (n.)

   மீன்கொல்லி; fish-killer – Anamirta cocculus (சா.அக.);.

சடைச்சிவேர்

 சடைச்சிவேர் caḍaiccivēr, பெ. (n.)

   பூடுவகை (சங்.அக.);; a plant – Achyranthes corymbosa.

     [சடை → சடைச்சி + வேர்]

சடைச்செந்நெல்

சடைச்செந்நெல் caḍaiccennel, பெ. (n.)

சடைச்சம்பா பார்க்க;see {}.

 seeசடைச்செந்நெல் பொன்விளைக்கும்… நாடு” (நள. சுயம்வர.. 68);.

     [சடை + செந்நெல்]

சடைத்தும்பி

 சடைத்தும்பி caḍaittumbi, பெ. (n.)

   பெரிய தும்பி இன மீன் (மீனவ.);; a large kind of tumbi (scatish); fish.

     [சடை + தும்பி]

சடைத்தும்பை

 சடைத்தும்பை caḍaittumbai, பெ. (n.)

   முடித் தும்பை; a kind of leuces plant with thick set of flowers (சா.அக.);.

     [சடை + தும்பை]

சடைத்தேங்காய்

 சடைத்தேங்காய் caḍaittēṅgāy, பெ. (n.)

   நார் மிகுந்த தேங்காய் (யாழ்ப்.);; coconut whose husk abounds in fibres.

     [சடை + தேங்காய்]

சடைநவ்வல்

 சடைநவ்வல் caḍainavval, பெ. (n.)

   நரிநவ்வல் அல்லது சிறுநாவல்; ruddy black plum – Eugenia rubicunda (சா.அக.);.

     [சடை + நவ்வல்]

சடைநாகம்

 சடைநாகம் caḍainākam, பெ. (n.)

   மகளிர் தலையணி; a woman’s hair-ornament (செ.அக.);.

க. சடெநாகர

     [சடை + நாகம். நல்லப்பாம்பு படம் பொறித்த பொன்னாலான, சிறுவட்ட வடிவத் தலையணி]

சடைநாங்கில்

சடைநாங்கில் caḍaināṅgil, பெ. (n.)

   பெருநாங்கில் என்னும் பெரிய இலைகளையுடைய இருள்மரம்; large-leaved ironwood – Mesua (genus); (சா.அக.);.

     [சடை6 + நாங்கில்]

சடைநாய்

சடைநாய் caḍaināy, பெ. (n.)

   உடலில் மயிரடர்ந்துள்ள நாய்வகை; a species of dog having shaggy hair.

     [சடை6 + நாய்]

சடைநாரை

சடைநாரை caḍainārai, பெ. (n.)

   தலைப் பகுதியில் சடைபோன்ற நீண்ட இறகுகள் உடைய, செம்மஞ்சள்நிறக் கடற்பறவை (மீனவ.);; reddish yellow coloured bird, which has matted hair-like portion on top of its wings.

     [சடை6 + நாரை]

     [p]

சடைநெத்திலி

சடைநெத்திலி caḍainettili, பெ. (n.)

   நெத்திலி மீனிற் பெரியது (மீனவ.);; big nettili fish.

     [சடை4 + நெத்திலி]

சடைபற்று-தல்

சடைபற்று-தல் caḍaibaṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   அடர்த்தியாதல் (வின்.);; to become thick as of hair, leaves, etc. [சடை4 + பற்று-,]

சடைபின்னு-தல்

சடைபின்னு-தல் caḍaibiṉṉudal,    5 செ.கு.வி. (v.i.)

   தலைமயிரைப் பிரிவுகளாக்கி அவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து நிற்குமாறு பின்னுதல்; to plait the hair.

க. சடெயெணெ

     [சடை6 + பின்னு-,]

சடைபில்லை

சடைபில்லை caḍaibillai, பெ. (n.)

சடைவில்லை பார்க்க;see {}.

   க. சடெபில்லை;தெ. சடபில்ல.

     [சடை6 + பில்லை]

சடைபோடு-தல்

சடைபோடு-தல் caḍaipōḍudal, செ.கு.வி. (v.i.)

   கூரைவீட்டின் முகட்டினைப் புல்லால் பின்னல்போட்டு மூடுதல்; to plait the straws on the gabled of a hut (கட்டட);.

     [சடை6 + போடு-,]

சடைபோட்டுக்கொள்(ளு)-தல்

சடைபோட்டுக்கொள்(ளு)-தல் caḍaipōḍḍukkoḷḷudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   1. தலைமுடியைச் சடையாக்கிக் கொள்ளுதல்; to have one’s hair matted by artificial means.

   2. தலைபின்னிக் கொள்ளுதல்; to have one’s hair well combed and plaited.

     [சடை6 + போட்டுக்கொள்(ளு);-,]

சடைப்பயறு

சடைப்பயறு caḍaippayaṟu, பெ. (n.)

   பயறு வகை (L.);; tufted green-gram.

     [சடை1 + பயறு]

சடைப்பருத்தி

சடைப்பருத்தி caḍaipparutti, பெ. (n.)

   செம்மண்ணில் பயிராகும் அடுக்குப்பருத்தி (G.Sm.D.I.i.226);; a superior kind of cotton raised in red loam.

க. சடெகத்தி

     [சடை4 + பருத்தி]

சடைப்பாசி

சடைப்பாசி caḍaippāci, பெ. (n.)

   சடைபோல் தடித்திருக்கும் பாசிவகை; a kind of moss.

     [சடை4 + பாசி]

சடைப்பின்னல்

சடைப்பின்னல் caḍaippiṉṉal, பெ. (n.)

   ஒன்றோடொன்று நெருங்கிப்பிணைந்திருப்பது; intertwining like matted locks.

 seeகொடிகள் சடைப்பின்னலாகக் கிடக்கின்றன’ (உ.வ.);.

     [சடை6 + பின்னல்]

சடைப்புகையிலை

சடைப்புகையிலை caḍaippugaiyilai, பெ. (n.)

   இலை அதிகமாக வளரும் புகையிலை வகை; a kind of tobacco plant with thick set of leaves (சா.அக.);.

     [சடை4 + புகையிலை]

சடைப்புல்

சடைப்புல் caḍaippul, பெ. (n.)

   புல்வகை (M.M. 311);; hairy grass.

     [சடை4 + புல்]

சடைப்பூச்சி

சடைப்பூச்சி caḍaippūcci, பெ. (n.)

   கம்பளிப் பூச்சி வகை (வின்.);; a kind of caterpillar.

     [சடை6 + பூச்சி]

சடைப்பூம்பாதிரி

 சடைப்பூம்பாதிரி caḍaippūmbātiri, பெ. (n.)

   மிகுதியாய்ப் பூக்கும் பாதிரிமரம்; trumpet flower tree with dense flowers – Sterlospermum chelonoides (சா.அக.);.

     [சடை + பூம்பாதிரி]

சடைப்பூரான்

சடைப்பூரான் caḍaippūrāṉ, பெ. (n.)

   பூரான் வகை; a kind of centipede.

     [சடை6 + பூரான்]

சடைப்பேய்

சடைப்பேய் caḍaippēy, பெ. (n.)

   சடை முடியுடைய பேய்; devil or goblin which has matted hair.

மறுவ. முனி

     [சடை1 + பேய். பேபே என்பது அச்சக் குறிப்பு. பே = அச்சம். பே → பேம் =அச்சம். பே → பேய் = அச்சம், அஞ்சப்படும் ஆவி]

சடைப்பொருவா

 சடைப்பொருவா caḍaipporuvā, பெ. (n.)

   ஒரு வகைக் கடல்மீன்; a kind of sea fish (மீனவ.);.

     [சடை + பொருவா]

சடைமாஞ்சம்

 சடைமாஞ்சம் caḍaimāñjam, பெ. (n.)

   மிளகு சாரணைக்கொடி; a creeper of Triantheme (சாஅக);.

     [சடை + மாஞ்சம்]

சடைமாரியாயி

சடைமாரியாயி caḍaimāriyāyi, பெ. (n.)

   அம்மை நோய்க்குரிய பெண்தெய்வம் (M.L.);; goddess of measles.

     [சடை4 + மாரியாயி. ஒ.நோ. அம்மன் = அம்மைதோய் வகை, காளி]

சடைமுடி

சடைமுடி caḍaimuḍi, பெ. (n.)

   1. சடை6 1 பார்க்க;see {} l.

   2. சடையோடு கூடிய மகுடம்; matted hair coiled into a crown.

 seeபுன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை” (சிலப். 25, 126);.

   3. சரக்கொன்றை (மூ.அ.);; Indian laburnum.

க., தெ. சடெமுடி

     [சடை4 + முடி]

சடைமுடியோர்

சடைமுடியோர் caḍaimuḍiyōr, பெ. (n.)

   சடை முடியுடைய முனிவர் (பிங்.);; ascetics, as persons with matted hair.

     [சடை4 + முடியோர்]

சடையநாயனார்

சடையநாயனார் caḍaiyanāyaṉār, பெ. (n.)

   சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தையும் அறுபத்துமூவருள் ஒருவருமான நாயனார் (பெரியபு.);; a canonized {} saint, father of {}, one of 63 {}.

     [சடை4 → சடைய + நாயனார்]

சடையநோடை

 சடையநோடை caḍaiyanōḍai, பெ.(n.)

   திருவண்ணாமலை வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Thiruvannamalai Taluk.

     [சடையன்+ஓடை]

சடையனேரி

 சடையனேரி caḍaiyaṉēri, பெ. (n.)

   தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஊர்; a village in {} District.

     [சடையன் + ஏரி. சடையன் வெட்டிய ஏரி]

ஏரின் உதவி கொண்டு செய்யப்படும் பயிர்த் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படும் நீரைத்தேக்கி வைப்பதற்கு உருவாக்கப்படும் ஏரி. ஆழ்ந்தகன்ற நீர்நிலை.

சடையன்

சடையன்1 caḍaiyaṉ, செ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish (மீனவ.);.

     [சடை → சடையன்]

 சடையன்2 caḍaiyaṉ, பெ. (n.)

   1. சிவன் (உரி.நி.);;{}.

   2. சடையநாயனார்; a canonized Saiva saint.

 seeஎன்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன்” (தேவா.738, 11);.

   3. வெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தவரும், கம்பனுக்கு உதவியளித்தவருமான பெருமகன்; a patron of {}.

 seeவறுமை நோய்க்கு மருந்தன சடையன்” (கம்பரா. வேள்வி. 1);.

ம. சடயன்

     [சடை4 → சடையன்]

முழுமுதற்கடவுளுக்குப் பேரண்டத்தையே வடிவமாகக் கூறுவது வழக்கமாதலால், மாலையில் தோன்றும் செவ்வானம் சிவ மேலாகத் தோன்றும் பிறையையும், பனிமலையுச்சியில் பிறக்கும் கங்கையையும் அவர் தலையிலனிந்திருப்பதாகவும் உருவகித்துக் கூறினர் முன்னோர் (ஒ.மொ.56);.

 சடையன்3 caḍaiyaṉ, பெ. (n.)

   கி.பி. 863 – 911 வரை ஆண்ட பாண்டிய மன்னன்; a {} king.

 seeதென்னாட்டுக் கோனாயின சடையந் தனிசெல்க” (பா.செ.ப);

     [சடை + அன். ‘அன்’ – ஆ.பா.ஈறு]

இரண்டாம் வரகுணன் என்று அழைக்கப் பட்டவன். சிறந்த சிவனடியான்.

சடையன் வீரநாராயணன்

சடையன் வீரநாராயணன் caḍaiyaṉvīranārāyaṇaṉ, பெ. (n.)

   கி.பி. 866 – 911 வரை ஆண்ட பாண்டியமன்னன்; a {} king.

     [சடையன் + வீரநாராயணன்]

முற்காலப்பாண்டிய மன்னன்.

சடையன் வீரபாண்டியன்

சடையன் வீரபாண்டியன் caḍaiyaṉvīrapāṇḍiyaṉ, பெ. (n.)

   கி.பி 938 – 959 வரை ஆண்ட பாண்டியன்; a {} king.

     [சடையன் + வீரபாண்டியன்]

சடையன்மூலி

 சடையன்மூலி caḍaiyaṉmūli, பெ. (n.)

   நார் அல்லது மயிரடர்ந்த பூடுகள்; any plant grown with thick set of fibres or hairs (சா.அக.);.

     [சடையன் + மூலி. மூல → மூலி = மருத்திற்குரிய வேர்ச்செடிகொடி]

சடையப்பன்

சடையப்பன் caḍaiyappaṉ, பெ. (n.)

   1. சடை முடியையுடைய அப்பன், சிவன்; lit., the father or lord with mated hair, {}.

 seeஅப்பார் சடையப்பன்” (திருவாச. 8, 11);.

   2. கம்பனுக்கு உதவி யளித்தவரும் திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்தவருமான ஒரு வள்ளல்; patron of Kamban.

 seeவாழ்வார் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப்பெற” (கம்பரா. தனியன்);.

     [சடை6 + அப்பன்]

முனிவன்கோலத்திற் சடையுடைமையால், சிவன் சடையன், சடையப்பன் என்றும் பெயர் பெற்றான்.

சடையன்2 பார்க்க

சடையரசன்

சடையரசன் saḍaiyarasaṉ, பெ.(n.)

   1. வாணக்கெந்தி; stick sulphur.

   2. குழாய்க் கெந்தி; roll sulphur (சா.அக.);.

சடையவரை

சடையவரை caḍaiyavarai, பெ. (n.)

   சடை சடையாய்க் காய்க்கும் அவரை; a species of bean.

     [சடை4 + அவரை]

சடையவர்மன் இராசராசன் சுந்தரன்

சடையவர்மன் இராசராசன் சுந்தரன் caḍaiyavarmaṉirācarācaṉcundaraṉ, பெ. (n.)

   கி.பி. 1310 முதல் 1332 வரை ஆண்ட பாண்டியன்; a {} king ruled during 1310 – 1332.

     [சடையவர்மன் + இராசராசன் + சுந்தரன்]

சடையவர்மன், மாறவர்மன் என்பன தலைமுறைதோறும் மாறிமாறிச் சூடிக் கொள்ளும் பாண்டியர்தம் குலப்பட்டம்.

சடையவர்மன் உடையார் சிறிவல்லபன்

சடையவர்மன் உடையார் சிறிவல்லபன் caḍaiyavarmaṉuḍaiyārciṟivallabaṉ, பெ. (n.)

   கி.பி. 1014 முதல் 1031 வரை திருநெல்வேலிப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியன்; a {} king ruled during 1014-1031.

     [சடையவர்மன் + உடையார் + சிறிவல்லபன்]

சடையவர்மன் குலசேகரன்-

சடையவர்மன் குலசேகரன்-1 caḍaiyavarmaṉkulacēkaraṉ, பெ. (n.)

   1190 முதல் 1218 வரை ஆண்ட பாண்டிய மன்னன்; a {} king ruled during 1190 – 1218.

     [சடையவர்மன் + குலசேகரன்]

சோழஅரசுக்குத் திறை செலுத்த மறுத்ததால், சோழன் குலோத்துங்கன் மதுரை மீது படை யெடுத்து, குலசேகரனையும், அவன் மனைவி, மகளையும் சிறைவீடு செய்து பின்பு அடி பணிந்த பாண்டியனுக்கு அவன் நாட்டைத் திரும்ப அளித்தான். மதுரை மீனாட்சி கோயிலுக்குப் பல திருப்பணிகள் இம் மன்னன் செய்துள்ளான். சடையவர்மன் குலசேகரன் என்ற பெயரில் சிலர் ஆட்சி புரிந்துள்ளனர்.

சடையவர்மன் சிறிவல்லபன்

சடையவர்மன் சிறிவல்லபன் caḍaiyavarmaṉciṟivallabaṉ, பெ. (n.)

