செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை வெளியீடு
31 தொகுதி 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலி


1

10838

2769

3111

538

3554

677

1093

620

189

1004

402

2
க்
1

8212
கா
2579
கி
564
கீ
222
கு
4598
கூ
780
கெ
615
கே
391
கை
1101
கொ
2417
கோ
1754
கௌ
110
ங்
1

2
ஙா
2
ஙி
1
ஙீ
1
ஙு
1
ஙூ
1
ஙெ
1
ஙே
1
ஙை
1
ஙொ
5
ஙோ
1
ஙௌ
1
ச்
1

5235
சா
1186
சி
2424
சீ
439
சு
1261
சூ
420
செ
1529
சே
470
சை
23
சொ
409
சோ
365
சௌ
1
ஞ்
1

15
ஞா
44
ஞி
3
ஞீ ஞு ஞூ ஞெ
34
ஞே
5
ஞை
2
ஞொ
3
ஞோ
2
ஞௌ
1
ட்
1

1
டா
1
டி
1
டீ
1
டு
1
டூ
1
டெ
2
டே
1
டை
1
டொ
1
டோ
1
டௌ
ண்
1

1
ணா
1
ணி
1
ணீ ணு
1
ணூ
1
ணெ
2
ணே
1
ணை
1
ணொ
1
ணோ
1
ணௌ
த்
3113
தா
1530
தி
2203
தீ
393
து
1238
தூ
411
தெ
694
தே
856
தை
39
தொ
878
தோ
459
தௌ
ந்
1

2789
நா
204
நி
1860
நீ
1161
நு
14
நூ
18
நெ
892
நே
318
நை
89
நொ
210
நோ
159
நௌ
2
ப்
1

4560
பா
1824
பி
492
பீ
25
பு
2224
பூ
1133
பெ
1064
பே
483
பை
127
பொ
1218
போ
478
பௌ
2
ம்
4760
மா
1422
மி
535
மீ
268
மு
3016
மூ
949
மெ
396
மே
751
மை
152
மொ
284
மோ
242
மௌ
ய்
1

119
யா
426
யி
1
யீ
1
யு
46
யூ
20
யெ
9
யே
1
யை
1
யொ
1
யோ
98
யௌ
1
ர்
87
ரா
107
ரி
11
ரீ
7
ரு
24
ரூ
20
ரெ
6
ரே
16
ரை
10
ரொ
8
ரோ
23
ரௌ
ல்
117
லா
44
லி
8
லீ
5
லு
8
லூ
3
லெ
13
லே
21
லை லொ
20
லோ
63
லௌ
3
வ்
1

3800
வா
1329
வி
1638
வீ
515
வு
1
வூ
1
வெ
2164
வே
834
வை
229
வொ
1
வோ
3
வௌ
ழ்
1

1
ழா
1
ழி
1
ழீ
1
ழு
6
ழூ
1
ழெ
1
ழே ழை ழொ ழோ
1
ழௌ
ள்
1

2
ளா
1
ளி
1
ளீ
1
ளு
1
ளூ
1
ளெ
2
ளே
1
ளை
1
ளொ
1
ளோ
1
ளௌ
ற்
1

1
றா
1
றி
1
றீ
1
று
1
றூ
1
றெ
2
றே
1
றை
1
றொ
1
றோ
1
றௌ
ன்
1

1
னா
1
னி
1
னீ
1
னு
1
னூ
1
னெ
2
னே
1
னை னொ
1
னோ
1
னௌ
தலைசொல் பொருள்
செ

செ1 ce, பெ. (n.)

   சகர மெய்யும் எகர உயிரும் சேர்ந்த உயிர் மெய்யெழுத்து; the combination of c and e.

     [ச் + எ → செ]

 செ2 cettal,    4 செ.குன்றாவி. (v.t.)

   பொருந்துதல், ஒத்தல், கருதுதல்; to intend;

 to purpose;

 to design.

     “வெப்புடை யாடூஉச் செத்தனென்” (பதிற்றுப். 86);.

     [(சுள்); → செள் → செ-.]

செகண்டி

செகண்டி cegaṇṭi, பெ. (n.)

   தட்டும்போது ஒலியெழுப்பும் வட்ட மாழைத்தட்டு (வெண்கலம்);; circular bronze plate, raising sound on beating; a musical instrument used in religious rituals.

     ‘செகண்டிகை . . . இவ்வூர் அரணியச் சிங்க உவைச்சன் கொட்டுவதாக வைத்தோம்’ (தெ.க.தொ. 12. பக. 1. கல். 114);.

     [சேகண்டி → செகண்டி]

செகண்டை

செகண்டை cegaṇṭai, பெ. (n.)

   சேகண்டி; gong.

     “தண்ணுமை செகண்டை” (மேருமந். 1030);.

     [சேகண்டி → செகண்டி → செகண்டை]

செகதம்

 செகதம் cegadam, பெ. (n.)

   உண்ணுகை (யாழ்.அக.);; eating.

செகதி

 செகதி cegadi, பெ. (n.)

   இங்கிதம் (யாழ்.அக.);; indication, hint.

     [செய்தி → செகதி]

செகிடு

செகிடு cegiḍu, பெ. (n.)

   அலகடி, கன்னம்; check.

செகிட்டைக் கட்டியறைந்தான் (உ.வ.);

     [செகிள் → செகிடு (வே.க. 223);]

செகில்

செகில்1 cegil, பெ. (n.)

   தோளின் மேலிடம்; upper part of the shoulders.

     “நாடு செகிற் கொண்டு நாடொறும் வளர்ப்ப” (பொருந. 138);

 E. shoulder

     [செகிடு → செகில்]

 செகில்2 cegil, பெ. (n.)

   சிவப்பு; redness.

     “செகிலேற்றின் சுடருக் குளைந்து” (திருவிருத். 69);.

     [செம் → செவ் → செவு → செகு → செகில்]

செகிள்

செகிள் cegiḷ, பெ. (n.)

   1. கனியின் தோல் (பிங்.);:

 skin or rind of fruit.

   2. மீன் செதில்; fish scales.

   3. மீனின் சிவந்த மூச்சுறுப்பு (செதிள்);; fins.

   4. கேழ்வரகின் கப்பி; bran of ragi.

     [செகின் → செகிள்]

செகு-த்தல்

செகு-த்தல் ceguttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. கொல்லுதல்; to destory, kill.

   2. வெல்லுதல்; conquer.

     “பொருப்பெலாம் வானகஞ் செகுக்குமே” (சீவக. 1903);.

     [செம் → செவ் → செவு → செகு-.]

செகுடன்

 செகுடன் ceguḍaṉ, பெ. (n.)

   செவிடன்; deaf.

     [செவிடன் → செகுடன்]

செகுடி

 செகுடி ceguḍi, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in TiruvadaniTaluk,

     [சே(மரம்);+ குடி]

செகுடு

 செகுடு ceguḍu, பெ. (n.)

 deaf.

     [செவிடு → செகுடு (கொ.வ.);]

செக்கச்சிவ-த்தல்

செக்கச்சிவ-த்தல் cekkaccivattal,    3 .செ.கு. வி. (v.i.)

   மிகச்சிவத்தல்; to be deep-red.

     “விழியிணை செக்கச் சிவந்து” (திருப்பு. 126);.

சினத்தால் அவனது முகம் செக்கச் சிவப்பாயிற்று (உ.வ.);

     [செக்கம்2 + சிவ-.]

செக்கச்சிவந்த

செக்கச்சிவந்த cekkaccivanda, பெ.எ. (adj.)

மிகவும் சிவப்பான

 deep red.

செக்கச் சிவந்த உதடு.

     [செக்கம்2 + சிவந்த]

செக்கச்சிவேரெனல்

செக்கச்சிவேரெனல் cekkaccivēreṉal, பெ. (n.)

மிகவும் சிவந்திருத்தற் குறிப்பு:

 expr. of being decp-red.

காலை ஞாயிறு செக்கச் சிவேரென்று ஒளிர்ந்தது (உ.வ.);

     [செக்கம்2 + சிவேரெனல்]

செக்கச்செவேரென்று _

 செக்கச்செவேரென்று _ cekkaccevēreṉṟu, வி.எ. (adv.) செக்கச்சிவேரெனல் பார்க்க;see {sekka-c-civer-cial.}

நாணத்தால் அவள் முகம் செக்கச் செவேரென்றானது (உ.வ.);

     [செக்கம் + செவேரென்று]

செக்கஞ்செகு-த்தல்

செக்கஞ்செகு-த்தல் ceggañjeguttal,    4 செ.கு.வி. (v.i.)

செக்கச்சிவ-த்தல் பார்க்க;see {sekka-C. civa.}

     ‘செக்கஞ்செக என்றது செக்கச்சிவ என்றாய்’. (ஈடு, 1.9:5);.

     [செக்கம்2 + செகு-.]

செக்கடி

செக்கடி1 cekkaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   செக்கில் என் முதலியவற்றை ஆட்டுதல் (உ.வ.);; to work the oil-press.

மறுவ.செக்காட்டல்

     [செக்கு1 + அடி-.]

 செக்கடி2 cekkaḍi, பெ. (n.)

   எண்ணெய்யாட்டும் இடம்; place where oil-press is working.

செக்கடிக்குப் போய்வந்தான் (உ.வ.);

     [செக்கு1 + அடி]

செக்கடிக்கறுப்பன்

செக்கடிக்கறுப்பன் cekkaḍikkaṟuppaṉ, பெ. (n.)

   செக்கடியில் இருக்கும் சிறுதெய்வம் (வின்.);; a demon or ferocious deity having its abode in oil-press.

     [செக்கு1 + அடி + கறுப்பன்]

செக்கடிமுண்டன்

செக்கடிமுண்டன் cekkaḍimuṇḍaṉ, பெ. (n.)

   செக்கடிப்பதற்கு ஏற்ற உடல்வலிவுள்ள வெறுந்தடியன்; strout, strong butsenseless man, as fit only to work an oil-press.

மறுவ. செக்குலக்கை

ம. சக்கடியன்

     [செக்கடி2 + முண்டன்]

செக்கணி

செக்கணி cekkaṇi, பெ. (n.)

   கூத்துவகை; a kind of dance.

     “தெள்ளிய செக்கணி யாடி” (குற்றா.தவ. தருமசாமி. 55);.

தெ. சக்கணி

     [சொக்கம் → செக்கம் → செக்கணி]

செக்கம்

செக்கமலம்

 செக்கமலம் cekkamalam, பெ. (n.)

   செந்தாமரை; red lotus flower.

     [செங்கமலம் → செக்கமலம்]

செக்கம்

செக்கம்1 cekkam, பெ. (n.)

   இறப்பு; death.

     ‘செக்கமென்று மரணமாய்’ (ஈடு, 1.9:5);

     [செகு → செக்கம்]

 செக்கம்2 cekkam, பெ. (n.)

   1.

   சிவப்பு; redness.

   2. சினம்; anger.

     “செக்கஞ் செகவென் றவள்பா லுயிர்செக வுண்ட பெருமான்” (திவ். திருவாய். 1. 9:5);.

     [செம் → செவ் → செவு → செகு → செக்கு → செக்கம்]

செக்கர்

செக்கர் cekkar, பெ. (n.)

   1. சிவப்பு; redness, crimson.

     “சுடுதீவிளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்ற” (புறநா. 16:8);.

   2. செவ்வானம்; red sky of the evening.

     “செக்கர் கொள் பொழுதினான்” (கலித். 126);.

   3. மாலைநேரம்; evening.

ம. செக்கர்

     [செக்கல் → செக்கர்]

செக்கர்மேகக்குறி

 செக்கர்மேகக்குறி cekkarmēkakkuṟi, பெ. (n.)

மழைபெய்வதற்கான அறிகுறி

 indication of rain falling.

 |செக்கர்+மேகம்+குறி]

செக்கர்வானம்

செக்கர்வானம் cekkarvāṉam, பெ. (n.)

   செவ்வானம்; red sky.

     “செஞ்சோரி யெனப் பொலிவுற்றது செக்கர்வானம்” (கம்பரா. வரைக். 66.);.

     [செக்கர் + வானம்]

செக்கர்வானிறத்தன்

செக்கர்வானிறத்தன் cekkarvāṉiṟattaṉ, பெ. (n.)

   1.செவ்வானம்போற் செந்நிற முள்ளவன் (வீரபத்திரன்.);; lit., one red as the red sky (Virabadran);.

   2. சிவன்; Lord {Śivan.}

   3. முருகன், செவ்வேள்; Lord {Murugan.}

     [செக்கர் + வான்+ நிறத்தன்]

செக்கல்

செக்கல் cekkal, பெ. (n.)

   1. செக்கர்,

   2. பார்க்க;see {§ekkar.}

   2. அந்திமாலை (யாழ்.அக.);; evening.

   3. செவ்வந்தி; a flower.

ம. செக்கல்

     [செக்கம்2 → செக்கல்]

செக்கவுரி

 செக்கவுரி cekkavuri, பெ. (n.)

   கற்சூரை (மலை.);; spinous wild indigo.

     [செக்கர் + அவுரி – செக்கரவுரி → செக்கவுரி]

செக்கான்

செக்காடி

 செக்காடி cekkāṭi, பெ. (n.)

செக்காட்டி பார்க்க;see {Sekkätti.}

     [செக்கு + ஆடி. ஆட்டு → ஆடு → ஆடி]

செக்காடு

செக்காடு cekkāṭu, பெ. (n.)

   புதர்; low thicket, jungle.

     [செடி1 + காடு]

செக்காடு-தல்

செக்காடு-தல் cekkāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   செக்கில் அரைபடுதல்; to be pressed in oilpress.

எள் செக்காடுகிறது (உ.வ.);

     [செக்கு1 + ஆடு. ஆட்டு → ஆடு]

செக்காட்டி

 செக்காட்டி cekkāṭṭi, பெ. (n.)

   வாணியன், எண்ணெய்யின் பொருட்டுச் செக்கை யாட்டுபவன்; person of the {Vāniyan} caste, as worker of oil-press.

     [செக்கு + ஆட்டி. ஆட்டு → ஆட்டி]

செக்காத்தி

 செக்காத்தி cekkātti, பெ. (n.)

   செக்கார இனப் பெண்பாற் பெயர்; woman of the {Vāniya} caste.

     [செக்கான் → செக்காத்தி]

செக்கான்

செக்கான் cekkāṉ, பெ. (n.)

செக்காட்டி பார்க்க;see {sekkii,}

     “செக்கானெண்ணெய் விற்பான் (தனிப்பா.1, 58:114);.

ம. செக்கன்

மறுவ, வாணியன், வாணியச் செட்டியார்

     [செக்கு → செக்கான்]

செக்கான்கைதுவட்டுமெண்ணெய்ச்சி

 செக்கான்கைதுவட்டுமெண்ணெய்ச்சி cekkāṉkaiduvaṭṭumeṇīeycci, பெ. (n.)

   வாணியன் எண்ணெய் பிழிந்து கையைத் துடைக்கப் பயன்படுத்தும் துணி. இது நாய்முள்ளைப் போக்கும்; a rag used by oil monger to wipe his hands in an oil press. This picce of cloth is said to cure thorny eruptions.

     [செக்கான் + கை + துவட்டும் + எண்ணெய்ச்சி]

செக்காயம்

செக்காயம் cekkāyam, பெ. (n.)

எண்ணெய்

   ஆட்டும் செக்குக்குரிய முற்கால வரி (I.M.P.Cg.3);; tax levied on oil crusher.

மறுவ. செக்குக் கடமை

     [செக்கு → ஆயம்]

செக்காரக்குடி

 செக்காரக்குடி cekkārakkuḍi, பெ. (n.)

செக்காலியர் பார்க்க;see {šekkāliyar:}

     [செக்கார் + குடி.]

செக்கார்

 செக்கார் cekkār, பெ. (n.)

   எண்ணெய் வணிகர்; oil merchant.

செக்காலியர்

 செக்காலியர் cekkāliyar, பெ. (n.)

   செக்காட்டுத் தொழிலுள்ள ஒரு இனத்தாரான வாணியர் (நாஞ்.);; a caste of oil-press workers.

     [செக்கு + (ஆலையர் → ஆலியர்]

செக்காலை

 செக்காலை cekkālai, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvādāna Taluk.

     [செக்கு+ஆலை]

செக்கிறை

செக்கிறை cekkiṟai, பெ. (n.)

   ஊர்ப்பொது விடத்தைச் செக்கு நிறுத்த ப்யன்படுத்திக் கொண்டதற்காகச் செலுத்தும் வரி (தெ.க.தொ.7;   கல். 98, 107);; tax for utlizing the public land for installing oil crusher.

மறுவ, செக்குவரி, செக்குக்கடமை, செக்காயம்.

ம, செக்கிற, சக்கிற, சேக்கிற

     [செக்கு + இறை]

செக்கிலிட்டுத்திரி-த்தல்

செக்கிலிட்டுத்திரி-த்தல் cekkiliṭṭuttirittal,    4 செ.குன்றாவி. (v.t.)

செக்கில்வைத்தாட்டு-பார்க்க;see {ekkil-waittāttu-,}

     “செக்கிலிட்டுத்திரிக்கு மைவரை” (திவ்.திருவாய்.7. 1:5);.

     [செக்கில் + இட்டு + திரி-.]

செக்கில்வைத்தாட்டு-தல்

செக்கில்வைத்தாட்டு-தல் cekkilvaiddāṭṭudal, பெ. (n.)

   5 செ.குன்றாவி. (v.t.);

   1. செக்கில் எள் போன்றவற்றை ஆட்டுதல்; grindingin theoil press.

   2. மிகத் துன்புறுத்துதல்; to oppress, torment as by grinding in oil-press.

     [செக்கு + இல் + வைத்து + ஆட்டு-.]

செக்கில்வைத்துத்திரி-த்தல்

செக்கில்வைத்துத்திரி-த்தல் cekkilvaittuttirittal, பெ. (n.)

   4 செ.குன்றாவி. (v.t.);

செக்கில்வைத்தாட்டு-பார்க்க;see {Sekkil-waittättu-,}

     [செக்கில் + வைத்து + திரி-.]

செக்கிழு-த்தல்

செக்கிழு-த்தல் cekkiḻuttal,    4 செ.கு.வி. (v.i.)

   சிறைத் தண்டனையின் ஒரு பகுதியாக மாட்டிற்குப் பதிலாக எண்ணெய்ச் செக்கை இழுத்தல்; to work on the oil-press by pulling the yoke instead of bull.

இந்திய விடுதலைப் போரின் போது கப்பலோட்டிய தமிழன் வ. உ. –சிதம்பரனார் கோவைச் சிறையில் செக்கிழுத்தார் (உ.வ.);.

     [செக்கு + இழு-.]

செக்கு

செக்கு1 cekku, பெ. (n.)

   1. மரத்தாலோ கல்லாலோ ஆன பெரிய உரல் போன்ற அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன் மூலம் வித்துகளிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் பொறி; a country oil-press.

     “செக்கூர்ந்து கொண்டாருஞ் செய்த பொருளுடையார்” (நாலடி. 374);.

   2. காணம், ஒரு செக்கில் ஒரு முறை ஆட்டிக் கிடைக்கும் எண்ணெயின் அளவு; a measure of oil extracted one’s from an oil press called {kāmam.}

   3.இருபத்து நான்காம் விண்மீன் (பிங்.);; the24th star.

     “மகயிரஞ் செக்குருடேர்” (விதான குணாகுண. 11);.

   ம, செக்கு, சக்கு;க. செக்கு

எண்ணெய் ஆட்டும் செக்கு கருங்கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்டது. கல்செக்கில் பிழிவு அதிகமிருக்கும். எனினும், மரச்செக்கே நன்றெனக் கருதப்படுகிறது. கல்செக்கை விழுப்புரம் மாவட்டத்தில் ஏராளமாகப் பார்க்கலாம். கருங்கல் செக்கு மிகுந்திருந்த காலத்தில் அரிதாக மரச்செக்கு இருந்த ஊர் மரக்காணம் ஆயிற்று.

     [சக்கரம் → (சக்கு); → செக்கு = எண்ணெயாட்டும் வட்டமான பேருரல். ஒ.நோ. ச → செ. சத்தான் → செத்தான் சற்றே பொறு → செத்த (கொச்சை); பொறு. சருமன் (வ); → செம்மான்]

     [P]

 செக்கு2 cekku, பெ. (n.)

   கும்பஓரை;{Kumbha rāsi.}

     [செக்கு1 → செக்கு2]

 செக்கு3 cekku, பெ. (n.)

   இட்டலி, தோசை முதலானவற்றிற்கு ஈர மாவரைக்கும் கருங்கல் கருவி; stone grinder for wet flour.

மறுவ, ஆட்டுக்கல், ஆட்டுரல்.

     [செக்கு1 → செக்கு1]

செக்குக்கடமை

செக்குக்கடமை cekkukkaḍamai, பெ. (n.)

செக்காயம் பார்க்க;see {sekkiyam,}

     ‘செக்குக் கடமை, வணிகர் பேராற் கடமை உள்ளிட்ட கடமைகளும்’ (தெ.க.தொ. 1, கல்.108);.

ம. சக்குகடமப்பாட்டம்

     [செக்கு + கடமை]

செக்குக்கீரை

 செக்குக்கீரை cekkukārai, பெ. (n.)

   கீரை வகை (வின்.);; a kind of green, herb.

     [செக்கு + கீரை]

செக்குத்துணி

செக்குத்துணி cekkuttuṇi, பெ. (n.)

   எண்ணெய் ஆட்டும்போது எண்ணெய்யைப் பிழிந்து எடுக்கும் துணி; cloth used to take away the oil occumuleted in the press.

செக்குத் துணி போல அழுக்காகி விட்டதே (உ.வ.);

     [செக்கு1 + துணி]

செக்குமன்றாடி

செக்குமன்றாடி cekkumaṉṟāṭi, பெ. (n.)

வரி

   வகை (M.E.R.134 of 1924);; a tax.

     [செக்கு + மன்றாடி]

செக்குமுட்டை

 செக்குமுட்டை cekkumuṭṭai, பெ. (n.)

   செக்காடுவோரிடத்திலிருந்து ஊர்த்தலைவர் எண்ணெய் நிரம்பிய முட்டை உருவமாகப் பெறும் ஒரு வகை வருமானம் (R.T.);; spoonful of oil, being a contribution from oil-presses in the village to the village proprietors.

     [செக்கு + முட்டை]

செக்குமூட்டை

செக்குமூட்டை cekkumūṭṭai, பெ. (n.)

   செக்கு போன்று கனமான சுமை (பாரம்.);; a bag full of heavy material is considered as told as oil press bag.

இது என்ன கனம் கனக்கிறது: செக்கு மூட்டை போல அல்லவா இருக்கிறது! (உ.வ.);

     [செக்கு1 + மூட்டை]

செக்குமேடு

செக்குமேடு cekkumēṭu, பெ. (n.)

   எண்ணெயாடும் செக்குள்ள மேட்டிடம் (உ.வ.);; raised place where oil-press works.

செக்கு மேட்டிற்குப் போய் வருகின்றேன் (உ.வ.);.

     [செக்கு1 + மேடு]

செக்குரல்

செக்குரல் cekkural, பெ. (n.)

   செக்கின் அடிப் பகுதி (உ.வ.);; mortar of oil-press.

உடம்பு செக்குரல் போலப் பருத்துவிட்டதே (உ.வ.);

ம. செக்குரல், சக்குரல்

     [செக்கு1 + உரல்]

செக்குலக்கை

செக்குலக்கை cekkulakkai, பெ. (n.)

   1. செக்கில் அழுத்தும் மரத்தடி; pestle or shaft of the oil press, large and heavy wooden pole used to press the oil seeds etc., in the oil press.

     “வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே”(தனிப்பா. 1, 51:99);.

   2. செக்கு உலக்கை போல நின்று மெதுவாகச் சுறுசுறுப்பின்றி வேலை செய்பவன்; a person working very slowly like the wooden shaft used in the oil-press.

வேலையைச் சுறுசுறுப்பின்றிச் செய்வதால் அவளுக்குச் செக்கு உலக்கை என்பது பட்டப் பெயர் (உவ.);.

   3. வலிமை உள்ளவன்; a Strong person.

     [செக்கு + உலக்கை]

செக்குவாணிகர்

செக்குவாணிகர் cegguvāṇigar, பெ. (n.)

   எண்ணெய் விற்கும் இனத்தினர்; caste of oil mongers.

மறுவ. வாணியர், வாணியச் செட்டி.

     [செக்கு1 வாணிகர்]

செக்கைப்பிடியாய்தம்

 செக்கைப்பிடியாய்தம் cekkaippiḍiyāytam, பெ. (n.)

   சிற்ப வேலைக்குரிய கருவி வகை (C.E.M.);; flagner’s iron.

செக்கையன்

செக்கையன் cekkaiyaṉ, பெ. (n.)

   விளக்கு எரிக்கப் பொன் கொடுத்தவன்; a person who denoted for lighting.

     ‘இத்தளித்தேவனார் மகன் குமரடி நங்கை மகன் செக்கையன் கைய்யால்’ (தெ.க.தொ. 5-8, 1366-8);.

     [செக்கு → செக்கையன்]

செங்கடப்பாரை

 செங்கடப்பாரை ceṅgaḍappārai, பெ. (n.)

   கடலில் வாழும் வெள்ளிய பெருமீன் வகை; large silvery sea-fish.

     [செம் + கடன்பாரை → செங்கடப் பாரை]

செங்கடம்பு

செங்கடம்பு ceṅgaḍambu, பெ. (n.)

   கடம்ப மரவகை (திருமுருகு 10, உரை);; small Indian oak.

ம. செங்கடம்பு

கடம்பு வகைகள்: வெண்கடம்பு, மஞ்சட் கடம்பு, செங்கடம்பு

     [செம் + கடம்பு → செங்கடம்பு]

செங்கடல்

 செங்கடல் ceṅgaḍal, பெ. (n.)

   அரேபியாவிற்கு மேல்பக்கம் உள் கடல்; the Red Sea.

ம. செங்கடல்

     [செம் + கடல்]

செங்கடிவாயுப்பு

 செங்கடிவாயுப்பு ceṅgaḍivāyuppu, பெ. (n.)

   வெடியுப்பு; potasium nitrate (சா-அக.);.

செங்கடுகு

 செங்கடுகு ceṅgaḍugu, பெ. (n.)

   செடி வகை; Indian mustard.

ம. செங்கடுகு

     [செம் + கடுகு – செங்கடுகு]

செங்கடுக்காய்

செங்கடுக்காய் ceṅgaḍukkāy, பெ. (n.)

   செந்நிறமுள்ள கடுக்காய் வகை (பதார்த்த. 972);; red species of chebulic myrobalan.

ம. செங்கடுக்க

     [செம் + கடுக்காய் – செங்கடுக்காய்]

செங்கடுமொழி

 செங்கடுமொழி ceṅgaḍumoḻi, பெ. (n.)

   போலியாகக் கூறும் கொடிய மொழி; strong words from sweet consort.

     [செம் + கடுமொழி]

செங்கட்டம்

 செங்கட்டம் ceṅgaṭṭam, பெ.(n.)

   சதுரங்க விளையாட்டு; chess game.

     [செம்+கட்டம்]

செங்கட்டி

செங்கட்டி ceṅgaṭṭi, பெ. (n.)

   1. காவிக்கல் (யாழ்.அக.);; red ochre.

   2. சாதிலிங்கம் (யாழ்.அக.);; vermilion.

   3. செங்கல்லின் துண்டு (வின்..);; brick bat.

     [செம் + கட்டி. கட்டம் → கட்டி]

செங்கணாத்தி

 செங்கணாத்தி ceṅgaṇātti, பெ.(n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுர்; a village in Arantangi Taluk,

     [செங்கண்+ஆத்தி]

செங்கணான்

செங்கணான் ceṅgaṇāṉ, பெ. (n.)

செங்கண்

   1. செங்கண் மால் பார்க்க;see {šengan-māI.}

     “சிறியதோர் முறுவலுந் தெரியச் செங்கணான்” (கம்பரா. கும்பகர்ணன் 310);.

   2. கோச்செங்கணான்; a {Cholaking}

     “செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில்” (திவ். பெரியதி. 6. 6:4);.

     [செங்கண் + ஆன் – செங்கணான். ஆன் – ஆண் பாலீறு]

செங்கணார்கிழங்கு

 செங்கணார்கிழங்கு ceṅgaṇārkiḻṅgu, பெ. (n.)

   ஒரு வகைக் கிழங்கு; a variety of tuber.

செங்கணிக்குறுவை

 செங்கணிக்குறுவை ceṅgaṇikkuṟuvai, பெ. (n.)

   மூன்று அல்லது நான்கு திங்களில் பயிராகும் குறுவை நெல்வகை; a kind of coarse paddy cultivated throughout the year, maturing in three or four months.

     [செங்கண்ணி + குறுவை – செங்கணிக் குறுவை ண்டு முழுமையும் பயிரிடக் கூ-டிய செந்நெல் வகை]

செங்கண்

செங்கண் ceṅgaṇ, பெ.(n.)

அரத்தக்கண்,

 blood shot eye

     [செம்+கண்]

 செங்கண் ceṅgaṇ, பெ. (n.)

   1. சிவந்து விளங்கும் விழி; bright glowing eyes.

     “செயிர்தீர் செங்கட் செல்வநிற் புகழ்” (பரிபா. 4:10);.

   2. நான்கு விரல் நீளமும் வெளிர்சிவப்பு நிறமுள்ள கடல்மீன் வகை (F.L.);; sea-fish rosy, attaining 4 in. in length.

   ம. செங்கண்ணு;க. கெங்கண்

     [செம் + கண் – செங்கண]

செங்கண்டங்கத்திரி

 செங்கண்டங்கத்திரி ceṅgaṇṭaṅgattiri, பெ. (n.)

   சிவப்புக் கண்டங்கத்திரி; a red variety of prickly night shade.

     [செம் + கண்டங்கத்திரி]

செங்கண்ணனார்

செங்கண்ணனார் ceṅgaṇṇaṉār, பெ. (n.)

   அகம் 39, நற்றிணை 122 ஆகிய பாடல்களின் ஆசிரியர்; author of the verse Agam 39 and {Narriņai 122.}

     [செம் + கண்ணனார்]

செங்கண்ணன்

செங்கண்ணன்1 ceṅgaṇṇaṉ, பெ. (n.)

   மீன்வகை; a kind of fish.

     “குமிளா மாசினி செங்கண்ணன்” (பறாளை பள்ளு. 74);.

     [செம் + கண் – செங்கண் -→ செங்கண்ணன்]

 செங்கண்ணன்2 ceṅgaṇṇaṉ, பெ. (n.)

   சிவந்த கண்களுடைய எலிவகை (வின்.);; a kind of rat as red-eyed.

     [செம் + கண்ணன் – செங்கண்ணன்]

செங்கண்ணி

செங்கண்ணி ceṅgaṇṇi, பெ. (n.)

   1. சிவந்த கண்களுடைய கடல் மீன்வகை; young cockup, grey, as having eyes remarkably reddish and transparent.

   2. செந்நெல் வகை; a kind of {Šampā} paddy.

ம. செங்கண்ணி

     [செம் + கண்ணி – செங்கண்ணி]

செங்கண்ணிக்கார்

 செங்கண்ணிக்கார் ceṅgaṇṇikkār, பெ. (n.)

   கார் நெல் வக; a kind of paddy.

     [செம் + கண்ணி + கார்]

செங்கண்ணிப்பாரை

செங்கண்ணிப்பாரை ceṅgaṇṇippārai, பெ. (n.)

செங்கண்ணி.1 பார்க்க;see {ei-gail.}

     [செம் + கண்ணி + பாரை]

செங்கண்மா

செங்கண்மா1 ceṅgaṇmā, பெ. (n.)

   திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள தற்காலச் செங்கம் என்ற ஊரின் பழைய பெயர்; the old name of present {Šengam} town near {Thiruvannāmalai.}

     ‘ செங்கண் மாத்து நன்னன் சேய் நன்னனை’ (மலைபடு.ப. 503, உரை);.

பத்துப்பாட்டின் இறுதியில் உள்ள மலைபடுகடாம் பாட்டின் தலைவனான நன்னன் வேண்மான் தலைநகரம்.

 செங்கண்மா2 ceṅgaṇmā, பெ. (n.)

சிவப்பான கண்ணுடைய விலங்கு கரடி (உரி.நி.);

 bear, as red-eyed beast.

மறுவ, உளியம்

     [செங்கண் + மா. மா = விலங்கு]

செங்கண்மாரி

 செங்கண்மாரி ceṅgaṇmāri, பெ. (n.)

   மஞ்சள் காமாலை (யாழ்ப்.);; jaundice.

     [செங்கண் + (மாறு →); மாரி]

செங்கண்மால்

செங்கண்மால் ceṅgaṇmāl, பெ. (n.)

   சிவந்த கண்களுடைய திருமால்;{Thirumāl}, as having red eyes.

     “திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனாள்” (திவ்.பெரியாழ். 3 8:4);.

மறுவ. விண்ணவன், மாலவன்.

     [செங்கண் + மால்]

செங்கதாரி

 செங்கதாரி ceṅgatāri, பெ. (n.)

செங்கத்தாரி பார்க்க;see {Señ-gattāri.}

செங்கதிரோன்

செங்கதிரோன் ceṅgadirōṉ, பெ. (n.)

செங்கதிர் பார்க்க;see {eர்.gadi:}

     “செங்கதிரோன் மகன் செருக்கி” (கம்பரா. வாலிவதை. 55);.

ம. செங்கதிரோன்

மறுவ. ஞாயிறு

     [செம் + கதிரோன்]

செங்கதிர்

 செங்கதிர் ceṅgadir, பெ. (n.)

   பகலவன் (திவா.);; the sun, as bright-rayed.

   ம. செங்கதிர்;க. செங்கதிர

     [செம் + கதிர். சிவந்த கதிர் உடைய கதிரவன்]

செங்கதிர்நாள்

செங்கதிர்நாள் ceṅgadirnāḷ, பெ. (n.)

   மானேறு (உத்திர); நாள் (சூடா,);; the 12th star as having Sun for its presiding deity.

     [செங்கதிர் + நாள்]

செங்கதிர்பிறந்தநாள்

 செங்கதிர்பிறந்தநாள் ceṅgadirpiṟandanāḷ, பெ. (n.)

செங்கதிர்நாள் பார்க்க;see {seigadir. nāI.}

     [செங்கதிர் + பிறந்த + நாள்]

செங்கதிர்வாழி

 செங்கதிர்வாழி ceṅgadirvāḻi, பெ. (n.)

   கத்தூரி; musk.

செங்கத்தரி

 செங்கத்தரி ceṅgattari, பெ. (n.)

செடிவகை (L.);:

 orbicular-leaved caper.

     [செம் + கத்தரி]

செங்கத்தாரி

 செங்கத்தாரி ceṅgattāri, பெ. (n.)

   மயிலடிக் குருந்து (வின்.);; false peacock’s foot tree.

செங்கத்திமீன்

 செங்கத்திமீன் ceṅgattimīṉ, பெ. (n.)

ஒருவகை

   மீன்; a kind of fish.

     [செங்கத்தி + மீன்]

செங்கனல்

செங்கனல் ceṅgaṉal, பெ. (n.)

   1. கொழுந்து விட்டெரியுந்தீ; blazing fire.

     “செங்கனல் வெண்மயிர் செல்ல” (கம்பரா. வாலிவதை 50);

   2. செந்தணல் பார்க்க (இ.வ.);;see {šen-daņal.}

மறுவ, செந்தணல், செஞ்சுடர்

     [செம் + கனல்]

செங்கனி

 செங்கனி ceṅgaṉi, பெ.(n.)

ஒருவகை மீன்,

 rock cod

     [செம்+கனி]

செங்கனிறமணி

 செங்கனிறமணி ceṅgaṉiṟamaṇi, பெ. (n.)

   படிதமென்னும் ஒருவகை மணி (கோவாங்கப் பதுமராகம்); (யாழ்.அக.);; a kind of precious Stone.

     [செங்கல் + நிறம் + மணி]

செங்கப்படை

 செங்கப்படை ceṅgappaḍai, பெ.(n.)

திருமங்கலம் வட்டத்திலுள்ள சிற்றுர்,

 a village in Tirumangalam Taluk.

     [செங்கம்+படை]

செங்கமட்டை

 செங்கமட்டை ceṅgamaṭṭai, பெ. (n.)

செங்கமுட்டி பார்க்க: See {eiga-multi}

செங்கமலக்காமாலை

செங்கமலக்காமாலை ceṅgamalakkāmālai, பெ. (n.)

   காமாலை வகை (சீவரட் 134);; a kind of jaundice.

     [செங்கமலம் + காமாலை]

செங்கமலநெல்

 செங்கமலநெல் ceṅgamalanel, பெ. (n.)

   நெல் வகை (A.);; a kind of paddy.

     [செங்கமலம் + நெல்]

செங்கமலம்

செங்கமலம் ceṅgamalam, பெ. (n.)

செந்தாமரை: red lotus.

     “செங்கனிவாய் செங்கமலம்” (திவ். திருவாய். 2.5:1);.

ம. செங்கமலம்

     [செம் + கமலம்]

கமலம் பார்க்க

செங்கமலவல்லி

 செங்கமலவல்லி ceṅgamalavalli, பெ. (n.)

   செந்தாமரை மலரில் வாழுங் கொடி போன்ற திருமகள் (அகநி.);;{Thirumagal,} as the creeper dwelling on red lotus.

ம. செங்கமலவல்லி

     [செங்கமலம் + வல்லி]

செங்கமலை

செங்கமலை1 ceṅgamalai, பெ. (n.)

   செங்கமல வல்லி, திருமகள்;{Thirumagal.}

     [செங்கமலம் → செங்கமலை]

 செங்கமலை2 ceṅgamalai, பெ. (n.)

   துளசி; holy basil.

செங்கமுட்டி

 செங்கமுட்டி ceṅgamuṭṭi, பெ. (n.)

   உடைந்த செங்கல் துண்டு; brick piece.

மறுவ, செங்கமட்டை செங்கமட்டி.செங்கற் சல்லி.

     [செங்கல் + முட்டி. மத்தி→மட்டி→முட்டி]

செங்கம்

 செங்கம் ceṅgam, பெ. (n.)

   குழலாதொண்டை (L.);; common caper.

செங்கயல்

செங்கயல் ceṅgayal, பெ. (n.)

   மீன்வகை; a

 kind of fish.

     “செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு” (மணிமே. 4:22);.

     [செம் + கயல் – செங்கயல்]

செங்கரடு

 செங்கரடு ceṅgaraḍu, பெ. (n.)

   செம்மண் குன்று (வின்.);; red-hill.

மறுவ, செங்குன்று, செம்மலை

     [செம் + கரடு – செங்கரடு]

செங்கரந்தை

 செங்கரந்தை ceṅgarandai, பெ. (n.)

   பூடுவகை (சங்.அக.);; red-basil.

     [செம் + கரந்தை]

செங்கரப்பன்

 செங்கரப்பன் ceṅgarappaṉ, பெ. (n.)

   எயிற்றுப் புண் (சங்.அக.);; red-gum.

ம. செங்கரப்பன்

     [செம் + கரப்பன்]

செங்கரப்பான்

 செங்கரப்பான் ceṅgarappāṉ, பெ. (n.)

செங்கரப்பன் பார்க்க;see {Señ-garappan.}

     [செம் + கரப்பான்]

செங்கரா

செங்கரா ceṅgarā, பெ. (n.)

   1. மஞ்சள் கலந்த செந்நிறமுள்ள கடல்மீன் வகை(சங்.அக.);; seafish, yellowish red.

   2. கருஞ்சிவப்பும், பழுப்பு நிறமும் கலந்த கடல்மீன் வகை; red rock-cod, dark reddish-brown.

செங்கரிப்பான்

செங்கரிப்பான் ceṅgarippāṉ, பெ. (n.)

   கையாந்தகரை (பாலவா. 692); என்னும் மூலிகை; a kind of herb.

     [செம் + கரிப்பான்]

செங்கருங்காலி

செங்கருங்காலி ceṅgaruṅgāli, பெ. (n.)

   மரவகை (குறிஞ்சிப். 78, உரை);; red catechu.

ம. செங்கரிங்ங்லி

     [செம் + கருங்காலி]

செங்கரும்பு

செங்கரும்பு ceṅgarumbu, பெ. (n.)

   செந்நிற முள்ள கரும்பு வகை (பதார்த்த. 178.);; rcd sugar Cane.

ம. செங்கரிம்பு

     [செம் + கரும்பு]

செங்கறுப்பிறுங்கு

செங்கறுப்பிறுங்கு ceṅgaṟuppiṟuṅgu, பெ. (n.)

   சோள வகை (விவசா. 3);; a kind of maize.

     [செம் + கறுப்பு + இறுங்கு. இறுங்கு = சோளம்]

செங்கற்கட்டடம்

 செங்கற்கட்டடம் ceṅgaṟkaḍḍaḍam, பெ. (n.)

   செங்கல் கொண்டு கட்டப்பட்ட கட்டடம்; building made up of bricks.

     [செங்கல் + கட்டடம்]

செங்கற்கட்டளை

 செங்கற்கட்டளை ceṅgaṟkaṭṭaḷai, பெ. (n.)

   செங்கல் செய்தற்குரிய அச்சு; mould for making bricks.

மறுவ, செங்கலச்சு, செங்கற் சட்டம்

     [செங்கல் + கட்டளை]

செங்கற்காளவாய்

 செங்கற்காளவாய் ceṅgaṟkāḷavāy, பெ. (n.)

செங்கற்சூளை பார்க்க;see {Señgar-siilai.}

     [செங்கல் + கானவாய்]

செங்கற்சல்லி

 செங்கற்சல்லி ceṅgaṟcalli, பெ. (n.)

   தளம் போடுவதற்காகவும், தட்டைக்கூரை மீது போடுவதற்காகவும், உடைக்கப்பட்ட செங்கல் துண்டுகள்; broken brick jelly for flooring and weathering course over that roof.

     [செங்கல் + சல்லி. சன்னமாக உடைக்கப்பட்டது சல்லி]

செங்கற்சீரை

செங்கற்சீரை ceṅgaṟcīrai, பெ. (n.)

   காவித் துணி; ochre-colored cloth.

     “கையில் அர்த்த முண்டான காலம் பார்வையைச் செங்கற்சீரை கட்டிக் கூப்பிட்டுத் திரியவிடுமன்” (திவ். பெரிய திரு. 1, 1:4, வியா. ப.34);.

     [செங்கல் + சீரை. செங்கல் = காவிக்கல்]

செங்கற்சுவர்

 செங்கற்சுவர் ceṅgaṟcuvar, பெ. (n.)

   செங்கல் வைத்துக்கட்டிய சுவர்; wall made up of bricks.

     [செங்கல் + சுவர்]

செங்கற்சூளை

 செங்கற்சூளை ceṅgaṟcūḷai, பெ. (n.)

   உலர்ந்த களிமண் பாளங்களை (செங்கற்கள்); இடை வெளியிட்டு அடுக்கி, அதில் மரத்துண்டுகள் இட்டு, எரித்துச்சுடும் அமைப்பு; stack of dried bricks with wooden blocks as fuels to burn kiln.

மறுவ. செங்கற் காளவாய்

     [செங்கள் + சூளை]

செங்கற்பால்

 செங்கற்பால் ceṅgaṟpāl, பெ. (n.)

   நீரில் கலக்கிய செங்கற் பொடி (வின்.);; brick-dust mixed with water.

     [செங்கல் + பால்]

செங்கற்பொடி

செங்கற்பொடி ceṅgaṟpoḍi, பெ. (n.)

   1. செங்கல்லின் தூள்; brick-dust.

   2. செங்கற்றுண்டு (இ.வ.);; brick-bat, piece of brick.

மறுவ, செங்கற்சல்லி

     [செங்கல் + பொடி]

செங்கற்றலை

 செங்கற்றலை ceṅgaṟṟalai, பெ. (n.)

   மீன்வகை (யாழ்.அக.);; a kind of fish.

     [செம் + கற்றலை]

செங்கற்றாழை

 செங்கற்றாழை ceṅgaṟṟāḻai, பெ. (n.)

   கற்றாழை வகை (சித்.அக.);; a species of alocs.

     [செம் + கற்றாழை]

செங்கலங்கல்

செங்கலங்கல் ceṅgalaṅgal, பெ. (n.)

   செந்நிறக் கலங்கலாக வரும் புது வெள்ள நீர்; freshcts, flood from rains, as turbid and reddish.

     “செங்கலங்கல் வெண்மணன் மேற்றவழு நாங்கூர் (திவ். பெரியதி. 4. 4:7);.

     [செம் + கலங்கல்]

செங்கலச்சு

 செங்கலச்சு ceṅgalaccu, பெ. (n.)

செங்கற் கட்டளை (இ.வ.); பார்க்க;see {Señgar-katalai.}

மறுவ. செங்கற் கட்டளை

     [செங்கல் + அச்சு]

செங்கலதை

 செங்கலதை ceṅgaladai, பெ. (n.)

   நெல்வகை (A.);; a kind of paddy.

செங்கலம்

 செங்கலம் ceṅgalam, பெ. (n.)

   செந்தாமரை (மூ.அ.);; red lotus.

     [செம் + கமலம் – செங்கமலம் →செங்கலம். கமலம் → கலம்]

செங்கலறு-த்தல்

செங்கலறு-த்தல் ceṅgalaṟuttal,    5 செ.கு.வி. (v.i.)

   ஈரமண்ணிலிருந்து செங்கல் வார்த்தல்; to make brick with wet clay.

     [செங்கல் + அறு-.]

செங்கல்

செங்கல் ceṅgal, பெ. (n.)

   1. கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும் செம்மை நிறக் கனச் செவ்வகச் சுடுமண் கல், கட்டுமானப் பொருள் (பு.வெ. 6, 19, உரை);; burnt brick, as red.

   2. காவிக்கல்; red ochre in lumps;

 laterite.

     “செங்கற் பொடிக்கூறை” (தி.வி. திருப்பா. 14);.

   3. மாணிக்கம்; ruby.

     “கட்செவி யுமிழ் செங்கல் வீசுவர்”

ம, பட செங்கல்லு

     [செம் + கல்]

செங்கல்நத்தம்

 செங்கல்நத்தம் ceṅgalnattam, பெ.(n.)

   வாலாசா வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Wallajah Taluk.

     [செம்+கல்+நத்தம்]

செங்கல்மங்கல்

செங்கல்மங்கல் ceṅgalmaṅgal, பெ. (n.)

   1. மங்கின. செந்நிறம்; dimired colour.

   2. அந்தி வேளையில் உண்டாகும் மங்கல் ஒளி; dimness, of the evening twilight.

     [செம் → செங்கல் + மங்கல்]

செங்கல்மா

 செங்கல்மா ceṅgalmā, பெ. (n.)

   செங்கல்லின் தூள் (வின்..);; brick-dust.

     [செங்கல் + மா. மாவு → மா]

செங்கல்மாச்சுண்ணாம்பு

 செங்கல்மாச்சுண்ணாம்பு ceṅgalmāccuṇṇāmbu, பெ. (n.)

   சுண்ணாம்புடன் கலந்த செங்கல்தூள் காரை; mortar of brick dust and lime.

     [செங்கல் + மா(வு); + சுண்ணாம்பு]

சுண்ணாம்பும் செங்கற்பொடியும் கலந்த காரை மிகவும் உறுதியானது. இன்றும் பழைய கட்டுமானங்களில் இவ்வலிமையைக் காணலாம். கதைமா வந்த புதிதில், சுதைமா கற்காரையை விடச் செங்கல்மாவும் சுண்ணாம்பும் கலந்த கலவையே சிறந்ததென்ற கருத்து நிலவியது.

செங்கல்மால்

 செங்கல்மால் ceṅgalmāl, பெ. (n.)

   செங்கற் சூளை (நெல்லை);; brick-kiln.

     [செங்கல் + மால். மால் = காளவாய்]

செங்கல்மாவெள்ளம்

செங்கல்மாவெள்ளம் ceṅgalmāveḷḷam, பெ. (n.)

   செங்கல்வமலையென்னும் திருத்தணி மலைத்தலைவன், முருகக் கடவுள்; Murugan, as lord of {Señgalvakiri,} i.e., {Tiruttani} hill.

     “செங்கல் வராயரே வாரும்” (அருட்பா. 5. சண்முகர். காலைப். 5);.

தெ. செங்கலுவ

     [செங்கல்வன் + அரையன்]

செங்களம்

செங்களம் ceṅgaḷam, பெ. (n.)

   அரத்தத்தால் சிவந்த இடமான போர்க்களம்; battlefield, as red with blood.

     ‘செங்களம் படக்கொன்று’ (குறுந். 1);.

ம. செங்களம்

     [செம் + களம்]

செங்களி

செங்களி ceṅgaḷi, பெ. (n.)

   1. செம்பஞ்சுக் குழம்பு; red lac-dye.

     “செங்களி தோய்ந்துள் சிவந்த சீறடி” (சூளா. சுயம். 101);.

   2. பாக்கினை ஊறவைக்குஞ் சாயக்குழம்பு; a kind of infusion used in preparing areca-nuts

     “கருங்காலிச் செங்களியளைஇ” (பெருங். மகத். 14:81);.

ம. செங்களி

     [செம் + களி]

செங்களை

செங்களை1 ceṅgaḷai, பெ. (n.)

   செங்கரும்பு (யாழ்.அக.);; red sugarcane.

     [செம் + சுழை]

 செங்களை2 ceṅgaḷai, பெ. (n.)

   குதிரை நஞ்சு (வின்.);; a mineral poison.

ம. செங்கள

செங்கழனாரை

 செங்கழனாரை ceṅgaḻṉārai, பெ. (n.)

   செங்கானாரை (யாழ்.அக..);; pelican ibis.

     [செம் + சுழல் + நாரை.]

செங்கழுத்துள்ளான்

 செங்கழுத்துள்ளான் ceṅgaḻuttuḷḷāṉ, பெ. (n.)

   உள்ளானைப் போன்ற பறவை; red necked phalarope.

     [செம் + கழுத்து + உள்ளான்]

இது உப்பங்கழிகளில் காணப்படும்; கூட்டம் கூட்டமாகப் பறக்கும் இயல்புடையது; உடல் நீல நிறமாகவும், மார்பு வெண்மையாகவும் இருக்கம்.

செங்கழுநாடு

 செங்கழுநாடு ceṅgaḻunāṭu, பெ. (n.)

   ஆய் நாட்டில் இருந்த ஊர்; a place in {Äy} country.

     “செங்கழு நாட்டு ஐம்மாக் கொல்லை” (பாண்டிய செப்பேடு);.

     [செங்கழுநாடு = செங்கழுநீர்ப்பூ அதிகமாக இருந்த நாடு]

செங்கழுநீரோடை

செங்கழுநீரோடை ceṅgaḻunīrōṭai, பெ. (n.)

   இலால்குடி வட்டம் துறையூர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் ஓரெல்லை; a rivulet forming one boundary of a land denoted to {Thuraiyūr} temple in {Lâlgudi} Taluk.

     “செங்க முநீரோடைக்கும் மேற்கே” (தெ.க.தொ.26, கல். 752);.

     [செங்கழுநீர் + ஓடை]

செங்கழுநீர்

செங்கழுநீர் ceṅgaḻunīr, பெ. (n.)

   1. அல்லிக் கொடி வகை; purple Indian-lily.

     “கண்மலர்

செங்கழுநீர்” (திருக்கோ. 108);.

   2. செவ்வாம்பல்; red Indian water-lily.

ம. செங்கழிநீர்

     [செம் + கழுநீர். கழுநீர் = குவளை மலர்]

செங்கழுநீர்க்கல்

 செங்கழுநீர்க்கல் ceṅgaḻunīrkkal, பெ. (n.)

   காவிக்கல் வகை (வின்.);; red ochre, reddle.

     [செங்கழுநீர் + கல்]

செங்கழுநீர்க்காய்

 செங்கழுநீர்க்காய் ceṅgaḻunīrkkāy, பெ. (n.)

   ஊதா நிறமுள்ள வழுதுணங்காய் வகை (இ.வ.);; purple brinjal.

     [செங்கழுநீர் + காய்]

செங்கழுநீர்ப்பற்று

 செங்கழுநீர்ப்பற்று ceṅgaḻunīrppaṟṟu, பெ. (n.)

   செங்கல்பட்டு நகரம்;{chengal-patsu} town.

     [செங்கழுநீர்ப்பற்று → செங்கல்பட்டு = செங்கழுநீர் அதிகம் காணப்பட்டதால் பெற்ற பெயராகலாம்]

செங்கழுநீர்ப்புறம்

செங்கழுநீர்ப்புறம் ceṅgaḻunīrppuṟam, பெ. (n.)

   குளத்தில் வளரும் செங்கழுநீர் எனும் குவளை மலரை நாடோறும் அலரெடுத்து மாலையாக்கி கோயிலுக்குத் தர அமர்த்தப் பட்டவனுக்காக வைக்கப்பட்ட முதல் தொகை; capital a located for payment from interest to the person nominated for preparation of garland out of lilly flower grown in the tank.

     “திருவண்ணாமலை உடைய நாயனார்க்கு . . . ஒடுக்கின காசு 2000 திருச்செங் கழுநீர்ப் புறமாகக் கொடுத்தோம் (தெ.க.தொ. 8, கல். 93);.

     [செங்கழுநீர் + புறம்]

செங்கவளநாரை

 செங்கவளநாரை ceṅgavaḷanārai, பெ. (n.)

செங்கானாரை பார்க்க;see {Señ-gānārai.}

     [செம் + கால் + வளம் + நாரை – செங்கால் வளநாரை → செங்கவள நாரை]

செங்காகம்

 செங்காகம் ceṅgākam, பெ. (n.)

செம்போத்து (யாழ்.அக.); பார்க்க;see {šcm-põttu.}

மறுவ. செம்புகம்

     [செம் + காகம்]

செங்காடக்கோடன்

செங்காடக்கோடன் ceṅgāṭakāṭaṉ, பெ. (n.)

   மதுராந்தகம் வட்டாரத்திலுள்ள திருப்புலி வனம் கோயிலுக்கு நந்தா விளக்கு எரிப்பதற்கு ஆக்களைக் கொடையாக வழங்கியவன்; a person who denoted cows for the lighting of Thiruppulivanam temple in Madurandagam taluk.

     “இராசக்கோன் விளக்கு காலும் பிடாரன் மகன் செங்காடக்கோடன் விளக்கு காலும்” (தெ.க. தொ-6, கல்.326-5);.

     [செங்காடு + கோடன்]

செங்காடு

செங்காடு ceṅgāṭu, பெ.(n.)

   செய்யாறு வட்டத்தில் மழையூர் சாலையில் கோவிலூர்க்கு அருகே உள்ள ஓர் ஊர்; a village in Ceyyāru on the way to Malaiyur salainear the KövilDr.

     [செம்+காடு]

 செங்காடு ceṅgāṭu, பெ. (n.)

   1. சிவந்த காட்டு நிலம் (வின்.);; red soil.

   2. திருச்செங்காட்டங்குடி; a {Sivanshrine.}

     “ஊரோ செங்காடு” (தனிப்பா.);

     [செம் + காடு]

செங்காடை

செங்காடை ceṅgāṭai, பெ. (n.)

   காடைப்புள் வகை (M.M.885);; rock bush quail.

     [செம் + காடை]

செங்காட்டுக்கோட்டம்

செங்காட்டுக்கோட்டம் ceṅgāṭṭukāṭṭam, பெ. (n.)

   முதல் இராசராசன் ஆட்சிக்கு உட்பட்ட செயங்கொண்டசோழ மண்டலத்தில் இருந்த 24 கோட்டங்களுள் ஒன்று; one of the 24 areas (kottam); in {Jayamkoņda Chõla maņdalam} in first Rajaraja empire.

     “செயங்கொண்ட சோழ மண்டலத்து செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு மணிமங்கலம்” (தெ.க.தொ.2, 28);.

     [செங்காடு + கோட்டம்]

செங்காந்தள்

 செங்காந்தள் ceṅgāndaḷ, பெ. (n.)

   செந்நிற முள்ள கொடி வகை (திவா.);; red species of Malabar glory-lily.

     [செம் + காந்தன்]

செங்கானாரை

செங்கானாரை ceṅgāṉārai, பெ. (n.)

   சிவந்த காலையுடைய நாரைவகை; pelican ibis, as having red legs.

     “செங்கானாரை செல்வன காண்மின்” (பெருங், உஞ்சைக். 40:23);.

     [செம் + கான் + தாரை]

செங்காமாரி

 செங்காமாரி ceṅgāmāri, பெ. (n.)

   நெற்பயிரில் விழும் நோய் வகை (நாஞ்);; a blighting disease of paddy.

ம. செங்காமாரி

     [செம் + காய் + மாரி – செங்காமாரி]

செங்காய்

 செங்காய் ceṅgāy, பெ. (n.)

   பழுக்கும் பருவத்துள்ள காய்; fruit almost ripe.

   மறுவ, உதைக்காய்;உதைப்பழம்

க. செங்காய்

     [செம் + காய்]

செங்காய்ப்புண்

 செங்காய்ப்புண் ceṅgāyppuṇ, பெ. (n.)

   பழுக்காத புண் (இ.வ.);; unripe boil.

     [செங்காய் + புண்]

செங்காய்வேளை

 செங்காய்வேளை ceṅgāyvēḷai, பெ. (n.)

   பூடுவகை (யாழ்.அக.);; a herb.

     [செங்காய் + வேளை]

செங்காரனி

 செங்காரனி ceṅgāraṉi, பெ. (n.)

கருஞ்

   சிவலையான பெற்றம் முதலிய விலங்குகள் (யாழ்ப்.);; dark-red animal as cow.

மறுவ, செங்காரி

     [செம் + கார் – செங்கா → செங்காரணி. கார் = கருமை]

செங்காரி

செங்காரி1 ceṅgāri, பெ. (n.)

செங்காரனி பார்க்க;see {Señ-gărani,}

 செங்காரி2 ceṅgārittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சினம், வெயில் கடுமை இவற்றால் முகஞ்சிந்து காட்டுதல்; to flush or redden, as face due to anger or exposure to scorching heat.

   2. பருவமழையின்றி பயிர்கள் கதிர் வாங்காது செந்நிறமாதல்; to redden without forming ears, as paddy, crop for want of seasonal rains.

     [செம் + காரி-.]

செங்காரை

செங்காரை1 ceṅgārai, பெ. (n.)

   கன்மீன் (M.M.105);; bride-fish.

     [செம் + காரை]

 செங்காரை2 ceṅgārai, பெ. (n.)

   காரைச்செடி (L.);; spurious honey-thorn.

     [செம் + காரை. காரை = முட்செடி]

செங்கார்

 செங்கார் ceṅgār, பெ. (n.)

   மழைக்காலத்து விளையும் மங்கிய செந்நிறமுள்ள நெல்வகை (சங். அக.);; a kind of dark-red paddy growing in rainy season.

     [செம் + கார்]

செங்காலி

செங்காலி ceṅgāli, பெ. (n.)

செங்கருங்காலி பார்க்க;see {šeň-garuń-gāli.}

     ‘பாங்குறு செங்காலி கருங்காலி (சிலப். 3:26, உரை);.

ம. செங்ஙாலிக்காலி

     [செம் + காலி.]

 செங்காலி ceṅgāli, பெ. (n.)

   1. செங்கழுநீர் (அக.நி.);; purple Indian water lily.

   2. குங்குமக் காவி (இ.வ.);; saffron ochre

தெ. செங்காலி

     [செம் + காவி]

செங்காவிதி

செங்காவிதி ceṅgāvidi, பெ. (n.)

   கணக்கன்; accountant.

     ‘புகருடையர் செங்காவிதி நல்லாண்டார்’ (ஆவணம்: 10-12. பக். 20);.

     [செம் + காவிதி. காவிதி பார்க்க]

செங்கிடை

செங்கிடை ceṅgiḍai, பெ. (n.)

ஒருவகை முட்

   செடி; prickly sesban.

     “நீலச் சுருளுஞ் செங்கிடையுங் கொண்டு” (கம்பர மிதிலை14);.

     [செம் + கிடை]

செங்கிடைச்சி

 செங்கிடைச்சி ceṅgiḍaicci, பெ. (n.)

;see {Señ-gigai.}

     [செங்கிடை → செங்கிடைச்சி]

செங்கிரந்தி

செங்கிரந்தி ceṅgirandi, பெ. (n.)

   ஒருவகை (மேக);க்கட்டி (மூ.அ.);; venereal herpes.

   2. செந்நிறப் புண்கட்டி (M.L.);; crysipclas.

     [செம்(மை); + கிரந்தி]

செங்கிரி

 செங்கிரி ceṅgiri, பெ. (n.)

சிவப்புக் கீரிப்பிள்ளை,

 red or brown mungoose-herpestus fuscus. (சா.அக.);

     [செம்+கிரி]

செங்கிலிநாடு

செங்கிலிநாடு ceṅgilināṭu, பெ.(n.)

   புதுக்கோட்டை நாட்டினுள் அடங்கிய குளத்தூர் வட்டத்தைச் சார்ந்த மலையம்பட்டி முதலான ஊர்கள் அடங்கிய நாடு; villages or townships in {}, in {} dist.

இந்நாடு மீசெங்கிலி நாடு, கீழ்ச்செங்கிலி நாடு என்றும் பிரிக்கப்பட்டிருந்தது (புதுக்கோட்டை கல்வெட்டு.116); (கல்.அக.);.

செங்கிளுவை

செங்கிளுவை ceṅgiḷuvai, பெ. (n.)

   கீச்சுத் தாரா (M.M.338);; whistling teal.

   2. ஒருவகை மரம் (சங்.அக.);; a kind of jujube.

செம் +கிளுவை]

செங்கீரை

செங்கீரை1 ceṅārai, பெ. (n.)

   ஒருவகைக் கீரை (தைலல. தைல. 135);; cocks comb greens.

ம. செஞ்சீர

     [செம் + கீரை]

 செங்கீரை2 ceṅārai, பெ. (n.)

செங்கீரைப் பருவம் பார்க்க (இலக்.வி.806);;see {Señ-girai-pрагшvалт.}

     [செம் + கீரை]

செங்கீரைப்பருவம்

 செங்கீரைப்பருவம் ceṅāraipparuvam, பெ. (n.)

   பிள்ளைத் தமிழ்ப்பருவங்கள் பத்தினுள், குழந்தை பிறந்த ஐந்தாம் திங்களில் தன் தலையை நிமிர்த்தி இங்குமங்கும் அசைத்தாட்டுவதைச் சிறப்பித்துக் கூறும் பகுதி; one of the ten section of {pillai-t-tamil} describing the stage of childhood in which the child lifts up its head and nods itin about the fifth month from its birth.

     [செங்கீரை + பருவம்]

செங்குங்கிலியம்

 செங்குங்கிலியம் ceṅguṅgiliyam, பெ. (n.)

   செந்நிறமான குங்கிலிய வகை (வின்.);; red resin.

     [செம் + குங்கிலியம்]

செங்குங்குமம்

 செங்குங்குமம் ceṅguṅgumam, பெ. (n.)

   செஞ்சந்தனம் (பிங்.);; red sanders.

     [செம் + குங்குமம்]

செங்குஞ்சி

 செங்குஞ்சி ceṅguñji, பெ.(n.)

   செம்மயிர்; red hair’

விரிசெங்குஞ்சிப்பண்பிலா அரக்கன்

     [செம்+குஞ்சி]

செங்குடி

 செங்குடி ceṅguḍi, பெ.(n.)

   திருவாடானை வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruvādāna Taluk.

     [செம்+குடி]

 செங்குடி ceṅguḍi, பெ. (n.)

   பாண்டிய நாட்டுச் சிற்றூர்; a village in pandya territory.

     ‘படைக்கமலவனச் செங்குடிக் கெளசிகன் பராந்தகன்”

     [செங்கம்+குடி]

செங்குடை

 செங்குடை ceṅguḍai, பெ. (n.)

   செந்நிறமுள்ள குடை; red umbrella.

க. கெங்கொடெ

     [செம் + குடை]

செங்குட்டம்

செங்குட்டம் ceṅguṭṭam, பெ. (n.)

   நோய் வகை; a disease.

     “தணிந்திடச் செய்யா திடர் செய்யுஞ் செங்குட்ட ரோகர்” (கடம்பு. பு. இலீலா.124);.

     [செம் + குட்டம்]

செங்குட்டுவன்

செங்குட்டுவன் ceṅguṭṭuvaṉ, பெ. (n.)

   இளங்கோவடிகட்குத் தமையனும் பெரும்புழ் பெற்றவனுமான சேரவரசன்(பதிற்றுப்.5.பதி.);; a famous {Séra} king, brother of {Ilangóvadigal.}

சேரன்செங்குட்டுவன் பார்க்க

செங்குணக்கு

செங்குணக்கு ceṅguṇakku, பெ. (n.)

   நேர்கிழக்கு; due cast.

     “காவிரிப்பாவை செங்குணக் கொழுகி” (மணிமே. பதி. 13);

     [செம் + குணக்கு]

செங்குத்தான்

 செங்குத்தான் ceṅguttāṉ, பெ. (n.)

   பறக்கும் புறாமீது உருண்டையடிக்குங் குழல்; blow. pipe, used for shooting {pigeons.}

 Malay, sumpitan.

செங்குத்தாய்விழு-தல்

செங்குத்தாய்விழு-தல் ceṅguddāyviḻudal,    2 செ.கு.வி. (v.i.)

   தலைகுப்புற விழுதல் (உ.வ.);; to fall headlong.

மலை மீதிருந்து செங்குத்தாய் அவன் விழுந்ததால் மண்டை உடைந்து மடிந்தான் (உ.வ.);

     [செங்குத்து + ஆய் + விழு-.]

செங்குத்து

செங்குத்து ceṅguttu, பெ. (n.)

   1. மேலிருந்து கீழ்விழும் பொருளின் பாதை; perpendicular.

   2. பக்கச் சாய்வு இல்லாத நிலை: hotstanting on either side.

   3. கிடை மட்டத்திலிருந்து சமமாக எழும்பும் கோடு; line perpendicular to the base.

   4. 90 பாகைக் கோணத்தின் இரு பக்கங்கள்; sides of a rectangle.

செங்கோண முக்கோணத்தில் இரு பக்கங்களில் ஒன்று கிடைக்கோடாயின் மற்றது செங்குத்துக் கோடு.

ம, செங்குத்து

     [செம் + குத்து]

செங்குத்துமேடு

 செங்குத்துமேடு ceṅguttumēṭu, பெ. (n.)

   மிக உயரமான மேட்டுநிலம்; mesa.

     [செங்குத்து + மேடு]

செங்குத்துவழிகால்

 செங்குத்துவழிகால் ceṅguttuvaḻikāl, பெ. (n.)

   நீர்போக்கிற்கு ஏற்றமான வழி; shaftspillway.

     [செங்குத்து + வழிகால்]

செங்குந்தம்

செங்குந்தம்1 ceṅgundam, பெ. (n.)

   கண்ணில் விழுங் குந்த நோய் (வின்.);; tubercle on the cornea of the eye.

     [செம் + குந்தம். செங்குமுதரோகம் பார்க்க]

 செங்குந்தம்2 ceṅgundam, பெ. (n.)

   அரத்தத் தாற் சிவந்த ஈட்டி (ஈட்டியெழுபது);; spear red with blood.

     [செம் + குந்தம்]

செங்குந்தர்

 செங்குந்தர் ceṅgundar, பெ. (n.)

   செந்நிற ஈட்டியையுடைய கைக்கோளர் (திவா.);; persons of {Kaikóla} caste, as the spearmen of ancient times.

     [செங்குந்தம் → செங்குந்தர்]

செங்குன்றி

 செங்குன்றி ceṅguṉṟi, பெ. (n.)

   குன்றி (மூ.அ.);; crab’s eye.

ம. செங்குன்னி

மறுவ. குன்றிமணி, குன்றி முத்து

     [செம் + குன்றி]

பொன் நிறுப்பதற்குப் பயன்படும் ஒரு கொட்டை; சிவப்பு, கறுப்பு வண்ணத்துடன் இருக்கும்.

செங்குன்று

 செங்குன்று ceṅguṉṟu, பெ. (n.)

   கண்ணகியின் இறுதிக் காலத்தோடு தொடர்புடைய மலை; the hill connected with the last days of {Kannagi} of {Silappadikāram.}

சிலப்பதிகாரத்தின் இரும்பதவுரைகாரர் செங்குன்று என்பது இக்காலத் திருச்செங்கோடு என்று அடையாளம் காட்டுகிறார். இதனை அடியார்க்கு நல்லார் ஒப்பவில்லை. சுருளிமலை மேலுள்ள மங்கலாதேவி கோயிலோடு தொடர்புபடுத்தி இப்போதைய கருத்து நிலவுகிறது.

     [செம் + குன்று]

செங்குமரி

 செங்குமரி ceṅgumari, பெ. (n.)

   சிவப்புக் கற்றாழை; red aloe.

     [செம் + குமரி]

செங்குமரு

 செங்குமரு ceṅgumaru, பெ. (n.)

   வேம்பு; neem tree.

செங்குமிழ்

 செங்குமிழ் ceṅgumiḻ, பெ. (n.)

   குமிழ மரவகை (சூடா.);; small Cashmire tree.

     [செம் + குமிழ்]

செங்குமுகி

 செங்குமுகி ceṅgumugi, பெ. (n.)

சிவப்புத் தொட்டி நஞ்சு red poison.

செங்குமுதம்

செங்குமுதம் ceṅgumudam, பெ. (n.)

   செவ்வாம்பல்; red Indian water lily.

     “செய்யிற் கொய்யுஞ் செங்குமுதம்” (கம்பரா.பூக்கொமய் 33);.

     [செம் + குமுதம்]

செங்குமுதரோகம்

செங்குமுதரோகம் ceṅgumudarōkam, பெ. (n.)

   கண்ணின் கருவிழியில் செங்கழுநீர்ப் பூப் போல் சிவப்பான சதை வளர்ந்து, குத்தல், எரிச்சல் முதலிய வலிகளை உண்டாக்கும் நோய்; red growth of flesh over the pupil of the eye marked by acute pain, burning sensation ctc. (சா.அக.);.

     [செங்குமுதம் + ரோகம். செங்குமுதம்1 பார்க்க]

செங்குயில்

 செங்குயில் ceṅguyil, பெ. (n.)

   ஒருவகைக் குயில்; banded bay cuckoo.

     [செம் + குயில்]

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களின் அடர்ந்த காடுகள், தோப்புகளில் காணப் படும் பறவை. இது செம்பழுப்பான உடலில் பழுப்பு நிறக் குறுக்குக்கோடுகளைக் கொண்டது.

செங்குரங்கு

 செங்குரங்கு ceṅguraṅgu, பெ. (n.)

   முகம் செந்நிறமாகவுள்ள குரங்குவகை; red monkey. opp, to {karu-ñ-gurañgu.}

     [செம் + குரங்கு]

செங்குருகடம்

 செங்குருகடம் ceṅgurugaḍam, பெ. (n.)

   உடம்பின் அரத்தத்தில் வாழும் சிறிய அணுப் பூச்சிகள்; a minute organism forming the constitutent material of blood corpusles.

     [செங்குருதி + கடம்]

செங்குருகு

 செங்குருகு ceṅgurugu, பெ. (n.)

   ஒருவகைப் பறவை; a kind of bird, chestnut bittern.

     [செம் + குருகு]

தமிழகத்தில் ஆற்றங்கரையோரம் நெல் வயல்களையும் புதர்களையும் சார்ந்து காணப் படும் பறவை. செம்பழுப்பான உடலையும், வெண்மையான தொண்டையையும் உடையது; மிகவும் அச்சங் கொள்ளும் இயல்பினது.

செங்குறிஞ்சி

செங்குறிஞ்சி ceṅguṟiñji, பெ. (n.)

   மரவகை; Travancore red-wood.

