செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
சே

சே cē,    சகரமெய்யும் ஏகார உயிரும் சேர்ந்த உயிர்மெய் எழுத்து; the compound of {cando}

     [ச் + ஏ – சே.]

 சே2 cēttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தங்குதல்; to dwell, abide.

     “வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியில்” (பட்டினப். 249);/

   2. கிடத்தல்; to lie, remain.

     “கோழி சேக்குங் கூடுடைப் புதவின்” (பெரும்பாண். 52);.

   3. உறங்குதல்; to sleep.

     “பொய்கை நாரை போரிற் சேக்கும்” (புறநா. 209);.

   ம. சேகுக;   க. கே, கூ. கேக;   கொலா. கெப்;மா. கிதெ

 E. stay;OE. stag;OF. ester, stare;E. sommysleep;L. sommus.

     [சேய் → சே → சே-த்தல்]

ஒருகா. த. சே → க்ஷி;வ. (இ.வே.);. தங்கு, க்ஷி என்னுஞ் சொல்லினின்றே சேக்ஷித்ர என்னும் சொல் திரியும். வடமொழியில்”க்ஷேத்ர” என்னுஞ் சொல்

     ‘தங்குமிடம்’,

     ‘மனை’,

     ‘நகர்’,

     ‘இடம்’,

     ‘திருவிடம்’, என்னும் பொருளில் வழக்கூன்றியுள்ளது.

 சே3 cēttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   எய்துதல்; to obtain.

     “கனவிற் றொட்டது. . . கனவிற் சேஎப்ப” (பரிபா. 8:103-4);.

     [சேய் → சே → சே-த்தல்]

 சே4 cēttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சிவப்பாதல்; to redden.

     “அவன் வேலிற் சேந்து” (கலித். 57);.

   2. முகம் சிவந்து சினத்தல்; to get angry.

     “நித்திலமேந்திச் சேந்த போல்” (சீவக. 329);.

     [சேய் → சே-.]

 சே5 cē, பெ. (n.)

   1. சிவப்பு; red, redness.

     “சேக்கொள் கண்ணை” (கல்லா. 85:9);.

   2. சேங்கொட்டை (மலை.); பார்க்க;see {šēñgottai.}

   3. அழிஞ்சல் (தொல். எழுத்து.278);; sage-leaved alangium.

 சே4 cē, பெ. (n.)

   1. காளை; bull, bullock, ox.

     “சேவேறு சேவடிக்கே சென்றூதாய்” (திருவாச. 10:1);.

   2. விடை ஓரை (இராசி); (விதான. நல். 12);; Taurus in the zodiac.

   3. குதிரை; horse.

ம. சேக்காள

 E. ox;OE. oxa;ON. uxi;G. ochs;S. ukshan.

     [சே1 → சே]

 சே7 cē, இடை, (int.)

   1. வெருட்டுங்குறி; exclamation used in driving animals, etc.

   2. வெறுப்புக் குறி; expr. meaning ‘fie! Shocking!’ used in disgust.

சே! போகாதே (உ.வ.);

சேகடி

சேகடி cēkaḍi, பெ. (n.)

   சாக்கடை நீர்த் தொட்டி (தெ. கோ. சா. 3. பகுதி 2);; trough of Waste Water.

     [சாய்கடை → சேய்கடை → சேகடி]

சேகணம்

 சேகணம் cēkaṇam, பெ.(n.)

ஒரு வகையான இசைக்கருவி

 a kind of musical instrument.

     [சேகண்டி+சேகணம்]

சேகண்டி

சேகண்டி cēkaṇṭi, பெ.(n.)

   கோல் கொண்டு அடிக்கும் வட்டமணி; bell,

     “எறி மணி சேகண்டி”(நிகபி:6:161);

     [(கை); –செய்+கண்டி]

     [P]

 சேகண்டி1 cēkaṇṭi, பெ. (n.)

   1. காவலாளர்

   உறைவிடம் (யாழ்ப்.);; patrol hut.

   2. காவற் கூடம், cell.

     [சேக்கை + (அண்டு→); அண்டி]

 சேகண்டி2 cēkaṇṭi, பெ. (n.)

   கோல் கொண்டடிக்கும் வட்ட முறி (வெங்கல);த் தட்டு (சூடா.);; gong.

சேகண்டி

     [P]

சேகண்டியடி

சேகண்டியடி1 cēkaṇḍiyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. வீண்பேச்சுப் பேசிக் காலங் கழித்தல் (இ.வ.);; to waste one’s time in idle talk.

   2. சேகண்டியை அடித்தல்; to strike a gong.

   3. உணவுக்கு மிகவருந்தி முயலுதல் (இ.வ.);; to work hard for livelihood.

     [சேகண்டி + அடி.]

 சேகண்டியடி2 cēkaṇḍiyaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பலர் அறியக் கூறுதல் (இ.வ.);; to proclaim widely.

     [சேகண்டி + அடி-.]

சேகண்டியில்வை-த்தல்

சேகண்டியில்வை-த்தல் cēkaṇṭiyilvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   குற்றவாளியாகக் கருதி காவற் கூடத்தில் வைத்தல் (யாழ்ப்.);; to arrest and detain a criminal suspect in the cell.

     [சேகண்டி1 + இல் + வை-.]

சேகண்யம்

 சேகண்யம் cēkaṇyam, பெ.(n.)

   பொன்னேரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Ponneri Taluk.

     [செய்(வயல்);+காணி+அம்]

சேகன்

சேகன் cēkaṉ, பெ. (n.)

   வீரன்; soldier.

     “சேகா… குதிரையோ வீறியது” (கலித். 96);.

ம. சேகன்

     [சே4 → சேகன் = குதிரை வீரன். சேவல் = குதிரை.]

சேகம்

 சேகம் cēkam, பெ. (n.)

   மரவைரம் (திவா.);; hard core of a tree, central part of exogenous plant hardened by age, heart-wood.

க. சேகு;தெ. சே

     [சேகு → சேகம்]

சேகரம்

சேகரம்1 cēkaram, பெ. (n.)

   மாமரம் (சூடா.);; mango tree.

     “வெய்யோன்…சேகரமாகி நின்றான்” (கந்தபு. சூரபதுமன்வதை. 473);.

 சேகரம்2 cēkaram, பெ. (n.)

   முருங்கை (யாழ். அக.);; horse-radish tree.

சேகரி

சேகரி3 cēkari, பெ. (n.)

   நாயுருவி (மலை.);; Indian burr.

சேகல்

 சேகல் cēkal, பெ.(n.)

   நன்னிலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Nanniam Taluk.

     [ஒருகா, செவல்+செகல்+சேகல்]

சேகிலி

 சேகிலி cēkili, பெ. (n.)

   வாழை; plantain as having no heart-wood.

     [சேகு + இலி. சேகு = மரவயிரம்]

சேகில்

சேகில் cēkil, பெ. (n.)

   சிவந்த ஏறு; tawnycoloured bull.

     “குரூஉச் சேகில் காணிகா” (கலித். 105);.

     [சேகு → சேகில்]

சேகு

சேகு1 cēku, பெ. (n.)

   1. சிவப்பு; redness.

     “பாதங்கள் சேகு சேர்தர” (கம்பரா. உலா. 37);.

   2. சேகம் (பிங்.); பார்ப்ப;see {Ségam.}

   3. திண்மை; solidity, hardness.

     “சேகு நோன்சிலையாரோடும்” (சீகாளத். பு. கண்ண. 72);.

   4. குற்றம்; fault.

     ‘சேகறு மலருஞ் சாந்தும்’ (கம்பரா. மூலபல. 233);.

   5. ஐயம்; doubt.

     “சேகறத் தெருட்டி” (கம்பரா. கும்பக. 127);.

   6. மரவயிரம்; heart-wood.

   ம. சேகு க. சேகு;   தெ. சேகி;     [சேவு → சேகு]

 சேகு2 cēku, பெ. (n.)

   1. தழும்பு (யாழ்.அக.);; scar.

   2. செவ்வயிரம்; மரவயிரம்; heart-wood.

 E. scar;OF. escare;L. eschara;Gk. {escharā.}

     [சேவு → சேகு]

சேகுணம்

 சேகுணம் cēkuṇam, பெ. (n.)

   ஒரு நாடு; a country.

சேகுணர்

சேகுணர் cēkuṇar, பெ. (n.)

   சேகுண நாட்டார் (கலிங்.318);; people of {Šćgunam.}

சேகுவயிரம்

 சேகுவயிரம் cēkuvayiram, பெ. (n.)

   செம்மையான உறுதி வாய்ந்த நன்கு முற்றிய மரம், மரவயிரம்; ripe, strong-wood.

     [சேகு + வயிரம்]

சேகை

சேகை cēkai, பெ. (n.)

   சிவப்பு; redness.

     “அண்டத் துயிர்களெலாம் வந்திறைஞ்சச் சேகையாய் மல்குந் திருத்தாள்” (கந்தபு. இரணியன்பு. 14);.

     [சே → சேகு → சேகை]

சேக்கனூர்

 சேக்கனூர் cēkkaṉūr, பெ.(n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [சேக்கன்+ஊர்]

சேக்கரி-த்தல்

சேக்கரி-த்தல் cēkkarittal,    4 செ.கு.வி. (v.i.)

   கொக்கரித்தல் (யாழ்.அக.);; to cackle, as a hen after laying eggs.

     [கெக்கரி → சேக்கரி-.]

சேக்காளி

 சேக்காளி cēkkāḷi, பெ. (n.)

   தோழமை யுள்ளவன்-ள் (நெல்லை);; comrade, friend.

     [சேர்க்கை + ஆளி. ஆள் → ஆளி]

சேக்கிழான்

சேக்கிழான் cēkkiḻāṉ, பெ. (n.)

   மாடு மனைகளையுடைய செல்வன்; well to do person.

   2. ஆநிரைப் பண்ணையார்; cattle wealth holder.

     “மேலூர்க் கோட்டத்துத் தன் கூற்று காவனூர் சேக்கிழான் சத்தி மலையனாகிய சோழ முத்தரையன்” (தெ.க.தொ. 19. கல். 72);.

     [சேக்கிழார் → சேக்கிழான். சேக்கிழாஙர= வேளாளரின் குடிப்பெயர்]

சேக்கிழார்

சேக்கிழார் cēkkiḻār, பெ. (n.)

   1. தொண்டை நாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று; a family name among {Vēlālās in Tondaimandalam.}

     ‘சேக்கிழார் கரிகால சோழப்பல்ல வரையர்’ ;

     ‘சேக்கிழார் பாலறாவாயர்’ (கல்வெட்.);.

   2. திருத்தொண்டர் மாக்கதை (பெரியபுராணம்); இயற்றிய ஆசிரியர்; the author of Thiru-t-tondar makkadai {(Periyapurànam);.}

     [செய்(நிலம்); + கிழார் → சேக்கிழார்]

சேக்கிழார்புராணம்

 சேக்கிழார்புராணம் cēkkiḻārpurāṇam, பெ. (n.)

   சேக்கிழாரின் வரலாற்றோடு, திருத்தொண்டர் புராண வரலாற்றையும் சேர்த்துக் கூறும் செய்யுள் நூல்; a Tamil {purānā,} author of {Korravan-kudi Umāpadi} devar.

     [சேக்கிழார் + (Skt.); புராணம்]

சேக்கு

சேக்கு1 cēkku, பெ. (n.)

   முலைப்பால் (யாழ்.அக.);; breast milk.

     [சேக்கை2 → சேக்கு]

 சேக்கு2 cēkku, பெ. (n.)

   1. சீட்டாட்டத்தில் ஒருவர் கையில் ஒரு இனத்தில் தனித்து

   நிற்குஞ் சீட்டு; solitary card of any denomination in the hands of a player at a game of cards.

   2. துருப்புச் சீட்டு; trump-card. சேக்குராசா (இ.வ.); (செ.அக.);.

 சேக்கு3 cēkku, பெ. (n.)

கன்னக் குடுமி (இ.வ.);: side lock.

சேக்குப்புள்ளி

சேக்குப்புள்ளி cēkkuppuḷḷi, பெ. (n.)

   உறவினரற்றுத் தனித்து இருப்பவன் (நாஞ்.);; solitary person having no relations.

     [சேக்கு2 + புள்ளி]

சேக்கை

சேக்கை1 cēkkai, பெ. (n.)

   கட்டில் முதலிய மக்கள் படுக்கை; cot, bed, thing to sleep on.

     “நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை” (புறநா. 50);.

   2. விலங்கு முதலியவற்றின் படுக்கை (பிங்.);; sleeping place of animals, roost of birds.

   3. தங்குமிடம்; dwelling place.

     “புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை” (மணிமே. 4:117);.

   4. பறவைக் கூடு; bird’s nest.

     “மாலுமயனு மூரும் படர்சிறைப் புண்மாகமிகந்து வந்திருக்குஞ் சேக்கை யெனவும்” (பெரியபு. சண்டே 4);.

   5. வலை; net.

     “புளிஞர் . . . சேக்கைக் கோழிபோற் குறைந்து” (சீவக. 449);.

ம. சேக்க;து. கேலு (பறையர் வாழிடம்);

     [சே1 → சேக்கை. சே = தங்கியுறங்குதல்]

 சேக்கை2 cēkkai, பெ. (n.)

   1. முலை (பிங்.);; woman’s breast.

   2. உடற்றழும்பு (பிங்.);; scar.

     [சே2 → சேக்கை]

 சேக்கை3 cēkkai, பெ. (n.)

   1. கடகவோரை

 cancer in the zodiac.

   2. நண்டு (யாழ்.அக.);; crab, lobster.

     [சே3 → சேக்கை]

 சேக்கை4 cēkkai, பெ. (n.)

   1. சேகை (பிங்.); பார்க்க;see {segai.}

   2. செம்பசலை (மலை.);; red Malabar night shade.

     [சே4 → சேக்கை]

சேக்கைப்பள்ளி

சேக்கைப்பள்ளி cēkkaippaḷḷi, பெ. (n.)

   படுக்கை; bed, matress.

     “பல்பூஞ் சேக்கைப் பள்ளியுட் பொலிந்து” (சிலப். 4:28);.

     [சேக்கை + பள்ளி]

சேக்கோள்

சேக்கோள் cēkāḷ, பெ. (n.)

   ஆகோள்; capture of enemies, cattle.

     “சேக்கோ ளறையுந் தண்ணுமை” (அகநா. 63);.

ஆகோள் என்பது ஆநிரை கவர்தலைக் குறிக்கும்.

     [சே6 + கோள். கொள் → கோள்;

சே=ஆ, எருது, கால்நடைகள், ஆகோள் பார்க்க]

சேக்பறுவான்

சேக்பறுவான் cēkpaṟuvāṉ, பெ. (n.)

   களமி மரத்தின் அடிக்கட்டைக்குக் குறுக்கே போடப்படும் கழி (M.Navi.82);; cross-jack yard

சேங்கன்று

 சேங்கன்று cēṅgaṉṟu, பெ. (n.)

   ஆண்கன்று (உ.வ.);; bull-calf.

     [சே + கன்று]

சேங்கலம்

 சேங்கலம் cēṅgalam, பெ. (n.)

   சேமக்கலம் (இ.வ.);; gong used in temples.

ம. சேங்ஙில, சேங்கல, சேங்கில, சேங்ஙல சேங்ங்லம்

மறுவ. சேகண்டி.

     [சே + கலம் – சேக்கலம் → சேங்கலம்]

சேங்கார்

 சேங்கார் cēṅgār, பெ. (n.)

   நெல்வகை (A.);; a kind of paddy.

     [சே + கார்]

சேங்காலிபுரம்

 சேங்காலிபுரம் cēṅgāliburam, பெ.(n.),

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்

 a village in Thanjavur.

     [ஒருகா சேங்காலி (சேங்கன்று+புரம்);]

சேங்கொட்டை

சேங்கொட்டை cēṅgoṭṭai, பெ. (n.)

   1. சேமரத்தின் கொட்டை (பதார்த்த. 1066);; marking-nut.

   2. மரவகை (மலை.);; marking-nut tree.

     [சே + கொட்டை]

சேங்கொட்டைக்குறி

 சேங்கொட்டைக்குறி cēṅgoṭṭaikkuṟi, பெ. (n.)

   சேங்கொட்டைப் பாலால் இடும் ஆடைக் குறி; marks on clothes made with the juice of the marking-nut.

     [சேங்கொட்டை + குறி]

சேசுப்புணர்ச்சி

 சேசுப்புணர்ச்சி cēcuppuṇarcci, பெ.(n.)

   எதிர் வழக்கு (வியாச்சியம்); (இ.வ.);; counter case.

     [கேசு + புணர்ச்சி.]

     [E. case → த.கேசு.]

புணர் → புணர்ச்சி.

சேசூரணம்

 சேசூரணம் cēcūraṇam, பெ. (n.)

   செயற்கை நஞ்சு (கெளரி நஞ்சு); (மூ.அ.);; a prepared arsenic.

     [சே + சூரணம். சே = சிவப்பு]

சேசேயெனல்

சேசேயெனல் cēcēyeṉal, பெ. (n.)

   1. வெறுப்புக் குறிப்பு; expr. of contempt.

   2. மாடு முதலியன வெருட்டற் குறிப்பு; expr. used in driving as of animals.

   3. கூட்டத்தின் ஒலிக் குறிப்பு; onom. expr. denoting the tumultuous noise of a crowd.

     “சேசேயெனுஞ் சந்தடிக்குட் சிக்கினேன்’ (விறலிவிடு. 1033);.

சேச்சே

சேச்சே cēccē, பெ. (n.)

   1. அருவருப்புக் குறிப்பு; expr. meaning

     ‘fie shocking!, used in contempt.

   2. அமர்த்துங் குறிப்பு (வின்.);; meaning

     ‘hush’, silence.

சேச்சே = ஒலிக்குறிப்புச் சொல்

சேச்சை

சேச்சை cēccai, பெ. (n.)

   1. பாலை மலர் (மலை.);; silvery-leaved ape flower.

   2. முல்லை (மலை.);; trichotomous flowering smooth jasmine.

சேடகரம்

 சேடகரம் cēṭagaram, பெ. (n.)

கோழைக் காய்ச்சல்,

 phlegnatic (யாழ். அக.);

     [சேடம்+கரம்]

சேடக்குடும்பி

சேடக்குடும்பி cēḍakkuḍumbi, பெ. (n.)

   கோவில் வழிபாடாற்றுவோன்; temple-prest, as belonging to a family of devotees.

     ‘சேடக்குடும்பியின் சிறுமகள்'(சிலப்.30,52);

     [சேடம்+குடும்பி]

சேடசேடிபாவம்

சேடசேடிபாவம் cēṭacēṭipāvam, பெ. (n.)

   1 ஆண்டானடிமைத் திறம்; the relation of masterand servant.

     “முதல்வனுக்குச் சேட சேடியாவத்தால் ஆகற்பாலதாகிய அடிமையாம் என்க'(சி.போ.பா.93 பக்.201. சுவாமி. பதிப்);

   2. அறநெறி தவறாதிருக்குந் தன்மை; the relation of disposerand disposable.

     [சேடன்+சேடி+பாவம்]

சேடன்

சேடன்1 cēṭaṉ, பெ. (n.)

   1. பெரியோன்; great man.

     “சேடனைக் காணிய சென்று’ (சீவக. 2112);.

   2. கடவுள்; God.

     “செங்குன்றூர் நின்ற சேடனதாள்” (தேவா. 923, 7);.

   3. இளைஞன் (பிங்.); ; youth, lad.

     “குடந்தைக் கிடந்த சேடர் கொலென்று” (திவ். பெரியதி. 9.2:2);.

     [சேடு2 → சேடன்]

 சேடன்2 cēṭaṉ, பெ. (n.)

   1. தோழன் (பிங்.);; companion, associate, friend.

   2. பிரிந்திருந்த தலைவன் தலைவியரைச் சேர்த்து வைப்பதில் துணைபுரிபவன்; a companion who helps one in his love-affairs.

     “ஊட்க்குஞ் சேடரின்” (சீவக. 852);

     [சேட்டன் → சேடன்]

சேடர்

சேடர் cēṭar, பெ. (n.)

   1.அடிமைக்காரர்; slaves.

   2. அறிவுடையோர், பெரியோர்; intelligent persons.

     “வென்றி வேளருளாற் பெற்றசேடரின் மிக்க செய்மைத் திண்னன்” (பெரியபு. கண்ணப்ப.29);.

   3. ஏவல் செய்வோர்; attendant, servant.

   4.நெய்வாரினொரு சரார்; one of the group of weavers.

     [சேடு-சேடர்]

சேடல்

சேடல் cēṭal, பெ. (n.)

   1. பவளமல்லிகை (குறிஞ்சிப். 82.);; night-flowering jasmine.

   2. உச்சிச் செலுந்தில் என்னும் மரம் (சிலப். 13:153);; a kind of tree.

     [சேடு2 → சேடல்]

சேடவட்டில்

 சேடவட்டில் cēṭavaṭṭil, பெ. (n.)

   வட்ட வடிவ உண்கலம் (யாழ்.அக.);; plate for food in round shape.

     [சேடம் + வட்டில்]

சேடவை-த்தல்

சேடவை-த்தல் cēṭavaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   தொளியடித்தல் (இ.வ.);; to fill a field with water and preparing it for sowing paddy.

     [சேடை2 + வை-.]

சேடா

 சேடா cēṭā, பெ. (n.)

   சடைப்பூரான் (நெல்லை.);; centipede.

சேடி

சேடி1 cēṭi, பெ. (n.)

   1. ஏவல் செய்பவள் (பிங்.);; female servant.

     “சேடியர் செவ்வியி னேந்தினர்” (சிலப். 28:64);.

   2. தோழி (பிங்.);; a lady’s female companion;maid.

   3. இளமையுடையாள் (யாழ்.அக);; young woman.

     [சேடன் → சேடி]

 சேடி2 cēṭi, பெ. (n.)

   1. தெருச்சிறகு (சூடா.);; side of a street.

   2. விஞ்சையர் உலகு; the world of

{Vidyadaras.}

     “மாசில் வாலொளி வடதிசைச் சேடி” (மணிமே. 17:21);.

     [சேடு2 → சேடி.]

 சேடி3 cēṭittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. எஞ்சுதல்; to be left over.

     “ஓரவிழுஞ் சேடியா தருந்தினன்” (பிரபுலிங். ஆரோகண. 29);.

 சேடி4 cēṭittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   குறைத்தல் (வின்.);; to deduct, diminish.

     [சேடு → சேடி-.]

சேடிகை

சேடிகை cēṭigai, பெ. (n.)

   1. பணிப்பெண்; servant maid.

   2. கன்னியோரை (வீமே. உள்.);; Virgo in the zodiac.

     [சேடி – சேடிகை]

சேடியம்

 சேடியம் cēṭiyam, பெ. (n.)

   ஊழியம்; service.

     [சேடி → சேடியம்.]

சேடு

சேடு1 cēṭu, பெ. (n.)

   1. தோழமை, நட்பு; friendship.

   2. ஏவல்; command

     [சேண் → சேடு]

 சேடு2 cēṭu, பெ. (n.)

   1. பெருமை (பிங்.);; greatness.

   2. திரட்சி (பிங்.);; roundness, massiveness.

   3. உயரம்; height, elevation.

     “சேடேறு பொழில்” (திவ். பெரியதி. 7. 8:9);.

   4. நன்மை (பிங்.);; goodness, excellence.

   5. அழகு (பிங்.);; beauty, gracefulness, handsomeness.

     “சேடியல் வள்ளத்துப் பெய்த பால்” (கலித். 72);.

   6. இளமை (திவா.);; youth fulness.

     “சேட்டார் மைந்தர்கள்”(பிரமோத். பிரதோ. 13);.

ம. சேடு

     [ஏண் → சேண் → சேடு]

சேடுகட்டை

 சேடுகட்டை cēṭugaṭṭai, பெ.(n.)

   சேலையில் அகலத்தை ஒரே சீராக வைக்க உதவும் ஊசி முள்; a needle like tool used in loom.

     [சேடு+கட்டை]

சேடை

சேடை1 cēṭai, பெ. (n.)

   மணமக்கள் மீது மஞ்சள் கலந்த அரிசி (அட்சதை); தூவிம் திருமண நிகழ்ச்சி; part of the marriage ceremony which consists in throwing rice over the bride and bridegroomand blessing them.

