தலைசொல் | பொருள் |
---|---|
சோ | சோ1 cō, ‘ச்’ எனும் மெய்யெழுத்தும், ‘ஓ’ எனும் உயிரெழுத்தும் சேர்ந்தமைந்த உயிர் மெய்யெழுத்து; the compound of 5 and {c/š.} [ச் + ஓ = சோ] சோ2 cō, இடை (part.) வியப்புப் பொருளைத் தரும் இடைச்சொல் (இ.வ.); an expletive signifying surprise. சோ3 cō, பெ. (n.) வாணாசுரன் நகர்; the city of {Binasuran.} “சோவி மையழித்த மகன்” (நான்மணி. 2.);. 2. அரண் (நன். 129, உரை);; fortification, fortress. 3. துன்பம்; distress. 4. மடி, சோம்பல்; idleness. |
சோகசாவேரி | சோகசாவேரி cōkacāvēri, பெ. (n.) பண்வகை (பரத. ராக. 55);; a specific melody-type. |
சோகட்டு-தல் | சோகட்டு-தல் cōkaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) 1. இணை சேர்த்தல் (வின்.);; to join or unite two similar things. 2. இரட்டையாக்குதல்; to make or form a set, pair or couple. [சோடு2 + கட்டு-.] |
சோகண்டி, | சோகண்டி, cōkaṇṭi, பெ.(n.) செங்கற்பட்டு வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Chengalpet Taluk. [சேகண்டி-சோகண்டி] |
சோகத்துார், | சோகத்துார், cōkatr, பெ.(n.) வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vandavāsi Taluk. [சொகுத்தன்+ஊர்] |
சோகநீக்கி | சோகநீக்கி cōkanīkki, பெ. (n.) 1. மாதவி (சங். அக.);; common delight of the woods. 2. குறிஞ்சா; spring creeper. |
சோகமாதிரம் | சோகமாதிரம் cōkamātiram, பெ. (n.) கோங்கு; false tragacanth. |
சோகம் | சோகம்1 cōkam, பெ. (n.) ஒட்டகம்; camel. [சோ1 → சோகம்] சோகம்2 cōkam, பெ. (n.) அசோகம்; asoka tree. “சொரி யிதழ் வனசோகம்” (கம்பரா. வனம்புகு.81);. [சே (= சிவப்பு); → சோ → சோகம் = சிவத்த தனிரையுடைய அசோக மரம்] சோகம்3 cōkam, பெ. (n.) தொடை (திவா.);; thigh. |
சோகா-த்தல் | சோகா-த்தல்1 cōkāttal, 4 செ.கு.வி. (v.i.) துன்புறுதல்; to grive, suffer. “சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு” [சோ_+ கா-.] சோகாத்தல் சிறையிற் காத்திருத்தல், அது கனகவிசயர் என்னும் ஆரிய மன்னர் தமிழ் வேந்தரைப் பழித்ததனால், சேரன் செங்குட்டுவனின் சிற்றத்திற்காளாகிச் சிறைப்பட்டது போல்வது. ‘அடல்வேல் மன்னராயிருருள்ளும் கடலந் தானைக் காவல னுரைக்கும் பாலகுமரன் மக்கள் மற்றவர் காவா நாவிற் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடுங்கூடி அருந்தமி ழாற்றல் அறிந்தில ராங்கெனக் கூற்றங் கொண்டிச் சேனை செல்வது’ (சிலப். 26:156-62); “ஆரிய வரசரை யருஞ்சிறை நீக்கி” (சிலப். 28:165); சோ என்பது அரிய பொறிகள் ஏற்றப்பட்ட சிறந்த அரண். அஃது இராவணனின் இலங்காபுரியிலும் வாணனின் சோணித புரத்திலும் இருந்தது. “தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை ஆட்டழித்த சேவகம்” (சிலப். ஆய்ச்சியர் குரவை); “ஆனிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின் அருமை யழித்த மகன்” (நான்மணி. 2); சோன் என்னும் சொல்லைப் பிற்காலத்தார் பொதுவான மதிற்பெயராகவும் ஆண்டு விட்டனர். “சோமே லிருந்தொரு கோறா வெனின்” காத்தல் என்பது காத்திருத்தல் அல்லது நிலையில்லாது தங்கியிருத்தல்.wait என்னும் ஆங்கிலச் சொற்கு tarry, stay என்று ஆக்ககபோர்டு ஆங்கிலச் சிற்றகர முதலி பொருள் கூறியிருத்தல் காண்க. சோகா என்னும் சொல்லை வடசொல் தொடர்பினதாகக் காட்டல் வேண்டி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அரகமுதலி அதற்குச் சோகம் + யா என்று மூலங் குறித்திருப்பது பொருந்தாது. யாத்தல் கட்டுதல், அரையாப்பு, கழல் யாப்பு, மார்யாப்பு (மாராப்பு);, விதலை யாப்பு முதலிய கூட்டுச் சொற்கள் போல் சோக(ம்); யாப்பு என்றொரு சொல்லின்மையும், அவ்விரு பிறப்பியல் (hybrid); யாப்பு என்னும் சொல் இயற்கையாகப் பொருந்தாமையும் நோக்குக. இனி, சோ என்னும் சொல்லையும், வாணன் தலைநகர்ப் பெயரான சோணிதபுரம் என்பதன் சிதைவாக அவ்வகரமுதலி காட்டியிருப்பதும் குறும்புத்தனமாம் வாணனுக்கு முந்தின இராவணன் காலத்திலேயே சோவரண் இருந்தமையை நோக்குக (தி.ம.105-6);. |
சோகாகக்கனகம் | சோகாகக்கனகம் cōgāgaggaṉagam, பெ. (n.) பிள்ளைத் தாய்ச்சிச்செடி; any plant in which the legumes contain large and projecting seeds. (சா.அக.);. |
சோகாப்பு | சோகாப்பு cōkāppu, பெ. (n.) துன்பம் (சங்.அக.);; sorrow, grief. “சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு” (குறள், 127);. [சோகா → சோகாப்பு] |
சோகாரம் | சோகாரம் cōkāram, பெ. (n.) குங்குமச் செவ்வந்தி; crimson coloured chamomile flower (சா.அக.);. [சே → சோ → சோகரம்] |
சோகாரி | சோகாரி cōkāri, பெ. (n.) கடம்பு, கடம்பமரம் (மலை.);; common Indian oak. |
சோகி | சோகி1 cōkittal, 4 செ.கு.வி. (v.i.) 1. துன்பப்படுதல்; to grieve; to be depressed in mind. “முகமெலாங் கண்ணீர் வாரச் சோகித்தார்” (கோயிற்பு. நடராச. 9);. 2. மயங்குதல் (வின்.);; to faint, swoon. [சோகா → சோகி-.] சோகி2 cōki, பெ. (n.) 1. பலகறை (M.M.238);; cowry, small shell, white or coloured. “முத்தக்கழற் சோகியாகி” (உபசேகா. சிவபுண். 91);. 2. சோர்ந்தூர்ந்து செல்லு மொரு கடல் முத்து; a sea pearl moving slowly. [சோழி → சோகி.] சோகி3 cōki, பெ. (n.) மாயமந்திர விச்சைகளில் தேர்ச்சியுற்றுப் பாம்பைப் பிடித்தாட்டி வயிறு வளர்க்கும் தொட்டிய இனப் பிச்சைக்காரன் (E.T. II,494); (இ.வ.);; a caste of itinerant Teluge mendicants, who are dexterous jugglers and snake-charmer, and claim a profound knowledge of charms and medicine. க. சோசி, யோகின் |
சோகிக்கீரை | சோகிக்கீரை cōkikārai, பெ. (n.) பெருஞ் சீரகம் (M.M. 845);; sweet fennel. |
சோகிதன் | சோகிதன் cōkidaṉ, பெ. (n.) துன்பமுற்றவன் (பாரத வெண். 28, உரை);; one who is sorrowful. [சோகி3 → சோகிதன்] |
சோகித்தலம் | சோகித்தலம் cōkittalam, பெ. (n.) காற்சிகைப்பூடு; an unknown plant (சா.அக.);. |
சோகினி | சோகினி cōkiṉi, பெ.(n.) நள்ளிரவு முதல் அதிகாலை வரை பாடத்தக்க பண்; a music note sung at night. [சொக்கு-சொக்கினி-சோகினி] |
சோகு | சோகு cōku, பெ. (n.) பேய் (பிங்.);; vampire, devil, goblin. “கானத்தி லுற்பவித்துறுஞ் சோகாயுலைவரே” (சிவரக. நந்திகேசுரர். நமனுக்கு. 8);. தெ. சோகு [சோகு1 → சோகு = துன்பந்தரும்பேய்] |
சோகுவாகு | சோகுவாகு cōkuvāku, பெ. (n.) வாலுளுவை யரிசி;seeds of spindle tree. |
சோகை | சோகை cōkai, பெ. (n.) 1. அரத்தக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய் வகை (M.L.);; anaemia, a disease characteised by pale and bloated face. 2. அறிவுக் குறைந்தவன் (அப்பிராணி); (சங்.அக.);; feeble or impotent person. [சோ → சோகை] சோ என்றால் மடி அல்லது சோம்பல் என்ற பொருளாகும். இந்நோய் பீடிக்கப் பட்டவனும் விறுவிறுப்பின்றி சோம்பிக் கிடப்பதால் இந்நோய்க்கு சோகை என்ற பெயர் வந்தது. |
சோகைப்பாண்டு | சோகைப்பாண்டு cōkaippāṇṭu, பெ. (n.) அரத்தமின்மையால் ஏற்படும் பாண்டு நோய்; dropsy due to anemic condition of the body, anemic dropsy (சா.அக.);. [சோகை + பாண்டு] |
சோகைப்பாண்டுநாசினி | சோகைப்பாண்டுநாசினி cōkaippāṇṭunāciṉi, பெ. (n.) நறுந்தாளிப் பூண்டு; binweed – convolvulus genus, it is so called from its virtue of curing anemic dropsy (சா.அக.);. [சோகைப்பாண்டு + நாகினி] |
சோகைமூஞ்சி | சோகைமூஞ்சி cōkaimūñji, பெ. (n.) 1. ஊதின முகம்; swollen face. 2. நீர்க்கோர்வையினால் வீங்கிக்காணும் முகம்; face grown turgid or swollen up as with water-bloated face (சா.அக.);. [சோகை + மூஞ்சி] |
சோகையன் | சோகையன் cōkaiyaṉ, பெ. (n.) சோகை நோயால் வருந்துபவன் (யாழ்.அக.);; person affected with anaemia. [சோகை → சோகையன்] |
சோகைவீக்கம் | சோகைவீக்கம் cōkaivīkkam, பெ. (n.) நச்சூதை நோய் (விஷப்பாண்டு ரோகம்); (M.L.);; dropsy. [சோகை + வீக்கம்] |
சோக்காடி, | சோக்காடி, cōkkāṭi, பெ.(n.) கிருட்டிணகிரி வட்டத்திலுள்ள சிற்றூர்:Ti, a village in Krishnagiri Taluk. [சொக்கன்+பாடி] |
சோங்கண் | சோங்கண் cōṅgaṇ, பெ. (n.) மாறுகண் (நாஞ்.);; squint eye. மறுவ. சாய்ந்த கண் [சோங்கு + கண் → சோங்கண்] |
சோங்கம் | சோங்கம்1 cōṅgam, பெ. (n.) அகில் (மலை.);; blinding-tree. சோங்கம்2 cōṅgam, பெ. (n.) கிச்சிலிக் கிழங்கு (சங்.அக.);; camphor zedoary. |
சோங்கல் | சோங்கல் cōṅgal, பெ. (n.) 1. மறந்துவிடல்; forgetfullness. 2. மறதி; non-rememberance (சா.அக.);. [சோங்கு → சோங்கல்] |
சோங்கு | சோங்கு1 cōṅgu, பெ. (n.) கோங்கிலவு (வின்.);; false tragacanth. சோங்கு2 cōṅgu, பெ. (n.) மறதி (சங்.அக.);; forgetfulness, oblivion. [சோ → சோங்கு] சோ என்ற சொல் சோம்பல், சொக்குதல் (தூக்கக் கலக்கம்); போன்ற சொற்களை உருவாக்கும். சோம்பலால் மறதி ஏற்படுவது இயல்பு. சோங்கு3 cōṅgu, பெ. (n.) கானாறு சூழ்ந்து விளங்கும் மலைச் சோலை (வின்.);; hilly tract thickly clustered with trees and watered by streams or. cataracts. சோங்கு2 cōṅgu, பெ. (n.) உயரம்; height. பாரி சோங்கான ஆள். இந்த மரம் சோங்காக உள்ளது (வழ. சொ. அ.);. சோங்கு5 cōṅgu, பெ. (n.) நாரை (அக.நி.);; heron. தெ. கெங்க சோங்கு6 cōṅgu, பெ. (n.) 1. மரக்கலம்; boat, Vessel, junk. “சோங்கினை மேலிடுசரக்கொடுங் கவிழமுட்டும்” (திருவிளை. வலைவீ. 34);. 2. துமுக்கிக் கட்டை (யாழ்ப்.);; gunstock. க. சோக;தெ. சோகு சோங்கு7 cōṅgudal, 5 செ.கு.வி. (v.i) சரிவாதல் (நாஞ்.); to incline; to be oblique. |
சோங்குவெட்டு | சோங்குவெட்டு cōṅguveṭṭu, பெ. (n.) சரிவான வெட்டு (வின்.);; rough dressing of timber; slanting cut, as of rafters. [சோங்கு + வெட்டு – சோங்குவெட்டு] |
சோசகம் | சோசகம் cōcagam, பெ. (n.) மரப்பட்டை (யாழ்.அக.);; bark of trees. |
சோசக்காய் | சோசக்காய் cōcakkāy, பெ. (n.) தேங்காய்; coconut (சா.அக.);. |
சோசனம் | சோசனம் cōcaṉam, பெ. (n.) வெள்ளை வெங்காயம் (மலை.);; white onion. |
சோசம் | சோசம் cōcam, பெ. (n.) தென்னை; coconut palm; “பத்துப்பத் தடுக்கிய சோசக்காய் நீரை” (தைலவ. தைல. 134);. |
சோசாங்கினி | சோசாங்கினி cōcāṅgiṉi, பெ. (n.) துளசி; sacred basil. |
சோசாரம் | சோசாரம் cōcāram, பெ.(n.) கோசரம்1, 4 பார்கக;see {}. [Skt.{} → த.கோசாரம்.] |
சோசி | சோசி1 cōcittal, 4 செ.கு.வி. (v.i.) வற்றுதல் (வின்.);; to dry up, go dry. [சோ3 → சோசி] சோசி2 cōcittal, 4 செ.கு.வி. (v.i.) 1. துன்பப்படுதல் (வின்.);; to grieve, sorrow. 2. சோர்வடைதல்; to languish, faint. [சோ3 → சோசி] |
சோசியார்திருவடி | சோசியார்திருவடி cōciyārtiruvaḍi, பெ. (n.) அரசுப்பணியாளருள் ஒரு பிரிவினர் (S.I.I.V. 339);; an officer of the government. [சோசியார் + திருவடி.] |
சோச்சி | சோச்சி cōcci, பெ. (n.) சோறு (நாஞ்.);; boiled rice. [சோறு → சோச்சி] |
சோச்சிபாச்சி | சோச்சிபாச்சி cōccipācci, பெ. (n.) அன்னமும் பாலும்; boiled rice and milk. [சோறு → சோச்சி + பாச்சி] |