     ” செங்குறிஞ்சித் தாரார் நறுமாலை” (திவ்.இயற். சிறியதிரு. 16);.

ம. செங்குறுஞ்ஞ

     [செம் + குறிஞ்சி]

செங்குறுவை

செங்குறுவை ceṅguṟuvai, பெ. (n.)

   ஒரு வகை நெல்; a kind of paddy.

     “கோடைக் குறுவை குளவாளை செங்குறுவை” (நெல்விடு:179);.

     [செம் + குறுவை]

செங்குலிகம்

செங்குலிகம் ceṅguligam, பெ. (n.)

   இங்குலிகம், சாதிலிங்கம்; vermilion.

     “அரக்குறு நறுநீ ரஞ்செங் குலிகம்” (பெருங். உஞ்சைக். 41:16);.

     [செம்மை + குலிகம்]

செங்குளம்

செங்குளம் ceṅguḷam, பெ. (n.)

   இராமநாதபுரம், சாத்தூர் என்னுமிடத்தில் இருந்த பழைய குளம்; an old pond at {Śāttur} in Ramanatha puram.

     “நீர்ப்புகழ் மலியேரியோடு செங்குளமு நாடினோர் தமக்கில்லா” (தெ.க.தொ.14, கல். 44,19);.

     [செம் + குளம்]

செங்குளம்படி

 செங்குளம்படி ceṅguḷambaḍi, பெ. (n.)

   மான் குளம்படிக் கொடி; deer’s hoof creeper.

     [செம் + குளம்படி]

மான் குளம்பைப் போன்றதும் செம்மையானதுமான கொடி.

செங்குளம்பு

 செங்குளம்பு ceṅguḷambu, பெ. (n.)

   மாட்டின் உடம்பும் குளம்பும் ஒரே நிறமுடையனவாக இருத்தல்; samecolourforoxand its hoof.

     [செம்+குளம்பு]

செங்குளவி

 செங்குளவி ceṅguḷavi, பெ. (n.)

   செம்மஞ்சள் நிறமுள்ள குளவி வகை (வின்.);; bright yellow hornet. opp. to {karu-ñ-guļavi.}

     [செம் + குளவி]

செங்குளி

 செங்குளி ceṅguḷi, பெ.(n.)

   நீண்டகத்தி போன்ற மீன்; snapper.

     [செம்+குளி]

செங்குவளை

 செங்குவளை ceṅguvaḷai, பெ. (n.)

செங்கழுநீர் பார்க்க;see {Señ-galu-nir:}

     [செம் + குவளை]

செங்கெறால்

 செங்கெறால் ceṅgeṟāl, பெ. (n.)

   இறால் மீன் வகை (மீனவ.);; a kind of prawns.

     [சிங்கிறால் → செங்கெறால்]

செங்கை

செங்கை ceṅgai, பெ. (n.)

   1. கொடுக்குந் தன்னமையுள்ள கை; fair, liberal hand.

     “செங்கையோன் நங்கை” (கம்பரா. சூர்ப்ப. 39);.

   2. யாழ்விண்மீன் (திருவாதிரை); (சூடா.);; the 6th star.

     [செம் + கை]

செங்கையான்

 செங்கையான் ceṅgaiyāṉ, பெ. (n.)

   சிவப்புக் கரிசலாங்கண்ணி; a red variety of Eclipta prostrata.

     [செம் + கையான், கையான் = கரிசலாங் கண்ணி.]

செங்கையொளிதம்

 செங்கையொளிதம் ceṅgaiyoḷidam, பெ. (n.)

   கருங்குளவி; black wasp beetle (சா.அக.);.

செங்கொடிக்காணம்

செங்கொடிக்காணம் ceṅgoḍikkāṇam, பெ. (n.)

   பழைய வரிவகை (தெ.க.தொ. 2, 352);; an ancient tax.

     [செம் + கொடி காணம்]

செங்கொடிவேரி

 செங்கொடிவேரி ceṅgoḍivēri, பெ. (n.)

செங்கொடிவேலி பார்க்க;see {šeň-godi-vēli.}

     [செங்கொடி வேலி → செங்கொடுவேரி]

செங்கொடிவேலி

 செங்கொடிவேலி ceṅgoḍivēli, பெ. (n.)

   இளஞ்சிவப்பு நிறப்பூவுள்ள கொடி வகை (யாழ்.அக.);; rosy-flowered leadwort.

ம. செங்கொடிவேலி

     [செம் + கொடிவேலி]

செங்கொன்னை

 செங்கொன்னை ceṅgoṉṉai, பெ. (n.)

செங்கொன்றை பார்க்க;see {eர்.gonrai.}

     [செம் + கொன்னை]

செங்கொய்யா

செங்கொய்யா ceṅgoyyā, பெ. (n.)

   கொய்யாப் பழ வகை (M.M. 333);; red guava.

     [செம் + கொய்யா]

செங்கொல்

 செங்கொல் ceṅgol, பெ. (n.)

செம்பொன் (பிங்..);: pure gold.

     [செம் + கொல்]

கொல்லுத் தொழிலில் அதிகம் பயன்படுவது பொன். எனவே கொல் என்பது பொன்னைக் குறித்தது.

செங்கொல்லர்

 செங்கொல்லர் ceṅgollar, பெ. (n.)

   தட்டார்; gold smiths.

     [செம் + கொல்லர்]

செங்கொள்

செங்கொள் ceṅgoḷ, பெ. (n.)

   கொள்ளு வகை; Madras horse-gram.

கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று” (நாலடி. 387);.

     [செம் + கொள்]

செங்கோ

 செங்கோ ceṅā, பெ.(n.)

கடல் கொண்ட குமரிநாட்டுத் தமிழ் வேந்தன்,

 Tamil king of submerged Kumari land.

செங்கோவே ஒளிச்செம்மல்

     [செங்கோன் தரைச்செலவு)

     [செம்+கோ]

செங்கோடு

செங்கோடு ceṅāṭu, பெ. (n.)

   1. செங்குத்தான மலை; steep precipice, precipitous cliff.

     “செங்கோடு பாய்துமே யென்றாள் மன்” (ehyo/ 372);.

   2. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு; Thiruchengodu in Namakkal.

     “செந்திலுஞ் செங்கோடும்” (சிலப். குன்றக்.);.

   3. செருந்தி (சூடா.);; panicled golden blossomed pear tree.

   4. செங்குத்துக்கோடு; perpendicular.

ம. செங்கோடி.

     [செம் + கோடு. கோடு = மலை]

செங்கோட்டம்

 செங்கோட்டம் ceṅāṭṭam, பெ. (n.)

   செந்நிற முள்ள ஒரு கிழங்கு; red Arabian costum.

     [செம் + கோட்டம்]

செங்கோட்டியாழ்

செங்கோட்டியாழ் ceṅāṭṭiyāḻ, பெ.(n.)

   கின்னரி; fiddle.

     [செம்கோடு+யாழ்]

     [P]

 செங்கோட்டியாழ் ceṅāṭṭiyāḻ, பெ. (n.)

   நால்வகை யாழ்களுள் ஒன்று; a kind of stringed music instrument, one of four kinds of {yal.}

     “அங்கோற் றீந்தொடைச் செங்கோட்டி யாழின்” (பெருங். உஞ்சைக். 40: 269);

     [செம் + கோட்டியாது. செம்மை நிற மரத்தால் செய்த யாழாகலாம்]

நால்வகை யாழ்களாவன :

பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ். செங்கோட்டியாழிற்கு ஏழு நரம்புகள்

செங்கோட்டைச்சிவப்பி

 செங்கோட்டைச்சிவப்பி ceṅāṭṭaiccivappi, பெ. (n.)

   புளிச்சிறு கீரை; a kind of sour green.

செங்கோணம்

செங்கோணம் ceṅāṇam, பெ. (n.)

   90O பாகை கொண்ட கோணம்; right angle.

     [செம் + கோணம்]

செங்கோணி அத்திமல்லன்

செங்கோணி அத்திமல்லன் ceṅāṇiattimallaṉ, பெ.(n.)

   வீர ராசேந்திரன் இரண்டாம் ஆட்சியாண்டில் கி.பி. 1180 ஆம் ஆண்டு திருவோத்தூர் கோயிலுக்கு 30 ஆநிரைகளை (பசுக்களை); வழங்கியவன்; a name of donar of 30 cows to Tiruvõttūr temple.

     [செங்கோணி+அத்தி+மல்லன்]

செங்கோணி அம்மையப்பன்

 செங்கோணி அம்மையப்பன் ceṅāṇiammaiyappaṉ, பெ.(n.)

   திருவோத்தூர் கோயிலுக்கு கொடை வழங்கியவன்; a name of donar to tiruvottur temple.

     [செங்கோணி+அம்மை+அப்பன்]

செங்கோன் தரைச்செலவு

 செங்கோன் தரைச்செலவு ceṅāṉtaraiccelavu, பெ.(n.)

   மறைந்துபோன தமிழ் நூல்; an ancient Tamil treatise now extinct.

     [செங்கோன்+தரை+செலவு]

செங்கோன், கடல் கொண்ட பெருவள நாட்டில் ஒளியர் குடியில் தோன்றிய மன்னன். செங்கோ என்ற அழைக்கப்பட்டவன்.

செங்கோன்தரைச்செலவு

 செங்கோன்தரைச்செலவு ceṅāṉtaraiccelavu, பெ. (n.)

   மறைந்து போன தமிழ் நூல்; a Tamil book lost in time.

செங்கோன்மை

செங்கோன்மை ceṅāṉmai, பெ. (n.)

   அரச முறைமை நீதி (குறள்,அதி. 55);; righteous rule.

ம. செங்கோம

     [செம் + கோன்மை]

செங்கோற்கடவுள்

 செங்கோற்கடவுள் ceṅāṟkaḍavuḷ, பெ. (n.)

   அறக்கடவுள், யமன்; Yama, as the god dispensing impartial justice.

     [செங்கோல் + கடவுள்]

செங்கோற்பொறையன்

 செங்கோற்பொறையன் ceṅāṟpoṟaiyaṉ, பெ. (n.)

   சேரமான் பெருமாளுக்கு முன் சேரநாட்டையாண்ட அரசர்; the predecessor of {Šēramān perumāļ.}

     [செங்கோல் + பொறையன்]

பொறையன் சேர மன்னர்களின் அடைமொழி

செங்கோலம்

 செங்கோலம் ceṅālam, பெ. (n.)

   செம்பு மணல் (வின்.);; sand containing copper-ore.

     [செம் + கோலம்]

செங்கோலறுகு

செங்கோலறுகு ceṅālaṟugu, பெ. (n.)

   அறுகு வகை (பு,வெ,10, முல்லைப். 3, உரை.);; a kind of hurrialli grass.

     [செம் + கோலறுகு]

செங்கோலோச்சு-தல்

செங்கோலோச்சு-தல் ceṅālōccudal,    5 செ.கு.வி. (v.i.)

   அறம் (நீதி); தவறாது அரசு புரிதல்; to rule righteously, as wielding the sceptre properly.

     “செல்வவேந்தன் செங்கோ லோச்சி” (பெருங். வத்தவ. 14:185);.

     [செங்கோன் + ஒச்சு]

செங்கோல்

செங்கோல் ceṅāl, பெ. (n.)

   1. அரச இலச்சினை பொறிக்கப்பட்ட அரசாட்சிச் சின்னமாகிய நேர் கோல்; sceptre, a symbol of sovereignty.

     “சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே” (சிலப். 26:139);.

   2. அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லரசாட்சி; kingly justice, impartial administration of justice, one of six principles of a state. opp. to {kodu-i-g5l.}

     “செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணிமே, 18:82);.

   3. பழுக்கக் காய்ந்த சலாகை; red-hot rod.

     “தீத்துறு செங்கோல் (மணிமே, 18:2);.

ம. செங்கோல்

     [செம் + கோல்]

அறுவகை நாட்டமைதியாவன: செல்வம், விளைநிலம், செங்கோல், நோயின்மை, வளம், குறும்பின்மை.

செங்கோல்கோடு-தல்

செங்கோல்கோடு-தல் ceṅālāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   அரச முறை (நீதி); தவறுதல்; to fail in justice, rule unrighteously, as the sceptre slanting.

     “செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ” (மணிமே. 28:188);.

     [செங்கோன் + கோடு-.]

செச்சை

செச்சை1 ceccai, பெ. (n.)

   சிவப்பு; redness.

     “செச்சை வாய்திறந்து” (திருவிளை. வலை. 24);.

   2. வெட்சி; scarlet ixora.

     “செச்சைக் கண்ணியன்” (திருமுருகு. 208);.

   3. செந்துளசி (மலை.);; ied basil.

ம. செச்ச, செக்கி

     [கல் (சிவப்பு → செல் → செள் → செட்டு → செச்சு → செச்சை]

 செச்சை2 ceccai, பெ. (n.)

   1. வெள்ளாட்டுக் கடா; he-goat.

     “வெள்ளாட்டுச் செச்சை போல” (புறநா. 286);.

   2. ஆடு; sheep.

     “செச்சைக் கண்டத் தொத்துன் போல” (ஞானா பாயி 5:12);.

   3. மேழ ஓரை (விதான. நல்வினை. 9);; aries of the zodiac.

   ம. செச்ச;தெ. த்கத்சு

     [சே → செச்சை]

 செச்சை3 ceccai, பெ. (n.)

   1. சந்தனக் குழம்பு (திவா.);; sandal unguent.

   2. நீறு (அக.நி.);; ashes.

   3. சட்டை; coat.

     “உதிரச் செச்சை யொண்ணிண மீக்கொ டானை

     ” (சீவக. 1050);.

     [செம் → செச்சை]

 செச்சை4 ceccai, பெ. (n.)

   1. தழைகள் வேய்ந்த விடுதி; resting-place with roof of foliage.

     “மன்றஞ் செச்சையும் பலகண்டான்” (குற்றா. தல.கவுற்சன.90);.

   2. காடு (அக.நி.);; forest.

   3. இலிங்கங்கட்டிகள் அணிந்து கொள்ளும் இலிங்கப் பெட்டகம்; a little casket for {liñgam,} worn by {Lingayats.}

லிங்கச் செச்சை (இ.வ.);

   ம, செச்ச;க. தெ. செச்செ

     [செத்தை → செச்சை]

 செச்சை5 ceccai, பெ. (n.)

   இரட்டை (அக.நி.);; pair or set.

     [செண்டை → செச்சை. செண்டை = இரட்டை]

 செச்சை6 ceccai, பெ. (n.)

   தோன்றும் நிலா; rising moon.

     [செம் → செச்சை]

தோன்றும் நிலவு செந்நிறம் கொண்டது

செஞ்ச

செஞ்ச ceñja, வி.எ. (adv.)

   1. நேராக; properly, directly.

     “செஞ்ச நிற்போரைத் தெரிசிக்க” (திருமந் 2118);.

   2. முழுதும் (யாழ்.அக..);; abundantly; completely, wholly.

     [செஞ்செவே → செஞ்ச]

செஞ்செவே பார்க்க

செஞ்சடைச்சி

 செஞ்சடைச்சி ceñjaḍaicci, பெ. (n.)

   மஞ்சட் பூவுள்ள செடி வகை (L.);; yellow-flowered climbing Indian linden.

     [செம் + சடைச்சி]

செஞ்சடையோன்

 செஞ்சடையோன் ceñjaḍaiyōṉ, பெ. (n.)

   காசுமீரத்துப் படிகக்கல் (யாழ்.அக.);; a kind of red crystal.

     [செம் + சடையோன். செந்நிறமான படிகக்கல்]

செஞ்சந்ததி

 செஞ்சந்ததி ceñjandadi, பெ. (n.)

   சிவப்பு ஆவிரை; red variety of cassia curiculata.

செஞ்சந்தனம்

செஞ்சந்தனம் ceñjandaṉam, பெ. (n.)

   1. சந்தன மரவகை; red sanders.

   2. மரவகை; Travancore red-wood.

     [செம் + சந்தனம்]

செஞ்சம்

செஞ்சம் ceñjam, பெ. (n.)

   1. நேர்மை; correctness, directness.

   2. நிறைவு, முழுமை; completeness, fullness.

     “செஞ்சமுற வேறல் செயமென்று” (குற்றாதலதிருமால். 114);.

     [செஞ்சு → செஞ்சம்]

இயல்பாக எல்லாரையுஞ் சுடவேண்டிய நெருப்பானது வாய்மை, குற்றமின்மை, கற்பு, தெய்வநம்பிக்கை முதலிய பண்புகளை மெய்ப்பிக்கும் தெய்வச் சான்றாக நின்று சுடாதிருப்பதால், தீயின் நிறப்பண்பாகிய செம்மைக் கருத்தினின்று, தூய்மை அல்லது நேர்மைக் கருத்தும், நேர்மைக் கருத்தினின்று நிறைவுக் கருத்தும், கிளைத்தன.

செஞ்சம்பா

செஞ்சம்பா ceñjambā, பெ. (n.)

   நான்கு அல்லது ஐந்து திங்களில் பயிராகும் சம்பா நெல் வகை (பதார்த்த. 804);; a red {Samba} paddy, maturing in four or five months.

     [செம் + சம்பா]

செஞ்சாந்து

செஞ்சாந்து ceñjāndu, பெ. (n.)

   1. குங்குமம் (திவா.);; saffron powder.

   2. சந்தனக்கூட்டு; fragrant sandal-paste.

     “செஞ்சாந்து புலர்த்துந் தேக்க ணகிற்புகை” (பெருங். உஞ்சைக். 33:64);.

     [செம் + சாந்து]

செஞ்சாமாருதம்

செஞ்சாமாருதம் ceñjāmārudam, பெ. (n.)

   1. மழையோடு கூடிய காற்று; violent stom, boisteros wind and rain.

     “செஞ்சாமாருதம் போலே நொடிக்கிறேன்” (இராமநா. ஆரணி.5);.

   2. திறனை வெளிப்படுக்கை (உ.வ.);; show or display of skill.

     [செம் + (சமம் →); சா + மாருதம். மாருதம் = காற்று]

செஞ்சாமிருதம்

செஞ்சாமிருதம் ceñjāmirudam, பெ. (n.)

செஞ்சாமாருதம்,

   2. பார்க்க;see {seriamärudam,}

     [செஞ்சாமாருதம் → செஞ்சாமிருதம்]

செஞ்சாமை

 செஞ்சாமை ceñjāmai, பெ. (n.)

   ஒரு வகைச் சாமை; red species of little millet.

     [செம் + சாமை]

செஞ்சாலி

செஞ்சாலி ceñjāli, பெ. (n.)

   உயர்தரச் செந் நெல்வகை; a kind of superior yellowish paddy.

     “செஞ்சாலி நெல்லின் வளர்சோ றளிக்கொள்” (தேவா. 37:7);.

ம. செஞ்சாலி

     [செம் + சாலி]

செஞ்சால்

 செஞ்சால் ceñjāl, பெ. (n.)

   துமுக்கி (துப்பாக்கி); (யாழ்.அக.);; gun, rifle.

     [செம் + சால்]

செஞ்சி

 செஞ்சி ceñji, பெ. (n.)

   விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் திருவண்ணாமலை இடையே யுள்ள வரலாற்றுப் புகழ் பெற்றதும் அரனுடையதுமான ஒரு குறிஞ்சி நிலத்தூர் (G.S.A.D);; Ginji, a hill fortress of historical interest in Villupuram district.

செஞ்சிக்கோட்டை

செஞ்சிக்கோட்டை ceñjikāṭṭai, பெ. (n.)

   செஞ்சியிலுள்ள கோட்டை; fort at Ginji.

     [செஞ்சி + கோட்டை]

திண்டிவனம், திருவண்ணாமலை இடையில் உள்ள செஞ்சி, வீர இளைஞன் இராசா தேசிங்கு பற்றிய நாட்டுப்பாடலால் பெரும் புகழ் பெற்றது. இராசகிரி, கிருட்ண கிரி, சந்திரகிரி ஆகிய மூன்று அரண் மனைகளையும், கொத்தளங்களையும் இணைத்து அமைக்கப்பட்ட கோட்டை சுமார் 5 கல் (8 கிலோமீட்டர்); நீளம் கொண்டது. இன்றைய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பேரூர்.

செஞ்சிட்டு

 செஞ்சிட்டு ceñjiṭṭu, பெ.(n.)

   ஒரு வகைப்பறவை இனம்; miniver.

     [செம்+சிட்டு].

செஞ்சியர்கோன்காடவன்

 செஞ்சியர்கோன்காடவன் ceñjiyarāṉkāṭavaṉ, பெ. (n.)

   செஞ்சியில் வாழ்ந்த குறுநில மன்னன்; a king lived in Ginji.

பல்லவ குலமரபைச் சார்ந்தவன்.

     [செஞ்சியாகோன் + காடவன்]

செஞ்சிற்றகத்தி

 செஞ்சிற்றகத்தி ceñjiṟṟagatti, பெ. (n.)

   மரவகை (சத்-அக.);; variety of comon sesban.

     [செம் + சிற்றகத்தி]

செஞ்சிலுவைச்சங்கம்

 செஞ்சிலுவைச்சங்கம் ceñjiluvaiccaṅgam, பெ. (n.)

   போர், புயல், பஞ்சம் போன்ற சீரழிவுகளால் அல்லலுறும் மக்களுக்கு மருத்துவ உதவியும் பிற உதவிகளும் வழங்கக் கூடிய ஒரு பன்னாட்டுத் தொண்டு நிறுவனம்; Red cross society an international organisation to help the people affected by war, cyclone, faminc etc.

     [செம் + சிலுவை + சங்கம். . Syr;

 slibo → த. சிலுவை, Skt, sarigha → த. சங்கம்]

செஞ்சிலை

செஞ்சிலை1 ceñjilai, பெ. (n.)

   1. சிவந்தகல் (யாழ்.அக.);; a red stone.

   2. செங்காவி; red ochre.

     [செம் + சிலை]

பெருங்கல்லில் இருந்து செதுக்கும்போது சிதறி விழும் சிறுகல்லிற்குப் பெயர் ‘சில்’ ஆகும். இதனால் தான் செதுக்கப்பட்ட கல்லிற்கு ஆகுபெயராய் சிலை என்ற பெயர் உண்டாயிற்று.

 செஞ்சிலை2 ceñjilai, பெ. (n.)

   அழகிய வில்; beautiful bow.

     “செஞ்சிலைக் கரத்தர்” (கம்பரா. மிதிலை. 20);.

     [செம் + சிலை]

செஞ்சில்லை

 செஞ்சில்லை ceñjillai, பெ.(n.)

   ஒரு வகைப் பறவை இனம்; red mina,

     [செம்+சில்லை].

செஞ்சீரகம்

 செஞ்சீரகம் ceñjīragam, பெ. (n.)

   செந் நிறமுள்ள சீரக வகை (யாழ்.அக.);; red cumin.

ம. செஞ்சீரகம்

     [செம் + சீரகம்]

செஞ்சு

செஞ்சு ceñju, பெ. (n.)

செஞ்சம் பார்க்க;see {seilam.}

     “செஞ்சுறு செஞ்சுடர்” (திருமந் 1743);.

ம. செஞ்சு (அழகு);

     [கல் → செல் → சென் → செட்டு → செச்சு → செஞ்சு = செம்மை, செவ்வை, நிறைவு]

செஞ்சுடர்

செஞ்சுடர் ceñjuḍar, பெ. (n.)

   1. பகலவன் (பிங்.);; Sun.

   2. எரியும் நெருப்பு (யாழ்.அக.);; fire.

   ம. செஞ்சுடர்;க. கெஞ்சொடர்

     [செம் சுடர்]

செஞ்சுடர்ப்பகவன்

செஞ்சுடர்ப்பகவன் ceñjuḍarppagavaṉ, பெ. (n.)

   1. நெருப்பு (திவா.);; the Fire-god.

   2. பகலவன் (வின்.);; the Sun-god.

     [செம் + சுடர் + பகவன்]

செஞ்சுருட்டி

 செஞ்சுருட்டி ceñjuruṭṭi, பெ. (n.)

   ஒரு பண்; one musical mode.

ம. செஞ்சுருட்டி

     [செம் + சுருட்டி சுருட்டி = பண்]

செஞ்சுருட்டை

செஞ்சுருட்டை1 ceñjuruṭṭai, பெ. (n.)

   சுருட்டைப் பாம்பு வகை; the yellow variety of Echis carinata, red carpet-snake.

     [செம் + சுருட்டை]

சுருட்டை = ஒருவகைப் பாம்பு

 செஞ்சுருட்டை2 ceñjuruṭṭai, பெ. (n.)

   கேழ்வரகு வகை (விவசா.3);; a species of ragi.

     [செம் + சுருட்டை. சுருட்டை = சுருண்ட கதிரையுடைய கேழ்வரகு]

செஞ்சுறா

செஞ்சுறா ceñjuṟā, பெ. (n.)

   சுறாமீன் வகை (M.M. 850);; shark, grey or bronze, attaining considerable size.

     [செம் + சுறா. சுறவு → சுறா]

செஞ்சூரன்

 செஞ்சூரன் ceñjūraṉ, பெ. (n.)

செந்நாய்:

 a particular variety of dog used in the chase while hunting.

     [செம் + சூரன். சூரன் = நாய்]

செஞ்செயல்

 செஞ்செயல் ceñjeyal, பெ. (n.)

   நேர்மையான தொழில் (இ.வ.);; upright action.

     [செம் + செயல்]

செஞ்செழிப்பு ,

செஞ்செழிப்பு , ceñjeḻippu, பெ. (n.)

   1. முக மலர்ச்சி; cheerfulness of countenance.

   2. பயிர்ச் செழிப்பு (யாழ்ப்.);,

 fertility, luxuriance of crops or produce.

   3. ஏராளம் (யாழ்.அக.);; plentifulness, copiousness.

     [செம் + செழிப்பு]

செஞ்செவியர்

 செஞ்செவியர் ceñjeviyar, பெ. (n.)

   செல்வர் (யாழ்.அக.);; wealthy person.

     [செம் + (செவ்வியர் → செவியர்]

செஞ்செவே

செஞ்செவே ceñjevē, வி.எ. (adv.)

   1. நேராக; properly, directly.

     “செஞ்செவே கமலக் கையாற் றீண்டலும்” (கம்பரா. பூக்கொய். 7);.

   2. எளிதாக; with case.

     “செஞ்செவே படர்வரென் படைஞர்” (கம்பரா. வருணனை. 13);.

   3. முழுதும்;:abundantly, completely, wholly.

     “செஞ்செவே யாண்டா சிவபுரத்தரசே” (திருவாச. 28: 6);.

ம. செஞ்செம்மே.

     [செம் + செவ் – செஞ்செவ் → செஞ்செவே]

செஞ்சேரா

செஞ்சேரா1 ceñjērā, பெ. (n.)

   ஒரு வகை நச்சுப் பூச்ச (சீவரட். 364);; a kind of poisonous insect.

 செஞ்சேரா2 ceñjērā, பெ. (n.)

   இறால் வகை; spiny lobster.

செஞ்சைப்பாலை

 செஞ்சைப்பாலை ceñjaippālai, பெ. (n.)

   முல்லை; a kind of jasmine.

     [செம்(மை); + செய் + பாவை]

செஞ்சொட்டி

செஞ்சொட்டி ceñjoṭṭi, பெ. (n.)

   பூடுவகை; a plant.

     “செஞ்சொட்டியடியொட்டி” (குருகூர்ப்.45);.

     [செம் + சொட்டி]

செஞ்சொன்மாலை

செஞ்சொன்மாலை ceñjoṉmālai, பெ. (n.)

   புகழ் மாலை; culogy.

     “செஞ்சொன்மாலை சூடினான்” (சீவக. 691);.

     [செம் + சொல் + மாலை]

செஞ்சொற்கழகம்

 செஞ்சொற்கழகம் ceñjoṟkaḻkam, பெ. (n.)

   பிற மொழிகளில் உள்ள தொழில் நுட்பச் சொற்களுக்கு இணையான செம்மைப் படுத்திய நல்ல தமிழ்ச் சொற்களை வழங்குவதற்கான நிறுவனம்; an institution to furnish standarised Tamil equivalents for technical terms from other languages.

     [செம் + சொன் கழகம்]

செஞ்சொல்

செஞ்சொல் ceñjol, பெ. (n.)

   1. திருந்திய சொல்; correct language;

 felicitous words.

     “செஞ்சொலா னயந்த பாடல்” (தேவா. 734. 10);.

   2. வெளிப்படையான சொல் (குறள்,711, உரை.);; word or language in its direct primary significance.

   3. பல சொற்களிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட சரியான சொல்; standard term.

     [செம் + சொல்]

செஞ்சோறு

செஞ்சோறு ceñjōṟu, பெ. (n.)

   1. தீட்டாத சிவப்பு அரிசி கொண்டு வடித்த சோறு; cooked rice of red colour.

     “கருஞ்சோறு மற்றைச் செஞ்சோறுங் களினிழைத்தென் பயன்” (திவ்.திருவாய். 4. 6:4);.

   2. செஞ்சோற்றுக்கடன் பார்க்க (பு.வெ.8: 30, கொளு;see {Sefī-jörru-k-kagan.}

   3. தன்பொருட்டுப் போரில் உயிர் கொடுத்தலைக் கருதிய வீரனுக்கு அரசனளிக்குஞ் சோறு; provisions given by a king to a soldier as the price of his blood.

     [செம் + சோறு]

செஞ்சோற்றுக்கடன்

செஞ்சோற்றுக்கடன் ceñjōṟṟukkaḍaṉ, பெ. (n.)

   1. அரசனிடம் பெற்றுண்ட உணவுக்காக அவன் பொருட்டு வீரன் தன் உயிரைப் போரிடைக் கொடுத்தலாகிய கடமை; duty or obligation of a soldier to lay down his life in the cause of the king who fed him.

     “செஞ்சோற்றுக்கட னீங்கி” (சீவக. 22:40);.

   2. பெற்ற உதவிக்காகச் செய்யும் உதவி; a help done for the help received.

பாரதப் போரில் கன்னன் துரியோதனனுக்குத் தன் உயிரைக் கொடுத்துச் செஞ்சோற்றுக் கடன் தீர்த்தான்.

     [செஞ்சோறு + கடன்]

செஞ்சோற்றுதவி

 செஞ்சோற்றுதவி ceñjōṟṟudavi, பெ. (n.)

   செஞ்சோற்றுக்கடன் பார்க்க (திவா.);; sce {Seijóoru-k-kagan.}

     [செஞ்சோறு + உதவி]

செஞ்சோளம்

செஞ்சோளம் ceñjōḷam, பெ.(n.)

   சோளவகை; a kind of maize.

     [செம்+கோளம்]

 செஞ்சோளம் ceñjōḷam, பெ. (n.)

   செந்நிறமுள்ள சோளவகை (பதார்த்த. 832);; a red species of great millet.

   ம. செஞ்சோளம்;க. கெஞ்சோளம்

     [செம் + சோளம்]

செஞ்ஞானி

செஞ்ஞானி ceññāṉi, பெ. (n.)

   சிறந்த அறிவாளி; a person of ripe wisdom.

     “செஞ்ஞானிக் குரித்தாகு நற்சீவன் முத்தி” (வேதா. சூ. 162);.

     [செம் + ஞானி]

வ. ஜ்ஞாநிந் {ianin)} → த. ஞானி

செடல்

 செடல் ceḍal, பெ. (n.)

செடில் (வின்.); பார்க்க;see {Sedil.}

செடல் குத்துதல்

 செடல் குத்துதல் ceḍalkuddudal, பெ. (n.)

   வேண்டுதல் நிறைவேறியபின் பின்பற்றப்படும் நாட்டுப்புறச் சடங்கு; a ritual intemple festival

     [செடல்+குத்து].

செடி

செடி ceḍi, பெ.(n.)

   தோண்டிக்கரகத்தைக் காகிதப்பூச்சரங்களால் அழகு செய்வது; decorating the karagam pot with paper flowers.

     [சுவடி-சோடி-செடி].

 செடி1 ceḍi, பெ. (n.)

   1. மரத்தை விடக் குறைவாக வளரக் கூடிய, மெல்லிய தண்டைக் கொண்ட சிறுபூடு; Shrub.

கத்தரிச் செடி.

   2. புதர் (பிங்.);; shrubbery, bush.

   3. நெருக்கம், அடர்த்தி (சூடா.);; denseness.

     “செடிகொள் வான்பொழில் சூழ்” (திருவாச. 29:5);.

   ம. செடி;   க. கிட, கிடு, செட்டு;   தெ. செட்டு;   து., குட. கிட பட. கிடு;   கோத. கிட்ல்;   துட. கிட்வ்;கொலா. செட்ட், செட்ட், நா. செட்ட். (மரம்);

இ. ஜாட் (d); = மரம்

     [செள் → செழி → செடி = இலை கினையடர்ந்த சிறு நிலைத்திணை வகை]

 செடி2 ceḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   கொடி தழைகள் அடர்தல் (யாழ்ப்.);; to grow bushy, shoot out, as sprays, foliage.

ம. செடிக்குக.

     [செள் → செழி → செடி – செடி-த்தல் = அடர்தல் (வ.மொ.வ.);]

 செடி3 ceḍi, பெ. (n.)

   1. அறங்கடை (பாவம்);; sin.

     “செடியேறு தீமைகள்” (திருவாச. 40:2);.

   2. தீமை (சூடா.);; vice, evil.

   3. துன்பம்; trouble, distress.

     “செடிபடுநோ யடியாரைத் தீர்ப்பார் போலும்” (தேவா. 44, 7);.

   4. தீய நாற்றம்; bad odour, stench,

     “செடிபடுத் துணியுடைச் சீரை சுற்றினான்” (திருவாலவா. 54:19);.

   5. காய் விழுந்த மகளிர் தீண்டுதலால் குழந்தைகளுக்கு நேர்வதாகக் கருதப்படும் நோய்வகை; a disease of children. believed to be caused by

 the approach of aborted women. குழந்தைக்குச் செடி. தட்டியிருக்கிறது (நெல்லை.);.

   6. இழிவு; meanness.

     “செடி நாய் குரைக்க” (தேவா. 991,7);.

   7. பதனழிந்தது (யாழ்.அக.);; that which is decayed, faded, spoiled, as food, flower, etc.,

   ம. செடி;   தெ. செடு, செட்ட;து. செடி

     [சிதை → செதை → செடி. சிதை = சிதைத்தல்]

 செடி4 ceḍi, பெ. (n.)

   சதுரக்கள்ளி (இ.வ.);; square spurge.

     [செடி + கள்ளி]

செடி நாற்றம்,

 செடி நாற்றம், ceḍināṟṟam, பெ.(n.)

   பெண்கள் தீட்டு வந்த நாளில் வீகம் நாற்றம்; fowl smell of menstruation.

     [சோடு-சொடி-செடி].

செடிக்குடிபுக்கி

 செடிக்குடிபுக்கி ceḍikkuḍibukki, பெ. (n.)

   நாகரவண்டு (மூ.அ.);; bee.

     [செடி + குடி + புக்கி. புகு → புக்கு → புக்கி = புகுவது அல்லது புகுந்தது.]

செடிக்கொல்லி

செடிக்கொல்லி ceḍikkolli, பெ. (n.)

   களைச் செடிகளை அழிக்கும் மருந்து; herbicide.

     [செடி1 + கொல்லி]

செடிங்காடு

 செடிங்காடு ceḍiṅgāḍu, பெ. (n.)

செடிக்காடு (வின்.); பார்க்க;see {Sedi-k-kädu.}

     [செடி + காடு. செடிக்காடு → செடிங்காடு]

செடிசி-த்தல்

செடிசி-த்தல் seḍisittal,    4 செ.கு.வி. (v.i.)

   காடுவெட்டுதல்; to clear jungle.

     ‘செடிசித்துக் குடியேற்றினபடை வீடுகளை’ (ஈடு, 17:4);.

     [செடி1 + சீ-.]

செடிச்சி

செடிச்சி ceḍicci, பெ. (n.)

   இழிந்தவள் (யாழ்ப்.);; bad woman, strumpet.

     “செடிச்சிகள் மன்றி லிடைபலி தேரப் போவது வாழ்க்கையே” (தேவா. 991, 7);.

தெ. செடிப

     [செடி3 → செடிச்சி]

செடியன்

செடியன் ceḍiyaṉ, பெ. (n.)

   இழிந்தோன் (யாழ்.அக.);; bad, vicious fellow.

     [செடி3 → செடியன் ]

செடிலாட்டம்

 செடிலாட்டம் ceḍilāḍḍam, பெ. (n.)

   மாரியம்மன் வேண்டுதலுக்காகச் {செடிலில் தொங்கியாடும் ஆட்டம்; hook-swinging in honour of {Māriyamman.}

     [செடில் + ஆட்டம்]

     [P]

செடிலூசல்

 செடிலூசல் ceḍilūcal, பெ. (n.)

செடிலாட்டம் பார்க்க;see {Sedil-āttam.}

     [செடில் + ஊசல்]

செடில்

செடில் ceḍil, பெ. (n.)

   வேண்டுதலுக்காக முதுகின் தோலிடைக் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டப் பெற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங் கருவி; a mechanism consisting of a standing post with a long sweep at its top, on one end of which a person, under a vow, is suspended by a hook fastened into the integuments of his back and raised high in the air, is swung around.

க., தெ. சிடி.

     [செடி3 → செடில்]

செட்டளுர்

செட்டளுர் ceṭṭaḷur, பெ. (n.)

   பல்லவர் நாட்டுச் சிற்றூர்; a village in Pallava territory. (தண்.செ.164);

     ‘வாதுல கோத்திரத்து ஆலத் தம்ப குத்திரத்து செட்டரூர் சுயசருபவ செந்த்திரு வேதிபட்டச்சோமாசிபங்கொன்று”

     [செட்டி+ஆளுர்]

செட்டி

செட்டி1 ceṭṭi, பெ. (n.)

   1. வணிகன்;{Vaišya} or mercantile community.

     “முட்டில் வாழ்க்கைச் செட்டியார் பெருமகன்” (பெருங்..இலாவாண. 20:126);.

   2. வணிகர்களின் பட்டப்பெயர்; title of traders.

   ம செட்டி; Pkt., Pali. {šeithi}

செட்டி → ச்ரேஷ்டின் (Skt.);

   எழுதல் = உயர்தல். எண்ணுதல் = மேன்மேல் அளவிடுதல். எட்டுதல் = உயர்தல்;உயர்ந்து தொடுதல், தொடுமளவு நெருங்குதல். எட்டி நோக்குதல் = அண்ணாந்து பார்த்தல் (பெருங். நரவாண. 8:82);.

எட்டம் = உயரம், தொலைவு. எடுத்தல் = உயர்த்துதல், தூக்குதல், எட்டி =

   1. உயர்ந்தவன், மேலோன்.

   2. பண்டையரசர் வணிக மேலோனுக்குக் அளித்த பட்டம்.

     “எட்டிக் குமர விருந்தோன் தன்னை” (மணிமே. 4:58);

   3. வணிகன் (திவா.);.

எட்டு → எட்டி.

எட்டிப்பூ = எட்டிப்பட்டம் பெற்றவனுக்கு அரசர் கொடுக்கும் பொற்பூ.

     “எட்டிப் பூ பெற்று” (மணிமே. 22:115);.

எட்டிப்புரவு = எட்டிப்பட்டம் பெற்றவனுக்கு அரசர் கொடுத்த நிலம் (நன். 158, மயிலை, உரை);.

   எட்டி → செட்டி. ஒ.நோ: இளை → சிளை;ஏண் → சேண்.

செட்டி எனுஞ் சொல்லிற்கு வடமொழியாளர் காட்டும் மூவேறு மூலம் வருமாறு.

   1. ச்ரீமத் (திருமான்); என்பதன் உச்சத்தரம்.

   2. பிரகஸ்ம (புகழ்ப்படத் தக்கவசன்); என்பதன் உச்சத்தரம்.

   3. ச்ரீ (திரு); என்பதன் உச்சத்தரம்

தென் சொற்களை வட சொல்லாக்கும் வழிகளுள் ஒன்று முதலெழுத்தின் பின் ரகரம் இடைச் செருகல்.

   எ-டு :-தமிழம் – த்ரமிள;   கமுகம் – க்ரமுச;   திடம் – த்ருட;   நட்டம் – ந்ருத்த;   படி – ப்ரதி;   மெது – ம்ருது;விடை – வ்ருஷ்

இம்முறையில் செட்டி என்பதை வடமொழியில், எகரம் இன்மையால் ச்ரேட்டி எனத் திரிந்து அதற்கேற்பப் பொருத்தப் பொய்த்தல் எனும் உத்தி பற்றி வெவ்வேறு மூலங்காட்டுவாராயினர். செட்டி. என்பது தமிழில் வணிகனை மட்டுமே குறிக்கும் என்றும் ச்ரேஷ்டின் என்பது வடமொழியிற் சிறந்தோன் என்பதனையும் குறிக்கும் என்றும், வேறுபாடறிக (வ.மொ.வ.);.

 செட்டி2 ceṭṭi, பெ. (n.)

   1. சிவந்த அடியையுடைய வெட்சிச் செடி; scarlet ixora.

   2. சேயோன் (செந்நிற முருகன்);; Murugan.

     “கடற்சூர் நடிந்திட்ட செட்டி” (தேவா. 742, 10);.

     [எல் → செல் → செள் → (செட்டு); → செட்டி = செம்மலர் மரவகை (வெட்சி);]

 செட்டி3 ceṭṭi, பெ. (n.)

   மல்லகசெட்டி; wrestler, prize fighter.

க., தெ. செட்டி

செட்டிகுடிகெடுத்தான்

செட்டிகுடிகெடுத்தான் ceḍḍiguḍigeḍuttāṉ, பெ. (n.)

   அறிவனது (புதனது); தோற்றத்தை வெள்ளியின் (சுக்கிரன்); தோற்றமாகக் கருதி மயங்கிப் புறப்பட்ட செட்டி இடை வழியிற் கள்வராற் கொலையுண்ணும்படி அச்செட்டி 21 குடும்பத்தைக் கெடுத்தவனான அறிவன் (புதன்); (செஞ். 10,243);; Mercury, as one who, by his appearance like Venus, misled a Chetti to start on his journey in the dead of night and runied his family by the robbers murdering him.

     [செட்டி + குடிகெடுத்தான்]

செட்டிச்சி

 செட்டிச்சி ceṭṭicci, பெ. (n.)

   வணிக குடிப் பெண் (உ.வ.);; woman of {Vaisya} (merchant); community.

   ம. செட்டிச்சி;   க. செட்டிதி;பட. செட்டித்தி

     [செட்டி ஆ.பா. → செட்டி(ய);த்தி → செட்டிச்சி (பெயர்);]

செட்டிநாகம்

 செட்டிநாகம் ceṭṭinākam, பெ. (n.)

   நல்ல பாம்பு வகை (யாழ். அக.);; cobra.

     [செட்டி + நாகம்]

செட்டிபிள்ளையப்பன்

 செட்டிபிள்ளையப்பன் ceṭṭibiḷḷaiyabbaṉ, பெ. (n.)

   கொங்கு மண்டல சதகத்தில் பாடப் பெற்ற ஒரு வள்ளல்; a donor praised in a verse of {Kongu-mandala-Šadagam.}

     [செட்டி + பிள்ளை + அப்பன்]

     “இட்டமான கவிசொல்லும் பாவலர்க்கில்லை யென்று சொலற்கஞ்சிக் காட்டில் வாழ்துட்ட வன்புலித் தூற்றில் புகுந்தவன் தூயவன் கணவாள குலத்தினன், செட்டிப் பிள்ளையப் பன்றனந் தொண்டு செய்தேவி மாமலை யாதொரு பங்குள கட்டு செஞ்சடை அமரவிடங்கனார் கதித்து வாழ் பாரியூ. ரெங்கரரோ” கொங்கு மண்டல சதகம்.

செட்டிப்பிள்ளை

 செட்டிப்பிள்ளை ceṭṭippiḷḷai, பெ. (n.)

   நாட்டுக் கோட்டைச் செட்டி; person of {Nāsiukköffai} Chetti caste.

     [செட்டி + பிள்ளை]

செட்டிமை

செட்டிமை ceṭṭimai, பெ. (n.)

   1. வணிகத் தன்மை (யாழ்.-அக.);; gualities, characteristics of the Chetti caste.

   2. வணிகம் (வின்.);; trade, traffic mercantile profession.

     [செட்டி → செட்டிமை]

செட்டியப்பன்

செட்டியப்பன் ceṭṭiyappaṉ, பெ. (n.)

   முருகக் கடவுளின் தந்தையான சிவன்;{Sival,} as the Father of {Murugan.}

     “கடறுசூர் தடிந்திட்ட செட்டியப்பனை” (தேவா. 742, 10);.

     [செட்டி + அப்பன்]

செட்டியார்குதிரை

 செட்டியார்குதிரை ceṭṭiyārkudirai, பெ. (n.)

   பிள்ளை விளையாட்டு வகை (இ.வ.);; a boy’s game of leap-frog.

     [செட்டியார் + குதிரை]

செட்டியார்மகமை

செட்டியார்மகமை1 ceṭṭiyārmagamai, பெ. (n.)

   வணிகர்கள் நாள்தோறும் தம் வருமானத்தில் ஒரு பகுதியைத் தம் குமுகாயத்திற்கோ பொதுநன்மைக்கோ ஒதுக்கி வைத்தல்; allocation of a small portion of the income daily by the merchants for the benefit of their communties or public.

     [செட்டியார் + மகமை]

மகன்மை = மகனுக்குச் செய்யும் பண உதவி போல குமுகாய மக்களுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒருவகைப் பொது நலச் சேமிப்பு. மகன்மை → மகமை ஆயிற்று. சில இடங்களில் பேச்சு வழக்காய் மகிமை என உள்ளது.

 செட்டியார்மகமை2 ceṭṭiyārmagamai, பெ. (n.)

செட்டியிறை (I.M.PSm.91); பார்க்க;see {setti-yirai.}

செட்டியிறை

 செட்டியிறை ceṭṭiyiṟai, பெ. (n.)

   வணிகர்களிடம் வாங்கப்பட்ட பழைய வரி; an ancient tax on traders.

     [செட்டி + இறை. இறை = வரி]

செட்டிறை

 செட்டிறை ceṭṭiṟai, பெ. (n.)

செட்டியிறை பார்க்க;see {Setti-y-irai.}

     [செட்டியிறை → செட்டிறை]

செட்டு

செட்டு1 ceṭṭu, பெ. (n.)

   கொங்கு நாட்டுக் குயவர் சமுதாயத்தின் சிறுகுழுத் தலைவர்; a leader of a small group of Kulalar of Kongu country.

     [செட்டி → செட்டு]

கொங்கு நாட்டுக் குயவர்குடி. 24 நாடாகப் பிரிந்துள்ளது. ஒவ்வொரு நாட்டுக்காரரும் தம்முன் பங்காளிகள். பிறநாட்டில் தான் மண உறவு கொள்வர். ஒவ்வொரு நாட்டுக்காரரும் 20 அல்லது 30 குழுவாக இயங்குகின்றனர். இதில் 2 அல்லது 3 குழுக்களுக்கு ஒரு செட்டுக்காரர் இருப்பார். திருமணம், பிற சிறப்பு நிகழ்ச்சிகள் உறுதி செய்ய இவரிடம் உரிய கட்டணம் செலுத்தி ஒப்புதல் பெற வேண்டும். குடி வழக்குகளில் இவர் முறைமை வழங்குவார். சிறப்பு நிகழ்ச்சிகளில் கட்டில் மேல் அமரவைத்துப் பல சிறப்புகள் செய்யப்படுவார், குயவர் குடியில் மதிப்புறு மாந்தர்.

 செட்டு2 ceṭṭu, பெ. (n.)

   1. வாணிகம் (யாழ்.அக.);; trade, traffic.

   2. சிக்கனம்; economy, thrift.

     “பலங்கொண்ட செட்டுமக்குப் பலித்தது” (குமரபிரமதுரைக்.7);.

வரவுக்குத் தக்க செலவு செய்து செட்டாகக் குடும்பம் நடத்தத் தெரியாதவர்.

   3. கஞ்சத்தனம்; miserliness, stinginess.

ம. செட்டு

     [செட்டி → செட்டு]

செட்டுக்கட்டு

 செட்டுக்கட்டு ceṭṭukkaṭṭu, பெ. (n.)

   சிக்கனம் (உ.வ.);; carefulness, thrift.

     [செட்டு + கட்டு]

செட்டுக்கந்தாடை

செட்டுக்கந்தாடை ceṭṭukkandāṭai, பெ.(n.)

   கோயில் விளை நிலம்; temple fertile land. (தண்.செ150);

வாதுல கோத்திரத்து ஆலத் தம்ப சூத்திரத்து காரம்பிச் செட்டுகந்தாடை வாசுதேவச்சதுர்வேதிபங்கொன்று”

     [செட்டு+கந்தாடை]

செட்டுக்காரன்

செட்டுக்காரன் ceṭṭukkāraṉ, பெ. (n.)

   1. அளவாய்ச் செலவிடுவோன் (உ.வ.);:

 thrifty person, one careful in spending.

   2. கஞ்சன் (வின்.);; niggard, hard dealer.

     [செட்டு + காரன்]

செட்டுக்காரர்

செட்டுக்காரர்1 ceṭṭukkārar, பெ. (n.)

   கோயம்புத்தூரில் வாழும் தேவாங்க இனத்தார் (E.T. ii, 155);;{Devāńgas} of Coimbatore.

     [செட்டு + காரர்]

 செட்டுக்காரர்2 ceṭṭukkārar, பெ. (n.)

   1. செட்டுப் பொறுப்பை வகிப்பவர்; one who has the responsibility of {settu.}

   2. செட்டுப் பொறுப்பை வகிப்பவருக்கு உரிய பட்டம்; the title of the person who bears the responsibility of {Šettu.}

     [செட்டு + காரர்]

செட்டுப்பொட்டா-தல்

 செட்டுப்பொட்டா-தல் ceṭṭuppoṭṭātal, செ.கு.வி. (v.i.)

   வணிகம் சிதைதல்; to fail, as business.

அவன் வணிகம் செட்டுப் பொட்டாய் விட்டது (வின்.);

     [செட்டு + பொட்டு + ஆ-.]

செட்டுமை

 செட்டுமை ceṭṭumai, பெ. (n.)

செட்டு பார்க்க;see {settif.}

     [செட்டு → செட்டுமை]

செட்டை

செட்டை1 ceṭṭai, பெ. (n.)

   1. சிறகு (யாழ்.அக.);; wing, feather, plumage.

கோழி செட்டை அடித்துப் பறந்தது.

   2. மீன்சிறை (வின்.);; fin.

   3. தோட்பட்டை (யாழ்.அக.);; shoulder blade.

தெ. செட்டுப

     [தோள் → தேள் → சேள் → செட்டை]

 செட்டை2 ceṭṭai, பெ. (n.)

   ஆடைக் கரைவகை; short lace-border in cloth.

     [சிட்டை → செட்டை]

செண்

செண் ceṇ, பெ. (n.)

   மகளிர் கொண்டை; tuft, tresses done into a knot.

     “செண்ணியற் சிறுபுறம்” (அக.நா. 59);.

     [செல் → செள் → செண் (மு.தா.171);]

செண்செவ்வந்தி

 செண்செவ்வந்தி ceṇcevvandi, பெ. (n.)

   வெள்ளை சாமந்திப்பூ; white clarysanthe mum flower.

     [வெண் [மை] + செவ்வந்தி]

செண்டத்துார்,

 செண்டத்துார், ceṇṭatr, பெ.(n.)

   அரக்கோணம் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Arkonam Taluk.

     [செண்டை+அத்து+ஊர்].

செண்டமல்லிகை

செண்டமல்லிகை ceṇṭamalligai, பெ. (n.)

   குடமல்லிகை; Arabian jasmine.

மறுவ. குண்டு மல்லிகை

   ம. செண்டு மல்லிக;து. செண்டுமல்லிகெ.

     [செண்டு1 + மல்லிகை]

செண்டலரி

செண்டலரி ceṇṭalari, பெ. (n.)

   அடுக்கலரி; double-flowred oleander.

     [செண்டு1 + அலரி.]

செண்டாக்கல்

 செண்டாக்கல் ceṇṭākkal, பெ.(n.)

   எல்லைக் கோட்டில் வைக்கப்படும் கல்; borderstone,

     [செண்டை+கல்].

செண்டாடு

செண்டாடு1 ceṇṭāṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   பந்தாடுதல்; to play ball.

   க. செண்டாடிசு;   தெ. செண்டாடு;   து. செண்டாடுனி;பட. செண்டாடு

 செண்டாடு2 ceṇṭāṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   நிலை குலைத்தல்; to demolish, ruin.

     “தக்கன் பெருவேள்வி செண்டாடுதல் புரிந்தான்” (தேவா. 908, 9);.

   க. செண்டாடிசு;   தெ. செண்டாடு;து. செண்டாடுனி.

     [செண்டு1 + ஆடு-.]

செண்டாய்தன்

செண்டாய்தன் ceṇṭāytaṉ, பெ. (n.)

   செண்டாய்தம் உடைய ஐயனார் (பிங்.);;{Aiyanār,} as bearing the weapon {Sendu.}

     [செண்டு1 + ஆய்தன்]

செண்டிப்பு

 செண்டிப்பு ceṇṭippu, பெ.(n.)

   குதித்துப் பின்வாங்குதலைக் குறிக்கும் உடலியக்கம்; jump-retreat method in kalarimartial fight.

     [செண்டு-செண்டிப்பு].

செண்டு

செண்டு1 ceṇṭu, பெ. (n.)

   1. கட்டப்பட்ட மலர்தொகுப்பு, பூக்கற்றை; a kind of bouquet.

     “செண்டாடல் பாடி” (திருவாச. 9:18);

   2. விளையாட்டில் பயன்படுத்தும் பந்து; ball used in games.

     “செண்டோ முலை” (தனிப்பா ii, 22:48);.

   3. குதிரைஓட்டும் சவுக்கு; horse-whip.

     “செண்டு கொண்டு கரிகாலன்” (கலிங்.165);.

   4. குதிரை முதலிய வற்றைப் பழக்கிச் செலுத்தும் வையாளி வீதி; குதிரையைப் பயிற்றும் சாலை; horse training area; racecoursc.

     “செண்டுசேர் விடையினான்” (தேவா. 35, 2);.

   5. பந்தடி மேடை (யாழ்.அக.);; terrace for ball-game.

   6. நூற்செண்டு (வின்.);; ball of thread.

   7. தீவட்டிச்செண்டு (இ.வ.);; ball of rags used in torch.

   8. கொடி; flag.

க., தெ. து., செண்டு

     [செள் → செண் → செண்டு (மு.தா. 171);]

மணவேளையின்போது மணமக்கள் கையில் கொள்ளும் சுட்டிய பூங்கொத்து, பூச்செண்டு. தீவட்டி, குதிரைச் சவுக்கு அனைத்தும் கையில் கொள்வன. குதிரையைப் பழக்கும் இடம், பந்தடி. மேடை ஆகியவை இடஞ் சார்ந்தன. முதலில் பூச்சுற்று செண்டாகியது; பின்னர் துணிச்சுற்று (பந்து); செண்டாகியது. கொடியையும் செண்டு என்றனர்.

 செண்டு2 ceṇṭu, பெ. (n.)

   1. கூர்மை (அக.நி.);; sharpness.

   2. மழு; a kind of axe.

     [சுள் → செள் → செண்டு (மு.தா.228);]

மரத்தைச் செதுக்குவதற்கு உரிய கோடரி மனிதர்களையும் வெட்டிச் (செதுக்குவதில்); சிதைப்பதற்கு உரிய மாற்றம் பெற்றது; கூர்முனையையுடையது.

செண்டுகோல்

செண்டுகோல் ceṇṭuāl, பெ. (n.)

   பந்தடிக்குங் கோல்; a kind of bat used in ball-game.

     “சுரிகையுந் தெறிவில்லுஞ் செண்டுகோலும்” (தி.வ்.பெரியாழ். 3. 4:3);.

     [செண்டு + கோல்]

செண்டுவாத்து

 செண்டுவாத்து ceṇṭuvāttu, பெ. (n.)

   நீலமும் பசுமையும் தோய்ந்த கருப்புநிற உடலையும் வெண்மையான மார்பையும் வயிற்றையும் கொண்ட பறை; comb duck.

தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் காணப்படுகிறது. ஆண் பறவையின் அலகின் நெற்றியை ஒட்டிய பகுதியில் குமிழ் அமைந்திருக்கும். பெண் பறவை ஆணை விட சிறியது.

செண்டுவெளி

செண்டுவெளி ceṇṭuveḷi, பெ. (n.)

   அரண்மனையைச் சார்ந்துள்ள குதிரையைப் பழக்கும் இடம்; open place adjacent to a palace, used for training and riding horses.

     “வெம்பரியூர் செண்டுவெளி பார்த்து” (தெய்வீகவுலா. 23);.

     [செண்டு + வெளி]

செண்டேறு-தல்

செண்டேறு-தல் ceṇṭēṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   உலாவரப் புறப்படுதல்; to promenade.

     “அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது” (திவ். திரு. நெடுந். 6, பக்.50);.

     [செண்டு + ஏறு-.]

செண்டை

செண்டை1 ceṇṭai, பெ. (n.)

   கேரள மாநிலத்தில் அதிகம் பயன்படும் ஒருவகைக் கொட்டிசைக் கருவி; a kind of large drum.

     “திமிலை செண்டை குறடு” (கம்பரா. பிரமாத். 5);.

   ம. செண்ட;து. செண்டெ

     [P]

 செண்டை2 ceṇṭai, பெ. (n.)

   இரட்டை (இ.வ.);; pair, set.

   க. சண்டி;தெ. சண்ட

     [சுள் → செள் → செண்டு → செண்டை

செண்டைவரிசை

செண்டைவரிசை seṇṭaivarisai, பெ. (n.)

   இசைப்பண் வரிசை; serial combination of the notes of the scale doubled, sung as exercise.

     [செண்டை2 + வரிசை]

சச, ரிரி, கக என ஏழிசைகளும் இரட்டை, இரட்டைகளாய் வருதல் (மு.தா.192);

செண்ணம்

செண்ணம் ceṇṇam, பெ. (n.)

   1. நுண்டொழில்; fine, delicate work.

     “செண்ண வஞ்சிலம் பேறுதுக ளவித்து” (சீவக. 1333);.

   2. அழகிய வடிவு; beautiful form.

     “செண்ணக் காஞ்சனை” (பெருங். உஞ்சைக். 3:75);.

மறுவ. நுண்வேலை

     [சன்னம் → சண்ணம் → செண்ணம்]

செண்ணிகைக்கோதை

செண்ணிகைக்கோதை ceṇṇigaigātai, பெ. (n.)

   பூமாலை வகை; a kind of garland.

     “செண்ணிகைக் கோதை கதுப்போ டியல” (பரிபா. 21: 56);.

     [கண்ணி (=பூமாலை); → செண்ணி → செண்ணிகை + கோதை]

செண்ணு-தல்

செண்ணு-தல் ceṇṇudal,    5 செ.குன்றாவி. (v.t..)

   அழகுபடுத்துதல் (அக.நா.59, உரை);; decorate, dress up.

     [செள் → செண் → செண்ணு-.]

செண்பகக்குளிகை

செண்பகக்குளிகை ceṇpagagguḷigai, பெ. (n.)

   பழைய காசு வகை (புது.கல். 261);; an ancient coin.

செண்பகம்

செண்பகம்1 ceṇpagam, பெ. (n.)

   மணமிக்க மஞ்சள் நிறப் பூப்பூக்கும் ஒருவகை மரம்; champak.

     “பெருஞ் செண்பகமும் பிண்டியும் பிரம்பும்” (பெருங் உஞ்சைக். 50: 25);.

ம. செண்பகம், செம்பகம்

     [சண்பகம் → செண்பகம்]

சண்பக மரம் வெப்பமண்டலத்தைச் சார்ந்தது. வடமொழியில் ‘சம்பகா’ என்று ஆளப்படுகிறது.

 செண்பகம்2 ceṇpagam, பெ. (n.)

செம்போத்து பார்க்க;see {Sem-bottu.}

 H., U. pue.

செண்பகராயநல்லூர்

 செண்பகராயநல்லூர் ceṇpagarāyanallūr, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Tanjāvur.

     [செண்பக+அரையன்+நல்லூர்].

செண்பகவருக்கை

 செண்பகவருக்கை ceṇpagavaruggai, பெ. (n.)

   பலாவகை (யாழ்.அக. );; a species of jack fruit tree.

செதலப்பதி

 செதலப்பதி cedalappadi, பெ.(n.)

   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒர் ஊர்; a village in Pudukottai district.

     [சிதலை+பதி],

செதால்

 செதால் cetāl, பெ.(n.)

   சிதார்கள்; broken pieces of splint.

     [சிதை-சிதார்-செதால்].

செதிலடுக்கு

 செதிலடுக்கு cedilaḍukku, பெ. (n.)

மீனின் மேல் செதில் செதிலாக உள்ள அமைப்பு:

 lamella.

     [செதில் + அடுக்கு]

செதில்

செதில் cedil, பெ. (n.)

   1. மீனின் உடல் மேலுள்ள காப்பு உறுப்பு; tish-scale.

     “பல கடலுஞ் செதிலடங்க… மீன்வடி வெடுத்தாய்” (அழகர்கலம். 1);.

   2. மரப்பட்டை (வின்.);; outer bark of trees.

ம. செதும்பல்

     [செது → செதில். சில் → சிலு → செலு = சிறு செதிள். செலு → செது]

செதிளெடு-த்தல்

செதிளெடு-த்தல் cediḷeḍuddal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. தோலையுரித்தல்; to skin off.

அங்கே போனால் உன் காலைச்செதிளெடுத்து விடுவேன்.

   2. முற்றும் போக்குதல்; to remove utterly.

     “கரு நிறஞ் செதிளெடுப்பான் கருணை செய்கென” (காஞ்சிப்பு. வீராட்ட 43.);

     [செதிள் + எடு]

செதிள்

செதிள் cediḷ, பெ. (n.)

   1. செதில்,1 பார்க்க;see {sedi,}

   2. தூசி; dust.

     “நிலஞ்செதி ளெடுக்கு மான்றேர்” (சீவக. 2915);.

   3. மரப்பட்டை (தொல்.பொருள்.643);; bark of a tree.

   4. ஓணான் போன்றவற்றின் உடல்மேல் செறிவாக மூடியிருக்கும் விறைப்பான தோல் அடுக்கு; skin.

ம. செதல்

     [சில் → சிலு → செலு → செது → செதிள்]

செதிள்வயிற்றுமரங்கொத்தி

 செதிள்வயிற்றுமரங்கொத்தி cediḷvayiṟṟumaraṅgoddi, பெ. (n.)

   புல் பச்சை நிற உடலும் மஞ்சள் நிறப்புட்டமும் கொண்ட பறவை; little scaly-bellied green wood pecker.

     [செதின்வயிற்று + மரங்கொத்தி]

ஆணின் உச்சந் தலையும், தலைக் கொண்டையும் குங்குமச் சிவப்பாக இருக்கும். பெண்ணின் உச்சியும் கொண்டையும் கருப்பு நிறமானவை. மேற்கு கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகிறது.

செது

 செது cedu, பெ. (n.)

   குற்றம்; blemish fault.

     ‘செது மதிமிகு சமணரும்’

     [சீத்தை-செது]

செது-த்தல்

செது-த்தல் ceduddal,    4 செ.கு.வி. (v.i.)

   1. ஒளி முதலியன மழுங்குதல்; to get blunt;

 to lose lustre.

செதுக்கணார (புறநா. 261:9);.

   2. வற்றி யொடுங்குதல் (புறநா. 261:9, உரை);; to shrink.

   3. சோர்தல்; to be weak.

     “செதுகாற் குரம்பை” (அகநா. 63);.

     [செத்தல் → செது-த்தல். செத்தல் = ஒல்லி, மெலிதல்]

செதுகு

செதுகு1 cedugudal,    5 செ.கு.வி. (v.i.)

   தவறுதல்; to err, as in aim;

 to go wrong.

     “செதுகாப்படை தொடுப்பேன்” (கம்பரா. நிகும்ப. 130);.

     [செது → செதுகு-.]

 செதுகு2 cedugu, பெ. (n.)

   1. கூளம்; rubbish.

 chaff.

     “குலால னானவன் மண்ணும் நீரும் செதுகுங் கூட்டி (ஈடு, 6.9:1);.

   2. சருகு; dried leaves.

     “செதுகையிட்டுப் புகைக்க அமையும்” (ஈடு, 1. 6:1);.

   3. தீங்கு; evil.

     “செதுகறா மனத்தார்” (தேவா. 381, 9);.

   ம. செதுக்கு;   க. சத்தெ, சதெ. செதாக;   தெ. செத்த;து. சதெ

     [செத்தை → செது → செதுகு]

செதுகை

செதுகை cedugai, பெ. (n.)

   தீமை; evil.

     “செதுகைப் பெருந்தானவர்” (கம்பரா. நாகபா. 22);

     [செதுகு → செதுகை]

செதுக்கடவேலை

 செதுக்கடவேலை cedukkaḍavēlai, பெ. (n.)

   அணிகலன்களில் மணிபதிக்குந் தொழில்; work of inlaying gem in gold jewels by setting gold leaf on it and chiselling.

     [செதுக்கு → செதுக்கடவேலை]

செதுக்கணார்-தல்

செதுக்கணார்-தல் cedukkaṇārdal,    3 செ.கு.வி. (v.i.)

   விஞ்சியிருத்தல் (புறநா. 261:9, உரை);; to be EXCCSSIV€.

மறுவ. மீதி, மிஞ்சுதல், எஞ்சுதல்

     [செது + கண் + ஆர்-.]

செதுக்கி

 செதுக்கி cedukki, பெ. (n.)

செதுக்குப்பாறை பார்க்க;see {Sedukku-p-pāraī.}

     [செதுக்குப்பாரை → செதுக்கி]

செதுக்கு

செதுக்கு1 cedukkudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. புல் முதலியன செதுக்குதல்; to cut off a surface, as in cutting grass;

 to pare, shave off.

   2. மர முதலியன செதுக்குதல்; to plane, how with an adze, chisel.

கட்டையைச் செதுக்கிக் கத்திக்குப் பிடி போட்டான்.

   ம. செதுக்கு;   க., பட. கெத்து;தெ. செக்கு

     [செது → செதுக்கு-.]

 செதுக்கு2 cedukku,    5 செ.கு.வி. (v.i.)

செது,2 பார்க்க;see {Sedu-2.}

     [செது → செதுக்கு-.]

 செதுக்கு3 cedukku, பெ. (n.)

   1. செதுக்குகை; paring, cutting, chiselling.

   2. பூ முதலியவற்றின் வாடல்; that which is faded, dried, as flowers.

     “செம்பூத் தூய செதுக்குடை முன்றில்” (பெரும் பாண். 338);.

   3. சேறு (அக.நி.);; mud, mire.

     [செது → செதுக்கு]

செதுக்குப்பாரை

 செதுக்குப்பாரை cedukkuppārai, பெ. (n.)

   புல் மண் முதலியன செதுக்குங் கருவி; tool for cutting grass, soil, etc.

     [செதுக்கு + பாரை]

செதுக்குளி

செதுக்குளி cedukkuḷi, பெ. (n.)

   1. தச்சனின் உளி; carpenter’s chisel.

   2. மணி பதித்தற்குரி தட்டான் கருவி; gold-smith’s chisel, used in enchasing.

     [செதுக்கு + உளி]

செதுக்குவேலை

செதுக்குவேலை cedukkuvēlai, பெ. (n.)

   1. மிகையாயுள்ளவற்றைக் கழித்துச் சீர்படுத்தும் கலைத்தொழில்; the art of trimming the excess portion for beautification.

   2. செதுக்கடவேலை பார்க்க;see {Sedukkada-velai.}

     [செதுக்கு + வேலை]

செதுக்கை

 செதுக்கை cedukkai, பெ. (n.)

தழும்பு (பிங்.);:

 scar, cicatrice.

     [செது → செதுக்கை]

செதுமகவு

செதுமகவு cedumagavu, பெ. (n.)

   இறந்து பிறக்கும் பிள்ளை, சாபிள்ளை; still-born child.

     “செதுமகப் பலவும் பெற்று” (சீவக. 1124);.

     [(செத்த); செது + மகவு]

செதுமொழி

செதுமொழி cedumoḻi, பெ. (n.)

   தீ மொழி பொல்லாச் சொல்; evil words.

     “செதுமொழி சீத்த செவி” (கலித். 68);.

     [செது + மொழி]

செதும்பல்

செதும்பல் cedumbal, பெ. (n.)

செதும்பு,1 பார்க்க;see {Sedumbu,}1.

     “செதும்ற் றாமரைச்செவ்விதழ் போல” (பெருங். உஞ்சைக். 40: 323);.

     [செதும்பு → செதும்பன்]

செதும்பு

செதும்பு1 cedumbudal,    5 செ.கு.வி. (v.i) ஈரம் உறைத்தல்; to become damp and moist, as from excessive sprinkling of water;

 to be soaked.

செதும்ப நீர்தெளி (இ.வ.);.

 செதும்பு2 cedumbu, பெ. (n.)

   1. சேறு; mud, mire.

     “செகுத்தற் றீம்பால் செதும்பு படப் பிலிற்றி” (பெருங். உஞ்சைக். 49: 112);.

   2. குறைவாக ஓடும் நீர்; thin current of water,as of rivers in summer.

     “இன்னுரைச் செதுமபரற்றுஞ் செவ்வியுள்” (கலித். 48);.

     [செதுக்கு2 → செதும்பு]

செதுவல்

செதுவல் ceduval, பெ. (n.)

   பட்டுப் போகை; withering, drying.

     “செதுவன் மரத்திற் சேக்கை யாதலின்” (பெருங்.மகத , 15:20);

     [செது1 → செதுவல்]

செதுவாலை

 செதுவாலை ceduvālai, பெ.(n.)

   வேலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Vellore Taluk.

     [ஒருகா. சிதல்+வாலை].

செத்தணி

செத்தணி cettaṇi, பெ. (n.)

திருத்தணிகை (கந்தபு. வள்ளி. 216);;{Tiruttaņigai.}

மறுவ. திருத்தணி

     [செரு + தணி. செரு = போர், சினம்]

செத்தமூரல்

 செத்தமூரல் cettamūral, பெ.(n.)

   ஒருவகை மீன்; gat fish.

     [சா-செத்த+மூரல்].

செத்தரி

செத்தரி cettari, பெ. (n.)

   1. எலும்புந் தோலுமான பெண் (யாழ்ப்.);; lanky or skinny woman.

   2. மெலிகை அல்லது இற்றுப் போகை; leaning or becoming to powerless.

     [செத்தல் → செத்தலி]

செத்தலை

 செத்தலை cettalai, பெ. (n.)

   உழவுக் கணக்கு; cultivation accounts.

செத்தலை யிலே புளித்தரவு எழுதவும்.

     [செய் + தலை – செத்தலை]

செத்தல்

செத்தல் cettal, பெ. (n.)

   1. சாகை (யாழ்ப்.);; dying.

   2. தேங்காய் நெற்று (யாழ்ப்.);,

 dry, over-ripe coconut on the tree.

   3. உலர்ந்து கருங்கிய பனம்பழம், மிளகாய், வாழை முதலியன; shrivelled palmyra or other fruit; dried chillies, plantain trees, vegatbles or grass.

   4. ஒல்லி (வின்.);; emaciated person; {leán,} skinny animal.

   5. மெலிவு; leanness.செத்தற் பிள்னை (யாழ்.அக.);.

   6. பதர் (தெ.க:தொ. 5, 84);; chaff, withered.

     [சா → (சத்தல்); → செத்தல்]

செத்தல்மிளகாய்

 செத்தல்மிளகாய் cettalmiḷakāy, பெ. (n.)

   மிளகாய் வற்றல் (யாழ்ப்.);; dried chilly.