   2. சேடையரிசி பார்க்க;see {Ségas-y-arisi.}

     “சேடை நல்கி . . . போற்றி நின்றாள்” (பெரியபு. கண்ணப்.48);.

க. சேச;தெ. சேட

     [சேடு → சேடை. சேடு = நன்மை]

 சேடை2 cēṭai, பெ. (n.)

   தொளி யுழவுக்காக நீர்கட்டப்பெற்ற வயல் (இ.வ.);; field filed with water with a view to preparingit for sowing

     [செய் → சேய் → சேண் → சேடு → சேடை]

சேடைபாய்ச்சு-தல்

சேடைபாய்ச்சு-தல் cēṭaipāyccudal,    5 செ.கு.வி. (v.i.)

   வயலில் நீர் நிறைத்தல் (தஞ்சை.);; to fill fields with water.

     [சேடை2 + பாய்ச்சு-.]

சேடைபாய்தல்

 சேடைபாய்தல் cēṭaipāytal, பெ. (n.)

   வயலில் தானே நீர் பாய்கை (தஞ்சை.);; spontaneous flow of water into a field.

     [சேடை + பாய்தல்]

சேடையரிசி

சேடையரிசி sēṭaiyarisi, பெ. (n.)

   மணமக்கள் மீது இடும் மஞ்சள் கலந்த மங்கல வாழ்த்தரிசி; by the way of blessing them.

     [சேடை1 + அரிசி]

சேட்சி

சேட்சி cēṭci, பெ. (n.)

   தொலைவு; distance, remoteness.

     “சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க” (திருவாச. 3:41);.

     [சேண் → சேட்சி]

சேட்டங்கெட்டவேளை

சேட்டங்கெட்டவேளை cēṭṭaṅgeṭṭavēḷai, பெ. (n.)

   வறுமைக்காலம் (வின்.);; hard times, straitened circumstances.

     [சேட்டம்1 + கெட்டவேளை]

சேட்டன்

சேட்டன்1 cēṭṭaṉ, பெ. (n.)

   1. தமையன் (சூடா.);; elder brother.

   2. வயதில் மூத்தவன்; senior in age.

ம. சேட்டன்

     [சேண் → சேடு → சேட்டம் → சேட்டன்]

 சேட்டன்2 cēṭṭaṉ, பெ. (n.)

   1. பெரியோன்; person of eminence, or superior rank, great man.

     ‘சேட்டராமுனிவோர்களும்” (விநாயகபு. 75:79);.

   2. உருத்திரருள் ஒருவர் (சி.போ.பா. 2:3, பக். 212);; a Rudra.

     [சேட்டம் → சேட்டன்.]

சேட்டம்

சேட்டம்1 cēṭṭam, பெ. (n.)

   1. மேன்மை; eminence, greatness, excellence.

     ‘சேட்ட மல்கிய பாதுகை (விநாயகபு. 80:278);.

   2. வலிமை; strength, power, capacity.

     “எழுந்திருக்கச் சேட்டமில்லை” (யாழ்ப்.);.

   3. செழிப்பு; luxuriance, fertility.

     ‘சேட்டமாய் உண்டாக’ (வின்.);.

   4. அழகு (வின்.);; bloom, as of countenance.

ம. சேட்டம்

     [சேண் → சேடு → சேட்டம். ஒ.நோ. கோண் → கோடு → கோட்டம்]

 சேட்டம்2 cēṭṭam, பெ. (n.)

   உடல்நலம்; body health.

     ‘மேலுக்குச் சேட்டமில்லை’ (உ.வ.);

     [சேட்டம்1 → சேட்டம்3]

 சேட்டம்3 cēṭṭam, பெ. (n.)

   ஆடவை (வைகாசி); காருவா (அமாவாசை); கழிந்த முதல்நாள் தொடங்கி மடங்கல் (ஆனி); காருவா (அமாவாசை); முடியவுள்ள திங்கள் சார்ந்த மாதம் (வின்.);; the third lunar month from the day following the New Moon in the month of {Vaigasi} to the end of the New Moon day in the month of {Åni}

     [சேட்டம்1 → சேட்டம்3]

சேட்டாதேவி

 சேட்டாதேவி cēṭṭātēvi, பெ. (n.)

   மூதேவி (இலக்குமிக்கு மூத்தவன்);; goddess of lazyness, as the elder sister of {Laksmi,}

மறுவ. பெரியவள், அக்காள், மூத்தாள்

     [சேட்டை → சேட்டா + தேவி.]

சேட்டி

 சேட்டி cēṭṭi, பெ. (n.)

   தமக்கை (யாழ். அக.);; elder sister.

     [சேட்டம் (ஆ.பா.); → சேட்டி (பெ.பா.);]

சேட்டு-தல்

சேட்டு-தல் cēṭṭudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   எதிர்ப்படுதல்; to meet, approach.

     “சிறுமி தந்தையுஞ் செல்வனை. . . சேட்பட்டானரோ” (சீவக. 1458);.

     [சேண் + படு → சேட்படு-.]

சேட்டுக்குழி

சேட்டுக்குழி cēṭṭukkuḻi, பெ. (n.)

   சேற்றுக் குழி; pit filled with mire, swampy hollow.

     ‘சேட்டுக்குழியிற் சேற்றினுட் புக்கு அழுந்திய. எருமை” (சிலப். 10:120, உரை.);.

     [சேறு + குழி → சேட்டுக்குழி]

சேட்டை

சேட்டை1 cēṭṭai, பெ. (n.)

   1. மூத்தவள் (திவா.);; elder sister, elder woman.

   2. மூதேவி (திவா.); (இலக்குமிக்கு மூத்தவள்);; goddess of Misfortune, as the elder sister of Laksmi.

   3. பெருவிரல்; thumb.

     “செறித்துவடந் தர்ச்சனி

மீதே செபிக்க வொலியைச் சேட்டையினால்”(சிவதரு. 3:3);.

     [சேண் → சேடு = உயரம். பெருமை. சேடு → சேட்டம் = மேன்மை, சேட்டம் → சேட்டன் = பெரியோன், மூத்தவன், தமையன். சேட்டன் (ஆ.பா.); – சேட்டை (பெ.பா.);]

 சேட்டை2 cēṭṭai, பெ. (n.)

   முறம் (திவா.);; winnowing fan or basket.

மறுவ, சுளகு

தெ. சேட

சேட்படு-தல்

சேட்படு-தல் cēḍpaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1. தொலைவாதல் (தூரத்தாதல்);; to be at a distance;

 to be aloof.

     “செவ்வியில ளென்றல் சேட்பட நிறுத்தல்” (திருக்கோ. 90, அ.வ.);.

   2. நெடுங்காலத்ததாதல்; to take a long time.

     “சென்று சேட்பட்ட தென் னெஞ்சு” (கலித். 143);.

     [சேண் + படு → சேட்படு-.]

சேட்படுத்து-தல்

சேட்படுத்து-தல் cēḍpaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விரைய வரைந்து கோடல் கருதிக் களவுக் கூட்டத்திலுளவாம் இடையூறுகளை எடுத்துமொழிந்து அக்கூட்டத்திற் கியையாது தோழி மறுத்துக்கூறித் தலைவனை அகற்றுதல்; to put off a lover telling him of the insurmountable difficulties in the way of his clandestine meetings and urging him to expedite the marriage.

     ‘இவை யெல்லாங் கூறிச் சேட்படுத்தப் பெறும் என்பது’ (திருக்கோ. 97, உரை);.

     [சேட்படு- → சேட்படுத்து-.]

சேட்படை

சேட்படை cēḍpaḍai, பெ. (n.)

   1. தொலைவி (தூரத்திலிருக்கை; being at a distance.

     “அப்போர் செய்யச் சேட்படையன்றி யெம்முன் சேர்தியால் வீர” (கந்தபு. சிங்கமுகா. வதை. 194);.

   2. விரைய வரைந்து கோடல்கருதிக் களவுக் கூட்டத்திலுளவாம் இடையூறுகளை எடுத்து மொழிந்து அதற்கியையாது மறுத்துத் தோழி தலைவனை யகற்றுங் கிளவிக் கொத்து வகை (திருக்கோ. 90, அவ.);; theme of the companion-maid putting off the lover of her mistress telling him of the insurmountable difficulties in the way of his clande stine meetings and urging him to expedite the marriage.

     [சேட்படு → சேட்படை]

சேண

சேண cēṇa, கு.வி.எ. (adv.)

   உயர; up.

     “சேண வெரிநிற் சிறந்தானோ டேறினாள்” (பரிபா. 12:48);.

     [சேண் → சேண]

சேணம்

சேணம்1 cēṇam, பெ. (n.)

   துறக்கம்; paradise.

     “சேணந் தருவது நீறு” (தேவா. 857, 4);.

     [ஏண் → சேண் → சேணம், உயர்ச்சிக் கருத்தினின்று முகிழ்த்த இச்சொல் தவமுதல்வர் சம்பந்தர் காலத்தின் துறக்க உலகினையும் குறித்து வழங்கிய தெனலாம்]

 சேணம்2 cēṇam, பெ. (n.)

   1. மெத்தை (பிங்.);; cushion, mattress.

   2. குதிரை போன்ற விலங்குகளின் முதுகில் அமர்ந்து செல்வதற்குப் போடப்படுகிற தோல் அல்லது துணியினால் ஆன இருக்கை; saddle of cloth or leather pillion.

ம. சேணம்

     [சேண் → சேணம்]

சேணாடு

 சேணாடு cēṇāṭu, பெ. (n.)

   துறக்கவுலகம் (சுவர்க்கம்); (வின்.);; heaven, paradise.

ம. சேணாடு

     [சேண் + நாடு]

சேணி

சேணி cēṇi, பெ. (n.)

   1. சேடி2 பார்க்க;see {šēdi”.}

     “விஞ்சையர் சேணி செலவிட்டு” (சூளா. சுயம். 192.);.

   2. ஏணி (திவா.);; ladder.

   3. முறை (யாழ்.அக.);; order, arrangement.

   4. குழு (யாழ்ப்.);; party of workmen, set of players, company of travellers.

   ம. சேணி; Pkt. {sēņi}

     [சேண் → சேணி]

த. சேணி → Skt. {§rëni}

சேணியன்

சேணியன் cēṇiyaṉ, பெ.(n.)

   செக்கான்; oil

 monger.

     [ஒருகா. செய்+நன்.]

 சேணியன்2 cēṇiyaṉ, பெ. (n.)

   1. தேவர்கோன், இந்திரன்;{Indram,}

     “சேணியனு மன்றே தெரிந்து” (தனிப்பா. 1, 60:120);.

   2. விஞ்சையன்: {Vidyadaran.}

     [சேண் → சேணியன்]

 சேணியன்2 cēṇiyaṉ, பெ. (n.)

   ஆடை நெய்வோர் (E.T. vi. 361);; a class of weavers.

   ம. சேணியன்;   க. சடைசேட;   தெ. சேண்ட்று;து. சாடெ, சாட்யெ

சேணியர்

சேணியர் cēṇiyar, பெ. (n.)

   வானுலகத்தார்; a class of celestials.

     “சேணியர் கோன் தோன்றல்” (சேதுபு. வேதாள. 14);.

     [சேணி → சேணியன்]

சேணுவணன்

 சேணுவணன் cēṇuvaṇaṉ, பெ. (n.)

   கொல்லங் கோவை; a climbing shrub.

     [சேண் + உவணன்]

சேணை

சேணை1 cēṇai, பெ. (n.)

   பிறந்த குழந்தையின் வாயினில், தாய்மாமன் தன் விரலால் கொடுக்கும் ஒருவகை மருந்துப் பொருள் மற்றும் இனிப்பு கலந்த நீர்மப்பொருள்; a kind of liquid medicine given to the new born baby by the maternal uncle.

 சேணை2 cēṇai, பெ. (n.)

   தூளி, ஏணை; cradle.

     [ஏணை → சேணை]

சேணைக்கணிமகன்

சேணைக்கணிமகன் cēṇaiggaṇimagaṉ, பெ. (n.)

   சேனையிலுள்ள கணியன்; astrologer attached to an army.

     “செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன்” (பெருங். உஞ்சைக். 36:199);.

     [சேனை + கணி + மகன்]

சேணோன்

சேணோன் cēṇōṉ, பெ. (n.)

   1. மலைவாசி; mountaineer.

     “சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்” (மதுரைக். 294);.

   2. மரத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் பரணிலிருந்து விலங்குகள், பயிர்களை அழிக்கா வண்ணம் காப்பவன்; one who keeps watch over a field from a platform on a tree.

     “மரமிசைச் சேணோன் இழைந்த . . .இதணம்” (குறிஞ்சிப். 40);.

     [ஏண் → சேண் → சேணோன். உயர்ச்சிக் கருத்தினின்று பிறந்த இச்சொல், காலப் போக்கில் மலையில் வாழும் மாந்தரையும் உயர்ந்த விடத்தினின்று காவல்புரிபவரையுங் குறித் வழங்கலாயிற்று]

சேண்

சேண் cēṇ, பெ. (n.)

   1. சேய்மை; distance, remoteness.

     “சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு” (புறநா. 174:2);.

   2. உயரம் (திவா.);; height, loftiness.

     “சேன வந்தர நோக்கலும்” (கம்பரா. இராவணன் வதை. 38);.

   3. மலைமுகடு (பிங்.);; mountain top, summit.

   4. வானம்; sky.

     “சேணெல்லாம் புல்லொளி செலுத்தி” (கம்பரா. சூர்ப்பணகை, 20);.

   5. துறக்கம் (கவர்க்கம்);; heaven.

     “சேண் மகபதிக்கு நல்கி” (கந்தபு. திரநகர. 105);.

   6. அகலம் (பிங்.); (திருக்கோ.213.உரை);; width, spaciousness.

   7. நீளம் (திவா.);; length.

     “சேனுற நீண்டு மீண்டு” (கம்பரா. சூர்ப்பணகை 46);.

   8. நெடுங்காலம்; long time.

     “சுற்றமொடு முழுதுசேண் விளங்கி” (புறநா. 2:19);.

ம. சேணு

     [ஏண் → சேண்]

சேண்டிரவர்

 சேண்டிரவர் cēṇṭiravar, பெ. (n.)

   சேணியன் (யாழ்.அக.);; Weaver.

   க. ஜேடரு;தெ. ஜேண்ட்ர

சேண்பாக்கம்

 சேண்பாக்கம் cēṇpākkam, பெ.(n.)

   வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றுக்கு அருகில் உள்ள ஓர் ஊர்; a village in north Arcot, near the Palasuriver.

     [சேண்+பாக்கம்]

சேண்மரம்

 சேண்மரம் cēṇmaram, பெ. (n.)

   அழிஞ்சில் மரம் (அக.நி..);; a tree.

     [சே → சேண் + மரம்]

சேதகம்

சேதகம்1 cētagam, பெ. (n.)

   சிவப்பு (பிங்.);; red.

     [செம் → சே → சேது → சேதகம்]

 சேதகம்2 cētagam, பெ. (n.)

   சேறு (திவா.);; mud, slush.

     “குங்குமச் சேதகந் திமிர” (கம்பரா. வரைக்காட்சி. 56);.

     [சேறகம் (சேறு + அகம்); → சேதகம்]

சேதக்காலன்

 சேதக்காலன் cētakkālaṉ, பெ. (n.)

   கெடுதிக்காரன் (யாழ்ப்.);; mischicvious person.

     [சேதம் + (காரன் →); காலன்]

சேதனகி

 சேதனகி cētaṉagi, பெ. (n.)

   கடுக்காய் (சங்.அக.);; chebulic myrobalan.

சேதனம்

சேதனம் cētaṉam, பெ. (n.)

   1. பிளவு செய்கை; cutting, splitting.

     “சேதனப் படைஞரோடும்” (பாரத. பதினோ. 4.);.

   2. ஆண்குறியின் முன்றோலை எடுக்கும் விழா; circumcision.

     [சேதம் → சேதனம்]

சேதபாதம்

 சேதபாதம் cētapātam, பெ. (n.)

   கூத்து வகையுளொன்று (யாழ்.அக.);; a kind of dance.

     [சேதம் + பாதம்]

சேதம்

சேதம் cētam, பெ. (n.)

   1. புயல், வெள்ளம் போன்றவற்றால் உயிர், பொருள் முதலியவற்றிற்கு ஏற்படும் அழிவு; loss of life, property, things.

வெள்ளத்தால் பயிர்கள் சேதம்.

   2. கேடு (சூடா.);; damage, ruin, waste, injury.

   3. பிரப்பு; splitting, dissecting.

   4. வெட்டு; severance, cutting off.

தலைச்சேதம்.

   5. துண்டு; part, piece, portion, section.

   6. கீழ்வாயிலக்கம் (வின்.);; denominator of a fraction.

   7. கூத்தின் ஒர் உறுப்பு (சிலப். 3:13. உரை, பக். 89);; an element in dancing.

ம. சேதம்

     [ஏதம் → சேதம் ஏதம் = கேடு குற்றம்]

சேதா

சேதா cētā, பெ. (n.)

   சிவப்பு ஆண்; tawny coloured cow.

     “சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா” (நற். 359);.

     [சேது + ஆ – சேதா = செந்நிற ஆன்]

சேதாம்பல்

சேதாம்பல் cētāmbal, பெ.(n.)

   சிவகங்கை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Sivagangai Taluk.

     [செய்யது.(சிவப்பு);-சேது+ஆம்பல்]

 சேதாம்பல் cētāmbal, பெ. (n.)

செவ்வாம்பல்

 red Indian water-lily.

     “சேதாம்பற் போதனைய செங்கனிவாய்” (கம்பரா. நகர்நீங். 101);.

     [சேது + ஆம்பல்]

சேதாரம்

சேதாரம்1 cētāram, பெ. (n.)

   தேமா (சூடா.);; sweet mango.

 சேதாரம்2 cētāram, பெ. (n.)

   1. இழப்பு; waste, as of commodities in traffic;loss, damage, as of crops by cattle trespassing.

   2. பொன்னா லேனும் வெள்ளியினாலேனும் நகை முதலியன செய்யும்போது உண்டாகும் தேய்மான இழப்பு; wastage of gold or silver in making jewels, due to filing, etc.

புத்தாண்டை முன்னிட்டுச் செய்கூலி, சேதாரம் இன்றி மலிவாகப் பொன் கிடைக்கும் (உ.வ.);.

ம. சேதாரம், சேதவாரம்;க. சேதார;தெ. சேதாரமு

     [சேதம் + ஆரம் – சேதாரம்]

சேதி

சேதி1 cētittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வெட்டுதல்; to cut off, divide, sever, dissect.

     “தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப” (திருவாச. 15:7);/

   2. அழித்தல்; to destroy.

     “மேலுலகுஞ் சேதித்தீர்” (உபதேசகா. சூராதி. 50);.

 L. caedere

     [சேதம் → சேதி-.]

 சேதி2 cēti, பெ. (n.)

   1. செய்தி; news, occurrence.

     “இந்தச் சேதி யுரைக்க” (இராமநா. பாலகா. 13);.

   2. தன்மை; nature.

     “வாவறூங்குகின்ற சேதியென்ன” (உத்தரரா. சம்புவன். 32);.

ம. சேதி

     [செய்தி → சேதி]

 சேதி3 cēti, பெ. (n.)

   56 நாடுகளுள் ஒன்று;{Chédi,} the region around Bilaspur and Jubbalpur, one of 56 countries.

     “சேதிப் பெருமான் சிசுபாலன்” (பாரத. திரெளபதி. 42);.

   2. திருக்கோவிலூர்ப் பகுதியான சேதிநாடு; par to {Thirukkövilür} country {Sèthunädu.}

     “சேதி நன்னாட்டு நீடு திருக்கோவலூரில்” (பெரியபு. மெய்ப்பொருள் 1);.

   3. சேதியை ஆண்ட அரச குலம்; the dynasty that ruled {Chédi.}

     “சேதிமா மரபோன்” (பாரத. குருகுல. 104);.

சேதிகை

சேதிகை cētigai, பெ. (n.)

   மூங்கிலுழக்கு, நாழி முதலியவற்றின் அடிப்பகுதியால் குதிரை உடலிற் குத்தும் வண்ணத் தொழில்; coloured marking on a horse, made with the bottom of a bamboo measure.

     “வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்தி” (கலித். 96:27);.

சேதிநாடு

சேதிநாடு cētināṭu, பெ. (n.)

   திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட நடுநாடு (பெரியபு.மெய்ப்பொருள்.1);;{Nadu-nāquin} Tamil country, having {Tirukkövalur} as its capital.

     [சேதி + நாடு.]

சோழநாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடையில் இருந்த பகுதி நடுநாடு. இந்நடு நாட்டின் ஒரு பகுதி சேதி நாடு. சேதியர் மரபினரால் ஆளப்பட்டதால் சேதிநாடு எனப்பட்டது.

சேதிபன்

சேதிபன் cētibaṉ, பெ. (n.)

   1. சேதிநாட்டரசன்; the king of {Chédi.}

     “சேதிபப் பெரும்பகை செகுத்தே” (பாரத. இராசசூய. 152);.

   2. நடு நாட்டரசன்; the king of {Chêdi-nadu.}

     “சேதிபர் நற்கோவலூர் மலாட மன்னர்’ (புரானசாரம், 8, பெரியபு. பதிப்.);.

     [சேதி → சேதிபன்.]

சேதிமம்

 சேதிமம் cētimam, பெ. (n.)

சேதியம் (பிங்.); பார்க்க;see {šēdiyam}

சேதிமரம்

சேதிமரம் cētimaram, பெ. (n.)

   சமணக் கோயிலிலுள்ள புனிதமரம்; sacred trce in a Jaina temple.

     “சேதிமரங்களெட்டு” (மேரு மந். 1063);.

சேதியம்

சேதியம் cētiyam, பெ. (n.)

   1. சமண புத்தரின் பள்ளி; Jain or Buddhist temple.

     “பகவற், கியற்றிய சேதியந் தொழுது” (மணிமே. 28:175);.

   2. தேவாலயம் (பிங்.);; temple, shrine.

சேதிராய நல்லூர்

 சேதிராய நல்லூர் cētirāyanallūr, பெ.(n.)

   தென்னார்க்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்; a village in South Arcot.

     [சேதி+அரையன்+நல்லூர்]

சேதிராயர்

சேதிராயர் cētirāyar, பெ. (n.)

   1.தமிழகத்தின் நடுநாட்டரசர்; the king of {Nadu-nādu} in {Tamil} country.

   2. திருவிசைப்பாவாசிரியருள் ஒருவரான சிவனடியார்; a {Saiva} saint, one of the authors of {Tiru-v-išaippä.}

   3. கள்ளர் பட்டங்களிலொன்று; a title among {Kallar} caste.

     [சேதி + (அரையர் →); ராயர் – சேதிராயர். இவர் திருக்கோவலூர் மலையமான் வழித்தோன்றலுள் ஒருவராவர்]

சேது

சேது cētu, பெ. (n.)

   சிவப்பு (சூடா.);; red

     [சே → சேது]

 சேது2 cētu, பெ. (n.)

   1. பாலம், செய்கரை (பிங்.);; causeway, bridge, dam.

     “சேதுவை மேடுருத்தி வீதி சமைப்போம்” (பாரதி.);.

   2. இராமனது சேனைகள் இலங்கை செல்லுதற்கென இயற்றப் பெற்றதாகக் கருதப்படும் திருவனை; Adam’s Bridge, a reef of sunken rocks connecting the north of Srilanka with the main land of India,30ft, wide with 3 or 4 ft. of water above it at high tide said to have been constructed to enable Rama’s forces to cross over to Laika.

     “சேடனென்னப் பொலிந்தது சேதுவே” (கம்பரா. சேதுப. 66);.

   3. இராமேசுவரம்; the island of {Rāmeswaram.}

     “சேதுவி னிராமநாதனை நிறுவிய காதையை” (சேதுபு. அவை. 1);.

   4. தனுக்கோடியில் உள்ள புனித நீராடுமிடம்; sacred bathing – ghat at {Dhanuşkõɖi.}

     [செய் → (சேய் → சேது. செய் = செய்தது]

இராமேசுவரத் தீவின் கிழக்கு முனையான தனுக்கோடியிலிருந்து, இலங்கைத் தீவின் கிழக்க முனையான மன்னார் துறையை இணைக்கும் நீர்ப்பகுதி ஆடம் பாலம் எனப்படும். சாற்றொப்ப 19மைல் நீளமும், 10 முதல் 12 அடி ஆழமும் பயணம் செய்த காலத்தில், 4 அல்லது 5 அடி ஆழம் மட்டுமே இருந்திருக்கம். அக்காலத்தில் பாம்பன் பகுதி முழுதும் தரையாக இருந்தது. ஆழம் குறைவாக இருந்ததால், கற்பாறை கொண்டு மேடிட்டுப் பாலமாக்கும் எண்ணம் அவருக்குத் தோன்றியதெனலாம்.