   கி.பி. 1101 – 1124 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன்; a {} king ruled during 11௦4 – 1l24.

     [சடையவர்மன் + சிறிவல்லபன்]

இம்மன்னன் தந்தை மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இடைக்காலப் பாண்டியன் குலசேகரன்.

இப் பெயரில் பலர் பாண்டிய நாட்டை ஆண்டுள்ளனர்.

சடையவர்மன் சுந்தரன்-l

சடையவர்மன் சுந்தரன்-l caḍaiyavarmaṉcundaraṉ, பெ. (n.)

   கி.பி. 1250 – 1284 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன்; a {} king ruled during 1250 – 1284.

சுந்தரன் போசளர்களின் படைத்தலைவனான சிங்கணனைக் கொன்றான். போசளர்களின் கண்ணனூர்க் குப்பத்தைக் கைப்பற்றினான். இலங்கை மன்னனிடம் திறை பெற்றான். கோப்பெருஞ்சிங்கனை வென்று சேந்த மங்கலத்தைப் பிடித்தான். நெல்லூரில் மற முழுக்கும் (வீராபிசேகமும்);, வெற்றி முழுக்கும் (விசயாபிசேகமும்); செய்து கொண்டான். சடையவர்மன் சுந்தரன் பெயரில் ஒன்பதின்மருக்குமேல் ஆட்சி புரிந்துள்ளனர்.

சடையவர்மன் பராக்கிரமன்-I

சடையவர்மன் பராக்கிரமன்-I caḍaiyavarmaṉparākkiramaṉ, பெ. (n.)

   கி.பி. 1315 – 1334 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன்; a {} king ruled during 1315-1334.

     [சடையவர்மன் + பராக்கிரமன்]

தில்லி அரசன் அலாவுதீன் கில்சியின் படைத் தலைவன் குசுரூகானையும், அவனது படைகளையும் விரட்டியதால்,

இவன் “வாளால் வழி திறந்தான்” என்று அழைக்கப் பட்டான்.

 seeவாளால் வழி திறந்தான் பணம்” எனும்பெயரில் உள்ள நாணயம், இம் மன்னன் காலத்தைச் சார்ந்தது.

சடையவர்மன் விக்கிரமன்-l

சடையவர்மன் விக்கிரமன்-l caḍaiyavarmaṉvikkiramaṉ, பெ. (n.)

   கி.பி. 1241 -1254 வரை ஆண்ட பாண்டிய மன்னன்; a {} king ruled during 1241 – 1254.

     [சடையவர்மன் + விக்கிரமன்]

போசள மன்னன் வீரசோமேசுவரனின் சமகாலத்தவன். போசள மன்னனின் மேலாளுமையைப் பாண்டியர்கள் ஏற்று ஆட்சி செய்தனர். இப் பெயரில் பலர் ஆட்சி புரிந்துள்ளனர்.

சடையவர்மன் வீரன்

சடையவர்மன் வீரன் caḍaiyavarmaṉvīraṉ, பெ. (n.)

   கி.பி. 1170 – 1195 வரை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன்; a {} king ruled during 1170 – 1195.

     [சடையவர்மன் + வீரன்]

இப் பெயரில் பல பாண்டிய மன்னர்கள் ஆண்டுள்ளனர்.

சடையாணி

சடையாணி caḍaiyāṇi, பெ. (n.)

ஆணிவகை (பிங்.);,

 flat-headed nail.

     [சடை2 + ஆணி]

சடையாண்டி

சடையாண்டி caḍaiyāṇḍi, பெ. (n.)

   சடை வளர்த்த ஆண்டி; religious mendicant with matted hair.

     [சடை6 + ஆண்டி]

சடையாலி

 சடையாலி caḍaiyāli, பெ. (n.)

   சாலிவகை நெல்லினம்; a variety of paddy.

     [சடை+ஆலி]

சடையுளுவை

 சடையுளுவை caḍaiyuḷuvai, செ. (n.)

   சடை போலும் நீண்ட இழைகளையுடைய உளுவை மீன் (தஞ்சை. மீனவ.);;     ‘uluvai’ fish which has matted hair like long strings.

     [சடை + உளுவை]

சடையெருமை

 சடையெருமை caḍaiyerumai, செ. (n.)

   மயிர் அடர்ந்த எருமை; a species of buffalo with thick hairs (சா.அக.);.

     [சடை + எருமை]

     [p]

சடையோன்

சடையோன் caḍaiyōṉ, பெ. (n.)

   1. சிவன்;{}.

 seeபொன்னார் சடையோன் புலியூர்” (திறக்கோ.89);.

   2. சிவனின் தானைத்தலைவன் (சூடா.);;{}.

ம. சடயன்

     [சடை4 → சடையோன்]

சடைராகி

 சடைராகி caḍairāki, பெ. (n.)

   நீண்ட விரிந்த கதிர்களைக் கொண்ட கேழ்வரகு (கோவை.);; a kind of ragi.

     [சடை + ராகி. இறகி → இரகி → ராகி]

சடைவாறு-தல்

சடைவாறு-தல் caḍaivāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   இளைப்பாறுதல் (நெல்லை);; to have rest or relief.

     [சடைவு + ஆறு-,]

சடைவில்லை

சடைவில்லை caḍaivillai, பெ. (n.)

   தலைப் பின்னலிற் பெண்கள் செருகியணியும் தலையணி வகை; gold disc worn on the hair-plait, a woman’s ornament.

     [சடை4 + வில்லை]

சடைவிழு-தல்

சடைவிழு-தல் caḍaiviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   1. மயிர்ச்சடையாகப் பற்றுதல்; to get matted or entangled, grow shaggy or bushy as the hair.

   2. பயன்படாது போதல்; to become useless.

     [சடை6 + விழு-,]

சடைவு

சடைவு caḍaivu, பெ. (n.)

   1. மனத்தளர்ச்சி; wearisomeness, depression of spirits, dejection.

   அவனுக்குச் சடைவு அதிகம். 2 ஆணி முதலியன தறைகை; rivetting.

ம. சடவு

     [சடை1 → சடைவு]

சடைவுதீர்-த்தல்

சடைவுதீர்-த்தல் caḍaivutīrttal,    4 செ.கு.வி. (v.i.)

   சோம்பல் முறித்தல்; to stretch or twist oneself of cast off laziness.

     [சடைவு + தீர்-,]

சடைவெளவால்

 சடைவெளவால் caḍaiveḷavāl,    பெரிய வௌவால் மீன் (மீனவ); a large portrait sea- fish.

     [சடை + வெளவால்]

சடோகரம்

சடோகரம் caṭōkaram, பெ.(n.)

   1. புண்ணாற்றல்; healing of sores.

   2. அகரு; aloe wood – Agallocah (சா.அக.);.

சடோதரம்

சடோதரம் caṭōtaram, பெ.(n.)

   1. வயிற்றளைச்சல்; dysentry or flux.

   2. செரியாத பண்டங்களினால் ஏற்பட்ட குடற்கோளாறு; disorder of bowels due to indigestive substances (சா.அக.);.

சட்கோணம்

சட்கோணம் caṭāṇam, பெ.(n.)

ஆறுகோணம் பார்க்க;see hexagon.

     “சட்கோண நெடுந்தேர் மிசை” (பாரத.பதினாறாம்.65);.

     [Skt.{}-{} → த.சட்கோணம்.]

சட்சட்டெனல்

 சட்சட்டெனல் caṭcaṭṭeṉal, பெ. (n.)

   விரைவுக் குறிப்பு; onom. expr. signifying haste or hurry (செஅக.);.

பட. சடக்கன, சட்டன

     [சட்சட் + எனல்]

சட்சமம்

 சட்சமம் caṭcamam, பெ. (n.)

   வரகு; millet (சாஅக.);.

சட்சமயம்

சட்சமயம் caṭcamayam, பெ.(n.)

   அறுசமயம்; the six {} religious systems.

     “சட்சமயவேத” (திருப்பு.132);.

     [சட் + சமயம்.]

     [Skt.sats-samaya → த.சட்சமயம்.]

சட்சம்

சட்சம் caṭcam, பெ.(n.)

   சுரவரிசையில் ஒன்று (சிலப்.3, 26, உரை);;     [Skt.sad-ja → த.சட்சம்.]

சட்சரணம்

 சட்சரணம் caṭcaraṇam, பெ.(n.)

   வண்டு; beetle (சா.அக.);.

சட்சு

சட்சு caṭcu, பெ. (n.)

   கண் (சி.சி. 2, 61, மறைஞா);; eye (சா.அக.);.

     [சக்கு → சட்சு]

சக்கு1 பார்க்க.

த. சக்கு → Skt. {}.

 சட்சு caṭcu, பெ.(n.)

   கண் (சிசி.2,61.மறைஞா.);; eye.

     [Skt.caksuh → த.சட்சு.]

சட்சுகி

 சட்சுகி caṭcugi, பெ. (n.)

   இடு கொள்; four- leaved cassia- Cassia absus (சா.அக.);.

சட்சுசியம்

சட்சுசியம் saṭsusiyam, பெ. (n.)

   1. ஆட்டுச் செவி; worm-killer plant – Aristolochia bracteata.

   2. ஒதிய மரம்; Indian ash tree Odina wodier.

   3. தாழை; screwpine.

   4. நீர்ப்பூலா; water-poola – Phyllanthus multiflorus (சா.அக.);.

சட்சுதீட்சை

 சட்சுதீட்சை caṭcutīṭcai, பெ.(n.)

   குரு, சீடனைத் தனது அருட்பார்வையால் அறிவமுண்டாகும்படி செய்வது; gracious look, as a mode of initiation.

த.வ. கண்குருவம்.

     [Skt.caksuh+{} → த.சட்சுதீட்சை]

சட்சுபீடை

 சட்சுபீடை caṭcupīṭai, பெ.(n.)

   கண் வலி; pain of the eyes (சா.அக.);.

     [சட்சு + பீடை.]

     [Skt.caksh → த.சட்சு.]

சட்சுப்பார்வை

 சட்சுப்பார்வை caṭcuppārvai, பெ. (n.)

   கண்ணோட்டம்; gracious look, as a mode of imitation.

     [சட்சு + பார்வை]

சட்சுருதிதைவதம்

 சட்சுருதிதைவதம் caṭcurudidaivadam, பெ.(n.)

   எண்ணிரு (சோடச); சுரங்களுள் ஒன்று;     [Skt.sat-{}+daivada → த.சட்சுருதி தைவதம்.]

சட்சுரோகம்

 சட்சுரோகம் caṭcurōkam, பெ.(n.)

   கண்ணோய்; disease of the eyes (சா.அக.);.

     [Skt. caksuh+{} → த.சட்சுரோகம்.]

சட்சுவை

 சட்சுவை caṭcuvai, பெ.(n.)

   அறுசுவை; the six kind of tastes (சா.அக.);.

     [சட் + சுவை.]

     [Skt.sat → த.சட்.]

சட்சைவேர்

 சட்சைவேர் caṭcaivēr, பெ. (n.)

   வெள்ளைக் கரும்பு; white sugar-cane (சா.அக.);.

     [சட்சை + வேர்]

சட்ட

சட்ட caṭṭa, கு.வி.எ. (adv.)

   1. செவ்விதாக; properly, rightly;

     ‘சட்ட வினியுளது சத்தேகாண்’ (சி.போ. 9, 2);.

   2. முழுதும்; entirely.

     ‘நான் சட்டவும்மை மறக்கினும்’ (தேவா. 586, 1);.

   3. விரைவாக; speedily;

     ‘சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன்’ (திருவாச. 3௦, 2);.

     [சட்டு → சட்ட (மு.தா.62);]

சட்ட விளக்கு

 சட்ட விளக்கு caṭṭaviḷakku, பெ. (n.)

   கோயிலில் சட்டத்தில் அமைத்து இடும் விளக்கு வரிசை (இ.வ.);; rows of lamps fixed to a frame, as in a temple.

ம. சட்டவிளக்கு

     [சட்டம் + விளக்கு]

சட்டகன்

 சட்டகன் caṭṭagaṉ, பெ.(n.)

   நீள உறங்குவோன்; one who indulges in excessive sleep-Hypersomnambulist (சா.அக.);.

த.வ. நெட்டுறங்கி.

சட்டகப்பை

 சட்டகப்பை caṭṭagappai, பெ. (n.)

   தட்டகப்பை (கொ.வ.);; plate ladle (செஅக.);.

     [சட்டு + அகப்பை. அகழ் → அகழ்பு → அகழ்பை → அகப்பை]

சட்டகம்

சட்டகம் caṭṭagam, பெ. (n.)

   1. சட்டம்; frame, framework.

 seeசட்டகம் பொன்னிற் செய்து” (சீவக. 2523);.

   2. மக்களது படுக்கை (திவா.);; bed, couch.

   3. வடிவு (பிங்.);; shape, figure, image.

   4. உடல்; body.

 seeஉயிர் புகுஞ்சட்டகம்” (கல்லா. 8, 1);.

   5. பிணம்; corpse.

 seeசட்டகம் புகழாக் கட்டிலேற்றி” (ஞானா. 6: 1௦);.

   6. மரபு, விதி, நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படைக் கொள்கை; the fundamental principles of custom, law, belief, etc.

     [சட்டம் → சட்டகம் (மு.தா.119);]

சட்டகல்லி

 சட்டகல்லி caṭṭagalli, பெ. (n.)

சட்டக்கல்லி பார்க்க;see {} (செ.அக.);

     [சட்டக்கல்லி → சட்டகல்லி]

சட்டகி

 சட்டகி caṭṭagi, பெ. (n.)

   பாய்க் கோரை; koray grass used for making mats (சா.அக.);.

     [சட்டம் → சட்டகி]

சட்டக்கட்டில்

 சட்டக்கட்டில் caṭṭakkaṭṭil, பெ. (n.)

   பிரித்துப் பூட்டும்படி அமைந்த கட்டில் (இ.வ.);; cot with a detachable frame (செ.அக.);.

ம. சட்டக்கட்டில்

     [சட்டம் + கட்டில்]

சட்டக்கதவு

 சட்டக்கதவு caṭṭakkadavu, பெ. (n.)

   கனத்த சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப் பலகைகளால் அமைக்கப்பட்ட கதவு (இ.வ.);; penelled door (செஅக.);.

ம. சட்டக்கதவு

     [சட்டம் + கதவு]

சட்டக்கல்லி

 சட்டக்கல்லி caṭṭakkalli, பெ. (n.)

   வல்லாளப் (சமத்காரப்); பேச்சு (வின்.);; clever but vain talk.

தெ. சழ்டகல்லி

     [சட்டம் + கல்லி]

சட்டக்கல்லூரி

 சட்டக்கல்லூரி caṭṭakkallūri, பெ. (n.)

   சட்டக் கல்வி கற்பிக்கும் கல்லூரி; law college.

     [சட்டம் + கல்லூரி]

சட்டக்கல்வி

 சட்டக்கல்வி caṭṭakkalvi, பெ. (n.)

   சட்டப் படிப்பு; legal education.

     [சட்டம் + கல்வி]

சட்டக்கால்

சட்டக்கால்1 caṭṭakkāl, பெ. (n.)

   1. மரச்சட்டம் போல சுவரையொட்டி அமைந்த தூண்; wooden pillar.

   2 கோயில் விமான வாயிலில் சற்றுக் கூடுதலாக நீட்டித்து அமைக்கப்பட்ட கால்; outer projection of a temple tower near its gateway.

     [சட்டம் + கால்]

 சட்டக்கால்2 caṭṭakkāl, பெ. (n.)

   கடைத் தட்டியைத் தூக்கி நிறுத்துங் கால்; movable post in which the bazzar-screen rests.