     [செத்தல் + மிளகாய்]

செத்தவீடு

 செத்தவீடு cettavīṭu, பெ. (n.)

   இழவு வீடு (உ.வ.);; mourning house.

மறுவ. துட்டி வீடு, இறப்பு வீடு.

     [செத்தல் + வீடு – செத்தவீடு]

செத்து

செத்து1 ceddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   செதுக்குதல்; to cut with adze, chisel, {pare} off.

     “மனத்தையுங் குழையச் செத்து மாண்பினன்” (சீவக. 1578);.

   ம. செத்துக;   க., பட. கெத்து;தெ. செக்கு

     [செதுக்கு → செத்து-.]

 செத்து2 cettu, வி.எ. (adv.)

   1. கருதி; having thought.

     “அரவுநீ ருணல் செத்து” (கலித். 45);.

   2. ஒத்து (தொல். பொருள். 286, உரை);; having resembled.

   3. ஐயம் (யாழ்.அக.);; doubt.

     [செய் → செ → செத்து (மு.தா. 216);]

 செத்து3 cettu, பெ. (n.)

   செதுக்குகை; cutting. chiseling.

     “வாய்ச்சியினது வாயைச் சேர்த்தி ஒரு மயிர்க்கு ஒரு செத்தாகக் செத்தினாலும்” (சீவக. 2825, உரை);.

     [செதுக்கு → செத்து]

செத்துபனை

 செத்துபனை cettubaṉai, பெ. (n.)

   கள்ளிறக்கும் பனை (நாஞ்.);; toddy-yielding palmyra.

     [செத்து + பனை]

செத்துபாட்டம்

செத்துபாட்டம் cettupāṭṭam, பெ. (n.)

   பனையிற் கள்ளிறக்கக் கொடுக்கும் வரி (நாஞ்.);; tax paid for tapping palmyra.

     [செத்து1 + பாட்டம்]

செத்துப்பிழை-த்தல்

செத்துப்பிழை-த்தல் cettuppiḻaittal,    4 செ.கு.வி. (v.i.)

   நெருக்கடிக்கு உள்ளாகி மீள்தல்; have a narrow escape; survive a crisis.

காமாலை நோயால் அவதிப்பட்டுச் செத்துப் பிழைத்தான் என்று தான் நினைக்க வேண்டும்.

     [செத்து + பிழை-.]

செத்துவம்

செத்துவம் cettuvam, பெ. (n.)

   பேய்; spirit.

     “செத்துவங்க டாக்கி” (நீலகேசி, 112);.

     [சா → (சத்துவம்); செத்துவம்]

செத்துவிருப்பாநெல்

 செத்துவிருப்பாநெல் cettuviruppānel, பெ. (n.)

   நெல்வகை; a kind of paddy.

செத்தெழுத்து

 செத்தெழுத்து cetteḻuttu, பெ. (n.)

   ஒற்றெழுத்து (வின்.);; consonant.

மறுவ. மெய்யெழுத்து

     [செத்தல் + எழுத்து]

உயிரற்ற மெய்யெழுத்து

செத்தை

செத்தை cettai, பெ. (n.)

   1. கூரை வேய்வதற்கான தட்டை, புல், சருகு முதலியன; rooting materials like leaves, straw etc.

   2. குப்பை; dry rubbish, dried vegetable matter, as grass, leaves, etc.,

     “செத்தையேன் சிதம்பநாயேன்” (தேவா. 996, 1);.

   3. வைக்கோல் (இ.வ.);; hay, straw.

   4. ஓலைவேலி (யாழ்ப்.);; hedge or fence of palm leaves.

   5. அழுகின தசை; putrefied flesh.

மாட்டின் காலிற் செத்தை வைத்திருக்கிறது (நாஞ்.);.

   6. கன்று ஈனிய பிறகு மாடு வெளியிடும் நஞ்சு; pleasanta.

   7. வெண் சாம்பல் நிறமுள்ள கடல் மீன் வகை; Seafish, silvery grey.

   ம. செற்ற;   க. செத்தெ;தெ. செத்த

     [சா → செத்து → செத்தை]

செத்தைகட்டு-தல்

செத்தைகட்டு-தல் ceddaigaṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

பழத்துக்கு ஒலை மறைவு கட்டுதல் (யாழ்ப்.);:

 to cover fruit with olas, screening it from coveting or evil eyes.

     [செத்தை + கட்டு-.]

செத்தைகுத்து-தல்

செத்தைகுத்து-தல் ceddaiguddudal,    5 செ.கு.வி. (v.i.)

   மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல்; to root out parasitic plants on walls.

     “நித்தியப்படி திருமதில் கோபுரங்களிலே செத்தை குத்தி வைக்கிறதும்” (கோயிலொ. 63);.

     [செத்தை + குத்து-.]

செத்தைமேய்-தல்

செத்தைமேய்-தல் cettaimēytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   கூரையைக் காய்ந்த தழை வைக்கோல் முதலியவற்றால் மூடுதல் (வின்.);; to cover roof with dried leaves, hay etc.

     [செத்தை + மேய். வேய் → மேய்]

செத்தைவேர்

 செத்தைவேர் cettaivēr, பெ. (n.)

   நெல் வயலில் முளைக்குங் களை வகை (நாஞ்.);; a kind of weed growing in paddy-fields.

     [செத்தை + வேர்]

செத்தோர்ப்புணர்-த்தல்

செத்தோர்ப்புணர்-த்தல் cettōrppuṇarttal,    2 செ.கு.வி. (v.i.)

   இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்தல்; to restore to life, resuscitate.

     “செத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு” (பெருங். மகத. 4:91);.

     [செத்தோர் + புணர்-.]

புணர்த்தல் = உயிர் பெற்றெழச் செய்தல்

செந்தடி

செந்தடி cendaḍi, பெ. (n.)

   சிவந்த இறைச்சி; redish fesh.

     ‘செந்தடிக் குருதிப்பைந்நினக் கொழுங்குடர்”(பெருங். 529);

     [செம்+தடி]

செந்தட்டி

 செந்தட்டி cendaṭṭi, பெ. (n.)

செந்தொட்டி பார்க்க;see {Sen-dotti,’}

செந்தட்டு

செந்தட்டு cendaṭṭu, பெ. (n.)

   1. தன்மேல் விழும் அடியைத் தடுக்கை; parrying.

   2. செயல் வெற்றி கிட்டுமாறு செய்யும், மறைந்து கொள்ளல் முதலிய செயற்பாடு; scheme knavish contrivance to secure an object, as evading a creditor or the tax gatherer.

     [செம்(மை); + தட்டு – செந்தட்டு]

செந்தணக்கு

செந்தணக்கு cendaṇakku, பெ. (n.)

   1. முட்டைக் கோங்கு எனும் மரம்; whirling nut.

   2. கோங்கிலவு மரவகை; false tragacanth tree.

   3. வெண்டாளி; white catamaran tree.

ம. செந்தணக்கு

     [செம்(மை); + தணக்கு]

செந்தணற்கொடி

 செந்தணற்கொடி cendaṇaṟkoḍi, பெ. (n.)

செந்தழற்கொடி பார்க்க;see {Šen-dalar-kodi}

     [செந்தணல் + கொடி.]

செந்தணல்

 செந்தணல் cendaṇal, பெ. (n.)

   கனிந்து கொண்டிருக்கும் அழல் (உ.வ.);; glowing redhot cinder.

   ம. செந்தணல்;க. கெந்தணலு

     [செம்(மை); + தணல். தழல் → தணல்]

செந்தண்டீன்(னு)-தல்

செந்தண்டீன்(னு)-தல் cendaṇṭīṉṉudal,    5 செ.கு.வி. (v.i.)

   நோயுற்ற கதிரை ஈனுதல் (யாழ்ப்..);; to put forth blighted ears.

     [செந்தண்டு + ஈன்(னு);]

செந்தண்டு

செந்தண்டு cendaṇṭu, பெ. (n.)

   1. செந்தண்டுக் கீரை பார்க்க;see {Šendangu-k-kīrai.}

   2. நோயாற் சிவந்த கதிர் (யாழ்ப்.);; red spikes of blighted paddy.

   3. பவளம் (யாழ்.அக.);; coral.

ம. செந்தண்டு

செந்தண்டுக்கீரை

 செந்தண்டுக்கீரை cendaṇṭukārai, பெ. (n.)

   செந்நிறமுள்ள கீரைவகை (வின்.);; red spinach.

ம. செந்தண்டுசீர

     [செந்தண்டு + கீரை]

செந்தனாகுலியம்

 செந்தனாகுலியம் centaṉākuliyam, பெ.(n.)

   கருப்பு மிளகுச் செடியின் வேர் (செவ்வியம்);; root of black pepper plant Piper nigrum (சா.அக.);.

     [கந்தனம்+குலியம்]

செந்தனோபிதம்

 செந்தனோபிதம் centaṉōpitam, பெ.(n.)

   பரம்பை; Indian mesquit or Arjuna’s penance tree – Prosopis spicigera (சா.அக.);.

செந்தமிழிலக்கணம்

 செந்தமிழிலக்கணம் cendamiḻilakkaṇam, பெ. (n.)

   வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ் மொழியின் இலக்கம்; a grammar of classical Tamil by Beschi.

     [செந்தமிழ் + இலக்கம்]

செந்தமிழ்

செந்தமிழ் cendamiḻ, பெ.(n.)

செம்மையுற்றதமிழ்,

 refined Tamil.

     [செம்+தமிழ்].

 செந்தமிழ் cendamiḻ, பெ. (n.)

   கலப்பற்ற தூய தமிழ்; refined, standard Tamil, free from all corruptive elements. opp. to {kodu-n-tamil}

     “செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” (தொல். சொல். 398);.

ம. செந்தமிழ்

     [செம்(மை); + தமிழ்]

செந்தமிழ்நாடு

செந்தமிழ்நாடு cendamiḻnāṭu, பெ. (n.)

   1. செந்தமிழ் வழங்கும் பகுதி; portion where standared Tamilisinvogue.

   2. வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் மருவூரின் மேற்கும் கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம்(தொல்.சொல். 400, உரை);:

 the country of the standard Tamil, said to be bounded on the south by the river Vaigai on the north by the river Mrudai on the east by {Maruvur,} and on the west by {Karuvur.}

     [செந்தமிழ் + நாடு]

செந்தமிழ்நிலம்

செந்தமிழ்நிலம் cendamiḻnilam, பெ. (n.)

செந்தமிழ்நாடு பார்க்க;see {Sen-damil-nādu.}

     “செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” (தொல். சொல். 398);

     [செந்தமிழ் + நிலம்]

செந்தம்

 செந்தம் cendam, பெ. (n.)

   எழுத்தாணி யென்னும் பூடு (மலை.);; style plant.

ம. செந்தம்

செந்தயிர்

செந்தயிர் cendayir, பெ. (n.)

   செந்நிறமுள்ள கட்டித்தயிர்; reddish curds.

     “வெண்டயிருஞ் செந்தயிரும் விராய்” (கலிங். 506);.

     [செம்(மை); + தயிர்]

செந்தரா

செந்தரா cendarā, பெ. (n.)

   கசப்புள்ள மருந்துக்கொடி வகை (பதார்த்த. 581);; a kind of bitter climber.

     [செம் → தரா]

செந்தருப்பை

 செந்தருப்பை cendaruppai, பெ. (n.)

   நச்சுப் புல்வகை (மலை.);; a kind of poisonous grass.

     [செம்மை + தருப்பை]

செந்தரை

செந்தரை cendarai, பெ. (n.)

   கரை விளங்கு மரவகை (L.);; a species of white cadar.

 செந்தரை cendarai, பெ. (n.)

   பாலை, நிலம்; desert.

     “செந்தரைக் குருதிப் பைந் நினக் கொழுங்குடர் (பெருங். 52:9);

     [செம்+தரை]

செந்தலி-த்தல்

செந்தலி-த்தல் cendalittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. செழிப்பாதல் (திவ். திருவாய். 6. 8: 4 பன்னீ);; to be rich, fertile, as soil.

   2. செவ்வியுறுதல்; to be fresh and attractive.

     “நம்முகம் பண்டுபோலே செந்தலித்திருக்க நாம் காண்பதெப்போதோ? (திவ்.திருநெடுந் 12, வியா. பக்.107);.

     [செம் + தளிர் – செந்தளிர் → செத்தலி]

செந்தலிப்பு

செந்தலிப்பு cendalippu, பெ. (n.)

   செழிப்பு; fertility, prosperity.

     “அவனுடைய செந்தலிப் பேயிறே அத்தேசத்திற்குஞ் செந்தலிப்பு” (திவ். திருநெடுந். 12: 105, வியா);.

     [செந்தளிர் → செந்தலி → செத்தலிப்பு]

செந்தலை

செந்தலை cendalai, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒர் ஊர்; a village in Thanjāvur.

     [செல்+தலை (இடம்);] .

 செந்தலை cendalai, பெ. (n.)

   அரைக்கால்; the fraction 1/8, a mercantile slang.

     “க்ருந்தலை செந்தலை தங்கான் றிரிக்கால்” (தனிப்பா7. 87: 171);

செந்தலைக்கதிர்க்குருவி

 செந்தலைக்கதிர்க்குருவி cendalaikkadirkkuruvi, பெ. (n.)

   உச்சந்தலை செம்பழுப்பாகவும் உடலின் மேற்பகுதி கருங் கோடுகளோடும் கீழ்ப்பகுதி துருநிறமாகவும் இருக்கும் பறவை; golden-headed fantail warbler.

     [செந்தலை + கதிர்க்குருவி]

இது கொடைக்கானல், நீலகிரி மலைப் பகுதிகளில் காணப்படும் பறவை வகை

செந்தலைக்கழுகு

 செந்தலைக்கழுகு cendalaiggaḻugu, பெ. (n.)

   கருப்பு நிற வுடலையும், தலை, கழுத்து, தொடை, கால் ஆகிய பகுதிகள் சிவப்பு நிறமாகவும் உள்ள பறவை; red-headed vulture.

     [செந்தலை + கழுகு]

தமிழ்நாடு முழுமையும் வறள் காடுகளிலும், மக்கள் வாழ்விடத்தை அடுத்தும் காணப்படும் பறவை. பிணம் தின்னும் பறவை. மற்ற வகைக் கழுகுகளினும் வலிமை வாய்ந்ததால் கழுகு அரசன் (King vulture); என்று அழைக்கப்படுகிறது. கழக இலக்கியங்களில் ‘செஞ்செவி எருவை’ எனக் குறிக்கப்படுகிறது.

செந்தலைக்கிளி

 செந்தலைக்கிளி cendalaikkiḷi, பெ. (n.)

   நீலந்தோய்ந்த சிவப்பு நிறத்தலையும் மஞ்சள் நிற அலகும் கொண்ட கிளி; plum-headed parakeet.

     [செந்தலை + கிளி]

செந்தலைப்பஞ்சுருட்டான்

 செந்தலைப்பஞ்சுருட்டான் cendalaippañjuruṭṭāṉ, பெ. (n.)

   செம்பழுப்பு நிறத் தலையும் புல்பச்சை நிற உடலும் கொண்ட பறவை; chestnut-headed bee.

     [செந்தலை + பஞ்சுருட்டான்]

மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்த இலையுதிர் காடுகளில் காணப்படும் பறவை.

செந்தலைப்புலி

செந்தலைப்புலி cendalaippuli, பெ. (n.)

   சிவப்புத் தலைப்பாகை அணிந்த காவல் துறைப் பணியாளர்; police constable, asa tiger with red turban, used in contempt mod.

     [செம் + தலை + புலி]

ஆங்கிலேயர் ஆட்சி முதல் 1972 ஆம் ஆண்டு வரை காவலரின் தலைத் தொப்பி சிவப்பு வண்ணத்தில் இருந்தது. பின்னர் சீருடை மாறிவிட்டது.

செந்தலைப்பூங்குருவி

 செந்தலைப்பூங்குருவி cendalaippūṅguruvi, பெ. (n.)

   தலை பிடரி, மார்பு, வயிறு ஆகிய பகுதிகள் ஆரஞ்சு நிறம் தோய்ந்த செம்பழுப்பாக இருக்கும் குருவியினப் பறவை வகை; orange headed thrush.

     [செந்தலை + பூங்குருவி]

நிழல் அடர்ந்த மலையருவிகள், நிழலான ஏலக்காய்த் தோட்டங்கள், மூங்கில் காடுகள் ஆகிய பகுதிகளில் காணப்படும் பறவை.

செந்தலைமுத்தி

 செந்தலைமுத்தி cendalaimutti, பெ. (n.)

   எலிவகை (வின்.);; a kind of rat.

     [செம் + தலை + முத்தி]

செந்தலைவல்லூறு

 செந்தலைவல்லூறு cendalaivallūṟu, பெ. (n.)

   செந்நிறத் தலையை உடைய ஒரு வகை வல்லூறு; marlin redhead falco.

     [செத்தலை + வல்லுறு]

செந்தலைவிரியன்

 செந்தலைவிரியன் cendalaiviriyaṉ, பெ. (n.)

   நச்சுப் பாம்பு வகை (யாழ்.அக.);; russell’s viper,

     [செந்தலை + விரியன்]

செந்தளி-த்தல்

செந்தளி-த்தல் cendaḷittal,    4 செ.கு.வி. (v.i.)

செந்தலி-பார்க்க;see {Sen-dali}

     [செம் + தனிர் → தனி]

செந்தளிப்பு

 செந்தளிப்பு cendaḷippu, பெ. (n.)

பார்க்க;see {Śen-dallippu.}

     [செந்தளி → செந்தளிப்பு]

செந்தளிர்

செந்தளிர் cendaḷir, பெ. (n.)

   செந்நிறமுள்ள இளந்தளிர்; fresh, tender sprout, as reddish.

     “செந்தளிர் மரா அத்துப் பைங்காய்” (பெருங். மகத 1:114);

செந்தளிர்ப்பு

செந்தளிர்ப்பு cendaḷirppu, பெ. (n.)

   1. செழிப்பு (வின்.);; fertility, luxuriance, prosperity.

   2. மகிழ்ச்சி (யாழ்ப்);; joy, happiness.

     [செந்தளிர் → செந்தளிர்ப்பு]

செந்தழற்கொடி

 செந்தழற்கொடி cendaḻṟkoḍi, பெ. (n.)

   பவளக் கொடி (யாழ்.அக.);; creeper-like coral.

     [செம் + தழல் + கொடி.]

செம்மையான கொடி போன்ற பவளம்

செந்தழல்

செந்தழல் cendaḻl, பெ. (n.)

   1. பொங்கி யெரியுந் தீ; blazing fire.

     “செந்தழலே வந்தழலைச் செய்திடினும்” (திவ்.பெருமாள். 5:6);.

   2. செந்தணல், கனிந்து கொண்டிருக்கும் தீ; glowing red hot cinder.

   3. 18வது விண்மீன் (கோட்டை); (யாழ்.அக.);; the 18th star.

     [செம் + தழல்]

செந்தவிடு

 செந்தவிடு cendaviḍu, பெ.(n.)

   சிவப்பு நெல் பச்சரிசித் தவிடு; brain of red paddy

     [செம்+தவிடு].

செந்தாது

 செந்தாது cendātu, பெ. (n.)

   பொன் (திவா.);; gold

     [செம் + தாது]

செந்தாமரை

செந்தாமரை cendāmarai, பெ. (n.)

   செந்நிறமுள்ள தாமரை; red lotus.

     “அஞ்செந் தாமரை யகவித ழன்ன” (பெருங். உஞ்சைக். 53: 149);.

   ம. செந்தாமரை, செந்தார்;க. செந்தாவரெ

     [செம்(மை); + தாமரை. வெண் தாமரை போல செந்தாமரை நிறத்தால் பெயர் பெற்றிருக்கிறது]

செந்தாமரைக் கண்ணன்

செந்தாமரைக் கண்ணன் cendāmaraikkaṇṇaṉ, பெ.(n.)

   மூன்றாம் இராசராசனுடைய ஆட்சியின் போது (1235); திருவோத்துர் கோயிலுக்கு 2 விளக்குகள் வைக்கக் கொடை அளித்தவன்; name of a donar to Tiruvottur temple.

     [செம்+தாமரை+கண்னன்].

செந்தாரை

 செந்தாரை cendārai, பெ. (n.)

   வெண்மை கலந்த சிவப்பு (இ..வ.);; pale redness.

     [செம் + தாரை. தாரை = கோடு]

செந்தார்

செந்தார் cendār, பெ. (n.)

   கிளிக்கழுத்தின் செவ்வரை; bright red streaks round parrot’s ncck.

     “செந்தார்ப் பைங்கிளி முன்கை யேந்தி” (அகநா. 34);.

     [செம் + தார்]

செந்தார்ப்பைங்கிளி

 செந்தார்ப்பைங்கிளி cendārppaiṅgiḷi, பெ. (n.)

   பச்சைக்கிளி; rose-ringed paraker.

     [செந்தார் + பைங்கிளி]

இதன் கழுத்தில் உள்ள ரோசா நிற வளையக் கோடு கொண்டு இலக்கியங்களில் செந்தார்ப் பைங்கிளி என அழைக்கப்படுகிறது.

செந்தாளி

 செந்தாளி cendāḷi, பெ. (n.)

கொடிவகை (L.);:

 red convolvulus.

     [செம் + தாளி]

செந்தாள்

 செந்தாள் cendāḷ, பெ. (n.)

   நோய்ப்பட்ட பயிரின் செந்நிறமான கதிர் (யாழ்ப்.);; red spikes of blighted paddy.

     [செம் + தாள்]

செந்தாழம்பழம்

 செந்தாழம்பழம் cendāḻmbaḻm, பெ. (n.)

   அன்னாசிப்பழம் (மூ.அ.);; pine-apple fruit.

     [செம் + தாழம்பழம்]

செந்தாழம்பழம்

செந்தாழை

செந்தாழை1 cendāḻai, பெ. (n.)

   1. செந்நிறமுள்ள தாழை வகை (பதார்த்த. 622);; redspecies of screw pine.

   2. கோங்கிலவு மரவகை; false tragacanth.

   3. பார்வை மறைவுண்டாக்கும் கண்ணோய் (வின்.);; redness of the eye causing obscurity of sight.

   4. பயிரைச் செந்நிறமாக்கும் நோய்; red blight of paddy.

   5. உதட்டிற் புண்ணுண்டாக்கி வாயில் கெட்ட நாற்றம் அடைவிக்கும் நோய் (வின்.);; a disease which causes the mouth to smell badly, making the lips sore.

     [செம் + தாழை]

 செந்தாழை2 cendāḻai, பெ. (n.)

   நெல்வகை (குருகூர்ப். 58);; a kind of paddy.

     [செம் + தாழை]

செந்தி

செந்தி cendi, பெ. (n.)

செந்தில் பார்க்க (கந்தபு. முதனா. 6);;see {Sendil.}

     [செந்தில் → செந்தி]

செந்திட்டு

 செந்திட்டு cendiṭṭu, பெ.(n.)

   சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk.

     [செம்+திட்டு].

செந்தினை

செந்தினை cendiṉai, பெ. (n.)

   1. தினை வகை; Italian millet.

     “செந்தினையிடியுந் தேனும்” (கந்தபு. வள்ளி 208);.

   2. கம்புப்பயிர் (சூடா.);; bulrush millet.

ம. செந்தினை

     [செம்(மை); + தினை]

செந்திரிக்கம்

 செந்திரிக்கம் cendirikkam, பெ. (n.)

செந்திருக்கம் பார்க்க;see {sendirukkam.}

     [செத்திருக்கம் → செந்திரிக்கம்]

செந்திரு

செந்திரு cendiru, பெ. (n.)

   1. திருமகள்; goddess of wealth.

     “செந்திரு நீரல்லிரே லவளும்வந்தேவல்செய்யும்” (கம்பரா. மாயாசகை 53);.

   2. தாளகம் (மூ.அ.);; yellow sulphide of arsenic.

     [செம் + திரு – செந்திரு]

செந்திருக்கம்

செந்திருக்கம் cendirukkam, பெ. (n.)

   1. ஒலைக் கடிதத்தின் மூடு சுருள் (வின்.);; ola envelopeof an ola letter.

   2. காற்றாடிக் கயிற்றில் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஒலைச் சுருள் (நாஞ்.);; an ola scroll passed through the string of a flying kite.

ம. செந்திரிக்க

 Skt. Candraka

     [செத்துருக்கம் → செந்திருக்கம்]

செந்திருக்கு

செந்திருக்கு cendirukku, பெ. (n.)

   1. செடி வகை (மூ.அ.);; a plant.

   2. செந்திருக்கம்,2 பார்க்க;see {Sendirukkam,2.}

     [செந்திருக்கம் → செந்திருக்கு]

செந்திருக்கை

செந்திருக்கை1 cendirukkai, பெ. (n.)

திருக்கை மீன் வகை:

 a kind of dirukkai fish.

     [செம் + திருக்கை]

 செந்திருக்கை2 cendirukkai, பெ. (n.)

   மஞ்சள் வகை (யாழ்.அக.);; a kind of turmeric.

செந்திறம்

செந்திறம் cendiṟam, பெ. (n.)

   1. சிவப்பு (சங்.அக.);; redness.

   2. குறிஞ்சி யாழ்த்திறத் தொன்று (திவா.);; a secondary melody-type of the {kuriñji} class.

   3. தெளிவு; clearness.

     “செந்திறத்த தமிழோசை” (திவ். திருநெடுந். 4);.

ம. செந்நிறம்

     [செம் + திறம். நிறம் → திறம்]

செந்திலகம்

செந்திலகம் cendilagam, பெ. (n.)

   செடி வகை (புட்ப. 29);; a kind of plant.

செந்தில்

செந்தில் cendil, பெ. (n.)

   முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகிய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர்;{Tiru-C. cendür,} one of six abodes of Lord {Murugan} in Thoothukudi distirict.

     “வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்” (புறநா. 55: 18);

திருப்பரங்குன்றம், திருச்செந்துார். பழனி, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலை, சுவாமி மலை ஆகியன முருகனின் ஆறு படை வீடுகள் ஆகும். இவற்றிற்கு வேறு பெயர்களும் உள. அவை திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவின் குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர் சோலை ஆகியனவாகும். திருச்சீரலைவாய் என்பது திருச்செந்துாரின் மறுபெயர்.

     [சேத்து + இல் – சேந்தில் → செந்தில்]

செந்தீ

செந்தீ cendī, பெ. (n.)

   கொழுந்து விட்டெரியுந் தீ; blazing fire.

     “ஊருளெழுந்த வுருகெழு செந்தீக்கு” (நாலடி., 90);.

ம. செந்தீ

     [செம் + தீ]

செந்தீக்கரப்பன்

 செந்தீக்கரப்பன் cendīkkarappaṉ, பெ. (n.)

   கரப்பன் கட்டி வகை; erysipelas, a kind of cutaneous eruption.

ம. செந்தீக்கரப்பன்

     [செந்தீ + கரப்பன்]

செந்தீவண்ணன்

செந்தீவண்ணன் cendīvaṇṇaṉ, பெ. (n.)

   1. சிவன்;{Sivan,}

   2. செவ்வாய் (திவா.);; Mars.

நெருப்பின் நிறமுடையவன் என்ற பொருள் அடிப்படையில் இச்சொல் சிவனையும், செவ்வாயையும் குறித்தது.

     [செந்தீ + வண்ணன்]

செந்தீவளர்ப்போர்

 செந்தீவளர்ப்போர் cendīvaḷarppōr, பெ. (n.)

 Brahmins, as tending the sacred fire.

     [செந்தீ + வளர்ப்போர்]

செந்தீவேள்-தல் (செந்தீவேட்டல்)

செந்தீவேள்-தல் (செந்தீவேட்டல்) cendīvēḷtalcendīvēṭṭal,    16 செ.கு.வி. (v.i.)

   வேள்வி (யாகம்); செய்தல்; to perform {Védic} sacrifice

     “செந்தீவேட்ட சிறப்புரைத் தன்று” (பு.வெ.9: 15, கொளு);.

     [செந்தீ + வேள்-.]

செந்து

செந்து1 cendu, பெ. (n.)

   1. உயிரி (பிங்.);; anything possessed of life, living being, creature.

   2. ஊர்வன; animal of the inferior species, as the lower brutes, insects, reptiles, worms etc.

   3. நரி (பிங்.);; jackal.

   4. அணு; atom.

   5. ஏழுநிரய (நரக);த்தொன்று (பிங்.);; a hell, one of {elunaragam.}

வ. ஐந்து.

 செந்து2 cendu, பெ. (n.)

   1. பெரும் பண்களுள் ஒன்று; a primary melody-type.

   2. ஓசை; sound.

 செந்து3 cendu, பெ. (n.)

   1. சடாமாஞ்சி (மலை.);; spikenard herb.

   2. பெருங்காயம் (மூ.அ.);; assafoetida.

செந்துக்கு

 செந்துக்கு cendukku, பெ.(n.)

   அகவலோசை தழுவிய சந்தம்; agaval variety of tune in prosody.

     [செம்+துரக்கு].

செந்துத்தி

 செந்துத்தி cendutti, பெ. (n.)

   சிறுதுத்தி (மூ.அ.);; fine-winged capsule rose mallow.

     [செம் + துத்தி]

செந்துத்தீ

செந்துத்தீ cenduttī, பெ. (n.)

செந்து3 பார்க்க;see {Sendu.}

     [செந்து → செந்துத்தீ]

செந்துமி

 செந்துமி cendumi, பெ. (n.)

   செம்மரம்; Indian red wood tree or bastard cedar.

செந்தும்பி

செந்தும்பி cendumbi, பெ. (n.)

   ஏறக்குறைய 14 விரலம் (அங்குலம்); நீளமும் செந்நிறமும் உடைய கடல்மீன் வகை; sea-fish, reddish, attaining nearly 14 in. in length.

     [செம் + தும்பி. தும்பி = மீன்வகை]

செந்தும்பை

 செந்தும்பை cendumbai, பெ. (n.)

   தும்பை வகை (மூ.அ.);; a species of spider flower, shrub.

ம. செந்தும்ப

     [செம்(மை); + தும்பை]

செந்துரசம்

 செந்துரசம் sendurasam, பெ. (n.)

   ஒருவகைப் பிசின்; a resinous substance.

செந்துரிப்போ-தல்

செந்துரிப்போ-தல் cendurippōtal,    8 செ.கு.வி. (v.i.)

   மட்பாண்டத்தின் அடியில் சிறு ஓட்டை விழுதல்; to form a hole at the bottom of a earthen pot.

     [சிந்தூரி → செந்தூரி + போ-.]

செந்துருக்கம்

செந்துருக்கம்1 cendurukkam, பெ. (n.)

   எழுதிய ஓலையின் மேற் சுற்றும் ஓலைச் சுருள் (யாழ்.அக.);; ola leaf wound round an ola.

     [சந்திரகம் → (செத்திரகம்); → செத்துருக்கம். சந்திரகம் = ஓலைச்சுருள்]

 செந்துருக்கம்2 cendurukkam, பெ. (n.)

   செடி வகை (M.M. 776);; safflower.

ம. செந்துரகம்

     [செம் + துருக்கம்]

செந்துருக்கு

 செந்துருக்கு cendurukku, பெ. (n.)

செந்துருக்கம் பார்க்க;see {sen-durukku,}

     [செம் + துருக்கு]

செந்துருக்கை

 செந்துருக்கை cendurukkai, பெ. (n.)

செந்துருக்கம் பார்க்க;see {Sen-durukkam.}

     [செம் + துருக்கை]

செந்துருதி

 செந்துருதி cendurudi, பெ. (n.)

   குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று (பிங்.);; a secondary melody type of the {kuriñji} class.

     [செம் + துருத்தி]

செந்துருத்தி

செந்துருத்தி cendurutti, பெ. (n.)

   செம்பாலைப் பண்களுள் ஒன்று (சிலப். 8:35, உரை);; an ancient melody-type.

     [செம் + துருத்தி]

செந்துறை

செந்துறை cenduṟai, பெ. (n.)

   பாடற்கேற்ற செய்யுள் வகை (யாப்.வி.537);; a kind of composition adapted to singing, dist. fr. {veņqurai.}

     [செம் + துறை]

விகார வகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப்போலாது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுவது, செந்துறைப் பாடாண் பாட்டு எனப்படும். (தொல் பொருள். நச்.82);.

பாடாண் பாட்டின்கண் செந்துறைப் பாட்டு இவையெனக் கூறப்படவில்லை. எனவே எல்லாப் பாட்டும் செந்துறைப் பாட்டே ஆம். (தொல், பொருள். இளம். 80);.

செந்துறைச்செந்துறை

செந்துறைச்செந்துறை cenduṟaiccenduṟai, பெ. (n.)

   இசைப்பாட்டு வகை (யாப்வி.537);; a kind of musical composition.

     [செந்துறை + செந்துறை]

செந்துறைப்பாட்டு

 செந்துறைப்பாட்டு cenduṟaippāṭṭu, பெ. (n.)

செந்துறை பார்க்க;see {en-durai}

செந்துறைமார்க்கம்

செந்துறைமார்க்கம் cenduṟaimārkkam, பெ. (n.)

   நாற்பெரும் பண்ணிலும் இருபத்தொரு திறனிலும் பாடக்கூடிய இசைப்பாடல் (யாப்.வி. 537);; musical composition which could be sung in any of the four major {paņ} and of the 2l {diran,}

     [செந்துறை + மார்க்கம்]

செந்துறைவெண்பா

 செந்துறைவெண்பா cenduṟaiveṇpā, பெ. (n.)

செந்துறைவெள்ளை பார்க்க;see {en-durai. vellai.}

     [செந்துறை + வெண்பா]

செந்துறைவெள்ளை

செந்துறைவெள்ளை cenduṟaiveḷḷai, பெ. (n.)

   குறள் வெண்பாவின் இனத்துள் ஒன்றாகி, ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் பெற்று இரண்டடியாய்த் தம்முள் அளவொத்து வருவது (காரிகை, செய்.6);; a species of rhythemic couplet of equal metrical quantitiy, dealing with noble topics, a variety of {kura-vembā.}

மறுவ. வெண்செந்துறை

எ-டு.

     “ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம் ஒதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை” (முதுமொழிக். 1);

     [செந்துறை + வெள்ளை]

செந்துளசி

செந்துளசி senduḷasi, பெ. (n.)

   செந்நிறமுள்ள துளசி வகை (பதார்த்த. 303);; red basil.

ம. செந்துளசி

     [செம் + துளசி]

செந்துளிர்

 செந்துளிர் cenduḷir, பெ. (n.)

செந்தளிர் பார்க்க;see {Sen-dalir.}

     [செந்தளிர் → செந்துளிர்]

செந்துவரை

 செந்துவரை cenduvarai, பெ. (n.)

   துவரை; red gram. (சா.அக.);

     [செம்+துவரை]

செந்தூக்கு

செந்தூக்கு1 cendūkku, பெ. (n.)

   1. நேராகத் தூக்குகை; lifting straight up, direct lift.

செந்தூக்காய்த் தூக்கிக் கொண்டு போனான்.

   2.செங்குத்து;: steepness, as of rock.

செந்தூக்கான மலையினின்றும்’ (பு.வெ. 1:11, உரை);.

   3. தாளவகை (சிலப். 14:150, உரை);; a mode of beating time.

ம. செந்தூக்கு

     [செம் + தூக்கு]

 செந்தூக்கு2 cendūkku, பெ. (n.)

   கையால் இலேசாய்த் தூக்கும் கனம், கனமுள்ளது (யாழ்.அக.);; weight which can be easily lifted by a person.

     [செம் + தூக்கு. தூக்கு = தூக்கக்கூடியது.]

செந்தூட்படுத்து-தல்

செந்தூட்படுத்து-தல் cendūḍpaḍuddudal,    5 செ.கு.வி. (v.i.)

   கெடுத்தல் (நாசஞ்செய்தல்);; to reduce to dust.

     “வழக்கையெல்லாம் செந்தூட்படுத்தி” (பேரின்பக்கீர்த். பக். 103);.

     [செந்தூள் + படுத்து-.]

செந்தூரத்தாசி

 செந்தூரத்தாசி cendūrattāci, பெ. (n.)

   கந்தகம் (சங்.அக.);; sulphur.

செந்தூரத்தாதி

செந்தூரத்தாதி cendūrattāti, பெ. (n.)

செந்தூரத்தாசி பார்க்க (மூ.அ.);;see {endia-1. Tiši}

     [செந்துரத்தாசி → செந்தூரத்தாதி]

செந்தூரம்

 செந்தூரம் cendūram, பெ. (n.)

   சிந்தூரம் (உ.வ.);; red metallic oxide.

செந்தூரம் → Skt. {sindüra}

     [செந்தூள் → செந்தூரம்]

செந்தூரி-த்தல்

செந்தூரி-த்தல் cendūrittal,    4 செ.கு.வி. (v.i.)

   சிந்தூரமாக்குதல் (யாழ்..அ);க.);; to calcine.

     [செந்தூரம் → செந்தூரி-.]

செந்தூள்

 செந்தூள் cendūḷ, பெ. (n.)

   போர்க்களத்திலுள்ள அரத்தமயமான தூளி; red dust, dust red from the blood of the slain in battle.

செந்தூள் கருந்தூள் பறக்கிறது (யாழ்.அக.);.

     [செம் + தூள்]

செந்தூள்கருந்தூள்பறத்தல்

 செந்தூள்கருந்தூள்பறத்தல் cendūḷkarundūḷpaṟattal, பெ. (n.)

   பொருதல் முதலிய செய்கையின் கடுமையை உணர்த்துங் குறிப்பு; expr. Denoting fierceness of combatin battlefield or vehemence of action in general.

     [செந்தூள் + கருந்தூள் + பறத்தல்]

செந்தூள்பறத்தல்

 செந்தூள்பறத்தல் cendūḷpaṟattal, பெ. (n.)

செந்தூள் கருந்தூள் பறத்தல் (இ.வ.);;see {Sendij/-karundo/-parattal.}

     [செந்தூள் + பறத்தல்]

செந்தெங்கு

 செந்தெங்கு cendeṅgu, பெ. (n.)

   செந்நிறத் தேங்காய் காய்க்கும் தென்னை வகை (இ.வ.);; a variety of coconut bearing red fruit.

   ம. செந்தெங்கு;   க. செந்தெங்கு;குட. கென்தெங்கெ

     [செம் + தெங்கு]

செந்தேன்

செந்தேன் cendēṉ, பெ. (n.)

   1. அறுவகைப்

   புகைப்பொருள்களுள் ஒன்று (சீவக. 534, உரை);; a kind of frankincense one of six {dubavarukkam.}

   2. உயர்ந்த வகைத் தேன்; honey of superior quality.

     “செந்தேன் பருகி” (கம்பரா. மாயாசனக. 86);.

ம. செந்தேன்

     [செம் + தேன்]

செந்தொடை

செந்தொடை cendoḍai, பெ. (n.)

   1. சிவப்பு மாலை; garland of red flowers.

   2. மோனை முதலிய அமையாது வேறுபடத் தொடுக்குந் தொடை (காரிகை, உறுப். 17);; versification in which mónai etc., are neglected.

   3. அம்பு முதலியவற்றை எய்யுங்குறி; aim in shooting.

     “செந்தொடைபிழையாவன்கணாடவர்” (புறநா. 3:20);.

     [செம் + தொடை]

செந்தொடை: எ-டு

     “பூத்த வேங்கை வியன்சினை யேறி மயிலினம் அகவும் நாடன் நன்னுதற்கொடிச்சி மனத்தகத்தோனே”

செந்தொடைமருள்

செந்தொடைமருள் cendoḍaimaruḷ, பெ. (n.)

   இனவெழுத்துப் பெற்றுத் தொடையும், தொடை விகற்பமும் போலாது தொடுப்பது (யாப்வி. 53);; a typical poetical grammar reference.

     [செம் + தொடை + மருள்]

செந்தொடையன்

 செந்தொடையன் cendoḍaiyaṉ, பெ. (n.)

   செந்நிறப் பூமாலையை அணிந்த வைரவன் (வின்.);;{Bairavan,} as wearing a garland of red flowers.

     [செம் + தொடையன்]

செந்தொட்டி

செந்தொட்டி1 cendoṭṭi, பெ. (n.)

   காஞ்சொறி (பதார்த்த. 471);; climbing nettle.

   2. சிறு காஞ்சொறி (மலை..);; small climbing nettle.

   3. உடலின் மீது பட்டால் அரிப்பையுண்டாக்கும் ஒருவகைச் சிறு கொடி; a creeper which when touched, causes irritation to the skin.

     [சேரி + தொட்டி. தொட்டி = செடி. இச்செடியைச் சேர்த்தால், செடியைத் தொட்டால் அரிப்பையுண்டாக்கி, அவ்விடத்தைச் செத்திறமாக்கும் தன்மை யுடையது]

 செந்தொட்டி2 cendoṭṭi, பெ. (n.)

   செப்புத் தொட்டி நஞ்சு (யாழ்.அக.);; a prepared arsenic.

     [செம் + தொட்டி]

செம்மையான தொட்டி. நஞ்சு

செந்தோன்றி

செந்தோன்றி cendōṉṟi, பெ. (n.)

   1. காந்தள் மலர் (மலை.);; Malabar glory lily.

   2. செங்கழுநீர் (வின்.);; red Indian water lily.

     [செம் + தோன்றி]

செந்நகரை

செந்நகரை cennagarai, பெ. (n.)

   1. எட்டு விரல நீளமும் செந்நிறமுமுள்ள கடல் மீன் வகை; sea fish, reddish, attaining 8 in. in length.

   2. ஒரு வகை மரம் (தைலவ. தைல. 135; aspecies of live linden

     [செம் + நகரை, நகரை = மின்]

செந்நடை

செந்நடை cennaḍai, பெ. (n.)

   நாளும் தவறாகு நிகழும் தூய வழிபாட்டு முறைமை; daily or the adore rituals in a temple.

     “இவ்வூர்த் திருமேற்றாகி ஆழ்வார்க்கு வைத்த திருச்செந்நடை நிசதி நெல்லுக் குறுணி நானாழி யால் சந்திராதித்தவல் வைத்தோம். (தெ. க. தொ. 19, கல் 351);

     [செம் + நடை]

செந்நடையந்தாதி

செந்நடையந்தாதி cennaḍaiyandāti, பெ. (n.)

   செய்யுளின் இறுதியடியின் இறுதிச் சீரும் முதலிடியின் முதற்சீரும் ஒன்றாகாமல் அடிதோறும் எழுத்து, அசை, சீர், முதலியன, அந்தாதியாக வருந்தொடை (யாப்.வி. 52, 184);; a kind of metrical composition in which the last syllable of every line occurs at the beginning of the next line, the last syllable of the last line and the first syllable of the first line being dissimilar.

     [செம் + நடை + அந்தாதி]

அந்தாதியை ஈறுதொடங்கி என்பர்

செந்நவரை

 செந்நவரை cennavarai, பெ.(n.)

   வெள்ளாட்டு மீன் வகை; golden randed goatfish,

     [செம்+நவரை].

செந்நாகம்

செந்நாகம் cennākam, பெ. (n.)

   1. செந்நிறமுள்ள நாகப் பாம்பு வகை; red cobra.

   2. செம்பாம்பு (கேது);; descending node.

     “செந்நாகமோடு கருநாகத்தின் செய்கை பெற்று’ (கந்தபு. மகாசாத்தா. 25);.

     [செம் + நாகம்]

செந்நாடிக்கா

 செந்நாடிக்கா cennāṭikkā, பெ. (n.)

   மூக்கிரட்டை (மலை.);; spreading hogweed.

செந்நாப்போதார்

செந்நாப்போதார் cennāppōtār, பெ. (n.)

   செஞ்சொல் கமழும் செந்நாவாகிய தாமரையையுடைய திருவள்ளுவர்; the poet {Tiruvalluvar,}

     “மறுவில் புலச்செந்நாப் போதார்” (வள்ளுவமா. 21);.

     [செம் + நா(ப்);போதார்]

நாப்போதார் = செந்நாவாகிய தாமரையை யுடையவர்

செந்நாயுருவி

செந்நாயுருவி cennāyuruvi, பெ. (n.)

   நாயுருவி வகை (பதார்த்த. 396);; a kind of dog-prick.

     [செம்மை + நாயுருவி]

செந்நாய்

செந்நாய் cennāy, பெ. (n.)

   செந்நிறமுள்ள நாய் வகை; brown – coloured dog.

     “வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்” (குறுந், 56);.

   ம. செந்நாயி;க. கெம்பு நே: பட. கென்னெ

     [செம் + நாய் – செந்நாய் = செந்நிற உடலும் கறுப்பு நிறவாலும் உடைய காட்டு நாய்]

செந்நாய்

செந்நிறக்கல்

 செந்நிறக்கல் cenniṟakkal, பெ. (n.)

   ஒருவகை சிவப்புக் கல் (மாமிசச்சிலை (யாழ்.அக.);; a kind of red stone.

     [செம் + நிறம் + கல்]

செந்நிறமி

 செந்நிறமி cenniṟami, பெ. (n.)

   அரத்தத்திற்குச் சிவப்பு நிறம் தரும் நுண்பொருள்; huemoglobin.

     [செம் + நிறமி. நிறமி = நிறம் தரும் பொருள்]

செந்நிறவு-தல்

செந்நிறவு-தல் cenniṟavudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   நேர்வழியில் நிறுத்துதல்; to keep one out of harm’s way;

 to establish one in the path of virtue.

     “சேரி திரியாமற் செந்நிறீஇ” (திவ். இயற். 1:47);.

     [செம் + நிறுவு-.]

செந்நிலத்தாமரை

 செந்நிலத்தாமரை cennilattāmarai, பெ. (n.)

   ஒரு வகை முளரி (ரோசா);; a variety of rose. (சா.அக.);

     [செம்-நிலம்+தாமரை]

செந்நிலம்

செந்நிலம் cennilam, பெ. (n.)

   1. போர்க்களம்; battle-field.

   2. செந்தரை; red soil.

க. கெந்நெல

     [செம்மை + நிலம்]

அரத்தத்தால் சிவந்த நிலம்

செந்நிலை

செந்நிலை cennilai, பெ. (n.)

கூத்துநிலை

   வகை; a posture in dancing.

     “செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து” (சிலப். 17, கூத்துள். 1);.

     [செம் + நிலை]

கூத்துக்கு வேண்டிய செம்மையான நடை (பாவணை); வகை.

செந்நீர்

செந்நீர்1 cennīr, பெ. (n.)

   புது வெள்ளம்; fresh, flood, as turbid.

     “மூதூர்ச் செந்நீர்க் கடியின் விழவாட்டினுள்” (சீவக. 12);.

   2. அரத்தம்; blood, as red.

     “செந்நீர்த் திரைகடல் பருகலாக” (கலிங். 293);.

   3. விந்துவோடு கலந்து கரு உண்டாகுதற்குக் காரணமாகும் மகளிர் அரத்தம்; blood believed to be in the womb causing pregnancy when fused with semen.

     “மாதர் செந்நீரொடு கூடி” (சூத. ஞான.10: 9);.

   ம. செந்நீர்;க. செந்நீர்

     [செம் + நீர்]

 செந்நீர்2 cennīr, பெ. (n.)

   பருவ காலத்தில் ஆற்றில் பெருகி வரும் செவ்வண்ணப் புதுநீர்; freshwater in the rivers, rivulats in red colour.

     “செந்நீர் வெட்டி செய்யக் கடவதில்லை யாகவும், புந்நீர் விட்டுப் பாய்ச்சிக் கொள்வதாகவும்” (தெ. க தொ. 2:1, கல். 24);.

     [செம் + நீர்]

செந்நீர்நுங்கல்

செந்நீர்நுங்கல் cennīrnuṅgal, பெ. (n.)

   ஒரு நிரையம் (நரகம்); (சேதுபு. தனுக்கோ. 4);; a hell.

     [செந்நீர் + நுங்கல்]

செந்நீர்ப்பவளம்

 செந்நீர்ப்பவளம் cennīrppavaḷam, பெ. (n.)

   சிவந்த பவளம் (யாழ்.அக.);; coral with bright red lustre.

     [செம் + நீர் + பவளம்]

செந்நீர்முத்து

செந்நீர்முத்து cennīrmuttu, பெ. (n.)

   செந்நீரோட்டமுள்ள முத்து (சிலப். 14: 195, உரை);; pearl with pink lusture.

     [செம் + நீர் + முத்து]

செந்நென்முத்து

 செந்நென்முத்து cenneṉmuttu, பெ. (n.)

   செந்நெலில் உண்டாவதாகக் கருதப்படும் முத்து (யாழ்.அக.);; pearl believed to be formed in {Šennel} paddy.

     [செந்நெல் + முத்து,]

செந்நெய்தல்

செந்நெய்தல் cenneytal, பெ. (n.)

   அல்லிக் கொடிவகை (புட்ப. 4);; a kind of water-lily.

     [செம் + நெய்தல். நெய்தல் = ஆம்பல் மலர்]

செந்நெறி

செந்நெறி cenneṟi, பெ. (n.)

   1. செவ்விய வழி; goodor finepath.

     ” இடையது செந்நெறியாகும்” (சிலப். 11:142);.

   2. நல்வழி (சன்மார்க்கம்);; path of virtue, the right way, especially in religious sense.

     “சேராரே செந்நெறிச் சேர்து மென்பார்”(நாலடி, 378);.

   3. மரபு சார்ந்து ஒழுகும் தூய பண்பு; righteous path.

     [செம் + நெறி]

செந்நெற்றீட்டல்

செந்நெற்றீட்டல் cenneṟṟīṭṭal, பெ. (n.)

செந்நெல்தீட்டல் பார்க்க;see {§em-nel-dittal.}

     “நாழி அரிசிக்கு முற்றாழி நெல்லாகத் திருபலிக்கு நிறதி அரிசி செந்நெற்றீட்டல் ஒரு போரைக்கு நாழியாக” (தெ.க.தொ. 14 கல். 16:4 – 133);.

செந்நெல்

செந்நெல் cennel, பெ.(n.)

ஒருவகை மீன்:

 glassy perchlet.

     [செம்+நெல்].

 செந்நெல் cennel, பெ. (n.)

   1. செஞ்சாலி நெல்; a kind of superior paddy of yellowish hue.

     “பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின்” (பதிற்றுப். 71:4);.

   2. நன்னீர் மீன்வகை (யாழ்.அக.);; a kind of fresh water fish.

   ம. செந்நெல்;க. கெம்புநெல்லு

     [செம் + நெல்]

செந்நெல் முதுகுடியினர்

 செந்நெல் முதுகுடியினர் cennelmuduguḍiyiṉar, பெ.(n.)

   மள்ளரின மக்களுக்கு வழங்கும் வேளாண் அடையாளப் பெயர்; a name of Mallar community people.

     [செந்நெல்+முது+குடியினர்].

செந்நெல்தீட்டல்

செந்நெல்தீட்டல் cenneltīṭṭal, பெ. (n.)

   புது நெல்லை உரலிலிட்டுக் குற்றித் தீட்டிய அரிசி; hand pounded rice from fresh paddy.

     “செந்நெற்றீட்டல் அறுபத்து நாற்கலம்” (தெ.க.தொ. 14, கல்.13);.

     [செம் + நெல் + தீட்டல்]

செந்நொச்சி

 செந்நொச்சி cennocci, பெ. (n.)

   நொச்சி வகை (யாழ்.அக.);; a variety of chaste-tree.

     [செம் +நொச்சி]

செனை

 செனை ceṉai, பெ.(n.)

   உழும்போது கலப்பையின் கொழுவில் சிக்கிக் கொள்ளும் செடி, கொடி, மண் போன்றவை; vegetation and earth clot that sticks to the plough.

     [சில்-சினு-செனை]

சென்னகரை

 சென்னகரை ceṉṉagarai, பெ.(n.)

   வெள்ளாட்டு மீன்; goat fish

     [ஒருகா, சின்ன+நவிரை]

சென்னகிரி

 சென்னகிரி ceṉṉagiri, பெ.(n.)

   சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk.

     [சென்னன்+கிரி]

சென்னக்கூனி

 சென்னக்கூனி ceṉṉakāṉi, பெ. (n.)

   சிறிய இறால் மீன் (வின்.);; small shrimps.

     [சில் → சின் → சின்ன → சென்ன + கூனி]

சென்னசிறை

 சென்னசிறை seṉṉasiṟai, பெ. (n.)

   பூடு வகை; a plant.

சென்னடை

சென்னடை ceṉṉaḍai, பெ. (n.)

   நேர்த்தியான வழிபாட்டு முறைமை தொடர்பான செலவுகள்; expenditure towards regular worship in temples.

     ‘சென்னடைக் கமைச்ச பூமியாவது’ (T.A.S. 2;1:23);.

     [செம் + தடை செம்மைாக நடைபெறும் பூசைக்கு ஆகும் செலவைக் குறித்தது]

சென்னடைக்கால்

சென்னடைக்கால் ceṉṉaḍaikkāl, பெ. (n.)

   ஒரு முகத்தல் அளவை; a liquid measure.

     “பொலியூட்டு நெல்லுக் கலனெய் தூணியான பழநெல் சென்னடைக் காலால் நுற்றிருபதின் கலமுங் கொண்டு” (தெ.கதொ. 4, கல். 517/1986);.

     [சென்னடை + கல்]

சென்னபாத்திரம்

சென்னபாத்திரம் ceṉṉapāttiram, பெ. (n.)

   தென்னை வகை (G.Sm.D.I, i, 214);; a variety of coconut.

சென்னபுரி

 சென்னபுரி ceṉṉaburi, பெ. (n.)

சென்னப் பட்டணம் பார்க்க;see {Senna-p-passanam.}

சென்னப்பட்டணத்தான்

சென்னப்பட்டணத்தான் ceṉṉappaṭṭaṇattāṉ, பெ. (n.)

   பழைய காசு வகை (பணவிடு. 117);; an ancient coin.

     [சென்னப்பட்டணம் → சென்னப் பட்டணத்தான்]

சென்னபட்டணத்தில் வழங்கிய காசு வகை

சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணம் ceṉṉappaṭṭaṇam, பெ. (n.)

   சந்திரகிரியரசன்கீழ்ச் சிற்றரசனாயிருந்த சென்னப்ப நாயக்கன் பெயரால் அமைந்த ஊர் (சீதக். நொண்டி. 7);; Chennai, as the town of {Sennappa-nāyakkan,} a chief under the Raja of Chandragiri.

     [சென்னப்பன் பட்டணம் → சென்னப்பட்டணம்]

 Madras the chief city in the Tamil country, is also the chief city in the South Indian Presidency. The name by which it is known amongst natives everywhere is, not Madras, but {Chennappa-pattanam} abbreviated into {Chenna-pattanam,} a name which it derived from Chennappa {Náyakkar,} father-in-law of the {Nāyakkar} of {Chinglepat,} a petty local chieftain, a feudatory of the Chandragiri {Rājā,} from whom the English obtained possession of a little fort on the coast which they converted into a fortified factory. The origin of the name by which it appears always to have been called by Europeans Madras (officially Madraspatam); – has never been made out with certainty. Perhaps the most probable derivation is from the Telugu Madura (Tamil madil);, the surrounding wall of a frot, a rampart.There is a neighbouring town, Sadras, originally a Dutch settlement, the name of which closely resembles Madras. Sadras is an European corruption from Sadurei, which is an abbreviation of Sadurangam (- Sans. Chaturanga); the four constituent arms of an army (-CGDFL. Int. p. 7-8);.

சென்னமல்லையர்

சென்னமல்லையர் ceṉṉamallaiyar, பெ. (n.)

   கி.பி. 1768-ல் சிவசிவ வெண்பா இயற்றிய புலவர்; the author of {Sivasiva-vembă,} 1768 A.D.

சென்னம்

சென்னம்1 ceṉṉam, பெ. (n.)

   நீர்ப்பறவை வகை; an aquatic bird.

     “சென்னங் காகங் குணாலஞ் சிலம்புமே” (கம்பரா. ஊர்தே. 151);.

 சென்னம்2 ceṉṉam, பெ. (n.)

   வடிவு (யாழ்.அக.);; shape.

     [சின்னம் → சென்னம்]

சென்னலேரி

 சென்னலேரி ceṉṉalēri, பெ.(n.)

   வாலாசா வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Wallajah Taluk.

     [ஒருகா சேய்நலன்+ஏரி]

சென்னல்

சென்னல் ceṉṉal, பெ. (n.)

   எட்டரை விரல நீளமும் கரும்பச்சை நிறமுமுள்ள பனையேறிக் கெண்டை மீன்; climber perila, rifle green, attaining 81/2 in. in length.

சென்னவலை

 சென்னவலை ceṉṉavalai, பெ. (n.)

   பெரு மீன்கள் பிடிக்க உதவும் வலைவகை; net for catching big fish.

சென்னாகூனி

 சென்னாகூனி ceṉṉāāṉi, பெ.(n.)

   கடலில் இருக்கும் மீன் வகைகளுள் ஒன்று; a variety of seafish.

     [சின்ன+( குன்னி); கூனி]

சென்னாக்கூனி

 சென்னாக்கூனி ceṉṉākāṉi, பெ. (n.)

சென்னக்கூனி (வின்.); பார்க்க;see {&qakkiம்}

     [சென்னக்கூணி → சென்னாக்கூணி]

சென்னாக்கோனி

 சென்னாக்கோனி ceṉṉākāṉi, பெ. (n.)

சென்னக்கூனி (வின்.); பார்க்க;see {senga-k-kம்i.}

     [சென்னக்கூனி → சென்னாக்கோனி]

சென்னி

சென்னி1 ceṉṉi, பெ. (n.)

   1. தலை; head.

     “நலம்பெறு கமழ்சென்னி” (கலித். 81);.

   2. உச்சி; top, summit, peak.

     “மைபடு சென்னிப் பயமலை நாடன்” (கலித். 43);.

   3. சிறப்பு; eminence.

     “உனைச் சென்னித்தலை கொண்டது தேர்கிலையோ” (கந்தபு. காமத. 28);.

   4. சோழன்;{Cola} king

     “சென்னி செங்கோ லதுவோச்சி” (சிலப். 7:2, பக். 205);.

   5. உண்கலமாகத் தலையோடு கொண்ட பாணன்; bard, lyrisist, as having skull-bowl to eat from.

     “செவ்வரை நாடன் சென்னிய மெனினே” (பெரும்பாண். 103);.

   6. குதிரையின் தலை போன்ற முதல் விண்மீன், இரலை (அச்சுவினி); (சூடா.);; the first naksatra, as resembling horse’s head.

 சென்னி3 ceṉṉi, பெ. (n.)

   கன்னம்; cheek.

     [சென்னை3 → சென்னி]

சென்னிக்கோடு

சென்னிக்கோடு ceṉṉikāṭu, பெ. (n.)

சென்னிமலை பார்க்க;see {semi-malai.}

     “ஓடுமழை கிழிக்குஞ் சென்னிக் கோடுயர் பிறங்கல் மலை கிழவோனே” (நற்.28);

     [சென்னி + கோடு]

சென்னிக்கோன்

சென்னிக்கோன் ceṉṉikāṉ, பெ. (n.)

   ஏராளமான ஆநிரைகளையுடைய ஆயர் தலைவன்; a leader of shephards having numerous cows and goats.

     “இவ்வூர் மன்றாடிக் குடிமக்களில் சென்னிக்கோன்” (தெ.க.தொ. 12, 198);.

     [சென்னி + கோள்]

சென்னிமலை

 சென்னிமலை ceṉṉimalai, பெ. (n.)

   ஈரோடு வட்டத்தில் மலை உள்ள ஒரூர்; a hill town in Erode dt.

     “சென்னிக் கோடுயர் பிறங்கள்…” (நற்.);

     [சென்னி + மலை]

சென்னியர்

 சென்னியர் ceṉṉiyar, பெ. (n.)

   கூத்தர் (அக.நி.);; actors, dancers.

     [சென்னி → சென்னியர்]

சென்னியெரி

 சென்னியெரி ceṉṉiyeri, பெ. (n.)

   தலையிலுண்டாகும் எரிச்சல்; burning sensation in the heat. (சா.அக.);

     [சென்னி+எரி]

சென்னிவருத்தி

 சென்னிவருத்தி ceṉṉivarutti, பெ. (n.)

தலையோடு:

 skul. (சா. அக.);

     [சென்னி+வருத்தி]

சென்னிவலி

 சென்னிவலி ceṉṉivali, பெ. (n.)

   தலைவலி; headache. (சா.அக.);

     [சென்னி+வலி]

சென்னிவலை

சென்னிவலை ceṉṉivalai, பெ. (n.)

   1. தலை மண்டையோடு; the skull.

   2. மூளை; division of the brain behind the cerebrum. (சா.அக.);

     [சென்னி+வலை]

சென்னீரமஞ்சி

சென்னீரமஞ்சி ceṉṉīramañji, பெ. (n.)

   வரிவகை (தெ.க.தொ. 3, 300);; a tax.

சென்னீர்வெட்டி

சென்னீர்வெட்டி ceṉṉīrveṭṭi, பெ. (n.)

   வரிவகை (தெ.க.தொ. 3,300);; a tax.

சென்னை

சென்னை1 ceṉṉai, பெ. (n.)

சென்னப்பட்டணம் பார்க்க;see {sela-p-pattaram,}

     “சென்னை நகர் வீற்றிருந்த விமலவாழ்வே” (விநாயகபு. 85:63);.

 சென்னை2 ceṉṉai, பெ. (n.)

   மீன்வகை (பாலவா. 1085);; a kind of fish.

     [சென்னக்கூணி → சென்னை]

 சென்னை3 ceṉṉai, பெ. (n.)

   கன்னம்; cheek.

க. செந்நெ

     [சென்னி → சென்னை]

சென்னைப்பட்டினம்

 சென்னைப்பட்டினம் ceṉṉaippaṭṭiṉam, பெ. (n.)

சென்னப்பட்டணம் பார்க்க;see.{culap-paftaqam.}

சென்ற

 சென்ற ceṉṟa, பெ.எ. (adj.)

   கடந்த; last.

சென்ற ஆண்டு. திருவிழா நடந்தது.

மறுவ. கழிந்த, முடிந்த, கடநத்.

     [செல் → சென்ற]

சென்றஞான்றை

சென்றஞான்றை ceṉṟañāṉṟai, பெ. (n.)

   நேற்றைய நாள்; yesterday.

     “சென்ற ஞான்றைச் சென்றுபட ரிரவின்” (புறநா. 390: 10);.

மறுவ. நேற்று

     [செல் → சென்ற + ஞான்றை]

சென்றது

சென்றது ceṉṟadu, பெ. (n.)

   வினாவொடு சேர்த்து அடுக்கியவும் அடுக்காதும் வரும் அசைநிலை (தொல். சொல். 425);; an expletive, used in its interrogative form, sometimes in pairs.

     [செல் → சென்றது]

சென்றுதேய்ந்திறுதல்

சென்றுதேய்ந்திறுதல் ceṉṟudēyndiṟudal, பெ. (n.)

   நூற்குற்றம் பத்தனுள் நூலின் அழகு வரவரக் குறைந்துகொண்டே வரும் குற்றம் (தொல். பொருள். 664, உரை);; gradual loss of vigour and tone, one of ten {nor-kuiram;} defects of a literary work.

     [செல் → சென்று + தேய்ந்து + இறுதல்]

சென்றுபோ-தல்

சென்றுபோ-தல் ceṉṟupōtal,    8 செ.கு.வி. (v.i.)

   இறத்தல்; to die.

     ‘அவர் சென்றுபோனார்’ (வின்.);

     [சென்று + போ-.]

சென்றுமுட்டு-தல்

சென்றுமுட்டு-தல் ceṉṟumuṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   படையுடன் சென்று நேருக்கு நேர் மோதுதல்; to face the other directly in a fight.

     ‘காரிப் பொருமாள் – எருமை தொரு எயினாட்டார் கொள்ளப் பாசாற்றுார் பூசலிடப்பூசல் சென்று கோவூர் நாட்டுச் சிற்றிடையாற்று முதுகொன்றை மூக்கின் மீடலை, அயங்கரையிற் சென்று முட்டி பட்டான்’ (செங்கம் நடுகற்கள் – கம்பவர்மன் கி.பி. 9 நூ.);.

போரில் நேருக்கு நேர் மோதி இறப்பவனை சென்று முட்டி என்பர்.

     [சென்று + முட்டு-.]

சென்றுழுபாழ்

 சென்றுழுபாழ் ceṉṟuḻupāḻ, பெ. (n.)

   உழக்கூடிய சேரும் சகதியும் கொண்ட பாழ் நிலப்பகுதி; a kind of cultivable lying empty land.

செபத்தையபுரம்

 செபத்தையபுரம் cebattaiyaburam, பெ.(n.)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்

 name of the village in Thuththukudi.

     [செபம்+அத்து+ஐயன்+புரம்].

செப்பஞ்செய்-தல்

செப்பஞ்செய்-தல் ceppañjeytal, செ.குன்றாவி. (v.t.)

   1. ஒழுங்குபடுத்துதல்; to clean, repair, put in order.

   2. புதைத்தல் (வின்.);; to inter.

   3. கட்டடங்களைப் பழுதுபார்த்தல்; to repair buildings, maintenance of buildings.

   4. பழுது, குறைபாடு, பிழை முதலியவற்றை நிக்கிச் சரிசெய்தல்;   புதுப்பித்தல்; restore;

 removate;

 set right.

     [செப்ப்ம் + செய்-.]

செப்பட

செப்பட ceppaḍa, கு.வி.எ. (adv.)

   செவ்விதாக; correctly, neatly.

     “மாலை வாங்கிச் செப்பட முன்கை யாப்ப” (சீவக .2665);.

     [செம் + படு = செம்படு. செம்படு → செப்படு → செப்பட. படு → பட]

செப்படக்குவித்தை

செப்படக்குவித்தை ceppaḍakkuvittai, பெ. (n.)

செப்படிவித்தை பார்க்க;see {Seppadi-wittai.}

     “பச்சிலைக்குளோது செப்படக்கு வித்தையோ” (தனிப்பா. 11, 57:140);.

     [செப்பு + அடக்கு + வித்தை]

செப்படி

செப்படி1 ceppaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   செப்படி வித்தை செய்தல்; to practise sleight of hand.

     “செப்படிப்பவரி னின்று சிரித்தனன்” (பாரத. புட்.ப. 106);.

     [செப்பு + அடி.]

 செப்படி2 ceppaḍi, பெ. (n.)

செப்படிவித்தை பார்க்க;see {Seppagi-wittai.}

ம. செப்படி, செப்பிடி

செப்படிவித்தை

செப்படிவித்தை ceppaḍivittai, பெ. (n.)

   1. பிறரறியா வகையில் செப்புகளுள் உருண்டைகள் வந்து போகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக்காட்டுவது முதலிய தந்திரக் கலைகள்; legerdemain; sleight of hand, as causing a ball to appear or disappear by a mere touch on the cup containing it.

   2. தந்திரம்; tricks, deceptive arts.

     “செப்படி வித்தைத் திறமறியேன் பூரணமே” (பட்டினத். திருப்பா. பூரண. 73);.

   3. சிறுகச் செலவாக்கிச் செய்யுஞ் சிக்கனம் (யாழ்ப்.);; contrivance to economise by dealing out in small quantities.

ம. செப்படிவித்ய

     [செப்படி + வித்தை]

செப்படிவித்தைக்காரன்

செப்படிவித்தைக்காரன் ceppaḍivittaikkāraṉ, பெ. (n.)

   1. செப்படிக்கலை செய்வோன்; one who practises legerdemain, juggler.

   2. தந்திரக்காரன்; deceitful person.

     [செப்படி + வித்தை + காரன்]

செப்பட்டை

செப்பட்டை1 ceppaṭṭai, பெ. (n.)

   1. கட்டடச் சுவரின் அடிப்படை; plinth.

   2. தூணின் அடியில் வைக்கும் சதுரக்கல்; square plate stone placed at the bottom the piller.

     [செம்பொன் → செம்பு → செப்பு. செப்பு + பட்டை → செப்பட்டை]

 செப்பட்டை2 ceppaṭṭai, பெ. (n.)

   1. பறவைச் சிறகு (யாழ்.அக.);; wing.

   2. தோட்பட்டை; shoulder blade.

   3. கன்னம்; cheek.

     [சப்பட்டை → செப்பட்டை]

 செப்பட்டை ceppaṭṭai, பெ.(n.)

   1தோள்பட்டை; upper arm.

   2. கன்னம்; cheek.

     [சேர்+பட்டை-சேர்ப்பட்டை-செப்பட்டை]

செப்பட்டைமட்டம்

 செப்பட்டைமட்டம் ceppaṭṭaimaṭṭam, பெ. (n.)

   அடிப்படை மட்டச் சுவர் அளவு; plinth level.

     [செப்பட்டை + மட்டம்]

செப்பனிடு-தல்

செப்பனிடு-தல் ceppaṉiḍudal,    18 செ.குன்றாவி. (v.i.)

   1. பழுதுபார்த்தல், சீர்திருத்துதல்; to repair correct.

சாலைகளைச் செப்பனிடக் கேட்டுள்ளோம்.

   2. சமப்படுத்துதல்; to level, make cven.

   3. மெருகிடுதல்; to polish.

     [செப்பம் → செப்பன் + இடு-.]

செப்பப்புல்

 செப்பப்புல் ceppappul, பெ. (n.)

   நாணல் (மலை.);; kaus.

செப்பம்

செப்பம் ceppam, பெ. (n.)

   1. செம்மை; ruddiness.

     “செப்பமு நாணு மொருங்கு” (குறள், 951);.

   2. நடு நிலை (பிங்.);; impartiality, evenness, equity.

செப்பமுடைய வனாக்கம் (குறள், 112);.

   3. சீர்திருத்துகை; repair, renewal.

இந்த வீதியைச் செப்பஞ்செய்.

   4. ஆயத்தம் (யாழ்ப்.);; preparedness, fitness.

   5. பாதுகாப்; protection.

     “செப்ப முடையாய்” (திவ்.திருப்பா. 20);.

   6. செவ்விய வழி; straight path, road.

     “சேந்தசெயலைச் செப்பம் போகி” (மலைபடு. 160);.

   7. தெரு (பிங்.);; street.

   8. நெஞ்சு (பிங்.);; heart.

   9. மனநிறைவு (திருப்தி); (வின்.);; satistaction, agreeableness,

   10. ஒழுங்கு, செவ்வை; perfection.

ஆய்வுக்கட்டுரை செப்பமாக உள்ளது.

     [செய்ம்மை → செய்மை → செப்பம்]

செப்பம்செய்-தல்

 செப்பம்செய்-தல் ceppamceytal, செ.கு.வி. (v.i.)

செப்பஞ்செய்-தல் பார்க்க;see {seppai,jey.}

செப்பறை

 செப்பறை ceppaṟai, பெ.(n.)

   சீவலப்பேரியில் உள்ள ஓர் ஊர்; name of the village near Seevalapperi in Thirunelvelisdists)

     [செப்பு+அறை].

செப்பலி

செப்பலி ceppali, பெ. (n.)

   1. இரண்டடி நீளமும் ஒருவகைச் செந்நிறமும் உடைய கடல் மீன்வகை; sea-fish, cherry red, attaining 2 ft. in length.

   2. கருமை கலந்த செந்நிறமுடைய கடல் மீன்வகை; red rock cod, dark reddish brown.

     [செப்பல்3 → செப்பலி]

செப்பலோ-டுதல்

 செப்பலோ-டுதல் ceppalōṭudal, செ.கு.வி. (v.i.)

   செந்நிறங் கொள்ளுதல் (யாழ்ப்.);; to become red, as the sky at dusk.

பொழுது செப்பலோடி வரும் பொழுது (யாழ்ப்.);

     [செப்பல் + ஒடு-.]

செப்பலோசை

செப்பலோசை ceppalōcai, பெ. (n.)