சேதுகாவலன்

 சேதுகாவலன் cētukāvalaṉ, பெ. (n.)

சேதுபதி பார்க்க;see {Sedu-padi.}

     ‘சேதுகாவலன் திருவணைகாவலன்’ (கல்.);.

     [சேது + காவலன்]

சேதுபதி

 சேதுபதி cēdubadi, பெ. (n.)

   இராமநாதபுர மன்னரின் பட்டப்பெயர்; hereditary title of the {Rāja} of Ramnad, as being guardians of {Adam’s} Bridge.

     ‘சேதுபதி ரகுநாதன்’ (ஒருதுறைக்);.

     [சேது + பதி]

சேதுபுராணம்

சேதுபுராணம் cētuburāṇam, பெ. (n.)

   சற்றேறக்குறைய கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நிரம்பவழகிய தேசிகராற் பாடப் பெற்ற இராமமேசுரப்புராணம்; a {Purina} on the shrine of {Râméšvaram} by {Niramba-valagiya desigar,} prob. 16th. c.

     “புகலு நூற்பெயர் சேதுபுராணமே” (சேதுபு. அவை. 10);.

     [சேது + புராணம்]

 Skt. {puräna} → த. புராணம்

சேது அணைகட்டிய வரலாறு முதல் இராமேசுவரத்திலுள்ள நீராடும் துறையின் சிறப்பு வரை பல்வேறு செய்திகளைக் கூறும் சிறந்த நூல்.

சேதுரான்

சேதுரான் cēturāṉ, பெ. (n.)

சேதிராயர்-3 (இ.வ.); பார்க்க;see {Sédirāyar-3.}

     [சேது + (அரையன்); ராயன் → சேதுராயன் → சேதுரான்]

சேத்தாளி

 சேத்தாளி cēttāḷi, பெ. (n.)

சேக்காளி (தஞ்சை.); பார்க்க;see {Śēkkāli}

மறுவ. கூட்டாளி, நண்பன்.

     [சேர் + ஆளி → சேக்காளி]

சேத்தியார் தோப்பு

சேத்தியார் தோப்பு cēttiyārtōppu, பெ.(n.)

   புவனகிரியிலிருந்து10 மீ தொலைவில் உள்ள ஓர் ஊர்; a village 10km from Puvanagiri

     [ஒருகா. சாத்து-சாத்தியர் (வணிகர்);சாத்தியார்+தோப்பு]

சேத்து

சேத்து1 cēttu, பெ. (n.)

   சிவப்பு (திவா.);; red, crimson.

     “சேத்தகில் புழுகு சந்தம்” (பாரத. பதினான். 219);.

     [சே → சேது → சேத்து]

 சேத்து2 cēttu, பெ. (n.)

   1. ஒப்பு (திவா.);; resemblance, similarity.

     “ந்கையொடு சேத்திற்காக நாறுவ நித்திலம்” (இரகு. நாட்டு. 10);.

   2. கருத்து (திவா.);; thought, idea.

     [சே2 → சேத்து]

 சேத்து3 cēttu, பெ. (n.)

   1. உறுப்பு (அக.நி.);; limb, member, section.

   2. நெருக்கம் (வின்.);; closeness, compactness, thickness.

     [சேர் → சேத்து]

 சேத்து4 cēttu, பெ. (n.)

   நிலம் (வின்.);; field, plot of ground.

 H., U. {këth}

     [செய் → சேய் → சேத்து]

 சேத்து5 cēttu, பெ. (n.)

   அசைச்சொல்; an expletive (செ.அக.);.

     [சே → சேத்து]

சேத்துப்பட்டு

 சேத்துப்பட்டு cēttuppaṭṭu, பெ.(n.)

   சென்னையில் உள்ள ஓர் ஊர்; a place in Chennai city.

     [சேற்று+பட்டு]

சேந்தங்கண்ணனார்

சேந்தங்கண்ணனார் cēndaṅgaṇṇaṉār, பெ. (n.)

   கழகக் காலப்புலவர்; a {Sangam} poet.

     [சேந்தன் + கண்ணனார்.]

இவரின் தந்தை பெயர் சேந்தன் என்பது. இவரின் இயற்பெயர் கண்ணனார். இவர் நற்றிணையில் 54ஆம் பாட்டையும், அகநானூறில் 350ஆம் பாட்டையும் பாடியுள்ளார்.

சேந்தநதி

 சேந்தநதி cēndanadi, பெ.(n.)

   அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Aruppukkottai Taluk.

     [சிவந்த-சேந்த+நதி]

சேந்தனார்

சேந்தனார் cēndaṉār, பெ. (n.)

   திருவிசைப்பா வாசிரியருள் ஒருவரும், திருப்பல்லாண்டு இயற்றியவருமாகிய சிவனடியார்; a {Šaiva} saint author of {Tiru-p-palländu} and one of the author of {Tiru-v-išaippä.}

     [சேந்தன் → சேந்தனார்]

இந்நூல் 12 தொகுதிகளையுடையது. 9500 சொற்கள் பொருள் விளக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் 384 பலபொருள் ஒரு சொற்களாகும். இந்நூல் கி.பி. 1835ல் வெளியிடப்பட்டது.

சேந்தன்

சேந்தன் cēndaṉ, பெ. (n.)

   1. முருகன்;{Murugan.}

     “சூர்தடிந்திட்ட சேந்தர்” (தேவா. 942, 6);.

   2. திவாகரஞ் செய்வித்த அம்பர்த் தலைவன்; patron of the author of {Tivägaram,} chief of Ambar.

   3. சேந்தனார் (திருவிசைப்.); பார்க்க;see {Endanள்:}

   4. கடைக்கழகக்கால அரசன்; a king in {Sangam} age.

இவன் பரணரால் குறுந்தொகை 258ல் பாடப்பெறுபவன்.

     [சேத்து → சேந்து → சேந்தன்]

சேந்தன் என்பது இவரின் இயற்பெயர். உழவன் என்னும் காப்பியக் குடியில் பிறந்ததால் பெற்ற பெயர் காப்பியாற்றுக்காப்பியனார்

 சேந்தன் என்பது இவரின் இயற்பெயர். உழவன் என்னும் காப்பியக் குடியில் பிறந்ததால் பெற்ற பெயர் காப்பியாற்றுக்காப்பியனார் cēntaṉeṉpatuivariṉiyaṟpeyaruḻvaṉeṉṉumkāppiyakkuṭiyilpiṟantatālpeṟṟapeyarkāppiyāṟṟukkāppiyaṉār, பெ.(n.)

   களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைப் பாடிப் பரிசில் பெற்ற புலவர்; A poet who received award from ka/arikāy-k-kansai-nārmudi-céral (அபி.சிந்);. [காப்பி+ஆறு+காப்பியன்+ஆர்.]

சேந்தன்கீரனார்

சேந்தன்கீரனார் cēndaṉāraṉār, பெ. (n.)

   குறுந்தொகை 311ஆம் பாடலை இயற்றியவர்; author of verse no. 311 of {Kurundogai.}

     [சேந்தன் + கீரனார். சேந்தன் – தந்தையின் பெயர்.]

சேந்தன்றிவாகரம்

 சேந்தன்றிவாகரம் cēndaṉṟivākaram, பெ. (n.)

   சேந்தன் என்ற புரவலரால் புரக்கப் பெற்றுத் திவாகரரால் இயற்றப் பெற்ற நிகண்டு நூல்;{Tivágaram,} a Tamil lexicon composed under the patronage of {Sendan.}

மறுவ. ஆதிதிவாகரம்

     [சேந்தன் + திவாகரம்]

சேந்தமங்கலம்

 சேந்தமங்கலம் cēndamaṅgalam, பெ.(n.),

 a village in Pandiyanādu (Madurai);.

     [சேந்தன்+மங்கலம்]

சேந்தம்பூதனார்

சேந்தம்பூதனார் cēndambūtaṉār, பெ. (n.)

   அகநானூறு 84, 207;   குறுந்தொகை 90, 226, 247;   நற்றிணை 69, 261 ஆகிய பாடல்களை இயற்றியவர்; author of the following verses: {Aganānūru} 84,207;{Kurundogai} 90,226, 247 and {Narriņai} 69, 26l.

     [சேந்தன் + பூதனார்]

சேந்தி

சேந்தி1 cēndi, பெ. (n.)

   1. சுவரில் அமைந்த பரண்; loft.

   2. துலாக்கட்டைகளின் மீது பலகைகளைச் சேர்க்கும்போது இடைவெளி தெரியாமலிடும் பலகை (நாஞ்.);; thin reapers running across the joints on which planks are laid.

   3. க்ளஞ்சியம் (மதுரை.);; granary.

ம. சேந்தி

     [சேர் → சேந்து → சேந்தி]

சேந்து

சேந்து2 cēndu, பெ. (n.)

   கள்; toddy.

சேந்திக்கடை (W.G.);.

   து. சேந்தி; U. {sēndi.}

 சேந்து1 cēndudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கயிறு முதலியவற்றை இழுத்தல் (வின்.);; to draw, as a rope running over a pulley.

   2. கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்தல்; draw water from a well.

அவள் கிணற்றிலிருந்து தண்ணீரைச் சேந்தினாள் (உ.வ.);.

க. சேது;தெ.சேது

     [சேர் (=திரட்டுதல்); → சேந்து-.]

 சேந்து2 cēndu, பெ. (n.)

   1. சிவப்பு (பிங்.);; redness.

   2. தீ (யாழ். அக.);; fire.

     “சேந்தினடைந்த வெலாஞ் சீரணிக்க (அருட்பா, 1, நெஞ்சறி, 689);.

   3. அசோகு (மலை.);; mast-tree.

ம. சேந்து

     [சேந்தன் → சேந்து. ஒ.நோ. வேந்தன் → வேந்து]

சேந்து-தல்

 சேந்து-தல் cēndudal, செ.குன்றாவி (v.t.)

   நீர் இறைத்தல்; to draw water,

அவள் தண்ணீர் சேந்துகிறாள் (கொங்.வ.);

     [சேண்+து-சேந்து]

சேந்துகிணறு

சேந்துகிணறு cēndugiṇaṟu, பெ. (n.)

   இறை கிணறு (இ.வ.);; draw well.

     [சேந்து1 + கிணறு]

சேந்துபந்தம்

சேந்துபந்தம் cēndubandam, பெ. (n.)

   அரக்கு (சங்.அக.);; sealing-wax.

     [சேந்து2 + பந்தம்]

சேந்துவலை

சேந்துவலை cēnduvalai, பெ. (n.)

   படகிலிருந்து சேந்தி இழுக்கப்படும் வலை; a kind of fishing net.

     [சேந்து1 + வலை]

சேந்தை

சேந்தை cēndai, பெ. (n.)

   கட்டிலின் மேற்கட்டி (யாழ்ப்.);; canopy, tester.

     [சேந்து2 → சேந்தை]

சேனன்

சேனன் cēṉaṉ, பெ. (n.)

   ஒரு பழைய பட்டப் பெயர்; an ancient title.

     “சந்து சேனனு மிந்து சேனனுந் தருமசேனனும்” (தேவா. 859, 4);.

சேனமீன்,

 சேனமீன், cēṉamīṉ, பெ.(n.)

   விலாங்கு மீன் வகையுள் ஒன்று; giant moray eel.

     [சேனை+சேன+மீன]

     [P]

சேனம்

சேனம் cēṉam, பெ. (n.)

சேம்பு1 பார்க்க;see {šēmbu}

     [சேம்பு → (சேம்மு); → சேனம்]

சேனம்பாம்பு

சேனம்பாம்பு cēṉambāmbu, பெ. (n.)

சேனா1 பார்க்க;see {šēnā.}

சேனல்

 சேனல் cēṉal, பெ.(n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vandavāsifaluk.

     [ஒருகா. செந்நெல்-சேனல்]

சேனா

சேனா1 cēṉā, பெ. (n.)

   1. நான்கு அடிக்கு மேல் வளரும் பழுப்பு நிற மீன்வகை; true eel, brownish, attaining more than 4 ft. in length.

   2. மலங்குமீன் (வின்.);; a kind of eel with picked head.

 சேனா2 cēṉā, பெ. (n.)

   நிலவாவிரை; Thirunelveli senna.

சேனாங்கம்

 சேனாங்கம் cēṉāṅgam, பெ. (n.)

   படையின் உறுப்பு (யாழ்.அக.);; component division of an army.

     [சேனை + அங்கம்]

சேனாசமுத்திரம்

சேனாசமுத்திரம் cēṉācamuttiram, பெ. (n.)

   1. கடல்போன்ற பெரும் படை; army, vast as an ocean.

   2. பெருங்கூட்டம் (உ.வ.);; immense crowd.

     [தானை → சேனை + சமுத்திரம். தானை = படை, பெரும்படை.]

 Skt. சமுத்ர → த. சமுத்திரம்

சேனாதிபதி

 சேனாதிபதி cēṉādibadi, பெ. (n.)

சேனாபதி பார்க்க;see {Séné-padi.}

சேனாதிபன்

சேனாதிபன் cēṉātibaṉ, பெ. (n.)

சேனாபதி பார்க்க;see {Enச்-padi,}

     “சூரனே சேனாதிபன்” (அறப்பளீ. 85);.

     [சேனை + அதிபன்]

 Skt. அதிப → த. அதிபன்

சேனாதிராயன்

சேனாதிராயன் cēṉātirāyaṉ, பெ. (n.)

   1. சேனாபதி (யாழ்.அக.); பார்க்க;see

{padi.}

   2. முருகக்கடவுள்; god {Murugan.}

     [சேனை + ஆதிராயன்]

 Skt.அதிராஜ → த. அதிராயன். அதி → ஆதி

சேனானியன்

 சேனானியன் cēṉāṉiyaṉ, பெ. (n.)

சேனாதிராயன் (யாழ்.அக.); பார்க்க;see {Sénédi-rayan}

சேனாபதி

சேனாபதி1 cēṉāpadi, பெ. (n.)

   படைத்தலைவன்; general, commander of an army.

     “சுவேதனைச் சேனாபதியாய்” (திவ். இயற். 4:24);.

     [சேனை + பதி. Skt. பதி]

 சேனாபதி2 cēṉāpadi, பெ. (n.)

   பண்வகை (இராகவகை); (பரத. ராக. 103.);; a specific melody-type.

சேனாபதியாழ்வார்

சேனாபதியாழ்வார் cēṉāpadiyāḻvār, பெ. (n.)

   திருமாலுக்கு விருந்து கொடுத்தவர் (M.B.R. 514 of 1917);; Visnu’s host.

மறுவ. சேனை முதலியார்

     [சேனாபதி + ஆழ்வார்]

சேனாபத்தியம்

 சேனாபத்தியம் cēṉāpattiyam, பெ. (n.)

   படைத்தலைமை; office of a commander, commander-ship.

     [சேனை + பத்தியம் – சேனைபத்தியம் → சேனாபத்தியம்

 Skt. பத்ய → த. பத்தியம்]

சேனாமரம்

 சேனாமரம் cēṉāmaram, பெ. (n.)

   அழிஞ்சில் மரம்; alangium tree (சா.அக.);.

     [சே → சேனா + மரம்]

சேனாமுகம்

சேனாமுகம் cēṉāmugam, பெ. (n.)

   1. முற்படை; frontamy.

     “வாழ்க சேனாமுகம்” (சிலப். 25:192);.

   2. மூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை, பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை (பிங்.);; division of an army comprising 3 chariots, 3 elephants, 9 horses and 15 foot-soldiers.

     [சேனை முகம்]

சேனாவரைசி

சேனாவரைசி sēṉāvaraisi, பெ. (n.)

   சேனாவரையன் மனைவி (நன். 276, மயிலை.);; wife of commander-in-chief.

     [சேனை + அரைசி]

சேனாவரையன்

சேனாவரையன் cēṉāvaraiyaṉ, பெ. (n.)

சேனாபதி (நன். 278, மயிலை); பார்க்க;see {Ščná-pati}

     [சேனை + அரையன்]

சேனாவரையம்

 சேனாவரையம் cēṉāvaraiyam, பெ. (n.)

   தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சேனாவரையர் செய் உரை; a commentary on the {Sol-l-adigăram} of {Tolkāppiyam} by {Šēnāvaraiyar}

     [சேனாவரையர் → சேனாவரையம்]

சேனாவரையர்

சேனாவரையர் cēṉāvaraiyar, பெ. (n.)

   தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்குச் சிறந்த உரை செய்த ஆசிரியர்; the renowned commentator on the {SoI-1-adigâram} of {Tolkáppiyam}

     [சேனை + அரையன்]

சேனாவு

 சேனாவு cēṉāvu, பெ. (n.)

   தகரை (மலை.);; focid cassia.

சேனை

சேனை1 cēṉai, பெ. (n.)

   1. யானை, தேர், பரி, காலாள் என்ற நாற்படை; army comprising four-fold divisions, viz.,{yānai, dër,} pari, {kälä}.

   2. படைக்கலம்; weapon.

   3. கூட்டம்; multitude, crowd.

     “குரிசிலை விடாத சேனையே” (கம்பரா. தைலமா. 8);.

   4. உற்றார் உறவினர்; friends and relations.

அவன் சேனையை யாரால் தாங்க முடியும்?

     [தானை → (சானை→); சேனை. தானை = படை]

 சேனை2 cēṉai, பெ. (n.)

   1. தெரு (பிங்.);; street.

   2. கடைத்தெரு; bazaar.

   3. சந்தை (வின்.);; market, fair.

 சேனை3 cēṉai, வி.அ. (adj.)

   பல; many.

அவன் வந்து சேனைநாள் ஆயின (இ.வ.);.

தெ. சேந

 சேனை4 cēṉai, பெ. (n.)

   சேணம்; saddle.

     [சேணம் → சேணை → சேனை]

 சேனை5 cēṉai, பெ. (n.)

   1. கரணை வகை (தைலவ. தைல. l35);; Tahiti arrowroot, Tacoa pinnatifida.

   2. கரணை வகை (M.M.);; tuberous-rooted herb. Amorphophallus campanulatue.

   ம. சேன;   க., து., கேனெ;கூ கூனெ

     [சேமம் → சேனை. சாற்றை (சத்துகனை); வேரில் சேமித்து வைக்கும் கிழங்கு]

 சேனை6 cēṉai, பெ. (n.)

சேனைப்பால் பார்க்க;see {traippil}

     “சங்கிற். . . சேனையுடன் வஞ்சத் திருட்டுமருட்டுங் கலந்து புகட்டினாள்” (விறலிவி டு.166);.

     [சேணை → சேணை]

சேனைக்கால்

 சேனைக்கால் cēṉaikkāl, பெ. (n.)

   கோயிலில், குடவடிவ விளக்கை வைக்கும் கம்பம் (இ.வ.);; stand of a pot-shaped lamp used in temples.

     [சேனை + கால்]

சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கு cēṉaikkiḻṅgu, பெ. (n.)

   சமையலுக்குப் பயன்படும், கறுப்பு நிறத்தோலும் வெளிர்ச் சிவப்பு நிறச் சதைப் பகுதியும் கொண்ட அரைக்கோள வடிவத்தில் இருக்கும் ஒருவகைக் கிழங்கு; a big variety of elephant foot yam (சா.அக.);.

     [சேனை5 + கிழங்கு]

சேனைக்குடையார்

சேனைக்குடையார் cēṉaikkuḍaiyār, பெ. (n.)

   சேனைத்தலைவர்,3 பார்க்க; Sce {Senai-ttalaivar;3.}

மறுவ. படைத்தலைவர், சேனைமுதலி

     [சேனை + கு + உடையார்]

சேனைக்கைகோளர்

சேனைக்கைகோளர் cēṉaikkaiāḷar, பெ. (n.)

சேனைத்தலைவர் பார்க்க;see:{Emai-talaiyar.}

     “சேனைக் கைகோளரும், கண்ணாளரும் மற்றும் பல கல்வனையில் உள்ளாரும்” (ந.க.தொ.2.கல். 4, தொ.எ. 259-4);.

     [சேனை + கைகோளர்]

சேனைத்தலைவர்

சேனைத்தலைவர் cēṉaittalaivar, பெ. (n.)

   1. சேனாபதி; commander, leader of an army.

     “சேனைத் தலைவராய்ச் சென்றோரும்” (நாலடி-2);.

   2. சேனைமுதலியார்,1 பார்க்க;see {taaimudaiyil}

     ‘சேனைத் தலைவர் திருத்தாள். . . சேவிப்பனே’ (அழகர்கலம். காப்பு);.

   3. இல வணிகரினத்தார் (இ.வ.);; men of {ilai-vāņigar} caste.

     [சேனை + தலைவர்]

சேனைநாதன்

 சேனைநாதன் cēṉainātaṉ, பெ. (n.)

சேனாபதிஆழ்வார் பார்க்க;see {Śānāpadi-ásvár}

     “நாதமுனி சடகோபன் சேனை நாதன்”

     [சேனை + நாதன்]

சேனைபோகம்

 சேனைபோகம் cēṉaipōkam, பெ. (n.)

   படைக்குரிய பணிகளில் ஒன்று; an office in military service.

     [சேனை + போகம்]

சேனைப்படைகள்

 சேனைப்படைகள் cēṉaippaḍaigaḷ, பெ. (n.)

   பெருங்கூட்டம் (யாழ்ப்.);; big crowd, concourse of people.

     [சேனை + படைகள்]

சேனைப்படையரவம்

 சேனைப்படையரவம் cēṉaippaḍaiyaravam, பெ. (n.)

   சிறியாநங்கை; snake root (சா.அக.);.

சேனைப்பால்

 சேனைப்பால் cēṉaippāl, பெ. (n.)

   குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக் கலந்த நீருணவு (இ.வ.);; sweetened liquid, used for feeding an infant as soon as it is born.

     [சேனை + பால் – சேனைப்பால்]

சேனைப்பெருங்கணி

சேனைப்பெருங்கணி cēṉaipperuṅgaṇi, பெ. (n.)

   படையெடுப்பு முதலியவற்றுக்குரிய நாள் முழுத்தங்களைக் கணித்தற்குச் சேனையில் அமர்ந்துள்ள கணியர் தலைவன்; chief astrologer attached to an army.

     “சேனைப் பெருங்கணி செப்பிய நன்னாள்”(பெருங். மகத. 22: 185);.

     [சேனை + பெரும்கணி]

சேனைப்பெருவாணிகன்

சேனைப்பெருவாணிகன் cēṉaipperuvāṇigaṉ, பெ. (n.)

   படைக்கு வேண்டிய உணவு முதலிய பண்டங்களைக் கொடுத்து உதவுபவன்; chief purveyor for an army.

     “செருவார் சேனைப் பெருவாணிகன் மகன்” (பெருங். உஞ்சைக். 40: 344);.

     [சேனை + பெருவாணிகன்]

சேனைமீகாமன்

சேனைமீகாமன் cēṉaimīkāmaṉ, பெ. (n.)

   கடற்படையின் கலத்தலைவன்; captain of the warship.

     ‘இராசராச சேதிராயஞ் சேனைமீகாமன் எழுந்தருவித்த சேதி நாயகற்கும் நாச்சியாற்கும் (முதல் இராசராசன், கி.பி. 1049, தெ.க.தொ. 7, கல். 890);.

     [சேனை + மீகாமன்]

சேனைமுதலி

 சேனைமுதலி cēṉaimudali, பெ. (n.)

   படைத் தலைவர்; chief of an army.

     [சேனை + முதலி]

சேனைமுதலியார்

சேனைமுதலியார் cēṉaimudaliyār, பெ. (n.)

   திருமாலுக்கு விருந்து கொடுத்தவர்;{Visn’s} hosts.

   2. கைக்கோள இனத்தார்; men of {Kaikkölar} caste.

     [சேனை1 + முதலியார்]

சேனையங்காடிகள்

சேனையங்காடிகள் cēṉaiyaṅgāṭigaḷ, பெ. (n.)

   அறுவை வணிகருளொரு வகையினர் (தெ.கொ. 430);; a sect of cloth merchants.

