தலைசொல் | பொருள் |
---|---|
சொ | சொ co, ஒகரம் ஏறிய ‘ச’கர உயிர்மெய் எழுத்து; the compound of ‘c’ and ‘o’, [ச் + ஒ] |
சொகுசு | சொகுசு sogusu, பெ. (n.) 1. அனைத்து ஏந்துகளும் நிறைந்தது, நேர்த்தி; refinement, neatness. அவன் சொகுசான வாழ்க்கைக்குப் பழகி விட்டான். 2. இதம்; luxury, சொகுசுப் பேருந்தில் நேற்றுதான் பயணித்தேன் (உ.வ.);. 3. சிறப்பு; fineness, as of work, superior quality. ம. சொகிசு;க., தெ., து. சொகசு [சொக்கு → சொகு → சொகுசு] |
சொகுசுக்காரன் | சொகுசுக்காரன் sogusuggāraṉ, பெ. (n.) பணச்செலவுமிக்க மிகுமகிழ் வாழ்க்கை வாழ்பவன்; person of delicate or fastidious taste; person given to luxurious living. சொகுசுக்காரனாய்ந் திரிந்ததால் இன்று தெருவில் நிற்கிறான் (உ.வ.);. க. சொகசுகாற [சொகுசு + காரன்] |
சொக்கக்கட்டிவெள்ளி | சொக்கக்கட்டிவெள்ளி cokkakkaṭṭiveḷḷi, பெ. (n.) தூய வெள்ளி; pure silver. [சொக்கம் + கட்டி + வெள்ளி] |
சொக்கக்கூத்து | சொக்கக்கூத்து cokkakāttu, பெ. (n.) ஒரு வகைக்கூத்து; a kind of dance. [சொக்கன் + கூத்து. சொக்கம் = நல்லாடல் (சுத்த நிருத்தம்); சொக்கசீயன் என்பது கோப்பெருஞ்சிங்கன் என்னும் பல்லவ மன்னனுக்குரிய சிறப்புப் பெயர்.] |
சொக்கச்சியன்கோல் | சொக்கச்சியன்கோல் cokkacciyaṉāl, பெ. (n.) தில்லைக்கோயிலின் நிலங்களை அளக்கப் பயன்பட்ட கோல்; the name of linear measure, used to measure the lands belonging to the temple at Chidambaram. “சொக்கச்சியன் கழுகு திருநந்தவனம் நிலம் அறுபத்து மூன்று மா முக்காணிக் கீழ் முக்காலும் சொக்கச்சியன் கோலால் அளந்த இடத்து” (தெ.க.தொ. 12, கல். 215);. [சொக்கச்சியன் → சொக்கச்சியன் +கோல்] |
சொக்கச்சியன்திருவாசல் | சொக்கச்சியன்திருவாசல் cokkacciyaṉtiruvācal, பெ. (n.) சிதம்பரம் திருக்கோயிலின் தெற்கு வாசலுக்கமைந்த பெயர் (தெ.க.தொ. 8, கல். 50);; the name given to the Southern entrance of the temple at Chidambaram. [சொக்கச்சியன் → சொக்கச்சியன் + திருவாசல்] |
சொக்கச்சீயன் | சொக்கச்சீயன் cokkaccīyaṉ, பெ. (n.) பல்லவ அரசர்க்குரிய சிறப்புப் பெயர்; Special title of Pallavä kings. [சொக்கன் (=சிவன்); + சீயன்] |
சொக்கட்டான் | சொக்கட்டான் cokkaṭṭāṉ, பெ.(n.) பல்லாங்குழி ஆட்டத்தின் பெயர். (வடஆ-வ);; a name of pallankuli. [சொக்கு-சொக்கட்டார்] சொக்கட்டான் cokkaṭṭāṉ, பெ. (n.) 1. உருட்டிப் போடும் கட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விளையாடும் தாய விளையாட்டு வகை; a game similar to backgammon. 2. சொக்கட்டான்சீலை,2 பார்க்க;see {Sokkattān-Silai.2} ம. சொக்கட்டான்;கெ. சொடகமு [சதுரம் என்பதைச் சவுக்கம், சதுக்கம் என்று கூறுவது உலகவழக்கு. சவுக்கம் + கட்டாம் → சவுக்கட்டாம் → சொக்கட்டாம் → சொக்கட்டான்] |
சொக்கட்டான்கவறு | சொக்கட்டான்கவறு cokkaṭṭāṉkavaṟu, பெ. (n.) சொக்கட்டான் ஆட்டத்தில் தாயங் குறிக்க உருட்டும் கட்டை; dice used in the game of {šokkaitām} மறுவ. ஆடுகல், தாயக்கட்டை [சொக்கட்டான் + கவறு] |
சொக்கட்டான்காய் | சொக்கட்டான்காய் cokkaṭṭāṉkāy, பெ. (n.) சொக்கட்டான் ஆட்டத்தில் பயன்படுத்தும் காய் (சங். அக.);; pieces used in the game of {šokkattām} மறுவ. சொக்கட்டான்கல். [சொக்கட்டான் + காய்] |
சொக்கட்டான்சீலை | சொக்கட்டான்சீலை cokkaṭṭāṉcīlai, பெ. (n.) 1. விளையாடுதற்கென்று சொக்கட்டான் கட்டங்கள் வரையப்பட்ட கிழிச்சீலை; chequered cloth in the form of a cross for playing {šokkațţān.} 2. ஒருவகைப் புடவை; a kind of saree, having square designs. [சொக்கட்டான் + சீலை] |
சொக்கட்டான்பந்தல் | சொக்கட்டான்பந்தல் cokkaṭṭāṉpandal, பெ. (n.) சொக்கட்டான் மணை போலமைந்த பந்தர் (யாழ்.அக.);; shed or pavilion in the form of a {Šokkastān} board. ம. சொக்கட்டா மண்டபம் [சொக்கட்டான் + பந்தல் – சொக்கட்டான் பந்தல் = சொக்கட்டான் மணை வடிவில் உள்ள பந்தல்] |
சொக்கட்டான்பாய்ச்சிகை | சொக்கட்டான்பாய்ச்சிகை coggaṭṭāṉpāyccigai, பெ. (n.) சொக்கட்டான்கவறு பார்க்க;see {Sokkastān-kayasu} [சொக்கட்டான் + பாய்ச்சிகை] |
சொக்கட்டான்மணை | சொக்கட்டான்மணை cokkaṭṭāṉmaṇai, பெ. (n.) சொக்கட்டான் ஆடும் பலகை (வின்.);; draught board for playing {Šokkastān,} [சொக்கட்டான் + மணை] |
சொக்கட்டான்வீடு | சொக்கட்டான்வீடு cokkaṭṭāṉvīṭu, பெ. (n.) சொக்கட்டான் கட்டங்கள்; chequers of {Šokkattān} board. [சொக்கட்டான் + வீடு] |
சொக்கட்டாய் | சொக்கட்டாய் cokkaṭṭāy, கு.வி.எ. (adv.) எளிதாக; easily, without much ado. அதைச் சொக்கட்டாய்த் தள்ளி விட்டான் (இ.வ.);. |
சொக்கதேவன் | சொக்கதேவன் cokkatēvaṉ, பெ. (n.) 1. கூகைபோல முகத்தை வீங்கச் செய்வதான பொன்னுக்கு வீங்கி என்னும் அம்மைக்கட்டு (யாழ்.அக.);; mumps. 2. கூகை; rock horned owl. செர்க்கு, சோ என்பன துயிலைக் குறிக்கும் சொற்கள். சோம்பல், மடியையும் குறிக்கும். கூகை பகலில் துயின்று கொண்டிருப்பதால் சொக்கதேவன் என்றழைக்கப்பட்டது. [சொக்கு + தேவன்] |
சொக்கத்தங்கம் | சொக்கத்தங்கம் cokkattaṅgam, பெ. (n.) தூய்மையான தங்கம்; pure gold. ‘பிள்ளையைச் சொக்கத்தங்கமே’ என்று கொஞ்சினாள். [சொக்கம்1 + தங்கம்] |
சொக்கத்தாண்டவம் | சொக்கத்தாண்டவம் cokkattāṇṭavam, பெ. (n.) நல்லாடல் (சுத்த நிருத்தம், ஆனந்தத் தாண்டவம்);; a kind of dance. “சொக்கன் சொக்கத் தாண்டவம் புரிந்தா னன்றே” (திருவாலவா. 5:5);. [சொக்கன் + தாண்டவம்] |
சொக்கநாதன் | சொக்கநாதன் cokkanātaṉ, பெ. (n.) மதுரையிற் கோயிற் கொண்ட சிவன்;{Sivan} at the shrine of Madurai. “மைதிகழுங் கண்டத்தன் சொக்கநாதன்” (திருவாலவா. 57: 21);. மறுவ. ஆலவாயன், நீலகண்டன். [சொக்கன்+ நாதன்] சொக்கு, சொக்கன் என்றால் அழகன் என்ற பொருள் உண்டு. எனவே ஆலவாயனை அழகன் என்ற பொருளில் சொக்கன் என்பர். |
சொக்கநாயகன் | சொக்கநாயகன் cogganāyagaṉ, பெ. (n.) சொக்கநாதன் பார்க்க;see {šokka-näidan.} “அரவணிச் சொக்கநாயக னாடலும்” (திருவிளை. விடையி. 5);. [சொக்கன் + நாயகன்] |
சொக்கனார்புல் | சொக்கனார்புல் cokkaṉārpul, பெ. (n.) புல்வகை; citro-nella grass, Andropogon nardus. [சொக்கனார் + புல்] |
சொக்கன் | சொக்கன்1 cokkaṉ, பெ. (n.) 1. அழகன்; handsome person. 2. சிவன்;{Sivan,} as beautiful. “சொக்க னென்னு ளிருக்கவே” (தேவா. 859, 11);. [சொக்கம் → சொக்கன்] சொக்கன் என்பது அழகன் என்று பொருள் படுமேனும், சிவனைக் குறிக்கும் போது அப்பொருள் படாது (மு.தா.142); மக்கட்பெயராக சொக்கன், சொக்கி, என உள்ளன. ஊர்ப்பெயராக சொக்கிக்குளம், சொக்கநாதபுரம் போன்று சில ஊர்ப் பெயர்கள் தமிழ்நாட்டில் உள்ளன. சொக்கலிங்கபுரம் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. சொக்கு என்ற சொல் வட இந்திய மொழிகளில் சோபா, சோபனா என்று மக்கட்பெயராக மாறுகிறது. ஆங்கிலம் போன்ற மேலை ஆரிய மொழிகளில் சோபியா (sophya, sophia); என்ற வடிவம் பெறுகின்றது. சொக்கன்2 cokkaṉ, பெ. (n.) வணிகனின் கையாள் (வின்.);; merchant’s attendant, carrying a bag. சொக்கன்3 cokkaṉ, பெ. (n.) குரங்கு (நாஞ்.);; monkey. ம. சொக்கன் சொக்கன்4 cokkaṉ, பெ. (n.) மிகுதியாக உண்போன்; one who indulges to excess in eating. சொக்கனுக்குச் சட்டியளவு (உ.வ.); (சா. அக.); சொக்கன்5 cokkaṉ, பெ. (n.) மூடன்; simpleton. |
சொக்கன்சம்பா | சொக்கன்சம்பா cokkaṉcambā, பெ. (n.) சம்பா நெல் வகை; a kind of {Šambápaddy.} “நேர் பெருகு சொக்கன் சம்பா நெல்லென்றும்” (நெல்விடு. 189);. [சொக்கன் + சம்பா] |
சொக்கப்பநாவலர் | சொக்கப்பநாவலர் cokkappanāvalar, பெ. (n.) தஞ்சைவாணன் கோவையுரையாசிரியர்; the commentator on {Tafjaivänan-kövai.} |
சொக்கப்பனை | சொக்கப்பனை1 cokkappaṉai, பெ. (n.) தாளிப்பனை; talipot. (சா.அக.);. ம. சொக்கப்பன சொக்கப்பனை2 cokkappaṉai, பெ. (n.) கார்த்திகைத் திருவிழாவில் கோயில்களுக்கு முன்பு எரிக்கும் பனையோலைக் கூடு; bonfire with palmyra leaves lit in front of temples in {Kārttigai} festival. “வானளாவு மோங்கு சொக்கப்பனை” (திருநெல். பு. தீபம். 15);. |
சொக்கப்பானை | சொக்கப்பானை cokkappāṉai, பெ. (n.) சொக்கப்பனை பார்க்க;see {sokka-p-parai} மறுவ. சொக்கப்பான், சொக்கப்பனை [சொக்கப்பனை → சொக்கப்பானை] |
சொக்கப்பான் | சொக்கப்பான் cokkappāṉ, பெ. (n.) சொக்கப்பனை பார்க்க;see {sokka-p-pagai} [சொக்கப்பனை → சொக்கப்பான்] |
சொக்கப்பான்கார்த்திகை | சொக்கப்பான்கார்த்திகை coggappāṉgārttigai, பெ. (n.) சொக்கப்பனை நடக்கும் திருக்கார்த்திகை விளக்கீடு (வின்.);; lamp lighting festival on the day of {Šokka-p-panai.} [சொக்கப்பான் + கார்த்திகை] |
சொக்கப்பையன் | சொக்கப்பையன் cokkappaiyaṉ, பெ. (n.) 1. வேலைக்காரச் சிறுவன் (வின்.);; errand boy, attendant. 2. அழகிய சிறுவன்; beautiful boy. மறுவ. சொக்கரா H., U., Gu, {chokrä} [சொக்கு + பையன்] சொக்கு என்ற சொல்லுக்கு மயங்க வைக்கும் அழகு என்ற பொருளும் உண்டு. அதனடிப்படையில் சொக்கன், சொக்கி என்னும் இயற்பெயர்கள் உண்டாகின. |
சொக்கம் | சொக்கம் cokkam, பெ.(n.) பாடலின்றி, வெறும் முழக்குதலுக்கு மட்டும் ஆடும் ஆடல், dance Without song. [சொக்கு-சொக்கம்] ; சொக்கம்1 cokkam, பெ. (n.) 1. தூய்மை; genuineness, purity, excellence, as of gold, silver. சொக்கத்தங்கம் (உ.வ.);. 2. அழகு (பிங்.);; beauty. 3. சொக்கத்தாண்டவம் பார்க்க;see {šokka-t-tāņdavam.} ‘சொக்க மவினய நாடகம்’ (சிலப். பதி. 73, உரை.);. 4. கெம்பு (சங்.அக.);; ruby. 5. சிவப்பு; red. [சொள் → (சொகு); → சொக்கம்] சொக்கம்2 cokkam, பெ. (n.) களவு (யாழ்ப்.);; theft. [சொக்கு1 → சொக்கம்] |
சொக்கயம் | சொக்கயம் cokkayam, பெ. (n.) பட்டாணி; pea (சா.அக.);. |
சொக்கரை | சொக்கரை cokkarai, பெ. (n.) சொக்கறை (வின்.); பார்க்க;see {Sokkarai.} |
சொக்கறை | சொக்கறை cokkaṟai, பெ. (n.) 1. கன்னம் முதலியவற்றில் விழுங்குழி; dimple in cheek; bend in walls, baskets, etc., flaw in the edge of nails. 2. தோட்டம் முதலியவற்றின் சிறிய அடைப்பு; small enclosure or partition, as in a garden, a house. 3. மதில் முதலிய வற்றிலுள்ள தொண்டு; breach orgapina wall, hedge or mound. [சொக்கு5 + அறை] |
சொக்கலா | சொக்கலா cokkalā, பெ. (n.) மூக்கரட்டை, spreading hogweed (சா.அக.); |
சொக்கலாதி | சொக்கலாதி cokkalāti, பெ. (n.) ஒளிப்புல்; a luminous grass (சா.அக.);. [சொக்கம் → சொக்கவாதி.] |
சொக்கலி | சொக்கலி cokkali, பெ. (n.) 1. சிறுபசளை; small Indian purslane. 2. சடாமாஞ்சில்; valarian root. 3. மூங்கில்; bamboo. 4. மூக்கிலிப்பூடு; a plant-portulaca meridiana. |
சொக்கலிங்கம் | சொக்கலிங்கம் cokkaliṅgam, பெ. (n.) சொக்கநாதன் பார்க்க;see {sokka-nadam.} “சொக்கலிங்க முண்டேதுணை” (பெருந்.தொ. 1576);. [சொக்கு + இலிங்கம்] அழகிய ஆடை அணிந்தவன் (புலித்தோல்); என்ற பொருளில் சிவபெருமானுக்குச் சொக்கலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டது. |
சொக்கலை | சொக்கலை cokkalai, பெ. (n.) ஐந்திலைகளைக் கொண்ட ஒருவகை மரம்; roxburgh’s five leaved tree of beauty. |
சொக்களி | சொக்களி cokkaḷi, பெ. (n.) பயனற்ற மறுப்புரை கூறிப் பகடி பண்ணுகை; ridicule by raising frivolous objections. சொக்களி பேசுவதைத் தவிரக் காரியம் முடிக்க உன்னாலாகாது (நாஞ்.);. [சொல் + கனி] |
சொக்கவெள்ளி | சொக்கவெள்ளி cokkaveḷḷi, பெ. (n.) 1. சொக்கக்கட்டி வெள்ளி (உ.வ.); பார்க்க;see {šokka-k-kațți-veļļi.} “சொக்கவெள்ளிப் பாற்குடமோ அமுதவூற்றோ (பாவேந்தர்.); 2. விடிவெள்ளி; morning star. சொக்கவெள்ளி தோன்றிவிட்டதாற் புறப்படுவோம் (நாஞ்.);. [சொக்கம் + வெள்ளி] |
சொக்கா | சொக்கா cokkā, பெ. (n.) சொக்காய் பார்க்க;see {sokkay.} “சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காவிலை” (அருட்பா. 6, வெறிவிவக்கு. 2);. தெ. த்சொக்கா அழகிய ஆடை என்ற பொருளுள்ள இச் சொல் உருது போன்ற பிறமொழிகளுக்கும் பரவியுள்ளது. பருத்தி, பஞ்சு, நூல், சாயமிடல், நெசவு ஆகியன தென்னிந்தியா விற்கே உரித்ததாக இருந்தமை மேலே கூறிய கருத்திற்கு அரண் செய்யும். இது தமிழ்ச் சொல்லே ஆகும். [சொக்கம்1 → சொக்கா] |
சொக்காக்கீரை | சொக்காக்கீரை cokkākārai, பெ. (n.) கீரைவகை (வின்.);; a species of greens. [சொக்கு + கீரை] |
சொக்கானை | சொக்கானை cokkāṉai, பெ.(n.) முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Madukulattür Taluk. [சொக்கு மயக்கம், மதம்)+யானை] |
சொக்கான் | சொக்கான் cokkāṉ, பெ. (n.) பழைய அரிசியிலுள்ள சிவப்பு வண்டு (இ.வ.);. ricebug. [சே → சேக்கு → சொக்கு → சொக்கான்] சே = செந்நிறம். சிவப்பு நிறமுள்ள சிறுவண்டு சொக்கான் எனப்பட்டது. |
சொக்காய் | சொக்காய் cokkāy, பெ. (n.) சட்டை (ஈடு, 10. 6: 1, ஜீ);; coat, shirt, jacket. மறுவ. கைச்சட்டை [சொக்கம்1 → சொக்காய்] |
சொக்காரன் | சொக்காரன்1 cokkāraṉ, பெ. (n.) ஓரினத்துப் பிறந்த உரிமைப் பங்காளி (தாயாதி);; agnate. மறுவ. தாயாதிக்காரன் [சொந்தம் → சொம் + காரன்] சொக்காரன்2 cokkāraṉ, பெ. (n.) சகலன் (இ.வ.);; wife’s sister’s husband. மறுவ. சட்டகர், கசலப்பாடி [சொந்தக்காரன் → சொக்காரன்] |
சொக்காரி | சொக்காரி cokkāri, பெ. (n.) சொத்திற்கு உரிமைபூண்டவன் (இ.வ.);; female agnate. [சொக்காரன் → சொக்காரி] |
சொக்காலி | சொக்காலி cokkāli, பெ. (n.) சொக்காளி (வின்.); பார்க்க;see {Šokkāli} |
சொக்காளி | சொக்காளி cokkāḷi, பெ. (n.) சிறுபூனை (யாழ்.அக.);; a common way-side weed. |
சொக்கிடல் | சொக்கிடல் cokkiḍal, பெ. (n.) நோட்டமிடுகை; watching. ‘சொக்கிட்ட ரமனை புக்கு” (பட்டினத்துப்பிள்ளை);, [சொக்கு+இடு] |