   வெண்பாவுக்குரிய ஓசை(தொல்.பொருள்.379, உரை);; rhythmic tone appropriate to {vembäverse.}

     [செப்பல் + ஓசை]

செப்பலோசை மூன்று வகைப்படும். ஏந்திசைச் செப்பலும், துங்கிசைச் செப்பலும், ஒழுகிசைச் செப்பலும் என்பன (யாப். கா. 22);.

அகவிக் கூறாது ஒருவற்கு ஒருவன் இயல்பு வகையானே ஒரு பொருண்மையைக் கட்டுரைக்குங்கால் எழும் ஒசை செப்பலோசை எனப்படும் (தொல்.39பொருள். 394, பேரா.);.

அழைத்துக் கூறாது ஒருவற்கு ஒருவன் இயல்பு வகையான் ஒரு பொருண்மையைக் கட்டுரைக்குங்கால் எழுந்த ஓசை செப்பலோசை (தொல். பொருள். செய். 82, நச்);

செப்பல்

செப்பல்1 ceppal, பெ. (n.)

   1. சொல்லுகை; saying, replying, declaring.

     “செறிவளை மகளிர் செப்பலு முண்டோ” (மணிமே. 4:110);.

   2. செப்பலோசை பார்க்க;see {seppal-dsai.}

     “திண்பா மலிசெப்பல்” (காரிகை, செய். 1);.

     [செப்பு → செப்பல்]

 செப்பல்2 ceppal, பெ. (n.)

   செந்நிறம்; red, rosy colour, as of dawn.

பொழுது செப்பலோடி வரும் பொழுது (யாழ்ப்.);.

     [செப்பு3 → செப்பல்]

செப்பல்பிரி-தல்

செப்பல்பிரி-தல் ceppalpiridal,    4 செ.கு.வி. (v.i.)

   பொழுது விடிதல்; to dawn.

செப்பல் பிரியப் புறப்பட்டோம் (இ.வ.);.

     [செப்பல் + பிரி]

செப்பவாய்

 செப்பவாய் ceppavāy, பெ. (n.)

   இடை (யாழ்.அக.);; waist.

     [செப்பு → செப்பவாய்]

செப்பாடல்

செப்பாடல் ceppāṭal, பெ. (n.)

   பழைய காசு வகை (பணவீடு. 139);; an ancient coin.

செப்பாடு

செப்பாடு ceppāṭu, பெ. (n.)

   நேர்மை; straightness, justness.

     “செப்பாடுடைய திருமாலவன்” (திவ்பெரியாழ். 35:6);.

     [செப்பம் + பாடு.]

செப்பாயி

 செப்பாயி ceppāyi, பெ.(n.)

   சிக்கனம் பின்பற்றும் பெண்; a spend thrifty women.

     [செம்+பாயி].

செப்பிக்கூறு-தல்

செப்பிக்கூறு-தல் ceppikāṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   விடை சொல்லுதல்; to reply, give answer.

ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது (தொல் பொருள். 393, உரை);.

     [செப்பு → செப்பி + கூறு-.]

செப்பிடில்

 செப்பிடில் ceppiḍil, பெ. (n.)

   சடாமாஞ்சி (மலை.);; spikenard herb.

செப்பிடுவித்தை

செப்பிடுவித்தை ceppiḍuvittai, பெ. (n.)

செப்படிவித்தை பார்க்க;see {seppai-wittai.}

     “செப்பிடு வித்தை செலத்தம்பன வித்தை” (பணவிடு. 20);.

     [செப்பு + இடு + வித்தை]

செப்பியம்

 செப்பியம் ceppiyam, பெ. (n.)

   திரும்பத்திரும்பச் சொல்லுகை (யாழ்.அக.);; repeating.

     [செப்பு → செப்பியம்]

செப்பிலி

செப்பிலி ceppili, பெ. (n.)

செப்பலி,1 பார்க்க;see {Seppall,1.}

     [செப்பலி → செப்பிலி]

செப்பிலை

 செப்பிலை ceppilai, பெ. (n.)

   தும்பை (மலை.);; white dead nettle.

     [செம்பு + இலை]

செப்பு

செப்பு1 ceppudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. சொல்லுதல்; to say, speak, declare, tell.

     “செய்ததும் வாயாளோ செப்பு” (பரிபா. 6: 67);.

   2. செப்பிக்கூறு-பார்க்க (தொல்.பொருள். 393, உரை);;see {Seppi-k-küru}

   ம. செப்புக;   தெ. செப்பு;குரு. கெப்னா

 செப்பு2 ceppu, பெ. (n.)

   1. சொல்; speech, word.

     “ஏதுபோ லிருந்த தைய னிசைத்த செப்பென்றார்” (திருவிளை. வனையல். 9); (சூடா.);

   2. விடை; answer, reply._

     “செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்” (தொல். சொல். 13);.

தெ. செப்பு

 OE. secgan;

 OS. soggian;

 E. say;

 M.E. seggen;

 A.S. {secgañ;

   } Dan. sige; Swed. saga;

 G. sagen;

 OHG. {sagën;

   } Lith. sakyti; Ol. in-sece, Wels. Heb

 செப்பு3 ceppu, பெ. (n.)

   1. செம்பு-1 பார்க்க;see {sembur-1.}

   2. குங்குமம் முதலியவைப் போட்டு வைக்கப் பயன்படும் மரத்தால் அல்லது மாழையாலான சிறிய பெட்டி, சிமிழ்; casket, little box of metal, ivory orwood.

     “செப்பின் புணர்ச்சிபோணுற கூடினும்” (குறள், 887);.

   3. நீர்க்கரகம்; a kind of water-vessel.

     “சேமச் செப்பிற் பெறீஇயரோ” (குறுந். 277);.

   4. மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டு ஏனம் (உ.வ.);; toy utensils.

   ம. செப்பு;குட. செப்பி

 E. copper;

 M.E. coper;

 O.E. coper;

 L.L. cuper;

 L. cuprum;

 Gk. cyprium;

 G. kupper;

 Du. koper;

 F. cuivre.

     [செம்பு → செப்பு]

 செப்பு4 ceppu, பெ. (n.)

   இடுப்பு; hip.

அவன் விழுந்ததில் செப்பு நகர்ந்து விட்டது (நாஞ்.);.

     [சப்பை → செப்பு]

செப்புக்கட்டை

 செப்புக்கட்டை ceppukkaṭṭai, பெ. (n.)

   பொன் வளையல் முதலியவற்றிற்கு உள்ளே இடும் தாமிரக்கட்டை (உ.வ);; copper barinserted in hollow gold ornaments, as in bracelets.

     [செம்பு + கட்டை]

செப்புக்கால்திருச்சிற்றம்பலமுடையான்

செப்புக்கால்திருச்சிற்றம்பலமுடையான் ceppukkāltirucciṟṟambalamuḍaiyāṉ, பெ. (n.)

   முற்காலத்து வழங்கிய நெல்லளக்குங் கருவி வகை; a kind of measure for paddy used in ancient times.

     ‘செப்புக்கால் திருச்சிற்றம்பல முடையானாலே அளக்கக் கடவார்களாகவும்’ (தெ.க.தொ, 5, 178);.

     [செம்புக்கால் + திருச்சிற்றம்பலம் + உடையான் = செம்பால் செப்யப்பட்ட அனவு கருவி]

செப்புக்குடம்

செப்புக்குடம் ceppukkuḍam, பெ. (n.)

   1. கோயில் கோபுரத்தின் மீது பொருத்தப்படும் செம்பலான கலசம்; ornamental copper {kudam} placed at the top of {vimānam} and gopuram.

     “ஸ்துபித்தறியில் வைக்கக் குடுத்த செப்புக் குடம்” தெ.க.தெ7..2;

கல்.1).

   2. கோயில் பூசைக்கு நீர் எடுத்துவரும் செம்பாலான குடம்; copper vessel used to bring water to temple rituals.

   3. குடிநீர் எடுத்து வரும் செம்பாலான குடம்:

 water carrier for drinking purposes made of copper.

செப்புக் குடத்து நீர் குடிக்க நல்லது.

ம. செப்புகுடம், செப்பிக்குடம்

     [செப்பு + குடம்]

கோயில் கோபுரத்தின் மீது பொருத்தப்படும் செப்புக் குடத்துள் ஒன்பது வகைத் தவசங்களைப் போடுவர். செப்புக் கலயமும் தவசங்களும் கூடி இடிதாங்கியாகப் பயன் படுகின்றன. இதுகாறும் எந்தக் கோவில் மீதும் இடிவிழுந்ததில்லை. இஃது பழந் தமிழரின் அறிவியல் திறமைக்குச் சான்றாகும்

     [P]

செப்புக்குளிசம்

 செப்புக்குளிசம் seppukkuḷisam, பெ. (n.)

   செப்புத் தகட்டில் மந்திரவெழுத்து பதித்துத்திரட்டிய தகடு; an amuletmade of rolled copperplate on which is inscribed magic lines and letters and worn as a remedy againstevilor mischief. (சா.அக.);

     [செம்பு+குளிசம்]

செப்புக்கோட்டை

 செப்புக்கோட்டை ceppukāṭṭai, பெ. (n.)

   செம்பினாலியன்ற கோட்டை; fort, as made of copper.

செம்பினால் கட்டியது இராவணன் கோட்டை

     [செம்பு → செப்பு + கோட்டை]

செப்புச்சல்லி

 செப்புச்சல்லி ceppuccalli, பெ. (n.)

   ஒரு தம்படியான சிறு தாம்பரக்காக; Small.copper coin = l pie.

ஒரு செப்புச் சல்லிக் காசு கூட உனக்குத் தரமாட்டேன்.

     [செப்பு + சல்லி]

செப்புச்சிமிழ்

 செப்புச்சிமிழ் ceppuccimiḻ, பெ. (n.)

   செம்பினாற் செய்த சிறிய பெட்டி; small box made of copper. (சா.அக.);

     [செம்பு+சிமிழ்]

செப்புச்சிலை

செப்புச்சிலை ceppuccilai, பெ. (n.)

   1. செம்பாலான படிமை (பிரதிமை);; copper idol or statue.

செப்புச்சிலை போன்ற உடம்பு.

   2. மாந்தளிர்க்கல் (யாழ்.அக.);; a copper-coloured stone.

     [செம்பு + சிலை]

செப்புத்தளிகை

செப்புத்தளிகை cepputtaḷigai, பெ. (n.)

   செப்புத் தட்டு; copperplate.

     ‘செப்புத் தளிகை ஒன்று’ (தெ.க.தொ.2 கல். 85-22);.

     [செப்பு + தளிகை. தளிகை = தட்டு ஏனம், உண்கலம்]

செப்புத்திருமேனி

செப்புத்திருமேனி cepputtirumēṉi, பெ. (n.)

   செம்பினாலாகிய கடவுள்_உருவச்சிலை; copper idol.

     ‘ஶ்ரீ ராஜராஜேச்வரமுடையார் கோவிலில் . . . எழுந்தருளுவித்த செப்புத் திருமேனி’ (தெ.க.தொ.2, 400);.

     [செப்பு + திருமேனி]

செப்புத்துறை

 செப்புத்துறை cepputtuṟai, பெ. (n.)

   இடுகாடு (வின்.);; burial ground, grave-yard.

     [செப்பு + துறை]

செப்புத்தொட்டி

 செப்புத்தொட்டி cepputtoṭṭi, பெ. (n.)

   வைப்பு நஞ்சு வகை (மூ.அ.);; a prepared arsenic.

     [செப்பு + தொட்டி]

செப்புநிறம்

 செப்புநிறம் ceppuniṟam, பெ. (n.)

   கருஞ்சிவப்பு நிறம் (யாழ்.அக.);; dark-red colour.

     [செம்பு + நிறம்]

செப்புநெருஞ்சி

செப்புநெருஞ்சி ceppuneruñji, பெ. (n.)

   சிறு நெருஞ்சி (பதார்த்த. 357);; red cow thron.

     [செம் → செப்பு + நெருஞ்சி]

செப்புப்பட்டயம்

 செப்புப்பட்டயம் ceppuppaṭṭayam, பெ. (n.)

செப்பேடு பார்க்க;see {šeppēgu.}

மறுவ. செப்பேடு

     [செம்பு + பட்டயம்]

செப்புப்பத்திரம்

செப்புப்பத்திரம் ceppuppattiram, பெ. (n.)

செப்பேடு பார்க்க;see {seppel}

     ‘விடுபேறாகச் செப்புப் பத்திரஞ்செய் தட்டிக் கொடுத்தேன்’ (T.A.S. 2,68);

மறுவ. செப்பேடு

     [செம்பு + பத்திரம்]

செப்புமலை

 செப்புமலை ceppumalai, பெ. (n.)

   காவியுடை (யாழ்.அக.);; ochre-coloured cloth.

செப்புமல்லிகை

 செப்புமல்லிகை ceppumalligai, பெ. (n.)

   பொன்னிறமுள்ள மல்லிகை வகை; golden jasmine.

     [செம்(மை); → செப்பு + மல்லிகை]

செப்புவழு

செப்புவழு ceppuvaḻu, பெ. (n.)

   விடைக் குற்றம் (தொல். சொல். 13, உரை);; incorrect answer.

     [செப்பு2 + வழு]

செப்பேடு

செப்பேடு ceppēṭu, பெ. (n.)

   பழங்கால அரசர்களின் ஆணைகள், அவர்கள் வழங்கிய கொடை பற்றிய செய்திகள் முதலானவை பொறிக்கப்பட்ட செப்புத்தகடு (ஈடு, 4:10);; copper-plate grant.

சோழர் காலச் செப்பேடுகள் அந்தக்கால நிரவாக முறையை அறிய உதவுகின்றன.

ம. செப்பேடு, செம்பேடு

 L. cuprium, E. copper.

மறுவ. செப்புப்பட்டயம்

     [செப்பு + ஏடு]

செப்போடு

செப்போடு ceppōṭu, பெ. (n.)

   செம்பாலான ஓடு (வின்.);; copper tiles, as on temple roof.

     [செப்பு3 + ஓடு]

செமக்கையிறால்

 செமக்கையிறால் cemakkaiyiṟāl, பெ. (n.)

   இறால் வகை; a kind of prawn.

     [செம் + கை + இறால்]

செமதி

 செமதி cemadi, பெ. (n.)

   மிகுதி; abundance.

     [செம் → செம்தி]

செமத்தியாக

 செமத்தியாக cemattiyāka, வி.எ. (adv.),

   நன்றாக, முழுமையாக; fully completely

இவன் தப்பாகப் பேசியதால், ஆசிரியரிடம் செமத்தி யாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.

     [சுமை-சுமத்தி- செமத்தி – செமத்தியாக (கொ.வ.);]

 செமத்தியாக cemattiyāka, வி.அ. (adv)

   கடுமையாக; severely.

     “கீழே விழுந்து செமத்தி யான அடி”

     [கமத்தி-செமத்தி+ஆக]

செமி

செமி1 cemittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   செரித்தல்; to digest.

     “நஞ்சையுண்டு

செமிப்பீரையா” (திருக்குற் ஊடற்.19.செந்.25, 392);.

     [சரி → செரி- → செமி-.]

 செமி2 cemittal,    4 செ.கு.வி. (v.i.)

   செரிமான மாதல்; to be digested.

     ‘உண்டது செமியாமே’ (ஈடு);.

     [செமி-1 → செமி2-.]

 செமி3 cemittal,    4 செ.கு.வி. (v.i)

   பிறத்தல்; to be born.

     “செமித்த தெத்தனை” (திருப்பு. 242);.

செமியாக்குணம்

 செமியாக்குணம் cemiyākkuṇam, பெ. (n.)

   செரியாமை; indigestion.

     [செமி- → செமியா + குணம்]

செமை

செமை cemai, பெ.(n.)

   1. சுமை,

 load

   2. கட்டு; bundle

     [சுமை-செமை (கொ.வ);]

செம்

செம் cem, கு.பெ.எ. (adj.)

   1. சிவந்த; reddish. செந்நீர்.

   2. நேர்மையான; honest. செங்கோலாட்சி.

   3. நடு நிலையான; impartial.

     “செம்மனத்தான்” (நள.46);.

   4. இலக்கணம் பிறழாத; grammatical. செந்தமிழ்.

   5. முதிர்ந்த; mature. செங்காய்.

   6. சொல்லழகில்லாத; without flourish of words.

செந்தொடை

   7. இயல்பான; natural.

     “செம்மகள்” (கல்லா: 5:31);.

   8. தகுந்த, ஏற்ற; in accordance with, appropriate.

செந்துறை.

   9. சமமான; equal. செம்பாகம்.

   10. ஒரே ஒழுங்கான; straight.

செந்தூக்கு

   11. கோட்டமில்லாத; without bend.

செங்குத்து.

   12. எண்ணிடைச் சொல் பெறாத; without conjunctive particles.

செவ்வெண்.

     [செய்ம்மை → செம்மை → செம். ஒ.நோ.: வெள் → வெய் → வெய்ம்மை → வெம்மை → வெம்]

செம்பகம்

செம்பகம் cembagam, பெ. (n.)

செண்பகம்1 பார்க்க;see {Sembagam.}

ம. செம்பகம், சம்பகம்

     [செண்பகம் → செம்பகம் (உ.வ.);]

செம்பகை

செம்பகை cembagai, பெ. (n.)

   மரக் குற்றத்தால் நரம்பு இன்பமின்றி இசைக்கையாகிய யாழ்க் குற்றம்; harsh note of a lute-string, due to bad wood of the lutc.

     “செம்பகை யார்ப்பே யதிர்வே கூடம்” (சிலப் 8:29);.

     [செம் + பகை]

பகை = குற்றம் சரியான, செம்மையான மரத்தால் செய்யாத யாழில் இருந்து எழும் ஓசை குற்றமுடையது.

செம்பக்கால்

 செம்பக்கால் cembakkāl, பெ. (n.)

   வெற்றிலைக் கொடி நடாத இளமையான அகத்திச் செடிகளையுடைய வெற்றிலைத் தோட்டம்(R.T.);; unplanted betel-garden with young ‘akatti’ plants.

     [செம்பை + கால்]

செம்பசலை

 செம்பசலை sembasalai, பெ. (n.)

   பசலை வகை (மலை.);; red Malabar nightshade.

     [செம் + பசலை]

செம்பசளை

 செம்பசளை sembasaḷai, பெ. (n.)

செம்பசலை பார்க்க (யாழ்.அக.);;see {sem-basalai.}

     [செம்பசலை → செம்பசளை]

செம்பஞ்சி

செம்பஞ்சி cembañji, பெ. (n.)

செம்பஞ்சு பார்க்க (சிலப். 6:82, அரும்.);;see {Šem-banju.}

     [செம்பஞ்சு → செம்பஞ்சி]

செம்பஞ்சு

செம்பஞ்சு cembañju, பெ. (n.)

   1. பருத்தி வகை; Brazil cotton.

   2. செவ்வரக்குச் சாயமிட்ட பஞ்சு; cotton coloured with lac-dye.

     ‘கோகிலக்கண் செம்பஞ்சு’ (சிலப். 14:187, உரை.);.

     [செம் + பஞ்சு]

செம்பஞ்சுக்குழம்பு

செம்பஞ்சுக்குழம்பு cembañjukkuḻmbu, பெ. (n.)

   1. செம்பஞ்சாற் செய்யப்பட்டு மகளிர் காலிற் பூசியணியப்பட்டுவந்த வண்ணக் குழம்பு வகை (மணிமே. 6:110, உரை);; paste prepared from red cotton, used to dye women’s feet.

   2. எழுதுவதற்குப் பயன்பட்ட செந்நிற மை; ink prepared for writing letters.

     [செம்பஞ்சு + குழம்பு]

செம்பஞ்சுக் குழம்பு = எழுதுவதற்குப் பயன் பட்ட வண்ணக் குழம்பு. தாழை மடலில், பித்திகை முனையால் தொட்டு மடல்கள் எழுதப்பட்டன. பனை ஓலையின் பழக்கம் இதன் பின்னரே தோன்றியது. பனை ஒலையில் எழுத்தாணி கொண்டு கீற வேண்டும். தாழை மடலில் மை தோய்த்து எழுத வேண்டும்.

செம்பஞ்சுநிறமணி

 செம்பஞ்சுநிறமணி cembañjuniṟamaṇi, பெ. (n.)

   ஒருவகை மணி (சௌகதந்திகப்பதுமராகம்); (யாழ்.அக.);; a kind of precious stone.

     [செம் + பஞ்சு + நிறமணி]

செம்பஞ்சூட்டு-தல்

செம்பஞ்சூட்டு-தல் cembañjūṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   மகளிர் பாதத்திற்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல்; to paint women’s feet with red-cotton dye.

     [செம்பஞ்சு + சூட்டு-.]

செம்பஞ்செழுது-தல்

 செம்பஞ்செழுது-தல் cembañjeḻududal, செ.கு,வி. (v.i.)

செம்பஞ்சூட்டு- பார்க்க;see {Sem-baijūstu}

     [செம்பஞ்சு + எழுது-.]

செம்படக்கரை

 செம்படக்கரை cembaḍakkarai, பெ. (n.)

   செம்படவர் வாழும் கடற்கரை; sea shore where fishermen live.

     [செம் + படகு + கரை]

செம்படக்கா

 செம்படக்கா cembaḍakkā, பெ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish.

செம்படத்தி

 செம்படத்தி cembaḍatti, பெ. (n.)

   பரதவரினப் பெண் (சங்.அக.);; woman of the fisherman caste.

     [செம்படவன் (ஆ.பா.); → செம்படத்தி (பெ.பா.);]

செம்படம்

செம்படம்1 cembaḍam, பெ. (n.)

   திருநீறு வைக்குஞ் சிறுசெப்பு (இ.வ.);; small, round or oval matal box for keeping holy ashes.

     [சம்யுடம் → செம்படம்]

 செம்படம்2 cembaḍam, பெ. (n.)

செப்புமலை (நிலககேசி,244, உரை.); பார்க்க;see {seppu-malai.}

     [செம் + படம்.]

செம்படர்

செம்படர் cembaḍar, பெ. (n.)

   சிவப்பாடை அணியும் புத்தர்கள்; Buddhists, as wearing red-coloured cloth.

     “இது செம்பட்ர்க ளிறைவ னுறையு மிடம்” (நீலகேசி, 464);.

     [செம்படம்2 → செம்படர்]

செம்படவச்சி

 செம்படவச்சி cembaḍavacci, பெ. (n.)

செம்படத்தி பார்க்க;see {Sem-badatti.}

     [செம்படத்தி → செம்படவச்சி]

செம்படவன்

 செம்படவன் cembaḍavaṉ, பெ. (n.)

   மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்; fisherman.

     [செம் + (படகு → படவு + அன்]

செம்படவர்கருவிகள்

 செம்படவர்கருவிகள் cembaḍavargaruvigaḷ, பெ. (n.)

   மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் கருவிகள்; fishermen’s tools.

     [செம்மடவர்+கருவிகள்]

செம்படாம்

செம்படாம் cembaṭām, பெ.(n.)

   சிவந்த கம்பளம்; red carpet

     “கம்பளம் சிம்புளி செம்படாம் ஆகும்”(நிகதி.7:282);

     [செம்+படாம்]

 செம்படாம் cembaṭām, பெ. (n.)

   1. சிவந்த ஆடை (திவா.);; red cloth.

   2. சிவப்புச் சீலை; red saree.

     [செம் + படாம்]

செம்படை

செம்படை1 cembaḍai, பெ. (n.)

செம்பட்டை-2 பார்க்க;see {Sem-bassal}.

 செம்படை2 cembaḍai, பெ. (n.)

   பொது வுடைமைக் கட்சியினர்; followers of the communist parties.

     [செம் + படை]

பொதுவுடைமைக் கட்சியின் கொடி சிவப்பு வண்ணமுடையதாதலின், அதன் தொண்டர் செம்படைத் தொண்டர் எனப்பட்டனர்.

செம்படைச்சி

 செம்படைச்சி cembaḍaicci, பெ. (n.)

செம்படத்தி (யாழ்.அக.); பார்க்க;see {sembagatti.}

     [செம்படத்தி → செம்படைச்சி]

செம்பட்டத்தி

 செம்பட்டத்தி cembaṭṭatti, பெ. (n.)

செம்படத்தி பார்க்க (யாழ்.அக.);;see {Sem-bagatti.}

     [செம்படத்தி → செம்பட்டத்தி]

செம்பட்டலரி

செம்பட்டலரி cembaṭṭalari, பெ. (n.)

   அலரி வகை (புட்ப. 29);; a kind of oleander.

     [செம்பட்டை (= வெளிர்ச்சிவப்பு); + அலரி]

செம்பட்டை

செம்பட்டை1 cembaṭṭai, பெ. (n.)

   ஒருவகைக் கொட்டிசைக் கருவி; a kind of musical instrument.

     ‘பாணி யிடக்கை செம்பட்டை’ (வள்ளிகதை. Ms.);

     [செம் + பட்டை]

 செம்பட்டை2 cembaṭṭai, பெ. (n.)

   தலை முடியின் ஒரு வகை வெளிர்ச் சிவப்பு நிறம் (உ.வ.);; reddish brown colour of hair.

பட கெஞ்சலு

     [செம் + பட்டை]

செம்பட்டைத்தில்லான்

 செம்பட்டைத்தில்லான் cembaṭṭaittillāṉ, பெ.(n.)

   தூக்கணாங்குருவி வகை; a kind of Swallow.

     [செம்பட்டை+தில்லான்]

     [P]

செம்பட்டைபாய்-தல்

 செம்பட்டைபாய்-தல் cembaṭṭaipāytal, செ.கு.வி. (v.i.)

   செந்நிறமாதல்; to become reddish brown, as hair.

அவன் தலை செம்பட்டை பாய்ந்தது.

     [செம்பட்டை + பாய்-.]

செம்பட்டைமயிர்

 செம்பட்டைமயிர் cembaṭṭaimayir, பெ. (n.)

   செம்மயிர்; reddish brown hair.

     [செம்பட்டை + மயிர்]

செம்பண்ணை

 செம்பண்ணை cembaṇṇai, பெ. (n.)

   சேவலின் தலைக் கொண்டை (மலை.);; cock’s comb.

     [செம் +பண்ணை]

செம்பத்தி

செம்பத்தி cembatti, பெ. (n.)

   உண்மையான அன்பு; trucpiety.

     “தாமரைத்தாள் செம்பத்தியால் வணங்காச் சிறியார்” (திருநூற். 23);

     [செம் + (பற்று → பற்றி →); பத்தி]

செம்பனசை

 செம்பனசை sembaṉasai, பெ. (n.)

   பனசைப் பாம்பு வகை (யாழ்.அக.);; a venomous snake.

     [செம் + பனசை. பனசை = பாம்பு வகை]

செம்பன்

 செம்பன் cembaṉ, பெ. (n.)

   சிவலை (யாழ்.அக.);; brown-coloured cow or bull.

     [செம்பு → செம்பன்.]

செம்பயிரவப்பூண்டு

 செம்பயிரவப்பூண்டு cembayiravappūṇṭu, பெ. (n.)

   மருதோன்றி வகை; unarmed orange nail dye.

     [செம் + பயிரவப் பூண்டு]

செம்பரக்கு

செம்பரக்கு cembarakku, பெ. (n.)

   கொம்பரக்கில் வெந்நீரை விட்டு உண்டுபண்ணும் அரக்கு வகை (M.M.427);; square cake of crimson colouring-matter, obtained by pouring warm water on stick-lac.

     [செம்பு + அரக்கு]

செம்பரணி

 செம்பரணி cembaraṇi, பெ.(n.)

திருமங்கலம் வட்டத்திலுள்ள சிற்றுார்.

 a village in Tirumangalam Taluk.

     [செம்+பரணி]

செம்பரத்தை

 செம்பரத்தை cembarattai, பெ. (n.)

   செடிவகை; shoe-flower.

ம. செம்பரத்தி

     [செம் + (பருத்தி →); பரத்தை]

செம்பரம்பன்னி

 செம்பரம்பன்னி cembarambaṉṉi, பெ.(n.)

   ஒரு வகை மீன்; rock cod.

     [ஒருகா. செம்பரம்+(பன்றி); பன்னி]

செம்பரவன்

 செம்பரவன் cembaravaṉ, பெ. (n.)

   மீனவருள் ஒரு வகையிர்; a group among fishermen.

     [செம்படவன் → செம்பரவன்]

செம்பரிதி

செம்பரிதி cembaridi, பெ. (n.)

சூரியன்,

 sun.

     “செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளி’ (பெரிய,3695);.

     [செம்+பரிதி]

செம்பருத்தி

செம்பருத்தி cembarutti, பெ. (n.)

   1. நல்ல பருத்தி வகை (G.Sm.D. i. 227);; a kind of superior cotton.

     ‘திலக முலோத்திரஞ் செம் பருத்திப்பூ’ (சிலப். 14:187, உரை);.

   2.செம்பஞ்சு; Brazil cotton.

   3.பருத்தி வகை (L.);; a kind of cotton plant.

   4. புதர்போல் வளர்வதும் சிவப்பு நிறப்பூப்பூப்பதுமான ஒருவகைச் செடி; a shrub with red flowers.

செம்பருத்திப் பூப்போன்றச் சிவப்புச் சேலை வாங்கி வா.

   க. கெம்பத்தி;ம. செம்பருத்தி

     [செம் + பருத்தி]

செம்பருந்து

 செம்பருந்து cembarundu, பெ. (n.)

   கருடன்; sacred kite.

     [செம் + பருந்து]

செம்பறாம்பண்ணி

 செம்பறாம்பண்ணி cembaṟāmbaṇṇi, பெ. (n.)

   செம்பழுப்பு நிறமுள்ள ஒருவகைக் கடல்மீன்; sea-fish, reddish brown.

செம்பலகை

 செம்பலகை cembalagai, பெ. (n.)

   செங்கல் (வின்.);; brick.

     [செம் + பலகை]

களி மண்ணைப் பலகை போல் தட்டையாகப் பரப்பி மரச் சட்டத்தால் அறுத்துச் சுட்டுச் செய்வதால் செங்கல்லுக்குச் செம்பலகை என்ற பெயர் உண்டாயிற்று.

பண்டை நாளில் செங்கல்லைப் பலகை போன்று அகலமும் நீளமும் மிகுந்ததாகச் செய்தனர். அவ்வகைச் செங்கற்கள் பூம்புகாரில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்பலக்கிளுவை

 செம்பலக்கிளுவை cembalakkiḷuvai, பெ. (n.)

   பேய்ச்சுண்டை (L.);; woolly, oblong bluishflowered prickly night-shade.

செம்பலா

 செம்பலா cembalā, பெ. (n.)

   கிராம்பு வகை (L.);; country cinnamon.

     [செம் + பலா]

செம்பல்

 செம்பல் cembal, பெ. (n.)

   அரத்தம்; blood. (சா.அக.);.

     [செம்-செம்பல்]

செம்பளி-த்தல்

செம்பளி-த்தல் cembaḷittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அச்சம் முதலிய காரணம் பற்றிக் கண்ணை இடுக்கிக் கொள்ளுதல்; to close the eyes, as in terror.

     ‘அஞ்சிக் கண்ணைச் செம்பளித்தவாறே’ (ஈடு, 5. 5:3);

செம்பழம்

செம்பழம் cembaḻm, பெ. (n.)

   1. பழுக்கும் நிலையிலுள்ள காய்; fruit almost riped.

   2. எலுமிச்சைபழம்; lime fruit. (சா.அக.);.

     [செம்-பழம்]

செம்பவளச்சம்பா

 செம்பவளச்சம்பா cembavaḷaccambā, பெ. (n.)

   செந்நிறமுள்ள சம்பா நெல்வகை; a kind of reddish {Śambá paddy.}

     [செம்பவளம் + சம்பா]

செம்பவளம்

செம்பவளம் cembavaḷam, பெ. (n.)

   1. வெளுப்புக் கலவாது செந்நிறத்திலுள்ள பவளவகை; coral of deep red colour.

     “வாய் செம்பவளம்” (திவ். திருவாய். 2. 5:5);.

   2. உருண்டை வடிவுள்ள பவளவகை (இ.வ.);; round-shaped red coral.

     [செம் + பவனம்]

செம்பவழம்

 செம்பவழம் cembavaḻm, பெ. (n.)

   செங்காய் (யாழ்.அக.);; fruit almost ripe.

     [செம் + பழம்]

செம்பாகம்

செம்பாகம்1 cembākam, பெ. (n.)

செம்பாதி பார்க்க;see {semi-bidi,}

     “காமத்திற் செம்பாக மன்று பெரிது” (குறள். 1092);

     [செம் + பாகம். பகு → பாகம்]

 செம்பாகம்2 cembākam, பெ. (n.)

   தெளிவு; lucidity; clear, natural flow of style.

அவர்கவி செம்பாகமாயுள்ளது.

     [செம் + பாகம்.]

செம்பாடு

செம்பாடு cembāṭu, பெ. (n.)

   1. செம்மண் நிலம்; Red soil.

   2. செம்மண் படிந்தது; anything soiled or tinged with red earth.

     [செம் + பாடு]

செம்பாட்டுத்தரை

செம்பாட்டுத்தரை cembāṭṭuttarai, பெ. (n.)

   செம்மண் நிலம்; red earth, red soil.

     “செம்பாட்டுத் தரையிலே மலையருவிகள் விழுந்தாற்போல” (திவ். பெருமாள். 10:2, வியா.);.

     [செம்பாடு + தரை]

செம்பாட்டுநிலம்

செம்பாட்டுநிலம் cembāṭṭunilam, பெ. (n.)

செம்பாட்டுத்தரை பார்க்க(அகநா. 26, 24, உரை);;see {sem-battu-t-tarai.}

     [செம்பாடு + நிலம்]

செம்பாட்டுமண்

 செம்பாட்டுமண் cembāṭṭumaṇ, பெ. (n.)

செம்பாட்டுத்தரை (வின்.); பார்க்க;see {embättu-t-tarai.}

     [செம்பாடு → செம்பாட்டு + மண்]

செம்பாதி

செம்பாதி cembāti, பெ. (n.)

சரிபாதி,

 exact half. moiety.

     ‘இவ்வூர்த் தச்சக்காணி செம்பாதியுடைய தச்சன்’ (தெ.க.தொ. 3, 80);.

ம. செம்பாதி

     [செம் + பாதி. பகுதி → பாதி]

செம்பாந்தள்

செம்பாந்தள் cembāndaḷ, பெ. (n.)

   கேது (சாதகசிந். 7);; moon’s descending node.

     [செம்பு → செம்பாந்தள்]

செம்பாம்பு

 செம்பாம்பு cembāmbu, பெ. (n.)

   ஒன்பான் கோள்களுள் ஒன்று(கேது); (திவா.);; moon’s descending node.

     [செம் + பாம்பு]

செம்பாரை

 செம்பாரை cembārai, பெ. (n.)

   வரிப்பாரை என்னும் மீன் (வின்.);; horse mackerel, silvery.

     [செம் + பாரை. பாரை = மீன்வகை]

செம்பாறாங்கல்

 செம்பாறாங்கல் cembāṟāṅgal, பெ. (n.)

   செந்நிறப் பாறை; laterite, cabook.

     [செம் + பாறை (ஆம்); + கல்]

செம்பாறைநண்டு

 செம்பாறைநண்டு cembāṟainaṇṭu, பெ. (n.)

   சிவப்பு நண்டு; large red crab.

     [செம் + பாறை + நண்டு. பாறை இடுக்குகளில் காணப்படும் நண்டு]

செம்பாற்சிட்டி

 செம்பாற்சிட்டி cembāṟciṭṭi, பெ. (n.)

   கீரை வகை (யாழ்.அக.);; a kind of greens.

     [செம் + பாற்சிட்டி. பாற்சிட்டி = கீரை வகை]

செம்பாலை

 செம்பாலை cembālai, பெ. (n.)

   பாலைப் பண்வகை (பிங்.);; a melody type of the palai class.

     [செம் + பாலை. பாலை = பண்வகை]

செம்பால்

செம்பால்1 cembāl, பெ. (n.)

   1. அரத்தம்; blood.

     “செம்பாலிறைச்சி திருந்த மனைசெய்து (திருமந், 461);.

   2. கருப்பை அரத்தம் (பிங்.);; blood in the womb causing, pregnancy.

     [செம் + பால். பால் = அரத்தம்]

 செம்பால்2 cembāl, பெ. (n.)

செம்பாதி பார்க்க;see {semi-bidi,}

     “செம்பால் வாரம் சிறுமைக் கெல்லை” (தொல்.பொருள். 463);.

     [செம் + பால். பால் = பாதி]

செம்பால்பாய்-தல்

செம்பால்பாய்-தல் cembālpāytal,    1 செ.கு.வி. (v.i.)

   கட்டிளமையால் உடம்பில் அரத்த வோட்டம் தெரியும் படியாயிருத்தல்; to glow with health and beauty, as one’s youth, making the blood-vessels appear through the transparent skin.

     “இவனுடைய பால்யம் செம்பால் பாயாநிற்கும்” (திவ்.அமலானாதி-9, வியா. 101);.

     [செம்பால் + பாய்-.]

செம்பால்முடாங்கி

 செம்பால்முடாங்கி cembālmuṭāṅgi, பெ. (n.)

   பூடுவகை (யாழ்.அக.);; a shrub.

செம்பாளை

செம்பாளை cembāḷai, பெ. (n.)

   1. தில்லைக் கட்டி நெல்; a reddish kind of paddy.

   2. சம்பா நெல் வகை (G.Tj.D.I.,92);; a species of {Šampå} paddy.

     [செம் + பாளை. பாளை = நெல்வகை]

செம்பி

செம்பி1 cembi, பெ. (n.)

   சோழர்குல முன்னோன்; ancestor of Chola dynasty.

 செம்பி2 cembi, பெ. (n.)

   கருவண்டு (யாழ்.அக);; black bce.

செம்பிச்சி

 செம்பிச்சி cembicci, பெ. (n.)

செம்பிச்சு (மூ.அ.); பார்க்க;see {$embiccu.}

செம்பிச்சு

 செம்பிச்சு cembiccu, பெ. (n.)

   செப்புத் தொட்டி நஞ்சு (மலை.);; a prepared arsenic.

     [செம்பு + (நச்சு →); பிச்சு]

செம்பித்தநோய்

செம்பித்தநோய் cembittanōy, பெ. (n.)

   பித்த நோய் வகை (சீவரட் 185);; a bilious disease.

     [செம் + பித்ததோய்]

   பித்தநோய் பார்க்க;

செம்பிநாடு

செம்பிநாடு cembināṭu, பெ. (n.)

   கி.பி. 14ஆம் நூற்றாண்டில் திருக்குருகூர் உள்ளிட்ட பகுதியின் பெயர்; the name of a region including Thirukkurugurin Thiruchendur Taluk during l4th century.

     “வட தலை செம்பிநாட்டு கீழைக்கொடுமளான மது ரோதைய நல்லூர்” (தெ.க.தொ. 26;கல். 495);

செம்பிநாட்டுமறவன்

செம்பிநாட்டுமறவன் cembināṭṭumaṟavaṉ, பெ. (n.)

   மறவர் வகையான் (ETV,32);; a subsect of {Marava} caste.

செம்பினிறம்

 செம்பினிறம் cembiṉiṟam, பெ. (n.)

   மாந்தளிர்க் கல் (யாழ்.அக.);; a kind of precious stone.

     [செம்பு + நிறம்]

செம்பின்பச்சை

 செம்பின்பச்சை cembiṉpaccai, பெ. (n.)

   நாகப்பச்சை (வின்.);; a kind of green stone.

செம்பியதரையன்

செம்பியதரையன் cembiyadaraiyaṉ, பெ. (n.)

   திருவள்ளூர் வட்டத்திலுள்ள கூவியம் கோயிலில் பதியப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்; a signatury of an agreement recorded in temple of {Küviyam} at Thiruvallur tk.

     ‘இவை செம்பியதரையன் எழுத்து’ (தெ.க.தொ. 26;கல். 363);

     [செம்பியன் + அரையன்]

செம்பியனார்

செம்பியனார் cembiyaṉār, பெ. (n.)

   நற்றிணை 102ம் பாடலின் ஆசிரியர்; author of the verse {Narrinai } 102.

செம்பியனேந்தல்

 செம்பியனேந்தல் cembiyaṉēndal, பெ.(n.)

   மதுரை மாவட்டத்தில் உள்ள ஒர் ஊர்; a village in Madurai.

     [செம்பியன்+ஏந்தல்(ஏரி);]

செம்பியன்

செம்பியன் cembiyaṉ, பெ.(n.)

   1. சோழன்; Chola king.

   2. சோழர் குடிமரபுகளுள் ஒன்று

 one of the Chola dynasties.

     [செம்+செம்பியன்]

 செம்பியன்1 cembiyaṉ, பெ. (n.)

   1. சிபியின் வழி வந்த சோழன்; king of the {Sóla} dynasty, as descendant of {Šibi.}

     “செம்பியர் மருகன்” (புறநா. 228: 9);.

   2. முதல் வள்ளல்கள் எழுவரில் ஒருவன் (சூடா.);; an ancient chief, noted for his liberality, one of seven {mudal-vallalgal.}

     [செம்பி1 → செம்பியன்]

வ. சைப்ய

   முதல் வள்ளல்கள் எழுவராவர்;குமணன், சரகன், சாரண், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி, இவர்கள் தொன்மங்களில் கூறப்பட்டவர்கள்.

ஆரியர் வருமுன் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பாண்டியர் ஆட்சியிலிருந்தது.

     “பஃறுனி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி” (சிலப். 11:19-22);

என்று இளங்கோவடிகள் கூறுதல் காண்க.

அக்காலத்தில் பாண்டியர் குடியினர் சிலர் வடநாடு சென்று வாழ்ந்திருந்தனர். அவரே, பாண்டவரின் முன்னோரான வடநாட்டுத் திங்கள் மரபினர். அதன்பின், சோழக்குடியினர் சிலரும் வடநாடு சென்று ஆண்டனர். அவரே இராமனின்

முன்னோரான வடநாட்டுக் கதிரவன் மரபினர். இதனாலேயே, மனு, மாந்தாதா முசுகுந்தன், செம்பி முதலியோர், சோழருக்கும் வடநாட்டுக் கதிரவக் குலத்தினருக்கும் பொது முன்னோராகச் சொல்லப்படுவாராயினர். செம்பி வழிவந்தவன் செம்பியன். செம்பி என்னும் பெயர் வடமொழியிற் சிபி எனத் திரிந்துள்ளது.

செம்பியன் சோழன்,

     “செம்பியர் மருகன்” (புறநா.228:9);.

சோழன் செம்பியன் எனப் பெற்றமையாலும், செம்பியன் தமிழப் பேரரையன், செம்பியன் தமிழவேள் என்பன சோழராற் கொடுக்கப் பெற்று வந்த பட்டங்களாயிருந்தமையாலும், செம்பி என்னும் பெயர் தூய தமிழ்ச் சொல்லாகவேயிருத்தல் வேண்டும். மனு, மாந்தாதா முதலியோரின் தமிழப் பெயர் மறையுண்டு போயின.

தலையெழு வள்ளல்களுள் ஒருவன் செம்பியன் எனப் பெற்றிருந்தமையால், சோழர்குடித் தொன்முது பழைமையும் செம்பியன் முதுபழமையும் உணரப் பெறும்.

ஆரியர் வருமுன் வடநாட்டில் தமிழர்

குடியேறியிருந்தது போன்றே தமிழ் அரசரும் குடியேறியிருந்தனர் என அறிக.

அகத்தியர்

     “துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியின் கண்” இருந்தார் என்று நச்சினார்க்கினியர் கூறுவதையும் நோக்குக (வ.மொ.வ.);.

செம்பியன் மாதேவி

 செம்பியன் மாதேவி cembiyaṉmātēvi, பெ..(n.)

   தஞ்சை மாவட்டத்திலுள்ள ஊர்; a village in Thanjavur district

செம்பியன் மாதேவி சதுர்வேதிமங்கலம், செம்பின் மாதேவி(கல்);.

     [செம்பியன்+மாதேவி]

செம்பியன்தமிழப்பேரரையன்

செம்பியன்தமிழப்பேரரையன் cembiyaṉtamiḻppēraraiyaṉ, பெ. (n.)

   பிற்காலத்துச் சோழர்களாற் கொடுக்கப்பட்டு வந்த பட்டங்களிலொன்று (தெ.க.தொ. 5,238);; a little conferred by the later Cholas.

     [செம்பியன் + தமிழப் பேரரையன்]

செம்பியன்தமிழவேள்

செம்பியன்தமிழவேள் cembiyaṉtamiḻvēḷ, பெ. (n.)

   பிற்காலத்துச் சோழர்களால் கொடுக்கப்பட்டு வந்த பட்டங்களுள் ஒன்று (தெ.க.தொ. 3, 22);; a title conferred by the later Cholas.

     [செம்பியன் + தமிழவேள்]

செம்பியன்மாதேவி

செம்பியன்மாதேவி cembiyaṉmātēvi, பெ. (n.)

   கண்டராதித்த சோழனின் இரண்டாம் மனைவி; wife of {Kandarāditta-Šàlar.}

     [செம்பியன் + மாதேவி]

கண்டராதித்த சோழரின் இரண்டாம் மனைவியின் பெயர் செம்பியன்மாதேவி. கொல்லிமலை மழவர் குடியைச் சேர்ந்தவர். இராசராசசோழனின் வளர்ப்பு அன்னை கணவர் இறந்த பின்னரும் 40 ஆண்டு காலம் வாழ்ந்து பல குமுகாயப் பணி செய்துள்ளார். குறிப்பாகப் பல கோயில்கள் கருங்கல்லில் எடுத்துள்ளார்.

செம்பியன்மாதேவிநாழி

செம்பியன்மாதேவிநாழி cembiyaṉmātēvināḻi, பெ. (n.)

   திருமழபாடி கோயிலில் உப்பு அளப்பதற்காகப் பயன்படும்படியளவு (தெ.க.தொ. 5, கல். 627, 638);; a volume measure, in use, the temple of {Tirumalabadi. }

     [செம்பியன்மாதேவி + நாழி]

அளவுக் கலங்களுக்கு, அரச மரபினர், இறைவன் பேரிட்டு அழைப்பது பண்டைய மரபாகையால், அளவு நாழிக்கு செம்பியன்மா தேவி பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் ஒரு மரக்காலும் இருந்ததாகத் தெரிகிறது.

செம்பியன்மாதேவிப்பெருமண்டபம்

செம்பியன்மாதேவிப்பெருமண்டபம் cembiyaṉmātēvibberumaṇṭabam, பெ. (n.)

   முதல் இரைசராசன் (கி.பி. 985-1016); தன்னுடைய பெரிய பாட்டியாகிய செம்பியன் மாதேவியின் பெயரால் திருமுக்கூடல் என்னும் ஊரில் எழுப்பித்த மண்டபம் (பிற்சோவர. சதாசிவ பண். பக். 134.);; a memorial building built by Rajaraja Chola-I.

     [செம்பியன்மாதேவி + பெருமண்டபம்]

செம்பியமங்கலம்

 செம்பியமங்கலம் cembiyamaṅgalam, பெ.(n.)

   தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Thanjavur.

     [செம்பியன்+மங்கலம்]

செம்பிரண்டை

 செம்பிரண்டை cembiraṇṭai, பெ. (n.)

   முடை நாறி; a small downy-lobed vine.

     [செம் + பிரண்டை]

செம்பிறப்பு

செம்பிறப்பு cembiṟappu, பெ. (n.)

   அறுவகைப் பிறப்புகளுள் நான்காவதாகிய செம்புயிர்க்குரிய பிறப்பு; the fourth of the six kinds of birhts, which is that of {Šempuyir,}

     “பசும் பிறப்புஞ் செம்பிறப்பும்” (மணிமே.27:151);.

     [செம் + பிறப்பு]

சமணர் கொள்கையின் படி பிறப்பு அறுவகைப்படும். தமிழகராதிகள் கூற்றுப்படி பிறப்பு ஏழு வகைப்படும். அவையாவன: தேவர், மக்கள், விலங்கு, புள், ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம், சமண வகைப்பாடு வருமாறு : கரும் பிறப்பு, கருநீலப் பிறப்பு, பசும்பிறப்பு, செம்பிறப்பு, பொன் பிறப்பு, வெண் பிறப்பு.

செம்பிறால்

 செம்பிறால் cembiṟāl, பெ. (n.)

   சிவப்பிறால் மீன் வகை (யாழ்.அக.);; a species of reddish prawn.

     [செம்பு + இறால், செம்பு = சிவப்பு]

செம்பிறை

செம்பிறை cembiṟai, பெ. (n.)

   1. கானற்கல்

 a kind of metallic ore.

   2. நீலக்கல் (யாழ்.அக.);; blue stone.

     [செம் + பிறை]

செம்பிற்பொருப்பு

செம்பிற்பொருப்பு cembiṟporuppu, பெ. (n.)

   செம்புகனிமம் உள்ள பொதியமலை; Mt. Podiyam, as containing copper.

தென்கால் விடுக்குஞ் செம்பிற் பொருப்பு (கல்லா. 51:11);.

     [செம்பு + இல் + பொருப்பு (செம்புத் தாது உள்ள மலை);]

செம்பிலிச்சை

 செம்பிலிச்சை cembiliccai, பெ.(n.)

   ஒரு வகை மீன்; snapper

     [செம்-செம்பிவி-செம்பிலிச்சை]

செம்பிலியாடு

 செம்பிலியாடு cembiliyāṭu, பெ. (n.)

   செம்மறியாறு; a brown sheep. (சா.அக.);.

     [செம்பல்-செம்பிலி+ஆடு]

செம்பில்

 செம்பில் cembil, பெ.(n.)

   ஒரு வகை மரம்; atree.

     [செம்-செம்பு – செம்பில்]

 செம்பில் cembil, பெ. (n.)

   மரவகை; cup-calyxed white cedar.

செம்பில்வேதை

 செம்பில்வேதை cembilvētai, பெ. (n.)

   சோர நஞ்சு (மூ.அ.);; a prepared arsenic.

செம்பிளி-த்தல்

செம்பிளி-த்தல் cembiḷittal,    4 செ. குன்றாவி. (v.t.)

செம்பளி- பார்க்க;see {šembali-.}

     [செம்பளி → செம்பிளி]

செம்பு

செம்பு1 cembudal,    5 செ.குன்றாவி. (v.t.)

செம்மு1,2 பார்க்க;see {emmu’2}

     “அவுணன் பட்டுக் குரைகடல் செம்ப (திருப்பு. 841);.

     [செம்மு → செம்பு (அடைத்தல்);]

 செம்பு2 cembu, பெ. (n.)

   1. வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத் தன்மை குறைந்ததுமான வெளிர்ச்சிவப்பு நிற மாழை, தாம்பரம்; copper Cuprum, as reddish.

     “செம்பிற செய்நவுஞ் கஞ்சத் தொழிலவும்” (சிலப். 14: 174);.

   2. பொன் (அக.நி.);; gold.

   3. நீர், பால் முதலியவற்றை எடுத்துச் செல்ல ஏந்தாகக் குறுகிய கழுத்தும உருண்டை வடிவக் கீழ்ப்பகுதியும் உடைய ஓர் மாழை ஏனம்; a small metal vessel with a narrow neck for carrying water, milk, etc.

   4. மூன்றே காற் சேர்கொண்ட முகத்தலளவு; liquid measure = 31/4 {$ér} = 216 cu. in.

   5. காசுக்குற்ற வகை (சரவண. பணவிடு. 16);; a blemish in coin.

   ம. செம்பு;   . க. செம்பு, கெம்பு;து. செம்பு

 E. copper;

 LL. cuper;

 L. cuprum;

 Gk. cyprium;

 G. kuppes;

 Du. koper;

 F. cuinre.

     [செம் → செம்பு (வே.க.220);]

 செம்பு2 cembu, பெ. (n.)

   பனஞ்சிறாம்பு; fibres of palmyra palm.

     “செறும்பிற் பிறங்கிச் செறி . . . மயிர்” (கம்பரா. கங்கை. 33);.

     [சில்(= சிறியது); → சிலும்பு → செறும்பு]

செம்புகம்

செம்புகம்1 cembugam, பெ. (n.)

   நரி; fox.

 செம்புகம்2 cembugam, பெ. (n.)

   செம்போத்து (சங்.அக.);; crow pheasant.

தெ. செமுடு காகி

     [செம்போத்து → செம்புகம்]

செம்புகொட்டி

செம்புகொட்டி cembugoṭṭi, பெ. (n.)

செம்பு

   வேலை செய்யும் தொழிலாளி (சிலப். 5: 28, உரை);; copper smith.

   ம. செம்பு கொட்டி;   க. செம்புகுட்டிக;து. செம்பு குட்டி

     [செம்பு + கொட்டி]

செம்புக்கலம்

 செம்புக்கலம் cembukkalam, பெ.(n.)

   செம்புப் பாத்திரம்; copper eating dish (சா.அக.);.

     [செம்பு+கலம்]

செம்புக்கலுவம்

 செம்புக்கலுவம் cembukkaluvam, பெ. (n.)

   கல்லம்மி; grinding Stone. (சா.அக.);.

     [செம்பு+கலுவம்]

     [P]

செம்புக்குட்டி

செம்புக்குட்டி1 cembukkuṭṭi, பெ. (n.)

   செம்புச் சிலை; idol made of copper.

     [செம்பு + குட்டி. குட்டி = சிலை]

 செம்புக்குட்டி2 cembukkuṭṭi, பெ. (n.)

   1. செண்பகக்குட்டி (இயற்பெயர்);; a personal name.

   2. செண்பகக் குட்டி குலப்பிரிவு; a subsectas {Šeņbagakkusți.}

செம்புக்குள்வேதை

 செம்புக்குள்வேதை cembukkuḷvētai, பெ. (n.)

   கற்பரி நஞ்சு (வின்.);; a mineral poison.

செம்புடையன்

 செம்புடையன் cembuḍaiyaṉ, பெ. (n.)

   பாம்பு வகை; red wart snake.

     [செம் + உடையன். உடையன் = பாம்பு]

செம்புண்

செம்புண் cembuṇ, பெ. (n.)

   1. ஆறும் நிலைமையில் உள்ள புண் (இ.வ.);; healing wound, as looking reddish.

   2. அரத்தத்தாற் செந்நிறமாயிருக்கும் புண்; fresh wound, red with blood.

     “தாம்பிறிதின் செம்புண் வறுத்த வறைதின்பர்” (அறநெறி. 94);.

     [செம் + புண்]

செம்புண்ணீர்

செம்புண்ணீர் cembuṇṇīr, பெ. (n.)

   அரத்தம்; blood.

     “செம்புணிர் பொசியு மெய்யினன்” (பாரத. வேத்திரகீய. 15);.

     [செம் + புண்ணீர்]

செம்புதட்டி

 செம்புதட்டி cembudaṭṭi, பெ. (n.)

செம்பு கொட்டி பார்க்க;see {Sembu-kotti.}

ம. செம்புதட்டி

     [செம்பு + தட்டி]

செம்புத்தீக்கல்

 செம்புத்தீக்கல் cembuttīkkal, பெ. (n.)

   இரும்புஞ் செம்புங் கலந்த மாழைக்கட்டி (இ.வ.);; copper pyrites, sulphide of copper and iron.

     [செம்பு + தீக்கல்]

செம்புனல்

செம்புனல் cembuṉal, பெ. (n.)

   1. புது வெள்ளம்; freshes in river.

     “தலைப் பெயற் செம்புனலாடி” (ஜங்குறு. 80);.

   2. சிவந்த நீர்; red -water.

   3. அரத்தம்; blood.

     “கடார மழித்த நாட் பாய்ந்து செம்புன லாடியு நீந்தியும்” (கலிங். 138);.

     [செம் + புனல்]

செம்புப்பற்று

 செம்புப்பற்று cembuppaṟṟu, பெ. (n.)

   பொன்னிற் கலந்த செம்பு (வின்.);; alloy of copper in gold.

     [செம்பு + பற்று]

செம்புமணல்

 செம்புமணல் cembumaṇal, பெ. (n.)

   செம்பு கலந்த மணல் (வின்..);; sand containing copper.

     [செம்பு + மணல்]

செம்புமலை

 செம்புமலை cembumalai, பெ. (n.)

   செப்புக் கனிமங்களைத் தன்னிடத்தே கொண்ட மலை; mountain containing copper ore.

     [செம்பு + மலை]

செம்புயிர்

செம்புயிர் cembuyir, பெ. (n.)

   1. மக்களிற் கீழாயினாரும் விலங்கும் கொண்டுள்ள உயிர்; the grade of life which includes animals and human beings of low type.

     “செம்புயிரிரும்புபோல வாம் பிணியுயிர்” (சீவக. 3111);

     [செம்பு + உயிர்]

   மணி உயிர் – வீடு பெற்ற உயிர்;   பொன் உயிர்- வானவர் உயிர்;வெள்ளி உயிர் – அழகிய

   மக்கள் உயிர்;   செம்புயிர் – மக்களின் கீழாயினோர் உயிர், விலங்குயிர்;இரும்பு உயிர் – நிரையயுயிர் (நரகருயிர்); (சைனம்);.

செம்புறா

 செம்புறா cembuṟā, பெ. (n.)

   மீன் வகை (யாழ்ப்.);; a kind of fish.

     [செம்பிறால் → செம்புறா]

செம்புறைக்கல்

 செம்புறைக்கல் cembuṟaikkal, பெ. (n.)

செம்பாறாங்கல் (சங்.அக.); பார்க்க;see {sempārāṁgal}

செம்புலப்பெயல்நீரார்

செம்புலப்பெயல்நீரார் cembulappeyalnīrār, பெ. (n.)

   குறுந்தொகை 40 ம் பாடலில் வரும் சொற்றொடர் கொண்டு அழைக்கப்படும் புலவர், அப்பாடலின் ஆசிரியில்; the name of the poet, named after the terms found in his verse {Kurundogai} 40, when his original name was not known.

     “செம்புலப் பெயந்நீர் போல” (குறுந். 40);.

     [செம்புலம் + பெயல் + நீரார்]

செம்புலம்

செம்புலம் cembulam, பெ.(n.)

   1. செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒர் ஊர்; a village in Chengalpattu.

   2. செம்மண் நிலம்; red soil land

     [செம்+புலம்]

 செம்புலம் cembulam, பெ. (n.)

   1. செம்மண் நிலம்; red earth country.

     “செம்புலப் பெயந்நீர் போல” (குறுந். 40);.

   2. போர்க்களம் (திவா.);; battle field.

   3. பாலைநிலம் (பிங்.);; desert tract.

   4. சுடுகாடு; place of cremation.

   5. செம்புமலை பார்க்க;see {Šembu-malai.}

   6. செழிப்பானநிலம் (வின்.);; fertile land.

     [செம் + புலம். புலம் = நிலம்]

செம்புலவு

 செம்புலவு cembulavu, பெ. (n.)

   வெண்ணாங்கு மரவகை (L.);; creamy-leaved lance wood.

செம்புலி

செம்புலி cembuli, பெ. (n.)

   1. பழுப்பு நிறமுள்ள புலிவகை; tawny-coloured tiger.

   2. கள்ளர் இனத்தில் ஓர் உட்பிரிவு (E.T.);; a sub-sect of Kajjar caste.

ம. செம்புலி

     [செம் + புலி]

செம்புலியாடு

செம்புலியாடு cembuliyāṭu, பெ. (n.)

செம்மறி பார்க்க (பதார்த்த. 847);;see {Sem-mad.}

செம்புலிலை

 செம்புலிலை cembulilai, பெ. (n.)

   சேரர் ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்ட வரி; a kind of tax.

செம்புளிச்சான்

 செம்புளிச்சான் cembuḷiccāṉ, பெ. (n.)

செம்புளிச்சை (L.); பார்க்க;see {šem-buliccai.}

செம்புளிச்சை

செம்புளிச்சை cembuḷiccai, பெ. (n.)

   1. தேவதாரு மரம் (பிங்.);; red cedar.

   2. மரவகை (M.M.83);; a kind of tree Roselle.

     [செம் + புளிச்சை. புளிச்சை = மரவகை]

செம்புள்

செம்புள் cembuḷ, பெ. (n.)

   கருடன்; sacred kite.

     “செம்புளாய்க் கொடிய நாரசிங்க மாய்” (திருவிளை. யானையெ. 41);.

ம. செம்புள்

     [செம் + புன்]

செம்புழை

 செம்புழை cembuḻai, பெ.(n.)

குலாத்தி பறவையின் வகையுள் ஒன்று

 a variety of kulati bird

     [செம்+புழை]

செம்புவட்டகை

 செம்புவட்டகை cembuvaṭṭagai, பெ. (n.)

   செம்பினாற் செய்த சிறு கிண்ணம்; smal copper basin. (சா.அக);.

     [செம்பு+வட்டகை]

செம்புவரை

செம்புவரை cembuvarai, பெ. (n.)

செம்பிற் பொருப்பு பார்க்க;see {Sembirporuppu.}

     “செம்பு வரை தனிலேகி” (குற்றா. தல. திருமால். 9);.

     [செம்பு + வரை. வரை = மலை]

செம்பூ

செம்பூ cembū, பெ. (n.)

   செந்நிறப் பூவுள்ள செடி வகை; a plant with red-flower.

     “செம்பூங் கண்ணியர்” (பரிபா. 22:21);.

     [செம் + பூ]

செம்பூசணி

 செம்பூசணி cembūcaṇi, பெ. (n.)

   பூசணி வகை (மூ.அ.);; a variety of reddish pumpkin.

     [செம்(மை); + பூசணி]

செம்பூட்சேய்

செம்பூட்சேய் cembūṭcēy, பெ.(n.)

   தொல்காப் பியரின் ஒருசாலை மாணாக்கர்; a classmate of the great Tamil grammarian Tolkappiyar.

     [செம்+பூண்+சேய்],

 செம்பூட்சேய் cembūṭcēy, பெ. (n.)

   அகத்தியனார் மாணாக்கருள் ஒருவரான கூற்றியல் என்னும் நூலின் ஆசிரியல் (இறை. 56, உரை);; a disciple of {Agastya,} author of {Kūrriyal.}

செம்பூத்தன் கூட்டம்

 செம்பூத்தன் கூட்டம் cembūttaṉāṭṭam, பெ.(n.)

   கொங்குவேளாளரின் அடையாளக்குடிப் பெயர்களுள் ஒன்ற; name of a clan among Kongu Vellalars.

     [செம்போத்து-அன்+கூட்டம்]

செம்பூமி

 செம்பூமி cembūmi, பெ. (n.)

செம்மண்,

 ret earth, soil. (சா.அக.);.

     [செம்+பூமி]

செம்பூரம்

 செம்பூரம் cembūram, பெ. (n.)

செம்பூரான் பார்க்க;see {Sem-btirin.}

     [செம் + பூரம். பூரம் = பூரான்]

செம்பூராங்கல்

 செம்பூராங்கல் cembūrāṅgal, பெ. (n.)

செம்பாறாங்கல் பார்க்க;see {Sem-biráň-gal.}

     [செம்பாறாங்கல் → செம்பூராங்கல்]

செம்பூரான்

 செம்பூரான் cembūrāṉ, பெ. (n.)

   பூரான் வகை (சங்.அக.);; red centipede.

     [செம்(மை); + பூரான்]

செம்பூரான்கல்

செம்பூரான்கல் cembūrāṉkal, பெ. (n.)

செம்பாறாங்கல் (கட்டடநா. 41); பார்க்க;see {sem-biráñ-gal.}

     [செம் + பூரான்]

செம்பூர்

 செம்பூர் cembūr, பெ.(n.)

   வந்தவாசி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in VandavasiTaluk.

     [செம்பு+ ஊர்]

செம்பூர்நாடு

செம்பூர்நாடு cembūrnāṭu, பெ. (n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பழைய நாட்டுப் பிரிவு; an old divison in {Käfijipuram} dt.

     “செம்பூர்க் கோட்டத்து செம்பூர் நாட்டு கலிகுளத்து வாயுடையமாங் கோயில்…” (தெ.க.தொ : 7, கல். 541-1);.

     [செம்பூர் + நாடு]

செம்பூறல்

 செம்பூறல் cembūṟal, பெ. (n.)

   செம்பி லுண்டாகுங் களிம்பு (யாழ்ப்.);; verdigris.

     [செம்பு + ஊறல். ஊறு → ஊறல்]

செம்பூறு-தல்

செம்பூறு-தல் cembūṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   களிம்ப உண்டாதல்; to form verdigris, as on copper.

     [செம்பு + ஊறு-.]

செம்பூவம்

 செம்பூவம் cembūvam, பெ.(n.)

   செம்பழுப்புநிறம் கொண்ட காகம் போன்ற பறவை; a brown coloured bird, resembling crow.

மறுவ. செம்போத்து.

     [செம்+பூவம்]

 செம்பூவம் cembūvam, பெ. (n.)

   மரவகை; a kind of tree.

     [செம் + பூவம். பூவம் = மரவகை]

செம்பை

செம்பை1 cembai, பெ. (n.)

   1. சிற்றகத்தி (L.);; common sesban.

   2. சீமைச்செம்பை (L.);; Jerusalem thorn.

   3. ஒருவகைப் பூச்செடி; a kind of flower plant.

     [செம்பு → செம்பை (வே.க.220);]

     [P]

 செம்பை2 cembai, பெ. (n.)

   நெற்பயிரின் நோய் வகை (நீலகேசி, 366, உரை.);; a disease affecting paddy crop.

செம்பொடி

செம்பொடி1 cemboḍi, பெ. (n.)

   1. செம்மணல் (சங்.அக.);; red sand.

   2. மகரந்தப்பொடி; pollen.

     “சேவலொடு பெடையன்னம் … பூவணைமேல் துதைந்தெழு செம்பொடியாடி” (திவ். பெரியாழ். 49:9);.

 செம்பொடி2 cemboḍi, பெ. (n.)

   1. நீலக்கல் (யாழ்.அக.);; blue stone.

   2. சிந்தூரம்; red oxide of mercury.

     “செம்பொடிப் புரத்திக் கயங்களை” (தக்காகப். 496);.

     [செம் + பொடி]

செம்பொத்தி

செம்பொத்தி cembotti, பெ. (n.)

   ஆடைவகை (சிலப். 14:108, உரை);; a kind of cloth.

     [செம் + பொத்தி. பொத்தி = ஆடை வகை]

செம்பொன்

செம்பொன் cemboṉ, பெ. (n.)

   சிறந்த பொன்; Superior gold.

     “செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துற” (பெருங். உஞ்சைக். 33:189);.

   ம. செம்பொன்னு;க. செம்பொன்

     [செம் + பொன்]

செம்பொன்வரை

செம்பொன்வரை cemboṉvarai, பெ. (n.)

   மேருமலை; Mt. {Méru,} as golden.

     “கல்விச் செம்பொன் வரையினா ரளவில்லா வளவு சென்றார்”(திருக்கோ.:308);.

     [செம் + பொன் + வரை. வரை = மலை.]

செம்பொருளங்கதம்

செம்பொருளங்கதம் cemboruḷaṅgadam, பெ. (n.)

   வாய்கரவாது சொல்லிய வசைப்பாட்டு (தொல்.பொருள்.437.உரை);; open, undisguised lampoon.

     [செம்பொருள் + அங்கதம். அங்கதம் = வசைப்பாட்டு]

செம்பொருள்

செம்பொருள் cemboruḷ, பெ. (n.)

   1. நேர் பொருள்; natural, correct meaning.

   2. உண்மைப்பொருள் (சி.போ.பா. 6:2, பக். 319);; true significance.

   3. சிறந்த பொருள்; object of supreme worth or excellence.

     “மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் (பெரியபு.திருஞான. 102);.

   4. முதற்பொருளான கடவுள்; God.

     “செம் பொருள் காண்ப தறிவு” (குறள், :358);.

   5. அறம; virtue.

     “செம்பொருள் கண்டார்” (குறள், 91);.

     [செம் + பொருள்]

செம்பொறி

 செம்பொறி cemboṟi, பெ. (n.)

   அரசமுத்திரை (அக.நி.);; royal seal.

     [செம் + பொறி]

செம்போக்கு

செம்போக்கு cembōkku, பெ. (n.)

   உயிர், உயர் பிறவிகளிற் சென்று கொண்டிருக்கை; upward progress of souls in higher births.

     “இது செம்போக்கி னியல்பு” (மணிமே.27: 157);.

     [செம் + போக்கு. செம்மை = உயர்த்தது]

செம்போதகர்

செம்போதகர் cembōtagar, பெ. (n.)

   அருகரில் ஒரு பகுதியார் (சி.சி. ஆசீவகன் மறுதலை,2. பர.);; a class of Arhats.

 Skt. {bódhaka}

     [செம் + போதகர்]

செம்போத்து

செம்போத்து1 cembōttu, பெ. (n.)

   உடல் கறுப்பாகவும் இறக்கை பாக்கு நிறமாகவும் இருக்கும் காக்கை அளவிலான பறவை (பிங்.);; crow pheasant.

மறுவ, செண்பகம்

   ம. செம்போத்து;க. செம்போது, கெம்போது

     [செம் + போத்து. போத்து = பறவை]

 செம்போத்து2 cembōttu, பெ. (n.)

   செண்பகம் (யாழ்.அக.);; champak tree.

 செம்போத்து cembōttu, பெ.(n.)

   இறக்கை மட்டும் காவி நிறமுள்ள பறவை; a bird ha: brown wings.

     [செம்+போத்து]

செம்போத்துக்காரி

 செம்போத்துக்காரி cembōttukkāri, பெ. (n.)

   சில இடங்களில் வெளுத்தும் சில இடங்களிலும் கறுத்துமுள்ள எருது (இ.வ.);; bull partly grey and partly black in colour.

     [செம்போத்து + காரி]

செம்போத்துமாடு

 செம்போத்துமாடு cembōttumāṭu, பெ. (n.)

   கருமையுஞ் சிவப்புங் கலந்த மாடு; the of coloured mingled in black and red.

     [செம்+பூத்து+மாடு]

செம்மகள்

செம்மகள்1 cemmagaḷ, பெ. (n.)

   1. திருமகள்; Lakshmi, as beautiful.

     “முளரி நிறை செம்மகள் முன்னி யாடுக” (கல்லா. 39: 4);.

     [செம் + மகள். செம்மையான, அழகான திருமகள்]

 செம்மகள்2 cemmagaḷ, பெ. (n.)

   பட்டறிவற்ற (அனுபவமற்ற); பெண்; artless, inexperienced girl.

     “செம்மகண் மாலை யிம்முறை யென்றால் (கல்லா. 5:31);.

     [செம் + மகள்]

செம்மங்குடி

 செம்மங்குடி cemmaṅguḍi, பெ.(n.)

கும்ப கோணத்திற்கு அண்மையில் உள்ள ஓர் ஊர்

 a village in Kumbakonam.

     [செம்மண்+குடி]

செம்மடுவு

 செம்மடுவு cemmaḍuvu, பெ.(n.)

   சேலம் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Salem Taluk.

     [செம்+(மடு); மடுவு]

செம்மட்டி

செம்மட்டி cemmaṭṭi, பெ. (n.)

   1. ஒரு வகைச் சிப்பி; a kind of musselor oyster.

   2. மரமஞ்சள் (மலை.);; tree turmeric.

     [செம் + மட்டி. மட்டி = சிப்பிமீன்]

செம்மட்டைமயிர்

 செம்மட்டைமயிர் cemmaṭṭaimayir, பெ. (n.)

   கபில நிறமான மயிர்; hair brown in colour (சா.அக.);.

     [செம்பட்டை+மயிர்]

செம்மணத்தக்காளி

 செம்மணத்தக்காளி cemmaṇattakkāḷi, பெ. (n.)

செம்மணித்தக்காளி (M.M.); பார்க்க;see {Sem-mani-t-takkālī.}

     [செம்மணித்தக்காளி → செம்மணத்தக்காளி]

செம்மணத்தி

செம்மணத்தி cemmaṇatti, பெ. (n.)

செம்புளிச்சை,1 (மலை); பார்க்க;see {sempusiccai,1}.