     [சேனை + அங்காடிகள்]

சேனையர்கோன்

சேனையர்கோன் cēṉaiyarāṉ, பெ. (n.)

சேனைமுதலியார் பார்க்க;see {senaimudallyள்}

     “பேராழி செலுத்திய சேனையர் கோன்வாழ” (அஷ்டப். சிரங்கதாயகி. ஊசல், 1);.

     [சேனையர் + கோன்]

சேனையுள்படுநன்

சேனையுள்படுநன் cēṉaiyuḷpaḍunaṉ, பெ. (n.)

   அரசன் ஆணையைக் காளமூதிச் சேனைக்கு அறிவிப்போன்; royal herald who proclaims with a trumpet the king’s commands to his army.

     ‘சேனையுள்படுநரை யாணையிளேவி’ (சிலப். 8: 13, உரை);.

     [சேனை + உள் + படுநன்]

சேன்

சேன் cēṉ, பெ. (n.)

சேனன்2 பார்க்க;see {tag.}

     “புரவிச்சே னென்றியாவரும் புகழப்பட்டார்” (சீவக. 1681);.

     [சேனன் → சேன்]

சேபாலம்

 சேபாலம் cēpālam, பெ. (n.)

   சேங்கொட்டை (மலை.);; marking-nut

     [சே + பாலம்]

சேபாலிகை

சேபாலிகை1 cēpāligai, பெ. (n.)

   கருநொச்சி (மூ.அ.);; willow-leaved jusiticia.

 சேபாலிகை2 cēpāligai, பெ. (n.)

சேபாலம் பார்க்க;see {sébafam.

சேப்பங்கிழங்கு

சேப்பங்கிழங்கு cēppaṅgiḻṅgu, பெ. (n.)

   உணவுக்குப் பயன்படும் வழுவழுப்புத் தன்மை கொண்ட பழுப்பு நிறக் கிழங்கு (M.M. 402);; Indian kales root.

     [சேப்பை + கிழங்கு. சேம்பு பார்க்க]

சேப்பாடு

 சேப்பாடு cēppāṭu, பெ.(n.)

   சிவந்த (செவலை); நிறமுடைய செம்மறியாடு; a sheep of brown colour.

     [சிவப்பு – சேப்பு+ஆடு]

சேப்பு

சேப்பு1 cēppudal,    5 செ.கு.வி. (v.i.)

   தங்குதல்; to abide, remain

     “அணங்குடைத் தடக்கையர் தோட்டி சேப்பி” (பதிற்றுப். 62);.

 E. stay;OE. stadg;OF estayer.

     [சே1 → சேப்பு-.]

 சேப்பு2 cēppu, பெ. (n.)

   1. சிவப்பு; red, redness.

     “ஊடலிற் செங்கண் சேப்பூர” (பரிபா. 7:70);.

   2. சிவப்புக் கல்; red gem.

ம, சேப்பு;க. கெம்பு;பட. கெப்பு

     [செம் → சே → சேப்பு]

 சேப்பு3 cēppu, பெ. (n.)

   தாமரைக் கிழங்கு; root of the lotus.

     “பாசடைச் சேப்பினுள்” (சலித். 74);.

     [செம் → சே → சேப்பு]

சேப்பை

 சேப்பை cēppai, பெ. (n.)

சேம்பு பார்க்க;see {sëmbu}

சேமகாலம்

 சேமகாலம் cēmakālam, பெ. (n.)

   செழிப்புக் காலம்; time of prosperity or plenty, opp. to {Śāma-kālam} (செ.அக.);.

     [சேமம் + காலம்]

சேமக்கலம்

 சேமக்கலம் cēmakkalam, பெ. (n.)

   சேகண்டி; gong used in temples.

ம. சேமங்ஙலம்

     [சேமம் + கலம்]

சேமக்காரன்

சேமக்காரன் cēmakkāraṉ, பெ. (n.)

   1. காவற் காரன் (யாழ்.ப்.);; guard, watchman.

   2. நம்பிக்கையுள்ளவன்; trust-worthy, confidential person.

   3. சிக்கனமுள்ளவன்; thrifty, careful person.

   4. வருமுன் காப்போன் (யாழ். அக.,);; prudent, cautious man.

     [சேமம் + காரன்]

சேமக்கிழங்கு

 சேமக்கிழங்கு cēmakkiḻṅgu, பெ. (n.)

   சேப்பங்கிழங்கு; Indian kales root.

     [சேப்பங்கிழங்கு → சேமக்கிழங்கு]

சேமக்குழல்

 சேமக்குழல் cēmakkuḻl, பெ. (n.)

   எப்பொழுதும் திறந்திருக்கும் கன்னக் குழாயின் ஓர் பகுதி; that portion of the eaustachien tube which is always open-safety tube.

சேமங்கரி

 சேமங்கரி cēmaṅgari, பெ.(n.)

   தோன்றியங்கள் (ஆகமங்கள்); கூறுகின்ற காளி சிற்பத்தின் வேறோர் வடிவம்; a dfferent variety of the shape of the sculpture goddess Kali.

     [ஒருகா. சிம்மம்+காளி]

சேமங்கலம்

 சேமங்கலம் cēmaṅgalam, பெ. (n.)

சேமக்கலம் (இ.வ.); பார்க்க;see {sema-k-kalan,}

ம. சேமங்ங்லம்

சேமங்குதிரை

 சேமங்குதிரை cēmaṅgudirai, பெ.(n.)

   அய்யனார் தெய்வம் அமர்ந்து இருக்கும் குதிரைச்சிலை; a figure of Ayyanar’s horse.

     [ஒருகா. சாமன் சேமன்+குதிரை]

சேமங்கொள்(ளு)-தல்

சேமங்கொள்(ளு)-தல் cēmaṅgoḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

   பிணத்தை வைத்து அழகுபடுத்தச் சாணத்தால் இடத்தைத் துய்மைப்படுத்துதல் (யாழ்ப்.);; to smear a place with cowdung in order to layout a corpse and dress it for the funeral.

     [சேமம் + கொள்-.]

சேமஞ்செய்-தல்

சேமஞ்செய்-தல் cēmañjeytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   மூடி வைத்தல்; to keep covered, protected.

     “செவிகளைத் தளிர்க்கையாலே சிக்குறச் சேமஞ்செய்தாள்” (கம்பரா. சடாயுவுயிர். 69);.

     [சேமம் + செய்-.]

சேமணி

சேமணி1 cēmaṇi, பெ. (n.)

மாட்டுக்கழுத்திற்

   கட்டும் மணி (யாழ்.அக.);; bell tied to the neck of a cow.

சேமணி

     [சே + மணி]

சே = எருது. எனினும் பொதுவாக பெற்றத்தையும் எருதையும் குறிக்கும்.

     [P]

 சேமணி2 cēmaṇi, பெ. (n.)

   சேகண்டி; gong used in temples.

     [சேமம் + மணி]

சேமண்டன்

 சேமண்டன் cēmaṇṭaṉ, பெ. (n.)

   தந்தையிலி; one who has lost his father.

     [சேமம் → சேமண்டன்]

சேமதருமம்

 சேமதருமம் cēmadarumam, பெ. (n.)

   நிலை நிற்கும் வண்ணம் செய்யும் அறம் (வின்.);; deeds of lastingbenefit, opp, to {māyā-darumam}

     [சேமம் + தருமம்]

சேமத்தில்வை-த்தல்

சேமத்தில்வை-த்தல் cēmattilvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. பாதுகாப்புச் செய்தல் (வின்.);; to keep in safe custody.

   2. கோணிலை சரியற்ற குழந்தைகளைக் கணியன் (சோதிடன்); சொற்படி பெற்றோர் காணாதவாறு சிலகாலம் மறைத்து வைத்தல்; to keep away from parents children born under an unlucky star for a certain time fixed by astrologer.

     [சேமத்தில் + வை-.]

சேமத்தேர்

சேமத்தேர் cēmattēr, பெ. (n.)

   வைப்புத்தேர்; war-chariot kept in reserve.

     “சேயிரு மணிநெடுஞ் சேமத்தேர்” (கம்பரா. யுத்த. முதற்போர். 105);.

     [சேமம் + தேர்]

சேமநலநிதி

 சேமநலநிதி cēmanalanidi, பெ. (n.)

பொது நலனுக்காகச் சேமித்து வைக்கப்படும் பணம்

 welfare fund.

தொழிலாளர் மே நலநிதி.

     [சேமம் நலநிதி]

சேமநிதி

 சேமநிதி cēmanidi, பெ. (n.)

சேமப்பொருள் பார்க்க;see {Séma-p-porul.}

     [சேமம் + நிதி]

சேமனம்

 சேமனம் cēmaṉam, பெ. (n.)

   உணவு; food.

     [சேமம் + சேமனம்]

சேமனவம்

 சேமனவம் cēmaṉavam, பெ. (n.)

   சிவந்த மணி (யாழ். அக.);; red stone, ruby.

சேமன்

சேமன் cēmaṉ, பெ. (n.)

   போக்கிலி; cunning fellow;rogue.

     “இந்தச் சேமனை நீர் . . . வெருட்டிடும்” (விறலிவிடு. 860);.

     [சோம்பன் → சோமன் → சேமன்]

சேமன்திருக்கை

 சேமன்திருக்கை cēmaṉtirukkai, பெ.(n.)

திருக்கைமீன் வகையுள் ஒன்று,

 whipsting ray

     [சாமன்-சேமன்+திருக்கை]

     [P]

சேமப்படை

சேமப்படை1 cēmappaḍai, பெ. (n.)

   வைப்புப் படை; army and weapons kept in reserve.

     [சேமம் + படை]

 சேமப்படை2 cēmappaḍai, பெ. (n.)

   தேமல்; a yellow discolouration of the skin occuring in patches (சா.அக.);.

     [சே → சேமம் + படை]

சேமப்பிள்ளை

சேமப்பிள்ளை cēmappiḷḷai, பெ. (n.)

   அரசருடைய மெய்க்காப்பாளன்; bodyguard of the king.

     ‘வீரபாண்டிய தேவற்கு 4ஆவது நாயனார் சேமப்பிள்ளையார் அகம்படி முதலிகளில்’ (புதுக்கோட்டைக் கல். 430);.

     [சேமம் + பிள்ளை]

சேமப்பொருள்

சேமப்பொருள் cēmapporuḷ, பெ. (n.)

   1. வைப்புப் பொருள்; riches kept in reserve, reserve funds.

   2. தன் நன்மைக்காகப் பிறரிடம் வைக்கப்பட்ட பொருள்; deposit

 to meet one’s needs in the future.

   3. புதையல் (யாழ்.அக.);; treasure-trove.

     [சேமம் + பொருள்]

சேமம்

சேமம்1 cēmam, பெ. (n.)

   1. நல்வாழ்வு; safety, well-being, welfare.

     “சேமமே யுன்றனக்கென் றருள்செய்தவன்” (தேவா. 1136, 9);.

   2. இன்பம் (சூடா.);; happiness, pleasure.

 Skt. {ksēma}

     [ஏமம் → சேமம்]

தங்குதலை அல்லது குடியிருத்தலைக் குறிக்கும் ‘க்ஷி’ என்னும் முதனிலையை வடவர் மூலமாகக் காட்டுவது பொருந்தாது.

 சேமம்2 cēmam, பெ. (n.)

   1. காவல் (சூடா.);; protection, preservation, security, defence, safe guard.

     “சேம வன்மதில்” (தேவா. 93, 4);. சி.

   2. அரணான இடம்; stronghold, secure place.

     “காப்புச் சிந்தைசெய்துவே றிடத்தொரு சேமத்தின் வைத்தார்” (பெரியபு. அமர்நீதி. 16);.

   3. சிறைச்சாலை; prison, dungeon.

     “சேமந் திறந்தனை. . . எய்துதி” (உபதேசகா. சிவநாம. 90);.

   4. படைத் தொழில் ஐந்தனுள் பகைவரது அம்பு தன்மேற்படாமற் காக்குஞ் செயல்; act of a warrior protecting himself against hostile arrows;

 one of {pañja-kiruttiyam.}

     ‘எய்தாற் கருவியாலே மறைத்துச் சேமஞ் செய்யு மாறும்’ (சீவக. 1676, உரை.);.

   5. சவக்காப்பு (வின்.);; binding and shrouding a corpse for burning or interment.

     [ஏமம் → சேமம்]

 சேமம்3 cēmam, பெ. (n.)

   1. புதைபொருள்; hoard,treasure-trove.

     “சேமம்போ யெடுப்பவர்” (பிரபுலிங். சித்தரா. 49);.

   2. ஓலைச் சுவடியின் கட்டு; tying of ola book.

     “புத்தகந்தன்னைச் சேமநீக்கின னோதினான்” (திருவாத பு. திருவடி. 20);.

     [ஏமம் → சேமம்]

 சேமம்4 cēmam, பெ. (n.)

   பலவகை அணுக்களின் சேர்க்கை; a unit of a group of atoms.

 Skt. {kshëma}

     [சேர்மம் → சேமம்]

சேமம்போகிப்போகு-தல்

சேமம்போகிப்போகு-தல் cēmambōkippōkudal,    5 செ.கு.வி. (v.i.)

   பாதுகாப்பு இல்லாத போது களவு போகுதல்; stolen when there was no proper security arragements.

நாயனார் கோயில் எழுந்தருளுகிற நாயனார் இத்தேவர்க்கு ஏழாவது நாளில் சேமம் போகிப் போகையில் பின்பு இக்கோயிலுக்கு எழுந்தருளி விநாயகரையும் எழுந்தருளிவித்தான் இராசராசன் 2, கி.பி. 1160, (தெ.க.தொ.8;கல். 201);.

     [சேமம் + போகிப் போகு-.]

சேமரம்

சேமரம் cēmaram, பெ. (n.)

   1. அழிஞ்சில் (பிங்.);; sage leaved alangium.

   2. சேங்கொட்டை (மலை.);; marking nut tree.

     [சே + மரம்]

சேமறி

 சேமறி cēmaṟi, பெ. (n.)

   மாட்டின் புணர்ச்சி (வின்.);; copulation of bull and cow.

     [சே + மறி]

சேமவில்

சேமவில் cēmavil, பெ. (n.)

   உற்றகாலத்து உதவும்படி துணையாகக் கொள்ளும் வில் (சிலப். 2:42, உரை.);; bow kept in reserve.

     [சேமம் + வில்]

சேமவைப்பு

சேமவைப்பு cēmavaippu, பெ. (n.)

சேமப்பொருள் பார்க்க;see {séma-p-porul.}

     “இராமானுச னென்றன் சேமவைப்பே” (திவ். இராமானுச. 22);.

     [சேமம் + வைப்பு]

சேமா

சேமா cēmā, பெ. (n.)

   எருது; bull.

     “சேமா போற்

குப்புறூஉம்” (நாலடி, 377);.

     [சே + மா. சே = எருது. மா = விலங்கு;ஒ.நோ: ஆமா]

சேமாறி

சேமாறி cēmāṟi, பெ. (n.)

   விதையடிப்போன் (நன். 138, மயிலை);; gelder.

     ‘எருதுகளுடைய பீசத்தை சேமாறிகளால் உடையும்படி செய்விக்கும் பொல்லாதவனும்” (சிவதரு. பாவ. உரை);.

     [சே6 +மாறி. மாறு → மாதவி.]

சேமாறு-தல்

சேமாறு-தல் cēmāṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   எருதுக்கு விதையடித்தல் (இலக். வி. 45, உரை);; to geld a bull.

     [சே + மாறு – சேமாறு-.]

சேமாளைச் சம்பா

 சேமாளைச் சம்பா cēmāḷaiccambā, பெ. (n.)

   சம்பா நெல்வகை (யாழ். அக.);; a kind of {Šambá} paddy.

     [செம்பானை → சேமானை + சம்பா]

சேமி-த்தல்

சேமி-த்தல் cēmittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. போற்றி வைத்தல்; to keep secure, preserve in safety.

     “தனதானியங்கள் சேமித்தல்” (விதான. பஞ்சாங்க. 19);.

   2. புதைத்து வைத்தல் (சூடா.);; to hide underground, bury.

   3. நிறைத்தல்; save money, water, etc., store blood, etc., for emergency.

ஏரிகளை ஆழப்படுத்தி அதிகத் தண்ணிரைச் சேமித்து வைக்கலாம்.

   4. எரிபொருள் முதலானவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்திச் சிக்கனப் படுத்துதல்; conserve energy, fuel, etc.,

எரிபொருளைச் சேமிக்கும் நுட்பத்தைத் தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டும்.

     [சேமம் → சேமி-.]

சேமிப்பாவணம்

 சேமிப்பாவணம் cēmippāvaṇam, பெ. (n.)

   அரசு நேரடியாகவோ அஞ்சலகம் முதலிய அமைப்புகள் வழியாகவோ ஒருவர் சேமிப்பாகச் செலுத்தியத் தொகையைக் குறிப்பிட்ட கால முடிவில் வட்டியுடன் திருப்பித் தருவதாக எழுத்துமூலம் உறுதியளித்துத் தரும் ஆவணம்; Savings certificate.

தேசிய சேமிப்புப் பத்திரம்/ அஞ்சலகச் சேமிப்புப் பத்திரம்.

     [சேமிப்பு + ஆவணம்]

சேமிப்பு

சேமிப்பு cēmippu, பெ. (n.)

   1. எதிர்காலத் தேவை கருதி வங்கி முதலியவற்றில்சிறிது சிறிதாகச் சேர்த்து வைத்திருக்கும் பணம்; savings in a bank, etc.

திடீர் செலவுகளுக்குச் சேமிப்புதான் கைகொடுக்கிறது.

   2. எதிர்காலத் தேவை கருதி உணவுப் பொருள் அரத்தம் முதலிய வற்றைப் பாதுகாப்பாக உரிய இடத்தில் சேர்த்தல்; store of paddy etc;stock.

நெல் சேமிப்புக்கிடங்கு, அரத்தச் சேமிப்பு நிலையம்.

     [சேமி → சேமிப்பு]

சேமிப்புப்பத்திரம்

 சேமிப்புப்பத்திரம் cēmippuppattiram, பெ. (n.)

சேமிப்பாவணம் பார்க்க;see {scmippivaram.}

     [சேமிப்பு + பத்திரம்]

 Skt. Patra → க. பத்திரம்

சேமிப்புவங்கி

 சேமிப்புவங்கி cēmippuvaṅgi, பெ. (n.)

   சேமிப்புப் பொருளகம்; savings bank.

     [சேமிப்பு + வங்கி]

சேமை

சேமை cēmai, பெ. (n.)

சேம்பு,1 பார்க்க;see {šeimbu}

     [சேப்பை → சேமை]

சேம்பி

 சேம்பி cēmbi, பெ. (n.)

   மருதாணி; fragrant nail dye.

சேம்பு

சேம்பு cēmbu, பெ. (n.)

   1. நீர்ப்பாங்கான இடங்களில் வளரும் பெரிய இலைகளோடு கூடிய, கறிக்குதவும் கிழங்கைத்தரும் ஒரு வகைச் செடி; Indian kales.

     “சேம்புகால் பொர” (கம்பரா. நாட்டு. 35);

   2. வறட்சேம்பு; a garden plant.

வ. கேமுக

சேம்புகா

 சேம்புகா cēmbukā, பெ. (n.)

   பொன்னூமத்தை; yellow dalura (சா.அக.);.

சேம்பை

 சேம்பை cēmbai, பெ. (n.)

சேம்பு (மலை.); பார்க்க;see {Śēmbu}

     [சேம்பு → சேம்பை]

சேயன்

சேயன்1 cēyaṉ, பெ. (n.)

   தொலைவிலுள்ளவன்; one who is at a distance.

     “சேய னணியன்” (திவ். பெரியதி. 2. 1:8);.

     [சேய் → சேயன்]

 சேயன்2 cēyaṉ, பெ. (n.)

   செந்நிறமுள்ளவன்; ruddy person.

     ‘வண்ணமு மாயனவ னிவன் சேயன்’ (தொல். பொருள். 307, உரை);.

     [சேய் → சேயன்]

சேயபரம்

 சேயபரம் cēyabaram, பெ. (n.)

   மரமஞ்சள்; tree turmeric.

சேயமம்

 சேயமம் cēyamam, பெ. (n.)

   செய் (கெளரி வைப்பு); நஞ்சு (யாழ்.அக.);; a prepared arsenic.

சேயம்

 சேயம் cēyam, பெ. (n.)

   கரை (யாழ். அக.);; shore, bank.

 E. shore;OE. schore;Du. schoor, schor.

     [சேய் → சேயம்]

சேயவன்

சேயவன் cēyavaṉ, பெ. (n.)

   1. செவ்வாய்க் கோள் (திவா.);; Mars.

   2. முருகக் கடவுள்; Lord {Murugan,}

     “ஆறுமாமுகச் சேயவன்” (கந்தபு. தெய்வயா. 58);.

     [சேய் → சேயவன்.]

சேயா

 சேயா cēyā, பெ. (n.)

   கடுக்காய் (மலை.);; chebulic myrobalan.

சேயான்

 சேயான் cēyāṉ, பெ.(n.)

   ஒட்டன், பாட்டனுக்குப் பாட்டன்; great – great – grandfather.

     “பாட்டனுக்கு மேல் பூட்டன், பூட்டனுக்கு மேல் ஒட்டன், ஒட்டனுக்குமேல் உறவில்லை”(பழ);

     [சே(ய்மை); + ஆன்]

 சேயான் cēyāṉ, பெ. (n.)

   செந்நிற முடையவன்; person of ruddy complexion.

     [சேய் → சேயான்]

சேயார்

சேயார் cēyār, பெ. (n.)

   1. தொலைவிலுள்ளவர் (யாழ்.அக.);; people at a distance.

   2. பகைவர்; enemics, foes.

     [சேய்3 → சேயார்]

சேயாறு

சேயாறு cēyāṟu, பெ. (n.)

   தொண்டை நாட்டில் ஒடும் செய்யாறு என்னும் ஆறு; a river flowing through Vellore and Kanchipuram districts.

     “சேயாற்றின் யானரொரு கரை” (மலைபடு. 476.);.

     [சேய் + ஆறு.]

சேயிலம்

 சேயிலம் cēyilam, பெ. (n.)

இலுப்பை (மலை.);:

 South Indian mahua.

மறுவ. இருப்பை.

சேயிழை

சேயிழை cēyiḻai, பெ. (n.)

   அழகிய அணிகலன்களை அணிந்த பெண்; woman, as wearing beautiful ornaments.

     “சேயிழை கணவ” (பதிற்றுப். 88:36);.

மறுவ. ஆயிழை.

     [செம் → சேய் + இழை]

சேயேபசம்

 சேயேபசம் sēyēpasam, பெ. (n.)

   மரமஞ்சள் (மலை.);; tree turmeric.

சேயோன்

சேயோன்1 cēyōṉ, பெ. (n.)

   1. முருகக்கடவுள்; Lord {Murugan.}

     “சேயோன் மேய மைவரை யுலகமும்” (தொல். பொருள். 5);.

   2. சிவன் (யாழ்.அக.);;{Sivar.}

   3. குழந்தை; baby.

     [சேய்2 → சேயோன் = முருகன், சிவன். முதற்காலத்தில் சேயோனும் சிவனும் ஒருவரே.]

 சேயோன்2 cēyōṉ, பெ. (n.)

   தொலைவில் இருப்பவன்; one who is remote.

     “புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க” (திருவாச. 1:8);.

     [சேய்3 < சேயோன்]

சேய்

சேய்1 cēy, பெ. (n.)

   1. சிவப்பு; red ness.

     “சேயுற்ற கார்நீர் வரவு” (பரிபா. 11:114);.

   2. செவ்வாய் (பிங்.);; Mars.

   3. செந்நிற முருகன்; God Murugan.

     “சேஎய் குன்றம்” (பரிபா. 6:69);.

     [செய்4 → சேய்]

 சேய்2 cēy, பெ. (n.)

   1. மகன்; son.

     “தயரதன் சேய்” (திவ். பெரியதி. 3.10:6);.

   2. இளமை (திவா.);; juvenility, youth.

   3. பெருமை; greatness.

     “சேயுடம் பெய்துவை” (சீவக. 943);.

   4. முருகனை யொத்த மறவன், தலைவன்; cheit, lord.

     “பாரதப் போர் செற்றானுங் கண்டாயிச் சேய்” (நள. சுயம்வ. 137);.

   5. குழந்தை; child. தாயும் சேயும் நலம்.