சொக்கிடு-தல் | சொக்கிடு-தல் cokkiḍudal, 18 செ.குன்றாவி. (v.t.) மயக்கப்பொடி தூவுதல்; to sprinkle magic powder for inducing stupor. “சொக்கிடுந் தொழில் வல்ல துரிசனும்” (சிவதரு. பாவ. 69);. தெ. சொக்கிடு [சொக்கு + இடு-.] |
சொக்கு | சொக்கு1 cokkudal, 5 செ.கு.வி. (v.i.) 1. அழகு, திறமை முதலியவற்றால் தன்வயம் இழத்தல்; மயங்குதல், to become languid, sleepy; to be stupefied. அவளின் அழகிலும் ஒப்பனையிலும் சொக்கிநின்றான். 2. மனம் பிறர்வயமாதல்; to be enchanted, fascinated, captivated, subjected to the will of another. 3. பிறரை மயங்குமாறு ஒழுகுதல் (இ.வ.);; to behave in a captivating manner. 4. தூக்கத்தால் கண்கள் செருகுதல்; to be heavy with sleep, எனக்குத் தூக்கம் சொக்குகிறது. க. சொக்கு (sokku);;தெ. சொக்கு [சோ → சொக்கு-.] சொக்கு2 cokkudal, 5 செ.கு.வி. (v.i.) குழிவு அல்லது வளைவு விழுதல்; to be pressed in, bent in, as the surface of a wall, the edge of a mat, a basket. சொக்கு3 cokku, பெ. (n.) 1. மயக்கம்; supor, torpor, dullness, as produced by enchantment or drug. ”சொக்குப் பொட்டெத்திக் கைப்பொருள்” (திருப்பு.);. 2. வயப்படுகை; fascination, captivation. ம. சொக்கு; க. சொக்கு;தெ. சொக்கு. [சோ → சொக்கு] சொக்கு4 cokku, பெ. (n.) தூய்மை; purity. 2. அழகு; beauty. 3. பொன் (சங்.அக.);; gold. சொக்கத்தங்கம் (உ.வ.); 4. சொக்கநாதன் பார்க்க;see {sokka-ாக்dan.} “மன்றினு ளாடுஞ் சொக்கைப் பாடினான்” (திருவாலவா. 55:17);. ம. சொக்கு [சொக்கம்1 → சொக்கு] சொக்கு5 cokku, பெ. (n.) கன்னக் கதுப்பு (யாழ்ப்.);, cheek. E. cheek சொக்கு6 cokku, பெ. (n.) கள்ளுண்ணுதற் கேதுவாய சிறிய மட்பாண்டம்; small mud vessel used for drinking toddy. |
சொக்குக்கிள்ளு-தல் | சொக்குக்கிள்ளு-தல் cokkukkiḷḷudal, 5 செ.கு.வி. (v.i.) விளையாட்டாகவேனும், சினத்தினா லேனுங் கன்னத்தை நிமிண்டுதல் (யாழ்ப்.);; to pinch, draw out or twist the cheeks, eitherfor sport or in anger. [சொக்கு + கிள்ளு-.] |
சொக்குச்செட்டி | சொக்குச்செட்டி cokkucceṭṭi, பெ. (n.) கடுஞ்செட்டுள்ளவன், சிக்கனக்காரன் (கவிகுஞ். 13);; miser. [சுக்குச்செட்டி → சொக்குச்செட்டி] |
சொக்குப்பாக்கு | சொக்குப்பாக்கு cokkuppākku, பெ. (n.) மயக்கத்தையுண்டாக்கும் புழுக்கள் பாய்ந்த பாக்கு; worm-eaten arecanut causing choke or loss of consciousness when chewed (சா.அக.);. [சொக்கு + பாக்கு] |
சொக்குப்பிடுங்-தல் | சொக்குப்பிடுங்-தல் cokkuppiḍuṅtal, 5 செ.கு.வி. (v.i.) சொக்குக்கிள்ளு- (யாழ்ப்.); பார்க்க;see {Sokku-k-killu} [சொக்கு + பிடுங்கு-.] |
சொக்குப்பொடி | சொக்குப்பொடி cokkuppoḍi, பெ. (n.) பிறரை மயக்கித் தன்வயப்படுத்துதற்குப் பயன்படும் மாயப்பொடி; a magic powder causing stupor lowe-powder. “சொக்குப்பொடி யெடுத்துத் தூற்றி யுடைமையெல்லாம்… சுழற்றியே” (பணிவிடு. 337);. ம. சொக்குபொடி;தெ. த்சொக்குபொடி. [சொக்கு + பொடி] |
சொக்குமாந்தடி | சொக்குமாந்தடி cokkumāndaḍi, பெ. (n.) சுக்குமாந்தடி. (இ.வ.);; magic wand. [சுக்குமாந்தடி → சொக்குமாந்தடி.] |
சொக்குளிசம் | சொக்குளிசம் sokkuḷisam, பெ. (n.) கிலுகிலுப்பை; nattle-wort (சா.அக.);. |
சொக்குவித்தை | சொக்குவித்தை cokkuvittai, பெ. (n.) மயக்குவித்தை (யாழ்.அக.);; art of causing sleep or stupefaction. மறுவ. கண்கட்டி வித்தை [சொக்கு + வித்தை] |
சொக்கெண்ணெய் | சொக்கெண்ணெய் cokkeṇīey, பெ. (n.) நீராடுதற்கு முன் உடம்பில் அரைகுறையாய்த் தேய்த்துக் கொண்ட எண்ணெய் (உ.வ.);; oil rubbed partially over the body before bathing. [சொக்கு + எண்ணெய்] |
சொங்காரன் | சொங்காரன் coṅgāraṉ, பெ. (n.) சொக்காரன்1 (வின்); பார்க்க;see {secokian’} |
சொங்காரிகம் | சொங்காரிகம் coṅgārigam, பெ. (n.) பப்பாளி; common papaya tree. |
சொங்கி | சொங்கி coṅgi, பெ. (n.) உள்ளீடு இல்லாமை; hollow. சொங்கிப்பயல், சொங்கித்தனம் (உ.வ.);. [சொங்கு → சொங்கி] சோளத்தின் மணியை ஒட்டிக் கொண்டிருக்கும் மூடியைச் சொங்கு என்பது வழக்கு. சோளம் நீக்கிய சொங்கு உள்ளீடின்மையால் சோற்றுக்குப் பயன்படாது. சிலரை அவரது சோம்பல், செயலற்ற தன்மை, பயனின்மை ஆகியவை கருதிச் சொங்கு என்பது வழக்கு. பேச்சு வழக்கில் இது சொங்கி ஆயிற்று. (வழ.சொ. அ.); |
சொங்கு | சொங்கு1 coṅgu, பெ. (n.) குற்றம்; fault, blemish. ” சொங்கில்லையாக” (திருமந். 558);. [சொக்கு → சொங்கு] சொங்கு2 coṅgu, பெ. (n.) குஞ்சம்; excess over the requirement. வேட்டியைச் சொங்கு வைத்துக் கட்டிக் கொண்டான். [சும் → சொம் → சொங்கு] சொங்கு3 coṅgu, பெ. (n.) சோளத்தின் உள்ளீடற்ற வெளிக்கூடு, உமி; the outer cover of the {cõlam.} [சும் → சொங்கு] |
சொச்சமுங்காசும் | சொச்சமுங்காசும் coccamuṅgācum, பெ. (n.) வட்டியும் முதலும்; principal and interest there on. சொச்சமுங்காசுங் கீழே வை (வின்.);. [சொச்சம்1 + உம் + காசு + உம்] |
சொச்சம் | சொச்சம்1 coccam, பெ. (n.) 1. மிச்சம்; to deficiency, balance, arrears. செலவு போக சொச்சம் எங்கே. 2. சில்வானம்; odd, a term appended to number, sum, weight, etc. “ஆயிரத்து சொச்ச நோய்களும்” (தைலவ. தைல. 97);. 3. வட்டி; interest on prinicipal. சொச்சத்துக்குப் பணங் கொடுத்தான் (இ.வ.);. 4. கழித்தல் வகுத்தல்களில் வரும் மீதி; remainder, as in subtraction, division. தெ. சொச்செமு [மீதி → மிச்சம் → சொச்சம்] சொச்சம்2 coccam, பெ. (n.) தூய்மை; purity. “சொச்சத் தாதையர் தாமெனவே” (திருப்பு. 573);. [சொக்கம்1 → சொச்சம்] |
சொடகு | சொடகு coḍagu, பெ. (n.) சொடக்கு,1,2 பார்க்க;see {Sogakku,12} [சொடக்கு → சொடகு] |
சொடக்கு | சொடக்கு1 coḍakkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நெட்டி வாங்குதல்; to crack as the joints, knuckles. 2. கைநொடித்தல்; to snap, as the fingers. 3. பேன் நசுக்குதல்; to crack, as lice. [கடக்கு → சொடக்கு-.] சொடக்கு2 coḍakku, பெ. (n.) 1. கை, கால் முதலியவற்றை நீட்டி உதறி அல்லது விரல்களை நெறித்து எழுப்பும் சடசட ஒலி, நெட்டி; cracking the fingers, knuckles, etc. விரல்களைச் சொடக்கு எடுத்தான். 2. சோம்பற் றன்மை (வின்.);; laziness, idleness. 3. கைநொடி (இ.வ.);; snapping the fingers. 4. கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டியெழுப்பும் ஒலி; கை நொடிப் பொழுது; time taken to snap one’s fingers, moment. ஒரு சொடக்கில் வருகிறேன். ம. சொடக்கு [சுடக்கு → சொடக்கு.] சொடக்கு3 coḍakku, பெ. (n.) 1. துளைக்கருவி (புதுவை.);; wind instrument 2. கிலுகிலுப்பை (மலை.);; rattlewort. |
சொடக்குப்போடும்நேரம் | சொடக்குப்போடும்நேரம் coḍakkuppōḍumnēram, பெ. (n.) 1. கைநொடிப் பொழுது; ஒரு மாத்திரை அளவு நேரம்; one second. 2. விரைவு; quickness. சொடக்குப் போடும் நேரத்தில் அவ்வேலையை அவன் முடித்து விட்டான். (உ.வ.);. [சொடக்கு + போடும் + நேரம்] |
சொடக்குவாங்கு-தல் | சொடக்குவாங்கு-தல் coḍakkuvāṅgudal, 5 செ.குன்றாவி. (v.t.) சொடக்கெடு-த்தல் பார்க்க;see {Sogakkedu} [சொடக்கு + வாங்கு] |
சொடக்கெடு-த்தல் | சொடக்கெடு-த்தல் coḍakkeḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) நெட்டி வாங்குதல்; to crack as the joints, knuckles; to stretch oneself. [சொடக்கு + எடு-.] |
சொடக்கெடுத்தாற்போலிரு-த்தல் | சொடக்கெடுத்தாற்போலிரு-த்தல் coḍakkeḍuttāṟpōliruttal, 3 செ.கு.வி. (v.i.) தொந்தரவு நீங்கியிருத்தல் (இ..வ..);; to feel easy; to be rid of uncomfortable elements. [சொடக்கு + எடுத்தால் + போல் + இரு-.] |
சொடக்கெனல் | சொடக்கெனல் coḍakkeṉal, பெ. (n.) ஓர் ஒலிக்குறிப்பு; onom. expr. of cracking noise. கம்பைச் சொடக்கென முறித்தான் (உ.வ.);. [சொடக்கு + எனல்] |
சொடி | சொடி1 coḍidal, 2 .செ.கு.வி. (v.i.) 1. வெயிலில் வாடுதல் (இ.வ.);; to be burnt by the sun, as crops; to be blighted. மழையின்றி கடலைக்கொடி சொடிந்து போயிற்று. 2. குழைதல்; to shrink, as the abdomen for want of food. வயிறு சொடிய (வின்.);. க. சடு [ஈடு → சொடு → சொடி → சொடி-.] சொடி2 coḍittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. குறைவாய் விற்றல் (யாழ்ப்);; to sell dear. 2. வற்றுதல்; to grow dry. [சுடு → சொடு → சொடி-.] சொடி3 coḍi, பெ. (n.) சுறுசுறுப்பு (இ.வ.);; active, temperament and habit. ம. சொடி |
சொடிக்கு-தல் | சொடிக்கு-தல் coḍikkudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. சாட்டை முதலியவற்றைச் சுண்டியிழுத்தல்; give a sharp, snapping, sound. சாட்டையச் சொடிக்கியதும் மாடு வேகமாக ஓடியது. 2. சொடக்குப்போடுதல்; Snap. கை சொடிக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. [கடக்கு → சொடுக்கு] |
சொடுகு | சொடுகு coḍugu, பெ. (n.) குழிவு; dent. [சொட்டை → சொடுகு.] |
சொடுக்கு | சொடுக்கு coḍukku, பெ.(n.) கரண்டி; a laddle. [சொடு-சொடுக்கு] |
சொடுக்கு வாதம் | சொடுக்கு வாதம் coḍukkuvātam, பெ.(n.) மாடுகளின் காலைச் சொடுக்கி இழுக்கும் ஊதை (வாதம்);; a disease of cows. [சொடுக்கு+வாதம்] |
சொடுக்குச்சொடுக்கெனல் | சொடுக்குச்சொடுக்கெனல் coḍukkuccoḍukkeṉal, பெ. (n.) 1. ஒர் அடுக்கொலிக் குறிப்பு; onom. expr. signifying repeated clacking noise, as of wooden sandals in walking. 2. விரைவுக்குறிப்பு; quick action. தவறிழைத்த மாணவனை ஆசிரியர் சொடுக்குச்சொடுக்கென பிரம்பால் விளாசினார் (உ.வ.);. [சொடுக்கு + சொடுக்கு + எனல்] |
சொடுக்குப்போடு-தல் | சொடுக்குப்போடு-தல் coḍukkuppōḍudal, செ.குவி. (v.i.) விரல் ஒட்டி ஓசை எழுப்புதல்; to make a noise by eroisting two fingers suddenly. [சொடுக்கு +போடு [சொடுக்கு-ஒலிக்குறிப்பு]] |
சொடுக்கெனல்_ | சொடுக்கெனல்_ coḍukkeṉal, பெ. (n.) பிரம்பாலடிக்கும் பொழுதும் சாட்டையால் வீசும்பொழுதும் எழும் ஒலிக்குறிப்பு (உ.வ.);; onom. Expr. of sharp sound, as of a stroke with a cane or a smack with a whip. [சொடுக்கு + எனல்] |
சொடுதலை | சொடுதலை coḍudalai, பெ. (n.) வாயகன்ற ஏன வகை (சங்.அக.);; a cylindrical vessel with open mouth. [சோடு + தவலை – சோடுதவலை → சொடுதவலை → சொடுதலை] |
சொட்டச்சொட்ட | சொட்டச்சொட்ட coṭṭaccoṭṭa, வி.எ. (adv.) நீர் வழிய வழிய; drenched, soaked. மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே வந்தாள் (உ.வ.);. [சொட்ட + சொட்ட.] |
சொட்டன் | சொட்டன் coṭṭaṉ, பெ. (n.) குற்றமுள்ளவன்; guilty person. “சொட்டனுக்கு நெஞ்சு சுருக்கென்னும்” (விறலிவிடு. 259.);. [சொட்டு5 + சொட்டன்] |
சொட்டவாளை | சொட்டவாளை coṭṭavāḷai, பெ.(n.) வாளைமீன் வகையுள் ஒன்று; thread, gim bream, [சொட்டை+வாளை] [P] |
சொட்டிக்கட்டை | சொட்டிக்கட்டை coṭṭikkaṭṭai, பெ.(n) வில்லுப் பாட்டில் குடத்தின் கழுத்துப் பகுதிக்குக் கீழே தட்டி, ஒலியெழுப்ப உதவும் மரத்துண்டு; a wooden piece used as a tool infolklore. [சொட்டு-சொட்டி+கட்டை] |
சொட்டு | சொட்டு1 coṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) துளித்தல்; to fall in drops, drizzle. “தேன் சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை” (தேவா. 586. 1);. வியர்வை சொட்ட ஓடி வந்தான். ம. சொட்டுக; க. தொட்டு, தடக்கனெ, தொடக்கனெ; தெ. தொட்ட; து. தடகு; கோத. சொட்; துட. ச்விட்;பட. சொட்டு. [கல் (குத்தற் கருத்து வேர்); → சுள் → சுர் → கரு → சுறு → (சுற்று → சுத்து → கத்தி = குத்துவது போல் தட்டும் சிறு சம்மட்டி. சுத்து → சொத்து → சொட்டு → சொட்டு-தல் = தட்டுதல், தட்டுதல் போல் துளி ஒன்றில் விழுதல்] சொட்டு2 coṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. கொத்துதல்; to peck as a crow . 2. சூழ்ச்சியால் கவர்தல்; to snatch away, misappropriate secretly and slowly. 3. ஏமாற்றுதல் (வஞ்சித்தல்);; to cheat, circumvent. ம. சொட்டுக [சொல் → சொள் → சொட்டு-.] சொட்டு3 coṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. குட்டுதல் (உ.வ.);; to strike with knuckles. 2. பால் கறத்தற்கு ஆட்டு மடியைத் தட்டுதல் (வின்.);; to tap gently the udder of a goat for inducing freeflow of milk. 3. அடித்தல் (இ.வ.);; to beat, hit. ம. சொட்டுக;தெ. சொட்டு [சொட்டு1 → சொட்டு] சொட்டு4 coṭṭu, பெ. (n.) 1. சிறு உருண்டை வடிவ சொட்டுந்துளி; drop. ஒரு சொட்டு நெய். 2. துண்டு; small, piece, slice. தேங்காய்ச் சொட்டு (யாழ்ப்.);. க. சொட்டு [சொட்டு1 → சொட்டு] சொட்டு5 coṭṭu, பெ. (n.) 1. குட்டு; cuff, knock on the head. 2. குற்றங்குறை; defect, blemish, stigma. 3. குற்றத்தை வெளிப்படக் கூறாது குறிப்பாற் கூறும் பேச்சு; disparaging remark conveyed through a hint, insinuation. அவன் சொட்டு வைத்துப் பேசுகிறான். 4. பாழ் (கன்னம்); (இ.வ.);; cipher. 5. வழுக்கை; baldness. ம. சொட்டு; க. சொட்ட; தெ. சொட்ட;து. சொண்ட், சோண்ட், சோண்டு. [சுல் (துளைத்தல் கருத்து); → சொல் → சொள் → சொண்டு → சொட்டு] |
சொட்டுச்சொட்டாக | சொட்டுச்சொட்டாக coṭṭuccoṭṭāka, வி.அ. (adv.) துளித்துளியாக; drop by drop. மழை சொட்டுச் சொட்டாகப் பெய்தது. [சொட்டு → சொட்டு + ஆக.] |
சொட்டுச்சொட்டெனல் | சொட்டுச்சொட்டெனல் coṭṭuccoṭṭeṉal, பெ. (n.) துளித்தற்குறிப்பு; expr. signifying dripping, drizzling. “சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க” (திவ். பெரியாழ். 1. 9:1);. [சொட்டு1 + சொட்டு + எனல்] |