சோச்சியகன் | சோச்சியகன் cōcciyagaṉ, பெ. (n.) கீழ்மகன் (யாழ். அக.);; low-caste person. |
சோடசம் | சோடசம் sōṭasam, பெ. (n.) 1. மரப்பட்டை; bark of a tree. 2. நார்; fibre (சா.அக.);. [சோசகம் → சோடகம்] |
சோடசவாண்டுமூலி | சோடசவாண்டுமூலி sōṭasavāṇṭumūli, பெ. (n.) பசியெடுக்காதிருக்கச் சித்தர்கள் உண்ணும் ; to keep them off from hunger and thirst (சா.அக.);. |
சோடன் | சோடன் cōṭaṉ, பெ. (n.) கீழ்மகன் (சங்.அக.);; low-bred man. 2. சோம்பன்; idle fellow. 3. மூடன்; fool, idiot [சோடை → சோடன் = சோம்பேறி] |
சோடம் | சோடம்1 cōṭam, பெ. (n.) முலைக்கச்சு வகை (புதுவை.);; a kind of corset. சோடம்2 cōṭam, பெ. (n.) பொறுமை (யாழ்.அக.);; patience, endurance. |
சோடல் | சோடல் cōṭal, பெ. (n.) புடைவை (அக.நி.);; Saree. மறுவ. சீலை, சீரை, சேலை |
சோடாப்புல் | சோடாப்புல் cōṭāppul, பெ. (n.) ஒருவகை நீர்ப் புல்; a grass growing in water. |
சோடி | சோடி1 cōṭittal, 4 செ.கு.வி. (v.i.) வற்றுதல் (சங்.அக.);; to dry up. [சுடு → சூடு → சோடு → சோடி → சோடி-த்தல் = காய்தல், வற்றுதல்] சோடி2 cōṭittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. அணியழகு செய்தல் (யாழ்.அக.);; to adom, beautify, decorate, as a town, a street, a dwelling, a person. 2. கற்பித்தல் (உ.வ.);; to prepare carefully, concoct, arrange. அவன் பேரில் வழக்குச் சோடித்தார்கள். 3. புனைந்து பேசுதல் (வின்.);; to exaggerate, elaborate, as speech. க., பட. சோடிசு [சுவடி → சோடி. சுவடித்தல் = அழகு செய்தல், ஒப்பனை செய்தல்] சோடி3 cōṭi, பெ. (n.) 1. இணை, இரட்டை (இ.வ.);; couple, pair. 2. ஒப்பு; similarity, match. ம., க., பட. சோடி;{H.jidi} [சுவள் → சுவடி → சோடி.] சோடி4 cōṭi, பெ. (n.) உசிலம்பொடி (சங்.அக.);; powder of the dried leaves of black sirissa. |
சோடிகாமுத்திரை | சோடிகாமுத்திரை cōṭikāmuttirai, பெ. (n.) அன்றாட இறைவழிபாட்டின் போது கட்டை விரலால் பெருவிரலைத் தெறிக்கும் கட்டை விரலால் பெருவிரலைத் தெறிக்கும் முத்திரை (செந். X. 424);; a finger-pose during prayer, which consists in joining the tip of the thumb with the middle finger and snapping. |
சோடிசேர் | சோடிசேர்1 cōṭicērttal, 4 செ.குன்றாவி. (v.t.) பொலிகாளையோடு பெற்றத்தைப் புணர விடுதல்; to let a cow and a bull cover. [சோடி + சேர்-.] சோடிசேர்2 cōṭicērttal, 4 செ.கு.வி. (v.i.) ஒரு மாட்டிற்கு இணை சேர்த்தல்; to select a bull as match for another. [சோடி + சேர்-.] |
சோடினை | சோடினை cōṭiṉai, பெ. (n.) 1. அழகு படுத்துகை (வின்.);; adorning decoration; attire for a play. 2. ஒப்பனையால் தோன்றும் அழகு; beauty due to decoration. ‘உடைமை சோடினையாப் பூட்டி’ (விறலிவிடு. 375);. 3. ஏறிட்டுக் கற்பிக்கை (இ.வ.);; concoction, as of a false case. [சுவடி → சோடி → சோடினை. சுவடி = ஒப்பனை செய்கை] |
சோடினைகட்டு-தல் | சோடினைகட்டு-தல் cōṭiṉaigaṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) நாடகம் நடித்தற்கு வேண்டிய உடையுடுத்தல் (யாழ்ப்.);; to attire oneself for a play. [சோடினை + கட்டு-.] |
சோடினைக்காரன் | சோடினைக்காரன் cōṭiṉaikkāraṉ, பெ. (n.) 1. நாடகம் நடிப்போர்க்கான உடைகளை ஆயத்தம் செய்பவன் (வின்.);; maker of costumes for actors in a play; one who dresses actors for the stage. 2. கற்பனை செய்பவன் (இ.வ.);; one who concocts or fabricates. [சோடினை + காரன்] |
சோடிபார்-த்தல் | சோடிபார்-த்தல் cōṭipārttal, 4 செ.கு.வி. (v.i.) சோடிசேர்1-த்தல் பார்க்க;see {di-sன்.} [சோடி3 + பார்-.] |
சோடியாட்டம் | சோடியாட்டம் cōṭiyāṭṭam, பெ.(n.) பல்லாங்குழியில் இருவர் ஆடும் ஆட்ட வகை; a doubles play of pallankuli game. [சுவடி+சோடி] |
சோடு | சோடு cōṭu, பெ.(n.) வாயகன்ற பெரிய ஏனம்; big vessel. [தோடு-சோடு] சோடு1 cōṭu, பெ. (n.) 1. காற்கவசம்; a kind of legging for warriors. “காலார் சோடற்ற கழற்கால்” (களவழி, 9);. 2. கவசம்; coat of mail. “தலைச் சோடு வஜ்ரச் சோடிட்டு” (கூளப்ப.43);. 3. நாலுபட்டணம்படி கொண்ட அளவு (இ.வ.);; a measure of capacity equal to four Madras measures. 4. 360 நெற்கனமுள்ள ஓர் எடை; weight equal to 360 grains of paddy. 5. திரட்சி; rotundity. இந்தச்சோடு (உ.வ.);. [சுள் → (சொள்); → சுவடு → சோடு.] சோடு2 cōṭu, பெ. (n.) 1. இணை, இரட்டை; pair, cuple, brace, set. “சோடுற்றத் தாமரை மாமுகை போல’ (திருப்பு. 806);. 2. பறவை முதலியவற்றின் ஆண் பெண்ணிரட்டைகளுள் ஒன்று; mate, partner. “சோடுகாணாத பேடு” (குமரேச.சத. 29);. 3. சுவடு (உ.வ.);; trace, mark, foot-print. 4. மிதியடி வகை; pair of shoes, slippers. 5. ஒப்பு; equal. “அவளுக்கவள் சோடு” (இராமநா. ஆரணி. 15);. 6. ஓரிணை வரிசை(வின்.);; gradual increase or decrease of things in a series. ம., க., பட. சோடு;{H.jod} [சுவள் → சுவடு → சோடு. சுவடு = காலடித் தடமாகும் இதுவே காலணிக்கும் பெயர் ஆயிற்று.] |
சோடுபறிபூண்டு | சோடுபறிபூண்டு cōṭubaṟibūṇṭu, பெ. (n.) பேய்ப்புடலை; devil’s gourd (சா.அக.);. [சோடுபறி + பூண்டு] |
சோடுபார்-த்தல் | சோடுபார்-த்தல் cōṭupārttal, 4 செ.கு.வி. (v.i.) இருவர் அல்லது இரண்டு பொருள்கள் தம்முள் நிகரொத்துள்ளமையைக் கவனித்தல்; to see whether two persons or things are well matched. சேர்க்கும்போது சோடுபார்த்துச் சேர்க்க வேண்டும் (இ.வ.);. [சோடு2 + பார்-.] |
சோடுபிரிவு | சோடுபிரிவு cōṭubirivu, பெ. (n.) 1. ஆணும் பெண்ணும் பிரிதல்; separation of the couple as that of bird. 2. கணவனும் மனைவியும் சேர்ந்து வாழாமல் செய்யும் மந்திரம்; a magic for separation of wife and husband (சா.அக.);. [சோடு2 + பிரிவு] |
சோடுபெயர்ந்தகாய் | சோடுபெயர்ந்தகாய் cōṭubeyarndakāy, பெ. (n.) முதலில் இணையாக வைக்கப்பட்டும் பின்னர்த் தாயம் வேண்டியவாறு விழாமையால் தனியாகப் பிரிக்கப்பட்டதுமான காய் (உ.வ.);; piece in a game of draughts moving in pair but separated owing to the unlucky fall of the dice. [சோடு + பெயர்த்தகாய்] |
சோடேந்தல் | சோடேந்தல் cōṭēndal, பெ.(n.) முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in MudukulathurTaluk. [சோழன்(சோமன்);+ ஏந்தல் (ஏரி);] |
சோடை | சோடை1 cōṭai, பெ. (n.) 1. வறட்சி (சங்.அக.);; drought, heat, dryness. 2. காய்த்து ஓய்ந்த மரம் (யாழ்ப்.);; tree which has ceased to yield, withered tree. 3. சோர்வு (உ.வ.);; faintness, languor. 4. அறிவிலி; person of imperfect or weak understanding, booby. “சோடைகள் நன்னெறி சொல்லார்” (தேவா. 220, 10);. 5. செயற்கேடு (வின்.);; failure, as in the accomplishment of an object. 6. ஒருவக நோய்; a kind of disease. “ஒதிய சோடையுட னஞ்சுமாம் (சினேந். 229);. 7. வாழை நோய் வகை (இ.வ.);; a blight affecting the plantain. Skt. {§ösa} [சுடு → சூடு → சோடு → சோடை =வறட்சி, சோர்வு வடவர் சுஷ் என்பதை மூலமாகக் காட்டுவர். அது சுள் என்பதன் திரிபு.] சோடை2 cōṭai, பெ. (n.) 1. கோடைக் காலத்தில் வயல் வழியே செல்லும் வண்டிப்பாதை; cart-track lying through a field in summer. வயல் வழியாகச் சோடை போகிறதா? (இ.வ.);. 2. பாதையில் வண்டி சென்ற தடம் (இ.வ.);; rut in a road. 3. சுவடு (இ.வ.);; trace. [சோடு2 → சோடை.] சோடை3 cōṭai, பெ. (n.) 1. விருப்பம்; eager desire. “சமர்பரி சோடை கொண்டனன்” (விநாயகபு. 74:64);. 2. மகிழ்ச்சி; delight, ecstasy. “மன்றலின் சோடையிற் பயின்ற நான்” (விநாயகபு. 80:119);. 3. தொழில்; duty “உறமுறை செலுத்துஞ் சோடை யினீங்கி” (விநாயகபு. 47:2);. [சோட்டை → சோடை] சோடை4 cōṭai, பெ. (n.) 1. சொத்தை; that which is withered, blighted or decayed. 2. பயனற்றவ-ன்-ள்; useless, good-for-nothing person. 3. உடல் வலியற்றவை-ன்-ள்; weak. emaciated person. 4. உள்ளீடு இல்லாமை; hollow. அவன் ஒன்றும் சோடையில்லை (உ.வ.); [சொள்ளை → சொட்டை → சோடை] நிலக்கடலையுள் பருப்பு இல்லாமல் வெற்றுக் கூடாக இருப்பது சோடை எனப்படும். அறிவாற்றல் தேர்ச்சி இன்மையும் சோடை யாகும் (வழ. சொ. அக.); |
சோடைபற்று-தல் | சோடைபற்று-தல் cōṭaibaṟṟudal, 5 செ.கு.வி. (v.i.) நறுங்கிப் பலனற்றுப் போதல் (யாழ்ப்.);; 10 become stunned, unfruitful. [சோடை4 + பற்று-.] |
சோடையன் | சோடையன் cōṭaiyaṉ, பெ. (n.) பலவீனன் (வின்.);; weak, sickly person. [சோடை → சோடையன்.] |
சோட்டத்தடி | சோட்டத்தடி cōḍḍattaḍi, பெ. (n.) 1. திரண்ட தடி; club, rod. 2. சிறுகழி (வின்.);; small stick, baton with a curved end, walking stick. H.,U, {châţţa} [சுள் → (சொள்); → சோடு → சோட்டா + தடி.] |
சோட்டா | சோட்டா cōṭṭā, பெ. (n.) சோட்டாத்தடி. (சங். அக.); பார்க்க;see {Söttà-t-tagh.} |
சோட்டுப்பப்பளி | சோட்டுப்பப்பளி cōṭṭuppappaḷi, பெ. (n.) சேலைவகை (உ.வ.);; a kind of saree. |
சோட்டை | சோட்டை cōṭṭai, பெ. (n.) 1. பேராவல்; eagerness desire, longing, yearning. 2. அன்பு; fondness, devation. [ஏட்டை → சோட்டை] |
சோட்டைப்பண்டம் | சோட்டைப்பண்டம் cōṭṭaippaṇṭam, பெ. (n.) ஆசையுணவு (யாழ்ப்.);; favourite food. [சோட்டை + பண்டம்] |
சோட்டையன் | சோட்டையன் cōṭṭaiyaṉ, பெ. (n.) பயனற்ற ஆள் (நெல்லை);; uscless fellow. [சொட்டை → சோட்டை → சோட்டையன்] |
சோணகத்திருக்கை | சோணகத்திருக்கை cōṇagattiruggai, பெ. (n.) முதுகில் முள் வாய்ந்த ஒரு வகைக் கடல் திருக்கை மீன்; a species of thorn back sea fish. |
சோணகவாளை | சோணகவாளை cōṇagavāḷai, பெ. (n.) வாளை மீன் வகை (M.M.);; a kind of {vaļai fish.} |
சோணகாரி | சோணகாரி cōṇakāri, பெ. (n.) பட்ட இடத்தை சிவப்பாக்கி எரிச்சலை உண்டாக்கும் மருந்து; rubefacient. [சோணம் = சிவப்பு) காரி] |
சோணகிரி | சோணகிரி cōṇagiri, பெ. (n.) திருவண்ணாமலை;{Tiruvannamalai} hill in South Arcot District, sacred to {Śivan,} “சோணகிரி வித்தகா” (பட்டினத். தாயார்தகன. 9);. [சோண்ம் + கிரி] சோணம் = தீ;சிவப்பு. இதனால் தான் திருவண்ணாலையில் சிறப்பு நாளில் தீ வழிபாடு, தீப வழிபாடு நடைபெறுகிறது. Skt. Giri -→ த. கிரி |
சோணங்கி | சோணங்கி cōṇaṅgi, பெ. (n.) 1. மெலிந்த-வன்-வள்-து (இ.வ.);; lean person or animal. 2. சோர்வற்றவன்; one who get tired. 3. சோணங்கிநாய் (வின்.); பார்க்க;see {straigiліу} [சுணங்கு → சுணங்கி → சோணங்கி. சுணங்கு = மெலிவு] [சுள் → சொள் → (சோள்);→சோணங்கி.] |
சோணங்கிநாய் | சோணங்கிநாய் cōṇaṅgināy, பெ. (n.) நாய் வகை (வின்.);; a breed of dog. [சோணங்கி + நாய்] |
சோணசைலம் | சோணசைலம் sōṇasailam, பெ. (n.) சோணகிரி பார்க்க;see {stra-giri.} சோண சைல மாலை. மறுவ. திருவண்ணாமலை [சோணம் + அசைலம்] Skt. {Saila} → த. சைலம் |