 E son;OE sunu;O.S. O.tris, sunu;O.N. sonr;Dan. Swed son, M.Du. sone;Du, zoon, OHG: summ, som;MHG. sun;G. sohn;Goth. sunus, OG. {stinuh,} Toch. A. se;Torcvh. B. soya;anestic: humush;{O. slov: synā;} Lita: sunus;Gk. Tos;Arm. Ustre;Ogr, suta.

     [செம் → சேம்]

 சேய்3 cēy, பெ. (n.)

   1. தொலைவு (சூடா.);; distance, remoteness.

   2. நீளம் (பிங்.);; length.

   3. மனையிடம் (யாழ்.அக.);; house, site.

   4. மூங்கில் (மலை.);; bamboo.

     [சேண் → சேய்.]

சேய்குன்றம்

சேய்குன்றம் cēykuṉṟam, பெ. (n.)

   முருகக் கடவுள் வாழ்விடமாகிய திருப்பரங்குன்றம்;{Tirupparangunram,} as a residence of {Murugan.}

     “நீரிற்றுவண்ட சேஎய் குன்றம்” (பரிபா. 6:69);.

     [சேய்2 + குன்றம்]

சேய்ஞ்ஞலூர்

 சேய்ஞ்ஞலூர் cēyññalūr, பெ.(n.)

   கும்பகோணம் வட்டத்தில் திருவாய்ப்பாடி என்று அழைக்கப்படும் ஊர்; a village in Kumbakonam Taluk.

     [சேயன்+நல்லூர்]

சேய்து

சேய்து cēytu, பெ. (n.)

சேய்த்து1 பார்க்க;see {šēyttu’.}

     “ஒள்ளொளி சேய்தா” (பரிபா. 16:40);.

     [சேண் → சேய் → சேய்து]

சேய்த்து

சேய்த்து1 cēyttu, பெ. (n.)

   செம்மை நிறமுடையது; that which is red.

     “அறங்கரிது சேய்த் தென்ப தியாது மறியார்” (சீவக. 2622);.

     [சேய்1 → சேய்த்து]

 சேய்த்து2 cēyttu, பெ. (n.)

   தொலைவானது; that which is at a distance.

     “சேய்த்தானுஞ் சென்று கொளல் வேண்டும்” (நாலடி, 218);.

   2. நீளமானது (வின்.);; that which is long.

     [சேண் → சேய் → சேய்த்து]

சேய்நீர்

 சேய்நீர் cēynīr, பெ. (n.)

   சுண்ணாம்பும் எரியுப்பும் (நவச்சாரமும்); கலந்த நீர்; medicinal preparation of lime and sal ammoniac.

     [செயநீர் → சேய்நீர்]

சேய்மரபு

சேய்மரபு cēymarabu, பெ. (n.)

   இளமைப் பருவம்; youth.

     “சேய்மரபிற் கல்விமாண் பில்லாத மாந்தரும்” (திரிகடு. 84);.

   2. குழந்தைத் தன்மை; childishness.

     [சேய் +மரபு]

சேய்மை

சேய்மை cēymai, பெ. (n.)

   1. தொலைவு (சூடா.);; distance, remoteness.

     “சேய்மையி னோக்குறு” (கம்பரா. சடாயுகாண். 5);.

   2. நீளம் (யாழ்.அக.);; length.

     [சேய் → சேய்மை]

சேய்மைவிளி

சேய்மைவிளி cēymaiviḷi, பெ. (n.)

   தொலைவி லுள்ளோரை அழைக்கும் விளி (நன்.313, விருத்.);; vocative used to call a person at a distance.

     [சேய்மை + விளி]

சேர

சேர cēra, கு.வி.எ. (adv.)

   1. முழுதும்; altogether, wholly.

     “சேர வாருஞ் செகத்திரே” (தாயு. காடுங்கரையும் 2);. ஒரு சேர முயன்று அவன் வெற்றி பெற்றான் (உ.வ.);.

   2. கூட (வின்.);; along

 with, in company with.

   3. அணித்தாக; near. சேரப் போ.

     [சேர் → சேர]

சேரகோன்

சேரகோன் cēraāṉ, பெ. (n.)

   1. சேரவரசன்; the king of {Córa} country.

   2. நாஞ்சினாட்டு முதலியார்களுக்குரிய பட்டம் (நாஞ்.);; a title conferred upon Mudaliars in {Nanjinădu}.

ம. சேரகோன்

     [சேரன் + கோன்]

சேரக்கட்டு-தல்

சேரக்கட்டு-தல் cērakkaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   செலுத்துதல் (வின்.);; to deliver, remit, transmit.

     [சேர + கட்டு-.]

சேரக்காற்று

 சேரக்காற்று cērakkāṟṟu, பெ.(n.)

   கீழ்க்காற்று; easterly wind

சேரங்கை

சேரங்கை cēraṅgai, பெ. (n.)

   சிறாங்கை; quantity that can be held in the hollow of the palm as a measure; palmful.

     “சேரங்கை யள்ளிச் சீருடன் கொடுத்தல்” (பரத. பாவ. 23);.

     [சேரை + அம் + கை]

சேரடி

சேரடி cēraḍi, பெ. (n.)

   நெற்சேர் நிற்குமிடம்; the place where granary or straw-receptacle for paddy stands.

     “செந்நெற் சேரடிகளும்” (இராம.நா. கந். 3);.

சேர் = தவச வகைகளைச் சேர்த்து வைக்கும் களஞ்சியம்.

     [சேர் + அடி]

சேரடி மூலை

 சேரடி மூலை cēraḍimūlai, பெ.(n.)

   ஆத்தூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in AtturTaluk.

     [சேரடி+மூலை]

சேரடையாக

 சேரடையாக cēraḍaiyāka, கு.வி.எ. (adv.)

   தொடர்ச்சியாக; continuously.

சேரடையாக மாட்டுமந்தை வீடு திரும்பிக் கொண்டிருக்கிறது.

     [சேர் + அடை + ஆக]

சேரநாடு

 சேரநாடு cēranāṭu, பெ. (n.)

சேரமண்டலம் பார்க்க;see {Séra-mangalam}

ம. சேரநாடு

     [சேரன் + நாடு]

சேரன்

சேரன் cēraṉ, பெ. (n.)

சேரலன்1 பார்க்க;see {seralaா.}

     “சேரன்பொறையன் மலையன் றிறம்பாடி” (சிலப். 29, ஊசல்வரி. 2);.

ம.சேரன்

     [சேரலன் → சேரன்]

குடமலைநாடு சேரனுக்கே சிறப்பாகவுரிய தாயிருந்தமையால் இதனால் மலையன், மலையமான், பொறையன், வானவன், வானவரம்பன் என்னும் பெயர்கள் அவனுக்கு வழங்கி வந்தன.

சேரன்செங்குட்டுவன்

 சேரன்செங்குட்டுவன் cēraṉceṅguṭṭuvaṉ, பெ. (n.)

   கழகக் காலச் சேரமன்னன்; a Chera king in {Sangam} age.

     [சேரன் + செங்குட்டுவன்.]

சேரமன்னர்களில் சிறந்தவன். கண்ணகிக்குக் கோயில் எடுத்துச் சிறப்புற்றவன். இவனைப் பற்றி பதிற்றுப் பத்தின் ஐந்தாம்பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு ஆகியவற்றால் அறியலாம். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் இவன் தம்பி.

சேரன்தீவு

 சேரன்தீவு cēraṉtīvu, பெ. (n.)

   இலங்கையின் பெயர்; the name of Srilanka.

வெளிநாட்டார் Cerandeep என்று

இலங்கையை அழைத்தனர். இஃது ஒரு காலத்தில் சேரநாட்டின் பகுதியாக இருந்தது என்பதை உய்த்துணர்த்துகிறது.

     [சேரன் + தீவு]

சேரன்மாதேவி

சேரன்மாதேவி cēraṉmātēvi, பெ. (n.)

   நெல்லை மாவட்டத்திலுன்ளள ஊர்; a place in Tirunelveli district.

     “கீழ்பாற்கெல்லை சேரமாதேவிக்கு மேற்கு” (தெ.க.தொ.26, கல். 677-2);.

சேர அரசியின் நினைவாக ஏற்படுத்தப் பட்ட ஊர்.

     [சேரன் + மாதேவி]

சேரமண்டலம்

 சேரமண்டலம் cēramaṇṭalam, பெ. (n.)

   சேரநாடு; the {Cerâ} country.

     [சேரன் + மண்டலம்]

சேரமாதேவி

 சேரமாதேவி cēramātēvi, பெ.(n.)

   திருநெல் வேலி மாவட்டத்தில் உள்ள ஒர் ஊர்; a village in Thirunelveli.

     [சேரமான்+தேவி]

சேரமானெந்தை

சேரமானெந்தை cēramāṉendai, பெ. (n.)

   குறுந்தொகை 22ஆம் காடலை இயற்றியவர்; author of 22nd verse of {Kurundogai.}

     [சேரமான் + எந்தை]

சேரமான்

சேரமான் cēramāṉ, பெ. (n.)

சேரலன்1 (புறநா.); பார்க்க;see {šẽralan”}

ம. சேரமான்

     [சேரன் → சேரமான்.]

   ஒ.நோ. தொண்டைமான், அதியமான்;மான்- சிறந்த மனிதர், பெருமகன் போன்ற பொருளில் வரும். உலகெங்கிலும் இச்சொல் மக்கட் பெயருடன் வருகிறது.

சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை

சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறை cēramāṉanduvañjēralirumboṟai, பெ. (n.)

   புறாநானூற்று 13ஆம் பாடலின் ஆசிரியரான உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் நண்பரான சேரன்;{Cerá} king, friend of the poet {Uraiyūr Enicéry Mudamóšiyār, the author of poem no. 13 of {Puranānūru.}

சோழன் முடித்தலைக் கோப்பெருநற் கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ் சேரலிரும்பொறை யொடு வேண்மாடத்து மேலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது (புறம்நா.13, உரை.);.

     [சேரமான் + அந்துவன் + சேரல் + இரும்பொறை]

சேரமான் இளங்குட்டுவன்

 சேரமான் இளங்குட்டுவன் cēramāṉiḷaṅguṭṭuvaṉ, பெ.(n.)

   சேரனின் சங்க்கால இயற்பெயர்; name of a person of Cera clan.

     [சேரமான்+இளங்குட்டுவன்]

சேரமான் எந்தை

 சேரமான் எந்தை cēramāṉendai, பெ.(n.)

   சங்கால சேரமரபினன்; a person of Cera clan in during sangamage.

     [சேரமான்+எந்தை]

சேரமான் மாரிவெண்கோ

 சேரமான் மாரிவெண்கோ cēramāṉmāriveṇā, பெ.(n.)

   சேரமன்னன்; a Cera king.

     [சேரமான்+மாரிவெண்கோ]

சேரமான்இளங்குட்டுவன்

சேரமான்இளங்குட்டுவன் cēramāṉiḷaṅguṭṭuvaṉ, பெ. (n.)

   அகநானூறு 153ஆம் பாடலைப் பாடிய சேரர் குலத்து அரசன்; a {Cerâ} prince who wrote the poem no. 153 of {Aganānūru.}

     [சேரமான் + இளம் + குட்டுவன்]

சேரமான்கடலோட்டியவேல்கெழுகுட்டுவன்

சேரமான்கடலோட்டியவேல்கெழுகுட்டுவன் cēramāṉgaḍalōḍḍiyavēlgeḻuguḍḍuvaṉ, பெ. (n.)

   பரணர் பாடிய, புறநானூற்று 369ஆம் பாட்டின் பாட்டுடைத் தலைவன்; a {Ceraking.}

சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவனைப் பாடியது. (புறநா.369, உரை);.

     [சேரமான் + கடலோட்டிய + வேல்கெழு + குட்டுவன்]

இம்மன்னனின் கடல் வெற்றிச் சிறப்பினை விளக்கும் வகையில் கடலோட்டிய என்னும் அடையும், வேலேந்திச் செய்யும் போர்த்திறச் சிறப்பால் ‘வேல் கெழு’ என்னும் அடையும் இவன் பெயர்க்கு முன் அமைந்துள்ளன. இவன் பெயர்க்கு ‘வேள் கெழு குட்டுவன்’ என்ற பாடபேதமும் உண்டு. 129

சேரமான்கடுங்கோவாழியாதன்

சேரமான்கடுங்கோவாழியாதன் cēramāṉkaḍuṅāvāḻiyātaṉ, பெ. (n.)

   கபிலர் பாடிய பாட்டுடைத் தலைவன்; hero of a poem authored by Kapilar.

     ‘சேரமான் கடுங்கோ வாழியாதனைப் பாடியது (புறநா. 8ஆம் பாடலின் குறிப்பு);.

கடுங்கோ என்பது பெருவீரன், பெருமன்னன் என்ற பொருளில் வந்தது.

மறுவ. செல்வக்கடுங்கோவாழியாதன்

     [சேரமான் + கடுங்கோ + வாழி + ஆதன்]

   சேரமான்கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானொடு பொருது சிறைப்பட்டு மாண்ட சேரன்; a {Cerá} who lost his life in jail, after fighting with {Cölan Señganān.}

சேரமான் கணைக்கா லிரும்பொறை, சோழன் செங்கணா னொடு (புறநா. 74, உரை);.

மறுவ. கோச்சேரமான், சேரமான்.

     [சேரமான் + கணைக்கால் + இரும்பொறை]

சேரமான்குடக்கோநெடுஞ்சேரலாதன்

சேரமான்குடக்கோநெடுஞ்சேரலாதன் cēramāṉkuḍakāneḍuñjēralātaṉ, பெ. (n.)

   கழகக்கால சேரமன்னன்; a {Cera} king in Sangam age.

     [சேரமான் + குடக்கோ + நெடுஞ்சேரல் + ஆதன்]

சேரலாதன், செடுஞ்சேரலாதன் என்னும் பெயரோடு விளங்கிய ஏனையோர்களி னின்றும் பிரித்துணர ஏந்தாக. இவன் பெயரில் குடக்கோ என்னும் அடை அமைந்ததாகலாம். சேரநாடு, குடநாடு, குட்டுவர் நாடு என்னும் பகுதிகளைக் கொண்டமையால் குடவர், குடவர்கோ, குட்டுவர், குட்டுவர்கோ என்று வழங்கப் பெற்றனர். ஆதன் சேரமன்னர்க்கு வழங்கிய இயற்பெயர்களுள் ஒன்று. இவனைப் பற்றி கழாத் தலையர், பரணர் ஆகியோர் புறநானூறு 62, 63, 368 ஆகிய பாடல்களில் பாடியுள்ளனர்.

சேரமான்கோக்கோதைமார்பன்

சேரமான்கோக்கோதைமார்பன் cēramāṉākātaimārpaṉ, பெ. (n.)

   கழகக் கால மன்னர்களில் ஒருவன்; a king in {šañgam} period.

மறுவ. கோதைமார்பன்

     [சேரமான் + கோன்கோதை +மார்பன்]

இம்மன்னனைப்பற்றி நற்றிணை (8);, அகநானூறு (346);, புறநானூறு (48); ஆகியவற்றில் பாடல்கள் உள்ளன.

சேரமான்கோட்டம்பலத்துத்துஞ்சியமாக்கோதை

சேரமான்கோட்டம்பலத்துத்துஞ்சியமாக்கோதை cēramāṉāṭṭambalattuttuñjiyamākātai, பெ. (n.)

   புறநா. 245ஆம் பாடலை இயற்றிய சேரவரசர்; a {Cérå} king, who wrote the poem {Puram.} 245.

     [சேரமான் + கோட்டம்பலத்து + துஞ்சிய மான்கோதை]

சேரமான்தகடூர்எறிந்தபெருஞ்சேரல் இரும்பொறை

சேரமான்தகடூர்எறிந்தபெருஞ்சேரல் இரும்பொறை cēramāṉtagaṭūreṟindaberuñjēralirumboṟai, பெ. (n.)

   கழகக்கால சேரமன்னர்; a Chera king in {Sangam} period.

     [சேரமான் + தகடூர் + எறிந்த + பெருஞ்சேரல் + இரும்பொறை]

இவன் தகடூர் மேல் படை எடுத்து வென்றதால் தகடூர் எறிந்த என்னும் அடையைப் பெற்றான். முரசு கட்டிலில் உறங்கிய மோசிகீரனார்க்குக் சுவரி விசியவன் இவனே, புறநானுறு 50வழ பாடல் இவனைப் பற்றிக் கூறுகிறது. அரிசில் கிழார் பதிற்றுப்பத்தில் இவனைப் பாடுகிறார்.

சேரமான்தோழர்

சேரமான்தோழர் cēramāṉtōḻr, பெ. (n.)

{Sundaramärtti náyanār,} as the friend of {Seramānperumānāyanār.}

     “சேரமான்தோழரென்று பார்பரவு மேன்மை” (பெரியபு. கழிறிற். 66);.

     [சேரமான் + தோழர்]

சேரமான்பெருஞ்சேரலாதன்

சேரமான்பெருஞ்சேரலாதன் cēramāṉperuñjēralātaṉ, பெ. (n.)

   கழகக் கால சேரமன்னன்; a {Cērā} king in {Šangam} age.

மறுவ. சேரமான் பெருந்தோளாதன்

சோழன் கரிகாலன் விட்ட அம்பு மார்பில் பட்டு முதுகுவழியே வெளிவந்ததை இழுக்கு எனக் கருதி வடக்கிருந்து உயிர்விட்டவன். புறநானூற்று 65, 66ஆம் பாடல்கள் இவனைப் பற்றியது.

சேரமான்பெருஞ்சோற்றுதியஞ்சேரன்

சேரமான்பெருஞ்சோற்றுதியஞ்சேரன் cēramāṉperuñjōṟṟudiyañjēraṉ, பெ. (n.)

   கழகக் கால சேர வேந்தன்; a {Cērā} king in {Šangam} age.

மறுவ. உதியன், உதியஞ்சேரல், உதியஞ்சேரலன்

     [சேரமான் + பெருஞ்சோற்று+ உதியன் + சேரன்]

பாரதப் போரில் நூற்றுவர் பொருது களத்தொழிய, மறவர்க்குப் பெருஞ்சோறு வழங்கியதால் பெருஞ்சேற்று உதியன் எனப்பட்டான். இவனை முரஞ்சியூர் முடிநாகனார், மாமூலனார், இளங்கீரனார் போன்றவர்கள் பாடியுள்ளனர். அகநானூறு (65, 233, 168);, புறநானூறு (2);, நற்றிணை(113); ஆகியவற்றில் இவன் பாடப்படுகிறான்.

சேரமான்பெருமாணாயனார்

சேரமான்பெருமாணாயனார் cēramāṉperumāṇāyaṉār, பெ. (n.)

   நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவரும் சேரவரசரும் ஆதியுலா, பொன்வண்ணத்தந்தாதி முதலியவற்றின் ஆசிரியருமான சிவனடியார் (பெரியபு.);; a canonized {Šaiva} saint, {Cērā} king and author of {Ädi-ulâ, Pon-vannattandädi.} etc., one of 63 {nāyanmärs.}

     [சேரமான் + பெருமாள் + நாயனார்]

சேரமான்மாந்தஞ்சேரவிரும்பொறை

சேரமான்மாந்தஞ்சேரவிரும்பொறை cēramāṉmāndañjēravirumboṟai, பெ. (n.)

   கழகக் காலத்தில் வாழ்ந்த சேரமன்னர்களில் ஒருவன்; a {Cera} king in {Sangam} period.

     [சேரமான் + மாந்தஞ்சேரவிரும்பொறை]

இவன் மாந்தரன் என்னும் சேரனின் மகனாக இருக்கலாம் இவன் புறநானூறு 125ல் பாடப்படுகிறான்.

சேரமான்மாரிவெண்கோ

சேரமான்மாரிவெண்கோ cēramāṉmāriveṇā, பெ. (n.)

   கழகக் கால சேர மன்னன்; a {Cera} king in {Sangam} age.

     [சேரமான் + மாரிவெண்கோ]

இவனைப் பற்றிய செய்தி புறநானூறு 367 ஆம் பாடலில் காணப்படுகிறது.

சேரமான்யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை

 சேரமான்யானைக்கட்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை cēramāṉyāṉaikkaṭcēymāndarañjēralirumboṟai, பெ. (n.)

   கழகக் கால சேரமன்னன்;а {Сеra} king in {Šangam} period.

மறுவ. கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை

     [சேரமான் + யானைக்கட்சேய் + மாந்தரஞ்சேரல் + இரும்பொறை]

சேரமான்வஞ்சன்

சேரமான்வஞ்சன் cēramāṉvañjaṉ, பெ. (n.)

   புறநானூற்றால் அறியப்படும் சேரமன்னன்; a {Cerá} king in {Pura-nānūru.}

     [சேரமான் + வஞ்சன்]

இவனைத் திருத்தாமனார் என்னும் புலவர் புறநானூறு 398இல் பாடியுள்ளார்.

சேரம்

 சேரம் cēram, பெ. (n.)

   கேரளத்தின் பழம் பெயர்; the ancient name of {Kerala} (சேரநா.);

ம. சேரம்

     [சாரல் → சேரல் → சேரம்]

சேரர்

 சேரர் cērar, பெ. (n.)

   குடவர்;   குட்டநாட்டவர்; Kings of the western area.

குட்டநாடு குறுகி குடநாடு ஆயிற்று.

     [சாரல் (=மலைச்சாரல்);→சேரல்→சேரலர்→சேரர்] l

தமிழக முடியுடை வேந்தர் மூவருள் முதன்மையினராக வைத்து எண்ணப் பட்டவர்கள் சேரர்கள். தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள இன்றைய மலையாள நாடாகிய கேரளப் பகுதியில் அவர்கள் ஆண்டனர். மலை அடுக்குகள் தொடர்ச்சியாகப் பின்னிப் பிணைந்த பகுதி

     ‘சேரல்’ எனப்படும். அச்சேரலைச் சேர்ந்த நாடு சேரல் நாடாகும். அதனை ஆண்டவர்கள்

     ‘சேரலர்’ எனப்பட்டனர்.

     ‘சேரலர்’ என்ற சொல்

     ‘சேரர்’ எனவும்

     ‘கேரளம்’ எனவும் திரிந்து வழங்கலாயிற்று. இவர்கள் வில் பொறித்த கொடியினையும், பனம்பூ மாலையையும் அடையாளப் பொருள்களாகக் கொண்டனர். இவர்களின் தலைநகர் வஞ்சி.தொண்டி துறைமுகத் தலை நகராக இருந்தது.

சேரலன்

சேரலன்1 cēralaṉ, பெ. (n.)

   தமிழ் வேந்தர் மூவருள் சேரநாட்டரசன்;{Cerá} king one of the three Tamil dynasties.

     “சேரலர் சுள்ளியம் பேர்யாற்று” (அகநா. 149);.

ம. கேரல, சேரலன்

     [சாரல் = மலைச்சரிவு, மலை. சாரல் → சேரல் → சேரலன்]

தமிழ் வேந்தர் மூவர் – சேர, சோழ, பாண்டியர்.

 சேரலன்2 cēralaṉ, பெ. (n.)

   பகைவன் (திவா.);; Enemy.

ம. சேரார்

     [சேர் + அலன் – சேரலன் = தன்னைச் சேர்ந்தவன் அல்லன். ஆகவே பகைவன்]

சேரலார்

 சேரலார் cēralār, பெ. (n.)

   பகைவர்; enemy.

     “தற்சேரலாரைத்திறைகவர்ந்துற்றன்”

     [சேர்+அல்+ஆர்]

சேரலி

 சேரலி cērali, பெ. (n.)

   ஒரு வகை நெல் (சங்.அக.);; a kind of paddy.

சேரல்

சேரல் cēral, பெ. (n.)

சேரலன்1 பார்க்க;see {stralaா.}

     “குடக்கோச் சேரல் இளங்கோ வடிகட்கு” (சிலப்/. பதி.2);.

     [சேரலன் → சேரல். சேரவன் என்ற பெயர் ஈறுகெட்டுச் சேரல் என நின்றது. ஒ.நோ. பாண் (பாட்டு); → பாணன் (பாடல் தொழிலான்); → பாண் = பாணர்குலம்]

சேரா

 சேரா cērā, பெ. (n.)

   கள் (அக.நி);; toddy.

     [சுரா → சேரா.]

சேராங்கொட்டை

 சேராங்கொட்டை cērāṅgoṭṭai, பெ.(n.)

மருந்துக்குப்பயன்படும் மரம்

 a tree of medical use.