சொட்டுச்சொல் | சொட்டுச்சொல் coṭṭuccol, பெ. (n.) சொட்டைச் சொல் (உ.வ.); பார்க்க;see {Sottai-c-col} [சொட்டு5 + சொல்] |
சொட்டுத்தண்டம் | சொட்டுத்தண்டம் coṭṭuttaṇṭam, பெ. (n.) தனக்கு விருப்பமின்றிப் பிறர்க்காகக் கொடுத்த பொருள் (யாழ்ப்.);; unwilling contribution made through another’s influence. [சொட்டு + தண்டம்] |
சொட்டுப்பால் | சொட்டுப்பால் coṭṭuppāl, பெ. (n.) 1. கெட்டியான தேங்காய்ப் பால்;பால், juice extracted from coconut kernel. 2. நீர் சேர்க்காத ஆவின் பால்; cow’s milk without adding water. [சொட்டு + பால்] |
சொட்டுப்போடு-தல் | சொட்டுப்போடு-தல் coṭṭuppōṭudal, 20 செ.கு.வி. (v.i.) 1.அடிகொடுத்தல் (வின்.);; to give a slap. 2. குறைகூறுதல் (வின்.);; to speak disparagingly of one’s character. 3. தவறுதல்; to fail, as in examination. அவன் தேர்வில் சொட்டுப் போட்டுவிட்டான். [சொட்டு5 + போடு-.] |
சொட்டுமருந்து | சொட்டுமருந்து coṭṭumarundu, பெ. (n.) இளம்பிள்ளைவாத நோய் தாக்காமல் இருப்பதற்காக, குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்திற்குப் பின் 6 திங்களுக்கொரு நாள் மேனி ஐந்து ஆண்டுகள், குழந்தையின் வாயில் சொட்டு சொட்டாக ஊற்றப்படும் மருந்து; polio drops. 2. கண், காது, மூக்கு, வாய் ஆகியவற்றில் சொட்டுச் சொட்டாக விடப்படும் மருந்து; medicinal drops. [சொட்டு1 + மருந்து] |
சொட்டுயநீர்ப்பாசனம் | சொட்டுயநீர்ப்பாசனம் coṭṭuyanīrppācaṉam, பெ. (n.) குழாய்களின் வழியே நீரைச் செலுத்தி, மரம் செடி கொடிகளின் வேர்ப் பகுதியில் நீர் சொட்டிக் கொண்டிருக்கும் வகயில் அமந்த பாசனமுறை; drip irrigation. [சொட்டு1 + நீர் + பாசனம்] |
சொட்டுவை-த்தல் | சொட்டுவை-த்தல் coṭṭuvaittal, 4 செ.கு.வி. (v.i.) 1. குட்டுதல்; to give a hit with knuckles. 2. இகழ்ச்சிக்கு ஆளாகுதல்; to cast a slur. அவன்மேல் சொட்டுவைத்துப் பேசினான் (இ.வ.); [சொட்டு5 + வை-.] |
சொட்டை | சொட்டை1 coṭṭai, பெ. (n.) பார்ப்பனரது பழங்குடிகளுள் ஒன்று; an ancient Brahmin family. “இராயூர் சொட்டை கோவிந்த பட்டரும்” (தெ.க.தொ. 3);. சொட்டை2 coṭṭai, பெ. (n.) 1. சொட்டைவாள் பார்க்க;see {Sottai-vă1.} “சொட்டையாலே . . . நாவை விரைவொடு மரிந்து” (திருவாலவா. 35:22);. 2. வளைதடி (வின்.);; crooked club. 3. வளைவு (வின்.);; crookedness, bend, as in the sheath of a sword. 4. சுருக்கு முதலியவற்றை மாட்டுதற் கிடமானது (நாஞ்.);; a knob-like contrivance for hanging anything. ம. சொட்ட [சொட்டு5 → சொட்டை = சொத்தை, குற்றம்] சொட்டை3 coṭṭai, பெ. (n.) 1. சொட்டைச்சொல் பார்க்க;see {Sostaf-c-col.} 2. குழிவு; dent. அவன் கன்னத்தில் சொட்டை விழுந்திருக்கிறது. (இ.வ.);. 3. பள்ளம் (வின்.);; excavation, furrow, cavity. 4. தலைவழுக்க; baldness in spots due to disease or old age. 5. தலைப்பொடுகு (உ.வ.);; dandruff. 6. சொற்சித்திரம் (யாழ்ப்.);; pun quibble, play on words. ம. சொட்ட, தெ. சொட்டா [சொட்டு → சொட்டை = தட்டுவதால் உண்டாகும் தட்டை, மொட்டை, பள்ளம் வழுக்கை. வழுக்கைக் குற்றம். ஒ.நோ. தட்டு → தட்டை; பட்டு → பட்டை] |
சொட்டைக்கத்தி | சொட்டைக்கத்தி coṭṭaikkatti, பெ. (n.) வளைந்த கத்தி; crooked or curved knife. சொட்டைக் கத்தியால் வெண்ணெய் கூட வெட்ட முடியாது (உ.வ.);. [சொட்டை + கத்தி] |
சொட்டைக்காரன் | சொட்டைக்காரன் coṭṭaikkāraṉ, பெ. (n.) வேடிக்கையாக பேசுகிறவன் (யாழ்ப்.);; punster, quibbler. [சொட்டை + காரன்] |
சொட்டைசொள்ளை | சொட்டைசொள்ளை soṭṭaisoḷḷai, பெ. (n.) குற்றங்குறை (நெல்லை.);; flaw, defect. [சொட்டை + சொள்ளை] |
சொட்டைச்சொல் | சொட்டைச்சொல் coṭṭaiccol, பெ. (n.) 1. பழிச்சொல் (உ.வ.);; stigma. 2. எள்ளல் (பரிகாசம்); (யாழ்ப்.);; ridicule. [சொட்டை + சொல்] |
சொட்டைத்தலை | சொட்டைத்தலை coṭṭaittalai, பெ. (n.) வழுக்கை விழுந்த தலை; baldness in spots, due to disease. ம. சொட்டித்தல [சொட்டை + தலை] |
சொட்டையன் | சொட்டையன் coṭṭaiyaṉ, பெ. (n.) சொட்டைக்காரன் (யாழ்ப்.); பார்க்க;see {attai. k-kāгад.} [சொட்டை → சொட்டையன்] |
சொட்டையாளன் | சொட்டையாளன் coṭṭaiyāḷaṉ, பெ. (n.) படை வீரன்; Soldier, warrior. ‘சொட்டையாளர் படை தெரிய’ (பதிற்றுப். 67:5, உரை.);. [சொட்டை + ஆளன். ஆள் → ஆளன்] |
சொட்டைவாள | சொட்டைவாள1 coṭṭaivāḷa, பெ. (n.) 1. இரண்டடிக்கு மேற்பட்ட நீளமுடையதும் நன்னீரில் வாழ்வதும் வெண்ணிறமுள்ளது மான வாளமீன் வகை; fresh-water fish, silvery, attaining more than 2 ft. in length. 2. ஒன்றரையடி நீளமுள்ளதும் நன்னீரில் வாழ்வதும் வெண்ணிறமுள்ளதுமான வாளை வகை; butter-fish, fresh water-fish, silvery shot with purple attaining 1 ½ ft. in length. 3. பூரான் வக (நாஞ்.);; a species of centipede. [சொட்டை + வாளை] |
சொட்டைவாளைக்குட்டி | சொட்டைவாளைக்குட்டி coṭṭaivāḷaikkuṭṭi, பெ. (n.) வாளை மீனைப் போல் தடித்த தேகமுள்ள இளைஞன்; said of a young lad with a robust and symmetrical body (சா.அக.);. [சொட்டை + வாளை + குட்டி] |
சொட்டைவாள் | சொட்டைவாள் coṭṭaivāḷ, பெ. (n.) வளந்த வாள் வகை; a kind of crooked sword. “சொட்டைவாள் பரிசை” (பாரத. கிருட்டிண. 101);. [சொட்டை + வாள்] |
சொட்டைவிழு-தல் | சொட்டைவிழு-தல் coṭṭaiviḻudal, 2 செ.கு.வி. (v.i.) 1. தலையில் வழுக்கை உண்டாதல்; to become bald, as the head. தலையெல்லாம் சொட்டை விழுந்துவிட்டது. 2. அதுங்கிப் போதல்; to be dented, marked with dents, as a vessel. ஏளம் சொட்டை விழுந்திருக்கிறது. [சொட்டை + விழு-.] |
சொட்மூத்திரம் | சொட்மூத்திரம் coṭmūttiram, பெ. (n.) ஒழுக்கு மூத்திர நோய்; strangury. [சொட்டு1 + மூத்திரம்] நீர்க்கடுப்பு நோயால் இது நேரும். அதிகப் படியான தண்ணீர் அருந்துவதாலும், எலுமிச்சை, ஆரஞ்சு சாறுகளை உரிய முறையில் குடிப்பதாலும் இது நீங்கும். |
சொணை | சொணை coṇai, பெ. (n.) இலை, காய் முதலியவற்றின் மேல் உள்ள சிறுமுள்; prickle, as in leaves, stalks, etc. [சுணை → சொணை] |
சொணைப்பு | சொணைப்பு coṇaippu, பெ. (n.) சுரணை;{sensibility} அவன் சொணைப்புக் கெட்டவன் (உ.வ.);. |
சொண்டடி-த்தல் | சொண்டடி-த்தல் coṇḍaḍittal, 4 செ.கு.வி. (v.i.) பேசுதற்கு உதடு குவித்தசைத்தல் (வின்.);; to blubber in speaking, as an old man. [சொண்டு = உதடு. சொண்டு + அடி-.] |
சொண்டன் | சொண்டன் coṇṭaṉ, பெ. (n.) 1. சொண்டுக்காரன் (வின்.); பார்க்க;see {šongál-k-kāram} 2. செருக்கன்; self-conceited person. “ஒரு சொண்டன் பரந்துலவும்” (கோயிற்பு. இரணிய. 22);. [சொண்டு → சொண்டன்.] |
சொண்டறை | சொண்டறை coṇṭaṟai, பெ. (n.) இழிந்தவன் (அற்பன்); (யாழ்ப்.);; mean person. மறுவ. சொங்கி [சொல் → சொள் → சொண்டு → சொண்டறை.] |
சொண்டலு | சொண்டலு coṇṭalu, பெ. (n.) சரக்கொன்றை; cassia fistula (சா.அக.);. |
சொண்டாங்கலயம் | சொண்டாங்கலயம் coṇṭāṅgalayam, பெ. (n.) சிறுமட்பாண்டம் (நெல்ல);; a small round earthern vessel. ம. சொண்டாங்கி [சொண்டு + ஆம் + கலயம்] |
சொண்டி | சொண்டி1 coṇṭi, பெ. (n.) சுக்கு (மலை.);; dried ginger. க., தெ. சொண்டி;பட. சுட்டி [சுண்டி → சொண்டி] சொண்டி2 coṇṭi, பெ. (n.) சுண்டியுண்டை; a kind of yeast-ball. [சுண்டி → சொண்டி] |
சொண்டிச்சோறு | சொண்டிச்சோறு coṇṭiccōṟu, பெ. (n.) சுண்டியுண்டையைப் பயன்படுத்திப் புளிக்க வைத்த சோறு; a kind of rice. [சொண்டி + சோறு] |
சொண்டிதா | சொண்டிதா coṇṭitā, பெ. (n.) கணைப் பூண்டு; a plant (சா.அக.); |
சொண்டிலி | சொண்டிலி coṇṭili, பெ. (n.) சொண்டறை (சங். அக.); பார்க்க;see {šoņgarai} |
சொண்டு | சொண்டு1 coṇṭu, பெ. (n.) குழிவு; dent. க. ஜொண்டு;தெ. த்கண்டு [சொல் → சொள் → சொண்டு.] சொண்டு2 coṇṭu, பெ. (n.) 1. பறவைமூக்கு (யாழ்ப்.);; beak, bill. 2. உதடு; lip. சிவந்த சொண்டு; 3. தடித்த உதடு; blubberlip. 4. அடி பருத்த ஏன (பாத்திர); விளிம்பு; thick brim of a pot or vessel. 5. மீன் மூக்கு; nose of fish. ம. சுண்டு [சுல் → சுள் → சொள் → சொண்டு] சொண்டு3 coṇṭu, பெ. (n.) 1. குற்றம்; guilt, fault. 2. சொண்டறை (இ.வ.); பார்க்க;see {šoņgarai} 3. சொத்தை மிளகாய்; decayed chilly. தெ. சொட்டு [சுல் → சொல் → சொன் → சொண்டு] |
சொண்டுகூட்டு-தல் | சொண்டுகூட்டு-தல் coṇṭuāṭṭudal, 5 செ.கு.வி. (v.i.) பேசுதற்குக் குழந்தைகள் இதழ் கூட்டுதல் (வின்.);; to protrude the lips, as a child when beginning to talk. [சொண்டு3 + கூட்டு-.] |
சொண்டுக்கதை | சொண்டுக்கதை coṇṭukkadai, பெ. (n.) 1. உணவுக்காகச் சொல்லும் கதை (வின்.);; stories told for food, etc. 2. பிறரை மகிழ்விக்கப் புறங்கூறுகை; tale-bearing, blabbing, exposing secrets in order to please others. [சொண்டு + கதை] |
சொண்டுக்காரன் | சொண்டுக்காரன் coṇṭukkāraṉ, பெ. (n.) தடித்த உதடன் (வின்.);; blubber-lipped person. [சொண்டு2 + காரன்] |
சொண்டுசொல் | சொண்டுசொல் soṇṭusol, பெ. (n.) துன்புறுத்தும் மொழி (இ.வ.);; caustic remarks. [சொண்டு3 + சொல்] |
சொண்டுச்சாடை | சொண்டுச்சாடை coṇṭuccāṭai, பெ. (n.) ஒருவனைப் பிறன் இழித்துக் கூறியதாக அவனிடமே கூறம் புறங்கூற்று (வின்.);; telling a person what another has said to his discredit, a kind of tale-bearing [சொண்டு3 + சாடை] |
சொண்டுத்தீன் | சொண்டுத்தீன் coṇṭuttīṉ, பெ. (n.) அடிக்கடி கொள்ளுஞ் சுவையுணவு (வின்.);; delicious food taken frequently. [சொண்டு2 + (தீனி→); தீன்] |
சொண்டுபண்ணு-தல் | சொண்டுபண்ணு-தல் coṇṭubaṇṇudal, 5 செ.குன்றாவி. (v.t.) இகழ்ச்சிக் செய்தல் (யாழ்.அக.);; to scorn, treat with contempt மறுவ. ஏளனம் செய்தல் [சொண்டு + பண்ணு-.] |
சொண்டுபேசு-தல் | சொண்டுபேசு-தல் coṇṭupēcudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. இகழ்ச்சியைச் சொல்லில் மறைத்துப் பேசுதல் (உ.வ.);; speak with hidden abuse. 2. பழித்தல் (யாழ்ப்.);; to abuse. சொண்டு பேசுவதே அந்தக் கிழவிக்கு வழக்கம் (உ.வ.);. [சொண்டு + பேசு-.] |
சொண்டுப்பானை | சொண்டுப்பானை coṇṭuppāṉai, பெ. (n.) தடித்த விளிம்புடைய பானை (வின்.);; thick brimmed pot. [சொண்டு2 + பானை] |
சொண்டுமிளகாய் | சொண்டுமிளகாய் coṇṭumiḷakāy, பெ. (n.) விதையில்லாத சொத்தை மிளகாய்த் தோல்; blighted pod of chilly. [(சண்டு →); சொண்டு + மிளகாய்] |
சொண்டுவில்- தல் | சொண்டுவில்- தல் coṇṭuviltal, 14 செ.கு.வி. (v.i.) புறங்கூறுதல் (வின்.);; to backbite. [சொண்டு3 + வில்-.] |
சொதசொதெனல் | சொதசொதெனல் sodasodeṉal, பெ. (n.) கசிதற் குறிப்பு; expr. signifying the state of being mashy, as over-boiled rice, or of being soaked, as with oil or other fluids. [சொதுசொதுவெனல் → சொதசொத வெனல்] |
சொதப்பு-தல் | சொதப்பு-தல் codappudal, செகுன்றாவி (v.t.) 1. குழப்பு. குழப்பமடையச் செய்தல்; to confuse 2. சேறாக்குதல்; to make mire. [சொது-சொதப்பு] |
சொதி | சொதி codi, பெ. (n.) தேங்காய்ப்பாலவியல் (யாழ்ப்..);; vegetable soup prepared from coconut. இவ்வகைக் குழம்பு நெல்லை மாவட்டத்தில் தான் சிறப்பாகச் செய்யப் படுகிறது. |
சொதுசொதுவெனல் | சொதுசொதுவெனல் sodusoduveṉal, பெ. (n.) சேறுபோற் குழைந்திருத்தல் குறிப்பு; expr. signifying the state of being mud. [சொளுசொளு → சொதுசொது → சொதுசொதுவெனல்] |
சொதை | சொதை codai, பெ. (n.) 1. குழாம், கூட்டம்; crowd. 2. சொத்து1 (யாழ்.அக.); பார்க்க;see {šotti/.} [சொது → சொதை] |
சொதைகாரன் | சொதைகாரன் codaikāraṉ, பெ. (n.) சொத்துக்காரன் பார்க்க;see {Sottu-k-kāran.} [சொத்து → சொதை + காரன்] |
சொத்தட்டை | சொத்தட்டை cottaṭṭai, பெ. (n.) உளுத்த மரக்கட்டை (நாஞ்.);; rotten piece of wood. [சொத்தை + கட்டை – சொத்தட்டை] |
சொத்தலி | சொத்தலி cottali, பெ. (n.) கொட்டையில்லாப் பளங்காய் (யாழ்ப்.);; stoneless palmyra fruit. [சொத்தல் → சொத்தலி] |
சொத்தல் | சொத்தல் cottal, பெ. (n.) சொத்தை1, 1, 4 பார்க்க;see {šottai’,/4.} [சொத்தை1 → சொத்தல்] |
சொத்தாட்சியலுவலர் | சொத்தாட்சியலுவலர் cottāṭciyaluvalar, பெ. (n.) சொத்து ஒப்படைப்பு அலுவலர்; official receiver. [சொத்தாட்சி + அலுவலர்] |
சொத்தி | சொத்தி cotti, பெ. (n.) 1. உறுப்புக்குறை; lameness, crippledom. 2. நொண்டி; lame person. 3. குற்றம்; fault. யாருடைய சொத்தியால் இந்த வேலை இப்படி யாயிற்று. [சொத்தை → சொத்தி] |
சொத்தினம் | சொத்தினம் cottiṉam, பெ. (n.) அசையாச் சொத்துவகை ; estate. [சொத்து + இனம்] |
சொத்தியன் | சொத்தியன் cottiyaṉ, பெ. (n.) நொண்டி (வின்.);; lame person, cripple. [சொத்தை → சொத்தியன்] |
சொத்திருப்புவகை | சொத்திருப்புவகை cottiruppuvagai, பெ. (n.) சொத்து இருப்புகளின் வகைப்பாடு; classification of assets. [சொத்து + இருப்புவகை] |
சொத்திலை | சொத்திலை cottilai, பெ. (n.) பூமரம்; lac tree. |
சொத்து | சொத்து1 cottu, பெ. (n.) 1. அசையும் பொருள் அசையாப்பொருள் என்ற இருவகை உடைமை; property, possessions, being of two kinds viz., {tàvaram} and {Sangamam.} சொத்தை விற்று.க் கடனை அடைத்தார். 2. பொன்; gold. “சொத்துற் றமைந்த சுதையில் செஞ்சுவர்” (பெருங். உஞ்சைக். 34:221.);. க., தெ. சொத்து [சொம் → சொத்து, ஒ.நோ. தொகை = தொகுதி, செல்வம். வ. ஸ்வாம் = சொத்து. தேவஸ்வாம் = தெய்வச் சொத்து, கோயிற் சொத்து. ஸ்வாம் → ஸ்வாமி → ஸ்வாமின் = சொத்துக்காரன், ஆண்டை, ஆண்டவன், தெய்வம். வடவர் ஸ்வாமின் என்னுஞ் சொல்லை ஸ்வ + மின் என்று பகுத்து, சொந்தக்காரன், உடையவன், உரிமையாளன், தலைவன், கணவன், அரசன், குரு, தெய்வப் படிமை என்று பொருள் தொடுப்பர்] சொத்து2 cottu, பெ. (n.) சொத்தை’, 2 பார்க்க;Տee {sottai’.}2. “உலக்கை பட்டு வலக்கை சொத்தானவும்” (கலிங். 133);. [சொத்தை → சொத்து] சொத்து3 cottu, பெ. (n.) உடலிற்பூசும் அரத்தம் போன்ற செம்பசை; blood-like red paste. சொத்துப் பூசிக்கொண்டான் (வின்.);. |