     ‘சட்டக்காலை வாங்கிட —————- நெடிய கடையை அடைத்து’ (மதுரைக். 621, உரை.);

ம. சட்டக்காலு (சட்டகத்தின் கால்);

     [சட்டம் + கால்]

சட்டக்கூடு

 சட்டக்கூடு caṭṭakāṭu, பெ. (n.)

சட்டகம் பார்க்க;see {}.

ம. சட்டக்கூடு

     [சட்டம் + கூடு]

சட்டங்கட்டு-தல்

சட்டங்கட்டு-தல் caṭṭaṅgaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஏற்பாடு செய்தல் (நாஞ்);; to arrange, settle.

     [சட்டம் + கட்டு-,]

சப்பரம் முகடு முதலியவற்றிற்குச் சட்டங் கட்டுதல் ஆயத்த வினையாயிருத்தலின், சட்டங்கட்டுதல் என்பது ஆயத்தஞ் செய்தல் என்று பொருள்படும்.

சட்டங்கொழி-த்தல்

சட்டங்கொழி-த்தல் caṭṭaṅgoḻittal,    4 செ.கு.வி. (v.t.)

   ஒழுங்கு பேசுதல் (இ.வ.);; to talk glibly on punctilos and proprieties, used in contempt.

     [சட்டம் + கொழி-,]

சட்டச்சவை

சட்டச்சவை caṭṭaccavai, பெ. (n.)

   சட்டத்தை உருவாக்கும் அரசு அவை; legislature.

ம. சட்டசபா

     [சட்டம் + சவை (மு.தா. 62);]

த. அவை → சவை → சபை → Skt. {}

=

சட்டசபை

__,

பெ. (n.);

சட்டச்சவை பார்க்க;see {}.

     [சட்ட(ம்); + சபை]

சவை → சபை → Skt.{}

சட்டதிட்டம்

சட்டதிட்டம் caṭṭadiṭṭam, பெ. (n.)

   1. சட்ட ஒழுங்கு; code or regulation.

   2. உறுதிப்பாடு (வின்.);; accuracy, preciseness.

     [சட்டம் + திட்டம்]

ஓர் அமைப்பகத்தின் கரும நடப்பிற்குரிய விதியொழுங்கு முழுவதும் சட்டதிட்டம் எனப்படும் (மு.தா.109);.

சட்டத்தரணி

 சட்டத்தரணி caṭṭattaraṇi, பெ. (n.)

   வழக்கறிஞர் (யாழ்ப்.);; lawyer;

 attorney at law.

     [சட்டம் + தரணி]

 E. attorney -→ த. தரணி

சட்டத்தறி

 சட்டத்தறி caṭṭattaṟi, பெ. (n.)

   தரைக்கு மேலே உயரத்தில் இயங்கக் கூடியதறி வகை; a loom fixed above the ground level.

     [சட்டம்+தறி]

சட்டத்துறை

 சட்டத்துறை caṭṭattuṟai, பெ. (n.)

   சட்ட நுணுக்கங்கள் பற்றிய துறை; law department.

     [சட்டம் + துறை]

சட்டநம்பி

சட்டநம்பி caṭṭanambi, பெ. (n.)

   1. மாணவர் தலைவனாகிய ஆசிரியர்; teacher.

   2. தலைமை மாணவன்; pupil leader.

மறுவ. சட்டாம்பிள்ளை, சட்டநம்பிப்பிள்ளை

     [சட்டன் + நம்பி (மு.தா.108);]

சட்டநாதன்

 சட்டநாதன் caṭṭanātaṉ, பெ. (n.)

சட்டைநாதன் பார்க்க;see {}.

     [சட்டைநாதன் → சட்டநாதன்]

சட்டநிருமாண சபை

 சட்டநிருமாண சபை saṭṭanirumāṇasabai, பெ. (n.)

சட்டச்சவை பார்க்க;see {}.

     [சட்டம் + நிருமாண சபை]

சட்டநிரூபணசபை

 சட்டநிரூபணசபை saṭṭanirūbaṇasabai, பெ. (n.)

சட்டச்சவை பார்க்க;see {}.

     [சட்டம் + நிரூபணசபை]

சட்டந்தட்டு-தல்

சட்டந்தட்டு-தல் caṭṭandaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   புனுகு வழித்தல் (வின்.);; to extract the unctuous substance from the dried sac in the anal pouch of the civet cat.

     [சட்டம் + தட்டு-,]

சட்டந்தை-த்தல்

சட்டந்தை-த்தல் caṭṭandaittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. படம் முதலியவற்றிற்குச் சட்டஞ் சேர்த்தல்; to frame, nail on a frame.

   2. வரிச்சலடித்தல்; to put on reapers for tiles (செ.அக.);.

     [சட்டம் + தை-,]

சட்டன்

சட்டன் caṭṭaṉ, பெ. (n.)

   மாணாக்கன்; scholar, student.

 seeஒரு சட்டனை ஒரு சட்டன் பிழைக்கப் பேசுவானாகில்” (TA.S.I. i,9);.

     [சட்டம் → சட்டன் (மு.தா.118.);. சட்டன் = ஓலைச்சுவடி பயிலும் மாணவன்]

சட்டன் என்னும் சொல்லைச் சாத்ர (chatra); என்று திரித்து அதனையே தென்சொற்கு மூலமாகக் காட்டுவர் வடமொழியாளர்.

சட்டப்படி

 சட்டப்படி caḍḍappaḍi, பெ.எ. (adj.)

   சட்டத்திற் கேற்ப; according to law.

சட்டப்படி செய்வது நன்மையே தரும்.

ம. சட்டப்படி

     [சட்ட(ம்); + படி. பள் → படு → படுதல் = விழுதல். படு → படி → படிதல் = ஒன்றின் மேல் விழுதல், விழுத்து பதிதல், பதிந்து உருவம் அமைத்தல்]

நிலத்திற் பதிந்த பொருளின் வடிவம் நிலத்திலும், தாளிற் பதிந்த அச்சின் வடிவம் தாளிலும் அமைதல் காண்க.

படி = உருவம், உடம்பு. படிந்த உருவம் படிந்த பொருளை ஒத்திருத்தலால், படி என்னும் சொல் ஒப்புமைக் கருத்தை உணர்த்திற்று. அப்படி = அதுபோல்.

சட்டப்பரம்பு

 சட்டப்பரம்பு caṭṭapparambu, பெ. (n.)

   வயல் திருத்தும் பலகை வகை; a kind of roller for land newly ploughed, harrow, drag.

     [சட்டம் + பரம்பு]

சட்டப்பலகை

சட்டப்பலகை caṭṭappalagai, பெ. (n.)

   1. சட்டம்1 பார்க்க;see {}.

   2. எழுதுங் கற்பலகை (இ.வ.);; slate or board as enclosed in a frame.

   3 வரியிழுக்குஞ் சட்டம் (வின்.);; flat ruler.

     [சட்டம் + பலகை]

சட்டப்பல்கலைக்கழகம்

 சட்டப்பல்கலைக்கழகம் caṭṭappalkalaikkaḻkam, பெ. (n.)

   சட்டக்கல்விக்கான பல்கலைக்கழகம்; law university.

     [சட்டம் + பல்கலைக்கழகம்]

சட்டப்பெருமக்கள்

சட்டப்பெருமக்கள்1 caṭṭapperumakkaḷ, பெ. (n.)

   ஆளுங்கணத்தார்;     [சட்டம் + பெருமக்கள்]

 சட்டப்பெருமக்கள்2 caṭṭapperumakkaḷ, பெ. (n.)

   வடமொழி வல்லுநர்கள்; Sanskrit pandit.

     ‘சட்டப் பெருமக்களும் பணி மக்களும்’ (பா.செப.12);.

     [சட்டம் + பெருமக்கள்]

சட்டப்பேரவை

 சட்டப்பேரவை caṭṭappēravai, பெ. (n.)

   குடியரசமைப்புள்ள நாட்டின் மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் அவை; legislative assembly of a state in the democratic country.

     [சட்டம் + பேரவை]

சட்டப்பேரவைஉறுப்பினர்

 சட்டப்பேரவைஉறுப்பினர் caṭṭappēravaiuṟuppiṉar, பெ. (n.)

சட்டமன்றவுறுப்பினர் பார்க்க;see {}.

     [சட்டம் + பேரவை + உறுப்பினர்]

சட்டப்பேரவைத்தலைவர்

 சட்டப்பேரவைத்தலைவர் caṭṭappēravaittalaivar, பெ. (n.)

   சட்டப்பேரவை உறுப்பினர்களால் பேரவையின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படுபவர்; speaker of the legislative assembly.

     [சட்டம் + பேரவை + தலைவர்]

சட்டமன்றம்

 சட்டமன்றம் caṭṭamaṉṟam, பெ. (n.)

   மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றும் சட்டப்பேரவை; legislature.

     [சட்டம் + மன்றம்]

சட்டமன்றவுறுப்பினர்

 சட்டமன்றவுறுப்பினர் caṭṭamaṉṟavuṟuppiṉar, பெ. (n.)

   சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்; member of legislative assembly.

     [சட்டமன்றம் + உறுப்பினர்]

சட்டமழி-த்தல்

சட்டமழி-த்தல் caṭṭamaḻittal,    4 செ.கு.வி. (v.i.)

   ஆணை மீறுதல் (இ.வ.);; to transgress or violate, as a law.

ம. சட்டமழி

     [சட்டம் + அழி-,]

சட்டமாக்கு-தல்

சட்டமாக்கு-தல் caṭṭamākkudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒரு தீர்மானத்தை எல்லோரும் பின்பற்ற வேண்டிய கட்டளையாக (விதியாக); சட்ட மன்றம் ஒப்புதல் அளித்தல்; to enact, legislate.

ம. சட்டம் ஆக்குக

     [சட்டம் + ஆக்கு-,]

சட்டமாடு

 சட்டமாடு caṭṭamāṭu, பெ. (n.)

இரண்டு மூன்று

   நிறங்கள் கலந்திருக்கும்மாடு; a cow of mixed Colour appearance.

     [சட்டம்+மாடு]

சட்டமிடு-தல்

சட்டமிடு-தல் caḍḍamiḍudal, செ.கு.வி. (v.i.)

   செய்ய வேண்டிய கட்டளையைப் பணித்தல்; to dictate, to issue orders, to chalk out a plan of work.

 seeதானிருந்து சட்டமிடுகின்ற சமுகத்தான்” (பணவிடு. 3௦);.

ம.சட்டமிடுக

     [சட்டம் + இடு-,]

சட்டமியற்று-தல்

சட்டமியற்று-தல் caṭṭamiyaṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

சட்டமாக்கு-தல் பார்க்க;see {}.

     [சட்டம் + இயற்று-,]

சட்டமுனி

 சட்டமுனி caṭṭamuṉi, பெ. (n.)

சட்டைமுனி பார்க்க;see {}.

     [சட்டைமுனி → சட்டமுனி]

சட்டமூலம்

 சட்டமூலம் caṭṭamūlam, பெ. (n.)

   சட்டமன்றம், நாடாளுமன்றம் முதலிவற்றில் ஒன்றைச் சட்டமாகச் செய்வதற்கு உறுப்பினர்களால் அல்லது அரசால் கொண்டுவரப்படும் திட்டம் முதலியவை அடங்கிய குறிப்பு, திட்ட வரைவு; bill in a legislature or parliament.

     [சட்டம் + மூலம்]

சட்டமேதை

 சட்டமேதை caṭṭamētai, பெ. (n.)

சட்ட வல்லுநர் பார்க்க;see {}.

     [சட்டம் + மேதை]

சட்டமேலவை

 சட்டமேலவை caṭṭamēlavai, பெ. (n.)

   மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப் படாத அவை; legislative council.

     [சட்டம் + மேலவை]

சட்டமேலவையுறுப்பினர்

 சட்டமேலவையுறுப்பினர் caṭṭamēlavaiyuṟuppiṉar, பெ. (n.)

   சட்ட மேலவைக்கான உறுப்பினர்; member of legislative council.

     [சட்டமேலவை + உறுப்பினர்]

சட்டம்

சட்டம்1 caṭṭam, பெ. (n.)

   1. படம், கண்ணாடி முதலியவற்றின் நாற்புறமுங் கோக்கப்படும் மரச்சட்டம்; wooden frame.

   2. கம்பியிழுக்குங் கருவி; perforated metallic frame for drawing wire.

   3. நகையின் உம்மச்சு; socket in a jewel for insetting gems.

   4. எழுதும் ஓலை;{} used for writing.

   5. உடம்பு; body.

   6. எழுதுதற்குப் போலிகையாயமைந்த மேல்வரிச் சட்டம்; plan, model.

   7. முறைமை (நியாய); ஏற்பாடு; rule, order, law, regulation especially written.

 seeசட்டஞ்செய் துலகைத் திட்டஞ் செய்பவர் போல்” (புலவராற்.);.

   8. செப்பம்; excellence, superior quality.

   9. நேர்மை; exactness, precision, accuracy, neatness, nicety, propriety.

 seeசட்டமாய்ப் பேசி” (இராமநா. உயுத். 53);.

   10. அணியம் (ஆயத்தம்); (இ.வ.);; readiness.

   11. மாணிக்க வகை; a kind of ruby.

 seeமாணிக்கம் சட்டமும் இலைசுனியும் ஒன்றும் உட்பட” (S.l.l.ii.430, 32);.

   ம. சட்டம்;   க., து., பட. சட்ட;   தெ. சட்டமு;கோத. சட்ம்

     [தட்டு → சட்டு → சட்டம்]

சட்டம்: மரச்சட்டம், கோடிழுக்கும் சட்டம், பலகை, நேர்மை, செப்பம், முறைமை, நயன்மையொழுங்கு, வரம்பு, நெறியீடு.

மாணவர் பார்த்து ஒழுங்காக எழுதுவதற்கு மேல் வரியில் வரையப்பட்டிருப்பது மேல்வரிச் சட்டம் எனப்படும்.

சட்டம் : படம் கண்ணாடி முதலியவற்றின் நாற்புறமுங் கோக்கப்படும் மரச்சட்டம். சட்டக் கட்டில், சட்டக்கதவு, சட்டப் பரப்பு, சட்டவாள் முதலியன நாற்புறமுஞ் சட்டங் கோத்தவை. உடம்பு உயிருக்குச் சட்டம் போன்றிருப்பதால் அதுவும் சட்டம் எனப்படும் (மு.தா.1௦9);.

சட்டம் அரசியலார் அமைத்த நெறிமுறை (law);. மேல்வரிச் சட்டம் ஒருவர் தாம்

கையாளுவதற்குத் தாமே அமைத்துக் கொண்ட திட்டத் தொடரியம் (motto);.

 சட்டம்2 caṭṭam, பெ. (n.)

   1. புனுகுச்சட்டம்; sac or gland in the anal pouch of the civet cat.

   2. புனுகுப் பூனையின் உறுப்பிலிருந்து எடுக்கப்படும் நீர்மப் (திரவப்); பொருள்; fluid extracted from the sac of a civet cat (செ.அக.);.

ம. சட்டம்

     [சட்டு → சட்டம்]

சட்டம் வாரு-தல்

சட்டம் வாரு-தல் caṭṭamvārudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒலையின் அருகுகளை அரிந்து எழுது சட்டமாக அணியஞ் செய்தல்; to remove the ribs in {} and make it suitable for writing (செஅக.);.

     [சட்டம் + வாரு-,]

சட்டம்பி

சட்டம்பி caṭṭambi, பெ. (n.)

   திண்ணைப் பள்ளிக் கூடத்து மாணவர் தலைவன், சட்டாம் பிள்ளை; school pupil leader.

     [சட்டாம்பிள்ளை – சட்டம்பி]

 சட்டம்பி caṭṭambi, பெ. (n.)

   1. ஆசிரியர்; teacher.