சோணப்பூ | சோணப்பூ cōṇappū, பெ. (n.) செம்பருத்திப்பூ; red cotton. “வாசப்பளிதமுஞ் சோணப்பூவும்” (பெருங். மகத. 17:133);. [சோணம் (செந்நிறம்); + பூ] சோணம் = சிவப்பு. செம்பருத்திப்பூ செந்நிறமாய் இருப்பதால் சோணப்பூ எனப்பட்டது. |
சோணமலை | சோணமலை cōṇamalai, பெ. (n.) அருண மலை;{Arunamalai.} [சோணம்1 மலை = திருவண்ணாமலை] |
சோணம் | சோணம்1 cōṇam, பெ. (n.) சிவப்பு (பிங்.);; red colour, crimson. Crimson. [சுல் (சிவத்தல்); → சுள் → (சொள்); → சோண் → சோணம்.] சோணம்2 cōṇam, பெ. (n.) சோணை2 பார்க்க;see {stiaar.} “சிலம்பு சூழுங்காற் சோனமாந் தெரிவையை” (கம்பரா. அகலிகை. 1);. [சோணம்1 → சோணம்2.] சோணம்3 cōṇam, பெ. (n.) பொன்; gold. “சோனந்தரு கும்பங்கிளர் துணைமாளிகை” (திருவாத. பு. திருவம்பல. 51);. Skt. {svarna; } H.U. {sönå} [சோணம்1 → சோணம்3.] |
சோணாகம் | சோணாகம் soligam, பெ. (n.) பெருவாகை (மலை.);; siris. |
சோணாசலங்கம்பு | சோணாசலங்கம்பு cōṇācalaṅgambu, பெ. (n.) கம்புப் பயிர் வகை (G.sm. D.I.i, 219);; a variety of kambu. |
சோணாடு | சோணாடு cōṇāṭu, பெ. (n.) சோழ நாடு; the Chola country. “குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு” (பட்டினப் 28);. [சோழன் + நாடு] |
சோணாலு | சோணாலு cōṇālu, பெ. (n.) தாயம் முதலிய விளையாட்டில் விழும் ஒரு நற்குறி (விருத்தம்); (உ.வ.);; a lucky fall of dice or cowries, as in the game of {tãyam,} dist. fr.{pāņālu.} |
சோணி | சோணி cōṇi, பெ. (n.) பலகறை (இ.வ.);; cowrie. [சோழி → சோணி] |
சோணேசன் | சோணேசன் cōṇēcaṉ, பெ. (n.) திருவண்ணாமலையிற் கோயில் கொண்ட சிவன்;{Sivan,} as the Lord of {Sônācalam or Tiruvannāmalai.} “காட்டுமோ சோணேசன் கஞ்சமலர்த் தாளிணையை” (அருணகிரியந். 25);. [சோணம்1 → சோணேசன்] |
சோணை | சோணை1 cōṇai, பெ. (n.) 1. காதினடித்தண்டு (யாழ்ப்.);; lobe of the ear, thick ear-lobes. “சோணையழகியார் (திவ். பெரியதி. 10.8:1,வியா);. 2. மண் வெட்டியிற் காம்பு சொருகுமடிப் பகுதி (வின்.);; extremities of the sides of a hoe near the haft. 3. புகையிலை முதலியவற்றின் காம்பினடி (யாழ்த.அக.);; base of a leaf or leafstalk which grows from the branch without a stem, as of tobacco. [சுணை → சோணை.] சோணை2 cōṇai, பெ. (n.) பாடலிபுத்திரத்துக் கருகில் கங்கையொடு கலக்கும் ஒரு ஆறு (பிங்.);; the river {Sónai} which mingle with the Ganges near {Padaliputra.} [சோணம்2 → சோணை] சோணை3 cōṇai, பெ. (n.) 1. சிவப்பு; red. 2. சோனகிரி (யாழ்.அக.); பார்க்க;see {&iagiri} சோணை4 cōṇai, பெ. (n.) முக்கோல் எனப்படும் இருபத்திரண்டாவது நாண்மீன் (திருவோணம்); (சூடா.);; the 22nd {naksatra.} சோணை5 cōṇai, பெ. (n.) சோனாலு (இ.வ.); பார்க்க;see {šõnalu.} [சோனை → சோணை] சோணை6 cōṇai, பெ. (n.) சோணை3 பார்க்க;see {šõnai.} [சோணை → சோணை] சோணை1 cōṇai, பெ. (n.) அணிகலன் அணிவதற்காகக் காது மற்றும் மூக்கில் இட்ட துளை தூர்ந்து போகாமலிருக்க இடப்படும் சிறு குச்சி; small stick which prevents the hole provided in the ear or nose from closing. [சுணை → சோணை. சுணை = முள், குச்சி] |
சோணைகழி-த்தல் | சோணைகழி-த்தல் cōṇaigaḻittal, செ.கு.வி. (v.i.) கரும்பின் உலர்ந்த தழைகளை நீக்குகை; to remove the dry leaves from Sugarcane. [சோனை+சுழி] |
சோணைக்கட்டு | சோணைக்கட்டு cōṇaikkaṭṭu, பெ. (n.) கழிக்கப்பட்ட கரும்பின் சோணைகளைச் சேர்த்துக் கட்டிய கட்டு; a kind of knot especially tied around sugarcane leaves. [சோனை+கட்டு] |
சோணைக்காது | சோணைக்காது cōṇaikkātu, பெ. (n.) அடிபெருத்த காது (யாழ்ப்.);; large-lobed ear. [சோணை1 + காது] |
சோணையறு-த்தல் | சோணையறு-த்தல் cōṇaiyaṟuttal, செ.கு.வி. (v.i.) கேழ்வரகுப்பயிரில் தாள் நீளமாதலைக் குறைக்க அறுத்தல்; to cut the ragi leaves to control the crop growth. [சோணை+அறு] |
சோதிகம் | சோதிகம் cōtigam, பெ. (n.) வாலுளுவை; spindle tree. |
சோதிகா | சோதிகா cōtikā, பெ. (n.) மகிழம்பூ; West Indian medlar (சா.அக.);. |
சோத்தாங்கை | சோத்தாங்கை cōttāṅgai, பெ.(n.) உண்ணும் கை (வலது கை);; right hand. [சோற்று+ஆம்+கை] |
சோத்தாள் | சோத்தாள் cōttāḷ, பெ. (n.) வேலை செய்யாத சோம்பேறி (உ.வ.);; lazy, indolent person, fit for eating only. [சோறு + ஆள்] |
சோத்துப்பக்காளி | சோத்துப்பக்காளி cōttuppakkāḷi, பெ. (n.) சோற்றுப்பக்காளி பார்க்க;see {siruppakki.} |
சோத்துப்பட்டை | சோத்துப்பட்டை cōttuppaṭṭai, பெ.(n.) மூங்கிலின் உட்பகுதிச் சோறு ; inner pulp of bamboo. [சோறு+பட்டை] |
சோத்துப்புட்டி | சோத்துப்புட்டி cōttuppuṭṭi, பெ. (n.) மீனவர் கட்டுச்சோறு எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் கோரையினால் ஆன பெட்டி; small box made of sedge to convey packed meals. [சோறு → சோத்து + புட்டி, பெட்டி → புட்டி] |
சோத்துவெள்ளி | சோத்துவெள்ளி cōttuveḷḷi, பெ. (n.) மீனவர் இரவில் உணவு உண்ணுவதற்கான நேரம் கணிக்கப் பயன்படும் வெள்ளி விண்மீன்; the silverstar, which is seen to determine the time for night meals by fishermen in sea. [சோறு → சோற்று → சோத்து + வெள்ளி] |
சோநிசி | சோநிசி sōnisi, பெ. (n.) குகை (சங். அக.);; cave, cavern. |
சோந்தை | சோந்தை1 cōndai, பெ. (n.) 1. பற்று; interest, concern, connection. எனக்கு அதிலே சோந்தையில்லை (வின்.);. 2. குடியானவனுக்குத் தன்மீது பற்று அதிகப்படுமாறு நிலவுடைமையாளர் முன்னதாகக் கொடுத்து உதவும் நெல் முதலியன (இ.வ.);; advance in cash or kind given by a land-owner to his cultivating tenant in order that the latter may remain continually attached to him. [சொந்தம் → சோந்தை] சோந்தை 2 cōndai, பெ. (n.) இடையூறு; impediment, difficulty. அவன் சோந்தை பண்ணுகிறான் (வின்.);. |
சோந்தைக்காரன் | சோந்தைக்காரன் cōndaikkāraṉ, பெ. (n.) பற்றுள்ளவன் (யாழ்ப்.);; interested person. [சோந்தை + காரன்.] |
சோனகத்திருக்கை | சோனகத்திருக்கை cōṉagattiruggai, பெ. (n.) மஞ்சட் பழுப்பு நிறமுள்ளதும் 13 அடி நீளமும் 5அடி குறுக்கும் வளரக்கூடியதுமான திருக்கை மீன் வகை; sting ray yellowish brown, attaining 13ft. in length, 5 ft. across the disc. |
சோனகப்புல் | சோனகப்புல் cōṉagappul, பெ. (n.) திராய்ப்புல்; a kind of straw plant. ம. சோனகப்புல்லு |
சோனகப்பூ | சோனகப்பூ cōṉagappū, பெ. (n.) நாகப்பூ; scarlet flowered plant. |
சோனகம் | சோனகம் cōṉagam, பெ. (n.) தென்கிழக்குக் காற்று; wind from southeast. [சோனம் → சோனகம்] |
சோனகவாளை | சோனகவாளை cōṉagavāḷai, பெ. (n.) ஒரு வகை வெண்ணிறமுள்ளதும் 26 விரலம் வரை வளரக்கூடியதுமான வாளை மீன்; sea-fish, burnished silvery, attaining 26 in. in length. |
சோனம் | சோனம் cōṉam, பெ. (n.) முகில்; cloud. “சோனந்தரு குழலார்” (பதினொ. ஆளு மும். 12);. க. சோனெ;தெ. சோன [சோனை → சோனம்.] |
சோனா | சோனா cōṉā, பெ.(n.) விடாப்பெரு மழை; incecent an. “சோணா மேகம் பொழிவது போல்'(வி.பா:45:135); பட சோனெ [சோனை-சோனா] |
சோனாகம் | சோனாகம் cōṉākam, பெ. (n.) பெருவாகை; common sirissa. |
சோனாங்கெளுத்தி | சோனாங்கெளுத்தி cōṉāṅgeḷutti, பெ.(n.) கெளுத்தி மீன் வகையுள் ஒன்று; long whiskerred cat fish [சோனை+ஆம்+கெளுத்தி] [P] |
சோனாமாரி | சோனாமாரி cōṉāmāri, பெ. (n.) விடாப் பெருமழை; incessant downpour of rain. சோனா மாரியாய்ச் சொரிகிறதே (உ.வ.); [சோனைமாரி → சோனாமாரி] |
சோனாமேகம் | சோனாமேகம் cōṉāmēkam, பெ. (n.) விடாமழை பொழியும் முகில்; clouds incessantly pouring rain. “சோனாமேகம் பொழிவது போல்” (பாரத. பதினேழாம் 135);. [சோனைமேகம் → சோனாவாரி] |
சோனாவாரி | சோனாவாரி cōṉāvāri, பெ. (n.) [சோனாமாரி → சோனாவாரி] |
சோனி | சோனி cōṉi, பெ. (n.) 1. வளர்ச்சியற்றது; that which is stunted. 2. மெலிந்தவன்-ள்; thin or lean person. ஏன் இப்படிச் சோனியாக இருக்கிறாய். [சோர் → (சோ); → சோனம்.] |
சோனிக்கரைச்சல் | சோனிக்கரைச்சல் cōṉikkaraiccal, பெ. (n.) தெற்கிலிருந்து வடக்காய் செல்லும் கடல் நீரோட்டம்; an undercurrent in the sea running from south to north. [சோனம் → சோனி + கரைச்சல்] |
சோனிக்கரையெடுப்பு | சோனிக்கரையெடுப்பு cōṉikkaraiyeḍuppu, பெ. (n.) தென்கிழக்கிலிருந்து தென் மேற்காய் செல்லும் கடல் நீரோட்டம்; an undercurrent in the sea running from southeast to southwest. [சோனி + கரையெடுப்பு] |
சோனிசி | சோனிசி sōṉisi, பெ. (n.) குகை (யாழ். அக.);; cave. [சோனி → சோனிசி] |
சோனிமேமுறி | சோனிமேமுறி cōṉimēmuṟi, பெ. (n.) தென்மேற்கிலிருந்து வடகிழக்காய் செல்லும் கடல் நீரோட்டம்; anundercurrent in the sea running from southwest to southeast. [சோனி + மேமுறி] |
சோனிமேமுறி வெள்ளம் | சோனிமேமுறி வெள்ளம் cōṉimēmuṟiveḷḷam, பெ. (n.) மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு திசை நோக்கி ஓடும் கடல் நீரோட்டம்(மீனவ.);; an undercurrentin the sea running from west to north east. [சோனி + மேல் + முறி + வெள்ளம்] |
சோனிவெள்ளம் | சோனிவெள்ளம் cōṉiveḷḷam, பெ. (n.) தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி ஒடும் கடல் நீரோட்டம் (மீனவ.);; an undercurrent in the sea running from south to north. [சோனி + வெள்ளம்] |
சோனை | சோனை1 cōṉai, பெ. (n.) 1. கார்முகில்; dark, moisture-laden clouds. “சோனை வார் குழலினார்” (கம்பரா. நீர்விளை. 14);. 2. சோனாமாரி (பிங்.); பார்க்க;see {ini-mil.} “மேகஞ்சோனைபட” (கம்பரா. குகப். 20);. 3. வானினின்று நீருற்றுச் சொரிவது போன்ற விடாப் பெரும் பெயல்; pouring rain, rainfalling in torrents. 4. மலையடிவார விடா மழைச்சாரல்; constant drizzle from clouds gathering on hill-tops. க. சோனெ;தெ. சோன [சுனை → (சொனை); → சோனை. சுல் (துணைத்தல்); → (சுன்); → சுனை = நீரூற்று] சோனை2 cōṉai, பெ. (n.) முக்கோல் (திருவோணம்); விண்மீன் (பிங்.); பார்க்க;see {tiruvõņam,} the 22nd {nakşatra,} சோனை3 cōṉai, பெ. (n.) கைப்பிடிச் சுவர் (இ.வ.);; parapet wall. [சோ → சோனை. சோ = மதில்.] சோனை cōṉai, பெ. (n.) சோழ நாட்டுப்பெண்; a woman belonging to chola country. “நாயகி நற்சோணை. சோழன். (ஆ.பா.); – சோணை.(பெ.பா.);. |
சோனைகட்டுதல் | சோனைகட்டுதல் cōṉaigaṭṭudal, பெ. (n.) தூரத்தில் மழை பெய்யுங் குறிப்பாக ஓரிடத்தில் மேகம் மூடியிருக்கை (உ.வ.);; darkening with moisture-laden clouds, as an indication of heavy shower at distance. [சோனை1 + கட்டுதல்] |
சோனைத்தூற்றல் | சோனைத்தூற்றல் cōṉaittūṟṟal, பெ. (n.) மழை தூற்றல் (உ.வ.);; drizzle. [சோனை1 + தூறல் →) தூற்றல்] |
சோனைப்புல் | சோனைப்புல் cōṉaippul, பெ. (n.) புல் வகை; Guinea grass. |
சோனைமழை | சோனைமழை cōṉaimaḻai, பெ. (n.) 1. பெருமழை; heavy rain. 2. விடா மழை; continuous rain. பட சோனெமே [சோனை1 + மழை] |