சொத்துக்காரன் | சொத்துக்காரன் cottukkāraṉ, பெ. (n.) 1. பொருளுக்குரியவன்; owne 2. பணக்காரன்: rich man. [சொத்து + காரன்] |
சொத்துசுகம் | சொத்துசுகம் sottusugam, பெ. (n.) சொத்து பல, கை இருப்பில் உள்ளதால் வரும் இன்பம்; pleasure available by the ownership of property. அவனுக்குச் சொத்துச் சுகம் ஏதும் கிடையாது. [சொத்து + சுகம்] |
சொத்துச்சொத்தெனல் | சொத்துச்சொத்தெனல் cottuccotteṉal, பெ. (n.) தேங்காய் முதலியன ஒன்றின்பின் ஒன்றாய் விழுதல் முதலியவற்றால் உண்டாகும் அடுக்கொலிக்குறிப்பு (வின்.);; onom, expr. signifying the repeated sound as of coconuts falling on the ground one after another. தேங்காய் சொத்துக் சொத்தென விழுகின்றது. பழம் சொத்துச் சொத்தென விழுகின்றது. [சுல் (குத்தல்); → சுள் → சுர் → சுரு → சுறு → (சுற்று); → சுத்து – சொத்து + சொத்து எனல். சொத்து – சொத்துதல் வினை இன்று வழக்கற்றுப்போப் ஒலிக்குறிப்பாக மட்டுமே வழங்குகிறது] |
சொத்துபற்றுஅறிக்கை | சொத்துபற்றுஅறிக்கை cottubaṟṟuaṟikkai, பெ. (n.) சொத்திற்கான பொறுப்பு அறிக்கை; statement of assets and liabilities. [சொத்துபற்று + அறிக்கை] |
சொத்துப்பூசு-தல் | சொத்துப்பூசு-தல் codduppūcudal, 5 செ.கு.வி. (v.i.) பிறர் இரங்கிப் பிச்சைக் கொடுக்கும்படி உடலிற் செஞ்சாந்து பூசிக்கொள்ளுதல் (வின்.);; to daub one’s body with blood-like red paste with a view to excite compassion while begging. [சொத்து + பூச-.] |
சொத்துவம் | சொத்துவம்1 cottuvam, பெ. (n.) 1. பொருளுரிமை (சங்.அக.);.; right, proprietorship, title, claim. 2. தானே இருத்தல் (சுயம்பு); (யாழ்ப்.);: self-existence, independent condition. [சொத்து → சொத்துவம்] |
சொத்துவரி | சொத்துவரி cottuvari, பெ. (n.) வீடு, பணம், வேளாண்மை நிலம் திங்கலாக உள்ள இதர நிலம் போன்ற சொத்துகளின் மதிப்பின்மீது வாங்கப்படும் வரி; wealth tax on the capital value of a person’s assets exclusive of agricultural lands. [சொத்து + வரி] |
சொத்துவை-த்தல் | சொத்துவை-த்தல் cottuvaittal, 4 செ.கு.வி. (v.i.) 1. தொகுத்து வைத்தல்; to collect. “நெடுங்கயிறெல்லா மிசைசொத்து வைத்தும்” (அஞ்டப். திருவரங். மா52);. 2. வழித்தோன்றல் முதலியவர்க்கு சொத்து தொகுத்து வைத்தல் (உ.வ.);; to leave propertics to heirs. [சொத்து + வை-.] |
சொத்தெனல் | சொத்தெனல் cotteṉal, பெ. (n.) மண்போன்ற மென்மைப் பரப்பில் தேங்காய் போன்ற பொருள் விழும்போது ஏற்படும் ஒலிக்குறிப்பு; onom. expr. of a falling material like coconut over soil surface. மறுவ. சொத்துச் சொத்தெனல் [சொத்து + எனல்] |
சொத்தை | சொத்தை1 cottai, பெ. (n.) 1. புழுவண்டு முதலியன அரித்தது; that which is decayed, worm-eaten, injured by insects. 2. ஊனம்; defect, as in limbs, teeth, fruits etc. “சொத்தையில் லாடித்ததை” (இராமநா. பாலகா. 25.);. 3. சீர்கேடு (வின்.);; being ruined in circumstances or character. 4. மெலிந்த உயிரி (பிராணி);; emaciated person or animal. 5. சொத்தைனக்களா (வின்.); பார்க்க;see {sottai:-kasa.} ம., து., சொத்த; க. சொத்த, சொத்தி, சொத்து, சொத்து; தெ. சொத்த; கோத. சொதி;பட. சொத்தெ [சொள் → சொட்டை → சொத்தை = உள்ளீடற்றக் கறுத்த பழம், புழுத்த காய் பூச்சியரித்த பல்] சொத்தை2 cottai, பெ. (n.) கன்னம் (யாழ்ப்.);; check. E. cheek: OE. ce’ce. |
சொத்தைக்களா | சொத்தைக்களா cottaikkaḷā, பெ. (n.) 1. செடிவகை; bushy roundish-leaved sweet thorn. 2. இலங்கை மரவகை; Ceylon plum. 3. ஒருவகை இலங்கை மரம்; lowiowi of Ceylon. [சொத்தை1 களா] |
சொத்தைக்காய் | சொத்தைக்காய் cottaikkāy, பெ. (n.) புழுப்பாய்ந்த காய்; warm eaten fruit. (சா. அக.); [சொத்தை+காய்] |
சொத்தைப்பல் | சொத்தைப்பல் cottaippal, பெ. (n.) கெட்டுப் போன பல் (உ.வ.);; carious tooth. மறுவ, சூத்தைப் பல் [சொத்தை + பல்] |
சொத்தைப்பாக்கு | சொத்தைப்பாக்கு cottaippākku, பெ. (n.) 1.புழு அரித்த பாக்கு; wormeaten arecanut. 2. சொள்ளைப் பாக்கு பார்க்க;see collai-ppākku. (சா.அக.); [சொத்தை+பாக்கு] |
சொத்தையிற்போடு-தல் | சொத்தையிற்போடு-தல் coddaiyiṟpōṭudal, 20 செ.கு.வி. (v.i.) கன்னத்திலடித்தல் (யாழ்ப்.);; to give one a slap on the cheek. [சொத்தை + இல் + போடு-.] |
சொந்த | சொந்த conda, 1. தன்பிறப்பால் அல்லது தன்னுடைய முன்னோரில் பிறப்பால் உரிமையுடைய; native. சொந்த ஊருக்குப் போய் வந்தான். 2. உடன்பிறந்த; தன்னநேர் உறவான; blood relation;own. சொந்தத் தம்பி. 3. தனக்கே உரிய; தனிப்பட்ட; personal; private. நடிகை தன் சொந்தக் குரலில் பாடினாள். [சொந்தம் → சொந்த] |
சொந்தக்கம்பத்தம் | சொந்தக்கம்பத்தம் condakkambattam, பெ. (n.) பண்ணை வைத்துச்செய்யும் வேளாண்மை; cultivation carried on by one’s own plough and cattle. [சொந்தம் + கம்பத்தம். கம்மம் → கம்பத்தம் = வோனண்மை] |
சொந்தக்காரன் | சொந்தக்காரன் condakkāraṉ, பெ. (n.) 1. உரியவன்; owner. இந்த மாட்டின் சொந்தக் காரன் யாரோ? 2. உறவினன்; close relation. சொந்தக்காரன் திருமணத்திற்கு வந்தேன். [சொந்தம் + காரன்] |
சொந்தக்காரி | சொந்தக்காரி condakkāri, பெ. (n.) சொந்தக்காரன் என்பதன் பெண்பால்; feminine of {Šonda-k-kāran.} [சொந்தக்காரன் (ஆ.பா.); → சொத்தக்காரி (பெ.பா.);] |
சொந்தம் | சொந்தம் condam, பெ. (n.) 1. நிலம், பொருள் முதலியவற்றின் மீது ஒருவருக்குள்ள உரிம; one’s own peculiar right, exclusive property, that which belongs to oneself. “சொந்தமா யாண்ட நீ” (தாயு. சுகவாரி. 11);. அவருக்குச் சொந்த வண்டி உண்டு. 2. நெருங்கிய உறவு (உ.வ.);.; near relationship. க. சொந்த;தெ. சொந்தமு [சும் → சொம் → (சொத்து); → சொந்தம்] |
சொனகு | சொனகு coṉagu, பெ. (n.) பெரும்புல் வகை தைலவ. தைல.); a kind of large grass. [சுணை → சோணை → சொனகு =சுனையுள்ள புல்வகை] |
சொனாகம் | சொனாகம் coṉākam, பெ. (n.) வேலிப் பருத்தி (மலை.);; stinkingswallow-wort. |
சொன்ஞானம் | சொன்ஞானம் coṉñāṉam, பெ. (n.) அறிவுடை மொழி; words of wisdom. “காரறிவாளர் முன் சொன் ஞானஞ் சோர விடல்” (நாலடி. 311);. [சொல் + ஞானம். Skt. {jñāna} → த. ஞானம்] |
சொன்னகாரன் | சொன்னகாரன் coṉṉakāraṉ, பெ. (n.) தட்டான் (பிங்.);; goldsmith. ம. சொன்னான் [சொன்னம் + காரன்] |
சொன்னதானம் | சொன்னதானம் coṉṉatāṉam, பெ. (n.) பொன்னைக் கொடையாக வழங்குகை; gif of gold or money. “சொன்னதானப் பயனெனச் சொல்லுவர்” (கம்பரா. சிறப்பு);. [சொன்னம் + தானம்] |
சொன்னபட்டி | சொன்னபட்டி coṉṉabaṭṭi, பெ. (n.) நாக செண்பகம், சிறுமரவகை; common yellow. trumpet flower tree (செ.அக.);. |
சொன்னமாக்கி | சொன்னமாக்கி coṉṉamākki, பெ. (n.) பவள வைப்புநஞ்சு (சங்.அக.);; a prepared arsenic. |
சொன்னம் | சொன்னம்1 coṉṉam, பெ. (n.) பொன் (திவா.); gold. க. பட சின்ன [சொல் → சொன் → சொன்னம் = பொன். வடவர் சு + வர்ண என்று பகுத்து தன்னிறமுன்னது என்று பொருட் காரணங் காட்டுவர். இரட்டித்த னகரத்தை ‘ர்ண’ என்று திரிப்பது வடவர் மரபு. எ-டு. கன்னம் → கர்ண = காது. வண்ணம் →வர்ண] சொன்னம்2 coṉṉam, பெ. (n.) கால்வாய் (திவா.);; a channel. E. chamme/; ME., OF. chameE L. camaIis. சொன்னம்3 coṉṉam, பெ. (n.) சோளம்; great millet. [சொன்னம்1 → சொன்னம்3] |
சொன்னலம் | சொன்னலம் coṉṉalam, பெ.(n.) சொல்லின் பயன்; good effect of good words. முளைநலமே, விளைநலத்தைத் தெரிவித்தல் போல், மக் களின் சொன்னலமே அவர் செயல் நலத் தையும் தெரிவிக்கும். (குறள்.959, தமிழ் மரபுரை);. [சொல்+நலம்] |
சொன்னல் | சொன்னல்1 coṉṉal, பெ. (n.) இரும்பு (ஆ. நி.);;ΙΓΟΠ. [சொல் → சொன் → சொன்னல்] சொன்னல்2 coṉṉal, பெ. (n.) சோளம் (சூடா.);; great millet, cereal grass. தெ. சொந்த [சொன்னம் → சொன்னல்] |
சொன்னி | சொன்னி coṉṉi, பெ. (n.) மணம் (அக.நி.);; fragrance. |
சொன்மகள் | சொன்மகள் coṉmagaḷ, பெ. (n.) சொன் மடந்தை பார்க்க;see {Son-madandai.} ‘நும்முடைய நாவின் மேலிருக்குஞ் சொன்மகள் (பு.வெ.9:48, உரை);. மறுவ. சொல் மடந்தை [சொல் + மகள்] |
சொன்மடந்தை | சொன்மடந்தை coṉmaḍandai, பெ. (n.) கலைமகள்; Kalaimagal as the Goddess of Speech. (சொல்லுக்குரிய பெண் தெய்வம்); “நடையூறு சொன்மடந்தை நல்குவதும்” (பு.வெ. கடவுள். 1);. மறுவ, நாமகள், சொல்மகள் [சொல் + மடந்தை] |
சொன்மலைவு | சொன்மலைவு coṉmalaivu, பெ. (n.) முன்னுக்குப்பின் முரணாகக் கூறுகை; self contradictory statement. ‘சொல்லலன் யானெனச் சொல்லுவை யாயினுஞ் சொன்மலைவாம்”(நீலகேசி 384);. [சொல் + மலைவு] |
சொன்மாலை | சொன்மாலை coṉmālai, பெ. (n.) 1. புகழ்ச்சி (திவா.);; encomium, eulogy, praise. 2. புகழ் மாலை (சூடா..);; laudatory poem, panegyric. “சுடராழி யானடிக்கே சூட்டினன் சொன்மாலை” (திவ். இயற். 1:1);. 3. சொற்களின் அணிவகுப்பு; garland of words. [சொல் + மாலை] |
சொன்மிக்கணி | சொன்மிக்கணி coṉmikkaṇi, பெ. (n.) சொற்பின்வருநிலை (தொன். வி. 314); பார்க்க;see {Sor-pin-varu-milai.} [சொல் + மிக்கணி.] |
சொன்முதல் | சொன்முதல் coṉmudal, பெ. (n.) மாயை (நாதத்துக்குக் காரணமாவது); (சங்.அக.);;{Mayi,} as the source of {nådam.} [சொல் + முதல்] |
சொன்முந்திரி | சொன்முந்திரி coṉmundiri, பெ. (n.) 1. கண்ணாடியிலை; sunder-tree. 2. கண்டலங் காய்; Malay karapa. [சொல் + முந்திரி] |
சொன்முரணணி | சொன்முரணணி coṉmuraṇaṇi, பெ. (n.) ஒன்றற்கொன்று முரணிய சொற்றொடராய் வருவது; controversy sentence. ‘அவரே கிழவனா கிப்பின் காளையாய் கிஞ்சுகச் செவ்வாய்க் குழவியாய் விளையாடிய கொள்கையைப் பகர்வாம்” (திருவிளை. விருத்தம்); [சொல்+முரண்+அணி] |
சொன்றி | சொன்றி1 coṉṟi, பெ. (n.) சோறு; boiled ricc. “வரகின் சொன்றியொடு பெறுஉம்” (புறநா. 197:12);. [சொல் → சொன்றி,. சொல் = நெருப்புப் போல் அல்லது பொன் போல விளங்கித் தோன்றும் நெல்] சொன்றி2 coṉṟi, பெ. (n.) சுக்கு (சங்.அக.);; dried ginger. [சுண்டி → சொண்டி → சொன்றி.] |
சொப்பட | சொப்பட coppaḍa, கு.வி.எ. (adv.) நன்றாக; well, neaily,fully. ‘சொப்பட நீராட வேண்டும்’ (திவ். பெரியாழ். 2. 4:5);. தெ. சொப்படு. [செப்பம் + படு – செப்பப்படு → சொப்பட] |
சொப்பம் | சொப்பம் coppam, பெ. (n.) ஒளியின்மை; dullness, lack of brilliancy. ‘ஹீனரோட்டை ஸம்ஸர்க்கத்திலிறே . . . சொப்பமும் பிறப்பது’ (தி.வ். திருநெடுந். 21, வியா, பக். 175);. க. சொப்பு |
சொம் | சொம் com, பெ. (n.) property, wealth, ones own goods. “சொம் மனைவைத் தெப்படி நடப்பீர்” (குமர. பிர. காசிக். 34);. வ. ஸ்வ → ஸ்வாம் [சும் → சொம். சும் → சும்மை = தொகுதி, செல்வத் தொகுதி] |
சொம்படக்கா | சொம்படக்கா combaḍakkā, பெ. (n.) நீளமும் அகலமும் ஒரளவினதான கடல்மீன் வகை; sting-ray, dull brown, with disc as broad as long. |
சொம்பாதி | சொம்பாதி1 combāti, பெ. (n.) சரிபாதி; exact half. “சொம்பாதியானான் சுமக்கவெருதானான்” (தனிப்பா. 1, 62:123);. [செம்மை+பாதி-செம்பாதி→ சொம்பாதி] சொம்பாதி2 combāti, பெ. (n.) மேல்வாரம் (இ.வ.);; owner’s share of produce. [சொம் + பாதி. சொம் = சொத்து] |
சொம்பு | சொம்பு1 combu, பெ. (n.) செம்பு பார்க்க;see {šeimbu.} ம. செம்பு; க. செம்பு; தெ. செம்பு; து. சொம்பு; செம்பு, சம்பு; கோத. கெபி; குட. செம்ப்;பட. செம்பு [செம்பு → சொம்பு] சொம்பு2 combu, பெ. (n.) beauty, grace. “சொம்பிற் பலவள முதிர் சோலைகள் சூழ்” (திருப்பு. 136);. க., தெ. சொம்பு |
சொம்மாளி | சொம்மாளி commāḷi, பெ. (n.) உடைமையாளன் (யாழ். அக.);; heir, owner. மறுவ : உரிமையாளன், சொத்துக்காரன் [சொம் + (ஆன் →); ஆளி] |
சொம்மெடு-த்தல் | சொம்மெடு-த்தல் commeḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) வழியுரிமையாகச் (வாரிசாக); சொத்தை யடைதல் (நாஞ்.);; to inherit of property. [சொம் + எடு. சொம் = சொத்து] |
சொரங்கம் | சொரங்கம் coraṅgam, பெ. (n.) ஏலக்காய்த் தோல் (வின்.);; husk of cardamom. |
சொரசத்தோரசி | சொரசத்தோரசி sorasattōrasi, பெ. (n.) இலவங்கம் (மலை.);; clove. |
சொரசொரப்பு | சொரசொரப்பு sorasorappu, பெ. (n.) உராய்வை ஏற்படுத்தும் தன்மை; roughness of a surface. மழிக்காமல் முகம் சொரசொரப்பாக உள்ளது. [சுரசுரப்பு → சொரசொரப்பு] |
சொரடு | சொரடு coraḍu, பெ. (n.) துறட்டி (வின்.);; crook of wood or iron. [துறடு → சொரடு.] துறடு = காய் முதலியனப் பறிக்குந்துறட்டுக் கோல் |
சொரணை | சொரணை coraṇai, பெ. (n.) சுரணை (யாழ்.அக.);; sensitiveness. [கரணை → சொரணை] |
சொரண்டி | சொரண்டி coraṇṭi, பெ.(n.) களை எடுக்கும் கருவி; a weed removing implement. [சுர-சுரண்டி-சொரண்டி] |
சொரத்துார் | சொரத்துார் coratr, பெ.(n.) கடலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Cudalore Taluk. [கரம்+ அத்து+ ஊர்] |