   2. முதலாளி (எசமான்);; master.

 seeமணியகாரச் சட்டம்” (புலவராற்);;

   3. தலைவன்; chief

ம. சட்டம்பி

     [சட்டநம்பி → சட்டம்பி]

சட்டம்பிப்பிள்ளை

 சட்டம்பிப்பிள்ளை caṭṭambippiḷḷai, பெ. (n.)

சட்டாம்பிள்ளை (வின்.); பார்க்க;see {}.

     [சட்டாம்பிள்ளை → சட்டம்பிப்பிள்ளை]

சட்டம்பியார்

 சட்டம்பியார் caṭṭambiyār, பெ. (n.)

சட்டம்பி (யாழ்ப்.); பார்க்க;see {}.

     [சட்டநம்பி → சட்டம்பி → சட்டம்பியார்]

சட்டம்பிள்ளை

 சட்டம்பிள்ளை caṭṭambiḷḷai, பெ. (n.)

சட்டாம்பிள்ளை பார்க்க;see {}.

     [சட்டநம்பிப்பிள்ளை → சட்டம்பிப் பிள்ளை → சட்டாம்பிள்ளை]

சட்டம்பிழி-தல்

சட்டம்பிழி-தல் caṭṭambiḻidal,    2 செ.கு.வி. (v.i.)

சட்டந்தட்டு-தல் பார்க்க;see {}.

     [சட்டம் + பிழி-,]

சட்டம்போடு

சட்டம்போடு1 caṭṭambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   ஆணை இடுதல்; to command (செ.அக.);.

ம. சட்டம் பெட்டுக.

     [சட்டம் + போடு-,]

 சட்டம்போடு2 caṭṭambōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   படம், கண்ணாடி முதலியவற்றின் ஓரத்தில் காப்பிடுதல்; to arrange frame for picture, mirror, etc.

     [சட்டம் + போடு-,]

சட்டம்வை-த்தல்

சட்டம்வை-த்தல் caṭṭamvaittal,    4 செ.கு.வி. (v.i.)

சட்டம்போடு-தல் பார்க்க;see {}.

     [சட்டம் + வை-,]

சட்டர்

சட்டர்1 caṭṭar, பெ. (n.)

   கொற்றவைக்கணத்தார் (வைரவர்);; Bhairava.

     [சட்டைநாதர் → சட்டர். சட்டையணிந்தவர்]

சட்டைநாதன் பார்க்க

 சட்டர்2 caṭṭar, பெ. (n.)

   வடமொழி கற்கும் மாணவர்களும் கற்பிக்கும் ஆசிரியர்களும்; Sanskrit students and Pandits.

 seeகாந்தளூர் மரியாதையால் தொன்னூற்று ஐவர் சட்டர்க்கு சாலையுஞ் செய்தான்” (பா.செ.ப 11);

     [சட்டம் → சட்டர் = மறைநூலுடன் மீமாம்சை, இலக்கணம், போன்ற பல பிரிவுகளையும் கற்றவர்]

சட்டறம்

சட்டறம் caṭṭaṟam, பெ. (n.)

   அறநூல் (சாத்திரம்); பயிற்றுவிக்கும் நெறிமுறை; teaching the {}, considered as a merit.

 seeசாலைதொறும் பயில் சட்டறங்கள் பல்குவன” (பெரியபு.கழறிற்.3);.

     [சட்டம் + அறம்]

சட்டவட்டம்

 சட்டவட்டம் caṭṭavaṭṭam, பெ. (n.)

   திட்டம்; neatness, fineness, orderliness.

ம. சட்டவட்டம்

     [சட்டம் + வட்டம்]

சட்டவரியோலை

 சட்டவரியோலை caṭṭavariyōlai, பெ. (n.)

   நெறி முறைகள் பதிந்துவைத்துள்ள பனை ஒலை (சேரநா.);; palm leaves in which rules are recorded.

ம. சட்டவரியோல

     [சட்டம் + வரி + ஓலை]

சட்டவல்லுநர்

 சட்டவல்லுநர் caṭṭavallunar, பெ. (n.)

   சட்டத் தொடர்பானவற்றில் நுட்ப அறிவுடையவர்; expert in law.

     [சட்டம் + வல்லுநர்]

சட்டவளை

 சட்டவளை caṭṭavaḷai, பெ. (n.)

   குறுக்குச் சட்டம் (யாழ்ப்.);; cross-beam connecting wall plates.

     [சட்டம் + வளை]

சட்டவாங்குவளையம்

 சட்டவாங்குவளையம் caṭṭavāṅguvaḷaiyam, பெ. (n.)

   சட்டத்தில் பிணைக்கப்பட்ட இரும்பு வாங்கும், வளையங்களும் (நெல்லை.);; joining ring of metalic frame.

     [சட்டம் + வாங்கு + வளையம்]

சட்டவாள்

 சட்டவாள் caṭṭavāḷ, பெ. (n.)

   பிடி வைத்த பெரிய அரம்பம் (யா .);; large saw fixed in a frame.

ம. சட்டவாள்

     [தட்டை → சட்டை → சட்ட + வாள்]

     [p]

சட்டாம்பிள்ளை

சட்டாம்பிள்ளை caṭṭāmbiḷḷai, பெ. (n.)

   பள்ளிக்கூட வகுப்பில் மாணாக்கர் தலைவன்; monitor of a class in school (செ.அக.);.

     [சட்டநம்பிப்பிள்ளை → சட்டம்பிப் பிள்ளை → சட்டாம்பிள்ளை (மு.தா.118);]

சட்டாலொட்டா

 சட்டாலொட்டா caṭṭāloṭṭā, பெ. (n.)

   ஒரு வகைக் கடல்மீன்; a kind of sea-fish.

     [சட்டை → சட்டா + லொட்டா. மோனை நோக்கி வந்த இணை மொழி]

சட்டால்

 சட்டால் caṭṭāl, பெ. (n.)

   வில்வம் (மலை.);; Indian bael.

ம. சட்டாலு

     [சட்டு → சட்டால்]

சட்டி

சட்டி1 caṭṭi, பெ. (n.)

   1. அகன்றவாயுள்ளதும் அடிப்பக்கம் தட்டையாகவுள்ளதுமான மட் பாணடம்; broad mouthed flaten earthen pot.

   2. மட்பாண்டம் (பெரும்பாண். 317, உரை);; earthen vessel, pan.

   3. சமையற்கலம்; vessel in general.

 seeசட்டி சுட்டதடா கையை விட்டதடா” (பழ.);.

   ம. சட்டி;   க. சட்டி, செட்டி, சடிகெ, சட்டிகெ (வாயகன்ற சிறு மட்கலம்);;   தெ. சட்டி (வாயகன்ற மட்கலம்);;   து. சட்டி; Mar. {};

 Sind. {}.

     [தட்டு → சட்டு → சட்டி. ஒ.நோ:க. சட்டு, சட்ட, சட்டெ, தட்டையானது = சரி மட்டமானது;து. சட்டெ=தட்டையானது, சரிமட்டமானது]

சட்டியின் பயன்பாடு கருதி அப்பச்சட்டி, எண்ணெய்ச்சட்டி, நெய்ச்சட்டி, பூச்சட்டி, வெல்லச்சட்டி, பணியாரச்சட்டி, தீச்சட்டி என்பன போன்று குறிக்கப்படுவதும் அமைப்பு கருதி அடுக்குச்சட்டி, மிடா (சட்டி);, கிணிர்ச் சட்டி (அகல் விளக்கு); என்பன போன்று குறிக்கப்படுவதும் செய்பொருள் கருதி, மண் சட்டி, கல்சட்டி, இரும்புச் சட்டி, மரச்சட்டி எனக் குறிக்கப்படுவதும் வழக்கு. சட்டி என்பது பெரியது, சிட்டி சிறியது. அகலுக்குச் சிட்டி என்னும் பெயரே பொருந்தும் நெல்லை மாவட்டத்தில் கிழிபஞ்சிட்டியென்றே சொல்வர்.

சட்டி வகைகள்

   1. களிமண்சட்டி.

   2. பீசலை மண்சட்டி.

   3.கருப்புச்சட்டி.

   4. வெண்சட்டி.

   5. வெண்களிமண் சட்டி.

   6. சருவச்சட்டி.

   7. போகினிச்சட்டி.

 சட்டி2 caṭṭi, பெ. (n.)

   பெரியது; that which is big.

     ‘சட்டித் தலை’ (உ.வ.);.

 சட்டி3 caṭṭi, பெ. (n.)

   தாமரை (மலை.);; lotus.

     [தட்டு → சட்டு → சட்டி. சட்டு = தாமரை]

 சட்டி4 caṭṭittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சட்டி போலாக்குதல், அகன்றதாக்குதல், தட்டி மழுங்க வைத்தல்; to be pot like, to be flat or blunt.

   2. அழித்தல்; to destroy ruin.

 seeமாவுருவைச் சட்டித்தருளுந் தணிகையிலென் றாயே” (அருட்பா. 5, காணாப். 6);.

   2. கொல்லுதல் (வின்.);; to kill.

ம. சட்டிக்குக

     [சட்டுதல் = தட்டுதல், அடித்தல், சட்டுதல் → சட்டித்தல் = தாக்குதல், அழித்தல், கொல்லுதல்]

 சட்டி5 caṭṭi, பெ. (n.)

   மல்லக செட்டி; a professional wrestler.

   க. சட்டி; U. {}.

     [எட்டி → செட்டி → சட்டி]

 சட்டி1 caṭṭi, பெ.(n.)

   வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஆறாம் பக்கல் (விதான.குணாகுண.6);; the sixth tidi of a bright or dark fortnight.

த.வ. அறுமி.

     [Skt.sasthi → த.சட்டி.]

 சட்டி2 caṭṭi, பெ.(n.)

   அறுவது; sixty.

     “சட்டி விரத வத்தியாயம்” (மச்சபு.);.

     [Pkt.satthi

சட்டிகை

சட்டிகை1 caṭṭigai, பெ. (n.)

   தாமரைப் பூ; lotus flower (சா.அக);.

     [சட்டி → சட்டிகை]

 சட்டிகை2 caṭṭigai, பெ. (n.)

   வாயகன்ற சிறு மட்கலம் (கருநா.);; a small earthern pot with a broad mouth.

க. சட்டிகெ, சடிகெ

     [சட்டி → சட்டிகை]

சட்டிக்கரணை

 சட்டிக்கரணை caṭṭikkaraṇai,    காறாக்கரணை; a tuberous-rooted herb.

     [சட்டி + கரணை]

சட்டிக்கல்பம்

 சட்டிக்கல்பம் caṭṭikkalpam, பெ. (n.)

   கொள்; horse-gram (சா.அக.);.

சட்டிக்கிழங்கு

 சட்டிக்கிழங்கு caṭṭikkiḻṅgu, பெ. (n.)

   உணவுக்குப் பயன்படும் ஒருவகைக் கிழங்கு; a kind of edible root.

     [சட்டி + கிழங்கு]

சட்டிசாட்டாரணை

 சட்டிசாட்டாரணை caṭṭicāṭṭāraṇai, பெ. (n.)

   செடி வகை; pointed-leaved hogweed.

     [சட்டி + சாட்டரணை]

சட்டிசுரண்டி

சட்டிசுரண்டி saṭṭisuraṇṭi, பெ. (n.)

   1. சட்டி சுரண்டுங் கருவி; small scraping instrument for cleaning mud vessels.

   2. சட்டி சுரண்டுபவர்; scullion, cook, used in contempt.

     [சட்டி + சுரண்டி. சுரண்டு → சுரண்டி]

சட்டிசுரண்டு-தல்

சட்டிசுரண்டு-தல் saṭṭisuraṇṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   இழிதொழில் செய்தல்; to do any menial service, used in contempt.

 seeஉனக்கென்ன வரும் சட்டி சுரண்ட வருந் தையலே” (விறலிவிடு.);.

     [சட்டி + சுரண்டு-தல். சட்டி சுரண்டுதல் = மட்பாண்டங்களைக் கழுவி வாழ்க்கை நடத்துதல், வறுமையில் வாழ்தல்.]

சட்டிச்சாரணை

 சட்டிச்சாரணை caṭṭiccāraṇai, பெ. (n.)

   சமையலுக்குப் பயன்படும் ஒருவகைக் கீரை; a kind of greens.

   மறுவ. சத்திக்காரணை;சாரட்டிணை

     [சட்டி + சாரணை]

சட்டிச்சோறடுவார்

சட்டிச்சோறடுவார் caḍḍiccōṟaḍuvār, பெ. (n.)

   உணவு சமைப்பவன்; the person who cooks food.

 seeசட்டிச்சோறடுவாற்கும் விறகிடுவானுக்குமாக நாளொன்றினுக்கு நெல்லு குறுணி யிருநாழியாக” (தெ. க. தொ. 14. கல். 191 : 22);.

     [சட்டி + சோறு + அடுவார். சொல் → சொன்றி → சோறு. அடுதல் = சமைத்தல்]

சட்டிச்சோறு

சட்டிச்சோறு caṭṭiccōṟu, பெ. (n.)

   1. கோயிற் பணியாளர்க்கும் சிவனடியார்க்கும் சட்டி அளவிட்டுக் கொடுக்கும் சோறு; food offerings distributed as a perquiste to temple- servants.

 seeமகசேவரர்க்குச் சட்டிச்சோறு ஆயிரம் கொடுக்கவும்” (தெ.க.தொ. 4, கல். 223);.

     ‘சொக்கனுக்குச் சட்டிச்சோறு’ (பழ.);.

   2. இருநாழி அரிசி சமைத்த சோற்றின் அளவு; two {} measured cooked rice.

     [சட்டி + சோறு]

சட்டித்தலை

சட்டித்தலை caṭṭittalai, பெ. (n.)

   1. பெருந்தலை (வின்.);; pot-head, big head.

   2. வழுக்கைத்தலை; bald head.

ம. சட்டித்தல

     [சட்டி + தலை. வடிவத்தால் பெரிய தலையையும் தோற்றத்தால் வழுக்கைத் தலைமையும் குறித்தது]

சட்டித்தலைப்பாகை

 சட்டித்தலைப்பாகை caṭṭittalaippākai, பெ. (n.)

   பெருந்தலைப்பாகை (இ.வ.);; a kind of large turban.

     [சட்டி + தலைப்பாகை]

சட்டித்தலையன்

சட்டித்தலையன் caṭṭittalaiyaṉ, பெ. (n.)

   மீன்வகை; a kind of fish.

 seeதிருக்கை சட்டித் தலையன்” (பறாளை. பள்ளு.16);.

     [சட்டி + தலையன்]

சட்டித்தலையுள்ளான்

 சட்டித்தலையுள்ளான் caṭṭittalaiyuḷḷāṉ, பெ. (n.)

   பெரிய தலையையுடைய உள்ளான் பறவை (வின்.);; large headed snipe.

     [சட்டி + தலை + உள்ளான்]

     [p]

சட்டித்தோசை

__,

பெ. (n.);

   மண் சட்டியில் வார்த்தெடுக்கும் தோசை வகை (இ.வ.);; a round cake of rice-flour fried in an earthern pan.

     [சட்டி + தோசை. தோய் → தோயை → தோசை]

சட்டித்தோட்டா

 சட்டித்தோட்டா caṭṭittōṭṭā, பெ. (n.)

   தோட்டா இனக் கடல்மீன் (முகவை.);; a kind of {} fish.

     [சட்டி + தோட்டா]

சட்டித்தோணி

 சட்டித்தோணி caṭṭittōṇi, பெ. (n.)

   தட்டையான அடிப்பக்கமுள்ள படகு (புதுவை.);; flat- bottomed boat.

     [சட்டி + தோணி]

சட்டினி

 சட்டினி caṭṭiṉi, பெ.(n.)

   துவையல் வகை; chutney, a kind of strong relish.

த.வ. பச்சினி.

     [U.catni]

சட்டிபானை

 சட்டிபானை caṭṭipāṉai, பெ. (n.)