செம்மணற்பாறை

 செம்மணற்பாறை cemmaṇaṟpāṟai, பெ. (n.)

   மணற்பாறை வகைகளுள் ஒன்று; a kind of sand-stone in red colour.

     [செம்மணல் + பாறை]

செம்மணல்

 செம்மணல் cemmaṇal, பெ. (n.)

   சிவப்புமணல்; red sand.

     [செம்+மணல்]

செம்மணி

செம்மணி cemmaṇi, பெ. (n.)

   1. மாணிக்கம் (பிங்.); ruby.

   2. பதுமராகம், குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி, பவளம் என்ற ஐம்மணிகளில் ஒன்று (யாழ்.அக.);; any of the red gems, viz., {padumarāgam,} kuruvindam, kurundakkal, {māmšagandi,} pavaļam.

   3. சிவப்புமணி; red bead.

   4. கண்ணின் கருமணியைச் சூழ்ந்துள்ள செந்நிற வட்டம் (யாழ்ப்);; a redddish circle round the pupil of the eye.

     [செம் + மணி]

செம்மணிச்சை

செம்மணிச்சை cemmaṇiccai, பெ. (n.)

   மரவகை (தெ.க.தொ. 3, (408);; a tree.

     [செம் + (மணிச்சிகை→); மணிச்சை]

செம்மணித்தக்காளி

 செம்மணித்தக்காளி cemmaṇittakkāḷi, பெ. (n.)

   செடிவகை; a variety of Indian houndsberry.

     [செம்மணி + தக்காளி]

செம்மண்

செம்மண்1 cemmaṇ, பெ. (n.)

   மட்பாண்டங்கள் மீது பூசவும், சாலைகள் அமைக்கவும் பயன்படும் ஒருவகைச் சிவப்பு நிற மண் (சிலப். 16:5, உரை);; a kind of red earth, red soil.

   ம. செம்மண்ணு;   க., பட கெம்மண்ணு;துட. கெம்மொண்

     [செம் + மண்]

 செம்மண்2 cemmaṇ, பெ. (n.)

   மாணிக்கக் குற்றங்களுள் ஒன்று (திருவாலவா. 25:14);; a flow in rubies, one of {mănikka-k-kurram. }

     [செம் + மண்]

செம்மண்குறி

 செம்மண்குறி cemmaṇkuṟi, பெ. (n.)

பாவில் செம்மண்ணால் குறிக்கப்பட்ட அடையாளம்

 a symbol marked in loom by red soil.

     [செம்மண்+குறி]

செம்மண்சிலை

 செம்மண்சிலை cemmaṇcilai, பெ. (n.)

   காவிக்கல் (யாழ்.அக);; red ochre.

     [செம்மண் + சிலை.]

செம்மண்நிலம்

 செம்மண்நிலம் cemmaṇnilam, பெ. (n.)

   சிவந்த மண்ணையுடைய நிலப்பகுதி; red soil area;

 laterite soil.

     [செம்மண் + நிலம்]

செம்மண்பட்டை

 செம்மண்பட்டை cemmaṇpaṭṭai, பெ. (n.)

   நற்காலங்களில் கோயில், மதில், திண்ணை முதலியவற்றில், சுண்ணாம்புப்பட்டையை இடையிட்டு அடிக்கும் சிவப்புப்பட்டை; stripes of red wash alternating with white, made on festive occasions on the side walls, as of temples, of raised platform at the entrance of house, etc.,

     [செம்மண் + பட்டை]

செம்மண்பூச்சு

 செம்மண்பூச்சு cemmaṇpūccu, பெ. (n.)

   மண் சுவரின் மீது குழைத்த செம்மண் கொண்டு பூசி மெழுகியது; finishing the mud wall with red earth.

என் வீட்டிற்கு நேற்று செம்மண் பூச்சு பூசினார்கள் (உ.வ.);.

     [செம்மண் + பூச்சு]

செம்மண்பூமி

 செம்மண்பூமி cemmaṇpūmi, பெ. (n.)

செம்மண்நிலம் பார்க்க;see semi-map-nilam.

     [செம்மண் + பூமி]

செம்மந்தாரை

 செம்மந்தாரை cemmandārai, பெ. (n.)

   மந்தார மரவகை (L.);; purple variegated mountain ebony.

     [செம் + மந்தாரை]

செம்மன்திருக்கை

செம்மன்திருக்கை cemmaṉtirukkai, பெ. (n.)

   பழுப்பு நிறமும், 25 விரலம் நீளம் வளரும் உடலும், 72 விரலம் நீளம் வளரும் வாலுமுள்ள, மீன்வகை; sting ray, brown, attaining 25 in. in length besides a tail 72 in. long, trigon bleekeri.

     [செம் → செம்மன் + திருக்கை]

செம்மன்திருக்கை

செம்மயிற்கொண்டை

 செம்மயிற்கொண்டை cemmayiṟkoṇṭai, பெ. (n.)

செம்மயிற்கொன்றை (வின்.); பார்க்க;see {Sem-mayir-komrai.}

     [செம்மயிற்கொன்றை → செம்மறிய்கொண்டை]

செம்மயிற்கொன்றை

 செம்மயிற்கொன்றை cemmayiṟkoṉṟai, பெ. (n.)

கொன்றை வகை

     [செம் + மயிற்கொன்றை]

செம்மரம்

செம்மரம் cemmaram, பெ. (n.)

   1. மரவகை; Coromandal red-wood-Soymida febrifuga.

   2. மரவகை (L.);; a kind of tree.

   3. செஞ்சந்தனம் (L.);; red-sanders.

   4. அழிஞ்சில் (மலை.);; sageleaved alangium.

   5. மஞ்சாடி (L.);; barbadoes pride.

   6. தேவதாரு (L.);; red cedar.

ம. செம்மரம்

செம் + மரம்]

செம்மரிசி

செம்மரிசி semmarisi, பெ. (n.)

செந்நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட அரிசி (நன்னி. க.தொ.

   2. கல்.

   2. தொ.எ.ண 254-32); a kind of rice taken from red paddy.

     [செம் + அரிசி]

செம்மரு-தல்

செம்மரு-தல் cemmarudal, செ.கு.வி. (v.i.)

   களிப்படைதல்; to enjoy.

     “மதுவுண்டு செம் மருந்தண்கரும்புசுழல்”(பெரியபு.ஆனாய20);.

     [செம்முறு-செம்மறு-செம்மரு]

செம்மருதம்

 செம்மருதம் cemmarudam, பெ. (n.)

   கட்டடப் பணிக்குப் பயன்படும் கெட்டியான மருதமரம், பூமருது; hard country wood for building works.

ம. செம்மருத

     [செம் + மருதம்]

செம்மருதர்

 செம்மருதர் cemmarudar, பெ. (n.)

நல்ல

   வேளாளர்; good farmers or cultivators.

செம்மருதர் குடியாக (T.A.S);.

     [செம் + மருதர்]

செம்மருது

 செம்மருது cemmarudu, பெ. (n.)

செம்மருதம் பார்க்க;see {Sem-marudam.}

ம. செம்மருது

     [செம் + மருது]

செம்மறி

 செம்மறி cemmaṟi, பெ. (n.)

   கம்பளிப் போர்வைக்குத் தேவையான முடியைப் பொறுவதற்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் ஒருவகைப் செம்பழுப்பு நிற ஆடு (திவா.);; common brownsheep.

ம. செம்மரி

     [செம் + மறி]

     [P]

செம்மறிக்கடா

 செம்மறிக்கடா cemmaṟikkaṭā, பெ. (n.)

   செம்மறியாட்டின் ஆண்; its horn is angular and turned down words. (சா.அக.);.

     [செம்+மறி+கடா]

     [P]

செம்மறிக்குட்டி

 செம்மறிக்குட்டி cemmaṟikkuṭṭi, பெ.(n.)

செம்மறியாட்டுக்குட்டி

 lamb.(சா. அக.);.

     [செம்+மறி+குட்டி]

செம்மறிச்சாணி

 செம்மறிச்சாணி cemmaṟiccāṇi, பெ. (n.)

செம்மறியாட்டுப்புழுக்கை,

 excrete(dung); of the red sheep is very useful as manure. (சா. அக.);.

     [செம்மறி+சாணி]

செம்மறிப்புருவை

செம்மறிப்புருவை cemmaṟippuruvai, பெ. (n.)

   1. பெண்ணாடு (நாஞ்.);; she sheep, ewe.

   2. செம்மறியாட்டுக்குட்டி (வின்.);; lamb.

     [செம்மறி + புருவை]

செம்மறியாடு

 செம்மறியாடு cemmaṟiyāṭu, பெ. (n.)

செம்மறி பார்க்க;see {Sem-mad.}

செம்மறியாட்டிறைச்சி

 செம்மறியாட்டிறைச்சி cemmaṟiyāṭṭiṟaicci, பெ. (n.)

   உணவாகப் பயன்படும் ஆட்டின் ; a sort of eczema. (சா.அக.);.

     [செம்மறி+ஆடு+இறைச்சி]

செம்மலர்

செம்மலர் cemmalar, பெ. (n.)

   1 சிவந்த மலர்; reddish flower.

   2. நெற்றி மாலை; fore head garland.

     ‘அம்மலரடியுங்கையுமணி கிளர்பவ ளவாயுஞ்-செம்மலர் நூதனுநாவும்” (சிந்தா. இலக்கனை. 69);.

     [செம்+மலர்]

செம்மலை

செம்மலை1 cemmalai, பெ. (n.)

செங்கரடு பார்க்க;see {Señ-garagu.}

 செம்மலை2 cemmalai, பெ. (n.)

   ஆவிரை; tanner’s senna.

செம்மலைப்பாலை

 செம்மலைப்பாலை cemmalaippālai, பெ. (n.)

   பாலைப் பண் வகை (சங்.அக.);; a secondary melody-type of the {pālai class.}

செம்மல்

செம்மல்1 cemmal, பெ. (n.)

   1. தலைமை; greatness, excellence, superiority.

     “அருந் தொழில் முடித்த செம்மற் காலை” (தொல். பொருள். 146);.

   2. வலிமை (பிங்.);; power.

   3. தருக்கு; haughtiness.

     “செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார்” (குறள், 880);.

   4. பெருமையிற் சிறந்தோன், தலைவன் (திவா.);; great person, as king. சீர்திருத்தச் செம்மல்.

   5. இறைவன் (திவா.);; god.

     “சித்தன் பெரியவன் செம்மல்” (சிலப். 10:183);.

   6. சிவன் (சூடா.);;{Siva.}

   7. அருகன் (சூடா.);; Arhat.

   8. மறவன் (வீரன்); (திவா.);; warrior, hero.

   9. பெருமையுள்ள மகன்; son.

     “பருதிச் செல்வன் செம்மலுக்கு” (கம்பரா. அனும. 18);.

ம. செம்மு

     [செம் → செம்மல்]

தலைவன் அல்லது அரசன் செம்மல் எனப்பட்டது, நேர்மையான ஆட்சியால்; சிவன் செம்மல் எனப்பட்டது, செந்நிறத்தால்

 செம்மல்2 cemmal, பெ. (n.)

   1. சாதிப்பூ (குறிஞ்சிப். 82);; large flowered jasmine.

   2. வாடிச்சிவந்த பழம்பூ (திவா.);; faded flower

     “உதிர்ந்த . . . செம்மன் மணங்கமழ” (சிலப். 7, பாடல், 39);.

   3. வாடாப்பூ (அக.நி.);; ever-fresh flowers.

     [செம் → செம்மல்]

 செம்மல்3 cemmal, பெ. (n.)

   நீர் (அக.நி.; water.

     [செம் → செம்மல்]

செம்மல்லிகை

 செம்மல்லிகை cemmalligai, பெ. (n.)

   செம்முல்லை (இ.வ.);; golden jasmine.

     [செம் + மல்லிகை]

செம்மா

செம்மா1 cemmātal,    6 செ.கு.வி. (v.i.)

   செம்மை யாதல்; to be right, to become proper.

     “என் கண்ணன் கள்வ மெனக்குச் செம்மாய் நிற்கும்”(திவ்.திருவாய். 9. 6:6);.

ம. செம்மாக்குக (அழகாக்குதல், நேராக்குதல்);

     [செம் + ஆ – செம்மா-.]

 செம்மா2 cemmāttal,    6 செ.கு.வி. (v.i.)

   1. இறுமாத்தல்; to be elated with pride, to be haughtly, to assume superiority

     “மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்’ (குறள், 1074);.

   2. மிகக் களித்தல்; to be over-joyed, intoxicated with joy.

     “மதுவுண்டு செம்மருந் தண்சுரும்பு” (பெரியபு. ஆனாய. 20);.

   3. வீறுபெறுதல்; to be majesticin manner or bearing.

     “அண்ணல் செம்மாந் திருந்தானே” (சீவக. 2358);.

     [செம் → செம்மா-.]

செம்மாத்தி

 செம்மாத்தி cemmātti, பெ. (n.)

   காலணித் தொழிலாளர் குலப்பெண்; woman of the shoe-maker caste.

     [செம்மான் (ஆ.பா.); → செம்மாத்தி (பெ.பா.);]

செம்மாந்து

 செம்மாந்து cemmāndu, வி.எ. (adv.)

   பெருமிதமாக; a sit an exalted manner.

அடியார்கள் இறைவன் மேல் அசையா நம்பிக்கை வைத்து செம்மாந்து திரிந்தனர்.

     [செம்மா-செம்மாந்து]

செம்மானம்

செம்மானம் cemmāṉam, பெ. (n.)

   1. செக்கர் வானம்; roseate sky.

     “செம்மானத் தொளியன்ன மேனியான் காண்” (தேவா. 711. 1);.

   2. மழைப் பெய்தலைக் குறிக்கும் வானம் (தஞ்சை);; copper sky.

   ம. செம்மானம்;க. கெம்பரா

     [செம் + (வானம் → மானம்]

செம்மான்

 செம்மான் cemmāṉ, பெ. (n.)

   காலணி செய்வோன் (சூடா.);; shoe-maker, one who works in leather

ம. செம்மான்

     [செம் → செம்மான்]

 Skt. Carman

செம்மாப்பு

செம்மாப்பு cemmāppu, பெ. (n.)

   1. அகமலர்ச்சி (திவா.);; exultation.

   2. இறுமாப்பு (சூடா.);; pride, haughtiness.

   3. வீற்றிருக்கை (சூடா.);; majestic bearing or manner.

     [செம்மா-1- → செம்மாப்பு]

செம்மாரா

 செம்மாரா cemmārā, பெ. (n.)

மஞ்சள் அல்லது

   இளஞ்சிவப்பு நிறமுள்ள கடல்மீன் வகை; Sea. fish, yellow or rosy.

     [செம் + (ஆரால் → ஆரா]

செம்மார்

 செம்மார் cemmār, பெ. (n.)

   திருநெல்வேலி வட்டத்திலுள்ள ஓர் இனத்தினர்; atribe living in Tirunelveli Dt.

     [செருமான்-செருமார்-செம்மார்]

செம்மார்புகுக்குறுவான்

 செம்மார்புகுக்குறுவான் cemmārpugugguṟuvāṉ, பெ. (n.)

   பச்சை நிறவுடலும், மஞ்சள் நிறத் தொண்டையும் சிவப்பு நிறமார்பும் கொண்ட பறவை; coppersmith barbet.

     [செம்மார்பு + குக்குறுவான்]

சாலை ஒரமரங்கள், தோட்டங்கள், பூங்காக்கள் ஆகியவற்றில் காணப்படும் பறவை.

செம்மாளி

 செம்மாளி cemmāḷi, பெ. (n.)

செம்படவர்

   அணியும் செருப்பு வகை (இ.வ.);; a kind of sandals used by fishermen.

தெ. சம்மாளிகலு.

     [செம்மான் → செம்மாளி]

செம்மான்

செம்மிளகி

 செம்மிளகி cemmiḷagi, பெ. (n.)

   சம்பாநெல் வகை (A.);; a species of {Šambá paddy.}

     [செம் + மிளகி. மிளகி = நெல் வகை]

செம்மீன்

செம்மீன்1 cemmīṉ, பெ. (n.)

   1. அருந்ததி; the star Arundadi

     “செம்மீ னனைய னின்றொன்னகர்ச் செல்வி” (பதிற்றுப். 31:28);.

   2. செவ்வாய்; Mars.

செம்மீ னிமைக்கு மாக விசும்பின் (புறநா. 60:2);.

   3. யாழ்விண்மீன் (திருவாதிரை); (புறநா. 60 உரை);; the 6th star.

ம. செம்மீன்

     [செம்(மை); + மீன். மீன் = விண்மீன்]

 செம்மீன்2 cemmīṉ, பெ. (n.)

   1. பெருந்தலைத் திமிங்கலம் (M.M.345);; sperm whale.

   2. இறால் மீன்; prawns.

ம. செம்மீன்

     [செம் + மீன்]

செம்மீன்வயிரம்

 செம்மீன்வயிரம் cemmīṉvayiram, பெ. (n.)

   மீனம்பர் என்னும் மருந்துப்பண்டம்(வின்.);; ambergris as found in the intestines of the sperm whale.

     [செம்மீன் + வயிரம்]

செம்மீன் வயிற்றில் காணப்படுவது

செம்மு

செம்மு1 cemmudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. மூடுதல்; to shut, close, as door.

     “திண்கதவஞ் செம்மி” (திவ்.இயற். 3:12);.

   2. தூர்த்தல்; to close up, fill up

     “துளி . . . யானை மதத்தொளை

செம்மிற் றன்றே” (கம்பரா. எழுச். 52);.

   3. மருந்துப் பண்டங்களைப் புடமிடும் பொழுது சீலை மண்கட்டுதல் (வின்.);; to apply lute to a cloth covering a medicinal substance, before heating.

   4. பையை நிறைத்து வாயைத் தைத்தல் (வின்.);; to stuff and fill, as pillow or bag, and sew up the end.

   5. புண்ணைக் கீறிவிடுதல்; to open, as a sore.

   6. புடைத்தல் (இ.வ.);; to beat soundly, thrash.

   7. கிட்டித்தல்; to consolidate.

தோண்டிய குழிக்குள் துணை நிறுத்திச் சுற்றிலும் சல்லி மண் முதலியன இட்டுச் செம்மினார்கள்.

     [செம் → செம்மு]

 செம்மு2 cemmudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கலங்குதல்; to be disturbed, agitated.

   2. கண் கலங்கி வீங்குதல் (வின்.);; to be swollen and bleared, as the eyes.

   3. வயிறு பொருமுதல் (வின்.);; to be hard, as belly through indigestion.

   4. நிறமுதலியன பரவுதல் (வின்.);; to spread, as colour.

     [செம் → செம்மு]

செம்முகம்

 செம்முகம் cemmugam, பெ. (n.)

   குரங்கு; monkey so called for its red face. (சா.அக);.

     [செம்-முகம்]

செம்முதுகுக்கீச்சான்

 செம்முதுகுக்கீச்சான் cemmudugugāccāṉ, பெ. (n.)

   பெரிய தலையோடு பருத்த வளைந்த அலகும், செம்மையான முதுகும் கொண்ட பறவை; rufous-backed shrike.

     [செம்முதுகு + கீச்சான்]

இது ஓணான், தவளை போன்றவற்றைப் பிடித்து முன்மரங்களில் குத்தி வைத்து பின் ஓய்வாகத் தின்னும் இயல்புடையது.

செம்முருங்கை

 செம்முருங்கை cemmuruṅgai, பெ. (n.)

   மரவகை; a kind of tree.

ம. செம்முரிங்ங

     [செம் + முருங்கை]

செம்முல்லை

 செம்முல்லை cemmullai, பெ. (n.)

   முல்லை வகை (L.);; golden jasmine.

     [செம் + முல்லை]

செம்முள்ளி

செம்முள்ளி cemmuḷḷi, பெ. (n.)

   1. சமுத்திராப் பழவகை (L.);; Andaman Indian oak.

   2. முட் செடிவகை; a thorny plant.

   3. வெள்ளை நீலாம்பரம் (L.);; crested purple nail dye.

ம. செம்முள்ளி

     [செம் + முள்ளி]

செம்மூக்கன்

செம்மூக்கன் cemmūkkaṉ, பெ. (n.)

   1. முதலை வகை (யாழ்ப்.);; a species of alligator.

   2. எலி வகை (சங்.க.);; a species of rat.

     [செம் + மூக்கன்]

செம்மேவல்

 செம்மேவல் cemmēval, பெ. (n.)

   இணங்குகை (யாழ்ப்.);; agreement, reconciliation.

     [செம் + மேவு + அல்]

செம்மை

செம்மை cemmai, பெ. (n.)

   1. சிவப்பு (திவா.);; redness, ruddiness.

கதிரவன் மறையும் நேரத்தில் வானம் செம்மை பூசியிருந்தது.

   2. செவ்வை (திவா.);; goodness, soundness, good condition.

   3. நேர்மை; spotlessness, directness, rectitude

     “செம்மையி னிகந் தொரீஇ” (கலித்.14);.

வறுமையிலும் செம்மை வேண்டும்.

   4. மனக் கோட்டமின்மை; fairness, impartiality.

     “செம்மையுஞ் செப்பும்” (தொல்.பொருள். 209);.

   5. ஒற்றுமை (யாழ்ப்.);; unity, concord, agreement.

   6. பெருமை (திவா.);; excellence, eminence, greatness.

     “செம்மை சான்ற காவிதி மாக்களும்” (மதுரைக். 499);.

   7. தூய்மை (வின்.);; fineness, neatness, cleanliness.

   8. அழகு; beauty, grace, elegance.

   9. செங்கோள் (கேது); (சூடா.);; moon’s descending node.

   10. கந்தகம்; sulphur.

     “செம்மை முன்னிற்பச் சுவேதம் திரிவபோல்” (திருமந். 2455);.

   11. கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாமை (குறள், அதி 11, பரிமே.);; no change in thought, word and deed.

ம. செம்ம

     [செய்ம்மை → செம்மை]

செம்மைகட்டு-தல்

செம்மைகட்டு-தல் cemmaigaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. ஒழுங்குபடுத்துதல்; to adjust, settle.

   2. அமைதி (சமாதான);ப் படுத்துதல்; to reconcile, as parties.

   3. ஏற்றுக் கொள்ளச் (சம்மதிக்கச்); செய்தல்; to induce consent.

     [செம்மை + கட்டு-.]

செம்மைக்கல்

 செம்மைக்கல் cemmaikkal, பெ. (n.)

   செந்நிறமான கானகக்கல்; a variety of red stone containing ore.

     [செம்மை + கல்]

செம்மைபண்டாரக்கல்

செம்மைபண்டாரக்கல் cemmaibaṇṭārakkal, பெ. (n.)

   பொன்னை அளவிட உதவும் பண்டைய கல்; an old weighingstone to weigh gold.

     ‘தென்னாட்டுத் (தி); ருவ (ரை);ச் சங்கரனிரனை சிங்கன் நந்தாவிளக் கொன்றி னுக்குத் தந்த பொன் செம்மை பண்டாரக் கல்லால் 79 இவனெய்” (தெ.க.தொ.4, கல். 519/1986);.

     [செம்மை + பண்டாரக்கல்]

செம்மைப்படுத்து-தல்

செம்மைப்படுத்து-தல் cemmaippaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.i.)

   1. ஒழுங்குபடுத்துதல்; to put in order, adjust, arrange, make ready, rectify.

   2. தூய்மையாக்குதல் (உ.வ.);; to cleanse.

   3. நிறைவு செய்தல்; to finish, complete.

   4. அழகு படுத்துதல்; to dress, decorate.

   5. மேம்படுத்துதல்; toimprove.

   5. சீர்படுத்துதல்; toreform.

நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தச் சில திட்டங்கள் போட வேண்டும்.

     [செம்மை + படுத்து-.]

செம்மையாக

 செம்மையாக cemmaiyāka, வி.எ. (adv.)

   கடுமையாக; severely.

அதிகாரியிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.

     [செம்மை → செம்மையாக]

செம்மொழி

செம்மொழி cemmoḻi, பெ.(n.)

   உயர்தனிச் செவ்வியல் மொழி; classical language.

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் தமிழுக்குச் செம்மொழித் தகுதிபெற்றுத் தந்தார். (உவ.);

     [செம் + மொழி]

 செம்மொழி1 cemmoḻi, பெ. (n.)

   1. நல்ல சொல்; good, spotless words.

     “செம்மொழி மாதவர்” (சிலப். 30:32);.

   2. தொகை மொழியல்லாத ஒரு மொழி; simple. inseparable word; word that cannot be split up. opp.to {piri-moli.}

     ‘தாமரை யென்பது செம்மொழியும் பிரிமொழியுமானாற் போலவும் (பி.வி. 5, உரை);.

     [செம் + மொழி]

 செம்மொழி2 cemmoḻi, பெ. (n.)

   தொன்மையும் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட செவ்வியமொழி; classical language.

இந்திய அரசின் செம்மொழிப் பட்டியலில் இன்னும் தமிழ் இடம்பெறவில்லை.

     [செம் + மொழி]

செம்மொழிச்சிலேடை

செம்மொழிச்சிலேடை cemmoḻiccilēṭai, பெ. (n.)

   பிரிக்கப்படுதலின்றியே பலபொருள் பயக்குஞ் சொற்களாலாகிய தொடர் (தண்டி. 75 உரை);; paronomasia in {Šem-moli,} caused without splitting up words, one of two {Silêdai.}

     “செங்கரங்க ளானிரவு நீக்கத் திறம் புரிந்து

பங்கய மாதர் நலம்பயிலப் –பொங்குத்

தேராழி வெய்யோனுயர்ந்த நெரியொழுகும்

நீராழி நீணிலத்து மேல்”

இப்பாடலில் ஆதித்தச் சோழனுக்குப் பகலவன் சிலேடையாக குறிப்பிடப்பட்டுள்ளது காண்க.

     [செம்மொழ + சிலேடை]

செயங்கொண்டான்

செயங்கொண்டான் ceyaṅgoṇṭāṉ, பெ. (n.)

   ஒருவகை நெல்; a kind of paddy.

     “சித்திரக் காலிவாலன் செயங்கொண்டான் மணல்வாரி”(முக்கூடற். 97);.

செயநீர்

செயநீர் ceyanīr, பெ. (n.)

   சுண்ணாம்பும் எரியுப்பும் (நவச்சாரமும்); கலந்த நீர் (பதார்த்த. 1488);; medicinal preparation of lime and salammoniac.

     [செய் + நீர்]

செயநீர்க்கருத்தன்

 செயநீர்க்கருத்தன் ceyanīrkkaruttaṉ, பெ. (n.)

   எரியுப்பு (நவச்சரம்); (மூ.அ.);; sal-ammoniac.

     [செயநீர் + கருத்தன்]

செயப்படுபொருள்

செயப்படுபொருள் ceyabbaḍuboruḷ, பெ. (n.)

   1. வினை, முதலது தொழிலின்பயனை அடைவது; object of a verb.

     “வினையே செய்வது செயப்படு பொருளே” (தொல். சொல். 112);.

     ‘நான் வண்டியை ஒட்டினேன்’ என்பதில்

     ‘வண்டி’ என்பது செயப்படுபொருள்.

   2. நூலாசிரியன் கூறப்புகும் நூற்பொருள்; subject of a treatise required to be mentioned by its author at the commencement.

     ‘தெய்வ வணக்கமுஞ் செயப்படு பொருளும்’ (யாப். வி. கடவுள்வா. உரை);.

     [செய் + படு + பொருன்]

   செயப்படுபொருள்: வினைமுதற் றொழில் பயனுறுவது. (சேனா. தொல்.சொல். 71); இயற்றப்படுவதும், வேறு படுக்கப்படுவதும், எய்தப்படுவதுமென செயப்படுபொருள் மூன்றாம். இயற்றுதலாவது முன்னில்லதனை உண்டாக்குதல், வேறு படுத்துதலாவது முன்னுள்ளதைத் திரித்தல்;எய்தப்படுதலாவது, இயற்றுதலும், வேறு படுத்தலுமின்றி, தொழிற் பயனுறுந் துணையாய் நிற்றல் (தொல். சொல். 71. சேனா);. செயப்படுபொருள்தான் இல்லதொன்றாய் உண்டாக்கப்படுதலும், உள்ளதொன்றாய் உடல் வேறுபடுக்கப்படுவதும், உள்ள தொன்றாய் ஒரு தொழில் உறுவிக்கப்படுவதும், உள்ளதொன்றாய் ஒன்றனாலுறப் படுவதும் எனப் பல வகையாம். (தொல்.சொல். 73, கல்.); வினை முதற்றொழில் பயனுறுவது செயப்படு பொருள். செய் பொருள், கருமம், காரியம் என்பன ஒரு பொருட்சொற்கள்.அச் செயப்படு பொருள், கருத்தினின்றிச் செயப்படுவதும், கருத்துடன் செய்யப்படுவதும், இருமையிற் செய்யப் படுவதும் என மூவகைப்படும். அச் செயப்படு பொருள் அகநிலையாகவும் தானே கருத்தாவாகவும் வரும். (நன். 296, ஆறு);.

செயப்படுபொருள்குன்றாதவினை

செயப்படுபொருள்குன்றாதவினை ceyabbaḍuboruḷkuṉṟātaviṉai, பெ. (n.)

   செயப்படு பொருளை ஏற்கும் வினைச்சொல் (நன். 320, சடகோப.);; transitive verb.

எகா:சுரண்டு (சுரண்டினான்); உரை(உரைத்தான்);

     [செயப்படுபொருள் + குன்றாத + வினை]

செயப்படுபொருள்குன்றியவினை

செயப்படுபொருள்குன்றியவினை ceyabbaḍuboruḷkuṉṟiyaviṉai, பெ. (n.)

   செயப்படு பொருளை ஏற்காத வினைச்சொல் (நன். 320, சடகோப.);; intranstive verb.

எ.கா: ஓடு (ஓடினான்);, நில் (நின்றான்);

     [செயப்படுபொருள் + குன்றிய + வினை]

செயப்பாட்டுவினை

செயப்பாட்டுவினை ceyappāṭṭuviṉai, பெ. (n.)

   1.படு ஈறு புணர்ந்த முதனிலையுடையதாய்ச் செயப்படுபொருளை எழுவாயாகக் கொண்ட வினை (இலக். கொத். 67);; verb in the passive voice.

   2. பழவினை; karma.

     “செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது” (மணிமே. 23:77);.

எ.கா. பாடல் பாடப்பட்டது சோறு உண்ணப்பட்டது.

     [செயப்பாட்டு + வினை]

செயர்

 செயர் ceyar, பெ. (n.)

   வீட்டுவரி, சந்தைவரி உரிமக் கட்டணம், ஆயத்தீர்வை முதலிய பலவகை வருவாய் (R.T);; current or customary sources of revenue other than the land-tax as customs, transit dutics, licence-fees, house-tax, market-tax, etc.

க. சயர்

செயற்கட்டளைகள்

 செயற்கட்டளைகள் ceyaṟgaṭṭaḷaigaḷ, பெ. (n.)

   செயல்வரைவு ஆணைகள்; instructions.

     [செயல் + கட்டளைகள்]

செயற்கரிய

 செயற்கரிய ceyaṟkariya, பெ.எ. (adj.)

   எளிதில் செய்ய முடியாத; not easily achieved; extra ordinary.

அவர் யாராலும் செய்ய முடியாத ஒரு செயற்கரிய காரியத்தைச் செய்து முடித்தார்.

     [செயல் + அரிய → செயற்கரிய]

செயற்குழு

 செயற்குழு ceyaṟkuḻu, பெ. (n.)

   நிருவாகத்திற்காக தேந்தெடுக்கப்பட்ட உறுப்பின்ர் குழு; executive committee.

பொதுக்குழுவின் செயற்பாடுகளைச் செயற்குழு நடைமுறைப்படுத்தும்.

     [செயல் + குழு]

செயற்கை

செயற்கை ceyaṟkai, பெ. (n.)

   1. தொழில்; action.

     “இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்” (புறநா. 35:28);.

   2. இயற்கையாகக் காணப்படும் அல்லது பெறப்படும் ஒன்றிற்கு மாற்றாக மனிதனால் உண்டாக்கப்படுவது; artificiality.

   3. செயற்கைப்பொருள் பார்க்க;see {eyarkaip-porul}

   4. தன்மை; characteristic, property.

     “இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப” (தொல். எழுத்து. 197);.

   5. செய்பொருள்; manufactured products.

     [செயல் + செயற்கை]

செயற்கை இரை

 செயற்கை இரை ceyaṟkaiirai, பெ.(n.)

மீன்களுக்குப் போடப்படும் உணவு

 artificial food for fish.

     [செயற்கை+ இரை]

செயற்கை முத்து

 செயற்கை முத்து ceyaṟkaimuttu, பெ.(n.)

   கடலில் உள்ள முத்தைப் போன்று உருவாக்கப்படும் ஒரு வகை முத்து; artificial pearl.

செயற்கை+முத்து]

செயற்கைக்கோள்

 செயற்கைக்கோள் ceyaṟkaikāḷ, பெ. (n.)

   நிலவுலகை அல்லது ஒரு கோளை சுற்றி வரும்படி செலுத்தப்பட்ட அறிவியல் கருவி (சாதனம்);; satellite.

இந்தியா பல செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

     [செயற்கை + கோள்]

செயற்கைச்சாக்காடு

செயற்கைச்சாக்காடு ceyaṟkaiccākkāṭu, பெ. (n.)

   பொய்ச்சாவு; feigned or pretended death.

     “செயற்கைச் சாக்காடு தெளியக் காட்ட” (பெருங். இலாவண. 9:254);

     [செயற்கை + சாக்காடு]

செயற்கைப்பல்

செயற்கைப்பல் ceyaṟkaippal, பெ. (n.)

   செய்யப்பட்ட பல்; artificial tooth.

   2 பொய்ப் பல்; false tooth (சா.அக.);.

     [செயற்கை+பல்]

செயற்கைப்பொருள்

செயற்கைப்பொருள் ceyaṟkaipporuḷ, பெ. (n.)

   1. கரணியத்தால், தன்மைதிரிந்த பொருள்; object whose nature or characteris changed by artificial means.

     “செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல்” (தொல். சொல்.20);.

   2. உண்டாக்கப்பட்ட பொருள்; manufactured article;artifact.

நம்நாட்டு இயற்கைப் பொருள்கள் அயல்நாட்டு சென்று செயற்கைப் பொருள்களாகத் திரும்புகின்றன (உ.வ.);.

     [செயற்கை + பொருள்]

செயற்கைமுத்து

 செயற்கைமுத்து ceyaṟkaimuttu, பெ. (n.)

   கடலில் உண்டாகும் இயற்கை முத்துக்கு மாறாக மனித முயற்சியால் ஆய்வகத்தில் உண்டாக்கும் முத்து; artificial pearl cultured in a laboratory.

     [செயற்கை + முத்து]

செயற்கைமூச்சு

 செயற்கைமூச்சு ceyaṟkaimūccu, பெ. (n.)

   மூச்சு தடைபட்டுத் திணறும் நிலையில் உள்ள ஒருவர் மீண்டும் சீரான முறையில் மூச்சு விடுவதற்கான உயிர் வலியைச் செலுத்தி அளிக்கும் சிகிச்சை; artificial respiration.

     [செயற்கை + மூச்சு]

செயற்கையறிவு

 செயற்கையறிவு ceyaṟkaiyaṟivu, பெ. (n.)

   இயல்பாகவன்றிக் கல்வி முதலியவற்றால் உண்டாகிய அறிவு; simi-tou of acquited knowledge.

     [செயற்கை + அறிவு]

செயற்கையளபெடை

செயற்கையளபெடை ceyaṟkaiyaḷabeḍai, பெ. (n.)

   செய்யுளின் ஓசை நிரம்பப் புலவர் செய்து கொள்ளும் அளபெடை (தொல். பொருள். 329, உரை);; long vowel or consonant lengthened for the sake of metre.

     [செயற்கை + அளபெடை]

செய்யுட்குப் புலவர் செய்து கொண்டது (தொல். பொருள். 330, பேரா. தொல். எழுத்து. 6, நச்); செய்யுட்குப் புலவர் ஓசை கருதிச் செய்து கொண்டது செயற்கை அளபெடை (தொல் சொல். 17, செய்);.

செயற்கையழகு

 செயற்கையழகு ceyaṟkaiyaḻku, பெ. (n.)

   பட்டாலும் பகட்டாலும் மெருகேற்றிப் புணைந்துண்டாக்கிய எழில்; the beauty caused by silk and various cosmetics artificial beauty,

     [செயற்கை + அழுகு]

செயற்கையிரை

செயற்கையிரை ceyaṟkaiyirai, பெ. (n.)

   1. செயற்கையாகத் தரப்படும் உணவு; artificial food.

   2. மீன் பிடிக்க உதவும் உணவு; the food material used to catch fish.

     [செயற்கை + இரை]

செயற்கையுயிர்ப்பு

 செயற்கையுயிர்ப்பு ceyaṟkaiyuyirppu, பெ. (n.)

   செயற்றை மூச்சு; artificial respiration. орр. to iyarkai-у-uyirppu. (சா.அக);.

     [செயற்கை+உயிர்ப்பு]

செயற்கைவாசனை

செயற்கைவாசனை1 ceyaṟkaivācaṉai, பெ. (n.)

   உண்டாக்கப்பட்ட நறுமணம்; artificial fragrance.

     [செயற்கை + வாசனை]

 செயற்கைவாசனை2 ceyaṟkaivācaṉai, பெ. (n.)

   சேர்க்கைக் குணம் (இ.வ.);; habits acquired from company.

     [செயற்கை + வாசனை]

செயற்படு-தல்

செயற்படு-தல் ceyaṟpaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   செயல் நிகழ்ச்சி இயங்குதல்; function; operate; work.

நாளை அலுவலகம் வழக்கம் போல் செயற்படும்.

     [செயல் + படு-.]

செயற்படுத்து-தல்

செயற்படுத்து-தல் ceyaṟpaḍuddudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஒரு திட்டம் செயல் முதலியவற்றை நடை முறைப்படுத்துதல்; to implement a scheme.

இந்தியா, மொழிவழி மாநிலங்களாகத் திருத்தியமைக்கப்பட்டவுடனேயே, தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாகச் செயற்படுத்தப்பட்டது.

     [செயல் + படுத்து-.]

 செயற்படுத்து-தல் ceyaṟpaḍuddudal, செ.கு.வி. (v.i.)

   நடைமுறைப்படுத்துதல்; enforce, implement.

பள்ளி மாணவர்களுக்கு இலவசச் சீருடை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயற்படுத்தப்படும்.

     [செயல்+படுத்து]

செயற்பாடு

 செயற்பாடு ceyaṟpāṭu, பெ. (n.)

   செயற்படுகின்ற முறை; style of functioning.

ஆட்சியின் அடக்குமுறைச் செயற்பாட்டைக் கண்டித்துப் பேசினார்.

     [செயல் + பாடு.]

 செயற்பாடு ceyaṟpāṭu, பெ. (n.)

செயற்படுகின்ற முறை:

 style of functioning.

நிருவாகத்தின் செயற்பாட்டைக் கண்டித்துப் பேசினார்.

     [செயல்+பாடு]

செயற்பாட்டியல்

 செயற்பாட்டியல் ceyaṟpāṭṭiyal, பெ.(n.)

   நாட்டுப் புறவியல் ஆய்வின் ஒரு கோட்பாடு; a tenet infolklore study.

     [செயல்+பாடு+இயல்]

செயலகம்

 செயலகம் ceyalagam, பெ. (n.)

   உயர்நிலை நிருவாக அலுவல்கள் நடைபெறும் இடம்; secretariat.

அரசுச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

     [செயல் + அகம்]

செயலர்

 செயலர் ceyalar, பெ. (n.)

   ஒரு துறையின் நிருவாகப் பொறுப்புள்ள தலைமை அதிகாரி; secretary to departments, ministry.

     [செயல் → செயலர்]

செயலறவு

 செயலறவு ceyalaṟavu, பெ. (n.)

   வலியின்மை; prostrate condition, helplessness.

     [செயல் + அறவு]

செயலறு-தல்

செயலறு-தல் ceyalaṟudal, செ.கு.வி. (v.i.)

   1. வலியழிதல் (சூடா.);; to be powerless, to be laid prostrate;

 to be helpless.

   2. ஒழுக்கங் கெடுதல் (உ.வ.);; to swerve or go astrey from the path of virtue.

   3. அழகழிதல் (இ.வ.);; to lose beauty, to be in disorder.

     [செயல் + அறு-.]

செயலற்ற

 செயலற்ற ceyalaṟṟa, பெ. (n.)

   சடமான;   இயக்கமற்ற; inactive functionless.

     [செயல் + அற்ற]

   செயலற்ற நிலையைச் சிவம் என்பர்;இயங்கு நிலையைச் சத்தி என்பர். உடற்கூற்று நூல்களில் மூளை இயங்கினும் உடல் இயங்கா நிலையைச் செயலற்ற (கோமா); நிலை என்பர்.

செயலலுவலர்

 செயலலுவலர் ceyalaluvalar, பெ. (n.)

   செயல் நிறைவேற்றுவோர்; executive.

     [செயல் + அலுவலர்]

செயலலுவலர்துறை

 செயலலுவலர்துறை ceyalaluvalartuṟai, பெ. (n.)

   செயல் நிறைவேற்றுத்துறை; executive department.

     [செயல் + அலுவலர் + துறை]

செயலழி-தல்

செயலழி-தல் ceyalaḻidal,    2 செ.கு.வி. (v.i.)

செயலறு, பார்க்க;see {seyal-arul}

     “செயலழிந்து ழன்று” (திருப்பு. 89);. வணிகத்தில் கைமுதல் இழந்ததும் அவன் செயலழிந்தான் (உ.வ.);.

     [செயல் + அழி-.]

செயலாற்று-தல்

செயலாற்று-தல் ceyalāṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   செயல்படுதல்; function; act; work.

தனக்கென்று இல்லாமல் நாட்டுக்கென்று செயலாற்றவே விருப்பம்.

     [செயல் + ஆற்று-.]

செயலாளர்

 செயலாளர் ceyalāḷar, பெ. (n.)

செயலர் பார்க்க;see {seyala:}

கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்.

     [செயல் + ஆளர்]

செயலிழ-த்தல்

செயலிழ-த்தல் ceyaliḻttal,    3 செ.கு.வி. (v.i.)

   செயற்படும் திறனை இழத்தல்; become impaired.

பக்கவூதையால் ஒரு கையும் காலும் செயலிழந்து விட்டது.

     [செயல் + இழ-.]

செயலூரிளம்பொன்சாத்தன்கொற்றனார்

செயலூரிளம்பொன்சாத்தன்கொற்றனார் ceyalūriḷamboṉcāttaṉkoṟṟaṉār, பெ. (n.)

   அனநானூறு 177 ஆம் பாடலைப் பாடிய புலவர்; author of Agam 177.

     [செயலூர் + இளம்பொன் + சாத்தன் + கொற்றனார்]

செயலை

செயலை ceyalai, பெ. (n.)

   சிவந்த அடியையுடைய அசோமரம்; Indian masttree.

     “செயலைத் தண்டளிர்” (திருமுருகு. 207);

     [செய் → செயல் → செயலை]

செயல்

செயல் ceyal, பெ. (n.)

   .உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றைச் செய்வது, தொழில்; act, action, performance, work, operation.

     “கழலிணை கடந்தருளுஞ் செயலை” (திருவாச. 11:17);.

கள்ளக் கடத்தல் ஒரு குற்றமான செயலாகும்.

   2. பொருள் தேடுகை; acquisition, as of wealth.

     “மலையிறந்து செயல் சூழ்ந்த பொருள்” (கலித்.2.);.

   3. இழைப்பட வேலை; engraving, carving; setting work in jewellery,

     ‘வயிரச் செயல்தாலி மணிவடம்’ (தெ.க.தொ. 2,16);.

   4. வேலைப்பாடு; fine workmanship.

     ‘இந்தச் சங்கிலி செயலாக உள்ளது’ (இ.வ.);.

   5. காவல் (பிங்.);; safeguard, protection, watch.

     “செயலைச் செற்ற பகைதெறுவான்” (கம்பரா. வாலிவதை. 86);.

   6. ஒழுக்கம் (சூடா.);; behaviour, conducts.

   7. வலிமை; power, energy.

இப்போது அவனுக்கு நடக்கச் செயலில்லை.

   8. செல்வாக்கு (உ.வ.);; influence.

   9. நிலைமை; state, circumstance.

அவன் நல்ல செயலில் இருக்கிறான்.

   10. செய்யல்,4 பார்க்க (அக.நி.);;see {Seyya/4.}

ம. செயல்

     [செய் → செயல்]

செயல்தலைவர்

 செயல்தலைவர் ceyaltalaivar, பெ. (n.)

   செயலை நிறைவேற்றுவதில் தலைமை வகிப்பவர்; chief executive.

     [செயல் + தலைவர்]

செயல்திட்டம்

 செயல்திட்டம் ceyaltiṭṭam, பெ. (n.)

   ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டிய பெரிய திட்டத்தின் நடைமுறைச் செயற்பாடு; action programme.

இரண்டாயிரம் வீடுகள் கட்டித் தருவதாக அரசு செயல்திட்டம் வகுத்துள்ளது.

     [செயல் + திட்டம்]

செயல்திறன்

 செயல்திறன் ceyaltiṟaṉ, பெ. (n.)

   கால, பண இழப்பு இல்லாமல் செலவழிக்கப்படும் ஆற்றலின் முழுமையான பயன்பாடு; efficiency.

செயல்திறன் அதிகரித்தால் நாட்டின் வளம் பெருகும்.

     [செயல் + திறன்]

செயல்மாள்(ளு)-தல்

செயல்மாள்(ளு)-தல் ceyalmāḷḷudal,    16 செ.கு.வி. (v.i.)

செயலறு-தல் பார்க்க;see {Seyal-aru-.}

     “கலகமிடு மஞ்சும் வேரறச் செயல்மாள” (திருப்பு. 194);.

     [செயல் + மாள்-.]

செயல்முறை

 செயல்முறை ceyalmuṟai, பெ. (n.)

   இயங்கும் அல்லது செயற்படும் முறை; mode of functioning.

தொழிற்சாலைகள் உற்பத்தியைப் பெருக்குவதற்கான செயல்முறையைப் பற்றிக் கலந்து பேசினார்கள்.

     [செயல் + முறை]

செயல்வடிவம்

 செயல்வடிவம் ceyalvaḍivam, பெ. (n.)

   செயற்படுத்துவதற்குரிய வழிமுறை; implementation.

முதலமைச்சரின் கருத்து உடனடியாகச் செயல் வடிவம் பெற்றது.

     [செயல் + வடிவம்]

செயல்விளக்கம்

 செயல்விளக்கம் ceyalviḷakkam, பெ. (n.)

   எவ்வாறு செய்வது அல்லது மேற்கொள்வது என்பதை நிகழ்த்திக்காட்டும் முறை; demonstration.

சிறுதொழில் வளர்ச்சியைப் பெருக்கச் செயல் விளக்கக் கூட்டங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

     [செயல் + விளக்கம்]

செயல்வீரர்

 செயல்வீரர் ceyalvīrar, பெ. (n.)

   குறிக்கோளை அடைவதில் ஏற்படும் தடைகளையெல்லாம் கடந்து நடைமுறையில் நிறைவேற்றி முடிப்பவர்; man of action.

இயக்கத்தின் செயல் வீரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.

     [செயல் + வீரர்]

செயவெனெச்சம்

செயவெனெச்சம் ceyaveṉeccam, பெ. (n.)

   எச்சவகைகளுள் ஒன்று; an infinite verb

     [செயவென் + எச்சம்]

செயவெனெச்சம் = காரணகாரியப் பொருண்மை உணர்த்தும் வழியில்லது.

   68 செயவெனெச்சம் இறந்தகால முணர்த்தாது. (தொல்.சொல். 457, சேனா.); நிகழ்காலத்தின் கண் இது நிகழாதிற்க இது நிகழ்ந்த தென்னும் பொருட்டாயும், இறந்த காலத்திற் காரணப் பொருட்டாயும் எதிர்காலத்தில், காரியப் பொருட்டாயும் வரும். மழை பெய்யக் குளம் நிறைந்தது – காரண காரியத்தால் இறந்த காலம் உணர்த்திற்று. பக்தி பெருக, வானுலகம் அடையலாம் – எதிர்காலம் உணர்த்திற்று.

செயிரியர்

செயிரியர் ceyiriyar, பெ. (n.)

   பாணர் (பிங்.);; minstrels.

     “செயிரியர் மகரயாழின் றேம்பிழி தெய்வகீதம்” (கம்பரா. கார்முக. 40);.

     [செயிர் → செயிரியர்]

செயிர்

செயிர்1 ceyirttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. வெகுளுதல்; to be angry with, to show signs of anger.

     “செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்” (புறநா. 226);.

   2. வருத்துதல்; to afflict, cause pain.

     “சிரறியவன்போற் செயிர்த்த நோக்கமொடு” (பொருந. 124);.

     [செய் → செயிர்-. செயிர்1-த்தல் பார்க்க]

 செயிர்2 ceyirttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. சிவத்தல்; to show sign of red.

   2. குற்றஞ்செய்தல்; to commit an offence.

     “செயிர்தீதெழு தெவ்வர்” (பொருந. 120);.

     [செய் → செயிர் → செயிர்-த்தல் (முதா. 153);]

கறுத்தற்பொருளும், சிவத்தற்பொருளும், சிநத்தற்பொருளையும், குறிக்கும்.

     “கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள” (தொல்.உரி.74);. செயிர்த்தலாகிய சிவத்தல் சினத்தலையும் குறித்தது. சினத்தால் குற்றஞ்செய்தலும் உண்டு.

 செயிர்3 ceyir, பெ. (n.)

   1. சினம்; anger, rage.

     “செயிர்தீர் செங்கட் செல்வ” (பரிபா. 4:10);.

   2. குற்றம்; fault, defect, blemish

     “செயிர் தீரண்ணல்” (பரிபா. 1:27);.

   3. போர்; battle, fight.

     “செயிர்மேற் கனல் விழிப்பச் சீறி” (பு.வெ. 7:4);.

   4. வருத்துகை; affliciting, oppressing.

     “செயிர்த்தொழின் முதியோன்” (சிலப். 27:7);.

   5. நோய்; disease

     “செயிருடம்பிற் செல்லாத்தீ வாழ்க்கையவர்” (குறள், 330);.

     [செயிர்1 → செயிர்2]

செயிர்ப்பு

செயிர்ப்பு ceyirppu, பெ. (n.)

   1.சினம்; anger.

     “சிவப்பு ளுறுத்துச் செயிர்ப்பு முந்துறீஇ (பெருங் இவரவாண. 16:18);.

   2. குற்றம்; fault.

     “செயிர்ப்பொடு சிவந்து நோக்கி” (சீவக. 1t624);.

     [செயிர் → செயிர்ப்பு]

செயிற்றியன்

 செயிற்றியன் ceyiṟṟiyaṉ, பெ. (n.)

   செயிற்றியம் என்னும் நாடகம் நூலின் ஆசிரியல்; author of {šeyitriyam.}

     [செயிற்றியம் → செயிற்றியன்]

செயிற்றியம்

செயிற்றியம் ceyiṟṟiyam, பெ. (n.)

   செயிற்றி யனார் என்ற புலவர் இயற்றிய நாடக விலக்கண நூல் (சிலப். பக்.9);; a treatise on dramaturgy by {Šeyirriyanār.}

     [செயிற்றியன் → செயிற்றியம்]

செய்

செய்1 ceytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   1. இயற்றுதல்; to do; perform, make, create, accomplish.

     “செயப்படு பொருளைச் செய்தது போல” (தொல். சொல். 248);.

செய்வதைச் திருந்தச் செய்.

   2. உண்டாக்குதல்; to cause, effect.

     ‘செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காமம்” (கவித். 140);.

   3. பொருளீட்டுதல் (சம்பாதித்தல்);; to acquire.

     “ஈதற்குச் செய்க பொருளை (திரிகடு. 90);.

   4. ஒத்தல்; to resemble

     “வேனிரை செய்த கண்ணீ” (சீவக. 2490);.

   ம. செய்யுக;   க. கெய், தெய்;   தெ. சேயு;   து. கைபினி;   கோத. கெய்;   துட. கிய்;   பிரா. கன்னிங்க்;   குட கெய்;   கோண். கீபானா;   கூ. கிவ. கிய;   குவி. சீனை;   நா. அக்;   கொலா. கக்;   கட. கெய்;பட. கீய்

     [கல் → செல் → சென் → செய்-.]

 செய்2 cey, பெ. (n.)

   1. செய்கை; deed, act, action.

     “களிறு களம்படுத்த பெருஞ்செய் யாடவர்” (நெடுநல். 171);.

   2. வயல்; field, especially wet field.

     “செய்யிற் பொலம்பாப்புஞ் செய்வினை” (பரிபா. 10:128);.

   ம. செ;யி க. கெய்

     [செய்1 → செய்]

 செய்3 cey, பெ. (n.)

   ஏக்கர் கொண்ட நன்செய் அல்லது புஞ்சை நிலவளவு; a unit offield measure = 276 ft x 276 ft = 76, 176 sq. ft=13/4 acres of wet land (R.P.);

   2. பெருங்குழி, 100 சிறு குழி கொண்ட நிலவளவை (G.Sm.D., i.288);;{peru-n-kuli,}

 a land measure consisting of 100 {ciru-kuli.}

     [செள் → செய். (ஒ.மொ. 169);]

 செய்4 cey, பெ. (n.)

   சிவப்பு (தைலவ.);; redness.

     [சுல்(சிவப்பு); → செல் → செள் → செய்]

செய்கடன்

செய்கடன் ceykaḍaṉ, பெ. (n.)

   1. கடமைச் செயல்; duty, religious, social or moral.

     “தீர்த்தமாடிச் செய்சுட னினிது முற்றி” (தணிகைப்பு, அகத். 131);.

   2. முன்னோர்க்குச் செய்யும் கடன் (வின்.);; funeral obsequies, rites for the manes.

   3. நேர்த்திக்கடன்; votive offering as to a deity.

     “தெய்வம் நொந்தேஞ் செய்சுட னேர்ந்தோம்” (மனோன். 1, 3:168);.

   4. ஏற்கனவே ஒருவர் செய்த கொடை, அன்பளிப்பு போன்றவற்றைத் திருப்பிச் செய்தல்; returning the donation orgift to other when the occasion occurs.

     [செய் + கடன்]

செய்கரை

செய்கரை ceykarai, பெ. (n.)

   1. வரப்பு; artificial bank, ridge infields.

     “மண்… சுமந்த சென்றச் செய்கரை சிந்தி” (திருவாத்.பு.மண்சுமந்த 37);.

   2. பாலம் (சூடா.);; causeway, bridge.

     “அதுவே காட்சிச் செய்கரை யாகப் போகி” (இரகு. திக்குவி. 70);.

   3. செயற்கையாய் உண்டாக்கப்பட்ட தடுப்புக் கரை; dykes.

     [செய் + கரை]

செய்காடு

செய்காடு ceykāṭu, பெ. (n.)

   குறுங்காடு (திருக்கோ. 148, உரை.);; thickest.

     [செய்2 + காடு]

செய்காரியஅட்டவணை

 செய்காரியஅட்டவணை ceykāriyaaṭṭavaṇai, பெ. (n.)

   கோயிலில் நடக்க வேண்டிய காரியங்களைக் காட்டும் பட்டி (இ.வ.);; index of items of work to be done in temple service.

     [செய் + காரியம் + அட்டவணை]

செய்காரியம்

செய்காரியம் ceykāriyam, பெ. (n.)

   1. செய்யப்பட்ட வேலை; thing done, deed, act.

   2. வல்லமை (சமாளிப்பு);; economical management.

     [செய் + காரியம்]

செய்காற்கரம்பு

 செய்காற்கரம்பு ceykāṟkarambu, பெ. (n.)

   தரிசாகவிடப்பட்ட சாகுபடி நிலம்; arable land, allowed to lie fallow or waste, one of two karambu.

     [செய்கால் + கரம்பு]

செய்காற்றரிசு

 செய்காற்றரிசு seykāṟṟarisu, பெ. (n.)

செய்காற் கரம்பு பார்க்க;see {šeykār-karambu.}

     [செய்கால் + தரிசு]

செய்கால்

செய்கால்1 ceykāl, பெ. (n.)

   1. பயிர் செய்யும் நிலம்; cultivated or arable land.

     ‘தரிசு கிடந்த தரையைச் செய்காலாம்படி திருத்துவாரைப் போலே’ (ஈடு, 2. 7:4);.

   2. சோலை (பிங்.);; grove.

     [செய் + கால்.]

 செய்கால்2 ceykāl, பெ. (n.)

   1. நற்காலம்; happy occasion, opp. to {pari-kãl.}

செய்கால் பரிகால் மட்டுந் தென்புறத்துத் திண்ணை விடுகிறது (இ.வ.);.

     [செய் + கால் = காலம்]

 செய்கால்3 ceykāl, பெ. (n.)

   நிலத்தில் பயிர் செய்வதற்கு வேண்டிய வுழைப்பு (தஞ்சை.);; labour necessary for the cultivation of lands.

     [செய் + கால்]

செய்கால்சாகுபடி

 செய்கால்சாகுபடி ceykālcākubaḍi, பெ. (n.)

   நன்செய் நிலத்தில் புன்செய்ப்பயிர் செய்கை (இ.வ.);; cultivation of dry crops in wet lands.

     [செய்கால் + சாகுபடி]

செய்கால்பரிகால்

 செய்கால்பரிகால் ceykālparikāl, பெ. (n.)

   நற்காலமும் தீக்காலமும்; occasions of joy and Sorrow.

செய்கால் பரிகால் மட்டுந் தென்புறத்துத் திண்ணை விடுகிறது (இ.வ.);.

     [செய்கால் + பரிகால்]

செய்குன்றம்

செய்குன்றம் ceykuṉṟam, பெ. (n.)

செய்குன்று பார்க்க;see {eykuru.}

     “சேணோங் கருவி தாழ்ந்த செய்குன்றமும்” (மணிமே. 28: 62);

     [செய் + குன்றம்]

செய்குன்று

செய்குன்று ceykuṉṟu, பெ. (n.)

   செல்வமக்கள் விளையாடற் பொருட்டு அமைக்கப்படும் கட்டுமலை; artificial mound, elevated place for high-born persons to play on.

     “செய்குன் றுவையிவை சீர்மலர் வாவி” (திருக்கோ. 223);

     [செய் + குன்று]

செய்குறை

செய்குறை ceykuṟai, பெ. (n.)

   1. பிழை; nonperformance of duty, fault, error, mistake.

   2. அரைகுறை வேலையாயிருப்பது; incomplete thing, that which is in an unfinished state.

     [செய் + குறை]

செய்குற்றம்

 செய்குற்றம் ceykuṟṟam, பெ. (n.)

   பிழை (யாழ்ப்.);; fault, error commission (of a crime sin etc,.);.

     [செய் + குற்றம்]

செய்கூலி

செய்கூலி ceyāli, பெ. (n.)

   1. செய்த வேலைக்குப் பெறுங்கூலி (உ.வ.);; wages for labour.

   2. பொற்கொல்லர் தச்சர் முதலியோர் பொருளின் விலை அல்லாமல் செய்த வேலைக்குப் பெறும்கூலி; labour charges.

நகை வாங்கினால் செய் கூலி தள்ளுபடி செய்யப்படும்.

     [செய் + கூலி]

செய்கை

செய்கை ceykai, பெ. (n.)

   1. செயல்; act, deed, action.

     “மக்கள் மனம்வேறு செய்கையும் வேறு” (நாலடி, 127);.

அவர் செய்கை பலருக்கும் சினமூட்டியது.

   2. மனம், பேச்சு, உடல் இவைகளிலுண்டாகும் இருவகை வினைகளாகிய நிலை; actions, physical and mental.

     “நின்றவுரு வேதனையே குறிப்புச் செய்கை நேர்நின்ற ஞான மென நிகழ்ந்த வைந்து மொன்றிய கந்தத்து” (பெரியபு. திருஞான. 916);.

   3. கருமம் (உ.வ.);; karma.

   4. வேலைப்பாடு; workmanship, work.

     “செய்கை யழிந்து சிதன்மண்டிற் றாயினும்” (நாலடி.147);.

   5. ஒழுக்கம்; conduct.

     “பேரருளாளர் தத்தஞ் செய்கையிற்பிழைப்பதுண்டோ” (கம்பரா. விபீடண. 128);.

   6. உடன்படிக்கை; agreement, contract, as a solemn act.

     “ஆதிசைவ னாரூரன் செய்கை” (பெரியபு. தடுத்தாட். 59);.

   7. செயற்கைப் பொருள்; artificial product, artifact, that which is manufactured.

இந்தச் சரக்கு செய்கை.

   8. செய்கைச் சூத்திரம் பார்க்க (நன்.20, உரை);;see {Seygaj-c-ciittiram}

   9. செய்வினை (பில்லி சூனியம்);; witchcraft, sorcery.

இந்த நோய் செய்கையாலானது.

   10. வேளாண்மை (யாழ்ப்.);; cultivation of land, agricultural labour.

   11. அரசின் அனுமதியாற் பெற்றுப் புதிதாகப் பண்படுத்திப் பயிரிடப் பெற்ற காட்டு நிலம் (யாழ்ப்.);; forestland newly broken up, enclosed and cultivated, held by grant or permission from Government.

     [செய் → செய்கை (மு.தா. 177);]

செய்கைகாண்(ணு)-தல்

செய்கைகாண்(ணு)-தல் ceykaikāṇṇudal,    12 செ.கு.வி.(v.i.)

   நிலம் வயலாகத் திருத்தப்படுதல் (யாழ்ப்.);; land to be newly brought under cultivation.

     [செய்கை + காண்-.]

செய்கைக்காணி

செய்கைக்காணி ceykaikkāṇi, பெ. (n.)

   1. பற்றடைப்பு நிலம்; landheld by a cultivator who renders a certain share of the produce to the owner,

   2. ஆவணக்காணி (சாசன காணி);; hereditary property held under a royal grant.

     [செய்கை + காணி]

செய்கைக்காரன்

செய்கைக்காரன் ceykaikkāraṉ, பெ. (n.)

   1. குத்தகைக்காரன் (யாழ்ப்.);; cultivator who is a sharer in the produce.

   2. நல்ல வேளாளன்; good cultivator.

   3. மந்திரஞ் செய்வோன்; sorcerer.

   4. வேலைக்காரன் (யாழ்.அக.);; servant.

     [செய்கை + காரன்]

செய்கைக்குறைச்சல்

செய்கைக்குறைச்சல் ceykaikkuṟaiccal, பெ. (n.)

   1. வேளாண் தாழ்வு; shortage of labour in cultivation.

   2. நடத்தைத் தவறு; misdeed, bad conduct.

     [செய்கை + குறைச்சல்]

செய்கைச்சரக்கு

 செய்கைச்சரக்கு ceykaiccarakku, பெ. (n.)

   செயற்கைப் பொருள்; that which in manufactured.

     [செய்கை + சரக்கு]

செய்கைச்சீட்டு

 செய்கைச்சீட்டு ceykaiccīṭṭu, பெ. (n.)

   மேல் வாரச் சாகுபடி ஒப்பந்தம் (யாழ்ப்.);; cultivation deed, written contract between owner and cultivator.

செய் = நிலம்

     [செய் → செய்கை + சீட்டு]

செய்கைச்சூத்திரம்

 செய்கைச்சூத்திரம் ceykaiccūttiram, பெ. (n.)

   புணர்ச்சி நெறி (விதி); முடிபு நெறி (விதி); முதலியவற்றை முடித்துக்காட்டும் நெறி (விதி);;{šūtra} containing directive rules on sandhi, syntax etc., corresponding to {vidi šutras} in {Šanskrit}

     [செய்கை + சூத்திரம்]

செய்கைச்சூழ்ச்சி

செய்கைச்சூழ்ச்சி ceykaiccūḻcci, பெ. (n.)

   தந்திரச்செயல்; stratagem, trick, secret, device.

     “கையிகந்து பெருகிய செய்கைச் சூழ்ச்சியுள்” (பெருங். இலாவாண. 17:67);.

     [செய்கை + சூழ்ச்சி]

செய்கைத்தரை

 செய்கைத்தரை ceykaittarai, பெ. (n.)

   பண்படுத்தின நிலம் (யாழ்.அக.);; field prepared for sowing.

     [செய்கை + தரை]

செய்கைத்தளை

செய்கைத்தளை ceykaittaḷai, பெ. (n.)

   1. நன்றாகப் பண்படுத்தப்பட்ட நிலம்; field well ploughed and richly manured.

   2. பட்டயக் காணி; land held from Government for cultivation.

     [செய்கை + தளை]

செய்கைத்தாழ்ச்சி

செய்கைத்தாழ்ச்சி ceykaittāḻcci, பெ. (n.)

   1. மேற்பார்வைக் குறைவு; mismanagement.

   2. தொழிற்குறைவு; deficiency in the amount of labour required.

   3. வயலின் செம்மைக் குறை (தஞ்சை.);; defect in the nature of the field.

     [செய்கை + தாழ்ச்சி]

செய்கைத்தேர்

 செய்கைத்தேர் ceykaittēr, பெ. (n.)

   ஊர்வலத்தில் பயன்படுத்தும் தேர்வகை (யாழ்ப்.);; a kind of car used in procession.

     [செய்கை + தேர்]

செய்கைபண்ணு-தல்

செய்கைபண்ணு-தல் ceykaibaṇṇudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   உழவு முதலிய பயிர்த் தொழில் செய்தல் (யாழ்ப்.);; to cultivate, till, manure.

     [செய்கை + பண்ணு-.]

செய்கைப்பங்கு

செய்கைப்பங்கு ceykaippaṅgu, பெ. (n.)

   1. பயிரிடுவோனுக்குரிய வாரம் (யாழ்ப்.);; share of the cultivator or planter.

   2. செய்நேர்த்தியான நிலம்; land made suitable for cultivation.

     [செய்கை + பங்கு]

செய்கையாட்சி

 செய்கையாட்சி ceykaiyāṭci, பெ. (n.)

   பட்டயத்தாற் பெற்ற நில உரிமை (யாழ்ப்.);; possession of land for cultivation held under a written grant from Government.

     [செய்கை + ஆட்சி]

செய்கையுப்பு

 செய்கையுப்பு ceykaiyuppu, பெ. (n.)

காய்ச்சியெடுக்கப்படும் உப்பு (யாழ்ப்.);:

 manufactured salt.

மறுவ. செயற்கை உப்பு

     [செய்கை + உப்பு]

செய்கையொப்பம்

 செய்கையொப்பம் ceykaiyoppam, பெ. (n.)

   நில உரிமைச் சீட்டு (பட்டா);; written grant by Government for cultivation.

     [செய்கை + ஒப்பம்]

செய்க்கடன்

செய்க்கடன் ceykkaḍaṉ, பெ. (n.)

   நிலவரி; land tax.

     “பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது” (புறநா. 35);.

     [செய் + கடன்]

செய்சுனை

செய்சுனை ceycuṉai, பெ. (n.)

   அகழ்ந்து உண்டாக்கப்பட்ட நீர்நிலை; tank or pond, as formed by human labour.

     “கையமைத் தியற்றிய செய்கனை தோறும்” (பெருங். இலாவாண. 15:18);.

     [செய் + சுனை]

செய்தி

செய்தி ceyti, பெ. (n.)

   1. செய்கை1 பார்க்க;see {šergas.}

     “குடிப்பொருளன்று நுஞ்செய்தி” (புறநா. 45: 7);.

   2. தொழில் (இறை. 1:18);; occupation.

   3. ஒழுக்கம் (சூடா.);; behaviour, conduct.

   4. செய்ந்நன்றி (புறநா. 34:6); பார்க்க;see {ey-nnari,}

   5. குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்ச்சி பற்றிய விளக்கம் (செய்தி);; news, tidings, information.

     “பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் (மணிமே. 19:49);.

அவனுக்கப் பணம் கிடைத்த செய்தி எனக்குத் தெரியாது.

   6. நிலைமை; state, condition.

   ம. செய்தி;   க. பட. சுத்தி;தெ. செயிதமு

     [செய் → செய்தி]

செய்தி முகவர்

 செய்தி முகவர் ceytimugavar, பெ.(n.)

   செய்தித்தாள் போன்ற ஊடகத்தார் தம் ஊடகங்களில் வெளியிடுவதற்கான செய்தி களையும் நிகழ்ச்சிகளையும் திரட்டும் பணியியில் ஈடுபடுத்தும் பணியாளர்; news agent, press reporter.

     [செய்தி+முகவர்].

செய்திகள்

 செய்திகள் ceytigaḷ, பெ. (n.)

   வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் படிக்கப்படும் செய்தித் தொகுப்பு; news over the radio or television.

     [செய்தி → செய்திகள்.]

செய்திகொன்றோர்

செய்திகொன்றோர் ceytigoṉṟōr, பெ. (n.)

   நன்றியில்லாதவர்; ungreateful persons.

     “ஒருவன் – செய்தி கொன்றேர்க் குய்தியில்லென”(புறநா.34);.

     [செய்தி+கொன்றோர்]

செய்திகொல்(லு)தல்

செய்திகொல்(லு)தல் ceydigolludal,    13 செ.கு.வி. (v.i.)

செய்ந்நன்றிகொல்(லு);-தல் பார்க்க;see {sey-n-namri-kol_}

     “செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென” (புறநா. 34:6);.

     [செய்தி + கொல்-.]

செய்திக்காக

 செய்திக்காக ceytikkāka, வி.அ. (adv.)

   கவனத்திற்காக (தகவலுக்காக);; tor guidance;

 for information.

     [செய்தி +ஆக]

செய்திக்குறிப்பு

செய்திக்குறிப்பு ceytikkuṟippu, பெ. (n.)

   1. ஒர் அமைப்பு தனது நடவடிக்கைகளைப் பொதுமக்களுக்கு அறிவிக்கும் முகமாகச் செய்தித்தாள், வானொலி போன்றவற்றுக்கு அனுப்பிவைக்கும் எழுத்து வடிவச் செய்தி; press release.

பொங்கலுக்குச் சேலை வழங்கப்படும் என்று அரசின் செய்திக் குறிப்புக் கூறுகிறது.

   2. சிறுவிளத்தத் தொகுப்பு; a note.

இதைக் கட்டுரை என்பதைவிடச் செய்திக்குறிப்பு எனலாம்.

     [செய்தி + குறிப்பு.]

செய்தித்தாள்

செய்தித்தாள் ceytittāḷ, பெ. (n.)

   1. செய்தியிதழ் பார்க்க;see {cydi-y-idal.}

   2. நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, விற்பனைக்கு வரும், நாட்டு நடப்பைக் காட்டும் இதழ் (பத்திரிக்கை);; newspaper.

     [செய்தி + தாள்.]

செய்தித்துணுக்கு

 செய்தித்துணுக்கு ceytittuṇukku, பெ. (n.)

   கவனத்தை ஈர்க்கும் வகையில் செய்தியிதழ்களில் வெளியாகும் சுவையான சிறு செய்திகள்; titbits in periodicals.

அந்தச் செய்தியிதழில் செய்தித் துணுக்குள் அதிகம் வெளிவருகின்றன.

     [செய்தி + துணுக்கு]

செய்திப்படம்

 செய்திப்படம் ceytippaḍam, பெ. (n.)

   செய்திகளை வெளியிடும் முறையில் எடுக்கப்படும் செய்தித் திரைப்படம்; documentary film.

     [செய்தி + படம்]

செய்திப்பறை

 செய்திப்பறை ceytippaṟai, பெ.(n.)

   செய்தி பரவலுக்காக (பரிமாற்றத்திற்காக);ப்பயன்படுத்தப்பட்ட பறை; a drum used to convey message.

     [செய்தி+பறை]

செய்திப்பிழை

செய்திப்பிழை ceytippiḻai, பெ. (n.)