சோனைமாரி | சோனைமாரி cōṉaimāri, பெ. (n.) சோனாமாரி பார்க்க;see {somi-mari.} “சோனைமாரியிற் சொரிந்தனன்” (கம்பரா. பிரமாத்திர. 59);. [சோனை1 + மாரி] |
சோனைமேகம் | சோனைமேகம் cōṉaimēkam, பெ. (n.) சோனாமேகம் பார்க்க;see {Śānā-mégam.} “சொரிந்தது சோனைமேகம்” (பாரத. சம்பவ. 79);. [சோனை + மேகம்] . செள |
சோபக்கினி | சோபக்கினி cōpakkiṉi, பெ. (n.) நிலவேம்பு; ground neem. |
சோபநாசனி | சோபநாசனி cōpanācaṉi, பெ. (n.) கழற்கொடி; bonduc creeper. |
சோபம் | சோபம்1 cōpam, பெ. (n.) பத்துக்கோடி(வின்.);; a large number ten thousand trillions. சோபம்2 cōpam, பெ. (n.) 1. கள்; toddy. 2. மயக்கம்; fainting. 3. களைப்பு; fatigue. 4. சோம்பல்; drowsiness. 5. ஒளி; lustre. 6. தளர்ச்சி; languor. 7. அரத்தத்தைக் குறைக்கும் நோய்வகை; disease causing bloodlessness-anaemia (சா.அக.);. [சோபலம் → சோபம்] |
சோபலம் | சோபலம்1 cōpalam, பெ. (n.) சோம்பல் (சங்.அக.);; laziness, sluggishness. [சோம்பல் ? சோம்பலம் → சோபலம்] |
சோபலாங்கி | சோபலாங்கி cōpalāṅgi, பெ. (n.) சோப்பளாங்கி (வின்.); பார்க்க;see {ipaligi.} [சோப்பளாங்கி → சோபலாங்கி] |
சோபாஞ்சனம் | சோபாஞ்சனம் cōpāñjaṉam, பெ. (n.) முருங்கை; drumstick tree. |
சோபானை | சோபானை cōpāṉai, பெ.(n.) வெற்றுக் குழியாகத் தோன்றும் நிலை; appearance of an empty pit. [சூப்பல்-சோபானை] |
சோபாலிகை | சோபாலிகை cōpāligai, பெ. (n.) 1. குடை Globe, sol–# Gauq-; an unknown plant. 2. oil toll; hare-leaf plant. “onsorsfavo சோபாலிகை” திணைமாலை 2 3. சுவாலை; fire flame. |
சோப்பறுதி | சோப்பறுதி cōppaṟudi, பெ. (n.) சோர்வு (வின்.);; languor, lassitude, fatigue, prostration. [சோம்பு → சோப்பு + அறுதி] |
சோப்பளாங்கி | சோப்பளாங்கி cōppaḷāṅgi, பெ. (n.) 1. பயனற்றவன்; lazy, worthless fellow. 2. வலுவற்றவன் (இ.வ.);; weak person. க. சோப . [சோம்பு → சோப்பு → சோப்பளாங்கி] |
சோப்பி | சோப்பி cōppi, பெ. (n.) ஈயோட்டி (யாழ்ப்.);; flapper. |
சோப்பு | சோப்பு1 cōppudal, 5 செ.குன்றாவி. (v.t.) சோர்வுறச் செய்தல் (யாழ்ப்.);; to cause to droop or languish. க. சோப்பிசு;தெ. சோபு சோப்பு2 cōppudal, 5 செ.குன்றாவி. (v.t.) அடித்தல் (வின்.);; tobeat, flog, give a drubbing. சோப்பு3 cōppu, பெ. (n.) அடி; blow. “நந்தன் மனைவி கடைதாம்பாற் சோப்புண்டு” (திவ். பெரியாழ். 2. 1:5);. [சோப்பு2 → சோப்பு1] |
சோமகுண்டம் | சோமகுண்டம் cōmaguṇṭam, பெ. (n.) காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள ஒரு நன்னீர்க் குளம் (புண்ணிய தீர்த்தம்);; a sacred tank in {Käviri-p-pum-pattinam.} |
சோமசபன்னி | சோமசபன்னி sōmasabaṉṉi, பெ. (n.) குங்கிலியம்; Indian damer resin. |
சோமசுந்தரம் | சோமசுந்தரம் sōmasundaram, பெ. (n.) பண்வகை (சங். அக.);; a specific melody type. |
சோமதனம் | சோமதனம் cōmadaṉam, பெ. (n.) செம்மரம் (L.);; Coromandel red-wood. தெ. சோமித [சே = சிவப்பு. சே → சோ → சோமதனம்] |
சோமநாதி | சோமநாதி cōmanāti, பெ. (n.) ஒருவகைப் பெருங்காயம் (வின்.);; a kind of asafoetida. ம. சோமநாதிகாயம்;து. சோமநாதிகாயி |
சோமம் | சோமம் cōmam, பெ. (n.) 1. கள் (வின்.);; toddy. 2. கொடிக்கள்ளி; moon creeper. |
சோமலதை | சோமலதை cōmaladai, பெ. (n.) கொடிக்கள்ளி; creeping milk hedge. |
சோமவலக்கம் | சோமவலக்கம் cōmavalakkam, பெ. (n.) பெருங்குமிழ்; Cashmere tree. |
சோமவல்லரி | சோமவல்லரி cōmavallari, பெ. (n.) பொன்னாங் காணி (மலை.);; a plant. |
சோமவல்லி | சோமவல்லி cōmavalli, பெ. (n.) சீந்தில் (மலை.);; gulancha. |
சோமவுலுக்கம் | சோமவுலுக்கம் cōmavulukkam, பெ. (n.) தேக்கு (மூ.அ.);; teak. |
சோமாக பாடி | சோமாக பாடி cōmākapāṭi, பெ.(n.) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Kanchipuram. [சோ(கோட்டை);+மாசி+பாடி] |
சோமாக்கியம் | சோமாக்கியம் cōmākkiyam, பெ. (n.) 1. செந்தாமரை; red lotus. 2. செவ்வல்லி; red Indian water-lily. |
சோமாசி, | சோமாசி, cōmāci, பெ.(n.) பரமக்குடி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Paramagudi Taluk. [சோ(எயில் கோட்டை);+ மாசி] |
சோமாறி | சோமாறி1 cōmāṟi, பெ. (n.) சோம்பேறி; idle fellow, sluggard. ம. சோமாரி; க, து.சோமாரி;தெ. சோமரி [சோமாறு → சோமாறி] சோமாறி2 cōmāṟi, பெ. (n.) சமையற்காரன் (இ.வ.);; cook. [சோமாறு → சோமாறி] சோமாறி3 cōmāṟi, பெ. (n.) எனாதியர் வகை (E.T.vi, 392);; a subsect of {Enădicaste.} |
சோமாறித்தனம் | சோமாறித்தனம் cōmāṟittaṉam, பெ. (n.) சோம்பல் (உ.வ.);; slothfulness, indolence, idleness. மறுவ சோம்பேறித்தனம் [சோமாறி + தனம்] |
சோமாறு | சோமாறு1 cōmāṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. ஒரு ஏனத்திலிருப்பதை மற்றொன்றிற் பகிர்ந்து வைத்தல் (இ.வ.);; to transfer part of the contents of one vessel to another. 2. திருடுதல் (யாழ்ப்.);; to steal, pilfer; to exchange stealthily. 3. பிறர் உடை நகை முதலியவற்ற இரவல் வாங்கி மனம்போன போக்கில் பயன்படுத்துதல் (யாழ்ப்.);; to use indiscriminately, as another’s utensils, jewels, cloths etc. 4. ஒரே ஏனத்தைப் (பாத்திரத்தைப்); பல வேலைகளுக்கும் பயன்படுத்துதல் (யாழ்ப்.);; to use the same, utensil for various purposes. 5. ஒருத்தியைப் பலர் புணர்தல் (யாழ்ப்.);; to cohabit with a woman in common with others. 6. பண்ட மாற்றுதல் (யாழ்ப்.);; to exchange goods and articles. [சொம் + மாறு-.] சோமாறு2 cōmāṟudal, 5 செ.கு.வி. (v.i.) 1. சோம்புதல்; to be lazy. 2. பின்வாங்குதல்; to draw back, shirk, backsdilde. அவன் வேலையைச் செய்யச் சோமாறுகிறான். க. சோமாரி [சோம்பு + சோமாறு → சோமாறு-தல்] |
சோம்பன் | சோம்பன் cōmbaṉ, பெ. (n.) சோம்பேறி1 (சங். அக.); பார்க்க;see {šõmbëri.} [சோம்பு → சோம்பன்] |
சோம்பன், | சோம்பன், cōmbaṉ, பெ.(n.) வண்டின் ஒருவகை; a beetle. [சோம்பு-சோம்பின்] |
சோம்பரக்கு | சோம்பரக்கு cōmbarakku, பெ. (n.) சோம்புத்தீநீர் பார்க்க;see {šõmbuttīmīr} |
சோம்பரை | சோம்பரை cōmbarai, பெ. (n.) சோம்பல்; laziness, drowsiness. [சோம்பல் → சோம்பர் → சோம்பரை] |
சோம்பறை | சோம்பறை cōmbaṟai, பெ. (n.) 1. சோம்பல்,1 பார்க்க;see {šõmbal.} 2. மூரி நிமிர்கை; stretching oneself in idleness. 3. சோம்பேறி1 பார்க்க;see {Sömbéri,} [சோம்பல் → சோம்பறை] |
சோம்பற்காரன் | சோம்பற்காரன் cōmbaṟkāraṉ, பெ. (n.) 1. சோம்பேறி1 (வின்.); பார்க்க;see {inbri’} 2. சின்னம்மை நோயால் வருந்துவோன் (யாழ்ப்.);; person suffering from small pox. [சோம்பல் + காரன்] |
சோம்பற்சாவடி | சோம்பற்சாவடி cōmbaṟcāvaḍi, பெ. (n.) 1. சோம்பேறி1 பார்க்க;see {šõmbēti”.} 2. சோம்பேறிகன் கூடுமிடம்; place where idlers meet. [சோம்பல் + சாவடி] |
சோம்பற்றழும்பு | சோம்பற்றழும்பு cōmbaṟṟaḻumbu, பெ. (n.) அம்மைத் தழும்பு; scar or pitted marks of small poх. |
சோம்பலம் | சோம்பலம்2 cōmbalam, பெ. (n.) சோம்பு3 (சங்.அக.); பார்க்க;uměča: see {Sömbu’.} சோம்பலம் cōmbalam, பெ. (n.) சேங்கொட்டை (மலை.);; marking-nut tree. [சே → சோ → சோம்பலம்] |
சோம்பலம்பலம் | சோம்பலம்பலம் cōmbalambalam, பெ. (n.) சோம்பற்சாவடி,2 பார்க்க;{ՏՇc Sömbassàvadi.2.} [சோம்பல் + அம்பலம்] |
சோம்பலாளி | சோம்பலாளி cōmbalāḷi, பெ. (n.) சோம்பேறி (வின்.); பார்க்க;see {šömbëtì,1.} மறுவ. சோம்பற்காரன் [சோம்பல் + ஆளி] |
சோம்பல் | சோம்பல் cōmbal, பெ. (n.) 1. சோம்பு2 பார்க்க;see {imbi.} காணிக்குச் சோம்பல் கோடிக்குக் கேடு (உ.வ.);. 2. மயக்கம் (வின்.);; drowsiness, stupor. 3. சின்னம்மைநோய் (வைசூரி); (யாழ்ப்.);; small-pox, as causing stupor. சோம்பல் = மந்தத்தன்மை, மடிமைத்தன்மை [சூம்பு → சோம்பு → சோம்பல்] |
சோம்பல்முறி-த்தல் | சோம்பல்முறி-த்தல் cōmbalmuṟittal, 4 செ.கு.வி. (v.i.) சோம்பற்குறியாக உடம்பை முடக்கு வாங்கதல் (உ.வ.);; to stretch or twist oneself due to excessive idleness. [சோம்பல் + முறி-.] |
சோம்பாகம் | சோம்பாகம் cōmbākam, பெ. (n.) பிள்ளை மருது; flowering murdah. |
சோம்பி | சோம்பி cōmbi, பெ. (n.) சோம்பேறி1 (உ.வ.); பார்க்க;see {Sömbers.} [சோம்பு + சோம்பி] |
சோம்பிரு-த்தல் | சோம்பிரு-த்தல் cōmbiruttal, 3 செ.கு.வி. (v.i.) வேலைக்கு வாராது நின்றுவிடுதல் (தஞ்சை.);; to stay away from work. [சோம்பு + இரு-.] |
சோம்பு | சோம்பு1 cōmbudal, 5 செ.கு.வி. (v.i.) 1. வினைமடிந்திருத்தல்; to be idle, indolent, slothful. “சோம்பியிருந்ததக் குரங்க மென்றார்” (கம்பரா. சுந்தரபஞ்சசே. 67);. 2. அறிவு மந்தமாதல் (வின்.);; to be lethargic, apathetic, dull. 3. மனவுறுதி குறைதல்; to be cast down, dejected, dispirited. “சூல மன்னதோர் வாளியாற் சோம்பினன் சாம்பன்” (கம்பரா. யுத்த முதற்போர். 199);. 4. வாடுதல் (வின்.);; to droop, fade, as persons, plants. 5. கெடுதல்; to be spoiled, marred. “அரிவையர் கற்புச் சோம்பி” (கலிங். 247);. 6.பின்வாங்குதல்; to Stint. ஒரு காசுக்குச் சோம்புகிறான். வ. ஸ்வப் = தூங்கு. கனவு காண் சோம்புதல் = வினை செய்யாதிருத்தல், சுறு சுறுப்பின்மை, கால நீட்டித்தல், தூங்க விரும்புதல். ஒ.நோ. தூங்குதல் = உறங்குதல், காலந்தாழ்த்து வினை செய்தல், மந்த மாதல். L. somnus; Slav. supati; Lith. sapnus; AS. swef; GK. hupnos (sleep); [சூம்பு → சோம்பு → சோம்பு-.] வெப்பத்தினால் மந்தமும் மடிமையும் உண்டாகுமாதலால், வெப்பக் கருத்தில் சோம்பற் கருத்துத் தோன்றிற்று. வெப்பக் காலத்திலும் வெப்ப நாட்டிலும் வினை முயற்சி குன்றுவதையும், குளிர் காலத்திலும் குளிர் நாட்டிலும் அது மிகுவதையும், உலகியலை நோக்கிக் காணலாம். சோம்பு2 cōmbu, பெ. (n.) மடிமை (தொல். பொருள். 260, உரை);; sloth, idleness, inactivity. 2. மந்தம்; lethargy, dullness, sluggishness of the system. “சோம்பு தவிர்ப்பிக்கும்” (திருமந். 566);. 3. தூக்க மயக்கம்; sleeping-giddiness. 4. மயக்கம்; giddiness. Gk. somnus (sleep); [சூம்பு → சோம்பு] சோம்பு3 cōmbu, பெ. (n.) பெருஞ்சீரகம்; common anise. தெ. சோபு |
சோம்புத்தனம் | சோம்புத்தனம் cōmbuttaṉam, பெ. (n.) சோம்பல்,1 (வின்.); பார்க்க;see {šomball.} [சோம்பு + (தன்மை→); தனம்] |
சோம்புத்தீநீர் | சோம்புத்தீநீர் cōmbuttīnīr, பெ. (n.) பெருஞ் சீரகத்தால் ஆகிய மருந்து நீர் (பைஷஜ);; medicinal extract of aniseed. [சோம்பு3 + தீநீர்] |
சோம்பூசிகம் | சோம்பூசிகம் cōmbūcigam, பெ. (n.) கருப்பு மந்தாரை; black mountain ebony. |
சோம்பேறி | சோம்பேறி1 cōmbēṟi, பெ. (n.) சோம்பலுள்ளவன்; sluggard, idler. க. சோமாரி [சோம்பு → சோம்பேறி = சோம்பு எறியவன்] சோம்பேறி2 cōmbēṟi, பெ. (n.) பொன்னைக் கரைக்கும் அமிலம் (வின்.);; aqua regia. |