   சமையல் முதலியவற்றிற்கு உதவும் மட்பாண்டங்கள்; pots and pans, cooking utensils, crockery (செஅக.);.

ம. சட்டிப்பான

     [சட்டி + பானை. மரபிணைமொழி]

பானை = பெரிய மட்கலம். சட்டி = பானையை நோக்கச் சிறியது. சருவப்பானை, சருவச்சட்டி என்னும் வழக்குகளும், மோர்ப் பானை, நெய்ச்சட்டி என்னும் வழக்குகளும் இதனை வலியுறுத்தல் காண்க.

சட்டிபூர்த்தி

சட்டிபூர்த்தி caṭṭipūrtti, பெ.(n.)

   அறுபதாம் அகவை நிறைவு; attainment of one’s sixtieth birthday.

   2. சட்டிபூர்த்திசாந்தி பார்க்க;see satti-{}-{}.

த.வ. அறுபான் நிறை.

     [சஷ்டி + பூர்த்தி.]

     [Skt. sasti+{}.]

சட்டிபூர்த்திசாந்தி

 சட்டிபூர்த்திசாந்தி caṭṭipūrtticāndi, பெ.(n.)

   அறுபதாம் வயது நிரம்பிய நாளில் செய்யுஞ் சடங்கு; ceremony performed on one’s sixtieth birthday.

த.வ. அறுபதாம் சடங்கு.

     [Skt.sasti+{}+{} → த.சட்டிபூர்த்தி சாந்தி.]

சட்டிப்பீரங்கி

 சட்டிப்பீரங்கி caṭṭippīraṅgi, பெ. (n.)

   குண்டு முதலியன தொலைவிற் பாயும்படிச் செய்யும் தகரி (பீரங்கி); வகை (வின்.);; mortar for throwing bombs and shells.

     [சட்டி + பீரங்கி]

சட்டிப்புல்

 சட்டிப்புல் caṭṭippul, பெ. (n.)

   புல்வகை (யாழ்ப்.);; bushy kind of grass.

     [சட்டி + புல்]

சட்டிமரக்கால்

 சட்டிமரக்கால் caṭṭimarakkāl, பெ. (n.)

   அகலம் மிகுதியாகவும் உயரம் குறைவாகவும் உள்ள மரக்கால்; a kind of {}.

     [சட்டி + மரக்கால்]

சட்டிமேளம்

 சட்டிமேளம் caṭṭimēḷam, பெ. (n.)

   தப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் இசைக் கருவி; a musical instrument.

     [சட்டி+மேளம்]

சட்டியப்பம்

 சட்டியப்பம் caṭṭiyappam, பெ. (n.)

   அரிசி மாவினாற் செய்த பணியார வகை; a large cake made of rice flour (செ.அக.);.

ம. சட்டியப்பம்

     [சட்டி + அப்பம். மண் சட்டியிற் சுட்ட அப்பம், சட்டியப்பம்]

சட்டியாட்டு-தல்

சட்டியாட்டு-தல் caṭṭiyāṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

சட்டியுருட்டு-தல் பார்க்க;see {}-

ம. சட்டிகளி, சட்டியாட்டம்

     [சட்டி + ஆட்டு-,]

சட்டியுருட்டு-தல்

சட்டியுருட்டு-தல் caṭṭiyuruṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சூதாடுதல் (வின்.);; to gamble with balls in a brass vessel.

   2. வாயாலூட்டுதல் (இ.வ.);; to be blatant, to bluster.

   3. மட்பண்டங்களில் வைத்திருக்கும் பொருள்களைத் திருடி உண்ணுதல் (இ.வ.);; to steal and eat things stored

 in mud-pots.

   4. சட்டிசுரண்டு-தல் பார்க்க;see {}. (செ.அக.);.

     [சட்டி + உருட்டு-,]

சட்டியெடு-த்தல்

சட்டியெடு-த்தல் caḍḍiyeḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   இரத்தல் (கையில் சட்டியையெடுத்தல்);; lit., to take pot on hand, to beg (செ.அக.);

     [சட்டி + எடு-,]

சட்டியொட்டி

 சட்டியொட்டி caṭṭiyoṭṭi, பெ. (n.)

   பொருவா என்னும் கடல்மீன் வகை (வின்.);; sea-fish, blackishi.

ம. சட்டிப்பற்றி

     [சட்டி + ஒட்டி]

சட்டிரசவர்க்கம்

சட்டிரசவர்க்கம் saṭṭirasavarkkam, பெ.(n.)

   அறுசுவைத் தொகுதி; the six palatable elements of a meal.

     “சட்டிரசவர்க்கத் தமுதருந்தி” (கொண்டல்விடு.412);.

     [Skt.sad-rasa+varga → த.சட்டிரசவர்க்கம்.]

சட்டிவட்டு

 சட்டிவட்டு caṭṭivaṭṭu, பெ. (n.)

   கப்பல் வள்ளிக் கிழங்கின் துண்டம் (யாழ்ப்.);; round root of the alligator yam, which is cut out and planted as a sucker.

     [சட்டி + வட்டு]

சட்டிவிரதம்

 சட்டிவிரதம் caṭṭiviradam, பெ.(n.)

   திங்கள்தோறும் வளர்பிறை ஆறாம் பக்கலில் மேற்கொள்ளும் நோம்பு; religious observance on the sixty day of the bright fortnight in every month.

     [Skt.sasthi+vrata → த.சட்டிவிரம்.]

சட்டு

சட்டு1 caṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t..)

   தட்டுதல்; to strike, to beat

க. சச்சு, செச்சு

     [தட்டு → சட்டு]

     ‘சட்டு’ என்பது தட்டுதலைக் குறித்த ஒரு பழந்தமிழ்ச் சொல். (மு.தா.1௦8);

 சட்டு2 caṭṭu, பெ. (n.)

   அழிவு (வின்.);; destruction, injury, waste.

   ம. சட்டு (குற்றம், குறை, முடம்);;   க. சட்டு, செட்டு;   தெ. செடி, செடு (பயனற்றது);;து. சட்டு (முடிவு, அழிவு);.

     [சட்டுதல் = தட்டுதல், அடித்தல். சட்டு1 – சட்டு. சட்டு1-தல் பார்க்க]

 சட்டு3 caṭṭu, பெ. (n.)

   சிக்கனம்; thrift (செஅக.);.

     [செட்டு → சட்டு]

 சட்டு caṭṭu, பெ. (n.)

   கிணறு வெட்டும்போது நீர் இருப்பதை உறுதி செய்யும் மண்; the soil which indicates watering in digging well.

     [செட்டு-சட்டு]

 சட்டு caṭṭu, பெ.(n.)

   ஆறு (தைலவ.பாயி.30);; six.

     [Skt.sat → த.சட்டு1.]

சட்டுகந்தம்

 சட்டுகந்தம் caṭṭugandam, பெ. (n.)

   வசம்பு; sweet flag (சா. அக.);.

     [சடகந்தம் → சட்டுகந்தம்]

சட்டுகம்

 சட்டுகம் caṭṭugam, பெ. (n.)

சட்டுவம் பார்க்க;see {}.

   ம. சட்டுகம்;க. சடுக

     [சட்டுவம் → சட்டுகம்]

சட்டுப்பண்ணு

சட்டுப்பண்ணு1 caṭṭuppaṇṇudal,    5 செ. குன்றாவி. (v.t.)

சட்டுப்பார்-த்தல் (வின்.); பார்க்க;see {}.

     [சட்டு + பண்ணு-,]

 சட்டுப்பண்ணு2 caṭṭuppaṇṇudal,    5 செ.கு.வி. (v.i.)

   சிக்கனமாயிருத்தல்; to be thrifty (செ.அக);.

     [செட்டு → சட்டு + பண்ணு-,]

சட்டுப்பார்-த்தல்

சட்டுப்பார்-த்தல் caṭṭuppārttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அழித்தல்; to destroy, injure.

   2. விழுங்குதல்; to devour, consume (செ.அக.);.

     [சட்டு + பார்-,]

சட்டுப்புட்டெனல்

 சட்டுப்புட்டெனல் caṭṭuppuṭṭeṉal, பெ. (n.)

   விரைவுக் குறிப்பு; onom. expr. signifying haste (செ.அக);.

   ம.சட்டுபெட்டனு; H. jhatpat;

 Mar. {}, Guj. {};

 Sind. {}.

     [சட்டு + புட்டு + எனல்]

சட்டுவக்கல்

 சட்டுவக்கல் caṭṭuvakkal,    பெ (v.i) மடங்களுக்குக் கொடை கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லையில் நடப்பெறும் சட்டுவ வடிவம் வரைந்த எல்லைக் கல் (இ.வ.); boundary stone having a ladle-mark for lands granted to a mutt.

     [சட்டுவம் + கல்.]

சட்டுவச்சாதம்

 சட்டுவச்சாதம் caṭṭuvaccātam, பெ. (n.)

சட்டுவச்சோறு பார்க்க;see {}.

     [சட்டுவம் + சாதம்]

சட்டுவச்சோறு

 சட்டுவச்சோறு caṭṭuvaccōṟu, பெ. (n.)

   திருமணத்தில் மணாளனுக்கு மணப்பெண் படைக்கும் சோறு; food served by the bride to the bridegroom for the first time at the marriage.

     [சட்டுவம் + சோறு]

சட்டுவஞ்செலுத்து-தல்

சட்டுவஞ்செலுத்து-தல் caṭṭuvañjeluddudal, செ.கு.வி. (v.i)

   1. உணவு பரிமாறுதல்; to ladle out or serve food.

   2. விருந்தோம்புதல்; to exercise hospitality (செ.அக.);.

     [சட்டுவம் + செலுத்து-,]

உணவு அளிப்பதற்கு உதவும் சட்டுவம், உணவு அளித்தலோடு விருந்தோம்புதலு க்கும் ஆயிற்றென்க.

சட்டுவம்

சட்டுவம் caṭṭuvam, பெ. (n.)

   1. அகப்பை; ladle.

 seeஆனபல் சட்டுவ மங்கைதொ றேந்தி” (கந்தபு. திருச்செந். 4.);;

   2. தோசை திருப்பி; metal spatula with a long handle for turning and removing a cooked cake.

 seeசுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவையறியுமோ” (சித்தர்பா.);.

   3. சோற்றுப் பானை கசடு நீக்குங் கருவி; spatula.

   ம. சட்டுகம், சட்டகம், சட்டுவம்;   க. சடுக, சட்டுக, சொடக, சட்டு;   தெ. சட்டுமு, சட்டுவமு;   து. சட்டுக, பட. சட்டுகோலு;   கோத. சட்ய்கோல்;குட. சட்டுவ.

     [சட்டு → சட்டுவம்]

சட்டுவர்க்கம்

சட்டுவர்க்கம் caṭṭuvarkkam, பெ.(n.)

   1. அறுசுவை; the six flavours.

   2. பிறப்பிய (சாதக);க் கணிப்பின் அறுவகைப் பிரிவு;     (Astrol.);the six main modes of casting a horoscopical chart.

     [Skt.Sad-varga → த.சட்டுவர்க்கம்.]

சட்டெனல்

சட்டெனல் caṭṭeṉal, பெ. (n.)

   1. விரைவுக் குறிப்பு; onom. expr. signifying, quickness.

சட்டென வழல்வாய்ப் பல்பிண மருந்தீமத்து (ஞானா. 6: 12);.

   2. திடீரெனற் குறிப்பு; onom. expr. signifying suddenness.

   ம., க., து. சட்டனெ;தெ., பட. சட்டன

     [சட்டு + எனல்]

சட்டை

சட்டை1 caṭṭai, பெ. (n.)

   1. மெய்ப்பை; jacket, coat, gown, cloak.

 seeதேசுடைச் சட்டை சாத்தி” (திருவாலவா. 16: 19);.

   2. பாம்புச் சட்டை; slough of a snake.

   3. யாக்கை; body, as put on by the soul or by God.

மறுவ. மெய்ப்பை, கஞ்சுறி, அஞ்சுகம், வாரணம், குப்பாயம், அங்கு, படம்

   ம., தெ., து. சட்ட;க. சட்டெ, சொட்டெ

     [சட்டம் → சட்டை = உடம்பு, உடம்பின் மீந்தோல், அதுபோன்ற மெய்ப்பை]

மீந்தோல் பெயர அடிபட்டவனை நோக்கி அவன் உடம்பு சட்டை சட்டையாய்க் கழன்றுவிட்டது என்றும் பாம்பு மீந்தோல் கழித்தலைச் சட்டை கழற்றுதல் என்றும் கூறுதல் காண்க (மு.தா. 109);.

பழங்காலத்து மெல்லாடை, பாம்புச்சட்டை போன்றும், மூங்கிலின் உட்புற மீந்தோல் போன்றும் புகை விரிந்தாற் போன்றும் நீராவி படர்ந்தாற்போன்றும், இழையோடியது தெரியாமலும் பூந்தொழிலுடன் நுண்ணியதாய் நெய்யப்பட்டிருந்ததென்று பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

அரசர்க்கும் அரசியல் அதிகாரிகட்கும் அரண்மனை அலுவலர்க்குமே சட்டையணியும் உரிமையிருந்தது. சட்டை உடம்பிற்குப் பை

போன்றிருப்பதால் மெய்ப்பை என்றும் பெயர் பெறும்.

 seeஈசனுங் கற்றுச் சொல்வோர் பின்வர விகலிற் கூடித் தேசுடைச் சட்டை சாத்தி” என்னும் பெரும்பற்றப் புலியூர் நம்பிக் கூற்றுப் பிற்காலத்ததேனும், சட்டை என்னும் சொல் முற்காலத்ததே.

 seeகஞ்சக மாக்கள்’ என்னும் சிலப்பதிகாரச் சொற்கு

 seeசட்டையிட்ட பிரதானிகள்” என்று அருஞ்சொல்லுரைகாரர் வரைந்திருத்தல் காண்க (ப. ப. 44.45);.

 சட்டை2 caṭṭai, பெ. (n.)

   மதிப்பு (உ.வ.);; esteem, regard, honour, respect.

     ‘அவன் யாரையுஞ் சட்டை செய்யவில்லை’ (உ.வ.);.

     ‘குட்டுமானம் தப்பி குசவனோடு பேசினால் சட்டையும் பண்ணான் சட்டியும் கொடான்’ (பழ.);.

     [சட்டம் → சட்டை]

த. சட்டை → Skt. {}

 சட்டை3 caṭṭai, பெ. (n.)

   1. ஒருவகை நிறை (G.Sm.D.I.l,283);; a weight of about ten maunds.

   2. பொதி (வின்.);; pack or sack for a beast of burden.

   3. தைவேளை (மலை.);; species of cleome.

     [சட்டம் → சட்டை]

 சட்டை4 caṭṭai, பெ. (n.)

   தட்டை, தட்டையான பொருள்; flatness.

   க. சட்டெ, சட்டு;பட. சட்டெ

     [தட்டை → சட்டை]

சட்டைகழற்று-தல்

சட்டைகழற்று-தல் caṭṭaigaḻṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   பாம்பு தோலுரித்தல்; to cast slough, as a snake.

     [சட்டை + சுழற்று-,]

சட்டைக்கயிறு

 சட்டைக்கயிறு caṭṭaikkayiṟu, பெ. (n.)

   சட்டையை உடம்புடன் இறுக்கிக் கட்டுங் கயிறு; tying string of a jacket.

மறுவ. தாள்

     [சட்டை + கயிறு]

சட்டைக்காரன்

சட்டைக்காரன் caṭṭaikkāraṉ, பெ. (n.)

   ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்த கலப்பு இனத்தான்; Anglo-Indian.