     [சேரான்+கொட்டை]

 சேராங்கொட்டை cērāṅgoṭṭai, பெ. (n.)

   சேங்கொம்டை; marking-nut.

     [சேரான் + கொட்டை]

சேராச்சேர்த்தி

சேராச்சேர்த்தி cērāccērtti, பெ. (n.)

   1. இசைவற்ற சேர்க்கை (யாழ்ப்.);,

 unequal match, as of a married couple, ploughing bullocks etc.

   2. தகாத கூட்டுறவு (யாழ்ப்.);; bad company, improper association with low persons.

அந்தக் கட்சியும் இந்தக் கட்சியும் சேராச்சேர்த்தியாகத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்துள்ளன. (உ.வ.);.

   3. தாறுமாறு (யாழ்ப்.);; confusion, disorder.

   4. எதிர்பாராத சந்திப்பு (இ.வ.);; unusual, unexpected meeting.

     [சேர் + ஆ + சேர்த்தி.]

     ‘ஆ’ எதிர்மறை இடைநிலை

சேரான்

 சேரான் cērāṉ, பெ. (n.)

   சேங்கொட்டை (வின்.);; marking-nut.

     [சேர் → சேரான்]

சேரான்கொட்டை

 சேரான்கொட்டை cērāṉkoṭṭai, பெ. (n.)

சேங்கொட்டை பார்க்க;see {Eர்.gottai.}

சேராமாறி

 சேராமாறி cērāmāṟi, பெ.(n.)

   யாரோடும் ஒட்டாதவன்; a seclude person

     [சேரான்+மாறி]

சேராமுட்டு

 சேராமுட்டு cērāmuṭṭu, பெ.(n.)

   செய்யாறு வட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Ceyyāru

     [சேரான்+முட்டு]

சேரார்

சேரார் cērār, பெ. (n.)

பகைவர்l enemies, foes.

     “சேரார் இன்னுயிர் செருக்கும் (பரிபா. 2, 48);.

ம. சேரார்

     [சேர் + ஆ + அர்]

சேரி

சேரி cēri, பெ. (n.)

   1. ஊர் (பிங்.);; town, village, hamlet.

   2. முல்லைநிலத்தூர் (தொல். பொருள். 18, உரை);; village of the Mullai tract, herdsmen’s village.

   3. தெரு; street.

     “நஞ்சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானை” (கலித். 65);.

   4. பழந் தமிழர் வாழும் பகுதி; quarters of the ancient Tamils.

   5. சிற்றூர்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழும் பகுதி; that part of the village where people of certain castics live.

சேரிக்குப் பக்கத்திலிருக்கும் வயல்.

   6. நகர்ப் புறங்கல் ஏழை மக்கள் வாழும் நெருக்கமான குடிசைகளைக் கொண்ட பகுதி; slum.

சேரிகளைத் தூய்மை செய்ய மாநகராட்சி நடிவடிக்கை எடுத்துள்ளது.

   ம.சேரி;   க., குட, கேதி;   தெ. கேரி (தெரு, வழி);;   து. கேரி (தெரு);;   பட. கேரி (தெரு);;   கோத. கேர்ய்;   துட. கேர்ய (தெரு);; E. Street {G.strāssa;

   } OE. struot; Du. street;

   {IT. strāta;} {L. strāta.}

     [சேர் → சேரி = மக்கள் சேர்ந்து வாழும் இடம்]

சேரிகை

சேரிகை cērigai, பெ. (n.)

   நகரம், ஊர்; town, village.

     “சேரிகை யேறும் பழியாய் விளைந்தது” (திருவிருத். 19);.

     [சேரி → சேரிகை]

சேரிகோன்

சேரிகோன் cēriāṉ, பெ.(n.)

   மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கி.பி.1314ஆம் ஆண்டில் திருவாய்ப்பாடி நாட்டவர் அவையில் இருந்த ஓர் உறுப்பினன்; a member in the assembly of Tiravaypadi. [சேரி+கோன்]

சேரிக்கூத்தன்

சேரிக்கூத்தன் cērikāttaṉ, பெ. (n.)

   திருக்கச்சூர் கோயில் நிலத்திற்குத் தம் ஏரியிலிருந்து நீர் வழங்கியோருள் ஒருவர்; one of the group who donated water to the land of the {Tirukkaccur} temple from their tank.

     “இவன் தம்பி சேரிக்கூத்தனும்” (தெ.க.தொ. 26, கல். 313-6);.

     [சேரி + கூத்தன்]

சேரிடு – தல்

சேரிடு – தல் cēriḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   பிணைத்தல் (சங்.அக.);; to tie or fasten together, bind up.

     [சேர் + இடு-.]

சேரிடையாக

சேரிடையாக cēriḍaiyāka, கு.வி.எ. (adv.)

   1. இடையீடடின்றித் தொடர்ச்சியாக; continuously, without break.

அவனுக்கு நான்கு கோட்டை நிலம் சேரிடையாக இருக்கிறது. (நாஞ்.);.

   2. ஒரே குழுவாக; in one group.

     [சேர் + இடை + ஆக. ஆ → ஆக]

சேரிப்பரத்தை

சேரிப்பரத்தை cēripparattai, பெ. (n.)

   ஊர்ப்புறச் சேரியில் வாழும் பரத்தை (தொல். பொருள். 151, உரை);; prostitute, courtesan, living in the quarters set apart for her class.

     [சேரி + பரத்தை]

சேரிமடை

 சேரிமடை cērimaḍai, பெ. (n.)

   மதகின் மேலாக வழிந்தோடும் மிகுதி நீர் வாய்க்கால் (R.T.);; sluice carrying surplus water.

மறுவ. வடிகால்

     [சேரி + மடை]

சேரிமொழி

சேரிமொழி cērimoḻi, பெ. (n.)

   உலக வழக்குச் சொல்; colloquialism.

     “சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து” (தொல். பொருள். 553);.

சேரி + மொழி]

சேரிமொழி இலக்கியம்

 சேரிமொழி இலக்கியம் cērimoḻiilakkiyam, பெ.(n.)

   உரையாடலும், பொதுமக்களின் மொழியும் இசையும் கலந்த இலக்கிய வகை; layman literature.

     [சேரி+மொழி+இலக்கியம்]

சேருகம்

 சேருகம் cērugam, பெ. (n.)

   நாகண வாய்ப்புள் (சது.);; common myna.

சேரும்பாடும்

 சேரும்பாடும் cērumbāṭum, கு.வி.எ. (adv.)

   கூட்டாக் குழப்பமாய் (யாழ்ப்.);; promiscuously, in confusion, topsy-turvy.

     [சேர் + படு – சேர்படு → சேர்பாடு → சேரும்பாடும்]

சேரும்வழியுரிமை

 சேரும்வழியுரிமை cērumvaḻiyurimai, பெ. (n.)

   கலப்பு மரபுவழி உரிமை; blending inheritance.

     [சேரும் + வழியுரிமை]

சேருவைகாரன்

சேருவைகாரன் cēruvaikāraṉ, பெ. (n.)

சேர்வைகாரன் பார்க்க;see {servaikiran.}

     “தேடுங்கன சேருவைகாரர்” (விறலிவிடு. 1001);.

     [சேர்வைகாரன் → சேருவைகாரன்]

சேரை

சேரை1 cērai, பெ. (n.)

   சாரைப் பாம்பு; rat snake,

     “சேரையென்று புலம்புவ தேரையே” (கம்பரா. ஆறுசெல்.43);.

   ம. சேர;   க. கே.ரெ;   து. கேரெ, கேரி: துட. கேர்;தெ. சார, கோத. கேர்பாம்ப்.

     [சாரை + சேரை.]

 சேரை2 cērai, பெ. (n.)

சேரங்கை பார்க்க;see {இவர்ஜய்}

     ‘உப்பு- ஒரு சேரை போடு’ (பாலவா. 874);.

   க. சேரெ;தெ. சேர

     [சேர் → சேரை]

சேர்

சேர்1 cērtal,    2 செ.கு.வி. (v.i.)

   1. ஒன்று கூடுதல்; to become united, incorporated;

 to join together.

     “செம்பொன் செய்சுருளுந் தெய்வக்

குழைகளுஞ் சேர்ந்து மின்ன” (கம்பரா. பூக்கொய். 5);.

நீ என்னோடு சேர்ந்தால் உனக்கும் நன்மை, எனக்கும் நன்மை.

   2. கலத்தல்; to become mixed, blended.

நீரும் பாலுஞ் சேரும்.

   3. தொடர்புடையதாதல்; to have connection, as witha society or an institution.

   4. நட்பாதல்; to be in close friendship or union.

அவனோடு சேர்ந்து கொண்டான்.

   5. இயைதல்; to fit, suit;

 to be adapted to, as the tenon to the mortise.

   6. உரித்தாதல்; to be incidental, co-existent;

 to appertain, as a quality.

இந்த நிலம் அவனைச் சேர்ந்தது (உ.வ.);.

   7. சேர்த்தல்; to be collected to become aggregated.

நெய்க்கு வேண்டிய வெண்ணெய் சேர்ந்து விட்டது (உ.வ.);

   8. திரளுதல்; to be well-rounded plump.

     ‘மால்வரை யொழுகிய வாழை . . . என . . . சேர்ந்து’ (சிறுபாண். 20, உரை);.

   9. செறிதல்; to be full, replete.

     “அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை” (குறள், 243);.

   10. கிடத்தல்; to lie down.

     “மீக்கோ ளுடற் கொடுத்துச் சேர்தல் வழி” (ஆசாரக். 31);.

   11. உளதாதல்; to exist;

 co-exist.

     “தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு” (குறள், 731);.

   12. செல்லுதல்; to go, advance.

     “எண் சேர்ந்த நெஞ்சத்து” (குறள், 910);.

   ம. சேருக;   க., குட. சேர்;   தெ., பட. சேரு;   து. சேருனி;   கோத. சேர், சேட், சேத்;   துட. சோர், சோத்;   கோண். சேராணா;   கூ. செர்னஆட;   குவி. மகரினெ;   நா. செத;கொலா. செர்(போ);

     [சுள் → செள் → செரு → சேர்.]

 சேர்2 cērtal,    2 செ.குன்றாவி. (v.i.)

   1. கூடுதல்; to join, associate with.

     “தீயினஞ் சேரக்கெடும்” (நாலடி. 179);.

   2. பொருந்துதல்; to be in contact with.

     “மழகளிறு கந்துசேர்பு” (புறநா. 22:9);.

   3. புணர்தல்; to copulate.

     “அல்லில் வந்ததுண்டு சேர்ந்ததில்லை” (தணிப்பா. 1, 151:58);

   4. அடுத்தல்; to belong to;

 to be attached;

 dependent on, connected with.

மன்னரைச் சேர்ந்தொழுகல்.

   5. பெறுதல்; to obtain, acquire.

     “உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்குமெனின்” (நாலடி, 40);.

   6. சென்றடைதல்; to reach, gain, arrive at.

     “நும்மரண் சேர்மின்” (புறநா. 9:5);.

   7. இடை விடாது நினைத்தல் (தியானித்தல்);; to unite in meditation. மாணடி

   8. ஒப்பாதல்; to resemble, equal correspond with.

     “கனஞ்சேர் குழலி” (மருதூ. 25);.

     [சேர்1 → சேர்2]

 சேர்3 cērtal,    2 செ.குன்றாவி. (v.t.)

   வெட்டுதல்; to cut.

     “வாழ்மரஞ் சேர்ந்தவை” (நீலகேசி. 389);.

 சேர்4 cērttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. இயைத்தல்; to join. கம்பியின் இரு முனைகளையும் சேர்.

   2. தொடுத்தல் (வின்.);; to append, piece together.

பூக்களை நார் கொண்டு சேர்த்தாள்.

   3. கலத்தல்; to admix, incorporate, amalgamate.

பாலொடு நீரைச் சேர்த்தான்.

   4. புணரச்செய்தல்; to cause sexual union.

பசுவைத் தொழுவிற்குச் சேர்க்கக் கொண்டு போனான் (நாஞ்.);.

   5. கூட்டிக் கொள்ளுதல்; to admit to one’s company or party, receive into friendship or service, bring under protection or shelter.

வழிப் பயணத்துக்குத் துணையாக அவனையும் சேர்த்துக் கொள்.

   6. கட்டுதல் (வின்.);; to tie, fasten, as with a rope or chain;

 to secure by fastening.

எல்லாவற்றையும் சேர்த்து முடிச்சுப் போடு (உ.வ.);

   7. கட்டடம் கட்டுதல் (நிருமித்தல்); வின்.);; to build, construct, make.

   8. இடைச் செருகுதல்; to add, interpolate, insert.

இல்லாததைச் சேர்த்துப் பேசுகிறான்.

   9. திரட்டுதல்; to collect, gather, muster, assemble,

அறப்போருக்குத் தொண்டர்களைச் சேர்.

   10. ஈட்டுதல்; to aggregate;

 to add sum to sum, to amass, as wealth;

 to increase as riches.

பாடுபட்டுச் சேர்த்த காசு.

   11. தனதாக்குதல்; to appropriate, make one’s own; annex.

பகைவனாட்டைச் சேர்த்துக் கொண்டான்.

   12. அடைவித்தல்; to restore.

அதை உரியவனிடம் சேர்த்து விட்டான்.

     [சேர்1 → சேர்-தல் = அணைத்தல். வாய்க்காலிற் பக்கமாக வழிந்தோடும் நீரை மண்ணிட்டுத் தடுத்தலை அணைத்தல் என்பர் உழவர்.]

 சேர்5 cēr, பெ. (n.)

   1. திரட்சி (தொல். சொல். 363; roundness, plumpness, globularity.

   2. வைக்கோற் புரியாலமைந்த நெற்குதிர்; straw-receptacle for paddy.

   3. களஞ்சியம் (இ.வ.);; granary.

   4. ஓரேர் மாடு (யாழ்ப்.);; yoke of oxen, pair or oxen yoked together.

   5. இரண்டு மாடுகளின் முன்னங் கால்களைச் சேர்த்துக் கட்டுதல் (யாழ்ப்.);; band joining the forelegs of a pair of cattle.

   6. சேங்கொட்டை (நேமிநா.எழுத்து. 15. உரை);; marking-nut tree.

   ம. சேர்;   க. கெரு;     [சேர்1 → சேர்5]

 சேர்6 cēr, பெ. (n.)

   1. எட்டுப்பலங் கொண்ட

   ஒரு நிறுத்தலளவை; a standard weight = 8 palams.

ஒருசேர் கத்திரிக்காய் போடு (உ.வ.);.

   2. ஒரு முகத்தலளவை; dry or liquid measure = 1/24 {par-ai} in Ceylon = 70cu. in. and upward in S.India.

   க., து., சேரு;{H.sன்}

     [சேர்1 → சேர்6]

சேர்கட்டு-தல்

சேர்கட்டு-தல் cērkaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   தவசத்தை அளந்து சேரிலிடுதல்; to measure and store up paddy in straw receptacle or granary.

     [சேர் + கட்டு-.]

சேர்கந்தகம்

சேர்கந்தகம் cērgandagam, பெ. (n.)

   80 பட்டணம் படியளவுள்ள முகத்தலளவை (G.Sm. D.I,i.287);; a measure of capacity equal to about 80 Madras measures.

     [சேர் + கந்தகம்]

சேர்காய்

 சேர்காய் cērkāy, பெ. (n.)

   செங்காய் (நாஞ்.);; fruit almost ripe.

     [சே → சேர் + காய்]

சேர்காலிடு-தல்

சேர்காலிடு-தல் cērkāliḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   கால் தளைதல் (வின்.);; to hamper the feet, clog.

     [சேர்கால் + இடு-.]

சேர்கால்

சேர்கால் cērkāl, பெ. (n.)

   தளைகால் (யாழ்ப்.);; clogged feet, as of animals. [சேர்1 + கால்]

     [P]

சேர்கால்

சேர்கொடு-த்தல்

சேர்கொடு-த்தல் cērkoḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   காட்டிக்கொடுத்தல்; to betray.

     “தென்புலர்க் கென்னைச் சேர் கொடான்” (திவ்.பெரியதி. 7. 3: 3);.

     [சேர் + கொடு-.]

சேர்க்கலூர்

 சேர்க்கலூர் cērkkalūr, பெ.(n.)

   கள்ளக்குறிச்சி வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Kallakurichi Taluk.

     [செறு+கால்+ஊர்]

சேர்க்காளி

 சேர்க்காளி cērkkāḷi, பெ. (n.)

சேத்தாளி (இ.வ.); பார்க்க;see {šēttāli}

     [சேர்க்கை + ஆளி.]

சேர்க்கை

சேர்க்கை1 cērkkai, பெ. (n.)

   1. நட்பு, தொடர்பு; friendship, intimacy.

உன் சேர்க்கைதான் உனக்குக் கேடு (உ.வ.);.

   2. மற்றொறு பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொள்ளல்; taking a woman as a paramour.

இவள் அவருடைய சேர்க்கை.

   3. சீட்டு விளையாட்டு போன்றவற்றில் ஒத்த சீட்டுகளைச் சேர்த்தல்; collecting the equivalents, as in the playing card game.

   4. புணர்ச்சி; sexual union.

     [சேரி → சேர்க்கை]

 சேர்க்கை2 cērkkai, பெ. (n.)

   1. திரளுகை; collecting, gathering.

   2. ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலை, கூடுகை; combining, mixing.

சுண்ணாம்பின் சேர்க்கையால் மஞ்சள் செந்நிறமடையும்.

   3. கலப்புப்பொருள்; compound, mixture.

   4. கூட்டுறவு; fellowship;

 company;

 friendship;

 alliance.

அவனுக்கு நல்ல சேர்க்கை வேண்டும்.

   5. ஒன்றிப்பு (வின்.);; union.

   6. வில்லையாகச் செய்த மணமூட்டும் கூட்டுச் சரக்கு (இ.வ.);; scented substances mixed together and made into pills.

   7. பள்ளி முதலியவற்றில் மாணவர் ஆவதற்கான பதிவு; admission to a school, etc., enrolment.

திறந்தவெளிப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

   தெ. சேரிக;து. சேரிகெ.

     [சேர் → சேர்க்கை]

சேர்க்கைப்பல்லி

சேர்க்கைப்பல்லி cērkkaippalli, பெ. (n.)

   நிலைப்பல்லி; lizard that chirps for a long time in one place.

     ‘இது சேர்க்கைப்பல்லி போலே பணியன்றோ’ (ஈடு, 4. 9:3);.

     [சேர்க்கை + பல்லி]

சேர்க்கைமணம்

சேர்க்கைமணம் cērkkaimaṇam, பெ. (n.)

   பல வகைக் கூட்டுப் பொருளால் உண்டான மணம்; a fragrance coming out from the mixture of materials.

   2. பலரது நட்பால் உண்டாகும் குணம்; habits acquired from company.

     [சேர்க்கை + மணம்]

சேர்க்கைமூலை

 சேர்க்கைமூலை cērkkaimūlai, பெ. (n.)

   சந்து மூலை (C.E.M.);; hip.

     [சேர்க்கை + மூலை]

சேர்க்கைவாசனை

 சேர்க்கைவாசனை cērkkaivācaṉai, பெ. (n.)

சேர்க்கைமணம் பார்க்க;see {serkkai-manam}

சேர்ச்சி

சேர்ச்சி cērcci, பெ. (n.)

சேர்க்கை பார்க்க;see {serkkai}.

     “சேர்ச்சியில் செய்கையொடு” (பெருங்.மகத. 24:84);.

     [சேர் → சேர்ச்சி.]

சேர்ச்சை

 சேர்ச்சை cērccai, பெ. (n.)

சேர்க்கை (நாஞ்.); பார்க்க: see {Sörkkai.}

     [சேர் → சேர்க்கை.]

சேர்த்தி

சேர்த்தி cērtti, பெ. (n.)

   1. சேர்க்கை பார்க்க;see {Sörkkai.}

   2. இசைவு; suitability, propriety.

   3. ஒப்பு; resemblance, equality.

     “நித்திய சூரிகளுக்குந் தன்னோடு சேர்த்தி சொல்ல வொண்ணாத” (திவ்.திருவிருத். வியா.);;

   4. பொருத்தம்; consistency.

     “வந்தபடிக்கும் . . . பேசுகிற பேச்சுகுக்கும் ஒரு சேர்த்தி கண்டிலோம்” (திருவிருத். 15:99);.

   5. சொல்லின் புணர்ப்பு (ஈடு.);; combination, as in words.

   6. கடவுள் தேவியுடன் ஒருங்கு வீற்றிருக்கும் சமயம்; occasion when the god and goddess of a temple are seated together.

     “பெருமாள் சேர்த்தியை விட்டுப் புறப்பட்ட ருளினால்” (கோயிலொ. 96);.

     [சேர் → சேர்த்தி]

சேர்த்திகை

சேர்த்திகை cērttigai, பெ. (n.)

சேர்த்தி, 1,2,3 (யாழ்.அக.); பார்க்க;see {šērtti,} 1.2.3.

     [சேர் + சேத்திக்கை]

சேர்த்து

சேர்த்து1 cērddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

சேர்2 பார்க்க;see {šēr=.}

     [சேர்2 → சேர்த்து-.]

 சேர்த்து2 cērttu,    பெ. (adv.) கூட; also, in addition to.

சிறைக் காவலுடன் சேர்த்து தண்டமும் (அபராதமும்); விதிக்கப்பட்டது.

     [சேர் → சேர்த்து.]

சேர்த்துக்கொள்(ளு)-தல்

சேர்த்துக்கொள்(ளு)-தல் cērddukkoḷḷudal,    13 செ.கன்றாவி. (v.i.)

   1. ஏற்றுக் கொள்ளுதல்; to admit into society, take into service.

   2. கணக்கிற் பதிதல்; to allow in account, credit.

   3. கவர்தல்; to encroach upon, misappropriate.

     [சேர்த்து + கொள்(ளு);தல்]

சேர்த்துபிடி

சேர்த்துபிடி cērttubiḍi,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வயப்படுத்துதல் (வின்.);; to conciliate, gain over.

   2. சிக்கனம் பண்ணுதல்; to economise.

   3. சேர்த்துக் கொள்-3. பார்க்க;see {Śērttu-k-kol-3.}

   4. வைப்பு வைத்தல், தொடுப்பு வைத்தல்; to keep a paramour.

     [சேர்த்து + பிடி-.]

சேர்த்துவை-த்தல்

சேர்த்துவை-த்தல் cērttuvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சொத்துச் சேர்த்தல்; to layup a hoard,

 amass, accumulate.

   2. அமைதி உண்டாக்கதல்; to reconcile, reunite.

     [சேர்த்து + வை-.]

சேர்ந்த

சேர்ந்த cērnda, கு.பெ.எ. (adj.)

   1. குறிப்பிட்ட ஊர், நாடு முதலியவற்றைப் பிறப்பிடமாகவோ வாழ்விடமாகவோ கொண்ட; ஒன்றை எல்லையாகக் கொண்டு அதற்கு உட்பட்ட; belonging to a country, nation, etc.

   2. ஒரு பிரிவு, அமைப்பு முதலியவற்றில் உறுப்பினராக உள்ள; indicating membership belonging to of.

நீ எந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்.

     [சேர் → சேர்ந்த]

சேர்ந்தகை

 சேர்ந்தகை cērndagai, பெ. (n.)

   கூட்டாளி; partner, as in a game, a company.

     [சேர் → சேர்ந்த + கை]

சேர்ந்தகைமை

 சேர்ந்தகைமை cērndagaimai, பெ. (n.)

சேர்ந்தலை (யாழ்ப்.); பார்க்க;see {Serndalai.}

     [சேர் + தகைமை. சேர்தகைமை → சேர்ந்தகைமை]

சேர்ந்தணையாக

 சேர்ந்தணையாக cērndaṇaiyāka, கு.வி.எ. (adv.)

சேர்ந்தரணையாக பார்க்க; see {Sörndaranas-y-āga.}

சேர்ந்தரணையாக

 சேர்ந்தரணையாக cērndaraṇaiyāka, கு.வி.எ. (adv.)

சேரிடையாக பார்க்க;see {Séridaiyiga.}

     [சேர் + இணை + ஆக – சேரிணையாக → சேர்ந்தரணையாக]

சேர்ந்தலை

சேர்ந்தலை cērndalai, பெ. (n.)

   1. கூட்டுறவு; intimate, connection, intimacy of friends.

