தலைசொல் | பொருள் |
---|---|
சை | சை1 cai, சகரமெய்யும் ஐகார உயிரும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து; the compound of ‘c’ and ‘ai’. [ச் + ஐ = சை] சை2 cai, பெ. (n.) இகழ்ச்சிக் குறிப்பு; expr. of contempt, abhorrence. சை3 cai, பெ. (n.) தினை; millet. |
சைகை | சைகை caigai, பெ. (n.) செய்தி தெரிவிக்கும் முறையில் கை, கண் முதலியவற்றால் காட்டும் குறிப்பு; signal gesture, hint, as winking of the eyes, hand.”செங்கட் சைகை” (சூள. குமார. 27);. [செய் + கை – செய்கை (செய்வது); → சைகை] |
சைக்கினை | சைக்கினை caikkiṉai, பெ. (n.) சைகை பார்க்க;see {Saigai} E. signal; F., LL, L: signum [சைகை → சைக்கினை] |
சையகம் | சையகம் caiyagam, பெ. (n.) படுக்கை (அக.நி.);; bed. [தலை சாய்த்தல் என்பது உறங்குதலைக் குறிக்கும். எனவே சாய்→அகம்-சாயகம்→சையகமாகிப் படுக்கையைக் குறிக்கிறது.] |
சையரியம் | சையரியம் caiyariyam, பெ. (n.) பெருங்குறிஞ்சி; cone head – Strobil anthes consanguineus (சா.அக.);. |
சையல் | சையல் caiyal, பெ. (n.) சாயல்; exact likeness. “சாமி நடையைப் போல. . . சையலிலே நான் காணேன்” (கட்டபொம்மு. பக். 57);. [சாயல் → சையல்] |
சையானம் | சையானம் caiyāṉam, பெ. (n.) சையகம் பார்க்க;{šaiyagam} |
சையெனல் | சையெனல் caiyeṉal, பெ. (n.) இகழ்ச்சிக் குறிப்பு; onom. expr. of contempt, abhorrence. “சையெனத் திரியேல்” (ஆத்திசூடி.);. [சே → சை + எனல்] |
சையை | சையை1 caiyai, பெ. (n.) சைகை பார்க்க;see {&aigai} E. signal; L. L, L., F. signum [சைகை → சையை] சையை2 caiyai, பெ. (n.) செய்யுள்போக்கு; flow as a poetry. |
சையொத்திரு-த்தல் | சையொத்திரு-த்தல் caiyottiruttal, செ.கு.வி. (v.i.) இணக்கமாயிருத்தல் (வின்.);; to be friendly. [இசை + ஒத்திரு → சைமொத்திரு] |
சைரிகன் | சைரிகன் cairigaṉ, பெ. (n.) 1. உழவன் (யாழ்.அக.);; ploughman. 2. ஏர்மாடு; ploughbullock. [சைரிகம் → சைரிகன்] |
சைரிகம் | சைரிகம் cairigam, பெ. (n.) கலப்பை (யாழ்.அக.);; plough-share. மறுவ. மேழி, ஏர். [ஏரி → சேர் → சேரி → சேரிகம் → சைரிகம்] |
சைரிபம் | சைரிபம் cairibam, பெ. (n.) எருமை (பிங்.);; buffalo. [சைரிகன் → சைரிபம்] |
சைரியம் | சைரியம் cairiyam, பெ. (n.) சையரியம் பார்க்க;see {Saiyariyam} |
சைலியம் | சைலியம் cailiyam, பெ. (n.) 1. பூக்களை இரண்டிரண்டாகத் தொடுக்கும் மாலைவகை (உ.வ.);; a kind of garland strung with pairs of flowers. 2. மொழிநடை; style. [சையை + சைலியம்] |
சைவகட்பலா | சைவகட்பலா caivagaṭpalā, பெ. (n.) வெள்வேல்; white babool. |
சைவங்கம் | சைவங்கம் caivaṅgam, பெ. (n.) தினை; millet. |
சைவசுயா | சைவசுயா saivasuyā, பெ. (n.) தழுதாழை; wild killer. |
சைவசேகரப் பண்டிதன் | சைவசேகரப் பண்டிதன் caivacēkarappaṇṭidaṉ, பெ.(n.) திருவோத்துர் கல்வெட்டில் திருவுண்ணாழிகை அவையில் ஒர் உறுப் பினராக குறிப்பிடப்பட்டவன். இவரது காலம் கி.பி.16ஆம் நூற்றாண்டு; a member of Tiruvannaligai avaias per Tiruvottur inscription in 16th Century AD. [சைவ+சேகரன்+பாண்டியன்] |
சைவரல் | சைவரல் caivaral, பெ. (n.) இகழ்கை(இலக்.அக.);; contempt, act of despising. [சே + ஒலிக்குறிப்பு) → சை + வரல்] |
சைவலம் | சைவலம் caivalam, பெ. (n.) ஒரு வகைப்பாசி (சூடா.);; duck-weed greee, moss-like plant growing in pools. |
சைவவாதளா | சைவவாதளா caivavātaḷā, பெ. (n.) தனக்கு; catamaran tree (சா.அக.);. |
சைவாதி ராசய்யபட்டன் | சைவாதி ராசய்யபட்டன் caivātirācayyabaṭṭaṉ, பெ.(n.) இளமுலை நாச்சி அம்மன் கோயில் கல்வெட்டில் தேவரடியாருக்கு நிலம் வழங்கிய போது கையெழுத்து இட்டவர்களில் ஒருவன். இவனது காலம் 16-17ஆம் நூற்றாண்டு; name of a person mentioned in temple inscription. [சைவாதி+ராசய்யர்+பட்டன்] |