சொரி | சொரி1 coridal, 2 செ.கு.வி. (v.i.) 1. மழை முதலியன தொகுதியாக விழுதல்; to flow down, rain, spill. “அலர்மழ சொரிந்த” (கம்பரா. வேள்வி. 56); 2. மிகுதல்; to bear in plenty; to be abundant, profuse, copious. 3. உதிர்தல் (யாழ்ப்.);; to drop off, as dry scales in small-pox; to be scattered, as rice from the husk. பூச்சொரிந்து வரவேற்றனர். ம.சொரியுக; க. சுரி; தெ. தொரகு, தொருகு, தொறகு; து. தொரியுனி; கோத. சோர்; குட. தோர்; கூ. ககார; பர். சோர்; கட. சோர்ப்; குரு. சுர்கானா; மா. சுர்கெ, சுர்க்ரெ;பட. சோரு [சொல் → (சொர்); → சொரி → சொரி-தல் = உன்னிருந்து விழுதல், சிந்துதல்] சொரி2 coridal, 2 செ.குன்றா.வி. (v.t.) 1. பொழிதல்; to scatter pour forth, effuse, emit, shoot, as arrows, shed, as leaves fruits. “வானவர்பூ மழை சொரிந்தார்” (பெரியபு. மநுநீதி. 45);. 2. கொட்டுதல்; to empty, pour out, as corn from sack; to dump, as sand from cart. “காரியெட் சொரிந்தார்” (கம்பரா. பிரமாத். 165);. 3. மிகக் கொடுத்தல்; to give a way in plenty. “துகில் வர்க்க மெல்லாம் . . . சொரிந்தா ரன்றே” (சிவரக. சுகமுனி. 5);. [சொரி1 → சொரி2-.] சொரி3 coridal, 2 செ.குன்றாவி. (v.t.) சொறி பார்க்க;see {šori.} [சொறி → சொரி-.] சொரி4 coridal, 2 செ.கு.வி. (v.i.) சுழலுதல் (சூடா.);; to whirl, revolve. [சுரி → சொரி-. சுரி-தல் = சுழிதல்] சொரி5 cori, பெ. (n.) தினவு; itching, tingling. “சொரிபுற முரிஞ்ச” (சிலப். 10:122);. [சொறி → சொரி] |
சொரிகுட்டம் | சொரிகுட்டம் coriguṭṭam, பெ. (n.) 1 அரத்தம் வடியும் குட்டம்; leprosy attended with bleeding from sores. [சொரி+குட்டம்] |
சொரிகுரும்பை | சொரிகுரும்பை corigurumbai, பெ. (n.) நெல்வகை (வின்.);; a kind of paddy. [சொரி1 + குரும்பை – சொரி குரும்பை = மிகுதியாக விளையும் நெல் வகை] |
சொரிகொன்றை | சொரிகொன்றை corigoṉṟai, பெ. (n.) கொன்றை வகை (L.);; Indian trumpet flower. [சொரி + கொன்றை] |
சொரிநெல் | சொரிநெல் corinel, பெ. (n.) குவித்திருக்கும் நெல் (வின்.);; paddy heaped up. ம. சொரிநெல்லு [சொரி + நெல்] |
சொரிந்தள-த்தல் | சொரிந்தள-த்தல் corindaḷattal, 3 செ. குன்றாவி. (v.t.) பண்டங்களை மேலே தூவியளத்தல் (வின்.);; to measure gently without pressing down, as flowers, flour, etc. [சொரி1 → சொரிந்து + அள-.] |
சொரிபுன்னை | சொரிபுன்னை coribuṉṉai, பெ. (n.) பேய்க் கண்டல் என்னும் சிறுமரவகை; Simple cymed mangrove. [சொரி + புன்னை] |
சொரிமணல் | சொரிமணல் corimaṇal, பெ. (n.) கால் வைத்தால் இறக்கியமிழ்த்தும் புதைமணல்; quick-sand. ம. சொரி மணல் மறுவ, சொருகுமணல், புதைமணல் [சொரி + மணல்] |
சொரிமி-த்தல் | சொரிமி-த்தல் corimittal, 4 செ.கு.வி. (v.i.) இணங்குதல் (நாஞ்.);; to agree, to be cordial. |
சொரிமிப்பு | சொரிமிப்பு corimippu, பெ. (n.) இணக்கம் (நாஞ்.);; agreement, cordial relationship. [சொரிமி → சொரிமிப்பு] |
சொரிவாய் | சொரிவாய் corivāy, பெ. (n.) குதிரிலிருந்து நெல் சொரிந்து விழுந்துளை (நாஞ்.);; aperture or opening of a receptacle through which paddy can be taken out. [சொரி + வாய்] |
சொருகம்புல் | சொருகம்புல் corugambul, பெ. (n.) புல்வகை (சங்.அக.);; a kind of grass. [செருகு + அம் + புல்] |
சொருகல் | சொருகல் corugal, பெ. (n.) பெரும்பாலுங் குழந்தைகளிடங்காணும் குடற்சிக்கு; sticking in the bowels, as of indigestible food, especially of children. [சொருகு → சொருகல்] |
சொருகு | சொருகு1 corugudal, 5 செ.கு.வி. (v.i.) 1. சிக்கிக் கொள்ளுதல்; to be entangled, become connected inadvertently. 2. குடலிற் சிக்குதல்; to gripe in the bowels. 3. கருவிழி மறைதல்; to disappear, as the pupil of the eye in fainting, etc. தூக்கத்தால் அவனுடைய கண் சொருகுகின்றது 4. தங்குதல்; to repose “துரியங்கண் மூன்றுஞ் சொருகிடனாகி” (திருமந். 1893);. [சொள் → (சொர்); → சொருகு → சொருகு-தல் = துனைக்குள் இடுதல், உள்ளிடுதல்] சொருகு2 corugudal, 5 செ.குன்றாவி. (v.t.) 1. நுழைத்தல்; to put in, insert, tuck in. “சொருகு கொந்தளக மொருகை மேலலைய” (கலிங். 46);. 2. தூக்கம் நோய் முதலியவை கண் விழிகளை ஒரு பக்கமாக ஒதுக்கி மறையச் செய்தல்; to turn the pupil of the eye till it disappears, as in sleep, giddiness. தூக்கம் கண்ணைச் சொருகுகிறது. ம. சொருகுக;க. சொருகு [சொருகு1 → சொருகு2] சொருகு3 corugu, பெ. (n.) 1. படகில் துடுப்பைப் பூட்டுதற்குரிய வளையம்; a ring to hold the ore in the boat. 2. உட்புறமிருந்து சிறு இரும்புச் சட்டத்தை அல்லது உருளையைத் தள்ளி, வீட்டுக்கதவைப் பூட்டுகை; small metal moving latch fitted on the door. 3. இரட்டைக் கதவில் ஒன்றை ஒரு சிறு இரும்பு உருளை அல்லது இரும்புச் சட்டத்தைத் தள்ளுவதன் மூலம் கதவு நிலையுடன் அல்லது கீழ்த் தரையில் உள்ள குழியுடன் பிணைப்பது; a movement of a latch which is used to fix the bolt to the door frame or whole on the floor. [சொருகு1 → சொருகு3] |
சொருகுகதவு | சொருகுகதவு corugugadavu, பெ. (n.) 1. சொருகி மூடுங்கதவு; door of insertion. 2. கடையை மூடவுதவும் சொருகு பலகைகள்; wooden planks to close the shops. [சொருகு1 + கதவு] கடைக்கதவு பலகைகளால் ஆனது. மேல் நிலை, கீழ் நிலைகளில் தோண்டப்பட்ட பள்ளத்தில் நிற்கும். நடுப்பலகை இருக்கு மிடத்தில் மேல் நிலையில் பள்ளம் ஆழமாக எடுக்கப்பட்டிருக்கும். அப்பள்ளத்தில் பலகையைச் சொருகித் துரக்கிக் கீழ்நிலைப் பள்ளத்தில் நிறுத்தி இரு முனைகளுக்கும் தள்ளிவிடலாம். இறுதியில் நடுப்பலகையைச் சொருகிப் பூட்டி விடலாம். |
சொருகுகொண்டை | சொருகுகொண்டை corugugoṇṭai, பெ. (n.) பெண் மயிர்முடிவகை (வின்.);; woman’s hair twisted round and tucked in, as in dressing. [செருகு + கொண்டை] |
சொருகுதலைப்பு | சொருகுதலைப்பு corugudalaippu, பெ. (n.) சீலையின் உள்ளிடமான தலைப்பு (வின்.);; the end of saree tucked in. [சொருகு + தலைப்பு] |
சொருகுபிடிகத்தி | சொருகுபிடிகத்தி corugubiḍigatti, பெ. (n.) உறையுடன் இட்ட பிடியுள்ள கத்தி (இ.வ.);; sword or knife with handle kept in sheath. [சொருகு + பிடிகத்தி] |
சொருகுமணல் | சொருகுமணல் corugumaṇal, பெ. (n.) சொரிமணல் பார்க்க;see {šori-maņa/} மறுவ. புதைமணல் [சொருகு + மணல்] |
சொருகுமாந்தம் | சொருகுமாந்தம் corugumāndam, பெ. (n.) கண்களை ஒரு பக்கமாகச் சொருகுமாறு செய்யும் குழந்தை நோய்வகை (சங்.அக.);; convulsions affecting children in, which the eyes are turned up under the lids. [செருகு + மாந்தம்] |
சொருகுமுந்தானை | சொருகுமுந்தானை corugumundāṉai, பெ. (n.) புடைவையின் சொருகு தலைப்பு (வின்.);; the end of a saree which is tucked in. [சொருகு + முந்தானை] |
சொருகோடு | சொருகோடு coruāṭu, பெ. (n.) சொருகி யடுக்குந்தட்டையோடு (C.E.M.);; thick flat insertible tile. [சொருகு + ஒடு] |
சொருக்கு | சொருக்கு corukku, பெ. (n.) சொருகு கொண்டை பார்க்க;see {Sorugu-kongai.} [சொருகு → சொருக்கு] |
சொருணை | சொருணை coruṇai, பெ. (n.) 1. கரணை (யாழ்ப்.);; sensitiveness. 2. சுருட்டி வைத்த பொருள்; anything rolled up. [சுரணை → சுருணை → சொருணை] |
சொருவா | சொருவா coruvā, பெ. (n.) கஞ்சி (அக.நி.);; gruel. |
சொருவு | சொருவு coruvu, பெ. (n.) உறை (இ.வ.);; sheath. [செருகு → சொருவு] |
சொரையூர் | சொரையூர் coraiyūr, பெ.(n.) வாலாசா வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Wallajah Taluk. [சுரம்-கரை+ஊர்] |
சொர்க்கப்பாவனை | சொர்க்கப்பாவனை corkkappāvaṉai, பெ. (n.) சொக்கப்பனை (வின்.); பார்க்க;see {sokka-pрадаі.} [சொக்கப்பனை → சொக்கப்பாவனை] |
சொர்னாழி | சொர்னாழி corṉāḻi, பெ.(n.) பறையிசைக் கூட்டியத்தில் இடம்பெறும் ஊதுகுழல்; a wind pipe of played in drum play [கரை+ நாடு] |
சொற | சொற coṟa, பெ. (n.) கடல் உயிரினம்; a kind of sea fish. [சொறி → சொற.] சங்கு குளிப்பவரின் உடலின்மேல் இவ்வுயிரினம் பட்டால் தாங்க முடியாத வலியும் எரிச்சலும் ஏற்படும் என்பது மீனவர் கூற்று. |
சொறண்டல் | சொறண்டல் coṟaṇṭal, பெ. (n.) தேய்க்கை; scraping (சா.அக.); [சுரண்டல்-சொறண்டல்] |
சொறி | சொறி1 coṟidal, 2 செ.குன்றாவி. (v.i.) 1. தினவு நீங்க நகத்தால் வறண்டுதல்; to scratchin order to allay itching. “ஓங்கெயிற் கதவ முருமுச்சுவல் சொறியும்” (சிறுபாண். 80);. பேன் அரிப்புத் தாங்காமல் தலையைச் சொறிகிறான். 2. கெஞ்சிக் கேட்டல்; to crave, solicit meanly. அவனைச் சொறிந்து கொண்டிருக்கிறான். ம. சொறியுக; க. துறி, சூரு; தெ. துரத; து. கெரெபுனி, தொச்சி; பர். கிர்ப், சொத்; கோண். சோக்தானா, சொகன;ப. துரிசு, துருசு [சுல் → சுர் → சுறு → சொறி → சொறி-தல்] சொறி2 coṟidal, செ.கு.வி. (v.i.) தினவுண்டாதல் (வின்.);; to itch, tingle. [சொறி1 → சொறி2] சொறி3 coṟi, பெ. (n.) 1. தினவு; itching, tingling. 2. முட்போன்ற சிரங்கு புண்; deep itches. “சொறி கொண்டெழுந் தினவுமாற” (சேதுபு. முத்தீர். 5);. சொறிபிடித்தவன். 3. மர முதலியவற்றிற் காணும் சுரசுரப்பு (வின்.);; roughness of surface. 4. காஞ்சொறி (மலை.);; climbing nettle. 5. மீன்வகை; a kind of jelly fish. 6. அரிப்புடன் கூடிய தோல் நோய்; Skin disease causing itching. சொறி நாய். 7. உயிரிகளின் கரடுமுரடான புறத்தோல்; roughness of the skin. சொறித் தவளை. ம. சொறி; க. துரி, துரிசு; தெ. துரத; து. தொச்சி;கோத. செரிங்க. [சுல் → சுர் → சுறு → சொறி] |
சொறிகட்டை | சொறிகட்டை coṟigaṭṭai, பெ. (n.) ஆதீண்டு குற்றி; rubbing post for cattle. [சொறி + கட்டை] |
சொறிகட்டையானவன் | சொறிகட்டையானவன் coṟigaṭṭaiyāṉavaṉ, பெ. (n.) வலியற்றவன் (சவுங்கலானவன்); (யாழ்ப்.);; a mean, spirit less person, as no better than a rubling post. [சொறிகட்டை + ஆனவன்] |
சொறிகண் | சொறிகண் coṟigaṇ, பெ. (n.) கண்ணிமைகளில் உண்டாகுஞ் சொறிநோய் (வின்.);; an itching complaint in the eyelids. [சொறி + கண்] |
சொறிகரப்பான் | சொறிகரப்பான் coṟigarappāṉ, பெ. (n.) சொறிக் கரப்பான் (சீவரட் 219); பார்க்க;see {Sori-k-karappän.} [சொறி + கரப்பான்] |
சொறிகுட்டம் | சொறிகுட்டம் coṟiguṭṭam, பெ. (n.) காயம் உண்டாகாமலே உடம்பு முழுவதும் எரிச்ச லுண்டாக்கும் ஒரு வகைக் குட்டம்; a kind of leprosy with diffuse papillary eruption with out ulceration on the entire surface of the body marked by intense itching and burning sensation. (சா.அக.); [சொறி+குட்டம்] |
சொறிகுரு | சொறிகுரு coṟiguru, பெ. (n.) தவிடுபோல் உதிரும் பொடுகு; brawney scales scruf. (சா. அக.); [சொறி+குரு] |
சொறிகொள்ளிநாய் | சொறிகொள்ளிநாய் coṟigoḷḷināy, பெ. (n.) mad dog, as being mangy. [சொறி + கொள்ளி + நாய்] |
சொறிக்கரப்பான் | சொறிக்கரப்பான் coṟikkarappāṉ, பெ. (n.) தினவெடுக்கும் சிரங்கு வகை (சங்.அக.);; a kind of cutaneous eruption producing itching sensation. மறுவ. சொறிசிரங்கு [சொறி + சுரப்பான்] |
சொறிக்கல் | சொறிக்கல் coṟikkal, பெ. (n.) 1. செம்பாறாங்கல்; laterite. 2. மஞ்சளுரைக்குங்கல்; saffron stone. 3. சுக்கான்கல்; limestone. [சொறி + கல்] |
சொறிக்கிட்டம் | சொறிக்கிட்டம் coṟikkiṭṭam, பெ. (n.) இரும்புத் துரு; iron dross. [சொறி + கிட்டம்] |
சொறிக்கொட்டுக்கொட்டு-தல் | சொறிக்கொட்டுக்கொட்டு-தல் coṟikkoṭṭukkoṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) மென்மையாக (இலேசாக); அடித்தல்; to beat lightly. சொறிக்கொட்டுக் கொட்டுவதனாற் பயனில்லை, பலமாக அடிக்க வேண்டும் (நாஞ்.);. [சொறி + கொட்டு + கொட்டு-.] |
சொறிசங்கு | சொறிசங்கு soṟisaṅgu, பெ. (n.) கற்று வெளிப்புறம் வழவழப்பாக இல்லாமல் சொர சொரப்பான் இருக்கும் சங்கு; rough surfaced conch. [சொறி + சங்கு] |
சொறிசிரங்கு | சொறிசிரங்கு soṟisiraṅgu, பெ. (n.) தோலில் சொரசொரப்பான தடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒருநோய் (உ.வ.);; a kind of itch that causes much annoyance, herpes, scab. [சொறி + சிரங்கு] |
சொறிதேய்-த்தல் | சொறிதேய்-த்தல் coṟitēyttal, 1 செ.கு.வி. (v.i.) 1. தினவுக்காக உரைசுதல் (யாழ்ப்.);; to rub against a post, as a beast. 2. இழிவாய்க் கருதுதல்; to ignore, brush away, as a person. 3. சினமூட்டுதல்; to rub one the wrong way. என்னிடத்தில் சொறி தேய்க்க வருகிறான். [சொறி + தேய்-.] |
சொறித்தவளை | சொறித்தவளை coṟittavaḷai, பெ. (n.) தவளை வகை; Indian toad. “கேணி நீர்ப்படுஞ் சொறித்தவளை கூப்பிடுகுது’ (முக்கூடற் பள்ளு. 90);. ம. சொறித்தவள [சொறி + தவளை] |
சொறித்தேமல் | சொறித்தேமல் coṟittēmal, பெ. (n.) படர்தாமரை (வின்.);; ringworm. [சொறி + தேமல்] |
சொறிந்துகொடு-த்தல் | சொறிந்துகொடு-த்தல் coṟindugoḍuttal, 4 செ.குன்றாவி. (v.i.) 1. தூண்டுதல்; to urge, incite. 2. பிழைப்புக் கருதி ஒருவனையணுகி இச்சகமாகத்தொழில் செய்தல் (உ.வ.);; to fawn servilely upon. [சொறிந்து + கொடு-.] |
சொறிபுண் | சொறிபுண் coṟibuṇ, பெ. (n.) சிறுபிள்ளை கட்கு உண்டாகும் கட்டுக் கரப்பான் (இ.வ.);; a kind of eruption affecting children. [சொறி + புண்] |
சொறிப்பாறை | சொறிப்பாறை coṟippāṟai, பெ. (n.) கடலடியில் பூம்புகாருக்குக் கிழக்கே சற்றொப்ப 55 பாக ஆழத்தில் கிழக்கு மேற்காக நீண்டு வளர்ந்துள்ள பாறை; a rock outcrop situated 55 fathoms below sea level extended in the east west direction. [சொறி + பாறை] |
சொறிமண்டலி | சொறிமண்டலி coṟimaṇṭali, பெ. (n.) பாம்பு வகை (யாழ். அக.);; a kind of snake. சொறி + மண்டலி] |
சொறிமீன் | சொறிமீன் coṟimīṉ, பெ. (n.) இழுதுமீன், கூழ்மீன் (எலும்பில்லாமீன்);; jelly fish. ம. சொறிமீன் [சொறி + மீன்] |
சொறியன் | சொறியன் coṟiyaṉ, பெ. (n.) 1. சொறி பிடித்தவன்; scabby person. 2. சொறித் தவளை, a kind of frog. 3. செந்தொட்டி (நாஞ்.);; a kind of medicinal herb. ம. சொறிபணம், சொறி யணங்ங [சுர் → சுர → சுற → சொறி → சொறியேன்] |