சோயன் | சோயன்2 cōyaṉ, பெ. (n.) ஒருவகை மண்வெட்டி (யாழ்ப்.);; a kind of spade. [சோழமம் → சோழியன்] |
சோயிக்கீரை | சோயிக்கீரை cōyikārai, பெ. (n.) சதகுப்பி (M.M.852);; dill. |
சோயிசி | சோயிசி sōyisi, பெ.(n.) இராமநாதபுரம் பரமக்குடி வட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Ramanathapuram (Dist.); Paramakudi (Taluk);. [சோமாசி – சோயி] |
சோரகம் | சோரகம் cōragam, பெ. (n.) ஒருவகைப் புல்; a kind of grass. |
சோரகுறுவை | சோரகுறுவை cōraguṟuvai, பெ. (n.) குறுவை நெல்வகை (A.);; a kind of paddy. |
சோரக்கதண்டு | சோரக்கதண்டு cōrakkadaṇṭu, பெ. (n.) கரு வண்டு; a kind of black bettle. |
சோரங்கொடு-த்தல் | சோரங்கொடு-த்தல் cōraṅgoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) துன்புறுதல் (யாழ்ப்);; to be suffering. |
சோரநஞ்சு | சோரநஞ்சு cōranañju, பெ. (n.) வைப்புநஞ்சு வகையுளொன்று (வின்.);; a prepared arsenic. |
சோரன் | சோரன் cōraṉ, பெ. (n.) ஆட்டுக்குட்டி (திவா.);; lamb, kid. |
சோரப்பெய்-தல் | சோரப்பெய்-தல் cōrappeytal, 1 செ.குன்றாவி. (v.i.) மழ மிகுதியாகப் பொழிதல் (இ.வ.);; to rain profusely. [சேர் → சேர → பெய்] |
சோரப்போடு-தல் | சோரப்போடு-தல் cōrappōṭudal, 20 செ.கு.வி. (v.i.) காரியத்தை ஆறவிடுதல் (உ.வ.);; to leave a matter to rest. [சோர் → சோர + போடு-.] |
சோரல் | சோரல் cōral, பெ. (n.) 1. தளர்கை; drooping, fainting. 2. கெடுக (சூடா.);; perishing. [சோரி1 + சோரல்] |
சோராக்கண்துடிப்பு | சோராக்கண்துடிப்பு cōrākkaṇtuḍippu, பெ. (n.) கண்ணின் பார்வைக் கடுத்துக் குத்தலுண்டாகி இமைகனத்து நீர் வடிந்து கிடைகொள்ளாமலும், தூக்கம் பிடிக்காமலும் அடிக்கடிக் கண் சிவந்து துன்புறுத்துமோர் கண்ணோய்; an eye disease marked by irritation of the lens boring pain swelling thickening of the eye lid watery discharge restlessness, sleep lessness, frequent inflammation of the eyes. [சோராக்கண் + துடிப்பு] |
சோராவொற்றி | சோராவொற்றி cōrāvoṟṟi, பெ. (n.) மீட்க முடியாத ஒற்றிவகை (நாஞ்.);; an irrecoverable form of mortgage. [சோர் + ஆ + ஒற்றி] |
சோரி | சோரி1 cōri, பெ. (n.) 1. சிந்தும் அரத்தம்; blood “ஓசைச் சோரியை நோக்கினன்” (கம்பரா. கிட்கிந். வாவிவதை. 69);. 2. மழை (அரு. நி.);; rain, shower. ம. சோரி [சுல் → (சோல்); → சோர் → சோரி = அரத்தம்] சோரி2 cōri, பெ. (n.) சிறு செருப்படி (மூ.அ.);; a medicinal plant with small leaves. |
சோரியிளநீர் | சோரியிளநீர் cōriyiḷanīr, பெ. (n.) செவ்விளநீர் (பதார்த்த. 69);; milk of reddish tender coconut. [சோரி + இளநீர்] |
சோரிவரி | சோரிவரி cōrivari, பெ. (n.) அரத்தப் படலத்துடன் வலியையுண்டாக்கும் கண்ணோய் வகை (சீவரட்);; an eye disease producing irritaion with red streaks. [சோரி + வரி] |
சோரிவீழல் | சோரிவீழல் cōrivīḻl, பெ. (n.) அரத்தம் ஒழுகியமூக்கு (தைலவ. தைல. 53);; bleeding of the nose. [சோரி1 + வீழல்] |
சோர் | சோர்1 cōrtal, 2 செ.கு.வி. (v.i.) 1. உடல் அல்லது மனம் மேற் கொண்டு செயல்பட ஆற்றலற்று தளர்தல்; to languish, droop; to be prostrate or relaxed, as the limbs in sleep; to be weary, exhausted. கடியு மிடந்தேற்றாள் சோர்ந்தனள் கை” (கலித். 92:50);. கவலையால் சோர்ந்து விட்டான். 2. மனந்தளர்தல்; to be dejected, dispirited, depressed in spirits. 3. மயக்கமாதல்; to faint, swoon. “அரசன் சோர்ந்தான்” (கம்பரா. தைலமாட்டு. 59);. க. சோர் (துளை);;தெ. சோலு [சொள் → சோள் → சோர் → சோர்-தல் = குழைத்தல்] சோர்2 cōrtal, 2 செ.கு.வி. (v.i.) 1. நழுவுதல்; to slip off slip down, as clothes. “துகிலிறையே சோர்ந்தவாறும்” (திருவாச. 5:57);. 2. கண்ணீர் முதலியன வடிதல்; to trickle down, as tears, blood, milk. “அயறு சோருமிருஞ் சென்னிய” (புறநா. 22: 7);. 3. விழுதல் (வின்.);; to fall drop; to be dropped. 4. கசிதல்; to exude, to ooze out. “மலஞ்சோரு மொன்பது வாயில்” (திருவாச. 1:54);. 5. சுழலுதல்; to become loose, as rings; to grow slacek,as a grip. “பைந்தொடி சோரும்” (குறள், 1234);. ம. சோருக; க. சோரு; தெ. தொறகு, தொறுகு; து. சோருனி, தோருனி; கோத. சொர்; குட. தொர்; கோண். தோரானா; பர். சோர்; கட. சோர்; குரு. கர்க்க; மா. கர்கெ;பட. சோரு [சொற் → சோள் → சோர் → சோர்-தல். சொள் → சொள்ள = துளை] சோர்3 cōrtal, 2 செ.கு.வி. (v.i.) 1. வாடுதல்; to fade, wither. “எரியிதழ் சோர்ந்துக’ (கலித். 78);. 2. மெலிதல்; to be emaciated, grow thin. “காம்பேர் தோளி கண்டு சோர்ந்தன்று” (பு.வெ.11, பெண்பாற். 1, கொளு);. 3. தள்ளாடுதல்; to totter. “கோலூன்றிச் சோர்ந்த நடையினராய்” (நாலடி,13.);. 4. தடுமாறுதல்; to falter, as words; to be confused. 5. துன்பப்படுதல் (இ.வ.);; to be stricken with grief. 6. இறத்தல்; to die. “பாலகன்றான் சோர” (சிலப். 9:6);. [தொள் → சோள் → சோர் → சோர்-தல்] சோர்4 cōrtal, 2 செ.குன்றாவி. (v.t.) விட்டொழிதல்; to give up, abandon. “சூதரைச் சோர்த லினிது” (இனி. நாற். 24);. [சொள் → சோள் → சோர் → சோர்-தல். சொள் = விழுதல், நீங்குதல்] சோர்5 cōrtal, 2 செ.கு.வி. (v.i.) உடம்பில் எண்ணெய் முதலியன இறங்குதல்; to be absorbed in the system, as oil. “எண்ணெய் சோரத் தேய்க்கிறான்” (வின்);. [கொள் = வடிதல். சொள் → சோள் → சோர் → சோர்-தல்] சோர்6 cōr, பெ. (n.) ஏய்ப்பு (வஞ்சகம்);; [சூர் → சோர்-.] |
சோர்ச்சி | சோர்ச்சி cōrcci, பெ. (n.) ஏய்ப்பு (வஞ்சகம்);; deceit, guile. “சோர்ச்சி சேர்மடவார்” (குற்றா. தல. கவுற்சன. 10);. [சோர் → சோர்ச்சி] |
சோர்பதன் | சோர்பதன் cōrpadaṉ, பெ. (n.) தளர்ந்த காலம்; one’s weak moments. “வலையர் போலச் சோர்பத னொற்றி” (கலித். 55);. [சோர்1 + பதன்] |
சோர்பு | சோர்பு cōrpu, பெ. (n.) சோர்வு1 பார்க்க;see {oேryu.} “அவன் சோர்பு காத்தல் கடனெனப் படுதலின்” (தொல். பொருள். 174);. [சோர்1 → சோர்பு] |
சோர்பொழுது | சோர்பொழுது cōrpoḻudu, பெ. (n.) மாலைக் காலம்; evening time. “சோர்பொழு தணிநகர் துறுகுவர்” (கம்பரா. திருவவ. 132);. [சோர்1 + பொழுது] |
சோர்வாதம் | சோர்வாதம் cōrvātam, பெ. (n.) கை, கால்களில் அயர்ச்சியுண்டுபண்ணும் முடக்கு நோய் வகை (யாழ்ப்.);; a disease causing loss of power in the limbs. [சோர்1 + வாதம்] |
சோர்வு | சோர்வு cōrvu, பெ. (n.) 1. அறுவகை உவர்ப்புக்களில் ஒன்றாகிய தளர்ச்சி (சது.);; languishing. drooping, one of six uvaippu. 2. மெலிவு (இ.வ.);; weakness, debility. 3. மறதி; carelessness, negligence, forgetfulness. “உவகை மகிழ்ச்சியிற் சோர்வு” (குறள், 531);. 4. இழுக்கு (பிங்.);; fault, slip, remissness. 5. சொரிகை; falling pouring, as rain. “வான்சோர் வினிதே” (இனி. நாற்.16);. [சோர் → சோர்வு] |
சோர்வுபார்-த்தல் | சோர்வுபார்-த்தல் cōrvupārttal, 4 செ.கு.வி. (v.i.) ஏமாறும் நேரம் பார்த்தல்; to watch for an opportunity to deceive a person. “சோர்வு பார்த்து மாயந்தன்னால் வலைப் படுக்கில்” (திவ். பெரியாழ். 2.2:5);. [சோர்வு + பார்-.] |
சோறறுப்பக்காளி | சோறறுப்பக்காளி cōṟaṟuppakkāḷi, பெ. (n.) சோற்றுப்பக்கரை பார்க்க;see {sorru-ppakkarai.} [சோறு + பக்காளி] |
சோறாக்கி | சோறாக்கி cōṟākki, பெ. (n.) சமையற்காரன் (இ.வ.);; cook. [சோறு + ஆக்கி (ஆக்குபவன்);] |
சோறாக்கு-தல் | சோறாக்கு-தல் cōṟākkudal, 5 செ.கு.வி. (v.i.) உணவு சமைத்தல்; to cook food. ம. சோறாக்குக [சோறு + ஆக்கு] |
சோறாள்வி | சோறாள்வி cōṟāḷvi, பெ. (n.) சோறாக்கி பார்க்க;see {sirikki,} “ஆண்பிள்ளைச் சோறாள்வியை” (திவ். பெரியதி. 2 5:1, வியா.);. [சோறு + ஆள்வி] |
சோறு | சோறு1 cōṟu, பெ. (n.) 1. சமைத்த அரிசி (அன்னம்);; boiled or cooked rice (used also to the sense of food in general);. “ஏற்றுக வுலையே வாக்குக சோறே” (புறநா. 172);. ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். 2. பனை முதலியவற்றின் உள்ளீடு; pith in palms and other plants, as soft and white like boiled rice. 3. தாழைமடல் முதலியவற்றின் உள்ளீடு; filament, as of the flower of the screw-pine. ‘சோறவிழ்ப்பன மடற்கைதை’ (பெரியபு. திருக்குறிப். 36);. 4. வீடுபேறு; final bliss, beatitude. “பாதக்மே சோறு பற்றினவா தோனோக்கம்” (திருவாச. 15:7);. 5. உணவு; food. ஒரு வேளைச் சோற்றுக்கே வழியில்லை. ம. சோறு, சோர்; க. சோறு; எர. சோறு;துட. த்விர் [சொல் (நெல்); → சோறு] சோறு2 cōṟu, பெ. (n.) தாழி (பரணி);நாண்மீன்; the second {naksatra.} “சதயமுதற் சோறளவும் வஞ்சிக்கும்” (இலக். வி. 881);. [சோறு1 → சோறு2] சோறு3 cōṟu, பெ. (n.) வங்கியத்தின் (மிருதங்கத்தின்); நடுப்பாகத்திற் பூகங் கலவைச் சாந்து (கலைமகள். 12, 401);; paste used in drums. [சோறு1 → சோறு3] |
சோறுகவிழ்-த்தல் | சோறுகவிழ்-த்தல் cōṟugaviḻttal, 4 செ.கு.வி. (v.i.) சோறாக்கு (நாஞ்.); பார்க்க;see {šorākku.} [சோறு கவிழ்-.] |
சோறுகொல்லி | சோறுகொல்லி cōṟugolli, பெ. (n.) 1. பெருந்தீனிக்காரன்; glutton. 2. மருந்துச் சரக்கு வகை (அன்னபேதி);; green vitriol. [சோறு + கொல்லி] |
சோறுபடை-த்தல் | சோறுபடை-த்தல் cōṟubaḍaittal, 4 செ.கு.வி. (v.i.) சோறு பகிர்ந்தளித்தல் (உ.வ.);; to serve boiled rice on plates or leaves. [சோறு + படை-.] |
சோறுபொங்கு-தல் | சோறுபொங்கு-தல் cōṟuboṅgudal, 5 செ.கு.வி. (v.i.) சோறாக்கு-தல் பார்க்க;see {wikku.} [சோறு + பொங்கு-.] |
சோறுபொலிதல் | சோறுபொலிதல் cōṟubolidal, பெ. (n.) சோறு மலர்தல்,1 (வின்.); பார்க்க;see {šõru-malardal/} [சோறு + பொலிதல்] |
சோறுமலர்தல் | சோறுமலர்தல் cōṟumalartal, பெ. (n.) 1. அரிசி நன்றாய்ப் பதப்படுகை; the state of rice being well-cooked. 2. சமைக்கும்போது சோறு பொங்கி வழிகை; the overflow of rice in boiling. [சோறு + மலர்தல்] |
சோறுமாடு | சோறுமாடு cōṟumāṭu, பெ. (n.) வரிவகை (தெ.க.தொ. 3, 27);; a kind of tax. [சோறு + மாடு] |
சோறுமாட்டு | சோறுமாட்டு cōṟumāṭṭu, பெ. (n.) பிற்காலச் சோழர் காலத்து வழங்கிய வரிவகை (தெ.க.தொ. 3, 142);; a tax levied during the time of the later {Colas.} [சோறு + மாட்டு] |
சோறுவடி-த்தல் | சோறுவடி-த்தல் cōṟuvaḍittal, 4 செ.கு.வி. (v.i.) 1. சோறாக்கு-தல் (இ.வ.); பார்க்க;see {sirikku.} 2. சமைத்த சோற்றினின்று கஞ்சியை வடித்தல் (வின்.);; to strain conjee water from boiled rice. ம. சோறுவார்க்குக [சோறு + வடி] |
சோறுவாய்-த்தல் | சோறுவாய்-த்தல் cōṟuvāyttal, 4 செ.கு.வி. (v.i.) செஞ்சோற்றுக் கடன் கழித்தல்; to render a suitable return to one who has provided food. “சோறுவாய்த் தொழிந்தோர்” (முல்லைப். 72);. [சோறு + வாய்] |
சோறூட்டல் | சோறூட்டல் cōṟūṭṭal, பெ. (n.) குழந்தைக்கு முதன் முறையாகச் சோறுாட்டுகை; first feeding of an infant with boiled rice. [சோறு + ஊட்டல்] |