   அறியாமல் செய்த தவறு; unconscious mistake slip.

     “எப்பொழுதுந் தன்மணத்துக் கேற்க நடப்பார்க்கொரு செய்திப்பிழை வாராதோ தினகரா” (தினகராவெண்பா. 85);.

     [செய்தி + பிழை.]

செய்திமடல்

 செய்திமடல் ceytimaḍal, பெ. (n.)

   ஒரு துறை அல்லது கழகத்தின் செய்திகள் அடங்கிய இதழ்; news letter of a department or association journal.

     [செய்தி + மடல்]

செய்திமெய்ப்பு

 செய்திமெய்ப்பு ceytimeyppu, பெ. (n.)

   செய்தித்தாள் அச்சாகுமுன் தயாரிக்கப்படும் மெய்ப்பு; news proof;gally proof.

     [செய்தி + மெய்ப்பு]

செய்தியறிக்கை

 செய்தியறிக்கை ceytiyaṟikkai, பெ. (n.)

   வானொலி, தொலைக்காட்சிகளில் குறிப்பிட்ட நிகழ்ச்சி பற்றிய சிறப்பு அறிக்கை; news bulletin.

தேர்தல் பற்றிய செய்தியறிக்கை மணிக்கொருமுறை நாள் முழுதும் வழங்கப்படுகிறது.

     [செய்தி + அறிக்கை]

செய்தியாளர்

 செய்தியாளர் ceytiyāḷar, பெ. (n.)

   செய்தித் தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றின் நிருபர்; reporter, newsperson.

செய்தியாளர் கூட்டத்தில் முதல்வர் பேசினார்.

     [செய்தி + செய்தியாளர்]

செய்தியிதழ்

 செய்தியிதழ் ceydiyidaḻ, பெ. (n.)

   நாளிதழ், வார இதழ், மாத இதழ் மற்றும் பருவ இதழ் ஆகியனவற்றின் பொதுப் பெயர்; a common name for the daily, weekly, monthly and periodical newspaper.

     [செய்தி + இதழ்]

செய்திறம்

செய்திறம்1 ceytiṟam, பெ. (n.)

   மருத யாழ்த் திறத்துள் ஒன்று (பிங்.);; a secondary melodytype of the Marudam class.

     [செய் + திறம்]

 செய்திறம்2 ceytiṟam, பெ. (n.)

   வினைத்திறம்;   செயல்படக்கூடிய திறமை; the technique of doing things in a perfect manner.

     [செய் + திறம்]

செய்திவள்ளுவன்பெருஞ்சாத்தன்

செய்திவள்ளுவன்பெருஞ்சாத்தன் ceytivaḷḷuvaṉperuñjāttaṉ, பெ. (n.)

   குறுந்தொகை 228 ஆம் பாடலின் ஆசிரியர்; author of {Kurundogai-228.}

     [செய்தி + வன்ஞவன் + பெருஞ்சாத்தன்]

செய்து

செய்து ceytu, வி.எ. (adv.)

   இறந்தகாலத் தெரிநிலை வினையெச்ச வாய்பாட்டி னொன்று; grammatical classification.

     “செய்துசெய்பு செய்யாச் செய்யூச் செய்தென'(நன். 343);

     [செய்-செய்து]

செய்துகோள்

செய்துகோள் ceytuāḷ, பெ. (n.)

   தானே உண்டாகாது செய்து கொள்ளப்பட்டது (நம்பியகப். 1, பக்.36);; artificiality.

     [செய் → செய்து + கோன்.]

செய்தே

செய்தே ceytē, இடை (part.)

   வினை நிகழ்ந்து கொண்டிருத்தலைக் குறித்தற்குச் செயவென் எச்சத்துடன் வரும் ஒரு துணைவினை; an auxiliary verbal participle added to verbal participles for denotng continuity of action.

     “குணவிசிஷ்ட வஸ்து தோற்றா நிற்கச் செய்தேயும்” (ஈடு, 1. 1:6);.

     [செய் → செய்தே]

செய்தொழில்

செய்தொழில் ceytoḻil, பெ. (n.)

   1. செய்கை; action, deed

     “கீழ்களைச் செய்தொழிலாற் காணப்படும்” (நாலடி, 350);.

   2. செய்கின்ற வேலை; the work having done.

   3. வேளாண் பயிர்த்தொழில்; agriculture.

     [செய் + தொழி.ல்]

செய்நீர்

 செய்நீர் ceynīr, பெ. (n.)

   மருந்துச் சரக்கினின்று இறக்கப்படுஞ் சத்துநீர் (இ.வ.);; tincture.

     [செய் + நீர்]

செய்நேர்த்தி

செய்நேர்த்தி1 ceynērtti, பெ. (n.)

   1. குற்றங் குறைபாடில்லாத நில விளைவு (C.G.16);; proper cultivation of land, as by manuring, weeding in season, etc.,

   2. பயிர்வைப்பதற்கு முன் நிலத்திற் செய்யுஞ் சீர்திருத்தம்; improvement effected on land before actual cultivation;reclamation of waste land.

   3. சரியான ஊட்டம்; proper nourishment.

செய்நேர்த்தி யில்லாத பிள்ளை (தஞ்சை);.

     [செய் + நேர்த்தி. நேர்த்தி = திறமை, அமுகு]

 செய்நேர்த்தி2 ceynērtti, பெ. (n.)

.

   1. சிறப்பான செயல்; great action.

   2. நுட்பமான செயல்; very fine work.

இந்த அணைக்கட்டு செய் நேர்த்தி மிக்கது (உ.வ.);.

   3. அழகான (நகாசு); வேலை; fine decorative work.

இந்த அணிகலன் செய்நேர்த்தி மிக்கது (உ.வ.);.

     [செய் + நேர்த்தி. தேர்த்தி = திறமை, அமுகு]

செய்ந்நன்றி

செய்ந்நன்றி ceynnaṉṟi, பெ. (n.)

   1. உதவி; act of benevolence

     “செய்ந்நன்றி கொன்ற மகற்கு” (குறள், 110);.

   2. நன்றியறிவு; gratitude.

     [செய் + நன்றி]

செய்ந்நன்றிகொல்(லு)-தல்

செய்ந்நன்றிகொல்(லு)-தல் ceynnaṉṟigolludal,    13 செ.கு.வி. (v.i.)

   நன்றி மறத்தல்; to be ungrateful.

     “செய்ந்நன்றி கொல்லன் மின்” (சிலப். 30:191);.

     [செய்ந்நன்றி + கொல்]

செய்ந்நன்றிக்கேடு

செய்ந்நன்றிக்கேடு ceynnaṉṟikāṭu, பெ. (n.)

   பிறன்செய்த உதவியை மறக்கை (கலித். 149, உரை.);; ingratitude.

     [செய்ந்நன்றி + கேடு]

செய்ந்நன்றியறிதல்

 செய்ந்நன்றியறிதல் ceynnaṉṟiyaṟidal, பெ. (n.)

   தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை; to remember the help done to one, the act of gratitude.

     [செய்ந்நன்றி + அறிதல்]

செய்பவன்

செய்பவன் ceypavaṉ, பெ. (n.)

   செயற்படுபவன் (கருத்தா);; subject of an active verb.

     “செய்பவன் கருவி நிலஞ் செயல்” (நன். 320);.

     [செய் → செம்பவன்]

செய்பாகம்

செய்பாகம் ceypākam, பெ. (n.)

   மருந்து செய்யும் முறை; medical process, skill in preparing medicines.

செய்பாகங் கைபாகம் அறியவேண்டும்.

   2. கருத்து முற்றுதற்கு ஏற்ற வழி (வின்.);; proper means to effect an object.

   3. ஒழுங்கு முறை; methodical arrangement.

     [செய் + பாகம். பாகம் = வழி]

செய்பாவை

செய்பாவை ceypāvai, பெ. (n.)

   1. திருமகள்; Lakshmi.

     “செய்பாவை யன்னார்” (சீவக. 2338);.

   2. பொம்மை; doll, image.

     [செய் + பாவை]

செய்பொருள்

செய்பொருள் ceyporuḷ, பெ. (n.)

   1. செயப்படு பொருள் (நன். 320);; object.

   2. மனித வாழ்வின் குறிக்கோள்; objects of human pursuit.

     “அவரவர் செய்பொருட் கரணமு நீயே” (பரிபா. 4:73);.

   3. ஆக்கும் பொருள்; manufactured products;

 produce.

     [செய் + பொருள்.]

செய்முறை

செய்முறை ceymuṟai, பெ. (n.)

   1. பணிநிரல்; procedure, process, method.

கணக்குத் தேர்வில் செய்முறைக்கும் மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆய்வகச் சோதனைகளில் முதலில் செய்முறையை எழுதிக்கொள்ள வேண்டும்.

   2. இறந்தவருக்கு உறவினர் சடங்காகச் செய்ய வேண்டிய கடமை; ritual obligations imposed on close relations on occasions like funeral, etc.,

சம்பந்திக்கு செய்முறை செய்ய வேண்டும்.

     [செய் + முறை]

செய்முறைப்பயிற்சி

செய்முறைப்பயிற்சி ceymuṟaippayiṟci, பெ. (n.)

   1. எடுத்துக்காட்டாக நிகழ்த்தப்படும் விளக்கம்; demonstration.

வேளாளர்களுக்கு வேளாண்மைத் துறைவழி செய்முறைப் பயிற்சி அளிக்கப்படுகிறது (உ.வ.);.

   2. மாணவர்களை ஆய்வு செய்யப் பாடத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் வினாப்பட்டியல்; exercise in a text book.

பாடத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்முறைப் பயிற்சிகளைச் செய்து வரவேண்டும்.

   3. கருவிகள் கொண்டு நிகழ்த்திக் காட்டும் பயிற்சி; experiments in a school etc., in science subjects;demonstration.

பள்ளியில் செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.

     [செய்முறை + பயிற்சி]

செய்ம்மெழுகு

 செய்ம்மெழுகு ceymmeḻugu, பெ. (n.)

   அரக்கு (இவ.);; lac.

     [செய் + மெழுகு]

செய்ம்மை

 செய்ம்மை ceymmai, பெ. (n.)

   செம்மை (சிவப்பு);; redness.

     [சுல் → செல் → செள் → செய் → செய்ம்மை]

செய்ய

செய்ய ceyya, பெ.எ. (adj.)

   1. சிவந்த; red.

     ‘செய்ய தாமரைக ளெல்லாம்” (கம்பரா. நீர்வினை.3);.

   2. செப்பமான, நேர்மையான; correct, perfect, sound

     “செய்ய சிந்தைப் பேரருளாளர்” (கம்பரா. வி.பீடண. 128);.

ம. செய்ய

     [செய்4 → செய்ய]

செய்யது

செய்யது ceyyadu, பெ. (n.)

   சிவப்புப் போர்வை; red colour carpet.

     “செய்யது போர்த்தான் போல்”(கள.32);

     [செம்-செய்-செய்யது]

செய்யன்

செய்யன்1 ceyyaṉ, பெ. (n.)

செந்நிறமான முருகன்;{Murugan,}

     “செய்யன் சிவந்த வாடையன்” (திருமுரு. 206);.

   2. நேர்மையானவன்; just, impartial person.

     “செய்யரைச் சேர்ந்துளாரும்” (கம்பரா. கோலங்.9);.

     [செம் → செய் → செய்யன்]

 செய்யன்2 ceyyaṉ, பெ. (n.)

   பாம்புவகை (சித்தர். சிந்து);; a species of snake.

     [செய் → செய்யன்]

செய்யர்

 செய்யர் ceyyar, பெ. (n.)

   நேர்மையுள்ளவர்; honest person.

     [செம்-செய்-செய்யர்]

செய்யலேரி

 செய்யலேரி ceyyalēri, பெ.(n.)

திருவண்ணா மலை வட்டத்திலுள்ள சிற்றுர்,

 a village in Thiruvannamalai Taluk.

     [செய்யல் (சிவப்பு);+ஏரி]

செய்யல்

செய்யல் ceyyal, பெ. (n.)

   1. ஒழுக்கம் (பிங்.);; behaviour, conduct.

   2. செய்தொழில் (சூடா.);; work, occupation.

   3. காவல்; protection, watch.

   4. சேறு (திவா.);; mire, siush.

     “பலத்தின் செய்யலி னடந்து” (இரகு. தேனுவ. 22);.

     [செய் → செய்யல்]

செய்யவன்

செய்யவன் ceyyavaṉ, பெ. (n.)

   1. சிவந்தவன்; person of red or brown complexion.

   2. சிவன்;{Siva}

     “செய்யவனே சிவனே” (திருவாச. 6:7);

   2. செவ்வாய்க் கோள் (விதான. குணாகுண. 12);; Mars.

   3. பகலவன்; Sun.

ம. செய்யவன்

     [செய்ய → செய்யவன்]

செய்யவள்

செய்யவள் ceyyavaḷ, பெ. (n.)

   சிவந்த திருமகள்; Lakshmi

     “செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்” (குறள், 167);.

     [செய்ய → செய்யவன்]

செய்யாக்கோலம்

செய்யாக்கோலம் ceyyākālam, பெ. (n.)

   இயற்கையழகு; natural beauty

     “செய்யாக் கோலமொடு வந்தீர்க்கு” (சிலப். 16: 11);.

     [செய் + ஆ + கோலம்]

செய்யாண்டையான சம்புவராய நாச்சி

 செய்யாண்டையான சம்புவராய நாச்சி seyyāṇṭaiyāṉasambuvarāyanāssi, பெ.(n.)

   விசயகண்ட கோபாலனுடைய திருவோத்துர் கல்வெட்டொன்றில் குறிக்கப்படும் சம்புவ ராயர் மரபில் வந்த தேவரடியார் மகள்; a name of a dancer in temple.

     [செய்யாண்டை+ஆன+சம்புவராயன்+ஆட்சி]

செய்யாத்து வென்றான்

 செய்யாத்து வென்றான் ceyyāttuveṉṟāṉ, பெ.(n.)

   வாலாசா வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Wallajah Taluk.

     [செய்யாறு – செய்யாற்று+வென்றான்]

செய்யான்

செய்யான் 1 ceyyāṉ, பெ. (n.)

செய்யன் பார்க்க ;see {Seyуал.}

 செய்யான்2 ceyyāṉ, பெ. (n.)

   1. சிவந்தவன்; person of red or brown complexion.

   2. சிவன்;{Sivan,}

     “செய்யானை வெண்ணீ றணிந்தானை” (திருவாச. 8:13);.

   3. செம்பூரான்; red, venomous centipede.

     [செய் → செய்யான்]

செய்யாமொழி

செய்யாமொழி ceyyāmoḻi, பெ. (n.)

 the {Vēda,} as uncreated.

     “செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும்” (வள்ளுவமா. 23);.

     [செய் + ஆ + மொழி]

செய்யார்

செய்யார் ceyyār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “செய்யார் தேஎம்” (பொருந. 134);.

     [செய் → செய்யார்]

செய்யாற்றை வென்றான்

 செய்யாற்றை வென்றான் ceyyāṟṟaiveṉṟāṉ, பெ.(n.)

   செய்யாறு வட்டத்தில் அனுக்காவூர் அருகில் உள்ள ஓர் ஊர்; a village in Seyyăru near the Anukkavur.

     [செய்யாறு+ஐ+வென்றான்]

செய்யால்

 செய்யால் ceyyāl, பெ. (n.)

   அழிந்துபோன காடு; destroyed forest.

     ‘நம்ம புஞ்சை தவிர நாலு பக்கமும் செய்யலு:

     [சாய்-சய்யல்-செய்யால்]

செய்யாள்

செய்யாள் ceyyāḷ, பெ. (n.)

   1. திருமகள் (செந்நிற முடையவள்);; Laksmi, as being red.

     “செய்யாட் கிழைத்த திலகம் போல்” (பரிபா 22:4, பக்.175);.

   2. தாயின்தங்கை;   சின்னம்மா அல்லது சித்தி (தஞ்சை.);; mother’s younger sister.

ம. செய்யாள்

     [செய்யவள் → செய்யாள்]

செய்யில்

செய்யில் ceyyil, பெ. (n.)

   சமம் செய்யப்பட்ட விளைநிலம் (தெ.க.தொ. 3, கல்.210);; modified and cultivated land.

     [செய் + இல்]

செய்யுட்கணம்

 செய்யுட்கணம் ceyyuṭkaṇam, பெ. (n.)

   சிற்றிலக்கியம் இயற்றத் தொடங்கும் போது செய்யுண்முதற்கண் வருதற்குரிய நிலக்கணம், நீர்க்கணம், மதிக்கணம் அல்லது சந்திரகணம், இயமானக்கணம் அல்லது இந்திரகணம் என்ற நற்கணம் நான்கும், சூரியகணம், தீக்கணம், வாயுகணம் அல்லது மாருதகணம், அந்தரகணம் அல்லது ஆகயாகணம் என்ற தீக்கணம் நான்குமாகிய எண்கணங்கள் (திவா.); (பிங்.);; the eight varities of trisyllabic feet viz., {nila-k-kanam, mir-k-kanam, madi-k-kanam or šandira-kaņam, iyamāņa-k-kaņam, or indirakaņam, šūriya-kanam, tī-k-kanam, vāyukanam or mâruda-kanam, andara-kanam or ăgăya-kanam} of which the first four are considered auspicious at the beginning of a poem and the rest inauspicious.

     [செய்யுள் + கணம்]

செய்யுட்கலம்பகம்

 செய்யுட்கலம்பகம் ceyyuṭgalambagam, பெ. (n.)

   பலவகைப் பாடற்றிரட்டு; anthology of different kinds of verses.

மறுவ. செய்யுட்கோவை

     [செய்யுள் + கலம்பகம்]

செய்யுட்கிழமை

செய்யுட்கிழமை ceyyuṭkiḻmai, பெ. (n.)

   ஆறாம்வேற்றுமைப் பொருள்களுள், இன்னாரது பாட்டு என, ஆக்கியோனுக்கும் அவன் பாட்டுக்கும் உள்ள உரிமையாகிய பொருள் (குறள், 6, உரை.);; the relation of an author to his work, denoted by the possessive casc.

     [செய்யுள் + கிழமை]

செய்யுட்கோவை

 செய்யுட்கோவை ceyyuṭāvai, பெ. (n.)

செய்யுட்கலம்பகம் பார்க்க;see {seyyulkalambagam.}

சிதம்பரச் செய்யுட் கோவை.

     [செயுயுள் + கோவை]

செய்யுட்சொல்

செய்யுட்சொல் ceyyuṭcol, பெ. (n.)

   செய்யுளில் மாத்திரம் வழங்கும் சொல்; word used only in poetry.

     ‘இது செய்யுட்சொல் லாதலால் வந்தது’ (திருக்கோ. 1, உரை);.

     [செய்யுள் + சொல்]

செய்யுட்டாரணை

 செய்யுட்டாரணை ceyyuṭṭāraṇai, பெ. (n.)

   ஒன்பது தாரணையுள் ஒன்று (வின்.);; one of {navadāraņai.}

செய்யுட்பாடு

 செய்யுட்பாடு ceyyuṭpāṭu, பெ. (n.)

   அசை நிலை (ஈடு.);; expletive particle.

     [செய்யுள் + பாடு]

செய்யுட்பொருத்தம்

 செய்யுட்பொருத்தம் ceyyuṭporuttam, பெ. (n.)

செய்யுண் முதன்மொழிப் பொருத்தம் பார்க்க;see {Seyyun-mudammoli-p-poruttam.}

     [செய்யுள் + பொருத்தம்]

செய்யுட்போலி

செய்யுட்போலி ceyyuṭpōli, பெ. (n.)

   கத்திய வகை இரண்டனுள் ஒன்று (வீரசோ. யாப். 6, உரை);; one of the two divisions of kattiyam dist. fr. {katturai-p-põli.}

     [செய்யுள் + போலி]

செய்யுணடை

 செய்யுணடை ceyyuṇaḍai, பெ. (n.)

   செய்யுளில் வழங்கும் நடை; poetic style.

     [செய்யுள் + நடை]

செய்யுண்முடிபு

செய்யுண்முடிபு ceyyuṇmuḍibu, பெ. (n.)

   செய்யுளில் மட்டும் வழங்குஞ் சொல் வழக்கு; peculiar forms which words assume in poetry.

     “என்மனாரென்பது செய்யுண் முடிபெய்தி நின்றதோர் . . . சொல்” (தொல்.சொல். 1, சேனா.);

     [செய்யுள் + முடி.பு. முடிவு → முடி.பு.]

செய்யுண்முதன்மொழிப்பொருத்தம்

செய்யுண்முதன்மொழிப்பொருத்தம் ceyyuṇmudaṉmoḻipporuddam, பெ. (n.)

   மங்கலப் பொருத்தம், சொற் பொருத்தம், எழுத்துப் பொருத்தம், தானப் பொருத்தம், பாற் பொருத்தம், உண்டிப் பொருத்தம், வருணப் பொருத்தம், நாட்பொருத்தம், கதிப்பொருத்தம், கணப் பொருத்தம் என்று பத்து வகையாய்க் காவியத்தின் முதற்செய்யுள் முதன்மொழியிற் பார்த்தற்குரிய பொருத்தம் (வெண்பாப்.முதன்.1);; rules of propriety regarding the initial word or letter of a poem ten in number, viz. mangala-p-poruttam, {Śor-poruttam, eluttu-pporuttam, tāna-p-poruttam, pâr-poruttam, undip-poruttam, varuna-p-poruttam, nāf-poruttam, kadi-p-poruttam and kana-p-poruttam.}

     [செய்யுள் + முதன்மொழி + பொருத்தம்]

செய்யும்படி

செய்யும்படி ceyyumbaḍi, பெ. (n.)

   ஆணை; order, instruction.

     ‘பிரசாதஞ் செய்தருளி வந்த செய்யும்படிப் படி (தெ.க.தொ. 3, 211);

     [செய் → செய்யும் + படி]

செய்யுளியல்

 செய்யுளியல் ceyyuḷiyal, பெ. (n.)

   இலக்கண நூல்களில் யாப்பிலக்கணங் கூறும் பகுதி; a section in grammatical works, dealing with prosody.

     [செய்யுள் + இயல்]

செய்யுளுறுப்பு

 செய்யுளுறுப்பு ceyyuḷuṟuppu, பெ. (n.)

   எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற செய்யுள் பகுதிகள்; constituent elements of a stanza, viz. {eluttu, ašai, šir, taļai, adi, todai.}

     [செய்யுள் + உறுப்பு]

செய்யுள்

செய்யுள் ceyyuḷ, பெ. (n.)

   1. செய்கை; action.

     ‘பாய்த்துள் விக்குள் என்றாற் போலச் செய்யுள் என்பதூஉம் தொழிற்பெயர் (தொல்.பொருள். 439, உரை);.

   2. யாப்பு தவறாது அடிவரையறயுடன் எழுதப்படுவது, பாட்டு; stanza, verse.

     “செய்யுளுறுப் பென . . . வகுத்துரைத்தனரே” (தொல்.பொருள். 313);.

   3. காப்பியம்; poetic composition, poem.

     “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” (சிலப். பதி. 87);.

   4. உரை; commentary.

     “யாதொரு செய்யுள் கேட்டாற் றோன்றிய புளக மெய்யுந் துளிபடு கண்ணு முண்டோ வான்றவச் செய்யுள்” (திருவாலவா. 19:6);.

   5. விளைநிலம் (சங்.அக.; cultivated field.

     [செய் → செய்யுள்]

இலக்கணம் பிழையாமற் கூறவேண்டுதலானும், ஒரு பொருளைக் குறித்து. செய்யப்படுதலானும் செய்யுளாம் (தொல் பொருள். செய். 166, இளம்.);. செய்யுளாவது அடிவரையறை யுள்ளனவும், அடிவரையறையில்லனவும் என இருவகைப்படும். அடிவரையுள்ளன.ஆசிரியம் வஞ்சி, வெண்பா, கலி, தாழிசை துறை விருத்தம் என்பன அடிவரையில்லன.

செய்யுள்வழக்கு

செய்யுள்வழக்கு ceyyuḷvaḻkku, பெ. (n.)

   செய்யுளில் வழங்குஞ் சொல்; poetic or iterary usage opp. to {ulaga-valakku.}

     ‘திரிசொல் திசைச்சொல் வடசொல்லாகிய செய்யுள் வழக்கையும்’ (நன். 267, உரை);.

மறுவ. இலக்கிய வழக்கு

     [செய்யுள் + வழக்கு]

செய்யுள்வழு

செய்யுள்வழு ceyyuḷvaḻu, பெ. (n.)

   யாப்பிலக்கணத்தோடு பொருந்தாத இயல்பினையுடைய குற்றம் (தண்டி. 112);; defectin versification.

     [செய்யுள் + வழு]

செய்யுள்விகாரம்

செய்யுள்விகாரம் ceyyuḷvikāram, பெ. (n.)

   வலித்தல், மெலித்தல், நீட்டல், குறுக்கல், விரித்தல், தொகுத்தல், முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை எனச் செய்யுளிற் சொற்கள் பெறும் ஒன்பதுவகை மாறுபாடு (நன். 155, உரை);; changes in words allowed as poetic licence, nine in number viz. valittal, melittal, {nittal, kurukkal,} virittal, toguttal, {mudar-kurai, idai-k-kurai, kadai-k-kurai.}

     [செய்யுள் + விகாரம்]

{Skt. vi-kāra } -→ த. விகாரம்

செய்யூர்

 செய்யூர் ceyyūr, பெ.(n.)

   காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே உள்ள ஓர் ஊர்; a village in Kanchipuram, near the Mathuranthagam.

     [செய்+ஊர்]

செய்யொளி

செய்யொளி ceyyoḷi, பெ. (n.)

   1 வைடுரியம்; cat eye.

   2. உண்டாக்கிய வெளிச்சம்

 a light contrived by art or skill as electric light, gas light etc. (சா.அக.);.

     [செம்-செய்+ஒளி]

செய்யோன்

செய்யோன் ceyyōṉ, பெ. (n.)

   1. செந்நிற முள்ளவன்; ruddy or fair-complexioned person.

     “செய்யோ னகளங்கள்” (பெருந்தொ. 817);.

   2. செவ்வாய்; Mars

     “மீனத்து மந்தன் செய்யோன் மதியெழ” (விதான. கர்ப்பா. 10);

   3. அருகன் (சூடா.);; Arhat.

   4. கதிரவன் (சீவக, 2322, உரை);; Sun.

     [செய் → செய்போன்]

செய்யோள்

செய்யோள் ceyyōḷ, பெ. (n.)

   1. செந்நிற முள்ளவள்; ruddy or fair-complexioned woman.

     “எய்யா விளஞ்சூற் செய்யோள்” (பொருந. 6);.

   2. செய்யாள்,1 பார்க்க;see {Seyyāl, 1.}

     “செய்யோள் சேர்ந்த நின்மாசி லகலம்” (பரிபா. 2:31);.

     [செய் → செய்யோள்]

செய்வகை

செய்வகை ceyvagai, பெ. (n.)

   1. செய்யுமுறை; method.

   2. செய்முறை நுட்பம்; technological procedure, process of manufacture.

     [செய் + வகை]

செய்வது

செய்வது ceyvadu, பெ. (n.)

   1. செய்யத்தக்கது; that which ought to be done.

     “செய்வது தெரிந்திசிற் றோழி” (அகநா. 281);.

   2. கருத்தா; agent, doer of an action.

     “வினையே செய்வது செயப்படு பொருளே” (தொல்.சொல். 112);.

     [செய் → செய்வது]

செய்வினை

செய்வினை1 ceyviṉai, பெ. (n.)

   1. செய்யுந் தொழில்; work, undertaking.

     “செய்வினை தூய்மை” (குறள், 455);.

   2. முற்பிறப்பிற் செய்த செயல்; karma.

     “சீலமில்லாச் சிறியனேனுஞ் செய்வினையோ பெரிதால்” (திவ்.திருவாய். 4. 7:1);

   3. கருத்தா செய்யும் செயலை உணர்த்தும் வினைச் சொல், வினைமுதல் வினை (இலக். கொத். 67);; verb in active voice.

     [செய் + வினை]

 செய்வினை2 ceyviṉai, பெ. (n.)

   மந்திர தந்திரத்தால் பிடிக்காதவர் மீது ஏவல் போன்ற வினைகளைச் செய்கை; mystic acts done against the enemy people by black magic.

செய்வினை செய்து அவனைக் கொன்று விட்டனர்.

     [செய் + வினை]

செய்வினைமடி-தல்

செய்வினைமடி-தல் ceyviṉaimaḍidal,    2 செ.கு.வி. (v.i.)

   உரியதொழிலிற் சோம்புதல்; to shirk or delay one’s appointed work, to fail in one’s duty.

     “செய்வினை மடிந்தோற் சேர்ந்துறை விலளே . . . மலர்மகள்” (பெருங். இலாவாண. 17:39);.

     [செய்வினை + மடி-.]

செரகு

 செரகு ceragu, பெ.(n.)

   பாத்தி கட்டி நீர் பாய்ச்சும் முறை; an irrigation method.

     [சிறகு-செரகு]

செரக்கனூர்

 செரக்கனூர் cerakkaṉūr, பெ.(n.)

   திருத்தணி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Tiruthani Taluk,

     [செருக்கன்+ஊர் (செருக்கு-கரும்பு);]

செரங்கை

 செரங்கை ceraṅgai, பெ. (n.)

   சிரங்கை; handful.

செரங்கை (கொ.வ.); (சா. அக.);.

     [சிறங்கை-செரங்கை (கொ.வ.);]

செரளியாடு

 செரளியாடு ceraḷiyāṭu, பெ. (n.)

   உடல் வெண்மையும் மேற்புறம் சிவப்பு அல்லது வேறு நிறங்கொண்ட ஆடு; a goat having its body whiteandtopis redorsomeothercolours.

     [சரளி-செரளி+ஆடு]

செரி-த்தல்

செரி-த்தல் cerittal, செ.கு.வி. (v.i.)

   குடலினால் உறிஞ்சப்படுவதற்கு ஏந்தாக உணவில் உள்ள சத்துகள் வயிற்றுத் தசைகளினால் அரைக்கப்பட்டுக் கூழாதல் (சீரணமாதல்);; to be digested.

     “புவனஞ் செரிக்கு மென்றே” (அஷ்டப். திருவரங். மா. 98);. தின்ற சோறு செரிக்கவாவது வேலை செய்ய வேண்டும்.

   2. நிலையாகப் பெறுதல்; to be permanently acquired.

கோயில் சொத்து உனக்குச் செரிக்காது.

     [சிதை → செரி-. சிதைத்தல் = நிலை குலைதல், தன்மை கெடுதல்]

செரிகளியன்

 செரிகளியன் cerigaḷiyaṉ, பெ.(n.)

ஒரு வகை கடல் மீன்,

 seafish.

     [செரி+களியன்]

செரிகுடல்

 செரிகுடல் ceriguḍal, பெ. (n.)

   உண்டவற்றை செரி மானமாக்கும் சிறுகுடல்; that part of small intestine in which the greater part of the food is digested and turned into chyme. (சா.அக.);.

     [செரி+குடல்]

செரிப்பி-த்தல்

செரிப்பி-த்தல் cerippittal, செ.குன்றாவி. (v.t.)

   செரிக்கச் செய்தல்; to help or promote digestion by medicine.

   2. இடையூற்றை நீக்குதல்; to remove a difficulty.

   3. நிலைநிறுத்தல்; to maintain successfully.

உன் வாதத்தைச் செரிப்பிக்க முடியுமா?

     [செரி → செரிப்பி-.]

செரிப்பு

 செரிப்பு cerippu, பெ. (n.)

   செரிமானம்; digestion. (சா.அக.);.

     [செரி-செரிப்பு]

செரிமானநெதி

 செரிமானநெதி cerimāṉanedi, பெ. (n.)

   செரிக்க உதவும் நீர்மப்பொருள்; protein catalyst of a specific bio-chemical reaction, namely enzyme.

     [செரிமானம் + நெதி]

செரிமானம்

 செரிமானம் cerimāṉam, பெ. (n.)

   செரிக்கை (இ.வ.; digestion.

செரிமானத்திற்கு மாவுப் பொருள் பெரிதும் உதவுகிறது.

     [செரி + மானம். மானம் சொல்லாக்க ஈறு]

செரிமானி

 செரிமானி cerimāṉi, பெ.(n.)

செரிமான ஆற்றலை வளர்க்கும்.மருந்து

 a medicine that induces the action of digestion.

     [செரி+மானி]

செரியாநோய்

 செரியாநோய் ceriyānōy, பெ.(n.)

   செரியாமை; disease caused by indigestion.

     [செரியாத+நோய்]

செரியாப்படுவன்

 செரியாப்படுவன் ceriyāppaḍuvaṉ, பெ. (n.)

   நோய்வகை (யாழ்.அக.);; a disease.

     [செரி + ஆ + படுவன்]

செரியாமாந்தம்

 செரியாமாந்தம் ceriyāmāndam, பெ. (n.)

   செரிமானம் ஆகாத் தன்மைகளை உண்டாக்கும் நோய்; dyspepsia.

     [செரி + ஆ + மாந்தம்]

செரு

செரு1 ceruttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   அழித்தல்; to destroy, ruin.

     “செருத்தது . . . தக்கனை வேள்வி” (தேவா. 139, 4);

தெ. செருகு

     [செறு → செரு]

 செரு2 ceru, பெ. (n.)

   1. போர்; battle, fight.

     “மதந்தபக் கடந்து செருமேம் பட்ட” (பரிபா.1:75);.

மறுவ. அமர், சமர், சண்டை

   ம. செரு;   க. கெரன் (சினப்படுதல்);;தெ. சிராகு (சினம்);

     [சுள் → செள் → செறு → செரு]

செருகு

செருகு1 cerugudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   ஒரு பிடிப்பில் நிற்கும்படி ஒன்றை நுழைத்தல் அல்லது திணித்தல்; to insert, to slide into.

     “திருகிச் செருகுங் குழன்மடவீர்” (கலிங். 30);.

பேனாவைப் பையில் செருகினான்.

     [சொருகு → செருகு]

 செருகு2 cerugudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. பசி, மயக்கம், வலி முதலியவற்றால் கண் சொருகுதல்; to roll sideways, as eyeballs.

     “கண்கள் செருகின வன்றே” (கம்பரா. நாகபாச. 287);.

பசியால் கண் செருகி வீழ்ந்தான்.

   2. செரிமானமாகாத தின்பண்டம் வயிற்றிற் சிக்கிக்கொள்ளுதல்; to get held up in stomach, as indigestible matter.

   3. வயிற்றில் திருகுவலியுண்டாதல்; to have colic pains.

     [சொருகு → செருகு]

செருகுகொண்டை

 செருகுகொண்டை cerugugoṇṭai, பெ. (n.)

   முடிக்குங் கொண்டைவகை (யாழ்.அக.);; a mode of dressing the hair.

     [செருகு + கொண்டை]

செருகுடி,

 செருகுடி, ceruguḍi, பெ.(n.)

நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள சிற்றுார்.

 a village in Nagapattinam Taluk.

     [செரு(வயல்);+குடி]

செருகுபூ

 செருகுபூ cerugupū, பெ. (n.)

   இடையிடையே வைத்துத் தொடுக்கப்பட்ட பூ (யாழ்.அக.);; flowers inserted singly in making wreaths.

     [செருகு + பூ]

செருகுமுடி

 செருகுமுடி cerugumuḍi, பெ.(n.)

   நெல் கொட்டி வைக்கும் பெரிய தாழியின் கீழுள்ள பக்க வாயை மூடுவதற்கு ஏதுவாகச் செருகிப் பொருத்தப்பட்டுள்ள சதுரமான மூடி; square sliding type of lid fixed to the barrel at the bottom.

     [செருகு+மூடி]

செருக்கடு-த்தல்

செருக்கடு-த்தல் cerukkaḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   இறுமாப்புக் (அகந்தைக்); கொள்ளுதல்; to become proud, haughty.

     “செருக்கடுத்தன்று திகைத்தவரக்கரை” (திவ்.திருவாய். 1:47);.

     [செருக்கு + அடு-.]

செருக்கன்

செருக்கன் cerukkaṉ, பெ. (n.)

   இறுமாப் புள்ளவன்; vain, self-conceited person.

     ‘செருக்கனாயிருக்கும் ராஜபுத்ரனுக்கு’ (ஈடு, 10. 3:1);.

     [செருக்கு → செருக்கன்]

செருக்கம்

செருக்கம்1 cerukkam, பெ. (n.)

   மாதுளை (மலை.);; pomegranate.

 Skt. karaka

 செருக்கம்2 cerukkam, பெ. (n.)

   கண் முதலியன குடிப்பதால் வரும் மயக்கம்; intoxication

     “கட்கழி செருக்கத்தன்ன” (நற்.35);.

ம. செருக்கம், சொருக்கம்

     [செருக்கு → செருக்கம்]

செருக்கறு-தல்

செருக்கறு-தல் cerukkaṟudal,    4 செ.கு.வி. (v.i.)

   வாடுதல்; to fade, wilt, as flower.

     “செருக்கற்ற பஞ்சி மலர்ச் சீறடி” (சீவக. 2339);,

     [செருக்கு + அறு-.]

செருக்கற்பாக்கு

 செருக்கற்பாக்கு cerukkaṟpākku, பெ. (n.)

   மயக்கத்தை உண்டாக்கும் பாக்கு வகை; a kind of areca-nut having narcotic properties.

     [செருக்கல் + பாக்கு]

செருக்கல்

செருக்கல் cerukkal, பெ. (n.)

   குடிமயக்கம்; intoxication.

ம. சொருக்கல்

     [செருக்கம் → செருக்கல்]

 செருக்கல் cerukkal, பெ. (n.)

   1 அலங்கரித்தல்; to decorate.

   2. மிக மகிழ்வை

 bliss.

     “ஈசன் சேவடி நிழலிற்றங்கள் கிளை யுடன் செருக்கி வாழ்வார்'(அருணாசலபு தீர்த்த,32);.

     [செருக்கு-செருக்கல்]

செருக்கல்வரகு

 செருக்கல்வரகு ceruggalvaragu, பெ. (n.)

   மயக்கத்தை உண்டாக்கும் வரகுவகை; a kind of millet that causes dizziness.

     [செருக்கல் + வரகு]

செருக்களம்

செருக்களம் cerukkaḷam, பெ. (n.)

   போர்க்களம் (பிங்.);; field of battle.

     “செருக்களத் துருத்தெய் யாதே” (கம்பரா. வாலிவ. 116);.

மறுவ. அடுகளம், சமர்க்களம், படுகளம்

ம. செருக்களம்

செருக்களவஞ்சி

செருக்களவஞ்சி cerukkaḷavañji, பெ. (n.)

   போர்க்களத்தைச் சிறப்பித்து அகவற்பாவாற் பாடப்படும் சிற்றிலக்கியம்; அகவற்பாவாற் பாடப்படும் சிற்றிலக்கியம்; battle-piece, a poem in agaval verse describing the field of battle.

     “செருக்களங் கூறிற் செருக்கள வஞ்சி” (இலக்வி. 869);.

     [செருக்களம் + வஞ்சி]

செருக்கிய

 செருக்கிய cerukkiya, பெ.எ. (ad.)

   மயங்கிய (சிந்தா);; to be infatuated.

     [செருக்கு-செருக்கிய]

செருக்கு

செருக்கு1 cerukkudal, செ.கு.வி. (v.i.)

   1. இறுமாப்பக் (அகந்தை); கொள்ளுதல்; tobe proud, vain, self-conceited.

     “மீளி மொய்ம்பின், மிகுவலி செருக்கி” (பொருந. 140);.

   2. பெருமித முறுதல்; to be elated with self pride.

     “செருக்கியே தவங்கள் செய்வீர்” (இராமநா. ஆரணிய. 4);.

   3. மதர்த்தல் to be gay, lively

     “செருக்கிய நெடுங்கண் சேப்ப” (சீவக. 2657);.

   4. களித்தல்; to exult.

     “கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து” (மணிமே. 19:22);.

   5. மயங்குதல்; to be infatuated.

     “மொய்வளஞ் செருக்கி” (பதிற்றுப். 49:8);.

   ம. செருக்குக;   க. செர்கு, செக்கு;   தெ. செருவு;   து. சுச்சுனி;   கோண். சோமநானா;   கூ. சோம்ப;   நா. சோன்;   கொலா. சொந்க்;   பர். சோங்க;   கட. சிக்த்;   மா. க்வெரெ;குரு. கெர்னா

     [செரு → செருக்கு-.]

 செருக்கு2 cerukkudal,    5 செ. குன்றாவி. (v.t.)

   மிகுத்தல்; to increase, nurse, cherish, as anger.

     “செங்குட்டுவன் சினஞ் செருக்கி” (சிலப்.29, உரைப்பாட்டு);.

   2. நன்கு நுகர்தல் (அனுபவித்தல்);; to enjoy to the full.

     “நன்னிலப் பகுதியிற் பெருவளஞ் செருக்கி” (உபதேசகா. சிவபுராண. 50);.

     [செரு → செருக்கு-.]

 செருக்கு3 cerukku, பெ. (n.)

   1. பிறரை மதிக்காத

   போக்கு, இறுமாப்பு (அகந்தை);; haughtiness, pride, arrogance, self-conceit.

     “செருந்ர் செருக்கறுக்கு மெஃகு” (குறள், 759);.

   2. மகிழ்ச்சி; cheer exultation, elation.

     “செருக்கொடு நின்ற காலை” (பொருந. 89);.

   3. ஆண்மை; daring, intrepidity, courage, as of an army.

படைச் செருக்கு (குறள், 78, அதி.);.

   4. மயக்கம்; infatuation;

 intoxication.

     “யானென தென்னுஞ் செருக்கறுப்பான்” (குறள், 346);.

   5. செல்வம்; wealth.

     “விறலீனும் . . . வேண்டாமை யென்னுஞ் செருக்கு” (குறள், 180);.

   6. செல்லம் (இ.வ.);; luxury, indulgence, as in bringing up a child.

செருக்காய் வளர்த்த பிள்ளை.

   ம. சொருக்கு;   க. சொர்கு, சொக்கு;   தெ. சொக்கு;து. சொர்கு

     [செரு → செருக்கு]

 செருக்கு4 cerukkudal,    5 செ.கு.வி. (v.i.)

பாக்கு

   முதலியன தொண்டையில் அடைத்துக் கொள்ளுதல்; to be choked, as by a bone or a piece of areca-nut.

     [செருகு → செருக்கு]

 செருக்கு5 cerukku, பெ. (n.)

செருகு கொண்டை பார்க்க (இ.வ.);;see {Serugu-kongai.}

 செருக்கு cerukku, பெ. (n.)

   1 அகந்தை; self conceited.

     “மீளிமொய்ம்பின் மிகுவலி செருக்கி” (பொருந. 140);.

   2. மயங்கி; confused.

     “உரவுச்சின முன்பாலுடல் சினஞ் செருக்கி”(குறிஞ்சி.159);.

     [செரு-செருக்கு]

செருக்கொடு-த்தல்

செருக்கொடு-த்தல் cerukkoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   எதிர்த்து போர் செய்தல்; to give battle.

     “தூதனு மெதிரே செருக்கொடுத்தான்” (கம்பரா. அதிகாய. 177);.

     [செரு + கொடு-.]

செருதண்ணை

 செருதண்ணை cerudaṇṇai, பெ. (n.)

   மரக் கலத்தைக் கட்டுதற்குரிய சிறுமரப் பலகை; small plank to tie the boats.

செருத்தல்

செருத்தல் ceruttal, பெ. (n.)

   மாட்டுமடி; udder as of a cow.

     “குடம்புரை செருத்தல் . . . எருமை” (சீவக.2102);.

செருத்தல் பருத்திருந்தும் பால் குறைவாகத் தருகிறதே (உ.வ.);

க. கெச்சல்

     [செறு → செரு → செருத்தல்]

செருத்தி

 செருத்தி cerutti, பெ. (n.)

   வெற்றிக்கொடி (வின்.);; banner of victory;badge of distinction.

     [செரு → செருத்தி. செரு = பேர்]

செருத்துணைநாயனார்

செருத்துணைநாயனார் ceruttuṇaināyaṉār, பெ. (n.)

   நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர் (பெரியபு);; a canonized Saiva saintone of 63.

செருத்தொழிலோர்

செருத்தொழிலோர் ceruttoḻilōr, பெ. (n.)

செருநர்,1 பார்க்க;see {serumail.}

     [செரு + தொதுலோர்]

செருநர்

செருநர் cerunar, பெ. (n.)

   1. படைவீரர் (பிங்.);; soldiers, warriors.

   2. பகைவர்; encmies.

     “கதம்பெற் றார்க்குஞ் செருநர்” (கலிங். 548);.

ம.செருநர்

     [செரு → செருநர்]

செருந்தி

செருந்தி cerundi, பெ. (n.)

   1. வாட்கோரை; a kind of sedge.

     “களிறுமாய் செருந்தியொடு” (மதுரைக். 172);.

   2. சிலந்தி என்னும் மரம்; panicled golden-blossomed pear tree.

     “செருந்தி காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே” (தேவா. 40, 9);.

   3. மணித்தக்காளி (மலை);; Indian hounds-berry.

   4. குறிஞ்சி யாழ்த்திறத்தொன்று (பிங்.);; a secondary melody-type of the {kuriñji class.}

     [சிலந்தி → செருந்தி]

செருந்து

செருந்து cerundu, பெ. (n.)

   1. பூ முதலியவற்றின்

   இதழ்; petal.

     “செருந்தவிழ் துளபமாலை” (பாரத. எட்டாம். 15);.

   2. செருந்தி, 2 பார்க்க;see {šertindi} 2.

     “பரிமளப்பூஞ் செருந்தொன்று சோலை”

     [செருந்தி → செருந்து]

செருப்படி

செருப்படி1 ceruppaḍi, பெ. (n.)

   1. செருப்பு என்னும் காலணியால் கொடுக்கும் அடி; blow given through sandals.

அண்ணன் தம்பியர் சண்டையில் ஒருவருக்கொருவர் செருப்படி கொடுத்துக் கொண்டனர் (உ.வ.);.

ம. செருப்படி

     [செருப்பு + அடி-.]

 செருப்படி2 ceruppaḍi, பெ. (n.)

செருப்படை2 பார்க்க;see {seru-p-pagaf.}

     [செருப்படை → செருப்படி]

செருப்படிநாயன்

செருப்படிநாயன் ceruppaḍināyaṉ, பெ. (n.)

செருப்படை2 பார்க்க;see {šeruppagai=}

செருப்படை

செருப்படை1 ceruppaḍai, பெ. (n.)

   சிறந்த போர் வீரர்களைக் கொண்ட போர்ப்படை; army of tried soldiers.

     “செருப்படையான் பல் புகழ் பாடி” (பு.வெ. 9:31);.

     [செரு + படை]

 செருப்படை2 ceruppaḍai, பெ. (n.)

   படர்கொடி வகை; a diffuse prostrate herb.

ம. செருப்படி

 செருப்படை ceruppaḍai, பெ. (n.)

   சிறந்த வீரர்களைக் கொண்ட படை; army of tried solidiers.

     [செரு-படை]

செருப்பறை

செருப்பறை ceruppaṟai, பெ.(n.)

   1.போரின்போது பாடப்படும் பாடல்; song sung at the battlefield.

   2. போரின் போது முழக்கப்படும் பறை

 drums played at the battle field.

செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி (புறம்.); விருப்புற்று மயங்கி (புறம்.);

     [செரு+யறை]

செருப்பளிச்சம்பா

 செருப்பளிச்சம்பா ceruppaḷiccambā, பெ. (n.)

   சரப்பளிச்சம்பா என்னும் நெல் வகை; a kind of {Šambā-paddy.}

     [சரப்பளிச்சம்பா → செருப்பளிச்சம்பா]

செருப்பள்ளி

செருப்பள்ளி ceruppaḷḷi, பெ. (n.)

   பல்லவர் நாட்டுச் சிற்றூர்; a village in pallava territory.

     “காசியப கோத்திரத்து ஆலத்தம்பசூத்திரத்து செருப்பள்ளி நாராயணச் சடங்கவி பங்கொன்று” (தண்.செ.52);

     [செரு+பள்ளி]

செருப்பு

செருப்பு ceruppu, பெ. (n.)

   1. காலில் பொருத்தி நிற்கும்படி சிறுபட்டை வைத்துத் தைத்த அடிப்பகுதியுடைய காலணி; leather sandals, slippers, shoe.

     “மணியழுத்திச் செய்த தெனினுஞ் செருப்புத்தன் காற்கேயாம்” (நாலடி, 347);.

மறுவ. மிதியடி, அடிபுதையரணம்.

   ம. செரிப்பு, செருப்பு;   க. கெர, கெரவு, கெரகு, கெர்பு;   தெ. செப்பு;   து. செப்பளு;   பட. கெருவு;   கோத. கெர்ப்;   துட. கெர்வு;   கோண். சர்பு;   குவி. செப்பு;   கெலா., நா. கெர்ரி;பர். செருப்

     [சரு → செரு → செருப்பு]

செருப்பு, தொடுதோல் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. செருப்பைத் தொட்டுக் கொண்டு போனார் என்பது கொங்குநாட்டு வழக்கு.

 செருப்பு2 ceruppu, பெ. (n.)

   பூழிநாட்டிலுள்ள தோ மலை; a mountainin {Püli-nadu.}

     “மிதியற் செருப்பிற் பூழியர் கோவே” (பதிற்றுப். 21:23);.

     [பொருப்பு → செருப்பு]

செருப்புக்கடி

 செருப்புக்கடி ceruppukkaḍi, பெ. (n.)

   செருப்பு அழுத்துவதால் உண்டாய புண்; shoe-bite.

செருப்புக்கடியால் உண்டான புண் ஆற அவனுக்கு ஆறுமாதம் ஆகியது (உ.வ.);.

     [செருப்பு + கடி]

செருப்புக்கட்டை

 செருப்புக்கட்டை ceruppukkaṭṭai, பெ. (n.)

   தேய்ந்த செருப்பு (வின்.);; worn-out sandals.

     [செருப்பு + கட்டை]

செருப்புத்தின்னி

 செருப்புத்தின்னி cerupputtiṉṉi, பெ. (n.)

   தோற் செருப்பைத் தின்னும் நாய் (யாழ்ப்.);; a dog as sandals eater.

     [செருப்பு + தின்னி]

செருப்புநெருஞ்சி

 செருப்புநெருஞ்சி ceruppuneruñji, பெ. (n.)

   சிவப்பு நெருஞ்சி முள்; red cow-thorn.

     [சிவப்பு + நெருஞ்சி]

செருப்பூசி

 செருப்பூசி ceruppūci, பெ. (n.)

   செருப்புத் தைக்கும் ஊசி; shoemaker’s awl.

     [செருப்பு + ஊசி]

     [P]

செருமகள்

 செருமகள் cerumagaḷ, பெ. (n.)

போர்க்குரிய

   பெண் தெய்வம் (துர்க்கை); (இலக். அக.);; Durga, as the war Goddess.

     [செரு + மகள்]

செருமரம்

 செருமரம் cerumaram, பெ. (n.)

   கடலில் மீன் பிடிக்கச் செல்வதற்குரிய கட்டுமரம்; a kind of cata-maram.

     [சறுக்குமரம் → செருமரம்]

செருமலையரியன்

 செருமலையரியன் cerumalaiyariyaṉ, பெ. (n.)

   ஒருவகை நெல்; a kind of paddy.

செருமல்

 செருமல் cerumal, பெ. (n.)

   தொண்டையைத் தூய்மையாக்கக் கனைக்கை; hemming, clearing the throat.

க. கெம்மு

     [செருமு → செருமல்]

செருமு

செருமு2 cerumudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   அடைத்தல் (யாழ்ப்.);; to crowdin, stuff orcram in, fill up.

     [இருமு → செருமு-.]

செருமு-தல்

செருமு-தல் cerumudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. நிரம்புதல்; to be full, replete.

     “கருனை வாசமும் . . . அகிற் புகை வாசமுஞ் செருமி” (சீவக. 130);.

   2. நெருக்கமாயிருத்தல்; to be close and crowded.

பயிர் செருமிப் போனதினால் கதிர்க்குலை வாய்க்கவில்லை (நாஞ்.);

   3. பதிதல்; to sink;

 to pierce through.

     “மருமங்களினும் புயங்களினுஞ் . . . செருமும்படி வெங்கணை மாரி சிந்தி” (பாரத. மூன்றாம். 12);.

   4. இருமுதல், கனைத்தல்; to hem, cough.

செந்தேனே மெல்லச் செருமுவேன்” (விறலிவிடு. 293);. கிழவர் செருமிவிட்டுச் சளியைத் துப்பினார்.

   5. விக்குதல்; to get choked.

     “தருப்பணஞ் செருமித் தன்னுயிர் வைத்தனன்” (பெருங். இலாவாண. 9:239);.

ம. செருமல்

     [இருமு → செருமு-.]

செருமுனை

செருமுனை cerumuṉai, பெ. (n.)

   1. போர்க்களம்; field of battle.

     “செருமுனையுள் வைகி” (பு.வெ. 1:6);.

   2. போர்புரியம் படை; fighting army.

     “செருமுனைமேல் வாள்சென்றன்று” (பு.வெ. 4:7, கொளு);.

     [செரு + முனை]

செருவங்கி

 செருவங்கி ceruvaṅgi, பெ.(n.)

குடியேற்றம் (குடியாத்தம்); வட்டத்திலுள்ள ஒரு சிற்றுார்.

 a village in Gudiyattam Taluk.

     [செரு+வங்கி]

செருவஞ்செய்-தல்

செருவஞ்செய்-தல் ceruvañjeytal,    1 செ.கு.வி. (v.i.)

   மாறுபடுதல்; to attack.

     “செருவஞ் செய்தற்கு” (பரிபா. 8:87);.

மருவ. போர்புதில், தாக்குதல்

     [செரு → செருவம் + செய்-.]

செருவாடி

செருவாடி ceruvāṭi, பெ. (n.)

   சிறுவாடு; petty savings in money.

     ‘செருவாடி போகம் கொண்டு’ (தெ.க.தொ. 5, 285);.

     [சிறுவாடு → செருவாடி]

செருவிச்சினவி

 செருவிச்சினவி ceruvicciṉavi, பெ. (n.)

   மிகு சினம் (கோபம்);; tremendous anger.

     [செரு → செருவி + சினவி]

செருவிடைவீழ்தல்

செருவிடைவீழ்தல் ceruviḍaivīḻtal, பெ. (n.)

   அகழினைனயும் காவற்காட்டையுங் காத்துப் பட்ட வீரரது வெற்றியைப் புகழும் புறத்துறை (பு.வெ. 5:4);; theme celebrating the heroic death of the warriors who defended the moat round a city and the adjoining forest.

     [செரு + இடை + விழ்தல்]

செருவிளை

செருவிளை ceruviḷai, பெ. (n.)

   வெள்ளைக் காக்கணம் (குறிஞ்சிப். 68);; white-flowered mussel-, shell creeper.

     [செரு + விளை]

செருவுறு-தல்

செருவுறு-தல் ceruvuṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   ஊடுதல்; to quarrel;to sulk.

     “தீர்விலதாகச் செருவுற்றாள்” (பரிபா. 7:75);.

செறல்

செறல் ceṟal, பெ. (n.)

   1. சினம், வெகுட்சி; anger, open hatred.

     “செறனோக்கின்… களிறு” (புறநா. 15: 8);.

   2. கொல்லுகை, அழிக்கை (தொல். சொல். 72, சேனா.);; killing, destroying.

     [செறு → செறல்]

செறி

செறி2 ceṟidal, செ.குன்றாவி. (v.t.)

   புணர்தல்; to cohabit with.

     “செறிதொறுஞ் சேயிழை மாட்டு” (குறள், 1110);.

     [செறி1 → செறி2-.]

 செறி3 ceṟittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. சேர்த்தல்; to unite.

   2. அடைத்தல்; to shut, close, block up.

     “தாழ்செறி கடுங்காப்பில்” (கலித். 48);.

   3. அடக்குதல்; to hold in reserve, as one’s opinion.

     “செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின்” (குறிஞ்சிப். 12);.

   4. திணித்தல்; to stuff.

     “வாய்செறித் திட்ட மாக் கடிப்பிதுவே” (கல்லா.6);.

   5. அடைவித்தல்; to cause to obtain.

     “சிவமந்திரமே சித்தி செறிக்கும்” (சிவரக. காயத்திரி.14);.

   6. இறுக்குதல்; to tighten.

     “நிறைத்தாழ் செறித்து’ (நீதிநெறி . 99);.

   7. திரட்டுதல்; to hoard up, store up.

   8. நெரித்தல் (வின்.);; to press, crush.

   9. கொல்லுதல் (பிங்.);; to kill.

   10. பதித்தல்; to set, enease.

     [சுள் → செள் → செறி → செறி-த்தல், சுள் = அணுகல், நெருங்கல்]

 செறி4 ceṟittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மூழ்குதல் (திவா.);; to immerse, dive, plunge into water.

   2. மூடுதல்; to close, shut, as eyes.

     “கண்ணையும் செறித்து” (திவ்.திருப்பல். 3, வியா, பக்.40);.

     [செறி → செறி4-.]

 செறி5 ceṟi, பெ. (n.)

   நெருக்கம் (சூடா.);; closeness. denseness.

     [செறி1 → செறி5]

செறி-தல்

செறி-தல் ceṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. நெருங்குதல்; to be thick, as foliage, hair;to be dense, crowded.

     “செறிந்த மணிமுடி” (திவ்.பெரியாழ். 3. 10:1);.

   2. திண்ணிதாதல்; to be hard and strong.

     “மாப்படை சிந்தின தெறித்துகச் செறிந்த தோளினான்” (கம்பரா கரன். 41);.

   3. இறுகலாய் இருத்தல்; to be tight, close fitting, as bangles.

     “செறிவளை நெகிழ்த்தோன்” (ஐங்குறு. 199);.

   4. அடங்கதல்; to be controlled.

     “செறியாப் பரத்தை யிவன்றந்தை” (கலித். 84);.

   5. எல்லை கடவாதிருத்தல்; to keep within bounds.

     “செறி கடலே” (திருக்கோ. 179);.

   6. மறைதல்; to hide, disappear.

     “அன்னம் … நளிமலர்ச் செறியவும்” (சிலப். 2:55-6);.

   7. மிகுதல்; to increase.

     “செயிர்சினஞ் செறிந்து” (கலித். 102);.

   8. கலத்தல் (வின்.);; to mix.

   9. திரளுதல்; to accumulate.

   10. பொருந்துதல்; to be joined, accompanied.

     “மகளிரொடு செறியத் தாஅய்க் குழலகவ” (பட்டினப். 155);.

     [சுள் → செள் → செறி → செறி-தல் = கூடுதல், நெருங்குதல்]

இருபொருள்கள் ஒன்றை ஒன்று அணுகுதல் நெருங்குதலும், பலபொருள் ஒன்றை யொன்றணுகுதல் செறிதலும் ஆகும். நெருங்கலினும் செவுறி, மிக அணுக்கமாகும்.

செறிஞர்

 செறிஞர் ceṟiñar, பெ. (n.)

   உறவினர் (இலக்.அக.);; relations.

     [செறி → செறிஞர்]

செறித்து

செறித்து ceṟittu, வி.எ. (adv.)

   அடக்கி; restrain.

     “செப்பல்வன்மையிற் செறித்தியான் கடவலின்”(குறிஞ்சிப்.12);

     [செறி-செறித்து]

செறிப்பு

செறிப்பு ceṟippu, பெ. (n.)

   1. நெருக்கம்; thickness.

     “செறிப்பில் பழங்கூரை” (நாலடி, 231);.

   2. இற் செறிவு; restraining the heroine from meeting her lover.

     “சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்” (தஞ்சைவா. 151);.

     [செறி → செறிப்பு]

செறிமை

செறிமை ceṟimai, பெ. (n.)

   நெருக்கம்; thickness.

     “செறிமையுற” (கோயிற்பு. வியா. 6);.

செறிழிக்கதவு

 செறிழிக்கதவு ceṟiḻikkadavu, பெ. (n.)

   கழிகளை நெருக்கமாக வைத்துக் குறுக்குச் சட்டம் இட்டுச் செய்யப்பட்ட கதவு; a door with sticks arranged closely with a cross bar.

     [செறி + கழி + கதவு → செதவிழிக்கதவு]

செறிவன்

செறிவன் ceṟivaṉ, பெ. (n.)

   1. எல்லாவுயிர் கட்கும் இதமான அருகன்; Arhat, as Allmerciful Being.

   2. சலியாதவன், கலங்காதவன் (சிலப். 10: 177, உரை);; person of perfect equanimity.

     [செறிவு → செறிவன்]

செறிவு

செறிவு ceṟivu, பெ. (n.)

   1. நெருக்கம்; thickness, denseness, closeness.

     “செறிவுடை மும்மதில்” (திருவாச. 9: 5);.

   2. மிகுதி; abundance.

     “அரும் புலத்தின் செறிவு மீதே” (கம்பரா. உருக்காட்டு. 111);.

   3. கூட்டம்; union, combination.

     “இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு” (குறள், 684);.

   4. உறவு; relationship.

     “செறிவெனப் படுவது கூறியது மாறாமை” (கலித்,. 133);.

   5. கலப்பு (வின்.);; diffusion.

   6. உள்ளீடு; kernel, as attached to the shell of a nut.

     ‘நுங்கினது இனியசெறிவை அயிலங (புறநா. 225, உரை);.

   7. தன்னடக்கம்; self-restraint, modesty.

     “முதுவருள் முந்துகிளவாச் செறிவு” (குறள், 175);.

   8. எல்லை கடவா நிலைமை (திருக்கோ. 179, உரை,);; conformity to rules, as of properiety.

ம. செறிவு

     [செறு → செறி → செறிவு]

செறு

செறு1 ceṟudal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அடக்குதல்; to control, as the senses.

     “ஆறுஞ் செற்றதில் வீற்றிருந்தானும்” (தேவா. 84:9);.

   2. தடுத்தல்; to hinder, prevent.

     ‘வரையா வாயிற் செறாஅது” (மதுரைக். 748);.

   3. சினத்தல்; to be angry with.

     “அரசர் செறின் வவ்வார்” (நாலடி, 134);.

   4. வெறுத்தல்; to hate, dislike, detest.

     “செற்றாரெனக் கைவிட லுண்டோ” (குறள், 1245);.

   5. வருத்துதல்; to cause pain, torment.

     “செலினந்திச் செறிற்சாம்பும்” (கலித். 78);.

   6. வெல்லுதல்; to over come.

     “இருநால் வினையுஞ் செற்றவற்கு” (திருநூற். 46);.

   7. அழித்தல்; to kill, destroy.

     “புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலும்” (தேவா. 476:3);.

     [சுள் → (சுறு); → செறு-.]

 செறு2 ceṟudal,    4 செ.கு.வி. (v.i.)

   வேறுபடுதல்; to change as one’s mind.

     “அன்பிற் செறப்பட்டா ரில்லம் புகாமை” (ஆசாரக் 80);.

     [செறு → செறு2-.]

 செறு3 ceṟuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. அடக்குதல்; to suppress

   2. தடுத்தல்; to prevent.

     “நாயேனைப் பொருட்படுத்துச் செறுத்தாய்” (தேவா. 31, 3);.

   3. செறிதல், உள்ளடங்கச் செய்தல்; to comprise, contain as ideas.

     “செறுத்த செய்யுள்” (புறநா. 53:11);.

   4. தூர்த்தல்; to fill up.

     “கடலைச்செறாஅ அய்வாழிய நெஞ்சு” (குறள், 1200);.

   5. வெறுத்தல் (திவா..);; to detest.

   6. வெல்லுதல்; to overcome.

     “பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும்” (பரிபா. 9:73);.

   7. கொல்லுதல் (பிங்.);; to kill.

     “செறுத்தறுத் துழக்கி (கலித். 104);.

   8. நெருக்குதல் (வின்.);; to narrow.

   9. சினத்தல்; to be angry.

ம. செறுக்குக;க. கிர்;தெ. செற (சிறை);;து. செறெ (சிறை);;கோண். கெக்தான;கொலா. செறு (ஏரி);;பர். கெத்ப்;கோத. செர் (தடுத்தல்);;துட. செர் (சிறை);.

     [ஈறு → செறு-.]

 செறு4 ceṟu, பெ. (n.)

   1. சினம்; anger.

     “யாண்டுஞ்

செறுவொடு நிற்குஞ் சிறுமை” (திரிகடு. 14);.

   2. வயல்; field,

     “செதுமொழி சித்த செவி செறுவாக” (கலித். 68);.

   3. குளம்; tank.

   4. பாத்தி; garden plot, division in a field.

     “இருங்கழிச் செறுவின் வெள்ளுப்புப் பகர்நரொடு” (மதுரைக். 117);.

ம. செறு (போர்);;க. கொன் (சினப்படுதல்);;தெ. சிறாகு

     [செறு1 → செறு4.]

செறுங்கடம்பூர்

செறுங்கடம்பூர் ceṟuṅgaḍambūr, பெ.(n.)

   மயிலாடுதுறைக்கு16 கி.மீ.தொலைவில் உள்ள ஓர் ஊர்; a village 16km from Mayiladuturai.

     [செறு (வயல்+கடம்பு+ ஊர்]

செறுதொழில்

செறுதொழில் ceṟudoḻil, பெ. (n.)

   வெறுக்கத் தக்கச் தீயசெயல்; evil decd, as reprehensible.

     “செறுதொழிலிற் சேணீங்கியான்” (பு.வெ. 8:10, கொளு);.

     [செறு + தொழில்]

செறுநர்

செறுநர் ceṟunar, பெ. (n.)

   பகைவர்; foes, enemies.

     “செறுநர் செருக்கறுக்கு மெஃகு” (குறள். 759);.

     [செறு → செறுநர்]

செறுப்பனை

 செறுப்பனை ceṟuppaṉai, பெ. (n.)

   தொந்தரவு; trouble, worry.

     [சிறுப்பனை → செறுப்பனை]

செறுப்பு

செறுப்பு ceṟuppu, பெ. (n.)

   1. கட்டுப்பாடு; restriction.

     ‘அச்செறுப்புத்தீர . . . போந்த இடமிறே இது’ (ஈடு, 5. 8:2);.

   2. நெருக்கம் (வின்.);; narrowness.

   3. கொலை; killing.

     [செறு → செறுப்பு]

செறுப்புநோய்

செறுப்புநோய் ceṟuppunōy, பெ. (n.)

   நோய்வகை (கடம்பபு.இலீலா. 111);; a disease.

     [செறு → செறுப்பு + தோய். செறுத்தல் = வருத்துதல், அழித்தல்]

செறுமர்

 செறுமர் ceṟumar, பெ. (n.)

   மலையான (கேரள); நாட்டுப் பழங்குடிகளுள் ஒருவகையினர்; a kind of tribal people in {Kérala} state.

மறுவ. செறுமக்கள்

செறுமு-தல்

செறுமு-தல் ceṟumudal,    5 செ.கு.வி. (v.i.)

   கனைத்தல், உறுமுதல்; to hem, grunt.

     “செறுமுமந்தச் சன்னை யறிந்து” (விறலிவிடு. 759);.

   2. தேம்பியழுதல்; to sob agitatedly.

     [செறு → செறுமு-.]

செறும்பு

செறும்பு1 ceṟumbu, பெ. (n.)

   மனக்காழ்ப்பு; rancor.

     ‘மனத்திடைச் செறும்பு நீக்கி’ (சீவக. 947);.

க. கறும்பு

செறும்புக்காரன்

 செறும்புக்காரன் ceṟumbukkāraṉ, பெ. (n.)

   மனத்திற்கறுக் கொண்டவன் (வின்.);; malicious person.

     [செறும்பு + காரன்]

செறுவர்

செறுவர் ceṟuvar, பெ. (n.)

   பகைவர்; foes.

     “செறுவர் நோக்கயி கண்” (புறநா. 100: 10);.

மறுவ. செறுநர்

     [செறு → செறுவர்]

செறுவு

செறுவு ceṟuvu, பெ. (n.)

   திருத்திய நிலம்; developed lands.

     “பவழவாய்ச் செறுவு தன்னுள்” (சீவக. 379);.

     [செறு → செறுவு]

செற்பம்

செற்பம் ceṟpam, பெ. (n.)

வாய்ப்பும் (அநுகூலமும்); வாய்ப்பின்மையு (பிரதி கூலமும்);மான கருவிகள் இரண்டுமுள்ளதன் கண் வெல்லும் வேட்கையுடையோன் கதை (தருக். சங். நீலகண். 205);.

 a form of polemical discussion, the aim of which is victory over opponents.

செற்றம்

செற்றம் ceṟṟam, பெ. (n.)

   1. மனக்காழ்ப்பு (திவா.);; rancour, hatrcd.

     “செற்ற நீக்கிய மனத்தினர்” (திருமுருகு. 132);.

   2. வெறுப்பு; aversion.

     “ஆர்வமுஞ் செற்றமு நீக்கிய வக்கதனே” (திரு.நூற். 20);. );

   3. தணியாச்சினம் (பிங்.);; imepressible anger.

   4. ஊடற்சினம்; love-quarrel.

     “செற்றமுன் புரிந்ததோர் செம்மல்” (கம்பரா. உண்டாட்டு. 30);.

     [செறு → செற்று → செற்றம்]

செற்றலர்

செற்றலர் ceṟṟalar, பெ. (n.)

செற்றார் பார்க்க;see {ser}

     “செற்றலரை வென்ற திருமலைராயன்” (தனிப்பா. 1, 27:49);.

ம. செற்றலர்

     [செற்றல் → செற்றலர்]

செற்றல்

செற்றல் ceṟṟal, பெ. (n.)

   கொல்லுகை (பிங். MSS);; killing.

   2. கேடு (அக.நி.);; destruction.

   3. செறிவு. (திவா.);; denseness, closeness.

   4. ஈ முட்டை; eggs of fly.

     “புண்மேற் செற்றலேறி” (திவ்.பெரியாழ். 4. 5:2);.

     [செறு → செற்று → செற்றல்]

செற்றவர்

செற்றவர் ceṟṟavar, பெ. (n.)

செற்றார் பார்க்க;see {serit.}

     “செற்றவர் புரங்கண் மூன்றுத் தியெழச் செறுவர் போலும்” (தேவா. 476:3);.

     [செறு → செற்றவர்]

செற்றார்

செற்றார் ceṟṟār, பெ. (n.)

   பகைவர்; enemies.

     “செற்றார் செயக்கிடந்த தில்” (குறள், 446);.

ம. செற்றார்

செறு → செற்று → செற்றார்]

 செற்றார் ceṟṟār, பெ. (n.)

   கொலை செய்வோர்; murderer.

வேளும்பட விழியாற் செற்றார்க்கு”(கந்தரல.58);

     [செறு-செற்றார்]

செற்று

செற்று1 ceṟṟudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. கொல்லுதல் (பிங். MSS);; to kill.

   2. அழித்தல்; to destroy.

   3. செதுக்குதல் (ஈடு, 9. 9: 1);; to cut, chisel.

   4. பதித்தல்; to set, as a jewel.

     “மணி செற்றுபு குயிற்றி” (கம்பரா. கையடை. 5);.

ம. செற்றுக;து. கெர்பினி;பர். கெத் (வேட்டையாடுதல்);;மா. கெர்மெ.

     [செறு → செற்று-.]

 செற்று2 ceṟṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. செறிதல்; to gather in crowds.

     ‘பெருங் களிறுகள் செற்றிவந்து சேர்ந்தன’ (சீவக. 277, உரை);.

   2. அழுந்துதல்; to sink deep.

     “உரத்தினுகிர் செற்றும் வகை குத்தி” (கம்பரா. மகுட. 8);.

     [செறு → செற்று-.]

 செற்று3 ceṟṟu, பெ. (n.)

   நெருக்கம் (பிங்.);; thickness.

     [செறு → செற்று]

செற்றை

செற்றை ceṟṟai, பெ. (n.)