சொறியெழும்பு-தல் | சொறியெழும்பு-தல் coṟiyeḻumbudal, 5 செ.கு.வி. மரம் முதலியவற்றில் சுரசுரப்புண்டாதல்; to become rough with fibres, as a piece of wood. [சொறி + எழும்பு-.] |
சொறிலை | சொறிலை coṟilai, பெ. (n.) சிறுமரவகை; mediumhairy-nerved oblongacute-leaved fetid holly. [சொறி + இலை] |
சொறுண்டு-தல் | சொறுண்டு-தல் coṟuṇṭudal, 5 செ.குன்றாவி. (v.t.) சொறிதல்; to scratch. “செவி சொறுண்டார். . . பெரியா ரகத்து” (ஆசாரக் 76);. [சுரண்டு → சொறுண்டு-.] |
சொறுமாட்டு | சொறுமாட்டு coṟumāṭṭu, பெ. (n.) நிலுவை, balance. ‘பொன்கொண்டு எப்பேர்ப்பட்ட இறையுஞ் சொறு மாட்டுங் காட்டப்பெறா தோமாக” (தெ. கல்.தொ.7. கல். 420);. [சொறு+மாட்டு] |
சொற் | சொற் coṟ, பெ. (n.) வடியும் வாய்நீர்; dribbling at the mouth. [சுள் → சொள்] |
சொற்கட்டான் | சொற்கட்டான் coṟkaṭṭāṉ, பெ. (n.) சொக்கட்டான் (வின்.);; back-gammon. |
சொற்கட்டு | சொற்கட்டு1 coṟkaṭṭu, பெ. (n.) 1. தாளக் கட்டுரை; imitative sounds uttered in drumming, etc. 2. செல்வாக்கு (இ.வ.);; influence. தெ. சொல்கட்டு [சொல் + கட்டு.] சொற்கட்டு2 coṟkaṭṭu, பெ. (n.) பொய் (இ.வ.);; false-hood, fib. [சொல் + கட்டு. கால அளவைக் காட்டும் (பொருளற்ற); ஒலிக் குறிப்புகளின் தொகுதி] |
சொற்கருவி | சொற்கருவி coṟkaruvi, பெ. (n.) பேசுவதற்கு ஆதாரமாயுள்ள உறுப்புகள்; organs faciltating speech as lips tongue, teeth etc. (சா. அக.); [சொல்+கருவி] |
சொற்கலகம் | சொற்கலகம் coṟgalagam, பெ. (n.) சொற்போர் (வின்.);; controversy. [சொல் + கலகம்] |
சொற்கா-த்தல் | சொற்கா-த்தல் coṟkāttal, 4 செ.கு.வி. (v.i.) 1. சொன்ன சொல்லை நிறைவேற்றுதல்; to keep one’s word. 2. அடக்கிப் பேசுதல்; to speak with due caution. 3. புகழப் போற்றுதல்; to guard one’s reputation. “சொற்காத்துச் சோர்விலான் பெண்” (குறள், 56);. [சொல் + கா-.] |
சொற்காரி | சொற்காரி coṟkāri, பெ. (n.) எழுவகை முகில்களுள் ஒன்று (சூடா.);; one of seven kinds of clouds. [சொல் + காரி] |
சொற்குன்றல் | சொற்குன்றல் coṟkuṉṟal, பெ.(n.) சொற்குற்றம் பார்க்க; see sor kurram “சொற்குன்றலின்றித் தொழுமின்” (திருமந்279); [சொல்+குற்றம்] |
சொற்குறி | சொற்குறி coṟkuṟi, பெ. (n.) செய்நஞ்சு (மூ.அ);; a prepared arsenic. [சொல் + குறி] |
சொற்குற்றம் | சொற்குற்றம் coṟkuṟṟam, பெ. (n.) 1. சொல்லி லக்கணத்திற்கு மாறான குற்றம்; ctymological error. 2. சொல்லின் தீமை (இ.வ.);; impropriety, offensiveness, in words. [சொல் + குற்றம்] |
சொற்குற்றம்வாய்க்குற்றம் | சொற்குற்றம்வாய்க்குற்றம் coṟkuṟṟamvāykkuṟṟam, பெ. (n.) சிறுசொற்பிழைகள் (வின்.);; trivial mistakes in words. [சொல் + குற்றம் + வாய் + குற்றம்] |
சொற்கேள்-தல் (சொற்கேட்டல்) | சொற்கேள்-தல் (சொற்கேட்டல்) coṟāḷtalcoṟāṭṭal, 6 செ.கு.வி. (v.i.) 1. ஏவற்படி நடத்தல்; to be obedient; to listen, to pay regard. சொற்கேளாப் பிள்ளையினாற் குலத்துக் கீனம் (உ.வ.); 2. வசையைப் பொறுத்தல்; to put up with abuse orabusive words. 3. வசை பெறுதல்; to get abusive words. 4. கேட்டல்; to hear. ‘மழலைச் சொல் கேளாதவர்” (குறள், 66);. [சொல் + கேட்டல்] |
சொற்கோ | சொற்கோ coṟā, பெ. (n.) திருநாவுக்கரசு நாயனார்;{Tiru-nāvukkarašu-nāyanār.} “சொற்கோவுந் தோணிபுரத் தோன்றலு மென் சுந்தரனும்” (சிவானந்தமாலை);. [சொல் + கோ] |
சொற்கோவை | சொற்கோவை coṟāvai, பெ. (n.) 1. சொற்களின் தொகுப்பு; thesaurus vocabulary; stock of words. 2. உரை; speech. [சொல் + கோவை – சொற்கோவை = ஒரு மொழியிலுள்ள அல்லது ஒருவர் அறிந்து வைத்துள்ள சொற்களின் தொகுப்பு] |
சொற்சிதைவு | சொற்சிதைவு coṟcidaivu, பெ. (n.) சொல்லின் மாறுபட்ட உருவம்; corrupt form of a word. [சொல் + சிதைவு] |
சொற்சித்திரம் | சொற்சித்திரம் coṟcittiram, பெ. (n.) பேச்சு வன்மை; picturesqueness of language; play on words. [சொல் + சித்திரம்] |
சொற்சிமிட்டு | சொற்சிமிட்டு coṟcimiṭṭu, பெ. (n.) 1. பொடி வைத்துப் பேசுகை, (யாழ்ப்.);; subtle, speech. 2. பொருளை மாற்றவல்ல சிறு சொல்; use of a little word or particle easily over looked yet materially affecting the meaning. 3. சொற்றிறமை2 பார்க்க;see {šortiramař.} [சொல் + சிமிட்டு] |
சொற்சிலம்பம் | சொற்சிலம்பம் coṟcilambam, பெ. (n.) சொற்களின் அழகிய கூட்டு; rhetorical. கவிதையில் உணர்வு எதுவும் வெளிப்படவில்லை, எல்லாம் சொற்சிலம்பம் தான். [சொற் + சிலம்பம்] |
சொற்சீரடி | சொற்சீரடி coṟcīraḍi, பெ. (n.) அம்போதரங்கம் (காரிகை.செய். 10, உரை. பக்.96);; one of the component elements of kali verse. [சொல் + சீரடி] |
சொற்சுவை | சொற்சுவை coṟcuvai, பெ. (n.) சொல்லினிமை; verbal sweetness. ‘சொற்சுவையும் பொருட்சுவையும்’ (குறள், 420. உரை);. [சொல் + சுவை] |
சொற்செறிவு | சொற்செறிவு coṟceṟivu, பெ. (n.) சொல்வளம்; wealth of words. ‘சொற்செறிவும் இசைச்செறிவு முடைத்தாதலானும்’ (சிலப். 3:67, உரை.);. [சொல் + செறிவு] |
சொற்செலவு | சொற்செலவு coṟcelavu, பெ. (n.) 1. செல்வாக்கு; influence, fame. ‘நிலத்துக் குலிமை, சொற்செலவு, கல்வி . . . எனப்பட்ட’ (ஆசாரக். 3, உரை);. 2. ஒருவர்க்காகப் பரிந்து பேசுகை (வின்.);; recommendation. [சொல் + செலவு] |
சொற்செல்(லு)தல் | சொற்செல்(லு)தல் coṟcelludal, 13 செ.கு.வி. (v.i.) அதிகாரமுடையவனாதல்; to command obedience. “எனக்கு அடைத்த விடயத்தில் சொற் செல்லாதாகிலன்றோ எனக்குக் குறையாவது” (ஈடு, 10:21);. [சொல் + சொல்(லு);-.] |
சொற்சேர்க்கை | சொற்சேர்க்கை coṟcērkkai, பெ. (n.) அகரமுதலி (அகராதி); (புதுவை.);; dictionary. [சொல் + சேர்க்கை] |
சொற்சோதனை | சொற்சோதனை coṟcōtaṉai, பெ. (n.) சொல்லாராய்ச்சி; critical examination of words. “பேராசிரியர் சொற்சோதனை காட்டிய” (பி.வி.14);. மறுவ. சொல்லாய்வு [சொல் + சோதனை] |
சொற்சோர் | சொற்சோர் coṟcōr, பெ. (n.) சொற்சோர்வு (யாழ்.அக.); பார்க்க;see {sor-coryu.} [சொல் + சோர்] |
சொற்சோர்வு | சொற்சோர்வு coṟcōrvu, பெ. (n.) 1. பேச்சில் தடுமாறுகை; faltering in speech. 2. சொற்பிழை பார்க்க;see {sorpilai} “சொற் சோர்வு படேல்” (ஆத்திசூடி.);. [சொல் + சோர்வு] |
சொற்பகட்டு | சொற்பகட்டு coṟpagaṭṭu, பெ. (n.) 1. அணியழகுச் சொல்; bombastic word. 2. விண் பெருமை; tall talk. [சொல் + பகட்டு] |
சொற்பசி | சொற்பசி soṟpasi, பெ. (n.) 1. சொல்தேவை; hunger for words. 2. சொல்தட்டுப்பாடு; short-age of words. [சொல் + பசி] |
சொற்படு-தல் | சொற்படு-தல் coṟpaḍudal, 20 செ.கு.வி. (v.i.) பலன் மிகுதல்; to yieldin plenty, increase; to succeed. ‘தவசம் சொற்பட்டிருக்கிறது’ (வின்.);. [சொல் + படு-.] |
சொற்படுத்து-தல் | சொற்படுத்து-தல் coṟpaḍuddudal, 5 செ.கு.வி. (v.i.) இசைக்கு ஏற்பச் சொல்லமைத்தல்; to compose to a particular tune. ‘உருவுக்குச் சொற்படுத்தியும் இசைப்படுத்தியும் அறிந்து’ (சிலப். 3, 150, உரை.);. [சொல் + படுத்து-.] |
சொற்பதம் | சொற்பதம் coṟpadam, பெ. (n.) 1. சொல்லளவு; implication, suggestion. “வெற்பன் வினாய சொற்பத நோக்கி” (திருக்கோ.61);. 2. சொல்லாற் குறிக்கப்படும் நிலை; the state of being expressed in words. “சொற்பதங் கடந்த சோதி” (திருவிளை. வரகுண. 23);. [சொல் + பதம்] |
சொற்பயன்பாடு | சொற்பயன்பாடு coṟpayaṉpāṭu, பெ. (n.) சொற்களைத் தெரிவுசெய்து ஆளுகை; use of words in proper place. மறுவ. சொல்லாட்சி, சொல்லாண்மை, சொல்லாளுகை. [சொல் + பயன்பாடு] |
சொற்பழி | சொற்பழி coṟpaḻi, பெ. (n.) பிறர்கூறும் பழிச்சொல்; scandal, reproach. “தலையெலாஞ் சொற்பழி யஞ்சிவிடும்” (நாலடி. 297);. [சொல் + பழி] |
சொற்பழுத்தவர் | சொற்பழுத்தவர் coṟpaḻuttavar, பெ. (n.) நாவண்மையுடையவர்; persons with great power of speech or command of language, as poets. ”சொற்பழுத்தவர்க்கு மாண்மை சொல்லலாம்” (சீவக. 435);. [சொல் + பழுத்தவர்] |
சொற்பாடு | சொற்பாடு1 coṟpāṭu, பெ. (n.) 1. உடன்படிக்கை; agreement, mutual understanding. ‘தூமொழியாளூட றொலையாத காலத்தோர் சொற்பாடாய் வந்து . . . இலங்கையர்கோன் வரையெடுக்க” (தேவா. 677, 7.);. 2. பழிச்சொல் (இ.வ.);; stigma. [சொல் + பாடு] சொற்பாடு2 coṟpāṭu, பெ. (n.) புகழ்; fame. “குலந்தனிலிட்ட சொற்பாடும்” (சொக்க, உலா, 259);. [சொல் + பாடு] |
சொற்பின்வருநிலை | சொற்பின்வருநிலை coṟpiṉvarunilai, பெ. (n.) ஒரு சொல் வெவ்வேறு பொருளிற் பல முறைவரும் அணி (தண்டி. 41, உரை);; repetition of the same word with different meanings, as in a verse. [சொல் + பின் + வருநிலை] எ-டு. மால்கரி காத்தளித்த மாலுடைய மாலைசூழ் மால்வரைத்தோ ளாதரித்த மாலையார் மாலிருள்சூழ் மாலையின் மால்கட லார்ப்ப மதன்றொடுக்கு மாலையின் வாளி மலர். |
சொற்பிறப்பியல் | சொற்பிறப்பியல் coṟpiṟappiyal, பெ. (n.) சொல்லின் வேர், தோற்றம், வளர்ச்சி, மாற்றம் பற்றிய மொழியியற் பிரிவு; study of the origin and history of words and their meanings, etymology. மறுவ. வேர்ச்சொல்லாய்வு [சொல் + பிறப்பு + இயல்] |
சொற்பிறப்புவகைப்படு-த்தல் | சொற்பிறப்புவகைப்படு-த்தல் coṟpiṟappuvagaippaḍuttal, 20 செ.கு.வி. (v.i.) வேர்ச்சொற் பிறப்பினைத் தொகுத்தல்; etymological compilation classification. [சொற்பிறப்பு + வகைப்படு-த்தல்] |
சொற்பிழை | சொற்பிழை coṟpiḻai, பெ. (n.) 1. சொற்குற்றம்; verbal mistake. “சொற்பிழை வராமலுனைக் கனக்கத் துதித்து” (திருப்பு. 779);. 2. எழுத்துப் பிழை (இ.வ.);; spelling mistake. [சொல் + பிழை] |
சொற்பு | சொற்பு coṟpu, பெ. (n.) சொல்லுகை; saying, speaking “சொற்புறுத்தற் குரியன” (கம்பரா. நகர்நீ. 16);. [சொல் → சொற்பு] |
சொற்புத்தி | சொற்புத்தி coṟputti, பெ. (n.) அறிவுரை (வின்.);; advice; admonition. [சொல் + புத்தி] Skt. buddhi —» த. புத்தி |
சொற்புரட்டு | சொற்புரட்டு coṟpuraṭṭu, பெ. (n.) பொய்; falsehood, lie. “சொற்புரட் டைந்திடத்தே சொல்லலா மெய்யதாமே” (தனிப்பா.);. [சொல் + புரட்டு] |
சொற்புள் | சொற்புள் coṟpuḷ, பெ. (n.) காக்கை (பின்வருவதைச் சொல்லுதலுடைய பறவை);; crow, as foretelling events like the coming of guests. “நற்றாய் நயந்து சொற்புட் பராயது” (திருக்கோ. 235, கொளு);. [சொல் + புள்] |
சொற்பெருக்கு | சொற்பெருக்கு coṟperukku, பெ. (n.) விரிவுரை; lecture. [சொல் + பெருக்கு] |
சொற்பொருட்பின்வருநிலை | சொற்பொருட்பின்வருநிலை coṟporuṭpiṉvarunilai, பெ. (n.) ஒரு சொல் ஒரு பொருளிலேயே பலமுறை வரும் அணி (தண்டி. 41, உரை);; repetition of a word in the same meaning as in a verse. [சொல் + பொருள் + பின் + வருநிலை] எ-டு: செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. (குறள், 411); |
சொற்பொருத்தம் | சொற்பொருத்தம் coṟporuttam, பெ. (n.) செய்யுண் முதன்மொழிப் பொருத்தம் பத்தனுள், வகையுளி சேர்ந்ததும், சிறப்பில்லதும், பல்பொருட் கேற்பதும், பொருளில்லாததும் திரிதல் கெடுதல் என்னும் உறழ்ச்சியுடையது மாகாது, மூவசையுடைய மங்கலச்சொல் செய்யுளின் முதற்கண் அமைதலாகிய பொருத்தம் (வெண்பாப். முதன்.3);; rule of propriety which enjoins that the commencing word of a poem must be trisyllabic and auspicious and must not be capable of being split in scanning. inelegant, ambiguous, meaningless, or defective in form one of ten {šeyyun-mudan-moli-p-poruttam.} [சொல் + பொருத்தம்] |
சொற்பொருள்விரித்தல் | சொற்பொருள்விரித்தல் coṟporuḷvirittal, பெ. (n.) உத்திகள் முப்பத்திரண்டனுள் சொல்லின் பொருள் வெளிப்படையாக விளங்கும்படி விரித்துக் கூறும் உத்தி (நன்.14);; elaborating the etymological and semantic significance of a word in a treatise, one of 32 utti. [சொல் + பொருள் + விரித்தல்] |
சொற்பொழிவு | சொற்பொழிவு coṟpoḻivu, பெ. (n.) நீண்டமேடைப் பேச்சு, சொற்பெருக்கு; lecture சமயச் சொற்பொழிவு. [சொல் + பொழிவு] |
சொற்போர் | சொற்போர் coṟpōr, பெ.(n.) எதிராடல், தருக்கம்; logic [சொல்-போர் (மற்றவர் பேச்சுக்கு மறுப்பு தரும் திறன்);] |
சொற்றல் | சொற்றல் coṟṟal, பெ. (n.) சொல்லுகை; saying, telling. “இராக்கதர் கொற்றஞ் சொற்றல்” (கம்பரா. பொழிலிறுத். 58);. [சொல் → சொற்றல்] |
சொற்றாமம் | சொற்றாமம் coṟṟāmam, பெ. (n.) சொன் மாலை; garland of words. “நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி” (திருத். பு. சா. 43);. [சொல் + தாமம்] |
சொற்றிரிபு | சொற்றிரிபு coṟṟiribu, பெ. (n.) சொல்லின் கண் நிகழும் மாறுபாடு (வின்.);; change in the form of a word. [சொல் + திரிபு.] |
சொற்றிருத்தம் | சொற்றிருத்தம் coṟṟiruttam, பெ. (n.) 1. சொல்லின் சரியான பலுக்கம்; correct pronunciation distinctarticulation. 2. எழுத்துப் பிழையின் திருத்தம்; correction of criors in writting. [சொல் + திருத்தம்] |
சொற்றிறமை | சொற்றிறமை coṟṟiṟamai, பெ. (n.) 1. நாவன்மை; 2. பேச்சு நயம்; ingenuity or artfulness, in the use of words, verbal subtlety. [சொல் + திறமை] |
சொற்றிறம் | சொற்றிறம் coṟṟiṟam, பெ.(n.) சொல்வன்மை; eloquence commandon language. [சொல்+திறம்] |
சொற்றொடர் | சொற்றொடர் coṟṟoḍar, பெ. (n.) ஒரு சொல் நீர்மைத்தான தொடர்; sentence. 2. தன்னளவிலோ ஒரு சொற்றொடரிலோ ஒரு தனித்த அலகாக முழுமையடையாத சொற்றொகுதி; phrase, clause. [சொல் + தொடர்] |