சோறூறுதல் | சோறூறுதல் cōṟūṟudal, பெ. (n.) தீக்குறைவால் சோறு பதமாகாமை (யாழ்ப்.);; the state of rice being too much soaked over insufficient fire. [சோறு + ஊறுதல்] |
சோற்றடைப்பு | சோற்றடைப்பு cōṟṟaḍaippu, பெ. (n.) சோற்றறம் (அன்னதானக் கட்டளை);; endowment for free feeding. “சோற்றடைப்புக்கு உடலாம் போனகப் பழநெல்” (தெ.க.தொ. 7. 299);. [சோறு + அடைப்பு] |
சோற்றப்பளம் | சோற்றப்பளம் cōṟṟappaḷam, பெ. (n.) இலைவடகம் (இ.வ.);; cake prepared from boiled rice-flour and dried in the sun. [சோறு + அப்பளம்] |
சோற்றப்பெட்டி | சோற்றப்பெட்டி cōṟṟappeṭṭi, பெ. (n.) படகில் செல்லும்போது உணவுப் பொருள் வைப்பதற்குரிய கோரைப்பெட்டி; a box made of koraippus for carrying food materials in boat. [சோறு + பெட்டி] |
சோற்றமலை | சோற்றமலை cōṟṟamalai, பெ. (n.) சோற்றுக் கட்டி பார்க்க;see {šõrru-k-katti.} ‘பழஞ் சோற்றமலை’ (பெரும்பாண். 224);. [சோறு + அமலை. அமலை = மிகுதி.] |
சோற்றலகு | சோற்றலகு cōṟṟalagu, பெ. (n.) 1. மரத்தில் வயிரமில்லாத பாகம்; pith of a palmyra tree, as distinct from the hard or indurated part. 2. சிப்பல்; colander. [சோறு + அலகு. அலகு = பாகம், அளவு] |
சோற்றாலாத்தி | சோற்றாலாத்தி cōṟṟālātti, பெ. (n.) கடவுள் மணமக்கள் முதலியோர் முன்பு கண்ணேறு படுதற் பொருட்டுச் சுழற்றும் ஆலத்திவகை (வின்.);; boiled rice waved before an idol, a married couple, etc., to avert the evil eye. [சோறு + ஆலாத்தி] |
சோற்றாவி | சோற்றாவி cōṟṟāvi, பெ. (n.) தேவருணவு (அவியுணவு); முதலியற்றின் ஆவி (சிலப், 10:144, அரும்.);; vapour emitted by boiled rice or sacrificial offering to the gods. [சோறு + ஆவி] |
சோற்றி | சோற்றி cōṟṟi, பெ. (n.) 1. மரத்தினுள் இருக்கும் மென்சோறு (யாழ்ப்.);; pith of trees. 2. வயிரமற்ற கட்டை; softwood. 3. பழத்தின் சதைப்பகுதி; fleshy part of some fruits. 4. பச்சிலை வகை (நாஞ்.);; a medicinal herb. [சோறு → சோற்றி] |
சோற்றியற்ற | சோற்றியற்ற cōṟṟiyaṟṟa, பெ.எ. (adj.) சதைப் பற்றில்லாத; pithless. [சோறு → சோற்றி + அற்ற.] |
சோற்றிறக்கம் | சோற்றிறக்கம் cōṟṟiṟakkam, பெ. (n.) பசியுணர்ச்சி; appetite for food. [சோறு + இறக்கம்] |
சோற்றிலை | சோற்றிலை cōṟṟilai, பெ. (n.) சோற்றுக் கற்றாழை (மூ.அ.);; yellow-flowered aloe. [சோறு + இலை] |
சோற்றுக் கடன் | சோற்றுக் கடன் cōṟṟukkaḍaṉ, பெ. (n.) 1. உண்ட சோற்றுக்குக் கைம்மாறாகச் செய்யும் நன்றி (வின்.);; duty or obligation in return for having been fed. 2. கடமையாக மாத்திரம் இடுஞ்சோறு(இ.வ.);; food provided only under duty. [சோறு + கடன்] |
சோற்றுக்கடை | சோற்றுக்கடை cōṟṟukkaḍai, பெ. (n.) 1. சோறு விற்குமிடம்; hotel. 2. சோறிடுகை; feeding. சோற்றுக்கடை இன்னும் ஒழியவில்லை (உ.வ.);. ம. சோற்று கச்சவடம் (சோற்று வணிகம்); [சோறு + கடை] |
சோற்றுக்கட்டி | சோற்றுக்கட்டி cōṟṟukkaṭṭi, பெ. (n.) சோற்று உருண்டை (அன்னவுருண்டை);; lump of boiled rice. ‘புதிய வெண்சோற்றுக் கட்டியை’ (புறநா. 177, உரை);. மறுவ. சோற்றுக்கவளம் ம. சோற்றுருள [சோறு + கட்டி.] |
சோற்றுக்கத்தலை | சோற்றுக்கத்தலை cōṟṟukkattalai, பெ. (n.) கடல்மீன் வகை (வின்.);; a genus of sea-fish. [சோறு + கத்தiலை] |
சோற்றுக்கற்றாழை | சோற்றுக்கற்றாழை cōṟṟukkaṟṟāḻai, பெ. (n.) குட்டையான அடித்தண்டையும் வெண்ணிறச் சதைப் பற்றான மடல்களையும் கொண்ட ஒருவகைக் கற்றாழை; thick leaved Indian aloe. [சோறு + கற்றாழை] |
சோற்றுக்காரி | சோற்றுக்காரி cōṟṟukkāri, பெ. (n.) 1. சோற்றுக் கடை வைத்திருப்பவள் (வின்);; a woman hotel-keeper. 2. சோறு கொண்டு வரும் வேலைக்காரி (உ.வ.);; maid-servant employed to carry food. ம. சோற்றுகச்சவடக்காரி [சோறு + காரி] |
சோற்றுக்குடலை | சோற்றுக்குடலை cōṟṟukkuḍalai, பெ. (n.) சோறு கொண்டு செல்லுங் கூடை (யாழ்ப்.);; basket of plaited leaf for carrying boiled rice. [சோறு + குடலை] |
சோற்றுக்குழி | சோற்றுக்குழி cōṟṟukkuḻi, பெ. (n.) இரைப்பை; stomach which is membraneous sac or receptacle for receiving the food taken in. [சோறு + குழி] |
சோற்றுக்குவால் | சோற்றுக்குவால் cōṟṟukkuvāl, பெ. (n.) சோற்றுக் குவியல்; heap of cooked rice. “அந்தணர்க் காக்கிய சோற்றுக் குவாலினை” (சீவக. 934);. [சோறு + (குவியல் →); குவால்] |
சோற்றுக்குவீங்கி | சோற்றுக்குவீங்கி cōṟṟukkuvīṅgi, பெ. (n.) சோற்றுக்கு ஏங்கியிருப்பவன் (உ.வ.);; one who hankers after food, used in derision about a person willing to eat anywhere. ம. சோற்றுமாடன் (மிகுதியாக உண்டாலும் பொந்திகை கொள்ளாதவன்] [சோறு + கு + வீங்கி] |
சோற்றுக்கை | சோற்றுக்கை cōṟṟukkai, பெ. (n.) வலக்கை (சோற்ற எடுத்துண்ணுங் கை);; right hand, as used in taking food. ம. சோற்றுகை [சோறு + கை] |
சோற்றுச்சட்டி | சோற்றுச்சட்டி cōṟṟuccaṭṭi, பெ. (n.) சோற்றுப்பானை (வின்.); பார்க்க;see {šorru-p-pānai.} ம. சோற்றுகலம் [சோறு + சட்டி] |
சோற்றுச்செறுக்கு | சோற்றுச்செறுக்கு cōṟṟucceṟukku, பெ. (n.) வயிறு நிரம்பக் கிடைக்கும் உணவினால் ஏற்படும் பெருமிதம்; a pride on the assured supply of food throughout. “காங்கேயர் கோனளித்த சோற்றுச் செறுக்கல்லவோ மூன்றரை கண்டதுவே” (சிலப்பதிகார உரைக்கு அடியார்க்கு நல்லாரின் பாயிரம்);. [சோறு + செறுக்கு] |
சோற்றுத்தடி | சோற்றுத்தடி cōṟṟuttaḍi, பெ. (n.) சோற்றமலை பார்க்க;see {sorramalai.} ‘சோற்றுத்தடியை நாடோறும் பெறுகுவிர்’ (மலைபடு. 441, உரை);. [சோறு + தடி] |
சோற்றுத்தட்டு | சோற்றுத்தட்டு cōṟṟuttaṭṭu, பெ. (n.) சிப்பல் (வின்.);; colander. மறவ. வடித்தட்டு [சோறு + தட்டு. தட்டு = சோறுவடித்தல் போன்றவற்றுக்குதலும் சிறுதட்டு] |
சோற்றுத்திரளை | சோற்றுத்திரளை cōṟṟuttiraḷai, பெ. (n.) சோற்றுக்கட்டி பார்க்க;see {Sörru-k-katti.} ‘பெருஞ் சோற்றுத்திரளையைப் பாண் சுற்றத்தை ஊட்டும்’ (புறநா. 33, உரை);. [சோறு + திரளை] |
சோற்றுத்துருத்தி | சோற்றுத்துருத்தி cōṟṟutturutti, பெ. (n.) உடம்பு (சோற்றால் நிரப்பிய துருத்தி);; body, as a bladder filled with food. “சோற்றுத் துருத்தியைச் சதமெனவும்” (தாயு. பரிபூரண. 7);. [சோறு + துருத்தி] |
சோற்றுத்தூக்கம் | சோற்றுத்தூக்கம் cōṟṟuttūkkam, பெ. (n.) பேருணவு உண்டமையால் வரும் தூக்கம் (யாழ்ப்.);; sleep induced by over-eating. [சோறு + தூக்கம்] |
சோற்றுப் பாக்கம் | சோற்றுப் பாக்கம் cōṟṟuppākkam, பெ.(n.) காஞ்சிபுரம் மாவட்டத்தில் வந்தவாசியிலிருந்து செங்கற்பட்டுக்குச் செல்லும் சாலையில் உள்ள ஊர்; a village in Kanchipuram, on the way to Wanthavasi Chengalpattu salai. [சோற்று+பாக்கம்] |
சோற்றுப்பக்கரை | சோற்றுப்பக்கரை cōṟṟuppakkarai, பெ. (n.) மிகுதியாக உண்பவன் (சாப்பாட்டு இராமன்); (இ.வ.);; a glutton, as a bag for food. [சோறு + பக்கரை] |
சோற்றுப்பசை | சோற்றுப்பசை sōṟṟuppasai, பெ. (n.) 1. சோற்றால் ஆகும் பசை; rice paste. 2. வாழ்வுக்குப் (சீவனத்துக்குப்); போதுமான வருவாய்; income sufficient for one’s maintenance. அவனுக்குச் சோற்றுப்பசை உண்டு (உ.வ.);. [சோறு + பசை] |
சோற்றுப்படி | சோற்றுப்படி cōṟṟuppaḍi, பெ. (n.) சான்றாளர் (சாட்சி); முதலானவர்க்கு உணவு முதலிய வற்றிற்காகக் கொடுக்கும் தொகை; batta. [சோறு + படி.] |
சோற்றுப்பட்டாளம் | சோற்றுப்பட்டாளம் cōṟṟuppaṭṭāḷam, பெ. (n.) எந்த வேலையும் செய்யாமல் உணவுக்காக மட்டும் ஒருவரை அண்டி வாழும் கும்பல்; hangers on for food. [சோறு + பட்டாளம்] |
சோற்றுப்பதம் | சோற்றுப்பதம் cōṟṟuppadam, பெ. (n.) அரிசி வெந்த நிலைமை; the stage of which the rice is sufficiently boiled. [சோறு + பதம்] |
சோற்றுப்பனை | சோற்றுப்பனை cōṟṟuppaṉai, பெ. (n.) வைரமற்ற பனை மரம்; palymyra with a soft interior. [சோறு + பனை] |
சோற்றுப்பருகை | சோற்றுப்பருகை cōṟṟupparugai, பெ. (n.) சோற்றவிழ், வெந்த சோற்றின் பருக்கை; grains of boiled rice. [சோறு + பருக்கை] |
சோற்றுப்பற்று | சோற்றுப்பற்று cōṟṟuppaṟṟu, பெ. (n.) சோற்றுப்பருக்கை பார்க்க;see {stirru-pparukkai.} [சோறு + பற்று] |
சோற்றுப்பலகை | சோற்றுப்பலகை cōṟṟuppalagai, பெ. (n.) வடிபலகை (நாஞ்.);; a wooden strainer, used in cooking rice. [சோறு + பலகை] |
சோற்றுப்பானை | சோற்றுப்பானை cōṟṟuppāṉai, பெ.(n.) சமையல் செய்வது போல் சிறுமியர் நடித்து விளையாடுதல்; a play of young girls as if they are cooking with pot. [சோற்று+பானை] சோற்றுப்பானை cōṟṟuppāṉai, பெ. (n.) 1. சோறாக்கும் மட்பாண்டம்; cooking pot. 2. பெருந்தீனிக்காரன்; glutton. [சோறு + பானை] |
சோற்றுப்பாளையம் | சோற்றுப்பாளையம் cōṟṟuppāḷaiyam, பெ. (n.) 1. முகாமில் சமையல் செய்யும் இடம் (வின்.);; that part of a camp where food is prepared. 2. பயனற்றகூட்டம் (சோற்றை யுண்ண மட்டும் தகுதியுள்ள கூட்டம்); (இ.வ.);; unserviceable or useless crowd of dependants, as fit only for eating. ம. சோற்றுப்பாளயம் [சோறு + பாளையம்] |
சோற்றுப்பிச்சை | சோற்றுப்பிச்சை cōṟṟuppiccai, பெ. (n.) இரப்போர்க்குப் பிச்சையாக இடும் சோறு (உ.வ.);; boiled rice given as alms. ம. சோற்றுபிச்ச [சோறு + பிச்சை] |
சோற்றுப்பு | சோற்றுப்பு cōṟṟuppu, பெ. (n.) உணவிலிடும் உப்பு; salt used in food. [சோறு + உப்பு] |
சோற்றுப்புரை | சோற்றுப்புரை cōṟṟuppurai, பெ. (n.) மடைப் பள்ளி, சமையலறை; kitchen. “சோற்றுப்புரை மணியஞ் சூரியன்” (தெய்வச். விறலிவிடு. 388);. [சோறு + புரை] |
சோற்றுப்பை | சோற்றுப்பை cōṟṟuppai, பெ. (n.) இரைப்பை; stomach as a receptacle for food. [சோறு + பை] |
சோற்றுப்பொதி | சோற்றுப்பொதி cōṟṟuppodi, பெ. (n.) பொதிச்சோறு (இ.வ.);; food tied up in a cloth for use on journey. ம. சோற்றுப்பொதி [சோறு + பொதி] |
சோற்றுமயக்கம் | சோற்றுமயக்கம் cōṟṟumayakkam, பெ. (n.) சோற்றுத்தூக்கம் பார்க்க;see {stru-t-likkam.} ம. சோற்றுமயக்கம் [சோறு + மயக்கம்] |
சோற்றுமரம் | சோற்றுமரம் cōṟṟumaram, பெ. (n.) உறுதியில்லாத (வைரமில்லாத); மரம் (வின்.);; tree which is all sap-wood. |
சோற்றுமாடு | சோற்றுமாடு cōṟṟumāṭu, பெ. (n.) பயன்பாடற்றவன் (வின்.); (சோறு தின்பதற்கு மாத்திரமுள்ள மாடு போன்றவன்);; worthless fellow, as fit for nothing but eating. [சோறு + மாடு] |
சோற்றுமுத்து | சோற்றுமுத்து cōṟṟumuttu, பெ. (n.) போலி முத்து (இ.வ.);; artificial pearl. [சோற்று + முத்து] |
சோற்றுருவி | சோற்றுருவி cōṟṟuruvi, பெ. (n.) உடல்; body. [சோறு + (உரு→); உருவி] |
சோற்றுறக்கம் | சோற்றுறக்கம் cōṟṟuṟakkam, பெ. (n.) சோற்றுத் தூக்கம் [சோறு + உறக்கம்] |
சோலணி, | சோலணி, cōlaṇi, பெ.(n.) அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Arantangi Taluk. [சோலை+அணி] |