   2. புணர்ச்சி; sexual union.

     [சேர் → சேர்த்தலை.]

சேர்ந்தாரைக்கொல்லி

சேர்ந்தாரைக்கொல்லி cērndāraikkolli, பெ. (n.)

சேர்ந்தார்க்கொல்லி பார்க்க;see {Sendar-k-kolli.}

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி (குறள், 306);.

சேர்ந்தார்

சேர்ந்தார் cērndār, பெ. (n.)

   1. தஞ்சம் அடைந்தவர்; persons under one’s protection.

     “சேர்ந்தார் தீவினைகட் கருநஞ்சை” (திவ். திருவாய். 2. 3:6);.

   2. நண்பர் (சூடா.);; partisans, allies, friends.

   3. உறவினர் (உ.வ.);; relatives.

   4. ஆட்கொள்ளப்பட்டவர்; one who is involved.

   5. இறந்தவர்; dead person.

     [சேர் → சோந்தார்]

சேர்ந்தார்க்கொல்லி

 சேர்ந்தார்க்கொல்லி cērndārkkolli, பெ. (n.)

   நெருப்பு (சூடா.);; fire, as destroying anything that comes in contact with it.

     [சேர்ந்தார் + கொல்லி. சேர்ந்தார்க் கொல்லி = தன்னைச் சேர்ந்தாரை அழிக்கும் தெருப்பு.]

சேர்ந்தாற்போல்

 சேர்ந்தாற்போல் cērndāṟpōl,    வி.எ. (adv.) தொடர்ச்சியாக; continuously; at a stretch.

சேர்ந்தாற்போல் ஒரு மணி நேரம் பேசக்கூடியவர் சிலர் உண்டு (உ.வ.);.

     [சேர் → சேர்ந்தால் + போல்]

சேர்ந்திரணையாக

சேர்ந்திரணையாக cērndiraṇaiyāka, கு.வி.எ. (adv.)

   1. தொடர்ச்சியாக;   சேரிடையாக (நெல்லை.);; continuously.

   2. மொத்தமாக; in a lot or lump.

அவன் சேர்ந்திரணையாகப் பாடுபட்டு வெற்றி பெற்றான் (உ.வ.);.

     [சேர் → சேர்ந்த + இரணையாக. இணை → இரணை]

சேர்ந்து

சேர்ந்து cērndu, கு.வி.எ. (adv.)

   1. செயலைச் செய்யும்போது ஒன்றாக; ஒன்றுகூடி; to gether,jointly.

இருவரும் சேர்ந்து நடித்த படம்

   2. ஒன்றோடொன்று ஒட்டி; sticking together.

புத்தகத்தின் பக்கங்கள் சேர்ந்து இருந்தன.

     [சேர் < சேர்ந்து]

சேர்பு

சேர்பு cērpu, பெ. (n.)

   1. வாழ்விடம்; residence, abode.

     “செங்கமல பார்வையான் சேர்பு” (அஞ்டப். திருவேங். மா. 7);.

   2. வீடு (பிங்.);; house.

   3. சேர்மானம்1 (யாழ்.அக.); பார்க்க;see {sன். mānam’.}

     [சேர் → சேர்பு]

சேர்பேடு

 சேர்பேடு cērpēṭu, பெ.(n.)

   பொன்னேரி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Ponnéri Taluk.

     [ஒருகா:செரு+பேடு]

சேர்ப்பன்

சேர்ப்பன் cērppaṉ, பெ.(n.)

   நெய்தல் நிலத்தலைவன்; chieftain of seashore track

சேரே திரட்சி (தொல். சொல் 363);.

தெ. சேர்க (மக்கள் குழு. தொகுதி);

     [சேர்-சேர்ப்பன்]

 சேர்ப்பன் cērppaṉ, பெ. (n.)

   1. நெய்தனிலத் தலைவன்; chief of the maritime tract.

     ‘பனிக்கடற் சேர்ப்ப னென்கோ’ (இறை. 1, உரை.);.

   2. மழைக் கடவுள் (வருணன்);;{Waruna.}

     “எற்று தெண்டிரைநீர்ச் சேர்ப்பன்” (திருவிளை. நான்மா.);.

     [சேர்ப்பு + சேர்ப்பன்.]

சேர்ப்பாடு

 சேர்ப்பாடு cērppāṭu, பெ. (n.)

   சேரில் அளந்து வைத்த நெல்லில் ஏற்பட்ட குறைவு (தஞ்சை.);; decrease in quantity of the grain stored up in granary.

     [சேரி + பாடு. உலர்தலால் அல்லது காப்தலால் தவசங்களின் எடை அல்லது அளவு குறையும். இக்குறைப்பாட்டை சேர்ப்பாடு என்பர்.]

சேர்ப்பால்

சேர்ப்பால் cērppāl, பெ. (n.)

   குழம்புப் பால்; well-boiled milk.

     ‘சேர்ப்பாலுங் கண்ட சர்க்கரையும் போல’ (ஈடு, 9. 3:7);.

     [சேர் + பால்.]

சேர்ப்பி-த்தல்

சேர்ப்பி-த்தல் cērppittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   ஒப்படைத்தல்; hand-over, entrust.

பணத்தை யாரிடம் சேர்ப்பித்தாய்?

     [சேர் + சேர்ப்பி]

சேர்ப்பு

சேர்ப்பு1 cērppu, பெ. (n.)

   1. இடம்; to place.

     “மேருவின் சிகரச் சேர்ப்பின்” (கம்பரா/. மருத்து. 53);.

   2. சேர்பு-1 பார்க்க;see {sepu-}

     “ஏகம்பஞ் சேர்ப்பதாக நாஞ் சென்றடைந்து” (தேவா. 1043, 7);.

   3. கடற்கரை; seashore, coast.

     “பிறங்குநீர்ச் சேர்ப்பினும்” (புறநா. 49:6);.

   4. கலப்பான பொருள்; mixture.

     “சேர்ப்பாய பலவே யுண்மை யென்றி.டின்” (சி.சி. 4: 5);.

   5. பின்னி- ணைப்பு; supplement, appendix.

பிற்சேர்பப்க.

   6. மனைவியில்லாமல் மற்றொருத்தியை வைத்துக் கொள்ளல்; another woman taken as wife; to keep a paramour.

   7. பட்டியலில் பதிவு செய்தல்; enrolment.

வாக்காளர் சேர்ப்புப் பணி தொடங்கியது.

   8 வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்தல்; recruitment.

கப்பல் படைக்கு ஆள் சேர்ப்பு.

     [சேர் → சேர்ப்பு.]

 சேர்ப்பு2 cērppu, பெ. (n.)

   1. கப்பலினின்று சரக்கிறக்கும் பாலம் (புதுவை.);; whart.

   2. கட்டு மரத்தின் முன்புறம் பின்புறம் நீர் புகாதிருக்க தடுத்துக் கட்டப்பெறுமோர் மரப்பலகை; a plank to prevent in flow of water in front and back side of catamaran.

     [சேர் → சேர்ப்பு.]

சேர்ப்பூட்டு

சேர்ப்பூட்டு cērppūṭṭu, பெ. (n.)

   1. சரியிணை; well-matched pair.

   சேர்ப்பூட்டு மாடு (யாழ்ப்.);;   2.ஒத்த இணை; well matched couple.

     [சேர் + பூட்டு]

சேர்ப்பெழுத்துப்பா

 சேர்ப்பெழுத்துப்பா cērppeḻuttuppā, பெ.(n.)

   ஒரு பொருள் பயப்பதோர் சொற்கூறி அச் சொல்லொடு, ஒரே எழுத்தாகக் கூட்ட வகை; verse composed with a play on words, by adding or deleting letter to words which give different meaning as in kam, nagam, kanagam, kokanagam, orkā, kāvi, kāviri.

     [சேர்ப்பு+எழுத்துப்பா]

எ-டு. கம், நகம், கனகம், கோகனகம் அல்லது கா-காவி-காவிரி.

சேர்மம்

 சேர்மம் cērmam, பெ. (n.)

   கூட்டுப் பொருள் (வேதி.);; compound.

     [சேர் → சேர்மம்]

சேர்மானக்காரன்

சேர்மானக்காரன் cērmāṉakkāraṉ, பெ. (n.)

   வரி வாங்கும் அதிகாரி (நாஞ்.);; tax collector.

     [சேர்மானம்1 + காரன்]

சேர்மானம்

சேர்மானம்1 cērmāṉam, பெ. (n.)

   1. சேர்க்கை பார்க்க;see {க்ikkai.}

   2. கலக்கும் பொருள்; addition, thing added, accompaniment.

   3. இணைப்பு; joint in carpentry.

   4. ஒன்றில் இணைந்த மற்ற பொருளின் கூட்டு அளவு; proportion of an additive.

   5. நகை செய்வதற்காகத் தங்கத்தில் செம்பின் கலப்பு விழுக்காடு; ratio of copper added to pure gold.

ம. சேருமானம்.

     [சேர் → சேர்மானம்]

 சேர்மானம்2 cērmāṉam, பெ. (n.)

   ஓரவஞ்சனை (யாழ்.அக.);; partiality.

     [சேர்மானம் = ஓர் ஓரம்சேர்தல். சேர் + மானம்]

சேர்மானம்சேர்த்துவிடல்

 சேர்மானம்சேர்த்துவிடல் cērmāṉamcērttuviḍal, பெ. (n.)

   கூட்டவேண்டியதைக் கூட்டுகை; adding what is required.

தக்க சேர்மானம் சேர்த்துவிட்டால் சாம்பாரின் மணம் எட்டுத் தெரு வீசுமே! (உ.வ.);.

     [சேர்மானம் + சேர்த்துவிடன்]

சேர்வள்ளம்

சேர்வள்ளம் cērvaḷḷam, பெ. (n.)

   இரண்டு பட்டணம்படி அளவுள்ள முற்கால முகத்தலளவை (G.Sm. D.l, i, 287);; a measure of capacity equal to about 2 old Madras measures.

     [சேர் + வள்ளம்]

சேர்விடம்

சேர்விடம் cērviḍam, பெ. (n.)

   1. சேர்பு,1 பார்க்க;see {trbu,}

     “சேர்விடந் தேடியுஞ் செல்குவரே” (திருக்கருவை, கலித். 38);.

   2. துயிலிடம் (பிங்.);; bed, bed-room.

   3. சேர்க்கை,1 (யாழ்.அக.); பார்க்க;see {Sörkkai,z}

   4. தங்குமிடம்; place of staying.

   5. வாழ்விடம்; place of living.

     [சேர்வு + இடம்]

சேர்விலங்கு

 சேர்விலங்கு cērvilaṅgu, பெ. (n.)

   தளை (யாழ்ப்.);; fetters for the feet or hands.

     [சேர் + விலங்கு]

சேர்வு

சேர்வு cērvu, பெ. (n.)

   1. அடைகை; arriving, joining.

   2. சேர்பு,1 பார்க்க;see {Sörbuzou’s}

அகத்தியர் தமக்கு. . . திருப்பொதியிற் சேர்வு நல்கிய” (தேவா. 1715);.

   3. சேரி, ஊர் (பிங்.);; town, village.

   4. திரட்சி (பிங்.);; roundness, sphericity.

   5. ஒன்றுசேர்கை; union, association, junction, connection.

   6. கூட்டம் (வின்.);; collection, assocation.

     [சேர் → சேர்வு.]

ஐரோப்பிய நாடுகளின் ஊர்ப்பெயர்களில் இச்சொல் பரவலாக உள்ளது.

 York-shire;

 Lanka-shire – England.

சேர்வேன்

 சேர்வேன் cērvēṉ, பெ. (n.)

   சேரில் அளந்து வைத்தபின் அதிகப்படியாகக் கண்ட தவசம் (தஞ்சை.);; excess in quantity of the grain measured and stored up in granary.

சேர் = தவசம் சேர்த்து வைக்கப்படும் களஞ்சியம்.

     [சேர் → சேர்வேன்]

சேர்வை

சேர்வை cērvai, பெ.(n.)

   எட்டுகட்டு வெற்றிலை; eight fold bundles of betel.

     [சேர்- சேர்வை].

 சேர்வை1 cērvai, பெ. (n.)

   1. கூட்டுறவு; tellowship, association, union.

     “தொண்டர்களின் சேர்வை” (தணிகைப்பு. நாரண. 1);.

   2. கலவை; mixture, compound.

     “அரிசனவாடைச் சேர்வை குளித்து” (திருப்பு. 139);. மருந்து முதலியவற்றிற் கூட்டுங் கலப்புச்சரக்கு;

 ingredients for medicinal or other composition.

   4. சீலையிற் பூசிஇடும் மருந்து (யாழ்ப்.);; plaster, salve spread on cloth.

   5. மாழை (உலோக);க் கலப்பு (இ.வ.);; alloy;

 admixture of base metal, as in coin.

   6. சேனை (வின்.);; army.

   7. கூட்டம் (வின்.);; collection, assemblage.

   8. 20 வெற்றிலைக் கட்டு (வின்.);; twenty bundles of betel leaves.

   9. மசாலாப் பொருட்களும் காய்கறி அல்லது இறைச்சியும் கலந்த ஆனம் (குழம்பு);; a mixture of spices and vegetables or mutton.

     [சேர் → சேர்வை]

 சேர்வை2 cērvai, பெ. (n.)

   1. கள்ளிறங்கும்படி சீவிய பாளையைக் கள்ளுக் கலயத்துடன் இணைக்கை; connecting the scraped end of the spathe of a palm-tree with a vessel attached to it to receive toddy.

   2. நுங்கு பொதிந்துள்ள பனங்காயின் இளந்தோல்; the tender skin of the unripe palm fruit around the jelly part.

     [சேர் → சேர்வை]

 சேர்வை3 cērvai, பெ. (n.)

   1. மகளிர் காதணி

   வகை( வின்.);; women’s ear-ornament.

   2. கூத்து வகை (வின்.);; a kind of dance.

     [சேர் → சேர்வை.]

 சேர்வை4 cērvai, பெ. (n.)

   பற்று (புதுவை);; poultice.

   2. அணை; dam.

     [சேர் → சேர்வை.]

சேர்வைகட்டு-தல்

சேர்வைகட்டு-தல் cērvaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   1.மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல் (வின்.);; to unite the upper branches of trees in the form of a portico.

   2. வெற்றிலைக்கொடி படரும்படி அகத்திக் கால்களை இரட்டையாகச் சேர்த்துக் கட்டுதல்; to tie the stalks of agatti trees in pairs, as a support for growing betel creepers.

   3. வெற்றிலைக்கொடி கொடிக்காலில் ஆள் ஏறி வெற்றிலை கிள்ளுவதற்கு வாய்ப்பாக வரிசல் வைத்துக் கட்டுதல் (இ.வ.);; to tie scaling pieces in a betel garden.

     [சேர்வை + கட்டு-.]

சேர்வைகாரன்

 சேர்வைகாரன் cērvaikāraṉ, பெ. (n.)

   அகம்படியார்க்கும் மறவர் கள்ளர் வன்னியரின் உள்வகுப்பினர்க்கும் வழங்கும் பட்டப்பெயர் வகை; caste title of {Agambadiyār} and of certain other sub-castes, viz., {Maravar, Kallar, Vanniyar.}

து. சேரிகாரெ

     [சேர்வை + காரன்]

சேர்வைக்களி

சேர்வைக்களி cērvaikkaḷi, பெ. (n.)

காசுக்

   குற்ற வகை; a delect in coins.

     “கள்ளனென்றுஞ் சேர்வைக்களியென்றும்” (நெல்விடு. 345);.

     [சேர்வை + களி.]

சேர்வைக்காரன்

சேர்வைக்காரன் cērvaikkāraṉ, பெ. (n.)

   1.சேர்வைகாரன் பார்க்க;see {servaikia.}

   2. படைத்தலைவன் (வின்.);; captain, commander of a division of army.

     [சேர்வை + காரன்]

சேர்வைக்கால்

சேர்வைக்கால் cērvaikkāl, பெ. (n.)

   1. ஏணியைத் தாங்குங்கால் (வின்.);; support for a ladder to lean against.

   2. தட்டைத் தாங்கி நிற்கும் பீடக்கால்; stand, as of plates.

     [சேர்வை + கால்]

சேர்வைச்சந்தனம்

 சேர்வைச்சந்தனம் cērvaiccandaṉam, பெ. (n.)

   கலவைச் சந்தனம்; compound sandal paste.

     [சேர்வை + சந்தனம்]

சேர்வைச்சீலை

 சேர்வைச்சீலை cērvaiccīlai, பெ. (n.)

   காரச்சீலை (யாழ்ப்.);; plaster, cere-cloth.

     [சேர்வை + சிலை]

சேர்வையணி

சேர்வையணி cērvaiyaṇi, பெ. (n.)

   கலவையணிக்கு எதிரிடையான வேறுபட்ட பல அணிகள் சேர்ந்து வரும் அணியிலக்கணம் (அணியி. 43);; combination of several distinct figures of speech, opp, to {kalavai-y-aņi}.

     [சேர்வை + அணி]

சேறடி

 சேறடி cēṟaḍi, பெ. (n.)

சேறடை (யாழ்ப்.); பார்க்க;see {Séradai.}

 சேறடி cēṟaḍi, பெ. (n.)

   ஏரிமதகின் அடிப்பகுதி யில் தண்ணிர் வெளியேறும் சாளரம், திறந் தால் சேறு சகதி வெளியேறும்படி அமைந்த அமைப்பு; opening in near sluice.

     [சேறு+அடி]

சேறடை

 சேறடை cēṟaḍai, பெ. (n.)

   வண்டிச்சக்கரத்தில் படும் சேற்றை அகற்றிக் கொண்டேயிருக்கும் கருவி; tool to remove the slush from the wheel of the cart; mudguards of a carriage.

     [சேறு + அடை. சேறு அடையாவண்ணம் விவக்கிக் கொண்டேயிருக்கும் கருவி]

சேறல்

சேறல் cēṟal, பெ. (n.)

   செல்லுகை (சூடா.);; passing, going, reaching.

     “தென்றிசை சேறலாற்றா” (கம்பரா. சம்புமாலி. 19);.

     [செல் → சேறல்]

சேறாடி

சேறாடி1 cēṟāṭi, பெ. (n.)

சேறடை (யாழ்ப்.); பார்க்க;see {Śēradai.}

     [சேறு + ஆடி – சேறாடி. ஆடு → ஆடி]

 சேறாடி2 cēṟāṭi, பெ. (n.)

   ஒரு வகை விருது; a royal emblem carried in procession.

     “பொன் னெழுத் தெழுது சேறாடி பொற்புற” (திருக்காளத். பு. 7.66);.

சேறாடு

சேறாடு1 cēṟāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   வயலில் விதத்தற்குத் தொளி கலக்குதல் (யாழ்ப்.);; to make a field slushy for sowing paddy.

     [சேறு + ஆடு-.]

 சேறாடு2 cēṟāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   துவைத்துக் குழைத்தல்; to mash, reduce to pulp, as mangled bodies on the field of battle.

     [சேறு + ஆடு. சேறாடு = சேற்றைத் துவைத்துக் குழப்புதல்.]

சேறாம்பாம்பு

சேறாம்பாம்பு cēṟāmbāmbu, பெ. (n.)

   10 அடி நீளமும் பழுப்பு நிறமும் உள்ள மீன்வகை; eel, uniform brown, attaining 10 ft. in length.

     [சேறு + ஆம் + பாம்பு;

சேற்று மணலுள் அடிக்கடி புதைந்து செல்லும் செவிளுள்ள மீன். வடிவில் பாம்பு போலிருக்கும்]

சேறி

சேறி cēṟi, பெ. (n.)

   1, 2 அடி நீளமும் கரும்பலகை நிறமும் உடைய கடல்மீன் வகை; sea-fish, slaty grey attaining 2ft. in length, Aiagramma cinctum.

   2. 4 3/4 விரல நீலமும் கருமை கலந்த சாம்பல் நிறமும் உடைய கடல்மீன் வகை; sea-fish dark-grey attaining 4 ¾ in. in length, mugil labiosus.

சேறு

சேறு cēṟu, பெ.(n.)

   தவசங்களைக் கொட்டி வைக்கப்பயன்படும் தாழி; a barrel like utensil to storefood grains,

     [செறு-(செறி);→சேறு]

 சேறு1 cēṟu, பெ. (n.)

   1. நீருடன் கலந்து குழைந்த மண், சகதி; mud, mire, slush, loam.

     “கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்ப” (புறநா. 249);.

   2. குழம்பு; liquid of thick consisting as sandal paste.

     “சாறுஞ் சேறும்” (பரிபா. 6:41);

   3. பனம் பழம் தேங்காய் முதலியவற்றின் செறிந்த உள்ளீடு; kernel, as of a coconut.

     “நுங்கின் றீஞ்சேறு மிசைய” (புறநா. 225.);.

   4. விளாம்பழம் (மலை.);; wood-apple.

   5. சீழ்; pus.

புண்ணிலிருந்து சேறுஞ் சலமும் பாய்கின்றன (நாஞ்.);.

   ம. சேறு, சேற், சேர்;   க. கெசர்;   தெ. செறுகு;   து. கெலர், கேது;   பட. சேரு;   குரு. கச்ச்;மா. க்வசூ

     [செறி → சேறு]

 சேறு2 cēṟu, பெ. (n.)

   கோயில் திருவிழா (சூடா.);; temple festival.

 சேறு3 cēṟu, பெ. (n.)

   1. சாரம்; sap, juice.

     “சேறு சேர்கனி” (சூளா. சுயம். 66);.

   2. இனிமை; sweetness, toothsomeness.

     “தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற” (நெடுநல். 26);.

   3. கள் (சூடா.);; toddy.

     “சேறுபட்ட தசும்பும்” (புறநா. 379:18);.

   4. தேன்; honey.

     “சேறுபடு மலர்சிந்த” (சீவக. 426);.

   5. பாகு; treacle.

     “கரும்பின் றீஞ்சேறு” (பதிற்றுப். 75:6);.

     [சாறு → சேறு]

 சேறு4 cēṟu, பெ. (n.)

   அரத்தின நீரோட்டம் (இ.வ.);; water, transparency and brilliance of a gem.

சேறு-தல்

 சேறு-தல் cēṟudal, செ.கு.வி.(v.i)

   புடைத்தல்; to winnow.

மறுவ, தென்னு மாற்றுதல் புடைத்தல் கொழித்தல். க.கேறு, தெ. செறுகு, ம. சேறுமுறம்

     [செறு-சேறு]

சேறுகம்

 சேறுகம் cēṟugam, பெ. (n.)

விதை;seed (சா.அக.);.

     [சாறு → சேறு -→ சேறுகம்]

சேறுகுத்தி

சேறுகுத்தி cēṟugutti, பெ. (n.)

   சேற்றைத் தள்ளற்கு உதவுங் கருவி (புறநா. 61. உரை.);; an instrument for removing mud.

     [சேறு + குத்தி]

சேறுஞ்சுரியுமாய்

 சேறுஞ்சுரியுமாய் cēṟuñjuriyumāy,    கு.வி.எ. (adv.) குழைவாய்; in over boiled mashy condition.

சோறு சேறுஞ்சுரியுமா யிருக்கிறது (யாழ்ப்.);.

     [சேறு + சுரியும் + ஆய்]

சேறுஞ்சுரியும்

 சேறுஞ்சுரியும் cēṟuñjuriyum, பெ. (n.)

   சகதி; mud and mire.

மறுவ. சேறும் சகதியும் (முகவை);

     [சேறு + சுரி ]

சேறுதடித்தநீர்

 சேறுதடித்தநீர் cēṟudaḍiddanīr, பெ. (n.)

   சேறு கலந்த கலங்கலான தண்ணிர்; muddy water.

மறுவ. மண்டி, மண்டிநீர் (முகவை);

     [சேறு + தடித்த + நீர்]

சேறுதாங்கி

 சேறுதாங்கி cēṟutāṅgi, பெ. (n.)

   சேற்றினை வலைப்பையில் செல்லவிடாமல் செய்யும் ஒரு வலைக்கூறு; a part of the net to prevent slush going into the net.

     [சேறு + தாங்கி]

சேறுதூக்கி

 சேறுதூக்கி cēṟutūkki, பெ. (n.)

   சேறு அகற்றி; mud jack.

     [சேறு + தூக்கி]

சேறுவை-த்தல்

 சேறுவை-த்தல் cēṟuvaittal, செ.கு.வி (v.t),

   நாற்று நடுவதற்குப் பதமாகச் சேறு அமையும் வகையில் உழுது வைத்தல்; to plough softly so as to enable implant sapling.