சொற்றொடர்நிலைச்செய்யுள் | சொற்றொடர்நிலைச்செய்யுள் coṟṟoḍarnilaicceyyuḷ, பெ. (n.) ஒரு செய்யுளினிறுதி அடுத்த மற்றொரு செய்யுட்கு முதலாக வரத் தொடுப்பது (தண்டி. 11, உரை);; a versein which the last word or later of a stanza in repeated as the first of word or letter of the next stanza. [சொல் + தொடர்நிலை + செய்யுள்] |
சொலவடை | சொலவடை colavaḍai, பெ. (n.) பழமொழி; proverb. Poli., Russ. solava; Cz. solava; Skt. sloka [சொலவு → சொலவடை] |
சொலவம் | சொலவம் colavam, பெ. (n.) சொலவு (நெல்லை); பார்க்க;see {Solavu,} [சொலவு → சொலவம்] த. சொலவம் → Skt. {šlõk,} |
சொலவு | சொலவு colavu, பெ. (n.) 1. சொல்லுகை; saying, telling. “சொற்செல்லாவழிச் சொலவு” (முது. காஞ்.87);. 2. பழமொழி; proverb. ‘ஆயிரங் காக்கைக்கு ஒரு கல் என்று ஒரு சொலவு உண்டு’ (இ.வ.);. [சொல்1 → சொலவு = மரபுக் கூற்று, பழமொழி, பழமொழி போன்ற செய்யுள் தொடர்] |
சொலி | சொலி1 colittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. உரித்தல்; to strip off, “பாம்பு சொலித்தன்ன வறுவை” (சிறுபாண். 236);. 2. பெயர்த்தல், பேர்த்தல்; to tear. “திங்களுகிரிற் சொலிப்பது போல” (சீவக. 350);. 3. தோண்டுதல்; to dig off. 4. பிளத்தல்; to split. [சொல்2 → சொலி-.] சொலி2 colittal, 4 செ.கு.வி. (v.i.) 1. ஒளிர்தல்; to shine, be radiant. “மானமென் றுரைப்ப தெழுந்துமேற் சொலித்து வருவது போன்றும்” (பிரபோத. 11:1);. 2. எரிதல்; to burn, blaze up, as fire oranger. “நாப்ப ணழல் சொலிப்பதாக வுன்னி” (பிரபோத. 44:15);. [சுல் → சுல்லி = அடுப்பு. சுள்ளெனல் = வெயில் சுடுதல். சுள் → சுள்ளை = மட்கலஞ் சுடுமிடம் = காளவாய். சுல்→(சொல்); → சொலி → சொலி-த்தல்] சொலி3 coli, பெ. (n.) மரமுதலியவற்றின் தோல், பட்டை; bark of a tree; the inner fibrous covering of a bamboo. “கழைபடு சொலியின்” (புறநா. 383);. [தொலி → சொலி] |
சொலிதை | சொலிதை colidai, பெ. (n.) வெளிச்சம்; brilliance. சொலிதை யுற்றிடும் விவேகர்” (பாடு. 28, அடியவர்);. [சொல்2 → சொலிதை.] |
சொலிப்பு | சொலிப்பு colippu, பெ. (n.) வெளிச்சம்; பளபளத்தல் (வின்.);; shining, glittering. [சொல்2 → சொலிப்பு.] |
சொலியன் | சொலியன் coliyaṉ, பெ. (n.) முடக்கொற்றான் (மலை.);; balloon vine. |
சொலுசொலெனல் | சொலுசொலெனல் solusoleṉal, பெ. (n.) 1. இடைவிடாதத் தூறலின் ஒலிக்குறிப்பு (வின்.);; expr. signifying, continuous drizzling. 2. சேறாதற் குறிப்பு; clayey condition, as of weifoor 3. சோறு முதலியன குழைதற் குறிப்பு; the state of being mashy, as overboiled rice. [சொளுசொளுத்தல் = எளிதாய்த் துளைக்குமாறு கூழ்போற் குழைதல், சேறாதல், சொளுசொளு → சொலுசொலு → சொலுசொலெனல் = சோறு குழைத்தல்] |
சொல் | சொல்1 colludal, 8 செ.குன்றாவி. (v.t.) 1. பேசுதல்; to say, speak, tell, mention, utter, express. “சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்” (குறள், 664);. 2. திருப்பிக்கூறுதல்; to recite, repeat, relate, quote. சொன்னதைச் சொல்லுங் கிளிப்பிள்ளை. 3. கட்டளையிடுதல்; to dictate, command. மூத்தோர் சொல்லியதை மீறாதே. 4. அறிவுரைக் கூறுதல்; to advise. 5. அறிவித்தல்; to inform. “யாருக்கென் சொல்லுகே னன்னை மீர்காள்” (திவ். திருவாய். 9. 9:7);. 6. புகழ்தல்; to praise. “தோளையே சொல்லுகேனோ (கம்பரா. மாரீச. 73);. ம. சொல்லுக; க. சொல், சொல்லு; தெ. சொல்; இரு. சொல்லு;எர. சொன்னு [சுல் → சொல் = ஒலி, மொழி. சொல் → சொல்(லு);-தல் = உரைத்தல்] சொல்2 colludal, 8 செ.குன்றாவி. (v.t.) களைதல்; to remove, alleviate, put away. “புறவி னல்லல் சொல்லிய . . . துலாஅம் புக்கோன்” (புறநா. 39);. [சுல் → சொல் → சொல்(லு);-தல்] சொல்3 col, பெ. (n.) 1. மொழி; word, term. ‘சொல்லினாகு மென்மனார்’ (தொல். சொல். 158);. 2. பேச்சு; saying, speech. “சான்றோர் கொடுத்தா ரெனப் படுஞ்சொல்” (நாலடி, 100);. 3. பழமொழி; proverb, maxim. “அல்லவை செய்தார்க் கறங் கூற்றமாமென்னும் . . . சொல்” (சிலப். 20, வெண்பா.);. 4. உறுதிமொழி; declaration, promise, assurance. “தோழமை யென்றவர்ன சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ” (கம்பரா. குகப். 15.);. 5. புகழ்; praise, encomium, panegyric. “தன்சொலாற் றான்கண்டனைத்து” (குறள். 387);. 6. மந்திரம்; incantation. “சொல்லுங்காற் சொல்லும் பலவுள” (பு.வெ. 12, வென்றிப், 9);. 7. தீமொழி (சாபம்);; curse. “சொல்லொங்குங் கடியவேகச் சுடுசரம்” (கம்பரா. தாடகை. 72);. 8. கட்டளை; command, direction. “என்சொற் கடந்தா லுனக்கியாதுள தீனமென்றான்” (கம்பரா. நகர்நீங்கு. 140);. 9. அறிவுரை; advice. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை. ம. சொல்லு, சொல்; க. சொல், சொல்லு; குட. சொல்லி (பெயர்);; கோத. சொல் (ஆணை);;பர். கல் [சுல் → சொல்] சொல்4 col, பெ. (n.) 1. பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நால்வகை மொழிகள் (நன். 270);; part of speech, of which there are four, viz. peyar-ccol, {vinai-c-col, idai-c-col, uri-c-col.} 2. தமிழ் மொழியில் உள்ள இயற்சொல், திரிசொல், திசைச்சொல் வடசொல் என நால்வகைப் பட்ட மொழிகள் (தொல். சொல். 397);; words in Tamil language, of four classes, viz., {iyarcol, tiri-šol, tišai-c-col, vada-šol.} [சொல்3 → சொல்4] ‘சொல் எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை’ (இளம். தொல். சொல். 1, கல். தொல். சொல்.1);. ‘ எழுத்தோடு ஒருபுடயான் ஒற்றுமையுடைத் தாய்ப் பொருள் குறித்து வருவது. சொல்தான் இரண்டு வகைப்படும் தனி மொழியும் தொடர் மொழியும் என’ (சேனா. தொல். சொல். 1);. ‘எழுத்தினா னாக்கப்பட்டு இருதினைப் பொருட்டன்மையும் ஒருவன் உணர்தற்கு காரணமாம் (நிமித்தமாம்); ஓசை’ (நச்.தொல். எழுத்து. பாயிரம்; நச். தொல். சொல். 1). ‘எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறி வுறுக்கும் ஓசை’ (நச்.தொல். பொருள்.195);. ‘எழுத்தினானியன்று பொருள் அறிவிக்குஞ் சொற்களைப் பொருள் நிலைமை நோக்கித் தொடர்மொழி தனி மொழியென இருவகைப் படுத்தி, அத்தொடர்மொழியை அல்வழித் தொடர் வேற்றுமைத்தொடரென இருவகைப் படுத்தலாம்’ (தெய்வச். தொல். சொல்.1);. ‘எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதினைப் பொருட்டன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசை’ (சிவ. நன். சொல். முன்னுரை);. ‘சொல் (கூறும் முறை); எல்லாச் சொற்களையும் கூறுங்கால் பொருள் சிறக்குமிடத்து எழுத்தினை எடுத்தும் அயலெழுத்தினை நலித்தும் ஏனை யெழுத்துகளைப்படுத்தும் கூறுக’ (நன்.132. சிவ.);. ‘சொல் (முரண்); சொல்லாலன்றிப் பொருளான் மாறுபடாமை’ (தொல். செய். 91, இளம்.);. சொல்5 col, பெ. (n.) 1. நாடகவரங்கிற் பேசப்படும் உட்சொல், புறச்சொல், வான் (ஆகாசச்); சொல் என்பன (சிலப். 3. 13 உரை. பக். 87);; speech or utterance on the stage. of three kinds, viz., {ut-col. pura-c-col.} 2. ஒலி; sound. பல்லி சொல். [சுல் → சொல்] சொல்6 col, பெ. (n.) 1. நாமகள்;{Šarasvadi,} as Goddess of speech. சொல்லென்றது நாமகளாகிய தெய்வம் (தொல். சொல். 57, சேனா.);. 2. சொல் விளம்பி (அக.நி.); பார்க்க;see {Sol-Vilambi.} [சுல் → சொல்] சொல்7 col, பெ. (n.) நெருப்புப் போல் அல்லது பொன்போல் விளங்கித் தோன்றும் நெல்; paddy. “சொல்- இறைஞ்சிக் காய்த்தவே” (சீவக.53);. [சுல → சொல்] |
சொல்சைவு | சொல்சைவு colcaivu, பெ. (n.) சொல்லப்பட்டதற்கு ஏற்றது; according to the said word. [சொல் + இசைவு] |
சொல்தவறு-தல் | சொல்தவறு-தல் coldavaṟudal, 5 செ.கு.வி. (v.i.) சொல் (வார்த்தை); பிறழ்தல்; to treak one’s word. [சொல் + தவறு-.] |
சொல்ப்போடு | சொல்ப்போடு2 colppōṭudal, 20 செ.கு.வி. (v.i.) சொல்லியனுப்பு2-தல் பார்க்க;see {soli. y-anաppա-.} [சொல் → சொல்லி + போடு-. போடு’ – துணை வினை.] |
சொல்மறதி | சொல்மறதி colmaṟadi, பெ. (n.) பேசத் தொடங்கும் போது வார்த்தைகளை மறத்தல்; forgetfulness of words when attempting to speak. (சா.அக.); [சொல்+மறதி] |
சொல்மாறாட்டம் | சொல்மாறாட்டம் colmāṟāṭṭam, பெ. (n.) 1. வாய் குளறல்; blabbering. 2. தடுமாறிப் பேசுகை; incoherent talk. (சா.அக.); [சொல்+மாறாட்டம்] |
சொல்லகத்தியம் | சொல்லகத்தியம் collagattiyam, பெ. (n.) இறந்துபட்ட ஓர் இசைநூல் (சிலப். 8:24. அரும்.);; an ancient treatise on music, not extant. [சொல் + அகத்தியம்] |
சொல்லடைவு | சொல்லடைவு collaḍaivu, பெ. (n.) ஒரு நூலில் வழங்கும் சொற்களை அகர வரிசைப்படுத்தி நூலுடன் இணைக்கும் பட்டியல்; word index. (for texts, ext, literary works); [சொல் + அடைவு] |
சொல்லணி | சொல்லணி collaṇi, பெ. (n.) சொல்லினோசை முதலியன இன்பம்பட அமைக்கும் அணிவகை (தண்டி.);; figure of speech depending for its effect on sound alone, opp. to {poru/-апі.} [சொல் + அணி] |
சொல்லதிகாரம் | சொல்லதிகாரம் colladikāram, பெ. (n.) சொல்லின் பாகுபாடு செய்கை முதலியவற்றைப் பற்றிக் கூறும் இலக்கணப் பகுதி (தொல்.);; section dealing with etymology. [சொல் + அதிகாரம்] |
சொல்லபோனால் | சொல்லபோனால் collapōṉāl, வி.எ. (adv.). உண்மையில்; in fact. இவர்கள் ஏன் ஒப்பாரி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை; சொல்லப் போனால் நானல்லவா. துயரப்படவேண்டும். [சொல் → சொல்லப்போனால்] |
சொல்லறிகணை | சொல்லறிகணை collaṟigaṇai, பெ. (n.) ஒலியைக் கேட்டே மறைந்துள்ள இலக்கை அறிந்து எய்யுங்கணை; arrow that is shot at a person oranimal when out of sight, the direction being judged by sound. “சொல்லறி கணையை வாங்கி தொடுத்தவன் விடுத்தலோடும்” (யசோதர. [சொல் + அறிகணை] |
சொல்லறிபுள் | சொல்லறிபுள் collaṟibuḷ, பெ. (n.) 1. கிளி (யாழ்.அக.);; parrot. 2. பூவை (சங்.அக.);; myna. [சொல் + அறி + புள்] |
சொல்லறுதி | சொல்லறுதி collaṟudi, பெ. (n.) விலை முதலியவற்றை வரையறையாகக் கூறும் உறுதி (வின்.);; final word, as in striking a bargain. [சொல் + அறுதி] |
சொல்லற்பாடு | சொல்லற்பாடு collaṟpāṭu, பெ. (n.) சொல்லப்படுகை; spoken mentioned. ‘அவ்விரண்டும் உவமமென்று சொல்லற்பாட்டிற் கடியப்படா’ (தொல். பொருள். 310, உரை);. [சொல் + அல் + (படு→); பாடு] |
சொல்லலங்காரம் | சொல்லலங்காரம் collalaṅgāram, பெ. (n.) சொல்லணி பார்க்க;see {So/-/-ani.} [சொல் + அலங்காரம்] Skt. அலங்கார → த. அலங்காரம் |
சொல்லழிம்பு | சொல்லழிம்பு collaḻimbu, பெ. (n.) இடக்கர்ச்சொல்; obscene word. அவன் சொல்லழிம்பு மிகமோசம் (உ.வ.);. [சொல் + அழிம்பு] |
சொல்லழுத்தம் | சொல்லழுத்தம் collaḻuttam, பெ. (n.) 1. ஊன்றிச்சொல்லுகை; emphasis. 2. சொல்லுறுதி (வாக்குறுதி);; word of promise; decisive speech. [சொல் + அழுத்தம்] |
சொல்லாகுபெயர் | சொல்லாகுபெயர் collākubeyar, பெ. (n.) ‘உரை செய்தான்’ என்பதில் உரையென்பது அம்மொழியால் உணரப்படும் பொருளுக்கு ஆவது போன்ற ஆகுபெயர் (நன். 290, உரை);; a species of metonymy in which a term signifying word is used to denote a composition, oral or written as in ‘நூலுக்கு உரை செய்தான்” [சொல் + ஆகுபெயர் – சொல்வாகுபெயர் = ஒரு சொல் அதனோடு ஏதேனும் ஒரு வகயில் தொடர்புடைய மற்றொன்றையும் குறிப்பிட்டு வழங்கி வருவது] |
சொல்லாக்கம் | சொல்லாக்கம் collākkam, பெ. (n.) 1. புதிய கருத்துகளை உணர்த்த ஒரு மொழியில் சொற் செய்துகொள்ளுகை; formation of words, word-building. 2. பேட்டி; interview. 3. கலந்துரையாடல்; conversation. [சொல் + ஆக்கம்] |
சொல்லாடல் | சொல்லாடல் collāṭal, பெ.(n.) 1) பேசுதல் : speaking சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் (சிலம்);. 2) சொல்விளையாட்டு; word game of children. 3) எதிராடல்; speaking against of சொல்லாடாதே என்றால் நீ கேட்க மாட்டாய் போலிருக்கிறது. [சொல்+ஆடல்]. |
சொல்லாடு-தல் | சொல்லாடு-தல் collāṭudal, 5 செ.கு.வி. (v.i.) பேசுதல்; to speak, talk. “சொல்லாடச் சோர்வுபடும்” (குறள், 405);. [சொல் + ஆடு-. ஆடு → ஆடுதல் = பேசுதல், உரைத்தல்] |
சொல்லாட்சி | சொல்லாட்சி collāṭci, பெ. (n.) சொற்களை தொடரில் பயன்படுத்தும் பாங்கு; command over words. மொழிநடையில் உள்ள சொல்லாட்சி கண்டே, எழுத்தாளர்/கவிஞர் யாரென அறியமுடியும். |
சொல்லாட்டி | சொல்லாட்டி collāṭṭi, பெ. (n.) திறமையாய்ப் பேசுபவன்; woman of clever or skilful speech. “சொல்லாட்டி நின்னொடு சொல்லாற்ற கிற்பார் யார்” (கலித். 108);. [சொல் + ஆட்டி – சொல்லாட்டி = சொல்லை ஆள்பவள்.] |
சொல்லாட்டு | சொல்லாட்டு collāṭṭu, பெ. (n.) பேச்சு; conversation speech. “சொல்லாட் டிடையுஞ் செல்ல றீர்தலின்” (பெருங். வத்தவ. 6:25);. [சொல் + ஆட்டு. ஆடு → ஆட்டு] |
சொல்லாதசொல் | சொல்லாதசொல் sollātasol, பெ. (n.) 1. தகாத சொல் (யாழ்.அக.);; improper word. 2. இடக்கர்ச் சொல்; obscene or indecent language. 3. வசை; abusive language. [சொல் + ஆத + சொல்] |
சொல்லானந்தம் | சொல்லானந்தம் collāṉandam, பெ. (n.) இலக்கியத் தலைவனின் இயற்பெயரை யடுததுக் கேடுபயக்கும் அமங்கலச் சொல்லைப் புணர்த்துப்பாடுவது (யாப்.வி.96. பக். 519);; inauspicious use of a word of evil importin conjunction with the name of the hero of a poem. [சொல் + ஆனந்தம் – சொல்லானந்தம் = பாடலின் குற்றங்களுள் ஒருவகை. பாக்குற்றங்கள்: எழுத்துக் குற்றம், சொல் குற்றம், பொருள் குற்றம், யாப்புக் குற்றம், தூக்குக் குற்றம், தொடைக் குற்றம்] |
சொல்லாமற்சொல்(லு)-தல் | சொல்லாமற்சொல்(லு)-தல் collāmaṟcolludal, 8 செ.குன்றாவி. (v.t.) தன் கருத்தைக் குறிப்பாற் கூறுதல்; to communicate one’s thoughts indirectly orby sly remark or gestures. “சொல்லாமற் சொன்னவரை” (திருவிளை. பாயி. 13);. மகன் செய்த தவற்றைச் சொல்லாமல் சொல்லித் திருத்தினார். [சொல்லாமல் + சொல்(லு);-.] |