   ம. சட்டக்காரன்;   க., து. சட்டகார;தெ. சட்டகார வாடு

     [சட்டை + காரன்]

சட்டைக்காரன் = மேனாட்டார் போன்று சட்டை (கால்சட்டை, மேல்சட்டை); அணிபவன்.

 seeமெய்ப்பை புக்க வெருவருந் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” என வரும் முல்லைப்பாட்டு வரிகள் நம் நாட்டிற்கு வந்த யவனர் போன்ற அயல்

நாட்டினரே சட்டை அணிந்திருந்ததையும் சட்டை மெய்ப்பை என அழைக்கப் பட்டதையும் காட்டுகின்றன. இச்சட்டை வகையைத் திருவாசகம் (177); குப்பாயம் என்று குறிப்பிடுகிறது. உடலில் அணிவது சட்டை (shirt); என்றும், சட்டையின் மேல் அணிவது குப்பாயம் (coat); என்றும் பாகுபடுத்தப்பெற்று வழக்கூன்றியுள்ளது.

சட்டைக்காரி

 சட்டைக்காரி caṭṭaikkāri, பெ. (n.)

   சட்டைக்காரப் பெண் (உ.வ.);; Anglo-Indian woman.

ம. சட்டக்காரி

     [சட்டைக்காரன் (ஆ.பா.); – சட்டைக்காரி (பெ.பா.);]

சட்டைக்கை

 சட்டைக்கை caṭṭaikkai, பெ. (n.)

   மேற் சட்டையின் கைப் பகுதி; sleeve of a shirt.

ம. சட்டக்கை

     [சட்டை + கை]

சட்டைக்கோல்

சட்டைக்கோல்2 caṭṭaikāl, பெ. (n.)

   சாட்டையின் கைப்பிடிக்கோல்; the wooden handle of a whip.

ம. சாட்டக்கோல்

     [சாட்டை + கோல்]

     [p]

சட்டைச்சாம்பு

 சட்டைச்சாம்பு caṭṭaiccāmbu, பெ. (n.)

   சீமைத்துணி வகை (வின்.);; long cloth, Lancashire white cotton-shirtings.

தெ. சாடி

     [சட்டை + சாம்பு]

சட்டைத்தாள்

 சட்டைத்தாள் caṭṭaittāḷ, பெ. (n.)

   தெருக் கூத்தில் பங்கேற்கும் ஆடவர் அணியும் அணிகலன்; a male ornament interukkuttu.

     [சட்டை+தாள்]

சட்டைத்துணி

 சட்டைத்துணி caṭṭaittuṇi, பெ. (n.)

   சட்டை தைப்பதற்கான துணி; shirt-cloth.

     [சட்டை + துணி]

சட்டைநாதன்

 சட்டைநாதன் caṭṭainātaṉ, பெ. (n.)

   கொற்றவைக்கணத்தார் (சட்டையணிந்தவர்);; Lord having a jacket, Bhairava (செ.அக.);.

     [சட்டை + நாதன்]

சட்டைநீக்கி

 சட்டைநீக்கி caṭṭainīkki, பெ. (n.)

   கருநீல நொச்சி; black-blue notchi; willow-leaved justicia – Justicia gendarussa (சா.அக.);.

சட்டைபண்ணு-தல்

சட்டைபண்ணு-தல் caṭṭaibaṇṇudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   மதிப்புக் கொடுத்தல், அக்கறை காட்டுதல்; to care for, regard.

     [சட்டை + பண்ணு-,]

சட்டைப்புரை

சட்டைப்புரை caṭṭaippurai, பெ. (n.)

சட்டைப்பை பார்க்க;see {}.

 seeஅபகரித்துச் சட்டைப்புரைக்குள்ளே இட்டுக் கொள்வர்” (திவ். திருமாலை, வியா, 24, ப. 83);.

     [சட்டை + புரை. புரை = துளை, அறை]

சட்டைப்பை

 சட்டைப்பை caṭṭaippai, பெ. (n.)

   சட்டையில் அமைக்கப்படும் பை; shirt pocket.

     [சட்டை + பை. பொள் → பொய் → (பய்); → பை = உட்டுளையுடையது]

சட்டைமுனி

 சட்டைமுனி caṭṭaimuṉi, பெ. (n.)

   ஒகம் (யோகம்);, மருத்துவம், பொன்னாக்கம் (இரசவாதம்);, மெய்ப்பொருள் (தத்துவம்);, முதலியவற்றைப் பற்றிய நூல்களைப் பாடியவரும் அகத்தியரின் மாணவருமான அறிவர் (சித்தர்);; a very ancient Siddhar of the Agastiyar’s school of thought, author of various works on alchemy, medicine, yoga and philosophy (சா.அக.);.

     [சட்டை + முனி. முனிதல் = சினத்தல், வெறுத்தல். முனி → முனிவு = சினம், வெறுப்பு. முனிவு → முனிவன் = உலகப் பற்றைத் துறந்த அறிவன்]

சட்டையன்

சட்டையன் caṭṭaiyaṉ, பெ. (n.)

   திருவரங்கத் திருக்கோயிலுக்கு நிலம் கொடையாகக் கொடுத்தவன்; the land donar to Thiruvarangam temple

 seeபெரியகோயில் நம்பிக்கு நீர்வார்த்துக் கொடுத்தேன் சட்டையனேன்”. (தெ.க. தொ. 24, கல். 157: 29);.

     [சட்டை → சட்டையன்]

சட்டோலை

 சட்டோலை caṭṭōlai, பெ. (n.)

   சட்டம் எழுதுதற்குரிய ஒலை (யாழ். அக);; ola or palm- leaf fit for writing.

ம. சட்டோல

     [சட்டம் + ஓலை]

சட்னி

 சட்னி caṭṉi, பெ.(n.)

சட்டினி பார்க்க;see {}.

த.வ. பச்சினி.

     [U.{} → த.சட்னி.]

சட்பதம்

சட்பதம் caṭpadam, பெ.(n.)

   அறுகால்; beetle, as six legged.

     “சட்பதங் குடைந்தெழு தாமம்” (செவ்வந்தி.4, நினைத்தது.4);.

     [Skt.sat-pada → த.சட்பதம்.]

சட்பதாதிதி

சட்பதாதிதி caṭpadādidi, பெ. (n.)

   1. சண்பகம்; champak.

   2. மாமரம்; mango tree (சா.அக.);.

சட்பம்

சட்பம் caṭpam, பெ. (n.)

   1. இளம்புல்; tender grass.

   2. அறுகு; bermuda grass (சா.அக.);

     [சுல் → சல் → (சல்பம்); → சட்பம்]

சட்பராசி

சட்பராசி caṭparāci, பெ. (n.)

   1. அறுகம்புல்; bermuda grass – Cynodon dactylon.

   2. நாணல்; reed (சா.அக.);.

     [சட்பம் → சட்பராசி]

சட்பலம்

 சட்பலம் caṭpalam, பெ.(n.)

   ஆறு வகைக் கடைச்சரக்கு; the six kinds of bazaar drugs (சா.அக.);.

சட்பாவம்

சட்பாவம் caṭpāvam, பெ.(n.)

   உடலில் உண்டாகும் இருந்தல், தோன்றுதல், உருத்திரிதல், வளர்தல், சுருங்குதல், அழிதல் என்ற ஆறுநிலைகள்; the six states of the physical body, viz., iruttal, {}, uru-t-tiridal, valardal, curungudal, alidal.

     “சட்பாவம்…. இயைந்திடாப் புற்கலன் றன்னை” (காசிக.யோக.13);.

த.வ. ஆறுநிலை.

     [Skt.sad-{} → த.சட்பாவம்.]

சட்பிதாபுத்திரிகம்

சட்பிதாபுத்திரிகம் caṭpitāputtirigam, பெ.(n.)

   பஞ்கதாளங்களுள் ஒன்று (பரத.தாள.13);;     [Skt.sat-{}-putraka → த.சட்பிதா புத்திரிகம்.]

சட்பித்துதயிலம்

சட்பித்துதயிலம் caṭpiddudayilam, பெ.(n.)

   ஆயுள் வேத முறைப்படி, தலை நோய் முதலியவற்றிற்கு அணியம் செய்து மூக்கில் ஆறு துளியிடும் மெய்ம்மருந்து (தைலம்);; an Ayur vedic preparation of medicated oil, 6 drops of which are administered into the nostrils in oase of cerebral complaints (சா.அக.);.

த.வ. ஆறுதுளி மருந்து.

சட்புலம்

சட்புலம் caṭpulam, பெ. (n.)

   தொலைவான (தூரமான); இடம்; distant place.

     “சேட்புலம் படர்ந்தோர்” (அகநா. 61);.

     [சேண் + புலம்]

சட்ரசநிகண்டு

 சட்ரசநிகண்டு saṭrasanigaṇṭu, பெ.(n.)

   வடமொழி நூலினின்று மொழி பெயர்த்த சட்ரச (ஷட்ரச); நிகண்டு என்னும் நூல்; a vocabulary translated into Tamil from Sanskrit (சா.அக.);.

சட்ரசம்

 சட்ரசம் saṭrasam, பெ.(n.)

   அறுசுவை; the six distinctive tastes.

     [Skt.sad-rasa → த.சட்ரசம்.]

சட்ரசம்பரிமாறுகை

 சட்ரசம்பரிமாறுகை saṭrasambarimāṟugai, பெ.(n.)

   பூதக்கலம் (நெல்லை.);; serving of food by the bride to the bridegroom for the first time at the marriage.

     [Skt.sad-rasa → சட்ரசம் + த.பரிமாறுகை → த.சட்ரசம்பரிமாறுகை.]

சணகம்

சணகம்1 caṇagam, பெ. (n.)

   கடலை (சங்.அக.);; Bengal gram.

   க, சணகெ, சணங்க, சணங்கி, சணக, சணகி, சணிகி, சன்னங்கி, சாணங்கி; Skt. {}

     [சள் → சண் → சணம் → சணகம்]

 சணகம்2 caṇagam, பெ. (n.)

   புளியாரை, பூடுவகை (வின்.);; yello wood-sorrel.

     [சள் → சண் → சணம் → சணகம்]

 சணகம்3 caṇagam, பெ. (n.)

   சணல் (தத்துவ. 156. உரை);; hemp.

     [சணம் → சணகம்]

சணகி

 சணகி caṇagi, பெ. (n.)

   மூங்கில்; bamboo – Bambusa arundinacea (சா.அக.);.

     [சணம் → சணகி]

சணச்சிச்சாரம்

சணச்சிச்சாரம் caṇacciccāram, பெ. (n.)

சணகம்2 பார்க்க;see {} (சாஅக.);.

     [சணச்சி + சாரம்]

சணபுட்பிகை

 சணபுட்பிகை caṇabuṭbigai, பெ.(n.)

   கிலுகிலுப்பை; rattle-wort – crotalaria laburnifolia (சா.அக.);.

சணபேதி

 சணபேதி caṇapēti, பெ.(n.)

   கணப் பொழுதில் மாழைகளை வேறு பிரித்துப் பொன்னாக்கும் மருந்து; medicine capable of trausmuting metals into gold in a moment (சா.அக.);.

சணப்பங்கோழி

 சணப்பங்கோழி caṇappaṅāḻi, பெ. (n.)

   கோழி வகைகளுள் ஒன்று; a kind of hen. சணப்பங்

கோழி போலத் தொண தொணக்கிறான் (உ.வ.);.

     [சணப்பு + கோழி]

ஒரே ஓசையை, அடிக்கடி தொடர்ந்து வெளி யிடும் தன்மையால் ‘அரிக்குரல்’ எனப்பட்டது. இக்கோழி ஆண்பெண் இணைபிரியாது வாழும் தன்மையுடையது.

     [p]

சணப்பநார்

 சணப்பநார் caṇappanār, பெ. (n.)

   சணல்நார்; fibres of flax.

தெ. சநபநார

     [சணப்பம் + நார்]

சணப்பன்

சணப்பன் caṇappaṉ, பெ. (n.)

   சணலில் நாருரிக்கும் குலத்தான்; member of a Telugu caste whose profession was flax-dressing.

சணப்பன் வீட்டுக் கோழி தானே விலங்கு மாட்டிக் கொண்டது (பழ.);.

     [சணப்பு → சணப்பன் (வ.வ. 139);]

சணப்பு

சணப்பு caṇappu, பெ. (n.)

   1. சணல்2 (பதார்த்த. 250); பார்க்க;see {}.

   2. கஞ்சா (M.M.);; Indian hemp.

   ம. சணம்பு;க. சணம்பு

     [சணம்பு → சணப்பு(வ.வ. 139);]

சணப்புக்குஞ்சம்

 சணப்புக்குஞ்சம் caṇappukkuñjam, பெ. (n.)

   மருள்; bowstring – hemp – Sansiviera roxburghiana (சா.அக.);.

     [சணப்பு + குஞ்சம்]

சணப்புப்புளிச்சை

 சணப்புப்புளிச்சை caṇappuppuḷiccai, பெ. (n.)

   புளிச்சை வகை; Indian brown hemp.

     [சணப்பு + புளிச்சை]

சணப்பை

சணப்பை caṇappai, பெ. (n.)

சணல்1 பார்க்க;see {}.

     [சணப்பு → சணப்பை (வ.வ. 139);]

சணப்பொழுது

 சணப்பொழுது caṇappoḻudu, பெ.(n.)

   நொடிநேரம் (இ.வ.);; short space of time, a moment’s time.

த.வ. கணப்பொழுது.

     [Skt.ksana → சணம் + த.பொழுது.]

சணமம்

சணமம் caṇamam, பெ. (n.)

சணகம்1 பார்க்க;see {} (சா.அக.);.

     [சணகம் → சணமம்]

சணமாலி

 சணமாலி caṇamāli, பெ. (n.)

   இலவு; silk cotton- Bombax malabaricum (சா.அக.);.

சணம்

சணம் caṇam, பெ. (n.)

சணல் (மூ.அ.); பார்க்க;see {}.

     [சடம் → சணல்1 (வ.வ.139);]

 சணம் caṇam, பெ.(n.)

சணப்பொழுது பார்க்க;see {}-p-{}

     [Skt.ksana → த.சணம்.]

சணம்பு

சணம்பு caṇambu, பெ. (n.)

சணல்1 பார்க்க: see {}.

 seeசணம்போடு பருத்தி” (காசிக. பிரமச. 14);.

     [சணம் → சணம்பு (வ.வ.139);]

சணற்சரடு

 சணற்சரடு caṇaṟcaraḍu, பெ. (n.)

   சணல்நூல் கொண்டு செய்த சரடு; cord made of jute threads.

ம. சணச்சரடு

     [சணல் + சரடு]

சணற்பநார்

 சணற்பநார் caṇaṟpanār, பெ. (n.)

   சணல்நார்; fibres of flax.

தெ. சனபநார

     [சணல் → சணப்பு → சணற்ப + நார்]

சணப்பநார் பார்க்க

சணற்புரி

 சணற்புரி caṇaṟpuri, பெ. (n.)

   சணற்கயிறு; flax cord, hempen rope.

     [சணல் + புரி]

சணலரிசி

சணலரிசி saṇalarisi, பெ. (n.)

   1. சணல் செடியின் விதை; seed of jute plant.

   2. ஒரு வகை நெல்; a kind of paddy.

ம. சணயரி

     [சணல் + அரிசி. அரி → அரிசி]

சணல்

சணல்1 caṇal, பெ. (n.)

   பழுப்புநிற நாரினால் திரிக்கப்பட்ட சிறுகயிறு; cord made by twisting together strands of jute.

     [சள் → சண் → சணல்]

 சணல்2 caṇal, பெ. (n.)

   செடிவகை; sunn-hemp.