சோலைக்கொடுக்காய்ப்புளி | சோலைக்கொடுக்காய்ப்புளி cōlaikkoḍukkāyppuḷi, பெ. (n.) மரவகை (L.);; slender-nerved broad medium-leaved gamboge. [சோலை + கொடுக்காய்புளி] |
சோலைதேவியார் | சோலைதேவியார் cōlaitēviyār, பெ. (n.) திருவரங்க இறைவனுக்கு மாலைச சூட்டும் உரிமை பெற்றவர்கள்; ladies who got the right of garlanding the deity {(Thirumäl);} of Thiru {araigam.} ‘அரியபிள்ளை தண்டநாயக் கன்மக்கள் சோலை தேவியார்’ (தெ.க.தொ.24, கல்: 270-1); [சோலை + தேவியார்] |
சோலைநுகர்வு | சோலைநுகர்வு cōlainugarvu, பெ. (n.) வேனிற் காலத்துச் சோலயின் குளிர்ச்சியின்பம் நுகர்கை (சீவக. 2707, தலைப்பு);; enjoyment in the pleasure – grove during summer. [சோலை + நுகர்வு] |
சோலைப்புளி | சோலைப்புளி cōlaippuḷi, பெ. (n.) இரேவற்சின்னி; Ceylon gamboge. [சோல + புளி] |
சோலைமலை | சோலைமலை cōlaimalai, பெ. (n.) அழகர்மலை;{Alagarmalai} near Madurai. “வளர்சோலைமலைக் கண்ணினன்” (அஷ்டப். அமுகர். 26);. [சோலை + மலை] |
சோலைவேங்கை | சோலைவேங்கை cōlaivēṅgai, பெ. (n.) காட்டுச் சாதிக்காய்; wild mace. [சோலை + வேங்கை] |
சோல்(லு)-தல் | சோல்(லு)-தல் cōlludal, 7 செ.குன்றாவி. (v.t.) 1. கவர்ந்து கொள்ளுதல்; to plunder, seize. “நல்கிற்றை யெல்லாஞ் சோல்வான் புகுந்து” |
சோளகம் | சோளகம் cōḷagam, பெ. (n.) குடுமி வைக்கும் விழா (சங்.அக.);; ceremony of tonsure. வ. சௌல |
சோளகாண்டம் | சோளகாண்டம் cōḷakāṇṭam, பெ. (n.) நீர்க்கடம்பு; water cadamba. |
சோளக்குழி | சோளக்குழி cōḷakkuḻi, பெ.(n.) சோளம் போட்டு வைக்க பயன்படும் நிலக்குழி; underground store room for storing food grains, [சோளம்+குழி] |
சோளக்கூழ் | சோளக்கூழ் cōḷakāḻ, பெ. (n.) சோளத் தவசத்தை மாவாக அரைத்துச் செய்யும் கூழ்; food prepared from maize. [சோளம் + கூழ்] |
சோளக்கொண்டை | சோளக்கொண்டை cōḷakkoṇṭai, பெ. (n.) சோளக்கதிர் (உ.வ.);; ear of the maize. [சோளம் + கொண்டை] |
சோளக்கொல்லைபொம்மை | சோளக்கொல்லைபொம்மை cōḷakkollaibommai, பெ. (n.) கம்பு, சோளம் முதலியவை விளையும் நிலத்தில் பறவைகளை விரட்டுவதற்காக உயரமான கழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் துணி அல்லது வைக்கோல் அடைத்த மனித உருவத்தை ஒத்த பொம்மை; scarecrow. [சோளம் + கொல்லை + பொம்மை] |
சோளச்சொறி | சோளச்சொறி cōḷaccoṟi, பெ. (n.) சோளக்கூழ் அதிகமாக குடிப்பதால் உடம்பில் ஏற்படும் சொறி சிரங்கு; a kind of skin disease due to the free use of maize as prinicipal food. [சோளம் + சொறி] |
சோளச்சோறு | சோளச்சோறு cōḷaccōṟu, பெ. (n.) சோளமணிகளை (தவசம்);க் கொண்டு சமைக்குஞ்சோறு; food prepared from maize. [சோளம் + சோறு] சோளத் தவசத்தை மாவாக அரைத்துச் செய்யப்படுவது சோளக்கூழ், சோள மணிகளை சோறாக சமைப்பது சோளச் சோறு. |
சோளத்தட்டு | சோளத்தட்டு cōḷattaṭṭu, பெ. (n.) சோளத் தட்டை (வின்); பார்க்க;see {Sóla-t-lattai.} [சோளத்தட்டை → சோளத்தட்டு] |
சோளத்தட்டை | சோளத்தட்டை cōḷattaṭṭai, பெ. (n.) சோளத்தின் அரிதாள் (உ.வ.);; stalks of maize. [சோளம் + தட்டை] |
சோளன் | சோளன்1 cōḷaṉ, பெ. (n.) சோழன் (இ.வ.);;பார்க்க;see {Solan.} [சோழன் → சோளன்] சோளன்2 cōḷaṉ, பெ. (n.) சோளம்1 (யாழ்ப்.); பார்க்க;see {Sólam,} 2. மக்காச்சோளம; Indian corn. [சோளம் → சோளன்] |
சோளப்பொறி | சோளப்பொறி cōḷappoṟi, பெ. (n.) உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த சோளம்; popcorn. |
சோளம் | சோளம்1 cōḷam, பெ. (n.) உருண்டையான தனித்தனி மணிகளைக் கொண்ட ஒருவகைத் தவசம் (பதார்த்த. 1399);; maize, great millet. ம. சோளம்; க., து., குட., சோள; தெ. சொன துட. ச்விளம்; கோண். சொனா; கொலா. சொன்ன; பர். சென்ன; கட. சோனல்;பட. சோலு [சுள் → (சொள்); → சோளம்] சோளம்2 cōḷam, பெ. (n.) சோழம் (இ.வ.); பார்க்க;see {Solam.} |
சோளவலைக்கட்டை | சோளவலைக்கட்டை cōḷavalaikkaṭṭai, பெ. (n.) வலையின் முற்பகுதியில் கட்டப் பட்டிருக்கும் மிதப்புக் கட்டை; float lied in the front portion of the net. [சோளவலை + கட்டை] மிதப்பதற்கு ஏற்ற, கனமில்லாத கட்டை, தலைவலைக் கட்டை தொங்கு வலைக் கட்டை, கெடமால் கட்டை, மோப்புக் கட்டை என்பன பிற மிதப்புக் கட்டைகளாகும். |
சோளி | சோளி cōḷi, பெ. (n.) கிளிஞ்சல் வகை; a kind of shell. மறுவ. சோவி [சோழி → சோளி.] சோளி2 cōḷi, பெ. (n.) சோளிகை பார்க்க;see {šöligai,} து. சோலி;{H.jõsi} [சொள் (துளை); → (சோள்); → சோளி. ஒ.நோ. பொள் → பொய் → (பய்); → பை = துளை, துளையுள்ளது;துளை போல் தையல் கொண்டது.] |
சோளிகை | சோளிகை cōḷigai, பெ. (n.) இரப்போன் பெரும்பை; satchel, bag, as of a beggar. ‘ஒருவன் மாளிகைக்காரனாக இருக்க வேண்டும். ஒருவன் சோளிகைக்காரனாக இருக்க வேண்டும்’ (பழமொழி.);. க. சோலிகெ; து. சோலிகெ;தெ. சோலிய [சோளி → சோளிகை.] |
சோளிச்சங்கு | சோளிச்சங்கு cōḷiccaṅgu, பெ. (n.) சங்கு வகை; a kind of conch. [சோளி1 + சங்கு] |
சோளியல் | சோளியல் cōḷiyal, பெ. (n.) சோளிகை (நெல்விடு.);; bag, pouch. [சோளி2 → சோளியல்.] |
சோழ மாருதி நல்லூர் | சோழ மாருதி நல்லூர் cōḻmārudinallūr, பெ.(n.) மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்; a village in Mannarkudi. [சோழன்+மருதன்+நல்லூர்] |
சோழகக்கச்சான் | சோழகக்கச்சான் cōḻkakkaccāṉ, பெ. (n.) சோழக்கரைக்காற்று (யாழ்ப்.); பார்க்க;see {Sóla-k-kari-k-kārru.} [சோழகம் + கச்சான்] |
சோழகக்கொண்டல் | சோழகக்கொண்டல் cōḻkakkoṇṭal, பெ. (n.) தென்கீழ்க்காற்று (வின்.);; the Southeast wind. [சோழகம் + கொண்டல். கொண்டல் = காற்று] |
சோழகங்கம் | சோழகங்கம் cōḻkaṅgam, பெ.(n.) இராசேந்திர சோழன் கட்டிய பொன்னேரி நீர்நிலை; a large write reservation made by the great Chola emperor Rajendra Chola. [சோழன்+கங்கம் (நீர்நிலை);] |
சோழகம் | சோழகம் cōḻkam, பெ.(n.) தென்காற்று : southern wind. [சோழம்+சோழகம்] பாய்மரக்கப்பலை முதலில் கண்டுபிடித்த சோழன் வளிதொழில் ஆண்டவன் என்பதால் தென்காற்று சோழகம் எனப்பட்டது. சோழகம் cōḻkam, பெ. (n.) தென்காற்று (வின்.);; south wind, wind that blows during the South West monsoon. [சோமும் + அகம்] |
சோழகர் | சோழகர் cōḻkar, பெ. (n.) கோவை மாவட்ட எல்லைப்பகுதியில் வாழும் பழங்குடியினர்; a tribal people in {Koyambuttårdt.} |
சோழகுலவல்லிவதி | சோழகுலவல்லிவதி cōḻkulavallivadi, பெ. (n.) அரியலூர் வட்டத்தில் ஓர் அரசியின் பெயரால் அமைந்னத பாசன வடிகால்; an irrigation drainage named after a Chola queen in the Ariyalur region. “சோழ குல வல்லி வதிக்கு கிழக்கு சோழ பாண்டிய வாய்க்காலுக்கு வடக்கு” (ஆவணம் 10-3 (1););. [சோழன் குலம் வல்லி + வதி] |
சோழகேரளவாய்க்கால் | சோழகேரளவாய்க்கால் cōḻāraḷavāykkāl, பெ. (n.) அரியலூர் வட்டாரத்தில் சோழ அரசரின் பட்டப்பெயரில் அமைந்த பாசன வாய்க்கால்; an irrigation channel named after one of the titles of a Chola kings in the Ariyalur region. “இவ்வதிக்கு மேற்கு சோழ கேரள வாய்க்காலுக்கு வடக்கு” (ஆவணம் 10-3 (1););. [சோழன் + கேரளன் + வாய்க்கால்] |
சோழக்கரைக்காற்று | சோழக்கரைக்காற்று cōḻkkaraikkāṟṟu, பெ. (n.) தென்மேற்கு திசையிலிருந்து வீசுங்காற்று; the wind blowing from South West direction. [சோழக்கரை + காற்று] |
சோழங்கன் | சோழங்கன் cōḻṅgaṉ, பெ. (n.) சோழன் (வின்.);;{Chösa} king. [சோழன் → சோழங்கன்] |
சோழங்கவைப்புநஞ்சு | சோழங்கவைப்புநஞ்சு cōḻṅgavaippunañju, பெ. (n.) வைப்பு நஞ்சு வகையுள் ஒன்று (சங்.அக.);; a kind of mineral poison. |
சோழசிகாமணிவதி | சோழசிகாமணிவதி cōḻcikāmaṇivadi, பெ. (n.) அரியலூர் வட்டாரத்தில் ஓர் அரசியின் பெயரால் அமைந்த பாசன வடிகால்; an irrigation drainage named after a Chola queen in the Ariyalur region. “சோழ சிகாமணி வதிக்கு மேற்கு முடிகொண்ட சோழ பாண்டிய வாய்க்காலுக்கு தெற்கு” (ஆவணம் 10-3 (1););. [சோழன் + சிகாமணி வதி] |
சோழசிராமணி | சோழசிராமணி cōḻcirāmaṇi, பெ. (n.) நாமக்கல் மாவட்டச் சிற்றூர்; a village in Namakkal district. [சோழன் + (சிரோன்மணி → ); சிராமணி] |
சோழநாடு | சோழநாடு cōḻnāṭu, பெ. (n.) சோழர் ஆண்ட தமிழ்நாட்டுப்பகுதி; the country of the ancient {Chola} dynasty in South India. [சோழன் + நாடு.] சேலம் மாவட்டத்தில் தோன்றிக் கடலூர் மாவட்டத்தில் ஒடும் வட வெள்ளாற்றுக்கும் தஞ்சை மாவட்டத்தின் தெற்கிற் பாயும் தென்வெள்ளற்றுக்கும் இடையிலுள்ள வளமான நாடு சோழநாடு. இக்கால திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களும் கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியும் அடங்கிய நிலப்பரப்பே பண்டைய சோழநாடு எனலாம். காவிரியிலும் அதன் துணையாறுகளாலும் வளம்பெரும் இந்நாடு பொன்நாடு, காவிரிநாடு எனவும் வழங்கப்பெறும். இந்நாட்டில் கிடைத்த நெல்வளத்தைப் பாராட்டி, ‘சோழநாடு சோறுடைத்து’ என ஒளவையாரும் பாடினார். |
சோழன் | சோழன் cōḻṉ, பெ. (n.) முற்காலத்தில் புலியை அரசுச் சின்னமாகக் கொண்டு காவிரி ஆற்றைச் சார்ந்த பகுதிகளை ஆண்ட மன்னன்; any king of the Chola dynasty that ruled over the cauvery delta. “நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்” (புறநா. 378);. ம. சோழன், சோனன்; க. சோள;தெ. சோட [சொல் (=நெல்); → சோல் → சோழன்] |
சோழன்.இராசசூயம்வேட்டபெருநற்கிள்ளி | சோழன்.இராசசூயம்வேட்டபெருநற்கிள்ளி cōḻṉirācacūyamvēṭṭaberunaṟkiḷḷi, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்; a {Cola} king in Sangam age. [சோழன் + இராசசூயம் + வேட்ட பெருநற்கிள்ளி] இவன் அரசர்கள் செய்யும் பெரிய வேள்வியைச் செய்து பெயர் பெற்றான். புறநானூறு 16, 377,125 ஆகிய எண்ணுடைய பாடல்களில் இவனைப் பற்றி அறிய முடிகிறது. |
சோழன்.உருவப்பஃறேர்இளஞ்சேட்சென்னி | சோழன்.உருவப்பஃறேர்இளஞ்சேட்சென்னி cōḻṉuruvappaḵṟēriḷañjēṭceṉṉi, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்; a {C6la} king in {Sangam} age. [சோழன் + உருவப்பஃறேர் + இளஞ்சேட் சென்னி] இவனிடம் இருந்த தேர்ப்படையால் உருவப்பல்தேர் என்ற அடை மொழியைப் பெற்றிருக்கலாம். இவளைப் பரணரும், பெருங்குன்றுர் கிழாரும் புறநானூற்றில் (4,366); பாடியுள்ளனர்.] |
சோழன்.குராப்பள்ளித்துஞ்சியகிள்ளிவளவன் | சோழன்.குராப்பள்ளித்துஞ்சியகிள்ளிவளவன் cōḻṉgurāppaḷḷittuñjiyagiḷḷivaḷavaṉ, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்a {Cölä} king in {Sangam} period. [சோழன் + குராப்பள்ளி + துஞ்சிய + கிள்ளிவளவன்] கிள்ளி, வளவன் எனபன சோழ மன்னர்களைக் குறிக்கும் பெயர்கள். குராப்பள்ளி துஞ்சிய குராப்பள்ளி என்னும் இடத்தில் இறந்த – இறந்தவன். புறநானூறு 373ஆம் பாடல் இவனைக் குறிக்கிறது. |
சோழன்.குளமுற்றத்துத்துஞ்சியகிள்ளிவளவன் | சோழன்.குளமுற்றத்துத்துஞ்சியகிள்ளிவளவன் cōḻṉguḷamuṟṟattuttuñjiyagiḷḷivaḷavaṉ, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்; a {Cla} king in {Sangam} period. [சோழன் + குளமுற்றத்து + துஞ்சிய + கிள்ளிவளவன்] குளமுற்றம் என்ற இடத்தில இறந்தவன் |