     [சேறு+வை]

சேறை

சேறை cēṟai, பெ. (n.)

சேரை2 பார்க்க;see {:ன்a.}

சேற்கண்ணி

 சேற்கண்ணி cēṟkaṇṇi, பெ. (n.)

   மெய்யழகுப் பூச்சு;   அரிதாரம் (சங்.அக.);; sulphide of arsenic.

     [சேல் + கண்ணி]

சேற்கெண்டை

சேற்கெண்டை cēṟkeṇṭai, பெ. (n.)

   கரும்பச்சை நிறமுடைய கெண்டை மீன் வகை; camatic carp,greenish-brown, weighing as much as 25 Ib.,

     [சேல் + கெண்டை]

சேற்றக்கெண்டை

 சேற்றக்கெண்டை cēṟṟakkeṇṭai, பெ. (n.)

   சேற்றில் வளரும் கெண்டை மீன்; a kind of fish.

     [சேறு → கெண்டை]

சேற்றாமை

 சேற்றாமை cēṟṟāmai, பெ. (n.)

   ஆமை வகை; common terrapin.

     [சேறு + ஆமை]

சேற்றாரால்

சேற்றாரால் cēṟṟārāl, பெ. (n.)

   15 விரல நீளமும், பழுப்பும் பச்சையுங் கலந்த நிறமுமுள்ள ஆரால் மீன் வகை; sand-eel brownish or greenish, attaining 15in. in length.

     [சேறு + ஆரால்]

சேற்றில்வளர்ந்தமடச்சி

 சேற்றில்வளர்ந்தமடச்சி cēṟṟilvaḷarndamaḍacci, பெ. (n.)

   பிரமிப்பூடு; brahmiplant(சா.அக.);.

     [சேற்றில் + வளர்ந்த + மடச்சி]

சேற்றுக்கால்

சேற்றுக்கால் cēṟṟukkāl, பெ. (n.)

   1. வயலில் தொளியடித்து நாற்றுநடவு செய்து பயிர் செய்யும் வேளாண்மை; wet-ploughing system of cultivation.

   2. தொளியடித்து விதைக்கும் வயல்; land trampled, ploughed and puddled for sowing paddy.

   3. களிமண் வயல், நஞ்சை (தஞ்சை);; slushy clay-soil.

     [சேறு + கால்]

சேற்றுக்கால் செல்வர்கள்

 சேற்றுக்கால் செல்வர்கள் cēṟṟukkālcelvarkaḷ, பெ.(n.)

   மள்ளர் இன மக்களைக் குறிக்கும் பெயர்; a term referring to Mallar community.

     [சேறு+கால]

சேற்றுத்தாவி

 சேற்றுத்தாவி cēṟṟuttāvi, பெ. (n.)

   ஈரமும் மென்மையும் கொண்ட களிமண்; wet and soft earth mire, aspersions, mud slipper.

     [சேறு + தாவி]

சேற்றுநாற்று

சேற்றுநாற்று cēṟṟunāṟṟu, பெ. (n.)

   சேறுசெய்த வயலில் முளத்த நாற்று (G.Tj.D.I.96);; seedling, growing from slushed seed-bed, mud-shoots.

     [சேறு + நாற்று]

சேற்றுப்பலகை

சேற்றுப்பலகை cēṟṟuppalagai, பெ. (n.)

   1. மண்தாங்கிப் பலகை; wooden lintel.

   2. சேறடித்த வயலைப் பரம்படிக்கப் பயன்படும் பலகை; wooden plank to flatten the slushed wet land.

     [சேறு + பலகை]

சேற்றுப்புண்

 சேற்றுப்புண் cēṟṟuppuṇ, பெ. (n.)

   சேற்றால் கால்விரலிடையில் உண்டாகும் அரிபுண்; itching sore between the toes, due to frequent walking in the mud.

   ம. சேற்றுப்புண்ணு;பட. கொரெகுண்ணு

     [சேறு + புண்]

சேற்றுப்புழுதி

 சேற்றுப்புழுதி cēṟṟuppuḻudi, பெ. (n.)

   உழப்பட்ட நிலம் (R.T.);; ploughed land.

     [சேறு + புழுதி]

சேற்றுமடு

 சேற்றுமடு cēṟṟumaḍu, பெ.(n.)

   களிமண் கலவை; puddle.

     [சேறு+மடு]

சேற்றுமரக்கரப்பான்

 சேற்றுமரக்கரப்பான் cēṟṟumarakkarappāṉ, பெ. (n.)

   குழந்தைகளுக்கு வரும் கரப்பான் நோய்; eczema of children due to phlegm humour (சா.அக.);.

சேலகம்

 சேலகம் cēlagam, பெ. (n.)

   கோரைக்கிழங்கு (மலை.);; tuber of sedge.

ம. சேலகம்

சேலஞ்சர்க்கரை

 சேலஞ்சர்க்கரை cēlañjarkkarai, பெ. (n.)

சேலஞ்சீனி (இ.வ.); பார்க்க;see {elaர்ini}

     [சேலம் + சர்க்கரை. சருக்கரை → சர்க்கரை]

சேலஞ்சீனி

 சேலஞ்சீனி cēlañjīṉi, பெ. (n.)

   பழுப்புச் சருக்கரை (இ.வ.);; country sugar, after Salem where it was originally manufactured.

     [சேலம் + சீனி]

சேலம்

சேலம்1 cēlam, பெ. (n.)

   ஆடை; cloth.

அவள் சேலந்திருந்தி” (பெருங். வத்தவ. 12:97);.

     [சீரை → சிலை → சேலை → சேலம்]

 சேலம்2 cēlam, பெ. (n.)

   ஒரு நகரம்; Salem town.

     “சேலங்கைக் கொண்டு” (ஒரு துறைக். 2);.

     [சாரல் (=மலைச்சாரல்); → சேரல் → சேரம் → சேலம்]

சேலவன்

 சேலவன் cēlavaṉ, பெ. (n.)

   திருமால் (அக.நி.);;{Visnu,} as fish Avatar.

ம. சேலவன்

     [சேல் = மீன். சேல் + அவன் – சேலவன் = மீனாகத் தோற்றரவு செய்த திருமால்]

சேலவாயல்

 சேலவாயல் cēlavāyal, பெ.(n.)

   செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Chengalpattu.

     [ஒருகா செலவு+வாயில்]

சேலியால்

 சேலியால் cēliyāl, பெ. (n.)

   இலாமிச்சை (மலை.);; CUISCUSS.

சேலிரு

 சேலிரு cēliru, பெ. (n.)

   சிவப்பவரை; red bean.

சேலேகம்

சேலேகம் cēlēkam, பெ. (n.)

   1. சிந்தூரம் (சூடா.);; vermilion.

   2. சந்தனம் (மலை.);; sandal-wood tree.

ம. சேலேகம்

     [சேல் → சேலேகம் = சித்தூரம் (மு.தா. 140);]

சேலேசி

 சேலேசி cēlēci, பெ. (n.)

   அசோகு மரம்; asoka tree.

சேலை

சேலை1 cēlai, பெ. (n.)

   1. ஆடை (பிங்.); ; cloth.

   2. மகளிர் உடுத்தும் ஆடை; saree.

     “சேலை கட்டிய மாதரை” (விவேகசிந்.);.

   3. முழுத் துணியின் பாதி (யாழ்ப்.);; half a piece of cloth, measuring 36 to 40 cubits.

     [ம. சேல;

க. பட. சேலெ

 A.S. segel;

 E. sail

     [சீரை → சீலை → சேலை. சீலை = நீண்ட அல்லது அகன்ற துணி. சேலை → வ. சேல. வடவர் சில் (c); என்றொரு செயற்கை மூலத்தை அமைத்துக்கொண்டு ஆடையணிதல் அமைத்துக்கொண்டு ஆடையணிதல் என்று பொருள் கூறுவர். இஃது முற்றிலும் பொருந்தாமை வெள்ளிடைமாலை. (வ.மொ.வ.166. ஒமொ.174.);]

 சேலை2 cēlai, பெ. (n.)

   அசோகு (மலை.);; mast tree.

   2. மரவகை; parchment bark cutch.

ம. சேல

     [செய் → செயலை → சேலை]

சேலைக்கலிச்சி

 சேலைக்கலிச்சி cēlaikkalicci, பெ. (n.)

   இச்சி மரம் (L.);; jointed ovate-leaved fig.

சேலைபோடு-தல்

சேலைபோடு-தல் cēlaipōṭudal,    20 செ.கு.வி. (v.i.)

   கைம்பெண்ணானவட்குப் புதுத்துணி அளித்தல் (நாஞ்.);; to offer a new cloth to a widow in mourning.

     [சேலை + போடு-தல். கைம்பெண் ஆனவனின் திடீர் கையறு நிலை கண்டு அவளது எதிர்காலத் தேவையை முன்னிட்டு உறவினர்கள், அவளுக்குச் சேலை அளித்து உதவுதல்]

சேலையுஞ்சை

 சேலையுஞ்சை cēlaiyuñjai, பெ. (n.)

   கருவாகை மரம் (L.);; fragrant sirissa.

சேலையுடைத்தாள்

 சேலையுடைத்தாள் cēlaiyuḍaittāḷ, பெ. (n.)

   கவிழ்தும்பை; stooping leucas.

சேலைவாகை

 சேலைவாகை cēlaivākai, பெ. (n.)

   வாகை வகை; silken rose tree.

க. சேலபாகெ

     [சேவை → சேவைவாகை]

சேலொளி

சேலொளி cēloḷi, பெ. (n.)

   1. வைடூரியம்; cat’s eye.

   2. சேற்கெண்டைமீனின் கண்ணை யொத்த ஒளி; light or lustre resembling the carp fish eye.

     [சேல் + ஒளி.]

சேலோதம்

 சேலோதம் cēlōtam, பெ. (n.)

   சந்தனம் (மூ.அ.);; sandal-wood tree.

     [சேலேகம் → சேலேதம் → சேலோதம்]

சேல்

சேல் cēl, பெ. (n.)

   செந்நிறக் கெண்டை மீன்(சூடா.);; camatic carp.

     “சேலனைய சில்லரிய” (சீவக. 167);.

தெ. சேப்ப

     [சுல் → செல் → சேல். கல் = சிவத்தற் கருத்து]

சேல்கெண்டை

 சேல்கெண்டை cēlkeṇṭai, பெ.(n.)

கெண்டை மீன் வகையுள் ஒன்ற,

 white sardine.

     [சேல்+கெண்டை]

 சேல்கெண்டை cēlkeṇṭai, பெ. (n.)

சேற்கெண்டை பார்க்க;see {Ser-kengai.}

மறுவ. சேல்

     [சேல் + கெண்டை]

     [P]

சேல்விழி

 சேல்விழி cēlviḻi, பெ. (n.)

   சேல்மீன் போலும் செவ்வரி பரந்த பெண்ணின் கண்; women’s eye.

     [சேல் + விழி]

சேளம்

 சேளம் cēḷam, பெ. (n.)

   மீதி (நெல்லை);; remainder,balance.

சேளாகம்

 சேளாகம் cēḷākam, பெ. (n.)

   ஒரு வகைக் கோணி (இ.வ.);; a kind of gunny bag.

ம. சேளாகம்

சேழம்

 சேழம் cēḻm, பெ. (n.)

சேளம் (நாஞ்.); பார்க்க;see {Solam}

     [சேளம் → சேழம்]

சேழி

 சேழி cēḻi, பெ. (n.)

   முற்றம் (தருமபுரி.);; court-yard.

     [சேழ் → சேழி]

சேழ்

சேழ் cēḻ, பெ. (n.)

   மேலிடம்; the upper region.

     “சேழுயர்ந்த மணிமாடம்” (திவ். பெரியதி. 4. 49);.

ம. சேழ்

     [சேண் → சேழ்]

சேவகனார்

 சேவகனார் cēvagaṉār, பெ. (n.)

   மஞ்சட் காளான்; yellow fungus.

சேவகனார்கிழங்கு

சேவகனார்கிழங்கு cēvagaṉārgiḻṅgu, பெ. (n.)

   மருந்தாகப் பயன்படும் கிழங்குவகை (பதார்த்த. 408);; a kind of root, used medicinally.

     [சேவகன்2 → சேவகனார் + கிழங்கு]

சேவகன்

 சேவகன் cēvagaṉ, பெ. (n.)

சேவகன்பூடு (மலை.); பார்க்க;see {Sévagan-piidu}

     [செம் + அகம் – செமகம் → சேமகம் → சேவகம் → சேவகன்]

சேவகன்பூடு

சேவகன்பூடு cēvagaṉpūṭu, பெ. (n.)

   1. சிற்றாமுட்டி (மலை.);; rose-coloured sticky mallow.

   2. காந்தள்; Malabar glory-lily.

   3. சிறு புள்ளடி; scabrous ovate unifoliate ticktrefoil.

     [சேவகன் + பூடு]

சேவகம்

சேவகம்1 cēvagam, பெ. (n.)

   1. யானைக்கூடம்; elephant’s stall.

     “சேவக மமைந்த சிறுகட்கரி” (கம்பரா. தைலவ. 12);.

   2. தூக்கம் (சூடா.);; sleep.

     “யானை சேவகமமைந்த தென்னச் செறிமலர் அமளி சேர்ந்தான்” (கம்பரா. கும்ப. 9);.

 E. sleep;

 OE. sladpan;

 G. schlafen;

 L. sommus

     [சே2 + அகம்.]

 சேவகம்2 cēvagam, பெ. (n.)

   1. பேயுள்ளி; wild onion.

   2. கோரைக்கிழங்கு; koray root.

   3. சோம்பு; anise seed.

     [சே2 + அகம்.]

சேவடி

சேவடி cēvaḍi, பெ. (n.)

   சிவந்த பாதம்; lotusred foot.

     “மன்னிய வீசன் சேவடி நாளும் பணிகின்ற” (தேவா. 104:15);.

ம. சேவடி

     [சே + அடி. சே = சிவப்பு, செம்மை]

சேவணம்

 சேவணம் cēvaṇam, பெ. (n.)

   ஒரு நாடு; a country.

சேவணர்

சேவணர் cēvaṇar, பெ. (n.)

   சேவண நாட்டார் (கலிங். 318);; people of the country of {Sèvanam.}

சேவதக்கு-தல்

சேவதக்கு-தல் cēvadakkudal,    5 செ.கு.வி. (v.i.)

   எருதுக்கு விதையடித்தல்; to geld a bull.

     “சேவதக்குவார் போலப் புகுந்து’ (திவ்.பெரியாழ். 4. 5:7);.

     [சே + அதக்கு-,]

சேவமரம்

 சேவமரம் cēvamaram, பெ. (n.)

   சாயமரம்; Malay sandal.

சேவற் சூடு

 சேவற் சூடு cēvaṟcūṭu, பெ. (n.)

   சேவற் கொண்டை; cock’s crest.

     [சேவல் + சூடு]

சேவற்கட்டு

சேவற்கட்டு cēvaṟkaṭṭu, பெ. (n.)

   சேவற்போர் (எங்களூர். 10);; cock-fight.

     [சேவல் + கட்டு. கத்தி போன்றவற்றை சேவலின் கrவில் கட்டி போர் புரியவிடல்]

சேவற்கத்தி

 சேவற்கத்தி cēvaṟkatti, பெ. (n.)

போர்ச்

   சேவல்களின் கால்களிற் கட்டுங் கத்தி; knife fastened to the feet of cocks incock-fight, spur.

     [சேவல் + கத்தி]

சேவற்கொடி

 சேவற்கொடி cēvaṟkoḍi, பெ. (n.)

   ஒருவகைக் கொடி; cock-creeper (சா.அக.);.

சேவற்கொடியோன்

 சேவற்கொடியோன் cēvaṟkoḍiyōṉ, பெ. (n.)

   முருகக்கடவுள் (திவா.);; Muruga, as having the cock on his banner.

     [சேவல் + கொடியோன். சேவற்கொடி யோன் = சேவலைக் கொடியில் கொண்டவன்]

சேவற்கொண்டை

சேவற்கொண்டை cēvaṟkoṇṭai, பெ. (n.)

   1. சேவலின் தலையில் உள்ள கொண்டை போன்ற அமைப்பு; cock’s crest.

   2. கோழிக் கொண்டைச் செடி; cock-comb.

     [சேவல் + கொண்டை]

சேவற்பண்ணி

 சேவற்பண்ணி cēvaṟpaṇṇi, பெ. (n.)

   நாணற் புல்; kaus grass (சா.அக.);.

சேவற்பண்ணை

 சேவற்பண்ணை cēvaṟpaṇṇai, பெ. (n.)

   கோழிக் கொண்டைச் செடி (சங்.அக.);; cocks- comb.

     [சேவல் + பண்ணை]

சேவற்பூ

 சேவற்பூ cēvaṟpū, பெ. (n.)

   கோழிக் கொண்டைச் செடி; cock’s comb (சா.அக.);.

சேவற்போர்

 சேவற்போர் cēvaṟpōr, பெ. (n.)

   சேவல்களின் காலில் கத்தியைக் கட்டி மோத விடும் ஒருவகை போர்; cock-fight.

     [சேவல் + போர்]

சேவலஞ்சித்தி

 சேவலஞ்சித்தி cēvalañjitti, பெ. (n.)

   கீரிப் பிள்ளை; mongoose (சா.அக.);.

சேவலவரை

 சேவலவரை cēvalavarai, பெ. (n.)

   கோழியவரை; fowl bean.

     [சேவல் + அவரை]

சேவலாங்கொட்டை

 சேவலாங்கொட்டை cēvalāṅgoṭṭai, பெ. (n.)

   நேர்வால்ங்கொட்டை; Indian croton seed.

     [சேவாலம் + கொட்டை]

சேவலான்

சேவலான் cēvalāṉ, பெ. (n.)

சேவற் கொடியோன் பார்க்க;see {Sévar-kodiyon.}

     “சேவலானெனத் தயித்திய னனையவத் திகத்தர்” (பாரத. நிரைமீட். 20);.

     [சேவல்1 → சேவலான்]

சேவலாள்

சேவலாள் cēvalāḷ, பெ. (n.)

விளை

   புனங்களைக் காவல்புரிபவன் (W.G.);; watchman in corn-field.

     [சேவல்2 + ஆள்]

சேவல்

சேவல்1 cēval, பெ. (n.)

   1. மயிலொழிந்த பறவைகளின் ஆண் (தொல். பொருள். 603);; male of birds and fowls, excepting peacock.

   2. கோழியின் ஆண் (திவா.);

 cock.

   3. ஆண் அன்னம் (திவா.);.

 male swam.

     “அன்னச் சேவ லன்னச் சேவல்” (புறநா. 67);

   4. கருடன்; kite.

     “உயிர்கொடிச் சேவலோய்” (பரிபா. 3:18);.

   5. முருகக் கடவுளூர்தியாகிய மயில் (தொல். பொருள். 603, உரை.);; peacock, the vehicle of {Murugan}

   6. ஆண்குதிரை; stallion.

     “குதிரையு ளாணினைச் சேவலென்றலும்” (தொல். பொருள். 623);.

 F. chevell

ம. சேவல், சாவல் கோழி

     [சே → சேவு → சேவல். சேவல் என்பது விலங்கு, பறவை முதலானவற்றின் ஆண்பாற் பொதுப்பெயராகும். (எ.கா); சேங்கன்று = ஆண்கன்று.

     “சேவும் சேவலும் இரவையும் கலையும் . . . போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் மாத்த ஆண்பாற் பெயரென மொழிப” (தொல்.1501); (தமி.வ.108);]

 சேவல்2 cēval, பெ. (n.)

   காவல்; watching.

     “இறடியஞ் சேவற்கு (கல்லா. 84: 9);.

ம. சேவல்

     [செய்வி → சேவி → சேவு → சேவல்]

 சேவல்3 cēval, பெ. (n.)

   சேறு (சூடா.);; mud, mire.

மறுவ. களிமண், அளறு, சகதி.

     [செவ்வல் → சேவல்]

சேவல்காத்தல்

 சேவல்காத்தல் cēvalkāttal, பெ. (n.)

   பயிர்க்குப் புள், விலங்கு முதலியவற்ற்ற் கேடு விளையாமற் காக்கை (ஏரெழு.);; keeping watch over corn-field, protecting it from birds, beasts, etc.

     [சேவல் + காத்தல்]

சேவாட்டம்

 சேவாட்டம் cēvāṭṭam, பெ.(n.)

   ஒரு வகையான ஒயில் ஆட்டம்; a folkdance.

     [சேவை+ஆட்டம்]

சேவாலகம்

 சேவாலகம் cēvālagam, பெ. (n.)

   சத்திசாரணை; spreading hogweed.

சேவாலங்கொட்டை

 சேவாலங்கொட்டை cēvālaṅgoṭṭai, பெ. (n.)

சேவாலம் பார்க்க;see {šēvālam}

     [சேவாலம் + கொட்டை]

சேவாலம்

 சேவாலம் cēvālam, பெ. (n.)

   நேர்வாளம் (மலை.);; CTOtOn.

சேவாலிகம்

 சேவாலிகம் cēvāligam, பெ. (n.)

   கருநொச்சி (மலை.);; willow-leaved justicia.

சேவியம்

 சேவியம் cēviyam, பெ. (n.)

   வெள்ளை வெட்டிவேர் (மூ.அ.);; a variety of cuscuss grass.

சேவியால்

சேவியால் cēviyāl, பெ. (n.)

   1. இலாமிச்சை; cuscuss root.

   2. சேலமரம்; acacia tree (சா.அக.);.

சேவியால்புல்லுருவி

 சேவியால்புல்லுருவி cēviyālpulluruvi, பெ. (n.)

   வேலமரத்தின்மேற் புல்லுருவி; a parasite on acacia tree (சா.அக.);.

     [சேவியால் + புல்லுருவி]

சேவு

சேவு1 cēvu, பெ. (n.)

   1. செவ்வயிரம்; heart-wood.

   2. சிவப்பு வண்ணம்; red colour.

   3. மரவயிரம்; headcore of a tree.

     ‘செய் தகை சேவேறும், செய்யாத கை நோவேறும்’ (பழ.);.

     [சே → சேவு]

 சேவு2 cēvu, பெ. (n.)

   கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து எண்ணெய்யில் இட்டுச் செய்யப்படும் கார அல்லது இனிப்புச் சுவையுடைய தின்பண்டம்; a savoury or sweet in the shape of stort stickstrips made of chick- pea past fried in oil.

இனிப்புச் சேவு.

     [சேரி → சேர்வை → சேவை → சேவு]

சேவுகன்

 சேவுகன் cēvugaṉ, பெ. (n.)

   பேயுள்ளி அல்லது நரி வெங்காயம்; wild onion.

சேவூர்

 சேவூர் cēvūr, பெ.(n.)

   அவினாசி வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்; a village in Avinasi.

     [சேவு+(காளை);+ஊர்]

 சேவூர் cēvūr, பெ.(n.)

   வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Vellore.

     [சேவு(எருது+ஊர்]

சேவை

சேவை1 cēvai, பெ. (n.)

   எதிராக; towards, in front of.

கடைக்குச் சேவை (இ.வ.);.

     [செவ்வை → சேவை]

 சேவை2 cēvai, பெ. (n.)

   அரிசி மாவை நூல் போலப் பிழிந்து நீராவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவு; a noodle-like steamed rice preparation.

மறுவ, இடியாப்பம்

     [சேரி → சேர்வை → சேவை]

சேவைக்கீல்

 சேவைக்கீல் cēvaikāl, பெ. (n.)

   நீண்டகீல் (C.E.M.);; long hinges.

     [சேரி → சேர்வை → சேவை + கீல் – சேவைக்கீல்]

சேவைநாழி

 சேவைநாழி cēvaināḻi, பெ. (n.)

   சேவை பிழிவதற்கான அடித்துளைகளும் கைப் பிடிகளும் கொண்டு, ஒன்றுக்குள் ஒன்று செல்லுமாறு அமைந்த உழக்குப் போன்ற கருவி; a kind of colander-like vessel, used in preparing {Sevai.}

     [சேவை + நாழி]

சேவையர்காவலன்

சேவையர்காவலன் cēvaiyarkāvalaṉ, பெ. (n.)

சேக்கிழார்;{Sekkilar.}

     “வளவர் கோமான் சேவையர் காவலரை முகநோக்கி (சேக்கிழார். பு.25);.