   1. சிறுதூறு; thicket, bush.

     “செற்றை வாயிற் சிறுகழிக் கதவின்” (பெரும்பாண். 149);.

   2. கூட்டம்; crowd.

     “சேய்விடுத்த செற்றை” (கந்தரந். 22);.

   3. நன்னீரில் வாழும் மீன்வகை; a fresh water fish.

     “செற்றைவரும் பழனம்” (கந்தரந். 22);. ம. செற்ற;

   க. ததெ, சத்தெ, செதகெ (குப்பை);;தெ. செத்த (அழுக்கு);

     [செற்று → செற்றை]

செற்றோர்

செற்றோர் ceṟṟōr, பெ. (n.)

செற்றார் பார்க்க;see {serir.}

     “செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானை” (பதிற்றுப். 82:12);.

     [செறு → செற்றோர்]

செலகம்

 செலகம் celagam, பெ. (n.)

   மல்லிகை; Arabian jasmine.

செலக்குரு

 செலக்குரு celakkuru, பெ. (n.)

செலக்கூர்மை பார்க்க;see {Sela-k-kirmai.}

செலக்கூர்மை

 செலக்கூர்மை celakārmai, பெ. (n.)

   எரியுப்பு (நவச்சாரம்); (சங்.அக.);; sal-ammoniac.

செலதம்

 செலதம் celadam, பெ. (n.)

   கோரைக் கிழங்கு; fragrant tuber of Cyprus rotundus.

செலந்தன்

 செலந்தன் celandaṉ, பெ. (n.)

   ஒரு வகை மீன்; a kind of fish.

செலம்பை

 செலம்பை celambai, பெ.(n.)

   கரூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in KarurTaluk.

     [சிலம்பு-சிலம்பை]

செலவகொடு-த்தல்

செலவகொடு-த்தல் celavagoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. அனுமதிொடுத்தல்; to give leave.

   2. இழப்பீடு கொடுத்தல்; to pay costs, as in a suit;

 to recompense.

செலவு கொடுக்கும்படி முறை மன்றத்தில் தீர்ப்பாயிற்று (உ.வ.);.

     [செலவு + கொடு-.]

செலவடை

 செலவடை celavaḍai, பெ.(n.)

   ஓமலூர் வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Omalur Taluk.

     [செலவு+அடை]

 செலவடை celavaḍai, பெ. (n.)

   செலவு; exponses.

அவனுக்கு ஒருநாள் செலவடை பத்து உரூபா (உ.வ.);.

     [செலவு + (அடு →); அடை]

செலவணி

செலவணி2 celavaṇi, பெ. (n.)

செலாமணி பார்க்க;see {šelāmaņi.}

செலவயர்-தல்

செலவயர்-தல் celavayartal,    2 செ.கு.வி. (v.i.)

   1. செல்ல விரும்புதல்; to desire to go.

     “சீர்மிகு நல்லிசை பாடிச்செலவயர்தும்” (பு.வெ. 12, வென்றிப். 1);.

     [செலவு + அயர்-.]

செலவழி

செலவழி1 celavaḻidal, செ.கு.வி. (v.i.)

   1. பணம், பொருள், நேரம் முதலியன செலவாய்ப் போதல் (உ.வ.);; to be spent, used up, consumed.

   2. சாதல் (இ.வ.);; to die.

அவன் செலவழிந்து விட்டான்.

ம. செலவழியுக

     [செலவு + அழி-,]

 செலவழி2 celavaḻittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   1. செலவிடுதல்; to spend, consume, use up, as stores.

   2. கொடுத்துவிடுதல்; to give away, dispose of.

   3. பொருளையழித்தல்; to squander, waste.

மலையளவு சொத்தைச் செலவழித்ததால் அவன் இன்று இரங்கத்தக்க நிலையில் உள்ளான் (உ.வ.);.

ம. செலவழிக்குக

     [செலவு + அழி-.]

செலவழிவு

செலவழிவு celavaḻivu, பெ. (n.)

   1. செலவழிகை; disbursement and expenditure.

   2. ஊதியமும் இழப்பும் (இலாப நட்டம்);; gain and loss.

     [செலவு + அழிவு]

செலவழுங்கு-தல்

செலவழுங்கு-தல் celavaḻuṅgudal,    5 செ.கு.வ. (v.i.)

   தலைவன் தலைவியிடமிருந்து பிரிதலைத் தவிர்த்தல்; to desist from parting from one’s love.

     ‘தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது’ (அகநா. 191);.

     [செலவு(பயணம்); + அழுங்கு (நிறுத்தம்);-.]

செலவா-தல்

செலவா-தல் celavātal,    6 செ.கு.வி. (v.i.)

செலவழி1-தல் பார்க்க;see {selawall.}

செலவாளி

 செலவாளி celavāḷi, பெ. (n.)

செலவுகாரன் பார்க்க;see {Selavu-kāran.}

   ம. செலவாளி;தெ. செலவகாடு

     [செலவு + ஆணி]

செலவிடல்

செலவிடல் celaviḍal, பெ. (n.)

   எறிதல் (பிங்கல. 2162);; throw.

     [செல்ல-செல+[வரு]விடல்]

செலவிடு

செலவிடு1 celaviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   கூலி கொடுத்தல், பொருள் வாங்குதல் போன்ற வற்றிற்காகப் பணத்தை வழங்குதல்; to spend.

   2. பணம் போன்றே நேரம் முதலியவற்றையும் செலவிடுதல்; to spend time like money etc.

ஆய்விற்காக அவன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டான் (உ.வ.);/

   3. பொருளையழித்தல்; to squander, waste.

ம. செலவிடுக

     [செலவு + இடு-.]

 செலவிடு2 celaviḍudal,    18 செ.குன்றாவி. (v.t.)

   அனுப்புதல்; to send, send forth.

     “சிந்தை மகிழ்வுறவுரைத்து மணநேர்ந்து செலவிட்டார்” (பெரியபு. மானக்கஞ். 17);,

கலைப் பொருட்களின் நேர்த்தியில் அவர்தம் சிந்தையைச் செலவிட்டார் (உ.வ.);.

     [செல் + விடு-.]

செலவினம்

 செலவினம் celaviṉam, பெ. (n.)

   வெவ்வேறு பணிகளுக்கான செலவு வகை; items of expenditure.

மருத்துவச் செலவு உட்பட எல்லாச் செலவினங்களும் கணக்கில் காட்டப்படுகின்றன.

     [செலவு → செலவினம்]

செலவு

செலவு celavu, பெ.(n.)

   ஆளத்தியிலேயே நிரம்பப் பாடுதல்; musical note of fuller length,

     [செல்-செலவு]

 செலவு celavu, பெ. (n.)

   1. போக்கு;,going, passing.

     “செலவினும் வரவினும்” (தொல். சொல். 28);.

   2. ஓட்டம்; running, flowing.

     “வெருவருஞ் செலவின் வெகுளி வேழம்” (பொருந. 172);.

   3.நடை; manner or mode of walk.

     “சாமனார் தம்முன் செலவு காண்க”;

     (கலித். 94);.

   4. குதிரை (கதி); நடை அல்லது ஓட்டம்; pace of a horse.

     “ஐந்து செலவொடு மண்டிலஞ் சென்று” (பு.வெ.12, வென்றிப். 14);.

   5. பயணம்; journey.

     “நீளிடைச் செலவொழிந்தனனால்” (கலித். 10);.

   6. படையெடுப்பு; expedition of an army.

நாடிய நட்புப் பகை செலவு’ (பு.வெ. 9:37, உரை);.

   7. நீட்சியளவு; full height.

     “ஒளிநிற வண்ணனைச் செலவு காணுலுற்றா ரங்கி ருவரே” (தேவா. 1209);.

   8. கலைத் தொழில் எட்டனுள் ஒன்றாகிய அலுக்கம் (ஆலாபனம்);; elaboration of a tune on the {yāl} one of eight {kalai-t-tolil.}

     ‘ஆளத்தியிலே நிரம்பப்பாடுதல் செலவு’ (சீவக. 657, உரை);.

   9. வழி (திவா.);; way, passage, route, street.

     “செஞ்ஞாயிற்றுச் செலவும்ட” (புறநா. 30);.

   10. ஒழுக்கம்; conduct, behaviour.

     “தன் செலவிற் குன்றாமை” (திரிகடு. 29);.

   11. பணச்செலவு; expense, charges.

     “தாங்குகோடி தன்ஞ்செல வென்பவே” (சிவரக. சுகமுனி. 41);.

   12. வீட்டுக்கு வேண்டிய உணவுப் பண்டம்; provisions needed for consumption.

கடைக்குப்போய்ச் செலவு வாங்கி வந்தேன் (உ.வ.);.

   13. தேவை (இ.வ.);; demand, necessity, need.

இந்தத் துணிக்கு வீட்டில் செலவில்லை.

   14. மொய் (இ.வ.);; marriage presents.

   15. காலம், பண்டம் முதலியவற்றின் கழிவு; expenditure, as provisions, lapse, as of time of life, etc.

   16. இறந்த காலம்; past tense.

     “பாந்தஞ் செலவொடு வரவும்” (நன். 145);.

   17. சாவு; death. ஊரில் செலவு அதிகம் (இ.வ.);.

   18. பிரிவு; separation, departure.

     “செலவழுங்கியது” (அகநா. 191);.

   19. ஆணை; permission, leave, order.

செலவு பெற்றுக் கொள்கிறேன்.

   20. எலி முதலிவற்றின் வளை; hole, as of ral.

எலிச் செலவாயினுந் தனிச்செலவு வேண்டும் (யாழ்ப்.);.

ம. செலவு;க., தெ., பட. செலவு;கோத. சல்வ், செல்வ்;துட. சல்வ்

     [செல் → செலவு]

செலவுகாரன்

செலவுகாரன் celavukāraṉ, பெ. (n.)

   1. தாராளமாய்ச் செலவிடுபவன்; one who spends freely.

   2. மட்டுக்கு மிஞ்சிச் செவழிப்போன்; spendthrift, extravagant person.

   3. குடும்பச் செலவுமிக்கவன்; one who has large expenses.

ம. செலவுகாரன்;தெ. செலவுகாடு;பட. செலவுகார

     [செலவு + காரன்]

செலவுசிற்றாயம்

செலவுசிற்றாயம் selavusiṟṟāyam, பெ. (n.)

   1. நான் செலவுக்கு வேண்டும் பணம்; money required for daily expenses.

செலவு சிற்றாயத்திற்கு என்ன செய்வாய்.

   2. நாளுக்கும் வேண்டிய உணவுப் பண்டம்; provisions for daily consumption.

     [செலவு + சிற்றாயம்]

செலவுசெய்-தல்

செலவுசெய்-தல் selavuseytal,    1 செ.குன்றாவி. (v.t.)

   பணம், பொருள், நேரம் போன்றவற்றைத் தீர்த்தல்; to spend, consume, use up.

ம. செலவு செய்யுக

     [செலவு + செய்-.]

செலவுசொல்(லு)-தல்

செலவுசொல்(லு)-தல் selavusolludal,    13 செ.கு.வி. (v.i.)

   வாங்கிய தொகையிற் செலவிட்டதற்குக் கணக்கு ஒப்பித்தல்; to account for sum received.

   2. செலவிடுதற்கு விளத்தம் சொல்லுதல்; to give directions for the expenditure of a sum.

     [செலவு + சொல்]

செலவுபாக்கு

 செலவுபாக்கு celavupākku, பெ. (n.)

   செலவிடுதற்குப் பயன்படும் தாழ்தரமான பாக்கு; areca-nuts for distribution, generally of an inferior quality.

     [செலவு + பாக்கு]

செலவுபெயர்-தல்

செலவுபெயர்-தல் celavubeyartal,    2 செ.கு.வி. (v.i.)

   போதலைத் தவிர்தல் (கலித். 17);; to give up one’s journey.

     [செலவி + பெயர்-.]

செலவுமுன்பணம்

 செலவுமுன்பணம் celavumuṉpaṇam, பெ. (n.)

   திட்டச் செலவிற்கு அளிக்கப்படும் முன் பணம்; advance for planning expenditure.

     [செலவு + முன்பணம்]

செலவுவாங்கு

செலவுவாங்கு1 celavuvāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   விடைபெறுதல்; to take leave, get leave.

     [செலவு + வாங்கு-.]

 செலவுவாங்கு2 celavuvāṅgudal,    5 செ.கு.வி. (v.i.)

   மசாலைப் பண்டம் வாங்குதல்; to buy provisions, as curry stuffs.

     [செலவு + வாங்கு-.]

செலவுவை-த்தல்

செலவுவை-த்தல் celavuvaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   செலவழிக்கச் செய்தல்; make one spend.

மகனின் படிப்பு அவருக்கு நிறையச் செலவு வைத்து விட்டது

     [செவவு + வை-.]

செலவெடு-த்தல்

செலவெடு-த்தல் celaveḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   பண்ட சாலையிலிருந்து உணவுப் பண்டங் கொள்ளுதல் (யாழ்ப்.);; to purchase provisions from a store.

     [செலவு + எடு-.]

செலவோடு-தல்

செலவோடு-தல் celavōṭudal,    5 செ.கு.வி..(v.i.)

புண்

   புரையோடுதல் (வின்.);; to run deep, as a fistula, an ulcer.

     [செலவு + ஒடு-.]

செலாமணி

செலாமணி celāmaṇi, பெ. (n.)

   1. செல்லக்

   கூடியது; that which can be passed, as coin, that whichisa legal tender.

   2. செல்வாக்கு (இ.வ.);; influence.

இப்போது அவருக்கு அவ்வளவு செலாமணி யில்லை.

{U. clãoņi}

     [செலாவணி → செலாமணி]

செலாவணி

செலாவணி1 celāvaṇi, பெ. (n.)

   பணப் புழக்கம்; currency.

அணா காசுகள் இப்போது செலாவணியில் இல்லை.

     [செலவாணி → செலாவணி]

செலாவணிச்சீட்டு

செலாவணிச்சீட்டு celāvaṇiccīṭṭu, பெ. (n.)

   செல்லக் கூடிய உண்டியல் முதலியன (செந். xii, 283);; negotiable instrument like demand draft, cheque etc.

மறுவ. கேட்பு ஒலை, வரைவு ஒலை

     [செலாவணி + சீட்டு]

செலிக்கட்டி

 செலிக்கட்டி celikkaṭṭi, பெ. (n.)

   காதில் உண்டாகும் அழற்சி; a bscess or boil of the ear.

     [செவி + கட்டி]

செலியம்

 செலியம் celiyam, பெ. (n.)

   இலாமிச்சை (மலை.; cuscuss grass.

செலு

செலு1 celu, பெ. (n.)

   1. மீன் செதிள்; small fins of a fish.

     “செலுவுட்கரந்தவாழி” (அஷ்டப். திருவரங். மா. 22);.

   2. சிலாம்பு; splinter.

     “பெளவமுற்றுமோர் செலுவுட் சென்று” (பாகவத. 8. 8:17);.

     [கல் → சில் = சிறியது. சில் → சிலு → செலு = சிறு செதிள்]

 செலு2 celu,    பெ.எ. மெலிந்த; thin, poor, puny, செலுநாய்.

க. சிலு

     [சில் → சில்லு → செலு]

செலுத்து-தல்

செலுத்து-தல் celuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. செல்லச் செய்தல்; to cause to go or proceed, despatch, circulate, deliver.

     “மாதலியைச் செலுத்தி” (கம்பரா. இராவணன் வதை. 203);.

   2. எய்தல்; to discharge, as a missile,

அம்பைச் செலுத்தினான்.

   3. ஒட்டுதல்; to drive, impel, push forward, propel.

     “ஓராழி கொண்டு செலுத்துதேர்” (பாரத. பதினாறாம். 40);

   4. ஆணை நடத்துதல்; to execute, as orders;

 to administer, as justice.

     “தனியரசு செலுத்து நாள்” (உபதேசகா.விபூதி. 104);.

   5. நடத்துதல்; to perform, observe, as charity, to fulfil, as a promise, vow.

     ‘இத்தன்மம் முட்டாமை செலுத்துவோ மானோம்’ (தெ.க.தொ. 3, 95);.

   6. இறுத்தல்; to pay, as tribute, debt.

வரி செலுத்தியாயிற்று.

   7. போகவிடுதல், திருப்பிவிடுதல்; to direct;

 turn.

பந்தை அவர் இடப்பக்கமாகச் செலுத்திய முறை சிறப்பாக இருந்தது.

   8. ஏற்றுதல், உட்செலுத்துதல்; to transfuse; give, infect.

நோயாளிக்கு உடனடியாக அரத்தம் செலுத்த வேண்டும்.

   9. காட்டுதல், மேற்கொள்ளதல்; to show, exercise.

அவர் மீது அன்பு செலுத்த ஆளில்லை.

ம. செலுத்துக

     [செல் → செலுத்து-.]

செலுந்தி

செலுந்தி celundi, பெ. (n.)

   மெலிந்தது; thin,slim person or animal; small, stunted tree.

     [செலு2 → செலுந்தி]

செலுந்தில்

 செலுந்தில் celundil, பெ. (n.)

செலுந்தி பார்க்க (யாழ்ப்.);;see {Selundi.}

     [செலு → செலுந்தில்]

செலுப்பட்டி

 செலுப்பட்டி celuppaṭṭi, பெ. (n.)

   மீன்வகை; flat fish, olive-brown. I

     [செலு + பட்டி.]

செலுப்பு

செலுப்பு celuppu, பெ.(n.)

   சேலையின் மேல் முந்தியில் காணப்படும் பூவேலைப்பாடு; flower designs in saree.

     [செலவு-செலுப்பு]

 செலுப்பு1 celuppu, பெ. (n.)

   நீர்க்கோப்பு (இ.வ.);; cold.

தெ. த்ஜலுபு

     [சல் → செல் → செலு → செலுப்பு]

 செலுப்பு2 celuppu, பெ. (n.)

   1. சிறுதுண்டு; a little piece.

   2. பாக்கச் சீவல் (யாழ்ப்.);; slices or parings of areca-nut.

     [செலு2 → செலுப்பு]

செலுப்பை

 செலுப்பை celuppai, பெ. (n.)

கருவாலி (L.);:

 Ceylon tea.

செலுமுரல்

 செலுமுரல் celumural, பெ. (n.)

   மீன்வகை (யாழ்.அக.);; a kind of fish.

     (செலு முரன்);

செலும்பு

செலும்பு celumbu, பெ. (n.)

   1. சிறுதுண்டு; a little piece.

   2. பாக்குச்சீவல்; parings of areca-nut for use with betel.

     [செலு2 → செலும்பு]

செலுவன்

செலுவன் celuvaṉ, பெ. (n.)

   மெலிந்தவன் (யாழ்.அக.);; lean person.

க. செலுவ, சலுவ (அழகன்);

     [செலு2 செலுவன்]

செலுவல்

 செலுவல் celuval, பெ. (n.)

செத்தல் பார்க்க (யாழ்.அக.);;see {šettal.}

     [செலு → செலுவல்]

செலை

செலை celai, பெ. (n.)

   சிலைவாகை (G.Tj.D.I.II5);; fragrant sirissa.

     [சிலை → செவை. சிலை = வாகை மரம்]

செல்

செல்1 celludal,    13 செ.கு.வி. (v.i.)

   1. போதல்; to go, flow, pass, to traverse, as the eye, mind.

     “சென்ற தேஎத்து” (தொல்.பொருள்.146);.

   2. நிகழ்தல்; to occur.

     “செல்லா அநின்ற வித்தாவர சங்கமத்துள்” (திருவாச. 1:30);.

   3. வீழ்தல்; to fall, as on the ground.

     “படியிற் செல்லும்படி” (கம்பரா. நிகும்பலை. 23);.

   4. ஆதல்; to become, form.

     “புண்செல்வன வல்லால்” (கம்பரா.நிகும்பலை.107);.

   5. பரவுதல்; to spread, as fame.

     “உரைசெல முரசுவௌவி” (புறநா. 26:7);.

   6. பயனுறுதல்; to be effective;to have influence.

     “செல்வர்வாய்ச் சொற்செல்லும்” (நாலடி, 115);.

   7. நிலைத்திருத்தல்; to last, endure, exist.

     “செல்லாதவ் விலங்கை வேந்தர்க் கரசென

     ” (கம்பரா. இந்திரசித். 56);.

   8. செலாவணியாதல்; to pass, as coin.

     “சந்தையினிற் செல்லாப் பணஞ் செல்லுமோ” (தனிப்பா.);.

   9. வேண்டியதாதல்; to be required;

 to cost. இந்தக் காரியத்தை முடிக்க ஆயிர உருபா செல்லும் (உ.வ.);.

   10. பொருந்துதல்; to be suitable;to be acceptable.

உலகம் . . . தோற்றுவா னொருவனை உடைத்தாதல் செல்லாது (சி.போ.சிற். 1:2, பக். 17);.

   11. விரும்பியேற்றுக் கொள்ளப்படுதல்; to be acceptable to the system.

நோயாளிக்கு உணவு செல்லவில்லை.

   12. அடைதற்குரியதாதல்; to be due, as money;

 to appertain to, as a right.

இந்த பணம் எனக்குச் செல்ல வேண்டியது.

   13. கழிதல்; to pass away, lapse, expire, as time.

     “சென்றன சென்றன வாழ்நாள்” (நாலடி, 4);.

   14. தணிதல்; to disappear, diminish, as anger.

     “செலியரத்தை நின் வெகுளி” (புறநா. 6:23);.

   15. கெடுதல்; to perish, to be ruined.

     “செல்லா நல்லிசை” (மலைபடு. 388);.

   16. இறத்தல்; to die.

     “செல்லுநாளைந்து புலனு மயர்ந்த பின்னர்” (உபதேசகா. சிவநாம. 3);.

ம.செல்லுக;க. சல், செல்;தெ. செல், செல்லு;து. சல்லுனி;கோண். கன்தாரை, செனானா;கூ. சல்பா;நா.ச;கொலா. செர்;பர். செல், செல்;கட. செல்

     [சல் → செல்.]

     ‘சல்’ பார்க்க

   {Šel,} to go, to proceed. This is unquestionably a Dravidian root, and abounds in derivatives e.g. {šel,} the white ant;   {šel-avu,} expenditure, {šel-vam,} prosperity. It forms its preterite also in a manner which is peculiar to pure Dravidian verbs. It is obviously allied to the {Sanskrit śal,} to go or move;   {šel,} to move, to trumble; chal and char, to go, to shake, to totter;

 and also to the Hindustani derivative chal,to go, close as these analogies are, {Šel} appears to bear an equally close resemblance to cel, the obsolete Latin root, signifying to go, from which are formed celer and also ex-cell-o and pre-cell-o the same root is in Greek {kel- e.g. kel-es,} a runner;

 and {kelló,} to urge on (CGDFL.594);.

 செல்3 cel, பெ. (n.)

   1. விரைந்து போகை; carcer, swift course.

     ‘செல்லொன்று கணையால்” (கம்பரா.இரானவணன்வதை. 15);.

   2. வாங்கிய கடனுக்குச் செலுத்திய தொகை; payment of loan.

இந்தப் பத்திரத்துக்குச் செல் உரூபா ஐம்பது (உ.வ.);

   3. கடன்; loan, debt.

கணக்குப் பார்த்ததில் அவனுக்க ஆயிர உரூபா செல் இருக்கிறது.

   4. கடன் செலுத்தியதற்கு ஆவணத்திலெழுதுங் குறிப்பு; note of payment.

கொடுத்த உரூபவைச் செல் வைத்திருக்கிறதா? (உ.வ.);

   5. சென்ற கால வளவு; period that has elapsed.

சூரிய புத்தியின் செல் நான்கு ஆண்டு.

   6. மஞ்சு (பிங்.);; cloud.

   7. வானம் (அக.நி.);; sky.

   8. இடி; thunder bolt.

     “வான் முழக்குச் செல்” (பரிபா. 13: 44);.

   9. வேல் (அக.நி.);; javelin.

     [சல் → செல்]

 செல்4 cel, பெ. (n.)

   கறையான் (பிங்.);; white ant.

     “செல்லரித்திடவு மாண்டெழாதாள்” (கம்பரா. காட்சி. 15);.

செல்லரித்த புத்தகம்,

     [சிதல் → செல்]

செல் சுடர்

செல் சுடர் celcuḍar, பெ. (n.)

   மறையும் பகலவன்; declining Sun.

     “செல்சுடர் நோக்கி” (நாலடி. 394);.

   மறுவ. அடை ஞாயிறு;மறையும் ஞாயிறு படி ஞாயிறு.

     [செல் + சுடர்]

செல்(லு)

செல்(லு)2 celludal,    8 செ.குன்றாவி. (v.t.)

   1. கிட்டுதல்; to approach.

     “செல்வரைச் சென்றிர வாதார்” (நாலடி, 296);.

   2. அடைதல்; to become, trun into, attain.

     “கலங்கலைச் சென்றவன்றும்” (திருக்கோ. 24);.

     [சல் → செல்-.]

செல்கதி

செல்கதி celkadi, பெ. (n.)

   1. புகல்; the ultimate or last refuge.

     “எங்கள் செல்கதி வந்தது” (கம்பரா. கங்கை. 10);.

   2. உய்வு; Salvation.

     “செல்கதி யுண்டோ தீவினை யேற்கென்று” (மணிமே. 13:88);.

வ. கதி

     [செல் + கதி]

செல்காரியம்

 செல்காரியம் celkāriyam, பெ. (n.)

   நடத்தப் பெறுங் காரியம் (வின்.);; the matter on hand.

     [செல் + காரியம்]

செல்காலம்

செல்காலம் celkālam,    1. செல்வாக்குள்ள காலம்; time of one’s influence.

   2. சென்ற காலம்; past time.

     “வருகாலஞ் செல்கால மாயினானை” (தேவா 716, 3);.

மறுவ. இறந்த காலம், கடந்த காலம்.

     [செல் + காலம்]

செல்கை

 செல்கை celkai, பெ. (n.)

செல்வாக்கு பார்க்க (இ.வ.);;see {Sel-vákku.}

     [செல் + காரியம்]

செல்சார்

செல்சார் celcār, பெ. (n.)

   பற்றுக்கோடு; support.

     “இரப்பவர்க்குச் செல்சாரொன்றீ வோர்” (நான்மணி, 39);.

     [செல் + சார். சார் = சார்தல்]

செல்சார்வு

செல்சார்வு celcārvu, பெ. (n.)

செல்சார் பார்க்க;see {selsi:}

     “சிறைகொளப் பட்டியான் செல்சார் வுறுத்த பின்” (பெருங். இலாவாண. 10:126);.

     [செல் + சார்வு]

செல்பாக்கி

 செல்பாக்கி celpākki, பெ. (n.)

   சிற்றூர்களின் வரவு செலவுப் பாக்கிக் கணக்கு; statement of demand, collection and balance of revenue in a village.

     [செல் + பாக்கி]

செல்ல

செல்ல cella, வி.எ. (adv.)

   1. அளவு; at a distance, out of the way.

     “செல்லப்போய் நிற்பாள்திரு” (அபிசிந். 277.தனிப்பா.);.

   2. சிறிது காலங் கழித்து; after some time.

     ‘செல்ல வா’ (வின்.);.

   3. முடிய; to the very end.

     ‘சடைக்கு மேல் கேசாந்தத் தளவுஞ் செல்ல’ (தெ.க.தொ. 2, 175);.

     [செல் → செல்வ]

செல்லக்கட்டு-தல்

செல்லக்கட்டு-தல் cellakkaṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   1. திட்டமாய் முடித்தல்; to accomplish.

   2. வயப்படுத்துதல்; to bring round, as a person.

அவனைச் செல்லக் கட்டி விட்டேன்.

   3. கடன் தீர்த்தல் (வின்.);; to liquidate loan, pay up arrears.

     [செல் → செல்ல + கட்டு-.]

செல்லக்கலியாணம்

 செல்லக்கலியாணம் cellakkaliyāṇam, பெ. (n.)

   சிறு குழந்தைகளாக இருக்கும்போதே செய்யும் திருமணம்; child-marriage.

மறுவ. சிறுவர் திருமணம், குழந்தை மணம்

     [செல்லம் + கலியாணம்]

செல்லக்குடை

 செல்லக்குடை cellakkuḍai, பெ. (n.)

   மிகு செல்வம் (இ.வ.);; immense wealth.

     [செல்வம் → செல்லம் + குடை]

செல்லக்குந்தாணி

 செல்லக்குந்தாணி cellakkundāṇi, பெ. (n.)

   செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளை (இ.வ.);; boy or girl very indulgently brought up, used in contempt.

     [செல்வம் → செல்வம் + கெகுந்தாணி]

செல்லங்கொஞ்சு-தல்

செல்லங்கொஞ்சு-தல் cellaṅgoñjudal,    5 செ.கு.வி. (v.i.)

   குழந்தை பெண்டிர் முதலியவருடன் கொஞ்சிப் பேசுதல்; to prattle;

 touse gestures, as a humoured child or woman;

 to fondle, dally with a woman.

     [செல்லம் → செல்வம் + கொஞ்சு-.]

செல்லங்கொடு-த்தல்

செல்லங்கொடு-த்தல் cellaṅgoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   அன்பு மேலீட்டால் குழந்தைகட்கு அதிக இடங்கொடுத்தல்; to be indulgent, as to a child.

     [செல்வம் → செல்வம் + கொடு-.]

செல்லச்சிரிப்பு

 செல்லச்சிரிப்பு cellaccirippu, பெ. (n.)

   புண்சிரிப்பு (வின்.);; delicate, gentle smile.

மறுவ. சிறுநகை, முறுவல், புன்னகை, குறுஞ் சிரிப்பு.

     [செல்வம் + சிரிப்பு]

செல்லச்சோறு

 செல்லச்சோறு cellaccōṟu, பெ. (n.)

   செல்லத்தால் சிறிது சிறிதாக அடிக்கடி கொடுக்கும் உணவு (வின்.);; food repeatedly given in small quantities, as to children brought up indulgently, dainties

     [செல்வம் + சோறு]

செல்லடி

செல்லடி1 cellaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

செல்லரி (இ.வ.); பார்க்க;see {el-Hari,}

 செல்லடி2 cellaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

செல்வை பார்க்க;see {sel-Wai.}

செல்லடை-த்தல்

 செல்லடை-த்தல் cellaḍaittal, செ.கு.வி (v.i.)

   கடனை தீர்த்தல்; to repay debit.

     [செல்+அடை-]

செல்லத்தனம்

 செல்லத்தனம் cellattaṉam, பெ. (n.)

செல்லம் (யாழ்ப்.); பார்க்க;see {Sellam.}

     [செல்வம் → செல்வம் + (தன்மை); தனம்]

செல்லத்தீனி

 செல்லத்தீனி cellattīṉi, பெ. (n.)

செல்லச் சோறு (யாழ்.அக.); பார்க்க;see {sela-c-cru.}

     [செல்வம் + தீனி]

செல்லத்தொப்பை

 செல்லத்தொப்பை cellattoppai, பெ. (n.)

செல்லத்தொந்தி பார்க்க;see {sela-t-tondi.}

     [செல்வம் + தொப்பை]

செல்லநடை

செல்லநடை cellanaḍai, பெ. (n.)

   1. குழந்தை முதலியோரின் தளர்நடை; gentle, graceful gait, as of children.

   2. மந்தநடை; slow, loitering walk.

     [செல்வம் + நடை]

செல்லநரை

 செல்லநரை cellanarai, பெ. (n.)

   செல்வமாக வளர்வதால் இளமையில் உண்டாம் நரை (யாழ்ப்.);; premature grey hairs, supposed to result from luxurious living.

     [செல்வம் + நரை]

செல்லன்

செல்லன் cellaṉ, பெ. (n.)

   1. செல்லப்பிள்ளை 1,2 பார்க்க;see {Sella-p-pillai,}12.

   2. செல்வ முள்ளவன் (உ.வ.);; wealthy person.

செல்லன் சொல்லுக் கஞ்சான், அழகன் நடைக்கஞ்சான் (உ.வ.);.

     [செல்லம் → செல்வன்.]

செல்லபிராட்டி

 செல்லபிராட்டி cellabirāṭṭi, பெ.(n.)

   செஞ்சி வட்டத்திலுள்ள சிற்றூர்; a village in Cenji Taluk.

     [செள்ளை+பெருமாட்டி-பிராட்டி]

செல்லப்பசி

 செல்லப்பசி sellappasi, பெ. (n.)

   குழந்தைகட்கு அடிக்கடி உண்டாகும் பசி (வின்.);; frequent hunger as of children.

     [செல்வம் + பசி]

செல்லப்பிள்ளை

செல்லப்பிள்ளை cellappiḷḷai, பெ. (n.)

   1. செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட அருமைக் குழந்தை; child brought up delicately, petted

 child. கடைக்குட்டிதான் அவனுக்குச் செல்லப் பிள்ளை.

   2. செல்வமாக வாழ்பவர் (சுகவாசி);; person living in luxury and ease.

   3. நாடக மாந்தர்களில் முருகன் வேடம்பூண்டு வரும் இரண்டாம் மாந்தன் (வின்.);; the second character in comedy, supposed to have been originally a representation of {Murugan.}

ம.செல்லப்பிள்ளை

     [செல்லம் + பிள்ளை]

செல்லப்பிள்ளைக்காய்ச்சல்

செல்லப்பிள்ளைக்காய்ச்சல் cellappiḷḷaikkāyccal, பெ. (n.)

   1. ஒருவகைக் காய்ச்சல்; a kind of fever.

   2. பள்ளிக்குப் போவதற்கு அஞ்சி, செல்வச் சிறுவர் நடிக்கும் போலி காய்ச்சல் பாவனை; action of children of rich people as if they are in fever-only to avoid to go to school.

மறுவ, பாசாங்குக் காய்ச்சல்

     [செல்வம் + பிள்ளை + காய்ச்சல்]

செல்லப்பிள்ளைவிளையாட்டு

 செல்லப்பிள்ளைவிளையாட்டு cellappiḷḷaiviḷaiyāṭṭu, பெ. (n.)

   இன்ப வாழ்விலிருப் பவனது கருதலற்ற நடத்தை (உ.வ.);; thoughtless, extravagant conduct of a person given to luxurious and easy life.

முதாதையர் சேர்த்து வைத்திருந்த செல்வத்தை, இவன் செல்லப்பிள்ளை விளையாட்டில் தொலைத்து விட்டான் (உ.வ.);.

     [செல்லப்பிள்ளை + விளையாட்டு]

செல்லப்பிள்ளைவேட்டி

 செல்லப்பிள்ளைவேட்டி cellappiḷḷaivēṭṭi, பெ. (n.)

   சிறுவர் அணியும் சிற்றுடை (தஞ்சை.);; a small cloth usually worn by children.

மறுவ சித்தாடை, குறுவேட்டி.

     [செல்வம் + பிள்ளை + வேட்டி]

செல்லப்பெட்டி

 செல்லப்பெட்டி cellappeṭṭi, பெ. (n.)

   வெற்றிலைப் பாக்கு வைக்கும் பெட்டி; metallic box for keeping betel leaves and areca nut.

மறுவ. வெற்றிலைச் செல்லம்

ம. செல்லப்பெட்டி

     [செல்வம் + பெட்டி]

     [P]

செல்லப்பெண்

 செல்லப்பெண் cellappeṇ, பெ. (n.)

   அருமைப் பெண்; female child or girl brought up delicately; petted girl.

     [செல்வம் + பெண்]

செல்லப்பேச்சு

செல்லப்பேச்சு cellappēccu, பெ. (n.)

   1, மழலைச்சொல்; child’s prattle or lisp.

   2. மகளிரின் கொஞ்சற் பேச்சு; soft, winning talk, as of a woman.

மறுவ. கிள்ளைப் பேச்சு, மழலை மொழி, காதற் பேச்சு.

     [செல்வம் + பேச்சு]

செல்லமடி

 செல்லமடி cellamaḍi, பெ. (n.)

   இளமையிற் பெருத்த கன்று மடி (யாழ்ப்.);; prematureuddei of a heifer.

     [செல்வம் + மடி]

செல்லமடிப்பு

 செல்லமடிப்பு cellamaḍippu, பெ. (n.)

   செல்வச் செழிப்பில் விழும் வயிற்று மடிப்பு; folds of the abdomen, due to luxurious living.

மறுவ, தொந்தி, மடிப்பு

     [செல்வம் + மடிப்பு]

செல்லம்

செல்லம் cellam, பெ. (n.)

   1. பொருள்; opulence, prosperity, fortune.

     ‘செல்லஞ் செருக்குகிறது, வாசற்படி வழுக்குகிறது’ (வின்.);.

   2. சொந்தக் கருவூலம்; private treasury, as of a king.

   3. செல்லப்பேச்சு,2 பார்க்க;see {šella-p-pēccu,}

இந்தச் செல்லமெல்லாம் இங்கே நடக்காது.

   4. புதுமை (வினோதம்);; novelty, amusement, pastime.

   5. வெற்றிலை பாக்க எடுத்துச் செல்லும் செல்லப் பெட்டி (தஞ்சை.);; metal box to carry betal leaves and areca-nuts.

அந்த வெற்றிலைச் செல்லத்தைக் கொண்டுவா (உ.வ.);

   6. இளக்காரம் (இ.வ.);; indulgence.

   7. இளமை; youth.

செல்லக்குட்டி.

ம. செல்லம்

     [செல்வம் → செல்லம்]

செல்லம்பொழி-தல்

செல்லம்பொழி-தல் cellamboḻidal,    2 செ.கு.வி. (v.i.)

   1. செல்வமாய் இருத்தல் (இ.வ.);; to be happy and prosperous.

அந்த ஊர் செல்லம் பொழிகிறது (உ.வ.);

   2. மகிழ்ந்து விளையாடுதல்; to play merrily;to be frolic-some, jovial.

     [செல்வம் + பொழி-.]

செல்லரி-த்தல்

செல்லரி-த்தல் cellarittal,    4 செ.கு.வி. (v.i.)

   கறையானால் தின்னப்படுதல்; to be eatenby white ants.

     “செல்லரித்தவோலை செல்லுமோ” (அஷ்டப். திருவரங். கலம். 53);.

     [செல் + அரி-.]

செல்லரித்துப்போன

 செல்லரித்துப்போன cellarittuppōṉa, பெ.எ. (adj.)

   மதிப்பிழந்துவிட்ட அல்லது பயன் இல்லாமல் போன; old and worn-out;motheaten.

செல்லரித்துப் போன சடங்குகளை இன்னும் சிலர் அப்படியே பின்பற்றி வருகின்றனர்.

     [செல் + அரித்து + போன]

செல்லல்

செல்லல்1 cellal, பெ. (n.)

   1. துன்பம் (தொல். சொல். 302);; sorrow, suffering, afflicition.

   2. வெறுப்பு (வின்.);; diagust.

     [செல் → செல்லல்]

 செல்லல்2 cellal, பெ. (n.)

   மூன்று விரல நீளமும் மஞ்சணிறமும் உள்ள நன்னீர் மீன்வகை; fresh water fish, yellowish, attaining 3 in. in length.

தெ. ஜெல்ல

     [சேல் → செல் → செல்லல்]

செல்லவண்டி

 செல்லவண்டி cellavaṇṭi, பெ. (n.)

செல்லத்தொந்தி பார்ப்ப;see {sela-t-tond.}

     [செல்லம் + வண்டி. பண்டி → வண்டி.]

செல்லவயிறு

 செல்லவயிறு cellavayiṟu, பெ. (n.)

செல்லத் தொந்தி பார்ப்ப;see {Sella-t-tondi.}

     [செல்வம் + வயிறு]

செல்லவை-த்தல்

செல்லவை-த்தல் cellavaittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   செல்லாத காசைச் (நாணயத்தைச்); செலாவணி யாக்குதல்; to pass, as a base coin.

     [செல் + வை-.]

செல்லா-தல்

செல்லா-தல் cellātal, செ.கு.வி. (v.i.)

   1. கடன் தொகை செலுத்தப்படுதல்; to be paid or discharge, as loan.

   2. இறந்து போதல்; to be dead and gone.

அவர் செல்லானார் (இ.வ.);.

     [செல்2 + ஆ-.]

செல்லாக்காசு

செல்லாக்காசு cellākkācu, பெ. (n.)

   1. செலாவணியாகாத பணம்; coin that will not pass, base coin.

   2. செல்வாக்கும் மதிப்பும் இழந்தவன் (வின்.);; one who has lost credit or influences.

அவன் அரசியலில் செல்லாக்காசு ஆகிபோனான் (உ.வ.);.

   3. செல்லல்,3 பார்க்க;see {Sellal,3},

   4. மருந்துப் பச்சிலை வகை; a medicinal herb.

செல்லாக்காசில் வைத்துச் சிறுசெருப்படியைக் கொடுக்க.

ம. செல்லாக்காசு;க. சல்லத காசு

     [செல் + ஆ + காசு]

செல்லாக்காசோலை

 செல்லாக்காசோலை cellākkācōlai, பெ. (n.)

   பணம் மறுக்கப்பட்ட காசோலை; dishonoured cheque.

     [செல்லா + காசோலை. செல்வா = செல்லாத]

செல்லாக்காலம்

செல்லாக்காலம் cellākkālam, பெ. (n.)

   செல்வாக்கு நீங்கி காலம்; time when one’s influence is gone, as by loss of office, reputation etc.

அந்தக் கட்சிக்கு இப்போது செல்லாக்காலம் (உ.வ.);

   2. தள்ளாத கிழப் பருவம்; decrepit, old age.

     [செல் + ஆ + காலம்]

செல்லாநெறி

செல்லாநெறி cellāneṟi, பெ. (n.)

   செல்லுதற்கரிய வானம்; aerial region, as impassable.

     “செல்லா நெறி யேறினர்” (அரிச். புவிவாக. 59);.

     [செல் + ஆ + நெறி]

செல்லானகணக்கு

 செல்லானகணக்கு cellāṉagaṇaggu, பெ. (n.)

   தீர்ந்துபோன கணக்கு; paid-off account.

     [செல் + ஆ(ன); +கணக்கு]

செல்லாமை

செல்லாமை1 cellāmai, பெ. (n.)

   1. பிரிந்து போகாமை; remaining, stopping.

     “செல்லாமை யுண்டே லெனக்குரை” (குறள், 1151);.

   2. வறுமை; poverty.

     “செல்லாமை செவ்வனேர் நிற்பினும்” (நாலடி. 148);.

   3. வலியின்மை (இ.வ.);; inability.

   4. செய்யாதிருக்கக் கூடாமை; unavoidable necessity, inevitability.

     ‘என் செல்லாமையாலே ஏத்தினேன்’ (ஈடு, 4. 3:10);.

     [செல் + ஆ + மை. ஆ = எதிர்மறை இடைநிலை]

 செல்லாமை2 cellāmai, பெ. (n.)

   ஆற்றாமை; powerlessness to control oneself.

     ‘பெரிய திருவடியுடைய செல்லாமையாலும் தன் செல்லாமை யாலும் . . . அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது’ (திவ்.திருநெடுந். 6, வியா, பக். 50);.

     [செல் → செல்லாமை]

செல்லாயி

 செல்லாயி cellāyi, பெ. (n.)

   ஊர்த் தெய்வம்; a village goddess.

     [சென்னியாயி → செல்லாயி]

செல்லாறு

செல்லாறு cellāṟu, பெ. (n.)

   1. கைக்கொள்ளும் முறை; the proper or advisable course, the correct or the right path.

     “இருளற விளங்குஞ் செல்லா றிதுவென” (பெருங். நரவாண, 7:90 -91);.

   2. செல்லும் வழி; the way one goes.

     [செல் + ஆறு]

செல்லாவாழ்க்கை

செல்லாவாழ்க்கை cellāvāḻkkai, பெ. (n.)

   வறுமை வாழ்வு; wretched life, life of poverty.

     “சில்விலைக் கிடுஉஞ் செல்லா வாழ்க்கையர்” (பெருங். உஞ்சைக். 55:49);.

செல்லா வாழ்க்கை வாழ்வதிலும் உயிர் துறப்பதே நன்று (உ.வ.);

     [செல் + ஆ (எதிர்மறை); + வாழ்க்கை]

செல்லாவிடம்

செல்லாவிடம் cellāviḍam, பெ. (n.)

   1. வறுமைக் காலம்; straitened circumstances.

     “செல்லா விடத்துங் குடிப்பிறந்தார் செய்வன” (நாலடி. 149);.

   2. தகுதியில்லாத இடம்; improper place.

     “செல்லா விடத்துச் சினந்தீது” (குறள். 302);.

     [செல் + ஆ + இடம்]

செல்லி

செல்லி celli, பெ. (n.)

   1. செல்லப்பெண் பார்க்க;see {sella-p-per.}

     “தங்கையான செல்லி மங்கையர்க்குள் நல்லி” (இராமநா. ஆரணி. 12);.

   2. செல்லாயி பார்க்க;see {selliyi}

     [செல்வம் → செல்லி]

செல்லிடம்

செல்லிடம் celliḍam, பெ. (n.)

   1. பொருளுள்ள காலம்; prosperous circumstances

     “செல்லி டத்துஞ் செய்யார் சிறியவர்” (நாலடி, 149);.

   2. தகுதியான இடம்; proper place.

     “செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்” (குறள், 301);.

   3. செல்லுகின்ற இடம்; the place to which one goes.

     [செல் + இடம்]

செல்லியம்

 செல்லியம் celliyam, பெ. (n.)

   கோழி; fowl.

     [சேவல் → சேல் → செல் → செல்லியம்]

செல்லியாயி

 செல்லியாயி celliyāyi, பெ. (n.)

   சிற்றுார்த் தெய்வம்; village goddess.

     [செல்லி + ஆயி. ஆய் → ஆயி]

செல்லு

செல்லு1 cellu, பெ. (n.)

செல்2 பார்க்க;see {sel2}.

 செல்லு2 cellu, பெ. (n.)

செல்3 பார்க்க;see {se’.}

செல்லுங்காசோலை

 செல்லுங்காசோலை celluṅgācōlai, பெ. (n.)

   செல்லுபடியான காசோலை, தீர்வான காசோலை; valid cheque honoured.

     [செல்லும் + காசோலை]

செல்லுச்சீட்டு

 செல்லுச்சீட்டு celluccīṭṭu, பெ. (n.)

   பற்றுச்சீட்டு (ரசீது);; receipt or acquittance in evidence of payment.

தெ. செல்ல சீட்டு

     [செல்லு + சீட்டு]

செல்லுஞ்சீட்டு

செல்லுஞ்சீட்டு celluñjīṭṭu, பெ. (n.)

   1. உண்மையான கையெழுத்து; authentic signature.

   2. செலாவணியான ஆணை (பாத்திரம்); முதலியன; bill or bond that is valid and honoured.

   3. செல்லுச்சீட்டு பார்ப்ப;see {Տellu-c-cittա,}

     [செல் → செல்லும் + சீட்டு]

செல்லுஞ்செலவுக்கு

 செல்லுஞ்செலவுக்கு celluñjelavukku, கு.வி.எ. (adv.)

இன்றியமையாத செலவுக்குப்

   போதியதாக (இ.வ.);; sufficiently for actual or necessary expenses.

     [செல் → செல்லும் + செலவுக்கு]

செல்லுஞ்சொல்

செல்லுஞ்சொல் celluñjol, பெ. (n.)

   1. செல்வாக்கு பார்க்க;see {sel-wikku.}

   2. பிறர்க் கேற்க உரைக்கம் சொல்; word acceptable to others;winsome or convincing words.

     “செல்லுஞ்சொல் வல்லா னெதிர் தம்பியும்” (கம்பரா. நகர்நீங். 139);.

     [செல் + உம் + சொல்]

செல்லுபடி

 செல்லுபடி cellubaḍi, பெ. (n.)

   செல்லான தொகை (உ.வ.);; the amount paid.

செல்லுபடியாகு-தல்

செல்லுபடியாகு-தல் cellubaḍiyākudal,    5 செ.கு.வி. (v.i.)

   உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல்; be valid;be in force.

உன் அதிகாரமெல்லாம் இனி செல்லுபடியாகாது.

     [செல்லுபடி + ஆகு-.]

செல்லுபாக்கி

 செல்லுபாக்கி cellupākki, பெ. (n.)

செல்பாக்கி பார்ப்ப;see {sel-pâkki.}

     [செல் + பாக்கி]

செல்லுப்புலையர்

செல்லுப்புலையர் celluppulaiyar, பெ. (n.)

   உப்பு விற்கும் பிரிவினர்; people who sell salt.

     “தறிக்குறையுழு கோடு செல்லுப் புலையரும்” (பாண்டிய. செ.பத். பக். 29, பாலி. செ.);.

செல்லுப்பூச்சி

 செல்லுப்பூச்சி celluppūcci, பெ.(n.)

   துளையிடும் பூச்சி; borer insect.

     [செல்+பூச்சி]

செல்லுமதி

 செல்லுமதி cellumadi, பெ. (n.)

   செல்லாக வேண்டிய தொகை; balance due.

     [செல் + மதி. மதி = அறிவு, செல்வம்]

செல்லும்புள்ளி

செல்லும்புள்ளி cellumbuḷḷi, பெ. (n.)

   1. கொடுக்கல் வாங்கல் செய்யத் தகுதியுள்ளவன்; a man capable of money transaction.

   2. கொடுக்க வேண்டிய கடன் (நெல்லை.);; liabilities, debt.

     [செல் + உம் + புன்னி]

செல்லும்பேச்சு

 செல்லும்பேச்சு cellumbēccu, பெ. (n.)

செல்லுஞ்சொல் பார்க்க;see {sellai.iol.}

     [செல் + உம் + பேச்சு]

செல்லுலகு

செல்லுலகு cellulagu, பெ. (n.)

   மக்கள் செல்லுதற்குரிய உலகம், மறுமை; heaven, as the goal of humanity.

     “செல்லு லகறிந் தோர்” (மணிமே. 23: 134);.

     [செல் + உலகு]

செல்லூர்

செல்லூர் cellūr, பெ.(n.)

   துளு நாட்டில் கடற்கரைக்கு அருகில் இருந்த ஊர்; one of the small village in Thulunadu situated near Seashore, –

     [செல்(மழை மேகம்);+ஊர்]

 செல்லூர் cellūr, பெ.(n.)

   திருநள்ளாற்றி லிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள ஓர் ஊர்; a village,

   3 km west of Thirunallar.

     [செல்(மழை மேகம்);+ஊர்]

 செல்லூர் cellūr, பெ. (n.)

   மதிச்சயம் என்னும் ஊருக்கு மேற்கும், மதுரைக்கு வடக்குமுள்ள ஊர்; the village situated by westward of madiccayam and north word of Madurai.

     [செல்+ஊர்]

செல்லூர் கிழான்

 செல்லூர் கிழான் cellūrkiḻāṉ, பெ.(n.)

   செல்லூரில் வாழ்ந்த நிலக்கிழார்; name of a landlord in cellur village, |

     [செல்லூர்+கிழான்]

செல்லூர்க்கிழார்மகனார்பெரும்பூதங்கொற்றனார்

செல்லூர்க்கிழார்மகனார்பெரும்பூதங்கொற்றனார் cellūrggiḻārmagaṉārperumbūtaṅgoṟṟaṉār, பெ. (n.)

   அகநானூறு 250, குறுந்தொகை 218, 358, 368, நற்றிணை 30 ஆகிய பாடல்களின் ஆசிரியர்; a {Saigam} poet, author of Agam 250, {Kurundogai} 218,358, 368 and {Narrinai-30.}

     [செல்லூர்க்கிழார் + மகனார் + பெரும்பூதம் + கொற்றனார்]

செல்லூர்க்கோசிகன்கண்ணனார்

செல்லூர்க்கோசிகன்கண்ணனார் cellūrgācigaṉgaṇṇaṉār, பெ. (n.)

   அகம் 66ஆம் பாடலின் ஆசிரியர்; author of Agam 66.

     [செல்லூர் + கோசிகன் + கண்ணனார்]

செல்லெண்ணெய்

 செல்லெண்ணெய் celleṇīey, பெ. (n.)

   மரத்தைக் கறையான் அரிக்காமல் பாதுகாக்கப் பூகம் எண்ணெய்; anti termite oil for wood.

     [செல் + எண்ணெய்]

செல்லெழுது-தல்

செல்லெழுது-தல் celleḻududal,    5 செ.கு.வி. (v.i.)

   ஆவணத்தில் (பத்திரத்தில்); கடன் தீர்ந்ததாக எழுதிக் கொடுத்தல்; to cancel, as a bond, by super-scription.

     [செல் + எழுது-.]

செல்லெழுத்து

 செல்லெழுத்து celleḻuttu, பெ. (n.)

   உண்டியல் ஆவணம் முதலியவற்றில் வரவு வைக்கும் கையொப்பம் (இ.வ.);; endorsement of payment, as on bonds.

     [செல் + எழுத்து]

செல்லொப்பம்

 செல்லொப்பம் celloppam, பெ. (n.)

   ஆவணம் (பத்திரம்); முதலியவைகளில் இடம்பெறும் மேல் ஒப்பம் (யாழ்ப்.);; counter-signature.

     [செல் + ஒப்பம்]

செல்லொளி

 செல்லொளி celloḷi, பெ. (n.)

   வைடூரியம் (யாழ்.அக.);; cat’s eye.

     [செல் + ஒளி]

செல்வக்கடி

 செல்வக்கடி celvakkaḍi, பெ. (n.)

   பருங்கடி (யாழ்.அக.);; biting, in playfulness.

     [செல்வம் + கடி]

செல்வக்களிப்பு

 செல்வக்களிப்பு celvakkaḷippu, பெ. (n.)

   செல்வச் செழிப்பால் உண்டாகும் திமிர் (வின்.);; joy or elation due to prosperity.

     [செல்வம் + களிப்பு]

செல்வக்கிடப்பு

செல்வக்கிடப்பு celvakkiḍappu, பெ. (n.)

   செல்வமிகுதி; aboundance of wealth.

     ‘தன்னை எழுதிக் கொடுத்தால் பின்னை செல்வக்கிடப்புக் காட்டி மீட்க வொண்ணாதாப் போலே’ (ஈடு, 1. 3:1);.

     [செல்வம் + கிடப்பு]

செல்வங்காசி

 செல்வங்காசி celvaṅgāci, பெ. (n.)

   மதகிரி வேம்பு; Chittagong wood.

செல்வச்சிரஞ்சீவி

 செல்வச்சிரஞ்சீவி celvaccirañjīvi, பெ. (n.)

     (நீடுழி வாழ்க என சொல்லும்); ஒரு வாழ்த்துரை;

 a term of blessing.

     [செல்வம் + சிரஞ்சீவி]

செல்வச்செருக்க

 செல்வச்செருக்க celvaccerukka, பெ. (n.)

   செல்வ மிகுதியால் உண்டாகும் இறுமாப்பு; haughtiness due to wealth.

செல்வச்செருக்கால் அழிந்தோர் பலர்.

     [செல்வம் + செருக்கு]

செல்வநூல்

 செல்வநூல் celvanūl, பெ. (n.)

   செல்வப் பொருளைப் பற்றிய நூல் (இக்.வ.);; economics, political economy.

     [செல்வம் + நூல்]

செல்வந்தன்

 செல்வந்தன் celvandaṉ, பெ. (n.)

   மிகுந்த செல்வம் படைத்தவன்; rich person, plutocrat.

     [செல்வன் → செல்வந்தன்]

செல்வன்

செல்வன் celvaṉ, பெ. (n.)

   1. செல்வமுள்ளவன் பொருளுடையவன்; wealthy man.

     “செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்” (நாலடி, 298);.

   2. இறைவன்; lord.

     “ஆலமர் செல்வற்கு” (சிறுபாண். 97);.

   3. புத்தன் (சூடா.);;{Buddham.}

   4. மகன்; son.

     “செங்கதிர்ச் செல்வன் செய்த வென்றியை” (கம்பரா. மகுடபங்க. 45);.

   5. மணமாகாத இளைஞனின் பெயருக்கு முன் சேர்த்து வழங்கும் சொல்; a form of address for an unmarried young man.

     [செல்வம் → செல்வன்]

செல்வப்பிள்ளை

செல்வப்பிள்ளை celvappiḷḷai, பெ. (n.)

செல்வப்பிள்ளை பார்க்க;see {sela-p-pillai.}

     “அடியேனை நின் செல்வப் பிள்ளை யாக்கினையே” (அருட்பா, 4, திருவருட்பேறு 1, பக்.622);.

     [செல்வன் + பிள்ளை]

செல்வப்பெண்

செல்வப்பெண் celvappeṇ, பெ. (n.)

செல்லப் பெண் பார்க்க;see {sela-p-per.}

     “வியனகரிடத்திற் செல்வப் பெண் விளையாடும்” (பிரபுலிங். ஆரோகண. 39);.

     [செல்வம் + பெண்]

செல்வப்பேச்சு

 செல்வப்பேச்சு celvappēccu, பெ. (n.)

மழலைப் பேச்சு

 drattling speech as child. (சா. அக.);.

     [செல்வம்+பேச்சு]

செல்வப்பொருள்

 செல்வப்பொருள் celvapporuḷ, பெ. (n.)

   கல்வியின் மாறான பொருட் செல்வம்; wealth, riches, dist. from education.

     [செல்வம் + பொருள்]

செல்வமட்டி

 செல்வமட்டி celvamaṭṭi, பெ. (n.)

   கொடி வகை; a kind of creeper.

செல்வம்

செல்வம் celvam, பெ. (n.)

   1. மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு;   சொத்து; பொருள் வளம்; wealth, riches.

     “துகடீர் பெருஞ் செல்வம்” (நாலடி, 2);.

எவ்வளவு செல்வம் இருந்து என்ன பயன்.

   2. செழிப்பு, வளமை; immensity, prosperity, flourishing state;

     “சேனையின் செல்வ நோக்கி” (திருவிளை. மெய்க்கா. 29);.

   3. அழகு; beauty.

     “தேவரிற் பெற்றதஞ் செல்வக்கடி” (திருக்கோ. 14);.

   4. நுகர்ச்சி (தொல்.பொருள். 259, உரை);; enjoyment, pleasure, experience of happiness.

   5. மேலுலகம் (துறக்கம்); (அக.நி.);; Indra’s heaven.

   6. கல்வி (அக.நி.);; learning

   7. குழந்தை; child.

உங்கள் செல்வங்களின் வளமான வாழ்க்கைக்குச் சொத்துச் சேருங்கள்.

   ம. செல்வம்;   க. செல்வ, செல்வு (அருள்);;   தெ. செலுவமு, செலுவு (அழகு);;து. செலுவிகெ (அழகு);

     [செல் → செல்வம்]

செல்வராட்சி

 செல்வராட்சி celvarāṭci, பெ. (n.)

   பணக்காரர் மட்டுமே பங்கு பெறும் ஆட்சி; timocracy.

     [செல்வர் + ஆட்சி]

செல்வர்

 செல்வர் celvar, பெ. (n.)

   திருமால் கோயிலிலுள்ள திருபலி மூர்த்தி (இ.வ.);;{Sripali} in {Vişņu} temple.

     [செல்வம் → செல்வர்]

செல்வழி

செல்வழி celvaḻi, பெ. (n.)

   போகும்பாதை (இ.வா);; royal road.

ம. செல்வழி

     [செல் + வழி]

 செல்வழி celvaḻi, பெ. (n.)

   செல்லுதற்குரிய இலக்க; destination, goal.

     “தாஞ்செல்வுழி யெண்ணாத (நாலடி, 8);.

     [செல் + உழி]

செல்வழி மங்கலம்

 செல்வழி மங்கலம் celvaḻimaṅgalam, பெ.(n.)

   திருபெரும்புதூர் வட்டத்திலுள்ள சிற்றுார்; a village in Tiruperumbudur Taluk.

     [செல்வழிசாலை, பாதை)+மங்கலம்]

செல்வாக்கு

 செல்வாக்கு celvākku, பெ. (n.)

   பணம், மதிப்பு, பதவி முதலியவற்றால் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்ய அல்லது வழிநடத்த இருக்கும் திறன், நாடெங்குங் கிடைக்கும் பெருமதிப்பு (இ.வ.);; influence.

நாளுக்குநாள்.அவன் செல்வாக்குப் பெருகிடவே, அவன் தனிக்கட்சியைத் தொடங்கினான் (உ.வ.);.

     [செல் + வாக்கு]

செல்வாண்டான்

 செல்வாண்டான் celvāṇṭāṉ, பெ.(n.)

   திருநள் ளாற்று சிவன் கோயில் கல்வெட்டில் உள்ள பெயர்; name found in inscription of Thirunalăru temple.

     “தென்மலியுடையான் தேவன் செல்வாண்டான் (கல்);”

     [செல்வு அழகு, உயர்வு)+ ஆண்டான்]

செல்வானம்

 செல்வானம் celvāṉam, பெ. (n.)

   சில்லறை; small change.

     [சில்வானம் → செல்வானம்]

செல்வாரம்

 செல்வாரம் celvāram, பெ. (n.)

   நில உடைமையாளரும் பயிரிடுவோரும் பிரித்துக் கொள்ளும் சரிவாரம் (இ.வ.);; equal division of the produce of a field between the owner and the cultivator.

ம. செல்வாரம்

     [செம் → செவ் → வாரம்]

செல்வி

செல்வி celvi, பெ. (n.)

   1. திருமகள் (திவா.);; Lakshmi, as Goddess of Wealth.

   2. பொருள் உள்ளவள்; wealthy woman.

   3. தலைவி; lady of rank.

     “செல்வீ … உனக்குண்மை யியம்பினேமால்” (காஞ்சிப்பு. தலவி. 29);.

   4. மகள்; daughter.

   5. மணமாகாத பெண்ணைச்சுட்டும் முன்னடை; miss.

     [செல்வம் → செல்வி]

செல்விக்கை

செல்விக்கை celvikkai, பெ. (n.)

   1. செல்வம்; luxury, affluence.

   2. செட்டு; thriftiness.

     [செல்வம் → செல்விக்கை]

செல்விராசகேசரி

செல்விராசகேசரி celvirācaācari, பெ. (n.)

   1. திருவல்லம்

     ‘சிவன் கோயிலில் நெல் அளக்கப் பயன்பட்ட மரக்காலின் பெயர்;

 name of a measure for paddy, use in the {Śivan} temple at Tiruvallam,

     “காசொன்றுக்குச் செல்விராஜ கேஸரியால் நெல்லு நாற்கலமாக” (தெ.க.தொ. 3: கல். 57);.

     [செல்வி + (அரச→); ராச + கேசரி]

அளவுக் கருவிகளுக்கு அரசரி, இறைவர் பெயர் சூட்டும் பண்டைப் பழக்கத்தின் அடிப்படையில் எழுந்த பெயர்.

செல்வு

செல்வு celvu, பெ. (n.)

செல்வம் பார்க்க;see {Selvam.}

     “கோனாகி வீற்றிருந்து கொண்டாடுஞ் செல்வறியேன்” (திவ். பெருமாள். 4:7);

     [செல்வம் → செல்வு]

 செல்வு celvu, பெ.எ (adj)

   1. அழகு; beauty.

   2. காலம்; time.

   3. பருவம்; season.

   4. நிலைமை; state.

   5. மொக்கு; bud.

   6. மனம்; smell.

   7. செல்வரளி பார்க்க;see šev-v-arali.

   8. செம்புகுடத்தி;see Šembu-kudatti.

     [செல்-செலவு]

செல்வை-த்தல்

செல்வை-த்தல் celvaittal,    4 செ.கு.வி. (v.i.)

   கடன் முதலியவற்றிற்குத் தொகை செலுத்தி ஆவணத்தில் பதிதல்; to enter a credit in account;to endorse payment.

     [செல் + வை-.]

செள

 செள ceḷa, பெ. (n.)

     ‘ச்’ என்ற மெய்யொலியும், ‘ஒள’ என்ற உயிரொலியும் சேர்ந்தமைந்த உயிர் மெய்யெழுத்து;

 the compound of ‘c’, ‘S’ and ‘au’.

     [ச் + ஔ – சௌ]

செளக

 செளக ceḷaga, பெ.(n.)

   ஒடப்பாட்டில் முதலில் பாடப்படுவது; beginning song of the boatmen folk songs.

     [சோ ஒலிக் குறிப்பு) – செளக]

செளகர்

 செளகர் ceḷagar, பெ.(n.)

   ஒரு வகை மீன் இனம்; a kind of fish.

     [செவுக்கர்-செளகர்]

செளசின்

 செளசின் seḷasiṉ, பெ.(n.)

   இந்தியக் காடுகளில் காணப்படும் நான்கு கொம்புகள் கொண்ட உயிரினம்; a four horned wild animal.

     [சதுரம் (நான்கு); – செளரம்]

செளிம்பன்

 செளிம்பன் ceḷimbaṉ, பெ. (n.)

   சண்டித்தன முள்ளவன் (வின்.);; obstinate, unruly fellow.

     [செளிம்பு → செளிம்பன்]

செளிம்பு

செளிம்பு ceḷimbu, பெ. (n.)

   1. களிம்பு; verdigris, rust.

   2. விடாபிடி; obstinacy.

க. சிலுபு;தெ. சிலுமு

     [களிம்பு → சளிம்பு → செளிம்பு]

செளிம்பூறல்

 செளிம்பூறல் ceḷimbūṟal, பெ. (n.)

   களிம்புப் பற்று (யாழ்ப்.);; green rust on copper.

     [செளிம்பு + ஊறல்]

செளுகம்

 செளுகம் ceḷugam, பெ. (n.)

செழுகம் (உரி. நி.); பார்க்க;see {Selugam.}

     [செழுகம் → செளுகம்]

செளுகை

செளுகை ceḷugai, பெ.(n.)

   திருவாடானை வட்டத்துச் சிற்றூர்; a village in Tiruvādāna Taluk.

     [செழுவை-செளுகை]

 செளுகை ceḷugai, பெ. (n.)

செழுகம் பார்க்க;see {elugam,}

     “செளுகையு முடலட வொருவழி யறிவிலர் செறிவார்” (சிவதரு. 7: 56);.

     [செழுகம் → செளுகம் → செளுகை]

செளுவத்தி

 செளுவத்தி ceḷuvatti, பெ.(n.)

   திருவாடாணை வட்டத்திலுள்ள சிற்றூர்; avillage in Tiruvadapa Taluk.

     [செழுவை+அத்தி]

செளைப்பு

செளைப்பு ceḷaippu, பெ. (n.)

   சோர்வு; weariness, fatigue.

     “செளைப்பில்லாமலே வருஞ் சேனைகளை” (இராமநா. உயுத். 78);.

     [சளை → செளை → செனைப்பு]

செள்ளு

செள்ளு ceḷḷu, பெ. (n.)

   1. தெள்ளுப் பூச்சி (வின்.);; flea.

   2. உண்ணிவகை; tick.

ம. செள்ளு;க. சிக்காடு;பட. சிக்கட்டு;கோத. செக்;துட. தொள்;குட. செள்ளி

     [தெள்ளு → செள்ளு]

செள்ளை

செள்ளை ceḷḷai, பெ. (n.)

   1 உடன் பிறந்தவள்; sister.

   2. பெண்களுக்கு வழங்கப்பட்ட செல்லப்பெயர்; pet name of female.

தெ. செள்ள

     [செள்-செள்ளை]

செழி

செழி1 ceḻittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. தழைத்தல்; to thrive, flourish, grow well, as vegetation.

மழைக்குப் பின் செடி நன்கு செழித்து வளர்ந்துள்ளது.

   2. சிறப்புற்ற நிலையில் இருத்தல்; to prosper, as a kingdom family,country.

     “அடியேனுஞ் செழிக்க” (திருப்பு .218);.

   3. வளமிகுதல்; to be fertile.

செழித்த சீமை.

   4.அளவுக்கு மிஞ்சியிருத்தல் (இ.வ.);; to be superabundant.

ம. செழிக்க

     [செழு → செழி-.]

 செழி2 ceḻittal,    4 செ.கு.வி. (v.i.)

   முகமலர்ச்சி யுறுதல்; to be cheerful, as countenance.

செழித்தமுகமுள்ளவன்.

     [செழு → செழி-.]

 செழி3 ceḻidal, செ.கு.வி.(v.i.)

   வளர்தல்; to grow;

 to increase.

     “செழிகின்ற தீப்புகு விட்டிலின்” (திருவாச. 6:5);.

     [செழு → செழி-.]

செழிச்சி

 செழிச்சி ceḻicci, பெ. (n.)

செழிப்ப (வின்.); பார்க்க;see {Selippu}

     [செழி – செழிச்சி]

செழிஞர்

 செழிஞர் ceḻiñar, பெ. (n.)

செழியன் பார்க்க;see {Selyan.}

     [செழியன் → செழிஞர்]

செழித்தகல்

 செழித்தகல் ceḻittagal, பெ. (n.)

   கக்கான்கல் (வின்.);; lime-stone.

     [செழி → செழித்தல் + கல்]

செழிப்பம்

 செழிப்பம் ceḻippam, பெ. (n.)

செழிப்பு பார்க்க;see {Selippu.}

மறுவ. வளமை, செழுமை.

செழிப்பு

செழிப்பு ceḻippu, பெ. (n.)

   1. வளம்; fertility, flourishing, condition, prosperity.

   2. பொருள் நிறைவு; plenteousness, abundance, fulness.

ம. செழிப்பு

     [செழி → செழிப்பு]

செழிம்பு

 செழிம்பு ceḻimbu, பெ. (n.)

செழிப்பு பார்க்க;see {Selippu.}

     [செழிப்பு + செழிம்பு]

செழியன்

செழியன் ceḻiyaṉ, பெ. (n.)

   பாண்டியன்; king of the {Pändya} country.

     “வென்வேற் செழிய” (புறநா. 19:4);.

     [செழு → செழி → செழியன். செழு = செழுமை]

செழியவாணியர்

செழியவாணியர் ceḻiyavāṇiyar, பெ. (n.)

   தொண்டைமண்டலத்தில் வாழ்ந்திருந்த ஒருவகை எண்ணெய்ச் செக்கார்; a class of oil mongers who lived at {Tondai-mandalam.}

     “குன்றத்துர் செழிய வாணியர்களோ மானோம்” (தெ.க.தொ. 12, ப-1, கல். 53);.

     [செழியன் + வாணியர்]

செழு-த்தல்

செழு-த்தல் ceḻuttal,    4 செ.கு.வி. (v.i.)

   1. மிகுதல்; to become abundant.

   2. வளர்தல்; to grow.

   3. செழித்தல்; to be fertile.

     [செள் → செழு-.]

செழுகம்

செழுகம் ceḻugam, பெ. (n.)

   அட்டை; leech.

     “செழுகம்போலச் சுருங்கியும் விரிந்தும்” (சி.போ.பா. 4:2, பக்.264);.

     [செழு → செழுகம்]

செழுகாதனம்

செழுகாதனம் ceḻukātaṉam, பெ. (n.)

   ஓக வகை (தத்துவப். 109, உரை.);; a yogic posture.

செழுகை

செழுகை ceḻugai, பெ. (n.)

   சாணளப்பான் புழு; a worm.

     “திரனுறுஞ் செழுகைபோல்” (சிவதரு. 8:88);.

செழுங்கிரியம்

செழுங்கிரியம் ceḻuṅgiriyam, பெ.(n.)

புருவநடு:

 space between the eyebrows.

     “செண்டு வெளியிற்செழுங்கிரியத்திடைகொண்டுகுதிரை குசைசெறுத்தாரே'(திருமந்601);

     [செமும்+கிரியம்]

செழுசெழு-த்தல்

செழுசெழு-த்தல் seḻuseḻuttal,    4 செ.கு.வி. (v.i.)

   மிகுவளப்பமாதல் (நன். 395, மயிலை.);; to be extremely fertile.

     [செழு + செழு-.]

செழுஞ்சோறு

செழுஞ்சோறு ceḻuñjōṟu, பெ. (n.)

   கொழுத்த உணவு; rich, sumptuous meal.

     “தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோ றீத்து” (மணிமே. 18:117);.