சோழன்.செங்கணான் | சோழன்.செங்கணான் cōḻṉceṅgaṇāṉ, பெ. (n.) களவழி நாற்பது என்ற நூலின் பாட்டுடைத் தலைவனான சோழவரசன் (புறநா. 74, உரை.);; a {Chölä} king, the hero of the poem {Kala-vali-nātpatu.} [சோழன் + செங்கணான்] |
சோழன்.செருப்பாழிஎறிந்தஇளஞ்சேட்சென்னி | சோழன்.செருப்பாழிஎறிந்தஇளஞ்சேட்சென்னி cōḻṉceruppāḻieṟindaiḷañjēṭceṉṉi, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்; a {Cölä} king in {Sangam} age. மறுவ. இளம்பெருஞ்சென்னி [சோழன் + செருப்பாழி + எறிந்த + இளஞ்சேட்சென்னி] பாழி என்னும் இடத்தை தமக்கிடமாகக் கொண்டு பொருத வடுகரைத் தம்படை வலியால் அழித்துப் பாழி நகரைச் சிதைத்ததால் செருப்பாழி எறிந்த என்னும் அடையைத் தன் பெயரில் கொண்டவன். அகநானூறு 375ஆம் பாடலும், புறநானூறு 370, 378 ஆகிய பாடல்களும் இவனைப் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. |
சோழன்.நலங்கிள்ளி | சோழன்.நலங்கிள்ளி cōḻṉnalaṅgiḷḷi, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்; a {Cola} king in {Sangam} age. மறுவ. சேட்சென்னி நலங்கிள்ளி, தேர்வண் கிள்ளி, புட்பகை. [சோழன் + நலங்கிள்ளி] ஆலந்தூர்கிழான், முதுகண்ணன் சாத்தன் போன்றோர் இவனப் பாடியுள்ளனர். இவன் அரசப் புலவனாகவும் இருந்தான். இவன் பாடியதாக புறநானூற்றில் இருபாடல்கள் (73,75); உள்ளன. |
சோழன்.நல்லுருத்திரன் | சோழன்.நல்லுருத்திரன் cōḻṉnalluruttiraṉ, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்; a {Cölä} king in {Sangam} age. [சோழன் + நல் + உருத்திரன்] இவர் பாடிய ஒரே பாடல் புறநானூறு 190 ஆகும். |
சோழன்.நெய்தலங்கானல்இளஞ்சேட்சென்னி | சோழன்.நெய்தலங்கானல்இளஞ்சேட்சென்னி cōḻṉneytalaṅgāṉaliḷañjēṭceṉṉi, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்; a {Cölä} king in {Sangam} age. [சோழன் + நெய்தலங்கானல் + இளஞ்சேட்சென்னி] நெய்தலங்கானல் இம்மன்னனின் ஊராகும். புறநானூறு பத்தாம் பாடல் இவனைப் பற்றிக் கூறுகிறது. |
சோழன்.மணக்கிள்ளி | சோழன்.மணக்கிள்ளி cōḻṉmaṇakkiḷḷi, பெ. (n.) கழகக் காலச் சோழ மன்னன்; a {Cla} king in {Sangam} age. [சோழன் + மனக்கிள்ளி] இவன் சேரன் செங்குட்டுவனின் தாய்வழிப் பாட்டன். சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் வாழ்த்துரைக் காதை, உரைப்பாட்டு மடை ‘திகழொளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் செங்குட்டுவன்’ என்று குறிக்கிறது. |
சோழபாண்டியவாய்க்கால் | சோழபாண்டியவாய்க்கால் cōḻpāṇṭiyavāykkāl, பெ. (n.) அரியலூர் வட்டத்தில் சோழ அரசரின் பட்டப்பெயரில் அமைந்த பாசன வாய்க்கால்; an irrigation channel named after one of the titles of a Chola kings in the Ariyalur region. “சோழகுல வல்லி வதிக்குக் கிழக்கு சோழபாண்டிய வாய்க்காலுக்கு வடக்கு” (ஆவணம் 10-3 (1););. [சோழன் + பாண்டியன் வாய்க்கால்] |
சோழபுரம் | சோழபுரம் cōḻpuram, பெ. (n.) வேளாள வகையினர்; a subsect of {Velāla} caste. [சோழன் + புரம்] |
சோழமண்டலக்கரை | சோழமண்டலக்கரை cōḻmaṇṭalakkarai, பெ. (n.) சோழநாட்டின் கடற்கரை; Coromandel coast. [சோழன் + மண்டலம் + கரை] |
சோழமண்டலசதகம் | சோழமண்டலசதகம் sōḻmaṇṭalasadagam, பெ. (n.) சோழநாட்டின் பெருமையைப் பற்றி 17ஆம் நூற்றாண்டில் ஆன்மநாத தேசிகரால் நூறுபாக்களிற் பாடப்பட்ட தமிழ்நூல்; a Tamil poem of one hundred stanzas dealing with the greatness of {Cölanādu, by Anmanāda-desigar,} 17th c. [சோழன்+ மண்டலம் + சதகம்] |
சோழமண்டலம் | சோழமண்டலம் cōḻmaṇṭalam, பெ. (n.) சோழநாடு (சோழமண். சத.); பார்க்க;see {Šola-nādu.} [சோழன் + மண்டலம்] |
சோழமாராசன்கட்டிநுளம்பன் | சோழமாராசன்கட்டிநுளம்பன் cōḻmārācaṉkaṭṭinuḷambaṉ, பெ. (n.) திரு.அத்தியூர் நின்றருளின பெருமாளுக்கு நந்தவனம் அமைக்க 250 குழி நிலம் கொடுத்தவன்; a land donar. “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து எயில் நாட்டு திருஅத்தியூர் நிறைருளின அருளைப் பெருமாளுக்கு கங்க மண்டலத்து மகா மண்டலகன் சோழமா ராசன் கட்டி நுளம்பன் திருநந்தவனம் செய்கைக்கு கொண்ட குழி இருநூற்று ஐம்பது குழிநிலம்” (தெ.க.தொ. 4, கல். 861);. [சோழன் + மாராசன்] |
சோழம் | சோழம் cōḻm, பெ. (n.) சோழநாடு பார்க்க;see {sia-indu.} “ஈரிருபதாஞ் சோழம்” (அட்டப். நூற்றெட். திருப். நூன்முகம், 6);. [சோழன் → சோழம்.] |
சோழர் | சோழர் cōḻr, பெ. (n.) சோழன் பார்க்க;see {:5lan.} தமிழ்நாட்டைச் சிறப்புடன் ஆண்ட சோழர்களைக் கழகக் காலச் சோழர், விசயாலயன் வழிவந்த சோழர், சாளுக்கியச் சோழர் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். கழகக் காலச் சோழரின் தலைநகரம் தஞ்சாவூர். கழகக் காலச் சோழர்களில் சிறந்தவன் கரிகாலன். விசயாலயன் வழிவந்தவர்களில் முதலாம் ராசராசன் சிறந்தவன். சாளுக்கியச் சோழர்களில் முதலாம் குலோத்துங்கன்சிறந்தவன். கழகக் காலத்தில் தோன்றிய சோழர்கள் ஆட்சி மூன்றாம் இராசேந்திரன் காலத்தோடு (கி.பி. 1256 – 1279); முடிவுற்றது. |
சோழவக்கொண்டல் | சோழவக்கொண்டல் cōḻvakkoṇṭal, பெ. (n.) சோழகக்கொண்டல் பார்க்க;see {ilaga-k} |
சோழவரம் | சோழவரம் cōḻvaram, பெ. (n.) சோழபுரம் (E.T.ii. 103); பார்க்க;see {Sóla-puram{ [சோழன் + புரம்] |
சோழவர்தான் | சோழவர்தான் cōḻvartāṉ, பெ.(n.) மதுரை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Madurai. [ஒருகா சோழன்+வென்றான்] |
சோழி | சோழி cōḻi, பெ. (n.) மாலையாகக் கோக்கவோ, விளையாடவோ பயன்படும் கடல்வாழ் சிறு உயிரிகளின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஒடு, பலகறை (இ.வ.);; cowry. மறுவ. சோவி [சோகி → சோவி → சோழி] |
சோழிக்காக | சோழிக்காக cōḻikkāka, பெ.(n.) பண்ட மாற்றுக் காலத்தில் காசாக ஆளப்பட்ட சோழிகள்; cowries used as currency in Africa and Asia. [சோழி+காசு] நான்கு சோழி ஒரு விடுகாசு, 320 விடுகாசு ஒரு உருபாய் என்பது பழைய கணக்கீட்டு முறை. |
சோழிக்கூடு | சோழிக்கூடு cōḻikāṭu, பெ. (n.) நடுவில் துளையிடப்பட்டு, நான்கு மூலைகளிலும் கயிறுகளால்கட்டப்பெற்ற பலகை; a plank with a hole in the middle, tied at all four corners. [சோலி1 → சோழி + கூடு] தோணியின் விளிம்புக்கு வெளியே நீட்டி மலங்கழிக்கப் பயன்படுத்தும் பலகை. |
சோழிசொங்கமான் | சோழிசொங்கமான் sōḻisoṅgamāṉ, பெ. (n.) நாடோடிக்குரிய பை, சோழி முதலிய அடையாளங்கள் (உ.வ.);; cowries, bag, etc, as the belongings of a {paradči.} [சோழ + சொங்கமான்] |
சோழிச்சி | சோழிச்சி cōḻicci, பெ. (n.) 1. சோழநாட்டுப் பெண் (நன். 276, மயிலை);; woman of the {Chola} country. 2. சோழிய வேளாளர் பெண் (தஞ்சை.);; a woman of {Söliya-viola} caste. [சோழியன் → சோழிச்சி] |
சோழிப்பல் | சோழிப்பல் cōḻippal, பெ. (n.) பலகறை போன்ற பல cowry-like tooth. [சோழி + பல்] |
சோழியக்கடகம் | சோழியக்கடகம் cōḻiyaggaḍagam, பெ. (n.) 1. மண்ணள்ளுங் கூடைa large basket. [சோயியன் + கடகம்] |
சோழியக்காசு | சோழியக்காசு cōḻiyakkācu, பெ. (n.) 13ஆம் நூற்றாண்டில் வழங்கியதும் ஒரு பணத்தின் நூற்றிலொரு பகுதியுமான நாணயவகை (I.M.P.Sm.32);; an old coin of the 13th century, one-hundredth of a {passam.} மறுவ. சோழியன்காசு ம. சோழியர்காசு [சோழியன் + காசு] |
சோழியக்கூடை | சோழியக்கூடை cōḻiyakāṭai, பெ. (n.) சோழியக்கடகம் (யாழ்ப்.); பார்க்க;see {iliyak-kagagam.} [சோழியன் + கூடை] |
சோழியநாழி | சோழியநாழி cōḻiyanāḻi, பெ. (n.) நெல் அளக்கப் பயன்படும் நாழியின் பெயர்; a vessel to measure paddy etc. “நெல் சோழிய நாழியால், நெல் ஆழாக்கும் அட்டுவதாக” (தெ. க. தொ. 14, கல். 80);. [சோழியன் + நாழி] |
சோழியன் | சோழியன்1 cōḻiyaṉ, பெ. (n.) 1. சோழ நாட்டான் (தொல். சொல். 167);; man of the {Chóla} country. 2. பார்ப்பனர், வேளாளர் முதலியோருட் சில வகுப்பினர்க்கு வழங்கும் பெயர் (E.T.vi,391);; the title of certain sub-castes of Brahmins, {Vélälas,} etc. ம. சோழியன் [சோழம் → சோழியன்] |
சோழியன்காசு | சோழியன்காசு cōḻiyaṉkācu, பெ. (n.) சோழியக்காசு பார்க்க;see {Söliya-k-kāsu.} [சோழியன் + காசு] |
சோழியன்வெட்டு | சோழியன்வெட்டு cōḻiyaṉveṭṭu, பெ. (n.) பழைய காசு வகை (பணவிடு 134);; an ancient coin. [சோழியன் + வெட்டு] |
சோழியப்பல் | சோழியப்பல் cōḻiyappal, பெ. (n.) சோழிப்பல் (யாழ்ப்.); பார்க்க;see {lip-pal.} |
சோழியப்பாரை | சோழியப்பாரை cōḻiyappārai, பெ. (n.) மண்வெட்டி வகை (கட்டட நாமா. 43);; a kind of spade. [சோழியன் + பாரை] |
சோழியப்பிராமணன் | சோழியப்பிராமணன் cōḻiyappirāmaṇaṉ, பெ. (n.) முன்குடுமிப் பார்ப்பான்; a Brahmin sub-caste who have the hair-tuft in front. [சோழியன் + பிராமணன்] |
சோழியப்பை | சோழியப்பை cōḻiyappai, பெ. (n.) நாடோடிகள் பிச்சை ஏற்கும் பை (வின்.);; a large kind of bag used by mendicants. இந்தி, சோல்னா [தோள் + பை → தோளியப்பை → சோழியப் பை] தற்போது சோல்னாப்பை என்று இந்தியில் வழங்குகிறது. தொடக்கத்தில் துணியின் நான்கு முனைகளையும் முடிந்து தோளில் மாட்டி கொண்டனர். தற்போது பை தைத்து தோளில் மாட்டி கொண்டனர். குறி சொல்வோர் தோளில் மாட்டும் துணியில் குறி சொல்லப் பயன்படும் சோழிகளை எடுத்துச் செல்லப் பயன்பட்டதால் சோழிப்பை என்ற பெயர் சோழியப்பை என்றாயிற்று என்பாருமுளர். |
சோழியமணம் | சோழியமணம் cōḻiyamaṇam, பெ. (n.) 20,000 பாக்குக் கொண்ட அளவு (வின்.);; a term used for twenty thousand areca-nuts. [சோழம் + அமணம்] |
சோழியவெள்ளாளர் | சோழியவெள்ளாளர் cōḻiyaveḷḷāḷar, பெ. (n.) வேளாள வகையார்; a sub-caste of {Vēlālas of Chöla} country. [சோழியன் + வெள்ளாளர்] |
சோழியாவணம் | சோழியாவணம் cōḻiyāvaṇam, பெ. (n.) சோழியமணம் (வின்.); பார்க்க;see {iliya.maImam.} [சோழியமணம் → சோழியாவணம்] |
சோவன்னமில்பொரி | சோவன்னமில்பொரி cōvaṉṉamilpori, பெ. (n.) பாதானகருடன்; common snake dog-bane. |
சோவாசி | சோவாசி cōvāci, பெ. (n.) பயிரிடுங் குடியானவன்; cultivating tenant. [சோ + வாசி] |
சோவானை | சோவானை cōvāṉai, பெ. (n.) மங்களகரமான ஆரத்திப்பாட்டு; a benedictory song. சோவானை பாடி ஆரத்தி எடுத்தாள் (இ.வ.);. தெ. சோபாந;க. சோபாநே. |
சோவாரி | சோவாரி cōvāri, பெ. (n.) சோமாறி1 (இ.வ.); பார்க்க;see {šõmāri.} [சோமாறி + சோவாரி] |
சோவி | சோவி cōvi, பெ. (n.) பலகறை (இ.வ.);; cowry. [சோகி → சோவி] |
சோவெனல் | சோவெனல் cōveṉal, பெ. (n.) ஒலிக்குறிப்பு; onom. expr. of pattering, as of rain. சோவென்று மழை பெய்தது (உ.வ.); [சோ + எனல்] |
சோவென்று | சோவென்று cōveṉṟu, வி.எ. (adv.) வேகமாக இரைச்சலுடன்; in a downpour. மழசோ வென்று பெய்யத் தொடங்கியது. [சோ + என்று. சோ. ஒலிக்குறிப்பு] |
சோவை | சோவை cōvai, பெ. (n.) சோகை பார்க்க;see {šögai.} [சோகை → சோவை] |