   ம. சண, சணம்; H., Mar, sana;

 Beng., Guj.,

 Skt. {}

     [சள்ளுதல் = சிக்குதல். சடாய்த்தல் = அடர்ந்துவளர்தல். சீடை = நார். சடைத் தேங்காய் = நார்த்தேங்காய். சடை → சடம் → சடம்பு = நாருள்ள சணற் செடி. சடம் → சணம் = சணல். சணம் → சணம்பு = சணல். சணப்பு = சணல். சணப்பு → சணப்பை = சணல். சணம் → சணல் (வ.வ. 137);]

த. சணல் → Skt. {}

சணல்நார்

சணல்நார் caṇalnār, பெ. (n.)

   1. புளிச்சைக் கீரையிலிருந்து எடுக்கும் ஒருவகை நார்; fibres taken out from sour green or chicori plant.

   2. சணப்பு; fibres of Chennai hemp (சா.அக.);.

மறுவ. காசினிக்கீரை

ம. சணநாரு

     [சணல் + நார்]

சணல்நூல்

 சணல்நூல் caṇalnūl, பெ. (n.)

   சணல் நாரினால் செய்த நூல்; thread made of jute fibre.

ம. சணநூல்

     [சணல் + நூல்]

சணல்வலை

 சணல்வலை caṇalvalai, பெ. (n.)

   சணல் நாராலான வலைவகை; a hemp net to catch big fishes.

     [சணல் + வலை]

சணல்வித்து

 சணல்வித்து caṇalvittu, பெ. (n.)

சணலரிசி பார்க்க;see {}.

ம. சணவித்து

     [சணல் + வித்து]

சணவேலி

 சணவேலி caṇavēli, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Thiruvadanai Taluk.

     [சணல்+வேலி]

சணாய்

சணாய்1 caṇāyttal,    4 செ.கு.வி. (v.i.)

   காமங்கொள்ளுதல்; to be inflammed with passion or lust.

     [சண்ணு → சணாய்-,]

 சணாய்2 caṇāy, பெ. (n.)

   கடலை (சங்.அக.);; Bengal gram.

ம. சணாயி

     [சணகம் → சணாய்]

 சணாய்2 caṇāy, பெ.(n.)

சண்கம் பார்க்க;see {}.

     “கொழுந்துபடு சணாயும்”

சணாவு

 சணாவு caṇāvu, பெ. (n.)

   கையாந்தகரை (மலை);; a plant growing in wet places – Eclipta alba.

     [சள் → சதுப்பு = சேற்று நிலம். சள் → சண் → சணவு → சணாவு = நீர்கோத்த நிலத்தில் வளர்வது]

சணை-த்தல்

சணை-த்தல் caṇaittal,    4 செ.கு.வி. (v.i.)

   கொழுத்தல் (யாழ்ப்.);; to grow luxuriant, as trees;

 to become stout, as persons.

     [சினை → சனை → சணை-,]

சணைப்பு

சணைப்பு caṇaippu, பெ. (n.)

   1. கிளைப்பு; branching.

   2. செழிப்பு; flourishing.

     [சணை → சணைப்பு]

சண்டகன்

 சண்டகன் caṇṭagaṉ, பெ.(n.)

   இலிங்க பாடாணம் (மூ.அக.);; a mineral poison.

     [Skt.prob.candaka → த.சண்டகன்.]

சண்டகி

 சண்டகி caṇṭagi, பெ. (n.)

   பெருமுத்தக் காசு; a big variety of koray root – Cyperus pertenui (சா.அக.);.

சண்டகோபி

சண்டகோபி caṇṭaāpi, பெ. (n.)

   கடுஞ்சினம் உடையவன்; person of violent anger.

 seeசண்டகோபி. துருத்தேவதை” (யசோதர. 1, 14);.

     [சண்ட(ம்);2 + கோபி]

த்.கோபி → Skt. {}

சண்டகோலாகலம்

சண்டகோலாகலம் caṇṭaālākalam, பெ.(n.)

   நிரய வகை (சேதுபு.துராசர்ர.22);; a hell.

     [Skt.canda-{} → த.சண்டகோலாகலம்.]

சண்டகோலாலம்

சண்டகோலாலம் caṇṭaālālam, பெ.(n.)

கண்டகோலாகலம் பார்க்க (சிவதரு.சுவர்க்கநரக.180);;see sanda-{}.

     [Skt.canda-{} → த.சண்டகோலாலம்]

சண்டதாண்டவம்

சண்டதாண்டவம் caṇṭatāṇṭavam, பெ. (n.)

   காளியோடு சிவன் ஆடிய கூத்து (சங்அக.);; dance of {} with {}.

     [சண்ட(ம்);2 + தாண்டவம்]

சண்டத்துவம்

 சண்டத்துவம் caṇṭattuvam, பெ.(n.)

   ஆண் தன்மை யில்லாமை; impotency (சா.அக.);.

சண்டநாயகன்

சண்டநாயகன் caṇṭanāyagaṉ, பெ. (n.)

   சண்டேசுரநாயனார்; a canonized {} saint.

 seeசண்டநாயகனுக் கருள் செய்தவன்” (தேவா. 237, 8.);.

     [சண்ட(ம்);2 +நாயகன்]

சண்டன்

சண்டன்1 caṇṭaṉ, பெ. (n.)

   1. கடுஞ்சினத்தன்; violent-tempered person.

   2. கூற்றுவன் (திவா.);; Yama.

 seeசண்டன்போ யெட்டித் தொடுமுன்” (தேவை. 7௦);.

   3. காலன் (திவா.);; a messenger of {}.

   4. கதிரவன் (பிங்.);; Sun, as the source of heat.

   5. உருத்திரருள் ஒருவர் (சி.போ.பா.2. ப. 24);; a {}.

   6. சிவன் (வின்.);;{}.

   7. சண்டேசுர நாயனார்; a canonized Saiva saint.

 seeசண்டன்றேர் பின்னூர” (தேவை. 109);.

     [சண்டம் → சண்டன் (வ.வ. 138);]

த. சண்டன் → Skt. {}

 சண்டன்2 caṇṭaṉ, பெ. (n.)

   புளியமரம் (மலை.);; tamarind tree.

     [சள் → சண → சண்டன்]

 சண்டன்1 caṇṭaṉ, பெ.(n.)

   அலி (பிங்.);; eunuch, hermaphrodite.

     [Skt.sanda → த.சண்டன்.]

 சண்டன்2 caṇṭaṉ, பெ.(n.)

   புளி (மலை);; tamarind tree.

     [Skt.{} → த.சண்டன்.]

சண்டபானுரசம்

 சண்டபானுரசம் saṇṭapāṉurasam, பெ.(n.)

   குளிர்க் காய்ச்சலுக்குக் கொடுக்கும் ஆயுள் வேத மருந்து; an Ayurvedic medicine prescribed for fever from chillness or cold (சா.அக.);.

சண்டப்பிரசண்டன்

 சண்டப்பிரசண்டன் saṇṭappirasaṇṭaṉ, பெ. (n.)

   மிகுதியாகப் பேசுபவன்; one who talks boisterously.

     [சண்டப்பிரசண்டம் → சண்டப்பிரசண்டன்]

சண்டப்பிரசண்டம் பார்க்க

சண்டப்பிரசண்டம்

சண்டப்பிரசண்டம் saṇṭappirasaṇṭam, பெ. (n.)

   1. மிகு கடுமை; wild fierceness, extreme violence.

 seeமண்டிவரு சண்டப் பிரசண்ட மாருதமான” (திருவேங். சத. 48);.

   2. ஆர்ப்பாட்டம்; boisterousness, turbulence, often applicd to persons.

தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டம் செய்வான்.

     [சண்டம் + பிரசண்டம். எதுகை நோக்கி வந்த இணைமொழி]

சண்டப்பிரசண்டர்

சண்டப்பிரசண்டர் saṇṭappirasaṇṭar, பெ. (n.)

   திருமால் கோயிலுள்ள வாயிற்காப்பாளர் (M.E.R. 634 of 1919);; deities guarding the inner shrine of {} ({}); temples.

     [சண்டப்பிரசண்ட(ம்); + அர்]

சண்டப்பை

சண்டப்பை caṇṭappai, பெ. (n.)

   கருப்பம்; uterus, womb.

 seeசண்டப்பைக்குள்ளிருந்து” (தனிப்பா. 1, 12௦, 4);.

     [அண்டப்பை → சண்டப்பை]

சண்டமற்கடி

 சண்டமற்கடி caṇḍamaṟkaḍi, பெ. (n.)

   பூனைக்காய்ஞ்சொறி; climbing nettle mercuty- Tragia involucrats (annebina); (சா.அக.);.

சண்டமாருதசிந்தூரம்

 சண்டமாருதசிந்தூரம் saṇṭamārudasindūram, பெ.(n.)

   சிந்தூர வகை (வின்.);; a medicinal powder.

     [Skt.canda+{} → கண்டமாருதம் + த.சிந்தூரம் → த.சண்டமாருதசிந்தூரம்.]

சண்டமாருதம்

சண்டமாருதம் caṇṭamārudam, பெ. (n.)

   பெருங்காற்று; hurricane, wind-storm

     ‘சண்ட seeமாருதத்திற்குமுன் சருகோட்டம் போல” (பழ.);.

     [சண்டம்2 + மாருதம்]

 Skt. {} → த. மாருதம்

சண்டம்

சண்டம்1 caṇṭam, பெ. (n.)

   1. உறைப்பு:

 pungency.

   2. எருது; ox.

   3. கருப்பம்; pregnancy.

     [சண்டு → சண்டம்]

 சண்டம்2 caṇṭam, பெ. (n.)

   1. சினம் (சங்.அக.);; anger.

   2. கொடுமை; fierceness.

 seeசண்ட மன்னனைத் தாடொழுது” (சீவக. 43௦);.

   3. விரைவு (சூடா.);; speed, rapidity, swiftness,

   4. வலிமை; strength, power.

 seeபல்லாயிரகோடி சண்ட தூணங்கள் போன்றன” (பாரத காண்டவ. 38);.

   3. ஒருவகை நிரையம் (சிவதரு. சுவர்க்க. நரக. 108);; a kind of hell.

     [சள்ளெனல் = சினந்து விழுதல், சள் → சள்ளை = தொந்தரவு. சள் → சண்டு → சண்டை = சச்சரவு. சள் → சளம் = கடுஞ்சினம். சண்டு → சண்டம் = சினம், கொடுமை (வ.வ. 138);]

 சண்டம்3 caṇṭam, பெ. (n.)

   பெருமை (அக.நி.);; greatness.

     [சடு → சண்டு → சண்டம்]

சண்டரசம்

 சண்டரசம் saṇṭarasam, பெ.(n.)

   ஒரு வகை இனிப்புப் பற்பம்; a compound of mercury oxide (சா.அக.);.

சண்டவேகம்

சண்டவேகம் caṇṭavēkam, பெ. (n.)

   மிகுவிரைவு; great, excessive or headlong speed impetuosity.

 seeதேருமெதிர் நடத்தினர் சண்ட வேகமொடு’ (பாரத. பன்னிரண்டாம். 22);.

     [சண்டம்2 + வேகம்]

சண்டா

 சண்டா caṇṭā, பெ. (n.)

   அலரி; oleander – nerium odorum (சா.அக.);.

சண்டாதகம்

 சண்டாதகம் caṇṭātagam, பெ. (n.)

சண்டாதம் பார்க்க;see {} (சா.அக.);.

     [சண்டாதம் → சண்டாதகம்]

சண்டாதம்

 சண்டாதம் caṇṭātam, பெ. (n.)

   அவுரி; indigo plant – indigofera tinctoria (சா.அக.);.

சண்டாளக்கரு

 சண்டாளக்கரு caṇṭāḷakkaru, பெ.(n.)

   கழுதைக் கொழுப்பு; ass’es fat (சா.அக.);.

சண்டாளன்

சண்டாளன் caṇṭāḷaṉ, பெ. (n.)

   1. கொடுமை யானவன்; low, degraded man, villain, sinner.

   2. பார்ப்பனிக்கும் தொழும்பனுக்கும் (சூத்திரன்); பிறந்தவன்; person of the degraded caste, born of the brahmin woman and a sudra father.

   3. வசைமொழிக்குப் பயன்படுத்தும் சொல்; vile traitor, a term of reproach.

சண்டாளன் என் பிழைப்பைக் கெடுத்துவிட்டான்.

   க. சாண்டால, சண்டால;து. சண்டாலெ, சாண்டாலெ (தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவன்); [சண்டாளம் → சண்டாளன் (வ.வ.138]

த. சண்டாளம் → Skt. {}

சண்டாளப்பேறு

சண்டாளப்பேறு caṇṭāḷappēṟu, பெ. (n.)

   வரிவகை (S.I.I.V., 139);; a tax.

     [சண்டாளம் + பேறு]

சண்டாளம்

சண்டாளம் caṇṭāḷam, பெ. (n.)

   1. இழிந்ததன்மை; baseness, villeness, sinfulness.

   2. பேய்; demon.

     [சள்ளெனல் = சினந்து விழுதல். சள் → சள்ளை = தொல்லை. சள் → சண்டு → சண்டம் = சினம், j=கொடுமை. சண்டம் → சண்டாளம்]

த. சண்டாளம் → Skt. {}

சண்டாளர்

 சண்டாளர் caṇṭāḷar, பெ. (n.)

   கொலைஞர் (திவா.);; murderer, assassin.

மறுவ. குணங்கர், வங்கர், கவுண்டர், இழிஞர், புலைஞர், கொலைஞர் (ஆ.நி.);

     [சண்டாளம் → சண்டாளர்]

சண்டாளி

சண்டாளி caṇṭāḷi, பெ. (n.)

   1. கொடியவள், கொடுமையான பெண்; low, degraded woman, sinful woman.

 seeசண்டாளி சூர்ப்பனகை” (தனிப்பா. 1, 95, 15);.

   2. புலைச்சி; woman of the most degraded caste.

     [சண்டாளன் (ஆ.பா.); – சண்டாளி (பெ.பா.); (வ.வ. 138);]

த. சண்டாளி → Skt. {}

சண்டி

சண்டி1 caṇṭi, பெ. (n.)

சண்டித்தனம் பார்க்க;see {}.

க. சண்டி

     [(சள்); → சண்டு → சண்டி]

 சண்டி2 caṇṭi, பெ. (n.)

   1. கொடியவன்; wicked.

 seeஒளித்த தேதடா அடசண்டி” (இராமநா.);.

   2. இடக்குச் செய்-பவன்-வது; any obstinate, perverse person or animal.

சண்டிமாடு.

 seeசண்டிக்குதிரைக்கு நொண்டிச் சாக்கு’ (பழ.);.

   3. அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்; a canonized {} saint, one of 63 {}.

 seeஅம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்” (தேவா. 736, 3);.

க. சண்டிக

     [(சள்); → சண்டு → சண்டி (வ.வ. 138);]

த. சண்டி → Skt. {}

 சண்டி3 caṇṭi, பெ. (n.)

   1. கொடியவள்; wicked woman.

 seeபிணக்கிடுஞ் சண்டிகள்” (திருப்பு. 13);.

   2. காளி (பெருஞ்சினமுள்ளவள்.); ; Durga, as furious.

மறுவ. கொற்றவை, அம்மை, மாயோள், காளி, அங்காளம்மை, மாரி, பிடாரி, கன்னி, குமரி, பகவதி

   ம. சண்டி;   க. சண்டி, சண்டெ (காளி);;து. சண்டி

     [(சள்); → சண்டு → சண்டி (வ.வ. 138);]

த. சண்டி → Skt. {}

 சண்டி4 caṇṭi, பெ. (n.)

   1. மானமற்றவன் (யாழ்.அக.);; shameless person.

   2. ஒரு வகைச் சீமை மரம்; lettuce tree.

ம. சண்டிச்சி (கொடியவள்);

     [சண்டி1 → சண்டி3]

 சண்டி caṇṭi, பெ.(n.)

   சல்லிக்கட்டு எனும் வீர விளையாட்டில் மாட்டின் கொம்பில் சுற்றப்பட்டிருக்கும் துணி; the cloth tied around the horn of the bull in Salli-k-kattu.