     [செழு + சோறு]

செழுது

செழுது ceḻudu, பெ. (n.)

செழிப்பு பார்க்க;see {selippu}

     “செழுது மாதவி மலர்திசை மணக்க” (அருட்பா, 2, அவனத்தமு. 4);.

     [செழு → செழுது]

செழுத்து

செழுத்து ceḻuttu, பெ. (n.)

   வளமை; fertility.

     “செழுத்தாலதிர்த் தெழுந்து” (கோயிற்பு. பாயி. 9);.

     [செழு → செழுத்து]

செழுந்து

செழுந்து ceḻundu, பெ. (n.)

செழிப்பு,2 பார்க்க;see {elippu.}

   2. ஆயிரமரக்காற் செழுந்துபடச் செந்நெனி றைத்து” (சீவக. 2489);.

     [செழு → செழுந்து]

செழுப்பம்

 செழுப்பம் ceḻuppam, பெ. (n.)

   செழிப்பு; prosperity.

     [செழு → செழுப்பு → செழுப்பம்]

செழுமறை

 செழுமறை ceḻumaṟai, பெ. (n.)

   நெருப்பு (வின்.);; fire.

செழுமை

செழுமை ceḻumai, பெ. (n.)

   1. செழிப்பு (பிங்.);; fertility.

     “செழுமிடற்றின் மைவந்த கோன்” (திருக்கோ. 212);.

   2. மாட்சிமை (பிங்.);; greatness, excellence.

   3. அழகு (பிங்.);; beauty.

   4. தழைவு (வின்.);; verdancy verdure.

     [செழி → செழு → செழுமை]

செழும்பல்

 செழும்பல் ceḻumbal, பெ. (n.)

   செழிப்பு, வளமை; fertility,

     ‘செழும்பலான பயிர்’ (வின்.);.

     [செழுப்பு → செழும்பு → செழும்பல்]

செழுவர்

 செழுவர் ceḻuvar, பெ. (n.)

   பள்ளர் வகையினர்; a sub-division of the {Pallar} caste.

செழுவிதின்

செழுவிதின் ceḻuvidiṉ, வி.எ. (adv.)

   செம்மையாக; correctly, fully.

     “செழுவிதி னுணர்த்தி” (திருக்காsத். பு. 33: 15);.

     [செழு → செழுவிதின்]

செவ-த்தல்,

செவ-த்தல், cevattal,    3 செ.கு.வி. (v.i.)

   சிவத்தல்; செந்நிறமாதல்; redden, to be red.

     [சிவ → செவ-.]

செவகி

 செவகி cevagi, பெ. (n.)

   நிலக்குமிழ்; small Cashmere tree.

செவணை

 செவணை cevaṇai, பெ. (n.)

செவிடு (இ.வ.); deathess.

     [செவி + அணை]

செவத்தம்

 செவத்தம் cevattam, பெ. (n.)

   ஒருவகை முருங்கை மரம்; a kind of moringa tree.

செவந்தன்

 செவந்தன் cevandaṉ, பெ. (n.)

   பூவன் வாழை; a kind of plantain tree.

     [செம் → செவ் → செவ → செவந்தன்]

செவந்தரை

 செவந்தரை cevandarai, பெ. (n.)

   துலை (ஐப்பசி);, நளி (கார்த்திகை); சிலை (மார்கழி); மாதங்கள் ஒன்றில் கோலாட்டத்துடன் இளம் பெண்கள் கொண்டாடும் ஒரு விழா; a festival celebrated by girls with {kölättam.}

செவந்தி

 செவந்தி cevandi, பெ. (n.)

செவ்வந்தி பார்க்க;see {Sevvandi.}

   ம. செவந்தி;   : க. சேவந்தி;தெ. சேமந்தி.

     [செம் → செவ் → அந்தி – செவ்வந்தி → செவந்தி]

த. செவந்தி → Skt. {Sèvafi}

செவரியாடு

 செவரியாடு cevariyāṭu, பெ. (n.)

செவ்வரியாடு பார்க்க;see {Sevvari-y-ādu.}

     [செவ்வரியாடு → செவரியாடு]

செவலை

செவலை cevalai, பெ. (n.)

   1. செந்நிறமான விலங்கு; reddish animal, as a bull.

செவலைக்காளை.

   2. சிவப்பான ஆள்; person of light complexion.

   3. சிவப்பு நிறமுள்ளது; that which is red.

     [சிவலை → செவலை]

செவல்

செவல் ceval, பெ. (n.)

   1. சிவலை; ruddy person or animal.

   2. செம்மண் நிலம்; soil of light red colour.

செவனிலம்.

     [செம் → செவ் → செவல்]

செவல்காடு

 செவல்காடு cevalkāṭu, பெ. (n.)

செம்மண்

   நிலம்; red soil.

கடலை விளைச்சலுக்கு செவல்காடு சிறந்தது (உ.வ.);

மறுவ. செவ்வல், செவல்தரை, செம்மண் (பூமி); நிலம்.

     [செவல் + காடு]

செவல்தரை

 செவல்தரை cevaltarai, பெ. (n.)

   செம்மண் நிலம்; red soil.

மறுவ. செவல்காடு, செவ்வல்

     [செவல் + தரை]

செவி

செவி1 cevi, பெ. (n.)

 ear.

     “ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே” (தொல். பொருள். 582);. செவிகிழிவது போல ஓசை வருகிறது.

   2. கேட்கை; hearing.

   3. ஏனத்தின் காது வளையம்; ear shaped handle of a vessel.

     “விழுத்தகு மணிச் செவி . . . படியகம்” (சீவக. 2472);.

   4. வீணையின் முறுக்காணி; the screw of a lute.

மறுவ. காது

   ம. செவி;க. கிவி, கிமி;தெ. செவி;து. கெபி;கோத. கெவ்;துட. கிவ்ய்;குட. கெவின்;கோண். கவீ;கூ. க்ரிள;நா. கெவ்;பர். கொகொன்;குரு. கெம்தா;மா. க்வெத்வு;பிரா. கப்;பட. கிவி{§evi,} Tam; chevi. Mal. – Tel., the ear, Can. kivi, Tulu keppi. Comp. {šrava,} the ear, Sans., from {šru,} to hear (CGDFL. 584);.

     [செவிள் → செவி.]

 செவி2 cevi, பெ. (n.)

   ஒருவிரல மழை; a unit of rainfall one inch.

செவி-த்தல்

செவி-த்தல் cevittal, செ.கு.வி. (v.i)

   1 செவிக் கொள்ளுதல்

 to hear.

   2. பாடங்கேட்டல்; to listen lesson.

     ‘குவித்து மனத்தைக் குவிந்துள்ளே ஓங்கிப் செவித்தும் பெறுவது எவன்” (ஒளவைக்குறள். 284);

     [செவ்வு-செவி]

செவிகடி-த்தல்

செவிகடி-த்தல் cevigaḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

செவிதின்னு-பார்க்க;see {sewi-dimmu.}

     [செவி + கடி-.]

செவிகொடு-த்தல்

செவிகொடு-த்தல் cevigoḍuttal,    4 செ.கு.வி. (v.i.)

   கேட்டற்குக் காது கொடுத்தல்; to give ear, attend, listen.

     “செவி கொடுத்துங் கேட்கலார்” (நாலடி, 322);.

ஆசிரியரின் உரைக்குச் செவி கொடுக்க வேண்டும் (உ.வ.);

ம. செவிகொடுக்க

     [செவி + கொடு-.]

செவிகொள்(ளு)-தல்

செவிகொள்(ளு)-தல் cevigoḷḷudal,    13 செ.குன்றாவி. (v.t.)

   1. கேட்டல்; to hear, listen to.

     “கட்டுரை செவிகொளா” (நீதிநெறி, 31);.

பெரியோர் சொல்லைச் செவி கொள்ள வேண்டும் (உ.வ.);

     [செவி + கொள்-.]

செவிக் கோனை

 செவிக் கோனை cevikāṉai, பெ.(n.)

   திருவோத்துர்கோயிலுக்குப்படையல் (சாதம்); வழங்கியவரின் பெயர்; name of a person who made food offering in Tiruvottur temple.

     [ஒருகா. செவ்வி+கோனன்]

செவிக்கரப்பன்

 செவிக்கரப்பன் cevikkarappaṉ, பெ. (n.)

   காதிலுண்டாகும் கரப்பான் நோய்; eczema of the ear.

     [செவி + கரப்பான்]

செவிக்காயம்

 செவிக்காயம் cevikkāyam, பெ. (n.)

   காதுக் குறும்பி (இ.வ.);; car wax.

மறுவ. காதுப்பீ, காதழுக்கு

     [செவி + காயம். காயம் = செறிவான அழுக்கு]

செவிக்குத்து

 செவிக்குத்து cevikkuttu, பெ. (n.)

   காது நோவு; ear-ache.

ம. செவிக்குத்து.

     [செவி + குத்து]

செவிக்குறடு

 செவிக்குறடு cevikkuṟaḍu, பெ. (n.)

   காதிற்குள் செலுத்துங்கருவி; car forceps for extracting foreign bodies.

     [செவி + குறடு]

செவிக்குறும்பி

 செவிக்குறும்பி cevikkuṟumbi, பெ. (n.)

காதழுக்கு

 earwax.

     [செவி+குறும்பி]

செவிக்குழல்

 செவிக்குழல் cevikkuḻl, பெ. (n.)

   செவிக்குள் வழி; ear cavity.

     [செவி + குழல்]

செவிக்குழி

 செவிக்குழி cevikkuḻi, பெ. (n.)

   காதினுட் பக்கமுள்ள பள்ளம்; labyrinth of the ear.

     [செவி + குழி]

செவிக்கெட்டு-தல்

செவிக்கெட்டு-தல் cevikkeṭṭudal,    5 செ.கு.வி. (v.i.)

   கேள்வியிற்படுதல்; to reach one’s cars.

     [செவி(க்கு); + எட்டு-.]

செவிக்கேறு-தல்

செவிக்கேறு-தல் cevikāṟudal,    5 செ.கு.வி. (v.i.)

   1. கேள்வியிற்படுதல் (யாழ்.அக.);; to reach one’s ears.

   2. கேட்டற் கினிதாயிருத்தல் (இ.வ.);; to be pleasing to one’s ears.

புலவர் பேச்சை அவன் செவிக்கேற்றினான் (உ.வ.);.

     [செவிக்கு + ஏறு-.]

செவிசாய்-த்தல்

செவிசாய்-த்தல் cevicāyttal,    4 செ.கு.வி (v.i.)

   1. சொல்வதைக் கேட்கச் செவி தாழ்த்தல்; to incline one’s ear.

     “இகுத்த செவி சாய்த் தினியிளிப் பட்டன” (கலித். 95);.

தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிருவாகம் செவி சாய்க்க மறுக்கிறது.

   2. விருப்பமுடன் கேட்டல்; hearing with interest.

பெரியோர் கூற்றுக்குச் செவி சாய்க்கவேண்டும் (உ.வ.);.

     [செவி + சாய்-.]

செவிச்சளி

 செவிச்சளி ceviccaḷi, பெ. (n.)

   காதினின்று வடியும் சளி நீர்; mucous discharge from the ear. (சா.அக.);

     [செவி+சளி]

செவிச்சுவை

செவிச்சுவை ceviccuvai, பெ. (n.)

   செவியால் நுகரப்படும் இருவகைச் சுவை; two kinds of pleasure heard by the car.

     [செவி + சுவை]

     ‘செவியால் நுகரப்படும் சுவைகளாவன’: சொற் சுவையும், பொருட்சுவையும். அவற்றுள் சொற்கவை குணம், ஒப்பனை (அலங்காரம்); என இரு வகைத்து. பொருட்சுவை காமம், நகை, இரக்கம், வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, அமைதி என ஒன்பது வகைத்து (குறள், 420 உரை.);.

செவிச்செல்வம்

செவிச்செல்வம் ceviccelvam, பெ. (n.)

   கேள்வியறிவாகிய பெருஞ்செல்வம்; the wealth of knowledge acquired through the ear.

     “செல்வத்துட் செல்வஞ் செவிச் செல்வம்” (குறள், 411);.

     [செவி + செல்வம்]

செவிச்சொல்

 செவிச்சொல் ceviccol, பெ. (n.)

   காதில் கமுக்கமாக (இரகசியமாக); ஒதுகை; whispering.

     [செவி + சொல்]

செவிடன்

 செவிடன் ceviḍaṉ, பெ. (n.)

   காது கேளாதவன் (திவா.);; deaf man.

ம. செவிடன், செகிடன்;தெ. செவிடி;க., பட. கிவட்;கோத. கெவ்டன்;கொலா. செவட்க்

     [செவிடு + அன்]

செவிடன்காடு

 செவிடன்காடு ceviḍaṉkāḍu, பெ.(n.)

   அறந்தாங்கி வட்டத்திலுள்ள சிற்றுார்; name of a village in Arantangi Taluk.

     [செவிடன்+காடு]

செவிடி

 செவிடி ceviḍi, பெ. (n.)

   காது கேளாதவள்; deaf woman.

   க. கிவுடி;பட. கிவடி

     [செவிடன் → செவிடி]

செவிடு

செவிடு1 ceviḍu, பெ. (n.)

   1. கேட்கும் திறன் இல்லாமை, காது கேளாமை,

 deatness.

     “செவிடா யொழிகென் செவி” (பு.வெ. சிறப்.3);.

விபத்தில் அவனுக்குக் காது செவிடாகி விட்டது.

   2. காது கேளாதவன்-வள்-து; deaf person or animal.

     “கூனுங் குறளு மூமுஞ் செவிடும்” (மணிமே. 12:97);.

சத்தமாகச் சொல்ல வேண்டாம், நான் ஒன்றும் செவிடு இல்லை.

ம. செவிடு, செகிடு;க., பட கிவடு

     [செவி → செவிடு]

 செவிடு2 ceviḍu, பெ. (n.)

   1. செவியை ஒட்டிய கன்னம்; cheek.

உன் செவிட்டிலே அடிப்பேன் (இ.வ.);.

   2. காதணி வகை; an ear-ornament.

     [செகிள் → செவின் → செவிடு]

 செவிடு3 ceviḍu, பெ. (n.)

   ஆழாக்கில் ஐந்தில் ஒன்றாகிய அளவு (தொல். எழுத்து. 165, உரை);; a small measure consisting of 360 grains of paddy = 1/5 ollock.

     “மிளகமுது இரண்டரைச் செவிடும்” (தெ.க.தொ. 154);.

ம. செவிடு

     [சுவடு → செவிடு. சுவடு = அளவு]

செவிடுசெல்(லு)-தல்

செவிடுசெல்(லு)-தல் seviḍuselludal,    13 செ.கு.வி. (v.i.)

செவிடுபடு- பார்க்க;see {Sevidu-padu-.}

     “செவிடுசெல்லக் கிழிந்தன திசைகள்” (கம்பரா. நாகபாச. 104);.

     [செவிடு + செல்(லு);-.]

செவிடுபடு-தல்

செவிடுபடு-தல் ceviḍubaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   1.

   ஒசை மிகுதியால் காது கேளாது போதல்; to be deafened with noise.

     “செவி செவிடுபடுபு முடிக ளதிர” (பரிபா. 2:39);.

   2. செவிடெறி- பார்க்க;see {Seviders}

தெ. செவுடுபடு.

     [செவிடு + படு-.]

செவிடெறி-தல்

செவிடெறி-தல் ceviḍeṟidal,    2 செ.கு.வி. (v.i.)

   உரத்த வோசையால் அலைவுறுதல்; to be stunned with deafening noise.

     “திசைகளோடு மலை செவி டெறிந்து” (கம்பரா. நாகபாச. 61);.

     [செவிடு + எறி-.]

செவிட்டாம்பாம்பு

 செவிட்டாம்பாம்பு ceviṭṭāmbāmbu, பெ. (n.)

செவியான் பார்க்க;see {ševiyān}

     [செவிடு → செவிட்டான் + பாம்பு]

செவிட்டு

செவிட்டு1 ceviṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   கொல்லுதல் (பிங்.);; to crush, destroy, kill.

மறுவ. கோறல், சாகடித்தல்

     [சவட்டு → செவிட்டு-.]

 செவிட்டு2 ceviṭṭudal,    5 செ.குன்றாவி. (v.i.)

   கூர்ந்து நோக்குதற்குக் கண் முதலியவற்றை ஒரு பக்கமாகச் சாய்த்தல்; to incline to one side, as one’s eyes in examining closely.

     “விசயனென்பான் வெங்கணை செவிட்டி நோக்கி” (சீவக. 2191);.

மறுவ. தலை சாய்த்தல், சிறக்கணித்துக் கேட்டல்,

     [சாய் – சார் → சார்த்து → சாட்டு →செவிட்டு-.]

 செவிட்டு3 ceviṭṭu, பெ. (n.)

   கன்னம்; cheek.

     [செவிடு → செவிட்டு]

செவிட்டுப்பயல்

 செவிட்டுப்பயல் ceviṭṭuppayal, பெ. (n.)

செவிடன் பார்க்க;see {ševidan. }

     [செவிடு + பயல்]

செவிட்டுவிரியன்

 செவிட்டுவிரியன் ceviṭṭuviriyaṉ, பெ. (n.)

   விரியன் பாம்புவகை; russell’s viper.

     [செவிடு + விரியன்]

செவிதின்(னு)-தல்

செவிதின்(னு)-தல் cevidiṉṉudal,    14 செ.குன்றாவி. (v.t.)

   கமுக்கமாக (இரகசியமாக); ஒதுதல் (வின்.);; to whisper.

     [செவி + தின்-.]

செவித்தாரை

 செவித்தாரை cevittārai, பெ. (n.)

   காதின் வழி; auditory passage of the ear (சா.அக.);

     [செவி+தாரை]

செவித்துறண்டி

 செவித்துறண்டி cevittuṟaṇṭi, பெ. (n.)

   குறும்பி வாங்கி (இ.வ.);; ear-pick.

ம. செவித்தோண்டி

     [செவி + துறண்டி]

செவித்துவாரம்

செவித்துவாரம் cevittuvāram, பெ. (n.)

   1. செவியின் துளை; cavity of the ear.

   2. காதின் வெளி அல்லது உட்துளை; the externalandorinternal opening of the ear.

   3. நடுக்காது

 middle ear. (சா.அக.);

     [செவி+துவாரம்]

செவிநிறக்கல்

 செவிநிறக்கல் ceviniṟakkal, பெ. (n.)

   மாந்தளிர்க்கல் (வின்.);; a stone.

     [செவ்வி → செவி + நிறக்கல்]

செவிபடுவாதம்

 செவிபடுவாதம் cevibaḍuvātam, பெ. (n.)

   காது கேளாமற் போகச் செய்யும் நோய் வகை (வின்.);; disease of the ear causing deafness.

     [செவி + படு + வாதம்]

செவிபிடி-த்தல்

செவிபிடி-த்தல் cevibiḍittal,    4 செ.குன்றாவி. (v.t.)

   விளையாட்டில் வெற்றிக் குறியாகத் தோற்றவன் காதைப்பிடித்தல் (வின்.);; to seize one by the ear in token of winning, as in games.

     [செவி + பிடி-.]

செவிப்படு-தல்

செவிப்படு-தல் cevippaḍudal,    20 செ.கு.வி. (v.i.)

   கேட்கப்படுதல்; to be heard.

     “ஆபரண வொலி செவிப்படா நின்றது” (ஈடு, 10. 6:6, வியா. பக். 200);.

     [செவி + படு-.]

செவிப்படுத்து-தல்

செவிப்படுத்து-தல் cevippaḍuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   காதில் மெல்ல அறிவித்தல்; to inform, as news.

     [செவி + படுத்து-.]

செவிப்பண்

 செவிப்பண் cevippaṇ, பெ. (n.)

   நீர்க்கரகத்தை அடக்கி வைக்கப் பயன்படும் பிரம்புக் கூடை (வின்.);; a cane basket for keeping water-ewer.

     [செவ்வி → செவி + பண்]

செவிப்பறை

 செவிப்பறை cevippaṟai, பெ. (n.)

   உட்பகுதியில் ஒலியை உணர்வதற்காக இருக்கும் மெல்லிய தோலாலான உறுப்பு; cardrum.

     [செவி + பறை.]

செவிப்பறைபறை-தல்

செவிப்பறைபறை-தல் cevibbaṟaibaṟaidal, செ.குன்றாவி. (v.t.)

   மந்திர முதலியவற்றைப் பிறர் செவியிற்படாது கமுக்கமாக (இரகசியமாக); ஒதுதல்; to mutter inaudibly, as mantras.

     ‘செவிப்பறை பறைந்து ஜபிக்கிறது என்ப’ (ஈடு, 3. 5:5.);.

     [செவிப்பறை + பறை-.]

செவிப்பாடு

செவிப்பாடு1 cevippāṭu, பெ. (n.)

   காதிற் புகுகை (ஈடு, 9. 9:1);; entering the ear.

     [செவி + பாடு]

 செவிப்பாடு2 cevippāṭu, பெ. (n.)

   கேள்வி யின்பம்; harmony, as of music.

     ‘இசைக்கு எவ்வளவு செவிப்பாடுண்டு அவ்வளவும் பாதகமாம்’ (ஈடு, 9. 9:1);.

     [செவ்வி + பாடு.]

செவிப்பாம்ப

செவிப்பாம்ப1 cevippāmba, பெ. (n.)

செவியான் (இ.வ.); பார்க்க;see {ševiyān.}

ம. செவிப்பாம்பு

     [செவி + பாம்பு]

செவிப்பாம்பு

செவிப்பாம்பு2 cevippāmbu, பெ. (n.)

   மாட்டுக் குற்றவகை (பெரிய மாட். 20);; A blemish in cattle.

செவிப்புற்று

 செவிப்புற்று cevippuṟṟu, பெ. (n.)

   காதுநோய் வகை (வின்.);; a kind of eruption about the ears.

     [செவி + புற்று]

செவிப்புலன்

 செவிப்புலன் cevippulaṉ, பெ. (n.)

   காதாலுணரும் ஓசையுணர்வு; sense of hearing.

     [செவி + புலன்]

செவிப்புலன் ஒடுங்கல்

செவிப்புலன் ஒடுங்கல் cevippulaṉoḍuṅgal, பெ. (n.)

   1. காதடைத்தல்; deaf.

   2. காதால் அறியும் ஓசை அற்றுப்போகை

 loss of sense of hearing.

   3. ஒகத்தில் ஐம்புலன் ஒடுங்குங் காலத்து வெளி சத்தம் கேளாதிருக்கை,

 that stage in the yoga practice when the external sound reaching the ears is not perceived owing to the conquering of the five sense. (சா.அக.);

     [செவி+புலன்+ஒடுங்கல்]

செவிப்பூ

செவிப்பூ cevippū, பெ. (n.)

   மகளிர் காதணி வகை; an ear-ornament of women.

     “தோடே செவிப்பூவே” (திவ். திருப்பா. 27);.

     [செவி + பூ]

செவிப்பூரான்

 செவிப்பூரான் cevippūrāṉ, பெ. (n.)

செவியான் (வின்.); பார்க்க;see {ševiyān.}

ம.செவிப்பூரம்

     [செவி + பூரான்]

செவிமடல்

செவிமடல் cevimaḍal, பெ. (n.)

   காதின் வெளியுறுப்பு; external ear. திருடன் அவள் செவிமடலோடு நகையை அறுத்துக் கொண்டு போய் விட்டான்.

   2. செவிமலர் (இ.வ.); பார்க்க;see {Sevi-malar.}

     [செவி + மடல்]

செவிமடு-த்தல்

செவிமடு-த்தல் cevimaḍuttal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கேட்டல்; to drinkin by the ears, hear.

     “மாருதி வினய வார்த்தை செவிமடுத் தமிழ்தின் மாந்தி” (கம்பரா. விபீடண. 106);.

அந்த இனிய பாடலைக் கொஞ்சம் செவிமடுத்துக் கேள்.

     [செவி + மடு-.]

செவிமத்திபம்

 செவிமத்திபம் cevimattibam, பெ. (n.)

செவி மந்தம் (இ.வ.); பார்க்க;see {Sevi-mandam.}

     [செவி + மத்திபம்]

செவிமந்தம்

 செவிமந்தம் cevimandam, பெ. (n.)

   காதுமந்தம் (யாழ்.அக.);; dullness of hearing, deafness.

     [செவி + மந்தம்]

செவிமறை

செவிமறை cevimaṟai, பெ. (n.)

   செவியில் மறுவையுடைய எருது; bull having a spot in its ears.

     “செவிமறை … நுண்பொறி வெள்ளை” (கலித். 101);.

     [செவி + மறை]

செவிமலர்

செவிமலர் cevimalar, பெ. (n.)

   1. மகளிர் காதணி வகை (சூடா.);; an ear-ornament of women.

   2. தெய்வத்திருமேனிகளில் அணிவிக்கும் செவியணி; gold or silver ears put on idols on special occasions.

   3. காதுநோய் நீங்கியது பற்றி வேண்டுதலாகச் செலுத்தும் செவியுருவம்; gold or silver ears presented as votive offerings by persons recovering from diseases of the ear.

     [செவி + மலர்]

 செவிமலர்2 cevimalar, பெ. (n.)

உட்செவி

 inner ear.

     [செவி + மலர்]

செவிமலர்ப்பூ

 செவிமலர்ப்பூ cevimalarppū, பெ. (n.)

   மகளிர் காதணி வகை; an ear-ornament of women.

     [செவி + மலர்ப்பூ]

செவிமாட்டு-தல்

செவிமாட்டு-தல் cevimāṭṭudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   பிறர் காதில் வலிய நுழைத்தல்; to force into one’s car.

     “கற்றன கல்லார் செவி மாட்டி” (நீதிநெறி. 25);.

     [செவி + மாட்டு-.]

செவியடி

செவியடி1 ceviyaḍittal,    4 செ.கு.வி. (v.i.)

   செவியினை ஆட்டுதல் (வின்.);; to flap the ears, as an elephant.

     [செவி + அடி-.]

 செவியடி2 ceviyaḍi, பெ. (n.)

   1. காதின் அடிப்பகுதி; temple, the part about the front of the ear.

     “கண்டிடுஞ் செவியடிப்பேர் சூளிகை” (சூடா. 3:8);.

   2. களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டரை வைத்திருந்த இடம் (தஞ்சை.);; place where grain is temporarily stored on the threshing-floor immediately after it is threshed.

     [செவி + அடி]

செவியன்

 செவியன் ceviyaṉ, பெ. (n.)

   நீண்ட செவியுடைய முயல் (நாஞ்.);; hare.

     [செவி → செவியன்]

செவியம்

செவியம்1 ceviyam, பெ. (n.)

செவ்வியம் (வின்.); பார்க்க;see {Sevviyam.}

ம. செவ்வியம்

     [செவ்வியம் → செவியம்]

செவியறிவு

செவியறிவு ceviyaṟivu, பெ. (n.)

   செவியறிவுறூஉ பார்க்க; see {evi-y-ariyuriu.}

     “ஒண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை” (காரிகை. செய். 15);.

     [செவி + அறிவு]

செவியறிவுறுத்து-தல்

செவியறிவுறுத்து-தல் ceviyaṟivuṟuddudal,    5 செ.குன்றாவி. (v.t.)

   நல்லறிவு புகட்டுதல்; to give active, counsel.

     “மந்திரத்தை நல்கி. . . செவியறிவுறுத்தல் செய்தான்” (கந்தபு. அகரர்யாக.33);.

     [செவியறிவு + உறுத்து-.]

செவியறிவுறூஉ

செவியறிவுறூஉ ceviyaṟivuṟūu, பெ. (n.)

   1. அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கச் கூறும் அறம்; instruction in the path of virtue, given to kings, etc.

     “வாயுறை வாழ்த்தே செவியறிவுறூஉ” (தொல்.பொருள். 423);.

   2. அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை (பு.வெ. 9:33);; theme of instructing the king in the path of virtue.

   3. செவியறிவுறூஉ மருட்பா (தொன். 283); பார்க்க;see {sewi-y-atiV-urtiu-maru!-pa.}

     [செவியறிவு + உறூஉ]

செவியறிவுறூஉமருட்பா

செவியறிவுறூஉமருட்பா ceviyaṟivuṟūumaruṭpā, பெ. (n.)

   அரசர்க்கு அறமுறைகளைக் கூறுவதும் மருட்பாவால் அமைந்ததுமாகிய ஒரு சிற்றிலக்கிய வகை (காரிகை, செய். 15, உரை);; a kind of poem in {marutpā} metre instructing the king in the path of virtue.

     [செவியறிவு + உறூஉ + மருட்பா]

செவியறை

செவியறை ceviyaṟai, பெ. (n.)

   1. காது அறுபட்டவன் (நன். 139, மயிலை);; one whose ear has been cut off or mutilated.

   2. காது கேளாதவன் (வின்.);; a deaf person.

மறுவ. செவிடன்

     [செவி + அறை. அறு → அறை]

ஒ.நோ. கண்ணறை, மூக்கறை

செவியான்

 செவியான் ceviyāṉ, பெ. (n.)

   காதுக்குள் புகுந்து துன்புறுத்தும் சிறு பூரான் வகை; a kind of small centipede believed to get into the ears and cause pain.

     [செவி → செவியான்]

செவியிலி

செவியிலி ceviyili, பெ. (n.)

செவியறை (நன். 283, மயிலை.); பார்க்க;see {Sevi-y-arai,}

     [செவி + இலி. ஒ.நோ. கண்ணிலி]

செவியுணவு

செவியுணவு ceviyuṇavu, பெ.(n.)

   செவியுணவாகிய கேள்வி; listening; (wisdom – food);.

செவியுணவின் கேள்வி உடையார் (குறள். 413);

     [செவி+ உணவு]

செவியுறு-தல்

செவியுறு-தல் ceviyuṟudal,    4 செ.குன்றாவி. (v.t.)

   கேட்டல், காதுகொடுத்துக் கேட்டல்; to hear, listen to.

     “யாது மொன்று செவியுற்றிலார்” (கம்பரா. நாகபாச. 68);.

வ. ச்ரு

     [செவி + உறு-.]

செவியுறை

செவியுறை ceviyuṟai, பெ. (n.)

   1. காதுக்கிடும் மருந்து; medicine for the ear.

   2. அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக்கூறும் அறம் (நீதி);; instruction in the path of virtue, given to kings etc.

     “செவியுறை தானே, பொங்குதலின்றிப் புரையோர் நாப்ப, ணவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே” (தொல்.பொருள். 426);.

     [செவி + உறை]

செவியுறையங்கதம்

செவியுறையங்கதம் ceviyuṟaiyaṅgadam, பெ. (n.)

   அரசர்க்கு உறுதி கூறும் நோக்குடன் அறிஞர் கூறும் வகைச் செய்யுள் (தொல். பொருள். 440, உரை);; a kind of derisive verse reproving a king for his faults with a view to reclaiming him to a sense of his duty.

     [செவியுறை + அங்கதம்]

செவியேறு

செவியேறு ceviyēṟu, பெ. (n.)

கேள்வி: hearsay.

     ‘அவன் சொல்லக் கேட்ட செவியேற்றாலே சொல்லுகிறாளிறே’ (ஈடு, 10. 3:1);.

     [செவி + ஏறு]

செவிரம்

 செவிரம் ceviram, பெ. (n.)

   ஒரு வகைப் பாசி (திவா.);; a class of aquatic plant.

செவிலி

செவிலி1 cevili, பெ. (n.)

   1.செவிலித்தாய் பார்க்க;see {evili-t-ty.}

     “தாயெனப் படுவோள் செவிலி யாகும்” (தொல். பொருள் 124);.

   2. முன்பிறந்தாள் (பிங்.);; elder sister.

 செவிலி2 cevili, பெ. (n.)

   நோயர்களைப் பேணுதல், மருத்துவர்க்குதவுதல் போன்ற பணிகளைச் செய்யும் ஊழியர்; nurse.

அறுவைச் சிகிச்சையின் போது பல செவிலியர் உதவி புரிந்தனர்.

செவிலித்தாய்

 செவிலித்தாய் cevilittāy, பெ. (n.)

   ஐவகைத் தாயருள் வளர்ப்புத் தாய் (பிங்.);; foster-mother, one of {al-vagai-t-täyar}

     [செவிலி + தாய்]

செவிலிமேடு

 செவிலிமேடு cevilimēṭu, பெ.(n.)

   செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்; a village in Chengalpattu.

     [ஒருகா. செவ்வல்+மேடு]

செவிலியர்

செவிலியர்1 ceviliyar, பெ. (n.)

   குழந்தையின் வளர்ப்புத் தாயர்; those who bring up children of rich people.

மறுவ. செவிலித்தாய்

     [செவிலி → செவிலியர்]

 செவிலியர்2 ceviliyar, பெ. (n.)

மறுவ. செவிலித்தாய்

     [செவிலி → செவிலியர்]

செவிள்

 செவிள் ceviḷ, பெ. (n.)

   காதின் மேற்புறத் துறுப்பு; tragus.

ம. செள்ள

     [செகில் → செவிள்]

செவிவழிசெய்தி

 செவிவழிசெய்தி sevivaḻiseyti, பெ. (n.)

   ஒருவர் கூற மற்றவர் கேட்பது என்ற முறையால் வழங்கிவரும் செய்தி; that which is orally transmitted.

செவிவழிச் செய்தியில் உண்மை உருமாறியிருக்கும்.

     [செவிவழி + செய்தி]

செவுரொட்டி

செவுரொட்டி cevuroṭṭi, பெ. (n.)

   மண்ணீரல் (இங்.வை. 42);; spleen.

     [சுவரொட்டி → செலுரொட்டி]

செவுள்

 செவுள் cevuḷ, பெ. (n.)

   மீனின் மூச்சுறுப்பு (வின்.);; gills.

ம. செளுக்க

     [செகிள் → செவுள்]

நீரிலுள்ள காற்றை இழுப்பதற்கு மீனுக்கு இயற்கையாகவே அமைந்த மூச்சுறுப்பு. இது அதன் கழுத்தின் இரண்டு பக்கமும் இருக்கும்.

செவுள் இதழ்

 செவுள் இதழ் cevuḷidaḻ, பெ.(n.)

மீனின் காதுப்பகுதி,

 girake.

     [செவி +உள்+இதழ்]

செவுள் இழை

 செவுள் இழை cevuḷiḻai, பெ.(n.)

   மீனின் காதுப் பகுதியில் ஒளிரும் இழை; gill filament.

     [செவி +உள்+இழை]

செவுள்சிதைவு

 செவுள்சிதைவு cevuḷcidaivu, பெ. (n.)

   செவுள் சிதைவால் வரும் நோய்; branchial disease.

     [செவுள் + சிதைவு]

இந்நோய் மீன்களுக்கு மட்டும் வரும்.

செவுள்மூடி

 செவுள்மூடி cevuḷmūṭi, பெ. (n.)

   மீனின் செவுள் பகுதிகளை மூடும் உறுப்பு; operculum.

     [செவுள் + முடி]

செவுள்வலை

 செவுள்வலை cevuḷvalai, பெ. (n.)

   மீன் பிடிக்கும் வலைகளில் ஒன்று; gill net.

     [செவுள் + வலை]

செவேரெனல்

 செவேரெனல் cevēreṉal, பெ. (n.)

   சிவந்திருத்தற் குறிப்பு; expr. denoting redness.

     [செம் → செவ் → செவ்வேர் + எனல்]

இரட்டுரையாகச் செக்கச் செவரேன்று என்ற வழக்கும் வழக்கில் உள்ளது. ஒ.நோ. கன்னங் கரேலென்று. பிறந்த குழந்தை, செக்கச் செவேரென்று இருந்தது. (உ.வ.);.

செவை

 செவை cevai, பெ. (n.)

செவ்வை பார்க்க;see{sewai:}

     ‘நீ செவைக்கு வரமாட்டாய்’ (வின்.);.

     [செவ்வை → செவை]

செவ்வகத்தி

செவ்வகத்தி cevvagatti, பெ. (n.)

   மரவகை (பதார்த்த. 521);; red flowered West Indian peatree.

   2. செடிவகை (L.);; scarlet-flowered peatree of Texas.

க. செம்பகசெ

     [செம் → செவ் + அகத்தி]

செவ்வகம்

 செவ்வகம் cevvagam, பெ. (n.)

   நீண்ட சதுரம்; rectangle.

     [செம் → செவ் + அகம்]

செவ்வகில்

 செவ்வகில் cevvagil, பெ. (n.)

   தூணாமரம்; moulmein cedar.

க. செம்பகிலு

     [செம் + அகில்]

செவ்வட்டை

செவ்வட்டை1 cevvaṭṭai, பெ. (n.)

   உடலின் ஒரத்தில் சிவப்புப் பட்டைகள் கொண்டதும் சிறு கால்களால் ஊர்ந்து செல்வதுமான அட்டை வகை; a species of leech;

     “மரவட்டை, செவ்வட்டை” (விறலிவிடு. 620);.

க. கெம்பட்டெ

     [செம் → செவ் + அட்டை]

 செவ்வட்டை2 cevvaṭṭai, பெ. (n.)

   1. சருக்கரை வள்ளிக் கொடிக்கு வரும் நோய்; a blight affecting sweet potato.

   2. நெற்பயிரின் தோகையில் எள் வடிவத்தில் பழுப்பு நிறப் புள்ளிகளாகத் தோன்றிப் பச்சையத்தைச் சிதைக்கும் பூசண நோய்; helmin thosporium.

செவ்வணம்

செவ்வணம் cevvaṇam, கு.வி.எ. (adv.)

செவ்வனம் பார்க்க;see {Servanam.}

     ‘இதனைச் செவ்வணங் கூறாமையின் அமைத்தார்’ (தொல்.பொருள். 242, உரை);.

     [செம் → செவ் → செவ்வணம்]

செவ்வணி

செவ்வணி cevvaṇi, பெ. (n.)

   தலைமகற்குத் தலைவியின் பூப்பு உணர்த்தற் குறியாகத் தோழியணிந்து கொள்ளுஞ் செங்கோலம்; red garment and red flowers, worn by the confidante to indicate to the hero that the heroine isinher periods.

     “செவ்வணி யணிந்து சேடியை விடுப்புழி” (நம்பியகப். 205);.

     [செம் → செவ் + அணி]

செவ்வணில்

 செவ்வணில் cevvaṇil, பெ. (n.)

   சீமைச்சிவப்பு அணில்; red squirrel of Europe.

     [செம் → செவ் + அணில்]

செவ்வண்

 செவ்வண் cevvaṇ, பெ. (n.)

   செங்குத்து (யாழ்.அக.);; Steepness.

     [செம் → செவ் → செவ்வண்]

செவ்வண்டு

செவ்வண்டு1 cevvaṇṭu, பெ. (n.)

   1. தென்னையின் குருத்தைக் கெடுக்கும் ஒரு வகை வண்டு; red beetle which damages the tender shoots of coconut trees.

   2. வீட்டின் சல தாரைப் பகுதியில் திரியும் செந்நிறப் பூச்சி; cockroach.

     [செம் + வண்டு]

 செவ்வண்டு2 cevvaṇṭu, பெ. (n.)

   சிவப்பு இண்டஞ் செடி; a red variety of sensitive tree.

செவ்வத்தி

 செவ்வத்தி cevvatti, பெ.(n.)

   தேமல், அரிப்பு. பல்வலி முதலியவற்றிற்கு மருந்தாகப் பயன்படும் மரம்; a tree of medicinal use.

     [செவ்-அத்தி]

செவ்வத்தை

செவ்வத்தை cevvattai, பெ. (n.)

   1. செடிவகை (K.R.);; globular-flowred neem.

   2. கொடி வகை (L);; a species of silverweed

செவ்வநிறம்

 செவ்வநிறம் cevvaniṟam, பெ. (n.)

   மாந்துளிர் கல்; a red stone of the colour of tender mango leaf (சாஅக);.

     [செம் – செவ் + திறம்)

செவ்வந்தி

செவ்வந்தி cevvandi, பெ. (n.)

   1. செவ்வந்தி நேரத்தில் பூக்கும் பூச்செடிவகை; garden chrysanthemum.

   2. சாமாந்தி; wild chammomile.

   ம. செவ்வந்தி, சேமந்தி, சேமந்திக;க. சேவந்திகெ, த. செவ்வந்தி → Skt. {Sevati}

     [செம் → செவ் + அந்தி – செவ்வந்தி = செவ்வான மாலை, அவ்வேனையில் மலரும் பூ]

செவ்வந்திக்கல்

 செவ்வந்திக்கல் cevvandikkal, பெ. (n.)

   ஒருவகைச் செந்நிறமணி (வின்.);; amethyst .

     [செவ்வந்தி + கல்]

செவ்வந்திப்புராணம்

 செவ்வந்திப்புராணம் cevvandippurāṇam, பெ. (n.)

   எல்லப்ப நாவலர் இயற்றிய திருச்சிராப்பள்ளிப் புராணம்; a {Purāna} on the {Śiva} shrine at {Trichirāppalli} by Ellappa {Nāvalar.}

     [செவ்வந்தி + புராணம்]

 Skt. புராணா → த. புராணம்

செவ்வனம்

செவ்வனம் cevvaṉam, கு.வி.எ. (adv.)

   செவ்வையாக; rightly, properly, correctly, directly, completely.

     “செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள்” (மணிமே. 3:81);.

     [செம் → செவ் → செவ்வனம்]

செவ்வனார்

 செவ்வனார் cevvaṉār, பெ. (n.)

செவ்வாம்பல் (மலை.); பார்க்க;see {šev-v-āmbal}

     [செம் → செவ் → செவ்வன் → செவ்வனார்]

செவ்வனிறை

செவ்வனிறை cevvaṉiṟai, பெ. (n.)

   நேர்விடை; direct answer.

     ‘உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி, உணர்தற்றன்மைத்து என்றல் செவ்வணிறையாம்’ (தொல்.சொல். 13, சேனா.);.

     [செம் → செவ் → செவ்வன் + இறை]

செவ்வனே

 செவ்வனே cevvaṉē, கு.வி.எ. (adv.)

   செம்மையாக; most property.

இந்த ஓவியம் காந்தாரக் கலைமரபில் செவ்வனே அமைந்துள்ளது.

     [செம் → செவ் → செவ்வனே]

செவ்வன்

செவ்வன் cevvaṉ, கு.வி.எ. (adv.)

செவ்வனம் பார்க்க;see {servanam}

     “செவ்வணிறை காக்கு மிவ்வுலகில்” (பு.வெ. 10, முல்வைப். 9);.

     [செவ்வனம் → செவ்வன்]

செவ்வம்மான்பச்சரிசி

 செவ்வம்மான்பச்சரிசி sevvammāṉpassarisi, பெ. (n.)

   ஒருவகைப் பூடு (மூ.அ.);; red.spurge.

     [செம் → செவ் + அம்மான் பச்சரிசி]

செவ்வரக்கு

செவ்வரக்கு cevvarakku, பெ. (n.)

   1. சாதிலிங்கம்; vermilion.

     “பருவிரும்பு பிணித்துச் செவ்வரக் குரீஇ” (நெடுநல். 80);.

   2. செம்பரக்கு; red lac.

     [செம் +அரக்கு]

செவ்வரத்தமணி

 செவ்வரத்தமணி cevvarattamaṇi, பெ. (n.)

   தாழ்ந்த தரமான ஒருவகை மணி (சங்.அக.);; an inferior ruby.

     [செம் → செவ் + அரத்தம் + மணி]

செவ்வரத்தம்

செவ்வரத்தம் cevvarattam, பெ. (n.)

   1. செவ்வரத்தை பார்க்க;see {sci-y-arattai.}

     “கூத்தன் குதம்பை செவ்வரத்த முயரசோகம்” (சங்.அக. திருநாகைக்கா. புண்ட இரண்.5);.

   2. மிகு சிவப்பு; crimson colour.

     “செவ்வரத்தத வுடையாடை” (திவ் பெரியதி. 8. 1:7);.

மறுவ. கருஞ்சிவப்பு

     [செவ்வரத்தை → செவ்வரத்தம்]

செவ்வரத்தை

 செவ்வரத்தை cevvarattai, பெ. (n.)

   செம்பரத்தை (உரி.நி.);; shoe-flower.

     [செம்பரத்தை → செவ்வரத்தை]

செவ்வரளி

 செவ்வரளி cevvaraḷi, பெ. (n.)

   சிவப்பு நிறப் பூப்பூக்கும் அரறி; oleander rose bay.

     [செம் → செவ் + அரளி]

செவ்வரி

செவ்வரி cevvari, பெ. (n.)

   கண்ணின் சிவந்த கோடுகள்; red streaks in the eye.

     “செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண்” (சிலப் 11: 184);.

   2. நாரை வகை (பதிற்றுப். 23:21, அரும்.);; a species of ibis.

   ம. செவ்வரி;க. கெம்பரி

     [செம் → செவ் + வரி]

செவ்வரியாடு

செவ்வரியாடு cevvariyāṭu, பெ. (n.)

   ஆடுவகை (தெ.க.தொ. 5, 265);; a kind of sheep.

     [செம் → செவ் + வரி + ஆடு]

செவ்வலரி

 செவ்வலரி cevvalari, பெ. (n.)

செவ்வரளி பார்க்க;see {Sev-V-arall.}

     [செம் → செவ் → அல்லி]

செவ்வல்

செவ்வல் cevval, பெ. (n.)

   1. செந்நிறம்; redness.

     “செவ்வலங் குன்றம்” (களவழி. 10);.

   2. செம்மண் நிலம்; soil of light red colour.

     [செம் → செவ் → செவ்வல்]

செவ்வல்நார்

 செவ்வல்நார் cevvalnār, பெ. (n.)

செவ்வாம்பல் (மலை. பார்க்க;see {Sev-V-āmbal.}

     [செவ்வல் + நார்]

செவ்வல்லி

செவ்வல்லி1 cevvalli, பெ. (n.)

   1. செவ்வள்ளி (தைலவ.தைல. 59); பார்க்க;see {sey-Walli.}

   2. மஞ்சிட்டி; Indian madder.

 செவ்வல்லி2 cevvalli, பெ. (n.)

செவ்வாம்பல் (பிங்.); பார்க்க;see {šey-v-āmbal.}

செவ்வள்ளி

செவ்வள்ளி cevvaḷḷi, பெ. (n.)

வள்ளிக்கொடி வகை (தைலவ. தைல. 94:24); purple yam.

   ம. செவ்வள்ளி; Skt. {tāmravalli}

     [செம் → செவ் + வள்ளி]

செவ்வழலை

 செவ்வழலை cevvaḻlai, பெ. (n.)

   மனைப் பாம்பு; common brown snake.

     [செம் → செவ் + அழவை]

செவ்வழல்

 செவ்வழல் cevvaḻl, பெ. (n.)

   விளக்கு; lamp.

செந்திச்செவ்வழல் தொடங்க”(கலி);.

     [செம்-செவ்+அமுல்]

செவ்வழி

செவ்வழி cevvaḻi, பெ. (n.)

   1. நல்ல வழி; good way, path of virtue.

     “கைதவந் திருப்பாச் செவ்வழி நிறீஇ” (பெருங். மகத. 15: 19);.

   2. பெரும் பண்களுள் ஒன்றாகிய முல்லைப் பண்; a primary melody-type of the mullai class.

     “சீறியாழ் செவ்வழி பண்ணி” (புறநா. 144);.

     [செம் → செவ் + வழி]

செவ்வழிபாடு

செவ்வழிபாடு cevvaḻipāṭu, பெ. (n.)

   முற்றும் அடங்கியொழுகுகை; absolute obedience, as of a pupil towards his teacher.

     “செவ்வழிபாட ராகிச் சிலைத் தொழில் சிறுவர் கற்ப” (சீவக. 1758);.

     [செம் → செவ் + வழிபாடு]

செவ்வழிப்பாலை

செவ்வழிப்பாலை cevvaḻippālai, பெ. (n.)

   பாலையாழ்த் திறத்தொன்று; a secondary melody-type of the {pālaf} class.

     “தீந்தொடைச் செவ்வழிப் பாலை” (சிலப். 7: 47, பக்.218);.

செவ்வழியாழ்

செவ்வழியாழ் cevvaḻiyāḻ, பெ. (n.)

   பெரும்பண்களுள் ஒன்றாகிய முல்லைப்பண்; a primary melody-type of the mullai class.

     ‘வண்டுகள் செவ்வழியாழ்ப் பண்ணினைப் பாடும்’ (சிலப். 11:88, உரை);.

     [செவ்வழி + யாழ்]

செவ்வவரை

செவ்வவரை cevvavarai, பெ. (n.)

   அவரை வகை (M.M. 206);; hyacinth bean.

     [செம் → செவ் + அவரை]

செவ்வாக்கு

 செவ்வாக்கு cevvākku, பெ. (n.)

   நீண்ட வளைவு (யாழ்.அக.);; long curve.

     [செம் + வாக்கு. வங்கு (=வளைவு); → வாங்கு → வாக்கு]

செவ்வானம்

செவ்வானம் cevvāṉam, பெ. (n.)

   1. செக்கர் வானம், செந்நிறமான அந்திவானம்; red evening sky.

   2. செந்நிறமுகில்; red clouds.

     “செவ்வானத்து வனப்புப் போன்றன” (புறநா. 4:2);.

     [செம் → செவ் + வானம்]

செவ்வாப்பு

செவ்வாப்பு cevvāppu, பெ. (n.)

   1. செவ்வாப்புக் சுட்டி பார்க்க;see {Sevváppu-k-katsi.}

   2. காமாலை வகை (M.L.);; cyanosis.

     [செம் → செவ் + ஆப்பு]

செவ்வாப்புக்கட்டி

 செவ்வாப்புக்கட்டி cevvāppukkaṭṭi, பெ. (n.)

   குழந்தைகளுக்குத் தலையிலுண்டாகும் சிவப்புக் கட்டி; a kind of erysipelas affecting the head, especially of children.

     [செவ்வாப்பு + கட்டி]

செவ்வாப்புக்கட்டிக்களிம்பு

 செவ்வாப்புக்கட்டிக்களிம்பு cevvāppukkaṭṭikkaḷimbu, பெ. (n.)

   ஒரு ஏனத்தில் தேன் மெழுகை உருக்கி நெய்விட்டுப் பருத்திப் பஞ்சைச் சுட்ட சாம்பல் போட்டுக் கிளறி, இதனுடன் வசம்புசுட்ட சாம்பல், வறுத்த துருசும்’ சேர்த்துக் கிளறி ஆறவைத்துச் சீலை யிலூட்டிக் கட்டிக்குப் போடும் மருந்து; a medicinal preparation comprising melted bees wax, cow’s ghee, ashes of cotton, sweet flag and fried copper sulphate. This is smeared over the affected part, as a sure cure for such boils.

     [செவ்வாப்பு + கட்டி + களிம்பு]

செவ்வாப்பெண்ணெய்

 செவ்வாப்பெண்ணெய் cevvāppeṇīey, பெ. (n.)

   மருந்தெண்ணெய் வகை; a medicinal oil.

     [செவ்வாப்பு + எண்ணெய்]

செவ்வாமகம்

 செவ்வாமகம் cevvāmagam, பெ. (n.)

   சிவப்புக் காசி தும்பை; a red variety of Benares toombay.

செவ்வாமணக்கு

செவ்வாமணக்கு cevvāmaṇakku, பெ. (n.)

   சிவப்பாமணக்கு (பதார்த்த.531);; variety of castor-plant.

     [செம் → செவ் + ஆமணக்கு]

செவ்வாமிகம்

 செவ்வாமிகம் cevvāmigam, பெ. (n.)

   சிவப்புக் கொன்றை; red cassia tree.

செவ்வாம்பல்

 செவ்வாம்பல் cevvāmbal, பெ. (n.)

   செந்நிறமான அல்லிவகை (பிங்.);; red Indian water lily.

மறுவ. சேதாம்பல், அரக்காம்பல், செங்குமுதம், செவ்வல்லி.

     [செம் → செவ் + ஆம்பல்]

செவ்வாயன்

 செவ்வாயன் cevvāyaṉ, பெ. (n.)

செம்போத்து பார்க்க;see {Sem-bottu.}

     [செவ்வாய் + பாகம்]

செவ்வாயாட்சி

 செவ்வாயாட்சி cevvāyāṭci, பெ. (n.)

   செவ்வாயின் சொந்த ஒரைகளான மேழம் நளி (விருச்சிகம்); ஆகியன (விதான.);; Aries and Scorpio, the signs of the zodiac belonging to Mars.

     [செவ்வாய் + ஆட்சி]

செவ்வாய்

செவ்வாய்2 cevvāy, பெ. (n.)

   பிடாரி கோயில் திருவிழ; festival in a {Pigiri-temple}

 செவ்வாய்3 cevvāy, பெ. (n.)

   ஒரு வகைப் பாறை மீன்; a kind of {pārai} fish.

செவ்வாய்’

 அஅன்ன ஆவன்னா aaṉṉaāvaṉṉā, பெ. (n.)

   அரிவரி யென்னும் தமிழ் வண்ணமாலை (குறுங்கணக்கும் நெடுங்கணக்கும்);;  Tamil Alphabet.

   எழுத்துகளைக் கல்லா மக்கள், சிறப்பாகச் சிறுவர் சிறுமியர், எளிதாக ஒலித்துக் கற்கும் பொருட்டு, பண்டைத் தொடக்கப்பள்ளி யாசிரியர் உயிரும் உயிர்மெய்யுமாகிய இருவகைக் குறிலுக்கும்’அன்ன’ச் சாரியையும், இருவகை நெடிலுக்கும் அன்னா’ச் சாரியையும் ஏற்படுத்தினர்;     ‘அஆ’ என்னும் ஈரெழுத்தும் தமிழ் வண்ணமாலையின் முதலெழுத்துகளாதலின், அவை முதற்குறிப்பாகி, அம் முதற்குறிப்பே’அஅன்ன ஆவன்னா’ என்று வண்ணமாலைப் பெயராயிற்று. இது ‘alpha’, ‘beta’ என்னும் கிரேக்க இரு முதலெழுத்துகளும் சேர்ந்து”alphabetum’ என்று இலத்தீனிலும், ‘alphabet’ என்று ஆங்கிலத்திலும், வண்ணமாலைப் பெயராக வழங்குவது போன்றது;

   அ, இ, க, கி என்று ஒரு மாத்திரை யொலிக்குங்குறிலெழுத்துகளை விட்டொலிப்பது, சிறுபிள்ளைகட்குச் சற்று வருத்தமுற மூச்சு வாங்குவதால்,’அஅன்ன’ என்பது”ஆனா” என்றும் இஅன்ன என்பது’ஈனா’ என்றும், மாணாக்க நிலையிலும் பின்னும் ஒலிக்கப்பட்டுவந்தன. இவ்வொலிப்புமுறை குறில்களின் உண்மையான ஒலியளவை உடனே தெரிந்துகொள்ளத் தடையாயிருந்தமையின், இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் அரசியற் கல்வித்துறையறிஞர், சாரியையின்றி ஒலிநூன் முறைப்படி அ, ஆ, இ, ஈ,… என்று ஒலித்துப் பயிலும் முறையைப் புகுத்திவிட்டனர். அதனால், இன்று ‘அஆ’ என்பது வண்ணமாலைப் பெயராக வழங்கி வருகின்றது. இது புணர்ச்சியில்’அவ்வா’ என்றாகும்;

செவ்வாய்க்கிழமை

 செவ்வாய்க்கிழமை cevvāykkiḻmai, பெ. (n.)

   கிழமை ஏழனுள் மூன்றாவது; Tuesday, the third day of the week.

     [செவ்வாய் + கிழமை]

செவ்வாய்க்குற்றி

 செவ்வாய்க்குற்றி cevvāykkuṟṟi, பெ.(n.)

   கொம்பு விளையாட்டுக்காகக் கொண்டு வரப்படும் ஒரு மரக்குற்றி; a wooden piece used in kombu play.

     [செவ்+வாய்+குற்றி]

செவ்வாய்நோன்பு

 செவ்வாய்நோன்பு cevvāynōṉpu, பெ. (n.)

   ஆண்டிற்கு இருமுறை செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஆண்கள் யாரும் அறியா வண்ணம் வேளாள மகளிர் மேற்கொள்ளும் நோன்பு; ceremony performed in secret by {Vēlāla} women twice a year on Tuesday midnights when no male, not even a babe in arms is allowed to be present.

     [செவ்வாய் + நோன்பு]

செவ்வாய்ப்பாகம்

செவ்வாய்ப்பாகம் cevvāyppākam, பெ. (n.)

   சுவரை ஒன்பதாகப் பிரித்தால் அதில் மூன்றாம் பாகம்; the third part of the wall, where it was divided into 9 parts.

     [செவ்வாய் + பாகம்]

செவ்வாய்ப்பிள்ளையார்

 செவ்வாய்ப்பிள்ளையார் cevvāyppiḷḷaiyār, பெ. (n.)

செவ்வாய்நோன்பு (இ.வ.); பார்க்க;see {Seииay-пónbи}

     [செவ்வாய் + பிள்ளையார்]

செவ்வாய்ப்புண்

 செவ்வாய்ப்புண் cevvāyppuṇ, பெ. (n.)

   வாய் வேக்காளம்; sore through inflam-mation of the mouth. (சா.அக.);.

     [செவ்+வாய்+புண்]

செவ்வாய்ப்பேட்டை

 செவ்வாய்ப்பேட்டை cevvāyppēṭṭai, பெ.(n.)

   சேலம் நகரில் உள்ள ஒர் ஊர்; a village in Salem.

     [செவ்வாய் (கிழமை);+பேட்டை]

செவ்வாரை

 செவ்வாரை cevvārai, பெ. (n.)

   ஆரைப் பூடுவகை (வின்.);; a red pseudo fern

     [செம் → செவ் + ஆரை]

செவ்வாலம்பழம்

 செவ்வாலம்பழம் cevvālambaḻm, பெ. (n.)

   ஆலமரத்தின் பழம்; fruit of banyan tree.

     [செம் → செவ் + ஆலம்பழம்]

செவ்வாலி

 செவ்வாலி cevvāli, பெ.(n.)

கெண்டை மீன்வகையுள் ஒன்று

 carnatic carp.

     [செம்-செவ்+வாலி]

செவ்வாலிக்கெண்டை

செவ்வாலிக்கெண்டை cevvālikkeṇṭai, பெ. (n.)

   ஆறு விரல (ஆறங்குல); நீளமும் வெண்ணிறமு முள்ள கடல் மீன் வகை; Seafish, silvery, attaining 6 in. in length.

செவ்வால்

 செவ்வால் cevvāl, பெ. (n.)

   அரணை; horse lizard.

     [செம் → செவ் → வால்]

செவ்வாளம்

 செவ்வாளம் cevvāḷam, பெ. (n.)

   நேர்வாளம்; Indian croton seed.

     [செம் → செவ் + வானம்]

செவ்வாளி

 செவ்வாளி cevvāḷi, பெ.(n.)

   ஒரு வகைக் குருவி இனம்; a variety of swallow.

     [செவ்+வாளி (அம்பு);]

செவ்வாழை

செவ்வாழை cevvāḻai, பெ. (n.)

   மூன்று ஆண்டிற்கொரு முறை 60 முதல் 120 வரை, செந்நிறமும் நன்மணமுமுள்ள காய்கள் கொண்ட குலையினை ஈனும் வாழை வகை (G.Sm. D.I, i. 215);; a kind of plantain tree yielding red fruits of delicate flavour once in three years in large bunches of 60 to 120.

ம. செவ்வாழ

     [செம் → செவ் + வாழை]

செவ்வாவிரை

 செவ்வாவிரை cevvāvirai, பெ. (n.)

   ஆவிரை வகை; red cassia.

     [செம் → செவ் + ஆவிரை]

செவ்வி

செவ்வி1 cevvi, பெ. (n.)

   நேர்முகம் (யாழ்ப்.);; interview.

செய்தியாளர் அரசுத் தலைவரைச் செவ்வி கண்டார்.

     [செம் → செவ் → செவ்வி]

 செவ்வி2 cevvi, பெ. (n.)

   1. காலம்; time.

   2. தகுந்த சமயம்; season, appropriate occasion.

     “கதங் காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி” (குறள், 130);.

   3. காட்சி; audience.

     “செவ்வியுங் கொடா னிவ்வியல் புரிந்தனன்” (பெருங். இலாவாண. 9:198);.

   4. மலரும் பருவத்துள்ள பேரரும்பு (பிங்.);; bud about to blossom.

   5. விளைச்சற் பருவம்; mature condition.

     “முதிர்ந்த செவ்வித் தினையினை” (கந்தபு. வள்ளி. 158);.

   6. புதுமை; newness; freshness.

     ‘காயா மலருஞ் செவ்விப்பூப்போல” (பு.வெ. 9:4. உரை);.

   7. அழகு; beauty, fairness.

     “வண்டுறை கமலச் செவ்வி வாண்முகம்” (கம்பரா. சூர்ப்ப. 2);.

   8. சுவை; taste.

     “நாய்பாற்சோற்றின் செவ்விகொள றேற்றா தாங்கு” (நாலடி. 322);.

   9. மணம்; smell.

     “நாவிய செவ்விநாற” (கம்பரா. கார்கால. 35);.

   10. தன்மை (வின்.);; state. condition.

   11. செம்மை; propriety.

     “செவ்வியிற் றொடர்ந்த வல்ல செப்பலை” (கம்பரா.இராவணன்வதை. 210);.

     [செம் → செவ் → செவ்வி]

செவ்விசை

 செவ்விசை sevvisai, பெ.(n.)

   நாட்டுப்புற இசையில் இருந்து வளர்ந்த ஓர் இசைவகை; a musical note developed from folksong.

     [செவ்+இசை]

செவ்விஞ்சி

செவ்விஞ்சி cevviñji, பெ. (n.)

   எலுமிச்சஞ் சாற்றில் ஊறின இஞ்சி (சீவக. 2682, உரை);; ginger pickled in lime-juice.

     [செம் → செவ் + இஞ்சி]

செவ்விண்டு

 செவ்விண்டு cevviṇṭu, பெ. (n.)

   இண்டுவகை; a species of sensitive tree.

     [செம் → செவ் + இண்டு]

செவ்விதின்

 செவ்விதின் cevvidiṉ, வி.எ. (adv.)

செவ்வனம் பார்க்க;see {SevVanam.}

     [செம் → செவ் → செவ்விதின்]

செவ்விது

செவ்விது1 cevvidu, பெ. (n.)

   நேரானது; that which is right, good, proper.

     [செம் → செவ் → செவ்விது]

 செவ்விது2 cevvidu, பெ. (n.)

   நன்று; expr. meaning ‘very well’.

     “செவ்விதென் றவனுநேர” (கம்பரா. வேள்வி. 3);.

     [செம் → செவ் → செவ்விது]

செவ்விநிறம்

 செவ்விநிறம் cevviniṟam, பெ. (n.)

செவ்வநிறம் பார்க்க;see {Sevvaniram.}

     [செவ்வநிறம் → செவ்விநிறம்]

செவ்விந்தியர்

 செவ்விந்தியர் cevvindiyar, பெ. (n.)

   அமெரிக்கக் கண்டத்தில் வாழும் பழங்குடி மக்கள்; red Indian in America.

     [செவ் → செம் + இந்தியா]

இந்தியாவிற்குக் கடல் வழித் தேடிவந்த கொலம்பசு என்ற மாலுமி முதலில் அமெரிக்காவை அடைந்தபோது இந்தியா எனப் பிறழ உணர்ந்தததால், அமெரிக்கப் பழங்குடிகளும் இந்தியர் எனப்பட்டனர். அவர்களின் நல்ல சிவப்புப் பூச்சு, அவர்களைச் செவ்விந்தியர் என அழைக்க ஏதுவாயிற்று.

செவ்வினையாளர்

செவ்வினையாளர் cevviṉaiyāḷar, பெ. (n.)

   நற்செய்கை யுடையோர்; men of virtuous deeds.

     “செவ்விளையாளர் சேரார் நம்பதிக்கு” (பெருங். உஞ்சைக். 49:52);.

     [செம் → செவ் + வினையாளர்]

செவ்விபார்-த்தல்

செவ்விபார்-த்தல் cevvipārttal,    4 செ.கு.வி. (v.i.)

   ஒருவன் தக்க சமயத்தை எதிர்பார்த்து நிற்றல்; to await one’s convenience for audience.

     “செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க” (மணிமே. 25:80);. I

     [செவ்வி + பார்-.]

செவ்விய

செவ்விய1 cevviya, பெ.எ. (adj.)

   நேர்மையான; guile-less, righteous, regular.

     “செவ்விய தீவிய சொல்லி” (கலித். 19);.

   2. வாழ்க்கை வழிமுறைகள்

   முதலியவற்றைக் குறிக்கையில் சிறந்த; most proper, excellent.

செவ்விய வாழ்விற்குத் திருவள்ளுவரின் அறவுரைகளே போதுமானவை (உவ.);.

     [செம் → செவ் → செவ்விய]

 செவ்விய2 cevviya, பெ.எ. (adj.)

   சிவந்த; red. அவளின் செவ்விய இதழ்களும் நீண்ட விரல்களும் கவர்ச்சியாக இருந்தன.

     [செம் → செவ் → செவ்விய]

செவ்வியன்

செவ்வியன் cevviyaṉ, பெ. (n.)

   நேர்மையானவன்; good, upright perrson, virtuous man a family man.

     “செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார்” (நாலடி, 322);.

     [செம் → செவ் → செவ்வியல்]

செவ்வியம்

செவ்வியம் cevviyam, பெ. (n.)

   1. ஐம் மூலத்தொன்று; one of the five meidicinal roots.

   2. மிளகுக் கொடி; black pepper creeper.

   3. மலை வெற்றிலைக் கொடி; mountainbeteal Creeper.

   4. கடைச்சரக்குகள் 64ல் ஒன்று; one of the 64 bazaar drugs as contemplated in Tamil medicine.

ம. செவியம்

     [செம் → செவ் → செவ்வியம்]

செவ்வியல்

 செவ்வியல் cevviyal, பெ. (n.)

   மரபுவழிப்பட்ட சிறந்த கலை அல்லது இலக்கியம்; classicalism.

     [செம் → செவ் → செவ்வியல்]

செவ்வியான்

செவ்வியான் cevviyāṉ, பெ. (n.)

செவ்வியன் பார்க்க;see {sewiyan.}

     “செவ்வியான் கேடும்” (குறள், 169);.

     [செம் → செவ் → செவ்வியன் → செவ்வியான்]

செவ்வியைபு

 செவ்வியைபு cevviyaibu, பெ. (n.)

   யாப்பிலக்கண நெறி (விதி);களுள் ஒன்று; a grammatical point in composing poems.

     [செம் → செவ் + இயைபு]

செவ்வியோன்

செவ்வியோன் cevviyōṉ, பெ. (n.)

செவ்வியன் பார்க்க;see {sewwiyam,}

     “செவ்வியோர்க் களித்தலும்” (புறநா. 29:9);.

     [செவ்வியன் → செவ்வியோன்]

செவ்விரத்தம்

 செவ்விரத்தம் cevvirattam, பெ. (n.)

   தூய்மையான அரத்தம்; pure aerated red blood. (சா. அக.);.

     [செவ்-இரத்தம்]

செவ்விரியன்

 செவ்விரியன் cevviriyaṉ, பெ. (n.)

   சிவப்பு விரியன் பாம்பு; red viper snake.

     [செம் → செவ் + விரியன்]

செவ்விருக்கைநாடு

செவ்விருக்கைநாடு cevvirukkaināṭu, பெ. (n.)

   ஆழ்வார்திருநகரிக்கு அருகிலிருந்த பழைய நாட்டுப் பெயர்; name of small country near {Alvār-dirunagari.}

     “செவ்விருக்கை நாட்டு சக்கரபாணி நல்லூர்” (தெ.க.தொ. 26, கல். 492-4);.

     [செம் → செவ் + இருக்கை + நாடு]

செவ்விரும்பகக்களிமண்

 செவ்விரும்பகக்களிமண் cevvirumbagaggaḷimaṇ, பெ. (n.)

   செந்நிற இரும்புக் களிமண் கலந்த மண்; laterite.

     [செம் → செவ் + இரும்பக + கனிமண்]

செவ்விருள்

 செவ்விருள் cevviruḷ, பெ. (n.)

   சிவப்பு இருள மரம்; a red variety tree.

     [செம் → செவ் + இருள்]

செவ்விறகி

 செவ்விறகி cevviṟagi, பெ. (n.)

   கழுதைவண்டு (வின்.);; a kind of large beetle.

     [செம் → செவ் + இறகி. இறகு → இறகி]

செவ்விறகுக்கொண்டைக்குயில்

 செவ்விறகுக்கொண்டைக்குயில் cevviṟaguggoṇṭaigguyil, பெ. (n.)

   செம்பழுப்பு நிற இறக்கைகளையுடையதும், தலையில் கொண்டை போன்ற அமைப்பை யுடையதுமான பறவை; red-winged crested cuckoo.

     [செவ்விறகு + கொண்டைக்குயில்]

இது கடலைக் குயிலைப் போன்ற தோற்றம் உடையது. முதுகு பளபளப்பான கருப்பு நிறத்துடனும் மேவாய், தொண்டை மேல் மார்பு ஆகியன துருச் சிவப்பு நிறத்துடனு:ம காணப்படும்.

செவ்விலைக்கள்ளி

 செவ்விலைக்கள்ளி cevvilaikkaḷḷi, பெ. (n.)

   சிவப்பு இலைக்கள்ளி; a kind of milk hedge with red leaves used for rejuvenation.

     [செம் → செவ் + இவை + கள்ளி]

செவ்விளகி

 செவ்விளகி cevviḷagi, பெ. (n.)

செவ்விறகி (வின்.); பார்க்க;see {šev-v-iragi.}

செவ்விளநீர்

செவ்விளநீர் cevviḷanīr, பெ. (n.)

   செந்தெங்கின் இளங்காய்; tender coconut of red or yellow colour.

     “செவ்விள நீருந் தேர்வென்” (கம்பரா. நாடவிட்ட 43);.

க. கெம் பௌநீர்

     [செம் → செவ் + இளநீர்]

செவ்விளிம்பன்

செவ்விளிம்பன் cevviḷimbaṉ, பெ. (n.)

சிவக்கத் தோய்ந்த விளிம்பினையுடைய ஆடை (வீரசோ.தொகை.8);,

   சிவப்புக் கரையிணை யுடைய ஆடை; red-bordered cloth.

     [செவ் + விளிம்பன்]

செவ்விளை

 செவ்விளை cevviḷai, பெ. (n.)

செவ்விளநீர் பார்க்க;see {Sev-V-Ilanir.}

செவ்விளைக்கெவுளி

 செவ்விளைக்கெவுளி cevviḷaikkevuḷi, பெ. (n.)

   உட்புறம் சிவந்தும் வெளிப்புறம் வெளுத்தும் உள்ள காய்களைக் கொண்ட தென்மை வகை; a kind of coconut tree which yields nuts of white in outter portion and red in inner portion.

     [செவ்விளை + கெவுளி]

செவ்விழிநோய்

 செவ்விழிநோய் cevviḻinōy, பெ. (n.)

   கண் சிவந்து காணும் கண்நோய்; redness of the eye disease.

     [செம் → செவ் + விழிநோய்]

செவ்வு

செவ்வு1 cevvu, பெ. (n.)

   1. செம்மை (யாழ்.அக.);; redness.

   2. நேர்மை; straightness.

     “ஆருயிர் செவ்விராது” (கம்பரா. காட்சி.29);.

   3. திக்கு; direction.

இந்தச் செவ்வுக்குப் போனால் கோயிலைக் காணலாம் (நாஞ்.);.

ம. செவ்வு;க. ச்ய், செய், செய்;தெ. சசி;து. சச்சி

     [செம் → செவ் → செவ்வு]

 செவ்வு2 cevvu, பெ. (n.)

   முத்துக்களின் அளவு வகை; a unit in counting pearls.

     [செம் → செவ் → செவ்வு]