சொல்லாய்வு | சொல்லாய்வு collāyvu, பெ.(n.) சொல்லின் வேர், தோற்றம், வளர்ச்சிமாற்றம்பற்றிய ஆய்வு study on the origin and history of words and etymology. [சொல்+ஆய்வு] |
சொல்லாராய்ச்சி | சொல்லாராய்ச்சி collārāycci, பெ.(n.) சொல், சொற்பொருள் ஆகியவற்றின் தோற்றம், வரலாறு ஆகியன பற்றிய ஆய்வு; study on words. [சொல்+ஆராய்ச்சி] |
சொல்லாளி | சொல்லாளி collāḷi, பெ. (n.) உறுதிச்சொல் (வாக்குறுதி); யுள்ளவன் (வின்.);; one faithful to his word. 2. சொற்றிறமையுள்ளவன் (வின்.);; eloquent person. 3. செல்வாக்குள்ளவன் (உ.வ.);; a person of influence. [சொல் + ஆளி. ஆள் → ஆளி] |
சொல்லாழம் | சொல்லாழம் collāḻm, பெ. (n.) சொல்லின் பொருளாழம்; deep significance of a word. [சொல் + ஆழம்] |
சொல்லிக்காட்டு-தல் | சொல்லிக்காட்டு-தல் collikkāṭṭudal, 5 செ.குன்றாவி. (v.t.). 1. பாடம் ஒப்பித்தல்; to repeat a lesson. 2. விளக்கியறிவித்தல் (வின்.);; to describe, explain, define. 3. குத்திக் காட்டுதல்; to remind one of one’s faults; to call to mind one’s misdeeds or defects. குற்றத்தைச் சொல்லிக் காட்டினான். [சொல் → சொல்லி + காட்டு-. காட்டு → காட்டு-தல் = அறிவித்தல், காண்பித்தல்] |
சொல்லிக்கொடு | சொல்லிக்கொடு1 collikkoḍuttal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. படிப்பித்தல்; to teach, explain. 2. அறிவித்தல்; to inform, make known. [சொல் → சொல்லி + கொடு-. கொடு’ – துணைவினை] சொல்லிக்கொடு2 collikkoḍuttal, 4 செ.கு.வி. (v.i.) 1. அறிவுரை கூறுதல்; to advise. 2. தூண்டி விடுதல்; to instigate. [சொல் → சொல்லி + கொடு-. கொடு’ – து. வினை] |
சொல்லிக்கொள்(ளு) | சொல்லிக்கொள்(ளு)1 collikkoḷḷudal, 16 செகு.வி. (v.i.) 1. விடைபெறுதல்; to take leave. 2. ஒருவனுக்காகப் பிறனிடந் தாங்கிப் பேசுதல்; to recommend; to speak on one’s behalf. பணத்திற்காக நான் அவனுக்குச் சொல்லிக் கொள்ளுகிறேன். [சொல் → சொல்லி + கொள்(ளு);-.கொள்-துணைவினை] சொல்லிக்கொள்(ளு)2 collikkoḷḷudal, 10 செ.குன்றாவி. (v.t.) 1. முறையிடுதல்; to complain, make known. நடுவரிடம் தன் குறையைச் சொல்லிக் கொண்டான். 2. தனக்குட் பேசுதல்; to speak to oneself. அவர் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார். 3. பாடங்கேட்டல்; to learn from a teacher. மாணாக்கன் பாடத்தைச் சொல்லிக் கொண்டு வரப் போயிருக்கிறான். 4. விடை பெறுதல்; take leavc. மனைவியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். [சொல்லி + கொள்(ளு);-. ‘கொள்’ – துணை வினை.] |
சொல்லிசையளபெடை | சொல்லிசையளபெடை sollisaiyaḷabeḍai, பெ. (n.) பெயர்ச்சொல் வினையெச்சச் சொல்லின் இசையை நிறைத்தற்பொருட்டு அளபெடுப்பது (ஆறு.நன். 91);; an extension of vowel or consonant sound to give rhythm or melody either in noun or in past participle. “உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரனசைஇ இன்னும் உளேன்” (குறள். 1263); “உரனசைஇ யுள்ளம்”, “வரனசைஇ யின்னும்” இவற்றுள் உரனசை, வரனசை என நிற்பினும் செய்யுளோசை குன்றாதாயினும் விருப்ப மெனப் பொருள்படும் நசையென்னும் பெயர்ச்சொல், விரும்பியென வினையைசசப பொருள்படும் பொருட்டு வினையெச்சச் சொல்லாதற்கு நசைஇ என அளபெடுத்தது. [சொல் + இசை + அளபெடை] |
சொல்லின்பம் | சொல்லின்பம் colliṉpam, பெ. (n.) சொற்கவை (வின்.);; euphony. [சொல் + இன்பம்] |
சொல்லின்முடிவினப்பொருண்முடித்தல் | சொல்லின்முடிவினப்பொருண்முடித்தல் colliṉmuḍiviṉapporuṇmuḍittal, பெ. (n.) உத்தி முப்பத்திரண்டனுள், சொல் முடிந்த விடத்து மற்றப் பொருள்களையும் முடிய வைக்கும் உத்தி (நன்.14.);; closing a topic with the finishing word or expression of the chapter dealing with it, one of 32 utti. [சொல் → சொல்லின் + முடிவின் + அப்பொருண் + முடித்தல்] |
சொல்லிப்போடு | சொல்லிப்போடு1 collippōṭudal, 19 செ.குன்றாவி. (v.t.) 1. வெளியிடுதல்; to give out, publish, as a secret. 2. காட்டிக் கொடுத்தல்; to betray. 3. சொல்லியனுப்பு1-தல் பார்க்க;see {Solli-y-anuppu-.} [சொல் → சொல்லி + போடு-. ‘போடு’ – துணை வினை.] |
சொல்லியனுப்பு | சொல்லியனுப்பு1 colliyaṉuppudal, 5 செ.கு.வி. (v.t.) ஆள்மூலம் சொல்லி யனுப்புதல்; to send through a person, as a message. [சொல் → சொல்லி + அனுப்பு-.] சொல்லியனுப்பு2 colliyaṉuppudal, 5 செ.கு.வி. (v.i.) அழைத்துவரச் செய்தி யனுப்புதல்; to send for. உறவினர்களுக்குச் சொல்லி அனு.ப்பியிருக்கிறோம். [சொல் → சொல்லி + அனுப்பு-,] |
சொல்லியல்நூல் | சொல்லியல்நூல் colliyalnūl, பெ.(n.) சொல்லின் தன்மை, வகைப்பாடு முதலியவற்றை கூறும் நூல்; work on etymology. [சொல்+இயல்+நூல்] |
சொல்லிற-த்தல் | சொல்லிற-த்தல் colliṟattal, 3 செ.கு.வி. (v.i.) வாக்கினைக் கடந்து நிற்றல்; to transcend description. “சொல்லிறந் தார்வ நெஞ்சந் தலைத்தலை சிறப்ப” (அகநா. 396);. [சொல் + இற-.] |
சொல்லிலக்கணம் | சொல்லிலக்கணம் collilakkaṇam, பெ. (n.) சொல்லின் தன்மை பாகுபாடு முதலிய வற்றைக் கூறும் நூல்; etymology. [சொல் + இலக்கணம்] |
சொல்லிழுக்கு | சொல்லிழுக்கு colliḻukku, பெ. (n.) சொற்குற்றம்; incorrectness in speech. “சோகாப்பர் சொல்விழுக்குப்பட்டு” (குறள், 127);. [சொல் + இமுக்கு] |
சொல்லிவிடு-தல் | சொல்லிவிடு-தல் colliviḍudal, 18 செ.குன்றாவி & 20 செ.கு.வி. (v.t. & v.i.) சொல்லிப்போடு-தல் பார்க்க;see {Solli-p-pogu-.} [சொல்லி + விடு-.] |
சொல்லிவை-த்தல் | சொல்லிவை-த்தல் collivaittal, 4 செ.குன்றாவி. (v.t.) 1. முன்னறிவித்தல்; to inform before hand; to forewarn. “அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன்” (திவ்.பெரியாழ்._4:1);. 2. கற்பித்தல்; to teach. [சொல் → சொல்லி + வை-.] |
சொல்லிவைத்தாற்போல | சொல்லிவைத்தாற்போல collivaittāṟpōla, வி.எ. (adv.) முன்கூட்டியே திட்டமிட்டது என்று தோன்றும் படி; as if agreed upon or preplanned. சொல்லிவைத்தாற்போல இருவரும் ஒரே மதிப்பெண் வாங்கியிருக்கிறீர்களே! [சொல்லி + வைத்தாற்போல] |
சொல்லுதவி | சொல்லுதவி colludavi, பெ. (n.) உறுதி மொழி தருதல் (வின்.); பரிந்துரை; word of. recommendation or encouragement, dist. fr. {porul-udavi.} [சொல் + உதவி] |
சொல்லுரிமை | சொல்லுரிமை collurimai, பெ. (n.) 1. பேசுவதற்குகான உரிமை (வின்.);; freedom of speech. 2. அழுத்தமாய்த் திருந்திய பேச்சு (வின்.);; fine, emphatic expression. [சொல் + உரிமை] |
சொல்லுருபு | சொல்லுருபு collurubu, பெ. (n.) வேற்றுமை யுருபுகட்கு மாற்றாக வழங்குஞ் சொல்; word functioning as case-suffix. “உருபுவே றுருபு சொல்லுரு பாகியும்” (இலக். கொத். 18);. [சொல் + உருபு] ‘கத்தி கொண்டு வெட்டினான்’ என்பதில் ‘கொண்டு’ என்பது ‘ஆல்’ என்னும் வேற்றுமை உருபு போலக் செயல்படுவதால் அதுஒரு சொல்லுருபு ஆகும். |
சொல்லுருமாறுபாடு | சொல்லுருமாறுபாடு collurumāṟupāṭu, பெ. (n.) சொல்லின் ஒலிப்பு ஒருவருக்கு ஒருவர் மாறுபட்ட குரலில் ஒலிப்பது; Sound difference from person to person on a particular word. [சொல் + உரு + மாறுபாடு] |
சொல்லுறுதி | சொல்லுறுதி colluṟudi, பெ. (n.) வாக்கு நிறைவேற்றுகை; keeping one’s word or promise. [சொல் + உறுதி] |
சொல்லுவான்குறிப்பு | சொல்லுவான்குறிப்பு colluvāṉkuṟippu, பெ. (n.) கூறுவோன் கருத்து; speaker’s aim or intention. [சொல் → சொல்லுவான் + குறிப்பு] |
சொல்லெச்சம் | சொல்லெச்சம் colleccam, பெ. (n.) சொல் எஞ்சி நிற்பது (சீவக. 4, உரை.);; ellipsis in a sentence. [சொல் + எச்சம்] |
சொல்லெடுப்பு | சொல்லெடுப்பு colleḍuppu, பெ. (n.) அழுத்தமாகச் சொல்லுகை (புதுவை.);; emphasis. [சொல் + எடுப்பு] |
சொல்வகை | சொல்வகை colvagai, பெ. (n.) 1. சொல்லியற் பகுப்பு; classification of words into parts of speech. “பாடங் கருத்தே சொல்வகை” (நன். 21);. 2. பேசுந்திறம் (வின்.);; method of speaking, as of a teacher; method of cross-examining, as of a barrister. 3. கண்ணம், சுரிதகம், வண்ணம், வரிதகம் என நால்வகைப்பட்டுக் கூத்துக் குரியவாய் வரும்பாட்டு (சிலப். 3:13, உரை, பக். 88);; song accompanying dance, of four kinds viz., {cunnam, curitagam, vannam, varitagam.} [சொல் + வகை] |
சொல்வன்மை | சொல்வன்மை colvaṉmai, பெ. (n.) சொற்றிறம் (குறள், 65,அ.தி.);; cloquence, command of language. [சொல் + வன்மை] |
சொல்வருநிலை | சொல்வருநிலை colvarunilai, பெ. (n.) சொற்பின்வருநிலை பார்க்க;see {sorpia.w.artnilai.} [சொல் + வருநிலை.] |
சொல்வல்லபம் | சொல்வல்லபம் colvallabam, பெ. (n.) பேச்சு வன்மை (வின்.);; power of speech, eloquence. [சொல் + வல்லபம்] |
சொல்வளம் | சொல்வளம் colvaḷam, பெ. (n.) சொற் பொலிவு; copiousness of vocabulary. தமிழ்மொழியின் சொல் வளத்தைப் பாவாணர் தம் நூல்களில் பலபடக் காட்டியுள்ளார். [சொல் + வளம்] |
சொல்வளர்-த்தல் | சொல்வளர்-த்தல் colvaḷarttal, 4 செ.கு.வி. (v.i.) 1. செய்தியைப் பலருமறியச் செய்தல்; to spread news. “சொல்வளர்த்தாரவர் தோழியர்” (சீவக.1474);. 2. வீணாகச் சொல்லைப் பெருக்குதல் (உ.வ.);; to talk or write unnecessarily and without point. [சொல் + வளர்-.] |
சொல்வழு | சொல்வழு colvaḻu, பெ. (n.) சொல்லிலக்கணத் தோடு பொருந்தாமை யாகிய குற்றம் (தண்டி. 108);; சொல்லதிகாரத் தோடு மாறு கொள்வது (யாப். 95);; etymological error. [சொல் + வழு] |
சொல்வார்த்தை | சொல்வார்த்தை colvārttai, பெ. (n.) 1. எச்சரிப்புரை; admonition. 2. பொய்ச் சாற்று; false accusation. [சொல் + வார்த்தை] Skt. {värtta} → த. வார்த்தை |
சொல்விளம்பி | சொல்விளம்பி colviḷambi, பெ. (n.) கள், சாராயம் போன்ற மதுவகைகள்; hot drinks like arrack, toddy etc., as causing garrulity. குடித்தவர் தம் மனதிலுள்ளதை யெல்லாம் தம் மதிமயக்கத்தில் கொட்டித் தீர்ப்பதால் இக்குழுஉக் குறி வந்ததாகலாம். [சொல் விளம்பி] |
சொல்விழுக்காடு | சொல்விழுக்காடு colviḻukkāṭu, பெ. (n.) பொருளின்றிக் கூட்டுந் துணைச்சொல் (சீவக. 1886, உரை);; expletive. [சொல் + விழுக்காடு] |
சொல்வென்றி | சொல்வென்றி colveṉṟi, பெ. (n.) சொற்போரில் வெல்லுகை; victory in argument. “வாய்ப் பகையுட் சொல்வென்றி வேண்டு மிலிங்கியும்” (திரிகடு. 17);. [சொல் + வென்றி] |
சொல்வேருழவர் | சொல்வேருழவர் colvēruḻvar, பெ. (n.) 1. அமைச்சர்; king’s ministers. “கொள்ளற்க சொல்லே ருழவர் பகை” (குறள். 872);. 2. புலவர் (அக.நி.);; poets. 3. சொல்லாகிய ஏரைக் கொண்ட உழவர்; those who plough with words. [சொல் + ஏர் + உழவர்] |
சொளகு | சொளகு coḷagu, பெ.(n.) மூங்கில் கணுவில் வெட்டிச் செய்த சிறிய முகத்தல் அளவுக் கருவி; a small cubic measure made of bamboo. [சுளகு-சொளகு] |
சொளமாடு-தல் | சொளமாடு-தல் coḷamāṭudal, செ.கு.வி. (v.i.) ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே சுற்றிச் சுற்றி வருதல்; to wander around a particular place. [சுலவு+ஆடுதல்] |
சொளு-த்தல் | சொளு-த்தல் coḷuttal, 4 செ.கு.வி. (v.i.) சொளுசொளு-த்தல் பார்க்க;see {alt-salu/} [சுள் → சொள் → சொளு → சொளு-த்தல்] |
சொளுசொளு-த்தல் | சொளுசொளு-த்தல் soḷusoḷuttal, செ.கு.வி. (v.i.) 1. மழையால் தரை கூழ்போற் குழைதல், சேறாதல் (யாழ்ப்.);; to become muddy, slippery as the ground by rain. 2. சோறு குழைதல்; to be sodden, as overboiled rice. [சொள் (=துளை); → சொளு → சொளுசொளு-த்தல், ஒ.நோ. நொள் → நொளு→ நொளுநொளு-த்தல்] |
சொளையமாடு-தல் | சொளையமாடு-தல் coḷaiyamāṭudal, செ.குன்றாவி. (v.t.) 1. திருடுதல்; to steal. 2. திருடும் நோக்கத்துடன் வீட்டை வளைய வருதல் (உ.வ.);; to pry about a house with the intention of stealing. [சொளயம் + ஆடு-.] |
சொளையமாறு-தல் | சொளையமாறு-தல் coḷaiyamāṟudal, 5 செ.குன்றாவி. (v.t.) திருடுதல்; to steal. [சொளையம் + மாறு-.] |
சொளையம் | சொளையம் coḷaiyam, பெ. (n.) 1. திருட்டு; fraud, stealing, pilfering. என்ன சொளையம் போடத் தொடங்கி விட்டாய்? (இ.வ.);. 2. கன்னம் (இ.வ.);; zero. [சுள் → சுளை → சொளை → சொளையம்] |
சொள்ளல் | சொள்ளல் coḷḷal, பெ. (n.) 1. சொத்தை; decayed. 2. பயனற்றவன்; useless person. 3. குற்றம், கறை, இழுத்கு; stigma. [சொல் → சொள் → சொள்ளல்] |
சொள்ளு | சொள்ளு coḷḷu, பெ. (n.) வடியும் வாய்நீர், சாளைவாய் நீர்; dribbling at the mouth, as of a child. க. செல்லு; தெ. செல்லு;து. செல்லெ [சொல் → சொள்ளு] |
சொள்ளை | சொள்ளை coḷḷai, பெ. (n.) 1. உள்ளீடற்ற சொத்தை; that which is decayed worm-eater, carious. 2. ஒல்லி; lean, skinny person. சொள்ளைப் பயல் (நாஞ.);. 3. ஒன்றுக்கும் பயனற்றவன்; useless, good-for-nothing person. 4. பள்ளமான அம்மை வடு; scars of small pox pock. சொள்ளை முகம். 5. இழுக்கு; sigma, flawin character. 6. விளையாட்டில் தோற்றவர் தலையில் விழுங்குட்டு (இ.வ.);; slap on the head of the loser in a game. 7. காரியக்கேடு; failure, as in a business. 8. துளை; hole. ஒற்றைக் கடுக்கன் சொள்ளை (உ.வ.);. [சுல் (துளைத்தல்); → சொல் → சொன் → சொல்ளை] |
சொள்ளைப்பாக்கு | சொள்ளைப்பாக்கு coḷḷaippākku, பெ. (n.) சொத்தைப்பாக்கு; worm eaten are canut. (சா. அக.); [சொள்ளை+பாக்கு] |
சொழங்குணம், | சொழங்குணம், coḻṅguṇam, பெ.(n.) செஞ்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Senjitaluk. [சோழன்+குண்டம்] |