     [செண்டு-சண்டி]

சண்டிகை

சண்டிகை caṇṭigai, பெ. (n.)

   காளி (பிங்.);;{}.

     [சண்டி → சண்டிகை]

சண்டிசெய்-தல்

__,

   1 செ.கு.வி. (v.i.);

   ஒட்டாரம் செய்தல்; to become passionate, obstinate.

க. சண்டி கொள்ளு

     [சண்டி + செய்-,]

சண்டிக்கடா

சண்டிக்கடா caṇṭikkaṭā, பெ. (n.)

   1. சண்டித்தனமுள்ள எருமைக்கடா; lit., stubborn he-buffalo.

   2. ஒட்டாரஞ் செய்யும் சோம்பேறி எருமைக்கடா; indolent, obstinate person.

 seeசோம்பலொடு பெரியோர் சபைக்குட் படுத்திடுந் தூங்கலே சண்டிக்கடா” (குமரேச. சத. 40);.

     [சண்டி1 + கடா]

எருமைக்கடாவின் சண்டித்தனத்தை அவ்வியல்புடையோன் மீது ஏற்றிக் கூறுவது.

சண்டிக்கார்

 சண்டிக்கார் caṇṭikkār, பெ. (n.)

   கார் நெல் வகை; a kind of {} paddy.

ம. சண்டிக்காடு

     [சண்டி = கார்]

சண்டிக்கீரை

சண்டிக்கீரை caṇṭikārai, பெ. (n.)

   ஊதை நோய், இடுப்புவலி முதலியவற்றிற்கு மருந்தாகப் பயன்படும் சீமைக்கீரையினம்; lettuce – leaves of a tree which is used in cases of rheumatic complaints, gout, lumbago etc. (சாஅக);.

     [சண்ட4 + கீரை]

சண்டிசாட்சி

 சண்டிசாட்சி caṇṭicāṭci, பெ.(n.)

   செஞ்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a Village in Senji Taluk.

     [சண்டியன்+சாட்சி]

சண்டித்தனம்

 சண்டித்தனம் caṇṭittaṉam, பெ. (n.)

   ஒட்டாரம்; obstinacy, stubbornness, perversity.

   ம. சண்டித்தனம், சண்டித்தரம், சண்டித்தம்;   ச. சண்டிதன;தெ. சண்டிதரம்.

     [சண்டி → சண்டித்தனம்]

சண்டினி

சண்டினி caṇṭiṉi, பெ. (n.)

   விளக்கு; lamp.

 seeமகர பூசத்துநாள் திருமலையில் சண்டினி குடத்தபடி

தம்மிட அதிரசப்படி அமுது செய்” (திருப். க. தொ.1, கல். 23௦.3);

சண்டிமாடு

 சண்டிமாடு caṇṭimāṭu, பெ. (n.)

   இணக்கமாகச் செல்லாத மாடு; obstinate ox.

     [சண்டி + மாடு. சளம் → சண்டு → சண்டம் = சினம், கொடுமை, சண்டன் = கடுஞ்சினத்தன், கூற்றுவன், கொடியவன். சண்டன் → சண்டி = கொடியவன், காளி, இடக்குப் பண்ணும் விலங்கு]

சண்டியன்

 சண்டியன் caṇṭiyaṉ, பெ. (n.)

   பிடிவாதமுள்ள சோம்பேறி (யாழ்ப்);; obstinate, indolent person.

     [சண்டி → சண்டியன்]

சண்டியர்

 சண்டியர் caṇṭiyar, பெ. (n.)

   சண்டையை மூட்டுபவன், பெரும் முரடன்; rowdy, rogue.

அந்தப் பேட்டைக்கு அவன்தான் சண்டியர்.

     [சண்டி → சண்டியர்]

சண்டிலன்

சண்டிலன் caṇṭilaṉ, பெ. (n.)

   1. சிவன்;{}..

   2. முடிதிருத்துவோன்; barber.

     [சண்டி → சண்டிலன்]

சண்டிவாளம்

சண்டிவாளம்1 caṇṭivāḷam, பெ. (n.)

   ஒப்பந்தத்தை நீக்கவோ ஒன்றை மீட்கவோ கொடுக்கும் பணம் (வின்.);; money given to dissolve a bargain or to redeem anything.

க. சண்டிவாள

     [சண்டி + வாளம்]

 சண்டிவாளம்2 caṇṭivāḷam, பெ. (n.)

   கால் விலங்கு (இ.வ.);; fetters for the legs.

     [சண்டி1 + வாளம். வள் → வாள் → வாளம் = வளைவு, வட்டம், வட்ட வடிவிலமைத்த விலங்கு]

சண்டீசர்

 சண்டீசர் caṇṭīcar, பெ. (n.)

சண்டேசுர நாயனார் பார்க்க;see {}.

க. சண்டேச (சிவன்);

     [சண்டர் + ஈசர் – சண்டேசர் → சண்டீசர்]

சண்டீனம்

சண்டீனம் caṇṭīṉam, பெ. (n.)

   பறவைகள் பறக்கும் முறை; one of the modes of flight, peculiar to birds.

 seeசண்டீன முட்டீனம்” (காசிக. திரிலோ. 6);.

     [சண்டு + இனம்]

சண்டு

சண்டு1 caṇṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அளவுக்கு அதிகமாக உண்ணுதல்; to cat to excess, to be gluttonous.

     [சள் → சண்டு-,]

 சண்டு2 caṇṭu, பெ. (n.)

   1. பதர்; chaff.

   2. கூளம்; broken chips of spoilt straw.

   3. பயிரில் விழும் வண்டுவகை; an insect damaging growing crops.

   4. புகைபிடிக்கும் பிசினி (அபினி); உருண்டை; a preparation of opium used for smoking.

   5. எல்லையில் நடப்படும் கோல்; pole, as a boundary mark.

   ம. சண்ட;   க. சரட, சட்ட;பட. சண்டு: Skt. {}

     [சள் → சள் → சண்டு (வே.க. 213);]

சண்டுசருகு

 சண்டுசருகு saṇṭusarugu, பெ. (n.)

   காய்ந்த தாள்களும் இலைகளும்; dried leaves.

     [சண்டு + சருகு]

   மோனை நோக்கி வந்த மரபிணைமொழி. சண்டு = காய்ந்த தாளும் தோகையும்;சருகு = காய்ந்த இலை.

சண்டுசருவை

 சண்டுசருவை saṇṭusaruvai, பெ. (n.)

   கடலடிக்கூலம் (முகவை.);; grains of sea.

     [சண்டு + சருவை]

சண்டேசானுக்கிரகர்

 சண்டேசானுக்கிரகர் caṇṭēcāṉuggiragar, பெ.(n.)

   சண்டேசுரருக்கு அருள்புரிந்த சிவமூர்த்தம்;{}, as bestowing grace on {}-{}.

     [Skt.{}+{}-kar → த.சண்டேசானுக்கிரகர்.]

சண்டேசுரநல்லூர்

சண்டேசுரநல்லூர் caṇṭēcuranallūr, பெ. (n.)

   சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சிற்றூரின் பண்டைய பெயர்; an ancient village near Chidambaram.

 seeஇவூர் பிடாகை சண்டேசுர நல்லூரில் குலோத்துங்க சோழயிரமாராயன்” (தெ. க. தொ. 12: க. 151: 5-6);

     [சண்டேசுவரம் + நல்லூர்]

சண்டேசுரநாயனார்

சண்டேசுரநாயனார் caṇṭēcuranāyaṉār, பெ. (n.)

   சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவர் (பெரியபு);; a canonized {} saint, one of 63 {}.

     [சண்டேசுவரம் + நாயனார்]

சண்டேசுரப்பெருவிலை

சண்டேசுரப்பெருவிலை caṇṭēcurapperuvilai, பெ. (n.)

   கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை வாங்க, விற்க, மதிக்கப்படும் விலை; temple land amount.

 seeஇவ்வூர் எங்கள் பிரம்மசேத்திரம் என்றும் சண்டேசுரப் பெருவிலை கொள்ளக் கடவல்ல என்றும்” (தெ.க. தொ. 7: க. 759:1);.

     [சண்டேசு வரம் + பெருவிலை]

நிலமாவது இறைவனது பெயரிலேயே இருக்கும். அந்நிலத்தை வாங்க, விற்க உறுதிப்படும்விலை சண்டேசுரப்பெருவிலை. ஆதிசண்டேசுரப்பெருவிலை.

சண்டேசுரவாய்க்கால்

சண்டேசுரவாய்க்கால் caṇṭēcuravāykkāl, பெ. (n.)

   நீர்ப்பாசன வாய்க்காலின் பெயர்; name of a irrigation channel.

 seeஇச்செயும் இதுக்குப் பாயும் சண்டேஸ்வர வாயிக்காலும் இறையிலி” (தெ. க. தொ.3: க 73:24);

     [சண்டேசுவரம் + வாய்க்கால்]

சண்டை

சண்டை caṇṭai, பெ. (n.)

   1. பூசல்; quarel.

   2. முரண்பாடு; conflict.

   3. போர்; war.

நாடுகளுக்கிடையே நிகழும் சண்டை பேரழிவைத் தரும்.

   ம. சண்ட;   க. தண்டெ;   தெ. தண்ட;   து. சண்டெ. தண்டெ;பட. சண்டெ

   சண்டை வகை: சண்டை – இருவர் செய்யும் போர்;   மல் – இருவர் தம் வலிமை காட்டச் செய்யும் போர்;   கலாம் – பலர் செய்யும் போர்;   போர் – இரு நாட்டார் அல்லது அரசர் செய்யும் போர்;   பூசல் – போர் ஆரவாரம்;   சமர் – இருபடைகள் கலந்து செய்யும் போர்;   ஞாட்பு செறிந்து செய்யும் போர்;   மலைவு – பூச்சூடிச் செய்யும் போர்;செரு – பகைவரை அழிக்கும் போர் (சொ.க. 55, 56);.

     [சள்ளெனல் = சினந்துவிழுதல், சள் = தொல்லை. சள்ளை = தொல்லை. சள் → சண்டு → சண்டை = பூசல், போர்.]

 சண்டை2 caṇṭai, பெ. (n.)

   இசைக்கருவி வகை;(S.I.I.V. 308);; a musical instrument.

ம. சண்ட

     [சள் → சண்டு → சண்டை. சள் – ஒலிக்குறிப்புச் சொல்]

சண்டைக்கப்பல்

 சண்டைக்கப்பல் caṇṭaikkappal, பெ. (n.)

   போரிடுவதற்குப் பயன்படுத்தும் கப்பல், போர்க்கப்பல்; warship, privateer.

     [சண்டை + கப்பல்]

சண்டைக்காரன்

சண்டைக்காரன் caṇṭaikkāraṉ, பெ. (n.)

   1. சண்டையிடுங் குணமுள்ளவன்; quarelsome person.

   2. பகைவன்; enemy, அவன் என் சண்டைக்காரன் (உ.வ.);.

   ம. சண்டார் (பகைவர்);;க. சகலிகண்ட

     [சண்டை + காரன்]

சண்டைக்காரி

 சண்டைக்காரி caṇṭaikkāri, பெ. (n.)

   சண்டையிடும் இயல்பினள்; a quarrlesome woman.

க. சகளிகாதி

     [சண்டை + காரி]

சண்டைக்கிழு- த்தல்

சண்டைக்கிழு- த்தல் caṇṭaikkiḻuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   சண்டைபோடச் செய்தல்; to pick a quarrel.

க. சகளதெகெ

     [சண்டை + கு + இழு-]

சண்டைக்குச்சூரன்

சண்டைக்குச்சூரன் caṇṭaikkuccūraṉ, பெ.(n.)

   1. கோழி; fowl.

   2. சேவல்; cock (சா.அக.);.

சண்டைக்குநில்-தல் (சண்டைக்கு நிற்றல்)

சண்டைக்குநில்-தல் (சண்டைக்கு நிற்றல்) caṇṭaikkuniltalcaṇṭaikkuniṟṟal,    14 செ.கு.வி. (v.i.)

   போராடுதல்; to pick a quarrel, to fight.

     [சண்டைக்கு + நில்-,]

சண்டைக்கும்மி

 சண்டைக்கும்மி caṇṭaikkummi, பெ.(n.)

   ஆடவர்களால் ஆடப்பெறும் கும்மியாட்டம்; dance with lapping of hands to time and singing by men.

     [சண்டை+கும்மி]

சண்டைசத்தம்

சண்டைசத்தம் saṇṭaisattam, பெ. (n.)

   வாய்ப்பூசல்; rashness in speech.

     [சள் → சண்டு → சண்டை- சச்சரவு வ.வ.பக் 136]

சண்டைச் சச்சரவு

 சண்டைச் சச்சரவு caṇṭaiccaccaravu, பெ. (n.)

ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளுதல் அல்லது காரசாரமாகப் பேசிக் கொள்ளுகை,

 quarrel.

இந்தத் தெரு எப்பொழுது பார்த்தாலும் சண்டைச் சச்சரவு மிக்கதாகவே இருக்கும்.

     [சண்டை+சச்சரவு]

சண்டை – பூசல், சச்சரவு – கலகம். முதலெழுத்து ஒன்றிவந்த மரபினை மொழி.

சண்டைபிடி

சண்டைபிடி1 caṇḍaibiḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   போரிடுதல்; to quarrel, fight.

ம. சண்டபிடிக்குக

     [சண்டை + பிடி-,]

 சண்டைபிடி2 caṇḍaibiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கடிந்துகூறுதல் (இ.வ.);; to chide, rebuke.

     [சண்டை + பிடி-,]

சண்டைபோடு-தல்

சண்டைபோடு-தல் caṇṭaipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   போராடுதல்; to pick quarrel, fight.

     [சண்டை + போடு-,]

சண்டைப்புழு

சண்டைப்புழு caṇṭaippuḻu, பெ. (n.)

   புழுவகை (பரராச. 2, 216);; a kind of worm.

     [சண்டை + புழு]

சண்டைமூட்டு-தல்

சண்டைமூட்டு-தல் caṇṭaimūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. சினமூட்டும் செய்திகளைக் கூறிச் சண்டைக்குத்தூண்டுதல்; to bring the news of some quarrel before others, generally as a complaint and with the purpose of rousing a quarel.

   2. இருதரப்பினர்க்கிடையே சண்டை உருவாக்குதல்; to create quarrel or fight between two parties.

     [சண்டை + மூட்டு-. முள் → மூள். மூளுதல் = பொருந்துதல், கூடுதல், மூள் (த.வி.); – மூட்டு (பி.வி.);]

சண்டைமூள்(ளு)-தல்

சண்டைமூள்(ளு)-தல் caṇṭaimūḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

 to start fighting, generally between two countries.

     [சண்டை + மூள்-,]

சண்ணக்கடா

சண்ணக்கடா caṇṇakkaṭā, பெ. (n.)

   1. தின்று கொழுத்த கடா; a well-fed fat ram.

   2. பொலி கடா; bull kept for covering.

ம. சண்ணக்கிடாவு

     [கண் → சண். சண்ணுதல் = புணர்தல். சண் → சண்ணம் + கடா. குல் → குள் → குழு → குழ → குட → குடம் = திரட்சி. குடத்தல் = கூடுதல், திரளுதல். குட → கட → கடா = உருண்டு திரண்ட விலங்கு (வ.வ. 137);]

சண்ணத்துருக்கவேம்பு

 சண்ணத்துருக்கவேம்பு caṇṇatturukkavēmbu, பெ. (n.)

   செவ்வத்தை; globular flowered neem.

     [சண்ணத்துருக்க + வேம்பு]

சண்ணநெல்

 சண்ணநெல் caṇṇanel, பெ. (n.)

   சன்னவரிசி தரும் நெல்; the paddy of {}.</